Powered By Blogger

Sunday, November 25, 2012

அடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் !

நண்பர்களே,

வணக்கங்கள் ! NEVER BEFORE ஸ்பெஷல் முன்பதிவுகள் ஒரு பக்கம் எங்கள் அலுவலகப் பணியாளர்களை மும்முரமாக வைத்திருக்க ; மறு பக்கம் அதன் தயாரிப்புப் பணிகள் இதர நபர்களை பெண்டு நிமிர்த்தி வருகின்றது ! அச்சுக்குச் சென்றிடும் நேரம் நெருங்கி வருவதால் எங்களது 'லப்-டப்' வேகங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு உச்சஸ்தாயியில் இருக்கப் போகின்றது ! காலை ஆறு மணிக்கு jogging புறப்படும் ஆர்வலனைப் போல் கிளம்பிடும் மிஸ்டர் மின்சாரம்,திரும்புவதோ மதியம் இரண்டு மணிக்கு !  மாலை ஆறு மணி வரை விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையாய் தங்கி விட்டு, அப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேரம் கண்ணாமூச்சி ஆடிடுகிறார் ! அவரது கடாட்சம் அடுத்த 20 நாட்களுக்கு எங்களுக்கு இன்றியமையா அவசியமென்பதால் - கைகளில், கால்களில் உள்ள அத்தனை விரல்களையும் cross செய்து வைத்து ரத்தக் கண்ணீர் M.R. ராதா போல் காட்சி தருகின்றோம் ! 'ஒரு மின்சாரப் புலம்பல்' என்று இந்தப் பதிவிற்கு நீங்களாய் பெயரிடும் முன்னே, இதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகின்றேனே !அச்சுக்குப் புறப்படும் பக்கங்களின் ஒரு சிலவற்றை உங்களுக்கு டிரைலராக அறிமுகப்படுத்திடலாமே என்று மனதில் பட்டதன் பலனே இந்தப் பதிவு! கடைசி நிமிட மாற்றமான வேய்ன் ஷெல்டன் கதைகளின் பணிகள் தற்சமயம் feverish pace -ல் நடந்தேறி வருகின்றன; so அவற்றின் ட்ரைலர்கள் மாத்திரம் அடுத்த வார இறுதிக்கு ! Here goes ! 

இதோ - முதல் கதையாக வரவிருக்கும் லார்கோவின் "கான்க்ரீட் கானகம் NEW YORK "-ன் ஒரு action packed பக்கம் ! 


 தொடர்வது - லார்கோவின் பாகம் இரண்டான "சுறாவோடு சடுகுடு " கதையின் கிளைமாக்சில் இருந்து ஒரு high -voltage பக்கம் ! லார்கோவின் இந்த சாகசங்களை ஆங்கிலத்திலோ ; பிரெஞ்சிலோ ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்களுக்கு அதன் இடியாப்பச் சிக்கல் plot பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் ! புதிதாய்ப் படிக்கவிருக்கும் நண்பர்களே - சின்னதாய் ஒரு suggestion - 'உஷார் !' உங்களின் 200 % கவனத்தைக் கோரவிருக்கும் கதை இது ! 


லார்கோவின் roller coaster சவாரிக்குப் பின்னே, உங்களுக்குக் காத்திருப்பதோ ஒரு பறக்கும் கம்பளப் பயணம் ! ரொம்ப காலம் கழித்து முழு வண்ணத்தில் வந்திடும் சிக் பில் & குழுவின் இந்த கார்ட்டூன் கலாட்டாவை நிஜமாக ரசித்தேன் ! உங்களுக்கும் பிடித்திடுமென்ற நம்பிக்கையோடு - "கம்பளத்தில் கலாட்டா" கதையின் ஒரு இடைப்பட்ட பக்கம் இதோ !  


அடுத்து வருவதோ நம் கேப்டன் டைகரின் serious stuff ! "மரண நகரம் மிசௌரி" யின் தொடர்ச்சியான "கான்சாஸ் கொடூரன்" ! வழக்கம் போல் பரபரப்பான ஆக்க்ஷன் நிறைந்ததொரு சாகசம் !  


டைகரின் முதல் சாகசத்தைத் தொடர்ந்து வரக் காத்திருப்பவர் புது வரவான கில் ஜோர்டன் ! கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் என்ற போதிலும் இது ஒரு ஜாலியான துப்பறியும் கதையே ! பெல்ஜியப் படைப்புகளில் பிரசித்தி பெற்றதொரு கதைத் தொடர் இது!நம்மையும் இது impress செய்திடுமாவென்பதை NBS மூலம் அறிந்திடக் காத்திருக்கின்றேன் !  இதோ - "அலைகளின் ஆலிங்கனம்" கதையின் முதற் பக்கம் !
ஜோர்டனைத் தொடர்ந்து மீண்டும் கேப்டன் டைகர் ! புதிதாய்த் துவங்குமொரு சாகசத்தின் பக்கம் இதோ ! "இருளில் ஒரு இரும்புக் குதிரை" டைகருக்கும் ரயில்களுக்குமுள்ள காதலை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகும் கதை ! 


டைகரின் இரண்டாம் சாகசத்தைத் தொடர்ந்து WAYNE SHELTON - பாகம் 1 & 2 நூற்றியேழு பக்க நீளத்தில் அற்புத வண்ணக் கலவையில் வரவிருக்கிறது ! அத்தோடு வண்ணக் கோட்டா நிறைவுற - மாயாவி & மாடஸ்டி black & white  பகுதியினைத் துவக்கிடுகிறார்கள் ! அடுத்த வாரப் பதிவில் இவர்களது ட்ரைலர்களும் இடம் பெறும் ! 'இன்றைய இந்தப் பதிவை இத்தோடு முடித்துக் கொள்ளும் வழியைப் பாரு சாமி ' என்று எனது இன்வெர்ட்டர் பாட்டரிகள் கூவிடத் துவங்கியதால், கொசுக்கடிக்குள் ஒரு அவசரமான adios amigos போட்டிட வேண்டிய நெருக்கடி ! See you soon folks ! Take care !

347 comments:

 1. me the first,சார், ஆலிங்கனம்-னா என்ன அர்த்தம்?

  ReplyDelete
  Replies
  1. தழுவுதல், அணைத்தல் - என்று நினைக்கிறேன் நண்பரே! ஒருவேளை கட்டிப்புடி வைத்தியமோ?

   Delete
  2. MH Mohideen : 'கடல் அலைகளின் அணைப்பு' என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம் இந்தக் கதையின் தலைப்பிற்கு !

   Delete
  3. To: Editor,
   டிங்! கில் ஜோர்டன் கதைக்கு நீங்கள் போட்டிருக்கும் ட்ரெய்லர் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் - காலையில். பார்த்தீர்களோ தெரியவில்லை....

   Delete
  4. This is one of my fav. online tamil dictionary. you can search for both Tamil and English words! :)

   http://www.dictionary.tamilcube.com/index.aspx

   embrace : கட்டித்தழுவு , ஆலிங்கனம் செய்.
   embrace : ஆலிங்கனம்
   ஆலிங்கனம் [ ālingkaṉam ] , embrace . தழுவுகை ; 2 . copulation , புணர்ச்சி .
   ஆலிங்கனம் பண்ண , to embrace

   Delete
 2. trailer கள் அட்டகாசம், NBS ஒரு சூப்பர் டுப்பர் ஹிட் ஆகுமென்பதைப் பறைசாற்றுகின்றன? இந்த இதழ் நிச்சயம் ஒரு visual treat டாக அமைவது உறுதி! மின்சாரத்துடன் தாங்கள் மற்றும் உங்கள் டீம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு வரும் ஜனவரி '13 ல் கண்டிப்பாக பலனை எதிர்ப்பார்க்கலாம். வாழ்த்துக்கள் முன்னதாகவே....
  .

  ReplyDelete
 3. marvelous...thank you Vijayan for your Dedicated & sincere effort. Ur blog increase the fever more. Pictures are really looking good. Coming pongal will be a memorable one. Thank you again.

  ReplyDelete
 4. சார் nbs ல டைகர் கதை ஒரே கதையின் இரண்டு பாகம இல்லை இரண்டு தனி தனி கதையா

  ReplyDelete
 5. இருளில் ஒரு இரும்பு குதிரை கதை கன்சாஸ் கொடூரன் கதையின் தொடர்ச்சியா இல்லை புது கதையா. புதுசென்றால் மொத்தத்தில் எத்தனை பாக கதையிது.

  ReplyDelete
  Replies
  1. //புதிதாய்த் துவங்குமொரு சாகசத்தின் பக்கம் இதோ ! "இருளில் ஒரு இரும்புக் குதிரை" டைகருக்கும் ரயில்களுக்குமுள்ள காதலை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகும் கதை ! //

   Delete
 6. ஆசிரியருக்கும்
  நண்பர்களுக்கும்
  வணக்கம் !

  திருநெல்வேலியில்
  நமது இதழ்கள்
  கிடைத்திட
  ஏற்பாடுகள்
  செய்யப்பட்டுள்ளது !

  இன்னும்
  ராஜபாளையம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்
  தூத்துக்குடி
  பகுதிகளில்
  விற்பனை செய்ய
  முயற்சிகள்
  நடந்து வருகிறது !

  எனக்கு
  ஒரு யோசனை
  தோன்றுகிறது !

  நம் வாசகர்களில்
  விருப்பமுள்ளவர்கள்
  10 or 20 பிரதிகள்
  வாங்கி
  தங்கள் பகுதியில்
  உள்ள கடைகளில்
  விற்பனைக்கு
  கொடுக்கலாமே !

  நிச்சயம்
  அதிக வாசகர்களை
  நமது இதழ்கள்
  சென்றடையும்
  என நம்புகிறேன் !

  இன்று விதையிடுவோம்
  நாளை விருட்சமாகும் !


  [திருநெல்வேலி
  புதிய பேருந்து நிலையத்தில்
  பிளாட்பாரம் எண் 2ல்
  1. P.A.மணி புக்சென்டர்
  2. புத்தக பூங்கா
  ஆகிய கடைகளில்
  நமது இதழ்கள் கிடைக்கின்றன...]

  ReplyDelete
  Replies
  1. Msakrates: உங்கள் பதிவை பார்க்கும் போது புதுக்கவிதை நடையிலும் படிக்கும் போது புத்துணர்ச்சி தருவதாகவும் உள்ளது நண்பரே! மொத்தமாக சந்தா செலுத்த வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், அதன் நடைமுறை பற்றி அறியாத வாசகர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்!!! பத்து ரூபாய் லாபம் கிடைத்தாலும் அதற்கு மேலாக உழைக்க நம் சிறு வியாபாரிகள் எப்பொழுதும் பரவசமாக இருப்பர்! தொடர்ச்சியாக விசாரிப்புகள் கடைகளுக்குச் சென்றால் அவர்களுக்கும் எழுச்சியாக எண்ணங்கள் தோன்றும்! காலம் கனியும் வரை விதை மண்ணுக்குள் புதைந்துதானே இருக்கும்!!!

   Delete
  2. @msakrates : நண்பரே புது கவிதை நிறைய எழுதுவீர்களோ? மிகவும் உன்னதமான செயல் செய்து உள்ளீர் நீங்கள்!!! hats off!!!

   Delete
 7. இந்த trailer கள் நமது வாசகர்களை திருப்தி படுத்தும் என்று நினைக்கிறேன். மிக அருமையான சித்திரங்கள், வண்ணங்கள்...சித்திரத்தின் தரம் வாவ் ...பாராட்டுக்கள். இவ்வளவு மின்சார தட்டுபாட்டிலும் உங்களது குழு அயராது உழைப்பதற்கும் எனது பாராட்டுக்கள். பாவம் எங்களுக்காக இரவெல்லாம் கண் விழித்து வேலை செய்கிறீர்கள். எப்படித்தான் முடிகிறதோ- எடிட்டருக்கும், உங்கள் குழுவினருக்கும் மீண்டும் மீண்டும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் .

  ReplyDelete
 8. வாவ் எடிட்டர்,

  புதிய டைகர் கதை ஒரு இன்ப அதிர்ச்சி. வண்ணக்கலவை பார்க்கவே ஜொலிக்கின்றது. அப்படியே அட்டைப்படத்தினையும் ஒரு ஸ்கேன் செய்திடுங்களேன் வரும் வாரங்களில்.

  Thanks so much for the hard work by your teams!

  ReplyDelete
  Replies
  1. Comic Lover : அட்டைப்படத்தினை கடைசி ட்ரைலரில் unveil செய்திட எண்ணம் ! :-)

   Delete
  2. சார், அட்டைப்படத்தில் யார்யாருக்கு இடம் என்று ஒரு guessing / போட்டி வைத்தால் என்ன....?

   Delete
 9. NBS ன் உச்சகட்டம் நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்துகொண்டே இருக்கிறது

  ReplyDelete
 10. லார்கோவின் வண்ணக்கலவை அசத்துகிறது .....விறு விருப்பை ட்ரெயிலர்கள் வெளிச்சம் போட்டு காட்ட சிவகாசியில் இருள் என்பது சிறிது கவலை தரும் செய்தியாக உள்ளது ! சொன்ன நாளில் புத்தகம் கண்டிப்பாக கிடைக்கும் என்றே நினைத்தாலும் ,நமது டீமுக்குள்ள வேலை பளுவை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது ,ஆனால் அந்த மலைப்பை கண்டிப்பாக இந்த ட்ரெயிலர்கள் போக்க உதவிடும் இன்னும் அதிகரிக்க உள்ள முன்பதிவுகள் அந்த மலைப்பை துடைத்தெறியும் உற்ச்சாக ஊற்றாய் அமையவிருப்பது திண்ணம் ! நமது டீமினரை உற்ச்சாக படுத்த நமது முன்பதிவாலர்களும் ஆர்வமாய் இருப்பது கண்டு நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் இருக்காது என அதிரடியாய் அறிவித்துள்ளீர்கள் ,ஐயோ நான் தவற விட்டு விட்டேனே எனும் குரல்கள் இன்னும் ஆறு மாதங்களில் ஒலிக்க இருப்பது காதில் விழுகிறது ஆனால் அவை நிச்சயமாய் புதிதாய் வர உள்ள வாசகர்களின் குரல்களே !.....பச்ச கலரு கண்களுக்கு குளிர்ச்சியை தர , கார் நிற்கும் சாலையோரம் என நிச்சயமாய் கதை நம்மை உண்மை முதலாளி உலகத்தை கண் முன்னே விரிக்க இருக்கிறது ,கேட்ட கேள்விகளுக்கு உடனே வெடிக்க வெடிக்க பதில் .......சைமன் கூட இருப்பது இன்னும் உற்ச்சாகத்தை பாய்ச்சுகிறது ! ஐயோ !சைமன் ............இந்த ட்ரைலரில் இன்னும் அதிகமாய் ,ஏகத்திற்கும் கவர்கிறாரே ! சாலையை தவிர்த்து குறுக்கே பாயும் நண்பரை கண்டு,இது போல வரவிருக்கும் நாட்களை தகர்த்து உடனே குறுக்கே வரக்கூடாதா என ஏங்குகிறேன் ...வழக்கம் போல கிட்டின் அறிமுகம் சிறிது புண் முறுவலை தருகிறது.........ஜோர்டானின் அறிமுக கதை வரிகள் ,நுழையவிருக்கும் கோட்டை என திகிலை கிளப்பினால் எது பற்றியும் கவலை படாத பறவை என ஏகமாய் தொடரும் காட்ச்சிகள் மனதில் நுழைய, வண்ண சிதறல்கள் மத்தாப்பை மனதில் கொளுத்துகின்றன !இருளில் ஒரு இரும்பு குதிரை என இன்னொரு தொங்கும் தோட்டத்திற்கு நாங்கள் தயாராக வேண்டுமே என்பது சற்றே வருத்தமளித்தாலும் ஏற்று கொண்டுதானே ஆக வேண்டும் இந்த அற்புதமான தலைப்பிற்காக !
  பொங்கட்டும் உற்சாக வெள்ளம் !தங்கட்டும் மனமெங்கும் ! காத்திருப்போம் கனவுகளுடன் WAYNEவின் ட்ரெயிலர்கலுக்காக !

  ReplyDelete
 11. ம்..... பக்கங்கள் ட்ரெய்லருக்கே உரித்தானவையாகவே இருக்கின்றன. இதழ் சிறப்புற வெளிவர வாழ்த்துக்கள் ஸார். இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறோம் - ட்ரெய்லர்கள்!!!

  ReplyDelete
 12. Dear Vijayan Sir,
  The Chennai book fair festival is nearing fast
  Could you provide us with a glimpse of what we can expect during the festival ?

  ReplyDelete
 13. Ultimate trailer sir. We are waiting with bated breath to put our hands on NBS.
  You are the true "Thala" for us.

  ReplyDelete
 14. டியர் எடிட்டர் சார்,
  NBS இன் trailor கள் சூப்பர். லார்கோ விஞ்சின் action தூள். கேப்டன் டைகர் , கில் ஜோர்டான், சிக் பில் & குழு என trailor அற்புதமாக உள்ளது. ஜனவரியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். மாயாவி,மாடஸ்டி இவர்களோடு இடம் இருந்தால் சட்டி தலையன் ஆர்ச்சியின் சிறிய கதையும் இடம் பெற செய்யுங்கள் சார். நன்றி.
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 15. ட்ரைலர்(கள்) அட்டகாசம்!!! :)

  ReplyDelete
  Replies
  1. சத்... பூம்... பூம்... டுமீல்... விர்ர்ரூரூம்ம்ம்ம்... ஊஊஊஷ்ஷ்ஷ்... யாஹீஊஊ... ஸூஸூஸூம்ம்ம்ம்... விர்ர்ரூரூம்ம்ம்ம்... ஸ்ஸ், யப்பா!

