நண்பர்களே,
வணக்கம். தொலைவில் ஒரு புள்ளியாய்த் தெரிந்திட்ட பெங்களுரு COMIC CON 2012 வரும் சனிக்கிழமை என்று நெருங்கி விட்டது !
செப்டம்பர் 8 & 9 தேதிகளில் கோரமங்களா ஸ்டேடியத்தில் நடந்திடவிருக்கும் இந்த காமிக்ஸ் திருவிழா எனக்குமே ஒரு புது அனுபவம் ! அமெரிக்காவில் நான் பார்த்திட்ட காமிக்ஸ் convention - அளவில் ; பிரம்மாண்டத்தில் ; மிகப் பெரிதென்ற போதிலும் இந்தியாவிற்கு சமீபத்திய இந்தப் புதிய முயற்சிகள் ஒரு சந்தோஷமான வருகையே ! தமிழ் தாய்மொழியாக அல்லாததொரு நகரில் நடந்திடும் இந்தத் திருவிழாவில் நமக்கு எத்தனை தூரம் வரவேற்பிருக்குமென்று கணித்திடத் தெரியவில்லை என்ற போதிலும், நமது படைப்புகளை showcase செய்திடவும், பிறரது படைப்புகளை ரசித்திடவும் இது நல்லதொரு வாய்ப்பாகப் பார்த்திடுகின்றோம்!
நமது ஸ்டால் எண் B -17 ! குட்டியானதொரு இடம் தான் என்ற போதிலும் நம்மிடம் தற்சமயம் ஏராளமான ஸ்டாக் இல்லை என்பதால் கூடுதல் கட்டணத்தை அவசியப்படுத்தும் பெரிய ஸ்டால் தேவை இராதென்று நினைத்தோம். அடுத்த COMIC CON சென்னையில் நடந்திட வாய்ப்பிருக்கும் பட்சத்தில், நிச்சயம் பெரியதொரு ஸ்டாலில் கலக்கிடலாம் !
Layout |
WILD WEST SPECIAL அழகாகத் தயாராகி வருகின்றது. வரும் சனிக்கிழமையன்று காலையில் பெங்களுருவில் நமது ஸ்டாலில் இதழ் கிடைக்கும் ; அதே தேதியில் சிவகாசியிலிருந்து உங்களது சந்தா பிரதிகளும் அனுப்பிடப்படும் ! 'உலகத் தொலைகாட்சிகளில் " முதன்முறையாக என்ற பாணியில், என் நினைவுக்குத் தெரிந்த வரைக்கும் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஒரு லயன் இதழ் தயார் ஆவது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன் ! கடந்த 2 வாரங்களாய் முகம் சுளிக்காது செயலாற்றிட்ட எங்களது டீம் - க்கு எனது நன்றிகள் என்றும் உண்டு !
COMIC CON விழாவிற்கும், நமது ஸ்டாலுக்கும் உங்களை வரவேற்பது எங்களது பெருமை !!
- September 8th சனிக்கிழமை காலை 10 -00 முதல் மாலை 5 -00 வரையும்
- September 9th ஞாயிறு காலை 10 -00 முதல் மதியம் 1 மணி வரையிலும்
நான் நமது ஸ்டாலில் இருப்பேன். இதர நேரங்களில் நமது பணியாளர்கள் அங்கே இருந்திடுவார்கள் ! Look forward to seeing you there folks !
என்னிடம் பேச எண்ணிடும் நண்பர்கள் வழக்கம் போல் 9842864584 என்ற நம்பருக்கு சனி & ஞாயிறு போன் அடிக்கலாம் ! Adios amigos !
பெங்களுரு COMIC CON 2012 வெற்றி பெறவும், நமது லயன் முத்து காமிக்ஸ் இவ்விழாவில் முத்திரை பதிக்கவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteAll the very Best Mr. VIJAYAN & TEAM.
வாவ்.... போஸ்டர்கள் செம சூப்பர்... அட்டகாசம்...
ReplyDeleteபெங்களுரு COMIC CON 2012 இல் நமது காமிக்ஸ் தனி முத்திரை பதிப்பது நிச்சயம். வாழ்த்துக்கள்
மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். விற்பனை சிறக்கவும், புதிய வாசகர்களிடம் நமது காமிக்ஸ் சென்று சேரவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteபோஸ்டர்கள் அருமை சார்! அப்படியே கொஞ்சம் டிங்கரிங் செய்து அடுத்த லக்கி லூக் ஸ்பெஷலுக்கு அட்டை படமாக போடலாம் போல் உள்ளது! :)
ReplyDeleteஉங்களை (மீண்டும்) நேரில் சந்திக்கும் வாய்ப்பு நெருங்குகிறது! :D
I will be there at 11 o'clock!! See you all there!!!
Delete- போஸ்டரில் லயன் வலைத்தள முகவரி இருப்பதால் (http://www.lion-muthucomics.com/) குறைந்த பட்சம், 2013-க்கான சந்தா விபரம் மற்றும் சில புதிய இதழ்களின் கவர் ஸ்கேன்களை அந்தத் தளத்தில் அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும்! :)
Delete- நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கான போஸ்டர் ஒன்றையும் ரெடி செய்து ஸ்டாலில் ஒட்டலாமே? அருகிலேயே கணிசமான முன்பதிவு கூப்பன்களையும் வைத்து விடுங்கள்! :)
- ஒரு சிறிய சந்தேகம்! Image Optimizer தளத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் சார்? அவர்களின் Watermark உறுத்துகிறது... :) விண்டோஸ் மூலமாகவே படங்களை resize செய்து பிறகு ப்ளாக்கரில் upload செய்யலாமே!
// நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கான போஸ்டர் ஒன்றையும் ரெடி செய்து ஸ்டாலில் ஒட்டலாமே? அருகிலேயே கணிசமான முன்பதிவு கூப்பன்களையும் வைத்து விடுங்கள்! //
Delete- அருமையான யோசனை Karthik, எடி இதை கண்டிப்பாக செய்வார் என நம்பலாம் :)
டியர் எடிட்,
ReplyDeleteகாமிக் கானுக்கு என்று இதுவரை சரித்திரம் (தமிழ் காமிக்ஸில் என்பதை குறித்து கொண்டு) காணாத வேகத்தில் ஒரு காமிக்ஸ் வெளியீடு, அதனுடன் சிறப்பு போஸ்டர்கள் என்று அமர்க்களம் செய்திருக்கிறீர்கள். உங்கள் டீமிற்கு பெண்டு நிமிர்ந்திருக்கம் என்று நம்பலாம். முதலில் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
காமிக் கான் வெவ்வேறு நகரங்களில் நடக்கும்போதெல்லாம் நமது தமிழ் காமிக்ஸும் அங்கு பங்குபெறாதா என்று நினைத்திருக்கிறேன். ஆனால், ஆங்கில காமிக்ஸ்கள் மட்டும் ஒப்பேறும் அத்தளங்களில், பிராந்திய மொழி வெளியீடுகள் பொருளாதார ரீதியாக தேர்வாவது கடினமே என்று உறைக்கும். சென்ற வருடத்தில் சென்னை அல்லது பெங்களூரு என்று காமிக் கான் நிர்வாகிகள், யோசித்த வேளையில், சென்னை என்றால் கண்டிப்பாக நமது ஸ்டால் வந்து விடும் என்று எண்ணி இருந்தேன். ஆனால், பெங்களூரையும் விட்டு வைக்காமல் களம் இறங்கி இருப்பது, வரவேற்ககூடியது. அங்கே விற்பனை சூடு பிடிக்காமல் போனாலும், தமிழில் இப்படி காமிகஸ்கள் வந்து சேர்வது அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
முடிக்கும் முன்.......
குறை கண்டு பிடிக்கவில்லை என்றால், நம்மை "ஐஸ் பாய்" என்று முத்திரை குத்திபுடுவார்கள் என்பதால்.... சமீப இதழ்களில் சரியான விகிதத்தில் வந்த பான்ட் அமைப்பு பேக் டூ ஸ்கொயர் ஒன், என்ற பெயரில் மீண்டும் சின்னதாக அவதாரம் எடுத்திருப்பது நெருடுகிறது. வெஸ்டர்ன் கதையில் மூன்றாம் நபர் கதை சொல்லும் பாணிக்கு, அதிக எழுத்துகள் தேவைபட்டிருக்கலாம் என்றாலும், ஆங்கிலத்தில் ALL CAPS முறையில் இப்படி சின்ன இடங்கள் நெருடாத அளவிற்கு பான்ட் அமைந்து விடும். ஆனால் தமிழில் அவ்வாய்ப்பு இல்லாத போது.. இதை தவிர்க்க வேறு வழி இல்லையா ? கட்டங்களை பெருதாக்கினால் ஓவியங்கள் அடிபடும்... நமது சைஸும் கட்டங்களுக்கு உதவ போவதில்லை... இப்பபிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு காணுங்கள்.
