Saturday, March 17, 2018

கேள்விகளோ கேள்விகள் !!

நண்பர்களே,


வணக்கம். இருட்டாய், ஒரு நீளமான டப்பி போலொரு உருவமாம்  ; அதற்குள்ளேயோ ஒரு முன்னூற்றிச் சில்லறை ஜனங்களாம் ; அத்தனை பேரும் குந்திக் கொண்டே ஏதேதோ ஒரு லோகத்தில் சஞ்சாரம் செய்ய, அந்த டப்பியோ 'ஜொய்ங்கென்று' 35000 அடி உசரத்துக்கு பறந்து சென்று  ஒட்டுமொத்தப் பேரையும் கண்டம் விட்டு கண்டம் இட்டுச் செல்லுமாம் ஒரு 18 மணி நேரத்துக்கு ! Welcome to பிட்டத்தைப் பதம் பார்க்கும் அமெரிக்காவுக்கொரு விமானப் பயணம் ! Oh yes – பஞ்சாப் நேஷனல் வங்கி போல் யாராவதொரு பரோபகாரியின் சகாயமாவது எனக்கும் கிட்டியிருப்பின், இதே பயணத்தை நானுமே சொகுசாய், கட்டையைக் கிடத்தியபடிக்கே மேற்கொண்டிருக்க முடியும் தான்; ஆனால் இங்கேயொரு புது நாலு சக்கர வண்டி வாங்கும் கிரயத்தை பிசுனஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்குக் கூசாமல் கேட்பதால் “நான் குந்திக்கினே பிரயாணம் பண்ணிக்கிறேங்க சார்!” என்போரின் கட்சியிலேயே ஆயுட்கால உறுப்பினராகி விட்டேன் !  நமது மிஷினரி இறக்குமதி பணியின் பொருட்டு திடுதிப்பென ஒரு பயணம் அவசியமாக, சிக்கிய ரெண்டு ஸ்வெட்டர்களை மட்டும் மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட வேண்டிப் போனது! சாமத்தில் மூன்று மணிக்கு விமானம் கிளம்ப, சற்றைக்கெல்லாம் லைட்களை அணைத்து விட்டு ‘தூங்குங்க மக்கா!‘ என்று சொல்லாமல் சொல்லிட, ஆளாளுக்கு இஷ்டப்பட்ட கனவுகளுக்குள் புகுந்து விட்டனர்! ஆனால் எனக்கோ குறுக்கு ஒரு பக்கம் நோவெடுக்க, பிட்டம் இன்னொரு பக்கம் பின்னியெடுக்க, சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டேன்! மூணாவது வரிசையில் அமர்ந்திருந்தவரின் முன்னிருந்த தம்மாத்துண்டு டி.வி.யில் விஜய் சேதுபதி செம குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்! சைடிலோ – தெலுங்குப் படம் மாதிரி ஏதோவொரு காரசாரமான ஐட்டம் ஓடிக் கொண்டிருந்தது. முன்வரிசையிலிருந்தவரோ ஏகாந்தமாய் குறட்டை விடத் தொடங்கியிருக்க, எனக்குப் பொறாமையாக இருந்தது – 'எப்படிங்காணும் கண்ணை மூடின நொடியே துபாய்க்குப் போய்விட முடிகிறது – உறக்கத்தில் ??' என்று ! சரி, நாம தான் தூங்கினாலுமே, கண்ணு ரெண்டுமே பாதி திறந்திருக்கிற மாதிரியே இருக்குமே – குழப்பத்தில் தூக்க தேவதை நம்மளை பை-பாஸ் செய்து போயிருப்பதில் வியப்பில்லை தான் ! என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு flight mode–ல் கிடந்த என் செல்போனை எடுத்து உருட்ட ஆரம்பித்தேன். கடைசியாக நமது வலைப்பக்கத்தில் எட்டிப் பார்த்த போது வாசித்திருக்க முடிந்திராப் பின்னூட்டங்களை சாவகாசமாய் படித்துக் கொண்டேயிருந்த போது – ‘அட… இதுக்கு இப்படிப் பதில் சொல்லியிருக்கலாமோ? – அதுக்கு அப்படி reply பண்ணியிருக்கலாமோ?‘ என்ற ஞானோதயங்கள் மாறி மாறி மின்னலடித்தன! ஒரே பக்கமாய் சப்பணமிட்டிருந்ததில் கால் சேலாக மரத்துப் போயிருக்க லேசாக நடக்கலாமே என்றபடிக்கு இருட்டுக்குள் மெதுவாய் நடைபோட்டேன்! நடுவாக்கிலிருந்த pantry பகுதியினுள் இரண்டு ஏர் ஹோஸ்டஸ் பெண்மணிகள் ஜாலியாகக் கதை பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது! “வண்டியிலே ஏறினவுடனேயே குடிக்க ஜுஸ் இத்யாதிகள் தான் தந்தோம்லே – அதுக்குள்ளாற பசிச்சிடுச்சா?" என்பது போல அவர்களுள் ஒருவர் லுக்கு விட, அடுத்தவரோ – ஓரத்திலிருந்த சிறு திண்டை சுட்டிக் காட்டினார். ரெண்டு டிரேக்களில் பிஸ்கட்களும், வேர்கடலை பாக்கெட்டுகளும் பரப்பியிருக்க, பக்கத்தில் ஜுஸ் டப்பிகளும், பெப்ஸி, கோக் ஐட்டங்களும் இருப்பது தெரிந்தது. ‘அடடே முழிச்சிருக்கிறதிலே இப்டிக்கா சலுகையா?‘ என்றபடிக்கே ரெண்டு பிஸ்கட்டையும், கொஞ்சம் தக்காளி ஜுஸையும் ஊற்றிக் கொண்டு என் இடத்துக்குத் திரும்புவதற்குள் பார்த்தால் – ‘அய்… என்னமோ சாப்பிட இருக்குதுடோய்‘" என்று ஒரு எட்டுப் பத்து பேர் எழுந்து pantry பக்கமாய் திபு திபுவென்று வேக நடை போடுவது தெரிந்தது! இலவசங்கள் மீதான நமது அளப்பரிய காதலை ஆகச் சரியாகக் கணித்து வைத்ததன் பலனாய்த் தான் அந்த வேளையிலுமே  பிஸ்க்கெட்டுகளை ரெடியாக  தட்டில்  போட்டு வைத்திருந்தார்கள் போலும் என்பதை உணர்ந்த கணமே - அந்த அம்மணிகள் தீர்க்கதரிசனத்துக்கு லேசான ஏப்பத்துடன் ஒரு 'ஜே' போட்டு வைத்தேன் !!  சரி…. நம்மைப் போன்ற ராக்கோழிகளுக்குப் பஞ்சம் இல்லை போலும் என்றபடிக்கே ஜன்னல் மூடிகளை லேசாக மேலே ஏற்றி விட்டு வெளியே எட்டிப் பார்த்தேன்! கும்மிருட்டு; காரிருள்; இருள் போர்வை என்று சொல்வோமே – அது ஒட்டுமொத்தமாய் கலவையாக்கியது போல ஒரு அடர்கறுப்பு ! ‘ச்சை… இரயில்லே; பஸ்சிலேனாக்கா – ஜன்னல் வெளியே ஏதாச்சும் பராக்குப் பார்த்திட்டிருக்கலாம்‘ என்று தோன்றியது!' அத்தனை பேரும் ஒரு மாதிரியாய் தூக்கத்தில் லயித்துக் கிடக்க, எனக்கோ படம் பார்க்கவும் பிடிக்கவில்லை! மறுக்கா போய் ஜூஸ் ரொப்ப முனைந்தால் - "இவன் குடுத்த காசை ஜூஸ்லேயும், பிஸ்கெட்லேயுமே கழிச்சிடறே தீர்மானத்திலே  வந்திருப்பானோ ?" என்று அம்மணிகள் நினைத்திடக் கூடுமே என்ற சங்கோஜம் !! சரி.... விமானத்திலுள்ள பொழுதுபோக்கு திரையில் செஸ் ஆடிப் பார்ப்போமே - என்று அந்த கேமை தேடித் பிடித்து ஆரம்பித்தால், அதற்கான ரிமோட்டில் பட்டன்கள் ஒவ்வொன்றும் நாயடி-பேயடி வாங்கியிருப்பது தெரிந்தது ! குதிரையை நகற்ற முயல்வதற்கு பாகுபலியே வந்தால் தான் ஆச்சு போல என்றபடிக்கு ஒவ்வொரு பட்டனோடும் மல்யுத்தம் செய்து அலுத்துப் போக  அதை அணைத்துவிட்டு மறுபடியும் மண்டையைப் பிறாண்ட ஆரம்பித்தேன் !! "ஆஹா...… சனியிரவு எழுத வேண்டிய பதிவை ஒரு நாலைந்து நாள் அட்வான்ஸாக பண்ணி விடலாமே !" என்று தோன்றிட, சத்தமில்லாமல் என் பைக்குள்ளிருந்த நோட்டை  தேடித் துளாவி எடுத்து வைத்துக் கொண்டேன் ! So சில நூறு மக்களின் ஏகாந்த உறக்கத்தின் மத்தியில், உருவான பதிவே இன்றைய அத்தியாயத்தின் ஆரம்பப்  பகுதி !

ரசனை”; “நாயகர்களின் தரவரிசைகள்” என்று சீரியஸாக கடந்த 2 வாரங்களைக் கடந்திருக்க – அதன் தொடர்ச்சியாய் எனக்குள் எழுந்து நின்ற கேள்விகளை கேட்பதோடு பதிவைத் துவங்கிட நினைக்கிறேன் ! தற்போது நம்மிடையே active ஆக உள்ள நாயகர்களுள் யாருக்கு எந்த க்ளாசில் டிக்கெட் வழங்குவது ? என்பது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள் ! இப்போது நான் கோருவது - நமது 2012 -ன் மறுவருகைக்குப் பின்பாய் அறிமுகம் கண்டுள்ள நாயக / நாயகியருள் - TOP  1 - 2 -3 என்ற இடங்களை யாருக்கு வழங்குவீர்களென்பதையே ! Please note : டெக்ஸ் வில்லர் ; டைகர் ; மாயாவி ; பிரின்ஸ் போல ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருந்த & தற்போதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் நாயகர்களை ஆட்டத்துக்கே சேர்த்திட வேண்டாமே ? முற்றிலும் புதுசாய் இந்த 6+ ஆண்டுகளில் நம்மிடையே உலாவத் துவங்கியுள்ளவர்களில், உங்களின் TOP 3 தேர்வுகளைச் சொல்லுங்களேன் ? 

