Tuesday, August 15, 2017

கேள்விகள் இன்னும் கொஞ்சமாய்...!

நண்பர்களே,

வணக்கம். சுதந்திரதின வாழ்த்துக்கள் !! சிக்கும் விடுமுறை நாட்களே - வீடெங்கும் கடைவிரித்துக் கிடைக்கும் புது காமிக்ஸ் ஆல்பங்களை படித்து ரசிக்கும் நேரமாகிடுவதால் கொஞ்சம் லேட்டாக இங்கே ஆஜராகிறேன் ! இந்த வாய்ப்புக்காகவாவது வருஷத்தில் ஒரு ரெண்டு / மூணு ஆகஸ்ட் மாதங்கள் புலர்ந்தால் தேவலை என்றே தோன்றுகிறது ! But first things first : 

TEX தேர்வுகள் குறித்து நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஒரு லோட் தெளிவான பதில்கள் கிட்டியிருப்பதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! பரவலான அபிப்பிராயங்கள் என்ன சொல்கின்றனவென்பதை மண்டைக்குள் இருத்திக் கொண்டு  'தல' தேர்வுகளை செய்யும் போது அந்தப் பணி சற்றே சுலபமாய் தெரிகிறது ! So thanks for the inputs folks !! தேடலில் கண்ணில்படும் சமீபத்துக் கதைகள் தற்போதைய TEX எடிட்டரான மௌரோ போசெல்லியின் பன்முகத்தன்மையை அட்டகாசமாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன - நூற்றியோராவது தடவையாக ! டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் ! ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது ! பாருங்களேன் - தேடலில் சிக்கியதொரு ஆல்பத்தின் preview ! 
இது போன்ற crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது ! வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன் : ஒரு சாகசத்தை முதன்முறையாக ரசிக்கும் போது அது black & white ஆகவே இருந்து விடுவது ; பின்னாட்களில் அது மறுபதிப்புக் காணும் சமயம் வண்ணத்தில் ரசிப்பது ! கம்பியூட்டர் திரைகளிலும், வாட்சப் சேதிகளிலும் கலர் பக்கங்களைப் பார்க்கும் பொழுது - "ஆஹா....இந்த அழகை ரசிக்க முடியாது போகிறதே !!" என்று நண்பர்களுள் சிலர் ஏங்குவது  புரிகிறது தான் ; ஆனால் இந்த ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart என்பேன் !! இது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவோ ? டெக்ஸ் planning-ல் இறுதி முடிச்சுக்கான இந்தப் பதிலையும் சொல்லி விட்டீர்களெனில் என் வேலை சுலபமாகிப் போகும் ! So ஆங்காங்கே லைட்டாக கசிந்து கொண்டிருக்கக் கூடிய வாயோர H2O-வை நாசூக்காய்த் துடைத்துக் கொண்டே பதில் சொல்லுங்களேன் guys ? 
2018 அட்டவணையில் லைட்டான "மதில் மேல் பூனை " பார்ட்டியாக நிற்கும் ஒரு மீசைக்காரரைப் பற்றி அடுத்ததாகக் கொஞ்சம் பேசி விடுவோமா - எனது தெளிவின் பொருட்டு ? இந்த மீசைக்காரர் நமது ரோமியோ பார்ட்டி கிடையாது - மாறாக "நான் கலீஃபாவாகியே தீருவேன்"  என்று பெனாத்தித் திரியும் மந்திரியார் ! Make no mistake - எனக்கு நிரம்பவே பிடித்த நாயகர் இவர் ! ரொம்பவே வித்தியாசமான அந்தக் கதை களம் ; கற்பனை வளம் ; வார்த்தைஜாலங்கள் என்று இதனில் ரசிக்க ஓராயிரம் உண்டு என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஆனால் நம்மவர்களில் ஒரு பகுதியினருக்கு இவரை filler pages பார்ட்டியாக மாத்திரமே பார்க்க முடிகிறது என்பதில் ரகசியம் நஹி ! "துண்டும் துக்கடாவுமாய் உள்ள கதைகளுக்குள் ஒன்றிட முடியவில்லை !" என்று மந்திரியார் பற்றி அவர்கள் சொல்லும் புகார் ! So சின்னதாயொரு விடுமுறையா - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் ? அல்லது business as usual ? "இதெல்லாம் ஏன் கேட்டுக்கிட்டுத் திரியுறீங்க ? கேள்வியே அனாவசியம் !" என்று உங்களுள் சிலர் பொங்கப் போவதும் நானறிவேன் ; ஆனால் கார்ட்டூன் எனும் genre-ஐ "மாவு கலந்த பாலோ ? ; பிளாஸ்டிக் அரிசியோ ? " என்ற ரீதியில் சந்தேகத்தோடு அணுகிடும் ஒரு அணி இன்னமுமே உள்ள நிலையில், இயன்றமட்டுக்கு ஒரு common ground நம்மிடையே இருந்தால் தேவலாம் என்பதே எனது நிலைப்பாடு ! So இந்தக் கேள்விக்கு react செய்வதை விடுத்து ; பதில் மாத்திரம் ப்ளீஸ் ?

வண்ண மறுபதிப்புகள் பற்றியும் ஒரு கேள்வியோடு நடையைக் கட்டுகிறேன் folks ! நமது ஒல்லிப்பிச்சான் Lucky Luke கதைகளுள் மறுபதிப்பிட உங்களது TOP சாய்ஸ் எதுவோ ? ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் ? பெரும்பான்மையின் ஆர்வத்துக்கேற்ப எனது தேர்வு அமைந்துள்ளதா என்று பார்க்கலாமே ? 
கிளம்பும் முன்பாய் "இரத்தப் படலம்" பற்றிய updates ! இதுவரை கிட்டியுள்ள முன்பதிவுகள் 78 ! நாளை காலை அந்தப் பட்டியலை டைப் செய்து இங்கே upload செய்கிறேன் ! நேற்றைய மாலை சிவகாசியில் ஆலங்கட்டி மழை + அசாத்திய இடி முழக்கம் என்ற அதிசயம் நிகழ்ந்ததால் கம்பியூட்டர்கள் எதையும் இயக்கவே வழி இருக்கவில்லை ! So பட்டியல் காலையில் !! Bye for now !!

340 comments:

 1. 2 nd .மேலே தல தல இருக்கும் போலிருக்கு.படித்து சந்தோஷம் அடைந்து வருகிறேன்.
  அனைவருக்கும் சுதந்திரத் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 3. ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் காதலர்களுக்கும் இனிய அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!!

  ReplyDelete
 4. டெக்ஸ் கருப்பு வெள்ளை தான் சூப்பராக இருக்கிறது.
  மந்திரியார் கண்டிப்பாக வேண்டும்

  ReplyDelete
 5. //** இது போன்ற crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது ! வர்ணங்கள் கபால்-கபாலென்று கவனத்தை ஈர்த்து விடும் பொழுது ஓவியரின் அந்த அசுரப் பிரயத்தனங்கள் ஒளிவட்டத்தை சற்றே இழந்து விடுவது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ?**//
  +1 B&W detailed illustrations are THE best, Sir.

  ReplyDelete
 6. விஜயன் சார் மற்றும் காமிக்ஸ் காதலர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
  .

  ReplyDelete
 7. டெக்ஸ் என்ற அந்த 3 எழுத்துக்கு அப்படி என்ன வசீகரம். பேரை கேட்டாலும் சரி படத்தை பார்த்தாலும் சரி மனதிற்குள் அப்படியொரு boost energy எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. .நாங்கள்இரு க்கும் வரை அந்த energy யை எங்களுக்கு அமுதசுரபி போன்று கொடுத்து கொண்டே இருங்கள்.இதுதான் உங்களிடம்கேட்பது வேண்டுவது..ஜெய்ஹிந்த். ..நன்றி

  ReplyDelete
 8. டெக்ஸ் என்ற அந்த 3 எழுத்துக்கு அப்படி என்ன வசீகரம். பேரை கேட்டாலும் சரி படத்தை பார்த்தாலும் சரி மனதிற்குள் அப்படியொரு boost energy எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. .நாங்கள்இரு க்கும் வரை அந்த energy யை எங்களுக்கு அமுதசுரபி போன்று கொடுத்து கொண்டே இருங்கள்.இதுதான் உங்களிடம்கேட்பது வேண்டுவது..ஜெய்ஹிந்த். ..நன்றி

  ReplyDelete
 9. 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது ! பாருங்களேன் - தேடலில் சிக்கியதொரு ஆல்பத்தின் preview ! //

  வாவ் சொல்லி அசத்த வைக்கிறது சார்
  அப்ப கண்டிப்பாக அடுத்த வருடம் தலையில்லா போராளி சைசில் வரப்போகிறார்ன்னு சொல்லுங்க

  அடி தூளேய்
  .

