நண்பர்களே,
வணக்கம். இப்போதைக்கு பாட்டி வடை சுட்ட கதையை மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறேன் ! மற்றபடிக்கு விக்ரமாதித்தன் - வேதாளம் கதையிலிருந்து ; ஆமையும், முயலும் kaun banega உசேன் போல்ட் ? விளையாடியது வரை சகலத்தையும் கரைத்துக் குடித்தாச்சு சமீப நாட்களாய் ! ஆர்ச்சியின் கால இயந்திரத்தில் ஏறி பயல் பால்யத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டானோ என்ற சந்தேகம் வேண்டாம் ; அன்றாட அவசியப் பணிகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்திற்குப் பின்பாக பாக்கி சமயங்களில் படிக்கிறேன் - படிக்கிறேன் - கதை, கதையாய்ப் படித்து வருகிறேன் ! 2015-ன் அட்டவணையை இறுதிப்படுத்தும் வேளை நெருங்கி வருவதால் - கதைத் தேர்வுகளின் பொருட்டு முடிந்த பல்டியெல்லாம் அரங்கேறி வருகின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமா - என்ன? பிரெஞ்சிலும், இத்தாலிய மொழிகளிலும் உள்ள கதைகளை இணையதள விமர்சனங்கள் வாயிலாகவும், படைப்பாளிகளிடமே கேள்விகளாய் கேட்பதன் மார்க்கமாகவும், நமது மொழிபெயர்ப்பாளர்களின் குடல்களை உறுவி, கதைச்சுருக்கங்களைத் தரச் செய்வதன் மூலமாகவும் பரிசீலனை செய்து வருகிறேன் ! ஆங்கிலப்பதிப்புகள் வெளிவந்திருக்கும் கதைகளுக்கான கோப்புகளை படைப்பாளிகளிடமிருந்தே தருவித்து, பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மாங்கு-மாங்கென்று படித்து வருகிறேன் ! (படிக்கும் நாட்களில் புத்தகங்களோடு இத்தனை அவகாசம் செலவிட்ட தருணங்கள் சொற்பமே என்பது வேறு கதை !!) இது தவிர, ஜூனியர் எடிட்டரின் உதவியோடு புதுத் தொடர்கள், புதுக்கதை வரிசைகளுக்கான தேடல்கள் தனியாக ஒரு தண்டவாளத்தில் ஓசையின்றியும் ஓடிக் கொண்டுள்ளது ! புதுப்புது பதிப்பகங்களின் கதவுகளையும் சந்தடிசாக்கில் தட்டிப் பார்க்கிறோம் - நம்பிக்கையோடு ! So மோட்டு வளையைப் பார்த்த வண்ணம் கட்டிலில் சாய்ந்தால் கூட அங்கே தெரிவது சவரம் செய்யாத குதிரை வீரர்களும், 'பாங்-பாங்' கென்று சுட்டுத் தள்ளும் சூட் போட்ட டிடெக்டிவ்களுமே ! அடுத்த 30 நாட்களுக்குள் 2015-ன் முழுமையான அட்டவணை பூர்த்தியாகிட வேண்டுமென்பதாலும், கடந்த ஆண்டுகளின் குறை-நிறைகளிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டுமென்பதாலும் தலைக்குள் சதா சர்வ காலமும் இதே சிந்தனையே ! கிட்டத்தட்ட 75% அட்டவணை எனக்குள் இறுதி வடிவம் பெற்றுவிட்ட போதிலும், புது வரவுகளை நாசூக்காய் உள்ளே நுழைப்பதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி அவசியமாகிறது ! அதுவும், புதுப் பதிப்பகங்களுக்கு நமது மார்கெட்டின் தனித்தன்மைகளைப் புரிய வைப்பதற்குள் திருவாளர் நாக்கார் பூமித்தாயை வருடாத குறை தான் ! நமது இதழ்களின் விலைகளை யூரோவிற்கு மாற்றிப் பார்க்கும் வரை சுமுகமாய் செல்லும் பேச்சுவார்த்தைகள் - 'ஒரு புக்கின் விலை 0-75 யூரோ தானா ??' என்ற கேள்வியோடு கரடுமுரடான பாதைகளில் சவாரி யைத் தொடங்கி விடுகிறது ! 'இதுநாள் வரைக்கும் ரூ.10 விலையில் இதழ்களை வெளியிட்டு வந்தவர்கள் நாங்கள் ; இதுவே எங்களுக்கொரு அசாத்தியத் தொகை என்று விளக்கம் சொல்வதை சிலர் புரிந்திட முயற்சிக்கின்றனர் ; ஒரு சிலரோ - 'ப்ச்ச்ச்' என்று உதட்டைப் பிதுக்கி விட்டு நடையைக் கட்டுகிறார்கள் ! எரிச்சல் மேலோங்கினாலும், நமக்கு முரட்டுத்தனமாய்த் தோன்றும் ராயல்டி பணங்கள், யூரோவாய் மாற்றம் செய்து பார்க்கும் அவர்களது கண்களில் பட்டாணிக்கடலையாய்த் தோற்றம் தருவதும் தவிர்க்க இயலா யதார்த்தமே என்பது புரிகிறது ! So சில தேடல்கள், சில வாசிப்புகள், (புதியவர்களிடம்) சில யாசிப்புகள் என்று கடந்த ஒரு மாதமாகவே நகன்று வருவதே என் பக்கத்து update !
இதன் மத்தியில் ஓசையின்றி இன்னொரு பணியையும் செய்து முடித்துள்ளோம் ! ஒரிஜினல் அட்டவணைப்படி இம்மாதம் 3 க்ஸ் ரூ.60 இதழ்கள் என்பதே திட்டம் ! ஆனால் LMS எனும் ஒரு 'திடும்' இதழுக்குப் பின்பாக இன்னுமொரு impact இதழ் வெளியானால் தேவலை என்று தோன்றியது ! So அக்டோபருக்கென திட்டமிட்டிருந்த மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் இதழை சற்றே அட்வான்ஸ் பண்ணி இம்மாதத்தினுள் நுழைத்து விட்டோம் ! So அசாத்தியமான சித்திரங்களோடும் ; திகைக்கச் செய்யும் வர்ணஜாலங்களோடும் தயாராகியுள்ள "தேவ இரகசியம் தேடலுக்கல்ல .!" தான் செப்டம்பரின் இதழ் # 3. இதுவுமொரு கிராபிக் நாவலே என்ற போதிலும் அழுகாச்சிகளுக்கோ, யுத்தப் பின்னணிகளுக்கோ ; வறட்சியான நிஜஉலக நிகழ்வுகளுக்கோ இங்கே இடம் கிடையாது ! திபெத்தில் துவங்கி, சீனா, காஷ்மீர், அமெரிக்க என பரபரப்பாய் நகன்றிடும் ஆக்ஷன் த்ரில்லர் இது ! சித்திரங்கள் வழியாகக் கதைசொல்லும் நமது காமிக்ஸ் கலையினில் - ஓவியங்களுக்கு உச்ச மரியாதை வழங்கி இருக்கும் இக்கதையினை பார்த்த நாளே இதனை எப்படியும் தமிழுக்குக் கொண்டு வந்தே தீர வேண்டுமென்ற குடைச்சல் எனக்குள் ! புரட்டும் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஓவியம் போலக் காட்சி தரும் இந்த இதழ் நமது வண்ணப் பயணத்தில் நிச்சயமாய் ஒரு மறக்க இயலா இதழாய் அமையவிருப்பது உறுதி ! பாருங்களேன் - சின்னதாய் ஒரு teaser !
புராதன ஓவியம் போல அழகாய் புனையப்பட்டுள்ள இந்த இதழை எவ்வித ஜோடனைகளும் இல்லாது ; தலையங்கம் - filler pages இத்யாதி என்று நிரப்பிடாமல் ஒரிஜினலின் பொலிவோடு ஒரே இதழாக 160 பக்கங்களில் வழங்கியுள்ளோம் ! So அதன் அட்டைப்படமும் கூட மாற்றங்கள் ஏதுமின்றி அமைந்துள்ளதைப் பார்க்கப் போகிறீர்கள் ! "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" - காமிக்ஸ் கலையின் ஒரு ஆராதனை - இதனை முயற்சிக்கும் தூரத்துக்கு நாம் வளர்ந்துள்ளோம் என்பதை நிச்சயமாய் ஒரு பெருமையாய்க் கருதுகிறோம் ! அதிலும் இந்தக் கதையினை ஒரு பத்தோடு பதினொன்று தருணத்தில் வெளியிடாது ஒரு மில்லியன் பார்வைகளை கொண்டாடும் இது போன்றதொரு வித்தியாசமான தருணத்தில் வெளியிடுவது இன்னமும் பொருத்தமெ என்று தோன்றுகிறது ! புதிய பாதைகளில் பயணம் செல்லும் போது பேச்சுத் துணைகளாக சில வேளைகளிலும், வழிகாட்டிகளாக பல நேரங்களிலும், முதுகு நோகும் சமயங்களில் 'மூவ்' தேய்க்கும் ஆதரவுக் கரங்களாகவும் ; எங்களது உத்வேக அளவுகள் சற்றே குறைந்திடும் தருணங்களில் க்ளுகோஸ் ஊட்டும் தோழர்களாகவும் - எல்லாவற்றிற்கும் மேலாய் அற்புத காமிக்ஸ் காதலர்களாய் ; நண்பர்களாய் மிளிரும் இந்தச் சிறு குடும்பத்திற்கு ஒரு mega-salute !! நிறைய சந்தோஷங்களை ; சங்கடங்களை ; உற்சாகங்களை ; உளைச்சல்களை ; உயரங்களை ; பாதாளங்களை இத்தளம் நமக்கு வெவ்வேறு தருணங்களில் அடையாளம் காட்டியுள்ளதென்பதில் துளியும் ஐயமில்லை ! ஆனால் அத்தனை சமயங்களிலும் ; அத்தனை காயங்களுக்கும் நமது காமிக்ஸ் நேசம் ஒரு அருமருந்தாய் இருந்துள்ளதையும், கஷ்ட தருணங்களையும் மீறி நமது நட்பு தொடர்வதே மில்லியன் ; ட்ரில்லியன் என்ற எண்ணிக்கைகளுக்கு அப்பாலான நிஜ வெற்றியாக நான் பார்த்திடுகிறேன் ! This has been a fascinating online journey !!!
ஒரு 160 பக்க கிராபிக் நாவல் புரமோஷன் கண்டுள்ள காரணத்தினால் - இம்மாதம் வரவிருந்த 56 பக்க கிராபிக் நாவலான "காலனின் கைக்கூலி" அக்டோபரில் வெளிவந்திடும் ! So இம்மாதப் பட்டியல் பின்வருமாறு :
- லயன் காமிக்ஸ் - செங்குருதிச் சாலைகள் - ரூ.60
- முத்து காமிக்ஸ் - காதலிக்கக் குதிரையில்லை - ரூ.60
- லயன் காமிக்ஸ் - மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் (தேவ இரகசியம் தேடலுக்கல்ல")
மி.ஹி.ஸ்பெஷல் சற்றே பருமனான இதழ் என்பதால் பைண்டிங்கில் கூடுதலாய் ஒரு நாள் அவகாசம் அவசியமாகிறது ! ஆகையால் செவ்வாய்க்கிழமை (2 செப்டெம்பர்) காலையில் இம்மூன்று இதழ்களும் கூரியரில் உங்களைத் தேடித் புறப்படும் ! (சின்னதொரு நினைவூட்டலும் கூட - இந்த 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' சூப்பர் 6 சந்தாவின் இதழ் ! வழக்கமான சந்தாவினில் இது இடம் பெறாது என்பதை மறந்திட வேண்டாமே !)
