Powered By Blogger

Sunday, November 12, 2017

நெருங்குது டிசம்பர் !


நண்பர்களே,

வணக்கம். யார் சொன்னது புதுசாய் மொழிகள் படிக்க வயது ஒரு தடையென்று? இதோ ஒரு கழுதை வயதான பின்னேயும் பேஷாய் படித்து வருகிறேனே புதியதொரு பாஷையை….!

“கிர்ர்ர்ர்….. க்ர்ர்ர்ர்” என்றால் – “"மவனே… உன் முழியே சரியில்லே…! கதவைத் திறந்திட்டு உள்ளே புகுந்தியோ- உன் தொடைக்கறி தான் எனக்கு டிபன் !"” என்று அர்த்தம்.

"உர்ர்ர்ர்ர்ர்….”" என்றால்- ”"நீ யாரோ தெரிலே.. ஆனாக்கா கோட்டுக்கு இந்தாண்டை வர வாணாம்… அந்தாண்டை நானும் வர மாட்டேன்”" என்று பொருள்!

ஈனஸ்வரத்தில் “வவ்வ்வ்வ்வ்” என்றால்- “"சித்தே கண்ணசரலாம்னு பார்த்தாக்கா நீ ஏன்டா பிராணனை வாங்குறே?"” என்று அர்த்தம்!

கல்யாணப் பத்திரிக்கையும் கையுமாய் வீடு வீடாய் கதவைத் தட்டும் process ல் ஆங்காங்கே கலர் கலராய் தடித் தடியாய்; உரோமங்களுக்கு மத்தியில் முகரையுமாய் காட்சி தரும் சில பல நாயார்களுடன் ஏற்படும் அறிமுகம் கற்றுத் தந்த பாடங்கள் தான் மேற்படி சம்பாஷணைகள் எல்லாமே! ‘நாய் ஜாக்கிரதை‘; ‘நாய்கள் ஜாக்கிரதை‘; ‘கடி நாய் ஜாக்கிரதை‘ என்றெல்லாம் பலகைகள் தொங்கும் வீடுகள் என்றாலே என்னை முன்னே அனுப்பி விடுகிறார்கள்- ஒரு சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திட! And ஒன்று பாக்கியில்லாமல் என் ‘திரு திரு‘ முழியைப் பார்த்த கையோடு “கோணிச் சாக்குத் திருடன் வந்துட்டான்டோய்!” என்ற தீர்மானத்தில் கத்திக் கூப்பாடு போட்டு தத்தம் எஜமானர்களை வரவழைத்து விடுகின்றன நான் காலிங் பெல்லைத் தேடுவதற்கு அவசியத்தை உருவாக்காமல்! அதிலும் சமீபமாய் எனது உறவினரும், நமது வாசகருமானவரின் வீட்டிற்குச் சென்ற போதோ சித்திரக் குள்ள உசரத்தில், நீளமானதொரு நாய் வாலை ஆட்டிக் கொண்டே ‘சிக்கி-புக்கி‘ என்று குறைத்து வைக்க, எனக்கோ இதுவொரு காமெடிப் பீஸ் என்று பட்டது! “ச்சூ…. ஓடு!” என்றபடிக்கே தாழ்ப்பாளை மொள்ளமாய் திறந்து விட்டு உள்ளே கால் வைக்க முனைந்த நேரமாய் – ‘அச்சச்சோ… கொஞ்சம் பொறுங்க… இதைக் கட்டி விட்டு வருகிறேன்‘ என்றபடிக்கே அவரது மனைவி வந்தார். அப்புறம் தான் தெரிந்தது இதுவரைக்கும் என்னைப் போன்ற அரை டஜன் அசட்டுத் தைரியசாலிகளைக் கணுக்காலோடு கவ்வுவதில் திருவாளர் குட்டையார் ஒரு நிபுணர் என்று! ஆத்தாடியோவ்… 60 கிலோ எடையில் கிங்கரன் போலக் காட்சி தரும் நாய் மாத்திரமின்றி, இது போன்ற ‘சின்னத் தம்பிகளுமே‘ மரியாதைக்குரியவர்கள் தான் போலும்! என்ற எண்ணத்தில் என் கணுக்காலை ஒன்றுக்கு இருமுறை பாசத்தோடு பார்த்துக் கொண்டேன்! ஷப்பா… கூரியர்களைப் பட்டுவாடா செய்ய நாள்தோறும் ஒரு நூறு நாய் சார்களைப் பரிச்சயம் பண்ணிக் கொள்ளும் டெலிவரி நண்பர்களை அந்த கணத்தில் நினைத்துப் பார்த்து சங்கடப்படத் தான் தோன்றியது! ‘என் கூரியர் இன்னும் வரலே!‘ என்று போனில் உறுமுவது ஒரு பக்கமெனில் – களத்தில் அவர்கள் தினம் தினம் “உறுமல் பார்ட்டிகளை“ச் சமாளிப்பது எத்தனை ஆபத்தான பிழைப்பு?! Hats off to these buddies!

பத்திரிக்கைப் படலம் ஒரு மாதிரியாய் இறுதிக் கட்டங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, ‘தெனாலி‘ திரைப்படத்து கமலைப் போல நித்தமும் புதுசு புதுசாய் பயங்கள் தலைதூக்கிய வண்ணம் உள்ளன!

  • விடுதல் இல்லாமல் எல்லோருக்கும் அழைப்பை வைத்தாயிற்றா? என்ற பயம்…
  • ‘சித்தாப்பாவை‘ – ‘மாமா‘ என்றோ – ‘ஆச்சியை‘ ‘சித்தி‘ என்றோ முறை சொல்லிக் கூப்பிட்டு சொதப்பி வைத்திருப்பேனோ என்ற பயம்!
  • சரியான முறை சொல்லியிருந்தாலும் – சொன்ன முறை சரியாக இருந்ததா? என்ற பயம்!
  • சொன்னவர்களில் ஆஜராகப் போகிறவர் எத்தனை பேர்? சமையல்காரருக்குச் சரியான கணக்குச் சொல்லி விட்டோமா என்ற பயம்!
  • நிறையச் செய்து விட்டு நிறைய மீந்து போகுமோ? என்ற பயம்!
  • குறையச் செய்து விட்டு பந்தியில் பல்லைக் காட்ட நேரிடக் கூடாதே என்ற பயம்!
  • வேஷ்டி கட்ட வேண்டுமெனும் போது, அது இடுப்பில் நல்ல பிள்ளையாய் துயில வேண்டுமே என்ற பயம்!
  • வருண பகவானுக்குத் திடீரென எங்கள் கந்தக பூமி மீது மாதயிறுதியில் மையல் எழுந்திடக் கூடாதே என்ற பயம்!
  • ஒன்றைப் பெற்று அதைக் கரை சேர்க்கவே கதக்கழி ஆடும் சூழலில் – அரை டஜன்களைப் பெற்று அனாயாசமாய் கட்டிக் கொடுத்த ஜாம்பவான்களின் முன்னே ஏற்பாடுகளில் விடுதல் ஏதும் இருந்திடக் கூடாதே என்ற பயம்!
  • ஆங்ங்... கமான்சேக்கு 16ம் பக்கத்தில் அந்த டயலாக் சுகப்படலியோ?‘ என்ற ரோசனைகளில் லயித்தபடிக்கே சுற்றித் திரிவதில் பால்காரரிடம் பூக்களின் ஆர்டரையும், பழக்கடைக்காரரிடம் பாலுக்கும் சொல்லி விட்டு அசடு வழியக் கூடாதே என்ற பயம்!

குடும்பப் பொறுப்புகளையும் சுமந்து பழிகியோர்க்கு இவையெல்லாம் just like that சாத்தியமாகிடும் சமாச்சாரங்களாக இருந்திடலாம்! ஆனால் பட்டை போட்ட குதிரை போல வீடு – ஆபீஸ் – மிஷின்கள் – காமிக்ஸ் என்றே இத்தனை காலத்தை ஓட்டியவனுக்கு இவையெல்லாமே பூதாகரமாய்த் தென்படுகின்றன! ஒரு கிராபிக் நாவலை இன்றைக்குப் பொதுவான ரசனைக்கு ஏற்புள்ளதாய்ச் சொல்வது சுலபக் காரியமாய்த் தென்படுகிறது – ஆனால் ஒரு பலசரக்குச் சிட்டையை சரிபார்ப்பதற்குள் 4 இரத்தப்படல Spin-off கதைகளை ஏக் தம்மில் படித்தது போலத் தலைசுற்றுகிறது! Anyways – ‘மரம் வைத்தவர் தண்ணீரும் விடுவார்!‘ என்ற நம்பிக்கையில், நாட்களை நகர்த்திச் செல்கிறேன்!

இடையிடையே ஆபீஸுக்கும் பாதை மறந்து விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் அவ்வப்போது attendance போட்டு வருகிறேன்! சுகவீனத்திலிருந்து மைதீனும் திரும்பியிருக்க புதுசாய் வேலைகளைப் பார்ப்போர் போல இருவருக்குமே starting troubles! ஆண்டாண்டு காலமாய் செய்த அதே பணிகள் தானென்றாலும் – ஒரு பிரேக்குக்குப் பின்பாய் அவற்றுள் மூழ்குவது சுலபமல்ல என்பதைப் புரிந்து வருகிறேன்! சைக்கிள் ஓட்டப் படித்தது மறக்காது தான் – ஆனால் இடுப்பு நெளியாமல் பெடலடிப்பது ஒரு தொடர் process ன் பலனே என்பது புரிகிறது!

