Powered By Blogger

Tuesday, March 24, 2015

இது கவிதை நேரம்..!

நண்பர்களே,

வணக்கம். ஒரு அவசர வேண்டுகோள்  : "மின்னும் மரணம்" தொகுப்பினில் ஒரே ஒரு பக்கம் காலியுள்ளது ! அதனில் நம் தளபதியைப் பற்றி குட்டிக் குட்டியாக ஹைக்கூ கவிதைகள் சிலவற்றைப் போட்டாலென்னவென்று     தோன்றியது ! So உங்களுள் உறையும் அந்த வைரமுத்துக்களையும், நா.முத்துகுமார்களையும் தட்டி எழுப்புங்களேன் ? ஆறு வரிகளுக்கு மிகாமல். அழகாய் நம் தளபதியாரைப் பற்றிய கவிதைகளாக எழுதி அனுப்பிடலாம் ! சீரியஸ் கவிதைகள் ; ஜாலியான கவிதைகள் - எல்லாமே welcome !

இந்த வேண்டுகோளை கடந்த பதிவின் பின்பகுதியினில்  இணைத்திட்டால்  நிறைய நண்பர்களின் கண்களில் படாமலே போகக் கூடுமென்பதால் இதற்கொரு தனிப்பதிவு status தந்துள்ளேன் ! உங்கள் கவிதை அருவிகளை இங்கேயே ஆறாய் ஓடச் செய்யுங்களேன் - அதனில் எல்லோரும் மூழ்கி களித்திடுவோமே ?! 

இது தவிர, இதழோடு நாம் தரும் அந்த வழக்கமான book-mark -ஐ நீங்களே பிரத்தியேகமாய் டிசைன் செய்திடும் வாய்ப்பும் உள்ளது ! நீங்கள் டிசைன் செய்திடும் அழகான ஆக்கத்தினை உங்களின் பெயரோடு சேர்த்து அச்சிடுவதாக உள்ளோம் !  இதுவுமே டைகரின் உருவமோ / செய்தியோ தாங்கியதாகவே இருத்தல் அவசியம் ! So why not get cracking ?

392 comments:

  1. Replies
    1. கவிதையா...அடியேனுக்கு சான்சே இல்லை.வித்தக கவிஞர் ஈரோடு விஜய் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !!!

      Delete
    2. பிசாசின் சின்ன ஹைக்கூ ...( அமரர் சுஜாதா மன்னிப்பாராக )

      "கிழட்டு உல்லி ரெட்டும் குடிகார ஜிம்மியும் உடன்வர

      கம்பீரமாக குதிரையில் கேப்டன் டைகர். எதிரே மினுமினுக்கிறது...

      " மரண பாலைவனம்! "

      Delete
    3. // கவிதையா...அடியேனுக்கு சான்சே இல்லை.வித்தக கவிஞர் ஈரோடு விஜய் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !! //

      கூடவே வண்ணப்புறாவும் :))
      .

      Delete
    4. வண்ணப் புறா, மேச்சேரி ரவி இவங்கள மாதிரி பிறவிக் கவிஞர்கள் எல்லாம் இருக்கும்போது நான் மேடைக்கு அடியிலதான் வரமுடியும் சாத்தான்ஜி! :)

      Delete
    5. தன்னடக்கம் சாஸ்தியா தெரியுதே குருநாயரே.!!!!!
      பிறவிக்கவிஞர்னா
      பிற + விக் + கவிஞர்
      (பிறக்கும்போதே விக்கு வெச்சிக்கிட்டு வந்த கவிஞர்னு அர்த்தமோ)

      Delete
  2. வணக்கம் எடிட்டர் சார்,என்னாது கவிதையா ? ரொம்ப கஷ்டமான வேலையாச்சே.

    ReplyDelete
  3. திடீர் பதிவில் திடுக்கிடும் பணியா?

    ReplyDelete
  4. Replies
    1. கொஞ்சம் டி.ஆர் வாடை அடிக்குதே.

      Delete
    2. பட்டையை கிளப்புங்கள் கண்ணன் ..
      அட்டகாசமான Beginning ...

      Delete
    3. சூப்பர் கண்ணன் ஜி.

      Delete
    4. ஆ! இன்ஸ்டன்டா வந்த கவிதை இம்புட்டு அழகா!!

      மேச்சேரியின் வைரமுத்து அவர்களே... ( ஆனா சில விசயங்கள்ல உங்களை 'கண்ணதாசன்'னு சொல்றதுதான் சரியா இருக்கும் ;) )

      Delete
  5. விஜயன் சார்
    ஒரு தாழ்மையான வேண்டுகோள்

    ஹாட் லைன் எழுத சொல்லி கேட்டோம்
    பதிலில்லை உங்களிடமிருந்து

    அந்த ஒரு பக்கத்தில் நீங்கள் ஏன்
    டைகரை பற்றி எழுதி எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கலாமே

    நன்றி :))
    .

    ReplyDelete
    Replies
    1. நீங்ககூட ஒரு கவிதை எழுதலாமே சிபி அவர்களே? இஸ்கூல்ல படிக்கும்போது தன்னந்தனியா கவிதைப் போட்டில கலந்துகிட்டு முதல் பரிசெல்லாம் வாங்கினிங்களாமே?! ;)

      Delete
  6. வன்மேற்கின் தளபதியும் நீயே,என்றும்
    தங்கத் தமிழ்நாட்டின் தளபதியும் நீயே,
    சிங்கத்திற்கு பிடரி அழகு உனக்கு
    கலைந்த முடிகள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. //உனக்கு
      கலைந்த முடிகள் அழகு//

      அதாவது... 'மயிரழகன்'னு சொல்லவரீங்க? ;)

      Delete
    2. ஏன் பூனையாரே இந்த கொலைவெறி.

      Delete
  7. வாழ்க்கையே போராட்டம் உனக்கு
    என்றுதான் வாழ்வில் சீர் ஓட்டம்.

    ReplyDelete
    Replies
    1. தேரோட்டும், கார் ஓட்டும் - இதெல்லாம் விட்டுட்டீங்களே ரவி அவர்களே! ;)

      Delete
    2. நீங்க கவித புலி ஜி,பெருந்தலைங்க வரதுக்குள்ள ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத அடிச்சி விட்டு ஒரு விளம்பரம் தேடிக்கலாம்னு பாத்தேன்.

      Delete
    3. //நீங்க கவித புலி ஜி //

      ஆங், அப்படிச் சொல்லுங்க! அதுவும் கவிதை கேட்டு பதிவு போட்டிருக்காரே... அவர் காதுல விழுற மாதிரி நல்லா சத்தமா சொல்லுங்க! ;)

      Delete
    4. @ FRIENDS : ஹல்லோ...ஹல்லல்லோ....இங்கே சிக்னல் செரியாவே கிடைக்கலே....ஹல்லோ..!

      Delete
  8. வணக்கம் சார் . மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட வேண்டி உள்ளது சார் . 1000ரூபாய் குடுத்து வாங்கும் ஒரு புதையலில் ஒரு நண்பர் எழுதும் கவிதை (?) .. .....ஏற்புடையதாக இல்லை சார் . அங்கே நீங்கள் ஹாட்லைன் எழுதுங்கள் அல்லது இந்த 11பாகத்தையும் தனி தனியாக வெளியிட்ட போது ஏதேனும் சுவாரஸ்யமான அனுபவம் இருந்தால் பகிருங்கள் சார் அல்லது 11பாகத்தின் ஒரிஜினல் அட்டை படங்களை குட்டியாக போடுங்கள் சார் . . இந்த மைல் கல் இதழில் உங்கள் எழுத்தை தவிர மற்றவர்கள் எழுத்து வேண்டாமே ப்ளீஸ் .இது நல்ல ஐடியா தான் ,ஆனால் மற்றொரு ரெகுலர் இதழில் இதை செயல்படுத்துங்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. "இல்லாங்காட்டி லயன்-250 'தல' ஸ்பெஷல்ல அவரின் புகழ்பாடி ஒரு 15 பக்க கவிதைக்கு நீங்க பக்கம் ஒதுக்கணும்"னு கேளுங்க விஜயராகவன்! ;)

      Delete
    2. இல்ல பூனையாரே 15பக்க கவித புக்கு இலவச இணைப்பா கேளுங்ளேள்

      Delete
    3. @Erode Vijay & @Jaya Sekhar

      உங்க "தல" விசுவாசம், ரொம்பா too much :)

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் @ இதனை நான் ஆமோதிக்கிறேன்!

      Delete
    5. சேலம் Tex விஜயராகவன் : Relax நண்பரே...!!ஆயிரம் ரூபாயக்கொரு முயற்சி என்ற ஒரு காலத்துப் பகற்கனவை இன்றைய நனவாக்கிய பெருமை இந்த நண்பர் குளாமுக்கே சேரும் !

      தம் கனவை எனதாக்கி ; நம் கனவை நிஜமாக்கிய உள்ளங்களுக்கு 548 பக்கங்களுக்குள் ஒற்றைப் பக்கத்தை ஒதுக்குவதால் நிச்சயமாய் அந்த இதழ் பெருமை கொள்ளுமே தவிர அயர்ச்சி காணாது ! இதழைக் காணும் வரை பொறுமை ப்ளீஸ் !

