Sunday, February 14, 2016

ஒரு 'மினி"மம் முயற்சி !

நண்பர்களே,
            
வணக்கம். நமது மதிப்பிற்குரிய பிரதமர் Make in India; Digital India என்றெல்லாம் அழகாய் பல திட்டங்களை முன்வைத்திருப்பது நாடறிந்த விஷயம் ; அதனை இன்னும் சற்றே refine செய்து ‘Make at home’; ‘Digital @ home’ என்றெல்லாம் நம்மவர்களுள் ஒரு சிறு பிரிவினர் பின்னிப் பெடலெடுத்து வருவது பற்றிய எண்ணச் சிதறல்களே இந்த ஞாயிறின் பதிவு! ஜனவரிப் பொங்கல் புத்தக விழா சென்னையில் நடந்து முடிந்த சில நாட்கள் கழிந்திருந்த நிலையில்- என் பெயரைத் தெளிவாக highlight செய்ததொரு parcel கூரியரில் நம் அலுவலகம் வந்திருந்தது! எல்லாமே ஆன்லைன் பணப்பட்டுவாடாக்கள்; போனிலும், வாட்சப்பிலும், மின்னஞ்சல்களிலும் ஆர்டர் & டெஸ்பாட்ச் விபரப் பரிமாற்றம் என்றாகிப் போன நிலையில் கடுதாசிகளும், இது போன்ற கூரியர் கவர்களும் நம்மவர்களிடம் அத்தனை கவனத்தைப் பெறுவதில்லை. அதிலும் “பெர்சனல்“ எனப் பருமனான எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த கவரைத் தொடக்கூடச் செய்யாமல் பத்திரமாக என்னிடம் ஒப்படைத்தனர்! அதனிலிருந்த கடிதத்தை அதாவது அவசியமான அதன் பகுதிகளை மட்டுமேனும் இங்கே உங்களோடு பகிர்ந்திடுவது சுவராஸ்யமான அனுபவமாகயிருக்குமென்று தோன்றியது!
*************** 
டியர் எடிட்டர்,
வணக்கம். சுற்றி வளைத்து எழுத எனக்குத் தெரியாது என்பதை விட பிரியமில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னடா இப்படிக் கேட்கிறானே என்று நீங்கள் வருத்தப்பட்டால் கூடப் பரவாயில்லை ஆனால் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு அதை நிஜமா ? பொய்யா? என்று தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்கிறது. உங்களுக்கு பழைய, கிடைக்க சான்ஸில்லாத முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ் புக்குகளை சத்தமில்லாமல் கொள்ளை லாபத்துக்கு விற்கும் ஆட்களோடு தொடர்பு உள்ளதா? 2 ரூபாய் பழைய புக்கை ஆயிரம் ரூபாய்க்கு விற்பவர்களை பற்றி நான் கேட்கவில்லை. உங்க புக்குகளை உங்கள் பெயர் போட்டே பிரிண்ட் போட்டு கிறுகிறுக்க வைக்கும் விலையில் விற்கிறார்களே அவர்களைப் பற்றித் தான் உங்களிடம் கேட்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முத்து மினி காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் செட்டாக அச்சு போட்டு செட் ஒன்றுக்கு 1800 என்று விற்கிறார்கள். இது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? என்னிடம் இந்த புக் ஒன்று கூட கிடையாது என்பதால் நானும் அவ்வளவு பணம் கொடுத்து தான் வாங்கினேன். யாரிடம் இருந்து? எந்த வழியிலிருந்து ? என்று கேட்காதீர்கள்- ஏனென்றால் அவர்களோடு நான் உண்மையாகவே பல வருடங்கள் பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில் கிடைக்காத புக்குகளை ஒருவருக்கொருவர் சுற்றில் விடுவது என்று ஆரம்பித்தது, அதன் பின்னர் ஸ்கேன் போட்டு, ஜெராக்ஸ் போட்டு, ஸ்பைரல் போட்டு பரிமாறிக் கொண்டது வரை எனக்கு தெரியும். ஆனால் திடீரென்று அந்த ஸ்கேன்கள் புத்தகங்களாக மாறி நீங்கள், அதாவது உங்கள் தந்தை 60 பைசாக்குப் போட்ட புக்குகளை இன்றைக்கு 200-250 என்று விற்கும் போது தான் எனக்கு வெறுத்து விட்டது. நண்பர்கள் என்ற உரிமையில் இது எப்படி என்று கேட்ட போது ‘ஜி... எல்லாமே விஜயன் சாருக்கும் தெரியும்; அவரால் இதையெல்லாம் பிரிண்ட் போட டைம் இல்லாததால் நாங்கள் போடுவதை அவர் கண்டுகொள்ள மாட்டார்!‘ என்று சொன்ன போது கூட நம்பிக்கையில்லை. ஆனால் தண்டம் அழுது அந்த 8 புக்குகளையும் வாங்கி பார்த்த போது, அதில் உங்கள் பழைய கம்பெனி பெயர் முதற்கொண்டு அச்சாகி இருப்பதைப் பார்த்த பிறகு எனக்கே சந்தேகம் வந்து விட்டது! ஒரு வேளை நீங்களும் தெரிந்து கொண்டே சும்மா இருக்கிறீர்களோ என்று. இதில் உங்களுக்கும் நேரடி பங்கு இருப்பதாய் நான் சொல்லவில்லை சார்; ஆனால் தெரிந்தவர்கள் தானே என்று பார்த்தும், பார்க்காதது போல இருக்கிறீர்களோ என்று! 

சென்னையில் மழை, வெள்ளம், சேதம் என்பதில் என் புக் கலெக்ஷன் காலியாகி விட்டது. என்னைப் போலவே நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இது மாதிரி தான் இனிமேல் பழசை சேகரிக்க வேண்டுமா? உங்கள் பிரச்சனைகள் பற்றி நிறைய ப்ளாக்கில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பழையதை சேகரிக்கும் ஆர்வம் எங்களைப் போன்றவர்களுக்கு குறையாது, நாங்கள் இப்படி கொள்ளை விலைகளுக்கு தான் வாங்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளணும் போலும். வாரமலர் கலரில், அப்புறம் ஏதோ திகில் புக்குகள்; அப்புறம் கிடைக்காத பழைய இதழ்கள் எல்லாவற்றையும் இதே போல சப்ளை செய்ய முடியும் என்று இஷ்டத்துக்கு விலை பேசினார்கள். நீங்கள் சென்னை புத்தக விழாவுக்கு வருவீர்கள் நேரில் புக்குகளை காட்டி பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கடையில் இருந்தவர் இந்த முறை நீங்கள் வரமாட்டீர்கள் என்று சொல்லி விட்டதால் இந்த கடிதம் எழுதுகிறேன். உங்கள் போன் நம்பர் தந்தால் பேசுகிறேன்..."
************ 
இன்னமும் நிறையவே நீண்டு செல்லும் அந்தக் கடிதத்தோடு 8 புத்தகங்களும் விறைப்பாக இருந்தன! ‘வாயுவேக வாசு‘ ; சூரப்புலி சுந்தர்‘  ; தபால்தலை மர்மம் etc. etc. என்ற அந்த 8 இதழ்களும் 1970-களின் மத்தியில் முத்து மினி காமிக்ஸ் என்ற லேபிலில் வெளிவந்திருந்த இதழ்களின் டிஜிட்டல் பிரிண்டுகள் என்பது பார்த்தவுடன் புரிந்தது. நமது லோகோ;அச்சகப் பெயர்,வெளியீடு நம்பர், தேதி, இத்யாதி என அட்சரசுத்தமாய் உட்பக்கங்களில் கண்ணில்பட்ட போது தான் கடிதம் எழுதியவரின சந்தேகம் முகாந்திரமின்றி இல்லை என்பது புரிந்தது! 

பிப்ரவரி மாதத்து இதழ்களின் வேலைகள், திருப்பூர் புத்தக விழாப் பணிகள் என்று தவிர்க்க இயலா விஷயங்கள் இடையே காத்திருந்தபடியால் இந்த சமாச்சாரத்தைத் தற்காலிமாகக் கிடப்பில் போடுவதெனத் தீர்மானித்தேன். பிப்ரவரி இதழ்கள் வெளியாகி, அழகாய் உங்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இதைப் பற்றி போன ஞாயிறின் பதிவில் எழுதிடும் பட்சத்தில் ஒளிவட்டம் பிப்ரவரி இதழ்கள் மீதிருந்து விலகிப் போய் விடக்கூடுமென்று பட்டது. So சென்ற வாரமும் வாய் மூடி இருந்து விடல் நலமென்று எண்ணியவன், இன்றைக்கு ஒரு வழியாக இதற்கென கவனம் தந்திடத் தீர்மானித்தேன்! 

முந்தைய இதழ்களுக்கென ஒரு சிறு மார்கெட் இன்றைக்கும் தொடர்வதும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு சேகரிப்புகளை யானைவிலை குதிரைவிலை சொல்லி விற்பதும் OLX வரை பகிரங்கமாகவே நடந்து வரும் விஷயங்கள் என்பதால் அது அவரவர் பிரியம் என்ற மட்டில் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் சேகரிப்பின் மீதான மோகத்தைக் கல்லாக்கட்டும் கருவியாகப் பார்த்திடுவது மட்டுமின்றி, இவற்றிற்கு நமது ஆசீர்வாதங்களும் உண்டென்று உரக்கப் பேசிடும் ‘கெத்து‘ நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது புரிகிறது! இந்த சமாச்சாரங்கள் நண்பர்களுள் பலருக்கும் ஏக காலமாய்த் தெரிந்துள்ளது எனும் போது நான் மட்டுமே ‘சிவாஜி செத்துட்டாரா?‘ என்ற ரேஞ்சிற்கு டியூப்லைட்டாக இருந்திருப்பதும் புரிகிறது! தெளிவாக ஸ்கேன் செய்தால் போதும் ஒரு பெரிய சைஸ் டிஜிட்டல் பிரிண்டரில் தேவைக்கேற்ப பிரிண்ட்கள் போட்டு சுலபமாய் மேகி நூடுல்ஸ் கிண்டி விடலாமென்ற மகாசிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் யாரென்பதைக் கண்டுபிடிப்பதற்கு பெரியதொரு ஷெர்லக் ஹோம்ஸ் தேவையில்லை ! கொஞ்சம் மெனக்கெட்டாலே ஸ்கேனிங் செய்வது யார் ? ; அச்சு வேலைகளைக் கவனிப்பது யார்?; மார்க்கெட்டிங் செய்வது யார் ? எந்த ரூட்டில் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் ? என்பதைத் தெரிந்து கொள்வதில் சிரமமிராதுதான்! இதனை மாவட்டம்தோறும் மார்கெட் செய்திட “Help Wanted” என்றும்; தயாரிப்புத் தரப்பினரின் விலைக்கு (!!!) மேல் ஒரு லாபம் வைத்து ஆங்காங்கே விற்றுக் கொள்ளலாமென்ற சட்டதிட்டங்களும் அமலில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள நேர்ந்த போது நிஜமாகவே சங்கடமாக இருந்தது! “எமது அடுத்த project-கள்“ என்று MC வாரமலர் தொகுப்பு; XIII – இரத்தப்படலம் தொகுப்பு என்ற பலமான / பசையான திட்டங்களும் pipeline-ல் இருப்பதாய்க் கேள்விப்பட்ட போது சில பல மாதங்களுக்கு முன்பாய் வருடத்திற்கு 48 புத்தம்புது இதழ்களை வழங்கிட ஆண்டுச் சந்தாவென நாலாயிரம் ரூபாய் கோரிட நான் முழித்த பேய்முழி தான் நினைவுக்கு வந்தது! இங்கேயோ 20 ரூபாய் சமாச்சாரத்தை 225-க்கு விற்பது மட்டுமின்றி இது கூட ஒரு ‘சேவை அடிப்படையில்‘ என்ற பில்டப்போடு நடைபெறுவதாய்க் கேள்விப்பட்டபோது அழுவதா-சிரிப்பதா என்று தெரியவில்லை!

சரி... இதற்கான தீர்வு என்னவாக இருக்க முடியுமென்று யோசித்த போது தான் ‘if you can’t beat them – join them !என்று தோன்றியது! எனது ஆசீர்வாதங்களோடு தான் அரங்கேறும் விஷயம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் – அவர்களது ஆசையை முழுமைப்படுத்தி விட்டாலென்னவென்று நினைத்தேன்! குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தொடர்ந்த நாட்களில் நமது முந்தைய பதிவுகளில் ஏதோ ஒரு நிலையில் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கென மலிவு விலைப் பிரதிகளைத் தயாரித்தால் நன்றாக இருக்குமே என்ற ரீதியில் நண்பர்கள் எழுதி வைக்க அக்கணமே தீர்மானித்தேன் நிழலில் தயாரிக்கப்பட்டுள்ளதை நிஜவுலகிற்குக் கொணர்வதென! So மறுபதிப்புப் படலத்தினுள் நாம் இறங்குகிறோம் தீர்க்கமாய்! 

