நண்பர்களே,
வணக்கம். நிறைய இன்டர்நெட் பேலன்ஸும், நிறைய-நிறையப் பொறுமையும், உங்களிடம் உள்ளனவாயென்று இந்தப் பதிவினில் புகுந்திடும் முன்பாக சோதித்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் !!
ஆண்டின் ‘அந்த வேளை‘ ஒரு வழியாய்ப் புலர்ந்து விட்டது !புதுசாய் ஓராண்டுக்கான அட்டவணையைத் தயாரிக்கிறேன் பேர்வழியென்று வண்டி வண்டியாய்க் கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்து என்னையே நிறையக் குழப்பிக் கொள்வது ; ‘இது உண்டா ? இது இல்லியா?‘ என்ற யூகங்களோடு உங்களை மண்டை காயச் செய்வது ; அவ்வப்போது பில்டப்பாய் விடுவது ; என்ற அந்தப் பரிச்சயமான கண்ணாமூச்சியாட்டம் இந்த முறை சற்றே சீக்கிரமே ஆரம்பித்து விட்டது ! அதன் பலனாய் செப்டெம்பர் இறுதியிலேயே தொடரும் ஆண்டுக்கான டைம்-டேபிளை ஒப்படைக்க முடிந்துள்ளது ! நிறைய நாயக / நாயகியர் ; நிறைய ஆர்வங்கள் / எதிர்பார்ப்புகள் ; ஆளுக்கொரு தேர்வு ; ரசனை என்றதொரு சூழலில் அனைவரையும் சந்தோஷப்படுத்த எங்களால் ஆன சகல குட்டிக்கரணங்களையும் அடிக்க முனைந்திருக்கிறோம் ! ஆனால் நூற்றுக்கு நூறென்பதெல்லாம் ரசனைகள் சார்ந்த தேர்வுகளில் சாத்தியம் லேது ! எனும்போது சிற்சிறு மாற்றுக் கருத்துக்கள் இருந்திட வாய்ப்புகளுண்டு என்பதை நாங்கள் அறியாதில்லை ! So உங்கள் 'ஆதர்ஷர்களுள்' யாரேனும் பட்டியலுக்குள் இடம் பிடிக்காது போயிருப்பின், இடமின்மையோ ; விற்பனைகளில் அவர்கள் கண்ட சுணக்கமோ காரணமாக இருந்திடக் கூடுமென்ற அனுசரணையான புரிதலுக்கு எங்களது முன்கூட்டிய நன்றிகள்! இனியும் பில்டப்களுக்கு வேலையுமில்லை ; வேளையுமில்லை என்பதால் - here goes !
நடப்பாண்டின் அட்டவணையில் நாம் செய்த பிரதானமான நல்ல விஷயம் - சந்தா முறைகளை genre-களின் அடிப்படையில் உத்தி பிரித்ததே என்பேன் ! லார்கோவையும், லக்கி லூக்கையும் ஒரே கோட்டில் அணிவகுக்கச் செய்வதை விடவும், லார்கோவுக்கு ஷெல்டனையும், லக்கிக்கு, டாக் புல்லையும் துணை நிற்கச் செய்வதில் நிறைய நலன்கள் இருப்பதாகத் தோன்றுவதால் அதே பாணி காத்திருக்கும் ஆண்டிலும் தொடர்ந்திடவுள்ளது ! ஒரே மாற்றம்- சந்தா பாணிகளின் எண்ணிக்கையில் மாத்திரமே ! A, B, C, D, க்குத் துணையாக சந்தா E-ம் 2017-ல் களம் காண்கிறது!
ஆண்டின் ‘அந்த வேளை‘ ஒரு வழியாய்ப் புலர்ந்து விட்டது !புதுசாய் ஓராண்டுக்கான அட்டவணையைத் தயாரிக்கிறேன் பேர்வழியென்று வண்டி வண்டியாய்க் கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்து என்னையே நிறையக் குழப்பிக் கொள்வது ; ‘இது உண்டா ? இது இல்லியா?‘ என்ற யூகங்களோடு உங்களை மண்டை காயச் செய்வது ; அவ்வப்போது பில்டப்பாய் விடுவது ; என்ற அந்தப் பரிச்சயமான கண்ணாமூச்சியாட்டம் இந்த முறை சற்றே சீக்கிரமே ஆரம்பித்து விட்டது ! அதன் பலனாய் செப்டெம்பர் இறுதியிலேயே தொடரும் ஆண்டுக்கான டைம்-டேபிளை ஒப்படைக்க முடிந்துள்ளது ! நிறைய நாயக / நாயகியர் ; நிறைய ஆர்வங்கள் / எதிர்பார்ப்புகள் ; ஆளுக்கொரு தேர்வு ; ரசனை என்றதொரு சூழலில் அனைவரையும் சந்தோஷப்படுத்த எங்களால் ஆன சகல குட்டிக்கரணங்களையும் அடிக்க முனைந்திருக்கிறோம் ! ஆனால் நூற்றுக்கு நூறென்பதெல்லாம் ரசனைகள் சார்ந்த தேர்வுகளில் சாத்தியம் லேது ! எனும்போது சிற்சிறு மாற்றுக் கருத்துக்கள் இருந்திட வாய்ப்புகளுண்டு என்பதை நாங்கள் அறியாதில்லை ! So உங்கள் 'ஆதர்ஷர்களுள்' யாரேனும் பட்டியலுக்குள் இடம் பிடிக்காது போயிருப்பின், இடமின்மையோ ; விற்பனைகளில் அவர்கள் கண்ட சுணக்கமோ காரணமாக இருந்திடக் கூடுமென்ற அனுசரணையான புரிதலுக்கு எங்களது முன்கூட்டிய நன்றிகள்! இனியும் பில்டப்களுக்கு வேலையுமில்லை ; வேளையுமில்லை என்பதால் - here goes !
நடப்பாண்டின் அட்டவணையில் நாம் செய்த பிரதானமான நல்ல விஷயம் - சந்தா முறைகளை genre-களின் அடிப்படையில் உத்தி பிரித்ததே என்பேன் ! லார்கோவையும், லக்கி லூக்கையும் ஒரே கோட்டில் அணிவகுக்கச் செய்வதை விடவும், லார்கோவுக்கு ஷெல்டனையும், லக்கிக்கு, டாக் புல்லையும் துணை நிற்கச் செய்வதில் நிறைய நலன்கள் இருப்பதாகத் தோன்றுவதால் அதே பாணி காத்திருக்கும் ஆண்டிலும் தொடர்ந்திடவுள்ளது ! ஒரே மாற்றம்- சந்தா பாணிகளின் எண்ணிக்கையில் மாத்திரமே ! A, B, C, D, க்குத் துணையாக சந்தா E-ம் 2017-ல் களம் காண்கிறது!
இந்தத் திட்டமிடலுக்குள் நான் தீவிரமாய்ப் புகுந்த முதல் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது ஆண்டின் மொத்த இதழ்களின் எண்ணிக்கையினையே ! மறுபதிப்புத் தடத்தில் 12 இதழ்கள் + Popular டெக்ஸ் தடத்தில் 12 இதழ்கள் என்று 2016-ல் போட்டுள்ள template-ஐ அட்சரசுத்தமாய் 2017-க்கும் தொடரும் பட்சத்தில் - புது வரவான சந்தா E-க்கென குறைந்த பட்சமான இதழ்களை இணைத்தாலே - மொத்த count 50-ஐத் தாண்டி விடுமென்று புரிந்தது. ஏற்கனவே 48-ல் பட்ஜெட்டும் எகிறிடுகிறது ; வாசிப்பில் பலருக்கும் தேக்கம் நேர்கிறது என்பதில் இரகசியமேது ? தீவிர நண்பர்கள் இதனை மறுப்பார்களெனினும் நிஜம் அதுவே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. So வழக்கமான 48+ சந்தா E+ Super 6 என்ற பட்டியல் – 2017-ன் நடைமுறையில் இருப்பின் அதுவே நயமான வாத்து பிரியாணிக்கான recipe ஆகிப் போகுமென்று பட்டதால் - நடைமுறையிலுள்ள ஒவ்வொரு சந்தாக்களிலும் தலா 2 இதழ்களைக் குறைத்திடுவதே வழியென்று புரிந்தது ! ஆக சந்தா A+B+C+D = 40 என்று எழுதிக் கொண்டான பின்பே கதைத் தேர்வுக்குள் புகுந்தேன்! இன்னும் சொல்லப் போனால் - ரெகுலர் சந்தாக்களில் தலா 9 இதழ்கள் என்ற திட்டமிடலோடு - 4 x 9 = 36 + சந்தா E 6 = TOTAL 42 இதழ்கள் என்ற கணக்கையும் போட்டுப் பார்த்தேன்தான் ! ஆனால் ரொம்பவே நாயகர்கள் அடி வாங்குவது போல் தோன்றியதால் அந்தத் திட்டத்தை மூட்டை கட்டிவிட்டேன் !
சந்தா A-ன் பட்டியலுக்குள் பெரிய சிரமங்களின்றி கீழ்க்கண்ட ‘ரெகுலர்களின்‘ பெயர்களை டிக் அடிக்க முடிந்தது !
- லார்கோ வின்ச்
- வேய்ன் ஷெல்டன்
- கமான்சே
- ரிப்போர்ட்டர் ஜானி
- ஜேசன் ப்ரைஸ் (இறுதி பாகம் காத்துள்ளதல்லவா ?)
என்று 5 பெயர்கள் தானாய்த் தேர்வாகிக் கொள்ள, பாக்கி 5 பற்றி மாத்திரமே நான் சிந்திக்க வேண்டி வந்தது ! நடப்பாண்டுக்கும், புத்தாண்டுக்குமிடையே வேறுபாடு காட்டிடல் அவசியமென்று நினைத்தேன் ! So கொஞ்சமேனும் புது இரத்தம் அவசியமென்று தோன்றியதால் எனது தேடல்கள் புது நாயக / நாயகியர் திசையில் ஓடத் தொடங்கியது ! ஏகப்பட்ட மொழிகளின், ஏகப்பட்ட ஹீரோக்களை அலசினேன்... உருட்டினேன் ! ஆனால் புதுவரவுகளுக்கு நம்மால் வழங்கக் கூடிய slot-களின் எண்ணிக்கையில் வந்து நின்ற போது நிறையத் தொடர்கள் அடிவாங்கின ! BATMAN ; வேதாளன் போன்ற popular தேர்வுகளுக்கும் ‘மடியில் 2 இடங்கள்; மனதில் பாக்கி இடங்கள்‘ என்ற டயலாக்கை நான் எடுத்து விட்டால் - "முன்வாசல் அங்கே...பின்வாசல் இங்கே.....! அண்ணாச்சிக்கு வசதி எப்படியோ ? " என்று படைப்பாளிகள் பதில் கேள்வி கேட்கும் ஆபத்துண்டு என்பதால் அந்த முயற்சிகளை நான் துவக்கவேயில்லை ! எஞ்சி நிற்கும் 'என்றும் பசுமையான' ரிப் கிர்பி ; காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஆகியோரைக் கொண்டு நான் பட்டியலமைத்தால் கொட்டாவிகளுக்குப் பஞ்சமேயிராது என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை ! பழமையில் நிலைகொண்டு நிற்கும் நண்பர்கள் இதனில் வன்மையாய் மாறுபடலாம் ; ஆனால் காலத்துக்கு ஒவ்வாக் கதைகள் காவியங்களாகவே சில அளவுகோல்களில் காட்சியளிப்பினும் - அவற்றிற்கு முன்னுரிமை வழங்குவது முன்செல்லும் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதில் எனக்குள் குழப்பமில்லை ! So நூற்றுக்கணக்கான / ஆயிரக்கணக்கான கதைகள் என்ற excess baggage இல்லாத, – நமது தற்போதைய ரசனைகளுக்கு நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் பக்கமாய் பார்வையை ஓடவிட்ட போது shortlist ஆனோர் 5 நாயக / நாயகியர் ! அவர்களது தொடர்களைப் பொறுமையாய் பரிசீலிக்கத் துவங்கியதே எனது அடுத்த பணியாக இருந்தது. நாம் பரிசீலித்தால் மாத்திரம் போதுமா ? படைப்பாளிகளின் எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்தி செய்திட முடிந்தால் மட்டும் தானே தேர் எல்லையை விட்டு நகரும் ? So அவர்களது ராயல்டி அளவுகோல்களில் நாம் அடிவாங்கும் தருணங்களில் – “சீச்சீ... எனக்கு ஜல்ப்பு புடிச்சிருக்கு... புளிப்பான இந்தப் பழம் தொண்டையைப் பதம் பார்த்து விடுமே !!” என்று கெத்தாக சுனா.பானா பாணியில் ஜகா வாங்கிடவும் அவசியமானது !
To cut a long story short – LADY S தொடரானது நமது திட்டங்களுக்கு ரொம்பவே வாகான தேர்வாய்த் தோன்றியது ! டாப் கதாசிரியர் வான் ஹாம்மேவின் ஆக்கம் ; இன்றைய நவீன உலகைச் சார்ந்த (புராதனமிலாக்) கதைக்களம் ; அதே சமயம் தொடரில் இதுவரையுள்ளதே சுருக்கமான கதையெண்ணிக்கை (14 ஆல்பம்கள்) என்று நமக்கு சாதகமான சகல பெட்டிகளையும் டிக் அடிக்க LADY S-க்கு சாத்தியமானதால் அவருக்குத் தலையசைத்தேன் ! துவக்கக் கதை – 2 பாகங்கள் கொண்டதென்பதால் ‘விடைகொடு ஷானியா‘ டபுள் ஆல்பமாகத் திட்டமிட்டேன் ! தொடரும் சாகஸம் one shot சிங்கிள் ஆல்பம் என்பதால் ‘சுடும் பனி‘ fix ஆகிப் போனது. ஆக 5+2 என 7 இதழ்கள் உறுதியான நிலையில் - நமது fantasy நாயகர் ஆஜானுபாகுவாய் என் முன்னே நின்றார் மிரட்டலாய் ! 2016-ல் சந்தா Z-ல் தோர்கலை இணைக்கலாம் என்ற எண்ணத்தில் mainstream சந்தாவில் அவருக்கு இடம் தராது போக ; பின்னர் சந்தா Z டீலில் விட்டுப் போக - 2016-ல் இந்த lovable நாயகருக்கு இடமின்றிப் போனது ! அந்தத் தவறை திரும்பவும் செய்திட வேண்டாமென்ற முன்ஜாக்கிரதையில் இன்னொரு சிங்கிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் என்ற தொகுதி உடன்படிக்கை போட்டு விட்டேன் - தோர்கலோடு ! ஆக 7+2 = 9 இடங்கள் பூர்த்தியான நிலையில் எஞ்சியது ஒரே ஸ்லாட் தான்! அந்த வெற்றிடத்தை நிரப்பிட வருகிறார் ட்யுராங்கோ! இவருமொரு ப்ராங்கோ- பெல்ஜியக் கௌபாயே ! ஒற்றைக் கழுகு....குறைவாய்ப் பேச்சு / நிறைவாய் செயல் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ; இவருக்குமே ஒரு கை செயலற்றுப் போக - இடதுகையே இவரது சாதிக்கும் கரம் ! THE GREAT SILENCE என்றதொரு இத்தாலிய கௌபாய் திரைப்படத்தை சார்ந்த முதல் ஆல்பத்தோடு துவங்கும் இந்தத் தொடர் - The Good, the Bad and the Ugly ; "Once Upon a Time in the West" போன்ற 'ஹிட்' ஹாலிவுட் திரைப்படங்களை ஆங்காங்கே தொட்டுச் செல்லுமொரு கிளாசிக் western ! பிரபல ஓவியர் Yves Swolfs-ன் கைவண்ணத்தில், வண்ணத்தில் மிளிரும் இந்தத் தொடரில் 17 ஆல்பங்கள் மட்டுமே உண்டு என்பதால் ஆண்டாண்டு காலமாய் இவரைக் கொண்டு ஜவ்வு இழுக்கப் போவதில்லை நாம் ! அது மட்டுமன்றி - முத்து 45-வது ஆண்டுமலரின் பொருட்டு ஏக் தம்மில் இவரது முதல் 4 ஆல்பங்களும் ஒரே edition ஆக வரவுள்ளது ! So அறிமுகமே 4 சாகசங்கள் ஒன்றிணைந்ததொரு அதிரடி ஆல்பத்தில் ! ‘சத்தமின்றி யுத்தம் செய்‘! 2017-ன் முதலிதழ் ஆன பின்னணி இதுவே ! So இதழ்களின் எண்ணிக்கையானது 10-ல் நின்றாலும், கதைகளின் எண்ணிக்கையில் வழக்கமான 12-ஐத் தாண்டியிருக்கும் 2017-ன் சந்தா A -வினில் ! Here are the visuals !
- இருப்பதே 10 இடங்கள் ; இதனில் இரவுக்கழுகாருக்கு எத்தனை ?
- இதர போனெல்லி crew-க்கு எத்தனை ?
- சமீபமாய் சாதித்த மர்ம மனிதன் மார்ட்டினுக்கு என்ன கௌரவம் ?
- மெகா சைஸில் ஏதேனும் ?
- டெக்ஸ் கதைகளில் சிங்கிள் எத்தனை ?டபுள் எத்தனை ?