  ReplyDelete
  Replies
  1. Black and white இனி எப்பொழுதும் தல மட்டும் தல மட்டும் தலை இல்லாத போராளி சைசில்...!?

   Delete
  2. // அடுத்த வருடம் தலையில்லா போராளி சைசில் வரப்போகிறார்ன்னு சொல்லுங்க.//
   வந்தா அருமையா இருக்கும்.
   +11111

   Delete
 10. கேள்வி ஒன்று ....
  சித்திரங்கள் சிறப்பாக இருக்குமாயின் கறுப்பு வெள்ளை ஓகே ...எல்லா டெக்ஸ் கதைகளுமே கறுப்பு வெள்ளையில்தான் என்ற முடிவுக்கு வரவேண்டுவதில்லை ...LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன.

  கேள்வி இரண்டு ...மதியில்லா மந்திரி ...கண்டிப்பாக வேண்டும் ..

  கேள்வி மூன்று ....எல்லா கதைகளும் படித்த நண்பர்கள் சொல்லப்போவதை கேட்க காத்து இருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. உதாரணமாக சர்வமும் நானே மற்றும் சட்டம் அறிந்திராத சமவெளி வண்ணத்தில் நன்றாக இருந்தது.

   Delete
  2. ///எல்லா டெக்ஸ் கதைகளுமே கறுப்பு வெள்ளையில்தான் என்ற முடிவுக்கு வரவேண்டுவதில்லை ...LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன///---அதே அதே...அப்படிப் போடுங்க ஜி...

   Delete
  3. வழக்கம்போல +1 ஜி...

   Delete
  4. selvam abirami : //கேள்வி மூன்று ....எல்லா கதைகளும் படித்த நண்பர்கள் சொல்லப்போவதை கேட்க காத்து இருக்கிறேன்...//

   Me too !

   Delete
  5. // LMS . மற்றும் லயன் 25௦ -ல் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் அற்புதமாய் இருந்தன.//
   வண்ணத்தில் வந்தால் சிறப்பாகவே இருக்கும்,எனக்கும் இதில் உடன்பாடே,ஆனால் இது போன்ற கலர் குண்டு ஸ்பெஷலை கேட்டாலே விலை பிரச்சினை என்று ஆசிரியர் பின்வாங்குகிறாரே,
   எனவே,சார் சொன்னது போல கருப்பு & வெள்ளையில் மெகா குண்டு ஸ்பெஷலாக போட்டாலும் ஓகே தான்.
   வண்ணத்தில் போட்டாலும் டபுள் ஓகே.

   Delete
 11. சார்" தல"டெக்ஸ் கதைகள் பலவும் வண்ணத்தில் வ௫வதை விட கறுப்பு வெள்ளையில் வ௫வதே சாலச் சிறந்தது. அதுவும் க/வெ யில் ரசிக்க சுகமோ சுகம். நீங்கள் க/வெ யில் சும்மா நச் சென்று போட்டுத் தாக்குங்கள் சார்!!.

  ReplyDelete
 12. // நான் கலீஃபாவாகியே தீருவேன்" என்று பெனாத்தித் திரியும் மந்திரியார் //

  இவ்வருடம் இவரோடுதான் ஆரம்பித்தோம்
  நன்றாகத்தான் சென்றுகொண்டு உள்ளது ஆகவே கண்டிப்பாக ஒரு ஸ்லாட் ஒதுக்குவதில் ஆட்சேபணை இல்லை சார்
  .

  ReplyDelete
  Replies
  1. Prabakar T : Hopefully நண்பர்களின் பெரும்பான்மை இதே கருத்தைச் சொல்வார்களென்று எதிர்பார்ப்போம் சார் !

   Delete
  2. மந்திரியார் அவசியம் வேண்டும்
   +11111

   Delete
 13. டெக்ஸ் கதைகள் ப்ளாக் & வொய்ட்டில்தான் வசீகரிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. செலக்டிவான கதைகளை கருப்பு & வெள்ளையில் வெளியிடலாம்.

   Delete
 14. - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் ? அல்லது business as usual ? "//
  அவசியம் மந்திரியார் ஒரு ஸ்லாட் வேண்டும் சார்.

  ReplyDelete
 15. சார், "மதியில்லா மந்திரி"கண்டிப்பாக வேண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டும்!!!

  ReplyDelete
  Replies
  1. மந்திரியார் பற்றிய கருத்து ஏதும் இல்லை.

   Delete
 16. மதியில்லா மந்திரி ஒரு மாதத்தில் முடிந்து போகாமல் filler page யாக பயன்படித்தினால் மாதம் மாதம் சந்திக்கலாம்.எனது யோசனை...
  லக்கியின் மறு பதிப்பில் my choice 1.கெளபாய் எக்ஸ்பிரஸ்
  2.மனதில் உறுதி வேண்டும்.

  ReplyDelete
 17. Previews are superb sir!!!
  I exactly love to read (and enjoy the art work for hours) this type of comics.

  ReplyDelete
 18. // Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன்.//
  100 % உண்மை சார்.

  ReplyDelete
  Replies
  1. +1234567.ஸ்பெஷல் இதழ்கள் மட்டும் நீங்களாக.

   Delete
 19. இரத்தப் படலம் அதற்குள் 78 புக்கிங் ஆகி விட்டதா? வாவ், அற்புதம்,அ௫மை!!!!.நன்று. தொடரட்டும் நற்செய்திகள்.!!!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக XIII வெற்றி பெறும்.

   Delete
  2. //நிச்சயமாக XIII வெற்றி பெறும்.///---யெஸ்..அதில் சந்தேகம் வேண்டவே வேண்டாம்.

   Delete
 20. ஜாலியான தலயை ரசித்து விட்டாச்சு,
  இனி நீங்கள் சொல்வதை பார்த்து விட்டு வருகிறேன், வணக்கம் சார்...

  ReplyDelete
  Replies
  1. பார்த்து விட்டு சீக்கிரமாக கருத்து சொல்லுங்கள் டெக்ஸ் ஜீ.

   Delete
 21. கருப்பு வெள்ளை பரிமாணத்தில் மெபிஸ்டோ யாமா போன்றவை பட்டையை கிளப்புகிற்ன .

  ReplyDelete
 22. கொடூர வனத்தில் டெக்ஸ் வண்ணத்தில் ரசிக்க மிக்க ஆசை !!!? நிறைவேறு மா ஆசிரியர் சார்.

  ReplyDelete
  Replies
  1. Sridhar : சரியாக நினைவில்லை சார் ; ஆனால் மிதமானதொரு சாகசம் தானே அது ? அதில் லயிக்க ஏதேனும் விஷயம் பிரத்யேகமாய் இருந்ததா - என்ன ?

   Delete
  2. ஏன் இல்லை சார் அடர்ந்த வனபகுதி,டெக்ஸ், கிட் வில்லர்,போட்டோ கிராபர்,குதிரை பயனம் இல்லாத சாகசம்,பார் சண்டை, பனாமா கால்வாய் வரலாற்று பின்னணி, நட்பு,தூரோகம்,காட்டுவாசிகள் தாக்குதல், ஸ்பேட் ராணுவ பிரிவு, இன்னும் நிறைய மேலும் மறுபடியும் காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தது இந்த கதயில் தான் சார்.please sir.இன்னொரு சாகசம் மலை பாம்பிடம் மாட்டிக்கொள்லும் கிட் வில்லரை டெக்ஸ் காப்பாற்றும் இடம் சூப்பர் சார்.

   Delete
 23. தேடலில் கண்ணில்படும் சமீபத்துக் கதைகள் தற்போதைய TEX எடிட்டரான மௌரோ போசெல்லியின் பன்முகத்தன்மையை அட்டகாசமாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன - நூற்றியோராவது தடவையாக ! டெக்ஸ் கதாசிரியர்களுள் பெரியவர் போனெல்லிக்கு அப்புறமாய் க்ளாடியோ நிஸ்சி தான் ராட்சசராய் நின்றிருந்தார் படைப்புகளில் ! ஆனால் போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது ! பாருங்களேன்.
  சூப்பர் சார். தேடுங்கள் சார் தேடி தேடி படிப்பதில் தனி சுகம் உண்டு அதை அனுபவித்து எங்களுக்குத் தாருங்கள்.!!!

  ReplyDelete
 24. //போசெல்லி 'தல'யை ஒரு முற்றிலும் புதுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது///---ஊய்..ஊய்..ஊய்...சூப்பர்..

  ReplyDelete
 25. ///crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது !///

  ///ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart///

  ///Ideally - இங்கே நாம் போனெல்லின் பார்முலாவைப் பின்பற்றுவது தான் சூப்பர் என்பேன்///--

  உங்களின் இந்த மூன்று பாயிண்ட் களையும் 90% அப்படியே எடுத்து கொள்ளலாம் சார்.