பெரியதொரு எண்ணிக்கையி்னை அச்சிடுவதோ அவற்றை ஸ்டாக்கில் வைத்திருந்து கங்காரூ குட்டியைப் போலச் சுமந்து திரிவதோ இம்முறை இந்த மலிவுவிலை மறுபதிப்புகளில் இருந்திடப் போவதில்லை! சிறிதளவுப் பிரதிகளை, துவக்கத்தில் அச்சடுவோம், அவை காலியாவதைப் பொறுத்து அடுத்து திட்டமிடுவோம்! And தற்போது சுடச்சுட மார்கெட் செய்யப்படும் நமது முத்து மினி காமிக்ஸிலிருந்தே அரை டஜன் இதழ்களை முதல் சுற்றுக்கான மறுபதிப்பு இதழ்களாகத் தேர்வு செய்திடுவோம்! இவற்றுள் ஒற்றை இதழ் நீங்கலாக பாக்கி எல்லாமே மும்பை நிறுவனத்திடமிருந்து flat ரேட்களில் வாங்கப்பட்டவை என்பதால் மறுபிரசுரம் செய்வதில் தடைகளில்லை.தொடரும் நாட்களில் விச்சு & கிச்சு தொகுப்பு; பரட்டைத்தலை ராஜா தொகுப்பு ஸ்டீல்பாடி ஷெர்லாக் தொகுப்பு  என்று பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு என் கையிலுள்ள 8 முத்து மினி இதழ்களுமே தெளிவான ஸ்கேன்களிலிருந்து digital பிரிண்ட் போடப்பட்டிருப்பதால் நேரடியாக அவற்றை நாம் அச்சுக்கு எடுத்துச் செல்வதில் துளியும் சிரமமிராது! இந்த மலிவு விலைப் பதிப்புகள் மாணவர்களின் மீதான focus-ல் தயாரிப்பது நமது நோக்கமெனும் பொழுது இதனில் வியாபார நோக்கத்தை பெரியளவில் நுழைத்திடுவதாக நாமில்லை! So, 64 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு புக்கும் ரூ.20 என்ற விலையில் வெளிவரும் ; புத்தக விழாக்களில் 10% கழிவுடன் விற்பனை செய்யப்படும். இந்த முயற்சியினில் நமக்கு ராயல்டி, மொழிபெயர்ப்பு, இத்யாதி,எனத் தயாரிப்புச் செலவுகள் இல்லாததால் அதன் பொருட்டு நாம் வசூலித்திடும் தொகையினை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பிலும், நமது சார்பிலும்,மிகுந்த சிரத்தையோடு ஸ்கேன்னிங் செய்த நண்பர்களின் சார்பிலும் ஒரு சிறு அன்பளிப்பாய்ச் சேர்ப்பித்து விடுவோமே?! சென்றாண்டின் ஒரு பதிவில் ஏதாவதொரு இதழிலிருந்து கிடைக்கும் சிறு தொகையினையாவது charity-ன் பொருட்டு தந்திட முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எழுதியிருந்ததும் மறந்திருக்கவில்லை! அதனை நடைமுறைப்படுத்திட இது வாகான வாய்ப்பாகவும் எனக்குத் தோன்றியது! So- மினி‘மம் முயற்சிகளில், ‘மினி‘மம் எண்ணிக்கையிலான இதழ்களை அச்சிட்டாலும், முத்துமினி காமிக்ஸ் வாயிலாக ஒரு நல்ல விஷயத்திற்கு வழி பிறந்திருப்பதை சங்கடமான இந்த சூழலிலும் ஒரு வெளிச்சக் கீற்றாகப் பார்க்கத் தோன்றுகிறது. விற்பனை எண்ணிக்கைகள் பற்றிய யூகங்கள் ஏதுமில்லா நிலையில் நாம் வழங்கக் கூடிய தொகைகளைப் பற்றிப் பேசிடத் தயக்கமாகவுள்ளது! ஆனால் இந்த முயற்சி take off ஆகும் சமயமே அந்த நம்பர்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்பது எனது promise!

செய்வன திருந்தச் செய்‘ என்ற கோட்பாட்டை வரும் நாட்களில் தீர்க்கமாகவும் செய்தே விடுவோமே? தற்போது ‘இல்லை... இல்லை‘ என்ற நிலையில் சேகரிப்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ‘இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பின் மீதாக விரைவில் பார்வையைப் பதிப்போம்! தற்சமயம் அமலிலுள்ள முறையில் அல்லாது முன்பதிவுகளுக்கு மாத்திரமே இவை‘ என்ற ரீதியில் சிறிதளவு பிரதிகளை மட்டுமே அச்சிடுவோம் தனித் தனி நம்பர்களிட்டு ! அதாவது 750 பிரதிகள் மட்டுமே அச்சிடப் போகிறோம் என முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடும் பட்சத்தில் இதழின் பின்னட்டையில் சலான்களில், டிக்கெட்டுகளில் வருவது போல அடுத்தடுத்த நம்பர்களை 1 முதல் 750 வரை அச்சிட்டு விடலாம். So- இவை மெய்யான Limited Collector’s Editions களாக மாத்திரமே இருந்திடும் ! On the flip side – printrun குறைவாய் அமைந்திடும் போது நாம் இதுவரைப் பழகியுள்ள ரீதியில் விலைகள் (சகாயமாய்) இருந்திட வாய்ப்பிராது! ஆனால் தற்போது க்ரே மார்க்கெட்டில் நிலவிடும் ஏழாயிரம், எட்டாயிரம் பத்தாயிரம் என்ற அபத்த விலைகள் நிச்சயமாய் நம்மிடம் இராது என்ற மட்டில் உறுதி! 

சரியாகத் தேர்வு செய்து மறுபதிப்பைத் திட்டமிடல்; எட்டிப் பிடிக்கக் கூடியதொரு சிறு printrun–ஐ மட்டுமே நிர்ணயம் பண்ணுதல்; போதிய அவகாசமும், தவணைகளும் தந்து பணம் வசூலித்தல் வாகான சந்தர்ப்பத்தில் ரிலீஸ் என்பதே நமது modus operandi ஆக இந்த limited editions மறுபதிப்புகளுக்கு வைத்துக் கொள்ளலாம்! So ஞாபக மறதிக்கார நண்பர் XIII வண்ண அவதாரில் நம்மை சந்திக்கவொரு வேளை புலர்வதும் இவ்விதம் தான் இருந்திட வேண்டுமென விதிக்கப்பட்டிருப்பின் - அதனை மாற்றியமைக்க நாம் யார் ?!! (ஸ்டீல் பொன்ராஜ் சார் - என்ஜாய் !!!)
அதே சமயம்- ‘தட புட‘வென்று ராத்திரியோடு ராத்திரியாய் அத்தனை மறுபதிப்புகளையும் களமிறக்கிடுவோமென்ற கற்பனைகளில் நானில்லை. புது இதழ்கள் தான் நமது எதிர்காலம் என்பதில் துளி கூட மாற்றுக் கருத்தில்லை என்னிடம்! And நமது சொற்ப வசதிகளை, கையிருப்புகளைப் புது இதழ்களைத் தாண்டி இந்த limited editions அந்தர்பல்டிகளுக்குள் விதைத்திடும் எண்ணமும் என்னிடமில்லை. And முக்கியமாக இவற்றினுள் எனது உழைப்பைக் கூட முதலீடு செய்யும் நிலையிலும் நான் இல்லை என்பதால் - இதனை மட்டும் இனி நமது சீனியர் எடிட்டர் பார்த்துக் கொள்வார் - வரும் நாட்களில் ! ஏதேனும் டென்ஷன் இல்லாப் பணிகளுக்குள் ஆழ்ந்திட ஆர்வமாயிருக்கும் அவரும் நிச்சயம் இதனில் சந்தோஷம் கொள்வார் ! (இது அவருக்கே இதுவரையிலும் தெரிந்திருக்கா சேதி !)So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !!

டெக்ஸ் கதைகளில் வரும் புகை சமிக்ஞைகளுக்குப் போட்டியாக இன்றைக்கு என் புண்ணியத்தில் சிலபல செவிகளிலிருந்து வெப்பச் சலனங்கள் வெளிப்படுவது உறுதியென்பது புரிகிறது! And எனது யோக்கியதாம்சங்களோ ; இன்மையோ தீவிரமாய் அலசலுக்கு உட்படுத்தப்படும் என்பதும், இனி வரும் நாட்களில் அழகான அர்ச்சனைகள் ஆங்காங்கே அமர்க்களமாக நடைபெறும் என்பதும் தெரியாமலில்லை! ஆனால் நடந்து வரும் அபத்தங்களை ஏதோவொரு நிலையில் நிறுத்த முயற்சிக்காது போயின் ஏற்கனவே நாலணா நாணயத்தைப் போலச் சுருங்கிக் கிடக்கும் காமிக்ஸ் வாசகர் வட்டம் நாளாசரியாக மாயமாகவே  மறைந்து விடுமென்ற அச்சம் எழுகின்றது! ‘இதைச் செய்யுங்கள் இதைச் செய்யாதீர்கள்‘ என்ற ரீதியில் அட்வைஸ் பண்ண அவசியமிங்கே நிலவுவதாய் நான் நினைக்கவில்லை! யதார்த்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள நான் தான் செம லேட் என்ற வகையில் இங்கே ஞானசூன்யம் அடியேனே! So அட்வைஸ் செய்யும் தகுதிகள் எனக்குக் கிடையாது சர்வ நிச்சயமாய்! 

ஆனால் இத்தகைய முறையற்ற முயற்சிகளைக் காமிக்ஸ் நேசத்தின் இன்னுமொரு பரிமாணமாக நியாயப்படுத்திடுவதை ஊக்குவிக்க வேண்டாமே ப்ளீஸ்? முந்தைய சேகரிப்புகளைப் பத்திரமாக வைத்திருக்கும் நண்பர்கள் நட்பு வட்டாரத்தின் பயனுக்காக அவற்றை ஸ்கேன்களாக வலையேற்றம் செய்வது தான் இந்த “தொழில் முனைவோர்க்கு“ மூலதனம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? தயைகூர்ந்து வரும் நாட்களில் உங்கள் ஸ்கேன்களை நமக்கு அனுப்பித் தாருங்கள் மொத்த வாசகர்களும் அதனிலிருந்து பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்திடுவோம்! இத்தனை காலமாய் நண்பர்கள் ஜாடை மாடையாக இந்த grey market படலம் பற்றி என்னிடம் தகவல் சொல்லியுள்ள போதிலும் இது போல ஆதாரங்களுடன் எதனையும் பகிர்ந்திட்டிருக்கவில்லை. So யூகத்தின் பெயரில் யாரையும் நோக்கி விரல்நீட்ட எனக்குத் தோன்றவில்லை. அது மட்டுமன்றி, சின்னதொரு வட்டத்துக்குள் மௌன பாஷையில் வியாபாரமாகி வரும் இந்த சங்கதிகளை நானே ஊதிப் பெருசாக்கி,விளம்பரப்படுத்தி விட்டு   இது நாள் வரைக்கும் ‘சிவனே‘ என்று விலகி நிற்கும் இதர வாசகர்களையும் இந்த விரயத்துக்குள் கால்பதிக்கச் செய்ய வேண்டாமே என்பதே என் எண்ணமாகயிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இதனைத் தோண்டித், துருவிப் பின்னணிகளை அம்பலமாக்குவதன் மூலம் ஏற்கனவே கார்சனின் இளமையைப் போல் தேய்ந்து நிற்கும் காமிக்ஸ் ரசிக வட்டத்தினை  மேற்கொண்டும் பலவீனமாக்குவது ரசிக்கக் கூடிய சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை ! எல்லோருமே காமிக்ஸ் எனும் நேசத்தின் வாயிலாக அறிமுகம் கண்ட நண்பர்களே எனும் பொழுது யாரையும் கஷ்டப்படுத்திட மனதும் கேட்கவில்லை !  So இத்தனை காலமும் காற்றுவாக்கில் காதுகளைத் தேடி வந்த கசப்பான சங்கதிகளை கண்டும் காணாது நகன்று செல்ல முயற்சித்ததன் பின்னணி இதுவே. ஆனால் ஒரு கட்டத்தில் துளியும் கூச்சமின்றி இத்தகைய வேலைகள் பகிரங்கமாய் செயலாவதற்கு எனது இத்தனை கால மௌனமும் முக்கிய காரணமென்பது புரியும் போது மௌன விரதத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை ! ‘நீ புதுசைப் போட்டுக்கி்ட்டே போ; அது காலியான பின்னே நாங்க பின்னாடியே அறுவடை செய்து கொள்கிறோம்‘ !'என்ற சிந்தனையை இனியும் வளர்த்திடவோ, சகித்திடவோ நம்மிடம் திராணியில்லை! புதிய பாணிக் கதைகளின் தேடலிலும் , உங்கள் ரசனைகளுக்கேற்ற படைப்புகள் முக்கியம் என்ற வேட்கையிலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி வைத்துள்ள oldie கதைகளை நான் வருஷங்களாய்ப் பீரோவுக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்க, இன்னொரு பக்கமோ அதே பழசைக் கடைவிரித்து,நம் பெயரைப் போட்டே சத்தமின்றி வியாபாரம் நடத்திடும் அந்த லாவகம் - phew ! 
இவை தற்போது வீட்டிலுள்ள எனது மேஜையில் வருஷங்களாய்த் தூங்கி வருபவை ! ஆபீசில் இன்னுமொரு வண்டி உள்ளது ! 
காமிக்ஸ் மீதான காதலின் பிரதிபலி்ப்பாய் ஏதாவது செய்திட வேண்டுமென்ற அவா மேலோங்குகிறதா folks ? - please do join hands with us ; உங்கள் கைவண்ணங்களை நமது இதழ்களுள் வாகான தருணங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்-நமக்கு இயன்ற சன்மானங்களுடனும், அங்கீகாரங்களுடனும் ! இன்னும் ஒருபடி மேலே போய் maybe ஆண்டுக்கு ஒரு இதழினை அட்டைப்பட டிசைனிங்கில் துவங்கி, மொழியாக்கம், டைப்செட்டிங் வரையிலும் முழுக்க முழுக்க வாசகர்களின் கைவண்ணத்திலேயே இருக்கும் விதமாய் கூட அமைத்திடலாம்! ‘அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க வாருங்களேன் நண்பர்களே‘ என்று நான் கூவும் போது மூன்றே நண்பர்கள் மாத்திரமே கைதூக்கும் அதே வேளையில், இந்த துல்லியமான ஸ்கேனிங்களின் பொருட்டும், உயர்மட்ட software-களைப் பயன்படுத்தி கலரிங் செய்வதற்கு மாதக்கணக்கான உழைப்புகளை நல்கிடுவதும் நடந்து வருகிறது! உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு showcase தேவையென்று தோன்றும் பட்சத்தில் அதனை சரியான விகிதத்தில் அணுகிடுவோமே இனியாவது? சீரியஸாகவே - மொழிபெயர்ப்புகளுக்கு கூடுதலாய் கரங்கள் கிட்டின் மகிழ்வேன் - தொடர்ச்சியாய் இந்தப் பளுவை இரண்டே பேராய் நாங்கள் சுமந்திடுவது சதாநேரமும் ஏதாவதொரு deadline-ன் பொருட்டு முட்டி மோதி ஓடிக்கொண்டே இருப்பது போலுள்ளது ! ஒவ்வொரு ஞாயிறையும் ஏதேனும் ஒரு காகித மலைக்குப் பின்னே புதைந்து கிடந்து கழிப்பதே எனது routine ஆகி நிற்கிறது ! So டிசைனிங்கில் மாத்திரமின்றி, மொழிபெயர்ப்பினில் ஆர்வம் காட்டிட நண்பர்கள் இருப்பின் - ஒரு பிள்ளையார் சுழி போடவும் இதனை ஒரு தருணமாக்கிக் கொள்ளலாம் ! ஒரு அழகான ரசனையை மிகக் குறுகிய வாசகவட்டத்தின் துணையோடு உயிரோட்டத்துடன் தொடர்ந்திடச் செய்ய முயற்சிக்கும்போது இத்தகைய ஸ்பீட் பிரேக்கர்கள் வேண்டாமே ப்ளீஸ் ! என்ற ஒற்றைக் கோரிக்கையோடு காத்திருக்கும் மார்ச் மாதத்தின் இதழ்கள் பக்கமாய் பார்வைகளைத் திருப்புகிறேன்!

