Powered By Blogger

Friday, November 02, 2012

சித்திரமும் பேசிடுமே..!


நண்பர்களே,

வணக்கம். இன்னுமொரு மாதத் துவக்கம் - இன்னுமொரு புதிய இதழோடு துவங்கிடும் சந்தோசம் மீண்டும் ஒரு முறை கிட்டியுள்ளது ! சரியாகச் சொல்வதானால் இது "புது" இதழ் அல்ல தான் என்ற போதிலும், அமைப்பில் ; வண்ணத்தில் ; பாணியில் எல்லாமே ஒரு முழுமையான makeover சகிதம் வந்திடும் "தங்கக் கல்லறை" யில் பழமை நெடி எங்கும் அடித்திடாது என்பது எனது நம்பிக்கை !  

இன்று காலையிலேயே அத்தனை சந்தாக்களுக்கும் ஒட்டு மொத்தமாகப் பிரதிகள் அனுப்பி விட்டோம் - அயல்நாட்டுச் சந்தாக்கள் உட்பட ! So - கூரியர் நண்பர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் - நாளைய தினம் உங்களின் பெரும்பான்மையினரிடம் இதழ் பத்திரமாக வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! 

  
ஒரிஜினல் அட்டைப்படங்களோடு வந்திடும் இந்த இதழில் டைகரை முழு வண்ணத்தில் ரசித்த கையோடு நிச்சயம் எங்களைத் திட்டப் போகிறீர்கள் என்பது உறுதி ! வண்ணத்தில் மிளிரும் இத்தனை வீரியமானதொரு கதையை black & white -ல் - அதுவும் சின்ன சைசில் வெளியிட்டதற்காக 17 ஆண்டுகள் தாமதமானால் கூட அர்ச்சனை காத்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது !உங்களைக் குளிர்விக்க நமக்குத் தெரிந்த ஒரே சங்கதி தான் உள்ளதே...! அவற்றை எடுத்து விட இதை விட வேறு பொருத்தமான தருணம் உண்டா  -என்ன ? So here  goes :  










2013 -க்கு திட்டமிடப்பட்டிருக்கும் புது இதழ்களின் ஒரு சின்ன ட்ரைலர் இது ! இன்னும் விரிவாய்...இன்னும் சில புதுமுகங்களோடு ; எந்த மாதங்களில் எந்த இதழ்கள் ; என்ன விலைகளில் என்பதெல்லாம் - NEVER BEFORE ஸ்பெஷல் இதழுடன் வரவிருக்கும் booklet -ல் பார்த்திடலாம் !

இம்முறை நீளமாய் நான் எழுதிட அவசியமில்லை என்றே நினைக்கிறேன் - இந்தச் சித்திரங்களே மேடையேறிப் பேசிடுமே ! நாளைய பொழுது உங்களின் விமர்சனங்களால் புலரப் போவதை எண்ணும் போது - ரிசல்ட் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவனின் சிந்தனைகளே என்னுள் ! Fingers crossed !

இப்போதைக்கு  - Adios amigos...!

பின்குறிப்பு : 2013 -க்கான சந்தா தொகையில் சின்னதாய் ஒரு மாற்றம் ! தமிழகத்துக்குள் கூரியரில் பெற்றிட : Rs.1320  ; பதிவுத் தபாலில் பெற்றிட : Rs.1420  ; தமிழகத்துக்கு வெளியே ( இந்தியாவுக்குள் ) : Rs.1520. ஏற்கனவே சந்தாக்களைப் புதிப்பித்துள்ள நண்பர்கள் இந்த சின்ன வித்தியாசத்தை பின்னர் ஒரு சமயம் அனுப்பிக் கொள்ளலாம் ! காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாத் ொகையில் மாற்றம் ஏதும் கிடையாது.  

454 comments:

  1. //இன்று காலையிலேயே அத்தனை சந்தாக்களுக்கும் ஒட்டு மொத்தமாகப் பிரதிகள் அனுப்பி விட்டோம்//

    Very Happy to hear it Sir.

    wayne sheldon - an amazing choice.

    A lot of superb graphic novels.

    Wow an amazing year ahead.
    I am going to send the subscription amount today.

    Thank You So Much Sir

    ReplyDelete
    Replies
    1. Sir,

      I have transfered Rs.1700 Now.
      I hope My Previous Year balance will be there around 200.
      Whom should i contact to clarify the same.

      Delete
    2. Thanks For the Reply sir.
      I have sent a mail to yahoo id seeking the Details.
      Will that be fine or should call them for the details.

      Delete
  2. வாவ்... பின்னிடிங்க தல... சூப்பர்... எங்கள் அனைவர்க்கும் fuse போய் விட்டது எடிட்டர் சார்...

    ReplyDelete
    Replies
    1. Never dreamed of the image that ur having will be back in our comics after these long years .Danger diabolik was one of my fav during that time

      Delete
  3. sir,

    when will it be listed in ebay???

    ReplyDelete
    Replies
    1. Dear Unknown,

      A subscription will put you in the first batch of shipping. E-bay listings would be done in a day ; but books will ship only after the agents' copies are sent.

      Delete
  4. @Vijayan Sir,

    Awesome announcements and list of comics ahead..

    How many color editions planned for 2013? Is Largo Winch there in 2013?(other than NBS special)?

    Looking forward for Bruno in Color.

    All the best sir !!!!! We are with you !!!

    ReplyDelete
    Replies
    1. Srini V : You will find all your answers in the NEVER BEFORE SPECIAL !

      Delete
  5. சூப்பர் சார் ,சிபி என்னிடம் போன மாதம் வேய்ன் ஷெல்டன் குறித்து சிலாகித்து கொண்டிருந்தார்,அற்புதமான ஓவியங்கள் என ,வான் ஹேம்மே என எனக்கு அப்போது தெரியாது!அட்டகாசம் சார் வான் ஹேம்மே படைப்புகள் அனைத்தும் தருவிக்க முயற்சி செய்துள்ளீர்கள்.......வான் ஹேம்மே மயமாக இருக்கிறது ...
    ஒளி மயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது......
    அதிலும் டேன்ஜர் டயபாலிக் பாலிக் வருகை அற்புதமான அறிவிப்பு /வண்ணத்தில்தானே?ஒரு வழியாக சாகச வீரரையும் கொண்டுவந்து விட்டீர்கள் வண்ணத்தில் ஆஹா .......லுக்கி கூட ,ஆனால் சிக் பில்லை காணோமே!
    அசத்தலான கிராபிக் நாவலைத்தான் தருவீர்கள் என நினைக்கிறேன் ...............
    புத்தாண்டு கலை கட்ட போகிறது !
    நன்றி ! நன்றி !! நன்றி !!!
    ஆனால் கருப்பு வெள்ளை அற்புதமே !ஆனால் வண்ணத்திற்கு ஈடாகாதல்லவா ?வண்ணத்தை தெளிக்கும் டைகர் நாளை வரை காத்திருக்க வேண்டுமே !

    ReplyDelete
  6. புரட்சித்தலைவன் பிரின்ஸ் டைஜஸ்ட்
    டெக்ஸ்வில்லர் டைஜஸ்ட்
    2013 ல் இல்லையா? :-(((

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN : இன்னும் நாம் வெளியிடாத டெக்ஸ் வில்லர் கதைகள் 600 க்கும் அதிகம் இருக்கின்றன...! அவற்றின் பக்கமும் கொஞ்சம் பார்வையைத் திருப்புவோமே ?

      Delete
    2. 600 ஆ ! கதாசிரியரின் சொர்கமாக இருந்திருப்பார் போல !

      Delete
    3. @Vijayan Sir
      600 stories of tex willer yet to be published? Surprising/great news for all tex fans..pls publish them all :)

      Delete
    4. வில்லர் பது கதைகளுக்கு டபுள் ஓகே. சார். அப்போ பிரின்ஸ்?
      பதிலுக்கு நன்றி.

      Delete
    5. @Srini V:If he publishes all then we will not have any other releases.
      So we will ask him to publish all the Hit Titles from the 600.

      What do you Say?

      Delete
    6. Super...600 more... 5 books in a year also will take 120 years sir....seperate comics for Tex then like lion,muthu

      Delete
  7. what is the English titles for these Lucky Luke books ?. It seems it will be raining lucky luke stories in next year as already 4 to 5 books are in coming list for lucky Luke

    ReplyDelete
  8. Just Noticed that Like Largo for Muthu.You have brought Wayne for Lion.Thats an amazing idea.Yday night only i was discussing with friend regarding the same.I am glad i got the answers today.

    ReplyDelete
    Replies
    1. Sir,

      The Cover Page of lucky's kanam paadum kambikal is similar to our previous issue jane irukka bayamen.

      Delete
    2. "மாதிரி" எல்லாம் இல்லை...! இதுவே தான் நாம் "ஜேன் இருக்க பயமேன்" இதழுக்குப் பயன்படுத்திய அட்டைப்படம் ! :-) இந்த இதழ் வெளி வரும் போது இன்னுமொரு புதிய டிசைன் தயார் செய்து கொள்வோம் !

      Delete
    3. கிருஷ்ணா - ஜேன் இருக்க பயமேன் சினி புக் அட்டைப் படத்தில் லக்கிலூக் இல்லை. முன்பு இக்கதையை வெளியிட்ட ஆசிரியர், அட்டையில் கண்டிப்பாக லக்கிலூக் இருக்கவேண்டும் என்று எண்ணி, அந்த அட்டைப் படத்தை உபயோகப்படுத்திவிட்டார் என்பது என் எண்ணம்.

      Delete
  9. Thool kilappittinka sir...

    puthu arimukankal puthu kathaikal
    ennai makilchi
    kadalil
    aalthukindrana...

    100000 THANKS...

    ReplyDelete
  10. காமிக்ஸின் இரண்டாவது innings -ல் நான் படித்த முதல் புத்தகம் 'மின்னும் மரணம்'. நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்த அந்த கதை என்னுள் அணையாமல் இருந்த காமிக்ஸ் காதலை எரிமலையாக வெடிக்கச் செய்தது. புத்தகம் கொடுத்த நண்பர் கூறியது, " 'தங்கக்கல்லறை' படிக்காமல் செத்துப்போய் விடாதே....!". அதனால்தான் ஒரு ஆர்வத்தில் 3 புத்தகங்களாக ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறேன், பசியோடு இருக்கும் போது மெனு கார்டில் இருப்பதையெல்லாம் ஆர்டர் செய்வது போல.

    ReplyDelete
  11. டியர் எடிட்,

    நிரம்ப நாட்கள் கழித்து உங்கள் பதிவேடு ஒன்றில் கருத்து பதியும் வாய்ப்பு கிட்டிற்று. அதற்கு காரணம் நமது அபிமான ப்ளுபெர்ரியின் சிறந்த கதைகளின் ஒன்று மீண்டும் பவனி வர போவது என்பது தான்.

    டெக்ஸ் வில்லர் கதைகளின் பின்னே செக்குமாடு போல சுற்றிதிரிந்த நமது தமிழ் காமிக்ஸ் களத்திற்கு, கவ்பாய் கதைகளில் புதிய ஒரு பரிணாமத்தை எனக்கு அறிமுகம் செய்தது, தங்களின் கேப்டன் டைகர் என்ற ப்ளுபெர்ரியின் தங்க கல்லறை அறிமுகம் தான். 1996 ல் கருப்பு வெள்ளை சித்திரங்களுடன் இதை படித்தது, பிறகு 2005 களில் இணையம் மூலம் இவைகளில் ஒரிஜினல்களை தருவித்து அவற்றின் சித்திர மற்றும் வண்ண திறனில் மதிமயங்கி போனது, என்றாவது ஒருநாள் இப்படி ஒரு தரத்தில் நமது தமிழ் காமிக்ஸ்களையும் காண மாட்டோமா என்று ஏங்கியது, பின்பு ஒருவழியாக 2012 ல் மூலம் லயன் முத்து வண்ண பிரவாகம் கண்டபோது, நான் அதிகம் அதில் படிக்க ஆசைபட்டது நமது ப்ளுபெர்ரி கதைதான்.

    முக்கியமாக தங்க கல்லறையை மீண்டும் ஒருமுறை தமிழில் வண்ணத்தில் பார்க்க வேண்டும் என்ற அவா, தற்போது தான் நிறைவேறுகிறது. நடுவில் வந்த மிசௌரி கதையை பற்றி கூறாமல் இருந்தாலே உசிதம். ப்ளுபெர்ரி கதைகள் அனைத்தையும் தமிழில் வெளியிட்டு விட வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்றே இத்தகைய கதைகளை வெளியிட வைக்கிறது என்ற வாதம் சரியானதாக தெரியவில்லை.

