Powered By Blogger

Wednesday, March 28, 2018

நான்காவது மாதத்தின் 4 !

நண்பர்களே,

வணக்கம். பூதக் கண்ணாடியைக்  கொண்டு தேடாத குறை  தான் ; ஆனால்  ஏப்ரல்  இதழ்களென்ற சமாச்சாரத்தைப் பற்றி, இண்டு இடுக்கில் கூட எதுவும் கண்ணில் தென்படக் காணோமே ? அதுக்கு மீறித் தட்டுப்படும் ஒன்றிரண்டுமே "பவளச் சிலை மர்மம்" பற்றிய சிலாகிப்புகள் மாத்திரமே !! JUMBO மீதான ஒளிவட்டத்துக்கு நன்றிகள் all ; ஆனால் ஏப்ரலின் பொட்டிகளைப் பிரித்திடவும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ! காத்திருக்கும் விருந்து பிரியாணியோ ; நூடுல்சோ - தற்சமயம் இலையிலுள்ள full meals ஆறிப் போக அனுமதிக்கலாகாது தானே ? 
ஏப்ரல் இதழ்கள் பற்றி
  • முதல் பார்வையில் இம்மாத இதழ்களின் அட்டைப்பட ரேங்கிங்ஸ் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை ! 
  • தயாரிப்புத் தரங்கள் பற்றியும்,அதன் தர வரிசை பற்றியும் - please ? 
  • அதன் பின்பாய் படிக்க இயன்றுள்ள ஏதேனுமொரு april இதழ் பற்றியும் சொல்லிடலாமே ?

ஜம்போ புது வரவென்பதால் அது சார்ந்த விளம்பரங்கள் & அறிவிப்புகள் இங்கேயும் தொடரட்டுமே ? என்று பார்த்தேன் ! ஜம்போ சந்தா பற்றி உங்களது நட்பு வட்டாரங்களில் பகிர்ந்திடவும் முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ? Word of mouth விளம்பரங்கள் தானே, நமது முதுகெலும்பே ? ஜம்போவின் அயல்நாட்டுச் சந்தா கட்டணங்களை, தொடர்ச்சியான அரசு விடுமுறைகளின் முடிவுக்குப் பின்பாய் அறிவித்திட இயலும்.  ஏர்மெயில் கட்டணங்கள் ஏகமாய் மாற்றம் கண்டிருப்பதால் - தெளிவாக விசாரிக்க இந்த அவகாசம் தேவையாகின்றது !  So தொலைவில் வசிக்கும் அன்பர்கள் அதுவரையிலும் பொறுமை காத்திடக் கோருகிறேன் !

"பவளச் சிலை மர்மம்" - அட்டவணையில் அறிவிக்கப்பட்டதோ  மித சைசில் தான் என்பதை நாமறிவோம் ! புத்தக விழாக்களில் "நிலவொளியில் நரபலி"க்கு துணையாக இருக்கட்டுமே என்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அப்போதே வழக்கமான டெக்ஸ் சைஸ் தான் உங்கள் ஆதர்ஷம் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள் ! ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்த  சந்தாத் தொகையினில் விலைகளை மறுபடியும் tweak செய்திடுவதெல்லாம் ஆகாத வேலை என்பதால் அப்போதைக்கு வாயைத் திறக்கவில்லை நான் ! ஆனால் இந்த இதழின் தயாரிப்புத் தருணம் நெருங்கிய சமயம் என்ன செய்வதென்ற சிந்தனை லேசாய் எழத் தான் செய்தது !  பெர்சனலாக எனக்கு அந்த "நி.ந.ப". சைஸ் ரொம்பவே compact & cute என்றுதான் பட்டது ! ஆனால் இந்த மறுபதிப்பு சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவருக்குமுள்ள flashbacks ; அவற்றிற்கு நீங்கள் நல்கிடும் மதிப்புகள் ; அவற்றை நீங்கள் போற்றிப் பாதுகாக்கும் பாங்குகள் - என்பனவெல்லாம் முன்னின்று ஜிங்கு ஜிங்கென்று ஒரு குத்தாட்டம் போட்டன ! சரி....ஆனது ஆச்சு ; வழக்கமான சைஸிலேயே களமிறங்குவோமெனத் தீர்மானித்தேன் ! And அந்தத் தீர்மானத்தின் பொருட்டு இப்போது மகிழ்கிறேன் ! Maybe காத்திருக்கும் ஒன்றிரண்டு மும்மூர்த்தி reprints-களை "நி.ந.ப".சைசில் போட்டு ஈடு செய்ய முடிகிறதாவென்று பார்க்கலாம் ! இப்போதைக்கு "பவளச் சிலை மர்மம்" மிரட்டும் வர்ணங்களில் உங்களை குஷி கொள்ளச் செய்திருப்பதில் நாங்களும் ஹேப்பி !! இந்த இதழ் அச்சாகும் போதே எனக்குத் தெரியும் - இது கண்ணைப் பறிக்கும் ஜாலமாக அமையவுள்ளதென்று ! "சைத்தான் சாம்ராஜ்யம்" கூட இதே போல் ஜொலிக்கிறது - டிஜிட்டல் கோப்புகளில் !! வரிசையில் அடுத்தது அது தானே ?! 

டைனமைட் ஸ்பெஷலின் சமாச்சாரம் பற்றிக் கேட்கவே வேண்டாம் - simply stunning !! போட்டுத் தாக்குகிறது வர்ணக்  கலவை !! 

ஜம்போ பற்றிய தகவல்கள் இணையத்துக்கு வரா நண்பர்களின் காதுகளிலும் போட்டு வைக்க முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ? Bye all ;  See you around !! லக்கி லூக் & டால்டன்களோடு சவாரி செய்யப் புறப்படுகிறேன் ! 

அப்புறம் ஒரு கொசுறு : நேற்றைக்கொரு கார்ட்டூன் கதையின் மொழிபெயர்ப்பு வந்து சேர, அதனை மேலோட்டமாய்ப் படிக்க ஆரம்பித்தவன் சற்றைக்கெல்லாம் 44 பக்கங்களையும் மேய்ந்த பின்பே ஓய்ந்தேன் ! And சிரித்து மாளலை சாமி !! நிச்சயமாய் சிறார்களுக்கான கதையல்ல தான் ; நமக்குமே கோக்கு-மாக்கான அந்தக் களம் சரிப்படுமா ? என்று யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன் ! But - வெளியிடுவதென்று தீர்மானித்தால் - 2019-ன் ஜனவரியில் தரையில் உருளத் தயாராகிக் கொள்ளலாம் நாம் ! Bye !!









312 comments:

  1. சிக் பில் கிளாசிக் படித்துக்கொண்டிருக்கிறேன்..
    மற்றவை எல்லாம் பகலிலேயே படித்து விட்டேன்...
    1)டெக்ஸ் - கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.
    2) நண்பனுக்கு நாலு கால்- 19 பக்கத்தின் ஆரம்பம் எதிர் பார்த்த காமெடிதான் என்றாலும் குபீரென சிரித்து விட்டேன்..
    3) ஷானியா- கதையை விட கவர்ச்சிதான் தூக்கலாக உள்ளது..( எப்பத்தான் அம்மனி ஆக்ஷன் ல இறங்க போறாங்க ??)
    இதே இளவரசியா இருந்தா சிந்திக்கறதுலயும் சரி செயலிலும் சரி அவங்களே களத்துல இறங்குவாங்க ..
    அடுத்த கதையிலாயாவது இவங்க கோதாவுல இறங்குனா சரி..
    4) சிக் பில் கிளாசிக் - ஏற்கனவே படிச்ச கதைதான் இருந்தாலும் ஆரம்பத்துலேயே குபீர் சிரிப்பொட கதைய ரசிச்சு படிச்சிட்டிருக்கேன்..

    ReplyDelete
    Replies
    1. குபீர் ன்னா என்னங்க.??

      Delete
    2. சிக் பில் கதை படிங்க ..
      நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..

      Delete
    3. Siva @ ரொம்ப வேகமா எல்லா கதையும் படிச்சு முடிச்சிட்டு விமர்சனம் எழுதிவிட்டிங்க. சூப்பர்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. புதனுக்கு பொட்டி அபி தக் நஹி ஆயா! : ( வியாழனுக்கு வெயிட்டிங்! :)

    ReplyDelete
  3. சைத்தான் சாம்ராஜ்யம்" கூட இதே போல் ஜொலிக்கிறது - டிஜிட்டல் கோப்புகளில் !! வரிசையில் அடுத்தது அது தானே ?!



    அட்டகாசம் சார்...!

    ReplyDelete
    Replies
    1. ஙே
      அடுத்தது
      வைக்கிங் தீவு மர்மம் ன்னு தானே முடிவாச்சு

      இப்போ எப்படி சை.சாம்ராஜ்யம் ???

      Delete
    2. எதுன்னாலும் ஓகேதான்...!

      டெக்ஸ் கலர்லவேணும்..!

      அம்புட்டுதான்...!

      Delete
    3. 2ம் இடம் தான் வைகிங் தீவு...
      முந்தைய வருட 2ம் இடம் பிடிச்சதும் தான் போடல...
      அடுத்த மறுபதிப்பு வரும் ஈரோடு விழாவில் தானே முடிவாகும்...

      Delete
    4. எது கிடைத்தாலும் சந்தோஷமே

      Delete
    5. // அடுத்தது
      வைக்கிங் தீவு மர்மம் ன்னு தானே முடிவாச்சு

      இப்போ எப்படி சை.சாம்ராஜ்யம் ??? //

      +1

      வைக்கிங் தீவு மர்மம் அடுத்து சைத்தான் சாம்ராஜ்யம் வரட்டுமே

      Delete
    6. சை.சாம்ராஜ்யம் அடுத்து வைகிங் தீவு தான் வரட்டுமே ஜீஸ்..:-)

      Delete
  4. \\ காத்திருக்கும் ஒன்றிரண்டு மும்மூர்த்தி reprints-களை "நி.ந.ப".சைசில் போட்டு ஈடு செய்ய முடிகிறதாவென்று பார்க்கலாம் ! //



    டபுள் ஓகே.....!

    ReplyDelete
  5. ஙே ஙே ஙே 😱😱
    முடியல வாத்தியார்

    ஒரு சிக்பில் க்கே படிக்கமுடியாம கெடக்கு - ( மீன்ஸ் ஒரே ஹீரோவின் கதைகளாக இருப்பதால் )

    இதில 5 கதைய எப்ப எப்படித்தான் படிச்சு முடிக்கப்போறனோ தெரியலியே !! 😂

    எடிட்டர் ஜி ஏன் எங்க மேல ஏன் இம்புட்டு கொலவெறி ??