இதோ- மார்ச் மாதத்து சிரிப்புப் புலி க்ளிப்டனின் இதழின் அட்டைப்பட first look ! ஒரிஜினலே சூப்பர் என்பதால் அதனை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்து நமது அட்டைப்படமாக்கியுள்ளோம்! 
And கதையைப் பொறுத்த வரை வழக்கமான க்ளிப்டன் பாணி விறுவிறு கதை laced with british humor என்ற தடத்தில் தான் வண்டி ஓடுகிறது! பரபரப்பான கதைக்களத்தின் மத்தியினில் உறுத்தலின்றி நகைச்சுவையினைப் புகுத்திட படைப்பாளிகள் எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தையை இயன்றளவுக்குப் பின்பற்றிட நானும் முயற்சித்திருக்கிறேன்! இந்த அழகான வண்ண ஆல்பம் உங்கள் முகங்களிலும் ஒரு மென் புன்னகையை வரச் செய்திடும் பட்சத்தில் நிச்சயம் திருப்தி கொள்வேன்! ஏற்கனவே சொன்னது போல மாதமொரு கார்ட்டூன் இதழ் எனும் போது பணியில் தொய்வுகளின்றிச் செயல்படுவது சாத்தியமாகிறது! இந்த எண்ணங்களை விதைத்த நண்பர்களுக்கும், இன்று அதனை பாராட்டுக்களால் குளிர்விக்கும் நண்பர்களுக்கும் நமது நன்றிகள்! 

And இதோ - தளபதியின் காத்திருக்கும் "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழின் உட்பக்கப் preview - வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலும் ! பார்த்து விட்டு - எது அழகாய்த் தெரிகிறதென்று சொல்லுங்களேன் ? எனக்கு இரண்டுமே ரம்மியமாய்த் தோன்றின !! மீண்டும் சந்திப்போம் guys ! Bye for now ! And oh yes,enjoy the day of love !!

P.S: விடிந்தும் விடியாமலும் இருக்கும் அதிகாலைகளிலேயே எழுந்தமர்ந்து தவறாமல் நமது பதிவுகளைப் படித்து வரும் என் தந்தைக்கு நிச்சயமாய் இவ்வாரப் பதிவு சந்தோஷம் தரப்போவதில்லை! என்றைக்கோ இந்த 74 வயது இளைஞர் துவக்கி வைத்த சிலபல முயற்சிகள் இவ்விதம் திசைமாறிய கப்பல்களாய் பயணிப்பதை யார் தான் ரசித்திடுவர்? Please do spare a thought guys! 

433 comments:

  1. Replies
    1. திகில் நகரில் டெக்ஸ் பெயருக்கு ஏற்றால் போல் உண்மையில் திகில் கிளப்பிவிட்டது!

      Delete
  2. நீண்ட இடைவெளிக்குப்பின் டாப் 5 க்குள்.!!!!


    உள்ளேன் ஐயா.!!!

    ReplyDelete
  3. Replies
    1. இரத்த படலம் வண்ண மறுபதிப்பை ஆவலுடன் வரவேற்கிறேன் சார்....
      கள்ள மார்க்கெட்டை களையும் உங்கள் முடிவுக்கு ஏகமான ஆதரவு தருகிறோம் சார்....
      தங்கள் கண்களுக்கு அவற்றை அனுப்பி வைத்து ,ஆதாரத்தை அளித்த நண்பருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்& நன்றிகள். ...

      Delete
    2. @சேலம் Tex விஜயராகவன்:
      +1000000000000000000

      Delete
  4. சூப்பர் ஐடியா! வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த முத்து காமிக்ஸ் கிரே மார்க்கெட்டுக்கு இப்போதாவது முடிவு கட்டவேண்டும் என்று தோன்றியதே! உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு!

      Delete
    2. ஒரே கல்லில் மூன்று மாங்காய், மாணவர்களை கவர போகிறோம், பழைய புத்தகம்களை தேடும் நண்பர்களை திருப்த்திபடுத்த போகிறோம், charity-க்கு பண உதவி செய்ய போகிறோம்!

      Delete
    3. 4வது மாங்காய், கள்ளச் சந்தையை களைவது....

      Delete
    4. @ friends : 5-வது மாங்காய் - yours truly !!

      Delete
    5. 1995 பிறகு கமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன். 1980,1970 வந்த கமிக்ஸ் பார்க்க படிக்க மிகுந்த ஆவல்.கிரே மார்கெட்டை நான் ஊக்குவிப்பவன் நான் இல்லை ஆனால் 'கன்னித் தீவில் மாயாவி' முதன் முதலில் படித்தது. 'இரத்த படலம்' இவைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை எந்த விலை யிலும் வாங்க ரெடியாக வாங்க உள்ளேன் என்பது உண்மை.

      Delete
    6. குமார் @

      உண்மை.! எனக்கும் கள்ள மார்க்கெட் காரர்களை பிடிக்காதுதான்.நான் எடிட்டரின் விசுவாசியாக கருதப்படுவதால் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது.உண்மையில் நான் நான் காமிக்ஸ் விஷயத்தில் நொரியோ வின்ச் ,மாடஸ்டி மாதிரி.! அதுவும் மாடஸ்டி கதைகள் என்றால் நான் டேஞ்சர் டயபாலிக்காக மாறிவிடுவேன்.!

      Delete
  5. /// ஏதேனும் டென்ஷன் இல்லாப் பணிகளுக்குள் ஆழ்ந்திட ஆர்வமாயிருக்கும் அவரும் நிச்சயம் இதனில் சந்தோஷம் கொள்வார் ! So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !!///

    வெற்றிக்கு நாங்க கியாரண்டி சார்.!
    ம்.! கிளப்புங்கள்!!!

    ReplyDelete
  6. ///– அக்கணமே தீர்மானித்தேன் – நிழலில் தயாரிக்கப்பட்டுள்ளதை நிஜவுலகிற்குக் கொணர்வதென! So மறுபதிப்புப் படலத்தினுள் நாம் இறங்குகிறோம் – தீர்க்கமாய்! ///

    கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது இதுதானோ?

    இத்தகைய முடிவை எடிட்டர் அவர்கள் எடுக்க வித்திட்ட அந்த முகமறியா நண்பர்களுக்கு நன்றிகள் பலப்பல!!!!

    ReplyDelete
    Replies
    1. ///– அக்கணமே தீர்மானித்தேன் – நிழலில் தயாரிக்கப்பட்டுள்ளதை நிஜவுலகிற்குக் கொணர்வதென! So மறுபதிப்புப் படலத்தினுள் நாம் இறங்குகிறோம் – தீர்க்கமாய்! ///
      தமிழ் பட ஹீரோ டயலாக் மாதிரி இருக்கு!

      Delete
    2. Parani from Bangalore : அட...கோமாளி வேஷத்தில் காலத்தைக் கழித்தவனின் ஒரு ஆதங்கக் குரல் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

      Delete
    3. Arumaiyana plan. Idhu mighaperiya vetriyayum vaasagar vattathayum thara pogiradhu

      Delete
  7. அனைவரைக்கும் வணக்கம். அரூமையான பதிவு. இரத்தபடலம் கலரில் வருவதூ உருதியாகிவிட்டது. பழைய இதழ்கள் மலிவு விலையிலான மறுபதிப்பு வருவதை வரவேற்போம். ஆனால் எடிடடர் அவர்களே இதற்காக தாங்கள் செலவு செய்ய போகும் தொகை உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த கூடாது என்பதே எனது கவலை. நண்பர்களே எடிட்டரின் இந்த முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் குறைகள் கரி எடிட்டரை நோகடிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : இம்முறை இவை அக்மார்க் லிமிடெட் editions ஆக மாத்திரமே இருந்திடப் போவதால் - உங்களிடமிருந்து வசூலிக்கும் தொகைகளைப் பத்திரப்படுத்தி - முறையாக இதழ்களை தயாரிக்கும் பொறுப்பு மாத்திரமே நமதாக இருந்திடும் நண்பரே ! கவலை வேண்டாம் !

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : சார்..நிறைய முறைகள் எழுதியுள்ள விஷயமே ; ஆனால் உங்களின் பொருட்டு இன்னொருமுறையும் பதிவிடுகிறேனே ! மாயாவி & கோ. மறுபதிப்புகளுள் இரண்டாம் சுற்றுக்கு உரிமைகள் புதுப்பிக்கும் பொழுது ஒட்டு மொத்தமாகவே அனைத்துக் கதைகளுக்கும் காண்டிராக்ட் + பணப் பட்டுவாடா அத்தியாவசியமாகியது. So ஒரு பெரிய தொகையினை அதனில் முடக்கியுள்ள சூழலில் - இயன்றளவுக்கு சீக்கிரமாய் அவற்றைக் களமிறக்க எண்ணுவதே தொடர்ச்சியாய் இந்த நாயகர்களின் கதைகளாய் வெளிவருவதன் பின்னணி !

      Delete
  9. எடிட்டர் சார்,
    அப்படியே அந்த சுஸ்கி விஸ்கி., மினி லய்ன்., ஜூனியர் லயன் இவற்றில் வெளியான கதைகளையும். . . . ,

    ஆரம்பகால லய்னின் லக்கி., ஆர்டின் கதைகளையும் இப்போதைய தரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்தால் சந்தோசத்தின் உச்சத்தை எட்டிப் பிடித்துவிடுவேன் சார்.!

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் கேளுங்க என் ஆர்ட்டின் குட்டி!

      ஆமா ஆமா ஆமா!

      Delete
    2. @ FRIENDS : நமது அடுத்த சந்திப்பின் போது (சென்னை / ஈரோடு /வேறெங்காவது) நிதானமாய் இவற்றை அலசிடுவோமே ! இங்கு நான் பதிவிட்டிருப்பது எனது துவக்க சிந்தனைகள் மாத்திரமே ! இவற்றை refine செய்து முறையான பாதைகளை நிர்ணயிக்க நிறைய inputs அவசியப்படும் !

      Delete
    3. சூப்பர் எடிட்டர் சார்! தங்கள் சித்தம் - எங்கள் புத்தகம்! :)

      Delete
    4. // வேறெங்காவது //

      எடிட்டர் சார்... இ..இத்தாலி? :D

      Delete
    5. Erode VIJAY : பொனெல்லி ஆபீசிலேயே நம் பொதுக்குழுவைக் கூட்டி விடலாம் தான் ; என்ன ஒரே பிரச்சனை பெரியவர் பொனெல்லியின் அறையில் ஒரு நிஜ வின்செஸ்டர் பார்த்த ஞாபகம் !!

      Delete
    6. இத சொல்லியாவது இத்தாலி செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததே!!

      Delete
    7. //பெரியவர் பொனெல்லியின் அறையில் ஒரு நிஜ வின்செஸ்டர் பார்த்த ஞாபகம் !!//

      அதால அடிச்சே கொன்னுடுவாங்களா சார்?! :O

      Delete
    8. Erode VIJAY : நமது கச்சேரிகளைப் பார்த்து மிரண்டு வின்செஸ்டரால் வழியனுப்புப் படலத்தை நடத்திடக் கூடாதில்லையா ?

