நண்பர்களே,
வணக்கம்.'மாமா..டிரௌசர் கழண்டு போச்சு' ; "பெண்டு நிமிர்ந்து போச்சு' ; "டப்பா டான்ஸ் ஆடிப் போச்சு" ; என்ற ரீதியிலான தமிழின் யௌவனமான சொற்பதங்கள் சகலத்தையும் கடந்த சில நாட்களாய் பல முறைகள் நினைத்துப் பார்த்துக் கொண்டேன் ! 'ஆஹா...திரும்பவும் ஆரம்பிச்சிட்டானா இவன் புராணத்தை ?' என்று பேஸ்தடித்துப் போகும் நண்பர்களே - worry not ! இது நிச்சயமாய் LMS -ன் பின்னணிக் கதையின் மறு ஒளிபரப்பும் அல்ல ; கழன்று போனது என் டிரௌசரும் அல்ல ! மாறாக கடந்த 3 நாட்களாய் எங்கள் அலுவலகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்து - உங்கள் ஒவ்வொருவரின் LMS பிரதிகளையும் சேகரித்து ; சரி பார்த்து ; பத்திரமோ பத்திரமாய்ப் pack செய்து அனுப்பிடும் பொருட்டு எடுத்துக் கொண்ட சிரத்தையைப் பார்த்த போது எழுந்த கரிசனத்தின் குரல் அது ! இன்று (சனிக்கிழமை) உங்களின் இல்லங்களை ; அலுவலகங்களை கூரியர் நபர் - முரட்டுப் பார்சலோடு தட்டும் விதமாய் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள்ளாகவே இங்கிருந்து சந்தாவின் அனைத்து LMS பிரதிகளையும் நம்மவர்கள் அனுப்பி விட்டார்கள் ! Worldmart மார்க்கமாய் வியாழன் இரவு வரை ஆர்டர் செய்திருந்த நண்பர்களுக்கும் பிரதிகள் புறப்பட்டு விட்டன ! அனுப்பியது மட்டுமல்லாது மாலை நேரத்து கூரியர் வேன்களில் நமது பார்சல்கள் சகலமும் எற்றப்பட்டுவிட்டதையும் உறுதிப்படுத்தி விட்டார்கள் ! So இன்று உங்கள் நகரத்துக் கூரியர் ஆபீஸ்களை உறங்க விடாதீர்கள் ! இன்று காலை ஈரோட்டில் LMS விற்பனை துவங்கும் தருணமே உங்கள் அவைவரிடமும் அதன் பிரதி ஒன்று ஜொலிக்குமென்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது ! இவ்வாரத்தில் நம்மவர்கள் செய்த வேலைகளைப் பார்த்த பின்னே A.C அறைக்குள் அமர்ந்து கொண்டு பேனா பிடிக்கும் என் பிழைப்பு சாலச் சிறந்தது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன் ! அவர்கள் எதிர்கொள்ளும் practical சிரமங்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு மாமாங்கத்தில் முடிந்து போனது போல என் மண்டைக்குள் தோன்றிடும் எடிட்டிங் பணிகளின் பளுவானது - ஜூஜூபி போலவே தெரிகிறது ! பார்சலைப் பிரிக்கும் கணமே பாக்கிங் சிரத்தை புரியுமெனில் ; அதனைத் திறந்த மறு கணம் உங்களை திகைக்கச் செய்யப் போவது நமது பைண்டிங் பணியாளர்களின் தொழில் நேர்த்தி ! இம்முறை நிச்சயமாக பிரமிக்கச் செய்யும் பைன்டிங்கின் அட்டகாசம் ! ஓவராய் பில்டப் கொடுத்து விட்டு ; கூரியரில் ஏதேனும் ஏடாகூடமாய் சொதப்பிடும் பட்சத்தில் இங்கே அசடு வழிய நேருமே என்ற பயமும் கூட இம்முறை மிகக் குறைவான சதவீதமே என்னுள் ! So இது நாள் வரை the making of LMS பற்றி சிலாகித்தேன் என்றால், இதுவோ the binding & shipping of LMS பற்றிய பீட்டர் படலம் !! மாறுபட்ட அளவுகள் ; புஷ்டியோ புஷ்டியான இதழ்கள் என்பதால் அவற்றை கூரியருக்குக் கொண்டு செல்வதே ஒரு தேர் திருவிழா போன்ற நிகழ்ச்சியாகிப் போனது ! இதனிடையே ஈரோடு விழாவிற்கென புத்தகங்களை பண்டல் செய்வது ; banner தயாரிப்பது என என்னைச் சுற்றி அத்தனை பேரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் ! நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இருதய அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் சூழலில் - அவரது absence அனுபவம் எனும் அருமருந்தின் மகிமையை உணர்ந்திடச் செய்கிறது ! விரைவில் நலமாய்த் திரும்புவார் எனக் காத்திருக்கிறோம் !
சரி...ஓட்டை வாய் உலகநாதனுக்கும் - பெவிகால் பெரியசாமியாக உருமாறும் வாய்ப்புகள் உண்டென்பதை நிரூபிக்கும் விதமாய் இத்தனை நாளாய் உங்கள் கண்களில் காட்டாமலே வைத்திருந்த LMS -ன் அட்டைப்படங்கள் இதோ ! போனெல்லி நிறுவனத்துக்கே நேற்றுத் தான் இதனைக் கண்ணில் காட்டினோம் என்றால் பெவிகாலின் மகிமை புரிந்திருக்கும் ! லைன் டிராயிங் + flat கலரிங் பாணிகளுக்குப் பழகிப் போன அவர்கள் - நமது பாலிவுட் ஸ்டைல் ஓவிய பாணிக்கு ரசிகர்கள் என்பதில் ரகசியம் இல்லையெனினும், இம்முறை அவர்களது சந்தோஷம் கரை புரண்டோடுவதை உணர முடிகிறது !! அவர்களே சிந்தித்துப் பார்த்திரா ஒரு COMBO இதழில் அவர்களது நாயகர்கள் டாலடிப்பதைப் பார்த்து விட்டு துள்ளிக் குதிக்கிறார்கள் !! 15 பிரதிகள் தங்களுக்கெனவும் ; மேற்கொண்டு 20 பிரதிகள் உலகெங்கும் உள்ள அவர்களது licensees -க்கு எனவும் ஆர்டர் தந்துள்ளனர் ! இது தவிர Dylan Dog ரசிகர் மன்றமும் தம் அங்கத்தினரின் பொருட்டு ஆர்டர் சேகரித்து வருகின்றனர் இத்தாலியில் ! காமிக்ஸ் எனும் ரசனைக்கு மொழிகள் ஒரு தடையே கிடையாது போலத் தோன்றுகிறது !!
அட்டைப்பட சித்திரங்கள் இதுவே எனினும் நீங்கள் பார்க்கப் போகும் ராப்பரில் - வார்னிஷ் ; லேமினேஷன் ; + ஒரு வித்தியாச வேலைப்பாடும் இணைந்து அழகாய் மெருகூட்டும் ! முன்னட்டையினில் 'தல' தான் தூள் கிளப்புவார் என்பது தீர்மானமான கணமே, வித்தியாசமான pose ஒன்றைத் தேடத் துவங்கினேன். NBS இதழின் அட்டைக்கு ஒரு டிசைன் மாதிரியைப் பிடிக்க நிறையவே சிரமப்பட்டேன் ; ஆனால் இம்முறை துளிச் சிரமும் இன்றி பார்த்த உடனேயே - 'கண்டேன் சீதையை' என்று குதூகலிக்க இயன்றது ! இதோ - நமது தற்போதைய ராப்பரின் inspiration :
ஒரு மாதிரியாய் LMS - 1-ன் ராப்பரில் 'தல' தயாரான பின்னே - புக் 2-வின் பொருட்டு 'தளபதியை' தயார் செய்யும் முஸ்தீபில் இறங்கினோம் ! இம்முறையோ எனது பணியை சுலபமாக்கி இருந்தார் சித்திர மாந்த்ரீகர் வில்லியம் வான்ஸ் ! "மார்ஷல் டைகர்" கதையின் முன்னட்டையை நாம் முன்பே "இரத்தக் கோட்டையின் " ராப்பருக்கு சுட்டு இருந்ததால் அதன் பின்னட்டையில் ஸ்டைலாக நின்ற தளபதியை அப்படியே தூக்கி வந்து விட்டோம் - வான்சின் ஒரிஜினல் பாணியிலேயே ! So 'தல' + 'தளபதி' தயாரான கதை இதுவே !! உங்களுக்குப் பிடித்துப் போய் விட்டால் எங்கள் முயற்சிகளுக்கொரு அர்த்தம் கிட்டி விடும் ! Fingers crossed big time !!! ஒரே ஒரு கொசுறுச் சேதி - LMS புக் 1-ன் முதுகைக் கவனித்தீர்களா ? :-) இதழைக் கையில் எடுக்கும் போதே காத்திருக்கும் surprise உங்களுக்குப் புலனாகும் ! பார்சல்களைப் பிரித்த பின்னே உங்களின் முதல் impression களைப் பகிர்ந்திட மெனெக்கெட்டால் நிச்சயம் மகிழ்வோம் !!
LMS கதைகளைப் பற்றிய முன்னோட்டங்களை நாம் ஏற்கனவே பார்த்தாகி விட்டோம் என்பதால் ; இனி நீங்கள் கதைகளைப் படிக்கத் துவங்கும் வேளைகளில் அது பற்றி மீண்டும் அலச ஆரம்பிப்போமே ? ! அப்புறம் ஒரு குட்டிப் போட்டி - LMS இதழ்களினுள்ளே 2 இடங்களில் ஸ்டிக்கர்கள் உள்ளன ; 2 factual பிழைகளை மறைக்க ! எங்கே என்று கண்டு பிடியுங்களேன்?!
ஒரு மெகா வெளியீட்டிலிருந்து அடுத்த மெகா படலத்துக்கும் இன்று முதல் பாலம் போடுகிறோம் ! இதோ "மின்னும் மரணம்" இதழின் முன்பதிவுப் படிவம் ! சென்ற பதிவில் நண்பர் கார்த்திக்கும், வேறு சிலரும் அபிப்ராயப்பட்டது போல - டைகரின் ஒற்றைக் கதையின் இத்தொகுப்புக்கு "மின்னும் மரணம்" என்ற பெயரைத் தவிர்த்து விட்டு வேறு நாமகரணத்தைச் சூட்டுவது அத்தனை பொருத்தமில்லை என்பது புரிவதால் - "மின்னும் மரணம்" - The Complete Saga என்று பெயரிட்டுள்ளோம் ! தவிரவும் புத்தக விழாக்களில் நாம் வழங்கும் 10% கழிவை முன்பதிவுக்கும் தந்து - கூரியர் கட்டணங்கள் உங்கள் கையை ரொம்பப் பிடிக்கா வண்ணம் ஏற்பாடு செய்துள்ளோம். பெங்களுருக்கு Proff Courier கட்டணங்கள் தலை சுற்றச் செய்யும் ரூ.260 என்பதால் அதனில் கொஞ்சமே நம்மால் சலுகை செய்ய முடிந்துள்ளது ! இன்று ஈரோட்டில் இதன் முன்பதிவு துவங்கும் ; 500 எனும் மந்திர என்னை எட்டிப்பிடிக்க முயற்சிகளைத் துவக்குவோமா guys ?!
Before I sign off - சின்னதாய் ஒரு teaser !! See you at 10-30 / 11 this morning folks !! Bye for now !!
அட்டைப்பட சித்திரங்கள் இதுவே எனினும் நீங்கள் பார்க்கப் போகும் ராப்பரில் - வார்னிஷ் ; லேமினேஷன் ; + ஒரு வித்தியாச வேலைப்பாடும் இணைந்து அழகாய் மெருகூட்டும் ! முன்னட்டையினில் 'தல' தான் தூள் கிளப்புவார் என்பது தீர்மானமான கணமே, வித்தியாசமான pose ஒன்றைத் தேடத் துவங்கினேன். NBS இதழின் அட்டைக்கு ஒரு டிசைன் மாதிரியைப் பிடிக்க நிறையவே சிரமப்பட்டேன் ; ஆனால் இம்முறை துளிச் சிரமும் இன்றி பார்த்த உடனேயே - 'கண்டேன் சீதையை' என்று குதூகலிக்க இயன்றது ! இதோ - நமது தற்போதைய ராப்பரின் inspiration :
கோடு மட்டும் போட்டுக் கொடுத்தால் 6 lane highway track போட்டு விடும் நமது ஓவியர் மாலையப்பனுக்கு இந்த முன் + பின் ஒரிஜினல் டிசைன்களைக் கொடுத்த தருணமே அவர் முகம் பிரகாசமாகியதைக் கவனித்தேன். அடுத்த 30-வது நாளில் இந்த அட்டகாச அட்டைகளோடு ஆஜரானார் ! டெக்சின் பின்னணி வர்ணத்தை வழக்கமான நீலத்தில் தீட்டி இருந்தது மட்டும் எனக்குக் கொஞ்சம் திருப்தி தரவில்லை ; எக்கச்சக்கமாய் அந்த ப்ளூ கலர் combination -ஐப் பார்த்து விட்டோமே என்று பட்டது ! So அதன் பின்னே நமது டிசைனர் பொன்னனைக் குடல் உருவும் படலம் துவங்கியது. இம்முறை நாமே வெவ்வேறு background கலர் options களையும் சொல்லி - விதவிதமாய் முயற்சித்துப் பார்த்தோம் ! பாருங்களேன் அவற்றில் ஒன்றிரண்டை ! எனக்கு அந்தப் பச்சை + மஞ்சள் கொஞ்சம் பிடித்தே இருந்தது - தற்போதைய மெட்டாலிக் grey சேர்க்கையைப் பார்க்கும் வரை. இந்த combination நமக்குப் புதிதாய்ப் பட்டதாலும், இருண்ட பின்னணியில் 'தல' இன்னமும் பளீரென்று டாலடிப்பதாலும் கிரேக்கு ஓ.கே சொன்னேன் !
