Powered By Blogger

Tuesday, August 08, 2017

ஆமோஸோடு ஆரம்பம் !

நண்பர்களே,

வணக்கம். புது வாரத்தின் தொடக்கத்தோடு பணிகளும், பொறுப்புகளும், வழக்கம் போல் நம்மை ஸ்வாஹா செய்திருக்கும் என்றே நினைக்கிறேன்  ! ஈரோட்டின் நினைவுகள் ஏதாவதொரு ரூபத்தில்  மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தாலும், வாழ்க்கைச் சக்கரங்கள் சுற்றியாக வேண்டுமல்லவா ? And அதற்குள் தேதி  8 ஆகிவிட்டது ; இன்னமும் மூன்றே வாரங்களுக்குள் செப்டெம்பரின் இதழ்களோடு ஆஜராகிட வேண்டுமே என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டு விட, காலையில் SMURFS ; மாலையில் கிராபிக் நாவல் என்று எனது நாட்கள் நகர்ந்து வருகின்றன ! நாளைய விருந்துக்கு நான் பணி செய்து வரும் வேளைதனில், இம்மாதத்து இதழ்களை பற்றிய அலசல்களுக்குள் புகுந்திட்டாலென்ன all ? அதிலும் அந்தக் கண்ணாடிக்காரர் கர்னல் ஆமோசின் இதழிலிருந்து ஆரம்பித்தால் ஆட்டம் சூடு பிடித்து விடுமென்று நினைக்கிறேன் ! 
இந்த spin-off சாகஸத்தைப் பொறுத்த வரையிலும் - வழக்கமான சந்தாவின் ஏதேனுமொரு பிரிவிற்குள் நுழைக்க எனக்கு அத்தனை ரசிக்கவில்லை ! சந்தா E இதற்கு வாகானதொரு களமே என்றாலுமே , அதனில் முற்றிலுமாய் புதிதான கதைவரிசைகளை ; one -shot களை மட்டுமே பயன்படுத்த நினைத்திருப்பதால் கர்னலுக்கு அங்கே இடமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை ! So இந்த bookfair slot தான் இதற்கு சரி வருமென்று தீர்மானித்தேன் ! XIII கதையோடு நேரடியாய் இந்த ஆல்பத்துக்கு தொடர்பில்லையெனினும், இரத்தப் படலத்தின் ஒரு மையக்  கதாப்பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நாம் அறிந்துகொள்ள இந்த ஆல்பம் பயன்படக்கூடும் ! இதன் ஓவியர் நமக்கு பவுன்சரின் புண்ணியத்தில் நன்றாகவே பரிச்சயமான Boucq தான் ! ஒரிஜினல் அட்டைப்படத்தோடு, துளியும் ஜிகினா வேலைகளின்றி வெளி வந்திருக்கும் இந்த சீரியஸ் ரக கதை -சர்வதேச உளவுத்துறைகளின் கள்ளன்-போலீஸ் ஆட்டத்துக்கொரு உதாரணம் என்று சொல்லலாம் போலும் ! இவர்கள் விடாக்கொண்டர்கள் என்றால் - எதிராளிகள் கொடாக்கண்டர்கள் !! நிதானமாய் இதனைப் படித்திட நேரம் ஒதுக்குங்களேன் guys ? இதனை ஆன்லைனில் வாங்கிட : http://lioncomics.in/xiii-rathap-padalam/427-xiii-colonel-amos.html
  • அப்புறம் இம்மாத ஹீரோ நமது டைகரை மறுபதிப்பில் ரசிக்க சாத்தியமானதா ?
  • டைலனின் "கொலையுதிர் காலம்" சுகப்பட்டதா ? பக்கத்துக்குப் பக்கம் தெறிக்கச் செய்யும் அந்தக் கொலைகார "கோஹ்லெம்" concept பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவோ ? 
  • நம்மவரின் மறுபதிப்பு - "மரணத்தின் நிறம் பச்சை" ? How did it fare ?
  • And நமது நரைமுடி ரோமியோ ஷெல்டன் சாகசம் பற்றியுமே பேசலாமே ?
Let 's get cracking guys ?! மீண்டும் சந்திப்போம் ! Bye for now !










இது 3  ஆண்டுகளுக்கு முன்பான நமது ஈரோடு ஸ்டால் !! Phew !!

256 comments:

  1. //கர்னல் ஆமோசின் இதழிலிருந்து ஆரம்பித்தால் ஆட்டம் சூடு பிடித்து விடுமென்று நினைக்கிறேன் ! //

    :)

    ReplyDelete
  2. //மாலையில் கிராபிக் நாவல் என்று//

    ....................... :)
    படித்து வைக்காமல் படிக்கவும்(2018ல் publish செய்து ) வையுங்கள் எடிட் சார் !

    ReplyDelete
  3. இரத்தப்படலம் ஆன்லைன் முன்பதிவு என்ன ஆச்சு சார்...

    ReplyDelete
    Replies
    1. M. Vidya : 2 நாட்களாய் நமது அலுவலக போன் அனல் பறக்க அலறி வருகிறது ! வித விதமான கேள்விகள் ; சந்தேகங்களோடு நண்பர்கள் அழைக்க - நம்மவர்கள் பிசியோ பிசி !

      நாளை காலையில் லிஸ்டிங் இருந்திடும் !

      Delete
    2. //// 2 நாட்களாய் நமது அலுவலக போன் அனல் பறக்க அலறி வருகிறது ! வித விதமான கேள்விகள் ; சந்தேகங்களோடு நண்பர்கள் அழைக்க - நம்மவர்கள் பிசியோ பிசி !///


      சூப்பர் சார்! உற்சாகம் பிச்சுக்கிது!:)

      Delete
    3. Wow....பிரம்மாதமான நியூஸ் சார்..
      இரத்த படலம் இத்தனை ஆர்வத்தை கிளப்பினால் அந்த மின்னும் மரண ரிலீஸ் மாதிரி ஏப்ரல் விழாவில் சென்னையில் அதகளம் தான்...
      உற்சாகம் துள்ளும் போதே, உங்களின் பணிச்சுமை இரட்டிப்பாகும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை சார்.

      Delete
    4. வணக்ககம் ஆசிரியர் சார் நேற்றே புக் செய்தாகி விட்டேன்

      Delete
    5. செம்ம சார் இரத்தப்படலம் முன் பதிவு வேகம் பிடிப்பது மகிழ்ச்சி அதுவும் அறிவிப்பு வந்த ஒரு வாரத்திற்குள்ளாக

      Delete
    6. வாவ் சூப்பரான செய்தி சார்

      அப்படீன்னா ஜனவரியில் இரத்தபடலம் ஒற்றை புத்தகமாக தலையில்லா போராளி சைசில்கிடைக்குமென்று சொல்லுங்கோ _/|\_
      .

      Delete
    7. சிபி தலையில்லா போராளி சைசுக்கு வாய்பிருக்கா தெரில...வந்தா அட்டகாசம்தான்...இரண்டாயிரம் முன் பதிவு வந்தா ஒரு வேளை விலை குறயலாம்..அதற்கு ஈடா ஆசிரியர் போட்டுத் தாக்கலாம்.....

      Delete
  4. கர்னல் ஆமோஸ்! ஆன்லைனில் வாங்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  5. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே..

    ReplyDelete
  6. கர்னல் ஆமோஸ் Online purchase mattum thaana? regular subscription la kidaiyatha?

    ReplyDelete
    Replies
    1. //இந்த spin-off சாகஸத்தைப் பொறுத்த வரையிலும் - வழக்கமான சந்தாவின் ஏதேனுமொரு பிரிவிற்குள் நுழைக்க எனக்கு அத்தனை ரசிக்கவில்லை ! சந்தா E இதற்கு வாகானதொரு களமே என்றாலுமே , அதனில் முற்றிலுமாய் புதிதான கதைவரிசைகளை ; one -shot களை மட்டுமே பயன்படுத்த நினைத்திருப்பதால் கர்னலுக்கு அங்கே இடமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை ! So இந்த bookfair slot தான் இதற்கு சரி வருமென்று தீர்மானித்தேன் !// - From Editor's Post.

      Delete
  7. கடைசி இரண்டு போட்டோக்களில் நமது வரலாறே தெரிகிறது சார்... பிரமாதம், புதிதாக யாரேனும் பழைய வாசகர் இணைந்தால் சந்தோசத்தில திக்கு முக்காடிப் போய்விடுவார்கள்... புதையல் குவியலில் எதை அள்ளுவது என???

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : "கஞ்சன் வீட்டுப் பந்தி " போல் அன்றைக்கு காட்சி தந்த ஸ்டாலைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது !!

      Delete
    2. ஒப்பிட்டிளவில் இது நல்ல வேகமான வளர்ச்சி,மேலும் முன் இடைப்பட்ட நாட்களில் இருந்த மந்தமான வளர்ச்சியை பார்க்கும்போது இப்போதைய மிக அவசியம்.இதே வேகம் என்றும் தொடரட்டும்.

      Delete
  8. டயலான் டாக் "இது கொலையுதிர் காலம்" செம திரில்லர்:
    மெலிதான டெர்மினேட்டர் கதை போல தோன்றியது எனக்கு. அர்னால்ட் போலவே அந்த கோஹல்லம் இருந்தது , மேலும் அர்னால்ட் தந்தை ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் கவனிப்பு . . .

    ReplyDelete
    Replies
    1. cap tiger : //மெலிதான டெர்மினேட்டர் கதை போல தோன்றியது//

      +1

      Delete
  9. கர்னல் ஆமோஸ்.

    இரத்தப்படலத்தில் ஆமோஸின் கற்பனையோடு கதையில் குதித்தால், ஏதேனும் சேதாரம் ஆவது நிச்சயம்.

    மாறாக இது ஒரு தனிக்கதை என்று நுழைந்தால் திருப்தியைக் கொடுக்கும் என்பது உண்மை.
    உளவுத்துறைகளின் இன்னொரு முகத்தை வெளிச்சமாக்கி, காரியமே முக்கியம் அதற்கென எந்த அளவிற்கும் செல்லும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் அதிகாரிகளின் மட்டமான சிந்தனையை பட்டவர்த்தமாக வெளிக்காட்டியது.
    என்ன இதையெல்லாம் ஒரிஜினல் 'இரத்தப்படலத்திலே ' பார்த்து விட்டோம் என்பது வேறு விசயம்.

    ஆசிரியருக்கு ஒரு கேள்வி இந்த Spin off தொடர்களுக்கு அதன் பிதாமகர்களுடன் அனுமதியுடன் வெளிவருமா? அல்லது கதாசிரியர் கை போன போக்கிலே செயல்பட அனுமதிப்பார்களோ?

    ReplyDelete
    Replies
    1. சார்ட் &சுவீட் விமர்சனம்...!!!

      நல்ல கேள்வி,பதில் தெரிந்து கொள்ள நானும் ஆர்வத்துடன் வெயிட்டிங் கோவிந்த்...

      Delete
    2. Govindaraj Perumal : //இந்த Spin off தொடர்களுக்கு அதன் பிதாமகர்களுடன் அனுமதியுடன் வெளிவருமா?//

      Not really....ஒரு தொடரிலிருந்து அதன் படைப்பாளிகள் விலகிக் கொள்ளும் போது, தொடரும் creative team-க்கு முழு சுதந்திரம் தரப்படுவது தான் வழக்கம். முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு - "இதை இப்படிக் கொண்டு செல்லலாம் ; அதை அப்படி மாற்றியமைக்கலாம் " என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள் !

      XIII மெயின் தொடரின் முதல் சுற்று முற்றுப் பெற்று - கதாசிரியர் வான் ஹாம்மே விலகிக் கொண்ட பின்பாய் - இரண்டாம் சுற்றுக்கான புது டீமை தயார் செய்த போதுமே, கதையை எந்தப் பாதையில் இட்டுச் செல்வதென்ற தீர்மானங்கள் எடுக்கும் முழு சுதந்திரமும் புது வரவான Yves Sente க்கு தரப்பட்டது! மெயின் தொடருக்கே இது தான் நியதி எனும் போது spin-offs விஷயங்களிலும் அதுவே தான் பாணியாக இருந்திருக்கும் !.

      என்ன - ஒவ்வொரு கதாசிரியரும் ஒட்டு மொத்தமாய் XIII தொடரின் சகல ஆல்பங்களையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமென்ற condition மாத்திரமே அமலில் இருந்திருக்கும் !

      Delete
  10. நானும் வந்திட்டேன்

    ReplyDelete
  11. வணக்கம் நட்புஸ்..
    இரத்த கோட்டை எடுத்து இப்பதான் முன்னடியும் பின்னாடியுமா நாலைஞ்சு தடவை புரட்டி பாத்துகிட்டு இருக்கேன்.. லீவுல உக்காந்து படிச்சுடனும்..