- 650 + கதைகள் கொண்ட டெக்ஸ் தொடரில் எதைத் தேர்வு செய்வது ?
என்று எக்கச்சக்கப் பாய்ப்பிறாண்டல்கள் இங்கே அவசியமாயின ! படித்தேன்... புரட்டினேன்... பக்கம் பக்கமாய் ஒரு லோடுக் கதைகளை ! இறுதியாய் ஒரு தீர்மானத்துக்கு வந்த போது - இரவுக் கழுகாருக்கென 8 ஸ்லாட்கள் & 9 கதைகள் ஒதுக்கிட முடிந்திருந்தது ! அவற்றுள் போனெல்லியின் நாவல் காமிக்ஸின் பிரதிநிதிகளாக ‘ஒரு தலைவன் ... ஒரு சகாப்தம்‘ + ‘Frontiera‘ வண்ணத்தில் – மெகா சைஸில் ஒரே இதழாகக் கைகோர்க்கின்றன- தீபாவளி மலராக ! ("மெகா சைஸ்" எனும் போது- அது ‘தலையில்லாப் போராளியின்‘ அளவென்பதை நினைவு கூர்க!) Tex கதைத் தேர்வுகளுக்குள்ளேயும் இயன்றளவு variety காட்டிட முனைந்திருக்கிறேன் ! புதுயுகக் கதாசிரியர்களின் கதைக்களங்கள் ; golden era -விலிருந்தும் சரிசமமான தேர்வுகள் என்று ‘தல‘ தாண்டவத்தின் பொருட்டு என் தலையை இயன்றமட்டிலும உருட்டியுள்ளது ஆண்டின் போக்கின் போது நிச்சயம் புரியும் ! சந்தா D-ன் மறுபதிப்புப் பட்டியலில் ஓரிடத்தை ‘மரணத்தின் நிறம் பச்சை‘க்கெனவும் ஒதுக்கியிருப்பதால் - 9+1=10 என்றாகிறது இரவுக்கழுகின் கதை எண்ணிக்கை ! ஏற்கனவே Super 6-ல் உள்ள ‘டிராகன் நகரத்தையும்‘ சேர்க்கும் போது total 11 எனும் போது - 2017-லிலும் பிரத்யேக Tex தடம் தொடர்வது புரிந்திடும் ! மர்ம மனிதன் மார்ட்டினுக்கொரு Mystery Special – 2 கதைகளுடன் ; டைலன் டாக்கிற்கொரு இடம் ; ஜுலியா & ராபினுக்கு லயன் # 300-ல் இடங்கள் என இதர போனெல்லி பெருமக்களை இங்கும், அங்குமாய் நுழைக்க எத்தனித்திருக்கிறேன் ! நமது ‘தல‘ வழிவிட்டாலன்றி மற்றவர்களுக்கு அதிக இடஒதுக்கீடுகள் சாத்தியமாகாது என்பது நிச்சயம் உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் folks ! Maybe 2018-ல் நமது மஞ்சள் சட்டை மாவீரரை சற்றே cool off செய்திட ஏகோபித்த அனுமதி கிடைப்பின் - ஓரளவுக்கு சமவிகிதப் பங்கீட்டைப் பரிசீலனை செய்திடலாம் ! ஆனால் ஜெயிக்கும் குதிரைக்கு ஓய்வளிக்க இப்போதைக்கு அவசியம் தோன்றிடவில்லை என்பதால் Tex rocks on ! இறுதியாய் இருந்ததொரு இடத்திற்குள் தலைநுழைக்க ஜடாமுடி மேஜிக் விண்டுக்கும் - நமது இளவரசிக்குமிடையே தான் போட்டியிருந்தது ! விற்பனையில் கடைசியிடம் பெற்ற dubious distinction மேஜிக் விண்டிற்கு எதிராகச் சதி செய்திட- கல்தா அவருக்கும் ; சீட் இளவரசிக்கும் கிடைக்கிறது ! அதுமட்டுமன்றி, நமது லயனின் பயணத்தைத் துவக்கி வைத்த இளவரசி – 300-வது இதழ் எனும் மைல்கல்லிலும் இடம்பிடிப்பது ஒரு விதத்தில் பொருத்தமே என்று பட்டதால், இத்தாலியக் கூட்டத்தோடு நமத பிரிட்டிஷ் இளவரசியையும் கரம் கோர்க்கச் செய்ய நினைத்தேன் ! So மாடஸ்டியின் ‘சிறையில் ஒரு சிட்டுக்குருவி‘ மடிப்பாக்கத்திலும், இன்னபிற மா.மு.க. தொகுதிகளிலும் மைசூர்பாகு விநியோகத்துக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உருவான கதை இதுதான் ! மேஜிக் விண்டைப் பொறுத்தவரை இது end of the road அல்ல ! சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாக மீண்டு(ம்) வருவாரென்று எதிர்பார்க்கலாம்!
Next Stop – சந்தா C ! எனது ஆதர்ஷக் கதைக்களங்கள் துளி கூடச் சிரமம் தராது தம்மைத்தாமே தேர்வு செய்து கொண்டன ! எப்போதுமே விற்பனையில் உச்சத்தில் நிற்கும் ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்குக்கு 2 இடங்கள் என்று ஆரம்பித்த பட்டியல் கீழ்க்கண்டவாறு ஓடியது!
சிக்பில் – 1
க்ளிப்டன் – 1
மதியில்லா மந்திரி – 1
பென்னி – 1
ரின்டின்கேன் – 1
2016-க்கு ஆட்டத்தில் சேர்க்கப்பட்டிரா ப்ளுகோட் பட்டாளத்தின் பட்டையைக் கிளப்பும் சாகஸமொன்றும் இம்முறை தயாராக நிற்க - பட்டியலின் எண்ணிக்கை 8-ஐத் தொட்டது - அவர்களது இணைப்போடு ! நமது நீலப் பொடியர்கள் SMURFS-க்கு மீதமிருந்த 2 இடங்களையும் ஒப்படைத்த போது சுலபமாய் ‘சுப மங்களம்‘ போட முடிந்தது கார்ட்டூனின் கதைத் தேர்வுகளுக்கு ! நவம்பரில் வரவிருக்கும் லியனார்டோ தாத்தா சூப்பராய் ஸ்கோர் செய்திடும் பட்சத்தில் ஸ்மர்ப்ஸ் -1; லியனார்டோ -1 என்று பங்கு பிரித்திடலாம் ! தாத்தாவின் செயல்பாடு so so என்றிருப்பின் ஸ்மர்ப்ஸ்கள் 2 இடங்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள் ! இவர்கள் தவிர, இன்னமும் 2 கார்ட்டூன் தொடர்களையும் தீவிரமாகவே பரிசீலனை செய்தேன் ! ஆனால் கிட்டத்தட்ட 80 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடர் ; 70 கதைகள் கொண்ட சிக் பில் ; 35+ ஆல்பம்கள் கொண்ட க்ளிப்டன் ; 67 ஆல்பம்கள் கொண்ட ப்ளுகோட் பட்டாளம் என்ற நடப்பு நாயகர்களுக்கிடையே மேற்கொண்டும் புதுசாய் 30/40 கதைகள் கொண்ட தொடர்களை கோர்த்து விட மனம் ஒப்பவில்லை ! So சந்தா C தொடர்கிறது அதே நாயகர்களோடு – ஆனால் அட்டகாசமான கதைகளோடு ! Here they are...!
- மின்சாரக் கையாருக்கு – 2
- மொட்டைத்தலை சகா கொண்டவருக்கு – 2
- பூப்போட்ட Jockey போட்டவருக்கு – 2
- முதுகில் சதாகாலமும் ஆக்சிஜென் டாங்கைச் சுமந்தே செல்லும் அழகு சுந்தரருக்கு – 2
என்று பிரித்துக் கொடுத்து விட்டேன் ! இடம் # 9 – டெக்ஸின் வண்ண மறுமதிப்புக்கென ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்க - இடம் # 10-ல் ஜான் சில்வரைப் போடலாமாவென்ற எண்ணம் எழுந்தது - சமீபமாய் அவரது முந்தைய இதழைப் பார்த்த போது ! So இவரது அறிமுக சாகஸமான ‘ஆகாயக் கல்லறை‘ + இன்னுமொரு புதுக்கதையும் இணைந்தொரு “சில்வர் ஸ்பெஷல்“ 2017-ன் பட்டியலில் இடம் பிடித்தது ! இவரை நீங்கள் நிச்சயமாய் reject செய்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையோடே அட்டவணையை அச்சடித்தும் விட்டோம் ! நீங்கள் மட்டும் அவருக்கு ஞாயிறுப் பதிவில் thumbs down தந்திருப்பின்- ‘அழகாய் அசடு வழிவது எப்படி?‘ என்ற புத்தகத்திற்கு நான் அவசரமாய் ஆர்டர் போட வேண்டி வந்திருக்கும் ! தப்பிச்சேன்டா சாமி ! These are the reprint selections !
ஆக சந்தாக்கள் 4 & இதழ்கள் 40-ம் தீர்மானமாகி விட்ட நிலையில் காத்திருந்தது சந்தா E தேர்வுகள் மட்டுமே ! இங்கேயும் 10 இதழ்கள் என்று நான் அறிவித்து விட்டால் பட்ஜெட்டிலும் சரி ; பணிச்சுமைகளிலும் சரி - அழுத்தம் பன்மடங்கு கூடிப் போய் விடுமென்று புரிந்தது ! அந்த முன்ஜாக்கிரதையில்தான் முன்கூட்டியே இங்கே 6 இதழ்கள் மட்டுமே என்று ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவித்திருந்தேன் ! அந்த 6 இதழ்களும் கூட ரொம்பவே கூடுதல் பட்ஜெட்டுடன் இருந்திட வேண்டாமே என்ற எண்ணமும் எனக்குள் விதை விட்டிருந்தது ! 'விலை ஜாஸ்தி' என்று ஆரம்பத்துச் செக்போஸ்டிலேயே புது வண்டியானது ஆட்டம் கண்டுவிடக் கூடாதென்பதால் நீளமான கதைத்தொடர்களை ; பருமனான தொகுப்புகளை நெருங்கிடவேயில்லை ! 4 பாகம் கொண்டதொரு கதையை ஒரே இதழாய் வெளியிடுவதென்றாலே விலை 300 / 400 என்று எகிறிவிடுமென்பதால் – அத்தகைய ஆக்கங்களுக்கு தூரத்திலிருந்தே சலாம் போட்டு விட்டேன் ! இதன் பொருட்டு சிலபல ருசிகரமான தொடர்களை (இப்போதைக்கு) பரிசீலனை செய்யும் வாய்ப்புகளை நாம் இழந்திருக்கலாம் தான் ; ஆனால் ஆரம்பத்திலேயே டாப் கியர் போடுவதை விடவும் சிறுகச்சிறுக வேகம் கூட்டிக் கொள்ளலும் விவேகமே என்றுபட்டது! So ஏகப்பட்ட அலசல்கள் ; ஆராய்வுகள் ; மண்டை நோவுகள் தொடர்ந்தன - சுத்தமாய் ஒரு மாதத்திற்கு ! எங்கெங்கோ- எப்போதெல்லாமோ நான் பார்த்திருந்த / கேள்விப்பட்டிருந்த தொடர்களையெல்லாம் பொறுமையாய் வரவழைத்து, ஆராய ஆராய- எனது தலைசுற்றல்கள் கூடியதே தவிர - விடைகள் கண்ணில்பட்ட பாடைக் காணோம் ! ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தது போல இம்முறை - ‘கிராபிக் நாவல்கள்‘ என்று அறிவித்தாலே அந்நாட்களில் காலராத்தடுப்பூசி போட வரும் ஆபீசரைப் போல டெரராய் யார் கண்களுக்கும் நான் தெரிந்திடக் கூடாதென்பதே எனது பிரதான இலக்காக இருந்தது ! மாறுபட்ட களங்கள் ; அதே நேரம் ரசிக்கக் கூடிய கதைகளாக அமைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தொடர்ந்தேன் ! அதன் பலனாய் கிட்டிய 6 கதைகளின் பட்டியல் இதோ!
* “பணமென்றால்...!“ – அறிமுகம் - ‘தி அண்டர்டேக்கர்‘ ! கொஞ்சம் திகில் ; கொஞ்சம் அதிரடி; நிறைய ஆக்ஷன்; நிறைவான கௌபாய் களம் ; முழு வண்ணத்தில் ! விரசமிலா ஒரு பெளன்சரின் பாணி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ?
* “என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம்“ – One Shot ! காதல் ; காமம் ; வசீகரம் கலவையாகிடும் போது அதனை நிராகரிக்கும் வலிமை நிறையப் பேருக்கு இருப்பதில்லை என்பதை black & white-ல் அதிரடியாய் சொல்லுமொரு ஆக்ஷன் த்ரில்லர்!
* “ஒரு முடிவிலா இரவு“ – சில துவக்கங்களுக்கு முடிவுரை எழுதும் வாய்ப்புகள் காணாமல் போய் விடும் போது சில பல பிரளயங்கள் நிகழலாம் ! அத்தகையதொரு இரவின் நிகழ்வுகளே இந்த சைக்கோ த்ரில்லர் ! Black & white!
* “கனவுகளின் கதையிது“ – எல்லாக் கனவுகளும் காலையானால் கலைந்து போவதில்லை ! கனவுகள் கற்பனையின் வெளிப்பாடாகவும் எல்லா நேரங்களிலும் இருந்திடுவதில்லை ! நேற்றைய மனிதர்கள் இன்றைய உலகுக்கு சேதி சொல்ல இதுவொரு பாலமானால்...? படித்துப் பாருங்களேன் இந்த one shot த்ரில்லரை !
* “நிஜம் நிசம்பதமாகிறது“ – ஒரு அசாத்தியச் சித்திர அதகளம் ! மனிதனின் துவேஷங்கள், புதியவர்களை ஏற்க மறுக்கும் பகையுணர்வுகள் ; யுத்தத்தின் வலிகள் ; தனிமையின் பயங்கள் என்று ஏராளமான உணர்வுகளைச் சொல்லும் ஒரு powerful நாவலின் காமிக்ஸ் ஆக்கமிது ! மிரளச் செய்யும் படைப்பிது - மிக வித்தியாசமான சைஸில் ! Black & white !
* காலம் தவறிய காலன் : SCI-FI ஆக்ஷன் த்ரில்லர் ; அதிரடிக்கு கதைக்களம் ; மிரட்டும் சித்திரங்கள் !! Again in b&w !
உங்களை ரூம் போட்டு அழச் செய்யும் ரகக் கதைகளல்ல இவை எதுவுமே ! எல்லாமே ஒரு விதத்தில் commercial ஆகவும், இன்னொரு பார்வையில் ஆழமாகவும் தென்படக்கூடிய படைப்புகளே ! இன்னமும் அமானுஷ்யம் ; Zombies ; Apocalypse ; எதிர்காலக் கதைகள் ; காதல் கதைகள் ; நிஜ வாழ்க்கைக் கதைகள் என ஏகப்பட்ட ரகங்கள் நமக்கென காத்துக் கிடக்கின்றன ! So இந்த முதல் சுற்றில் இந்த மாறுபட்ட வாசிப்புகளுக்கு நாம் தந்திடக்கூடிய வரவேற்புகளோ / விமர்சனங்களோ தான் இந்த வழித்தடத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்திடும் !
இந்த 6 இதழ்களின் தேடலின் பொருட்டு நான் சுற்றி வந்திருக்கக் கூடிய கதைத் தொடர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் ! அவற்றையெல்லாம் பார்க்கும் போது தான் - இன்னமும் எத்தனை அற்புதங்களை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது ! இந்த நிலையில்- பால்ய நினைவூட்டல்களை மட்டுமே செய்திடக்கூடிய புராதனங்களை தொடர்ந்து விரட்டிச் செல்வது அத்தனை உற்சாகம் தரும் விஷயமாய்ப்பட மறுக்கிறது ! நாம் நேரத்தையும், முயற்சிகளையும், செலவிடும் ஒவ்வொரு ரிப் கிர்பிக்கும், காரிகனுக்கும்,, சார்லிக்கும் பன்மடங்கு ஈடாகக் கூடிய ஒரு நூறு கதைகள் காத்துள்ளன folks ! பழமையைப் போற்றுவோம் – ஆனால் பழமையே இலக்கென்று நமக்கு நாமே கால்கட்டுக்கள் போட்டுக் கொள்ள வேண்டாமே ? எல்லையில்லாக் கற்பனைகள் சிறகடிக்கும் ஒரு புதுவானத்தைப் பார்த்த பரவசத்தின் முன்பாய் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர், அரை நிஜார்களோடு நாம் திரிந்த நாட்களை நினைவுபடுத்தித் தரும் அடையாளாச் சின்னங்களை ஒரு அளவுக்கு மேல் ஒப்பிடல் அபத்தமாய்ப்படுகிறது ! நம் எல்லைகளை - பழமையின் தேடலில் நாமே சுருக்கிக் கொள்ள வேண்டாமே ? எனது தேடல்கள் நாள் 1 முதலாகவே 100/100 வாங்கிடாது போகலாம்தான் ; இந்தப் புது பாணிகளுக்கு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளல் நேரமெடுக்கும் சமாச்சாரமாகிடலாம் தான் ! 'அட....எனக்கெதற்கு இந்த கனமான வாசிப்புகளெல்லாம் ?' என்ற கேள்விகள் தோன்றிடலாம் தான் ! God willing இந்தப் பொறுப்பில் எனக்கிருக்கும் 120 மாத அவகாசத்துக்குள் இந்தப் புதிய பூமிகளையும் ஆராய வாய்ப்புக் கிட்டின், நிச்சயமாயொரு மறக்க இயலா அனுபவம் காத்திருக்கும் என்றுபடுகிறது ! அதற்காக ஒட்டுமொத்தமாய் இதனுள் குதிக்கச் சொல்லவில்லை நான் ; வழக்கமான entertainment தடங்கள் அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும் தொடரட்டும் ! ஒரேயொரு ஓரத்து வண்டிப்பாதையினை மட்டுமேனும் - புதுக் தேடல்களுக்கென ஒதுக்கிடுவோமே ? ஒவ்வொரு ஆண்டும் நான் ஒப்பிக்கும் அதே ராகமாய் இது தோன்றிடலாம்தான் ; ஆனால் இம்முறை சந்தா E என்ற தடம் நனவாகிறது எனும் போது - we are not kidding any longer !
