நண்பர்களே,
வணக்கம். தொடரும் மாதத்து அட்டவணையில் :"ஜூன் ரிலீஸ் - 4 இதழ்கள் " என்று பதித்ததைத் தொடர்ந்து வேலைப் பளு பன்மடங்கு கூடிப் போனதால் இங்கு செலவிட நான் ஒதுக்கும் நேரம் வெகுவாய்க் குறைந்து போய் விட்டது ! பற்றாக்குறைக்கு தினம் ஒரு தினுசாய் படுத்தி எடுக்கும் இந்த மின்வெட்டு -'30 நாட்களில் முற்றும் துறந்த முனிவர் ஆவது எப்படி?' என்று பாடம் நடத்தாத குறை தான் ! 'லொடக் -லொடக்' என்ற ஓசையோடு கையை ஆட்டும் மின்விசிறி ஒரு பக்கம்;"'வுய்ய்...வுய்ய்"என்று அவ்வப்போது விசிலடிக்கும் இன்வெர்டர் மறு பக்கமென நித்தமும் நம் பொறுமைக்கு நிறைய பரீட்சைகள் அரங்கேறுகின்றன!
புலம்பல்களை மூட்டை கட்டி விட்டு மே மாதப் புது வெளியீடைப் பற்றிய preview வேலையைத் துவக்கிடலாமென்று நினைக்கிறேன் ! ஆண்டாண்டுகளாய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கேப்டன் டைகர் சாகசத்திற்கு 'சுப மங்களம்' போட்டிடும் நேரம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே ."இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை"யில் துவங்கியதொரு adventure இம்மாத "இரத்தத் தடம்" + "தலை கேட்ட தங்கத் தலையன்" அத்தியாயங்களோடு நிறைவாகிறது. இதோ இதழுக்கான அட்டைப்படம் :
கடைசி நிமிடத்தில் அச்சு இயந்திரப் பழுது என்ற தலைவலியும் தொற்றிக் கொள்ள, ஒரு வழியாய் அதனையும் நிவர்த்தி செய்து அச்சுப் பணிகளை முடித்து பைண்டிங் வேலைகளைத் துவக்குகிறோம் ! திங்கள் மாலை கூரியருக்குப் பிரதிகள் புறப்படும் சாத்தியங்கள் 90% ! We will give it our best shot folks !
ஒரிஜினலாக இக்கதைக்கு வரையப்பட்ட அதே சித்திரத்தை பின்னணி வண்ணக் கலவையில் மாத்திரம் மாற்றங்களோடு பயன்படுத்தியுள்ளோம். ஆகையால் இம்மாதம் நமது ஓவியருக்கு வேலை இல்லை ! ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக, ஜூன் மாதத்து இதழ்களுக்குப் பட்டையைக் கிளப்பியுள்ளார் மாலையப்பன் ! Just wait n' see.....!
ஒரிஜினல் அட்டை |
இம்மாத இதழைப் பொறுத்த வரை - ஒரு அக்மார்க் டைகர் சாகசம் என்பதைத் தாண்டி பெரிதாய் நான் சொல்லிட அவசியமிராது என்பதே எனது கணிப்பு. கதை முழுக்க ஜிம்மியும், ரெட்டும் இணைந்திருப்பது ; துவக்கம் முதல் இறுதி வரை பட்டாசாய்ப் பொறியும் action கதைக் களம் ; "உடைந்த மூக்கர்" என்ற அடைமொழியோடு எப்போதும் போல் ஓராயிரம் இன்னல்களைச் சமாளிக்கும் டைகரின் மதியூகம் என இந்த அத்தியாயங்களில் நிரம்ப highlights உண்டு ! இதோ உங்கள் பார்வைக்கு ஒரு சில பக்கங்கள் :
சென்ற இதழில் காமிக்ஸ் டைம் / ஹாட்லைன் பகுதிக்கு நான் அல்வா கொடுத்ததை "அப்பாடா நிம்மதி" என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு பகுதியெனில் ; "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேள்வி எழுப்பியோர் இன்னொரு அணி. Anyways - இந்த இதழில் வழக்கம் போல காமிக்ஸ் டைம் ; "சிங்கத்தின் சிறுவயதில்" ; "சிங்கத்தின் சிறுவலையில் " பகுதிகள் அனைத்தும் இடம் பிடித்துள்ளன. (இத்தனை பக்கங்களை வீணடித்ததற்குப் பதிலாக இன்னொரு குட்டிக் கதையை இணைத்திருக்கலாமே என்று அபிப்ராயப்படப் போகும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதையும் அனுபவம் உணர்த்திடாதில்லை :-) ) குட்டிக் கதைகள் எனும் போது - இந்த இதழில் filler pages பணியினைச் செய்திடக் காத்திருக்கும் புதியவரையும் முறைப்படி அறிமுகம் செய்திடுவது அவசியம் ! பல மாதங்களுக்கு முன்னால் விளம்பரங்களில் இங்கு தலை காட்டிய "ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் " இந்த இதழில் ஒரு 7 பக்க சாகசத்தோடு (!!) அறிமுகமாகிறார். பிரசித்தி பெற்ற ஷெர்லாக் ஹோம்சை கலாட்டா செய்திடும் பாணியில் வந்துள்ள பல காமிக்ஸ் தொடர்களில் இதுவும் ஒன்று. பிரான்சில் உருவாக்கப்பட்டு, அப்புறம் ஜெர்மனியிலும் நல்ல வரவேற்புப் பெற்ற இந்தத் தொடர் முதன்முறையாக தமிழுக்கு வருகை புரிகிறது. சில சிற்சிறு கதைகள் என்ற அறிமுகத்தின் பின்னே சில முழு நீளக் கதைகளும் கொண்ட தொடர் இது. உங்களின் response எவ்விதமிருக்கப் போகிறது என்பதை தொடரும் மாதங்களில் கணித்த பின்னே - நம்மிடையே இந்தப் புது வரவின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம் !
சென்ற இதழில் காமிக்ஸ் டைம் / ஹாட்லைன் பகுதிக்கு நான் அல்வா கொடுத்ததை "அப்பாடா நிம்மதி" என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு பகுதியெனில் ; "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேள்வி எழுப்பியோர் இன்னொரு அணி. Anyways - இந்த இதழில் வழக்கம் போல காமிக்ஸ் டைம் ; "சிங்கத்தின் சிறுவயதில்" ; "சிங்கத்தின் சிறுவலையில் " பகுதிகள் அனைத்தும் இடம் பிடித்துள்ளன. (இத்தனை பக்கங்களை வீணடித்ததற்குப் பதிலாக இன்னொரு குட்டிக் கதையை இணைத்திருக்கலாமே என்று அபிப்ராயப்படப் போகும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதையும் அனுபவம் உணர்த்திடாதில்லை :-) ) குட்டிக் கதைகள் எனும் போது - இந்த இதழில் filler pages பணியினைச் செய்திடக் காத்திருக்கும் புதியவரையும் முறைப்படி அறிமுகம் செய்திடுவது அவசியம் ! பல மாதங்களுக்கு முன்னால் விளம்பரங்களில் இங்கு தலை காட்டிய "ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் " இந்த இதழில் ஒரு 7 பக்க சாகசத்தோடு (!!) அறிமுகமாகிறார். பிரசித்தி பெற்ற ஷெர்லாக் ஹோம்சை கலாட்டா செய்திடும் பாணியில் வந்துள்ள பல காமிக்ஸ் தொடர்களில் இதுவும் ஒன்று. பிரான்சில் உருவாக்கப்பட்டு, அப்புறம் ஜெர்மனியிலும் நல்ல வரவேற்புப் பெற்ற இந்தத் தொடர் முதன்முறையாக தமிழுக்கு வருகை புரிகிறது. சில சிற்சிறு கதைகள் என்ற அறிமுகத்தின் பின்னே சில முழு நீளக் கதைகளும் கொண்ட தொடர் இது. உங்களின் response எவ்விதமிருக்கப் போகிறது என்பதை தொடரும் மாதங்களில் கணித்த பின்னே - நம்மிடையே இந்தப் புது வரவின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம் !
Moving on, சில குட்டியான சேதிகள்...! இவ்வாண்டு ஜனவரியில் வெளியான நமது NEVER BEFORE SPECIAL -ன் கையிருப்பு கடைசி 100 பிரதிகளுக்கு வந்து விட்டது ! உற்சாகமான முன்பதிவு 40% + சென்னை புத்தகத் திருவிழாவில் விற்பனை 25% + தொடர்ச்சியாக இணையத்திலும் ; (தைரியமான) விற்பனையாள நண்பர்கள் சிலரின் சகாயத்திலும் மீதம் என்பது தான் இந்த இதழின் sales breakup ! அச்சிட்டது ஒரு modest எண்ணிக்கை தான் என்ற போதிலும், இத்தனை விலை கூடிய இதழை 4 மாத அவகாசத்திற்குள் விற்றுத் தீர்ப்பது என்பது எங்களைப் பொருத்த வரை ஒரு பெரும் சாதனையே !Thanks guys -thanks a ton!! எஞ்சி இருக்கும் NBS இதழ்களும், பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு - fresh ஆக தோற்றம் தரவிருக்கும் "இரத்தப் படலம்-1-18"முழுத் தொகுப்பின் ஒரு 7 அல்லது 8 இதழ்களும் வரவிற்கும் COMIC CON -ல் விற்பனைக்குக் கிடைக்கும். இத்தனை mammoth ஆன இதழ்களை இப்போதைக்குள் மறுபதிப்பு செய்திடல் சாத்தியமாகாது என்பதால், இது வரை இவற்றை வாங்கி இருக்காத நண்பர்களுக்கு இது ஒரு last chance !