    😉

    ReplyDelete
  6. \\ டைனமைட் ஸ்பெஷலின் சமாச்சாரம் பற்றிக் கேட்கவே வேண்டாம் - simply stunning !! போட்டுத் தாக்குகிறது வர்ணக் கலவை !! //

    ஆவல் அடங்கவிலை..!

    யப்பா...! ஆகஸ்ட் ...! சீக்கிரம் வா...!

    ReplyDelete
  7. ####காத்திருக்கும் ஒன்றிரண்டு மும்மூர்த்தி reprints-களை ###

    மறுபடியும் ரீ பிரிண்டா ???
    வேணாம் சார் ..

    இதுவரை ரீதியாக பிரிண்ட் வராத கதைன்னா சந்தோஷம்தான்..
    தயவு செய்து ஏற்கனவே வெளிவந்த கதையை மறுபடியும் போடாதீங்க ..

    ReplyDelete
    Replies
    1. ##ரீ பிரிண்ட் ல ###

      Delete
    2. கொல வெரியா டைப்பறீங்க


      சார் இவருக்கு CC ல வந்த காமிக்ஸ் ரீபிரிண்ட் பார்சல் அனுப்பிடுங்கோ

      Delete
  8. Junto special sunscripsubs listed in site sir???

    ReplyDelete
  9. ஹம் எனக்கு இன்னும் புத்தகப் பார்சல் வரவில்லை.

    ReplyDelete
  10. கடைசி பலி--- கடுகு சிறுத்தாலும் காரம் குறையல...
    டெக்ஸ்க்கு இணை டெக்ஸ் தான்...

    ReplyDelete
  11. அடுத்த மாத டெக்ஸ் கலரா இல்லை க/வெ..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாதம் டெக்ஸ் இல்லை ஜி.
      ஆனா டியூராங்கோ இருக்கு...

      Delete
  12. // ஆனது ஆச்சு ; வழக்கமான சைஸிலேயே களமிறங்குவோமெனத் தீர்மானித்தேன் !//
    உங்கள் காமிக்ஸ் காதலை, எங்களுக்கு சிறப்பானதை மட்டும் வழங்க வேண்டும் என்பதை எப்போதும் கொண்டு செயல்படும் உங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. கேள்விகள் 3...
    1.அட்டைப்பட ரேங்

    சுவர்னம்:நண்பனுக்கு 4கால்
    ரஜக்:பவளச்சிலை
    கோன்சா:சிக்பில் க்ளாசிக்+லேடி(ஷேரிங்)

    2.தயாரிப்பு தரம்....

    ---பவளச்சிலை உலகத்தரம்; LMSன் சட்டம. அறிந்திரா சமவெளி மாதிரி கலரில் கண்ணைப் பறிக்கும் டாலடிக்குது.
    ஆல் டைம் பெஸ்ட்கள்ல இடம் நிச்சயம் சார். 110பக்கங்களும் திகிட்டாத விருந்து. அதிலும் செவ்விந்திய ஹீவால்பைகளின் இருப்பிடம், அட டா அந்த சிலையை திறக்கும் சீன், அந்த அழகிகளின் அணிவகுப்பு, அலங்கார பலிகடா, அந்த வெள்ளியோடை....முடிவேயில்லாம சொல்லிக் கொண்டே போகலாம் சார்...

    லேடி sம் முதல் பார்வையில் செம;மனசே என்னிடம் இல்லை...

    சிக்பில் அனைத்தையும் அள்ளுது;அடுத்த வாரம் இதன் விருந்து.

    குட்டி டெக்ஸ்: கில்லியான தரம்.

    ReplyDelete
  14. // Maybe காத்திருக்கும் ஒன்றிரண்டு மும்மூர்த்தி reprints-களை "நி.ந.ப".சைசில் போட்டு ஈடு செய்ய முடிகிறதாவென்று பார்க்கலாம் //

    You are the boss. உங்களுக்கு எது சரி என்பதைத் செய்யுங்கள். எனக்கு மாதாமாதம் காமிக்ஸ் தவறாமல் வந்தால் போதும்.

    ReplyDelete
  15. எடிட்டர் சார்....!
    ஜம்போவில் நான் எதிர்பாரா சர்ப்ரைஸ் ஆக்ஷன் ஸ்பெஷல்.என் அபிமான பழைய நாயகர்களின் மீள் வருகை.

    ஒற்றைக்கண் ஜாக்..சூப்பர் கம்ப்யூட்டர் மேக்ஸ்..007 ஜேம்ஸ் பாண்ட்..யங் டெக்ஸ் என ஆவலை கிளப்புகிறார்கள்.

    ஜெரெமியா இம்முறை ஏமாற்றமாட்டான் என நம்புகிறேன்.
    ஹெர்லக் ஷோம்ஸின் எழுந்து வந்த எலும்புக்கூடும்..விற்பனைக்கு ஒரு பேயும்...அந்நாட்களில் மிகவும் ரசிக்க வைத்தவை.இப்போது எப்படியென்று புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்

    ReplyDelete
  16. ******** நண்பனுக்கு நாலு கால் ******

    அலெர்ட் : கதை அளவாக விவரிக்கப்பட்டிருக்கிறது!

    கிட்ஆர்டினின் டெபுடி ஷெரீப் பணிக்கால ஒப்பந்தம் அன்றிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது!! 12 மணிக்குள் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் கிட்ஆர்டின் கையெழுத்துப் போடவில்லையென்றால், அவனொரு சுதந்திரப் பறவை! கையெழுத்துப் போட்டால் ஷெரீப் டாக்புல்லின் அடிமை!! சொந்தமாக மாடுகள் வளர்த்துப் பெரும் பண்ணை அதிபராகிட கனவு காணும் கிட்ஆர்டினுக்கு அடிமை வாழ்க்கையில் இஷ்டமில்லை! ஷெரீப்புக்கோ தன் அடிமையை இழந்திட மனம் வரவில்லை!!

    குறித்த நேரத்துக்குள் கையெழுத்துப் போடாமல் ஷெரீப்பை ஏமாற்றிய கிட்ஆர்டின், தன் டெபுடி பதவியைத் துறந்து ஷெரீப் ஆபீஸை விட்டு வெளியேறுகிறான்! கிட்ஆர்டினை இழக்க மனமின்றி தவிக்கும் ஷெரீப், சிக்பில், குள்ளன் ஆகியோருக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது! அதாவது, பதவிக் காலம் முடிந்து ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டாலும்கூட, இருவார காலத்துக்குள் அந்த நபர் விரும்பினால் மீண்டும் பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்ற அரசாங்க விதி ஒன்று இருப்பதுதான் அது!!

    கிட்ஆர்டின் தன்னிடமுள்ள மொத்த தொகையையும் கொடுத்து ஒரு பசுவை வாங்குகிறான்! 'மில்க்கி சில்க்கி' என்ற பெயர் கொண்ட அந்தப் பசுவுக்கும், கிட்ஆர்டினுக்கும் ஒருவர்மீது ஒருவர் புரிதல் ஏற்பட்டுவிட - நல்ல தோஸ்த் ஆகிறார்கள்! ஒரு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து ஒற்றை ஆளாக ஒரு பண்ணையை உருவாக்கிடும் முனைப்பில் தீயாய் வேலை செய்கிறான் கிட்ஆர்டின்!! இந்நிலையில் கால்நடைத் திருட்டுக்கும்பலின் கைங்கர்யத்தால் 'மில்க்கி சில்கி' காணாமல் போய்விட, டாக்புல்லின் உதவியை நாடுகிறான் கிட்! ஒரு நிபந்தனையின் பேரில் அவனுக்கு உதவிட முன்வருகிறார் ஷெரீப்!

    * அது என்ன நிபந்தனை?
    * கால்நடை திருட்டுக்கும்பல் மடக்கப்பட்டதா?
    * மில்க்கி சில்க்கியும், கிட்ஆர்டினும் இணைத்தார்களா?
    * கிட்ஆர்டினின் பண்ணையார்க் கனவு பலித்ததா?
    * கிட்ஆர்டினை மீண்டும் தன் டெபுடி ஆக்கிட முனைந்த ஷெரீப் டாக்புல்லின் திட்டம் பலித்ததா?

    என்பதையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திடும் காமெடி மேளாவில் ரகளையாகப் படித்து ரசித்திடுங்கள்!!

    கதைக் களம் அபாரமாக அமைந்துவிட்டால் படைப்பாளிகள் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்பிவிடுவார்கள் என்றிருக்க, மிதப் பங்கான காமெடி வசனங்களை அள்ளித் தெளிக்கும் வேலையை நம் உள்ளூர் படைப்பாளி செவ்வனே செய்து வழக்கம்போலவே பட்டையைக் கிளப்பியிருக்கிறார்!!

    கிட்ஆர்டின் கதைகளில் மீண்டும் ஒரு வெற்றிப் படைப்பு - செம்ம!! செம்ம !!! செம்ம!!!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
  17. 3.படிச்சது....

    குட்டி டெக்ஸ் தானாகவே கைகளில் வந்து அமர்த்து கொண்டது. அசாத்திய சித்திர நேர்த்தி. பனியில் அந்த நெப்ராஸ்கா மாநிலத்துக்கே போனது போல அப்படி ஒரு சில்...

    ப்ளாஷ்பேக்கில் வித்தியாசம் பட்டுனு தெரியும் அளவு துல்லியமான ஓவியங்கள்; அசாத்திய வர்ணக்கலவை...

    இத்தனை துளியூண்டிலும் எத்தனை அழகான ப்ளான்...சான்ஸே இல்லை...

    நிறைய நண்பர்கள் படிக்காத காரணமாக கதையைப் பற்றி பிற்பாடு.

    ReplyDelete
    Replies
    1. ரேட்டிங் 10/10
      ரேங்கிக் 10/10
      மதிப்பெண் 10/10

      Delete
    2. //ரேட்டிங் 10/10
      ரேங்கிக் 10/10
      மதிப்பெண் 10/10//
      +1

      Delete
  18. ///சிரித்து மாளலை சாமி !! நிச்சயமாய் சிறார்களுக்கான கதையல்ல தான் ; நமக்குமே கோக்கு-மாக்கான அந்தக் களம் சரிப்படுமா ? என்று யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன் ! But - வெளியிடுவதென்று தீர்மானித்தால் - 2019-ன் ஜனவரியில் தரையில் உருளத் தயாராகிக் கொள்ளலாம் நாம் ///

    இப்போதே தயாராகி விட்டோம் சார்..!! 😍

    ReplyDelete
  19. ///டைனமைட் ஸ்பெஷலின் சமாச்சாரம் பற்றிக் கேட்கவே வேண்டாம் - simply stunning !! போட்டுத் தாக்குகிறது வர்ணக் கலவை !! /////----

    யாஹீஹீஹீ....யாஹீஹீஹீ....

    ஆகஸ்ட் க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்குனு யாராவது சொல்லுங்களேன்...