சந்தா E தொடர்பாய் சின்னதொரு முக்கியத் தகவலும் கூட! ஏற்கனவே ரெகுலர் சந்தாக்களுக்கான இதழ்களை சப்ளை செய்து ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கத் திண்டாடி வரும் வேளைகளில் இந்தப் புதுக் கத்தையினையும் கடனுக்கு அனுப்பி பளுவை ஏற்றிக் கொள்வதாக இல்லை ! So சந்தா நீங்கலாக மிஞ்சிப் போனால் 200 அல்லது 250 பிரதிகள் மட்டுமே அச்சிடவுள்ளோம் (of course ஏஜண்ட்கள் முன்பணம் தந்து ஒத்துழைத்தால் எண்ணிக்கை கூடிடும் தான் ) இந்தத் தம்மாத்துண்டு பிரிண்ட்ரன்- விலைகளை எசகுபிசகாக ஏற்றிவிடும் தான் ; ஆனால் இந்த ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நஷ்டமே எழுந்தாலும் அதனை நாமே சமாளிப்பது என்ற தீர்மானத்தில் விலைகளை நிதானமான அளவுகளுக்கே அமைத்திடுகிறோம் ! So 2017-ன் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாய் இருக்குமென்பதால் பொதுவான விலை சார்ந்த ஒப்பீடுகள் இல்லாதிருப்பின் மகிழ்வோம் ! “கட்டாயம் சந்தா கட்டச் செய்ய இதுவொரு யுக்தி !“ என்ற விமர்சனங்கள் இங்கே எழலாம் தான் ; “குறைவான எண்ணிக்கையெனில் இது க்ரேமார்கெட்டை ஊக்குவிக்கும் !“ என்ற எச்சரிக்கைகளும் எழலாம் தான் ! ஆனால் நமக்குள்ள சிரமங்கள் நமக்கே பிரத்யேகமானவை எனும் போது - அவற்றைச் சமாளிக்கும் தீர்மானங்களும் நமதாகவே இருக்க வேண்டிப்போகிறது ! So சந்தா E-க்கு மட்டுமாவது subscribe பண்ணுவதா ? அல்லது உங்கள் நகர ஏஜெண்டை தாஜா செய்து முன்பணம் அனுப்பச் செய்வதா ? அல்லது அப்போதைக்கு ஆன்லைனில் பார்த்து வாங்கிக் கொள்வதா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
சந்தா E தொடர்பாய் சின்னதொரு முக்கியத் தகவலும் கூட! ஏற்கனவே ரெகுலர் சந்தாக்களுக்கான இதழ்களை சப்ளை செய்து ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கத் திண்டாடி வரும் வேளைகளில் இந்தப் புதுக் கத்தையினையும் கடனுக்கு அனுப்பி பளுவை ஏற்றிக் கொள்வதாக இல்லை ! So சந்தா நீங்கலாக மிஞ்சிப் போனால் 200 அல்லது 250 பிரதிகள் மட்டுமே அச்சிடவுள்ளோம் (of course ஏஜண்ட்கள் முன்பணம் தந்து ஒத்துழைத்தால் எண்ணிக்கை கூடிடும் தான் ) இந்தத் தம்மாத்துண்டு பிரிண்ட்ரன்- விலைகளை எசகுபிசகாக ஏற்றிவிடும் தான் ; ஆனால் இந்த ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நஷ்டமே எழுந்தாலும் அதனை நாமே சமாளிப்பது என்ற தீர்மானத்தில் விலைகளை நிதானமான அளவுகளுக்கே அமைத்திடுகிறோம் ! So 2017-ன் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாய் இருக்குமென்பதால் பொதுவான விலை சார்ந்த ஒப்பீடுகள் இல்லாதிருப்பின் மகிழ்வோம் ! “கட்டாயம் சந்தா கட்டச் செய்ய இதுவொரு யுக்தி !“ என்ற விமர்சனங்கள் இங்கே எழலாம் தான் ; “குறைவான எண்ணிக்கையெனில் இது க்ரேமார்கெட்டை ஊக்குவிக்கும் !“ என்ற எச்சரிக்கைகளும் எழலாம் தான் ! ஆனால் நமக்குள்ள சிரமங்கள் நமக்கே பிரத்யேகமானவை எனும் போது - அவற்றைச் சமாளிக்கும் தீர்மானங்களும் நமதாகவே இருக்க வேண்டிப்போகிறது ! So சந்தா E-க்கு மட்டுமாவது subscribe பண்ணுவதா ? அல்லது உங்கள் நகர ஏஜெண்டை தாஜா செய்து முன்பணம் அனுப்பச் செய்வதா ? அல்லது அப்போதைக்கு ஆன்லைனில் பார்த்து வாங்கிக் கொள்வதா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
ஆக, இது தான் 2017-ன் பயணத் திட்டம் ! நிதானமாய் எல்லாவற்றையும் பரிசீலித்தான பின்பு எனது சிந்தனைகள் பயணித்த பாதையினை நீங்களும் கண்டுகொள்ள சாத்தியமாகின் all will be well !
எனது "விஞ்ஞானபூர்வ விளக்கப் படலத்துக்குப்" பின்னேயும் உங்களுள் சிலருக்கு எழக்கூடிய சிலபல கேள்விகள் என்னவாகயிருக்கும்? என்று யூகிப்பதிலும் சிரமமில்லை என்பதால் - இதோ முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் முன்கூட்டிய கேள்வி-பதில்கள் :
எனது "விஞ்ஞானபூர்வ விளக்கப் படலத்துக்குப்" பின்னேயும் உங்களுள் சிலருக்கு எழக்கூடிய சிலபல கேள்விகள் என்னவாகயிருக்கும்? என்று யூகிப்பதிலும் சிரமமில்லை என்பதால் - இதோ முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் முன்கூட்டிய கேள்வி-பதில்கள் :
* 40 ரெகுலர் இதழ்கள் மட்டுமே என்பது ரொம்பவே குறைவி்ல்லையா?
எண்ணிக்கைகள் 40-ல் நின்றால் கூட – 2017-ன் பக்க எண்ணிக்கை கணிசமானதொரு நம்பர் ! ‘ட்யுராங்கோ‘ 4 பாகம் கொண்டதென்பதை மறந்து விட வேண்டாமே ! And 2016 -ல் டபுள் ஆல்பங்கள் மொத்தமே இரண்டு தான் ! ஆனால் 2017-க்கோ மொத்தம் 3 ! தவிர லயன் # 300-ல் – 4 கதைகள் ; தீபாவளி மலரில் 2 கதைகள்; மார்டினுக்கு 2 கதைகள் என்று திட்டமிடப்பட்டிருப்பதையும் கவனியுங்களேன் ! ‘நிறைய இதழ்கள் வருகின்றன - அந்த வேகத்திற்கு ஈடு தந்து படிக்க முடியவில்லை!‘ என்ற புகார்கள் சரிசெய்யப்பட வேண்டியவைகளே என்பதால் இந்தச் சின்ன எண்ணிக்கைக் குறைப்பு முயற்சி !
* தோர்கல் சந்தா A-வில் இடம் பிடிக்கத் தான் வேண்டுமா?
ஒரு அட்டகாசமான பந்தயக் குதிரையினை இனிமேலும் ஓரம்சாரங்களில் ஒண்டச் செய்வதாக இல்லை ! Fantasy கூட ஒரு தவிர்க்க இயலாக் கதைரகமே எனும் போது தோர்கல் நமது திட்டமிடல்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போவார் வரும் நாட்களிலும் !
* சாகஸ வீரர் ரோஜர் இல்லாவிட்டால் தமிழகம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் நல்லுலகில் ‘பந்த்‘ நடைபெறுமே? பரவாயில்லையா?
அவரது கதைகளை வெளியிடக் கூடாதென்ற திட்டமெல்லாம் கிடையாது ! அந்தத் தொடரிலிருந்து உருப்படியான சாகஸங்களைத் தேர்வு செய்வது தான் சிரமமாக உள்ளது ! இப்போது ரோஜரின் இரண்டாம் சுற்று துவங்கியுள்ளது – புதியதொரு அவதாருடன் ! அதன் ஆல்பம் # 2 இந்தாண்டு தான் வெளிவந்துள்ளது ! அது எத்தனை இதழ்களோடு முற்றுப் பெறுகிறது என்பது பற்றித் தெரிந்தான பின்பு – இந்தப் புதுயுக ரோஜரைப் பரிசீலனை செய்யலாமென்றுள்ளேன் !
* டேஞ்சர் டயபாலிக் is gone தானா ?
Black & white இதழ்களின் பெரும்பான்மையை மறுபதிப்புகளும் ; இரவுக் கழுகாரும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் நிலையில் என் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதே (வியாபார) நிஜம் ! இன்னும் ஒன்றரையாண்டுகள் பொறுமை காத்தால் இந்த Fleetway மறுபதிப்புகளை ஓரளவிற்கு மங்களம் பாடியிருப்போம் ! அப்போது open out ஆகிடும் வாய்ப்புகளை டயபாலிக் போன்றோருக்குத் தருவது பற்றித் தைரியமாக யோசிக்கலாம் !
* லார்கோ & ஷெல்டன் – தலா ஓரிடம் தானா ?
அவர்களது தொடர்களிலேயே இன்னமும் எஞ்சியிருப்பது தலா ஒவ்வொரு சாகஸமே என்பதால் – 2018 வரை அவர்களைத் தொடரச் செய்ய நினைத்தேன் ! தவிர இவர்களுக்குக் கூடுதலாய் வாய்ப்பளிப்பதாயின் LADY S-ன் கோட்டாவைக் காலி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும் ! 2016-ன் அட்டவணைக்கும், 2017-ன் அட்டவணைக்கும் மத்தியில் ‘பளிச்‘ வேறுபாடுகள் இல்லாது போயின் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் நேரிடக் கூடுமென்பதால் LADY S & ட்யுராங்கோ அறிமுகமாகிறார்கள்!
* டெக்ஸில் ‘அந்த‘ 550+ பக்கக் கதை கிடையாதா? கண்டனப் போஸ்டர்கள் அச்சிடவுள்ளோம் !!!
‘துரோகத்துக்கு முகமில்லை‘ ; (காத்திருக்கும்) ‘சர்வமும் நானே‘!; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமேது?‘ போன்ற கதைகளைப் படித்தான பின்பு - ‘டெக்ஸ்‘ என்ற இயல்பான நீதிக்காவலர் மீது நமக்கு அதிகமாகிடும் மரியாதையை ஒரு fantasy கதைக்களத்தினுள் இறக்கி விடுவதன் மூலம் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமேயென்று நினைத்தேன் ! ‘அந்த‘ 550+ கதையானது மாயாஜால மெபிஸ்டோவோடு மோதும் சாகஸம் ! தற்பேதைய Tex எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் தலைமையில் நமது இரவுக் கழுகாரின் கதைகள் இயல்பான; தரமான புதுக்களங்களைத் தேடிப் பயணித்து வரும் போது நாம் இந்த விட்டலாச்சார்யா பாணி Tex=க்கு ‘ஜே‘ போட்டால் பொருத்தமாக இருக்குமா ? பக்க நீளத்தை மட்டுமே பார்க்காது - கதையின் போக்கையும் கவனமாய் பரிசீலனை செய்யும் கடமை எனக்குண்டல்லவா?
* குண்டூ புக்ஸ் இவ்வளவு தானா? இன்னும் நிறைய எதிர்பார்த்தோமே ??
ஒரு புது வரவையும் நமது சாப்பாட்டு மேஜைக்கு அனுமதிப்பதாக இருப்பின், கூடுதலாய் சமைத்திடத் தேவைப்படும் ; அல்லது ஏற்கனவே உள்ளோர் கொஞ்சம் குறைத்துச் சாப்பிட்டாக வேண்டி வரும் ! யதார்த்தம் இது தானே ? So- சந்தா E எனும் புதுவரவை இணைத்தான பின்பும் சந்தாத்தொகைகள் 2016-ன் அளவுகளை ஓவராய் கடந்திடாது இருக்க வேண்டுமெனில் சில பல பத்தியங்கள் நமக்குத் தேவையன்றோ ? ஏற்கனவே “இரத்தக் கோட்டை“யும் காத்துள்ளது 2017-க்கென....! So திட்டமிடல்களில் நமக்குள்ள கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட இயலாதே ?
நியாயமாய்ப் பார்த்தால் – நமது கதைத் தேர்வுகள் ; பொருத்தமான விலைகள் என்று எழுதிப் பார்த்து, டோட்டல் போட்டு அந்தத் தொகையையே சந்தாவென்று அறிவித்தாக வேண்டும் ! ஆனால் இம்முறை நான் செயல்பட்டதோ கீழிருந்து மேலாய் ! அதாவது டோட்டலை முதலில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ரிவர்ஸ் கியரில் பயணத்தைத் தொடங்கினேன் ! So ‘புஷ்டியான புக்குகளின்‘ தேடலை விடவும் ‘ஆரோக்கியமான சந்தாவின்‘ வேட்கைக்கு பிரதானம் தர நேரிட்டது ! Hope I was right !!
*‘தலையில்லாப் போராளி‘ சைஸில் முயற்சிக்கவில்லையா ?
கலரில் முயற்சிக்கிறோம் இம்முறை அந்த மெகா சைஸில் !! டெக்ஸின் நாவல் காமிக்ஸ் # 1 & 2 இணைந்து ஒரே ஆல்பமாய் வண்ணத்தில், அட்டகாசமாய்க் காத்துள்ளது!
‘தலையில்லாப் போராளி‘யை முதல் முறை இந்த மெகா சைஸில் பார்த்த உற்சாகம் அடுத்த (அதே) முயற்சியின் போது ஒரு 25% குறைவான உத்வேகத்தை உண்டாக்கலாம் ! அதனையே வண்ணத்தில் முயற்சித்தால் ? சும்மா அதிராதா ? So இருக்கும் வரையறைக்குள் இயன்ற வேறுபாடுகளைக் காட்ட முயற்சிப்பதே எங்களது லட்சியமாக இருந்திடுகிறது!
* டிடெக்டிவ் கதைகள் அவ்வளவாய் காணோமே? கககபோ !
ரிப்போர்டர் ஜானி ; CID ராபின் நீங்கலாக – டைலன் டாக்கும், மார்டினும் – அசாத்தியங்களைத் தம் பணிகளில் துப்பறியும் ஸ்பெஷலிஸ்டுகள் தானே ? And ஜுலியா ஒரு pure டிடெக்டிவ் என்றில்லாவிடினும், க்ரைம், போலீஸ், மர்மம் என்ற களத்தில் உலா வருபவர் தானே ? பொதுவாகவே டிடெக்டிவ் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது தான் - தற்போதைய காமிக்ஸ் உலகினில் ! சோடாபுட்டிக் கண்ணாடி டிடெக்டிவ் ஜெரோமைப் பரிசீலித்தேன் ; but இடப்பற்றாக்குறையில் மனுஷனுக்கு வாய்ப்பில்லாது போய் விட்டது !
* ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகரை லபக்கி இருப்பதாகச் சொன்னது என்னாச்சு?
அவரது ஆல்பம் # 3 2017-ல் வெளிவரவுள்ளதாம் ! அது வெளியான பின்பாக மூன்று பாகங்களுக்கும் சேர்த்து ஒரே கான்டிராக்டாகப் போட்டுக் கொள்வோமே என்று படைப்பாளிகள் கேட்ட போது மறுக்க முடியுமா ?
* XIII – இரத்தப் படலம் மர்மம் (spin-offs) எதையும் காணோமே ?
2017-ல் மனுஷனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போமே ? உங்களுக்குச் சுற்றுகிறதோ - இல்லையோ ; எனக்கு ரங்க ராட்டினத்தில் அரை டஜன் தடவைகள் சவாரி செய்த உணர்வு எழுகிறது!
* கேப்டன் டைகர் ?
இரத்தக் கோட்டை!
* மேஜிக் விண்டுக்கு துரோகம் செய்த பாவத்துக்கு ஷமானின் சாபங்கள் விரட்டியடிக்கும் !