இதோ - உங்கள் வசதிக்காக - இந்த 74 மாதங்களில் நாம் பார்த்திருக்கும் புதியவர்களின் லிஸ்ட் : (விடுதல்கள் இருப்பின் சொல்லுங்களேன் !!)
  1. லார்கோ வின்ச்
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. டேஞ்சர் டயபாலிக்
  4. கமான்சே 
  5. ஸ்டீல்பாடி ஷெர்லாக் 
  6. ஜில் ஜோர்டன் 
  7. மேஜிக் விண்ட்
  8. டைலன் டாக்
  9. ஜூலியா 
  10. ரின்டின் கேன்
  11. பௌன்சர் 
  12. ஜேசன் ப்ரைஸ்
  13. அண்டர்டேக்கர்
  14. ஜெரெமியா
  15. டிடெக்டிவ் ஜெரோம் 
  16. ப்ளூ கோட் பட்டாளம்
  17. கர்னல் கிளிப்டன்
  18. SMURFS 
  19. பென்னி 
  20. லியனார்டோ 
  21. தோர்கல் 
  22. லேடி S
  23. ட்யுராங்கோ

நானிதைக் கோரிட "சும்மாக்காச்சும்" என்பதைத் தாண்டியொரு காரணமுள்ளது ! ஒரு நாயகரை / நாயகியை அறிமுகம் செய்திடுவது சுலபம் ; அவர்களது தொடர்கள் உங்களது ஈர்ப்பைத் தக்க வைப்பது தான் கடினம் என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறேன் ! Very clearly - அந்நாட்களைப் போல யாரைக் கொணர்ந்தாலும் ரசிக்கும் வயதிலோ, ரசனை விளிம்புகளிலோ நாமிப்போது இல்லை ! So இனி வரும் நாட்களில் ஒரு புதியவரை கையைப் பிடித்து நம்பக்கமாய் இழுத்து வரும் முன்பாய் ஒன்றுக்கு நாலு தடவை நான் யோசிக்கத் தேவைப்படுமென்பது புரிகிறது ! So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 !

கேள்வி # 2 : TOP 3 யாரென்று அடையாளம் காட்டி விட்டு - "உப்மா 3 ' யாரென்று சொல்லாது போவது முறையாகாதே ? So இந்தப் புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? அவ்வப்போது வனவாசம் போகும் நாயகர்கள் சில காலத்து கடும் உறக்கத்துக்குப் பின்பாய் நம்மிடையே புனர்ஜென்மம் எடுப்பது உண்டெனும் போது  - யாரை தொடர் உறக்கத்திலேயே ஆழ்த்திடல் நலமென்று தெரிந்து வைத்திருப்பதும் தேவலாம் தானே ? 


கேள்வி # 3 : Comeback ஸ்பெஷல் துவக்கம், இப்போது வரை சுமார் 230 இதழ்கள் வெளிவந்திருக்கும் என்பது ஒரு மொட்டைக் கணக்கு ! சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ ? 'டப்'பென்று பதில் ப்ளீஸ் ? No ஆழ்ந்த சிந்தனைஸ் !!  உங்கள் மனக்கண்ணில் அவை இடம்பிடிக்க காரணம் எதுவென்பதல்ல முக்கியம் இங்கே  ! கதையின் பொருட்டோ ; தயாரிப்பின் பொருட்டோ ; சேகரிப்பின் பொருட்டோ - எதன் காரணமாய் அவை உங்கள்  மனதுகளில்  நிழலாடினாலும் பரவாயில்லை - just let us know please !

"ஆங்...ஒண்ணுமே நினைவில்லியே கண்ணு ....மச மசன்னு என்னமோ கலர் கலரா மட்டுமே மண்டையிலே ஓடுது.....அப்பாலிக்கா ஒண்ணுமே நிக்கலியே  !!" என்று பதிலளிக்கும்  அணியாக இருப்பினும் no issues (?!!!) இதற்கான பதிலை -  "Only மச மச " என்று சொன்னாலும் போதும் ! 

கேள்வி # 4 : இந்த 230-க்கு முந்தைய சுமார் 500 + இதழ்களை தேடித் திரிந்து, பழைய பேப்பர் கடைகளுக்கு படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கள் சொற்பமாகவேணும் இன்னமும் உண்டென்பதில் ஐயமில்லை ! எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ? என்பதே ! அலாவுதீன் கில்ஜி ரேஞ்சுக்கு இறங்கிப் படையெடுக்காவிடினும், நம்ம ஸ்டீல் பாடி ஷெர்லாக் ரேஞ்சுக்காச்சும் எந்த இதழையாவது தேட முற்படுகிறீர்களா ? 

கேள்வி # 5 : அந்தக் காலம் போல வருமா ?" என்பது நமக்கெல்லாம் ஏதேதோ விதங்களில் பிடித்தமான டயலாக்கே !! "சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே படிச்ச இதழ்" ; "10 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுப் போய் வாங்கிட்டு வந்த புக்கு" ; "பைக்குள்ளாற மறைச்சு வய்சு ஸ்கூலிலே படிச்ச இதழ் " என்று ஏதேதோ காரணங்களின்  பொருட்டு நமக்கு வாஞ்சையான இதழ்களை பத்திரப்படுத்தி, அவ்வப்போது மறுவாசிப்புப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கலாம் ! அல்ல எனது இப்போதைய வினவில் !! நான் கேட்பதெல்லாம் - "இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? இங்கேயுமே ஒரு FIRST 3 என்று இருந்தால் போதும் !!

"அக்காங்...முதவாட்டி படிக்கவே நேரத்தை காணோம்...இதிலே மறுக்காவா  ?? சும்மா போவியா ?"  என்ற பதில் கொண்டுள்ள அணியா நீங்கள் ? No worries - உங்கள் பதிலை : "No மறுக்கா !!" என்று போட்டாலும் போதும் ! 

Last Question : நமது சட்டித் தலையன் ஆர்ச்சியிடன் அந்தக் கால இயந்திரத்தை ஆட்டையைப் போட்ட கையோடு, குடு குடுவென்று காலத்தில் முன்னோக்கிச் செல்வது மட்டும் சாத்தியமாகின் - இன்றிலிருந்து இன்னுமொரு 5 ஆண்டுகள் கழித்து நாமெல்லாம் எப்படியிருப்போம் / எங்கிருப்போமென்று கண்கூடாய்ப் பார்த்திடவே செய்யலாம் ! இன்னும் டாலடிக்கும் மண்டையோடும், காது வரை நீளும் வாயோடும் நான் சுற்றித் திரிவேன் என்ற மட்டில் நிச்சயம் ! ஆனால் நம்மிடம்  ஒரு கால இயந்திரம் இல்லை எனும் போது - கற்பனை + ஆழ்சிந்தனை   என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? இன்றைக்கொரு 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரு பௌன்சரை நம்மிடையே கனவில் கூட உருவாக்கப்படுத்தியிருக்க இயலாது தானே ? ஒரு லார்கோ பாணிக்  கதையை நாம் ஆர்வத்தோடு ஏற்றிருப்போமென்ற யூகங்கள் தான் இருந்திருக்க முடியுமா ? So ரசனைகளில் நிகழ்ந்திடும் மாற்றங்கள் ஓசையின்றி நம்மிடையே படர்ந்துள்ளன ! 5 years down the line - அந்த ரசனை மாற்றங்கள் எவ்விதம் இருக்கக் கூடுமென்ற யூகங்கள் ? Please note : இதுவொரு ஜாலியான / சிரத்தையான யூகமாய் மாத்திரமே இருந்திடட்டுமே  !!

So இந்தக் கேள்விகளோடு நடைமுறைக்கு ஜம்ப் பண்ணுவோமா ? இதோ - ஏப்ரலின் நமது இரவு கழுகாரின் அடுத்த சிங்கிள் ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை & உட்பக்க பிரிவியூ !! இம்முறையும் ஒரு சூப்பர் -டூப்பர் சித்திர விருந்து காத்துள்ளது - அட்டகாச இளமையான டெக்ஸோடு !! பாருங்களேன் : 

முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணம் ; பின்னட்டை - ஒரிஜினல் ! அடுத்தடுத்து படுக்கை வச ராப்பர் வேண்டாமே என்று எண்ணியதால் - இம்முறை ஒரிஜினலுக்கு பின்சீட் ! 

அப்புறம் "புலன்விசாரணை" மொழிபெயர்ப்புக்  குறித்து மேற்கொண்டும் 4 விண்ணப்பங்கள் !! ஆனால் அவ்வளவு உழைப்பு வியர்த்தமாகிடலில் எனக்கு உடன்பாடில்லை ! So சென்ற பதிவின்படி 3 நண்பர்கள் மட்டுமே களமிறங்கிடுவர் ! திங்கட்கிழமை அனைவரது கைகளிலும் அந்தப் பக்கங்கள் இருந்திடும் !! Good luck !!!

இதோ - லேட்டஸ்ட் முன்பதிவுப் பட்டியல் on the way ! Maybe இதிலும் உங்கள் பெயரைக் காணோமெனில் - திங்கட்கிழமை ஒரு மின்னஞ்சலை மட்டும் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் பதிவு செய்திருக்கா நண்பர்கள் - அடுத்த list-க்குள் உட்புக முயற்சிக்கலாமே ?

Bye all ! Have a lovely Sunday !!

317 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!!

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விஜயன் சார்!!!
      🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍭🍭🍭🍭🎈🎈🎈🍭💖💖💖💖

      Delete
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
      விஜயன் சார்.
      இன்று போல் என்றும் வாழ்க.
      பல்லாண்டு வாழ்க.
      நாளை நமதே.
      உலகம் சுற்றும் வாலிபனே?😜😜
      சக்ரவர்வர்த்தியின் திருமகனே
      லயன் காமிக்ஸின் அரசனே
      என்றும் மார்கண்டேயனாய்
      பு வி உள்ள வரை வாழவேண்டி
      வாழ்த்துகிறேன்.

      Delete
    3. புலன் விசாரணை யா அண்ணா. ?

      Delete
    4. ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் ......

      Delete
  2. நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சார். .!!

    ReplyDelete
  3. இனிய பிறந்தவர்கள் நல்வாழ்த்துகள் சார்...🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍭🍭🍭🍭🎈🎈🎈🍭💖💖💖💖

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!!