    ஒரே வேண்டுகோள், ப்ளுபெர்ரி என்ற வார்த்தை தற்போது நமது ரசிகர்களிடையே மிகவும் பரிச்சமயமான ஒன்று என்பதால், இனியாவது அவரை ஒரிஜினல் நாமகரணத்தோடு உலவ விடலாமே. கேப்டன் டைகர் மிகவும் செயற்கையாக தெரிகிறது... அதுவும் அவர் பல கதைகளில் லெப்டினன்ட் என்ற அதிகாரத்தோடு உலவும் போது, கதைக்குள் வலுவாக அந்த போலி பதவி உயர்வை திணிப்பது சரியாக படவில்லை, அது எத்தகைய நோஸ்டால்ஜி எபெக்டை கொடுத்தாலும் கூட.

    2013ல் அறிமுகமாகும் புதிய கதாநயாகர்கள் மற்றும் நமது பிரபல கதாபாத்திரங்களின் மறுபிரவேசம் கண்டு மகிழ்ச்சி. ஆனால் வான் ஹாமேவின் அனைத்து கதைகளையும் பதிகிறேன் என்று ஒரே குறிக்கோளாடு இறங்காமல் இருந்தால் சரி. வெய்ன் ஷெல்டன் சிறப்பானது தான், ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்ற பாணியில், வான்னும் சில கதைகளில் சொதப்பியிருக்கிறார்... உதாரணம் லேடி எஸ்.

    அதே போல, டெக்ஸின் மீதம் உள்ள 600 சொச்சம் கதைகளையும் தொடர்ந்து போடுவோம் என்று கூறி இறங்குவதும் சரியாக படாது என்று தங்களுக்கே தெரிந்திருக்கும். இத்தாலி மொழியில் கதையை படித்து விட்டு தேர்ந்தெடுப்பது நடவாத காரியம் என்றாலும், சிறந்த வரவேற்புகள் பெற்ற, மற்றும் வித்தியாச கதைகளன்களை கொண்ட டெக்ஸ் கதைகளை மட்டும் தேடி பிடித்து வெளியிடலாம். டெக்ஸ் என்ற கதாபாத்திரத்தின் பெருமைக்கு அந்த சிரமம் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : LADY S நம் ராடாரில் இல்லை ; Van Hamme மீதும் ஒரு கண்மூடித்தனமான காதலும் கிடையாது !

      அதே போல் டெக்ஸ் வில்லரின் 600 கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டது ஒரு passing reference மாத்திரமே ! அவை அனைத்தையும் வெளியிட ஒரு ஆயுள் பற்றாது !

      Delete
    2. சார் அந்த ராடார் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். சூப்பர் ஹீரோஸ்ஸ அனுப்பி எங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் பக்கமாக அதை திருப்பி வைத்துவிடுவோம் :-) (JUST JOKING) :-)

      Delete
  12. Dear Sir,

    அருமையான பதிவு சார் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும். புதிய அறிமுகங்கள் நன்றாக உள்ளது. தங்கக் கல்லறை புதிய MAKEOVER என்று நீங்கள் சொல்லும் பொழுது ஒருபக்கம் சந்தோசமாக இருந்தாலும் ஒரு பக்கம் பழைய அழகு கெட்டு விடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது... படிக்கும் பொழுது தெரிந்து விடும் :-)

    சார் FEB 2013-ல் வருவது TEX -ன் 256 பக்க சாகசம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியென்றால் அது காவல் கழுகு இல்லையா? வேறு கதையா?

    ReplyDelete
    Replies
    1. ஒரே வார்த்தையில் முடித்து விட்டீர்களே சார் :-). என்ன கதை என்பது சஸ்பென்ஸ்தானா? தள்ளிப் போடப்படுவதால் காவல் கழுகை பெரிய சைசில் எதிர்பார்க்கலாமா?

      Delete
    2. நான் கண்டுபிடித்துவிட்டேன்.
      தலைப்பு .எமனின் ஏஜன்ட்???

      Delete
  13. ebayல் வாங்குபவர்கள் பாவம் செய்தவர்களா . உடனடியாக ebayல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Thilagar, Madurai : ஓராண்டுக்கு முன்னதாய் முழுத் தொகையும் அனுப்பிக் காத்திருக்கும் சந்தாதார நண்பர்களுக்கு முதன்மை அளிப்பதில் வியப்புக்கு இடமில்லையே.

      Delete
    2. தவறாக நினைக்க வேண்டாம் . காலையில் அவர்களுக்கு மாலையில் எங்களுக்கு
      அதைத்தான் கூறினோம் . அடுத்த முதன்மையான வேலை 2013க்கு சந்தா அனுப்புவது .

      Delete
  14. அட்டகாசமான அறிவிப்புகள் ! 2013-ல் அனைத்து புத்தகங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    மிக்க நன்றி !

    ReplyDelete
  15. 2012 ஒரு வகையில் சிறந்த ஆண்டாக இருந்ததை போன்று 2013 ம் ஆண்டு பல மடங்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என இந்த அறிவிப்பின் மூலம் தெரிகிறது. வாழ்த்துக்கள். E-Bay இலும உடனடியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  16. கிராபிக் நாவல் என்றாலே சோகம் தானா? ஒற்றைக் கையன் படுத்தி எடுத்தது போல், இவரும் படுத்தி எடுக்கட்டும். :D

    டிடெக்டிவ் டைஜெச்டிலும் பின்னூட்டத்தில் அதிகம் கேட்டகப்பட்ட கதைகளாக இருக்கிறது. நன்றாக இருக்கும்
    என்று நம்புகிறேன். அதிகம் எதிர் பார்க்க பட்ட கதா நாயகர்கள். நன்றாக இருக்கிறது.

    நேற்று இரவு பதிவிட இருந்ததை மின் அரக்கன் பிடியால் இப்போது பதிவிட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா ?

    மின்னும் மரணம், சிக் பில் 2013 இல் வர வாய்ப்பு உள்ளதா ?

    முழு வண்ணத்தில் என்று கருப்பு வெள்ளையில் இமேஜ் கொடுத்திருக்கிறீர்களே. அந்த இம்பாக்டே போயிடுச்சு சார். தயவு செய்து கலர் இமேஜ் அப்டேட் பண்ணுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. Raj Muthu Kumar : இதழில் நீங்கள் என்ன பார்த்திடப் போகிறீர்களோ ; அதுவே தான் இங்கே பதிவில் உள்ளது. வண்ணத்தில் வரும் விளம்பரங்களாக இருக்கும் பட்சத்தில் இங்கேயும் வண்ணத்தில் அரங்கேறி இருக்கும்.

      Delete
    2. புரிந்தது, நன்றி சார்.

      Delete
  17. லார்கோ வின்ச் போல் வெய்ன் ஷெல்டன் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. 1 . டாப் 3 இதழ்கள் சர்ப்ரைஸ் ஸ்பெஸல் ,தங்க கல்லறை (பார்க்காமலே ),wild வெஸ்ட் ஸ்பெஸல்
    2 . ஜெரோம் கதைகள்
    3 .100 க்கு குறைவாய் வேண்டாம் கருப்பு வெள்ளை கதைகள் கூட shss போல வந்தால் நன்றாக இருக்கும்.அதிக கதைகளுடன்,அதிக பக்கங்களில்
    4 . டைகரின் பழைய கதைகளும் மீண்டும் தொடராகவும்,லார்கோ...
    5 . லார்கோ...
    6 . யாராக இருப்பினும் விறு விருப்பில்லாத கதைகளை
    7 . திருப்தியே ,ஆனால் டெக்ஸ் வண்ணத்தில் அலசுவோம் என கூறியுள்ளீர்கள் ஞாபகம் இருக்கட்டும் .....சிறிய கதை தேர்வுகள் இன்னும் சற்று சிறப்பாய் வேண்டும்...இல்லையெனில் சிறந்த பழைய கதைகளை மறுபதிப்பில் வெளிவிடலாம் இணைத்து....அல்லது வண்ணத்தில் நம் பழைய நண்பர்களை காலி,கபீஸ் போல பக்கங்களை குறைத்து வெளி விடலாமே!
    8 . வேறு என்ன shss தான் ! கார்த்திக் மன்னிக்க !
    9 .டபுள் த்ரில்
    10 .13 வண்ணத்தில்,மறு பதிப்பில் வண்ணத்தில் ஒரு புத்தகம் போதாது,astrix ,சுஸ்கி-விஸ்கி ,வால்ட் டிஸ்னி ,வேதாளர்,பேட் மேன்,ஸ்கார்பியன் ,சிறுவர்களை கவரும் கதைகள்,இலவச இணைப்புகள்.........இன்னும் சில ஞாபகம் வரும் போது கூறுவேன்!

    ReplyDelete
  19. நீங்கள் கேட்ட பத்து கேள்விகளுக்கான விடையை போட்டிருக்கலாமே சார். தலையை கையில் பிடித்து கொண்டு கேட்கிறேன் :D

    ReplyDelete
  20. பழமை கொஞ்சமும் (CC) புதுமை அதிகமாகவும் (அதிரடி அறிமுகங்கள்) விரும்பும் என்னைபோன்றவர்களுக்கு இது உண்மையிலேயே மறக்கமுடியாத தீபாவளிதான். ஆசிரியருக்கு நன்றி :)

    ReplyDelete
  21. Wow Wow Wow Editor! Am on cloud nine! Will write detailed comments later - but currently experiencing bliss!

    ReplyDelete
  22. Hi..everybody.. daily chceking for last whole week..but not able to come first...ohh Where is 2013 ==>TEX book preview

    ReplyDelete
  23. ebayல் சீக்கீரம் புத்தகத்தை வெளியிடலாமே சார். ஏன் ஏஜெண்ட்களுக்கு அனுப்பிய பிறகு தான் என புரியவில்லை

    ReplyDelete
  24. பல நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை வாங்க பரிந்துரைக்க ebayலிங்கே எனக்கு உதவும் . அதனால் விரைவில் ebayல் லிஸ்ட் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Lucky Limat லக்கி லிமட் : லிஸ்டிங் போட்டாகி விட்டது.

      Delete
  25. smurfs,மற்றும் lone ranger கதைகள் நமது ரசனைக்கு எடுபடுமா?எடிட்டர் பதில் அளிக்கவும்.மேற்படி காமிக்ஸ்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன.அப்படியே கொஞ்சம் வால்ட் டிஸ்னி வகையறாக்களையும் கவனிக்கவும்.டின் டின் என்ன ஆனார்?அடுத்த ஆண்டு அவர் கதைகள் வெளிவருமா?இரும்புக்கை எத்தன,பரலோக பாதை வண்ணத்தில் மறுபதிப்பு உண்டா?டெக்ஸ் கதைகள் சில வண்ணத்தில் வெளிவந்துள்ளன.அவற்றை நமது லயனில் வெளியிடும் சாத்தியங்கள் உண்டா?வருடா வருடம் பொங்கல்,கோடை,மற்றும் தீபாவளி ஸ்பெசல் வெளியிடுவீர்களா?நமது இதழ்களை விளம்பரபடுத்த எளிய வழி காலெண்டர் (டெக்ஸ்,டைகர்,லக்கி லுக் படத்துடன்)வெளியிட்டால் என்ன?வருடம் முழுவதும் தொங்கிகொண்டிருக்கும் காலெண்டர் நமது இதழ்களை மெளனமாக அனைவரிடமும் கொண்டு சேர்க்குமே.இந்த யோசனையை பரிசீலிப்பீர்களா?(காலெண்டரில் புனித சாத்தானின் படத்தை போட்டாலும் நன்றாக இருக்கும்.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. (காலெண்டரில் புனித சாத்தானின் படத்தை போட்டாலும் நன்றாக இருக்கும்.ஹிஹி).
      விளங்கிடும்

      Delete
    2. என் உயிரினும் மேலான அருமை நண்பர் ராஜகணேஷ் அவர்களே.என் கமெண்டின் ஆரம்ப பகுதியை விட்டுவிட்டு பிராக்கெட் தமாஸ்களை சீரியஸாக எடுத்துகொண்டு விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.பரவாயில்லை.சாத்தானுக்கு இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.(மீசையில் மண் ஒட்டவில்லை.ஹிஹி).

      Delete
    3. //வருடா வருடம் பொங்கல்,கோடை,மற்றும் தீபாவளி ஸ்பெசல் வெளியிடுவீர்களா?//

      Delete
    4. saint satan : செய்து விட்டே சொல்லுகிறேனே...?!

      ஜனவரி வரைப் பொறுங்கள்...2013 -ன் அட்டவணை உங்கள் கைகளில் தயாராக இருக்கும் !

      Delete
    5. Saint Somasundaram, you have given a wonderful idea!

      Delete
    6. சும்மா உங்கள சீண்டி பார்த்தேன் நண்பரே saint satan

      Delete
  26. புனித சாத்தானின் காலண்டர் யோசனை அருமையான ஒன்று.
    தினசரி காமிக்ஸ் ஹீராக்களின் முகத்தில் விழிக்கலாம்.
    எங்கள் வீடு காமிக்ஸ் வீடு என்று சொல்லாமல் சொல்ல்லாம். அருமையான விளம்பரமாக அமையுமே.
    தனியே விற்பனைக்குத் தரலாம்.