இரு வெவ்வேறு தருணங்களில் சந்தாக் கட்டணங்களை அறிவிக்கும் பாணி 2015-ல் தொடர்ந்திடாது ! வருடத் துவக்கத்திலேயே ரெகுலர் சந்தா + optional சந்தா என்று இரண்டையுமே அறிவிப்பதாய் உள்ளோம் ! அவற்றுள் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து ஆண்டின் ஆரம்பத்திலேயே சந்தாக்களைச் செலுத்திடலாம் ! சந்தா ; புக்கிங் என்ற தலைப்பினில் இருக்கும் வேளையிலேயே இதோ "மின்னும் மரணம்" The Complete Saga-வின் முன்பதிவுப் பட்டியல் (ஒரு வாரத்துக்கு முன்பான நிலவரப்படி ) :
இவை முன்பதிவு கிடைக்கப் பெற்ற வரிசையில் இல்லையென்பதையும் ; இவையே உங்களின் முன்பதிவு நம்பர்கள் என்பதையும் சொல்லும் கடமை அடியேனுக்கு உள்ளது ! ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை புக் செய்துள்ள நண்பர்களும் இப்பட்டியலில் உள்ளதால் இது வரை சுமார் 175 பிரதிகளுக்கு முன்பதிவாகியுள்ளது என்று சொல்லலாம் ! Obviously நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் நிறையவே உள்ளது ! இம்மாத முத்து காமிக்ஸில் இந்த இதழின் அறிவிப்பு வருவதைத் தொடர்ந்து வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களும் முன்பதிவுகளைத் துரிதப்படுத்துவார்கள் என்று நம்புவோம் ; fingers crossed !!
அப்புறம் கடந்த ஞாயிறின் பதிவில் நான் கேட்டிருந்த 15 கேள்விகளுக்கு உங்களிடமிருந்து வந்துள்ள (விரிவான) பதில்கள் real eye-openers!! நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு உங்களில் பலர் பதில்கள் தர முனைந்துள்ளதைப் பார்க்கும் போது உங்களின் அக்கறையும், ஈடுபாடும், தெளிவாகத் தெரிகிறது ! Thanks ever so much guys ; தொடருமொரு பதிவினில் அதைப் பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமே ?! இப்போதைக்கு "கதை படிக்கும் பணி" அழைப்பதால் அதனுள் நுழைந்திடப் போகிறேன் ! அதிலும் காத்திருப்பது 'தல' கதை எனும் போது கேட்கவா வேண்டும் ? Adios amigos - மீண்டும் சந்திப்போம் ! Enjoy the day !
i am first
ReplyDeleteடியர் எடிட்டர்ஜீ!!!
Deleteதேவ ரகசியம் தேடலுக்கல்ல -அட்டைப்படம் அட்டகாசம்.ரகசியங்கள் "ரகசியம்" ஆனது ஏனோ...?ரகசியங்களையே பயன்படுத்தியிருக்கலாமே ஸார்.
பெரியவரின் பின்னால் உள்ள கடவுள் ....விஷ்ணு...?...பிரம்மா...?
//'ஒரு புக்கின் விலை 0-75 யூரோ தானா ??' என்ற கேள்வியோடு கரடுமுரடான பாதைகளில் சவாரி யைத் தொடங்கி விடுகிறது ! 'இதுநாள் வரைக்கும் ரூ.10 விலையில் இதழ்களை வெளியிட்டு வந்தவர்கள் நாங்கள் ; இதுவே எங்களுக்கொரு அசாத்தியத் தொகை என்று விளக்கம் சொல்வதை சிலர் புரிந்திட முயற்சிக்கின்றனர் //
அந்த வெளிநாட்டுக்காரர்கள் கூட புரிந்துகொள்வார்கள்.நம்மூரில்தான் ஒருசிலர் "யானை விலை குதிரை விலை" என்று குதிக்கிறார்கள்!
மறுபடியும் மொதல்லருந்தா.?
Delete(அண்ணே.! அந்த சப்ஜெக்ட் நமக்கு வாணாமுண்ணே.!!)
மறுபடியும் மொதல்லருந்தா.?
Delete(அண்ணே.! அந்த சப்ஜெக்ட் நமக்கு வாணாமுண்ணே.!!)
நம்பள் துண்டைப் போட்டு பட்டியலில் இடம் பிடிச்சிட்டான் ஜி! சீக்கிரம் புலியாரை அவுத்து விட்டு அசத்துங்கோ! நம்பள் ப்ரே பண்றான்! நிம்பள் கில்லி அடிக்றான் கில்லி! மின்னும் மரணம் இந்த சேட்ஜிக்கு ரொம்ப புடிக்கறான் ரொம்ப! உங்கள்கு தாங்க்ஸ் சொல்றான்!
Deleteஅது கௌதம புத்தர் !
Deleteநல்லா உத்து பாரு நைனா.புத்தருக்கு நாலு கை கீதா வாத்யாரே...? சோத்தாங்கையி,பீச்சாங்கையி ன்னு டபுலு கைதானே கீது.அத்தொட்டு நானு இன்னா சொல்றேன்னா தாத்தா பேக்குல கீற சாமி நம்ம கொலவாரன்பேட்ட முனீஸ்வரன் மாரி கீது.நம்ம கபாலி கீறானே.அவனோட கொல சாமி.போனவாட்டி கூட நம்ம ஏரியாவாண்டே கொழாயி ஸ்பீக்கரு கட்டி கொல சாமிக்கு கடா வெட்டி பொங்க வச்சு அல்லாருக்கும் சப்ல பண்ணிக்கினான்.மக்கா நாளு போலீசு வந்து கபாலிய சாராய கேசுல தூக்கிகினானுங்க.ரொம்ப வில்லங்கம் புடிச்ச சாமி ன்றேன்.நீ இன்னான்றே?
Deletesaint satan : "இரகசியங்கள்" - "இரகசியம்" ஆனதன் இரகசியம் ஓரிரு நாட்களில் புலனாகிடுமே !
Deleteகாத்திருப்போம் /க்கிறேன்
Deleteவந்துட்டே ன்
ReplyDeleteசூப்பர்! படித்து விட்டு வருகிறேன்!
ReplyDelete//இப்போதைக்கு "கதை படிக்கும் பணி" அழைப்பதால் அதனுள் நுழைந்திடப் போகிறேன் ! அதிலும் காத்திருப்பது 'தல' கதை எனும் போது கேட்கவா வேண்டும்//
Deleteஅப்போ "கிங்" ஸ்பெஷல் நம்ம தல டெக்ஸ் !! சூப்பரு ! :)
P.Karthikeyan : 2015 -ன் 'தல' கதைகளின் தொகுப்பும் என் மேஜையில் கிடக்கின்றன நண்பரே !!
Delete//பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மாங்கு-மாங்கென்று படித்து வருகிறேன் ! //
ReplyDelete:)
I am there in the list! :D
Deletesir salute for your surprise! that's a highest honer i could give in this moment!
Satishkumar S : :-)
Deleteகொடுத்து வைத்த ஆசாமி
ReplyDeleteOnce again in top ten
ReplyDeletewill come back ...... after reading
ReplyDeleteரைமிங் கவிஞரே,
Deleteஇன்னுமா படிக்கிறீக.?
திட்டம் வகுத்து பணிச்சுமை கழித்து எழுத்து கூட்டி
Deleteபடித்து எண்ணத்தை பெருக்கி இப்போதுதான் எழுத முடிந்தது .........
(பேசாம :o இப்படி ஒரு ஸ்மைலி மட்டும் போட்டிருந்திருக்கலாம்தான் )
விஜயன் ஸார், மின்னும் மரணம் - முன் பதிவுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்??
ReplyDeletehttp://lioncomics.worldmart.in/index.php?categoryID=37
Deletehttp://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_2.html
follow the link for the details friend!
ஐந்தாவதாக இருக்கும் மகேந்திரன் கோயம்புத்தூர் நாந்தான்
ReplyDeletewelcome to the blog sir. Sorry if this is not your first post :-)
DeleteThank you very much. Not my first post but I post once in a while. Not new to our Lion comics too. Reading since modesty in Istanbul. It is 27+ years relation.
Deleteசாத்தான் சார்.. நீங்கள் முதல்...நான் பத்து ( அதற்குள் வரிசை மாறிவிடுமா..?)
ReplyDelete//So அசாத்தியமான சித்திரங்களோடும் ; திகைக்கச் செய்யும் வர்ணஜாலங்களோடும் தயாராகியுள்ள "தேவ இரகசியம் தேடலுக்கல்ல .!" தான் செப்டம்பரின் இதழ் # 3. //
ReplyDeleteஉய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.!!!!
+1
Deleteமை டியர் மானிடர்களே!!!
ReplyDeleteமின்னும் மரணம் முன்பதிவு பட்டியலில் நம்ம ஈரோடு விஜய் அவர்களின் பெயர் விஜய் சேகர் என்பதற்கு பதிலாக விஜய் சேங்கர் என்று அச்சாகியுள்ளது.
தங்கத்தலைவனை அவமதித்த அவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இன்னா சொல்றீங்க மக்கலே;-)
This comment has been removed by the author.
Deleteசாத்தான்ஜி ! அது எழுத்து பிழையல்ல ...............
Deleteஉலகம் முழுதும் நிறைந்துள்ள டெக்ஸலைட்டு களின் பரிபாஷையில்
சேங்கர் என்றால் அழகுள்ள அறிவுள்ள பண்புள்ள பணிவுள்ள போர்க்குணம் உள்ள
போர்வாள் என்று அர்த்தம் ......
வேண்டுமானால் இத்தாலி டு தமிழ் அகராதி -யை புரட்டி பாருங்களேன் ......
(விஜய் !...நிறைய adjectives போட்டிருக்கிறேன் ....ஒரு டயட் பெப்சி -யாவது
வாங்கி தரணும் )
சேங்கர் ங் என்றாலே மரியாதைதான் ! எனுங் நான் சொல்றது சரிதானுங்
Deleteடைப்செட் செய்யும் சகோதரியிடம் ஈரோட்டு முறைப்படி என் பெயரை கொஞ்சம் மரியாதையாக 'ங்' சேர்த்து போடச் சொல்லியிருந்தேன். விஜய் 'சேங்கர்' ஆக்கிட்டாங்க. ;)
DeleteErode VIJAY : திருமணத்திற்கு முன்பாய்ப் பணிகளை முடித்துத் தரும் அவசரமாக இருந்திருக்கலாம் சகோதரிக்கு !!
Delete//இம்மாதம் வரவிருந்த 56 பக்க கிராபிக் நாவலான "காலனின் கைக்கூலி" அக்டோபரில் வெளிவந்திடும் ! //
ReplyDeleteவடை போச்சே.!,?,!,?
this is called "graphics for graphics"- game?!
DeleteNice post!
ReplyDeleteமின்னும் மரணம்" The Complete Saga-வின் முன்பதிவுப் பட்டியலில் முதல் பெயர் எனது பெயர் :)
ReplyDeletegood to see your post friend! its a rare number you got friend, congrats!
