Powered By Blogger

Sunday, February 12, 2012

எல்லைகள் தாண்டுவோமா ?


ஒரு மார்க்கமான தலைப்பாக இருக்குதே என்று சிந்திக்கும் நண்பர்களுக்கு: No fears ...read on please !

வெளிநாடுகளுக்குப் பயணம் ஆகும் போது, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆங்காங்கே உள்ள காமிக்ஸ் கடைகளுக்குச் செல்வது என்பது சுவாரஸ்யமான விஷயம் எனக்கு..! But கொஞ்ச காலமாய் அதற்கு அவ்வளவாய் வாய்ப்புகள் அமைந்திடவில்லை. So சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது தேடித் பிடித்து பெரியதொரு காமிக்ஸ் shop -க்குப் போயிருந்தேன் ...!



"கிழிஞ்சது கிருஷ்ணகிரி  ... இன்னொரு அமெரிக்க புராணமா..?" என்று தலையைச் சொரியும் ; புருவங்களை உயர்த்தும் நண்பர்களுக்கு ஆறுதலான சேதி...! இது முழுக்க முழுக்க காமிக்ஸ் பற்றிய பதிவு மட்டுமே !!

ரொம்ப காலமாய் எனக்குள் உள்ள கேள்வி இது...! (அது என்னவென்று கேட்கிறீர்களா....? இந்தப் பதிவின் இறுதி வரைப் பொறுமையாய் படித்திட்டால் தெரிந்திடும் !)

காமிக்ஸ் எனும் ரசனைக்குப் பல முகங்கள் உள்ளன ... ! நமது ரசனை என்பது ரொம்பத் தெளிவு :

1  நமது முதல் எதிர்பார்ப்பு - ஸ்பஷ்டமான ; தெளிவான கதையோட்டம். அவ்வப்போது XIII ; மர்ம மனிதன் மார்டின் போன்ற தொடர்களுக்கு வேண்டுமானால் இந்தக் condition தளர்த்திக்கலாம் !

2 .வலுவான ஒரு ஹீரோ / ஹீரோயின் ! சில சமயம் "வலுவான" என்னும் இடத்தில "ப்ரியம் காட்டக் கூடிய " ஆசாமிகளுக்கும் இடம் உண்டு தான் ! உதாரணம் : அடிபட்டு..உதைபட்டு..சராசரி மனுஷனாய் காட்டிலும் மேட்டிலும் உலவும் நமது கேப்டன் Tiger!

3 தரமான சித்திரங்கள்..artwork ....! (இதுக்கும் விதிவிலக்குகள் இல்லாமல்  இல்லை...கேப்டன் பிரின்ஸ் கதைகளை மறக்க முடியுமா !!)

4 ஓரளவுக்காச்சும் logic !! (கரண்டில் கை விட்டு மாயமாய் மறையும் மாயாவி கதைகளையும் ; spider  கதைகளையும் அடுத்த இதழாக வெளியிடவிருக்கும் நேரத்தில் லாஜிக் பற்றிப் பேசுரதுலாம் ரொம்ப ஓவர் என்ற உங்கள் mind  voice எனக்குக் கேட்காமல் இல்லை !!)

மேற்சொன்ன எந்த ஒரு விஷயத்திலும் அடங்கிடாமல் ...எந்த ஒரு விதத்திலும் நம் ரசனைக்கு ஒத்துப் போகாத ஓராயிரம் காமிக்ஸ்களை அந்த அமெரிக்கப் புத்தகக் கடையில் பார்த்த போது பேந்தப் பேந்த முழிக்க மட்டுமே தோன்றியது எனக்கு .



"அந்த man "...."இந்த man " என்று எக்கச்சக்கமாய் சூப்பர் ஹீரோ தொடர்கள் ! அட்டகாசமான அட்டைப்படங்கள்....அமர்க்களமான விளம்பரங்கள்..promotions ...நல்ல artwork ..!ஆனால் ரெண்டு பக்கத்தைத் தாண்டி மூன்றாவது பக்கத்துக்குப் போவதற்குள் ஏதோ போன வாரத்தில் செய்த போண்டாவை சாப்பிட முயற்சிப்பது போன்ற உணர்வைத் தடுத்திட முடியவில்லை !



அந்த கணத்தில் 1990 களில் BATMAN கதைகளை நாம் வெளியிட்ட சமயம் கூட...ஒரு இதழுக்கான கதையைத் தேர்வு செய்திட நான் எத்தனை DC Comics இதழ்களைப் புரட்டி இருப்பேன் என்பது என் மண்டைக்குள் flashback ஆக ஓடியது !  சாம்பிள்கள் எத்தனை கேட்டாலும் முகம் சுளிக்காமல் அனுப்பிட்ட DC காமிக்ஸ்-ன் archives இன்-சார்ஜ் Mrs .Phillis Hume -க்கும் மானசீகமாய் ஒரு நன்றியும் சொல்லத் தோன்றியது ! கிட்டத்தட்ட 50  கதைகளைப் படித்து..அதிலிருந்து ஒன்றைத் தேற்றி..அதிலும் லேசு பாசாக எடிட்டிங் செய்து தான் வெளியிடுவோம். ("சிரித்துக் கொல்ல வேண்டும்" - ஒரு அற்புதமான விதிவிலக்கு!!)

