Powered By Blogger

Sunday, March 22, 2015

ஒரு கோமானும்...ஒரு மர்ம மனிதனும்...!

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் அட்டவணையில் ஒரு குட்டியான / ஜாலியான மாற்றமென்ற சேதியோடு இந்த வாரத்துப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேனே..! (ஏற்கனவே அறிவித்திருந்த) நமது புது அறிமுகத்தின் "விண்ணில் ஒரு வேங்கை" மே மாதத்துக்கு இடம் மாறிட, நம் கோடீஸ்வரர் திடும் பிரவேசம் செய்கிறார் - "டாலர் ராஜ்யம்" வாயிலாக ! ஏப்ரலில் "மின்னும் மரணம்" பணிகள் நம்மை நிறையவே பிசியாக வைத்திருக்கும் தருணத்தில் லார்கோவையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டால் பளு கூடிடுமே என்ற எண்ணத்தில் மிஸ்டர். கோமானை ஒரு மாதம் கழித்தே களமிறக்கிடத் திட்டமிட்டிருந்தேன் ஒரிஜினலாய் ! ஆனால் 56 பக்கங்களினான "வி.வே."யோடும் ; 2 மறுபதிப்புகளோடும் ஏப்ரலின் துவக்கக் கோட்டாவை முடித்திட மனது கேட்கவில்லை ! (மறுபதிப்புகளை மெய்யாகவே, முழுசுமாய்ப் படிக்கும் நண்பர்களின் சதவிகிதம் என்னவாக இருக்குமென்ற ஒரு curiosity எனக்குள் !) எல்லாவற்றிற்கும் மேலாக -லார்கோவின் இந்த அதிர்வேட்டு சாகசத்தின் வேகம் அசாத்தியமானது என்பதால் சிரமங்களே தெரியவில்லை பணிகளில் !! So here comes the blue jeans billionaire - with his albums # 13 & 14 !

2004-ல் முதல் பாகமான "கதை சொல்லும் கரென்சி" வெளியாகிட,சரியாக ஓராண்டின் இடைவெளிக்குப் பின்னே இரண்டாம் பாகமான - "டாலர் ராஜ்யம்" வெளிவந்திருந்தது 2005-ல் ! இது போன்ற த்ரில்லர் கதைகளை ஒரு முழு ஆண்டின் break விட்டு வெளியிடும் பதிப்பகங்களின் தைரியங்களும் ; வாசகர்களின் பொறுமைகளும் உண்மையிலேயே நமக்கு அன்னியமாய்த் தோன்றுமொரு விஷயம் ! இதோ - டாலர் ராஜ்யத்தின் அட்டைப்படத்தின் first look :


சமீப நாட்களது பாணியின் தொடர்ச்சியாக ஒரிஜினல் டிசைன்களே இம்முறையும் முன் & பின் அட்டைப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன - சிற்சிறு மாற்றங்களோடு ! லார்கோவின் அந்த வித்தியாசமான முகத்தை நாம் வரைய முற்பட்டால் ரணகளமாகிப் போவதால் 'சிவனே' என்று ஒரிஜினல்களையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வருகிறோம் ! Hope it looks o.k! உட்பக்கங்களில் இருந்தும் இதோ குட்டியாய் ஒரு டிரைலர் :


வழக்கமான அக்மார்க் அதிரடிகள் ; வழக்கமான பிசினஸ் சிக்கல்கள் ; பொறிகளுக்குள் மாட்டி விட்டு பின்னே வெளியேறும் வழக்கமான லாவகம் என லார்கோவின் கதைகளின் சகல template களும் இந்த சாகசத்திலும் முழுவீச்சில் உண்டு ! ஆனால் opening sequence தான் கதையின் ஹைலைட்டே ; செம அதிரடியான துவக்கம் ! லார்கோவின் கதைகளில் சுவாரஸ்யத்துக்கு என்றுமே பஞ்சம் கிடையாதென்பதொடு - அவை என்றைக்குமே மொழிபெயர்ப்புக்கு அற்புதமான வாய்ப்புகள் தரும் களங்களாக இருப்பதுண்டு ! இம்முறை கருணையானந்தம் அவர்கள் மொழிபெயர்ப்பின் முதல் படியினை செய்திருக்க, லார்கோ ; சைமன் வசனங்கள் + final touches எனது பேனாவினது ! நம் கோடீஸ்வரரை மீண்டுமொரு ஹிட் நாயகனென்று நிரூபிக்க இந்தக் கதை ஒரு சூப்பர் வாய்ப்பு !

கோமான் to மர்ம மனிதன் - இத்தாலியப் புராணம் தொடர்கிறது - சென்ற வாரம் நான் விட்ட இடத்திலிருந்தே ! போனெல்லி அலுவலகத்தில் டெக்ஸ் கதாசிரியரையும், அவர்களது பணிக்கூடத்தையும் பரக்கப் பரக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை ! அட..டெக்ஸ் புதிய இதழ்களின் ராப்பர்களா இவை ? என்றபடிக்கு வாய் பிளப்பது ஒரு பக்கமெனில், டைலன் டாக் ; மார்ட்டின் ; இன்ன பிற போனெல்லி கதாநாயகர்களின் அணிவகுப்பு என திரும்பிய திசையெல்லாம் யாராவது ஒருத்தர் சுவற்றிலிருந்து என்னைப் பார்த்து சிரிப்பதோ - முறைப்பதோ நடந்து கொண்டிருந்தது ! ஒரு பெரிய corporate அலுவலகத்தின் ஜாடையில் இல்லாது போனெல்லியின் ஆபீஸ் ஒரு studio லுக்குடன் வித்தியாசமாக இருப்பதுண்டு ! ஒவ்வொரு அறைக்குள்ளும் ஏதோவொரு நாயகரின் கதைகளுக்கான பணிகள் ; மேஜை நிறைய கதைகளின் ஸ்க்ரிப்ட்டும் ; ஓவிய மாதிரிகளும் என்று குவிந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது !

அப்போது உயரமான,கம்பீரமானதொரு வெண்தாடி மனிதர் அங்கு பிரசன்னமாக அவரை அறிமுகம் செய்து வைக்கும் முன்பாகவே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது எனக்கு ! மர்மமனிதன் மார்டின் கதைத்தொடரின் படைப்பாளியான ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி தான் அவர் ! சென்ற முறையே அவரை நான் சந்திக்க வாய்ப்புக் கிட்டயிருந்த போதிலும், 'ஹலோ' சொல்வதைத் தாண்டி ஏதும் பேசிட வாய்ப்பில்லாது போயிருந்தது ! ஆனால் இம்முறையோ என்னை தனது அறைக்குக் கூட்டிச் சென்று ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் ! அவரது அறைக்குள் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களின் சேகரிப்பு ஒரு வண்டி இருப்பதைக் காண முடிந்தது ! மார்ட்டினின் கதைகள் வரலாறு + எதிர்காலமென ஒரு புதுமையான combo-வில் இருப்பதால் அதற்கென ஏராளமாய் பின்னணி research அவசியம் என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்கும் தான் ; ஆனால் பரீட்சைக்குப் படிப்பது போல இத்தனை ஆழமாய் அதனுள் படைப்பாளிகள் மூழ்கிடுவதை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு தாளவில்லை !

"ஹ்ம்ம்ம்... முத்து காமிக்ஸ் !" என்று அழுத்தமாய்ச் சொன்னவர் சமீபத்திய ம.ம.ம.இதழ் ஒன்றை     நீட்டினார்  என்னிடம் ! அவரது முதுகுக்குப் பின்னே தெரிந்த கம்பியூட்டர் திரையில் "சரித்திரத்தைச் சாகடிப்போம் " என தமிழில் முரட்டு எழுத்துக்களோடு ஒரு black & white பக்கம் பிரதானமாக நின்றது !! என்றோ ஒரு சமயத்தில் நாம் வெளியிட்டிருந்த மார்ட்டின் கதையினை ஸ்கேன் செய்து தனது கம்ப்யூட்டரில் அவர் வைத்திருந்ததைப் பார்த்த போது எனக்கு  'ஜில்'லென்று இருந்தது ! இந்தத் தலைப்புக்கு அர்த்தமென்ன? என்ற கேட்ட மனுஷனுக்கு என்னமோ ஒரு விளக்கம் சொல்லி வைத்தேன் ! "எனக்கு அந்தத் தடியான புக்கில் இன்னும் இரண்டு வேண்டுமே..!!" என்று அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போதே அவர் நமது LMS பற்றித் தான் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! அதனில் வந்திருந்த "கட்டத்துக்குள் வட்டம்" கதை அவரது favorites களுள் ஒன்று என்றும் ; LMS -ல் அதனைப் பார்த்த போது மிகுந்த சந்தோஷம் கொண்டதாகவும் சொன்ன போது எனக்குத் தலை கால் புரியவில்லை ! 

