நண்பர்களே,
தாமதமாகினும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களோடு எனது வணக்கங்களும் உரித்தாகுக !
பிள்ளையாரின் பிறந்தநாட்கள் எப்போதுமே ஒரு விதப் பரபரப்பையும், உற்சாகத்தையும் என்னுள் கொண்டு வருவதுண்டு! கொழுக்கட்டைகளைப் போட்டுத் தாக்கிட ஒரு சூப்பர் வாய்ப்பென்பதைத் தாண்டி, நிறைய பள்ளிப் பருவ நினைவுகளையும் கொண்டு வந்திடும் மகிமை இந்நாளுக்கு உண்டு என்னைப் பொருத்த வரை ! எங்கள் நகரின் மையத்தில் உள்ளதொரு பிள்ளையார் கோவிலின் வாசலில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் பெரியதொரு மேடை அமைக்கப்பட்டு, பள்ளி மாணாக்கரிடையே ஒரு பேச்சுப் போட்டி நடைபெற்றிடும். எங்கள் பள்ளியின் சார்பாக அனுப்பப்படும் போட்டியாளர்களில் அடியேனும் அடக்கம். ஊரின் மையப் பகுதியில் ரோட்டை மறித்து மாலையில் நடத்தப்படும் போட்டி என்பதால் தெருக்களில் நல்ல கூட்டம் கூடிடுவது வழக்கம். பள்ளியில் மேடைகளில் பேசும் போதே ஒரு விதக் கூச்சம் மனுஷனை பிடுங்கிடும் போது, வீதிகளில் ஏராளமான கூட்டத்தின் நடுவே பேசிடணும் என்றால் கேட்கவும் வேண்டுமா? "பில்டிங் ஸ்ட்ராங் ;பேஸ்மென்ட் வீக் " என்ற கதை தான் !! அதுவும் மேடையில் மாணவிகள் தங்கு தடைகளின்றி விளாசிடும் போது, நமது வரிசை வருவதற்காகக் கீழே காத்திருப்பது - 'ஐயோடா சாமி' அனுபவம் !! "பிள்ளையாரப்பா....எனக்குப் பரிசெல்லாம் கிடைக்காவிட்டிலும் பரவாயில்லை; இத்தனை கூட்டத்தின் மத்தியில் ; அதுவும் இப்படிப் பின்னி பெடல் எடுக்கும் பெண் பிள்ளைகள் மத்தியில் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ளாது இருந்தாலே போதும்" என்று வேண்டிய மாலைகள் நிறையவே நினைவுக்கு வருகின்றன !!
நினைவுகளைக் கொணரும் இந்த சதுர்த்தி தினத்தில், வெகு சமீபத்தில் பெங்களுருவில் நமது நண்பர்களை சந்தித்ததும், அவர்களது கேள்விகளும் 'பளிச்' என்று நினைவில் நிற்கின்றது. ஆங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே சின்னதொரு பதிவாய்ப் போட்டிட promise பண்ணி இருந்ததும் நினைவில் நிற்பதால், here goes :
- சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது ? நிச்சயம் வருகிறது தானே ? ----> சந்தேகமே வேண்டாம்...சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் நிச்சயம் உண்டு ! அடுத்த வாரத் துவக்கத்தில் அச்சுப் பணிகளைத் தொடங்கிடவிருக்கின்றோம் . இம்மாத இறுதிக்குள் இதழ் அச்சாகி ; அக்டோபர் 10 தேதிக்கு முன்னதாகவே உங்களை வந்தடையும்.
- மறுபதிப்புகளில் மாயாவி உண்டா ?-----> மாற்றம் ஒன்று மாத்திரமே மாறாதது ; ஆனால் இதற்கு விதிவிலக்கென்று ஏதேனும் இருக்குமாயின், அது தான் "இரும்புக்கை மாயாவி"யின் குறையா மவுசு ! தமிழில் காமிக்ஸ் என்பதற்கே ஒரு அடையாளம் தந்த நம் மறையும் மனிதர் - ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த பின்னும் தனது (தமிழ்) காமிக்ஸ் பயணத்தின் வேகத்தை மட்டுப்படுத்திடுவதாகத் தெரியவில்லை !தனிப்பட்டமுறையில் 'it's time to move on' என்று நான் நினைத்திட்டாலும், மறுபதிப்புகள் எனும் உங்களின் கோரிக்கை விடாது தொடர்வதால், மாயாவி & கோ. 2013 - ல் நிச்சயம் தொடர்வர் ; reprint களில் !
- வண்ணத்தில் மறுபதிப்பு போடுவீர்களா ?--------->பெங்களுருவில் சந்தித்த நண்பர்களில் கணிசமானோர் - நமது இந்த வலைப்பதிவைத் தவறாது வாசிக்கும், ஆனால் நேரமின்மை காரணத்தாலோ ; தமிழில் டைப் செய்யத் தெரியாதென்ற காரணத்தினாலோ பின்னூட்டங்கள் இடாத passive followers ! ஆகையால், இங்கே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திடுவதை படித்துப் பரிச்சயம் கொண்டிருந்தாலும், தங்களது சொந்த விருப்பு - வெறுப்புகளை அதிகம் வெளிப்படுத்தியிரா மௌனிகள் - at least என்னை சந்தித்திட்ட வரை ! பேச வாய்ப்புக் கிடைத்த போது ஒவ்வொருவரும் தத்தம் ஆதர்ஷ நாயகர்கள் பற்றி ; தங்களின் மறுபதிப்புத் தேர்வுகள் பற்றி ; சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் பற்றி என்று வெளுத்துக் கட்டி விட்டனர் ! அவர்களில் நிறையப் பேர் கேட்டது : "வண்ணத்தில் மறுபதிப்பு சாத்தியமா?"என்பதே ! வண்ணத்தில் ஒரு இதழைத் தயாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நான் பட்டியலிட எத்தனித்தால், அது ஒரு அழுகாச்சி மெகா சீரியல் போல் ஆகிடும் என்பதால் நான் மழுப்பிக் கொண்டே நடையைக் கட்டிடுவது வழக்கம் ! ஆனால் சமீபமாய் , இந்த "வண்ணம் வேண்டும்" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது ! நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே ! பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது ! சொல்லப் போனால்,பணியாளர்களின் சம்பளமும், தொலைபேசிக் கட்டணங்களும் தவிர்த்து, நமது காமிக்ஸ் பிரிவின் தலையில் வேறு எந்த செலவினங்களையும் சுமத்துவதில்லை. நான் அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, அதில் ஒரு அணா வாகினும் காமிக்ஸ் பிரிவின் பொறுப்பாகிடாது ! தற்சமயம் நாம் பின்பற்றி வரும் இந்த நேரடி விற்பனை முயற்சியில் - முன்பைப் போல் கடன் தரும் அவஸ்தைகள் ; வசூலுக்காகச் செருப்புகள் தேய்விப்பது போன்ற தொல்லைகள் கிடையாது ! ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும். ஒரு குறைந்தபட்ச printrun ஆவது இல்லாவிடில், விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாதென்பது பத்திரிகை உலக economics ! ஆகையால் ஒவ்வொரு வண்ண இதழுக்கும் தற்சமயம் நம் முதலீடும் அதிகம் ; முடங்கும் தொகையும் அதிகம் ! அவ்வப்போது வந்திடும் புத்தகத் திருவிழாக்களில் விற்பனை ; E -Bay ஆன்லைன விற்பனை ; ஏஜெண்டுகளின் ரொக்கக் கொள்முதல்கள் என்று சிறுகச் சிறுக விற்பனைகள் நடந்தேறி வருவதால் சற்றே பாதை சுலபமாகி வருகின்றது ! இந்த சூழலில் வண்ணத்தில் மறுபதிப்பு என்று புதிதாக இன்னொரு சாலை அமைப்பதென்பது உங்கள் பாக்கெட்களுக்கு மாத்திரமன்றி எங்களது பாக்கெட்களுக்கும் நலம் தரா விஷயம்! இது ஒருபக்க நடைமுறைச் சிக்கலென்றால், தயாரிப்பில் சந்திக்கும் "பெண்டு நிமிர்த்திகளுக்குப்" பஞ்சமே கிடையாது ! வண்ண மறுபதிப்பான "தங்கக் கல்லறை" இதழுக்கான பணிகளும் தற்போது நடந்தேறி வருவதால், அதில் எழும் பிரச்னைகளை first hand ஆக சமாளித்து வருகின்றேன் ! இதழைப் படிக்கும் சமயம் வந்திடும் போது இது பற்றி எழுதுகிறேன் ! எல்லாவற்றிற்கும் மேலாக, புதிதாய் ஒரு பணியை ; ஒரு ப்ராஜெக்டை கையில் எடுத்திடும் போது தோன்றும் உற்சாகம், ஒரு மறுபதிப்பிற்கு மறுவடிவம் தந்திட முயலும் போது எழுந்திடுவதில்லை !So ஆண்டுக்கு ஒரு மறுபதிப்பு - முழு வண்ணத்தில் ; பெரிய சைசில் என்பது நிச்சயம் !! அதில் வந்திடவிருக்கும் கதைத் தேர்வுகள் முழுக்க முழுக்க உங்கள் கைகளில் !கள்ள ஓட்டோ - நல்ல ஓட்டோ போட்டு நீங்கள் தேர்வு செய்யும் கதைகள் வண்ணத்தில் (மறுபதிப்பாய்) வந்திடும் !
- "மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ? -------இக்கேள்விக்கு பதில் இதோ - மேலே உள்ளதால்...I will let this one pass by !!
- மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !மினி லயனின் அந்த ஆரம்பக் கதைகள் - ஒரு ரூபாய் விலையில் வந்தவை என்பதாலோ, என்னமோ இன்னமும் என் நினைவில் நின்றிடும் இதழ்கள். பின்னர் வெவ்வேறு விலைகளில் வந்தாலும், சுவாரஸ்யமான combination களைக் கொண்டு ஒவ்வொரு இதழும் வெளியானதாய் என் மனதுக்குப்பட்டது ! மறுபதிப்பு ப்ரோக்ராமில் மினி லயனுக்கு இடம் ஒதுக்குவது சிரமம் தராதென்று நினைக்கிறேன் ! பார்க்கலாமே..!
- டெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் ?'பதுங்குவது பாய்வதற்கே' என்று பஞ்ச் டயலாக் விட்டால் நன்றாகவே இருக்கும் ; எனினும் நிஜம் அதுவல்ல ! டெக்ஸ் கதைகளின் பிரதானம் கருப்பு, வெள்ளை என்பதாலும், அதன் வடிவமைப்பு நமது தற்சமயப் பெரிய சைசிற்கு அத்தனை ஏற்றதல்ல என்பதாலும், 2012 -ன் காலெண்டரில் அவருக்கு இடம் தந்திட்டு என்னை நானே குழப்பிக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய பாணி ; புதிய விற்பனை முறைகள் அனைத்துமே ஓரளவுக்குப் பரிச்சயமான பின்னே மாறுபட்ட விலைகள் ; அமைப்புகள் என்று முயற்சிக்கலாம் என்பதே எனது சிந்தனையாக இருந்தது இவ்வாண்டின் துவக்கத்தில் ! இப்போது ஓரளவிற்குத் தெளிவு பிறந்திருப்பதால் நமது டாப் ஸ்டாரான டெக்ஸின் வருகைக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. இரவுக் கழுகார் பிப்ரவரி 2013 -ல் பிரச்சனமாகிறார் - ரூபாய் ஐம்பது விலையில் - ஒரு 240 பக்க சாகசத்தோடு !
- மாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் ?எனது ஆதர்ஷ காமிக்ஸ் நாயகர்கள் பட்டியலில் மாண்ட்ரேக்குக்கு நிச்சயம் இடமுண்டு : ஆனால் உங்களில் எத்தனை பேர் அவரது சாகசங்களை ரசித்திட நிஜமாகத் தயாரென்று நானறியேன் ! நமது பத்து ரூபாய் இதழ்களில் மாண்ட்ரேக் வந்து கொண்டிருந்த வேளைகளில் விற்பனை செம மந்தம் என்பது அவரை ஓரங்கட்டிட ஒரு பிரதான காரணம் ! நீங்கள் தயாரென்றால் - நானும் தயாரே...! தூங்கிக் கொண்டிருக்கும் அவரது கதைகளை எனது மேஜையிலிருந்து விடுதலை கொடுத்த புண்ணியமும் நமக்குச் சேரும் !!
- நமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு ?பெரிதாய் இல்லாத போதிலும், நிச்சயம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று எண்ணிடச் செய்யும் ஒரு நம்பிக்கையான நம்பர் ! இப்போதைக்கு let's leave it at that !
- ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?'30 நாட்களில் அப்பாடக்கராவது எப்படி ?' என்று புத்தகங்கள் எதையும் படித்து ஜான் ஸ்டீல் நம் இதழ்களில் தற்சமயத்து இடத்தைப் பிடித்திடவில்லை! '60 களின் இறுதியிலும் ; '70 -களின் துவக்கங்களிலும் Fleetway வெளியீடுகளில் மிகுந்த வரவேற்புப் பெற்றதொரு ஹீரோ ஜான் ஸ்டீல்!அவரது கதைகளில் திறமையான ஓவியரின் பணியும்;யதார்த்தமான கதைக்களங்களை உருவாக்கும் கதாசிரியரின் கைவண்ணத்தையும் ரசித்திட முடியும். ஜான் ஸ்டீல் கதைகளின் காலகட்டம் புராதனமானதென்பதால், லார்கோ ;XIII போன்ற சமகாலத்து நாயகர்களின் பளபளப்பு தென்படுவது இயலாக் காரியம் ; but still கழிக்கும் ரகமல்ல ! தவிர இவரது கதைகளின் நீளம் ஜாஸ்தி கிடையாதென்பதால் நமது இதழ்களின் பின்பக்கங்களில் இவரை நுழைத்திடுவது சுலபமாகுகிறது !
- இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?இரத்தப் படலம் - முழுத் தொகுப்பு சுருக்கமாய்ச் சொல்வதெனில் ஒரு வைராக்கியத்தின் வெளிப்பாடு ! அதனை கருப்பு வெள்ளையில் வெளியிடுவதிலேயே தொங்கிப் போன நாக்கு தெருவைக் கூட்டாத குறை தான் ! மீண்டும் அதனை வண்ணத்தில் வெளியிடுவதென்பது சுகமான கற்பனையாகவே இருந்திடும் ! இரத்தப் படலம் கதைகளில் வசனங்களுக்குப் பஞ்சமே கிடையாது ; பக்கம் பக்கமாய் ஒவ்வொரு பாத்திரமும் பேசுவது சகஜம் என்பது நாமறிவோம் . வண்ணத்தில் அந்தந்த வசன பலூன்களுக்குள் ஓரளவிற்காவது வாசிக்க இயலும் சைசில் எழுத்துக்களை அமைக்க வேண்டுமெனில், மீண்டும் 18 பாகங்களையும் crisp ஆக மொழிபெயர்த்திடல் அவசியம் ! புதிய மொழிபெயர்ப்பில் முந்தைய கருப்பு வெள்ளைக் கதையின் நடையில் இருந்த சுவாரஸ்யம் குன்றிடாமல் ; சங்கதிகள் ஏதும் கத்திரிக்கப்படாது அமைகிறதாவென்று பார்த்துக்கொள்வதிலேயே பெண்டு கழன்று விடும். 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் ! அது வரை கனவுகளே நம் தோழர்களாக இருத்தல் அவசியம் - இரத்தப் படலத்தைப் பொருத்த வரையிலாவது !
- கிராபிக் நாவல் என்றால் என்ன ? இது அடிக்கடி வருமா ? எமனின் திசை மேற்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கும் -நிச்சயமாக !இது போல் மாறுபட்ட கதைகள் கிடைக்கும் போது நிச்சயம் வெளியிடுவோம் - அவை கௌபாய் ரகக் கதைகளாக அல்லாது இருந்தாலும் !
- ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?இது ஒவ்வொருவரின் ரசனையினையும் சார்ந்த சங்கதி என்பதால், ரொம்பவே sensitive ஆன விஷயமாகிறது ! இதில் எனது அபிப்ராயம் எதுவாக இருப்பினும், வாசகர்களின் ஆர்வத்திற்கோ, வேட்கைக்கோ நான் தடையாக நிற்கப் போவதில்லை ! சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழ் வெளியான பின்னே இதனைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் ! Judgement reserved ?
- "கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !!ரீப்ரின்ட் - ரீப்ரின்ட் - உங்கள் சாய்ஸ் - உங்கள் சாய்ஸ் !
- கேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் ? செப்பனிட வேண்டிய சாலைகள் ; உருவாக்க வேண்டிய மேம்பாலங்களென - நம் நாட்டு நெடுஞ்சாலைகளைப் போல் டைகர் கதைகளிலும் நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி உள்ளது ! பணியைத் துவக்கியாச்சு..இனி பொறுமையாய் ஒவ்வொன்றாய் முடிக்க வேண்டியது தான் !
- இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ??? மே 2013 !
- புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ? மர்ம மனிதன் மார்ட்டின் & ராபின் வருவது உறுதியாகிவிட்டது . மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் ; ப்ருனோ பிரேசில் ஆகியோரும் உண்டு பட்டியலில். இன்னும் ஒரு சில நாயகர்கள் என் லிஸ்டில் உள்ளனர் ; நவம்பரில் அவர்களைப் பற்றி எழுதிகிறேனே !
- இந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ? ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் - "WOW "!! Thanks folks!!!
- மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ? தயக்கமெல்லாம் கிடையாது ! கடல் அளவு சர்வதேசத் தரம் நம் முன்னே புதிதாய்க் காத்திருக்கும் போது, பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது எவ்விதம் சுவாரஸ்யம் அளிக்குமென்பது தான் எனது கேள்வி ! "எமனின் திசை மேற்கு" ரகத்தில் காத்திருக்கும் அற்புதங்கள் எத்தனையோ ? லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ ? அந்தத் தேடலில் நமது creative energy செலவாகினால் எனக்கு சந்தோஷமே !
- வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ? வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம் !
- சூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா ?No way !!
- திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில் !!
- கபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் ? மும்பையிலிருந்து Rang Rekha Features எனும் நிறுவனம் மேற்படிக் கதைகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தது. நீண்ட காலமாய் தொடர்பின்றிப் போனதால், இப்போதைய நிலவரம் சரியாகத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும் !
- வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ? கவனிக்கப் படவேண்டியதொரு சங்கதி ! தமிழில் சிறார்கள் படிக்கக் கூடிய காமிக்ஸ் இதழ் ஒன்றை உருவாக்க முடிந்தால் அற்புதமாக இருக்கும் ! நிச்சயம் சிந்திப்பேன் !
- டைகர் digest ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ? மீண்டும் நமது விற்பனை முகவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது இதழ்களைக் கேட்டு வாங்குவதை கடந்த ஓரிரு மாதங்களாய் நாங்கள் பார்த்து வருகின்றோம். கொஞ்சம் அவகாசமளித்தால் விற்பனை எண் இன்னும் சற்றே தாட்டியமாகிட வாய்ப்புண்டு என்று உறுதியாக நம்பத் தோன்றுகிறது ! அந்த பொழுது புலரும் போது எல்லாமே சாத்தியமே !
- NEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா ?You bet !!! முழு மூச்சாய்ப் பணிகள் நடந்தேறி வருகின்றன ! சொல்லப் போனால் கடந்த ஒரு மாதமாகவே நான் இங்கே வலைப்பதிவிற்கு ஒதுக்கும் நேரம் கூட குறைந்து விட்டது - NEVER BEFORE ஸ்பெஷல் இதழின் பணி மும்முரத்தில் ! ஜனவரி 2013 -ல் உங்கள் கைகளில் இதழ் இருப்பது நிச்சயம் !
பெரும்பான்மையான சங்கதிகள் நாம் இங்கே ஏற்கனவே போட்டுத் துவைத்தவைகளே என்ற போதிலும், புது வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யத்தைத் தரலாமென்று தோன்றியது !எழுதிடுவதில் எனக்குக் கிடைத்த சந்தோஷம், படிக்கும் உங்களுக்கும் கிடைத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சியே ! Take care folks !
சாத்தானுக்கு மீண்டும் முதலிடம்
ReplyDeleteVijayan avargalku Iam in Salem ungal pathipugal engu kedaikum nangal apadi vanguvathu atharku vilambaram vendum sir
Deleteமை டியர் மானிடர்களே.வாத்தியார் சொன்னதை படித்துவிட்டீர்களா?மறுபதிப்பு உங்கள் சாய்ஸ் என்று சார் சொன்னதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.அடுத்த ஆண்டு மறுபதிப்பாக மின்னும் மரணம் வெளியிட இப்பொழுதே வாக்களியுங்கள்.(சாத்தான் ஒரு ஓட்டு போட்டா ,நூறு ஓட்டு போட்ட மாதிரி.ஹிஹி).
ReplyDeleteவேதாளருடன் நமது வவ்வால் மனிதனும் வேண்டும் ஆசிரியரே!!!
ReplyDeleteமனது வைப்பீர்களா?
Lakshmipathy Ramaiyan : BATMAN ஒரு high profile நாயகர் இப்போது...! அவரது தற்சமய ராயல்டி நமக்கு ஒத்து வருமா என்பது தெரியவில்லை ; எனினும் நமது "முயன்று பார்ப்போமே" பட்டியலில் தலைவர் முன்னணியில் உள்ளார் !
Deleteநன்றிகள் பல ஐயா!!!
Deleteஉங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால கடன் தேவை? நாம் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கொடுப்பனவு கடன்கள், திருமணக் கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள், வங்கி கடன்கள் மற்றும் கடன் செலுத்துவதற்கான கடன் ஆகியவற்றை வழங்குகிறோம். உங்கள் கெட்டதை அறியுங்கள்
Deleteகடன் ஸ்கோர். உங்களுக்குத் தேவையான கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நாங்கள் பட்டியலிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் அங்கீகரிக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் இப்போது பொருந்தும்
சிறந்த பரிந்துரை
எம்.ஆர்: கிறிஸ்டியன் டேவிட் பாங்
infosun கடன் சேவை நிறுவனம்
தொடர்பு மின்னஞ்சல்: எங்களை: infosunloanservice24@gmail.com
WHATS-APP CONTACT +919108281664
10 ம் தேதிக்கு முன்னாள் ஆஹா ,இந்த தீபாவளி என்னை போன்ற நண்பர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைவது உறுதி.................
ReplyDeleteஎப்பிடி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே ....................
நமது கொண்டாட்டங்கள் ,தீபாவளி என்றால் சிவகாசி வெடி மட்டும்தானா ,இதோ சிவகாசியிலிருந்து அற்புதமான மலரும் நினைவுகளை கிளறி,மலர வைக்கும் மலர்............... .................
முன்பெல்லாம் தீபாவளிக்கு முன்னரே வெடிகள் வந்து விடும்,வெடிக்க ஆரம்பித்து விடுவோம்,தாங்கள் இப்போதே அது போல கொளுத்தி போட்டு விட்டீர்கள்,தீபாவளி வரும் பின்னே,வெடியோசை வரும் முன்னே.......
ReplyDeleteDear Editor,
ReplyDeletePlease consider a re-print of XIII mangnum opus volume. I am sure there will be a lot of new takers now. Also please re-consider BATMAN stories - would be topical given that the recent batman movies were a great hit - in particular the story HUSH which is a multipart BATMAN comic, is one of the masterpieces. Would be great to have it as a 200 buck priced Tamil edition.
Comic Lover ; prem 4u : This was a title that was pre-booked for a good three years ; finally released in 2010 and was in stock for a further 18+ months too ! Effectively the planning ; execution & sales of XIII Special was a 5 year affair !! You definitely cannot blame us for not having given opportunities enough to buy a copy in all of that time !
DeleteA reprint will not be viable unless we have an assured run of 1500 copies and that is definitely not a practical possibility at this point of time . You just need to try and see if any of our friends here are in a mood to spare you their second copy ! Good luck !
சென்னை புத்தகத் திருவிழா சமயத்தில்கூட இரத்தப்படலம் தாராளமாகக் கிடைத்ததே? அப்போதுகூட வாங்காமல் தவறவிட்டது வாசகர்களாகிய எமது தவறே தவிர ஆசிரியரின் தவறல்ல. 4, 5 பிரதிகள் வைத்திருப்பவர்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள்தான் இனி கருணை (என்ன விலையோ???) காட்டவேண்டும்!
Deleteஅன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,
ReplyDelete//
பெரும்பான்மையான சங்கதிகள் நாம் இங்கே ஏற்கனவே போட்டுத் துவைத்தவைகளே என்ற போதிலும், புது வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யத்தைத் தரலாமென்று தோன்றியது !எழுதிடுவதில் எனக்குக் கிடைத்த சந்தோஷம், படிக்கும் உங்களுக்கும் கிடைத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சியே ! Take care folks !
//
அற்புதம்,தெளிவான கருத்துக்கள்,எமது(நண்பர்கள்) சந்தேகங்களை தீர்த்து வைக்கும் விளக்கங்கள் என இப்படி ஒரு அதிரடி பதிவு அரங்கேறும் என நான் நினைத்து பார்க்கவில்லை................
இனி தங்களை டெக்ஸ் இன் கதைகள் பெரிய சைசில் வேண்டும் என தொல்லை பண்ண மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்..............
மினி லயனின் வரவு பல அற்புதங்களை நிகழ்த்த போகிறது பாருங்கள்............
கார்சனின் கடந்த காலத்திற்கு இப்போதே எனது ஓட்டை பதிவு செய்கிறேன்...........
ப்ரூனோ பிரேசில் ,ரோஜெர் ..........இன்னும் பல உள்ளன தங்கள் அறிவிப்பிற்காக காத்திருக்கிறேன் ......................
ஏற்கனவே ரத்த ஒப்பந்தத்தில் தாங்கள் கை எழுத்திட்டுள்ளீர்கள் ,தங்கள் துவக்க கால ஆசை பூந்தளிர்,அம்புலி மாமா போல ,அப்பு அல்லது புதையல் எனும் இதழை எழுப்ப திட்டமா சிறுவர்களுக்கு ..............ஜூனியர் லயன் பாணியில் மட்டுமா ?
ஸ்பைடர் கதைகளை ரசிக்க தயார் என நண்பர்கள் உணர்த்துவார்கள்..................
இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் சரி ,ஆனால் அதன் மறு பதிப்பு ................சரி............. இதற்கும் எனது வாக்கை பதிவு செய்கிறேன்
வேதாளரின் மறுபதிப்பு மற்றும் சிறப்பான கதைகள் என தங்களுக்கு தோன்றும் கதைகள் கண்டிப்பாக வேண்டும்,மாற்று கருத்து இருக்காதென நினைக்கிறேன்.......
digest தயாரிக்கும் பணியை வரவேற்க நண்பர்கள் தயாராகலாம் என்று கூறி விடலாமே .............................இன்னும் ஏன் தயக்கம்
திகிலை வரவேற்க தயாராகி விட்டேன்....................முழு மனதுடன்...............
NEVER BEFORE ஸ்பெஷல் தங்களது சிறப்பான இதழை தர வேண்டும் என்ற தாகத்தை காட்டுகிறது ,புக் செய்யாத நண்பர்கள் சீக்கிரமாக புக் செய்து வரவேற்ப்பை உரிய முறையில் அளியுங்கள் நண்பர்களே...........
இந்த புது பாணிக்கான வரவேற்பு தங்களுக்கு சந்தோசமளித்ததை காட்டிலும் எங்களுக்கு பல மடங்கு உற்ச்சாகத்தை பாய்ச்சி உள்ளது
இரத்தபடலம் பற்றி இங்கே எனக்கு அந்த புத்தகத்திலே நான் திரும்ப ,திரும்ப எடுத்து படித்து ,நோட்டுகளில் எழுதி மகிழ்ந்த ஏன் மனதை நெருடிய அந்த அற்புதமான கவிதை வரிகளை , ஏன் கதையின் நாயகனின் வலியை இரத்தின சுருக்கமாக வெளி படுத்திய அந்த வைர வரிகளை ,கதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளை இங்கே கூறினால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்
இவ்வாறாக கொந்தளிப்பு அடங்கி நடைமுறை வாழ்க்கை புதிய தொடக்கம் பெற்றது .ஆனால் ஒரு மனிதரை பொறுத்தவரை வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை-என்றைக்கு அது சாத்தியமாகும் என்ற கேள்விகளுக்கும் பதில் கொடுப்பார் யாருமில்லை !.............வண்ணத்தில் எதிர் பார்த்து எனது இடத்தில் வேறு யாரேனும் இருந்தால் நிச்சயம் நொறுங்கித்தான் போயிருப்பார்கள்............இவளவு நடந்து முடிந்த பின்பும் ,எவளவோ உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்த பின்பும் வண்ணத்தில் என்ற கேள்விகளுக்கு கனவை துணையாகுமாறு கூறிய ஆசிரியரை என்ன சொல்வது....................
காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .................
Dear editor,
ReplyDeleteநிறைய வாசகர்களின் கேள்விகளும், அதற்கான உங்களது பதில்களும் தற்போதய நிலவரங்களை ஓரளவு நிறையவே தெளிவுபடுத்தியிருக்கின்றன.
இன்று உங்களது இந்தப் பதிவை நிச்சயம் எதிர் பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. நன்றிகள் பல!
ஆர்வ மிகுதியில் என்னைப் போன்ற வாசகர்கள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஆசைப்பட்டாலும் கூட, கடந்த காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களே உங்களை நிதானித்து செயல்பட வைப்பதை உங்களின் தீர்க்கமான பதில்களே பறைசாற்றுகிறது.
உங்களது பதில்களை வைத்துப்பார்க்கும்போது அடுத்த வருடத்திற்கான வெளியீடுகள் பற்றிய லிஸ்ட் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டதை உணரமுடிகிறது. முழுதாக அறிவிப்பு வரும்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சிறுவர்களுக்கான புதிய காமிக்ஸ் பற்றிய உங்களது உறுதியான எண்ணவோட்டம் உற்சாகப்படுத்துகிறது. சரியான தருணத்தில் சரியாக யோசிக்கப்படும் விஷயமாகவே தோண்றுகிறது.
மறுபதிப்புகள் பற்றிய உங்களது விளக்கமும் மிகச்சரியானதாகவே மனதிற்குப் படுகிறது.
நமது பிரதிகளின் விற்பனை எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
அட்டகாசமான WWS க்கு பிறகு வரவிருக்கும் சூ.ஹீ.சூ spl எப்படிப்பட்டதொரு வரவேற்பை பெற்றிடப்போகிறதென்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப்பின் பிப்ரவரியில் டெக்ஸின் மறுபிரவேசம் அட்டகாசமான அறிவிப்பு!
இரத்தப்படலம் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் வண்ணத்தில் வெளிவந்தே தீரும். கதையல்ல அது; காவியம்!
மினி/ஜூனியர் லயன் மறுபதிப்புகள் ஏகோபித்த வரவேற்பைப் பெறுவதோடு இக்கால ஜூனியர்களிடத்தில் காமிக்ஸ் ஆர்வத்தை ஏற்படுத்தவும் உதவும்.
எப்போதும் அகோர (காமிக்ஸ்) பசியுடன் அழுதுகொண்டேயிருக்கும் குழந்தைகள் நாங்கள். ஆனால், ஒரு அன்னைக்குத் தெரியும் தன் குழந்தைக்கு எப்போது, என்ன தரவேண்டுமென!
ஆ....
vijay Erode : ஒரு மனுஷனுக்குக் காதோரம் தோன்றிடும் நரை நிறைய விஷயங்களைக் கற்பிக்க வல்லது - இந்த ஞாயிறு டை அடிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் தாண்டி ! நிறையப் பேசி ; நிறைய உசுப்பேற்றி விட்டு, அம்பேலாகும் அதிரடி ஆசாமியை விட, நிதானமாய்ப் பேசி, நிறைவாய் செய்திடக் கூடிய இந்தப் பாணி பரஸ்பரம் நல்லதே என்பது பிரதான பாடம் !
Deleteஅதற்காக கால் கட்டை விரல்களை வாய்க்குள் திணித்துக் கொள்ளும் "கலையை" மறந்திட்டேன் என்று சொல்வதற்கில்லை...! கூடவே பிறந்ததல்லவா..?!!
மனதைத் தொடும் அந்த இறுதி வரிகள் நிஜமாய் சிந்திக்கச் செய்கின்றன !! என்றும் நன்றிகள் !!
ஆஹா தங்களிடம் சாமர்த்தியமாக நடக்கலாம் என நம்பிக்கை வார்த்தைகளை ,அழகாக எழுதி பெற்று தந்த விஜய்க்கு நன்றிகள்......................
Delete//திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில் !! //
ReplyDeleteMy sooo glad that you are continuing thigil reprint..... Hurrray
V Karthikeyan : பார்க்க : நண்பர் SIV அவர்களின் பதிவு !!
Delete//V Karthikeyan : பார்க்க : நண்பர் SIV அவர்களின் பதிவு !! //
Delete//SIV : பார்க்க : நண்பர் V Karthikeyan அவர்களின் பதிவு !! //
I didn't know, you wrote the same reply for SIV when i read this reply.... good one. Laughing out loud in the middle of office :-)
Pls bring back vedhalar stories, vana ranger Jo and my vote for first colour reprint is irumbukkai Ethan
ReplyDelete>> முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம்!
ReplyDeleteLet's have a Phantom special in color with a selection of 10 or 12 early Sy Barry stories from the 70's in original English (Like Hermes Press is doing). This will probably be an easy way of reaching a wider audience for our comics. I know that you will say "NO" but it does not hurt to ask :)
When publishing Phantom/Mandrake/Corrigan strips, please don't have the local artist fill in the panels and extend the drawings for the sake of fitting them to the page size. I have a wish that for once in my lifetime I would like to read a phantom story in an Indian publication with no edits to the original drawings.
BN USA : Strips that we now reprint in the new, bigger format are all untouched by local artists. The strips fit in perfectly and so no worries on that any longer.
Delete//திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில்//
ReplyDeleteசார் திகில் கதைகள் கண்டிப்பாக போட்டு தான் ஆகனுமா? என்னை பொறுத்தவரை நமது மறுபிரவேசத்தின் மோசமான பக்கங்கள் என்றால் அது திகில் முதல் இதழ் மறுபதிப்பு பக்கங்கள் தான். திகிலில் வந்திட்ட பிரின்ஸ், ஜானி கதைகளை ஆரம்பிக்கலாமே..
SIV : பார்க்க : நண்பர் V Karthikeyan அவர்களின் பதிவு !!
DeleteFINGERS CROSSED
Delete//V Karthikeyan : பார்க்க : நண்பர் SIV அவர்களின் பதிவு !! //
Delete//SIV : பார்க்க : நண்பர் V Karthikeyan அவர்களின் பதிவு !! //
ஹீ ஹீ...சார் கலக்கல் பதில்.....
Well said SIV
DeleteSIV சொல்வதை நான் வழிமொழிகிறேன். இன்னும் என்னால் அந்தக் கதைகளைப் படிக்க முடியவில்லை :(. தயவு செய்து.. ஒரு வாக்கெடுப்பு நடத்தி திகில் ஆரம்ப இதழ்கள்கள் வேண்டுமே இல்லையா முடிவு செய்யலாமே.