பிற காமிக்ஸ் படைப்புகளை மட்டம் தட்டிடுவதோ ..நமது ரசனைகளை உயர்த்திப் பிடிப்பதோ எனது நோக்கமே அல்ல..நம்மால் ஏன் ஒரு வட்டத்தைத் தாண்டி பலதரப்பட்ட ரசனையினை அரவணைத்திட முடியவில்லை என்பதே என் மண்டைக்குள் ஓடிய கேள்வி !

இந்த சமாச்சாரத்தை..இந்தக் கேள்வியினை இப்போது எழுப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம் உங்களுக்கு...! காரணம் இல்லாமல் இல்லை...!

சமீபத்திய நமது ComeBack ஸ்பெஷல் இதழில் முழு வண்ணத்தில் அட்டகாசமாய் வந்திருந்த லக்கி லூக் கதைக்கு வந்திருந்த சில விமர்சனங்கள் eyeopener ரகம் என்றே சொல்ல வேண்டும். "அற்புதமாய்  வண்ணத்தில் வந்திருந்தாலும், இதுவரை வந்ததிலேயே படு மட்டமான லக்கி லூக் கதை இது தான்" என்று எழுதி இருந்தார்கள் நம் நண்பர்கள்.


லக்கி லூக் தொடர்களில் மிக சமீபத்திய ஆக்கம் "ஒற்றர்கள் ஓராயிரம்" என்ற பெயரில் நாம் வெளியிட்ட இந்தக் கதை ! இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்த போதே இது "ஆஹா .ஓஹோ" ரகமல்ல என்பது தெரிந்தது. But still "சொதப்பல்..படு மட்டம்" என்று மார்க் வாங்கும் அளவுக்குப் போகும் என்பது நான் எதிர்ப்பார்த்திடா சமாசாரம். Maybe வண்ணத்திலும், தரமான அச்சிலும் நானும் மயங்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அனால், நமது வாசகர்களோ எப்போதும் போலவே படு உஷார்!!


இத்தனை நுணுக்கமாய் நமது ரசனை இருப்பது ஒரு பக்கம் சந்தோஷமாய் உள்ளபோதிலும் ...மறுபக்கம் நமது discerning taste இன்னும் நிறைய விதமான காமிக்ஸ்களை ; மாறுபட்ட கதைகளை ...ரசனைகளை பரிச்சயப்படுத்திக் கொள்ளத் தடையாக இருக்குமோ என்றும் எண்ணம் எழாமல் இல்லை !

ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்..ஐரோப்பாவில் Thorgal எனும் ஒரு பிரெஞ்சுத் தொடர் ரொம்பவே பிரசித்தம். ஒவ்வொரு இதழும் ஆறு லட்சம் பிரதிகள் அச்சாகும் என்று அதன் publisher சொன்ன போது நான் "ஞே" என்று தான் முழித்தேன்..ஏனெனில் அது ஒரு வித science -fiction ; history ; மாயாஜாலம் கலந்த கலவை...நமக்குப் பொருந்தாத கதைகள் லிஸ்டில் அதற்கும் நான் இடம் கொடுத்துள்ளேன்.


பிரசித்தி பெற்ற எழுத்தாளர் Van  Hamme-ன் படைப்பு இந்த Thorgal என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் ! அங்கே பெரும் வெற்றி பெற்ற ; ஆனால் நம் வழக்கமான ரசனைக்கு அப்பாற்பட்ட ; இன்னும் நாம் எட்டிப் பிடிக்கா கதைகள்..தொடர்கள் ஏராளம் உண்டு !  



அந்த அமெரிக்க புத்தகக் கடலில் மண்டையை சொறிந்து கொண்டு நின்ற கணத்தில் என்னுள் இந்த சிந்தனைகள்  எழுந்தன !

கௌபாய் ; detective ; கார்ட்டூன் ரசனைகளைத் தாண்டி நமது எல்லைகளை விரிக்கும் முயற்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் சமயம் எப்போதென்ற கேள்வி தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கேள்வி !

Give it some thought guys !!

25 comments:

  1. திரு விஜயன் அவர்களே, முதல் முறையாக வாசகர்களிடம், அவர்களின் ரசனை என்ன என்று கேட்டு உள்ளீர். நன்றி!

    இன்றைய நாளில் 100 பணம் ஒன்றும் பெரியதொகை இல்லை. எதிர்பார்ப்பது நல்ல கதைகள் மற்றும் புதிய அறிமுகம்.

    ஒரு அதிரடி, ஒரு நகைசுவை, ஓர் சயின்ஸ் or பிச்சன், ஒரு குழந்தைகளுக்கான கதை என்று வெளிடலாம்.

