Powered By Blogger

Saturday, April 06, 2013

ஒரு போராளியும்...ஒரு கோமாளியும்...!


நண்பர்களே,

வணக்கம். தகிக்கும் வெப்பம் ஒரு பக்கம் ; அட்டகாசமாய்க் கண்ணாமூச்சி ஆடிடும் மின்வெட்டு மறு பக்கம் ; அதன் பலனாய் சிறுகச் சிறுக நசிந்து போகும் தொழில்கள் இன்னொரு பக்கம் - ஆனால் இவை அனைத்துக்கும் மத்தியிலும் விழாக்கோலத்தை தனதாக்கிக் கொண்டுள்ள நகரம் எங்களது ! பெருநகரங்களில் வசிப்பதில் சௌகர்யங்கள், சந்தோஷங்கள் நிரம்பவே இருந்திடலாம், ஆனால் நம் பாரம்பரியங்களின் அடையாளமான திருவிழாக் கொண்டாட்டங்களை இன்றும் ரசித்திட வேண்டுமெனில் - நீங்கள் இருந்திட வேண்டிய இடங்கள் சிறு நகரங்களே ! அம்மன்கோவில் திருவிழா துவங்கியது முதலே சிவகாசியே பரபரப்பின் மறு வடிவமாகிட, திடீரென முளைத்த சாலையோர ராட்டினங்கள் ; தண்ணீர்ப் பந்தல்கள் ; கருப்பட்டி மிட்டாய்க் கடைகள் (!!) என அலுவலகம் செல்லும் பாதையெங்கும் புது வரவுகள் !! அடுத்த மூன்று நாட்களுக்கு சிவகாசி முழுக்கவே விழாக்கோலமும், விடுமுறை நாட்களுமே என்பதால், வாங்கிட்ட போனஸ் தொகைகளோடு வீட்டுக்கு விரையும் பணியாளர்கள் ; அந்தக்கவரைக் கரைக்க ஜவுளிக் கடைகளில் தவமிருக்கும் இல்லத்தரசிகள் என்று திரும்பிய பக்கமெங்கும் சரசரக்கும் புது நோட்டுக்களைப் பர்ஸ்களில் கொண்டிருக்கும் மக்களின் சந்தோஷ முகங்கள் !!ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேறிடும் இந்த மகிழ்ச்சிகளை ரசிப்பது ஒரு பக்கமிருப்பினும், இந்த விடுமுறைகளுக்குள் நமது இதழ்களின் தயாரிப்பு தாமதமாகிடக் கூடாதே என்ற பதைபதைப்பு என்னுள் நிறையவே  ! நம் பைண்டிங் பிரிவு நண்பரின் கடைசி நேர அசாத்திய ஒத்துழைப்பு இல்லாவிடின், இன்று 'ஹி ..ஹி..' என்ற தலைப்போடு அசடு வழியும் ஒரு பதிவையே இங்கு நான் எழுதிட நேர்ந்திருக்கும். சுடச் சுட ஏப்ரலின் இரு படைப்புகளும் சற்று முன்னே நம் அலுவலகம் வந்து சேர, நாளைய தினம் ஞாயிறாக இருப்பினும் நம் பணியாளர்கள் packing பணிகளைச் செய்து முடித்து கூரியரில் ஒப்படைக்கிறார்கள். திங்கட்கிழமை  பயணத்தைத் துவக்கிடவிருக்கும் பார்சல்கள் அடுத்த நாட்களில் உங்கள் கதவுகளைத் தட்டிடும் - hopefully :-)

இதழின் ராப்பரில் ப்ளூ வர்ணம் - ரொம்பவே  rich ஆக வந்துள்ளது  ! 
ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்தியினில், மாதந்தோறும் ஒரு தேர்வை எதிர்நோக்கி நிற்கிறோம் நாங்கள் ! அட்டைப்படத்தில் துவங்கிடும் முதலாவது பரீட்சைக்கு ஆஜராகி இருப்பது நமது ஓவியர் மாலயப்பனும், டிசைனர் பொன்னனும் ! ஷெல்டன் ஓவியத்தைப் போட்டிட்ட மாலையப்பனக்கும் ;  அதன் மீது நகாசு வேலைகள் செய்து வழங்கி இருக்கும் பொன்னனுக்கும் உங்கள் மார்குகள் எத்தனை என்பது வரும் வாரத்தில் தெரிந்திடும் ! இங்கே டிசைனாகப் பார்ப்பதை விட  இதழ்களின் ராப்பர்களாய்ப் பார்த்திடும் போது, அச்சில் ஒரு 10% மெருகு கூடிடுவதை  சமீப மாதங்களில் நான் கவனித்து வருகிறேன். So - பாராட்டுக்களோ ; மண்டையில் கொட்டுக்களோ - இதழ் உங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்திடும் வரை சற்றே பொறுமை ப்ளீஸ் ?!

பரீட்சை # 2-ல் ஆஜராகப் போவது நானும், நமது மொழிபெயர்ப்பு டீமும் ! பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பு செய்து தரும் நமது behind the scenes writer  துவக்கி வைத்த தொடர் ஓட்டப் பந்தயத்தின் இரண்டாம் நிலையைக் கையாண்டவர் திரு கருணையானந்தம் ! அவரது முதல் copy-யில் அவசியப்பட்ட திருத்தங்களைச் செய்து, ஷெல்டன் & பிரதானப் பெண்மணியின் வசனப் பகுதிகளை பிரத்யேகமாய் எழுதிய வகையில் ஓட்டப் பந்தையத்தின் anchor leg எனது பொறுப்பு. லார்கோ அளவிற்கு வசனங்களில் / கதைக் களத்தில் அழுத்தம் இல்லாததால் - comparatively சுலபமான பணியே இம்முறை என்று சொல்லத் தோன்றுகிறது ! Anyways - வழக்கம் போல் இதனில் அபிப்ராயங்களுக்குப் பஞ்சமிராது தானே ?!

பரீட்சை # 3 எங்களது டைப்செட்டிங் டீமிற்கு ! சீரான எழுத்து அளவுகள் ; கண்ணை உறுத்தாத பலூன் placements என்று சிறப்பான செயல்பாடு என்பதே எனது அபிப்ராயம். தொடரும் பரீட்சை # 4 எங்களது prepress டீமுக்கு ! துளியும் சந்தேகமின்றி 100/100 ஸ்கோர் செய்திருக்கிறார்கள் ; அசாத்திய வண்ணக் கலவைகளை இம்மி பிசகாமல் அச்சுக்குத் தயார் செய்து கொடுத்து நம் அச்சகப் பணியாளர்களின் வேலைகளை சுளுவாக்கிய பெருமை ஓசையின்றிப் பனி செய்யும் அந்த prepress தொழில் வல்லுனர்களுக்கே ! தேங்க்ஸ் guys !!

ஷெல்டன் கதையென்ற போதே சென்சார் பற்றிய கேள்வியும் எழுந்திடும் என்பதை யூகிக்க பெரும் ஆற்றல் அவசியமில்லையே...! ஆனால் இது அதிகம் சிரமம் தராத action சாகசமாக அமைந்திட்டதால், எவ்வித சிரமும் நேர்ந்திடவில்லை என்பதே நிஜம் ! ஒரு போராளியின் படலம் 54 பக்க சாகசத்தோடு நிறைவு பெற்ற பின்னே துவங்குகிறது ஒரு கோமாளியின் படலம் !