  பாக்கி 10% வண்ணத்தின் வீரியம்; இதுவரை நாம் பார்த்து ரசித்துள்ள ஒக்லஹோமா, முகமில்லா மரண தூதன் இரண்டிலும் வண்ணத்தின் வீச்சு பல பக்கங்களில் அசாத்தியம். ஏன் இம்மாத மரணத்தின் நிறம் பச்சையிலும் வண்ணத்தின் வீரியம் உச்சம்.

  எனவே வண்ணமும் வேணும்;கருப்பு வெள்ளையும் வேணும்.

  இவை இரண்டுக்கும் இடையே சமரசமான ஒரு பார்முலாவை நீங்கள் அளிப்பீர்கள் என திடமாக நம்புகிறேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் //வண்ணமும் வேணும்;கருப்பு வெள்ளையும் வேணும்.//

   சங்கிலி முருகன் பஞ்சாயத்து தான் நினைவுக்கு வருது சார் !

   Delete
  2. But jokes apart, ரெண்டுக்கும் மத்தியில் பட்ஜெட்களை நிதானம் செய்வதில் தான் பிராணனே போகிறது !

   Delete
  3. இதுவே பிராதான பிரச்சினை, சிண்டை பிய்த்துக் கொள்ள வைக்கும் சிக்கல்.

   Delete
 26. டியர் எடிட்டர்


  IT துறையில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நான்கு நாட்கள் ஒரு சேர விடுமுறைகள் வருவதுண்டு - அப்போதும் customer calls இல்லாமல் இருப்பதுண்டு - very rare - ஆனால் நடப்பதுண்டு. இவற்றையும் மற்றும் முன் சென்ற இரு வார இறுதிகளையும் சேர்த்து நான் படித்த காமிக்ஸ்கள் :

  1. Tex - மரணத்தின் நிறம் பச்சை - முதல் வாசிப்பு - good story - loved it - need reprints like this - translation too was elegant (விரியன் , பன்றிப் பயலே , சாக்கடைப் புழுவே ஆகிய பிரயோகங்கள் அவசியமில்லா அருமையான வரிகள் )
  2. Tex - கவரிமான்களின் கதை - racy - loved it again - பாடல்கள் தவிர்த்து ;-)
  3. Dylan Dog - இது ஒரு கொலையுதிர் காலம் - இதுவும் ஒரு racy thriller
  4. Colonel Amos - அந்த கடைசீ கட்ட திருப்பத்துடன் அமைந்த சிறப்பான கதை. Steve Rolandக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த XIII ஆல்பம்
  5. ரின் டின் கேன் - சில இடங்களில் rib-tickling ; சில இடங்களில் சுமார்
  6. சிக்-பில் ஸ்பெஷல் - சிரிப்பு வெடிகள் - ஒரு ரயில் பயணத்தில் படித்து வெடிச்ச சிரிப்பில் ஆழ்ந்து மற்றவர்கள் என்னை முறைக்க வைத்த கதை
  7. Wayne Shelton - இம்முறை இதுவும் ஒரு breezy read
  8. Tex - ஒரு கியூபா படலம் - மாற்று குறையவில்லை - சற்றே நீளம் என்றாலும் ஏற்புடையதே
  9. அண்டர்டேக்கர் - மிக நன்றாய் வந்துள்ளது - again a sixer

  இப்போது வாசிப்பில் - lion 300ல் இதர கதைகள் மற்றும் ரத்தக் கோட்டை பக்கம் இரண்டு !!

  மொத்தத்தில் - ஆண்டின் முதல் மூன்று மாதங்களை விட - ஜூன் ஜூலை - ஆகஸ்ட் இதழ்கள் பின்னி எடுத்து விட்டன. சென்ற ஆண்டும் இவ்வாறே எழுதிய ஞாபகம்.முதல் மூன்று மாதங்கள் கொஞ்சம் ஜாலியா விட்டு விடுகிறீர்களோ ? :-)


  --

  உங்கள் கேள்விகளின் பொருட்டு ஒரே விஷயம் :

  Tex அட்டைப்படத்தில் கூட ஆதி வாங்க கூடாது ! கூடாது !! கூடாது !!

  அப்புறம், போன்னேல்லியின் இன்னொரு சூப்பர் ஹிட் - Zagor உண்டா 2018ல் ? ஏன் இன்னும் கண்ணில் காட்ட மாட்டேங்கிறீர்கள் ? ஒரு குண்டு புக் அடிக்கும் வாய்ப்பு இதனுள் உண்டல்லவா ???

  ReplyDelete
  Replies
  1. Raghavan : // Colonel Amos - அந்த கடைசீ கட்ட திருப்பத்துடன் அமைந்த சிறப்பான கதை. Steve Rolandக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த XIII ஆல்பம் //

   ரொம்பவே பயந்து பணியாற்றிய கதைகளுள் இதுவும் ஒன்றென்பேன் ! பிரெஞ்சு ஸ்கிரிப்ட் செம crisp & precise ; ஏதேனும் துளியூண்டு விஷயத்தை மிஸ் பண்ணினாலுமே சிக்கலாகிப் போகுமென்பதால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருந்தது ! Glad it worked !

   Delete
  2. Raghavan : //அப்புறம், போன்னேல்லியின் இன்னொரு சூப்பர் ஹிட் - Zagor உண்டா 2018ல் ?//

   கொஞ்சம் டார்ஜான்...கொஞ்சம் மேஜிக் விண்ட்...கொஞ்சம் வேதாளன்என்ற ஒரு சுவாரஸ்யக் கலவையான ZAGOR -ஐ நம்மவர்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ என்ற சந்தேகம் ஒரு பக்கமெனில் ; TEX ஆக்கிரமித்தது போக மீதமிருக்கும் slots களுக்கு ஏற்கனவே ராபின் ; டைலன் டாக் ; மார்ட்டின் ; ஜூலியா ஆகியோர் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி நிற்கிறதே !

   Delete
  3. Zagor is a heady cocktail for a super-hit for our folks - verily due to "கொஞ்சம் டார்ஜான்...கொஞ்சம் மேஜிக் விண்ட்...கொஞ்சம் வேதாளன்என்ற .."

   /* ஆக்கிரமித்தது போக மீதமிருக்கும் slots */

   Which is why it is a candidate for a two parter Gundu book as a special release in Chennai Book Fair ? :-)

   Delete
  4. டியர் எடிட்டர்,

   நம்மவர்களுக்கு பிளூகோட்ஸ் செட்டாவாது .. நம்மவர்களுக்கு லேடி S கொஞ்சம் கஷ்டம் .. நம்மவர்களுக்கு தோர்கல் தூரம் என்று சொல்லிக்கொண்டிருந்த சிவகாசிவாசி ஒருவரை நானும் நம்மவர்களும் அறிவோம் :-) ZAGOR ஹிட்டடிச்சப்புறம் அந்த சிவகாசிக்காரர் ஒரு "ஹி ஹி" சொல்லுவார் பாருங்களேன் !

   Delete
  5. சார் மூன்று பேர் கலவை ...நினைத்தாலே இனிக்குதே...ஒரு குண்டு புக்க நண்பர் சொன்னத போல சர்ப்ரைஸ் ஸ்பெசலா தரலாமே....

   Delete
 27. ஆங் .. அப்பொறம் மேலே உள்ள முதல் Tex படங்கள் கொண்ட கதை நீல வண்ணத்தில் வருதா சார் ? :-) ;-) :-p

  ReplyDelete
  Replies
  1. Raghavan & சேலம் Tex விஜயராகவன் : கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு....!

   Delete
 28. டெக்ஸ் கதைகளை பொறுத்தவரை கருப்பு வெள்ளை கதைகளை கருப்பு வெள்ளையிலும் வண்ண கதைகளை வண்ணத்திலுமாக வெளியிடலாம். இத்தாலியில் என்ன சைசில் வெளியிடுகிறார்களோ... அதே சைசில் வெளியிடலாம்..

  ReplyDelete
 29. மதியில்லா மந்திரி நன்றாக இருக்கிறது. டெக்ஸ் அவர்கள் கொண்டுவரும் விதம் அள்ளுகிறது. சிறப்பான கதைகளை உடனேயும் மற்றவற்றை அவ்வப்போது கலந்தும் கொள்ளலாம்.

  ReplyDelete
 30. மதியில்லா மந்திரி ...


  என்ன தான் துக்கடா கதையாக இந்த மந்திரியார் தோன்றினாலும் மற்ற சிறு கதைகளாக தோன்றும் கார்ட்டூன் நாயகர்களை விட குறுகதைகளாக வரும் மந்திரியார் அதிகம் ஏமாற்றுவது இல்லை.உண்மையை சொல்ல போனால் லக்கி ,சிக்பில் வரிசைக்கு பிறகு கார்ட்டூன் நாயகரை ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பதில் என்னை பொறுத்தவரை மூன்றாவது இடத்தில் மந்திரியாரே உள்ளார் .