Deleteதேவ இரகசியம் தேடலுக்கல்ல - Now looks interesting and the wrapper is stunning! Nice to see a 160 page thriller shipping this month! :)
ReplyDeletePS: There is a black color Ambassador car in one panel - long time no see! :D
Ramesh Kumar : அம்பாசடரா ? அமெரிக்காவில் அம்பாசடருக்கு சாத்தியங்கள் குறைவே..!! Could be a vintage Buick..?
Delete//இது தவிர, ஜூனியர் எடிட்டரின் உதவியோடு புதுத் தொடர்கள், புதுக்கதை வரிசைகளுக்கான தேடல்கள் தனியாக ஒரு தண்டவாளத்தில் ஓசையின்றியும் ஓடிக் கொண்டுள்ளது ! //
ReplyDeleteஇந்த பதிவில் அதிக உற்ச்சாகம் அளித்த செய்தி இதுதான்.!
+2
Delete@Kannan Ravi,
DeleteLoad More இரண்டுநாளாவது தள்ளி வரட்டுமே.
பிளாஸ்திரி.!
Deleteஇல்லயில்ல
+3
ஓஹோ இவரு தான் லோட் மோருக்கு காரணமா ...........
Deleteநல்ல வேளை இவருமேல தான் எல்லாரும் ''கண்ணா'' இருக்காங்க..................... நம்மல யாரும் கண்டுக்கலை ............இளையராஜா பார்த்தா தாளிச்சுடுவார்
Deleteமில்லியன் ஹிட்ஸ் அறிவிக்கப்பட்டதற்கு முன்பாகவே வருவதற்கு மகிழ்வதா , "காலனின் கைக்கூலி" வெளியிடு தேதி ஒத்திவைக்கப்பட்டதிற்கு வருந்துவதா?!! எனது மி.மி.முன்பதிவு எண்- 7
ReplyDeleteதேவ ரகசியம் தேடலுக்கல்ல இந்த மாதமே வருவது மகிழ்ச்சி ..காலனின் கைகூலி யோடு
ReplyDeleteசேர்ந்து 4வது புத்தகமாக வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்
+1
DeleteBAMBAM BIGELOW : எனக்கும் ஆசை தான் ; ஆனால் ஒரே மாதம் 2 கிராபிக் நாவல் என்ற ஓவர்டோஸ் வேண்டாமே என்று நினைத்தேன் !
DeleteMy Reservation number is 56...
ReplyDeleteதேவரகசியம் தேடலுக்கு அல்ல ஓவிய பாணி தமிழ் காமிக்ஸ்ற்கு புதியது என கருதுகிறேன்!
ReplyDeleteஅப்போது தீபாவளிக்கு வில்லர் வரார்னு சொல்லுங்கள்... ஹை ஜாலி...
ReplyDeleteஹலோ ஆசிரியரே ...
Deleteகார்சனின் கடந்த காலம் எப்பொழுது ?
AHMEDBASHA TK : October....
Deleteஆஹா ! காத்து கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு.....இல்லையா சார் ?
Deleteவணக்கம்......
ReplyDelete//வருடத் துவக்கத்திலேயே ரெகுலர் சந்தா + optional சந்தா என்று இரண்டையுமே அறிவிப்பதாய் உள்ளோம் ! அவற்றுள் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்து ஆண்டின் ஆரம்பத்திலேயே சந்தாக்களைச் செலுத்திடலாம் !//
ReplyDeleteதேவையானதை தேர்வு செய்து.:::-
எல்லாமே தேவையானதுதான்.
இரண்டு மாதம் இடைவெளி விட்டு Optional சந்தாவை அறிவித்தால் சிரமம் குறையுமே சார்.!
கதைகளின் எண்ணிக்கை 50க்கு குறையாது என்ற நம்பிக்கை இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
//இரண்டு மாதம் இடைவெளி விட்டு Optional சந்தாவை அறிவித்தால் சிரமம் குறையுமே சார்.!//
Deleteவேணாம் வேணாம்.,
ஒட்டுக்காவே கட்டிப்புடறேன்.
தெரியாம சொல்லிப்புட்டேன்.
அப்புறம்..இங்க இருக்குற வல்லுனர்கள்,
இந்தியாவோட பொருளாதாரம்,தனிநபர் வருமானம், டாலரு,யூரோன்னு காய்ச்சி ஊத்தி என் கண்ண கலங்கடிச்சிருவாங்க.!
(நாம்ப யாரு வம்புக்கும் போறதில்ல (சிரிக்காதிங்க.) )
தமிழ் திரையுலகில் தற்போது அறிமுகமாகி இருக்கும் C2H(cinima to home)ற்கு ஒரு வகையில் நாம் முன்னோடி நாமும் C2H (Comics 2 Home)தான்!
ReplyDeleteGood one!
Deletesenthilwest2000@ Karumandabam Senthil : நிறைய சினிமாக்களுக்கே காமிக்ஸ் எனும் கலை தானே முன்னோடி ; inspiration !!
Delete//மி.ஹி.ஸ்பெஷல் சற்றே பருமனான இதழ் என்பதால் //
ReplyDeleteசைசு
பெருசா.,?
இல்ல
சிருசா.?
சொல்லவே இல்லையே.!!!!
இந்த கதையின் ஓவியங்களுக்கு, கண்டிப்பாக பெரிய சைஸ் தான் செட் ஆகும்.....160 pages for 150 rupees so கண்டிப்பாக பெரிய சைஸ் தான்....
Delete//.....160 pages for 150 rupees so கண்டிப்பாக பெரிய சைஸ் தான்.//
Deleteit's really a medical miracle.
awaiting for Wednesday,!!
@ ALL : பெரிய சைஸ் தான் ! சித்திரங்களுக்கு நியாயம் செய்ய சின்ன சைஸ் சரிப்பட்டு வராது இக்கதைக்கு !!
Delete//@ ALL : பெரிய சைஸ் தான் ! சித்திரங்களுக்கு நியாயம் செய்ய சின்ன சைஸ் சரிப்பட்டு வராது இக்கதைக்கு !! //
Delete:D
விரியனின் விரோதியை சந்தித்து சில நாட்களே கடந்திருக்கும் நிலையில்
ReplyDeleteகாலனின் கைக்கூலி சற்றே தாமதமாக வருவதில் வருத்தம் பெரிதாய் இல்லை.
(தீபாவளிக்கு வரட்டுமே.?)
அசத்தலான எதிர்பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சி சார்.மௌனப்பார்வையாலனான என்னை பதிவிடத் தூண்டிய "தேவ இரகசியம் தேடலுக்கல்ல .! அறிவிப்புக்கு நன்றி.
ReplyDeleteதீபாவளிக்கும் இது தொடரட்டும்.நீங்கள் தல கதையை படிக்கப் போகிறீர்கள் என்று கோடி காட்டியிருப்பதே தல தீபாவளிக்கு வெளிவருவார் என்பது உறுதி.
வரவு நல்வரவாகுக! தொடர்ந்து பதிவிடுங்கள்!
Deleteவெல்கம் ப்ரெண்ட் !........தொடர்ந்து எழுதுங்க ........:)
Deleteஅக்டோபரில் தல வருவார்....! ஆனால் புது மாப்பிள்ளையாகயில்லை, கா. க. கா. மூலம் பழைய மாப்பிள்ளையாக.... அநேகமாக, அடுத்த மாதம்...நான்கு இதழ்கள்?
Delete1. கிராபிக் நாவல் - தீபாவளி மலர்.
2. லார்கோ
3. காலனின் கைக்கூலி
4. கார்சனின் கடந்தக் காலம்..(அக்டோபரில் வரும் பட்சத்தில் முன்பு கோடைமலராகவும், தற்போது தீபாவளி மலராகவும் (தல ரசிகர்களுக்கு) வெளிவந்த ஒரேயிதழ் என்ற பெருமையையடையும்!))
பரணி சார்,செல்வம் சார் மற்றும் முஹியித்தீன் அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி.நான் கடந்த கடந்த சென்னை புத்தகத்திருவிழாவில் தற்செயலாக நம் ஸ்டாலை பார்வையிட்டேன்.என்னை முதலில் கவர்ந்தது டெக்ஸ் வில்லரின் பூத வேட்டை.சிகப்பாய் ஒரு சொப்பணம்,நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் வண்ண இதழ்) மற்றும் டாஞ்செர் டயபோலிக்கின் குற்ற திருவிழா.
Deleteஇவற்றை படித்தவுடன் எனக்கு ஒரு புதிய உலகில் நுழைந்து விட்டோம்.இனி பிரிய கூடாது என்று மனதுள் ஆழமாக பதிந்து விட்டது.பிறகுகூகிளில் தேடியபோது நண்பர் கார்த்திக்கின் பிளேட்பீடியா மூலம் நம் வலைத்தளம் அறிமுகமானது.அப்புறம் எனக்கும் சித்திரபித்து உண்டாகி என்னென்ன இதழ்கள் இருப்பில் உள்ளனவோ அனைத்தையும் கலீல் அண்ணாவிடம் வாங்கி ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனவே என்னை முதல் பார்வையிலேயே வாசிப்பதற்கு முன்பே கவர்ந்தது
டெக்ஸ் என்பதால் (வாசித்த பின்பும்) தீபாவளிக்கு இரவுக் கழுகாரின் வருகையை உறுதிப்படுத்திய எடிட்டருக்கு நன்றி.(கார்சனின் கடந்த காலம் நான் படித்ததில்லை.அதனால் டெக்ஸ் என்றும் எனக்கு புது மாப்பிளைதான்)
//(கார்சனின் கடந்த காலம் நான் படித்ததில்லை.அதனால் டெக்ஸ் என்றும் எனக்கு புது மாப்பிளைதான்)//
Deleteஅந்த அற்புத காவியத்தை (வண்ணத்தில்.) முதல்முறை படிக்கப்போகும் உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கு.!
//வெல்கம் ப்ரெண்ட் !........தொடர்ந்து எழுதுங்க ........:)//
Delete+1
அக்காங் .................தொடர்ந்து எழுதுங்க ......
Deleteகலீல் அண்ணாவிடம் வாங்கி ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்..............
அப்பிடியே கலீபா அண்ணனையும்...............ஆசிரியரிடம் கேக்க மறந்துடாதீங்க
Thirumavalavan P : புது மாப்பிள்ளையும், மாப்பிள்ளையின் தோழனும் நிச்சயம் ஏமாற்றப் போவதில்லை !
DeleteI am 45 in list...hope so bcoz initial is missing
ReplyDeleteDasu bala : Oops..! Sorry !!
Deleteதேவ இரகசியம் தேடலுக்கல்ல: ஒவ்வொரு ஃப்ரமும், நீள வாக்கில் அமைத்து, படத்தின் மூலமாகவே நிறையே இடத்தில் கதை சொல்லி இருப்பார்கள்...பின்னணி ஓவியங்கள் மிக நுணுக்கமாகவும், அருமையாகவும் இருக்கும்....ஆங்கிலத்தில் படித்து விட்டாலும், தமிழ் பதிப்பிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....
ReplyDeleteஎடிட்டர் சார்.,
ReplyDeleteபோன பதிவுல பரிட்சை வெச்சிரூந்திங்களே.!
பேப்பர் திருத்தின பிறகு நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை பற்றியும் ஒரு கோடு போட்டு காட்டினா சந்தோசப்படுவோம் சார்.