      Delete
    6. // நம் கனவை நிஜமாக்கிய உள்ளங்களுக்கு 548 பக்கங்களுக்குள் ஒற்றைப் பக்கத்தை ஒதுக்குவதால் நிச்சயமாய் அந்த இதழ் பெருமை கொள்ளுமே தவிர அயர்ச்சி காணாது ! இதழைக் காணும் வரை பொறுமை ப்ளீஸ் ! //
      சேலம் Tex விஜயராகவன் @ இதனை படித்த பின் எனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கிறேன்!

      Delete
  9. ஒரு பக்கம் மட்டும்தானா

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர்... மொதல்ல ஒரு வரியாவது எழுத முடியுதான்னு பாருங்க! :D

      Delete
  10. வாழ்வெங்கும் மரணம் மின்னினாலும் மேற்கே
    ஒரு மின்னலாய் எழுந்து திசை
    திரும்பாத தோட்டாவாக மாறி புதையலை
    தேடும் புயலாக வந்தாய்.

    ReplyDelete
    Replies
    1. இறுதியில் வேங்கைக்கு முடிவுரை ஆனாய்...

      Delete
  11. நீங்க எல்லாம் நல்லா வருவிங்க.!!

    மைல்கல் இதழ்ல ஒரிஜினல் கதாசிரியர் பேரும் ஓவியர் பேரும் போடலாமா இல்ல அதுவும் வேணாமா.???
    இறுக்கி கண்ணை மூடிக்கோங்க உலகம் இருண்டிடும்.

    ReplyDelete
    Replies
    1. நோ நோ அதையும் போடக் கூடாது.

      Delete
  12. கவிதையை பொறுத்தவரையில் என்றும் நான் Audience Gallery தான் ! கலக்குங்கள் நண்பர்களே !

    ReplyDelete
  13. ஒரு எரிமலை இங்கே ஏ ணியாகிறது ..
    ஏழைகள் ஏறிச்செல்லும் தோ ணி யாகிறது
    மந்தி ரச்சொல்லாம் டைகர் என்னும் மூன்றெழுத்து -செவ்
    விந்தியரின் வாழ்வை மாற்று ம் தலைஎழுத்து
    தளபதி நீ வெற்றியின் உச்சியில் கால்பதி ..
    உனக்கேது ஈடு ?..இல்லை அது கண்கூடு.....

    ReplyDelete
    Replies
    1. விடாதீங்க வண்ணப்புறா... இன்னும் இன்னும்...

      Delete
  14. பத்தரை மாற்றுத் தங்கத்தை மட்டுமே
    பார்த்திருக்கும் பூமி -இதோ
    பார்க்கப் போகிறது பதினோரு மாற்றுத்தங்கம்
    சிகுவாகுவா சில்க்கின் மனம் கவர் சிங்கம்
    மின்னும் மரணத்தின் நாயகன் பெயர்
    முன் பதிவிற்கு மட்டுமே கிடைப்பார் டைகர்..

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ அது ஒரு ஏழரை மாட்டுத் தங்கம்'னு தோணறது!

      விடாதீங்க வண்ணப்புறா... அப்படித்தான் அப்படித்தான்!

      Delete
    2. /சிகுவாகுவா சில்க்கின் மனம் கவர் சிங்கம் //
      எனக்கென்னவோ இதில் பொருட்பிழை இருப்பதாகப் படுகிறது :-)))

      Delete
    3. @ Radja

      சிங்கம்னா... லயன்
      லயன்'னா... நம்ம சிங்கமுத்து வாத்தியார்
      ஆங், இப்போ எல்லாம் தெளிவா புரிஞ்சிடுச்சு! :)

      Delete
    4. Erode VIJAY : பூனைகள் எப்போதுமே இப்படித் தானா ? இல்லை இப்படித் தான் எப்போதுமேவா ?

      Delete
    5. Radja : ///சிகுவாகுவா சில்க்கின் மனம் கவர் சிங்கம் //
      எனக்கென்னவோ இதில் பொருட்பிழை இருப்பதாகப் படுகிறது :-)))//

      வாருங்கள் கடல் கடந்த நக்கீரரே.. :-)

      Delete
  15. Replies
    1. ஹாஹாஹா! சூப்பர்!!

      வண்ணப்புறா Vs கரும்புறா

      விடாதீங்க கண்ணன்... அப்படித்தான் அப்படித்தான்...

      Delete
  16. Surprise Post. Let me read and come back.
    Thanks @Mayavi for letting us know about the new post.

    ReplyDelete
  17. வேடந்தாங்கல் பறவைகள் போல் வேறு வேறு கெளபாய்கள்
    அத்தனை பேர்க்கும் ஒரேஆசை
    உன் வேடம் தாங்கல் ....
    வான்கோழிகள் சிறகை விரிக்க ,மயி ல் தோகையே
    ஏப்ரலில் உன் மின்னும் மரணம்
    ஏக்கத்தில் எங்கள் கண்ணும் மனமும்..

    ReplyDelete
    Replies
    1. வண்ணப்புறா.!
      அருமை! அருமை.!

      Delete
    2. உங்க வான்கோழிகள் லிஸ்ட்டுல எங்கள் 'தல' இடம்பெறலேன்னா நிச்சயம் இதுவொரு அட்டகாசமான கவிதைதான்!

      கமான் வண்ணப்புறா... இன்னும் இன்னும்...

      Delete
    3. vijay...தூக்கம் வருவதால் நாளை தொடரும்

      Delete
    4. உறங்கி ஓய்வெடுங்கள் வண்ணப்புறா...

      நித்திரையின் நடுவினிலே - வண்ணச்
      சித்திரமாய் வரும் கவிதைகளை
      பத்திரமாய் நினைவில் கொண்டு - இங்கே
      முத்திரை பதித்திட நித்தமும் வாருங்கள் வண்ணப்புறா!

      (எல்லாரும் பார்த்துக்கோங்க... நானும் பெரிய ரவுடிதான்!) :)


      Delete
    5. //(எல்லாரும் பார்த்துக்கோங்க... நானும் பெரிய ரவுடிதான்!) :)//

      உங்க பேரு விஜய சேகர் இல்லையா.??? (தலைநகரம் வடிவேலு பெயரா.?)

      எதுக்கும் உங்க பேர மூணுவாட்டி திருப்பி சொல்லி திரும்பி திரும்பி பாருங்க.!! :)

      Delete
  18. Replies
    1. //மார்ஷலாக மாறியதும் ஏனோ பார்ஷலாகி போனாய்.! ///

      ஹாஹாஹா! :))))

      Delete
    2. \\மூக்கு முழுதாய் இல்லையெனினும் முத்தம் இடுதலில் முதல்வன் நீ\\
      கடத்த பதிவின் மி.மரணம் பற்றிரிய vijay sir _இன் கேள்விக்கு ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் அதிக லிப்_LOCK இருக்கிறதூ மி.மரணம் இருக்குமோ?.

      Delete
    3. KiD ஆர்டின் KannaN : //மூக்கு முழுதாய் இல்லையெனினும் முத்தம் இடுதலில் முதல்வன் நீ.!//

      இதைத் தான் ரணகளத்திலுமொரு கிளுகிளுப்பு என்பதோ ? :-)

      Delete
  19. அதிகாரத்திற்கு கட்டுபடுவான்!
    அதற்காக அடிமையாக உழலமாட்டான்!
    சீரியஸாக சிந்திப்பதுமுண்டு!
    சிறுபிள்ளைதன விளையாட்டுமுண்டு!
    தோழமை கொண்டால் தோளில் கைபோடுவான்!
    தாக்கவந்தால் தோலை உரிப்பான்!
    டைகர் என்றாலே நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் உண்டு!
    ஷிநாபா என்ற பெயரோடு நிறைய வீரமும் உண்டு!
    :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆர்டின்!

      Delete
    2. cap tiger @ உங்களுக்கு கவிதையெல்லாம் எழுத தெரியுமா! அடி பின்னுங்க!

      Delete
  20. "வன் மேற்கின் அசராத சிங்கம்
    அவன் தோற்றத்தில்தான் கொஞ்சம் அசிங்கம்!
    அலுக்காத தொடர் பயணப் போராளி
    இருள் வாழ்வுக்குள் அவன் ஒரு நம்பிக்கைப் பேரொளி!
    ஆட்டம் காட்டும் எதிரிகள் ஆயிடுவார் அவன் முன் சைபர்
    தோட்டா எதிரொலியாய் ஒலித்திடும் அவர் பெயர்தான் டைகர்!"

    ReplyDelete
    Replies
    1. Podiyan : இரண்டாவது வரியை மட்டும் லேசாக டிங்கரிங் செய்தால் சூப்பராக இருக்குமன்றோ ?

      Delete
    2. இப்படி மாற்றிடலாமா சார்?
      "கரடு முரடு மலை, பாலைவனமெல்லாம் அவன் வாழ்வின் நிரந்தர அங்கம்"

      Delete
    3. Podiyan : ஆங்..இது தேவலை !

      Delete
  21. 'கதிர்'கள் எரித்தாலும் 'இலை'கள் வீழ்ந்தாலும் தயங்காமல் செல்லும் 'புலி'
    துரோகம் அணைத்தாலும் துவண்டே போனாலும் மீண்டும் திருப்பிக் கொடுக்க
    நேரம் ஆனாலும் காலம் போனாலும்
    அனற் காற்றாய் அருக விடாமல்
    தீயோரை தாக்க பதுங்கிபாயும்
    இது கழுதைப்புலியல்ல காவட் புலி..!