ஒரு மாதிரியாய் LMS - 1-ன் ராப்பரில் 'தல' தயாரான பின்னே - புக் 2-வின் பொருட்டு 'தளபதியை' தயார் செய்யும் முஸ்தீபில் இறங்கினோம் ! இம்முறையோ எனது பணியை சுலபமாக்கி இருந்தார் சித்திர மாந்த்ரீகர் வில்லியம் வான்ஸ் ! "மார்ஷல் டைகர்" கதையின் முன்னட்டையை நாம் முன்பே "இரத்தக் கோட்டையின் " ராப்பருக்கு சுட்டு இருந்ததால் அதன் பின்னட்டையில் ஸ்டைலாக நின்ற தளபதியை அப்படியே தூக்கி வந்து விட்டோம் - வான்சின் ஒரிஜினல் பாணியிலேயே ! So 'தல' + 'தளபதி' தயாரான கதை இதுவே !! உங்களுக்குப் பிடித்துப் போய் விட்டால் எங்கள் முயற்சிகளுக்கொரு அர்த்தம் கிட்டி விடும் ! Fingers crossed big time !!! ஒரே ஒரு கொசுறுச் சேதி - LMS புக் 1-ன் முதுகைக் கவனித்தீர்களா ? :-) இதழைக் கையில் எடுக்கும் போதே காத்திருக்கும் surprise உங்களுக்குப் புலனாகும் ! பார்சல்களைப் பிரித்த பின்னே உங்களின் முதல் impression களைப் பகிர்ந்திட மெனெக்கெட்டால் நிச்சயம் மகிழ்வோம் !!
LMS கதைகளைப் பற்றிய முன்னோட்டங்களை நாம் ஏற்கனவே பார்த்தாகி விட்டோம் என்பதால் ; இனி நீங்கள் கதைகளைப் படிக்கத் துவங்கும் வேளைகளில் அது பற்றி மீண்டும் அலச ஆரம்பிப்போமே ? ! அப்புறம் ஒரு குட்டிப் போட்டி - LMS இதழ்களினுள்ளே 2 இடங்களில் ஸ்டிக்கர்கள் உள்ளன ; 2 factual பிழைகளை மறைக்க ! எங்கே என்று கண்டு பிடியுங்களேன்?!
ஒரு மெகா வெளியீட்டிலிருந்து அடுத்த மெகா படலத்துக்கும் இன்று முதல் பாலம் போடுகிறோம் ! இதோ "மின்னும் மரணம்" இதழின் முன்பதிவுப் படிவம் ! சென்ற பதிவில் நண்பர் கார்த்திக்கும், வேறு சிலரும் அபிப்ராயப்பட்டது போல - டைகரின் ஒற்றைக் கதையின் இத்தொகுப்புக்கு "மின்னும் மரணம்" என்ற பெயரைத் தவிர்த்து விட்டு வேறு நாமகரணத்தைச் சூட்டுவது அத்தனை பொருத்தமில்லை என்பது புரிவதால் - "மின்னும் மரணம்" - The Complete Saga என்று பெயரிட்டுள்ளோம் ! தவிரவும் புத்தக விழாக்களில் நாம் வழங்கும் 10% கழிவை முன்பதிவுக்கும் தந்து - கூரியர் கட்டணங்கள் உங்கள் கையை ரொம்பப் பிடிக்கா வண்ணம் ஏற்பாடு செய்துள்ளோம். பெங்களுருக்கு Proff Courier கட்டணங்கள் தலை சுற்றச் செய்யும் ரூ.260 என்பதால் அதனில் கொஞ்சமே நம்மால் சலுகை செய்ய முடிந்துள்ளது ! இன்று ஈரோட்டில் இதன் முன்பதிவு துவங்கும் ; 500 எனும் மந்திர என்னை எட்டிப்பிடிக்க முயற்சிகளைத் துவக்குவோமா guys ?!
ஹைய்யா!! :)
ReplyDeleteSooooo....,.........ppperrrrrrr......
DeleteDear Viaji
DeletePlz update our friend Blueberry and Erode Stalion Face book id with their permission.
Sham1881, Erode
சூப்பர்!!
ReplyDeleteLMS day.......
ReplyDeletesuper .........
ReplyDeleteஅட்டை சூப்பர் சார்
ReplyDeletewow....cover is super....
ReplyDeleteஅருமை சார்,
ReplyDeleteதல தளபதி கலக்குகிறார்கள் ....
இன்னும் கொஞ்ச நேரத்தில் நேரில் சந்திப்போம் :) இதை பற்றி விவாதிப்போம் .... :)
அட்டை மிகநன்று.ஈரோடில் சந்திப்போம் நண்பர்களே
ReplyDeletesuper sir
ReplyDeleteSuper sir..!
ReplyDeleteWow :) Great cover design!
ReplyDeleteஅட்டை அருமையாக உள்ளது
ReplyDeleteSuper Sir
ReplyDeleteவரவு நல்வரவு ஆகட்டும்!
Deleteமின்னும் மரணம் அமெரிக்காவுக்கு எவ்வளவு என்று சொல்லுங்கள்.
ReplyDeleteyes, please.
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteSir, Please create "மின்னும் மரணம்" - The Complete Saga booking link in worldmart....we are waiting sir....
ReplyDeleteheart attack because art attack :-)
ReplyDeleteடியர் விஜயன் சார்,
இதுபோன்ற இன்ப அதிர்ச்சியை தாங்க கூடிய அளவில் என் இதயம் வலுவாக இல்லையே சார்.. பார்த்த கணத்திலேயே என்னுடைய BP அதிகமாகி சுவாசம் தடுமாறி விட்டது. பாராட்ட வார்த்தைகளே இல்லை சார். டெக்ஸ் தோன்றும் அட்டைப்படம் ஆஹா.. ஆஹா..! இதுவரை நான் பார்த்த கேப்டன் டைகரிலேயே இவர்தான் அழகானவர் ; கம்பீரமானவர் சார். அற்புதம் செய்து விட்டீர்கள். இரவே..இருளே..கொல்லாதே!! டீஸரில் உள்ள பேய் மாளிகையை என்னவென்று வர்ணிப்பது? ச்சேன்சே இல்லை சார்.. எங்களை வாயடைத்துப் போகச் செய்து விட்டீர்கள்.. நன்றி விஜயன் சார் !
On the way to Erode.
ReplyDeleteJust one hour to go.
அட்டைபடம் Hardbound போல பிரமிப்பு ஏற்படுத்துகிறது! LMS வருவது ST courier or Professional Courier என தெரிந்தால் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட வசதியாக இருக்கும் !
ReplyDeleteஈரோடு புத்தக கண்காட்சி முதல் நாள் புகைப்படங்கள் இங்கே...!
ReplyDeleteஇந்த புகைப்படங்களை எடுத்தவர்கள் உலக பிரசித்தி பெற்ற கேமரா கலைஞர்களான ஈரோடு விஜயும்,நல்ல பிசாசும் ;-)
ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் எடிட்டர்ஜீ மற்றும் நண்பர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
மின்னும் மரணம்- The complete saga bookingற்கு நேற்றே Rs.1000/- transfer செய்து விட்டேன் ! இன்று சனிக்கிழமை என்பதால் NEFT serverல் தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை - முன் எச்சரிக்கை முத்தண்ணா
ReplyDeleteநேரடி ஒளிபரப்பு .............பார்க்க ஆவலாய் உள்ளோம் ............யு ட்யுப் ...........ப்ளீஸ்
ReplyDeleteGoing to courier office, hope my book will be ready
ReplyDeleteLMS book 1 cover art/design/color are amazing, i can feel the hard work you and your team had put on this book. Particularly the center having a leather design is a master stroke. Definetly this book is going to give tough fight to NBS.
ReplyDeleteLMS book 2 cover is also good.
Awaiting to get the parcel and to open it.
வாவ் ! சந்தோஷ செய்திகளுக்கு ...........
ReplyDeleteOutstanding
ReplyDeleteStunning
Amazing
Artistic
Unbelievable
Professional
Hats off to the entire team ......
டியர் விஜயன் சார்,
ReplyDeleteதடித்த LMS-இன் அட்டை(கள்) குறித்து, ஒரு மெல்லிய பயம் எனக்குள் இருந்தது! :) ஆனால், இம்முறை உங்கள் குழு அசத்தி விட்டது!
"LMS இத்தாலிய ஸ்பெஷலின் (முன்) அட்டை அட்டகாசம்" என்றால் அது எளிமையான வர்ணிப்பாக மட்டுமே இருக்கும்! வசீகரமான டெக்ஸ்; இதழின் முதுகில் Leather Bound போன்றதொரு மாயத் தோற்றம் - என கலந்து கட்டி பிரமாதப் படுத்துகிறது!
"LMS பெல்ஜிய ஸ்பெஷல்" - அழகான ப்ளூபெர்ரியின் பின்னே, திருஷ்டிப் பொட்டாய் தொங்குகிறது அந்த தடித்த MagnuM தோரணம்! :( இருந்தாலும், NBS அட்டையை நினைத்துப் பார்க்கையில் இது அருமை தான்! ;) டைகருக்கு இதுவரை இழைக்கப் பட்ட அநீதிக்கு, மின்னும் மரணம் தொகுப்பின் அட்டையில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்! :D
பல நாயகர்கள் இணையும் இதழ்களில், பின்னட்டைகள் பெரும்பாலும் கொசகொசவென்றே இருக்கும்! அந்த வகையில், இத்தாலிய ஸ்பெஷலின் பின்னட்டை சற்று நன்றாக இருக்கிறது. பெல்ஜிய பின்னட்டை ஓகே ரகம்!
சாத்தான் ஜி & ஈ. விஜயின் பதிவுகளைப் பார்த்தேன்! ஆங்கில காமிக்ஸ்களின் விற்பனை தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த 'சின்னதொரு ஆச்சரியமா'?! :D ஒரு வகையில் நல்லது தான்!!! ஆங்கில எழுத்துக்களை கண்டாவது புதிய தலைமுறை மக்கள் நம் ஸ்டாலுக்குள் நுழைந்தால் சந்தோஷமே! :-/ அது சரி, Eurobooks & Tara Press மட்டுமே தென்படுகின்றன?! Cinebook எங்கே சார்?! :)
//மின்னும் மரணம் தொகுப்பின் அட்டையில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்! :D
Delete//
+1
//முதுகில் Leather Bound போன்றதொரு மாயத் தோற்றம் -//
+same feeling
Compare to Eurobooks, Cinebooks are costly
Deleteதல'....தளபதி.....திருவிழா..!
ReplyDeleteதலைப்பே அசத்தல் சார் உங்களை சந்திக்க ஈரோடுல்
காத்துக்கொண்டுஇருக்கிறோம்
சலாமுங்கோ நான் சந்தாகட்டலிங்கோ ஈரோட்டுக்கும் வல்லீங்கோ
ReplyDeleteவழக்கமா வாங்கற கடையிலே கேட்டேங்கோ ஒருவாரம் ஆ கும்னுட்டாருங்கோ
கொஞ்சம் அங்கே இருந்தே போனைபோட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்க
சொல்லுங்கோ .எழுத்து கூட்டி படிக்கணும் பாருங்க
ஹா ....ஹா ...ஹா ........
Deleteஇலங்கையில் LMSன் விலை மற்றும் ஏனைய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லையே!
ReplyDeleteலயனிர்க்கு 30வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Deleteஎப்பொழுதும் பணியும், கொஞ்சம் சோம்பேறித்தனமும் கண்களை அழுத்த, இந்த வலைப்பக்கத்தை நுனிப்புல் மேய்வது மட்டுமே வழக்கம்... இன்றோ, அலுவலகத்தில் இருந்தாலும் முழுக் கட்டுரையையும் சிரத்தையாய் படித்து முடித்து விட்டேன்... அவ்வளவு சிறப்பு... அட்டைப்படம் மிக நன்று... அலுவலகத்தில் நான்... வீட்டிலும் ஆள் இல்லை... எனவே, அனேகமாய் கூரியர் பையன் வீட்டைத்தட்டி ஆளில்லாமல் ஏமாந்து, என்னைத் திட்டியபடியே திரும்பிச் சென்றிருப்பான்... (அவ்ளோ எடையை மறுபடி தூக்கிட்டு வரணுமே). பாவம்... அலுவலகம் முடிந்து வீட்டிக்குச் செல்லுப் போதே கூரியர் அலுவலகத்தில் வாங்கி அங்கேயே பிரித்துப் படிக்க வேண்டும் என கை பரபரக்கிறது... ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலை...