படிச்சு படிச்சு
மாஞ்சி மாஞ்சி எழுதினோம்.ரிசல்ட்ட தெரிஞ்சுக்க ஆசை.?
உங்க பேப்பரையாவது ட்ரேஸ் பண்ணிடலாம் .......கவலைய விடுங்க .........
Deleteஒண்ணு கவனிச்சீங்களா ?....சதீஷ் குமார் சார் ...போன பதிவில் அங்கே இங்கே -ன்னு
+1 போட்டே 15 கேள்விக்கும் ஆன்ஸர் பண்ணிட்டாரு ...பிட்டு ?....;)
கேள்விக்கும்
//மாஞ்சி மாஞ்சி எழுதினோம்.ரிசல்ட்ட தெரிஞ்சுக்க ஆசை.?//
Delete+1
school habit(?) :)
//+1 போட்டே 15 கேள்விக்கும் ஆன்ஸர் பண்ணிட்டாரு ...பிட்டு ?....;)//
Delete+1 :D
answering is important! than how (?) :)
ரிசல்ட் வேனும்னா கொஞ்ச செலவு ஆவுமே .............
DeleteKannan Ravi : இவ்வார இறுதியில்...!!
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDelete//இந்த இதழை எவ்வித ஜோடனைகளும் இல்லாது ; தலையங்கம் - filler pages இத்யாதி என்று நிரப்பிடாமல் ஒரிஜினலின் பொலிவோடு ஒரே இதழாக 160 பக்கங்களில் வழங்கியுள்ளோம் !//
பல பாகக் கதைகளை, ஒரே புத்தகமாகப் படிப்பது நிறைவான அனுபவத்தைத் தரும்; இனி வரும் தொடர் கதைகளை இயன்ற வரை இப்படியே வெளியிடுங்கள்!
பக்க நிரப்பிகள் இல்லாதிருப்பது, இப்புத்தகத்திற்கு தனி அழகை அளிக்குமென்பது நிச்சயம்! முதல் பக்கத்திலேயே சடாரென கதையைத் துவக்கிடாமல் - படைப்பு விவரங்கள் (தலைப்பு, ஆசிரியர்கள் & பதிப்பகம்) தாங்கிய வெண் பக்கத்தையோ அல்லது உள்ளிருக்கும் சித்திரங்களில் சிறப்பானதொன்றை முன்னிறுத்திய தலையங்கத்தையோ ஒதுக்கியிரு(ப்பது அழகு!)க்கலாம்! ஒருவேளை ஏற்கனவே அப்படி இருக்கக் கூடும் என்பதால், அடைப்புக் குறிகளுக்குள் ஒரு 'எக்ஸ்ட்ரா பிட்' போட்டு வைத்துள்ளேன்! :D
million-ஐ, pillion-ல் தள்ளிய அட்டை அழகு! திகைப்பையும், பீதியையும் கிளப்பக் கூடிய "கிராஃபிக் நாவல்" என்ற சொல்லை உபயோகிக்காமல், வெறுமனே "திகைக்கச் செய்யும் ஒரு த்ரில்லர்" என்று போட்டிருப்பது ஆறுதல்! ;)
வசனங்களுக்கிடையே சித்திரங்களைத் தேட வைக்கும் சித்திரக்(!) கதைகளைப் போலன்றி, அளவான வசனங்களுடன் கூடிய, வித்தியாசமான ஓவியங்கள் ரசிக்க வைக்கின்றன... கதையும் ரசிக்க வைக்கும் என்றே நம்புகிறேன்! இவ்வகை ஓவியங்கள், ஆர்ட் பேப்பரில் மேலும் அழகாக மிளிரும் என்றும் நம்புகிறேன்!
பி.கு.: மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் வரவிருக்கும் வேளையில், ஃபேஸ்புக்கிலும் 1000 லைக்குகளைக் கடந்திருக்கிறீர்கள் - வாழ்த்துகள்!
//பல பாகக் கதைகளை, ஒரே புத்தகமாகப் படிப்பது நிறைவான அனுபவத்தைத் தரும்; இனி வரும் தொடர் கதைகளை இயன்ற வரை இப்படியே வெளியிடுங்கள்!//
Deleteஆமாம் சுவாமி.!
("+1"க்கு தமிழ்பதம்.)
//பல பாகக் கதைகளை, ஒரே புத்தகமாகப் படிப்பது நிறைவான அனுபவத்தைத் தரும்; இனி வரும் தொடர் கதைகளை இயன்ற வரை இப்படியே வெளியிடுங்கள்!
Delete//+1
//வசனங்களுக்கிடையே சித்திரங்களைத் தேட வைக்கும் சித்திரக்(!) கதைகளைப் போலன்றி, அளவான வசனங்களுடன் கூடிய, வித்தியாசமான ஓவியங்கள் ரசிக்க வைக்கின்றன... கதையும் ரசிக்க வைக்கும் என்றே நம்புகிறேன்! இவ்வகை ஓவியங்கள், ஆர்ட் பேப்பரில் மேலும் அழகாக மிளிரும் என்றும் நம்புகிறேன்!//
+1
//பி.கு.: மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் வரவிருக்கும் வேளையில், ஃபேஸ்புக்கிலும் 1000 லைக்குகளைக் கடந்திருக்கிறீர்கள் - வாழ்த்துகள்!//
+1 congrats for this Edit! wishes to add few more zeros at the end soon!
கார்த்திக், இங்க நீங்க திரி வைத்தத இன்னும் யாரும் சரியாக கவனிக்கல, பார்க்கலாம் யார் கண்டு பிடிக்கிறாங்கன்னு :-)
Delete//ஃபேஸ்புக்கிலும் 1000 லைக்குகளைக் கடந்திருக்கிறீர்கள் - வாழ்த்துகள்!//
DeleteFacebook special (1000 likes,)
கார்த்திக் இந்த திரியைத்தானே பற்ற வைத்திருக்கிறார்.
(வெடிப்பதும் .புஸ்வானமாவதும் யார் கையில் இருக்கிறது.?)
Karthik Somalinga : //படைப்பு விவரங்கள் (தலைப்பு, ஆசிரியர்கள் & பதிப்பகம்) தாங்கிய வெண் பக்கத்தையோ அல்லது உள்ளிருக்கும் சித்திரங்களில் சிறப்பானதொன்றை முன்னிறுத்திய தலையங்கத்தையோ ஒதுக்கியிரு(ப்பது அழகு!)க்கலாம்! ஒருவேளை ஏற்கனவே அப்படி இருக்கக் கூடும் என்பதால், அடைப்புக் குறிகளுக்குள் ஒரு 'எக்ஸ்ட்ரா பிட்' போட்டு வைத்துள்ளேன்! :D//
Deleteநீங்கள் 'cautious கார்த்திக்' என்றால் அடியேன் 'முன்ஜாக்கிரதை முத்தண்ணா' !! :-)
// ஒதுக்கியிரு(ப்பது அழகு!)க்கலாம் //
Deleteஎதிர்காலத்தில் பிராக்கெட் உள்ளே பிராக்கெட் என காம்பினேஷன்ஸ் வளர (வாழ்த்துக்கள்! (என சொல்லவேண்டி வருமோ?)) வாய்ப்புள்ளதா?
மிகவும் எதிர்பார்க்க வைத்த இதழ் வருகிறது நன்றி விஜயன் sir countdown starts.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..
ReplyDeleteமுதல் பதிவும்................. நாற்பதாவது நம்பரும்
Deleteநற....நற...
DeleteVijayan sir இது போல உங்கள் இடம் நிறைய எதிர் பார்கிரோம் 2015இல் ஒரு 20 சதவீதம் இந்த மாதிரி கதைகள் ஒதுக்கீடு செய்தல். நன்றாக இஇருக்கும் sir most awaiting book of the year countdown begins
ReplyDelete//Vijayan sir இது போல உங்கள் இடம் நிறைய எதிர் பார்கிரோம் 2015இல் ஒரு 20 சதவீதம் இந்த மாதிரி கதைகள் ஒதுக்கீடு செய்தல். நன்றாக இஇருக்கும் //
Delete+1
kabdhul : புதுமைகளை விரும்பும் நண்பர்களுக்கும், பழமையே போதுமே என்று கருதும் நண்பர்களுக்கும் நெருடல் தரா ஒரு அட்டவனையை உருவாக்குவதே இப்போதுள்ள சவால் !! பார்ப்போமே...!!
Deleteஆஹா பல நண்பர்கள் வேண்டுவது முத்து காமிக்ஸின் முதல் நூற்று நாற்பது இதழ்களில் சிறந்ததை ! காரிகனின் சிறந்த கதைகள் அதில் உண்டாமே உண்மையா ?
Delete56th
ReplyDeleteSuper sir. TeX diwali special confirmed
ReplyDeletetex kit : Ahaa ??
Deleteதேவ இரகசியம் தேடலுக்கல்ல படம் மிக அருமை .காலனின் கைக்கூலி புத்தகத்திற்காக காத்துள்ளேன்.2015ல் என்ன கதைகள் வர உள்ளன என்று ஆர்மாக உள்ளது.
ReplyDeleteSalemLee : காத்திருக்க 60 நாட்களே...நவம்பரில் 2015-ன் அட்டவணை உங்கள் கைகளில் இருந்திடும் !
DeleteSir. My name is missing from the list. I pre booked Minnum Maranum on 5th August
ReplyDeleteAnu : தவறு எங்களதே...!! உங்களின் ஆர்டரையும் பதிவு செய்து கொண்டோம் ; விரைவிலேயே திருத்திய பட்டியலில் உங்கள் பெயரையும் காண்பீர்கள் ! Thanks for letting us know !
Deleteதே..ர..தேடலுக்கல்ல,
ReplyDeleteஎதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது.
டீஸர் பார்க்கும்போதே வாய் திறந்த நிலைக்கு தயாராகிவிட்டது.
இடையில் இருக்கும் இரண்டு நாட்களும் நிச்சயம் இண்டு யுகங்களே.!!!
Kannan Ravi : ஓராண்டாய் இந்த ஓவியங்களைப் பார்த்து வாய் பிளந்து வருபவன் நான் ; உங்கள் பாடு தேவலை நண்பரே!
Deleteஆங்கிலத்தில் படித்து அகமகிழ்ந்த இந்த தேவ ரகசியம் கண்டிப்பாக ஜெயிக்கிற குதிரை சார்! அருமையான ஒரு தருணத்தில் வெளியிட்டுள்ள உங்களுக்கும், பரிந்துரைத்த விக்ரமுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteJohn Simon C : வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே...!உங்களின் பதிவை ஒரு முக்கியமான பின்னூட்டமாய்ப் பார்க்கிறேன் ...! இவ்வாரத்திலே அதன் காரணம் அனைவருக்கும் புரிந்திருக்கும் !
DeleteVijayan sir, I know why you are saying this. I have read this in English. I think controversy will be lot less in Comics worlds than the cine world. Contrary to the belief, comics readers are matured. :)
Deleteவிஜயன் சார், முதல் முறையாக ஒரு புதிய சாகசத்தை ஒரு முழு இதழாக வெளி ஈடுவதற்கு எனது நன்றி; அதுவும் அறிமுகம் இல்லாத ஒரு புதிய கதைகளம் 160 பக்கம்களில் எனும் போது எனது ஆர்வம் பன்மடங்காக கூடி உள்ளது. இது போன்ற சித்திர விருந்தில் நமது அச்சுத்தரதின் பங்கு மிக முக்கியம்; L.M.S போன்று சிறப்பாக வருமாறு பார்த்து கொள்ளவும். இது போன்ற இதழ்களில் நண்பர் கார்த்திக் சொன்னது போல் கூடுதல் விஷயம்களை இணைத்து வெளி இட்டால் இன்னும் சிறப்பாக அமையும்.