அப்புறம் ஜூனியர் எடிட்டரின் பங்களிப்பு குறித்து நண்பர்கள் பலர் தத்தம் சிந்தனைகளை ஆங்காங்கே தெரியப்படுத்தி இருந்தனர். தற்போது behind the scenes எனக்கு ஆங்காங்கே உதவி வரும் ஜூனியர், 'எனது பிள்ளை ' என்ற அடையாளத்தைத் தாண்டி இத்துறைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திடலே பிரதானம் என்பது எனது அபிப்ராயம் ! அந்தத் திறமைகளை அவன் உள்வாங்கிவிட்ட நம்பிக்கை எனக்கு வரும் நாளில் - திரைக்குப் பின்னே தொடர்ந்திட அவசியமிராது ! அது வரை எனது "உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" பாணி தொடரும் :-) Catch you soon guys ! Take care !
I AM FIRST!
ReplyDeleteWaiting to lay hands on the latest issue at least by next weekend :-) Am yet to read the re-print edition of last month - had kept it aside to enjoy with this!!
ReplyDeleteஎன்னாது மறுபடியும் ஜம்போ ஸ்பெஷலா ? :-) :-) ஸ்டீல் க்ளா இப்போவே பணம் அனுப்பி எல்லாத்தையும் வாங்கிடுவாரே !!
காமிக் கான் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள் !!
வேண்டும் வேண்டும் கலரில் வேண்டும் :D
DeleteI AM 3RD
ReplyDeleteAdvance Wishes to Junior Editor. Myself, Haja and Siva(Late) seen our Junior Editor with School Uniform in the year 2004 end.
ReplyDeleteBest wishes to comic con festivel sir...
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeleteபுள்ளியாய் ஒரு விவரம் ... :-)
இது வரை இந்த வருடம் வந்த கௌபாய் கதைகள் :
ஜனவரி - 3 (NBS டைகர் 2, சிக் பில் - 1)
பிப்ரவரி - 2 (லக்கி லூக், டெக்ஸ்)
ஏப்ரல் - 2 (டைகர் reprint, சிக் பில் )
மே - 1 (இந்த இதழ்)
ஜூன் - 3 (டெக்ஸ், லக்கி லூக் reprint, பிளஸ் சிக்ஸ் முதல் இதழ்)
தொடரும் மாதங்களில் 5 (பிளஸ் சிக்ஸ் மீதம் ) + 1 (இ.ஒ.இ.கு பாகம் ரெண்டு - இறுதி பாகம் இவ்வருடம் இல்லை என்றால் மண்டை காய்ந்து விடும் என்பதால்).
ஆக மொத்தம் மினிமம் 17 கௌபாய் கதைகள் ... எப்போதும் குதிரை மீதே அமர்ந்திருப்பது போல ஒரு பிரமை தோன்றுகிறதே !
அடுத்த வருடமும் 24 இதழ்கள் என்றால் இப்போவே கொஞ்சம் யோசித்து genres திட்டமிடலாமே !
Comic Lover (a) சென்னை ராகவன் : டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; லக்கி லூக் ; சிக் பில் - இந்த நால்வர் கூட்டணியைக் கழற்றி விட்டால் தவிர கௌபாய் ஆதிக்கம் குறைந்திட வழியில்லை !
Deleteஇவர்களைக் கழற்றி விட்டால் பேந்தப் பேந்த விழிப்பதைத் தவிர்த்தும் மார்க்கம் வேறு இராதே !
உண்மை !மேற்கொண்டு மேற்கிலிருந்து வரும் அடுத்த மாடு மேய்ப்பர் யார் சார் ?
DeleteWAITING CONTINUES FOR RATHA THADAM!Please inform us about the amount to be sent for +6!
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : +6 details have now been added !
Deleteon thala birthday thalai ketta thanga thalaiyan?! enna porutham!
ReplyDeletesuper backround colour sir better than original sir,
ReplyDeleteXIII adverticement yeppo sir..?
ReplyDeletepalanivel arumugam : ஆகஸ்ட் அல்லது செப்டெம்பரில் ரூ.100 விலையில் புதுப் பாகங்கள் இரண்டும் வந்திடும் ! பாப்பா நலமா ?
Deleteplease publish pullan visarani before the new series begins in 13
Delete//please publish pullan visarani before the new series begins in 13 //
Deleteஎனக்கும் போன வாரம் படிக்கும் போதே ஓடிய சிந்தனையும் இதுவே !எப்போ சார் புலன் விசாரணை !
நண்பர்களே,
Deleteபுலன் விசாரணை ஒரு காமிக் strip format-ல் இல்லை. அது ஒரு கதைப் புத்தக format கொண்டது. அதாவது ஒரு பக்கத்தில் ஓரிரு சித்திரங்கள் மற்றும் paragraphs. எனவே தனிப்புத்தகமாக வந்தால் ரசிக்கப்படுமா தெரியவில்லை. ஆங்கிலத்தில் கூட இதனால் இதனை (investigation) வெளியிடவில்லை.
ஆனால் அடுத்த நமது 'குண்டு பலசரக்கு' - ஸ்பெஷல் இதழ்களோடு இலவச இணைப்பாக வந்தால் பலரும் ரசிக்ககூடும்.
thanks raghavan for the info .
Delete'குண்டு பலசரக்கு' - ஸ்பெஷல் :) Awesome title
varsha is good sir thanks
Deleteஇந்த அலிஸ்டர் தான் மின்னும் மரணத்தில் வரும் அந்த ஜெனரல் அலிஸ்டரா? [புயல் தேடிய புதையல் ] விபரம் தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன்..........
ReplyDeleteYes.He is the one.General Mac Allister alies General Golden Mane.
Deleteennapa solla vara
ReplyDeleteஇரும்புக்கை எத்தன் கதை மூலமாக மீண்டும் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி விட்டார் நம்ம கேப்டன் டைகர்.. இதே போல டைகரின் கிளாசிக் கதையான மிண்ணும் மரணம் கதையையும் ஒரே இதழாகவோ அல்லது இரண்டு பாகமாகவோ வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeletewelcom back thala
ReplyDeleteவேறு புத்தகம் ஏதாவது உண்டா
ReplyDeleteகாமிக் கான் முன்னிடு ரத்த படலம் more units கிட்ட செய்யலாமெ ரத்த படலம் வரும்போது lion comics வருவதெ எan போன்ற சிலருக்கு தேரியாது
so pls do favorable edit sir
நான் கேட்டது தவறு என்றால் மன்னிக்கவும்
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteமூன்று பாகங்களையும் ஒன்றாக படிக்கலாம் என்ற எண்ணத்தில் டைகர் ஸ்பெஷலை இன்னமும் படிக்கவில்லை. இதுதான் இறுதிப் பாகமா?!
ஒரு ஜாலி சந்தேகம்: முன்னட்டையில் ப்ளூ உட்கார்ந்து கொண்டிருக்கிறாரா? இல்லை நின்று கொண்டிருக்கிறாரா? :)
Karthik Somalinga : Piles பிரச்னை வந்தவர் போல் ஒரு தினுசாய் டைகர் போஸ் தருகிறாரே என்று நீங்கள் நினைத்தால் - சௌந்தர் சண்டைக்கு வரப் போகிறார்! டைகரையும் சொல்லிக் குற்றமில்லையே - வருஷத்தின் முக்காலே மூன்று வீசப் பொழுதை குதிரையின் மேல் கழிக்கும் அவசியமும் அவஸ்தையும் அவருக்கு !
DeleteAnd yes, டைகர் ஸ்பெஷல்-1 + இந்த இதழோடு - குறிப்பிட்ட இந்த 4 அத்தியாயக் கதை நிறைவு பெறுகிறது !
//Piles பிரச்னை வந்தவர் போல் ஒரு தினுசாய்//
Deleteநான் சொல்ல நினைத்ததை 'கப்'பென்று பிடித்து விட்டீர்கள்! :D
@ஈரோடு விஜய்:
//எதிரிகள் வருவதைப் பார்த்து எச்சரிக்கையடைந்து எழுந்திருக்கும்//
நீங்களும் நல்லா ட்ரை பண்றீங்க, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :) :)
டைகர் ஸ்டைல்-ஆ போஸ் கொடுப்பது பார்த்து உங்களுக்கு பொறாமை. பெங்களுர் பக்கம் இருந்து புகையுர வாசனை வருதே பாஸ். தண்ணிய குடிங்க, தண்ணிய குடிங்க புகைச்சல் நிற்கும். :-) :-)
Deleteஎத்தனை பேர் போட்டிக்கு வந்தாலும் எங்க டைகர அசைக்க முடியாது. 10-15 வருசமா முதலிடத்தை தக்க வைத்திருந்த டெக்ஸ் கூட எங்க வரவுக்கு பின் 2ஆம் இடத்திற்கு சென்று விட்டார் இனி வரும் புதிய நாயகர்கள் எம்மாத்திரம்? :-) :-)
அப்படி போடுங்க சௌந்தர் :)
Deleteஎன்னாது ....? டெக்ஸ் ரெண்டாம் இடமா?