  என்ன தான் கலீபாவை மந்திரியார் ஓரம் கட்ட நினைத்தாலும் மந்திரியாரை நீங்கள் ஓரம் கட்டி விடாதீர்கள் சார் ..ப்ளீஸ் ...

  ReplyDelete
  Replies
  1. // மந்திரியாரை நீங்கள் ஓரம் கட்டி விடாதீர்கள் சார் ..ப்ளீஸ்.//
   அதே,அதே.
   +123456789

   Delete
 31. சார்..நீங்கள் மேலே காட்டியுள்ள டெக்ஸ் அவர்களின் அட்டகாச கறுப்புவெள்ளை சித்திரத்தை வண்ணத்தில் கண்டால் கொஞ்சம் மாற்றுகுறைவாக தான் தோன்றும் என்பது மறுக்க முடியா உண்மை .மற்ற நாயகர்களை விட டெக்ஸ் கறுப்புவெள்ளையில் இன்னும் கூடுதலாக மனதில் ஓன்றுகிறார் ..எனவே கறுப்பு வெள்ளையில் டெக்ஸ் வருவதை ஆமோதிக்கும் அதே சமயத்தில் டெக்ஸ் வண்ண ரசிகர்களுக்காக அவ்வபொழுது அவரை வண்ணத்திலும் "தல " காட்ட வையுங்கள் சார் ...:-)

  ReplyDelete
  Replies
  1. மாற்று குறையா இல்லையானு கலர்ல பாத்தா தானே தெரியும்
   தலீவரே

   Delete
  2. ஓ....அப்படியும் இருக்குல்ல ஷல்லும் ஜீ ....சரி அதையும் செக் பண்ணிரலாம் .

   ஆனா "கலரை " காட்றது யாரு...!? :-)

   Delete
  3. Paranitharan K : ஆனாலும் உங்களுக்கு ரெம்போ பிஞ்சு மனசு தலீவரே....! லைட்டா one உலுக்கு உலுக்கினா 'ஜெர்க்' ஆகிடுறீங்களே !

   Delete
 32. ஆர் துக்கடா கதைகள் எனக்கும் ரசிக்கலை...ஆஆனாக்கா மந்திரி வரட்டுமே...இரத்தப்படலம் நண்பர்கள் விரைந்தால் அதகளம் காத்திருக்கு ....அட்டைபடம் இரத்தப்படலத்துக்கு அட்டகாசமா இருககே....👌

  ReplyDelete
  Replies
  1. "திண்டுக்கல்லுக்கு இந்த பஸ் போகுமா ?"

   கவிஞர் : "இரத்தப் படலம்" வந்துட்டா கொல்லம் மெயில் உசிலம்பட்டிக்கு போகும் தெரியுமா ? "

   Delete
  2. சார் கலக்கதான் செய்யுது...எல்லாம் நண்பர்கள் கையில்..

   Delete
 33. மேலே கொடுக்கப் பட்டுள்ள டெக்ஸ் BW படங்களின் கலர் படங்களையும் இங்கே காட்டினால் கம்பேர் பண்ண வசதியாக இருக்கும்.
  செய்வீர்களா இதை செய்வீர்களா

  ReplyDelete
  Replies
  1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : அவர்கள் செய்யட்டும் முதலில்....! இவை இன்னமும் வண்ணம் காணா சமீப ஆக்கங்கள் !

   Delete
 34. விஜயன் சார்,
  // ஆனால் இந்த ஒரிஜினல் லைன் டிராயிங்கில் உள்ள அந்த வசீகரம் a class apart என்பேன் !! இது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவோ ?
  //

  எனக்கு கருப்பு வெள்ளை மட்டும்தான் பிடிக்கிறது. அதில்தான் டெக்ஸ் கம்பீரமாக இருக்கிறார்.
  வண்ணத்திற்கு டெக்ஸ் சரிப்பட்டு வரமாட்டார். வருடத்தில் சிறப்பு மலர் ஏதாவது ஒன்றை வேண்டும் என்றால் வண்ணத்தில் வெளியீடலாம்.

  டைகர், லார்கோ, ஷெல்டன், டியூராங்கோ, லேடி எஸ், போன்ற கதைகள் வண்ணத்தில் ரசிக்க சிறந்த கதைகள்.

  டெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை அதில்தான் கம்பீரமாக உள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. //டெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை//-1

   Delete
  2. டெக்ஸ் கருப்பு வெள்ளையில் மட்டும் தேவை//-1

   Delete
 35. மந்திரியார் எனக்கு வேண்டும்.

  மந்திரியார் மற்றும் லியார்டினோ இருவரையும் இணைத்து ஒரு புத்தகமாக வருடம் ஒரு புத்தகமாக தரமுடியுமா? அல்லது இது போல் மதில் மேல் இருக்கும் வேறு நாயகர்கள் கதைகளை இணைத்து ஒரு புத்தகமாக தரமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : தாத்தா இப்போதைக்கு ரிட்டையர் ஆனா மாதிரி தான் !

   And No - கூட்டணிகளுக்கு அனுமதி லேது !

   Delete
  2. // மந்திரியார் எனக்கு வேண்டும்.//
   +123456789

   Delete
 36. 70. வது சுதந்திர ஆண்டில்
  டெக்ஸ் 70. அறிவிப்பு
  பட்டையை கிளப்புகிறது

  ReplyDelete
 37. Continuing my book reads:

  CID Robin Story - though the story is interesting - ராபின் அவருடன் பணி செய்யும் அந்த கறுப்பின ஆளை வார உபயோகிக்கும் மொழி அத்து மீறுகிறது - சற்றே edit செய்திருக்கலாம். இரு வாரங்களுக்கு முன் படித்த என் பாஸ் இதைச் சொன்ன பொது புரியவில்லை. ஆனால் இப்போது ஓவராக தோன்றுகிறது.

  ஆனாலும் கதை நன்றாக இருந்தது.

  ReplyDelete
 38. Dear Editor,

  அப்புறம் அந்த மெகா சைஸ் Tex ஆல் கலர் தீபாவளி மலர் ஹார்ட் பவுண்ட் பண்ணிடுங்களேன் - அடுத்த வருட சந்தாவில் 50 ரூபாய் சேர்த்துக்கொள்ளவும் ப்ளீஸ் !

  ReplyDelete
  Replies
  1. Raghavan : ஆஹா....அடுத்த வருஷத்துக்கு carry over செய்து கொண்டு போகவா ? சாத்தப் போகிறார்கள் சார் !

   But a thought worth considering all the same !

   Delete
 39. Vijayan Sir,
  How about the following TEX option?

  30% B&W (ultra-fine artwork stories)
  30% B&W (solid story and medium artwork)
  40% Colour(Mixed Art vs Story combinations)

  + Any size but 1:1 size as originals for ultra fine artwork books?

  What do you think friends?

  ReplyDelete
 40. சார்,அடுத்த ஆண்டு இதழ்களின் விலைகள் கூடாது தானே?

  ReplyDelete
 41. Lucky Luke:

  1) A cure for The Daltons
  2) Bayangara Podiyan (Billy the Kid - second story)
  3) Calamity Jane

  ReplyDelete
 42. மதியில்லா மந்திரி filler page க்கு பயன்படுத்தி கொண்டு அந்த slotஐ புதிய கார்ட்டூன் காமெடி நாயகரை அறிமுகம் செய்யுங்கள் சார். லக்கி லூக் மற்றும் நம்
  காமெடி ஷெரீப் கூட்டணிக்கு சரியான போட்டி இல்லா நிலையே உள்ளது. Tex B&Wல் அதிகம் கவர்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : Filler pages போடும் அளவுக்கு நம்மிடம் 6 / 8 காலிப் பக்கங்கள் எங்கேயுள்ளன சார் ?

   Delete
 43. சார் மரணத்தின் நிறம் பச்சை படித்தேன் . அந்த நீல வண்ண ஜீன்ஸும் , பின்னணி வர்ணங்களும் அட்டகாசம் . இதப்போல ிருக்கும் அட்டகாச வண்ணங்களுக்கு இதயும் , நம்ம பென்சில் கருப்பு வெள்ளைக்கு கருப்பு வெள்ளயும் காட்டுங்கள் . வண்ணம் சிறந்ததாய் பட்டால் வண்ணமும் , கருப்பில் எடுப்பாய் தெரிந்தால் அதாகபட்டதாயும் வரட்டும் .

  ReplyDelete
 44. சார்,1.அடுத்த ஆண்டு"தல"கதைகள் எத்தனை சார்? 2.super 6 இல் பிரின்ஸ் கதைகள் உண்டா சார்?