ReplyDeleteகடந்த சில தினம்களாக நமது தளத்தின் பார்வையாளர்கள் வரவு அதிகம் ஆனதால் நமது மில்லியன் ஹிட்ஸ் இதழ் வருவதற்குள் நாம் 2 மில்லியன் ஹிட்ஸ்சை தொட்டுவிடுவோமா என நினைத்துக்கொண்டு இருந்தேன், நல்லவேளை இந்த மாதமே மில்லியன் ஹிட்ஸ் வெளி வருவது சந்தோஷம் தருகிறது.
Parani from Bangalore : //கடந்த சில தினம்களாக நமது தளத்தின் பார்வையாளர்கள் வரவு அதிகம் ஆனதால் நமது மில்லியன் ஹிட்ஸ் இதழ் வருவதற்குள் நாம் 2 மில்லியன் ஹிட்ஸ்சை தொட்டுவிடுவோமா என நினைத்துக்கொண்டு இருந்தேன்//
Deleteஆஹா...ஈரோட்டுக்காரரின் காதில் விழுந்து விடப் போகிறது ! டபுள் மில்லியன் என்று ஆரம்பித்து விடுவார் !!
விஜயன் சார், கதைய படிக்கும் போது கிடைக்கிற கேப்ல இங்கவந்து அட்டென்ட்டேன்ஸ் போட்டு போன சந்தோஷபடுவோம்; செய்வீர்களா செய்வீர்களா :-)
ReplyDelete// இரு வெவ்வேறு தருணங்களில் சந்தாக் கட்டணங்களை அறிவிக்கும் பாணி 2015-ல் தொடர்ந்திடாது ! வருடத் துவக்கத்திலேயே ரெகுலர் சந்தா + optional சந்தா என்று இரண்டையுமே அறிவிப்பதாய் உள்ளோம் ! //
நல்ல முடிவு, இதனை வரவேற்கிறேன்! இதனை படிக்கும் போது கலெக்டர் ஸ்பெஷல் வருவதற்கு வாய்புகள் அதிகமாகி விட்டதை உணர்கிறேன்!
தே.ர.தே,ல. அட்டை படம் அருமை!
// நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு உங்களில் பலர் பதில்கள் தர முனைந்துள்ளதைப் பார்க்கும் போது உங்களின் அக்கறையும், ஈடுபாடும், தெளிவாகத் தெரிகிறது Thanks ever so much guys ; தொடருமொரு பதிவினில் அதைப் பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமே ?! //
இதனை பற்றிய பதிவை விரைவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும், முடிந்தால் வரும் மாத இறுதிக்குள்.
Parani from Bangalore : //இதனை பற்றிய பதிவை விரைவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும், முடிந்தால் வரும் மாத இறுதிக்குள்.//
DeleteHopefully இவ்வார இறுதியினில்..!
சார் பல நண்பர்களை மின்னும் மரணம் முன் பதிவு நாளை மறுநாள்தான் சென்றடையும் என நினைக்கிறேன் ! நான் கார்சனின் கடந்த காலம் சேர்ந்து நான்கு இதழ்கள் இந்த மாதம் என்றிருந்தேன் ! ஆனால் காலனின் கைக்கூலியும் அடுத்தமாதத்திர்க்கே என தள்ளி போட்டு விட்டீர்கள் ! ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே பூத்திருக்கும் தேவ ரகசியம் தேடலுக்கல்ல அதே எதிர்பார்ப்பை தந்துள்ளது தங்களின்/நண்பர்களது பில்ட் up களுக்கு மத்தியில் !
ReplyDeleteமீண்டும் அடுத்த மாதத்தை சுவாரஸ்யமாக எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் . லார்கோ ,கார்சன், ஸ்டீவ் ராலண்டு என அடுத்த மாதம் மாபெரும் அமர்கலத்துடன் இருக்கும் என நினைக்கிறேன் !
அடுத்த டெக்ஸ் கதை நீங்கள் படிப்பதை பார்க்கும் போது லயன் கிங் ஸ்பெசல் எது என அனைவருக்கும் தெரிந்திருக்கும் ! தீவிரமான தங்கள் படிப்பால் எங்களுக்கு அடுத்த வருடம் அற்புதமான விருந்துகள் உண்டென்று சொல்லுங்கள் !
அடுத்த வருட கதைகளின் அட்டவணை சென்ற முறை சொன்னது போல மறவாது இந்த முறை ஆர்ட் பேப்பரிலே வழங்கி விடுங்கள் ! கார்சனின் கடந்த காலம் பழைய அட்டை அருமையாக இருக்கும் , அதனை உள் பக்கங்களில் இணைத்திடுங்கள் !
இந்த புத்தகத்தின் அட்டை படமும் ,தூரிகை கொண்டு தீட்டிய ஓவியங்களும்.....என்னத்த சொல்ல ! சீக்கிரம் வரட்டும் புதன் கிழமை ! ஹாட் லைன் இருந்திருக்கலாம் அந்த கதை குறித்து விவரிப்பதாய் ......
ஆனால் மனதிற்குள் ஒரு பட்சி இந்த மாதம் ஏதோ ஒன்று மாறுதலாய்/மிகையாய் உண்டு என்று முழங்கி கொண்டே இருந்தது ! அது போல அடுத்த வருடம் ஸ்பைடர் வருவாராமே .....
Deleteவிக்ரம் தங்கள் தேடலில் விளைந்த மில்லியன் ஹிட்சுக்கு நன்றிகள்......மீண்டும் தங்களது தேடலில் ஸ்பைடர் போன்ற ஒரு அற்புத ஹீரோ கிடைக்க வாழ்த்துகள் !
Delete//விக்ரம் தங்கள் தேடலில் விளைந்த மில்லியன் ஹிட்சுக்கு நன்றிகள்......மீண்டும் தங்களது தேடலில் ஸ்பைடர் போன்ற ஒரு அற்புத ஹீரோ கிடைக்க வாழ்த்துகள் !
Delete//
+1
மீண்டும் தங்களது தேடலில் Long John silver ,thieves of thieves போன்ற ஒரு அற்புத ஹீரோகளும் கிடைக்க வாழ்த்துகள் ! ;)
//மீண்டும் அடுத்த மாதத்தை சுவாரஸ்யமாக எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் . லார்கோ ,கார்சன், ஸ்டீவ் ராலண்டு என அடுத்த மாதம் மாபெரும் அமர்கலத்துடன் இருக்கும் என நினைக்கிறேன் !//
Deleteஸ்டீல் ஜி...அடுத்த மாதம் கார்சனின் கடந்த காலம் confirmed ஆ..?
ஏனென்றால் ஆசிரியர் அடுத்த மாதம் என்று சொன்னதாக நினைவில்லை ...
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஆனால் மனதிற்குள் ஒரு பட்சி இந்த மாதம் ஏதோ ஒன்று மாறுதலாய்/மிகையாய் உண்டு என்று முழங்கி கொண்டே இருந்தது ! அது போல அடுத்த வருடம் ஸ்பைடர் வருவாராமே .....//
Deleteஇன்னுமா அந்தப் பட்சியை யாரும் ப்ரை போடாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் ? !!
சார் அது ஒரு பீனிக்ஸ் பறவை என்று உங்களுக்கு கூடவா தெரியவில்லை !
Deleteஅஹமத் ஆசிரியரே கூறி விட்டாரே .....இப்போ ஆசிரியரிடம் கேளுங்கள் பட்சி குறித்து ....
சார் திங்கள் சிவகாசியில் இருப்பீர்களா
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : இல்லையே நண்பரே..!
DeleteALON
ReplyDeleteடார்வின் டைரி
பரகுடா
கதைகளை வெளியிடலாமே!!!
தேவ....ரகசியங்கள் ....தேடலுக்கல்ல .....
ReplyDeleteமாறுபட்ட சித்திர வண்ண கலவை .......
பாட்டி வடை சுட்ட கதையும் ....வான்ஸின் கைவண்ணத்தில் வந்தால் .........
வான்ஸின் வடை சுட்ட கதையும்......................பாட்டி கைவண்ணத்தில் வந்தால் ...........ரூம் ரெண்ட் எவ்வளோ வருது செல்லம் .........(யோசிக்கிறதுக்கு தான் )
Deletedarwins diaries
ReplyDeletebarracuda
seuls
என சர்ச் செய்து பாருங்கள் !!நல்ல விறுவிறுப்பான தொடர்கள் !!
+1
Deletetry the below link friend, I am sure you will like it.
try searching - "long john silver comics"
http://en.wikipedia.org/wiki/Long_John_Silver_(comics)
சதீஷ் அட்டை படமே ஆவலை கிளப்புதே ! கடல் கொள்ளையர்கள் எப்போதும் எதிர்பார்ப்பில் .....இப்போதாவது வருவார்களா !
Delete:)
DeleteSame feeling here Steel! Its one of supper hit 4 episode(till now) comics. விக்ரம், or Edit only have to decide! I am waiting to see this in tamil ever since I read about it in one of comics review blog. hope விக்ரம்/Editor will consider(?) for next year(?)!
@ ALL : ஆண்டுக்கு 4800 ஆல்பம்கள் படைக்கப்படும் ஒரு மார்கெட்டில் நாம் 'ஆ'வென்று வாய் பார்த்துக் கொண்டு நிற்கிறோம் ; so கதைகளுக்கு, புதிய பாணிகளுக்கு ; தொடர்களுக்குப் பஞ்சம் கிடையாது ! ஆனால் கூடியமட்டிலும் அனைத்துத் தரப்பினரையும் கவரக் கூடிய கதைகளாய்ப் பார்த்துத் தேர்வு செய்வதும் அவசியமே என்பதால் நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது !
Deleteடாப் கதாசிரியரான வான் ஹாம்மேவின் 'LADY S' போன்றதொரு தொடரைக் கூட நாம் நிராகரிக்கும் நிலை எனும் போது நமது எதிர்பார்ப்புகளின் அளவுகோல்கள் எத்தனை கடுமையானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம் !
This comment has been removed by the author.
Delete//Edit//
DeleteLady S' also ledaa(?) but do expect to read long john silver in tamil Edit! :)
புரிகிறது சார் ....நன்றிகள் என்றென்றும் !
Delete//இந்த இதழை எவ்வித ஜோடனைகளும் இல்லாது ; தலையங்கம் - filler pages இத்யாதி என்று நிரப்பிடாமல் ஒரிஜினலின் பொலிவோடு ஒரே இதழாக 160 பக்கங்களில் வழங்கியுள்ளோம் !//
ReplyDelete+1
I feel graphics novels deserves such single edition option. plz do include your தலையங்கம் !
Satishkumar S : Silence can be eloquent too...at the right places !
DeleteKannan Ravi @ ஆசிரியரின் பதிவுகளை முழுவதுமாக படித்தப்பின், பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை சிறு சிறு பதிவாக போடாமல் ஒரே பதிவாக இடலாமே, இவ்வாறு செய்வதால் "load more" பிரச்சனை குறையும்; இந்த விஷயத்தில் உங்கள் குரு ஈரோடு விஜய் அவர்களை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteParani from Bangalore.,
Deleteமூணாவது வரிய டைப் பண்ணும்போது
முதல் வரில என்ன சொன்னேன்னு மறந்து போயிடுது.