ஒன்றுக்கு 4 வாய்ப்புகள் கிட்டியும், ஏதோவொரு விதத்தில் வாசக அபிமானத்தை ஈட்டாது போய் விட்டாரே மனுஷன் ! Poorest performer in sales என்று புள்ளி விபரங்கள் பறைசாற்றும் போது, தீர்மானம் என் கைகளிலிருந்து நழுவி விடுகிறதே!
* சந்தா E ?
எனக்குமே இது முற்றிலுமொரு புது அனுபவம் ! கண்களை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு யானையைத் தடவிடத் தயாராகி வருகிறேன் ! தும்பிக்கையைப் பிடித்து ஆசி வாங்கிடுவேனா ? தூர்ப்பகுதியைத் துளாவி மணக்க மணக்க சாணத்தைச் சாகுபடி செய்யப் போகிறேனா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! கதைச் சுருக்கங்களின் வாசிப்புகள் ; நிறைய இன்டர்நெட் தேடல்கள் ; சில பல அயல்நாட்டு வாசகர்களின் அபிப்பிராயக் கோரல்கள் என்று எனது தேர்வுகளின் பின்னே ஏகமாய் முயற்சிகள் இருப்பினும் - அவற்றை முழுமையாய் மொழிபெயர்த்து, கதைக்களத்தினுள் இறங்கிடும் வரையில் எனது அனுமானங்கள் மேலோட்டமானவைகளாக மட்டுமே இருந்திட முடியும் ! ஆனாலும் இவை சாதித்துக் காட்டுமென்ற நம்பிக்கையோடு பயணம் புறப்படத் தயாராகிறேன் ! கலப்படமில்லா நிஜமிது folks ! எப்போதையும் விட இப்போது உங்கள் துணை எனக்கு அவசியம் !
* டி-ஷர்ட் உண்டா இம்முறை ?
நோ ! ஆனால் MC-வின் 45வது ஆண்டு; லயனின் இதழ் # 300; முத்து இதழ் # 400; பதிவினில் 25 இலட்சம் பார்வைகள் என ஏராளமான முக்கிய தருணங்களை 2017 தாங்கி நிற்பதால் இந்தாண்டின் 12 மாதங்களிலும் சந்தாதாரர்களுக்கு சிறுசிறு surprises காத்திருக்கும் ! அவை என்னவென்பதை அந்தந்த மாதத்து கூரியர் டப்பாக்களைப் பிரிக்கும் வேளைகளில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ! இந்த சர்ப்ரைஸ்ஸ் வரிசையில் சீனியர் எடிட்டரின் உபயம் ஒன்றும் காத்துள்ளது என்பது கொசுறுச் சேதி ! சந்தாவில் அல்லாத நண்பர்களும் இந்த surprise களை எட்டிட வாய்ப்பு இல்லாது போகாது - ஆனால் அது சற்றே தாமதமாய் ; உரிய விலை தந்து பெறும் விதமாகவே அமைந்திடும் ! “சந்தாதாரர்கள்“; கடைகளில் வாங்குபவர்கள்“ என்ற யதார்த்தத்தைத் தாண்டி சத்தியமாய் எங்கள் பார்வைகளில் எவ்வித ஏற்ற-இறக்கங்களும் கிடையாது ! ஆனால் சந்தாவெனும் பிராணவாயுவைத் தொடர்ந்து நமக்குச் செலுத்தி வரும் நண்பர்களை ஒரு மைல்கல் ஆண்டில் மட்டுமாவது மகிழ்விப்பது எங்களது கடமையென்று தோன்றியது ! அவர்களது உதவிகளின்றிப் போனால் இங்கே நாமிருந்த தடம் கூட மிச்சமிராது ! சந்தாக்களின் பெயரைச் சொல்லிப் போடப்படும் சாலைகளும் ; நட்டப்படும் சாலையோர மரங்களும், விளக்குகளும் பயன் தருவது நம் எல்லோருக்கும் தானே ? So சின்னதொரு ‘தேங்ஸ்‘ சொல்லும் முயற்சி மட்டுமே இது ! ஆகையால் இதனையும் ஒரு வாட்சப் விவாதப் பொருளாக்கிக் கொண்டு குழப்பிக் கொள்ளாதிருப்பின் மகிழ்வேன் !
இதற்கு மேலும் நான் இங்கே தொடர்ந்து கொண்டிருப்பின், படித்து படித்து உங்கள் கண்கள் என்னதைப் போலாகி விடக் கூடும் ! So விடைபெறுகிறேன் guys - என் ஆற்றலுக்குட்பட்ட முயற்சிகளை செய்துள்ளேன் என்ற சிறு திருப்தியோடு ! அதே திருப்தி உங்களுக்கும் தோன்றிடும் பட்சத்தில் – கடந்த சில மாதங்களது மெனக்கெடல்களின் வலி காணாமல் போயே போயிருக்கும் ! இன்னொரு நெடும் பயணம் நமக்கெனக் காத்துள்ளது ! நல்லதொரு துவக்கமாய் இன்றைய பொழுது அமைந்திடும் பட்சத்தில் உசேன் போல்டுக்கு செம சவால் தந்திடுவோம் என்ற திட நம்பிக்கை கொள்ளலாம் அல்லவா ? ஆண்டவனின் ஆசியும், உங்களது ஆதரவும் தொடரும் வரை- அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது!
இப்போதைக்கு எனது பணி முடிந்தது 2017-ன் திட்டமிடலைப் பொறுத்த வரைக்கும் ! இனி பந்து உங்களது கோர்ட்டில் தான் ! So தூள் கிளப்புங்கள் !
அப்புறம் ‘அக்டோபர் இதழ்கள்‘ என்றதொரு சமாச்சாரத்தையும் மறந்து விடாதீர்களேன் ப்ளீஸ் ? படிக்க, ரசிக்க, விமர்சிக்க நேரம் ஒதுக்கிட மறவாதீர்கள்! இன்று மதியத்துக்கு முன்பாகவே கூரியர்கள் / பதிவுத் தபால்கள் என சகலமும் புறப்பட்டுவிட்டன ! நாளை தூத்துக்குடி நகரில் துவங்கிடும் புத்தக விழாவினிலும் நமது புது இதழ்களை வாங்கிடமுடியும் - நமது ஸ்டால் நம்பர் 47-ல் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now!
P.S : விரல் ரேகைகள் தேயும் அளவுக்கு இந்தப் பதிவில் டைப்போ-டைப்பென்று டைப்பியிருப்பதால் - இந்த ஞாயிறுக்கு இன்னுமொரு புதிய பதிவிட சத்தியமாய் விரல்களில் திராணியிராது ! So ஞாயிறு அவசியப்பட்டால் ஒரு உப பதிவு போட்டுவிட்டு, ஜாலியாய் அரட்டைக்குத் தயாராகிடுவேன் !
P.S : விரல் ரேகைகள் தேயும் அளவுக்கு இந்தப் பதிவில் டைப்போ-டைப்பென்று டைப்பியிருப்பதால் - இந்த ஞாயிறுக்கு இன்னுமொரு புதிய பதிவிட சத்தியமாய் விரல்களில் திராணியிராது ! So ஞாயிறு அவசியப்பட்டால் ஒரு உப பதிவு போட்டுவிட்டு, ஜாலியாய் அரட்டைக்குத் தயாராகிடுவேன் !
நான் பாஸாயிட்டேன்.
ReplyDeleteமுதலிடத்தை பிடிச்சுட்டேன்.
அனைத்து கதைகளுமே அட்டகாசமான தேர்வுகள்...கலக்கலாம் இந்தப் புத்தாண்டில் வாழ்த்துகள் சார்.
Deleteவாழ்த்துக்கள் ATR sir...
Deleteஇந்த மைல்கல் பதிவில் மிகவும் பொருத்தமான நண்பருக்கு முதலிடம் அமைந்தது மகிழ்ச்சியை தருகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete2017 கதை தேர்வுகள் அனைத்தும் அருமை!
Deleteநான் 2!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..
Deleteஈரோடு விஜய்.!
Deleteபிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
( சிபி அவர்கள் இளைய தளபதி என்று குறிப்பிட்டதால் தவறாக நினைத்துவிட்டேன்.! அதான் லேட்!,.மன்னிச்சு .)
உங்கள் பிறந்த தினத்தில் எடிட்டர் சந்தா அட்டவணையை வெளியிட்டு அறுசுவை விருந்தே வைத்து விட்டார்.!
யாயாயாயாகூகூகூகூகூ. . .!!!
ReplyDelete3rd
ReplyDeleteOops...5th
Deleteசூப்பர்
ReplyDelete'தொடரி' பதிவு....வரலாற்றில் மிக நீளமான பதிவு போல தெரிகிறதே.
ReplyDeleteMy first choice goes to ghost....Eeeeeee....Exotic....waiting for it.
Delete2018-ல் சந்தா 'F' -for Fanatics and 'G' -'Ghost'.
மேற்கிலிருந்து ம. ராஜவேல். : வெள்ளைக்காரன் எழுத்துக்களுக்கு copyright கோராத வரைக்கும் சகல எழுத்துக்களையும் கலக்கிட மாட்டோமா - என்ன ?
Deleteஆகா....படித்து விட்டு வர்றேன் சார்...
ReplyDeleteவிஜயன் சார், அனைத்தும் அமர்க்களம்!! மீண்டும் ஒரு முறை படித்து விட்டு எனது எண்ணத்தை தெரிவிக்கிறேன்!
ReplyDeleteஅனைவரையும் சந்தோஷ படுத்த வேண்டும் என்பது உங்களின் இந்த அட்டவணை நிரூபிப்பது போல் உள்ளது!! வாழ்த்துக்கள்! நன்றாவே உள்ளது!!! சந்தோசம்!
Deleteஆகா....படித்து விட்டு வர்றேன் சார்... :))
ReplyDelete.
First 10
ReplyDeleteயப்பா இந்தப் பதிவை படிப்பதற்கே நீண்ட நேரம் ஆகும் போல் தெரிகிறதே!
ReplyDeleteஇதை தயாரிக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்! உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது எடிட்டர் சார் !
Radja : ஓராண்டுக்கான பயணமல்லவா சார் ? முஸ்தீபுகள் பலமாய் இருப்பதில் வியப்பில்லை தானே ?
Deleteமகிழ்ச்சி. மிக்க நன்றி.
ReplyDeleteஹைய்யா சூப்பரு.
ReplyDeleteஎப்படி சார்? இந்த பதிவை படித்து அதன் தாக்கத்திலிருந்து விடுபடவே வெகு நாளாகும் போலிருக்குதே.எப்படி இப்படி வகை வகையாக எங்களுக்கான காமிக்ஸ்களை இனம் கண்டு வழங்கவும், யார் மனதும் நோகாமலும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து (உங்கள் சிகையழகின் ரகசியம் இதுதானா?) தர முடிகிறது. நீங்கள் வரும் ஆண்டில் உங்கள் உழைப்புக்கேற்ற வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள் சார். இது நிச்சயம். என் முதல் வாழ்த்துக்கள். இதில் குறையெல்லாம் சொல்லமாட்டேன் சார். இதற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பை நினைத்தால் நாங்கள் செலுத்தும் சந்தா தொகையெல்லாம் வெறும் தூசுதான்.நீங்க அடிச்சி தூள் கிளப்புங்க சார். துணைக்கு நாங்க இருக்கோம். இரவு மறுபடி மறுபடி உங்கள் பதிவை படிக்க வேண்டும். வாழ்த்துக்கள் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும்.
ReplyDeleteAT Rajan : இன்னமும் நிறைய செய்திட முடியும் சார் ! ஆனால் பட்ஜெட் மீதும் ஒரு கண் அவசியமாகிடுகிறது அல்லவா ?
Deleteடியர் விஜயன் சார் எவ்ளோபெரிய மாத்திரை:-) என்பது போல எவ்ளோ பெரிய அட்டவணை. உண்மையிலேயே அக்மார்க் அட்டகாசம். எல்லா தரப்பையும் திருப்தி செய்துள்ளீர்கள் என்றே சொல்லலாம். உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் இந்தா பிடியுங்கள் அழகிய பூங்கொத்து.டெக்ஸின் மறுபதிப்பு மரணத்தின் நிறம் பச்சைக்கு பதில் பளிங்கு சிலை மர்மமோ அல்லது பழிக்கு பழியோ இடம் பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்பதை தவிர வேறொன்றும் குறையில்லை சார்.மேலும் கொரில்லா சாம்ராஜ்யம் 2017ல் வண்ணத்தில் மறுபதிப்பு சொல்லியிருந்தீர்களே சார். அதற்கு வாய்ப்பில்லையா
ReplyDeleteஇதை குறையாக கேட்க வில்லை சார்.டாக்டர் சார் கேட்கும் கேள்வி எனக்கும் மனதில் எழுந்தது. கொரில்லா சாம்ராஜ்யம் வண்ணத்தில் என்றால் சந்தா தொகை எகிறிவிடும் என்ற உச்சத்தில் கொரில்லா சாம்ராஜ்யம் இடம்பெறவில்லையா? அல்லது கடுமையான இடநெருக்கடியால் தவிர்க்கப் பட்டதா?
Deleteஅச்சம் உச்சமாக மாறிவிட்டது.சாரி.
Delete+1,கொரில்லா சாம்ராஜ்ஜியம்
Deleteகொரில்லா சாம்ராஜ்யத்தில் அப்சலூட் க்ளாசிக் சீசன் 2வில் நுழைவோமா சார்??
Delete@ FRIENDS : "கொ.சா." - மாயாவியின் பைனல் மறுபதிப்பின்வெளியீடாக வண்ணத்தில், ஹார்ட்கவரில் அமைந்தால் ஒரு அற்புத தருணமாய் அமைந்திடாதா ?
Delete// டெக்ஸின் மறுபதிப்பு மரணத்தின் நிறம் பச்சைக்கு பதில் பளிங்கு சிலை மர்மமோ அல்லது பழிக்கு பழியோ இடம் பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்பதை தவிர வேறொன்றும் குறையில்லை //
Deleteயானும் அவ்வண்ணமே கோரும்.....
எடிட்டர் சார்.!
Deleteபுனித சாத்தான் கூறுவது சரி என்று படுகிறது.! டெக்ஸ் கதைகளில் பிடிக்காத கதைகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய கதைகளில் இதுவும் ஒன்று.காரணம் கிரகம்விட்டு கிரகம வந்து வில்லன் வேலை பார்க்கும் ஏலியன் கப்ஸா கதை நமது டெக்ஸ் வில்லருக்கு எதுக்கு.????
டெக்ஸின் மறுபதிப்பு மரணத்தின் நிறம் பச்சைக்கு பதில் பளிங்கு சிலை மர்மம் இடம் பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்!!
Deleteசந்தா A B C D மகிழ்ச்சி. சந்தா E - (keeping the fingers crossed) நிறைய கருப்பு வெள்ளை இதழ்கள் உள்ளதே சார். சிறிய ஏமாற்றம். அடுத்த வருடமாவது டேஞ்சர் டயபாலிக்கிற்கு இடம் ஒதுக்குங்கள் சார். சின்ன டவுட் : ப்ளாட்டினம் , கோல்ட் இடம் மாறியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
ReplyDeleteMohammed Harris : நகைக்கடை பக்கமாய் மழைக்குக்கூட ஒதுங்கியதில்லை என்பதால் உலோகங்களின் மதிப்பு பற்றிய ஞானம் நஹி !!
Delete//சின்ன டவுட் : ப்ளாட்டினம் , கோல்ட் இடம் மாறியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.///
Deleteசரியான கருத்து! உலோகங்களின் மதிப்புப்படி பிளாட்டினமே முதலிடத்தில் இருக்க வேண்டும்! சரி பரவாயில்ல விடுங்க!
//சின்ன டவுட் : ப்ளாட்டினம் , கோல்ட் இடம் மாறியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.///
Deleteநம்மூரு பெண்மணிகள் கடை கடையாய் ஏறி பிளாட்டினமா வாங்குகிறார்கள் ? நமது நாடு பொன் விளையும் பூமி, இங்கே தங்கத்துக்கு தான் மதிப்பு,மொக்கையான உலோகமான பிளாட்டினத்தின் மதிப்பு இங்கே குறைவு தானே ஹாரிஸ் சார் ?
எம்மா பெரிய பதிவு .:D
ReplyDeleteஅட்டகாசம்!!!!!!
ReplyDeleteஅடேங்கப்பா அதுக்குள்ள பதிவா
ReplyDeleteசூப்பர்
அருமை அட்டகாசம் வேறென்ன சொல்ல ..2017 வா வா சீக்கிரம்
ReplyDeleteநானும் ஆஜர்
ReplyDeleteபக்கா பிளான் சார்
ReplyDeleteகலக்கிட்டீங்க போங்க :)
.
சந்தா D மாதிரியான கதைகளை நீண்ட. நாளாக எதிர்நோக்கியிருந்தேன். காத்திருந்தது வீணாகவில்லை.ரொம்ப நன்றி சார்.
ReplyDeleteஆஹா....ஆஹா.....ரொம்ம்ம்ப ....ரொம்ம்ம்ம்ப நன்றி சார் ...படித்து விட்டு வருகிறேன் ....
ReplyDelete///இவரது அறிமுக சாகஸமான ‘ஆகாயக் கல்லறை‘ + இன்னுமொரு புதுக்கதையும் இணைந்தொரு “சில்வர் ஸ்பெஷல்“ 2017-ன் பட்டியலில் இடம் பிடித்தது ! .///
ReplyDeleteWelcome back John Silver .!
