Powered By Blogger

Sunday, November 05, 2017

ஒரு நவம்பரின் மழையிரவு !

நண்பர்களே,

வணக்கம்.   சிங்காரச் சென்னை மீது வருண பகவானுக்கு சமீப ஆண்டுகளில் உருவாகியுள்ள அந்த மையல் இம்முறையும் வீரியமாய்த் தொடர்வதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது !  கொட்டித் தள்ளும் மழை, களைகட்டுவதற்கு ஓரிரு நாட்கள் முன்புவரை வேளச்சேரிகளிலும், பள்ளிக்கரணைகளிலும், கீழ்க்கட்டளைகளிலும் பத்திரிக்கையும் கையுமாய்ச் சுற்றித் திரிந்தவனுக்கு இன்று அதே பகுதிகளை நீச்சல்குளங்களாய் டி.வியில்  பார்க்கும் போது - கையைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்று,"சை..எனக்கு மழையே புடிக்காது !" என்று புலம்பணும் போல் தோன்றுகிறது ! இம்முறை தலைநகரில்  மாத்திரமன்றி, பாண்டி ; நாகை ; கடலூர் போன்ற மண்டலங்களிலுமே ரோட்டில் படகு ஓட்டும் நிலை தட்டுப்படும் போது - 'சிவனே' என்று எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் சாமீ ! என்று சொல்ல தோன்றுகிறது ! Oh yes - இங்கேயும் மழை "உள்ளேன் ஐயா" போட்டு வருகிறது தான் ; ஆனால் எங்களின்  கந்தக பூமியின் தவித்த மண்ணுக்கு இந்த ஜலமெல்லாம் சர்பத் உறிஞ்சுவது போல !! Anyways - கடந்த 2 ஆண்டுகளைப் போலல்லாது இம்முறை தலைப்பாகைக்கு மட்டுமே சேதமென்று தமிழகம் தப்பித்து விட்டால் சூப்பர் ! Fingers crossed !

நவம்பர் இதழ்கள் உங்கள் கைகளில் fresh ஆக உள்ள நிலையில் - spotlight அவற்றின் மீதே இருத்தல் அவசியம் என்பேன் !  And அந்த ஒளிவட்டத்தின் நட்ட நடுவே விசாலமாயொரு இடத்தைப் பிடித்து நிற்பது யாரென்று யூகிக்க, நிச்சயம் மங்குணி smurf-க்குக் கூட சாத்தியமாகிடும்  என்பேன் ! 30 ஆண்டுகளென்பது ஒரு நார்மலான மறுபதிப்புக்கே நெடியதொரு அவகாசம் தானெனும் போது - முழு வண்ணத்தில், ஒரு மாறுபட்ட பாணியில் அந்த மறுபதிப்பு  வெளியாகிடும் போது ஒரு இனம்புரியா உற்சாகம் கூடிக் கொள்கிறது தானே ?! And அதுவொரு all time favorite நாயகரின், atf கதையாக இருப்பின் - அதன் வெற்றி எழுதப்பட்ட விதியாகிடுவதில் வியப்பில்லை அல்லவா ?! And "டிராகன் நகரம்" - என் தலைக்குள்ளே ரொம்ப காலமாகவே உறுத்திக் கொண்டிருந்ததொரு மறுபதிப்பு என்பதில் இரகசியம் கிடையாது ; so அதனை ஒருமாதிரியாய் களமிறக்க முடிந்ததில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! இன்னமும் எனது தனிப்பட்ட ரசனையானது  "சைத்தான் சாம்ராஜ்யம்" இதழை வண்ணத்தில்  ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ; ஆனால் இம்முறை(யும்) ஈரோட்டின் வாக்கெடுப்பில் "சை.சா" மூன்றாவது இடத்தைப் பிடிக்க - "சை...எனக்கு மூன்றாம் இடமே புடிக்காது !" என்று மண்டைக்குள் ஒரு மௌன டயலாக் ஓடியது !  'பவளச் சிலை மர்மம்" ; அதன்பின்பாய்  "வைகிங் தீவு மர்மம்" என்று சிலபல மர்மங்கள் லைனில் முன்னே நிற்பதால்  - இப்போதைக்கு நம்மிடம் வந்து கிடக்கும் "சை.சா"வின்  முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன் !! 
SUPER 6 வரிசையின் இதழ் # 5-ன்     அட்டைப்படத்தின் highlight அந்த "டிராகன்" எழுத்துரு தான் என்பேன் ! வழக்கமான கம்பியூட்டர் font-களாகப் பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு old school கலைஞனின் கைவண்ணத்தில் உருவான எழுத்துக்களைப் பார்க்கும் போது ஒரு refreshing change ஆக இருந்தது  ! இதனைத்   தயாரித்தவர் நமது ஓவியர் சிகாமணி தான் ! இதற்கு மாத்திரமன்றி,  சமீப மாதங்களில் நமது அட்டைகளில் தென்பட்ட இன்னும் சில handwritten தலைப்புகளின் பின்னிருந்தவரும் அவரே ! அறுபதைத் தாண்டிய பின்னேயும் அந்தக் கைகளின் ஜாலங்கள் மங்கிடவில்லை என்பதை உணர்ந்த போது சந்தோஷமாக இருந்தது ! என்னதான் DTP ; PC ; ஏட்டய்யா  என்று தொழில்நுட்பங்கள் புயலாய் முன்னேறியிருந்தாலும், அந்தத் துவக்க காலத்து impetus இவர் போன்ற கலைஞர்களின் உபயங்கள்  தான் என்பதை மறக்க முடியாது தானே ? மூப்பின் காரணமாய் இப்போது ஓய்வாய் இருக்கும் மனுஷன் எப்போதாவது நம் ஆபீஸ் பக்கமாய்த் தலைகாட்டினால் சில வாரங்கள் இங்கேயே தங்கி விடுவதுண்டு ! அப்படியொரு சமீபத் தங்கலின் போது எழுதி வாங்கிய தலைப்புகளுள் "டி.ந' வும் ஒன்று ! 
Old school ஓவியர்கள் பற்றிய பேச்சில் இருக்கும் வேளைதனில் - நமது இன்னொரு மூத்த ஓவியரான மலையப்பன் சமீபமாய் போட்டுத் தாக்கியுள்ள TEX அட்டைப்படங்களை பற்றி நான் சொல்லியே தீர வேண்டும் ! அவற்றை நேற்றைக்குப் பார்த்த பொழுது திறந்த எனது வாய் இன்னமும் மூடிய பாடைக் காணோம் ! இப்போதெல்லாம் பிரான்க்கோ-பெல்ஜிய சாகசங்களை ஒரிஜினல் ராப்பர்களோடே களமிறக்கப் பழகி விட்டுள்ள நிலையில் - டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும், FLEETWAY மறுபதிப்புகளுக்கும் தான் நமது ஓவியங்கள் தேவைப்படுகின்றன ! TEX-ன் ஒரிஜினல் ராப்பர்களில் அதிரடிகளுக்குத் துளியும் பஞ்சமிராது தான் ; ஆனால் அவற்றின் வர்ணக் கலவைகள் தட்டையான color fillings என்பதால், அவற்றை மட்டுமே redraw செய்திடுகிறோம் ! குழப்பங்களில்லா ஒரிஜினல்களை  தந்தால் - மனுஷன் எப்போதுமே தூள் கிளப்பி விடுவார் ; இம்முறை ஒன்றல்ல, இரண்டல்ல - 4 பெயிண்டிங்குகள் போனெல்லியின் ஓவியர்களுக்கே சவால் விடும் விதத்தில் உருவாகியுள்ளது ! So 2018-ன் 'தல' தாண்டவம் - சும்மா அட்டைப்படங்களிலிருந்தே கலக்கப் போகிறது !!  தொடரும் நாட்களில் நமது ஓவியரைப் பற்றி போனெல்லிக்கு சொல்ல எண்ணியுள்ளேன் ; so one of these days - மாலையப்பனை போனெல்லியின் FB பக்கத்தில் பார்க்க நேரிட்டால் நாமெல்லாமுமே காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே ?

Moving on, இம்மாத இதழ்களுள் போட்டியே இரண்டாமிடத்தைப் பிடிக்கும் பொருட்டுத் தான் எனும் பொழுது - களத்தில் நிற்பவை 3 முற்றிலும் மாறுபட்ட genre-கள் அல்லவா ? எனது வோட்டு எப்போதுமே கார்டூனுக்கே என்பதால் - லக்கி லூக்கை ஜனாதிபதியாக்க முடிகிறதா ? என்றே என் சிந்தனை ஓடுகிறது ! "ஒற்றைக்கை பகாசுரன்" அட்டைப்படத்திலுமே உள்ள அந்த எழுத்துரு உபயம் : ஓவியர் சிகாமணி தான் ! கதையானது - நாமிப்போது ரொம்பவே பரிச்சயம் கண்டு விட்டுள்ளதொரு லக்கி லூக் template தான் ; ஒரு பொறுப்பு நம் பென்சில் கவ்பாய் வசம் ஒப்படைக்கப்பட ; அதை நிறைவேற்றும் பொருட்டு வன்மேற்கை வலம் வருகின்றனர் - மாமூலான சிரிப்பு வில்லன்களின் குறுக்கீடுகளோடு !! ஆனால் இம்முறையோ - லக்கியிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு ரொம்பவே புதுசானது என்பதால் கதையும் fresh ஆக இருப்பது போல் எனக்குப்பட்டது ! Of course - ஒரு "சூப்பர் சர்க்கஸ்" ரேஞ்சுக்கோ ; "புரட்சித் தீ" அட்டகாசத்துக்கோ இது நெருங்கிட முடியாதென்றாலும் - இந்த ஆல்பத்தில் ஜாலி ஜம்பரின் லூட்டி செமையாக இருப்பதாக நான் நினைத்தேன் ! அதுவும் பக்கம் 14-ல்  "சூதாட்டம் மேலே எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் கிடையாது" என்று செனட்டரிடம் LL விளக்கிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஜாலி "ஹி..ஹி..ஹி.." என்று பல்லைக் காட்டுமிடம் A-1 !! லக்கி தொடரின் creamy layer கதைகளின் பெரும்பான்மையை நாம் போட்டு விட்டோம் என்ற நிலையில், தொடரும் ஆண்டுகளில் கதைத் தேர்வு நிச்சயம் சுலபமாய் இருக்கப் போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம் ! And by the way - சென்றாண்டு ஐரோப்பாவில் வெளியான அந்த லக்கி லூக் கிராபிக் நாவலை (Who Killed Lucky Luke?) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks ? சென்றாண்டு இது பற்றிப் பேசியது கொஞ்சமாய் நினைவுள்ளது ; but அப்போது slots ஏதும் காலி இல்லாததால் பேசிய கையோடு அவரவர் ஜோலிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன் ! 2018-ல் இதைப் போட்டுத் தாக்கலாமா ? Or இப்போதைக்கு இந்த பழகிப் போன கார்ட்டூன் LL மட்டுமே போதுமா ? என்ன தோன்றுகிறது உங்களுக்கு ? 
LADY S - "சுடும் பனி" - எனது மதிப்பீட்டில் இம்மாதத்து இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆல்பம் ! கதை அரங்கேறும் சுவீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோல்ம் நமக்கு இதுவரையிலும் அத்தனை பழக்கமிலா அரங்கம் தானே ? இதற்கு முன்பாய் ஸ்டெல்லாவின் வழிகாட்டுதலில் சாகசம் செய்திடும் ஜானி நீரோ - "சதிகாரர் சங்கம்" இதழில் இங்கே ரவுண்ட் அடித்தது போலொரு ஞாபகம் உள்ளது எனக்கு ; அது நீங்கலாய் இந்த தேசத்தை நாம் வேறு சாகசங்களில் ரசித்துள்ளோமா guys ? I think no.... அது மட்டுமன்றி, நோபல் பரிசு வழங்கப்படும் பின்னணிகள் பற்றியும் நாம் இதுவரையிலாவது எந்தவொரு ஆல்பத்திலும்  பார்த்தது இல்லையெனும் பொழுது - கதையரங்கு ரொம்பவே புதுசு ! ஆனால் அந்த வழக்கமான வான் ஹாம்மே template-ஐ லார்கோவின் தொடரில் எக்கச்சக்க முறைகள் ரசித்திருப்பதால் - "அட..லார்கோ ஏன் நைட்டியோடு சுற்றித் திரிகிறார் ?" என்று யாருக்கேனும் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ! But சர்வதேச ராஜாங்க சதுரங்க ஆட்டங்களை நம் கண் முன்னே கொணரும் ஆற்றல் வேறு எவருக்கும் இல்லா அளவிற்கு வான் ஹாம்மேவிடம்  கொட்டிக் கிடப்பதால் - இன்னமுமொரு சர்வதேச spy த்ரில்லரை ரசித்த திருப்தி உத்தரவாதம் என்பேன் ! காதல்வயப்படும் ஷானியா ; சென்டிமென்டுக்கு உருகும் வில்லன் என்ற இடங்களில் வான் ஹாம்மே கொஞ்சமாய் பாணிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கிறார் என்பதை உணர முடிகிறது !  And "சுடும் பனி" எழுத்துரு.....yup !! சிகாமணியே ! 
மார்டினின்  MYSTERY SPECIAL - 2 மாறுபட்ட கதைகள் ; இரண்டுமே அழகான ஆக்கங்கள் தானெனினும் -சென்றாண்டின்  "இனி எல்லாம் மரணமே" தொட்ட உயரத்தை தூரத்தில் நின்று எட்டிப் பார்க்க மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை ! மார்ட்டின் ஒரு offbeat கதைவரிசை எனும் போது இதனுள் புகுந்து கதைத் தேர்வுகளை உருப்படியாய்ச் செய்து திரும்புவது என்பது சாமான்யப் பணியாக இருப்பதே இல்லை ! ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு வித்தியாசப் பின்னணியில் தட தடக்கும் சாகசம் என்பதால் எதைக் கழிப்பது ? எதைத் தேர்வு செய்வது ? என்ற தீர்மானம் எடுப்பதற்குள் போதும்-போதும் என்றாகிவிடும் ! And Mystery Special இதழின் அட்டைப்படம்  போஜ்பூரி ஹீரோக்களின் கிளோஸப் போல் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் ; நிச்சயமாய் அடுத்த MM சாகசத்துக்கு ஒரிஜினல் ராப்பரையே மரியாதையாகப் போட்டு விடலாமென்றிருக்கிறேன் ! இப்போதெல்லாம் நாம் பழகி விட்டுள்ள தரங்கள் - சுமாரான எதையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க அனுமதிப்பதில்லை எனும் பொழுது - Mystery Special-க்கான அட்டைப்படத் தேர்வு சுகப்படவில்லை என்பது புரிகிறது ! சிக்கல் என்னவெனில் - தீவிரமாய் எதனுள்ளேயும் தலைநுழைத்தே கிடக்கும் பட்சத்தில் - உள்ளங்கையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் ஒரு விஷயம் கூட கண்களுக்குப் புலப்படாது போய் விடும் போலும் ! "அட...விளக்கெண்ணெய் ! உள்ளங்கையில் உள்ளதை கண்ணு ரெண்டையும் முழிச்சுப் பாரேன் !" என்று சுட்டிக் காட்ட அவ்வப்போது யாரேனும் அவசியம் போலும் ! 