    1. லார்கோ வின்ச், வாயன் ஷெல்டன், ஆல்பா, லேடி எஸ், IR$,
    2. ப்ளூ கோட்ஸ், வல்ஹால (டேனிஸ்),
    3. தோர்கள், அல்டிபறேன், ப்ளக் & மோர்டிமோர்,அக்குவப்ளூ, வலேரியன், கோல்டன் சிட்டி, etc..
    4. யாகரி

    இது எனக்கு தெரிந்தா லிஸ்ட் மற்றும் இது எல்லா வயதுனரையும் திருப்திபடுத்தும்.

    பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று இருப்போம்.

    ReplyDelete
  2. திரு விஜயன் அவர்களே,

    கண்டிப்பாக தமிழ் ரசிகர்களிடம் கேட்கபட வேண்டி கேள்வி என்பதில் எந்த ஐயமுமில்லை.

    ஐரோப்பிய கதைகளில் உள்ள ஒரு தாக்கம், மற்றும் கதையமைப்பு, அமெரிக்க கதைகளில் இல்லை என்பது உண்மையான ஒன்றுதான். அதற்கு காரணம் இரு நாட்களிலும் உள்ள ரசிகர்களின் ரசிப்புத்தன்மை, மற்றும் வியாபார தந்திரங்கள் என்பதை சரியாக வகை காட்டி கொள்ள முடியும்.

    உதாரணத்திற்கு, ஐரோப்பிய கதைகளில் பெரும்பாலும் ஒரே தொடர்கள் 20 வருடங்கள் வெளியானாலும், அதன் மொத்த இதழ்கள் 20 லிருந்து 25 தாண்டி இருக்காது. இப்படி நேரம் செலவழித்து ஒவ்வொரு தொடர்களையும் செதுக்கும் பாணி, அவர்கள் கதைகளில் வலுவை சேர்க்கின்றன. ஆனால் இதே சமயத்தில் அது ஒரு

    சமீபத்திய லக்கி லூக் கதைகளை நமது ரசிகர்கள் வெறுப்பதற்கு காரணமும், அதன் வெற்றி ஆசரியர் கூட்டணி அதில் ஒருங்கே பணியாற்றவில்லை என்பதுதான். முன்பிருந்ததை விட சிறப்பான ஓவிய பாணிகளில் அவைகள் வெளிவந்தாலும் (இப்போதைய கணிணி முறை அதற்கு முக்கிய காரணம் என்பதையும் குறிப்பிட வேண்டும்), அதன் அடிப்படை கதையம்சம் இப்போது இல்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

    இவற்றை தாண்டி ஐரோப்பிய புதிய கதைகள் அங்கு சட்டைபோடுவது, அங்குள்ள ரசிகர்களின் ரசனை மாற்றை எடுத்து காட்டுகிறது. தற்போதைய பெரும்பான்மை ரசிகர்கள் அதிகம் விரும்புவது அட்டகாசமான ஓவியங்களை கொண்ட சித்திர தொடர்களை தான். அதில் கதைகள் சற்றே தொய்வுடன் இருந்தாலும், அதை அவர்கள் சட்டை செய்து கொள்வதில்லை. இதற்கான சமீபத்திய உதாரணங்கள்.. தோர்கலில் இப்போது வேறு ஆசிரியர் குழு மூலம் வெளியிடபடும் புதிய ஆல்பங்கள், கூடவே பிரின்ஸின் ஆசிரிய குழு மாற்றம், இஸ்நோகுட் புதிய ஆல்பங்கள் என்று அடுக்கி கொண்டே செல்லாம். சில சமயங்களில் புதிய ஆல்பங்கள் புதிய ஆசிரியர் கூட்டணியில் அருமையாக வருவதும் இருக்கிறது. சமீபத்திய் உதாரணம் xiii ன் புதிய ஆல்பம், அது அத்தி பூத்தது போல தான் என்பதும் நினைவு கொள்ளவேண்டும்.

    அமெரிக்க கதைகளை பொறுத்த வரை, சூப்பர்ஹீரோக்கள் என்ற ரசனையை தாண்டி அவர்கள் செல்வது மிக கடினம். எனவே அதை சுற்றி கதையமைப்பை உருவாக்கும் அவர்களால், பெரிய அளவில் புதிய கதைகளங்களை எட்ட முடியவில்லை. நமது ரசனைகளுக்கு அப்புத்தகங்கள் எடுபடவது நடப்பது அரிதே. ஆனாலும், DC ன் வெர்டிகோ என்ற தனிபட்ட இம்பிரின்ட் புத்தகங்கள், ஒரு தனித்துவம் உண்டு. அனேகமாக, அமெரிக்க கதைகளை நமது ரசிகர்களுக்கு அறிமுகபடுத்த அத்தொடர்கள் ஒரு சரியான ஆரம்பமாக இருக்கம் என்று நான் நினைக்கிறேன்.

