Sunday, February 10, 2019

ஒரு சாவகாச sunday !

நண்பர்களே,

வணக்கம் ! நேற்றைக்குத் தான் "புது அட்டவணை-புது வருஷம் - புதுப் பயணம்" என்றெல்லாம் பெனாத்திக் கொண்டு திரிந்தது போலுள்ளது ! ஆனால் கண் மூடித் திறப்பதற்குள், மார்ச்சின் பணிகள் நிறைவு பெறும் தருவாயை நெருங்கி நிற்பதைப் பார்க்கும் போது -  "ஆண்டின் முதல் க்வாட்டர் நிறைவு பெறுகிறதுடோய் !" என்ற புரிதல் ஒருவித த்ரில்லையும், பயத்தையும் ஒருங்கே ஓடச் செய்கிறது !! த்ரில் - for obvious reasons : தோர்கல் துவக்கி வைத்த பயணத்தில் பராகுடா எனும் புதுவரவு அதிரடியாய் இணைந்து கொள்ள - ஜனவரியே ஜாலிவரிகளின் சங்கமமாயிற்று ! "சிகரங்களின் சாம்ராட்" நம்மிடையே உருவாக்கிய அலசல்கள் இன்றைக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்க்கின் தருணமாய்த் தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் ஒரு சோம்பலான நாளில் பின்திரும்பிப் பார்க்கும் போது - இந்த நொடி நம் பயணத்தில் ஒரு மைல்கல் நொடி என்பது நிச்சயமாய் புரிந்திடாது போகாது !! "காலப் பயணம் ; பிரபஞ்சக் கோட்பாடுகள் ; இணையுலகங்கள்" என நாம் ரவுண்டு கட்டி அடித்துள்ளதெல்லாமே ஒரு "பொம்மை புக்" ரசிகக் குழுவின்  ரேஞ்சே கிடையாது !!! பிப்ரவரியில் ரிப்போர்ட்டர் ஜானியின் புத்தம் புது பாணி, சிந்தைகளைக் கவர்ந்திட ;  மேக் & ஜாக் கார்ட்டூனில் கதக்களி ஆடிட ; வண்ண மறுபதிப்பில் டெக்ஸ் ஜாலம் பண்ண ;  ஜெரெமியாவோ "படிக்கப் - படிக்கப் புடிக்கும்" என்ற பாணியில் ரவுசு விட, ஆண்டின் இரண்டாம்  மாதமுமே உற்சாகத்துக்கு குறை வைக்கா பொழுதாகிப் போயுள்ளது - at least until now !! மார்ச்சில் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள மட்டினைக் கொண்டே கணிப்பதாயின் - அதுவுமொரு செம பட்டாசு மாதமாயிருக்கப் போகின்றதென்பேன் ! ஆக த்ரில்லுக்கான காரணம் புரிகிறது !! Why then பயம் ? 