தமிழில் மார்டினுக்குள்ள வரவேற்பு பற்றியும், அந்தக் கதையின் தன்மை காரணமாய் அது டெக்ஸ் போன்ற bestsellers உடன் போட்டி போடுவது சாத்தியமாகாது தான் என்றும் அவரே சொன்ன போது அவரது யதார்த்தம் புரிந்தது / பிடித்தது ! 1982-ல் மார்ட்டின் கதைகளைத் தொடங்கியவர் இன்னமும் இதற்கென இத்தாலிய மொழியிலொரு தீவிர வாசக வட்டமிருப்பதை இயல்பாய்ச் சொன்னார் ! நாம் இதுவரை ம.ம.ம. கதைகளை அளவாகவே பயன்படுத்தி வந்திருப்பதால் ஆழமான "மார்ட்டின் ஞானம்" எனக்கிருக்கவில்லை எனும் போது பொதுவாகவே பேசிக் கொண்டிருந்தேன் ! அடுத்த மாதம் மார்ட்டினின் சாகசம் வெளியாகவிருப்பதால் அது பக்கமாய்ப் பேச்சு திரும்பியது ! கனவின் குழந்தைகள் + பிரபஞ்சப் பயணிகள் என 2 பாகக் கதையிது ; இதற்கென நமக்கு வந்திருந்த CD க்கும், ஒரிஜினல் இதழுக்குமிடையே முதல் சில பக்கங்களில் வேற்றுமை இருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினேன் ! பல்லாயிரக்கணக்கான பக்கங்களை உருவாக்கிய மனுஷனுக்கு ஒவ்வொரு கதையும் துல்லியமாய் நினைவில் நிற்கும் போல ; உடனே டிஜிடல் பைல்களின் நிர்வாகியை வரவழைத்து ஏதோ சொல்லிட, சற்றைக்கெல்லாம் ஒரு பச்சை நிற தடிமனான ஆல்பமும், ஒரு மெலிதான மார்ட்டின் இதழும் அங்கே வந்து சேர்த்தன ! ஒரிஜினலாய் இந்தக் கதையினை மாதந்திர வெளியீடாகத் தயாரித்த சமயம் முதல் 10 பக்கங்களை வேறொரு விததமாய் உருவாக்கி இருந்ததாகவும், பின்னாட்களில் அதனை ஒரு தொகுப்பாய் வெளியிட்ட வேளைதனில் சில மாற்றங்களைச் செய்ததாகவும் விளக்கினார் ! So மாற்றங்களால் கதை துளியும் மாறிடாது என்றும் புரியச் செய்தார் ! கம்பியூட்டராவது - கத்திரிக்காயாவது - ஒரு கைதேர்ந்த ஆற்றலாளரின் நினைவாற்றலின் முன்னே இயந்திரங்கள் பிச்சை தான் எடுக்க வேண்டுமென்று தோன்றியது ! ஜெர்மனியில் ; அமெரிக்காவில் ; துருக்கியில் ; செர்பியாவில் ; குரோவேஷியாவில் என வெளியாகியிருக்கும் மார்டினை ஆசியத் துணைக்கண்டத்தில் வெளியிடும் ஒரே பதிப்பகம் நாமே என்பதை அவர் matter of fact சொன்ன போது இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றியது ! மாறுபட்ட ரசனைகளுக்கும் ஸ்வாகதம் சொல்லும் எங்கள் வாசகர்களுக்கொரு பேட்டி தர  இயலுமா என்று நான் கேட்ட போது - of course !!" என்று சொல்லி தனது மின்னஞ்சல் முகவரியைத் தந்தார் ! So அவரிடம் கேட்க உங்களுக்குக் கேள்விகளிருப்பின் - please do mail me ! 




தமக்கையின் இல்லத்திலொரு விசேஷம் என்பதால் ஞாயிறு காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டியுள்ளதால் இவ்வாரத்துப் பதிவை இதற்கு மேல் நீட்டிட அவகாசமில்லை ! So இத்தாலியப் புராணத்தையும், இவ்வாரத்துப் பதிவையும் நிறைவு செய்வதற்கு முன்பாய் குட்டியாய் சில துணுக்குச் சேதிகள் : 

  • டெக்சின் ஒவ்வொரு புது இதழும் 190,000 இதழ்கள் விற்பனை காண்கின்றனவாம் - இத்தாலிய மொழியினில் மட்டும் !
  • இத்தாலிக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் டெக்சுக்கு வெறித்தனமான ரசிகப் பட்டாளம் உண்டாம் !! 
  • டெக்சின் விற்பனை எண்ணிக்கைகளைப் பின்தொடரும் நாயகர் டைலன் டாக் தானாம் !! 
  • டைலன் டாக் ரசிகர் மன்றம் என 2 தனித்தனிக் குழுக்கள் இத்தாலியில் உள்ளனவாம் ! 
  • நாம் இதுவரை "வீதியெங்கும் உதிரம்" & "நள்ளிரவு நங்கை"  இதழ்களில்  215 பிரதிகள் இத்தாலியில் விற்றுள்ளோம் !! இது நமது சென்னை விற்பனைகளை எட்டிப்பிடிக்கும் எண்ணிக்கை !! 
  • டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...! 
  • நமது 2013 தீபாவளி மலரில் வெளியான டேவிட் போநெல்லியின் பேட்டி தான் அவரது முதல் பேட்டியாம் !! நிஜமான சந்தோஷத்தொடு அதைச் சொன்னார் டேவிட் ! 
  • "மின்னும் மரணம்" அச்சுப் பணிகள் துவங்கி மூன்று நாட்களாகி விட்டன ! Touch wood - இது வரையிலான வேலைகள் பிரமாதமாக நடந்தேறியுள்ளன ! இன்னுமொரு வாரம் 'தம்' பிடித்து இரவு, பகல் பாராது நமது டீம் உழைப்பை நல்கிட்டால் அட்டகாசம் தான் !! Fingers crossed !!
  • ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! அது என்னவாக இருக்குமென்ற யூகங்களை உங்களிடம் விட்டு விடுகிறேன் ! இதழ் வெளியாகும் சமயம் அது என்னவென்று சொல்கிறேனே..! 
  • ஏப்ரல் 13-23 தேதிகளுக்குள் நடந்திடும் சென்னை புத்தக சங்கமத்தில் நாம் பங்கேற்கிறோம் !
  • சென்னையில் நிறைய கடைகளை எட்டிப் பிடிக்க முயற்சித்தும் வருகிறோம் ; இம்மாதம் துவக்கம் கீழ்க்கண்ட கடைகள் அனைத்திலும் நமது இதழ்கள் கிடைக்கும் :  

Discovery Book Palace,
No-6,Mahavir complex,First floor,
Munusamy salai,
K.K.Nagar west
Chennai-600078
cell-9940446650,ph no-044 65157525

Park Book House
20/2,EVR Periyar high road,
Near golden cafe,
Peramet,
chennai-3, cell- 94448 96858

Sri Eswar Enterprises
Archana arcade,new no-27,old no-16
Natesan street
T.Nagar
Chennai-600017,cell-98846 68667,
ph no-o44 24345902,24339591

Bella Publishers & Book Sellers
52,Ranganathan street,
T.nagar,
Chennai-17,cell- 94441 01894,ph no-044 24341622,24311644

New Book Lands
52,C,North usman road,Basement,
Near panagal park
Fly over north end,
T.nagar
Chennai-17,
cell- 98402 27776,98402 907776,ph-044 2815 8171,28156006

T.Raja sekar,
M/S.Books Corner,
AB-2,Second avenue,
opp;Spencers dairy building,
Anna nagar
chennai-40,
cell-98415 67467,ph -044 42172388

தொடர்ந்து ஊர் ஊராய் பயணம் மேற்கொண்டு நமது விற்பனை முயற்சிகளை செய்து வருகிறோம் ! ஒன்றுக்குப் பாதி சொதப்பலாகுவதும், வசூல்களுக்கு மல்லுக்கட்டுவதும் ஆங்காங்கே நிறையவே நிகழ்ந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை ; ஆனால் 'தம்'கட்டிக் கொண்டு ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறோம் - ஆண்டவனும், காமிக்ஸ் ரசிகர்களும் நம்மைக் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் guys ! Bye for now ! 

238 comments:

  1. இனிய காலை வணக்கம் நண்பர்களே! அட்டைப்படம் அட்டகாசம் சார். அந்த கலரே அசரடிக்கிறது!

    ReplyDelete
  2. நான் நாலாவதா நிற்கிறேன்..!

    ReplyDelete
  3. ஏற்று கொள்ளகூடிய சமாதானம் சொல்வது ஒரு கலை.உங்களுக்கு நன்றாகவே வருகிறது.லார்கோ மாற்றம் மகிழ்ச்சி சார்.நன்றி

    ReplyDelete
  4. லார்கோ வின்ச் ஏப்ரல் மாதத்தில் நுழைந்தது சந்தோஷமான ஆச்சிர்யம்!

    ReplyDelete
  5. மர்ம மனிதன் மார்டின் எனக்கு பிடித்தமான நாயகர்! சரித்திரத்தை சாகடிப்போம் நான் படித்த முதல் மார்டின் கதை!
    கடலடியில் உயிர் தப்பும் , மலையில் உள்ள மடாலயத்தில் மார்டின் ஜாவா செய்யும் சாகசம், அருமையான கிளைமாக்ஸ் என மிகவும் ரசித்த கதை.

    மார்டினின் ரசிகன் / ரசிகர்கள் இங்கும் நிறைய உண்டு என்று ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி-இடம் சொல்லுங்கள்,விஜயன் சார்!

    ReplyDelete
    Replies
    1. //மார்டினின் ரசிகன் / ரசிகர்கள் இங்கும் நிறைய உண்டு என்று ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி-இடம் சொல்லுங்கள்//

      சொல்லாமல் விடுவேனா ?!!

      Delete
  6. ஞாயிறு வந்தாலே ஒரு சந்தோச உணர்வு வருவது எனக்கு மட்டும் தானா. ..

    ReplyDelete
    Replies
    1. //ஞாயிறு வந்தாலே ஒரு சந்தோச உணர்வு வருவது எனக்கு மட்டும் தானா. ..//
      +1

      Delete
    2. எனக்கு சனிக்கிழமை இரவே அந்த சந்தோச உணர்வு வந்துவிடும் தலீவரே! :)

      Delete
  7. ஆசிரியர் பதிவு இல்லா விட்டால் ஞாயிறும் திங்களாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா

    ReplyDelete
    Replies
    1. தலைவரே உங்களுக்கு மட்டும் இல்ல, எங்களுக்கும்தான்.

      Delete
    2. Paranitharan K & Arivarasu @ Ravi : அட....காதைக் கொடுங்கள் இரகசியமொன்றைச் சொல்கிறேன் !

