நண்பர்களே,
வணக்கம். நிறையத் தடவைகள் பதிவு செய்த விஷயமே ; ஆனாலும் இன்னொரு தபா அதனை நினைவூட்டும் ஆசையை மட்டுப்படுத்த இயலவில்லை ! பெரும் தேவன் மனிடோ சந்தேகமேயின்றி ஒரு காமிக்ஸ் காதலரே ; அது மாத்திரமின்றி நம் மீதும் ஒரு இம்மியூண்டு கூடுதல் அக்கறை கொண்டவரே என்பேன் ! இல்லாவிடின் இந்த "400 " எனும் பதிவுகளின் மைல்கல்லை - ஆண்டின் ஒரு அட்டகாசமான தருணத்தில் - தற்செயலாய் அமையச் செய்வது சாத்தியமாகுமா - என்ன ?
* ஈரோட்டுப் புத்தக விழா
* இரத்தக் கோட்டை- The Collection ரிலீஸ்
* வாசக சந்திப்பு
என ஏராளமான highlights நிறைந்ததொரு பொழுதல்லவா இது ? அது மாத்திரமின்றி, இந்த மாதத்துக்கு இன்னமும் ஒரு விதத்தில் ஒரு ஸ்பெஷல் அந்தஸ்துள்ளது - நம் இதழ்களை பொறுத்தவரை ! அது என்னவென்பதை இன்றைய நமது சந்திப்பில் அலசிடுவோமா ? So நீளத்தில் மிதமானதாய் இருப்பினும், ஒரு landmark moment-ன் பதிவென்ற முக்கியத்துவதோடு இன்றைய பதிவு உலா வரவுள்ளது !
நேற்றைய தினம் (வெள்ளி) உங்களது WWF - "இரத்தக் கோட்டை" முன்பதிவு இதழ்கள் - ஈரோட்டுக்கு நேரில் வர இயலா நண்பர்களைத் தேடி கூரியரில் புறப்பட்டு விட்டன ! So ஈரோட்டில் இன்று இதழ் ரிலீஸ் ஆகும் அதே நேரத்துக்கு, அநேகமாய் அனைவரையுமே டைகரின் இந்த டாப் சாகசம் எட்டிப் பிடித்திருக்குமென்று நம்புகிறேன் ! Without much ado - இதோ இதழின் அட்டைப்பட முதல் பார்வை !
ஓவியர் ஜிரோவின் ஒரிஜினல் டிசைனையே இந்தத் தொகுப்புக்கு அட்டைப்படமாக்குவது என்பது ஆரம்பத்திலேயே நாம் எடுத்த முடிவென்பதால் - இம்முறை எங்களுக்கிருந்த குழப்பமே - 5 பாகங்களின் 5 அட்டகாச ராப்பர்களிலிருந்து எதனை முன்னட்டைக்குத் தேர்வு செய்வது என்பதே ! நிறைய combinations ; நிறைய பரீட்சார்த்த டிசைன்கள் என்றதன் முடிவினில் - இந்த ஆக்கமே அழகாய்த் தோன்றியது எனக்கு ! அந்த ரங்கோலி ரகப் பின்னணியை ரொம்பவே பளிச்சென்று அமைத்தால் உள்ளேயுள்ள நமது நாயகர் மீது பார்வைகள் பாய்வதை விடவும், சுற்றியுள்ள வர்ணத் தோரணங்கள் மீதே கவனங்கள் லயிக்கும் போல் பட்டது ! So அதனை subtle ஆக்கி விட்டு, மெலிதாய் வெள்ளைப் பின்னணியோடு டிசைன் செய்து பார்த்த போது classy ஆகப் பட்டது ! இதழை தயார் செய்து கையில் ஏந்திய பொழுது அந்த கணிப்பில் பிழையில்லை என்றே தோன்றியது எனக்கு ! இனி ultimate ஜூரிக்களாகிய நீங்களே தீர்ப்பெழுத வேண்டும் ! பின்னட்டையுமே தன் பங்குக்கு தக தகக்க - கொஞ்சம் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ! இதழைக் கையிலேந்திப் பார்க்கும் போது தான் அதனை உணர்ந்திட முடியும் ! So ஒரு அட்டையின் கதையிதுவே !
கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !
இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading guys !!
ஈரோட்டில் நண்பர்களோடு சந்திப்புக்கு நேரமாகி விட்டதால் - இப்போதைக்கு விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறேன் ! மீண்டும் சந்திப்போம் ; bye until then !!
And lest I forget - 400 பதிவுகள் என்று ஆஞ்சநேயர் வால் போல இந்தப் "பதிவுகளின் படலம்" நீண்டு சென்று கொண்டிருப்பினும் - தொடர்ந்து உற்சாகத்தோடு என்னை பேனா பிடிக்கச் செய்துவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது heartfelt thanks ! நாலு நாள் சேர்ந்தாற்போல ஒரே பாணியை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ - "போலே மொக்கைச்சாமி...!" என்று அயர்ச்சி மேலோங்கும் இன்றைய நாட்களில் - சுமார் 70 மாதங்களாய் எனது புராணங்களுக்குச் சளைக்காது காது கொடுத்து வரும் நீங்கள் ஒவ்வொருவருமே நமது பயணத்தின் இன்றியமையாப் பங்குகளே !! Awesome as always - each one of you !!
And lest I forget - 400 பதிவுகள் என்று ஆஞ்சநேயர் வால் போல இந்தப் "பதிவுகளின் படலம்" நீண்டு சென்று கொண்டிருப்பினும் - தொடர்ந்து உற்சாகத்தோடு என்னை பேனா பிடிக்கச் செய்துவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது heartfelt thanks ! நாலு நாள் சேர்ந்தாற்போல ஒரே பாணியை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ - "போலே மொக்கைச்சாமி...!" என்று அயர்ச்சி மேலோங்கும் இன்றைய நாட்களில் - சுமார் 70 மாதங்களாய் எனது புராணங்களுக்குச் சளைக்காது காது கொடுத்து வரும் நீங்கள் ஒவ்வொருவருமே நமது பயணத்தின் இன்றியமையாப் பங்குகளே !! Awesome as always - each one of you !!
Hai
ReplyDeleteHi
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteHello every EBF friends!
ReplyDeleteஈரோடு ரயில் என்ன இப்படி மெதுவா வருது
ReplyDeleteஎன்ன சார்? சஸ்பென்ஸ் இதழ் பற்றி தகவல் எதுவும் போடவில்லையே நீங்கள்!
ReplyDeleteநண்பர்களே பீப்பிய யார்னாலும் எடுத்துக்கங்க..கொட்டு மட்டும் கொட்டிட்டே இருக்ற பரணி பயபுள்ளைக்குதான்
ReplyDelete......
லயனுவிஜயசாமி வேட்டைக்கு போற மாதிரி விளையாடி பார்க்கலாமடா….
ம்….ம்…ம்….
நீ தான் பி…பி….
பி…பி…
ஏய் நீ தான் கொட்டு
டும் டும் டும்
ஏ ஸ்டீல் நீ தான்டா பாட்டு
ஆ… சரி சரி சரி
ம்..ம்….ஆரம்பிக்கலாமா
ஓ…..
ஏ…அடிங்கடா
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜய சாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜயசாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
கொடுக்க வேணும் படலம்
கையை நீட்ட வேணும் யாரும்
கெஞ்சி நிக்கும் ஊரும்
ஆகஸ்டு வாக்குச் சொல்லும் நேரம்
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜய சாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
அன்னாடம் நாட்டுல இரத்தப்டலமும் கொலைப்படையும் விலையேறிப் போகுது மார்க்கெட்டுல
கள்ள மார்க்கெட்டுல
……..
அன்னாடம் நாட்டுல இரத்தப்டலமும் கொலைப்படையும் விலையேறிப் போகுதுமார்க்கெட்டுல
கள்ள மார்க்கெட்டுல
……..
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..
என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி படிக்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….