மாப்பிள்ளையாகும்   கனவோடு களமிறங்கும் கிட ஆர்டினும் சரி ; கவுண்டமணியை frame க்கு frame நினைவு படுத்தும் ஷெரிப் டாக்புல்லும் சரி, கதை முழுவதிலும் சிக் பில் & குள்ளனை தூக்கிச் சாப்பிட்டு விடுவது கண்கூடு ! வழக்கம் போல் வண்ணத்தில் டாலடிக்கும் வுட்சிடியின் சிரிப்புப் போலீசின் குட்டியானதொரு ட்ரைலர் இதோ :

கதையைப் படித்து முடித்த பின்னே நீங்களும் "ஆர்ஹியூ" என்று  சொல்லத் துவங்கினால், நாங்கள் பெற்ற மதிப்பெண்கள் என்னவென்று யூகிப்பதில் எங்களுக்குச் சிரமமிராது !அது என்ன "ஆர்ஹியூ" என்று இப்போதைக்குக் கேட்காதீர்கள் !

இதழின் இறுதிப் பக்கங்களை ஆக்ரமிப்பது மீண்டும் நம் குள்ள மந்திரியே ! "ஒரு போஸ்டர் படலம்" preview ஏதும் அவசியப்படா ஒரு அக்மார்க் கலாட்டா ! வழக்கம் போல் மியாவி ; குட்டீஸ் கார்னர் ; இரத்த வெறியன் ஹாகர் ஆகியோரும் உண்டு ! வெயிலுக்கு இதமாய் நம் Hot n' Cool ஸ்பெஷல் அமைந்திட்டதா என்பதை அறிந்திட எப்போதும் போல் ஆவலாய் இருப்பேன் ! Fingers crossed !

புது வரவோடு, மறு (வண்ண) அவதாரில் வருகை புரிந்திடும் "டைகர் ஸ்பெஷல்" அட்டைப்படமும், அந்த இதழ் பற்றியும் நாளைய பகல் பொழுதில் குட்டியாய் ஒரு பதிவிடுகிறேன் ! முதன் முறையாக, ஒரே சமயத்தில் 2 x  நூறு ரூபாய் இதழ்கள் வெளியாவதால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப் பதிவை ஒதுக்கிட்டால்,தொடரும் உங்களின் பின்னூட்டங்களைக் குழப்பமின்றி, நெரிசலின்றிப் படிக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்று மனதுக்குப் பட்டது ! So I'll hope to catch you again tomorrow ! Bye for now folks ! 

119 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பா!

      Delete
  2. e bay listing எப்போ சார்?

    ReplyDelete
    Replies
    1. Pushparaj R : புதன்கிழமை E-bay லிஸ்டிங் வந்திடும் - எங்களது விடுமுறைகள் முடிந்த பின்னே !

      Delete
  3. Trailors super.

    டாக் புல் & கிட் ஆர்டின் ஜோடி super and always my favourite than சிக் பில் :)

    ReplyDelete
  4. காத்திருந்தது வீண் போகவில்லை சார் :)

    பதிவு படித்து முடிக்கும் வரையில் எங்கே 'காப்டன் டைகர்' பற்றி எதுவுமே சொல்லவில்லையே என நினைத்து கொண்டு இருந்தேன். நாளை மதியம் ஒரு பதிவு என்றதும் சமாதானம் ஆனது மனது.

    "சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும்" :)

    ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல் பொருத்தவரை அட்டைப்படம் நன்றாக உள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் சொன்ன மாதிரி புத்தகங்கள் அனுப்பிட முயற்சிக்கும் நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

    சார், உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய அம்மன்கோவில் திருவிழா (பொங்கல்?) வாழ்த்துக்கள். பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழுங்கள்.

    செவ்வாய் கிழமையை எதிர் நோக்கி ....

    திருப்பூர் ப்ளுபெர்ரி



    ReplyDelete
  5. மாலையப்பன் அவர்களுக்கு நூறு !
    பொன்னன் அவர்களுக்கு நூறு !

    ReplyDelete
    Replies
    1. ஷெல்டனை அந்த பெண் இவ்வளவு கேவல படுத்தி இருக்க வேண்டாம் 1

      Delete
    2. ஷெல்டன்: "அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா மிஸ்டர் ஸ்டீல் க்ளா ... "

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : கவலை வேண்டாம் ...ஷெல்டனின் பதில் அதிரடி இதை விட வீரியமாய் இருக்கும் என்பதைப் பார்க்கத் தான் போகிறீர்கள் !

      Delete
  6. ஒரு கழுதையின் கதை - ஆரம்பமே அசத்தல் போங்க... முதல் பக்கத்தை படித்த பொழுதே சிரித்து விட்டேன் ...

    சிக்பில் பட்டையை கிளப்ப போவது உறுதி ...

    காத்திருக்கிறோம் ...

    ReplyDelete
  7. Front cover artwork is amazing. Really beating the originals. Title tagline on back cover is very relevant.

    ReplyDelete
  8. இந்த வெயிலுக்கு மோரும்,பானைகரமும் போல் இருக்கிறது இந்த அறிவிப்பு.

    ReplyDelete
  9. Dear Editor,

    இந்த முறை பெங்களூரு comicon 2013 வருகை தரும் (with Lion/Muthu stall) plan உள்ளதா? தெரிவித்தால் நாங்கள் plan செய்ய வசதியாக இருக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. Periyar : Comic Con அமைப்பினர் நம்மை விடுவதாக இல்லை ! விரைவில் ஒரு பதிவை எதிர்பாருங்கள் !

      Delete
    2. அதற்க்கான சிறப்பு புத்தகங்கள் ஏதேனும் உண்டா சார் !

      Delete
    3. அப்படியே கொஞ்சம் plus 6 இதழ்கள் ... :-)

      Delete
    4. ஸ்பைடர் டைஜெஸ்ட் மற்றும் detective டைஜெஸ்ட் தயார் செய்யப்பட்டு காமிக்கான் அனுப்பப்பட்டால் ..... :-) :-)

      Delete
    5. அப்ப கண்டிப்பாக வருகிறீர்கள் :) உறுதி செய்ததற்கு நன்றி!

      எங்களது நெடுநாளைய கோரிக்கையான காமிக்ஸ் கிளாசிக்ஸ digest (Spider, Steel Claw, Lawrence & David, Johny Nero, Archie etc.) களுடன் வருவீர்களென நம்புகிறோம்

      Delete
    6. நண்பர்கள் கோரிய இவற்றுடன் கோடைமலரோ ,தீபாவளி மலரோ !

      Delete
  10. NOWADAYS OUR COVER DESIGNS ARE BECOMING VERY ATTRACTIVE AND RICH IN COLOR!

    ReplyDelete
  11. சொன்னது போல நடத்தி காட்ட துடிப்பாய் உழைத்த நம் பைண்டிங் பிரிவு நண்பர்,prepress தொழில் வல்லுனர்கள் மற்றும் packing பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் !ஆசிரியர் மற்றும் அனைத்து அலுவலக நண்பர்களுக்கும் கோவில் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. அட்டை படம் இதுவரை வந்த இதழ்களிலே இதுவே டாப்!நீல வண்ணத்திற்கு எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு !அட்டகாசம் !

    ReplyDelete
  13. Dear Editor,

    Thanks to the staff who agreed to work on a Sunday! Going this length for a comic book is laudable. Perhaps the next time we should spare their weekends!

    ReplyDelete
    Replies
    1. The front cover color combinations are awesome!

      Delete
    2. Comic Lover (a) சென்னை ராகவன் : A comic book it might be...but pretty much obvious it has now become a monthly battery charger for a lot of us in here ! So going that bit extra to help speed up things is always o.k. for us !

      Delete
  14. please update ebay as soon as possible...........

    ReplyDelete
  15. நிச்சயமாய் நம்பிக்கை இருக்கிறது சொல்ல போகிறேன்
    ஆர்ஹியூ

    ReplyDelete
  16. hot & cool splku நான் வைத்த பெயர் ஒரு கோமாளி ஒரு போராளி ஸ்பெஷல். எடிட்டர் அதை ஒரு பதிவுக்காவது வைத்தாரே சந்தோஷம்:-)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மாவீரரே!