சொல்கிறேனே....! ஒரு காலத்தில், நாலு ரகளையான ஆக்ஷன் sequences ; சுலபமாய் - நேர்கோட்டில் ஓடும் கதையென்று இருந்தாலே போதும், நாமெல்லாம் குஷியாகி அதனை ஹிட்டாக்கி விடுவோம் ! சிறுகச் சிறுக XIII ; கேப்டன் டைகர் போன்ற கதைகள் களம் காணத் துவங்கிய பிற்பாடு - பைப்பாஸைப் பிடித்து ஓடும் கதைகளையும் ரசிக்கத் துவங்கினோம் ! And தற்போது ரிங் ரோடைச் சுற்றி வரும் கி.நா.பாணியாகவே இருந்தாலும் அதை மடித்து அக்குளுக்குள் செருகிக் கொள்ளும் லாவகம் நமக்குத் துளிர்த்து விட்டது என்பது தான் நிதரிசனமாகத் தெரிகிறது ! ஒரு காலத்தில் "சிகரங்களின் சாம்ராட்" போலான கதைகளை தெரியாத்தனமாக தொட்டு விட்டிருப்பின், அதை அப்படியே பத்திரமாய் பீரோவுக்குள் போட்டுப் பூட்டியிருப்பேன் - காசு முடங்கினாலுமே பரவாயில்லையென்று !! (The Insiders என்றதொரு தொடரின் முதல் கதை கொஞ்சம் குழப்பமானது ! அதை வாங்கி ; மொழிபெயர்த்து ; ராப்பரும் அச்சிட்ட பின்னே - பயந்து பின்வாங்கிய நாட்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிப்பு-சிப்பாக வருகிறது !!) "பராகுடா " - என்று காதில் விழுந்திருந்தாலும் - "போடா..போடா.." என்று நகன்றிருப்பேன் ! "கிராஸ்ட்ரெஸ்ஸர்ஸ் " ; பசங்களும்-பசங்களும் குத்தாட்டம் போடும் கதை" என்றெல்லாம் முன்வந்திருப்பின் - நான் ஏகப்பட்ட ஸ்டெப்ஸ் பின்சென்றிருப்பேன் ! கம்யூனிசம் பேசும் ரிப்போர்ட்டர் ஜானியை கண்ணில் முழிக்கவே அனுமதித்திருக்க மாட்டேன் !! ஜெரெமியா நம் தெருவில் நடந்து வந்து மணி கேட்டிருந்தால் கூட - "நேக்கு மணி பாக்கவே தெரியாதுடா தம்பி !" என்று அனுப்பியிருப்பேன் ! ஆனால் இன்றைக்கு நீங்கள் தொட்டு நிற்கும் ரசனைகளின் லெவெல்களைப் பார்க்கும் போதுதான் பயமே பூக்கிறது - நம் பயணமானது, உங்களுக்கு  துளியும் ஏமாற்றத்தைத் தந்திடாது, மேலும் மேலும் சுவாரஸ்யங்களோடு தொடர்ந்திட வேண்டுமே என்று !  தொடர்களின் தேர்வுகளில் ; கதைகளின் தேர்வுகளில் ; கதைகளைக் கையாளும் விதங்களில் ; மொழியக்கத்தின் தரங்களில் ; அட்டைப்படங்களின் டிசைனிங்கில் ; தயாரிப்பின் பரிமாணங்களில் துளிகூட சறுக்க, இனித் தொடரும் காலங்களில் leeway இருக்கவே செய்யாதெனும் போது - ஒவ்வொரு இதழையும் விராட் கோலியின் சதங்களை போல ரம்யமாக செதுக்கிடும் பொறுப்பு, வழுக்கைத் தலைமீது குடிகொண்டு நிற்பது புரிகிறது !! At this point of time - முன்வைக்க வேண்டிய முக்கிய கேள்வி "ஜெரெமியா" பற்றியே ! 

மாதத்தில் 10 தேதிகள் ஓடியிருக்கும் நிலையில், ஹெர்மனின் இந்தப் பரட்டை நாயக ஜோடியின் ஆல்பத்தை வாசிக்கும் வாய்ப்பு உங்களுள் பெரும்பான்மைக்காவது கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் ! So படித்தவுடன் பிடித்திருந்தாலும் சரி...படிக்கப் படிக்கப் பிடித்திருந்தாலும் சரி - அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ! அதே போல - ஜெரெமியாவைப் பார்த்த (படித்த_ கையோடு), கும்ப மேளாவில் ஒருமுழுக்குப் போட காசி புறப்பட்டிருப்போரும் தங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிப் பதிவிடலாமே ? எதிர்காலம் சார்ந்த இந்தக் கதைக்கு (நம்மிடையிலான) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளையிது ! "ஊம்" என்றீர்களெனில் ஜம்போ சீசன் 2-ல் ஒரு ஸ்லாட்டை ஜெரெமியா-3 க்கு ஒதுக்கிடலாம் ! "ஊஹும்" என்றீர்களெனில் மனதின் ஒரு ஓரத்தை அவர்களுக்கு ஒதுக்கிடலாம் !   தேர்தல் நேரம் guys ; so பட்டியலை இனியும் தாமதிக்க சுகப்படாது !! ஜம்போ சீசன் 2-ன் மொத்த இதழ்களையும் இந்த மார்ச் இதழ்களில் நாம் திரைவிலக்கிக் காட்டிட வேண்டுமென்பதால் decision making time right now !! 