  ReplyDelete
 45. நேற்று ஈரோடு புத்தகத் திருவிழா சென்று இரத்த கோட்டை க்காக காத்திருந்தேன் காத்திருந்தேன் மணி 11 இருந்து 5 வரை... மழையை காரணம் காட்டி வெறும் கையுடன் திருப்பி அனுப்பபட்டேன்... விடுமுறை தினத்தின் அவ்வளவு பரபரப்பான தினத்தில் stock இல்லை என்றதும் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை....

  ReplyDelete
  Replies
  1. On one hand not-enough pre-bookings (!) - on the other hand folks go to purchase and return empty handed (!!) - oh what a pity for a splendid action packed tale !! :-(

   Delete
  2. // விடுமுறை தினத்தின் அவ்வளவு பரபரப்பான தினத்தில் stock இல்லை என்றதும் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.//
   ஞாயிறு காலை நாங்கள் ஸ்டாலுக்கு சென்றிருந்த போதே இரத்தக் கோட்டை அங்கே இருப்பில் இல்லை,அதே போல் சர்வமும் நானே சாகஸமும் இருப்பில் இல்லை.

   Delete
  3. "இது எங்கே வரப்போகிறது, வந்தால் வாங்கி கொள்ளலாம்"- என நினைக்காமல்; கொஞ்சம் சிரமம் பாராமல் புக்கிங்கும் செய்தால் இதுபோன்ற அசெளகரியங்களை தவிர்க்கலாம் நண்பர்களே...!!!

   Delete
 46. டெக்ஸ் B&w ட்டிலேயே சூப்பராக இருக்கிறது
  கண்டிப்பாக மந்திரியார் வேண்டும்

  ReplyDelete
 47. மந்திாியாா் கண்டிப்பாக வேண்டும் சாா்.

  ReplyDelete
 48. கருப்பு அழகுதான், வண்ணம் சில சமயங்களில் அதை விட அசாத்திய அழகு.

  ஒக்லஹோமா,
  முகமில்லா மரண தூதன்,
  நிலவொளியில் ஒரு நரபலி,
  சர்வமும் நானே,
  சட்டம் அறிந்திரா சமவெளி போன்றவை மாஸ் ஹிட் அடிக்க வண்ணமே முழு முதற் காரணம்.

  இந்த வரிசையில்
  சைத்தான் சாம்ராஜ்யம்,
  கழுகுவேட்டை,
  இரும்புக் குதிரையின் பாதையில்,
  மந்திர மண்டலம்,
  பழிக்குப் பழி,
  எமனின் வாசலில்,
  டைனோசரின் பாதையில்,
  தலையில்லாப் போராளி
  & பல கதைகள் பட்டையை கிளப்பி இருக்கும் என்பது மறுக்க இயலா உண்மை.
  பின்வரும் பேஸ்புக் பேஜ்ஜில் வண்ணத்தின் வீரியத்தை உணர சில கம்பியூட்டர் சாம்பிள் பக்கங்கள் போடப்பட்டுள்ளன. இதை ஒரு பார்வை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே...

  https://m.facebook.com/groups/1723924691198965?ref=bookmarks

  ReplyDelete
  Replies
  1. வாவ். .! செம்மயா இருக்கு. அத்தனை பக்கங்களும் ச்சும்மா டாலடிக்குது.!
   அதுவும் எமனின் வாசலில், மரண முள், அப்புறம் அந்த குதிரைக்கூட்டம் தண்ணீர் குடிக்கும் முதல் பக்கம் (தற்செயலாய் ஒரு ஹீரோ ன்னு நினைக்கிறேன்) மூன்றும் ச்ச்சான்ஸே இல்லை.! பின்னி பெடலெடுக்குது. இப்பத்தான் உண்மையிலேயே கடைவாயில் H2O சுரக்குது..!

   Delete
  2. கலர்ல குண்டு புக்கு ஒவ்வொரு மாசமும் வேண்டும்

   Delete
  3. ஆஹா.....! இதைப்பார்க்கும்போது என் நிலைப்பாட்டிலிருந்து சற்றுப்பின் வாங்கலாம் போலிருக்கிறதே...! எமனின் வாசலில்.....யப்பா...என்னவொரு அற்புதம்...! ஒரு அட்டகாசமான அனுபவத்தை இழந்திருக்கிறோம்...!

   எடிட்டர் சார்....!

   டெக்ஸ் 70 க்கு ஒரு 500பக்க கலர் குண்டு...இன்னொரு 500 பக்க ப்ளாக் & வொய்ட் குண்டு ....! டோட்டல் 1000 பக்க டெக்ஸ் இரு தனித்தனி இதழ்களாக ...ஒரே சமயத்தில் ரிலீஸ்....! ஓ.கே.வா சார்...! டெக்ஸின் 70 கொண்டாட்டம் அதிரடி சரவெடியாய் கலக்கட்டும்....!

   Delete
  4. நன்றிகள் நண்பர்களே..

   JSK@ ///எமனின் வாசலில்.....யப்பா...என்னவொரு அற்புதம்...! ஒரு அட்டகாசமான அனுபவத்தை இழந்திருக்கிறோம்...!//--அதே அதே நண்பரே. சர்வமும் நானே-விற்கு இணையான வரவேற்பை பெற்று இருக்கும்.
   //டெக்ஸின் 70கொண்டாட்டம் அதிரடி சரவெடியாய் கலக்கட்டும்///--அட்டகாசம். உங்கள் வாக்கு பலிக்கட்டும் நண்பரே...

   Delete
  5. எமனின் வாசலில்...பவளச்சிலை மர்மம் தூள்...இது போல எல்லா பக்கங்களும் அமையணும்....சதுப்பு நில காடுகள் , நீர் நிலைகள் நிறைந்த கதைகள விடலாம் .

   Delete
 49. சார் லக்கி லூக் எனது சாய்ஸ்
  1. மேடையில் ஒரு மன்மதன்
  2. பிசாசுப் பண்ணை
  3. மனதில் உறுதி வேண்டும்

  ReplyDelete
 50. டியர் விஜயன் சார்

  மந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் கண்டியப்பாக வேண்டும் ...

  டெக்ஸ் கலரில் மட்டுமல்ல B & W லும் அட்டகாசம்தான் ... எனவே .... :)

  ReplyDelete
 51. 112வது. பார்த்து ,பார்த்து கண்கள் போது போனேன்

  ReplyDelete
 52. மந்திரியாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவும்.

  ReplyDelete
  Replies
  1. ///மந்திரியாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவும்.///

   எதிர்த்து ஓட்டுகளே விழவில்லை ரவி.!

   Delete
 53. டெக்ஸ் இன் சிறப்பான சித்திரங்கள் எல்லாம் கருப்பு -வெள்ளையில் வர வேண்டும் என்பது எனது ஆவல் . மந்திரி தொடந்து வர வேண்டும் . சித்திரங்கள் அருமையாக உள்ளன . நெசமாலுமே கட வாயில் வழியும் நீர்வீழ்ச்சியினை கட்டுப்படுத்த முடியவில்லை .

  ReplyDelete
  Replies
  1. // மந்திரி தொடந்து வர வேண்டும் . சித்திரங்கள் அருமையாக உள்ளன.//
   +11111

   Delete
 54. Lucky my choice
  Payagara podiyan part 1 & 2
  Pesasu pannai

  ReplyDelete
 55. இப்படியாக, ஈரோட்டின் வருடாந்திரத் திருவிழா சற்றுமுன்பு நிறைவு பெற்றது நண்பர்களே!

  ஃபீலிங் ஸோ ஷேடு!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் 360 நாட்கள் தான் உள்ளது .. சீக்கிரம் நாட்கள் ஓடி விடும் நண்பரே ...

   Delete
  2. ஈவி@ அடுத்த ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதியே விழா தொடங்குதாம்.
   350க்கும் குறைவான நாட்களே உள்ளன...

   Delete
 56. ஏன் இல்லை சார் அடர்ந்த வனபகுதி,டெக்ஸ், கிட் வில்லர்,போட்டோ கிராபர்,குதிரை பயனம் இல்லாத சாகசம்,பார் சண்டை, பனாமா கால்வாய் வரலாற்று பின்னணி, நட்பு,தூரோகம்,காட்டுவாசிகள் தாக்குதல், ஸ்பேட் ராணுவ பிரிவு, இன்னும் நிறைய மேலும் மறுபடியும் காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தது இந்த கதயில் தான் சார்.please sir.இன்னொரு சாகசம் மலை பாம்பிடம் மாட்டிக்கொள்லும் கிட் வில்லரை டெக்ஸ் காப்பாற்றும் இடம் சூப்பர் சார்.
  சார் கொடூர வனத்தில் டெக்ஸ் க்கான பதில் சார்.