    "இலைகள்","கதிர்கள்" விளங்கிவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா விளங்குது Jeev.

      Delete
    2. \\"இலைகள்","கதிர்கள்" விளங்கிவிட்டதா?\\
      புரீயலைையே

      Delete
    3. புரியாதவரை...எனக்கு நன்மை!

      Delete
  22. காலங்கார்த்தாலே கவிதைக்குளம்பிலே குளிச்செழுந்து மனசு குழம்பி,மூளை குழம்பி தலையும்
    கிர் ஆனதாலே..நம்ம பங்குக்கு நாமளும் ஒன்னை அடிச்சி விடுவோம் மக்களே காசா பணமா...
    இராவணனுக்கு பத்துதல
    அந்த ஆறுமுகனுக்கு ஆறு தல
    அட நம்ம பிரம்மனுக்கு நாலு தல
    தல க்கு த்துணையா மூணு தல இந் த
    தளபதிதான் பார்த்தா தறுதல ..வீரத்திலே
    போடணும் அவனுக்கு தபால்தல

    ReplyDelete
    Replies
    1. வெட்டுக்கிளியாரே.!
      ஹாஹாஹா.! செம்ம.!!!

      Delete
  23. வேகத்திலே நயாகரா
    வீரத்திலே வயாகரா
    சிந்தனையிலே சேகுவாரா
    சிகுவாகுவா சிக் குவாளா
    மொத்தத்திலே டைகர்தான் தலை
    வைக்கணும் அவனுக்கு சிலை

    ReplyDelete
    Replies
    1. நல்லாயிருக்கு! ஆனா 'டைகர்தான் தலை'னு சொன்னதை ஏத்துக்கிட முடியாது! தலைன்னா 'தல' மட்டும்தான்!

      Delete
  24. ஊத்து க்குளி வெண்ணெயி லே செஞ்ச உடம்பு இல்லே இல்லே
    பாத்துக்க நீ பரட்டெதான் தலே தலே
    பாலைவனம் காடுமேடுதான் வீடு
    பகைவனுக்கு காட்டுவான் சுடுகாடு
    டைகருக்கு மேலே இங்கே யாரு யாரு
    டைகர் பேரைச் சொன்னா கிடைக்கும்யா சோறு சோறு

    ReplyDelete
  25. எதிரிங்க மத்தியிலே இவன் ஹல்க்கு
    எப்பபாரு நினைப்பெல்லாம் சில்க்கு
    சரக்கடிச்சா ஏ று மையா கிக்கு
    சாதாரணமா நினைச்சவங்க பேக்கு
    கடுகளவும் காட்டமாட்டான் பந்தா
    காட்டட்டுமா டைகர் புகழ் ஏ ..இந்தா

    ReplyDelete
  26. நண்பர்களே கலக்குங்கள் .... _/\_

    எல்லோர் கவிதையும் அருமை ... ஆசிரியர் இன்னும் பல பக்கங்களை ஒதுக்க வேண்டும் என நினைக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : நீங்களும் பங்கேற்கலாமே நண்பரே ?

      Delete
  27. //சேலம் Tex விஜயராகவன்24 March 2015 at 22:08:00 GMT+5:30
    வணக்கம் சார் . மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட வேண்டி உள்ளது சார் . 1000ரூபாய் குடுத்து வாங்கும் ஒரு புதையலில் ஒரு நண்பர் எழுதும் கவிதை (?) .. .....ஏற்புடையதாக இல்லை சார் . அங்கே நீங்கள் ஹாட்லைன் எழுதுங்கள் அல்லது இந்த 11பாகத்தையும் தனி தனியாக வெளியிட்ட போது ஏதேனும் சுவாரஸ்யமான அனுபவம் இருந்தால் பகிருங்கள் சார் அல்லது 11பாகத்தின் ஒரிஜினல் அட்டை படங்களை குட்டியாக போடுங்கள் சார் . . இந்த மைல் கல் இதழில் உங்கள் எழுத்தை தவிர மற்றவர்கள் எழுத்து வேண்டாமே ப்ளீஸ் .இது நல்ல ஐடியா தான் ,ஆனால் மற்றொரு ரெகுலர் இதழில் இதை செயல்படுத்துங்கள் சார் .//

    //மேலே உள்ளவற்றில் சில மாற்றங்களை மட்டும் செய்து இன்னும் கொஞ்சம் இதமாகச் சொன்னால் அதுவே எனது கருத்தும்! :-)//

    ReplyDelete
    Replies
    1. மாயவி சார் மனசுல படரத அப்படியே சொல்லி பழக்கம் ஆகி விட்டது . இந்த பாலீஸ் , மாலீஸ் இதெல்லாம் ஒருத்தர் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து உள்ளார் சார் . உங்கள் ஸ்டைலில் ஒன்று ............ஏற்கனவே 200கமெண்ட்ஸ் க்கு மேலே படிக்க முடியாது . இப்போது கொலையா கொல்ராங்க, இப்போது 200க்கு உள்ளயும் படிக்க முடியல......க்ர்ர்ர் ..க்ர்ர்ர் ...இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் ஆசிரியர் சார் . என்ஜாய் . பை ஃபார் நவ். ஞாயிறு அடுத்த பதிவில் சந்திப்போம் சார் . சாரி நண்பர்களே இந்த ஒரு முறை உங்கள் கருத்துக்கள் உடன் பொருந்தி வர இயலவில்லை .

      Delete
    2. மாமா அவர்களே.!
      மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது.
      உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மற்ற நண்பர்களின் ஆர்வத்திற்கு அணை போட முயற்ச்சிக்காதீர்கள்.

      சொலவடை சொல்ல சரியான சந்தர்ப்பம் ஹிஹிஹி.!!

      "தானும் படுக்காது
      தள்ளியும் படுக்காது "

      Delete
    3. @ டெக்ஸ் விஜயராகவன்

      :(

      Delete
    4. @டெக்ஸ் விஜயராகவன்
      நான் போட்டவை இரண்டுமே copy paste தான்..! உண்மையில் மிகவும் இதமாகவே சொல்லியிருந்தீர்கள்...இதை அழகாக எனக்கு சொல்லவராது என்பதே உண்மை..! என் மனதை அழகா வார்த்தையாக்கிவிட்டிர்கள், அதற்கு நன்றிகள்..! நான் எழுதியிருந்தால் என் வரிகள் தடிமனாகவே இருக்கும். என் வரிகள் சேம்பிள்...
      " ஊரே கும்பிடும் கோவில் கட்டிய சிற்பி,கொத்தனார் யாராயினும் கோயில் சுவரில் வாழ்த்து போஸ்டர் ஓட்ட கூடாது என்பது தர்மம்..!"

      "இதுவரை போட்டியில் இங்கு ஜாலியாக பங்கு கொண்டு எடிடரிடம் பெரும்பாலும் 'சபாஷ்' வாங்கியவர்கள் முகமூடி நண்பர்கள் என்பதுவரை சரி, கொண்டாடப்படவேண்டிய சந்தோஷம்..! ஆனால் இந்த கவிதை போட்டி...? நண்பர்களை மகிழ்விக்க விதவிதமான ஐடியா வருவது அவர் உள்ள ஸ்தானத்திற்கு இயல்பே, அதன் சாதகபாதகங்களை நாம் தானே கவனிக்க: நினையூட்டியே ஆகவேண்டும். ஏன் என்றால் நமக்கெல்லாம் மையபுள்ளியான மதிப்பிற்குரிய 'நண்பர் அவர்'..! மாற்றத்தை பொறுத்திருந்து பார்ப்போம்..!!

      Delete
    5. @KiD ஆர்டின் KannaN

      //"தானும் படுக்காது
      தள்ளியும் படுக்காது "//
      இரவு நேரத்தில் பொறுந்தும், இந்த சொலவடை வேலை நேரத்தில் செல்லாது என தடை செய்யப்பட்டுள்ளது..!
      பார்க்க : பிரகாஷ் பப்ளிகேஷன்ஸ்,சிவகாசி.

      Delete
    6. @டெக்ஸ் விஜயராகவன் : பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களும், கல்லூரிகளில் நடக்கும் கல்ச்சுரல் நிகழ்வுகளும் ஒரு வித ரசனைகளுக்குரியவை தானே சார் ? நம் வீட்டுப் பிள்ளைகள் அதனில் பங்கேற்கும் போது ஆர்வமாய் நாம் ரசிப்பதில்லையா ? இதனையும் அப்படிப் பார்ப்போமே ?

      தவிர நண்பர்களின் எழுத்தாற்றல்கள் துளியும் குறை சொல்லும் விதமாயும் இல்லையெனும் போது - let's sit back and enjoy !

      Delete
    7. மாயாத்மா.!
      எல்லாத்துக்கும் நேரடியா அர்த்தம் எடுக்க கூடாது.
      பாலிஷ் மாலிசுன்னு பல விசயம் இருக்கு.
      இதுகொண்டு நிங்களுக்கு டவுட் உண்டெங்கில் டெக்ஸ் விஜயரிடம் சோதிச்சு அறியும்.
      தொடர்ப்புக்கு.:-
      விஜயராகவன்
      C/o விதண்டாவாதம்
      சேலம்.