   லார்கோ ரெண்டே பக்கத்தில் பட்டையை கிளப்பிவிட்டார்!!! ஐயாம் வொய்ட்டிங் :) :) :)

   Delete
 16. மரமண்டை சார்!

  மண்ணுக்குள் இருக்கும்
  விதைக்கு நாம்தான் நீர் தெளிக்க வேண்டும்...

  ஏஜண்டுகள்
  நமது இதழ்களுக்கு
  ஏஜன்ஸி எடுக்க
  தயங்குவதன் காரணம்

  முன்பணம் செலுத்த வேண்டும் என்பதும்

  புத்தகங்களை வரவழைக்க ஆகும்
  செலவை ஏஜண்டுகளே
  தர வேண்டும் என்பதும் தான்...

  ReplyDelete
  Replies
  1. Msakrates: தண்ணீர் மட்டுமே விதையை முளைக்க வைப்பதில்லை அதற்கான பருவமும்,பக்குவமும் கூடி வரவேண்டும்! ஏற்கனவே விதைக்கப்பட்ட விதைக்கு தாங்கள் நீர் தெளித்து வருகிறீர்கள்! இனி காலம் தான் அதை முளைக்க வைக்க வேண்டும்! தாங்கள் கூறியது போல முன்பணமும்,செலவும் இருந்தாலும் அதை கடந்து வரும் லாபம் மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். இது எல்லா வியாபாரங்களுக்கும் பொதுவான விதி என்பதால் நாம் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்? ஏஜெண்டுகளுக்கு விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே ஏற்பட வேண்டும் அதற்கு அப்புறம் பாருங்கள் monopoly -க்காக சண்டைப்போடுவார்கள்!!!

   Delete
 17. கில் ஜோர்டனா?ஜில் ஜோர்டனா?எது சரியான உச்சரிப்பு?(சாத்தானுக்கு வந்த சந்தேகத்தை பாரீர்.ஹிஹி).

  ReplyDelete
 18. part: 1

  வலைத்தளத்தில் ஒரு பாராட்டு விழா!!!

  இன்று நடக்கவிருக்கும் இந்த மிகப்பெரிய பாராட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் வாசக நண்பர்களை வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்று முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!! இது ஒரு வலைத்தள வாசகர்களுக்கான பந்தயகளம். முதல் 5 இடத்திற்கான வெற்றியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று முறைபடி அறிவிக்கப்படவிருக்கிறார்கள்! அதே சமயம் அவர்களின் தேர்வுக்கான தகுதியையும் வலையுலகத்துக்கு தெரிவித்து பாராட்டு விழாவும் நடைப்பெற உள்ளதால் தயவுசெய்து யாரும் கலைந்து செல்லவோ அல்லது கல்லெடுத்து எறியவோ வேண்டாம் என்று பயத்துடன் கேட்டுக்கொள்கிறேன்! கண்டிப்பாக 5 வெற்றியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேர்வாணையம் கூறிவிட்டபடியால் என்னால் முதல் 5 போட்டியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது! எனவே மற்றைய வாசக அன்பர்கள் என் மீது கோபமோ மனவருத்தமோ கொள்ள வேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! அதையும் மீறி என்னை திட்ட தோன்றினால் ஒரு நிமிடம் இந்த அப்பாவியை நினைத்துப் பாருங்கள். முதல் ஐந்து இடத்தில் கடைசி இடத்தைக் கூட என்னால் பிடிக்க முடியவில்லை! நானும் மனிதன் தானே, எனக்கும் ஆசா பாசமும்,கோப தாபமும் இருக்கத்தானே செய்யும்? நான் போய் யாரிடம் சண்டைப்போட முடியும் அல்லது கோபத்தை காட்ட முடியும் நீங்களே சொல்லுங்கள்? ஆனால் ஒன்று மீண்டும் ''சரித்திரம் திரும்பும் அப்பொழுது நாமும் ஜெய்ப்போம்'' என்ற சிந்தனையை தவிர என்ன சொல்ல?

  contd part:-2 ''வெற்றியாளர்கள்''

  ReplyDelete
 19. part.2 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  1.முதல் இடத்திற்கு எப்பொழுதும் சந்தேகம் இருப்பதே இல்லை. எளிதாக தேர்ந்தெடுத்து விடலாம்! காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த கோட்பாட்டின்படி நமக்கும் தேர்வு எளிதாக அமைந்து விட்டது! சிறிதும் சிரமம் வைக்காமல் முதலிடத்தை இவர் பிடித்துள்ளார்! short and sweet !!!

  2.அடுத்து இரண்டாம் இடம். ஒரு மாபெரும் போராளி என்ற தனித்தன்மையால் இவரும் எளிதாக வெற்றி பெற்று விட்டார்! எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன வீரம் என்று? ஆனால் களத்தில் நின்று சிக்ஸர் அடிப்பவருக்குத் தான் தெரியும் எதிராளி எவ்வளவு வலிமையாக பந்து வீசினான் என்று! you will know what is fight when you fight with someone !!!

  3.அடுத்து காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் வழிமுறையின்படி இரண்டுக்கு பின் மூன்று. இந்த தேர்வு பலருக்கு பல சிந்தனையை தூண்டக்கூடியதாக இருக்கும். என்னடா இந்த மரமண்டை தவறு செய்து விட்டதா என்ற சந்தேகம் வரக்கூடும். ஆனால் பல சமயம் வெற்றியாளர்கள் வெளியுலகத்திற்கு தெரிவதே இல்லை.சீனாவைப் போன்று நாம் தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியாளராக்கி வலைத்தளத்தை வளம் வரச் செய்யவேண்டும்!
  marathon is not a 100 metre race !!!

  4.வழுமையாய் நான்காம் இடம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இருவர் பகிர்ந்துக்கொள்கின்றனர்! இவர்கள் இருவருமே காமிக்ஸ் மீது தீராத காதல் கொண்டவர்கள். இதில் முதலாமவர் தன்னுடைய ஒரே ஒரு நாஸ்டாலஜி பதிவின் தகுதியை அடிப்படையாகக்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அவர் வெற்றி அடைந்து விட்டதால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்! winners are finalized !!!

  5.இறுதியாக ஐந்தாம் இடம். இதிலும் இருவர் வெற்றி கோப்பையை பகிர்ந்துக் கொள்கின்றனர். இவர்களும் சாதனையாளர்களே. ஆனால் சொந்த வேலை காரணமாகவோ அல்லது பெருந்தன்மை காரணமாகவோ பல போட்டிகளில் கலந்து கொள்ளாமல் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் மட்டும் என்னை ஏமாற்ற முடியாது அல்லவா? இவர்களுக்குள்ள தனித்திறமையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் சரிசமமாக வெற்றியை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். a photo finish !!!

  வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

  contd part.3 : ''சாதனையாளர்களும் அவர்களின் சரித்திரமும்''

  ReplyDelete
  Replies
  1. சஸ்பென்ஸ் தாங்கலே.மரமண்டை அவர்களே நீங்க ஹிட்ச்காக்குக்கு ரிலையன்ஸா?ஹிஹி.

   Delete
  2. புனித சாத்தான்: எங்கும் சென்று விடாதீர்கள் நண்பரே! அனைவரையும் வாழ்த்திவிட்டுத்தான் செல்ல வேண்டும்! தங்களின் ஆசிர்வாதம் அனைவருக்கும் அவசியம் சாத்தான் தெய்வமே!!!

   Delete


 20. சித்திரங்களும், வண்ணங்களும் மிகவும் அற்புதம்.

  படிப்பதற்க்கு ஏற்ற வகையில் எழுத்துகளின் அளவிலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் சிரத்தை தெரிகிறது. பாராட்டுக்கள்.

  இந்த அற்புதங்களை காண காலம் சிறிதளவு தாழ்த்திவிட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.
  ஆனால் இப்பொழுதாவது உங்கள் மூலம் கிடைத்ததே என்று மனதை சாந்தபடுத்திகொள்ள வேண்டியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. parimel :

   இந்தத் தரம், வண்ணம், விலை - மூன்றுமே ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே நாம் எட்டி இருந்தால் கூட, அன்றைய பாக்கெட்கள் இதனை afford செய்திருக்க இயலுமா என்பது ஐயமே ! ஐந்து ரூபாய் என்றிருந்த விலையினை ஏழாக மாற்றிய போது நான் பயந்ததும் சரி ; விற்பனையாளர்கள் பயந்ததும் சரி,நன்றாகவே நினைவுள்ளது ! முதன் முறையாக நூறு ரூபாய் விலையில் மெகா ட்ரீம் ஸ்பெஷல் அறிவித்த பின்னே - 'மறை கழன்று விட்டதா இவனுக்கு ?' என்ற பாணியிலான பார்வைகளையே சந்தித்தேன் நமது அலுவலகத்திற்குள்ளேயே !!

   So இந்தப் "பரிணாம வளர்ச்சி" (!!!) தரத்தில் ; ரசனைகளில் ; வாங்கும் சக்தியில் என்று ஒருங்கே நடந்தேறிட வேண்டிய சங்கதி என்றே நினைக்கத் தோன்றுகிறது ! A time for everything....and everything in time I guess !

   Delete
 21. part.3 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  1.Erode VIJAY : முதலாம் இடம் !!!

  புதியவரா இல்லை பதிவரா, சிறியவரா அல்லது பெரியவரா, நல்லவரா கெட்டவரா, சூதுவாது தெரியாதவரா அல்லது வில்லங்கம் பிடித்தவரா, படித்தவரா இல்லை பட்டிக்காடா, தன்மையானவரா வன்மையானவரா, பரந்த மனப்பான்மை கொண்டவரா அல்லது குறுக்கு புத்தியா என்றெல்லாம் பார்க்காமல் எழுத்தை மட்டுமே பார்த்து அடுத்தவரை பாராட்டும் குணமே இவரை முன்மொழிந்தது!!! கலக்கலாகவும், கலகலப்பாகவும், கலாய்க்கும் இவரின் இன்னொரு குணம் இவரை வழிமொழிந்தது!!! ஒரு சிறந்த வாசகனாக, தீராத காமிக்ஸ் காதலனாக ஒவ்வொரு பதிவும் முன்னூறு பின்னூட்டத்தை தாண்ட பாடுபடும் அந்த குணம் இவருக்கு இந்த சிம்மாசனத்தை கொண்டுவந்து வைத்து விட்டது! இதில் நான் எவருடைய சிபாரிசை ஏற்க முடியும் சொல்லுங்கள்?

  me the first !!!

  contd part .4 : ''இரண்டாம் இடம்''  ReplyDelete
  Replies
  1. ஈரோடு விஜய் சாத்தானின் நெருங்கிய நண்பர்.ஈரோடு bsnl அலுவலகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்.நம்பர் ஒன் இடத்திற்கு சரியான தேர்வு.வாழ்த்துக்கள் இளைய தளபதி அவர்களே.

   Delete
  2. சாத்தான் அன்பரே இப்படி சிறு குறிப்பு கொடுத்தால் அனைவருக்கும் யார் இந்த நண்பர் என்று அறிய எளிதாக இருக்கும்! எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்..

   Delete
  3. hats off vijay! ama vijaynale vetrithaan theriyuma!!

   Delete
 22. Happy to see the trailer... Picture abhi rakhi hei... I wholeheartedly salute to everyone involved as this is going to be an wonderful issue inspite of power issues.. Happened to experience u r difficulties with power cut as i was there yesterday..

  Saw the books in tirunelveli buss stand.. Nice to see them in book shops..

  Had enjoyed my visit there as i saw our artist in action for Wayne shelton cover page... Great...

  I am waiting....

  ReplyDelete
 23. part.4 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  2.லூசு-father of லூசு பையன் : இரண்டாம் இடம் !!!

  என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறேன்! மற்றவர்களை புரட்டிப் போட்டு தடுமாற வைக்கும் அந்த ஒரு தகுதியே இவரின் வெற்றி வாய்ப்பைக் கூட்டியிருக்குமோ என்ற சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் கடைசி நேரத்தில் எழுந்தது. இவர் தனி மனுஷன் சார்! ஆனாலும் வீரமும், அநீதியை பார்த்து கொதித்து எழும் போராட்டக்குணமும் கொண்டு கடைசி வரை மாறாமல் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இவரின் போர்க்குணமும், தடம் மாறாத நாணயமும், இந்த வலைத்தளத்தின் மேன்மைக்கான நன்மையை கருதி பதிவில் காட்டும் தன்மையும், தான் ஒரு சிறந்த காமிக்ஸ் ரசிகன் என்பதில் கொண்ட பெருமையும் இவரை இன்று இங்கு உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து விட்டது! வாழ்த்துக்கள் நண்பரே! உயர்ந்த இடத்தில் இருப்பவரை நோக்கி எறியப்படும் கற்கள் வலுவிழந்தப்பின் எறிந்த இடத்தை நோக்கியே விசையோடு குறிவைக்கும் என்பது யாருக்குத்தான் தெரியாது? இதில் இடைப்பட்ட காலம் தான் நம்மை சங்கடப்படுத்தும் பெரிய இடைவெளியாக!!! ஆனால் அந்த இக்கட்டும் நம்மில் பலரை மாற்றிவிடும் போராளியாக!!! ''நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே''

  Born to fight !!!

  contd part.5: ''மூன்றாம் இடம்''

  ReplyDelete
  Replies
  1. லூசு பையன் என்ற பெயரில் எழுதிய நண்பரை அடியேனுக்கு தெரியும்.(அவர் யார் என்று சொல்லமாட்டேன்)ஆனால் லூசு -FATHER of லூசு பையன் யார் என்று தெரியாது.

   Delete
  2. புனித சாத்தான்: இப்படி தாங்கள் குழப்பினால் கடைசியில் நான் லூசு பையனாக மாறிவிடுவேன் :)

   Delete
  3. மரமண்டை அவர்களே.லூசு பையன் வேறு.லூசு father of லூசு பையன் வேறு.இரண்டாமவர் சமீபமாக பதிவிடுபவர்.லூசு பையன் அடியேனின் மிக மிக நெருங்கிய நண்பர்.நீங்கள் தேர்ந்தெடுத்தவர் இருவரில் யாரை என அறிய ஆவலாக இருக்கிறேன்.

   Delete
  4. லூசு- father of லூசு பையன் இவரே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளவர்.
   இப்ப சரியா சொல்றேன் பாருங்கள் சாத்தான் நண்பரே, நீங்கள் இப்படி என்னை குழப்பினால் நான் உண்மையான லூசா மாறிடுவேன் :)


   Delete
  5. vaalthukkal loose -f\o loosu payyan ji!!

   Delete
 24. இருளில் ஒரு இரும்புக்குதிரை
  அலைகளின் ஆலிங்கனம்

  அட..அட..அட...நமது காமிக்ஸுக்கு தலைப்பு சூட்டுவது யார் சார்? அருமையான தலைப்புகள் சார்....

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் ரசிகன் : நள்ளிரவில், கொசுக்கடியின் மத்தியில் சிந்தனைக் குதிரை நன்றாகவே செயல்படுகின்றது என்று சொல்லத் தோன்றுகிறது ! சுடச் சுட நேற்றிரவு சூட்டிய பெயர்கள் இரண்டுமே ! கில் ஜோர்டன் கதையின் முதல் பக்க artwork -ல் கூட பெயர் இடம் பெறவில்லை - நேற்றிரவு வரை பெயர் சூட்டும் படலம் நிறைவு பெற்றிருக்காத காரணத்தால் !

   Delete
  2. ஆலிங்கனத்துக்கு, கஸ்மாலம், பேமானியே தேவலை! கொஞ்ச நாள் முன்பு ஏற்பட்ட இந்த வார்த்தைகளின் சர்ச்சைகளின் காரணமாக ஆசிரியர் தமிழாசிரியர் ரேஞ்சிக்கு தள்ளப்பட்டு வழக்கத்திற்கு அல்லாத அல்லது வழக்கொழிந்த வார்த்தையை தலைப்பாக சூட்டியது ஒரு காரணமாகயிருக்குமோ....? இந்த மாதிரி இலக்கணமான தலைப்பு இது வரை நம் இதழ்களில் கண்டிராதது மற்றும் முதல் முறை என்று நினைக்கிறேன்.? anyway புதுமாதிரியான தலைப்பிற்கு மாற தயாராவோம் guys.

   Delete
  3. இருளிள் ஒரு இரும்புக்குதிரை - மெய்யாலுமே மிரட்டலான பெயர் சார்...

   Delete
  4. miga arumaiyaana thalaippukkal sir!!

   Delete
 25. part.5 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  3.கோயம்பத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : மூன்றாம் இடம்

  நான் முன்பே வாழ்த்துரையில் கூறிய முன்னுரையில் உள்ள ஆச்சர்யம், திரும்பவும் இங்கே எல்லோருக்கும் தலைக்காட்டும்! தவறு நடந்து விட்டது என்று வாதம் செய்பவர்கள் எங்கே, எனக்கு விளக்கம் கூறி தொடர்ந்து நான்கு அல்லது பதினொன்று பின்னூட்டம் இட்டு எல்லோரையும் படிக்க வைத்து பாருங்கள்? படிப்பதை விட எழுதுவது ரொம்ப கஷ்டம் சார்! விஷயமே இல்லாமல் எழுதவும் முடியாது, ரசனையே இல்லாமல் யோசிக்கவும் முடியாது என்று பெரியவர்கள் எழுதிவிட்டு போயுள்ளது எத்தனை பேருக்கு இங்கு தெரியும் சொல்லுங்கள்? இதில் என்ன விசேஷம் என்றால் எனக்கே முதல் வரி எழுதிய பின்புதான் அடுத்த வரியாக சட்டென்று தோன்றியது! தன் ரசனையை வெளிக்காட்டும் ஆர்வத்திலும், தன் ரசனையின்பால் கொண்ட பெருமிதமும், சாதுவாக தட்டிக்கேட்பதில் உள்ள வீரமும் இவரை மூன்றாம் இடத்திற்கு அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது! இதில் மற்றவர் யோசித்து எழுதி பதிவிட்டு, மீண்டும் நன்றாக வளப்படுத்தி பதிவிட என்ன இருக்கிறது? என்று நானும் உங்களை போலவே தலையை பிய்த்துக்கொள்கிறேன் நண்பர்களே! அப்பப்பா, சற்று பெரிய பதிவு கொஞ்சம் சுற்றி வளைத்தது போலவும் ஆகிவிட்டது. அடுத்த பதிவில் மாற்றி கொள்கிறேன் நண்பர்களே:D கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே! பலன் தானாக நீ தூங்கும் போது கூட உன் வாசல் கதவை தட்டும்!!!

  தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் !!!

  contd part .6 : ''நான்காம் இடம்''


  ReplyDelete
  Replies
  1. கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா அடியேனின் நல்ல நண்பர்.தீவிர காமிக்ஸ் காதலர்.அவருடைய முழு நீள விமர்சனங்களில் காணப்படும் உற்சாகமும்,காமிக்ஸ் மீதான காதலும் யாரிடமும் காணமுடியாத ஒன்று.நண்பருக்கு ஒரு ராயல் சல்யூட்.

   Delete
  2. வாழ்த்துக்கள் ஸ்டீல் கையரே ! அப்படியே இன்னொரு முறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

   Delete
 26. part.6 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  4.meeraan and podiyan : நான்காம் இடம் :

  இந்த நண்பர்கள் இருவருமே ஒரே தகுதியின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்! ''தீராத காமிக்ஸ் காதல்'' . இது ஒரு படத்தின் தலைப்பு போல் இருந்தாலும் இவர்கள் காமிக்ஸ் காவியத்தில் சேர்க்கப்படக்கூடிய கதாநாயகர்கள்! காமிக்ஸ் போராட்டத்தில் முன்னவர் தீவிரவாதியாகவும் பின்னவர் மிதவாதியாகவும் தமிழகத்திலும் இலங்கையிலும் வலம் வருகின்றனர். வழி எதுவென்பது முக்கியமல்ல, சுதந்திர வேட்கை தான் முதல் அவசியம்! அது இரண்டு பேருக்குமே அடுத்தவருக்கு தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. நேரம் இருந்தால் மீரானின் 21.5.12 தேதியிட்ட பதிவை படித்து பாருங்கள் நண்பர்களே, கண்களின் கண்ணீர் காணாமல் போய்விடும்!!! you the best meeraan !!!

  நாலு பேருக்கு நல்லதுனா எல்லா காமிக்ஸும் படிக்கலாம் தப்பில்ல !!!

  contd part .7 '' ஐந்தாம் இடம்''

  ReplyDelete
  Replies
  1. அடடே... இதை எதிர்பார்க்கவேயில்லை... ஆனாலும், நமக்கு இது ஓவர்தான். ஓ.கே. நண்பர்களே !!! (???). உங்களுக்கு இப்போ வெறும் வாய்க்கு அவல் கிடைச்சிருக்குமே? லெட்ஸ் ஸ்டார்ட் த கும்மி! (அண்ணே... மர மண்டைண்ணே... இப்போ திருப்திதானே? :) )

   Delete
  2. நண்பர் மீரானின் அந்த பதிவை கீழே paste செய்திருக்கிறேன்.
   //////பழைய இதழ்களை பற்றி படிக்கும் போது அளவில்லாத சந்தோசம்வுண்டாகுது. 1984 ல் இருந்து காமிக்ஸ் படித்து வருகிறேன். நான் அப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தன்தருவை என்ற சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்தேன் . என் சித்தப்பா காமிக்ஸ் படிப்பார்கள் அவர்களின் சேமிப்பில் இருந்து ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன். என் ஆர்வத்தை பார்த்து என் தந்தை பின்னர் வாங்கி வர ஆரம்பித்தார்கள். என் தந்தை வேலையின் பொருட்டு இரண்டு தினங்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள திருசெந்தூர் சென்று வருவார்கள். வரும்பொழுது எல்லாம் லயன் ,முத்து, திகில் ,மினிலயன்,ஜூனியர் லயன், ராணி, இந்திரஜால், அப்பு, மேத்தா,jamespond ,பூந்தளிர், அம்புலிமாமா, 3d காமிக்ஸ் இப்படி ஏதாவது ஒன்று வாங்கி வருவார்கள். அப்போ எங்கள்வூருக்கு மொத்தம் 4 பஸ்தான் வரும். கடைசி வண்டி நைட் 11 :30 மணிக்கு வரும். என் தந்தை அதில் தான் வருவார்கள் .கடைசி வண்டிக்காக காத்திருந்து அது வந்ததும் என் தந்தை எனக்காக வாங்கி வரும் காமிக்ஸை கைகளில் பெற்றதும் நான் அடையும் சந்தோசத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது . இன்று சென்னையில் இரும்பு மற்றும் LCD,LED வியாபாரம் செய்கிறேன் , எவ்வளவோ லாபங்களை பார்தாகி விட்டது ,எனினும் சிறு வயதில் என் தந்தையிடம் இருந்து நான் காமிக்ஸை பெறும்போது ஏற்பட்ட சந்தோசம் வேறு எதிலும் கிடைக்கவில்லை.பஸ்ஸே வராத ஊரில் 60 கிலோமீட்டர்க்கு அப்பாலிருந்து நான் விரும்பிய காமிக்ஸ் என்னை வந்தடைந்த அதிசயம்தான் என்ன?... நான் படித்த அனைத்து காமிக்ஸ்களும் புத்தம்புதியதாக வார்னிஸ் மனம் மாறாமல் படித்ததுதான். ஆரம்ப இதழ்களில் 85 கோடைமலர் கிடைக்கவில்லை, என்னை கஷ்ட்ட படுத்த விரும்பாத என் தந்தை என் தாய் மாமனுடன் என்னை திருநெல்வேலிக்கு அனுப்பி அங்கு ஏதாவது கடையில் கிடைத்தால் வாங்கிகொள்ள சொன்னார்கள். அப்பொழுது எல்லாம் என்னை பொறுத்தவரை நெல்லைதான் இந்தியாவிலயே மிகப்பெரிய சிட்டி. புக்கை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நெல்லை டவுன் முழுவதும் நானும் என் மாமாவும் சுற்றினோம் ஆனால் கிடைக்கவில்லை. அன்று நான் அழுத அழுகையை என் மாமா இன்று வரை சொல்லுவார்.என்னை சமாதானபடுத்த, அப்போ ரிலிஸ் ஆகிஇருந்த விடுதலை மற்றும் நானும் ஒரு தொழிலாளி படத்திற்கு அழைத்துச்சென்றார்கள். இன்று வரை அந்த புக்கை நான் படிக்கவில்லை. நான் படித்த ஒரே பழைய காமிக்ஸ் டெக்ஸ்வில்லரின் பவளசிலைமர்மம் அல்லது பளிங்குசிலைமர்மம். ஆரம்பத்தில் எனக்கு அந்த புக் கிடைக்கவில்லை, என்னுடைய அண்ணனுக்கு உடல் நலமில்லை என்று நாகர்கோவில் மத்தியாஸ் ஹோஸ்பிடலில் சேர்த்திருந்தோம் அங்கு ஒரு அண்ணன் ரூம் கிளீன்பண்ண வருவார்கள்,அந்த அண்ணன் கையில் ஒருநாள் நான் அதுவரை தேடிகொண்டிருந்த புதையல் இருந்தது ,முன் பின் அட்டைகளில்லாமல் பளிங்குசிலைமர்மம் இருந்தது. கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் அந்த புக்கை வாங்கிக்கொண்டேன். ஒவ்வரு புக்கையும் படித்துவிட்டு அவ்வளவு ஆசையாக சேமித்து வைப்பேன்.என் சேமிப்பு மூன்று அட்டைபெட்டிகளில் நிறைந்துஇருந்தது . என் காமிக்ஸ் புதையலுக்கு என் அண்ணன் வடிவில் ஆபத்து வந்தது ,இப்போ நினைத்தாலும் தீக்கனவு போல்வுள்ளது, 90 களின் அந்த காலை விடியாமலே இருந்திருக்கலாம். நான் ஸ்கூல் சென்றிந்தபோது என் அண்ணன் அனைத்து புக்கையும் பக்கத்து ஊரில்இருந்த பழைய புத்தக கடையில் போட்டுவிட்டான். ஸ்கூலில் இருந்து வந்ததும் என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை, பக்கத்துல மண்ணெண்ணெய் கேன் இருந்தது எடுத்து தலையில வூற்றிகொண்டு அருகில் எரிந்து கொண்டிருந்த அடுப்பை நோக்கி ஓடினேன்,என் அண்ணன் மற்றும் என் அம்மா என்னை பிடித்து கொண்டார்கள்.மண்ணெண்ணெய் ஊறியதால் கண்எரிச்சலுக்கு சிறிது தினங்கள் மருத்துவம் பார்த்ததுதான் மிச்சம். போன வருடம் என் தந்தை கல்லீரல் கேன்சரினால் இறந்து விட்டார்கள். கடைசி தினங்களில் அவர்களிடம் பேசி கொண்டிருக்கும்போது என்னை அரவணைத்த சிறுவயது தினங்களை அசைபோட்டு கொண்டோம்.என் தந்தையிடம் நான் கேட்காமல் போனது எனக்காக திருசெந்தூரில் எங்கு காமிக்ஸ் வாங்குவீர்கள் என்பதுதான்.சில மாதங்கள் கழித்து சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்று அனைத்து புத்தககடைகளிலும் தேடினேன் எங்கும் காமிக்ஸோ சிறுவர் புத்தகங்களோ இல்லை. எனக்கு காமிக்ஸ்ன்னா எதுவோ இல்லை அதுதான் என் சிறுவயது அடையாளம். பழைய திகிலை பற்றி ஆசிரியர் எழுதுவதை படிக்கும் போது எதையோ இழந்ததை அடைந்தது போல் உணர்கிறேன். நன்றி சார் !

   Delete
  3. புனித சாத்தான்: தலைவரே கலக்கிட்டீங்க!!!

   Delete
  4. நான் எதிர்பார்க்கவே இல்லை .ஆச்சர்யமாக இருக்கின்றது .மிக்க நன்றிகள் நண்பர்களே !

   Delete
 27. Wow. Cap. Tiger'l paarthu evvalavu naal aagivittathu.

  ReplyDelete
 28. --------
  அருமையான டிரைலர்....
  அட்டைப்பட டிசைன் இப்பொழுது வெளியிட்டாமல் சஸ்பென்சாக வைத்துருப்பது மேலும் ஆர்வத்தைக் கூட்டுகிறது.


  ***** ஜில் ஜோர்டான் கதையில் கடைசி ப்ரேமில் இருக்கும் எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டுவிடும் என நம்புகிறேன். *****


  --------

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரிசெய்யப்பட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி...

   முட்டாள்த்தனம் -- த் எடுக்கவேண்டும் என நினைக்கிறேன்..

   ஒரு landmark இதழில் குறைகள் கூடுமானவரை இருக்கக் கூடாது என்பதின் முனைப்பு மிகவும் மகிழ்வளிக்கிறது.. நன்றிகள்..

   Delete
 29. part.7 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  5.ஹஜன் சுந்தர் and புத்தக பிரியன் : ஐந்தாம் இடம்

  ஐந்தாவது இடத்தை சரிசமமாக பகிர்ந்துக்கொண்ட இவர்கள் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கூட வரவில்லை என்பதை என்னவென்று சொல்வது? ஆனால் ஓன்று நண்பர்களே நீங்கள் எல்லோரும் போய்விட்டாலும் நான் மட்டும் தன்னந்தனியனாக அமர்ந்திருந்து நிச்சயம் அவர்களை கௌரவித்தப்பிறகே வீடு திரும்புவேன் என்பதை இங்கே உறுதியிட்டு கூறுகிறேன்! இவர்கள் இருவரும் நம் பல்கலைகழகத்தின் தூண் போன்றவர்கள்! வீரம் செறிந்த போர் வாள்கள்! ஆனால் தற்போது கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார்கள்! எதிர் காலத்தில் Black cats அதாவது தமிழில் கருப்பு பூனை படை (இப்பவெல்லாம் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யவே பயமாக இருக்கிறது) என்ற உயர்ந்த பாதுகாப்பு படையின் தலைவர்களாக அலங்கரிக்க கூடியவர்கள்!!!

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!!

  contd பார்ட்.8 : ''நன்றியுரை''

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பர் மரமண்டை அவர்கள் நடத்திய வலைதள வாசகர் போட்டியில் வெற்றிவாகை சூடிய ஈரோடு விஜய்,லூசு father of லூசு பையன்,கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா,மீரான்,பொடியன்,ஹஜன் சுந்தர்,புத்தக பிரியன் ஆகிய நண்பர்களுக்கு புனித சாத்தானின் ஆசிகளும்,ஆசிர்வாதங்களும்.ஆயுஸ்மான் பவ.

   Delete
  2. நான் ஏற்கனவே கணித்ததை போலவே நீங்க மரமண்டை அல்ல நண்பரே, மரண மண்டை!!!அழைப்பு வர வில்லை எனில் எவ்வாறு வந்து கலந்து கொள்(ல்)வது? தயக்கம் காரணமாகவே தவிர்த்தேன். தலைவர் சாத்தான் ஐ போன்றே எனக்கும் கூச்ச சுபாவம் கொஞ்சம் ஜாஸ்தி! ஹி ஹி!!! இடம் அளித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி நண்பரே!!!

   Delete
  3. புத்தக ப்ரியன்: நண்பரே! என் கடமையை தானே செய்தேன்! ஆனால் ஓன்று வாய்ப்பு நம்மை தேடி வருவதில்லை, நாம் தான் தேடி போகவேண்டும்! ஆனால் இரண்டு வெற்றியை நாம் தேடி போவதில்லை, வெற்றி நம்மை தேடி தானாக வரும்!!! வாழ்த்துக்கள் நண்பரே!!! winners are the leaders in this world !!!

   Delete
  4. ஹஜன் சுந்தர் and புத்தக பிரியன் எனது அன்பான வாழ்த்துக்கள் நண்பர்களே! ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்கிய ஐவர் அணிக்கு என் தரப்பு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் !! அடியேனுக்கு நேரமில்லாததால் ஜெயிச்சிட்டிங்க (நற ! நற !)

   Delete
 30. //ஆவிகளும் அமானுஷ்யங்களும் மாத்திரமே உலவி வரும் களமது என்று உள்ளூர்வாசிகள் பேசுவது நிஜம்தானோ என்று எண்ணச் செய்யும் ஒரு கனத்த மௌனம் அங்கே நிலவி வந்தது மறுக்க இயலா நிஜம்.//

  மிகவும் அழகான ஒரு விவரிப்பு. நமது இந்த மாபெரும் முயற்சியை , மாபெரும் வெற்றி அடைய வைக்க தங்களின் உழைப்பிற்கு இந்த மொழி நடை ஒரு சிறு உதாரணம்,

  ReplyDelete
  Replies
  1. // behind the screen // நிகழ்ச்சி புதுப்பட வெளியீடுக்கு முன்னும் பின்னும் வருவது போல், இன்னும் பல சுவாரசியமான தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்கிறேன். இது நமது இதழுக்கான Hype மேலும் அதிகப்படுத்திடும்.

   அத்துடன் இவ்வாறு அதிகமான எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு காத்திருப்பில் இருக்கும் அதீத சுகம் ஒரு தனி அனுபவம்.

   Delete
 31. part.8 :

  top 5 வலைத்தள வாசகர்கள் :

  நன்றியுரை:

  இதுவரை இந்த தளத்தை பொறுமையாக படித்த, இனி படிக்க போகும் வாசக நண்பர்கள் அனைவருக்கும், ஒரு தலைவனின் தலைமை பண்பை இங்கு செயலில் காட்டிய புனித சாத்தான் என்ற சோமசுந்தரம் அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வலைத்தளத்தில் பதிவிட எனக்கு மானசீக அனுமதி அளித்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், இப்படி ஒரு மேடை அமைய முகம் தெரியாமல், பின்னணியில் உழைக்கும் ஆசிரியர் அவர்களின் டீமிற்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

  சொல்லாத காதல் ஜெயிப்பதில்லை !!!

  முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. எக்ஸ்சலன்ட் ஜாப் .அருமை நண்பர் மரமண்டை ஒரு மாமேதை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டார்.வாழ்த்துக்கள் நண்பரே.தீர்க்காயுஸ்மான் பவ.

   Delete
  2. புனித சாத்தான்: தங்களின் பாராட்டு என்னை மிகவும் மகிழச் செய்கிறது. உங்களைப் போன்ற பதிவர்கள் தானே என்னை போன்றவருக்கு முன்னோடி!!! இவ்வளவு நேரம் சாப்பிடாமல் கூட சப்போர்ட் செய்த பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்!!!