திரு.விஜயன்,
ReplyDeleteCOMIC CON 2012இல் நமது காமிக்ஸ்கள் கவனம் ஈர்த்திட, கண்களைக் கவர்ந்திட, உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறிட கடல் கடந்திருந்து வாழ்த்துகிறோம்.
போஸ்டர்கள் கண்களைக் கவர்கின்றன. புதிய விருந்தாளியான 'லார்கோ'வையும் ஒரு ஓரத்தில் போட்டிருக்கலாம்.
-Theeban
சித்திரங்கள்
ReplyDeleteபேசிவிட்டன .அற்புதம்...................
நீங்க இவ்ளோ சின்னதா கமெண்ட் போட்டா எப்பிடி?. ரொம்ப பிஸியோ?
DeleteThis comment has been removed by the author.
Delete// நீங்க இவ்ளோ சின்னதா கமெண்ட் போட்டா எப்பிடி?. ரொம்ப பிஸியோ? //
Deleteஅதானே நீங்கள் மற்றும் பாலாஜி சுந்தர் இருவரின் கைவண்ணம் மிக அருமையாக இருக்கும் ;-)
.
அற்புதம், அருமை, அபாரம். (வேறு ஏதாவது வார்த்தை உண்டா?!) :௦௦-)
ReplyDeleteதங்களை சந்திக்க இன்னும் 48 மணி நேரங்களே உள்ளது என்று நினைக்கும் போது உண்டாகிற மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல (டைப்ப?!) இயலாது சார். Keeping my fingers crossed!
By the way, தமிழை தாய்மொழியாக கொண்ட பலர் பெங்களூரில் வசிக்கிறார்கள். அவர்களில் நிச்சயம் பாதிப்பேராவது காமிக்ஸ் மேல் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். (Wild guess!) ஆகவே, நமது படைப்புகளுக்கு கண்டிப்பாக ஒரு வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். :-)
வாழ்த்துக்கள் முதலில்....
ReplyDeleteபோஸ்டரில் லக்கிலூக் இடம் பெற்றிருப்பது, நல்ல விஷயம். தமிழ் தெரியாதவர்களையும் கவனிக்க செய்யும் யுக்தி இது.
20 நாட்கள் இடைவெளியில் அடுத்த இதழ் வருவது எங்களுக்கு மகிழ்ச்சி, அதற்கு உங்கள் ஆபீஸில் இருப்பவர்கள் எவ்வளவு அதிக நேரம் கூடுதலாக உழைத்திருப்பார்கள் என்று நினைக்கும் போது அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்த்துக்கொள்கிறேன்.
கண்டிப்பாக உங்கள் பயணம் வெற்றி அடையும் சார்.
ReplyDeleteபோஸ்டர் கள் மிகவும் அருமையாக உள்ளது.
சார் முடிந்தால் இப் போஸ்டர் களை எங்களுக்கும் சிறு சிரிதாகினாலும் பரவில்லை அனுப்புங்கள் சார்.
எங்கள் வீட்டு சுவர்களையும் அலங்கரிக்கும்.
COMIC CON 2012ல் நமது லயன் முத்து காமிக்ஸ் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
If there is any issue in our comics please let us know! at least i am not interested about Vadivellu or you blog. Can you please find some other blog to put your post!
Deleteஇவர் எப்போது பார்த்தாலும் இங்கு வந்து தனது வலைப் பதிவைப் promote பண்ணுவதிலேயே இருக்கிறார். ஒன்று இவரை ban பண்ண வேண்டும். இல்லை இவரது வலைப் பூவில் சென்று லயன் காமிக்ஸ் பற்றி நாம் கமெண்ட் போட வேண்டும்.
DeleteYes. Editor needs to take care of these kind of issue!
Deleteலக்கிலூக்கின் யானை வண்டி போஸ்டர் பிரமாதம் .
ReplyDeleteஅசத்திட்டிங்க போங்க !!!
பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் .
நன்றியுடன் ....
நான் பெங்களூரில் இருந்தாலும் comic-con க்கு வர முடியுமா தெரியவில்லை :( நான் இருப்பதும் தொலைவு. நேரமும் இல்லை :(
ReplyDeleteEverything is in our hand, so please make it! lets meet on saturday!!
DeleteComic con-ல் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteசமீபத்திய நமது தரமான வண்ணப் படைப்புகள் தமிழ்கூறும் பெங்களூருவை நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கும். மற்ற பதிப்பகங்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவும், காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும், நம் தலையில் நாமே குட்டு வைத்துக் கொள்ளவும், புதிய உத்வேகம் கிடைத்திடவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்திடப் போகிறது.
எதிர்வரும் காலம் இன்னும் சிறப்பாய் அமைந்திடுமென எனக்குள் ஏதோ ஒன்று உரக்கச் சொல்கிறது.
கொண்டாட்டம்தான்!
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்கலான படை தயாராகிவருகிறது.......அசத்துங்கள் .... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அருள் துணைபுரியும்.
டியர் எடிட்டர்,
ReplyDeleteWE WISH YOU ALL SUCCESS. இது ஒரு ஆரம்பம். உங்களது சாதனைகளை மற்றவர்கள் பாராட்டப் போகும் நேரம். உங்களை மற்றவர்கள் பாராட்டவில்லை என்றாலும், நிச்சயம் உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்ளப் போகின்றார்கள்.
நீங்கள் அச்சிட்டது வெளிநாட்டு காமிக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் அந்த வெளியீடு துவங்கியது 40 வருடங்களுக்கு முன்பு என்பது குறிப்பிடத் தகுந்தது.
இன்று நமது காமிக்ஸ் தமிழில் மட்டும் இருக்கலாம். ஆனால் உங்களை சந்திக்கும் பெரும்பாலான மற்ற இந்திய காமிக்ஸ் வெளியீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கப் போவது உங்களிடம் இருக்கும் வாசகர்களைப் பற்றிய புள்ளி விவரங்களைப் பற்றியும், உங்களது சந்தாதாரர்களைப் பற்றியும் இருக்கும் என்று ஊகிக்கின்றேன்.
நமது லயன், முத்துவில் வெளிவந்த அனைத்து பழைய சிறப்பு வெளியீடுகளையும் முடிந்தால் நமது ஸ்டாலில் ஒரு கண்ணாடி பேழையில் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அப்படி பழைய காப்பிகள் இல்லையென்றால், நமது சிறப்பு வெளியீடுகளைப் பற்றிய யூட்யூப் வீடியோக்களை டவுன் லோட் செய்து, லேப்டாப்பிலாவது தொடந்து ஓடும் நிலையில் நமது ஸ்டாலில் வையுங்கள்.
கிங் விஸ்வா சொல்வது போல மீண்டும் காமிக்ஸ் பொற்காலம் ஆரம்பித்துவிட்டது என்றே என் மனதிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது.
பெங்களூருவில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். நமது காமிக்ஸ்களுக்கு நல்ல வரவேற்பிருக்கும் என்றே என் மனம் சொல்கிறத்து.
வாழ்த்துக்கள்.
சொல்ல மறந்து விட்டேன். போஸ்டர்கள் இரண்டும் சூப்பர்.
Deleteஇவரு யாரோ ஒருவருடைய பிரச்சார பீரங்கி போல தெரியுதே!!! பொது ப்ளாக் இல் இது போன்ற செயல்கள் வேண்டாம் பாஸ். அதை எல்லாம் உங்கள் இடத்தில வைத்து கொள்ளலாமே... நன்றிகள் பல...
DeleteDear Editor,
ReplyDeleteWOW the posters are looking stunning. Can we get these posters as a prize for some online contest here? I would like to have one :-)
CONGRATS and Best Wishes for the Success in the ComicCon
-- V. Karthikeyan
Agreeing with karthikeyan. Going forward editors can print posters on a majority based vote and sell it .I am sure there will be huge demand for it .
DeleteSir. PLEASE PUT DISPLAY OF our RATHTHAPADALAM X111. THIS IS A GOOD VISITING CARD OF OUR COMICS AND READERS. BEST WISHES.
ReplyDeleteசிறப்பாக விழா நடக்க வாழ்த்துக்கள். இந்திய அளவில் நாம் கவனத்தை பெற போகிறோம்.