And இதோ – ஆண்டின் இறுதி மாதத்து சந்தா A சார்பிலான இதழின் preview! காத்திருக்கும் புத்தாண்டில் இவருக்கு இடம் நஹி என்று தீர்மானம் செய்திருக்கும் போது தான் ஒரு சுவாரஸ்யமான கதை கண்ணில் படுகிறது – கமான்சே தொடரினில்! “ஓநாயின் சங்கீதம்” வழக்கமான slow moving கதையாக இராமல் – வித்தியாசமான plot; மாறுபட்ட கதை நகர்த்தல் என்று செல்வதைப் பார்க்கும் போது – ‘இந்த ரூட்டை சித்தே முன்னேவே அமல்படுத்தியிருக்கக் கூடாதா ஹெர்மன் சார்? க்ரேக் சார்? என்று கேட்கத் தோன்றுகிறது! வழக்கம் போல கதை மாந்தர்கள் தலைகளுக்கு எண்ணெய் போன்ற வஸ்துகளையே கண்ணில் காட்டா பரட்டைப் பிரபுக்களாய்ச் சுற்றி வருவதிலோ; சித்திர ஜாலங்களிலோ; கலரிங் அதகளங்களிலோ அதே பழக்கப்பட்ட தரங்கள் தொடர்கின்றன! கதையில் மாத்திரம் tempo ஒரு மிடறு தூக்கலாய்! இதோ – அட்டைப்படம் & உட்பக்க preview!


ஹெர்மனின் தூரிகையில் உருவாகும் ராப்பர்களை நாம் பெரிதாய் மெருகூட்ட அவசியங்கள் இராதென்பதால் கிட்டத்தட்ட ஒரிஜினல் டிசைனே நமது அட்டையுமாகிறதுஎப்போதும் போல பின்னட்டை மட்டுமே நமது பங்களிப்பு! May be சின்ன இந்த பிரேக்குக்குப் பின்பாய் கமான்சேயும் கலக்குவாராஎன்பதை 2019ல் பார்த்திடலாமே!

டிசம்பரில் ஓவியர் ஹெர்மன் & கதாசிரியர் க்ரெக் கூட்டணி தொடரவிருக்கிறது காத்திருக்கும் கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் வாயிலாகஎன்றோ ஒரு யுகத்தில் b&w ல் வெளியான இக்கதைகளை வண்ணத்தில் பளபளக்கும் ஆர்ட் பேப்பரில் பார்க்கும் போது ஒரு கணம் இதயம் துள்ளுவதை உணர முடிகிறதுகேப்டன் பிரின்ஸ் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடா சாகஸங்கள் & இம்முறை காத்துள்ள இரு கதைகளுமே செம classy என்பதால் இந்த இதழ் ஒரு ஹிட்‘டாக அமையுமென்று பட்சி சொல்கிறது! And உங்கள் போட்டோக்கள் விவகாரத்தில் ஏற்கனவே சாத்து வாங்கியுள்ள சூழலில் அதற்கான பரிகாரம் தேடவிருக்கும் இதழும் இதுவே என்பதால் நிச்சயம் இது நமக்கொரு முக்கிய இதழேகல்யாணப் பணிகளுக்கு மத்தியில் இதனையும் இழுத்துப் போட்டுக் கொண்டுதிரும்பவும் டின் வாங்கத் தயாரில்லை என்பதால் பிரின்ஸ் ஸ்பெஷல்” + “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவல் என்ற கூட்டணி டிசம்பர் 15 வாக்கில் தனியாகக் கூரியரில் கிளம்பிடவுள்ளன! So நவம்பர் இறுதிகளில் 3 இதழ்கள் மாத்திரமே இருந்திடும் உங்களது டப்பாக்களில்!

  • கமான்சே     ஓநாயின் சங்கீதம்”
  • ஸ்மர்ப்ஃஸ் விண்ணில் ஒரு பொடியன்”
  • மறுபதிப்பு – “மர்மத் தீவில் மாயாவி”


கிராபிக் நாவலுமே சற்றே ஆற அமர பணியாற்றினால் தேவலை என்ற உணர்வை எனக்குத் தந்ததால் இந்தச் சின்ன மாற்றம்ஒரு அசாத்தியமான நாவலின் கிராபிக் நாவலாக்கம் இதுஅதற்கான மரியாதையை நம்மளவிலும் தந்தாலொழிய ஒரிஜினலின் வீரியம் மட்டுப்படக் கூடும் என்று நினைத்தேன்! So “நிஜங்களின் நிசப்தம்” இருபாக கிராபிக் நாவலோடு 2017க்கு விடை தருவோம்!

பெயரளவிற்கு ஆண்டு முடிந்து புதிதாயொன்று துவங்கினாலும்நம் பயணம் as usual தொடர்ந்திடும் கூடுதலாயொரு ஆண்டின் அனுபவத்தோடுஎப்போதும் போலவே உங்கள் துணையும் நமக்கு அத்தியாவசியம் என்பதால் சந்தாப் புதுப்பித்தல்களைச் செய்திடலாமே folks?

புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு பழைய ஜோடி‘புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது முழு வண்ணத்தில்யாரந்த ஆசாமிகள்என்று யூகித்திட முடிகிறதா?

மீண்டும் சந்திப்போம்! Have a great Sunday!

293 comments:

  1. Replies
    1. நண்பர் இந்தத் தளத்திற்குப் புதியவரா?
      புதியவர் எனில் வ௫க வ௫க வணக்கம்...!@!!

      Delete
  2. 2nd.படித்து விட்டு வருகிறேன். .

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. NANBAR SENTHIL SATHYA VANAKKAM.
      NEENDA NATKALAKIRATHU THANAGALIDAM PESI.NALAMAGA
      IRUKKIRARGALA?

      Delete
    2. நலமே சார் நீங்கள் நலமா

      Delete
  4. வீட்டை கட்டி பார் .கல்யாணம் பண்ணி பார் என்று முன்னோர்கள் சொன்னது விளையாட்டுக்கு அல்ல என்பதை நிருபித்து கொண்டு இருக்கும் ஆசிரியருக்கு பணிவான இரவு.மற்றும் அதிகாலை வணக்கம்.😜😜😜😜
    மிக அழகான முடிவு கேப்டன் பிரின்ஸ், க்ராபிக் நாவல் இரண்டையும் தள்ளி வைத்ததற்கு.(பதறிய காரியம் சிதறும்.)
    இம்மாதம் டெக்ஸை சந்திக்க முடியாதது..அவரை பற்றிய செய்தி எதுவும் இல்லாதது...ஏதோ மாதிரி தோன்றுகிறது. ....

    ReplyDelete
  5. ஸூப்பர் ஸெவன்..!

    ஸெவன் இஸ் ஹெவன்..!

    ReplyDelete
    Replies
    1. இல்ல...

      மைட்டி எயிட்..!

      எயிட் இஸ் வெயிட்..!

      Delete
  6. தொடர் மழை காரணமாக எனது வீட்டில் தண்ணீர் முழங்கால் வரை நுழைந்து விட நான் தண்ணீரில் நீச்சலடித்துக் கொண்டே இருந்தேன் ( இன்று வரை அதே நிலைதான்)
    கரண்ட் டும் ஒரு வாரமாக இல்லாமல் போக வீடு மட்டுமல்ல எல்லாமே இருட்டாகி விட்டது விளக்கின் வெளிச்சத்தில் நமது காமிக்ஸ் வாசிப்பு மட்டுமே எனக்கு துணை யாக இருந்தது அந் நிலையில் நண்பர் சம்பத் போன் செய்து எனது நலனை விசாரித்து ஆறுதல் சொன்னது மட்டுமல்லாமல் எனது வங்கி கணக்கில் 5000 ரூபாயை அளித்து என்னை திக்கு முக்காட வைத்து விட்டார் 15 நாட்களாக மழை. வேலையில்லாத நிலை இந்த நேரத்தில் அவர் செய்த இந்த உதவிக்கும் மற்றும் அனாமதேய நண்பர்கள் எனக்கு செய்துள்ள உதவிகளுக்கும் நெக்குறிக் போய் ஆனந்த கண்ணீரோடு இரு கரம் கூப்பி நன்றி யை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே நான் கஷ்டப்படும் நேரத்திலெல்லாம் என்னுடன் இருக்கிறீர்கள் நண்பர்களே இன்னொரு நண்பர் நான் ரொம்ப நாட்களாக தேடிய இரட்டை வேட்டையரின் திக்கு தெரியாத தீவில் புத்தகத்தை அனுப்பி வைத்து சந்தோஷத்துக்குள்ளாக்கினார் இவையெல்லாம் காமிக்ஸ் எனும் பொம்மை புத்தகத்தாலே கிடைத்த வரங்கள் அனைத்திற்க்கும் மிக்க நன்றி நண்பர்களே
    காமிக்ஸோடு வாழ்ந்தேன்
    காமிக்ஸொடு வாழ்கிறேன்
    காமிக்ஸோடே வாழ்வேன்
    காமிக்ஸோடேயே மறைவேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் சத்யா. உங்களுக்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் நன்றி.

      Delete
    2. சிரமங்களிலிருந்து மீண்டெழுந்து சீக்கிரமே இயல்பு நிலைமைக்குத் திரும்ப என் வாழ்த்துகள் செந்தில் சத்யா!

      Delete
    3. சிரமங்களிலிருந்து மீண்டெழுந்து சீக்கிரமே இயல்பு நிலைமைக்குத் திரும்ப என் வாழ்த்துகள் செந்தில் சத்யா!

      Delete
    4. நாங்கள்ளாம் இருக்கிறப்ப நீங்க கலங்கலாமா.

      Delete
    5. Ithuvum kadandhu pokum.
      God bless you and your family.

      Delete
    6. நன்றாக நீச்சல் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு. .(சும்மா ஜோக்...
      இடுக்கண் வருங்கால் நகுக...நம்ம காமிக்ஸ் இருக்கும் வரை துன்பம் எல்லாம் இன்பமாக மாறி விடுமே.....இப்போது தண்ணீர் எந்த அளவுக்கு உள்ளது.உடல்நிலை எல்லோருக்கும் நன்றாக உள்ளது அல்லவா....