      Delete
  10. குறி கரி ஆகிவிட்டது மன்னிக்கவும்

    ReplyDelete
  11. ‘இரத்தப் படலம்‘ வண்ண மறுபதிப்பு வரட்டும்! ஆனால் நிதானமாக வரட்டும்.. அடுத்த வருடம் என்பது நண்பர்கள் பணம் ரெடி செய்ய வசதியாக இருக்கும்! யோசித்து செய்யவும்! பல நண்பர்களுக்கு இது சந்தோசமான செய்தி.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : நிச்சயமாய் ! உங்களுக்கும், எங்களுக்கும் மூச்சிரைக்காது நடை பழகியாக வேண்டும் ! அது தான் பிரதான விஷயமே !

      Delete
    2. \\இரத்த படலம் நிதானமாக வரட்டும்\\
      ஆமா நிதானமாக வரட்டும். இரண்ண்ண்டு(2) மாதம் டைம் எடுத்து கொள்ளுங்கள்.

      Delete
  12. அந்த க்ரே-மார்க்கெட்காரவுகளுக்கு என் நன்றிகள் பல! பல வருடங்களாய் கேட்டுக் கிடைக்காத பலவும் இனி சரமாரியாய் கிடைக்கப்போகுதுன்னா காரணம் அவுகதானே?

    '2016ல் காத்திருக்கிறது ஒரு காமிக்ஸ் அடைமழை'னு சிலமாசங்களுக்கு முன்னே வந்த விளம்பரம் இப்பத்தான் பலமா உண்மையாகிட்டு வருது!

    அடை மழை கொட்டட்டும்! தொப்பலாக நனையக் காத்திருக்கிறோம்! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : சில ஆரம்பங்கள் அத்தியாவசியங்களின் பிள்ளைகளாக அமைந்து போவது படைப்பவரின் லீலைகளே !! வேறென்ன சொல்ல ?

      Delete
    2. //அடை மழை கொட்டட்டும்! தொப்பலாக நனையக் காத்திருக்கிறோம்! :)//

      +1

      Delete
    3. தொப்பலாக நனைவதில் மாடஸ்டிக்கும் பங்குண்டா.?

      Delete
    4. //தொப்பலாக நனைவதில் மாடஸ்டிக்கும் பங்குடா//
      நாம லெக் பிஸ் கேட்டு போராடுவோம் MV sir.

      Delete
  13. I always love lion comics...14க்காக

    ReplyDelete
  14. // ஜி... எல்லாமே விஜயன் சாருக்கும் தெரியும்; அவரால் இதையெல்லாம் பிரிண்ட் போட டைம் இல்லாததால் நாங்கள் போடுவதை அவர் கண்டுகொள்ள மாட்டார்!‘//

    இவர்கள்தான் உண்மையான காமிக்ஸ் "வியாபாரிகள்". இவர்களின் விற்பனைக்காக ஆசிரியரின் பெயரை இழுப்பது அபத்தத்தின் உச்சம் :-(.

    மொத்தத்தில் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" என்பதை புரிந்து கொண்டு இப்போதாவது களத்தில் இறங்குவது சந்தோசத்தை தருகிறது! வெற்றி நிச்சயம்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : நிச்சயமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்கள் பல அவர்களிடம் உள்ளன !! அந்தத் திறமைகள் திரைமறைவுக்குச் செல்ல இஷ்டப்பட்டதே துரதிர்ஷ்டம் !

      Delete
    2. எப்போது திறமைசாலிகள் தவறான இடத்தில இருக்கிறார்கள்! வருத்தமான விஷயம்தான்!

      Delete
  15. கர்னல் கதை அட்டை படம் ஜில் ஜோர்டன் கதை அட்டை படத்தை நினைவுபடுத்துகிறது. அதே போல் மாதிரி பக்கத்தில் உள்ள சேசிங் காட்சியும் சமீபத்தில் வந்த ஜில் ஜோர்டன் கதையை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஆனால் இது முற்றிலும் வேறு விதத் தடத்தில் தடதடக்கும் ஜாலித் திரில்லர் !

      Delete
  16. Replies
    1. Erode VIJAY : Dial 'M'for முட்டைக்கண்ணனின் அந்தர்பல்டிகள் !

      Delete
  17. Replies
    1. விஜயன் சார், தற்போது எல்லாம் டிஜிட்டல்மயம் என்னும் போது விரைவில் விற்பனையாகி காலியாகிவிடும்/demand அதிகம் உள்ள புத்தகம்களை உடனே சில நூறு பிரதிகள் அச்சிட்டு ஒரிஜினல் விலையை விட கொஞ்சம் அதிகம் வைத்து விற்பனை செய்ய முடியுமா? நமது come-back special பிறகு வந்த பல இதழ்களை பல நண்பர்கள் இன்றும் தேடி வருகிறார்கள்!

      Delete
  18. இரத்தப் படலம் மறுபதிப்புப் பணிகளில் நாளை காலை விடிந்தும் விடியாமலேயே களமிறங்கவுள்ள நமது ஜூனியர் எடிட்டருக்கு எங்களது வாழ்த்துகள்! ;)

    எங்க ஜூனியர் எடிட்டருக்கு வேளா வேளைக்கு டீ,காப்பி, பூஸ்ட், போன்வீட்டா எல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்துடுங்க எடிட்டர் சார்...! கண்ணு முழிச்சு வேலை செய்யணுமில்ல?

    ReplyDelete
  19. திகில் நகரில் டெக்ஸ்: அந்த பெண்ணின் பிளாஷ்-பக் மிகவும் அழுத்தமாக இருந்தது, மனதை பாதித்தது. அவளின் பழிவாங்கும் முடிவு சரி என உள்மனம் சொல்லியது. அந்த பெண்ணுக்காக "சிறப்பு பத்திரிகையாளர்" இறுதியில் எடுத்த முடிவு மிகவும் பாராட்டு உரியது!

    கதையின் இறுதிவரை கொலையாளி யார் என்பதை சஸ்பென்ஸ் உடன் கொண்டு சென்றது தான் கதையின் பலம். நான் டெபுடி ஷெரிப் அல்லது அந்த சிறப்பு பத்திரிகையாளர்தான் கொலையாளியாக இருப்பார்கள் என நினைத்தேன். அந்த பெண்ணை பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளவில்லை. இறுதி பக்கம்களில் அந்த பெண்தான் குற்றவாளி என்பதை அறிந்து திகைபடைதேன்!

    எதிரிகளுடன் நடக்கும் சண்டையில் அந்த முன்னால் ராணுவ வீரர் பங்கு பெறுவது, தேவை இல்லாதது.

    அதே போல் நமது டெக்ஸ் கையெழுத்தை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதது கதையின் மிக பெரிய ஓட்டையாகபடுகிறது.

    மொத்தத்தில் இந்த மாத கதைகள் அனைத்தும் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இந்த டெக்ஸ் கதை பிடிப்பது பெரிய விஷயம் கிடையாது. எனக்கு (டெக்ஸ் எதிர்போர் சங்க உறுப்பினர்)இந்த கதை பிடித்திருப்பதுதான் பெரிய விஷயம்.இந்த மாதிரி கதைகளை ஆசிரியர் தேர்வு செய்யும் பட்சத்தில் அடுத்த வரும் வருடங்கள் டெக்ஸ் சந்தா கட்ட எனக்கு எந்த ஓரு தயக்கமும் இருக்காது.(12ம் எனக்கு பிடித்த இதே மாதிரி டெக்ஸ் கதைகள் வேண்டும் என்று கேட்கவில்லை. அட்லிஸ்ட் 3,4 கதைகளை இதேபோல் உள்ள டெக்ஸ் கதைகளை வெளியீடுகள்)

      Delete
    2. கணேஷ்@...
      டெக்ஸ் உங்களை கவர்ந்து விட்டது ரொம்ப நல்ல செய்தி...
      நிச்சயமாக இந்த ஆண்டு நீங்கள் எதிர்பார்க்கும் வித்தியாசமான டெக்ஸ் கதைகள் 6வது அமையும்.....
      டெக்ஸ் கிளப்பின் புதிய உறுப்பினரை காதலர் தினத்தில் வரவேற்கின்றோம்...

      Delete
    3. கணேஷ் @

      நான் கூட டெக்ஸ் கதைகள் போரடித்துவிடுமோ என்று நினைத்ததுண்டு.ஆனால் இப்போது அதற்கு சாத்தியம் இல்லை.! அதற்கு காரணம் டெக்ஸ் கதையோடு கதையாக வரும் கேரக்டரே காரணம்.!
      உதாரணமாக ரமணா,துப்பாக்கி போன்ற படங்கள் அந்த ஹீரோவை பிடிக்காதவர்களுக்கு கூட அந்தபடம் பிடிக்கும்.!

      Delete
  20. எடிட்டர்,

    நீங்கள் செய்ய இருப்பது சரியா/தவறா என்று சொல்லத் தெரியவில்லை, ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.எந்த பத்திரிகை உலகிலும் நடக்காத விஷயம், நம் காமிக்ஸ் உலகில் மட்டும் நடப்பதில் என்ன காரணம்...? இவையெல்லாம் முளையிலேயே கிள்ளி அல்ல.. தூக்கி ஏறிய வேண்டிய விஷயங்கள்.
    கண்டும், காணாமலும் இருந்ததால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவையும், அதிகாரத்தையும் இவர்களுக்கு வழங்கியவர்கள் யாரோ..? ஆரம்பத்திலேயே.. சொல்ற இடத்தில் சொல்லி இரண்டு தட்டி தட்டியிருக்கணும், இந்தளவிற்கு வளரவிட்டதற்கு நாமும் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு காரணமாகி விட்டோமென்பது வருந்ததக்கது.

    தெரிந்த முகமோ, அறியாத நபரோ செய்தவர்கள் யாராகயிருப்பினும், இத்துடன் இதனை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களின் உழைப்பை இப்படி நோகாமல் சுரண்டி நொங்கு திங்கும் புண்ணியவான்கள் 'வெட்கமே உன் விலை என்ன'..வென்று கேட்பார்கள் போலிருக்கிறது. shame on you..ரத்தம் கொதிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. //'வெட்கமே உன் விலை என்ன'//

      ' அட! அப்படியொரு புக்கு வந்திருக்கா... அதையும் பிரிண்ட் போட்டு சேல் பண்ணிட்டாப் போச்சு'னு சொல்லப்போறாங்க மொய்தீன் சார்! பயபுள்ளைக!

      Delete
    2. MH Mohideen : புரிகிறது சார் ! நிச்சயமாய்த் தவறு நம் மீதும் உள்ளது தான் ! .

      Delete
    3. Mohideen: பொட்டில் அடத்தால் போல் உள்ள உங்கள் comment எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

      Delete
  21. விஜயன் சார், நமது சிறப்பு இதழ்களை மறுபதிப்பு செய்வது கடினம். அதற்கு பதிலாக அந்த சிறப்பு இதழ்களில் வந்த கதைகளை தனி தனியாக மறுபதிப்பாக வரும் காலம்களில் மறுபதிப்பு செய்யலாம்.

    ஆனால் முதலில் செய்வது நமது முத்து காமிக்ஸ்சில் வந்த முதல் நூறு இதழ்களை மறுபதிப்பு செய்வது. எனக்கு தெரிந்து இன்று கிரே மார்க்கெட்டில் அதிக demand உள்ள இதழ்கள் இவைதான்! இதில் இருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. ஆனா ஒன்னு நீங்க எந்த பக்கம் பந்தை போட்டாலும் பிடித்து அதனை கோல் போட்டு உங்கள் முயற்சிகளை வெற்றி பெற செய்வோம்.

      Delete
    2. முத்து அல்லது மினி லயன்...

      Delete
  22. காதலர்கள் தினத்தில் காமிக்ஸ் காதலர்களுக்கு ஒரு சிறப்பான பரிசு! அதுவும் மறுபதிப்பு பரிசு!

    ReplyDelete
  23. இந்த திட்டத்தில் உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து விரைவில் செயலில் இறங்குவது வெற்றிக்கு வழிவகுக்கும்! முடிந்தால் இந்த வருடத்தின் மத்திய பாகத்தில் இறுதி இந்த மறுபதிப்பு முயற்சியை நடை முறைபடுத்தலாம். "இரும்பு சூடா இருக்கும் போதே வளைத்து விட வேண்டும்".

    ReplyDelete
  24. ஹூம்.... இன்னிக்கு பதிவு பயங்கர ரொமேன்ட்டிக்கா இருக்கும்னு நினைச்சேன்... ஆனா பயங்கரமா மட்டும்தான் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ரோமங்களைத் தலையில் எண்ண வேண்டிய வேளையில் அடியேனிடம் ரொமாண்டிக் பதிவை எதிர்பார்த்தால்...?

      Delete
    2. @vijay:
      காதலென்றாலே....பிரச்சனை என்பதால், இன்று வந்த இந்த பதிவும் அதனுடன் கைகோர்க்கிறதுபோல?

      Delete
  25. சில நண்பர்களிடம் தெரிந்துகொண்டதன் மூலம் ஒரு காமிக்ஸ் 15000 ரூபாய்க்கெல்லாம் விற்கப்பட்டதாக அறிந்தபோது....


    இதெல்லாம் எனக்கில்லை... என்று திருவிளையாடல் தருமியாய் மனதினுள் புழுங்கிய நான் இப்போது...

    அத்தனை காமிக்ஸும் திரும்ப வருதா..? சொக்கா, உன் விளையாட்டே விளையாட்டு என்று கூத்தாடத் தோன்றுகிறது விஜயன் சார்..!