    ReplyDelete
  20. எடிட்டர் சார்....!
    ஆக்ஷன் ஸ்பெஷல் விளம்பரத்துல எனக்கொரு சின்ன டவுட்.

    பேர் மின்னல் மனிதன்னு இருக்கு. ஆனா போட்டோ கம்ப்யூட்டர் மனிதனோடது.

    வரப்போறது யார்....? மேனிக்ஸா....? கம்ப்யூட்ர் மனிதனா...?

    ReplyDelete
    Replies
    1. போன பதிவிலேயே கேட்டேன் ஆசிரியர் கவனிக்கவில்லை போலிருக்கிறது

      Delete
    2. நம்மிடம் "அந்த மனிதன்"....."இந்த மனிதன்", என்று ஏகப்பட்ட மனிதர்கள் இருப்பதால் நேர்ந்த குளறுபடி ! Sorry guys !!

      விளம்பரத்திலுள்ள படம் சரியே ; "இயந்திரன்" என்ற பெயரோடு இம்முறை களம் காணவுள்ளார் !

      Delete
  21. சார் அட்டைப் படம் இப்ப பாத்தா ,,,இரவின் ஒளியில் முதலிடம் பவளச் சிலைதான்....இரண்டு லேடி ...மூன்று சிக் நாலு கால் ....௪..கொலைகாரக்காதலி , இவ்வட்டை காலையில் ஜொலிக்கல , இப்ப பட்டாசாருக்கு....உள்ள போனா கோடை மலர் வார்த்தை கலக்க , வழவழப்பான கண்ணாடி அட்டைங்றத போல , அந்த ஹார்டு பவுண்டு , பக்க எண்ணிக்கைன்னு போட்டு தாக்கிருக்கலாமோன்னு தோண...சும்மா கலக்கலா பசிம அடுத்து லேடி வண்ணக்கலவை அசத்த , சிக் கிளாசிக்ஸ் பின்னுது ..அச்சுத்தரம் நேர்த்தி ...குறையேதுமில்லை விஜயகுமாரா

    ReplyDelete
  22. ///"சைத்தான் சாம்ராஜ்யம்" கூட இதே போல் ஜொலிக்கிறது - டிஜிட்டல் கோப்புகளில் !! வரிசையில் அடுத்தது அது தானே ?! ///---அப்படீனா வரும் இறுதி விழாவில் எலக்சன் வைக்காம, அன்னப்போஸ்ட்டாகவே இதை செயிக்க வைத்து விடலாம்....

    சூனியக்காரி மாஷையும், அந்த விநோத விலங்குகளிம், குகையுலக இயற்கை காட்சிகளும் ஜொலிக்குமே....

    ஏகப்பட்ட ஓட்டை வாய் உலகநாதன் மேட்டர்கள் சரமாரியா தாக்குதே...கடவுளே...

    ReplyDelete
  23. /// : நேற்றைக்கொரு கார்ட்டூன் கதையின் மொழிபெயர்ப்பு வந்து சேர, அதனை மேலோட்டமாய்ப் படிக்க ஆரம்பித்தவன் சற்றைக்கெல்லாம் 44 பக்கங்களையும் மேய்ந்த பின்பே ஓய்ந்தேன் ! And சிரித்து மாளலை சாமி !! நிச்சயமாய் சிறார்களுக்கான கதையல்ல தான் ; நமக்குமே கோக்கு-மாக்கான அந்தக் களம் சரிப்படுமா?/// --- இப்படியே எல்லாம் பார்த்தும் ரசித்தும் விடுங்கசார்... 3மாசத்துக்கு ஒருக்கா இப்படி உசுப்பேத்தியே எங்கள எக்ஸ்ட்ரா ஜெலிசில் குடிக்க வைக்கிறீங்களே யுவர் ஆனர்...

    ReplyDelete
  24. 'பவளச் சிலை மர்மம்' - வர்ண ஜாலம்!!

    இப்படியொரு அருமையான படைப்பை நம் வேண்டுகோளுக்கு இணங்க, ரெகுலர் சைஸிலேயே வெளியிட மெனக்கெட்ட எடிட்டர் சமூகத்திற்கு வாசகர் சமூகத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள்!!

    விரைவிலேயே விற்றுத்தீரும் இதழாக இது இருக்குமென்பது உறுதி!! அவ்வளவு நேர்த்தி - புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்!!

    ReplyDelete
    Replies
    1. பாக்கெட் சைசில் இயற்கை காட்சிகள் ரசிக்க முடியாது போயிருக்கும்... நல்லவேளை... நல்ல மனம் வாழ்க...

      Delete
    2. விரைவிலேயே விற்றுத்தீரும் இதழாக இது இருக்குமென்பது உறுதி!! அவ்வளவு நேர்த்தி - புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்!!///


      அப்ப ஈரோட்டில் இரண்டாவது புக் வாங்க முடியாதா..

      Delete
    3. ///அப்ப ஈரோட்டில் இரண்டாவது புக் வாங்க முடியாதா..///

      ஏன் ரெண்டு கண்ணுக்கும் ரெண்டு புக்கு வச்சுப் படிக்கப்போறீங்களாக்கும்?

      Delete
  25. Dear sir jumbo super selection of hero's but DIABOLIC missing sir.please consider in jumbo at least two slots in 2019.Thanks and Regards .Dass.chennai.

    ReplyDelete
    Replies
    1. டயபாலிக் வாங்கியுள்ள சாத்துக்களைக் கொண்டொரு கட்டிடம் கட்டுவதாயின் LIC க்குப் பக்கத்திலேயே அதை விட உசரமானதொரு பில்டிங் எழுப்பிட இயலுமே !

      Delete
    2. Like XIII, we probably can see how many people would sign up if you plan a gundu Diabolic one shot collection (kind of SUPERHIT LIBRARY). I am sure there will be more takers that way. You can start prints after enough people pay - like that of XIII.

      Delete
    3. நான் எப்போதுமே இதுபோன்ற புது முயற்சிகளுக்கு ரெடி தான் சார் ! ஆனால் பொதுவான வரவேற்பு எவ்விதமிருக்குமென்பதில் I have my own doubts !! 2019 -ல் முயற்சித்துப் பார்க்கலாம் - குறைந்தது 400 / 500 முன்பதிவுகள் கிட்டினால் நிஜமாக்கிடலாம் தான் !

      Delete
    4. In fact, Jumbo comics என்ற உடன் மற்றவர்களைப்போலல்லாமல், ஒரே கதாநாயகனின் பல கதை collection அல்லது ஒரே பதிப்பகத்தாரின் காம்போ collection என்று ஒரு எண்ணம் கொண்டிருந்தேன். Just curious to know about the name ..

      Delete
  26. ஆசிரியர் சார் @

    இம்மாத குட்டி டெக்ஸ் "கடேசி பலி" யின் வெளியீடு எண்:323என போட்டு உள்ளீர்கள்.

    லயனில் காலியாக உள்ள வெளியீடு எண்315பிப்ரவரி மாத குட்டி டெக்ஸின் எண் என உறுதி யாகிறது.

    லயன் வெளியீடு எண்கள் 324ம் 322ம் இல்லை. அவைகள் அடுத்த மாதம் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. முன்பே தயாரிப்பு பணிகள் முடிஞ்சதால இந்த முன்பின் மாறிய எண்கள் எனப் புரிகிறது சார்...

    100வது டெக்ஸ் இதழும் & 101வது டெக்ஸ் இதழும் கூட இந்தாண்டே வந்துடும் போல தெரிகிறதே சார்... அதுபற்றி பிறகு ஒரு டல் நாளில் பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. லயன் 315 : TEX - "விரட்டும் விதி "

      லயன் 322 : TEX - "காலனின் கானகம்" (அது எப்போது வெளியானாலும் சரி !)

      லயன் 324 : மேக் & ஜாக் - "வாடகைக்கு கொரில்லாக்கள் "(மே'18 வெளியீடு)

      Delete
    2. எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கதான் ஜெயிப்போம் என்கிற மாதிரி.

      Delete
    3. Which one is 321? I keep on missing something? :(

      Delete
    4. ஆம் 321ம் காணல; அநேகமாக ஜூன் மாத குட்டி டெக்ஸ் ஆக இருக்கலாம்;

      அல்லது லார்கோ வின்ச் ஆக இருக்கலாம்...3மாத இதழ்கள் முன் கூட்டியே பிரிண்ட் அடிச்சதால் இந்த கன்ஃபியூசனாக இருக்கும் போல...

      Delete
  27. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை... அட்டை மட்டும் போட்டு வைத்துள்ளேன்.. ஆனால் பவளச்சிலை மட்டும் புரட்டிப் பார்த்தேன்.. கலரில் தனி லெவலாக உள்ளது.. மே பி, இனிவரும் டெக்ஸ் கதைகளுக்கு பெஞ்ச்மார்க் ஆகிவிடுமோ என பயந்து பயந்து வருது...

    ReplyDelete
    Replies
    1. ஏன் கரூராரே ..உங்களுக்கு அட்டையோடு வரலையா...?..:-)

      Delete
  28. பதிவு மேல் பதிவு
    சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  29. பவளச்சிலை மர்மம் பெரிய சைஸில் தந்ததற்க்கு பெரிய நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  30. ////And சிரித்து மாளலை சாமி !! நிச்சயமாய் சிறார்களுக்கான கதையல்ல தான் ; நமக்குமே கோக்கு-மாக்கான அந்தக் களம் சரிப்படுமா ? என்று யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன் ! But - வெளியிடுவதென்று தீர்மானித்தால் - 2019-ன் ஜனவரியில் தரையில் உருளத் தயாராகிக் கொள்ளலாம் நாம் ///

    போட்டுத் தாக்குங்க சார்!! நீங்களே 'சிரிச்சு மாளலை'ன்னா, உங்க பேனாவின் சகாயத்தால் அது மெருகேறும்போது - எங்களோட கதியை நினைச்சுப் பாருங்க!!

    சிரிக்கணும் சார்... நாங்க நிறைய சிரிக்கணும்... மனசு - மயிலிறகு மாதிரி லேசாகிடணும்... மன இறுக்கங்கள் இறங்கி ஓடிப்போயிடணும்... உடலை அண்டிய பிணிகள் காணாமல் போயிடணும்...

    சீக்கிரமே களமிறக்குங்கள் சார்!!

    ReplyDelete
  31. இதுவரை இந்த மாதத்தில் பத்து பதிவுகள் வந்துவிட்டன... XIIIஐ சிறப்பிக்க 13 பதிவுகளை தொட்டுவிடுவோமா..???

    ReplyDelete
    Replies
    1. ///இதுவரை இந்த மாதத்தில் பத்து பதிவுகள் வந்துவிட்டன... XIIIஐ சிறப்பிக்க 13 பதிவுகளை தொட்டுவிடுவோமா..???///

      அப்படிஇப்படி கஷ்டப்பட்டு எப்படியோ 13 பதிவுகளை போட்டாலும்கூட, அதன்பிறகு ஒரு 'புலனாய்வு' பதிவுவேற கேட்பாங்களே கரூர்கார்?!! ;)

      எடிட்டர் பாவம்ல?