ஜம்போவின் முதல் சீஸனின் இறுதி இதழில் தற்போது பணியாற்றி வருகிறேன் !!  பக்கத்துக்குப் பக்கம் சும்மா அனல் பறக்கிறது ஜேம்ஸ் பாண்ட் 007 -ன் இரண்டாம் சாகசத்திலும் !! And trust me - இது நிச்சயமாய் வெற்று பில்டப் இல்லை guys !! கதையினில் தெறிக்கும் வேகம், அந்த ஆக்ஷன் sequences களில் முற்றிலுமாய் வேறொரு கியரைத் தொட்டு விடுகின்றன !! மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை - இம்முறை yet another விதத்தில் சவால் ! ஒரிஜினலில் இங்கிலீஷில், நாலே வார்த்தைகளில் செம அழுத்தத்தோடு  வசனங்களை கதாசிரியர் அமைத்திருக்க  - அதனை அதே crisp பாணியில் தமிழ்ப்படுத்த நாக்கார் தரையைக் கூட்டியது தான் மிச்சம் !! And பற்றாக்குறைக்கு - அந்த வறண்ட பிரிட்டிஷ் நகைச்சுவையுணர்வு ஆங்காங்கே தலைகாட்டிட வேண்டுமெனும் போது - நிறையவே மண்டையைப் பிய்த்துக் கொண்டேன் - இயன்ற நியாயத்தைச் செய்திட !! எது-எப்படியோ - இதுவொரு "டைனமைட்" பதிப்பகத் தயாரிப்பு மாத்திரமல்ல ; பாணியிலும் டைனமைட் தான் ! பாருங்களேன் இதன் அட்டைப்பட first look - ஒரிஜினல் டிசைனோடே !! 
இங்கொரு சின்ன கொசுறுத் தகவலும் !! ஜேம்ஸ் பாண்டின் ஒவ்வொரு முழு சாகசமும் 132 பக்கங்களில் அமைத்துள்ளனர் ! அவை 22 பக்கங்கள் கொண்ட 6 தனித்தனி மாதாந்திர இதழ்களாய் வெளிவந்திடுகின்றன அமெரிக்காவில் ! So நாம் முழுசாய் ஒரே  தொகுப்பாய் வெளியிடும் போது - அவர்களது 6 இதழ்களின் முன் + பின்னட்டை டிசைன்கள் என்று மொத்தமாய் ஒரு பத்துப் பன்னிரண்டு அதிரடி  டிசைன்கள் நமக்கு கிட்டுகின்றன !! Variant covers என்றதொரு பாணி அவ்வப்போது மேலைநாடுகளில் நடைமுறையில் உண்டு ! அதாவது ஒரே கதைக்கு ; ஒரே பதிப்பின் போது வெவ்வேறு வித அட்டைப்படங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் ; இஷ்டப்பட்ட கவரை வாசகர்களே  தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் !! சேகரிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களோ - எல்லா டிசைன்களிலும் ஒரு புக் என்று வாங்கிப்போடுவதும் உண்டு !! Maybe அடுத்தாண்டில் ஏதேனுமொரு ஜேம்ஸ் பாண்ட்   புக்குக்கு இந்த variant covers பாணியை நாம் கையில் எடுத்துப் பார்க்கலாமா ? முன்னொரு காலத்தில் முத்து காமிக்சில் ஒரு இதழுக்கு இது நிகழ்ந்தது ! நினைவுள்ளதா - எந்த இதழென்று ?

ஜம்போவின் சீசன் 1 நிறைவுறும் தருணத்தில் - இந்த அனுபவம் சார்ந்த உங்களின் எண்ணங்களும் எனக்குப் பெரிதும் உதவிடக்கூடும் - சீசன் 2-வின் 2 காலி ஸ்லாட்களை ரொப்பிட !! How has the JUMBO experience been guys ? இயன்றமட்டிற்கும் இதனை ஜனரஞ்சகக் கதைகளோடு - நல்ல தரத்தில் உருவாக்க முனைந்துள்ளோம் ! உங்களின் மதிப்பீடுகள் தொடரும் சீசனுக்குச் செய்திட அவசியமாகிடக்கூடிய திருத்தங்களை சுட்டிக்காட்ட உதவிடக்கூடும் என்பதால் - இத்தருணத்தில் no to மௌனம் ப்ளீஸ் !!