    ReplyDelete
    Replies
    1. Arun Kamal : சிறுகச் சிறுக...! கவனமாய் அடி வைத்து முன்னேறுவோம் !

      Delete
    2. @ Arun Kamal: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இவர்கள் 15000/- ரூபாய்கென்ன, விட்டால் 150000/-ரூபாய்க்கு கூட விற்பார்கள். நாம் இவர்களிடம் சிக்காமல் நழுவி செல்லவதே, இவர்களை அடக்கும் ஒரே வழி!

      Delete
  26. அருமையான வரவேற்கதக்க முடிவு இனி எல்லாம் ஜெயமே
    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இனி கள்ள சந்தை அடியோடு ஒழிய வேண்டும்.

    ReplyDelete
  27. எடிட்டர் சார்....?
    நீங்கள் சொல்லும் விஷயங்களை கேட்க திகைப்பாய் இருக்கிறது. இப்படியெல்லாமா நடக்கிறது..? என்ன விலையேனும் கொடுத்து பழைய இதழ்களை வாங்கத்துடிக்கும் நண்பர்கள் இருக்கப்போய்த்தானே இதுபோல ஃபோர்ஜரிகள் கிளம்பி கல்லா கட்டுகிறார்கள்...! இவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாதா..?

    எது எப்படியோ இந்த கொள்ளைக்காரன்களின் புண்ணியத்தில் நான் கண்ணில் கண்டிரா பல இதழ்கள் வெளிவர இருப்பதை எண்ணி மனம் குதூகலிக்கிறது...! மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது...! நண்பர் ஒருவர் சொன்னதைப்போல சிறப்பிதழ்களில் வந்த கதைகளை தனித்தனியே வெளியிடலாம்...! இது நல்ல பலனைத்தரும். மினி லயனின் கதைகள் வெகு பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து. சூப்பர் பைலட் டைகர், மறையும் மாயாவி ஜாக், ஒற்றைக்கண் ஜாக்,புயல் வேக இரட்டையர் என பலப்பல நாயர்கள் கனவில் வந்து இந்த இரவின் மீத தூக்கத்தை கெடுப்பார்கள் என்பது உறுதி...!

    உங்கள் மலிவு விலை பதிப்பில் மினி லயனின் முதல் நான்கு கதைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. //நான் கண்ணில் கண்டிரா பல இதழ்கள் வெளிவர இருப்பதை எண்ணி மனம் குதூகலிக்கிறது...! மிகவும் மகிழ்ச்சியான செய்தி இது...! //

      மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான்... ஆனால், இதன் ஆரம்பப் புள்ளி ஒரு மோசமான விஷயத்தின் துவக்கமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      Delete
  28. வாத்தியாரே மினிலயனில் வந்த அங்கிள் ஸ்குரூஜ்,கள்ளக்குறிச்சி கார், சுக்கிரன் விஸ்கி, புதிர் குகை, லக்கி, சிக்பில்.

    முத்து காமிக்ஸில்
    டிடக்டிவ் கதைகள், வேதாளர் மாண்ட்ரேக்,சிஸ்கோ கிட் கதைகள்
    மறுபதிப்பு செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : Whoa...whoa....நிதானமாய்ச் செல்வோம் நண்பரே ! ஒற்றை நாளில் 40+ ஆண்டுகளின் சிறப்பு இதழ்களை கவர் செய்திட இயலாதெனும் போது - கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் நகர்ந்தாக வேண்டும்

      Delete
  29. இரத்த படலம் கலரில்....என் நீண்ட நாள் கனவு.சீக்கிரம் நிறைவேற்றுங்கள் எடி சார்..

    ReplyDelete
  30. // இதோ - தளபதியின் காத்திருக்கும் "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழின் உட்பக்கப் preview - வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலும் ! பார்த்து விட்டு - எது அழகாய்த் தெரிகிறதென்று சொல்லுங்களேன் ///

    நிச்சயமாய் வண்ணம்தான்!

    ReplyDelete
    Replies
    1. I feel B&W impress me more than color.. The face expressions are better and clearly visible :)

      Delete
    2. நிச்சயமாய் b&w மோசமில்லை !!

      Delete
  31. ஆசிரியரே நான் இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில் புத்தகத்தை பல அந்தர் பல்டிகள் அடித்து கள்ள மார்கெட்டில் வாங்கினேன் எனக்கு ஜார்ஜ் ட்ரேக் மீது எனக்கிருந்த அபிமானத்தை எவ்வளவு காசாக்க முடியுமோ அவ்வளவு பிடுங்கினார்கள்
    நீங்கள் தயவுசெய்து எப்பாடு பட்டாவது இரட்டை வேட்டையர்கள் புத்தகத்தை வெளியிட முயற்சி செய்யுங்கள் முயன்றால் முடியாததில்லை

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஜான் மாஸ்டர் கதைகளையும் வெளியிட முயற்ச்சியுங்கள் சார்......! ப்ளீஸ்.....!

      Delete
    2. @ செந்தில் சத்யா..!
      கேட்பதே கேட்கிறோம்...பல்க்காக கேட்டுவிடுவோமே..?
      @ எடிட்டர் சார்...!
      இரட்டை வேட்டையரின் அனைத்து கதைகளையும் ஒன்று திரட்டி டைஜஸ்ட்டாக கூட வெளியிடலாம்....!

      இரும்புக்கை நார்மன் கதைகளையும் டைஜஸ்ட் வடிவில் வெளியிடலாம்....!
      நாங்க வேண்டாம்னா சொல்லப்போறோம்...!!

      Delete
    3. ஜே.பா.சரவண குமார் சார் கரும்பு தின்ன கசக்குமா தேனை ருசிக்க நாக்கு மறுக்குமா

      Delete
  32. இரத்தப்படலம் வண்ணத்தொகுப்பு...!

    கருப்பு வெள்ளையில் வெளியிட்டது போலில்லாமல் பாகஸ் செட்டாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்...!
    இரண்டிரண்டு ஆல்பங்களாக ஒன்பது புத்தகங்கள்...
    அல்லது

    மும்மூன்று ஆல்பங்களாக ஆறு புத்தகங்கள்....!

    ஏன் சொல்றேன்னா க/வெ தொகுப்பையே கையில தூக்க முடியலை...அவ்ளோ கனம்..!
    கலர்ல ஆர்ட் பேப்பர்லனா இன்னும் கனம் கூடிடுமே..அதனாலதான்...!
    தனித்தனி புக் படிக்க ரொம்ப வசதியா இருக்கும்....!

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : கவனத்தைக் கோரும் கருத்தே ....! நண்பர்களின் சிந்தனைகளை சிறுகச் சிறுகத் திரட்டுவோமே !

      Delete
    2. இடையில் வந்த கதை பற்றிய கதையும் சேத்தி 19தும் வரட்டும் :)

      Delete
  33. Better Late than Never.. Happy that you have acted on sir.
    Happy to see Muthu Mini reprints.. We are with you.

    ReplyDelete
    Replies
    1. Krishna VV : :-) நன்றிகள் நண்பரே !

      Delete
  34. இந்த பதிவு என் மனதைத் தொட்ட பதிவு கள்ள மார்க்கெட்டை தடை செய்ய சிங்கம் களம் இறங்கி விட்டது இனி எல்லாம் தூள் தான்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : அவர்கள் செய்துள்ளது சுலபமான விஷயம் நண்பரே ; நம் முன்னே காத்திருப்பது கடினப் பாதை ! So நிறைய உழைப்பும், நிறையப் பொறுமையும் அவசியமாகிடும் !

      Delete
  35. //சீரியஸாகவே - மொழிபெயர்ப்புகளுக்கு கூடுதலாய் கரங்கள் கிட்டின் மகிழ்வேன் //

    ம்... செனா அனா, கார்த்திக் சோமலிங்கா, ஆதி தாமிரா, ரமா கார்த்திகை, வண்ணப்புறா, பாம்பாம், புதுவை செந்தில், கிட்ஆர்ட்டின், காமிக்லவர், M.H.மொய்தீன், சூப்பர் விஜய், விஸ்கி-சுஸ்கி, தங்கவேல், M.V, M.P உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. மேலே உள்ள லிஸ்டில் சைனா ஷெரிஃபை கவிதையாய் பேச வைத்த ஈரோடு விஜயின் பெயர் காணப்படவில்லையே? ??
      என்ன காரணம் , யார் செய்த தாமதம்???

      Delete
  36. ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டி விட்டீர்களே வாழ்த்துக்கள். இரத்தபடலம் வண்ணத்தில் என்ற அறிவிப்பு சூப்பர்.முத்து மினி மட்டுமல்லாது பழைய கோடைமலர்கள், மற்றும் பழைய சிறப்பிதழ்களையும் மறுபதிப்பிக்க வேண்டும் ஏனெனில் இனி அது போன்ற பது இதழ்கள் சாத்தியமில்லை எனும் போது மறுபதிப்பிலாவது ஆறுதல் அடையலாம்!

    ReplyDelete
    Replies
    1. முதல்வரி தவிர மற்ற வரிகளுக்கு ஒரு like! ;)

      Delete
  37. ////சீரியஸாகவே - மொழிபெயர்ப்புகளுக்கு கூடுதலாய் கரங்கள் கிட்டின் மகிழ்வேன் ////

    எனக்கென்னவோ அவர் 'கிட்டின்'னு சொல்லியது 'கிட்ஆர்ட்டின்'னே கேட்குது!

    கிட்ஆர்ட்டின் கண்ணன் - ஜமாய்ச்சுடலாம்தானே?

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கென்னவோ அவர் 'கிட்டின்'னு சொல்லியது 'கிட்ஆர்ட்டின்'னே கேட்குது!///

      ஈனா வினா.,

      "அவ்வளவு சத்தமாவா கேக்கூது? "

      Delete
  38. என் பெயர் டைகர் கறுப்பு வெள்ளை களையாக உள்ளது

    ReplyDelete
  39. பலமுறை காதலை சொல்லி ஏற்காத காதலி ஒரு காதலர் தினத்தன்றுதான் ஏற்று கொண்டாள் அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை விட இந்த காதலர் தினத்தன்று பல மடங்கு மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன் இது நான் வணங்கும் கடவுளின் மீது ஆனை உங்களின் இந்த முயற்சி நான் உட் பட பல காமிக்ஸ் காதலர்களின் கனவுகள் நனவாக போகிறது

    ReplyDelete
  40. சமீபத்தில் என் சேகரிப்பிலிருந்த இரண்டு முத்து காமிக்ஸ் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.!

    விங் கமாண்டர் ஜார்ஜின் கொலைகார கபாலம் மற்றும் ஷெர்லக் ஹோம்ஸின் மயான மாளிகை....!

    இரண்டுமே குட்டியான பாக்கெட் சைசில் நூறுபக்கங்களில் இரண்டிரண்டு கதைகளோடு....அவ்வளவு அழகாய் காட்யளித்தன..!
    டெக்ஸ் டைகர் லார்கோ போன்ற நீ.....ளமான கதைகளை படித்துவிட்டு இதுபோன்ற சின்ன சின்ன கதைகள் வாசிப்பில் ஒரு விளக்கமுடியா சந்தோஷ உணர்வை தநதன...!

    இதுபோன்ற சிறுகதைகளெல்லாம் இனி வருமா என ஏங்கிக்கிடந்த தருணத்தில் கோடையில் பெய்யும் சாரல் மழைபோல் தங்களின் இந்தப்பதிவு தந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.நன்றிகள் சார்...!

    ReplyDelete
  41. மேலும் பழைய இதழ்களை கோட்டை விட்ட அயல்நாட்டு பதிப்பாளர்களுக்கு நம் மறுபதிப்பு digital files இழந்ததை மீட்க உதவக்கூடும்!

    ReplyDelete
  42. ///விடிந்தும் விடியாமலும் இருக்கும் அதிகாலைகளிலேயே எழுந்தமர்ந்து தவறாமல் நமது பதிவுகளைப் படித்து வரும் என் தந்தைக்கு நிச்சயமாய் இவ்வாரப் பதிவு சந்தோஷம் தரப்போவதில்லை! ///

    முத்து-மினியின் மறுபதிப்புப் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இந்த சந்தோச தருணத்தில் அப்படியே அந்த மறுபதிப்புகளில் ( அல்லது ரெகுலர் இதழ்களில்) நமது 'சீனியர் எடிட்டரின் சிறுவயதில்' வெளியாகிடும் என்ற அறிவிப்பையும் வெளியிடலாமே எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தை நள்ளிரவுக் கழுகுகளாய்க் கடத்தி விட்டால் - அவரையே நேராகக் கேட்டு விடலாம் !! ஹாவ்வ்வ்வ் !! தூங்குவோம் இப்போதைக்கு !

      Delete
    2. சீனியர் எடிட்டர் நிச்சயம் சம்மதிப்பார்! காத்திருக்கிறோம்...

      Delete
  43. இரத்தப் படலம் கலரில் வர போவது மகிழ்ச்சி ஆசிரியரே நான் தங்களது வரலாற்று சாதனையாக கருதுவது இரத்தப் படலம் கலெக்டர் ஸ்பெஷலைத்தான்

    ReplyDelete
  44. எடிட்டர் சார்,

    நண்பர் KiD ஆர்டின் KannaN சொன்னது மாதிரி "கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது".

    தங்கள் மேஜையில் பல நாளாக தூங்கிக்கொண்டிருக்கும் "ரிப் கிர்பி & மாண்ட்ரேக்" கதைகளை நாங்கள் விரைவில் பார்க்க வாய்ப்பு உள்ளதா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Radja : அட..போட்டோவில் அதையும் கவனித்து விட்டீர்களா நண்பரே ?