    மேற்படி உங்கள் எண்ண்ததையும், மற்ற ரசிகர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள எனக்கும் ஆர்வமே.

    பி,கு,: அமெரிக்க கதைகளை நீங்கள் வெளியிடுவது சர்ச்சைகுரிய விவாத பொருள் தான் என்றாலும், தோர்கல் தேர்வு அருமையான ஒன்று... வான் ஹாமேவின் தொடர் மொத்தத்தையும் கண்டிப்பாக வெளியிடுங்கள்... அவை ஒரு பொக்கிஷம்.. சினிபுக் ஆங்கிலத்தில் அவற்றை வெளியிட ஏற்கனவே ஆரம்பித்து விட்டதால், பிரஞ்சிலிருந்து அவற்றை மொழிமாற்றம் செய்து புரிந்து கொண்டு, பிறகு தமிழிற்கு கொண்டு வரும் கஷ்டமும் இல்லை.

    ReplyDelete
  3. முற்றிலும் உண்மை... அமெரிக்க கதைகள் அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை... ஒரு ரசிக்க கூடிய சித்திரம் கூட இல்லை... ஐரோப்பியன் கதைகள் சித்திரங்களும், கதைகளும் ரசிக்கும்படி உள்ளன...

    ReplyDelete
  4. Sir Ellaigal Thaandalaam,

    Good question to our readers and we looking these series- Thorgal, Zagor, Dylan dog, Largo winch, Blue coats etc..

    ReplyDelete
  5. சார்,
    சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் மாதிரி 'புது முயற்சி ஸ்பெஷல்' ஒன்னு போடுங்க சார். எல்லாருக்கும் பிடிச்சா கண்டினியு பன்னுவோம் இல்லைனா விட்ருவோம்.
    அந்த மேன் இந்த மேன்கள்ளை விட்டு விட்டு ஐரோப்பாவின் ஆழமான கதையம்சம் உள்ள கதைகளை டிரை செய்யலாமே..

    ReplyDelete
  6. கொரிய, ஜப்பானிய காமிக்ஸ்கள் பற்றியும் நெட்டில் அவ்வப்போது படிக்க நேருகிறது. (எந்த கதையையும் நான் படித்ததில்லை)
    கொரிய, ஜப்பானிய காமிக்ஸ்களை முயற்சி செய்வது பற்றியும் இங்கு விவாதிக்கலாமே..

    ReplyDelete
  7. Hi Vijayan,
    I am a big fan of comics and i would really like to thank you for introducing quality works (Blueberry, Bernard Prince,xiii, Lucky luke,etc) from master story tellers to tamil. After lion/muthu went on hiatus in 2000s I started exploring american/European comics and i found very interesting worlds.
    1) Mainstream American comics that mostly focus on super heroes having monthly publishing schedule. Same book may have different artists/writers and a tight schedule resulting in varying quality
    2) Alternate creator owned works
    3) Mainstream French BDs that focus on science fiction.
    4) Other French BDs focusing on different genres.
    Though I enjoyed some of the mainstream works I was more entertained by the alternate comic works. I will make a list of stuffs I enjoyed.

    From vertigo (Y the last Man, 100 bullets, Fables, DMZ, scalped, etc), Image comics(Bone), Idw Publishing (Locke & Key), Dark horse (Hellboy), etc

    some French Stories I liked Blacksad, Les Tours de_Bois-Maury, works by André Franquin, etc

    I would also like to see some serious literary works like "Maus" in our comics. I know you will love to explore this territory too as you have already tried it with "Barefoot Gen" (நரகத்தை பார்த்தேன்)

    You have introduced some great artists Jean Giraud, Hermann, William Wance to tamil. I would also love to see some works by "Alberto Breccia" (Master of Black and White art), "Andreas" (Notable for very detailed line work),"Jordi Bernet" and "Paolo Serpieri"(Though all of his work may not be suitable for us. ஒரு மாந்த்ரீகனின் கதை was by serpieri?)

    Couple of Requests
    1) Preserve the Original layout and format whenever possible. Though some layout change is reqd for comic strips originally printed as daily strips. If we just stick to the size of Mega Dream Special we wont have issues with most of the french comics.
    2) Try to print stories notable for great art in quality papers as you have done with lucky luke and Bernard prince in comeback special. Some of the beauty of the art is lost in Newsprint.

    Iam really excited for the future of lion/muthu.

    Regards,
    Sundara Pandian

    ReplyDelete
  8. Forgot to mention Hugo Pratt in the previous comment :)

    ReplyDelete
  9. //ஒரு மாந்த்ரீகனின் கதை was by serpieri//

    Yes. It was from Serpieri.

    ReplyDelete
  10. Thorgal is a very nice comic series.

    Siv's idea is a good one. we can try a 'புது முயற்சி ஸ்பெஷல்'.

    ReplyDelete
  11. try pannuvom sir ella type rasigargalum inge undu.