      ஞாயிறு பதிவைக் காத்திருந்து படிப்பது நமது சீனியர் எடிட்டரும் கூடத் தான் ! சமீபமாய்த் தான் எனக்கே தெரிந்தது !

      Delete
    3. //
      ஞாயிறு பதிவைக் காத்திருந்து படிப்பது நமது சீனியர் எடிட்டரும் கூடத் தான் ! சமீபமாய்த் தான் எனக்கே தெரிந்தது ! ///

      !!!! இது ரொம்பவே வித்தியாசமா இருக்கே!!!!

      Delete
    4. // ஞாயிறு பதிவைக் காத்திருந்து படிப்பது நமது சீனியர் எடிட்டரும் கூடத் தான் ! //
      இதனை விட சிறந்த பெருமை வேறு என்ன வேண்டும் விஜயன் சார்!

      Delete
  8. திடும் பிரவேசம் செய்கிறார் திகம்பர சாமியார்..சாரி ..லார்கொ விஞ்ச் ..வரவேற்கிறேன்..

    ReplyDelete
  9. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.பதிவை படிச்சிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  10. மறு பதிப்புகளை மெய்யாகவே முழுசாய்ப் படிக்கின்றீர்களா ..வேறே வேலை ?

    ReplyDelete
  11. அந்த டிடக்டிவ் ஸ்பெசல் மட்டும் போ ட்டுப்பாருங்கள் ..மறு பதிப்புகளின் மகத்துவம் தெரியும்

    ReplyDelete
  12. Good morning guys.... I'm in Maldives.. பணியின் காரணமாய் இங்கு வரவேண்டிய கட்டாயம்.. rombha miss பண்ணுவது Family yayum and நமது Comics kalayum...... but now got my sim and net here.... வீடு திரும்பிய மகிழ்ச்சி நம் blog ஐ காண்பது.... All our comics books are delivered to my Chennai address... waiting to November to read them all at once.... a bit concerned about safety of books... they are received by my neighbors... and i hope i will not miss minnum maranam... feels really good to be back to our blog again.....

    ReplyDelete
    Replies
    1. Tex willer rasigan!!! : வீட்டை விட்டுப் போனால் எல்லோரும் மிஸ் பண்ணும் தத்தம் குடும்பத்தோடு நமது காமிக்ஸ் (குடும்பத்தையும்) இணைத்திருப்பது நெகிழ்வாக உள்ளது !! அடிக்கடி இங்கே கலந்து கொள்ளுங்கள் நண்பரே..!

      Delete
  13. //டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது//

    என்னவாக இருக்கும்..?
    எடி சார் ஏதோ ஒன்றை சொல்லி நம்மளை இப்படி அந்தரத்திலே தொங்கவிட்டிட்டாரே.....!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை தனி சந்தா வாக இருக்குமோ ?
      ஒரு வேளை டெக்ஸ் கலெக்டர் ஸ்பெஷல் வருமோ ?
      அஒரு வேளை புதிய இளம் டெக்ஸ், இளம் கார்ஸனும் சேர்ந்து வருகிராரோ ?

      Delete
    2. Jaya Sekhar : ஒரு வேளை இதில் எதுவுமே இல்லாது வேறொரு விஷயமாயும் இருக்குமோ ? :-)

      Delete
    3. மறுபடியும் அந்தரத்திலயா!!

      Delete
    4. டெக்ஸ் மகன் கிட் டோட ஸ்டோரி ஏதாவது வரும் போல!
      R
      குட்டி குட்டிங்கிறீங்களே சார்
      ஒரு வேளை அந்தமாதிரியான "குட்டி" விஷயமா இருக்குமோ என்னவோ!!!!!?!!!!!

      Delete
    5. நாம .........உடனே ......தொங்க ஆரம்பிக்க வேண்டியது தான்

      Delete
  14. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  15. Comics kalai padipadhu late aanulum... nam blog padipadhey ipoodhaiku podhum endra thirupthi.....

    ReplyDelete
  16. அனைவருக்கும் வணக்கம். ஒரு அதிரடி பதிவுதான் இது. லார்கோவை வரவேற்க இப்போதே தயராகிவிட்டோம். என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியாது ஆனால் ஆசிரியர் ஒவ்வொரு பதிவிலும் சஸ்பெற்ஸ் வைக்கிறார் தாங்க முடியவில்லை... எடிட்டர் சார் தளே பற்றிய தகவலையாவது இப்போதே சூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh: இப்போதே சொல்லி விட்டால் அதற்கு "சஸ்பென்ஸ்" என்ற பெயர் பொருந்தாதே நண்பரே..? ! சரியான தருணத்தில் புதிருக்கு விடையளிப்போமே !

      Delete
  17. விஜயன் சார், காமிக்ஸ் கடல் பற்றி மீண்டும் ஒரு அருமையான பதிவு! லார்கோ மாற்றம் வரவேற்க வேண்டிய ஒன்று, கோடை விடுமுறையில் அதிக புத்தகம்கள் எங்களுக்கு கிடைக்கும்படி பார்த்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து கௌபாய் கதைகளாக வரும் இந்நாட்களில் ஒரு ஜீன்ஸ் போட்ட கோடீஸ்வரனின் கதை வரவேற்புக்குரியது!

      Delete
    2. Parani from Bangalore : //கோடை விடுமுறையில் அதிக புத்தகம்கள் எங்களுக்கு கிடைக்கும்படி பார்த்து கொள்ளவும்//

      அட..நிறுவனங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் போலவே கோடை விடுமுறையா அவ்விடம்?! ஹை ஜாலி !

      Jokes apart - "மின்னும் மரணம்" 540 பக்கங்களைப் படிக்க ஒரு முழு மாதம் தேவைப்படப் போகிறது நண்பரே !

      Delete
    3. Parani from Bangalore : //தொடர்ந்து கௌபாய் கதைகளாக வரும் இந்நாட்களில் ஒரு ஜீன்ஸ் போட்ட கோடீஸ்வரனின் கதை வரவேற்புக்குரியது!//

      2016-ன் அட்டவணை ரொம்பவே வித்தியாசமாய் இருக்கப் போகிறது - பாருங்களேன்...!

      Delete
    4. // அட..நிறுவனங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் போலவே கோடை விடுமுறையா அவ்விடம்?! //
      அப்படி எல்லாம் இல்லை! குழந்தைகளுக்கு அடுத்த 2 மாதம்கள் விடுமுறை, அந்த நேரத்தில் ஒரு வேலை நமது குடும்பம் வெளி ஊர் சென்றால் பொழுது போக்க ஏதுவாக இருக்கும் என்ற காரணம்தான் :-)

      Delete
  18. Replies
    1. விஜயன் சார், தோர்கல் எப்போது (எந்த மாதம்), எங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்து வந்த கேள்வி இது!

      Delete
    2. Parani from Bangalore : ஜூனில் ஒற்றைக்கை ஆசாமியின் இறுதி ஆல்பம் ; So தோர்கல் அதனைத் தொடர்ந்து !

      Delete
    3. என்ன சார் இப்படி சொல்லுறிங்களே :-)

      Delete
    4. Parani from Bangalore : சூட்டோடு சூடாய் ஒற்றைக்கையரை கரை சேர்த்து விடுவோமே என்ற அவா தான்!

      அப்புறம் "சர்ப்பங்களின் சாபம்" முதல் frame -ல் பாம்பு ;கையில் கத்தி ; நம் வசனம் தொடர்பாக நீங்கள் எழுப்பியிருந்த கேள்வி மறந்தே போச்சு :

      ஹேங்-மேன் கையில் கத்தியை எடுத்திருப்பது சர்ப்பத்தைப் போட்டுத் தள்ளத் தான் என்ற அவசியமில்லையே...? பாம்பை கொண்டு வந்த செவ்விந்தியனைத் தாக்கிடவும் அது இருந்திருக்கலாம் இல்லையா ? அவன் முந்திக் கொண்டு பாம்பைத் தூக்கி வீசும் போது அதனை கைகளால் நசுக்க முயற்சி செய்வது லாஜிக் தானே ?

      Delete
    5. விஜயன் சார், // ஹேங்-மேன்// அனுமானங்கள் பல வகை, அதனை நான் ஒத்துகொள்கிறேன்! கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட படி படத்தை பார்த்தவுடன் "வெட்டி" என்பது சரியாக அமையும் என தோன்றியதால் எழும்பிய வினா மட்டுமே!

      நமது காமிக்ஸ் கதைகளை படிக்கும் விதம்:-
      நான் பொதுவாக வசனம்களை படிப்தற்கு முன் படம்களை பார்த்து நிகழ்வுகளை உன்வாங்கி அதன் பின் வசனம்களை படிப்பேன். அதன் விளைவாக தோன்றிய கேள்வி எனவும் இதனை வைத்து கொள்ளலாம்!

      Delete
    6. // சூட்டோடு சூடாய் ஒற்றைக்கையரை கரை சேர்த்து விடுவோமே என்ற அவா தான்! //
      மிகவும் சரியான விஷயம்தான்!

      Delete
  19. மின்னும் மரணம் வெளியீட்டு தேதி ஏப்ரல் 19 தானே?????

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : இவ்வார இறுதி வரை பொறுமை - ப்ளீஸ் ! தயாரிப்புப் பணிகளை பதட்டங்களின்றித் தெளிவாய் செய்து கொண்டு உறுதிப்படுத்துகிறேனே..!

      Delete
  20. Good morning friends have a great Sunday

    ReplyDelete
  21. // ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் //
    1. அதிக பக்கம்களுடன் வெளிவரும் முதல் தமிழ் வண்ண புத்தகம்
    2. அதிக பக்கம்களுடன் வெளிவரும் நமது இரண்டாவது புத்தகம் (முதல் புத்தகம் XIII)

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII @ கண்டிப்பாக பெரிய விலையில் அதிக வசூலை கொடுக்கபோகும் ஒரு கனவு இதழ்!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முன் பதிவுகளுக்கு மட்டும் என வெளிவரும் முதல் இதழ்!