   Delete
  3. என்னது? "சொல்லாத காதல் ஜெயிப்பதில்லை !!!" யா!!! தலைவரே, எங்கயோ இடிக்குது ல? மரமண்டை கூட காதல் தோல்வியில் சிக்கி கொண்டாரா என்ன? (நம்மை போலவே) :)

   Delete
  4. சாத்தான் கும்பலுக்கு வயது என்றும் 18 என்பது ஒரு கொசுறு தகவல்!!! ஹி ஹி ஹி ஹி

   Delete
  5. புத்தக ப்ரியன்: அப்படியில்லை நண்பரே! காதல் என்றால் தீராத ஆசை, தளராத ஆவல், வெறி பிடித்த வேட்கை, உயிரையும் கொடுக்கும் துச்சம், எதையும் இழக்கும் மனோநிலை, எதற்கும் துணிந்த வீரம், சுய கழிவிரக்கம், எதையும் அடையும் லட்சியம், எல்லாவற்றையும் இழக்கும் அலட்சியம், படித்தவன் பட்டிக்காடாய், பணக்காரன் பரதேசியாய், உயர்ந்தவன் உடுக்கை இழந்தவனாய், இல்லாதவன் இவ்வுலகையும் அழிப்பவனாகவும், சிந்தனை கொண்டவன் சீரழிந்தவனாகவும், சீரழிந்தவன் சிகரெமென உச்சம் அடையவும், ஆத்திகன் நாத்திகனாகவும், நாத்திகன் ஆத்திகனாகவும் ஆக்க கூடிய கலியுலக கண்கண்ட தெய்வமே காதல்!!! ஆதலினால் காதல் செய்வீர் என் அருமை நண்பர்களே! ஆனால் உயர வேண்டும் என்று நினைத்தால் காதல் ஒரு மாயை என்று புரிந்துக் கொள்ளுங்கள்!!!

   Life is never end's with love !!!

   Delete
  6. ////சாத்தான் கும்பலுக்கு வயது என்றும் 18 என்பது ஒரு கொசுறு தகவல்!!! ஹி ஹி ஹி ஹி
   யாரது சாத்தான்?எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறது. ஹிஹி).

   Delete
  7. அருமை மர மண்டை நண்பரே! மிகசிறப்பான வரிசை! அன்மை காலமாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் நல்ல சிந்தனையாளர்.சிறந்த நடை.காமிக்ஸ் அல்லாது உங்கள் வாசிப்பு ஆர்வம் வேறு பல வகையான புத்தகங்களினுடே படர்ந்திருப்பது பல இடங்களில் வெளிபடுகிறது. தொடர்ந்து பதியுங்கள்! வாழ்த்துக்கள்!

   Delete
  8. 1.Erode VIJAY
   2.லூசு-father of லூசு பையன் : இரண்டாம் இடம் !!!
   3.கோயம்பத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : மூன்றாம் இடம்
   4.meeraan and podiyan : நான்காம் இடம்
   5.ஹஜன் சுந்தர் and புத்தக பிரியன் : ஐந்தாம் இடம்

   YOU GUYS FULLY DESERVE IT!!

   வாழ்த்துக்கள் நண்பர்களே ! தொடர்ந்து கலக்குங்க...!!!

   Delete
  9. விஸ்கி-சுஸ்கி: தங்களின் மனம் திறந்த பாராட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது!!! ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!!!

   Delete
  10. mara manndaiyaare!! unga treatment super! kalakkunga! aattathai alagaaga thuvakki suvaarasyapaduththi viteergal!

   Delete
  11. John simon: நன்றி தோழரே! நீங்கள் எல்லாம் நிஜ உலக காவலர்கள்! பெருமையாக இருக்கிறது! சிலருக்கு மட்டுமே சிந்தனையும், சீராட்டும் பதவியும் ஒன்றாக இருக்கும்! நீங்கள் எல்லாம் ''காக்க காக்க'' கதாநாயகனை போன்று தமிழகத்தை வலம் வர வேண்டும்! எனக்கு உங்கள் துறையில் Mr.விஜயகுமார் -ஐ மிகவும் பிடிக்கும்! இரண்டாவதாக Mr.சைலேந்திர பாபு -வை (முன்னால் கோவை கமிஷ்னர் ) மிகவும் பிடிக்கும்! உங்களையும் ஒரு காலத்தில் இது போன்று குறிப்பிடுவேன் என்று நினைக்கின்றேன்! நாம் நம்மை உணரவே குறைந்த பட்சம் 35 வருடங்கள் ஓடிவிடுகிறது! உணர்ந்த பின் 15 வருடங்களுக்குள் தளர்ந்து விடுகிறோம்! இடைப்பட்ட 15 வருடத்திற்குள் நம்மால் என்னதான் சாதிக்க முடியும், ஆனால் லட்சியம் மட்டும் இருந்தால் என்னவெல்லாமோ சாதிக்கலாம்!!!

   லட்சியம் வெறியாக மாறினால் இமயமும் தொட்டு விடும் தூரம் தான்!!!

   Delete
  12. டியர் மரமண்டை , வலைதள வாசகர்கள் டாப் 5 என்று வரிசைபடுத்தி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுதிவிடீர்களோ ?
   இது உங்களின் டாப் 5 , இப்படி ஒவ்வொருவரும் வரிசைபடுதினால் தேவையில்லாத problem வராதா?, எப்படி முத்துவின் சமீப கதைகளை மட்டும் படித்துவிட்டு , முத்து டாப் 5 வரிசைபடுதினால் , சரியாக வராதோ , அதே போல் சமீப பதிவுகளை படித்துவிட்டு டாப் 5 வாசகர்கள் என்று வரிசைபடுதுவது முறையாகாது .நம் ப்ளாக் ல் உள்ள 60 க்கும் மேற்பட்ட பதிவுகளை படித்துபார்த்து விட்டு , அதற்கு பிறகும் உங்கள் முடிவில் தெளிவாக இருந்தால் , உங்களுக்கு ஒரு சபாஷ் !
   பழைய பதிவுகளில் blade கார்த்திக் ன், நகைச்சுவை கலந்த ,யாரையும் புண்படுத்தாத, வரிகளை படித்து பாருங்கள் (இப்போது நகைச்சுவை சதவீதம் குறைந்து , கொஞ்சம் கிண்டலும் கேலியும் அதிகமாகிவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது , கார்த்திக் மீண்டும் பார்முக்கு வாங்க !,) அவரின் பழைய பதிவில் , போகிற போக்கில் விஜயன் வாரிசை மினி லயன் என்று எழுதி இருப்பார்! படித்தால் சிரிப்பை அடக்கமுடியாது
   பொடியன்னுக்கு 4 ம் இடம் கொடுத்து உள்ளீர்கள் ! என்னுடைய கணிப்பில் முதல் இடம் , ப்ளாக் ல் விசயத்தோடு எழுதும் வெகு சில ஆத்மாக்களில் அவரும் ஒருவர் . கனவுகளின் காதலனை மறந்து விட்டீர்கள் ,
   மேலும் உங்க டாப் 5 ல் குறிப்பிட்ட சிலரை அடிக்கடி தேவை இல்லாமல் தாக்கும் , நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர்கள் , இது தேவை இல்லாமல் கசப்பை உண்டாக்கும் . இந்த விளையாட்டை யாரும் இனி தொடராமல் இருப்பதே நல்லது .டாப் 5 ல் உள்ள நண்பர்கள் மேல் எனக்கு வருத்தம் இல்லை , இனிமேலும் இது தொடரவேண்டாமே , ப்ளீஸ் ! நான் சொன்னதில் தவறுல்லதா நண்பர் சாத்தான் அவர்களே ?

   Delete
 32. முதலில் வெளிவந்த ட்ரைலர் விளம்பரத்தில் ஜில் ஜோர்டன்.தற்போது கில் ஜோர்டன்.எது சரியான பெயர் என்று சொல்லும் நண்பர்களுக்கு இரண்டு பாக்கெட் மயக்க பிஸ்கட்டுகள் இலவசம்.உடனே முந்துவீர்.

  ReplyDelete
  Replies
  1. @ saint satan , //இரண்டு பாக்கெட் மயக்க பிஸ்கட்டுகள் இலவசம்.உடனே முந்துவீர்.//

   ஐயா சாத்தான் அவர்களே...உங்களுக்கு எங்கிருந்து இப்படிப்பட்ட உவமைகள் எல்லாம் கிடைகிறது ஐயா...அல்லது வேறு யாரிடமிருந்தாவது இப்படிப்பட்ட பரிசு பெற்ற அனுபவம் பேச வைக்கிறதோ...!!?
   anyways, இதை படித்துவிட்டு 40 நொடிகள் விலா நோக சிரித்தேன்.

   Delete
 33. dear friends,
  my android mobile phone which I used to place comments, is having some technical error since morning. i cant open some of the sites from my mobile including this blog. I will get back to place my comments as soon as the problem restored.

  ReplyDelete
 34. டியர் விஜயன் sir , உங்களின் மற்றும் எங்களின் கனவு இதழின் trailer அருமை ! இடைவிடாத மின்வெட்டு நம் பொறுமையை சோதிப்பதொடு மட்டும் இல்லாமல் , நம் வேலையின் தரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது . குறித்த நாளில் nbs release செய்யவேண்டும் என்று தங்கள் குழு அசுரத்தனமாக உழைப்பது கண்கூடு. but , அதிலும் தங்ககல்லறை போன்று ஸ்பெல்லிங் mistake வந்து nbs என்ற குருஞ்சி பூவின் அழகை கெடுத்து விடகூடாது என்று சிறிது கவலையாக உள்ளது ! so , சிறிது காலம் எடுத்தாலும் ஸ்பெல்லிங் mistakes தவிர்த்தால் நலம் .
  தாங்கள் அத்தகைய குறைகளுக்கு இடம் தரமாட்டிர்கள் என்று நம்புகிறேன் . காமிக்ஸ் ல் நொட்டை கண்டுபிடிக்கும் நண்பர்கள் , நம் கனவு இதழில் கதையில் நொட்டை கண்டுபிடித்தாலும் , தரத்தில் , அவர்கள் சிறிதளவும் நொட்டை கண்டுபிடிக்காமல் திணறும் அளவுக்கு இதழ் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் .
  அட்டைப்படத்தை nbs ரிலீஸ் க்கு 2 அல்லது 3 தினங்களுக்கு முன் ப்ளாக் ல் போட்டால் நன்று . ஒரு மாதம் முன்பே அட்டைப்படத்தை ப்ளாக் ல் ரிலீஸ் செய்தால், ப்ளாக் ல் தினம் தினம் அட்டையை பார்த்து சிறிது சலித்துவிடும் என்பது என் தாழ்மையான கருத்து!
  sir , சென்னை bookfair ல் உங்கள் தந்தையுடன் கலந்து கொள்ளும் எண்ணம் உள்ளதா?, ஆர்வகோளாறில் கேட்டு இருந்தால் மன்னிக்கவும் .

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் ஐயா ரொம்ப நல்லா சொன்னிங்க!!! "காமிக்ஸ் ல் நொட்டை கண்டுபிடிக்கும் நண்பர்கள்" அட ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க டாக்டர் ஐயா!!! மெய்யாலுமே நீங்க பெரிய டாக்டர் தான் போல!!!! கலக்கிபுட்டிங்க சாமி!!!

   Delete
  2. doctor is a doctor is a doctor !!!

   Delete
  3. ரொம்ப நாயமா சொல்லிப்புட்டீங்க டாக்டரய்யா.மொதல்ல பொஸ்தக கண்ணுகாச்சிக்கு நீங்க வருவீகளா மாட்டீயளா.அத சொல்லிபோடுங்க மொதல்ல.எங்கூர்ல ஸ்டாலினு,ஆடிட்டரு,நானு குடும்பத்தோட பட்டணத்துக்கு அடுத்த சனவரி மாசம் போலாமுன்னு இருக்குறமுங்க.எல்லா பெரண்டுகளையும் பாத்து பேசலாமுன்னு ஐடியா பண்ணி வச்சிருக்கறமுங்க.ஒங்களையும் அங்க பாத்து பேசுனா பெரயோசணமா இருக்குமுங்க.சீக்கிரமா முடிவு சொல்லுங்க சாமீ. அப்புறம்,நானு உத்தரவு வாங்கிக்கிறேன் சாமியோவ்.
   Delete
  4. நண்பர் சாத்தான் அவர்களே , என்னை sundar என்று அழைத்தாலே போதும் . டாக்டர் அய்யா என்றால், ராமதாஸ் feel வந்துவிடுகிறது .bookfair க்கு குடும்பவிழா போன்று family யோடு நீங்களும் உங்கள் நண்பர்களும் செல்வது மிகுந்த மகிழ்ச்சி .
   கண்டிப்பாக bookfair வருவேன் . எல்லா காமிக்ஸ் நண்பர்களையும் சந்திக்க வேண்டும் .முக்கியமாக kingviswa வை .

   Delete
 35. லார்கோ கதையில் "fenimore இன் transplanted monkey balls" டயலாக்ஸ் எவ்வாறு எடுத்தாளபட்டுள்ளது என அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். அநேகமாக கத்திரியில் தப்பி இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். பதில் ஆசிரியரிடம்!!! இனிமேல் அனைத்து லார்கோ கதைகளுக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கத்திரி தயார் செய்தாகி இருக்கும் என நம்புகிறோம்!!!!

  ReplyDelete
  Replies
  1. புத்தக பிரியன்: இன்னும் நம் பண்பாடு மாறவில்லை என்பது மட்டும் அல்ல என்றுமே மாறாதிற்க ஆசைப்படுகிறேன் அன்பு நண்பர் கர்ணன் -ஐப் போல!!!

   Delete
 36. புத்தக பிரியன் சார்!

  பாராட்டுக்கு நன்றி!

  நான் இதில் எதுவும்
  செய்யவில்லை
  எல்லாம் நண்பர்களின்
  உழைப்புதான்!

  பாராட்டுகள் அவர்களையே சேரும்!

  ReplyDelete
 37. புத்தக பிரியன் சார்!

  பாராட்டுக்கு நன்றி!

  நான் இதில் எதுவும்
  செய்யவில்லை
  எல்லாம் நண்பர்களின்
  உழைப்புதான்!

  பாராட்டுகள் அவர்களையே சேரும்!

  ReplyDelete
 38. புத்தக பிரியன் சார்!

  பாராட்டுக்கு நன்றி!

  நான் இதில் எதுவும்
  செய்யவில்லை
  எல்லாம் நண்பர்களின்
  உழைப்புதான்!

  பாராட்டுகள் அவர்களையே சேரும்!

  ReplyDelete
  Replies
  1. Msakrates: உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நண்பரே! உலகம் உங்களை ஒரு நாள் எல்லோருடைய நினைவிலும் கொண்டுவரும் அன்பரே!!!

   Delete
 39. செய்யும் வேலையைக் காதலுடன் செய்பவர்களே சரித்திரத்தில் இடம்பெறுவர்...அவ்வகையில் நமது ஆசிரியர் கிடைத்தது நம் போன்ற காமிக்ஸ் ரசனை உடையவர்களுக்குக் கிடைத்த வரம்...கனவு இதழை இழைத்து செய்வது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது...அதே போல் டைகர் கதைகளை பிரித்து வெளியிடாமல் ஒரே இதழாக வெளியிடுங்களேன்...கலெக்சனுக்கு உதவியாக இருக்கும்...நமது வாசக நண்பர்களின் பின்னூட்டங்கள் முதிர்ச்சியும் சுவையும் ஆர்வமும் அதிகரித்த மிகுந்த சுவாரஸ்யமானதாகவும் மாறி வருவது சந்தோசமாக உள்ளது...நன்றி நண்பர்களே...

  ReplyDelete
  Replies
  1. Raja babu: சரியாக சொன்னீர்கள் நண்பரே! எதிர்ப்பார்த்து செய்பவன் ஏமாளியாகின்றான், எடுத்த முயற்சியை கைவிடாதவன் வெற்றி வாகை சூடுகிறான், ரசனை உள்ளவன் ரசிக்கப்படுகிறான், உணர்ச்சி உள்ளவன் உலகத்தில் உயர்ந்தவனாகின்றான், அதே போல் நல்லவனும் வல்லவனும் சரித்திரம் படைக்கின்றான்!!! ஆசிரியர் விஜயன் மட்டும் என்ன விதிவிலக்கா?

   Delete
  2. உங்க பேரை இனிமேல் "தங்கமண்டை" என்று மாற்றிக்கொண்டால் நலம் . ஒரே தத்துவ மழையாக உள்ளது . மெருகேரிவரும் உங்கள் எழுத்துகளுக்கு என் வாழ்த்துக்கள் .சீக்கிரமே நீங்களும் நம் நண்பர்கள் சிலர் போல் comicsblog ஆரம்பிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

   Delete
  3. Dr.sundar,salem: தங்கமண்டை என்றெல்லாம் வேண்டாம் டாக்டர், தங்கம் விலை விண்ணைத் தொடுகின்றது. தலை வாங்கி குரங்கு போல் ஒரே வெட்டாக வெட்டிவிடுவார்கள்!!! என்னதான் இருந்தாலும் உங்கள் ஊசிக்கு ஈடாகுமா டாக்டரே :D

   Delete
 40. முடியல அய்யா பெரியவர்களே -சிறியவர்களே நம்ப மர -மண்ட என்னதான் சொல்லவருகிறார் ஒண்ணுமே புரியமாட்டேங்குதே......உங்களுக்கு எதாவது புரிகிறதா ? மனிதர்களுக்கு புரியாமல் சாத்தன் மண்டைகளுக்கு புரியுமோ

  ReplyDelete
  Replies
  1. அய்யா கொடை வள்ளல் அவர்களே.அடியேனின் மண்டை மரமண்டை அல்ல.களிமண் மண்டை.ஹிஹி.

   Delete
  2. karnan L : இப்ப தெளிவா சொல்கிறேன் கர்ணன் அவர்களே! உலகம் என்பது உருண்டை, எங்க சுத்தனாலும் இங்கத்தான் வந்தாகணும்!!! இப்ப புருஞ்சிதா கலியுலக கர்ணணே ? உங்களைப்போலவே எனக்கும் பண்பாட்டின் மீது ரொம்ப அக்கறை தலைவா!!!