      Delete
  32. மன்னிக்க வேணும்!!

    இந்தமாதம் வெளியாகியுள்ள கிட்ஆர்டின் கதைகள் மொத்தம் நான்கல்ல - ஐந்து என்று போன பதிவில் சொல்லியிருந்தேன்!

    அது ஐந்தும் அல்ல - ஆறு!!

    கிட்ஆர்டின் வாழ்க வாழ்க!! :)))

    ReplyDelete
  33. **** கிட்ஆர்டின் மாதம் *** 'நண்பனுக்கு நாலுகால்' புத்தகத்தில் கதை #2 - நான் மானஸ்தன் *****

    கிட்ஆர்டின் அறியாமல் செய்த சிறு தவறுக்காக, வாள் வீச்சில் தேர்ச்சி பெற்ற புரபஸர் ஒருவரால் விடப்பட்ட 'நீயா-நானா' ஒற்றைக்கு ஒற்றை சவாலை ஏற்கவேண்டிய சூழ்நிலை! நம் கிட்ஆர்டினுக்கோ வாள் வீச்சுப் பற்றி கேள்விப்பட்டது கூடக் கிடையாது!! ஆனால் தன்மானத்தையும், வுட்சிட்டியின் மானத்தையும் காக்க வேண்டிய சூழ்நிலை நம் கிட்ஆர்டினுக்கு!!

    * கத்திச் சண்டை நடந்ததா?
    * கிட்ஆர்டின் கதி என்ன?

    என்பதை ஏழு பக்க சிறுகதையைப் படித்து புன்னகை முகத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்!!

    என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
  34. **** கிட்ஆர்டின் மாதம் *** 'நண்பனுக்கு நாலுகால்' புத்தகத்தில் கதை #3 - கடமை... கண்ணியம் *****

    ஷெரீப் டாக்புல் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட, குற்றங்கள் ஏதும் நடவாமல் நகரை நிர்மானிக்கும் பொறுப்பு கிட்ஆர்டினிடம் வந்து சேருகிறது!!

    அந்த நேரத்தில் மதுபானக்கடையில் நுழைந்து எல்லோரிடமும் கலாட்டா செய்கிறான் பலம் வாய்ந்த முரடன் ஒருவன்!

    அவனைக் கைது செய்து ஜெயிலில் அடைக்கவேண்டிய நிர்பந்தம் நம் கிட்ஆர்டினுக்கு!

    * சாந்த சொரூபியான நம் கிட்ஆர்டினால் அந்த முரடனை சமாளிக்க முடிந்ததா?
    * முரடன் கைது செய்யப் பட்டானா?

    என்பதை ஏழு பக்க சிறுகதையை சிரிக்கச் சிரிக்கப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!!

    முடிவு - ஒரு ஹைக்கூ வடிவிலான காமெடிக் கவிதை!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி எங்களுக்கு புக் வர்றதுக்குள்ள எல்லா விமர்சனத்தையும் போட்டு முடிச்சிடுவிங்க போல.
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      Delete
    2. பேசாம அந்த ஞாபகமறதி ஆத்தாவுக்கு கூழ் ஊத்தறதா நீங்களும் வேண்டிக்குங்க.

      Delete
  35. சார்...பாதிபேரு டெக்ஸ் அட்டைபடத்தை பாராட்டுறாங்க...ஆனா நான் இன்னும் அதையே பாக்கமுடியலை...


    கொரியரே..:-(

    ReplyDelete
    Replies
    1. Same feeling,Same blood தலைவரே.

      Delete
    2. கொரியர் வாழ்க..!!!

      உங்கள் இருவரின் நட்பு கொரியர் கம்பெனிக்கே தெரிந்து உள்ளதே சூப்பர். பாருங்க, இருவரையும் புலம்ப விட்டு அழகு பார்க்குறாகளே...😊😊😊😊

      Delete
    3. இன்னொருத்தர் மேச்சேரியில் புலம்பாம அமைதியா இருக்கார்,மும்மூர்த்திகளின் நட்புனு சொல்லுங்க.

      Delete
    4. என்னது 100வா நோட்ட காணோமா...😊😄😀😅😆😃😁😅

      Delete
  36. வைகிங் தீவு மர்மம் பிறகு கூட வரலாம் அது பாக்கட் சைசில் வந்த சிறிய கதையே...ஆனால் சைத்தான் சாம்ராஜ்யம் வழக்கமான டெக்ஸ் அளவு .பருமனாகவும் இருக்கும் .

    எனவே அடுத்த டெக்ஸ் மறுபதிப்பு சைத்தான் சாம்ராஜ்யம் எனில்


    பெரும் மகிழ்ச்சியே...:-)

    ReplyDelete
  37. எடுக்க வேண்டிய விடுமுறை பாக்கி இருப்பதால் இன்று கொரியரை வாங்கி அனைத்தயும் ரசித்து ஒரு இதழாவது படித்து விட வேண்டும் என்ற முடிவோடு விடுமுறை எடுத்துள்ளேன் ..


    இன்னிக்கும் வரலை....அவ்ளோ தான்...


    நான்...:-(

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு படிக்கறோம்,விமர்சனத்தை போடறோம்.

      Delete
    2. நாளை காலையும் இதே ரிப்பீட் பண்ணுவீங்களா சார்ஸ்....(எஸ்கேப்...டொய்ங்)

      Delete
    3. ஆமா கண்டிடப்பா அதுவும் விட்ல திட்டு வாங்கிட்டே .......
      என்ன அறிவு சார்...
      என்ன பரணி சார் நான் சோல்றது....


      இந்த காமிசு வந்திட கூடாதே
      மனுசனுக்கு ஒலகமே மறந்து போகும்....

      Delete
    4. // நாளை காலையும் இதே ரிப்பீட் பண்ணுவீங்களா சார்ஸ்....(எஸ்கேப்...டொய்ங்)//
      ஓஹோ, அப்ப உங்க வேலைதானா அது?!

      Delete
  38. ஆமா அதுவும் காலாட்டிகிட்டே சந்தோசமா சின்னக்கொழந்தையோட குதூககலத்தோட படிக்கப்பபோறேன்

    ReplyDelete
    Replies
    1. @ j ji

      சின்னக் கொழந்தை மாதிரி காலாட்டிக்கிட்டே காமிக்ஸ் படிக்கிற வேலையெல்லாம் நாங்க பார்த்துக்கிடறோம்...

      வயசானவங்க மாதிரி கை-கால் நடுக்கத்தோட புலனாய்வு மொழிபெயர்ப்பு பணிகளை நீங்க கவனியுங்க, போங்க!! :P :D

      Delete
    2. அய்யோ இத வச்சகிட்டே என்ன கலாய்ச்சு
      கசாயமாக்கிட்டாங்களே

      Delete
    3. கிட்டக்க வாங்கங்க
      நம்ப கா பா 60 பக்கம் தாண்டிட்டாறாம்

      Delete
    4. ஹிக்!! பெரிய்ய விசயம் தான்!!

      எந்த நீலமும், பச்சையும் கூட அவருக்கு ஒரு தடையா இல்லேன்றதும் ஆச்சரியமாத்தான் இருக்கு!! ;)

      Delete
    5. வேணாஞ்சாமி
      நாம ஏதோ எதார்த்தமா பேசப்போக ....அதுவும் வரமொறயோட பேசறப்பவே....
      அதனால கோட் வேர்டுல பேசிக்கிவோம்

      இந்த சித்தர்கள் பாட்டுலாமே ஒருத்தனுக்கும் புரியாத மாதிரி இருக்குமே...

      அதுகணக்கா ...
      நீலம்னா ......ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீடெர்ரர்
      பச்சைன்னா....பிசிபேளா,


      லொக்...லொக்...
      வூட்டுக்காரம்மா பின்னாடி நின்னு பாத்தட்டே இருந்தது தெரியாம போச்சூ..
      எஸ்கேப்ப்பாயிர்ர்ரா J

      Delete

    6. ///÷எந்த நீலமும், பச்சையும் கூட அவருக்கு ஒரு தடையா இல்லேன்றதும் ஆச்சரியமாத்தான் இருக்கு!! ;)//÷


      ஒருவேள கா பா முற்றும் தொறந்தவரா இருப்பாரோ....

      Delete
    7. ஒருபக்கத்துல பாருங்க

      ந ம்ப பெலிசிட்டி பழுப்பு ஶ்ரீஶ்ரீஶ்ரீ டெர்ரர்ராயி பிசிபேளா பாத் எடுக்குறாங்கங்கங்ஙக

      ஙே...


      Delete
    8. பவழச்சில.
      அந்த செவ்விந்திய பொண்ணு ஜீப்பரு..

      நண்பனுக்கு நாலுகாலு

      கி ஆ டைம் அட்ஜஸ்ட் பண்றது ஜீப்பரூ
      அதயே ஷெரீப் பண்றது ஜூப்பரோ ஜூப்பரு


      நைட் பத்து மணிக்கி சிரிசிரி....

      சிரிக்க மிடில ....பு வி

      Delete
  39. லயன் காமிக்ஸ் : 323

    கடைசி பலி ( இலவச இணைப்பு )

    அமெரிக்காவின் கடைக்கோடி நகரமான நெப்ராஸ்காவிற்க்கு ராபின்ஸன் கோட்டையின் கமான்டரின் வேண்டுகோளின்படி முக்கியமான காரியத்தினை செய்து முடித்திட வரும் டெக்ஸ் வில்லர் அங்கே வெகுமதி வேட்டையன் ஸ்காட்டை காண்கிறார் ஆனால் அவருக்கு ஸ்காட்டை தெரியவில்லை . 17 வருடங்களுக்கு முன் நடந்த வற்றை சொல்லி டெக்ஸ் க்கு புரிய வைக்கும் ஸ்காட் தான் வந்த வேலையை பற்றி கூறுகிறார்.

    இருவருக்கும் அவரவர் வேலைகள் என்னென்ன. ?
    வெகுமதி வேட்டையன் ஸ்காட் அங்கே வரக் காரணம்தான் என்ன. ?

    கலர் திரையில் காண்க ....