      Delete
    4. புத்தக கண்கட்சியில் ஓரே காமிக்ஸ் அதிக விலை வீற்க்கபோகும் இதழ். (10 காமிக்ஸ் Sales ஆனாலும் 10,000 ருபாய்)

      Delete
    5. @ FRIENDS : பக்கங்கள் ; பணம் ; வசூல் / மகசூல் இத்யாதிகளைத் தாண்டி - இது வேறொரு விதமான ரெகார்ட் !

      Delete
    6. ஒருவேளை, புத்தகத்தை முதல்முறையாக பார்சல் சர்வீஸில் அனுப்பறீங்களோ என்னவோ! ;)

      Delete
    7. ஒருவேளை, புத்தகத்தை முதல்முறையாக......எல்லாருக்கும் நேர்லயே கொண்டு வந்து கொடுக்க போறீயளா

      Delete
  22. கோடீஸ்வர கோமான் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ்.....

    ReplyDelete
    Replies
    1. லார்கோ விட எனக்கு ஷெல்டன் அண்ணாச்சி தான் புடிக்கும்

      Delete
  23. அடுத்த மாதம் லார்கோ வா......

    அதிர்ச்சி ....இன்ப அதிர்ச்சி ......

    சூப்பர் சார் ....

    ReplyDelete
  24. விஜயன் சார், மி.ம. புத்தகம் வெளி ஈடு ஏப்ரல் 19, நேரம் பற்றி சொல்ல முடியுமா (மாலையா/காலையா)? பயணத்தை திட்டமிட உதவும் என்பதால் இந்த கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு காலைகளில் பஸ்பமாகிப் போவோம் சார் ! சனியா ..? ஞாயிறா..? என்பது மாத்திரமே கேள்வி ! இந்த வார இறுதிக்குள் எங்கள் பங்குப் பணிகளின் பெரும்பான்மை முடிந்து விட்டால் நிம்மதியாய், தைரியமாய் அறிவித்திடுவேன் !

      Delete
    2. நன்றி. தங்கள் அறிவிப்புக்கு ஆர்வமுடன் காத்துகொண்டு இருப்பேன்

      Delete
  25. வணக்கம் மதுரையில் மாதம்தோறும் புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யவும் மதுரை ரயில்நிலையம் எதிரில் மல்லிகை புத்தகநிலையம் முயற்சிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கங்கள் வேல்முருகன்,

      என் வலைதள பிரவேசம் சமீபகாலமாக என்பதால் உங்களை இங்கு நான் சந்திப்பது முதல் முறையே..! உங்கள் 'நெடுஞ்சாலை' வலைபூவையும், நீங்கள் தொடரும் தளங்களும், உங்கள் பயண பதிவுகளும் மதிப்பை கூட்டுகிறது. முயற்சிக்க வேண்டிய கடைபற்றி குறிப்பு எடி கவனத்தில் கொள்ளவேண்டியவை. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து தொடருங்கள் நண்பரே..!

      Delete
    2. வேல்முருகன் : மதுரையைப் பொறுத்த வரையில் ஒரு மொத்த விநியோக ஏற்பாடை முகவர் ஒருவர் மூலமாய் செய்துள்ளோம் ! So எந்தக் கடைகளில் போடுவதென்ற தீர்மானங்கள் அவரது கைகளில் ! நீங்கள் குறிப்பிடும் கடைக்கும் கேட்டுப் பார்க்கச் சொல்வோமே..!

      Delete
  26. காலை வணக்கங்கள் எடிட்டர் & நண்பர்களே,

    *அதிர்வேட்டு நாயகன் லார்கோவை ஏப்ரலில் தடார் பிரவேசத்தை விசில் அடித்து பலத்த கைதட்டலுடன் வரவேற்கிறேன்..! உண்மையில் மறுபதிப்புகள் கண்களால் தடவிக்கொடுக்கும் மகிழ்ச்சியோடு நின்று விடுவதால் படித்துபரவசம் அடைய வாய்ப்புகள் மிக குறைவே...! இந்த குட்டி மாற்றம் மிக உற்சாமான,தேவையான ஒன்றே..!

    *''அட்டவணையில் ஒரு குட்டியான / ஜாலியான மாற்றமென்ற சேதியோடு இந்த வாரத்துப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி....டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி...'' என்ற வரிகள் டெக்ஸ் வில்லருக்கு 'தனி சந்தா' என்ற செய்திக்கு இணையாக ஒரு அறிவிப்பை நோக்கி மனம் அருவியாய் பாய்கிறது.. :-)

    * "மின்னும் மரணம்" அச்சுப் பணிகள் துவங்கி மூன்று நாட்களாகி விட்டன..."மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன்...ஏப்ரல் 13-23 தேதிகளுக்குள் நடந்திடும் சென்னை புத்தக சங்கமத்தில் நாம் பங்கேற்கிறோம்.." என்ற செய்திகள் ஏப்ரல் 19 ஞாயிறு அன்று (?) தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் சரித்திரம் படைக்கவிருக்கும் சாதனை புத்தகத்தை கண்குளிர பார்க்க போகிறோம் என்ற படபடப்பும், என் முதல் வகுப்பு தோழர்களை ஒருசேர பார்க்கப்போவதும் இப்போது நினைத்தாலே 'ஜிவ்'..!

    * தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து 'வெட்டி ஆபீசர்கள்' பதினைந்து பேர் 'சர்வாதிகாரி' தலைமையில் காலேஜ் திருவிழா போல சென்னைக்கு கிளம்ப தயாராகிவிட்டோம் என்பது கூடுதல் செய்தி..!

    * மர்மமனிதன் மார்டின் கதைத்தொடரின் படைப்பாளியான 'ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி' தனது கம்பியூட்டரில் வைத்திருந்த 'சரித்திரத்தை சாகடிப்போம்' B&W புத்தகத்தின் அட்டைபடம் பார்க்க....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. //கண்களால் தடவிக்கொடுக்கும் மகிழ்ச்சியோடு நின்று விடுவதால் படித்துபரவசம் அடைய வாய்ப்புகள் மிக குறைவே..//

      மாயாவிஜி !.. காமிக்ஸ் கஜானா என எடுத்து கொண்டால்

      நீங்கள் லார்கோ மாதிரி ..

      நாங்கள் எல்லாம் ஜெரோம் மாதிரி ..

      வெளியாக போகும் 95% மறுபதிப்பு காமிக்ஸ்கள் எங்களை போன்றவர்கள் படிக்காதவையே ..

      (எங்கே ஆசிரியர் மறுபதிப்புகளை குறைத்து விடுவாரோ என்ற பயத்தினால் எழுதியது ..:-)...]

      Delete
    2. மாயாவி ஜி, ஆதாரங்களை சேதாரமில்லாமல் போட்டு கண்களுக்கு அழகாக விருந்து படைகின்றிர்களே அருமை.

      Delete
    3. // வெளியாக போகும் 95% மறுபதிப்பு காமிக்ஸ்கள் எங்களை போன்றவர்கள் படிக்காதவையே ..//
      உண்மை.

      Delete
    4. @செல்வம்,
      கொஞ்சுண்டு (5%..?) பயத்தில்....நாம் எடிட்டருடன் போட்ட சந்தா C ஒப்பந்தத்தை மறந்துவிட்டிர்களே..! மறுபதிப்புகள் சென்னையில் விற்பனை விண்ணைத் தொட்டிருப்பதால், அதன் சீரான வேகத்தை எடிட்டர் குறைக்க வழியே இல்லை,கவலையே வேண்டாம்..! :-)))

      @ர(வுடி)வி
      புரியுது...எனக்கு 'ஸ்கேச்சு' போட்டுட்டிங்க..! :-)

      Delete
    5. //வெளியாக போகும் 95% மறுபதிப்பு காமிக்ஸ்கள் எங்களை போன்றவர்கள் படிக்காதவையே ..

      (எங்கே ஆசிரியர் மறுபதிப்புகளை குறைத்து விடுவாரோ என்ற பயத்தினால் எழுதியது ..:-)...]//
      +1

      Delete
    6. // வெளியாக போகும் 95% மறுபதிப்பு காமிக்ஸ்கள் எங்களை போன்றவர்கள் படிக்காதவையே ..//
      உண்மை.

      Delete
    7. @ mayavi.siva : //தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து 'வெட்டி ஆபீசர்கள்' பதினைந்து பேர் 'சர்வாதிகாரி' தலைமையில் காலேஜ் திருவிழா போல சென்னைக்கு கிளம்ப தயாராகிவிட்டோம்//

      அட...கட்டிளங்காளைகள் வீட்டினில் விடுமுறை விண்ணப்பங்களை வெற்றிகரமாய் சமர்ப்பித்து விட்டனவா ? :-)

      Delete
    8. Dasu Bala : ஏஜெண்ட்கள் வாயிலான விற்பனைகளிலும் சத்தமின்றி விற்பனை வெற்றிகளை ஈட்டி வருபவை மறுபதிப்புகளே எனும் போது - பயம் வேண்டாம் ! மறுபதிப்புத் தண்டவாளத்தில் போக்குவரத்து ஒரு போதும் நிற்காது !

      Delete
    9. விஜயன் ஸார்....

      கட்டிளங்காளைகளை கட்டி மேய்க்கற நம்ம காலேஜ் பிரின்ஸ்பால் நம்மள விட பெரிய அப்பாடக்கர் 'காமிக்ஸ் பிரியர்'..! ஞாயிறு கிழமை கண்டிப்பா காலேஜே லீவ்ன்னு சொல்லிட்டார்..! அப்பறம் காலேஜ் ரயிலையே...சரி 'டங்கு' ஸிலிப்...பஸ்ஸையே சென்னை பக்கம் திருப்பசொல்லியிருக்காருங்கோ..!