///இறுதியாய் இருந்ததொரு இடத்திற்குள் தலைநுழைக்க ஜடாமுடி மேஜிக் விண்டுக்கும் - நமது இளவரசிக்குமிடையே தான் போட்டியிருந்தது ! ///
ஹிஹிஹி. .!
ரெண்டு பேத்துல யார் வயசுக்கு வந்தாலும் எனக்கு ஒண்ணுமில்லை ஹிஹி.!!
மேச்சேரியார்.!
Delete//ரெண்டு பேத்துல............//
கர்கர்கர்ர்ர்ர்கர்ர்ர்ர்ர் என்ன ஒரு வில்லத்தனம்.!
நன்று!
ReplyDelete///இந்தாண்டின் 12 மாதங்களிலும் சந்தாதாரர்களுக்கு சிறுசிறு surprises காத்திருக்கும் ! அவை என்னவென்பதை அந்தந்த மாதத்து கூரியர் டப்பாக்களைப் பிரிக்கும் வேளைகளில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ! ///
ReplyDeleteசூப்பர் சார்.!
பார்சலை பிரிக்கும் வரை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் உண்மையான Surprise.
இந்த முடிவை நான் குப்புறக்கா வுழுந்து கும்பிட்டு வரவேற்கிறேன்..!
வென்றாள் மாடஸ்டி.நன்றி சார்
ReplyDeleteஇதயத்தில் மட்டுமல்ல...
Deleteஆண்டு மலரிலும் இளவரசி...
ராவணன் இணியன் சார்.!
Deleteஉய்ய்ய்ய்ய்......(விசில் )
எடிட்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.! அதுவும் 300 வது இதழில் இடம் கொடுத்து கௌரவப்படுத்தியதற்கு நன்றி.! நன்றி.! நன்றி.!_______/|\__________ !
இளவரசி 300 வது இதழில் இடம் கொடுத்து கௌரவப்படுத்தியதற்கு நன்றி.! நன்றி.! நன்றி.!
Deleteஇப்ப புரியுதா மக்களே, நமது ஆசிரியர்தான் இளவரசி மன்ற தலைவர் என்று!!! அவர் எப்போதும் இளவரசி கட்சிதான்!!
Deleteநாங்கதான் சொன்னம்ல இளவரிசி ஏதாவது ஒரு மைல்கல் இதழில் இடம்பெறுவாள் என்று...
Deleteமுத்து 400ல் லேடி S...
லயன் 300ல் இளவரசி...
ஜெயிக்கப்போவது யார்???...
அட...போட்டியில் பென்சில் இடையழகி ஜூலியாவையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் !!
Deleteஹி..ஹி...நீங்கள் ஆயிரம் சொன்னாலும், ஜூலயா என்ற உடன்
Deleteகோபாலகிருஷ்ணனின் " போ மயிலு நீ தான் கோ.கி. ,கோ.கி.னு கூப்பிடற, எல்லாம் சப்பாணின்னு தான் சொல்றானுவ" - என்ற டயலாக்தான் ஞாபகம் வந்து நிக்கிதுங் சார்.
இளவரசி கெத்துக்கு முன்னாடி...பெரிய ஹி ஹி தான் ஜூலியா. லேடிS போட்டோக்களை பார்த்த உடன் சபாஷ் வாம்மா மின்னல் ,வா வா இளவரசிக்கு டஃப் பைட் கொடுக்க ஆள் ரெடி என நினைக்க வைக்கிறது சார்.
சேலம் Tex விஜயராகவன் : அட...ஒரு poor man 's இலியானா என்று வைத்துக் கொள்வோமே பென்சில் அழகியை ?!
Deleteமுதல் முறை பதிவை படித்து முடித்தபோது சகலமும் மூளையில் (?)பதிவான மாதிரி இருந்தது, ஆனால் 5நிமிடங்களில் என்ன படித்தோம் என பதிவாகாத மாதிரியும் இருக்கு சார். இந்த ஃபோபியா இன்றைய இரவு முழுதும் தொடருமோ.....!!!!
ReplyDeleteஇவ்வளவு நீஈஈஈஈஈஈஈள்ளள்ளளம் டைப்பியதில் இருந்தே உங்கள் உழைப்பின் அசாத்திய பரிமாணம் லேசா புலப்படுகிறது சார்.
சிம்ப்ளி அஷ்டானிஸ்டு சார்...
மீண்டும் ஒருமுறை வயிற்றை நிரப்பிக் கொண்டு படித்து விட்டு வருகிறேன் சார்...
+1
Deleteபெரிய பதிவு படித்து விட்டு வருகிறன்
ReplyDeleteசிறப்பான தேர்வுகள் . கடினமான தேடல்கள் . தீவிர உழைப்பிற்கு நன்றி எடிட்டர் சார் . ஒவ்வொரு மாதமும் ஒரு ஆச்சர்யம் , நமக்கு பிடித்தமான காமிக்ஸ் புதையல் பெட்டியில் . என சிறப்பான ஆண்டு ஆக 2017 மாற விரும்புகிறேன் .
ReplyDeleteபதிவைப் பார்க்கவே மூச்சு முட்டுதே, எப்படித்தான் படித்து முடிப்பதோ..... !!! நன்றி சார்...!!!
ReplyDeletePodiyan : பார்க்கவே மூச்சு முட்டினால் - டைப்படிக்க ?
Deleteயப்பாடி எம்மாம் பெரிய பதிவு
ReplyDelete!!!!
இதுநாள் வரை வந்ததிலயே மிகப்பெரிய்ய பதிவு
படித்துவிட்டு வருகிறேன்
அக்டோபர்மாத புக்ஸ் அனுப்பீட்டீங்களா எடி சார் ???
ஆசிரியருக்கு அட்டைவணையை பார்க்க இருந்த துடிப்பு அடங்கியது.ஆனால் அதன் சந்தோஷம் தீர இன்னும் 15 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே? ஆசைகள் அடங்குவதில்லை என்பதை மீண்டும் நிருபிக்கும் சந்தோசத் தருணம் இது.
ReplyDeleteஇது போன்ற விஷயங்களில் ஆசைக்கு அழிவு வேண்டாம்.(புத்தரின் கொள்கையை இங்கு மீறினால் தவறியில்லை என்று நினைக்கிறேன். )
அட்டைவணையை அலசி காயப்போட்டு வருகிறேன். நன்றி
எடிட்டர் சார் , 2017 லயன்&முத்து காமிக்ஸ் அட்டவணை யை கடைகளில் வாங்கும் என்னைப்போன்றவர்களுக்கும் கிடைக்குமாறு செய்யுங்கள் சார்....
ReplyDeletekannan s : நிச்சயம் கிடைக்கும் !
DeleteOverall looks a good list - except for the fact that remains quizzical to me - when Largo and Sheldon are already not 'fly-off-the-shelf' candidates, how come 150 buck albums lined up. That said I am opting for SILVER - I will keep the bronze copies and my friend who is a reprint fan takes the D series .. and missing Leonardo .. Hmm !!
ReplyDeleteRaghavan : லார்கோவை 75 + 75 என்று பிரிப்பதில் உடன்பாடில்லை என்பதாலேயே ஒற்றை இதழ் ! And ஷெல்டன் சிங்கிள் ஆல்பம் தானே ?
Deleteபாக்கி 2 டபுள் ஆல்பம்களும் LADY S (again an episode that cant be split ) & தோர்களின் பொருட்டே !
லியனார்டோ இன்னமும் ரேஸில் உள்ளவர்தான் - நவம்பர் முடிவுகளுக்காக வெயிட்டிங் !
விஜயன் சார்,
ReplyDeleteஅருமை ... அட்டகாசம் ... என்பதை தவிர்த்து எதுவும் சொல்ல தெரியவில்லை சார். கதை தேர்வுகள் அனைத்தும் ஆஹா ரகம்.
இதனுடன் சேர்த்து டைகர் 'இரத்த கோட்டை' தொகையும் அறிவித்து இருக்கலாமே சார் ...
மொத்தத்தில் ...... 'மகிழ்ச்சி'
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : சார், இந்தத் தொகையினை அறிவிப்பதற்கு எத்தனை நாள் தயங்கினேன் என்பது நான் மட்டுமே அறிந்த இரகசியம் ! "இரத்தக் கோட்டை"யையும் இதனோடு இணைத்து total-ஐ இன்னமும் பெரிதாக்கிக் காட்டும் பயம்தான் !!
Deleteசார்,
ReplyDeleteஅட்டவணை அட்டகாசமாக வந்திருக்கிறது!. தங்களின், அதன்பின்னுள்ள கதை தேடலுக்கும், இந்த இம்மாபெரிய பதிவிற்கான முயற்சியும் அசாதாரணமானவையே! 2017-ல் ரீங்காரமிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 'ரிங்கோ' பற்றி சத்தத்தையே காணோமே..?
MH Mohideen : 'ரிங்கோ' மொத்தமே இரண்டே ஆல்பங்கள் கொண்ட நாயகர் என்பதால் அவரை one shot ஹீரோவாக மட்டுமே பார்க்க முடிந்தது ! So ட்யுராங்கோ அவரிடத்தில் சார் !
DeleteReporter Johnny - ஒரு சிலந்தியின் வலையில் - இந்த ஒரு புத்தகம் போதும், சந்தா Sold :)
ReplyDeleteV Karthikeyan : நிச்சயமாய் இந்த கமெண்ட் உங்களிடமிருந்து வருமென்று தெரியும் சார் !! பட்டாசாய்ப் பொரியும் கதையிது !!
Delete// பட்டாசாய்ப் பொரியும் கதையிது /// oooh சூப்பர்.
Deleteஇப்பதான் பாதி பதிவு படித்திருக்கிறான், பொறுமையாக புரிந்து படித்துக்கொண்டு இருக்கிறேன். ஆபீஸ் முடியறதுக்குள்ள படிச்சி முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன் :)
Lady S பார்க்க பட்டாசா இருக்காங்க. ஒரு கலக்கு கலக்குவாங்கன்னு எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteட்யூராங்கோ - அடேங்கப்பா!! அறிமுகமே நாலு கதைகள் கொண்ட ஷ்பெசலில். .!
அவ்ளோ பெரிய்ய அப்பாடக்கரா அவரு! :-)
KiD ஆர்டின் KannaN : 'சவ சவ' வேகத்தில் ஆண்டுக்கு 2 கதைகள் வீதம் - தொடர்களை அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இழுக்கும் பாணிகள் வரும் காலங்களில் இராது என்பதற்கு இதுவொரு கோடி ஆர்டின்காரு ! JEREMIAH தொடருக்குமே இதே புது பாணி தான் !
Delete//Lady S பார்க்க பட்டாசா இருக்காங்க///...ஸ்டொபொனியை விளம்பரத்தோடு கல்தா கொடுத்த போது அடைந்த ஏமாற்றம் இப்போது ஓரளவு சரியாகியுள்ளது சார்.
Deleteகிட் மாமா@ இப்ப நமக்கும் போட்டி மன்றம் துவக்க ஆள் கெடச்சாச்சி...
நம்ம லேடிS மன்றத்துக்கு நல்ல பேராக செலக்ட் செய்யுங்கள்...
ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கை நாளையே துவக்கி விடலாம்...
சபாஷ் ! சரியான போட்டி !!
Delete//நமக்குப் போட்டி மன்றம் துவக்க ஆள் கிடைச்சாச்சு. //
Deleteஊர் குருவி பருந்தாகாது..எங்கள் இளவரசி சூரியன் மாதிரி.எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும் சூரியனுடன் போட்டி போட முடியாது.!
ReplyDeleteபதிவை பார்த்ததும், உடனே சந்தா செலுத்த வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது. 2017 ஆம் வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
parimel : நன்றிகள் சார் !
Deleteஎல்லாம் சரி அக்டோபர் இதழ்கள் கிளம்பிடுச்சா இல்லையா
ReplyDelete(சந்தாதாரர்களுக்கு சிறு சர்ப்ரைஸ்
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்)
//அப்புறம் ‘அக்டோபர் இதழ்கள்‘ என்றதொரு சமாச்சாரத்தையும் மறந்து விடாதீர்களேன் ப்ளீஸ் ? படிக்க, ரசிக்க, விமர்சிக்க நேரம் ஒதுக்கிட மறவாதீர்கள்! இன்று மதியத்துக்கு முன்பாகவே கூரியர்கள் / பதிவுத் தபால்கள் என சகலமும் புறப்பட்டுவிட்டன !//
Deleteஅன்புள்ள ஆசிரியருக்கு
ReplyDeleteமிக நீளளளளளமான பதிவு. பொறுமையாக படித்தேன். அனைத்து வாசகர்களையும் திருப்தி படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளீர்கள். ஆனால். புத்தகங்களின் எண்ணிக்கை கூடும் எனக் கருதிpயிருந்தே;ன். சொல்லப்போனால் குறைந்தது எனக்கு வருத்தம் தான். பட்ஜெட்டையும பார்க்க வேண்டும் தான். காரிக்கன் மற்றும் ரிப்கர்பி யையும் பற்றி சிந்தித்திருக்கிறீhகள் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் மாடஸ்டியை சிந்திக்க வேண்டிய நிலையில் வைத்திருப்பது வருத்தமாக உள்ளது.
ரொம்ப நாளாக விண்வெளிக் கதைகள் அதாவது பிளாஸ் கார்டன் போன்ற புதிய கதைகள் வருமென எதிர்பார்த்தேன். ஏதோ ஒன்று மாதிரி தெரிகிறது.
அனைவரையும் திருப்தி படுத்த பலமாகவே உழைத்துள்ளீர்கள் என்பது புரிகிறது சார் ..:-) இதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அல்லது வருத்தங்களையும் கூட பின்குறிப்பாக தாங்களே மீண்டும் தெளிவு படுத்திவிட்ட காரணமாய் அது மறைகிறது தான் ...ஆனாலும் மாதம் ஒரு டெக்ஸ் என்ற நிலை குறைகிறது எனும் போது அது அவ்வளவு சீக்கிரம் மறைய தோன்ற மாட்டேன் என்கிறது ...இதில் 2018 ல் இன்னும் குறைக்கலாமா என்று வேறு ஆதங்க படுங்குகிறீர்களே ...நியாமாரே சார் ...:-(
ReplyDeleteஅடுத்து மேஜிக்வின்ட் ..இளவரசி இவர்களுக்குள் ஏற்பட்ட சுழல் நாற்காலியில் இளவரசி வெற்றி பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...:-)
புது கெளபாய் ஹீரோ மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்...ஆனால் .ஒரிஜினல் நாயகர் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில் தங்களின் வழக்கமான அதிரடியான பெயர் மாற்ற நிகழ்வு நடைபெறாமல் போனதால் " ட்யூராங்கோ " கொஞ்சம் அந்நியமாய் தான் தோன்றுகிறார்..
இரத்தபடலம் ....தொடராததில் பெரும் மகிழ்ச்சி சார் ...ஓர் அழகான காவியத்தை அயல்நாட்டில் வியாபார நோக்கோடு எப்படி வேண்டுமானாலும் தொடரட்டும...நாம் காவியமாகவே வைத்திருக்கலாம் ...அதிலும் கதாபாத்திரங்களின் வரலாறு என்று வெளிவரும் இதழ்களை இந்த வருடம் கொண்டு வராததலிலும் பெரும் மகிழ்ச்சி..
இதுவரை கண்ணில் படாத கொரில்லா சாம்ராஜ்யம் வண்ணத்தில் காண ஆவலுடன் இருந்தேன் ..இப்போது வண்ணத்தில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ..கறுப்பு வெள்ளையிலாவது வெளியிட கூடாதா என்று ஏங்குகிறது மனம்....
சந்தா நண்பர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சர்ப்ரைஸ்....ஆஹா இதுவே சர்ப்ரைஸ் ஆக இருக்கிறதே ...சூப்பர் சார் ...நண்பர்களே சந்தா கட்ட மறந்துறாதீங்க ...சர்ப்ரைஸை மிஸ் பண்ணிராதீங்க ...
சந்தா E பலத்த வெற்றியடையும் என்பது கதை சுருக்கத்தை காணும் போதே ஏற்படுகிறது ...காத்திருக்கிறேன் ....
நிறைவாக ....
அட்டவனை சிறப்பு புத்தகத்தில் சிறப்பு பக்கமாக சிங்கத்தின் சிறு வயதில் எனும் அதகள அட்டகாச தொடர் ஒவ்வொரு மாதமும் .....
எனும் விளம்பரமும் இனைந்திருந்தால் துள்ளல் கொண்டாட்டம் இன்னும் கூடுதல் ஆகியிருக்கும் சார் ....
இறுதியாக ...
நண்பர்களின் வேண்டுகோளுக்காக அவசர அவசரமாக முன் கூட்டியே பதிவிட்டதிற்கு அனைத்து நண்பர்களின் சார்பாக மனதார நன்றியை தெரிவித்து கோள்கிறேன் சார் ..நன்றி ...நன்றி ...நன்றி ....
//இளவரசி வெற்றி பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.!//
Deleteதலைவரே.! எல்லா பெருமையும் உங்களுக்கே.! எல்லாம் உங்கள் யுத்த தந்திரம் தலைவரே.!