Before I sign off - சின்னச் சின்ன updates :

1 .சென்றாண்டின் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு - "பவளச் சிலை மர்மம்" காலி !! தோட்டா மழை பொழியோ பொழியென நம்மவர்கள் பொழிந்ததை நீங்கள் ஏகமாய் ரசித்து விட்டதன் பலனிது !

2 அதே போல "விரட்டும் விதி" - COLOR TEX முதல் மூன்று சிறுகதைகளின் தொகுப்பானது sold out ! இதன் அடுத்த edition (சிறுகதைகள் 4 ; 5 & 6 கொண்டதை ) அடுத்து கையிலெடுக்கலாமா ?

3 . இந்தச் சென்னைப் புத்தக விழாவின் டாப் விற்பனை - லக்கி லூக் நஹி ; டெக்ஸ் நஹி ; XIII நஹி !! "பிரபஞ்சத்தின் புதல்வரே" இம்முறை முதன்மையானவர் விற்பனையில் !! தமிழ் இதழ்கள் மாத்திரமின்றி, நம்மிடமிருந்த CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களும் பரபரப்பாய் விற்பனை கண்டுள்ளன !! ஆரிசியாவின் ஆதர்ஷ நாயகர் நமக்கும் செம தோஸ்த் ஆகி விட்டிருப்பது செம ஹாப்பி !!

4 . ஏற்கனவே பலமுறைகள் சொன்னதே தான் ; but மறுக்கா ஒலிபரப்பில் தவறில்லை என்றே தோன்றுகிறது !! ஜனவரியிலும் சரி, பிப்ரவரியிலும் சரி - உங்களின் அலசல்கள் இங்கே களை கட்டியதன் நேரடிப் பிரதிபலிப்பு ஆன்லைன் விற்பனையில் தெறிக்கிறது !! "வாங்குவோமா-வேணாமா ?" என்ற விளிம்பில் நிற்கும் நண்பர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பின்னூட்டமும் செமத்தியாய்ப் பயனாகிறது guys !! கிராம் கூப்பிய நன்றிகள், இங்கே நேரம் செலவிட மெனெக்கெடும் ஒவ்வொரு நண்பருக்கும் !! Keep it going folks !!!

5 திருப்பூர் புத்தக விழா இன்றோடு நிறைவு காண - அப்பாலிக்கா நமது கேரவன் பயணிக்கவிருப்பது நாகர்கோவில் நோக்கி ! நம் ஸ்டால் விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் பிப்ரவரி 15 to 25 வரையிலான நாகர்கோவில் விழாவில் நாமும் கலந்திடுவோம் !!

மீண்டும் சந்திப்போம் all !! Have a great Sunday !! நானோ முடிவிலா மூடுபனிக்குள் மூழ்கிடப் புறப்படுகிறேன் !! Bye for now !! 

Sunday, February 03, 2019

The Feb Four !!

நண்பர்களே,

வணக்கம். The Feb Four - உங்களிடம் The Fab Four என்ற பெயரை ஈட்டிட உள்ளார்களா என்பதே இப்போதைய மேட்டர் எனும் போது - ஞாயிறின் (குட்டியான) பதிவு வேறெங்கும் ஒளிவட்டத்தைப் பாய்ச்சிடப் போவதில்லை !! So இந்த இதழ்களின் தயாரிப்பு ; இத்யாதி பற்றியே எழுதவுள்ளேன் !

போன மாசமும் சரி ; இந்த மாதமும் சரி, இதழ்களின் தயாரிப்பில் நிறையவே பல்டி அடிக்க வேண்டியிருந்தது போலவே தோன்றிடுவதற்கு என்ன காரணமென்று நிதானமாய் யோசிக்க முயற்சித்தேன் ! "வயசாகிட்டே போகுது மாப்பு ; வேறென்ன ?" என்று பதில் பளிச்சென்று கிட்டினாலும் - முதன்மையான காரணமாய்த் தோன்றியது ஜனவரியில் இரு biggies & இம்மாதமும் ஜெரெமியாவின் வடிவில் இன்னொரு biggie இருப்பதே ! பரக்குடா ; தோர்கல் & ஜெரெமியா -தலா 3 அல்பங்களின் தொகுப்புகள் எனும் போது பணியில் பளு கூடித் தெரிவது இயல்பு தானே ! And அவை மூன்றுமே தத்தம் பாணிகளில் complex கதைகளே எனும் போது - அவற்றை உருப்படியாய் உங்களிடம் ஒப்படைப்பதில் நிறையவே தண்ணீர் குடித்தேன் !