அதனால பெரிய்ய பின்னூட்டமெல்லாம் எனக்கு கொஞ்சநஞ்சம் இருக்குற ஃப்ளோவ கெடுத்துடும் பாஸ்.
(பலாப்பழத்த உரிச்சாத்தான சுளை கிடைக்கும்.,Loadmore வந்தா சமாளிப்போமே.!)
பொது பிரச்சனையான "Load more" உங்கள் பிரச்சனையை விட சிறியதுதான் எனும் போது... நடத்துங்கள்... சமாளியுங்கள்..
Deleteஎடிட்டர் சார்,
ReplyDelete* 'தேவ ரகசியம் தேடலுக்கல்ல' இந்த மாதமே வெளிவருவது எதிர்பாரா இன்ப அதிர்ச்சியளிக்கிறது.
* அடுத்த வருட கதைத் தேடல்களுக்கான முஸ்தீபுடன் நீங்கள் ஏற்கனவே 75% கதைகளை தேர்வு செய்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
* ஜூ.எடிட்டரின் ஈடுபாடும், புதிய தேடல்களும் உற்சாகமளிக்கிறது.
* மி.ம - முன்பதிவு எண்ணிக்கை தற்போது குறைவாக தோன்றினாலும், இந்தமாத இதழில் வரயிருக்கும் விளம்பரங்கள் மூலமாக இணையத்திற்கு அப்பாற்பட்ட வாசகர்களின் கவன ஈர்ப்பைப் பெற்று நிச்சயம் நமது '500'டார்கெட்டை விரைவில் அடையுமென்ற நம்பிக்கையளிக்கிறது.
* 'தே.ர.தேடலுக்கல்ல' அட்டைப்படம் அசத்தலாக உள்ளது. அட்டைப்படமே கதையை படிக்கும் ஆர்வத்தை அளிக்கிறது.
* அடுத்த வருட சந்தாத் தொடர்பாக நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒருவகை நிலைத்தன்மையளிக்கிறது. உங்களது இம்முடிவு எங்களுக்கு எவ்வகையிலும் குண்ண்டு சிறப்பிதழ்கள் கிடைக்கத் தடையாக இருக்கக்கூடாதே என்று துளியூண்டு கவலையளிக்கிறது.
* 'தல' கதையை தற்போது நீங்கள் மட்டும் படித்துக் களிப்புறுவது கொஞ்சம் பொறாமையளிக்கிறது.
* அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் 'அடுத்த வருடத்திற்கான கதைப் பட்டியல்' பெருத்த எதிர்பார்ப்பளிக்கிறது. முன்னோட்டங்களை கண்டிடப் போகும் நாளை எண்ணி மனம் குதூகலிக்கிறது.
விஜய் குண்டு சிறப்பிதழ்கள் , ஆசிரியரின் அதிரடி சரவெடி அனைத்திற்கும் இணைத்தே
Delete//இரு வெவ்வேறு தருணங்களில் சந்தாக் கட்டணங்களை அறிவிக்கும் பாணி 2015-ல் தொடர்ந்திடாது ! வருடத் துவக்கத்திலேயே ரெகுலர் சந்தா + optional சந்தா என்று இரண்டையுமே அறிவிப்பதாய் உள்ளோம் ! //
இப்போது போல இடையில் சந்தா கேட்க போவதில்லை ....வருட துவக்கத்திலே ....இதனால் துவக்கமே அதிரடியுடன் இருக்கும் !
ஆம் இருக்கிறது !
Deleteஅதிர்ச்சி...
மகிழ்ச்சி..
உற்சாகம்..
நம்பிக்கை..
ஆர்வம்..
கவலை...
பொறாமை..
குதூகலம்..
உங்களது இம்முடிவு எங்களுக்கு எவ்வகையிலும் குண்ண்டு சிறப்பிதழ்கள் கிடைக்கத் தடையாக இருக்கக்கூடாதே என்று துளியூண்டு கவலையளிக்கிறது.//
Deleteதுளியூண்டு=பலமான!
@ ALL : லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒரு கடையினைப் பார்த்திருக்கிறேன் - முழுக்க முழுக்க XXXL சைசிலான உடைகளுக்கு மாத்திரமே என்று ! கடைக்குள் நின்ற வாடிக்கையாளர்கள் அத்தனை பேரும் புஷ்டியோ புஷ்டியாக இருந்தனர் !! நமது "குண்டு புக் காதலர்களைப்" பார்க்கும் போது - பெரிய சைஸ் உடுப்புகளுக்கென அந்தப் பிரத்யேகக் கடை போல ஒரு exclusive BIG BOOKS வரிசையை உருவாக்க முடிந்தால் எப்படி இருக்குமென்று நினைக்கத் தோன்றியது !! ஹ்ம்ம்ம்ம் ! If only wishes were horses....!
Delete// ஒரு exclusive BIG BOOKS வரிசையை உருவாக்க முடிந்தால் எப்படி இருக்குமென்று நினைக்கத் தோன்றியது !! //
Deleteஹை! திரியை கிள்ளி பத்தவச்சுட்டோம்னு நினைக்கிறேன். திரியின் நீளம் அதிகம்தான்னாலும் இந்த 'சிவகாசி வாத்தியார் வெடி' வெடிக்கத் தவறியதேயில்லை!
குண்டூஸ் வாழ்க! குண்டுபுக்ஸ் வாழ்க!
மிஸ்டர் மரமண்டை :-
ReplyDeleteமௌனம் மோமோகனமாய்த்தானிருக்கிறது,
ஆனால்,
ஆடாத மயில்
பாடாத குயில்
எவ்வளவு ஆவலை கிளப்புகின்றன மனதில்,,,,,,!!!
// So அசாத்தியமான சித்திரங்களோடும் ; திகைக்கச் செய்யும் வர்ணஜாலங்களோடும் தயாராகியுள்ள "தேவ இரகசியம் தேடலுக்கல்ல .!" தான் செப்டம்பரின் இதழ் # 3. //
ReplyDelete// மி.ஹி.ஸ்பெஷல் சற்றே பருமனான இதழ் என்பதால் பைண்டிங்கில் கூடுதலாய் ஒரு நாள் அவகாசம் அவசியமாகிறது ! ஆகையால் செவ்வாய்க்கிழமை (2 செப்டெம்பர்) காலையில் இம்மூன்று இதழ்களும் கூரியரில் உங்களைத் தேடித் புறப்படும் ! //
சூப்பர் நியூஸ்! மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் -ஐ சீக்கிரமா கொண்டு வந்ததுக்கு நன்றிகள்.
இந்த மாதிரி "ஓசையின்றி" புத்தகங்களை அடிக்கடி சேர்த்து தாருங்கள்,விஜயன் சார்!
Siva Subramanian : 2014-ன் தொடரும் அத்தனை மாதங்களும் ஒன்றுக்கு மூன்றோ ; நான்கோ (!!!) இதழ்களின் வருகையோடு இருக்குமென்பதால் - start music !!
Delete//start music !!// music that started with million hits is still in high pitch Edit ! we crossed 1.5 million hits, one more reason for you (!) to read more fat books (?) ;)
DeleteIts very true editor sir, every page looks like a canvas. very good and catchy title.
ReplyDeleteV Karthikeyan : It's a celebration of art !
Delete//It's a celebration of art !//
Delete:) thanks Edit ji!
டியர் ஆல்,
ReplyDeleteஅடுத்த ஆண்டின் அட்டவனைக்காக நீங்கள் மேற்கொள்ளும் ஆழ்ந்த கடினமான தேடல்கள் வெற்றிபெற்று, சிறப்பு வாய்ந்த முத்துக்கள் உங்கள் கரம் சிக்க வாழ்த்துகள் சார்.
//அதிலும் இந்தக் கதையினை ஒரு பத்தோடு பதினொன்று தருணத்தில் வெளியிடாது ஒரு மில்லியன் பார்வைகளை கொண்டாடும் இது போன்றதொரு வித்தியாசமான தருணத்தில் வெளியிடுவது இன்னமும் பொருத்தமெ என்று தோன்றுகிறது ! //\
"பிரளயத்தின் பிள்ளைகள்", தனியாக வராதது எனக்கு இப்போதும் வருத்தம். இது போன்ற கதைகள் தனியாக வருவது தான் சிறப்பு. அதன் முழு வீரியமும் படிப்பவர்கள் மனதில் தங்கும். excellent decision! இந்த ஹிட்ஸ் ஸ்பெஷல் மில்லியன் வாசகர்களை சேர வேண்டும் என்பது என் ஆசை.
அட்டைப்படம் அழகாக உள்ளது. டைட்டில் கார்டு, கொஞ்சம் ஓவிய பழமை சாயலுடன் merge ஆகியிருந்தால் இன்னமும் எடுப்பாக இருக்கும்.
BTW நம்ம டெக்ஸ் ரைட் ஹன்டரா அல்லது லெப்ட் ஹன்டரா ?? ( (நாயகன் மாடுலேசன்) அது எனக்கே தெரியலப்பா ...., நாலு பேருக்கு நல்லதுன்ன எந்த கையும் தப்பில்ல )"சட்டம் அறிந்திரா சமவெளியை" முடித்த போது இந்த குழப்பம் மேலும் அதிகமாகிவிட்டது. சில இடங்களில் வலது கையை ஓங்கி, அடுத்த பேனலில் இடது கையில் குத்து விடுகிறார். வேறு ஒரு இடத்தில் வலது கையில் குத்து விட்டுவிடடு, இடது கையை தடவிக்கொடுக்கிறார். :-)
//BTW நம்ம டெக்ஸ் ரைட் ஹன்டரா அல்லது லெப்ட் ஹன்டரா ?? ( (நாயகன் மாடுலேசன்) அது எனக்கே தெரியலப்பா ...., நாலு பேருக்கு நல்லதுன்ன எந்த கையும் தப்பில்ல )"சட்டம் அறிந்திரா சமவெளியை" முடித்த போது இந்த குழப்பம் மேலும் அதிகமாகிவிட்டது. சில இடங்களில் வலது கையை ஓங்கி, அடுத்த பேனலில் இடது கையில் குத்து விடுகிறார். வேறு ஒரு இடத்தில் வலது கையில் குத்து விட்டுவிடடு, இடது கையை தடவிக்கொடுக்கிறார். :-)//
Deleteஉலக்கையால அடி விழுனும்னு இருக்கறப்போ அது எந்த கையா இருந்தா என்ன ?..
தவிர டெக்ஸ் ஒரு ambidextrous person விஸ்கி -சுஸ்கி சார் ...ரெண்டு கையையும்
equal skill உடன் பயன்படுத்துபவர் ........
(Artist பண்ணிய blunder -க்கு இதுக்கு மேல எப்படி சப்பகட்டு கட்றது ?);)
PS :நானெல்லாம் ambilevous person .... அதாவது எந்த கையையும்
உருப்படியா use பண்ண தெரியாது :)
@selvam,
Delete:-)))))
விஸ்கி-சுஸ்கி : போனெல்லி குழுமம் சமீபமாய் ஒரு மின்னஞ்சலில் கூட நமது டெக்ஸ் வாஞ்சையைப் பற்றி மிக சந்தோஷமாய் எழுதி இருந்தனர் ; அதன் காரணம் இது போன்ற தருணங்களில் தான் புலனாகிறது ! இரண்டுலட்சம் பிரதிகள் விற்பனையாகும் அவர்கள் தேசத்தில் கூட நெருடாத சங்கதிகள் நமது நண்பர்களின் கூர்மதிக்கும், பார்வைக்கும் தப்பாது போவதை பார்க்கும் போது பிரமிப்பாய் உள்ளது !