வீட்டுக்கு வீடு எங்களைத்தான் காமிக்ஸ்வாங்கச் சொல்லுறாக
படலமேதான் எங்க காமிக்சாச்சு சாமி ஏழைக வாயை மெல்லுறாக
பதிமூன்றின் வாழ்வும் கலராக வேணும் உன்னாலதான்
கண்ணால பாரு ஒன்னாக்கிக் காட்டு முன்னாலதான்
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜய சாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
ஊர் சுத்தும் சாமியே
நீ முட்டக் கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே
ஊர் சுத்தும் சாமியே நீ
முட்டக் கண்ணாலே என்னாட்டம்
ஏழையைப் பாக்கணுமேஎன்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே
எப்போதும் காவல் நானிருப்பேன், என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்
பொல்லாங்கு பேசும் பரணி சனம்தான் புண்ணாகிப் போச்சே என் மனம்தான்
என்னாட்டம் சாமி எல்லோர்க்கும் சொந்தம் எப்போதும்தான்
என்னோடு நீயும் உன்னோடு படலமும் ஐனவரியில்தான்
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜய சாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜயசாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
கொடுக்க வேணும் படலம்
கையை நீட்ட வேணும் யாரும்
கெஞ்சி நிக்கும் ஊரும் ஆகஸ்டு வாக்குச் சொல்லும் நேரம்
கோட்டையை விட்டு
படலத்துக்குப் போகும்
லயனுவிஜயசாமி லயனுவிஜய சாமியும் நீ தான்
ரசிகனும் நான் தான்
ஜனவரியில் படலம் காமி
😊 ....ஆனா புத்தக தயாரிப்பில் பைண்டிங்கிள் பிழைகள் நேர்ந்தால் முழு புத்தகமும் வீணாகி விடுமென கூறுவதால் மூன்றுக்கே தாவிட்டேன்...☹
Deleteநானும்
Delete@ஸ்டீல்:
Delete'இரத்தப்படலம்' முதல் புக்கிங்க்கு வாழ்த்துக்கள் நண்பரே!!!
ஆனா நீங்களே இப்படி ஒரே புக்கா இல்லாம மூணு புக்குக்கு போயிட்டீங்களே...'இரத்தப்படலம்' ஒரே புக்காகத்தான் வேண்டும்னு அடம்பிடிக்கிற எனக்கு யார் கம்பெனி தருவா...போங்க பாஸ்...
(Just for fun ji)
நீங்கள் மூன்று பாக புக்குக்கு பதிவு செய்ததின் காரணம் புரிகிறது...👍
😊👍
Deleteஆசிரியர் ..லீ ஜார்டியன் ஹோட்டலின் வாசலில் இருந்து upload செய்திருப்பார் போலிருக்கிறதே...நண்பர்கள் அவரின் வருகையை கிளிக்கி கொண்டிருந்த போதே, பதிவும் கிளிக் ஆகி இருக்கிறதே.... 'என்னா டையமிங்:... :)
ReplyDeleteOn the way sir...
ReplyDeleteTrain ஒரு மணி நேர தாமதமாக ஓடுகிறது.
ReplyDeleteசுமார் 12 மணியளவில் ஆஜராகிவிடுவேன் நண்பர்களே...!!!
நாமெல்லாம் வாட்ஸ் அப்லேயே பாக்க வேண்டியதுதான்
ReplyDeleteபன் சப்ளை பண்ணியாச்சா
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDelete400 வது பதிவுக்கு அல்ல சற்றும் அயராமல் எழுதுவதற்கு வாழ்த்துகள்.
இந்தப் பொன்னான தருணத்தை கொண்டாடும் பொருட்டு 400 வது பதிவு ஸ்பெஷல் என ஒரு குட்டி குண்டு புத்தகம் போடலாமே!! :-)
ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும், நம் ஆசிரியர் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் (விழாவிற்கு வர இயலாத என்போன்ற) நம் காமிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள். விழா இனிதே சிறக்கட்டும் ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.... காத்திருக்கிறோம்.
ReplyDelete+100
Deleteசார் நீங்கள் கம்பமா?.நான் சின்னமனூர்.
Delete400வது பதிவுக்கு 400வணக்கங்கள்...
ReplyDeleteHi
ReplyDeleteI'm back 2 blog
ReplyDeleteWelcome Akkik!!!