Deleteஅஜித், விஜய் படங்கள் அடுக்கடுக்காக வந்த பொது ரஜினி படம் கடந்த 10 வருஷத்தில மூணு தான் வந்துது. மூணும் ஹிட்டா இல்லியா?
அது மாதிரி இந்த வருடம் மறுவரவு செய்த ஒரே டெக்ஸ் புத்தகத்தையே இத்தாலி டெக்ஸ் காமிக்ஸ் museum உள்ளே வேச்சுருக்காங்கய்யா - நெனப்புல இருக்கா?
அம்பது கத அடுத்தடுத்து வந்தாலும் டைகர் சாகசங்கள் தொங்கலில் தான் நிற்கின்றன :-)
[உதாரணம்: இ.ஒ.இ.கு :-)]
அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ வந்தாலும் டெக்ஸ் தனியா வந்து தூள் கிளப்பி record break பண்ணாரா இல்லியா? :-)
எல்லாரிடமும் அடி வாங்கி அடி வாங்கி டைகர் டர் ஆகிட்டருன்னு நினைக்கிறேன். அதான் நேரா நிக்க முடியாம கஷ்டப்படறாரு நம்ம டைகரு. :)
Deleteநன்றாக சொன்னீர்கள் ராகவன்.
Deleteடெக்ஸிடம் போட்டி போடுவதற்கு கூட டைகருக்கு தகுதி கிடையாது.
Comic Lover (a) சென்னை ராகவன், P.Karthikeyan, கிருஷ்ணா வ வெ -
Deleteசரியாகச் சொன்னீர்கள்
இது ஒன்றே போதும் டெக்ஸ் புகழுக்கு ஆதாரம்..
// ஒரே டெக்ஸ் புத்தகத்தையே இத்தாலி டெக்ஸ் காமிக்ஸ் museum உள்ளே வேச்சுருக்காங்கய்யா //
robot archie: நீ எதற்குடா இங்கே வந்த வெளியே போடா?
ReplyDeleteஏய் பல்லி நீ யாருட வெளியா போக சொல்றது நாய்
Delete@ karthik
ReplyDeleteகீழே உட்கார்ந்திருந்த டைகர், தூரத்தில் எதிரிகள் வருவதைப் பார்த்து எச்சரிக்கையடைந்து எழுந்திருக்கும் நேரத்தில் எடுத்த படம் இது! :)
டியர் எடிட்டர்,
ReplyDeleteகழற்றி விட வேண்டும் என்றா சொன்னேன் :-) நண்பர்கள் என்னை கைமா போட்டு விடுவார்கள் :-(
நான்கு கௌபாய் ஹீரோக்களுக்கு தலா மூன்றென்று 12 கதைகள் வைத்துக்கொண்டால் - நமக்கு இன்னும் 12 கதைகள் வேண்டும்.
இவை ஷெல்டன், லார்கோ, ஒரு மதியில்லா மற்றும் ஸ்டீல் பாடி கலந்து கட்டிய காமெடி கூட்டணி, மார்டின், கிராபிக் நாவல்கள், டயபாலிக் மற்றும் வரவிருக்கும் புதிய கதைகளில் இரண்டு வரிசைகள் எனக்கொண்டால் சாத்தியம் ஆகிடுமே ! கொஞ்சம் planning ahead வேண்டும் - அவ்வளவே !!
ஊப்! நான்கூட அப்படித்தான் நினைச்சேன்!
Deleteடெக்ஸ், லக்கி, டைகர், சிக்பில் கூட்டணிகள் வெகு ஆண்டுகளாக நம் காமிக்ஸைத் தாங்கிப்பிடித்திருக்கும் தூண்கள் என்றால் மிகையல்லவே?!! எப்போதும் மங்கிடாத சொக்கத் தங்கங்களாச்சே! (ஸ்டீல் க்ளா மாதிரியே பேசுறேனோ?)
Comic Lover (a) சென்னை ராகவன் : 2014-க்கு ஏற்கனவே ஏற்பாடுகள் சில நடந்தேறி வருகின்றன...! புதுத் தொடர்கள்..நாயகர்கள் அரிதாரம் பூசி வருகிறார்கள் - தமிழுக்கு வருகை புரிய !
DeleteWaiting ...!
Deleteஆஹா திணறடிக்கும் நாயகர்களுக்காக காத்திருக்கிறோம் !
DeleteWE ARE WAITING TO WELCOME THEM SIR!
Deleteடியர் எடிட்டர்,
ReplyDelete* NBS கையிருப்பு நூறுக்கும் கீழாக வந்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. மீதமுள்ளவையும் காலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
* 'இரத்தத் தடம்' நிச்சயமாக ஒரிஜினலைவிட தூள்தான் என்றபோதிலும், என் பார்வையில் சற்று சுமார் ரகமாகவே தோன்றுகிறது. ஒருவேளை, நேரில் பார்த்திடும்போது என் எண்ணத்தில் மாற்றமிருக்குமோ என்னவோ! தவிர, 'ஒரு கெளபாய் த்ரில்லர்' என்பதை ஒரு சாதாரண டயலாக் பலூனில் அடைத்திருக்கும் விதமும் சற்றே கற்பனை வறட்சியாகப் படுகிறது!
* இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் மறுபடியும் ஒரு வெளிநாட்டுப் பயணம் ( மலையாகக் கிடக்கும் காமிக் கான் பணிகளுக்கு நடுவே) கிளம்பவிருப்பதாக நினைத்துப் பயந்துவிட்டேன்.
* +6க்கான சந்தா விபரம் மகிழ்ச்சியளிக்கிறது. ஓரிரு நாட்களில் சந்தாவை அனுப்பிவிடுவேன் ( +6ல் வெளியாகவிருக்கும் கதை வரிசைகள் பட்டியலிடப்பட்டால் சந்தா செலுத்துவதற்கான உத்வேகம் அதிகரிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!)
டைகரின் இரத்தத் தடத்தைக் காணவும், ஸ்டீல் பாடி ஷெர்லக்கை வரவேற்றிடவும் தயாராகிவிட்டேன்!
Erode VIJAY : /// ( +6ல் வெளியாகவிருக்கும் கதை வரிசைகள் பட்டியலிடப்பட்டால் சந்தா செலுத்துவதற்கான உத்வேகம் அதிகரிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!)///
Delete'Thinking on your feet' என்பதே +6-ன் பின்னணி ! இதனில் பெரியதொரு திட்டமிடலுக்கு இடம் தராது, சுதந்திரமாய்ப் பணியாற்ற எண்ணிடுகிறேன் ! Let's see...
சார்
ReplyDelete"இரும்புக்கை எத்தன்" + "பரலோகப் பாதை" இவற்றில் இறுதி பகுதி என்பதை அட்டையில் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம். புதியவர்கள் இது ஒரு தனி கதையோ என என்ன வைத்து விடும் என்பதால்...
மே முதல் வாரத்தில் எனது +6 இன் சந்தா உங்கள் அக்கௌண்ட் ஐ நோக்கி புறப்பட்டு வந்துவிடும் :)
ரத்த தடத்திற்கு waiting ....
ரத்த தடம் அட்டை படம் அடிக்கும் வண்ணமில்லாததால் பரவாயில்லை ரகமே என்னை பொறுத்தவரை. பின்னட்டை நன்றாக வந்துள்ளது !nbs வெற்றி சந்தோசத்தை அதிகரித்துள்ளது ! ஸ்டீல் பாடி செர்லக்கை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். ரத்தபடலம் வண்ணமில்லாமல் .....ஆனால் , எப்படியோ கிடைக்காத நண்பர்களை நிச்சயம் சந்தோஷ பட வைக்கும் என்பதில் ஐயமில்லை !
ReplyDeleteசொன்னது போலவே மேவிற்க்கு முன்னாள் கிடைக்க அரும் பாடு படும் நண்பர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல !
ரத்த தடம் எழுத்துருவும் அருமையாக வந்துள்ளது !
DeleteWelcome back editor sir, (?!)
ReplyDeleteYou are back with lot of good news. I need to appreciate both the front & back cover artwork r. Iratha thatam loks very pleasant. Back cover the layout is nice. Hats off to you and the designer. Is Our jumbo special stock still available.? you made nice arrangement. only 7 or 8 copies available...?
முன் அட்டையை விட பின்னட்டை சூப்பராக தெரிகிறது எனக்கு. லக்கி ஸ்பெஷலை எப்படா வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
ReplyDeletesame blood
Deleteஇரத்தத்தடம் என்பதை பிரித்து போட்டிருப்பது மட்டும் சற்று உறுத்தலாக உள்ளது. பிரித்து போடும் போது 'த்' என்ற எழுத்தை தவிர்த்து போட்டிருக்கலாம்.