ReplyDeleteUnable to describe my feelings. Thanks soooo muchhhh sir.
ReplyDeleteYahoo.......
ReplyDeleteI'm really stunned .........
Once open the package
சொல்ல வார்த்தைகளே இல்லை விஜயன் சார்
மொத்தத்தில கலக்கிட்டீங்க
Finally Hard Bond is on Hand Friends
Thank u very much sir
Its very very big surprise
Thanks once again sir :))
+1
DeleteReceived books.Book 1 is having hard cover binding
ReplyDeleteWow, i dont have words to describe the quality of book, its fantabulous, a special mention has to be given to the parcel, really superb, i expect the same dedication to all the parcels send in future, sir, you have to publish with such a kind of quality books every year, all the best for you to break the benchmark set with this book.
ReplyDeleteஇதற்காகத்தான் ...இதை காணத்தான் இரவு முழுவதும் கண்விழித்து மகாசிவராத்திரி விரதமிருந்தோம்...ஒருவழியாக பார்த்தாயிற்று..!ஓவியர் மலையப்பன் அவர்களின் ஓவியம் அழகாகவே உள்ளது. ஆனால், கேப்டன் டைகரின் ஓவியத்தில் ரியாலிட்டி அதிகமாக இருப்பதால் எங்களுக்கு அதுதான் மிகவும் பிடித்திருக்கிறது..சித்திர மாந்த்ரீகர் வில்லியம் வான்ஸ் என்கின்ற வார்த்தை மிகப் பொருத்தமே!.டெக்ஸின் "தணியாத தணல்" புக்கின் அட்டைப்படம் யார் சார் வரைந்தது ? இன்றும் டெக்ஸ் என்றால் அந்த அட்டைபடம்தான் மனதில் நிழலாடுகிறது. சற்றே ரியாலிட்டியான (portrait) டெக்ஸை காண ஆசையாகவும் இருக்கின்றது..என்றேனும் இவ் ஆசையை தங்களால் பூர்த்தி செய்ய இயன்றால் மகிழ்வோம்.
ReplyDelete"இரவே ....இருளே ..கொல்லாதே.."teaser இல் உள்ள பேய்வீட்டு ஓவியமும் மனதை கவர்கிறது.(அது,அட்டைபடத்தில் இடம் பெறுமா?)
Received LMS Books., At first sight it is a GREAT GREAT GREAT work! Superb Binding and Printing!! Thank you Vijayan Sir and a mega salute to you and your team!!!
ReplyDeleteவரவு நல்வரவு ஆகட்டும்!
Deleteஇந்த பதிவை திறந்தவுடன், மகிழ்ச்சி, ஆனந்தம் , கிளர்ச்சி,சந்தோசம், உற்சாகம் என தமிழில் இந்த உணரவை விவரிக்க வார்த்தைகளை தேடினால் எல்லாமே இந்த சூழ்நிலைக்கு ரொம்பவே சாதரணமாக தெரிகிறது.கணினிக்கும் எனக்குமிடையே இருக்கும் காற்று வெளி படித்து முடியும் வரை, இந்த உணர்வுகளால் மெலிதாக அதிர்வதை உணர முடிந்தது. மிக்க நன்றி சார்! :-)!
ReplyDeleteST நண்பர்களுக்கு போன் போட்டால், மழை காரணமாக பார்சல்கள் வந்தது லேட், இனிமேல் தான் பிரித்து அனுப்பவேண்டும் எனும் பதிலால் பற்கள் நறநற வென கடிபட்டன.
புத்தகத்திருவிழாவை அலங்கரித்துகொண்டிருக்கும் நண்பர்களுக்கு.... GREAT JOB GUYS! விரைவில் UPDATES கொடுக்கவும்.
Book recived no words to explain vijaya sir. அற்புதம். golden period of Tamil comics. It is benchmark special
ReplyDeleteஇப்படி ஒரு அற்புதமான இதழுக்கு முன்பதிவு 350 தாண்டவில்லை, அதனால் இனி இப்படி இதழ்கள் வராது என்று ஆசிரியர் சொன்னதை நினைத்துப் பார்த்தால் இந்த மகிழ்ச்சியை முழுதுமாக என்னால் அனுபவிக்க முடியவில்லை. :(
ReplyDeleteஆசிரியர் முடிவை மாற்றி கொள்வார் ! சந்தோஷ வேளை இது .......
Deleteநண்பர் பிருந்தாபன் !.......ஸ்மைலியை மாற்றி போடுங்கள் .........
உற்சாகத்தில் திளைப்போம் ........
வாங்கிட்டேன்! வாங்கிட்டேன்! 1.595 வெயிட் போட்டு கிலோ வாங்கிட்டேன்!
ReplyDeleteதல'யும், தளபதி'யும் வீட்டுக்கு வந்துட்டாங்க!
(Enna oru எக்ஸ்சைட்மென்டு)
இன்னும் என் கைக்கு புக் வரல ................கர ...........கர .......
Deleteஏதோ கண்காட்சியில் சஸ்பென்ஸ் சொன்னாரே...............இன்னாபா அது
ReplyDeleteமுத்து லயன் ஸ்டாலில் ஆங்கில காமிக்ஸ் விற்கிறார்கள். அதுவும் குறிப்பாக மதியில்லா மந்திரி (Iznogoud) காமிக்ஸ் தான் அதிகம் :) இது எப்படி இருக்கு? :)
DeleteGreat Work... :-)
ReplyDeleteவாழ்க PROFESSIONAL COURIER! இபோளுதுதான் LMS கைப்பற்றினேன்!
ReplyDeleteநியாயமாரே ..அல்லாரும் சந்தோசமா கீரிங்கே .என்னபோல ஏழைப்பட்ட ஆளையும்
ReplyDeleteபாருங்கோய்யா கடைகளுக்கு புத்தகத்தை அனுப்ப சொல்லுங்கோய்யா .
வரவு நல்வரவு ஆகட்டும்!
Deleteஎனக்கு தெரிந்த வரை இந்த புத்தகம் கடைகளில் கிடைப்பது என்பது உறுதியாக தெரியவில்லை, அது முழுவதும் விற்று தீர்ந்து விடுவதற்குள் நமது அலுவலகத்திற்கு பணம் அனுப்பி பெற்று கொள்வது நலம்.
டியர் எடிட்,
ReplyDeleteLMS-1 மற்றும் LMS-2 அட்டைபடங்கள் கனஜோர்... அதிலும் இத்தாலிய ஐஸ்க்ரீமில் அனைத்து கதாபாத்திரங்களின் கொலாஜ் இமேஜ் மிகவும் திருப்திகரமாக உள்ளது.... அதே முயற்சியை பெல்ஜிய சாக்லேட் பின்னட்டைக்கும் முயன்றிருக்கலாமோ ? ஆனாலும், சிவப்பு வண்ண பேக்ரவுண்ட் விஷயத்தை இம்முறை தவிர்த்து கருமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது, ஒரு புரபஷனல் டச் தருகிறது... அதற்கு பாராட்டுகளை பிடியுங்கள்.
LMS முதுகின் கனம் இங்கேயே பிரம்மாண்டமாக தெரிகிறது... நேரில் Leather Finishing டச்சுடன் எப்படி இருக்கும் என்று எண்ணங்கள் அலைபாய்கின்றன....
மின்னும் மரணத்திற்கான முன்பதிவுக்கு பணம் அனுப்பியாயிற்று, ஆன்லைனில்.... நடத்துங்கள் கச்சேரியை... 500 எட்டும் வரை ஓயக்கூடாது :)
வழக்கம் போல ST Couriers சென்னையில் இந்த பகுதியில் இன்னும் கதவை தட்டவில்லை.... எப்போதும் வருமோ... அட போங்கப்பா...
பி.கு.: புத்தக கண்காட்சி புகைப்பங்களில் ஆங்கில புத்தகங்களான தாரா பிரஸ், யூரோ புக்ஸும் விற்பனைக்கு உண்டா... இல்லை அவை வெறும் காட்சி புத்தகங்கள் மட்டும் தானா ??? நேரில் சென்றவர்கள் பதிலளியுங்களேன் ?
// பி.கு.: புத்தக கண்காட்சி புகைப்பங்களில் ஆங்கில புத்தகங்களான தாரா பிரஸ், யூரோ புக்ஸும் விற்பனைக்கு உண்டா... இல்லை அவை வெறும் காட்சி புத்தகங்கள் மட்டும் தானா ??? நேரில் சென்றவர்கள் பதிலளியுங்களேன் ? //
Deleteவிற்பனைக்கும் தான்!
Got the books..i was stunned on seeing books..500 rs is very cheap for this book...thanks a lot for dispatching team..
ReplyDeleteTex belt, Karson cap and title "MAGNUM" glittering in gold....
ReplyDeleteIn front n back cover, dresses are shining....
Tex dailogue in last page of LMS1 is nice...
ReplyDeleteஎப்பொழுதும் மாலையில் வரும் கூரியர் இன்று அதிசயமாக காலையிலேயே, எல்லாம் LMS மாயம்!
ReplyDeleteபாக்ஸ் packing அட்டகாசம்,
LMS-1 வெளியே எடுக்கிறேன், WOW, Fantastic, Marvelous, Beautiful , Exquisite, Wonderful etc., தமிழில் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தரம் First Class. Surprise என்று நீங்கள் சொன்ன Hard bound Cover பிரம்மிக்க வைக்கிறது! அட்டை – அட்டை its simply stunning. You people are done a great Job.
LMS-2 ஒரு இத்தாலிய ஐஸ் கிரீம் காமிக்ஸ் இதழ் என்ற மலையின் முன் ‘சோப்ளாங்கி’யாக காட்சியளிக்கிறது? இத்தாலிய ஐஸ் கிரீம் மட்டும் வழங்கியிருக்கலாமோ...?
தல-க்கு ஒரு நியாயம், தளபதிக்கு ஒரு நியாயமா...? Hard Bound Cover-ல் ‘டைகர்’ ‘மின்னும் மரணம் – The Complete Saga’ வட்டிக்கு முதலுமாக வெளுத்து வாங்குவாராக...!?
Sticker 1- வெ. எண். 233
Sticker 2 - …………?
மொத்தத்தில் பாராட்ட வார்த்தைகள் இல்லை, Finally your hard work and sleepless nights paid off. Well done.
Sir...thanks giving portion in hotline is so touching...We Thank you too for giving this lovable comics for us.....I LOVE OUR LION-MUTHU COMICS AND ITS PUBLISHERS..
ReplyDeleteTHANKS A LOT FOR THE PUBLISHING TEAM....
Hope you have send my books as well. When I called last Thursday I found out that even last months books(kaval kalgi & others) have not parcelled tome yet. So I request to send everything together with magnum specials (2 copies in everything) please ensure the sendoff. Thanks
ReplyDeleteபுத்தகங்கள் வழக்கமான வேலையில் தான் வந்தது என்றாலும் ஏதோ பல வருடங்கள் காத்திருந்து பார்ததைபோன்ற ஒரு பீலிங்! லபக் என்று ST அன்பரிடம் பார்சலை பிடுங்கிக்கொண்டு ஒரு நன்றியை உதிர்த்தேன்.
ReplyDeleteமுதலில் லயனுக்கு முப்பதாவது பிறந்தநாள் வாழ்த்துகள்!
இந்த இன்பப்புதையலை சாத்தியமாகிய ஆசிரியர் மற்றும் அவரது டீமுக்கு மில்லியன் நன்றிகள்!
கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ ஸ்வீட் பாக்ஸ் போன்ற ஒரு தோற்றம். CORRUGATED பாக்ஸ்சில் பாக்கிங் TAPE ஒட்டி புத்தகங்களை பாதுகாத்திருந்தார்கள்.
பாக்கிங் புத்தகங்களை அருமையாக பாதுகாக்கிறது என்றாலும் டேப் ஒட்டியதை இன்னமும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம்.
இதோ உங்களுக்காக UNPACKING OF LMS
பாதுகாப்பான பேக்கிங்,பார்பதற்கு கொஞ்சம் நீட் ஆகா இருந்திருக்கலாம்
அட்டைப்பெட்டியினுள்ளே ஒரு காமிக்ஸ் புதையல்
இரண்டு புத்தகங்கள் வேறு வேறு வடிவங்களில்
டைகரின் LMS அருமையான அட்டையில்
LMS -1 , புத்தகத்தை வெளியே எடுக்கும்போது நமது நெற்றிப்பொட்டில் தோட்ட பாய்வதை போன்ற ஒரு உணர்வு. முதன்முதலில் ஹார்ட் BOUND , அட்டகாசம் !!!