   Delete
 41. trailer-ல பண்பாடு கெட்டு போற அளவுக்கு ஒன்னும் இல்லையே..... பாத்தீங்களா காலை வாருறீங்க மர மண்டை அவர்களே ......

  ReplyDelete
  Replies
  1. Karnan L : காலைவாருவது என்பது எனக்கு புதிதாக தோன்றுகிறது! இன்டியன் இங்க் பற்றி நீங்கள் கூறியது என் நினைவுக்கு வந்தது! நானும் அது போன்ற மனம் கொண்டவன் என்பதால் இங்கே உங்களை உதாரணத்துக்கு சுட்டிக்காட்டினேன்! இது எப்படி உங்களுக்கு வருத்தமடைய செய்யும் பதிவாக மாறியது என்று கூறினால், நான் இன்னொரு பகைவனை உருவாக்கிக் கொள்ளமட்டேன் அல்லவா!!!

   Life is short, make it sweet !!!

   Delete
  2. Karnan L : உலகம் உருண்டை என்ற உண்மை உங்களுக்கு அல்ல நண்பர ! நீங்கள் தெளிவாக கேட்டதால் De-coding செய்தேன்!!! வலையுலகத்தை ஒரு முறை வலம் வந்து பாருங்கள், ஆப்ரிக்கா ஒரு இருண்ட கண்டம் என்று புரியும் அன்பரே!!!


   Delete
 42. இது 100.எப்பூடி?ஹிஹி.

  ReplyDelete
 43. ஆகா ஆகா திகட்ட திகட்ட விருந்து இருக்குன்னு மட்டும் தெரியுது. மின் பகவான் உங்களுக்கு
  நீண்ட நேரம் மின்சாரம் வர அருள் புரியட்டும்.

  ReplyDelete
 44. எடிட்டர் க்கு ஒரு விண்ணப்பம். லார்கோ கதையில் வரும் "green archer" க்கு தமிழாக்கம் "பசுமை பாதுகாவலன்" என்பது பொருத்தமாக இருக்குமே!!! இப்போது இருக்கும் "பச்சைப் பாதுகாவலனை" விடவும்!!! மற்ற அன்பர்கள் என்ன கருத்து கொண்டுள்ளனர் என அறிய ஆவல்!!!

  ReplyDelete
  Replies
  1. you have a point mate! May be அப்படி இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கலாம்...

   Delete
 45. sir very nice trailer...

  how many bookings for NBS...

  NBS bookings are closed or not...

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. நானும் இன்டியன் இன்க் மனம் கொண்டவன் என்ற ஒரு வார்த்தையை படித்த பிறகு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது வரை எடிட்டர்கூட இதற்கு பதில் சொல்லவில்லை எனக்கு ஒரு உற்ற நண்பர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மர மண்டை அவர்களே நான் தங்களது biodata - வை பார்க்க விரும்புகிறேன் தங்களது வலைப்பதிவை நான் சரியாக படிக்கவில்லை தவறுக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 48. இதுவரை நாம் பார்த்த trailer எல்லாம் சும்மா ஜுஜுபி? அடுத்த வாரம் ஆசிரியர் வெளியிடவிருக்கும் wayne ஷெல்டனை பாருங்கள், Mr Denayer ஓவியரின் கைவண்ணத்தில் சித்திரங்கள் சும்மா தாறுமாறாக இருக்கும். பார்ட்டில dinner க்கு அப்புறம் பினிஷிங் touch ஆக ஐஸ் கிரீம் சாப்பிடுவோமில்ல அது போல் அமையபோகிறது wayne ஷெல்டன், Let wait and see...

  ReplyDelete
 49. அன்பு ஆசிரியருக்கும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என் வணக்கங்கள்!

  ReplyDelete
 50. இரும்பு குதிரை ,அலைகளின் ஆலிங்கனம் தலைப்புகள் ஆஹா !

  ReplyDelete
 51. அருமையான முன்னோட்டங்கள்.
  புத்தகத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
  ஜனவரி மாதத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

  உங்களது குழுவினருக்கு எனது நன்றிகள் சார்.

  ReplyDelete
 52. i saw somewhere the resevation for Never b4 spl is already over. Is it so ? Can i still send money to reserve one ? pls somebody let me know. my address : mrprasanna23@gmail.com

  ReplyDelete
 53. அருமை ,,,,,,ஆசிரியரே .....உற்சாகம் பீறிடுகிறது சந்தோஷத்தில், ஒவ்வொரு பக்கமும் கண்களுக்கு விருந்தாக இருக்கும் ....
  அது சரி ........சென்னை புத்த்கத்திருவிழவின் தேதிகள் முடிவாகிவிட்டனவா ...?
  நண்பர்களே ...அங்கு வருபவர்கள் தங்களின் உண்மைப்பெயர்களை சொல்லி விடுங்களைய்யா .....!
  சாத்தான்களும் ,
  மாயாவிகளும் ,
  வவ்வால்களும் .
  மரமண்டைகளும் ,
  பொடியன்களும் ,
  லூசு பையன்களும்.
  இன்னும்பல அமானுஷ்ய பெயர்களும் உலா வந்தால் எப்படி கண்டுபிடிப்பது ?
  ஐயோ ...அதையும் ஒரு போட்டியாக வைத்துவிடாதீர்கள் ......,

  ReplyDelete
  Replies
  1. மை டியர் அஹமத் பாஷா அவர்களே.அடியேனின் இயற்பெயர் சோமசுந்தரம்.மாயாவியாரின் இயற்பெயர் பொன்ராஜ்.வவ்வால்ஜியின் இயற்பெயர் இலக்ஷ்மிபதி இராமைய்யன்.பொடியன்ஜியின் இயற்பெயர் தீபன்.லூசு பையனின் இயற்பெயர் ................சொன்னால் எனக்கு உதை விழும்.மரமண்டைஜியின் இயற்பெயர் மாமேதை.ஹிஹி .

   Delete
 54. nanbarkale

  ple

  sollunga tiger story 2 vara vera story ya ?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ...இரண்டாம் கதை ஆங்கிலத்தில் "The Train from Hell" வெளிவந்த புத்தகம். Jean-Michel Charlier and Colin Wilson இணைந்து பணியாற்றிய கடைசி படைப்பு. அமெரிக்க உள்நாட்டு காலங்கள் உச்சம் பெற்றிருந்த 1860 காலகட்டத்து கதை. அமெரிக்க வடக்கதியவருக்கும் தென்னவர்களுக்கும் இடையே நடைபெறும் இன கலகங்கள் இந்த இளமைக்கால டைகர் கதைகளின் ஒரு FINE THREAD. இந்த நிகழ்வுகளை சுற்றி பின்னப்பட்ட ஒரு கதை தொடர் க்வான்ட்ரில் சாகா, கான்சாஸ் கொடுரனில் முடிகிறது.
   மீண்டும் இதே BACKDROP'இல் இரண்டு பகுதிகளாக கொண்ட இன்னொரு கதை தொடர் "Scenario: Rail" . முதல் பாகத்தில் ஒரு வடக்கத்திய நகரம் ஒரு தெற்கத்திய நகரம் என்று மிசெளரி மற்றும் கான்சாஸ் நகரங்களை மையமாக வைத்து கதை நகர்ந்ததை போல இந்த தொடர் ஜார்ஜியவையும் டென்னசியையும் மையமாக கொண்டுள்ளது .

   Delete
 55. "அடாது இருட்டிலும்... விடாது பதிவோம் "
  எப்படி சார் இப்படி ...?? தலைப்புகளின் தலைவராக எப்போதும் இப்படி ஒரு பதிவுக்கே அருமைய யோசிக்கறீங்க ???
  ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் சூட்டும் தலைப்புகளிலும் அரு தனித்தன்மை மிருளுகிறது.இந்த தலைப்பையே ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் ரசித்தேன். இதில் உள்ள நகைச்சுவை உணர்வு...நம் ஊரின் மின்வெட்டு சோதனை..இதில் வெளிப்படும் உங்கள் COMMITMENT...ETC...ETC....
  NBS TRAILER என்ன சொல்ல. உலக தரம் இப்போது தமிழில்...இதை விட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு???


  ReplyDelete
 56. அற்புதமான trailor சார் எப்போ ஜனவரி 2013 வரும் என்று ஏங்க செய்து விட்டது. So மொத்தம் எட்டு லட்டு கதைகள் :) வாவ்.அப்புறம் மரண நகரம் மிசௌரி இல் நீங்கள் ஏகமாக கத்தரி போட்டமாதிரி ஒரு குறு குறுப்பு புத்தகம் படிக்கும் போது இருந்தது. அது வரும் tiger கதைகளில் வராமல் பார்த்து கொள்ளுங்கள் better to release Tiger stories Separately sir, ஒரே கதையாக முழு நீளமான story யாக வந்தால் மிகவும் சந்தோஷபடுவேன்.It's my humble request. எப்போ reporter Johnny ஸ்டோரி கையில் கிடைக்கும்?. Please think about reprinting Bernard prince and reporter johnny stories(திகில் இதழ்லில் இருந்து வரிசை வாரியாக), If it comes in comics classics in colour would be really great :).

  Adios Amigos,

  Giri

  ReplyDelete
 57. சார் நேரம் கிடைத்தால் Lucky luke in Kid Lucky புத்தகம் வாசித்து பாருங்கள், எந்த ஒரு லக்கி luke கதைக்கும் நான் இந்த மாதிரி சிரித்ததே இல்லை. Morris and Pearce & leturgie in அற்புதமான நகைச்சுவை படைப்பு. இன்னும் நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருகிறேன். ஆபீஸ் ல எல்லோரும் என்னை லூசு என்று நினைக்க போறாங்க ஹஹாஹ். This book is available in Euro Kids. இதை நீங்கள் தமிழ்லில் கொண்டு வந்தால் அற்புதமாக இருக்கும்.

  Adios Amigos,

  Giri

  ReplyDelete
 58. நமது பழைய கதைகளில் வரும் conversation ஸ்டைல் பிட் மிஸ்ஸிங் ஆனதாக தோணுது. உதாரணமாக கம்பளத்தில் கலாட்டா வில் "தொலைச்சு கட்டிடுவேன் கு பதிலா தொலைச்சு புடுவேன்", "தோன்றியது கு பதிலா வந்துச்சுன்னு" இருந்த நல்லா இருகிற மாதிரி ஒரு பீலிங் etc etc .....

  ReplyDelete
  Replies
  1. நூறு சதவிகிதம் உண்மை...இப்போது நான் படித்து முடித்த 'பரலோக பாதை பச்சை' கதையிலும், இந்த வித்தியாசத்தை உணருகிறேன். என்னதான் சித்திரங்களும், புத்தகத்தின் தரமும் உயர்ந்திருந்தாலும், மொழிபெயர்ப்பு தரத்தால் கதையுடன் ஒன்றவே முடியவில்லை. கதை முடிந்தபோது, ஒரு 'ஹாலிவுட் டப்பிங்' படம் பார்த்த உணர்வே இருக்கிறது. என்னுடைய ரசனை மாறி விட்டிருக்கலாம் என்ற நினைப்பில் மீண்டும் 'பனி மண்டல கோட்டை' படித்து பார்த்தேன். ஒவ்வொரு பக்கத்தையும், அதன் மொழிபெயர்ப்போடு ரசிக்க முடிகின்றது. மேலும் 'பனி மண்டல கோட்டை'யில் உள்ள அனைத்து வசனங்களும் தூய தமிழில் உள்ளன. மொழிபெயர்ப்பை சூழலுக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கும் முயற்சியில், இந்த சறுக்கல் ஏற்படுகிறதென நினைக்கிறேன்.. உதாரணத்திற்காக முதல் இரு பக்கங்களை தந்துள்ளேன்....எடிட்டர் கொஞ்சம் கவனித்தால் நலம்.
   ---------------------------------
   'பரலோக பாதை பச்சை'

   பார்னே: ஓ..! நிஜம்தானா நான் காண்பது ?.. இருக்காது...சொப்பனத்திலேதான் இப்படி எல்லாம்
   வரும்...ப்ளீஸ்...யாரும் என்னை எழுப்பிடாதீங்கப்பா...
   பார்னே: புது மலர் போல...தத்தி நடக்கிற ஒரு குழந்தை போல...ஆகா...கழுகின் இந்த புதுப்
   பொலிவுத் தோற்றம்...படு அட்டகாசம்...கண்பட்டிடுமோன்னு !

   ஜின்: அந்த கவலை உனக்கு வாணாம் பார்னே...அதான் நீ இருக்கியே இங்கே...திருஷ்டி பரிகாரமா!
   பார்னே: ராஜாவீட்டு கன்னுக்குட்டி நீ...எப்பவும் பிரஷ்ஷா இருப்பே...ஆனா நான்...நாயா பேயா
   உழைகிறேன்லே...அழுக்காதான் இருப்பேன்...
   ---------------------------------
   'பனி மண்டல கோட்டை'

   ப்ரின்ஸ்: சே...சே. வீணாக நான்கு தினங்கள் இங்கே அங்கே என்று தேடியலைந்ததுதான் மிச்சம்...இந்த
   வட்டாரத்தில் ஸ்மித் என்று யாருமே அகப்படவில்லை. எழுந்திரு பார்னே போகலாம்.

   பார்னே: ஏன்...ஏதும் வேலையா? ஆமா- சரக்கு ஏற்றுவது என்னவாயிற்று !

   ப்ரின்ஸ்: ஒரு இழவும் இல்லை ! முன்பணத்தில் இதுவரை ஆன செலவு போக 400 டாலர்
   மிஞ்சக்கூடும்...அத்தோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

   பார்னே: மனம் தளராதே ப்ரின்ஸ்...இன்னும் ஓரிரு தினங்கள் முயன்று பார்ப்போம்...எப்படியாவது
   அந்த ஸ்மித்தை தேடிக்கண்டு பிடித்துவிடலாம் !
   ---------------------------------

   Delete
 59. ஹாய் விஜயன் சார் , நான் அபினேஷ் இலங்கையை சேர்ந்த lion&muththu வாசகன்,உங்களின் பல தீவிர comix பிரியர்களை போலவே நானும் but எங்கள் நாட்டில் கடந்த சில வருடங்களாக லயன் ,முத்து கிடைக்கிறதில்லை,இப்ப உங்களோட தொடர்பு கொள்ள இந்த வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோசம்,இனி வரப்போற எந்த ஒரு லயன் ,முத்தும் நான் மிஸ் பண்ண விரும்பல ,இனி லயன்,முத்து தவறாமல் கிடைக்க என்ன வழி ????? எவளவு செலவானாலும் பரவாயில்ல,அதற்க்கு வழி சொல்லுங்க,தயவுசெய்து பதில் அனுப்பாமல் விட்டுராதைங்க, உங்கட பதிலுக்காக காத்திருப்பன்.

  ReplyDelete
  Replies
  1. இலங்கையில் இப்போது லயன், முத்து காமிக்ஸ்கள் ஒழுங்காகக் கிடைக்கிறதே அபினேஷ்! இந்த இணைப்பில் பாருங்கள், உங்களுக்கு பல விடயங்கள் கிடைக்கும்! உங்கள் காமிக்ஸ் ரசனைக்கு இப்போதைய லயன், முத்து காமிக்ஸ்கள் நிச்சயம் உற்சாகம் கொடுக்கும்!
   http://www.facebook.com/tamilcomics

   http://www.facebook.com/groups/412480238797291/?fref=ts

   Delete
  2. Thank u ,நீங்கள் அறியத்தந்த பக்கம் மூலம் பல விடயங்கள் தெரிந்துகொண்டேன்.என்றாலும் அங்கு தரப்பட்ட எந்த தொலைபேசி இலக்கத்திலும் சரியான பதில் கிடைக்கவில்லை,நான் வவுனியா வில் இருப்பதால் யாழ்ப்பணத்திலிருந்த தொடர்பிலக்கங்களுக்கு தொடர்புகொண்டே தோல்வியடைந்தேன் ,நான் colombo சென்று வாங்குவது உடனடி சாத்தியம் அற்றது எனவே தபால் மூலம் பெற்றுக்கொள்ள எதுவும் வலியிருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்.

   Delete
  3. தபால் மூலம் பெறவும் வாய்ப்பு உண்டு என்றே நினைக்கிறேன். அவர்களது மொபைல் இலக்கத்துக்கு ஒரு எஸ்.எம்.எஸ். போட்டுவிடுங்கள். உங்களை தொடர்புகொள்ள அது உதவும். இல்லையெனில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவல் அனுப்பிவிடுங்கள்.

   Delete
 60. Dear editor,

  அடாத இன்னல்கள் மற்றும் வேளைப்பளுவின் நடுவிலும், எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு நடுநிசி தாண்டியும் UPS கதறும்வரை பதிவிட்டு NBS ன் சில பக்கங்களை புரட்டிக்காட்டி எங்கள் இதயத்துடிப்பை ஏகத்துக்கும் எகிற வைத்து.... உஸ்...அப்பாடா!

  நன்றிகள் சார்!

  அலைகளின் ஆலிங்கனம், இருளில் ஒரு இரும்புக் குதிரை - தலைப்புகள் சூப்பர்!

  இந்தப் பதிவில் சற்றே நெருடலான ஒரு விஷயம் : NBSல் வரவிருக்கும் இரு டைகர் கதைகளுமே 'மரண நகரம் மிசெளரி' யின் தொடர்ச்சி என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறென்று உங்களின் இந்தப் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன். டைகரின் ஒரு கதை முடிவுற்று, புதிதாய் இன்னொருகதை 'இருளில் ஒரு இரும்புக் குதிரை' யாக தொடங்கவிருப்பதே அந்தச் சிறு நெருடல்.