Deleteவாழ்த்துக்கள் சார். அந்தந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதத்தில் சில வார்த்தைகளை உங்கள் எழுத்து நடையில் படிப்பது ஒரு சுவாரஸ்யமான விசயம். :)
ReplyDeleteடியர் எடிட்,
ReplyDeleteஒவ்வொரு வருடமும் ஈரோடு வாசகர் சந்திப்பு நண்பர்கள் படைசூழ களைகட்டுவது கண்டு மகிழ்ச்சி. காமிக்ஸ் காதலர்களை இணைக்கும் இத்தகைய சந்திப்புகள் வருடம் இரு முறையாவது வெவ்வேறு நகரங்களில் நடைபெறுவது நமது குழுவை மேம்மேலும் வலுவாக்கும். வழக்கம் போல இவ்வருடமும் வேலைபளுவினூடே சந்திப்பை நேர்காண முடியவில்லை. அடுத்த வருடம் முயற்சிகள் தொடரும்.
தற்போதைக்கு முன்பதிவில் எனது முழு பெயரை பார்த்த மகிழ்ச்சியுடன், பார்சலை எதிர்பார்த்து காத்திருப்பேன். இந்த மாத சந்தா பிரதியுடன் வராத Early Bird இலட்சிணம், இதுவில் இருக்கும் என்ற ஆவலும் கூடவே.
400 வது பதிவிற்கும், ப்ளுபெர்ரி ஸ்பெஷல் இதழுக்கும், வாசிக சந்திப்பிற்கும் வாழ்த்துகுள் பல. தொடரட்டும் நமது காமிக்ஸ் காதல்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDelete400 post..wow...
ReplyDeleteஇரத்தப்படலத்தின் முதல் புக்கிங் ஸ்டீல் களா செய்து விட்டார்
ReplyDeleteஇது எப்போ நடந்துச்சு...Details please..
Deleteஇது எப்போ நடந்துச்சு...Details please..
Deleteமதியம் நண்பரே...முன் பதிவு ஆயிரத்திரணூறு...
Deleteஸ்டீல் ஆசிரியர் அறிவித்த உடனே நான்
Delete2350/IMPS செய்து விட்டேன்.
டைம் 1-22Pm
Delete😊
Deleteஇரத்த படலம் Book பன்னியாச்சு(இரண்டாது.)
ReplyDeleteHai
ReplyDeleteHai.ஈரோடு புத்தகவிழா சிறப்பாக நடந்து ஆசிரியரின் கஜானா நிரம்பி வழிய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteஅப்பதானே நமக்கு நிறைய புத்தகத்தை பயமின்றி வெளியிடுவார் நம் ஆசான்.
ஷோ சேடு :(
ReplyDelete??
Deleteஈரோடு மீட்ல தம்பி சம்பத் மட்டுமே பேச நேரம் கிடைத்தது. மற்ற நண்பர்கள் பேச டைட் ஷெட்யூலில் நேரம் இல்லை...அதான் நண்பர்கள விட்டுட்டு பேசட்டமோனு வருத்தபடுறாப்புல...
Deleteஷோ சேடு :(
Deleteஉண்மையை தைரியமாக உரைத்த தங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் ஈரோடுவந்ததை பற்றி மற்ற நண்பர்களின் கருத்தாக இது இருக்காது என்றே நினைக்கிறேன்.
ஸோ ஸேடு :-(
ஷோ சேடு :(
Deleteஉண்மையை தைரியமாக உரைத்த தங்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் ஈரோடுவந்ததை பற்றி மற்ற நண்பர்களின் கருத்தாக இது இருக்காது என்றே நினைக்கிறேன்.
ஸோ ஸேடு :-(
அப்படி அவர் உரைத்த உண்மைகளை சிறிது நாங்களும் அறிந்து கொள்ளலாமா?
Deleteஇரத்தப் படலம் சந்தா 2350 ரூபாய் கட்டியாச்சு...
ReplyDeleteWat is the surprise book? Any details?
ReplyDeleteXiii - தொடரிலுள்ள கதாபாத்திரமொன்றின் கதை!