  ReplyDelete
 57. ///நமது ஒல்லிப்பிச்சான் Lucky Luke கதைகளுள் மறுபதிப்பிட உங்களது TOP சாய்ஸ் எதுவோ ? ஏதேனும் 3 கதைகளை மட்டுமே பரிந்துரை செய்யலாமெனில் உங்களது லிஸ்ட் என்னவாக இருக்கும் ?///

  மனதில் உறுதி வேண்டும்
  ஜேன் இருக்க பயமேன்
  மேடையில் ஒரு மன்மதன்

  பயங்கர பாலம்
  பிசாசு பண்ணை
  கௌபாய் எக்ஸ்ப்ரஸ்

  ReplyDelete
  Replies
  1. பழைய கதைகளை வாசிக்க அவ்வளவு வாய்ப்பு கிட்டவில்லை, எனவே,கண்ணன் அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

   Delete
 58. /// ஆங்காங்கே லைட்டாக கசிந்து கொண்டிருக்கக் கூடிய வாயோர H2O-வை நாசூக்காய்த் துடைத்துக் கொண்டே பதில் சொல்லுங்களேன் guys ? ///

  ரெகுலர் இதழ்கள் B&W ல் இருக்கட்டும் சார்.!
  ஆனா. . .ஆனா. . . அந்த டெக்ஸ் 70 ஷ்பெஷல் மட்டும் முழுவண்ணத்தில் வேண்டும். . வேண்டும்.. வேண்டும்..!

  ReplyDelete
  Replies
  1. ///ஆனா. . .ஆனா. . . அந்த டெக்ஸ் 70 ஷ்பெஷல் மட்டும் முழுவண்ணத்தில் வேண்டும். . வேண்டும்.. வேண்டும்..!////--- ஆமாம், கலரில் மட்டுமே வேண்டும் சார்...

   டெக்ஸ் 70 & தீபாவளி ஸ்பெசல் இரண்டுமாவது அவசியம் கலரில் வேணும், மற்றவை சமரசத்திற்கு ஏற்ப...

   Delete
  2. ///டெக்ஸ் 70 & தீபாவளி ஸ்பெசல் இரண்டுமாவது அவசியம் கலரில் வேணும், மற்றவை சமரசத்திற்கு ஏற்ப...///

   அதே . . அதே..!

   Delete
 59. ///So சின்னதாயொரு விடுமுறையா - மந்திரிக்கும், ஜால்ராவுக்கும் ? அல்லது business as usual ?///

  இப்போதெல்லாம் ஃபில்லர் பேஜஸே வருவதில்லை எனும்போது நா மோடி மஸ்தானை நாங்கள் எவ்விதம் பார்க்கமுடியும்.!
  எனவே வழக்கம்போல மந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் இருந்தே ஆகவேண்டும் என்பது என்னைடைய ஆசை சார்.!

  ReplyDelete
 60. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் கொடூர வனத்தில் டெக்ஸ் இங்கு நினைவு கூறுங்கள். டெக்ஸ் விஜய் சார், ஈ.வி.சார், ஷ்ல்லூம் சார் ,பொடியன் சார், கிட் ஆர்டின் சார், மாயாவி சார், செனா அனா சார், பரணி சார், பாட்ஷா சார்,police simon sir, மற்றும் நம் காமிக்ஸ் சொந்தபந்தஙக்ள் அனைவரும் சொல்lungal pls.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆவலை புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே...

   25முதல் 30வருடங்களுக்கு முந்தைய டெக்ஸ் கதைகள் தான் தற்போதைய கலர் ரீபிரிண்ட்களுக்கு தேர்வாகின்றன....

   வெளியீடு எண் 150க்கு முன்பும்+ சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற பொக்கிஷங்களும் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கே...

   சமீபத்தில் வந்த அதாவது 15ஆண்டுகள் முன்பு வந்த "கொடூர வனத்தில் டெக்ஸ் "- ரீபிரிண்ட் ஆக கேட்க இன்னும் ஒரு 15வருடமாவது காத்திருக்க வேணும் நண்பரே...ப்ளீஸ் லியாலிட்டியை கொஞ்சம் ஏற்று கொள்ள பாருங்கள்...
   பலரின் பேவரைட் , அவ்வளவு ஏன் நம் அன்பின் ஆசிரியர் சாரின் பேவரைட் ஆன சைத்தான் சாம்ராஜ்யம் கதையே இந்தாண்டு ஓட்டெடுப்பில் 25 வாக்குகள் பெற்று 3வது இடம்தான் பெற்றது...

   Delete
  2. ///சைத்தான் சாம்ராஜ்யம் போன்ற பொக்கிஷங்களும் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கே...///

   ஆஹான்..!!

   Delete
  3. ஸ்ரீ@ உங்களுக்காக டெக்ஸ் பட்டியலை மீண்டும் புரட்டி புரட்டி பார்த்ததில்,
   தற்போதைய சீனியாரிட்டியில்,

   பவளசிலை மர்மம் (அடுத்த ஆண்டுக்கு தேர்வானது)
   வைக்கிங் தீவு மர்ம்ம்
   சைத்தான் சாம்ராஜ்யம்
   பழிக்கிப் பழி,
   இரத்த முத்திரை,
   பழிவாங்கும் பாவை,
   எமனோடு ஒரு யுத்தம்,
   கழுகு வேட்டை,
   இரத்த வெறியர்கள்,
   இரும்பு குதிரையின் பாதையில்,
   மரணமுள்,
   மந்திர மண்டலம்,
   இரத்த நகரம்,
   எல்லையில் ஒரு யுத்தம்,
   மரண தூதர்கள்,
   மெக்சிகோ படலம்...
   ..................
   நீஈஈஈண்ட வரிசையில் காத்துள்ளன...
   வருடம் ஒன்று தவறாமல் ரீபிரிண்ட் ஆனாலே எத்தனை ஆண்டுனு கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள் நண்பரே...

   இடையில் சஸ்பென்சாக சாத்தான்வேட்டை, இருளின் மைந்தர்கள், பனிக்கடல் பபடலம் போன்றவையும் போட்டிக்கு வரக்கூடும்...

   Delete
  4. மெக்ஸிகோ படலமெல்லாம் ஞாபகம் இருக்கு : நள்ளிரவு வேட்டை ஞாபகம் வர்லையோ..?!?!

   Delete
  5. ///இடையில் சஸ்பென்சாக சாத்தான்வேட்டை, இருளின் மைந்தர்கள், பனிக்கடல் பபடலம் போன்றவையும் போட்டிக்கு வரக்கூடும்...///

   முன்னதாக மில்லேனியம் ஷ்பெசலில் வந்த எல்லையில் ஒரு யுத்தம் வெய்ட்டிங்கு.. ஆம்மா..!

   Delete
  6. ///நள்ளிரவு வேட்டை ஞாபகம் வர்லையோ..?!?!////- ஹி...ஹி.. என் மண்டையும் எவ்வளவு தான் தாங்கும்...

   அட இதை எப்படி மறந்தேன்,
   டெக்ஸ் தன்னந்தனியாக நீதியை நிலைநாட்ட புறப்படுவாரே, அந்த பண்ணையில் இரவு வெளியே டெக்ஸ் காத்திருக்க, படுக்கையில் அவர்தான் என எதிரிகள் வீட்டை கொளுத்தி கொக்கரிக்க, வகையா வட்டியோடி திருப்பி தருவாரே...சூப்பரா இருக்குமே...
   நவஹோக்கள் பறந்து வருவதற்குள் வேறு இன செவ்விந்தியர்கள் டெக்ஸின் உதவிக்கு வர... அட டா,
   மறுபடியும் நாளைக்கே இன்னொரு தடவை மறுவாசிப்பு செய்யனுமே,....

   Delete
  7. வைக்கிங் தீவு மர்ம்ம்
   சைத்தான் சாம்ராஜ்யம்
   பழிக்கிப் பழி,
   இரத்த முத்திரை,

   எமனோடு ஒரு யுத்தம்,
   கழுகு வேட்டை,
   இரத்த வெறியர்கள்,
   இரும்பு குதிரையின் பாதையில்,

   மந்திர மண்டலம்,
   இரத்த நகரம்,
   எல்லையில் ஒரு யுத்தம்,இவை எல்லாம் நான் படித்தது இல்லை. ஹ்ம் இதலெல்லாம் எப்போ பார்க்க போகிரெனோ? நன்றி டெக்ஸ் ஜீ.good night.

   Delete
  8. ///நவஹோக்கள் பறந்து வருவதற்குள் வேறு இன செவ்விந்தியர்கள் டெக்ஸின் உதவிக்கு வர... அட டா, ///

   கமான்சேக்கள்னு நினைக்கிறேன் மாம்ஸ்..!
   நானும் நாளைக்கு மறுக்கா படிக்கணும்!
   கால்நடை கடத்தலை தடுக்க முள்வேலி அமைத்து கெத்தாக பேசும் வசனங்கள் செம்மயா இருக்கும்.!