ReplyDeleteBTW இரும்புக்கை மற்றும் வலைமன்னன் இல்லாமல் போஸ்டர்கள். ரொம்பத்தான் மாறிவிட்டீர்கள் போங்கள்.
டியர் எடிட்டர்,
ReplyDeleteComic con-ல் உங்கள் முயற்சி வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி
டியர் எடி ,,,,,,,,,,அட்டை படம் சூப்பர் ஒ சூப்பர் ,,,,,,,,
ReplyDeleteபேசாமல் இந்த அட்டையை newlook க்கு,,,, use செய்து இருக்கலாம் ,,,,,,,,,, newlook ன் அட்டை சுமார் ரகம் தான் என்பது என் கருத்து,,,,,,,,,,
டபுள் த்ரில் ல் வந்த jhony கதை,,,,,,,, யாருகாவது புரிந்து இருந்தால் ,,,,,,,, அது என்ன கதை ன்னு,,,,,, யாராவது சொல்லுங்க ,, நைனாக்களா ,,,,,,,,,,
jhony கதை புரியாமல் பாயை,,,,,,,,பிராண்டியதுதான் ,,,,,,,,மிச்சம் ,,,,,,,,,,,,,,,
ரத்த காட்டேரி மர்மம் ,,,,,சிவப்பு பாதை,,,,ஊடு சூன்யம் ,,,,,,,,,போன்ற ஹிட்
வரிசையில் ,,,,,,, இந்த கதை வருதா,,,,,என்பதை விஷயம் தெரிந்தவங்கதான் சொல்லணும் ,,,,,,,,,,,,,,,
comics con பெங்களூர் ஒரு பெரிய ஹிட் என்பதை நாளைய சரித்திரம் ,,,சொல்லும் ,,, சொல்லணும் ,,,,,,,,
நான் பெங்களூர் வந்தாலும் ,,,,, எடி யை துரத்தில் இருந்தே ரசிக்க விரும்புகிறேன் ,,,,,,,,,,,,,,,
நேரில் அவரை பார்த்தால்,,,,,,, அவர் உடைய பெர்சனாலிட்டி ல் நான்,,,,,பேச வேண்டிய விஷயம் மறந்து போய்,,,,பெபபெப்ப்ப ,,,,,,,தான் ,,,,,,,,,,
அவர் உடைய எழுத்தில் மயங்கி ,,அவருடன் எழுத்தில் பழகும் சுதந்திரம் ,,,,,,, பேசும்போது ,,,,, கிடைக்குமா ,,,, என்றும் சிறிது பயம் இருக்கிறது ,,,,,
,,,,,,,,anyway பெங்களூர் ,வரும் ,,,,காமிக்ஸ் நண்பர்களுக்கு ,,,,,,,,,,,, வாழ்த்துக்கள் ,,,,,,,,,,,,,,,
டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு ஊர்ல ஒரு சாமியார் அவருக்கு ஒரு மகன் அவரது அம்மாவை சாமியார் கலட்டி விட பழி வாங்க புறப்படுகிறான் அவரது மகன். கடைசியில் நம்ம ஜானி கிட்ட மாட்டிக்கிறான். சாமியாருக்கு ஒரு சகோதரன் அவரை மாதிரியே இருக்க அவரை பயன்படுத்தி வித்தை காட்டி மக்களை ஏமாத்தரார் சாமி! அதையும் ஜானி உடைச்சி விடுறார். இது போதுமா இன்னும் வேணுமா? அப்பப்போ நம்ம மொக்கை ப்ளாக் பக்கம் ஒதுங்குங்க ஜி!
Deleteபாஸ் தயவு செஞ்சு நீங்க சினிமா வுக்கு கதை எழுத போய்டாதிங்க. இரத்தின சுருக்கமா இப்புடி சொல்லிபுடிங்களே... ஆனால் சொன்ன விதம் சூப்பர்
Deleteநன்றி பிரியரே! நான் ஊர்ல நாடகம் நடத்தியவன்! சும்மா நட்புக்காக!
Deleteபெங்களுரு காமிக்ஸ் விழாவில் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் அளிக்கும் விசியம்தான், ஆனால் என்ன செய்வது?
ReplyDeleteவிளம்பர போஸ்டர்கள் அனைவரையும் கவரும். தமிழில் போஸ்டர் இல்லையா?
லயன் காமிக்ஸ், பெங்களூரில் பல புதியா சந்தாதாதர்களை உருவாக்கும். புதியா மற்றும் மறந்துபோன பழைய லயன் வாசகர்களை சென்றடைய இந்த காமிக்ஸ் கானுக்கு வாழ்த்துக்கள்.....
பெங்களுரு COMIC CONஇல் நமது காமிக்ஸ் தனி முத்திரை பதிப்பது வெற்றி அடைய வாழ்த்துக்கள் .
ReplyDeleteபோஸ்டர் கள் மிகவும் அருமையாக உள்ளது.அட்டை படம் சூப்பர்.மீண்டும் காமிக்ஸ் பொற்காலம் ஆரம்பித்துவிட்டது..வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteA small review on our recent releases...
ReplyDeleteAs usual standard was awesome..& colour mixing makes it like portrait.....
Regarding the stories...
Captain Prince was just an above average story, Our Reporter Johnny was @ his usual best...
Both the last 2 prince stories lacked a strong plot...
The black & white stories doesn't add any value...It looks pretty outdated & odd in the mix..
Largo & Lucky are the perfect example for a special issue...
will be really happy..if u follow the same pattern...
இறைவனின் அருளால் தங்கள் முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைக்க வேண்டுகிறேன்! கலக்குங்க ஜி!
ReplyDeleteDear Sir,
ReplyDeleteHope to see you soon in Bangalore.
As few readers suggest I too believe you should have books for Display of the the specials -
-------------
With better security to ensure they are not stolen :) -
-------------
Regards
Suresh
போஸ்டர்கள் அருமை சார்.நிச்சயம் COMIC CON - ல் நமது முத்து லயன் காமிக்ஸ்கள் மாபெரும் வெற்றி பெறும்.
ReplyDeleteBEST OF LUCK SIR..
ReplyDeleteAll the Best..
ReplyDeleteஇதோ எனது குழந்தை பாருங்கள் எப்படி வளர்த்துள்ளேன் என்று சபைதனில் தந்தை தனது வெற்றி வீரனான ,”முத்தான” குழந்தைதனை பூரிப்புடன் அறிமுகபடுத்தும் வெற்றி திரு நாள் இன்று.முன்னிறுத்த அத்தனை தகுதிகளும் உண்டு. தமிழகத்து மக்கள் தரமான ஒன்றை முன்னேற ,செய்வார்கள் ,தரத்திற்கு மதிப்பளிக்க தயங்க மாட்டார்கள் என இந்தியா முழுவதும்,ஏன் உலகமெங்கும் காண்பித்து,தமிழக மக்களை பெருமை படுத்தக்கூடிய கூடிய நாள் .எங்களையும் . இந்த வெற்றிக்காக தாங்கள் இழந்த தொகை,பட்ட வலிகள் ...............என பல இருக்கலாம் ,ஆனால் தங்களது , (க )தரம் கொண்டு செதுக்க பட்ட இந்த புத்தகத்தை பார்க்கும் ஒவொருவரும் (இந்திய பதிப்பாளர்களை கூறுகிறேன்) வியக்கும் போது அந்த தந்தை என் கண் முன்னே தெரிகிறார் சந்தோசமாய் ,பூரிப்புடன்,விம்மும் நெஞ்சமுடன் ,அத்தனை துயரங்களையும் மறந்து புன்னகையுடன் ................................வளர்த்தால் இப்படி வளர்க்க வேண்டும் எனும் அவர்கள் கூற்றை ..........வெற்றி !வெற்றி!! வெற்றி!!! மட்டுமே இனி வழி தோறும் சிங்கமே .....................
ReplyDeleteவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ,அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் ...சேரும்.....