Deleteடெக்ஸ் மின்னல் வேகத்தில் அடிக்கும் போது நமக்கு ஒரு கைதான் தெரியும் ! அதற்குள் இன்னொரு கை சாதித்து விட்டிருக்கும் ! இதுதான் ஒரு கைக்கு தெரியாமல் மறு கையால் தருவது நண்பரே !
Delete// டெக்ஸ் மின்னல் வேகத்தில் அடிக்கும் போது நமக்கு ஒரு கைதான் தெரியும் ! அதற்குள் இன்னொரு கை சாதித்து விட்டிருக்கும்! //
Deleteஇடையில் ஒளிவேகத்தில் காலாலும் இரண்டு உதை வைத்திருக்கக்கூடும். யார் கண்டா?! :D
// இதுதான் ஒரு கைக்கு தெரியாமல் மறு கையால் தருவது நண்பரே! //
இதுதானா அது? :D அப்போ அடிக்கும்போது எதிரியின் ரத்தம் கையில் ஒட்டிக்கொண்டால் - "கொடுத்து சிவந்த கரம்!"
(சின்னதொரு நினைவூட்டலும் கூட - இந்த 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' சூப்பர் 6 சந்தாவின் இதழ் ! வழக்கமான சந்தாவினில் இது இடம் பெறாது என்பதை மறந்திட வேண்டாமே !)
ReplyDeleteகாமிக் ஆசான் 150 மட்டும் அனுப்பினால் போதுமா
இல்ல ............
தீவாளி வெடிகுண்டு ஸ்பெசல்...........
ஏதும் வருதுனா அதுக்கும் சேர்த்து தினார்கள் அனுபட்டுமா சார்.............
துட்ட வச்சுகிட்டு காமிக்ஸ்க்காக ஏங்குவார் சங்க மந்திரி
மதியில்லா மந்திரி : பாக்தாத்தில் முகவர்களிருப்பின், சுலபமாய் அங்கும் வாங்கிடலாம் தானே ?
Deleteஇதழை எவ்வித ஜோடனைகளும் இல்லாது ; தலையங்கம் - filler pages இத்யாதி என்று நிரப்பிடாமல் ஒரிஜினலின் பொலிவோடு ஒரே இதழாக 160 பக்கங்களில் வழங்கியுள்ளோம்.... #
ReplyDeleteசார் ...ஒரே பாகமாக 160 பக்கத்தில் வருவது சந்தோசம் அளித்தாலும் .....தங்களின் ஹாட் -லைன் ...அடுத்த வெளியீட்டு விளம்பரம் ...வாசகர் கடிதம் போன்றவை இல்லாமல் வருவது ஏமாற்றம் அளிக்கிறது.அட்லீஸ்ட் இந்த கதையை பற்றிய தங்கள் எண்ணத்தையாவது மட்டும் "ஹாட் -லைன் " பகுதியில் கொண்டு வந்து இருக்கலாம் .அட்டையை திறந்தவுடன் கதை ...கதை முடிந்தவுடன் அட்டை என வருவது என்னை பொறுத்த வரை எப்படி இருக்கும் என்றால் ......
வீட்டிற்க்கு வந்த விருந்தாளியை முகம் மகிழ வரவேற்று .....உணவருந்த அவரை அன்புடன் அழைத்து .....மடித்து வைத்த பாயில் அவரை அமர வைத்து .....தலை வாழை இலையை அவர் முன் பரப்பி ....சுத்தமான நீரில் இலையை கழுவி......சன்ன ரக பொன்னி அரிசியில் ஆக்கிய சாப்பாட்டை....சுட ..சுட ....இலையில் பரிமாறி .........
சாம்பார்...ரசம் ....கூட்டு.....பொரியல்.....அப்பளம் ....எதுவும் வைக்காமல் "சாப்பிடுங்கள் " என்று சொல்வது போல உள்ளது ... ;(
யாருபா அது.?
Deleteபதினோரு மணிக்கே.,
கூட்டு.., பொரியலு, அப்பளம், சாம்பாரு,
சன்ன ரக பொன்னி அரிசின்னு வயித்துக்கு வரவேற்ப்பு வாசிக்கிறது.?
Paranitharan K : பிரியாணி விருந்தெனும் போது - கூட்டு, பொரியல், ஊறுகாய் என்று பரிமாறி இலையில் இடத்தை அடைக்க முனையும் ஆசாமியின் தலையில் 'ணங்' என்று ஒரு கொட்டு வைக்கத் தோன்றாதா ? அதைப் போன்றதொரு தருணம் இது நண்பரே...! லெக் பீஸ் இருக்கா ? என்று பார்த்தால் மட்டும் போதாதா - ஓரத்தில் கொஞ்சூண்டு பச்ச்சடியோடு ?
Deleteசாம்பாருக்கும்,பொரியலுக்கும் எல்லா நேரங்களிலும் மவுசு இருப்பதில்லை !!
வருட ஆரம்பத்தில் "ஒரே சந்தா " என்பதை வரவேற்கிறேன் சார் .....
ReplyDeleteஆனால் "தொகை " அதிகமாக தெரியும் என்பதற்காக அடுத்த வருட 500 ரூபாய் ஸ்பெஷல் வரும் இதழை சந்தாவில் மறந்து விட போகிறீர் ...சார் ....கவனமாக இருங்கள் :-)
தேவ ரகசியம் தேடலுக்கல்லதான் ....ஆனால் எங்களுக்கு தேடாமலே கிடைத்துவிட்டது நன்றி எடிட்டர் சார்...
ReplyDeleteதீபாவளிக்கு தல வருகிறார் என்பது ஒரு யூகமாகவே இருப்பினும் நினைக்கும்போது ஒரு ஜிவ் ஃபீல் வருகிறது..
உண்மையாகவே தீபாவளிக்கு தல வருவது உறுதி எனில் இந்த தீபாவளி ஓர்
அதிரிடியான,அதிரிபுதிரியான,சூப்பரான,பிரமாதமான,அற்புதமான இன்னும் என்னென்னவோ மாதிரியான
பண்டிகையாக இருப்பது உறுதி....
ஒரே முறையாக சந்தா செலுத்துவது நல்லது ...ஒரு தடவை வீட்டம்மாவிடம் திட்டு வாங்கினால் போதும் ஹை!
ஜாலி! ஸ்பெஷல் வெளியிடுகளுக்கான சந்தாவும் இதில் அடங்குமா என்பதை உறுதிபடுத்தினால் சரி...
Senthil Madesh : //ஒரே முறையாக சந்தா செலுத்துவது நல்லது ...ஒரு தடவை வீட்டம்மாவிடம் திட்டு வாங்கினால் போதும்//
Deleteஅட...ஆமாம்லே ?!!
பழைய முத்து காமிக்ஸ்களின் (டைஜஸ்ட்) மறுபதிப்புகள் 2015 ம் வருட அட்டவணையிலாவது இடம் பிடிக்கும்
ReplyDeleteவாய்ப்பு உண்டா? மனசு ஏங்குகிறது சார்
Senthil Madesh : படித்ததையே மூன்றாவதோ / நான்காவதோ முறையாக மீண்டும் ஒரு முறை காண்பதில் என்ன த்ரில் இருக்கக் கூடும் சார் ? புரியாத புதிரே !!
DeleteAnyways "மின்னும் மரணம்" எனும் முரட்டுப் பணியை நிறைவு செய்திடாது வேறு முயற்சிகளுக்குள் கால் பதிக்க நம் பர்சுக்கு வலு பற்றாது ; so that takes priority on the reprints stakes for the moment !
வணக்கம் சார்..தேவ ரகசியம் தேடுதலுக்கல்ல இப்படி ஒரு வித்தியாசமான தலைப்புடன்
ReplyDeleteநம்மை தேடி வரும் கிராபிக்ஸ் காமிக்ஸ் இன்னும் இரண்டே நாளில் ..நன்றி சார்
VETTUKILI VEERAIYAN : வித்தியாசமான நாமகரணம் உங்களுக்கும் பொருந்துமே நண்பரே.. :-)
Delete@ பரணீதரன் .......
ReplyDeleteblog -ல் புதிதாக எழுதுவதால் மற்றவர்களுக்கு taken for granted என்ற வகையில்
அமையும் சிறு விஷயங்களும் எனக்கு novel என்றாகிறது ....
அந்த வகையில் மற்றும் ஓர் சந்தேகம் ........
ஸ்மார்ட் போனில் landscape orientation -ல் வைத்து டைப் செய்ய படும்
வார்த்தைகள் portrait orientation -ல் வைத்து பார்க்கும்போது சீரான வரிகளாக
அல்லாது jumble -ஆகின்றன ...(என்னுடையது மட்டுமே )
அதே போல ஸிஸ்டத்தில் அடிக்கும்போதும் சரியாக இருக்கும் வரிகள்
ஸ்மார்ட் போனில் போர்ட்ரெய்ட் ஓரியன்டேஷனில் ஜம்பிள் ஆகிறது .....
இஇந்த பிரச்சினையை எப்படி fix செய்வது என சொல்லி தாருங்களேன் ......
செல்வம் லக்ஷ்மி ....நீங்கள் உங்கள் சந்தேகத்தை என்னிடம் தான் வினவுகிறிரா என தெரிய வில்லை ....
Deleteஇந்த கம்ப்யூட்டர் வினாவெல்லாம் தாங்கள் எழுப்ப வேண்டிய நபர்கள்
பெங்களூர் பரணிதரன்
பெங்களூர் கார்த்திக்
கிங் விஸ்வா ....
நான் பச்சை குழந்தை ..என்னை அழ வைக்காதீர்கள் :-)
ஹ !ஹ ! உங்களிடம்தான் கேட்டேன் ..
Deleteநீங்கள் எழுதும் நீண்ட பதிவுகளும்
படிக்க ஏதுவாக அழகாக அமைந்து
இருப்பதால் கேட்டேன் ........
it's ok ...நண்பர் பரணி (bengalore )
Blog _க்கு வந்தவுடன் கேட்கிறேன் ....
thanks anyway ....
selvam laxmi @ I never use to smart phone for posting in blogs; I do browse and post from my laptop.
DeleteSo I can't help you on this! May be people who uses smart phones for blog posting can help you.
alas..... no problem parani ... thanks anyway......
Delete2015 அட்டவணை, ஆப்ஷனல் சந்தாக்கள், கதை வரிசையின் முன்னோட்டம் போன்ற சுவாரசிய விபரங்கள் தயாராகிக்கொண்டிருப்பது, ஏதோ பசி நேரத்தில் பட்சணம் தயாராகிக் கொண்டிருப்பதைப்போன்ற எதிர்பார்ப்பை, ஆவலைத் தூண்டுகிறது. காமிக்ஸ் படிப்பது குழந்தைத்தனம் அல்ல, அதற்காக இப்படி புத்தகங்களை, அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்துக்கிடப்பதுதான் சுவாரசியமான குழந்தைத்தனமாக இருக்கிறது.