    ReplyDelete
  27. கில்லர் பஞ்ச்.....ஆசிரியர் அவர்களே ....இதைப்போல் திக்குமுக்காடவைக்கும் ஒரு அறிவிப்பை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை ...ஒரு பக்கம் நமது காமிக்ஸ் பயணத்திலேயே ஒரு மைல் கல் சகாப்தமான தங்கக்கல்லறை வண்ணப்பதிவு என்கிற பொக்கிஷம் கிடைக்கிற சந்தோஷத்தில் ,வந்து நெட்டில் உட்கார்ந்தால் ,எதிர்பாரா இந்த அறிவுப்புகளை கண்டு நான் சந்தோஷத்தில் ஆடிப்போய்விட்டேன் ...வழக்கமாக நடு இரவில் அப் டேட் இருக்கும் என நேற்று இரவு ம் கண் முழித்து பார்த்தேன் ....அந்த அசதி இப்பொழுது உற்சாகமாகிவிட்டது....நன்றி ...காமிக்ஸ் கிளாசிக்கில் இந்தஅறிவிப்பில் உள்ள இதழ்களைவெளியிடுங்களேன் ...தாங்க முடியவில்லை .....

    ReplyDelete
  28. இனி போஸ்ட்மேன் வருகையை எதிர்பார்த்தே ஓடிவிடும் இந்த வாரம் ....இதவும் ஒரு சுகமான அனுபவம் தான் ...

    ReplyDelete
  29. 1) Top 3 இதழ்கள் - Wild West Special (definitely the best issue of 2012), thanga kallarai, largo's surprise special

    2) Top 3 சொதப்பல்ஸ் - only because of bad stories and not because of heroes :) .. Jerome, super hero special and double thrill special(prince story very bad. artwork is the only saving grace).

    3) தற்போதைய விலை :No complaints

    4) most expected issue - மரணம் மறந்த மனிதர்கள் . (read the scenario for the original. really fascinating. lost series இதுல இருந்துதான் சுட்டுருப்பாய்ங்க போல இருக்கு. )

    5) most fav hero - Blueberry and Largo

    6) least fav hero - இப்போதைக்கு reporter Johnny. தொடர்ந்து மொக்கை கதைகளாக தருவதால்.

    7) black and white
    - கருப்பு வெள்ளை கதைகளை நான் ஆதரிக்கிறேன் . ஆனால் தற்போது வரும் action cowboy steve போன்ற மொக்கை filler கதைகளை அல்ல.
    - கருப்பு வெள்ளையின் பல பரிமாணங்களை காட்டிய Alex Raymond, Al Williamson, Breccia, Toppi, Bernet போன்றவர்களை காண விளைகிறேன்

    8) best cover image - Wild west special

    9) worst cover image - Comeback special/Double thrill special . overdone Photoshop effects.

    10) suggestions 2012:
    பின்வருவனவற்றை vision 2015 என கொள்க. :)
    *) stories from all genre. blockbuster action (largo, Tex Willer), serious mature comics, comedy (Iznogoud, chickbill, lucky luke) , western (blueberry, comanche, etc), mystery, real gritty stories, fantasy.
    - one genre each month.
    *) More stories from top artists (Hermann, Giraud, Rosinski, vance)
    *) introduce more top artists (Breccia, Toppi, Serpieri, Hugo Pratt, Andreas, )
    *) bigger size - like Original french bds, cinebook.
    - gives more room for the art to shine
    - definitely will improve translation and story quality by giving more freedom to translator and letterist.
    - hope this becomes a realizable dream atleast by 2015 :) .

    ReplyDelete
    Replies
    1. sundar //least fav hero - இப்போதைக்கு reporter Johnny. தொடர்ந்து மொக்கை கதைகளாக தருவதால்//

      பெல்ஜியத்தில் இதைப் படித்தால் சண்டைக்கு வரப் போகிறார்கள் ! ரிபோர்ட்டர் ஜானி அவர்களது favorite sons-ல் ஒருவர் !! :-)

      Delete
    2. Dear Sundar,
      Reporter Johnny stories never fails. A worst Johnny story also 100 times better than todays movie...
      I request our editor, to pls ensure atleast one Johnny story next year
      Peace and blessings...
      Udhay, chennai -78

      Delete
  30. டியர் எடிட்டர் சார்,
    தங்க கல்லறை மொத்தமாக அனுப்ப பட்டு விட்டது என்ற அறிவிப்பை பார்த்தவுடன் நாளை காலை எப்போது வரும் என்று ஏங்கி கொண்டிருக்கிறேன். 2013 காமிக்ஸ் கதைகளின் அறிவிப்பு அட்டகாசம். புதிய கதைகள். புதிய நாயகர்கள்.
    மாதா மாதம் காமிக்ஸ் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இரவு பகலாக உழைக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் சார்.
    எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  31. எங்களுக்காக அசுரத்தனமாக உழைக்கும் lion ..முத்து...டீம் crew யார் யார் ...என்பது எங்களுக்கு தெரியாது ,அந்த UNSUNG HEROS க்கு எங்கள் நன்றிகள் .........

    ReplyDelete
    Replies
    1. Ahmed Pasha : அந்த unsung ஹீரோஸ் அனைவரையும் NEVER BEFORE ஸ்பெஷல் வெளிச்சம் போட்டுக் காட்டிடும் !

      Delete
    2. Dear Editor, you can have passport size of group snaps of all the people who worked with you since inception of Lion and take over of Muthu. That would be a great tribute to your fantastic team! You can have a short note about each of them - even the past members of the Lion-Muthu team.

      Amazing revival so far ..! May God bless your team with more and more successes !

      Delete
    3. Meant passport size OR group snaps (not of) ...!

      Delete
  32. எடிட்டரின் இந்தப் பதிவு குட்டியானதுதான் எனினும், இது ஏற்படுத்தும் தாக்கம் ஒரு அணுகுண்டுக்கு இணையானது!

    2013 ல் ஒவ்வொரு மாதமும்  தீபாவளியாகிடவிருப்பதை இந்த அட்டகாசமான அறிவிப்புகள் உறுதிசெய்கின்றன! இவற்றோடு சேர்த்து CC digests வேறு! அமர்க்களம்தான்! ( அடுத்த வருட தீபாவளி மலரும்(!), வண்ணத்தில் ஒரு மெகா மறுபதிப்பும் இந்தக் கணக்கில் சேராதிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்)

    600 டெக்ஸ் கதைகளா?!!!?!!!!!!?!!!!
    பேசாமல் இத்தாலிக்கு குடிபெயர்ந்துவிடலாமா என படு சீரியசாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    What is the procedure to change the country sir?

    ReplyDelete
    Replies
    1. வருங்கால இத்தாலிய குடிமகன் ஈரோடு விஜய் அவர்களுக்கு வருங்கால பிராங்கோ-பெல்ஜிய குடிமகனின் வாழ்த்துக்கள்.(பி பெல்ஜியன்.பை பெல்ஜியன்.ஹி ஹி).

      Delete
    2. Erode VIJAY : இத்தாலிக்கு குடிமாற முதல் தகுதி பிட்சா காதலராக ; பாஸ்டா பிரியராய் இருத்தல் அவசியம் ! அப்புறம் ஆலிவ் எண்ணை சமையலுக்கு சொத்தை எழுதித் தரத் தயார் நிலையில் இருத்தல் முக்கியம் ! நம்ம ஊர் பரோட்டா பிரியர்களுக்கு இத்தாலி - strictly a no- no !

      Delete
    3. நான் 'காமிக்ஸ் பசி'யை பற்றிச் சொன்னேன்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் போலும்! ஹி!ஹி!!

      Delete
  33. -- டைகருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்கிறது. புத்தகத்தைப் படிக்கும் முன்பே மெகா ஹிட் என்பது சந்தோஷமளிக்கும் விஷயம்.

    -- புதிய ஹீரோக்கள் மற்றும் இரண்டு கிராஃபிக் நாவல்கள் என்று 2013 டிரைலர் அருமையாக இருக்கிறது. 2012 போலவே, 2013ம் நம் காமிக்ஸ்க்கு மறக்கவியலா ஆண்டாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

    -- 15 நாள் இடைவெளியில் அடுத்த இதழ், உங்கள் டீமின் அயராத உழைப்பைக் காட்டுகிறது.

    -- ஆப்பிள் கம்பெனிக்கு கிடைத்த ரசிகர்கள் வரவேற்பைப் போல நம் காமிக்ஸ்க்கும் ஒரு பெரிய ஹைப் கிடைக்கிறது. பலருடைய ப்ளாக்குகளிலும், பலரின் பேச்சுக்கிடையிலும் காமிக்ஸ் புகுந்திருப்பது விற்பனையை அதிகரிக்கவைக்கும் அதன் மூலம் தரமான காமிக்ஸ்கள் தொடர்ந்து வர ஏதுவாக இருக்கும்.

    -- என் அலுவலக நண்பனிடம் பல முறை / பல நாட்கள் பேசி WWS மற்றும் நியூலுக் ஸ்பெஷல் புத்தகங்களை வாங்கவைத்தது காமிக்ஸ்க்கு என் பங்களிப்பு :-)

    ReplyDelete
  34. Going to my home next week for diwali, and i have 3 back log books - so happy to read all of them together for Diwali....

    ReplyDelete
  35. டியர் எடிட்டர்,

    தாங்கள் குறிப்பிட்டபடி இந்த டிரைலர் அமர்க்களமாக அமைந்துள்ளது. புது வரவுகள் குறித்து மிக்க மகிழ்ச்சி. நெவர் பிபோர் ஸ்பெஷல் தவிர இந்த கதைகள் ஐந்து நூறு ரூபாய் இதழ்களை நிரப்பிடும் போல் தெரிகின்றது. இது தவிர டெக்ஸ் மற்றும் நெவர் பிபோர் சேர்த்தால் ஏழு மாத பிளான் ரெடி! டூ குட்!!

    அனைவரையும் மகிழ்விக்க கடுமையாய் உழைத்திடும் உங்கள் டீமுக்கு மிக்க நன்றி.

    பேட்மேன் இதழ் ஒன்று வெளியிடவும் - CC டைஜெஸ்ட் அல்லது மூன்று கதைகள் சேர்த்து நூறு ரூபாய் வண்ண இதழாக - ப்ளீஸ் !

    ReplyDelete
  36. நண்பர்களே,

    E-Bay-ல் "தங்கக் கல்லறை " லிஸ்டிங் போட்டாகி விட்டது.

    ReplyDelete
  37. எதிர்பார்த்ததும் (ப்ருனோ பிரேசில், ரோஜர் & பில், டேஞ்சர் டயபாலிக்) எதிர்பார்க்காததுமான (வேயின் ஷெல்டன், வான் ஹாம்மே கிராபிக் நாவல் etc., etc.,) முன்னோட்ட அறிவிப்புகளை கண்டு திக்குமுக்காடி போனோம். அசத்தி விட்டீர்கள். திட்டமிட்டப்படியே இதழ்கள் வெளியாகி உடனடியாக அனைத்தும் விற்றுத்தீர்ந்திட அடியேனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. மாடஸ்டி என்ற பெயரில் ஒரு அம்மையார் நமது காமிக்ஸ்களில் சாகசம் புரிந்துல்லாரே....அந்த அம்மையார் என்ன பாவம் செய்தார்?அவருக்கும் ஒரு டைஜெஸ்ட் வெளியிடலாமே?

    ReplyDelete
    Replies
    1. காந்தக் கண்ணழகி மாடஸ்டி வாழ்க! வாழ்க!

      Delete
    2. அருமை நண்பர் விஜய் அவர்களே.இரவில்கூட தூங்கமாட்டீர்களா?மாடஸ்டியை காந்த கண்ணழகி என்கிறீர்களே.இந்த விஷயம் வீட்டிற்க்கு தெரியுமா?தெரியாவிட்டால் சரி.இத்தாலிக்கு எப்போது கிளம்புகிறீர்கள்?போகும் வழியில் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் என்னை இறக்கிவிடவும்.

      Delete
    3. //அருமை நண்பர் விஜய் அவர்களே.இரவில்கூட தூங்கமாட்டீர்களா?//

      அவரும் நம்மை போல ஒரு இரவு கழுகு தானே :)

      Delete
  39. நண்பர்களே,

    இன்றைய page views இது வரை 1588 ! Phew !!

    ReplyDelete
    Replies
    1. பதிவிட பல நண்பர்கள் தயங்குகிறார்கள் !சீக்கிரம் அவர்களும் வெளி படும் ஆர்வத்தை தங்க கல்லறை கிளப்ப போவது உறுதி !

      Delete
    2. Dear Edi ranger joe, phantom storiesku vaaipirukiratha. Insha allah 2014 il 12 lion 12 muthu ithal veliyidungal bcoz tharpothu ungalidam ulla kathaikalathukum engalin ethirparpukum theeni athigam thevaipaduthu

      Delete
    3. மஞ்சள் சட்டை மாவீரன் : 2012 இன்னும் நிறைவுறாத போது 2014 -க்குத் திட்டமிடுவது அத்தனைப் பொருத்தமாய் இராது ! சின்னச் சின்ன அடிகளாய் எடுத்து வைப்போமே...! கனவுகள் மெய்ப்படும் வேளைகள் ஒன்றன் பின் ஒன்றாய் புலராது போகுமா-என்ன ?!!