    ReplyDelete
  5. ///இதோ - உங்கள் வசதிக்காக - இந்த 74 மாதங்களில் நாம் பார்த்திருக்கும் புதியவர்களின் லிஸ்ட் : (விடுதல்கள் இருப்பின் சொல்லுங்களேன் !!)///


    ட்யூராங்கோ லிஸ்டில் இல்லையே சார்.!

    ReplyDelete
    Replies
    1. போச்சா ...சோனமுத்தா கண்ணும் போச்சா.... :) :) :)

      Delete
  6. /// So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 !///

    ட்யூராங்கோ

    வேய்ன் & லார்கோ

    ஸ்மர்ஃப்ஸ் & ப்ளூகோட்ஸ்

    ReplyDelete
  7. டாப் 3 largo winch,wayne shelton மற்றும் லேடி s.top 3உப்புமா பார்ட்டிகள் smurf,magic wind and dylan dog

    ReplyDelete
  8. /// So இந்தப் புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? ///

    ஜெரெமயா

    லியனார்டோ

    மேஜிக் விண்ட் & டயபாலிக்

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் !

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..🌽🎂🍰🦁

    ReplyDelete
  11. ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ///சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ ? 'டப்'பென்று பதில் ப்ளீஸ் ? No ஆழ்ந்த சிந்தனைஸ் !! ///

    Lion magnum special & never before special


    இரவே இருளே கொல்லாதே &
    சிப்பாயின் சுவடுகளில் & தேவரகசியம் தேடலுக்கல்ல

    சர்வமும் நானே & Lion 250 notout

    ReplyDelete
  13. ///இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ?///

    லக்கி & சிக்பில் க்ளாசிக்ஸ்

    லயன் 250 நாட்அவுட்

    ட்யூராங்கோ

    ReplyDelete
  14. நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சார். .!!

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  16. /// என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் -///

    மாதம் ஒரு டெக்ஸ் வில்லர்

    மாதம் ஒரு கார்ட்டூன்

    மாதம் ஒரு ஒன்ஷாட் கிநா

    மாதம் ஒரு வெரைட்டின்னு சந்தா A

    அத்தோட வருசத்துக்கு ரெண்டு கலர் குண்ண்ண்ண்டு கதம்பம்.! CBF க்கு ஒண்ணு EBF க்கு ஒண்ணுன்னு ..!!

    (இப்படித்தான் இருக்கும்னு உறுதியாக சொல்லவரலைன்னாலும், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு உறுதியாக சொல்லவந்தேன்.) :-)

    ReplyDelete
  17. வாழ்த்துச் சொல்லியுள்ள இரவுக் கழுகுகளுக்கும் / சொல்ல நினைத்துள்ள பகல் கழுகுகளுக்கும் நன்றிகள் ஓராயிரம் !!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சாா்!!

      Delete
    2. நன்றி சொல்லி எங்களை தள்ளி வெக்காதீங்க சார்...

      நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லனும் சார்...

      🙏🙏🙏🙏🙏🙏

      எங்கள் தொந்தரவுகளை பொறுத்து கொண்டு காமிக்ஸ் முன்னின்றி வழி நடத்துவது நெகிழ்ச்சி சார்....
      👏👏👏👏👏👏

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!!

      Delete
    4. நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.

      Delete
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...

      Delete
  18. Top 3:
    தோர்கல்
    பென்னி
    பௌன்சர்

    ReplyDelete
  19. Bottom 3
    ஜூலியா
    ஜெராமியா
    Smurfs

    ReplyDelete
  20. Top 3

    அண்டா்டேக்கா்
    ஸ்மா்ப்ஸ்
    லேடி S

    ReplyDelete
  21. Xii மங்கூஸ் spin off
    நில் கவனி சுடு
    LMS

    ReplyDelete
  22. கேள்வி5
    நில் கவனி சுடு
    நள்ளிரவில் நரபலி
    வில்லனுக்கோரு வேலி

    ReplyDelete
  23. ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. எங்களின் மூத்த சகோதரர் ஸ்ரீகாந்த் விஜயன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு நீங்கள் மகிழ்வுடன் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நடுவில் "முத்து"வை விட்டு விட்டீர்கள் சத்யா !

      Delete
    2. எங்களின் சகோதரர் மதிற்பிற்குறிய ஆசிரியர் திரு ஸ்ரீகாந்த் முத்து விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

      Delete
  25. விஜயன் சார், இந்த மாத புத்தகங்கள் எல்லாம் முதல் இரண்டு நாளில் படித்து விட்டதால் புதிதாக காமிக்ஸ் படிக்க ஒன்றும் இல்லை. எனவே ஏப்ரல் மாதப் புத்தகங்களை வரும் வாரத்தில் அனுப்பி வைத்தால் சந்தோஷப்படுவேன். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அந்த smurfs கதையைச் சொல்லி இன்னுமொரு 10 நாட்களை ஒப்பேற்றுங்கள் நண்பரே ; புது இதழ்களுக்கான வேளை புலர்ந்திருக்கும் !

      Delete
    2. சார், கடந்த 5 நாட்களாக வானம் தந்த வரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

      Delete
    3. அடுத்து டாக்டர் ஸ்மர்ப்ஸ் சொல்லலாம் என இருக்கிறேன்.

      Delete
  26. விஜயன் சார், இந்த மாதம் மினி டெக்ஸ் உண்டா?

    ReplyDelete
  27. இரத்த படலம் முன்பதிவு 500ஐத் தொட இன்னும் 52 தான். சூப்பர். முன்பதிவு செய்யாத நண்பர்கள் விரைந்து முன்பதிவு செய்யுங்களேன்.

    ReplyDelete
  28. நமது மறுவரவு முதலாக பளிச்சென்று நினைவிலிருக்கும் ஹிட் இதழ்கள் (எனக்கு):

    - தங்கக்கல்லறை / ஹார்ட் பவுண்ட் மேக்ணம் ஸ்பெஷல் (முதலிடத்தை பங்கிடுகின்றன)
    - இரவே .. இருளே .. கொல்லாதே ...
    - சிகப்பாய் ஒரு சொப்பனம் (நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்த tex என்பதால்)

    ReplyDelete
    Replies
    1. ////- தங்கக்கல்லறை / ஹார்ட் பவுண்ட் மேக்ணம் ஸ்பெஷல் (முதலிடத்தை பங்கிடுகின்றன////---ஈவி & GP லுக் அட் திஸ்...

      LMSஇந்தளவு ஹிட் அடிக்குதுனா அதற்கு காரணம் டெக்ஸ் ம் தான் நண்பர்களே...!!!!

      இன்னொரு முறை பொறுமையாக படித்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லும்போது உங்களுக்கும் உணர துவங்கும்....
      & எனக்கு பிடிச்ச பெஸ்ட் கமல் டயலாக், " நான் ஒரு மேட்டர் சொன்னா மறுத்து பேச கூடாது"...ஓகே...

      Delete
    2. Raghavan : "சிகப்பாய் ஒரு சொப்பனம்" நமக்கொரு landmark இதழே ! அது பற்றி எப்போதாவது எழுதிட வேண்டும் !!

      Delete
    3. இதுவரை ஆறு முறை படிச்சாச்சி,இதுவும் பூத வேட்டையும் செமையான சாகசங்கள்.
      பக்கங்களும் அதிகம்,விலையும் குறைவு.

      Delete
  29. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார். பல்லாண்டு சகல வளங்களும் பெற்று வாழ்க என்று வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் சார்.
    🎂🎂🎂🎁🎁🎁💐💐💐🌹🌹🌹🎆🎆🎆🎊🎊🎊

    ReplyDelete
  30. காலனின் கானகம் அட்டைப்படம் மிக மிக அருமை இப்படி கம்பீரமாய் அட்டைப்படத்தில் டெக்ஸை பார்த்து ரொம்ப நாளகிறது

    ReplyDelete
  31. “காலனின் கானகம்” அட்டை படம் ஜீப்பராக இருக்கு சார். உள்பக்க சித்திரங்களும் அருமை.

    ReplyDelete
  32. கேள்வி 1.
    1. லார்கோ.
    2. தோர்கல்
    3. நாலுகால் ஞானசூன்யம்.

    ReplyDelete
  33. கேள்வி 2.
    1. மேஜிக் விண்ட் (நண்பர் சதீஸ் மன்னிக்க)
    கண்டிப்பா force ranking பண்ணியே ஆகனும்னா
    2. ஜெரோம்.
    3. டயபாலிக்

    இவர்களின் கதைக்கு நான் எதிர்ப்பும் இல்லை. வந்தால் வாங்காமலோ படிக்காமலோ விடப் போவதும் இல்லை. எனக்கு பிடித்த மற்ற நாயகர்களின் கதையை நிறய பேர் ஆதரிப்பதால் அனைத்து வெரைட்டிக்கும் என்னுடய ஆதரவு உண்டு.

    ReplyDelete
  34. கேள்வி 3.
    1. சர்வமும் நானே
    2. ஓக்லஹாமா
    3. அண்டர்டேக்கர். அண்டர்டேக்கர் சட்டென நினைவில வரக்காரணம் அண்டர்டேக்கரின் அண்டர்டிராயர் கிழியும் வரை அக்கதையை நண்பர்கள் அலசியதால் கூட இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. 3. அண்டர்டேக்கர். அண்டர்டேக்கர் சட்டென நினைவில வரக்காரணம் அண்டர்டேக்கரின் அண்டர்டிராயர் கிழியும் வரை அக்கதையை நண்பர்கள் அலசியதால் கூட இருக்கலாம்./////      மஹி ஜி செம்ம...சிரிப்ப அடக்க முடியல.....

      Delete
  35. கேள்வி 4.
    பழய டெக்ஸ் கதைகளின் மீதும் நிறய பழய மினி, திகில்லயன் கதைகளின் மீதும் தீராக் காதல் உண்டு. ஒவ்வொன்றாக இப்போது வருவது போல்மறுபதிப்பில் கொண்டு வந்தீர்களானால் அதுவே போதும்.
    இப்போது போனாலும் பழய கடைகளில் தேடுவது டெக்ஸ் கதைகளைத்தான்.

    ReplyDelete
  36. கேள்வி 5
    1. சர்வமும் நானே
    2. சட்டம் அறிந்திரா சமவெளி
    3. RTKவின் அனைத்து கதைகளும்.