      Delete
    8. \\உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மற்ற நண்பர்களின் ஆர்வத்திற்கு அணை போட முயற்ச்சிக்காதீர்கள். \\
      +1

      Delete
    9. @ விஜயன் அவர்கள்,

      ரசிப்பதற்கும்,கைதட்டுவதற்க்கும் என்றால் டபுள் ஓகே..! மி.ம ஒன்று(பத்து கூட தரலாம்) பரிசு என்றாலும்கூட ஓகே தான்..! ஏன் ஏப்ரல்19 வரை போட்டி தொடர்ந்தாலும் ஓகே ஓகே தான்..! ஆனால்...சரித்திர முக்கியத்துவம் பெறப்போகும் பொக்கிஷத்தில் உங்கள் விருப்பம் போல ஒரு பக்கம் (கவனிக்க: இந்த பொக்கிஷம் நம் விருப்பத்திற்கான தனி பதிப்பு) நிரப்புவதுதான்....#*@^& :-((

      இந்த கருத்தை சொல்வதால் நண்பர்களில் ஒரு சிலர் கொண்டாடப்படுவதை எதிர்க்கிறேன் என்று அர்த்தமல்ல..! ரசித்தவற்றை பதிவிட ஏராளமான வாய்ப்புகள் கொட்டிகிடக்கின்றன. இந்த ரெகார்ட் பிரேகில் திரும்ப திரும்ப படிக்கும் விஷயங்கள் எங்கும் நிரம்பியிருக்க வேண்டுகிறேன்..!

      அந்த ஒரு பக்கத்தில் இந்த பிரம்மாண்டமான காமிக்ஸ் படைப்பாளிகளிடமிருந்து மதிப்புரைகள் வாங்கி ஏன் போடக்கூடாது...!

      இல்லை நான் செய்வேன் என்று அங்கமுத்து வாத்தியார் அடம் பிடித்தால்...வாய்ப்பு சமமாக வழங்கப்பட வேண்டும், அதாவது எதிர்வரும் இதழில் முறையான அறிவிப்பு...! தவறினால் பீகார் SSLC தேர்வு போலவே ஆகிவிடலாம்..!

      Delete
    10. mayavi. siva : 548 பக்கங்களை நிரப்பும் ஆற்றல் எனக்கிருக்கும் என்று நம்பும் போது அதனில் ஒற்றைப் பக்க நிரப்புதலுக்கு நான் அங்கீகாரம் கோரத் தான் வேண்டுமா ? தவிர, "என் இஷ்டத்துக்கு" நான் நிரப்பியிருக்கும் இதர 547 பக்கங்களும் எவ்விதமிருக்குமென்ற கணிப்பும் இதழைக் காணும் வரை தான் சாத்தியமா ?

      இது வாசகர்களின் கனவு இதழே - நிச்சயம் அதனில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை தான் ; ஆனால் அது இன்னமும் நமது முத்து காமிக்ஸ் தானே ?

      Delete
    11. //இது வாசகர்களின் கனவு இதழே - நிச்சயம் அதனில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை தான் ; ஆனால் அது இன்னமும் நமது முத்து காமிக்ஸ்// தான்..!

      ஐறுற்றி நாற்பத்தி எட்டு ...இங்கே'கிளிக்'

      Delete
    12. மாயவி சார் மனசுல படரத அப்படியே சொல்லி பழக்கம் ஆகி விட்டது . இந்த பாலீஸ் , மாலீஸ் இதெல்லாம் ஒருத்தர் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து உள்ளார் சார் . உங்கள் ஸ்டைலில் ஒன்று ............ஏற்கனவே 200கமெண்ட்ஸ் க்கு மேலே படிக்க முடியாது . இப்போது கொலையா கொல்ராங்க, இப்போது 200க்கு உள்ளயும் படிக்க முடியல......க்ர்ர்ர் ..க்ர்ர்ர் ...இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் ஆசிரியர் சார் . என்ஜாய் . பை ஃபார் நவ். ஞாயிறு அடுத்த பதிவில் சந்திப்போம் சார் . சாரி நண்பர்களே இந்த ஒரு முறை உங்கள் கருத்துக்கள் உடன் பொருந்தி வர இயலவில்லை .

      Delete
    13. ///\\உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மற்ற நண்பர்களின் ஆர்வத்திற்கு அணை போட முயற்ச்சிக்காதீர்கள். \\
      +1////---2013ஆம் ஆண்டு ஆகஸ்டு ஈரோடு புத்தக விழாவில் காலையில் இருந்து பாலீஸ் மற்றும் மாலீஸாக ஆசிரியரிடம் கெஞ்சி இந்த மின்னும் மரணம் முழு வண்ண தொகுப்பு போட கேட்டு , மாலை 3.30க்கு ஒருவழியாக அவரை ஒப்பு கொள்ள வைத்து சுமார் 15பேர் கொண்ட கும்பலில் நானும் ஒருவன் . நான் வந்து நண்பர்களின் ஆர்வத்திற்கு தடை போடுறனா?. 10ரூபாய் தந்து குடிக்கும் டீ கூட அவரவர் விருப்பமான சுவையுடன் எதிர் பார்க்கும் இந்த உலகில் 1000ருபாய் கொடுத்து யாரோ ஒரு நண்பரின் கவிதை என்னும் உளறலை (கடுமையான வார்த்தை க்கு சாரி நண்பர்களே) நான் ஏன் படிக்க வேண்டும் . இதற்காக 2014ஆகஸ்டு ல யும் நவம்பரில் லும் முன்பணம் கட்டி விட்டு நான் ஏன் காத்திருக்க வேண்டும் ? இந்த தொகுப்பு என்ன பிட் நோட்டாஸா ? ஆண்டாண்டு காலம் வைத்து இருந்து பாதுகாத்து படித்து மகிழும் பொக்கிஷம் அல்லவா? இதில் இவ்வாறு வேண்டாம் என்றால் நான் விதண்டாவாதம் செய்கிறேனா? ...... ..கவிதை போட்டி ,கேப்சன் போட்டி இன்னும் பல பல போட்டி வைங்க சார் . அதற்கு பரிசாக லயன் காமிக்ஸ் 1ல் இருந்து 250வரை செட்டாக கூட தந்து மகிழுங்கள் சார் . அது உங்கள் விருப்பம் . ஆனால் இதில் வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள் சார் .அதற்காக நண்பர்களை ஏமாற்ற வேண்டாம் ஆண்டுமலர் , கோடை மலர் ,,தீபாவளி மலர் .....என வருடம் 3முறை வரும் இது ஏதாவது ஒன்றில் இதுமாதிரி முயலுங்கள் சார் . இருகரம் கூப்பி வரவேற்கிறேன் சார் . ஸ் அப்பா சோடா யாராவது தாங்கப்பா .........

      Delete
    14. சேலம் Tex விஜயராகவன் : சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தருணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதக் கண்ணோட்டம் இருப்பதும், உங்களுக்கு "உளறலாய்த்" தெரிவது இன்னொருவருக்கு நயமாகவும்; உங்களுக்கு சிறப்பாய்த் தெரியும் எனது எழுத்துக்கள் அடுத்தவருக்குப் பேத்தலாகவும் தெரிந்திடும் வாய்ப்புகள் உள்ளதும் புலனாகும் !

      இந்த ஒற்றைப் பக்க இணைப்பினால் ஒரு கோபுரமே சாய்ந்து போய் விடுவதாக நான் எண்ணவுமில்லை ; நாம் படைத்து வருவது காலத்தால் அழியாக் கம்பனின் காப்பியமும் அல்ல !

      So இது போன்ற சிற்சிறு சங்கதிகளையும் ஒரு ஜீவ-மரணப் போராட்டம் ரேஞ்சுக்குப் பார்வையிடும் பாணிகளை நமது காமிக்ஸ் நாயகர்களிடம் ஒப்படைத்து விட்டு ஜாலியான வாசகர்களாகவே தொடர்வோமே ?

      Delete
    15. \\ஆசிரியரிடம் கெஞ்சி இந்த மின்னும் மரணம் முழு வண்ண தொகுப்பு போட கேட்டு , மாலை 3.30க்கு ஒருவழியாக அவரை ஒப்பு கொள்ள வைத்து சுமார் 15பேர் கொண்ட கும்பலில் நானும் ஒருவன் \\

      அந்த 15 பேரோட மட்டும் பதிவு செய்தால் மட்டும் மின்னும் மரணம் வெளிவரவில்லை 600 பேறுக்குமேல்
      (தர்போதய நிலவாரம் 1000மக கூட இருக்கலாம்) குடுத்த ஆதரவினால் இது சாத்தியம் ஆயிட்றூ
      இல்லை என்றால் நிங்கள் கெஞ்சியது அனைத்தும் வீண்தான். இங்க கவிதை எழூதூவது யாரோ இல்லை
      நாம் LIONMUTHU குடும்பத்தின் வாசகர்கள்.மின்னும் மரணம் வெளிவருவதற்கு அவர்களும் காரணம்.
      மின்னும் மரணம் காமிச்ஸ்_இல் எனக்கு ஏற்பட்ட விஷயம். நான் 241வதுதாக பதிவு செய்தேன். முதல்
      LIST வெளீட்டபோது 235 வாரை இருந்தது. இரன்டாவதா 245 தொடகியது. என் பெயர் LIST_வராதது ஏனக்கு
      ஏமாற்றமா இருந்ததது. இது சின்ன விஷயம் தான். ஆனால் நினைத்து பாருங்கள் நமது கனவு இதழில்
      நமது LIONMUTHU குடும்பத்தின் வாசகர்கள் கவிதைகள் வருவது எவ்வளவு நல்ல செய்தி. எனக்கு கவிதைகள்
      பிடிக்கும் நானும் தான் 1000 ருபாய் காட்டீருக்கிறானே. நிங்கள் கெஞ்சியது மட்டும் மின்னும் மரணம் வருவதர்கு காரணம் இல்லை.ஆசிரியர் 500 வாகர்கள்(நீங்கள் கூட) பதிவு பாண்னுவார்கள் என்று நம்பியதால் இப்போது இது சாத்தியம் அயிட்‌ரூ

      Delete
    16. // இது போன்ற சிற்சிறு சங்கதிகளையும் ஒரு ஜீவ-மரணப் போராட்டம் ரேஞ்சுக்குப் பார்வையிடும் பாணிகளை நமது காமிக்ஸ் நாயகர்களிடம் ஒப்படைத்து விட்டு ஜாலியான வாசகர்களாகவே தொடர்வோமே ///

      அருமையாச் சொல்லியிருக்கீங்க எடிட்டர் சார்! 548 பக்கங்களில் நமது நண்பர்களின் தனித்தன்மைக்காக ஒரு பக்கத்தை ஒதுக்குவதால் அப்படியொன்றும் குடிமுழுகிப்போய்விடாது தான்!