ReplyDeleteதேவரகசியம் மினிகுண்டு இதழ் (160 பக்கத்தையெல்லாம் குண்டுனு சொல்ல வைச்சிட்டீங்களே? அவ்வ்வ்) முந்தி வருவது மகிழ்ச்சி. அட்டைப்படமே ஒரு கிளாசிக் லுக்கைத் தருகிறது. நிச்சயம் ஒன் ஷாட் நாவல்கள் மீதான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் படைப்பாக இது இருக்கும் என நம்புகிறேன். ...அதற்காக காலனின் கைக்கூலியை தள்ளி வைத்தது சரியல்ல. விரியனின் விரோதி செய்த அதகளம் கைக்கூலிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. ஜனவரி புக்ஃபேரில் டைகர் அதகளம் செய்யப்போவது நிச்சயம். தயாராக இருங்கள்!!
ஆதி தாமிரா : //நிச்சயம் ஒன் ஷாட் நாவல்கள் மீதான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் படைப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.//
Deleteஅதில் எனக்கு சந்தேகமே இல்லை இம்முறை !
அது மட்டுமல்ல - கிராபிக் நாவலின் அடுத்த வருகையான "இரவே ..இருளே..கொல்லாதே." கூட நம்மை மெய்மறக்கச் செய்யப் போகும் படைப்பு என்பதில் துளி ஐயம் கிடையாது !
//அது மட்டுமல்ல - கிராபிக் நாவலின் அடுத்த வருகையான "இரவே ..இருளே..கொல்லாதே." கூட நம்மை மெய்மறக்கச் செய்யப் போகும் படைப்பு என்பதில் துளி ஐயம் கிடையாது ! //
Deletewe are waiting Edit!
2015ல் எந்த வகையான கதைகளுக்கு எவ்வளவு முன்னுரிமை தரலாம் என கடுமையாக சிந்தித்ததில்..
ReplyDeleteடைகர் கதைகள் குறைவாக இருப்பதாலும், மி.ம வரவிருப்பதாலும் அவற்றுக்கு வழக்கத்தைவிட சற்று குறைத்து 2015ன் மொத்த கதை ஒதுக்கீட்டில் ஒரு 43% மட்டும் ஒதுக்கலாம். டெக்ஸை பலருக்கு பிடிப்பதாலும், நிறைய கதைகள் இருப்பதாலும் கொஞ்சம் அதிகரித்து 27% இடம் தரலாம். அப்புறம் குழந்தைகளை கவ்ர்வது ரொம்ப முக்கியம் என்பதால் கார்டூன்களுக்கு ஒரு 42% இடமும், நவீன அதிரடி ஆக்ஷன்கள்தான் என் போன்ற இளைஞர்களை(?!) மிகவும் கவரும் என்பதால் லார்கோ, வேய்ன் ஷெல்டன், டயபாலிக் போன்ற கதைகளுக்கு ஒரு 35% இடமும் தரலாம். காமெடி மிக மிக முக்கியம் என்பதால்.. (கார்டூன் என்பது வேறு, காமெடி என்பது வேறு) வழக்கம் போல லக்கி, சிக்பில் கதைகளுக்கு இருக்கும் 30% அப்படியே தொடரவேண்டும். இலக்கியத்தரமும், வாசிப்பனுபவமும் தரவல்ல கிராஃபிக் நாவல்கள் புதிய வாசக வெள்ளத்தை அழைத்துவரும் என்பதால் அதற்கு மிக முக்கியத்துவம் தந்து ஒரு 45% இடம் தந்துவிடுங்கள். இதுபோக மார்டின், ராபின், மாடஸ்தி போன்ற பழைய ஆட்கள், கமான்சே, டைலன் டாக், ஜூலியா போன்ற புதிய ஆட்களை நாங்கள் வேண்டாம் என்றாலும் கேட்கவா போகிறீர்கள். உங்கள் விருப்பத்துக்காக அவற்றுக்கு ஒரு 25% இடம் தந்துவிடுங்கள். இதுக்கு மேல உங்களை கஷ்டப்படுத்த விரும்பாததால் 2015க்கு இவை மட்டும் போதும் என நிறுத்திக்கொள்கிறேன்.
(யாராவது கூட்டிப்பார்த்துவிட்டு என்ன கணக்கு இது 247% வருது என்றெல்லாம் கேட்டால் பிச்சி, பிச்சி!! ஐயாம் M.Sc., மேத்ஸ் யு நோ!)
ஆதி தாமிரா : //இதுக்கு மேல உங்களை கஷ்டப்படுத்த விரும்பாததால் 2015க்கு இவை மட்டும் போதும் என நிறுத்திக்கொள்கிறேன்//
Deleteஎன்னே உங்கள் பெருந்தன்மை !! (பத்தோடு பதிமூன்றாய் "இரத்தப் படலம் -வண்ணத்தில்" என்ற கொடி பிடித்துக் கொண்டு உங்கள் ஆதரவை எதிர்நோக்கி நம் ஸ்டீல்க்ளா நிற்கிறாராம் !!)
//என்னே உங்கள் பெருந்தன்மை !! (பத்தோடு பதிமூன்றாய் "இரத்தப் படலம் -வண்ணத்தில்" என்ற கொடி பிடித்துக் கொண்டு உங்கள் ஆதரவை எதிர்நோக்கி நம் ஸ்டீல்க்ளா நிற்கிறாராம் !!) //
Delete+1
we all behind steel Edit ! plz include that in 2015 schedule!(?)
சார் ......ஆஹா அப்படியே உச்சியில் பறப்பது போல உள்ளது .....சீக்கிரம் மின்னும் மரணத்திற்கு அடுத்த புத்தகம் இரத்தபடலம் என்பதில் உறுதியாய் நில்லுங்கள் !
Deleteநண்பர்களே அனைவறும் தங்கள் கைகளில் இதே கொடியுடன் அணி வகுக்கலாமே !
தேவ ரகசியங்கள் தேடலை விட தல யோட எந்த கதைய நீங்க கொடுக்க போறீங்க அப்படின்ற தேடல் கொஞ்சம் அதிகமா இருக்கு !!!
ReplyDeletebalaji ramnath : வாழ்க்கையே ஒரு தேடல் தானே நண்பரே ?!
Deletedear vijayan sir ,2014 முடிய இன்னும் சில மாதங்கள் உள்ள போதே , இந்த வருடத்தின் . டாப் 3,ப்ளாப் 3 , கொஞ்சம் அதிகமாக தெரிகிறது . மேலும் எதனை வைத்து டாப் 3 யை முடிவு செய்வது .விற்பனையின் அடிப்படையில் செய்வதுதான் நியாமாக இருக்கும் .. இல்லை ப்ளாக் ல் கூவும் சிலரின் அடிப்படையில் செய்வது சரியாக இருக்குமா சார் ? கிரீன் மானேர் கதை வரிசையை இந்த ப்ளாக் ல் நிறைய பேர் பாராட்டி இருந்தனர் .. (எனக்கு பிடிக்க வில்லை என்பது வேறு விஷயம் .. என் நண்பர் புத்தக பிரியனுக்கு அந்த கதை வரிசையை பிடிக்கும் .எனக்கும் புத்தக பிரியனுக்கும் அந்த விசயத்தில் குஸ்தியே நடந்தது ).பட் அது விற்பனையில் சாதனை படைக்க வில்லையே சார் .சூப்பர் ஹீரோ spl நிறைய பேரால் ப்ளாக் ல் கழுவி கழுவி ஊற்றப்பட்டது .பட் அது விற்பனையில் சாதனை படைத்தது .மேலும் காலத்தின் கால் சுவடுகளில் எனக்கு பிடித்து இருந்தது (என் மகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது,அந்த புத்தகத்தை தலையனைக்கி அடியில் வைத்து கொண்டு தான் தூங்குவா ள் !!) பட்,அதில் கதை இல்லை என்று நிறைய பேர் கழுவி ஊத்தறாங்க ..கதை வேனுமின்ன , novels தான் படிக்கணும் .அதிலேயே கதை இல்லேங்கிறது வேற விஷயம் ..காமிக்ஸ் யை அதிலுள்ள படங்களுக்காக ரசிங்கப்பா ..அதில கதையை தேடாதிங்க .:-) எனவே இந்த வருடம் முடிந்த பிறகு டாப் 3 செலக்ட் செய்வதே சரியானதாக இருக்கும் . எல்லா கோட்டையும் அழிங்க ,முதலில் இருந்து விளையாடலாம் .:-)
ReplyDeleteDr.Sundar, Salem : எல்லா நேரங்களிலும் விற்பனை எண்ணிக்கைகள் நிஜ நிலவரங்களுக்கு சாட்சி சொல்வதில்லை ; நான் இது வரை சந்தித்த நண்பர்களுள் குறைந்தது 70 % கொடுத்த வாக்குமூலம் (!!!) - "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வாங்கினோம் தான் ; ஆனால் படிக்கவில்லை !" என்பதே !
Deleteஅதே போல அமைதி காப்பதையே பரவலான பாங்காய்க் கொண்டுள்ள வாசகர்களின் மத்தியினில் மனதில்படுவதை உரக்கச் சொல்லும் ஒரு சிறு அணியின் மீது கவனம் செலுத்தாது போவதும் சரியாக இராது ! அபிப்ராயங்களை வெளிச்சொல்லும் பாணிகளில் வேறுபாடுகள் இருக்கும் காரணத்தால் சொல்லப்படும் விஷயங்களுக்கு காது கொடுக்காமல் போயின் நஷ்டம் நமக்கே !
So விற்பனை எண்ணங்கள் + முகவர்களின் கருத்துக்கள் + நம் நண்பர்களின் அபிப்ராயங்கள் என்ற கலவையே நம் திசைகாட்டும் கருவியாக செயல்படட்டுமே !
P.S. : ஜூனியர் எடிட்டருக்கும் 'காலத்தின் கால் சுவடுகளில்' ஒரு favorite !!
//So விற்பனை எண்ணங்கள் + முகவர்களின் கருத்துக்கள் + நம் நண்பர்களின் அபிப்ராயங்கள் என்ற கலவையே நம் திசைகாட்டும் கருவியாக செயல்படட்டுமே !//
Delete+1
எனக்கும் கா கா சு fav
Deleteஹலோ ஆசிரியரே ...
ReplyDeleteகார்சனின் கடந்த காலம் எப்பொழுது ?
//கார்சனின் கடந்த காலம் எப்பொழுது ?//
Deleteஅவ்வாறே யானும் (+1,)
This comment has been removed by the author.
Deleteநண்பர்களே கவனிக்கவில்லை எனில்..... அக்டோபர் என ஆசிரியர் மேலே கூறிவிட்டார் !
Deleteஅட்டைப்படம் மிக , மிக அருமையாக உள்ளது.
ReplyDeleteஒரத்தில் கருப்பு வெள்ளையில் முத்திரை பதித்து நிற்கும் சிங்க ராஜாவின் முகத்தில் பெருமிதம் தெரிகிறது.
உலகத்தரம் ,உலகத்தரம் என்கிறார்களே அதை நாம் அடைந்து விட்டோம் என்று நினைக்கின்றேன்.
எடிட்டர் சார்,
ReplyDeleteலயன் 250வது இதழ் ஒரு மெகா குண்ண்ண்டு சிறப்பிதழாக ருக்கணும். மறந்துடாதீவ்க! (சென்ற பதிவில் இதை ஞாபகப்படுத்திய அந்த நண்பருக்கு நன்றி!)
Deleteஅஃதே.(+1,)