  போகட்டும்!
  என் வேண்டுகோள் எல்லாம், 'இருளில் ஒரு இரும்புக்குதிரை'யின் அடுத்த பாகம்/பாகங்களைப் படித்திட மாதக் கணக்கிலோ/ ஆண்டுக் கணக்கிலோ எங்களைக் காக்க வைத்து பொறுமையைச் சோதிக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும் - என்பதே அது!

  செய்வீர்களா?

  ReplyDelete
 61. டியர் மரமண்டை , வலைதள வாசகர்கள் டாப் 5 என்று வரிசைபடுத்தி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுதிவிடீர்களோ ?
  இது உங்களின் டாப் 5 , இப்படி ஒவ்வொருவரும் வரிசைபடுதினால் தேவையில்லாத problem வராதா?, எப்படி முத்துவின் சமீப கதைகளை மட்டும் படித்துவிட்டு , முத்து டாப் 5 வரிசைபடுதினால் , சரியாக வராதோ , அதே போல் சமீப பதிவுகளை படித்துவிட்டு டாப் 5 வாசகர்கள் என்று வரிசைபடுதுவது முறையாகாது .நம் ப்ளாக் ல் உள்ள 60 க்கும் மேற்பட்ட பதிவுகளை படித்துபார்த்து விட்டு , அதற்கு பிறகும் உங்கள் முடிவில் தெளிவாக இருந்தால் , உங்களுக்கு ஒரு சபாஷ் !
  பழைய பதிவுகளில் blade கார்த்திக் ன், நகைச்சுவை கலந்த ,யாரையும் புண்படுத்தாத, வரிகளை படித்து பாருங்கள் (இப்போது நகைச்சுவை சதவீதம் குறைந்து , கொஞ்சம் கிண்டலும் கேலியும் அதிகமாகிவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது , கார்த்திக் மீண்டும் பார்முக்கு வாங்க !,) அவரின் பழைய பதிவில் , போகிற போக்கில் விஜயன் வாரிசை மினி லயன் என்று எழுதி இருப்பார்! படித்தால் சிரிப்பை அடக்கமுடியாது
  பொடியன்னுக்கு 4 ம் இடம் கொடுத்து உள்ளீர்கள் ! என்னுடைய கணிப்பில் முதல் இடம் , ப்ளாக் ல் விசயத்தோடு எழுதும் வெகு சில ஆத்மாக்களில் அவரும் ஒருவர் . கனவுகளின் காதலனை மறந்து விட்டீர்கள் ,
  மேலும் உங்க டாப் 5 ல் குறிப்பிட்ட சிலரை அடிக்கடி தேவை இல்லாமல் தாக்கும் , நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர்கள் , இது தேவை இல்லாமல் கசப்பை உண்டாக்கும் . இந்த விளையாட்டை யாரும் இனி தொடராமல் இருப்பதே நல்லது .டாப் 5 ல் உள்ள நண்பர்கள் மேல் எனக்கு வருத்தம் இல்லை , இனிமேலும் இது தொடரவேண்டாமே , ப்ளீஸ் ! நான் சொன்னதில் தவறுல்லதா நண்பர் சாத்தான் அவர்களே ?

  ReplyDelete
  Replies
  1. நோ கமெண்ட்ஸ்.(ஏற்கனவே நான் வாங்கிய உதை பத்தாதா?ஹிஹி.)

   Delete
  2. டியர் Dr.Sundar உங்கள் அன்புக்கு நன்றி! :)

   Delete
  3. // சமீபத்திய பதிவுகளை மட்டும் படித்துவிட்டு top5 வாசகர்களை வரிசைப் படுத்துவது முறையாகாது//

   உண்மை! உடன்படுகிறேன்.

   Delete
  4. Dr. Sundar, salem: நண்பரே! தங்கள் பதிவுக்கு உரிய பெரிய பதிலை கீழே பதிவிட்டு பின் தங்களுக்கு பதிவு எண்ணை இங்கே தருகிறேன்! இது போன்ற மாறுபட்ட கருத்துக்கு உண்டான பொதுவான பதில் இது என்பதால் எல்லா நண்பர்களுக்கும் பொதுவானதாக அமையும்! எனவே தங்களுக்கு உண்டான தனிப்பட்ட பதிலாக கருத வேண்டாம்! அதற்கு முன்பு, துப்பாக்கி சினிமா விமர்சனம் கீழே :)

   Delete
  5. Dr.Sundar,Salem : என் மாறுபட்ட கருத்துக்கான பதிவு எண்.164 & 168 கீழே உள்ளது. இது அனைவருக்கும் ஒரு பொதுவான கருத்து என்பதால் தங்களின் கேள்வியின் மூலமாக பதிவு அளித்துள்ளேன். தனிப்பட்ட பதிலாக கருத வேண்டாம்!!!

   Delete
 62. கரெக்ட் டாக்டர். உங்களின் எண்ணம் ஓரளவிற்கு சரி என ஒத்து கொள்வேன். டாப் 5 rating அவரவர் தனிப்பட்ட கருத்து என்பது எனது அபிப்ராயம். எப்படி லேட்டஸ்ட் வாசகரும் அவர்கள் படித்ததில் டாப் 5 கணிக்க முடியுமோ அவ்வாறே கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு என்பது என் அபிப்ராயம். எனவே மரமண்டை யின் கருத்து சுதந்திரத்தை தவறு என சொல்வது எவ்வாறு பொருந்தும்?
  blade கார்த்திக் ஐ பொறுத்த வரை அவரது ப்ளாக் இல் "irctc -யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை" பதிவினை பற்பல முறை அவரது நகைச்சுவை கலந்த எழுத்து நடைக்காகவே படித்து ரசித்து மகிழ்ந்து இருக்கிறேன். மிகவும் இன்னும் ரசிக்க கூடிய பதிவு அது. ஆனால் அதற்கு பின்னர் நீங்கள் கூறியது போல அவரது எழுத்து நடையில் கிண்டலும் கேலியும் அதிகமாகிவிட்டது போலவே தான் எனக்கும் தோன்றியது. ஒத்த கருத்துகள் நாம் இவ்விஷயத்தில் கொண்டுளோம். அவரது பழைய ஸ்டைல் தொடர்ந்தால் மிகவும் நன்றாகவே இருக்கும் என்பதே எனது எண்ணமும்.
  கனவுகளின் காதலன் வார்த்தை ஜாலங்களால் வானவில்லையே வண்ணங்களால் அலங்கரித்தவர். அவரது பதிவும் ஒரு வர்ண ஜாலத்தை தரும் நாம் வாசிக்கும் போது.
  மேலும் சிலர் விலகி நின்று உள்ளனரா இல்லை புனை பெயரில் உலவுகின்றனரா என தெரியவே வில்லை. அனைவரும் பதிவு இட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கருத்து பேதங்கள் வந்தால் என்ன? பேசி (எழுதி) தீர்த்து கொள்ளலாமே நாம் அனைவரும்!!!

  ReplyDelete
  Replies
  1. டியர் புத்தகப் பிரியன், நான் எழுதிய ஒரு சில பதிவுகளை நீங்கள் படித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி! எந்தவித ஈகோவும் இன்றி நீங்கள் ரசித்த பதிவைப் பற்றி பொதுவில் சொன்னதிற்கு நன்றி!!! நீங்கள் குறிப்பிட்டதைப் போல, கருத்து சுதந்திரம் இந்த வலைப்பூவில் இருப்பதாலேயே எதிர்ப்புகள் / கிண்டல்கள் வந்தாலும் நான் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றேன். 'SHSS குறித்த கருத்துக்கள்' தவிர்த்து என்னுடைய மற்ற பின்னூட்டங்களுக்கு பெரிதாய் எதிர்ப்பும் வந்ததில்லை. நான் விரும்பும் "தமிழ் காமிக்ஸை" கேலி, கிண்டல் செய்வது என் நோக்கமாய் இருந்ததில்லை. SHSS பற்றி என் எண்ணங்களை காட்டமாய் எழுதியிருந்தேனே தவிர கேலியாய் எழுதவில்லை - anyways அது முடிந்த கதை!

   ஆனால், ஒவ்வொருவரின் பார்வையும் மாறுபடும் என்பது நாம் அறிந்ததே! கேலி, கிண்டல் & நகைச்சுவை - இவற்றிற்கிடையேயான இடைவெளியும் குறைவே! IRCTC-யில் உள்ள குறைகளை பயங்கரமாக கிண்டலடித்து எழுதிய பதிவு உங்களுக்கு நகைச்சுவையாக தெரிகிறது :) ஆனால், அதுவே நமது காமிக்ஸ் பற்றி எழுதும்போது நகைச்சுவையாக தோன்றாமல், கேலி கிண்டலாக புரிந்துகொள்ளப்படுகிறது! IRCTC-யை நேசிக்கும் நபர் யாராவது அப்பதிவை படித்திருந்தால் என்னை அடி பின்னியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்! :) அதே போல சமீபத்தில் இங்கு தீவிர எதிர்ப்புகள் வந்ததிற்கு குறிப்பிட்ட காமிக்ஸ் நாயகர்கள் மீதான Soft Corner / Nostalgic Memories - இவை கூட ஒரு காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

   //கருத்து பேதங்கள் வந்தால் என்ன? பேசி (எழுதி) தீர்த்து கொள்ளலாமே நாம் அனைவரும்!!!//
   உண்மை! இங்கு பின்னூட்டமிடுவது மிகச் சில வாசகர்களே! அந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைவது நல்லதல்ல...

   மற்றபடிக்கு நமது காமிக்ஸ் இதழ்களை / பதிவுகளை தவறாமல் படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாசகரும் டாப் வாசகரே!

   Delete
  2. ஈகோ எல்லாம் நான் அவ்வளவாக :) பார்ப்பதில்லை கார்த்திக். பிடித்ததை சொல்லுவதில் எந்த ஒரு தயக்கமும் என்றும் என்னிடம் இருந்ததில்லை. அதே போலவே பிடிக்காததையும்!!! (SHSS!!!) உங்கள் பதிவு மிகவும் காட்டமாக இருந்தது போல இருந்ததால் நானும் அதே போலவே பதிவு இட்டு விட்டேன்... தெரிந்தோ தெரியாமலோ என் வார்த்தைகள் உங்களை சிறிதேனும் வேதனை படுத்தி இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள் நண்பரே!!! நமக்குள் கருத்து மோதல்கள் மட்டும் தானே!!! இனியும் நமது கருத்துகள் வேறு பட்டால் மீண்டும் அடித்து கொள்ள நான் ரெடி!!! நீங்க ரெடி தானே? :) Nothing பர்சனல்!!! :)
   //IRCTC-யை நேசிக்கும் நபர் யாராவது அப்பதிவை படித்திருந்தால் என்னை அடி பின்னியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்! // நான் மிகவும் ரசித்த இரண்டாவது டாப் காமெடி இது தான் கார்த்திக் :). அப்படி ஒரு ஆள்,ஒரே ஒரு ஆள் இருப்பின் அவருக்கு நமது ஈரோடு விஜய் தான் குச்சியை நீட்டி பெற்ற செயினையும், மோதிரத்தையும் அந்த நபரின் கழுத்திலும், விரலிலும் மாட்டிவிட்டு விடுவார் என்பது உறுதி!!!!! :) விஜய்க்கு முழு சம்மதம் தானே? :)
   //அதே போல சமீபத்தில் இங்கு தீவிர எதிர்ப்புகள் வந்ததிற்கு குறிப்பிட்ட காமிக்ஸ் நாயகர்கள் மீதான Soft Corner / Nostalgic Memories - இவை கூட ஒரு காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.// தவறு நண்பரே, இதை காமிக்ஸ் மீதான என திருத்தி கொள்ளுங்களேன்!!!! தொடரட்டும் உங்கள் பணி!!!

   Delete
  3. @புத்தகப் பிரியன்: நீங்கள் போட்ட இந்த கமெண்ட் எனக்கு மெயில் மூலம் வந்தது, ஆனால் இங்கே மிஸ்ஸிங்!:
   ***புத்தக ப்ரியன் has left a new comment on the post "அடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் !":

   ஈகோ எல்லாம் நான் அவ்வளவாக :) பார்ப்பதில்லை கார்த்திக். பிடித்ததை சொல்லுவதில் எந்த ஒரு தயக்கமும் என்றும் என்னிடம் இருந்ததில்லை. அதே போலவே பிடிக்காததையும்!!! (SHSS!!!) உங்கள் பதிவு மிகவும் காட்டமாக இருந்தது போல இருந்ததால் நானும் அதே போலவே பதிவு இட்டு விட்டேன்... தெரிந்தோ தெரியாமலோ என் வார்த்தைகள் உங்களை சிறிதேனும் வேதனை படுத்தி இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள் நண்பரே!!! நமக்குள் கருத்து மோதல்கள் மட்டும் தானே!!! இனியும் நமது கருத்துகள் வேறு பட்டால் மீண்டும் அடித்து கொள்ள நான் ரெடி!!! நீங்க ரெடி தானே? :) Nothing பர்சனல்!!! :)
   //IRCTC-யை நேசிக்கும் நபர் யாராவது அப்பதிவை படித்திருந்தால் என்னை அடி பின்னியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்! // நான் மிகவும் ரசித்த இரண்டாவது டாப் காமெடி இது தான் கார்த்திக் :). அப்படி ஒரு ஆள்,ஒரே ஒரு ஆள் இருப்பின் அவருக்கு நமது ஈரோடு விஜய் தான் குச்சியை நீட்டி பெற்ற செயினையும், மோதிரத்தையும் அந்த நபரின் கழுத்திலும், விரலிலும் மாட்டிவிட்டு விடுவார் என்பது உறுதி!!!!! :) விஜய்க்கு முழு சம்மதம் தானே? :)
   //அதே போல சமீபத்தில் இங்கு தீவிர எதிர்ப்புகள் வந்ததிற்கு குறிப்பிட்ட காமிக்ஸ் நாயகர்கள் மீதான Soft Corner / Nostalgic Memories - இவை கூட ஒரு காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.// தவறு நண்பரே, இதை காமிக்ஸ் மீதான என திருத்தி கொள்ளுங்களேன்!!!! தொடரட்டும் உங்கள் பணி!!!***

   Delete
  4. நன்றி புத்தகப் பிரியன்! ஒரு மாறுதலுக்கு என்னிடமும் ஒரு நபர் மன்னிப்பு கேட்பதைப் பார்த்து படு குஷியாக இருக்கிறது :-D இருந்தாலும் மன்னிப்பு எல்லாம் தேவையில்லை என்பதால் விஜயின் குச்சி மூலமாகவே அதை தட்டி விடுகிறேன்! ;-) பிடித்ததையும் பிடிக்காததையும் வாசகர்கள் தயங்காமல் இங்கே பகிரவேண்டும். கருத்துக்கள் மாறுபடும் போது அடித்துக்கொள்ள நானும் ரெடிதான்! :) :) :) எனக்கு திடீரென்று IRCTC மீது இப்போது பயங்கர லவ்ஸ் வந்துவிட்டதால் குச்சிக்காரர் அந்த தங்க சங்கிலி & மோதிரத்தை எனக்கே மாட்டி விடலாம்! ;)

   விஜய்: குச்சி மூலம் சங்கிலி & மோதிரம் மாட்டும் பயிற்சியை இப்போதே தொடங்கிவிடுங்கள்! ;)

   Delete
  5. ஈகோ எல்லாம் நான் அவ்வளவாக :) பார்ப்பதில்லை கார்த்திக்!!! எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை எனக்கு. அது போன்றே பிடிக்காததையும்!!! (SHSS கமண்ட்ஸ்!!!) உங்கள் கருத்துகள் காட்டமாக இருந்ததால் நானும் அவ்வாறே பதிவை இட்டேன். அது தெரிந்தோ தெரியாமலோ உங்களை சிறிதேனும் காயப்படுத்தி இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள் நண்பரே!!!!! நமக்குள் கருத்து மோதல்கள் மட்டும் தானே!!! முன் பின் பார்த்திராத ஒருவரை காயப்படுத்துவதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லையே! இனிமேலும் காமிக்ஸ் தொடர்பான கருத்து வேற்றுமைகள் நமக்குள் வந்தால் வார்த்தை போருக்கு (!!!!!) எப்போதும் நான் ரெடி! நீங்க ரெடி தானே? :) Nothing Personal :)
   //IRCTC-யை நேசிக்கும் நபர் யாராவது அப்பதிவை படித்திருந்தால் என்னை அடி பின்னியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்! // நான் மிகவும் ரசித்த இரண்டாவது மிக பெரிய காமெடி இது கார்த்திக்!!! அப்படி irctc ஐ நேசிக்கும்(????) ஒரு ஆள், ஒரே ஒரு ஆளாவது இருந்தால் அவரை கூட்டி வாருங்கள்!!! அவருக்கு நமது ஈரோடு விஜய் தான் பரிசாக குச்சியை நீட்டி பெற்ற சங்கிலியையும் மோதிரத்தையும் உடனடியாக தந்து விடுவார்!!! :) உங்களுக்கு முழு சம்மதம் தானே விஜய்? :)
   //அதே போல சமீபத்தில் இங்கு தீவிர எதிர்ப்புகள் வந்ததிற்கு குறிப்பிட்ட காமிக்ஸ் நாயகர்கள் மீதான Soft Corner / Nostalgic Memories - இவை கூட ஒரு காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.// ஒரு சிறு திருத்தும் நண்பரே, மேல் உள்ளவற்றில் காமிக்ஸ் மீதான என மாற்றி கொள்ளுங்களேன்!!!
   நாம் மிகவும் நேசிக்கும்/வாசிக்கும் ஒன்றை குறை கூறினால் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது!!! ஏன் என்று அறுதியிட்டு கூற இயல வில்லை!!! ஹ்ம்ம்ம்!!!
   மேன்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி!!!