      //@டெக்ஸ் விஜயராகவன் : பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாக்களும், கல்லூரிகளில் நடக்கும் கல்ச்சுரல் நிகழ்வுகளும் ஒரு வித ரசனைகளுக்குரியவை தானே சார் ? நம் வீட்டுப் பிள்ளைகள் அதனில் பங்கேற்கும் போது ஆர்வமாய் நாம் ரசிப்பதில்லையா ? இதனையும் அப்படிப் பார்ப்போமே ?///

      இதைவிட அழகான விளக்கம் கொடுத்துவிட முடியாது டெக்ஸ் விஜயராகவன்!

      Delete
    17. @ இத்தாலி விஜய் அவர்களே,

      கல்ச்சுரல் நிகழ்ச்சிகள் சீப் கெஸ்ட்,பிரின்ஸ்பால் பார்வையில் உற்சாகமான சங்கதிதான்..! நம் வீட்டுப் பிள்ளைகள் அதனில் பங்கேற்கும் போது ஆர்வமாய் நாம் ரசிப்பதும் பெற்றோர்கள் பார்வையில் ஓகேதான்..! ஆனால் அங்கு வலியை தூண்டும் போட்டி கிடையாது..! நாடகமோ, ஆடல்பாடலோ, சமமாகவே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்..! மேடையில் கூட்டாக செய்த முயற்சியின் முடிவில், சிலரே சிறந்தவர்கள் என கொண்டாடும் போது தான் கரஸ்பாண்டன்ட்...எத்தனை பிள்ளைகளுக்கும்,அழங்கரித்து ஆசையாக மேடையேற்றிய பெற்றோர்களுக்கும் வில்லனாகபோகிறான் ..என்பது கொஞ்சம் யோசித்தால் புலப்படும்..!

      நிஜத்தில் பள்ளிகளில் இப்படி செய்வது கிடையாது, இங்கு நடந்தால் வாத்தியார் வில்லனாவார் என்பதே கவலை..! வாத்தியாரின் வரிகள் படிக்க இனிமையானவை, நடைமுறையில் பலரில் மனதில் வலி தரக்கூடியவையே..! வாத்தியார் பாம்பை வெட்டுகிறாரா ? நசுக்குகிறாரா ? பார்ப்போம்..!

      Delete

    18. @ Ganeshkumar Kumar

      நண்பர் டெக்ஸ் பாசக்காரர் மட்டுமல்ல...கொஞ்சமேனும் கொஞ்சம் உரிமையாக கேட்டும் ரோசக்கார்..! அவர் கெஞ்சி இந்த படைப்பு வரவில்லை ஒத்துக்கொள்கிறேன். 15 பேர் கெஞ்சி இந்த படைப்பு வரவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதவிட பெரிய உண்மை...

      KiD ஆர்டின் KannaN24 March 2015 at 21:42:00 GMT+5:30
      Arivarasu @ Ravi24 March 2015 at 22:02:00 GMT+5:30
      Arivarasu @ Ravi24 March 2015 at 22:20:00 GMT+5:30
      vannappuraa24 March 2015 at 22:45:00 GMT+5:30
      vannappuraa24 March 2015 at 23:04:00 GMT+5:30
      KiD ஆர்டின் KannaN24 March 2015 at 23:10:00 GMT+5:30
      KiD ஆர்டின் KannaN24 March 2015 at 23:10:00 GMT+5:30
      vannappuraa24 March 2015 at 23:28:00 GMT+5:30
      KiD ஆர்டின் KannaN25 March 2015 at 00:03:00 GMT+5:30
      cap tiger25 March 2015 at 00:10:00 GMT+5:30
      Podiyan25 March 2015 at 01:15:00 GMT+5:30
      kavinth jeev25 March 2015 at 06:28:00 GMT+5:30
      VETTUKILI VEERAIYAN25 March 2015 at 06:51:00 GMT+5:30
      VETTUKILI VEERAIYAN25 March 2015 at 07:27:00 GMT+5:30
      VETTUKILI VEERAIYAN25 March 2015 at 07:47:00 GMT+5:30
      VETTUKILI VEERAIYAN25 March 2015 at 08:05:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 08:54:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 08:55:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 08:56:00 GMT+5:30
      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்25 March 2015 at 10:54:00 GMT+5:30
      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்25 March 2015 at 10:57:00 GMT+5:30
      vannappuraa25 March 2015 at 11:01:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 11:24:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 11:26:00 GMT+5:30
      selvam abirami25 March 2015 at 11:44:00 GMT+5:30
      vannappuraa25 March 2015 at 12:19:00 GMT+5:30
      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்25 March 2015 at 13:12:00 GMT+5:30
      குற்றச் சக்கரவர்த்தி25 March 2015 at 13:58:00 GMT+5:30

      மேற்கண்ட... இதுவரை பங்குகொண்ட ஒன்பது பேர்களின் கவிதையே, ஆயிரம் வாசகர்களின் எழுத்தாற்றல்களுக்கு சான்றாகாது..! உங்களுக்கே உங்களுக்கு மட்டும் அடையாளம் தெரிந்த உங்கள் பதிவு 241 விடுபட்டதற்க்கே வருத்தப்பட்ட உங்களுக்கு...நேற்று முளைத்த கவிதை, நாற்பது ஆண்டு காமிக்ஸ் காதலர்களின் அடையாளமாகாது என்பது எளிதாகவே புரியும் என நம்புகிறேன்..!

      Delete

    19. இப்போ முடிவா என்ன சொல்ல வரிங்க மாயாவி.???
      உங்க ரெண்டு பேரோட சந்தோசத்துக்காக மத்தவங்கள நான் வாபஸ் வாங்க வைக்க முடியாது. ஆனா நான் வாபஸ் வாங்கிக்கிறேன். மூணு பேரகிராஃப் (உங்க பாசையில உளறல்) எழுதியிருக்கேன்.
      அந்த மூணையும் நான் வாபஸ் வாங்கிக்கிறேன்.
      இனிமேலாவது இந்த மாதிரி பொங்காம இருங்க.! நன்றி.!

      Delete
    20. @ KiD ஆர்டின் KannaN

      எப்படியிருந்தாலும் வலச்சி வலச்சி (?) கமெண்டு போடுற நாலுபேர்(உங்களையும் சேர்த்து) பேரு வரப்
      போறதில்லை. வந்தா "இந்த ஜால்ராபாய்ஸ் தொல்லைதாங்கலையே..! வழக்கம்போல 'மாஸ்டரை' சாஞ்ச்சிட்டாங்கப்பா.." ன்னு வெளிய பேசியே கொல்லுவாங்க..! so ஜாலியா தொடருங்க கண்ணன் ரவி அவர்களே..!
      பொடியன் கவிதை ஒன்னு சூப்பரா இருந்திச்சி...! அதை தனியா ஒரு 'டீசர்'பண்ணலாம்ன்னு இருக்கேன்..! அதுமாதிரி ட்டிரை பண்ணுங்க..! :-)))
      (ஆமா நா எப்ப உளறல்ன்னு சொன்னேன்..!) :-(

      Delete
    21. ///ஆனால் நினைத்து பாருங்கள் நமது கனவு இதழில்
      நமது LIONMUTHU குடும்பத்தின் வாசகர்கள் கவிதைகள் வருவது எவ்வளவு நல்ல செய்தி///- நம்முடைய சகோதரர்கள் எழுதுகின்றனர் என்பதற்காக தலையில் வைத்து எல்லாம் கொண்டாட வேண்டுமா என்ன ?. கவிதை க்காக பல நூறு இதழ்கள் வருகின்றன , எனக்கு கவிதை வாசிக்க தோன்றினால் நான் அதல எதாவது ஒன்றை வாங்கி படித்து கொள்கிறேன் சார் . தயவுசெய்து செய்து எனக்கு அனுப்பும் காப்பிகள் 2லும் கவிதை இல்லாமல் அனுப்ப இயலுமா சார் ? அதையாவது நான் கேட்க உரிமை உள்ளதாக நம்புகிறேன் சார் . அப்புறம் மாம்ஸ் -" தங்க ஊசிங்கரத்துக்காக கண்ணை குத்திக்க முடியாது ".

