Saturday, September 29, 2012

ஒரு பயணத்தின் வெள்ளோட்டம் !


நண்பர்களே,

14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில் தத்ததளிக்கும் சிவகாசியிலிருந்து வணக்கங்கள் ! எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... ! டிசைன் பிரிவில் ; கம்ப்யூட்டர் பிரிவில் ; அச்சுப் பிரிவில் ; லாமினேஷன் பிரிவில் என்று ஒப்படைத்த எந்தப் பணிகளும் நடந்தேறிட வாய்ப்பில்லை என்பதால், 'அக்கடா'வென தலைக்குக் கையை வைத்துக் கட்டையைக் கிடத்த அவகாசம் கிடைக்கிறதே - அந்த மட்டிற்கு ஜாலி தான் என்று தோன்றியது !! 

திண்ணை சிந்தனைகள் செல்லும் திசைகள் ; வழங்கிடும் முத்துக்கள் தான் எத்தனை,எத்தனை !! இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல!!) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி  இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா ! நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் !  5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது "தலை" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST  கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து !! So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் ! தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி ! அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் ! So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் ! 

இடையில் வரவிருக்கும் பெரிய இதழ்களின் பணிகளை முடித்துவிட்டால் மெகா இதழான NEVER BEFORE ஸ்பெஷல் மீது கவனம் செலுத்திட  இயலும் என்பதால் ஒரு வித பரபரப்பு என்னுள் இப்போதெல்லாம் ! இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் ! ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் ! சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள்  சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் !  அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ! புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 ! அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது ! நூறு ரூபாய் இதழ்களெனும் போதே இந்த நிலை என்றால், கனவிலும் எட்டிட இயலா 4 digit  விலைகள் இது போன்ற ஏக்கங்கள் எத்தனைக்கு விளைநிலங்கள் ஆகிட வாய்ப்புத் தருமோ ? 

மறுபதிப்புகள் ஆண்டொன்றுக்கு ஆறு இதழ்களே என்று நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம்  ! அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும்  இருக்கும் என்று சொல்லி இருந்தேன் ! அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white  இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன்! அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் ..! So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது ! So, here goes : 

மறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே ! So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது "மாயாவி டைஜெஸ்ட் -1 " பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :
 • உறைபனி மர்மம்
 • நயாகராவில் மாயாவி
 • கொள்ளைக்கார  மாயாவி 


நமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ; black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும். அடுத்த இதழாக வரவிருப்பது - லாரன்ஸ் டேவிட் டைஜெஸ்ட் -1 ! அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி...! கதைகளின் பட்டியல் இதோ :

 • FLIGHT 731 
 • வான்வெளிக் கொள்ளையர்
 • பனிக்கடலில் பயங்கர எரிமலை !

இதழ் எண் 3 - "ஜானி நீரோ ஸ்பெஷல் -1 " ! கதைகளின் வரிசை இதோ :

 • பெய்ரூட்டில் ஜானி நீரோ
 • காணாமல் போன கைதி
 • மலைக்கோட்டை மர்மம்இந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன ! முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் ! 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா ? லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா ?' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு !! "ஸ்பைடர் ஸ்பெஷல்-1 "-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :

 • சைத்தான் விஞ்ஞானி
 • விசித்திர சவால்
 • மரண ராகம்


இதில் முதல் இரு கதைகள் லயனின் ஆண்டுமலர் & தீபாவளி  மலர்களில் பல கதைகளின் மத்தியினில் இணைந்து வந்தவை என்பதால், இது நாள் வரை நமது மறுபதிப்பு வலையில் சிக்கிடாமல் போனது ! அதே போல் மரண ராகம் இதழ் கூட மறுபதிப்பானதாய் நினைவில்லை எனக்கு ! 

இதழ் எண் 5  - நிறைய நண்பர்களுக்கு சற்றே வியப்பைத் தரும் ஒரு தேர்வாக இருந்திடலாம் !  எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - "மினி லயன் டைஜெஸ்ட் -1 "  ஆக மறுபதிப்பாகிடும் ! இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் !!) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ! ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய்  வந்திடும் ! இதோ அந்தக் கதைகளின் பட்டியல் ! 
 • துப்பாக்கி முனையில்
 • மரண சர்க்கஸ் 
 • கறுப்புப் பாதிரி மர்மம்
 • கானக மோசடி
இதழ் எண் 6 -ம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு என்றே சொல்லுவேன் ! ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு "VINTAGE DETECTIVE DIGEST "! ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகிய நால்வரின் டாப் சாகசங்களில் ஒவ்வொன்றைக் கொண்ட இந்த இதழில் கீழ்க்கண்ட கதைகள் இடம் பெற்றிருக்கும் :
 • நெப்போலியன் பொக்கிஷம் (ஜார்ஜ்)
 • குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)
 • வைரஸ் x (காரிகன்)
 • ரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)

இவை அனைத்துமே முத்து காமிக்ஸில் வெளி வந்த சமயம் தொடங்கி ; இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்யும் கதைகள் என்பதில் சந்தேகமே கிடையாதே ! புதிதாய் படிக்கவிருக்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரமிப்பான அனுபவமாய் அமையப் போவது உறுதி !  

2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் ! இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே..! நம் இதழ்களில்  இதற்காக ஒரு கூப்பன் இருந்திடும் ; அவற்றில் உங்கள் தேர்வுகளை தெளிவாக எழுதி அனுப்பிடலாம் !  

So புலரவிருக்கும் புத்தாண்டின் மறுபதிப்புப் பட்டியல் இதுவே ! கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் ! எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் !  உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் ! Fingers Crossed ! 

விரைவில் சந்திப்போம் ! Take  Care !!

217 comments:

 1. விடியும் வரை முழிச்சிருந்தாதான் இப்படி முதலிடம் வரமுடியும்முன்னு இப்பதான் புரிஞ்சது......... :)

  ReplyDelete
  Replies
  1. நமது தமிழ் காமிக்ஸ் சங்கத்தின் சார்பாக நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு 'இரவுகழுகுகளின் தலை' என்ற பட்டத்தை வழங்குகிறோம்.

   :)

   Delete
  2. இதேமாதிரி விடியும்வரை முழிச்சிருந்து அப்பவே நல்லா படிச்சிருந்தா 'ஸ்டாலின் I.A.S'னு இருந்திருக்கும். ஹூம்....

   Delete
 2. சூப்பர் அறிவிப்பு தலைவரே! அதுவும் மினி லயன் டைஜெஸ்ட் -1 அறிவிப்பு அமர்க்களம். அப்படியே இதன் சந்தா விபரம், வெளிவரும் மாதத்தையும் தெரிவித்தால் நிம்மதியாக காமிக்ஸ் கனவில் தூங்குவேன்.......:)

  ReplyDelete
  Replies
  1. Erode M.STALIN : சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் சந்தா விபரங்கள் வந்திடும் !

   Delete
 3. //14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில்//
  ஈரோடு (எங்கள் ஏரியாவில்) பவர் கட்டே கிடயாது !. பேசாமல் பொட்டி படுக்கயோடு இங்க வந்திருங்க .... டயத்துக்கு இதழ் வந்திடும் . அப்படியே நமது நண்பர்களும் உதவிக்கு பட்டய கிளப்பிடுவாங்க.... ( "என்னே ஒரு சுய நலம்னு" உங்க மைண்டு வாய்ஸ் கேக்குது...)

  ReplyDelete
  Replies
  1. ஸ்டாலின் அவர்களே,

   ஈரோடு புத்தகத் திருவிழாவில் கையில் 60 ரூபாயும், கண்களில் காமிக்ஸ் ஏக்கத்துடனும் சுற்றித்திரிந்த சிறுவன் முருகேசன் இப்போது சிவகாசிக்கு சென்று நம் எடிட்டருக்கும் விலையைப் பற்றிய உங்களது அதே எண்ணத்தை வரவழைத்துவிட்டான் போலிருக்கிறதே?!!

   Delete
  2. ஏக்கமான கண்களையும், சின்னதான பாக்கெட்களையும் ஒரு சேரப் பார்த்திடும் போது மனதை என்னவோ செய்கிறது ! உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... !

   Delete
  3. அதற்காகவும் காத்திருக்கிறோம்..............
   அருமையான முடிவு!அதற்காகவும் காத்திருக்கிறோம்..............

   Delete
 4. Dear Editor,

  Very very good news! I hope you hold on to this path without wavering.

  Thank you for this great selection of stories.

  I have one Mayavi request: I missed the very first issue of Comics Classics featuring Mayavi in "Pathazha Nagaram". If you could reprint it in the large size sometime in the future I will be very grateful.

  Some more stories that could benefit from a reprint:
  1. Tex Willer's "Pazhi vangum paavai" that came out in comics classics . I have this issue but the pocket size of this tex story is so tiny it is hard to even see the pictures properly. This story is very nice and could do with a reprint in the normal large size.
  2. The Johnny in London classics issue. This story also has some detailed pictures that lost resolution when I read this in the pocket size.

  The Rip Kirby / charlie / george selections are all great.

  I sincerely hope that adverse circumstances don't force you to backtrack.

  ReplyDelete
 5. >> இந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன !

  By the way, Kollaikaara Mayavi & Flight 731 have come out recently in classics. But CID Lawrence has not come out yet. All other stories that you have selected have not been republished in the classics.

  >> முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் !

  Very good choice! The early Muthu comics issues had also followed this and used the original Fleetway covers.

  Rip Kirby's "Puthayal Vettai" is another golden oldie that could do with a reprint. I have a dog-eared copy of the original Muthu issue of this. And don't forget Corrigan's Madalaya Marmam, which was the first Corrigan story to appear in Muthu. In my opinion, Al Williamson's art is amazing in this particular story.

  How about Modesty's "Kazhugu Malai Kottai" instead of any one of the Modesty stories announced? I know it is a Lion digest, and this story is from Muthu, but it is one of the best Modesty stories.

  ReplyDelete
  Replies
  1. >> How about Modesty's "Kazhugu Malai Kottai" instead of any one of the Modesty stories announced? I know it is a Lion digest, and this story is from Muthu, but it is one of the best Modesty stories.

   Sorry, I misread the mini-lion digest announcement as Lion Digest, and figured the first story was a modesty story. My bad. Please ignore this part of my post.

   Delete
 6. Also, Mayavi's "Gorilla Samrajyam" has not appeared in the classics reprint yet either.