      Delete
    10. //அட...கட்டிளங்காளைகள் வீட்டினில் விடுமுறை விண்ணப்பங்களை வெற்றிகரமாய் சமர்ப்பித்து விட்டனவா ? :-)// -அதெல்லாம் ஓகே சார் . கவனிக்க வேண்டிய விதமாக கவனித்து (கால்ல விழுந்தது சொல்லி கூடாது ) பர்மிசன் வாங்கியானது , இப்போது நீங்கள் தான் தேதி அப்டேட்டனும். போ.கு .தல பரணீ யே முன்னின்று முன் பதிவு பணமாக 500 வசூலித்தாரு . ஒரு இங்கே க்ளிக் போடுங்கள் மாயவி சார் ....

      Delete
    11. ஸாரி கொஞ்சம் லேட்டாயிடிச்சி, நீங்க கேட்ட...இங்கே'கிளிக்'

      Delete
    12. @mayavi. siva
      //தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து 'வெட்டி ஆபீசர்கள்' பதினைந்து பேர் 'சர்வாதிகாரி' தலைமையில் காலேஜ் திருவிழா போல சென்னைக்கு கிளம்ப தயாராகிவிட்டோம் என்பது கூடுதல் செய்தி..!//
      சூப்பர்...வருக வருக :-):-):-)

      Delete
  27. // ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! அது என்னவாக இருக்குமென்ற யூகங்களை உங்களிடம் விட்டு விடுகிறேன் !//

    "பிரெஞ்சு மொழி தவிர்த்து அந்நிய மொழியில் வெளிவரும் முதல் தொகுப்பு !"

    ReplyDelete
    Replies
    1. saint satan & friends : ஊஹூம்..! இது வேறு விதத்திலொரு ரெகார்ட் !

      Delete
    2. ஹம் இதுவும் இல்லையா! அதுக்கும் மேலேயா ... மிடியல சார்!

      Delete
    3. ஒரு வேளை கின்னஸ் ரெகார்ட் ..............
      சயின்ஸ் ரெகார்ட் .................
      மெடிக்கல் ரெகார்ட் ...............
      இந்திரன் வசூலை மிஞ்சிய ரெகார்ட்......................

      ரெகார்ட் டான்ஸ் ............ஹா ஹா ..................என் மூளை காலி

      Delete
  28. சைமன் வருகை ..இந்த வெயிலுக்கு கண்களுக்கு இதமான குளிர்ச்சி .ஹி .ஹி

    ReplyDelete
    Replies
    1. லார்கோவின் புது பைலட் சில்க்கி சாங் (ஆஹா ! என்ன ஒரு ரொமாண்டிக் பெயர் !)கராத்தே ,ஐகிட்டோ என புரட்டி எடுப்பதை பார்த்தால் "விண்ணில் ஒரு வேங்கை "பெயர் இதற்கும் பொருத்தமானதாக தோன்றுகிறது ....!!!!!!!!

      Delete
    2. selvam abirami : அட...ஆமாம்லே...?!

      ஆனால் சின்னதாய் ஒரு பின்குறிப்பு : அம்மணி சற்றே வித்தியாச ரகம் !! கதையைப் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள் !

      Delete
  29. மி. ம_இல் பெரும்பாலும் கதைகள் நான் படிக்காதது எப்படா APR_19 வரும்னு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : தயாரிப்புப் பணிகள் முடியாத வரை - "அடடா ..ஏப்ரல் 19-க்கு இடைவெளி இன்னமும் கூடுதலாய் இருந்திடாதா ?" என்ற எண்ணம் தான் இந்தப் பக்கத்தில் !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. போர்க்கல அடிப்படைல் வேலை செய்து APR_01 தேதி மீ.ம வருமாறு அழுது அடிம்பிடித்து கேட்டுக்கொள்கிறேன்

      Delete
  30. //டெக்சின் விற்பனை எண்ணிக்கைகளைப் பின்தொடரும் நாயகர் டைலன் டாக் தானாம் !!
    டைலன் டாக் ரசிகர் மன்றம் என 2 தனித்தனிக் குழுக்கள் இத்தாலியில் உள்ளனவாம் ! //
    அருமையான ரசனை..வாழ்க வளர்க,,இத்தாலி மற்றும் பிரேசில் காமிக்ஸ் பிரியர்கள்....?!!!

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : ரசனையில் நாமும் சளைத்தவர்களல்ல என்பதைப் பதிவிட ஒரு ஐடியா துளிர் விட்டு வருகின்றது தலைக்குள்...!

      Delete
    2. துளிர்விட்ட ஐடியா இன்னிக்கே செடியாகி, பழம் கொடுத்தாலும் சந்தோசம்தான் எடிட்டர் சார்!

      Delete
  31. மின்னும் மரணம் ரிக்கார்ட் செய்வது மகிழ்ச்சி..சென்னை புத்தகத்திருவிழாவில் பதிவு செய்ததால்
    வரிசை எண் தரப்படவில்லை...புத்தகம் வீடு தேடி வந்துவிடும்தானே

    ReplyDelete
    Replies
    1. selvas : பெயர், முகவரியோடு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டு விடுங்களேன் - சரி பார்த்துக் கொள்ள !

      Delete
  32. Sir, Wild West Special என்ன ஆச்சு sir...

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : தற்சமயத்துக்கு பாக்கெட்டுக்குள் கை விட்டால் காற்று மட்டுமே ஆக்கிரமிப்பத்தால் WWS -ஐ ஓரிரு மாதங்களுக்குத் தள்ளி வைத்துள்ளோம் சார்! கடுமை - கோடையின் வருகையினில் மட்டுமல்லவே. ...நிதியிலுமே !

      Delete
  33. இந்த முறை லார்கோ அட்டை படத்திற்கு உபயோகபடுத்தி உள்ள வண்ணம் இதுவரை நமது காமிக்ஸ் அட்டை படம்களுக்கு உபயோகபடுத்தாதது. நித்தமும் குற்றம் அட்டை படத்தில் இந்த வண்ணம் சில இடம்களில் உபயோக படுத்தி இருந்ததாக ஞாபகம்.

    மொத்தத்தில் அட்டைபடம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஆரம்பத்தில் இந்த ராப்பருக்கு நமது டிசைனர் பிங்க் நிறமே தந்திருந்தார் ; நான் தான் (முதல் பாக) ஒரிஜினலின்படியே இந்த லாவெண்டர் நிறம் இருக்கட்டுமே என்று சொல்லி வைத்தேன் !

      பொதுவாய் டிசைனிங்கில் எனது ஞானம் பூஜ்யம் என்பதால் இது போன்ற மாற்றங்களை தைரியமாய் நான் சொல்வதில்லை ; ஆனால் இம்முறை அந்த பிங்க் நிறத்தை விட இது தேவலாம் என்று எப்படியோ மனதுக்குத் தோன்றியது !

      Delete
    2. நீங்க நம்ப T.ராஜேந்தர் மாதிரி ஒரு ஆல் ரௌண்டரா மாறி வரிங்க!

      Delete
    3. Sorry... இது மிஸ் பண்ணிட்டேன்

      ஏயே டன் டனகா ஏய் டணக்கு நக்கா!

      Delete
    4. Parani from Bangalore : அட....அவர் திறமைகளில் பத்தில் ஒரு பங்கு கூட வேண்டாம்...அவரது கேச வளத்தில் ஒரு குட்டிப் பங்காவது கிடைத்தால் கூட சந்தோஷமே !!

      Delete
  34. ஏற்று கொள்ளகூடிய சமாதானம் சொல்வது ஒரு கலை.உங்களுக்கு நன்றாகவே வருகிறது.லார்கோ மாற்றம் மகிழ்ச்சி சார்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. ravanan abujack : அட...இதில் சமாதானம் சொல்லச் / செய்திட எங்கள் தரப்பில் அவசியமே இல்லையே சார் ! "விண்ணில் ஒரு வேங்கை" தயாராகவே உள்ளது ; அறிவித்தபடியே அதனை களமிறக்குவது எங்களுக்கு ரொம்பவே சுலபமான வேலை தான்! ஆனால் உங்களின் வாசிப்பு அனுபவங்களை மனதில் கொண்டே இம்மாத மாற்றம் நிகழ்த்த எண்ணினேன் !

      அட்டவணையினை ஓராண்டுக்கு முன்பாகவே அறிவிக்காது அவ்வப்போது தீர்மானிப்பதன் பின்னணியே - இது போன்ற சிற்சிறு (அவசிய) மாற்றங்களைச் செய்திடும் பொருட்டே எனும் போது - I think this is a change worth it !

      Delete
  35. சார் ஒரு சின்ன வேண்டுகோள் லார்கோ பார்ட் 3-4 nbs இல் மாட்டிக்கொண்டது பைண்டிங் செய்ய முடியவில்லை NBS ஐ பிரிக்கவும் மனம் இல்லை முடிந்தால் 3-4 மட்டும் ஒரு இதழ் மறுபதிப்பு கிடைக்குமா ?

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : தனியானதொரு கதை தானே பழனிவேல்...? பைண்டிங் கூட்டணிக்குள் ஐக்கியம் ஆகிடாது - தனியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே ?!

      Delete
  36. வணக்கம் சார் . ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த 4கதைகளில் சுவாரசியம் இல்லாமல் இருந்தேன் ,ஆனால் லார்கோ இப்போது வருகிறார் என்ற செய்தி என் ஆர்வத்தை சற்றே அதிகப்படுத்தி உள்ளது சார் . பளா பளா சாவு -(மின்னும் மரணம்) ஜோரா ரெடியாவது எதிர் பார்ப்பை எகிற வைத்துள்ளது சார் .

    ReplyDelete
    Replies
    1. பளா பளா சாவு..! எங்க சார் புடிசிங்க

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : லார்கோவின் வருகை ஆர்வத்தை "சற்றே (தான்) அதிகப்படுத்தி உள்ளதா "? போச்சுடா !