DeleteAaghaa, ஒரு grouppae kilambedum polla irukkae :-)
DeleteAny way the reason behind my happiness of THIGIL early reprints are as follows
1. Amazing stories and pictures - these stories still bring thigil to me.
2. Few pages each story - Good to read in-between during busy times.
3. Nostalgia feeling - Brings back old memories i had during childhood days while reading these stories in my grandma's house.
4. More for less - I am not asking these stories as stand-alone issue, i love largo, tiger and all the new stories. With the B&W stories i get the feeling that i am getting 300 rs ( 100 rs largo part1 + 100 rs largo part 2 + 100rs B&W issues) worth of book for 100 Rs.
- V. Karthikeyan
எப்படியும் இரண்டாம் பாகம் நாம் படித்துதான் ஆக வேண்டும் போல.. V.Karthikeyan - உங்களுக்கு ஜாலி தான் போங்க. :) :)
Deleteதிகில் கதைகள் இல்லாவிடிலும் கருப்பு கிழவியின் கதைகள் வந்தால் மிகவும் சந்தோசபடுவேன்.
Delete//கடல் அளவு சர்வதேசத் தரம் நம் முன்னே புதிதாய்க் காத்திருக்கும் போது, பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது எவ்விதம் சுவாரஸ்யம் அளிக்குமென்பது தான் எனது கேள்வி//
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள். வாசகர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்..
அதே சமயம் வெளிவரும் மறுபதிப்புகளில் லாரன்ஸ், ஜானி நீரோ, மாயாவி, ஸ்பைடர் போன்றவர்களுக்கு முக்கியத்துவத்தை குறைத்து விட்டு ரிப் கெர்பி, கேப்டன் பிரின்ஸ், சார்லி போன்றவர்களின் கதைகளை அதிகம் வெளியிட வேண்டும் என்பது என் அவா.
Athiradi saravedi
ReplyDelete2013 varuga varuga...
நவம்பர் இதழுடன் அப்படியே நம்ம அன்பான, அழகான, பண்பான, என்றும் இளமையான, எளிமையான, திறமையான, பொறுமையான, மதி நுட்பம் மிகுந்த,ஆசிரியர் ஒரு தீபாவளி பட்டாசு பார்சல் இலவசமாக (கவனிக்க: முற்றிலும் இலவசமாக) அனுப்பி வைத்தால் இது போன்ற மேலும் பற் பல பின்னூட்டங்கள் உறுதி. :) (அதை சந்தா தொகையில் கழித்து விட தடை உத்தரவு அமலில் உள்ளது.) மிக்க ஆவலுடன் நவம்பர் மாதத்தை எதிர்நோக்கி ...
ReplyDeleteபுத்தக ப்ரியன் : சரவெடிப் பார்சலுக்காக ஒரு மனுஷன் சரமாரியாகப் பீலா விடுவதா ? தாங்காதுடா சாமி....! அதிலும் இந்த "என்றும் இளமையான" சமாச்சாரம் ரெம்பவே இடிக்கிறதே !!
Delete//புதிதாய் ஒரு பணியை ; ஒரு ப்ராஜெக்டை கையில் எடுத்திடும் போது தோன்றும் உற்சாகம், ஒரு மறுபதிப்பிற்கு மறுவடிவம் தந்திட முயலும் போது எழுந்திடுவதில்லை !//
ReplyDeleteதூங்கி எழுந்த பின் என்ன சொல்வதென்றே புரியவில்லை,புரிகிறது உங்களது நிலை.............................மண்டையை பிய்த்து கொள்கிறேன்............
//லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ ? அந்தத் தேடலில் நமது creative energy செலவாகினால் எனக்கு சந்தோஷமே ! //
உற்ச்சாக வெள்ளத்தில் நீந்தி கழிக்கிறேன் உங்களது உற்ச்சாககத்தின் துணை கொண்டு.............மாபெரும் புரட்சி நடத்திய லார்கோ,கிராஃபிக் நாவல் போல நினைத்தாலே இனிக்கிறது......விரைவில் கொண்டு வர ஆவன செய்யுங்கள்
ஆசிரியருக்கு,
ReplyDeleteமிக நிதானமான விரிவான பதில்கள்.
உங்களை நேரடியாகச் சந்தித்து இதேபோன்ற பல கேள்விகளைக் கேட்கவேண்டும் என்ற எங்கள் எண்ணங்களுக்கு, எங்கள் மனதில் உள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு இந்தப் பதில்கள் விடை சொல்லிவிட்டன. நீங்கள் இங்கே பதிலளித்திருப்பது பெரும்பாலான வாசக நண்பர்கள் கேட்கவிரும்பும் கேள்விகளில் ஒருசிலவற்றுக்குத்தான் என்றாலும், அந்தப் பதில்களுக்குள் பல்வேறு விடைகளும் பொதிந்திருக்கின்றன. வாசிப்பவர்களது உள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் பல கேள்விகளுக்கு அந்தப் பதில்கள் விடை பகர்கின்றன. மிக்க நன்றி.
தனிப்பட்ட முறையில் எனது அபிமான கதாநாயகர்களில் சிலரான மாண்ட்ரேக், வேதாளர், பேட்மேன் போன்றவர்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்ற நண்பர்களின் கருத்தை நானும் அழுத்தமாகவே வழிமொழிகிறேன். இப்போதிருக்கும் புதிய நமது காமிக்ஸ்களின் பாணிக்கு அவர்கள் சரிவருவார்களா என்று நீங்கள் தயங்கலாம்.
ஆனால், அதற்கு நான் (நாம்) அடிக்கடி வலியுறுத்திவரும் ஒரு விடயம் தீர்வுகொடுக்கும் என்று நம்புகிறேன். அது - மீண்டும் நமது 'ஜூனியர் லயன்' அல்லது 'மினி லயன்' (அல்லது இரண்டையுமே) உயிர்ப்பிப்பது. பொதுவாகவே இப்போது மெச்சூர்ட் ஆகி இன்றைய நமது காமிக்ஸ்களின் வாசகர்களாக இருக்கும் நமது வாசகர்கள் அனைவருமே தமது பாடசாலைக் காலங்களில் இந்தக் கதாநாயகர்களோடு நமது காமிக்ஸ்களின் புண்ணியத்தில் சகவாசம் வைத்திருந்தவர்களே! இப்போது அவர்கள் வெளித்தோற்றத்தில் பெரிய மனிதர்களாகிவிட்டாலும், இன்றும் அந்த தமது குழந்தைப்பருவத்துத் தோழர்களோடு நட்புக்கொண்டிருக்கவே விரும்புகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தமது பாடசாலை நாட்களில் தமக்கு நட்பாக இருந்து, நம்பிக்கை அளித்து, தைரியம் கொடுத்து, தம்மை வளர்த்துவிட்ட இந்தக் கதாநாயகர்களின் நட்பு தமது குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஏக்கமும் அவர்களுக்கு இருக்கிறது. அதேவேளை, இன்றைய குழந்தைகளுக்கும் தமிழில் அவர்கள் வாசிக்கக்கூடிய காமிக்ஸ்கள் (காமிக்ஸ்கள் என்ன, புத்தகங்களே) இல்லை என்று சொல்லலாம். பெரியவர்களின் புத்தகங்களையே படிக்கவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு.
இப்படி பல கோணங்களிலிருந்தும் வரும் எதிர்பார்ப்புக்களுக்கும், ஏக்கங்களுக்கும் ஒரே வடிகால் - ஜூனியர், மினி லயன்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதுதான். முன்புபோல சிறிய சிறிய புத்தகங்களாக வெளியிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது நமது முத்து, லயன் வரும் சைஸிலேயே வெளியிடலாம். அவற்றில் இந்தக் கதாநாயகர்களில் சிலரின் கதைகளை உள்ளடக்கி ஒரு 'டைஜஸ்ட்' போல இதே விலையில் வர்ணத்தில் வெளியிடலாம். உங்கள் மேஜையில் உறங்கிக்கொண்டிருக்கும் இவர்களின் பல கதைகளுக்கு வழிகிடைக்கும்.
அத்தோடு முன்பு முத்து காமிக்ஸ்களில் வெளிவந்த பல மாண்ட்ரெக், வேதாளர் கதைகளில் வேறு எந்த தமிழ்ப் பதிப்பகத்தாராலும் வெளியிடப்படாமலே இருக்கின்றன. (மாண்ட்ரெக்கின் சமையல் காரரர் ஹோஜோ தான் முக்கிய உளவுப்பிரிவின் தலைவர் என்பது வெளிப்படும் கதைகள் போன்றவை - பெயர் ஞாபகமில்லை) அப்படியான அருமையான கதைகளை இந்தத் தொகுப்புக்களில் தொகுக்கலாம். இப்படி ஒரு விடயத்தை, முயற்சியை நீங்கள் முன்னெடுப்பீர்களாக இருந்தால், வியாபார ரீதியில் உங்களுக்கு நிச்சயம் இன்னும் ஒரு பூஸ்ட் கிடைப்பதோடு, இன்றைய குழந்தைகளின் நல்ல வாசிப்புக்கும் அவர்களது கற்பனைத் திறன்களை விரிவுபடுத்துவதற்குமான நல்ல புத்தகங்களை வெளியிட்டவர் என்ற புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும். செய்வீர்களா ஸார்?
Note: மேலுள்ளவை பொதுவாக நமது வாசக நண்பர்கள் சார்பில் எழுதியவை. இது, எங்களுக்கானது - நம்மூருக்கு புத்தகங்கள் கொண்டுவருவது தொடர்பில் சில விடயங்களை நேற்று உங்கள் அலுவலகத்தாரோடு பேசினோம். பல மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தோம். உங்களுக்கு நேரம் கிடைத்தால் இன்று காலை அவர்கள் புத்தகங்களை அனுப்பும் முன்னர் அவைபற்றி சில வார்த்தைகள் ஸ்டெல்லாமேரி அவர்களோடு உங்களால் பேசமுடியுமா, புத்தக எண்ணிக்கை, கட்டணங்கள் தொடர்பாக? கொஞ்சம் அவசரம், ப்ளீஸ்.....
ஆசிரியருக்கு,
Deleteஅல்லது மின்னஞ்சலை பரிசோதித்தாலே எமது கோரிக்கைகள் புரியும்.
podiyan::
Deleteஉள்ளத்தில் இருப்பதை மிக அழகாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்!
ஆசிரியருக்கு நன்றிகள்.
Delete//SIV : பார்க்க : நண்பர் V Karthikeyan அவர்களின் பதிவு !!//
ReplyDelete//V Karthikeyan : பார்க்க : நண்பர் SIV அவர்களின் பதிவு !!//
ஆ...ஹா... கோர்த்துவிடுவது என்று இதைத்தான் சொல்வார்கள்!!! #LOL
//வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ? கவனிக்கப் படவேண்டியதொரு சங்கதி ! தமிழில் சிறார்கள் படிக்கக் கூடிய காமிக்ஸ் இதழ் ஒன்றை உருவாக்க முடிந்தால் அற்புதமாக இருக்கும் ! நிச்சயம் சிந்திப்பேன் //
ReplyDeleteI would like to share my thoughts:
For juniors we can try with large picture frame stories with less dialogues in big font, so that they can easily spell it and read it, u have to believe it, my 6 year old daughter is spelling out the story headings and trying to read Tamil, she is asking me to tell the story. i previously told the story of Lucky Luke, but i can't convey this cowboy stories to her.
Many would be happy to see stories published for children in the age group of six years which they can easily understand, and it will be a stepping stone for new young readers. So i kindly request you to consider JUNIOR LION with new format and new stories for children.
S.Mahesh
Chennai
Dear Editor,
ReplyDeleteஉங்கள் சிறு வயதில், பிள்ளையார் கோயில் தெரு மேடை பேச்சுப்போட்டியில், பிறகு நடந்தவைகளைப் பற்றி (மேடையில் ஏறியபின் பயத்தில் பேச்சு வராமல் 'பெப்பரக்கா' என நின்றதும், பின்பு ஒருவழியாக சமாளித்துக்கொண்டு உளறிக்கொட்டியதும், பார்வையாளர்கள் 'கெக்கபிக்கே' என சிரித்ததும்) அழகாக இருட்டடிப்பு செய்துவிட்டு, கேள்விபதில் பகுதிக்குத் தாவி நம் வாசக நண்பர்களை ஏமாற்றியதைப் போல என்னையும் ஏமாற்றிவிட முடியாது!
உண்மையைச் சொல்லுங்கள்...என் கணிப்பு சரியாக இருக்குமானால், உங்கள் பள்ளிப்பருவத்தில் சகமாணவர்கள் எல்லோரும் உங்களை "ஏய், முட்டைக் கண்ணா!" என்றுதானே அழைத்திருப்பார்கள்?! :))
Vijay Erode : நகைச்சுவை உணர்வோடும், உரிமையோடும் நீங்கள் சொல்லியிருந்தாலும், நம் ஆசிரியரை "அப்படிச் சொல்லியிருப்பார்கள்" என்று நீங்கள் சொல்வதும் அவ்வளவு நன்றாக இல்லை. தவிர்ப்பது நல்லது. நாங்கள் அதீத உரிமை எடுத்துக்கொண்டாலும், அவர் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் இடம் மிக உயர்வானதல்லவா? இது மற்றவர்களும் இப்படி 'அதீத உரிமை' எடுத்துக்கொண்டு வார்த்தைகளைப் பரிமாற வழி அமைத்துவிடும். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Delete30 வயதைக் கடந்து விட்டாலும், 'காமிக்ஸ்' என்ற மந்திர வார்த்தையின் முன் இன்னும் 15 வயதைத் தாண்டாத சிறுவனாகவே நீடிக்க விரும்புவதன் உள்மன ஆசைகள்தான் என்னை இப்படிப்பட்ட தவறுகளுக்கு அவ்வப்போது வழிநடத்திவிடுகின்றன.
Deleteபுரிந்துகொண்டேன்.
நண்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.
தவறுதான்! மன்னியுங்கள்!
புரியவைத்த நண்பர் பொடியனுக்கு நன்றிகள் பல!
வருத்தமுடன்,
விஜய்
vijay Erode : நீங்கள் நிச்சயம் ஷெர்லக் ஹோம்ஸ் ஆகி இருக்க சாத்தியங்கள் கம்மி ! சொதப்பும் ஒரு மாணவனை மறு வருஷம் அதே போட்டிக்கு எந்தப் பள்ளியாச்சும் அனுப்பிடுமா - என்ன ?
Deletevijay Erode: இதில் வருத்தப்பட ஏதுமில்லை நண்பரே! அன்பில் யாரும் செய்யக்கூடியதுதான். ஆனால் பாருங்கள் - உங்கள் கண்டுபிடிப்பை ஆசிரியர் இல்லை என்று சொல்லிவிட்டாரே! அதனால் என்ன, இன்னொருவிடயத்தை கண்டுபிடிக்காமல் விடுவாரா 'ஷெர்லக் ஹோம்ஸ்'?.
Deleteஆசிரியர் தன் கையினாலேயே சிக்குகிறார் பாருங்கள் -
DeleteTo Editor: ஸார், 'ஷெர்லக் ஹோம்ஸ்' கதைகள் இப்போது கலக்கலாக கலரில் வருகின்றனவே? நமது காமிக்ஸ்களிலும் கொஞ்சம் இடம் கொடுக்கலாமே?
அதேபோல, 'உல்ட்டா' 'ஷெர்லக் ஹோம்ஸ்' (ஹெர்லக் ஷோம்ஸ்) க்கும் கொஞ்சம் வாய்ப்பு வேண்டும் - மினி, ஜூனியர் லயன்கள் மீள்வருகை செய்யும்போது. Gil Jourdan கதைகளின் சித்திரங்களைப் பார்க்கும்போது அவர் ஞாபகம் வருகிறார்....!!!
விஜயன் சார் கொண்டுவரும் வரைக்கும் ஹெர்லக் ஷோம்ஸ் பற்றிய இந்த பதிவை படித்து பாருங்கள் நண்பரே.
Deletehttp://www.kittz.info/2012/09/herlock-sholmes-mini-lion.html
Dear Vijayan Sir,
DeleteI too like this story, this is one of the Hilarious one which really makes you lough again and again.
If you could let us know the original author and how many stories were published it would help us to know what we can expect in future :)
Regards
Suresh
சார், புதிய ஹீரோ ,மறுபதிப்பு ஹீரோ வில் எங்கள் gentleman ரிப் கெர்பி கதைகளை விட்டு விட்டேர்களே...? minilion மறுபதிப்பு அனைத்துமே முதல் புக்ஸ் இல் இருந்து கடைசி புக் வரை மூன்று, மூன்று கதை (or )நான்குகதை யாக கண்டிப்பாக போடவண்டும் சார்.( அவை அனைத்தும் சிறு ,சிறு புக்ஸ் தானே சார்,)
ReplyDelete//மறுபதிப்பு ஹீரோ வில் எங்கள் gentleman ரிப் கெர்பி// - Me too
Deleteme too
Deleteமறுபதிப்புபற்றி எனது சில யோசனைகள்:-
ReplyDeleteமாண்ட்ரக் கதைகள் சுமார்தான்! அவைகளை நாம் ஏன் நமது ஸ்பெஷல் இதழ்களில் வெளிஈடும் கருப்பு வெள்ளை கதைக்கு பதிலாக அவ்வப்போது வெளிட்டால் என்ன??
திகில் சூனியகாரிய கிழவி கதைகளுக்கும் இந்த யோசனை பொருந்துமா என யோசிக்கலாம்!
If we do that we may not required to reprint them separately!