தலீவரே ! நீங்க குறட்டை விடும் வேளைதான் எங்க ஊரில் பிரெஷ்ஷாக புரோட்டாவுக்கு மாவு பிசையும் தருணம் ! ஆனாலும் உங்க தூக்கத்தை பாழாக்குவானேன் என்று பார்த்தேன் !
Deleteசூப்பர்சார் எனக்கு a.b.d.e. ஆகிய 4பிரிவுமட்டும்வேண்டும்
ReplyDeleteSundar : கார்ட்டூன் பிரியரல்ல என்பது புரிகிறது ! ஆனால் 2017-ன் கார்ட்டூன்கள் நிச்சயமாய் சூப்பர்-டூப்பர் ரகங்கள் !
Deleteநானும் ஆஜர்
ReplyDeleteமாமோவ் நானும்....ஆஜர்
Deleteசிவா ஏதோ மனதை நெருடுகிரது.table பற்றி உனது அபிப்ராயம் என்ன?
Deleteஒரு தலைவன் ஒரு சகாப்தம்..
ReplyDeleteஅட்டகாசமான தலைப்பு சூப்பர் சாா்...
இது வரை தோா்கல் டிரைலர் ல மட்டும்தான் பாா்த்தோம்.....
ReplyDeleteஇனி மெயின் பிக்சர்ல (சந்தா A )வர போகுது....
sivakumar siva : Yes !!
Deleteலேடி S ஆஹா..
ReplyDeleteஆஹா....ஆஹா.....ரொம்ம்ம்ப ....ரொம்ம்ம்ம்ப நன்றி சார் ...படித்து விட்டு வருகிறேன் ....
ReplyDeleteசிறப்பான தேர்வுகள் . கடினமான தேடல்கள் . தீவிர உழைப்பிற்கு நன்றி எடிட்டர் சார் . ஒவ்வொரு மாதமும் ஒரு ஆச்சர்யம் , நமக்கு பிடித்தமான காமிக்ஸ் புதையல் பெட்டியில் . என சிறப்பான ஆண்டு ஆக 2017 மாற விரும்புகிறேன் .
ReplyDeletePOSTAL PHOENIX : நன்றிகள் சார் !
Delete####₹டெக்ஸின் நாவல் காமிக்ஸ் # 1 & 2 இணைந்து ஒரே ஆல்பமாய் வண்ணத்தில், அட்டகாசமாய்க் காத்துள்ளது!######
ReplyDeleteIam waiting...
90 வயதானாலும் பால்ய நினைவுகள் எவ்வளவு மகிழ்சியியை தரும் என்பது அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். பழைய கதாநாயகர்களை தற்பொழு பார்க்கும் பொழுது எனது வயதில் 10 குறைந்தது போலுள்ளது. பழைய கதைகளை எடிட் செய்யாமல் அப்படியே புதிய சைசில் வெளியிடலாம். ஏனென்றால் பழையதை தேடி அலைகிறேன் புதிய வடிவில். மேலும் புதிய வரவுகளையும் நான் புறந்தள்ளுவதில்லை. நான் நினைந்திருந்த கதைகளை மறுபதிப்பு செய்வதினை அறிந்த பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தாங்கள் பெரிய மனது வைத்து ரிப்கர்பி மற்றும் காரிக்கன் கதைகளை ஏதாவது ஒரு வகையில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி டைம் கிடைக்கும் பொழுது 5 நிமிடமாவது யோசியுங்கள். இந்த கோரிக்கையினை நான் வேறு யாரிடம் வைக்க முடியும்.. இந்த பழைய பல்லவியை பாடுவதால் எனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
ReplyDeleteJegang Atq : சார் - வாசிப்பின் பலன்கள் பலவிதம் ! பொழுதுபோக்கு ; தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுதல் ; புது அனுபவங்களைக் கற்றறிந்து கொள்வது என என்னென்னவோ உள்ளன! அவற்றுள் ஒன்று நீங்கள் குறிப்பிடும் அந்தப் பால்யத்தின் நினைவூட்டலுமே !
Deleteஆனால் "அது" மாத்திரமே பலனாகிடக் கூடியவை என்ற சமாச்சாரங்களை இன்னும் எத்தனை காலம்தான் தேடி ஓடிக் கொண்டே இருப்பது ? கையில் இருப்பதோ சுருக்கமான தொகையே - அதனை நிறைவாய் பலன் தரக்கூடிய அழகான விஷயங்கள் நோக்கிய தேடல்களுக்குச் செலவிடுவோமே ! மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் பாடிய நாட்களெல்லாம் திரையிலேயே மாற்றம் கண்டுவரும் வேளையிது சார் ! "பழைய நினைப்புடா பேராண்டி" என்று நாம் மாத்திரம் பிடிவாதம் காட்டினால் உலகம் நம்மைத் தாண்டி எங்கோ சென்றிருக்குமே !
தீபாவளி போனஸ் பணத்துல பட்டாசு துணிமணிகளுக்கு முன்னாடி நம்ம சந்தா தான் பர்ஸ்ட் சாய்ஸ் ....ரெடி ஜூட் ...
ReplyDeleteParanitharan K : தலீவரே...தாரமங்கலத்தில் பூரிக்கட்டைத் தேடல் தீவிரமாய் நடந்து வருவதாய் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிவதில் நிஜம் ஏதேனும் உண்டோ ?
Deleteஎடிட்டர் சார்.!
Delete//பூரிக்கட்டை தேடல் தீவிரமாய். //
ஹிஹிஹிஹி பூரிக்கட்டைகளை மாடஸ்டியின் காங்கோவா நினைச்சு ஏற்றுக்கொண்டால் ,பூமாலையில் அடிச்சமாதிரி இதமா இருக்கும்.!
MV Sir@ வீட்டு அட்ரஸ் தாங்க, சேலம் ஸ்டீல் பூரிக்கட்டை இம்மாதம் முதல் சேல்ஸ்க்கு வந்துள்ளது.தீபாவளி கிஃப்டாக உங்களுக்கு ஒன்று எடுத்து வைத்து விடுகிறேன்.
Deleteவிஜயன் சார்,
ReplyDelete// மேஜிக் விண்டைப் பொறுத்தவரை இது end of the road அல்ல ! சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாக மீண்டு(ம்) வருவாரென்று எதிர்பார்க்கலாம்! //
மேஜிக் விண்ட் எனக்கு மிகவும் பிடித்த நாயகன், ஆனால் கடத்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி இவரின் கதைகள் அதிகம் கவரவில்லை! இவருக்கு நீங்கள் சிறிய இடைவேளை என முடிவு எடுத்தது மிகவும் சரியானது! வரவேற்கிறேன்!
Great effort
ReplyDeleteRounded selections
All the best sir
My option sandha gold
Regards
Arvind
ARVIND : :-)
Deleteவிஜயன் சார்,
ReplyDelete// “நிஜம் நிசம்பதமாகிறது“ – ஒரு அசாத்தியச் சித்திர அதகளம் ! மனிதனின் துவேஷங்கள், புதியவர்களை ஏற்க மறுக்கும் பகையுணர்வுகள் ; யுத்தத்தின் வலிகள் ; தனிமையின் பயங்கள் என்று ஏராளமான உணர்வுகளைச் சொல்லும் ஒரு powerful நாவலின் காமிக்ஸ் ஆக்கமிது ! மிரளச் செய்யும் படைப்பிது - மிக வித்தியாசமான சைஸில் ! Black & white ! //
இந்த யுத்தம் என்னும் வார்த்தை கொஞ்சம் கலக்கத்த கொடுக்குது... வரட்டும் படித்து விட்டு எப்படி இருக்குன்னு முடிவு பண்ணலாம் என மனதை சமாதானபடுத்திகிட்டேன்!
!!
விஜயன் சார், மும்மூர்த்தி கதைகளை தொடர்ந்து அதே விலையில் வரும் ஆண்டும் வெளி இட உள்ளது நல்ல விஷயம்!! நல்ல முடிவு!!
ReplyDeleteஇதன் பின்னே நிறையவே சிந்தனை செலவாகியுள்ளது ! கடைகளிலும் இவை சீராக விற்பதால் அதனில் கை வைப்பதில்லை என்று தீர்மானித்தேன் !
Deleteவிஜயன் சார் @ சரியான முடிவு!
Deleteஅன்பு ஆசிரியர், காரிகன்,ரிப் மறக்க முடியாது.. ஒரே அடியாக நிராகரித்து மிகவும் வருத்தம் தருகிறது. அவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரக்கூட மனமில்லை என்பது மிக வருத்தும் செய்தி.யார்க்கும் அவர்கள் இளமை திரும்புவது பிடிக்கும் தானே. மற்றபடி 2017 table & தேர்வு அற்புதம். உங்கள் கடின உழைப்பின் பலனை அனுபவிக்க தயார். நன்றி
ReplyDeleteSenthil Madesh : சார்...காலம் ஒரு கருணையறியா நியதி ! யாருக்காகவும், எதெற்காகவும் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை தானே ?! இன்றைக்கு காரிகன், ரிப் கிர்பி என்றால் அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்குப் பின்னே லார்கோ ; ஷெல்டனுக்கும் இதே நிலை நேரலாம் ! மனதில் இருத்திக் கொள்வோம் ஆதர்ஷர்களை ; வாசிப்பில் கொணர்வோம் புதியவர்களை !
Deleteவிஜயன் சார், ப்ளுகோட் பட்டாளத்தை மீண்டும் கொண்டு வந்தது சந்தோசம்!! எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதை தொடர்!! இந்த வருடம் வர உள்ள தாத்தா கண்டிப்பாக வெல்வார், அடுத்த வருடம் எங்களை மீண்டும் சந்தோஷபடுத்துவார், படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்!
ReplyDeleteParani from Bangalore : நவம்பரில் தெரிந்து விடும் தாத்தாவின் பரீட்சை முடிவுகள் !
Deleteசந்தா D மாதிரியான கதைகளை நீண்ட. நாளாக எதிர்நோக்கியிருந்தேன். காத்திருந்தது வீணாகவில்லை.ரொம்ப நன்றி சார்.
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteஅட்டவணையை பார்த்தவுடன் ஒரு பேனா பேப்பர் எடுத்து கொண்டு எழுதத் துவங்கினேன். மேலோட்டமாக பார்த்ததில் மனதிற்கு நெருடலாக இருக்கும் விஷயங்களை முதலில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
1.எப்போதுமே சொல்வீர்கள்'அரை டிரையர் வயதை தாண்டிய வாசகர்கள் என்று,'அப்படி இருக்க சந்தாவை ₹4500 முடிக்க கதைகளை குறைப்பானேன்?
2.குண்டு புக் என்று ஆசையாக இருந்த எங்களுக்கு .....இல்லாதது குறையே.(512'300,220-பக்கம் எல்லாம் குண்டே இல்லை இப்போதைய நிலையில்! !!!!.
3.முத்து 45 வது ஆண்டுமலர், #400 வது இதழ்-கதம்பமாக வரும் என்று நினைத்ததில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்களே.விலை என்று நீங்கள் கூறினாலும் மனது ஏற்க மறுக்கிறது.
4.டெக்ஸ்-க்கு 10 கதை என்றால் 2 மாதங்கள் அவரை பிரிவது வேதனை அளிக்கிறது. அவருக்குமா இந்த அளவுகோல்? வேண்டாம் இனி ஒருமுறை எக்காரணம் கொண்டும் அவரது கதைகளை குறைத்து விடாதீர்கள். Pls
நன்றாக அலசிவிட்டு நாளை வருகிறேன். நன்றி
Saran Selvi : மீண்டுமொருமுறை பொறுமையாய் பதிவைப் படிக்கும் போது உங்கள் சகல கேள்விகளுக்கும் பதில்கள் பூரணமாய் இருப்பது புரியும் !
Deleteபணம் சார்ந்த அளவுகோல்கள் ஆளாளுக்கு மாறிடுமென்பது உறுதி ; 4000 / 5000 என்பது ஒருத்தருக்கு சுலபமாய் இருக்கலாம் ; பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தும் இன்னொருவருக்கு அதுவே மெகாத் தொகையாய்த் தோன்றிடலாம் ! அதன் மீது பிரதான கவனம் வழங்கிடாது நான்பாட்டுக்கு பட்டியலைப்பெரிதாக்கிக் கொண்டே போனால் நியாமாகாது !
அப்புறம் இன்னுமொரு விஷயத்தின் பக்கமாய் சிந்தனையினை ஓடச் செய்தீர்களா என்பது தெரியவில்லையே ! ஒற்றை மனிதனின் செயல்பாடுகளுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா ? ஆண்டுக்கு 100 இதழ்கள் வாங்கிட நீங்கள் தயாராக இருக்கலாம் தான் - ஆனால் அதற்கான ஆற்றல் வேண்டுமன்றோ எனக்கு ?
+1
Deleteவிஜயன் சார், என்னை பொருத்தவரை நமது முத்து & லயன் காமிக்ஸில் 1985 முன்னால் வந்த பல கதைகளை படித்து இல்லை. எனவே இவர்கள் எனக்கு தொடர்ந்து வரவேண்டும். எனவே வரும் காலம்களில் இவர்களுக்கு கொடுத்து வரும் இடம்களை குறைத்து விடாதீர்கள்!
ReplyDeleteசில்வர் - வரவேற்கிறேன்: எதிர்பாராத மறுவரவு! வரும் காலம்களில் இவரது கதைகளை இது போன்று தொடர்ந்து மறுபதிப்பு செய்யவும்!!
Parani from Bangalore : சந்தா D - 10 மறுபதிப்புகள் + SUPER 6 -ல் மறுபதிப்புகள் = 8 = GRAND TOTAL : 18 !
Deleteவிஜயன் சார், SUPER 6 இதனை மறந்து விட்டேன்!! 2௦18 இதே போல் 18 மறுபதிப்பு கதைகளை கொடுக்கவும்.
Delete+1
ReplyDeleteகதைத்தேர்வுகள் அருமை எடிட் !
transfer : வீட்டு அக்கௌன்டன்ட் சரிபார்த்து ரிசல்ட்க்கு வைட்டிங் ;P
ஆமா ராமைய்யா எப்போ வொஸ்தாவய்யா ?
ReplyDeleteSathishkumar S : வருவார் - வெகு விரைவில் ! அவருக்குப் பின்னும் ஒரு வெயிட்டான பதிவு வெயிட்டிங் !
DeleteInteresting....Paid subscription for a+b+c+e...
ReplyDeleteசந்தா E
ReplyDeleteசெம்ம மிரட்டலான கதைகளாய் தெரிகிறதே சார்.!
அந்த அண்டர்டேக்கர் அண்ணாச்சிய சும்மா பாக்கவே பயம்மா இருக்கு. இதுல, கதையிலும் திகில் இருக்குன்னு வேற பீதியை கெளப்பிட்டிங்களே சார்.
காலம் தவறிய காலன் மட்டும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதுன்னு இருக்கே!? ஏன் சார்.? Sci fic என்பதாலா அல்லது அந்த இடத்தில் வேறொரு கதைக்காக காத்திருக்கிறோமா சார்?
கனவுகளை சேதி சொல்லும் ஊடகமாக நேற்றைய மனிதர்கள் பயண்படுத்திக் கொண்டால்??
கனவுகளின் கதையிது - வித்தியாசமானதொரு த்ரில்லர் ஆக இருக்கப்போகிறது.
நிஜங்களின் நிசப்தம்.-
யாத்தே...! பயங்கரமா இருக்கே விளம்பரம். நைட்ல படிச்சிட்டு, இந்த படத்தையெல்லாம் பாத்துட்டு தூங்க முடியுமான்னு தெரியலையே. ஆகையினால, இந்த கதையை பகல்ல படிக்க முடிவு செஞ்சிட்டேன்.
துவங்கட்ட செயலுக்கு முடிவு இல்லாவிட்டால் - ஒரு முடியா இரவு - எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
காதல் - காமம், ஒரு லேசான கோடு ன்னு இப்போதைய ட்ரெண்டில் ஒரு த்ரில்லர் என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம் . ஆவலைத் தூண்டுகிறது.
ஒரேயொரு சின்ன வருத்தம்.,Undertakerஐ தவிர பாக்கி அனைத்தும் கருப்பு வெள்ளை என்பதே.! அதற்கான விளக்கத்தையும் நீங்கள் சொல்லிவிட்டதால் மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்!
இந்த புதிய முய்ற்சி மாபெரும் வெற்றி பெறுவோதடல்லாமல், வருடாவருடம் சந்தா E வெளியீடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகவேண்டும் என்று விரும்புகிறேன்.!!
KiD ஆர்டின் KannaN : //காலம் தவறிய காலன் மட்டும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதுன்னு இருக்கே!? ஏன் சார்.? Sci fic என்பதாலா அல்லது அந்த இடத்தில் வேறொரு கதைக்காக காத்திருக்கிறோமா சார்?//
Deleteஅந்தக் கதாசிரியரின் ஒப்புதலுக்கு வெயிட்டிங் ! அதனால்தான் அந்த முன்ஜாக்கிரதைக் குறிப்பு !