ஆண்டின் ஒற்றை மாதம் மட்டுமே இனி எஞ்சி நிற்கும் தருணத்தில் - "the year that has been" - பற்றிய உங்களின் முதல் சிந்தைகள் என்னவாக இருக்குமோவென்று அறிந்திட ஆவலாய் இருக்கிறோம் ! ஜனவரியில் "ட்யுராங்கோ" சகிதம் போட்ட பிள்ளையார் சுழியானது - தொடர்ந்துள்ள நாட்களிலும், மாதங்களிலும் 5000 பக்க சுமாருக்கு ஓடியுள்ளதேனும் பொழுது - 2017-ன் இது வரையிலான memorable தருணங்கள் பற்றிய அசை போடலை ஆரம்பிப்போமா ? என்று நினைத்தேன் ! சூப்பர் 6  இதழ்கள் ; சந்தா E-வின் கிராபிக் நாவல்கள் ; LADY S அறிமுகம் ;  இரத்தக் கோட்டைஜெரெமியா ; என்று கலர் கலராய் நினைவுகள் மட்டுமே எனக்குள் இந்தச் சாமத்தில் ஓடுகின்றனவே தவிர்த்து ; கோர்வையாய் எதையும் நினைவுகூர்ந்திட முடியவில்லை ! So இந்தாண்டின் இதுவரையிலான உங்களது TOP 5 moments என்னவென்று நினைவு கூர்ந்திட முயற்சியுங்களேன் guys ? அப்படியே - நவம்பரில் அலசல்களையும் தொடர்ந்திடலாமே ? Bye all !! See you around !  

276 comments:

  1. //And by the way - சென்றாண்டு ஐரோப்பாவில் வெளியான அந்த லக்கி லூக் கிராபிக் நாவலை (Who Killed Lucky Luke?) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks ? சென்றாண்டு இது பற்றிப் பேசியது கொஞ்சமாய் நினைவுள்ளது ; but அப்போது slots ஏதும் காலி இல்லாததால் பேசிய கையோடு அவரவர் ஜோலிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன் !//

    கொண்டு வந்திடுங்க சார்!!!

    ReplyDelete
  2. இதோ பதிவைப் படித்து விட்டு வ௫கின்றேன்.
    நண்பர்கள் அனைவ௫க்கும் நள்ளிரவு வணக்கம்!!@@

    ReplyDelete
  3. வந்தாச்சி ஞாயிறு. ...வந்தாச்சி பதிவு.....வந்தாச்சி 10 க்குள்......டண்டணக்கா....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. எனக்குமே சை.சாம்ராஜ்யத்தை கலரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை. .காரணம் 1.டெக்ஸ் செவ்விந்திய மரபு உடையில் முழு சாகஸம்.
    2.டைனோசர், பாம்பு,நண்டுetc...விலங்குகளின் அணிவகுப்பு...
    3.கற்பனையின் உச்சம் என்று பல ப்ளஸ் உள்ள கதை. ..
    ஏன் இது 3 ம் இடம் பிடித்தது...!!!!!!!
    அடுத்த மறுபதிப்பாக சைத்தான் சாம்ராஜ்யம் வர வாய்ப்புள்ளதா.ஆசிரியரே...

    ReplyDelete
  6. பவளச் சிலை மர்மம், வைக்கிங் தீவு மர்மம், சைத்தான் சாம்ராஜ்யம் மூன்றையும் இணைத்து குண்டு புத்தமாகத் தந்து விடுங்கள் ஆசிரியர் சார்!
    உங்கள் ஆசையும் நிறைவேறியமாயும் இ௫க்கும் , எங்களுக்கு குண்டு புத்தகம் கிடைத்தமாறியும் இ௫க்கும்!!!!
    எப்பூடி கலக்கலான ஐடியால...!!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி. .....

      சரவணன் சார்.!@


      உங்கள் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. !

      பலே!பலே!

      இதை,இதைத்தான் எதிர்பார்த்தேன். !

      Delete
  7. லக்கி லூக் கிராபிக் நாவலை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். அடுத்த ஆண்டு வ௫கை தந்தால் நலமாக இ௫க்கும்!!!@

    ReplyDelete
  8. சமீபத்துல புது கி. நா. டைப் லக்கிய வாசிக்க நேர்ந்தது. இது ரெகுலரான லக்கி கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஜாலி ஜம்பருக்கு மைண்ட் வாய்சோ, வசனமோ இல்லாம இருந்தா எப்படி இருக்கும். சீரியசா லக்கி லூக் இருந்தா எப்படி இருக்கும்?
    வேண்டாம்னு சொல்லலை வாசகர்கள் புது வேறு விதமான அனுபவத்துக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

    ReplyDelete
  9. மாடஸ்டியை போல் ஷானியாவையும் பக்குவமாக கையாள வேண்டுகிறேன் ஆசிரியரே கிளர்ச்சியான படங்களையும் உடல்உணர்ச்சியான வசனங்களையும் தவிர்க்க வேண்டுகிறேன். மாடஸ்டிக்கென்றே வாங்கிய கருப்பு மசியை ஷானியாவுக்கும் உபயோகியுங்கள். ஆசிரியர் என்றால் நல்வழிப்படுத்துபவர் என்பது உலக நியதி

    ReplyDelete
    Replies
    1. உண்மை. வழிமொழிகிறேன்.

      Delete
    2. இனியன் சார் @

      நான் இன்னும் " சாணி"யா புக்கை
      புரட்டிக்கூட பார்க்கவில்லை.

      "அடைந்தால் மகாராணி இல்லையேல் மரணதேவி " என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ளேன். !

      Delete
    3. கருப்பு மசி
      விஜயன் சார் சும்மாவே டான்ஸ் ஆடுவார்
      இதுல இன்னும் கால்ல சலங்கை கட்டி
      விட்டால்! !!!

      Delete
  10. Who Killed Lucky Luke... Is a definite YES.... Bring it On, Edi !

    ReplyDelete
  11. லக்கி லுக்கின் ஒற்றை கை பகாசுரன் படித்து கொண்டு இருக்கிறேன். எனது மீள் வாசிப்பில் நில் கவனி சுடு உள்ளது. ஆசிர்யர் குறிபிட்டது போல் டிராகன் நகரம் அட்டை படத்தில் எழுத்துரு அருமை.

    ReplyDelete
  12. 2018ல் who killed lucky luke வெளியிட முயற்சித்தால் மிக்க மகிழ்ச்சி. Tex and kid படம் அருமை எந்த கதையின் அட்டை படம் சார்?

    ReplyDelete
  13. Top 5 momentsல் முதல் இடம் இரத்த கோட்டை வெளியீடு.2ம் இடத்தில் Durango, 3ம் இடத்தில் undertaker,4ம் இடத்தில் shania 5ம் இடத்தில் டெக்ஸ் கிராபிக் நாவல்.

    ReplyDelete
  14. special momentsஎன் சித்தம் சாத்தான்கே சொந்தம்

    ReplyDelete
  15. விடிய காலை வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  16. ஒரு வெறியனின் தடத்தினில்.

    வழக்கம் போல டெக்ஸின் மிளகாய் பஜ்ஜி ஸ்டைல் ஆக்சன் கதை. பனி அடர்ந்த பயணத்தின் போது பழய நணபனை சந்திக்கும் டெக்ஸ். அவனுடய வினோதமான வாழ்க்கைத் துணை மற்றும் வாழும் முறை. அவர்களை சூழ்ந்த ஆபத்திலிருந்து அவர்களை டெக்ஸ் காப்பாற்றுவது தான் கதை. சுவராஸ்யமான ஆக்சன். சீக்கின் முன் கதையும் பரபரப்பானது. மொத்தத்தில் இன்னொரு சூப்பர் ஹிட்.

    ReplyDelete
    Replies
    1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கதை.சும்மா பட்டையக் கிளப்பியது. ஆசிரியரின் மொழிபெயர்ப்பும் சும்மா நச் னு இ௫ந்தது.

      Delete
  17. நவம்பர் இதழ்களின் விமர்சனம்:
    க) சுடும் பனி(Lady S)

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: சின்ன விஷயத்தை வைத்து…கதாசிரியர் அருமையான கதையை பின்னி எடுத்து விட்டார்.
    உ) மர்ம மனிதன் மார்ட்டின்

    அட்டைப்படம்: சுமார்
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: இரண்டு கதைகளும் விறுவிறுப்பாக சென்றன. எதிர்பார்த்த முடிவுகள்.

    ங) லக்கி லூக்

    அட்டைப்படம்: அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை
    ஒரு வரி விமர்சனம்: படிக்க படிக்க பக்கம் போய்க் கொண்டே இருந்தது…தனிமையே என் துணைவன் என்பதை படித்த போது தான் கதை முடிந்தது என்பதை உணர்ந்தேன்.

    ReplyDelete
  18. சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்.

      Delete
    2. மஹி அங்கிள், கரூர் அங்கிள் சொல்வது போல சிங்கத்தின் சிறு வயதில் கண்டிப்பாக வேண்டும்...

      Delete
    3. ஈரோடு விஜய்5 November 2018 at 08:36:00 GMT+5:30

      'சிங்கத்தின் சிறுவயதில்' வேண்டும்!

      ஈரோடு விஜய்5 November 2019 at 08:36:00 GMT+5:30

      'சிங்கத்தின் சிறுவயதில்' வேண்டும்!

      ஈரோடு விஜய்5 November 2020 at 08:36:00 GMT+5:30

      'சிங்கத்தின் சிறுவயதில்' வேண்டும்!

      ஈரோடு விஜய்5 November 2021 at 08:36:00 GMT+5:30

      'சிங்கத்தின் சிறுவயதில்' வேண்டும்!




      # போராட்டம் இந்த அளவுக்கு நீடிக்காம இருந்நாச் சரிதான்!

      Delete
    4. எனக்கு சிங்கத்தின் சிறு வயதில் இல்லேன்னா கூட பரவாயில்லை, லயனின் ஸ்மால் ஏஜ் இருந்தா மட்டும் போதும்.😁😂😁

      Delete
    5. எடிட்டர் சார்.!

      சிங்கத்தின் சிறு வயதில் கண்டிப்பாக வேண்டும். !

      Delete
    6. சி.சி.வயதில்

      ஏன் ..வருவது ..இல்லை..ஏன்..?

      ஏன் எத்தனை முறை வினவினாலும் பதில் வருவதில்லை..? ஏன்..?



      எத்தனை காலம் ஓடினாலும் நாங்களும் போராடி கொண்டே இருந்தாலும் செவி சாய்க்காது போவது ஏன்..?


      போராட்டத்தை முடித்து எங்கள் பழைய காமிக்ஸ் இதழ்களை மறுமுறை புரட்டி பார்க்காமல் இருக்க வைப்பது ஏன்..?



      ஏன்...ஏன்...ஏன்...?



      வினாக்களோ பலப்பல...

      விடைகளோ வினாகுறிகளாகவே ..?


      Delete
  19. எடிட்டருக்கும்,காமிக்ஸ் சொந்தங்களுக்கும் வணக்கம்!
    டிராகன் நகரம் அசத்தலான வடிவமைப்பு..!
    நன்றிகள் பல..!


    பவளச் சிலை மர்மம் அட்டகாசமான கதை..ரசித்து ருசித்து படித்த கதைகளில் ஒன்று..! அந்நாளிலேயே பெரிய சைஸில் பட்டாசாய் வெடித்த கதை..! அட்டகாசமான ஓவியங்களோடு அதகளமான கதை..!
    அப்பேர்பட்ட ஒரு கதையை "நிலவொளியில் நரபலி" சைஸில் போடுவது நியாயமா எடிட்டர் சார்? வழக்கமான சைஸிலேயே போடுங்கள் சார்..இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல..பல அன்பு நண்பர்களின் விண்ணப்பமும் இதுவாகத்தானிருக்கிறது...!
    இனிமேல் டெக்ஸின் எந்தக் கதைகளுமே நிலவொளியில் நரபலி சைஸில் வேண்டாம் சார்!
    ப்ளீஸ்!!

    ReplyDelete
    Replies
    1. ///வழக்கமான சைஸிலேயே போடுங்கள் சார்..இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல..பல அன்பு நண்பர்களின் விண்ணப்பமும் இதுவாகத்தானிருக்கிறது...!///

      +11111

      ///இனிமேல் டெக்ஸின் எந்தக் கதைகளுமே நிலவொளியில் நரபலி சைஸில் வேண்டாம் சார்!
      ப்ளீஸ்!!
      ////

      -1

      வசனங்கள் குறைவாய் உள்ள கதைகளை (வருடம் ஒரு புத்தகம் மட்டும்) 'நிலவொளி-நரபலி' சைஸில் போடலாம். குறைந்த விலையில் வெளிவந்து, விற்பனையில் சக்கைபோடு போட்ட/போட்டுக்கொண்டிருக்கும் இதழ் அதுவென்பதை நாம் மறந்துவிடக்கூடாது!

      Delete
    2. நிலவொளியில் ஒரு நரபலி சைஸ் வேண்டவே வேண்டாம். !

      தற்போது வேண்டும் என்று கூறும் நண்பர்கள் கூட 40+ வயதில் தங்களுடைய கருத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும்.!

      எனக்கு 44 ஆகிறது.கடந்த ஒரு ஆண்டாக கண்ணாடி இல்லாம காமிக்ஸ படிக்க முடியாத நிலை உள்ளது. !இதனால் காமிக்ஸ வாசிப்பு குறைந்து விட்டது. வேத புத்தகம் போல தினமும் படிக்கும் மாடஸ்டி புத்தகங்கள் கூட வாசிப்பு குறைந்து போய்விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

      Delete
  20. டிராகன் நகரம் அரிய பொக்கிஷமாக இருந்த காலத்தில் நண்பர்கள் Dr.சுந்தர் & சிபி ஜி எனக்கு பரிசளித்தார்கள். 2 கிடைத்ததால், ஒன்றை நானும் பரிசளித்து விட்டேன்.
    எல்லாம் சேந்தபட்டி நண்பர்களின் நட்பு மற்றும் பெருந்தன்மை.
    தற்போது கலரில், ஹார்ட் பைண்டிங்கில் வந்தாலும் அந்த நட்பே எனக்கு பெரிதாக தெரிகிறது.
    தற்போதைய வெளியீடு (சந்தா காப்பி) என் கைக்கு வர சில/பல மாதங்கள் ஆகும்.

    ReplyDelete
  21. அன்புள்ள ஆசிரியரே!

    TEX மூன்று கதைகளையும் ஒரே புத்தகமாக கலரில் வெளியிட வேண்டுகிறேன். தயவு செய்து தனித்தனியாக பிரிக்க வேண்டாம். நரபலி சைஸ் கண்டிப்பாக வேண்டாம்.

    ReplyDelete
  22. தோர்கலுக்கு டெக்ஸ் எவ்வளவோ மேல்...