ReplyDeleteடியர் எடிட்,
ReplyDeleteஇரத்த தடம் அட்டை வண்ண சேர்க்கை நமது ரத்த சிவப்பு அல்லது கரு நீலம் என்ற பாணியில் இருந்து மாறி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த வண்ண சேர்க்கை சற்றே டல்லாக காட்சியளிப்பதாக தோன்றுகிறது. கூடவே பின் அட்டையை இன்னொரு இதழுக்கு விளம்பரம் என்ற வகையில் உபயோகிக்காமல் நமது புதிய வருகையின் பாணிபடி எப்போதும் போல இதழில் வரும் இன்னொரு கதைக்கான அட்டையாக உபயோகிப்பதை கண்டிப்பாக கடைபிடியுங்களேன். இவ்வகையில் இரு இதழ்கள் ஒன்றாக வெளியானாலும், அட்டைகளை இழக்காமல் பெற்று கொள்ள முடிந்தது.
ஜுனியர் எடிட்டிற்கு உடனே ஒரு பொறுப்பை கொடுப்பதை விட, அவர் உங்களிடம் இன்னும் சற்று காலம் பாடம் கற்று கொண்ட பின் களம் இறங்கலாம் என்ற உங்கள் முடிவு சரியானதே. உங்கள் தந்தை பாணியில் நீங்களும் ஆசானாக தொடர வேண்டும். விக்ரம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உண்டே.
2014 இதழ்களை பற்றி ஒரு தனி பதிவில் சற்றே கோடிட்டு காட்டுங்களேன் ?
அட்டைகளின் தரம் பற்றிய பேச்சு எடுக்கையில் நியாபகத்திற்கு வந்தது, நமது வாசகர் வட்டத்தில் சில திறம் வாய்ந்த ஓவியர்களும், கிராபிக் டிசைனர்களும் உள்ளார்கள் என்பது தான்.
Deleteஉதாரணத்திற்கு, பேஸ்புக்கில் சண்முகம் என்ற நபர் சமீப காலமாக, சொந்த முயற்சியில் வெளியிட்டு வரும் நமது இதழ்களுக்கான மாற்று அட்டைகள், ஆங்கில அட்டைகளுக்கே சவால் விடும் தரம் கொண்டவை. அவர் தம் அட்டைகளை உங்களுக்கும் ஒரு தகவலுக்காக அனுப்புவதாக கேள்விபட்டேன்.
முடிந்தால் எந்தவித லாபமும் எதிர்பார்க்காத இப்படிபட்ட வாசகர்களின் படைப்பையும் நமது வருங்கால இதழ்களுக்கு உபயோகித்து பார்க்கலாமோ எடிட் ?
உதாரணத்திற்கு ரத்த தாகம் இதழுக்கான அவரின் இந்த அட்டையை பாருங்களேன். பார்த்து கொண்டே இருக்கலாம். கண்டிப்பாக பலருக்கு சென்றடைய வேண்டிய உழைப்பு அது.
நண்பர்கள் சண்முகம் மற்றும் தவமணி மணி ஆகியோரது அட்டைப்பட டிசைன்களை நண்பர் ராஜ் முத்துக் குமாரின் சமீபத்திய பதிவில் கண்டு வியந்தேன்! அட்டகாசமான அந்தப் படைப்புகளைப் பாராட்டி, என்றாவது அவர்கள் ஈரோடு வந்திடும்பட்சத்தில் என் சார்பில் விருந்தொன்று ரெடி!
Delete(விருந்துகளுக்காவே தயார் செய்யப்பட்ட லூசான பேண்ட்டை மாட்டிக்கொண்டு ராஜ் முத்துக் குமாரும் அந்த விருந்தில் பங்கேற்கலாம்! :D )
அட்டகாசம் !
Delete... கூடவே "ஸ்டீல் க்ளா"-வின் பைக் சவாரியும் உண்டுதானே விஜய்? :-)
DeleteAwesome! Extra Ordinary Talented Person ...!! Hats off to "Shanmuga Sundaram"
Delete" கண்டிப்பாக பலருக்கு சென்றடைய வேண்டிய உழைப்பு அது." "உதாரணத்திற்கு, பேஸ்புக்கில் சண்முகம் என்ற நபர் சமீப காலமாக, சொந்த முயற்சியில் வெளியிட்டு வரும் நமது இதழ்களுக்கான மாற்று அட்டைகள், ஆங்கில அட்டைகளுக்கே சவால் விடும் தரம் கொண்டவை"
100% Agreed.....
Also a rare peronality with bundles of talent.. spending more time for our comics, this has to be recognised.
Vijayan Sir, I request you to please use this amazing artwork... for the benefit of our comics.
@ Rafiq Raja & friends : ஒரு காமிக்ஸ் காதலரின் கைவண்ணத்திற்கும், அதே பணியை தொழிலாய் மாத்திரம் செய்பவரின் செயல்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை நண்பர் சண்முகத்தின் அட்டைப்பட டிசைனில் காண முடிந்தது. Stunning job !
Deleteநமது முயற்சிகளில் எனக்கு எப்போதுமே உள்ளதொரு உறுத்தல் இது தொடர்பானதே ! பிரெஞ்சிலிருந்து ; இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பவர்களாகட்டும் ; டைப்செட் செய்யும் நபர்களாகட்டும் ; டிசைன் செய்யும் ஓவியராகட்டும் ; அனைவருக்குமே காமிக்ஸ் என்பது ஒரு பணி மாத்திரமே ! இதே டீம் காமிக்ஸ் மீதொரு நேசத்தோடு பணியாற்றிடும் பட்சத்தில் - இன்னமுமே அழகான ஆக்கங்களை உருவாக்கிட நிச்சயம் சாத்தியப்படும். ஆனால் - நூற்றில் ஒருவர் காமிக்ஸ் ரசிகராய் இருத்தலே பெரியதொரு விஷயம் எனும் போது, பெருமூச்சு விடுவதே இப்போதைக்கு முடியும் சங்கதி !
இது நம் டீம் மீது குறை காணும் ஒரு புலம்பலல்ல...நிஜத்தை உரைக்கும் ஒரு ஆதங்கம் !
உங்கள் ஆதங்கம், எங்களுக்கும் உரித்தானதே எடிட். பெரும்பாலும் ஒரு துறையை அதிகம் நேசிக்கும் நபர்கள், சூழ்நிலை கைதிகளாக வேறு துறைகளில் குடும்ப பொறுப்புகளிற்கேற்ப பணியாற்றும் கதைகளையே நித்தம் கேட்டறிகிறோம். அவற்றில் இருந்து வேறுபட்டு சிலர் தங்கள் ஆர்வம் சம்பந்தபட்ட துறையிலேயே வேலை செய்வதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Deleteசண்முகம் போன்ற நமது ரசிகர்களின் இப்படிபட்ட படைப்புகளை நமது இதழ்களில் வெளியிட்டு, மற்ற காமிக்ஸ் நிறுவனங்களில் இருந்து இது பதிப்பாளர்+வாசகர் என்ற கூட்டு அன்பில் உருவாகும் காமிக்ஸ் இதழ்கள் என்ற பெருமையை நமது நிறுவனம் தனித்துவமான பெற வேண்டும் என்பதே என் அவா.
கண்டிப்பாக உங்கள் வசதிக்கு ஏற்ப நிறைவேற்றுங்கள் எடிட். எதிர்பாக்கிறோம், வரவேற்கிறோம்.
Dear Editor,
Deleteஇந்த ஒரு அட்டைப் படம் மட்டுமல்ல.. ஷண்முகசுந்தரம் வேறு சில அருமையான அட்டைப் படங்களையும் Facebook-ல் பகிர்ந்துள்ளார். அவரது ஈடுபாடும், உழைப்பும் பாராட்டத்தக்கது.
நிச்சயமாக, அவரது ஈடுபாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
லைட்டான கலரில் வரும் இந்த அட்டை படம் அதிகம் கவர வில்லை சார் .நமது ஓவியர்களின் படைப்பில் வந்திருந்தால் சூப்பர் ஆக இருந்திருக்கும் .
ReplyDeleteஅப்புறம் சார் ,யார் என்ன சொன்னாலும் சரி ...ஒவ்வொரு புத்தகத்திலும் உங்கள் ஹாட் -லைன் /காமிக்ஸ் டைம் ..,சிங்கத்தின் சிறு வயதில் ,அதிக வருகிறது விளம்பரங்கள் அனைத்தும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.(மாதம் 4 புத்தகங்கள் வந்தாலும் அனைத்திலும் இந்த பகுதிகள் இடம் பெற வேண்டும் .ஆமா ..,சொல்லிபுட்டேன் )
அது தான் சார் ..நமது புத்தகத்துக்கு அழகு ..
same blood !
Deleteஅப்பா ...டைகர் ஸ்பெஷல் இத்துனை நாள் படிக்காமல் விட்டது எவ்வளவு நன்றாக போய் விட்டது .
ReplyDeleteபொண்டாட்டி ,புள்ளைங்க எல்லாம் நாளைக்கு விடுமுறைக்கு ஊருக்கு போறாங்க ."ரத்த தடம் "வந்தவுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் அந்த நான்கு பாக கதையும் தனிமையில் படிப்பது எவ்வளவு சுகம் .கௌ -பாய் உலகத்திற்கே செல்ல போகிறேன் .வாழ்க்கையில் இதை விட என்ன சந்தோசம் இருக்க போகிறது ..