  So from the first 50 issues of Muthu, the stories that still have not appeared in the classics series are (excluding the ones listed in the editor's announcement):
  1. CID Lawrence
  2. Gorilla Samrajyam

  ReplyDelete
 7. >> 2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் ! இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே..!

  What size will this be? The stories we can request can only be based on the size.

  If it is the comeback special/ new look special size, we can request Tiger/Prince stories. If it is the normal Rs.10 Lion/Muthu size, we can request Tex willer stories. So please do let us know.

  ReplyDelete
  Replies
  1. BN USA : Will be the same size as our current Rs.100 releases in colour.

   Delete
  2. Then my selection will be for the reissue of any old Bernard Prince story in full color. I haven't read many of these and so I do not know which of Prince's old stories are good.

   If not possible, my second choice will be for any old Bruno Brazil story.

   Third choice will be the Minnum Maranam final chapter "Arizona Love" (Properly censored of course, like Largo Winch).

   Talking of Minnum Maranam, how about a Jumbo Minnum Maranam special in color containing all parts of the story from the start until the end, "Arizona Love"? But I guess this will be impossible, given that it will take many months of work, during which you cannot release any other books at all (similar to XIII Jumbo special).

   Delete
 8. Dear editor sir
  itz realy unexpected announcement thank you and pls tel the subscription detais abt this issues and pls issue our favrte cowboy lucky digest .....

  ReplyDelete
 9. Vijayan Sir, please consider opening a small branch office in chennai. Here it is only 1 hour power cut and all facilities are easily available.

  ReplyDelete
 10. Dear editor,

  மறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை. உள்மனதை விசாரித்தபோது, ஆரம்ப காலங்களில் வந்த டெக்ஸ் கதைகளோ, கேப்டன் பிரின்ஸ் கதைகளோ, லக்கிலூக் கதைகளோ ஒரு டைஜெஸ்டாக உருமாறிட இயலாதுபோன ஏக்கமே அது என்றும் பதில் கிடைத்தது.

  'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' வெளியீடுகள்கூட இக்கால புதியதலைமுறை வாசகர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால் எதிர்கால காமிக்ஸ் உலகிற்கு இன்னும் நன்மை ஏற்படுத்திடும் என்று தோன்றுகிறது.

  ஒருவேளை....
  2013 க்கான நமது ரெகுலர் இதழ்களின் பட்டியல் உங்களால் வெளியிடப்படும்போது, மேற்க்கூரிய எனது எண்ணங்களில் மாற்றம் ஏற்படுமோ என்னவோ!

  ReplyDelete
  Replies
  1. I Agree Vijay..I also believe vijayan sir's initial list which was published earlier was far better choice & it was a complete package.. Nevertheless, this is also good but not the BEST.

   Delete
  2. /this is also good, but not the BEST/

   Nicely said, senthil! This is the exact word which I intended to say to my friends regarding the digest selection list of our editor's post on this blog. Thank u!

   Delete
 11. A great news.

  As you have the schedule in your hand, could you please let us know the yearly subscription cost so that we can do the payment for the same.

  Really love to read our old stories.

  Thanks.

  ReplyDelete
  Replies
  1. prem4u : You'll have the subscription rates pretty soon...

   Delete
 12. கதைகளின் தேர்வு அருமை ,நான் ஒரு கல்லுரிஇன் கம்ப்யூட்டர் துறை ப்ரோபசர்
  கல்லுரியில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, அதே போல் நமது வாசகர்கள்
  தேவைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாது , நாற்பது வருடங்கள் வந்த இதழ்களை தேர்வு செய்வது
  கல்யாணத்துக்கு பெண் பார்ப்பது போன்று மிகவும் கஷ்டம். எனவே எடிட்டரை ஆதரிப்போம், காமிக்ஸ் வளர்ச்சிக்கு
  உதவிடுவோம்

  ReplyDelete
  Replies
  1. lion ganesh : அழகாகச் சொன்னீர்கள் ! அனைவரது ரசனைக்கும் பிடித்தமானதொரு combination சிக்குவது சுலபமல்ல தான்...! தொடர்ந்து முயற்சிப்போமே அந்த மந்திர பார்முலாவைத் தேடி !

   Delete
 13. Dear Mr. Vijayan,

  I am soooo happy about this announcement!! My favourite Flight 731, Beiruttil Johnny,Napolean Pokkisham etc, etc. WOW!! One request though. Corrigan's Virus X is not that good a story. Instead, can you please include Madalaya marmam? That was one of Corrigan's best ever. Thank You so much for this post!!!

  ReplyDelete
  Replies
  1. komixkreate : Thanks for the kind words. There will be more Detective Digests in the days to come ; so other prime stories will still have their days !

   Delete
  2. Thank you so much, Mr. Vijayan. I am above 50, but this announcement itself is taking me back to the golden old days. While in school, our family was travelling to Madras in train, and my athai who was waiting in Madurai station to greet us, gave me this 'new comic' (Irumbukkai Mayavi) that had 'just arrived' I got hooked that day, and after that every month it was a wait near the magazine agent's office for the arrival of Muthu comics... Thouht bubble...thought bubble...thought bubble...!

   Delete
 14. அன்புள்ள விஜயன் சார்,

  பதிவை பார்த்த உடனே திக்குமுக்காட வைத்துவிட்டது. கொஞ்சம் ஆசுவாசம் எடுத்துகொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 15. அன்புள்ள விஜயன் சார்,
  கதைகளின் தேர்வு அருமை. மறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை.
  அது ஒன்றும் இல்லை சார். மாயாவி, ஸ்பைடர் வரிசையில் சட்டி தலையன் அர்ச்சி digest ஒன்றும் வெளியுடுங்கள் சார். ப்ளீஸ். அர்ச்சிகோர் அர்ச்சி உள்ளிட்ட அர்ச்சியின் சிறந்த கதைகளை வெளியுடுங்கள் சார். நன்றி.
  எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
  Replies
  1. அதேதான் நண்பா ஒரு திகில், ஒரு அதிரடி, ஒரு காமெடி என அனைத்து கலவைகளும் சரி விகிதத்தை எட்ட தங்கள் எண்ணங்களையும் இங்கே அடிக்கடி வரையுங்கள்!

   Delete
 16. அன்பான ஆசிரியர் அவர்களது அனைத்து செலக்ஷன்களும் எனக்கு முழு சம்மதமே! அதே சமயம் ஒரே ஒரு வேண்டுகோள்.
  திகில் கதை டைஜஸ்ட் ஒன்று ஊடே கலந்து விட்டால் களை கட்டும்.
  http://johny-johnsimon.blogspot.in/கதைக்கோர் கிழவி! என்ற எனது பதிவை படித்து விட்டு வந்து இங்கே கதையுங்களேன் நண்பர்களே! மற்ற நாயகர்கள் அனைவரையும் அப்பப்போ ஒரு முப்பது நாப்பது ஐம்பது விலைகளில் போட்டிங்கன்னா நாங்க இன்னும் சந்தோஷமாக அங்கீகரிப்போம் சார்! சின்ன பசங்க என்றுமே நமக்கு தேவை சார்! இன்று கலக்கும் நம்ம படை அன்று ஒரு காலத்தில் அப்பா அம்மா ஆயா தாத்தாவின் அடக்குமுறைகளுக்கு மத்தியில்தான் வீறு கொண்டு காமிக்ஸ் உலகை காதலித்தவர்கள் சார். அப்புறம் அதே பெரியவர்கள் ஆதரவு கொடுத்து அங்கீகரித்தது தனி கதைதானே!

  ReplyDelete
 17. விஜயன் சார்,

  மறுபதிப்பு எனும் 'அறுசுவை விருந்து' பற்றிய அறிவிப்பு அட்டகாசம்.

  இந்த ஒரு வருட காலமாக, தாமதம் என்ற 'நமது வழக்கமான' பாதையை விட்டு விலகி வீறு நடை போட்டு வருகிறோம் என்பது கண்கூடு.

  "சொல்வதை செய்வோம், செய்வதையே சொல்வோம்" - விஜயன்.

  அடுத்த வருடத்திற்காக காத்திருக்கிறோம் ....  ReplyDelete
  Replies
  1. திருப்பூர் புளுபெர்ரி : புதிய விலை ; புதிய பாணி ; புதிய சுதந்திரம் ஒன்றிணைந்து புதிய உத்வேகம் தந்துள்ளது எங்களுக்கு ! Touch wood, we'll keep marching on...!

   Delete
 18. மினி லயன் டைஜெஸ்ட் மற்றும் VINTAGE DETECTIVE DIGEST ஆகியவை ஆர்வத்தை தூண்டும் இதழ்கள். அப்பாடா..ஒரு வழியாக ரிப்கெர்பியும் சார்லியும் மறுபதிப்புகளில் தலைகாட்ட ஆயத்தமாகிவிட்டார்கள். இதழ்.6 ஐ முதலில் வெளியிட்டால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன்

  ReplyDelete
 19. Dear Sir,

  வருடத்திற்கு 6 மறுபதிப்புகள் என்றதற்கே மகிழ்ச்சியில் இருந்தேன். இப்போது

  Digest 1 : 3 கதைகள்.
  Digest 2 : 3 கதைகள்.
  Digest 3 : 3 கதைகள்.
  Digest 4 : 3 கதைகள்.
  Digest 5 : 4 கதைகள்.
  Digest 6 : 4 கதைகள்.

  மொத்தம் 20 கதைகள் + ஒரு வண்ண மறுபதிப்பு.

  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கதை தேர்வுகள் அருமை. வேதாளர் Digest மற்றும் சிஸ்கோ கிட் Digest எப்போது சார்? :-)

  ஆனால் ஒன்று கொடுத்த வாக்கை நிறைவேற்றி விடுங்கள். எங்களை உசுப்பேத்தி விட்டு பின்னர் என் வழி தனி வழி என்று பின்னாடியே இன்னொரு பதிவில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடாதீர்கள் :-) சார் (கள்ளவோட்டு போட்டு, ஒன்றும் நடக்காததால் கடுப்பானோர் சங்கம்).

  அப்புறம் இரத்தப் படலம் விசயத்தில் மொத்தமாக அனைத்து பாகங்களையும் வண்ணத்தில் போடுவது கடினமென்றால் வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக) 100 விலையில் வெளியிட முயற்சிக்கலாமே சார். (இது கனவுகளின் காதலர் ஐடியா) :-). எனக்கும் இது முடியக்கூடிய விஷயம் என்றே படுகிறது.