முதலை பட்டாளம்: மீண்டும் முதலை பட்டாளம் புத்தகம் நமது காமிக்-காண்-ல் வாங்கி படித்தேன்! சித்ரம் அருமை, அவைகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. சில சித்ரம் முழு பதக்கத்தை அழங்கரிதன!!! என்னை பொறுத்தவரை சமீபத்தில் வந்த கருப்பு வெள்ளை கதைகளில் மிக ரசித்தது. முதலை பட்டாளம் கதை வண்ணத்தில் வெளிஈட நல்ல சாய்ஸ்! விஜயன் சார் எண்ணம் என்ன என அறிய ஆவல்.
Parani : ப்ருனோ பிரேசில் கதைகளை தற்சமயம் படைப்பாளிகள் digitalize செய்யும் பணியில் இருக்கின்றனர். அது நிறைவானதும், முதலைப்பட்டாளத்தின் (நாம் வெளியிடாத ) புதுக் கதைகளை வண்ணத்தில் கொணர இயலும். 2013 -க்கு அது சாத்தியமே என்று சொல்லியுள்ளனர் ! Fingers crossed !
Deleteப்ரூனோ படை வருகிறதா....? ஆஹா...ஆஹா....
Deleteமறு பதிப்பு
ReplyDelete===========
மறு பதிப்பு ஆர்வம் இந்த ஆண்டு இறுதில் இருக்கும் அளவு அடுத்த ஆண்டு இருக்குமா என்பது சந்தேகம் தான். பழைய விஷயங்கள் எல்லாமே நமக்கு பிடிப்பதில்லை. சிறு வயதில் எனக்கு ஆர்ச்சி, ஸ்பைடர் ரொம்ப பிடிக்கும். உங்களிடம் இருக்கும் ஆங்கில ஆர்ச்சி மற்றும் ஸ்பைடர் வாங்கி வாசித்தால் இப்போது எனக்கு பிடிக்க வில்லை. ஆனால் டெக்ஸ் மட்டும் அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறார்.
மறுபடியும் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது விட்ட இடத்தில இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது மனித மனதின் இயல்பு. அதனால்தான் நாம் எல்லோரும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என்று உங்களை படுத்தி கொண்டிருக்கிறோம் என்று நினைகிறேன்.
XIII
===
XIII வண்ணத்தில் வருவது கஷ்டம் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம்.
மினி லயன்
===========
2014 இல் ஆவது மினி லயன் கொண்டு வர நீங்கள் முயற்சிக்க வேண்டும். கபிஷ் , இன்ஸ்பெக்டர் கருடா போன்றவற்றை மினி லயன் வரும்போது பரிசீலிக்கலாம்.
டைஜெஸ்ட்
===========
சூப்பர். நினைக்கும் போதே அந்த காலத்து தூர் தர்ஷன் இல் எதிரொலி நிகழ்ச்சிக்கு வரும் கடிதத்தில் சிலர் எழுதுவது போல "சர்க்கரை பந்தலில் தேன் மாரி (மழை) பெய்தது போல" இருக்கிறது. டேக்ஸ்சை விட்டுடீங்களே சார். டெக்ஸ் நிச்சயம் வேண்டும்.
நெவெர் பிபோர் ஸ்பெஷல்
==========================
பெட்டே வச்சுடீங்க. சூப்பர் அது பற்றி கவலைபடாமல் இருக்கலாம்.
இனிப்பு கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை இரண்டையும் மிக்ஸ்பண்ணி பரிமாறியதுபோல் உள்ளது உங்கள் பதிவு. எப்படியோ கொழுக்கட்டைகள் கிடைத்த சந்தோஷத்தில் நாங்கள்.......
ReplyDelete//இரவுக் கழுகார் பிப்ரவரி 2013 -ல் பிரச்சனமாகிறார் - ரூபாய் ஐம்பது விலையில் - ஒரு 240 பக்க சாகசத்தோடு ! //
என்னிடம் கால இயந்திரம் மட்டும் இருந்தால் இப்போதே பிப்ரவரி 2013 சென்றுவிடுவேன்
நண்பரே ,,,,,,,,,, காலஎந்திரம் இருந்தால் ,,,,,,,,,, வாருங்கள் ,,,,,,,, நாம் இருவருமே ,,,,,,,,,1990 கால கட்டத்திற்கு ,,,,,,,,போய் விடுவோம் ,,,,,,,,, அப்போதுதான் ,,,,,,,,, பழைய முத்து காமிக்ஸ்களும் ,,,,,,,, பழைய லயன் ,,,,,,மினி லயன் ,,,,, திகில் ,,,,,,,,, தங்கு தடை இன்றி கிடைத்தன ,,,,,,,,,, ,,,,,,,,,,, பொற் காலம் ,,,,,,,,,,,அய்யா ,,,,,,,,,அது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் buddy ,,,,,,,,,,,,,,
Delete//மினி/ஜூனியர் லயன் மறுபதிப்புகள் ஏகோபித்த வரவேற்பைப் பெறுவதோடு இக்கால ஜூனியர்களிடத்தில் காமிக்ஸ் ஆர்வத்தை ஏற்படுத்தவும் உதவும்.//
ReplyDeleteஈரோடு விஜய் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.....வழிமொழிகிறேன்....
என் குழந்தைகளுக்கும் காமிக்ஸ் எனும் இனிய உலகத்தை அறிமுகம் செய்ய நல்ல வழி.......
ஒவ்வொரு முறை பின்னூட்டம் இடும் போதும் 'நான் ரோபோ இல்லை' என்பதை நிரூபிக்க அரும்பாடு பட வேண்டியதா இருக்கு...
ReplyDeletewell said friend . Because of that i have stopped commenting for number of times .
Deletebut i think its the best way to avoid spam viruses...isn't it?
DeleteDear Editor,
ReplyDelete/// இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ??? மே 2013 ! ///
I hope for the complete story.. Please.. Please..
/// இரவுக் கழுகார் பிப்ரவரி 2013 -ல் பிரச்சனமாகிறார் - ரூபாய் ஐம்பது விலையில் - ஒரு 240 பக்க சாகசத்தோடு ! ///
Is it a NEW story or a complete collection of "இரவுக் கழுகு".. a little confusion..
sankaralingam u : ALL NEW TALES ! மறுபதிப்புகள் ; தொகுப்புகள் இத்யாதி எல்லாமே காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மாத்திரமே !!
DeleteNever before
ReplyDeleteithal mun pathivukku
M.O anuppi vitten...
Innum pathivu seyyathavarkal
viraivaka
mun pathivu seiyunkal
nanparkale...
XIII
ReplyDelete****
ஏற்கனவே உங்களிடம் அச்சுக் கோர்க்கப் பட்ட நெகடிவ் ?? இருக்கும். அதை அப்படியே கலர் பிரிண்டரில் அச்சிடவேண்டியது தானே என மிக சுலபமான ஒரு விஷயமாக நினைத்துவிட்டேன்.
மினி/ஜீனியர்
************
இது இன்னும் சில வருடங்களுக்கு சாத்தியமில்ல என்பதனை உங்கள் பதில்கள் உணர்த்துகின்றன. நீங்கள் நஷ்டமடையும் படியான எந்த விஷயத்தை (காமிக்ஸில்) செய்ய சொல்லி வற்புறுத்த எங்களுக்கும் மனமில்லை.
ரீபிரிண்ட்
*********
காமிக்ஸ் க்ளாசிக்ஸில் வருடத்திற்கு ஒரு கலர் புத்தகம் என்பதனை முழு மனதுடன் வரவேற்கிறேன்
- அலிபாபா (3 கதைகள்) - ஒரே புத்தகமாக இருந்தால் அருமை. இந்த இருவரணியை மறந்து விடாதீர்கள் :)
- அங்கிள் ஸ்குரூஜ்
- பழைய கலர் கதைகள் (சிக்&பில், லக்கிலூக்)
- சுஸ்கி & விஸ்கி
- விடுபட்ட அனைத்து கார்ட்டூன்களும்.
//பதுங்குவது பாய்வதற்கே' என்று பஞ்ச் டயலாக் விட்டால் நன்றாகவே இருக்கும்//
ReplyDelete-- நான் ஏற்கனவே டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டேன் சந்தோசம் !!!
// 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் ! //
-- மனிதனின் தேவையினால் தான் புது கண்டுபிடிப்புகள் பிறக்கின்றன முடிந்தால் அப்டி ஒரு
மென்பொருளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன், fingers crossed முயற்சி மட்டுமே எடுக்க
முடியும் முடிவு தெரியாது so lets wait n see.
//செப்பனிட வேண்டிய சாலைகள் ; உருவாக்க வேண்டிய மேம்பாலங்களென - நம் நாட்டு நெடுஞ்சாலைகளைப் போல் டைகர் கதைகளிலும் நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி உள்ளது ! பணியைத் துவக்கியாச்சு..இனி பொறுமையாய் ஒவ்வொன்றாய் முடிக்க வேண்டியது தான் ! //
-- முற்றிலும் உண்மை அது ஒரு இமாலய பிரயத்தனம் பொறுமையாக காத்திருந்து
ஒவொன்றாக படிபோம்.
Lot more to share but very happy with all these news, happy publishing to Vijayan Sir while we are the floating world of happiness with all these books...
Dancing once again...
Shriram..
டின் டின்னையும் அப்படியே கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சார்.அவருடைய வருகையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்.மேலும்,ஆஸ்டெரிக்ஸ் என்ன ஆனார்?என்பதையும் குறிப்பிட்டால் அடியேனுக்கு நிம்மதியாக இருக்கும்.(சாத்தானுக்கு இப்போதைய தேவை நிம்மதி.யாரிடமாவது இருந்தால் அனுப்பிவைக்கவும்.ஹிஹி).
ReplyDelete//வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம் ! //
ReplyDeleteநன்றி சார் .............வாசகர்களை மதிக்கும்...................
// வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் ! அது வரை கனவுகளே நம் தோழர்களாக இருத்தல் அவசியம் - இரத்தப் படலத்தைப் பொருத்த வரையிலாவது ! //
நீங்கள் புது முயற்ச்சிகளில் கவனம் செலுத்துங்கள் சார்,காத்திருப்போமே,நண்பர் விஜய் கூறுவது போல தாய்க்கு அக்கறை இருக்காதா?
//ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும். ஒரு குறைந்தபட்ச printrun ஆவது இல்லாவிடில், விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாதென்பது பத்திரிகை உலக economics ! ஆகையால் ஒவ்வொரு வண்ண இதழுக்கும் தற்சமயம் நம் முதலீடும் அதிகம் ; முடங்கும் தொகையும் அதிகம் !//
//"வண்ணத்தில் மறுபதிப்பு சாத்தியமா?"என்பதே ! வண்ணத்தில் ஒரு இதழைத் தயாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நான் பட்டியலிட எத்தனித்தால், அது ஒரு அழுகாச்சி மெகா சீரியல் போல் ஆகிடும் என்பதால் நான் மழுப்பிக் கொண்டே நடையைக் கட்டிடுவது வழக்கம் ! ஆனால் சமீபமாய் , இந்த "வண்ணம் வேண்டும்" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது ! நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே ! பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது !//
இவளவு கூறியும் தங்களை இரத்த படலம் வண்ணத்தில் கேட்ட என் மடமையை என்ன சொல்வது,மன்னித்து கொள்ளுங்கள்........
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : மன்னிப்புக் கோரிட எவ்வித அவசியமுமில்லையே ! ஆர்வத்தின் வெளிப்பாடுகள் பல விதம் ; உங்களது அதனில் ஒரு விதம் ! அவ்வளவே !
Deleteதவிர,கனவுகளில்லையேல் காலைகளில் சுவாரஸ்யம் இருக்காது ! அதற்காகவேனும் கனவுகள் (அவ்வப்போது) அவசியமே !
தங்களது விற்பனை பிரிவின் வேகம் அபாரம. வங்கி கணக்கில் பணம் செலுத்தி தொலைபேசி வாயிலாக ஆர்டர் conform பண்ணிய மறு நாள்லே புத்தகங்கள் கை இல் கிடைத்தன....நன்றி!!!!
ReplyDeleteRobinson Abraham : உரியவர்களிடம் உங்கள் பாராட்டுக்கள் சேர்ப்பிக்கப்படும் ! Thank you !!
DeleteThe same here.
DeleteI called to your office number and a lady picked. She answered all my questions patiently and helped in buying all the previous stocks.
Great team. My hearty appreciation for her and your team's efforts.
One can become successful only if the team performs. Their efforts are your success. Having the right people at the right place and for that excellent decisions my hearty appreciations.
All the best.
//திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில் !! //
ReplyDeleteplease kindly reprint Dhigil comics as early as possible
டியர் நண்பர்களே!
ReplyDeleteஆசிரியரின் இந்த பதிவிலிருந்து ஒவ்வெரு எழுத்துக்கலையும் பிரித்து அலசிய
நாம் இந்த வரிகளை அவ்வளவாக கண்டுகொள்ள வில்லையே
ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும்.
Its shocking!!!!
இதற்கு எவ்வகையில் நாம் உதவலாம்....??
நமக்கு தெரிந்த புத்தக ஆர்வல நண்பருக்கு இந்த திபாவளிக்கு ஒரு வருட
சந்தாவை அவர் பெயரில் கட்டி பரிசளித்தால் நமது சர்க்குலேசன் உயரும். நமது காமிக்ஸ் குடும்பத்தில் நண்பர்கள் எண்ணிக்கை கூடும்!
விஸ்கி-சுஸ்கி : எந்த ஒரு முயற்சியின் பின்புலத்திலும் இது போல் ஏதாவது இடியாப்பச் சமாச்சாரங்கள் இருந்திடுவது இயல்பே. அவற்றை சமாளித்து, சகஜமாய் நடை போடுவது தானே நித்தமும் நாம் செய்திடும் முயற்சிகள் !
Deleteஉற்சாகமாய், என்றும் இல்லாததொரு உத்வேகத்தோடு நாம் உயரே aim பண்ணிச் செல்லும் இந்த வேளையில் - இது போன்ற உற்சாகத்தடைகள் உங்களுக்கு வேண்டாமே என்று எண்ணியதால் தான் இவற்றை நான் பகிரங்கப்படுத்திடப் பிரியப்படவில்லை ! 'மறுபதிப்புகள் ; வண்ணத்தில் ஸ்பெஷல்கள்' என்று நிறையவே கோரிக்கைகள் தொடர்ச்சியாய் எழுந்திடும் போது, நான் பொத்தாம் பொதுவாய் சமாளித்துக்கொண்டே செல்வது ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாய் நான் கிராக்கி செய்வதாக ஒரு தோற்றத்தை எற்படுத்திடக் கூடுமென்ற பயமாகிப் போய் விட்டது.
கவலை வேண்டாம்...நித்தமும் கூடி வரும் சந்தா எண்ணிக்கைகள் நம்மை நிச்சயம் கரை சேர்க்கும் ! Thanks so much for the concern !!
இதன் முதல் முயற்சியாக WWS புத்தகம் வாங்கி என் அண்ணனின் பிறந்த நாள் பரிசுகளில் ஒன்றாக தரவிருக்கிறேன் :-). சிறு அணிலாக இந்த விஷயம், நம் காமிக்ஸ் பயணத்திற்கு உதவினால் நல்லது.
Deleteமறுபதிப்பு என்பதே ஓய்வு நேரத்தில் சுகமான அசை போடல்தான்...நமது சிங்கத்திற்கு தற்போதைய தேவை பரந்த (காமிக்ஸ்)காட்டில் ஓடி ஓடி இரை தேட உதவும் உறுதியான கால்களே(வாசகர்கள்).. முதலில் நல்ல இரைகளை உண்டு வலுவான பின் வருடம் ஒருமுறை மட்டும் அசை போடலாமே.இன்னும் என்னைப் போன்ற எளிய வாசகர்கள் அறிந்திடாத sci-fic காமிக்ஸ்கள்(மர்ம மனிதன் மார்ட்டின் போல),அட்வென்ச்சர் காமிக்ஸ்கள்(வனரேஞ்சர் ஜோ போல)கிராபிக் நாவல்கள் போல,வால்ட் டிஸ்னியின் காமிக்ஸ்கள், இன்னும் பல அற்புதமான பல காமிக்ஸ் புதையல்கள் மேலை நாடுகளில் உள்ளன.அவற்றை நமக்காகத் தர வேண்டியது நமது எடிட்டரின் தயவில்தான் உள்ளது...இந்த மாதிரி பொன்னான பாதையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நேரத்தில் இன்னும் சில பேர் இ.கை.மாயாவி, வேதாளம்,கபிஷ்,கருடா கொஞ்சம் விட்டா பாட்டி சுட்ட வடை கதையைக் கூட reprint சொல்லுவாங்க போல...நண்பர்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்...old is gold தான்.ஆனால் காலத்திற்கேற்ப update செய்யாவிட்டால் நம் இழப்புகள் நமக்குத் தெரியாமலேயே போகக் கூடும்.
ReplyDeleteDear Editor,
ReplyDeleteFor december currently there is no 100 rupees issue? We need one for sure to complete the year whose last six months would then be full of 100 buck issues. Currently we have SHSS, Thanga Kallarai, and directly looks like Muthu NBS. We need one for december please!!
Comic Lover : December would be the month when the NEVER BEFORE Special gets its final touches ! So this needs to be a time when we do not have too many other things to do !
ReplyDeleteDear Editor,
DeleteThank you. I think we can manage to pass one month without a mega issue in anticipation of a super mega issue.
As for you reply to my query on XIII - thanks again. But since 2008 at Chennai in the usual places I would hunt for Lion Comics, since there were no regular supplies, I had been out of touch for about 4 years. Hence the pre-order and booking for XIII was largely unknown to me.
Now that we are in this online format, I have a suggestion for the benefit of folks like me who are lion comics fans since 1987: Why not consider a PDF version of the XIII Tamil book which can be priced at 50-100 rupees. Those who want can download it from e-bay or your website. This way this mega issue can reach hundreds of others who lost touch in the meanwhile and yet be satisfied.