    இதில் ஓவியங்கள் & வர்ணங்கள்
    10000 வாலா சிவகாசி பட்டாஸ் ரகம்
    அவ்வளவு அருமையாக கண்ணுக்குள் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கிறது !!! 😱😱😱

    அதிலும் குறிப்பாக டெக்ஸ் அறிமுகமாகும் இடம் மார்வலஸ்
    இளவயது & வயது மூத்த டெக்ஸ் இருவகையான முகபாவங்கள் அருமையோ அருமை.. l <3 vely

    சண்டை களங்கள் எதிர்பாராதது

    சின்னக்கதையாகினும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ( வர்ணச்சேர்க்கைககள் & ஓவியத்திற்காக )

    எனது மார்க் 08/10
    ( ஓவியத்திற்க்கு 04
    வர்ணச்சேர்க்கைக்கு 04 )

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற சிறு கதைகளை - புது ஓவியர்களைப் பரீட்சித்துப் பார்க்கும் களங்களாகவும் பயன்படுத்துகின்றனர் ! இதுவரையிலும் நம்மளவுக்கு சூப்பர் என்பேன் !

      Delete
  40. டெக்ஸுக்கு .சண்டையில் காயம் படுமா? குண்டுகள் தீராதா? நண்பர்களுக்காக உயிரை கொடுப்பாரா? இந்த மர்மங்க ளுக்கு விடை பவளச்சிலை மர்மத்தில் .ப வளச்சிலை அகற்குரிய இடத்தில் சென்று சேர்ந்து விடுகிநது. அந்த செவ்விந்திய பெண் எங்கு சென்றாள் என்பது தான் பவளச் சிலை மர்மமோ ? சித்திரம் வண்ண சேர்க்கை நன்று

    ReplyDelete
    Replies
    1. "மாடஸ்தி ப்ளைசி"-----

      ஒரு வருடமாக இந்த ஒரு வார்த்தையை தவிர வேறொன்றும் உதிர்க்காத இனியரிடமிருந்தே பவளசிலையைப் பற்றிய சிலாகிப்புகள் வருதுனா பவளச்சிலையின் வசீகரமும், பிரம்மாண்டமும் எத்தகையது என புலனாகும்...!!!

      Delete
    2. தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் காரணம் புரிகிறது இப்போது !!

      Delete
    3. டெக்ஸுக்கு தனி சந்தா இருப்பதால் சந்தா கட்டும் அவரது ரசிகர்களை விட ஒரே ஒரு மாடஸ்டி புக்குக்காக எல்லா சந்தாவையும் கட்டும் மாடஸ்டி ரசிகனின் காமிக்ஸ் காதல் அதிகம் ஜி. முன்பு காமிக்ஸ் பயணத்தில் அப்போதைய வயதில் என்னால் தனியே முனக தான் முடிந்தது. எடியின் பயணம் வெற்றிகரமாக தொடர என்னால் இப்போது தோள் கொடுக்கவும் முடியும்

      Delete
  41. Editor Sir, I have paid for Jumbo and I want all the books. As I didn't see any options in our web I'm posting it here. Have a great day guys.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் ஓ.கே. எனில் எதுவும் சொல்லத் தேவை கிடையாது சார் ! குறிப்பிட்ட இதழ்கள் வேண்டாமெனும் பட்சத்தில் - அந்தந்த இதழ்கள் வரவுள்ள வாரத்தில் NO சொல்லி ஒரு மின்னஞ்சல் அல்லது ஆபீசுக்கு வாட்சப் தகவல் !

      Delete
  42. ஏப்ரலில் படிக்கலாமென்று எடுத்து வைத்தபோது, என்னையறியாமல் நப்பாசையால் டெக்ஸின் 32 பக்க சிறுகதையை படித்துவிட்டேன்.. மிக அருமை.. சிறு கதையா இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு சேதி என்னவெனில் - முழுக்கவே வர்ணத்தில் வரையப்பட்ட சித்திரங்கள் சார் - இந்தத் தொடர் முழுசுமே !!

      Delete
  43. ஹைய்யா!! ஜம்போ காமிக்ஸுக்கான சந்தாத் தொகையை நானும் IMPS மூலமா சித்தே முன்னே செலுத்திட்டேன்!

    நாங்களும் பெரிய்ய ஜம்போகாரவுஹ தான், தெரிஞ்சுக்கோங்க!

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவுக்கு ஜம்ப் செய்து சந்தா செலுத்தியதால் இன்று முதல் "ஜம்போவான் " என்று அன்போடு அறியப்படுவீராக !!

      Delete
    2. ஹைய்யா!! ஜாம்பவான் ஆகணும்றது என்னோட ஆசை! ஆனா, இப்போ அதைவிடப் பெரிய ஜம்போவான் ஆகியிருப்பதில் ஈவி ஹேப்பி அண்ணாச்சி!!

      ஜம்போவான் ஈவி - ஆஹா!!

      Delete
  44. புத்தகங்களை கைப்பற்றியாச்சி.இனி வாசிப்பு வேட்டை ஆரம்பம்.

    ReplyDelete
  45. பவளச்சிலை மர்மம் ஆல்டைம் பேவரிட்ல ஒண்னு

    ReplyDelete
  46. முதல் புரட்டலில் எல்லாமே அசத்துது,எதுக்கு முதலிடம் தர்றதுன்னு கொஞ்சம் குழப்பாமாதான் இருந்தது.
    தயாரிப்பு தரத்தில்
    1.பவளச் சிலை மர்மம்தான் முதலிடம்,சான்ஸே இல்ல கலர்ல அள்ளு தெறிக்குது-10/10,
    2.சிக்பில் கிளாசிக்,நண்பனுக்கு நாலுகால்,பூமிக்கொரு போலீஸ்காரன்,குட்டி கலர் டெக்ஸ்-9.5/10.

    ReplyDelete
  47. அட்டைப்பட ரேங்கில்,
    1.சிக்பில் க்ளாசிக்கும்,நண்பனுக்கு நாலுகால் முதலிடத்தையும்.
    2.பூமிக்கொரு போலீஸ்காரன்,பவளச்சிலை மர்மம் இரண்டாமிடத்தையும் கைப்பற்றுகிறது.

    ReplyDelete
  48. Dear Editor,

    Just checking to see if the combo edition of the 32 page TEX (* 3) is on Track for June as well. Very keen to have that purchased.

    ReplyDelete
  49. காமெடிகென்று ரசிகர் கூட்டம் இருந்தும் சிக் பில்(ஆர்டின்) கிளாசிக்கிற்க்கு என்னுடையது தான் முதல் ஒட்டாக பதிவாகியுள்ளது..
    Kok,midun மற்ற சகோதரர்கள் எல்லாம் எங்க போனீங்க ??
    வந்து ஓட்டு போட்டு கிட்'ட முதலிடத்துக்கு கொண்டு வாங்க ..

    ReplyDelete
    Replies
    1. புக் தராம ஆப்பு வெச்சிட்டாகளே கொரியாஸ்..்

      Delete
  50. ஆசிரியர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.2019 குண்டு டயபலிக் try பண்ணலாம் சார்.

    ReplyDelete
  51. @ ALL :

    ஜம்போ காமிக்ஸ் சந்தாவினை இப்போது ஆன்லைனிலும் செலுத்தலாம் : http://lioncomics.in/advance-booking/498-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html

    ReplyDelete
  52. பூமிக்கொரு போலீஸ்காரன்,
    நாயகி சூஸன் பிட்ஸ்ராய் என அழைக்கப்படும் ஷானியா "கேட்ரிக்" எனும் ஐரோப்பிய அமைப்புடன் (பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நிறுவனம்) தொடர்பு வைத்துள்ளார் என சந்தேகிக்கும் CIA அமைப்பு விர்ஜினியாவில் உள்ள லாங்வே நகரில் ஆலோசனை நடத்தி இதற்கான புலனாய்வு பொறுப்பை மர்டாக் எனும் CIA அதிகாரியிடம் ஒப்படைக்கிறது,
    ஷானியாவும் அவரது தந்தையும்
    கோட்டே-டி-அஸூரில் உள்ள மென்டன் மாளிகையில் ஓய்வெடுக்க செல்கின்றனர்.
    மர்டாக் திட்டப்படி தூண்டில் புழுவாக ஷானியாவை பயன்படுத்த வேண்டி அவரது தந்தை ஜேம்ஸ் ஏர்ல் பில்ட்ராய் தூதரை கடத்துகின்றனர்.
    ஷானியாவை மயக்கத்திற்கு உட்படுத்தி அவரையும் கடத்தி உளவறிய காலணியில் மைக்ரோசிப்பை பொருத்துகின்றனர்,கடத்தப்படும் முன் நடக்கும் கைகலப்பில் ஷானியா கடத்தல்காரனின் முகத்தை காணுகிறார்.
    பின்னர் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஷானியாவை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுவிட்டு செல்ல,ஷானியாவுக்கு ஏற்கனவே அறிமுகமான ரால்ப் எல்லிங்டன் அங்கே வருகிறார்,ரால்ப்பும் CIA வின் பணியாள்,அதேநேரத்தில் அங்குவரும் போலீஸாரும் ஷானியாவை விசாரிக்க கடத்தியபோது இனம் கண்ட நபரின் அடையாளத்தை தெரிவிக்கிறார்,கம்யூட்டரின் உதவியால் முகத்தை இனம் காண்கின்றனர்,திடீரென அங்கு வருகை புரியும் ஓரியன் எனப்படும் மேஜர் மாட்ரியர் DST அமைப்பு பொறுப்பாளர்,வேகமாக ஷானியாவை அங்கிருந்து அழைத்து செல்ல முயலும் போது,ரால்ப்பின் தகவலால் மேலிடத்தின் உத்தரவுப்படி அங்கு வேகமாக வரும் வேன் ஓரியனை இடித்து வீழ்த்த,ஷானியாவை "வீல்" செல்லும் விரைவு இரயிலில் கிளம்ப பணிக்கிறார்,
    அதைக் காணும் ஓரியனை இடித்த வேனும் இரயிலை பின்தொடர்கிறது.
    இடையில் இரயிலில் ரால்ப் ஏறி ஷானியாவை கண்காணிக்க,"வடை சுடும் பாட்டி" என்று அறிமுகமாகும் பாட்டியாரின் உதவியுடன் இரயிலில் இருந்து இருவரும் எஸ் ஆகிறார்கள், பின்தொடரும் ரால்ப்பை "வடை சுடும் பாட்டி" சாமர்த்தியமாக துப்பாக்கி முனையில் தள்ளிக் கொண்டு போய் லேடீஸ் டாய்லெட்டில் அடைக்கிறார்.
    பின் மைக்ரோ சிப்பை இனம் கண்டறிந்து "வடை சுடும் பாட்டி" நம் மனதையும் சுடுகிறார்.
    பாட்டியின் உதவியுடன் "மையம்" எனப்படும் இடத்திற்கு செல்லும் வழியில் ரால்ப் ஷானியாவின் கைபேசி மூலம் அவரின் இருப்பிடத்தை காண முயல்கிறார்.இடையே பின் தொடர்ந்து வரும் கடத்தல் வேன் காவல்துறையின் சோதனையைக் கண்டு அவசரமாக பின்வாங்க,வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கி போலீஸிடம் மாட்டுகின்றனர்.
    அவர்கள் கொடுக்கும் தகவலால் ரால்ப்பையும் பிடிக்கின்றனர்,
    ஷானியா தன் இலக்கான "மையம்" எனப்படும் இடத்திலுள்ள மவுண்டன் ப்ளவர்ஸ் எனும் ஓய்வு விடுதியை காண முதியவர் உதவியுடனும் அடுத்து ஓர் இளைஞன் உதவியுடனும் தொடர்ந்து ஒரு ட்ரக்கின் டிரைவர் உதவியுடனும் சென்றடைய,
    அங்கே,Catrig அமைப்பை உருவாக்கிய The Centaur எனும் பட்டப்பெயரை சூட்டிக் கொண்டிருக்கும் மனிதரை காணுகிறார்.அவர் இது வெறும் முதியோர் அமைப்பு அல்ல,இங்கு ஐரோப்பிய செயற்கை கோள் மூலம் பல செய்தி பரிமாற்றங்கள் நிகழ்கிறது என்று விளக்குகிறார்.
    மேலும்,இந்த அமைப்புக்காக ஷானியா பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார், மேலும் ஷானியாவின் தந்தையை மீட்கவும் உரிய உதவியை செய்வதாகவும் வாக்களிக்க,தற்போது தனது தந்தை வருவதே தனக்கு முக்கியம் என விடைபெறுகிறார்,
    இடையே ஷானியா முன்பு "மெளஸ்" எனப்படும் புனைப்பெயரில் சிறு திருட்டுக்களை நிகழ்த்தியதாகவும்,"மெளஸின்" கைரேகையும்,ஷானியாவின் கைரேகையும் ஒத்துப் போவதாகவும் போலீஸின் விசாரணை திசைதிரும்ப,விசாரணையில் ஷானியா அதை சாமர்த்தியமாக மறைக்க,இடையே The Centaur கட்டளைப்படி ஆண்டன் என்பவனின் கைங்கர்யத்தால் ஷானியாவின் முந்தைய "மெளஸ்" பைல்கள் கவரப்படுகிறது,அதனுடன் கம்பூட்டரில் உள்ள மெளஸின் தகவல்களும் ஹேக் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றன.
    பின்னர் மருத்துவமனை சென்று ஓரியனை நலம் விசாரிக்கும் ஷானியா விடைபெறும்போது நம்மிடையே மீண்டும் ஒரு சந்திப்பு விரைவிலேயே நிகழும் என்று நம்புகிறேன் என்று ஓரியன் சிரிக்கிறார்.
    -நிறைவு.
    அடிதடி ஆக்‌ஷன் அதிகம் இல்லாமல் ஒரு பரபர ஆக்‌ஷன் கதை.
    சுவராஸ்ய வாசிப்புக்கு உத்திரவாதம்
    "பூமிக்கொரு போலீஸ்காரன்".
    என்னுடைய ரேட்டிங்-9/10.