Latest in the list - நமது பரட்டை ஜோடி ஜெரெமியாவின் இரண்டாவது தொகுப்பு பற்றிச் சொல்வதானால் - ரொம்பவே வித்தியாச அனுபவம் இம்முறையும் ! Truth to tell - இந்த apocalypse உலகின்  (அதாவது நிகழுலகம் அழிவு கண்ட பின்னே எஞ்சியிருக்கும் ஒரு இருண்ட உலகின்) கதைகளில் எனக்கு அத்தனை பரிச்சயம் நஹி ! So அந்த ஜானரிலுள்ள காமிக்ஸ் தொடர்களை அவ்வளவாய் படித்திரா நிலையில் ஹெர்மனின் இந்த எதிர்காலக் களத்தொடரைப் பற்றி பளிசென்றோரு கணிப்பை செய்து வைக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ! "இங்கே இதைத் தான் எதிர்பார்த்திடலாம் ; எதிர்பார்த்திடணும் !" என்று சொல்லத் தெரியா நிலமையெனும் போது, ஒவ்வொரு ஆல்பத்தையும் ஒரு மோனா லிசா ஓவியம் போல பாவிக்க வேண்டும் போலும் என்பதே எனக்குள் பிறந்த ஞானம் ! இப்டிக்கா ஒரு கோணத்தில் பார்த்தால் (படித்தால்) கதை ஒரு பாணியிலும், அப்டிக்கா இன்னொரு டிஸைனாகவும் புரிபடும் என்பதை இந்த ஆல்பங்களுள் பணியாற்றும் போது புரிந்து கொண்டேன் ! நமது தொகுப்பானது ஆங்கிலத்தில் வெளியான JEREMIAH INTEGRAL-ன் ஈயடிச்சான் காப்பி என்பதால், இடையிடையே, ஒவ்வொரு கதைக்கும் மத்தியினில் கதாசிரியர் ஹெர்மன் அந்தந்தப் படைப்புகள் பற்றிச் சுருக்கமாய் சொல்லியுள்ள வரிகளுமே நமக்கு கிட்டின ! And அட்சர சுத்தமாய் அவற்றையும் நமது தமிழ் முயற்சியினில் இடம்பிடிக்கச் செய்துள்ளேன் - அவையும் உதவிடும் என்ற எண்ணத்தில் ! அந்த 3 பக்கங்களுக்குமே நாம் நிரம்பக் கடமைப்பட்டிருப்போம் என்பதை நீங்கள் புரிந்திடுவீர்கள் - இந்த ஆல்பத்தைப் படித்து முடிக்கும் போது !! 2 INTEGRALS ; 6 ஒற்றை ஆல்பங்கள் என்று ஜெரெமியாவில் ஒரு decent தூரத்தைக் கடக்க நமக்கு இப்போது சாத்தியமாகியுள்ளது !! இப்போது உங்களின் பளிச் தீர்ப்புகளே நம்மை அடுத்து வழிநடத்திடக்கூடும் - இந்தத் தொடரினைத் தொடர்வது குறித்து ! So நிதானமாய் இந்த ஆல்பத்தை படிக்க நேரமெடுத்துக் கொண்ட பிற்பாடு - YESSS !! NOOOO !! என்று ஏதேனும் ஒரு பதிலை மட்டும் தந்திட்டால் ரெம்போ மகிழ்வேன் ! இம்முறை மட்டும் NOTA-க்கு NO ப்ளீஸ் !! And இதழைப்  படிக்காமலே போடும் டப்ஸா வோட்டுக்களும் ஆட்டத்துக்குச் சேர்த்தியாகாது ! So புக்கை எடுக்கறோம் ; படிக்கறோம் ; வோட்டைக் குத்தறோம் !! 