(As a 'sirukurippu' -> my age is 37 now and I work in Chennai currently and have mailed a couple of times to the lion yahoo account from my official ID recollecting early childhood 'lion comic' days and request of speedy post for Wild West Special - I am a lion comic fan for 25 years and not having XIII collection hurts big time!).
Comic Lover : Online comics is a world that the original creators are still not prepared to move into - at least for the Indian market. Nobody has a license or authorization to publish e-comics at the moment. So any such ventures are out of question. Sorry !
DeleteThanks for reply. I am presently in "eththai thinnaal piththam theliyum (XIII kidaikkum)" state!
Deleteவிஜயன் சாருக்கு,
ReplyDeleteஜூனியர் லயன் காமிக்ஸை பழைய பாக்கெட் சைசில் இப்போதுள்ள காகிதத் தரத்தில் அதிகப பக்கங்களோடு வண்ணத்தில் இப்போதுள்ள சிறுவர்களுக்கு(எங்களைப் போன்ற குழந்தை உள்ளம் கொண்டவர்களையும் சேர்த்துத்தான்...ஹிஹிஹி)ஏற்றவகையில் சுஸ்கி விஸ்கி,அலாவுதீன்,மதியில்லா மந்திரி மேலும் பல குட்டி குட்டி புதிய நகைச்சுவை cartoon strips சில புதிர் போட்டிகள்,வலையில் சில சுவாரஸ்யமான தளங்களின் சுட்டிகள் முடிந்தால் ஒரு கேம்ஸ் சிடியும் சேர்த்து ரூ.50 விலையில் மாதம் ஒருமுறை வந்தால் புதிய இளைய தலைமுறை வாசகர்களை உருவாக்க முடியும்...நான் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் சார்.. பெரிய சோகம் என்னவென்றால் நான் சிறுவனாக இருந்தபோது வந்த இந்திரஜால்,மேத்தா,ராணி,மேகலா ஆகிய காமிக்ஸ்களும் கோகுலம்,பூந்தளிர்,அம்புலிமாமா,ரத்தினபாலா ஆகிய இதழ்களும் அழ.வள்ளியப்பா வாண்டுமாமா கௌசிகன் அணில் அண்ணா ஆகிய ஆசிரியப் பெரியோர்களும் இப்போது இல்லை...
இப்போதைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் குழந்தைகள் உலகம் தன் பொழுதுபோக்கு நேரங்களை டிவியிலும் கம்ப்யூட்டரிலும் அடக்கிவிட்டன...உடல்சார் விளையாட்டுகளோ அறிவுசார் வாசிப்புகளோ இல்லாத நம் குழந்தைகளின் கவனம் இப்போது லேசாக நம் காமிக்ஸ்களின் பக்கம் திரும்பும் இந்த வேளையில் ஜூனியர் லயன் திரும்ப வருவது நம் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவி...குழந்தைகள் உலகம் சிறக்க சிங்கம் வகை செய்யுமா ப்ளீஸ்...
Sorry to correct you. Gokulam and Ambulimama are published now also . Vandumama's another name is Kowsigan and he is still alive.
Deleteஇதைக் கொஞ்சம் பாருங்களேன் நண்பர்களே!
ReplyDeletehttp://www.facebook.com/photo.php?fbid=413096062073425
("சார்.. அம்புலிமாமா, லயன் காமிக்ஸ் எல்லாம் எடுத்தாச்சு. முத்து காமிக்ஸ்ல வர்ற இரும்புக்கை மாயாவி, குஜயகாந்த் மாதிரியே இருக்காரு")
vijayan sir,
ReplyDeleteit is usefulfor us
வணக்கம், மறுபதிப்புகள் வெளியிட நேரம் தங்களிடமில்லையென்பது எங்களுக்கு தெரியும், அது போல் அதிக ஆட்கள் இல்லையென்பதும் தெரியும், ஆனால் தங்களிடம் மறுபதிப்பு கேட்பவர்களில் அதிகம் பேர் பழைய புத்தகங்கள் கிடைக்காதவர்கள், சேர்த்துவைக்க முடியாதவர்கள், சேர்த்துவைத்து தொலைத்தவர்கள் (என்னைப்போல).
ReplyDeleteபெரும்பாலும் இவர்களுக்கு பழைய வெளியீடுகளில் வெளியான கதைகளைத்தான் தேடுகிறார்கள் என நினைக்கிறேன். எனவே மறுபதிப்புகளுக்கென தனியாக சந்தா பெற்று வருடத்திற்கு ஒரு முறை என்பதை கால் வருடத்திற்கு ஒரு முறையென மாற்றலாமே.
அன்புடன்
SHALLUM FERNANDAS
Good Suggestion, getting separate subscription for reprints
DeleteSounds like good idea. இதை நான் வழி மொழிகிறேன்
Deleteஉலகம் மரண வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கும் போது இரும்புக்கையர் பின்னாலும் ஸ்பைடி பின்னாலும் சென்றால் பழைய வாசகர்களை மட்டுமே திருப்திப் படுத்த முடியும்.
ReplyDeleteலார்க்கோ இதழைக்காட்டி என்னுடைய பல நண்பர்களை காமிக்ஸ் வாசிக்க வைத்திருக்கின்றேன், பழைய மாயாவியோ, வேதாளரோ, ஸ்பைடியை வைத்தோ இதைச்செய்ய முடியாது.
பழம்தின்று கொட்டை போட்ட எம் இரசிக சிகாமணிகளை திருப்திப்படுத்த மறுபதிப்புகள் ஓகே. அவை பழையதை இரைமீட்கும் அந்த அரிய இன்பத்தைத்தருகின்றன. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் லயனில் எதிர்காலம் லார்க்கோ போன்ற அட்டகாசமான புதிய படைப்புகளின் அறிமுகத்திலேயே தங்கியிருக்கின்றது.
லயன் மேலும் மேலும் உயர்ந்து பல வாசகர்களையும் நாடுகளையும் சென்றடைய வாழ்த்துக்கள்.
இலங்கையில் எங்கே புத்தகங்கள் வாங்குகிறீர்கள் நண்பரே?
Deleteநியூ லுக் ஸ்பெசலுக்குப் பிறகு இலங்கைகுக் புத்தகங்கள வரவில்லை. வெள்ளவத்தையில் பொலிஸ் ஸ்ரேசன் அருகில் உள்ள ஒரு சிறிய பத்திரிகைக்கடையில் கிடைக்கின்றது.
Deleteஅடுத்தவார இறுதியில் புதிய காமிக்ஸ்கள் இலங்கைக்கு (Double Thrill Special, Wild West Special இரண்டும் ஒன்றாகவே!) வரும் என்று தகவல் கிடைத்தது! நண்பர்களுக்கும் சொல்லிவையுங்கள்!!!
Deleteமறுபதிப்பு பற்றி இதற்கு முன் என்னுடைய பதிவு
Deleteகாமிக்ஸ் வேட்டைகளும் ..சில கசப்புகளும்..!
Link:http://lion-muthucomics.blogspot.in/2012/08/blog-post_25.html#comment-form
இதற்காக நான் வாசக நண்பர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது கொஞ்சம் நஞ்சமில்லை.
தற்போதாவது நண்பர்கள் உணர்ந்துகொண்டால் சரி
******START*************************
டியர் ஆல்,
பழைய காமிக்ஸ் சேகரிக்கும் பழக்கம் முதலில் தோன்றுவது அந்த புத்தகத்தை விற்பனையின் போது தவற விட்டு பிறகு படிக்க முடியாத ஆதங்கத்தில் அதை தேடி அலையும் போது ஏற்படுகிறது. அந்த புத்தகத்தை அடைய நம்மை துhண்டிய அளவு கடந்த ஈர்ப்பு, அந்த புத்தகத்துக்கு வாசகர்கள் மத்தியில் உள்ள வெறித்தனமான தேடல், அந்த புத்தகத்துக்காக பல காலம் காத்திருந்த தவிப்பு, அந்த புத்தகத்தை அடைய நாம் சிந்திய வியர்வை, நாம் செலவிட்ட விலைமதிப்பற்ற காலம், இவை அனைத்தயும் கடந்து அந்த புத்தகத்தை அடையும் போது ஏற்படும் அந்த மகிழ்ச்சி, எதையோ சாதித்துவிட்டோம் என்ற உணர்வு, நம்மை முதலில் அந்த புத்தகத்தை அடைய துhண்டிய படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. அங்கே அந்த புத்தகம் கிடைத்தற்கறிய பொக்கிஸம் ஆகிறது. எனவே இதை போன்ற புத்தகங்களின் மதிப்பு உயர்வது இயற்கையே.
இது ஒருபுறம் இருக்க என் நண்பர் ஒருவர் முத்துவில் வெளிவந்த "நாடோடி ரெமி" யை தேடி அலையாத இடம் இல்லை. கடைசியில் அதை அவர் அடைந்த போது அதற்காக அவர் செலவிட்டிருந்த தொகை பல ஆயிரத்துக்கு மேல். (குறிப்பு அவர் என் ஆர் ஜ கிடையாது! ) அதற்காக அவர் தரும் விளக்கம்- பல இன்னல்கள் துயரங்கள் நிறைந்த அவரது சிறு வயது காலத்தில் அவருக்கு சிரிது மகிழ்ச்சியில் இளைப்பார இடம் கொடுத்த சொர்கம் இந்த குறிப்பிட்ட புத்தகம்.10 வயதில் ரசித்து படித்து பின் தொலைத்த அந்த புத்தகத்தை 45ஆவது வயதில் மீண்டும் அடைந்த போது, அவர் திரும்ப பெற்ற சிறு வயது சிறு மகிழ்சசி, இன்று பல லட்சம் செலவு செய்து பயணிக்கும் அவரின் பி எம் டபிள்யு கார் கொடுப்பதில்லை.
இட்ஸ் கெய்ட் அன்டஸ்டேன்டபுல் அன்ட் நேசுரல் கைஸ்!
நமது ஆசிரியர் சென்னது போல் இது ஒரு யனிவர்சல் பினோமினா! பழைய புத்தகங்களின் மதிப்பு உயருகிறதே என்று ஆதங்கப்படுவதும், கிடைக்காத போது அடுத்தவர்களை சாடுவதும் மிக மிக முட்டாள்தனமானது.
கமான் கைஸ் லேட் அஸ் சோ எ பிட் ஆப் மெசு{ரிட்டி!
பழைய புத்தகங்களை மறுபதிப்பிடுவது என்பது நிச்சயம் இதற்கொரு தீர்வாகாது . மாறhக அந்த புத்தகங்களின் மதிப்பையே சற்று குறைக்கும். இன்றய லார்கே தலைமுறை வாசகர்களை நிச்சயம் கவராது. அந்த புத்தகத்தை பல வருடங்களாக தேடிகொண்டிருக்கும் வாசகர்களின் கைகளில் 10 ரூபாய்க்கு கிடைக்கும் போது (லார்கோ யுகத்தில், லரன்ஸ் டேவிட் கதைகள் வேகம் குறைவாக அபத்தமாக தெரிவதை தவிர்க்க முடியாது)இவ்வளவு தானா இந்த புத்தகம் என்ற எண்ணம் மேலோங்காதா?
மேலும் மறுபதிப்பு வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் ஒரு சிறு கூட்டத்துக்காக நமது பப்ளிசரின் வேல்யுவபில் ரிசோர்சஸ்சை வேஸ்ட் செய்வது எந்த வகையில் நியாயம்? மறுபதிப்புக்காக அவர்கள் செலவிடும் காலத்தை பல நல்ல புதிய கதைகளை நம் தேன் தமிழக்கு கொண்டு வந்தால் நமது பப்ளிசரும் வளருவார், நமக்கும் மாதம் மாதம் திபாவளி கெண்டாட்டம். தயவுசெய்து இந்த உண்மையை உணருங்கள் நண்பர்களே!
நமது வட்டத்துக்கு வெளியே பல அருமையான பொக்கிஸங்கள் தமிழக்கத்துக்காக காத்துள்ளன. தினம் ஒரு புத்தகம் என்று தமிழக்கம் செய்தாலும் அவற்றை படிக்க நமக்கு காலம் பத்தாது. (ஸ்டீபன் கிங் ன் ஸ்டேன்ட், இயன் கால்பரின் ஆர்திமிஸ் பவ்ல், தி வாக்கிங் டெட் இவை இப்போது வந்து கொண்டிருக்கும் அற்புத காமிக்ஸ படைப்புகளில் சில ).
மேலும் எத்தனை பதிப்பகங்கள் 20 ஆண்டுகளுக்கு முன் தாம் வெளியிட்டவைகளையே திரும்ப திரும்ப வெளியிடுகின்றன?
ஆகவே மறுபதிப்பு வேண்டும் என்று தவறhன ஆழத்தம் கொடுத்து நமது காமிக்ஸின் வெற்றிப்பாதை தடம் மாற்றிவிட வேண்டாமே! சிந்திப்பிர் நண்பர்களே!
***********************END**************
அத்தனையும் முத்தான வார்த்தைகள். மறு பதிப்பு மறு பதிப்பு என்று எமது வட்டத்தை மீள சுருக்கிகொள்ளக் கூடாது என்பதே அடியேனின் விரும்பமும் கூட.
Delete// தாமதமாகினும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களோடு எனது வணக்கங்களும் உரித்தாகுக ! //
ReplyDeleteமிக்க நன்றி சார்
தங்களுக்கும் உரித்தாகுக :))
.
//திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில் !! //
ReplyDeleteஇதே போல் தயவு செய்து ஸ்பெஷல் வெளியீடுகளில் காமிக்ஸ் classics இதழ்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
ஹ்ம்ம்மம்ம்ம்ம் வழக்கம் போல நான் மிக தாமதமாக வந்திருக்கிறேன் இருந்தாலும்
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா, புனித சாத்தான் , ஈரோடு விஜய் , பொடியன் அவர்களைப்போல எண்ணங்களை விரிவாக தெளிவாக சொல்ல முடியாவிட்டாலும் எனது எண்ணங்களை தெரிவிக்கிறேன்
// மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ? லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ ? அந்தத் தேடலில் நமது creative energy செலவாகினால் எனக்கு சந்தோஷமே ! //
எனது முதல் சாய்ஸ்
Wayne Sheldon
மேலும் திகிலில் வந்த
இரும்புக்கை ஏஜெண்ட் நெல்சன்
சாகச வீரர் ரோஜர்
CID மார்ஷல்
லயனில் வந்த
இரட்டை வேட்டையர்கள்
முத்துவில் வந்த
செக்ஸ்டன் பிளக்
ஆகியவர்களின் வெளிவராத கதைகளை வெளியிடலாமே :))
.
திருக்குறள் இரண்டடி எனினும் அது தாழ்ந்து போய் விட்டதா?உங்களது எண்ணங்கள் மகத்தானவைதானே நண்பரே ,சிறிய எண்ணங்களே பெரிய ஏணி படிகள் ,அனைவரையும் உற்ச்சாக படுத்த வல்லவை ..........
Deleteமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
Deleteஅகநக நட்பது நட்பு.
உண்மைதானே ,இதோ இவரும் வந்து விட்டார்,நம்முடனேதான் இருக்கிறார் எனும் உற்ச்சாகத்தையும் ,நானும் இருக்கிறேன் எனும் படியான பதிவும் கூட உற்ச்சாகத்தைதானே தரும்,யாரென்றே தெரியாமல் ,எந்த எதிர்பார்ப்பும் இன்றி தொடரும் நட்புதானே இது,நம்மை நாமே உற்ச்சாக படுத்திக்கொள்ள அறி(ரி)ய வாய்ப்பு ..................
இரும்புக்கை ஏஜெண்ட் நெல்சன் : It was a wonderful story . Excellent art work with action packed one . I reckon only story of this hero was published
Deleteஆசிரியர் மேல் பாசம் கொண்ட நண்பர்கள்,அன்பினால் உரிமை எடுக்கும் நண்பர்கள் ,நண்பர்கள் மேல் ப்ரியம் வெகுவாக கொண்ட ஆசிரியர் ,என நமது காமிக்ஸ் குடும்பம் அற்புதமாக,குதூகலமாக கொண்டிருக்கிறது,புதிய நண்பர்கள் அதிகம் வந்துள்ளனர்,பழைய நண்பர்கள் வேலை பளு போலும்.நிதம்தோறும் 1000 முறை சராசரியாக க்ளிக்கிடபடுகிறது ,நிறைய பேர் பதிவிடாமல் படித்து மட்டுமே செல்கிறார்கள் ,கலந்துரையாட உங்கள் எண்ணங்களையும் நாங்கள் அறிந்து கொள்ள ,தமிழ் பதிவிட http://www.google.com/transliterate/tamil இதனை உபயோகிக்கவும் ,ஆர்வமிருந்தும் பதிவிட எதனை உபயோகிக்க என தேடி கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்காக .........................
ReplyDelete**தமிழ் பதிவிட http://www.google.com/transliterate/tamil இதனை உபயோகிக்கவும் **
Deleteஅருமை நண்பரே , என்னை போன்று புதியதாக பதிவெழுதும் நபர்களுக்கு உதவியாக உள்ளது.
by thilagar
இந்த பாராட்டுக்கு உரியவர் நமது மூத்த பதிவர் கிங் விஸ்வாதான் ,நண்பரே ,இது அவருக்கே சேரும் ..நன்றி தோழர் கிங் விஸ்வாவிற்கு .......
Deleteதோழர் கிங் விஷ்வாவிற்கு ஜெ !
Deleteசரியான தருணத்தில், தேவையானதொரு வேண்டுகோள் விடுத்திருக்கறீர்கள் ஸடீல் க்ளா!