      Delete
    7. சரண் சார் காமிக்ஸ் துணைக்கு துணையாகவும் சந்தோஷத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது காமிக்ஸ் நண்பர்களின் ஆறுதல் உற்சாகத்தை கொடுக்கிறது மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருப்பதால் வீட்டில் தண்ணீர் படிப் படியாகத்தான் குறைகிறது வேலை தான் 16 நாட்களாக இல்லை விரைவில் எல்லாமே சரியாகும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்

      Delete
    8. சரண் சார் காமிக்ஸ் துணைக்கு துணையாகவும் சந்தோஷத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது காமிக்ஸ் நண்பர்களின் ஆறுதல் உற்சாகத்தை கொடுக்கிறது மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருப்பதால் வீட்டில் தண்ணீர் படிப் படியாகத்தான் குறைகிறது வேலை தான் 16 நாட்களாக இல்லை விரைவில் எல்லாமே சரியாகும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்

      Delete
    9. இறைவன் என்றும் நல்லவர்களுக்கு சோதனை தருவது தானே இயல்பு.

      Delete
    10. அட்டை பெட்டி மக்கன் பேடா பாகுபலி

      அங்கே மழை பெஞ்ச மாதிரி
      இங்கேயும் மழை பெய்ஞ்சு தள்ளூது
      என்ன ஒண்ணு
      தண்ணி நிக்கல
      ஆனா
      குளிரு தாங்கல

      நைட்டு தூக்கம் வராட்டி
      காமிக்ஸே கதி
      காமிக்ஸே துணை
      நெலவரம் கலவரமா தான இருக்கு
      இன்னமும்
      ஒரு வாரத்திற்கு
      மிக அதிக கனமழை இருக்காம்பா.

      Delete
    11. இதோ இங்கு சென்னையில் மீண்டும் கனமழை ஆரம்பமாகி விட்டது

      Delete
    12. ஜனார்த்தனன் சார் பத்திரம்

      Delete
  7. பிரின்ஸின் மூணாவது அட்டை படு சூப்பர்

    ReplyDelete
  8. கமான்சே வின் அட்டை பளீரென்ற வண்ணத்தில் பட்டையை கிளப்புகிறது

    ReplyDelete
  9. இரவுக் கழுகுகளுக்கு மற்றும் ஒர் இரவுக் கழுகின் இரவு வணக்கம்!!!.

    ReplyDelete
  10. கமான்சே என் மனம் கவரந்தவர்.அடுத்த ஆண்டு அவர் இடம் பெறாதது வ௫த்தம் த௫கிறது.
    ஓநாயின் சங்கீதம் அட்டைப் படமும் டீச௫ம் மனத்தை அள்ளுகின்றன.
    2019லாவது ரெட் டஸ்ட் வரட்டும்.!!

    ReplyDelete
  11. புத்தாண்டில் எங்களைச் சந்திக்க வ௫ம் அந்தப் பழைய ஜோடி யாராக இ௫க்கும் என்று யோசித்து யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சமாதலால் யார் என்று நீங்களே சொல்லிவிடுவது தான் உத்தமம் ஆசிரியர் சார்...!!!.[கமா,புல்ஸ்டாப் இல்லாத எம்மாம் வாக்கியமடா சாமி...]

    ReplyDelete
  12. கமான்சே எனக்கு மிகவும் பிடித்த தொடர்.
    2019-ல் நிச்சயம் தொடரவும்

    ReplyDelete
  13. கமான்சே அட்டையில் உள்ள படம் இதற்கு முன் நமது காமிக்ஸில் வேறு கதையில் அல்லது அட்டைப்படத்தில் வந்துள்ளதா?
    கலக்கலாக அட்டையில் மிரட்டுகிறார்.

    இந்த கதை விற்பனையில் சாதித்து 2019ல் இவர் மீண்டும் வர ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதே.. எனக்கும் கமான்சே பிடிக்கும். இந்த தொடர் முடிவு பெற இன்னும் சில கதைகளே இருக்கு...

      Delete
  14. //
    புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு ‘பழைய ஜோடி‘ – புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது – முழு வண்ணத்தில்! யாரந்த ஆசாமிகள்? //

    ஹம்... தெரியாது. ப்ளீஸ். அந்த ஆசாமிகளின் பெயரின் முதல் மற்றும் கடைசி எழுத்தை மட்டுமாவது சொல்லுங்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வேற யாராயிருக்க போகுது
      மாடஸ்டி கார்வின் தான்

      Delete
  15. கிராப்பிக் மற்றும் ப்ரின்ஸ் இதழ்களை தனியாக டிசம்பர் 15ம் தேதி அனுப்ப முடிவு செய்தது சரியான முடிவு. இது உங்களை கல்யாண வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உதவும். இதனை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  16. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. //மாடஸ்டி பிளைசி //

      வாழ்க ! வாழ்க!

      Delete
    2. Modesty BLAISE......!
      Modesty BLAISE......!
      Modesty BLAISE......!
      Modesty BLAISE......!

      Delete
  17. Hello Editor sir &friends good morning. Captain Prince 3rd cover is best& opt for prince special 👍👍👍

    ReplyDelete
  18. ////புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு ‘பழைய ஜோடி‘ – புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது – முழு வண்ணத்தில்! யாரந்த ஆசாமிகள்? என்று யூகித்திட முடிகிறதா?////

    ப்பூ!! எளிதாக கணித்துவிடலாம்!

    * 'புத்தாண்டில்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இது F&F சந்தாவில் வரும் ஜோடியல்ல!

    * ஏற்கனவே அட்டவணை வெளியாகிவிட்ட இச்சமயத்தில் மீள்வருகை என்பது எந்த ஜோடிக்கும் 'ஜம்போ காமிக்ஸ்'இல் மட்டுமே சாத்தியம்!

    * 'ஜம்போ காமிக்ஸ்' - குழந்தைகளைக் குறிவைத்து வெளியாகயிருக்கும் இதழ் ( எனக் கணிக்கப்படுவதால்) என்பதால், அந்த 'பழைய ஜோடி' நம்மையெல்லாம் கவர்ந்த 'விஸ்கி-சுஸ்கி' தான் என உறுதியாக கணிக்கப்படுகிறது!

    இப்ப டிக்கி,
    போன ஜென்மத்தில் ஷெர்லக் ஹோம்ஸாகப் புகழ்பெற்ற ஈனாவினா! :)

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் சாம்பு ஈனா வினாவிற்கு வாழ்த்துக்கள்

      Delete
    2. துப்பறியும் சாம்பு ஈனா வினாவிற்கு வாழ்த்துக்கள்

      Delete
    3. ///துப்பறியும் சாம்பு///

      ஹூம்...! 'ஷெர்லக் ஹோம்ஸ்'னு சொல்லி இன்ட்டர்நேஷனல் லெவல்ல ரீச் ஆகலாம்னு ப்ளான் பண்ணினா... உள்ளூர் டிடெக்டிவ் அந்தஸ்து மட்டும்தான் கொடுப்பீங்களாக்கும்? கிர்ர்ர்ர்ர்... க்ரா...

      Delete
    4. விஜய் @ சூப்பர் கணிப்பு. நானும் அறிவிக்கப்பட்ட சந்தாவில் பழைய இரட்டை நாயகர்கள் யாரையும் குறிப்பிடாத போது எப்படி எங்கு வருவார் என நினைத்து குழம்பி இருந்தேன். உங்கள் கண்டுபிடிப்பு இவர்கள் வருவதற்கு ஜம்போவில் வாய்ப்புகள் அதிகம் என்பதை சொல்லி விட்டது.

      Delete
    5. விஜயன் சார், நம்ப விஜய்யின் இந்த "கிர்ர்ர்ர்ர்... க்ரா..." என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?

      Delete
    6. இந்த கிர்ர்ர்ரருக்கும் ஆசிரியர் சொன்ன
      கிர்ர்ர்ரருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா.

      Delete
    7. அருமையான கண்டு பிடிப்பு செயலாளரே

      Delete
  19. வணக்கம். எங்கள் கிராமத்தில் நான் எனது நண்பர்கள் மூவர் நமது காமிக்ஸ் படித்து வருகிறோம்.கடந்த இரு வருடங்களாக நான் சந்தா செலுத்தி இதழ்கள் படித்து வந்தோம்.இந்த வருடம் சில பொருளாதார சூழ்நிலைகளால் 2018 சந்தா செலுத்த இயலவில்லை.காமிக்ஸ் நண்பர்கள் எவரேனும் உதவி செய்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்.நன்றி.

    ReplyDelete
  20. இனிய காலை வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  21. இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்!

    ReplyDelete
  22. கடல்கடந்து காமிக்ஸ் தேடிதத் தரும் அந்த இரக்க சிந்தையுள்ள இளவரசருக்கு, தன் படிமக்கள் கேட்கும் 'சி.சி.வ' விஷயத்தில் மட்டும் கொடுங்கோல் மன்னராய் தொடர்வதுமேனோ?!!

    'சிங்கத்தின் சிறு வயதில்!'

    ReplyDelete
    Replies
    1. தேவை சி.சி.வயதில்.

      Delete
    2. 'சிங்கத்தின் சிறு வயதில்!'

      Delete
    3. 'சிங்கத்தின் சிறு வயதில்!'

      Delete
    4. வேண்டும் உலகம் சுற்றிய சிங்கத்தின் சிறு வயதில்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நமது ஆசிரியர் அவர்கள் "சிங்கத்தின் பெரிய வயதில்" என்று இங்கு தொடர்ந்து எழுதும் போது சி.சி.வ. இப்ப தேவையா? அதான் இங்கு ப்ளாக்கில் வாரம் தவறாமல் எழுதரத சொல்லுகிறேன்.


      எஸ்கியூஸ் மீ பதுங்கு குழி போகிற வழி எங்கே என்று யாராவது சிக்கிரமா சொல்ல முடியுமா. :-)

      Delete
    7. நமக்கு Ok பரணி வலைதளம் வராத நண்பர்களுக்காக சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்

      Delete
  23. என் இனிய காலை வணக்கம் காமிக்ஸ் நண்பர்களுக்கு ....