   Delete
  9. ///கமான்சேக்கள்னு நினைக்கிறேன் மாம்ஸ்..!///---ஆமா, கமான்சே இனத்தினர் தான் மாம்ஸ்...

   நவஹோக்கள் புகை சமிஞ்கை அனுப்ப, ஒவ்வொரு மலைத்தொடராக பாஸ் ஆகி, அந்த பண்ணை அருகே உள்ள கமான்சேக்களுக்கு செய்தி போகும். உரிய தருணத்தில் டெக்ஸுக்கு அருகே இவர்கள் வந்து விடுவர். பட்டாசான கதை...

   இதுவும் ஒரு தீபாவளிமலர் தான்.
   மிக சுமாரான அட்டை படம் , இப்போ நல்லா நினைவில் வந்துட்டது...

   Delete
  10. டெக்ஸ் விஜய ராகவன்
   சாத்தான் வேட்டை யை மறந்தது ஏனோ

   Delete
  11. செந்தில் சத்யா@ மேலே என்னுடைய கமெண்ட்டை இன்னொரு முறை நன்றாக பாருங்கள்.

   நண்பர் ஸ்ரீக்காக போடப்பட்ட ரீபிரிண்ட் ஆக கூடிய வாய்ப்பு இருக்கும் முக்கிய கதைகளின் பட்டியல் தந்துள்ளேன்.

   கொடூர வனத்தில் டெக்ஸ் " க்கு பிறகு தான் சாத்தான் வேட்டை " வந்தது. எனவே அதற்கு பிறகு அதை பட்டியலிட்டுள்ளேன். கொஞ்சம் கவனித்து பாருங்களேன்.

   "தி லயன் 250" ல் 2015வரை வந்த டெக்ஸ் கதைகள் லிஸ்ட் பின் இணைப்பாக இருக்கும் அதையும் ஒரு தடவை பார்தீர்களே எனில் நான் மறக்க வில்லை என உங்களுக்கு புரியும், தொடர்ந்து இப்படி அவசரப்பட்டு நீங்களும் கேட்க மாட்டீர்கள் தானே.

   Delete
  12. செம மாஸான கதை என்பதால் சொன்னேன் வருடம் சட்டென்று நினைவுக்கு வரவில்லை நான் லூசு என்பதால் தொடர்ந்து அவசரப் படுகிறோனோ என்னவோ

   Delete
 61. சார்!
  மரணத்தின் நிறம் பச்சை பக்கம் எண்.25 ல் மணியோசையை கேட்ட பென் கூறுவது "மார்கழி மாத பஜனை கோஷ்டி இங்கே வந்து விட்டதா என்ன?"


  பென் தமிழரா சார்?

  மேலும் கௌபாய்கள் சகோதரரே என்றோ நண்பரே என்றோ அழைக்காமல் ப்ரோ என்றழைப்பது மிகவும் மோசம்.ஏனெனில் 2013 ல் வெளியான தலைவா படத்தில் சந்தானத்தினால் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வார்த்தைதான் "ப்ரோ!"

  எனவே இனி கதைகளில் சினிமாத்தனமான வசனங்களை உபயோகப்படுத்தாமல் இயல்பாக இருக்கட்டுமே...ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் விஜயன் சார் ப்ரோ என்பது ஸ்டைலாக இருந்தாலும் அன்னியமாக தெரிகிறது

   Delete
 62. வருடம் முழுவதும் டெக்ஸை கலரில் கொடுக்க முடியுமா என்ன! !!(பட்ஜெட். பிராப்ளம்).கருப்பு. வெள்ளையில் கொடுத்து தானே தீர வேண்டும். அந்த சமயத்தில் இது போன்ற சித்தர பொக்கிஷத்தை கையலாமே.
  எங்களுக்கு வேண்டியது இத்தாலி மக்களை போல் மாதம் மாதம் டெக்ஸ் உடன் காடு மேடு மலை பாலைவனம் என்று சுற்ற வேண்டும். அம்புட்டு தான்...👏👏💪💪

  ReplyDelete
  Replies
  1. ///எங்களுக்கு வேண்டியது இத்தாலி மக்களை போல் மாதம் மாதம் டெக்ஸ் உடன் காடு மேடு மலை பாலைவனம் என்று சுற்ற வேண்டும்.///--- அதே அதே சார்...
   12மாதங்களில் ஒரு மாதம் டியூராங்கோ நன்றாகவே சுற்றிக் காட்டுகிறார். எனவே பாக்கி 11மாதங்களுக்கு ஆவண செய்யுங்கள் சார்...

   Delete
 63. ///இது போன்ற crisp லைன் டிராயிங்குகளைப் பார்க்கும் போது - இவற்றை ரசிக்க black & white பாணியை அடித்துக் கொள்ள முடியாதென்ற மனதுக்குப் பட்டது ! ///

  இரண்டு பக்கங்களையும் Save செய்து வைத்துக்கொண்டேன். :-)

  இந்த கதை 2018 ல் வரப்போகிறதென்றால் இப்போதே ஒரு டஜன் டர்க்கி டவல் வாங்கிவைத்துக் கொள்ளவேண்டும். கர்ச்சீப் பத்தாதுன்னு தோணுது.. ஹிஹி..!! :-)

  ReplyDelete
 64. டெக்ஸ் கருப்பு-வெள்ளை மற்றும் வண்ண வெளியீடுகளை 3:1 என்ற விகிதத்தில் வைக்கலாம்! சிறப்பிதழ்கள் வண்ணத்தில் வந்தால் கூடுதல் சிறப்பு!

  மந்திரியாரை எனக்கு ரொம்ப்ப்பப் பிடிக்கும்! ஆனால், விற்பனை முனையில் மந்திரியார் கொஞ்சமாவது சாதிக்கிறார் என்றால் தொடர்ந்து வாய்ப்புக் கொடுங்கள். புத்தகத் திருவிழாக்களில்கூட மந்திரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு பலர் திரும்ப வைத்துவிடுவதைக் காணமுடிகிறது! நமக்குப் பரிட்சையமில்லாத அரேபிய உடைகளுடனான ஓவியங்கள்தான் காரணமா இதற்குக் என்பதும் புரியவில்லை! சிக்பில்,லக்கி - ஓவியங்களோடு ஒப்பிடும்போது மந்திரியாரின் சற்றே கசமுசா ஓவியப் பாணி புதிய வாசகர்களை வசீகரிக்கும் வாய்ப்புக் குறைவோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது!
  மந்திரியாரின் இந்நிலைமை - ஷோ ஸேடு!

  ReplyDelete
  Replies
  1. # நமக்குப் பரிட்சையமில்லாத அரேபிய உடைகளுடனான ஓவியங்கள்தான் காரணமா இதற்குக் என்பதும் புரியவில்லை! #

   ஆமாம் சார்! இதற்கு பூந்தளிரில் வந்த தந்திரக்காரமந்திரி எவ்வளவோ மேல்!

   Delete
 65. /// புத்தகத் திருவிழாக்களில்கூட மந்திரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு பலர் திரும்ப வைத்துவிடுவதைக் காணமுடிகிறது.///

  கவலையளிக்கும் தகவல்..! ஆனால் ஒருமுறை படித்துப்பார்த்தால் பிடிக்கக்கூடும்.!

  ReplyDelete
 66. மேலே முதலாவதாக வரும் அந்த ப்ரிவியூ பக்கம் - அசர வைக்கிறது! ப்பா என்னமா வரைஞ்சிருக்காங்க!
  இங்கே ப்ரிவியூவாக வரும் இப்பக்கம் பிரிதொருநாளில் புத்தமாக மாறும்போது மட்டும் 'டயலாக் பலூன்கள்' சரேல் சரேல் என்று குறுக்கே புகுந்து பார்வையை தடுக்குது! என்னிக்காச்சும் ஒருநாள் நம்ம DTP ஆப்பரேட்டர்கள் மட்டும் என் கைக்கு சிக்கினாங்கன்னா நாலு பிறாண்டு பிறாண்டாம விடப்போறதில்லை நான்! கிர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. போறோம்.. இரத்தப் படல ஃப்ரூப் ரீடிங்க்காக ஒரு ரெண்டு மூணு நாளு சிவகாசி போயி வெச்சு செய்யறோம்..

   Delete
 67. லக்கி க்ளாசிக் 2018ற்கு... என் விருப்பங்கள் இவைகளே சார்.
  1.பிசாசு பண்ணை
  2.அதிரடி பொடியன்-2
  3.பயங்கர பாலம்

  ReplyDelete
  Replies
  1. நல்ல தேர்வு ..ஆனால் ..பயங்கர பாலம் சிறுகதை போல இருக்கும் ..ஆனால் அதற்கு பதிலாக பார்த்தாலும் லேட்டஸ்ட் லக்கி கதைகள் தாம் மீதம் இருக்கும் ..எனவே இந்த மூன்றையுமே இணைத்தால் மிக சிறந்த க்ளாசிக் ஆக தான் இருக்கும் ....