    ReplyDelete
    Replies
    1. ///2. சட்டம் அறிந்திரா சமவெளி///---சம்திங் ஏதோ ஓர் வசீகரம் இதில் இருக்கு,கமர்சியல் டெக்ஸ் என்பதை தாண்டி...

      Delete
  37. கேள்வி 6

    நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது அப்பாவின் நண்பர ஒருவர் செம்மீன் கதையின் தமிழ் பதிப்பை “சோகத்திலும் ஒரு சுகம் இருக்கு. படிடா. புரியும்னு” சொல்லிக் குடுத்தார். திருமணம் மற்றும் குடும்பம் வரும் வரை என்னால் சோக ரசம் கொட்டும் கதைகளைக் நிறய படிக்க முடிந்தது நானும் என்னுடய கல்லூரி நண்பரும் மகாநதி படத்தை 5 அல்லது 6 தடவை பார்த்து கோவை கிராஸ்கட் தெருக்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசியது நினைவிறு வருகிறது. ஆனால் என்னால் அது போன்ற ஒரு புத்தகத்தை படிக்கவோ படத்தை பார்ககவோ முடியுமா என்று தெரியவில்லை.

    பெரும்பாலான நண்பர்களும் என்னைப் போல் தான் என நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் விரும்புவது சந்தோசமாக பொழுதைக் கழிக்க உதவும் கதைகளே. இன்ட்ரஸ்டிங்கா பர பரவென செல்லனும். இல்லன்னா நல்லா சிரிக்க வைக்கனும். இதுதான் என்னுடய தற்போதய ரசனை.

    இது அடுத்த பத்து வருடங்களிலும் மாறாது. ஏன்னா கடந்த 30வருசமா இந்த மாதிரி கதைகள் மற்றும்படங்கள் என்றும் எனக்கு பிடித்தே இருக்கிறது. இது எல்லா ஜெனருக்கும் பொருந்தும். கௌபாயாக இருந்தாலும் சரி. லார்கோ, செல்டன் போன்ற கதைகளாக இருந்தாலும் சரி. தோர்கல் ஸ்டார்ட்ரெக் ஏர் பெண்டர், ஹேரி பாட்டர்போ ன்ற பேன்டசி சமாச்சாரங்களாக இருந்தாலும் சரி.

    ReplyDelete
    Replies
    1. //பெரும்பாலான நண்பர்களும் என்னைப் போல் தான் என நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் விரும்புவது சந்தோசமாக பொழுதைக் கழிக்க உதவும் கதைகளே. இன்ட்ரஸ்டிங்கா பர பரவென செல்லனும். இல்லன்னா நல்லா சிரிக்க வைக்கனும்.//

      உள்ளேன் ஐயா !!!!

      நானுமே ரொம்ப காலமாகவே இந்த அணி தான் சார் !

      Delete
    2. எனது எண்ணம் இதுவே.

      அதே போல் நேர்கோட்டில் பயணிக்கும்/எளிதான வாசிப்பு தள கதைகளுக்கு வரும் காலங்களில் ஆதரவு அதிகமாகும்.

      Delete
    3. நானும் உங்களின் அணி..்:-)

      Delete
    4. நானும் உங்கள் அணியில் உள்ளேன் ஷெரீப் அய்யா. எனக்கும் ஒரு டெபுடி ஷெரீப் பேட்ஜை ஒதுக்கீடு செய்துடுங்க..

      Delete
  38. எனது இரத்தப்படலம் முன்பதிவு எண்-427.(4+2+7=13)!?😉

    ReplyDelete
    Replies
    1. # உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? #

      லார்கோ வின்ச்
      டேஞ்சர் டயபாலிக்
      கமான்சே
      மேஜிக் விண்ட்
      டைலன் டாக்
      ஜூலியா
      பௌன்சர்
      ஜேசன் ப்ரைஸ்
      அண்டர்டேக்கர்
      SMURFS
      பென்னி
      தோர்கல்
      லேடி S
      ட்யுராங்கோ

      Delete
    2. # புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? #

      வெய்ன் ஷெல்டன்
      ஸ்டீல்பாடி ஷெர்லாக்
      ஜில் ஜோர்டன்
      ரின்டின் கேன்
      ஜெரெமியா
      டிடெக்டிவ் ஜெரோம்
      ப்ளூ கோட் பட்டாளம்
      கர்னல் கிளிப்டன்
      லியனார்டோ

      Delete
    3. வெய்ன் ஷெல்டன் - Bottom 3 ? Hmmmm !!!

      Delete
  39. PLEASE PUHLISH SPIDER MAN STORY "" VINVELI PISASU"" IN COLOUR BOOKM WE ARE VERY HAPPY IF YOU PUBLSH THE BOOKS

    ReplyDelete
  40. கேள்வி1) லார்கோ வின்ச் & வெய்ன் ஷெல்டன்
    அண்டர்டேக்கர் & ட்யூராங்கோ
    தோர்கல் & பெளன்சர்

    கேள்வி 2) Bottom 3 என்னளவில்
    பென்னி, கமான்சே, மேஜிக் விண்ட்

    கேள்வி 3) மக்னம் ஷ்பெசல், Come Back ஷ்பெசல், தலையில்லா போராளி & நில் கவனி சுடு

    கேள்வி 4) தற்போது வெளிவந்த 230+ இதழ்களில் எல்லாமே உள்ளதனால், பழைய இதழ்களில் தீபாவளி ஸ்பெஷல் இதழ் கிடைக்குமா என்று படையெடுக்கிறேன்- சேலம் டெக்ஸாரினது அலசலை தொடர்ந்து- இன்னும் கூடுதலாக

    கேள்வி 5) மூட் அவுட் ஆயுள்ள நேரம்- மூடினை மாற்ற சில இதழ்கள், நாஷ்டாலஜிக்கு என சில இதழ்கள், ஆழ்ந்து படிக்க என சில இதழ்கள் என
    இவற்றில் First 3 - தங்க கல்லறை& மின்னும் மரணம், Come back ஷ்பெசல் & மக்னம் ஷ்பெசல், ரத்த படலம் & கார்சனின் கடந்த காலம்

    கேள்வி 6) 2023-ல் நமது காமிக்ஸ் ரசனை- இன்னும் அதிகமாக ( Sc-Fi இதழ்கள்+ கிராபிக்ஸ் இதழ்கள் இன்னும் கூடுதலாய்) புது தொடர்கள் என கலக்கல்+ கலர்புல்லாக இருக்கும். ஆனால் அப்போதும் குளிப்பை மாதக்கணக்காய் மறந்து திரியும் நமது கெளபாய் தொடர்களும், டெக்ஸ்ம் இருப்பது உறுதி.
    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் ஜி@ //அப்போதும் குளிப்பை மாதக்கணக்காய் மறந்து திரியும் நமது கெளபாய் தொடர்களும், டெக்ஸ்ம் இருப்பது உறுதி...///ஹா...ஹா...செம...👌😄

      Delete
  41. இனிய பிறந்தவர்கள் நல்வாழ்த்துகள் சார்...🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍰🍰🍰🍰🍰🍭🍭🍭🍭🎈🎈🎈🍭💖💖💖💖

    ReplyDelete
  42. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. 1 மற்றும் 23
    1.லார்கோ
    காரணம்: 1.வண்ணம் ஓவியங்கள்
    2.கதை களம் - பங்கு சந்தை மதிப்பு தகிடுதித்தங்கள்,போன்ற வித்தியாசம் நிறைந்த இடம்.
    3.முதல் கதையே செம இம்ப்ரஸ் செய்ததும்.

    23.டுராங்கோ
    என்ன சொல்ல எதை விட
    1.இங்கும் ஜெய்ப்பது வண்ணம் ஓவியங்கள் கதை.
    2.வேறுபட்ட கவ் பாய்
    3.கொஞ்சமும் தொய்வில்லாது நகரும் விறுவிறுப்பான கதை
    4.அடுத்த பாக எதிர்பார்ப்பை நோக்கி செல்லும் அம்சங்கள்.
    மேற்கண்ட இவைகள் எனது ஈர்ப்பிர்க்கு காரணம்.
    இரண்டு மூன்று ஆல்பங்களில் வந்ததும் ஒரு காரணம் + புத்தக வடிவமைப்பு.

    ReplyDelete
  44. சார் அட்டகாசமான பதிவு....சும்மா பஞ்சு மிட்டாய் வண்ணத்ல டெக்ஸ் இதுவர வந்ததுலயே முதலிடத்த அபகரிக்கிறார் . பின்னட்டை , முன்னட்டை அசத்தல் . கவர்ந்தவர்கள் லார்கோ , ஷெல்டன் , தோர்கள் , ஸ்மர்ஃப்...மறுவாசிப்பு லார்கோ , ஷெல்டன் , தோர்கள்...லார்கோவில் மனிதனின் ஏக்கமான உண்மை நட்பு , காததல் , சாகசம் , பரபரப்பு , வெற்றி இருப்பதால் ஒரு படி மேல்....செனா , கார்த்திகை பாண்டியன் , ஆசிரியர் மூணு பேரும் கலந்து அதாவது உங்க மேலான பார்வை கலந்து வந்தா புலன் விசாரணை வந்தா ஆஹா....தொடரும்.....

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே.....இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம் தந்தி சேவையைக் கைவிட்டு நிறைய வருஷங்கள் ஓடிவிட்டன ! இன்னமும் அதே 'தட தட' பாணியை கைவிடா ஒரே ஆள் நீங்கள் தான் !

      Delete
  45. தங்கக்கல்லறை / ஹார்ட் பவுண்ட் மேக்ணம் ஸ்பெஷல் (முதலிடத்தை பங்கிடுகின்ற

    ReplyDelete
  46. யாரை தொடர் உறக்கத்திலேயே ஆழ்த்திடல் நலமென்று தெரிந்து வைத்திருப்பதும் தேவலாம் தானே ?
    சந்தேகம் இல்லாமல்
    மேஜிக் விண்ட்
    லேடி எஸ்
    டைலன்
    கேள்வி # 4 : இந்த 230-க்கு முந்தைய சுமார் 500 + இதழ்களை தேடித் திரிந்து, பழைய பேப்பர் கடைகளுக்கு படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கள் சொற்பமாகவேணும் இன்னமும் உண்டென்பதில் ஐயமில்லை ! எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ? என்பதே ! அலாவுதீன் கில்ஜி ரேஞ்சுக்கு இறங்கிப் படையெடுக்காவிடினும், நம்ம ஸ்டீல் பாடி ஷெர்லாக் ரேஞ்சுக்காச்சும் எந்த இதழையாவது தேட முற்படுகிறீர்களா ?
    டெக்ஸ் வில்லரின் என்னிடத்தில் இல்லாத படிக்காத அத்தனையும்.