      Delete
  17. * குறித்த நேரத்தில் இதழைத் தயார் செய்திட பெருமுயற்சி எடுத்திட்ட அனைவரையும் இதழைக் கைகளில் ஏந்திப் புரட்டிடும்போது நிச்சயம் நன்றியுடன் நினைத்துக் கொள்வோம்!

    * முன் அட்டை ஓவியம் ரிச்சான ஒரு எஃபெக்ட் கொண்டுவந்திருப்பது கண்கூடு! எடிட்டர் சொல்லியிருப்பதுபோல், நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாக ஜொலிக்கப்போவது உறுதி!

    * முன் அட்டையின் அந்த நீல வர்ணம்- தகிக்கும் கோடையில் தர்பூசணியை ஏந்திடுவதைப்போன்ற அனுபவத்தைக் கொடுக்கப் போவதும் உறுதி! நல்ல பொருத்தமான வண்ணத் தேர்வு!

    * முன் அட்டைப்படத்தில் ஷெல்ட்டனையோ, அந்தப் பெண்ணையோ வரைந்ததைவிட சிதறித் தெரிக்கும் டாலர் நோட்டுகளை வரைந்திடவே ஓவியர் சிரமப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது!

    * கிட் ஆர்ட்டினின் கல்யாண கலாட்டா வாசகர்களின் வயிறைப் பதம்பார்க்கப் போவது உறுதி என்பது ட்ரெயிலரிலேயே தெரிகிறது! கிட் ஆர்ட்டின் அளிக்கப் போகும் காமெடி/கல்யாண விருந்தில் கலந்துகொள்ள நாங்களும் தயார்! :)

    ReplyDelete
  18. பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி ப்ளூ!

    ReplyDelete
  19. அட்டைப் படங்கள் சூப்பர் . நாளுக்கு நாள் நமது அட்டைப்படங்கள் மேருகேறுக்கொண்டே வருகிறது. அட்டகாசம்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் தலைவரே! தங்கள் பொக்கிஷ சாலையில் இருந்து அடுத்து ஒரு அணு குண்டு! அமர்க்களமான அட்டைப் படம்! நேரில் இன்னும் மிரட்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை! தங்களது தீவிரக் குழுவிற்கு மற்றுமோர் மகுடம்!

    ReplyDelete
  21. ஒரே நேரத்தில் இரு இதழ்கள் வருவது மகிழ்ச்சி . .

    ReplyDelete
  22. Cover arts definetly beat the originals - simply superb. After reading about sivakasi festival, i am started missing my town (chidambaram) natraja car festival.

    ReplyDelete
  23. டைனமைட் ரெக்ஸ் என்றொரு ஹீரோ . . (புயல் படலம்) இரு கதைகளுடன் தொங்கலில் நிற்கிறது தெரியுமா ? :-)

    ReplyDelete
    Replies
    1. http://johny-johnsimon.blogspot.in/2012/12/dynamite.html நானும் விடாமல் இவரைப் பற்றி அப்பப்போ உங்களை கேட்டுகிட்டே தான் வாத்யாரே இருக்கேன்! ஹி ஹி ஹி

      Delete
  24. காலை எழுந்தவுடன் ,பதிவை படித்தவுடன் தான் எனது B .P .நார்மலுக்கு வந்துள்ளது .நாளை மறு நாளை ஆவலுடன் எதிர் பார்கிறேன் .(அலுவலகத்துக்கு விடுமுறை விடலாமா எனவும் பலத்த யோசனை இப்போது )

    ReplyDelete
  25. நீங்கள் கூறியது 100 கு 100 உண்மை சார்.பதிவிலே வரும் அட்டை படத்தை விட நேரில் ஒவ்வொரு முறையும் அட்டை படம் இன்னும் டாப் .இப்பொழுது மட்டும் அது தவறாகி விடுமா என்ன..?

    பதிவின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கி .....!

    ReplyDelete
  26. டியர் சார்,

    தொடர்ந்து நமது இதழ்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய சிவகாசி அம்மனை மணமுருகி வேண்டிகொள்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் லயன் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், இந்த திருவிழா நாட்கள் சந்தோசமாக கழிய வாழ்த்துக்கள்.

    மேலும் அடுத்த திருவிழாவுக்கு முன்பு ஒரு 500 ரூபாயில் ஸ்பைடர் ஸ்பெஷல் புக் வெளிவந்தால், பிளேடு கார்த்திக் அவர்களை கூப்பிட்டு வந்து அலகு குத்துவதாக வேண்டிக்கொள்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. //அலகு குத்துவதாக வேண்டிக்கொள்கிறேன்//
      //அழகாய் இருக்குமே!//
      அப்படியே பூமிதிக்கும் ஏற்பாடு பண்ணீங்கன்னா, உங்க ரெண்டு பேரையும் அதிலே தள்ளி விட வசதியா இருக்கும்!!! :) :) :)

      Delete
  27. சார்.. உங்களுக்கும் .உங்கள் குடும்பத்திற்கும்,நமது பணியாளர்களுக்கும் பண்டிகை தின வாழ்த்துக்கள் .அதுவும் எங்களுகாக இன்றும் பணிக்கு வரும் நமது பணியாளர்களுக்கு மேலும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் ...

    ReplyDelete
  28. ஆசிரியருக்கு,

    முன்னட்டைப்பட ஓவியம், டிசைன் இரண்டும் பிரமாதமாக இருக்கின்றன. ஒரிஜினல் அட்டைகளை பயன்படுத்தச்சொல்லி பலர் கருத்துக்களைக் கூறிவந்தாலும், அதில் நம் ஓவியரின் கைவண்ணம் இருப்பதையே என்னைப்போல பலரும் ரசித்துவந்திருக்கிறார்கள், வருவார்கள் என்பது உண்மை!

    சிக்-பில், ஷெல்ட்டன் இரண்டு கதைகளினதும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் பக்கங்களில், டைப் செட்டிங் பகுதியினர் மிக அருமையாக எழுத்துக்களை அமைத்திருக்கிறார்கள். இடத்துக்கு ஏற்ப உங்களது எடிட்டிங்கும் கனகச்சிதமாக வசனங்களை இடம்பெறச்செய்திருப்பது தெரிகிறது. இது முழு இதழிலும் தொடர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    முன்னைய வெட்டி ஒட்டும் காலத்திலிருந்த நுணுக்கமான வேலைப்பாடு இப்போதைய தொழிநுட்ப காலத்தில் இல்லையே என்ற ஏக்கம் இனி இல்லாமற்போய்விடும் என்று தெரிகிறது. இத்தகைய நுணுக்கங்களில் அடைந்துவரும் சிறப்புத் தேர்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறக்கட்டும் உங்களதும், உங்கள் பணியாளர்களதும் வேலைகள்! எங்களுக்கு கிடைக்கட்டும் அருமையான காமிக்ஸ்கள்.

    திருவிழாக் கால வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பணியாளர்கள் சிவகாசி மக்கள் அனைவருக்கும்!
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
    பி.கு: மொழிபெயர்ப்பு போட்டி 2 - க்கு விண்ணப்பித்த அயல்நாட்டு வாசகர்களுக்கு இம்முறை வாய்ப்பு இல்லையா? கதை அனுப்பப்படவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஊப்ஸ்...நாளைக்கு அனுப்பிடப்படும் !!

      Delete
    2. நன்றி-தகவலுக்கு!

      Delete
    3. To: Editor,

      ஸ்கேன் செய்ய கரண்ட் தொல்லை இருந்தால், டைட்டில் மட்டும் அனுப்பிடுங்கள் சார். கதையை தேடிப் பிடிக்கிறோம்.

      Delete
    4. 21 halberds the third story in the first series!

      Delete
  29. "ஒரு கழுதையின் கதை" முதல் பக்க ட்ரைலரே செமக்காமடி. முழு கதையையும் உடனே படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. cool !