ஜானியாரின் இந்தப் புது template சார்ந்த இதழிலுமே உங்களுக்கு அதே பொறுப்புள்ளது - இம்முறை அத்தனை சீரியஸான பொறுப்புக்கள் அல்லாது ! புதுப் பாணியோ ; பழைய "புன்னகை  மன்னன்" பாணியோ - ஜானி நம் அணிவகுப்பில் தொடரவிருப்பதில் ஐயங்கள் லேது ! So தற்போதைய வாக்கெடுப்பே - இந்த ஜானி புது அவதாரைத் தொடர்வதா - பழசுக்கே ரிவர்ஸ் கியரை  போடுவதா  ? என்பதே !  இந்தக் கதையில் பணியாற்றும் போது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கவனிக்க முடிந்தது !! கமிஷனர் போரடனுக்கு    இங்கே நல்கப்பட்டிருக்கும் காமெடி பொறுப்புகளைப் பார்த்து முகம் மலர்ந்திடாது இருக்க இயலவில்லை !! பிரின்ஸ் கதைகளுக்கு ஒரு குடிகார  பார்னே மெருகூட்டுவது போல ; கார்சனின் நக்கல்கள் டெக்ஸ் சாகசங்களை ஜாலியாக்குவது போல ; இனி கமிஷனர் போர்டனை கொண்டு ஜானியின் புது பாணி கதைகளை refresh செய்திட படைப்பாளிகள் எண்ணியுள்ளனர் போலும் ! எப்படியிருந்த மனுஷன்....இப்படியாகிப் போனாரே ?!! தவிர, இந்த ஆல்பத்தை முழுசாய்ப் படித்த பிற்பாடு எனது கேள்விக்கு பதில் தர முற்படுவீர்களா guys ? ஜானியின் இந்த சாகசம் நடைபெறுவதாய் சித்தரிக்கப்பட்டிருப்பது 1968-ல் ! உங்களுள் முக்காலே மூன்று வீசத்தினர் அன்றைக்கெல்லாம் பிறந்திருக்கவே மாட்டீர்கள் ! My question is - கதை நெடுக கவனமாய்க் கவனித்தால் எல்லாமே அந்த 1960's காலகட்டத்தோடு பொருந்திடும் விதத்தில் கதாசிரியர் அமைத்துள்ளாரா ? என்பதே !! 'மண்டையை மறைத்தாச்சு ; ஆனால் கொண்டையை அல்ல' - என்பது போல் எங்கேனும் கதாசிரியர் லைட்டாய் கோட்டை விட்டுள்ளாரா ? கதையினை ஒரு தபா அங்குலம் அங்குலமாய் அலசிச் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? 

டெக்சின் "வைக்கிங் தீவு மர்மம்" பற்றி புதுசாய் என்ன சொல்லவிருக்கிறேன் - என்னளவிற்கு அந்த பாக்கெட் சைஸ் தான் இதைவிடவும் அழகாய்த் தெரிந்தது என்பதைத் தவிர்த்து ? Maybe இன்றைக்கு எல்லா இதழ்களையும் ஒரே standard சைசில் பார்த்துப் பழகிப் போய் விட்டதாலோ - என்னவோ , அந்நாட்களது அந்த கோக்கு மாக்கு சைஸ் லைட்டாய் சபலப்படுத்துகிறது ! கதையைப் பொறுத்தவரைக்கும் எனக்குச் சுத்தமாய் எதுவும் ஞாபகம் இருந்திருக்கவில்லை - எடிட்டிங்கிற்கு அமர்ந்த போது ! And உப்புத்தாளைக் கொண்டு லேசாய் லேசாய் தொடையில் உரசுவது போல் அந்நாட்களது மொழிபெயர்ப்பு வழிநெடுக படுத்தி எடுத்ததால் அதனைச் செப்பனிடும் அயர்வில் கதையை இம்முறையும் அவ்வளவாய் உள்வாங்க முடியவில்லை ! Maybe மார்ச்சில் வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமாய் முடிக்க முடிந்திட்டால் புக்கை fresh ஆக வாசிக்க வேண்டும் போலும் !! And இங்கேயே இன்னொரு முக்கிய கேள்வியும் எழுகிறது - what next இரவுக்கழுகாரின் மறுபதிப்பினில் என்று ! ஆண்டுதோறும் இது ஈரோட்டில் தீர்மானிக்கப்படும் சமாச்சாரம் என்றாலும் - உங்களின் அடுத்த "TEX 3" பட்டியலை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து வைத்துக் கொள்கிறேனே ?! எனது personal choice : குத்தும் ஒரு சாகசம் !! 