    ReplyDelete
    Replies
    1. Prasanth Karthick : அட..புரட்டிப் பார்ப்பதிலேயே 3 நாட்கள் ஓடிவிட்டனவா ?

      Delete
  12. இந்த ரெகுலர் இதழ்களில் ஷெல்டன் தான் சார் சரசர சரவெடி,விறுவிறுப்பான வாசிப்புக்கு உத்திரவாதம்.

    ReplyDelete
  13. Ratha Kottai...Back Cover Golden outline simply superb and excellent...
    Hats off to the team

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : மின்னும் மரணத்தின் "தங்கமகன்" அல்லவா ? - மினுமினுப்பது பொருத்தமென்று நினைத்தேன் !

      Delete
  14. ஷெல்டன் அதிரடி அணுகுண்டு
    டெக்ஸ் பரபரப்பான ஹைடிரஜன் குண்டு
    டைலன் டாக் நியூக்ளியர் குண்டு
    இரத்தக்கோட்டை செங்கோட்டை பட்டாசு
    ஆமோஸ் டபுள் ஷாட்.
    அடடா தீபாவளி இப்பவே வந்தமாதிரி
    இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இதன் மூலமாக நீங்கள் குண்டு புக் வேணும்னு கேட்பது தெரிகிறது

      Delete
  15. வணக்கம் ஆசிரியரே & நண்பர்களே

    ReplyDelete
  16. இப்போ தனியே ஒரு கழுகு.. ,my alllllllltime favourite... இந்த பாகம் மட்டுமே 3 வது முறையாக... இப்பத்தான் குதிரை விழுங்கி கன்யானில் வெடி வைத்து கொண்டிருக்கிறேன்.. மத்த புக் எல்லாமே அப்புறம் தான்


    இரத்தக் கோட்டை புத்தக வடிவமைப்பு அட்டகாசம்... வர்ணிக்க வார்த்தக்களே இல்லை... The BEST

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : சில நேரங்களில் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே, பூரண திருப்தி கிடைப்பது அரிதாகவே இருந்திடும். ஆனால் சில தருணங்களிலோ எல்லாமே தானாய் ஒரு slot க்குள் விழுந்து கிடக்கும் ! இம்முறை இரண்டாவது நிகழ்வே !!

      Delete
    2. ஓட்டுவீங்க இருந்தாலும் சொல்லைனா வரலாற்று பிழை ஆகிப் பூடும்...
      தங்க தலைவனது விழாக்கள் எப்பொழுதுமே சிறப்பு & மகிழ்ச்சி.
      அடுத்த ஆண்டு வெளிவரும் தங்க தலைவனது இளம் வயது கதைகளின் ஆறு பாக தொகுப்பிற்காக வெயிட்டிங்..

      Delete
    3. இரத்தக் கோட்டை story has always thrilled me - I like it more than MINNUM MARANAM. If I were to buy one book only for 2017 I would choose RATHTHAK KOTTAI blindfolded.

      Sad the booking is yet to meet the numbers ! May be due to heavy competition from other FAT books like Lion 300, Super Six doubles etc!

      Delete

  17. ஈரோடு 2017

    2.தி ரியல் சர்ப்ரைஸ்....

    *2015ம் ஆண்டில் முதல் ஈரோடு மீட்டு அதற்கு சர்ப்ரைஸ் இதழ் ஒன்றும் கிடையாது. சென்றாண்டு 2ம் பிரம்மாண்டமான ஈரோடு மீட்டில் அதிரடியாக முத்துNBSல் வந்திருந்த லார்கோவின் "கான்கிரீட் கானகம் நியூயார்க்" வெளியிட்டார் ஆசிரியர் சார்.

    *இந்த ஆண்டு மீட்ல என்ன சர்ப்ரைஸ் என நண்பர்கள் ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்தனர். சந்தாவில் 46&சூப்பர்6 இருக்க இதற்கும் ஆர்வம் காட்டியது நிறைய முகங்களில் ஆச்சர்யத்தை கொண்டு வந்திருக்க கூடும். ஆசிரியர் சாரும் பெரிய இதழ் ஏதும் இல்லை என அறிவிக்கவும் அது கார்டூனாக இருக்கும் என அதிகம் பேர் நம்பினர்.

    * சர்ப்ரைஸ் என்ன என ஒரு கட்டத்தில் நானும் புதிய நண்பர் மிதுனும் பந்தயமே கட்டினோம். ஆனால் ஆசிரியர் சாரின் பணியாளர்கள் அந்த சர்ப்ரைஸ் இதழை இரு நாட்கள் முன்பே வெளிச்சம் போட்டு விட்டனர். போச்சுடா இதென்ன இப்படி ஆச்சே என ஈரோடு போய் சேர்ந்தோம்.

    *ரொம்ப காலமாகவே தளத்தில் தன்னுடைய தனி பாணி எழுத்துக்களால், மரியாதைக்குரிய நண்பர் ஒருவர் நண்பர்கள் அனைவரையும் கவர்ந்து இருந்தார். ஒவ்வொரு விழாவாக வருவேன் என அவர் உறுதி தருவதும், கடேசி நேரத்தில் அவரின் கடினமான பணி நெருக்கடியில் வராமல் போவதும் என மிக்கி மவுஸ் கேம் ஆடிக் கொண்டே இருந்தார்.

    *இம்முறையும் வந்து விடுவேன் என உறுதிசொல்லி இருந்த அவர் கடந்த சில தினங்களாக மெளன மொழி பேசிடவும், க்கும் இப்பவும் அதே கேம் தான் என நினைத்து இருந்தோம். விழா அன்று காலை கும் இருட்டில் நண்பர்கள் பேனர் கட்டி கொண்டு இருக்க, நான் ஆல்மோஸ்ட் லைவில் மூழ்கி இருந்தேன். திடீரென நண்பர்களை வரவேற்கும் பணியில் இருந்த பேபி ஸ்மர்ப் தன் சிம்ம குரலில் சீக்கிரம் இங்கே வாங்க மாம்ஸ்& மாமி என கூப்பாடு போட, என்ன என்ன என கேட்டு கொண்டே வாயிலுக்கு சென்றோம்....

    * பைனலி அந்த நண்பரின் தரிசனம் கிட்டியது. ஆம் அவரே தான், கிட் மாம்ஸ் நம்ப முடியாமல் திகைக்க போட்டோவுல விட நேரில் இன்னும் வசீகரிக்கும் அந்த முகத்தை கண்டோம். பொருளர் என்கிற செனா அனா என்கிற செல்வம் அபிராமி ஜியை சந்தித்தே விட்டோம்.

    *தன்னுடைய தனித்துவ விமர்சனங்கள், மற்றும் எல்லாவித சந்தேகங்களுக்கும் சிரத்தையுடன் எளிதாக புரியும் படியான விரிவான விளக்கங்களுக்கு புகழ்பெற்றவர் தான் செனா அனா ஜி. அதனாலேயே தளத்தின் என்சைக்ளோபீடியா என அழைக்கப்படுபவர். அவரை சந்தித்த நண்பர்கள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றனர்.

    *சீனியர் எடிட்டருக்கு முத்து 400க்கான சாதனை கேடயத்தை வழங்கும் மரியாதை செய்ய அழைத்த போது, உற்சாகத்துடன் மேடையேறி சீனியர் எடிட்டர் சாரை கெளரவப்படுத்தினார். தொடர்ந்து மீட்டிங்ல ஆர்வத்துடன் ஒன்றியும், முதன் முதலாக நம்முடைய ஆர்ப்பாட்டங்களை ஆச்சர்யத்துடனும் கண்டு ரசித்தார். மாலை மரத்தடி மீட்டிங்லயும் கலந்து கொண்டு எடிட்டரிடம் சரளமாக உரையாடி நம்மை மகுழ்வித்தார்.

    * மாலை வந்தவர் எனக்காக கொடுத்த அன்பு பரிசை கண்டு திக்கு முக்காடிப் போனேன். அமெரிக்காவில் வெளியான டெக்ஸ் வில்லரின் "The lonesome rider" என்ற ஆங்கில பதிப்பு அது. நம் லயனில் சாத்தான் வேட்டையாக ஏற்கனவே வந்திருந்த கதை. வழக்கமாக சேந்தம்பட்டி சார்பில் தரும் புத்தக கிஃப்ட்களை நான் தருவதே வழக்கம். இன்று முதன் முறையாக எனக்கு அன்பு பரிசு கிடைக்கப்பெற்ற போது தான் வாங்குபரின் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

    *செனா அனாவுடன் ஓரு நாள் கொண்டாட்டமாக ஞாயிரை ஏற்பாடு செய்து இருந்த போதும் டைட் செட்யூல் காரணமாக அவர் சனிக்கிழமை இரவு கிளம்ப வேண்டியதாகிற்று. போட்டோ எடுத்து கொண்டு அவரை அனுப்பி வைத்த பிறகே நண்பர்கள் இந்த 2017ன் ரியல் சர்ப்ரைஸ்ஸை உண்மையாக உணர்ந்தோம்.....

    ------தொடரும்------

    ReplyDelete
  18. டைலன் டாக் விறுவிறுப்பாக சென்றது ... கடைசி twist நன்றாக இருந்தது .. இதே போன்று Dylan கதைகள் வந்தால் நன்றாக இருக்கும் ...

    கர்னல் Amos நன்றாக இருந்தது ... ஆனால் கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் .. Mongoose spin off Ku பிறகு இது சிறந்த spin off ..

    ReplyDelete
    Replies
    1. Mks Ramm : //கர்னல் Amos நன்றாக இருந்தது ... ஆனால் கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் ..//

      Careful reading - என்று நான் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது இதன் பொருட்டே !

      Delete
  19. ஐ யாம் ரீடிங் டைலன் டாக் நவ்!
    செம பயமாக்கீது!! ய்யீயீயீஈஈஈக்...

    ReplyDelete
  20. இம்முறை ஆசிரியரின் போட்டி அதிக நேரத்தை விழுங்கி விட்டதாக ஒரு பீலிங்... என்ன எனக்கு மொத்தம் 3 விடைகளே தெரிந்திருந்தது.. இருந்தாலும் அரங்கத்தில் எல்லோரையும் time machineல் ஏற்றியது போலிருந்தது..

    ReplyDelete
  21. அப்புறம் இம்மாத ஹீரோ நமது டைகரை மறுபதிப்பில் ரசிக்க சாத்தியமானதா ?//
    நானெல்லாம் தலைவன் போஸ்டரையே 3 நாள் பார்க்கிற ஆளு...

    ReplyDelete
  22. சார், கடைசி photoவில் தெரியும் Magnum Special இன்னும் stock இருக்கா?
    1991 முதல் 2015 வரை நான் காமிக்ஸ் உலகிலகோடு டச் இல்லாமல் இருந்ததால் நிறைய மிஸ் பண்ணிட்டேன்..
    Thanks

    ReplyDelete
  23. இம்மாத highlight Colonel Ammos!மிக நேர்த்தியான கதையாக்கம், அருமையான வண்ணகலவை. Wayne Sheldon இம்முறையும் ஏமாற்றவில்லை Simple and clean action story. மரணதின் நிறம் பச்சை no comments

    ReplyDelete
  24. Blue Berry once again proved he is a KING OF SPECIAL EDITIONS!!! Enna style??? Enna MASSu... Tackaruma. Kudos 2 d TEAM...

    ReplyDelete
  25. Dear Edi,

    Yet to get TIGER special... And I was among the first 115. Should I have expected when I didn't get the Early Bird Badge ?? :)

    Though booked XIII Amos & 2018 Special... But yet to see a reply confirming the same from your team. :(

    ReplyDelete
    Replies
    1. Yep - for me too - no reply from Lion Office Team for XIII Amos.

      Delete
  26. ரத்தக் கோட்டை கையில் எடுத்து பார்க்க கை பர பரக்கிறது. ஆனால் உலகத்தின் கீழ் கோடியில் உட்க்கார்ந்து கொண்டு இருக்கிறேன். யாராவது புத்தகத்தோட போட்டோ வாவது போடுங்கப்பா . பார்த்து கொள்கிறோம்.

    ReplyDelete
  27. ஈரோடு புத்தகதிருவிழா வீடியோகளை கீழ் கண்ட இணையதள முகவரியில் upload செய்யவுள்ளேன். சில வீடியோகள் மிக பெரிய சைஸ் (1.5GB) என்பதால் அதிக நேரம் எடுக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வீடியோகளையும் இங்கு upload செய்து விடுகிறேன் நண்பர்களே.

    https://www.youtube.com/channel/UCxVvyOVd0kXZ_jroq4VEVYA

    ReplyDelete
    Replies
    1. @ பெங்களூர் பரணி

      வாவ்...ஸுப்பர்.! [கைதட்டும் படங்கள் இஸ்டத்துக்கு..]