      Delete
    3. பளா பளா சாவு..! கொன்னுட்டீங்க

      Delete
    4. பளா பளா சாவு -எங்கே சார் புடிச்சீங்க, கொன்னுட்டீங்க///- இது வாடஸ் அப் நண்பர் ஒருவர் சொன்ன தலைப்பு , நல்லா இருந்ததால்...........பாராட்டில் அவருக்கும் பங்குண்டு .
      //சேலம் Tex விஜயராகவன் : லார்கோவின் வருகை ஆர்வத்தை "சற்றே (தான்) அதிகப்படுத்தி உள்ளதா "? போச்சுடா !///-அது ஒன்றும் இல்லை சார் சேலம் திருவிழாவின் போது வந்த "நிழல் நிஜமாகிறது "- சற்றே ஏமாற்றம் தந்த காரணம் தான் ....ஹி.ஹி...

      Delete
    5. //பளா பளா சாவு -எங்கே சார் புடிச்சீங்க, கொன்னுட்டீங்க///- இது வாடஸ் அப் நண்பர் ஒருவர் சொன்ன தலைப்பு ///

      ஆ! குருவாயூரப்பா! இது என்ட ட்யூனாக்கும்... இது என்ட ட்யூனாக்கும்! :)

      Delete
    6. //ஆ! குருவாயூரப்பா! இது என்ட ட்யூனாக்கும்... இது என்ட ட்யூனாக்கும்! :)//-அஸ்கு புஸ்கு ..............பேட்டன் ரைட்டு வாங்கினீர்களா விஜய் ?

      Delete
    7. // /பளா பளா சாவு // அருமை! ஹா ஹா! எப்படி இப்படி :-)

      Delete
  37. Question to M.M.M author.
    1. Have Marin visited India in any of the stories ?
    2. Certain stories are pure science fictional like "amanusha alaivarisai" and most of them are historical + futuristic. I know editor typically chooses the later genre, but how do you define M.M.M genre ?
    3. Java and heroine back story ? There is a brief about java but is there any story that entirely deals with how java joined Martin?
    4. Martin mystery cartoon series has to do anything with you? Or is if completely separate venture? The reason I ask is there a possibility to see our stories in that cartoon series.
    5. A BIG thanks for creating such a different type it's stories and thanks to our editor for introducing that to us.

    ReplyDelete
    Replies
    1. கேள்விகள் கேட்டே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... ;)

      Delete
  38. @editor,
    Haven't received my March month books. Last month received the books without any reminder so I didn't call the office for march month.
    Could you please check?
    Name: Karthikeyan Veeravel.

    Guys,
    Have anybody else received their books in U.S.?

    ReplyDelete
  39. Happy to see largo, as somebody already mentioned we read too much cowboy in the starting off the year with bouncer and tex.
    Excited to see largo !

    ReplyDelete
    Replies
    1. சாமி... கடவுளே... இந்தப் புத்தகத்தில் லார்கோவும் கெளபாயாவே வரணும்...

      Delete
  40. Editor sir thanks for bringing the inside information.
    Never thought the authors will have this much reference material for creating books. For some reason I assumed they will just look it up in the internet.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : இன்டர்நெட் யுகத்துக்கும் முன்பே துவங்கிய தொடர்களல்லவா இவையெல்லாமே ?

      Delete
  41. I haven't read the reprints yet, keeping it for a super busy day as these old comics very easy to read and they are very good stress busters.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : As long as the reprints don't get to be a stress by themselves - great !!

      Delete
  42. // டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...! //
    எடி சார், என்ன சஸ்பென்ஸ் அது விரைவில் தல தனி சந்தாவில் ஜோரா வந்து கலக்கப்போறாரு என்பதுதானே.
    சீக்கிரம் சொல்லுங்க சார் ப்ளீஸ்.

    ReplyDelete
  43. விஜயன் சார், ஏப்ரல் மாத புத்தகம்கள் எங்கள் கைக்கு கிடைக்கும் நாள் ஏது என சொல்ல முடியுமா?
    மி.ம நீங்கலாக!

    ReplyDelete
    Replies
    1. அடுத்தபதிவில் பதில் !

      Delete
  44. // மே மாதத்துக்கு இடம் மாறிட, நம் கோடீஸ்வரர் திடும் பிரவேசம் செய்கிறார் - "டாலர் ராஜ்யம்" வாயிலாக //
    அருமை சார்,லார்கோ சாகசம் பெரும்பாலும் ஒரே (பிசினஸ்) ட்ராக்கில் சென்றாலும் விறுவிறுப்பாகவே உள்ளது,என்ன அயன் மேன் படத்தில் வருவதுபோல வசனங்கள்தான் அதிகம்,அது சிலருக்கு அயர்ச்சியை கொடுக்கலாம்.எனினும் அக்கதையின் போக்கு அப்படி உள்ளதால் அதை தவிர்க்க இயலாது என்று நினைக்கிறேன்.
    யார் கண்டது இந்த ட்ராக்கில் கதையை கொண்டு செல்வது ஒருவேளை சவாலான பணியாகக்கூட இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : லார்கோ கதைகள் ஒரு மாறுபட்ட ரகம் ! ஒரே விதமான template -ல் அவரது கதைகள் பயணிப்பினும், அதற்குள்ளும் சுவாரஸ்ய மீட்டரை தொய்வின்றிக் கொண்டு செல்ல அசாத்தியத் திறமை தேவை !

      படைப்பில் எதுவுமே சுலபமல்ல நண்பரே - கன்னித்தீவு சிந்துபாத் உட்பட !!

      Delete
  45. // மார்டினை ஆசியத் துணைக்கண்டத்தில் வெளியிடும் ஒரே பதிப்பகம் நாமே என்பதை அவர் matter of fact சொன்ன போது இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றியது //
    நிச்சியமாக சார்,நம் வாசகர்கள் சரியான காமிக்ஸ் வாசிப்பு தளத்தில் செல்வதும்,அதற்கு ஏற்ப அவர்களை நீங்கள் பயணிக்க வைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
    இனி மார்ட்டினை அட்டவணையில் கண்டிப்பாக இடம் பெற செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : ஊறுகாய் என்ற நிலையிலிருந்து கூட்டு என்ற நிலைக்கு உயர்த்திட்டுப் பார்ப்போமே..!

      Delete
    2. //Arivarasu @ Ravi : ஊறுகாய் என்ற நிலையிலிருந்து கூட்டு என்ற நிலைக்கு உயர்த்திட்டுப் பார்ப்போமே..! ///

      டெக்ஸுக்காக தனியா ஒரு இலை போடலாமே எடிட்டர் சார்?

      Delete
  46. இத்தாலியில் இருந்து சற்றுமுன் வந்த தகவல்..!
    மார்டின் கதைத்தொடரின் படைப்பாளியான 'ஆல்ப்ரெடொ காஸ்டெல்லி' கேட்ட LMS குண்டு புத்தகத்தை நண்பர் 'இத்தாலி விஜய்' தன்னிடம் இருந்த LMS ஐ பரிசாக படைப்பாளிக்கு கொடுத்து மகிழ்வித்தார்..! 'இத்தாலி விஜய்' இத்தாலியில் இருந்து சுடசுட அனுப்பிய போட்டோ பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. ரொம்பக் கெஞ்சிக் கேட்டார்... கொடுத்தேன்... இதையெல்லாம் உழியர்கள் பரஸ்பரம் உதவி செஞ்சுக்கறது இயல்புதானே? ;)

      Delete
  47. விஜயன் சார், இந்த மாத இதழ்கள் வரும் போது வந்த பதிவில், இந்த இதழலில் நமது T.R வருகிறார் என குறிப்பிட்டு இருந்தீங்க! மூன்று புத்தகம்களை படித்த பின்னும் அந்த T.R என்ன என்பது எனக்கு புரியவில்லை! யாராவது நமது ஆசிரியர் என குறிப்பிட்டது ஏது என்று சொல்லுங்களேன்!

    ReplyDelete
  48. விண்ணில் ஒரு வேங்கைக்குப் பதில் லார்கோ ஏன் ? இரண்டையுமே அனுப்பி வைத்தால்
    ரெட்டிப்பு சந்தோசம்தானே...

    ReplyDelete
  49. //ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! அது என்னவாக இருக்குமென்ற யூகங்களை உங்களிடம் விட்டு விடுகிறேன் ! ///

    மின்னும் மரணம் நிறைய ரெக்கார்டுகளை ஏற்படுத்தப்போவது உறுதி! குறிப்பாக, வெளியான ஓரிரு நாட்களிலேயே அனைத்துப் பிரதிகளும் காலியாகிவிட்டது என்ற ரெக்கார்ட்!

    ///டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...! ///

    அப்படியெல்லாம் காத்திருக்க முடியாது சார்... எங்களுக்கு அதுக்கெல்லாம் டையமில்லை. இப்பவே சொல்லுங்க!

    ///நமது 2013 தீபாவளி மலரில் வெளியான டேவிட் போநெல்லியின் பேட்டி தான் அவரது முதல் பேட்டியாம் !! ///

    அட!!! வெறித்தனமாக படிப்பதைத் தாண்டி அங்கே எந்தப் பயபுள்ளையும் படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாதது ஒரு ஆச்சர்யமான செய்திதான்! இது ஓவரா வித்தியாசமா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. மின்னும் மரணம் நிறைய ரெக்கார்டுகளை ஏற்படுத்தப்போவது உறுதி! குறிப்பாக, வெளியான ஓரிரு நாட்களிலேயே அனைத்துப் பிரதிகளும் காலியாகிவிட்டது என்ற ரெக்கார்ட்!
      LIKE

      Delete
  50. ///நமது புது அறிமுகத்தின் "விண்ணில் ஒரு வேங்கை" மே மாதத்துக்கு இடம் மாறிட, நம் கோடீஸ்வரர் திடும் பிரவேசம் செய்கிறார் ///

    தலீவர் அவர்களே... நீங்க சிவகாசிக்கு ஏதாச்சும் கடுதாசி கிடுதாசி அனுப்பிவச்சீங்களா? உண்மையச் சொல்லுங்க!