ReplyDeleteநாமெல்லாம் ரத்தமும், சதையும் (கொஞ்சூண்டு தொப்பையும்) கொண்ட மனிதர்கள்தான் என்பதை அடிக்கடி நிரூபிக்க வைக்கும் அந்த 'CAPTCHA' (word verification) இல்லாதிருந்தால் இன்னும் நிறைய பின்னூட்டங்கள் இவ்வலைத்தளத்திற்கு வந்து சேரும்.
ஏதாவது செய்திடுவாரா நம் எடிட்டர்?
விஜயன் சார். வணக்கம். உங்கள் அடுத்த பதிவு. காமிக்ஸ் கிளாசிக்ஸ் வெளீயீடுகள் பற்றியதாக இருந்தால் ஐ ஜாலி. பெரும்பாலான வாசகர்கள் லக்கிலூக்கிற்காக ஏங்குவதாக எனக்கு படுகிறது. ஆகவே காமிக்ஸ் கிளாசிக்ஸ்இல் முன்பு நன்கு விற்பனை ஆன கதையை வண்ணத்தில் மறு பதிப்பு செய்வது ஓரளவு எல்லா வாசகர்களையும் கவரும் என நினைக்கிறேன். தவறான ஐடியா என்றால் மன்னிக்கவும்.
ReplyDeleteI vaguely remember someone else also commenting here saying that "New look special" had too much of movie dialogues. So you are not the only one complaining about it. So I am sure editor will look into this.
ReplyDeleteநண்பர்களே. ஆன்ட்ராய்ட் போன் மூலம் தமிழில் பதிவிட தமிழ் விசை என்ற இலவச சாப்ட்வேர் அருமையாக உள்ளது.
ReplyDeletepanini keyboard நன்றாக இருக்கும்....:)
Deleteஉண்மை தான் நண்பரே. ஆனால் என்னை போன்று சில சமயம் மொபைலிலும் சில சமயம் கம்யூட்டரிலும் டைப் செய்யும் நண்பர்களுக்கு தமிழ் விசை சாப்ட்வேர் எளிதாக இருக்கும். தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள தமிழ்99 முறை இந்த தமிழ்விசை சாப்ட்வேரில் உள்ளது.இது ஆங்கில கீ போர்ட் போன்றே ஒரு எழுத்துக்கு ஒரு கீ இருக்கும். qwerty. முயற்சித்து தான் பாருங்களேன். அன்புடன். :-))
DeleteiOS apple phone moolam tamilil pathividuvathu eppadi pls tel me friends
ReplyDeleteஇது உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்;
Deleteஇங்கே பாருங்கள் : http://itunes.apple.com/us/app/type-tamil/id453450583?mt=8
ஆசிரியர் அவர்கட்கு,
ReplyDeleteஇலங்கையிலிருந்து உங்கள் வெளியீடுகளை பெறுவது எப்படி? முறையான ஒரு முகவர் இல்லாத காரணத்தால் லயன் மற்றும் முத்துவின் பல வெளியீடுகளை நாம் இழந்திருக்கிறோம்
தற்போது நமது வாசகர் அமைப்பு ஒன்று புத்தகங்களை வெளியிட முயற்சி எடுப்பதால் ஓரளவுக்கு புத்தகங்களை பெற முடிக்கிறது,ஆனால் படு தாமதமாக..... இன்னும் WWS மற்றும் DTS ஆகியவை இலங்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.....
எனவே ஆசிரியருக்கு அன்போடு வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் என்னைபோன்ற அயல் நாட்டு வாசகர்கள் புத்தகங்களை பெற்று கொள்ளகூடிய வழிமுறைகளையும் பணம் அனுப்பிடும் முறைகளையும் தெளிவாக தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும்
தாங்கள் தற்போது நேரடி விற்பனை முறையை பின்பற்றுவதால் மேற்படி எனது கோரிக்கைக்கு பதிலளிப்பது என்னைபோன்ற அயல் நாடு வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும், இலங்கையில் லயன் மற்றும் முத்துவுக்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்
உண்மையில் இங்கே முந்தைய வெளியீடுகளை பற்றி கொமென்ட்ஸ் வாசிப்பது மிகவும் கவலையாக உள்ளது, அந்த இதழ்களை இன்னும் கண்ணால் கூட பார்க்க முடியவில்லையே என்று எண்ணும் போது..... எனவே சற்று நேரம் ஒதுக்கி பதிலளிக்க முடியுமாக இருந்தால் நன்றியுடையவனாவேன்
ஆசிரியர் இதற்கு பல மாதங்களுக்கு முன்பே பதிலளித்திருக்கிறார். இந்த இணைப்பில் பாருங்கள்.
Deletehttp://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html
ஆனால், இந்தத் தகவல்கள் பல மாதங்களுக்கு முந்தையவை என்பதால் அப்டேட் செய்யப்படவேண்டும். ஏனென்றால், இப்போது பெரும்பாலும் ரூபா 100 விலையிலேயே புத்தகங்கள் வருகின்றன. ஆனால், இந்தப் பதிலை ஆசிரியர் பதியும்போது ரூபா 100 இதழ்கள் ஸ்பெஷல் இதழ்களாக மட்டுமே வரும் நிலை இருந்தது. அத்தோடு இன்னொருவிடயம், இலங்கையிலிருந்து பணம் அனுப்புவதற்கு வங்கி, மணி ஆர்டர், செக் முறைகள் சாத்தியப்படாது என்று விசாரித்தறிந்தபோது தெரிந்தது. அத்தோடு, இந்தியா - இலங்கை போஸ்டல், கூரியர் சார்ஜஸ்களும் மிக அதிகமாகவே உள்ளன. விசாரித்துப்பாருங்கள்.
புத்தகங்கள் வெளியாகி சில மாதங்களுக்குப் பின்னரே இங்கே வருகின்றன. சிலவேளைகளில் பேசாம டிக்கட்டைப் போட்டு மெட்ராஸ் போயி புத்தகத்தை வாங்கிட்டு வந்தால் என்ன என்று தோன்றும். சந்தா செலுத்த ஆசிரியர் Paypal, Credit Card போன்ற முறைகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும். செக், ட்ராப்ட் எடுத்து அனுப்ப தனிப்பட்ட நபர்களுக்கு அனுமதி இல்லை. அன்னிய செலாவணி தொலைந்து போயிடுமாம். (இப்ப மட்டும் ஏதோ தொலயாமதானே இருக்காம் இங்க) ;)
Deleteyes it would be better if we can pay through credit card..... we don't need to worry about echange fluctuations.....
Deletenice saying sir
ReplyDeleteடைகர், டெக்ஸ் கதைகளுக்கு மறுபதிப்பு வேண்டுதல் சரி! மறுபதிப்பில் எனக்குப் பிடித்த ஹீரோக்கள் வரிசையில் நிச்சயம் புஷ் சாயர், ரிப் கிர்பி, மாண்ட்ரேக் போன்றோர் இடம் பெறுகிறார்கள்! புஷ் சாயர் கதைகள் மிகக் குறைவாகவே வெளி வந்து இருக்கின்றன! கடைக்கண் பார்க்கலாமே! வேதாளர் தொடர்களிலும் சில வித்தியாசமான கதைகள் உண்டே! மாடஸ்டியின் 'கழுகு மலைக் கோட்டை', பிரின்சின் 'பனி மண்டலக் கோட்டை,' ஜானியின் 'தலைமுறை எதிரி', 'பிசாசுக் குரங்கு'......... இன்னும் நிறைய என் லிஸ்டில் உள்ளன! ஹ்ம்ம் ..பார்க்கலாம்!
ReplyDeleteஅதே சமயம் நண்பர்கள் பலரும் லேட்டஸ்ட் ஆகவந்த மெகா ஸ்பெஷல் "மின்னும் மரணம் "மறுபதிப்பு கோர காரணம் புரியவில்லை. tiger இன் சூப்பர் ஸ்டோரி அது என்பதில் மாற்று கருத்துஇல்லை.அப்படிப்பட்ட மெகா ஸ்பெஷல் காக ஆசிரியர் உழைக்கும் நேரம் ஒரு புது tiger காக உழைத்தால் நமக்கு முழுநீள,முழுவண்ண tiger சாகசம் புதியதாக கிடைக்குமே.மறுபதிப்பு என்பது பழைய வாசகர்கள் இடம் அதிகம் இல்லாத ,புது வாசகர்கள் படிக்காத கதையாக இருந்தால் நலம் .நமது மினி lion ,திகில் முழுநீள கதை ,lion இல் முதல் 100 குள் ,முத்து முதல் 200 குள் இருந்தால் அனைவருமே பயன் பெறுவர் .இதை நண்பர் steelclaw ,நண்பர் jonsimen (சிங்கமா ,சிறுத்தை யா )மற்றும் பலரும் ஒத்து கொள்வர் என நம்புகிறேன் .இத்தனை காரணகளை காட்டியும் "மி.மரணம்" மறுபதிப்பு ஆக வந்தால் ......................................
ReplyDeleteநான் ஒரு பிரதி மட்டுமே வாங்கி கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.
ReplyDeleteDear Editor
ReplyDeleteHave been trying to reach you from the US - was on a two week trip year - during last weekend (16th) and today. The mobile says "switched off". So I dialed office and learnt you are out of station. An update on the web would be good so that we can try at different times. Will try to catch you on 23rd Sunday.
Comic Lover
மெல்லத் தமிழ் இனி வாழும். முதல் தமிழ் பதிவு. இனி நம் செல்லத் தமிழினில் பதிவுகள் வரும். - காமிக் லவர்
ReplyDeleteஇரு வார பணி நிமித்தம் அமேரிக்கா வந்தேன். வரும் வழியில் Frankfurt விமான நிலையத்தில் Wild West Special மற்றும் என் பெயர் லார்கோ புத்தகங்களை படித்துக்கொண்டு அமர்ந்திருக்கையில் ஒரு பிரெஞ்சு காமிக் அபிமானி சற்று தொலைவில் இருந்து வந்து நம் புத்தகங்களை பார்த்து 'wow what language? Great quality of print' என்று சொன்ன அந்த வார்த்தைகள் நமது லயன் - முத்து காமிக்ஸ் வெற்றிக்கு ஒரு சிறிய சான்று. All credits to the editor for daring to venture into new format.இதைச்சொல்ல போன் செய்திடலாமென்றால் தலைவர் எஸ்கேப் - இரு வாரங்களாய்.
ReplyDeleteஎல்லா புகழும் தமிழுக்கே
Deletevijayan sir , உங்கள் தரப்பு நியாயங்களை ,அழகாக சொல்லி இருகிறீர்கள் . நன்று . நீங்கள் என்னதான் சொன்னாலும் இரத்தபடலம் கலரில் கேட்பதை நம் வாசகர்கள் (என்னையும் சேர்த்துதான் ) விடபோவது இல்லை .
ReplyDeleteஇரத்தபடலம் கருப்பு வெள்ளையில் ,வருவதற்கே முன்பதிவு என்ற பெயரில் 3 வருடம் காத்து கிடந்தோம் . கலரில் வருவதற்கு 5 வருடம் ஆனாலும் நாங்கள் காத்து கிடப்போம் , நீங்கள் கனவு காண சொல்லி இருக்கீங்க , அப்துல்கலாம் சொன்ன மாதிரி ,நாங்கள் கனவு காண்கின்றோம் , கனவு ஒரு நாள் நனவு ஆகும் என்ற நம்பிக்கையில் .
மறுபதிப்பு வருடம் ஒரு முறை வண்ணத்தில் என்று சொல்லி இருக்கீங்க ,நன்று , அப்படியே கருப்பு வெள்ளையிலும், ஒருமுறை publish செய்தால்,நன்றாக இருக்கும் .
மாடஸ்டியின் 'கழுகு மலைக் கோட்டை', பிரின்சின் 'பனி மண்டலக் கோட்டை,' ஜானியின் 'தலைமுறைஎதிரி', போன்ற நல்ல கதைகளை இணைத்து கருப்பு வெள்ளையில் , காமிக்ஸ் classic ஆக வெளியிட்டால் ஆகா, சூப்பர் .
tiger digest ,prince digest ,tex digest ,வரும் என்று positve ஆன,பதில் முதல்முறை சொல்லி இருக்கீர்கள் , கனவு காண தொடங்கி இருக்கிறோம் , நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் .
சுந்தர்.. ஒரு வேளை கலரில் XIII வெளியிட நினைத்தால், இன்றைய விலையில் ரூபாய் 1200 முதல் 1400 ஆகும் என்று நினைக்கிறேன்.
Deleteதற்போது வெளிவந்த W.W.Special போன்ற புத்தகங்கள் கூட 40 சதவிகிதம் உடனடியாக விற்பனையாகவதில்லை என்ற நிலை இருப்பதால், ரூ 1000 விலையில் புத்தகம் என்ற கனவு மெய்ப்பட ...ம்ம்ம் இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.
ரூ 400 வெளிவரும் முத்து நெவர் பிஃபோர் ஸ்பெஷல் முன் பதிவு கூட 170+ என்ற நிலையே இருக்கிறது :(
தங்களுடைய பதிலுக்கு நன்றி தோழரே ," நெவெர் before " கண்டிப்பாக ஹிட் ஆகும் , இன்னும் முன்பதிவு செய்யாத தோழர்கள் அதிகம் , என்னையும் சேர்த்து , கடைசி நேரத்தில் முன் பதிவு செய்துகொள்ளலாம் என்ற lazyness தான் காரணம்.
Delete5 வருடங்களுக்கு முன்பு கூட நிறைய வீட்டில் landline connection இருந்தது , landline பில் 2 month க்கு ஒருமுறை 15 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் , நம்ம ஆளுங்க 14 ம் தேதி வரை bsnl ஆபீஸ் போக மாட்டாங்க, 15 ம் தேதி bsnl ஆபீஸ் ரெண்டுபடும் , அத்தனை பேரும் ஒட்டுகா பில் கட்ட வந்து இருபாங்க,
அந்தமாதிரி , நம் விஜயன் sir ,ம் நவம்பர் 15 என்று deadline பிக்ஸ் செய்து இருக்கிறார் , நம் வாசகர்கள் கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார்கள் ,
ஒன்னரை வருடம் முன்பு கூட சிவகாசி சென்ற என் நண்பர் , இரத்த படலம் ஒரு ரூம் full ஆ குமித்து வைத்து உள்ளது , எப்படித்தான் sales செய்ய போறாங்களோ என்று ,என்னிடம் மலைத்தார், இன்று அந்த புத்தகம் demond ஆகி விட்டது . நம்பிக்கை தான் வாழ்க்கை, நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும் என்று இல்லை ,
ரத்த படலம் கலர் ல் வரும் என்று நம்புவோம் , வரும் .
இது சரியே. இன்னமும் ஆர்டர் செய்யாதவர்களில் அடியேனும் ஒருவன்.
Deleteஆனால் October முதல் வாரம் சம்பளம் வந்தவுடன் more than one copy ஆர்டர் நிச்சயம். Editor சொல்லிய new year gift idea மண்டையில் ஓடிக்கொண்டுள்ளது. சில நண்பர்களையாவது comics addict ஆக்காமல் விடப்போவதில்லை.
enna டாக்டர் சார்,, நான் சொன்ன கதைகளையே நீங்களும் சொல்லி இருக்கீங்க! ஒரே ரசனை...!? :-)
Deleteஎடிட்டர் அவர்களே, XIII மறுபதிப்பு இப்போதைக்கு இல்லை என்றாகியதால் இங்கு அமெரிக்காவில் 13 பாகங்கள் ஆங்கிலத்தில் ஆர்டர் செய்திருக்கின்றேன். இன்னும் இரண்டு நாட்களில் கைக்கு வந்திடும். எனினும் தமிழினில் படிக்க முடியவில்லையே என்ற குறை தொடரும் - மறு அச்சு ஏறிடும் வரை. 14 முதல் 18 வரையிலான பாகங்கள் இனிதான் ஆங்கிலப் பதிப்புக்கள் அமெரிக்கன் ப்ரிண்டினில் வரவிருக்கின்றன. இப்போது ப்ரீ- ஆர்டர் செய்கின்றார்கள். An expensive way to quench my thirst temporarily. எனினும், தமிழ் பாதிப்பினால் inspire ஆகி ஆங்கில பதிப்பு ஆர்டர் செய்யப்பட்ட முதல் காமிக் வரிசை XIII ஆக தான் இருந்திடும் என நினைக்கின்றேன், லயன் காமிக்ஸ் இப்படியும் inspire செய்கின்றது.
ReplyDeleteComic Lover:
DeleteWell, Blueberry (Captain Tiger in Tamil) too inspired most of the fans.
I bought some great quality books of Blueberry from www. graphittidesigns .com.
Since you are in USA, give a try if you like Blueberry.
MOEBIUS 4: BLUEBERRY and MOEBIUS 5: BLUEBERRY - covers the entire Minnum Maranam Series.
MOEBIUS 8: BLUEBERRY covers the whole "Irumbukkai Eththan" series.
Regards,
Mahesh
Dear Comic Lover,
DeleteXIII ய்
ஆங்கிலத்தில் வாங்கிட வழிமுறைகள் கூறினால் நாங்களும் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்
@ Thilagar,
DeletePlease see the link below where you can order XIII in english
http://www.landmarkonthenet.com/books/search/?q=XIII+comics
Thanks :)
இன்னும் மலிவு விலையில் இங்கே
Deletehttp://www.indiaplaza.com/searchproducts.aspx?sn=all&q=xiii%20cinebook&dn=books
நண்பர்களே,உங்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் போரடித்தால் மட்டும் கீழே உள்ள முகவரிக்கு வரவும். BARANIWITHCOMICS .blogspot .com .
ReplyDeleteஆசிரியர் அவர்களே!
ReplyDeleteபல கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டீர்கள், எனக்கு வெகுநாட்களாக உங்களிடம் கேட்க வேண்டும் என்ற கேள்வி இங்கே இடம் பெறவில்லை. வேறு யாரும் கேட்டார்களா என்றும் எனக்கு தெரியாது.