புத்தகம் கைக்கு கிடைக்க காத்து கொண்டே இருக்கிறேன் .
நாளையே +6 காண சந்தா MO வில் உங்களை தேடி புறப்படும் சார்.
ReplyDeletedear vijayan sir , நீங்கள் +6 க்கு rs 375/- என்று அறிவித்து உள்ளதை பார்த்தால் ,ஒவ்வொரு இதழும் தலா 50rs என்று முடிவு செய்து உள்ளதை காட்டுகிறது ! +6ல் ஒரு புத்தகமாவது டெக்ஸ் ன் இரண்டு கதைகளோ or மூன்று கதைகளோ இணைத்து rs 100 ல் போடலாமே sir ஒரு பெரிய தலையணை size ல் ! 2012 ல் டெக்ஸ் ன் 1கதை கூட வரவில்லை ! so ,2013 டெக்ஸ் ன் ஆண்டாக மலர்ந்தால் சந்தோசமே ! ஒரு வருடத்தில் இவ்வளவு cowboy ஸ்டோரியா என்று கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் தூங்கி போன timebom கதை ஹீரோ வின் இதர சாகசங்களை , cowboy ஸ்டோரீஸ் க்கு பதிலாக அனுப்பலாம் ! அவர்களும் படித்து இன்புறுவார்கள்!!!!!
ReplyDeleteதூங்கிப் போன டைம்பாம் ஹீரோவா?ஐயோ, டாக்டருக்கு என்னா ஒரு கொலவெறி…
Delete// தூங்கி போன timebom கதை ஹீரோ// தொந்தரவு செய்யாதீங்க. அவர் தூக்கத்திலேயே இருக்கட்டும். :)
Deleteடியர் சுந்தர்!!!
Deleteநீங்கள் கிண்டலாக கூறியிருந்தாலும் இது நிஜமாகும் பட்சத்தில் cowboy எதிர்ப்பாளர்களுக்கு அதைவிட பெரிய கொடுமையான தண்டனை கிடைக்கமுடியாது.நமது நண்பர்களால் அதிக பட்ச வெறுப்பை சம்பாதித்து கொண்ட கதை "தூங்கி போன டைம்பாம்"-ஐ தவிர வேறெதுவும் இருக்க முடியாது.அந்த கதையை எடிட்டர்ஜீ படித்து பார்க்காமலே தேர்ந்தெடுத்து விட்டாரோ என்ற சந்தேகம் அடியேனுக்கு இப்போதும் உண்டு!!!
தூங்கிப் போன டைம்பாம்மா...! ஐயோ அந்த கதையை பாதிக்கு மேல் நான் படிக்கவே இல்லை....முடியல
Deletesaint satan : படித்துப் பார்க்காமலே ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதோடு ; படித்துப் பார்க்காமலே அதன் மொழிபெயர்ப்பும், proof -reading-ம் செய்திட முடிந்துள்ளதெனில் - எனக்கே தெரியாமல் என்னுள் இத்தனை திறமைகள் புதைந்துள்ளன போலும் :-)
Deleteதூங்கிப் போன டைம்பாம்...............ஓகே ரகம் தான்.................. ஆனால் படங்கள் கச கச வென்று ........சோர்ந்து போய் படிக்க விடாமல் செய்கிறது ..........அப்படா நீண்ட நாளுக்கு பிறகு ஜால்ராவை வாசிச்சாச்சு ..........இல்லாட்டி ஜால்ரா துரு பிடுச்சுடும்.............
DeleteDear Sir,
ReplyDeleteஅட்டைப்படம் ஈர்ப்பு குறைவாகவே தோன்றுகிறது. கழுவாத நெகடிவ் போன்று பின்னணி கலர் தோன்றுகிறது. ரத்தப் படலம் comicon-ல் மட்டும் கிடைக்கும் என்பது சரியா? எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்தால் வாங்க தவறியவர்களும் வாங்க இயலுமல்லாவா?
இரத்தத்தடம் எழுத்துருவைத் தவிர இந்த அட்டைப்படம் ஒண்டர்ஃபுல் ரகம்!
ReplyDelete+6 சந்தாவுடன் என் போன்ற புதியவர்கள் மெயின் சந்தாவையும் கட்ட விரும்பினால்.? 4 மாதங்கள் கழிந்த நிலையில் அதற்காக எவ்வளவு அனுப்பவேண்டும் என்றும் தெரிவித்தால் மகிழ்வேன்!
ஆதி தாமிரா : 4 x ரூ.100 கழித்து விட்டு மீதத் தொகையினை அனுப்பினால் போதுமானதே !
DeleteNBS போன்ற அடுத்த மெகா இதழ் அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கிறேன் சார். ஸ்டாக்கில் உள்ள பழைய b&w இதழ்கள் வெகுவாகக் குறைந்ததால் பழைய கதைகளை கலரில் reprint செய்து ஸ்டாக் வைக்கும் பணி எந்த அளவில் உள்ளது? பழைய முத்து,லயன் காமிக்ஸ்களை கலரில் படிக்க உள்ளம் ஏங்குகிறது…
ReplyDeleteரத்தத் தடம் அட்டைப்படம் அட்டகாசம்... ஒரிஜினலை விட பன்மடங்கு நேர்த்தி என்பேன்...
ReplyDeleteஎன்னாது இரத்தப்படலம் ஸ்டாக் இருக்கா ! அதுவும் காமிக்கான்ல மட்டும் விற்பனையா ! ஏன் சார் இந்த ஓரவஞ்சனை ? ம்ம்ம் யார் அந்த எட்டு அதிர்ஷ்டசாலிகளோ.
ReplyDeleteஅடி பிடிதான் !
Delete@ friends : இரத்தப் படலம் ஸ்டாக் இல்லை ; பக்கங்கள் தவறுதலாய் பைண்டிங் செய்யப்பட பிரதிகள் சிலவற்றை இடையில் நேரில் வருகை தந்த வாசகர்கள் கொணர்ந்து திரும்பக் கொடுத்திருந்தனர். அதனை சமயம் கிடைக்கும் போது பட்டி டிங்கரிங் செய்து COMIC CON -க்குக் கொண்டு வர எண்ணியுள்ளோம்.
Deleteஎனது புத்தகங்களையும் தருகிறேன் சார், வண்ணத்தில் அப்படியே பட்டி ,டிங்கரிங் செய்தீர்களென்றால் .....
Deleteஹா ஹா ஹா!
Deleteவண்ணத்தில் கிடைக்கும்வரை ஓயமாட்டீங்க போலிருக்கே?
என்னைப் போல நீங்களும் திருந்தலாமே? நான் 'தலையணை சைசில் ஒரு டெக்ஸ்' கேட்பதை நிறுத்திப் பல நூற்றாண்டுகளாச்சு, கவனிச்சீங்களா?
நான் டிங்கரிங் மட்டும்தானே கேட்டேன் !நீங்க தலயனைய மறக்க முடியாம , தொடர்ந்து நினைவு படுத்தி வருகிறீர்களே !
DeleteSir, at what time you will be there on 1-Jun-2013 and what is the exhibition starting time? I am planning to come there by 10 AM and planning to leave at 2 PM. Will I get the new 4 books between these timings? Please confirm. So that I can plan for booking the tickets.
ReplyDeleteSankar C., Hyderabad
In the Comic Con website, our stall number (B11) does not exists. (http://www.comicconindia.com/index.php?page=exhibitors). Is our stall and few other stalls (B07 to B11..) not considered by the organizers?
DeleteSir, please confirm our stall number and details.
Sankar C : B-11 is our stall. The show starts at 10 a.m. ; will be there on Saturday morning. And all 4 books would be available ! Fingers crossed :-)
DeleteThank you sir. Will meet there.
Deleteஎடிட்டர் சார் !
ReplyDeleteஇரத்தபடலம் ... பெங்களூர் வந்தால் மட்டும் தான் கிடைக்குமா ? எங்களை போன்று பெங்களூர் வர முடியதவர்க்கு வேறு வழி இல்லையா? தயவு செய்து எதாவது செய்யவும்.... , +6 சந்தா அறிவுப்புக்கு நன்றி உடனே அதற்க்கான தொகை அனுப்பி வைக்கப்படும் ......
நாளை வருவதை எதிர்பார்த்து வண்ண கனவுகளுடன்.....
ReplyDeleteஎங்கள் காமிக்ஸ்கள் தமிழுக்கு பிறப்பெடுக்கும் சிவகாசியில் நேற்று மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை விபத்து என்று செய்தி படித்தேன்.
ReplyDeleteஇம்முறை நடந்தது பட்டாசு உரிமையாளர் சங்க தலைவரது தொழிற்சாலையிலாம். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும், ஞாயிற்றுக்கிழமையாதலால் கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் என்று யாரும் இல்லாமலும் வேலை நடந்தபோது இந்த துயரம் நடந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.