    ReplyDelete
    Replies
    1. முடிந்த மட்டும் விளக்கியிருக்கேன்.

      Delete
    2. @ Arivarasu @ Ravi

      வாவ்!! இவ்வளவு பெரிய பத்தியில் ஒரு பிழை கூட இல்லாமல் மிக நேர்த்தியாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லியிருக்கிறீர்கள்!! அருமை அருமை!!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. எடிட்டர் சார்... 'இ.ப' புரூப் ரீடிங் பணிக்கு இவரை விட்றாதீங்க!!

      Delete
    5. இ.ப ப்ரூப் ரீடிங்க்கு என்னை மறந்திடாதீங்க!!!!

      Delete
    6. Arivarasu @ Ravi has :

      நண்பர் அறிவரசு அவரகளே, ஒவ்வொரு கதையையும் நன்றாக படித்து, மனப்பாடம் செய்து, பிறகு ஆசிரியரிடம் ஒப்புவிப்பது ஏனோ?

      நீங்கள் ஒரு நல்ல மாணவன் என்பதாலோ?

      #சத்தியமா மிடியல :P

      Delete
    7. Arivarasu @ Ravi has:

      கமெண்டு படிச்சா கதய படிக்க வேணா :P
      கதய படிச்சா கமெண்டு படிக்க வேணா :P

      #ஏம்பா இப்படியா முழு கதையை ஆசிரியருக்கு ரிப்பீட் பண்ணுவீங்க? என்னவோ போடா மண்ணடி மாதவா :P

      Delete
    8. @ Udaya Kumar

      எப்பவும் குற்றம் குறைகளையே குடைந்து கொண்டிராமல் கொஞ்சம் நேர்மறை கருத்துக்களையும் இங்கே பதிய முயற்சிக்கலாமே?
      'எனக்கு அதெல்லாம் வராது' என்பது பதிலாக இருந்தால் இங்கே வாங்கிக்கட்டிக் கொள்வதையும் இனி தவிர்க்க இயலாது!!

      பொறுமையின் இருப்பிடமாகிய அறிவரசு ரவியையே இவ்வளவு சினம் கொள்ள செய்திருப்பது - எனக்கே ஆச்சரியமளிக்கிறது!

      Delete
    9. //'எனக்கு அதெல்லாம் வராது' என்பது பதிலாக இருந்தால் இங்கே வாங்கிக்கட்டிக் கொள்வதையும் இனி தவிர்க்க இயலாது!! //
      ஈ.வி ஹா,ஹா,ஹா.

      Delete
    10. ///பொறுமையின் இருப்பிடமாகிய அறிவரசு ரவியையே இவ்வளவு சினம் கொள்ள செய்திருப்பது - எனக்கே ஆச்சரியமளிக்கிறது!///

      உண்மைதான்... எனக்குமே திகைப்பாக இருக்கிறது.!

      Delete
  53. Sir,

    I request to publish DANGER DIABOLIC special stories like tex willer hard bound books.

    Regards

    V.SUNDARAVARADAN
    LITTLE KANCHEEPURAM
    CELL :: 7667291648.

    ReplyDelete
  54. அனைத்தது கதைகள் ..... ஆகா! ஓகோ! சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பரு..ஹே..அப்படி போடுங்க சார்... ஐத்தலாக்கா ஜம்தலக்கா..!!!

      Delete
  55. JUMBO கடைகளுக்கும் வருமா சார் ... இல்லை பிரத்யகமாக சந்தாவிற்கு மட்டும் தானா ?? இதழ்கள் எப்போதிலிருந்து வெளியாகும் சார் ..

    ReplyDelete
  56. கடைசிப் பலி,
    ஸாம் பாக்கெட் என்பவனைத் தேடி நெப்ராஸ்காவில் உள்ள ஒரு விடுதிக்கு வந்து தங்கியிருக்கிறான் வெகுமதி வேட்டையன் எனப்படும் ஸ்காட் வானபே,
    ராபின்சன் கோட்டையில் ஒரு நண்பனை சந்திக்கும் காரணத்துடன் அதே விடுதிக்கு வந்து தங்குகிறார் நமது கீர்த்திமிகு டெக்ஸ் வில்லர்.
    டெக்ஸுடன் அறிமுகமாகும் ஸ்காட் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பாக நெக்ராஸ் எனும் சிறுநகரில் இசிட்ரோ என்பவனை வேட்டையாட வரும் டெக்ஸை சந்தித்துள்ளதாகவும்,வெகுமதிக்காக இசிட்ரோவின் சடலத்தை பெற்றுச் சென்றதாகவும் கூறுகிறான்.
    உடன் ஸ்காட்டின் வருகையின் நோக்கம் பற்றி டெக்ஸ் வினவ ஸாம் பாக்கெட் என்பவனைத் தேடி போட்டுத் தள்ள வந்திருப்பதாகவும்,ஸாம் ஒரு போக்கிரி கும்பலை சேர்ந்தவன் என்றும் அந்த கும்பல் தனது சகோதரனை தேவையில்லாமல் கொன்று விட்டதாகவும்,அந்த கும்பலை 17 ஆண்டுகளாக தேடித்தேடி வேட்டையாடி வருவதாகவும் ஸ்காட் கூறுகிறான்.
    பின்னர் ஸ்காட் விடுதி உரிமையாளரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு தர சஞ்சலமுறும் விடுதி உரிமையாளரின் மனைவி பாதுக்காப்புக்காக டெக்ஸின் உதவியைக் கோருகிறார்.
    அப்போது நகருக்குள் ஸ்வீடு என்பவனின் தலைமையில் நுழையும் போக்கிரிக் கும்பல் ஒன்று சலூனுக்குள் போகிறது,அங்கே இருக்கும் டெக்ஸ் ஸ்வீடை விசாரிக்க,இடையில் புகும் ஸ்காட் ஸாம் பாக்கெட் பற்றி சற்றே கிண்டல் தொனியில் ஸ்வீடிடம் விசாரிக்க,கடுப்பாகும் ஸ்வீடு ஸ்காட்டை அடித்து நொறுக்க கலவர மேகம் சூழ்கிறது,நடக்கும் துப்பாக்கி சண்டையில் ஸ்வீடு மற்றும் அவன் ஆட்களை டெக்ஸும்,ஸ்காட்டும் போட்டுத் தள்ளுகின்றனர்.
    பின் சலூனில் இருந்து கோபமாக வெளிவரும் ஸ்காட் அங்கே இசை ஆரவாரத்துடன் பாடிக் கொண்டிருக்கும் ஒருவரை குரோதத்துடன் துப்பாக்கி முனையில் விசாரிக்க,திடீர் திருப்பமாக இடையில் புகும் விடுதியின் உரிமையாளர் தான்தான் ஸாம் பாக்கெட் எனக் கூறிக்கொண்டே முன்வர,அவரைப் போட்டுத் தள்ள ஸ்காட் முனையும்போது இடைமறிக்கும் டெக்ஸ் ஸ்காட்டை பரலோகத்திற்கு அனுப்புகிறார்.
    மடியும் இறுதிக் கணத்தில் " இங்கு எதற்குத்தான் வந்தாய் டெக்ஸ் " என வினவ,ஸ்வீடின் அளவுக்கு மிஞ்சிய அட்டகாசத்தால் இங்குள்ள மக்களின் நலன் வேண்டியும்,அவன் கொட்டத்தை அடக்கவும் ராபின்சன் கோட்டையில் உள்ள கமாண்டரின் வேண்டுகோளை ஏற்று தான் இங்கு வந்ததாக கூறும் டெக்ஸ்,ஸாமை நோக்க,தனது கைகளில் இரத்தக் கறை தான் அந்த போக்கிரி கும்பலின் வெறும் குதிரை பராமரிப்பாளன் மட்டுமே என்ற ஸாம் பாக்கெட்டின் பேச்சில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு அவனை நோக்கி இனி கவனமுடன் வாழ அறுவுறுத்தி விடை பெறுகிறார்.
    பெயருக்கு 32 பக்க சாகசமாக இருந்தாலும் இதில் ஆக்‌ஷன் அனல் பறக்கிறது.
    அட்டகாசமான ஒரு சாகஸமிது.
    டெக்ஸின் மினி டைனமைட் சாகஸம் என்றும் சொல்லலாம்.
    வசனங்கள் அசத்தல் ரகம் குறிப்பாக,
    1.ஆனாலும் உங்களுக்கு அவையடக்கம் ஜாஸ்தி! கருவிலிருக்கும் குழந்தைக்குக் கூட உங்களைப் பற்றி தெரியுமே மிஸ்டர் வில்லர்? நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு முன்பாகவே உங்களது கீர்த்தி பயணிப்பது தவிர்க்க இயலா நிகழ்வு!
    2.விதிகள் ரொம்பவே சுலபம் என்பதால் நானே அறிவித்து விடுகிறேனே?
    3.வாஸ்தவம்தான்! ஆனால்,எரிமலையே ஆனாலும் பொங்கித் தீர்த்தான பின்பு அமைதி கொள்வது இயல்புதானே?
    4.உன்னைப் பற்றியும் எனக்கு நிறையவே தெரியும்! உன்னைக் கால்மிதியாகப் பயன்படுத்தி வரும் பட்டாளத்திலிருந்து கம்பி நீட்டிய அந்தத் துரோகியைப் பற்றியும் நிறையவே தெரியும்!
    5.என்ன ஒரு அசாத்தியமான மனிதர் இவர்!
    6.நூற்றில் ஒரு வார்த்தை! வேகம் மட்டுமல்ல விவேகமுமே இவரது துணைவர்கள்.
    -அட்டகாசமான வசனங்கள்.
    எனது ரேட்டிங்-10/10.