      Delete
  28. ******* இது கொலையுதிர் காலம் ******

    80 மற்றும் 90 களில் வெளியாகி நம்மை பயமுறுத்திய சிலபல ஆங்கிலப் படங்களை ஒரு பானையில் போட்டு நன்கு பிசைந்து, அதில் துளியூண்டு எடுத்து காமிக்ஸாக செய்தால் - அதுதான் 'கொலையுதிர் காலம்'!

    டவுசரிலிருந்து மாறி, பேண்ட் போட ஆரம்பித்த கால கட்டங்களில், 'நண்பர்களுடன் கம்பைன் ஸ்டடி' என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு,நைட்ஷோவுக்குப் போய் திகில் படம் பார்த்து ஜிலீரிட்ட அதே உணர்வை இந்த 'இ.கொ.கா' கொஞ்சமேனும் தந்துவிடுகிறது தான்!

    திகில், அமானுஷ்யம் சார்த்த டைலனின் கதைகளில் லாஜிக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆவாது என்ற புரிதலுடன் பக்கங்களைப் புரட்டத்தொடங்கிடும் வேளையில் ஒரு பரபரப்பான, திகிலான வாசிப்பு அனுபவம் ரெடியாகிவிடுகிறது!

    என்னுடைய ரேட்டிங் : 9.5 / 10


    ReplyDelete
  29. போனமாசம் சிக்பில் ஸ்பெஷலை வச்சுக்கிட்டு கெக்கபிக்கேன்னு கொஞ்சம் ஓவரா சிரிச்சுக்கிடந்ததாலோ என்னவோ இந்தமாசம் கார்ட்டூன் புக்கே இல்லாமப் போய்டுச்சு! ஐயாம் ஷோஓஓ ஸேடு!!

    கார்ட்டூன் இல்லா இம்மாதம் கண்சிமிட்டும் பொழுதினில் கடந்துசெல்லக் கடவது!

    ReplyDelete
    Replies
    1. True - Chick-Bill special was hilarious to the core - especially the second and third stories - The Mouse story and the Bank Robbery story. I was travelling in train when I was reading the book - I erupted into laughter much to the bemusement of co-travellers :-) :-)

      Delete
    2. இந்தமுறை(யாவது) எப்படியும் EBF வருவீங்கன்னு நினைச்சேனே ராகவன்ஜி?

      ஐயாம் ஷோஓஓ ஸேடு!

      Delete
    3. ///கார்ட்டூன் இல்லா இம்மாதம் கண்சிமிட்டும் பொழுதினில் கடந்துசெல்லக் கடவது!///

      மீஇஇஇ... டூஉஉஉ...

      Delete
    4. ஓய் குசும்புக்காரரே..!!
      அந்த ஷோ ஸேடு மறக்கவேமாட்டீங்களா...!!???

      Delete
    5. ////ஓய் குசும்புக்காரரே..!!
      அந்த ஷோ ஸேடு மறக்கவேமாட்டீங்களா...!!???///

      ஏன் மறக்கணும்றேன்? எனக்கு இப்ப இங்கிலீஸுல பிடிச்ச மொதோ வார்த்தையே இந்த 'ஷோ ஸேடு' தான்! என்னவொரு இனிமையான வார்த்தை!!! எப்படி இத்தனை நாளா எனக்கு தெரியாமப் போச்சுனு தெரியலை!
      நாலு தபா திரும்பத் திரும்ப சொல்லிப்பாருங்க, நாக்கிலே மக்கன்பேடா சாப்பிட்டாப்ல இனிக்கும்!

      ஷோஓஓஒஓ ஸேடு - ப்பா! செம டேஸ்ட்!!

      Delete
    6. மாத இறுதியில் சேலத்தில் நண்பரின் திருமண நிமித்தம் இரு நாட்கள் வேலை உள்ளது. ஒரே மாதம் இரு பயணங்கள் சற்றே பர்ஸை பதம் பார்க்கும் என்பதால் இம்முறை skip. There is always a future :-)

      Delete
  30. புத்தகங்களை வாங்க இமெயில் மேல் இமெயில் அனுப்பி இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டேன் சார் , புத்தகங்கள் கைக்கு கிடைத்ததும் வாசித்துவிட்டு கருத்தை கூறுகிறேன் சார்

    ReplyDelete
  31. Still I have not received Raththak kottai Copy. :( My booking number is 122.

    ReplyDelete
    Replies
    1. Sir, They are missing your complete address ; been trying to reach you on the phone as well. Please mail or call ...

      Delete
    2. Dear sir, I have shared my address again through mail. Hope I can get Tiger ASAP.
      - A lone survivor, who is eagerly waiting to dissolve into the Wild West.

      Delete
  32. A suggestion: If possible, editor can add UPI as a payment option for future bookings/ subscriptions. Readers can easily make the payments without having to add beneficiary. Also QR codes can be printed in the subscription announcement itself so that the exact amount can be paid easily.

    ReplyDelete
  33. இரத்த கோட்டையை கைப்பற்றியாகி விட்டது இது மாதிரி மாதம் ஒரு புக் வந்தா கூட போதும் இரத்தப் படலத்தில் XIII தவிர்த்து வேறு எந்த செய்தியும் இராது என்று சொன்ன ஆசிரியர்க்கு நன்றி நன்றி

    ReplyDelete
  34. இரத்தக் கோட்டை முழுவண்ணத்தில் இதழ் சிறப்பாக உள்ளது. நேற்று எனக்கு கிடைத்தது. வண்ணத்தில் பார்த்ததும் மறுபடி படிக்க தோன்றுகிறது.
    அட்டை படம் சூப்பர் சார்....
    கதை நெடுகே வர்ணஜாலம் சூப்பர்.
    மீண்டும் படிக்க தோன்றுகிறது.....
    வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  35. மரணத்தின் நிறம் பச்சை
    ========================
    "தல" டெக்ஸ் அவரது நண்பர் கிட் கார்சனும் சலூனில் தன் நண்பன் பென்னை சந்திக்கும் போது அவரது சுரங்கத்தில் உள்ள பிரச்சனையை அறிந்து அதனை தீர்க்க செல்லும்போது விசேஷமான எதிரியை எதிர்கொண்டு முறியடிக்க முனைகையில் அவன் தப்பி ஓடிவிடுகிறான்...
    கதையின் சீமான் போக்கும் ரசிக்கும் வர்ணசேர்க்கை நெஞ்சை ஆக்குகிறது.
    ஒரே மூச்சில் வாசிக்க தோன்றும் சரக மான நடையில் மொழிபெயர்ப்பு.
    ரசிக்க தோன்றும் சித்திரங்கள்,
    உண்மையிலேயே தரமான மறுபதிப்பு இது.
    ""தல "" கதையை வண்ணத்தில் படிக்க ஆவல்தூண்டுகிறது.
    வாழ்த்துகள் சார்...
    பணி தொடரட்டும்.

    ReplyDelete
  36. மரணத்தின் நிறம் பச்சை
    =======================
    கதையின் சீரான போக்கும் ரசிக்கும் வர்ணசேர்க்கையும் நெஞ்சை அள்ளுகிறது.
    ஒரே மூச்சில் வாசிக்க தோன்றும் சரளமான
    நடையில் மொழிபெயர்ப்பு.
    ரசிக்க தோன்றும் சித்திரங்கள்,
    உண்மையிலேயே தரமான மொழிபெயர்ப்பு இது.
    ""தல "" கதை வண்ணத்தில் படிக்க ஆவல்தூண்டுகிறது தூண்டுகிறது.
    வாழ்த்துகள் சார்....
    பணிகள் தொடரட்டும்

    ReplyDelete
  37. கர்னல் ஆமோஸ்!
    புதிய கதாசிரியர், புதிய ஓவியர் கைவண்ணத்தில் எப்படி அமையுமோ என்கிறதொரு சந்தேகத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்......!!!
    X111 கதைகளுக்கேயுரிய , அந்த CURIOSITY-யை அட்சரம் பிசறாமல் நகல் எடுத்துள்ளார்கள் இந்த புது அணியினர்.
    அருமையான த்ரில்லர் வாசித்த அனுபவம் .

    அப்புறம்....நம்ம டைகர் மெகா இதழ்.
    கொள்ளை அழகை இன்னும் நன்றாக , தடவி ஆறஅமர, ரசித்து சுவாசித்து முடித்த பின் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
    டெக்ஸ் வில்லரின் "மரணத்தின் நிறம் பச்சை"
    அந்த காலத்தில் தவறவிட்டவர்களுக்கு கிடைத்த ஒரு ஜாக் பாட்.
    ஆசிரியர் மற்றும் லயன் டீமின் அசுர உழைப்பு கண்கூடாக தெரிகிறது.
    நன்றி செலுத்தலாம் என்றால் அந்த வார்த்தை சின்னதாக படுகிறது ஆசிரியரே..!
    அஸ்ஸலாமு அலைகும்.

    ReplyDelete
  38. கர்னல் ஆமோஸ்


    புத்தக சிறப்பு விழா வெளியீடாக வந்த இந்த இதழ் இதுவரை வந்த இரத்தப்படல spin off கதைகளை விட அருமை என்பேன் .காரணம் இதுவரை வந்த ஸ்பின் ஆப் கதைகள் இரத்த படலத்தோடு சிறிதளவாது தொடர்பு கொண்டும் அங்கேயும் ,இங்கேயும் சில குழப்பங்களை கொண்டு வந்தது தான் மிச்சம் .ஆனால் கர்னல் ஆமோஸ் கதையை பொறுத்தவரை இரத்த படலத்திற்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் இல்லாத கர்னல் ஆமோஸ் நாயகராய் வெளிப்பட்டு இருக்கும் தனிப்பட்ட சாகஸமாய் திகழ்வதே இதன் சிறப்பு மட்டுமல்ல இதுவே இந்த இதழுக்கு கிடைக்கும் ப்ளஸ் பாயிண்ட் கூட ..இதழை படிக்கும் வரை இந்த இதழின் மீது ஆர்வம் சிறிது சுமாரே ..ஆனால் உள்ளே உட்புக ,உட்புக ஆமோஸ் கலக்குகிறார்..இதுவரை ஷெல்டன் தான் இளமையை தொலைத்த நாயகர் என இருந்ததை இந்த "தாத்தா" இப்பொழுது வெளிப்பட்டு அவரை பின்தங்க செய்ததும் மகிழ்ச்சியே .அதே போல் இறுதியில் க்ளைமேக்ஸ் யாருமே எதிர்பாரா சஸ்பென்ஸ் அருமை.இறுதியில் தனது மகளுக்கு அவர் எழுதி வைக்கும் கடிதமும் ,அதே அவரின் மகள் ஜியார்டினோ அலுவலகத்தில் பணிபுரிய போவதையும் கதாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என புரியவைக்கிறது .ஆனால் ஒரே சந்தேகம் "அந்த ஐம்பத்திஐந்தாம் பக்கம் .நச் " என்று இருக்கும் இரினா நச்சாக மாறி மைக்கேலை கொல்வது ஏன் என்று நிரம்ப யோசிக்க வைத்தது. ஆனால் அதிகம் யோசித்தால் இது கிராபிக் நாவல் ஆகிவிடும் சூழல் உண்டாகி விடும் அபாயத்தால் இதன் விளக்கத்தை செனா அனாவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் என விட்டுவிட்டேன் ..செனா அனா ஜீ அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன் .


    மற்றபடி இரத்த படலத்தை கொண்டு கர்னல் ஆமோஸ் அறிமுகமானாலும் இந்த ஸ்பின் ஆப் இதழான கர்னல் ஆமோஸ் இரத்த படல சுவடே இல்லாமல் தனிப்பட்ட நாயகராய் வெற்றிநடை போடுகிறார் ...



    எனது மதிப்பெண் நன்று...

    ReplyDelete
    Replies
    1. //இரினா நச்சாக மாறி மைக்கேலை கொல்வது ஏன் என்று நிரம்ப யோசிக்க வைத்தது //

      தனது உதவியாளர் வாய் திறக்காமல் கவனித்துக் கொள்வதாக, கர்னல் ஆமோஸுக்கு ஜியார்டினோ வாக்கு கொடுத்திருந்தார்,.. ஆனால் கொல்லவே ஆள் அனுப்பிவிட்டார்..

      அந்த ஐம்பத்திஐந்தாம் பக்கத்தை நச்ன்னு கவனித்த உங்களுக்கு அதுக்கு முன்னால வந்த அந்தப் பகுதிய கவனிக்கத் தோனலியே தல..