இவ்வளவு காமிக்ஸ் கதைகளை உள்வாங்கியுள்ள நீங்கள், ஒரு காமிக்ஸ் கதையை நீங்களே உருவாக்கலாமே. இந்த எண்ணமே உங்களுக்கு உருவாகவில்லையா?
எங்களுக்கும் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ கிடைத்த மாதிரி இருக்கும். உங்கள் ஆஸ்தான ஓவியர்களுக்கும் நல்ல திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் அமையும்.
ஏன் இந்த விஷபரிஷை என்கிறீர்களா? ஒரு கதை வெளியிடுங்கள் “Judgment” செய்ய நாங்கள் இருக்கிறோம்.
நாங்க ரெடி! நீங்க ரெடியா!!
Indeed he has created some filler pages in our comics along with his artist . The name is some thing like Junior & Senior [Not sure abt the name]
Deleteஆமாம். ஓவியர் பெயர்: சிகாமணி
Deleteஇங்கு மீண்டும் ரத்தபடலம் வேண்டும் என்பது போல குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.அதில் மொழி பெயர்ப்பு பிரசினைகலூடே ,பெருமளவு பணமும் முடங்க வாய்ப்புள்ளது என ஆசிரியர் கூறினாலும் ,எத்தனை பேர் ஆதரவு குரல் எழுப்புகிறோம்,மறுக்கிறோம்,என இங்கு 291 நண்பர்களும் தங்களது கருத்துக்களை பதியலாமே.கள்ள ஓட்டுக்கள் இதில் விழாதல்லவா .இப்போது வேண்டாம் ,ஆசிரியர் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணத்தை தூண்ட இது உதவலாம் நண்பர்களே,
ReplyDeleteவேண்டும்,வேண்டாம் ................yes or no ...................என்று ஒரு வார்த்தை மட்டும் பதியுங்கள் நண்பர்களே (வேலை பளு அதிகம் உள்ள நண்பர்கள் என்றாலும் முடியுமே),இதன் கீழே,வேண்டாம் என்றாலும் காரணம் கூட தேவை இல்லை வேண்டாம் என்று கூறுங்களேன்,தயவு செய்து ஒருவர் விடாமல் பதிலளித்தால் ...........................
வேண்டும்
Delete(எனக்கு இரண்டு copyகள்) வேண்டும்
Delete(5 copies) வேண்டும்
Deleteஎனக்கு ஒன்று நண்பரே
Deleteவேண்டும்்
Deleteவேண்டும் (I need two)
Deleteமுழுவண்ணத்தில் 5 வருடங்கள் கழித்து வந்தாலும் இப்போதே அதற்கு முன் பதிவு செய்ய தயார்
Deleteமறுபதிப்பென்பது நமக்கு ஒரு தேவையற்ற காலவிரையம்!!
Deleteமறுபதிப்பென்பது நமக்கு ஒரு தேவையற்ற காலவிரையம்!!
மறுபதிப்பென்பது நமக்கு ஒரு தேவையற்ற காலவிரையம்!!
ஆனால் இரத்தபடலம் IS SOMETHING VERY VERY VERY VERY VERY VERY SPECIAL!!
அப்படி ஒரு மறுபதிப்பு செய்ய ஆசிரியர் முடிவு செய்தால் நிச்சயம் இரண்டு புத்தகங்களுக்கு முன்பதிவு செய்ய தயார்!!!
முழு வண்ணம் என்றால் எனக்கு ஒன்று வேண்டும்.
Deleteஆசிரியர் கூறும் 1500 பெற சற்று காலம் ஆகும்.
ஆனால் எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும் அல்லவா.
தொடகியதர்க்கு நண்பர்க்கு எனது வாழ்த்துக்கள்.
yes
Deleteவண்ணத்தில் படிப்பதென்பது ஒரு சுகமான அனுபவம்
Deleteஆதலால் என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு நண்பரே :))
.
चाहिए चाहिए
Deleteஇலங்கையிலும் பல நண்பர்களுக்கு XIII மெகா கலெக்ஷன் கிடைத்திருக்கவில்லை. அவர்களுக்கு கலரில் வந்தால் கொண்டாட்டம்தான்.
Deleteவேண்டும் :-)
Deleteநண்பர் ஸ்டீல் கிளா அவர்களே, ரத்தினச்சுருக்கமாக கருத்து கேட்டு விட்டீர்கள்! எல்லாம் சரி, அது என்ன 291 நண்பர்கள்? ;-)
@ Prasanna : 291 is the total number of members who have joined this blog .
DeletePersonally i am against this reprint of this XIII story . Since it came recently and there of lot of other books waiting for reprints .But still i will buy this book ,just to see how it will look in color
No
Deleteகலர்ல் ரத்த படலம் வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 1000 rs ஆகும் . எத்தனை பேர் வாங்க முன்வருவார்கள் ?, 1000 copy ரத்தபடலம் பிரிண்ட் செய்தாலே 10 லட்சம் வரை செலவு ஆகும் . 1000 copy ல் உடனே 300 copy sales ஆனாலும் , மீதி 700 copy விற்பதற்கு 3 வருடங்கள் பிடிகிறது என்றால் அந்த 3 வருடங்களுக்கு , வட்டி கணக்கு போட்டு பாருங்கள் ,தலை சுற்றும்
Deleteரத்தபடலம் கலரில் போட்டால் ,தோரயமாக என்ன செலவு ஆகும் என்று நம் விஜயன் சார் யை கேட்போம் .காமிக்ஸ் ல் ஆர்வம் உள்ள 50 பேர் ஒன்று சேர்ந்து ,ஆளுக்கு 20 copy ஆர்டர் பிடிப்போம் , எப்படியும் நமக்கே 2 copy தேவைப்படும் .மீதி 18 copy ஆர்டர் பிடிக்க 1 வருடம் கூட கால அவகாசம் எடுத்து கொள்வோம் . இது ஒன்றும் சிரமமான வேலை இல்லையே ,
இதை விட்டு விட்டு , நம்முடைய ஆசைக்காக விஜயன் சார் யை மட்டும் , நஷ்டத்தை ஏற்று கொள்ள வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் ?
சும்மா சின்ன பசங்க மாதிரி , ரத்த படலம் ,வேண்டும் மற்றும் வேண்டாம் , என்று ப்ளாக் ல் எழுதுவதால் மட்டும் ரத்த படலம் மீண்டு(ம்), வர போவதில்லை , active ஆக step எடுப்போம் ,
எப்படியும் 10 பேர் ரத்த படலம் வேண்டும் என்று ,ப்ளாக் ல் எழுதினால் ,4 பேர் வேண்டாம் என்று வீம்புக்காக எழுதுவார்கள் , எதற்கு வம்பு ,
நாம் 50 பேர் ஒன்று இணைந்து ,ஆளுக்கு 20 copy ஆர்டர் பிடித்து ,1000 copy கான பணத்தை முன்கூ ட்டியே தந்தால், நம் எடிட்டர் வேண்டாம் என்றா சொல்ல போகிறார் , so யோசிங்கள் தோழர்களே .
டாக்டர் சுந்தரின் பின்னூட்டத்தை படித்தபிறகு இப்படியொரு யோசனை தோன்றியது...
Deleteஒருவேளை, இரத்தப்படலம் மறுபதிப்புப் பற்றி எடிட்டரே பின்வருமாறு அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...
* இரத்தப்படலம் - மறுபதிப்பு கலரில்...
* ரூபாய் 1000 விலையில்...
*முன்பதிவு முறையில் மட்டும்...
* முன்பதிவிற்கான காலம் சுமார் 1 வருடம்...
* இந்த ஓருவருட காலத்தில் குறைந்தபட்சம் 1000 பிரதிகளாவது முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்...
* 1000 பிரதிகள் முன்பதிவு என்ற இலக்கை எட்டிய பிறகு மட்டுமே மறுபதிப்பிற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்படும்...
* மறுபதிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், எந்த குறிப்பிட்ட காலவரையறைக்குள்ளும் அடங்காமல் பணிகள் நிதானமாகவே மேற்கொள்ளப்படும்...
* ஒருவேளை, குறைந்தபட்சம் 1000 பிரதிகள் இலக்கு எட்டப்படவில்லை என்றாலோ அல்லது வேறு எந்த தொழில்நுட்ப/ சட்ட சிக்கல் ஏற்பட்டாலோ நிபந்தனையின்றி இரத்தப்படலம் மறுபதிப்பு முயற்சி கைவிடப்படும். இதில் ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
ஏற்கெனவே செலுத்தப்பட்ட முன்பதிவுத் தொகையானது சந்தா கணக்கில் இருப்பாக வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் முன்பதிவுத்தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
* வைப்புத் தொகைக்கு கண்டிப்பாக வட்டி வழங்கப்பட மாட்டாது... :-)
நண்பர்களே, அதீத ஆசையும், கற்பனையுமே நீங்கள் கண்ட மேற்கூரிய வரிகளே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
இந்தப் பின்னூட்டம் நம் எடிட்டரின் கண்களில்பட்டு, அவருக்கு சிறு சஞ்சலமாவது ஏற்படுமானால், இரத்தப்படலம் என்ற காமிக்ஸ் காவியத்தை வண்ணத்தில் கண்டிட கனவுகளுடன் துடித்திடும் நூற்றுக் கணக்கான இதயங்களின் உற்சாகக் கொண்டாட்டத்தில் நானும் இருந்திடுவேன்.
எதிர்பார்ப்புகளுடன்,
ஈரோடு விஜய்
இந்த வாரம் சென்னை திரும்புகிறேன். என் hand luggage பெட்டியில் XIII English 13 வால்யூம்கள். வண்ணம் அசத்துகின்றது. ஆம். 1500 ரூபாய்கள் தமிழ் வண்ண இதழுக்கு நிச்சயம் கொடுக்கலாம். Just indescribable folks!
Deleteமேலே நண்பர்கள் சுந்தர் ,விஜய் கூறுவதை ஏற்று கொள்ளலாம்,கண்டிப்பாக எனக்கு இரண்டு பிரதிகள் வேண்டும்.மேலும் பலர் இரண்டுக்கு மேலே வாங்க தயாராக உள்ளார்கள்........இது வெறும் வாய் வார்த்தையாக இருந்து விடக்கூடாது.அதற்க்கு ஒரே வழி முன் பதிவே,முன் பதிவு தொகைகளை உடனடியாக அனுப்ப வேண்டுமென்பதே ........இப்போது நமது ஆசிரியர் பெரியதொரு முயற்ச்சியில் ஈடு பட்டுள்ளார்,அதன் முன் பதிவு வேகம் என்னதான் அதிகரித்தாலும் மிக பலவீனமே...இப்போது கடைகளில் கிடையாது எனும் போது கூட முன்பதிவின் வேகம் அதிகரிக்கவில்லை ......காரணம் பின்னால் பார்த்து கொள்ளலாம்....சுந்தர் அவர்கள் கூட அனுப்ப முடியும் எனும் போது கூட பார்த்து கொள்ளலாம் என இவளவு நாள் தாமதம்...........இது தவிர்க்க பட வேண்டும் ,அப்போதுதான் ஆசிரியரும் இதில் முழு கவனம் எடுத்து கொள்ள வழி வகை பிறக்கும்.........இதற்க்கு காரணம் அதிக நாட்கள் முன் பதிவுக்கு ஒதுக்கியதும் இரண்டு மாதங்களே (recard date )முன்பதிவிற்கு இல்லையெனில் பணம் திருப்பி அனுப்பபடும் என ஆசிரியர் கூறினால் கண்டிப்பாக ஏதேனும் வழி பிறக்கும்...தேவை எனும் போது மனிதன் (மெஜாரிட்டி )கண்டிப்பாக நெருக்கடி நிலையில் மட்டுமே செயல்படுவான் என்பது மறுக்க முடியாத உண்மை ................
Deleteமேலும் இங்கு வரும் எதிர்ப்பு குரல்களும் அவசியமே,கண்டிப்பாக யாரும் வீம்புக்காக இங்கு குரல் கொடுக்க மாட்டார்கள்.......குரல் வராவிட்டால்தான் யாரும் முடிவெடுக்க இயலாது..............................இங்கு வரும் நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் மேலும் ,அவரது ரசனை மிகுந்த வெளியீடுகளில் நம்பிக்கை வைத்துள்ளவர்களே .................
கண்டிப்பாக இந்த(நெவெர் பிஃபோர் ஸ்பெஸல்) புத்தகம் வெளி வருவதற்கு முன்னே 1000 பிரதிகள் தொகை ஆசிரியருக்கு சென்றால் மட்டுமே இதுவும் (ரத்த படலம் )சாத்தியம் என ஆசிரியர் ஹாட் லைனில் குறிப்பிட வேண்டும்......நெட்டில் நாம் குறைந்த நபர்களே உள்ளோம்.......இதன் மூலம் நமது வெளியீடே அடுத்த வெளியீட்டிற்கு சிறந்ததொரு விளம்பரமாக அமையும்........மேலும் நண்பர்கள் பலரின் பதில் இங்கே கிடைக்கவில்லை ,இது ஏதோ சிறு பிள்ளை விளையாட்டு என நினைத்திருக்கலாம் ,ஒரு வேளை ஆசிரியர் இதை கூறியிருந்தால் பதில்கள் அதிகரித்திருக்கலாம் ................
நாம் இவளவு கூறிய போதும் ஆசிரியரின் கதை வெளியிடும் முயற்ச்சியில்
*********ஆனால் சமீபமாய் , இந்த "வண்ணம் வேண்டும்" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது ! நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே ! பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது ! சொல்லப் போனால்,பணியாளர்களின் சம்பளமும், தொலைபேசிக் கட்டணங்களும் தவிர்த்து, நமது காமிக்ஸ் பிரிவின் தலையில் வேறு எந்த செலவினங்களையும் சுமத்துவதில்லை. நான் அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, அதில் ஒரு அணா வாகினும் காமிக்ஸ் பிரிவின் பொறுப்பாகிடாது
இரத்தப் படலம் கதைகளில் வசனங்களுக்குப் பஞ்சமே கிடையாது ; பக்கம் பக்கமாய் ஒவ்வொரு பாத்திரமும் பேசுவது சகஜம் என்பது நாமறிவோம் . வண்ணத்தில் அந்தந்த வசன பலூன்களுக்குள் ஓரளவிற்காவது வாசிக்க இயலும் சைசில் எழுத்துக்களை அமைக்க வேண்டுமெனில், மீண்டும் 18 பாகங்களையும் crisp ஆக மொழிபெயர்த்திடல் அவசியம் ! புதிய மொழிபெயர்ப்பில் முந்தைய கருப்பு வெள்ளைக் கதையின் நடையில் இருந்த சுவாரஸ்யம் குன்றிடாமல் ; சங்கதிகள் ஏதும் கத்திரிக்கப்படாது அமைகிறதாவென்று பார்த்துக்கொள்வதிலேயே பெண்டு கழன்று விடும். 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் ! அது வரை கனவுகளே நம் தோழர்களாக இருத்தல் அவசியம் - இரத்தப் படலத்தைப் பொருத்த வரையிலாவது ! ********************
இந்த காரணிகளும் ஒத்துழைக்க வேண்டும்..........
இப்போது நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வெளியீட்டுக்கு ,வெற்றிக்கு பின்னர் அடுத்த ஆறு மாதத்தில் ஆசிரியர் இந்த முடிவு குறித்து வெள்ளோட்டமிடலாம்....
அதற்க்கு இங்கு கூடும் நண்பர்கள் உற்ச்சாக படுத்தும் விதத்தில் தங்கள் வேண்டும் குரல்களை ஒழிக்க செய்தால்........ஆனால் இந்த அதிகம் வாங்க தயார் என கூறிய நண்பர்கள் முன் பதிவாக பணம் அத்தனை பிரதிகளுக்கும் அனுப்ப தயார் என்றால் மட்டுமே அத்தனை பிரதிகள் கேட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ,வெறுமே உசுப்பேற்றும் செயலாய் இருந்து விட கூடாது நமது வார்த்தைகள் .....
இது ஒரு முன் முயற்ச்சியே .......காலங்கள் நீடிப்பு ஆசிரியரின் கைகளில் மட்டுமே....................
Deleteநண்பர் steelclaw அவர்களுக்கு ,உங்கள் யோசனை அழகானது .but ஆசிரியர் ஏற்கனவே தனது முழு கவனமும் N .B .S .இல் இருபதாக கூறிஉள்ளார்.எனவே கனவா,நிசமா என்று சந்தேக படும் புததகதிற்கு நாம் இப்போது உழைப்பதை விட இன்னும் மூன்றே மாதத்தில் வரும்,இன்னும் 200 கூட தாண்டாத N .B .S . புத்தகத்திற்கு இப்போது கொடுக்கும் யோசனை யை நாம் பயன்படிதனால் ஆசிரியர்கு பெரும் உற்சாகமாக இருக்குமே. எனது பங்காக மூன்று புத்தகத்திற்கு நான் ஆர்டர் செய்துவிட்டேன் .நண்பர்களும் விரைந்தால் நலம். (நான் கோரியது தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பரே..)
Deleteவேண்டும்.
Deleteவேண்டும் 2
Delete2 copy வேண்டும்.
Deleteஇது வரை இந்த blog-ன் "silent reader" அக இருந்தேன். இரத்தபடலம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இங்கே reply செய்ய தூண்டியது. நண்பர் ஸ்டீல் களாவின் ஐடியா மிக அருமை.
Yes we want reprint in colour
ReplyDeleteநண்பர்களே, யாரிடமாவது இரண்டு பிரதிகள் இரத்தப் படலம் முழுத் தொகுப்பு உள்ளதா? ஒன்று அளித்து உதவ முடியுமா? நன்றி உள்ளவனாவேன். தெரியப்படுத்திடுங்கள்.