    ReplyDelete
  51. எடிட்டர் சார்,

    இப்போ அடுத்த பிரச்சினை என்னன்னா... மாதாமாதம் வந்து குவியும் புத்தகங்களை வீட்டில் எங்கே (பதுக்கி?) வைப்பது- என்பதுதான்!
    பேசாம தீபாவளி மலரோடு இலவச இணைப்பாக ஒரு பீரோ, கட்டில் ஏதாச்சும் கொடுத்தீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்... ( ஏன், தாய விளையாட்டேதான் தருவீங்களா?)

    ReplyDelete
    Replies
    1. @ஈ.வி,

      இலவச பீரோவா? முடியல.. :‍‍-)))))

      (சரி, நாஸ்டால்ஜிக் எபக்டுல எவ்வளவோ ரீபிரின்ட் கேக்குறீங்க? ஒரு தாயக்கட்டம் கேட்க யாருக்காச்சும் தோணுச்சா? நான்லாம் அந்தக் காலத்துல புக்கு வாங்குனவன் இல்ல, அதனால பாவம் பாத்து ஏதாவது ஒரு இதழுக்கு ஒரு தாயக்கட்டத்தை இலவச இணைப்பு போட்டுவிடவும் எடிட்டர் சார்!)

      Delete
  52. //பேசாம தீபாவளி மலரோடு இலவச இணைப்பாக ஒரு பீரோ, கட்டில் ஏதாச்சும் கொடுத்தீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.//

    அப்போ, பீரோவுல வெக்கிற அளவுக்கு உங்ககிட்ட புக்ஸ் இருக்கு.!!!!!

    அதுசரி., இன்னொன்னு எதுக்குங்க.?
    கறுப்புப்பணத்தை கட்டில்ல ஒளிச்சு வைப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஒருவேளை கறுப்பு வெள்ளை காமிக்ஸ ஒளிச்சு வைக்க கட்டில் கேக்குறிங்களா குருநாயரே.????

    ReplyDelete
    Replies
    1. //ஒருவேளை கறுப்பு வெள்ளை காமிக்ஸ ஒளிச்சு வைக்க கட்டில் கேக்குறிங்களா குருநாயரே.?? ///

      நல்ல கற்பனை! ஆனால் பதில் சொன்னா மாட்டிக்குவேன்றதால... :)

      வேகமா படிச்சப்போ 'குருநாயாரே'னு படிச்சுட்டேன்... ஹிஹி!

      Delete
  53. ஆங்! கண்டு பிடிச்சுட்டேன்! 'மி.ம' செய்யப் போற ரெக்கார்டு என்ன்னா... புக்கு வைக்க இடமில்லேன்ற நம்ம கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு உலகிலேயே முதல்முறையாக 'மி.ம'வை அலமாரியோட சேர்த்தே அனுப்பறாங்களோ என்னவோ! ('கண்டிப்பாக முன்பதிவுகளுக்கு மட்டுமே!'னு நினைக்கிறேன்) ;)

    ReplyDelete
  54. //டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...//

    கார்சனுக்கு கல்யாணம் ஆகப்போகுதா சார்.?
    ஏன் கேக்குறேன்னா, இத்தனை வயசாகியும் முடி கொட்டாம இருந்த கார்சன் , "ஒரு நாயகன் ஒரு சகாப்தம் " தொடரில் முடியெல்லாம் கொட்டி ரொம்ப டொக்கு விழுந்து காட்சியளிக்குறாரே.? கல்யாணம் முடிஞ்சாதானே இது சாத்தியமாகும்.!!!

    ReplyDelete
    Replies
    1. // முடியெல்லாம் கொட்டி ரொம்ப டொக்கு விழுந்து காட்சியளிக்குறாரே.? கல்யாணம் முடிஞ்சாதானே இது சாத்தியமாகும்.!!! ///

      :) ஷெரீப்பிடம் கிட்ஆர்ட்டின் கேள்வி கேட்கிறமாதிரியே கேட்கறீங்களே...

      Delete
  55. ஐயா ராசா
    என்னமோ சொல்றீங்க செய்றீங்க
    மாசா மாசம் நீங்க தர்ற காமிக்ஸ் வச்சு அறிவு பசி ஆத்துறோம்
    லார்கோ னா என்ன
    விண்ணில் ஒரு வேங்கைனா என்ன

    இப்படிக்கு
    என்ன போட்டாலும் படிக்கிறவங்க சங்கம்

    ReplyDelete
  56. லார்கோ வருவது மகிழ்ச்சி தான். ஆனால் அதற்காக விண்ணில் ஒரு வேங்கை தள்ளிப்போனதில் வருத்தமே.!

    அந்த பெண் பைலட்டின் சாகசம் காண ஆலோடு இருந்தேன். பிக்சர் குவாலிட்டியும் பிரமாதமாக இருந்தது. (டீஸரில்) .
    இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டுமே கடவுளே.!!

    ReplyDelete
    Replies
    1. பெண் பைலட்டின் ........ஜொள்ளு வழியுது துடையுங்கள் ஆர்டினாரே....

      Delete
    2. எவ்ளோ பாலீஸா சுத்தி வளைச்சு சொன்னாலும்,
      கண்டு பிடுச்சிடுறிங்களே மாமா.??
      க க க போங்கள்.!!!!

      Delete
    3. நீங்கள் படித்த காலேஜ்ல தானே நானும் படித்தேன் .........ஹி....ஹி....

      Delete

  57. DEAR MR ALBRETTO

    MARTIN STORIES CAN BE MADE TAMILNADU INDIAN CENTERED

    LIKE , PONNIYIN SELVAN OF Mr. Kalki

    will you create sir

    jj jj

    ReplyDelete
  58. //ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! //

    "கஷ்ட"மைசுடு இம்ப்ரிண்ட்ஸ் முயற்சி. காமிக்ஸ் உலகில் தமிழில் முதலில் செய்யப்பட்டு வெற்றியும் கண்டுள்ளதே., அதுவா சார்.???

    ReplyDelete
  59. வருசம் பொறந்து நாலு மாசம் ஆயிடுச்சே.? இன்னும் வசூல் ராஜா டெக்ஸ் வில்லரை கண்ணுலயே காட்டமாட்டேன்றிங்களே.?
    கடை எப்ப சார் திறப்பிங்க.???

    ReplyDelete
    Replies
    1. மே மாதம் கோடை மலராக வருவாரு தலை ......அப்படித்தானே சார் ?

      Delete
  60. கோமானுக்கு அருமையான அட்டைப்படம்.

    மார்டின் கதாசிரியருக்கு பயன்படக் கூடிய தமிழ்,தமிழக,இந்திய புராண,புதிர்கள்,மர்ம தகவல்களை அவருக்குக் கோடிட்டுக் காண்பிக்கலாமே ஸார்.வருங்காலத்தில் வந்தால் அட்டகாசமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //மார்டின் கதாசிரியருக்கு பயன்படக் கூடிய தமிழ்,தமிழக,இந்திய புராண,புதிர்கள்,மர்ம தகவல்களை அவருக்குக் கோடிட்டுக் காண்பிக்கலாமே ஸார்.வருங்காலத்தில் வந்தால் அட்டகாசமாக இருக்கும்..//

      சூப்பர் Fla sh.
      அருமையான யோசனை.
      எடிட்டர் சார்.,!இதனை மார்டின் கதாசிரியரின் கனத்துக்கு கொண்டு செல்லுங்களேன்.
      நமது புராணங்களில் மார்ட்டினுக்கு ஏகப்பட்ட தீனி கிடைக்குமே.!?!

      Delete
  61. //(மறுபதிப்புகளை மெய்யாகவே, முழுசுமாய்ப் படிக்கும் நண்பர்களின் சதவிகிதம் என்னவாக இருக்குமென்ற ஒரு curiosity எனக்குள் !) //

    இதற்கு முன்னர் படித்திருந்த கதையாக இருந்தாலும் நிச்சயம் புதுப்பொலிவில் ஒரு முறையாவது படித்துவிடுவேன். தவிரவும் அதெல்லாம் நினைவிலும் இருப்பதில்லை. (புத்தகமும் கையில் இல்லை என்பதும் வேறு விசயம். ஏனெனில் சிறுவயதில் நண்பர்கள் Share செய்து வாங்குவோம். என்னுடைய பங்குத் தொகை ரொம்பவும் குறைச்சலாக இருந்ததால் படிக்க மட்டுமே தருவார்கள்.)

    மறுபதிப்புகளில் இந்த குறிப்பிட்ட நால்வரின் கதைகளோடு,
    அக்காலத்தில் ஹிட்டடித்த ஒன்ஷாட் கதைவரிசைகள், மற்ற ஹீரோக்களின் கதைகளையும் கொஞ்சம் சேர்த்து வெளியிட்டால் நன்னாருக்கும் சார்.!!!

    ReplyDelete
  62. டெக்ஸ் மகன் கிட் டோட ஸ்டோரி ஏதாவது வரும் போல!
    R
    ( டெகக்ஸு மேட்டர்ல )

    குட்டி குட்டிங்கிறீங்களே சார்
    ஒரு வேளை அந்தமாதிரியான "குட்டி" விஷயமா இருக்குமோ என்னவோ!!!!!?!!!!!


    ReplyDelete
  63. .ம. ம. மார்டின் கதைகளில் என்னை அதிகம் கவர்ந்தது.
    "பழி வாங்கும் ரா "
    நிறைய முறை படித்தேன்.
    அடுத்த இடம்
    "அமானுஸ்ய அலைவரிசை "
    வித்தியாமான களம்.