    ReplyDelete
    Replies
    1. படிக்காதவர்கள் தாண்டிச் செல்லவும்.

      Delete
    2. நான் தாண்டிச் சென்று விட்டேன் சார்.

      குட்டியூண்டு டெக்ஸுக்கு இவ்ளோ பெரிய விமர்சனம் மலைப்பைத் தருகிறது.

      Delete
    3. // குட்டியூண்டு டெக்ஸுக்கு இவ்ளோ பெரிய விமர்சனம் மலைப்பைத் தருகிறது.//
      கதையில் வலு இருப்பதனாலும்,ரசிக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாலுமே கொஞ்சம் விரிவான விமர்சனம். மற்றபடி வேறொன்றும் இல்லை கோவிந்த்.

      Delete
    4. இந்தக் கதையின் மூடுக்கு வரிகள் தாமாய் அமைந்துவிட்டன சார் ; கார்சன் இல்லாத கதையும் என்பதால் டயலாக்குகளில் கொஞ்சம் முதிர்ச்சி இருப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைத்தேன் !

      Glad it came out ok...

      Delete
    5. Arivarasu @ Ravi has :

      நண்பர் அறிவரசு அவரகளே, ஒவ்வொரு கதையையும் நன்றாக படித்து, மனப்பாடம் செய்து, பிறகு ஆசிரியரிடம் ஒப்புவிப்பது ஏனோ?

      நீங்கள் ஒரு நல்ல மாணவன் என்பதாலோ?

      #சத்தியமா மிடியல :P

      Delete
    6. Arivarasu @ Ravi has:

      கமெண்டு படிச்சா கதய படிக்க வேணா :P
      கதய படிச்சா கமெண்டு படிக்க வேணா :P

      #ஏம்பா இப்படியா முழு கதையை ஆசிரியருக்கு ரிப்பீட் பண்ணுவீங்க? என்னவோ போடா மண்ணடி மாதவா :P

      Delete
    7. //நண்பர் அறிவரசு அவரகளே//
      முதலில் உன்னை போன்ற தரங்கெட்ட ஆட்களுக்கு நட்புனா என்னனு தெரியுமா மிஸ்டர்.ஒதயகொமாரு,
      நல்ல நட்பு தப்பை செஞ்சா தனியா கூப்பிட்டு நாகரீமாக சுட்டிக் காட்டும்,நல்லது செஞ்சா பொதுவில் வைத்து பாராட்டும்.
      உன்னை மாதிரி ஆட்களிடம் நல்ல நட்பை பத்தி பேசறதே தப்பு,
      உனக்குத்தான் ஒண்ணுமே கிடையாதே.எதனை முறை அசிங்கபட்டாலும் துடைச்சி தூக்கி போட்டுட்டு வருவிங்களே.

      Delete
    8. Arivarasu @ Ravi

      எங்க வந்து என்ன வேலை பாக்குறிங்க.? இது காமிக்ஸ் தளம்னு தெரியுமோல்லியோ.!? இங்க வந்து காமிக்ஸ் படிச்சிட்டு விமர்சனத்தை பகிர்ந்துக்கலாமோ ..தப்போல்லியோ ..!
      நீங்க என்ன பண்றிங்க ரவி .. கடேசியா பாத்த ஹிந்திப்படம் அப்புறம் கொரியப்படம் முடிஞ்சா மலையாளப்படம் பத்தின விமர்சனங்களை மட்டும் இங்கே பதியுங்கோ.! (முடிஞ்சா ஊ டூப்பு லிங்கையும் இங்க எங்கயாச்சும் க்ளிக்கி வைங்கோ.)
      அப்பத்தான் மண்ணடி மாதவாஸோட தோஸ்த்துக்கு குஜாலா இருக்கும்.!

      Delete
    9. // நீங்கள் ஒரு நல்ல மாணவன் என்பதாலோ? //
      நான் மாணவன் என்று உனக்கு எப்படி தெரியும்? உனக்கு பயிற்சி கொடுத்தவங்க சொன்னாங்களா?

      Delete
    10. // ஒவ்வொரு கதையையும் நன்றாக படித்து, மனப்பாடம் செய்து, பிறகு ஆசிரியரிடம் ஒப்புவிப்பது ஏனோ? //
      உனக்கு திறமையும்,காமிக்ஸ் மேல காதலும் இருந்தா,உனக்கு தில் இருந்தா ஒரு காமிக்ஸ படிச்சிட்டு வந்து நல்ல ஒரு விமர்சனத்தை எழுது,அதுக்கு துப்பில்லாம எழுதுறவன் மேல ஏன் பாயற,உன்னை மாதிரி ஆட்களுக்கு பதில் சொல்லித்தான் என்னைப் போன்றவர்களின் காமிக்ஸ் காதலையும்,ஆசிரியர் மேல் இருக்கும் மதிப்பையும் நிரூபிக்க வேண்டுமா என்ன?

      Delete
    11. Arivarasu @ Ravi

      Please calm down. உங்கள் வார்த்தை பிரயோகம் சங்கடமாய் உள்ளது. அந்த நண்பர் எப்படி இருப்பினும் நாம் கனிவாக நடந்து கொள்வோமே !

      Delete
    12. பொதுவில் சபை நாகரீகம் இல்லாமல் பேசுவதை நான் விரும்பாதவன்,ஆனா நாம என்ன பண்ணனும்னு சில நேரங்களில் மத்தவங்கதான் முடிவேடுக்கறாங்க.

      Delete
    13. //நான் மாணவன் என்று உனக்கு//

      நல்லதை எடுத்துச் சொன்னால் இங்கு அவமரியாதை. மனம் ரணமாகிறது :((

      Delete
    14. // Please calm down. உங்கள் வார்த்தை பிரயோகம் சங்கடமாய் உள்ளது. அந்த நண்பர் எப்படி இருப்பினும் நாம் கனிவாக நடந்து கொள்வோமே !//
      அருமை நண்பர் ரட்ஜா,மன்னிக்கவும் இந்த பதில் என்னை சீண்டியதால் அல்ல.காமிக்ஸ் மேலும் ஆசிரியர் மேலும் நான் வைத்துள்ள மதிப்பு அளவிட முடியாதது,மேலும் நட்பின் தூய்மையை என்றும் மதிப்பவன் நான்,அதை எனதருமை நண்பர்கள் அறிவார்கள்,நட்பின் பெயரால் மேலே உள்ள சிலரின் கருத்துக் குப்பைகளை பார்க்கும்போது ரொம்பவே சங்கடம் நேருகிறது.
      தடங்கலுக்கு வருந்துகிறேன்.

      Delete
    15. Calm down ரவி!
      தெளிவான நோக்கத்தோடு, மற்றவர்களை சீண்டி கலவரம் ஏற்படுத்தவென்றே சில ஐடி கள் சமீபமாக இங்கே சுற்றிவருகின்றன.!
      இங்கே ரெகுலராக காமிக்ஸ் கலந்துரையாடும் நண்பர்களை நோகடித்து வரவிடமால் செய்யவேண்டுமென்ற உன்னத லட்சியத்தோடு செயல்படும் அவர்களுக்கு தரம் தாழாமல் பதிலடி கொடுப்போம்.!

      Delete
    16. //மனம் ரணமாகிறது.//
      நிறைய நாடகம் பார்ப்பிங்களோ????
      என்கிட்ட விவாதிக்க உங்களுக்கு உண்மையா ஆர்வம் இருந்தா ஈரோட்டில் புத்தக விழாவுக்கு வருவேன்,நீரும் வரலாம்,தாரளமாக உரையாடக் காத்திருக்கிறேன்.

      Delete
    17. //அவர்களுக்கு தரம் தாழாமல் பதிலடி கொடுப்போம்.! //
      ஓகே கண்ணன்.

      Delete
    18. ///நல்லதை எடுத்துச் சொன்னால் இங்கு அவமரியாதை. மனம் ரணமாகிறது :((///

      யாருக்கு நல்லது? உங்களை எழுதவைப்பவருக்கா?
      மற்றவர் மனங்களை ரணப்படுத்துவதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கும் உங்க குழுமத்திற்குகூட ரணம் ஏற்படுகிறதா ..??ஆச்சர்யம்தான்.!!

      Delete
    19. @ Udaya Kumar

      எப்பவும் குற்றம் குறைகளையே குடைந்து கொண்டிராமல் கொஞ்சம் நேர்மறை கருத்துக்களையும் இங்கே பதிய முயற்சிக்கலாமே?
      'எனக்கு அதெல்லாம் வராது' என்பது பதிலாக இருந்தால் இங்கே வாங்கிக்கட்டிக் கொள்வதையும் இனி தவிர்க்க இயலாது!!

      பொறுமையின் இருப்பிடமாகிய அறிவரசு ரவியையே இவ்வளவு சினம் கொள்ள செய்திருப்பது - எனக்கே ஆச்சரியமளிக்கிறது!

      @ அறிவரசு
      இவங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆக்ரோஷத்தைக் கொட்டி எனர்ஜியை வேஸ்ட் பண்ணவேண்டாம் நண்பரே!! கூல்!!!