    ReplyDelete
  30. முதலில் நமது லயன் குழுமத்தினர் அனைவருக்கும் அம்மன் திருவிழா வாழ்த்துக்கள் சார்.

    குறித்த நேரத்தில் புத்தகங்களை தயார் செய்து எங்களுக்கும் மகிழ்ச்சி அளித்ததற்கு நன்றிகள் நமது குழுமத்தினருக்கு.

    சாம்பிள் பக்கங்களே கதை பற்றிய ஆவலை அதிகம் ஆக்குகின்றன.

    டைகர் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன் சார்.

    அப்படியே பெங்களூர் காமிக் கானிற்கு ஏதாவது டைஜெஸ்டுகள் அடிக்கும் என்ன இருக்கிறதா என்பதையும் கூறுங்கள் சார்.

    // இதழ்களின் ராப்பர்களாய்ப் பார்த்திடும் போது, அச்சில் ஒரு 10% மெருகு//
    நேரில் பார்க்கும் போது இன்னும் பலவேப்று அழகாக இருக்கிறது.

    கண்டிப்பாக அனைத்து பரிட்சையிலும் 100/100 வாங்கிவிடுவீர்கள்.

    ReplyDelete
  31. பின்னட்டை பன்ச் லைன்?!

    ஒரு போராளி, ஜென்டில்மேன் ஆகிடுவது Hot..!
    ஒரு கோமாளி, ஜென்டில்மேன் ஆகிடுவது Cool..!

    ***

    ஆனால் நீங்கள் போட்டிருக்கும் சாம்பிள் பக்கங்களைப் பார்த்தால், அழகிய பெண்ணிடம் ஏமாந்த நமது Hot அங்கிள்தான் கோமாளி போல் தெரிகிறார்! :) ஷெரிஃப்பின் மூக்கை Cool-ஆக உடைத்த கிட் ஆர்ட்டின் போராளி போல் தெரிகிறார்! :)

    ReplyDelete
    Replies
    1. // Hot அங்கிள் //

      ஹா ஹா! என்னா ஒரு நக்கல்!! :D

      Delete
  32. மை டியர் மானிடர்களே!!!

    ஒரு ஒப்பந்தத்தின் கதை-ஒரு கழுதையின் கதையை உரிய அனுமதி பெறாமல் தனது வலைப்பூவில் "நல்ல பிசாசு" வெளியிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.இந்த அநாகரிக செயலில் ஈடுபட்ட நல்ல பிசாசை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி ,கணம் கோர்ட்டார் அவர்களை கேட்டுகொள்கிறேன்.தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.
    (ஒன்றுமில்லை.வெயில் ரொம்ப ஜாஸ்தி ....ஹிஹி)

    ReplyDelete
  33. Vijayan sir,

    It's a great post, please convey our thanks to folks in your office, for working on weekend to send these books.

    I got the அம்மன்கோவில் திருவிழா fever after reading this post.
    (It makes me to think about visiting my native place to attend அம்மன்கோவில் திருவிழா there.)

    Eagerly awaiting to get these wonderful comics (hope, it will reach me on Tuesday or on Wedensday).
    Any update about +6 and classic reprints in color?
    Awaiting to get those books too.

    Regards,
    Mahesh kumar S

    ReplyDelete
  34. அட்டைப்படம் ஓவியர் மாலையப்பன் மிக அருமையாக வரைந்துள்ளார். ஷெல்டன் அந்த பெண்ணின் கையை பற்றியிருக்கும் இடத்தில் ஷெல்டனின் மணிக்கட்டு உடைந்து வளைந்திருப்பதைப்போல் இருக்கிறது. ஓவியர் மாலையப்பன் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் படத்தின் பின்னணியில் கோடு, வளைவு இவற்றைதவிர்த்து படத்திற்கு தக்கபடி பின்னணியை சேர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // அந்தப் பெண்ணின் கையைப் பற்றியிருக்கும் இடத்தில் ஷெல்டனின் கை உடைந்து வளைந்திருப்பதைப் போல //

      கர்ணன்ஜி!

      ஒரு ஓவியரின்  கழுகுப் பார்வையில், மற்றொரு ஓவியரின் சிறு தவறுகூட தப்பிவிடாதுதான்!

      இந்தப் பதிவில், ஷெல்டனின் ஒரு பக்க ட்ரெயிலரில், அந்தப் பெண்  ஷெல்டனின் கைக்கு விலங்கு மாட்டிடும் யுக்தியை கவனித்தீர்களா? ஒருவேளை... அவள் மாட்டிய விலங்கு ஷெல்டனின் கையை மடக்கி வளைத்திருக்கலாமில்லையா? வலி உயிர் போவதால்தான் அத்தனை பணத்தையும் காற்றில் பறக்கவிட்டாரோ என்னவோ?! ;)

      Delete
  35. மீண்டும் ஒரு பதிவு சற்றுநேரத்திற்கு முன்பு எடிட்டரால் பதிவிடப்பட்டுள்ளது நண்பர்களே!

    ReplyDelete
  36. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் பங்குனி பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. I think in trichy we get hot & cool special, tiger special on wednesday!AMMAN FESTIVAL GREETINGS TO OUR EDITOR & ALL HIS TEAM MEMBERS!

    ReplyDelete
  38. அட்டை படத்தில் சிகப்பு மஞ்சள் என்ற நமது ஆஸ்தான TRADE மார்க் வண்ணங்கள் மிஸ்ஸிங் : (
    நமது வழக்கமான ஸ்டைலுக்கு சற்றும் குறை வைக்காமல் தமது பணியை செம்மையாக செய்துள்ளார் திரு மாலையப்பன். சமீப காலமாக திரு.பொன்னனின் கைவண்ணம் சற்று அழுத்தமாகவே வெளிப்படுகிறது.
    அட்டைப்படம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக FEATURES இல்லாவிட்டாலும் WE ARE MAINTAINING THE STATUS QUO.

    சட்ரென்று பார்க்கும்போது பின்னட்டையின் சிக்பில் ஏதோ ஒரு " வருகிறது " விளம்பரம் போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. "ஒரு போராளியின் கதை" டைட்டில் "ஹாட் & கூல் " டைட்டிலை விட பெரிதாக முன்னட்டையில் ஆக்கிரமித்ததால் வந்த விளைவோ இது??



    ReplyDelete
  39. விஜயன் சார்,
    பதிவு தபால் மூலம் பெரும் வாசகர்களுக்கு இதழ்கள் எப்போது அனுப்படும் சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  40. ஆசிரியர் மற்றும் இளம் ஆசிரியர் [ ரொம்ப படுத்தறனோ...? பேசாம எடிட்டர் மற்றும் ஜூனியர் எடிட்டர்னு சொல்லிட்டுப்போலாமே? ] அவர்களுக்கும் , தங்கள் குழுவினருக்கும் இனிய அம்மன் பண்டிகை நல் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  41. Thanks to you and your teams effort sir..

    ReplyDelete
  42. AMMAN FESTIVAL GREETINGS TO OUR EDITOR & ALL HIS TEAM MEMBERS!

    ReplyDelete
  43. கோமாளியையும், போராளியையும் காண மிக ஆவலாக உள்ளேன். அட்டை படம் மிக அருமை...

    ReplyDelete
  44. ஒரு கழுதையின் கதை! இப்படி ஒரு முழுநீள காமெடி கதையைப் படித்து எவ்வளவு வருடங்கள் ஆகிறது! மிக அருமை! சமீபத்தில் வெளியான நகைச்சுவை கதைகளில் பெஸ்ட் இதுதான்! அட்டகாசமான தமிழாக்கம் - சரளமான நகைச்சுவை வசனங்கள்! வாழ்த்துக்கள் சார்!