    ReplyDelete
  23. லக்கி கதை சாரமில்லாத கதை. காமெடி மிகவும் நன்றாக உள்ளது. அவரது சுபாவத்திற்கு ஏற்ற கதையாக தெரியவில்லை. நம்பியவர்களை இடையிலேயே விட்டு விட்டு செல்வதாக தோன்றுகிறது.

    ReplyDelete
  24. சானியா ::- வாழ்கையில் அடிப்பட்டவர் அவ்வளவு சீக்கிரம் ஒரு ஆணிடம் ஏமாறுவது அபத்தமாக உள்ளது.

    இத்த தடவை முதல் பரிசினை கண்டிப்பாக மார்ட்டினுக்கே வழங்க வேண்டும் மிகச்சிறப்பான கதை. ஏனென்றால் டிராகன் நகரம் ஏற்கனவே ரேசில் ஜெயித்ததுதானே!

    ReplyDelete
  25. அதிகாலை வணக்கம்

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் 🙏...

    ReplyDelete
  27. ஒற்றைக்கை பகாசுரன்: - காமெடி பகாசுரன்

    கதையின் முதல் பக்கத்தில் சேவல் கூவுவதை விரும்பாத அல்டாப் தவறான வார்த்தையை உபயோகபடுத்தியதை கண்டிக்கும் அம்மா, உன்னை பார்த்து உனது தம்பி கேட்டு போவான் என சொல்லும் இடம்; அட இது நம்ப வீட்டு குட்டிகளை நாம் கண்டிப்பது போல் உள்ளதே என்று பக்கம்களை திருப்ப ஆரம்பித்தேன் முடிவு வரை சிரிப்பு சிரிப்பு வேறு ஒன்றும் இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த சேவல் ஒரு இயந்திரம் :-)

    அண்ணனை விரட்டும் அம்மாவிடம் தம்பியும் தவறான வார்த்தையை உபயோகபடுத்த, அதனை தொடர்த்து அவர்களில் அப்பாவும் அதே போல் மாட்டிகிட்டு உதை வாங்கும் அந்த இடம் செம! கடைசியில் அந்த அம்மாவும் தன்னை அறியாமல் தவறான வார்த்தையை உபயோகபடுத்தும் இடம் சிரிக்க மறந்தவர்களையும் சிரிக்கவைக்கும்.

    இந்த சகோதர்களில் கண்டுபிடிப்புகள் ஆகா ஓகோ ரகம். வீட்டில் ரொட்டி எடுக்கும் செட்அப், வெந்த முட்டையை உடைக்க உள்ள இயந்திரம், லக்கியுடன் பயணம் செய்யும் போது, முகசவரம் செய்யும், இயந்திரம், காபி இயந்திரம் சூப்பர்! இதை விட டாப், அவர்களில் வண்டி சக்கரத்திற்கு மாற்றாக shoeவை கொண்டு வடிவமைத்து செம! இதனை ரசிக்கும் படி செய்ததற்கு ஓவியருக்கு முக்கிய பங்கு உள்ளது!

    சரி லக்கி பக்கம் வருவோம். அறிமுகமான பக்கத்தில் இருந்தே மனிதன் சிரிப்பை வயிற்றில் அலையென உருவாக்கிவிட்டார். ஜாலியை முதுகில்தொடர்த்து உப்பு மூட்டை தூக்கி வரும் இடத்தில் இருந்து, செவிந்தியர்களை விரட்ட மலையில் இருந்து செங்குத்தாக இறங்குவாதகட்டும் அவர்களை விரட்டிய பின்பும் செங்குத்தாக ஏறுவதாகட்டும், நீர் வீழ்ச்சி விழும் இடத்தில் ஜாலியை வைத்து கோச்வண்டியை இழுப்பது சொல்லிக்கொண்டே போகலாம்! அதுவும் அவர்கள் திரும்பிவரும் போது பாலம் நல்ல நிலையில் இருந்தும் ஜாலியை வைத்து கோச்வண்டியை இழுப்பது சூப்பர்! சிரிப்பை அடக்க முடியவில்லை.

    இந்த கதையில் பக்கத்திற்கு பக்கம் சிரிப்பு, ஒவ்வொரு பக்கத்தையும் பற்றி எழுத நிறைய உள்ளது.

    நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு காமெடிகதை வசனம்களிலும் கதையின் படம்களின் என்னை ரொம்ப சிரிக்க வைத்துள்ளது.



    கண்டிப்பாக நமது வீட்டு சுட்டிகளுக்கு பிடிக்கும், அவர்களுக்கு கதை சொல்ல கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      இரசித்து இரசித்துப் படித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

      ////இந்த கதையில் பக்கத்திற்கு பக்கம் சிரிப்பு, ஒவ்வொரு பக்கத்தையும் பற்றி எழுத நிறைய உள்ளது.

      நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு காமெடிகதை வசனம்களிலும் கதையின் படம்களின் என்னை ரொம்ப சிரிக்க வைத்துள்ளது.///

      சூப்பர்!

      Delete
    2. @ பெங்களூர் பரணி

      வரவர தாங்கள் புத்தகங்களை கைபற்றியதும், அதை சுடசுட படிக்கும் வேகமும்,படித்த அனுபவத்தை ஆர்வம் குறையாமல் சுவையாக,விரிவாக எழுதும் விமர்சனமும் வியக்கவைக்கிறது.

      உங்களுக்கான நேரபற்றாக்குறையை நான் நன்கு அறிவேன்.காமிக்ஸுக்காக தவறாமல் நேரம் ஒதுக்கி படிப்பதும்,மணிக்கணக்கில் டைப் செய்து விமர்சனத்தை பதிவிடுவதும் பாராட்டியே ஆகவேண்டும். அருமை.! தொடருங்கள்.!!

      Delete
    3. நன்றி சிவா. இரண்டு காரணங்கள்.
      1. நமது விமர்சனம் ஆசிரியர் நாம் இந்த கதையை விரும்புகிறோமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள.
      2.ஆன்லைன் மூலம் வாங்கும் சில நண்பர்கள் இந்த தளத்தில் நடக்கும் கதை விமர்சனம் மற்றும் விவாதங்களை கொண்டு புத்தகம் வாங்குவதை தீர்மானிக்கிறார்கள் என்பதை ஆசிரியர் பலமுறை சொல்லி உள்ளார். எனவே நமது விமர்சனம் நமது விற்பனைக்கு ஒரு மறைமுகமான காரணி என்பதும் ஒரு காரணம்.

      Delete
    4. உண்மை நேரம் இன்மை. தற்போதும் குண்டு புத்தகம் முழுவதையும் இன்னும் படிக்கவில்லை. லயன் 300 டெக்ஸ் கதை பாதி மட்டுமே படித்து உள்ளேன். ஜூலியா இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

      Delete
    5. @ பெங்களூர் பரணி

      இரண்டு காரணங்களும்,காலத்தே செய்யும் விமர்சன நோக்கமும்,பொறுப்புணர்ச்சியும் பக்காவோ..பக்கா..!

      ஜூலியா படிங்க...உங்களை செமையான விமர்சனம் எழுதவைக்கும். இதனால் ஸ்பெஷல் விற்பனையாகி அடுத்தவருடம் ஜூலியாவுக்கு ஒரு வாய்ப்புகிடைக்கலாம்.!

      Delete
  28. 2018 ஆண்டு மலருக்கு இரண்டு லக்கி கதைகளை தேர்வு செய்தது அருமை, அதுவும் இரண்டுமே டால்டன் சகோதரர்களுடன் என்பது இன்னும் சிறப்பு.

    தயவு செய்து இந்த கதைகளில் மாற்றம் செய்து விட வேண்டாம்.

    ReplyDelete
  29. Who killed lucky கதையை 2019 க்கு வைத்துக் கொள்ளலாமே. ப்ளீஸ்.

    ReplyDelete
  30. சுடும் பனி :
    தனது தந்தையுடன் நோபல் பரிசு விழாவிற்கு வரும் இடத்தில் வழுக்கட்டாயமாக ஒரு வேலையை செய்ய வைத்து அதனால் ஏற்படும் குழப்பம் இறுதியில் சுபம். இதில் நோபல் பரிசின் பின்னணி, சுவீடனில் உள்ள அரச குடும்பத்தின் வரலாறு, சூஸன் தந்தையின் நினைவுகள், இடையில் பத்திரிகை ரிப்போர்ட்டர் போர்வையில் ஒரு தீவிரவாதி, அவன் தீவிரவாதம் வேண்டாம் என்று நினைத்தாலும் என்ன நடக்கும். இவை அனைத்தையும் கலந்து ரசிக்கும் படி கொடுத்ததை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    இந்த கதையில் சூஸனை மிரட்டி வேலை வாங்கும் கும்பலின் நோக்கம் புரிகிறது, உன்னதமான நோக்கம்தான்.

    ஓவியம்கள் அருமை, அதுவும் சுவீடன் அரண்மனை அட்டகாசம்.

    கதையில் வசனங்கள் கொஞ்சம் அதிகம், இது கதையின் வேகத்தை சற்று குறைக்கிறது.

    லார்கோ கதைக்கு ஒரு டெம்ப்ளேட் என்பது போல் Lady-S க்கும் ஒரு டெம்ப்ளேட் என்று கதாசிரியர் அமைத்து விட்டார். இந்த மாதிரி டெம்ப்ளேட் இல்லாத கதைகள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    கிளைமாக்ஸில் பனியில் தனியே சென்று தனது தீவிரவாத நண்பனை சரணடைய செய்வது நமது தமிழ் படங்களை ஞாபகபடுத்தியது என்றால் மிகையில்லை.

    சுடும் பனி சுடு கொஞ்சம் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. பரணி சார. !

      விமர்சனம் அட்டகாசம். ! தெளிவான கதை சுருக்கம் + நடை அருமை. !

      அப்படி யே இரவே இருளே கொல்லாதே கதையின் விமர்சனமும் இதே போல் டைம் கிடைக்கும் போது,
      கூறுங்களேன்.இதுவரை பலமுறை முயன்றும் புரியாத ஒரே கதையை இதுதான். என்பதும் காமிக்ஸ வாசிப்பு க்கு இது ஒரு கரும்புள்ளி. !

      காமிக்ஸ கதையை படித்து விட்டு பிடிக்க வில்லை என்பதுவேறு
      ஆனால் என்ன கதை என்பதையே தெரியாமல் வைத்திருப்பது அவமானமாக உள்ளது. !ப்ளீஸ். !

      Delete
    2. சுடும் பனியில் சில காட்சிகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதில் ஹோட்டலில் அயூப் கான் சூசனை விரட்டி வரும் போது ரிபோட்டருடன் லிஃப்ட்டில் செல்லும் போது இரண்டாவது தளத்தில் ஆன்டன் வெளிவருவது. சரி ஏன் சூசனை இவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாமே என்று நினைக்கையில் அடுத்த சில பக்கங்களில் அதற்கான விடை அழகாக சொல்லப்பட்டது.

      Delete
    3. வெங்கடேசன் @ இருவே இருளே கொல்லாதே பற்றி நமது சிவா அருமையாக எழுதி இருந்தார். அவர் ப்ளாக்கில் அல்லது நமது தளத்தில் அவரின் விமர்சனத்தை நேரம் கிடைக்கும் போது எடுத்த தருகிறேன்.

      Delete
    4. பரணி சார்.

      மாயாவிகாரு ஓவியம் சார்ந்த ரசனை. !

      எனக்கு தேவை நீங்கள் மேலே சுடும் பனி விமர்சனம் செய்தது போன்று நச என்று தெளிவான கதை சுருக்கம்.

      Delete
    5. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். ஆனால் என்னைவிட சிறப்பாக கதை சுருக்கம் சொல்ல பல நண்பர்கள் இங்கு உள்ளார்கள்.

      சமீபத்தில் ரவி கண்ணன் மெகா குழப்பமான இரத்த படலத்திற்கு எழுதிய கதை சுருக்கம்.

      டெக்ஸின் பழைய கதைகளுக்கு அப்ப அப்ப கதை சுருக்கம் கொடுக்கும் நம்ப விஜயராகவன்.

      இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

      Delete
    6. இரத்த படலம் நான் ஆரம்பத்திலிருந்தே நிதானமாக படித்து வந்ததால் அவ்வளவாக குழப்பம் இல்லை. ! இருந்தாலும். இ.இ கொ.கதையைத்தான் தெளிவாக யாரும் கதையை கூற வில்லை. இது அதுதான் அது இதுதான என்று மழப்பனான பதில் தான் வந்து ள்ளது. .நானும் காதலிக்க நேரமில்லை படம் நாகேஷ் போல் கதையை தேடிக் கொண்டு உள்ளேன். !

      Delete
  31. Replies
    1. சூப்பர்.. மாயாஜிசார்..👌🏼👌🏼👌🏼

      Delete
    2. Dear friend Mayavi Siva,
      நண்பர் ஒருவர் சில நாட்களாக இங்கு திருக்குறள் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். பிறகு சில நண்பர்களின் வேண்டுகோளின்படி அவர் அதை இங்கு நிறுத்திவிட்டார். நீங்கள் செய்யும் இந்த 'மாத்தியோசி' எதற்கு என்று புரியவில்லை. மேலும் நீங்கள் செய்வதில் மாத்தியோசிக்க (except that you own lot of our comics) என்ன இருக்கின்றது என்பதும் புரியவில்லை. சிறிது விளக்கினால் நன்று.

      Delete
    3. இதுரை பார்க்காத படிக்காத முத்து
      இதழ்களை நம் கண்களுக்கு விருந்தாக
      அளிக்கும் அற்புத சேவை செய்கிறார்
      மாயாஜி.பொன் முட்டை இடும் பணியை
      அறுத்துவிடாதீர்.
      மாஜி ஊர்ல 4பேர் 40 விதமாக பேசுவர்
      நீங்கள் கன்டினியூ ப்ளீஸ்.

      Delete
    4. Accept dear friend Ganesh, but what is the meaning of 'மாத்தியோசி'. Also just by seeing the wrappers what you are getting???

      Delete
    5. Then Mr. Jegang Atq can also continue with his 'திருக்குறள் விளக்கம்s'.

      Delete
    6. அன்பின் செந்தில் விநாயகம்,

      உங்கள் கேள்வி நியாமானதே.! அதற்கான விளக்கம்....

      லயன் காமிக்ஸ் ஆரம்ப காலத்தில் சுமார் 20,000 பிரதிகள் விற்பனையாகி கொண்டிருந்தது என்றால், 30,000 வாசகர்கள் கைமாற்றி படித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று 300 சந்தாவுக்கு தினறிக்கொண்டு இருக்கிறோம்.

      இருபது வருடங்களுக்கு முன் ஆர்வமாய் படித்துக்கொண்டிருந்தவர்களில் தப்பிப்பிழைத்தவர்கள் தான்,தீவிரமான காமிக்ஸ் ரசிகர்கள் தான் இன்று மீதம் இருப்பவர்கள். அவர்களும் ஆயிரத்திற்கும் சற்றே அதிகமானவர்களே.! ஒரு இரண்டாயிரம் நிரந்தர வாசகர்கள் கிடைத்தால் இன்னும் பல உயரங்களுக்கு எடிட்டர் இந்த காமிக்ஸ் உலகை கொண்டு செல்வார் என்பதே யதார்த்தநிலை.!