மனித உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனைப்படும் மனது பின்னர் பழகிவிடுகிறதே! இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். காயமடைந்த, பாதிப்படைந்த அனைவரும் தேறிவரவேண்டும் என்று இயற்கையை பிரார்த்திப்போம் நண்பர்களே!
Podiyan : எப்போதுமே பட்டாசுகள் என்னை ஈர்த்தது இல்லை ; சில காலமாய் தொடரும் இந்த விபத்துக்கள் மிச்சம் மீதி இருந்த ஆசையையும் போக்கடித்து விட்டன..! சிவகாசியையே சங்கடப்படுத்தும் விஷயங்கள் தொடரும் இந்த அப்பாவி மக்களின் சாவுகள்....!
Delete'வலைச்சரம்' என்ற வலைப்பூவில் வாரம் ஒரு பதிவர் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏழு நாட்களுக்கு வலைப்பூவை நிர்வகிக்கும் வாய்ப்புக்கிடைத்த நண்பர் கார்த்திக் சோமலிங்காவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுவரை அறியாத பலரும் நம் காமிக்ஸின்பால் ஈர்ப்புக்கொண்டிட மற்றுமொரு நல்ல வாய்ப்பு!
கலக்குங்க கார்த்திக்!
http://blogintamil.blogspot.in/
நடைபெறவிருக்கும் 'காமிக் கான்' பற்றிய ஒரு சிறப்புப் பதிவும் அதில் இடம்பெறுமென்று நம்புகிறேன்!
Deleteநண்பர் கார்த்திக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
DeleteErode VIJAY : கார்த்திக்கிற்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே வேளையில் அங்கும் அவர் காமிக்ஸைப் பிரதானப்படுத்திட வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமாக இராதே ! தளத்தின் தன்மைக்கும், அங்கு வருவோரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வகையில் கார்த்திக் செயல்பட்டிட ஆதரவு சொல்வோமே !
Deleteவாங்குவது 'டோஸ்' என்றாலும்
Deleteகொடுப்பது எடிட்டர் என்றால்...
சுகமே!
ஈரோடு விஜய், இதுக்கும் சந்தா செலுத்துவீங்களா :-) பிளஸ் சிக்ஸ் வேணுமா? :-) :-)
Delete@ காமிக் லவர்
Deleteஎன்னைமாதிரி கவிதை எழுத வரலியேன்னு உங்களுக்குப் பொறாமை! :D
Congrats Karthik!!
Deleteவிஜயன் சார்,
ReplyDelete// திங்கள் மாலை கூரியருக்குப் பிரதிகள் புறப்படும் சாத்தியங்கள் 90% !//
இன்று மாலை புத்தகங்கள் அனுப்பபடுமா சார் ?
திருப்பூர் ப்ளுபெர்ரி
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : புதியதொரு வாரம் ; புதியதொரு மின்வெட்டு நேரம் என்பது எதிர்பாராத சக்கையை வைத்து விட்டது நமது பைண்டிங் பணிகளில் ! மதியம் 12-க்கு விடை பெற்ற மின்சாரம் மறு வருகை தந்தது மாலை 7-க்கே ! இன்றிரவு பாக்கிங் முடித்து - நாளை முதல் வேலையாக அனுப்பிடுவோம்.
Deleteமே 1 தேதிக்கு தபால் அலுவலகம் திறந்திருக்கும் என்பது கொசுறுச் சேதி !
நன்றிகள் சார். சொன்ன தேதிக்குள் புத்தகத்தை அனுப்ப நீங்கள் மற்றும் நமது டீம் படக்கூடிய கஷ்டங்கள் புரிகின்றன. ஒரு ராயல் சல்யூட் சார்,
Delete//மே 1 தேதிக்கு தபால் அலுவலகம் திறந்திருக்கும் என்பது கொசுறுச் சேதி ! //
நமக்கு எஸ்.டி. கொரியர் ஓபன் பண்ணி இருந்த சரி சார், ஆனா என்னன்னு தெரியலையே ...
நண்பர்களே யாரவது சொல்லுங்கள் - எஸ்.டி.கொரியர் மே 1 - நீக்கி இருப்பார்களா ?
புரொபஷனல் லீவுப்பா லீவு - மே 1-ஆம் தேதி ! சரி பரவாயில்ல இன்னொரு நாள் வெயிட் பண்ணுவோம் !!
Delete//
Deleteமே 1 தேதிக்கு தபால் அலுவலகம் திறந்திருக்கும் என்பது கொசுறுச் சேதி !//
ஆஹா ! மனது முழுக்க இனிக்கிறது , தங்களது இந்த அறிவிப்பு கேட்டு !
சற்று முன்னர் நண்பரின் பதிலான நாளைதான் அனுப்புகிறீர்கள் என கண்டு காயம் பட்ட மனதிற்கு ஆறுதல் மருந்தாய் மே ஒன்று அமைவது சந்தோசமே !
நண்பரே ப்ளூபெர்ரி , தபால் நிலையமே திறக்கும் பொது stc திறக்காமளிருப்பார்களா !
Delete'வலைச்சரம்' பதிவு ஆசிரியராக பொறுப்பு ஏற்றுள்ள நண்பர் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த ஒரு வார காலத்தில், பலதரப்பட்ட நண்பர்கள் நமது காமிக்ஸ் பற்றி அறிந்து கொள்வார்கள் என்பது நிதர்சணம் ... நமது காமிக்ஸ் பயணத்தில் உங்களது பங்களிப்பு இதன் மூலம் இன்னும் சிறப்பானதாக அமைகிறது நண்பரே ...
தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் 'கிறுக்கல் கிறுக்கன்' ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு ஈரோடு விஜயின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteநண்பர் ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Delete'கிறுக்கல் கிறுக்கன்' ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
Deleteநானும் இணைந்து கொள்கிறேன் - வாழ்த்துக்கள் சொல்வதில் ! சாக்லேட் எப்போ பெர்னான்டெஸ் ?
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள்,ஃபெர்னாண்டஸ்! God bless!!
Delete27-ம் தேதி சாத்தூரை நெருங்கும்போது அலுவலகத்திற்கு தோடர்பு கொண்டால் பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைத்திருந்தால் நேந்திரம் பழ சிப்ஸோடு வந்து சென்றிருப்பேன்
Deleteவாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
Deleteசார் புத்தகங்களை அனுப்பி விட்டீர்களா !
ReplyDeleteஅலுவலத்தில் நாளைதான் என்று கூறிவிட்டனர் .
Deleteஅடடா ......
Deleteநமது ஆசிரியரின் இள வயது புகைப்படம் (நண்பர் விஸ்வாவின் வலைபதிவிலிருந்து)
ReplyDeletehttp://lh3.ggpht.com/_ymLqylrIhm4/ShFfLjoz7iI/AAAAAAAACh8/PRfdnfbrpaU/s1600-h/LionComicsIssueNo19ThalaiVangiKurang%5B4%5D.jpg
ஆசிரியரின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
DeleteOnce upon a time...long long ago...!!
Deleteஎடிட்டரின் புகைப்படம் - சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் மாதிரி இருக்கு. கலக்குங்க :)
Deleteமலரும் நினைவுகள் சார் :)
Delete@ ஸ்டீல்
Deleteஇருபது வருடங்களுக்கு முன்பு எடிட்டர் மேற்கொண்ட பயணத்துக்கெல்லாம் கூடவா இப்போ வாழ்த்துச்சொல்வது?!! :)
அந்த கால இளைஞர்களின் கனவு கண்ணாடியோ !
Deleteஅன்றைக்கு சொல்ல இயலவில்லை ,அந்த காலம் காட்டும் கண்ணாடியில் எழுதினேன் , இங்கும் விழுந்து விட்டது !
Deleteஎன்ன திடீர்னு வைரமுத்து மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க?! :D
Delete!
Deleteமகழ்ச்சி தரும் அறிவிப்பு, steele body sherlock - மிகவும் எதிர்பார்கிறேன்.
ReplyDeleteநானும் !
DeleteV Karthikeyan : இது கார்ட்டூன் போல் இருக்கும் - ஆனால் கார்ட்டூன் அல்ல ; சீரியஸ் கதை போல் தெரியலாம் ; சீரியசான சங்கதியும் அல்ல ! உஷார்...!
Deleteஆஹா எதிர்பார்ப்பை அதிகரித்து விடீர்கள்.
Deleteசார்,
ReplyDeleteசிங்கத்தின் சிறுவயதில் - உங்களது அனுபவங்கள் நிறைய உள்ளதால், ஏன் நீங்கள் நமது வலைத்தளத்தில் அவ்வப்பொழுது அதை ஒரு பதிவுகளாக இடக்கூடாது ?
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : மாதமொருமுறை இதழ்களில் எழுதுவதை முன்கூட்டியே இங்கேயும் வெளியிடும் போது, அதே பகுதியை மீண்டும் இதழில் படித்திடும் சமயம் ஒரு வித அயர்ச்சி தோன்றுவதை தவிர்த்தல் சிரமமே ! So - இப்போதைக்கு இந்த frequency போதும் என்றே நினைக்கிறேன் !
Delete+6 பிற மாநிலத்திற்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்...same amounta sir...