  அப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.

  பெரும்பாலும் மறுபதிப்பு கேட்பது பழைய புத்தங்களை மீண்டும் பார்பதற்காகவே எனவே நம் பழைய முத்து இதழ்களில் பயன்படுத்திய அட்டைப்படங்களையே போடலாமே.

  கடைசியாக ஒரு விஷயம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட சனி மற்றும் ஞாயிறு தினங்களில் உங்கள் எண் பெரும்பாலும் "SWITCH OFF" நிலையிலேயே இருக்கிறது. உங்களுக்கு மற்ற பணிகளும் நிறைய என்பது எங்களுக்கு புரிந்தாலும், இந்த இருதினங்களும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற உங்களின் அறிவிப்போடு, இந்த இருதினங்களிலும் குறைந்தது குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டும் மற்ற வேலைகள் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரம் முழுமையும் வாசகர்களுக்காகவே என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் (CALL செய்து ஏமாற்றம் அடைந்ததால் உதித்த சிந்தனை :-) ) .

  ReplyDelete
  Replies
  1. //இரத்தப் படலம் - வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக)//
   மொதல்ல தனித்தனியா போடச் சொல்வீங்க, அப்புறம் தனித்தனியா போட்டதை ஒண்ணு சேர்த்து மறுபடியும் "தனியா" போடச் சொல்வீங்க - முடியல! :) :) :)

   Delete
  2. \\அப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.\\
   good sugestion சௌந்தர் . but ,இதனால் புத்தகத்தின் விலை சிறிது அதிகம் ஆகுமே ?, பரவாயில்லையா , எனக்கு ஓகே , but , நம் மற்ற நண்பர்களுக்கு இதில் சம்மதமா ?

   Delete
 20. அறிவிப்புகள் அசத்தல். நடைமுறைக்கு வந்தால் ஆஹா..ஆஹா.. தான்.

  அதே நேரம், 'மினி லயன் டைஜஸ்ட்' என்னும் ஐடியாவுக்கான அட்சரத்தை ஆரம்பித்து (மற்றைய டைஜஸ்ட் ஐடியாக்களை பல நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள்!) வைத்தவன் நான் என்பதை யாருமே குறிப்பிடாததால் நானே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் (தம்பி டே... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா...தம்பி...).

  ஆனாலும், மினி லயன் டைஜஸ்ட் வர்ணத்தில் வரவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான் பொடிசுகளை கவரமுடியும்.... அதைமட்டும் கொஞ்சம் மாற்றிடுங்களேன், ப்ளீஸ்???

  ReplyDelete
  Replies
  1. Podiyan : விலை நிர்ணயத்தில் சின்னதாய் ஒரு சிந்தனை என்னுள் ஓடிக்கொண்டிருப்பதால் மாத்திரமே, சந்தா விபரத்தை இன்னும் அறிவிக்கவில்லை. வரும் சூ.ஹீ.சூ.Spl இதழில் சந்தா விபரம் + கூப்பன் இருந்திடும். So "நடைமுறைக்கு வந்தால் சூப்பர் ஆகா இருந்திடுமே ..." என ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் ரகமல்ல இந்த அறிவிப்புகள் ; விரைவில் நிஜமாகப் போகும் ஒரு காமிக்ஸ் காலப்பயணத்தின் வெள்ளோட்டமே !

   Sorry, மினி லயன் டைஜெஸ்ட் வண்ணத்தில் என்பது சாத்தியப்படாது !

   Delete
 21. Dear Sir,

  அப்படியே Dedective உலகின் அகராதி "ஷெர்லாக் ஹோல்ம்ஸ்" பற்றியும் நினைத்துப் பார்க்கலாமே ...

  ReplyDelete
 22. sir , what about luckyluke and chickbill stories? If they will come in colour i am very happy.

  ReplyDelete
  Replies
  1. ESS : Chick Bill & Lucky Luke are ongoing series and they will be around frequently in colour with their new episodes. So they wouldn't be a part of the reprint schedule.

   Delete
  2. sir if so when we will get the old episodes?

   Delete
 23. அன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,

  தங்களது இந்த பதிவை படித்ததும் அசந்து போனேன்.வழக்கம் போலவே அதிரடி சர வெடி! ஒரே நாயகர்களின் தொகுப்பு ,காலத்தில் புதைந்த இவை தோண்டி எடுக்க பட்டதால் அற்புத புதையல்களின் தொகுப்பே .சிறு வயதில் தேடி திரிந்த புத்தகங்கள் தற்போது என்பது நம்பமுடியாத இனிக்கும் செய்தியாக கண்களில் பாய்கிறது.கிடைக்குமா என தேடி திரிந்த ஏக்கங்களில் மூழ்கி விட்டேன்,இப்போது சந்தோஷ கடலில் திணறித்தான் போனேன் ! பல டப்பா இதழ்களில் கூட மாயாவி என்ற பேர் இருந்தாலே விற்பனை பிச்சிகிட்டு பறக்கும் ! என்ற எண்ணத்தில் வெளி வந்த பல இதழ்களுக்கும் ,நமது EVER GREEN மாயாவியின் பாதிப்பு என்றால் மிகை அல்ல.நாங்களும் மாயாவி என்ற மந்திர பெயருக்காக அந்த புத்தகங்களையும் வாங்கி படித்ததும் நினைவில் பளிச்சிடுகிறது தங்களது சிவகாசி சிந்தனைகள் போலவே.அன்றும்!இன்றும்! ........... இப்போது நமது முதல் CC சிறப்பிதழின் வரிசைதனில் இவரை முன்னாலே நிறுத்தியது சிறந்த தேர்வே......

  இரண்டாவது லாரன்ஸ் ,டேவிட் என்பது இவர்களின் (மும்மூர்த்திகளின் ) தர வரிசை போலவே ,இரண்டாவதாக தங்களின் தேர்வு சரியே .FLIGHT731 ,இதனை எனது தந்தையார் 1985 ல் அல்லது 87 ல் ஒரு முறை பழைய புத்தக கடையில் விமானம் கொண்ட அட்டை படத்துடன் ( பாக்கட் சைசில்தான் ) வாங்கி வந்து மகிழ்ச்சியுடன் தந்தது எனது நினைவில் வந்து செல்கிறது.உலகம் சுற்றும் வாலிபர்களாக இவர்களை தொடரும் ஆபத்துக்களுடன் பயணம் செய்வது இந்த கதை ஓவியங்கள் மற்றும் கதைகள் நகரும் விதம் அற்புதமான த்ரில்லேரே ,இது தற்போது வெளிவந்தாலும் பெரிய சைசில் வரவிருக்கிறது என்பதால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கிறேன்.வான் வெளி கொள்ளையர் கதை நினைவில் இல்லை,கண்டிப்பாக அற்புதமாகவே இருக்கும்.பனிக்கடலில் பயங்கர எரிமலை படிக்கவில்லை............

  ஜானி நீரோ - ஸ்டெல்லா கதைகள் அப்போது சிறு வயதென்பதால் ஸ்டெல்லாவால் ஜானி தாப்பி பிழைப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ஆணாதிக்க சிந்தனை அல்ல .....பெண்களை ரசிப்பது கேவலம் என்று சிறுவர்களிடையே ஓடிய சிந்தனைகளும் காரணமாயிருக்கலாம்,ஆனால் இப்போது என்னை வெகுவாக ஈர்த்த கதைகள் இந்த ஜோடிகளுடயதே........இப்போதெல்லாம் ஸ்டெல்லாவை வெகுவாக ரசிக்கிறேன் அவரது வீர சாகசங்களுடன் ................

  ReplyDelete
  Replies
  1. நமது வலை மன்னனின் அற்புத கதைகள் எவளவு முறை படித்தாலும் அலுக்காதல்லவா,இவை மறு பதிப்பில் ஒரு முறை கூட வரவில்லை எனும் போது ,மேலும் ஸ்பெசல்களில் வந்த கதைகள் எனும் போது ஆஹா................சைத்தான் விஞ்ஞானி ஆண்டுமலராக சட்டி தலையனுடன் இணைந்து மலர்ந்த அற்புதமான மனதை அள்ளும் கதை இது.நமது இதழ்களில் எனது மனதில் எப்போதும் இடம் பெற்ற இதழ் இது.மேட்டுபாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ,வரும் போது எனது சித்தியிடம் பணம் வாங்கி காந்திபுரம் கஸ்தூரி பவன் அருகே இருக்கும் புத்தக கடையில் வாங்கிய இதழ் இது,கண்டிப்பாக அவாரம்பாளையத்தில் இது கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.......பிறரிடம் கடன் வாங்க போதித்த முதல் இதழ் இதுதான்,ஆகவே எனது தந்தையார் தப்பித்தார் என்றால் மிகை அல்ல ...... சட்டிதலயன் இல்லை என்பது தவிர குறை ஒன்றுமில்லை ...................அட்டை படம் நமது ஒரிஜினலை விட ஸ்டைலே சிறப்பு என்பதே எனது எண்ணம்.........
   மினி லயன் ஆஹா .......,இதன் முதல் கதை துப்பாக்கி முனையில் கிளரிடும் சிந்தனைகள்......இந்த இதழ் வெளி வரும் முன்பே ஆசிரியர் கணக்கு வகுப்பெடுக்கும் போது கணக்கு புத்தகத்தில் ஒரு கதை புத்தகத்தை வைத்து படித்து லயித்து கொண்டிருக்கும் போது ,தொடையில் பளீரென ஒரு அடி ,அதிர்ச்சியுடன், துள்ளிக்கொண்டு நிமிர்ந்த போது கோபத்துடன் ஆசிரியர்,முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதால் சற்றே கண்டிப்புடன் நிறுத்தி விட்டார்....இதன் பிறகு வேறொரு நாள் துப்பாக்கி முனையில் பீளமேடு புத்தக கடையில் மதியம் உணவு இடை வேளை போது ,அந்த புத்தம் புதிய இதழ் சிறிய சைசில் வித்தியாசமான அட்டை படத்தில் இன்னும் என் நினைவில் துப்பாகியுடன் அந்த இளைனனுடன் என் மனதில் பளிச்சிடுகிறது .எனது நண்பன் நான் படித்து விட்டு தருகிறேன் என வாங்கி புத்தகத்தில் வைத்து படிக்க , ஆசிரியரிடம் அகப்பட்டு கொள்ள ,என்னை காட்டி விட கூடாதே என்ற பீதியில் நான்! என்னை காட்டி கொடுக்கவில்லை !பிறகென்ன புத்தகம் கிழிக்க பட்டு குப்பை கூடையில்......எனது தந்தையார் தினம் தோறும் பாக்கெட்மணி தாராளமாக தந்தாலும் ,சேர்த்து வைக்கும் பழக்கம் கிடையாது. மேலும் அப்போது பத்துக்கு மேற்பட்ட சிறுவர் இதழ்கள் பூந்தளிர்,ரத்னபாலா,அம்புலிமாமா,பாலமித்ரா,கோகுலம்,லயன்,முத்து,போதாதென மினி லயன்,ஜூனியர் லயன்,அசோக் (மேத்தா),ராணி,பொன்னி,மாயாஜால கதைகள் என வந்து கொண்டே இருக்கும் .........தினம் தோறும் தரும் பாக்கெட்மணி 50 பைசா அல்லது ஒரு ரூபாய் செலவில் கரைந்து போக இவை வரும் போது பணம் கிடைக்காது,எனது தாயாரிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி விடுவேன்,கிடைக்காவிடில் எனது தந்தையாருக்கு தெரியாமல் காசை எடுத்து வாங்கி படிக்கும் போது அக பட்டுள்ளேன்.....ஆகவே துப்பாக்கி முனையில் மீண்டும் வாங்க இயலவில்லை,பின்னர் நான் படிக்கவே இல்லை ,நான் படிக்காமல் விட்ட ஒரே மினி லயன் அதே.....ஆகவே பரபரப்பாய் எதிர்பார்க்கிறேன்......