      படைப்புகள் மலையளவு குவிந்து கிடக்கிறது,அதில் ஒரு சுண்டெலி தோண்டி எடுத்த அளவே நம் வாசிப்புக்கு வருகிறது. உழைக்கவும்,படைப்புகளை உலகெங்கும் வேட்டையாடி கொண்டுவரவும் எடிட்டர் தயாராக இருந்தாலும்கூட, வாசிக்க வாசகர்கள் தான் தட்டுப்பாடு.

      இந்த மாத்தியோசியில் உள்ள வாசகங்களுக்காக காமிக்ஸ் வட்டம் தாண்டி நம்மால் கணிக்க முடியாத, புக முடியாத இடங்களுக்கு பயணிக்கிறது.வெறும் அட்டைபடம் மட்டுமென்றால் அது காமிக்ஸ் குருப் தாண்டி ஒரு பருக்கை அளவு கூட செல்லாது.ஆனால் இந்த வலிமையான வாசகங்களுக்காக பயணிக்கும் இந்த மாத்தியோசி....

      வாழக்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நம் காமிக்ஸ் வாசிப்பாளர்கள் எவரேனும் ஒருவர் கண்ணில் இந்த அட்டைபடம் தெரிந்து, அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் அந்த வாசிப்பு ஆர்வம் உயிர் பெறாதா..??? இந்த உலகிற்கு திரும்ப அவர்களுக்கு வழி காட்டாதா..??? என்ற தேடலே,ஆசையே இந்த மாத்தியோசியின் நோக்கம்.!

      கால வெள்ளத்தில் புதைந்து கிடக்கும் நம் வாசகர்களை மீட்டெடுக்க, ஏதோ என்னால் முடிந்த இந்த வேள்வி மூலமாக ஒரு 100 வாசிப்பாளர்களையாவது மீள் வாசிப்பு கொண்டுவர வேண்டும் என்பதே என் இலக்கு.

      காலத்தால் அழியாத வைர வரிகளும் சரி...
      காமிக்ஸ் அட்டைபடங்களும் சரி...
      என்னளவில் உறங்காத விதைகள்.!


      இந்த மாத்தியோசி வாரம் 700 பேர் எனது facebook பக்கத்தில் மட்டும் படித்து பின்தொடர்கிறார்கள். எனது இன்பாக்ஸில் வாரம் மூன்று முதல் ஐந்து பேர் 'இன்னும் காமிக்ஸ் வருகிறதா..? அதை எங்கு வாங்கலாம்..?' என விசாரிகிறார்கள். அவர்களுக்கு லயன் ஆன்லைன் ஸ்டோருக்கு நான் வழிகாட்டுகிறேன்.

      இதுதவிர அதில் உள்ள தொலைபேசி எண்னுக்கு, லயன் ஆபிஸுக்கு எத்தனை விசாரணை செல்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.

      இப்ப சொல்லுங்க செந்தில் விநாயகம்....நான் என்ன செய்ய...? இந்த வேள்விக்காக....
      அட்டைபடங்களை ஸ்கேன் செய்வது,
      அதை பட்டி டிங்கரிங் செய்து புதிதாக்குவது,
      வாசகங்களை வேட்டையாடுவது,
      வால்பேப்பராக தயாரிப்பது என என சிந்தனையும் நேரமும் தினசரி 90 நிமிடங்கள் இந்த வேள்விக்காக செலவாகிறது.

      செலவை குறைத்து விடலாமா..???

      இன்றைய வாசகத்தின் படி பலரும் 'நான் அறிவாளியாக காட்டிக்கொள்ளவே இப்படி செய்து...முட்டாளாகிறேன்...' என ஒரு குற்றசாட்டு இருக்கத்தான் செய்கிறது.!

      எனக்கேற்ற நல்ல அட்வைஸ் ப்ளிஸ்...[கை கூப்பும் படம் ஒன்று]

      Delete
    7. //இந்த மாத்தியோசி வாரம் 700 பேர் எனது facebook பக்கத்தில் மட்டும் படித்து பின்தொடர்கிறார்கள். எனது இன்பாக்ஸில் வாரம் மூன்று முதல் ஐந்து பேர் 'இன்னும் காமிக்ஸ் வருகிறதா..? அதை எங்கு வாங்கலாம்..?' என விசாரிகிறார்கள். அவர்களுக்கு லயன் ஆன்லைன் ஸ்டோருக்கு நான் வழிகாட்டுகிறேன்.//

      அருமை. நீங்கள் இதை ஆரம்பித்த பொழுது SV தளத்தில் அதற்கான காரணத்தை போட்டதை கவனித்திருக்க மாட்டார்.
      உங்கள் முயற்சியால் ஒரு புது சந்தா வந்தால் கூட வெற்றியே..நிறுத்தி விட வேண்டாம்

      Delete
    8. @ மாயாவிகாரு

      'மாத்தியோசி'யின் கான்செப்ட் என்னவென்று புரியாமல் நண்பர் செந்தில் விநாயகம் கேள்வியெழுப்பியதில் கூட அர்த்தமுள்ளது!

      ஆனால், இத்தனையையும் அவருக்கு விளக்கிவிட்டு 'நான் என்ன செய்ய?'என நீங்கள் கேள்வியெழுப்புவதில் துளியும் அர்த்தமில்லை! தவிர, அது உங்கள் ஸ்திரத்தன்மைக்கு புறம்பானதும் கூட!

      உங்களின் இந்த 'மாத்தியோசி' குறித்து நம் மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் கடந்த EBFல் மேடையில் பாராட்டிப் பேசியிருப்பதை - அதை அறியாத நண்பர்களுக்கு இங்கே சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!

      பலரும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் உங்களுடைய இந்த 'மாத்தியோசி' பணி - மகத்தானது! போற்றலுக்குரியது!!

      தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் பணி!!

      Delete
    9. தயங்காமல் உங்கள் பணியை தொடருங்கள் சிவா.

      Delete
    10. @ இத்தாலிகாரு

      இந்த மாத்தியோசியில ரொம்பவே பெண்டு எடுக்குற விஷயம்...

      ஒவ்வொரு அட்டைபடத்திலும் எழுதப்பட்ட
      இந்த அட்டைபடம் மாடஸ்டி ஆர்மிக்கு சொந்தமானது.!
      ...கிற வாசகத்தை டிஜிட்டல் ரப்பர்ல அழிகிறதுதான் 'படா' வேலையா இருக்கு....எத்தினி நாள்தான் இப்படியே ஓட்டுறது...??? அதுதான் எதுனா 'புது ஐடியா' நண்பர் சொல்லுவாறோன்னு கேட்டேன், அம்புட்டுதான்..ஹீ..ஹீ..ஹீ..! :P

      [ஹீ..ஹீ...போட்டு ரொம்பநாள் ஆச்சி..]

      @ மகேந்திரன் பரமசிவம்

      அதை நிறுத்தறது ஆகாத காரியம்.!

      பழக கடினமான நல்ல பழக்கத்தை
      கைவிடுவதற்கு, அவ்வளவு எளிதில்
      காரணங்கள் கிடைக்கவே கிடைக்காது.!

      Delete
    11. Great thanks dear Mayavi Siva. Please give your number. Just want to talk to you.

      Delete
    12. @ செந்தில் விநாயகம்

      740------6001 என்ற உங்கள் எண் என்னிடம் உள்ளது,உங்கள் செல்ல மகளுடனான செல்பி படத்துடன்..!

      நாளை நானே அழைக்கிறேன்.! :))))

      Delete
    13. Thanks Mayavi Siva. Few months back I have migrated to Australia as a PR. My number is +61 431 009 887. Kindly give me your number, I will call you.

      Delete
  32. //"சைத்தான் சாம்ராஜ்யம்" இதழை வண்ணத்தில் ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ;
    "சை.சா"வின் முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன் !! //

    ஆஹா சார் அடுத்த வருடம் சைத்தான் சாம்ராஜ்யத்தை டிராகன் நகரம் புத்தக வடிவமைப்புடன் எப்படியாவது எப்பேர் பாடு பட்டாவது உள்ளே நுழைக்க பாருங்கள் :) :) :) please....

    ReplyDelete
    Replies
    1. என்னை பொறுத்தவரையில் வைகிங் தீவு மர்மம் ஒரு சுமாரான டெக்ஸ் கதைதான் கண்டிப்பாக இதை படித்தவுடன் இதுக்கா இவோலோ பில்ட் அப் கொடுத்தோம்னு நண்பர்கள் அவர்களையே திட்டி கொள்ள கூடும் ;)

      Delete
    2. அதற்க்காக இதை போட வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு நண்பர் இந்த புத்தகத்தை 4000 என்று வாய் கூசாமல் சொன்னார் so it should definitely come to abolish grey market .....

      Delete
    3. ///என்னை பொறுத்தவரையில் வைகிங் தீவு மர்மம் ஒரு சுமாரான டெக்ஸ் கதைதான் ///

      +1

      ரொம்பவே சுமாரான டெக்ஸ் கதை!

      Delete
    4. ஆம்...எனவே சை.சாம்ராஜ்யத்துக்கு ஆதரவு கொடுத்தால் மறுக்க மாட்டோம் சார்..!

      Delete
    5. உண்மை ! வைக்கிங தீவு மறுபதிப்பு அளவிற்கு வொர்த் கிடையாது. !

      Delete
    6. வைக்கிங தீவு சொன்னபடி அடுத்த வருடம் வேண்டும். இதனை நான் படித்து இல்லை அதேநேரத்தில் இதன் கிரே மார்க்கெட் விலை நமது ஒரு வருட சந்தா விலையை விட அதிகம்.

      நண்பர்களே தயவுசெய்து இதனை குழப்ப வேண்டாம்.

      2019 சைத்தான் துறைமுகமும் பவளச்சிலை மர்மமும் இணைந்து ஒரு புத்தகமாக வேண்டும் என ஆசிரியரிடம் கேட்போமே.

      Delete
    7. இந்த கதையை ஏற்கனவே படித்த நண்பர்கள் இது மறுபதிப்புக்கு வொர்த் இல்லை என சொல்வதை தவிர்க்கலாமே. அதேநேரத்தில் இந்த கதை எப்போது மறுமதிப்பில் வரும் எப்போது படிக்கலாம் என தவமாய் தவமிருந்த என் போன்ற நண்பர்களையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

      இந்த கதை ஈரோடு புத்தகத் திருவிழாவில் பல நண்பர்களின் அமோக ஆதரவுடன் மறுபதிப்புக்கு தேர்வு செய்யபட்ட கதை. மீண்டும் ஒட்டு என்று சொல்லி குழப்ப வேண்டாமே.

      Delete
    8. பரணி சார. @

      என்னுடைய கலெக்சனில் வைக்கிங தீவு மர்மம் இல்லை. !

      இருந்தாலும் எனக்கு அவ்வளவு பிரமாதமாக தோன ற விலையை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. !

      Delete
    9. உண்மை தான்.வைக்கிங் தீவு மர்மம் டெக்ஸின் பட்டாசை எதிர் பார்க்க முடியாது. சுமாரான கதை தான்..
      சைத்தான் சாம்ராஜ்யம் ஒரு த்ரிலிங் கதை என்று சொன்னால் மிகையாகாது..ஏன் இது 3 ஆம் இடம் வந்தது என்பது குழப்பமாகவே உள்ளது.(ஈரோடு வரும் நண்பர்களின் கருத்தை மட்டும் வைத்து முடிவெடுப்பது தவறோ என்று ஒரு சிறு உறுத்தல் ஏற்படுகிறத.தவறாக இருந்தால் மன்னிக்கவும். )

      Delete
    10. இந்த கதை படிக்காதவர்கள் அதிகம் என்பதை என்பதே காரணம் சரண்.

      Delete
    11. //சைத்தான் சாம்ராஜ்யம் ஒரு த்ரிலிங் கதை என்று சொன்னால் மிகையாகாது..ஏன் இது 3 ஆம் இடம் வந்தது என்பது குழப்பமாகவே உள்ளது.(ஈரோடு வரும் நண்பர்களின் கருத்தை மட்டும் வைத்து முடிவெடுப்பது தவறோ என்று ஒரு சிறு உறுத்தல் ஏற்படுகிறத.தவறாக இருந்தால் மன்னிக்கவும். )//

      +1

      //ஏன் இது 3 ஆம் இடம் வந்தது என்பது குழப்பமாகவே உள்ளது.//

      ஈரோடு திருவிழாவிற்கு வந்தவர்களில் இந்த கதை படிக்காதவர்கள் அதிகம் போலும் ....

      Delete
  33. Top 5 my list 1,Ratthakkottai. 2,Jeremiah. 3,Durango. 4,Lady s.5,Tex graphic novel. Special moments graphic novels&Ratthappadalam colour release. Have a nice day friends &Editorji😆😃👌👌👍👍

    ReplyDelete
  34. ""தல"" யின் தாண்டவம்.....

    டிராகன் நகரம்!
    =============

    லயன்காமிக்ஸ் 50 வது இதழாக வந்து கலக்கிய புத்தகம் இன்று வண்ணத்தில் 311 மறுபதிப்பு நூலாக வந்துள்ளது.

    டிராகன் நகரம் என்ற பெயருக்கு ஞாயம் செய்யும் விதமாக டிராகன் உருவம் தாங்கிய பெயர் அருமையான முடிவு.

    கதையின் மையம் சீனர்கள் என்பதால் சீனப்பட்டாசக அட்டை பிரகாசிக்கிறது, வச்சகுறி தப்பாத தலயின் துப்பாக்கித் தோரணம் செம லுக்காக அட்டை அமைந்துள்ளது. வாழ்த்துகள் எடிட்டர் சார்.

    ஆஸ்டினில் உள்ள ரேஞ்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த "தல" யிடம் புதிய மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.
    டெக்ஸாஸ்ஸில் தலைவிரித்தாடும் சட்ட ஒழுங்கை நேர் செய்ய புரப்பட்ட ரேஞ்சர்கள் அனைவரும் மீளாத்துயிலில் உறங்குகின்றனர். ஆகவே தல தனக்கே உரித்தான முறையில் பணியை பொறுப்பேற்றதோடு எச்சரிக்கை உணர்வோடு தன் குழுவிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார்.


    தலயை பின் தொடர்ந்து உறங்கும்போது அவரை மடக்க எதிரி எத்தனிக்கையில் கார்சன் அன்ட்கோ அவனை சுட்டுத்தள்ளி காப்பாற்றும் காட்சி அருமை.
    தலயை தொலைநோக்கியில் பார்க்கும் காட்சி விசுவல் ட்ரீட்.....

    டெக்ஸாஸ்ஸில் உள்ள மதுக்கடையில் நுழையும்போதே அதிரடி ஆக்சன் தூள்பறக்கிறது....

    ஜிம் அண்ட்கோ குழுவை அடித்து துவம்சம் செய்து தங்கள் பணியை டெக்ஸாஸ்ஸில் தொடங்குகின்றனர்.