    ReplyDelete
  12. Sir,

    Where Can I get Tamil comics in chennai

    ReplyDelete
  13. லயன், முத்து, திகில், மினி லயன், காமிக்ஸ் கிளாஸிக்ஸ் என்று லோகோ போட்டு, உள்ளே எந்தக் கதையைக் கொடுத்தாலும் ரசித்துப் படிக்க ஆவலாயிருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். காரணம், உங்கள் தெரிவுகளில் இருக்கும் நம்பிக்கை.

    ஆனால் எல்லா வாசகர்களும் அப்படியே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது உன்பது உண்மை.

    விற்பனை ரீதியாக அடுத்த காமிக்ஸ் வெற்றிபெறவேண்டும் என்றால், அதற்கு முன்னதாக வந்த காமிக்ஸ் வாசகர்களைக் கவர்ந்திருக்கவேண்டும் என்பது யதார்த்தம்.

    ஆனாலும், உலகமகா யுத்தத்தை வைத்து (அதிரடிப்படை?) வந்த கதைகள், ஒரு சில செவ்விந்திய - வெள்ளையர் (டைகர், டெக்ஸ் தவிர்த்து) மோதல்களை வைத்து வெளிவந்த கதைகள் போன்றன (இன்னும் நிறைய - சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை) அற்புதமான அனுபவங்களைத் தந்திருக்கின்றன.

    எனவே, ஓவராக பூச்சுற்றும் கதைகள் இன்று மேலைத்தேய - அமெரிக்க காமிக்ஸ்களில் மலிந்துவிட்டாலும் அவற்றை விட்டு ரசனையான கதையம்சம் + ஓவியங்கள் கொண்ட கதைகளை வாசகர்கள் வரவேற்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    'ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என்று ச்ச்சும்மாக்கும் வசனம்பேசும் ரகத்தவரல்ல நம் எடிட்டர் என்பதால், நீண்டகால நோக்கில் நம் காமிக்ஸ்களை கொண்டுவரும் அஸ்திவாரத்தோடு எடிட்டர் வெளியிடும் காமிக்ஸ் கதைகளை வரவேற்பது நமக்கும் ஒரு கடமையாகும் என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.

    -Theeban (SL)

    ReplyDelete
  14. தீபன்(SL): தங்குதடையில்லா,அழகான நடையில் உங்கள் பதிவினைப் படிக்க நிறைவாக இருந்தது.

    எனது கதைத் தேர்வுகள் எல்லா சமயங்களிலும் சரியானதாக இருக்குமென்ற இறுமாப்பு எனக்குக் கிடையாது ; அவ்வப்போது சொதப்பல்கள் தலைதூக்கிடத் தான் செய்யும் ! !

    அந்த சொதப்பல்களைப் பூசி மெழுகிட முடிந்த காலமும் ஒன்று இருந்தது!But அது இந்த Ipad ; கணினி ; செல்போன் யுகத்திற்கு முன்பு..!டேப் ரிக்கார்டரில் பாட்டுக் கேட்டுக் கொண்டு;'டர்ர்..டர்ர்' என்று விரல் நோவ கறுப்புத் தொலைபேசிகளைச் சுழற்றிக் கொண்டு பால்யப் பருவத்தில் நம்மில் பலரும் இருந்த வேளையில் !!

    இன்னமும் கூட 1984 -ல் நமது "இரும்பு மனிதன்" (தீபாவளி மலர்) வெளிவந்திருந்த சமயம், சிவகாசியில் எங்களது அலுவலகத் தெருவினில் tuition படித்து முடித்து விட்டு, வீடு செல்லும் இரு சிறுவர்கள் ஆர்ச்சியைப் பற்றி பிரமிப்போடு பேசிக் கொண்டு செல்வது எனக்குக் கேட்க்க முடிந்தது நினைவில் உள்ளது! "அப்படியே பறந்து போயி அந்த இரும்பு மனுஷன் கப்பலைப் புடிச்சதுடா" என்று வாய் பிளக்கப் பேசிச் சென்ற அந்தச் சிறுவன்,இன்று உலகின் எந்த மூலையில்,எத்தனை பெரிய எஞ்சினியராகவோ;எழுத்தாளராகவோ;நிபுணனாகவோ இருக்கிறானோ தெரியாது!!

    So அன்றைக்கு லயிக்கச் செய்த ரசனை இன்று வேறு விதமான வரவேற்பைப் பெற்றிடக் கூடும் என்பதால், எனது caution levels கூட சற்றே அதிகரித்து உள்ளன என்று சொல்லுவேன்! அதனால் தான் புதிய பாணியில் நுழைந்திட எத்தனிக்கும் முன்பு, உங்களது எண்ணங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் !