      நானும் சோ ஷேடு தல...

      Delete
    2. ஹா......நன்றி சரவணாரே.....நம்ம மரமண்டைக்கு கொல்ல போறேன் னு விவரமா சொன்னா தான் புரியுது ...:-(

      டவுட் கிளியர்.....:-)

      Delete
  39. அப்புறம் இம்மாத ஹீரோ நமது டைகரை மறுபதிப்பில் ரசிக்க சாத்தியமானதா ?///
    முடிச்சாச்சி படித்து.
    வண்ணத்தில் அட்டாகாசம்.மின்னல் வேகக்கதையை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.


    அப்புறம் எடி ஸார் அந்த பாக்கி டைகர் புது கத......அடுத்த ஆண்டா ஓ கே.ஓ கே,.

    ReplyDelete
  40. மரணத்தின் நிறம் பச்சை.....


    ஏற்கனவே படித்த கதையாகவே இருப்பினும் "மரணத்தின் நிறம் பச்சை " போன்ற காலம் கடந்த கதைகள் மீண்டும் வருகை தருவது ,அதுவும் வண்ணத்தில் எனும் போது அந்த மறுபதிப்பில் 100% சந்தோசத்தை அள்ளி தெளித்து விடுகிறது .முன்னர் எல்லாம் பழைய இதழ்களை கூட தினம் ஒரு காமிக்ஸ் என்ற பார்முலாவில் பழைய இதழ்களை தினம் ஒருதடவையாவது படித்து விடுவேன் .ஆனால் இப்பொழுதைய கால சூழல்கள் ,பணிசுமைகள் அவ்வாறு விட வைப்பது இல்லை.எனவே இப்போதைய மறுபதிப்புகள் அனைத்தும் மாதந்தோறும் வெளிவரும் சமயம் புது இதழ்களாகவே எண்ணம் கொண்டு படித்து விடுகிறேன் .அதுவும் டெக்ஸ் இதழ் எனில் சொல்லவும் வேண்டுமா ..முதல் பக்கத்தில் ஆரம்பித்த பரபரப்பு இறுதி வரை கொஞ்சம் கூட தொய்வின்றி சென்று பட்டாஸ் என முடிந்தது. அட்டை படங்களும் ..அருமையான தெளிவான வண்ண சித்திரங்களும் அதற்கு ஈடு கொடுக்கிறது .இந்த இதழை பார்த்தவுடனே அடுத்து வரும் " டிராகன் நகரம் " எந்த அளவில் அசத்த போகிறதோ என்ற எண்ணமும் தன்னால் வந்து விடுகிறது ..


    மரணத்தின் நிறம் பச்சையை சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கலாம் ...



    எனது மதிப்பெண் சூப்பர் ....

    ReplyDelete
  41. கிழகோமான் வெய்ன் ஷெல்டன் தன்தோழி யோடு அர்ஜென்டினாவில் லூட்டியில் இருக்கும் போது சிவபூசையில் கரடிபோல் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பருவ வயதில் பிலார் என்னும் மங்கையை பாலியல் துன்புறுத்தியதாக அவரின் தந்தை போட்ட வழக்கை காரணம் காட்டி போலீசார் துரை யுடன் கிழகோமான் மிரட்டல் விடுக்க வேறுவழியின்றி பிலாரின் தேவைக்காக பாதிரியாரின் தோற்றத்தில் சென்று நூறுமில்லியன் பெறுமான உள்ள லாட்டரி சீட்டை பெற்று வரும்வழியில் சிறு மோதல் என கதை செட் வேகத்தில் பயணிக்கிறது......
    இந்நாள் காதலி ஹானஸ்டியின் திடீர்ரென விமானத்தில் வெளிப்பட்டு கதையின் போக்கு மாற்றப்படுகிறது.....
    இருப்பினும் பிலார் விமானத்தில் பெட்ரோல் இல்லையென பீலாவிட அதை உண்மையென நம்பி ஏமாறும் போது பிலார் தப்பிக்கிறாள்.
    கிழக்கோமான் ஒரிஜினல் லாட்டரியோடு சென்று பணத்தை பெற்று பாதிரியார் வசம் ஒப்படைத்து தன் கரத்தை சுத்தப்படுத்திக் கொள்கிறார் கிழகோமான் ஷெல்டன்.....
    தனிமனிதனின் வாழ்வில் தான் மேற்கொள்ளும் தவறுகள் என்றேனும் தண்டனை உண்டு என்பதை கிழகோமான் வழியிலும், அடுத்தவன் பணத்திற்கு பேராசைப்பட்டால் பெறுநஷ்டம் ஏற்படும் என்பதை பிலார் அசாங்கியன் கேரக்டர் உணர்த்து கின்றன.......

    ReplyDelete
  42. ஈரோடு புத்தகதிருவிழா வீடியோகளை கீழ் கண்ட இணையதள முகவரியில் சுமார் 33 வீடியோகளை upload செய்துள்ளேன்.

    https://www.youtube.com/channel/UCxVvyOVd0kXZ_jroq4VEVYA

    நாளை மீதம் உள்ள அனைத்து வீடியோகளையும் மேலே சொன்ன முகவரியில் upload செய்து விடுகிறேன் நண்பர்களே.

    ReplyDelete
  43. பார்த்து கொண்டு இருக்கிறேன் ......சார்

    ReplyDelete
    Replies
    1. I am also watching what you are seeing now :-)

      Delete
    2. மிகச்சிறப்பான பணி.
      EBFல் கருமமே கண்ணாக செயல்பட்டதற்க்கு நல்ல முறையில் நியாயம் செய்துள்ளீர்கள் பரணி சார்.

      Delete
    3. நன்றி கோவிந்தா.இது எனது கடமை & பாக்கியம்.

      Delete
    4. எல ரெம்ப ஃபீல் பண்ணாதல...டவுன் பண்ணிட்டு பேசறேன்...

      Delete
  44. i am really disappointed without super heroes like maayavi,lawrence david and johnny nero for the passed two months

    ReplyDelete

  45. ஈரோடு 2017....

    3.வெற்றிக் கோட்டையில் வேதாளர்...

    *இந்தாண்டு விழாவில் எடிட்டருக்கு அடுத்து எதிர்பார்க்கப்பட்டவர்கள் இருவர், ஒருவர் பாகம் 2ன் நாயகர். அடுத்தவர் இந்த தலைப்பின் நாயகர். யார்னு யூகிக்க முடியாத நண்பர்களே...???

    * சில ஆண்டுகளாகவே தன்னுடைய வசீகரிக்கும் ஆளுமையால் ஒரு கூட்டத்தையே ஈர்த்து வந்தார் நீஈஈஈண்ட கால ரசிகர் ஒருவர். போனில் பேசும்போது அவரின் காமிக்ஸ் தாகமும் பாஸிடிவ் எனர்ஜியும் நம்முள்ளேயும் புகுந்து கொள்ளும். தன்னுடைய சேகரிப்புகள்& அனுபவங்களை அவர் விவரிக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு புதிய செய்தி போலவே தோன்றச் செய்துவிடும் அவரின் ஈர்ப்பான பேச்சு.

    *அவரின் சேகரிப்புகளில் இருந்து அவ்வப்போது போடும் அட்டை படங்களில் உள்ள பல காமிக்ஸ்கள் நான் பிறக்கும் முன்பே ப்ரிண்ட் ஆனவை. தன்னுடைய போட்டோ பதிவுகளில் திணற அடித்து கொண்டு இருந்தார் அந்த குழந்தை மனசுக்காரர். சென்றாண்டு ஈரோடு விழா வர இருந்த நிலையில் மிக முக்கிய சூழ்நிலை காரணமாக அவர் வர இயலவில்லை.

    *இம்முறை அவர் வருவது உறுதியானவுடன் சந்திக்க ஆவலுடன் தயாரானேன். விழா தொடங்கும் முன்பே வந்துவிட்ட அவரை சுற்றி என்னை விட ஆர்வமான நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர். ஆல்மோஸ்ட் லைவில் போட்டோ பிடித்து கொண்டு இருந்த என்னை கண்ணசைவிலே அவர் ஈர்க்க நானும் ஓடிச் சென்று அவர் கையை பற்றி வெல்கம் சுரேஷ் சந்த் சார் என சொன்னபோது நிறைவாக உணர்ந்தேன்.

    *தன்னுடைய முதல் காமிக்ஸ் ஆசானான சீனியர் எடிட்டர் சாருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த கணத்தில் அவரின் பாடி லாங்வேஜ் ஒரு மாணவருடையதாகவே இருந்தது. நம்முடைய ஜூனியர் எடிட்டர் விக்ரமுக்கு மரியாதை செய்யும் போது அவர் வாழ்த்து சொன்ன பாங்கு அடியனை அசத்தி விட்டது.
    விழாவின் ஒவ்வொரு கட்டத்திலும் ஓடியாடி ஒவ்வொரு நிகழ்விலும் மூழ்கி திழைத்தார். அவரின் முதல் காமிக்ஸ் மீட் அனுபவத்தை ஓரக்கண்ணால் ரசித்து கொண்டே வந்தேன்.

    * பரீட்சையில் வெற்றி பெற்ற சிலரில் சந்த் சாரும் ஒருவர் என நான் சொல்லவும் வேண்டுமோ..???. எடிட்டருக்கு அடுத்து அதிக நண்பர்கள் போட்டோ எடுத்து கொண்டது நம்ம சந்த் சாருடன் தான் எனும்போது அவரின் வருகை எந்த அளவு முக்கியமானது என புரியும். காமிக்ஸ் குழந்தையாகவே மாறிவிட்ட இந்த வேதாளர் இனி எல்லா விழாக்களிலும் நம்மோடு இருப்பது உறுதி.

    *உற்சாகம் ததும்பும் அனுபவத்தால் தன்னை சுற்றி கலகலப்பை மட்டுமே தவழ விட்டு, நவஜோ கோட்டையில் வெற்றி கொடியை ஏற்றியவர் இந்த வேட்டைக்கு வந்த வேதாளரே...!!!


    *நம்ம சுரேஷ் சந்த் சாரின் அனுபவத்தை உணர்வு பூர்வமான அவருடைய வார்த்தைகளில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் நண்பர்களே....


    /////ஈரோடு இரத்தக் கோட்டை
    வெளியீட்டு விழா.
    என் வாழ்வில் மறக்கயியலா நிகழ்வு.
    விழாவின் அதிர்வலைகள்
    தற்போதும் என் உடலிலும்
    உள்ளத்திலும் அதிர்வுகளை
    ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
    எனது ஆசான் அவர்களுக்கு
    பொன்னாடை அனிவித்த தருனம் என்
    நீண்ட கால தவம்.
    நான் கனவிலும் நினைத்து
    பார்க்கா தருனம்
    என்ஆசை பூர்த்தியுற்றது.
    அசிரியர் அவர்களுக்கும் எதிர்கால
    ஜுனியர் ஆசிரியர் அவர்களுக்கும்
    பொன்னாடை அனிவித்த தருனம்
    சந்தோசம் பொங்கும் நிகழ்வு.
    மற்றும் எனது காமிக்ஸ் குடும்ப
    உறுப்பினர்களை சந்தித்தது
    சொல்வதற்கு வார்த்தைகளே இந்த
    உலகத்தில் எங்கு தேடினாலும்
    கிடையாது.
    சேலம் ஈரோட்டை சேர்ந்த எனது
    குடும்ப உறுப்பினர்களின்
    விருந்தோம்பல் நமது கொங்கு
    மண்டலத்திற்கே உரிய அற்புத
    விருந்தோம்பல்.
    வாசலில் வரவேற்றது
    அத்தாட்சி அட்டையை கழத்தில் பூ
    மாலை போல் அணிவித்தது.
    நிகழ்சியின் நடுவே சிற்றுண்டிகள்
    ஒவ்வொருக்கும் பார்த்து பார்த்து
    கொடுத்தது.
    அருமையான கொங்கு மண்டல
    உபசரிப்பு.
    விழாவில் எனக்கு பரிசு கிடைத்த
    நேரம் தரையில் கால்கள் படாத
    தருனம்.
    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    விழா முடிந்து ஆசான் ஐயா
    எல்லோரையும் உணவருந்த
    சொன்னது.
    என் வாழ்வில் மறக்க முடியா எங்கள்
    இல்ல விழா.////

    ------- தொடரும்-------

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் சந்த் ஜி @ wow super!

      Delete
    2. வாழ்த்துக்கள் சார்.....

      Delete
    3. @ டெக்ஸ் விஜய்

      செம்ம!