      Delete
    22. mayavi.siva : ஒன்பதே பேரின் எழுத்துக்கள் ஓராயிரம் பேரின் ஆற்றல்களுக்குச் சான்றாகாது என்பது எத்தனை நிஜமோ, அத்தனை நிஜமே ஓரிருவரின் அபிப்பிராயங்கள் அதே ஆயிரம் பேர்களின் சிந்தனைகளின் பிரதிநிதித்துவமாகவும் இருந்திட முடியாது என்பதும் தானே !

      Delete
    23. அப்பாடா...ஒரு முடிவுக்கு வந்துட்டும்...அப்போ ஒரே வழி வாக்கெடுப்பு..! ஒரு பக்கத்தை என்ன செய்யலாம்..?

      A. ரசிக்கும் வாசகர்கள் கவிதையா ? B. சுவைக்கும் எடிட்டரின் செய்தியா ?

      ஓகே தானே ஸார்...!

      Delete
    24. ஜாலியாய் தொடர்வதற்கு ஒன்றுமில்லை மாயாவி.!
      பொடியன் அவர்களின் கவிதை சூப்பராக இருந்தது உண்மை.
      ஆனால் நான் ஏன் அவர் மாதிரி ட்ரை பண்ண வேண்டும். நான் என்னைப் போலத்தான் இருப்பேன். (அதை உங்களால் மாற்ற முடியாது)

      நான் என்னுடைய கேப்சன்கள்??, மூன்றையும் டெலிட் செய்துவிட்டேன்.
      உணர வைத்ததற்க்கு உங்களுக்கும் மாமி விஜயராகவனுக்கும் நன்றிகள் பல.
      தொடர்ந்து பணியை செவ்வனே செய்யுங்கள்.

      Delete
    25. சேலம் Tex விஜயராகவன் : ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு யாருக்குத் தான் இருந்திட முடியும் ? பிடித்ததை ரசிக்கப் போகிறோம் ; பிடிக்காததைத் தாண்டிச் செல்லப் போகிறோம் ! அது காமிக்ஸாக இருந்தாலும் சரி ; வலைப்பதிவாக இருந்தாலும் சரி !

      "எனக்குப் பிடிக்கவில்லை ; ஆகையால் எனக்கு மட்டும் அந்தப் பக்கங்கள் வேண்டாமென்ற கோரிக்கை / எதிர்பார்ப்பு எத்தனை சதவிகித சாத்தியக்கூறு கொண்டதென்று சத்தியமாக எனக்கு புரியவில்லை !

      ஒன்றரை அணாவிற்குப் பெறா ஒரு விஷயம் மனங்களுக்குள் இத்தனை யுத்தங்களைக் கிளப்பிடுமெனில் எனது ஈகோவை வீதியிலேயே விட்டுச் செல்ல எனக்கு நிச்சயமாய் சங்கடம் ஏதுமில்லை ! உங்கள் பார்வையில் "உளறலான" ; "பிழையான" அந்தப் பக்கத்தோடு உங்களது 2 பிரதிகளை அனுப்பவிருப்பதற்கு முன்கூட்டியே மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன் நண்பரே !

      Delete
    26. @Edi
      book subscribed by definetly 600+ but கவிதை u have announced only in blog- what about most of the subscribers who do not visit the blog, who are not even aware, wont they feel bad that they were not considered for contributing to the collectors edition?

      p.s கவிதைக்கு எனக்கு பிடிக்கும் & above is just for your thoughts:-)

      Delete
    27. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் : //wont they feel bad that they were not considered for contributing to the collectors edition?//

      They won't....simply because I have announced it there too !

      Delete
    28. Hi Edi

      "They won't....simply because I have announced it there too !"
      -couldnt underestand where "there" refers to.. I was referring subscribers who dont access internet.

      Small suggesstion in future such surprise competition you could send out an sms alert to all subscribers(through free sms sending sites)

      conscisouly or unconsciously you are good :-) i am resisting major temptation to book another MiMa

      Delete
  28. மண்ணில் மரணம் தந்தால்
    மறலி வந்தானென மருள்வோர் பலரிருக்க
    சிவகாசி செல்வர் தருகின்ற மரணத்தை முனபதிவு செய்கின்றார் விந்தை பாரீர் !!!!

    முத்துஅதுவின் சொத்து அதுவாய் கத்துமாகடலனைய டைகர்நின்
    பெருமை விளங்கும் .நினது
    அருமைபாட என் தமிழ் கலங்கும் !

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே, யாரிடமாவது 'கோனார் தமிழ் உரை' இருந்தால் எக்சேஞ்சுக்கு கிடைக்குமா?

      Delete
    2. இத்தாலி விஜய் அவர்களே நான் தருகிறேன்...பதிலுக்கு ஓல்ட் காமிக்ஸ் என்ன தர்றீங்க...? :-)

      Delete
    3. புரியல ஆனா நல்லா இருக்கு...

      Delete
  29. மேற்கொண்ட கடமையாலே மேனியிலே சில இனச் அழுக்குடன் அலையும் டைகர் உனைப்பற்றி
    சர்ஃப் எக்ஸல் அறிந்து இருந்தால் சன்டிவியில் வந்திருக்கும்
    "அழுக்கு நல்லது"

    ReplyDelete
  30. செய்யாத குற்றத்திற்காக உனை சேர்ந்தடையும் இழுக்கும் செய்கின்ற பயணத்தால் உனை வந்தடையும் அழுக்கும்

    உனது அடையாள சின்னம்
    உன்புகழ் உலகறிவது திண்ணம்

    ReplyDelete
    Replies
    1. வாவ்! அட்டகாசம் புலவர் செல்வம் அபிராமி அவர்களே!!

      Delete
    2. பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் ஒரு ரகம் ; ஒத்துக் குழல் ஊதியே பெயர் வாங்குபவரும் ஓர் ரகம்..!

      அட..நேற்றைக்கு தூர்தர்ஷனில் திருவிளையாடல் ஒடுச்சோ ? !

      Delete
    3. // ஒத்துக் குழல் ஊதியே பெயர் வாங்குபவரும் ஓர் ரகம்..! // ஹா ஹாஹா!

      Delete
  31. தன்தூர பயணத்தில்
    செந்தூர பூவொன்று சிக்காத வேளையிலும் மக்காத மாமனிதன்

    ReplyDelete
  32. செல்பேசி யில் டைப் செய்வதால் வரிகளை ஒழுங்கு படுத்த இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. இந்த கவிதை டைகர் சம்பத்தப்பட்டது இல்லை என நினைக்கிறேன் ஜி :)

      Delete
  33. செல்வம்.! கவித.! கவித.!
    ப்ளூ ஜி.! ஹிஹிஹி.!!!

    ReplyDelete
  34. கல்லறையில் கூட தங்கம் நீ
    எதிரிகளுக்கு பங்கம் நீ
    ராணுவத்தின் சிங்கம் நீ
    எங்களுக்கு டைகர் நீ
    முத்துவின் பங்கும் நீ

    மரணத்த்திலும் மின்னுவாய்
    எதிரிகளை பின்னுவாய்
    துரோகங்களை தின்னுவாய்
    செவிந்தியருக்கு ஏதேனும் பண்ணுவாய்
    எம் மனதில் ஏதேதோவாய்.....

    முடிவில்லா வேங்கைதாம்
    முடியுள்ள மன்மதன்தான்
    நெஞ்சத்தை உலுக்கு
    உன் மனதில் பய புள்ள சிலுக்கு
    எங்களுக்கோ உங்களால் கிறுக்கு
    முடிவினில் சோகம் இருக்கு

    காதலுக்கு கண்ணில்லை
    உனக்கு மூக்கில்லை
    உன்னை பிரிய மனமில்லை
    வா வா வா ...
    மலர்ச்சி தா தா தா ...



    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : I want more emotions steelji !!

      Delete
    2. ஸ்டீல் @ இத நல்லா ஒரு முறை படிச்சிட்டு சொல்லுங்க.. கவிதையா :-)

      Delete
  35. முடிவில்லா வேங்கைதாம்
    செயலிலோ வேகம்தான்
    முடிவினில் சோகம்தான்
    எமது வாழ்வின் பாகம்தான்

    ReplyDelete
  36. உருவத்தால் நட்சத்திரங்கள் ஆயிரம் என்றாலும்
    துருவ நட்சத்திரம் நீ -சிலசமயம்
    தென்மேற்கின் தெ ன்றலாகிறா ய்....பலசமயம்
    வன்மேற்கின் புயலாகிறா ய்
    ஊழிக்காலத்து உறுமும் பூகம்பமே .. சிறு
    பூவைக் கண்டதும் புன்னகைக்கின்றாய் ...டைகர்
    சிப்பிக்குள் முத்து நீ எங்கள் காமிக்ஸின் சொத்து நீ

    ReplyDelete
  37. மக்களே, செமையா பின்னுறிங்க! வாழ்த்துகள் அனைவருக்கும்!

    ReplyDelete
  38. ஒரு டைகர் ரசிக தந்தையின் தாலாட்டு
    டைகர் முகம் பாத்து
    தாய் என்ன கட்டிகிட்டா
    தேவலியாம் என் மூஞ்சி
    தேவதையே நீ தூங்கு

    ஷிநாபா கை சீட்டினிலே
    சேர்ந்து விட்ட ரம்மி போல
    எனை சேர்நதஇளங்காற்றே
    இமை மூடி நீ தூங்கு

    ReplyDelete
    Replies
    1. மீண்டுமொரு வித்தியாசமான கற்பனை! ஜூப்பர்! :)

      Delete
  39. மின்னும் மரணமிங்கே
    இன்னும் வந்து சேரலியே
    கண்ணுறக்கம போனதையா ..