   Delete
  2. லக்கி விருப்பத்தில் சின்ன மாற்றம் சார். 2வது அதிரடி பொடியன் பார்ட்2
   பிறகு .

   புதிய விருப்ப பட்டியல்...

   1.பிசாசு பண்ணை
   2.பயங்கர பொடியன்
   3.பயங்கர பாலம்
   4.அதிரடி பொடியன-பார்ட்2.

   (இன்னும் ஒரு பொடியன் இருக்கானே அது, லயன் சூப்பர் ஸ்பெசல்ல வந்த பொடியன் எந்த பொடியன்?.அதிரடி பொடியன் தானே?
   பிற்பாடு லக்கி ஸ்பெசல்ல வந்த பொடியன் இந்த பொடியன் தானே)

   அதிரடி பொடியன்2 அந்த சூப்பர் ஸ்பெசல் பொடியனின் தொடர்ச்சி தானே???

   இதில்லாம இப்ப வர்ர ஊதா பொடியன் தனி பொடியன். அதில் குழப்பம் இல்லை....

   அய்யா கார்டூன் பிரியர்களே முதல்ல எவன் எந்த பொடியன்னு விளக்குங்கய்யா????
   என்னிடம் இருப்பது இரண்டு பொடியன் தான்.
   அதான் இந்த குழப்பம்... 3பொடியன் களும் உள்ளவர்கள் நல்லா ரெஃபர் பண்ணிட்டு விளக்குங்கய்யா...ப்ளீஸ்...உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி... ஆம்மாஆஆஆஆ...

   Delete
  3. ///அதிரடி பொடியன்2 அந்த சூப்பர் ஸ்பெசல் பொடியனின் தொடர்ச்சி தானே???///

   அதே பயங்கரப் பொடியன் பில்லிதான் இந்த அதிரடிப் பொடியனும்.!
   சிறையில் இருக்கும் பில்லியை வேறோரு நகரத்தில் இருக்கும் கோர்ட்டில் விசாரிக்க வேண்டுமென அழைத்துவரச் சொல்லுவார்கள்.
   அப்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்பவர்தான் நமது லக்கிலூக்.
   பயணத்தின்போது தப்பிச்செல்ல பில்லி செய்யும் சேட்டைகளும் அதை லக்கி முறியடித்து வெற்றிகரமாக அழைத்துச் செல்வதுமே கதை.!

   மிகப்பெரிய காமெடி க்ளைமாக்ஸ்தான். அவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிப்போனா, அங்கே விசாரிக்கப்படும் வழக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் ப்ப்ப்புர்ர்ர்ருன்னு சிரிக்கிறா மாதிரி இருக்கும்.!

   Delete
  4. கதை முழுக்க பில்லியை காப்பாற்றவேண்டி பின்தொடரும் ஒரு (பில்லியால் பணம் கிடைகௌகுமென்று ) ஏமாந்த சோணகிரி கேரக்டரும் சிரிப்புக்கு கியாரண்டி கொடுப்பார்.!

   Delete
 68. அனைவருக்கும் வணக்கம் .
  B&Wல் தல பட்டைய கிளப்புகிறார்.
  சாம்பிள் படங்கள் கதையாக வெளிவரும்
  போது மைய கொட்டி அழகிய சித்திரங்களை மறைத்து விடக்கூடாது .
  கர்ச்சீப் டர்கிடவல் ஒத்து வராத காரணத்தால் பெரிய டிரம் வாங்கி
  விட்டேன்.

  ReplyDelete
 69. மந்திாியாா் இல்லாத காா்ட்டூன் சந்தாவா??
  என்ன கொடுமை சாா் இது??

  கழட்டிவிடுரதுக்கு
  தாத்தா லியானா்டோ,
  மீசை மாமா கிளிப்டன் லாம் இருக்கிறப்போ "மந்திாியாா்" ஏன்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. அதானே ....பாருங்க சார் கார்ட்டூன் காதலரே சொல்லிட்டாரு ....


   மந்திரியார் அவர்களுக்கு அவர் ஆதரவை கொடுத்ததை விட கழட்டி விட அவர் சொன்ன நாயகர்களை நோட் பண்ணுங்க சார் ...:-))

   Delete
  2. அதுவும் தற்போது வெளிவந்த "கேரட்" கதை ரொம்ப அமா்களமால இருந்துச்சு!!

   நம்ம ஆசிாியா் ஏதோ கேட்கக்கூடதா எடத்துல கேட்டுப்புட்டு மந்திாிய கழட்டி விடலாமானு பாக்குராரு!!

   Delete
 70. சாா்,
  டெக்ஸ் கருப்பு வெள்ளையில் அழகு!
  ஆனா
  வண்ணத்தில் கொள்ளை அழகு!!

  சொல்றதை சொல்லீட்டோம்
  அப்புறம் முடிவ நீங்க தான் எடுக்கணும் சாா்!

  ReplyDelete
 71. கருப்பு வெள்ளையில் இருக்கும் இப்படியான இதழ்கள் வேண்டும். ஆனால் இதே இதழுக்கு வண்ண மறுபதிப்பு இருந்தால் அதுவே என் சாய்ஸ்.

  மந்திரியாருக்கு ஒரு ஸ்லாட் கொடுக்கலாம் விற்பனையை பொறுத்து.

  ReplyDelete
  Replies
  1. டியர் விஜயன் சார்,

   இந்தியா மட்டும் அல்லாமல் ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மந்திரியாருக்கு ஆதரவு பெருகுவதை கணக்கில் கொள்ளவும் ...

   Delete
 72. பரலோகத்திற்கொரு பாலம்
  கௌபாய் எக்ஸ்ப்ரஸ்
  ஜேன் இருக்க பயமேன்

  பரலோகத்திற்கு பாலம்னு தானே கதையிருக்கு!

  பயங்கரப் பாலம் என்ன கதை?
  இரண்டும் வேறயா? அல்லது நான் சொல்றது தப்பா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சார். 'பயங்கரப் பாலம் ' லக்கியின் ஆரம்பகால க்ளாசிக்.

   Delete
  2. ஆம் நண்பரே மிதுன்.
   நம்ம கோவிந்த சொன்ன மாதிரி லக்கியின் க்ளாசிக்களில் இதுவும் ஓன்று. எனக்கு ரொம்பவே பிடிச்சது.

   பயங்கர பாலம் -மினிலயன்ல வெளிவந்தது, இருவண்ணமா என யாராவது உறுதி படுத்துங்கள் நண்பர்களே?

   பரலோகத்திற்கு ஒரு பாலம்-லயனில், முழு வண்ணத்தில், சாதாரண தாளில் வந்தது.

   Delete
  3. பயங்கர பாலம் இரு வண்ணமே

   Delete
  4. பயங்கர பாலம் ..இரு வண்ணமே ...பக்கத்திற்கு இரண்டு பேனல்களாக மிக சிறிய கதை நண்பர்களே ....அது அவ்வளவு பெரிய ஹிட் ஆன கதையா என்பதும் சந்தேகேமே....?

   Delete
 73. லியோனார்ட் தாத்தாவை வெளியேத்துனதை கூட பொறுத்துக்கலாம்.

  ஆனா 'ஆபரேசன் மோடி மஸ்தான் ' ங்கிற அடுத்த டார்கெட்டை மட்டும் ஏத்துக்கவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. ஆப்பரேசன் MM- னு பேரே வச்சிட்டீங்களா..!!

   நிறைய ஆதரவு இருப்பதை பார்த்தா மந்திரியும் பாயும் 2018லும் கலீஃபாவை கவுப்பாங்களோ...!!!

   Delete
  2. வழிமொழிகிறேன் சார் ....:-))

   Delete
  3. நானுந்தே! (ஆசிாியா் ஸ்லாங்க்ல)

   Delete
 74. ரவிகண்ணர்,நாக்ஜீ சொல்ற மாதிரி மந்திரியாருக்கு 100% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது என்பதையும் எதிர் வாக்குகள் ஒன்று கூட விழவில்லை என்பதையும் ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சுட்டிகாட்ட விரும்புகிறேன் ...:-)


  விட்டால் மந்திரியார் லக்கி ,சிக்பில் அவர்களை கூட ஓரம் கட்டிவிடுவார் போல ...எனவே உடனடியாக தாங்கள் மந்திரியாருக்கான முடிவை அறிவித்து லக்கி ,சிக்பில் அவர்களை காப்பாற்றுமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன் சார்..!

  ReplyDelete