LMS-1 இன்னொரு ஆங்கிளில்
LMS-1 உள்ளே, புத்தகம் சுகமாய் நம் கைகளில் கணக்கும்
HAPPY READING!! :-)
புக் பேக்கிங் பிரிப்பதையே விஷுவலுடன் குறுநாவல் ரேஞ்சுக்கு எழுதி
Deleteஇருக்கீங்க ...............
இன்னும் புக் வரல .........
உங்கள் பதிவு ஒரு வகையில் ஆறுதல் ........
பிறிதோர் வகையில் .......????????????????
I dont think anyone can satisfy you
DeleteAfter seeing LMS hardbound cover, definetly this is THE best cover in our comics history until now :-)
DeleteThis book itself looks like worth of 1000 Rs, think about MM the actual 1000 Rs book will look like - Expectation went so high for MM.
To avoid Courier Charges, planning to buy Minnum Maranam in Chennai Book Fair...Any possibility???
ReplyDeleteநண்பரே மி.மி.ம குறைந்த அளவு பிரிண்ட் செய்து வெளி இட போவதாக ஆசிரியர் சொல்லி உள்ளார், எனவே சென்னை புத்தக திருவிழாவில் கிடைக்கும் ஆனால் நீங்கள் முந்தி கொண்டு முதல் நாள் வங்கிக்கொள்வது நலம்.
Deleteஉங்களுக்கு உறுதியாக நமது மி.மி.ம வேண்டும் என்றால் முன்பதிவு செய்வது நலம் என்பது எனது அபிப்ராயம்.
64th
ReplyDeleteMissing the book fair festival and meeting vijayan sir and friends
DeleteLMS Super Sir....Hearty Thanks to you and Backend Team!!!!!
ReplyDelete"மின்னும் மரணம்" - The Complete Saga சந்தா கட்டியாச்சு!!!!
ஐயா வணக்கம் ,
ReplyDeleteஅருமையோ அருமை LMSன் அட்டைகளும் , கதைகளும் இன்று மதியம் நீங்கள் சாப்பிட சென்ற வேலையில் நான் வந்தேன் , நமது நண்பர்கள் குழாம் ஒருவருடன் ஒருவர் நட்பையும் , வரும் நாட்களின் விமர்சங்களை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர் . நான் வந்த வேலையை ( LMS ய் வாங்கிகொண்டு ) சென்று விட்டேன் , என்னுடுன் என் GM இருந்ததால் இன்று இப்படி ஆகியது , பார்போம் அடுத்த வாரம் .
விழா நன்றாக நடைபெற அந்த திண்டல் முருகனை வேண்டும் LMS இல் மூழ்கி இருக்கும் --- இரவி
சனிக்கிழமையாதலால் மதியம் 2 மணியுடன் அலுவலகம் முடிந்துவிட, 50கிலோமீட்டர் பயணித்து, ஆவலாய் கூரியர் ஆஃபீஸ் சென்று பார்த்தால்... உணவு இடைவேளை என ஆள் எவரையும் காணோம்... பற்களை நரநரத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தால்... வீட்டின் வாசலில் என்னை வரவேற்றது சாட்சாத் த்துக் கொண்டே வீட்டிற்கு வந்தால்... வீட்டின் வாசலில் என்னை வரவேற்றது சாட்சாத் LMS-ஏ தான்... பக்கத்து வீட்டு பாட்டியிடம் சொல்லி எனக்கு கொடுக்கச்சொல்லிச் சென்றிருக்கிறார் புண்ணியவான்... பார்சலை பிரித்ததே சுகானுபவம்... ஏ தான்... பக்கத்து வீட்டு பாட்டியிடம் சொல்லி எனக்கு கொடுக்கச்சொல்லிச் சென்றிருக்கிறார் புண்ணியவான்... பார்சலை பிரித்ததே சுகானுபவம்... LMS ராசியோ என்னவோ, இணையத்தில் ஆர்டர் செய்திருந்த மேலும் மூன்று பொருட்கள் அடுத்தடுத்து வந்து சேர, மதியம் முழுதும் ஒரே துகிலுரி படலம் தான்... கடின அட்டை பைண்டிங் அட்டகாசம் என்றாலும், பேக்கிங் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கலாமோ என்று தோன்றியது...
ReplyDeleteஇணையத்தில் இரண்டாம் புத்தகத்தின் அட்டைப் படத்தின் முதுகில் தெரிந்த வரிகளைப் பார்த்து... ஒரு வேளை மெட்டல் ஸ்பைரலாக இருக்குமோ என எண்ணினேன்... பெரிய பல்பு வாங்கியது தான் மிச்சம்...
FLASH NEWS....
ReplyDeleteஅடுத்த வருடம் டெக்ஸ் வில்லரின் 772 பக்கங்களில் (இரு கதைகள் 336 + 336 பக்கங்கள்) ஒரே இதழாக வண்ணத்தில் வெளிவருகிறது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் எடிட்டர் அறிவிப்பு. :) :) :)
டெக்ஸ் வாழ்க!!!
பிருந்தாபன் !சொன்னேனா இல்லையா ?
Deleteஅடுத்த வருடம் 776 பக்க டெக்ஸ் ...........
அதற்கு அடுத்த வருடம் 1500 பக்க டெக்ஸ் ........
இப்பவாவது ஸ்மைலியை மாத்துங்க !.......:-))
சந்தோஷ செய்திகளுக்கு முடிவே இல்லை போலும் ......:) :)
DeleteSuper news! ... Hard bound - முக்கியம்... எடிட்டரிடம் வலியுறுத்தவும்
Delete772 பக்கங்கள் முழு வண்ணம் டெக்ஸ் rocks
Deleteய்ய்யீயீயீயீயீப்ப்ப்ப்ப்பீபீபீபீபீ.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Deleteஎடிட்டரையும், ஜுனியர் எடிட்டரையும்,
நண்பர்களையும் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.!
VERY AMAZING NEWS,
DeleteSHAM 1881, ERODE
Operation Tex special full success :-)
Deleteஅருமையான பதிவு
ReplyDelete//இது நாள் வரை the making of LMS பற்றி சிலாகித்தேன் என்றால், இதுவோ the binding & shipping of LMS பற்றிய பீட்டர் படலம் !!// Edit your team deserves stand-up ovation ! :D best and beyond, world class binding and packing ! i am in uncontrollable glee after seeing the LMS :D
ReplyDeletethe covers looks stunning i couldn't get into book because of cover, best of attraction Edit ! good choice good work Malayappan sir! full mark !
happy birthday Lion comics! happy LMS friends ! :D
"மின்னும் மரணம்" - The Complete Saga - looking forward to see world mart subscription link Edit! faster plz!
ReplyDeleteThanks for quick response Edit !
DeleteDear Editor,
ReplyDeleteToday afternoon I have received the parcel through professional courier in bangalore.Hats off to the team, marvellous work.
Tamil Comics with hard Bound I have never expected, fantastic.Definitely i can keep safely for my son(Chotta beem fan).One of the milestone moment in our comic journey.
அருமையான ,நெகிழ்ச்சியான அனுபவம்..நண்பர்கள் ,தங்கவேல் ,விநோஜ்,பிரசன்ன,ஸ்டீல் க்ளா,ஈரோடு விஜய்,டெக்ஸ் விஜயராகவன்,k.பரணீதரன் ,புனித சாத்தான் ,கிங் விஸ்வா,ஜூனியர் எடிட்டர் விக்ரம்,நமது அன்பு ஆசிரியர் என இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாள்
ReplyDeleteஅன்பு நண்பர் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் மற்றும் மேடம் ஜூலியா அவர்களின் புன்னகை மாறா முகங்கள் இன்றைய தினத்தின் ஹைலைட்ஸ் ..
Deleteபுளூ பெர்ரி திருப்பூர் நாகராஜன் ,Radja,செந்தில் மாதேஷ்,L.கர்ணன்...
Deleteஅன்புக்கு நன்றி நண்பர்களே..
நண்பர்கள் ,கிரிதரன் ,மஞ்சள் சட்டை மாவீரன் ஶ்ரீ ராம் ,ரஞ்சித் ,கார்த்திக் சோமலிங்கா மற்றும் என் அன்பு நண்பர் Bangalore சுப்பிரமணியன் ,பரணீதரன் from Bangalore .கலீல்,அஸ்லம்,செந்தில் ,பிரபாவதி ,Willer fan ஆகியோரை மிகவும் mis பண்ணினேன்..
Deleteஅகமது பாஷா சென்னை புக்பேரில் மிண்னும் மரணம் வெளியிட்டில் கண்டிப்பாக சந்திக்காலம்
DeleteAHMEDBASHA @ என்ன பாஸ் நாம் இன்று நமது ஸ்டால்ல சந்தித்த மறந்து விட்டீங்களா :-)
DeleteMissed to meet vijayan sir and friends
ReplyDeleteDear Editor,
ReplyDeleteஇன்ப அதிர்ச்சி, Hard-bound அட்டை, அத்துடன், தொடர்ந்து படிக்க வசதியாக bookmark நூலுடன் ... அட்டையில் தல டெக்ஸ் shine & rocks... excellent fit & finish. அட்டகாசமான, meticulous packing. இதற்காக எனது ஸ்பெஷல் நன்றியைத் தங்களது ஊழியர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்... truly awesome...
சர்வதேசத்தரங்களுக்கு இணையாக, ஏன்.. மேலாகவே வெளிவந்துள்ளது.... உண்மையிலேயே இது நமது காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்
தங்களுக்கும் மிக்க நன்றி for all the hardwork behind this wonderful book preparation and I am sure it will be a HUGE, successful hit release.
இன்னும் கதைகளைப் படிக்கத்துவங்கவில்லை... எங்கே புத்தகத்தை திறக்கிறது.. அட்டையைப் பார்த்தே, நம்ப முடியாமல் ஆ-வெனப் பிளந்து கொண்டுள்ளேன் :)
நமது தரம் கூடக் கூட எதிர்பார்ப்புகளும் கூடிக்கொண்டே போகின்றன.. இனி வரும் புத்தகங்கள் Hard-bound அட்டையில்லாமல் வந்தால் குறையாகத் தெரியும் :) எனவே Hard-bound அட்டையையே, இனிமேல் நமது standard binding ஆகக் கொள்ளவும் :)
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன் ... LMS-ன் முழுவிலை hard-bound-ல் வந்துள்ள முதல் புத்தகத்துக்கு (quality, fit & finish) மட்டுமே தகும்.... என்னைப் பொறுத்தவரை LMS-2 இலவச இணைப்பே ;)
Deleteஎடிட்டருடன்,L M S உடன் ஈரோட்டில் ஒரு நாள்.இது மறக்க முடியாத திருநாள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஈரோட்டில் நண்பர்களுடன் இன்றைய பொழுது இனிய பொழுதாக சென்றது. இது என்றும் நினைவில் நிற்கும் ஒரு இனிய நாள்.
ReplyDeleteஅசுரத்தனமான உழைப்பின் பலனாக இதழ் ஒரு சாதனை மைல் கல் ....டெக்ஸ் வில்லர் மற்றும் டைலான் டாக்...ஊஹும்...சான்சே இல்லை ...
ReplyDeleteபிரிண்டிங் குவாலிட்டி உண்மையிலேயே மேம்பட்டுள்ளது ....
மகுடம் வைத்தார் போல் நமது ஆசிரியரின் தமிழ் அதகளம் ..
மொத்தத்தில் 30 வது ஆண்டு மலர் ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷம்
//இன்னும் கதைகளைப் படிக்கத்துவங்கவில்லை... எங்கே புத்தகத்தை திறக்கிறது.. அட்டையைப் பார்த்தே, நம்ப முடியாமல் ஆ-வெனப் பிளந்து கொண்டுள்ளேன் :)//
ReplyDelete+1
5800+ views in just 2 days
ReplyDeleteஇந்திய காமிக்ஸ் வரலாற்றில் இத்தகைய தரத்தில் எந்த காமிக்ஸ்ம் வெளிவந்ததில்லை! இது காமிக்ஸ் இந்திய காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகீரீச் கீரீச்....
ReplyDeleteநீண்ட நாள் கழித்து உறங்கி எழுகையில் என் முன்பு அட்டகாசமாய் LMS...
பசியும் மறந்து போனது என் மனம் இப்பொக்கிஷத்தை இரசிக்கும் பொழுது...
எடிட்டர் அவர்களுக்கும், இப்பொக்கிஷத்தினை செதுக்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல... :)
Welcome back vadapalani vavvalu! Happy to see u here again. :)
Deleteவணக்கமுங்கணா...நலம் நலமறிய ஆவல் :)
Deleteவந்தனங்கள் வவ்வால்ஜீ..! உங்கள் மீள்வருகை ஒரு இனிய சர்ப்ரைஸ் :-)
DeleteWelcome Back vadapalani vavalu!
Deleteநன்றி நன்றி நன்றி :)
DeleteDear All,
ReplyDeleteNow only I return from the Book Fair, Tiz day is one of the ever and never forgettable Amazing Day in my life. Today I met most of our Friendz in Erode Book Fair ( Erode Vijai & Tripur Blu Bery & Saint Satan & Tripur CB & Auditor Raja & Cbe Steel Glaw ( GOLD KING ) & Mayavi Siva & Erode Dictator Stalion & Tripur Rajesh & Dr. Sathish & No. of Friends and sory if any one name not added this list because I felt i am in my childhood days and unable to recal the some friend Names ) .