      Delete
  45. Dear Editor Sir,
    காமிக்ஸ் காதலர்களுக்கு காதலர் தினத்தன்று இதை விட இனிப்பான செய்தி இல்லை .

    நன்றி எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. Suresh Natarajan : அட..இத்தனை இரவுக் கழுகுகளா ? :-)

      Delete
    2. +1
      Mandarke are publish by old rani comics
      Now i want to see the mandrake in lion logo

      Delete
  46. முத்து காமிக்ஸ் வாரமலர் மற்றும் அல்லாமல்,இது வரை.,அதாவது முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ்ல் 2000 ஆண்டிற்கு முன் வெளிவந்த கதைகளை கதைநாயகர்களை முன்னிறுத்தி Collector’s Edition-களாக தாங்கள் கூறிய மலிவு விலை பதிப்பில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
    தற்போது வெளிவரும் மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் ஒரிஜினலாய் இல்லை என்பது எனது அபிப்ராயம்.ஏனெனில்,சிறிய அளவில் விளம்பரத்தில் அழகாக தெரியும் மும்மூர்த்திகள் கதைகளில் பெரியதாக்கும் போது தமது ஒரிஜினாலிடியை இழந்து விடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. Boopathi Rajkumar : தவறான அனுமானம் சார் ! மும்மூர்த்திகள் + ஸ்பைடர் கதைகளின் ஒரிஜினல் ஆக்கங்கள் சகலமுமே நாம் இப்போது வெளியிட்டு வரும் அதே சைஸ் தான் ! நாம் தான் அவற்றை இத்தனை காலமாய்க் குட்டியூண்டாக்கிப் பார்த்தே பழகிப் போய் விட்டோம் ! So அந்தப் பாக்கெட் சைஸ் மும்மூர்த்திகளை நினைவிலிருந்து நீக்கிவிட்டால் இந்த வேறுபாடு தோன்றிட வாய்ப்பில்லை ! And இன்றைக்கு இந்த மறுபதிப்புகளை ஆசையாய் வாங்குவதில் மூத்த வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசம் எனும் பொழுது அவர்களுக்காகவாவது பெரிய சைஸ் + பெரிய எழுத்துக்கள் அவசியமன்றோ ?

      Delete
    2. //இன்றைக்கு இந்த மறுபதிப்புகளை ஆசையாய் வாங்குவதில் மூத்த வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசம் எனும் பொழுது அவர்களுக்காகவாவது பெரிய சைஸ் + பெரிய எழுத்துக்கள் அவசியமன்றோ ?//

      ரொம்ப ரொம்ப நியாயமான, அவசியமான காரணம்!

      Delete
  47. கத்தி முனையில் மாடஸ்டி, மாடஸ்டிin இஸ்தான்புல், கழுகுமலைக்கோட்டை) கற்கால வேட்டையையும் மறுபதிப்பு செய்யுங்கள் சார். நான் கள்ள மார்கெட்டில் வாங்க விருப்பம் இல்லாமல் நேர்மையாக இன்று வரை உங்கள் மறு பதிப்புக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..! ராவணன் சார்..அருமையா சொன்னீங்க..!
      எடிட்டர் சார் இளவரசி ஃபேன் க்ளப் கொஞ்சம் கொஞ்சமா வலுவாயிட்டே வர்றதை கவனிச்சீங்களா...?

      Delete
    2. ravanan iniyan : கிட்டத்தட்ட அதே சைஸ் ; அமைப்பு ; black & white என்ற காரணங்களினால் மாடஸ்டி கதைகள் மறுபதிப்புகளுக்கு சுலபக் களங்கள் ! பார்ப்போமே !

      Delete
    3. ஆசிரியர் ஒத்துக் கொண்டார் இனி தேவதையின் அரூமையான மறு பதிப்புகளை கண்ணால் காண போகிறோம் கொண்டாடுவோம் நண்பர்களே

      Delete
    4. கொண்டாட்டம் கோலாகலமாய் இருக்கும்...!

      Delete
    5. நன்றி சார். இளவரசியின் ரசிகர்கள் சார்பாக கைத்தட்டி கரவொலி எழுப்பி என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் தோழர்களே இதை வரவேற்று அணி வகுப்போம்

      Delete
    6. ஆடுவோம்...
      பாடுவோம்....
      கொண்டாடுவோம்...!

      Delete
    7. மாடஸ்டியுமா.?......................ஹைஹைஹை...

      சூப்பர்.!
      உண்மையில் சார்.!இந்த கள்ள மார்க்கெட் பற்றி ஒனக்கு ஒன்றுமே தெரியாது.!என்னிடம் பழையவை 80% உள்ளது.மேலும் நான் உங்கள் விசுவாசியாக மற்றவர்கள் நினைப்பதாலும் இந்த விஷயத்தை எனக்கு யாரும் தெரிவித்தது கிடையாது.!

      பழைய காமிக்ஸ்கள் பல ஆயிரங்களுக்கு விற்பது என்னைப்பொறுத்தவரை பெருமையான விஷயம்.!இங்கு வாசிப்பு பழக்கமே அரிதானது அதில் காமிக்ஸ் வாசிப்பு அதனையும் விட அரிதானது.அதனால் காமிக்ஸ் வாசிப்பவர்களை ஜந்துவாக பார்ப்பவர்கள் மத்தியில் பந்தாவாக காலரை தூக்கி விட முடியும்.!

      ஆகமொத்தம் கிரே மார்க்கெட்டை பற்றி நீங்களே விளம்பரபடுத்தி விட்டீர்கள்.!இதை படித்ததும் எனக்கு " தீயா வேலை செய்யனும் கொமாரு " படம் பாலா தான் ஞாபகம் வந்தார்.!

      எது எப்படியோ மாடஸ்டி கதைகள் பெரிய எழத்தாக வெளிவந்தால் புண்ணியமாக போகும்.!(வயசாக வயசாக கண் பிரச்சினை ) நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்.!

      Delete
    8. ஆடுவோம்...
      பாடுவோம்....
      கொண்டாடுவோம்...!

      Delete
  48. ஒரு பரண் உருட்டும் படலம் பதிவுக்கப்புறம் நான் ரொம்பவும் ரசித்துப் படித்து மகிழ்ந்த பதிவு இது நன்றி ஆசிரியரே கல்யாணம் ஆகாத நண்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் கல்யாணத்திற்கு முன்பே சந்தோஷமாக இருந்திடுங்கள் கல்யாணத்திற்கப்புறம் அது சாத்தியமில்லை என் ஜாய் ப்ரன்ட்ஸ்

    ReplyDelete
  49. Dear Edi,

    Right decision, could have been far earlier. But, better late than never.

    Only have to correct your statement, that you were never shown about such offshoot prints without any evidence. You would very well know that the proof was long submitted with the name of people involved. but you choose to ignore them, for being unbiased towards all of them. It's this mistake which has let people like them grow in numbers.

    I would rather buy your reprints than anybody else's fan prints. Good to know it would be sooner than later.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : உரிய அவகாசம் கிட்டும் வேளைகளில் சில தவறுகள் சரி செய்யப்பட்டு விடுமென்ற எனது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போய் விட்டன ! So இந்த இடியாப்பங்களுக்கு நானும் ஒருவிதக் காரணம் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை ! தவறை சரி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேனே !

      Delete
  50. நாங்கள் இரவுக் கழுகானாதே உங்கள் சூப்பரான பதிவால்தான் சாரே

    ReplyDelete
  51. இந்த வார பதிவு சூப்பரோ சூப்பர். ரத்த படலம் வண்ண மறு பதிப்பு வெளிவரவுள்தை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை ஸார். அதுவும் கள்ள மார்கட்டை ஒளிக்க நீங்களே நேரில் களம் இறங்கி உள்ளது எழுந்து கூத்தாட தோன்றுகின்றது. மேலும் மறுபதிப்புகள் அதுவும் பழைய புத்தகங்கள் வருள்ளதை நினைத்தால், ஆஹா! இதற்கு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. சும்மா சொல்ல கூடாது. சூப்பரோ சூப்பர். கள்ள மார்கட் வியாபாரிகளுக்கும், முக்கியமாக உங்களுக்கும் கோடி நன்றிகள் ஸார்.

    ReplyDelete
  52. Dear Edi,

    Right decision, could have been far earlier. But, better late than never.

    Only have to correct your statement, that you were never shown about such offshoot prints without any evidence. You would very well know that the proof was long submitted with the name of people involved. but you choose to ignore them, for being unbiased towards all of them. It's this mistake which has let people like them grow in numbers.

    I would rather buy your reprints than anybody else's fan prints. Good to know it would be sooner than later.

    ReplyDelete
    Replies
    1. ரபீக் சாா் என்னமோ சொல்லியிருக்காரு..என்னா சொல்லியிருக்கறாருன்னுதான் தெரியல..! யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்களேன்..!

      Delete
    2. ரபீக் சாா் என்னமோ சொல்லியிருக்காரு..என்னா சொல்லியிருக்கறாருன்னுதான் தெரியல..! யாராவது ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்லுங்களேன்..!

      Delete
  53. என் பெயர் டைகர் இன் கறுப்பு வெள்ளையும் நன்றாகவே உள்ளது ஸார்.

    ReplyDelete
  54. \\\ விச்சு & கிச்சு தொகுப்பு,பரட்டைதலை ராஜா தொகுப்பு,ஸ்டீல் பாடி ஷெர்லாக் தொகுப்பு ///

    க்ளாஸிக் கதைகளின் மறுபதிப்புகளில்,...வெகு சமீபமாய் அறிமுகமாகி,...வெகு சீக்கிரமே டாப் மொக்கை லிஸ்ட்டில் வெகு சுலபமாய் இடம் பிடித்த ஸ்டீல் பாடியார் எப்படி இடம் பிடித்தார் என்று கொஞ்சமும் புரியவில்லையே சார்....?

    ReplyDelete
  55. வரட்டும் எல்லோரும் மீண்டும் வரட்டும்... இதற்கு வேண்டிய வெள்ளையன் தாராளமாக கிடைக்கட்டும்... நமது இந்த மறுபதிப்பு பயணம் தங்கு தடையின்றி தொடர & வென்றி பெற எனது வேண்டுதல்கள்.

    ReplyDelete
  56. காலை வணக்கம் எடி அவர்களுக்கு
    பதிவை பார்த்தேன்.மிகுந்த மகிழச்சி.Gray சந்தையில் நமது குழமத்தின் அத்தனை புத்தகத்தின் விலை ரூ.25 லட்சம் என்று ஒரு குழு தற்போது கிளம்பி உள்ளது. அர்களிடம் புத்தகம் உள்ளதா இல்லையா என்பது வேறு விஷயம் .
    பேங்கில் பணம் கட்ட சொல்லி ஏமாற்றும் கும்பல் ஒன்றும் தற்போது கிள்ம்பியும் உள்ளது.இதற்கு ஒரோ முடிவு மலிவு பதிப்பு. இப்போதாவது இந்த முடிவை எடுத்தீர்களே மிகவும் நன்றி.

    ReplyDelete
  57. பிப்ரவரி 14 இனி காமிக்ஸ் காதலர் தினம் என்று அழைக்க வேண்டும், காமிக்ஸ் காதலர்களே

    ReplyDelete

  58. ஙே....


    இன்று தான் முதல்முறையாக இவ்வளவு அதிகாலை நேரத்தில் கமெண்ட்ஸ் போட வந்தால் இப்பொழுதே கமெண்ட்ஸ் நூறை தாண்டி விட்டது ..ஏதாவது சூடான அலசலா ....சார் ..


    முதலில் படித்து விட்டு வந்து விடுகிறேன் ...

    ReplyDelete
  59. இரத்தப்படலம்-வண்ண மறுபதிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி சார்!அதேபோல,உடைந்த மூக்காரின் இரத்தக்கோட்டை to தோட்டா தலைநகரம்(ஆறு பாகங்கள்) அறிவிப்பு எப்போது சார்?

    ReplyDelete
  60. Wow, Super news.
    கூடிய விரைவில் கொன்டுவாருங்கள், பழைய ரிப்போட்டர் ஜானி கதைகளையும் கொஞ்சம் கொண்டுவாருங்க.

    One questioning- you are asking us to send high quality scans of old comics to you ? Just want to get it cleared.

    ReplyDelete
  61. ஆசிாியா் அவா்களுக்கும்,காமிக்ஸ் சொந்தங்களுக்கும் காலை வணக்கங்கள்! அதிகாலை 5.30-க்கள் 137 கமெண்ட்ஸ்...!! என்னவோ கொளுத்தி போட்டுட்டாரு போல நம்ம எடி..!என்னவா இருக்கும்..?? ஆா்வம் உச்சம் தொட, பர,பரவென வாசிக்க ஆரம்பித்தேன்! வாசிக்க,வாசிக்க அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தேன்..!அட, சந்தோசத்துல தாங்க !இது நல்ல முயற்சி. காலங்கள் கடந்து வந்த ஞானோதயம்! போதி மரமாய் இருந்த அந்த கடிதத்திற்கு நன்றிகள் பல கோடி! அந்த முகமறியா அன்பு நண்பருக்கும் நன்றிகள்! மலிவு விலையில் ஒரு மகத்துவம். இது போன்ற கதைகள் என்னிடம் இல்லையே என்ற புலம்பல் காயங்களுக்கு ஒரு மருத்துவம்! அட்டகாசம்!அருமை!!அற்புதம்!!!ஆஹா..ஆஹா..!! சந்தோசக் கொண்டாட்டங்கள் சத்தமில்லாமல் சந்தடிச் சாக்கில்...ஆடுவோமே பள்ளு படுவோமே....ஆனந்தங்கள் அனந்தம்! அய்யோ சொக்கா, ஒரு பொன்னா, ரெண்டு பொன்னா, அது கெகடக்கே வண்டி வண்டியா..காலங்காத்தால இப்படி பொலம்ப வுட்டுட்டாரே..சந்தோசக் கூத்துதான் போங்கள்..!