வாவ்.!வாவ்.! வாவ்.! அருமையான அட்டவணை.! ஐந்து சந்தாக்கள் இருந்தாலும் ,விலையை கட்டுக்குள் வைத்து.,இந்த வருடம் அதிக ஸ்பெஷல்கள் இருந்தாலும்,பலதரபட்ட ரசணையுடைய வாசகர்கள் இருந்தாலும் எல்லோரையும் திருப்தி படுத்தி மிகச் சிறப்பான அட்டவணையை உண்டாக்கி உள்ளீர்கள் சார்.! மிகவும் நன்றி சார்.அதுவும் இளவரசிக்கு வாய்ப்பு கொடுத்தோடு மட்டுமல்லாமல் 300 வது இதழில் வாய்ப்பு கொடுத்து கௌரவப்படுத்திவிட்டீர்கள் சார்.! நீண்ண்ண்ட இடவெளிக்கு பிறகு தலையுடன் இணைந்து அசத்தப்போகிறார்.! நன்றி.! நன்றி.! நன்றி.!
ReplyDelete__________/|\___________!
மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : //நீண்ண்ண்ட இடவெளிக்கு பிறகு தலையுடன் இணைந்து அசத்தப்போகிறார்.!//
Deleteஇதற்கு முன் எப்போது இதே கூட்டணி கைகூடியது சார் ?
டாப் 10 ஸ்பெஷல்.!ஜாலி ஸ்பெஷல் (மரண மாமா )
Deleteமாடஸ்டி வெங்கடேஸ்வரன் @ எப்படி இப்படி ஜி! கலக்குறிங்க!!
Deleteஅட்டவனை அருமை அபாரம் சூப்பர் மகிழ்சசியில் மேலும்வார்த்தைகள் கிடைப்பதற்க்கு தடுமாறுகின்றன
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete// * XIII – இரத்தப் படலம் மர்மம் - 2017-ல் மனுஷனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போமே ? உங்களுக்குச் சுற்றுகிறதோ - இல்லையோ ; எனக்கு ரங்க ராட்டினத்தில் அரை டஜன் தடவைகள் சவாரி செய்த உணர்வு எழுகிறது! //
இந்த வருடம் முதல் இதேதான் எனக்கு தோன்றியது. மிகவும் சரியான முடிவு!!!
உரக்கப் பேசிடாதீங்க சார் ! கோவைக்காரரும் , பழனிவேலும் உருட்டுக்கட்டைகளோடு கிளம்பிடுவார்கள் !!
Deleteஉண்மைய சொன்ன நம்ப ஸ்டீல் கோபப்பட மாட்டார்!
Deleteசந்தான்னு வந்துட்டா, நாங்க எப்பவுமே கோல்டுதான்.
ReplyDeleteA+B+C+D+E எல்லாத்தையும் கட்டிடுறதுதான்.!! அதுல மேஜிக்கு இருந்தாலும் சரி, மாடஸ்டி இருந்தாலும் சரி, அவ்வளவு ஏன் ஸ்பைடர்,, டயபாலிக்குன்னு எத்தனை தில்லாலங்கடிங்க இருந்தாலும் சரிதான்.! எதையுமே மிஸ் பண்ண மாட்டோமாக்கும். (வாங்கி படிச்சிட்டு கலாய்ப்போம்.அது வேற விசயம். ஏன்னா வாங்குவது கடமை. கலாய்ப்பது உரிமை :-))
// வாங்கி படிச்சிட்டு கலாய்ப்போம்.அது வேற விசயம். ஏன்னா வாங்குவது கடமை. கலாய்ப்பது உரிமை :-))//
Deleteசெம! கண்ணன்!! லொள்ளு!!
//வாங்கி படித்துவிட்டு கலாய்ப்பது உரிமை.!//
Deleteஅது என்னவோ வாஸ்துவம்தான்.பிடித்த கதாநாயகர்களை தலையில் தூக்கிவைத்து கரகமாடும் சந்தோசத்தைவிட , பிடிக்காத கதாநாயகர்களை காலில் போட்டு மிதி த்து தோரணம் கட்டி தொங்கவிடும் சந்தோசம் 10 மடங்கு அதிகம்.!
KiD ஆர்டின் KannaN : தேர்தல் நேரமல்லவா ? பன்ச் வரிகளுக்குப் பஞ்சமிராது !!
Delete/// பிடிக்காத கதாநாயகர்களை காலில் போட்டு மிதி த்து தோரணம் கட்டி தொங்கவிடும் சந்தோசம் 10 மடங்கு அதிகம்.!///
Deleteமாடஸ்டிகாரு @
க க க போங்கள்!! :-)
விஜயன் சார், காமஞ்சே - தற்போது வரும் கௌபாய் கதைகளில் மிகவும் சிறந்தது, நான் விரும்பி படிப்பது!! அடுத்த வருடம் இவருக்கு ஒரு இடம் என்பது மிகவும் நெருடுகிறது!
ReplyDeleteலேடி-S படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்!! அடுத்த வருடம் மகளீர் (ஜூலியா, இளவரசி) அணிக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுத்து உள்ளது சந்தோசம்!!
Parani from Bangalore : ரேஷன் என்றான பிற்பாடு கமான்சேவோ, லார்கோவோ - ஒரே மாதிரியான அளவுகோல்கள் தானே ?
Deleteவிஜயன் சார், தோர்கல் கதை விசயத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்! இந்த வருடம் இவரை கண்ணில் காண்பிக்காததால் அடுத்தவருடம் குறைந்தது 5 கதைகள் வரும் என நினைத்தேன், ஆனால் 3 என்பது ஏமாற்றமே!
ReplyDeleteஇதில் ஒரு நல்ல விஷயம், இவரை நமது ரெகுலர் சந்தா (A) கொண்டுவந்தது!!
விஜயன் சார், அடுத்த வருட சந்தா தொகை கடந்த வருடம் ஒரு பதிவில் சொன்னது போல், ஒரு நாள் ஒன்று/ரெண்டு காபி குடிக்கும் செலவு தான்!! சந்தா தொகை ஒரு மாதம் என கணக்கு போட்டால் ரூபாய் 350-380 தான் வருகிறது! இது budget போட்டு அல்லது budget போடாமல் வாழ்க்கை நடத்தும் அனைவராலும் செலுத்த கூடிய ஒரு தொகை!!
ReplyDeleteParani from Bangalore : நிஜம்தான் ; ஆனால் புத்தகங்களுக்கென செலவிட ; அதிலும் காமிக்ஸுக்கென செலவிட இன்றைய நாட்களில் ரொம்பவே தயக்கங்கள் உள்ளனவே !
DeleteFLIPKART -ல் ; AMAZON -ல் ஆட்டு உரலிலிருந்து, அம்மிக்கல் வரை ஆர்டர் செய்தால் இரண்டாவது நாளே வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு டெலிவரி தருகிறார்கள் ! ஆனால் ஏதேனும் தரமான காமிக்ஸ் ஆர்டர் செய்து பாருங்களேன் - கிட்டத்தட்ட 20-25 நாட்கள் ஆகின்றன ; simply becos எந்தவொரு விற்பனையாளரும் அவற்றை இந்தியாவில் பெரும்பாலும் ஸ்டாக் வைத்திருப்பதில்லை ! ஆர்டர் கிடைத்தால் அயல்நாட்டிலிருந்து தருவிக்கிறார்கள் ! இதுதான் காமிக்ஸின்நிஜ நிலை !!
XIII இல்லா 2017 சந்தா வேஸ்ட்.
ReplyDeletePasupathy R : ஆளுக்கொரு அபிப்பிராயம் ! இது உங்களது !
Deleteஒரு smurf ஐ குறைத்து விட்டு சிக் பில் ஐ ஒன்று அதிகரிக்கவும் . தாழ்மையான வேண்டுகோள்
ReplyDeleteமாயாவி காரு .! எங்கிருந்தாலும் உடனே வரவும்.!
ReplyDeleteவிஜயன் சார்.. லயன் இதழ் # 300 – க்யூபா படலம் அட்டகாசமான சித்திரங்களுடன் 224 பாகங்கள் கருப்பு வெள்ளையில் என்று உள்ளது (பக்கங்களுக்கு பதிலாக பாகங்கள் என வந்துள்ளது).
ReplyDeleteஉண்மையாகவே இது போல ஒரு மெகா புத்தகம் வந்தால் எப்படி இருக்கும் ... NBS போல ஒரு குண்டு புத்தகம், 10 அல்லது 15 கதைகள் கொண்டு 2018 இல் முயற்சிக்கலாமே ????
இப்படிக்கு – குண்டு புக் குரூப் அன்பர்கள் :)
Julia விற்கு பதில் மார்ட்டின் ஐ அதிகப்படுத்தி இருக்கலாம்.
ReplyDeletePasupathy R : இத்தாலியில் டெக்ஸ் வில்லருக்கு அடுத்த இடத்தை விற்பனையில் பிடித்திருப்பது ஜூலியா தான் - தெரியுமோ ?
Deleteayyyayo appa Dylan, Diabolik illaiya ???????
Deleteதற்போதைக்கு ஜூலியா தொடரில் 216 கதைகள் உள்ளன ; தொடர்ச்சியாய் வந்து கொண்டுள்ளது ; விற்பனையிலும் கலக்கி வருகிறது ! நானே கண்கூடாய்ப் பார்த்தேன் இம்முறை - புத்தகக் கடைகளில் ஜூலியா இதழ்களுக்கென ஒரு தனி ரேக் ஒதுக்கப்பட்டிருப்பதை !
Deleteஓ.! இத்தாலியிலா.? நான் இங்கையோ என்று பேஜாரு ஆகிவிட்டேன்.!
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteஒரு ரோலர் கோஸ்டரில் ஏறி, அப்படியே ஜிவ்வுனு ஒரு பயணம் போய் வந்தா மாதிரி இருக்கு - உங்களுடைய இந்தப் பதிவு!இந்தப் பதிவை ஒருமுறை மட்டுமே படித்துப் எல்லா விசயங்களையும் உள்வாங்கிக் கொள்வதென்பது சற்றே கடினமான காரியம்தான்! ஒரு தபா தான் படிச்சிருக்கேன்! ஒவ்வொரு வரியிலயும் அபாரமான திட்டமிடல் தெரியுது; அந்தத் திட்டமிடலுக்கான உங்க மெனக்கெடல் புரியுது; எல்லாவற்றிற்கும் நியாயம் செய்வதற்காண்டி உங்களுக்கு நீங்களே செஞ்சுக்கிட்ட சமரசங்களை கொஞ்சம் கொஞ்சமாவது உணர முடியுது!
அனுபவம் கற்றுக்கொடுத்த பாடங்களை அழகாக வரிசைப்படுத்தி ஒரு அட்டவணையாக மாற்றி இதோ இங்கே அளித்திருக்கிறீர்கள்! அபாரம்!!
இப்பதிவில் அதிகம் கவனத்தைக் கவரும் காரணியாக 'சந்தா-E'யையே பார்க்கிறேன்! கதையின் தலைப்புகளும், கதை பற்றிய உங்களது கவித்துவமான வரிகளும் - ரொம்பவே கவர்கின்றன!
ட்யூராங்கோ - அசத்தல் அறிமுகம்; பட்டையைக் கிளப்புவார் என்று உறுதியாகத் தெரிகிறது!
மனதை ஆட்கொண்டிருக்கும் ஒருவித பிரம்மிப்பை சமனப் படுத்திக்கொண்டு மீண்டும் ஓரிருமுறை பதிவைப் படிக்கப் பார்க்கிறேன்... அப்பத்தான் 'ன்னா உங்க கணக்கு'ன்றது புரியவரும்!
Erode VIJAY : கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகப் போகிறது இந்த வலைப்பதிவின் வாயிலாக உங்கள் நாடிகளை பிடித்திடும் வாய்ப்புக் கிட்டி ! அவ்வப்போது நிகழும் நேர்முகச் சந்திப்புகள் இன்னொரு பக்கம் !
DeleteSo இந்த 60 மாதங்களது ரோலர் கோஸ்டர் அனுபவங்களை ; படித்த பாடங்களை ; கொஞ்சமேனும் நடைமுறைப்படுத்த நான் முனையாது போயின்- செம தத்தியாக தோன்றுவேன் அல்லவா ? அதற்காக உங்கள் அனைவரது ரசனைகளை, நாடிகளையும் கனகச்சிதமாய்ப் புரிந்து கொண்டேன் என்றெல்லாம் உதார் விட மாட்டேன் ; இன்னமும் ஒரு பிறவி அவசியப்படலாம் ரசனைகளின் முழுப் பரிமாணங்களையும் கிரகித்துக் கொள்ள !
ஆனால் இயன்றமட்டில் முயற்சிக்கிறேன் என்பதுவரை நிஜமே !
This comment has been removed by the author.
ReplyDelete1 & 3 .டெக்ஸ் வில்லரின் பின்னாட்களது கதைகள் 220 / 224 / 236 / 240 என்ற பக்க எண்ணிக்கைகளில் உள்ளனவென்றால் - golden era கதைகள் 180 / 190 / 195 என்ற பக்க எண்ணிக்கைகளில் உள்ளன ! விலை ரூ.120 என்றுள்ளன சமீபத்து (நீளம் கூடுதலான) கதைகள். ஆனால் எல்லாமே அவர்களது இதழ்களில் இரண்டோ-மூன்றோ இதழ்களில் தொடரும் சமாச்சாரங்கள் என்பதால் "டபுள் ஆல்பம்" என்று பொதுவாய் பெயரிட்டுள்ளேன் !
Delete2. இன்னமும் தீர்மானம் செய்திடவில்லை. கதைகளின் பக்க எண்ணிக்கை 96. Filler pages உண்டு. Hardcover-ம் !
4.UNDERTAKER - முதல் சுற்றில் இதுவரை வெளியாகியுள்ளதே 2 பாகங்கள் தான். 54 + 54 = 108 பக்கங்கள். இது சொற்பமான பிரிண்ட்ரன் கொண்ட ; கடைகளுக்குச் செல்ல வாய்ப்புக் குறைவான சந்தா E -ன் இதழ் என்பதால் pricing கூடுதல்.
5.வெவ்வேறு சைஸ்கள்.
6.Rs4350 -க்கு 10% discount போட்டு விட்டு, அதன் பின்பாக கூரியர் + பேக்கிங் கட்டணங்களில் 75% .செலவுகளை மட்டும் இணைத்துள்ளோம்.
1. //1 & 3 .டெக்ஸ் வில்லரின் பின்னாட்களது கதைகள் 220 / 224 / 236 / 240 என்ற பக்க எண்ணிக்கைகளில் உள்ளனவென்றால் - golden era கதைகள் 180 / 190 / 195 என்ற பக்க எண்ணிக்கைகளில் உள்ளன ! விலை ரூ.120 என்றுள்ளன சமீபத்து (நீளம் கூடுதலான) கதைகள். ஆனால் எல்லாமே அவர்களது இதழ்களில் இரண்டோ-மூன்றோ இதழ்களில் தொடரும் சமாச்சாரங்கள் என்பதால் "டபுள் ஆல்பம்" என்று பொதுவாய் பெயரிட்டுள்ளேன் !// இந்த ஆண்டு மொத்தம் எத்தனை பக்கங்கள் என்று கணக்கிட்டு கொண்டிருக்கையில் இந்த சந்தேகம் எழுந்தது. அதனாலேயே கேட்டேன்.
Delete2. //இன்னமும் தீர்மானம் செய்திடவில்லை. கதைகளின் பக்க எண்ணிக்கை 96. Filler pages உண்டு. Hardcover-ம் !// அதாவது ஒவ்வொரு கதையும் 96 பக்கமா? அல்லது இரண்டு கதையும் சேர்த்து 96 பக்கமா? ஐயம்.
4. //UNDERTAKER - முதல் சுற்றில் இதுவரை வெளியாகியுள்ளதே 2 பாகங்கள் தான். 54 + 54 = 108 பக்கங்கள்.// அப்படியா? சமீபத்தில் 3ஆவது இதழொன்றை எங்கேயோ இணையத்தில் நீச்சலடிக்கையில் கண்டேனே? ஒருவேளை கண்ணாடி அணியும் நேரம் வந்துவிட்டதா என்ன?
6. 4350 - 435 = 3, 915 ரூபாய். ஆக, கூரியர் _ பேக்கிங் கட்டணம் 385 ரூபார். சரிதானே?
TEX - ஒரு தலைவன்..ஒரு சகாப்தம் 44 பக்கங்கள் கொண்டது ; FRONTIERA 50+ பக்க எண்ணிக்கைக்குள் - சரியாக நினைவில்லை இந்த கணத்தில் !
DeleteUNDERTAKER : நீங்கள் பார்த்திருக்கக் கூடிய இதழ் 3 - தனித் தனியாய் வெளியான பாகங்கள் 1 & 2 -ன் INTEGRAL ஆக இருக்கக்கூடும் ! அடுத்த சுற்றிலும் 2 இதழ்கள் திட்டமிடப்பட்டுள்ளனவாம் !
பேக்கிங் + கூரியர் கட்டணங்கள் ST (தமிழகம்) எனில் : approx : ரூ.475 ; DTDC எனில் ரூ.450.
1. டெக்ஸ் வில்லரின் டபுள் ஆல்பம் என்றால் 224 பக்கங்கள்தானே?
ReplyDelete2. தீபாவளி ஸ்பெஷல் மொத்தம் எத்தனை பக்கங்கள்?