Delete/// ..Xiii - தொடரிலுள்ள கதாபாத்திரமொன்றின் கதை!.. ///
Deleteமிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த விஷயம் நேற்று BLOG'ல் லீக் ஆயிருந்தது. TEX விஜயராகவன் அவர்களும் என்னிடம் சொன்னார். இருந்தும், லீக்கான அந்த மேட்டர் பொய்யாகவோ, வதந்தியாகவோ இருக்கும் என்று ஒரு சின்ன நம்பிக்கை எனக்குள் இருந்தது. 'தோட்டா தலைநகரம்'தான் நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.
///தோட்டா தலைநகரம்'தான் நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்//./---இது 2018ல் சந்தா dல் என சென்றாண்டே அறிவிக்கப்பட்டு விட்டது...
Deleteஇனிய வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய வணக்கங்கள் நண்பர்களே!!!
இந்த வருட ஈரோடு புத்தகத் திருவிழாவை மிகவும் மிஸ் செய்கிறேன் (-:(-:(-:
ReplyDeleteஇரத்தப்படலத்துக்கு முதல் ஆளா புக் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன், நண்பர் ஸ்டீல் க்ளா செய்துவிடதால் அதுவும் போச்சு...
வட போச்சே!!!
@எடிட்டர் சார்,
இரத்தப்படலம் முன்பதிவு விவரங்களை (விலை,பேங்க் அக்கௌண்ட் நம்பர் etc.) அடுத்த பதிவில் தெரியப் படுத்துங்கள் சார்!!!
உங்க மெயில் ஐடி கொடுங்கள் அனுப்புகிறேன்
Deleteஉங்க மெயில் ஐடி கொடுங்கள் அனுப்புகிறேன்
Delete@palanivel:
Deleteநன்றி நண்பரே!!!
எனது மெயில் ஐடி:
runsathiya@gmail.com
smartsathiya@gmail.com
400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்!!! புத்தகத் திருவிழா அப்டேட்ஸ், காமிக்ஸ் மீட்டிங்,நண்பர்கள் சந்திப்பு,போட்டோஸ் என வரும் உங்கள் அடுத்த பதிவுக்காக நமது blog லேயே I'm waiting sirr!!!
ReplyDeleteசூப்பர்
ReplyDelete400 ஆவது பதிவா சார் . கலக்கிட்டிங்க . வாழ்த்துக்கள் சார் .
ReplyDeleteSuper Sir......
ReplyDeleteAwesome work...
WOW 400 !Thank god!.
ReplyDelete400 வது பதிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு, வாழ்த்துக்கள்.
+1
Deleteசார் இரத்தக்கோட்டைக்கு நீங்க டிசைன் செய்த அத்தன அ்டைகளும் அருமை....அந்த ரங்கோலிய என்னைக்காச்சு ஏதாச்சும் புத்தகத்துக்குத் தாங்க...
ReplyDeleteஇரத்த படலம் வண்ண மறுபதிப்பிற்கு முன்பணம் onlineல் transfer செய்துவிட்டேன் நண்பர்கள் முந்தவும்
ReplyDeleteஸ்டீல்த ஜி முதல் முன்பதிவு உங்க மனசு போல நிரம்பி வழியவேண்டும்
ReplyDelete😊 நிச்சயமா நிரம்பி வழியும்...
Delete400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசார்
இரத்த படலம் முன்பதிவுக்கு முழு பணத்தையும் ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்து விட்டேன்.
ReplyDeleteரூபாய் 2400 மட்டும். இந்த புத்தகம் வெளிவருவது நமது முன்பதிவின் வேகத்தை பொறுத்தே. நண்பர்கள் முன்பதிவுக்கு விரையவும்.
DeletePlease add my number to the WhatsApp group.
ReplyDelete00447792788723
Thanks
ஆம் நண்பர்களே,400முன்பதிவு ஜன18ல் எட்டினால் மட்டுமே "13" வ௫ம்.எனவே நணபர்களே விரைவாக பதிவு செய்யுங்கள்.
ReplyDeleteமிட்டாய் கடையை பார்த்த சிறுவனாய் உணர வைத்ததற்க்கு நன்றி செனா அனாஜி...
ReplyDeleteXIII official announcement எப்போது சார்? 1 setக்கு எவ்வளவு கட்டணும்? நன்றி.
ReplyDeleteநேற்று. புத்தகம் விலை 2200, பாக்ஸ் 50, + கொரியர் சார்ஜ்.