    ReplyDelete
  62. சூப்பர் சூப்பர் சார் .இரத்தப்படலம் கலரில்,இந்த வருடம் வர வாய்ப்பு உண்டா? சார்

    ReplyDelete
  63. அருமையான செய்தி சார்! சித்திரக் கதைகளை எட்டாக்கனியாக எட்டி நின்று ஏக்கத்துடன் தரிசித்திடும் எக்கச்சக்க இரசிகர்களில் நானும் ஒருவன்! குறைவான விலையில் நிறைவாகக் கொடுக்க நமது லயனால் மட்டும்தான் முடியும். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்! அடுத்தடுத்த தங்களின் அதிரடிக்காக!

    ReplyDelete
    Replies
    1. அடடே!தாங்களா..? இந்த மாதிரி சேதிகள் தென்பட்டால்தான் எட்டிப்பாா்ப்பீர்கள் போல..!வணக்கம் நண்பரே..!

      Delete
    2. கண்டிப்பாக நண்பரே! இன்றைக்கு ஞாயிறல்லவா? நமது ஆசிரியரின் இன்றைய அலசல் குறித்து ஒரு வீச்சு செலுத்துவது வழக்கமே! இன்று சூடான சங்கதியைக் கையில் அவர் எடுத்திருக்கும் வேளைதானே ஒரு வாசகனாக நமது பங்கினை ஆற்ற முடியும் வேளை? அதுதான் ஆயா இங்கே எட்டிப் பார்த்து விட்டாள். இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!

      Delete
  64. சூப்பர் சூப்பர் சார் .இரத்தப்படலம் கலரில்,இந்த வருடம் வர வாய்ப்பு உண்டா? சார்

    ReplyDelete
  65. "அதன் பொருட்டு நாம் வசூலித்திடும் தொகையினை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பிலும், நமது சார்பிலும்,மிகுந்த சிரத்தையோடு ஸ்கேன்னிங் செய்த நண்பர்களின் சார்பிலும் ஒரு சிறு அன்பளிப்பாய்ச் சேர்ப்பித்து விடுவோமே?!"
    உண்மையிலேயே இதுதான் சார் நெகிழ வைத்திடும் செய்தி! இந்த முத்து மினி ஓ எல் எக்ஸில் விலை முப்பத்து ஐந்தாயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒன்று சார்! வெறும் 8 புத்தகங்கள், அவ்வளவாகப் பிரபலமில்லாத நாயகர்கள் இவற்றை வைத்துக் கொண்டு அவ்வளவு விலைக்கு விற்பனைக்குத் திட்டமிடுதல் என்பது சாத்தியமா என்பதே பிரமிக்க வைக்கும் விஷயம். அவ்வளவு பணம் கொடுத்து அந்த காமிக்ஸ்களை வாங்குபவர்களுக்கு அவர்களின் காமிக்ஸ் தாகம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விதான் சார் எனக்குள். சக்தி காமிக்ஸ் இப்போது விலை உயர்வுப் பட்டியலில் இருக்கிறது.(பங்கு வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் வருவது போன்று இந்த மார்க்கெட்டிலும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று விலை ஏறுவதும் இறங்குவதும் நடந்தே வருகிறது) அதுவும் லயனின் அந்த காலப் படைப்புதானே சார்? முத்து காமிக்ஸின் ஒரு ரூபாய் விலையில் வந்த அத்தனைக் கதைகளுக்கும் வெறித்தனமான தேடல்கள் நம் வாசகர்கள் மத்தியில் அடிபிடி தகராறு மட்டும் இன்னும் வராமல் சென்று கொண்டிருப்பதையும் இங்கே நினைவூட்டல் தகுமென்று கருதுகிறேன் சார்!
    இப்போதும் ஒன்றும் இல்லை. முத்து காமிக்ஸ் வாரமலர் தொகுப்பு, இரத்தப்படல வண்ணத் தொகுப்பு, ஆர்ச்சி வண்ணத் (ஆங்கிலத்தில் இன்றும் தெளிவான ஸ்கான்களும் டிஜிட்டல் காப்பிகளும் கிடைக்கின்றன) தொகுப்பு, ஜெஸ் லாங் தொகுப்பு போன்று அந்தந்தத் தலைப்புகளில் நமது லயன் குடும்ப இதழ்களில் கிடைத்தவற்றை மீள் தொகுப்பாக இப்போது என் பெயர் டைகர் ஒரே தொகுப்பாகக் கொடுத்தது போன்ற தொகுப்பாக சேமிப்பாளர்களுக்கும், உண்மையான காமிக்ஸ் ஆர்வலர்களுக்கும் விலை மலிவாக தங்களால் மட்டுமே கொடுக்க முடியும். அப்படியே அந்த திகில் 2 இந்த வருடம் என்பதனையும் நினைவூட்டுகிறேன் சார். ஆயா கதைகள் வண்ணத்தில் ஆங்காங்கே சுற்றி வருகின்றன. நமது ஆயாவை மறந்து விட வேண்டாம் சார்.ஹீ ஹீ ஹீ!

    ReplyDelete
  66. இன்றைக்கு நேரத்திலேயே எழுந்து பதிவை பார்க்க வந்தால் ஏற்கனவே 140 கமென்ட்ஸ்...
    ஏகப்பட களேபரமாக இருந்திருக்குமோ ஏதாவது துப்பாக்கி சண்டை போலிருக்கும்என்று நினைத்துக் கொண்டு
    பதிவை படித்தால் இங்கே ஏகப்பட டைனமைட்டே வெடித்து கிடக்கிறது..

    ReplyDelete
  67. 2016-ன் பிப்ரவரி மாதத்து ஒரு முன்காலைப் பொழுதில் விழுந்ததொரு அடி..மாஃபியா கும்பலுக்கு அது மரண அடி! சாவுங்களடா சண்டாளா்களா..!!நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கும் பொழுது..!

    ReplyDelete
  68. இதனை மட்டும் இனி நமது சீனியர் எடிட்டர் பார்த்துக் கொள்வார் - வரும் நாட்களில் ! ஏதேனும் டென்ஷன் இல்லாப் பணிகளுக்குள் ஆழ்ந்திட ஆர்வமாயிருக்கும் அவரும் நிச்சயம் இதனில் சந்தோஷம் கொள்வார் ! (இது அவருக்கே இதுவரையிலும் தெரிந்திருக்கா சேதி !)_வாவ்! அவர் பாணி என்றுமே தனி பாணியாக நின்று கவனத்தை ஈர்க்கும் அட்டகாசம் சார்! அப்படியே ஹாட் லைன், சிங்கத்தின் சிறு வயதில் போன்று தனது இனிய நினைவுகளையும் அவர் எழுதினால் நிச்சயம் அற்புதமாக அமைந்திடும்.

    ReplyDelete
  69. தயைகூர்ந்து வரும் நாட்களில் உங்கள் ஸ்கேன்களை நமக்கு அனுப்பித் தாருங்கள் – மொத்த வாசகர்களும் அதனிலிருந்து பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்திடுவோம்!
    ஆஹா அற்புதமான செய்தி சார்! என்னிடமே கொட்டிக் கிடக்கிறது! விரைவில் டிவிடி அனுப்பி வைக்கிறேன் சார்!

    ReplyDelete
  70. அட ....ஆமாம் ..சூடான அலசலே தான் ...ஆனால் இதற்கான தீர்வு சும்ம்ம்மா.....    "ஜில்லுன்னு "


    இருக்கு .......இனிமேலாவது ...முத்து மினி தொகுப்பு வருவது போல ...நான் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்த படி வரிசைகிரகமாக மினிலயன் முதல் ஐந்தைந்து புத்தகமாக ...திகிலில் ....ஜூனியர் லயன் அனைத்தும் இதே போல வெளிகொண்டு வாருங்களேன் சார் ...

    உண்மையில் அந்த ஸ்கேன் நண்பர்களுக்கு நான் நன்றியை தான் தெரிவிப்பேன் .. மறுபதிப்பாக எத்தனை பேர் எத்தனை விதமாக கேட்டாலும் மறுத்து வந்த தாங்கள் இப்பொழுதாவது களம் இறங்கினீர்களே .....அவர்களுக்கு என் நன்றி ...;-)

    ReplyDelete
    Replies
    1. மினி லயன் நாற்பதே புத்தகங்கள். திகில் அறுபதே புத்தகங்கள். அவற்றின் இன்றைய சந்தை விலை நிச்சயம் அதிர்ச்சி அடையவே வைக்கிறது! இந்த நூறு பிளஸ் முத்து முதல் நூறு லயனின் சிறப்பிதழ்கள்! இவையே இங்கே தேவை! மணிமேகலை, வானதி போன்று தேவையுள்ளபோது தேவையுள்ளோருக்கு என்கிற ஸ்டைலைக் கொண்டு வரலாம் சார்!

      Delete
  71. ஒரு பிள்ளையார் சுழி போடவும் இதனை ஒரு தருணமாக்கிக் கொள்ளலாம் ! wow!இப்போது வேகவேகமாக திகில் நகரில் டெக்ஸ் கிடைத்து விட்டதல்லவா அதையும் உங்கள் மொழி பெயர்ப்பை போட்டு பணம் பெயர்ப்பதும் நடக்கும் சார். அதனால் முதலிலேயே வண்ணத்தில் கிடைப்பவற்றை வண்ணத்திலேயே கொடுங்களேன் சார்! சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் இது வண்ணத்தில் நம்மிடம் இருந்து வரும் என்கிற எண்ணம் குறையத் துவங்கும் அந்த, அந்தப் புள்ளிதான் இவற்றின், இந்த கிரே சந்தையின் ஆணி வேர். இதனைத் தாங்கள் உணர்ந்திருப்பீர்கள்!

    ReplyDelete
  72. அண்ட் இறுதியாக அனைவருக்கும் ஆயாவின் காதலர் தின நல்வாழ்த்துகள்! பார்த்து உங்கள் காதலை சொல்லிடுங்கப்பா! இல்லையென்றால் வீட்டில் இருந்து பூரிக்கட்டை பறந்து வரும். பார்த்துக்குங்க!

    ReplyDelete
  73. நேற்று அலுவலகம் சென்றவுடன் காலையிலேயே ஒரு பிரச்சனை ....கொஞ்சம் டென்சன் ....இரவு கடையில் டென்சனுடன் தூங்க சென்றால் காலையும் இன்று தாமதமாக எழுந்து டென்சன் .....

    எல்லா டென்சனும் இன்றைய பதிவை படித்தவுடன் கொஞ்சம் குறைந்துள்ளது என்றால் அது மிகையில்லை ...எதற்கும் இன்னொரு "ரவுண்ட் " படித்து விட்டு வந்து விடுகிறேன் ...சார் ....

    ReplyDelete
  74. எடிட்டர் ஸார்,
    ஆஹா என்ன ஒரு இனிய பதிவு!
    பழைய முத்து, லயன், திகில், மினிலயன் சிறிதும் மாற்றமின்றி அதே சைஸ்ஸில் மறுபதிப்பாக வருமென்றால் ? ஒரு சந்தோஷ தருணம் காத்துள்ளது எனக்கு!
    அந்த ‘old is gold’ புத்தகங்களை படித்துவிட்டு, சேகரிக்காமலும் விட்டுவிட்டு தற்போது கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் என் போன்ற காமிக்ஸ் காதலர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று! மிகவும் நன்றி எடிட்டர் ஸார்.

    ReplyDelete
  75. டியர் எடிட்டர் சார், இன்று காமிக்ஸ் உலகின் பொன்னாள்! அடுத்தவர் உழைப்பை சுலபமாக, முறைகேடாக சுரண்டும் கும்பலுக்கு தாங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளீர்கள். பழைய காமிக்ஸ் புத்தகங்களின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த பலரில் நானும் ஒருவன். ஒட்டுமொத்த காமிக்ஸ் புத்தகங்கள் ஒருசிலரிடம் மட்டுமே உள்ளது. மறுபதிப்பு குறித்து நாங்கள் கேட்கும் போதெல்லாம் நீங்கள் சரியான பதில் சொல்லாதது எங்களுக்கு வருத்தமே. ஆனால் இன்று எங்கள் மனக்கவலை தீர்ந்து விட்டது. நன்றிகள் சார்.

    மினி லைன், திகில் காமிக்ஸ், லைன் ஆரம்ப இதழ்கள் அப்படியே நான் என்ன கேட்க போகிறேன் - ஆர்ச்சி புத்தகங்களையும் மறுபதிப்பில் கொண்டு வாருங்கள் சார்!

    புதிய காமிக்ஸ் புத்தகங்களை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் பழைய காமிக்ஸ் புத்தகங்களை எதிர்பார்க்கிறோம். நீங்கள் இரண்டுக்கும் சரியான அளவில் முக்கியத்துவம் தாருங்கள் சார்.