   Delete
  2. VINTAGE DETECTIVE DIGEST அற்புதம்மான தொகுப்பு,என நினைக்கிறேன் எதுவும் படிக்கவில்லை ரோஜா மாளிகை ரகசியம் தவிர! ஆகையால் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .நெப்போலியன் பொக்கிஷம் ,நண்பர் ஸ்டாலின் மிகவும் எதிர் பார்த்த என்னையும் உசுப்பேற்றி விட்டு எதிர்பார்க்க வைத்த கதை.சார்லி என்னை அவளவாக கவரவில்லை,இருந்தாலும் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் என்ற கதையின் தலைப்பே என்னை எதிர் பார்க்க தூண்டுகிறது .
   வண்ண கதைகள் எதை செலக்ட் செய்வது என தாங்கள் திண்டாடுவது தெரிகிறது,ஆகவே எங்கள் தலையில் கட்டி விட்டீர்கள் போல !இரும்பு கை எத்தன் கேட்கலாம் என நினைத்தேன்,ஆனால் ஆண்டு இறுதிக்கு இதனை தள்ளி விட்டீர்கள்,மே மாதம் இதன் தொடர்ச்சி வெளிவருவதால் இந்த முறை மட்டும் தங்களது பிடிவாதத்தை சற்றே தளர்த்தி,அதாவது இந்த ஆண்டு மட்டும் வண்ணத்தில் இந்த கதை முன்னாள் வெளிவிட்டால் நன்றாக இருக்கும் .பார்ப்போம் நண்பர்களின் தேவை குரல்கள் எதுவென்று .........................சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை என்று மீண்டுமொரு முறை உரக்க கூறிய தங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன் நன்றிகளால் தங்களை குளிப்பாட்ட .......................
   நன்றி!நன்றி!நன்றி!
   *******************************தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி ! அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் ! So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் ! **********************
   10 ஆம் தேதி கிடைக்கும் என உசுப்பேற்றி விட்டு தற்போது ஐந்து நாட்கள் தள்ளி போவதுதான் சந்தோசமான செய்தியா? நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வழக்கம் போல தாமத பேயின் பிடியில்....அவர்களின் ராசியோ? இவளவு நாட்கள் சிறிது ஒத்துழைத்த மின் துறையினர் இப்போது ,இந்த இதழ் உருவாகும் போது ,காலை வாரி விட்டார்கலேனில் !என்ன சொல்வது! நமது ஹீரோக்களை அங்கங்கே சரியாக பணியில் அமர்த்த தங்களது கற்பனை குதிரைகளை தட்டி விட்ட மின் துறையினருக்கு நன்றிகள் சொல்லித்தானாக வேண்டும் என்னதான் கோபம் என்றாலும்! தீபாவளி அடுத்த மாதம்தானா,அப்போ தங்க கல்லறை தீபாவளிக்கு அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியான அடுத்த பதினைந்து நாட்களில் என்பது இன்னும் அதிகமான சந்தோஷமான செய்தி அல்லவா !டைகரின் வான வேடிக்கைகள் பொருத்தமாயிருக்குமே ............ஆஹா !

   Delete
  3. இரவுக்கழுகுகளுக்கு எனது சார்பான நன்றிகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன்............

   Delete
  4. இன்றைய தினம் power shutdown வேறு ! காலை 9 முதல் மாலை 7 வரை முழுதாய் blackout !

   Delete
  5. இனி வரும் நாட்களிலாவது மின்னிலாக்காவினர் ஒத்துழைக்க வேண்டும்......

   Delete
 24. நண்பர்களே,

  நேற்று பணம் செலுத்திவிட்டேன் NEVER BEFORE இதழுக்கு மேலும் ஒரு புத்தகத்திற்கு எனது தம்பியின் பெயருக்கு ,திங்களன்று செக் செய்து விட்டு ஆர்டர் நம்பரை கூறுவதாக கூறியுள்ளார்கள்........ தற்போது பணம் செலுத்தியவர்கள் யாரேனும் இருப்பின் எத்தனை புத்தகங்கள் புக்கிங் ஆகி உள்ளன என்று பகிர்ந்து கொள்ளலாமே.....................

  ReplyDelete
  Replies
  1. Me too ordered yesterday through netbanking.. Not yet get acknowledgement mail/call..

   Delete
  2. நேற்று எனக்கு acknowledgement mail வந்தது. என்னுடைய முன்பதிவு என் 240.

   Delete
  3. மிகவும் குறைவே,மீதமுள்ள முன் பதிவு பின்னர் செய்யலாம் என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து விரைவில் செய்யுங்கள்,அது நமது பயணத்திற்கான ஊக்கமாக அமைந்து ஆசிரியரையும்,அந்த இரவுகழுகு நண்பர்களையும் உற்ச்சாக படுத்த இது உதவுவதுடன் ,அவர்கள் பணி சிறக்கவும் வழி வகை செய்யலாம் ..........

   Delete
  4. இன்றுதான் ஆர்டர் செய்தேன். ஐந்து பிரதிகள். இன்று மாலையில் பேங்க் ட்ரான்ஸ்பர் செய்ததால் திங்கள் அன்று டிரான்ஸ்பர் ஆகும். திங்கள் காலை ஈ-மெயில் செய்ய உத்தேசம். என்னைத் தவிர நண்பர்கள் நால்வருக்கு நியூ இயர் பரிசளிக்க உத்தேசம்.

   Delete
  5. Comic Lover : நிச்சயம் அந்த நால்வர் முகங்களில் ஒரு பெரிய புன்னகைக்குக் காரணமாகிடப் போகிறீர்கள் ! எங்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னும் கூடிடும் ! Thank you !

   Delete
  6. நண்பர்களே ,

   NEVER BEFORE ஸ்பெஷல் எனது புக்கிங் நம்பர் -246 !?

   Delete
 25. இவ்வளவு நாளாக எவ்வளவு விலையில் காமிக்ஸ் போட்டாலும் வாங்க நமக்கு வசதி இருக்கிறதே என்ற லேசான கர்வத்துடன் இருந்தேன்...இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் என் அகந்தை அகன்றது...நமக்குப் பிடித்த காமிக்ஸ் ரசனை இருந்தும் பணமில்லாமல் வாங்க இயலாத சூழல் என் சிறுவயதை ஞாபகப்படுத்துகிறது...அதனால் ரசனைகள் வேறு ; அவற்றின் விற்பனைச் சந்தைகள் வேறு என்பதை உணர்கிறேன்...என் அபிப்ராயம் என்னவென்றால் பாக்கட் சைசில் ரூ.25/- விலையில் மறுபடி நமது ஜூனியர் லயன் காமிக்ஸை வண்ணத்தில் புதிய கதைகளோடு(வால்ட் டிஸ்னி,அலாவுதீன்,விஸ்கி சுஸ்கி) போன்ற எளிய காமிக்ஸ் பாத்திரங்களையும் கொண்டு வந்தால் புதிய ட்ரெண்ட் வருமென நம்புகிறேன்...ஆனால் இதன் marketing ability பற்றி ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும்...he knows very well about our taste as well as our buying capacity...

  ReplyDelete
 26. எடிட்டர் சார்,
  நெத்தியடியான பதிவு! இந்த லிஸ்ட்-ல் மாற்றம் ஏதும் இருக்ககூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் :-)
  Well, jokes apart! நான் முன்பே சொன்னது போல, நீங்கள் எந்த புத்தகம் போட்டாலும், அது என்ன விலை ஆனாலும், புதியது ஆனாலும், மறுபதிப்பு ஆனாலும் சந்தோஷமே! என் ஆசையெல்லாம், இனிமேல் தாமதம் என்ற வார்த்தையே வராமல், மாதா மாதம் நமது புத்தகங்கள் வரவேண்டும் என்பதே. Hope it will happen, GOD Willing!

  ReplyDelete
  Replies
  1. Prasanna S. : சில விஷயங்களை உரக்கச் சொல்லி பதிவிட முயல்வதை விட, ஓசையின்றி செயல்படுத்திக் காட்டுவது உத்தமம் என்பதை நான் சிறுகச் சிறுக கற்று வருகின்றேன் ! தாமதத்தைப் பற்றி பேசுவதை விட, அதனைப் பற்றிய கேள்வியே எழுந்திட அவசியம் நேராது பார்த்துக் கொள்வது தேவலை என்பது புரிகிறது !

   Delete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. ஆங்..சொல்ல மறந்துட்டேன்...மறுபதிப்பு லிஸ்ட்ல உள்ள கதைகள் எல்லாமே சூப்பர் செலக்சன்...2013 கால எந்திர ஆண்டாக அமையப் போவதை நினைத்தாலே இனிக்கிறது... ஆனால் அதே சமயம் லயனிலும் முத்துவிலும் பல புதிய கிராபிக் கதைகளையும் புதிய பல நாயகர்களையும்(லார்கோ வின்ச் போல) அறிமுகப்படுத்துங்கள் சார்...eager of reading much more comics heroes adventures...லார்கோ வின்ச் பாகங்களை எல்லாம் வருடம் ஒரே தடவை மெகா டைஜஸ்ட் ஆக போட possiblities இருக்கா சார்? i love his actions verymuch...