    ReplyDelete
  24. ஒற்றைக் கை பகாசூரன்!
    ======================

    🎵லக்கிலூக் சாகசம் இது!

    📣மிக்சிகன் மாநிலத்தில் சாஜினா கிராமம் அதிகாலையில் சேவல் சங்கூதியதுதுதுதுது......!!!!!
    இல்லை, சேவல்கூவியது பொழுது புலர்ந்தது மேள தாளம் கொட்டியது ஆமாம் வேறுவிதமாக கைலே சகோதரர்களுக்கு......

    📣""எழவடுத்த கோழி "" ,
    ""நாசமாப்போற சேவல்"",
    ""காண்டாகிறது"",
    என்ற எரிச்சலுடன் கைலே சகோதரர்கள் எழுந்து வர அவர்கள் தாய் பூரிக்கட்டையால் பிளக்க😣🤕🤕😷 இந்த சத்தம் கேட்டு எழுந்த அவர்களின் தந்தை ""இந்த கேடுகெட்ட தூத்தேறிக் குடும்பத்திலே ஒரு தடிப் பயலுக்கும் மருவாதைன்னா என்னன்னே புரிய மாட்டேன்குது!"" என டபாய்க்க கணவனை பூரிக்கட்டையால் புரட்டி எடுக்கிறார் அம்மணி.....
    கதையின் தொடக்கமே காமெடியின் சரவெடி ஒரு டஜன் டமால் டமால் டமால்..... 😂😂😥😭
    🎚கதையின் கரு இதுதான்....

    📢கைலே சகோதரர்கள் புதிதாக சூதாட்ட மிஷின் கண்டுபிடித்துள்ளனர் அதனை பல்வேறு நகரங்களுக்கு சென்று சோதனை ஓட்டம் காண்பிக்கின்றனர் அவர்களுக்கு உதவ லக்கிலூக் உதவுகிறார்....🎼

    🔊 கதை நெடுக காமெடி தோரணம் களைகட்டுது....
    🐎🐎🐎ஜாலி ஜம்பர் அட்டகாசத்திற்கு பஞ்சமில்லை.

    😍 சித்தே ஓய்வாக இருக்கலாம்னு பாத்தா-அதுக்கு வேட்டு வச்சிட்டாரே.....
    அதாவது நான் நடையை கட்டியும் நீங்க என் முதுகிலே அம்சமா குத்திவிட்டு தனிமையே என் துனணவன்'யு தீம் ஸாங்க் பாடிட்டு வருவிங்க....
    ஒருமாற்றத்திற்கு குதிரை உங்கள் மேல் சவாரி போகலாம் தானே என லக்கியிடம் கேட்டு பகடை ஆட்டத்தில் ஜாலி லக்கியை தோற்கடித்தது....
    விளைவு😣😣😣
    லக்கி ஜாலி சம்பரை தூக்கி சுமக்கிறார். 😂🙄😇😇

    🏞கைலே சகோதரர்கள் அழைத்துக்கொண்டு போகும்போது இடையில் 🚣🚣ஆற்றைக்கடக்கும்போது வண்டிக்குதிரைகளையும் கைலே சகோதரர்களை ஓடம்கட்டி உள்ளேவைத்து அழைத்துப்போக ஜாலியின் மேல் சவாரி செய்யும் லக்கியிடம் ""பேமானிப் பங்காளிகளை உள்ளே ஏத்திப்புட்டு என்னை மட்டும் இப்படி பாடாய் படுத்துறீங்களே பாஸ்? ""🐎🐎

    🏟இடையில் வழக்கமாய் குறுக்கிடும் செவ்விந்தியர்கின் மோதலில் முடிவில் எல்லோ சிட்டி வந்து சேர்கின்றனர்.
    அங்கு செனட்டர் மனைவி வடிவில் பிரச்சனை வெடிக்கிறது.
    ##சூதாட்டத்திற்கு எதிரான மாதர் சங்கத் தலைவி அவர்!##
    அவர் எதிற்க முடிவில் சூதாட்ட மிஷினின் திருவிளையாடல் புரிகிறது, விளைவு தலைவியின் ஆதரவு அமோகமாகிட்டியதுனு சொல்லனுமா என்ன?????📻📻📻

    📯போக்கர் கல்ச் நகரம்.!

    😙😙பரம்பரை சூதாடிகளின் வெறுப்பிற்கு கைலே சகோதரர்கள் உள்ளாக விளைவு அவர்களை பழிவாங்க பாலத்தில் வெடிகுண்டு வைக்க அதில் அவர்களே சிக்கி காயமுறுகின்றனர் அவர்களை துரத்த குண்டன் மேல் குள்ளன் சவாரி செய்ய வரலாற்றில் ஜாலியை ரேஸில் முந்துகின்றனர் இதுகண்டு ஜாலி புலம்புகிறது.....😘😘😘😘😘
    இவ்வாறாக லாஜிக் அனைத்துயும் இக்கதையில் உடைக்கப் படுவது இன்னும் ஜோர்....🕪🕪🕪🕪🕪

    காமெடி கதைக்கு லாஜிக் லேதுங்கோ......🕪🕪🕪

    மீதியை கதையில் பாருங்கள்....

    மொழிபெயர்ப்பு :
    எஸ். விஜயன் லயன்காமிக்ஸ் ஆசிரியர் .

    லயன்காமிக்ஸ் இதழ்:309
    சிவகாசி
    www.lioncomics.in

    யாழிசை செல்வா
    12/11/2017

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சி படிச்சிருக்கிங்க போல,விமர்சனம் நன்று.

      Delete
    2. @ யாழிசை

      உங்கள் விமர்சனங்கள் - குழலிசை!

      Delete
  25. // ”பிரின்ஸ் ஸ்பெஷல்” + “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவல் என்ற கூட்டணி டிசம்பர் 15 வாக்கில் தனியாகக் கூரியரில் கிளம்பிடவுள்ளன!//
    எனக்கு என்னமோ இது தேவையில்லாத இரட்டை செலவு போல் தோன்றுகிறது,இரண்டு புக்ஸ் ரெடியானா என்ன சார்,அதை எடுத்து பாக்ஸில் போட்டு தயாரா வெச்சிக்குங்க,மீதி புக்ஸ் ரெடியானதும் அதை பாக்ஸில் போட்டு எல்லாம் சேர்த்து கொரியர் பண்ணிடுங்க.
    இது என் யோசனையே,நடைமுறைக்கு எது சாத்தியமோ அதை நீங்கள் செய்து கொல்லுங்கள்.

    ReplyDelete
  26. விஜயன் சார்
    நம் சந்தாதாரர்களுக்கு விக்ரமின்
    கல்யாண பத்திரிக்கையை போஸ்டில்
    அனுப்பி வைத்தால் எல்லாரையும்
    அழைத்தது போல் இருக்குமே.

    ReplyDelete
    Replies
    1. அதான் ஏற்கனவே மொதல்லயே
      அனுப்பிட்டாருல்ல.
      போன மாச பொட்டியிலயே.

      Delete
    2. சுசூகி விஸ்கி

      Delete
    3. இந்த மாத எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்தில் திருமண அழைப்பு அழகாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதே போல் இந்த மாத கொரியர் உடன் திருமண அழைப்பிதழ் வந்துள்ளது.

      இது போக தனியாக இன்னும் ஒருமுறை நீங்கள் அனுப்ப சொல்லும் காரணம் புரியவில்லை கணேஷ்.

      Delete
    4. ஒருவேளை கணேஷ் சார் பொட்டியில வரலியோ

      Delete
    5. நாம் சுமார் 500-600 சந்தாதாரர்கள்
      இருப்போம் என்று நினைக்கின்றேன்.
      கல்யாண பத்திரிக்கை ஒன்றை
      தபாலில் அனுப்ப 5 ரூபாய் செலவாகும்.
      அதேசமயம் ஆசிரியரே திருமண
      பத்திரிகையை நேரில் கொடுத்து
      அழைத்த மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும்.
      அதற்கு மதிப்பளித்து வருகைதரும்
      வாசகரும் அதிகரிப்பர்.

      Delete
    6. பரணி @

      ஆமாம். ! பத்திரிகை முதல பக்கத்தில் உள்ளது. !

      Delete
  27. சார்! 2018-ல் ஏதேனும் ஒரு book fair special'லாக 'கமான்சே'யின் கதையை வெளியிடுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா. ஆனால் கடந்த முறை செய்தது போல் செய்ய வாய்ப்பு குறைவு, இது பற்றி சில நண்பர்கள் கவலையை/நெருடலை (concerns) இங்கு சொன்னதாக ஞாபகம்.

      Delete
  28. ஒற்றைக்கை பகாசுரன்:- சில சுவாரஸ்யமான காட்சிகள்.

    சூதாடிகள் நகரின் செனட்டர் அறிமுகம், அவர் மகன், முதல் நாய்க்குட்டி முதற்கொண்டு சூதாட்டம் செய்வது அருமை. அதிலும் சாப்பிடும் நேரத்தில் நடக்கும் காட்சி காமெடியின் உட்சம்... குறிப்பாக செனட்டரின் மனைவி அனைவருக்கும் ரொட்டியை சீட்டு களைந்து போடும் விதத்தில் பரிமாறும் படம் சூதாட்டத்தில் அவரின் அருமை பெருமைகளை வசனங்கள் எதுவும் இல்லாமல் அருமையாக சொல்லி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அந்த நகரத்தில் சலூனில் சென்று தங்கள் இயந்திரத்தின் செயல் திறன் பற்றி அறிந்து கொள்ள செல்லும் இடத்தில் நடக்கும் காமெடி. இதில் ஒவ்வொரு மனிதரின் செயல்பாட்டுக்கும் பெட் அந்த நகரவாசிகள், கடைசியில் லக்கியை வைத்து காமெடி செய்வது. கடைசியில் லக்கி வேறு வழியின்றி தனது துப்பாக்கி திறமையை காட்டி அவர்களை பணிய வைக்கும் இடம் சூப்பர்.