    ReplyDelete
  47. Top 3
    லார்கோ வின்ச்
    ஜில் ஜோர்டன்
    ஜேசன் ப்ரைஸ்
    அண்டர்டேக்கர்

    ReplyDelete

  48. கேள்வி # 5 : அந்தக் காலம் போல வருமா ?" என்பது நமக்கெல்லாம் ஏதேதோ விதங்களில் பிடித்தமான டயலாக்கே !! "சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே படிச்ச இதழ்" ; "10 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுப் போய் வாங்கிட்டு வந்த புக்கு" ; "பைக்குள்ளாற மறைச்சு வய்சு ஸ்கூலிலே படிச்ச இதழ் " என்று ஏதேதோ காரணங்களின் பொருட்டு நமக்கு வாஞ்சையான இதழ்களை பத்திரப்படுத்தி, அவ்வப்போது மறுவாசிப்புப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கலாம் ! அல்ல எனது இப்போதைய வினவில் !! நான் கேட்பதெல்லாம் - "இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? இங்கேயுமே ஒரு FIRST 3 என்று இருந்தால் போதும் !!
    1.நள்ளிரவு வேட்டை
    2.மரண முள்
    3.தங்க கல்லறை

    ReplyDelete
  49. Bottom 3
    லியனார்டோ
    ப்ளூ கோட் பட்டாளம்
    பென்னி
    ரின்டின் கேன்

    ReplyDelete
  50. Top 3 from 2012
    1. NBS
    2. LMS
    3. Thorgal first issue

    ReplyDelete
    Replies
    1. NBS and LMS are going to rule this list in most of the readers view bcos they are first குண்டு book and the story qualities were வேர level

      Delete
  51. இன்றிலிருந்து இன்னுமொரு 5 ஆண்டுகள் கழித்து நாமெல்லாம் எப்படியிருப்போம் / எங்கிருப்போமென்று கண்கூடாய்ப் பார்த்திடவே செய்யலாம் ! இன்னும் டாலடிக்கும் மண்டையோடும், காது வரை நீளும் வாயோடும் நான் சுற்றித் திரிவேன் என்ற மட்டில் நிச்சயம் ! ஆனால் நம்மிடம் ஒரு கால இயந்திரம் இல்லை எனும் போது - கற்பனை + ஆழ்சிந்தனை என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் - ப்ளீஸ்
    ஹி ஹி அப்போதும் டெக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் டெக்ஸ் !!

      Delete
    2. டெக்ஸ் ஈஸ் காமிக்ஸ்;
      காமிக்ஸ் ஈஸ் டெக்ஸ்...

      Delete
  52. Reread from 2012
    1. All reporter Johnny stories
    2. Thorgal initial 4 episodes
    3. Gil Jordan first episode, kadalin aalingam
    4. Most of the Lucky Luke stories
    5. Detective Julia
    6. Largo and Wayne some of the episodes
    7. First Dylan dog issue - This was an amazing story where people live even after they are dead.
    8. All chickbill stories

    ReplyDelete
  53. Tex front page cover art looks awesome.

    ReplyDelete
  54. காலை வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  55. திரைநாயகர்களை கொண்டாடுவோர் மத்தியில் ..

    காகித நாயகரை கொண்டாட வைத்தவரே...!


    திரைநாயகர்கள் பற்றி விவாதிப்போர் மத்தியில்..
    காகித நாயகர் பற்றி
    விவாதிக்க வைத்தவரே...!

    திரைநாயகருக்கு உயிருண்டு..
    காகித நாயகருக்கும் மனம் உண்டோ
    என எண்ண வைப்பவரே....!

    காகிதபூ மணக்காது எனும் மொழியை பொய்யுரைத்து..அந்த காகிதத்தையே மணக்க வைத்து முகர்ந்து பார்க்க வைப்பவரே...!

    சிங்கத்தின் பெயரை கேட்டாலே பிடறிமயிர் தெரிக்க ஓடுவோராக இருக்க..

    பிடறிமயிர் சிலிர்த்த சிங்கத்தை கட்டி அணைக்க வைத்தவரே...!

    கால சக்கரத்தில் சில
    உறவுகளே பிரிந்து இருக்க...

    காமிக்ஸ் சக்கரத்தில் பல உள்ளங்களை
    ஒன்றினைத்தவரே...!


    சிரிக்க சிலர்..சிலிர்க்க சிலர்..
    பரபரக்க பலர்..பரவசபடுத்த பலர் என பல நாயகர்களை தமிழ் படைத்த
    ஒரே நாயகரே...!

    நிஜ உலகின் சஞ்சலங்களால் மூழ்கி விடாமல்....
    கற்பனை உலகின் சந்தோஷங்களால் மிதக்கவைத்து காப்பவரே.....!

    இன்றுடன்
    "ஓர் அகவை" குறைய...

    ஒற்றை ரோசாவுடன்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் வாழ்த்து மடல் தலீவரே!! பின்னிட்டீங்க!!!

      பனைமரத்துல வெளவாலா - எங்க
      தலீவருக்கே சவாலா?

      Delete
    2. தலீவரே எங்க ரூம் போட்டீங்கன்னு
      தெரிஞ்சுக்கலாமா??

      Delete
    3. ரூம் போடற அளவுக்கு சங்கத்துல பட்ஜெட் இல்லை கணேஷ் சார்..:-(

      Delete
    4. கோவையில் மையம் கொண்டிருந்த கவிதைப் புயல் - தாரமங்கலம் பக்கமாய் தற்போது நகர்ந்துள்ளது போலுள்ளதே !!

      அந்த ஒற்றை ரோசாவுக்கு ஒரு நூறு நன்றிகள் !!

      Delete
    5. //ஒற்றை ரோசா//--- ஆசிரியர் சாருக்கு வாழ்த்துமாதிரி தெரிய்யலயே தலீவரே...!!!! ஏதோ ஒரு கதை இருக்கும் போல...

      Delete
    6. தலைவர் ராக்ஸ்.

      Delete
    7. சூப்பர் தல.....அட்டகாசம் ....

      Delete
  56. டெக்ஸ் அட்டைப்படம் செம கலக்கல் சார்...அருமை

    இம்மாத அனைத்து இதழ்களும் தயாராகிவிட்டது போல தெரிகிறதே சார்.மேலே ஒரு நண்பர் சொன்னபடி சந்தா நண்பர்களுக்காவது முன்கூட்டியே அதாவது இ..இந்த வாரமே இதழ்களை அனுப்பினால் வரமாக இருக்கும்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....ட்யுராங்கோ நீங்கலாய் மே இதழ்களும் ரெடி தான் ! என்ன பண்ணுவோம் ?

      Delete
    2. அப்ப அதையும் சேர்த்து வரும் வெள்ளிக்கிழமை அனுப்பி வையுங்கள்.

      Delete
    3. சார்..சார்..இந்த வாரமே அடுத்த மாத இதழ்...அப்புறம் ஒண்ணாம் தேதி அதற்கடுத்த மாத இதழ்..

      மிக பெரிய சாதனையாக இருக்கும் ..நாளைக்கு கொரியர் பாயை விரட்டுங்கன்னு ஒரு தகவல் போட்டுறுங்க ..சூப்பரா இருக்கும்..:)

      Delete
    4. போற போக்கை பார்த்தா ஆறு மாசத்தில் 12 மாத இதழ்களை போட்டு தாக்கிருவோம் போல,செம சார்.

      Delete
  57. எனது டாப் 3:

    லார்கோ
    ஷெல்டன்
    பெளன்சர் (அ) ட்யூராங்கோ (அ) அண்டர்டேக்கர்


    பாட்டம் 3:

    லியோ தாத்தா
    ரின்டின்
    கர்னல் தாத்தா ( கார்டூன் நாயகர்கள் மன்னிக்க..(

    ReplyDelete
  58. புதுசா வந்த கம்பேக் புக்குலிருந்து படக்குன்னு மூணு புடிச்ச புக்குன்னா

    பர்ஸ்ட் கம்பேக்ஸ்பெஷலே..
    கண்ணுல புது காமிக்ஸ் இதழே பல நாளாக பார்க்காமல் திடீரென இணையத்தில் கம்பேக் ஸ்பெஷல் என்ற விளம்பர்த்தை பார்த்து இது கற்பனையா ,க்ராபிக்ஸா .நிஜமா என அதிசியத்து உண்மை என அறிந்து பின் பது அவதாரத்தில் கைகளில் அந்த இதழ் தவழும் பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி வால்த்தைகளில் சொல்ல முடியுமா அல்லது மறக்கதான் முடியுமா.

    இரண்டாவது

    தொடர்ந்து வந்த என்பெயர் லார்கோ

    அந்த அழகான வெள்ளை அட்டைபடத்தில் அசத்தலாக அமர்ந்திருக்கும் அந்த ஸ்டைல் ஹீரோவும் சரி,அந்த கதை பாணியும் சரி முதன்முறையாக அப்படி ஒரு சாகஸத்தை படித்து அசந்து போய் திகைத்தது நினைவில்..

    மூன்றாவது

    ஏற்கனவே புது யுக படைப்பாக பது பாணியில் நமது இதழ்களை கண்டு வியந்து போது எனது கற்பனையில் ஆஹா இதே போல் பெரிய அளவில் .வண்ணத்தில் குண்டாக பழைய கோடைமலர் ,தீபாவளி மலர் போல இப்போது வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டிருக்கும் பொழுது நெவர் பிவோர் ஸ்பெஸல் ன்னு போட்டு அந்த இதழை தூக்க முடியாமல் தூக்கி படித்தது தான் மறக்க முடியுமா...!

    ReplyDelete
  59. எனது டாப் 3:

    1. தோர்கல் (நேர்த்தியான கதையமைப்பாலும், பிரம்மிக்கவைத்திடும் சித்திரங்களாலும் நம்மை வேறொரு மாயாஜால உலகுக்கே அழைத்துச் சென்றிடும் வல்லமை!)