Last in the list ; but first in my list - "மேக் & ஜாக்" ஜோடியின் அந்த "நடனமாடும் கொரில்லாக்கள்" ! எப்போதோ ஒரு யுகத்தில் பாரிசில் வாங்கியிருந்ததொரு SAMMY Integral ஆபீசில் துயில் பயின்று வந்தது ! பெரிய சைசில் - 4 கதைகள் அடங்கிய அந்த ஹார்டகவர்  இதழை போன வருஷம் உருட்டிக் கொண்டிருந்த போது கண்ணில்பட்டுத் தேர்வானது தான் இந்த கார்ட்டூன் கூத்து !  அப்போதே இதனை டிக் செய்து விட்டிருந்தேன் 2019-ன் கோட்டாவில் கட்டாயம் இடம்பிடித்திட வேண்டுமென்று ! 
And தற்செயலாய் ஆண்டின் முதல் மாதம் கார்டூனிலா வறண்ட பொழுதாய்க் காட்சி தர - பிப்ரவரியில் இந்தக் குட்டை-நெட்டை ஜோடிக்குக்  கிட்டியுள்ளது லட்டு போலவொரு வாய்ப்பு என்பது புரிந்தது !! Early days yet ; ஆனால் இதுவரைக்கும் செம positive reviews எனும் போது வருஷத்தில் முதல் கார்ட்டூன் இதழ் சோடை போகாதென்றே தோன்றுகிறது !! இங்கேயும் நீங்கள் கதையை முழுமையாய்ப் படித்து விட்டீர்களா ? என்பதை ஊர்ஜிதப்படுத்திட ஒரு சின்ன வேலை !! அவசரகதியில் அட்டவணை தயாராகும் சமயம் வைத்த பெயர் தான் "நடனமாடும் கொரில்லாக்கள்" ! நிதானமாய் யோசிக்கும் போது இதற்கு இன்னும் வேறு பெயர்கள் தலைக்குள் உதிக்கின்ற எனக்கு ! இது உங்களின் turn - இந்தக் கதைக்கு ஏற்ற விதமாய் மாற்றுப் பெயர்களை இங்கே புட்டு வைக்க !! Give it a try guys !
ஞாயிறை ஜேம்ஸ் பாண்டோடு தொடர்ந்திட நான் புறப்படுகிறேன் !! நீங்கள் The Feb Four பற்றி அலசல்களை நடத்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?

And இன்னமும் சந்தாவில் இணைந்து கொள்ளாதிருக்கும் ஒரு 40+ நண்பர்கள் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் நம்மோடு பயணத்தில் கைகோர்த்துக் கொண்டால் அட்டகாசமாயிருக்கும் !! Please folks - maybe this Sunday is a good time for it ? 

மீண்டும் சந்திப்போம் all !! அட்டகாசமானதொரு வாரயிறுதியாய் இது அமையட்டும் நமக்கெல்லாம் ! Bye for now !

Thursday, January 31, 2019

ஒரு பிஸியான மாதம் !!