    உறுத்தும் விஷயங்கள் இரண்டே இரண்டு!
    - 'ஒரு கழுதையின் கதை' - இது பொருத்தமான தலைப்பாக தோன்றவில்லை! கழுதை என்பது யாரைக் குறிக்கிறது? நமது லவ்லி கௌபாய் ஆர்டினை என்றால் எனது கண்டனங்கள்!
    - ஆர்ஹியூ - என்பதற்கான அர்த்தம் என்னவென்று விளங்கவில்லை! அல்லது அது ஆர்டினின் அர்த்தமற்ற குழறலா?

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : நன்றிகள் கார்த்திக் ; yes ..ஒரிஜினலின் தலைப்பைப் பின்பற்றிய பெயரிடல் இது ! "லானாவின் கழுதை " என்பது போன்ற தலைப்பு ஒரிஜினலில் ! அவளுக்காக, அவளது பாரங்களைச் சுமக்கும் ஒரு அப்பாவிக் கழுதையின் கதை என்று வைத்துக் கொள்ளலாம்...!

      ஆர்ஹியூ ....வழக்கம் போல் ஆர்டினின் பஞ்ச் டயலாக் - துளி அர்த்தமும் இன்றி !

      தமிழாக்கத்தின் போது என் மனதில் முழுக்க ஓடியது கவுண்டமணி கேரக்டர் தான்...! ஷெரிப் அந்த பாணியில் கச்சிதமாய் இருப்பதனால் லயித்து எழுதிட இயன்றது !

      Delete
    2. ST courier மீது இடி விழ :-(
      ஒரு புலம்பலின் கதை :-D

      Delete
  45. இதுவரையில் புத்தகம் கைவரப் பெராதவர்களுக்காக இந்த ஸ்பெஷல் பதிவு: லயன் காமிக்ஸ்: ஹாட் & கூல் ஸ்பெஷல்

    ReplyDelete
  46. வாங்கி விட்டேன் !நேரில் அட்டை மிக பிரம்மாண்டமாய் நாயகர் முன்னிலை படுத்தி அற்புதமாய் வந்துள்ளது !சிறப்பாய் அட்டை படம் தயாரிக்க இதுவே மாதிரி !எழுத்தும் கலக்கல்; ஆகா மொத்தம் பட்டய கிளப்புற அட்டை !அற்புதம் !

    ReplyDelete
  47. ஆர்ஹியூ = ஆர்-ஹி-யூ (Are -He-You )= அவனா நீ :)

    ReplyDelete
    Replies
    1. @Stalin:

      :D இவ்வாண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உங்களுக்குத்தான்! ;)

      Delete
  48. ஒரு போஸ்டர் படலம் அட்டகாசம் !ஏற்கனவே படித்தது போல இருக்குதே !

    ReplyDelete
  49. சற்று முன்னர் இரு புத்தகங்கள் அடங்கிய உறையை ST கொரியர் அன்பர் கருத்தாக என் அலுவலகத்தில் கொடுத்துச்சென்றார். ST கொரியரின் இன்னமும் ஒரு நேரம் தவறா சேவை.கொரியர் அன்பர்களுக்கு நன்றி.

    வழக்கமான PACKING முறையில் இந்த முறையும் புத்தகங்கள் மடங்காமல் கிழியாமல் வந்துள்ளன. THANKS TO LION COMICS STAFF & ST COURIER

    முதல் முறையாக ஒரே மாதத்தில் இரண்டு நூறு ருபாய் புத்தகங்களை ஒரே சமயத்தில் சொன்ன தேதியில் வாசகர்களுக்கு வழங்கிய அசிரியர் & கோ குழுவின் அசுர உழைப்புக்கு ஒரு மெகா SALUTE. இதே போல் இனிவரும் மாதங்களிலும் திட்டமிடுதலுடன் உழைத்தால் மாதம் முதல் வாரத்தில் ஒரு லயன் இதழும் மாதத்தின் முன்றாவது வாரத்தில் ஒரு முத்து இதழுமென வெளியிடும் ஒரு STANDARD FORMAT டில் வெற்றி பெரும் நாள் தொலைவில் இல்லை.

    புத்தகத்தின் பைண்டிங் வழக்கம் போல CLASS.

    அட்டை படத்தின் ஸ்கேன் பற்றிய எனது நேற்றைய பின்னூட்டம்

    // விஸ்கி-சுஸ்கி 8 April 2013 10:40:00 GMT+05:30
    அட்டை படத்தில் சிகப்பு மஞ்சள் என்ற நமது ஆஸ்தான TRADE மார்க் வண்ணங்கள் மிஸ்ஸிங் : (
    நமது வழக்கமான ஸ்டைலுக்கு சற்றும் குறை வைக்காமல் தமது பணியை செம்மையாக செய்துள்ளார் திரு மாலையப்பன். சமீப காலமாக திரு.பொன்னனின் கைவண்ணம் சற்று அழுத்தமாகவே வெளிப்படுகிறது.
    அட்டைப்படம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக FEATURES இல்லாவிட்டாலும் WE ARE MAINTAINING THE STATUS QUO.

    சட்ரென்று பார்க்கும்போது பின்னட்டையின் சிக்பில் ஏதோ ஒரு " வருகிறது " விளம்பரம் போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. "ஒரு போராளியின் கதை" டைட்டில் "ஹாட் & கூல் " டைட்டிலை விட பெரிதாக முன்னட்டையில் ஆக்கிரமித்ததால் வந்த விளைவோ இது?? //

    எனது நேற்றைய கருத்தில் சற்றும் மாற்றமில்லை. INFACT ஹாட் & கூல் இதழின் அட்டை படம் YET AN OTHER DISAPPOINTING REGULAR WORK.

    அதற்கான காரணங்கள்

    1.அட்டைபடத்தில் உள்ள CHARACTER களின் கை கால் முகங்களின் PROPORTIONATE மற்றும் POSITION களில் சிறு சிறு குறைகள் எப்போதும் உள்ளன. ( ஷெல்டன் கையை பிடித்திருக்கும் பெண்ணின் மேல் கை விரல் இதற்கு ஒரு உதாரணம்)

    2.CHARACTER களின் BACKGROUNDடில் இந்த மாதிரி DOMINATING கிராபிக் டிசைன் வருவது அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை. ஒரு அட்டைப்பட ஓவியம் குறைந்தபட்சம் 90% அட்டையின் பரப்பளவை ஆக்கிரமிக்கும்படியாக FG + BG( FG CHARACTER க்கு ஏற்ற SITUATION BG ) இணைந்து ஓவியரின் கைவண்ணத்தில் உருவாக்கி அதன் டைட்டில் மற்றும் BORDERING கில் மட்டும் கிராபிக் டிசைன்னை நுழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    3.சிக்-பில் ளின் ஓவியம் ஒரு துல்லியமில்லாத LOW RESOLUTION ஓவியம் போல தெரிகிறது.வண்ணங்களும் அவ்வளவாக பளிச்சென்று இல்லை. அட்டை படத்துக்கு ஏன் இப்படி ஒரு ஓவியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியவில்லை ;(

    புத்தகத்தின் உள்ள ஒரு விரைவு பார்வை பார்த்ததில் ....

    அற்புதமான ஓவியங்கள் நமது எண்ணங்களுடன் வண்ணமயமாக போர் புரிய காத்துள்ளன. உள்ளே இரண்டு கதைகளின் பிரிண்டிங் தரமும் அற்புதம். கண்களை சோதிக்காத எழுத்துக்களின் அளவுகள் நன்று.வழக்கமான ஹாட்-லைன் இல்லாதது மிகப்பெரிய குறை.

    புத்தகத்தை படித்தபின் மீண்டும் சந்திப்போம்...HAPPY READING GUYS ... : )

    ReplyDelete
    Replies
    1. // ( ஷெல்டன் கையை பிடித்திருக்கும் பெண்ணின் மேல் கை விரல் இதற்கு ஒரு உதாரணம்) //

      ஒரிஜினல் ஓவியத்திலயே இந்த இடம் சற்று கண்ணை உறுத்துகிறது. திருஷ்டிப்பொட்டு எனலாம் இதை...