"நேற்றைய பொழுதை விட இன்றைய பொழுதில் ஒரு படியேனும் முன்னேறியிருக்கிறோம்"." புதிதாய் விஷயங்கள் கற்று வருகிறோமென்ற உணர்வு திருப்தி தந்திடும் ஒரு சங்கதி நிச்சயம் இன்னும் அழகாய் ,நிறைவாய் செய்திட வாய்ப்புகள் உண்டுதானென்ற பொழுதிலும் எனது சந்தோசம் நமது LEARNING PROCESS ன் பொருட்டே " என்ற தங்களது கூற்றை மெய்பிக்க ,உணர அடுத்த வாய்ப்பு .நாம் தனிக்காட்டு சிங்கமாய் களமிரங்கியுள்ளோம்.இந்தியாவில் பிற வெளியீடுகளின் சிறப்புகளையும் நமது குழந்தை களமாடி கற்று கொள்ள வாய்ப்புண்டு,கற்று கொடுக்கவும் ,மேலும் நமது சிறப்புகளை மேம்படுத்த உள்ள வாய்ப்புகளும் பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....................நன்றி .............விரைவில் நமது வெற்றி குறித்த தங்களது அடுத்த பதிவை நோக்கி..............
அவை அடக்கம் தேவை இல்லை......................சந்தோசமாய் கொண்டாடுங்கள் ..... தோள் தட்டி நில்லுங்கள்......நாளை அங்கு வரும் தோழர்களுடன் ....................
,”முத்தான” மற்றும் "சிங்கமான" குழந்தைதனை :))
Deleteஎன்று ஆரம்பிக்கலாமே நண்பரே :))
.
போஸ்டர்கள் மிகவும் அருமையாக உள்ளது...Comic con-ல் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாவ்!! சூப்பர் சார்! உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது! இதற்காக உழைத்த நம் காமிக்ஸ் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி! என் சகோதரர் பெங்களூரில் கோரமங்களா அருகில் வசிக்கிறார். அவனுக்கு காமிக்ஸ் ஆர்வம் இல்லை, ஆனால் நான் ரத்தபடலம்---> bourne identity--> வெற்றிவிழா மற்றும் மார்டின், லக்கிலூக்,மதியில்லா மந்திரியில் மறைமுகமாக இழையோடும் மத்தியாசிய நாடுகளில் மேற்கத்திய அரசியல் உள்ளீடு என்று கூற கூற அவனுக்கு காமிக்ஸ் ஆர்வம் தொற்றி கொண்டது. அவனுக்காக இல்லாவிடினும், எனக்காக நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கு வருகை தந்து நிறைய காமிக்ஸ் எனக்கு அனுப்பி வைப்பதகாக கூறியுள்ளான். :)போஸ்டர்கள் அருமை!
ReplyDeleteஅருமை! I receive the Wild West Special. Excellent. வாழ்த்துக்கள்
DeleteWats the surprise news in tat issue pls let us know
Deleteஅது ஆக்சன் கௌபாய் ஸ்டீவ் தோன்றும் "ஒரு பனி வேட்டை" கதை நண்பரே :))
Delete.
Cibiசிபி ஒரு surprise சொல்லிவிட்டீர்கள். இன்னும் நான்கை சொல்லிவிடாதீர்கள்.
Deletemolto bello
ReplyDeleteமேற்கே ஒரு பயணம்
ReplyDeleteமேற்கே ஒரு மின்னல்
மேற்கே ஒரு மாமன்னர் ( நமது சிங்க ராஜா ) ஆக திகழ எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :))
.
ஹ்ம்ம் என்னதான் இருந்தாலும் நம்ம ஜாலி அண்ணாத்தே இல்லாத லக்கி லுக் கொஞ்சம் ..................
ReplyDeleteஆனால் வேகத்தில் ஜாலியை மிஞ்சிடுவார் போல உள்ளது
போஸ்டர்கள் மிக அருமையாக வந்திருக்கிறது விஜயன் சார் :))
.
Wild West Special பெங்களூரில் வெளியிடப்படும் இன்றே சந்தாதரரான எனக்கும் புத்தகம் கிடைத்தது.
ReplyDeleteஇதுவரை வந்த இதழ்களில் இது ஒரு மைல்கல். காமிக் கானில் வெளியிட இந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான முடிவென்பது புத்தகத்தை பார்த்த உடனே புரிந்தது.
இன்னும் கதைகளைப் படிக்கவில்லை என்றாலும், சித்திரங்களே, கதைகள் இரண்டும் மெகா ஹிட் என்பதனை உணர்த்துகின்றன.
புத்தகத்தில் பல ஆச்சரியத்தக்க விஷயங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்பதால் இங்கு குறிப்பிட விரும்பவில்லை..
Happy Reading......
Dear Friends,
ReplyDeleteI will get my book after 2/3 weeks. How can i sleep? Please tell all the news in the Wild West Special
Aldrin Ramesh From Muscat
wild west கிடைக்க பெற்றேன் ,,,,,,,,,,,,,,, பாராட்ட வார்த்தைகள் இல்லை ,,,,,,,,,, புத்தகத்திற்கு ,,,,,,,,,சுற்றி போடுங்கள் ,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteஎங்க tiger இத்தனை அழகா?,,,,,,,,, black &white ல் இத்தனை நாள் எங்க tiger ன் அழகை மறைத்ததற்கு CTAS சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,
ஒற்றை கை கவ்பாய் ன் சோகமுடிவு மனதை மிகவும் கலங்க அடித்தது,,,,,,,,,,,,,,,,,,,,,
week end wild west ஆல்,,,,,,,,,,,, சந்தோஷமடைந்தாலும்,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ஒற்றை கை கவ்பாய்யால்,,,,,,,சிறிது சோகமாக உள்ளது ,,,,,,,,,,,,
டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,
This comment has been removed by the author.
ReplyDeleteஆஹ்ஹா பரணி தாங்களே முதல் முறையாக அங்கிருந்து தகவலை பகிர்ந்துள்ளீர்கள் ,உங்கள் அனுபவம் நானும் பங்கு கொண்ட உணர்வை தருகிறது,எனது நண்பனும் போகலாமா என கேட்டான் ,இப்போது வந்திருக்கலாமோ எனும் ஒரு உணர்வு தலை தூக்குகிறது ............நமது ஆசிரியர் செயலில் காட்டுவேன் என கூறியது 2013 விரைவில் வராதா என ஏங்க வைத்துள்ளது.......................உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள் பல................Ahamed, Kallel, Rafiq Raja,மற்றும் ஆசிரியர் ,ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி .........அனைவரையும் உங்கள் பதிவில் பார்த்து விட்டேன் .....................நன்றிகள் பல .............
Deleteபரணி அவர்களின் ப்ளாக் URL தரமுடியுமா ?
DeleteSorry RamG, I dont have any! We met Junior Vijayan also, i.e. Vikram. He is doing 2nd year engineering in Chennai!
DeleteI have asked why we are not advertising our comics in some of the leading magazines, he says it is very costly now-a-days instead he can put the same money for shows like this and make our comics to reach many people. Also he plan to advertise our "Muthu Never Before Special" in Kungumam and Puthiya thalimurai end of this year!
I have not prepared for any questions, so I just asked the question which he has not answered in our blog.
Today I had been to Bangalore comic-con, finally got a chance to meet our Great Editor and Radhakrishnan Annachi. Great moment in my life, after 25 years meet the creator of our comics! I have bought wild west book in our stall! Our is the only stall where the reader has a chance to discuss with the editor of the comics! I get a chance to meet Ahamed, Kallel, Rafiq Raja, and many others! It really surprise to see many of our fans comes from Chennai, Pondichery, and Madurai, this show the love they have with our comics! Hats of to you Guys.
DeleteSpeak to our Editor and he share some of his experience and had few questions about our comics! When I asked him about the release other comics also on time like this, he said I don't want to say anything now but our action will speak and answers!! Good!!
In the comic-con I have bought many books from amar chitrakata, they are selling for 100, 195, and 500; the quality of the papers are not good and coloring. But for our comics we are just paying Rs.10, 50, and 100, but getting quality and good stories. The bottom line, is if we are able to pay more for our comics definitely editor can give many more good comics for us!!
Overall the good saturday, Happy week-end guys!
In comic-con meet Ahamed, he read our comics from 1984 and he subscribe from 1984 itself! He told that our comics make him to learn Tamil! He reads all stories more than ones and he remember dialog and picture of each stories! :-)
DeleteWho ever I met there they are all saying we first read the hotline first and rest next! they are impressed with our editors writtin :-)
"Wild West ஸ்பெஷல்" சனிக்கிழமை தான் அனுப்புவதாக சொன்னார்கள், எனவே திங்கள் கிழமைதான் கிடைக்கும் என்று நினைத்தேன். பெங்களூர் Comic-Con-ல் கலந்துகொள்ள முடியாதது வருத்தமாக இருந்தது, ஆனால் இன்று "Wild West ஸ்பெஷல்" கிடைத்ததும் அந்த வருத்தத்தை போக்கிவிட்டது.