Deleteமுன்பதிவுக்கு முதலில் ரூபாய் 1200 கட்டவேண்டும். குறைந்தது முன்பதிவு 400 வந்தால் இந்த கனவு இதழ் நனவாகும் நம் அனைவருக்கும்.
இந்த முறை நமது விழாவில் புதிய நண்பர்கள் பலரை பார்க்க தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, அதில் மிகவும் முக்கியமான நண்பர்கள், செல்வம் அபிராமி, கார்த்திகை பாண்டியன், சுரேஷ் சந்த், மற்றும் முத்து விசிறி. முத்து விசிறி சிங்கப்பூரில் இருந்தும் ரதிஜா பிரான்ஸ்ஸிருந்தும் இந்த காமிக்ஸ் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று வந்து சிறப்பு.
ReplyDeleteநண்பர் பழனிவேல் குடும்பத்துடன் வந்தது சிறப்பு.
ReplyDeleteசம்பத் அண்ணா மற்றும் சிவகுமார் சிவா நண்பர்கள் சிலருக்கு டெக்ஸ் படம் போட்ட டீ கொடுத்தார்கள். நன்றி நண்பர்களே.
தளத்தில் புதிய வரவாக இருந்து பல நண்பர்களை கவர்ந்த மிதுன் சக்கரவர்த்தி மற்றும் கோவிந்தராஜ் பெருமாள் அறிமுகம் கிடைத்தது, சிறிது நேரம் அவர்களிடம் பேச முடிந்தது.
பல புதிய நண்பர்கள் வந்திருந்தார்கள். அதிலும் ஜனார்த்தனன், சின்னஞ்சிறு கோபு, கணேஷ் KV சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருந்தார்கள். இதில் கணேஷ் மற்றும் ஜனார்த்தனன் உடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.
ReplyDeleteநண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்களுடன் இணைந்து உணவருந்த வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. பண்பாளர் பழக இனிமையான நண்பர்.
சொன்னா ஆனா ஜி, உங்கள் பணிவு உங்களிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டும்.
சபையின் தேவையை அறிந்து அதற்கேற்ப பணியாற்றிய விஜய் வாழ்த்துக்கள். தண்ணீர் சப்ளை சூப்பர்.
சுரேஷ் சந்த் ஐயா, உங்கள் பொருமை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ஆசிரியரிடம் உங்கள் தேவையை கேள்வியாக கேட்டுக் விதம் அருமை.
40; கேள்விகள் கொண்ட காமிக்ஸ் பரீட்சையில் வெற்றி பெற்ற நண்பர்கள் பலருக்கு நமது ஆரம்ப காலத்தில் வந்த காமிக்ஸ் அட்டைப்பட ஒரிஜினல் ஒவியம் பரிசாக வழங்கப்பட்டது. வைரஸ் X - கலீல், சுரேஷ் சந்த் - யார் அந்த மினி ஸ்பைடர், ரதீஜா - கொலைகார கலைஞன். பரிசு பெற்ற 10 பேருமே 40 கேள்வியில் 39 சரியாக எழுதி காமிக்ஸ் வெறியர்கள் என நிருபித்து விட்டார்கள். மற்ற நண்பர்கள் பெயர் தெரிந்து உள்ளவர்கள் தெரிவிக்கவும்.
ReplyDeleteகடல்யாழ் உங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். சிபியின் புதல்விக்கு நன்றி, தொடர்ந்து காமிக்ஸ் படிக்கவும். பழனிவேல் காமிக்ஸ் ஆர்வத்தை மதித்து அவருடன் வந்து விழா நிறைவு பெறும் வரை இருந்த அவரின் குடும்பத் தலைவிக்கு நன்றி.
76th
ReplyDelete76th
ReplyDeleteவாழ்வின் மறக்கவே முடியாத தருணம் என் ஆத்மார்த்த நண்பர் திரு செனா அனாவை நேற்று தோள்தழுவிய அந்த அற்புத கணம். !
ReplyDeleteநன்றி செனா அனா..!
இனி ஒவ்வொரு வருடமும் EBF க்கு உங்கள் வருகையை உறுதிப்படுத்தியதற்கு..!!