      Delete
    4. முன்பு முதல் மூன்று நாட்களுக்கு பின்னூட்டங்களின் சராசரி ரேட்டிங் 40 ,ஆனால் இன்றோ ஒரே நாளில் 97 தொடர்கிறது!

      Delete
    5. மஞ்சள் சட்டை மாவீரன் : வன ரேன்ஜர் ஜோ ரொம்பவே சின்னதொரு தொடர் ! அதில் அதிகக் கதைகள் உருவாக்கப்படவில்லை !

      Delete
  40. சார் எல்லாம் தங்க கல்லறை / நம்ம ப்ளுபெர்ரி செய்யும் மந்திரம் ...


    இன்றைய பார்வையாளர்களை விட, நேற்றைய பார்வையாளர்கள் அதிகம் என்பது எனது எண்ணம்.

    (நானே நேற்று சுமார் இருபது தடவை பார்ர்த்து இருப்பேன்)

    மேலும் ஒரு தகவல் : நமது தளம் விரைவில் இரண்டு லட்சம் ஹிட் அடிக்க போகிறது. எனக்கு தெரிந்து வேறு எந்த ஒரு தளமும் செய்யாத சாதனை. ஆரம்பித்த ஒரு வருட (டிசம்பர் வந்தால்தான்) காலத்திற்குள் இரண்டு லட்சம் ஹிட் என்பது பெரிய விஷயம்.

    தற்போதைய ஹிட் - 190648

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  41. எப்படி சார் வான் ஹேம்மேக்கு ஓவியங்கள் இவளவு சிறப்பாக அமைகிறது,வேய்ன் ஷெல்டன் என்ன நளினமான ஓவியம்,அற்புதம் போங்கள்!பார்க்க பார்க்க மனதை அள்ளுகிறது !மரணம் மறந்த மனிதர்கள் விவரிக்க வார்த்தைகள் இல்லை அற்புதம்!அற்புதம்!!அற்புதம்!!!திசையில்லா யாத்திரை அவர்கள் காண்பது போல சூறாவளியை கிளப்பும் போல உள்ளதே!சிறப்பான ஓவியங்கள்!தலைப்புகள் அனைத்தும் அசத்துகின்றன !லார்கோ தொடர் முடிந்த பின்னர் புதிய தொடர்கள் வந்தால்(நிறைய கதைகள் தொங்கி கொண்டிருப்பதால் ) நலம் என நினைத்தேன்,ஆனால் இந்த ஓவியத்தை பார்த்தவுடன் அடுத்த வருட இரண்டாவது வெளியீடாக வேய்ன் ஷெல்டன் உடனே வெளிவந்தால் நலம் என நினைக்க தோன்றுகிறது!முன்பு புத்தகம் வந்தவுடன் நான் பரபரப்பாய் பிரிப்பதே அடுத்த வெளியீடுகள் ,வர உள்ள வெளியீடுகள் என பார்க்கவே,அந்த காமிக்ஸ் உலகின் பொற்காலத்தில் கூட இது போல அதிரடிகள் இருந்ததில்லை !அடுத்த வருடம் பொற்காலம் இல்லை ,வைரம் இல்லை இல்லை பிளாட்டினம் காலமாக அமைவது உறுதி என அறுதியிட்டு காட்டி உள்ளீர்கள் வரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள்,மற்றும் தங்களுக்கே உரிய அற்புதமான ,மனதை அல்லும் தலைப்புகள் மூலமாகவும்...... நன்றிகள் பல பல பல !

    ReplyDelete
    Replies
    1. மை டியர் மானிடர்களே.எனக்கு தெரிந்து ,நானறிந்தவரை ,கோயமுத்தூர் ஸ்டீல் க்ளா(பொன்ராஜ்)அவர்களை போல ,குழந்தை மனம் படைத்த தீவிர காமிக்ஸ் காதலர் யாருமில்லை என நினைக்கிறேன்.அவரது விமர்சனங்களே அவரது நல்ல உள்ளத்தை பிரதிபலிக்கிறது.இப்படிப்பட்ட அருமையான வாசகர்கள் நமது நண்பர்களாக இருப்பது உண்மையில் பெருமைக்குரியதாகும்.நமது காமிக்ஸ்களின் பலமே இவரை போன்ற வெளிப்படையான ,விமர்சகர்கள் தான்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?.

      Delete
  42. attakasamana pathivu+munnotam. naan blueberry stories padika arambhathu irumbukai ethanilruthan. so thanga kalarai enaku thaangal kodutha great diwali gift! thank you editor sir! minum maranam series naan ennum padikathathu MINNUM MARANAM matume! my humble request is to republish MINNUM MARANAM in 2013! shall we expect MINNUM MARANAM next diwali of 2013 Editor sir?

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000 : 2013 -ன் (எஞ்சி இருக்கும்) வண்ண மறுபதிப்பின் தேர்வினை உங்களின் வாக்குகளே தீர்மானிக்கும் ! மெஜாரிட்டி வாசகர்களின் பிரியமே மறுபதிப்பாய் வரக் காத்துள்ளது !

      Delete
  43. Dear Editor,



    1) Top 3 Books in 2012 ==> Largo, Wild West Special and Thanka Kallarai


    2) 2012 Flop ==> Jay Ram only


    3) Current Price Format ==> No Problem


    4) Most expected books in 2013 ==> Never Before Special, Summer Special, Lion Birthday Special, Diwali Special


    5) Most expected Heroes in 2013 ==> Blueberry, Largo, Tex Willer and LuckyLuck


    6) Retirement for ==> Jay Ram


    7) Black & White story with Colour ==> Not a problem


    8) Best book cover in 2012 ==> My Name is Largo


    9) Worst book cover in 2012 ==> Comeback Special


    10) Suggestions for 2013 ==>

    1. More Blueberry Stories
    2. More Tex Willer Stories (2012 comp-off)
    3. More Largo Stories
    4. Special books (see 4th question)
    5. More new stories
    6. Keep your current delivery system (without delay or pre-dated)



    Thanks
    Tiruppur Blueberry

    ReplyDelete
  44. ஆஹா சார் அற்புதம் !இரண்டிரண்டாக ரத்தபடலம் என்பதை மூன்று மூன்றாக வைத்து கொள்வோமே !நண்பர்களே வாக்குகளை குத்தி தள்ளுங்கள் !முதல் வாக்களிக்கும் பாக்கியம் எனக்கே கிட்டியது!

    ReplyDelete
    Replies
    1. ஐந்தாவதாய் நீங்கள் போட்ட option நான்குமே என்று இருந்திருக்கலாம் என்றே நண்பர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!

      Delete
    2. விஜய் ,சிறிது மேலே பாரு கண்ணா !(மெம்பெர்ஸ் லிஸ்டுக்கு கீழே )

      Delete
  45. இந்தமுறை சாதாரணமாக 300 பின்னூட்டங்களை தாண்டும் என்று உள்ளுணர்வு சொல்கிறதே! நாம் ரோபோ இல்லையென்று ஒவ்வொறு முறையும் நிரூபிக்க அவசியமில்லையெனில் 500ஐக்கூட தாண்டலாம்!

    ReplyDelete
  46. ஹலோ நண்பர்களே
    யாருகாவது தங்க கல்லறை கிடைத்து விட்டதா? சீக்கரம் பதிவை போடுங்கப்பா! ஆர்வம் தாங்க முடியல!
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  47. டியர் எடிட்டர் சார்,
    மறு பதிப்பில் சட்டி தலையன் ஆர்ச்சி டைஜஸ்ட் உண்டா சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  48. டியர் எடிட்டர் மற்றும் பிரெண்ட்ஸ்,

    என்ன சொல்வது? மீண்டும் மீண்டும் இந்த டிரைலர் பக்கங்களைப் பார்த்து சிலாகித்துக் கொண்டிருக்கின்றேன். Just amazing collection of comics to hit the desk next year! சில நண்பர்கள் சொல்லுவதுபோல் சிறு வயதினில் லயன் இதழ்கள் வாங்கியவுடன் கண்கள் அடுத்த இதழ்களின் பட்டியலை நோக்கிச் சென்றிடும்.அந்த பரவசம் இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. Pretty nostalgic !

    Danger Diabolic சிறிய வயதினில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று (in the absence of other american heroes like superman, Diabolic was a great superhero series I had enjoyed in Tamil) - மிக்க ஆவலுடன் மறுவரவை எதிர்நோக்கியுள்ளேன்.

    மேலும் அடுத்த ஆண்டுக் கதைகளின் தலைப்புக்களை கவனித்தேன். Most of them are different and look better. மரணம், சாவு, கொலை, ஆவி, கொடூரம் போன்ற negative intent வார்த்தைகள் இல்லாமல் அழகாய் அமைந்திருக்கின்றன - except a few, which is fine. A complete transition always takes time.

    (Saint அவர்களே: இதழ் இதழ் என்று நான் எழுதியதைப் பார்த்து/படித்து விட்டு எனக்கு இதழ்களும் முத்தங்களும் பிடிக்குமா என்ற கேள்வியுடன் ஒரு 'ஹீ ஹீ' பின்னூட்டம் போடாதீர்கள் :) :) ஹீ ஹீ ! )

    ReplyDelete
  49. recently i watched jonnah hex in tv. is jonnah hex comic character?

    ReplyDelete
  50. எடிட்டர் அவர்களே,

    இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் நம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மேஜிக் நம்பர் ஆயிரத்தினைக் கடந்து விட்டதா? அல்லது வெகு அருகாமையில் முகாமிட்டிருக்கின்றதா? தெரியப்படுத்திடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. Comic Lover : அந்த மந்திர எண்ணை எட்டிட இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது ! நம்பிக்கையோடு தொடர்கிறோம் !

      Delete
    2. உங்கள் இடைவிடாத உழைப்பிற்கு பலனாக அந்த 1500 என்கிற எண்ணிக்கை இலக்கினை 2013ல் நிச்சயம் அடைவீர்கள் .... ஆசிரியர் அவர்களே...

      Delete
  51. தங்கம் கைக்கு வந்தாச்சு நண்பர்களே. உண்மையிலேயே சொக்கதங்கம்தான்

    ReplyDelete
    Replies
    1. word verification நீக்கியதற்கு நன்றி சார்

      Delete
    2. P.Karthikeyan : இந்த இதழின் கதை நமக்கு ஏற்கனவே பரிச்சயம் என்பதால், 'எல்லோருக்கும் இதழ் கிடைக்கும் வரை உடனடி விமர்சனம் வேண்டாமே' என்ற கட்டுப்பாடுகள் அவசியப்படாது ! So படித்து விட்டு உங்களின் எண்ணங்களை எழுதிடுங்களேன் !

      Delete
    3. vazthukal karthikeyan thanga parisai 1sta petratharku! naangalum kathrikoram aavalaga couriern varavai ethirnooki

      Delete
  52. thank you editor sir for removing word verification hectic process!

    ReplyDelete
  53. 'டேஞ்சர் டயபாலிக்'கின் வருகை பற்றிய அறிவித்தல் அருமை. கத்தரிக்கு அதிக வேலை இருக்குமோ ஆசிரியருக்கு? அல்லது லார்கோ போல கொஞ்சம் அனுமதிக்கப்படுமோ?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : டயபாலிக் வரிசையில் நிறைய கதைகள் உள்ளன....so தேர்வுக்கு நிறைய கதைகள் உண்டு ! பார்க்கலாமே..!

      Delete
  54. தங்க கல்லறை மறு பதிப்பு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.மோசமான மொழிபெயர்ப்பு.ஜீவனில்லாத வசனங்கள்.முதல் பதிப்பின் மொழிபெயர்ப்போடு சற்றும் பொருந்தவில்லை.கதையை படிக்கவே பிடிக்கவில்லை.பழைய மொழிபெயர்ப்பையே பயன்படுத்தி இருந்தால் மிக பிரமாதமாக இருந்திருக்கும்.புது மொழிபெயர்ப்பு ஏமாற்றத்தையும்,அதிருப்தியையும் ஏற்படுத்தி விட்டது.இனி இதை போன்ற விஷ பரிட்சை வேண்டாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. Saint: Understandable from your point of view. However for Blueberry readers like me who are new to Muthu Comics this quality of color and story should be welcome.

      In your case it is perhaps like comparing the remakes of "Naan avanillai" .. the first was a classic, the second was okay for newbies but the original movie's fans, it was unwelcome! Better luck with Never Before Special!

      Delete
    2. Comic Lover : There lies the difference between someone reading a tale the first time & someone reading it with the original version looming large at the back of their minds :-)

      Delete
    3. I am reading this title for first time though I read our old comics for more than 6 years.

      Saint Satan correctly mentioned this. Paper quality & Colors are too good. But dialogues are not good.

