நண்பர்களே,
வணக்கம். ‘லீப்‘ வருடத்தின் போனஸ் தினத்தினில் நமது மார்ச் இதழ்கள் உங்களை எட்டிப் பிடித்திடும் வாய்ப்புகள் பிரகாசம்! சனிக்கிழமை காலையே 4 இதழ்களும் தயாராகிட – DTDC ; ST ; பதிவுத் தபால்கள் என தினுசு தினுசான சவாரிகளை உங்களது சந்தாப் பிரதிகள் துவக்கி விட்டன! So திங்கள் காலையில் (பிப்ரவரி 29) யார் கதவை – யார் தட்டுவதென்ற பட்டிமன்றத்தினுள் நீங்களும், உங்கள் ஏரியா கூரியர்வாலாக்களும் ஜாலியாக மூழ்கிடலாம்! கொஞ்சமே கொஞ்சமாய் நமது பைண்டிங் பணியாளர்களைத் தாஜா பண்ணியிருப்பின், வெள்ளிக்கிழமை மாலையே பிரதிகளைக் கூரியர் செய்திடும் வாய்ப்புகள் இருந்தன தான் ; ஆனால் சனிக்கிழமையன்று பாதிப் பேருக்குக் கிடைத்து – மீதப் பேர் நகங்களையும் பற்களையும் திங்கள் வரையிலும் கடிக்குமொரு சூழல் வேண்டாமென்று தோன்றியதால் ஒட்டுமொத்தமாய் சனிக்கிழமை despatch என்று தீர்மானித்தோம் !
இம்மாத இதழ்கள் நான்கையும் கையில் ஏந்திப் பார்க்கும் போது இரண்டு விஷயங்களிலிருந்து உங்கள் கண்களை அகற்றிட இயலாச் சிரமங்கள் நேர்ந்திடப் போவது உறுதி! முதலாவது விஷயம் – ஓவியர் ஹெர்மெனின் (கமான்சே) அட்டைப்படம் ! என்ன தான் இதை நீங்கள் நெட்டில் ஏற்கனவே பார்த்து விட்டீர்கள் என்றாலும் – நிஜத்தில், கையிலொரு ஆல்பமாய்க் கொண்டு பார்க்கும் போது just looks stunning ! நாம் துளிகூடக் கை வைக்க அவசியமில்லாது போன அட்டைப்பட டிசைன் இது ; சமீப சமயங்களின் டாப் ராப்பர்களுள் இதுவொரு உச்ச இடம்பிடிக்கும் என்று நினைக்கச் செய்தது!
விஷயம் # 2 இம்மாத இரவுக்கழுகாரின் இதழும்; பருமனும்! ‘Almost a MAXI Tex’ - 260 பக்க நீள சாகஸம் எனும் போது, இதழைக் கையில் தூக்கும் போதே ஒரு சுகமான சுமையை உணர்ந்திட முடிகிறது! அதிலும் தெள்ளத் தெளிவான சித்திரங்களும், TEX-ன் முழு டீமும் இதழின் முழுமைக்கும் உலா வருவதை மேலோட்டமான புரட்டலின் போதே ரசித்திட முடியும்! கதையைப் படிக்கும் போது சில பல கோலிவுட் திரைப்படங்கள் உங்கள் மனதில் தோன்றினால் – போனெல்லி குழுமத்தின் தற்போதைய தலைவரும் சரி, அவரது தந்தையாரும் சரி – தீவிர ‘இந்தியாக் காதலர்கள்‘ என்பதை நினைவுகூர்ந்து கொள்ளுங்கள்! So – இந்திய பாணியில் - செண்டிமெண்ட் ; காதல்; மோதல்; வீரம்; தியாகம் என நவரசங்கள் சொட்டுமொரு கதையை அவர்கள் இத்தாலியில் உருவாக்கியிருந்தாலும் –அதன் ஆணிவேர் நம்மூர் பக்கமாகத்தானிருக்குமென்பது நிச்சயம்! இம்மாத ‘விதி போட்ட விடுகதை‘க்கு உங்களது விமர்சனங்களை ஏக ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்! தொடரும் நாட்களில் இங்கே மறவாது பதிவிடுங்களேன் guys!
‘மாதமொரு Tex‘ என்ற தண்டவாளத்தினில் நாம் சவாரியைத் துவங்கிடும் முன்பாக எனக்குள் லேசானதொரு உதறல் இருந்ததைப் பற்றி நிறையவே எழுதிவிட்டேன் தான்; இப்போது இந்த இதழ்களை ஒன்றன்பின் ஒன்றாய்ப் பார்க்கவும், ரசிக்கவும் முடிகின்ற போது – ‘அடங்கொன்னியா... இதுக்குப் போயா இவ்ளோ ரோசனை பண்ணிப் போட்டேன்னு?‘ நமது கவுண்டர் பாணியில் என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது! சூப்பர் டூப்பர் கதைகளோ; average ஆனவைகளோ – இந்த ஜாலியான ‘தடதட‘ப் பயணத்தின் சிம்பிளான சுகமே அலாதிதான் என்பது ஒவ்வொரு தினமும் புரிகிறது ! அதிலும் ஏப்ரலுக்கான ‘Mega Tex’ இதழின் பணிகளை நம்மவர்கள் செய்து வருவதைப் பராக்குப் பார்க்கும்போதே வதனத்தின் முழுமைக்குமொரு ‘ஈஈஈஈ....‘ புன்னகையும்; கடைவாயின் கடையோரத்தில் ஒரு குற்றால அருவியும் ஆர்ப்பரிப்பதை உணர முடிகிறது! ஓவியர் சிவிடெலியின் சித்திரங்களை அந்த ‘மெகா‘ சைஸில் பக்கம் பக்கமாய் ரசிக்கும் வேளையினில் -வண்ணத்துப் பூச்சிகளின் க்ரூப் டான்ஸ் என் தொந்திக்குள் அரங்கேறுகின்றது! நிச்சயமாய் நமது இரவுக் கழுகாரின் (தமிழ்) சகாப்தத்தில் இந்த இதழானது ஒரு மறக்க இயலா லேண்ட்மார்காக இடம்பிடிக்குமென்ற திட நம்பிக்கையும் எழுகின்றது! பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்ததொரு புராதன யுகத்திற்குப் பின்பாய் ‘ஏப்ரலே வாராயோ?‘ என்ற ஏக்கத்தோடு நாட்களைக் கடத்துகிறேன் !
நாம் ஒருமாதிரியாய்த் தக்கி முக்கி TEX தொடரினில் பால்வாடி வகுப்புகளுக்குப் போகத் தொடங்கியிருக்கிறோம் என்றால் - பொனெல்லியிலோ நேராக டிக்ரீ முடிக்க வழி தேடுகிறார்கள் ! சென்றாண்டு "ஒரு தலைவன்-ஒரு சகாப்தம் " என டெக்ஸ் கதைகளை வண்ணத்தில் ; பிரான்கோ பெல்ஜிய பாணியில் அவர்கள் வெளியிட்டுலதைப் பற்றி எழுதி இருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் ஆல்பம் 2 சென்றாண்டின் பிற்பகுதியில் வெளியானது ! பாருங்களேன் :
இது மூச்சிரைக்கச் செய்வது பற்றாதென இந்த வரிசையினில் ஆல்பம் # 3 - மூன்று நாட்களுக்கு முன்பாய் வெளியாகியுள்ளது ! பிரான்கோ-பெல்ஜிய பெரிய சைசில் - கதாசிரியர் மௌரொ பொசெல்லியின் கைவண்ணத்தில் ! மாதந்தோறும் டெக்ஸ் எனவொரு template -க்குள் புகுந்திருக்கும் வேளையில் - மேற்கொண்டு இந்த மாதிரியான சபலங்களைப் பார்க்கும் போது மண்டை கிர்ராகிறது ! இவற்றை "நாவல் காமிக்ஸ்" என்று அழைப்பதில் பிரியம் கொள்கிறார்கள் !! ஆண்டுக்கு இரண்டு இவ்விதம் வெளிவந்திடுமாம் !! நாம் எப்போதிந்த "நா.கா"-வினுள் குதிப்பது ? சொக்கா...சொக்கா...!!! ஆயிரம் பொன்னாச்சே...!! பெரிய சைஸ்...வித்தியாசமான கதைபாணி...முழுவதும் ஒரிஜினலாகவே கலரில்...!! ஐயோ..ஐயோ...!! மிச்சம் சொச்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சமாச்சாரங்களும், "இதை எங்கே நுழைப்பது ? அதை எப்படி வெளியிடுவது ?" என்ற அங்கலாய்ப்பிலேயே போயே போயிடும் போலுள்ளது !! முடிலே !!!
இதற்கு மேலும் ‘தல‘ புராணம் தொடர்ந்தால் – சிகுவாகுவா சில்க்கியின் ஆதர்ஷரின் ஆர்வலர்கள் சார்பாய் எனக்கொரு புத்தம்புதிய துடைப்பம் பார்சலாகும் என்பதால் – தடம் மாறுகிறேன்! ‘என் பெயர் டைகர்‘ முதல் 4 பாகங்களில் பெரும்பங்குப் பணிகள் முடிந்துள்ள நிலையில் – அவற்றின் மீது எனக்கு ஒரு வாரத்துத் தீவிர வேலையிருக்குமென்று தெரிகிறது! Intense பாணியிலான கதையிது எனும் போது இங்கே கொஞ்சம் கவனம்; அங்கே கொஞ்சம் நேரம் - என்ற ரீதியில் வேலைசெய்தல் இம்முறை வேலைக்கு ஆகமாட்டேன்கிறது ! தொடரும் நாட்களில் ‘தம்‘ பிடித்துப் பணி செய்தால் தான் நமது உடைந்த மூக்காருக்கு நியாயம் செய்திட முடியுமென்று புரிகிறது! Will do for sure!