    ##நாம் எண்ண ஆயூதம் எடுக்கவேண்டும் என்று எதிரிதான் தீர்மானிப்பான். ##
    ** தோழர் மாவோ**
    அவர்களின் கூற்றிற்கு ஏற்ப மதுபானக்கடை மற்றும் சூதாட்டத்தைை பின்புலமாகக்கொண்டு ஊரைசுரண்டும் எத்தன் டான் மானுவல் அவனது வழியை பின்பற்றி மதுபானக்கடையை 2000 டாலருக்கு விலைக்கு வாங்கிறார், நில்ஸன் எனும் சூதாடியின் உதவியோடு சூதாட்டத்தை ஒழிக்க அவர்கள் சூதாட்ட வருமானத்தில் 10% வசூலிப்பது பின் அவர்களை துவைத்து எடுத்து ஊரைவிட்டு ஓடச்செய்வது என சமூகத்தின் கேடுகளை கழை எடுக்கும் அதிரடி தூள்பறக்கிறது.

    டான் மானுவல் தலயை விலைக்கு வாங்க முயல எண்ணி அவருக்கு அழைப்பு விடுக்கும்போது அதனை தில்லாக எதிர் கொள்ளும் காட்சி அட்டகாகம் போங்கள்.

    பிளாக் டிராகன் கூட்டத்தலைவன் வாங்கை அவனது கூடாரத்தில் சென்று உதைக்கும் காட்சி அமர்க்களம்.

    அமைதியாக வாழும் சீனர்களை தூண்டிவிட்டு சமூக விரோத செயலில் ஈடுபடும் வாங்கின் தூண்டுதலால் 50 பேர்கொண்ட குழு தலயின் குழுவை அழிக்க வரும் செய்தி அறிந்து அவர்கள் கடந்து செல்லும் பாலத்தில் அதிரடியாக மறித்து நடத்தும் ஆக்சன் மேளா சீனப்பட்டாசாக வெடிக்கிறது.

    இறுதியில் டிராகன் குகையில் மாட்டிக்கொள்ளும்போது அதில் வெளியேற உதவும் எதிரி இறந்த போதும் அவனை பாதுகாப்பாக வெளியெடுத்துவரும் காட்சி எதிரிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் காட்சி நெஞ்சில் ஈரம்.!!!

    இறுதியில் நில்ஸன் சன்னலை உடைத்துக் கொண்டு எதிரியை சுடும்காட்சி பற்றி தல பாராட்டுகிறார் அதற்கு நில்ஸன் "வஷிஸ்டர் பிரம்மரிஷி பட்டம்" என மெய்மறந்து ஏற்றுக்கொள்ளும் சூழல்....
    தவறுகளை களைந்து துடிப்போடும் பொறுப்போடும் உள்ளவர்களை அங்கிகரிக்கவேண்டும் என வெளிப்படுத்துகிறார் அதன் மூலம்.

    தல கதை தரமாண நோக்கில் படைத்த பொனெல்லி, காலப்பினி குழுவிற்கு நன்றிகள் கோடி......

    30 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு வெள்ளையில் படித்த கதை இன்று முழுவண்ணத்தில் சீனப்பட்டாசு தோரணமாக வெடிக்கிறது.!!!!

    பலமுறை படித்தாலும் திகட்டாத
    சரளமான மொழிபெயர்ப்பு, அட்டகாசமான கதை.....

    பக்கம் 64, 65 ல் எதிரிகளை தலயின் குழு துப்பாக்கி தூரிகையில் வெடிக்கும் காட்சியில் முதல் கட்டம் தொடங்கி இறுதி கட்டம்வரை டுமீல் என சுடும் வாக்கியம் ஒன்று தான் எழுத்து பாண்டு சையும் ஒன்றுதான் ஆனால் அதில் மாறிமாறி வரும் வண்ணம் என்னை கவர்ந்துள்ளது.
    வர்ணசேர்க்கையில் விளையாடியுள்ளனர் அட்டகாசம் போங்கள்.
    இதுபோல் நிறைய இந்த புத்தகத்தில் உள்ளது வர்ணச்சேர்க்கை.

    இந்த கதையின் முழுவதும் கிட் பேசியது ஓர் இரு வார்த்தை தான்
    எப்போதுமே தல கிட்கார்சனை வாரூம்போது தன் பங்கிற்கு சில வேலையை காட்டுவது உண்டு அவை இதில் இல்லை. ஒருகாட்சிதவிர.

    இன்னும் இன்னும் நிறைய உள்ளது.....
    படியுங்கள் உடனே......

    யாழிசை செல்வா
    05/11/2017

    ReplyDelete
    Replies
    1. @ யாழிசை செல்வா

      பிரிச்சி மேஞ்சிட்டிங்க சாரே..! இதை சேலம் இரவுகழுகார் எழுதவேண்டியது....நீங்க முந்திட்டிங்க.! அவர் வேறுமாதிரி எப்படி எழுதுவதுன்னு சிண்டைய பிச்சுப்பார்..!! ஸுப்பர்..!!!

      Delete
    2. சூப்பர் செல்வா.அருமை.

      Delete
    3. நன்றிகள் நண்பர்களுக்கு!
      தல மேல் உள்ள காதல் அவ்வளவே!

      Delete
  35. இப்போதைக்கு நம்மிடம் வந்து கிடக்கும் "சை.சா"வின் முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன்



    ஏதாவது ஜானி..பிரின்ஸ் மாதிரி கள்ள ஓட்டு போட்டாவது சைத்தானை முன்னுக்கு கொண்டு வந்தால் எனக்கு டபுள் ஓகே தான் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே!

      கள்ள ஓட்டு எதற்கு ? உங்கள் பாணியில் எடிட்டருக்கு கடிதம் எழுதுங்கள் கைமேல் பலன் கிடைக்கும்.

      கடிதம் எழத, எத்தனை டன் பேப்பர் வேண்டுமானாலும் சங்க செயலர் மற்றும் பொருள்லாளர் ஸ்பான்சர் செய்வார்கள். !

      Delete
    2. க்கும்...எங்கே சார்...செயலர் அவர் கொடுக்க வேண்டிய டீ..பன்னுக்கே சங்கத்துல கடன் வச்சு ஆறு மாசமாகுது...பொருளாளர் காணோமேன்னு டிடெக்டிவ் ஏஜன்சியிடம் புகார் கொடுத்தும் ஆறு மாசமாகுது..:-(

      Delete
    3. சை.சாம்ராஜ்யம்+Vikingதீவுமர்மம் படிக்க நான்(நாங்கள்)ரெடி தலீவரே நீங்க?பொ(போ)குழுவ கூட்டுவமா?

      Delete
    4. கள்ள ஓட்டு எதற்கு.. நல்ல ஓட்டே போதும்.. இருந்தாலும் எதுக்கும் ரெடியாவே இருப்போம்..

      Delete
  36. ஒற்றைக்கை பகாசுரன் .

    எனது விமர்சனம்..

    கதையின் முதல் பக்கத்தில் சேவல் கூவுவதை விரும்பாத அல்டாப் தவறான வார்த்தையை உபயோகபடுத்தியதை கண்டிக்கும் அம்மா, உன்னை பார்த்து உனது தம்பி கேட்டு போவான் என சொல்லும் இடம்; அட இது நம்ப வீட்டு குட்டிகளை நாம் கண்டிப்பது போல் உள்ளதே என்று பக்கம்களை திருப்ப ஆரம்பித்தேன் முடிவு வரை சிரிப்பு சிரிப்பு வேறு ஒன்றும் இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த சேவல் ஒரு இயந்திரம் :-)

    அண்ணனை விரட்டும் அம்மாவிடம் தம்பியும் தவறான வார்த்தையை உபயோகபடுத்த, அதனை தொடர்த்து அவர்களில் அப்பாவும் அதே போல் மாட்டிகிட்டு உதை வாங்கும் அந்த இடம் செம! கடைசியில் அந்த அம்மாவும் தன்னை அறியாமல் தவறான வார்த்தையை உபயோகபடுத்தும் இடம் சிரிக்க மறந்தவர்களையும் சிரிக்கவைக்கும்.

    இந்த சகோதர்களில் கண்டுபிடிப்புகள் ஆகா ஓகோ ரகம். வீட்டில் ரொட்டி எடுக்கும் செட்அப், வெந்த முட்டையை உடைக்க உள்ள இயந்திரம், லக்கியுடன் பயணம் செய்யும் போது, முகசவரம் செய்யும், இயந்திரம், காபி இயந்திரம் சூப்பர்! இதை விட டாப், அவர்களில் வண்டி சக்கரத்திற்கு மாற்றாக shoeவை கொண்டு வடிவமைத்து செம! இதனை ரசிக்கும் படி செய்ததற்கு ஓவியருக்கு முக்கிய பங்கு உள்ளது!

    சரி லக்கி பக்கம் வருவோம். அறிமுகமான பக்கத்தில் இருந்தே மனிதன் சிரிப்பை வயிற்றில் அலையென உருவாக்கிவிட்டார். ஜாலியை முதுகில்தொடர்த்து உப்பு மூட்டை தூக்கி வரும் இடத்தில் இருந்து, செவிந்தியர்களை விரட்ட மலையில் இருந்து செங்குத்தாக இறங்குவாதகட்டும் அவர்களை விரட்டிய பின்பும் செங்குத்தாக ஏறுவதாகட்டும், நீர் வீழ்ச்சி விழும் இடத்தில் ஜாலியை வைத்து கோச்வண்டியை இழுப்பது சொல்லிக்கொண்டே போகலாம்! அதுவும் அவர்கள் திரும்பிவரும் போது பாலம் நல்ல நிலையில் இருந்தும் ஜாலியை வைத்து கோச்வண்டியை இழுப்பது சூப்பர்! சிரிப்பை அடக்க முடியவில்லை.

    இந்த கதையில் பக்கத்திற்கு பக்கம் சிரிப்பு, ஒவ்வொரு பக்கத்தையும் பற்றி எழுத நிறைய உள்ளது.

    நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு காமெடிகதை வசனம்களிலும் கதையின் படம்களின் என்னை ரொம்ப சிரிக்க வைத்துள்ளது.


    எனது மதிப்பெண் சூப்பர்...



    ( சத்தியமாக இது எனது விமர்சனமே..மேலே பாருங்கள் " எனது விமர்சனம் " என்று போட்டுள்ளது.யாராவது இது எனது விமர்சனம் என்று (முக்கியமாக எனது பெயரை கொண்டவராகவே இருந்தாலும் )வழக்கு போட்டாலும் நஷ்ட ஈடு ஏதும் கிடையாது என்பதை அறிவித்து கொள்கிறேன்..:-)


    ReplyDelete
  37. எடிட்டர் அவர்கள், அட்டைப் படத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு சிரத்தை யுடன் உருவாக்குவதை பார்க்கும் போது, நானும் தற்போது அட்டை படத்தை ரசிக்க ஆரமித்து உள்ளேன். !


    எனென்றால், சிறுவயதில் ,புது புத்தகம் வாங்கியதை வீட்டில் யாரும் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக புது காமிக்ஸ வாங்கியவுடன் அட்டை படத்தை கிழித்து தூக்கி எறிந்து விடுவேன். !

    ReplyDelete
    Replies
    1. ///நானும் தற்போது அட்டை படத்தை ரசிக்க ஆரமித்து உள்ளேன். !///

      கண்கெட்ட பின்பு அட்டை நமஸ்காரமா MV சார்? :D

      Delete
    2. ///சிறுவயதில் ,புது புத்தகம் வாங்கியதை வீட்டில் யாரும் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக புது காமிக்ஸ வாங்கியவுடன் அட்டை படத்தை கிழித்து தூக்கி எறிந்து விடுவேன். !///

      எனக்கென்னமோ நீங்க கிழித்துப் போட்ட அந்த அட்டைகளை எடுத்து ஸ்கேன் பண்ணித்தான் நம்ம மாயாவிகாரு 'மாத்தியோசி', 'இங்கே கிளிக்'னு போட்டு ஓட்டிக்கிட்டிருக்கார்னு நினைக்கிறேன்! :D

      Delete
    3. பூனையாரே. !


      நான் சிறுவயதில் காமிக்ஸ படிக்க பழகிய வட்டத்தில் கதைக்கு 75% முக்கியம் கொடுத்தே படித்து பழகிவிட்டோம்.இங்குள்ள காமிக்ஸ நண்பர் கள் ரசணையை வைத்தே ,ஓ!
      இப்படிதான் காமிக்ஸ படிக்க வேண்டுமோ? என்று குழப்பம் வந்தது. !

      ஹங்கம்மா டிவி யில் வரும் சின்சாங் கார்ட்டூன் தொடரில் கதையின் மூலம் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஓவியம் படு மட்டம். !

      Delete
    4. ///இங்குள்ள காமிக்ஸ நண்பர் கள் ரசணையை வைத்தே ,ஓ!
      இப்படிதான் காமிக்ஸ படிக்க வேண்டுமோ?///

      +8888 8888 8888

      Delete
    5. கரூர்கார் இதுதான் உங்க போன் நம்பரா?

      Delete
  38. /////SUPER 6 வரிசையின் இதழ் # 5-ன் அட்டைப்படத்தின் highlight அந்த "டிராகன்" எழுத்துரு தான் என்பேன் ! வழக்கமான கம்பியூட்டர் font-களாகப் பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு old school கலைஞனின் கைவண்ணத்தில் உருவான எழுத்துக்களைப் பார்க்கும் போது ஒரு refreshing change ஆக இருந்தது ! இதனைத் தயாரித்தவர் நமது ஓவியர் சிகாமணி தான் !////

    இந்த வயதிலும் ஈடுபாட்டோடு தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் ஓவியர் ஐயா சிகாமணி அவர்களுக்கு வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளும், நன்றிகள்! _/\_

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்...

      Delete
    2. ஆமாம் .. அந்த ஸ்டிக்கர் மட்டும் இல்லாம இருந்திருந்தா ... ஆ .. அம்மா .. இதோ ஓடீட்டேன் :-) ;-)

      Delete
  39. 2018-ல் இதைப் போட்டுத் தாக்கலாமா ? Or இப்போதைக்கு இந்த பழகிப் போன கார்ட்டூன் LL மட்டுமே போதுமா ? என்ன தோன்றுகிறது உங்களுக்கு ?


    ########₹


    உண்மையை சொல்லனும்ன்னா என்ன சொல்றதுன்னு தெரியலைங்கிறது தான் எனது பதில் சார்..!

    ReplyDelete
  40. இந்த மாத புத்தகங்களில் உள்ள சில குளறுபடிகள்.
    1. ட்ராகன் நகரம் புத்தகத்தில் வாசகர்கள் புகைப்படங்கள் அச்சிடபடுவதில்
    2. விமர்சனம் பகுதியில் விஜயராகவன் மற்றும் ஸ்டீல் க்ளா பெயர்கள் இடமாற்றம். எனது புத்தகத்தில் விமர்சனமும் பெயரில் ஸ்டீல் க்ளா பெயர் இருந்து. ஆனால் விஜயராகவன் புத்தகத்தில் ஸ்டீல் க்ளா பெயர் மட்டும் ஆனால் விமர்சனம் இல்லை.
    3. லக்கி புத்தகத்தில் முன்பக்கத்திலும் பின் பக்கத்திலும் ஒரே பக்கம் இரண்டு முறை இணைக்கபட்டு இருந்தது.