   Delete
  6. என்னப்பா நடந்துகிட்டு இருக்கு இங்க? ஒண்ணும் வெளங்கல!!! :??????

   Delete
 63. ''இருளில் ஒரு இரும்புக் குதிரை '' என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு !
  கதை நிகழும் சூல்நிலைகேற்ற ஒப்பிட்டு வார்த்தை ''இரும்புக் குதிரை'' .
  டைகர் கதை நிகழும் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இரயில் வண்டியை குதிரையுடன்தான் ஒப்பிட்டு இருப்பார்கள் .
  ரசிக்கும்படியான வார்த்தைகள் .
  நான் ஜூனியர் விகடனில் ஒரு தொடரில் படித்த ஞாபகம் அந்தமான் ஆதிவாசி ஒருவன் இரயில் வண்டியை பாம்புடன் ஒப்பிடுவான் .

  ''தங்க கல்லறை''யில் வரும் தேசிங்குராஜா , ஆணியே புடுங்க வேண்டாம் போன்ற வார்த்தைகள் அந்த சூழ்நிலைக்கு பொருந்துவதாக எனக்கு தோன்றவில்லை .ரசிக்கும் படியாகவும் இல்லை .

  ReplyDelete
 64. '' அலைகளின் ஆலிங்கனம் '' கவிதை நயமான தலைப்பு .
  அலைகளின் ஆர்ப்பரிப்பு ,அலைகள் தழுவின ,அலைகள் நனைத்தன என்ற வார்த்தைகளை படித்து இருக்கிறோம் .
  '' அலைகளின் ஆலிங்கனம்'' [ஆலிங்கனம் ] பழைய வார்த்தைதான். ஆனால் சொல்லபட்டிருக்கும் விதத்தில் ரொம்ப புதுமையாக இருக்கின்றது .

  ReplyDelete
 65. "கான்க்ரீட் கானகம் NEW YORK " தலைப்பே கதையின் சூழலை சொல்கின்றதே !
  நகரங்கள் மனிதர்கள் வாழும் இடமாக நினைகின்றோம், ஆனால் இங்கு சில மிருகங்களும் வாழ்கின்றன என்று "கான்க்ரீட் கானகம் NEW YORK " தலைப்பு சொல்லாமல் சொல்கின்றது .

  ReplyDelete
 66. "சுறாவோடு சடுகுடு "
  கதையின் விறுவிறுப்பு தலைப்பிலும் , ட்ரைலர் பக்கத்திலும் தெரிகின்றது.

  ReplyDelete
 67. "கம்பளத்தில் கலாட்டா"
  கலவரம்ன்னு போட்டாலே கிட் ஆர்ட்டின் சித்திரத்தோடு சேர்ந்து படித்தால் அது காமடியாகத்தான் தோன்றும் .
  ''கலாட்டா'' சொல்லவே வேண்டாம் ........

  ReplyDelete
 68. "கான்சாஸ் கொடூரன்" தலைப்பு ok

  ReplyDelete
 69. மர மண்டை :

  நன்றிகள் பல! 

  உங்கள் அன்புக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.

  ஆனால், நீங்கள் அளித்திருக்கும் முதலாம் இடத்திற்கு நான் துளியும் பொருத்தமானவன் அல்ல! இந்த ப்ளாக்கில் நான் பின்னூட்டமிட ஆரம்பித்து நான்கு மாதங்களே ஆகிறது. நம் நண்பர்களில் பலர், பல மாதங்களாக இன்றுவரை பல உபயோகமான ஆலோசனைகளையும், பல பயனுள்ள தகவல்களையும் பின்னூட்டங்களாக அளித்துவருகையில், என்னைப் போன்ற புற்றீசலை நம்பர்1ல் நிறுத்தியதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை!

  இந்த விசயத்தில் டாக்டர் சுந்தரின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.  நான் வியந்த நல்ல விமர்ச்சகர்களில் பலர் ( விஸ்கி-சுஸ்கி, காமிக் லவர், புனித சாத்தான், கார்த்திக் சோமலிங்கா, பாலாஜி சுந்தர், கிருஷ்ணா வ. வெ , திருப்பூர் ப்ளூபெர்ரி, சிபி, ஜான் சைமன், அஹமத் பாட்ஷா etc.,) உங்கள் லிஸ்ட்டில் இடம்பெறாமல் போனதையும் என் மனம் ஏற்க மறுக்கிறது.

  ஏதோ விருது, விழா என்று இதைப் பெரிய வார்த்தைகளால் அலங்கரிக்காமல் உங்களின் தனிப்பட்ட கருத்தாக அமையுமெனில், உங்கள் அன்புக்காக கொஞ்சமே கொஞ்சமாக, துளியூண்டு மட்டும், ஒரு ஓரமாக உங்கள் விருதை ஏற்றுக்கொள்கிறேன். :-)

  ( ஏம்பா, ஒரு நீளமான குச்சியை எடுத்து நீட்டினா செயினையும், மோதிரத்தையும் அதுல மாட்டிவிட்டுட மாட்டாங்க?!)

  ReplyDelete
  Replies
  1. @ Vijay: விருதை ஏற்றுகொள்வதாக சொல்லி, அதற்கு உதாரணம் காட்டி இருக்கும் காட்சி ரசிக்க கூடியது.

   Delete
  2. Erode VIJAY : அன்பு நண்பரே! உங்கள் அன்புக்கு பிரதியுபகாரமாக என்னாலும் என் அன்பை மட்டுமே தரமுடியும்! இது நிற்க;

   விஜய் நடிச்ச துப்பாக்கி படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நீங்க பாத்தீங்களா? நீங்க தான் ரெண்டு நாளா தேட்டருக்கே வரலயே! ஹீரோ விஜய் பட்டு பட்டுனு நெத்தி பொட்டுல சுடுறான் பாருங்க, செம கைத்தட்டு! இந்த படத்துக்கு விருது குடுத்தா விஜய் -க்குதான் முதல்வன் விருது கெடைக்கும்!!! பெருசா கட்டிபெரண்டு சண்ட போடாம பொட்டு பொட்டுன்னு, போட்டு தள்ற அழகே தனி!!! கண்டிப்பா நீங்க இந்த படத்த பாக்கனும்ன்றது என்னோட அன்பு கட்டளை!!!

   மாத்தி யோசிங்க -Enter Fresh.

   Delete
  3. மர மண்டை:

   'துப்பாக்கி' படம் பார்க்க தியேட்டர் வரை சென்றுவிட்டு, டிக்கட் விலை 3 மடங்கு அதிகமாக விற்கப்பட்டதால் உடன்பாடின்றி திரும்பிவிட்டேன் நண்பரே!
   பிரிதொரு சமயம் பார்த்தால் போயிற்று!

   Delete
  4. //ஏம்பா, ஒரு நீளமான குச்சியை எடுத்து நீட்டினா செயினையும், மோதிரத்தையும் அதுல மாட்டிவிட்டுட மாட்டாங்க?!// ஹா ஹா ஹா பின்னிடிங்க விஜய்!!! நமது ப்ளாக் இன் காமெடி மன்னன் நீங்கள் தான்!!! சூப்பர் டைமிங்!!!எனது ரேடிங் இல் நீங்கள் தான் No.1 காமெடி மன்னன்!!! இப்போது வம்பு இழுக்கும் படலம் டாக்டர் ஐ நோக்கி!!! அடுத்த இடத்தில உள்ளவர்கள் விரைவில்!!! டாக்டர் ஸ்டார்ட் மியூசிக் !!! :)இதற்கு அடித்தளம் இட்ட (நாரத) மரமண்டை க்கு என்ன பரிசு? [அதெல்லாம் சரி காதை கொடுங்க மரமண்டை சார், 5 ம் இடத்து பரிசு எப்போ வரும்? :)]

   Delete
  5. புத்தக பிரியன்: போகிற போக்கை பார்த்தால் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஐந்தாம் பரிசு என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்று விடுவீர்கள் போலுள்ளதே!!! இவர்கள் யாரும் பரிசு வாங்க வரவில்லை!!!

   Delete
 70. ஹாய் மரமண்டை,

  நண்பா நீங்கள் வரிசைபடுத்தி வலைதள வாசகர்களை விமர்சனம் செய்தது எல்லாம் ஓகே தான். ஆனால் நீங்கள் எப்போதாவது நண்பர்கள் கார்த்திக் இன் bladepedia ,Rafiq Raja இன் Comicology , ப்ரூனோ ப்ரேசில் இன் முதலை பட்டாளம் , King Viswa இன் தமிழ் காமிக்ஸ் உலகம் வலை தளங்களுக்கு சென்றது உண்டா?. நேரம் கிடைத்தால் விசிட் செயுங்கள், மேல் குறிப்பிட்டுள்ள நண்பர்களின் கடின உழைப்பு மற்றும் அவர்கள் காமிக்ஸ் உலகத்திற்கு மறைமுக தொண்டு செய்யும் பாங்கு தெரியும். கார்த்திக் இன் bladeபீடியா படித்து பாருங்கள் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடுவதை காணலாம். Rafiq, ப்ரூனோ ப்ரேசில், King Viswa அப்பா இவர்கள் வலை தளங்களுக்கு சென்று மலைத்து போய் இருகிறேன். இன்னும் jsc johny, இரவுக்கழுகு சொல்லிக்கொண்டே போகலாம். hats off யூ guys. நண்பா நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் தனியாக ஒரு blog create செய்து அதில் செய்யுங்கள், யாருக்கும் எந்த வித மன வருத்தமும் அதில் கிடையாது. உங்கள் பொதுவான கருத்துகளை திணிப்பதற்கு இது இடம் அல்லவே சோ ப்ளீஸ். எல்லோருக்கும் ஒரு தனி பானி உண்டு அதனால் யாரும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதே என் எண்ணம். ஜால்ரா போட்ட satan அவர்களுக்கு சின்னதா ஒரு கருப்பு கொடி ஹிஹிஹி .

  Adios Amigos,

  Giri

  ReplyDelete
  Replies
  1. *யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல*

   Delete
  2. டியர் கிரிதரன், உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி. மறைமுகத் தொண்டு என்பதெல்லாம் பெரிய வார்த்தை! மனதுக்கு பிடித்த காமிக்ஸ் பற்றி அவரவர் பாணியில் பதிவுகள் இடுகிறோம், அவ்வளவே!

   Delete
  3. Gridharan: உள்ளூர் டீமில் உள்ளவர்களின் திறமையை விவரித்தால் இன்டர்நேஷனல் டீமில் உள்ளவர்களை விமர்சனம் செய்ய சொல்கிறீர்கள்!
   அது சரி நகைச்சுவையான பதிவு ஒன்றை நீங்கள் ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்கள்? காமடி கலாட்டாவாக இதை பாருங்கள் சார்!

   Delete
  4. Gridharan: என்னை தனியாக ஒரு blog create செய்ய சொல்லி ஏன் நண்பரே உங்கள் கருத்தை என் மீது திணிக்கிறீர்கள் !!!

   Delete
 71. திரு. விஜயன் அவர்களுக்கு,

  சமீபத்தில் ஒரு அமெரிக்க நண்பரின் வீட்டிற்கு சென்றபோது அவரது collection-ஐ காட்டினார். நானும் எனது பையில் இருந்த 'தங்க கல்லறை'-யை காட்டினேன். இதழின் தயாரிப்பில் இருந்த சிரத்தையை வெகுவாக பாராட்டினார். இலக்கில்லாமல் பக்கங்களை புரட்டிய போது, குறிப்பாக 39 மற்றும் 55 ம் பக்கங்களில் அவரின் பார்வை நிதானித்து சித்திரங்களை பற்றி சிலாகித்தார். புத்தகத்தை திருப்பி கொடுக்கும் பொழுது, மீண்டும் முன் அட்டை படத்தை மட்டுமே 1 நிமிடம் பார்த்தார். அதில் போட்டிருந்த விலையை பார்த்து, இந்த விலைக்கு இங்கே நீங்கள் 4-5 பக்கங்கள் மட்டுமே வாங்க முடியும் என்றார். அவர் குறையாய் சொன்ன ஒரே விஷயம் இதழ் ஏன் சற்றே கசங்கி இருக்கிறது. நான் நமது circulation பற்றியும், மற்றும் இந்த விலைக்கு கட்டுபடியான அட்டை தரம் மற்றும் packing பற்றியும் கூறினேன். பின் அவரது collection-ஐ பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது V-for Vendetta (திரைப்படமாகவும் வந்துள்ளது) என்ற புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. அதன் அட்டைப்படம் மற்றும் format-களை பார்த்து, அந்த புத்தகத்தை இரவல் வாங்கினேன்.

  அதன் hard-bound அட்டையை பார்த்தவுடன் எனக்கு தோன்றிய ஒரே எண்ணம் நமது NBS-ம் இதேபோன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்பது மட்டுமே. 5 வருடங்களுக்கு முன்பு Amar-chitra-katha-வும் மகாபாரதத்தை இதேபோன்று வெளியிட்டு உள்ளனர். நமது NBS அதன் வண்ணத்திலும், தரத்திலும் நிச்சயம் ஒரு பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம். Hard -bound அட்டைகள் மட்டுமே அதற்கு தகுதியானவை. இது ஒரு suggestion மட்டுமே. அதற்காக 15 மணிநேர மின்வெட்டை எதிர்கொண்டு NBS இதழுக்கான நமது குழுவினரின் முயற்சிகள் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். NBS நமது முத்துவின் மாரத்தான் ஓட்டத்தில் ஒரு மைல்கல்லே (மாரத்தான் ஓட்டம் கூட 42கி.மீ மட்டுமே , நாம் அதையும் கடந்து போகவேண்டிய தூரம் இருக்கிறது...btw நமது 42வது வருடத்தில், 'மராத்தான் ஸ்பெஷல்' வெளியிடவும்).

  ReplyDelete
  Replies
  1. //நமது NBS அதன் வண்ணத்திலும், தரத்திலும் நிச்சயம் ஒரு பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம். Hard -bound அட்டைகள் மட்டுமே அதற்கு தகுதியானவை// நானும் இதை வழிமொழிகிறேன் Rajavel. நிச்சயமாக இது படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். விஜயன் சார் நிச்சயமாக அதற்குரிய மதிப்பை கொடுப்பார் என்று எதிர்பாக்கலாம்.

   Delete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete
 73. பழைய, புதிய நண்பர்கள் அனைவரின் பொதுவான பார்வைக்காக;

  Dr அவர்களுக்கு தங்களின் நடுநிலையான கருத்துக்கு மிகவும் நன்றி! எல்லோரும் எல்லா வரலாற்று பதிவுகளையும் படித்து விட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றால் ஒரு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலேயோ, வீர பாண்டிய கட்டபொம்மனையோ தான் தேர்ந்தெடுக்க முடியும்! ஆனால் இன்று நம்மோடு இருக்கும் நரேந்திர மோடி அல்லது Mr.விஜயகுமார் IPS -யோ பாராட்டி பாருங்கள், அவர்களால் இன்னும் அதிகமாக செய்யமுடியும்!

  கடந்து போனதெல்லாம் சரித்திரம் ஆகிவிடுகிறது, காலம் கொண்டு போனதெல்லாம் காலனுக்கு சொந்தமாகி விடுகிறது!!! இந்த தளத்தில் ஆவலோடு வருகின்ற நண்பர்கள் அனைவரும் இன்று நடக்கவிருக்கும் கார்த்திகை தீபத்தின் பக்தர்கள் போன்றவர்கள்! இந்த கூட்டத்தில் யாராவது நடுவில் கல்லெறிந்தால், எங்கோ அல்லது யாருக்கோ கோபம் வரத்தான் செய்யும்! சில சமயம் உரிமைகள் நீதித்துறைக்கும், சில மனித உரிமை அமைப்புகளுக்கும் உள்ளது போன்று வேறுபடுகின்றது! எது நியாயம் என்பது பொது மக்களுக்கும் தெரிந்து தான் உள்ளது!

  எது நண்பர்களே காமிக்ஸ் வளர்ச்சி? சந்தி விடுப்பட்டுள்ளது என்று சந்தி சிரிக்க வைப்பதா? அல்லது உடனே குணமாக்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று ஓவர் டோஸ் கொடுப்பதா? இங்கு நாம் எல்லோரும் நண்பர்களே! காமிக்ஸ் மீது தீராத ஆசையோ, வெறியோ கொண்ட வாசகர்கள்! நாம் ஒன்றும் குமுதம், ஆனந்த விகடன் புத்தகத்திற்கு திரை விமர்சனம் எழுதி, 100 க்கு 36, 100 க்கு 39 1/2 என்று போடுவதற்கு படிப்பதில்லை! பின் ஏன் அதில் தவறு, இதில் தவறு என்று அல்லாடுகிறோம்? தவறை சுட்டிக் காட்டுங்கள் அது குற்றமில்லை,அடுத்த இதழில் நிச்சயம் மாற்றம் இருக்கும்! கடும் தண்டனைக் கொடுக்க தவறு ஒரு கொடும் குற்றமாக கருதப்படுவதில்லை! நமக்கே இவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால் தயாரிப்பவருக்கு எவ்வளவு அக்கறை இருக்கும் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை? இப்படியே போனால் நீ அழிந்து விடுவாய், உன்னால் நாங்களும் அழிந்து விடுவோம் என்கின்ற ரேஞ்ச் எதுவரை பயணிக்கும் என்று தெரியவில்லை!