  ReplyDelete
  Replies
  1. Raja Babu : நிச்சயம் வாய்ப்புகள் உண்டு...! பொறுத்திருந்து பாருங்களேன்..!

   Delete
 29. ஆசிரியருக்கு
  வணக்கங்கள். கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக பல தொழிற்கூடங்கள் செயலிழந்து வரும் நிலையை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் இப்பொழுதில் இந்த மின்வெட்டினிடையே சற்றும் தளராமல் தற்காக இரவுபகல் பாராது கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் குழுவின் இரவு கழுகுகளுக்கு வாசகர்கள் சார்பாக கோடி நன்றிகளை தெரிவியுங்கள்.

  உங்கள் ஹாட்லைனில் அவர்களுக்கும் CREDITS கொடுத்தால் FITTING ஆக இருக்கும்.

  திண்ணை சிந்தனைகளிலும் தலையனை கனவுகளிலும் லயித்திருப்பது நமது மன அழுத்தத்தை குறைக்கும் மிகசிறந்த மருந்தென்பது எனது கருத்து.


  லண்டன் கிங்ஸ் க்ராஸ் ஸ்டேசனில் ப்ளட்பார்ம் 9-3/4ல் ஹக்வார்ட்ஸ் எக்ஸ்பெரஸை பிடித்து டம்புல்டோரிடம் கெஞ்சி கூத்தாடி உலகத்தில் உள்ள பழைய முத்து லயன் காமிக்ஸ்களை கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள ஆ கொ தி கா வினரின் பாசறைகளை கண்டுபிடிக்கும் மந்திர வித்தையை கற்றுக்கொண்டு இரும்புக்கையரின் மாயமாகும் திறமையால் மாயமாகி ஸ்பைடரின் வலை துப்பய்கியை எடுத்துக்கொண்டு ஹெலிகாரில் பயணித்து ஆ கொ தி கா
  வினருடன் மோதி அனைவரையும் வலையில் கட்டிபோட்டு ஆர்ச்சியின் டெலஸ்கோபிக் கரங்களின் உதவியுடன் அனைத்து புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு சேதமடைந்த ஹெலிகாரை அங்கேயே விட்டுவிட்டு ஜாலிஜாம்பரின் மேலெரி
  அரிசோனா பாலைவனத்தில் டெக்ஸ் வில்லரின் துணைகொண்டு அப்பாசேக்களுடன் மோதி வென்று அமேசான் நதிக்கரையை புத்தக மூட்டையுடன் அடைந்து
  கேப்டன் பிரின்சுடன் நீண்ட நேரம் விவாதித்தும் அபாயகரமான சரக்குகளை கழுகில் ஏற்ற மாட்டேன் என்றவரை பொடியன் துணை கொண்டு சில புத்தகங்களை
  அவனுக்கு படிக்க கொடுப்பதாக ரகசிய ஒப்பந்தம் செய்து பிரின்சுக்கு தெரியாமல் ரகசியமாக சரக்கு புத்தக மூட்டையை படகில் ஏற்றி வழியில் டாக்டர் மாக்னா ,விண்வெளி பிசாசு, பயங்கர பொடியன், டால்டன் சகோதரர்கள், மற்றும்
  வேண்டியவங்க எல்லாம் ஆ கொ தீ கா தலைவருடன் அணிசேர்ந்து எதிர்க்க அனைவரையும் வெற்றிகொண்டு வழக்கம் போல ஆ கொ தீ கா தலைவர் தப்பித்து கொள்ள வெற்றிக்களிப்பிடன் தமிழ் நாடு அடைந்து இங்கே பழைய காமிக்ஸ்களை ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கும் லூஸ்சுப்பையன் ஸ்டில் க்ளா போன்ற நண்பர்களுக்கு இலவசமாக பரிசளித்து நமது ஆசிரியரை மறுபதிப்பு வேண்டுவோர் பிடியிலிருந்து விடுவித்து புத்தம் புதிய காமிக்ஸ்களை மட்டும் இனி பதிவிடவேண்டும் என்று மதியில்லா மந்திரி மூலம் சட்டம் கொண்டு வந்தால்......
  ஹம்ம்.....

  JUST TO HAVE SOME LIGHTER SIDE FOR RELAXATION GUYS...

  ஒவ்வொரு வளர்ந்த மனிதனுள்ளும் ஒரு சிறுவனுள்ளான். பல சமயங்களில் நமது கவலைகளை மறக்கடிக்க அவன் துணை நமக்கு நிச்சயம் தேவை.

  ReplyDelete
 30. Editor sir,
  மொத்தத்தில் இரத்தபடலம் மறுபதிப்பு கேட்டவர்களின் கவனத்தை திசை திருப்பியாச்சு.

  ReplyDelete
  Replies
  1. Thilagar, Madurai : இப்படியும் பார்த்திடலாமோ ?! :-)

   Delete
  2. திலகர், அக்கனவு ஒருநாள் மெய்ப்படும். பொறுத்திருப்போம்.

   Delete
 31. என்னை பொறுத்த வரை கதைகளின் அறிவிப்பு ஒரு MiXED Feeling ஏற்படுத்துகிறது.
  இதுவை வந்த காமிக்ஸ் க்ளாசிக்கில் 95 சதவீதம் நமது மும்மூர்த்திகளின் கதைகளே.
  அவர்கள் தான் நமது முந்தய சூப்பர் ஸ்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
  ஆனால் இன்னும் இரட்டை வேட்டையர்,இரும்புக்கை நார்மன்,ஈகிள் மேன்,பிரின்ஸ்,ஜான் மாஸ்டர்,
  அதிரடி படை,முதலை பட்டாளத்தார் என இப்படி கை படாத மறுபதிப்பு ஹீரோக்கள் பலர் உள்ளன என்று தோன்கிறது.
  என்னை பொறுத்த வரை நமது சூ ஹி ஸ்பெசல் போல மூவரும் இணைந்த ஒரு மறுபதிபிர்க்கு பிறகு இவர்களுக்கும் ஒரு வாய்பளிதால் நன்றாக இருக்கும் என தோன்கிறது.

  அறிவித்திருக்கும் அனைத்து கதைகளுமே எனது விருப்பமானது தான்.நானும் சாந்த செலுத்தபோகிறேன் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, உங்கள் கருத்து தான் என்னுடையதும் .. நீங்கள் சொன்னதை அப்படியே நான் ஒத்து கொள்கிறேன் .... அறிவிக்கப்பட்ட அதி அற்புதமான 20 கதைகளில் 13 கதைகள் (கிட்டத்தட்ட 65 சதவீதம்) மீண்டும் முத்து காமிக்ஸ்களே! நிச்சயம் எனக்கும் பிடிக்கும் என்றாலும்.. லயன் திகில் மினி லயன் மறுபதிப்பு திட்டங்கள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு பின்னர் (மூத்த வாசகரின் கடிதத்தினால்???) பெரும் பங்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது எனக்கும் வருத்தமளிக்கிறது... லயன், திகில் மினி லயன் அபிமானிகளுக்கு மறுபதிப்பில் எப்போதும் ஏனிந்த பாரபட்சம்? முத்து காமிக்ஸ் 25 சதவீதம், லயன் காமிக்ஸ் 25 சதவீதம், திகில் காமிக்ஸ் 25 சதவீதம், மினி லயன் காமிக்ஸ் 25 சதவீதம் என்று நியாயமான மறுபதிப்பு இருந்திட்டால் தானே புதியவர்களுக்கு பல்சுவை விருந்து கிடைக்கும்...

   Delete
  2. கிருஷ்ணாவின் கருத்துகள் அப்படியே என் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. நன்றி கிருஷ்ணா!

   நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் எங்கேயும் போய்விடப்போவதில்லை. அவர்களது காமிக்ஸ் பசியைத் தீர்த்திடுவது அவ்வளவு சுலபமுமில்லை!
   ஆனால், இது புதிய வாசகர் வட்டத்தை விரிவுபடுத்திடவேண்டிய ஒரு முனைப்பான நேரம். நம்முடைய புதிய தரத்திலான சமீபத்திய வெளியீடுகளும், இனி வரவிருக்கும் புதிய வெளியீடுகளும் ஓரளவு நிறையவே அந்தப் பணியைச் செய்துவிடும் என்றாலும், 'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' டைஜெஸ்ட்களைக்கூட (பழைய வாசகர்களை திருப்திபடுத்த மட்டும் என்றில்லாமல்) மிகச்சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் புதியவாசகர்களை இன்னும் நெருக்கத்தில் கொண்டுவருவதற்கும் பயன்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

   சுருக்கமாகச் சொல்வதானால், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்களைக்கூட ஒரு தொலைநோக்குப் பார்வையில் பயன்படுத்தினால் பழைய வாசகர்களை கொஞ்சம் திருப்திபடுத்துவதோடு, கனிசமான அளவில் புதியவாசகர்களையும் சென்றடையும் (புத்தகத் திருவிழாக்கள் அதற்கு கொஞ்சமாவது உதவிடும்).

   இன்றைய தலைமுறை வாசகர்களின் பெரும்பான்மையான தேர்வு எந்தமாதிரி கதைகள் என்பதை, எடிட்டர் தன் பதிவில் குறிப்பிட்டிருந்த, கையில் 100 ரூபாயுடன் நம் சிவகாசி அலுவலகத்திற்கு வந்து புத்தகத்தை வாங்கிச்சென்ற அந்தச் சிறுவனின் ரசணையே சொல்லிடுமே!

   இந்த விசயத்தில் நம் எடிட்டரின் எண்ணவோட்டம் என்னவென்பது அவருக்கே வெளிச்சம்!

   Delete
  3. நண்பர்களே,

   சின்னதாய் ஒரு விஷயத்தை மட்டும் கோடிட்டுக் காட்டிட விரும்புகிறேன்...வரவிருக்கும் இந்த மறுபதிப்புகள் ஒரு துவக்கம் மாத்திரமே ! தொடரும் நாட்களில் இது போல் இன்னும் நிறைய experiments க்கு இடமிருக்கும். இம்முறை உங்களின் பிரியமான தேர்வுகள் இடம் பிடித்திடவில்லை எனில், அவற்றிற்கு இன்னொரு சந்தர்ப்பமே கிட்டிடாது என்று கொள்ளிட அவசியமில்லையே !