    தண்ணீர் சிக்கன போஸ்டரிலே
    டைகர் முகம் பார்க்கையிலே
    தடுமாறி மனம் போனதையா

    ReplyDelete
  40. சிகுகுவா சில்க் சின்னாளப்பட்டியில இருந்து பாடினால் .......

    உருவத்தில் அர்ச்சுனன் நீ
    உத்தமனே உன்ன விட்டு
    அறிவிழந்து போனேனே
    ஆதரிக்க வா ராசா !!

    காசு பணம் பெரிசென்னு
    கண்ட வழி ஓடினேனே
    பாசம் பெரிசென்னுபாவிமகள்
    பரிதவிச்சா .பட்டென்னு வா ராசா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! கலக்குறீங்க செல்வம்! வித்தியாசமான கற்பனை! மிகவும் ரசித்தேன்! :)

      Delete
  41. @ ALL FRIENDS

    இந்த கவிதை போட்டி இன்னும் சில மணிநேரத்தில் CAPTION போட்டியாக மாறலாம்....தயாராக இருங்கள் .. :-)))

    ReplyDelete
  42. முரட்டு முட்களுக்கிடையே முளை த்துவந்த பலா
    மாட்டுக் கொட்டிலில் மகான்கள் அவதரித்திருக்க
    தங் கக்கல்லறை யில் தரி சனம் தந்த நிலா
    முதுமலை க் காடு தேடாத புலியே -எங்கள்
    முத்து காமிக்ஸ்
    உலகத்தமிழர்களிடம் ஒப்படைத்த டை கரே..
    ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஓங்கி ..நீ வாழ்க ...

    ReplyDelete
  43. Johnnie To, la guerre d’un seul homme par Jean-Michel Frodon
    Trajectoire d’un cinéaste par Antoine Thirion
    En avant jeunesse ! par Jean-Michel Frodon
    Cahier du Cinéma n

    எனக்கு தமிழ் கவிதை எழுத தெரியாது அதனால FRENCH_ல ஏழுதி இருக்க படிச்சிட்டு கருத்த
    சொலுங்க...

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar.
      அடா அடா வாழ்க்கை சித்தாந்தத்தை நாலே வரில நச்சுன்னு சொல்லிட்டிங்களே.

      அதிலும் குறிப்பாக மூணாவது வரி அட்டகாசம்.!
      அடுத்த கவிதைய ஸ்பானிஷ்ல எழுதுங்க.! :)

      Delete
    2. @ Ganesh kumar, கிட்ஆர்ட்டின்

      :D

      Delete
    3. ஸ்பானிஷ்ல_தான அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ENGLISH மற்றும் தமிழ் தவிர எதுலவெனாலும் எழுதுவேனே....

      Delete
  44. சார், புக் மார்க் என்ன சைஸில் இருக்கணும்னு சொல்லலையே?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : நான் கொடுத்துள்ள மாதிரியே அளவுக்காகத் தான் !

      Delete
    2. அதைத்தான் எடுத்துவைத்தேன். உறுதிப்படுத்தவே கேட்டேன்.

      Delete
  45. என்னால நிம்மதியா வேலைய பார்க்க முடியல... காதுக்குள்ள கொய்ங் கொய்ங்னு கவிதைகளா வந்து சுத்துது. முகத்தில் பலவித உணர்வுகளும் மாறி மாறி வந்துபோகுது. ஆபிஸ்ல இருக்கறவங்களெல்லாம் "விஜய், ஆர் யூ ஆல்ரைட்?"னு கேட்கிறாங்க... நடுநடுவே செல்வம் அபிராமியின் செய்யுள் வேற...

    என்னம்மா... இப்பிடி பண்றீங்களேம்மா...

    ReplyDelete
  46. கடமையின் காவலனாய் ஆனாய்
    அதனால் தனிமையின் காதலனாய் ஆனாய்
    ஆனாலும் காதலித்தாய்
    அதனாலும் தத்தளித்தாய் ...
    தெற்க்கென தாய் இருப்பதை மறுத்தாய்
    வடக்கே உனது மறுதாய்
    முதல் காதலி தெற்க்கே
    இப்போது காதலில் நீ திரி'வது வடக்கே
    நீ தாவணிய நினைக்க வேணாம்
    அதனால ஆணிய புடுங்க வேணாம்
    வேனிற்காலத்தில்
    சர்ரென வரபோகும் ஸர்பத் நீ
    உன்கதையில்
    சர்ரென சீரும் சர்ப்பம் நீ
    கடமையால் கயவனானாய்
    ஆனால் கதையின் நாயகனானாய்
    காதல் உனக்கோர் பாலை வனம்
    அதில் திரியும் நீயே எமது சோலை வனம்
    அடிவானம் கருக்கும்
    அப்போதெல்லாம் உன் மனமே இருளாய் இருக்கும்
    காதலின் இருண்ட வானம் நீ
    முதல் காதல் முடியவில்லை
    இரண்டாம் காதல் இனி தொல்லை
    அதற்க்கு மின்னும் மரணமோர் எல்லை
    இல்லை இல்லை இனி பெண்களால் உனக்கு தொல்லை
    இனி காதலின் தொலை வானம் நீ
    நம்பிக்கையின் தொடு தூரம் நீ
    கால் போன போக்கில் போவதில்லை
    உனக்கினி காதல் ஆவதில்லை

    பகைவன் மேல் போர் தொடுத்தாய்
    அட ' மின்னும் மரணத்தை எம' க்கும் பரிசளித்தாய் !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :
      //நீ தாவணிய நினைக்க வேணாம்
      அதனால ஆணிய புடுங்க வேணாம்//

      :-)

      Delete
    2. ஸ்டீல் @ இது எந்த படத்துல வருது!

      Delete
    3. நம்ம ஸ்டீலுக்கு கவிதையெல்லாம் நல்லாத்தான் வருது. ஆனா காதல்ல செமத்தியா வாங்கியிருப்பார் போல தோணுது. :)

      Delete
    4. நம்ம ஸ்டீலுக்கு கவிதையெல்லாம் நல்லாத்தான் வருது. ஆனா காதல்ல செமத்தியா வாங்கியிருப்பார் போல தோணுது. :)
      +1

      Delete
  47. அதிகாரம் செய்யாத அரசன் நீ!

    அரிதாரம் பூசாத அழகன் நீ!

    கர்னல் அர்லிங்டன் முன்னால் பரிதாபம் நீ!

    துவண்டு போன முத்து-வை தூக்கி நிறுத்திய பரிகாரம் நீ!

    அறிமுக கதையிலேயே அதகளம் செய்தவன் நீ!

    தனியாக 1000 ரூபாய்க்கு கதைக்களம் கொண்டவன் நீ!

    தங்கத்தில் கல்லறை கண்டாய் அதை மரணத்திலும் மின்னக் கண்டாய்

    ரத்தக் கோட்டையை சுத்தக் கோட்டையாக்கினாய்

    இரும்புக்கை எத்தனையும் இன்னும் பல சுப்பனையும் சூறையாடினாய்

    டெக்ஸும், லார்‌கோவும் ஸூபர் என்பர்- உண்மையில்

    டைகர் புகழ் பிடிக்காதவர்.

    குற்றத்தில் சக்கரவர்த்தி ஸ்பைடர்.

    முத்து காமிக்ஸ்-இல் சக்கரவர்த்தி டைகர்.

    உனை போல் ஒரு நாயகன் இதுவரை இல்லை. இனி வருவார் என்பதும் உறுதி இல்லை.



    ReplyDelete
    Replies
    1. அம்சமாய் இருக்கிறது!!

      Delete
    2. ரொம்ப நல்ல இருக்கு.சூப்பர்.

      Delete
  48. Replies
    1. Rajaraaj Raja : நல்வரவு !

      Delete
    2. Rajaraaj Raja @ வரவு நல் வரவாகட்டும்.

      Delete
  49. கவிதை மழையா பொழிகிறது :-) அருவியா கொட்டுது ஜனங்களே :-)

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : குற்றால சீசன் சீக்கிரமே துவங்கி விட்டதோ ?

      Delete
    2. ஓசியில் ஒரு குற்றால சாரல்! எனக்கு மழை பெய்தால் மட்டும் போதும்!

      Delete
  50. விஜயன் சார், முடிந்தால் டைகர் பற்றிய சிறு சிறு குறிப்புகளையும் இந்த புத்தகத்தில் இணைக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பொறுத்திருந்து பாருங்களேன் நண்பரே..!

      Delete
  51. //சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
    நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
    வடதிசைக்கேகுவீராயின்
    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
    "எங்கோன் மாறன்வழுதி கூடலில்
    ஆடையின்றி வாடையின் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே" [1]
    என்ற பாடலைப் பாடினார். அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை கானாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, //

    இந்த சங்க கால பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ..

    இதையொட்டி கடிய சொற்கள் விடுத்து
    டைகர் ரசிகன் எழுதிய பாடல் ஒன்று கீழே .