      Delete
    2. இந்த கதையின் சிறப்பு அந்த சகோதரர்களின் வித்தியாசமான கண்டுபிடிப்புகள்.

      அவர்கள் வீட்டில் உள்ள ரொட்டி மேக்கர். அவர்கள் சாப்பிடும் டேபிளில் சுற்றிவரும் காபி கெட்டில்.

      அவர்களின் பயணத்தின் நடுவே இரவு படுக்க உபயோகபடுத்தும் படுக்கை. தூங்கும் போதும் அவர்களின் கனவுகள் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியே வருவது, மரத்தை அறுக்கும் இயந்திரம் பற்றிய கனவு.

      வழிமறிக்கும் திருடனுக்கு வண்டியின் பக்கவாட்டில் இருந்து கிடைக்கும் கும்மாங்குத்து...

      Delete
    3. மொத்தத்தில் லியார்டினோ மற்றும் லக்கியை இணைத்து இது ஒரு சூப்பர் வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

      Delete
    4. லியனார்டோ டாவின்சி மாதிரின்னு சொல்லிடுவோமே பரணி சார்

      Delete
    5. பரணி சார்.!

      ஒவியங்களை கவனிக்கும் போது ஏகப்பட்ட காமேடிகள் ரசிக்க வைத்தனர். ! ஒவியங்களை நுனிப்புவ் போல் மேய்ந்து விட்டு கதைகளை கூர்ந்து படிக்கும் நான் மேலும் இரண்டு முறை புரட்டவேண்டியயதாயிற்று. !

      Delete
    6. // ஒவியங்களை கவனிக்கும் போது ஏகப்பட்ட காமேடிகள் ரசிக்க வைத்தனர் //

      உண்மை. சுந்தர்ராஜன் ஸ்டைலில் exactly.

      Delete
    7. அப்பறம் என்னை பரணி என்றே சொல்லலாம்.

      Delete
  29. 2017 அட்டவணையில் இருந்த காலம் தவறிய காலன் என்னாச்சு எடிட்டர் சார்.........?

    ReplyDelete
    Replies
    1. அந்த 'காலம் தவறிய காலன்' கதைக்கு பதிலாகத்தான் இப்போது 'நிஜங்களின் நிசப்தம்' - 2'ம் பாகத்தை இணைத்து ஒரே புத்தகமாக ஆசிரியர் அனுப்பப் போகிறார். போன வருடம் அட்டவணை புத்தகம் கிடைத்தப்போது, அந்த புத்தகத்தில் 'காலம் தவறிய காலன்' விளம்பரத்தின் கீழ் *இந்த கதை கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது* என்று போட்டிருந்தார் ஆசிரியர். ஆனால் அந்த கதை ஏன் வெளியிட முடியவில்லை என்று அவர் இதுவரை விளக்கம் கூறவில்லை.

      Delete
  30. @ டெக்ஸ் சம்பத்

    புத்தகங்கள் பரிசளிப்பது,வருட சந்தா கட்டுவது என்பது...

    எதிரில் பேசவும்,விவாதிக்கவும்,விமர்சிக்கவும்
    ஒரு வாசகரை உருவாக்கும்,
    தக்கவைத்துக்கொள்ளும் செயல்.!
    ஒரு தனிநபரின் ரசிப்புதன்மையை உயிர்ப்புடன்
    இருக்க செய்யும் செயல் மாத்திரமே.!!

    ஆனால் ஒரு சக வாசக நண்பரான செந்தில் சத்யாவின்...
    பேரிடர் தாக்குதலில் மாறிப்போன வாழ்க்கைக்கு,
    கைகொடுப்பதும்...பொருளுதவு செய்வதும்...

    காலத்தே செய்த மிக சிறப்பான உதவி.!

    காலத்தை போன்ற பழிவாங்குவதும் வேறில்லை.
    காலத்தை போன்ற வாரி வழங்குவதும் வேறில்லை.

    டெக்ஸ் சம்பத் அவர்களே...
    நீங்கள் காலத்தே செய்த உதவிக்கு...
    உங்களுக்கு காலம் கட்டாயம் வாரி வழங்கும்.!!!


    [எழுந்து நின்று கைதட்டும் காணொளி ஒரு நிமிடம்]

    ReplyDelete
  31. சுடும் பனி :

    முதலிரண்டு பக்கங்களுக்கு ஷானியாவின் அழகை ரசித்தபடி அந்த நீளமான வசனங்களைத் தாண்டிவிட்டீர்களெனில், ஒரு பரபர விறுவிறு கதை நிச்சயம் உங்களுக்கு உண்டு.
    ஸ்வீடனின் செழிப்பான சாலைகளையும் கட்டிடங்களையும், ஓவியர் பிலிப் (உச்சரிப்பு சரிதானா?) அட்டகாசமாக காட்டியிருக்கிறார்.
    கதை சொல்வதில் தானொரு சக்கரவர்த்தி என்பதை வான் ஹாமே மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.
    ஷானியா, நிக்கோலஸிடம் ரகசியத்தை உளறும் போதே அடுத்து இதுதான் நடக்கும் என்பதை யூகிக்க முடிந்தாலும், அந்த தவறிலிருந்தே அதை சரிசெய்யும் வழியையும் உளவுத்துறையினர் கண்டறிவது நல்ல யுக்தி.!

    ஷானியா இப்படி ஏமாந்து போய், காதல் மயக்கத்தில் உண்மையை சொல்வது நம்பும்படி இல்லை என்போருக்காக .. ' ஷானியா வாழ்க்கையில் நிறைய இழந்த, பற்றுவதற்கு கொம்பு தேடும் கொடி போன்றவள்., எனவே நிக்கோலஸ் போன்ற கனவான் தோற்றத்தில் உள்ள நபரிடம் உண்மையையும் மற்றதையும் பறி கொடுத்ததில் வியப்பில்லை.!
    ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பின் அங்கமாக இருக்கும் நிக்கோலஸ், அதுவும் அத்தனை பெரிய புராஜெக்டை ஏற்றுக்கொண்டு இருக்கும் நிக்கோலஸ் ஷானியாவின் மீதான மயக்கத்தில் ட்ரக் பற்றி உளறியிருக்கும்போது ஷானியா உளறியதில் ஆச்சர்யமே இல்லைதானே?

    ஓரியன் வழக்கம்போல ஆண்ட்டன் மற்றும் ஷானீயாவை அல்லது சூசனை அல்லது லேடி Sஐ உபயோகப்படுத்தி காரியம் சாதித்துக்கொண்டு உளவுத்துறையில் பெருமை தேடிக்க்கொள்கிறார்.

    அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளோடு வேகவேகமாக பயணிக்கும் கதை லவ் சென்டிமெண்ட்டோடு முடிவடைகிறது . அந்த க்ளைமாக்ஸ், ஷானியா ஏமாறவில்லை என்று நிரூபிப்பதற்காக வைக்கப்பட்டது போல் தோன்றுகிறது ..!
    மொத்தத்தில் லேடி Sன் மூன்றாவது ஆல்பமும் சூப்பர்ஹிட்தான்!


    சுமும் பனி - மச்சக்கன்னி

    ReplyDelete
    Replies
    1. // ஷானியா இப்படி ஏமாந்து போய், காதல் மயக்கத்தில் உண்மையை சொல்வது நம்பும்படி இல்லை என்போருக்காக .. ' ஷானியா வாழ்க்கையில் நிறைய இழந்த, பற்றுவதற்கு கொம்பு தேடும் கொடி போன்றவள்., எனவே நிக்கோலஸ் போன்ற கனவான் தோற்றத்தில் உள்ள நபரிடம் உண்மையையும் மற்றதையும் பறி கொடுத்ததில் வியப்பில்லை.//

      கதையை படிக்கும் போது எனது மனதில் தோன்றிய கேள்வி.உங்கள் விளக்கம் அதனை சரியாக புரிந்து கொள்ள செய்து விட்டது.

      Delete
    2. சொல்ல போனால் ஷானியா கதாபாத்திரத்தை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

      Delete
    3. ///சொல்ல போனால் ஷானியா கதாபாத்திரத்தை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்.///

      ஹிஹி..! நேக்கு வெக்கவெக்கமா வர்ரது பெருமாளே ..! :-)

      Delete
    4. ஷானியா "கதாபாத்திரத்தை' என்றுதான் சொன்னேன் கண்ணா.

      Delete
    5. முதலிரண்டு பக்கங்களை விட
      இங்க blog ல ஷானியா படம் சூப்பரப்பு

      Delete
    6. ///சொல்ல போனால் ஷானியா கதாபாத்திரத்தை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்.///

      ஷானியாவுக்கு திருடக் கத்துக்குடுத்த அந்தப்பய ஆன்டன் கூடத்தான் அவளை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கான். ஆனா புரிஞ்சு வச்சுக்கிட்டவங்களுக்கெல்லாம் வாய்ப்புக் கிடைப்பதில்லையே?!! ஹிஹி!

      Delete
    7. ஈ வி
      ரஷ்யா பார்ட்டி கூட ஸ்லீப்பிங் பியூட்டி.
      Stand up
      Stand at ease
      Attention
      சொல்லி அலுத்து போச்சு
      ம்ஹும்
      சரி போனா போகுது ஷவர்ல குளிக்கங்காட்டி
      About turn shaniya ன்னு
      சவுண்டு விட்டேன் ம்ஹும்


      நீங்க கொஞ்சம்
      ஜொள்ளி பாருங்களேன்
      sorry
      சொல்லி பாருங்களேன்.