ReplyDeleteஎமனின் திசை மேற்கு அட்டகாசமான கலரில், இதுமாதிரியான கதைகள் நமது தமிழில் வருவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும. அந்த பக்கத்தை பிரித்து பார்த்த என் வீட்டில் உள்ள அனைவரும் ஒருகணம் அதிசயத்தனர். 37-ம் பக்கத்தில் உள்ள சித்திரத்தை பாருங்கள், அதில் வரையப்பட்டுள்ள விழிகள் கூட பேசுகின்றன. பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
சார் ,அட்டை படம் தற்போதைய 5 ல் இதுதான் டாப் .அடிக்கும் வண்ணத்திற்கு மட்டுமே அடிமை ஆன என்னையும் கவர்ந்து விட்டது இந்த அட்டை .முதலில் நான் சென்றது அடுத்த வெளியீடுகள் பற்றிய விளம்பரங்களுக்கே ,அப்பப்பா புல்லரிக்குது ,இப்போது நான் நண்பர்களின் எதிர் பார்ப்பு சுவாரஸ்யங்களை கலைத்து விட விரும்பவில்லை,ஒவொருவரும் தங்கள் கற்பனைகளை ஏற்றி கொள்ளுங்கள் ,அற்புதங்கள் காத்துள்ளன .புத்தகம் கையில் கிடைத்தவுடன் கொண்டாடுங்கள் நண்பர்களே,உங்கள் கொண்டாட்டத்திற்கு காரணங்களுக்கும் ,உற்ச்சாகம் கரை புரண்டோடவும் காரணமான காரணிகளுக்கு குறைவிருக்காது ,என பல நண்பர்கள் உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் நானும் அவர்களுடன் கைகோர்த்து அவர்களது வார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்க்கிறேன் ............
ReplyDeleteநன்றி சொல்ல......வார்த்தையில்லை எனக்கு ............
இனி கதைகளை படித்த பின்னர் மேலும் பேசுவேன்...............
Congratulations to be a part of Comic-con! Eagerly Awaiting for WWSpecial!
ReplyDeleteWhat's the surprise ??.? aaahaaaa mandayaeeee vedichudum polla irukku
ReplyDeleteDEAR EDITOR!
ReplyDeleteGOOD LUCK FOR THE COMIC CON. WISH YOU A GREAT SUCCESS THERE. I feel it will be helpful for many of our fans if you open up online subscription formats. Please let me know If there is any agent in coimbatore city where I can get all our issues this year.
Magesh.
இப்பொழுதுதான் எ.தி.மே படித்து முடித்தேன்.. SPEECHLESS !!!
ReplyDelete// என் நினைவுக்குத் தெரிந்த வரைக்கும் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஒரு லயன் இதழ் தயார் ஆவது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன் ! கடந்த 2 வாரங்களாய் முகம் சுளிக்காது செயலாற்றிட்ட எங்களது டீம் - க்கு எனது நன்றிகள் என்றும் உண்டு ! //
ReplyDeleteநிச்சயமாகவே Hibernation - lil இருந்து வழியே வந்து விட்டோம். ஹுசைன் போல்ட் நன்றாக தயாராகி tune ஆகி நிற்பது போன்று இருக்கிறது. உள்ளுரில் ஓடிய அவர் இனி ஒலிம்பிக்ஸில் ஓட வேண்டியதுதான் பாக்கி. ComicCon - இல் நன்றாக ஓடி மெடல் வாங்கி விண்ணை நோக்கி அவர் ஸ்டைலில் கரத்தை உயர்த்துங்கள். உடைக்க வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சித்திரங்கள் மட்டும் உறைந்திருக்கவில்லை புத்தகத்திலே ,நானும்தான் ................................
ReplyDelete----
ReplyDeleteWild West Special இரண்டு கதைகளும் படித்துவிட்டேன். அருமையான ஒரு புத்தகம். இரண்டு கதைகளும் டாப் க்ளாஸ். அற்புதமான சித்திரங்கள், அருமையான கதைகள் என என் ரேங்கிங்கில் டாப் இடத்தை இந்த இதழ் பிடித்துக்கொண்டது.
சில பக்கங்களில் பல் சக்கரத்தின் தடம் போன்ற ஒன்று தென்படுகிறது. அது பிரிண்டிங் மெஷின் குறைபாடா இல்லை பைண்டிங் மெஷினின் குறைபாடா எனத் தெரியவில்லை.
----
----
ReplyDeleteஇரண்டு கதைகளின் சித்திரங்கள் அற்புதங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த சித்திரங்கள் இதோ.
எமனின் திசை மேற்கு
*********************
பக்கம் - 13 - அந்த கானக வழித்தடங்கள்
பக்கம் - 52 - அந்த இரவு நேர வீட்டின் வெளிச்சங்கள்.
பக்கம் - 63 - அந்த கடைசி ஃப்ரேமில் உள்ள சேஸிங்
பக்கம் - 64 - இரவு நேர நட்சத்திரங்கள்
மரண நகரம் மிசௌரி
*********************
டைகரின் கதைகள் கருப்பு வெள்ளையில் படிக்கும் போது நம்மை கதையினிலுள் மூழ்கடிக்கும் திறன் கொண்டது. முதன் முதலில் டைகரின் கதையை கலரில் படிக்கும் போது கிடைத்த அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. சின்ன சின்ன யுத்தத் தந்திரங்கள்... WONDERFUL...
பக்கம் - 76 - லாந்தர் விளக்கின் ஒளியில் டைகர்
பக்கம் - 96 - அந்த வெடிப்பின் பிரளயம்
----
இந்த இரண்டு சித்திரங்களும் மனிதர்களால் வரையப்பட்டது என்பதனை நம்பமுடியவில்லை. அவர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்..
இக்கதைகளைத் தமிழில் படிக்க உதவிய எடிட்டருக்கு நன்றி.
வணக்கம் சார். தங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்தாலும், பின்னூட்டம் இட, சரியான சந்தர்ப்பம் கிட்டிடவில்லை. ஆனால் நேற்று வந்தடைந்த W.W Special இதழினை படித்தவுடன், எனது கருதுக்களை பகிராமல் இருக்க முடியவில்லை. தங்களை தொடர்புகொள்ள தொலைபேசியில் முயன்றேன், ஆனால் லைன் கிட்டிடவில்லை.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை இப்பொழுது வந்த இதழ்களிலேயே இந்த மாத வெளியீடுதான் மிகவும் நிறைவாக அமைத்துள்ளது. குறிப்பாக எமனின் திசை மேற்கு கதையினை விவரித்திட வார்த்தைகள் இல்லை. அதிலும் உறவுகளுக்கு இடையே வரும் உணர்சிப்போராட்டம், தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் புதிது. வான் ஹாம் உண்மையிலே மனிதர்தான அல்லது, கற்பனை ஊற்றா என்றே தெரியவில்லை.
இவ்வாறன, ஹீரோயிசம் இல்லாத எதார்த்த பாணியிலான கதையினை, இன்னும் சொல்ல போனால், கொஞ்சம் பெரிய கதையினை, ஒரே இதழாக நூறு பக்கங்களில் வரும் காலங்களில் எதிர்பார்கிறேன்.
டைகர் கதை வழமை போல் up to the mark. To Err is human. ஆகையால் ஒரு சில நெருடல்கள் இருந்தாலும், அதையும் தாண்டி உங்கள் குழுவினரின் உழைப்பே முன் நிற்கிறது. ஹாட்டஸ் ஆப் டு யு.
இருந்தாலும் சில கருத்துக்கள்.
விளம்பரங்கள் அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்து உள்ளன. நமது முத்து மெகா இதழின் விளம்பரத்தை ஒரே பக்கத்தில் உள்ளடக்கி வெளியிடலாம். முதல் கதையில் வந்த அத்தியாயம் பிரிப்பு ஓவியங்கள் மிகவும் அருமை. ஆனால் நீங்கள் அதனையும் பிரித்து அச்சிட்டபடியால் சிறு உறுத்தல். இது சரி செய்யப்பட்டால் இன்னும் கூடுதல் பக்கங்கள் கருப்பு வெள்ளை கதைக்கு கிட்டிடும்,.
அடுத்த வருடம் அமர்களமாக அமையப்போவது உறுதியாகி விட்டது உங்களின் அறிவிப்பால். வின்செஸ்டர் சங்கீதமும், பாலைவப்புளிதியும் என்னை அல்லது எங்களை புரட்டிப்போட்டிட போவது உறுதி. ஆனால் மரண முள் போன்ற பெரிய மற்றும் வித்தியாசமான இரவுக்கழுகார் கதை வந்திட்டால் மேலும் சுகம்.