    2. கர்னல் க்ளிப்டன் ( பரபரப்பான டிடெக்டிவ் கதை + வழிநெடுகிலும் அள்ளித் தெளிக்கப்படும் காமெடி ரகளைகள்)

    3. ஜூலியா ( தன் அறிமுகக் கதையில் சற்றே நெளியவைத்திருந்தாலும், அதன் பிறகு வந்த ஒவ்வொரு கதையிலுமே தன் தனிமுத்திரையை வெகு ஆழமாகப் பதித்த ஒல்லிப்பிச்சான்)

    3.1 : ரின்டின்கேன் ( நாலுகால் லக்கி-லூக் )

    3.2 : அண்டர்டேக்கர் (மிரள வைத்திடும் கதைக்களம் + சித்திரங்கள்)
    ReplyDelete
    Replies
    1. பாட்டம்-3 :

      1. DD
      2. மேஜிக் விண்ட்
      3. ஜெரெமியா

      Delete
    2. ஜெரெமியா - பாட்டம் 3 யா ? 😕

      Delete
  60. கேள்வி #3 :

    1. NBS
    2. LMS
    3. மின்னும் மரணம்

    ReplyDelete
  61. நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் ����

    என சொல்ல ஆசைதான்

    இருந்தாலும் வயது பற்றாத காரணத்தால் வணங்குகிறேன் சார்

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ������������

    இந்தநாளில் எங்களுக்கு மேன்மேலும் சிறந்த புத்தகங்கள் வழங்க முடிவெடுத்து செயல்படுத்துங்கள் சார்
    உங்களுடைய தேர்வுகள் என்றும் சரியாகத் தானிருக்கும்
    நன்றி சார் ����

    ReplyDelete
    Replies
    1. //உங்களுடைய தேர்வுகள் என்றும் சரியாகத் தானிருக்கும்//

      தட் அம்மையப்பர் தான் உலகு ; so பழம் எனக்கே moment #

      Delete
    2. மாம்பழம் கெடக்குறதே பெரிஸ்ஸூ...,
      இதுல வண்டு இருக்குன்னா இன்னும் கூடுதல் ருசின்னு அர்த்தமே

      Delete
  62. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
    எனது Top - 3 (5) நாயகர்கள்
    1.லார்கோ வின்ச்
    2. வேய்ன் ஷெல்டன்
    3.பவுன்சர்
    4.டியுராங்கோ
    5. ஜேசன் ப்ரைஸ்
    பாட்டம் 3
    1. ரிண்டிண்கேண்
    2. ஸ்மர்ப்
    3. லியார்னடோ

    ReplyDelete
  63. ///இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ?/////

    1. இரவே.. இருளே... கொல்லாதே!
    2. கிரீன்மேனர் கதைகள்
    3. நில் கவனி சுடு
    4. நிஜங்களின் நிசப்தம்
    5. கிட்டத்தட்ட எல்லா லக்கிலூக் + கிட்ஆர்ட்டின் கதைகளும்!

    ReplyDelete
    Replies
    1. 2. கிரீன்மேனர் கதைகள் +1

      Delete
  64. கடேசி கேள்வி :

    1. 'கி.நா இல்லாமல் லயன்-முத்து இல்லை' என்ற நிலையிருக்கும்!
    2. ஸ்மர்ஃப், பென்னி, ரின்டின்கேனுக்கு ஒரு இளையதலைமுறை ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கும்
    3. மொத்த வெளியீடுகளில் ஹார்டு-கவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும்
    4. இப்போதைய விலையைவிட சுமார் அரைமடங்கு அதிகரித்திருக்கும்
    5. ஆன்லைனில் வாங்குவோரது எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருக்கும்
    6. இளைய தலைமுறை வாசகர்களின் பங்களிப்பு 30% உயர்ந்திருக்கும்
    7.தளத்தில் போலி ஐடிக்கள் என்பதே இருக்காது. ப்ரொஃபைலில் ஒரு சிங்கிள்-க்ளிக்கின் மூலம் யாரும் - யாருடைய ஜாதகத்தையும் கணநேரத்தில் அறிந்துகொள்ள முடியும்!
    8. ப்ளாக்கில் voice tags வசதி ஏற்படுத்தப்பட்டு, பதிவு வந்தவுடன் "ஹைய்யா! நான்தான் பர்ஸ்ட்டு"னு கூவமுடியும்!

    ReplyDelete
    Replies
    1. //ப்ளாக்கில் voice tags வசதி ஏற்படுத்தப்பட்டு, பதிவு வந்தவுடன் "ஹைய்யா! நான்தான் பர்ஸ்ட்டு"னு கூவமுடியும்!//

      நம்ம கோவை ஸ்டீல் கவிஞரின் பதிவுகளை voice tag-ல் "கேட்க" முடிந்தால் எப்படியிருக்குமென்றும் யூகித்துப் பாருங்களேன் ?

      Delete
  65. மாசி- பங்குனி வெளியீடு (மார்ச்):

    அ)டெக்ஸ் வில்லர்
    அட்டைப்படம்
    அருமை(!!)
    சித்திரங்கள்
    அருமை
    கதை
    வழக்கமான தேடல்…
    விமர்சனம்
    டெக்ஸ் சொல்வது போல், “கார்சன் இல்லாதது மட்டுமே குறை”

    ஆ)ஜில் ஜோர்டான்
    அட்டைப்படம்
    அருமை
    சித்திரங்கள்
    அருமை
    கதை
    விலாசம் தவறிய கடிதம்….அதனால் ஏற்படும் சம்பவங்களும்….
    விமர்சனம்
    வழக்கமாக எப்படி ஒரு துப்பறியும் கதை நகருமோ அப்படியே நகர்ந்தது.
    ஜீல் தேறினாரா என்றால்….பாதி கிணறு தான் அவரால் கடக்க முடிந்தது.

    இ)நீல பொடியர்கள்
    அட்டைப்படம்
    அருமை
    சித்திரங்கள்
    அருமை
    கதை
    வீபரீத மருந்தினால் ஏற்படும் பிரச்சனையும்…அதை வென்று காட்டும் பொடியர்களும்….!
    விமர்சனம்
    ஒரு முறை படிக்கலாம். அவ்வளவு தான்.
    ஈ)டைகர்
    அட்டைப்படம்
    அருமை
    சித்திரங்கள்
    அருமை
    கதை
    வழக்கமான ரவுடி- போலீஸ் கதை
    விமர்சனம்
    டைகரின் வழக்கமான அதிரடி…அவரின் மதிநுட்பமான வீரத்தை காட்டும் கதை.

    ReplyDelete
  66. Many more happy returns of the editor sir.

    Piranthanal aduvuma pittam noga payanam pavam sir neenga :)

    ReplyDelete
    Replies
    1. அரசியலிலே இதெல்லாம் சாதாரணம் தானே நண்பரே ?

      Delete
    2. அவரு அசந்தா காமிக்ஸா

      ஆனா அவரு நைட் தூக்கம் கெடுறது பிடிக்கல.

      Delete
  67. ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    ஆசிரியர் அவர்கள் நீண்ட நெடிய ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  68. //டெக்ஸ் சொல்வது போல், “கார்சன் இல்லாதது மட்டுமே குறை”//
    சென்றாண்டு டெக்ஸ் குறைவான மதிப்பெண் வாங்கியதற்கு
    கார்சன், கிட், டைகர் போன்றோர் இல்லாத ததும் காரணமாக இருக்கலாம்.
    ஸ்பைடருக்கு ஆர்டினி,பெல்காம்.
    ஜானிநீரோக்கு ஸ்டெல்லா.
    கேப்டன் ப்ரின்ஸ்க்கு ,டைகருக்கு
    டீம் கண்டிப்பாக இருந்தால்தான் கதை களை கட்டுகிறது.


    ReplyDelete
    Replies
    1. //கேப்டன் ப்ரின்ஸ்க்கு ,டைகருக்கு
      டீம் கண்டிப்பாக இருந்தால்தான் கதை களை கட்டுகிறது.//

      True !!

      Delete
    2. எக்ஸாக்ட்லி

      Delete
  69. எனது TOP 3
    லார்கோ, வேய்ன்ஷெல்டன், லேடி S
    மூவரும் முதல் இடத்தில்
    இண்டாவதாக ரின்டின்கேன்
    மூன்றாவதாக பௌன்சர் .
    முன்னதாக காமிக்ஸ் உலகின்
    கோகினூர் நம்13இரத்தபடலமே என்று
    கூறி எனது கருத்தை இந்த கல்வெட்டில்
    பதிக்கிறேன்.

    ReplyDelete
  70. கேள்வி 1: TOP 3:
    1.லார்கோ வின்ச்,வெய்ன் ஷெல்டன் ,ட்யுராங்கோ,தோர்கல்
    2.கமான்சே,டேஞ்சர் டயபாலிக்,ஜேசன் ப்ரைஸ்
    3.பென்னி ,ப்ளூ கோட் பட்டாளம்.

    கேள்வி # 2 :
    லியனார்டோ,SMURFS..
    கேள்வி # 3:
    1.NBS
    2.LMS
    3.MINNUM MARANAM

    கேள்வி # 4:
    1.மந்திர மண்டலம்
    2.மரண தூதர்கள் .. BOTH TEX WILLER S MY FAVORITE STORIES .. I MISSED THEM ..
    கேள்வி # 5:மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல்:
    1.TEX , TIGER STORIES ..
    2.GREEN MANOR ,REPORTER JOHNNY,LUCKY AND KIT ORDIN ..
    3.SOME LARGO AND SHELDON ALBUMS ..
    5 years down the line - அந்த ரசனை மாற்றங்கள் எவ்விதம் இருக்கக் கூடுமென்ற யூகங்கள் ?
    DC, MARVEL , TIN TIN , DISNEY , SCI -FI STORIES IN LION-MUTHU ...

    ReplyDelete
    Replies
    1. சார்...உங்களின் Top 3 பட்டியலில் மொத்தம் 9 நாயகர்கள் உள்ளனர் !! நியாயமா ?

      :-)

      Delete
    2. அவை எதையும் தவிர்க்க முடிய வில்லை சார் ..இன்னும் கூட சேர்க்கலாம் என்று இருந்தேன் சார் ..

      Delete
    3. Yes u r correct🎁🎁🎁🎁🎁

      Delete
  71. Many more happy returns of the day editor sir

    ReplyDelete
  72. அன்பு எடிட்டருக்கு many more happy returns of the day,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  73. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்..!!