      Delete
    8. ///சரி போனா போகுது ஷவர்ல குளிக்கங்காட்டி
      About turn shaniya ன்னு
      சவுண்டு விட்டேன் ம்ஹும்///

      :)))))))

      கரப்பான் பூச்சிக்குப் பயப்படாத பெண்களே லோகத்துல கிடையாதுங்க ஜி! "அச்சச்சோ... கரப்பான் பூச்சி"னு நீங்க கத்தியிருந்தா ஒரு வண்ணத்துப்பூச்சி உங்க வசமாகியிருக்கும்! ;)

      Delete
    9. எஞ் செல்லோம் ஈ வி கண்ணு.,
      Super idea.,

      Delete
    10. ///
      எஞ் செல்லோம் ஈ வி கண்ணு.,///

      அஞ்சாப்பு படிக்கச்சே க்ளாசுல ருக்குவோட இஸ்கூல் பேக்கை எவனோ ஒளிச்சுவச்சுட்டான். நான்தான் புலன்விசாரணை பண்ணி, மரத்துக்குப் பின்னால இருந்த பேக்கை கண்டுபிடிச்சுக் கொடுத்தேன். அப்போ ருக்குவும் இதே மாதிரிதான் கொஞ்சினா.

      அதுக்கப்புறம் இப்போத்தான்! :)

      Delete
    11. ருக்கு எங்க
      ருக்காப்ல

      Delete
    12. எஞ்செல்லோம்ல

      Delete
    13. ///ருக்கு எங்க
      ருக்காப்ல///

      :))

      ருக்கு எங்க இ ருக்கு ன்னு எனக்குத் தெரியாது. அதே மாதிரி, ருக்குவோட ஸ்க்கூல் பேக்கை ஒளிச்சவச்சது நான் தான்னு இப்போ வரைக்கும் ருக்குவுக்கும் தெரியாது!

      சில ரகசியங்கள் சொல்லப்படாமல் இருக்கும்வரைதான் வாழ்க்கை இனித்துக்கிடக்கும்! :)

      Delete
    14. 😇❤(ӦvӦ。)
      எப்டியோ நம்பள்கி
      Shaniya mania
      பத்திகிடுச்சி.

      சானியா ருக்காப்ல

      Delete
    15. அப்படின்னா கமல் பாடின ருக்கு ருக்கு இதைதத்தானா.
      ஈ வி சொல்லாம மறச்சுட்டீங்களே.
      உங்க வீட்டம்மா பாக்றதுக்குள்ள Phone ஐ ஒளிச்சு வெச்சுடுங்க.

      Delete
    16. ருக்கு
      கிறுக்குல தான
      குறுக்கொடிஞ்சு போயி கெடக்கோம்

      Delete
  32. //புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு ‘பழைய ஜோடி‘ – புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது – முழு வண்ணத்தில்! யாரந்த ஆசாமிகள்? என்று யூகித்திட முடிகிறதா?//

    சுட்டி - நட்டி என்று மினி லயனில் அறிமுகமான Spirou and Fantasio
    வாக இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஏன் டாலர் வேட்டை பார்ட்டிகளா இருக்கலாமே.

      Delete
    2. நம்ம ஜில் ஜோர்டன் பார்ட்டியா இருக்கலாமே.

      Delete
  33. அதுக்குள்ள 67 பேரா

    ReplyDelete
  34. //புத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு ‘பழைய ஜோடி‘ – புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது – முழு வண்ணத்தில்! யாரந்த ஆசாமிகள்? என்று யூகித்திட முடிகிறதா?//

    சுட்டி - நட்டி என்று மினி லயனில் அறிமுகமான Spirou and Fantasio?

    சுஸ்கி விஸ்கி?
    இரட்டை வேட்டையர்?
    டிம்மி ஜெர்ரி?
    நமக்கு பிடித்த இரட்டையர்களை சொல்லி வைப்போம்...

    யாராக இருக்கும்... மோட்டு வளையை பார்த்து யோசிக்கும் படங்கள் பத்து.

    ReplyDelete
  35. ஹஹஹா...சார் மரம் வைத்தவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான்...உள் பக்கங்கள் போல அட்டயும் வண்ணத்தில் பின்னுது...கமான்சே அற்புதமான கதை..அதும் கடசி மூன்றும் கேக்கவே வேண்டாம்....சான்சே லேது...சரி இடமில்லாமதான ஒதுக்கி இருக்கோம்..அடுத்த வருடம் பாத்துக்கலாம்....கல்யாணப்பணியிலும் சிறப்பா தரணுமேங்ற எண்ணத்துக்கே எண்ணற்ற நன்றிகள்....கிநா கலக்கலுக்காக காத்திருக்கிறேன்...பிரின்ஸ் முதலட்டை பின்னுது..அதனால் அள்ளுது..அதானே ...பொடியர்கள் வருவது கூடுதல் மகிழ்ச்சி...பிரின்சில் அச்சிடப்பட உள்ள புகைப்படம் கூடுதல் மகிழ்ச்சி...அதில் தங்கை மகள் ஹரிணி என பேரை இணைத்தால் நன்றி....மகிழ்ச்சி

    ReplyDelete
  36. அட்டை படம் ஓநாயின் சங்கீதம் இது வரை வந்த தலைப்புகளிலும் ..அட்டயிலும் best

    ReplyDelete
  37. உடன் பிறந்தவருமல்ல.
    உடன் வளர்ந்தவருமல்ல.
    பக்கத்துவீட்டு பையனுமல்ல.
    பள்ளித்தோழனுமல்ல.
    கல்லூரி நண்பனுமல்ல.
    பணியிடத்து பழக்கமுமல்ல.
    ஆனால் அனைவரும்
    அண்ணன் தம்பி
    அக்கா தங்கை
    மாமன் மச்சான்
    தோழன் தோழி
    இவ்வுறவு எப்படி
    லயன்-முத்து காமிக்ஸ்
    குடும்பத்தால் அப்படி.
    இடையில் வந்த இந்த
    சொந்தமே இனிமையானது.
    பகையும் வெறுப்பும்
    வஞ்சமும் துரோகமும்
    காமிக்ஸ்
    குழந்தைகளாகிய
    நமக்கெதற்க்கு.
    பள்ளி கல்லூரியில்
    ஆசிரியரை மதித்து
    நடந்த நாம் தளத்திலும்
    அனைவரையும் மதிப்புடன்
    மரியாதை கொடுத்து
    அன்புடன் ஆனந்தமாக
    இருப்போம்.

    ReplyDelete
  38. உடன் பிறந்தவருமல்ல.
    உடன் வளர்ந்தவருமல்ல.
    பக்கத்துவீட்டு பையனுமல்ல.
    பள்ளித்தோழனுமல்ல.
    கல்லூரி நண்பனுமல்ல.
    பணியிடத்து பழக்கமுமல்ல.
    ஆனால் அனைவரும்
    அண்ணன் தம்பி
    அக்கா தங்கை
    மாமன் மச்சான்
    தோழன் தோழி
    இவ்வுறவு எப்படி
    லயன்-முத்து காமிக்ஸ்
    குடும்பத்தால் அப்படி.
    இடையில் வந்த இந்த
    சொந்தமே இனிமையானது.
    பகையும் வெறுப்பும்
    வஞ்சமும் துரோகமும்
    காமிக்ஸ்
    குழந்தைகளாகிய
    நமக்கெதற்க்கு.
    பள்ளி கல்லூரியில்
    ஆசிரியரை மதித்து
    நடந்த நாம் தளத்திலும்
    அனைவரையும் மதிப்புடன்
    மரியாதை கொடுத்து
    அன்புடன் ஆனந்தமாக
    இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையா எழுதியிருக்கீங்க கவிஞரே!

      Delete
    2. செமயாக எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
    3. ஒண்ணுக்கு கீழ ஒண்ணுன்னு கவிதையையே ரெண்டு தபா எழுதினதிலிருந்தே, நீங்க பெருங்கவிஞர்னு தெரிஞ்சுக்க முடியுது கணேஷ்ஜி ..!

      புதுக்கவிதைளுக்கு கல்யாண்ஜி போல காமிக்ஸ் கவிதைகளுக்கு நம்ம கணேஷ் ஜி ..! ( வாங்குன காசுக்குமேல கூவிட்டேன் கணேஷ்ஜி .. பாக்கியை அடுத்தமுறை பாக்கறச்சே கரெக்ட்டா கழிச்சிடணும் என்ன ..!!)

      Delete
  39. Dear sir, have n't you noticed our senior editor's task during ur wedding arrangement? But good to know u spend ur time on o(ur) family wedding. At least pls let our junior editor know how u are working hard now sir. Very nice post.

    ReplyDelete
  40. Dear sir, have n't you noticed our senior editor's task during ur wedding arrangement? But good to know u spend ur time on o(ur) family wedding. At least pls let our junior editor know how u are working hard now sir. Very nice post.

    ReplyDelete
  41. சிவகாசி கல்யாண கச்சேரிக்கு கிளம்பிட்டீங்களா.
    கவனிங்க.

    1) சிவகாசி கார்நேசன் பிரட்
    2) கோவில்பட்டி கடலை மிட்டாய்
    3) சாத்தூர் அரிசி சேவு
    4) பாலவநத்தம் சீரணி
    5) அருப்புக்கோட்டை சீவல், கார சேவு, மோதிர அப்பளம், முனியாண்டீ கடை பக்கோடா,நெச்சிலி சீலா கருவாடு,பெரிய காராமணி தட்டை பயறு,குருவி தல பாகற்காய், கரிசுண்ட வற்றல், வெற்றிலை பாக்கு,இளநீர் சர்பத்.

    6) விருதுநகர் பர்மாகடை புரோட்டா,
    மிளகா வற்றல்,பலசரக்கு.
    7)ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
    8)மதுரை ஜிகிர்தண்டா, பருத்திபால்,ரீகல்தியேட்டர் அல்வா, கோனார் மெஸ் கறி தோசை, குமார் மெஸ் பரியாணி, வறுத்த கறி, பன் தோசை.
    9)அழகாபுத்தூர் நுங்கு

    10) ராஜபாளையம் சப்போட்டா.