   Delete
  4. சார் பதிவிற்கு நன்றி.
   கண்டிப்பாக இவைகள் அனைத்தும் பிரியமானவைகளே.
   ஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசை தான்.

   Delete
  5. ***********ஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசைதான்*****************
   இது ஒன்றும் பேராசை இல்லை நண்பரே!

   Delete
  6. அன்புள்ள விஜயன் சார், உங்கள் ஆறுதலான பதிலுக்கு நன்றி... எமது எதிர்மறையான ஆனால் ஆரோக்கியமான(???!) விவாததத்தை positiveவாக பார்த்தமைக்கும் நன்றிகள்...
   ஒரு அற்புதமான தரத்தில் நம்முடைய பசுமைமாறா சிறந்த காமிக்ஸ்களை வரும் வருடத்தில் காணபோகிறோம் என்ற வகையில் மெய்யாகவே சந்தோஷப்படுகிறோம்..

   Delete
 32. விஜயன் சார்,

  மறுபதிப்பு பற்றி மிகவும் அருமையான பதிவு. அதிலும் இதழ் எண் 6 ஐ பார்த்தவுடன் துள்ளிக் குதிக்க தோன்றியது. கதை தேர்வு சூப்பர். நெப்போலியன் பொக்கிஷம் அருமையான ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி. இந்த நான்கு கதைகளும் என்னிடம் இருந்தாலும், தற்போது பெரிய சைசில் தரமான பேப்பரில் வரும் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

  மகிழ்ச்சியுடன்,
  ராஜா

  ReplyDelete
 33. ஆஹா! ஆஹா! ஆகாஹா! ஆனால் பிளைட் 731,,, காமிக்ஸ் கிளாச்சிக் ல வந்த மாதிரி ஞாபகம்!

  ReplyDelete
 34. பிரியமான ஆசிரியருக்கு

  டைஜெஸ்ட் அறிவிப்பு அட்டகாசம். சந்தா விவரம் சொன்னால் அனுப்ப எளிதாய் இருந்திடும். 2013 ஆண்டிறுதி வண்ண மறுபதிப்பு லக்கி லூக் - சூப்பர் சர்க்கஸ் , பிடியன் பில்லி மற்றும் இன்னொரு கதை கொண்டு வண்ணத்தில் வந்தால் - ஆஹா!

  Flight பயணங்களின் இடையினில் படித்திட்ட வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நினைவினில் இருந்து நீங்க மறுக்கின்றது. எனினும் அடுத்த இரு இதழ்கள் நோக்கி விழிகள் விழித்திருக்கின்றன.

  இரத்தப் படலம் மறுபதிப்பு வேண்டும் என்னும் பெரும் பின்னூட்டத் தொடரை துவக்கியது அடியேனே. இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். நம் சிறு வயதினில் வெளி வந்திட்ட ஒரு மாபெரும் காமிக்ஸ் காவியம் ஒரு சீராய் ஒரு புத்தகமாய் வந்திட்ட பொழுதினில் தவற விட்ட ஒரு ஆதாங்கத்தின் வெளிப்பாடே. இதன் மறுபதிப்பு எவ்வளவு சவால் நிறைந்த ஒரு விஷயம் என்பதை நான் அறியாதவனல்ல.

  ஆகினும் எமக்கு இரத்தப் படலம் முழுப்பதிப்பு அனுப்பிட சம்மதித்த இரு வாசக நண்பர்கள் - தியாகு முருகு மற்றும் பரணி - இருவருக்கும் எப்படி நன்றி செய்வது என்றே தெரியவில்லை. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றுக்கு நம் வாசகக் கூட்டம் அடித்தளம் அமைக்கின்றது மகிழ்ச்சியான ஒரு விஷயம். Just back in Chennai from my trip. Will contact you folks tomorrow via e-mail. First to Thiyagu Murugu and then to Parani in the order of response. Thank You very much folks.

  ReplyDelete
  Replies
  1. Sir am kanagasundram coimbatore am also searching rathapadalam book if u give one book am really happy for that pls inform me the details abt that my mail id is: sundaramudpt@gmail.com

   Delete
 35. ஆசிரியர் அவர்களே

  காமிக்ஸ் விலை பற்றிய வரிகள் என்னுள் பழைய நினைவுகளை கொணர்ந்தது. 1984 - கோடை விடுமுறையின் இறுதியினில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை செல்ல திருச்சி ரயில் நிலையதினில் நின்ற தருணம். ரூபாய் ஐந்து விலை உள்ள சூப்பர் மேன் காமிக்ஸ் நிறைய தொங்கி கொண்டிருந்தது அங்கு ஒரு கடையினில். தந்தைக்கு மத்திய அரசு வேலை ஆகினும் பட்ஜெட் குடும்பம் என்பதனால் அவைகளில் ஒன்றினைக் கூட வாங்க இயலவில்லை. பிறிதொரு சமயம் பன்னிரண்டு ரூபாய் விலையினில் அப்போது விற்ற Amar Chitra Katha Special Issue titled - Ramayana வாங்க முடியவில்லை. ஆனாலும் இந்த ஏக்கம் ஒரு உத்வேகத்தினை விதைத்தது. இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பொறுப்பினில் இருந்திட்டாலும் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் பொது Barnes and Nobles சென்று ஒரு முழு நீள BATMAN சாகசம் 90 டாலர் விலையினில் வாங்கத் தூண்டியது இதுவே. அப்படியே ஆங்கில XIII-ன் பதிமூன்று பாகங்கள் தலா 10 டாலர் விலையினில் வாங்கிட முடிந்தது. இவற்றினை வாங்கிய உடன் என் முதல் நன்றி நினைவுகள் சிறு வயதினில் கற்பனை செய்யக் கற்றுக் கொடுத்த Lion Comics Editor S Vijayan அவர்களையே சுற்றியது.

  இன்றைய ஏக்கங்கள் நாளைய கனவுகளாய் மாறும். பின்னொரு நாள் வண்ண நிகழ்வுகளாய் ஒளிரும். Thanks to the dreams inspired by Lion Comics.

  ReplyDelete
  Replies
  1. Comic Lover : ஒவ்வொருவரின் நினைவலைகளையும் பின்னோக்கிச் செலுத்தினால் இது போன்ற ஏக்கமான தருணங்கள் ஏராளம் இருந்திடும் ! இன்று வாங்கும் திறனும்,வசதிகளும்,ஆண்டவன் நமக்கு வழங்கி இருப்பினும் என்றோ தவற விட்ட புத்தகங்கள் ; என்றோ வாங்க இயலாது போன விளையாட்டுப் பொருட்கள் என நம் மூளையின் ஒரு மூலையில் சாஸ்வதமாய் தொடர்ந்து வரும் குட்டிக் குட்டி ஏமாற்றங்களை சாந்தப்படுத்திடுவது சவாலானதொரு அனுபவமே! உங்களின் பயணத்தில் வழித்துணையாக நமது லயன் இருந்திருக்கும் பட்சத்தில் அது நமக்குப் பெருமையே !

   Delete
  2. மிக அழகாக சொன்னீர்கள் சார்.

   Delete
 36. இரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,ஜானி நீரோ,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை மற்றும் அதிரடி வீரர் ஹெர்குலஸ் ஆகியோரது புதிய சாகசங்கள் எதுவும் நமது காமிக்ஸில் வெளியடப்படாமல் உள்ளனவா? இருந்தால் அவற்றை வெளியிட வாய்ப்புகள் என்று சொல்லுங்களேன் சார்...

  ReplyDelete
  Replies
  1. Raja Babu : அதிரடி வீரர் ஹெர்குலஸ், ஜானி நீரோ நீங்கலாக, உங்கள் பட்டியலில் உள்ள இதர நாயக / நாயகியரின் புது சாகசங்கள் இன்னும் உள்ளன தான் !

   Delete
  2. Dear Editor, எப்பொழுது போன் செய்தாலும் switch off ஆகி உள்ளது. எப்பொழுது அழைப்பது? சென்ற இரு வார இறுதி நாட்களில் அமெரிக்கா-வில் இருந்து பலமுறை முயன்றேன். இப்போது சென்னை வந்திட்டேன் என்றாலும் இன்று மாலையும் switch off என்ன செய்வது?

   Delete
  3. Comic Lover : NEVER BEFORE ஸ்பெஷல் பணிகள் ஒருபுறமிருக்க, 300 + பக்கங்கள் கொண்டிட்ட சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழின் இறுதிப் பணிகள் மின்வெட்டின் புண்ணியத்தில் ஜவ்வாய் இழுக்கின்றன ! அவற்றை முடிக்கும் படபடப்பு இன்றைய பொழுது போனை on பண்ணிட அவகாசம் தந்திடவில்லை. ஞாயிறு காலை 11 - 4 pm வரை ஆன் செய்திருப்பேன் ! ஆர்வத்திற்கு நன்றி !

   Delete
  4. ஆஹா தங்கமான செய்தி சார்!
   கண்டிப்பாக இரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை அனைவரது அதிரடியிலும் ஸ்டீவ் மாதிரி அவ்வப்போது இடை செருகல் செய்து அசதி விடுவீர்கள் என்ற நம்பிக்கை துளிர் விட தொடங்கி விட்டது சார்! இருக்கும் கதைகளை கண்டிப்பா எங்கள் தலையில் கட்டலாம் சார் கவலை வேண்டாம். அனைத்தும் அருமையாக விற்பனை ஆகி அட்டகாசம் பண்ணும். நாங்க இருக்கோம் சார். மீதம் உள்ள இன்னும் உங்க பொக்கிஷ சுரங்கத்தை விட்டு வெளியில் வராத நிறைய கதைகள் இருக்கு என்ற எங்கள் ஏக்கம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்! மறு பதிப்புகள் தேர்வு அசரடிக்க வைக்கிறது. அதே சமயம் எங்களுக்கு புதிய கதைவரிசைகளும் புதிய அறிமுகங்களும் இன்னும் நிறைய வேண்டுமே! ஒன்று செய்யுங்களேன். எல்லா புதிய நாயகர்களையும் (ஒரு லாலி பாப் படலம், ஒரு பத்து நிமிட படலம், இருளின் சாம்ராஜ்யம் (பிரின்ஸ் சிறுகதை) ) சின்ன சின்ன இடை செருகல்களில் அறிமுக கதைகளாக வெளியிட்டு எங்களுக்கு பல புதிய அறிமுகங்களை பரிசளியுங்களேன்! இது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே! (நாங்களும் வரோமில்லை!! அதுக்கு எதையாவது இழுத்து விடலேன்னா எப்புடி? ஹி! ஹி! ஹி! )அப்படியே கருப்பு கிழவி வரிசைக்கு வழி உள்ளதா என்று பாருங்க ஜி!