ஏப்ரல் மாதத்து இதழ்கள் சகலமுமே ‘ஹை... ஜாலி!‘ ரகக் கதைகள் என்பதால் almost தயாராகி விட்டன இப்போதே ! அழகாய் லார்கோ ஹாங்காங்கில் தனது முழு டீமோடும் தூள் கிளப்புவது ஒரு பக்கமெனில் – உட்சிட்டியில் நமது நீதிக்காவலர்கள் பட்டையைக் கிளப்பும் உற்சாகத்திற்குக் கேட்கவும் வேண்டுமா – என்ன? அதிலும் க்ளைமேக்ஸில் ஷெரீ்ப் டாக்புல்லின் அதிரடி முடிவைப் பார்த்து ‘சீரியஸோ- சீரியஸானவர்கள்‘ கூட ‘கெக்கே-பிக்கே‘ என்று ஆரம்பித்து விடுவார்கள்! அப்புறம் ஏப்ரலில் நண்பர்களின் பங்களிப்பு சற்றே தூக்கலாய் இருந்திட வாய்ப்புகளுண்டு – because உட்சிட்டி தவப்புதல்வர்களின் அட்டைப்பட டிசைனிங் மட்டுமன்றி –மறுபதிப்பான ‘நாச அலைகள்‘ proofreading-ம் நண்பர்களின் கரங்களில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது! Interesting days ahead என்பதால் ஆவலாய்க் காத்துள்ளேன்!!
'மாதம்தோறும் ஒரு கார்ட்டூன்' என்ற உபயத்தால் - இறுக்கமான கதைகளின் பணிகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் கெக்கே பிக்கே moments எனதாகின்றன ! So 'சொத்தில் ஒரு பங்கு கேட்டால் கூட ‘ரோசனை‘ செய்யலாம் – ஆனால் கார்ட்டூன் கதைகளில் பணியாற்றும் வாய்ப்பைக் கைமாற்றத் தயாரில்லைடா சாமி !' என்பதில் தீவிரமாயுள்ளேன்! காத்திருக்கும் நமது நீலப் பொடியர்களின் அடுத்த சாகஸத்தினுள் ஓரிரு நாட்களுக்கு முன்பாய் பேனாவுடன் புகுந்திட – எனது நாட்களே செம சிலுசிலுப்பாய் உருமாறியிருப்பது போலொரு உணர்வு! ‘தேவதையைக் கண்டேன்‘ என நமது ஸ்மர்ஃப் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் செய்யும் லூட்டிகள் simple awesome! பக்கத்துக்கு 15 அல்லது 16 frame-கள் சர்வ சாதாரணமாய் ஆஜராகுவதால் டயலாக்குகளின் எண்ணிக்கை ரொம்பவே ஜாஸ்தி! ஆனால் இந்தப் பொடியர்களுக்குக் குரல் கொடுப்பது ஒரு அற்புத அனுபவமென்பதால் சரளமாய் நாளொன்றிற்கு பத்துப் பன்னிரண்டு பக்கங்களைத் தாண்டிச் செல்ல முடிகிறது! அமெரிக்காவில் ஸ்மர்ஃப் ஆல்பங்களை வெளியிடும் Papercutz நிறுவனம் – இவற்றை ‘A SMURFS graphic novel’ என்றே விளம்பரப்படுத்தியுள்ளன ! நாம் கூட அந்த ரூட்டைப் பிடித்துக் கொண்டு இந்தக் குட்டி மனுஷர்களின் சாகஸங்களை graphic நாவல்களின் குடையினடியில் ஐக்கியமாக்கினால் – தாரமங்கலம் தலீவரும் சரி ; மாடஸ்டியின் கொ.ப.செ.வும் சரி, பெரும் நிம்மதி கொள்வார்களென்று நினைக்கத் தோன்றியது !
Moving on – புத்தக விழாக்கள் தொடர்பான சேதிகள்! திருச்சி மாநகரில் வரும் மார்ச் 4-ம் தேதி துவங்கிடவிருக்கும் BAPASI புத்தகத் திருவிழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு போல்படுகின்றது! அமைப்பாளர்கள் நம் மீது கருணைப் பார்வை காட்டிடும் பட்சத்தில் மலைக்கோட்டை நகருககு மூன்று வருட இடைவெளிக்குப் பின்பாகத் திரும்பிடுவோம் ! அது ஏனோ தெரியவில்லை – திருச்சியில் மட்டும் இதுவரையிலும் ஆறேழு கடைகளையும், ஓரிரு முகவர்களையும் முயற்சித்துப் பார்த்தும் எதுவுமே இன்றுவரை set ஆகிடவில்லை! பாக்கிப் பெருநகரங்களில் நமது விற்பனை எண்ணிக்கை கூரைகளைப் பிய்த்துக் கொண்டில்லை என்றாலும் கூட – அங்கெல்லாம் நமக்கொரு presence உண்டு ! ஆனால் சமீப நாட்களில் திருச்சியில் நாம் ‘ஹி... ஹி... ஹி‘ தான்! Maybe இந்தாண்டின் புத்தக விழாவின் வாயிலாக அங்கே ஓரிண்டு புதிய முகவர்களின் அறிமுகங்கள் கிட்டினாலும் சந்தோஷமே!
சென்ற வாரத்துக் கேப்ஷன் எழுதும் போட்டிக்கான முயற்சிகளை சாவகாசமாய் வெள்ளியன்று தான் படிக்க முடிந்தது! சைக்கிள் கேப்பில் – ஆறுவழிச் சாலை போடும் திறன்கொண்ட நம்மவர்களுக்கு இதுவொரு ஜுஜுப்பி மேட்டரே என்று சொல்லும் விதமாய் ஏராளமான சூப்பர் வரிகள்! But சித்திரத்திற்கும் சரி; அதனிலிருந்த டெக்ஸ் & கார்சனின் முகபாங்களுக்கும் சரி – ரொம்பவே பொருத்தமான caption எழுதியது நண்பர் வெட்டுக்கிளியார் தான் என்று பட்டது!
Vettukili Veeraiyan :
அந்தா தெரியிற மொட்டைப்பாறை வரைக்கும் எங்க பாட்டனாருக்கு சொந்தமான இடமாத்தான் இருந்தி ச்சிப்பா ..
அப்புறம் என்னாச்சி ?
வறுத்த கறிக்கு ஆசைப்பட்டு பூராத்தையும் வித்து தின்னே தீத்துப்புட்டாராம்.....!
So பரிசான இரத்தப் படலம் ஆங்கிலப் பதிப்பு நமது வாழ்த்துக்களுடன் நண்பருக்கு நாளையே அனுப்பிடப்படும்! அட்ரஸ் ப்ளீஸ் வெ.வீ. சார் ! அதே போல நண்பர் ‘உருவுது‘ சரவணனும் முகவரியோடொரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன்? உங்களுக்கான ‘மினி லயன்‘ புக்கினையும் அனுப்பிடுகிறோம்.
‘மினி லயன்‘ இதழைத் தேடி முந்தைய இதழ்களை உருட்டிக் கொண்டிருந்த போது –சுவாரஸ்யமான சில பல விஷயங்கள் கண்ணில் பட்டன! இன்றைய சூழலுக்கு அவற்றைப் பொருத்திப் பார்த்த போது வேடிக்கைக்குப் பஞ்சமிருக்கவில்லை! இந்த விளம்பரத்தைப் பாருங்களேன்...!
68 இதழ்கள் – ரூ.500 விலைக்கு – free shipping – பற்றாக்குறைக்கு ரூ.100/- மதிப்புக்கு பட்டாசு பார்சல்! 2012-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது கூட இதே போன்றதொரு அதிரடியை செய்தது நினைவுக்கு வருகிறது! சுமார் 140 முந்தைய இதழ்கள் கொண்ட pack ரூ.1100 or அது போன்றதொரு விலைக்கு விற்றோம் – கிட்டங்கியைக் காலி செய்திட ! அவை பார்சல் –பார்சலாய் சென்றடைந்தது காமிக்ஸ் காதலர்களிடம் மாத்திரமேயெனில் நிச்சயமாய் நமக்கு சந்தோஷமே!
And இந்தக் கூப்பன் கூட ஒரு புராதன பைலில் படபடத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது!
இதே கேள்வியினை இன்றைய சூழலில் – நமது சமகாலத்து நாயகர்களையும் களமிறக்கிக் கேட்டிடும் பட்சத்தில் உங்களது பதில் என்னவாகயிருக்கும்? நமது இதுவரையிலான காமிக்ஸ் பயணத்தின் Top 3 நாயக / நாயகியர் யாராக இருக்கக் கூடும் உங்கள் பார்வைகளில் ? இதோ – உங்களது updated options:
1. இரும்புக்கை மாயாவி
2. C.I.D. லாரன்ஸ் & டேவிட்
3. வேதாளன்
4. ஸ்பைடர்
5. கேப்டன் டைகர்
6. டெக்ஸ் வில்லர்
7. லக்கி லூக்
8. XIII
9. லார்கோ வின்ச்
10. கேப்டன் பிரின்ஸ்
11. பௌன்சர்
12. மாடஸ்டி பிளைஸி
வண்டி வண்டியாய் நாயகர்களை நாம் கையாண்டுள்ள போதிலும் – அதிகளவு வாய்ப்புகள் பெற்றுள்ள இந்த popular 12-லிருந்து உங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்வதே பொருத்தமாயிருக்குமென்று நினைத்தேன் ! உங்கள் பார்வையில் நமது பயணத்தின் சூப்பர் டூ்ப்பர் performers என முதல் 3 இடங்களை பெற்றிடும் தகுதிகள் யாரிடமுள்ளன ? சொல்லுங்கண்ணே... சொல்லுங்க! நான் இப்போதைக்கு தூக்கத்தை அரவணைக்கச் செல்கிறேண்ணே...! மீண்டும் சந்திப்போம்! !! Bye for now all !! Enjoy the day & the week ahead !!
படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteசெண்டிமெண்ட் ; காதல்; மோதல்; வீரம்; தியாகம் என நவரசங்கள் சொட்டுமொரு கதையை அவர்கள் இத்தாலியில் ////உருவாக்கியிருந்தாலும் –அதன் ஆணிவேர் நம்மூர் பக்கமாகத்தானிருக்குமென்பது நிச்சயம்! இம்மாத ‘விதி போட்ட விடுகதை‘// இது போன்ற கதைகளைத்தான் வெகு நாளக எடியிடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்
ReplyDeleteஇம்மாத புத்தகங்களை கைப்பற்றியாச்சு :) :) :)
Delete😊!
Deleteவந்துட்டேன்....................
ReplyDeleteகலவையான கலக்கல் பதிவு. அதிகாலை வணக்கங்கள்!
ReplyDelete3rd
ReplyDelete4th
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் பற்றிய செய்திகளை கேட்டாலே ஆர்வம் அதிகரிக்கும். டெக்ஸ் இன் புது ஆல்பங்களை வெளியிட சீக்கிரம் வழி தேடுங்களேன் welcome to trichy.
ReplyDelete
ReplyDeleteஎனது பார்வையில் டாப் 3 Performers
1. டெக்ஸ் வில்லர்
2. வேதாளர்
3. லார்கோ வின்ச்
10
ReplyDeleteஇனிய நடுநிசி வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய நடுநிசி வணக்கம் நண்பர்களே!!!
வணக்கம் தல
Deleteஇனிய வணக்கங்கள் டெக்ஸ் ஜி!!!
DeleteGood Morning i am eleventh
ReplyDeleteGd mrng
Deleteநூற்றாண்டின் நாயகன்
ReplyDelete1-டெக்ஸ்
2-ஸ்பைடர்
3-xii
(sub)வேதாளர்
ஒரு நாயகன் ஒரு சகாப்தம்-ஓவியங்கள் சும்ம்மா பட்டயைக் கிளப்புகிறது சார்...
ReplyDeleteசீக்கிரமே 'நாவல் காமிக்ஸினை' த் தரிசிக்க ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும்!!!
எனது டாப் 3 நாயகர்கள்:
ReplyDelete1. டெக்ஸ் வில்லர்
2. கேப்டன் டைகர்
2. XIII
3. பௌன்சர்
3. லக்கி லூக்
3. லார்கோ
கொஞ்சம் போங்கான லிஸ்ட் தான்... எடிட்டர் சார் மன்னிப்பாராக....:p
வேதாளர் எனக்கும் மிக மிக மிக பிடித்தமான காமிக்ஸ் ஹீரோ...ஆனால் அவரை 'முகமூடி வீரர் மாயாவி' என்று ராணி காமிக்ஸில் மட்டுமே படித்துள்ளேன்...
ReplyDelete+1
Delete20th
ReplyDelete//2012-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது கூட இதே போன்றதொரு அதிரடியை செய்தது நினைவுக்கு வருகிறது! சுமார் 140 முந்தைய இதழ்கள் கொண்ட pack ரூ.1100 or அது போன்றதொரு விலைக்கு விற்றோம் – கிட்டங்கியைக் காலி செய்திட ! அவை பார்சல் –பார்சலாய் சென்றடைந்தது காமிக்ஸ் காதலர்களிடம் மாத்திரமேயெனில் நிச்சயமாய் நமக்கு சந்தோஷமே!//
ReplyDeleteஅந்த மெகா பிரசாதங்களில் இரண்டு எனக்காகவும் நண்பர் ஒருவருக்காகவும், நண்பர் விஸ்வாவின் உதவியினால், திரு.ஆனந்தன் என்கிற இன்னுமொரு நண்பரால் 2012 புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டு எமக்குக் கிடைத்தன. ரூ.1110 என விலை குறிக்கப்பட்டு விலைக் கழிவோடு ரூ.900 க்கு வழங்கப்பட்டிருந்தன அந்த 'மெகா' பிரசாதங்கள். தன்யனானோம்...!!!! படம்: நண்பர் விஸ்வாவின் பதிவிலிருந்து
ஆஹா...இந்த புக் செட்டைப் பார்க்க பார்க்க ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸைப் பார்த்த மாதிரி நாக்கிலே எச்சில் ஊறுதே....
Deleteஅது என்னாங்க அந்த குண்டு புக் 'இரத்தப்படலமா' ?!
இந்த புக் செட் இனி கிடைக்காதா எடிட்டர் சார் ?!
:-(:-(:-(
இனிய நினைவுகள் சூப்பர் பொடியன் ஜி .....
Delete//அது என்னாங்க அந்த குண்டு புக் 'இரத்தப்படலமா' ?!//
Deleteஆமாம், நண்பரே. அதேதான்!
//இனிய நினைவுகள் //
Deleteஆமாம். ஆனால், அதை கிளறிவிட்டவர் நானில்லை. நம்ம எடி தான்!
வேதாளர்....
ReplyDeleteமாயாவி....
வேதாள மாயாத்மா....
.... ....
ஹலோ இந்த மாடஸ்டி படத்தை ஓரு வருடமாக நான் பயன்படுத்தி வருகிறேன். தயவுசெய்து உங்கள் profile picture மாற்றி விடுங்கள்.(மாடஸ்டி படம் use பன்ன MV சார் கிட்ட permission வாங்கிட்டிங்களா)
Deleteஹாஹாஹாஹாஹா..............
Deleteநாயகர்கள் யாராக இருந்தாலும் நாயகி மிஸ்.மாடஸ்டி பிளைஸி முதல் 3 இடங்களுக்குள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறார்
ReplyDeleteஅதுதானே.?
Delete" அப்படி போடுங்க அறுவால.! "
லிஸ்டிலே புட்போர்டில் தொங்கிட்டு வர்றமாதிரியே கடைசியில் பெயரை வெளிட்டு எங்களை கடுப்பேற்றினாலும் , முதல் மூன்று இடங்கள் இளவரசிக்கே சொந்தம்.!!!!!
என்னவோ போடா (ங்க) மாதவா !!!!!......
Deleteஅடுத்த வருடம் வரை இப்படி ஏதாவது சொல்லி ஆறுதல் பட்டுக்கோங்க....
ஹும்!........விஜயராகவன் சார்.!
Deleteமாதம் மூன்று சந்தா என்றால் கூட டெக்ஸை எட்டி பிடிக்க முடியாது போலுள்ளதே.! இன்று அதிகாலை ஈரோட்டிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸில் இருந்து சென்னை வரும்போது எடிட்டரின் டெக்ஸ்வில்லரின் புராணம் படித்த போது இதே சிந்தனைதான்.! டெக்ஸ் வில்லருக்கு கிடைத்தது போல் போனொலி போன்ற குழுமம் டைகருக்கோ மாடஸ்டிக்கோ அமையவில்லையே என்ற வருத்தம் காதில் புகைவரவைத்தது. ஹும் பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான். முடி இருக்கிறவன் முனுஞ்சுக்கிறான்.! என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.!ஹும்! என்னமோ போடா மாதவா.!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவெட்டுக்கிளி வெறியன் ஜி
( Xlll கதையை படிச்சிட்டு அதில் வரும் கேரக்டர் பெயரையெல்லாம் ஒண்ணுவிடாம ஒப்பிக்கணும் சரிதானுங் )
ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்
ReplyDelete1.ஸ்பைடர்
ReplyDelete2.மாயாவி
3.டெக்ஸ் வில்லர்
ஆசிரியரே கிளாசிக் மறு பதிப்புகளுக்கு
ReplyDeleteநீங்கள் உங்கள் விருப்பமான 20 புத்தகங்களின் பெயரை தெரிவியுங்கள் நாங்கள் அதில் 12 தேர்வு செய்கிறோம்
என்னால் என்றும் மறக்கவியலா நாயகர்கள்,
ReplyDelete1. கேப்டன் டைகர்
2. கேப்டன் பிரின்ஸ்
2. வேதாளர் (முகமூடி வீரர் மாயாவி)
3. டெக்ஸ் வில்லர்
3. லக்கி லூக்
3. இரும்புக்கை மாயாவி
3. C.I.D. லாரன்ஸ் & டேவிட்
3. XIII
3. மாடஸ்டி பிளைஸி
திருச்சியில் புத்தகதிருவிழா என்பதே மகிழ்ச்சியான சேதி! எடிட்டர் சார் உங்களையும் மற்றும் நம் நண்பர்களையும் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ! மிக்க மகிழ்ச்சி !
ReplyDeleteஎனக்கும் சொந்த ஊர் திருச்சி தான். 5,6 தேதிகளில் கண்டிப்பாக திருச்சியில் பார்ப்போம்.
Deleteஆசிரியரே சி.ஐ.டி.ஜான் மாஸ்டரின் கதைகளை முதலில் முயற்சியுங்களேன் தெளிவான சித்திரங்கள் விறுவிறுப்பான கதை டென்னிஸ் விளையாடிக்கொண்டே துப்பறிவது என எல்லா ஏரியாவிலும் தூள் பரத்தியிருப்பார் ஜான் மாஸ்டர் சற்று சிந்தியுங்கள் ஆசிரியரே
ReplyDeleteஎன்னுடைய Top3 list
ReplyDelete1.tex
2.tex
3.tex
1.Tiger
Delete2.Tiger
3.Tiger
1.Daibolik
Delete2.daibolik
3.daibolik
சபாஷ் ,ஆட்டம் ஆரம்பமானது .....
Deleteஏனுங்க டெக்ஸ் விஜயராகவன் சார். நீங்கள் உங்க டாப் ஹீரோ லிஸ்டை சொல்லவில்லையே.?
Deleteஐயோசொக்கா ..டெக்ஸ் அட்டை வாம்பம் படடையுடன் பட்டய கிளபபுதே...சார் காலத்தை பின்னோக்கிசுழற்றினால் ஓவியங்கள் நிஜ காலத்துக்குள் காத முறுக்கி இழுத்து நல்லவேள zிருக்கோங்குதே....சார் zசந்தா 5000₹என்றாலும் கட்டுபடியாகுமா..சார் தயவு செய்து சீக்கிரம் தாருங்கள்
ReplyDelete1.லார்கோ
Delete2.Xlll
3.டெக்ஸ்
வெடட்டுக்கிளியாருக்கு வாழ்த்துகள்
Deleteஎன்னுடைய top 3 லிஸ்ட்
ReplyDelete1) டெக்ஸ் வில்லர்
2) லார்கோ வின்ச்
3) xiii
மற்றும் லக்கி லூக் , நீங்கள் போட்டுள்ள அனைத்து நாயகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் .