    ReplyDelete
  74. 1) லார்கோ ,வேய்ன்,லேடி s. 2) மேஜிக் விண்ட்,டயபாலிக்,ரிண்டின்கேன்

    ReplyDelete
  75. @ ALL : வாழ்த்துக்களுக்கு ஓராயிரம் நன்றிகள் all !!!

    வாழ்த்துக்களோடு உங்களின் எண்ணங்களை ; தேர்வுகளை அறிந்து கொள்ள முடிந்திருப்பதில் டபுள் மகிழ்ச்சி !!

    கடந்த 3 பதிவுகளும் நிறைய விதங்களில் எனக்கொரு eye opener என்று சொல்வதில் மிகையிராது ! நான்பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு சவாரி பண்ணிக்கொண்டே - "ஆங்...எல்லாம் சரியா இருக்குலே ? இருக்குலே ?" என்று கேட்டுக் கிடப்பது எத்தனை பெரிய கூமுட்டைத்தனமாக இருந்திருக்கக்கூடும் என்பதை உங்களின் தேர்வுகள் சுட்டிக் காட்டுகின்றன ! இந்த 3 பதிவுகளையும், அவற்றிற்கான உங்கள் பதில்களையும் கூர்ந்து நோக்கினாலே 2019-ன் அட்டவணையினை முக்கால்வாசியாவது யூகித்து விடலாம் என்பேன் !

    தொடர்ந்து நேரம் எடுத்துக் கொண்டு, மேற்கொண்டும் நண்பர்கள் - இன்றைய பதிவுக்கு பதில்களிட முனைந்தால் சூப்பர் பிறந்தநாள் கிப்ட்டாக அமைந்திடும் !! Give it a shot guys ?!

    ReplyDelete
  76. 3) அனைத்து டெக்ஸ் ,அனைத்து லார்கோ 4)NBS. 5) அனைத்து டெக்ஸ்,வேய்ன் ஷெல்டன்,லார்கோ

    ReplyDelete
  77. Q3. 1.comeback special 2. New look special 3.Super hero super special. No need to think over . Immediate answer

    ReplyDelete
  78. டெக்ஸ் அட்டைப்படத்திற்கு ஓவியர் மாலையப்பன் அவர்கள் பட்டையைக் கிளப்பியுள்ளார்!! அங்க-அவைய விகிதாச்சாரங்கள் கனகச்சிதமாகப் பொருந்திவர, பின்னணிக் காட்சிகளும் கண்களுக்கு விருந்தாய்!!

    எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள் எடிட்டர் சார்! (பொன்னருக்கும்!)

    ReplyDelete
    Replies
    1. இங்கே மலையப்பன் + கோகிலா கூட்டணி !

      Delete
    2. எங்கள் வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் மறவாமல் சொல்லி விடுங்கள் சார்..!

      Delete
  79. நெடுநாள் வாழ்ந்து எங்கள் காமிக்ஸ் பசியை தீர்க்க ஆண்டவணை வேண்டுகிறேன்.

    பி்.கு எங்கள் டார்ச்சரையும் அனுபவிக்க வேண்டி வரும்.

    ReplyDelete
  80. ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதழியல் துறையில் தங்களின் பங்களிப்பு மேலும் சிறப்பு பெற ;உடலாலும்,மனதாலும் நீண்ட வளத்தை இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  81. 1.Top 3...

    டியூராங்கோ...அசாத்திய வன்மேற்கு,அசத்தல் வண்ணம்.

    லார்கோவிஞ்...It lifts us from boys to men.

    தோர்கல்...அசாத்தியமான கதையமைப்பு; கட்டிப்போடும் வசீகரமான பாத்திரங்கள்.

    ReplyDelete
  82. Happy Bday sir
    மானசீக ஆசீர்வாதங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உனை பெற்ற பேருடையோர் வாழ்க
      நினை பெற்ற துணையோள் வாழ்க
      நீர் பெற்ற குழவியான் வாழ்க
      நீவிர் கற்றுயர்ந்த பள்ளி வாழ்க
      ஆவீர் என்றேயுவந்த தமிழாசான் வாழ்க
      போவீருலகில் எனவுயர்த்துமும் அச்சு வாழ்க

      சாகாக்கலை காமிக்ஸ் வாழ்க வாழ்க

      Delete
    2. 1) உம்மா- எல்லாம் பிடிக்கும்
      1.1)💝 லார்கோ வின்ச்- ஷெல்டன்- லேடி எஸ்
      1.2)🎊 லியனார்டோ & ஆல்கை - ரின்டின் - கிளிப்டன்
      1.3) டேஞ்சர் D - டியூராங்கோ சண்டியர் - ஜில்லு


      2) உப்புமா-இருக்கு! சாப்ட்டு தானே ஆகணும் பில் போட்டாச்சில்ல
      2.1)😢டைலன்
      2.2)😢😢விண்ட்( மேஜிக் நஹி ஹை)
      2.3)😢 பௌன்ஸர்
      3) மச மசன்னு கசக்குனா நெனவுக்கு வந்தது
      3.1) 😊என் பெயர் லார்கோ
      3.2) 😊தங்க கல்லறை - மின்னும் மரணம்
      3.3) 😊7 நாளில் எமலோகம்
      4) out of print search - இல்லை
      5) மறுக்க சுவாசிக்க
      5.1)👌புளூகோட்ஸ் ★★★★
      5.2)☺நிஜங்களும் நிசப்தமும்◆◆◆◆◆
      5.3)👏மண்டு மந்திரி●●●
      6)future file
      6.1)😊 டெக்ஸ் (இல்லாம பொழக்க முடியாது)

      6.2)🙅 வன்முறை வறட்டு முள் முகங்கள் புது பேரோட இருக்கும்
      6.3) fantasy plus sex இருக்கும்.

      Delete
  83. Bottom 3...

    ஸ்டீல்பாடி ஷெர்லாக்-பெருத்த ஏமாற்றம்.

    மேசிக் விண்ட்-பெயரில் உள்ள ஈர்ப்பு கதையில் இல்லை.

    டேஞ்சர் டயபாலிக்-கிழவிகளிடம் வீரத்தை காட்டும் வாய்சொல் வீரர்; போலி முகமூடி போட்ட பார்ட்டினாவே அலர்ஜி டு த கோர்.

    ReplyDelete
  84. 3.சட்டென நினெவுக்கு வரும் இதழ்...

    லயன் மேக்னம் ஸ்பெசல்...அசாத்தியமான தரம்; ட்ரென்ட் செட்டர் இதழ்; இதைப்போல மறுபடியும் மற்றொன்று வருமா என எங்க வைக்கும் தாக்கத்தை கொண்டது; ஆல் டைம் பெஸ்ட்ல அசால்டாக இடம் பிடிக்க கூடியது.

    நெவர் பிபோர் ஸ்பெசல்-வாயடைத்துப் போன இதழ். இன்றும் கூட 2013ஜனவரியின் நினைவுகள் கண் முன்னே வந்து போகின்றன. போன்லயே ஒரு நண்பர் உடனடியாக அப்டேட் தந்தார்.

    த லயன் 250-பெயரிலேயே உள்ள கம்பீரம்; நண்பர்கள் கஷ்டப்பட்டு பெயர் வைத்தார்களே என்ற ஆதங்கம் அப்போது இருந்தாலும் பின்னாளில் இந்த பெயர் தான் பெஸ்ட் என புரிந்து போனது; ஆசிரியர் சாரின் தன்னம்பிக்கை வெற்றி பெற்றதை என்றென்றும் நியாகப் படுத்தும் இதழ்; அஃப்கோர்ஸ் தல தாண்டவம் வேற லெவல்க்கு கொண்டு போன இதழும் கூட...

    3மட்டுமே சொல்லனும் என்பதால் இடம் கிடைக்காமல் போகும் அடுத்த 3
    மின்னும் மரணம் ரீபிரிண்ட்,
    சர்வமும் நானே,
    க்ரீன்மேனர்1&2...

    ReplyDelete
  85. 4.தேடும் இதழ்- கம்பேக்கில் இருந்து அனைத்தும் இருப்பதால், பதில்-பிக் நோ...

    ReplyDelete
    Replies
    1. 5.மறுவாசிப்புக்கு செலக்ட்ட்

      டியூராங்கோ... த பெஸ்ட் ஃப்ரம் கம்பேக்.

      லார்கோ-என் பெயர் லார்கோ,கான்க்ரீட் கானகம் நியூயார்க்,விரட்டும் விதி...முதல் 3இதழ்களில் இருந்த கதையமைப்பு அசாத்தியம்....

      தோட்டா தலைநகரம்- கனவுக்கன்னி கேத்தி மார்ஸ்க்காகவே வருடம் ஒருமுறை மறுவாசிப்பு செய்வேன். வண்ணத்தில் கலக்கலான ஒன் ஷாட் இதழ்.

      (இங்கேயும் டாப்3 மட்டுமே சொல்லனும் என்பதால் விட்டுப்போனவை,
      மின்னும் மரணம்; க்ரீன் மேனர்; எமனின் திசை மேற்கு; தோர்கல் லேட்டஸ்ட் பாகங்கள்; சில கி.நா.க்கள்; சிலபல- ரின் டின்ஸ், சிக்பில், லக்கி ஸ்பெசல்ஸ்; லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்-பல டெக்ஸ் கதைகள்)

      Delete
    2. மார்ஸோட வீரமா (வி)வேகமா இளமையா

      Delete
  86. XIII தொகுப்பின் மீது கண்டிப்பாக அதன் விலையை அச்சிடத்தான் வேண்டுமா? இல்லை hardcover மீது ஒரு extra cover அதில் மட்டும் விலை அல்லது வேறு ஏதாவது?அல்லது முன்பதிவுக்கு மட்டும் எனில் எதற்கு சார் விலை?நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பொழுதுதான் வீட்டில் புதிதாக ஒரு பூரிக்கட்டை வாங்கினோம் அதற்குத்தான் வேறொன்றுமில்லை.(pleaseeeeeee)

    ReplyDelete
    Replies
    1. விடுங்க நண்பரே அமெரிக்க டாலர் சிம்பல் $30 போட்டர்லாம்

      Delete
  87. மறுபிறப்பில் தேடும் இதழ் ..

    அனைத்தும் தவறாமல் வாங்கி வந்ததால் அனைத்தும் கைவசம் ..எனவே நோ ஓடிங்...:-)


    புதுபிறப்பில் மறுபதி(டி)ப்பு...

    டெக்ஸ்..டெக்ஸ் ..டெக்ஸ்..    வருங்காலத்தில்...