      EBF பற்றி சுரேஷ் சந்த் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும் வார்த்தைகள் அவரது பக்குவப்பட்ட நல்ல மனதையும், காமிக்ஸ் மீதான காதலையும் அழகாகக் காட்டுகிறது!

      இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு ஃபோன் செய்து விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நம் நண்பர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டினார்! இனி ஒவ்வொரு விழாவிலும் தான் தவறாமல் பங்கேற்று, விழா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்யப்போவதாக அவர் கூறியபோது ரொம்பவே உற்சாகமாய் உணர்ந்தேன்!

      பல்கிப் பெருகட்டும் இக் காமிக்ஸ் நேசம்!

      Delete
  46. ஈரோடு திருவிழா முடிந்தவுடன் ஞாயிறு மதியம் கிளம்பும்போது பஸ்ஸில் கலோனல் ஆமோஸ் படிக்க ஆரம்பித்தேன். சேலம் வருவதற்குள் படித்து முடித்து விட்டேன். பரபரவென்று கதை அவ்வளவு வேகமாக நகர்ந்தது..
    ஆமோசுக்கென ஒரு முன்கதையை வடித்து அதில் பதின்மூன்றின் இன்ன பிற கதாபாத்திரங்களையும் கோர்வையாக நுழைப்பது கடினம். அதை நன்றாகவே இந்த ஆல்பத்தில் செய்திருக்கிறார்கள். அதிலும் ஜியார்டினோவிடம் எத்தனுக்கு எத்தனாக அவர் பதிலுரைக்கும் கட்டங்கள் உச்சகட்ட விறுவிறுப்பு!

    ஆனால், ஆமோஸை ஒரு கண்ணியவனாக, ஜேசன் மக்லேனுக்கு ஒரு நல்ல அறிவுரையாளராக இதுநாள் வரை படித்து பழகிவிட்டு, அவரின் பிளாஷ்பாக் படிக்கும் போது எனக்குள் கொஞ்சம் நெருடவே செய்தது!

    அப்புறம், எடிட்டர் சார், நீங்கள் சொன்ன அந்த இரு ஸ்டிக்கர் ஒட்டிய இடங்கள்.. 'பிரார்த்திப்பேன் ' பக்கம் 46
    'ஈரானிய' பக்கம் 49
    சரியா?

    ReplyDelete
  47. https://www.youtube.com/watch?v=W1Onj5YagFg

    - யதார்த்தம்! Hats off Edit sir!

    thanks for sharing videos B'Lore Parani.

    ReplyDelete
  48. XIII - My Evergreen Dream special is booked via Online....Happieeeeeee

    ReplyDelete
    Replies
    1. XIII B/W complete collection கிடைக்காத ஏக்கம், இன்னும் 8 மாதங்களில் கலரில் கிடைப்பதின் மூலம் தீர போகிறது.... நினைத்தாலே இனிக்கிறதே...

      Delete
  49. I booked XIII special online tonight as well ;-)....

    Yesssssssssssss!!!!!!!!

    ReplyDelete
  50. Just recalling the first ever reading experience of XIII some 25+ years back in Thigil comics....
    It's art, story, action, thrill .... It totally electrified me. How many times read that first book, how many hours looking at those art, how many times tried to draw those action sequences in my school note book!!!!

    Even after reading all English editions many times, awaiting for Vijayan sir's Tamil speaking XIII in this special edition.. We are in for a mega treat...

    ReplyDelete
  51. சும்மா சொல்லக்கூடாது கிழவாடி மங்கூஸ்ச சைடு போட்டாரு .கடவுளே ஜெஸி தாத்தாவோட பொண்ணா .இறுதி 5 பக்கங்களில் பட்டைய கெளப்பிட்டாங்க

    ReplyDelete
  52. சும்மா சொல்லக்கூடாது கிழவாடி மங்கூஸ்ச சைடு போட்டாரு .கடவுளே ஜெஸி தாத்தாவோட பொண்ணா .இறுதி 5 பக்கங்களில் பட்டைய கெளப்பிட்டாங்க

    ReplyDelete
  53. சுரேஷ் சந்த் ஐயா, உங்களுடன் அதிகநேரம் பேசமுடியவில்லை, வீடியோ எடுப்பதில் மும்மரமாக இருந்ததால். ஆனால் உங்களிடம் பேசிய குறைந்த நேரத்தில் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் காமிக்ஸ் காதல், அன்பு உள்ளம், குழந்தை போல உற்சாகம், பக்குவப்பட்ட பேச்சு, எடிட்டரை கேள்வி கேட்க மைக்குக்காக பொறுமையாக காத்திருந்து. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மீண்டும் சந்திக்க ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் Next time நீண்ட நேரம் செலவழிப்போம்.

      Delete
  54. செல்வம் அபிராமி @ உங்களுடன் அதிகநேரம் பேசமுடியவில்லை, வீடியோ எடுப்பதில் மும்மரமாக இருந்ததால்.

    உங்கள் அமைதி & பணிவுக்கு தலை வணங்குகிறேன். நமது ப்ளாக்கில் வரும் நண்பர்களில் நான் நேரில் பார்க்க வேண்டும் என விருப்பப்பட்டதில் முதன்மை மானவர்கள் நீங்கள். இந்த அந்த முறை விருப்பம் நிறைவேறியது.

    மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ////நமது ப்ளாக்கில் வரும் நண்பர்களில் நான் நேரில் பார்க்க வேண்டும் என விருப்பப்பட்டதில் முதன்மை மானவர்கள்////

      முதன்மை மானவரா?

      அதென்னங்க இது?

      Delete
    2. முதன்மையானவர் :-)

      Delete
  55. கரூர் சரவணன் & சம்பத் & சிவகுமார் சிவா, உங்கள் மூவரிடமும் அதிகம் பேசமுடியவில்லை. அடுத்த முறை இதனை சரி செய்து விடலாம்.

    சம்பத், உங்கள் மகன் தற்போது எப்படி உள்ளார். நன்றாக கவனித்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. கரூர் குணாவையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும். :-)

      Delete
    2. Parani from Bangalore-
      நானும் உங்களுடன் அதிக நேரம் உரையாடவிலை மன்னிக்கவும் அண்ணா...
      என் மகளை அழைத்து வந்த காரணத்தினால் அவர் மேல் கவனம் இருந்ததனால் நிறைய நண்பர்களுடன் கலந்துரையாட முடியவில்லை அடுத்த முறை நிச்சயம் பேசலாம் அண்ணா..

      Delete
    3. Siva @ உங்கள் மகள் செம cute, சிரித்த களையான முகம்.

      Delete
  56. ஆடிட்டர் ராஜா @ காமிக்ஸ்
    மேல் உள்ள காதலை நண்பர்கள் அனைவருக்கும் இட்லியும் கோழிக்கறி சால்னா விருந்தை போட்டு அசத்திவிட்டீர்கள். நன்றி.நன்றி.

    ReplyDelete
  57. Editor sir, quick clarification pls. is கர்னல் ஆமோஸ்! part of annual package for existing subscribers? or should we buy separately??

    ReplyDelete
    Replies
    1. Not part of regular subscription. You can buy online. Please read his previous post.

      Delete
  58. ////சந்தா E இதற்கு வாகானதொரு களமே என்றாலுமே , அதனில் முற்றிலுமாய் புதிதான கதைவரிசைகளை ; one -shot களை மட்டுமே பயன்படுத்த நினைத்திருப்பதால் கர்னலுக்கு அங்கே இடமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை////

    அப்ப அண்டா்டேக்கா் One - shot ஸ்டோாி தானா??

    அடுத்ததெல்லாம் கெடையாதா?

    ReplyDelete
  59. @ ALL : "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக " என்ற பில்டப்பைக் கேட்கும் போதே கொட்டாவி வருவது இயல்பே ; அதே போல சிக்கும் சந்தர்ப்பங்களில் நான் ஏதாச்சும் hype கிளப்புவதும் புதிதல்ல தான் ! ஆனால் -

    "இரத்தப் படலம்" முன்பதிவுகள் இதுவரையிலும் காட்டி வரும் துரிதம் எனக்கே பெரும் வியப்பைத் தந்து வருகிறது !! பட்டையைக் கிளப்பி வருகிறீர்கள் guys !!! இத்தனைக்கும் வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களுக்கு சேதி தெரிந்திருக்கவும் வாய்ப்புகள் குறைவு ; so அவர்களுக்கும் விஷயம் தெரிய நேரும் போது - புக்கிங் வேகம் இன்னமும் சூடு பிடிக்குமென்று நினைக்கிறேன் !! Fingers crossed !!

    And வழக்கம் போலவே அனாமதேய அன்புப் பரிசுகள் தொடர்கின்றன !

    ஸ்டீல் க்ளா பொன்ராஜ்
    ஈரோடு விஜய்
    மேச்சேரி கிட் ஆர்டின் கண்ணன்
    தானைத் தலீவர் பரணீதரன்
    டயபாலிக் அகில்
    செந்தில் சத்யா

    இந்த 6 நண்பர்களுக்குமே வெவ்வேறு அன்புள்ளங்களிடமிருந்து பணம் வந்து சேர்ந்துள்ளது !!! Phew !!

    ReplyDelete
    Replies
    1. சாா் முன்பதிவு எவ்ளோ ஆயிருக்குன்னு சொல்லவே இல்லையே?

      Delete
    2. சந்தோசம்! நண்பர்களின் கனவு விரைவில் மெய்ப்படட்டும்!

      Delete
    3. அருமை,நற்செய்திகள் தொடரட்டும்.

      Delete
    4. இரத்த படல வண்ண மறு பதிப்பை அன்பு பரிசாக பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
      அன்பு பரிசால் நண்பர்களை ஆனந்தம் அடையச் செய்த அந்த அன்புள்ளம் கொண்ட நண்பருக்கு பாராட்டு மட்டும் தெரிவித்தால் போதாது,என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.இந்த காமிக்ஸ் நேசம் வாழ்க எந்நாளும்....
      இத்தகைய அன்புள்ளங்கள் நம்முடைய அன்பின் ஆசிரியர் சாருடன் இருக்கும் போது அவருக்கு அந்த வானமும் எல்லையில்லை...!!!

      "எல்லாப் புகழும் காமிக்ஸிற்கே"

      Delete
    5. @ திரு விஜயன்

      ஆன்லைன் புக்கிங் பகுதியை நேற்று முதல் கவனித்து வருகிறேன்.items எண்ணிக்கை படிக்கடியாக குறைந்து வந்து 296 என இப்பொழுது உள்ளது.

      //"இரத்தப் படலம்" முன்பதிவுகள் இதுவரையிலும் காட்டி வரும் துரிதம் எனக்கே பெரும் வியப்பைத் தந்து வருகிறது !! பட்டையைக் கிளப்பி வருகிறீர்கள் guys !!! //

      இந்த துள்ளல் நேற்று துவங்கிய முன்பதிவு....இப்போதே 104 ஐ தாண்டியுள்ளது என்ற கணிப்பு சரி தானே ஸார்..?

      Delete
    6. நன்றிகள் நண்பரே...சார் முன் பதிவு ஆயிரத்த தாண்டுனா கொஞ்சம் முன்னாடி ஜனவரிக்கு ஏதாச்சும் பண்ணமுடியுமா ..பிழைதிருத்தம் ஒன்னிலிருந்து ஒன்றரை மாதங்களுக்குள் முழுக்கதயும் செய்து தர நான் தயார்..சார் அந்த நண்பருக்கு என்ன சொல்லி என் நன்றிய தெரிவிப்பதெனத் தெரியல.. நன்றி..நன்றி....நன்றி..மிக மிக மிக மிக.... சந்தோசம் கலந்த மகிழ்ச்சி...

      Delete
    7. அப்புறம்...அந்தத் தலையில்லா போராளி சைசயும் கொஞ்சம்...

      Delete
    8. ///அப்புறம்...அந்தத் தலையில்லா போராளி சைசயும் கொஞ்சம்...///தீபாவளி மலர் அந்த சைஸ்தான் நண்பரே...

      Delete
    9. ஹ...ஹ..ஹா....அது முடிவாயிருச்சே நண்பரே....இரத்தப்படலம் ஒரே புக்கா வர்றது சிரமம்னாரே....அதான் தலையில்லா போராளி சைஸ்ல வந்தா...நல்லாருக்குமேன்னு...