    அதுக்காக அந்த "என்கௌன்ட்டர் ஏகாம்பரம்' என்னுள் காணாமல் போய் விட்டான் என்று இல்லை !! ரிஸ்க் எடுப்பதும் ; ரஸ்க் சாப்பிடுவதும் நிச்சயம் தொடரும் !! அந்தத் த்ரில் இல்லாவிட்டால் உங்களுக்கும் சரி, எனக்கும் சரி போர் அடித்து விடாதா ? !!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு,

      தங்கள் பதில் பதிவுக்கு மிக்க நன்றி.

      தாங்கள் குறிப்பிட்ட 'தங்கு தடையின்றிய, அழகான நடை' என்பது - முழுக்க முழுக்க உங்களுக்கும் கோகுலம் ஆசிரியராக இருந்த ரேவதி அவர்களுக்குமே சொந்தமானது. ஆம், உங்களதும் அவரதும் ஆசிரியர் தலையங்கங்களைப் படித்தே எழுதப் பழகிக்கொண்டவன் நான்.

      ஏதோ தலையங்களம் என்று வாசகர்களை விட்டு தனித்து நிற்காமல் வாசகர்களோடு பேசுவதுபோலவே எழுதும் அந்தப் பாணி, என்னை முழுமையாக பாதித்தது.

      உங்களிடமிருந்தே பாராட்டுக் கிடைப்பது என்பது நான் நினைத்தே பார்த்திராத ஒன்று. எழுத்து நடையை என்னுள் ஊன்றிய உங்களுக்கு என்னென்றும் எனது நன்றிகள்.

      காமிக்ஸ் என்பது வெறுமனே வாசித்துவிட்டுப்போகும் படக்கதை அல்ல - அதுவும் ஒரு பிரதானமான இலக்கிய வடிவமே என்றும் - அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன என்றும் - இளவயதில் காமிக்ஸ் படிப்பவருக்கு, அதிலும் நம் லயன், முத்து குழும இதழ்களைப் படிப்போருக்கு அது வாழ்க்கையில் பல வழிகளிலும் உறுதுணையாக இருக்கும் என்பதற்கும் - என்னைப்போல பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் உலகெங்கும் இருக்கிறார்கள்.

      தொடரட்டும் உங்கள் பணி!

      - Theeban (SL)

      Delete
  15. Hello Vijaian Sir,

    I have mailed you about the subscription of comics. I would like to buy whet ever old copies you have with your publications. I am long time fan for your comics books. After long time I have bought the complete series of XIII and loved it. Then I am really surprised to know that that is story of famous movie "The Bourne Identity".

    Please reply to my mail. I sent to lioncomics@yahoo.com

    Thanks,
    Krishna

    ReplyDelete
  16. I am very glad that the comics journey has started again. I have lost touch with your comics for the past 6 years because of my person reasons. I have started reading from XIII series. But, now I am finding problem in getting the books. I am in Bangalore. Please let me know how I can get the comics.

    I am dreaming of the time when I would read our lion comics in iPad or Galaxy Tab. I hope that time is not far away.

    ReplyDelete
  17. vanakam vijayan sir! Nan spider man udaiya theeviramana rasigan. Neenga old spider story fulla ore book ka reprint pannalame color la. Atleast ethanuku ethan story yavathu reprint pannunga sir pls! -Sakthi@panruti.

    ReplyDelete
  18. வணக்கம் எல்லோருக்கும்,

    இதில் கருத்து சொல்லும் பலரும் லயன் / முத்துவின் ஆரம்ப கால வாசகர்களாக இருந்து லயன் / முத்து காமிக்ஸ் பாணியில் ஈர்க்கப்பட்டு பின்னர் அந்த பாணியின் அடித்தளமான ஐரோப்பிய காமிக்ஸ்களின் வாசகர்களாக இருப்பவர்களே...!!

    நமக்கெல்லாம் அமெரிக்க பாணியிலான அந்த மேன் இந்த மேன் வகை காமிக்ஸ்கள் பிடிக்காமல் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் இதே வேளை நம் இளையவர்களின் சமூகம், அதாவது 12-17 வயதுக்கு உட்பட்டவர்களின் தற்போதைய விருப்பம் எவ்வாறு இருக்கின்றது எனக் கண்டறிவது முக்கியம் என நான் நம்புகிறேன்.

    நான் அந்த வயதில் இருந்த போது கட்டு, கட்டாக வெளிவரும் டெக்ஸ்வில்லரின் கதைகளைத் தேடிப் பிடித்து படித்தேன் என்பதற்காக இப்போதைய இளையவர்களும் அதே போன்ற கதைகளை விரும்பிப் படிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது, அதற்கு முக்கிய காரணம் இன்றைய நவீன டெக் உலகில் உட்கார்ந்து படிக்கவே அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை. பள்ளி, டியூசன், பின்னர் மியூசிக்கிளாஸ், நீச்சல், விளையாட்டு பயிற்சி, etc etc என நம்ம ஜாலி ஜம்பர் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. :)

    சில வாண்டுகளுடன் நான் பேசும் போது, அவர்களுக்கு லாஜிக் இல்லை என நன்றாக புரிந்தாலும் அந்த விடயங்களை இரசிப்பதாகத் தெரிகிறது. அதனால் அமெரிக்க ஸ்டைலில் வரும் 20-30 பக்கங்களுக்குள் உள்ளடங்கியும் அசத்தல் ஓவியங்களுடன் நல்ல தாளில் வரும் கதைகளை அவர்கள் விரும்பக்கூடும் என்றே நான் எதிர்பார்கின்றேன்.