  சினிமா எடுப்பது எல்லோரும் பார்ப்பதற்காகவும், house full ஆக ஓடவேண்டும் என்பதற்காக தான்! அதற்காக விஜய் படத்திற்கு அஜித் ரசிகர்கள் சென்று படம் முடியும் வரை இதை அப்படி செய்திருக்கலாம், அதை இப்படி செய்திருக்கலாம் என்று யோசனை கூறிக்கொண்டிருந்தால் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அங்கு உருவாகும்?

  contd part .2

  ReplyDelete
  Replies
  1. படு சூடாக இருப்பது போல உள்ளதே மிஸ்டர். மரமண்டை!!! ஏன் இந்த திடீர் கொலவெறி? சூடு ஆறிய SHSS கமென்ட்ஸ் போலவே திரும்பவுமா? நான் மெய்யாலுமே அழுதுடுவேன் !!! :)

   Delete
  2. புத்தக பிரியன்: சூடாக பதியவில்லை ஆழமாக பதிந்துள்ளதால் அப்படி தெரியும்! நீங்கள் எழுதியதாக நினைத்து படியுங்கள் நண்பரே கருத்தும்,சுவையும் மிகுந்ததாக தெரியும் :)

   Delete
 74. part .2 :-

  பழைய, புதிய நண்பர்கள் அனைவரின் பொதுவான பார்வைக்காக;

  Dr அவர்களுக்கு, தங்களின் நடுநிலையான கருத்துக்கு மிகவும் நன்றி!

  பாதையில் சர்க்கரை கொட்டி அதன்மேல் நடந்து சென்றால் மட்டும் மனமும், வாயும் இனித்து விடுவதில்லை! நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல அதுவும் அந்த நாலு பேரு அநியாயமாக பாதிக்கப்பட்டிருந்தா நேர்மையான வழிமுறை எதுவுமே தவறான முன்னுதாரணமாக அமையாது! நடுநிலை என்பது உண்மையை பயமின்றி வெளிச்சம் போட்டுக் கட்டுவதே அன்றி இதுவும் சரி, அதுவும் சரி என்பதல்ல!

  இது ஆடுகளம், எப்படி வேண்டுமானாலும் அடித்து ஆடுங்கள்! no rules and regulations. ஆனால் யாராவது pitch-யை சேதப்படுத்தினால் என் போன்ற பார்வையாளருக்கு கூட அது தவறான ஆட்டமாகத்தான் தெரியும்.

  எல்லா விடியலும் இரவுக்கு பின்தான் !!!

  ReplyDelete
  Replies
  1. இவரு நல்லவரா கெட்டவரா? குழப்புதே அப்பப்போ!!! நாராயணா!!!

   Delete
  2. //இது ஆடுகளம், எப்படி வேண்டுமானாலும் அடித்து ஆடுங்கள்! no rules and regulations. ஆனால் யாராவது pitch-யை சேதப்படுத்தினால் என் போன்ற பார்வையாளருக்கு கூட அது தவறான ஆட்டமாகத்தான் தெரியும்//
   அருமை அருமை !!

   Delete
  3. விஸ்கி-சுஸ்கி: அருமை என்ற ஒரு வார்த்தையில் தங்களின் பெருமை -யை நான் உணர்ந்து கொண்டேன்!!!

   Delete
 75. இனி வரும் நான்கு நாட்களும் எனக்கு தீபாவளி கொண்டாட்டம் தான்! மிகவும் சந்தோஷமாகவும், ஆரவாரமாகவும் உள்ளது! என்னை தீபாவளி அன்று ஆசிர்வதித்த புனித சாத்தான் வாழ்க!!!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ,இரண்டு நாட்களுக்குள் கலவர படுத்தி விட்டீர்கள் ,இங்கு வரும் அனைத்து நண்பர்களும் முதலிடம்தான் !அவரவர் உற்ச்சாகமூட்டும் கருத்துக்களின் படி அவரவர் நடையில் ! இங்கே வரும் அனைவரும் கம்மண்டுகளை பார்க்கத்தானே வருகிறார்கள் ,இன்னார் என்று பார்க்க அல்லவே !எனவே உற்ச்சாகத்தை பாய்ச்சுவோம் ,நிதம்தோறும் அல்லது வாரம் தோறும் வந்து /வரும் அனைவரும் முன்னுரிமை பெறுவோம்! நமது வலைத்தளம் நம்மை போன்ற நண்பர்கள் குறித்து விமர்சிப்பதை விட முன்னர் வந்த அற்புத கதைகள் குறித்து விமர்சித்தால் நன்றாக இருக்குமே ! அது அவரது கருத்துதான் ,அதனை பெரிது படுத்த வேண்டியதில்லை !எழுத்தில் கட்டி போடும் .................................என புதிய வியக்க வைக்கும் நண்பர்களுடன் , பழைய நமது மதிப்பிற்குரிய வலை பதிவர்களும் வாருங்கள் ! நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம் ஆசிரியர் கூறுவது போல !
   நீங்கள் எடுத்து கூறிய கருத்தின் படி கடமையை செய் பலனை எதிர்பாராதே ! நிச்சயமாக யாரும் பாராட்ட வேண்டும் என நான் எழுதுவது கிடையாது,கண்டிப்பாக ரசிப்பார்கள் ,ஏனென்றால் நான் ரசித்துதானே எழுதுகிறேன் என்று மட்டுமே !(பிறர் பாராட்ட வேண்டும் என எழுதினால் நான் தளர்ந்து போயிருப்பேன் ,ஆசிரியர் எனது பல கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை/கண்டிப்பாக எல்லோருக்கும் அவர் பதில் தர இயலாது ,பல கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாய் தந்ததும் உண்டு அடுத்த பதிவில் அல்லது வேறோரிடத்தில் ) மேலும் நண்பர்களை உற்ச்சாக படுத்தவே !நமது பழைய நண்பர்கள் வராமல் ஏங்கியதுண்டு ,மேலே நண்பர்கள் கூறிய ப்ளாக் நண்பர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட மனத்தாங்கலை களைந்து வந்தால் இன்னும் பல புதிய வாசகர்கள் வர எதுவாக இருக்குமே !கலக்கி எடுக்கலாமே !நல்லெண்ணம் கொண்ட நண்பர்களே நீங்கள் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் அதை விட வேறு யாரின் எண்ணமும் வேண்டாம் ,வாருங்கள் உங்களது எண்ணங்களை உள்ளபடி நியாயமாக பதிய !கடமையை செய் பலனை எதிர்பாராதே ,நமது கடமை உற்ச்சாக படுத்துவதே ,பலன் உங்களுக்கும் கிடைக்கும் உற்சாகமே !
   மொழி பெயர்ப்பு
   // சினிமா எடுப்பது எல்லோரும் பார்ப்பதற்காகவும், house full ஆக ஓடவேண்டும் என்பதற்காக தான்! அதற்காக ரசிகர்கள் சென்று படம் முடியும் வரை இதை அப்படி செய்திருக்கலாம், அதை இப்படி செய்திருக்கலாம் என்று யோசனை கூறிக்கொண்டிருந்தால் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அங்கு உருவாகும் // நண்பரின் கேள்வி சரிதானே நண்பர்களே ! இப்படி எழுதலாமே என கூறுவது தவறல்லவா ? எனக்கு இந்த மொழி பெயர்ப்பு பிடிக்கவில்லை என கூறுங்கள் ........கண்டிப்பாக 150 பக்கத்தில் ஏதேனும் ஒன்று கிடைக்காமலா போகும் ! விட வேண்டாமே ! இப்படி எழுதுங்களேன் என கூறுவது தவறுதானே ! பிடிக்கவில்லை என கூற உரிமை உண்டு ! 100 பேரை திருத்தி படுத்த நினைத்தால், அவரவர் இழுக்கும் பக்கங்களுக்கு சென்றால் ? எனக்கு சில இடங்களில் சென்னை தமிழை கையாண்டது பிடிக்காதுதான் ,தூய மொழி பெயர்ப்பு சிலருக்கு பிடிக்கவில்லை புத்தகம் முழுதும் அப்படி இல்லையே ! உங்கள் கருத்துக்களை பதியுங்கள் இப்படி இருந்தால் என்ற வரியை சேர்க்காதீர்கள் ........மொழி பெயர்ப்பாளரை அவமான படுத்தும் செயலே அது ! அவரது நடையில் அவர் எழுதட்டுமே ,நாம் கூறுவது சரி என அவருக்கு பட்டால் !

   Delete
  2. ஒரு பின்னூட்டம் வந்தாலும் சிறிதெனினும் ரசிக்கிறோமே ! மேலும் DELETED கம்மேண்டுகளுக்காக நான் பெற்றது ஏராளம் அல்லவா ? அதற்க்கு காரணம் அவர்களது ஒரு கண் எப்போதும் வலைதளத்தில் இருப்பதால்தானே ! யார் எழுதினாலும் இங்கே ரசிப்பார்கள் ! அது நமது காமிக்ஸ் குறித்து ஹாய் எனும் படி சொன்னாலும்

   Delete
 76. Hi, Will somebody let me know whether the bookings for NBS are over or still time is there ?

  ReplyDelete
  Replies
  1. NBS புக்கிங்ற்கு இந்த லயன் அலுவலக எண்ணை 04562272649 தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்

   Delete
  2. I hope its still on.you can call lion comics off on 04562272649 and ask for stella or radhakrishnan.

   They will help u.

   Delete
 77. மாயாவி: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வந்திருக்கிங்க!!! இதில் எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இது ஆசிரியர் அறிவித்த top 5 அல்ல, அவரின் தேர்வும் அல்ல. இது ஒரு சுவாரசியத்திற்காகவும், வித்தியாசமான ரசனைக்காகவும், இடையே என் கருத்தை பதியவும் எழுதப்பட்டுள்ளது! மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள், உங்களை எல்லாம் எவ்வளவு கேலியும் கிண்டலுமாக நண்பர்கள் என்ற முறையில் எழுதியிருக்கிறேன்!!! நியாயமாக பார்த்தால் நீங்களும் மற்றைய 6 நண்பர்களும் தானே சண்டைக்கு வந்திருக்க வேண்டும்? ஆனால் உங்கள் தகுதி எனக்கு தெரிந்த உண்மை! நண்பர்களின் தகுதியை சொல்ல எங்கே சென்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதே போல் அந்த பதிவை சீரியஸாக படிக்கும் மற்றைய நண்பர்களும், இங்கே என் மனதிற்கு இனிய நண்பர்கள் ஐவரும், அன்னாரின் அழகிய செயல்பாடுகளும் என்று எழுதினால் என்னை போன்ற புதியவர்கள் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்! மேலும் பின்னூட்டங்கள் அதிகமாகி பொழுது சுவாரசிமாக கழியும்!!!

  புனித சாத்தான் அவர்கள் 13.11.12 தேதியிட்ட பதிவில் என்னை மனித வெடிகுண்டாக மற்றைய 9 மனித வெடிகுண்டோடு தீபாவளிக்கு அனுப்புவதாக கூறினார்! அதற்கு நீங்களும் நானும் சண்டைக்கா சென்றோம்? நான் ஒரு தீவிரவாதி அல்ல என்று எத்தனை பேர் அவரிடம் வாதம் புரிந்தோம் அல்லது என்னையும் ஏன் மனித வெடிகுண்டு லிஸ்டில் சேர்க்கவில்லை என்று யாராவது வருத்தப்பட்டார்களா? அதை பார்த்து சிலராவது கைகொட்டி சிரித்து இருப்பார்கள் அல்லவா? joke is a joke அவ்வளவுதான்! அதை போல் இங்கேயும் வாழ்த்தி விட்டு போகலாமே!!

  சிரிப்பு தான் இன்றைய பஞ்சம் ! பிறக்கும் போது எதை கொண்டுவந்தோம் அதை இழப்பதற்கு !!!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஏன் தரலைன்னு ஒரு பக்கம் இடி...எனக்கு ஏன் தந்தேன்னு ஒரு பக்கம் இடி....மர மண்டையாரின் பாடு படு திண்டாடமா போகுது...ha ha ha!!!

   Delete
  2. இந்த பதிவில் இதுவரை கலக்கிகொண்டிருக்கும் பலரது கோபத்துக்கு ஆளாகியிருக்கும் மர மண்டை அவர்களுக்கு இந்த சிறப்புவாய்ந்த "பதிவின் அதிபர்" விருதை உங்கள் அனைவர்!! :) சார்பாக புனித சாத்தன் அவர்கள் வழங்குவார்.

   ஈரோடு விஜய் அவர்கள் உங்களுடைய நீளமான குச்சியை மர மண்டையாருக்கு கொடுத்து உதவ கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  3. விஸ்கி-சுஸ்கி: நண்பரே! எவர் எப்படி இடித்தாலும் அல்லது திட்டினாலும் எனக்கு அவ்வளவாக புரிந்து வராது! ஏனென்றால் நான் தான் மரமண்டை ஆயிற்றே! அதே போல் தங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த பெரிய விருதையும் இந்த வலைத்தள நண்பர்களின் சார்பாக அந்த எழுவர் அணிக்கே பகிர்ந்து கொடுத்து வாழ்த்துகிறேன்!!!

   Delete
  4. குச்சியெல்லாம் கொடுக்க முடியாதுங்க! வேணும்னா, நண்பர் மரமண்டை கொடுத்த செயினையும், மோதிரத்தையும் அடகுக் கடையிலயிருத்து மீட்டுக் கொடுத்துடறேன்.
   எல்லாரும் மனசுல என்ன நினைச்சிட்டுருக்கீங்க? ஒருத்தர் நான் வாங்கிய செயினையும், மோதிரத்தையும் அப்படியே குச்சியோட டைரக்ஸனை மாத்தி இன்னொருத்தருக்கு தரச்சொல்றார். இன்னொருத்தர் குச்சியில செயினை மாட்டி அடிக்கடி ப்ராக்டிஸ் பண்ணச் சொல்றார். இப்போ நீங்க அதே குச்சியை மரமண்டைக்கே திரும்பக் கொடுக்கச் சொல்றீங்க (அதுவும், கொடுத்து 'உதவனுமாம்').
   இதுவாவது பரவாயில்லை; ஒருவர் என்னைக் 'குச்சிக்காரர்' என்கிறார். நான் என்ன விறகுக்கடை வியாபாரமா செய்கிறேன்? உங்களையெல்லாம்... நற..நற...

   Delete
  5. Erode VIJAY: நண்பரே இப்ப உங்க நிலைமை என்னை விட 1000 மடங்கு பரவாயில்லை! என் நிலைமையை பாருங்கள் பொலம்ப வச்சிட்டாங்க தல:(

   மரமண்டை-ஒரிஜினல்

   Delete
 78. நண்பர்களே இது என்ன பித்தலாட்டமாக இருக்கிறது :( இப்படியும் இந்த வலைத்தளத்தில் ஆள்மாறாட்டம் செய்கிறார்களே :( இதற்கு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது ஒரு வழி சொல்லுங்களேன்!!! மிக அவசரம் இல்லை என்றால் என் பெயரில் இந்த தளத்தை அசிங்கப்படுத்தி விடுவார்கள்:(

  இப்படிக்கு

  மர மண்டை -ஒரிஜினல்

  ReplyDelete
 79. ஆசிரியர் விஜயன்: //ஐந்து அமைச்சர்களுக்குமான துறைகள்://

  இந்த தலைப்பை தாங்கிவந்துள்ள பின்னூட்டத்தை தயவுசெய்து டெலிட் செய்துவிடவும். கள்ளநோட்டு போன்று அடுத்தவரின் பெயரில் வந்து களங்கம் ஏற்படுத்தும் இவர்களா காமிக்ஸ் வாசகர்கள்:( நிச்சயம் ஏதோ வழிபோக்கராகவோ அல்லது இதுவரை தன் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு இங்கே வலம் வந்தவராகவோ தான் இருப்பார். நான் ஏதாவது வித்தியாசமான எங்கும் கிடைக்காத profile உடன் வ்மீண்டும் வருகிறேன்:(

  இவண்

  மர மண்டை-ஒரிஜினல்

  ReplyDelete
 80. நான் இருநூற்றி ஒன்னு. ஆனா எனக்கு யாரும் ஒரு வழி சொல்லித்தர மாட்டுகிறீர்களே!!!

  மரமண்டை-ஒரிஜினல்

  ReplyDelete
 81. Folks,

  திரு. மரமண்டையார் அவர்களின் பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களையும் படித்திட்டேன்.

  நாம் அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் என்ற முறையினில் லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் பற்றி நாம் அளவளாவிடவும் நமது அன்புக்குரிய லயன் ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு தளம் இந்த வலைமனை. இங்கு நாம் முடிந்த்த வரையினில் தனி மனித துதிகள் பாடிடாமல் காமிக்ஸ் சார்ந்த ரசனை மிக்க விவாதங்களில் ஈடுபடுவோமேயானால் அனைவராலும் அது விரும்பப்படும். நமக்கு ஒரு சாரரின் பின்னூட்டம் பிடித்திருந்திட்டால் அதற்கு உரிய அளவினில் பதில் பின்னூட்டம் செய்திடல் நலம் - we can definitely pat our backs once in a while. However this should not lead to a situation where the passing readers feel that there is a lot of eulogizing going on in this space.

  காமிக்ஸ் பற்றிய ரசனைகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் - சில சமயம் ஹாஸ்யங்கள், காமிக்ஸ் படித்த பொது நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் - இவை அனைவராலும் இங்கு நன்றாக எழுதப்படுகின்றன. அவை சில சமயங்களில் உற்சாக மிகுதியினால் தனி மனித துதிகள் போன்று அமைந்துவிடுகின்றது. அவ்வாறு ஆகி விடாமல் நாம் கவனம் கொள்ள வேண்டும்!

  ReplyDelete