    ReplyDelete
    Replies
    1. பர்மா கடை எல்லாம் நன்றாக இல்லை ஜி. தையல் மார்க்கெட் பகுதியில் உள்ள ராஜாமணி தான் டாப்.

      Delete
    2. வேன்ல குரூப்பா வந்தீங்கன்னா
      ஒரு கை பாருங்க நண்பர்களே.

      Delete
    3. முக்கு ரோடு பர்மா கடை பழைய வாசனை இருக்கு பரணிசார்.

      Delete
    4. இருக்கலாம் வெளியூர் நண்பர்களுக்கு. விலை ரொம்ப அதிகம்... அதைவிட அவர்கள் உபயோகபடுத்தும் எண்ணையின் அளவு ஜாஸ்தி.

      முத்துராமன்பட்டி ரெயில்வே கேட் அருகே இருந்த கடையின் ருசி இப்போது அவர்களிடம் இல்லை. அந்த கடையும் இப்போது இல்லை.

      ஆனால் வெளியூர் நண்பர்களுக்கு பர்மா கடை சிறந்த அனுபவத்தை தரும் என்பது உண்மை.

      விருதுநகர் மாரியம்மன் மற்றும் வெயில் உகந்த அம்மன் கோவிலுக்கும் சென்று வரலாம்.

      Delete
    5. சிவகாசி விஜயா மெஸ் ரொம்ப ஃபேமஸ்.

      Delete
    6. பார்க்கலாம் வாங்க
      1)மதுரை- அழகர்கோவில், பழமுதிர்ச்சோலை, நூபுர கங்கை, மீனாட்சியம்மன் கோவில்,திருமலைநாயக்கர் மஹால்,விளக்குத்தூண் ஜிகர்தண்டா ஷாப்பிங்,கூடலழகர் கோவில், ஆனைமலை நரசிம்மர் கோவில், திருப்பரங்குன்றம் மலை மேல் அதிசய வற்றாத வெண்மீன் தீர்த்த குளம்.
      2)சதுரகிரி சித்தர் மலை , ஹெர்பல் புராடக்ட்ஸ்
      3)ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பால்கோவா, மூவர் சமாதி.
      4)சிவகாசி பட்டாசு,காலண்டர்கள், டைரிகள், நோட்டுகள்,cornation hackery bread
      சேர்மன்PKSS ரோடு முத்து காமிக்ஸ் ஆபீஸ், காமிக்ஸ் குடோன்.
      5)கழுகுமலை குடைவரை கோவில்(20 அடி மண்டியிட்டு ஊர்ந்து சென்றால் மலைக்குள் குடைந்து உருவாக்கப்பட்ட பெரிய சப்த நிசப்த சமணர் கால ரகசிய ஹால்)
      6)சங்கரன் கோவில், புதையல் ரகசிய மலை.
      6)குற்றால அருவிகள்.
      7)ராஜபாளையம் நகர் சித்தர்கள் கோவில்கள், வனவிலங்கு சரணாலயம்
      8)அருப்புக்கோட்டை நோய் தீர்க்கும் சித்தர்கள் கோவில்கள்(வெளியுலகம் அறிந்திடாத கோவில்கள்)
      9)தென்காசி
      10)திருச்சுழி கோவில் , ரமண மகரிஷி ஆசிரமம்.

      Delete
    7. என்னது முத்துராம்பட்டி முக்குரோடு பர்மா கடை போச்சா.ஐய்யோடா!!!!
      சாயங்காலம் அங்க விக்கிற ஒரு அடி உயர பஜ்ஜி பேமஸ்

      Delete
    8. விஜயாமெஸ் , எங்கன இருக்கு சார்?

      Delete
    9. N.R. K.R Road. Sorry மெஸ் பெயர் விஜயம் மெஸ்.

      விருதுநகரில் படித்து கொண்டு இருந்த
      போது மாலை நேரம் அக்கா குழந்தைகளுடன் சென்று பர்மா கடை பஜ்ஜி வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டது எல்லாம் மனதில் பசுமையாக உள்ளது.

      அந்த கடையில் டீ போடும் மாஸ்டர் டான்ஸ் ஆடிக்கொண்டே டீ போடும் அழகை ரசித்துக் நண்பர்களுடன் டீ குடித்தது ஒரு வசந்தகாலம்.

      இன்றும் விருதுநகர் செல்லும் போது இது தொடர்கிறது ஆனால் பஜ்ஜி வாங்குவது வாடியான் கேட் பக்கம் உள்ள ஒரு கடையில்.

      முத்துராம்பட்டி முக்குரோடு பர்மா கடை போய் 12 வருசத்துக்கு மேல் இருக்கும். ஆனால் ஊருக்குள் இரண்டு மூன்று இடத்தில் ஆரம்பித்து உள்ளார்கள். முனிசிபல் ஆஃபிஸ் அருகே உள்ளது ஃபேமஸ்.

      Delete
    10. பர்மா கடை ஸ்பெஷல் டீ இன்றும் எனது பெவரிட்.

      Delete
    11. சிவகாசிக்குப் போறதுக்கு ஒருவாரம் லீவு போடணும் போலிருக்கே...

      இத்தனை ஐட்டங்களையும் சாப்பிட்டா அதுக்கப்புறமும் ஒருவாரம் மெடிக்கல் லீவு போடவேண்டியிருக்கும் போலிருக்கே....

      Delete
    12. ஈ வி முடிஞ்ச மட்டும் தின்னு பாத்தா போச்சு.
      மிச்சத்த கல்யாண பந்தியில பாத்துக்குவோம்ல.

      அவுக் அவுக் சங்கம்

      Delete
    13. யாமறிந்த பஜ்ஜிகளில் சிறந்த பஜ்ஜி
      பர்மா கடை பஜ்ஜியே

      Delete
    14. ///ஈ வி முடிஞ்ச மட்டும் தின்னு பாத்தா போச்சு.
      மிச்சத்த கல்யாண பந்தியில பாத்துக்குவோம்ல.///

      இந்தப் பயணம் ஒரு 'உணவுத் திருவிழா' மாதிரி அமைஞ்சிடும் போலிருக்கே... :D

      மாசக் கடைசி எப்போ வரும்னு நெம்போ ஆவலா இருக்கு!

      Delete
    15. அருப்புக்கோட்டை non-vegக்கு பானு ஹோட்டல், காளான் பிரியாணி இங்கு சூப்பரா இருக்கும்.

      Vegக்கு ஹோட்டல் இனிமை.

      Delete
    16. Unizyme MPS டேப்ளட் இருக்கவே இருக்கு.
      நாலஞ்ச வாங்கி வச்சகிட்டா போச்சு.
      செமிச்சு தள்ளிரும்
      அப்புறமாட்டி

      அடுத்தடுத்த பந்திக்கு ரெடீ.

      உண்டு மகிழ்ந்து
      விழாவை சிறப்பிக்க

      அவுக் அவுக் சங்கம்

      Delete
    17. அட்றா சக்கை
      காளான் பிரியாணியா

      எண்ணெயில்லாம இருந்தா சூப்பர் தான்
      தனலட்சுமி ஹோட்டல்னு ஒண்ணு இருந்துச்சே - இன்னமும் இருக்கா

      Delete
    18. தெரியவில்லை ஜி. அருப்புக்கோட்டையில் அதிகம் தெரிந்த இடங்கள் அருப்புக்கோட்டை மார்க்கெட், ஹோட்டல் இனிமை மற்றும் பானு, தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அருப்புக்கோட்டை ஊ வழியே செல்லும் போது அந்த கார்னரில் (?) உள்ள பெட்டிக்கடை அங்கு கிடைக்கும் நமது காமிக்ஸ்.

      அருப்புக்கோட்டை நண்பர்கள் Sridhar or Saravananக்கு தனலட்சுமி ஹோட்டல் பற்றி தெரிந்து இருக்கலாம்.

      தனலட்சுமி ஹோட்டல் பழைய பஸ்டாண்ட் எதிர்ப்புறம் உள்ளதா?

      Delete
    19. பழய பஸ் ஸ்டாண்டு எதுக்க ஆஞ்ச நேய விலாஸ்.
      நீங்க சொல்றது செந்தூரான் பெட்டி கடை ன்னு நினைக்கேன்.

      ஆனா காமிக்ஸ் எப்பவும்,
      இப்பவும் இருக்கும்னு நினைக்கேன்.

      இந்த வாட்டி சிவகாசி வர்றச்சே மதுரை - அருப்புக்கோட்டை - பாலவநத்தம் - விருதுநகர் வழியா போலாம்னு இருக்கேன்

      Delete
    20. நீங்கள சொன்ன நண்பர்களை வரவேற்போம்.
      Jio வந்த பிறகு நெட் பேக்கேஜ் பற்றிய
      கவலை விட்டது.
      Vodafone to Jio , portability மூலமாக அதே நம்பரை மாற்றிய பிறகு video call கூட ஊதி தள்றோம்ல.

      நன்றி ஜியோ

      ஆனா டொக்காமோ ரிலையன்ஸ் MTS BSNL
      ஏர்செல் வீடீயோகான் எல்லாமே காலி.
      Jio இப்பிடி எல்லாரையும் கொன்னுபுட்டு நம்மள என்ன பண்ண காத்திட்டிருக்காங்கேளோ

      Delete
    21. // இந்த வாட்டி சிவகாசி வர்றச்சே மதுரை - அருப்புக்கோட்டை - பாலவநத்தம் - விருதுநகர் வழியா போலாம்னு இருக்கேன் //

      சூப்பர். என்ஜாய் ஜனார்த்தனன்

      Delete
    22. அப்புறம் அந்த காளான் பிரியாணியில் எண்ணெய் குறைவுதான்.