அப்பாடா ஒரு வழியாக பொடியர்களின் ஊதாஉலகிற்குள் நுளைஞ்சாச்சு...
ReplyDeleteவெற்றி பெற்ற வெட்டுக்கிளி சார்க்கு என் வாழ்த்துக்கள் . நாம் எப்போது நாவல் காமிக்ஸ் இனுள் குதிக்க போகிறோம் என்கிற ஆவலை, படங்களை பார்க்கும்போது கேட்காமல் இருக்க முடியவில்லை .
ReplyDeleteசார் மாதம்தோறும் டெக்ஸ் விசுபரூபம் எடுக்கிறார் அட்டகாசம்...நமது லயனும் விசுபரூபத்தி்ல் சளைக்கவில்லை ....சந்தோசம்...உற்ச்சாகம்..ஆனந்தமே
ReplyDeleteTop 3 from the list :
ReplyDelete1. இரும்புக்கை மாயாவி
2. ஸ்பைடர்
3. டெக்ஸ் வில்லர் & கேப்டன் டைகர்
But all are best in their area.
எனது டாப் ஹிரோக்கள் லிஸ்ட்.!
ReplyDelete1)இளவரசி
2)இளவரசி
3)இளவரசி
க்கும்
Delete0)இளவரசி
Delete0)இளவரசி
0)இளவரசி
1 முண்ணாடி 0 வருது தான இந்த தலைவி லிஸ்ட் எல்லாம் அப்பாற் பட்டவர் .
தற்போது:
ReplyDelete1) டெக்ஸ் வில்லர்
2) லக்கி லூக்
3) டைகர்
பள்ளி பருவத்தில்:
1) மாயாவி
2) ஸ்பைடர்
3) ஆர்ச்சி
//காமிக்ஸோடு இலவசம் பரிசு பொருள்கள் //
ReplyDeleteகாமிக்ஸோடு கிடைக்கும் இலவசங்கள் பரிசுபொருட்களில் என்றுமே ஆர்வம் இருந்ததில்லை.!
ஏனென்றால் சூரியன் போல் பிராகாசமாய் காமிக்ஸ் எனக்கு தெரிவதால் நட்சத்திரம் போல் பரிசுபொருள்கள் கவருவதில்லை.! சூரியன் முன்பு எப்படி நடசத்திரங்கள் கண்ணில் தெரியும்.?
தற்போது கூட ஞடி.சர்ட் மீதுகூட ஆர்வம் இல்லை.(முன்பு எங்களது குடும்பத்தொழில் பனியன் உற்பத்தி என்பதால் என்னவோ?) இளவரசி படம் வந்தால் ஆர்வம் வரும் என்று நினைக்கிறேன்.!
மடி சார்,எங்கேயும் எப்போதும்.
Deleteஎனது டாப் 3 தேர்வு: 1 மாயாவி
ReplyDelete2 வில்லர்
3 லார்கோ வின்ச்
டாப் 3:-
ReplyDelete1.Xiii
2.லார்கோ
3.டைகர்
கதைக்களம் அடிப்படையில் இவர்கள் தான் TOP..
மார்ச்-டிசம்பர் சந்தா பற்றி அறிவுப்புகள் இல்லையே எடி சார்?இரத்த படலம் வண்ண பதிப்பு சீக்கிரம் வேண்டும் சார்..
+111122
Deleteஎனக்கு டைகர் first, Xiii முன்றாவது
////நமது இதுவரையிலான காமிக்ஸ் பயணத்தின் Top 3 நாயக / நாயகியர் யாராக இருக்கக் கூடும் உங்கள் பார்வைகளில் ? /////
ReplyDeleteஇவ்வாண்டின் பதில் சொல்லவே இயலாத , மிகுந்த சிரமமான, என்ன பதில் சொன்னாலும் நியாயம் சேர்க்க முடியாத ஒரு அடாவடி ரகக் கேள்வியாக இதை பிரகடனம் செய்கிறேன்!!
அப்படியே ஏதாவது ஒரு காரணத்தை வச்சு கஷ்டப்பட்டு ஒரு டாப்-3ஐ ரெடி பண்ணினாலும்கூட, மீதமுள்ள நாயகர்கள் பாவமாய் என்னை ஏறிட்டுப் பார்ப்பதாக ஒரு பிரம்மை!! ( ப்பூஊவ்... மூச்..மூச்...)
ஒருவேளை உங்கள் கேள்வி (ச்சும்மா ஒரு பேச்சுக்கு) "இனிவரும் நாட்களில் ஒரே ஒரு நாயகன் மட்டுமே நம் எல்லா இதழ்களிலும் இடம்பிடித்திடுவார் எனில் உங்கள் தேர்வு யாராக இருந்திடும்?" என்றிருப்பின்... நான் அதிகம் யோசிக்க வேண்டியிருக்காது.. ஹிஹி 'தல' தான்!
உண்மை இது கடினமான கேள்வியே.
Deleteபரிசு பெற்ற நண்பர் வெட்டுக்கிளியாருக்கு எனது வாழ்த்துகள்! பொருத்தமான தேர்வு! ( வெட்டுக்கிளியாரின் பேர்-ஊர் என்னவோ?)
ReplyDeleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் இந்த மாத இதழ்கள் கூரியர் வாங்கிடேன்..
ReplyDeleteஅடங்கொப்புறானே.........! நிசமாவா.?....திருப்பூரில் ஒரு மாயாவி....
Deleteபுத்தக விழா முடிஞ்சும் ,தூங்கலயா குமார் ???...
DeleteHi.......
ReplyDeleteவாழ்த்துக்கள் வெ.வீ சார்..!!!
Deleteமுந்தைய காலங்களில் தாமதத்திற்கு பெயர் போன நாமா இப்படி குறித்தகாலத்திற்கு முன்பே புத்தகங்களை அனுப்பிவைத்து போட்டுத் தாக்கிவருவது !! - என்பதை நினைத்தால் ஒவ்வொரு மாதமுமே ஆச்சரியப்படுத்துகிறது!
ReplyDelete'இந்த குட்டி டீமுக்கு பக்கபலமாக ஒரு பெரிய்ய்ய டீம் இருக்குமோ?'னு ஒரு டவுட் வருது! அப்படியொரு அசாத்திய உழைப்பு!! ___/\___
;-)))
Delete1. Tex Willer
ReplyDelete2. Irumbukai Mayavi3
3. Largo Winch
எனக்கு பிடித்த டாப் 3 நாயகர்கள் ..
ReplyDeleteடெக்ஸ் வில்லர் ..
லார்கோ .....
வேதாளர் ....(ஒரே கதை மட்டும் படித்துள்ளேன் ..அதிலியே சூப்பர் ஸ்டார் போல மனதில் பதிந்து விட்டார் ..)
+ 1 தலீவரே
Delete+ 1 தலீவரே
Deleteசார். ....
ReplyDeleteதோர்கல் மூலம் கிராபிக்ஸ் நாவல் கொஞ்சம் மனதில் நுழைந்து விட்டது .அப்படியே நீங்கள் சொன்னது போல ஸமர்ப் நண்பர்களையும் கிராபிக் இடத்தில் நுழைத்து விட்டால் ..
ஓஹோ ...ஓஹோ ...தான் ....காத்திருக்கிறேன் ;-)
அதிகாலை வந்தனம்!!!
ReplyDelete(ரெண்டு நாட்கள் பயணத்தில் கழித்து இல்லம் திரும்பியதில் இப்போதுதான் அதிகாலை)
வாழ்த்துகள் வெட்டுக்கிளியாரே!!!
வாழ்த்துக்கள் வெட்டுக்கிளியாரே
Delete///‘அடங்கொன்னியா... இதுக்குப் போயா இவ்ளோ ரோசனை பண்ணிப் போட்டேன்னு?‘ நமது கவுண்டர் பாணியில் என்னையே கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது!///
ReplyDeleteஹாஹாஹா!!! :-)
தலைவர் எல்லா சூழ்நிலைக்கும் டயலாக் சொல்லி வெச்சிருக்காரு சார்.!!!
ஆஹா ..இங்கே கமெண்ட்ஸ் இட இட. எஸ் டி கொரியரில் இருந்து அழைப்பு ...சொக்கா ஒரு அரைமணி நேரம் தாமதமாக அலுவலகம் கிளம்பி இருக்க கூடாதா ...
ReplyDeleteவட லேட்டாயிறுச்சே ...;-((
அதிகாலையில் இன்ப அதி ர்ச்சி கொடுத்த ஆசிரியருக்கு நன்றிகள்...ஆயிரக் கணக்கான காமிக்ஸ் காதலர்களுக்கும் எ ன் மனமார் ந்த நன்றிகள் ..உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் என்று ஊக்கப்படுத்திய பரணி from பெங்களூர் நண்பருக்கு ஸ்பெசல் நன்றிகள் ..நமது தளத்தின் நிரந்தர ஹீரோக்களான ஈரோடு விஜய்,செல்வம் அபிராமி,டெக்ஸ் சம்பத்,மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் ,கிட் ஆ ர்டின் கண்ணன் ,steelkilaa கோயம்புத்தூர் ,திருச்செல்வம் பிரபானந்த் ,பரணிதரன் போன்ற அன்பு உள்ளங்களை நினைத்துப் பார்த்து நன்றி களை உரித்தாக்குகின்றேன் ..அனைவரையும் சந்திக்க ஆசைதான் ..காலம் கனியட்டும் நண்பர்களே ..
ReplyDeleteWe meet in Chennai book fair.
Delete@ வெட்டுக்கிளி
Delete//காலம் கனியட்டும் நண்பர்களே ..//
அந்தக் 'காலம்' கனியும்போது என் கண்பார்வை மங்கிடாம இருக்கணும். இல்லேன்னா உங்க 'பளபளா' சவுண்டை மட்டும்தான் என்னால கேட்கமுடியும்!
இலைகளின் பின்னாலிருந்து வெறுமே சவுண்டுமட்டும் கொடுத்துக்கிட்டிருக்காம சீக்கிரமா பறந்துவந்து எங்க மூக்குமேல உட்காருங்க வெட்டுக்கிளியாரே! ;)
வாழ்த்துக்கள் வெட்டுக்கிளியாரே
Deleteஹிஹி..... வாழ்த்துக்கள் நண்பரே.!
DeleteThis comment has been removed by the author.
Deleteவாழ்த்துக்கள் வெட்டுக்கிளி நண்பரே :-)
Deleteவெட்டுக்கிளியாரே .!@
Deleteவிஜய ஷேங்கர் சொல்வது முற்றிலும் உண்மை.! காலம் சீக்கிரம் கனியட்டும்.!
உங்களை போன்றே மிஸ்டர் மரமண்டைக்கும் எனது வேண்டுகோள்.!!
வெட்டுகிளியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..;-)
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும்.
DeleteThanks for the post. Waiting for April 10000 wala crackers. After seeing the title of the post I thought you are announcing z. But it is not.
ReplyDelete
ReplyDeleteஎனக்கு பிடித்த டாப் 3 நாயகர்கள்
டிடெக்டிவ் ஜெரோம்
ஜூலியா கென்டல்
ஏஜன்ட் 327
(சும்மா டமாஷூக்கு)
உண்மைய சொல்லோணும்னா.,
லக்கி லூக்
கிட் ஆர்டின் & டாக்புல்
டெக்ஸ் வில்லர்
எவர்க்ரீன் மனங்கவர் ஹீரோஸ்.!!!
ஆசிரியர் சார் ..
ReplyDeleteஅந்த காமிக்ஸ் நாவலை எப்படியாவது இந்த வருடம் உள்ளே நுழைக்க முடியுமா என பாருங்கள் ...இருக்கவே இருக்கு ..
"திடீர் மலர் ";-)
This comment has been removed by the author.
Deleteநாவல் காமிக்ஸின் அட்டைப்படங்களும், முதல் பக்க டீஸரும் மனதை அள்ளுகின்றன. அதைவிட்டு கண்களை நகற்றவே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது! இதையெல்லாம் எங்கள் கண்களில் காட்டி ஏன்தான் இப்படி காமிக்ஸ் டார்ச்சர் பண்ணுறீங்களோ!! சட்டுபுட்டுனு ஏதாவது ஒரு சந்துபொந்து இண்டுஇடுக்குல இறக்க முடியுமா பாருங்களேன் எடிட்டர் சார், ப்ளீஸ்!
ReplyDeleteஎதுவுமே கிடைக்கலேன்னா இருக்கவே இருக்கு 'Z'! அதுல கொஞ்சம் slotsஐ அதிகரிச்சா வேலை முடிஞ்சது! ;)
அதுவும் இல்லேன்னா நம்ம தலீவர் சொன்னா மாதிரி இருக்கவே இருக்கு 'திடீர் மலர்' ;)
அதே,அதே.
Delete+1
Deleteவேர்ல்ட் T20-வெற்றி மலர் .....
Delete(தோத்துபுட்டா,ஆறுதல் மலர் )...(எடுத்த கல்லை அல்லாரும் கீழே போட்டுருங்கப்பா...)
சென்னை புத்தக காட்சி பற்றி நல்ல முடிவாக சொல்லுங்க சார் ...இங்கே சேந்தம்பட்டி கரகாட்ட காரை தயார் செய்ய நண்பர்கள் காத்திருக்கின்றனர் ...;-)
ReplyDeletegood , it seems all comics lover fraternity will definitely enjoy NOVEL COMICS ENTRY
ReplyDeleteஅந்த 12 பேர் லிஸ்ட்டில் Wayne Sheldon. பெயர் இல்லையே சார்.??
ReplyDeleteநச் கேள்வி!!
Deleteஅதானே?!!
அதானே??
Delete“வேதாளர்- நினைவில் நீந்தும் கனவுகள்” புதிய பதிவைக்காண tamilcomicseries.blogspot.com
ReplyDeleteVijayan sir, All our Comics hero's are my favorite hero's only. They are all in top list always. But I never read 'vethalar' stories which came in muthu. Can you please re-print some of his stories this year?
ReplyDeleteTop-3க்கான 12 பேர் லிஸ்ட்டில் எங்கள் செல்ல புஜ்ஜிம்மா; பப்லு குட்டி - ரின்டின்கேன் இடம்பெறாததை வன்மையாகக் கண்டிக்கிறோம்! ( பயலுக்கு தெரிஞ்சா மனசு விட்ருவான் பாவம்! எப்பவும் கடைவாயில் மட்டுமே ஜலம் காட்டும் எங்கள் தொப்ளா குட்டியின் கண்களில் ஜலம் பெருக்கெடுப்பதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது! மூச்.. மூச்..)
ReplyDeleteஹா,ஹா பூனையாருக்கு ரொம்ப இளகிய மனசு போல.
Deleteதிருப்பூர் குமார்க்கு அடுத்தபடியாக நானும்
ReplyDeleteஇம்மாத புத்தகங்களை கைப்பற்றியாச்சு :) :) :)
This comment has been removed by the author.
ReplyDeleteதலீவரே, இந்த மாசமும் 'சி.சி.வயதில்'க்கு கல்த்தா கொடுத்திருந்தார்னா நேரே சிவகாசிக்குப் போய் நம்ம போராட்ட வலிமையைக் காட்டிடுவோம்... ன்னான்றீங்க? ( ரொம்ப நாள் பதுங்குகுழி-வாசம் போரடிக்குது தலீவரே!) ;)
ReplyDeleteசெயலாளர் அவர்களே ...
Deleteஇம்முறையும் சி .சிறு வயதில் கட் எனில் சென்னை வெளிநாட்டு பயணத்தை கேன்சல் செய்து விட்டாவது சிவகாசி பயணத்திற்கு தேவையான பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து விடுகிறேன் ..வேறு வழி இல்லை ...நாளை வரை காத்திருக்கிறேன் புத்தகத்தை புரட்ட ...
சிங்கத்தின் சிறு வயதில் இல்லாத லயன் எமக்கு முழுமையான இன்பத்தை நல்குவது குறைவே. போராடுவோம்! போராடுவோம்!
Deleteகாலை வணக்கம் _/\_ :)
ReplyDelete.
ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
ReplyDeleteVanakkam thozhare!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு பிடித்த டாப் 3 நாயகர்கள் ;
ReplyDelete1. டெக்ஸ் வில்லர்,
2. கேப்டன் டைகர்,
3. இரும்புக்கை மாயாவி & ஸ்பைடர்.
இவர்களே என் வாசிப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.
மற்றவர்களும் இவர்களுக்கு இணையான போட்டியில் பின்தொடர்ந்து கொண்டே உள்ளனர்.
Deleteபோன வாரம் எங்க ex supervisor send off party அவருக்கு நான் கொடுத்த கிப்ட்
ReplyDelete'மி.ம'. 15 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் விட இந்த 1000 ரூபாய் புத்தகம் அனைவரஅனைவரின் கவனத்தை பெற்றது. இந்த மாதிரி புத்தகம் இன்னும் வருதா என்ற வழக்கமான கேள்விகள்.
இந்தியில வருதான்னு வேற ஓருத்தன் கேட்டதற்கு இல்லை இந்திய மொழியில் தமிழ் ல மட்டும் தான் வருகிறது என்று கெத்தா சொன்னேன்(இந்தியில எதுவும் வெளியீடு செய்ய idea இருக்க edi) எனது producer லிங்க் மற்றும் டைகர் மற்றும் லார்கோ கதைகளை சிபாரிசு செய்தேன்.
சூப்பர் கணேஷ் .....
Deleteகணேஷ் சூப்பரோ சூப்பர்
Deleteநூற்றாண்டின் நாயகர் எனில்..
ReplyDeleteஅது ஏஜென்ட் XIII மட்டுமே!
காமிக்ஸ் ஐகான்கள் ஆன லக்கிக்கு 2ம் இடம், டெக்ஸ்க்கு 3ம் இடம் தரலாம்.
//நூற்றாண்டின் நாயகர் எனில்..
Deleteஅது ஏஜென்ட் XIII மட்டுமே!//
+1
சொக்கா...சொக்கா...!!! ஆயிரம் பொன்னாச்சே...!! பெரிய சைஸ்...வித்தியாசமான கதைபாணி...முழுவதும் ஒரிஜினலாகவே கலரில்...!! ஐயோ..ஐயோ...!! மிச்சம் சொச்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சமாச்சாரங்களும், "இதை எங்கே நுழைப்பது ? அதை எப்படி வெளியிடுவது ?//
ReplyDeleteநாக்கை சுழற்றும் படங்கள் ஆயிரம்,நல்ல காரியத்தை எல்லாம் தள்ளி போடக்கூடாது உடனே செஞ்சி முடிச்சிடனும்.
விரைவில் அதற்கு என்ன வழியோ கவனிக்கவும்.
Tex santha 2???
Deleteடெக்ஸ் unlimited. பேசாமல் அத்தனை டெக்ஸ் படைப்புகளையும் கொஞ்சம் சிரமம் பாராது தமிழ்ப்படுத்தி வைத்துக்கொண்டு ஆன் டிமாண்ட் பிரின்டிங் போல ஏற்பாடு செய்ய முடியுமா சார்?
Deleteஏகத்துக்கும் டெக்ஸ் இரசிகர் படை உண்டீங்கு காணீர்.
Deleteits not like lots of tex fan. only tex fans are visiting blogs....
Deleteமின்னும் மரணத்திற்கு குரல் கொடுத்த பெரும்பான்மையானோர் டெக்ஸ் ரசிகர்கள் தான் ....
Deleteஏன் ஆசிரியரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்த அந்த 15பேரில் பலர் டெக்ஸ் ரசிகர்களே .... பலசை கொஞ்சம் நினைத்து பாருங்கள் .....
டெக்ஸ் தான் இனி லயன் காமிக்ஸ்ன் எதிர்காலம் என்பதே யதார்த்தம் ....
இனி எதையும் கேட்கவில்லை என்றாலும்கூட தானே டெக்ஸின் வெற்றியே ,அனைத்தும் பெற்று தரும் ....
// டெக்ஸ் தான் இனி லயன் காமிக்ஸ்ன் எதிர்காலம் என்பதே யதார்த்தம் ...//
Deleteஎக்ஸாக்ட்லி தல விஜய்ன்னா
tiger எதிர்காலம் இல்லை தான் ஒத்துகொல்கிறேனே .tiger பதிலாக புது நாயகர்களை கொண்டுவர வேண்டும். 12 டெக்ஸ் ஓகே(யதார்த்தம்). ஆசிரியர் போடுற பதிவை பார்த்த அடுத்த வருடம் 12 டெக்ஸ் மேல வெளிவ௫ம் போல இறுக்கே??? .
Deleteடெக்ஸ் கதைகள் fantasy ரகம்.TIger கதை யதார்த்தம் ரகம். பல்வேறு சுவை கொண்டதா lionmuthu இரூக்க வேண்டும். இல்லை என்றால் lionmuthu எதிர்காலத்துக்கு நல்லது அல்ல .
Deleteடெக்ஸோ,டைகரோ,இளவரசியோ எல்லோருக்கும் ஒவ்வொருவர் ஒரு வகையில் மனம் கவர்ந்தவர்களே நண்பரே.
Deleteநான் முதலில் வாசித்தது பாட்டில் பூதம் புத்தகம்தான்.அப்போது வலை மன்னனை மிகவும் பிடிக்கும்,பின்னர் தல இதழை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
தளபதியின் மின்னும் மரணமும் எனக்கு பிடித்த இதழே.
இளவரசியும் என் மனம் கவர்ந்தவரே.
எல்லாவற்றையும் தாண்டி நாம் காமிக்ஸ் காதலர்கள் என்ற புள்ளியே நம்மை இணைக்கின்றது.ஆனாலும் ஒவ்வொருவரின் சுவை மட்டுமே சற்று மாறுபடுகிறது.
நல்ல கதை,களம்,நாயகன் என்பதை தாண்டி குறிப்பிட்ட கேரக்டரின் மேல் ஈர்ப்பு வர பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
ரவி சார்.!சூப்பர்.!
Delete+11111111111
உண்மை ரசனையில் வேறுபட்டாலும்
Deleteநாம் அனைவரும் காமிக்ஸ் காதலர்களே
அப்புறம் ஏன் சார் லேட்டஸ்ட் டெக்ஸ் நாவல்ஸ் பற்றில்லாம் தகவல் தந்து சும்மா இருக்கிற எங்கள் சுரண்டிவிடுறீங்க.. முடியல!
ReplyDelete@ஈவி,
இம்முறை பரிசை வெட்டுக்கிளி தூக்கிட்டு போயிடுச்சே! அவ்வ்.. எம்மாநாளாச்சு, நாம் வழக்கம்போல் மண்ணைக் கவ்வுவோம்! :-)))
(வாழ்த்துகள் வெ.கி)
@ ஆதி
Deleteடைரக்ட்டா மண்ணைக் கவ்வி அசடுவழிய நிக்க வேணாம்னுதான் இப்போல்லாம் *** ஒன்லி லூட்டிக்காண்டி *** அப்படீன்னு ஸ்லைடு போட்டு ஜகா வாங்கிடுறேன்.. ஹிஹி! ஆனாலும் உங்களைமாதிரி டைரக்டா மோதி குப்புற விழுந்து மண்ணைக் கவ்வும் கிக்'கே தனி தான்! ;))))
அடுத்த தபா ஸ்ட்ரெய்டா களமிறங்கிடுவோம்! :)
@ AT,EV ...
Delete:-)))
@ ஆதி : 'யாமுணர்ந்த கடைவாய்க் குற்றாலத்தை அனுபவிக்க - இந்தத் தமிழ் காமிக்ஸ் உலகமும்' என்ற மகா சிந்தனை தானே...வேறென்ன ?
Delete1)ரோஜா்,டயபாலிக்
ReplyDelete2)ரிப்போா்டா் ஜானி,பிாின்ஸ
3)all
பார்ஷல் வந்திடுச்சேய்!!!!
ReplyDeleteஆனால் இம்முறை ST நண்பரிடமிருந்து .!
மீணடும் சிறுநகரவாசியானதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.! ! !
///மீணடும் சிறுநகரவாசியானதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.///
Deleteஹாஹாஹா! :))))
:-))
Deleteவயிற்றெரிச்சல் கிளப்பாதீரும் கிட்டாரே , நாளை காலை 11மணி வரை காத்து இருக்கனுமே.... அவ்...அவ்...
Deleteபேசாமல் நீங்கள் வெள்ளிக்கிழமை அன்றே இந்த மாத இதழ்களை கொரியர் செய்திருக்கலாம் ஆசிரியரே.
ReplyDeleteஇந்த மாத புத்தகங்களை எதிர்நோக்கி ஆவலுடன்.
ReplyDeleteஏப்ரலில் ஒருவேளை சென்னை புத்தக கண்காட்சி இல்லையெனில் எ.பெ.டை,முத்து மினி காமிக்ஸ்,Extra,Exatra இதழ்களை வெளியிட வேறு திட்டங்கள் ஏதேனும் உள்ளதா ஆசிரியரே?
ReplyDeleteGirr girr en peyar tigerவந்தே ஆகணும்.
Deletetiger must you can postponed text after one or two year
Deleteஆம் இருக்கிறது நண்பரே. (இது முழுக்க காமடிக்காண்டி. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல)ஏப்ரல் மாதத்தின் குழு குழு குற்றாலச்சாரலின் இனிமையை அனுபவித்துக்கொண்டே(ஏப்ரல்ல சிவகாசிக்கு வந்து பாருங்க பிறகு தௌரியும்) நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர (வழியெல்லாம் பழைய புத்தகக்கடையில் காமிக்ஸ் வேட்டையாடிக்கொண்டே). காலை 8 மணிக்கு அன்பு ஆசிரியரின் சின்ன காலை உணவு உபசரிப்புடன்( ஆளுக்கு 2இட்லி, இடியாப்பம் தேங்காய்ப்பாலுடன், அடை அவியல், வெங்காய ஊத்தப்பம், இலையின் ஓரத்தில் கொஞ்சமா 1/4கிலோ அளவுக்கு சாத்தூர் சேவு, அதுக்குப்பக்கத்துல அழகர்கோவில் தோசை சைசுக்கு 2கடம்பூர் போளி, அப்புறமா ஒரு ரஸ்தாளிப் பழம்)
Deleteநமது ஆதர்ச நாயகன் கனவுக்கண்ணண் டைகர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா இனிதே ஆரம்பமாகும். 9.30 மணிக்கு நண்பர்களின் கரகோசத்திற்கிடையே முத்து மினி காமிக்ஸ்சின் முதல் செட்(8 தனித்தனி புத்தகங்கள்) புத்தக வெளியீடு. அதன்பின் 13ன் டீசர் வெளியீட்டு விழா. பின்னர் விழா சிப்பு விருந்தினர்களின் சிற்றுரை.( முடிந்தால் போனெல்லி குழுமத்தின் சிறந்த 3 படைப்பாளிகள் ) .அதன்பின் காமிக்ஸ் காதலர்கள் மற்றும் ஆசிரியருக்கிடையிலான கலந்துரையாடல். இறுதியில் அடுத்த ஆண்டில் வெளிவரவேண்டிய ஸ்பெசல் இதழ்கள் என்னென்ன என்பதை இறுதி செய்து விட்டு மதிய உணவுக்கு ஆசியரின் அன்பபான அழைப்பை ஏற்று நண்பர்களின் புறப்பாடு. மதிய உணவு மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் (சங்கரன் கோவில் சுல்தான் பிரியாணி, சாதம் வகையறாக்களுடன் கொஞ்சம் திருநெல்வேலி அல்வா, முதலூர் மஸ்கோத் அல்வா, திசையன்விளை மக்ரூன், இவற்றோடு உணவை முடித்த கையுடன் செரிமானக்கோளாறு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக கடைசியில் கோவில்பட்டி கடலை முட்டாயுடன்(அம்பளிப்பு ராசசேகரன் வேதிஹா) , ) நண்பர்களின் கவனமெல்லாம் எங்கோ ஓரிடத்தில் லயித்திருப்பதை கண்டுகொண்ட ஆசிரியர் நண்பர்கள் சிறிது சிரம பரிகாரம் செய்துகொண்டபின் நல்ல வழிகாட்டி ஒருவருடன் நண்பர்கள் காமிக்ஸ் வேட்டைக்கு ஏற்பாடு செய்ய நண்பர்கள் அனைவரும் அவரவர் பொக்கிசங்களுடன் பத்திரமாக ஊர் திரும்ப விழா இனிதே நிறைவு பெறும். நண்பர்கள் மனது வைத்தால். இந்த வாரமும் என் பங்குக்கு கொழுத்தி போட்டுட்டமுள்ள(கோவில்பட்டி தீப்பெட்டி நகரம் அண்ணாச்சியோ)
சென்னை விழாவை சிவகாசியில் வைங்கப்பா .....படிக்க படிக்கவே நாக்கில் நயாகரா .....
Deleteராஜசேகர் & டெக்ஸ் விஜயராகவன்.!
Deleteசூப்பர்.! மனசு குளுகுளுன்னு இருக்கு.!
@ ராஜசேகர்
Deleteஇந்த ப்ளான் சூப்பரா இருக்கே,நீங்க வகைவாறியா சொல்ற ஐட்டம்கள் படிச்சா இப்பவே நாக்கு ஜலம் கொட்டுறது. தலீவா வடக்கு தேச அயல்நாட்டு சென்னை பயணத்துக்கு போட்ட மொத்த குரூப் டிக்கெட்டையும் [ஏப்ரல்-10] கேன்சல் பண்ணிட்டு, தென் தேச அயல்நாடான சிவகாசிக்கு டிக்கெட் போட்டுடவா...!!!
காமிக்ஸ் காதலர்கள் நண்பர்கள் அனைவரையும் பட்டாசு நகராம் காமிக்ஸ் நகருக்கு( சில பத்தாண்டுகளுக்கு முன்பு வேறொன்றுக்கு உலக அளவில் பெயர் பெற்றது) வருக வருக என்று இரு கரம் கூப்பி வரவேற்பது உலக நாயகன் டெக்ஸ் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் மந்தித்தோப்பு ஒன்றியம் பாரதிநகர் குட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன். அனைவரும் ஜூன் மாதத்தில் வரும்பட்சத்தில் குற்றாலத்தின் குழு குழு சாரலை அனுபவித்து பாபநாசத்தின் தாலாட்டும் தென்றலையும் அனுபவிக்கலாம் நண்பர்களே. வாருங்கள் வரவேற்கிறோம் நண்பர்களே
Delete1. வேதாளன், இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், Daibolik
ReplyDelete2. XIII
3. கேப்டன் பிரின்ஸ், Lucky Luke and All Others
12 முத்தான நாயக நாயகியரைக் காட்டினால் நான் எப்படி மூவரைத் தேர்வது? அனைவருக்கும் எனது ஆதரவு!!!
ReplyDelete///VETTUKILI VEERAIYAN24 February 2016 at 06:11:00 GMT+5:30
ReplyDeleteஅந்தா தெரியிற மொட்டைப்பாறை வரைக்கும் எங்க பாட்டனாருக்கு சொந்தமான இடமாத்தான் இருந்தி ச்சிப்பா ..
அப்புறம் என்னாச்சி
வறுத்த கறிக்கு ஆசைப்பட்டு பூராத்தையும் வித்து தின்னே தீத்துப்புட்டாராம்
Reply
Replies
சேலம் Tex விஜயராகவன்24 February 2016 at 08:45:00 GMT+5:30
Super ,I am voting for this,...////---
வாழ்த்துக்கள் வெட்டுக்கிளி சார்....
கமெண்ட்ஸ் எழுத தெரியலனாலும்,டாப் எதுன்னு கணிக்க முடிந்ததே சந்தோஷம்...ஹி..ஹி..ஹி..
அட ஆமா பாஸ் !
Deleteகலகிபோட்டிங்க போங் :)
Yesterday: Spider, steel claw, phontom.
ReplyDeleteToday:Tex,tiger,Comanche.
Tomorrow: largo,Johnply
Evergreen: Modesty(my dream girl).
இதுவேரயா,..MV சார்க்கு இன்னிக்கு சோறே வேணாம் ..
Delete1-டெக்ஸ் வில்லர்
ReplyDelete2-Xlll
3கேப்டன் டைகர்...
1. Largo
ReplyDelete2. Tiger
3. Tex & XIII
டியர் எடிட்டர்,
ReplyDeleteநீங்கள் திருச்சி வரும் தேதிகள்?
/* ஆனால் சமீப நாட்களில் திருச்சியில் நாம் ‘ஹி... ஹி... ஹி‘ தான்! */
Strange irony :-)
நான் லயன், மினி லயன், ஜூனியர் லயன் என்று நமது காமிக்ஸ்கள் அனைத்தும் வாசிக்க ஆரம்பித்தது - பள்ளி ஆண்டிறுதி மற்றும் பொங்கல் விடுமுறைகளின் போது திருச்சியில்தான் ... in fact, சென்னையில் சில முறைகள் தேடி கிடைக்காத போது அதற்கு அடுத்த வாரம் திருச்சியிலிருந்து தருவித்த தருணங்கள் உண்டு !
இம்மாத டாப் அட்டைப்படம் வில்லருடையதே!
ReplyDeleteதந்தையும் மகனும் பின்னி பெடலெடுக்குறாங்க.!
அப்புறம்
கொஞ்ச நாளைக்கு முன்னால கமான்சே அட்டைப்படத்துல., நிழலோட கண்ணுல எதூக்கு ஓட்டை போட்டு இருக்கீங்க. எவ்ளோ பெரிய மிஸ்டேக்குன்னு மாயாவி சிவா ரிப்போர்ட் பண்ணாரு. ஈரோடு விஜய் சப்போர்ட் பண்ணாரு.
நான் அப்பவே அது ஓட்டை யில்லீங்கோ., மூக்கு கண்ணாடிங்கோன்னும் முதல்ல அது நிழலே இல்லேன்னும் கரடியா கத்தீனேன். யாருமே சட்டை செய்யல. இப்பவும் சட்டை பேண்ட் எதுவும் செய்யாமே லாங் ஜம்ப் செஞ்சிடுங்கோ.!!! :-)
கோடையிடியாரே,அந்த மூக்குகண்ணாடி டச்சிங்தான் அவர் சொல்லும்...//நாம் துளிகூடக் கை வைக்க அவசியமில்லாது போன அட்டைப்பட டிசைன் இது ; சமீப சமயங்களின் டாப் ராப்பர்களுள் இதுவொரு உச்ச இடம்பிடிக்கும் என்று நினைக்கச் செய்தது! //
Deleteநம்ம ஊர்ல லாஜிக் படமா ஹிட் அடிக்குது..? லாஜிக் இல்லாம செஞ்சதானே அது ஹிட். இதையும் அப்படி எடுத்துட்டு போவோமே..! ;)))
mayavi.siva : மூக்குக்கண்ணாடி டச்சிங்கா ?? அதற்கேது அவசியம் - ஓவியரின் ஒரிஜினல் சிந்தனைக்கும் - செயலாக்கத்துக்கும் முன்பாய் ?
Deleteகதையின் வில்லனை வித்தியாசமான லைட்டிங்கில் ஹெர்மன் கொணர நினைத்திருப்பதே அவரது இந்த ராப்பர் டிசைன் !
//வெள்ளிக்கிழமை மாலையே பிரதிகளைக் கூரியர் செய்திடும் வாய்ப்புகள் இருந்தன தான் ; ஆனால் சனிக்கிழமையன்று பாதிப் பேருக்குக் கிடைத்து – மீதப் பேர் நகங்களையும் பற்களையும் திங்கள் வரையிலும் கடிக்குமொரு சூழல் வேண்டாமென்று தோன்றியதால் ஒட்டுமொத்தமாய் சனிக்கிழமை despatch என்று தீர்மானித்தோம் !///---... நல்லவேளை மூன்றாம் உலகப்போர் மூளாது ......
ReplyDeleteடாப் 3 நமது லயனில்:
ReplyDelete1) தல டெக்ஸ்
2) லார்கோ வின்ச்
3) லக்கி லுக்
(மற்றவை....ஏன்னா இவங்கள நான் நம்ம சங்கத்துல்ல பார்த்ததே இல்ல !
இல்ல ஒரு முறை பார்த்திருக்கேன் :))
(But இவங்க கதை plot எப்பவும் வித்யாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்)
1) வேதாளர்
2) Batman
ஆமா.....
கொஞ்ச நாள் முன்ன நம்ம Batman வரபோறதா சொன்னிங் பாஸ் !
என்னாச்சு!!!!!!!!!!!
Saravanan R : BATMAN - ஐ ஆண்டுக்கு 3 இதழ்களுக்கோ - மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 இதழ்களுக்கோ மாத்திரமே தற்போதைய அட்டவணையினில் நுழைத்திட இயலும். உலகைக் கலக்கும் ஒரு டாப் ஸ்டாரை ஊறுகாய் போல பயன்படுத்தினால் அது அந்த சூப்பர் ஹீரோவுக்கு நியாயம் செய்வதாகாது ! So கொஞ்சம் பொறுமை காப்பின் - தொடரும் ஆண்டினில் தற்போதைய prime தொடர்களான லார்கோ ; ஷெல்டன் : XIII & கமான்சே கதைகள் கிட்டத்தட்ட காலி என்ற நிலையினை எட்டியிருப்போம். அந்த மாதிரியானதொரு தருணம் தான் BATMAN -ன் entry -க்கு உகந்ததென்று நினைத்தேன் !
DeleteMy top 3
ReplyDelete1XIII
2largo
3Tex
Welcome Tex saga
ReplyDeleteகோல்டு மெடல் .....
ReplyDelete1. டெக்ஸ் வில்லர்
2. லார்கோ வின்ச்
3. கேப்டன் டைகர்
சில்வர் மெடல் ....
1.X111
2.லக்கி லூக்
3.பெளன்சர்
ப்ரோன்ஸ் மெடல்...
1. கேப்டன் பிரின்ஸ்
2. ஸ்பைடர்
3. மாடஸ்டி பிளைஸி
பார்டிசிபிடன்ட் ஒன்லி ....
1. இரும்புக்கை மாயாவி
2. C.I.D. லாரன்ஸ் & டேவிட்
3. வேதாளன்
ஓகோ தங்க மங்கைக்கு வெண்கலமா? உங்க டெக்ஸ் இதுவரை கnரில் போனதுண்டா? மாடஸ்டிக்கு காரும். குதிரையும் ஓட்டத் தெரியும். ஆவியின் பாதையில் கெளஉமன் ஆக வந்தது போல் உங்க டெக்ஸ் காரில் வந்து செய்த சாகசம் ஏதேனும் உண்டா? வெண்கலமாம் வெண்கலம்
Deleteராவணன் சார்.!
Deleteஇளவரசியே பிடிக்காதவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து இரசிக்க ஆரமித்து உள்ளனர்.வெண்கலம் நல்ல முன்னேற்றம்.! மாற்றம் முன்னேற்றம்.!
//உங்க டெக்ஸ் காரில் வந்து செய்த சாகசம் ஏதேனும் உண்டா? //
Deleteஇது MV சாரின் தொழில் முறை பாயிண்ட் போலிருக்கிறது !! செம !!
அனைவருக்கும் வணக்கங்கள்..!
ReplyDeleteபுத்தகங்களுக்காக காத்திருக்கும் வேளையில் இந்தபதிவில் ஆசிரியர் போட்ட அறிவிப்பு வந்த புத்தகத்தை புரட்டினேன். 2000 வருடம் பிறந்ததை கொண்டாடும் விதத்தில் வெளிவந்த மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷலில் வந்தவைகள் தான் அந்த அறிவிப்புகள்..! டெக்ஸ் வில்லரின் 'எல்லையில் ஒரு யுத்தம்' இரத்த படலம்-10, லக்கிலூக், சிக்பில்,என 25 ரூபாயில்,356 பக்கங்களில் வெளிவந்த ஒரு பரிசுதான் காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு புதுயுகப் புதையல்
இதில் ஆசிரியர் இரண்டு போட்டிகளை அறிவித்து முதல் 50 நபர்களுக்கு டிசார்ட் பரிசளிக்கப்பட்டது. மில்லேனியம் நாயகன் யார் ? ன்னு ஓட்டளிக்கும் முதல் 500 வாசகர்களுக்கு கீசெயின் பரிசாக தரப்பட்டது..! அந்த கீசெயின் பார்க்க...இங்கே'கிளிக்'
ஓட்டளிப்பில் வெற்றிபெற்ற அன்றைய நாயகன் யார்..? பரிசாக கொடுக்கப்பட்ட டிசர்ட் எப்படியிருந்தது..? யாருக்கேனும் நினைவிருக்கா...!!!
க்ளிக்காரே அருமையான புதையல் .....
Deleteநானும் அந்த போட்டியில் வென்று இந்த கீசெயின் மற்றும் தொப்பி கைப்பற்றினேன் .....
முடிந்தால் அந்த வென்றவர்கள் பக்கத்தை க்ளிக்குங்க மாயா சார் ...
ஹூம் கால வெள்ளத்தில் அந்த பரிசுகள் தொலைந்து போனது வருத்தமான ஒன்று ....
நூற்றாண்டின் நாயகன் யார் ? கிற ஓட்டெடுப்பில் ஒரு பெரிய கலவரமே வெடித்தது. கிட்டத்தட்ட 400 கள்ளவோட்டுகள் போட்டு தீவிர ஸ்பைடர் ஒருவர் களத்தில் இறங்கியதை பார்த்து ஆசிரியர் ஆடிபோய்ட்டார்,அந்த ஆட்டம் சமீபமாதான் நின்னிருக்கும் போல.அந்த தீவிர ஸ்பைடர் ரசிகர் ஓட்டெடுப்பில் ஸ்பைடருக்கு வாக்களியுங்கள்..! ன்னு ஆட்டோவில பிரச்சாரத்துக்கே கிளம்பினார்கிற கொசுறு செய்தி. அன்னைக்கு நின்னுபோன தேர்தலை அவர் திரும்ப இப்ப ஆரம்பிச்சிருக்கார்.
Deleteஅந்த ஆ[அ]திகாரபூர்வமான தேர்தல் தள்ளிவைப்பு பார்க்க...இங்கே'கிளிக்'
@டெக்ஸ்
அந்த கீசெயின் பரிசுபெற்றவங்க யாருயாருன்னு பட்டியல் பார்த்தேன், அசத்தலா இருந்தது..! நீங்க கொஞ்சம் எடுத்து விடுங்க,சித்த கேப் விட்டு போடுறேன்..!
*மில்லெனியம் ஸ்பெசல் - ஜனவரி 2000ல் வந்த இதழுக்கு முன்கூட்டியே பணம் மணிஆர்டர் செய்து வாங்கினேன் ....நேரடியாக லயன் ஆபீஸில் பணம் கட்டி வாங்கிய முதல் இதழ் அதுதான்...டெக்ஸின் அசத்தல் சாகசம் (டெக்சோ டைகரோ மெக்சிகோ போனாலே அசத்தும் அந்த கதை) இடம் பெற்றிருந்தது .....என் 24வது வயதில் பலமுறை படித்து மகிழ்ந்த கதை அது.....
Delete*3வித போட்டிகளை அந்த இதழில் வைத்து இருந்தார் என் நினைக்கிறேன் .நான் இரண்டில் வெற்றி போல. கீசெயின் + லயன் லோகோவுடன் தொப்பியும் வந்தது ,இன்றும் நினைவிருக்கிறது . கிரிக்கெட் விளையாடும் போது பெருமையாக அதை போட்டு கொண்டு இருந்தேன் .பிறகு தொலைந்துவிட்டது .அப்போது பரிசு வாங்கிய மற்ற நண்பர்கள் யாரேனும் இங்கே இருக்கும் பட்சத்தில் உங்கள் நினைவுகளை தொடருங்கள் .ப்ளீஸ் ....
கிட்டத்தட்ட 1100 போஸ்ட்டுகார்டில் வேற வேற பெயர் இரண்டு நண்பர்கள் சேர்ந்து,சென்னையில பல்வேறு பகுதியில இருந்து கள்ளஒட்டு போட்டு குற்றச்சக்கரவர்த்தி ஸ்பைடரை வாக்கெடுப்பில் ஜெக்கவைக்க முயன்றார்கள். அவர்கள் இருவரும் சென்னைவாசிகளான அருமை நண்பர் RT முருகன் மற்றும் அவர் நண்பர் முத்துகிருஷ்ணனும் தான்..!
Delete@ டெக்ஸ்
அந்த பரிசு பெற்றபட்டியலில் உங்கள் பெயரும்,தாரமங்கலம் பரணிதரன் பெயர் உள்ளதும் நினைவில் உள்ளதா...? நினைவை மீட்டெடுக்க...இங்கே'கிளிக்'
நன்றிகள் சில ஆயிரங்கள் மாயா சார் .... வாவ் ....சில காமிக்ஸ் ஜாம்பவான்களுடன் பரிசு வாங்கியது மகிழ்ச்சியான ஒன்று ....மற்ற போட்டியில் வென்ற லிஸ்ட்ம் போடுங்கள் சார் ....
Delete@ FRIENDS : எனக்கு அந்த ப்ளூ கலர் டி-ஷர்ட் & கீ-செயின் நினைவில் நிற்கிறது ! ஆனால் தொப்பி என்ன மாதிரி செய்திருந்தொமென்பது சுத்தமாய் ஞாபகத்தில் இல்லை !!
Deleteஅந்த இரண்டாவது 'கேப்'பரிசு போட்டியிலும் மேன்ஆப் த மேட்ச் பட்டியலில் உங்க பேர் விஜயராகவன்..சூப்பர்..! வரும் புத்த்கத்திருவிழாவில் நம்மை சந்திக்கவருவதாக சொன்ன RT.ராஜேந்திரன் அவர்களின் பெயரும் இருக்கு, பார்க்க...இங்கே'கிளிக்'
Deleteசத்தியமா நீங்க சொன்ன ப்ளு டி-சர்ட் இதுஇல்லை எடி ஸார்..! ஆனா இது சாத்தியன்னு ஜேடர்பாளையம் சரவணன்,மடிபாக்கம் வெங்கடேஸ்வரன்,கரூர் சரவணன் கொண்ட குழு தான் சொல்லணும்..ஆங்..இங்கே'கிளிக்'
Deleteஎடிட்டர் ஸார்,
ReplyDeleteடாப் 12 பேர் லிஸ்ட்ல் வேய்ன் ஷெல்டனை எங்கே ?
கேப்ஸன் போட்டியில் கடந்தமுறைக்கு முந்தைய கேப்ஸனான டெக்ஸ்ஸை கட்டி தொங்க விட்டதுக்கும் முடிவை அறிக்கலாமே.
Jaya Kumar : அது தான் அப்போதே அறிவித்தோமே....வெற்றி பெற்றவர் நண்பர் R .சரவணன் என்று ! நீங்கள் கவனிக்கத் தவறி விட்டீர்கள் நண்பரே !
Deleteஜெ.கே. யின் டாப் த்ரீ.
ReplyDelete1.டைகர்
2.டெக்ஸ் கார்ஸன்
3.வேய்ன்+தோர்கல்
ReplyDeleteஎடிட்டர் ஸார்
தற்போது 500 ரூபாய் அனுப்பினால் புத்தக பார்சல் கிடைக்குமா?(ஹி ஹி)
போனஸாக நூறு மதிப்புள்ள பட்டாசு பார்சலை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.
வெட்டுக்கிளியாருக்கு வாழ்த்துக்கள்.
Jaya Kumar : நிச்சயமாய்க் கிடைக்கும்....68-க்குப் பதிலாய் ஆறோ.......எட்டோ !! :-)
DeleteTOP 3
ReplyDeleteTEX
TIGER
LARGO
டாப் 3
ReplyDeleteவேதாளர்
மாயாவி
டெக்ஸ்
Present Sir....!
ReplyDeleteரொம்பவே லேட்டா வந்துட்டேன்...!
TeX
ReplyDeleteTiger
Vethalar
Modesty blaise
Largo
Wyne Sheldon
yazhisai selva : இது செல்லாது...செல்லாது...TOP 3 மட்டும் தான் தேர்வு செய்திடணும் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete
DeleteMy top 3:
1: டெக்ஸ் வில்லர்
2: கேப்டன் டைகர்
3: Xlll
TNPSC ல கேக்கற கேள்விய கூட யோசிச்சு பதில் எழுதிடலாம் போல,நீங்க கேக்கற மாதிரி டாப் 3 ஹீரோக்கள் யாருங்கற கேள்விக்கு விடைய எழுத முடியாது போல.
ReplyDeleteஎன்ன சார் இப்படி பண்றிங்களே சார்.