இரண்டு நாட்களில் நமது புத்தக ஏஜன்ட் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தது. பலருக்கு ஏன் அனைவருக்குமே முத்து ஸ்பெஷல் இதழினை பற்றி தெரிந்திடவில்லை. நாற்பது வருடங்கள் என்பது மிகப்பெரிய ஒரு மைல்கல். அதனை கொண்டாடிட நமது முயற்சி சில நூறு முன்பதிவுகளில் முடிந்திட கூடாது. என்னை பொறுத்தவரை, தாங்கள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, Aggressive Marketing யுக்தியை கையாள வேண்டுகிறேன்.
ReplyDeleteஏஜென்ட் நண்பர்கள் விடுத்த ஒரு கோரிக்கை, விளம்பர அட்டை. குறைந்தது A3 Size கெட்டியான வண்ண அட்டையில் நமது முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் விளம்பரத்தை அடித்து தமிழகம் முழுக்க அனைத்து ஏஜென்ட் நண்பர்களுக்கும் அனுப்ப வேண்டுகிறேன். இதற்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு Minimum booking and additional booking, special bonus commission based on slab, போன்று ஏதாவது ஒரு யுக்தியை கையாள வேண்டும்.
FACEBOOK இணையத்தில் உடனடியாக ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் நமது மெகா இதழின் விளம்பரங்களை இட வேண்டும். எனது தனிப்பட்ட ஆசை இந்த மெகா இதழ், விற்பனையிலும் ஒரு மெகா வெற்றி பெற வேண்டும். குறைந்தது 2000 to 2500 முன்பதிவினையாவது எட்டிட ஆவன செய்ய வேண்டும். அதற்கு நமது வாசக நண்பர்களும் உதவிட முன்வரவேண்டுகிறேன்.
வலைப்பதிவின் துவக்கம் முதல் நான் இட்ட பெரிய பின்னூட்டம் இது. ஆகையால் இப்படியே நிறைவு செய்து விடுகிறேன். எடிட்டர் சார் இதனை நீங்கள் படிக்க நேர்ந்தால் தங்களது கருத்தினை அறிய ஆவலாக இருக்கிறேன்.
நன்றி.
Dear Editor
ReplyDeleteHow come, i have not received the subscription copy at Chennai.I would suggest that you take with the Courier guys that they should lift them all together and deliver all over at the same time with out delay.
Thanks
tgopalakrishnan
அன்பு ஆசிரியருக்கு ,தங்களை பார்க்கும் போது எனது பள்ளி ஆசிரியரைத்தான் நினைவு படுத்துகிறீர்கள்,ஹாட் லைன் உங்களது உழைப்பை சொன்னதென்றால் கதை அதன் விளைவை சொல்கிறது,உங்கள் உழைப்பு எங்களுக்கு கிடைத்த வரப்ரசாதம்தான்.அதிலும் சிங்கத்தின் சிறு வயதில் இந்த முறை பின்னியிருக்கிறது,அதனை பற்றி விவரிக்க துடிக்கிறேன் ,ஆனால் பிறரும் அந்த சந்தோசத்தை தங்கள் மூலமாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று கைகளை கட்டி போட்டுள்ளேன் .வாசகர் கடிதங்களை காதில் கொள்வீர்கள் என நினைக்கிறேன் .அந்த 114 ம் பக்கம் அனைத்தையுமே தூக்கி சாப்பிட்டு விட்டது .இரண்டு நாட்களுக்கு முன்னாள் பழைய டைகரின் கதைதனை மீண்டும் படித்த போது ,அந்த கருப்பு வெள்ளை அற்புதம் ஏதோ இழக்கும் உணர்வை தோற்றுவித்தது என்றால் மிகை ஆகாது ,மனித மனம் குரங்கு என்பது எனக்கு பொருந்தும் போல என நினைத்தேன் .இது வந்தால் அது ,அது வந்தால் இது.ஆனால் தற்போதைய வெளியீட்டை ரசித்த பின் அதனை மறந்தேன்,அற்புதம் சார் .டைகரின் கதைகளின் தொடர்ச்சியை வெளி விடுவதற்கு முன்னே தயவு செய்து முதலிலிருந்து வெளி விடுவதாக நினைத்து கொண்டு பழைய பாகங்களையும் வெளி விடவும் ,முழு வண்ணத்திலே .இன்னும் சந்தோசமான பல விசயங்களை புத்தகம் அனைவருக்கும் கிடைத்த பின்னர் தெரிந்து கொள்ளுங்கள்.........
ReplyDeleteஅற்புதம் ......................அற்புதம்...............................அற்புதம்...................................
மிக சிறந்த தேர்வே காமிக் கானிற்கு ......................நன்றி நன்றி ,நன்றி ,மீண்டும் என்னை பால்ய பருவத்திற்கே அழைத்து செல்லும் வண்ணச் சிதறல்களின் நாயகனுக்கு .................
On cloud Nine Steel Claw!
DeleteI met our editor Mr.Vijayan at comic-con Bangalore today. Till now he had been like a mythical figure to me, a hero without a face, a dark knight and only today his face was unmasked to me :). My happiness could not be measured when I took photos with him and his co at their stall. Plus I also got his autograph in the wild west special. Frankly I admit that i felt like how a Rajinikanth fan would have felt when he met Rajini for the first time.
ReplyDeleteThank you Mr.Vijayan
I just cannot move away from the stall. Even when I was seeing other stalls i frequently was looking at our lion comics stall only.
ReplyDeleteplease tell, any one of us bangalore comics friends
ReplyDeleteIS COMICS CON is sucess OR not
டியர் எடிட்டர்,
ReplyDeleteகுறு குறுவென்றிருக்கிறது. காமிக் கான் பற்றிய உங்களது பதிவினை எதிர்பார்த்து, நானும், மற்ற நண்பர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
அனைவருக்கும் வணக்கம்,
ReplyDeleteஇது வரை வந்த கவ்பாய் காமிக்ஸ்களில் மிக சிறந்தது எமனின் திசை மேற்கு. ஒரு சராசரி Wild வெஸ்ட் மனிதனின் வாழ்க்கை தேடல். மென்சோக காவியம். அற்புதமான சித்திரங்கள். வண்ணத்தில் கேப்டன் டைகர் ஜொலிக்கிறார். அணைத்து கேப்டன் டைகர் கதைகளும் வண்ணத்தில் மறுபதிப்பு வேண்டும்.
தமிழ் காமிக்ஸ்க்கு என்று ஒரு FONT இருந்தால் நன்றாக இருக்கும். பரலோக பாதையின் இறுதி பாகங்கள் கலரில் அறிவிப்பு அருமை. ஆனால் முதலிரண்டு பாகங்களுடன் சேர்த்து வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் காமிக் கிளாசிக் ல் முதலிரண்டையும் , முத்துவில் கடைசி இரண்டையும் ஒரே சமயத்தில் வெளியிட்டால் கூட ஓகே. :))
same feeling
DeleteAgreeing with both u guys .Please consider releasing all four parts in color . May be as an Summer special .
Deleteமதுரை கண்காட்சியில் ஒரு காமிக்ஸ் முத்திரை
ReplyDeletehttp://tamilcomicskadanthapaathai.blogspot.in
டியர் எடிட்டர் சார் ,
ReplyDeletewild west ஸ்பெஷல் இதழ் கிடைத்தது. வாசகர்கள் அனைவரும் சொல்வதையே நானும் வழிமொழிகிறேன். இது வரை வந்த அனைத்து இதழ்களையும் இது மிஞ்சி விட்டது. 2013 இல் நமது ஆஸ்தான கௌபாய் டெக்ஸ் வில்லர் வருகை உற்சாகம் அளிக்கிறது. தேங்க்ஸ் எ லாட்!
எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி
நண்பர்களே!
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்த காமிக்ஸ் ஹீரோ ஒருவரை (டெக்ஸ் வில்லரோ, கேப்டன் டைகரோ, லார்கோவோ) நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் மனம் எப்படி துள்ளிக் குதித்திருக்கும்?!...
கிட்டத்தட்ட அதே மனநிலைதான் நேற்று காமிக் கானில் நமது எடிட்டர் விஜயனை சந்தித்தபோது எனக்கும் ஏற்பட்டது. 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்துக்களின் மூலமாக மட்டுமே அறிமுகமான எனது ஆதர்ச நாயகனை நேரில் சந்தித்தபோது உற்சாகத்தில் வெலவெலத்துப் போய்விட்டேன்.