      Delete
    2. எனக்கு அட்டை படத்தின் ஒரே உறுத்தல் ஆறு விரல்கள் ....

      Delete
    3. //.சிக்-பில் ளின் ஓவியம் ஒரு துல்லியமில்லாத LOW RESOLUTION ஓவியம் போல தெரிகிறது.//

      Delete
  50. ஷெல்டன் கதை இப்போதுதான் படித்துமுடித்தேன்.அட்டகாசம்..ஹாட்லைன்,காமிக்ஸ்டைம் என்று நான் முதலில் படிக்கும் உங்களது பகுதிகள் இல்லாதது வெறிச்சென்று உள்ளது சார்..ஏன் சார்? எங்கள் மேல் ஏதாகினும் கோபமா?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக காமிக்ஸ் டைம் இல்லாதது பெரும் குறையே !இடம் போதாது என தூக்கி விட்டீர்களா !இனி தயவு செய்து இது போன்ற குற்றங்களில் ஈடு படாதீர்கள் !

      Delete
  51. @ நண்பர்களுக்கு :Ebay -ல் லிஸ்டிங் துவக்கியாச்சு !

    ReplyDelete
  52. இன்று மாலை தான் சுமார் 4:30 மணியளவில் எனக்கு வாய்னே ஷெல்டனின் 'ஒரு ஒப்பந்தத்தின் கதை' கிடைத்தது! ஆபீஸ்'ல் டீ குடிக்கும் gap-ல் இந்த 54 பக்க இதழை படித்து முடித்துவிட்டேன்!

    வாய்னே ஷெல்டன் கதையில் என்னை கவர்ந்த மிக முக்கிய அம்சமாக கதையில் ஆங்காங்கே காணபட்ட மொழிபெயர்ப்பு சாரல் தான்! உங்கள் மொழிபெயர்ப்பு குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    அதுவும் பக்கம் எண் 28-ல் வரும் திருக்குறள், 31-ல் வரும் 'பாவத்தின் சம்பளம் மரணம்! ஆமென்! மற்றும் பக்கம் 38-ல் வரும் 'அப்பழுக்கற்ற மனிதனை ஆண்டவன் அடிக்கடி படைப்பதில்லிலையே என்ற தத்துவங்கள் இன்னமும் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன. நல்ல சிந்தனை, நல்ல வார்ப்பு!

    குழந்தைகளும் வரும் காலத்தில் அதிகளவில் படிக்க வேண்டிய இதழாக நமது இதழ்கள் இதன் மூலமே அதிகமாகும்!

    ReplyDelete
  53. discoverboo : இப்போதெல்லாம் நமக்குக் கிட்டிடும் களங்கள் விசாலமானவை என்பதால் மொழிபெயர்ப்பினில் ஈடுபாடு கூடிடுவது சுலபமாகிறது.

    அது மட்டுமல்லாது வண்ணங்களோடும் , பெரிய சைஸ் சித்திரங்களோடும் ,பேனா போட்டியிட வேண்டுமெனில் - நிறையவே out of the box சிந்தனைகள் அவசியமாகிடுகின்றன !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக உங்களது முழு பிரவாகமும் இதில் பொங்கி கரை புரண்டோடுகிறது ,இதுவும் மொழி பெயர்ப்பின் உச்சமே !வாழ்கை பாடங்களும் அங்கங்கே வந்து செல்கின்றன ,அருமை சார் !

      Delete
  54. நேற்று இரவு ஷெல்டன் னை படித்து முடித்தேன். SORRY அனுபவித்து முடித்தேன்.ஷெல்டனின் கதையை சட்டென்று முடித்துவிட்டு அடுத்த கதைக்கு தாவ மனமில்லை. படித்த பக்கங்களிலேயே லயித்திருந்தேன்.

    ஒரு மெகா சைஸ் பூங்கொத்தை "பிடிங்க சார்" என கொடுக்க வேண்டியது ஆசிரியரின் மந்திர கைகளில்.

    என்ன ஒரு மொழிபெயர்ப்பு...

    நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சென்ற மாத லார்கோவின் அதிரடிஆலிங்கனத்தின் அணைப்பு போதையில் கட்டுண்டு ஷெல்டனின் இந்த இதழின் மேல் எனக்கு அவ்வளவாக எதிர்பார்ப்பின்றி இருந்தேன்.அதற்கேற்றாட்போல் இந்த ட்ரைலரில் ஒரு பெண்ணிடம் பன் வாங்கும் ஒரு 50 வயது ஹீரோ என்ன பெரிதாக நம்மை கவர்ந்துவிடப்போகிறார் என்று தவறாக கணித்துவிட்டதும் ஒரு காரணம் .

    மன்னித்துவிடு தலைவா...சும்மா தூள் கிளப்பறீங்க....

    இளம் கதாநாயகர்கள் லார்கோ - சைமன் னுக்கு ஏற்ற நடையில் மொழிபெயர்த்த அதே கையோடு 50 வயது ஹீரோவுக்கு ஏற்றாற்போல் பொறுமையும் நிதானத்தையும் அனுபவ அறிவையும் தத்துவங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் வசனங்களில் கொண்டு வந்தது , ஒரு சூர்யா விஜய் படம் பார்த்த கையேடு ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த எபக்ட்டை கொடுக்கிறது .

    இந்த பாகத்தை ரொம்பவே அனுபவித்து மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர்.ஓவ்ருடைய PERSONNEL டச் பல இடங்களில் வெளிப்படுகிறது. NBS சில் கூட ஷெல்டனின் அதிரடி அவ்வளவாக கவரவில்லை.பத்தோடு பதினொன்று எனும்படியாக அப்போது இருந்தது.இந்த பாகத்தின் வசனங்கள் TRULY AMAZING.

    ஒரே ஒரு உதாரணம்...
    "நரை நெளிவது கேசத்திலோஅன்றி சுவாசத்தில் இல்லை"

    புத்தகம் வராத நண்பர்களின் நன்மையை கருதி பஞ்ச டயலாக்குகளை புத்தகத்தில் படித்தால் மட்டுமே அதன் 100 % சதவீத வீச்சை அனுபவிக்க முடியும் என்பதால் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    எனது ஒரே வருத்தம் இப்படிப்பட்ட DEDICATED WORK ஒரு சிறு வாசகர் வட்டத்தில் மட்டுமே தவழுவது நிச்சயம் அதற்க்கு பெருமை சேர்க்காது. இந்த வசனங்கள் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்றிருந்தால் அது ஒரு மெகா ஹிட் படமாக வெற்றி பெரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.அப்போது அதற்குரிய அங்கீகாரமும் ஆசிரியருக்கு கிடைக்கும்.

    என்னுடய தாழ்மையான வேண்டுகோள்..." ஏன் நீங்கள் ஒரு திரைப்படத்துக்கு ஸ்க்ரீன் பலே எழுத கூடாது ??" தமிழ் படங்களையும் கொஞ்சம் காப்பாத்துங்க சார்!! அவங்க அங்கே போடற மொக்கை தாங்க முடியல!!!"

    ReplyDelete
  55. விஸ்கி-சுஸ்கி : குட்டியானதொரு வாசக வட்டத்தைத் தாண்டி நம் இதழ்கள் பேசப்பட்டால் நிச்சயம் நம் அனைவருக்கும் நிறைவாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை !

    அதைத் தாண்டி திரைக்கதை எழுதிட முயற்சிப்பதெல்லாம் , காகிதக் கப்பல் விடும் ஆசாமி - அரபிக் கடலில் சவாரி செய்வதைப் போன்றதாக இருக்கும் ! நம் உயரம் நமக்குத் தெரியும் :-)

    ReplyDelete
  56. //இளம் கதாநாயகர்கள் லார்கோ - சைமன் னுக்கு ஏற்ற நடையில் மொழிபெயர்த்த அதே கையோடு 50 வயது ஹீரோவுக்கு ஏற்றாற்போல் பொறுமையும் நிதானத்தையும் அனுபவ அறிவையும் தத்துவங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் வசனங்களில் கொண்டு வந்தது//
    கதையினூடே உயிர்பெற்று உலவுகின்றன வசனங்கள் !லார்கோவில் ஹெராயின் விரிவான அலசல் என்றால் இங்கே சைபர் கிரைம் !

    ReplyDelete
  57. விஜயன் சார்,2 புத்தகம்களும் நேற்று கிடைத்தது!! நன்றி, மீண்டும் மீண்டும் நமது காமிக்ஸ் சொல்லிய நாளில் கிடைத்ததுக்கு!!!

    சிக்-பில் கதை முதல் பக்கத்தில் இருந்து சிரிப்பு மழைதான்! சமிபத்தில் வந்த சிக்-பில் கதைகளில் அதிகமாக சிரிக்க வைத்தது இதுதான்! ஆனால் இந்த கதைக்கான அட்டை படம் சுமார் :-( படம் தெளிவாக இல்லை, வர்ணம்கள் சரியாக இல்லை !!! நமது ஆர்டிஸ்ட்/ஆசிரியர் சில்-பில் குரூப்-அ அலட்சியம் செய்தது போல் உள்ளது :-(

    New Look Special (Lucky-Luke) அட்டை படமும் இதே போல் தான் இருந்தது! ஆசிரியர் நமது காமெடி ஹீரோ கதைகளுக்கான அட்டை படம்களுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : "சுட்டி லக்கி " அட்டைப்படம் உங்கள் குறையை நிச்சயம் நிவர்த்தி செய்யும் !

      Delete
  58. டியர் எடிட்,

    முதலில், முதல் முறையாக ஒரே சமயத்தில் 100 ரூபாய் இதழ்கள் இரண்டை ஒருசேர சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைத்த அசுர முயற்சிக்கு உங்கள் டீமிற்கு ஒரு சபாஷ்.

    இரு அட்டைகளிளும் சமீபத்தில் வந்த இதழ்களில் இருந்து ஒரு பெரிய மிளிருதலை காண முடிந்தது. முக்கியமாக ஹாட் அண்ட கூல் ஸ்பெஷலில் ப்ளு வண்ண சேர்க்கை எடுப்பாக தெரிகிறது. இனி பார்டர் அல்லாத இப்படி முழு ஓவியங்கள் கொண்டவைகளையே நமது அட்டைகளுக்கு தேர்ந்தெடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    இனி கதைக்கு, முதலில் படித்தது சிக்பில் & Co... சமீப கால சிக்பில் கதைகளில் ஏற்பட்ட தொய்வை பெருமளவு சரிகட்ட உதவிய கதைதேர்வு, மற்றும் மொழிமாற்றம் என்று உறுதியாக கூறலாம். மினி லயனில் படித்த சிக்பில் கதைகளை போன்ற ஒரு உணர்வு மேலோங்குவதே, உங்கள் மொழிபெயர்ப்பின் வெற்றிக்கு சான்று. நகைச்சுவை சரியான கோர்வையில் சிறப்பாக வெளிபட்டிருக்கிறது. இனி சிக்பில் கதைகளுக்கு, டக்புல் கிட் ஆர்டின் என்று தலைப்பே வைக்கலாம். ஆர்ஹியூ என்றால் என்ன என்று கடைசி வரை காத்திருந்து, கடைசியில் அது கிட்டின் இன்னொரு உளறல் என்று புரிந்து கொண்ட போது, சே என்றாகி விட்டது... ஆனாலும், கதையின் கடைசி வரை வந்த சஸ்பென்ஸ் ஏ1 ரகம்.

    காதுகளில் ரத்தம் வரும அளவிற்கு பொத்தல் போடும் பொடியனை சிக்பில் கதைகளில் முன்பு பார்த்த நியாபகம் இல்லை. கூடவே கொலை அதுவும் எழும்புக்கூடு உடல் வேறு. தொடரின் போக்கோடு கர்த்தாக்கள் Mature ரகத்தை எட்டிய கதைகளில் ஒன்று போல... ஒரிஜினல் வரிசையை பார்த்தால் விவரம் புரியலாம்.

    அடுத்து ஷெல்டன் கதை படிக்க முயல போகிறேன்... ஏனோ லார்கோ ஈர்த்தது போல ஷெல்டன் கதைகளிடம் ஈர்ப்பில்லை. ஒரே ஆறுதல் ஓவியங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பின் அட்டையில் சிக்பில் ஓவியம் அவுட் ஆப் போகஸ் ஆகி இருப்பதை தவிர்க்க சற்றே கூடுதல் கவனம் எடுத்திருக்கலாமோ ???

      Delete
    2. Rafiq Raja : எனக்கும் அந்த வருத்தம் உண்டே...

      கதைக்கான ஒரிஜினல் CD -க்களில் எப்போதுமே அட்டைப்படங்களின் color separated files இருப்பது வழக்கம். ஆனால் இம்முறை அது இல்லாது போனதை இறுதி நிமிடத்தில் தான் நமது ஆட்கள் கவனித்துள்ளார்கள். மின்னஞ்சல் மூலம் அந்த file களை மாத்திரம் கோரி காத்திருந்தும் - பிரயோஜனமில்லை - அந்நேரம் சம்பந்தப்பட்ட நபர் அவர்களது book festival ஒன்றினில் பிஸி ஆகிவிட்டார்கள் ! வேறு வழியின்றி இந்த இதழுக்கான அட்டைப்படத்தின் medium resolution fil ஒன்றினை நெட்டில் டவுன்லோட் செய்ய வேண்டிப் போனது - திருஷ்டிப் பரிகாரமாய் !

      Delete
    3. Rafiq: I noticed one similarity and one difference in Largo vs Sheldon.

      The Similarity: both go on unfurling their plots finally closing in on the mastermind behind the scenes.

      The Difference: The pace of the unfurl - Largo is furiously fast akin to his age while Sheldon is strategically slow perhaps again, according to his age! This has been my observation.

      Of course Sheldon beats Largo in Artwork!

      Delete
  59. டியர் எடிட்டர்

    ஹாட் & கூல் படித்து முடித்தேன். முதல் இரண்டு பாகங்களில் பெரிய அளவில் என்னை கவராத ஷெல்டன் இதில் வட்டியும் முதலுமாக கலக்கி விட்டார். சூப்பர். அட்டகாசமான மொழிபெயர்ப்பு. ஆங்காங்கே தத்துவார்த்தமான வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால் பரபரப்பான ஹாலிவுட் ஆக்ஸன் படம் பார்த்த திருப்தி.

    கிட் ஆர்டினி குழு சும்மா புகுந்து விளையாடி விட்டார்கள். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அட்டகாசமான முழுநீள காமடி கலாட்டா. அந்த குள்ளன் லொள்ளு இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கதையை படிக்கும்போது என்னுடைய சிரிப்பை பார்த்து என் மனைவி கடுப்பாகி புத்தகத்தை பிடுங்கி 'அப்படி என்ன அவ்ளோ சிரிப்பு அதுல' என்று படிக்க ஆரம்பித்து விட்டார். ஒரே ஒரு குறை. கதைக்கு "ஒரு கழுதையின் கதை" என்ற தலைப்பு ஏனோ சம்பந்தமில்லாமல் இருப்பதாக இருக்கிறது.

    மொத்தத்தில் இந்த ஆண்டு சம்மர்க்கு மறக்கமுடியாத காமிக்ஸ் கதைகளை கொடுத்து அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : உங்களது குலுங்கும் சிரிப்பு நமக்கொரு புது வாசக சகோதரியை ஈட்டித் தந்துள்ளது போலும் !