ReplyDeleteDEAR FRIEND I HAVE 2 COPIES OF X111 PLEASE SEND ME UR ADDRESS TO MY MAIL thiagumurugu@yahoo.com.i will send u.
DeleteLet me know your details and address! Also wanted to know how long you are reading lion and muthu!!
Delete'வண்ணத்தில் இரத்தப் படலம்' மட்டும் அல்ல, அனைத்து மறுபதிபுக்களையுமே வரவேற்கிறேன்!
ReplyDeleteஇன்னொரு பிரதிக்கு நானும் இவ்வார இறுதியில் ஆர்டர் செய்கிறேன் நண்பரே....................
ReplyDeleteநன்றி ,steelclaw ...,"காமிக்ஸ் ஒரு கனா காலமா " நேரம் இருந்தால் வாருங்கள் நண்பர்களே, BARANIWITHCOMICS .blogspot .com
Deleteஹலோ ஸ்டீல் கிளா,நண்பரே,நன்றிகள் பல .பட்டையை கிளப்ரிங்க,பழைய வாசகன் நான் .லேசா லேட் பண்ணதுக்கே இப்படி கடமாடு மாதிரி ஓடிகிட்டிருக்காங்க? அப்போ நான் தான் அவுட்டா? இரத்தப்படலம் வண்ணப் பிரின்ட் எனக்கும் ஒன்று.....அதுவும் இப்போதே.......
ReplyDeleteநண்பர்களே முதலில் நெவர்பிபோர் முன்பதிவு ஆயிரம் தாண்டட்டும்.அதன்பின் ரத்தபடலம் பற்றி கலர் கனவு காண்போம. காமிக்ஸ் இப்போதுதான் ரெகுலராக கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆசிரியரை அதிகம் உசுப்பேற்றி விடாதீர்கள். அப்புறம் நஷ்டம் நமக்குத்தான்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரு விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ReplyDeleteதங்களிடம் கைவசம் உள்ள காமிக்ஸ் பிரதிகளின் பட்டியலை தனியே ஒரு போஸ்ட்ஆக போட்டால் நன்றாக இருக்கும்,
கூடவே மறுபதிபுகளையும் அதன் விலை மற்றும் வெளியிடபட்டும் தேதியையும் போட்டால் வாசகர்களுக்கு ஆர்டர் செய்வதற்கு எளிதாக இருக்கும்
மேலும் ,
1) ஷெர்லோக் ஹோல்மேஸ் - ஊடு கொலைகள் (முத்து காமிக்ஸ்)
2) மரண மண்டலம் (திகில் காமிக்ஸ்)
ஆகிய காமிக்ஸ்களை மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்
நண்பர்களே,இங்கே எனக்கு யாரிடமாவது இரண்டு பிரதிகள் இருந்தால் தாருங்கள் என்று நண்பர்களின் குரல் ஒலிப்பதே இரத்தபடலத்தின் மாபெரும் வெற்றியை பறை சாற்றும்.இந்த புத்தகம்தான் என்று இல்லை,அனைத்து சிறப்பு வெளியீடுகளுமே ,அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை.கோடை மலர்,தீபாவளி மலர் மற்றும் பல சிறப்பிதழ்கள்,அவை குறைவாகத்தான் விலை காரணமென்று பதிவிட பட்டனவா என்பதும் ஆசிரியர்தாம் அறிவார்...........முதல் பதிப்பு,இரண்டாம் பதிப்பு என்று ஏனோ வெளி வருவதில்லை இவை.........இரத்தபடலம் குறித்து ஆசிரியரை நேரில் தொல்லை தரும் நண்பர்களும் இருப்பார்கள்..........எப்போதும் இருக்கின்ற ஒன்றை ,கை நழுவ விட்டு விட்டு பின்னர் கிடைத்தால் என ஏங்குவதே குழந்தைத்தனம் .......நாம் காமிக்ஸ் விசயத்தில் குழந்தைகள்தாமே.......நானும் பிறகு பார்க்கலாம் என சைத்தான் சாம்ராஜ்யத்தை இழந்து தேடியது, அலுப்பில்லாத பெரும் துயரக்கதை .இப்போது இதே நிலை பின்னர் இந்த புத்தகத்திற்கும் வரலாம் அடுத்த இரண்டு வருடங்களிலோ,ஒரு வருடத்திலோ.........பல நண்பர்கள் இப்போது வரும் புத்தகத்தை வாங்குவோம் முதலில் என கூறுவது சரியே.....இங்கே உள்ள நண்பர்கள் அனைவரும் நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வாங்க பணம் அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்,டாக்டர் அவர்கள் கூறுவதும் சரியே நம்மால் இயன்ற அளவு புத்தகங்களை வாங்கி தெரிந்த, வேண்டும் நண்பர்களுக்கு விற்பனை செய்யலாம் முடியுமெனில்.................பலர் செய்தும் வருகிறார்கள்.......கடைகளுக்கு வந்த பின்(வருமா?) இன்னொரு புத்தகம் வாங்கலாம்,இல்லாவிடில் சிவகாசி சென்று இன்னொன்று வாங்கி வரலாம் என நினைத்தேன்.......நண்பர்கள் சிலரிடம் விவாதித்த பிறகு இப்போதே பதிவு செய்வதே ஆசிரியரிடம் உள்ள விற்க வேண்டுமே என்ற மலைப்பை (இருக்குமா ?) போக்க சிறிதளவாவது உதவுமோ என்றே ,இன்னொரு பிரதிக்கு வரும் வார இறுதியில் பணம் செலுத்த முடிவு செய்தேன்......இதை இங்கு கூறுவது வேண்டும் நண்பர்கள் ,பாது காக்க விரும்பும் ஆர்வலர்கள் ஒருவராவது அதிகரித்தால் நன்றாய் இருக்குமே என்றே,நண்பர் பரணிதரன் கூறிய பின்னரே நானும் முடிவு செய்தேன் ,அதை போல யாராவது ஒருவர் ...................நண்பர்களே முடிவு செய்யுங்கள்..........பல அதிரடி வெளியீடுகளுக்கும் நமது இந்த முதலாவது கனவு மலரே தூண்டுகோலாக இருக்க வேண்டும் என நினைத்து .....நமது சந்தோஷ கடலில் நீந்த உதவும் இந்த சிறு படகிற்கு(லயன்) ,நமது முன்பதிவுகளே ஒரு துடுப்பாக ,இயன்றால் பல துடுப்பாக இணைந்து செயல் பட ................
ReplyDelete//இந்த புத்தகம்தான் என்று இல்லை,அனைத்து சிறப்பு வெளியீடுகளுமே ,அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை.//
Deleteநண்பரே,
அப்படியெல்லாம் கிடையாது. பெங்களூரு காமிக் கானில் நமது ஸ்டாலையும், அதன் விற்பனையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், New look special, Surprise special, Double thrill special ஆகிய புத்தகங்களின் பல பிரதிகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன. ஆசிரியர் ஏற்கனவே சொன்னது போல பாதி புத்தகங்கள் stockல் தேங்கி இருந்துதான் விற்பனையாகும். ஒரு வேளை, நீங்கள் கூறுவது போல அனைத்து special புத்தகங்களும் பதிப்பித்த உடனே விற்று தீர்ந்துவிடும் என்றால், ரத்தபடலம் வெளியிட்ட போதே அல்லவா "Out of stock" ஆகி இருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஏப்ரல்-மே வரையில் ரத்தபடலத்தின் பிரதிகள் stockல் இருந்தன!
நண்பரே நான் இப்போதும் பல காலங்களுக்கு முன் வந்த ஆறு ,பத்து ரூபாய் இதழ்களை குறித்தே கூற எண்ணினேன் ....ஸ்பெஸல்கள் ஏதும் பின்னர் கிடைப்பதில்லை என கூற நினைத்தேன் ,நீண்ட காலம் என்பது மாறி விட்டதே காரணம்........சாரி
Deleteஇந்த புத்தகம் இரத்த படலம் வர தாமதமானால் (நீண்ட காலம்) , இப்போது இரத்தபடலம் இல்லாத நண்பர்கள் இதனை வைத்து demand வைக்கலாம் நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் இழந்த நண்பர்களிடம்,நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் முழுவதும் விற்று தீர்ந்தால் ஆசிரியரிடம் demand வைக்கலாம் இரத்தபடலம் கேட்டு ,எப்படி இருந்தாலும் புத்தகம் கிடைக்கும் நண்பர்களே தயாராகுங்கள் .............
ReplyDeleteமறுபதிப்பு மறுபதிப்பு என்று மீண்டும் மீண்டும் குரல் கொடுப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்கு புரிபடவே இல்லை. ஆசிரியர் இப்போது நெவர் before special இல் கவனம் செலுத்தும் போது இந்த கோஷ்டி கானம் எந்த விதத்தில் நியாயம்? 2 மாதங்களுக்கு முன்னால் இருந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யுங்கள் என்பது காரிய சாத்தியமா? அதுவும் கலரில்!!! தன்னிடம் இல்லாத புத்தகத்தை ஒவ்வொருவரும் மிகவும் மிஸ் பண்ணுவர். உண்மை தான். ஆனால் அந்த குறிப்பிட்ட புத்தகம் பல புதிய வாசர்களிடம் இருக்காது என்பது நிதர்சனம். ஆனால் அனைவரும் சேர்ந்து அதை மறுபதிப்பு செய்யுங்கள் என்றால் எப்படி முடியும்? சிந்தித்து கேளுங்கள் அன்பர்களே... இதை (காமிக்ஸ்) ஆசை என்று கூறுவதை விட பேராசை என்றே கொள்ள வேண்டும்.
ReplyDeleteநண்பரே ,உங்கள் கேள்வியும் நியாயமே,அது போலவே நமது தேவைகளை கேட்டு பெறவே இந்த முயற்ச்சியும்,இரத்த படலம் வந்த பின்னரே பழைய நண்பர்கள் பலர் அறிந்து மீண்டும் வந்துள்ளனர்,அவர்கள் தேவை கூட அதிகமே ........மறு பதிப்பு உடனடியாக கேட்கவில்லை,*****************வண்ணத்தில் தயாரிக்க சாத்தியப்படும் காலத்தில் மட்டுமே ***********************,இன்னும் மூன்று மாதத்தில் மறு பதிப்புகள் வந்த பின்னர் சாத்தியப்படுமா என்பதன் உண்மை ஆசிரியர் மற்றும் நமக்கும் தெரிந்து விடும்..........அப்புறம் இந்த குரல்கள் ஒலிக்க சாத்திய படுமா என்பது தெரிந்து விடும்,இப்போதே கேட்டு வைப்போமே,ஒரு தயார் படுத்தாலே இதுவும் ........இப்போது லயன்,முத்து,மினி லயன் என மூன்று கதைகள் கிட்டத்தட்ட சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றன ,ஒரே புத்தகத்தில் ...............இவை தொடர்ந்தாலே மாபெரும் வெற்றிதான் ........சிறப்பிதழ்கள் அவப்போது தேவையே.இப்போது வரும் கனவு மலர் 40 ஆண்டுகள் கொண்டாட்டத்திர்க்கே.......இரத்தபடலம் என்பது உலகளவில் வெற்றி பெற்ற காவியம் ,கருப்பு வெள்ளை ராமாயணம் என்றால் வண்ணத்தில் மகாபாரதம் என்பது போலவே.......சிலருக்காக கண்டிப்பாக வர வாய்ப்பில்லை ...........பார்ப்போமே .........
Delete***********************1000 copy ரத்தபடலம் பிரிண்ட் செய்தாலே 10 லட்சம் வரை செலவு ஆகும் . 1000 copy ல் உடனே 300 copy sales ஆனாலும் , மீதி 700 copy விற்பதற்கு 3 வருடங்கள் பிடிகிறது என்றால் அந்த 3 வருடங்களுக்கு , வட்டி கணக்கு போட்டு பாருங்கள் ,தலை சுற்றும்****************************என்ற நண்பரின் கூற்றில் உள்ள உண்மை சங்கடமாகவே உள்ளது.இதற்க்கு ஆசிரியர் முன் பதிவை துவங்கும் முன்பே ,வரவிருக்கும் இதழ் பற்றி கூறி விட்டு நண்பர்களை தயார் படுத்திய பின்னர் ,ஆறு மாதங்கள் கழித்து இரண்டு அல்லது ஒரு மாதத்தில் முன் பதிவை (விற்பனை கடைகள் மூலமாகவும் எனும் காலம் தொடர இருப்பதால் கடைகளிலும் முன்பதிவை தொடரலாம்) முடித்து கொள்ள வேண்டும் .அவரது கணக்கிற்கு தகுந்த படி ,கையை சுடாமல் புத்தகங்கள் தேவை எனும் எண்ணிக்கை வந்து விட்டால் தொடரலாம் இல்லை எனில் அந்த இதழை நிறுத்தி விட்டு தொகையினை திருப்பி அனுப்பினால் ,நண்பர்கள் முன் பதிவிற்கு அடுத்த முறை உடனடியாக தயாராவார்கள் .இது சாத்தியமா என்பதும் ஆசிரியர் கையில்தான்.இன்று ரொக்கத்திற்கு கடைகளில் வாங்க தயார் என்பதே மாபெரும் பிரம்மாண்டமான முன்னேற்றமே,இதற்க்கு காரணம் இரத்தபடலமே என்றால் மிகை அல்ல ,அதன் வெளியீட்டிற்கு பின்னரே நானும் முன் பணம் செலுத்தினேன்,அந்த இதழ் வண்ணத்தில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமே ,கண்டிப்பாக அதன் மூலம் தரமான பல வாசகர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் .அந்த பிரம்மாண்டமான வெளியீடே விளம்பரமாக ,வியப்பாக முன்னணி புத்தகங்களில் விளம்பர செலவின்றி வந்தது என்றால் மிகை இல்லையே........
.. ...............
நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வெற்றி என்பது ஒவ்வொரு வாசகர்கள் கையில்தான் உள்ளது .நண்பர்களே இரத்த படலம் கிடைக்காமல் தேடுவோரும் ,இந்த அற்புதமான லார்கோ,டைகர் கொண்ட நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வாங்க உள்ள நண்பர்களும் பிறகு கிடைக்க வாய்ப்பு குறைவே என்பதை உணர்ந்து தாராளமாக ,தரமான கதைகள் தொடர உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்,இப்போது விட்டால் இந்த கதைகளின் தொடர்ச்சியும் மிஸ் ஆக வாய்ப்புள்ளது,இப்போது இரத்தபடலம் கருப்பில் கூட கிடைக்க வில்லையே என்று ஏங்கும் நண்பர்கள் நிலை போலதான் நமக்கும் ......இன்று நேரம் கிடைத்தால் இன்னொரு புத்தகத்திற்கு ஆர்டர் செய்ய உள்ளேன் ......எத்தனை புத்தகங்களுக்கு முன் பதிவுகள் வந்துள்ளன என்பதை தெரிவிக்கிறேன்.............
இன்று புக் செய்ய இயலவில்லை ,நாளை கண்டிப்பாக பதிவெண்ணை கூறுகிறேன்..........
Deleteகடந்த 6-7 நாட்களில் ரத்தபடலம் மறுபதிப்பு குறித்து பல விவாதங்கள்.!
ReplyDeleteஆசிரியர் பல முறை சொல்லி விட்டார் இது இயலாது என்று. Frankly speaking, எனக்கு ஆசிரியர் எந்த புத்தகம் போட்டாலும், அது என்ன விலை ஆனாலும் சந்தோஷமே. நான் வாங்க தயாராக இருக்கிறேன். Money is not a matter at all in front of our comics and I MEAN IT. ஆனால் budget constrained நண்பர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களால் இது போல high valued புத்தகங்களை கண்டிப்பாக வாங்க முடியாது.
தற்போது தான் மெல்ல மெல்ல மாதம் ஒரு 100 ரூபாய் புத்தகங்கள் என்ற standard செட் ஆகி இருக்கிறது. இது மாதம் 200/400 ஆக மாறுவதற்கு சில (பல?!) காலம் பிடிக்கும். அந்த சமயத்தில் வேண்டுமானால் இந்த ரத்தபடலம் மறுபதிப்பை பார்த்துக்கொள்ளலாம். தற்போது, நமது/ஆசிரியரது கவனத்தை Super hero super special, தங்கக்கல்லறை மறுபதிப்பு, Never before special ஆகிய புத்தகங்களில் செலுத்துவோம்!
மற்றபடி, அனைத்து நண்பர்களில் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் மனம் மாறி, ரத்தபடலத்தை இப்போதே மறுபதிப்பு செய்வாரென்றால், கண்டிப்பாக ஒரு பிரதியை நான் order செய்ய தயாராக இருக்கிறேன். இதில் மாற்றம் ஏதுமில்லை!
Vayra Toppic i mattrinal nalam.
ReplyDeleteTest. ஹிஹிஹி!!!
ReplyDeleteஉங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால கடன் தேவை? நாம் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கொடுப்பனவு கடன்கள், திருமணக் கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள், வங்கி கடன்கள் மற்றும் கடன் செலுத்துவதற்கான கடன் ஆகியவற்றை வழங்குகிறோம். உங்கள் கெட்டதை அறியுங்கள்
ReplyDeleteகடன் ஸ்கோர். உங்களுக்குத் தேவையான கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நாங்கள் பட்டியலிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் அங்கீகரிக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் இப்போது பொருந்தும்
சிறந்த பரிந்துரை
எம்.ஆர்: கிறிஸ்டியன் டேவிட் பாங்
infosun கடன் சேவை நிறுவனம்
தொடர்பு மின்னஞ்சல்: எங்களை: infosunloanservice24@gmail.com
WHATS-APP CONTACT +919108281664
As usual நச்சென்று பதில்கள்
ReplyDelete