3. ஏன் டெக்ஸ் வில்லரின் டபுள் ஆல்பங்கள் சில ரூ 100 என்றும் சில ரூ 120 என்றும் உள்ளன? பக்க அளவுகளில் மாறுதல்? அல்லது வேறு ஏதாவது? (அளவு, வருடத்தின் பின்பாதி என்பதால், விலையேற்ற / மாறுதல் தொகை?).
4. அண்டர்டேக்கரின் ”பணமென்றால்” புத்தகத்தின் விலை ரூ 200 என்று போட்டு இருக்கிறீர்களே, முதல் 3 பாகம்தானே? 150 பக்கம்?
5. சந்தா Eயில் வரும் (என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம் முதல் நிஜங்களின் நிசப்தம் வரை) A4 சைஸா? இல்லை, B5 சைஸா?
6. இந்த 46 புத்தகங்களைன் விலையைக் கூட்டினால், 4, 350 வருகிறது.
இந்த பதிவை அப்படியே பிரிண்ட் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteசந்தா A
ReplyDeleteஎதிர்பார்த்த அத்துணை பேருடன், எதிர்பாராத லேடி S & புதிய கெளபாய் என இரண்டு அறிமுகங்கள் அட்டகாசம் சார். புதிய கெளபாய் டியுராங்கோவுக்கு எடுத்த உடன் 4கதைகள் என்பது குதிரையில் போகும் நாயகர்களின் அபிமானியான எனக்கு செம விருந்து சார்.
டெக்ஸ் 11மாதங்களில் மட்டுமே வர இருப்பதால் ஜனவரியில் ஸ்கிப் செய்துடுங்கள் சார். டெக்ஸ் இல்லா குறையை டியூ போக்கிடுவார் போல.
எதிர்பார்க்கப்ப்பட்ட தோர்கல் இடம் பிடித்து இருப்பதும் மற்றொரு ப்ளஸ் சார்.
கதம்ப இதழ்களுக்கு ஏங்கி கிடக்கும் மனதுக்கு இந்த ஆண்டும் ஏமாற்றமே, முத்துNBSமாதிரியே 45ம் ஆண்டுமலரும் இருந்து இருக்கலாம்.லயன் சூப்பர் ஸ்பெசலை இன்னொரு முறை படித்து ஆறுதல் அடைய வேண்டியதுதான், பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க வேண்டிய உங்கள் முடிவு ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றே சார்.
மற்றொரு மைல்கல் இதழான முத்து 400ல் வெறும் 2கதைகள் மட்டுமே என்பது சற்றே இந்த 400என்ற எண்ணிக்கைக்கு ஞாயம் செய்யவில்லையோ என்ற எண்ணம் எழாமல் இல்லை சார். லேடி S ஐ வரவேற்றாலும் இந்த மிக முக்கியமான இதழை இவர் மட்டுமே தாங்கி பிடிப்பாரா என்பதும் சற்றே லைட்டான கிர்ர்...இந்த இரு சிறு விசயங்கள் தவிர சந்தா A உண்மையில் செம வரவேற்பு பெரும் என்பதில் திணையளவு கூட ஐயமில்லை சார்.
சேலம் Tex விஜயராகவன் : உங்களுக்கு(ம்) நேர்ந்த நெருடல்கள் எனக்கும் உண்டுதான் ! ஆனால் சிக்கல்கள் மூன்று விதங்களில் :
Delete1.TEX மட்டுமே சுமார் 900 ரூபாயை தனதாக்கிக் கொள்கிறார் !
2.மறுபதிப்புகளுக்கொரு 600 ரூபாய் ; ஆக இதுவே 1500 ஆகிறது !
3.சந்தா E - தனித்தடத்துக்கொரு bare minimum 650 ரூபாய் எனும் போது மொத்தம் ரூ.2150 ஓடி விடுகிறதல்லவா ?
சரியாகப் பாருங்கள் - இந்தத் தவிர்க்க இயலா விஷயங்கள் கபளீகரம் செய்வது சந்தாவின் சரி பாதித் தொகையை !!
ஆக மீதமிருக்கும் தொகையைக் கொண்டே நான் ஆண்டின் முக்கிய தருணங்கள் + ரெகுகர் நாயகர்களுக்கு இடங்கள் ஒதுக்கியாக வேண்டும் !! சிக்கலே அதன் பொருட்டுத் தான் !
@ ALL : லாஜிக்கலாக இதழ்களை நிர்ணயம் செய்தானே பின்னே- சந்தாத் தொகையை அறிவிக்கும் சூழல் இருப்பின் பிரமாதமாக இருக்கும் ! ஆனால் இன்னமும் அந்த சகஜ நிலைகளை நம் வாசகர்கள் சகலரும் எட்டி இருப்பார்களா என்பதை அறியா நிலையில் அகலக்கால் வைக்கப் பயமாக உள்ளது என்பதே நிஜம் !
Deleteதங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்.
ReplyDeleteசந்தா F தொடங்கி AA -AB-AZ-ZA-ZZ -
போன்ற சந்தாக்களை விரைவில்
அளிக்க ஆசிரியரை வேண்டுகிறேன்.
Dear Vijayan,
ReplyDeleteSince I am not able to enjoy Cartoon books nowadays, I wish to have anoter subscription combination A+B+D+E.
I thought of paying money for the above mentioned combination. If possible, please let me know.
Thank you!
Regards,
Mahesh kumar S
Mahesh Kumar S : Sorry, no ! இதற்கு மேலும் காம்பினேஷன்ஸ் சாத்தியமில்லை ! டெஸ்பாட்ச்சில் இதுவே திணறடித்து விடும் !
Deleteஇரண்டு கோல்ட் சந்தா கட்டியாச்சு...நிறைய புதுசான கதைகள் இருப்பது டெக்ஸ் ஒன்று குறைவானதை ஈடு கட்டி விடும் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteMahendran Paramasivam : நிச்சயமாய் குறைகள் தென்படா ஆண்டாய் 2017-ஐ அமைத்திடுவோம் சார் !
Delete// BATMAN ; வேதாளன் போன்ற popular தேர்வுகளுக்கும் ‘மடியில் 2 இடங்கள்; மனதில் பாக்கி இடங்கள்‘ என்ற டயலாக்கை நான் எடுத்து விட்டால் - "முன்வாசல் அங்கே...பின்வாசல் இங்கே.....! அண்ணாச்சிக்கு வசதி எப்படியோ ? " என்று படைப்பாளிகள் பதில் கேள்வி கேட்கும் ஆபத்துண்டு என்பதால் அந்த முயற்சிகளை நான் துவக்கவேயில்லை //
ReplyDeleteha ha LOL
Lady S, பார்க்க அட்டகாசமா இருக்கு....
அட்டவனையில் மிக மிக சிறிய குறைகளும் உண்டு இயந்திரத்தலை மனிதர்களுக்கு பதிலாக கொரில்லா சாம்ராஜ்யம் இடம் பெற்றிருக்கலாம் முத்து 400 ம் சற்று திருப்தியளிக்க வில்லை டிராகன் நகரத்தை நைசாக அடுத்த வருடத்தில் நுழைத்து டெக்ஸ் கோட்டாவில் கணக்கு காட்டுவது போன்ற சின்ன சின்ன குறைகளை தவிர்த்து மற்றவை அனைத்தும் மன நிறைவே ஜான் சில்வரை உடனே களமிறக்கியதும் மாடஸ்டிக்கும் ஜானிக்கும் இடமளித்ததும் ரொம்பவே சந்தோஷம் ஆசிரியரே
ReplyDeleteஉட்ச பட்ச சந்தோஷம் கோடை மலரில் இடம் பெற்ற குற்றச் சக்கரவர்த்தியின் குற்றத் தொழிற்ச்சாலை வருவது
இந்த கதை வேண்டும் என்று ஈரோட்டில் உங்களிடம் கோரிக்கை வைத்தேன் கோரிக்கையை உடனே நிறைவேற்றியதற்க்கு எண்ணிலடங்கா நன்றிகள் ஆசிரியரே அதுவும் குண்டு புக்கில் வந்த கதை மறுபதிப்பாக வருவது சூப்பர் ஆசிரியரே இனி எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது ஆசிரியரே எங்களை திருப்திப்படுத்த நீங்கள் உழைத்தது வீண் போகவில்லை ஆசிரியரே தரமான அட்டவணை தந்ததற்கு காமிக்ஸ் உலகம் சார்பாக கோடானு கோடி நன்றி கள் ஆசிரியரே காமிக்ஸ் கடவுளே நீவிர் வாழிய பல நூற்றாண்டு
அன்புள்ள ஆசிரியர்க்கு,
ReplyDelete2017 ன் அட்டவணையை அட்வான்சாக (மணியிலும்,நாளிலும்,மாதத்திலும்) தந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதற்க்கு முதல் நன்றி.
2) எல்லோருக்கும் பிடித்தமான கதைகள் மட்டுமின்றி, அதை குரூப்படுத்தியவிதமும்,எல்லோருக்கும் அவரவருக்கு பிடித்த காமிக்ஸ்களை வாங்கும் விலையில் நிறுத்தயதற்க்கும் இரண்டாம் நன்றி.
3)2016-காமிக்ஸ்கள், மகிழ்ச்சி என்றால்,
2017: திருப்தி,சந்தோசம்,ஆச்சரியம் என்று இன்னும் பல உணர்ச்சி கலவைகள். வாழ்த்தும்&நன்றிகள் கோடி சார், உங்கள் உழைப்பிற்க்கு.
(நண்பர்களே:சந்தா கோல்ட், நான் கட்டிட்டேன். அப்ப நீங்க...????)
டியர் எடிட்டர் சார்,
ReplyDeleteAbsolute classics சந்தா பற்றிய விபரங்கள் எப்பொழுது தெரியவரும் ?
நன்றி.
Dear Edi,
ReplyDeleteI see this long post as a culmination of lot of hardwork from your part during last few months, in bringing a variety and balance for subscribers. I am totally in support of all the hard decisions, in big digests and number of issues, to keep the comics interest alive among masses.
As usual, a full subscription from my end would be on, along with Super 6. Looking forward for 2017.
குண்டு புஸ்கு இல்லை, கதம்பம் மலரவில்லை,முத்திரை கற்கள்(வேதாளன்,XIII( அமோஸ்,காரிங்டன்)) இல்லை என்று சொல்வதைவிட, அதுக்கும்மேல 2017-ல் எங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்துகொண்டுள்ளது என்று நம்புகிறேன்.
ReplyDeleteLady S மற்றும் காலம் தவறிய காலன், நான் விரும்பும் உளவு மற்றும் அறிவியல்புனைவு ஆக்கங்களாக இருக்கும் என்று நம்புகிறேன்.
லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?? எப்போ வருகிறது ???
ReplyDelete181th
ReplyDeleteதல " டெக்ஸ் வில்லர்" கனதயில் ஒரு எண்ணிக்கை குன்றந்த்ததிற்கு வத்னமயாக கண்டிக்கிறோம்......
ReplyDeleteதலயின் ரசிகர்கள் உடனே போர்க்கொடு பிடிக்கவும்....
இளவரசிக்கு ஆண்டுமலரில் இடம் மிக்க மகிழ்ச்சி சார்....
எங்க இளவரசி இல்லாமல் போகிவிடுமோ என்ற பயம் வயிற்றில் பால் வார்த்தீர்கள் சார்....
அட்டவணை சூப்பர் சார்....
கருப்பு வெள்னள இதழ்களின் ஆதிக்கம் அதிகம் என்பேன்.....
ஜெரோமியா, ஜெம்ஸ்பாண்டு பாணி கடத என நின்றய எதிர்பார்ப்புகள். அட்டவணை யில் அது இல்லாதது வருத்தமே.....
கோனடமலர், பொங்கல் மலர் , என புதிதாக ஸ்பெஷலாக புத்தகம் போடுங்கள் சார்.....
இதுபோன்ற மலர் முன்பு போட்டு அசத்தினீர்கள் சார்.... மீண்டும் அந்தகாலம் வருமா?
மற்றபடி அட்வனண மிக்க மிகிழ்ச்சி சார்.....
பதினவ முழுதாக படித்து வர தாமதம் அதற்குள் நண்பர்கள் முந்திவிட்டனர்.....
திருப்தியான அட்டவணை தயாரித்த எடிட்டருக்கு சலாம்.....
அனைவறுக்கும் வணக்கம்
ReplyDeleteடையபாலிக்,ரோஜா் இல்லையா(விடை பாா்த்துவிட்டேன்)
மேஜிக் விண்ட் இல்லையா நான் ரோம்பவும் விறும்பும் கதை
பூளூ கோட் வந்ததில் மகிழச்சி
ஜான் சில்வா் எக கலத்துக்கு நான் எதிா் பாா்த்த கதை
இரத்த கோட்டை எப்படி வரும்??
ReplyDeleteகொரியர்ல தான் சாரே ;-)))
Deleteடியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteஉங்கள் மெனக்கெடல்கள் வீணாகவில்லை.கதை தேர்வுகள் உண்மையில் அருமையாக அமைந்துவிட்டது.வாழ்த்துகள் சார்...!!!
2018 ஆம் ஆண்டில் பட்ஜெட்டை கணக்கில் கொள்ளாமல் கூடுதல் இதழ்கள் மற்றும் கதைகள் இடம்பெறும் வகையில், இந்த ஆண்டின் விற்பனைகள் நல்லவிதமாக அமைய இந்த கதைகள் நிச்சயம் உதவும் என நம்புவோம்.பிரார்த்திப்போம்...!!!
மொத்த கதைகளின் தலைப்புகளிலும் "சந்தா E" யின் இரண்டாவது கதையின் தலைப்பு ரொம்ப அட்டகாசம்.மிக்க தேங்க்ஸ் சார்.ஹி ஹி...!!!
அருமையான தேர்வுகள்!என்னை குறையென்றால் லார்கோவையும்,ஷெல்டனையும் முழுமையாக வெளியிட்டு மங்களம் பாடியிருக்கலாம் lady s க்காக பொறுத்துகொள்கிறோம்!
ReplyDeletePresent Sir
ReplyDeleteபதிவின் முழு விவரங்களை கிரகித்து கொள்ள மூன்று முறை படிக்க வேண்டியதாகிவிட்டது ....:-)
ReplyDeleteபடிக்கவே லேசாக தலை சுற்றும்போது இதன் பின்னால் உள்ள உங்கள் அசாத்திய உழைப்பு கண்கூடு..................................
சுற்றி வளைப்பானேன்????
அருமை சார்..........................
கவனத்தை வெகுவாக இழுப்பது சந்தா E…….
மறுபதிப்புகள் முக்கியமானவை முடிந்து சந்தா E ரெகுலர் சந்தாவின் ஒரு முக்கிய அங்கமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை எனும் நம்பிக்கை இருக்கிறது......................
எல்லாருக்கும் பிடித்த கதை நாயகர்கள் ,கார்ட்டூன் ஹீரோக்கள் என்பதை தாண்டி வழக்கமான பிம்ப வளையத்திற்குள் அடங்காத கதைகள், கதை வரிசைகள் இந்த சந்தா வரிசையில் யாவரும் ரசிக்கும்வண்ணம் ஊற்றெடுத்து பிரவகிக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் இருக்கிறது...
மாற்றங்களை அரவணைத்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் உங்கள் முடிவுகள் உங்கள் மேலுள்ள நம்பிக்கையை மேன்மேலும் அதிகப்படுத்துகின்றன.....
பழைய தடவழிகளில் நடப்பது எளிது
புதிய தடவழிகளை ஏற்படுத்த துணிச்சலும் பன்னோக்கு பார்வையும் வேண்டும்...அது இரண்டும் உங்களிடம் கொட்டி கிடப்பது பதிவிலும் ,பதில்களிலும் தெளிவாக தெரிகிறது.....................................
எவ்வழியாக இருப்பினும் உங்கள் பின் தொடர எப்போதும் போல் யாம்........
விஜயன் சார், // இந்த சர்ப்ரைஸ்ஸ் வரிசையில் சீனியர் எடிட்டரின் உபயம் ஒன்றும் காத்துள்ளது என்பது கொசுறுச் சேதி ! //
ReplyDeleteசீனியர் எடிட்டரின் சிறு வயதில் என்று சொல்லுங்க!! மகிழ்ச்சி!!
மொத்தத்தில் அடுத்த வருட கதைகள் மற்றும் சந்தா தொகை எனக்கு சந்தோசம்! முக்கியமாக நமக்கு இருக்கும் சிறு மைதானத்தில் பல புதுமைகளை கொண்டு அட்டவணையை அமைத்து இருப்பது சிறப்பு. இந்த வருடம் மேலும் பல நண்பர்கள் சந்தாவில் இணையும் வாய்ப்புகள் அதிகம்.
ReplyDeleteவழக்கம் போல் சந்தாவில் இணைந்து உங்களுடன் பயணம் செய்ய தயாராக உள்ளோம்.
ட்யூராங்கோ...லேடி sஐ வரவேற்கிறேன்....தலைப்புகள் தூள்...சந்தா ஈ ஆர்வத்த கிளப்புது...பட்டய கிளப்பப் போவதுறுதி....
ReplyDelete2017-அட்டவணை: திருப்தி.!
ReplyDeleteஅருமையான பதிவு....!
ReplyDeleteஇரு முறை வாசித்தேன்.