Sham 1881 , Erode.
மை டியர் மானிடர்களே!!!
ReplyDeleteஎடிட்டர்ஜீ மற்றும் ஜூனியர் எடிட்டர்ஜீ பங்கேற்ற LMS வெளியீட்டுவிழா இன்று காலை கோலாகலமாக நடந்தது.ஏராளமான காமிக்ஸ் அன்பர்கள் பங்கேற்று சிறப்பித்த இந்த இனிய விழாவில் எழுத படிக்க தெரியாத பாமரனாகிய அடியேனும் கலந்துகொண்டேன்.(நீங்கள் ஒரு திருஷ்டி பொம்மை மாதிரி என்று நண்பர் ஈரோடு விஜய் கூறியதை யாரிடமும் நான் சொல்லமாட்டேன் ;-)
அந்த இனிய நிகழ்வின் புகைப்பட தொகுப்பு இதோ
இன்று மறக்க முடியாத ஒரு நாள்! ஆசிரியரை பங்களூர் comic conக்கு பிறகு இன்று தான் சந்தித்தேன். ஆசிரியரும், juniorஉம் இளைத்திருந்தார்கள். Diet controlலா? நாம் கொடுக்கும் tortureராலா? Your guess is as good as mine! LMSஐ கண்டு உண்மையிலேயே மலைத்துவிட்டேன். எனது மனைவியும், எனது இரண்டரை வயது இரட்டையர்களும, உடன் வந்திருந்தனர். ஆசிரியர் புன்முறுவலுடன், ஒருவனுக்கு தன் கையொப்பமிட்ட LMSஐ அளிக்க ,அதன் பாரம் தாங்காமல் அவன் அதை நழுவ விட, என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள். ஆசிரியர் அவனுக்கு Rintincanஐ காண்பித்து காமிக்ஸ் ஆசையை புகட்ட முயன்றார். அவர் வெற்றி அடைந்தாரா என்றறிய சில வருடங்கள் ஆகும் என் எண்ணுகிறேன். King Viswaவையும் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கிளம்பும் பொழுது ஆசிரியரிடம் முத்துவை விட லயன் மீது அவர் கொண்டுள்ள காதலை குத்தி (பேச்சில்தான்) காண்பித்து விட்டு மகிழ்வுடன் கிளம்பினேன். - Dr. AKK ராஜா.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteDr. ராஜா உங்களை சந்தித்தும் பேச முடியாதது வருத்தமான விஷயம். முடிந்தால் பெங்களூர்/சென்னையில் மீண்டும் சந்திப்போம்.
DeleteDear Parani,
Deleteதயவுசெய்து என்னை மன்னிக்கவும். எனக்கும் நம் நண்பர்கள் அனைவரையும் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று ஆசை தான் ஆனால் என் மகன்களின் தொந்தரவால் உடனே செல்ல வேண்டியிருந்தது. கண்டிப்பாக சென்னை புத்தக திருவிழாவில் சந்திப்போம். - AKK
இதற்கு எதற்கு சார் பெரிய வார்த்தைகள் எல்லாம். நீங்கள் இரட்டையர்களுடன் வந்தது அறிந்தவுடன் தொந்தரவு செய்ய மனம் இல்லை.
Deleteவிஜயன் சார், நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; அவர்களின் உழைப்பு மகத்தானது. மீண்டும் ஒருமுறை எனது நன்றி.
ReplyDeleteஇன்று உங்களுடன் மற்றும் நமது காமிக்ஸ் அன்பர்களுடன் பேசிய தருணம்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம்! பெங்களூர் திரும்பும் முன் உங்களிடம் சொல்லாமல் கிளம்பியது வருத்தமாக உள்ளது.
நமது நண்பர்கள் ஆசிரியருடன் உரையாற்றிய ஒரு வீடியோ காட்சி, மேலும் சில வீடியோ காட்சிகளை திங்கள் கிழமை "upload" செய்கிறேன்.
https://www.youtube.com/watch?v=wllbhozjcJI&feature=youtu.be
இரவுகழுகோ !
Deleteஸ்டீல், நானும் நண்பர் பிரசன்னாவும் வீடு வந்து சேர மணி 12.30 ஆகிடுச்சி.
Deleteநேற்று காலை நான்கு மணிக்கு ஆரம்பித்த காமிக்ஸ் ஓட்டம் இப்பதான் முடிய போகுது :-)
Deleteநண்பரே நான் வந்து சேர்ந்த போது 1.35 நண்பர்கள் பின்னூட்டத்தை கண்ட பொது நாம் அங்கு கொண்ட உற்ச்சாகம் போல இங்கும் சந்தோஷ அலை பரவுகிறது ! பல நண்பர்கள் வருகை மகிழ்வளிக்கிறது ! எழுத நிறைய உள்ள்ளதால் நாளை சிந்திப்போம் நண்பர்களே !
Deleteஅற்புதமான உணர்வுகளுடன் தூங்க செல்கிறேன் !
இனியும் இரத்தபடலத்திர்க்காக warm up செய்து கொண்டிருங்கள் !
Deleteசார் பஸ்ல வரும்போதே அந்த பிழைகள் புத்தக வெளியீடு என்னும் , நமது வெளிவந்த இதழ்களும் என பார்த்து விட்டேன் ! ஆச்சரியம் என்னவென்றால் கண்ணில் முதலில் பட்டதே அந்த இரண்டும்தான் !
ReplyDeleteஸ்டீல் என்னது, நமது L.M.S. வெற்றியை கொண்டாட 108 தேங்கா உடைக்க போறிங்களா :-)
ReplyDelete108 ! o ப்படி ஒன்னு இருக்கா ! ஆனா 108 pothumaa !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேற்று ஈரோட்டில்
ReplyDeleteL--ovley
M--emories
S--pecial
அருமை
Deleteகாலை எழுந்து தொழுகை முடித்ததிலிருந்து LMS-ஐ கைகளில் வைத்து தடவி தடவி அழகு பார்த்து புல்லரித்துக்கொண்டிருக்கின்றேன்..
ReplyDeleteHard Binding உலக தரம்...அட்டைப்பட வண்ணம் மற்றும் சித்திரங்கள் கனகச்சிதம்...
சாதித்தது விட்டார் ஆசிரியர் ..
டெக்ஸ் கதையின் பிரிண்டிங் தரம் வரம் காலங்களில் தொடர வேண்டுகிறேன் ..
குறிப்பாக மின்னும் மரணத்தில்.
முப்பதாண்டுகளாக உங்களுடன் பயணித்ததற்கு அருமையான பரிசை வழங்கிவிட்டீர்கள் ஆசிரியரே ...
நன்றி
முதல் பார்வை ! (1)
ReplyDelete//LMS இதழ்களினுள்ளே 2 இடங்களில் ஸ்டிக்கர்கள் உள்ளன ; 2 factual பிழைகளை மறைக்க ! எங்கே என்று கண்டு பிடியுங்களேன்//
பக்கம் 2 வெளியீடு எண் : 233 & பக்கம் பக்கம் 764 வெளியீடு எண் 223-234 :-)
லயன் மில்லெனியம் ஸ்பெஷல் ?!
டியர் விஜயன் சார், லயன் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் என்று தானே வரவேண்டும்? millennium என்றால் ஆயிரம் வருடங்கள் அல்லவா? ப்ளீஸ்.. இதைக் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் சார் (பக்கம் 769) !
(என்) நினைவில் நின்றவை...(பக்கம் 755) ; சிங்கத்தின் சிறு வயதில் (பக்கம் 759) - இவற்றில் வரும் underline சற்று odd ஆக தெரிகிறதே சார்.. எப்பொழுதும் போல் bold letters மட்டுமே அழகாக இருக்கும் எ.எ.கருத்து !
முதல் பார்வை ! (2)
Deleteலயன் மேக்னம் ஸ்பெஷல் - புக் No :2ன் அட்டைப்படத்தில் இருக்கும் மார்ஷல் டைகரின் வலது கண் வெள்ளையாகவும் ; இடது கண், டெக்ஸ் வில்லரிடம் ஒரு குத்து வாங்கியது போலவும் தெரிகிறது சார் :-( ஒருவேளை ஒரிஜினல் ஓவியமே இதுபோல் தான் என்றாலும், இரண்டு கண்களை மட்டும் அழகாக வரைந்திருந்தால் இன்னும் கூட சூப்பராக இருந்திருக்குமே சார் :-)
// டைகரின் வலது கண் வெள்ளையாகவும் ; இடது கண், டெக்ஸ் வில்லரிடம் ஒரு குத்து வாங்கியது போலவும் தெரிகிறது //
Deleteகுத்துங்க எசமான் குத்துங்க!
// மார்ஷல் டைகரின் வலது கண் வெள்ளையாகவும் ; இடது கண், டெக்ஸ் வில்லரிடம் ஒரு குத்து வாங்கியது போலவும் தெரிகிறது///
Deleteஅந்த அட்டைப்படம் ஓவியர் கையால் வரைந்தது அல்ல.!
டைகரின் Original photoவாக்கும்.!
ஈரோடு புத்தகத் திருவிழா : 2ம் நாள் : LMS என்ற பொக்கிஷம் வெளியிடப்பட்ட நாள்
ReplyDeleteஎதை எழுத; எதை விட? விளக்கிச் சொல்ல முடியாத குதூகலத்தை ஒரு நாள் முழுக்க நெஞ்சில் சுமந்த நாளாயிற்றே! அளவிலா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்த நாளாயிற்றே! கொண்டாட்டத்தின் உச்சங்களை கொட்டித்தந்த நாள்!!
நினைவிலிருக்கும் சில முக்கிய சம்பவங்கள் மட்டும், நண்பர்களுக்காக இங்கே:
* அதிகாலையிலேயே Radja from france, கிங்-விஸ்வா, பிரசண்ணா from bangalore, shallum fernandez (with his wife) from nagergoil - ஈரோடு மாநகருக்குள் ஆஜராகிவிட்டிருந்தனர்.
* பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு வெகு நேரம் முன்பாகவே எடிட்டருக்காகவும், நண்பர்களுக்காகவும் காத்திருந்தது - Radja from France. ரஜினியின் 'Boss' ஸ்டைலில் மெல்லிய தாடியுடன் அசத்தலாக இருந்தார்.
* EBF அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படும் நேரமான 11 மணிக்கு பத்து நிமிடம் முன்பாகவே எடிட்டர் ஆஜராகியிருந்தார். இம்முறை விக்ரமும் உடன் வந்திருந்தது எதிர்பாரா சர்ப்ரைஸ்!
* அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சில வினாடிகளிலேயே நமது ஸ்டாலின் முன்பு மட்டும் ஒரு சிறு கூட்டம் LMSஐக் கண்டிடும் ஆவலுடன் கூடியிருந்தது.
* சுமார் 11:10 மணியளவில் LMS ஐ எடிட்டர் வெளியிட ஈரோடு ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பலத்த கரகோஷங்களும், கூக்குரல்களும் (யாருப்பா அது விசிலடிச்சது?) அப்பகுதியிலிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அழகாக Gift wrap செய்யப்பட்டிருந்த LMS அடங்கிய பார்சலை ஸ்டாலின் திறக்க, கூடியிருந்த நண்பர்களுக்கு heart beat எகிறிக் கொண்டிருந்தது. அட்டகாசமான அட்டைப்படத்துடன் குண்ண்ண்டாய் LMSன் பிரதான புத்தகம் நண்பர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது. Hard-bound அட்டையை சற்றும் எதிர்பாரா நண்பர்கள் அனைவரும் பிரம்மிப்பில் வாய்பிளந்து நின்றனர்.
* LMS வெளியீடு நடைபெற்ற சில நிமிடங்களிலேயே நடைபாதையில் ட்ராஃபிக் ஜாம் ஆகுமளவுக்கு வாசக நண்பர்கள் கூடிவிட்டிருந்தனர். மற்ற ஸ்டால்களில் ஓரிருவர் மட்டுமே பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் நம் ஸ்டால் மட்டும் திருவிழாக் கோலத்தில் திளைத்திருந்தது.
* நண்பர் சேலம் சிவக்குமார் தானே தயாரித்திருந்த பல வகையான போஸ்டர்களுடனும், டீஷர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த டெக்ஸ், வேதாளர் உருவப்படம், லயன்-முத்து லோகோ சகிதம் அசத்தினார். அவரது ஈடுபாடும், நண்பர்களை பரிவோடு அவர் கவனித்த விதமும் அவரது காமிக்ஸ் காதலை அப்பட்டமாய் பறைசாற்றியது. நன்றி சிவா சார்!
* உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் நண்பர்கள் நாள்முழுக்கத் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். மேற்கூறிய நண்பர்களோடு,
AKK Raja
Parani from Bangalore
Ajay palanisamy, Bangalore
tex vijayaragavan, salem
karnan, salem
sridhar, salem
Ravi kannan, salem
kumar, salem
steel claw ponraj, Coimbatore
Dr.Sathish, Coimbatore
Selvaraj, Coimbatore
Gogul C
Dr. swaminathan, kodumudi
Senthil Madhesh (குடும்பத்துடன்)
Vinoj, Erode
vinoth, Erode
vishnu, Erode
Dharmaraj, vellode
Blueberry, tiruppur
Devaraj, tiruppur
tex sampath
Ramesh (RummiXIII)
Govindaraj, Mettur
Rajkumar, Ataiyampatti
Paranitharan, Tharamangalam
Jeyaganthan, puliyampatti
Kumar, Erode
Nambi, Erode
Palanisany, veppadai
gunasekaran, veppadai
Sarathi, kangayam
Palanivel arumugam (குடும்பத்துடன்)
postal phoenix Raja, mayiladudurai
sankar, erode
sathyamurthy, kangayam
Dr. sundar, Salem
Barathi nandeeshwaran, komarapalayam
karthik (குடும்பத்துடன்), Salem
Anand, chennimalai
Cibi, tiruppur
kruthika (writter)
இவர்களோடு...
அறிமுகம் செய்துகொள்ள நேரம் கிடைக்காத, அறிமுகம் செய்தும் மறந்துவிட்ட, நான் ஸ்டாலில் இல்லாத நேரங்களில் வந்து சென்ற பலரும் உண்டு (விடுபட்டவர்கள் மன்னிக்கவும். எனக்குத் தெரிவிக்கவும்)
இவர்களோடு,
saint satan,
Auditor Raja
(நேரம் கிடைக்கும்போது தொடரும்...)
படங்களுடன் கூடிய பதிவுக்கு ஈரோடு ஸ்டாலின் மற்றும் புனிதசாத்தானின் வலைப்பூக்களைப் பார்க்கவும்.
உங்கள் அன்புக்கும் அரவனைப்புக்கும் முதல் வணக்கம் சார்!
Deleteகாலை முதல் இரவு உணவு வரை உங்களுடன் இருந்து பெற்ற உணர்வுகள் நண்பர்
நல்லபிசாசு சொன்னது போல்...
்்்்வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.்்்
என்பது மிக சரியான வார்த்தைகளின் வரிகள்.
இவ்வளவு பெரியவேலைக்கு பின்பும் அசதி ,அலைச்சல், கவனிப்புக்கு பின்பும்
ஒன்றுமே செய்யதவர் போல அமைதியாக( இரவில் எவ்வளவு நேரமோ) உட்கார்ந்து
2 பக்கத்திற்க்கு எழுதி புகைபடம் போட்டு நண்பர்கள் நம் பதிவிற்க்காக காதிருப்பார்களே என அழகாக பதிவை போட்ட உங்கள், ஆர்வம், அக்கறை, வேகம் தான்
சார் காமிக்ஸ் மேல் காதலை அப்பட்டமாக பறைசாற்றுகிறது சார்!
நம்மை இனைத்த காமிக்ஸ் வாழ்க !
விஜய்@
ReplyDeleteஎல்லாமுமே எழுதிவிட்டீர்கள்.
பரட்டை ஷ்பெசல் முன்பதிவு நிலவரம் பற்றி தகவல் இல்லையே.
நேற்று நான்தான் தொடங்கிவைத்தேன்.கைராசி எப்படி என தெரிந்துகொள்ள ஆவல்.!
நல்லா போகுது!
Deleteநமது L.M.S நேற்று இரவு நிலவரப்படி ரொம்ப நன்றாக உள்ளது! அதனால நமது மி.மி.ம சென்னை புத்தக திருவிழாவில் வெளி வர வாய்புகள் அதிகம் உள்ளது என்பது எனது எண்ணம்.
Dear All
ReplyDeleteThe LION MAGNUM SPECIAL is Master Piece of Master ( Cinemvauku Oscar madri namma Comics ku ethachu Viruthu Iruntha atthai naan Namma LMS ku Koduka Sibarisuu Seikeraen )
Sham 1881, Erode
ஒரு வாரமாக கனவில் நடந்த நிகழ்ச்சி நேற்று மகிழ்ச்சியுடன் நிஜத்தில் நடந்தேறியது .இணையத்தில் வரும் முகமறியா நண்பர்கள் பலரை சந்தித்ததில் மிக ..மிக ..மகிழ்ச்சி .ஆசிரியருடன் ஒரு முழு நாள் .நேரம் போவதே தெரியாமல் இருந்தது நமது காமிக்ஸ் ஸ்டாலில் இருந்ததால் மட்டுமே என்பது மிகையல்ல .நண்பர்கள் சாப்பிட போலாமா என்ற வினாவை எழுப்பியதும் தான் மணி இரண்டை தாண்டியதே தெரிய வந்தது .வீட்டில் வரும் பொழுது நான்கு மணி அளவில் வீட்டிற்க்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு வந்த நான் வீட்டிற்க்கு சென்ற பொழுது இரவு மணி 8 .ஆசிரியரின் புதல்வர் விக்ரம் அவர்களும் வந்தது இனிய அதிர்ச்சி .இன்று மட்டுமே அல்ல ...என்றுமே மறக்க முடியாத நன்னாள் ......இன்றும் செல்லலாம் என்ற ஆவல் உந்தி தள்ளினாலும் பணி அதை தடுக்கிறது.உண்மையில் இந்த திரு நாள் "காமிக்ஸ் திருநாள் " மட்டுமல்ல "தீபாவளி திருநாளும் " தான் .அடுத்த வருடத்திற்கு காத்திருக்கிறேன் .
ReplyDeleteநல்ல பிசாசு சொன்னவார்த்தைகள் இங்கு மிக பொருத்தமாக இருக்கும் நண்பரே
Delete்்்வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.்்்
மற்றும் ஒரு வீடியோ பதிவு
ReplyDeletehttp://youtu.be/dp5PCfphwzU
https://www.youtube.com/watch?v=dp5PCfphwzU&feature=youtu.be
Deletegood videos parani ! keep posting ....we love them
DeleteThank you parani
DeleteThanks Parani
Deleteலயன் மேக்னம் ஸ்பெஷல் :
ReplyDeleteஎன்ன ......சொல்வது ......அட்டைப்படங்களே அதகள படுத்துகிறது .நண்பர் கார்த்திக் சொல்வது போல நன்று ..அட்டகாசம் ...அருமை ...சூப்பர் என எதை சொன்னாலும் அது குறைவான வார்த்தையாக தான் இருக்கும் .தடிமனனான அந்த "டெக்ஸ் " அட்டைப்படத்தை ரசிக்கவே இந்த கண்கள் போதாது .அதை போலவே இலவச இணைப்பாக :-) வந்த "டைகர் " அட்டைப்படமும் அதகள படுத்துகிறது .எப்பொழுதும் இரண்டு ..,மூன்று புத்தகங்கள் வரும் பொழுது ஏதாவது ஒரு புத்தகத்தின் அட்டைபடமோ ...அல்லது பின் அட்டைபடமோ ஏதோ ஒன்று சுமாராக உள்ளது போல தோன்றும் .ஆனால் இம்முறை முன் பின் இரு புத்தகத்தின் அட்டைப்படமும் மயக்க வைக்கிறது.உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் எங்கள் மிக பெரிய நன்றியை குறிப்பாக ஓவியர் மாலையப்பன் அவர்களுக்கு மிக பெரிய நன்றியை தெரிவித்து விடுங்கள் .
ஈரோட்டில் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையையும் படிக்காமல் ரசித்து கொண்டே புரட்டினேன் .ஒவ்வொரு சித்திர கதைகளின் சித்திரமும் ஒரு கதையை சொல்கிறது .எந்த கதையும் சோடை போகாது என்று தான் தெரிகிறது .படித்து விட்டு சொல்கிறேன் சார் .புத்தகத்தை புரட்டி முடிபதற்க்குள் இரண்டு மணி நேர பயணமும் முடிவிற்கு வந்து விட்டது .வீட்டிற்க்கு சென்றவுடன் மனைவியும் ..,குழந்தைகளும் எப்பொழுது தூங்குவார்கள் என காத்திருந்து மீண்டும் எழுந்து தனி அறைக்கு சென்று இப்பொழுது ஆசிரியரின் ஹாட் -லைன் ...வாசகர் பகுதி.....சிங்கத்தின் சிறு வயதில் ....என பொறுமையாக ரசித்து படித்தேன் .விரைவில் ஆசிரியரின் தந்தையாரின் நினைவுகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .அதே போல கருப்பு வெள்ளை பக்கங்களும் தூள் கிளப்புகிறது .தரமான தாளில் சித்திரங்கள் அட்டகாசம் .இனி கருப்பு வெள்ளை கதைகளுக்கு இந்த தாளையே பயன் படுத்தினால் நன்று .
கதைகளை இன்று முதல் தான் படிக்க வேண்டும் .ஆனால் முன் போல ஒரே சமயத்தில் மூன்று ..நான்கு கதைகளை படிக்க போவதில்லை .அமைதியான பொலுதனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை யாக வரிசையாக படிக்க போகிறேன் .ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தை தர காத்திருக்கும் பொழுது அவசர .,அவசரமாக ஒரு சேர கதைகளை படித்து விட்டு அந்த அனுபவத்தை இழக்க விருப்பமில்லை ...
முதலில் சூப்பர் ஸ்டார் "டெக்ஸ் "
ரெடி ஜூட் ....
LMS விற்பனை எப்படியிருக்கிறது? திருப்திகரமாக இருக்கிறதா என்று அங்கு சென்றவர்கள் சொல்ல முடியுமா?
ReplyDeleteநான் அறிந்தவரை நமது L.M.S விற்பனை நேற்று இரவு நிலவரப்படி ரொம்ப நன்றாக உள்ளது! அதனால நமது மி.மி.ம சென்னை புத்தக திருவிழாவில் வெளி வர வாய்புகள் அதிகம் உள்ளது என்பது எனது எண்ணம்.
DeleteDear friend, yesterday lms sales nearly150 books. And yet erode vijay and some frnds not buy sum extra books bcse of few books only in our stall. compare with Chennai its small shot, but we don't expect this response . other stalls rushes only outside, but our stall only rush in and out.
Deletehappy to heard this
Deleteவிஜயன் சார், இன்று காலை S.T. கொரியர் நண்பரிடம் எனது புத்தகம்களை பெற்று கொண்டேன், அவர் இது போல் இன்று நிறைய நண்பர்களுக்கு வந்து உள்ளதாக கூறினார் :-)
ReplyDeleteபுத்தகம் சேதாரம் இல்லாமல் வர நமது காமிக்ஸ் பாகிங்ல் நீங்கள் எடுத்து கொண்ட சிரமத்திற்கு மிகவும் நன்றி, இதனை செயல்படுத்திய நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
தோர்கல் கதை அடுத்த வருடம் நான்கு கதைகள் ஒரு புத்தகமாக வெளிவர உள்ளது என எனது துணைவியாரிடம் சொன்னவுடன் அவர் இந்த வருடமே வெளி இட சொல்லலாமே என்ற போது என்ன சொல்லுவது என தெரியவில்லை.
நமது நண்பர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் உள்ள சுட்டிகளுக்கு ரின்-டின் கதையை படித்து சொல்ல சொன்னார் எடிட்டர் என்ற போது, ஏன் எனக்கும் அந்த நாய் கதையை படிக்க ஆர்வமாக உள்ளது எனவே நான்தான் முதலில் படிப்பேன் என்று புத்தகத்தை ஒளித்து வைத்து விட்டார் :-)
இந்த தளத்தில் பதிவிடாமல் தொடர்ந்து படித்துவரும் மவுன பார்வையாளர்கள் பலரை சந்திக்க நமது புத்தக ஸ்டாலில் முடிந்தது, அவர்கள் சொல்லும் காரணம், "என்ன சார் இந்த மாதிரி சண்டை போடுறாங்க, வெட்டு குத்து நடக்குது, நமக்கு எதுக்கு வம்பு அதனால எதுவும் நம்ப தளத்தில் பதிவு இடுவதில்லை" என சொன்ன போது மனது வருத்தபட்டது. அவர்களிடன் நீங்கள் அதை பற்றி கவலைபடாமல் உங்கள் மனதில் உள்ளதை எழுதி விட்டு செல்லுங்கள்; இது நமது காமிக்ஸ் தொடர்ந்து சிறப்பாக வெளி வர உதவும் என்றேன்.
ReplyDeleteDear Editor Vijayan
ReplyDeleteLMS is a Masterpiece
Hard bound Cover rocks
Especially loved the Collage design
Probably ur best everk comic collage cover!
Cant take my eyes off Martin and the big guy in golden hue.
And Tiger rocks as never before in the hands of Vance.
Your son Vikram seems to have great eye for beauty-The Forbidden manuscript looks like a painting!
LMS will create history in Collections!
All the best!
Thanks for ur sincere efforts all these years!
Regards-Arvind.