      Delete
    20. எல்லாதையும் பாராட்டுவோம்,நல்லதை பாராட்டுவோம்,
      பாராட்டினால் கிடைப்பது மகிழ்ச்சி,மகிழ்ச்சியா இருந்தால் கிடைப்பது மனத்திருப்தி,நல்ல மனத்திருப்தியால் கிடைப்பது நல்ல ஆரோக்கியம்,நல்ல ஆரோக்கியத்தால் கிடைப்பது நீண்ட ஆயுள்,நீண்ட ஆயுளால் கிடைப்பது நிறைய காமிக்ஸ்.
      ஆக சந்தோசமா இருப்போம்,நிறைய காமிக்ஸ் படிப்போம்.

      Delete
    21. //எப்பவும் குற்றம் குறைகளையே குடைந்து கொண்டிராமல் கொஞ்சம் நேர்மறை கருத்துக்களையும் இங்கே பதிய முயற்சிக்கலாமே?
      'எனக்கு அதெல்லாம் வராது' என்பது பதிலாக இருந்தால் இங்கே வாங்கிக்கட்டிக் கொள்வதையும் இனி தவிர்க்க இயலாது!!//

      குற்றம் குறைகளை மட்டுமே கூறவேண்டும் என்ற நினைப்பிருந்தால், சென்ற பதிவில் நான் மௌனமாக அமைதி காத்திருந்திருக்க மாட்டேனே?!

      .இங்கு முழு கதையையும் கூறிவிட்டால் Sales பாதிக்காதா விஜய்??

      Delete
    22. // இவங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆக்ரோஷத்தைக் கொட்டி எனர்ஜியை வேஸ்ட் பண்ணவேண்டாம் நண்பரே!! கூல்!!! //
      உங்களைப் போன்ற நல்ல நண்பர்கள் இருக்கும்போது எனக்கென்ன டென்ஷன் ஈ.வி.
      ஹா,ஹா,ஹா.
      அடுத்து சிக்பில் படிக்கணும்,அதுக்காகவாவது சந்தோஷமா இருக்கணுமே.

      Delete
    23. ///குற்றம் குறைகளை மட்டுமே கூறவேண்டும் என்ற நினைப்பிருந்தால், சென்ற பதிவில் நான் மௌனமாக அமைதி காத்திருந்திருக்க மாட்டேனே?!///

      கடல்யாழ் சகோவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதை அதற்குள் மறந்துவிட்டீர்களே நண்பா? இரண்டுநாள்தானே ஆச்சு?!! :))))

      Delete
    24. ///நல்லதை எடுத்துச் சொன்னால் இங்கு அவமரியாதை.///....

      அட்றா சக்கை...

      ஆசிரியர் சாரை எள்ளல் செய்வதும், 40ஆண்டுகளாக அனுபவப்பட்ட அவரையே குறைத்து மதிப்பீடு செய்வதும், அவருக்கு பாடம் எடுப்பதும், அவருக்கே ஆர்டர் போடுவதும் உங்க அகராதிப்படி நல்லதுங்களா????

      பொழுதுக்கும் தள அமைதிக்கு பங்கம் விளைவிப்பதும், தளத்தில் வந்து இளைப்பாறி செல்ல வரும் நண்பர்களை அவமானப்படுத்துவம், போலி முகமூடிகளை மாட்டிகொண்டு குற்றம் மட்டுமே சொல்வதை பிழைப்பாகவும் கொண்டுள்ளது நல்ல செய்கையா???

      இதெல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுத்து வரும் நபர்களுக்கு நல்ல செய்கைதான் என்பதில் ஏது ஐயம்...

      Delete
    25. "சாது மிரண்டால் காடு கொள்ளாது"

      தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருந்தால், பொறுமையின் சிகரங்களும் ரெளத்திரம் கொள்ளல் தவிர்க்க முடியாதது.

      Delete
    26. ///.இங்கு முழு கதையையும் கூறிவிட்டால் Sales பாதிக்காதா////ஹெ..ஹெ...

      இத்தனை நாள் சேல்ஸ்க்கு எதிராக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்துட்டு, இப்ப சேல்ஸ் பற்றி கவலைப்படுவது போல நடிக்க கூச்சமாக இல்லையா நண்பரே...!!!

      Delete
    27. Vijay Erode :

      //கடல்யாழ் சகோவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதை அதற்குள் மறந்துவிட்டீர்களே நண்பா? இரண்டுநாள்தானே ஆச்சு?!! :)))) //

      இதை தான் நான் மறைமுகமாக கூறினேன். யாரிடமாவது அந்த நம் அனைவரின் பதிவுகளைப் படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டுப்பாருங்களேன்? !

      நீங்கள் மிகவும் Emotional ஆகிவிட்ட ஒரே காரணத்தால் மட்டுமே அந்த விவகாரம் அடங்கியது என்பதைக் கூடவா உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை? :P

      Delete
    28. //கடல்யாழ் சகோவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதை அதற்குள் மறந்துவிட்டீர்களே நண்பா? இரண்டுநாள்தானே ஆச்சு?!! :)))) //

      இதை தான் நான் மறைமுகமாக கூறினேன். யாரிடமாவது அந்த நம் அனைவரின் பதிவுகளைப் படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டுப்பாருங்களேன்? !

      நீங்கள் மிகவும் Emotional ஆகிவிட்ட ஒரே காரணத்தால் மட்டுமே அந்த விவகாரம் அடங்கியது என்பதைக் கூடவா உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை? :P

      Delete
    29. @ டெக்ஸ் தல :

      //இத்தனை நாள் சேல்ஸ்க்கு எதிராக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்துட்டு, இப்ப சேல்ஸ் பற்றி கவலைப்படுவது போல நடிக்க கூச்சமாக இல்லையா நண்பரே...!!! //

      இது அபாண்டம் நண்பரே ...

      Delete
    30. ////அவர்களுக்கு தரம் தாழாமல் பதிலடி கொடுப்போம்.! /////---+10000

      Delete
    31. ///இது அபாண்டம் நண்பரே ...///ஹா..ஹா...உங்கள் மனசிடம் கேளுங்க, அது சொல்லும் உண்மை....

      சொல்லித்தரப்படுவதை நிறைவேற்றும் நீங்கள் மனசாட்சி படி நடக்கவும் இயலாது என்பதும் புரிகிறது நண்பரே...!!!

      Delete
    32. @ கண்ணா :

      //அப்பத்தான் மண்ணடி மாதவாஸோட தோஸ்த்துக்கு குஜாலா இருக்கும்.! //

      கண்ணா, நீங்களுமா?!

      Delete
    33. /// @ டெக்ஸ் தல ///
      ///
      கண்ணா, நீங்களுமா?!///


      யார் சார் நீங்க?

      பலநாள் பழக்கம் இருக்கா மாதிரி சீன் போட்டுட்டு இருக்கீங்க???

      Delete
    34. @ டெக்ஸ் தல :

      //சொல்லித்தரப்படுவதை நிறைவேற்றும் நீங்கள் மனசாட்சி படி நடக்கவும் இயலாது என்பதும் புரிகிறது நண்பரே...!!! //

      நான் நல்ல பிள்ளையேத் தவிர சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவே?!

      Delete
    35. // போலி முகமூடிகளை மாட்டிகொண்டு குற்றம் மட்டுமே சொல்வதை பிழைப்பாகவும் கொண்டுள்ளது நல்ல செய்கையா??? //
      +1111111111

      Delete
    36. // நான் நல்ல பிள்ளையேத் தவிர சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவே?! //
      ஏதோ பயிற்சி கொடுத்த கிளிமாதிரியே பேசறது போல் இருக்கற பீலிங்,எனக்கு மட்டும்தானா???

      Delete
    37. ///@ டெக்ஸ் தல///

      ///கண்ணா, நீங்களுமா?!///---என்னா மாம்ஸ் செய்ய???
      எய்தவர் எங்கோ இருக்க அம்பு வந்து இங்கே நடிக்கிறது...

      Delete
    38. Udaya Kumar @ நீங்கள் உண்மையில் அறிவரசின் விமர்சனம் விற்பனையை பாதிக்கும் என்றால் அதனை முதலில் சொல்லி இருக்கலாமே? அதனை விட்டு விட்டு அவர் மனம் கஷ்டபடும்படி ஏன் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் மூலம் இங்கு வருபவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது. இத்துடன் இது போன்ற செயல்களை நிறுத்தி கொள்ளுங்கள்.

      அறிவரசின் விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை. இங்கு நடக்கும் காமிக்ஸ் விவாதங்கள் மற்றும் நல்ல விமர்சனங்கள் விற்பனையில் உதவியாக உள்ளது என ஆசிரியர் பலமுறை சொல்லி உள்ளார்.

      நீங்கள் உண்மையில் நமது காமிக்ஸ் படிப்பவராக இருந்தால் மாதம்தோறும் விமர்சனம் எழுதுங்கள், விற்பனைக்கு உதவுங்கள். அதனை விட்டு விட்டு இங்கு வருபவர்களை விமர்சனம் செய்து ஆரோக்கியமான விஷயம் இல்லை.

      Delete
    39. @ கண்ணா :

      //யார் சார் நீங்க?

      பலநாள் பழக்கம் இருக்கா மாதிரி சீன் போட்டுட்டு இருக்கீங்க??? //

      ஏங்க இப்படி?!

      நான் சீன் போட்டா நீங்க என்ன எனக்கு காசு பணமா கொடுக்கப் போறிங்க? !

      Delete
  57. ஆசிரியர் சார்@

    சில பதிவுகளுக்கு முன் (தினம் 1பதிவாக வந்த காரணமாக எதுலனு தெரியல) ஓரு கதையில் சில பக்கங்களில் பசு வருவதாகவும், அதன் பெயர் என்னவென்றும் வினவி இருந்தீர்கள்.

    நண்பர்கள் சில பதில் சொல்லி இருந்தார்கள்... தங்களின் பதில் என்ன சார்???

    ReplyDelete
  58. புக் கிடைச்சும், இன்னும் படிக்க நேரம் கிடைக்காதது என்ன வகையான சோதனை என்று புரியவில்லை.😭😭😭😭

    ReplyDelete
  59. @ பரணி சார் :

    // நீங்கள் உண்மையில் அறிவரசின் விமர்சனம் விற்பனையை பாதிக்கும் என்றால் அதனை முதலில் சொல்லி இருக்கலாமே? அதனை விட்டு விட்டு அவர் மனம் கஷ்டபடும்படி ஏன் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் மூலம் இங்கு வருபவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது. இத்துடன் இது போன்ற செயல்களை நிறுத்தி கொள்ளுங்கள்.

    அறிவரசின் விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை//

    இதுவே உண்மை என்று ஆசிரியர் மற்றும் நண்பர்கள் கூறிவிட்டால், நானும் அறிவரசு போல், முழு கதையையும் இங்கு ஒப்புவிப்பேன் ஒவ்வொரு மாதமும் :P

    ReplyDelete