    இந்த வருடம் எல்லா மாதங்களிலும் பட்டையை கிளப்பிய நாம் இதனை உடனே சரி செய்து வருடத்தின் கடைசி மாதத்தில் வரும் புத்தகம்கள் சிறப்பாக வரும்படி பார்த்து, இந்த வருடம் சிறப்பாக முடியும்படி பார்த்து கொள்ளவும்.

    வருடத்தின் முதல் மாதம் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல் வருடத்தின் கடைசி மாதம் மிக முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. திருமண வேலைகளினால் இந்த தவறு நேர்ந்து இருக்கலாம்.. ஆனாலும் குறை, குறைதான்..

      Delete
    2. /////விமர்சனம் பகுதியில் விஜயராகவன் மற்றும் ஸ்டீல் க்ளா பெயர்கள் இடமாற்றம்.///

      அந்த விமர்சனத்தை முதல்ல படிச்சப்போ நம்ம ஸ்டீல்க்ளாதான் இம்புட்டு அழகா, எழுத்துப்பிழையில்லாம, எல்லோருக்கும் புரியுறாப்புல எழுதியிருக்காரோன்னு நினைச்சு… சந்தோசத்துல கொஞ்சம்போல கண் கலங்கிட்டேன்! அப்புறம் டெக்ஸ் விஜயின் கமெண்ட்டைப் படிச்சப்புறம்தான் இந்த 'பெயர் மாறிய படலம்' புரிஞ்சது! :D

      அப்புறம், என்னோட விமர்சனம் கூட அதிலே வெளியாகியிருக்கு. ஆனால், கதை விமர்சனத்துக்குப் பதிலாக - அட்டைப்பட விமர்சனம் வெளியாகியிருக்கு ஹிஹி! :))))

      Delete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. Dear Editor, நமது காமிக்ஸிற்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நேற்று என் பள்ளி நண்பனுடன் (he is in Bangalore and I am in Australia) தொலைபேசியில் பேசும் போது நான் இன்னும் காமிக்ஸ் படிப்பதை அறிந்து அவன் ஆச்சரியப்பட்டான். மேலும் அவன் பெங்களூரில் எங்கு நமது காமிக்ஸ் கிடைக்கும் என்று கேட்டான் (and I don't have any idea about this). நான் அவனிடம் சந்ததரராக இணைய சொன்னேன். ஆனால் நமது வலைத்தளத்தில் இன்னும் 2018 சாந்த link கொடுக்கப்படவில்லை. Please update 2018 Subscription link in our website.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். நன்று நண்பரே

      Delete
    2. Thanks dear friend Parani. நாம் காமிக்ஸ் படிப்பதை நமது நண்பர்களிடம் சொன்னாலே சந்தாதாரர்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. நமது மற்ற நண்பர்களும் இதை செய்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    3. You friend can easily send money (including courier charges) to Lion account - and get back issues which would be a treat for him (ahead of 2018 subscriptions). Usually it is the fastest method.

      Delete
    4. ஆபீஸில் பல நண்பர்களிடம் முயற்சி செய்து வருகிறேன். பார்க்கலாம். இந்த வருடம் ஒரு வரையாது நமது சந்தா குடும்பத்தில் இணைக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன்.

      Delete
    5. @ PfB

      ///இந்த வருடம் ஒரு வரையாது நமது சந்தா குடும்பத்தில் இணைக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன்.///

      சூப்பர்! உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்!

      Delete
  43. சுட்டி டிவியில் வரும் லியோன் சூப்பர். இது நமது பரட்டைத்தலை ராஜாவை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
  44. /"சைத்தான் சாம்ராஜ்யம்" இதழை வண்ணத்தில் ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ;
    "சை.சா"வின் முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன் !! //

    ஆஹா சார் அடுத்த வருடம் சைத்தான் சாம்ராஜ்யத்தை டிராகன் நகரம் புத்தக வடிவமைப்புடன் எப்படியாவது எப்பேர் பாடு பட்டாவது உள்ளே நுழைக்க பாருங்கள் :) :) :) please....
    ++123456789
    Reply

    ReplyDelete
  45. எனக்குமே சை.சாம்ராஜ்யத்தை கலரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை. .காரணம் 1.டெக்ஸ் செவ்விந்திய மரபு உடையில் முழு சாகஸம்.
    2.டைனோசர், பாம்பு,நண்டுetc...விலங்குகளின் அணிவகுப்பு...
    3.கற்பனையின் உச்சம் என்று பல ப்ளஸ் உள்ள கதை. ..
    ஏன் இது 3 ம் இடம் பிடித்தது...!!!!!!!
    அடுத்த மறுபதிப்பாக சைத்தான் சாம்ராஜ்யம் வர வாய்ப்புள்ளதா.ஆசிரியரே...
    +123456789

    ReplyDelete
    Replies
    1. ///ஏன் இது 3 ம் இடம் பிடித்தது..///

      'சைத்தான் சாம்ராஜ்யம்' கொஞ்சம் (அதிகமாவே) காதுல பூ சுத்தும் கதையம்சம் கொண்டதுதான் காரணம்னு நினைக்கிறேன்!

      தரைக்கடியில் இன்னொரு பாதாள உலகம், அதில் டைடோசர் உள்ளிட்ட வினோத விலங்குகளின் நடமாட்டம் - என்று டெக்ஸின் வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து விலகியிருந்தது டவுசர் போட்ட வயதிலேயே எனக்கு 'ஙே' என்றிருந்தது!

      Delete
  46. டாப் 5 மொமெண்ட்ஸ்:

    1 அண்டர்டேக்கர்
    2 டுரங்கோ
    3 ஒரு முடியா இரவு
    4 லேடி S
    5 தோர்கல்

    பவளச் சிலை மர்மம், வைகிங் தீவு மர்மம், சைத்தான் சாம்ராஜ்யம் எதுவும் படித்ததில்லை, அதனால் எந்த வரிசையில் வந்தாலும் சந்தோஷமே.

    /*(Who Killed Lucky Luke?) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks ? */

    கண்டிப்பாக வேண்டும்

    நவம்பர் மாதத்து கதைகளை படிக்க எனக்கு அடுத்த வருடம் ஆகும், எனவே..

    அன்று :

    1 பச்சை வனப்ப்பாவை - இளவரசி மாடஸ்டியும் கார்வினும், மாடஸ்டியின் முன்னாள் அடியாளின் வேண்டுகோளுக்கு இணங்க அவன் பதுக்கி வைத்திருக்கும் கொள்ளை பணத்தை எடுத்து போதை மருந்திலிருந்து மீள்வதற்கான காப்பகம் கட்ட முயற்சிக்கிறார்கள். அதே நேரம் வில்லனும், ஸ்காட்லாந்து போலீசும் மாடஸ்டியை பின் தொடர்கிறார்கள். முடிவு என்ன?
    அருமையான சித்திரங்கள்.

    2 புலி வருது - மாடஸ்டியும் கார்வினும் தங்களது விஞ்ஞானி நண்பரும் அவரது மனைவியையும் KGB குழுவிடமிருந்து காப்பாற்றுவது தான் கதை. கதை நடக்கும் இடம், ஒரு பனிபடர்ந்த மலை காடு. இந்த கதையை படிக்கும்போது எனக்கு cliff hanger படம் பார்த்த உணர்வு. கண்டிப்பாக மாடஸ்டி கதைகளின் டாப் 10 க்குள் இடம் பிடிக்கும்

    இன்று

    ஒரு காகிதத்தை தேடி - வெய்ன் ஷெல்டனின் கடைசி கதையா ?? நான் ஷெல்டனின் ரசிகன். அணைத்து கதைகளும் ரொம்ப பிடிக்கும். இதுவும் அது போல தான், நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பிரபு சார. !


      மாடஸ்டி யின் பச்சை வனப்பாவை, புலி வருது கதை யை நினைவு படுத்தி என்னை குதூகலமாக்கிவிட்டீர்கள் சார் !உடனே எடுத்து மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது. !சூப்பர் சார். !

      Delete
  47. சைத்தான்சாம்ராஜ்யம்( 130 பக்கம்),பவள சிலை மர்மம் 113 பக்கம் .இரண்டையும் சேர்த்தால் 243 பக்கம் தான் வருகிறது.சேர்த்தே கொடுக்காலாமே விலையிலே அப்படி யொன்றும் அதிகம் வராது என்றே நினைக்கிறேன் ஆசிரியரின் பதில் என்னவோ?????

    ReplyDelete
  48. By the way டிராகன் நகரம் வந்தது 1988 மே - நாம் இப்போது உழன்று கொண்டிருப்பது 2017ன் இறுதி மாதங்கள் என்பதை நிச்சயமாக நம்ப முடியவே இல்லை. இவ்வளவு வேகமாகவா வருடங்கள் ஓடும் ? யப்பா !!

    ReplyDelete
    Replies
    1. டீ நகர் உஸ்மான் சாலையில் ஒரு பெட்டிக்கடையில் ஐந்து ரூபாய் காயின் (அப்போதெல்லாம் அதுவே அரிது) கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டே வீடு வந்தது இப்போதும் நினைவில் .. இவ்வளவு தெளிவாக 88ல் நினைவிருக்கும் இன்னுமொரு சம்பவம் முத்து ஸ்பெஷல் வாங்கியது .. மற்றவை அனைத்தும் நிழலாடும் நினைவுகளே !

      Delete
    2. ///டீ நகர் உஸ்மான் சாலையில் ஒரு பெட்டிக்கடையில் ஐந்து ரூபாய் காயின் (அப்போதெல்லாம் அதுவே அரிது) கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டே வீடு வந்தது இப்போதும் நினைவில் ///

      வழிநெடுக படிச்சுக்கிட்டேவா வந்தீங்க? வீடு வந்து சேரும்வரை பொறுக்கலையா உங்களுக்கு?!!

      அந்தக் காலத்துல நானெல்லாம் புதுசா ஒரு புக்க வாங்கிட்டேன்னா ரெண்டுநாளைக்கு வச்சு தடவு தடவுனு தடவிட்டு, மை வாசனையை 'ம்...ஹாஆஆ' பண்ணிட்டு, ஒவ்வொரு பக்கமாப் புரட்டி எல்லாப் பக்கத்திலுமுள்ள பொம்மைகளை ரசிச்சுட்டு, அப்புறம் தான் படிக்கவே ஆரம்பிப்பேன்!

      அதுல தடவறதும், 'ம்...ஹாஆஆ' பண்றதும் மட்டும் இப்பவும் மாறலை! :D

      Delete
  49. சுடும்பனி!
    ========

    Lady S
    -------

    சுடும்பனி
    சுடாத நிலவு !

    சுவீடனில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 ந்தேதி நோபல் பரிசு விழா நடைபெறுகிறது.
    அந்த விழாவில் பரிசு வாங்க வரும் விஞ்ஞானி களை கடத்தி பினணயாக பல மில்லியன் பெற எண்ணி கடத்தலை அரங்கேற்ற துடிக்கிறது சர்வதேச சதிகார கும்பல்.

    ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள நோவோஸ்டி
    ஏஜென்ஸியின் செய்தி சேகரிப்பாளன் என கூறிக்கொண்டு LADY S -டம் நட்பை ஏற்படுத்திக்கொள்கிறான்-நிக்கோலஸ் ருபீவ்!

    இதற்கிடையே ஓரியன், அன்டன் இருவரின் பிடியில் சிக்கிக்கொள்கிறாள் LADY S
    அவர்களின் சதிவலையில் வேறுவழியின்றி அகப்படுகிறாள், அதற்காக அயூப் க்வாடீர் எனும் பாகிஸ்தான் அதிகாரியின் அறையில் ஆவணங்களை திருட அவனுடன் சரசமாடி நேரத்தை கடத்த ஒத்துக்கொள்கிறாள்.
    உளவாளி முளித்துக்கொள்ள
    தப்பியோடும்போது ரஷ்யஏஜெண்ட்டின் உதவியால் தப்பிக்கிறாள்.

    இறுதியில் திட்டமிட்டபடி
    நோபல் வெற்றியாளர்கள் கடத்தப்படுகின்றனர்
    பின்னணியில் ரஷ்ய ஏஜெண்டு உள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மூலம் LADY S- க்கு தெரிய வரும்போது உடைந்துபோகிறாள்.
    1. Lady s -ன் தந்தை அமெரிக்க தூதரக அதிகாரி ஜேம்ஸ் பிட்ராய்.
    விருது விழாவிற்கு வந்துள்ளாதால் அவரின் மூலமாக ரகசியங்களை LADY S வழியே பெறலாம்.
    2. ரஷ்ய ஏஜென்சி செய்தி சேகரிப்பாளன் என்ற முகமூடி யின் உண்மையான பெயர் சையது அகமது- பாகிஸ்தானிலிருந்து தப்பியோடிய கிரிமினல்.
    3. ரஷ்ய சதிவலையில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜேம்ஸ் பிட்ராய் அவரின் மகள் மூலம் அவப்பெயர் உண்டாக்குதல் அதற்காக காதலையும் பச்சாதாபத்தையும் பகடையாக்கி LADY S என்ற காய் வெட்டப்படுகிறது.

    ஹாலிவுட் திரைப்பட கிளைமாக்ஸ் பாணியில் ஹெலிகாப்டர் சேஸிங் மூலம்
    நோபல் வெற்றியாளர்கள் காப்பாற்ற படுகின்றனர், குற்றவாளி தப்பிக்கிறான்.!

    LADY S
    --------
    நிலவு தேய்கிறது
    வளர்பிறைக்காக.....

    ( அட்டைபடமே 1000 கதை சொல்லுகிறது... சொல்லவும் வேணுமா.......?

    Lady S
    -------
    ஓரப்பார்வையில்
    சாய்த்தாள் - என்னை!)

    யாழிசை செல்வா
    05/11/2017

    ReplyDelete
    Replies
    1. @ யாழிசை செல்வா

      யாப்பா...வாத்தியாரே....என்ன வேகமா படிச்சி ரிவியூ போடுறீங்க...தூள்.!

      Delete
    2. அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் செல்வா.

      Delete
    3. மாயாவி சிவா, பரணி பெங்களூர் இருவருக்கும் நன்றிகள்.....

      Delete
    4. மாயாவி சிவா, பரணி பெங்களூர் நண்பர்கள் இரவருக்கும் நன்றிகள் பல....

      Delete
    5. @ yazhisai selva

      வித்தியாசமான, நல்ல விமர்சனம்!

      (அந்த 'ஓரப் பார்வையில்'னு கடைசியா ஏதோ எழுதியிருக்கீங்களே... அதைப் படிக்கறப்போ மட்டும் காதுல கொஞ்சூண்டு புகை கிளம்புது. மத்தபடி ஓகே! ) ;)

      Delete
  50. டிராகன் நகரம் - இதுவரை இந்த கதைக்காக காத்திருந்து வீண்போகவில்லை. டெக்ஸ் & கோவின் அக்மார்க் சரவெடி.