   Delete
 37. ஏதாவது காமிக்ஸ் ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை
  பண்ண வில்லை என்றாலும் நொட்டை
  கருப்பு வெள்ளைக்கும் நொட்டை, கலருக்கும் நொட்டை
  முதல் வெளியீடு ஆரம்பித்து இப்போ வந்த புக் வரை ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை
  எந்த செலக் ஷன் கும் நொட்டை
  அட போங்கப்பா!!! நொட்டை சொல்றதுக்கு இம்மாம் பெரிய கமெண்ட் ஆ? வெறுப்ப கெளப்பாதிங்க பாஸ்!!!
  நல்ல கதை தேர்வை முடிவு சொன்னதுக்கு பின்னாலும் இவ்ளோ நொட்டை யா? முடியல சாமி சத்தியமா முடியல!!!

  ReplyDelete
  Replies
  1. புத்தக ப்ரியன் : ரசனைகள் ; சிந்தனைகள் ; அவற்றின் வெளிப்பாடுகள் எல்லாமே நம் வாசகர்களிடம் ரொம்பவும் மாறுபட்டவை ! வானவில்லின் பல வர்ணங்களைப் போல !

   Delete
 38. நான் கடந்த 18 வருடங்களாக நமது காமிக்ஸ்களை படித்து வருகின்றேன்.
  அப்போது தெரிந்தோ தெரியாமலோ இழந்த இதழ்கள் நிறைய .
  நீங்கள் தற்போது செய்து உள்ள இந்த அறிவிப்பு மிக்க சந்தோசத்தை தருகிறது.
  காமிக்ஸ் சுவை அடுத்த தலை முறைக்கும் கிடைக்க வேண்டும் என்ற உங்களது சமூக அக்கறைக்கு தலைவணங்குகின்றேன்.
  ரத்த படலம் மறுபதிப்புக்கென்று ஒரு discussion ஓடியது போல,நமது காமிக்ஸ் அனைவரிடத்தும் கொண்டு செல்வதிற்கு மீண்டும் ஒரு discussion ஏன் செய்யகூடாது ?இப்போது பிரபலமாக உள்ள பலருக்கும் அவர்களது வெற்றியில் சிறிதளவேனும் நமது காமிக்ஸ் வெளியிட்ட உங்களையே சேரும் .(இது மிகை அல்ல என்று உங்களுக்கும் தெரியும் ).
  நான் கூறுவது பொருளாதாரத்தில் பின் தங்கிய, காமிக்ஸ் மீது காதல் கொண்ட இளைய தலைமுறைக்காக .
  நன்றியுடன்.....

  ReplyDelete
  Replies
  1. இதனை நான் வழிமொழிகிறேன். இளைஞர்களின் கற்பனா-சக்தியைத் தூண்டி, அவர்களை வித விதமாக கனவு காண வைக்கும் Picturization and Visualization technique சிறு வயது முதல் வளர காமிக்ஸ் புத்தகங்கள் உறுதுணையாய் அமைகின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு காமிக்ஸ் இதழ்கள் எண்பதுகளில் வந்த போதிலும் தமிழினில் இந்த வாய்ப்பினை வழங்கிய பெருமை லயன் காமிக்ஸ்-ஐயே சாரும் என்றால் மிகை இல்லை. எனவே இந்த தலைமுறை இளைஞர்களுக்கு நம் இதழ்கள் கிடைத்திட - அதற்கு பொருளாதாரம் ஒரு பொருட்டாய் இருப்பின் இன்று வளர்ந்து வசதி அடைந்துள்ள நம்மில் பலர் முனையலாம். ஒரு சீரான முறை இருப்பின் செயல்படுத்திடலாம். நண்பர்களே, let's put our thinking hats on!

   Delete
  2. தனபாலன்,மதுரை : அன்பான எண்ணங்களுக்கு நன்றிகள் என்றும் ! "சமூக அக்கறை " என்பது சற்றே பெரிய வார்த்தை என்பது எனது அபிப்ராயம் !

   காமிக்ஸ் எனும் ஒரு அழகான மரத்தின் நிழலில் இளைப்பாறும் பறவைகள் நாம் ; அந்த மரத்தில் சின்னதாய் ஒரு ஷாமியானா போட்டுத் தந்திட்டது வேண்டுமானால் எங்களது பங்களிப்பாக இருந்திருக்கலாம் ! End of the day, அந்த ஷாமியானாவில் இளைப்பாறும் வாய்ப்பு எங்களுக்கும் சேர்த்துத் தானே ?!

   Delete
 39. மறுபதிப்பு இதழ்கள் மீது பெரிதான எதிர்பாப்பு ஏதும் என்னிடம் இல்லை. ஆகவே விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் என தாங்கள் கூறியதை நான் வரவேற்றேன். ஆனால் தற்பொழுது தாங்கள் வெளிட்டுள்ள கதைகளின் அறிவிப்பை பார்த்தால் எனது முடிவு தவறு என்று தோன்றுகிறது. முக்கியமாக லாரன்ஸ் டேவிட் கதைகள், ரிப் கெர்பி மற்றும் காரிகன் கதைகள், மினி லயன் வெளியீடுகள் என அத்துனையும் பொக்கிசங்கள்.

  இரும்புக்கை மாயாவியின் கதைகளை தவிர, ஜானி கதை இரண்டு மட்டுமே என்னிடம் உள்ளது. ஆகவே I am ready for 382 * 4 action adventure.

  தரமான பக்கங்கள், ஹர்ட் பவுண்ட் கவர் போன்ற குறிப்புகளை வைத்து பார்க்கையில் எப்படியும் இதழ் விலை 40 to 50 re இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறேன். So i am prepared with that.

  ReplyDelete
 40. சார்லியின் சிறை மீட்டிய சித்திரக்கதையை விட்டு விட்டீர்களே...
  மினி லயனில் வேறு பல கதைகளை எதிர்பார்த்தேன்.... பெரும் ஏமாற்றம்

  இதழ் 5 மற்றும் இதழ் 6ஐ முதலில் மறுபதிப்பு செய்யலாமே...?

  ReplyDelete
  Replies
  1. Lucky Limat லக்கி லிமட் : சார்லியின் "சிறை மீட்டிய சித்திரக்கதை" ஏற்கனவே மறுபதிப்பாகிய கதை என்பதால், "குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்" முந்திக் கொண்டது ! Anyways,தொடரும் காலங்களில் இன்னும் நிறைய combinations முயற்சிப்போம் !

   Delete
 41. நண்பர்களே இதுவரை யாரும் கேட்கவில்லை என்று ஓர் நம்பிக்கை...What about "Danger Diabolik" & "Eagle Man" as Reprints? Thoughts pls!!!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வேண்டும்...............ஈகிள் மேன்_நடாலியா என நினைக்கிறேன்.....அப்போது கோடை மலரில் வண்ணத்தில் பார்த்து எதிர்பார்த்து,அடுத்து வந்தது ஒரே இதழ் என நினைக்கிறேன்,மீண்டும் வரவில்லையே என ஏங்கியது அதிகம்.......டேன்ஜர் டயபாலிக் கண்டிப்பாக வேண்டும்.....

   Delete
 42. Sir karsanin kadantha kaalam, dragon nagaram, irumbukkai narmon, prince story ellam ennachu varuma varatha(varum AANA ....) oru super idea tharava tex, madesty, thigil digestnu yearly issues 12 aa mathidunga intha mathiri idea Vera yaaralayum thara mudiyathu( hi hi hi) thanks punitha saatan. Pls consider tex dragon nagaram.

  ReplyDelete
 43. இரத்தப் படலம் ரீப்ரின்ட் வேண்டாம் , அதற்க்கு பதில் வேறு புது கதைகளை கொண்டு வரலாம்
  கிட்டதட்ட நான்கு வருட உழைப்புதான் இரத்தப் படலம், இப்போது மீண்டும் ரீப்ரின்ட் என்பது எடிட்டரின் மற்ற
  வேலைகளுக்கு(never before special,comic classics) தடை கற்கள் ஆகவே அமையும்.

  ReplyDelete
 44. Editor sir,

  Story selections are amazing, except two stories i dont have any other books so for me its like getting lot of extra stories. I live in USA, but i usually get the comics in my parents house and will read them whenever i go there or whenever my parents come here. But now after seeing all the new announcements thinking of subscribing to Usa directly, will call the lion office to get the subscriptions.

  Like lot of other people in the forum, me too looking forward to issue no.6

  I hope we will see a similar trailer for 2013 new issues also vey soon

  ReplyDelete
 45. Replies
  1. nice to see all those books in a new shape again ,eventhough i m already having all thease .....

   Delete
 46. ஐயா,ஏற்கனவே உள்ளதலோ என்னவோ எனக்கு வழக்கமான உற்சாகம் குறைவாத்தான் உள்ளது .ஆனாலும் மற்ற நண்பர்களுக்காகவும் மீண்டும் புதுப்புத்தகங்கள் பெறவும் நான் ரெடி .ப்ளீஸ் பழைய lion மற்றும் திகில் ஹீரோக்களை மிகவும் எதிர் பார்க்கின்றேன்.....அப்போ இரத்தப்படலம் வண்ணப்பதிப்பு பார்க்கும் ஆசை கானல்நீர்தானா....பணிமண்டலக்கோட்டை குபாக்கை மீண்டும் பார்க்க முடியாதா?

  ReplyDelete
  Replies
  1. Pani mandala kottai panimalai kottai ena star comicsla colourlil vanthathe

   Delete
 47. ஹலோ பரணிசார்,பணிமண்டலக்கோட்டை பாதுகாத்து வைத்துள்ளீர்களா?கலீல் சார் நீங்கள்?ஸ்டீல் க்ளா வாட் அபௌட் யு ?பிரசன்னா?எத்தனை பேரிடம் உள்ளது இந்த பொக்கிஷம்? .....