    இதற்காக தங்கள் யூனியர் லயனை மீள துயிலெழுப்பி இது போன்ற ஓரிரு கதைகளை வெளியீடு செய்து பரிசீலனை செய்தால் என்ன?, இதற்கு அமெரிக்க காமிக்ஸ்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை இது போன்ற ஐரோப்பிய காமிக்ஸ்களிலும் இருந்தும் ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  19. Suganthan P : சிந்தனையைத் தூண்டிடும் அழுத்தமான பதிவு ! Thank you !

    நாம் ரசித்தோமென்ற ஒரே காரணத்துக்காக இன்றைய வாசகர்களும் அந்தப் பாதையிலேயே பயணிக்க விரும்புவார்களா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வியே !But-நம் தற்சமய வாசக family-ல், 12-17 வயதிலான நண்பர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்பது ஒரு புதிரே..!

    இது பற்றி உங்களுக்குக் தெரிந்தளவிற்கு சொல்லுங்களேன் guys ?!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருடைய இந்தக் கேள்விக்கான பதில், ரூம் போட்டு யோசிக்கவேண்டிய ஒன்று.

      ஆனாலும், எனது எண்ணத்துக்கு எட்டியவரையில், பதின்ம வயதினரிடைய இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் காரணமாக வாசிப்புப் பழக்கம் குறைந்து நிற்கிறது. எனவே கடைகளில் காட்சிப்படுத்தப்படும் காமிக்ஸ்களின் அட்டையைப் பார்த்து அவர்களாக வாங்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

      அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்டவேண்டும் என்ற முனைப்பில் இருப்பவர்கள் 30-60 வயதைக் கொண்டவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். எனவே, அவர்களைக் கவர்ந்து ஈர்த்துக்கொள்வதே காமிக்ஸ்களை இளையவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான வழி.

      ஒரு தடவை சுவையைக் காட்டிவிட்டால், நிச்சயம் அவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்தும் காமிக்ஸ் புத்தகங்களைத் தேடப்போவது உறுதி.

      அவ்வாறு, அவர்களாகவே தேடும் காலம் ஏற்பட (இப்போதுதான் எமது லயன், முத்து வின் அடுத்த ஸ்டெடி இன்னிங்ஸ் ஆரம்பித்திருக்கும் நிலையில்) இன்னும் சில காலம் எடுக்கும். அப்படி அவர்களாகவே தேடும் நாட்களில் - இங்கே - ஆசிரியரின் ப்ளாக்கில் அவர்களே நிச்சயம் தங்கள் தெரிவுகளையும், விருப்பங்களையும் பதியத்தான் போகிறார்கள். (இப்போதே சில மாறுபட்ட ரசனையுள்ள புதிய வாசகர்களின் பதிவுகளை இங்கே காணமுடிகிறதே!)

      எனவே, அவசரப்பட்டு மாற்றத்தைக் கொண்டுவருவது - தற்போதுள்ள நிலையான வாசகர் வட்டத்தில் குழப்பத்தை உண்டுபண்ணக்கூடும். (உதாரணத்துக்கு, 'நீதி தேவன் நம்பர் வன்' கதையை சிலரால் ரசிக்கமுடியாதிருந்ததைச் சொல்லலாம்).

      எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களை கற்பனையோடு கல்கியும், சாண்டில்யனும் சொன்னபோது ஒரு தலைமுறை கடந்த என்னைப்போன்றவர்களும் ரசித்துப் படிக்கவில்லையா?

      அதேபோல மறுபுறமாக, ஸ்பைடரும், ஆர்ச்சியும், இரும்புக் கை மாயாவியும் அறிமுகமான காலத்தில் அவர்களை அந்தக் காலத்தில் இளையவர்களாக இருந்தவர்கள் மட்டும்தான் படித்தார்கள் என்று சொல்லிவிடமுடியாதே; பெரியவர்களும் வரவேற்புக் கொடுத்தார்களே!

      எனவே, நல்ல கதைத்தேர்வும், சித்திரங்களும், ஆசிரியரின் வசன நடையும், எடிட்டிங்கும்தான் காமிக்ஸ்களின் பரவலைத் தீர்மானிக்குமே தவிர, புதிய சூப்பர் கதாநாயகர்களை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்துவிட்டால் காரியம் சக்ஸஸ் என்று சாதாரணமாக நினைத்துவிடமுடியாது என்பது எனது கருத்து.