    இதனை போல் டெக்ஸின் பழைய க்ளாஸிக் கதைகளை தொடர்ந்து தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  51. இந்த வருட எனது டாப் 5 + காரணம்:-
    1. ட்யூரங்கோ - ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான, குறைந்த வசனங்களுடன், நேர்கோட்டில் செல்லும் கதை, குறைந்த கதாபாத்திரங்கள் உடன் எளிதான வாசிப்பில் வந்து.

    2. ஜெரெமியா - இரண்டு இயல்பான மனிதர்கள், ஆனால் இருவேறு சிந்தனை உள்ளவர்கள், நமது வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் சில விசயங்களை சுற்றி கதையை அமைத்த விதம்.

    3. தோர்கல் - கனவு மெய்பட வேண்டும்
    சித்திரம், வசனம், வேகமாக நகரும் கதை. இதில் தாய் மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் ஹைலைட்.

    4. ஒற்றைக்கை பகாசுரன்
    இவன் ஒரு காமெடி பகாசுரன்.

    5. கைசீவம்மா கை சீவும்
    கதையின் ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பு. முதல் பக்கத்தில் இருந்த சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.

    ReplyDelete
  52. .....அதாவது.... வந்து.... வந்து.... எனக்கு இன்னும் டீ வரலை....

    ReplyDelete
    Replies
    1. என்னோட நெம்பர்....2003

      Delete
  53. எடிட்டர் சார் அவர்களுக்கு,

    சைத்தான் சாம்ராஜ்யம், இரத்த முத்திரை,வைக்கிங் தீவு மர்மம்,அதிரடி கணவாய் இந்த நான்கு கதைகள் சேர்த்து """ டெக்ஸ் மெகா ரிபிரின்ட் ஸ்பெஷல் """ ஆக சர்பிரைஸாக வெளியீடுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    வி.சுந்தரவரதன்
    சின்ன காஞ்சிபுரம்.
    தொடர்புக்கு :: 7667291648 '' 9283796806.

    ReplyDelete
  54. //தொடரும் நாட்களில் நமது ஓவியரைப் பற்றி போனெல்லிக்கு சொல்ல எண்ணியுள்ளேன் ; so one of these days - மாலையப்பனை போனெல்லியின் FB பக்கத்தில் பார்க்க நேரிட்டால் நாமெல்லாமுமே காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே ?//

    நிச்சயமாக சார்! அப்படியொரு அங்கீகாரத்துக்கு அவர்கள் நிச்சயம் பொருத்தமானவர்களே. ஓவியர் சிகாமணி அவர்கள் பற்றியும் இடைக்கிடையே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவரும் நீங்களுமாக முன்னர் உருவாக்கிய சில ஒரு பக்க கதைகளும் இரசிக்கவைத்துள்ளன. இப்போதுள்ள எமது வாசக வட்டத்துக்கே உங்களோடு பணியாற்றியவர்கள் பற்றி அறைகுறையாகத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது. மொழிபெயர்ப்பாளர் கருணையானந்தம், முன்பு பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துதந்த பெண்மணிகள் என்று அவ்வப்போது நீங்கள் குறிப்பிடும்போதுதான் நாம் அறிந்திடமுடிகிறது.

    இப்போது தங்களோடு பணியாற்றிடும் அச்சு, அலுவலக ஊழியர்கள் முதல் பெரும்பான்மையானவர்களை எமக்கு அறிமுகப்படுத்திவந்துள்ளீர்கள். சிறப்பிதழில் அவர்களது புகைப்படங்களையும் அச்சிட்டுள்ளீர்கள். 2018 முதல், தாங்கள் வெளியிடும் ஒவ்வொரு இதழிலும் மொழிபெயர்ப்பு, டிடிபி, லே-அவுட், அட்டை ஓவியம், அட்டை வடிவமைப்பு போன்றவற்றை செய்தவர்களையும் குறிப்பிட்டால் அவையும் பதிவுகளாகும் இல்லையா?

    அதேபோல, இப்போது இதழ்கள் வெளிவருவதில் தாமதங்கள் இல்லாமல் சீராக வெளிவருவதால், இதழ்கள் வெளிவரும் ஆண்டு, மாதம் என்பவற்றையும் குறிப்பிட்டால் (முன்பு கறுப்பு வெள்ளையில் வரும்போது ஆசிரியர் தலையங்கப்பகுதியில் மாதம், ஆண்டு இருக்கும். அதைவைத்து அவ்வப்போது பழைய நினைவுகளை மீட்டிட முடிகிறது) குறிப்பிடுவதுபற்றியும் சிந்திக்கலாமே சார்?

    ReplyDelete
    Replies
    1. @ பொடியன்

      ////இப்போது இதழ்கள் வெளிவருவதில் தாமதங்கள் இல்லாமல் சீராக வெளிவருவதால், இதழ்கள் வெளிவரும் ஆண்டு, மாதம் என்பவற்றையும் குறிப்பிட்டால்////

      தேதி குறிப்பிடுவது புத்தகத் திருவிழா விற்பனைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் நண்பரே! தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் அல்லாத பொதுமக்கள் லேட்டஸ்ட் வெளியீடுகளில் ஒன்றிரண்டைத் தேர்வு செய்திட மட்டுமே கவனம் செலுத்துர். அப்படியாகும்பட்சத்தில், நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியாகி இன்றும் ஸ்டாக்கில் உள்ள 'All new special', 'ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்' உள்ளிட்ட பல கதைகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகிவிடுமில்லையா?

      இதுகுறித்து, ஏற்கனவே இங்கே எடிட்டர் சொல்லியிருக்கிறார்!

      நமக்கிருக்கும் எளிமையான வழி - ஒரு பேனாவை எடுத்து மாதம், வருடத்தை நம் கைப்பட எழுதி வைத்துக்கொள்வதே! :)

      Delete
    2. // நமக்கிருக்கும் எளிமையான வழி - ஒரு பேனாவை எடுத்து மாதம், வருடத்தை நம் கைப்பட எழுதி வைத்துக்கொள்வதே! :) //
      +1

      Delete
    3. //இதுகுறித்து, ஏற்கனவே இங்கே எடிட்டர் சொல்லியிருக்கிறார்!// yes ji!!! ஆனாக்கா, முன் பக்கத்துல கொட்டை எழுத்துல தேவையில்ல... உட் பக்கத்துல எங்கியாச்சும் சின்னதா பொடிஞ்சா நல்லாருக்குமே என்ற நப்பாசைதான்!

      Delete
  55. //// இன்னமும் எனது தனிப்பட்ட ரசனையானது "சைத்தான் சாம்ராஜ்யம்" இதழை வண்ணத்தில் ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ; ஆனால் இம்முறை(யும்) ஈரோட்டின் வாக்கெடுப்பில் "சை.சா" மூன்றாவது இடத்தைப் பிடிக்க - "சை...எனக்கு மூன்றாம் இடமே புடிக்காது !" என்று மண்டைக்குள் ஒரு மௌன டயலாக் ஓடியது !////

    EBF வாக்கெடுப்பின்போது நண்பர்களிடம் 'சைத்தான் சாம்ராஜ்யம்' முன்வைக்கப்பட்டபோதே, வாசகர்களை முந்திக்கொண்டு மேடையிலிருந்து "நானு நானு" என்ற ஆரவாரம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் எடிட்டர் கண்கள் விரிய ஆர்வமாகக் கையைத் தூக்கிக் கொண்டிருந்தார். 'சும்மாக்காச்சும் விளையாடுகிறாரோ...?!!' என்ற சந்தேகத்தில், உண்மையை அறியவேண்டி எடிட்டரின் கண்களை உற்று நோக்கினேன் (துணிச்சலான செயல்தான் இல்லையா? ஹிஹி!). ஆனால் அந்த விழிகளில் தெரிந்த ஆர்வம் மேடைக்குக் கீழே வீற்றிருந்த வாசக நண்பர்களைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாய் இருந்ததைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமடைந்தேன்!
    (என்னதான் பூச்சுற்றல் நிறைந்த கதையென்றாலும்) எடிட்டரே இவ்வளவு ஆர்வப்படுகிறார் என்றால், காரணமில்லாமலா இருக்கும்?!! அவர் கையிலிருக்கும் அந்த டிஜிட்டல் பிரின்டுகளின் நேர்த்தியே காரணமாய் இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது!

    'Editor's choice' என்ற பெயரில் அடுத்த வருடமே 'சைத்தானை' நீங்கள் களமிறக்கினால் வேணாம்னா சொல்லப்போறோம், எடிட்டர் சார்? :)

    ReplyDelete
    Replies
    1. அந்த டிஜிட்டல் பிரின்டுகளின் கலர் மங்கிப் போறதுக்குள்ள சட்டுபுட்டுனு அச்சுல ஏத்திடுங்க எடிட்டர் சார்!

      Delete
    2. //'Editor's choice' என்ற பெயரில் அடுத்த வருடமே 'சைத்தானை' நீங்கள் களமிறக்கினால் வேணாம்னா சொல்லப்போறோம், எடிட்டர் சார்? :)//

      :)

      Delete
  56. // நமது ஓவியரைப் பற்றி போனெல்லிக்கு சொல்ல எண்ணியுள்ளேன் ; so one of these days - மாலையப்பனை போனெல்லியின் FB பக்கத்தில் பார்க்க நேரிட்டால் நாமெல்லாமுமே காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே ? //

    சூப்பர்! நல்ல விஷயம் விரைவில் நடக்கட்டும்!

    ReplyDelete
  57. //Who Killed Lucky Luke?//

    2018 கி நா சந்தாவில் ஒரு இடம் லக்கிக்கு பார்சல் ப்ளீஸ் !

    //"ட்யுராங்கோ" சகிதம் போட்ட பிள்ளையார் சுழியானது - தொடர்ந்துள்ள நாட்களிலும், மாதங்களிலும் 5000 பக்க சுமாருக்கு ஓடியுள்ளதேனும் பொழுது//

    WOW.... kudos to entire team ! your running real good fleet Edit!

    ReplyDelete
  58. http://www.namadhunambikkai.com/2011/06/01/1734/#more-1734
    சொல்லும் விதத்தில் வெல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக் ஜி :

      @ சென்ற பதிவில் ஓசிப் புகழ் அடைந்த வெள்ளந்திக்கு :

      எப்படித் தான் அடுத்தவரின் பதிவைத் திருட மனம் வருகிறதோ தெரியவில்லை. திருடியது மட்டுமல்லாமல் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் , நண்பர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் எப்படித் தான் ஏற்று கொள்ள முடிகிறதோ தெரியவில்லை !!

      காப்பி ஆற்ற இந்த தளம் ரொம்பவே வசதியானது போல :((

      Delete
    2. பரணி இந்த பின்னூட்டத்தில் தெளிவாக பிடித்ததை பகிர்கிறேன்னு எழுதியிருக்கார். இது போன பதிவுலயும் போட்டிருந்தீங்க. மறுபடியும் இதை போட்டு ஏன் சர்சசையை உருவாக்க வேண்டும்.

      தற்போதைக்கு இந்த மாதிரி பின்னூட்டங்களை தாண்டி செல்வதே அனைவருக்கும் நலம்.

      Delete
    3. @ MP

      ///தற்போதைக்கு இந்த மாதிரி பின்னூட்டங்களை தாண்டி செல்வதே அனைவருக்கும் நலம்.//

      காலில் லேசாக சுளுக்கியிருப்பதால் நான் அப்படியே சைடு வாங்கிப் போய்டலாம்னு இருக்கேன்! :P

      @ தலீவர்

      'பழுத்த மரம் தான் கல்லடி படும்'னு சொல்லுவாங்க... நீங்க ஓவரா பழுத்துட்டீங்கன்னு தோனுது தலீவரே!:D

      Delete
    4. // சென்ற பதிவில் ஓசிப் புகழ் அடைந்த வெள்ளந்திக்கு //
      வார்த்தைகளை உபயோகப்படுத்தறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கனும் சாரே,அந்த வெள்ளந்தி என்ன உம்ம சொத்தையா அடிச்சாரு?தேவையில்லாத ஒரண்டையெல்லாம் உமக்கு எதுக்கு?

      Delete
    5. Udaya Kumar @ நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் சரி இல்லை. அதுவும் கடந்த பதிவில் அவர் படித்ததை பகிர்கிறேன் என்று அவர் சொன்னதை சரியாக கவனித்தும்/கவனிக்காமல் இப்படி நீங்கள் எழுதுவது கொஞ்சம் கூட சரியில்லை. :-(

      Delete
    6. Parani from Bangalore :

      Just one sample for everything ;P

      //Parani from Bangalore3 November 2017 at 12:10:00 GMT+5:30
      ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் பரணி.

      உங்ககிட்ட இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் நான்.//

      Delete
    7. Yes. I realised while posting my comments. But nothing wrong in appreciating also he never said this as his writing.

      Even in many social media like, fb, whatsapp people do likes fwd messages or post and we say like it. Its something likes that.

      Can you take in lightly and move forward. "."

      Delete
    8. பெங்களூரு பரணி ஜி, இது உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியலையா ??

      மீண்டும் ஒரு முறை, சென்ற பதிவில் அவரைப் பாராட்டி, அவரே சுயமாக எழுதியதாக நினைத்து நண்பர்களால் பதிவிடப்பட்ட ரிப்ளை கமெண்டுகளைப் படித்துப் பார்க்கவும் !!

      மௌனம் சம்மதம் அல்லவா ?குறைந்தபட்சம் உங்கள் பதிவுக்காகவாவது ஒரு தெளிவுரை கொடுத்து இருக்கலாமே ?!

      விவாதம் இத்துடன் போதுமே பரணி சார் :-)

      Delete
    9. இதில் அவர் தவறு ஏதும் இல்லை. அவர் தனது பதிவில் "படித்ததில் பிடித்தது" என சொல்லி உள்ளார்.

      இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும்.

      மீண்டும் கேட்கிறேன் FB & Whatsappல் வரும் forward messageஐ பாராட்டும் நாம் இதனை மட்டும் (நீங்கள்) பெரிதாக்கி பேச என்ன காரணம்? அவர் மேல் எதும் தனிப்பட்ட கோபமா?

      Delete
    10. There is no harm in sharing others post if there is no objection by the author. But, it is always good to leave a note by referring the original post or author. Appreciation for sharing the good post can go to the person who has shared. But, appreciation for the content should go to the original author. We can find the same in our comics too. I just shared the link after seeing the comments and want to give credit to original author. I really need this kind of support and backing for other friends in this blog. There were incidents that was dragged for ever in each word and comment even after explaining their part. some left the blog too after those incidents as i didn't see them participating in any discussion after that. Same word or comment used by some taken seriously. For some, it was taken it as comedy. That should be changed. Here all are Comics lovers and that's the one joining us together. Ignore the things that you don't like and leave them to comment. If it is unnoticed, obviously those things will get vanished slowly....... Let us move on...

      Delete
    11. // மௌனம் சம்மதம் அல்லவா ?குறைந்தபட்சம் உங்கள் பதிவுக்காகவாவது ஒரு தெளிவுரை கொடுத்து இருக்கலாமே ? // FB & Whatsappல் இதனை எதிர்பார்க்காத நாம் (நீங்கள்) இங்கு மட்டும் இது போன்ற விளக்கத்தை எதிர்பார்ப்பு ஏன் உதய்.