      Delete
    10. @ ஸ்டீல்,

      //// ..பிழைதிருத்தம் ஒன்னிலிருந்து ஒன்றரை மாதங்களுக்குள் முழுக்கதயும் செய்து தர நான் தயார்..///

      காமெடி பண்ண ஒரு அளவு வேணாம்? கமா, ஃபுல்ஸ்டாப் - இதெல்லாம் சரியான இடத்துல வச்சு எழுத்துப் பிழையில்லாம ரெண்டே ரெண்டு கமெண்ட் போடுங்க பாக்கலாம்? :P

      Delete
    11. ///And வழக்கம் போலவே அனாமதேய அன்புப் பரிசுகள் தொடர்கின்றன !///


      எனக்குப் பரிசு வழங்கிய அந்த 'அன்புள்ள அனாமதேயா' யாரென்று தெரியும். ஆனால்...

      ///
      இந்த 6 நண்பர்களுக்குமே வெவ்வேறு அன்புள்ளங்களிடமிருந்து பணம் வந்து சேர்ந்துள்ளது !!!///

      மற்ற அனாமதேயாக்கள் யாருன்னு ரொம்பக் குழப்புதே...

      ஒரு காமிக்ஸ் இதிகாசத்தை அன்புப் பரிசாக பெற்றுக்கொள்ளவும் ஒரு கொடுப்பினை வேணும்தான்! அந்தவகையில், என் கன்னத்தைக் கிள்ளி நானே உம்மா கொடுத்துக்கொள்வதோடு... பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்!

      Delete
    12. அப்புறம் நான் ஏற்கனவே கூறியபடி, எனக்கு இ.ப அன்புப் பரிசாக கிடைக்கவிருப்பதால், நான் பணம் செலுத்தியிருக்கும் இ.ப'வை சென்னை புத்தகத் திருவிழாவின்போது நமது ஸ்டாலில் களப்பணியாற்றிய கரூர் நண்பர் ராஜசேகர் அவர்களுக்கு பரிசாக அளிக்கவிருக்கிறேன் ( நாங்களும் அனாமதேய ஈனாவினா தான்.. ஹிஹி!)

      முழுத்தொகையையும் - EBFல் நமது ஸ்டாலில் - ஏற்கனவே செலுத்திவிட்டேன் ( இதுலயும் ஒரு பெருமைதான், ஹிஹி!)

      Delete
    13. சத்தியமாக இது இன்ப அதிர்ச்சி தான்
      வேலை அதிகமாக இருந்ததால் தளத்தின் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை கணேஷ் சார் தான் வாழ்த்துகளோடு தகவலையும் சொன்னார் எவ்வளவோ கஷ்டங்கள் எக்கிருந்தாலும் அவை அனைத்தும் பொடிப் பொடியாய் கொண்டிருக்கிறது அனாமதேய நண்பர்களால் வாழ்வின் கடினமான தருனங்களில் என்னுடன் இருக்கிறீர்கள் நன்றி நண்பர்களே இந்த நன்றி வாய் வார்த்தைகளாக இல்லை மனதிலிருந்து சொல்கிறேன் மிகவும் நன்றி காமிக்ஸ் காதல் வாழ்க

      Delete
    14. ((எக்கிருந்தாலும்))
      எனக்கிருந்தாலும்

      Delete
    15. XIII B/W complete collection கிடைக்காத ஏக்கம், இன்னும் 8 மாதங்களில் கலரில் கிடைப்பதின் மூலம் தீர போகிறது.... நினைத்தாலே இனிக்கிறதே...

      Delete
    16. கமா , முற்றுப்புள்ளி ஆகியவற்றை சரியான இடத்தில் வைத்துள்ளேன் . சரியாக செய்து விட்டேன் ஈ.வி. . தேவை இல்லை ஆச்சரியக்குறி ! ஆனா இங்க , இங்க தேவை .😊

      Delete
    17. ஸ்டீல் முதலில் முகமறியாலே அன்பு
      செலுத்திய நண்பர்களை பதில் அன்பு
      செலுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

      Delete
  60. இரத்தக் கோட்டை !!! 👏👏👏

    ஸ்பாட் லேமினேசன், யு.வி. ல Wrapper அட்டகாசம் சாா்!

    டைகாின் உருவத்தை கோல்டுல ஜிகுனா மாதிாி ஏதோ செஞ்சுருக்கீங்களே!
    அந்த தொழில்நுட்பத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சாா்!

    It's amazing!!

    1 மற்றும் 3 பாகம் தவிர வேறு பாகமெல்லாம் நினைவிலே இல்லைங்க சாா்!!

    25 ஆண்டுகளுக்கு முன்பு கதை படித்த போது என்னவொரு கிலேசமும், பரவசமும் உண்டானதோ, இதை இப்போதும் உணர முடிகிறது.

    மொத்தத்தில் அழகிற்கு அழகு சோ்ப்பதாகவே அமைந்துவிட்டது "இரத்தக்கோட்டை"!!!

    ReplyDelete
  61. "கஞ்சன் வீட்டுப் பந்தி " போல் அன்றைக்கு காட்சி தந்த ஸ்டாலைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது !! -

    சார், இன்றைய சூழலில் அன்றைய நிலை உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதா? எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நமது மீள்வருகை எனக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிய வந்தது. தெரிய வந்த சில நாட்களிலேயே ஈரோடு புத்தக விழாவிற்கு வந்தேன். ஒரே காரணம் லயன் ஸ்டால் உள்ளது என்பதாலேயே. உள்ளே வந்து ஸ்டாலைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் இருக்கிறதே... அந்தப் பரவச உணர்வுக்கு வார்த்தைகளே இல்லை சார். ஏனென்றால் வழக்கமாக காமிக்ஸ்கள் வாங்கும் கடைகளில் தொங்கும் புத்தகத் தோரணங்களைப் பார்த்து, அதில் காமிக்ஸ் இல்லாமல் ஏமாற்றத்துடன் பலகாலமாய் திரும்பிய அனுபவங்களை உடைய எனக்கு ஒரே ஸ்டாலில் அத்தனை காமிக்ஸ்களை பார்த்தபோது... ம் சொல்ல வார்த்தைகளே இல்லை சார். அன்றைக்கு சுமார் 1200 க்கு காமிக்ஸ்களை அள்ளிக் கொண்டு வந்தேன்.

    சார் நம் குழந்தை இன்றைக்கு நம் கண்முன்னால் வாட்டசாட்டமாய், கனகம்பீரமாய் இருப்பதை நாம் ரசிப்பதும், விரும்புவதும் யதார்த்தம் தான் என்றாலும், அந்த குழந்தை பிறந்த சில மணித்துளிகளில் நம் கைகளில் தவழ்ந்த அந்த காட்சி நமக்கு கஷ்டமாய் இருக்குமா சார்?
    எனக்கு இல்லை! :)

    ReplyDelete
  62. ஈரோடு புத்தகதிருவிழா வீடியோகள் அனைத்தும்ளை கண்ட இணையதள முகவரியில் upload செய்துவிட்டேன்.

    https://www.youtube.com/channel/UCxVvyOVd0kXZ_jroq4VEVYA

    புத்தகத் திருவிழாவிற்கு வர இயலாத நண்பர்களே உங்கள் பல கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் உள்ளது.

    ஈரோடு விஜய்/மாயாவி சிவா/கண்ணன்/விஜயராகவன், இந்த வீடியோ இணையதள முகவரியை நமது காமிக்ஸ் கனவுலக whatsup குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை,கலக்குங்க.

      Delete
    2. //ஈரோடு விஜய்/மாயாவி சிவா/கண்ணன்/விஜயராகவன், இந்த வீடியோ இணையதள முகவரியை நமது காமிக்ஸ் கனவுலக whatsup குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.///-- நன்றிபரணி👌👌👌👌
      அந்த தற்காலிக குரூப் செவ்வாய் மாலை 6மணிக்கு கலைக்கப்பட்டு விட்டது. கவலை வேணாம், பேஸ்புக்& வாட்ஸ்அப் குழுக்கள் என பல இடங்களிலும் லிங் தந்து அதகளப்படுத்தி விடலாம்.

      Delete
    3. // அந்த தற்காலிக குரூப் செவ்வாய் மாலை 6மணிக்கு கலைக்கப்பட்டு விட்டது. //
      இது உலகம் அறிந்த ரகசியம் ஆச்சே :-)

      Delete
  63. ஈராேடு புத்தக விழாவிற்க்கு வரும் பாெழுதும் திரும்பும் பாெழுதும்
    சகாேதரி கடல் யாழ் சிறப்பான முறையில் என் மகளை கவனித்து காெண்டிருந்தாா் அவருக்கு என் மனமாா்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  64. விஜயன் சார், இரத்த படலம் பிழை திருத்தும் படலத்திற்கு நான் ரெடி.

    ReplyDelete
  65. இரத்தப் படலத்திற்கு ஃப்ரூப் ரீடிங் பார்க்க நானும் ஆவலா கை தூக்குகிறேன்.

    ReplyDelete
  66. ஆசிரியரின் அறிவிப்பை முதலில் டெக்ஸ் விஜய்அவர்களின் வாட்ஸ்அப் தகவலில் தான் அறிந்தேன் சார்..அலுவலகம் முடிந்து சிறு மழை தூரலில் ரசித்து நனைந்தவாறே இல்லம் திரும்பி அலைபேசியை கண்டால் முகம் தெரியா நண்பர்களின் அன்புமழையில் நனைந்தவாறு உங்களின் இந்த திக்குமுக்கான சந்தோச செய்தி...



    என்ன சொல்வது ..எப்படி சொல்வது ...எதுவுமே தெரியவில்லை...நமது காமிக்ஸ் நண்பர்களின் அன்பை எதை கொண்டு அளந்தாலும் அளக்க முடியாது என்பது மட்டுமல்ல இப்படி எல்லாம் என்னால் பாசத்தை ,நேசத்தை காட்ட முடியுமா என்று திகைக்கறேன் ..


    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முகம் தெரியா நணபர்கள்,முகம் அறிந்த நண்பர்கள் என நான் அறிந்த காமிக்ஸ் அன்பர்களால் இந்த வருடம் நான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை...


    யாரிடமும் அதிகம் நெருங்கி பழகும் சுபாவம் கூட அல்லாத எனக்கு இப்படி பட்ட பாசமிகு நண்பர்கள் கிடைத்தது எப்படி என யோசித்து கொண்டே இருக்கிறேன் ...சத்தியமாக புரியவில்லை....

    இந்த புரிபடாத சந்தோசத்தில் இந்த நள்ளிரவில் கூட இன்னும் உறக்கம் கண்களை அண்டவில்லை....


    பரிசளித்த நண்பருக்கு மனமார்ந்த நன்றிகளையும் ,அன்பர்களின் பரிசுமழையில் நனைந்த மற்ற தோழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. ///யாரிடமும் அதிகம் நெருங்கி பழகும் சுபாவம் கூட அல்லாத எனக்கு இப்படி பட்ட பாசமிகு நண்பர்கள் கிடைத்தது எப்படி///----காமிக்ஸின் மேல் நீங்கள் கொண்ட நேசத்திற்கு அது அளித்த கொடை...
      "காமிக்ஸை நேசியுங்கள் வாழ்க்கையே அழகாகும்"

      Delete
    2. அன்புடன் அனைவரையும் நேசிக்கும் தங்கள் அன்பு கவனிப்பிலும் நட்பார்ந்த
      பேச்சிலும் அனைவருக்கும் உணவளித்து
      விட்டு கடைசியில் உணவு உண்ட அன்பு
      சகோதரரே உங்கள் நேசம் கிடைத்ததில்
      மகிழ்ச்சி.

      Delete
    3. நன்றி டெக்ஸ் மற்றும் கணேஷ் சார் ....:-)

      Delete
    4. இரவு உணவளித்த ஆடிட்டர் ராஜா அவர்களுக்கும் அதனை எல்லோருக்கும் அன்புடன் பறிமாறிய தலைவருக்கும் நன்றிகள்

      Delete
    5. ஆடிட்டர் ராஜா அவர்களின் சார்பாகவும் நன்றி நண்பரே..:-)

      Delete
  67. ****** ஷோ ஸேடு & ஷோ ஹேப்பி with செனா அனா *****

    ஷோ-ஸேடு என்னன்னா...
    செனா அனா EBF வருவதற்கான எந்தத் தடயமும் இல்லாமல் இருந்தது. தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை!

    ஷோ-ஹேப்பி என்னன்னா...
    'அவராவது... இனி வருவதாவது' என முடிவு செய்திருந்த நேரத்தில் எதிர்பாராமல் மீட்டிங் ஹாலில் பிரசன்னமாகி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது!

    ################

    ஷோ-ஷேடு என்னன்னா...
    ஏசி சரிவர இயங்காதது, மைக் செட் ரெடியாவதில் தாமதம் - உள்ளிட்ட சில குறைகளைக் களைந்திடும்பொருட்டு ஹோட்டல் மேனேஜரைச் சந்திக்க அடிக்கடி மாடிப்படிகளில் ஏறியிறங்கியதில் - ஏகத்துக்கும் வியர்வையில் நனைந்திருந்தேன்!