    நான் அவ்ளோ வொர்த் இல்லை சார்..ஆனா அப்போதும் எப்போதும் டெக்ஸ் தான் முதலிடத்தில் இருப்பார் என்று மட்டும் நம்புகிறேன்..:-)

    ReplyDelete
  88. 6.5ஆண்டுகள் கழித்து ரசனை மாற்றங்கள் எப்படி இருக்கும்....

    *வன்மேற்கும் கார்டூன்களும் என்றும் நம் அகராதியில் இடம்பெறும் வார்த்தைகள். கதாநாயகர்கள் மாறி இருக்கலாம், ஆனால் இந்த 2ம் என்றும் மாறப்போவது இல்லை...

    *கி.நா.களின் அடுத்த பரிணாமத்தை எட்டிப் பிடித்து இருக்கலாம்...

    *இன்று பிடிக்காத நிறைய புதிய ஜானர்கள் சிலபல, உங்களின் விடாத முயற்சியில் சக்சஸ் ஆகி இருக்கலாம்.

    *இரத்தப்படலம்- தமிழ் காமிக்ஸ் உலகில் லயன்முத்துவை ஒரு லெவல் உயர்த்தி இருக்கும்.

    *ஜீனியர் எடிட்டர் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம் காட்ட கூடும்.

    *தாத்தா விஜயன் சாரின் அனுபவங்கள் பலதடவை உங்கள் எழுத்துக்களில் நாங்கள் ரசித்து இருப்போம்.

    *போனெல்லியில் இருந்து நம்ம ஈரோடு விழாவிற்கு யாரையாவது அழைக்கும் அளவு வளர்ந்து இருப்போம்.

    ReplyDelete
  89. Q1:
    1. டேஞ்சர் டயபாலிக்
    2. அண்டர்டேக்கர்
    3. பௌன்சர்

    Q2: No உப்மா 3

    Q3:
    1. முடியா இரவு
    2. அண்டர்டேக்கர்
    3. பௌன்சர்

    Q4:
    சட்டித் தலையன் ஆர்ச்சி
    திகில் கதைகள்
    ரிப் கெர்பி

    Q5:
    சிப்பாயின் சுவடுகளில்

    ReplyDelete
  90. சார் ஒரு வேண்டகோள்
    டெக்ஸ் 70 ஐ கொண்டாட இத்தாலிய மாடல் Tex பொம்மைகளை இறக்குமதி செய்ய முடியுமா சார்..?

    ReplyDelete
  91. அன்பின் ஆசிரியருக்கு,

    இனிய பிறந்ததின நல்வாழ்த்துகளும் என்றும் மாறிடா அன்பும்.

    முதல் கேள்வி: இந்தப் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில ஹீரோக்களைப் பிடிக்கும் என்றாலும் Long run என வரும்போது அண்டர்டேக்கர், ஜேசன் பிரைஸ் போன்றவர்களுடைய ஆல்பங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் அவர்களை சற்று ஓரங்கட்டி விட்டுச் சொல்வதானால் என்னுடைய டாப் - 3..

    லார்கோ வின்ச்
    வெய்ன் ஷெல்டன்
    ட்யூராங்கோ

    இரண்டாவது கேள்வி: அவ்வளவாக ரசிக்காத மூவர்..

    டேஞ்சர் டயபாலில் (எந்த ரகத்தில் இவரை சேர்ப்பதென்கிற குழப்பமே காரணம்.. ஹீரோவா / வில்லனா? ஸ்பைடர் தீயவன் என்றாலும் அவனை நம்மால் ரசிக்க முடிந்தது ஏன்? ஒரே குழப்பம்.. ஆனாலும் டயபாலிக்கோடும் மனம் ஒன்ற முடியவில்லை)
    லியானார்டோ
    ஸ்டீல்பாடி ஷெர்லாக்

    மூன்றாவது கேள்வி: சட்டென்று நினைவுக்கு வரும் மூன்று இதழ்கள்..

    மின்னும் மரணம்
    கார்சனின் கடந்த காலம்
    தங்கக் கல்லறை

    நான்காவது கேள்வி: தற்போதைய இதழ்கள் எல்லாம் கைவசம் இருக்கின்றன என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு சுட்டி லக்கியின் முதல் ஆல்பம் எங்காவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன்.

    ஐந்தாவது கேள்வி: மறுவாசிப்புக்கு உகந்த இதழ்கள்..

    லார்கோ (எல்லாமே)
    தங்கக் கல்லறை
    தேவ ரகசியம் தேடலுக்கல்ல

    ஆறாவது கேள்வி: ரசனைகள் சார்ந்து பெரிய மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது எடிட்டரின் கையில் தான் உள்ளது. கிராபிக் நாவல்கள் பெற்றிருக்கும் வரவேற்பு எவ்வாறு தொடர்கிறது என்பதும் இதைத் தீர்மானிக்கக்கூடும். குடும்பத்தோடு படிக்க முடியாது என்பது போன்ற சப்பைக்கட்டுகளைத் தவிர்க்கும் விதமாக தனிச்சந்தா ஒன்று 2023-ல் (ஆவது) சாத்தியப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  92. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்

    ReplyDelete
  93. வயதில் ஐம்பதை தாண்டியும் மனதில் இருபதிற்குள்ளும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இனிய ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்து கொண்டு ,முதல் மூன்று நாயகர்கள் யார் யார் என்பதை கணிக்கப் புகும்பொழுது சந்தேகமின்றி லார்கோ எனும் கோடீஸ்வர கோமகனார் போட்டியின்றி முன்னணியில் நிற்கும் பொழுது,இரண்டாம் இடத்திலே வெட்டியான் நிற்க, மூன்றாம் இடத்தை கைப்பற்றுவது ப்ளூ கோட் பட்டாளமே.. பட்டாளமே என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லிக்கொள்ளும் அதே நேரத்தில் கடைசி இடங்களில் கட்ட கடேசியாக வருவது டைலன் டாக்கே என்றும்,பின்னாலேயே தொடர்ந்து மேஜிக் விண்ட் ,அப்புறம் கமான்சே என்றும் செப்புதலே சிறந்தது ..

    ReplyDelete
  94. டெக்ஸின் அட்டைப்படம் அசத்தல்,சித்திர பாணிகள் கலக்கலாக அமையும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  95. கம்பேக்இதழோ எதுவோ காமிக்ஸ் கதைகளில் மிகப் பிடித்த கதை எது என்று தூக்கத்தில் உசுப்பி கேட்டாலும் பதில் ஒன்றுதான் ..அது கார்சனின் கடந்த காலமே ..அப்புறம் கேள்வி no 3 க்கு பதில் வெட்டியான் கதை ,ஒற்றைக்கை பவுன்சர் ,தங்கம் தேடிய சிங்கம்
    கேள்வி 4 இல்லை
    கேள்வி 5..பழைய மினி ,ஜூனியர் திகில் காமிக்ஸ் மற்றும் சார்லியின் கதைகள்

    ReplyDelete
  96. 1. டாப். 3
    1.லார்கோ வின்ச்
    2.வெய்ன் ஷெல்டன்
    3.பௌன்சர்

    2.பாட்டம்.3
    1.டயபாலிக்
    2.ஸ்மர்ப்ஸ்
    3.ஸ்டீல் பாடி ஷெர்லாக்

    3. சட்டென்று நினைவிற்க்கு வரும் 3 இதழ்கள்
    1. N.B.S.
    2. L.M.S.
    3. லயன் 250

    4. தேடிடும் இதழ்கள்
    1987 . தீபாவளி மலர் தான்
    பல வருடங்களாக தேடுகிறேன்
    அது உங்கள் ரேடரில் இல்லாததால்
    N.B.S.

    5.மறு வாசிப்புக்கு உகந்த இதழ்கள்
    1.வல்லவர்கள் வீழ்வதில்லை
    2.சட்டத்திற்கொரு சவக்குழி
    3.ஒக்ல ஹோமா

    6. 2023 அப்போதும் டெக்ஸ் வில்லர் சக்கை போடு போடுவார் கிராபிக்நாவல் ஆதிக்கம் செலுத்தும் அன்றும் எனது தாரக மந்திரம் என் உயிர் உள்ளவரை காமிக்ஸ் சலிக்காது ஓவர் டோஸாகாது காமிக்ஸே உயிர் மூச்சு

    ReplyDelete
  97. // So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 ! //
    1. ட்யுராங்கோ,
    2. தோர்கல்,
    3.1. லார்கோ வின்ச்,
    3.2. ஷெல்டன்.

    ReplyDelete
    Replies
    1. Bottom-3,
      1.ஜெரெமியா,
      2.லியனார்டோ,
      3.ஸ்டீல்பாடி ஷெர்லாக்.

      Delete
    2. //சட்டென்று நினைவுக்கு வரும் மூன்று இதழ்கள்.//
      1. N B S,
      2. L M S,
      3. மின்னும் மரணம்,
      3.1. இரத்தக் கோட்டை,
      3.2. லயன்-250,
      3.3. சர்வமும் நானே,
      3.4 தலையில்லா போராளி,
      3.5 டுயுரங்கோ ஸ்பெஷல்.
      -ஹி,ஹி மனசு கேட்கல அதான்.

      Delete
    3. // இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? //
      டெக்ஸ் வில்லரின் பெரும்பாலான கதைகள்,சிக்பில் சாகசங்கள்,லுக்கி லூக் சாகசங்கள்,தோர்கல் சாகசங்கள்,லார்கோ சாகசங்கள்,ஷெல்டன் சாகசங்கள்,மர்ம மனிதன் மார்ட்டின் சாகசங்கள்,ரிப்போர்ட்டர் ஜானி சாகசங்கள்.

      Delete
  98. Only I wish to reply for question No.4.

    I'm still searching for John Master issues for its splendid drawings and story line, secondly Norman series and Rip Kirby storyline. Even after these long years I can remember one sentence " ellame sulabamaayirikirathu endru sonnaaye thozha " I can't forget the scene ! A small request Vijayan Sir. Reprint Norman & John master series as,collecter's edition !

    ReplyDelete
    Replies
    1. கேள்வியை தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் சார் ! நான் கேட்டது ஒட்டுமொத்தத் தேடல்களின் பிரதிநிதிகளையல்ல !!

      Delete
  99. Happy birthday sir...440 booking no is not p.suresh instead of R.suresh ..kly rectify the same..

    ReplyDelete