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeleteசன்ஷைன் லைப்ரரியில் பழைய கிளாசிக் மினி லயன் கதைகளை மறுபதிப்பு செய்யும் எண்ணம் உள்ளதா? குறிப்பாக விஸ்வாவின் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள காமெடி கர்னல் கதை மறுபடியும் முழு வண்ணத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லை என்றால் இப்போதே சொல்லிவிடுங்கள், சினிபுக்கின் ஆங்கில வெளியீடுகளை காமிக் கானில் வாங்கிவிடுகிறேன். அப்புறம்.
அப்புறம்,மே முதல் தேதியன்று நான்கு லட்சம் ஹிட்ஸ் பெறுவதற்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
அட்டைப்படம் நன்றாக உள்ளது .mgr பாடலின் இளயோர்கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதியபூமி நண்பர் விக்ரமிற்கு பொருந்த கூடிய வரிகள் .
ReplyDeleteஎனினும் உங்களின் அணுகுமுறையும் அனுசரணையும் மனதிற்கு பிடித்தமானதாக இருக்கின்றது .அதையே மனது விரும்பவும் செய்கின்றது .
சென்சாரை பொறுத்த வரை இப்பொழுது இருக்கும் நடை முறையே போதுமானது .விரும்பி படிப்பவர்களுக்கே காமிக்ஸ் சரியாக வரும் அதை திணிக்க முடியாது என்பது என் கருத்து .
சன்சைனுக்கு வாழ்த்துக்கள் !
சார், அனுப்பிவிட்டீர்களா ?
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Yes !
Deleteஅய்யய்யோ ....! ஸ்டீல் க்ளா, சந்தோஷத்தில் இன்னொரு செய்யுள் இயற்றி இங்க பதிவிட போறாரு ....!
Deleteஅடடா... வண்டியை ஆஃப் பண்ணுங்க ஸ்டீல் க்ளா! இன்னிக்குத்தான் சிவகாசியில அனுப்பியருக்காங்க; நாளைக்கு கோவை வந்து சேர்ந்தபிறகு ST கொரியருக்கு போவீங்களாம்...
Deleteநன்றி சார் !
Deleteராகவன் இதோ !
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை உங்களுக்கு .....
நானா பாடினேன்...
விஜய் பெட்டி படுக்கையோடு சென்ற உங்களை திருப்பி அனுப்பி இருக்க வேண்டாம் ,எல்லாம் உங்க நல்லதுக்காகத்தான் .....மாலை நேரம் செல்லுங்கள் ,வெப்பத்தின் தாக்கம் குறையலாம் ....
Deleteநாளை நமது நாள் !
Deleteநீண்ட நாள் தாகம் தீரும் நாள் !
தாகத்துடன் இருந்தும் பாலை வனத்தில் திரிய ஆசை கொண்ட மனதினை
அழைத்து சென்று தாகம் தீர்க்கும் ஆச்சரியம் நிறைந்த புத்தகத்தை நீராய் பெரும் நாள் !
கானல் கண் முன்னே உயிர் பெற்று நிஜமாகும் நாள் !
எடிட்டர் சார், அப்படியே எனக்கு ஒரு கோனார் தமிழ் உரையும் சேர்த்து அனுப்பிடுங்க சார்! இப்போல்லாம் இந்தத் தளத்தில் நிறைய செய்யுள்கள் புழக்கத்துக்கு வந்துடுச்சு! :)
Deleteநாளை மே 1 விடுமுறையில் STC விடுமுறையாக இருக்க போவதால், நாளை மறுதினம் தான் கிடைக்குமா... சரி தான் :(
Deletesuper thalaivare! innru kidaithu vidum enra kanavugaludan..................
ReplyDeleteஇன்றே எப்படி ? மாலை வர வாய்ப்புள்ளதா , காலையில் அனுப்பியதால் !
Deleteஹலோ சார் ! வெளியூர் சென்ற தந்தை வீடு திரும்பும்போது நாம் எப்படி அவர் கைகளையும் பைகளையும் பெரும் எதிர்பார்ப்புடன் ஆராய்வோமா அதுபோல நீங்கள் இந்த ப்ளாக் பக்கம் பதிவிடும் ஒவ்வொரு வேளையிலும் எங்களுக்கு என்ன உள்ளது என்பதை கண்டறிவதிலயே எமது மனது சிறுபிள்ளைபோல் புதிய பதிவுகளை உற்சாகத்துடன் படிக்கிறது .
ReplyDeleteவழக்கமான பதிவுகளை போன்று இந்த பதிவும் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவைக்காமல் உள்ளத்தை மகிழ்ச்சியில் நிறைகிறது! :-)
YOU ARE REALLY SMART IN PLAYING THE ROLE OF A NICE DADDY HERE! :-)
முதலில் சொன்னது போல் ரத்ததடம் குறித்த காலத்தில் வெளியிட்டதற்கு நன்றிகள் பல! பல வருட காத்திருப்பு மிக விரைவில் முடியப்போகிறது. அதுவும் முழு வண்ணத்தில்...THIS IS A GREAT TREAT FOR TIGER FANS!
//ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக, ஜூன் மாதத்து இதழ்களுக்குப் பட்டையைக் கிளப்பியுள்ளார் மாலையப்பன் ! Just wait n' see.....!//
WOW! I'M WAITING....
//இத்தனை பக்கங்களை வீணடித்ததற்குப் பதிலாக இன்னொரு குட்டிக் கதையை இணைத்திருக்கலாமே என்று அபிப்ராயப்படப் போகும் நண்பர்களுக்கும் பஞ்சமிராது என்பதையும் அனுபவம் உணர்த்திடாதில்லை :-)//
I REALLY REALLY DOUBT THIS! அப்படி யாரவது ஒருவர்...ஒருவர்... இருந்தாலும் இந்த பின்னூட்டத்துக்கு பின்னால் அதை ஆமோதிக்கட்டும்...நான் ஒத்துக்கொள்கிறேன்...NO WAY SIR!!
காமிகான்னை ஆவலுடன் எதிர்பார்கிறேன்!
அப்புறம் இந்த +6 இதழ்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியே...
"ஆனால் இந்த லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கையை காட்டி நேராக போகும் சமாச்சாரமும்...ஒரு திட்டமிடுதல் இல்லாமல் மனதில் தோன்றுவதை தோன்றும்போது செய்வேன் எனபதும்..."
போன்றவை நமது மறக்கப்படவேண்டிய இறந்தகால சாதனைகள் எனபது எனது கருத்து. இது போன்ற முறைகள் உங்களுக்கு தலைவலியை கொடுக்காதா?? +6 சை நான் வரவேற்கிறேன்...BUT PLAN AHEAD SIR!!
MAY BE WE WILL SUCCEED IN MAKING THE NEW READERS REALIZE "HOW THE LION COMICS TASTED IN THE PAST"... : - )
//"ஆனால் இந்த லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கையை காட்டி நேராக போகும் சமாச்சாரமும்...ஒரு திட்டமிடுதல் இல்லாமல் மனதில் தோன்றுவதை தோன்றும்போது செய்வேன் எனபதும்..." //
ReplyDeleteஇது தந்தை என்ன தருவாரோ என எதிர் பார்த்து காத்திருந்த குழந்தைக்கு அதை விட சிறப்பாக தரும் போது எப்படி இருக்கும் ; இதுவும் ஒரு வகை த்ரில்லே !திட்டமிடல் ஒரு தனி ட்ராக்கிலும் ; அதிரடியான திட்டங்கள் இன்னொரு ட்ராக்கிலும் பயணித்தால் ....
ரத்த படலம் என்ற குண்டு புத்தகம் நமது குடோனில் இல்லை ....
ReplyDeleteNBS என்ற குண்டு புத்தகமும் அடுத்த மாதம்" காமிக் கான் " பிறகு நமது குடோனில் ஸ்டாக் இருக்காது .
ஒரு குண்டு புத்தகம் கூட இல்லாத நம்ம காமிக்ஸ் குடோனை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ...?
யோசிங்கள் சார் ...:-)
I Strongly Agree with Paranitharan K ....
DeleteDear Editor -> We are looking your new announcement about "ANU-KUNDU" size book ASAP :)
"ANU-KUNDU" is very small in size ... :)
Deleteஅப்போ குண்டு ok வா !
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/Bladepedia-In-Valaicharam-02.html) சென்று பார்க்கவும்... நன்றி...
E-bay listing எப்பொ சார்?.
ReplyDeleteஅதற்கு பதிலாக நமது தளத்திலேயே வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யாலாமே சார்.
அதே போல் ஆன்டு சந்தாவையும் ஆன்லைனிலேயே கிரடிட் கார்டு மூலம் செலுத்தும் வகையில் செய்யலாமே.
பிளாக்கிற்கு பதிலாக நமது தளத்தில் மட்டும் பதிவிட்டால் என்ன? vBulletin software உபயோகித்து நமது தளத்தை மேம்படுத்தலாமே. உடனடியாக இல்லாவிட்டாலும் பின்னாளில் முயற்சித்து பார்க்கலாமே சார்.
Pushparaj R : E-Bay listing's done already !
Deleteவிஜயன் சார்,
ReplyDelete"ஒரு வேங்கையின் சீற்றம்" -- NBS இல் வெளிவந்த 'இருளில் ஒரு இரும்புகுதிரை' யின் கடைசி பாகம் விரைந்து வருமா சார் ?