    ஷோ-ஹேப்பி என்னன்னா...
    நான் வியர்வையில் நனைந்திருந்ததையும் பொருட்படுத்தாமல், என்னைக் கண்டவுடனேயே ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய செனா அனா!

    ##############

    ஷோ-ஹேப்பி என்னன்னா...
    ஹைய்யா! செனா அனா சிக்கினார்னா அவர்ட்ட கொஞ்சநேரமாவது தனியாப் பேசிடணும்னு ஐடியா வச்சிருந்தேன்!

    ஷோ-ஸேடு என்னன்னா...
    செனா அனா சிக்கினார் - பேசினேன் - தனியாகத்தான்! அவர் ஏதும் பேசவில்லை!


    ReplyDelete
    Replies
    1. ///செனா அனா சிக்கினார் - பேசினேன் - தனியாகத்தான்///---ஹா...ஹா...செம ஈவி.. தனியாத்தான் எல்லோரும் பேசினோம். பொருளர் ஜி சரளமாக பேசியது எடிட்டர் சாரிடம்+ கிட் மாம்ஸ் உடன்.

      Delete
    2. செயலரே ....நச் ....:-)

      Delete
    3. ஆனா செயலரே ..பொருளாளர் என்னிடம் " தனியாக " நன்றாக தான் பேசினார் ...

      என்ன சங்கத்து வரவு செலவு பற்றி பேசியதால் அவர் மட்டுமே பேசவேண்டியதாகி விட்டது ..:-)

      Delete

  68. ஈரோடு 2017

    4.கனவு மெய்ப்பட்ட வேளை.....

    *2017, ஆகஸ்ட் 5ம் தேதி சனிக்கிழமை காலை10:50 மணித்துளிகள்- விழா தொகுப்பாளர் அருமை நண்பர் ப்ளூபெர்ரி நாகராஜனின் குரல் ஒலிக்கிறது:

    "மரியதைக்குரிய நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு டெக்ஸ் விஜயராகவன் பொன்னாடை போர்த்தி வரவேற்பார்".

    ------என்னுடைய செவிகளில் இந்த தங்க தருணத்திற்கான அழைப்பு விழுந்து ஆசிரியர் சாரை நான் நெருங்கிய அடுத்த 10விநாடிகளில் இதுவரையிலான என் காமிக்ஸ் பயணம் என் மூளையில் மின்னலாக பளீரிடுகிறது.

    *ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து நடுநிலை கல்வி வரை கிராமத்துக்கு அருகேயிருந்த சிற்றூரில் பயின்று வந்த காலங்களில் காமிக்ஸ்னா என்ன என்றே தெரியாமல் வளர்ந்த எளியவன் நான். 8ம் வகுப்பு முடியும் வரை என்னுடைய ஒரே பொழுது போக்கு தென்னமட்டை பேட்டில் கிரிக்கெட் விளையாடுவது ஒன்றே. சிறுவயதில் காமிக்ஸ் எனும் சுவையை நுகரும் வாய்ப்பு எனக்கு கிட்டியதல்ல...

    *சேலம் மாநகரின் நடுவே அமைந்துள்ள St. Paul's HS பள்ளியில் 9ம் வகுப்புல சேர்ந்த போது சாப்பாட்டு வேளையில் சில சக வகுப்பு நண்பர்கள் மரத்தடியில் (25 வருடம் ஆன பிறகும் மரத்தடி மட்டுமே மாறல) ஏதோ புத்தகத்தை வைத்து படித்து கொண்டு இருந்தனர். என்ன என எட்டிப் பார்க்கவும் ப்ளாஷ் கார்டன், ராணி காமிக்ஸ்னு சொன்னானுங்க. அப்போதான் காமிக்ஸ் என்ற வார்த்தையை கேட்கிறேன். அந்த புத்தகத்தை அடுத்த வாரம் எனக்கு வீட்டிற்கு படிக்க தந்தானுங்க. அந்த படத்தில் கதை சொல்லும் விசயம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது.

    *தொடர்ந்து 007 கதைகள் கிடைத்தன. ஓரிரு ஆண்டுகள் போன பிறகு முதன்முறையாக லயன் காமிக்ஸ் இதழ் ஒன்றும் கிடைத்தது. இதில் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் கூடியிருந்த காரணத்தால் இதையே தேடி வாங்கினார்கள். அந்த புத்தகங்களில் எடிட்டர் S.விஜயன் என பார்த்த சமயத்தில் அட இவர் பெயரும் என் பெயரை போலவே உள்ளதே என அந்த பெயர் கொண்டவர் மேல் தானாகவே ஒரு பிரியம் கலந்த மரியாதை ஒட்டிக் கொண்டது.

    * லயனில் டெக்ஸை கண்டபிறகு டெக்ஸின் நேர்மை, தைரியம், அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம், ஆணவம் கலந்த கம்பீரம் என்னை மிகவும் கவர்ந்தது. கொஞ்ச காலங்களில் டெக்ஸ் வாயிலாக இவற்றை நமக்கு சொல்வது விஜயன் சாரே என புரிந்து கொண்ட பின் அவரின் மேல் மரியாதை பன்மடங்கு கூடி, ஒரு கட்டத்தில் அவரையே என் ரோல் மாடலாக ஃபிக்ஸ் செய்து கொண்டேன். அடுத்த லட்சியம் என்றாவது ஒரு நாள் அவரைப் பார்க்க வேணும். அது என் கனவாக இருந்தது அந்த சமயங்களில்.

    *வாழ்க்கையின் ஓட்டத்தில் பல கட்டங்களை பார்த்த பிறகு 2012ல் முதல்முறையாக என் மனதில் பூஜித்தவரை பார்க்கும் பாக்கியம் அமைத்தது. பெங்களூரு காமிக்கானில் அவரை சந்தித்தபோது பேச முடியாமல் திக்கித்திணறி போனேன். இன்றும் என் வீட்டுக்காரி அதை சொல்லி கேலி செய்வாள். தொடர்ந்த புத்தக விழாக்களில் என் ஆசிரியரோடு உணவருந்தியும் அருகேயிருந்து டிஸ்கஸ் செய்து வந்த போதும் என் மனதில் அவரின் மதிப்பு கூடிக்கொண்டே இருந்தது.

    *இந்த விழாவில் எடிட்டர் சாரை நீதான் வரவேற்கிறாய் என நண்பர்கள் சொன்னபோது கொஞ்சம் உதறலாகவும் இருந்தது. பேக் டூ முதல் பாரா, இந்த பொன்னாடையை அவருக்கு அணிவித்து வணக்கம் சொன்ன போது என் உடலில் ஏற்பட்ட நடுக்கமும் அது கொணர்ந்த மகிழ்ச்சியும் சொன்ன சேதி என்
    \\.."கனவு மெய்ப்பட்ட வேளை"..//

    ------தொடரும்------

    ReplyDelete
    Replies
    1. செம்.ரொம்ப நல்லா எழுதுறீங்க.

      Delete
    2. ///செம்.ரொம்ப நல்லா எழுதுறீங்க.///

      +1

      Delete
    3. டெக்ஸ் உங்கள் எண்ணங்களும் ,எழுத்துக்களும் மிக அழகு...

      பாராட்டுக்கள் ...

      Delete
    4. குழந்தை உள்ளம் கொண்டவர் விஜயராகவன் என்பது மீண்டும் நிரூபணமானது.

      Delete
    5. கும்பிட்டுக்கரங்க எல்லோருக்கும்🙏
      பொறுமையாக படித்ததற்கு....

      Delete
  69. சார் , கர்னல் அமோஸ் இதழ் சந்தாவில் வருமா ? இல்லை ,தனியாக வாங்க வேண்டுமா ?

    ReplyDelete
    Replies
    1. அது தனிக்கதை நண்பரே....அதனால் தனியாதான் வாங்கணும் .

      Delete
  70. ஈரோட்டின் டாப் 5. எனது பார்வையில்
    1.ஆசிரியரின் இரத்தப்படலம் &டெக்ஸ் 70 அறிவிப்புகள்

    2. சீனீயர் எடிட்டர் உங்களுடைய ஆசிரியர் ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறார் அவரை குண்டு புக் வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு அவரை ரொம்பவும் கஷ்டப் படுத்த வேண்டாம் என மகன் ( நமது ஆசிரியர் )மீது அக்கறையுடன் நம்முடன் உறையாடியது

    3. செல்வம் அபிராமி அவர்களின் வருகை

    4. சுரேஷ் சந்த் சாரின் வருகை அவர் சீனீயர் எடிட்டர் . ஆசிரியர். ஜீனியர் எடிட்டர். ஆகியோருக்கு மரியாதை செய்தது

    5. நண்பர்களின் உற்சாக கூக்குரல்கள் இடை விடாத கை தட்டல்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓரே குறை ஆசிரியர் மைக்கில் கோர்வையாக பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்நாக்ஸ் கள் வழங்கப் பட்டதால் ஆசிரியரின் உரை பாதியில் நின்றது

      Delete
  71. ஆசிரியரே நீங்கள் நடத்திய போட்டி மிக அருமையாக இருந்தது பால்யங்களை நினைவுப் படுத்தியது அதிலும்
    ஆப்ரிக்க சதி. மர்ம எதிரி. இரண்டு அட்டை படங்களை காட்டும் போது இது செந்தில் சத்யா விற்க்கு ரொம்ப பிடிக்கும் என நீங்கள் கூறியது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது
    போட்டியில் ஜெயிக்க முடிய வில்லை என்றாலும் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. //ஆப்ரிக்க சதி. மர்ம எதிரி. இரண்டு அட்டை படங்களை காட்டும் போது இது செந்தில் சத்யா விற்க்கு ரொம்ப பிடிக்கும் என நீங்கள் கூறியது//

      +9

      Delete
  72. டெக்ஸ் சம்பத்தினை காணவில்லையே?

    ReplyDelete
  73. கொலையுதிர் காலம் ...


    முதலில் அட்டைப்படம் பற்றி சொல்லியே ஆகவேண்டும் .அவ்வளவு அழகு...வழக்கமான டைலன் கதைகளே இதுவரை மனம் கவர்ந்தே உள்ள போது இந்த இதழ் இன்னும் ஒருபடி மேல் ..மர்ம மனிதன் மார்ட்டின் கதையோடு சிறிய ஒற்றுமை போல வித்தியாச கதை களன்,வித்தியாச வில்லன் ,வித்தியாச கதைபாங்கு ....


    இம்முறையும் வெற்றியின் ஏணிபடியில் டைலன் ஏறிகொண்டு இருக்கிறார் ...

    ReplyDelete
  74. அத்தனை காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட,

    ஸ்டீல் க்ளா பொன்ராஜ்
    ஈரோடு விஜய்
    கிட் ஆர்டின் கண்ணன்
    தலைவர் பரணிதரன்
    டயபாலிக் அகில்
    செந்தில் சத்யா
    மற்றும் etc..
    ஆகியோர் நேற்று முதல்
    "உள்ளங்கவர் கள்வர்கள் "
    என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்.

    அனாமதேய அன்பில் ஆசையாய் குளிப்பாட்டியவர்கள் இன்று முதல்
    "மறைந்திருந்து மாலை சூட்டும் மகான்கள் " என ஆசையோடு அழைக்கப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோவிந்த்@ ஒப்புமை அருமை நண்பரே..
      கள்வர்கள், மகான்கள்-ஹா...ஹா...

      Delete
    2. ///"உள்ளங்கவர் கள்வர்கள் "///

      வெட்கம் பிடுங்கித்தின்றது எனக்கு!

      Delete
  75. கர்னல் ஆமோஸ் @ ஏனோ தெரியவில்லை இந்த சாமுவேல் ஆமோஸ் என்ற இவரின் முழு பெயர் பிடித்து இருக்கிறது; பெயரில் ஒரு கம்பீரம் இருப்பது காரணமாக இருக்கலாம்.

    மிகவும் அழகாக புனையப்பட்ட ஒரு துப்பறியும் கதை, இதில் உயர் மட்டத்தில் இரு நாடுகளுக்குள் நடக்கும் அரசியல். ஒரு முகத்தில் நண்பனாகவும் மறுமுகத்தில் குள்ள நரியாக சகநாடுகளுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் என் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ளும் படி இருந்தது சிறப்பு.