    இந்த இடத்தில் மாண்ட்ரேக்கின் "நிழல் எது நிஜம் எது " பற்றியும் சொல்லவேண்டும்.
    நாம் அன்றாடம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தே ஒரு பிம் உலகை கற்பனை செய்து இருப்பார்கள். அடாஅடா , அருமையாக இருந்தது.
    இன்னும் சிலாகித்து பேச நிறைய உண்டு. ரேப்புக்கு ஒஸ்தானு.!!!

    ReplyDelete
  64. // மறுபதிப்புகளை மெய்யாகவே, முழுசுமாய்ப் படிக்கும் நண்பர்களின் சதவிகிதம் என்னவாக இருக்குமென்ற ஒரு curiosity எனக்குள் ! //
    முதலில் படிப்பது மறுபதிப்பு இதழ்களைதான்! இவைகளை ஏற்கனவே படித்து இருந்தாலும் அதனை மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டுவது நேர்கோட்டில் செல்லும் எளிமையான கதை!

    ReplyDelete
  65. சார் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் !~
    கோமானை முன்னே கொண்டு வந்ததற்கு நன்றிகள்.
    மின்னும் மரணம் அச்சில் என்பதால் ஒன்றாம் தேதியே கிடைத்து விடும் என்று நம்பலாமா !
    மின்னும் மரணம் ஒரேவாரத்தில் அச்சிட்டு உடனடியாய் கிடைக்கும் என்பது , ஆயிரம் பிரதிகளும் வரும் முன்னரே விற்று விட்டது அல்லது அடுத்த மாபெரும் வெளியீடு இரத்த படலம் முழு வண்ணத்தில் என விளம்பரம் வாங்கி வரும் இதழ் எனும் பெருமை கொண்டு வருவது தானே அதன் சிறப்பாய் இருக்க ஏழும் !.......சரிதானே சார் ?

    ReplyDelete
  66. டைகரின் கதை அருமை ! வேங்கைக்கு முடிவுரை வேண்டாம் எனும்ம் விதத்தில் உள்ளது ....தொடரட்டும் ...மார்சல் பணி மேன் மேலும் !@

    ReplyDelete
  67. இனிய காலை வணக்கங்கள் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  68. //டெக்ஸ் கதை வரிசைகளில் நமக்கொரு குட்டியான சந்தோஷச் சேதி காத்துள்ளது !! Wait n' watch...! //
    ஒரு வேளை 'இளவயது' டெக்ஸ் சாகசங்களை அவர்கள் வெளியிட்ட சற்றைக்கெல்லாம் நாமும் இங்கே தமிழில் உடனுக்குடன் வெளியிடப் போகிறோமா சார்?

    ReplyDelete
  69. புத்தக கொடொனையெ எட்டிப்பார்க்காத ஒரே ஒரு புத்தகம் நம்ம மின்னும் மரணம்
    ரிக்கார்ட் டான்ஸ்...சாரி ரிக்கார்ட் சரிதான சார்

    ReplyDelete
    Replies
    1. அட! ஆமால்ல... இதுவும் ஒரு ரெக்கார்டுதான்!

      Delete
  70. @Editor sir:
    பௌன்சரின் 'ரௌத்திரம் பழகு' இதழை 'உயர்திரு.மணியம் செல்வம்' அவர்கள் வெளியிட்டது போல 'மின்னும் மரணம்' இதழினையும் பிரபலம் யாரேனும் வெளியிட உள்ளார்களா சார்?
    அப்படி வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே...(நண்பர் 'கிங் விஸ்வா' அவர்கள் கவனத்திற்கும்...)

    நேற்று திடீரென இந்த ரோசனை மனதுக்கு வந்தது....
    சென்னைப் புத்தகத் திருவிழாவின் போது நமது ஸ்டாலில் 'பௌன்சரின் 'ரௌத்திரம் பழகு' இதழை 'உயர்திரு.மணியம் செல்வம்' அவர்கள் வெளியிட்ட ஃபோட்டோவினை ஒரு பேனர் மாதிரி நாம் வைதிருக்கலாமோ?!

    அதைப் பார்த்தாவது 'காமிக்ஸ்' என்பது வெறும் சின்னக் குழந்தைகளின் சமாச்சரம் மட்டுமல்ல...அது '7 முதல் 77' வரை உள்ள அனைவருக்குமானது என்று பல பேர் புரிந்துகொள்ள வசதியாக இருந்திருக்குமே...இன்னும் பல பேரை நமது ஸ்டால் பக்கம் அது அழைத்து வந்திருக்குமே என்ற ஒரு எண்ணம் திடீரென்று தோன்றியது சார்...

    பின் குறிப்பு:
    ஹும்ம்ம்...இப்ப இந்த எண்ணம் தோன்றி என்ன பிரயோஜனம்...

    ReplyDelete
    Replies
    1. // இதழை 'உயர்திரு.மணியம் செல்வம்' அவர்கள் வெளியிட்ட ஃபோட்டோவினை ஒரு பேனர் மாதிரி நாம் வைதிருக்கலாமோ?! //
      Very good suggestion! அதனால் என்ன இனிவரும் புத்தக திருவிழாகளில் ஒரு பானேர் வைத்து விட்டால் போச்சு!

      Delete
  71. //ஒரு விதத்தில் "மின்னும் மரணம்" ஒரு ரெகார்ட் செய்திடவுள்ளது என்று நினைக்கிறேன் ! //
    ஒருவேளை 'டைகரின்' வெளிநாட்டு ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு 'மின்னும் மரணம்' புத்தகத்தினை அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளனரோ?!

    ReplyDelete
  72. நேற்று எதேச்சையாக 'சன் சினிமா க்ளப்' சேனலில் 'நினைவுச் சின்னம்' படம் பார்த்தேன்...
    அந்த படத்தில் ஹீரோ பிரபு வில்லன் விஜயகுமாரின் பையன் முரளியை வளர்த்து வருகிறார்...வில்லனோ பிரபுவின் பெண்ணை வளர்த்து வருகிறார்...முரளியும் அந்த பெண்ணும் (பெயர் தெரியவில்லை) கல்யாணம் செய்து கொள்கிறார்கள்...க்ளைமேக்ஸில் தான் இந்த உண்மை தெரிய வருகிறது...முரளியும் பிரபுவும் சேர்ந்து வில்லைனைப் பழி வாங்குகிறார்கள்...

    இதை எதுக்கு இங்க சம்பந்தமே இல்லாம சொல்றேன்னா...

    நேற்றைக்கு முந்திய நாள் அதாவது சனிக்கிழமை, பௌன்சரின் 'ரௌத்திரம் பழகு' கதை படித்தேன்...
    அதில் 'பௌன்சருக்கு' பிரபுவின் ரோல்...'சேத்' க்கு முரளி ரோல் (வில்லனின் மகன் என்பதற்கு பதிலாக வில்லனின் அண்ணன் மகன் ரோல்)...'டெபோரா' வில்லனின் சொந்த மகள் என்பதற்குப் பதிலாக வில்லனின் வளர்ப்பு மகளாக...

    ஹும்ம்ம்ம்ம்...'ஜோடோரோவ்ஸ்கி' நீங்க எப்ப தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்க... :D

    ReplyDelete
    Replies
    1. // ஜோடோரோவ்ஸ்கி' நீங்க எப்ப தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்க //
      ஹா ஹா! சூப்பர் கண்டுபிடிப்பு.

      Delete
    2. // ஜோடோரோவ்ஸ்கி' நீங்க எப்ப தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்க //

      :))

      Delete
    3. // ஜோடோரோவ்ஸ்கி' நீங்க எப்ப தமிழ்நாட்டுப் பக்கம் வந்தீங்க //
      ROOM போட்டு ஆராய்ச்சி பண்ணுவீங்க போல......

      Delete
  73. நான் LARGO series_இல் "துரத்தும் தலைவிதி" முன் வந்த எந்த ஒரு பக்கத்தையும் படிக்கவிலை
    (என் பெயர் லார்கோ மறுபதிப்பீல் வாங்கினேன்) என் பெயர் லார்கோ அப்புறம் உள்ள லார்கொ காமிக்ஸ் பதிப்புகளை மறுபதிப்பீல் வெளியீடுகலேன்

    ReplyDelete
  74. இந்த மற்றும் கடந்த பதிவுகளில் உள்ள உங்கள் பயண அனுபவங்கள் நாம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளச்செய்யும் மகிழ்ச்சியான பெருமைக்குரிய செய்திகள்.

    இருக்கும் புத்தகங்களை காணும் வரைக்குமே பொறுமையாய் இருக்கமுடியவில்லை. இந்த அழகில் 'டெக்ஸுக்கு ஒரு மகிழ்ச்சியான சேதி' 'மி.ம சாதனை' என்று இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வைக்காதீர்கள் என்று பல தடவைகள் உங்களுக்கு சொல்லியாயிற்று. எங்களை இப்படி டென்ஷன் செய்வதில் ஒரு சந்தோஷமா உங்களுக்கு? நடத்துங்கள்!

    மி.ம குண்டு புக்கை காண ஆவல் என்று சொன்னால் அது மிகவும் குறைவு. எப்போ அந்த நாள் வந்து தொலையும் என்று எரிச்சல் வருமளவுக்கு ஆவலாக உள்ளது!

    சென்னையில் ஆறு இடங்களில் புத்தக விற்பனை என்பது விற்பனை யுக்தியில் தங்களின் மனமாற்றத்தை காட்டுகிறது. நிச்சயம் இது சோடை போகாது. ஆனால், துவக்க கால பிரச்சினைகளை பொறுமையோடு களைந்திட முயலுங்கள். கணிசமான பலனை இது கொடுக்க வாழ்த்துகள்!

    ReplyDelete