@ ALL : நண்பர்களே,
ReplyDeleteவணக்கம்.ஒரு சந்தோஷச் சனிக்குப் பின்பாய் புதியதொரு பதிவிற்கு இரவில் முயற்சிக்க சுத்தமாய் 'தம்' இல்லை ! ஏகமாய் நினைவுகள் ; சிந்தனையில் நிழலாடும் ஓராயிரம் விஷயங்கள் என்று மனதே ஒரு பல வண்ணக் kaleidoscope போலுள்ளது ! காலையில் நண்பர் ஸ்டாலின் இல்லத்தில் நண்பர்களோடு சிற்றுண்டிச் சந்திப்பு ; பகலில் நமது ஸ்டாலில் சந்திப்பு என்று திட்டமிட்டிருப்பதால் -இந்த ஒற்றை ஞாயிறுக்கு மட்டும், ஒரு மாலை நேரப் பதிவாக நம் அட்டவணையை மாற்றிக் கொள்வோமே ? Catch you in the evening all !
////சுத்தமாய் 'தம்' இல்லை !///
Delete'ம்'மினு ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா உடனே ஒரு பாக்கெட்டை வாங்கிட்டுவந்து நின்னிருப்போம்ல சார்? :P
காலை முதல் மாலை வரை எங்களுடன் கால்கடுக்க நின்று எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி எங்களுடன் நாள் முழுவதும் இருந்த உங்களை புரிந்து கொண்டோம். நன்றி சார். இன்று இரவு புதிய பதிவு வரட்டும்.
Delete😃
DeleteOk sir
ReplyDeleteவழக்கமான ஞாயிறு பதிவுக்கு காத்துகொண்டு இருக்கிறோம் ஆசிரியரே !
ReplyDelete400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். அதற்குள் 400 பதிவுகள் 70 மாதங்கள் ஆகிவிட்டதா, நிறைய விடயங்கள் அண்மையில் நடந்தது போல் பசுமையாக இருக்கு.
ReplyDeleteநேற்று முழுதும் நண்பர்களின் வாட்ஸாப் குரூப் updates மற்றும் FB பதிவுகள் மூலம் ஈரோட்டில் என்ன நடக்கிறது என்பதில் மட்டுமே மனம் லயித்திருந்தது.
Facebook anyone please update details about Erode meet.
ReplyDeleteAlso Rathapadalam announced ?
Dear Editor
ReplyDeleteExcellent book Ratha kottai.
Kindly make sure the printing quality some pages are very dark with more ink splattered.
ஆசிரியர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.ஈரோட்டில் வெளியுட்ட ஆந்த வினா தாளை கொஞ்சம் எங்களுக்கு காட்டுங்களேனி.வெளிநாடு வாசகர்களும் முயற்சி செய்கிறோம். நன்றி
ReplyDeleteஅது 40அட்டைப்பட ஓவியங்களை ஒவ்வொன்றாக காண்பித்து அந்த கதையின் பெயர் எழுதனும்...
Deleteஇறுதி நேர அவச அரசுப் பணி காரணமாக ஈரோடு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டேன். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்தற்கு மிகவும் வருந்துகிறேன்.
ReplyDeleteகிளாசிக் காமிக்ஸ் என்ன ஆனது? சந்தா D ஆகஸ்ட் மாதம் கிடையாதா? இரத்த கோட்டையினால் கான்செல் ஆகி விட்டதா?
ReplyDeleteடெக்ஸ் வண்ணத்தில் வந்துள்ளதே நண்பரே..dல
Deleteநேற்றய பொழுது என் வாழ்வில் மீண்டும் ஒரு பொன் நாள்..ஆசிரியரின் பதில்களுக்கும் , நண்பர்களின் அன்பிற்கும்....அன்பு ஆசிரியருக்கும் நன்றிகள்..விற்பனை சிறக்க முருகன் அருள்பாலிக்க வேண்டுகிறேன் .
ReplyDeleteசார் பதிவில் இரத்தபடல அறிவிப்பு கேட்டலாக்கயும இணைத்திடுங்கள்...மறவாமல்
ReplyDelete1😊😊
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDeleteதாம்பரத்தில் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ?
ReplyDelete