    அதுவும் இறுதி சில பக்கம்களில் ஆமோஸ் மற்றும் ஜியோர்டினா இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் செம, இரு குள்ள நரிகளுமே ஒன்றுக்கு ஒன்று தந்திரத்தில் குறைத்தது இல்லை. இதனை தமிழில் அழகாக கொடுத்த ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    ஒரு கை இல்லாத இந்த முதியவரை வைத்து என்ன கதை சொல்ல போறாங்க என்ற கேள்வியுடம் படித்த எனக்கு, படித்து முடித்தவுடன் மனதில் தோன்றியது செம கதை. விறுவிறுப்புக்கு குறைவில்லாத கதை. கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கர்னல் ஆமோஸ் நல்ல வரவேற்பைப் பெற்று கலக்கிவருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

      இந்தவாரத்துக்குள்ள படிச்சிடலாம்னு இருக்கேன!

      Delete
  76. கர்னல் ஆமோஸ் @ கதை படித்த பின் தோன்றியவை

    1. இந்த கர்னல் ஆமோஸ் யார், இவருக்கும் XIIIக்கும் என்ன சம்பந்தம். ரத்த படலம் முழுமையாக படித்தது எதுவும் இப்போது ஞாபகம் இல்லை என்பதால் இந்த கேள்வி.

    2. ஜியோர்டினாவிடம் கர்னல் ஆமோஸ் ஏன் "மைகேல் இந்த வீடியோவை பார்த்தனா?" என கேட்பதற்கு என்ன காரணம்?

    3. கதையின் இறுதியில் மைகேல் கொல்லப் படுகிறான், யார் அவனை கொலை செய்ய சொன்னது? ஆமோஸ்? ஜியோர்டினா?

    4. கிரா ஆமோஸ்ஸிடம் தனது மகளை அறிமுகபடுத்தி வைக்கும் போது சொன்ன அதே டயலாக்கை ஜியோர்டினாவிடம் தனது மகளை அறிமுகபடுத்தி வைக்கும் போதும் சொல்வதன் காரணம் என்ன? கிராவின் குறிக்கோள் என்ன?

    5. கிராவின் மகளை தனது அலுவலகத்தில் வேலைக்கு சேர்க்கும் ஜியோர்டினாவின் திட்டம் என்ன? ஆமோஸ்சை பழி வாங்க வா? அல்லது அவரது மகளை பகடைக்காயாக கொண்டு எதிர் காலத்தில் ஆமோஸ்சை ஆட்டிபடைக்கவா?

    6. ஒரு சந்திப்பில் கிராவுடன் பேசும் போது எனது மகளின் குழந்தை பருவ குறும்புகளை ரசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் செய்து விட்டாய் கோபப்படும் அவர் அடுத்த சந்திப்பில் கிராவிடம், தன்னால் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாது எனவே இப்பொது உள்ள நிலையே தொடரட்டும் என சொன்ன போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, என்னடா இப்படி இந்த ஆள் பல்லடி அடிகிறானே என்று? ஆனால் கடைசி சில பக்கம்களை படிக்கும் போது உண்மை புரிந்தது, தனக்கு குடும்பம் இருப்பது தெரிந்தால் தனது மகளுக்கும் ஆபத்து என்பதை கொண்டே அவரது முடிவு அமைத்தது. ஒரு நல்ல தகப்பன் என்பதை அழகாக சொல்லி உள்ளார் கதாசிரியர்.

    7. முதல் பக்கத்தில் கார் வெடி குண்டு விபத்தில் இறப்பது யார்? ஆமொஸின் நண்பரும் மற்றும் கிராவின் கணவர்?

    8. மொசாட் அமைப்பு என்றால் என்ன?

    9. DOVEV - is a moshav in northern Israel. இந்த வார்த்தையை நமது ஆசிரியர் ஆங்கிலத்திலேயே கதை முழுவதும் பயன்படுத்தி இருக்க ஏதாவது காரணம் இருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. எத்தனை கேள்விங்க? எத்தனை குழப்பங்க?

      அத்தனைக்கும் நானே பதில் சொல்லிடுவேன். ஆனா பதில் தெரியாததால யாராச்சும் பதில் கொடுப்பாங்கனு எதிர்பாக்கிறேன்.

      Delete
    2. இத்தனை குழப்பம் இருந்தாலும் கதை படிக்கும் பொழுது குழப்பம் வராமல் நல்லாருக்கு ...:-))

      Delete
    3. டாக்டர் செல்வம் அபிராமி பராக் ! பராக் !! பராக் !! :-)

      Delete
    4. இரத்த படலம் வேண்டும் வேண்டும் எனக்கேட்ட ஸ்டீல் & பழனிவேல் எங்கு இருந்தாலும் பதில் சொல்லவும்.

      Delete
    5. மொசாட் அமைப்பு என்றால் என்ன? - From Vikatan

      // ஒவ்வொரு நாட்டிலும் அதன் இறையாண்மையை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் , அரசியல், பொருளாதார நிலைமைகளை சீராக வைத்துக் கொள்ளவும் அந்தந்த நாட்டின் உளவு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான "மொஸாட்" மற்ற உளவு அமைப்புகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனம் தான். மொஸாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இஸ்ரேலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பிரிட்டிஷ் அரசு ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில் அப்போது பெரும்பான்மையாக அரேபியர்களே வாழ்ந்து வந்தனர். யூதர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பம்தான். அப்போதிலிருந்தே அரேபியர்களுக்கும் யூதர்களுக்குமான மறைமுகப்போர் தொடங்கி விட்டது. அரேபியர்கள் தங்கள் நாட்டில் யூதர்கள் பெருமளவில் வந்து குவிவதை விரும்பவில்லை. ஆனால் அப்போதைய பிரிட்டிஷ் அரசு அவர்களின் எண்ணிக்கையை வளர்த்தெடுக்க உதவியது. உலகெங்கும் வாழ்ந்துவந்த யூதர்கள் இஸ்ரேலை நோக்கி வர ஆரம்பித்தனர். அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த சமயம் நாஜிப்படைகளின் மூலம் யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். ஹிட்லரிமிருந்து யூதர்களை காப்பாற்ற நினைத்த இஸ்ரேல் மக்கள் அதற்காக எவ்வளவு பெரிய முயற்சியையும் செய்ய தயாராக இருந்தனர். மிகப்பெரிய பொருட்செலவில் கப்பல்கள் வாங்கப்பட்டன. ஜெர்மனியிலிருந்து யூதர்களை காப்பாற்றி இஸ்ரேலுக்கு வருவதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஒரு பக்கம் நாஜிப்படைகள் யூதர்களை தேடித்தேடி கொன்று கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பிரிட்டிஷ் அரசும் யூதர்கள் பெரும் அளவில் வந்து குடியேறுவதை அப்போது விரும்பவில்லை. இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூத மக்களை கொண்டு வருவதற்காக ஒரு ரகசியக் குழு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் தான் "மொஸாட் லிஅலியா பெட்" இந்த அமைப்பே பின்னாளில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்டாக வளர்ச்சியடைந்தது.
      //

      Delete
    6. http://vishwarooopam.blogspot.in/2012/12/blog-post_27.html

      //
      இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
      உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், நமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம் யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்ச்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.
      //

      Delete
    7. நண்பர்களே
      மொசாட் பற்றி முழுமையாக அறிய
      திரு சொக்கன் அவர்கள் எழுதிய
      மொசாட் என்ற புத்தகத்தை உடனே
      படிக்கவும்.மிகவும் அற்புதமான எழுத்து
      நடையுடன் அற்புதமாகஆராய்ந்து எழுத்தில் வடித்துள்ளார். ஈரோடு விழாவில் கிடைக்கிறதா என்று பார்க்கவும்.
      படித்து பாதுகாக்க வேண்டிய அரிய
      புத்தகம்.

      Delete
    8. மொஸாட்-இஸ்ரேலிய உளவுத்துறை, பதிப்பகம்-மதி நிலையம்,விலை-150/-

      Delete
    9. நண்பர் பரணி,பயனுள்ள தகவல்களை கூறியுள்ளீர்கள்.

      Delete
  77. Add xiii mystery that is real 13 th part you had omitted early sir.possible to add and we get 1000 pages.it will be more than existing/old book with 848 pages.

    ReplyDelete
  78. The xiii mystery elucidate more clarification on core.already old 848 pages book has the add " xiii out punaivu"

    ReplyDelete
  79. Sorry "xiii our pulanaivu "by two reporters view.it is not in English also only in French ...

    ReplyDelete
  80. மொஸாத் அமைப்பு பற்றி நாம் முழுமையாகப் புாிந்து கொள்ள வேண்டுமானால் வரலாற்றில் சற்றே நெடும்பயணம் பின்னோக்கி போகவேண்டியிருக்கும்!!

    இஸ்ரேல், யூதா்கள், கிறிஸ்து, இஸ்லாம், முஹம்மது நபி, அரேபியா்கள் இவற்றோடு சோ்த்து விவிலியம் (பைபிள்) பழைய ஏற்பாடு ஆகியவற்றைப் பற்றிய வரலாற்றுப் புாிதலும் மிக அவசியம்!!

    பழைய ஏற்பாடு என்பது யூதா்கள், அரேபியா்கள், கிறிஸ்தவா்கள் மூவருக்குமே பொதுவான ஒரு சமய நூல்.

    பைபிள் பழைய ஏற்பாட்டின்படி,
    ஆபிரஹாம்-க்கு

    ஐசக் - இஸ்மாயில் என இரு மகன்கள்!

    ஐசக் கின் வம்சாவளி யூதா்கள் !

    இஸ்மாயில் ன் வம்சாவளி அரேபியா்கள் !

    யூத இனத்தில் கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு, கிறிஸ்துவை கடவுளாக வழிபட்டவா்கள் "கிறிஸ்துவ மதத்தை" உண்டாக்கினா்! கிறிஸ்துவை கடவுளாக ஏற்காதவா்கள் "யூதா்களாகவே" இருந்தனா்! அந்த வகையில் "யூதா்கள்" கிறிஸ்தவா்களுக்கு எதிரானவா்கள்!

    நபிகளின் வரவிற்குப் பிறகு பெரும்பான்மை அரேபியா்கள் "இஸ்லாத்தை" தழுவினா்!

    ஆரம்பத்தில் கிறிஸ்தவா்களுக்கும் யூதா்களுக்கும் சண்டை இருந்தது. நபிகளது பிறப்பிற்கு முன்பு வரை சுமாா் 500 ஆண்டுகளாய் கிறிஸ்தவா்களால் யூதா்கள் சீரழிக்கப்பட்டாா்கள்!

    நபிகளது வருகைக்குப் பிறகு நபி அவா்கள் "அரேபியா்களான நாமும், யூதா்களும், அபிரஹாமின் பிள்ளைகள்; சகோதரா்கள். ஆகவே கிறித்தவா்களால் யூதா்கள் வதைபடுவதை ஏற்க இயலாது" என்று கிறித்தவா்களை எதிா்த்து போராடினாா்!!

    அடுத்த 500 - 1000 ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் கிறித்தவம் மெல்ல மெல்ல பரவி ஆக்கிரமித்துக் கொண்டது.

    இப்போது நிலைமையே தலைகீழாகிப் போனது. என்னதான் இருந்தாலும், கிறித்தவா்களும் யூதா்களும் ஐசாக்கின் பிள்ளைகள்!

    அரேபிய இஸ்லாமியா்கள் தான் வேறானவா்கள்; அதாவது இஸ்மாயிலின் பிள்ளைகள் என்கிற மனப்போக்கே இன்றும் நடைபெரும் வன்மத்திற்கும், போருக்கும் மூலகாரணம்!

    இதன் பாதிப்பு முற்றிலும் யூதா்களுக்கே!
    சுமாா் 2500 ஆண்டுகளாக தொடா்ந்து கிறிஸ்தவா்களாலும், பின் அரேபிய இஸ்லாமியா்களாலும் தொடா்ந்து தொல்லைக்கு உள்ளாகி தனது தேசத்தையும், கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் இழந்து போயினா்!

    இந்த சுமாா் 2500 வருடப் பின்னணியில் தான் "மொஸாட்" என்ற அமைப்பு வளா்த்தெடுக்கப் பட்டது!

    யூதா்களின் வரலாற்றுப் பின்புலத்தை ஆராயாமல் பாா்த்தால் அது தவறாகத் தோன்றக்கூடும் என்ற காரணத்தினாலேயே இந்தப் பதிவு!

    எப்போதும் வரலாற்றில் இரண்டு பக்கங்கள் உண்டு

    வினை - எதிா்வினை!!

    இன்னும் "கா்னல் ஆமோஸ்" படிக்கவில்லை!

    மீண்டும் சந்திப்போம் நண்பா்களே!!

    ReplyDelete
    Replies
    1. பா.ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் ரத்தம் " புத்தகமே சரியான சாய்ஸாகும்.

      Delete