      Delete
  60. விஜயன் சார்,

    ஷெல்டன் இந்த முறை என்னை மிகவும் கவர்ந்து விட்டார். குறிப்பாக உங்களது மொழிபெயர்ப்பு இந்த இதழுக்கு மேலும் மெருகூட்டியது என்றால் மிகையாகாது.

    சித்திரங்கள் கண்ணில் வைத்து ஒற்றி கொள்ளாலம் போல உள்ளது. (நண்பர் ராஜ் முத்து குமார் - இந்த கதையின் சித்திரங்களை பற்றிய பதிவு போட அனைத்து பக்கத்தையும் ஸ்கேன் செய்யனுமுன்னு நினைக்கிறேன்)

    ஒரு கழுதையின் கதை - முதல் பக்கமே இந்த கதையின் வெற்றியை பறை சாற்றுகிறது. அருமையான கதை அருமையான மொழி பெயர்ப்பு.

    மொத்தத்தில் இந்த இதழ் நமது காமிக்ஸ் இதழ்களில் டாப் லிஸ்டில் இடம் பெறக்கூடியது.

    மந்திரி - சொல்லவே வேணாம் சார். வயிறு வலிக்குது போங்க :)

    உங்கள் டீமுக்கு ஒரு ராயல் சல்யூட் .....

    ReplyDelete
  61. ஹ ஹ ஹா ...ஆர் யூ ....சார் கையை கொடுங்கள் முதலில் கதையின் தேர்வுக்கு !நீண்ட நாட்களுக்கு பிறகு கிட்டின் அற்புதமான கதை !நகைச்சுவை தூவியிருக்கும் முக பாவங்கள்,உடை பாவனைகள்,நடை இதற்கெல்லாம் சிகரம் வைத்துள்ள மொழிபெயர்ப்பில் அடிக்கும் நக்கல் நையாண்டிகள் !ஆர்ஹியூ மணமகளும் சொல்வது அழகு !கதைநெடுக கிட்டின் தாக்கமும் ஷெரிப்பின் சேட்டைகளும் கொண்ட தொய்வில்லாத கதை ! நீண்ட நாட்களுக்கு பிறகு !குள்ளனின் பங்களிப்பு இந்த கதையில்தான் அதிகமென நினைக்கிறேன் !துவக்கத்தில் கிட்டின் காதலி எப்படி இருப்பாள் என செரிஃப் கூற ஆனால் அதனை போலவே அவர் கைபிடித்து அழைத்து சென்ற அம்மணி இருப்பதை கிட் கதையின் முடிவில் கூறும் கடைசி கட்டமும் ,அதனை விவரிக்கும் வசனங்களும் அக்மார்க் !துள்ளலான துடிப்பான நகைசுவை கலந்த கதைக்கு நன்றிகள் !இந்த கோடை கூலாய் துவங்கி உள்ளது !அடுத்தமாதம் நிறைவாய் இருக்க போவது ஆச்சரியமில்லை வேற இருப்பது டைகரல்லவா ?

    ReplyDelete
  62. இது மாதிரி ஒரு சிக்-பில் கதையா படித்து ரொம்ப வருடங்கள் ஆச்சு.பட்டய கிளப்பும் நகைசுவை தெறிக்கும் வசனங்கள். இது போன்ற நவரசமான கதைகள் தனியாக வந்தால் இன்னமும் புகழ் பெரும்.
    GREAT WORK SIR! I THOROUGHLY ENJOYED READING

    ReplyDelete
  63. ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல் படித்து முடித்தேன் ...!

    ஒரு கழுதையின் கதை சூப்பர் காமெடி. சமீபத்தில் நன்றாக சிரிக்க வைத்த கதைகளில் இது தலையாயது. சொல்லப் போனால் மினி லயனில் வந்து கொண்டிருந்த காலங்களில் எனக்கு சிக்-பில் அவ்வளவாய்ப் பிடிக்காது. கடந்த இரு கதைகள் - okk அண்ட் NBS சிக்-பில் கதை அதிரடியாய் சிரிக்க வைத்தது.

    வசனங்கள் அபாரம் - I mean மொழியாக்கம்.

    ஷெல்டனின் OOK வும் நன்றாய் இருந்தது. இதுவும் NBS-இல் வந்திருந்தால் இன்னும் நிறைவாய் இருந்திருக்கும். மூன்று பாகங்களுமாய்ச் சேர்த்து மறுபடி படிக்கத் தூண்டியது. மூன்றையும் படிக்கப் போகிறேன்.

    மொத்தத்தில் மிக நிறைவான இதழ்.

    மீண்டும் பதிவு செய்கிறேன் - translation இரு கதைகளிலும் அபாரம்.

    நான் கவனித்த ஒரே விஷயம் (இஃது குறை அன்று !!) சில இடங்களில் ஷெல்டன் வசனம் படிக்கும்போது Hotline நினைவிற்கு வந்தது ... :-) :-):-) ஏனவே எனக்கு Hotline இல்லாத குறை தெரியவில்லை !!!

    ReplyDelete
    Replies
    1. Comic Lover (a) சென்னை ராகவன் : /// சில இடங்களில் ஷெல்டன் வசனம் படிக்கும்போது Hotline நினைவிற்கு வந்தது ... :-) :-):-) ஏனவே எனக்கு Hotline இல்லாத குறை தெரியவில்லை !!!///

      காலமாய்ப் பழகிப் போனதொரு எழுத்துப் பாணியை mask செய்து எழுதிடும் ஆற்றல் ரொம்பவே rare என்பது எனது அபிப்ராயம் :-)

      Delete
  64. டைகர் ஸ்பெஷல் புத்தகத்தை வைத்துப் படிக்கப் போகிறேன் - அடுத்த இதழுடன் !

    ReplyDelete
  65. டியர் எடிட்டர்,

    இம்மாத மூன்று பரீட்சைகளிலும், மகத்தான வெற்றி பெற்றுள்ளீர்கள் நீங்களும் உங்கள் டீமும். இனி வரும் மாதங்களும் இவை தொடர வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் - and my prayers too.

    ReplyDelete
    Replies
    1. Comic Lover (a) சென்னை ராகவன் : மாதந்தோறும் ஒரு பரீட்சை எனும் போது, வாழ்த்துக்களோடு, உங்களின் பிரார்த்தனைகளுக்கும் நிச்சயம் அவசியம் உண்டு ! Many thanks !

      Delete
  66. டியர் எடிட்டர்,

    ஒரு யோசனை:

    Sunshine Library புதிய கதைகள் தாங்கி வரும் இதழ்களின் முதலிரண்டு பக்கங்கள் விக்ரம் அரவிந்த் எழுதிடலாமே. நீங்கள் proof read (மட்டும்) செய்திடலாமே! [Reprint நினைவுகள் மட்டும் நீங்கள் எழுதலாம்!]

    வயசாறதோல்லியோ ....? :-) :-) :-)

    ReplyDelete
    Replies
    1. Comic Lover (a) சென்னை ராகவன் :///வயசாறதோல்லியோ ....? :-) :-) :-)///

      ஆஹா...இதில் உள்குத்து...வெளிக்குத்து என்று ஏதும் இல்லையே..?!

      Delete
    2. நோ குத்தூஸ் ...!

      நீங்கள் லயன், முத்து, வலைப்பூ என்று நீங்களே சொன்னதுபோல் சந்து பொந்தில் எல்லாம் எழுதிடுவதால் sunshine library-யின் புதிய கதைகளுக்கு இன்னொரு முகம் எழுதினால் உங்களுக்கும் ஒரு gap ... எங்களுக்கும் next gen thoughts பார்க்கும் சந்தர்ப்பம் ...அவ்வளவே !!

      Delete
  67. பிரிண்டிங் behind the scenes குறித்து விவரித்தமைக்கு நன்றிகள் சார்

    ReplyDelete