      Delete
  59. சார் நமது ஆஸ்தான ோவியர்களுக்கு சந்தோச வாழ்த்துகளை என் சார்பாகவும் தெரிவித்திடுங்கள்...அட்டகாசம்....உங்களை வியக்கச் செய்யும் ஓவியங்கள் நிச்சயம் பட்டய கிளப்பும் என்பதில் ஐயமில்லை....சார் இதன்ன கேள்வி...லக்கிய போட்டுத் தள்ன கதய போட்டுத் தள்ளுங்க..

    ReplyDelete
  60. ஆங்... இப்படி வச்சிக்கிடுவோம்!

    எடிட்டர் சார்... நாங்க ஆசைப்பட்டுக் கேட்டு நீங்க எத்தனையோ மறுபதிப்புகள் போட்டிருக்கலாம் தான்.. எங்களோட மறுபதிப்பு ஆசைய நீங்க நிறைவேத்தினப்போல்லாம் நாங்க அடைஞ்ச சந்தோசத்துக்கு அளவே கிடையாதுன்னு சொல்லலாம்!

    இப்போ எங்க முறை!
    நீங்க ஆசைப்பட்டுட்டீங்க... 'சைத்தான் சாம்ராஜ்யத்தை' மறுபதிப்பாப் போடணும்னு நீங்க ஆசைப் பட்டுட்டீங்க. அதை நிறைவேத்தி வைக்க வேண்டியது எங்களோட கடமை! இல்லேன்னா 30+ வருசமா ஒரு எடிட்டருக்கு நாங்கள்லாம் வாசகர்னு இருந்து என்ன பிரயோஜனம்றேன்?
    நீங்க ஆசைப்பட்டபடியே 'சை.சா'வை 2018ல் மறுபதிப்பு செய்து உங்களை சந்தோசப்படுத்த நாங்க முடிவு செஞ்சுட்டோம். சந்தோசம்தானே?

    நோ.. நோ.. இதுக்கெல்லாம் இப்படி உணர்ச்சிவசப்படக்கூடாது சார்! கண்ணைத் தொடச்சிக்கிட்டுப் போய் அந்த டிஜிட்டல் ஃபைல்ல எல்லாப் பக்கமும் சரியா இருக்கானு ஒருதபா பார்த்துடுங்க பாக்கலாம்! :P

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர் ஈ வி.
      சை சா வில் எந்த ஒரு பிரேமும்
      விடுபடாமல் வண்ணக்கலவை மற்றும்
      வண்ணச்சேர்க்கையில் சற்று கவனமாக
      இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      டிராகனில் சிலபல பிரேம்கள் விடுபட்டும்
      வர்ணங்கள் சற்று டல்லாகவும் இருப்பது
      போல் தோன்றுவது எனக்குமட்டும்தானா
      சிறப்பு வெளீயிடுகளில் சற்று கவனம்
      தேவை. ( நம் வெளியீடுகள் அனைத்தும் சிறப்பானதே என்பது வேறு
      கதை.) இனி வரும் மாதங்களில்
      வரும் இதழ்களை டிராகன் நகரம்போல்
      சிறப்பான வடிவமைப்புடன் வெளியிட்டால் அருமையாக இருக்கும்.
      தற்போது நம் வெளீயிடுகள் உலக
      தரத்துடன் கண்களை கொள்ளை
      கொள்ளும் மலர்களாக வெளிவருவது
      மகிழ்ச்சி. அடுத்த வருடம் முதல் நாம்
      அகிலஉலக புத்தக கண்காட்சியில்
      பங்குபெற முயற்சி செய்ய வேண்டும்.

      Delete
    2. பூனையாரே. !

      ஹஹஹஹஹஹ........!

      ஆகா! இது என்ன புதுவகையான ஆட்டமா இருக்கும். ?

      Delete
  61. ஹா ஹா ஹா . ஈனா வீனா .செம . உங்களுக்கு கொஞ்சமும் ஆசை இல்லைதானே . எது எப்படியோ, எடிட்டர் இனுடைய ஆசையாக என்றாலும் சை .சா வந்தால் சரிதான் .

    ReplyDelete
  62. 14ம் பக்கம் ஜிம் மிரட்டிக் கொண்டிருக்கிறான்....13ம் பக்கம் அவன் எழுதிய கடிதத்த பார்க்கிறார் டெக்ஸ்...பீர் கேட்கிறார்15ல்...அடுத்த கவுண்டரில் போய்க் கேள் ....இங்கே தொந்தரவு செய்யாதே....சொன்னதும் பகடைப் பேர்க்கிறார் அதிரடியாய்..பேச்சே இல்ல...ஜிம்மிடம் மூச்சே இல்லை..இதான் டெக்ஸ்..அடக்கு முறைக்கும் , ஆனவத்துக்கும் அதிரடியாய் எதிராளி..அது மட்டுமா அடுத்த பக்கம் பாருங்க...தெருவில் வீசபட்ட ஜிம் உள்ள வருவான்னு எதிர் பாத்து அமர்கிறார்...புயலென திரும்ப நீட்டிய துப்பாக்கியுன் ..அந்தப் பன்றிப் பயல் எங்கே என நுழைய....மின்னலெனஎகிறும் துப்பாக்கி..இடியாய்..இதோ இங்கே எனும் கர்ஜனை....திகைக்கும் அவனிடம் ..ஏதாவது சொல்ல வந்தாயா என ொன்றுமறியாதவர் போல வினவும் டெக்ஸ் ...ஆஹா என்னஒரு அசத்தலான அறிமுகம்....இதானே நணபர்களே டெக்ஸ் கொடியஉயர்த்திப் பிடிக்கச் செய்யுது நம்மை..கச்சிதமானஒவியங்கள் , தைளிவான வசனங்கள்..அதனை அற்புதமாய் கூர் தீட்டிய சிங்கத்தின் கூர் விரல்கள்...அட்டகாசமல்லவா....இது வரை படித்ததிலிருந்து..இன்னும் இனிய பக்கங்கள் காத்திருக்கிறது..enjoy...

    ReplyDelete
  63. ஒற்றைக்கை பகாசுரன் !

    கதையோட்டத்துடன் கலந்து நிற்கும் நகைச்சுவையை மிகவும் ரசிக்க முடிந்தது. இறுதியில், லாஸ்வேகாஸ் நோக்கிச் செல்லும் போது, லக்கி பேசும் வசனங்களும், கதாசிரியர் சொல்ல வரும் விஷயமும் அற்புதமான நகைச்சுவை !

    ReplyDelete
  64. டிராகன் நகரம் எத்தனை தடவை படித்தேன் என்றே எனக்குத் தெரியாது.!நியூஸ் பிரிண்ட் காகிதம் எத்தனை தடவை படித்தால் தாங்கும் என்ற சோதனையை நான் இந்த புத்தகத்தில் செய்து பார்த்து விட்டேன்.

    புத்தகம் நைந்து போய்விட்டது. ஆகவே அந்த புத்தகத்தை படிப்பதை சில வருடங்களாக படிப்பதை குறைத்துக்கொண்டேன்.

    மறுபடியும் கலரில புத்தபுதியதாக பார்த்தபோது ஆனந்நதற்கு அளவில்லை.
    ஆனால் ஹார்டு கவர் பைண்டிங் அதிக தடவை படிக்க உதவுமா என்பது சந்தேகமே. ?

    நான் போட்டோ வே அனுப்பவில்லை. நம்மை யாரென்றே யாருக்கு ம் தெரியாது. ஆதலால் போட்டோ பிளான் 50% வெற்றிகரமாக செயல்படுத்தினாலே இது மிகப்பெரிய வெற்றிதான்.!

    ReplyDelete
  65. வேட்டையர்களை வேட்டையாடுவோம் !

    மீண்டும் ஒரு கணிக்க இயலாத மார்ட்டின் மிஸ்ட்ரியின் விறுவிறுப்பான சாகசம். புதிர் கதை ரசிகர்களுக்கு நல்ல விருந்து ! இந்த கதையில் வில்லன்கள் என்று எவருமே இல்லாதது ஒரு சிறப்பம்சம் !

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் இந்த கதையை படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

      Delete
  66. பனியும் ஒரு புதிர்ப் பெண்ணும் !

    மிகவும் சுமாரான கதை ! சுவாரஸ்யமில்லாத ஆரம்பம், வலுவில்லாத கதையோட்டம், ஆச்சரியங்களோ, திகைப்போ ஏற்படுத்தாத திருப்பங்கள் என சராசரியான ஒரு கதை. கதையின் ஆரம்பமோ, முடிவோ எதுவும் சுவாரசியத்தைத் தரவில்லை !

    ReplyDelete
  67. மர்மமனிதன் மார்ட்டின். !

    ம.ம.மார்ட்டின கதைகள் ஆரம்பத்தில் சுத்தமாக பிடிக்காது. ! ஆனால் தற்போது வரும் கதைகள் சித்திரம் படு நேர்த்தியாக உள்ளது. கதை கூட பூச்சுற்றல குறைவாகவும் துப்பறிவதும்
    திரிலரும் அதிகமாகவும் கதை நன்றாக உள்ளது.

    இந்த கதையில் ஜாவா வுக்கு முக்கியத்துவம் அதிகம். !

    கர்ர்ர்ர். ................

    உர்ர்ர்ர். .............


    எனது மதிப்பெண் 80/100

    ReplyDelete
    Replies
    1. ///தற்போது வரும் கதைகள் சித்திரம் படு நேர்த்தியாக உள்ளது.//

      +1

      Delete
  68. லக்கி லூக்!

    அப்போ நல்ல இருந்த லாஸ் வேகாஸை கெடுத்தது இந்த இரண்டு பக்கிகள்தானா? ?


    பிளடி ராஸ்கல்ஸ். !

    கதையாசிரியர் கடைசியில ,லாஸ் வேகாஸ் சூதாட்ட நகராக மாற லக்கிலூக் க்கும் ஒரு காரணமாக்காமல் எஸ்கேப் ஆக்கியது அருமை.!!!

    ReplyDelete
  69. டிராகன் நகரம் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்த ஒரு அற்புத படைப்பாக அமைந்துவிட்டது.
    அட்டைபடம் முதற்கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து வடிவமைத்துள்ளார்கள்.
    நிச்சயம் இதுவொரு Landmark இதழ்.
    வாழ்த்துக்கள் ஆசிரியரே..!!

    அப்படியே அந்த பிரின்ஸ் மறுபதிப்பையும் இதே தரத்தில் வழங்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ///அப்படியே அந்த பிரின்ஸ் மறுபதிப்பையும் இதே தரத்தில் வழங்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.///

      இல்லாங்காட்டி? :D

      Delete
  70. **** மார்ட்டின் மிஸ்ட்ரி ****

    முதல் கதை : வேட்டையரை வேட்டையாடுவோம்

    சுமார் 850 வருடங்களுக்கு முன்னால் மக்களை அச்சுறுத்திவந்த கொடிய/வினோத விலங்குகளை வேட்டையாட அலெக்ஸாண்டர்-III ஒரு சிறப்புக் குழுவை ஏற்படுத்துகிறார். 18ம் நூற்றாண்டுவரை பலப்பல வினோத ஜந்துகளை வேட்டையாடிக் கொன்று குவித்த அந்தக் கும்பலுக்கு திடீர் ஞானோதயம் பிறக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி வினோத ஜந்துகளை அடைத்துவைத்து பாதுகாக்க டிரான்ஸில்வேனியா மலைப்பகுதியில் சிறைக்கூடம் நிறுவப்பட்டு, அவ்வேட்டையர் குழுவின் சந்ததிகளால் வெளியுலகில் யாருக்கும் தெரியா வண்ணம் காலங்காலமாக ரகசியமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது! காலப்போக்கில், அந்தச் சிறைக்கூடம் தன் பழைமை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கவே, பயங்கர அமானுஷ்ய சக்திகள் நிறைந்த அந்த வினோத ஜந்துகள் எந்த நேரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தகர்த்தெறிந்துவிட்டு வெளிக்கிளம்பலாம் என்ற இக்கட்டான நிலைமை! இந்த நிலைமையைச் சமாளித்து, பாதுகாப்பு ஏற்பாட்டை ஸ்திரப்படுத்தும் மந்திரச் சொற்கள் அடங்கிய ஒரு ஆதிகாலத்து புத்தகம் மெளரிடானியா பாலைவனப் பகுதியில் புதையுண்டுபோன ஒரு நூலகத்தில் இருக்கிறது. 'வேட்டையர்' சார்பாக அதைத் தேடிக் கிளம்புகிறது மார்ட்டின் தலைமையிலான ஒரு குழு. அக்குழு எதிர்கொண்ட பல வினோத அனுபவங்கள் என்னென்ன? வினோத மிருங்களின் கதியென்ன? - என்பதே பரபரப்பான, திகிலான மீதக் கதை!

    'அடுத்து வரயிருக்கும் சிலபல பக்கங்களில் அழகாக நம் காதுகளில் பூ சுற்றப்படயிருக்கிறது' என்பதை மட்டும் ஆரம்பப் பக்கங்களிலேயே புரிந்துகொண்டு படிக்கத் தொடங்கினோமேயானால் ஒரு பரபர, விறுவிறு அனுபவம் உறுதி!

    எனது ரேட்டிங் : 9/10

    ReplyDelete
  71. **** மார்ட்டின் மிஸ்ட்ரி ****

    இரண்டாவது கதை : பனியும்... ஒரு புதிர் பெண்ணும்!

    அமெரிக்காவின் பிரபல பனிச்சறுக்கு மையமான கொலராடோவின் அஸ்பென் நகருக்கு விடுமுறையைக் கழிக்க வருகிறது மார்ட்டின்-ஜாவா-டயானா குழு! அங்கே நம் குழுவுக்கு ஜேன் எனும் சிறுமியைச் சந்திக்க நேர்கிறது. முதல் சந்திப்பிலேயே அச்சிறுமியிடம் சிலபல விசேஷ ஆற்றல்கள் நிறைந்துகிடப்பதை உணர்ந்துகொள்கிறார் மார்ட்டின். தொடரும் நாட்களில், மார்ட்டினின் கண்னெதிரிலேயே வினோதமான முறையில் விபத்துக்குள்ளாகிக் காணாமல் போகிறாள் அந்தச் சிறுமி! அதைத் தொடரும் நாட்களில், முதலில் ஜாவாவும், பிறகு டயானாவும் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர்.

    * ஜேன் எனும் அந்தச் சிறுமியின் கதி என்ன?
    * அவளுக்கு விசேஷ சக்திகள் கிடைத்ததன் பின்னணி என்ன?
    * டயானா மற்றும் ஜாவா - ஆகியோர் காணாமல் போனதன் பின்னணி என்ன?

    போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாய் விடை சொல்வதே மீதக் கதை!

    நேர்த்தியான சித்திரங்கள், வித்தியாசமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான கதை நகர்வு - ஆகியவை ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்திற்கு நம்மை எளிதாக ஆட்படுத்திவிடுகின்றன!

    என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete