*சின்னதொரு அறைக்குள்ளே இரண்டு பேர் அமர்ந்திருக்கும் காட்சி !
*இடது பக்கமாய், முன் frame -ல் இடம் பிடித்திருப்பது ஒரு 25 வயது இளைஞன். கறுப்பு கோட் ; வெள்ளைக் காலர் ; அடர் சிகப்பு டை என்ற உடுப்புடன் ! கையில் ஒரு பேனாவும், pad -ம் .
*அவனது முகத்தின் வலது பக்கம் மட்டுமே 90 டிக்ரீ கோணத்தில் பார்வைக்கு இருந்தாக வேண்டும். சவரம் செய்யப்பட முகம் ; அடர்த்தியான புருவம் ; படிய வாரப்பட்ட கறுப்புத் தலைமுடி. பார்க்கும் போது ஒரு படித்த பத்திரிகையாளனின் தோரணை அவசியம்.
*அவனுக்கு எதிரே, சுமார் மூன்றடி தூரத்தில் ஒரு சொகுசான சாய்வு நாற்காலி ; முதுகுக்கு ஒரு கனத்த குஷனோடு பிரவுன் நிறத்தில்.
*வலது கால் மேல் இடது கால் போட்டுக் கொண்டு அதனில் ஒரு பெரியவர் அமர்ந்திருக்கிறார். Frame-ன் மையம் அவர் தான்.
*அவரது முகத்தில் நிறைய சுருக்கங்கள் ; புதராய் மீசை ; ஒரு ஆட்டு தாடி ; வதனத்திலொரு இறுக்கம். அவரது வலது பக்கம் முழுமையாகவும், இடது பக்கத்தின் ஒரு பகுதியும் தெரிந்தாக வேண்டும்.
*தலையின் முன்பகுதியில் பிளாட் போட்டு விற்குமளவிற்கு காலியிடம் ; வெளீர் கேசம் ; லார்ட் லபக்தாஸ் ரேஞ்சிற்கு இடது கையில் ஒரு பைப் புகைந்து கொண்டிருக்கிறது..அந்தக் கிழ உருவத்தின் வாய்க்குக் கொஞ்சம் அருகினில்.
* அவரைத் தாண்டி ஒரு சதுர வடிவிலான ஜன்னல். அதன் மத்தியில் சிலுவை வடிவில் சட்டங்கள். ஜன்னலுக்கு மறு பக்கம் செங்கல் சுவர் ; மெலிதாக வெளிச்சம் உள்ளே பாய்கிறது !
*ஜன்னலின் விளிம்பில் ஒரு கிளாஸ் ; அதன் பின்னே ஒரு குடுவை ; ஓரத்தில் சின்னக் குடுவையும் , ஒரு தட்டும்.
*பெரியவரின் முழுக்கைச் சட்டை வெள்ளையில் ; sleeveless ஓவர்கோட் அடர் பச்சை ; பழுப்பு நிறக் கால் சராய் ! பெரியவர் முகத்தில் லேசாக வெளிச்சம் தெரிய வேண்டும் !
வணக்கம் நண்பர்களே....ஒரு ஞாயிறு காலையில் அரைத் தூக்கத்தில் எழுந்து வந்திருக்கும் உங்களுக்கு இதெல்லாம் என்னவென்ற சிந்தனையா ? பக்கம், பக்கமாய் நாம் படித்துச் செல்லும் காமிக்ஸ் கதைகளில் ; பல சமயங்களில் ஒற்றை நொடியில் நாம் தாண்டிச் செல்லும் சித்திரங்களில் ஒரேயொரு கட்டத்தை ஓவியர் வரைந்திடும் பொருட்டு கதாசிரியர் எழுதியிருக்கக் கூடிய விளக்கவுரையின் சின்ன சாம்பிள் மட்டுமே இது ! சித்திரத்தை என் முன்னே வைத்துக் கொண்டே நான் எழுதிய மேற்படி விளக்கங்களை அந்தக் கதாசிரியர் தன் கற்பனையில் மட்டுமே வடிவமைத்துப் பார்த்து இதைப் போல 4 மடங்கு விபரங்களோடு எழுதியிருப்பார் ஸ்க்ரிப்டில் ! (ஒரேயொரு கட்டத்துக்கு இந்தப் பாடு !! ஒரு பக்கத்துக்கு எத்தனை கட்டங்கள் ? ; எத்தனை பக்கங்கள் ஒரு கதைக்கு ? ; எத்தனை கதைகள் ஒரு தொடருக்கு ?யோசித்துத் தான் பாருங்களேன்..!!)
அதெல்லாம் சரி அண்ணாத்தே ...ஆனால் காலங்கார்த்தாலே இந்தக் காலட்சேபம் எதற்கோ ? என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் loud n ' clear ஆகக் கேட்பதால் விஷயத்துக்கு வருகிறேன் ! மேற்சொன்ன விபரங்களின் பலனாக வரையப்பட்ட சித்திரமானது 15 நாட்களுக்கு முன்னே இத்தாலியில் வெளியாகியுள்ள ஒரு (புது) டெக்ஸ் கதையின் முதல் frame ! வருஷமோ 1913 ; இடமோ நியூ யார்க் நகரிலொரு முதியோர் இல்லம் ; பழம் நினைவுகளை மீட்டெடுக்கும் கோரிக்கையோடு அந்தப் பத்திரிகையாளர் அமர்ந்திருப்பது வேறு யார் முன்புமல்ல - நமது வறுத்தகறிப் பிரியர் கிட் கார்சனின் முன்னே !! நக்கலும், நையாண்டியுமாய் இத்தனை காலம் நாம் பார்த்துப் பழகியிருந்த வெள்ளிமுடியார் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டே பேசத் துவங்குகிறார் ; பாதியிலேயே மனுஷன் "கொர்ர்" என்ற குறட்டையோடு நித்திரையில் ஆழ்ந்திட, ஒரு நர்சம்மா உள்ளே புகுந்து, "patient -ஐ தொந்தரவு செய்யாதீர்கள் !" என்ற மாமூல் வசனம் பேசுகிறார் !! என்ன கொடுமை போனெலி சார் ? என்ற திகைப்போடு இருக்கும் உங்களுக்கு ஆச்சர்யங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை ! நம் தளபதிக்குச் சவால் விடும் நீண்ட, சுருள் கேசம் ; ஆளை உலுப்பும் இளமைத் தோற்றம் ; பட்டாசாய் அனலடிக்கும் கதாப்பாத்திரமென பக்கங்களைப் புரட்டும் போது ஒரு இளைஞன் மையமாக வலம் வருவது 'பளிச்' என்று புலனாகும் ! அட...இந்த மஞ்சள் சட்டையை இதுக்கு முன்னே அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கே ? என்ற சிந்தனையில் ஆழ்ந்தால் - அது தான் நம் 'தல' என்று பிடரியில் அடித்துச் சொல்கிறது கதை ! அதிசயங்களும் அத்தோடு ஓயவில்லை ; பிரான்கோ-பெல்ஜிய ஆல்பங்களின் அதே அளவு ; அதே hardcover வடிவமைப்பு ; அதே 46 பக்க நீளம் ; அதே முழு வண்ணம் என இந்தப் புது ஆல்பம், இதுநாள்வரைக்குமான டெக்சின் இத்தாலிய பாணிக்கொரு புது இலக்கணத்தை எழுதுகிறது ! "ஒரு நாயகன்...ஒரு சகாப்தம்" என்பது இந்த பிரமிக்கச் செய்யும் கதையின் தலைப்பு !
அந்த முதல் frame ! |
டெக்சை கார்சன் சந்திக்கும் முதல் தருணம் ; டெக்சின் இளவயது பரபரப்பு ; தோற்றங்களில் ஏக மாற்றங்கள் என டெக்ஸ் கதைவரிசையில் இதுவொரு மைல்கல் இதழாக அமைந்திடுமென்பது உறுதி ! வெளியாகி அங்கு ஏக பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாம் இந்தப் புது பாணி !! 'அட..டெக்சுக்கு இனி இது தான் புதுப் பாதையா??" என்ற கேள்வியை நான் தயங்கி மெதுவாய்க் கேட்டு வைக்க , சிரித்துக் கொண்டே - என் முன்னே இம்மாததது டெக்ஸ் இதழ் # 653-ஐ தூக்கிப் போட்டார்கள் ! வழக்கமாய் வெளியாகும் கதைகளில் துளியும் மாற்றமின்றி அந்த வண்டி சீராய் மாதம் 200,000 பிரதிகள் விற்பனையோடு ஓடிக் கொண்டுள்ளது ! இந்த புது முயற்சி ஒரு தனித் தண்டவாளம் ! "பெல்ஜியப் பாணிகளை நாங்கள் எட்டிப் பிடிக்க நினைத்தால் அதுவும் எங்களுக்குச் சுலபமாய் சாத்தியமே !" - என ஐரோப்பிய காமிக்ஸ் உலகிற்கொரு பிரகடனமாய் இது இருக்குமோ ? என்ற எண்ணம் எனக்குள் எழாது இல்லை ! Anyways, இந்த அட்டகாசத்தை நாம் தமிழில் ரசித்திடுவோமா folks ? இந்தாண்டின் அட்டவணையில் ஏதாச்சும் லேசாகப் பட்டி, டிங்கரிங் செய்தால், இந்தப் புது யுக டெக்சை சுடச் சுட நாமும் ரசித்துவிடலாம் ! Thoughts on this please ?
போனெல்லி குழுமத் தலைவர் டேவிட் & ஓவியர் செர்பியரி |
கதாசிரியர் போசெல்லி |
வெறும் மொழிமாற்றம் மட்டுமே செய்து விட்டு அலப்பரை செய்யும் நாம் எங்கே ? முழுக்க முழுக்க creative அற்புதங்கள் நிகழ்த்தும் இவர்கள் எங்கே ? என ஒரு கணம் என் மண்டைக்குள் சிந்தனை ஓடிய போது - நம்மையும் அறியாது குடிவந்திருந்த கொஞ்சநஞ்ச தலைக்கனமெல்லாம் தலை தெறிக்க ஓட்டம் பிடித்ததை உணர முடிந்தது ! அத்தனை மாயாஜாலங்களையும் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் அமைதியாய் புன்னகையோடு நிற்பதைப் பார்க்கும் போது 'தம்பி...தரைக்கும், பாதத்துக்கும் இடைவெளி ஆகவே ஆகாது !" என்று என் மைண்ட்வாய்ஸ் உரக்கவே சொல்லியது ! நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் புன்சிரிப்பு மாறாது பதில் சொன்ன போசெல்லி, வீட்டுக்கு அன்று சீக்கிரமே புறப்படுவதாக இருந்ததால் அவரை ஒரு பிரத்யேகப் பேட்டி எடுக்க இயலாது போனது ! ஆனால் தனது நம்பரையும், மின்னஞ்சல் முகவரியையும் தந்து - "என்ன கேட்கணுமோ, அதனை தாராளமாய்க் கேளுங்கள் ; நிச்சயம் பதில் சொல்கிறேன் !" என்று அன்பாகச் சொன்னார் ! "ஊருக்குத் திரும்பிய பின்னே எங்களது வாசகர்களையே கேள்விகளைத் தொடுக்கக் கோருகிறேன் சார் ! "என நான் சொன்ன போது அதே புன்னகை ! So - தற்போதைய 'தல'யின் தலைவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்னவோ guys ? அத்தனையையும் ஒரு மொத்தமாய் அவருக்கு அனுப்பி, அவரது பதில்களை நமது லயனின் 250-வது இதழில் போடுவோமா ? உங்கள் கேள்விக் கணைகளை இங்கு பதிவாகவோ ; அல்லது "QUESTIONS TO MR BOSELLI " என்ற தலைப்போடு மின்னைஞ்சலாகவோ அனுப்பிடலாமே !
அவருக்கு விடை கொடுத்து விட்டு, திரும்பவும் மேல்தளத்திலிருந்த போனெல்லி அலுவலகம் திரும்பிய போது அங்கொரு ஆறடி உயர வெண்தாடி மனிதர் காத்திருந்தார் - முகத்திலொரு பெரிய புன்னகையோடு ! "ஹலோ..முத்து காமிக்ஸ் !" என்றபடியே கைகுலுக்கியவரை எனக்கு அடையாளம் தெரிந்தது ! மர்ம மனிதன் மார்ட்டின் கதைகளின் பிதாமகரான அல்பிரெடோ காஸ்டெல்லி தான் அவர் !
அவரை சந்தித்தது பற்றி......அடுத்த பதிவில் ! காமிக்ஸ் எனும் இந்தக் காலஇயந்திரச் சவாரியில் எனக்குக் கிட்டும் அனுபவங்கள் சகலமுமே ஒரு ஆயுளுக்கும் நிலைக்கும் சங்கதிகள் என்பது உறுதி ! படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் மத்தியினில் ஒரு போஸ்ட்மேனாகப் பணிபுரியும் இந்த மகிழ்வு ரொம்பவே வித்தியாசமானது என்பதை ஒவ்வொரு நாளும் எனக்கு உணர்த்தத் தவறுவதில்லை ! தூக்கமும், "மின்னும் மரணமும்" அழைப்பதால் - இப்போதைக்கு விடை பெற்றுக் கொள்கிறேனே ! Bye for now all ! See you around soon !
P.S: ஐரோப்பாவில் சுற்றித் திரிந்த போது எங்கோ என் கண்ணில்பட்ட படமிது ! கௌபாய் காதலர்களான நீங்கள் இதற்குப் பொருத்தமாயொரு funny caption எழுதி அனுப்புங்களேன் - பரிசாக ஒரு டெக்ஸ் ஒரிஜினல் இதழ் !!
மீண்டும் முதல்வன்
ReplyDeleteஇரண்டு முறை இரண்டாவது
ReplyDeleteஅதும் டெக்ஸ் பதிவிலே
//நமது ஒவ்வொரு இதழையும் அவர்கள் அத்தனை வாஞ்சையோடு அரவணைப்பதைப் பார்க்கும் போது//
ReplyDeleteஅந்த கொடுப்பினைதான் எங்களுக்கில்லையே சிங்கத்தலைவரே!!!
653 எங்கே?
63. எங்கே?
Jaya Sekhar : 6-க்குக் கூட வழியில்லாத மொழிகள் பற்றி நினைத்துப் பாருங்களேன்..?! 63-ன் மகிமை புலனாகும் !
Delete//காமிக்ஸ் எனும் இந்தக் காலஇயந்திரச் சவாரியில் எனக்குக் கிட்டும் அனுபவங்கள் சகலமுமே ஒரு ஆயுளுக்கும் நிலைக்கும் சங்கதிகள் என்பது உறுதி ! //
ReplyDelete//படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் மத்தியினில் ஒரு போஸ்ட்மேனாகப் பணிபுரியும் இந்த மகிழ்வு ரொம்பவே வித்தியாசமானது என்பதை ஒவ்வொரு நாளும் எனக்கு உணர்த்தத் தவறுவதில்லை//
உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வித்யாசமான போஸ்ட்மேன் பணி இப்பொழுதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
இளம்வயது இரவுக்கழுகு அருமையாய் இருக்கிறார்
ReplyDeleteஒரு சாயலில் கேப்டன் டைகர் போல் இருக்கிறார்
இந்த இளம்வயது டெக்ஸ் கதைகளை வெளியிட்டு நம் வாசகர்களை குஷி படுத்த ஏதாவது ஐடியா உண்டா சார்
Jaya Sekhar : ஒ..யெஸ் ! நிச்சயமாக நண்பரே !
Deleteவாவ்
Deleteஇளமை டெக்ஸ் பட்டாசாய் வெடிக்க காத்திருக்கிறார்
ஐயம் வெய்டிங்
இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுங்கள்
எடி சார்
Caption
ReplyDeleteவிடியலில் ஒரு விடிவெள்ளி
8 வது
ReplyDelete
ReplyDeleteமேற்கே ஓர் சமையல்
நீலச் சட்டை மர்மம்
சமைக்கும் சூறாவளி
ஆதலினால் நாய் வளர்ப்பீர்
Fla Sh : மினி-லயனுக்கொரு தலைப்பு ஆகும் ; மிச்ச சொச்சத்தை லயன் / முத்து / திகிலில் இங்கே-அங்கேவெனப் பொருத்திக் கொள்ளலாம் !
Delete@Fla Sh:
Delete+1 :)
//ஆதலினால் நாய் வளர்ப்பீர்//
இது பௌன்சர் கதைக்கு....
//ஆதலினால் குதிரை வளர்ப்பீர்//
இது அனைத்து கௌபாய் கதைகளுக்கு...
அப்ப நம்ம டெக்ஸ் & கோ வுக்கு...
//ஆதலினால் கை முஷ்டியை வளர்ப்பீர்//
:D
இன்றுதான் எனக்கு மர்ர்ச் இதழ்கள் வந்து கிடைத்தன. ஒரே வரியில் சொல்வதரயின் சூப்பர் ஸர்ர்.
ReplyDeleteThiruchelvam Prapananth : பரவாயில்லையே...ஏர்-மெயில் இந்தளவு துரிதமா ?!
Deleteவாவ்...சூப்பர் சார் ...அந்த இளவயது டெக்ஸ் கதையை ....அதுவும் கார்சன் ...டெக்ஸ் அதகள முதல் சந்திப்பை எத்தனை நாட்களாக ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தோம் .விரைவில் எங்கள் பார்வைக்கு அதுவும் இந்த வருடமே கொண்டு வாருங்கள் சார் .முடிந்தால் 250 வது இதழில் கூட அதில் இணைக்க பாருங்கள் .
ReplyDelete+1111
Deleteமிஸ்டர் லயன் காமிக்ஸ் ...மிஸ்டர் முத்து காமிக்ஸ் என வெளிநாட்டு படைப்பாளிகள் தங்களை அங்கே அழைக்கும் அந்த அழகு செய்தி இங்கே படிக்கும் எங்களுக்கு லயன் ..முத்துவா கொக்கா என கூவ சொல்லுகிறது .பாராட்டுக்கள் சார் ...
ReplyDeleteஅப்படியே தங்களின் அந்த புகைபடத்தில் ஆடையை மஞ்சள் நிறத்திலும் ...தலைக்கு நமது மாயாவி சிவா அவர்களின் தலை கவசத்தையும் அணிந்து இருந்தால் நீங்கள் டெக்ஸ் வில்லரா .....இல்லை டைகர் வில்லனா ச்சே டைகர் ரசிகரா என கண்டுபிடுத்து இருப்பேன் சார் . :)
ReplyDeleteParanitharan K : தலீவரே...சும்மாவே அவர் இங்கே அங்கே கிளிக் அடிப்பார் ; நீங்கள் வேறு கோர்த்து விட்டால் விட்டு வைப்பாரா ?
Deleteஇன்னமும் கூட காமிக்ஸ் புத்தகத்தை சிறு பிள்ளை சமாச்சாரமாக பார்க்கும் பலர் ஒரு பேனலுக்கு எத்தனை கடினமான உழைப்பு என்பதை அறிய நேர்ந்தால் தங்கள் எண்ணத்தை மாற்ற நேரலாம் என்றே நினைக்கிறேன் ...
ReplyDelete'தல' பற்றிய பதிவை அடுத்தடுத்து அதிரடியாய் எழுதிவரும் நம்ம 'தல'க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இதற்கு மேலும் டெக்ஸ் இன் அருமையை தெரியாததுபோலவே நடிக்கப்போறீங்களா பசங்களா?
ReplyDelete+111111
DeletePodiyan : ஒரு விதத்தில் இது 'தளபதி'க்கும் பெருமை சேர்க்கும் விஷயமே ; மாமூல் பாணியிலிருந்து விலகி டைகரின் பாணிக்குள் டெக்ஸ் நுழைந்து பார்க்கிறாரன்றோ ?
Delete17!!!
ReplyDeleteM.Vidya : அட..வருகைப் பதிவேட்டில் கை எழுத்திடுவதோடு நிறுத்திக் கொள்வானேன் ? Please do write too !
DeleteM.Vidya @ warm welcome!
Deleteஇந்த கதையினை இந்த ஆண்டே வெளியுடுங்கள் சார் !
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : :-)
Deleteதல காலை வணக்கம்.
ReplyDeleteடின் டின் மாதிரி காமிக்ஸ் நம் தமிழில் வந்த மாதிரி தெரியலையே நீங்கள் ஏன் முயற்சி செய்யகூடாது?
rajesh raman : முயற்சிகளுக்கு என்றுமே பஞ்சமிராது நண்பரே ; ஆனால் "டின் டின் வெளியிடும் அளவுக்கு வளர்ந்து கொள்ளுங்கள் முதலில் !" என்பதே படைப்பாளிகளின் அறிவுரை ! Still a long way to go...
Delete///Anyways, இந்த அட்டகாசத்தை நாம் தமிழில் ரசித்திடுவோமா folks ? இந்தாண்டின் அட்டவணையில் ஏதாச்சும் லேசாகப் பட்டி, டிங்கரிங் செய்தால், இந்தப் புது யுக டெக்சை சுடச் சுட நாமும் ரசித்துவிடலாம் !///
ReplyDeletebut, உங்க அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!
(1). இன்னும் சந்தா அறிவிக்கப்படாத கார்ட்டூன் ஸ்பெஷல், என் பெயர் டைகர் - இவற்றோடு இந்த அட்டகாசத்தையும் இணைத்திடலாம். இதுவே எனது விருப்பமும்கூட!
அல்லது...
(2). மாடஸ்டியின் 'மரணத்தின் முத்தம்' மற்றும் ஜில்ஜோர்டனின் 'துணைக்கு வந்த தொல்லை' - இவற்றில் ஏதாவதொன்றையோ அல்லது இரண்டையுமோ தூக்கிவிட்டு...
Erode VIJAY : //மாடஸ்டியின் 'மரணத்தின் முத்தம்' மற்றும் ஜில்ஜோர்டனின் 'துணைக்கு வந்த தொல்லை' - இவற்றில் ஏதாவதொன்றையோ அல்லது இரண்டையுமோ தூக்கிவிட்டு...//
DeleteNo chance....இரண்டு இதழ்களுமே கிட்டத்தட்ட பாதி தயாரென்ற நிலையில் உள்ளன !
//இன்னும் சந்தா அறிவிக்கப்படாத கார்ட்டூன் ஸ்பெஷல், என் பெயர் டைகர் - இவற்றோடு இந்த அட்டகாசத்தையும் இணைத்திடலாம்.//
ஆட்டுத் தாடி ஒன்று மட்டும் தான் பாக்கியிருக்கும் - "தாத்தா" கார்சனைப் போலவே நானும் எங்கேயாவது முதியோர் இல்லத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க !! அட்டவணையில் இதுக்கு மேல் additions இந்தாண்டில் செய்தால் அடியேன் அம்போ !
Happy sunday
ReplyDeleteDasu Bala : To you too & all our friends as well !
Delete///போசெல்லி தான் இப்போது டெக்ஸ் கதைகளின் பிதாமகர் ! "நேரம் இருந்தால் உங்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும் சார் !" என்று நான் கோரிக்கை வைக்க ///
ReplyDelete///அவர்களது பிசியான அட்டவணையை நாம் பாழ் செய்கிறோமோ ? என்ற மெல்லிய தயக்கம் எனக்குள் இருந்தது தான் ; ஆனால் அவர்களோ துளியும் முகல் சுளிக்காமல் என் ஒவ்வொரு கோரிக்கைக்கும் விலாவாரியாய் பதில் தந்து, மலையாய் புது இதழ்களைத் தந்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் சொல்லி, என்னை நெகிழச் செய்தனர் ! ///
முக்கியமான விசயத்தை அப்படியே மேம்போக்காகச் சொல்லிட்டு பதிவை முடிச்சுக்கிட்டீங்களே எடிட்டர் சார்!
* போசெல்லியை தனியே தள்ளிக்கிட்டுப்போய் அப்படி என்னதான் கோரிக்கை வைத்தீர்கள்?
* அப்படி என்னதான் விலாவாரியாக பதில் தந்துவிட்டார்கள்?
* நீங்கள் நெகிழும்படி அப்படி என்னதான் நடந்தது?
( மேற்கண்டவைகளுக்கான விடையை எடிட்டர் சொல்ல நேரிட்டால் நமக்கு ஒரு குதூகலமான செய்தி காத்திருக்கலாமில்லையா நண்பர்களே?)
Erode VIJAY : பெ..பெ...பெப்பே.பெப்பே..!
Deleteஒன்றுமில்லை - பெ.பெ. (பெவிகால் பெரியசாமி ) காலை வணக்கம் சொல்லி வைக்கிறார் !
ஹம்ம்ம்... வேறு வழியில்லை. கிசுகிசுவை அவிழ்த்துவிடவேண்டியதுதான்!
DeleteCaption
ReplyDeleteகாலையில் ஒரு கனல்
பாசக்கனல்
sai vignesh : :-)
Deleteநேசமாய் ஒரு நெருப்பு
ReplyDeleteஅட இது நல்லார்கே
Deleteவிஜயன் சார், இந்தக்கதையில் முதல் இரண்டு பாகம்களை படித்துவிட்டேன், மூன்றாம் பாகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை, படித்தப்பின் கதை பற்றிய எனது கருத்தை சொல்கிறேன்.
ReplyDeleteஇதற்கு இடையின் எனது மனதில் ஓடிய விஷயத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சர்பம்களின் சாபம் – கதையின் முதல் பக்கத்தில் மூன்றாவது படத்தில் ஹங்-மேன் இறந்து கிடக்கிறார், கழுத்தில் பவள நாகம் கடித்துக்கொண்டு உள்ளது, அதன் உடம்பின் மறுபகுதி வெட்டப்பட்டு ஹங்மேனின் ஒருகையில் உள்ளது, மறுகையில் ஒரு கத்தி உள்ளது; இதனை பார்க்கும் போது ஹங்மேனின் தனது கழுத்தை கடித்த நாகத்தை இரண்டாக வெட்டிவிட்டதாக தோன்றுகிறது, இருந்த போதும் கழுத்தை கடித்த அந்த நாகத்தின் தலை பகுதி அவன் கழுத்தை இன்னும் விட வில்லை.
இந்த காட்சிக்கு எழுதியுள்ள வசனம் தான் குழப்புகிறது.
“மரணதேவனின் வளவளப்பான பூலோகப் பிரதிநிதி கொடுரமான தனது விஷப்பற்களை இறையின் கழுத்தில் பதித்த அதே கணத்தில் அதனை நசுக்கிக் கொல்ல முயற்சித்திருக்கிறான் ஹங்மேன்! அவனது ஜீவன் பிரிந்திருப்பினும், அவன் கைக்குள் அகப்பட்டிருந்த சர்ப்பம் துவம்ஸமான நிலையில் துடித்துதுக் கொண்டிருந்தது....”
இந்த இடத்தில், “நசுக்கி” என்பதை விட வெட்டி கொல்ல முயற்சித்திருக்கிறான் என சொல்வது இன்னும் சரியாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
கத்தியை வைத்து நசுக்கினால் வெட்டுப்பட்டுவிடுமல்லவா பரணி அவர்களே? :D
Deleteஉங்க அளவு தமிழ் புலமை எனக்கு கிடையாது என்பதால் இந்த கேள்வி விஜய்!
DeleteParani from Bangalore : வீட்டில் பௌன்சரில்லை ; so பதில் reserved for tomorrow !
Deleteபரணி...பொதுவாக உடனடி மரணம் என்பது தலையை துண்டிக்கும் போதுமட்டுமே! இதயத்திற்கு கீழ் வெட்டபட்டபடும் நிலையில் உயிர் பிரிய சில நிமிடங்கள் ஆகும்.விலங்குகளுக்கு தான் இப்படி... தலை வெட்டப்பட்ட பாம்பின் உடல் துடிப்பு நிற்கவே சிலநிமிடங்கள் ஆகும்.
Deleteவெறியுட்டப்பட்ட பாம்பின் பிடியே பயங்கரமாக இருக்கும்...இதில் பாதி வெட்டப்பட்ட பாம்பின் பிடி உண்மையான 'மரணப்பிடி'..! மரணத்தின் பிடியில் இருப்பவன்,வெட்டியும் உயிர் பிரியாத பாம்பை கைகளால் நசுக்குவது சரியான விளைவே..!
mayavi. siva & Erode VIJAY@ நல்லா விளக்கம் கொடுக்கிறிங்கபா... உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட வேண்டி இருக்கு!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார், நிறைய செய்திகளுடன் ஒரு நல்ல பதிவு! காமிக்ஸ் என்பது ஒரு தனி கடல் என்பதை உணர்த்தும் ஒரு பதிவு! இவைகளை நேரில் ரசிக்க முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவின் மூலம் எங்களை ரசிக்க செய்ததற்கு நன்றி.
ReplyDeleteமார்ச் மாதம் முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளன; ஏப்ரலில் மின்னும் மரணம் வெளி ஈடு என்றால் இப்போதே அதன் தேதியை அறிவித்தால் நன்றாக இருக்கும்! இது பற்றி தற்போது கூற முடியுமா?
Parani from Bangalore :
Deleteஇந்தாண்டின் துவக்கம் முதலே நமது DTP டீமில் ஏகப்பட்ட மாற்றங்கள் ! ரெகுலராய் / மின்னல் வேகத்தில் பணி செய்து வந்த அருணா தேவி தாய்மைக்குத் தயாராகி வரும் நிலையில் டாக்டரின் ஆலோசனைப்படி முழுமையான ஓய்வுக்குள் புகுந்து விட்டார் ! நம்மிடம் பணியாற்றிய டிசைனர் ரமேஷ் வெளியூர் வேலைக்கு one fine morning சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார் ; இன்னொரு பெண் பணியாளரோ திருமண ஏற்பாட்டின் பொருட்டு வேலையிலிருந்து நின்று கொண்டார் ! So ஒரே சமயத்தில் அச்சாணிகளை இழந்தது போன்றதொரு நிலையில் சத்தம் காட்டாமல் சமாளிக்க அந்தர் பல்டிகள் ஓராயிரம் அடித்து வந்துள்ளோம் !
"மின்னும் மரணம்" வராது...பூட்ட கேஸ் தான் ! ' என ஜாலியாய் ஆரூடங்களை அவிழ்த்து விட்டு வந்த நண்பர்களுக்கு இது அவல் தந்தது போலாகி விடுமே என்பதால் சிக்கல்களைப் பற்றி நான் அப்போதே வாய் திறக்கவில்லை !
முட்டி மோதி, என்னென்னவோ 'டகாட்டி' வேலைகளையெல்லாம் செய்து ; யார் யார் கை-கால்களை எல்லாமோ பிடித்து பணிகளை ஒரு வழியாய் ஒரு வாரத்துக்கு முன்பு தான் முழுமையாக முடித்துள்ளோம் ! "தளபதி'யின் mega கதைக்கு அவசியமான சிற்சிறு எடிட்டிங் வேலைகளும் ஒரு வாரமாய் நெட்டியைக் கழற்றி வருகிறது ! நேரமாகி விட்டால் கூட - நமது ஒரிஜினல் இதழ்களில் நம்மையும் அறியாது புகுந்திருந்த பிழைகளை / மொழிபெயர்ப்புத் தவறுகளை சரி செய்யாது களமிறங்க எனக்கு மனதில்லை ! So அதனையும் செய்து விட்ட திருப்தியோடு தற்சமயம் அச்சுக்குச் செல்லத் தயாராகி நிற்கிறோம்.
இங்கும் கூட முன்பைப் போல் இல்லாது - நான் முழு நேரக் கவனம் செலுத்துவதென்பது திட்டவட்டமான தீர்மானம் என்பதால் எனது மற்ற பணிகளையும் ; அச்சு வேலைகளையும் ஒன்றுக்கொன்று இடைஞ்சலின்றி synchronize செய்திடத் தேவையாகிறது ! So ஒரு தேதியை முன்வைத்துக் கொண்டு அதற்குள்ளாக அவசர கதியில் தயாரிக்கும் இதழாய் "மின்னும் மரணம்" இருந்திட வேண்டாமே என்று நினைத்தேன் !
அதற்காக இதழ் தாமதம் ஆகிடும் என நான் சொல்ல வரவில்லை ; ஏப்ரல் 19 (ஞாயிறு) என்பதே இப்போதைக்கு நானாக நிர்ணயம் செய்துள்ள வெளியீட்டுத் தேதி ! But குறைந்த பட்சம் 10 நாட்கள் பிடிக்கப் போகும் அச்சுப் பணிகளை அரக்கப் பறக்கச் செய்து - இது போன்றதொரு one in a lifetime இதழை சொதப்பிடக் கூடாதே என்பது தான் எனக்கு இன்றைய priority !!
அச்சுப் பணிகளை 75% முடித்துக் கொள்ளும் தருணத்தில் உறுதிபட சொல்லிடுகிரேனே - ப்ளீஸ் ! இப்போதைக்கு ஏப்ரல் 19-ஐ உங்கள் காலேண்டர்களில் குறித்துக் கொள்ளுங்களேன் !
//இப்போதைக்கு ஏப்ரல் 19-ஐ உங்கள் காலேண்டர்களில் குறித்துக் கொள்ளுங்களேன் !//
Deleteசூப்பர் சார்!!! 'உய்ய்ய்ய்ய்ய்ய் உய்ய்ய்ய்ய்ய்ய்' :):):)
கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம் இன்னும் பிற நண்பர்களின் கவனத்திற்கு........
அப்படின்னா சத்யா சார் நீங்க எல்லோருக்கும் பிளைட் டிக்கட் ரெடி பண்ணீட்டீங்களா
Delete@Jaya Sekhar:
Deleteஎன்னது ஃப்ளைட்டாஆஆஆஆஆ....ஆஹா கிளம்பிட்டாங்கய்யா....கிளம்பிட்டாங்கய்யா....:D
Captions;
ReplyDelete1. கதிரவன் கைவிடும் நேரம் ...
துணிவை துணைக்கு அழைத்திடும் தருணம் ...
2. வெண்நிலவை வரவேற்கலாம்...
வெட்டவெளியில் படுத்துறங்லாம்...
And a funny one
1. நாய்க்கும் உண்டு கறி..... இல்லையென்றால் பிடித்துவிடும் வெறி
SIV : ஒவ்வொரு தலைப்பையும் ஒவ்வொரு கதைக்குச் சுட்டுக் கொண்டால் சூப்பராகத் தானிருக்கும் !!
DeleteDear விஜயன் சார்,நீங்களும் மஞ்ச சட்டையில், துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்தால்,இன்னொரு மஞ்ச சட்டை மாவீரன் போல தெரிவது என் கண்களுக்கு மட்டும்தானா?:-),, டெக்ஸின் இந்த கதையை, லயன் 250ல், முகமில்லா மரணதூதன் கதையை காவுகொடுத்துவிட்டு வெளியிட முயற்சி செய்யலாமே சார்.,நாம் சில வினாடிகளில் கடந்து செல்லும் ஒரு பிரேம் சித்திரத்திற்கான படைப்பாளிகளின் மெனக்கெடல் மலைக்க வைக்கிறது.,நான் எப்போதும் காமிக்ஸ் படிக்கும்போது, வசன பலூனிலுள்ள வசனத்தை படித்துவிட்டுதான் சித்திரத்தை கவனிப்பேன்.,பட்,காமிக் நண்பரொருவர், சித்திரத்தை வெறிக்க வெறிக்க பார்த்து மனதில் சித்திரத்தை பதியவைத்துவிட்டுதான் வசனத்தை படிப்பார்,அதுதான் காமிக்ஸ் படிப்பதற்கான வழிமுறையென அடம்பிடிப்பார்.நண்பர்கள் எப்படி காமிக்ஸ் படி(பார்)கள் என அறிந்து கொள்ள அவா;-)
ReplyDeleteநான் ஒவ்வொரு ஃப்ரேமிலும் முதலில் சித்திரங்களைப் பட்டும்-படாமலும் ரசித்துவிட்டு, வசனங்களைப் படித்தபிறகு மீண்டும் ஒருமுறை நன்றாக சித்திரங்களைக் கவனிப்பேன்.
Deleteமுன்பைவிட இப்போது சித்திரங்களை ரசிப்பதற்கு சற்று அதிக நேரம் செலவிடுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் - 'ஓவியப் பார்வை' புகழ் ராஜ் முத்துக் குமார். (நன்றி நண்பரே!)
Dr.Sundar,Salem : //டெக்ஸின் இந்த கதையை, லயன் 250ல், முகமில்லா மரணதூதன் கதையை காவுகொடுத்துவிட்டு வெளியிட முயற்சி செய்யலாமே//
DeleteNopes - இரண்டுமே முற்றிலும் வெவ்வேறு அளவுகளிலான / நீளங்களிலான கதைகள் ; so அந்த உல்டா சாத்தியமாகாது ! தவிர, "முகமற்ற மரண தூதன்" அட்டகாசமானதொரு அதிர்வெடி சாகசம் என்பதால் அந்த இதழில் அதுவுமொரு highlight !
//நண்பர்கள் எப்படி காமிக்ஸ் படி(பார்)கள் என அறிந்து கொள்ள அவா;-)//
சுவாரஸ்யமானதொரு சிந்தனை ! உங்கள் ஸ்டைல் என்னவென்று சொல்லுங்களேன் நண்பர்களே..?
நான் கதை மட்டும் படிப்பேன் ....ஏதேனும் ஈர்க்கும் சித்திரங்கள் கண்ணில் படும்...இராத்த படலம் ஆறாம் பாகம் முதல் நண்பர் சுஸ்கி விஸ்கி அருளால் சித்திரங்களை ரசிக்க கற்று கொண்டேன் ..ஓவியப் பார்வை' புகழ் ராஜ் முத்துக் குமார் என்னை மேலும் ரசிக்க வைத்தார் !
Deleteஅடிக்கடி ரீ பிரிண்ட் கேக்குறவங்கள சும்மா டுப்பு டுப்புனு சுட்டு தள்ளிடுங்கன்னு ஒரு துப்பாக்கிய நம்ம எடிகிட்ட குடுத்துவுட்டுருக்காங்களாம்பா... :-)
ReplyDeletePodiyan : பார்க்க பொம்மைத் துப்பாக்கி போலிருந்தாலும் நல்ல கனம் ; அதுமட்டுமன்றி அசல் வின்செஸ்டர் போலவே நுணக்கமான அமைப்புகள் ! ஆனாக்கா ஊசிப் பட்டாசு வெடிப்பதற்கே அனுமதி வாங்க வேண்டியதொரு தேசமது என்பதால் ரோல் கேப் கூடக் கிடையாது ! :-)
Deleteவந்துட்டேன்,காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.
ReplyDeleteபோராட்டகுழு தலைவரின் உத்தரவின் கீழ்..!
ReplyDeleteகாமிக்ஸ் உலகின் தனிசுற்றுக்கு மட்டும்....இங்கே'கிளிக்'
ஹாஹாஹா! அட்டகாசம், மாயாவி அவர்களே!
Deleteமாயாவி ஜி சூப்பரோ சூப்பர்.
Deletemayavi. siva : காற்றாடும் மண்டைக்கு அந்தத் தொப்பி ஒ.கே. தான் ; மற்றபடிக்கு மஞ்சள் சொக்காய் போட்டுக் கொண்டு எங்க ஊரில் திரிந்தால் 'மோச்சோக்கள்' ஒரு வழி பண்ணிவிடும் !
Deleteமீண்டும் தலை பதிவு. சந்தோச வணக்கம் சார்.
ReplyDelete
ReplyDeleteCaption போட்டினுதான் சொன்னாங்க... ஆனாலும் நான் அந்த நாய்க்கு மைண்டுவாய்ஸ் தான் கொடுத்திருக்கேன். பிடிச்சா பாருங்க; இல்லன்னா ஃப்ரண்ட்ஸா இருப்போம்... ;)
இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!
Erode VIJAY : அந்த நாய் கூட நிஜமாகவே மனதில் எதையோ வைத்துக் கொண்டிருப்பது போலத் தான் போஸ் கொடுக்குது !!
Delete@Erode VIJAY:
Delete'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'.... சூப்பர் :)
// வெறும் மொழிமாற்றம் மட்டுமே செய்து விட்டு அலப்பரை செய்யும் நாம் எங்கே ? முழுக்க முழுக்க creative அற்புதங்கள் நிகழ்த்தும் இவர்கள் எங்கே ? //
ReplyDeleteஎடி சார், அவர்கள் காமிக்ஸ் க்கு தரும் உழைப்பு உண்மையிலேயே அபாரமானது.வரவுகளையும் தாண்டி காமிக்ஸ் மீதான அடர்ந்த நேசம் அவர்களை வழிநடத்தும் என்று நினைக்கிறேன்.
அவர்களின் இந்த உழைப்புக்கு நாம் அணில் அளவு பங்காவது டெக்ஸ்சின் புகழ் வளர்க்க உதவி இருப்போம் அல்லவா ?
//அவர்களின் இந்த உழைப்புக்கு நாம் அணில் அளவு பங்காவது டெக்ஸ்சின் புகழ் வளர்க்க உதவி இருப்போம் அல்லவா ? //
Deleteச்சும்மா நச்சுனு கேட்டீங்க ரவி அவர்களே!
Arivarasu @ Ravi : சிறு துளிகளாய் பூமியை நனைக்கும் மழைத் துளிகள் தானே ஆர்ப்பரிக்கும் அருவிகளாகவும் மாற்றம் காண்கின்றன ? அந்த மழைத் துளிகளாய் இருப்பதும் கூடப் பெருமிதமே நமக்கு !
Delete//சிறு துளிகளாய் பூமியை நனைக்கும் மழைத் துளிகள் தானே ஆர்ப்பரிக்கும் அருவிகளாகவும் மாற்றம் காண்கின்றன ? அந்த மழைத் துளிகளாய் இருப்பதும் கூடப் பெருமிதமே நமக்கு !///
DeleteCho cute!
சார் அதனால் இந்த துளியை அடுத்த மாதம் சிதற விடலாமே எங்கள் மேல் !
Delete// கீழ் தளத்தில் இருந்த திரு. போசெல்லியின் அலுவலகத்திற்கு என்னை கூட்டிப் போய்க் காட்டிய போது, 'நம்ம தலையின்' தாய் வீட்டை கண்குளிர ரசித்தேன். //
ReplyDeleteவாவ் சூப்பர் சார், காமிக்ஸ் காதலருக்கு இதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்.
காமிக்ஸ் க்கான அனைவரின் அசுர உழைப்பை பார்க்கும் போது,நான் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Arivarasu @ Ravi : "இன்னமுமா இந்த பொம்மை புத்தகங்களை படிக்கிறே ?" என்று யாரேனும் அடுத்த முறை கேட்கும் பட்சத்தில் அவர்கட்கு நம் அனுதாபங்களைத் தருவோம் - இப்படியொரு கலையை ரசிக்கும் கொடுப்பினை அவர்கட்கு இல்லையே என்று !
Delete//இப்படியொரு கலையை ரசிக்கும் கொடுப்பினை அவர்கட்கு இல்லையே என்று !//
Delete+infinity likes :):):):):)
சார் அருமை !
ReplyDeleteடைகருக்கு ஒரு கதை !எப்படி தொட்ர்ந்ஹு குழுவில் இடம் பிடிக்கிறார் ! தனி பட்ட முறயில் அவர் புகழ் பாடட்டும் !
கார்சனின் கடந்த காலம் படித்ததும் அனைவர் மனதில் இருந்த கேள்வி பதிலாய் புதிய இதழாய் ! ஆஹா !
அடுத்த இதழில் டைகருக்கு போட்டியா புத்தக விழாவில் இதும் வந்து போகட்டுமே சார் !
பெரிய சைஸ் என்பதால் 250ல் இணைக்க முடியாதே !
சார் துப்பாக்கி சரி ஆனா மஞ்ச சட்ட missing
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அட..சமீபமாய் நீங்களே மிஸ்ஸிங் தானே நண்பரே !
Deleteசார் வாரம் தோறும் வருவேன் பதிவை படிக்கிறேன் ...இந்த மாத இதழ்களை படிக்கவில்லை ...படித்ததும் பின்னூட்டம் இடுவோம் என நினைஹ்தேன் .....ஆனால் தல ...
Deleteவிஜயன் சார், நம்ப ஸ்டீல் என்ன சொல்ல வரார்னா அவரு இப்ப எல்லாம் ரொம்ப பிஸியாம். அத எப்படி நசுக்கா சொல்லிட்டு போறார்னு பாருங்க!
Deleteஅனல் பறக்கும் ஒரு இளமை தொடர்! பார்க்க....இங்கே'கிளிக்'
ReplyDeleteகண்மூடித் திறக்கையிலும் கலை என்ன கலையே...
Deleteமாயாவியின் திறமைக்கு விலை இந்த உலகே...
+10000 :)
Deleteமாயாவி ஜி அசத்துங்க.
DeleteFunny caption here
ReplyDelete1. நாளையும் புலரும்! நம் காமிக்ஸ் பயணமும் தொடரும்!
Caption:
ReplyDelete'நானோ கண் பார்க்க, அவனோ மண் பார்க்கிறான்...'
சரி விடுங்க திண்ணட்டும்
Deleteசார் டெக்ஸ் இந்தியா வந்து ஒரு சாகசம் செய்யட்டுமே !
ReplyDeleteட்ராகன் நகரம் பார்ட் 2 அதே நண்பர்களுடன் !
Deleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : அப்டியே ரெண்டு பாட்டு சீன் ? இந்தியா வரைக்கும் வந்து விட்டு மரத்தைச் சுற்றி பாட்டுப் படிக்காமல் போனால் எப்படி ?
Deleteநிச்சயமாய் கார்சன் அந்த வேலையை ஜாலியாய் செய்வாரென்பது உறுதி !
ஒரு நாயின் சபதம்:
ReplyDelete"யாரையும் கடிக்கறதில்லேன்னு எங்க மம்மிக்கு செஞ்சுகுடுத்த சத்தியத்தைக் கேன்சல் பண்ணிடலாம்னு இருக்கேன் பாஸ்! பின்னே? நீங்க கஷ்டப்பட்டு தயாரிச்ச இந்த வறுத்த கறியை சாப்பிடச்சொல்லி எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் துளிகூட வாயில் வைக்காம இந்தியாவுக்கு கிளம்பிப்போய்ட்டார் அந்த காமிக்ஸ் எடிட்டர். அடுத்த தபா வரட்டும்; கால் கிலோ தொடைக் கறியையாவது கவ்வாம விடமாட்டேன்!"
இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
///Anyways, இந்த அட்டகாசத்தை நாம் தமிழில் ரசித்திடுவோமா folks ? இந்தாண்டின் அட்டவணையில் ஏதாச்சும் லேசாகப் பட்டி, டிங்கரிங் செய்தால், இந்தப் புது யுக டெக்சை சுடச் சுட நாமும் ரசித்துவிடலாம் !///
ReplyDeleteஎன்னத்த லேசா 'பட்டி டிங்கரிங்', அது இதுன்னுக்கிட்டு இருக்கவே இருக்கு 'தீபாவளி மலர்' அதுல போட்டு ஜமாய்த்துட வேண்டியது தானேங்கிறேன்....
Sathiya : :-)
DeleteCaption:
ReplyDelete" வறுத்த கறி இங்கிருக்க...
வெள்ளி முடியார் அங்கிருக்க...
புல்லு மேயும் கன்னுக்குட்டியே...
நீ போய் தூது சொல்ல மாட்டாயோ... "
இது கவிதைன்னா நானும் கவிஞன் தான் ! ஹை !!
Delete@விஜயன் சார்:
ReplyDeleteகையில் துப்பாக்கியுடன் அதுவும் மேல் picture ல் உள்ள 'தல' டெக்ஸ் வில்லர் மாதிரியே நீங்கள் நிற்பது செம அழகு....
ஹும்ம்ம்ம்ம்...நமக்கு இதற்கெல்லாம் கொடுத்து வைக்கைலேயேன்னு கொஞ்சம் feelings ஆகவும் இருக்கு...
ஹி..ஹி...அடுத்த தபா இந்த மாதிரி பயணம் போகும்போது அடியேனையும் உங்களின் 'அஸிஸ்டென்ட்'டாக கூட்டிப் போனால் இன்னும் நன்றாக இருக்குமே சார் :D
அன்புத் தம்பி சத்யா,
DeleteQ please! ;)
@Vijay Anna:
Deleteசரி சரி விடுங்க... அப்ப நான் உங்களுக்கு 'அஸிஸ்டென்ட்டா' சேர்ந்துக்கிறேங்க்கிறேன் :):)
Caption :
ReplyDeleteஎசமானர் குளிர் காய்கிறார்...
எனக்கோ வயிறு காய்கிறது!
//..இந்த அட்டகாசத்தை நாம் தமிழில் ரசித்திடுவோமா folks ? இந்தாண்டின் அட்டவணையில் ஏதாச்சும் லேசாகப் பட்டி, டிங்கரிங் செய்தால், இந்தப் புது யுக டெக்சை சுடச் சுட நாமும் ரசித்துவிடலாம் ! Thoughts on this please ? ..//
ReplyDeleteWow... Serpieri in தமிழ் ... அதுவும் தல கதையுடன் ... கண்டிப்பாக இந்த வருடமே வேண்டும் ... வருடத்தின் முன்பாதி போனாப்போகுது .. பின்பாதிக்கு, தீபாவளி ஸ்பெஷல் ரெடி ! முக்கியமாக இப்புத்தகத்தை original அளவிலேயே வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!
" வின்செஸ்டர் விஜயன் "சார்- ஒரு காலாண்டு முடிந்தே போனது ஆனாலும் ஒரு தலை கதைய கூட இதுவரை கண்ணில் காட்டாததன் இரகசியம் என்னவோ சார்? . என்னுடய கேள்வியும் அதுதான் சார- டெக்ஸ் இந்தியாவில் சாகசம் செய்யும் வாய்ப்பு உள்ளதா?. நீங்களே எங்களுக்கு சிபாரிசு செய்யும் கதை எது வோ?.
ReplyDeleteஒரு நாயின் ஐடியா:
ReplyDelete"மூட்டிய அடுப்பை அப்படியே தள்ளிக்கிட்டுப்போய் அந்த மாட்டுக்கு அடியிலே வச்சிட்டோம்னா வேலை முடிஞ்சது பாஸ்"
//So ஒரு தேதியை முன்வைத்துக் கொண்டு அதற்குள்ளாக அவசர கதியில் தயாரிக்கும் இதழாய் "மின்னும் மரணம்" இருந்திட வேண்டாமே என்று நினைத்தேன் !//
ReplyDeleteகண்டிப்பாக சார்,தாமதமானாலும் இதழ் சிறப்பாக முழுமையான தரத்துடன் வெளியிட வேண்டும்.அதேபோல் சில மாதங்களுக்கு முன் நீங்கள் லயன் குழும விவாதத்தில் குறிப்பிட்டபடி.....
//Karthik Somalinga : மின்னும் மரணம்: ஹார்ட் கவர், தொடர் பற்றிய பின்னணித் தகவல்கள், ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும் முன்னரும் அதன் ஒரிஜினல் அட்டைப் படம் தாங்கிய பக்கம் - இவற்றுடன் வரும் என நம்புகிறேன்.//
எடிட்டரின் பதில்
தைரியமாய் நம்பலாம் ...எல்லாமே திட்டமிடலில் உள்ளன ! ‘//
இவ்வாறு மறக்க இயலா இதழாக மலரும் என்று விரும்புகிறேன்.நன்றி சார்!
105th
ReplyDelete//சுவாரஸ்யமானதொரு சிந்தனை ! உங்கள் ஸ்டைல் என்னவென்று சொல்லுங்களேன் நண்பர்களே..? //
ReplyDeleteநான் முதலில் சித்திரங்கள் மீது லேசான கவனத்தையும், வசனம் மற்றும் கதையின் மீது முழுக் கவனம் வைத்து முதல் தடவை படிபேன்...
இரண்டாவது தடவைப் படிக்கும்போது கதை என்னவென்று தெரியுமென்பதால் சித்திரங்களை frame by frame ஆக கூர்ந்து கவனிப்பேன்...
இரண்டாவது தடவை புக் படிக்க நேரமில்லை என்றாலும் at least சித்திரங்களை மட்டுமாவுது frame by frame ஆக கவனித்து ரசிப்பேன்...
ஏனென்றால் சில இடங்களில் சித்திரங்களே கதை சொல்லும் பாணி அவ்வளவு அழகாக இருக்கும்...உதாரணமாக 'பௌன்சர்' மற்றும் 'கிராஃபிக் நாவல்கள்' etc. இந்த ரகத்தில் சேர்த்தியவைகள்...
சூப்பர் பாஸ்!
ReplyDeleteதல தலதான் !
ஒரிஜினல் ஒரிஜினல் தான்!
ஒரு வேளை அங்க போன அவங்க நெட்'ல 'சுட்ட' போட்டோவை எல்லாம் மாட்டி வச்சுருபாங்கலோ என்னோமோ! :)
சார் முடிந்தால் நம்ம "ஒரு நாயகன்...ஒரு சகாப்தம்" ஏப்ரல் அல்லது மே'ல ரசித்திட முடியுமா ?
இல்ல வேணாம் பாஸ்!
நம்ம ரிலீஸ்'அ நாமளே 'ப்ளாப்' ஆக்க வேணாம்!
(அதன்பா அந்த "மிண்ணும் மரணம்" :) )
சரி முடிந்தால் நம்ம ஈரோடு ரிலீஸ் லிஸ்ட்'ல "ஒரு நாயகன்...ஒரு சகாப்தம்" சேர்த்து விட்ருங்க !
ஒரு புக்கை மேலோட்டமாக புரட்டும்போதே தெரிந்துவிடும் அதில் வசனம் அதிகமா இல்லை வசனங்கள் கம்மியா என்று...
ReplyDeleteso அந்த புக்கைப் படிக்க ஆரம்பிகும்போதே, வசனங்கள் மீதா இல்லை சித்திரங்கள் மீதா அதிகக் கவனம் வைப்பது என்று 'mind set' ஆகி விடும்...
அனைவருக்கும் வணக்கம். தலைவரே பட்டி டிங்கரிங் பார்ப்பதை விட பைது புது இதழாகவே அறிவித்து விடலாமே
ReplyDeleteநாய்:
ReplyDeleteநானும் வறுக்க வேண்டாம்! அப்படியே சாப்பிடலமுனு சொன்னா கேக்க மாட்டான்னு சொல்றானே !
டாய்...
டாய்....
சொன்ன கேளு...
வறுக்கரனு சொல்லி கறிய கருகிக்கிட்டு இருக்கியே தீஞ்ச மண்டையா !
விஜயன் சார், அடுத்த மாதம் வர உள்ள புத்தகம்கள் எவை என சொல்ல முடியுமா!
ReplyDeleteஇந்த வருடத்தின் முதல் மூன்று மாதம் ஓடிபோய் விட்டது... இன்னும் டெக்ஸ் வரவில்லை. போற போக்க பார்த்தால் இந்த வருடத்தின் இரண்டாம் பகுதி டெக்ஸ்க்கும் முதல் பகுதி டைகர்ருக்கும் போல தெரிகிறது!
நாயின் மைண்டு வாய்ஸ்:
ReplyDelete" நீ மொத்தக் கறியையும் சத்தமில்லாம விழுங்கி ஏப்பம் விட்டுவேன்னு தெரியும்யா... ஆனாலும் காலைலேர்ந்து நான் ஏன் நாய் மாதிரி காத்திட்டிருக்கேன் தெரியுமா ... நீ மெல்ல முடியாம சப்பிட்டு கடைசியா வீசியெறிவியே, அந்த ஒத்தை எலும்புக்காகத்தான்யா... ஒத்தை எலும்புக்காகத்தான்! "
Funny caption 2:
ReplyDeleteநெருப்பைக் கிளறுவதால் எதிர்பார்க்கும் மறுபதிப்புகள் வரப்போவதில்லை. ஆசிரியரின் மனதைக்கிளறினால் மட்டுமே....
நெருப்பைக் கிளறுவதால் எதிர்பார்க்கும் மறுபதிப்புகள் வரப்போவதில்லை. ஆசிரியரின் மனதைக்கிளறினால் மட்டுமே....😃
Delete@Editor Sir: உங்களிடம் ஒரு கோரிக்கை...
ReplyDeleteதற்போது வெளியிடும் இதழ்களில், 'ஹாட் லயன் (லயன்)' மற்றும் 'காமிக்ஸ் டைம் (முத்து)' இல்லாமல் வெளிவருவது மிகவும் நெருடல் ஆக உள்ளது சார்...At least ஒரு அரைப்பக்க அளவுக்காவுது வெளியிடுங்கள்...
அதுலையும் 'மின்னும் மரணம்' போன்ற 'மைல்கல்' இதழ்களுக்கு இது போன்ற சங்கதிகள் இல்லாமல் வெளியிடலாம் என்று நீங்கள் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது...
அதுவும் 'ஹாட் லயனோ' 'காமிக்ஸ் டைம்' மோ இல்லாத போது,உனக்குத் தேவை 'கதை தானே இந்தா புடுச்சுக்கோ' என்று நீங்கள் கொடுப்பது போல் உள்ளது...
ஏனோ சிறுவயது முதலே, முதல் பக்கத்தில் 'ஹாட் லயன்','இன்னார் தோன்றும் இந்த கதை என்று கதையின் பெயர்', கடைசிப் பக்கத்தில் அடுத்த வெளியீடுகளின் விளம்பரங்கள் என்று பார்த்துவிட்டு...இப்பொழுது இதில் ஒன்று கூட இல்லாமல் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை வெறும் கதையை மட்டுமே பார்ப்பதற்கு ஏதோ போல் உள்ளது சார்...
உங்களின் பணிச்சுமையில் எல்லாப் புத்தகத்திற்கும் எல்லாப் பகுதியையும் கொண்டு வர முடியாதது தான்...ஆனால் முன் அட்டையை புரட்டியவுடன் திடுமென வந்து நிற்கும் கதையைப் பார்க்கும்பொது தான் என்னவோ போல் உள்ளது...அதுவும் சில கதைகளில் முதல் ஃப்ரேமில் கதையின் பெயர் கூட போடாமல் கதைக்குள் செல்வது இனி வேண்டாமே ப்ளீஸ்...
+100000
Deleteஅழகாச் சொன்ணீங்க சத்யா!
உங்களுக்கு ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை...சீரியஸாகவே 'ஹாட் லயன்' போன்ற்வகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்...
Deleteஇன்று ஏற்கனவே நிறைய கமென்ட்ஸ் போட்டாகி விட்ட மாதிரி ஒரு feeling....
ReplyDeleteஇருந்தாலும் பரவயில்லை...லன்ச் முடித்துவிட்டு வந்து 'Funny Captions' மொக்கைகளை ஆரம்பிக்கிறேன்....
இத்தனை நேரம் இந்த அண்ணன் பல மொக்கைகளை அள்ளித் தெளிச்சாச்சு... இனி அன்புத் தம்பியின் முறை! அண்ணன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்.. ;)
Delete:-):-):-)
Delete//இத்தனை நேரம் இந்த அண்ணன் பல மொக்கைகளை அள்ளித் தெளிச்சாச்சு//
Deleteஅதை மொக்கைகள் ன்னா சொல்றீங்க...நான் அதையெல்லாம் 'கவிதைகள்' ன்னு தானே நினைச்சுட்டு இருந்தேன்...:D
அப்புறம் விஜய் அண்ணா, அந்த 'டெக்ஸ்' புத்தகம் பரிசாக் கிடைச்சா எனக்கும் படிகக் குடுப்பீங்க தானே...
//அதை மொக்கைகள் ன்னா சொல்றீங்க...நான் அதையெல்லாம் 'கவிதைகள்' ன்னு தானே நினைச்சுட்டு இருந்தேன்///
Deleteஅந்தக் கண்றாவிகளையெல்லாம் நீங்க 'கவிதைகள்'னு சொன்னா அப்ப வைரமுத்து எழுதுறாரே அதை 'மொக்கைகள்'னு சொல்லுவீங்களா தம்பி? ;)
ஹல்லோ, இதுவரை நீங்கள் இருவரும் போட்டது மொக்கை கிடையாதா... இது போக சாப்பிட்டு வந்து வேற மொக்கை போட போறிங்களா :-) நான் எஸ்கேப் சாமி!!
Delete@Erode Vijay Anna:
Deleteஆனாலும் இதுக்குப் போய் 'ஈரோடு விஜய்' மாதிரி ஒரு மிகப்பெரிய கவிஞர் கூட அந்த 'வைரமுத்து' வ நீங்க compare பண்ணியிருக்கக்கூடாது...
யாருங்க அது 'வைரமுத்துவா யேசுதாசா?" :)
அப்புறம், அந்த 'டெக்ஸ்' புத்தகம் பரிசாக் கிடைச்சா எனக்கும் படிகக் கொடுப்பீங்க தானே...அந்த வைரமுத்து கொடுப்பாரா என்ன...
@Parani from Bangalore:
Deleteநீங்க வாங்க...'மின்னும் மரணம்' வெளியீட்டுக்கு வருவீங்க தானே...அங்கே கவனிச்சிக்கிறேன் உங்களை... :D
Sathiya @ இதையே தாங்க மிடியல... இதுல சென்னைல நேர்ல வேற கவனிக்க போறிங்களா... அப்ப சென்னை விசிட்டுக்கும் எஸ்கேப் :-) எப்படி!
Delete@Parani from Bangalore:
Deleteஅப்ப வேற வழியே இல்லை...டிக்கட்டை B'lore க்கு போட்ற வேண்டியது தான்.....:)
அடபாவிகளா.. விடாது கருப்பு மாதிரி விடாது மொக்கை போல :-)
DeleteFunny caption 3:
ReplyDeleteகறியை வறுப்பதற்காக எஜமானர் புதையல் வரைபடத்தை எரித்து விட்டாரே! ஹும். என் வயிற்றுத்தீ அணைந்தால் சரி!
Caption : 2
ReplyDelete(கொஞ்சம் இழுத்து வாசியுங்கள் வாசகர்களே)
நாய்:
இவன்
இத எப்போ வறுத்துஉஉ!
அதா சாப்ட்டுஉஉ!
மிச்சம் வச்சுஉஉ !
அதா நான் சாப்புட்டுஉ !
ஹ்ம்ம்...
இவன் மூஞ்சிய பார்த்தா எலும்பையும் மிச்சம் வக்கிற மாதரி தெரியலையே!
அதுக்கு பேசாம அந்த குதிரைவாவது பிறந்துருக்கலாம்!
கொஞ்சம் புல்லாவது மிச்சமாயிருக்கும்!
நாய் பொழைப்புனா அது இதுதானா !
//இவன் மூஞ்சிய பார்த்தா எலும்பையும் மிச்சம் வக்கிற மாதரி தெரியலையே!
Deleteநாய் பொழைப்புனா அது இதுதானா !//
+1:)
// இவன் மூஞ்சிய பார்த்தா எலும்பையும் மிச்சம் வக்கிற மாதரி தெரியலையே! //
DeleteLOL :-)
ஒரு நாயின் ஆற்றாமை :
ReplyDelete" ஒத்தை மாட்டை மட்டும் மேச்சுக்கிட்டு உங்களை ஒரு பெரிய கெளபாய்னு சொல்லிக்கிட்டுத் திரியறதெல்லாம் ரொம்பவே ஓவர் எசமான்! "
+1:)
Delete// ஒத்தை மாட்டை மட்டும் மேச்சுக்கிட்டு உங்களை ஒரு பெரிய கெளபாய்னு சொல்லிக்கிட்டுத் திரியறதெல்லாம் ரொம்பவே ஓவர் எசமான்! "///
DeleteGood one!
ஒரு நாயின் வேதனை :
ReplyDelete" குலைநடுங்கச் செய்யும் சாகஸம் செய்யப்போறோம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இப்படி குளிர்ல நடுங்க வச்சுட்டீங்களே எசமான்! "
விஜயன் சார்,
ReplyDelete// "மின்னும் மரணம்" வராது...பூட்ட கேஸ் தான் ! ' என ஜாலியாய் ஆரூடங்களை அவிழ்த்து விட்டு வந்த நண்பர்களுக்கு இது அவல் தந்தது போலாகி விடுமே என்பதால் சிக்கல்களைப் பற்றி நான் அப்போதே வாய் திறக்கவில்லை ! //
ஜாலியா சொல்லனும்னா - அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அப்படின்னு நம்ப வேலைய பாப்போம் சார்!
மி.ம. வெளி ஈடு தேதி அறிவிக்காமல் இருந்ததன் காரணம் புரிகிறது அதே நேரம் அதனை சொன்னது போல் வெளி ஈட வேண்டும் என்பதால் நீங்கள் எடுத்து வரும் முயற்ச்சிகளும் தெரிகிறது! நாங்கள் என்றும் உங்களுடன் என்பதை மட்டும் சொல்லி கொள்ளகிறேன்!
// இது போன்றதொரு one in a lifetime இதழை சொதப்பிடக் கூடாதே என்பது தான் எனக்கு இன்றைய priority !! //
இது தான் முக்கியம், சிறிது தாமதம் ஆகினாலும் பரவாயில்லை; தரத்தில் ஒரு குறையும் இல்லாமல் வெளி வர வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்!
ஒரு கோரிக்கை (ஏற்கனவே வைத்தது தான்): மி.ம. வெளி ஈடும் தேதி சனிகிழமை மாலை/இரவு வருமாறு திட்டமிட்டால் சந்தோஷபடுவேன் (வோம்).
Funny caption:
ReplyDelete4. Dog' dream
''Where there is a cow and fire, there would be a fried roast soon''
விஜயன் சார்,
ReplyDelete// இந்த அட்டகாசத்தை நாம் தமிழில் ரசித்திடுவோமா folks ? இந்தாண்டின் அட்டவணையில் ஏதாச்சும் லேசாகப் பட்டி, டிங்கரிங் செய்தால், இந்தப் புது யுக டெக்சை சுடச் சுட நாமும் ரசித்துவிடலாம் ! //
இதனை நான் வரவேற்கிறேன், ஆனால் இந்த வருடம் திட்டமிட்ட இதழ்களுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் இதனை வெளி ஈடுவது நலம்!
மொக்கை starts...
ReplyDeleteFunny Caption 1:
நாயின் மைண்ட் வாய்ஸ்: 'சூரியன் வேற மறையப் போகுது...சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாமுன்னு பார்த்தா...இவர் இப்பத்தான் அடுப்பே பத்த வெச்சிருகாரு ஹும்ம்ம்ம்...' தூர தேசத்தில ஒரு நாய் 'ஊஊஊஊ' ன்னு கத்தறது உங்களுக்குக் கேட்குதோ இல்லையோ, எனக்குக் கேட்குது...சீக்கிரம் ராஜ்ஜ்ஜ்ஜ்'
விஜயன் சார், பௌன்செர் இந்த மாத கதை :- யதார்த்தமும் கமெர்சியல் இரண்டும் சரி விகிதத்தில் கலந்து இருந்ததால் ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது! முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பாக சென்ற போதும், கடைசி பாகம் வாசிக்கும் போது ஒரு வித அயர்ச்சியை கொடுத்ததையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! இரண்டு பாகத்துடன் முடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
ReplyDeleteஹங்--உமன் தனது தயார் போல் இருக்கிறாள் என்று சொல்லும் பௌன்செர் அவளுடன் உறவு கொள்வது நெருடலாக இருந்தது.
ஆமா..அந்த picture ல் பின்னாடி மேய்வதுனைடைய வாலைப் பார்த்தால் 'குதிரை' மாதிரி தெரியுதே...இல்லை அது 'மாடு' தானா?
ReplyDeleteபசுமாடு மாதிரி அதுவொரு குதிரைமாடோ இருக்குமோ?! :)
Deleteபார்த்தா பாதி மாடு...பாதி குதிரை மாதிரித் தான் தெரியுதுதுது...
Deleteஎதுக்கும் ஆசிரியர் இந்தப் பக்கமா வந்தாக்கா அவர்கிட்டேயே கேட்டுக்குவோம்...என்ன சொல்றீங்க...
இந்த குதிரைமாடுகளில் ஒரு விசேஷம் என்னன்னா... குதிரை மாதிரி சவாரியும் பண்ணலாம்... பசியெடுத்தால் நிறுத்தி பால் கறந்தும் குடிச்சிக்கலாம்! (நம்ம கார்ஸனுக்கு இப்படியொன்னை வாங்கிக் கொடுத்தா என்ன?) ;)
Delete//(நம்ம கார்ஸனுக்கு இப்படியொன்னை வாங்கிக் கொடுத்தா என்ன?) ;)//
DeleteRe-direct to MR BOSELLI...
Funny Caption 2:
ReplyDeleteநாயின் மைண்ட் வாய்ஸ்: 'ஆளு தொப்பி போட்டிருக்குற ஸ்டைலைப் பார்த்துட்டு பின்னாளிலே இவர் ஒரு 'டெக்ஸ்' மாதிரி பெரிய ஆளா வருவாருன்னு தப்புக் கணக்கு போட்டு இவர் கூட வந்துட்டுனே...இங்க பார்த்தா இவருக்கு அடுப்பைக் கூட ஒழுங்க நெருப்பால சுடத் தெரியலை ஹும்ம்ம்ம்....''
//QUESTIONS TO MR BOSELLI//
ReplyDeleteQUESTION 1:
பல டெக்ஸ் கதைகளில் செவ்விந்தியர்களைப் பார்த்துவிட்டோம்...எங்க 'தல' டெக்ஸ் எப்போது 'இந்தியாவிலும்', 'இந்தியர்களுடனும்' சாகசம் செய்யப் போகிறார்?
Funny Caption 3:
ReplyDeleteநாயின் மைண்ட் வாய்ஸ்: 'ஹும்ம்ம்ம்....பின்னாடி ஒரு குதிரையையும். தலையில தொப்பியையும் மாட்டிக்கிட்டா இவருக்குப் பெரிய 'டெக்ஸ் வில்லர்' ன்னு நினைப்பு...'வறுத்த கறி' பண்றேன்னு கறியை ரொம்பவும் தீய்ச்சுடுவான் போலிருக்கே...டேய் ஒரே ஒரு பீஸ் கொடுடா சாப்பிட்டு இப்பிடியே ஓடிப்போயிடுறேன்...'
நண்பர்களே...
ReplyDeleteஉங்கள் கற்பனை குதிரையை தாறுமாறாக ஓடத்துண்டும் caption போட்டியின் 'டையலாக்' சரியாக 5:00 மணிக்கு..! யாருக்கு பரிசு என ஒரு கைபார்த்துவிடுவோம், கடிவாளத்துடன் காத்திருங்கள்..!
ஏன் 5 மணிக்கு மேல்தான் யோகம் அடிக்கும்னு ஜக்கம்மா உங்க கனவில் வந்து சொன்னாளா?
Delete((( இப்பவே போடுவதெற்கென்ன? )))
@mayavi. siva:
Delete//யாருக்கு பரிசு என ஒரு கைபார்த்துவிடுவோம், கடிவாளத்துடன் காத்திருங்கள்..! //
அதுதுது...வாங்க வாங்க நீங்க இல்லாம 'இங்கே க்ளிக்' கவும் இன்னும் களை கட்டாமல் உள்ளது... :)
காலை 'பாலம் the book meet' ல் ஸ்டீபன் ஹாக்ஸின் 'காலம்' அறிமுக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு நம்ம லயன் ஆபிசில்( ஆட்கள் இல்லாத விஷயம் நமக்கு எப்படி தெரியும்) பணம் கட்டி பத்து நாட்கள் போராடி, காத்திருந்து வாங்கிய நம் முந்தய காமிக்ஸ்கள் ஒரு தனி அறையில் ஒரு செல்ப்பு முழுதும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன..!
Deleteஅங்கு பத்து வயது சிறுவன் 'லக்கிலுக் வந்துவிட்டதா ?' என கேட்டுவாங்கியதும், "மாயாவி சார்...வேறு எதை வாங்கலாம் ?" என கேட்க...'டெக்ஸ்'ஐ கைகாட்டினேன். "டெக்ஸின் வா.வீ வரை' படித்துவிட்டேன்...இரும்புகையார் படிக்கலாமா..!" என கேட்டதுடன், அடுத்து கேட்ட கேள்விதான் 'அட்ராசக்கை' விதம்..! அந்த கேள்வி என்னதெரியுமா ?
அவன் கேட்ட கேள்விக்கு பதில் செல்ல முடியாமல், அசட்டு சிரிப்புடன் அங்கிருந்து எஸ்கேப்....ஹாஹா...!
அந்த சிறுவன் கேட்ட கேள்வி : " மாயாவி சார்...உங்ககிட்ட ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் நிறைய இருக்கமே..! அதை படிக்க சூப்பரா இருக்குமாமே...எனக்கு அதையெல்லாம் தரமுடியுமா சார்..! "
// ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் நிறைய இருக்கமே..! //
Deleteஆக உங்க கிட்ட இருக்கிற காமிக்ஸ் பெட்டகம் பற்றி ஊர்ல உள்ள சின்ன பசங்க முதற்கொண்டு தெரிய ஆரம்பிச்சிடுச்சி அதனால கொஞ்சம் கவனமா அந்த புதையல பார்த்துகோங்க மாயாவி!
அந்தச் சிறுவன் பெங்களூரு சுப்ரமணியத்தின் பேரனோ என்னவோ! ;)
Deleteந்த சிறுவன் கைநிறைய அள்ளிச்சென்ற காமிக்ஸ்களை படித்துவிட்டு, அதிலிருந்து அவனே ஒன்றை தேர்வு செய்து அறிமுகஉரையாக பேசப்போகிறான் என்பது கூடுதல் செய்தி..!
Deleteமாயாவி ஜி அடிச்சி கேட்டாலும் சொல்லிராதிங்க !
Deletecaption போட்டிக்கான சவால் விடும்....இங்கே'கிளிக்'
Deleteபாத்துட்டீங்களா...கேப்டன் டைகரின் தீவிர ரசிகனான நான் 'டெக்ஸ்' ரசிகர்களாகிய உங்களை எப்படி சந்தோசப்படுத்துறேன்...ஆனா..ஆனா...நீங்க இப்படி பண்றீங்களேம்மா..! நீங்க பண்ணற கிண்டலுக்கு நா போலீசையா கூப்பிட்டேன்..! பாத்து பண்ணுங்கம்மா..!
சரிங்க ர(வுடி)வி...!
Deleteஏங்க மாயாவியாரே, அந்த நாய் ஒரு வார்த்தை பேசித்தான் நாம டெக்ஸ்வில்லரின் எதிர்காலம் பற்றித் தெரிஞ்சுக்கணுமாக்கும்? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை?! ;)
Deleteகருத்து சொன்னா அனுபவிக்கணும்..! ஆராயக்கூடாது...! :)))
Deleteஹா ஹா ஹா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFunny Caption 4:
Deleteநாயின் மைண்ட் வாய்ஸ்: 'ஹும்ம்ம்ம்....இவனுக்கெல்லாம் வந்த வாழ்வைப் பாருய்யா...'டெக்ஸ் வில்லர்' மாதிரி தொப்பி போட்டிருக்கானுங்கிற ஒரே காரணித்திற்காக இவன் photo வை யெல்லாம் 'lion-muthu blog' ல போட்டு கேப்ஷன் போட்டியெல்லாம் வேற வைக்கிறாங்க...என்ன கொடுமை vijayan சார் இது...'
ஒரு நாயின் எகத்தாளம்:
ReplyDelete" ந்தாப்பா கெளபாயி... ரொம்ப நேரமா குத்தவச்சு உட்கார்ந்து இந்தக் குருவிக்கறியவே சுட்டுக்கிட்டிருந்தா எப்படிப்பா... எங்கே, அந்தண்டை மேய்ஞ்சுக்கிட்டிருக்கும் பசுமாட்டைக் குறி வச்சு ஒரேயொரு தபா சுட்டுக்காட்டு பார்ப்போம்? "
கௌபாயின் நமட்டு சிரிப்பு :
Delete" எதுக்கு ? நா சுடற அந்த கேப்புல..இந்த குருவிகறிய நீ கவ்விட்டு ஓடவா..நடக்காது மாமு..!"
Funny Caption : இப்படி பசியோட என்ன கயபோடுற நீ அடுத்த ஜென்மத்துல நாயா பொறக்கணும், நான் மனுசனா பொறக்கணும்.அப்பதான் உனக்கு என் பீலிங்க்ஸ் புரியும்.
ReplyDeleteFunny Caption 1 : (கவுண்டமணி ஸ்டைலில்) ஏண்டா பனக்கொட்ட தலையா, பசிக்குது நேரங்காலமா வீட்டுக்கு போனா ஏதாவது சாப்புட கிடைக்கும் பாத்தா, நீ பாட்டுக்கு பெரிய இவனாட்டம் நெருப்புக்குள்ள குச்சிய வுட்டு ஆட்டிக்கிட்டு இருக்குற, இப்ப இதெல்லாம் தேவையா ?
ReplyDelete+1 ( நல்ல எழுத்து நடை)
DeleteFunny Caption 2 : நானும் வந்ததுல இருந்தே பாக்குறேன் நம்ம எஜமான் எதுவுமே பேச மாட்டேங்குறாரு,ரொம்ப வருத்தமா இருக்காரு என்ன பிரச்சனையா இருக்கும்.
ReplyDeleteஒருவேளை எஜமானோட கேர்ள் பிரெண்ட் அவர வுட்டுட்டு போயிடுச்சா ?
//ஒருவேளை எஜமானோட கேர்ள் பிரெண்ட் அவர வுட்டுட்டு போயிடுச்சா ? //
Deleteம்ஹூம்! பிரிஞ்சுபோன அவரோட கேர்ள்ஃப்ரண்ட் மனசு மாறி திரும்பி வந்திருக்கும்! ;)
ஒரு நாயின் பயம்:
ReplyDelete" ஊய்ய்... இந்தாளு Camp fireலாம் போடறதைப் பார்த்தா அடுத்ததா இதைச் சுத்திச்சுத்தி வந்து ஆடச்சொல்வான் போலிருக்கே... "
ஒரு நாயின் கணிப்பு :
ReplyDelete" ஏனுங்க எசமான்... இப்படி டைட்-பிட்ல ரொம்ப நேரம் குந்திக்கிணு இருந்தா டர்ர்ர்னு கிழிஞ்சுடாது? "
கௌபாய்:
Delete" வருசம்பூரா தினமும் நூறுதபா குதிரையில எகிறி குதிக்கிறோம்.தாவறோம்...அப்பொல்லாம் கிழியாத இந்த 'ஜீன்ஸ்' இப்படி உட்காந்தாவா கிழிய போகுது...அதுசரி நீ குதிரையில தாவி ஏறியிருந்தாயில்ல உனக்கு புரியும்..!
விஷயம் புரியாம பேசாதீங்க மாயாவி! கெளபாய் போடுற ஷூக்களின் பின்புறத்தில் முள்சக்கரம் இருக்குமில்லையா? அப்படி உட்காரும்போது சரக்குனு கிழிச்சுட்டா டர்ர்ர்தானே?
Delete'பூதவேட்டை' அட்டைப் படத்தில் டெக்ஸ்வில்லர் அப்படி உட்கார்ந்து பின்புறத்தை பஞ்சர் பண்ணிக்கிட்டதை மறந்துட்டீங்களா? :D
Funny caption :
ReplyDeleteநாயின் மனதிலும்,'' இந்த எஜமானர் நெருப்பு பற்ற வைத்துவிட்டு யோசிப்பதைப் பார்த்தால் ஒருவேளை அந்த பசுவிற்க்கு பதிலாக என்னை வறுத்த கறியாக்கிடுவோரோ!''
Funny caption :
Deleteநாயின் மனவோட்டத்தில ,'' இந்த எஜமானர் நெருப்பு பற்ற வைத்துவிட்டு யோசிப்பதைப் பார்த்தால் ஒருவேளை இன்றைக்கு வறுத்து கறிக்கு அந்த பசுவா இல்லை இந்த நாயா என்ற சிந்தனையோ!''
ஒரு நாயின் கலக்கம் :
ReplyDelete" இந்த மார்கழி மாசத்துல என் கேர்ள் ஃப்ரண்டை தனியா விட்டுட்டு இந்த ஆளுடன் நான் வேட்டைக்கு வந்திருக்கக்கூடாது. இந்நேரம் அவளுக்காண்டி அங்கே எத்தனைபேர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டுக்கிட்டிருக்கானுகளோ... "
ஒரு கௌபாயின் கலக்கம்:
Delete"வழி தெரியாத இந்த காட்டுக்கு இந்த நாய் வீடு திரும்ப வழிகாட்டும்ன்னு நம்பி வந்தது தப்பபோச்சே...இந்த நாய் எனக்கு இரண்டடி பின்னாடி வருதே ஒழிய...ஒருஅடி கூட முன்னாடி போகலையே...வசம்மா மாட்டிகிட்டோமே...ம்...!"
Funny Caption 5:
ReplyDeleteகௌபாய் தன் காதலியை நினைத்து: 'கோவைப் பழம் அங்கிருக்க கொத்தும் கிளி இங்கிருக்க...ஏய் மாடே நீ தூது போக மாட்டாயோ...'
நாயின் மைண்ட் வாய்ஸ்: 'நானோ இங்கிருக்க வறுத்த கறியோ அங்கிருக்க, டேய் கௌபாயே நீ கொஞ்சம் எந்திரிச்சு அந்தப் பக்கமாக போக மாட்டாயோ...'
சத்யா...இன்னும்..இன்னும்...!
Deleteஒரு நாயின் அதிர்ச்சி:
ReplyDelete" என்னாது... ஒரு கோடி ரூவா குடுத்தாக்கூட 6 மணிக்கு மேல இருக்கற இடத்தை விட்டு அசையமாட்டீங்களா! ஐயோ...உங்களுக்கு மாலைக்கண் வியாதின்றதை சித்தே முன்னாடி சொல்லியிருந்தாகூட காலுக்கு நடுவிலே வாலை விட்டுட்டு பிடிச்சிருப்பேனே ஓட்டம் ... "
Caption ..
ReplyDeleteகௌபாய் ....நல்ல வேளை டைகர் ! இந்த கதையில வந்து குந்திக்கினோம் ..இதேங்காட்டி பௌன்ஸர் ரைட்டர் கிட்ட மாட்டிருந்தோம் ....எனக்கு ஒத்த கை இருக்காது ..உனக்கு ஒத்த கால் இருக்காது ..அந்தா மேயுதே மாடு அதுக்கு ஒரு காது இருக்காது .இந்த பிரேமிலேயே இல்லாத என் குதிரைக்கு ஒத்த கண்ணு இருக்காது ..ஏன் அந்த சூரியனை கூட கிரகணம் புடிச்சுருக்கும் ...தப்பிச்சோம் ...
(கௌபாய் தனது நாயை "டைகர் "என அழைப்பதில் உள்குத்து ஏதுமில்லை )
LOL. :D
Delete//(கௌபாய் தனது நாயை "டைகர் "என அழைப்பதில் உள்குத்து ஏதுமில்லை ) //
LOL(LU) :D
கௌபாய் ...அக்னி குஞ்சொன்று கண்டேன் ....
ReplyDelete(ஆர்ராது ..வைல்ட் வெஸ்ட்ல பாரதியை இழுக்கறது அப்டின்னு கேக்கபடாது ..எடிட்டர் எத்தனை தடவை யூரோப் ,இத்தாலி ,போறாரு ..கொஞ்சமாவது சொல்லி கொடுத்து இருக்க மாட்டாரு ..
தீயினால் சுட்ட புண் அப்டின்னு பின்னாலேயே திருக்குறள் எழுதாதீங்கப்பா :-) ]
E.Vijay @
ReplyDelete// (2). மாடஸ்டியின் 'மரணத்தின் முத்தம்' மற்றும் ஜில்ஜோர்டனின் 'துணைக்கு வந்த தொல்லை' - இவற்றில் ஏதாவதொன்றையோ அல்லது இரண்டையுமோ தூக்கிவிட்டு... //
Why திஸ் கொலைவெறி?
கடந்தகாலம் ஏற்படுத்திய எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடு இது, பரணி அவர்களே!
Deleteஆசிரியர் தைரியமாக முன் வைத்த காலை நாம் பின்வைக்க சொல்வது சரியா விஜய்!
Deleteஒரு "எச"கிசு கிசு (எசப்பாட்டுதான் இருக்கனுமா ?)
ReplyDeleteமஞ்சள் நிறைய விளையும் பூமி என்பதாலோ என்னவோ "அந்த "மஞ்சள் சட்டை போட்டவரை மிகவும் நேசிக்கும் இவர் இப்போது மிகவும் மாறி விட்டதாக கூறுகின்றனர் ..
வீட்டில் இட்லி சாப்பிடுங்கள் என சொன்னால் உண்ண மறுக்கும் இவர் "இட்டாலி "சாப்பிடுங்கள் என சொன்னால் சாப்பிடுகிறாராம்
ரவா உப்புமா சாப்பிட சொன்னால் மறுக்கும் இவர் அதையே வட்டமாக தட்டில் வைத்து வெட்டி தந்து ரவா பிட்சா என சொன்னால் சாப்பிடுகிறாராம் ...
Maggie noodles தந்தால் மறுக்கும் இவர் அதையே வட்ட வடிவ கேரட் கலந்து spaghetti என தந்தால் சாப்பிடுகிறாராம் ...
வெளியில் வானத்தில் விமானம் பறந்தால் தொலைநோக்கி கண்ணாடி வழியே அதில் ALITALIA (Italian airlines )என எழுதி இருக்கிறதா என பார்க்கிறாராம்
பக்கத்து வீட்டு தமிழ் ஐயா பிணி நீக்கும் மருந்து என பாடம் எடுத்தால் ஓடிப்போய் "காலப்பிணி "என இங்கு யார் சொன்னது என கேட்கிறாராம் ..
இவரது ஆர்வத்தை பார்த்து இத்தாலிய மஞ்சள் காமிக்ஸ் தலைமை இவரை உடனே அங்கு தருவித்து கொள்ளலாம் என நம்ப படுகிறது ..
அன்னார் விரைவில் இத்தாலி "விஜய "ம் மேற்கொள்ளலாம் ....[:-)]
Just for fun ....:-)
Delete//இவரது ஆர்வத்தை பார்த்து இத்தாலிய மஞ்சள் காமிக்ஸ் தலைமை இவரை உடனே அங்கு தருவித்து கொள்ளலாம் என நம்ப படுகிறது ..
Deleteஅன்னார் விரைவில் இத்தாலி "விஜய "ம் மேற்கொள்ளலாம் .... ///
இப்படிச் சொல்லி ஆசை காட்டி ( ஆசைக் கனலை மூட்டி) கடேசியா
///Just for fun ....:-) ///
இப்படி முடிச்சிட்டிங்களேம்மா...
அப்புறம் Spaghetti என்ற விமான சர்வீஸ் பற்றியும், ALITALIA என்ற உணவுப் பதார்த்தத்தையும் எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு என் நன்றிகள்! :)
Deleteஅப்புறம்... வீட்டுக்கு வெளியே வந்து அடிக்கடி தொலைநோக்கியில் பார்ப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் பார்த்து ரசிப்பது விமானத்தை அல்ல! ஹிஹிஹி!
Deleteவிஜயன் சார், நமது டெக்ஸ் கதையில் ஏதாவது ஒண்ண எடுத்துவிட்டு இந்த புதிய டெக்ஸ் கதைய சேர்க்கலாம்!
ReplyDeleteரத்தத்திற்கு ரத்தம் என்பது போல் டெக்ஸ்க்கு -> டெக்ஸ் சரியா போச்சு!
போசெல்லிக்கு ஒரு கேள்வி :
ReplyDeleteநீங்கள் உருவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த 'கார்ஸனின் கடந்த காலத்தை' போலவே, டெக்ஸ் குழுவின் மற்றொரு மிகமுக்கிய அங்கத்தினரும் செவ்விந்தியப் பிரஜையுமான டைகர் ஜாக்கிற்கும் ஒரு கடந்தகாலத்தை ஏற்படுத்திக் கெளரவிக்கும் ஐடியா ஏதேனும் உள்ளதா?
Captions;
ReplyDelete1. கதிரவன் கைவிடும் நேரம் ...
துணிவை துணைக்கு அழைத்திடும் தருணம் ...
2. வெண்நிலவை வரவேற்கலாம்...
வெட்டவெளியில் படுத்துறங்லாம்...
And a funny one
1. நாய்க்கும் உண்டு கறி..... இல்லையென்றால் பிடித்துவிடும் வெறி