      Editor Sir,

      Please take care of dialogues as all your efforts to bring a nice edition once again faltered. [I read previous Lucky Luke story and mentioned the same].

      You can't escape now saying 'You should not have compared old book dialogues with new book' and you need to accept that.

      Thanks.

      Delete
    4. prem4u : I don't really understand what you mean that "I can't escape now"...! When is the last time you saw me run away from criticism ?

      Delete
  55. எடிட்டர் சார்,
    பலருக்கும் தொந்தரவாகவே இருந்துவந்த word verification captcha வை நீக்கி அருளியமைக்கு இந்த வையகம் உங்களை வாழ்த்தட்டும்! இனி பின்னூட்டங்கள் குவியட்டும்!

    ReplyDelete
  56. டியர் சார் ..
    2013- விளம்பரங்கள் அமர்க்களமாக உள்ளது . பல வருடங்களுக்குப் பிறகு ப்ருனோ பிரேசில், ரோஜர் , டேஞ்சர் டயபாலிக்
    வருகை மகிழ்ச்சியை தருகிறது. வெறும் அறிவிப்புகளோடு நில்லாமல். விரைவில் புத்தகத்தை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
    மற்றும் பல வருடக் கனவை ( தங்கக் கல்லறை- வண்ணத்தில் ) நனவாக்கியதற்கு மிகவும் நன்றி சார்.
    இதே போல் தங்கக் கல்லறை வெளியிட்ட மாதிரி இரும்புக் கை எத்தன் முதல் இரு பாகத்தையும் மறுபதிப்பாக
    (வண்ணத்தில்)முதலில் வெளியிட்டு, விட்டு மீதியுள்ள 3,4 பாகத்தை அடுத்ததாக வெளியிடலாமே? சார் .
    மற்றும் பிப்ரவரியில் வரப்போகும் டெக்ஸ் வில்லரின் எமனின் ஏஜென்ட் தலைப்பை எமனின் தூதன் -ஆக மாற்றக் கூடாதா ?
    ஒரே இதழில் இரண்டு லக்கிலுக் கதைகளாக போடுவதற்கு பதிலாக
    சிக்பில் , சுஸ்கி & விஸ்கி , மதியில்லா மந்திரி யாரவது ஒருவரை இணைத்து போடலாமே?

    ReplyDelete
  57. என்னுடைய புத்தகம் Courier ஆபீசில் வரவில்லையாம். வேறு இருவருக்கு வந்துள்ளதாம். என்ன கொடும சார் இது.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஆர்வ கோளாற இருந்த இப்படி தான் ஆகும் போல

      Delete
  58. டியர் சார்

    தங்க கல்லறை சேலம் வந்து விட்டது, ST Courier இவ்வளவு வேகமாக இருகிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    வண்ணத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்று உள்ளது, இதை படிக்கும் போது நாம் நமது புத்தக அளவை பெரிதாக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.

    படங்கலில் ஓவியரின் dedcation சான்சே இல்ல சார். ஒரு சில இடங்களில் சிறிய பெரிய எழுத்துக்கள் மட்டுமே இப்பொழுது குறையாக தெரிகின்றது.

    வரும் வருடங்களில் இது சரி செய்ய படும் என்று நீங்கள் கூறியிருந்தாலும், உங்கள் உழைப்பில் இது black mark. திருஷ்டி பொட்டு

    CC வண்ண இதழ் விருப்பத்தினை எவ்வாறு தெரிவிப்பது என்று இன்னும் கூறவில்லையே சார், இங்கு மட்டும் தெரிவிப்பதால் அனைவரது விருப்பமும் அறிய முடியுமா சார்.

    எனது விருப்பம்
    1. Reportar Johny - ஊடு சூன்யம்
    2. Thigil - தவளை மனிதனின் முத்திரை ( நீங்கள் போடாதது)
    3. Chick Bill Stories

    கேப்டன் டைகர் மற்றும் XIII கதைகள் மறுபடியும் தனி தனியாக வேண்டாமே

    ReplyDelete
    Replies
    1. Suresh There has been Vote Bar been Attached in the Top Left Just Below the members list.
      Please Vote there.

      Sir Thanks for Removing Word Verification.

      Delete
    2. நன்றி கிருஷ்ணா,

      //இங்கு மட்டும் தெரிவிப்பதால் அனைவரது விருப்பமும் அறிய முடியுமா சார்.//
      இதுவும் ஒரு கேள்வி

      அதுமட்டுமல்ல புத்தகத்தில் ரிபோர்ட்டர் ஜானி உள்ளார் இங்கு இல்லை.

      Delete
    3. Suresh Natarajan : "தவளை மனிதனின் முத்திரை" தான் நாம் போட்டு விட்டோமே திகிலில் ..? நீங்கள் குறிப்பிடுவது வேறு எந்த இதழை ?

      Delete
    4. அவர் அந்த இதழை மறுபதிப்பு செய்யும்படி கேட்டிருக்கிறார். அந்த இதழை வாக்கெடுப்புக்கு நீங்கள் போடவில்லை என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      Delete
  59. அட்டைப்படம் சூப்பர் ,கதை சூப்பர்,வண்ணக்கலவை சூப்பர் ர் ர் ர் ர் ,மொத்தத்தில் சூப்பரோ சூப்பர் .(அடியேனுக்கு சூப் ரொம்ப பிடிக்கும் )ஹி ஹி ஹி .........

    ReplyDelete
  60. மறுபதிப்பில் இரத்த படலம் வேண்டாமே ,அதற்கு பதில் டெக்ஸ் வில்லர் , லக்கி லுக் அல்லது பிரின்ஸ் கதைகளை வெளி இடவும்

    ReplyDelete
  61. சாத்தானின் முதல் ஓட்டு எதிராக விழுந்துள்ளது. பார்ப்போம். majority என்ன என்று.

    ReplyDelete
  62. Dear Editor,
    Even though you are planning to print new Tex stories please consider few of those classic Tex on CC.
    I am sure many of us are not red those classics. My wish is we don’t get enough books (I am greedy)to buy
    On average a book for two months is not enough at all.(Am I right? folks)

    Greedy Fan from Muscat
    (Aldrin Ramesh)

    ReplyDelete
  63. அருமையான காய்கறிகள்.அற்புதமான கூட்டு பொரியல்.கெட்டி தயிர்.அப்பளம்.கூடவே பாயாசம்.நல்ல சுவையான அரிசி சாதம்.அதன் மேல் மகா மட்டமான சாம்பார்.இதுதான் இன்று வந்த தங்க கல்லறை.மறுபதிப்பாக மட்டுமே வந்திருந்தால் விருந்தாக அமைந்திருக்கும்.ஆனால்,மறு மொழிபெயர்ப்பாகவும் வந்து விருந்தை விஷமாக்கி விட்டது.தங்க கல்லறையின் மிக பெரிய வெற்றியாக அமைந்த அதன் பழைய மொழிபெயர்ப்பு ,இந்த வண்ண மறுபதிப்பில் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பிற்குரியது.புதிய மொழிபெயர்ப்பு சுத்தமாக எடுபடவில்லை.ஒரு wild west feeling-ஐ புது மொழிபெயர்ப்பால் கொண்டுவர முடியவில்லை.வசனங்கள் சகிக்கவில்லை.டைகர் கதையா இது என கேட்கும் அளவுக்கு வசனங்கள் அன்னியமாக இருக்கிறது.மொத்தத்தில் மிகுந்த ஏமாற்றத்தை தங்க கல்லறை ஏற்படுத்தி விட்டது.இனி வருங்காலங்களில் மறுபதிப்பை வெளியிடும்போது ,கூடவே மறு மொழிபெயர்ப்பு என்ற விபரீத விஷ பரிட்சையில் இறங்க வேண்டாம் என வாசக நண்பர்கள் சார்பாக பணிவுடன் வேண்டுகிறேன்.(மிக ஏமாற்றத்துடன்,மிக மிக துயரத்துடன்,மிக மிக மிக வேதனையுடன் .....புனித சாத்தான்.)

    ReplyDelete
    Replies
    1. Dear Saint Somasundaram,
      First time i am seeing your negative comment... (it was quite surprising, this is your first serious comment too) But what is the use in criticising, when there is plenty (or should I say bundles?) of good thing in it. And that too ours is a very small group... (Very few hundred people nowadays, right? All lion-muthu comics reader are one among the family i believe... Criticizing our own member doesn’t make any love in it. As the well-wishers let us all encourage our editor and team as they are one among us...
      Even I need to say there is a slight translation difference from the comeback special...(But “Emanin thisai Merku” got awesome tamil translation.) And I think editor need to cut off and edit the dialogues completely to fit in the balloons as you know when we translate English version into Tamil, it will occupy double the space (average)or more than that too.
      Dont mistake me Soma Sundaram... Take Care..!
      As for me “Thanga kallarai” is the best one out of all 6 special issues, even if it is reprint. Jean-Michel Charlier (Author) historical storyline and comicsplay, Moebius (Illustrator) Extra-Ordinary artwork, Excellent original depth printing (I love it. ), International quality wrapper (and paper too)... First class thigil reprint quality (This is the perfect quality example for reprint), Vijayan Sir’s Editing… etc., all together make this Special as a unique... No. 1 visual treat of the year for the comics lovers.

      Delete
    2. Dear Somasundaram, when there is a reprint/remake I don't think of the first version then only I can enjoy what is good / bad in the new release. I can understand your feeling!

      Delete
    3. Hmmmm I think everyone is saying the same.

      Dialogues are BAD.

      Everyone expressing the same everywhere [I checked here as well as FB pages].

      So editor sir, its not only for Saint Satan but for me too. You still can say its not tasty for us, but still there are more who are yet to come out to say the same.

      Thanks.

      Delete
  64. saint satan :

    சாம்பார்களில் பல வகைகள் உண்டு ; பல சுவைகள் உண்டு. இந்த வகை சாம்பார் உங்களுக்குப் பிடிக்காது போனது துரதிர்ஷ்டமே ! அதற்காக புதிதாய் இனி சாம்பாரே செய்யாது இருந்திடல் ; தன்னம்பிக்கையற்ற முயற்சியாகும்.

    சமையலும் தொடரும்..சாம்பாரும் தொடரும் ...சிறப்பாய் செய்திட கூடுதல் பிரயாசைகளோடு !

    ReplyDelete
  65. Replies
    1. (ஸ்பைடரின் கதையை இரண்டாவது முறை பொறுமையாக படித்து,ரசித்த பின்னர் வந்த மனமாற்றம்)

      It is good you read it second time, Steel Claw.

      Delete
  66. I still remember how enjoyable it was reading Thanga Kallarai for the first time. I just ordered in ebay and hoping it will reach me soon. Since then , I love blueberry and has been looking at other ways to get the complete collection in English. But even if i have the complete collection, i would still buy all that comes in Tamil as that would be only way to thank the editor and his team for introducing it to me.

    I hope there will be many more such additions to the list of characters you are bringing to Tamil. I really wish the user base increases to the extent that you can experiment. I also wish if feasible financially, you would explore publishing lion and muthu comics digitally.

    ReplyDelete
  67. நண்பர்களே,

    முதல் பாகம் படித்து முடித்து விட்டேன். இரண்டாம் பாகம் இன்று இரவோ நாளை பகலிலோ படித்திட உத்தேசம். நான் படித்த வரையில் ஒரு சிறிய அலசல்: (நான் முத்து காமிக்ஸ் படிப்பது இந்த வருடமே முதல் முறை என்பதனை நினைவில் கொள்ளுதல் நலம்).

    - கதைக் களம் அருமை
    - 'மரண நகரம் மிசெளரி' நான் படித்த முதல் டைகர் கதை. ஒரு தொடரின் இடையை வந்திட்டது தெரிந்திட்டாலும் அந்தக் கதை விறுவிறுப்பாக இருந்தது. இந்தக்க் கதையும் அதற்கு சளைக்கவில்லை.
    - கதையின் வேகம் நன்றாகவே இருந்தது - நாம் படித்த லார்கோ, XII போன்றவற்றோடு ஒப்பிடாமல் இருத்தல் நலம்.
    - வண்ணக்கலவை கண்ணுக்கு விருந்து என்பதில் மிகையில்லை
    - நட்ட நடு பாலைவனத்தில் டைகர் சோர்ந்திருக்க திடீரென்று வந்து நீர் கொடுக்கும் அந்த நாடகப் பெண்மணி - சுத்த மசாலா :) SHSS-க்கு காத்து பழகி இருந்ததால் இந்த லெவல் சுற்றுதலை சமாளிக்க முடிந்தது :) :) :) - but that scene did definitely take the realism out of the first part of the story !
    - எழுத்துக்கள் பிரிண்ட் தான் கொஞ்சம் கண் வலி ஏற்படுத்துகின்றது - இது காலப்போக்கினில் மேம்படக்கூடியதே - given the small team is putting in amazing effort to keep the cart rolling, this is something that can be weeded out when the team expands - for which the readership base should increase - நாம் பொறுமை காத்திடல் நலம்.