    ReplyDelete
    Replies
    1. டைகருக்காக அன்னம்தனை தூதுவிடும் அன்பு ரசிகன்
      பாராய்..பாராய்..அன்னமே ! பாராய்..
      டைகர் மனம் போல் வெண்மை வண்ண
      மேனியுடையாய் ..வனப்புறு அன்னம்....
      நீயும் நின்துணையும்
      சிராப்பள்ளி காவிரியாடி
      சிவகாசிக்கு ஏகுவீராயின்
      அங்கு அம்மன்கோவில்பட்டி அடைந்து
      மிகுந்த மூளை மிகசில முடியுடன்
      வீற்றிருக்கும் எம் விஜயனை கண்டு
      மின்னும் மரணம் விரைவில் வரணும்
      காமிக்ஸ் வேந்தே..திருவடி சரணம்..
      எனும் சேதியை சொல்லி மேலும் செப்புக
      டைகர் வந்திடும் தேதியை நோக்கி
      அரைஞ்சாண் கயிறு இடை விட்டு அகல
      தரைமேல் தவிக்கும் மீன்போல் துடிக்கும்
      மற்றுமோர் ரசிகனை கண்டனம் எனுமே

      Delete
    2. selvam abirami : கோணார் நோட்ஸ் பற்றாது போலிருக்கே..!

      Delete
    3. எடிட்டர் சார் !!!!

      :-))

      சிராப்பள்ளி >>>திருச்சி

      காவிரி ஆடி >>> காவிரியில் குளித்து

      ஏகுவீராயின் >>>(ஊர் )போய் சேர்ந்தால்

      Delete
  52. (மின்னும்) மரணத்தை
    விலை கொடுத்து
    வாங்கும் மனிதர்கள்
    இவர்கள் மட்டும் தான்!......
    முத்து காமிக்ஸ் வாசகர்கள்!!!

    ------மு.அஹமத் அலி,இஸ்டா கல்வி நிறுவனம்,பட்டுக்கோட்டை

    ReplyDelete
    Replies
    1. ista pattukkottai : அய்யய்யோ..புக்கின் பெயரை மாற்றணும் போலுள்ளதே !!

      Delete
    2. ista pattukkottai @ வரவு நல் வரவாகட்டும்.

      Delete
    3. @vijayan: sorry விஜயன் sir! புத்தகத்தின் பெயரை change பண்ணவேண்டாம்!
      புத்தகத்தில் என் கவிதை(?..!) வந்தால் போதும்!

      Delete
    4. @parani: Thank you மிஸ்டர் பரணி!....நான் புது முகம் அல்ல!...இந்த id தான் புதுசு!...பதிவு செய்யும்போது personal id ல login பண்ணாமல் ஆஃபீஸ் id ல பண்ணிட்டேன்! :)

      Delete
  53. சார் ...
    அந்த ஒரு பக்கத்தில் நம் காமிக்ஸ் குடும்ப வாசகர்களின் அத்தனை பெயர்களையும் (மிக மிக சிறிய எழுத்தில் இருந்தாலும் சரி ) இந்த சாதனை இதழில் இடம்பெற செய்து எங்களையும் பெருமைப்படுத்தலாமே ...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : முன்பதிவு செய்த அத்தனை வாசகர்களின் பெயர்களையும் போட்டுள்ளோம் நண்பரே !

      Delete
    2. பாட்ஷாவின் பெயரை நல்லா துள்ளியமா, தெளிவா போட்டுடுங்க சார்! :D

      Delete
  54. நண்பர்களே ஒரு அவசர வாக்கெடுப்பு..!

    மின்னும் மரணம் கடைசி பக்கத்தில்....

    A. ரசிக்கும் வாசகர்கள் கவிதையா ? B. சுவைக்கும் எடிட்டரின் செய்தியா ?

    வாக்களிப்பீர்...vote for...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. வலைத்தளம் முழுவதும் 2000 நண்பர்களுக்கு இந்த செய்தி புயலாய் பரப்பப்பட்டுள்ளது..! தேர்வு எதுவாகினும் நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்..! உங்கள் B என்ற ஒவ்வொருவரின் குரலும் எடிட்டரை புயலாய் தாக்கட்டும்..!

      Delete
    2. A & B
      நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா...
      நெய்விளக்குப் போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா...

      Delete
    3. விஜய் அவர்களே
      சிச்சுவேசனுக்கு பொருத்தமான பாட்டு. ஆஹா.!!!
      உங்க நினைவாற்றால் சிலிர்க்க வைக்குது.
      என்னோட நினைவாற்றல் சரியான்னு பாருங்க.!
      இது "வசந்த ராகம் " படத்தில் வரும் ஒரு பாடலின் தொகையறா.
      கதைப்படி ஹீரோ இறந்நது விட்டதாக நினைக்கும் ஹீரோயின் செகண்ட் ஹீரோவை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும் வேளையில் முதல் காதலனான ஹீரோ திரும்பி வந்துவிடுவார். அந்த சூழ்நிலையில் அமையும் பாட்டு இது. இந்த பாழாய்ப்போன பல்லவிதான் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.!

      Delete
  55. ஆனா பாருங்க... பார்க்க சகிக்காத ஒரு மூஞ்சியை படமா போட்டு 'இதுக்கு கவிதை எழுதுங்க'னு சொன்னதுக்கே இவிங்கல்லாம் இந்தப் பின்னு பின்னுறாய்ங்களே... இவிங்க எல்லாம் காதலிக்கும்போது என்ன கலக்கு கலக்கியிருப்பாய்ங்க!!

    சில காதலிகள் செய்யுளை எல்லாம் படிச்சுக் கஷ்டப்பட்டிருப்பாங்க பாவம்! ;)

    ReplyDelete
  56. எடிட்டர் சார். மற்றும் நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
    நண்பர்கள் இருவரும் இந்த காமிக்ஸ் உலகுக்கு ஏதோ செய்தி சொல்லப்போறாங்கன்னு நெனைச்சி ஏமாந்துட்டேன்.
    கடோசில பாத்தா மூஞ்சி பொஸ்த்தகத்துல கலாய்க்குறாங்கன்னு காரணம் சொல்றாங்க.?
    ச்சே! அவசரப்பட்டுட்டேன்.!
    எடிட்டர் சார்,
    என்னுடைய கவிதைகளை (கான்ஃபிடென்ட்) மீண்டும் பதிவேற்றம் செய்கிறேன். அதையும் கன்சிடர் பண்ணுங்கள்.

    ReplyDelete
  57. தயவு செய்து கவிதைன்னு நெனைச்சி படிக்கவும். (முன்னாடியே சொல்லிடறது பெட்டர் இல்லையா)

    கேப்டன் டைகர்.:-
    துவைக்காத நீலநிற கோட்டும்!
    துணைக்கு ஜிம்மியும் ரெட்டும்!
    சவரம் கண்டிரா முகவெட்டும்!
    சாகசம் செய்வாய் திக்கெட்டும்!
    சில்லறைக்கு அலையும் சிகுவாகுவா சில்க்கும்!
    அவளின் காதல் கானலாய்த்தான் உன் கைக்கெட்டும்.!

    ReplyDelete
  58. வன்மேற்க்கு வாசலின் வாத்சாயனாராம்!
    வதனமெங்கும் முடியிருக்கும் வயிரமாம்.!
    கட்டழகி குபி பாட்டியின் காதல் மன்னனாம்!
    மாதம் ஒருமுறை மட்டுமே குளிக்கும் மன்மதனாம்.!
    பரட்டை என்று பெயரெடுத்த பரிமேல் அழகனாம்.!
    அரிஸோனா அழகிகளின் சிந்தைக்கு சிங்காரவேலனாம்.!
    சிகுவாகுவா சில்க்குக்கு மட்டும் சித்தப்பா முறைதானாம்.!

    ReplyDelete
  59. கல்லறைக்குள் தங்கம் கண்ட காவிய நாயகனே.!
    தமிழ் உலகின் தளபதி - நீ
    ஃப்ரெஞ்சிலோ ப்ளுபெர்ரி!
    மூக்கு முழுதாய் இல்லையெனினும் முத்தம் இடுதலில் முதல்வன் நீ.!
    மின்னும் மரணம் வென்றெடுத்து வேங்கையாக ஆனாய்.!
    மார்ஷலாக மாறியதும் ஏனோ பார்ஷலாகி போனாய்.!

    ReplyDelete
  60. "நாமார்க்கும்
    குடியல்லோம்
    நமனையஞ்சோம் "

    ReplyDelete
  61. எதோ என்னால் முடிந்தது-

    டைகர்
    -----------
    விழி காணலே காதல்
    காதலோ கானல்
    ஆதலால் செவ்விந்தியர் சாதலே காதல்

    கடமையோ மடமையின் உச்சம்
    செவ்விந்தியரோ செத்ததே சொச்சம்
    கடைசியில் வெறும் மார்ஷ்ல்லே மிச்சம்
    கலிகால அமெரிக்கவின் கர்ணன்.


    டைகர்
    -----------
    Tiger இவன் பெயரை போலவே extinction நோக்கி செல்லும் புலி
    Tiger இவனை சுற்றியிருப்போர் எல்லாம் குள்ள நரி
    Tiger இவன் கண்ணில் தெரிவதோ நெருப்பு பொறி
    Tiger இவனை கண்டாலே தெரிவது எதிரி கண்ணில் கிலி
    Tiger வலிய சென்று விழுவதோ பெண்களிடம் பலி
    இவன் எப்பொதும் உண்டாக்குவதோ நம் நெஞ்சில் வலி
    இதுதான் Tiger

    ReplyDelete