நேற்று வழக்கம் போல் நமது ஸ்டால்ல மட்டும் வாசகர் கூட்டம் அதிகம், என்னடா நம்ப இந்த ஸ்டால்ல மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறதே என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் மறுபுறம் :-)
ReplyDeleteஒரு சிறுவன் தனது தந்தையுடன் வந்தான், அவர் நமது பத்து ரூபாய் கதைகள் இரண்டு வாங்கி கொடுத்தார், அந்த சிறுவன் நமது L.M.S பார்த்து விட்டு அப்பா MAGNUM ஸ்பெஷல்பா என்றவுடன் தந்தை புத்தகத்தின் விலையை பார்த்து பின் வாங்கி விட்டார் :-(
மற்றும் ஒரு வீடியோ
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=8R7nkn35bbE&feature=youtu.be
ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை!
ReplyDeleteAWESOME!!
நேற்று மாலை வீடு திரும்ப சற்று தாமதமாகிற்று. அதற்குள் பார்சலைப் பிரித்து மேய்ந்துவிட்டார்கள் இருவரும். ஏற்பட்ட மெல்லிய கோபத்தை மறைத்துக்கொண்டு புத்தகத்தைப் பார்த்தேன். எனக்கும் என்னுள்ளிருந்த குழந்தைத்தனத்துக்கும் போட்டி துவங்கியது.
ஏற்கனவே சில பல குண்டு நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், காமிக்ஸ் தொகுப்புகள் வீட்டு ஷெல்புகளில் இருக்கின்றனதானே.. எக்சைட்டிங் ஆகாதே, கண்ட்ரோல் யுவர்செல்ப்!!
அவ்வ்.. அதெல்லாம் முடியாது. வடிவேலு திருடப்புகுந்த வீட்டில் நிரம்பியிருக்கும் பீரோவைப் பார்த்துப் புலம்புவதைப்போல.. ஆகா ஹார்ட் பவுண்ட் அட்டை, ஐயோ ஜிகினா ஒர்க், அடாடா எவ்ளோ குண்டு, ஐயய்யோ ஸ்பாட் லேமினேஷன்.. டைட்டில் மினுங்குதே.. மினுங்குதே!!
ட்ரஸை மாற்றிவிட்டு முகம் கைகால் கழுவிவிட்டு, ரொம்ப சாதாரணமாக இருப்பது போல உட்கார்ந்து புக்கை எடுத்தேன். ’இந்தாங்க அதுக்குள்ள உள்ள முங்கிராதீங்க, சாப்பிட்டுட்டு உக்காருங்க..’ ஆமா மத்த நாள் கேட்டாலும் உடனே வராது. இன்னைக்கு எல்லாம் ஒழுங்கு மாதிரி நடக்குது என முனகிக்கொண்டே கட்டுப்படுத்திக்கொண்டு உணவு முடித்து மீண்டும் புக்கை எடுத்தேன்.
புக் 1ஐ எடுப்பது, உள்ளே முதல் பக்கத்தை, ஹாட் லைனை வாசிக்கவா என பார்ப்பது, மீண்டும் அட்டையை, கனத்தை ரசிப்பது, முதுகுப்பகுதியின் டிசைனை ரசிப்பது, கீழே வைப்பது, புக் 2ஐ எடுப்பது, அட்டையை ரசிப்பது, அதன் முதல் பக்கத்தைப் பார்ப்பது, 2 வரி படிப்பது, மண்டைக்குள் ஒன்றும் ஏறாமல் மீண்டும் புக்1ன் அட்டையைப் பார்ப்பது, மீண்டும் உள்பக்கப் புரட்டல், கீழே வைத்தல், புக்2, ரிண்டின்கேன், புக்1, டைலன் டாக், மீண்டும் ஓரிரு வரி, திரும்பவும் அட்டை..
’என்னங்க பண்ணிகிட்டிருக்கிறீங்க லூசு மாதிரி?’
சட்டென நிகழ் உலகத்துக்கு வந்து இயல்பாக இருப்பதாய் நடித்தேன். பையன் புக்1ஐ எடுத்து அட்டையை கொஞ்ச நேரம் உத்துப் பார்த்துவிட்டு ‘அப்பா, என்னப்பா கோல்டு மாதிரி மினுங்குது.. இங்க பாருங்க இந்த துப்பாக்கி வெடிக்கிற இடத்துலயும் அதே மாதிரி டிசைன் போட்டுருக்காங்க.. இங்க பாருங்க இவர் தொப்பிலயும்.. என்னப்பா இது ஸ்டிக்கரா இருக்குமோ..’ அவன் பாட்டுக்கு கருத்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தான். இல்லாளும் இன்னொரு புக்கை எடுத்துப்புரட்ட.. இருவரும் அலட்சியமாய் புத்தகத்தை ஹேண்டில் செய்வது கண்டு மனம் பதறி, (கிழிந்து விட்டால் அவசரத்துக்கு இன்னொரு புக்குதான் வாங்க முடியுமா என்ன? சில மாசங்களுக்குப் பிறகு நிலைமை என்னவாகும்? இன்னும் ஒரு காப்பி மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளலாமோ?) ‘உம்.. கிழிச்சிடாதீங்க.. வைங்க ஷெல்பில் என மிரட்டி, பிடுங்கி நகையைப் போல பாதுகாப்பாக கவரில் வைத்தேன்.
‘பாக்கத்தானே செய்றோம். ஏன் இப்படி பேய் மாதிரி வர்றீங்க?’ என திட்டிவிட்டுப் போனார் இல்லாள். பரவாயில்லை என டாப் ஷெல்பில் பத்திரப்படுத்தியிருக்கிறேன். இந்த ஆர்வமெல்லாம் ஓய்ந்தபின்பாக படித்துக்கொள்ளலாம் என்பது திட்டம்!
நண்பர்களின் ஈரோட்டு சந்திப்பும், அப்டேட்டுகளும் எத்தனை கொண்டாட்ட உணர்வை மிஸ் செய்திருக்கிறோம் என புரியவைக்கிறது. வாழ்த்துகள் நண்பர்களே!
//ஒரு COMBO இதழில் அவர்களது நாயகர்கள் டாலடிப்பதைப் பார்த்து விட்டு துள்ளிக் குதிக்கிறார்கள் !! 15 பிரதிகள் தங்களுக்கெனவும் ; மேற்கொண்டு 20 பிரதிகள் உலகெங்கும் உள்ள அவர்களது licensees -க்கு //
குதிக்காமல் வேறென்ன செய்வார்களாம். ஒரு சாதனையை சத்தமில்லாமல் நிகழ்த்தி முடித்திருக்கிறீர்கள் ஸார், தங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்! அடுத்த பயணம் மின்னும் மரணம் என்னும் இலக்கை நோக்கி! எப்போதும் உடனிருப்போம். Keep rocking!!
ஆதி, விஸ்வா அவர்கள் தங்களுக்காக டெக்ஸ்-ன் மரண முள் புத்தகத்துடன் நேற்று நமது ஸ்டாலில் காத்துக்கொண்டு இருந்தார் :-)
Deleteவிஸ்கி சுஸ்கி பேக்கிங் பிரிக்க குறுநாவல் எழுதினார் ..........
Deleteஆதி தாமிரா பிரித்த பேக்கிங் -ற்கு இன்னும் படிக்காமலே ஒரு நெடுங்காவியம்
புனைகிறார் ..........
மஹா ரசனை உள்ளவர்கள் ........................
பதிவு தபால் அபாக்கியசாலிகள் நாளை வரை பொறுத்துதான் ஆக வேண்டும் ............
மந்திரியார் போன்றோர் தளத்தை எட்டி மட்டும் பார்த்து கொண்டு பொருமல் உடன்
இருப்பார்கள் என கருதுகிறேன் ........
மந்திரியாரே !அதம் பறக்கும் உங்களது கமண்டுகளை நாளை
எதிர்பார்க்கிறேன் :-)
வாசக அன்பர்களே, நமது எடிட்டர் அவர்களின் உரையாடல் இன்னும் இரண்டு உள்ளது, ஒவ்ஒன்றும் பத்து நிமிடம்கள் ஓடும், file சைஸ் பெரிது என்பதால் வீட்டில் இருந்து அதனை upload செய்ய முடியவில்லை, நாளை காலை
ReplyDeleteyoutube-ல் uploadeசெய்துவிட்டு அதன் URL தருகிறேன்.
ஸ்டாலின் சாரின் பதிவும் உங்கள் பதிவும் வீடியோகளும் பார்த்தபின் நேற்றைய
Deleteஉணர்வுகள் உற்சாகங்கள் ,சிரிப்பொழிகள் ,சந்தோசங்கள் ,மீண்டும் தொடர்கின்றன சார்!
நாம்மை இனணத்த காமிக்ஸ் வாழ்க!
உங்கள் அடுத்த URLக்காக காத்திருக்கிறேன் பரணி ஸார் !!!
Deleteசிவா, நமது ஸ்டாலில் உங்களால் கொடுக்கபட்ட மி.மி.ம விற்பனைக்காக டைகர் டீசெர் அருமை, நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் காதல்.
Deleteடைகர் டீசெர் இன்னும் சில செய்து மி மி மீது அதிக ஆர்வம் ஏற்படுத்த சில திட்டம் உள்ளது.
Deleteடைகரின் சூப்பர் Images கிடைக்கும் Web link எனக்கு கொடுத்தால் மிக உதவியாக இருக்கும் நண்பர்களே !
Dear Mayavi Sivakumar,
Deletehttp://www.mediafire.com/download/25k2le0od5ob599/western+and+Blueberry+images+HiQ.rar
மிக்க நன்றிகள் நண்பரே !
Deleteகீரீச்..கீரீச்..
ReplyDeleteமின்னும் மரணத்தை முன்பதிவு செய்தாகிவிட்டது. இனி அது வரும் வரை மீண்டும் நித்திரையில் ஆளவேண்டியது தான் :P
கீரீச்..கீரீச்..
// இனி அது வரும் வரை மீண்டும் நித்திரையில் ஆளவேண்டியது தான் /
Deleteதொங்க சாரி தூங்க வேண்டாம் வவ்வால் அவர்களே!
நண்பர் பரணி அவர்களுக்காக நித்திரையை சில காலம் தள்ளி வைக்கவேண்டியது தான்...ஹீ ஹீ
Deleteநன்றி :-)
Deleteமாலை வணக்கம் நண்பர்களே.எடிட்டருடன்,L M S உடன் ஈரோட்டில் ஒரு நாள்.இது மறக்க முடியாத திருநாள்.
ReplyDeleteஈரோட்டில் நண்பர்களுடன் நேற்றைய பொழுது இனிய பொழுதாக சென்றது. இது என்றும் நினைவில் நிற்கும் ஒரு இனிய நாள்.பல புதிய நண்பர்கள்,பல நல்ல நண்பர்கள்,பல இனிய நண்பர்கள்,பல அன்பு நண்பர்களை சந்தித்தேன்.
எடிட்டரோடு ஒரு போட்டோ,இரண்டு ஆட்டோகிராப்,கைகுலுக்கல் சில வார்த்தைகள் இவை அனைத்தும் நேற்று நடந்தது.மிக்க மகிழ்ச்சி,இதைவிட ஒரு அற்புதமான தருணம் உண்டோ என தோன்றுகிறது.
நான் சந்தித்த நேற்றைய நண்பர்கள் சிலர்-
ReplyDeleteSalem Paranidharan
Ravi Kannan
Steel Claw Ponraj
Erode Vijay
Mayavi Sivakumar
Dr Sunder
Tex Vijayaragavan
Thirupor Sampath
Thirupor Raj
Bangalore Barani.
அறிவின் அரசு தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!
DeleteArivarasu,
Deleteதாங்கள் செய்த உதவி சிறிதெனினும் காலத்தால் செய்த உதவி.(அதுவும் நான் கேட்கமலேயே.)
உங்களுடைய bag இல்லையென்றால் ஏழெட்டு கிலோ எடையிருந்த புத்தகங்களை வீடு சேர்க்க சிரமப்பட்டிருப்பேன்.
நன்றி நண்பரே.!
I didn't come to write your every post regularly. But i read every post(also buy the every books) and comment of your some post ONLY. "ORU SIPPAYIN SUVADUGALIL" is really a good story. but i don't know the most people not like that... !!!!! Amazing.
ReplyDeleteI would like to tell you one thing "I AM ALL WAYS WITH YOU WITH THE COMICS JOURNEY".
"ORU SIPPAYIN SUVADUGALIL" is really a good story. +1
DeleteSame blood, but this is about personal liking of certain genre, we don't question others same way they don't have rights to ask. good to see some one of same liking.
friend its about what you think and expect out of the brand that we love only by expressing we can give/get. good to see your post friend!
:)
// "ORU SIPPAYIN SUVADUGALIL" is really a good story.//
Delete+1
This comment has been removed by the author.
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஹாட்லைன்- ல் LMS கதைகள் பற்றி வழக்கத்தை விட கூடுதல் கவனத்துடன்
3 பக்கங்கள் எழுதி இருந்தீர்கள்.அடுத்துள்ள 4 வது பக்கத்தில் விஷயம்.....
// n.சரஸ்வதி/திண்டுக்கல் என்ற பெயரில் போட்டப்பட்ட அந்த ரசீது கல்வி தரும்
கடவுளின் கடாட்சமாகவே எனக்கு காலமெல்லாம் காட்சி தரும் ! //
என்ற வரியில் கடவுளை நீங்கள் எங்கு பார்கிறீர்கள் என்ற தெளிவையும்.....