    எல்லையில்லா மகிழ்ச்சியுடன் - அன்புடன் எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. Awesome news!!! நன்றி எடிட்டர் சார். அப்படியே கொஞ்சம் Times of India கிட்ட பேசி இந்திரஜால் காமிக்ஸ், reprint செய்ய முடியுமா சார்? ஓவர் ஆசை தான் , ஆனா ஒரு பிட்ட போட்டு வப்போமே!!!

    ReplyDelete
  79. அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லையா சார் நீங்கள்?

    ReplyDelete
  80. )So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய)So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !! உள்ளது !!)So- புதுசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும் ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !!

    #$$#


    நினைத்தாலே இனிக்கும் ....;-))

    ReplyDelete
  81. சூப்பர் பதிவு
    மாணவர்களுக்கு 20 ரூ மிகுந்த வரவேற்பை பெரும்
    ரிப் கெர்பி
    மாண்ட்ரேக்
    வேதாளர்
    இரட்டை வேட்டையர்
    இவற்றையும் ஆவலுடன் எதிர் பார்க்கிரேன்

    ReplyDelete
  82. டியர் எடிட்டர்ஜீ !!!

    ///தொடரும் நாட்களில் விச்சு & கிச்சு தொகுப்பு; பரட்டைத்தலை ராஜா தொகுப்பு ; ஸ்டீல்பாடி ஷெர்லாக் தொகுப்பு என்று பார்த்துக் கொள்ளலாம்.///

    குழப்புகிறது.எதற்கு ஸ்டீல் பாடி தொகுப்பு ? ஒருவேளை , ஷெர்லாக் ஸோம்ஸ் என்பதை தான் மாற்றி சொல்லிவிட்டீர்களா...??? விளக்கம் ப்ளீஸ் !!!

    ரத்த படலம் வண்ண மறுபதிப்பு அறிவிப்பு, இப்படியொரு "சங்கடமான" பதிவில் அறிவிக்கப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.அடுத்த வருட ஜனவரி சென்னை புத்தக விழாவில் (செம்பரம்பாக்கம் ஏரியின் புண்ணியத்தில் சென்னை நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறாத பட்சத்தில்!) இதழை வெளியிட தோதாக சற்று முன்கூட்டியே புக்கிங்கை தொடங்கினால் மகிழ்வேன்.என் பெயர் டைகர் வெளியீட்டின் போதே முன்பதிவை ஆரம்பித்தால் சற்றே கூடுதல் கால அவகாசம் பலருக்கு கிடைக்கும்.

    நண்பர் பெங்களூர் பரணி அவர்கள் குறிப்பிட்டது போல் முத்துவின் முதல் நூறு இதழ்களே கள்ள மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் என தெரிகிறது.அடுத்த ஆண்டு முதல், மாதம் பத்து இதழ்களாக அவற்றை பதிப்பித்தால் விரைவில் இந்த கள்ள வியாபாரிகளின் கோட்டம் அடங்கும்.

    செய்வீர்களா...? நீங்கள் செய்வீர்களா...?

    ReplyDelete
    Replies
    1. @ புனிதசாத்தான்

      இனியாவது வருவீர்களா..? நீங்கள் தொடர்ந்து வருவீர்களா..?

      Delete
  83. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  84. @எடிட்டர் சார்:
    //இரத்தப்படலம் கலரில் வருவது உறுதியாகி விட்டது//

    உய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்.உய்ய்ய்ய்ய்ய்....

    என் வாழ்நாளில் மறக்க முடியாத காமிக்ஸ் விஷயங்களில் இந்த அறிவிப்பும் ஒன்று சார் :-):-):-):-):-)

    நான் இப்போ தரையிலேயே இல்ல சந்தோஷத்தில வானத்துல மிதந்துட்டு இருக்கேன் சார்....:-):-):-):-)

    ReplyDelete
  85. Dear edi sir,

    Good work, a real Feb 14 for comic lovers... By the way ippove I shall thundu pottufyi for Rib Kerby's reprint...

    ReplyDelete
  86. அனைவருக்கும் காலை வணக்கங்கள்..!

    வாவ்...மறுபதிப்பு அறிவிப்புபற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை,காரணம்...திரு விஜயன் அவர்களின் அறிவிப்புக்கு விடியவிடிய எல்லா வரிகளையுமே நண்பர்கள் அலசிவிட்டதால், அதுபற்றி நான் எதைசொன்னாலும் அது மறுபதிப்பாகதான் இருக்கும்.. :) இந்தமாதிரி அறிவிப்புக்கு பின் நடக்கும் ஒரு வேட்டை பத்தி இங்க நண்பர்களுக்கு ஒரு கோடுகாட்டினா உபயோகமா இருக்கும்ன்னு நினைக்கிறன்..!

    அருங்காட்சியகத்துக்கு போனால்...

    இது சோழர்கால செம்பு பட்டயம், இது பல்லவர்கள் செதுக்கிய சிலை, இது சுல்தான்கள் பயன்படுத்திய போர்வாள், இது ஆங்கிலேயர் பரிசளித்த கடிகாரம் என பார்வைக்கு குவித்து வைத்திருப்பார்கள்.அதைபார்க்க கூட்டம் அலைமோதும். இந்த விஞ்ஞான உலகத்தில் அப்படியொரு சிலையோ,பட்டயமோ,கடிகாரமோ தயாரிப்பதும் விலையும் கைக்கு எட்டும் அளவே..! ஆனால் பழமை பழமை தான்..! அது இருக்கும் இடம் பெருமைதான்..! அதை வைத்திருப்பது பெருமைதான்..!

    இங்க திரு.விஜயன் அவர்கள் மறுபதிப்பு பற்றி அறிவிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதன் பழைய இதழ்கள் வெச்சிருபவர்களிடம் "அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க, மக்கிப்போன பேப்பரை சட்டுனு கைகழுவி அஞ்சோ,பத்தோ பாருங்க...விட்டா உங்க பீரோ குப்பைதொட்டி ஆயிடும்.." என மயக்கி பேசி "அதுதான் எடிட்டர் எல்லாத்தையும் பிரிண்ட் போடபோறாரே..? அப்புறம் எதுக்கு இந்த ஆஸ்துமா பேப்பர்..?" என் சாதுர்யமாக பேசி ஒவ்வொரு முறையும் வியாபாரிகள் வேட்டையாடுவதும், ஏமாந்து விட்டகதையை தொடர்ந்து கேட்டுவருகிறேன்.

    புத்தகங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் படிக்கவேண்டிய படைப்புகள் என்ற தன்மையை இழந்து, பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களாக உயர்ந்துவிடுவதை நண்பர்ளே சற்று புரிந்துகொண்டு, ஏமாற்றும் வியாபாரிகளுக்கு தர்மம் செய்துவிடாதீர்கள்.அப்படி உங்களிடம் தர்மம் கேட்க பயன்படுத்துவது உங்கள் நண்பரை மூலமாகதான் என்பது உங்கள் நண்பருக்கே தெரியாத விஷயம். ஒவ்வொரு நண்பர்களிடமும் நான் தவறாமல் வைக்கும் விண்ணப்பம் "நண்பரே உங்கள் சேகரிப்பு உங்களிடமே இருக்கட்டும், அடுத்தவரின் சேகரிப்புக்கு ஆசைபடாதீர்கள்.இத்தாலியில் டெக்ஸ் வில்லரின் எல்லா கதைகளும் மறுபதிப்பில் கிடைகிறது,ஆனால் முதல் பதிப்புபுத்தகங்கள் ஒருசெட் [முதல்100புக்ஸ்] ஒரு கோடிக்கு மேல். உங்கள் சேகரிப்பே உங்கள் அடையாளம்,உங்களுக்கு இந்த காமிக்ஸ் உலகத்தில் கிடைக்கும் மதிப்பு...எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்திருகிறிர்கள் என்பதை வைத்து அல்ல, கையிருப்பில் எத்தனை வைத்திருக்கிறிர்கள் என்பதை வைத்துதான்..! மறந்து விடாதீர்கள் நண்பரே..."

    ReplyDelete
    Replies
    1. சில நாட்களுக்குமுன் ஒரு நண்பரிடலிருந்து ஒரு அவசர போன்கால்...

      "முத்துமினி ஒரு செட் 2000 மாம்..10% டிஸ்கவுன்ட் போக 1800க்கு தர்றாங்களாம்.பத்து செட் தான் பிரிண்ட் போட்டங்கலாம்...ரெண்டு செட் தான் கையில இருக்காம்.ஒன்னு வாங்கலாமா ஜீ..? அந்தளவுக்கு அது ஒர்த்தா ஜீ..?" என நண்பர் அவசரகதியாய் போனில் கேட்டார். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியலை, "முத்துகாமிக்ஸ் செட் முதல் 130 தானே ? " ன்னு திருத்தி கேட்டேன். "மரமண்டை சிவா ன்னு சரியாதான் சொன்னங்க, முத்து மினி ஜீ... பக்கெட் சைஸ்ல 60 காஸுக்கு வந்த எட்டு புக் ஜீஈ.." என அலறினார்.

      "அதிகபட்ச பக்கமே ஒரு 60 இருக்கும், ஒரு A4 சைஸ் பேப்பர்ல எட்டு பக்கம் பிரிண்ட் செய்யலாம், எட்டு சீட் பிரிண்ட் போட எட்டு ரூபாய்,அதுக்கு அட்டைபடம் A3 சைஸ்ல ஆறு வரும்.ஒரு பிரிண்ட் டபுள் சைடு 36 ரூபாய்,ஒரு அட்டை அப்போ 6 ரூபாய்.ஆக மொத்தம் பின்அடிச்சா ஒரு பதினைஞ்சி ரூபாய் மேட்டைரை, 120 ரூபாய் விஷயத்தை 1800 ரூபாய்க்கு வாங்குறது அநியாயமில்லையா..?" ன்னு விளக்கம் சொன்னேன். கேட்டதை கரெக்டா எடிட்டர் கிட்ட கொண்டுபோய் சேர்த்தின சாமார்த்தியதுக்கு நண்பரே உங்களுக்கு ஒரு சபாஷ்..!

      Delete
    2. ////எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்திருகிறிர்கள் என்பதை வைத்து அல்ல, கையிருப்பில் எத்தனை வைத்திருக்கிறிர்கள் என்பதை வைத்துதான்..! மறந்து விடாதீர்கள் நண்பரே..."////--- மிகத் தவறான ஸ்டேட்மெண்ட் மாயா சார்....
      என்னிடம் டெக்ஸ் கதைகள் மட்டுமே உள்ளன,மற்றவைகளை படித்து மட்டுமே உள்ளேன்....நண்பர்கள் பழகவில்லையா???,மதிப்பு கிடைக்கலயா???....
      இப்படி தவறாக வழி காட்டி மீண்டும் நண்பர்களை பழையனவற்றின்மீது ஏக்கம் கொள்ள செய்யாதீர்கள்.....
      இந்த கள்ள சந்தை வியாபாரிகளின் வலையில் விழ அது மறைமுகமாக தூண்டும்....(உங்கள் இந்த கமெண்ட்டை தயவுசெய்து டெலிட் செய்யுங்கள்)

      Delete
  87. Editor sir:
    ஏப்ரல் 2015 ல் 'மின்னும் மரணம்' கலரில் வெளியிட்டது போல ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஏப்ரல் 2027 ல்'இரத்தப்படலம்' கலரில் வெளியிடுவோம் சார்...

    ReplyDelete
  88. எடிட்டர் சார்,

    'இரத்தக் கோட்டை'யின் மொத்த பாகங்களும் கள்ள மார்க்கெட்டில் செமத்தியான விற்பனையாம்! ஊருக்குள்ள பேசிக்கிறாங்க!
    'மினிலயன்'க்கு Bundle offerலாம் விட்டிருக்காங்களாம்...!

    (ஹிஹி! என்ன பன்றது... இப்பல்லாம் இப்படிக் கொளுத்திப் போட்டால்தான் உடனே கிடைக்குது) ;)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லர் கலர் செட் 60 ம் கன்னா பின்னா விலையாம் சார்...
      60ம் வாங்கனும்னா ஓவா ஒர லகரம் ஆகுமாம்....நாங்களும் டைனமைட்டை கொளுத்துவோம்ல.....ஹீ..ஹீ....

      Delete
  89. எடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  90. I am happy to see old mini lion comics
    Edi sir,
    if you have any chance to reprint the roger and reporter johnny in sunshine logo..

    ReplyDelete
  91. Sir, it would be fantastic if you could start a campaign for printing real paper book using modern methods using the old editions from the 1 st one till 2011 without changing any thing. Those who are interested can pay and book it and once it becomes feasible, you can give it as a full set. This will be a dream come true for us.

    thanks - organicyanthiram

    ReplyDelete
  92. கடிதம் எழுதிய நண்பருக்கும், ஸ்கேன் செய்து அதை கடிதம் எழுதிய நண்பருக்கு விற்றவர்களுக்கும் நன்றி. ஏதோ உங்கள் புண்ணியத்தில் பழைய இதழ்கள் புதுப்பொலிவுடன் எங்கள் கைகளில் மிளிர போகிறது. XIII கலரில் மறுபதிப்பு வருவது மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கறுப்பு வெள்ளை என்னிடம் உள்ளது. அதில் சுமார் 60 பக்கங்களுக்கும் மேலாக இல்லாமல்தான் என்னிடம் வந்தது. அலுவலகத்தில் அதை அனுப்பி வைக்க சொன்னார்கள். ஆனால் என்னால்தான் அதை சரிவர செய்து பெற்றுக் கொள்ள முடியவில்லை.XIII கலரில் வரும்பொழுது இதுபோன்ற குறைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். நன்றி....

    ReplyDelete