'காமிக்கானில் நமது ஸ்டாலுக்கான வரவேற்புப் பரவாயில்லையா சார்?' என்று சற்றே சந்தேக தொனியில் கேட்டேன். 'பரவாயில்லையெல்லாம் இல்லை,Excellent ஆக போய்க்கொண்டிருக்கிறது' என்று சந்தோஷமாய் சொன்னார்.
பணிநிமித்தமாக பெங்களூரு சென்றிருந்த என் பயணத்திட்டத்தில் காமிக்கானுக்காக அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றாலும், எடிட்டர், எடிட்டரின் மகன், அண்ணாச்சி இராதாகிருஷ்ணன், நண்பர்கள் பிரசண்ணா, பழனிவேல், Sri Ram ஆகியோரையும் சந்திக்க கிடைத்த அந்த சில நிமிடங்களை என் வாழ்வில் என்றும் மறக்க இயலாத பொன் நிமிடங்களாகவே நினைக்கிறேன்.
வரவிருக்கும் தங்கக் கல்லறை அட்டைப்படத்தையும் காணநேர்தது கண்களுக்கு விருந்து! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலுக்கான அட்டைப்படமும் பழைய பாணியில் நெஞ்சை அள்ளியது.
நண்பர் கார்த்திக் சோமலிங்கா, ரஃபிக் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு ஓரிரு நிமிட நேர இடைவெளியில் தவறிவிட்டது சற்று வருத்தம் அளிக்கிறது.
காமிக்கான் பற்றிய மொத்த நிகழ்வுகளை எடிட்டரின் வலைப்பதிவு மூலமாகவும், நண்பர்களின் வலைப்பதிவு மூலமாகவும் அறிந்துகொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலாயிருக்கிறேன்.
சீக்கிரம் ஆகட்டும்....
அன்பு நண்பர் விஜய் அவர்களே! நான் கூட மிஸ் செய்த சங்கதி நமது ஆசிரியர் கையொப்பம் வாங்காமல் விட்டதுதான். கம் பேக் சிறப்பிதழ் வாங்கிய சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க மறந்து விட்டேன். எப்படியும் அடுத்த வருடம் நெவெர் பிபோர் ஸ்பெஷல்கு வாங்கி விடுகிறேன். நாகராஜனும் நானும் அட்டாக் பண்ண போறோம்! நான்தான் தொண்ணூறு நண்பர்களே! ஹி ஹி ஹி ஒரு பில்ட் அப் தான்!
ReplyDeleteநண்பா நான் ஒன்று !!! நூறுக்கும் ஆசைப்படுகிறேன் :)
Deletedear John simon,
Deleteநேரமின்மை காரணமாக உங்கள் சந்திப்பையும், உங்களைப் போலவே எடிட்டரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் நானும் தவறிவிட்டேன். உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் ஏற்படும் என்று தோன்றுகிறது.
Never before special booking no.115 (நீங்க கொடுத்த அதே பில்ட் அப்!)
நண்பர்களே ,
ReplyDeleteCOMIC CON அனுபவம் பற்றிச் சொல்லிட வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறேன் !! இன்று சென்னையில் பணி நிமித்தம் சுற்றித் திரிவதால் விரிவாக நாளை பதிவிடுகிறேன் ! Have quite a bit to share !!
ஆவலுடன் காத்திருக்கின்றோம் !!!
Deleteஆவலுடன் காத்திருக்கின்றோம் !!!
ஆவலுடன் காத்திருக்கின்றோம் !!!
Dear vijayan sir,
Deletecomic con-ல் உங்களைச் சந்தித்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு! ரொம்பநாள் ஆசைப்பட்டது திடீரென்று ஒருநாள் நிறைவேறிடும்போது மகிழ்ச்சியில் மனசு திக்குமுக்காடிப் போகுமே, கூடவே கொஞ்சம் பெருமிதமும் தொற்றிக்கொள்ளுமே - அப்படியிருக்கிறது இப்போது என் மனசு! உங்களை இதுவரை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்ததில்லை என்பதால், எடிட்டர் விஜயன் என்பவர் ஒரு வயதான, வழுக்கை விழுந்த, தொப்பையை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் நடக்கும் மனிதராக இருக்கலாமோ என நினைத்திருந்தேன். கடவுளே! நல்ல வேளையாக அப்படியெல்லாம் இல்லை! சற்றே மெலிந்த தோற்றமுடைய டெக்ஸ் வில்லரைப்போல் அட்டகாசமான கெளபாயாய் காட்சியளிக்கிறீர். உங்கள் இளமையும், துடிப்பும் இன்னும் வெகு காலத்திற்கு எங்களுக்கு காமிக்ஸ் கிடைக்கப்போவதை அப்பட்டமாய் பறைசாற்றுவதில் பூரிப்பாய் உணர்கிறேன்.
காமிக்கானில் அதிக நேரம் உங்களுடன் செலவிட முடியாமல் போனதற்கு பணிச்சுமை காரணமாகிவிட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே!
ஒரு ஆலோசனை சார். தவறென்றால் மன்னிக்கவும். வரவிருக்கும் 'தங்கக் கல்லறை'க்கான அட்டைப்பட டிசைன் அட்டகாசம். தலைப்புக்கீழே 'பாகம் 1&2' என்றிருக்கிறது. கடைகளில் வாங்க நினைக்கும் புதிய வாசகர்களுக்கு 'இந்தக்கதை பாகம் 3,4 என்று தொடருமோ?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அச்சந்தேகம் வாங்குவதற்கு தயக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஆகவே, 'பாகம் 1&2' என்பதற்குப் பதிலாக 'முழுக் கதையும்... முழு வண்ணத்தில்' என்றிருந்தால் இந்தக் குழப்பம் வராமல் தடுக்கலாமே?
டியர் எடி ,,,,,,,,,,,,,,,, காமிக்ஸ் con பெங்களூர் வெற்றி பெற்றது மகிழ்ச்சி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Deleteகாமிக்ஸ் con பற்றிய தங்கள் மந்திர எழுத்துக்காக ,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,
காத்திருகிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,,
டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஜென்ம சாபல்யம் என்பார்களே.. நான் அதை அடைந்து விட்டேன்!! நமது எடிட்டர், அவருடைய புதல்வர் விக்ரம், அலுவலக நண்பர்கள் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி, வேலு, லிங்கம் மற்றும் பல காமிக்ஸ் நண்பர்களை காமிக் கானில் சந்தித்தேன்.. சனி, ஞாயிறு இரு நாட்களும் பல நண்பர்கள் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள். சில நச் நிகழ்வுகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்:
ReplyDeleteகாலை முதல் ஆளாக வாசக நண்பர் பழனிவேலு ஆசிரியர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நான் ஒன்பது மணியளவில் ஸ்டாலில் நுழைந்தேன். அதன் பிறகு, ஆசிரியரை சந்தித்தது, பேசியது, புகைப்படம் எடுத்தது எல்லாமே ஒரு கனவு போல உள்ளது! அதன் பிறகு நண்பர்கள் கலீல், ஸ்ரீராம், கார்த்திக் சோமலிங்கா, ரபிக் ராஜா, அஹ்மத் மற்றும் பலரை சந்தித்தேன்!
ஸ்ரீராம் அவர்கள் ஒரு கவ்பாய் தொப்பி, டி ஷர்ட், அதில் முன்பக்கம் டெக்ஸ், பின்பக்கம் கேப்டன் டைகர் என கலக்கலாக உடையணிந்து அனைவரையும் ஒரு கணம் திரும்பிப்பார்க்க வைத்தார்!
கார்த்திக் தனது வலை தளத்துக்காக ஆசிரியரை ஒரு "Exclusive" பேட்டி எடுத்தார்! (வீடியோ எங்கே கார்த்திக்? சீக்கிரம் வலையேற்றுங்கள்!)
ஞாயிறு அன்று மீண்டும் சென்றேன்! நண்பர்கள் ஈரோடு விஜய், சேலம் விஜயராகவன் என பல நண்பர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்! நண்பர் விஜயராகவன் ஆசிரியரை சந்தித்து ஒரு பரிசு அளித்தார்! அதில் வரவிருக்கும் முத்து காமிக்ஸ் "Never Before Special" மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று எழுதி எடுத்துவந்திருந்தார்!