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : August'13 (or) September'13 !
Deleteyappa 151vatha vanthuten! +6 santha anupiten ji! valthukkal! kalakkungal!
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் அவர்களே! வாசக தோழர்களே! மே தின நல்வாழ்த்துக்களை அட்வான்ஸ் ஆக தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் அன்பிற்கினிய நண்பர்களுக்கும்,
ReplyDeleteஇனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!
திருப்பூர் ப்ளுபெர்ரி
நாளை 400000 page views touch பன்ன வாய்ப்புள்ளதா
ReplyDeleteஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் அன்பிற்கினிய நண்பர்களுக்கும்
ReplyDeleteஇனிய மேதினவாழ்த்துக்கள்
வெள்ளிவரை காத்திருக்க வேண்டியதை நினைத்தால் கவலையாக உள்ளது…
ReplyDeleteஎனக்கு புக் கிடைத்து விட்டது
ReplyDeleteஎந்த புக் ?
Delete
Deleteடைகர் ஸ்பெஷல் 1
உங்களுக்கு எப்படி கிடைத்தது !
Deleteதேடினேன் கிடைத்தது
Deleteಚುಂಮಾ ಪೊಯ್ ಚೊನ್ನೇನ್
ReplyDeleteகன்னடதள்ளி யாகே இல்லி டைப் மாடிதிர,
Deleteபுக் பந்திந்து சுள்ளு அன்தா
( Why have you typed in kannada that you have lied about receiving the book) :)
தலை கேட்ட தங்கத் தலையன் - கதை டைட்டில் சூப்பர் ! நமது முத்து காமிக்ஸின் "தலை கேட்ட தங்கப் புதையலை" நினைவுபடுத்தியது.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் விஜயன் சார் & லயன் அணி மற்றும் அனைத்து நண்பர்கள்/சகோதரர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்களின் பார்வைக்காக ...
0097 - முத்து காமிக்ஸ் இரத்தத்தடம் - MUTHU COMICS: RATHATHADAM
சிவகாசியில் இல்லாமல் போய் விட்டேனே என சிறு வயதில் ஏங்கியதுண்டு ; நண்பர் டர்போ சௌந்தர் மீண்டும் அந்த ஏக்கங்களை கிளறி விட்டு கொண்டே இருக்கிறார் ! வாழ்த்துக்கள் நண்பரே !
Deleteஆங்! ஸ்டீலுக்கு இன்னொரு ஐடியா!!
Deleteபேசாம, உங்களுக்கான வாழ்க்கைத் துணையை சிவகாசியில் தேடிபிடித்து கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா, மாதா மாதம் மாமனார் வீட்டுக்குப் போகிற சாக்கில், அச்சாகி வரும் முதல் பிரதியை லயன் ஆபிசில் நேரடியா வாங்கிட்டு ஆனந்தக்கூத்தாடாமில்லையா? சந்தோஷத்தில் தோணும் செய்யுளையெல்லாம் எடிட்டரிடமே நேரில் பாடிக்காட்டி பரிசில் பெறலாமில்லையா? :)
ஆசிரியர் விஜயன் சார் அவர்களுக்கும், அலுவலக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்த்துக்கள்...
ReplyDeleteஆசிரியர் விஜயன் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியருக்கும் , அனைத்து நண்பர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்று விடுமுறை நாளைக்காக காத்திருக்கிறேன் !
ReplyDeleteவிஜய நெனச்சா சிர்ப்பு சிர்ப்பா வருது .....ஹ ஹ ஹா !!!
Deleteசார் +6 காண சந்தா செலுத்திவிட்டேன்.
ReplyDeleteஇன்னும் டெக்ஸின் தலையணை சைஸ் புத்தகம் பற்றிய அறிவிப்பு இல்லாதது வருத்தமாக உள்ளது.
ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் சார்.
சௌந்தரின் ஸ்கான்களை பார்த்து இரத்த தடத்தின் ஏக்கம் அதிகமாகிவிட்டது.
மந்திரி ............இன்னைக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும்
ReplyDeleteஜால்ரா பாய் ..... எப்பிடி மாஸ்டர் ?
மந்திரி ..........இன்னிக்கு தான் LABOUR DAY ஆச்சே ...!.....
காமிக்கானில் வெளியாகும் அந்த சர்ப்ரைஸ் புக் கார்ஸனின் கடந்தகாலமாக இருக்க சாத்தியம் இல்லாமல் இல்லை.
ReplyDeleteநண்பர்களே ஆசிரியரின் புதிய பதிவு பல கேள்விகளை அடக்கி கொண்டு ; நமது பதில்களுக்காக காத்துள்ளது !
ReplyDeleteடியர் எடிட்,
ReplyDeleteசமீபத்தில் வெளிவந்த கலர் இதழ்களில் படுமோசமான பிரிண்டிங் இந்த இரத்த தடம் இதழ்தான். பெரும்பாலும் ஒரு சில பக்கங்கள் அவுட் ஆப போகஸ் ஆக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி 2,3 பக்கத்திற்கு ஒரு பக்கம், இல்லை இரு பக்கம் என்று சகட்டுமேனிக்கு ஓவியங்கள் மங்கலாக தெரிகின்றன, வண்ணச் சேர்க்கை இல்லைய்னறால் முகம் எங்கு, உடை எங்கு என்று கேள்வியே கேட்க தோன்றும் அளவிற்கு பிரச்சனை.
எழுத்துகள் மங்கலாக தெரியாமல் சரியாக வந்திருப்பதை பார்க்கையில், இந்த கோளாறு Pre Processing முறையில் பக்கங்கள் மற்றும் எழுத்துகளை ஒன்று சேர்க்கும் போது நேர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே நீங்கள் கூறியபடி ப்ரூப் ரீட் செய்த பின் நான் அச்சடித்த புத்தகத்தை பார்ப்பதில்லை என்று கூறியது நியாபகம் வருகிறது. இனி இப்படிபட்ட தவறுகளை சரிகட்ட அச்சடிக்கபட்ட புத்தகங்களை ஒன்றிரண்டு சாம்பிள் நீங்கள் கண்டிப்பாக பார்த்த பின்பே, மொத்த இதழ்களையும் அச்சடிக்க அனுமதிக்க வேண்டும்.
உண்மையில் கூற வேண்டுமானால், ப்ளுபெர்ரி போன்ற அமர ஓவிய பாணிக்கு பெயர் போன காமிக்ஸிற்கு இப்படி ஒரு இதழ், திருஷ்டி பரிகாரம். படிக்க மனதே வரவில்லை, ஓவியங்கள் சிதைந்திருக்கும் நிலையை பார்த்தால்.
//எழுத்துகள் மங்கலாக தெரியாமல் சரியாக வந்திருப்பதை பார்க்கையில், இந்த கோளாறு Pre Processing முறையில் பக்கங்கள் மற்றும் எழுத்துகளை ஒன்று சேர்க்கும் போது நேர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.//
DeleteSMART ரபீக்! இந்த இரத்ததடதிற்கான விளம்பரம் ஹாட் & கூல் ஸ்பெஷல் இதழில் வந்திருந்தது நினைவிருக்கலாம். அந்த படங்களை கொஞ்சம் பாருங்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்! அதே படம் இந்த இதழில் OUT OF FOCUS போல பிரிண்ட் ஆகியுள்ளது.எங்கோ தவறு நடந்துள்ளது.
இது போல் மீண்டும் நடக்காமல் இருக்க ஆசிரியர் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம் !
புதிய பதிவில் எழுந்த அச்சு தொடர்பான கேள்விகளுக்கு எடி பதிலளிக்காததில் இருந்தே, இது அனைத்து பிரதிகளிலும் நடந்த ஒரு மொத்த அச்சு குழப்பம் என்று தெரிகிறது. எடி ஒரு அதிகாரபூர்வமான பதிலை கொடுப்பார் என்று எதிர்பார்ப்போம், விஸ்கி ... தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு அது பழகிய விஷயம் ஆகிற்றே :)
Delete//ஜூனியர், 'எனது பிள்ளை ' என்ற அடையாளத்தைத் தாண்டி இத்துறைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திடலே பிரதானம் என்பது எனது அபிப்ராயம் !//
ReplyDeleteசார்,அற்புதமான அழகான, ஆனால் சாதிக்கும் உறுதிம் கொண்ட வரிகள்.இன்னும் சில காலத்தின் பின் பேப்பர்தாள் என்றால் என்ன என்று கேட்ககூடிய டிஜிட்டல்,கணணிமய யுகம் வந்தாலும் கூட சமாளிக்கும் திறமை கிடைக்கவும் டெக்ஸ் மகன் கிட் போல் சாதித்திடவும் எடிட்ட மகன் ஜூனியர் எடிட்டருக்கு நல்வாழ்த்துக்கள்.
மறு பிரவேசமே சவாலானது.. அதிலும் மின்வெட்டுடன் மறுபிரவேசம்.. என்னமோ பங்கு.. ஒரு அமைதியான நாளில் உங்களிடம் இது குறித்து நேரில் வினவி கற்றுக் கொள்கிறேன்...
ReplyDelete