    எடிட்டர் அவர்களே ,

    Cinebook or even Asterix/Tintin அளவினில் வண்ணப் புத்தகம் கொண்டு வந்தால் சித்திரங்கள் இன்னும் சிறிது பெரிதாய் இருந்திட்டால் வசனம் இன்னும் விரிவாய் எழுதிட இடம் உருவாகுமே ! இப்போது வரும் கருப்பு வெள்ளை சொருகல் கதைகளைத் தவிர்த்திட்டால், நூறு வண்ணப்பக்கங்கள் நான் சொன்ன அளவிலும் கூடுதலாய்ப் பத்து பக்கங்கள் Hotline, blog extracts, readers opinion மற்றும் அரைப் பக்க ட்ரைலர் கொண்டு வந்தால் நூறு ரூபாய் விலையினில் சாத்தியமா? இன்னும் தரம் உயருமே? ஒரு யோசனைதான் !!

    ReplyDelete
    Replies
    1. Comics Lover,
      "Cinebook or even Asterix/Tintin அளவினில் வண்ணப் புத்தகம் கொண்டு வந்தால் சித்திரங்கள் இன்னும் சிறிது பெரிதாய் இருந்திட்டால் வசனம் இன்னும் விரிவாய் எழுதிட இடம் உருவாகுமே ! இப்போது வரும் கருப்பு வெள்ளை சொருகல் கதைகளைத் தவிர்த்திட்டால், நூறு வண்ணப்பக்கங்கள் நான் சொன்ன அளவிலும் கூடுதலாய்ப் பத்து பக்கங்கள் Hotline, blog extracts, readers opinion மற்றும் அரைப் பக்க ட்ரைலர் கொண்டு வந்தால் நூறு ரூபாய் விலையினில் சாத்தியமா? இன்னும் தரம் உயருமே? ஒரு யோசனைதான் !!"

      என்னுடைய அபிப்பிரயாமும் இதுவே தான் நண்பரே ... நம்முடைய சர்குலேஷனுக்கு சாத்தியமில்லை என்று ஆசிரியர் சொல்லிவிட்டதால் அமைதியடைகிறோம். இதுவரை இத்தனை தரம் வந்துவிட்ட எடிட்டர் நிச்சயம் அந்த லெவலுக்கு பின்னொருநாள் முயற்சிப்பார் என நம்புகிறேன். விலையை குறித்து கவலையில்லை என்பதை மாத்திரம் நாம் பதிவு செய்து வைப்போம்.

      Delete
  68. Comic Lover : Asterix ; Tintin அற்புதமான printrun கொண்டவை ; அவை அச்சிடப்படுவது ரீல்களில் இருந்து ! அதில் சாத்தியப்படும் சைஸ்கள் பெரியதொரு சர்குலேஷன் இல்லாத நம் போன்றோருக்கு இயலாதவை. நமது மார்க்கெட்டில் கிட்டிடும் பேப்பர் சைஸ்களில் பெரியதொரு choice கிடையாது ! இப்போதைய சைஸை விட்டால், தலைவாங்கிக் குரங்கு வந்திட்ட சைஸ் மாத்திரமே possible !

    ReplyDelete
    Replies
    1. Comic Lover : தங்கக் கல்லறை இரண்டாம் பாகத்தில் இயன்ற வரை பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்த முனைந்துள்ளோம். படங்களில் இடம் இருந்திடும் பட்சத்தில் பலூன்களைப் பெரிதாக்கிட முயற்சித்துள்ளோம் ! கவனித்துப் பாருங்களேன்...

      Delete
  69. shss போல இல்லாமல் தங்கக் கல்லறை மதியமே வரப்பெற்றேன்.இப்போதைக்கு ட்ரைலர் மட்டும் பார்த்துவிட்டு இந்த இரவை இனியதாக்க இன்றிரவு மெயின் கதைக்குள் நுழைய ஐடியா...நான் தங்கக் கல்லறை முதல் பதிப்பைப் படித்ததில்லை...எனவே ஒரு எதிர்பார்ப்போடு படிக்க அமர்கிறேன்...

    ReplyDelete
  70. அட.word verification எடுத்தாச்சு போல...அப்பாடி...இப்பதான் நல்லாருக்கு...அப்பவே நாங்க அப்பூடி...இப்போ கேட்கவா செய்யனும்...பூந்து வெளாடுவோம்ல...

    ReplyDelete
  71. வழக்கம் போல் மதியம் மூன்று மணிக்கு தங்கக் கல்லறை கிடைத்து விட்டது. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். தங்கக் கல்லறை படிப்பது இதுதான் முதல் முறை. எடிட்டரின் டாப் 10 இன் முதல் இடத்தை பெற்றது அல்லவா? சுவாரசியதுக்கு அளவில்லை. 2013 -க்கு பலதரப்பட்ட கதைகளின் ட்ரைலர் அபாரம். இருந்தாலும் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ஜானி நீரோ-Digest-1, Detective Digest-1, மேலுள்ள நாட்டம் அதிகமே.

    ReplyDelete
  72. டியர் எடிட்டர்,

    "தங்க கல்லறை" இன்று மதியம் கிடைக்க பெற்றேன். உடனே படித்தும் முடித்து விட்டேன்.

    (தங்க கல்லறை முதல் தடவை படிக்கிறேன்)

    சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் "ப்ளுபெர்ரி" - தங்க கல்லறை -----> அருமை.

    மிக தெளிவான கதையோட்டம், அற்புதமான சித்திரங்கள் என அனைத்தும் கலந்த அருமையான கதை. ப்ளுபெர்ரி கதையின் வழக்கமான எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது.

    முதலில் வந்த தங்க கல்லறை படிக்காததினால், இரண்டையும் ஒப்பிட்டு எதுவும் கூற இயலவில்லை.

    என்னை பொருத்தவரை இந்த இதழ் -> பாஸ் பாஸ் :)

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  73. தங்க கல்லறையின் தயாரிப்பு தரம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றே.அட்டைபடம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.வண்ணங்களோ மனக்கிளற்சியூட்டி கனவுலகில் நம்மை கொண்டு சேர்க்கிறது.அச்சு தரம் அற்புதம்.பைண்டிங் பிரமாதம்.டிரைலர்கள் அபாரம்.எடிட்டரின் காமிக்ஸ் டைம் அற்புதம்.கதையின் சுவாரஸ்யம் தான் மோசமான மொழிபெயர்ப்பால் கல்லறைக்கு போய்விட்டது.பல வாசக நண்பர்கள் நமது எடிட்டர் அவர்கள் மீதுள்ள (பயம் கலந்த)மரியாதையின் காரணமாக என் கருத்தை ஏற்க்க மறுக்கலாம்.ஆனால் ,பழைய தங்க கல்லறை இதழ்களின் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு பார்த்தால் நான் சொல்வது பொய்யல்ல என்பதை உணர்வார்கள்.மற்றபடி புதிதாக இக்கதையை படித்த பல நண்பர்களுக்கு (உ,ம்-ஆடிட்டர் ராஜா அவர்கள்)இக்கதை பிடித்தே இருந்தது.அவரேகூட,மின்னும் மரணம் கதையோடு ஒப்பிட்டால் இக்கதை சுமார்தான் என்றார்.
    என் கருத்துதான் சரியானது என்ற பிடிவாதம் எனக்கு கிடையாது.இது என் கருத்து.அவ்வளவு தான்.அவ்வளவே தான்.

    ReplyDelete
    Replies
    1. சாத்தான்ஜி,

      'பயம் கலந்த மரியாதை' என்பதற்குப்பதில் 'அன்பு கலந்த மரியாதை' என எழுதியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது!

      ஏனெனில்,

      'பயம்'- மூன்றெழுத்து,
      'அன்பு' - மூன்றெழுத்து!

      காமிக்ஸ்மீது நீங்கள் கொண்டிருக்கும் 'காதல்' - மூன்றெழுத்து,
      உங்களிடம் நாங்கள் வைத்திருக்கும் 'அன்பு' கலந்த 'நட்பு' - மூன்றெழுத்து!

      ஹி!ஹி! Take it easy, folks!

      Delete
    2. தவிர,

      'ஆசிரியர்' என்றாலே 'பயம்''தானா?!

      'அந்த' ஆசிரியர் கொடுக்கும் புத்தகங்களை - படிக்க மனமிருக்காது;
      'இந்த' ஆசிரியர் கொடுக்கும் புத்தகங்களை - முடிக்க மனமிருக்காது.

      வித்தியாசம் இருக்கே?! :)

      Delete
  74. saint satan : உங்களின் கருத்தைச் சொல்லிட நிச்சயம் இங்கே யாரும் தடை சொல்லப் போவதில்லை ; அதே சமயம் பிறர் உங்கள் எண்ணங்களை ஆமோதிக்காது போவதற்கு நீங்களாய் ஒரு காரணம் கற்பிப்பது அவர்களது ரசனைகளையும் ; விமர்சிக்கும் ஆற்றல்களையும் கேள்விக் குறி ஆக்குவது போல் உள்ளது !

    'எனக்குப் பிடிக்கவில்லை' என்று நீங்கள் அழுத்தமாய்ப் பதிவிடுவதில் தவறேதும் இல்லை ! ஆனால் அடுத்தவர் அதனை ஏற்றுக் கொள்ளாது போனால், அது என் மேல் கொண்ட பயம் (??) காரணத்தால் என்று சொல்லுவது நிச்சயம் அபத்தம் ! இங்கு எவரும் மனதில் உள்ளதைச் சொல்ல தைரியமற்றவர்களுமல்ல ; எனக்குப் பயந்திட அவசியப்பட்டவர்களும் அல்லவே !

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வழிமொழிகிறேன்.

      புனிதர் அவர்களே,

      சென்ற சில மாதங்களில் இந்த வலைத்தளத்தினில் சில காரசாரமான அலசல்கள் மற்றும் விமர்சனங்கள் நடந்தேறி இருக்கின்றன. எனவே எடிட்டர் மீது அன்பும் மரியாதையும் வாசகர்களுக்கு இருக்கின்ற அதே சமயத்தில் பயம் இருப்பதாயும் அதனால் குறைகளை மறைப்பதாயும் படவில்லை.

      என்னைப் போன்ற சிலர் - நான் சென்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்டு சொன்னதுபோல - குறைகளை மிகைப்படுத்தாமல் நிறைகளைக்கொண்டு திருப்தியுற்று குறைகள் மேம்படும் காலத்தினை எதிர்நோக்கி இருக்கலாமே ஒழிய பயத்தினால் விமர்சனம் செய்யாமல் இருப்பதாய்ப் படவில்லை.

      At the end of the day, though most of us are passionate comic fans, we do look at value for money given that a hundred-rupee book, while affordable for most of us, is still significant money for all of us!

      இதனால் வாசகர்கள் பலமாய் ஆசிரியரைச் சார்ந்து நின்றாலும் விமர்சனங்களை முன்வைப்பதில் சளைத்தவர்களல்ல என்று தெரிகின்றது.

      Delete
  75. Friends,


    முழுக்கதையும் படித்து முடித்துவிட்டேன். சென்ற அலசலைத் தொடர்ந்து:

    - முதல் பாகத்தினைவிட இரண்டாம் பாகம் விறுவிறுப்பு கூடுதல்
    - இதற்கு முக்கிய காரணம் கஸ்டாபின் வில்லத்தனம் - யம்மா - இது போன்ற ஒரு சூழ்ச்சி நிறைந்த வில்லனை நான் கண்டதில்லை - இந்த வில்லத்தனத்தின் முன்னே டைகரின் ஹீரோயசம் கூட ஒரு சுற்று குறைகின்றது - எனினும் கதை மிகச்சிறப்பாக உள்ளது
    - மறுபடியும் இதழ் தயாரிப்பு பற்றி ஒரு வார்த்தை: அமர்க்களம் - வண்ணங்களால் கவரப்பட்டு எனது மனைவியும் அடிக்கடி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார் - நான் படித்துக்கொண்டிருக்கையில்
    - புனிதர் கூறியது போல் குவாலிட்டி ஆப் புரொடக்ஷன் - சூப்பர் !
    - எடிட்டர் கூறியது போல இரண்டாம் பாகத்தில் எழுத்துக்கள் சற்று பெரிசாய் - லார்கோ பிரிண்டினை ஒத்திருந்தது - நன்று!
    - ஆனால் மூன்று இடங்களில் மசாலா:
    அ) நான் மேற்கூறியது போல, நடு பாலைவனத்தினால் ஒரு நாடகக்காரி டைகருக்கு தண்ணீர் கொடுப்பது :)
    ஆ) கடைசி சீனில் டைகர் அவர்களைத் தேடி மிலிட்டரி வருவது :) :)
    இ) ஐரோப்பாவிற்கு கப்பல் ஏறும் வில்லனை டைகர் மற்றும் அடிப்பொடி இறுதி நொடியினில் மடக்குவது :) :) :)

    மேற்கூறிய மூன்றும் ஒரு மசாலா சினிமா பார்த்த அனுபவத்தைக் கொடுத்தமையால் இறுதியினில் a full realism இல்லாமல் போய்விட்டது. ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் இந்நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கக் கூடியவையாக இருந்திடும் - அனால் டைகரில் அல்ல எனப் படுகிறது!