ஒரு நடுத்தர வயது இளைஞன் வந்து மிக ஆர்வமாக அனைத்து புத்தகங்களையும் புரட்டினான்! இதில் என்ன விந்தை என்கிறீர்களா? அந்த இளைஞனுக்கு தமிழ் படிக்கவே வராது! தனது அம்மாவுக்காக என்று நமது லயன் நியூ லுக் ஸ்பெஷல் புத்தகத்தை வாங்கிச் சென்றான்!
ஒரு 50+ அன்பர் உற்சாகமாக வந்து "இரும்புக்கை மாயாவி" புத்தகம் போடுவார்களே அந்த முத்து காமிக்ஸ் நீங்கள் தானே, எனக்கு அனைத்து மாயாவி புத்தகங்களும் வேண்டும் என்று கேட்டார்! சோதனையாக மாயாவி கதையில் சமீபத்தில் வந்த கம் பேக் ஸ்பெஷலை தவிர வேறு எதுவும் கைவசம் இல்லை, அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன! அவருக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் ஏமாற்றம். கம் பேக் ஸ்பெஷலை மட்டும் வாங்கிக்கொண்டு ஆதங்கத்தோடு சென்றார்!
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.. அத்தனை நிகழ்வுகள்! இரு நாட்களும் போனதே தெரியவில்லை. கோடி ருபாய் கிடைத்தாலும் நமது ஸ்டாலில் கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது!
நண்பர்களே உங்களது உற்சாகம் என்னையும் தொற்றி கொண்டு விட்டது,உங்கள் அன்பவங்களை கேட்டு ,உங்களை விட அதிக உற்சாகத்தில் நான்..................நமது பயணமும் மேற்க்கே மாபெரும் வெற்றி என்பது கூடுதல் சந்தோசம்,ஆசிரியர் பட்டய கிளப்ப போறார் என அதிக பட்ச .எதிர்பார்ப்புடன்............
ReplyDeleteநானும் தான் இரும்பாரே!
ReplyDeleteமை டியர் மானிடர்களே.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................(ஒன்றுமில்லை.wild west special- ஐ பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.ஹிஹி).
ReplyDeleteநான்தான் நூறு. சார் எனக்கு ஒரே ஒரு ஆசை நம்ம இரும்பு கை எத்தன் முழுவதுமா வண்ணத்தில் படிக்கணும்! ப்ளீஸ்
ReplyDeleteவிஜயன் சார்
Deleteநண்பர் திரு ஜான் சைமன் எதற்கும் அவ்வளவு சீக்கிரம் ஆசைப்படமாட்டார் (!).
எனவே அவரது நியாயமான ஆசை (இரும்பு கை எத்தன் முழுவதுமா வண்ணத்தில் படிக்கணும்!) உங்களால் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன் :)
ஹி ஹி புளிய வேதாளம் முந்தி விட்டது! வாழ்த்துக்கள் புனித சாத்தான் அய்யா!
ReplyDeleteGlad to hear all these stories about "comicon", thanks guys for sharing and encouraging others to do the same. Awaiting editor's "post" regarding post-comicon like others.
ReplyDelete-- V .Karthikeyan
விஜயன் சார் ஏமாற்றிவிட்டார். இப்படியெல்லாம் ஏமாற்றுவார் என்று நான் நினைக்கவே இல்லை....
ReplyDeleteஏமாற்றம் ஒன்று : 15 ந்தேதி வரும் என்று சொன்ன ww ஸ்பெஷல் ஒரு வாரம் முன்பே வெளியிட்டது முதல் ஏமாற்றம்
ஏமாற்றம் இரண்டு : சனிகிழமைதான் புத்தகம் டெலிவரி என்று சொல்லிவிட்டு, அன்றே புத்தகம் கைக்கு கிடைக்க செய்தது இரண்டாவது ஏமாற்றம்.
ஏமாற்றம் மூன்று : இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த கதைகளை எல்லாம் தூக்கிசாப்பிடும் அளவிற்கு மிகச்சிறந்த கதைகளை ww ஸ்பெஷலில் வெளியிட்டது மூன்றாவது ஏமாற்றம்.
இதற்கெல்லாம் தண்டனையாக விஜயன் சார் எங்களையெல்லாம் இதுபோல் மாதம் மாதம் ஏமாற்ற வேண்டும் என்பதே..:)
நான் ஏமாற தயார். நண்பர்களே நீங்களும்தானே.....
I can only wish I can be as "disappointed" as you :)
DeleteI am still waiting for the double thrill special which is probably lost in the mail :(
நான் சனி மாலை சென்றிருந்தேன். ஆனால் எடிட்டர் i பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வைத்து விட்டு வந்த பின்பு தான் கடைசிக்கு ஒரு Autograph வாங்கி இருகலாமே என்று வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteMissing (:
In comic-con I met many of our reader but not able to recollect their name, by seeing photos in karthikeyan blog I can recollect names like, Prasanna, Sriram, Karthikeyan! I have seen their post in our blog but this time I could speak to them few words!! Thanks guys!!
ReplyDeleteCan anybody help me where to purchase Wild West special in Trichy. Thanks in advance
ReplyDeleteDear comic lover,
DeleteI dont hav the answer for your question. Someone in this blog will help you to know the answer.
My suggestion is, subscription is the best way to receive all our comic treasures at your door step. You will feel the pleasure of soul whenever you happen to hear the voice of courier boy that sounds "சார், பிரகாஷ் பப்ளிகேசனிலிருந்து உங்களுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு"
You will love it as we do!
You can also buy it from e-bay http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்வில் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வு
ReplyDeleteகாமிக்ஸ் கானில் நமது லயன் முத்து காமிக்ஸின் நிகழ்வுகள் பற்றிய சிறு பதிவு உங்கள்ளுகாக
http://modestynwillie.blogspot.in/2012/09/blog-post.html
Shriram
This comment has been removed by the author.
ReplyDeleteகாமிக் கானில் 'லயன்' கலந்து கொள்வது குறித்து மகிழ்ச்சி!நான் எதிர் பார்த்ததற்கும் மேலாக காமிக்ஸ் மீது உங்கள் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது! இதை வெறும் வியாபாரமாக நீங்கள் நினைக்க வில்லை என்பதை 'சிலர்' புரிந்து கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்! மொழி தெரியாத வேறு ஒரு ஊரில் காமிக்ஸ் தொடர்பான ஒரு விழாவில் ,, பெரிய ஜாம்பவான்களோடு கலந்து கொள்வதில் லாபம் இருக்க முடியாதுதான்! ஆனால் லயன் காமிக்ஸ் முத்திரை பதிந்தால் போதும்.., என்று காமிக்ஸ் மீது உங்களுடைய ஆர்வம் அல்லது காதல் (எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்) போன்றவற்றையும் தாண்டியது உங்கள் அர்பணிப்பு உணர்வு! வெறும் பாராட்டாக அல்ல,, உண்மையாகவே சொல்கிறேன்!!
ReplyDeleteReplyDelete
wild west special என்னை ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு அழைத்துச் சென்றது.பொதுவாக எப்படிப்பட்ட வருத்தமான சூழ்நிலையில் நான் இருந்தாலும் நமது காமிக்ஸ்கள் படிக்கும்போது மனம் லேசாக சருகாகி மிதக்கும்.இதனாலேயே என் மனைவியிடம் 'காமிக்ஸ் படிக்கும்போது மட்டும் முகத்தில் அவ்வளவு சந்தோசமா?' என்று கிண்டல் வாங்கியிருக்கிறேன்..ஆனால் எமனின் திசை மேற்கு படித்துவிட்டு கொஞ்ச நேரம் யாரிடமும் பேசவில்லை.என் மனம் இது வெறும் கதை என்பதையும் மறந்து சற்று நேரம் ஊனமானது.இது நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவமே.அடிக்கடி இப்படி கதைகளை வெளியிடுங்கள்.அடுத்த வரப் போகும் இதழ்களுக்கான ட்ரெய்லர்கள் எனது ஆவல்களை பலமாகத் தூண்டுகின்றன...மினிலயன்,ஜூனியர் லயனின் பழைய ஹீரோக்கள் சிந்துபாத்,விஸ்கி சுஸ்கி ஆகியவர்களின் சாகசங்களை இணைத்து ஒரு ஸ்பெஷல் போட்டால் நானும் என் மகன் வயதையொத்த (பத்து வயது) பொடுசுகளும் ரொம்ப சந்தோசப்படுவோம்... I love lion comics.I am proud of a lion comics fan...
ReplyDeleteYou would have never thought the stall rates going up in chennai comic con in 2023... எப்படியோ கலக்கிட்டீங்க சார்
ReplyDelete