  ReplyDelete
  Replies
  1. என்னிடமும் இல்லை நண்பரே,வண்ணத்தில் என்றால் முதலைபட்டாலம்,சிக்பில் ,லக்கிலூக்,பிரின்ஸ்,டைகர்,சுஸ்கிவிஸ்கி ,ஈகிள்மேன்,டயபாலிக் ,அலிபாபா,சிந்த்பாத் ,ஜூனியரில் வந்த அந்த புதிர் குகை,இரத்தபடலம்,ஜானி ,வேதாளர்,பேட்மேன்,சூப்பர்பைலட் டைகர் ,ஏற்கனவே வண்ணத்தில் வந்த இரும்புக்கை மாயாவி...........என நீண்ட கதை வரிசை, ஆனால் வருடம் ஒரு முறை வண்ணபதிப்பு என்ன சொல்ல ,ஆசிரியருக்கு இங்கு வேலை கிடையாது!இவை முன்னாள் வந்த கதைகள்தானே ,மொழி பெயர்க்க தேவை இல்லையே ,எடுத்தவுடன் பதிவிட வேண்டியதே ,வண்ணத்தை கலக்க வேண்டியதே எனும் எண்ணத்தில்தான் இருந்தேன்,ஆனால் இதற்க்கு செலவிடும் நேரமும் புதிய கதைகள் உருவாகும் நேரமும் ஏறத்தாள சமம் போல உள்ளது ஆசிரியரின் பதிவுகளை படிக்கும் போது,ஆகவே அற்புதங்கள் பல நிகழ்த்த உள்ள புதிய வெளியீடுகளை,புதிய நாயகர்களை பார்ப்போமே என்ற எண்ணம் எனது மனதில் சமீப காலமாக.... ஒரு வேளை இவை புதிய கதைகள் உருவாகும் நேரத்திற்கு தடைகள் இல்லை எனில் எனக்கு நமது cc வெளியீடு போல மாதம் 6 புத்தகங்கள் வண்ணத்திற்கும் இருந்தாலே எனது வண்ணக் கனவுகளை விவரிக்க,விரிக்க முடியும்,இல்லை எனில் ஆசிரியர் உருவாக்கும் எந்த கதைகளையும் வாங்கி கொள்ள நான் தயார் !!!!!!!! மன்னித்து கொள்ளுங்கள் நண்பரே!

   Delete
  2. நண்பர் SIV , கைகொடுத்தால் எத்தனை வண்ண புத்தகங்கள் 2 கதைகள் வீதம் தேவை என அறியலாம்,எத்தனை ஆண்டுகள் இவை முழுவதும் வெளிவர தேவை என தலை சுற்றி வியக்கலாம் !!!அவற்றுள் சிறந்த கதைகள் மட்டும் என சுருக்க இயலுமா,மீண்டும் தலை சுற்றுவது நிற்காது,சுழற்றி விட பட்ட பம்பரத்தின் நிலைதான் நன்மைக்கும்!

   Delete
  3. ****************ESS : Chick Bill & Lucky Luke are ongoing series and they will be around frequently in colour with their new episodes. So they wouldn't be a part of the reprint schedule.***********************

   ஆசிரியரின் பதில் ஆகவே இவர்களை நீக்கி விடலாம்..........பிறரின் நிலை?

   Delete
 48. ஆசிரியரின் பார்வைக்கு:
  1 ) Flight 731 ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது லயனில் வந்த "காணாமல் போன கடல்" ஒரு பர பர ஆக் ஷன் த்ரில்லர் . இது தேறுமா?
  2 ) கொள்ளைகார மாயாவி ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது நண்பர் ஒருவர் சொன்னது போல் "கொரில்லா சாம்ராஜ்யம்" போட இயலுமா?
  3 ) சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி. அதற்கு பதில் "பேய் தீவு ரகசியம்" போட இயலுமா?
  4 ) மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா?
  5 ) நமது தலை வாங்கியில் சொன்னது போல "பழைய முத்து ரீபிரிண்ட் கேட்காதீர்கள்" என்று சொல்லி விட்டு நாங்கள் கேட்காமலேயே அவற்றை தந்த உங்கள் தாய் உள்ளத்திற்கு எங்கள் வணக்கங்கள். (கொஞ்சம் ஓவர் ஆ போறோமோ??? போவோம் :) :P lol)
  இதில் என்ன என்ன சங்கடங்கள், பிரச்சனைகள் என்று உங்களுக்கு தான் தெரியும். முடிவு எதுவாக இருப்பினும் எங்களுக்கு டபுள் ஓகே. இந்த vintage
  selctions சூப்பர். மற்றபடி உங்கள் அனைத்து கதை தேர்வும் அட்டகாசம். (பின் குறிப்பு: இது நொட்டை கமெண்ட் அல்ல!!! :) )

  ReplyDelete
  Replies
  1. நண்பரே
   "சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி"
   "மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா?" என்று சொல்லிவிட்டு "இது நொட்டை கமெண்ட் அல்ல" என்பது முரண்பாடு அல்லவா ? மற்றவர்கள் ஆரோக்கியமான விவாதம் செய்தால் கூட அதை மட்டும் நொட்டை என்று தீர்ப்பு எழுதுவிடுகிறீர்கள்! மற்றவர் கருத்தையும் அன்போடு உணருங்கள்.. நன்றி!

   Delete
  2. நண்பரே இங்கு அனைவருக்கும் அவர்களது கருத்தை சொல்ல உரிமை உண்டு.
   நீங்களும் உங்கள் கருத்தை கூறலாம்
   ஆனால் கண்டிப்பாக மற்றவர்கள் கருத்தை விமர்சனம் செய்து அல்ல.
   இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் ஆனால் உபயோகபடுத்தும் வார்த்தைகளை யோசித்து செய்யுங்கள்.
   நன்றி.

   Delete
  3. சாரி, சார்லி in "பேய் தீவு ரகசியம்" மறுபதிப்பாக வந்ததை மறந்து விட்டேன். indrajal காமிக்ஸ் நிறைய நல்ல சார்லி கதைகளை வெளியிட்டுள்ளது. (அவை நமது முத்துவில் வெளியிட வில்லை இது வரை.) திக்கு தெரியாத தீவில், வெடிக்க மறந்த வெடிகுண்டு மிக நல்ல கதைகள்...

   Delete
 49. Replies
  1. **********************************வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம்*****************************

   சென்ற பதிவில் ஆசிரியரின் பதில் ,நம்மை போன்ற நண்பர்களின் கையில் .............

   Delete
 50. நமது பிளாக்கில் ஓட்டெடுப்பில் லீடிங்கில் உள்ள நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)
  மறு பதிப்பு லிஸ்ட்டிலேயே இல்லையே? என்ன கொடுமை சரவணன்.
  ஒரு வேளை 2023 ல் வருமோ?!!

  ReplyDelete
 51. pls publish vethalan new stories in muthu comics or old stories in comics clasics!

  ReplyDelete
 52. Friends,

  Any of you, if having more than one issues [Any title] and if interested in sharing[in fact selling] please do contact me.

  premgct87@gmail.com or 9894283809.

  Thanks.

  ReplyDelete
 53. Dear Editor,

  உங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியானதொரு விஷயம். பல ஆண்டுகள் Hotline மூலம் பரிச்சியமான ஒரு முகத்தை பேசி கேட்டிட்ட சந்தோஷம். தொடரட்டும் நமது காமிக்ஸ் பயணம் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அவகாசம் அளித்து பெசியமைக்கு நன்றி.

  ReplyDelete
 54. ஹலோ செயின்ட் சாத்தன்

  ReplyDelete
 55. யாருப்பா அது எம்பேர தப்பு தப்பா அடிக்கிறது?

  ReplyDelete
 56. சார் ,கொள்ளைகார மாயாவி க்கு, பதில் எயந்திரபடை, publish செய்ய முடியுமா ?, அருமையான கதை, பாக்கெட் சைஸ் ல் சித்திரங்கள் சுருக்கி வந்ததால் , கதை யை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .
  மேலும் இந்த கதை யின் தொடர்ச்சி சூப்பர் ஸ்பெஷல் ல் வருவதால் , நிறைய பேர் எந்திர படை வைத்திருக்க வாய்ப்பு குறைவு ,என்பதாலும் ,எந்திரபடை க்கு வாய்ப்பு கிடைக்குமா ?
  இல்லை , இந்த பட்டியலில் இருப்பது தான்,final decisson ,என்றாலும் , அதற்கும் , சந்தோசம் தான் .
  மறுபதிப்பு ,digest ஆக வெளியிடும் முடிவு , ஆகா சூப்பர் சார் .
  இந்த முடிவு திடீர் என்று (after பெங்களூர் sucess ), எடுத்ததா, இல்லை , ரொம்ப நாளாகவே மனதுக்குள் ஊறிக்கொண்டு இருந்ததா ?
  அப்படியே சிக்பில் digest ம் கொண்டு வந்தீர்கள் என்றால், சந்தோசம் சார் . போன வாரம் படித்த சிக்பில் ன் விசித்திர ஹீரோ , நல்ல காமெடி தோரணம் , வீட்டில் ஓய்வு ஆக இருந்த போது வாய் விட்டு சிரித்து கொண்டு படித்தேன் . நல்ல வேலை கிளினிக் ல் படிக்க வில்லை . நான் சிரிப்பதை பார்த்து , என்னோமோ எதோ என்று ,கிளினிக் வருபவர்கள் அரண்டு இருப்பார்கள் .
  பழைய கதைகள் மட்டும் தான் digest ல் வருமா ?, இல்லை புதிய கதைகளும், அடுத்த வருடம் digest ல் வரும் வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 57. அப்பாடா ஒரு வழியாக என்னாலும் விமர்சிக்க வழிபிறந்து விட்டது இதற்கு முதலில் செயின்ட் சாத்தானுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். கிட்ட தட்ட 3 மாதங்களாக தலை முடியை பிய்த்து கொண்டேன் எல்லோரும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள் நம்மால் முடியவில்லையே என்ற ஏக்கம் இன்று நிறைவேறியது . என்னைப்போல் எத்தனயோ ரசிகர்கள் எழுதுவதற்கு தடுமாறுகிறார்கள் உயர் திரு விஜயன் அவர்கள் இதற்க்கு ஒருவழிசெய்தல் நன்றாக இருக்கும் மேலும் நிறைய வாசகர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளலாம் அல்லவா செய்வாரா?

  ReplyDelete
 58. சார்,மாயாவியின் முதல்மĬ