    Hats off to the team for rounding the year with a good comic book. All in all, all seven color books were of different varieties and each of them was a treat! Largo tops the table for sure followed by the WWS graphic novel !!

    All the best to the editorial team for another great year in the annals of Tamil Comics!

    We will ride with you!

    ReplyDelete
    Replies
    1. Comic Lover : க்ளைமாக்சில் போலீஸ் வருவதை காலம்காலமாய் நாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம் ; இங்கே ஒரு மாறுதலுக்காக cavalry வருகின்றது !

      Jokes apart , இந்தக் கதையின் வில்லன் ஹீரோவிடம் உதை வாங்கி மண்ணைக் கவ்வும் சராசரி ரகமல்ல...எப்போதுமே டைகர் & ஜிம்மியை விட ஒரு step முன்னதாகவே பயணிக்கும் சமர்த்தன் என்பது தான் highlight ! So கொஞ்சம் மசாலாத்தனம் இருந்தாலும் கூட, நாயகனை all powerful ; all conquering என்று சித்தரிக்காது இருந்ததே கதாசிரியரின் மாறுபட்ட சிந்தனையாக எடுத்துக் கொள்ளலாம்.

      Delete
  76. I haven't received the book yet :(really it's been 17 years gone sir since the first release of this book. Wow time is really moving fast. I was studying 10th standard when I bought this book from Ramanathapuram bus stand book stall. 17 years hmmmm its really digging my childhood memories sir. Our comics is merged with all the way along with my life. It's a part of my life too. I am always ardent fan of our comics. I adore my lion comics. Love my lion .....it's my beautiful memory too :)

    ReplyDelete
    Replies
    1. எஸ் ! என்னதான் முத்து - மாயாவி, டைகர், ஜெரோம் எனப் படித்திட்டாலும், லயன் இஸ் லயன் இஸ் லயன் - இன்க்ளூடிங் மினி லயன் அண்ட் ஜூனியர் லயன் !!!

      இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருவதுபோல, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு அழகான வகுப்புத்தோழி - நம்மைப் பார்க்க மாட்டாளா - ஏன் காதல் செய்ய மாட்டாளா என்று எண்ணுவோமே :) - அது போல ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு லயன் காமிக்ஸ் படைப்பும் அழியாமல் நெஞ்சினில் நிறைந்திருக்கின்றது ! நாம் கொடுத்து வைத்தவர்கள் !!

      Delete
    2. ஆம் ! முதல் இதழ் வந்து 17 வருடங்கள் ஓடி விட்டன ,என ஆசிரியர் கூறிய பொது நம்ப இயலவில்லை !10 வருடங்களை தாண்டி மனம் செல்ல மறுக்கிறது !காலத்தின் வேகம் யப்பா .......

      Delete
    3. Innum en manam namba marukirathu nanba 17 varudangal odivittathu enbathai. Steel claw did you check your yahoo mail

      Delete
  77. Vanakkam sir

    urchakamaka padikka aarampitha
    "THANKA KALLARAI"
    thanthathu perum aemadram

    vasanankal poruthamaka illai

    muthal pathippil mozhi peyarpil iruntha
    jeevan
    ithil suthamaka illai

    ReplyDelete
  78. Muthal pathippin
    vasanankalai
    maru pathippilum payan paduthi irunthal
    intha ithal
    oru mega hit
    aaki irukkum..

    ReplyDelete
  79. Ordered in eBay..My favorite hero is Tiger :)

    ReplyDelete
  80. Our comics journey started new direction. I am eagerly waiting for 2013 mega special.

    ReplyDelete
  81. தங்க கல்லறை பழைய பதிப்பை படித்த நண்பர்கள் யாரும்,புதிய வண்ண மறு பதிப்பை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லை.அவர்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.பெரும்பாலோர் அடியேனின் கருத்துக்களை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்.ஆதரிக்க மறுத்தாலும் எனக்கு கவலையில்லை.என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.இந்த வருட ஸ்பெசல் இதழ்களை தர வரிசையில் (சாத்தானின் தரம்?)வரிசை படுத்தியுள்ளேன்.
    1.என் பெயர் லார்கோ.
    2.wild west special.
    3.come back special.
    4.டபுள் திரில் ஸ்பெசல்.
    5.நியூ லுக் ஸ்பெசல்.
    6.சூப்பர் ஹீரோ ஸ்பெசல்.
    7.தங்க கல்லறை.
    பழைய அற்புதமான பாடல்களை ரீ-மிக்ஸ் செய்து கெடுப்பதை போல அமைந்துவிட்டது தங்க கல்லறை.

    ReplyDelete
    Replies
    1. "தங்க கல்லறை பழைய பதிப்பை படித்த நண்பர்கள் யாரும்,புதிய வண்ண மறு பதிப்பை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லை.அவர்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."

      நான் படித்திருக்கிறேன் சோம சுந்தரம், நிச்சயம் அந்த மொழிபெயர்ப்பு தான் சிறந்ததாக படுகிறது. நிறைகள் அதிகம் வியாபித்திருக்க, ஏன் குறையை highlight செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

      Delete
  82. அன்பு ஆசிரியருக்கு,

    நேற்று காலையிலேயே த.கல்லறை பெற்று, டைகர் மேல் உள்ள ஆர்வத்தால் வேலை பார்க்கும் அலுவலகம் என்று கூட பாராமல் உங்கள் ஹாட் லைனை கூட படிக்காமல் நேராக கதைக்கு சென்றேன். முதல் 20, 30 பக்கங்கள் படிக்கும் போதே எனக்கு மிகபெரிய அதிர்ச்சி - பழைய த.கல்லறை போனவாரம் ஏண்டா படித்தோம் என்று நொந்துபோனேன் - ஒரு வீரியமிக்க கதையை அட்டகாசமான ஆர்ட் வொர்க்கை, வசனங்களும், மொழிபெயர்ப்பும் பாதாளத்தில் தள்ளும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. அப்படியே புத்தகத்தை மூடிவிட்டு, மொழிபெயர்ப்பும், வசனங்களும் சரியில்லை என்று facebook இல் எழுதிவிட்டு, உங்கள் ப்ளாக் வந்து பார்த்தபோது மேலும் அதிர்ச்சி. புனித சாத்தானின் கருத்தும் என்னுடன் அப்படியே ஒத்துபோய் இருந்தது. நானும் நெகடிவ் கமென்ட் போட்டு உங்களை மேலும் நோகடிக்கவேண்டாம் என்று போய்விட்டேன்.

    நான் இதுவரை நெகடிவ் கமென்ட் போட்டதே இல்லை. மீண்டும் நமது காமிக்ஸ் எழுச்சி பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் இந்தநேரத்தில், வாசகர்களாகிய நமது பொறுப்பு ஆசிரியரை உற்சாகமூட்டுவதாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே என் கமென்ட் இருப்பதாக பார்த்துக்கொண்டேன். ஆனால் இப்போது சூழ்நிலை வேறு.

    சார், கலரில் காமிக்ஸ், பெரிய சைஸ், நல்ல பேப்பர் தரம் இதையெல்லாம் விட மாதம் மாதம் காமிக்ஸ் என்று எங்கள் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் நீங்கள் அனைத்தையும் தாங்கிபிடிக்கும் மொழிபெயர்ப்பு என்னும் முதுகெலும்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

    த.கல்லறையில் பக்கத்துக்கு பக்கம் சாக்கடை, சனியன், கஸ்மாலம் (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்) என்று ஒரே மட்டமான நெடி தாங்கவில்லை. வரட்சியான வசனங்கள் கதையில் ஒன்ற விடாமல் எரிச்சல் ஊட்டுகிறது. சிறுவயதில் ரசித்த இதுபோன்ற சில்லறை வார்த்தைகள் இப்போது அளவுக்கு மீறி இருந்தால் என்னவோ செய்கிறது.

    இறுதியாக ஒன்று, சார், இப்போது காமிக்ஸ் படிப்பவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல என்றே நம்புகிறேன். எனவே உங்கள் முயற்சிகளுக்கு எதுவும் தடையாக இருக்கபோவதில்லை. தயவு செய்து மொழிபெயர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புத்தக உலகம் நம்வசப்படும்.

    நன்றி

    என்றும் உங்கள் ஆதரவான வாசகன்
    P . கார்த்திகேயன்

    ReplyDelete
  83. தங்க கல்லறை மீண்டும் ஒரு முறை படித்து முடித்தாயிற்று. எனது காமிக்ஸ் அனுபவத்தில் என்றுமே மறக்கமுடியாத ஒரு கதை இது. ஆகவே நேற்று படித்திடும் போதும் அதே பரவசமூட்டும் அனுபவும். அதை விட ஒன்று , ஆரிசியரின் காமிக்ஸ் டைம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு பின், அவர் கூறிய தீபாவளி வாழ்த்து தீபாவளிக்கு முன்னதாகவே படிக்க முடிந்தது.

    அரிஸோன மாகாணத்தின், அன்றைய மக்கள் பேசுவது போலவே இயல்பாக வசனங்கள் அமைத்தது அருமை. இந்த முயற்சியில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. இனி வரப்போகும் லார்கோ கதைகளில் கூட அதிகமாக சென்சார் செய்யப்படாது என்றே நான் நினைக்கிறன்.

    அட்டைபடம் மிக அருமை. இந்த ஆண்டின் சிறந்த அட்டைபடம் எனது தேர்வு இதுவே. பக்கங்களை நிரப்புவதற்காக வந்திருந்த திகில் கதைகளை வழக்கம் போல் இந்த முறையும் படிக்கவில்லை, இதுவரை.

    ஸோ இந்த தீபாவளி இதழ், சென்ற மாத இதழ் போல் இல்லாமல் மிகவும் நிறைவாக அமைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார், மறுபதிப்புக்காக நீங்கள் கொடுத்துள்ள தேர்வு அருமை.. பிரின்ஸ் கதைகள் இரண்டும், அத்துடன் பயங்கர பொடியன் , இது எனது விருப்பம். மேலும் ஒரு சின்ன வேண்டுகோள், முடிந்த அளவு கேப்டன் டைகர் கதைகளை (மறுபதிப்பில்) தனியாகவே , இப்பொழுது வந்தது போல் வெளியிட்டால் மகிழ்ச்சி.

      இந்த மாதம் எப்பாடு பட்டாவது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். ஆகவே விரிவான எண்ணங்கள் இனி கடிதம் மூலமே.

      Delete
    2. சிம்பா ///அரிஸோன மாகாணத்தின், அன்றைய மக்கள் பேசுவது போலவே இயல்பாக வசனங்கள் அமைத்தது அருமை. இந்த முயற்சியில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.///

      :-)நாணயத்தின் மறுபக்கம் !

      Delete
    3. சிம்பா ///பக்கங்களை நிரப்புவதற்காக வந்திருந்த திகில் கதைகளை வழக்கம் போல் இந்த முறையும் படிக்கவில்லை, இதுவரை.///

      படித்துத் தான் பாருங்களேன்...!

      Delete
    4. எடிட்டர் சார், அவசர கதியான இந்த உலக வாழ்வில், என்னிடம் மாறாமல் எஞ்சி நிற்கும் ஒரே குணம் படிப்பது மட்டுமே.. அதிலும் நமது வெளியீடுகளை படிப்பதென்பது ஒரு அலாதி இன்பம். ஆகையால் திகில் கதைகளையும் கண்டிப்பாக படித்துவிடுவேன்.

      என்ன ஒன்று, பெரிய கதைகளை , குறிப்பாக டைகர் கதைகளை படிக்க முனைந்திடும் பொழுது ஏற்படும் அதீத ஆர்வம், சில பக்க கதைகள் என்றால் உருவாவதில்லை, இருந்தாலும் படிதிடுவேன் . இதற்கு நீங்களும் ஒரு காரணம். :) நான் நமது இதழ்களை படிக்க தொடங்கியது 1992 முதல். அந்த சமயம் எனக்கு பரீட்சியமானது முழு நீல சாகசக்கதைகள் மட்டுமே.

      Delete
    5. நமது காமிக்ஸ் அவ்வளவு நீலமாகவா இருந்தது - தொன்னூறுகளில்? :) :) :)

      Delete
    6. மன்னிக்க வேண்டும் , தங்க்லீஷ் டைபிங் மற்றும் உடனடியாக பின்னூட்டமிட்டதால் பிழைகளை பார்கவில்லை. Editing option இல்லாததால் delete செய்து re post செய்ய வேண்டாமே என்று அவ்வாறே விட்டுவிட்டேன்.

      தமிழ் புலவர்கள் நீலத்தை நீளமாக படிக்கவும்.