      ஓவர் டூ காமிக்ஸ்.

      Delete
    23. Yes ji , nostalgic thoughts
      Thanks over to comics

      Delete
  42. இம்மாத தரவரிசை

    1. ஒற்றைக்கை பகாசுரன்
    2. சுடும் பனி
    3. மார்ட்டின் மிஸ்ட்ரீ

    ட்ராகன் நகரம் மேக்கிங்கிலும் லுக்கிலும் முதலிடம்.!

    ReplyDelete
    Replies
    1. பனி சுட வில்லையே கண்ணா

      Delete
  43. அன்று
    1 தலை வாங்கும் தாரகை - மாடஸ்டியின் பழைய எதிரி கேப்ரியல் ஒரு செக்ரெட்டரி ட்ரைனிங் ஆபீஸ் நடத்தி, அதன் மூலம் நாட்டு ரகசியங்களை திருடி விற்கும் வேலை செய்கிறான். மாடஸ்டியும் கார்வினும் எப்படி அவன் விரித்த வலையில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

    இன்று
    1 ஒரு வெறியனின் தடத்தில் - டெக்ஸ் தனி ஆளாக தன் நண்பனுக்காக பனி இரவில் உதவும் கதை. தூத்தேறி செம தெறி தான்

    2 இது கொலையுதிர் காலம் - டிலான் டாக், இது எனோ அவ்வளவாக ஈர்க்க வில்லை. வில்லன் டெர்மினேட்டர் அர்னால்டை ஞாபக படுத்தி விட்டது. கதையில் ரத்த சிதறல்கள் அதிகம். ஓகே ரக கதை.

    3 கனவு மெய்ப்பட வேண்டும் - தோர்கள் இல்லாமல் தன் மகன் கூட ஒரு கதையை தன் தோள்களின் சுமக்க முடியும் என்று நிரூபித்த கதை. இரண்டாவது கதையில், அந்த வில் போட்டி, அபாரம்.

    ReplyDelete
    Replies
    1. // கனவு மெய்ப்பட வேண்டும் - தோர்கள் இல்லாமல் தன் மகன் கூட ஒரு கதையை தன் தோள்களின் சுமக்க முடியும் என்று நிரூபித்த கதை //

      அருமையா சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர்.

      Delete
    2. ஆஆஆஆஆ ரீசியாயாயா

      Delete
  44. அருப்புக்கோட்டை சரவணன் மற்றும் வெட்டுக்கிளி வீரையன் உங்கள் பதிவுகள் கடந்த ஒரு வருடமாக (?) இல்லை. நேரம் கிடைக்கும் போது இங்கு பதிவிடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊரில் செட்டில் ஆவதற்காக கடந்த ஆறு மாத காலமாக அலைந்து கொண்டு இருப்பதால் தளத்தில் கலந்து கொள்ள இயலவில்லை நண்பரே.. என்னை ஞாபகம் வைத்து அழைத்ததற்கு நன்றி ..

      Delete
    2. சூப்பர். தூத்துக்குடியா அல்லது பெங்களூரா வீரையன்?

      Delete
    3. பெங்களூர் மாரத்தஹல்லி யில் குடியேற உத்தேசம்..அருப்புக்கோட்டையின் அருமை பெருமைகள் அத்தனையும் உண்மை. அதேபோல் ஆன்மீக நம்பிக்கை கொண்ட நண்பர்கள் அவசியம் அருப்புக்கோட்டை வந்தால் சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் தரிசனம் செய்யுங்கள்.அங்கே எல்லாம் வல்ல சித்தரை வணங்கி ஏழு முறை சுற்றி வர எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

      Delete
    4. I am in Whitefield, 9km away from there. Let me know if any help required.

      Delete
    5. வெட்டுக்கிளி சார்...

      நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களது கமெண்ட்டைக் கண்டதில் மகிழ்ச்சி!

      நினைவுபடுத்தி அழைப்பு விடுத்த PfBக்கு நன்றி! (இன்னும் நிறையப் பேரை ஞாபகப்படுத்துங்க PfB!)

      'கேப்ஷன் போட்டி வச்சா மட்டும்தான் இங்ஙனக்குள்ள வந்து எட்டிப் பார்ப்பேனாக்கும்'னு 'வெட்டுக்கிளி வீராப்புஐயா' இல்லாம அவ்வப்போது இங்கே தலைகாட்ட முயற்சிசெய்யுங்கள் சார்! :)

      'வண்ணப்புறா' நலம்தானே?

      Delete
    6. ///அருப்புக்கோட்டை வந்தால் சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் தரிசனம் செய்யுங்கள்.அங்கே எல்லாம் வல்ல சித்தரை வணங்கி ஏழு முறை சுற்றி வர எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்.///

      தகவலுக்கு நன்றி வெட்டுக்கிளி சார்!

      @ தலீவர்

      நம்ம 'சி.சி.வ' கோரிக்கையை எதிரணித் தலைவர்ட்ட கேட்டுக்கேட்டு ஒவ்வொரு மாதமும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கறதுக்குப் பதிலா, சங்கத்துச் செலவுல இந்தக் கோயிலுக்குப்போய் ஏழு தடவை சுத்திவந்து வேண்டிக்கிட்டோம்னா சுளுவா நம்ம போராட்டங்கள் வெற்றியடைஞ்சுடுமில்லையா?

      ம்'மினு சொல்லுங்க தலீவரே... வண்டியக் கட்டிப்புடலாம்!

      Delete
  45. Replies
    1. க்யூபா படலம் :- வழக்கமான டெக்ஸ் கதைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட கதை. கதையை படித்து முடித்த பின் டான் ரஃபேல் கதாபாத்திரம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. அதுவும் கதையின் இறுதியில் தனது மனைவி மற்றும் வீடு தீக்கிரையான போது கண்கலங்கி நிற்கும் இடத்தில் பேசும் வசனங்கள் கண்ணில் நீரை வரவைத்து விட்டது. ஆசிரியர் மொழி பெயர்ப்பு அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

      Delete
    2. அந்த சிறுவன் கிளைமாக்ஸில் மனதில் கிலி ஏற்படுத்தி விட்டான்.

      கதை கொஞ்சம் மெதுவா நகர்ந்தது. எப்போது கதை முடியும் என்று படிக்கும் போது தோன்றியது.

      Delete
    3. அந்த கதைல டெக்ஸூக்கு பதில்
      மர்ம மனிதர் மார்டின் இருந்தா
      🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🏺🏺🏺

      Delete
  46. இரட்டை வேட்டையர்

    ReplyDelete
  47. மெனு கார்டு அருமை

    ReplyDelete
  48. புத்தாண்டில் சந்திக்க போகும் ஜோடி
    1.பழைய ஜோடி
    2.புது பொலிவுடன்
    3.முழு வண்ணத்தில்
    இவர்களா இருக்குமோ...சுஸ்கி-விஸ்கி,அலிபாபா-முஸ்தபா, லாரன்ஸ்-டேவிட்,மாடஸ்டி-கார்வின்,ஷெர்லக் ஹோம்ஸ்-டாக்டர் (பெயர் மறந்து விட்டது).....

    ReplyDelete
  49. அப்பாடா! ! எடிட்டர்


    நாய்கள் மீது கடுப்பில் உள்ளார். .!!!

    ஹய் ஜாலி ! இனிமேல் ரின் டின் நாய்கதைகளை போட்டு உயிரை வாங்க மாட்டார். !

    ReplyDelete
    Replies
    1. அப்படியே,

      மாடஸ்டி "போர்ஸி" கதைகளையும் போடாமலிருந்தால் சந்தோஷம் ரட்டிப்பு ஆயிடும்லே!!

      Delete
    2. வாயில்லா ஜீவன்

      Delete
    3. ரின் டின் பற்றி தவறாக பேசிய நண்பர் மாடஷ்டி வெங்கடேஷ்ஐ வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆர்னர்.

      Delete
    4. // போட்டு உயிரை வாங்க மாட்டார். ! //

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் நண்பரே. அதற்காக இப்படி எழுத வேண்டாம் ப்ளீஸ்.

      Delete
    5. MV அவர்களே...

      என்னதான் நீங்க ரின்டின்கேனை எட்டி எட்டி உதைச்சாலும் "இந்த ஆர்மிக்கார கலா ரசிகருக்கு எம்மேல எம்புட்டு பிரியம் இருந்தா இப்படி நான் கேட்காமலேயே மசாஜ் பண்ணிவிடுவாரு!!" அப்படீன்னுதான் நினைக்கும்!

      அதான் ரின்டின்கேன்!

      தனக்குப் பிடித்த கலாரசிகருக்காண்டி தன் உயிரையே கொடுக்கும்! எடுக்காது!!

      Delete
  50. @ ALL : FOLKS : ஒரு அவசரக் கோரிக்கை :

    கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் இதழில் உங்கள் போட்டோக்களை அச்சிடும் வேலைகள் முன்கூட்டியே துவக்கிடவுள்ளோம் ; so உங்கள் பெயர்களில் ஏதேனும் பிழைகள் இருந்திருப்பின் தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சல் "PHOTO CORRECTION " என்ற தலைப்போடு உடனே அனுப்பிடுங்களேன் ப்ளீஸ் !

    ReplyDelete
    Replies
    1. Please let us know the mail-id to send?

      photos-lion@yahoo.com, photos_lioncomics@yahoo.com, photo_lioncomics@yahoo.com are NOT working. It seems these ids are not exists. Please let me know if am sending to wrong mail-id.!

      Delete
    2. பேசாம அட்டைப்படத்துலயே பிரின்ஸ் முகத்துக்குப் பதிலா எங்க முகத்தை கிராபிக்ஸ் பண்ணி அனுப்பிவச்சுடுங்க எடிட்டர் சார்! நாங்களே சாகஸம் பண்ணா மாதிரி ஒரு ஃபீல்க்கு கிடைக்குமில்லே?

      Delete