      இங்கே சில நண்பர்கள் குறிப்பிட்டதுபோன்று, மினி லயனில் வந்திட்ட சில கதைகளை (சுஸ்கி - விஸ்கி, சில அரேபியக் கதைகள்) மீள்பதிப்புச் செய்வது - ஒரு கருத்துக் கணிப்புப்போல, இளைய பதின்ம வயது வாசகர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தருவதாக அமையலாம்.

      -Theeban (SL)

      Delete
  20. hello mr. vijayan!

    எங்கள் ரசனைக்கு தாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்திற்கு நன்றி! ஆனால் எங்களில் பெரும்பாலோனோர் இந்த ரசனையை லயன் மற்றும் முத்து காமிக்ஸ் மூலமாகவே பெற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன்! கதை, ஹீரோ ஓவியங்கள் போன்ற விஷயங்களில் அதன் ஆசிரியராகிய தாங்கள் ரசனையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் எங்களுக்கு ஒரு காமிக்ஸ் வெளியிட்டு விட்டு அதன் மீதான விமர்சனங்களை நகம் கடித்துக் கொண்டு எதிர் பார்க்கும் உங்கள் ரசனை உயர்ந்ததாகவே(!) இருக்கும் ( விதி விலக்கு உண்டுதான், இருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் )என்றே நம்புகிறோம்!

    புது விதமான கதைகள், ஹீரோக்கள் அமெரிக்கா மட்டும் அல்ல எங்கிருந்து என்றாலும் வரவேற்க கூடியதுதான் (except super man type stories)! மாயாஜாலக் கதைகள் கூட நல்ல ஸ்டோரி லைன் இருந்து விட்டால், கூடவே ஓவியங்களும் கலக்கினால் ரசிக்கப் படக்கூடும்! ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் அபிப்ராயம் கேட்கும் லயன் வாசகர்கள் மிகப் பலர் 35-40௦ நெருங்கும் அன்பர்கள், என்னையும் சேர்த்துதான். நாங்கள் matured ஆன கதைகளை விரும்புவதில் ஆச்சரியம் இல்லைதான்! ஆனால் மிகவும் முக்கியம் லயனிற்கும், முத்துவிற்கும் புதுப்புது வாசகர்கள் தேட வேண்டியது! நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

    இன்னும் ஒன்று சொல்கிறேன்! நீங்கள் எந்த புதுக் கதைகள் அல்லது ஹீரோக்கள் வெளியிட்டாலும் நாங்கள் (பழைய) வாசகர்கள் வாங்காமல் இருக்க மாட்டோம்! படித்த பின் விமர்சனம் செய்வோம் என்பதும் நியாமாக இருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்பதும் தெரியும். குறிப்பாக பழைய ரசிகர்கள் (நானும் தான்) லயன் வெளியீட்டிற்காக அது எப்படி இருந்தாலும் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை! அது லயனின், தங்களின் வெற்றியே!

    எனவே புது விஷயங்களை அறிமுகம் செய்வதில் தயக்கம் வேண்டாம்! நாங்கள் புது ரசிகர்களை லயனிற்கு உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் (மற்ற வாசகர்களின் கருத்தும் இதுவாகத்தான் என்ற நம்பிக்கையில்) என்பதை பதிவு செய்கிறேன்!

    ReplyDelete
  21. புதிய யுக்திகளை நடைமுறை படுத்துவதில் தான் வியாபார வெற்றி அடங்கிருக்கிறது என்று நண்பர் ஒருவர் கூறுவார். மினி லயன் மீண்டும் வந்தால் இளைய தலைமுறைக்கு சரியாக வரும் . எனது எதிர்பார்ப்பு ஆங்கிலத்தில், எளிய நடையில், கலர் பக்கங்களில், உருபெறும் கதைகளுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திடும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  22. 24th. மேற்கு வேறு விதமாய் மாறியிருக்க, நாம் இன்னமும் பழையதை பிடித்து தொங்குகிறோம் எனும் ஆதங்கத்தை ஆசிரியர் சொல்கிறார். பிற்காலத்தில் நம் ஊரில் ஹிட் அடித்த தோர்கல் பற்றி அங்கலாய்க்கிறார். இன்றைய நம் பன்முக வாசிப்பிற்கு ஆசிரியர் போட்ட முதல் பிள்ளையார் சுழி இந்த போஸ்ட். இன்றைய நம் நிலையின் முதல் அடிக்கல் நாட்டப்பட்ட போஸ்ட் இது.

    ReplyDelete
  23. நமது வாசகர்களின் நாடித் துடிப்பை அன்றே உணர்ந்து தோர்கல் இங்கு செல்லாது என்று கூறியிருப்பது 2024ல் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் கிட்டங்கி நிறைந்தாலும் அந்த தொடரை நீங்கள் இன்னும் வெளியிட்டுக் கொண்டிருப்பது வருங்கால வாசகர்களை கணித்து என்பது என் எண்ணம்

    ReplyDelete