      Delete
  84. Thanks for removing the word verification sir. Now I can easily share my thoughts through my mobile :) my wife informed me that she received the book by 7 in the morning. Have to wait till this week end to read the book . "My wife was telling how come courier people come by 7 in the morning, I think you are thinking to much about comics". Ha ha

    ReplyDelete
  85. திகில் கதை அருமை , அப்படியே திகில் 3,4,5.... வெளியிடவும்

    ReplyDelete
  86. Thanks for the reply sir. After reading some negative comments about the translation of the book. I am wondering what made you to change the translation of the original one as it was a super hit and all time favourite for most of the comic lovers. I haven't read the book yet but why sir ?

    ReplyDelete
  87. டைகர், எப்போதும் என்னை அவர் கதைக்குள்ளே இழுத்து, ஒரு குதிரை தந்து, கூடவே கூட்டிச் செல்வார். கருப்பு வெள்ளையில் வந்த தங்கக் கல்லறையில், எங்கள் பயணம் சாதரணமாகவே இருந்தது..
    ஆனால் புதிய வண்ணத் தங்கக் கல்லறை பயணத்தில், பாலைவனமும் வெயிலும் என்னை நிஜமாகவே தண்ணீர் குடிக்க வைத்து விட்டது. திருப்தியான நல்ல பயணம். அட்டைபடம் மிக அருமை!

    அனைத்து பழைய டைகர் கதைகளும் Comics Classicil வண்ணமாக வர வண்ணக் கனவுகளுடன், திரும்பவும் தங்கக் கல்லறை தேடி டைகரோடு செல்லப் போகிறேன்.

    ReplyDelete
  88. --------
    ஒரு வருத்தம் - ஒரு சந்தோஷம்
    --------

    வருத்தம் - இன்னும் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை. திங்கள் அன்று கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆதலால், வார இறுதியில், சற்றே மேக மூட்டமான நாட்களில் டைகரைத் தொடர முடியவில்லை


    மகிழ்ச்சி - மொழிபெயர்ப்பு பற்றி பலர் தங்களது வருத்தங்களைத் தெரிவித்திருக்கின்றனர். நான் முதல் முறை வந்த மொழிபெயர்ப்பைப் படிக்கவில்லை (புத்தகம் இல்லை) ஆதலால் எனக்கு அந்த பிரச்சினை இருக்காது. இது மிகிழ்வான விஷயம்

    -----------

    நியூ லுக் ஸ்பெஷலில் மொழி பெயர்ப்பு பற்றி சிலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இனி வரும் புத்தகங்களில் ஆசிரியர் மொழிபெயர்ப்பை கவனிப்பார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  89. இடம் :காமிக்ஸ் பள்ளிக்கூடம் --- படம் : "சின்ன பசங்க நாங்க"
    1. மிஸ் மிஸ் நீங்க அவனுக்கு மட்டும் முன்னாடியே லப்பர் தந்துடிங்க... எல்லோருக்கும் ஒரே டைம் ல தான் தரணும் மிஸ். (தூரத்தை இடத்தை பொறுத்தே கொரியர் டெலிவரி என தெரிந்தும்!!!)
    2. மிஸ் மிஸ் நீங்க நடத்துற பாடம் சுத்த மோசம் மிஸ்,பழைய பாடத்தையே திரும்ப சொல்லி குடுங்க மிஸ்... (17 வருடத்துக்கு முந்தய பாடத்தை இப்போதுமா???)
    3. மிஸ் மிஸ் எனக்கு இது தான் முதல் கிளாஸ், உங்க டீச்சிங் சூப்பர் மிஸ்... (வெறுப்ப கிளப்பாதின்கப்பு!!!)
    4 . மிஸ் மிஸ் என்கிட்டே அந்த புக் இல்ல மிஸ், அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அத எனக்கு மட்டும் திரும்ப போட்டு தரிங்களா? (reprint நிலைமை பத்தி என்ன தான் கரடிய கத்தினாலும் திரும்ப சளைக்காது வரும் வேண்டுகோள்!!!)
    5. மிஸ் மிஸ் நான் எப்படி மிஸ் ஸ்கூல் பீஸ் கட்டணும்? சொல்லுங்க மிஸ்... எனக்கு தெரியலையே... (பழைய போஸ்ட் பார்த்தாலே தெரியுமே, இல்ல அதுல search this blog எதுக்கப்பு???)
    6. மிஸ் மிஸ் நான் fees கட்டிட்டேன், அத செக் பண்ணி சொல்லுங்க மிஸ்... (reg subcription renewal )
    7 . மிஸ் மிஸ் அவன் புக் இற்கு எக்கச்சக்க விலை சொல்றான் மிஸ். அவன அடிங்க மிஸ். (ஓல்ட் புக்ஸ் ரேட்!!!)
    8. மிஸ் மிஸ் நீங்க வருஷம் புல்லா உங்க வேலையலாம் விட்டுட்டு எங்களுக்கு மட்டும் சொல்லி தாங்க மிஸ்... (reg தி ஆசை இன் தி நம்பர் of issues per year)
    9 . மிஸ் மிஸ் 2025 ல தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் உண்டா? (forethought ஆம்)
    10. மிஸ் மிஸ் நம்ம ஸ்கூல் க்கு நான் புதுசா நெறைய பேர அட்மிஷன் போட வைக்கறேன் மிஸ்... (என்னத்த சொல்ல!!!)
    11. மிஸ் மிஸ் இவன் எங்க எல்லோரையும் கிண்டல் பண்றான் மிஸ்... (நான் உள்பட!!!)

    ReplyDelete
    Replies
    1. மிஸ் மிஸ் நீங்க என்ன சொள்ளவரிங்கனு பூரியல (மொக்க போஸ்ட்)

      Delete
  90. Dear Editor,

    தலைவாங்கிக் குரங்கு சைஸ் புத்தகத்தில் வண்ணத்தில் - 4 strips or at times 6 strips per page என்ற கணக்கில் இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் சித்திரம் மற்றும் வசன பலூன்ஸ் போட இயலுமா - நூறு ருபாய் விலையினில் ? - முடியும் என்றால் we can try a couple of issues next year in that size to see if we can allow more space for expanded/extended high quality dialogues.

    இதுவும் ஒரு யோசனைதான் ..! Trying to see where we can improve quality without much compromise. என்னைவிடவும் நீங்கள் இவற்றையெல்லாம் யோசித்திருப்பீர்கள். இல்லை என்று சொல்லவில்லை ...!

    ReplyDelete
  91. Sir oru santhekam...

    puthiya mozhipeyarpai
    neenkal
    padithu partheerkala?
    eppadi anumathi kodutheerkal?

    ReplyDelete
  92. "THANKA KALLARAI"

    endra pokkisam
    vasanankalal sithaikka pattu iruppathu
    enakku mikuntha
    mana vethanai
    tharukirathu.....

    ReplyDelete
  93. ஹிப் ஹிப் ஹூர்ரே ..........ஒன்றுமில்லை தங்க புழுதி கனவுகளில் வாழ்ந்திருந்த அமெரிக்க மக்களின் பாணியில் இக்கதைக்கு ஒரு ஒரு ஓ போட்டேன் ! வெளியே செல்லும் வேலை இருந்ததால் முதல் பாகம் மட்டும் படிக்க அமர்ந்தேன்,நண்பரிடம் இருந்து அழைப்பு வராததால் இரண்டாம் பாகத்தையும் முடித்து விட்டேன் ஒரே மூச்சில் ! விறு விருப்பான கதை என்பதால் ! நண்பர் அஹமத் கூறியது போல ஞாபக மறதி எனக்கும் ஒரு வரப்ரசாதமே ! இந்த கதை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு பாகம் மட்டுமே இருந்ததால் ,படிக்கும் போது வண்ணத்தில் இது போல இருக்குமா என நினைத்தேன் ,வண்ணம் என்றால் அங்கே கருப்பு வெள்ளையில் நமது கற்பனைதானே ,அற்புதமாக இருக்கும் அல்லவா !இங்கே அழகாய் மிகை படுத்த பட்ட வண்ணங்கள் ஒரு புறமும் ,பாலை வனத்தை சரியாக காட்டிய ,என்னையும் தாகத்தில் அலைய வைத்த இயல்பான வண்ணங்களும் ,கதையை அழகாய் நகர்த்தி செல்லும் வரிகளும் அருமை ! புதிதாய் படிப்பது போலவே இருந்தது கதை நினைவில் இல்லாததால் .......பழைய மொழி பெயர்ப்பு எப்படியோ தெரியாது !ஆனால் கதை ஓட்டத்திற்கு இந்த கதையின் ஊடே ஓடும் வரிகள் அற்புதமாகவே இருக்கிறது,விறு விருப்பை குறைக்காமல் கவனத்தை சிதைக்காமல்(நண்பர்களுக்கு இதை விட சிறப்பாக தேவை பட்டிருக்கலாம்,ஆனால் இது எந்த விதத்திலும் குறைந்ததல்ல எனது கவனத்தில் ) ......நமது இந்த வருட மகுடத்தில் இதுவும் ஒரு வைரக்கல்லே அனைத்திலும் ..........இக்கதை மீண்டும் மறு பதிப்பில் அளித்த தங்களுக்கு நன்றிகள் பல பல......இப்போதே ஒரு கோரிக்கை இது போலவே இரும்புக்கை எத்தனும் முழு பதிப்பும் ஒரே இதழில் வந்தால் நன்றாக இருக்கும் !

    ReplyDelete
  94. ///Comic Lover4 November 2012 14:47:00 GMT+05:30
    Dear Editor,

    தலைவாங்கிக் குரங்கு சைஸ் புத்தகத்தில் வண்ணத்தில் - 4 strips or at times 6 strips per page என்ற கணக்கில் இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் சித்திரம் மற்றும் வசன பலூன்ஸ் போட இயலுமா - நூறு ருபாய் விலையினில் ? - முடியும் என்றால் we can try a couple of issues next year in that size to see if we can allow more space for expanded/extended high quality dialogues.

    இதுவும் ஒரு யோசனைதான் ..! Trying to see where we can improve quality without much compromise. என்னைவிடவும் நீங்கள் இவற்றையெல்லாம் யோசித்திருப்பீர்கள். இல்லை என்று சொல்லவில்லை ...!///

    ஆசிரியர் ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொன்னதுபோல... ஒரிஜினலாக வரும் லே-அவுட்டில் ஒரேயடியாக மாற்றங்கள் செய்வது இயலாது என்று நினைக்கிறேன். விகித அடிப்படையில் ஒரு குறித்த பர்சண்டேஜ் முழுப்பக்கத்தையும் பெரிதாக்கலாம் - அல்லது சிறிதாக்கலாம். த.வா.கு. அளவுக்கு முழுப்பக்கத்தை சிறிதாக்கினால் படங்களும் எழுத்தும் மிகச்சிறியதாகவே வரவேண்டியிருக்கும். பக்கங்களிலுள்ள கட்டங்களை தனியாக்கி புதிதாக லே-அவுட் பண்ணுவது எவ்வளவு சாத்தியமானது என்பது தெரியவில்லை.

    ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டுப்போவதை தமிழில் ஒரு பந்தி முழுக்க எழுதினால்தான் புரியும்படி அமையும். அப்படி எழுத்துக்களையும் பெரிதாக்கி, பலூன்களையும் பெரிதாக்கினால் படங்களின் அழகு போய்விடும். பின்னணியிலுள்ள நூணுக்கமான வேலைப்பாடுகளும் தெரியாது. கூடுமானவரை சுருக்கமான மொழிநடையைக் கையாள்வதே இதற்கு சிறப்பான தீர்வாக இருக்கக்கூடும்.

    ஓரிடத்தில் பெரிய எழுத்துக்களும் இன்னோரிடத்தில் சிறிய எழுத்துக்களும் பயன்படுத்தப்படுவது உறுத்துவதால், பலூன்களில் பயன்படுத்தப்படும் எழுத்து அளவில், நமது காமிக்ஸ்களில் கணினியில் டைப் செட்டிங் செய்பவர்கள் (தமிழில்) - ஆகக் குறைந்த அளவாக எதனைப் பயன்படுத்துகிறார்களோ (ஃபாண்ட் சைஸ்) அதனையே (இப்போது புதிய வடிவில் பல புத்தகங்கள் வந்துவிட்டதால் அவர்களால் சராசரியாக ஆகக் குறைந்த அளவு எழுத்துரு அளவாக எதனைப் பயன்படுத்துகிறோம் என்ற தீர்மானத்துக்கு வரமுடியும் (6? 7? 8? 6.5?...) ) பயன்படுத்தினால் எல்லா எழுத்துக்களும் ஒரே அளவில் வந்துவிடும். இடத்துக்கு ஏற்ப பெரிய எழுத்துக்களால் நிரப்பப்போனால்தான் மற்றைய இடங்களில் சிறிய எழுத்துக்கள் வரும்போது உறுத்துகின்றன. சிறிய எழுத்துக்களை பயன்படுத்தி பலூனில் இடைவெளி இருந்தால் உறுத்தாது!

    ReplyDelete
  95. Double century in just three days !! Wow !! Wow !! Let us celebrate this with a 'Double Century' special :)

    ReplyDelete