// திரைமறைவில் அவர்கள் பங்குபோட்டு சுமந்து திரிய,முன்நின்று
'தஸ்... புஸ்... ' என்று எதை எதையோ பேசி credit ன் பெரும் பங்கை நான்
கொண்டு செல்கிறேன் என்பது நிஜம்! //
என்ற வரிகளும்....
//ஓசைஇன்றி தத்தம் பணிகளை செய்து தராவிட்டால்LMS என்றில்லை,
LKG பாடப்புத்தகங்கள் கூட என்னால் தாயரிக்க முடியாது ! //
என்ற வார்த்தைகள் உண்மையை உரக்க சொல்லும் தைரியத்தையும்....
//பயந்த சுபாவம் கொண்டதொரு நோஞ்சான் பிள்ளையான என்னிடம்
நம்பிக்கை வைக்க துணிந்து, மிக சின்ன வயதிலேயே எனக்குள்
பெரிய சிந்தனையை விதைத்து, //
என்ற அழமான விச்சு உங்களின் பலம்-பலவீனம்-அறிவின் ஆழம்
இவற்றை தெரிந்து வைத்துள்ள திடமனதையும், உங்கள் மேல்
நீங்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையை மிக
அழகாக எழுத்தாக்கம் செய்திருந்தீகள் !
இவ்வளவு சிறப்பு மிக்க ஒரு பலவினமான இரும்புமனிதரை நேற்று
சந்தித்தோம் என்பது பலவகையில் பெருமையாகவே உள்ளது சார் !!!
நம்மை இணைக்கும் காமிக்ஸ் வாழ்க !
நண்பர்கள் தினத்திற்கு மிகவும் சரியான உதாரணம் நேற்றைய சந்திப்பு :-)
ReplyDeleteஅமைதியாக தனது காரியமே கண்ணாக இருந்த விஜய், நமது தளத்தில் விடாமல் கமெண்ட் போடுவதுபோல் ஸ்பைடர் கதைக்காக விடாது நமது எடிட்டர் அவர்களை டார்ச்சர் செய்த ஸ்டீல், அமைதி காவலன் தாராபுரம் பரணிதரன், உயரமான மனிதர் ஷங்கர் மற்றும் சம்பத், காமிரேட்ஸ் விஸ்வா, பிரகாசமான பிரசன்னா, சிவா என்ற மாயாவி, பள்ளிபாளைய நண்பர் புனித சாத்தான், அமைதியாக வந்து சென்ற சாரதி, ஈரோடு ஸ்டாலின், சேலம் டெக்ஸ் விஜயராகவன், சேலம் ஸ்டீல் ஆலை நண்பர்கள், மற்றும் அனைவரையும் சந்தித்த நேற்றைய தினம் வாழ்வில் மறக்கமுடியாத நாள். நன்றி நண்பர்களே!
நண்பர் கர்ணன் அவர்களின் நண்பர்கள் வட்டம்.. அருமை; கர்ணன் வரவில்லை.
Deleteகலீல் வரவில்லையா என நிறைய நண்பர்கள் ஏமாந்து போனார்கள்... கலீல் many people missed you.
பெங்களூரில் இருந்து கார்த்திக் சோமலிங்கா மற்றும் சுப்பிரமணி சார் வரவில்லையா என விசாரித்த நண்பர்கள்
நமது எண்ணம்கள் சித்தனைகள் வேறாக இருந்தாலும் இந்த விழாவில் அனைவரும் அங்கு சந்தித்த வாசகர்களை நண்பர்களாகவே பாவித்ததை உன்னர்த்திய உன்னத நாள் நேற்றைய தினம் என்றால் மிகையில்லை.
நண்பர்களே,
ReplyDeleteநேற்றைய நாள் வாழ்வில் ஒரு மறக்க இயலா நாளாக அமைந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு மற்றும் புதிய நண்பர்களின் அறிமுகம் (மாயாவி சிவா, புளியம்பட்டி ஜெயந்தீச்வரன், டாக்டர் சதிஸ், சங்கர், டெக்ஸ் சம்பத், பழனிவேல், டாக்டர் சுந்தர், அஹ்மத்பட்சா, radja இன்னும் பல நண்பர்கள் --- பெயர் நினைவில் இல்லை, பெயரும் போட்டோவும் கூடிய விரைவில் ஈரோடு விஜய் மூலம் பெற்று கொள்வேன்)
பார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போன (என்னால்) நண்பர்கள் பல பெங்களூர் பரணி, அஜய், கர்ணன் சேலம், செந்தில் மாதேஷ், இன்னும் சிலர்.
மீண்டும் சென்னை புத்தக திருவிழாவில் 'மின்னும் மரணத்துடன்' சந்திப்போம் நண்பர்களே ....
எனக்கும் தங்களை சந்திக்க முடியாதது வருத்தம்தான் :-(
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete1. Thanks a lot to Parani from Bangalore for posting the videos and the updates.
ReplyDelete2. Ordered 2 M2CS. Scheduled NEFT for 4/8 transaction.
3. I respectfully disagree with Vijayan sir on Spider, Mayaavi and Archie. The beauty is they are very simple stories and will reach to kids very easily. We can try this as subscription or reservation only - 6 books/year.
L M S ன் அற்புதம் no 1
ReplyDeleteசட்டம் அறிந்திரா சமவெளி.:-
பரபரப்பான டெக்ஸ் கதை,
கறுப்பு வெள்ளையோ கலரோ டெக்ஸ் ஒரு மாஸ் ஹீரோ என்பதற்க்கு இன்னொரு உதாரணம் இந்த கதை.
சற்றும் தொய்வில்லாத High speed action கதை.
நிலவொளியில் ஒரு நரபலி
இதழில் சித்திரங்களும் வண்ணச்சேர்க்கையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லையாதலால் ச.அ.சமவெளியிலும் அப்படித்தான் இருக்கும் என்றெண்ணி ஏமாந்துபோனேன்..
சுருங்க சொல்வதெனில் கதை+படங்கள்+வண்ணச்சேர்க்கை,::வாவ்.!
டெக்ஸின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாபெரும் வைரம் இந்த ச.அ..ச.
L M Sக்கு இக்கதையை தேர்ந்தெடுத்த எடிட்டரை பாராட்ட வார்த்தைகளே வரவில்லை.
டெக்ஸ் ரசிகர் மன்ற பீரங்கிகளின் சார்பாக கோடானுகோடி நன்றிளையும் கூட ஒரு பிளேட் வறுத்த கறியும் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.
Thank you so much sir,.....
Dear Editor,
ReplyDeleteLMS hard-bound அட்டையைப் பார்த்தபின், "கார்சனின் கடந்த காலமும்" வண்ணத்தில், hard-bound அட்டையுடன் வந்தால் சூப்பர். இதுவும் colletor's edition தானே..
ஏதோ பார்த்து செய்யுங்க :)
L M S ன் அற்புதம் no2,
ReplyDeleteஅந்தி மண்டலம்,
கற்பனைக்கு எல்லைகள் என்ற ஒரு கோடு இல்லவேயில்லை.
ஒருமுறை படித்துவிட்டு தொடர்ந்து உடனே இரண்டாம்முறை படித்தேன்.
டைலன் டாக் லயனில் நிரந்தர இடம் பிடிப்பார்.
எடிட்டர் சார்...,
இக்கதையை கறுப்பு வெள்ளையில் வெளியிட்டுருந்தீர்களேயானால்.(ஆத்தீ எம்புட்டு பெரிய வார்த்தை.)
இந்தளவுக்கு கவர்ந்திருக்கும் என்று சொல்லமுடியாது.
சித்திரங்கள் மிகவும் தெளிவு.அதைவிட பிண்ணணியில் வரும் காட்சிகள் கண்களை கொள்ளைகொண்டன.
சதை கிழிந்து தொங்குவது,கண் பிதுங்கி விழுவது,ஏரி மற்றும் மலையின் நடுவில் அமைந்திருக்கும் ஊர்,பாதையை மறைக்கும் பனிமூட்டம்,மேபல் நீர்சுழலில் சிக்கும் காட்சி, மார்க் விபத்தில் மாட்டும்போது கண்ணில் கம்பி குத்தி நிற்க்கும் காட்சி..
இன்னும் சொல்லமறந்த எத்தனையோ காட்சிகள் ..,இவற்றை கறுப்புவெள்ளையில் இந்த அளவு ரசிக்க முடியுமென நான் நம்பமாட்டேன்.
ஆகயால் டைலனை வண்ணத்தில் மட்டுமே களமிறக்க வேண்டுமென்பது என்னுடைய ஆசை.
வழக்கமான நமது பாணியில் இருந்து மாறுபடும் இதுபோன்ற கதைகளை மனமாற வரவேற்க்கிறேன்.
Thank you sir.
நண்பர்களே lms வெளியீட்டிற்கு முந்தய நாள் இரவு தூக்கத்தை விரட்டிய சில கொசுக்க்களோடு போராடி கொண்டே திரும்பி திரும்பி படுக்கிறேன் ! தூக்கத்தை விரட்டியது கொசுக்கள் மட்டுமல்லவே ! ........மனதுக்குள் அட்டவணை தயார் செய்கிறேன் ! ஏற்கனவே விஜயுடன் உரையாடும் போது பதிவை எக்காரணம் கொண்டும் பார்த்து விடகூடாது என்பதில் தெளிவாய் இருந்தேன் அவரை போலவே ! ஆனால் அந்த பூனை திருட்டுத்தனமாய் பாலை குடித்தது வேறு கதை !!
ReplyDeleteநாளை இரண்டு மணி நேர பயணம் . எட்டு மணிக்கு கிளம்பினால் பத்து , பத்தரைக்கு அடைந்து விடலாம் இலக்கை ! சரி முதலில் சென்றது stc க்கு ! செல்லும் போது ஒரே குழப்பம் ! புத்தகத்தை வாங்கியவுடன் பிரிக்கலாமா அல்லது ஆசிரியர் வெளியிடும் பொது பார்த்து கொள்ளலாமா ! ஆனால் அங்கே எனக்கு பெரிதாய் குழப்பத்தை நீடிக்க விடவில்லை ! பணியாளர் சார் இனிதான் பிரிக்க போகிறோம் , எடுத்தவுடன் phone செய்கிறேன் என்றார் ! சரி சார் நான் ஈரோடு செல்கிறேன் வீட்டுக்கே அனுப்பி விடுங்கள் என்று கூறி ஒரு நன்றியை உதிர்த்து விட்டு நண்பர் உதவியுடன் பேருந்தை பிடிக்க கிளம்பினேன் ! எட்டு இருபத்தைந்துக்கு ஏறி அமர்ந்தேன் ! சிறிது நேரத்தில் பேருந்து bypass பாதையிலிருந்து விலகி வூருக்குள் செல்ல மனதில் ஒரு பெருமிதம் ! முன்பு சென்னை செல்லும் பொது நேரத்தை விழுங்கி ஆசிரியரை காண விடாமல் செய்தது போல இந்த முறை நடவாது ,.....நேரம்தான் இருக்கிறதே ! சரியாய் 10.40க்கு இறக்கி விட ஓட்டமும் நடையுமாய் சொர்க்க வாசலை அடைந்தேன் ! அப்பாடா இன்னும் திறக்கவில்லை ! புன்னகை முகங்களுடன் சில நண்பர்களை கண்டேன் ..........
யாரங்கே பிரசன்னமானது ....?
Deleteஸ்டீல்,
Deleteஅந்தி மண்டலம் படித்துவிட்டீர்களா.?
உங்கள் கருத்தை அறிய ஆவல்.
புன்னகை முகங்களுடன் சில நண்பர்களை பார்த்தவுடன் உங்கள் முகத்தில் பூத்த அந்த பெரிய புன்னகையை நானும் கண்டேன்....
Deleteகாமிக்ஸ்களின் DICTIONARY LMS என்றால் அது மிகையில்லை.
ReplyDeleteஉண்மை நண்பரே ..
Deleteஎன் கையில் இத பார்த்தவுடன் எங்க வீட்ல கேட்ட கேள்வி ... "என்ன dictionary இது ?" எனது பதில் - "இது எங்க காமிக்ஸ் dictionary" :)
சிறுபிழை:
ReplyDeleteஅடுத்த வருடம் வெளியாகவுள்ள 'டெக்ஸ் ஸ்பெஷல்' 672+ பக்கங்களைக் கொண்டது நண்பர்களே! தவறுதலாக 336 + 336 = 772 என்று சனிக்கிழமையன்று இங்கே பின்னூட்டமிட்டுவிட்டேன். (எனக்கு கணக்குப் பாடம் எடுத்த அந்த வாத்தியை... கிர்ர்ர்....)
நேற்று எடிட்டரும், கிங் விஸ்வாவும் என் கணிதத் திறமையை புகழ்ந்து தள்ளியபோது என் முகத்தில் வழிந்த அசடின் அளவு ஒரு கிலோவுக்கும் அதிகம்! ஹிஹி!
:) :)