நண்பர்களே,

வணக்கம். நம்ம கேரட் மீசை கிளிப்டன் ஓட்டும் ஆதிகாலத்து கார் போலத் தான் நமது சின்ன டீமும் ! ஆனால் டாப் கியரைத் தட்டுத் தடுமாறித் தொட்டு விட்டால் அப்புறம் வண்டி பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு பறக்கத் துவங்கி விடும் ! இந்த வரலாற்று சிறப்புமிக்க தகவலை ரெண்டே முக்கால் டஜனாவது வாட்டியாய் இந்த வாரத்தில் உணர்ந்திட முடிந்தது - அனுபவரீதியாய் !! ஏதேதோ காரணங்களால் பிப்ரவரியில் பணிகள் எனது மேஜையில் ரொம்பவே சுணங்கியிருந்தன ! அதன் பலனாய் பிப்ரவரி இதழ்கள் ரொம்பவே தாமதம் கண்டுவிடுமோ என்று பயம் ஏகமாய் இருந்தது !! ஆனால் எனது பணிகள் நிறைவுற்ற பின்பாய், திருத்தங்கள் போடுவதில் துவங்கி ; ப்ராசஸிங் ; பிரின்டிங் ; பைண்டிங் என அத்தனையுமே சும்மா அசுர வேகம் தான் ! அதிலும் இம்மாதம் சகலமும் வண்ண இதழ்களே ப்ளஸ் இம்முறை ஒரு ஹார்ட்கவர் புக்கும் உண்டெனும் போது- பிரின்டிங் & பைண்டிங்கின் வேலைப்பளுக்கள் செமத்தி !! So இந்த வாரத்தின் முழுமையுமே சிவகாசியை அதிசயமாய் நடுக்கி வரும் இரவுக்குளிருக்குள் பணிகளென்றே கரைந்திருக்க -  lo behold - நான்கு இதழ்களும் தயாராகி இன்று காலை (ஜனவரி 31) நம் ஆபீசில் அணிவகுத்து நின்றன !! ஒவ்வொருமுறையும் புது இதழ்கள் முழுமையடைந்து கைக்கு வந்து சேரும் தருணத்தில் "ஹை..ஜாலி !!" என்று மனசு துள்ளும் தான் ; ஆனால் இம்முறையோ நமது டீமின் தடாலடியை எண்ணி அந்தத் துள்ளல் சற்றே தூக்கலாயிருப்பதை உணர முடிந்தது !! So கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் இதழ்கள் கிளம்பியாச்சு ; மாதத்தின் முதல் தேதியன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டிட !! "நேரம் தவறாமை" என்பதை இந்த இரண்டாம் இன்னிங்சில் நாம் எத்தனை சீரியஸாக எடுத்து வருகிறோம் என்று நான் புரிந்திருப்பது அத்தனை பெரியதொரு சமாச்சாரமல்ல !! ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொருமே ஒவ்வொருவருமே அதனைப் புரிந்திருந்து, அதன் பொருட்டு எடுக்கும் முயற்சிகள் மனதை நிறைக்கின்றது !! Phew !!!

And  இதோ- இம்மாதத்து இதழ்களுள் நீங்கள் பார்த்திரா கார்ட்டூன் ஆல்பத்தின் அட்டைப்பட பிரிவியூ !! இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அட்டைப்படமென்பது கொசுறுத் தகவல் - simply becos இதன் வடிவமைப்புக்கு முழுமையாய் 'அகுடியா' தந்தது அடியேனே !! பொதுவாய் எனக்கும் இந்த art சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்கும், ஏழாம் ; எட்டாம் பொருத்தம் தான் !! டிசைனிங்கின் போது நான் உடனமர்ந்து யோசனை சொல்ல ஆரம்பித்தால் கொஞ்ச நேரத்தில் டிசைனர் சந்நியாசம் வாங்கிட முனைவார் ; அல்லது அந்த டிசைன் - பதம் தப்பிய மைசூர்பாகு   போல கேவலமாயிருப்பது வாடிக்கை !  இந்த மேக் & ஜாக்  ராப்பரின் first look-ஐ டிசைனிங்கில் கோகிலா கண்ணில் காட்டிய போது ரொம்பவே மிதமாய்த் தான் தென்பட்டது ! பொழுது போகாவொரு நாளோ என்னவோ - அந்த டிசைனை மாற்றியமைக்க யோசனைகளை நான் அள்ளி விட ஆரம்பித்தேன் !! அதிசயத்திலும் அதிசயமாய் - டிசைன் கொஞ்சம் தேறிடும் என்பது போலத் தென்பட - செம குஷியாகிப் போனேன் ! அப்புறமென்ன - 'மஞ்சளே கூட்டு ; சிகப்ப குறை !!' என்று ஏதேதோ கூத்துக்களை அடிக்கச் செய்த பிற்பாடு பார்த்தால் - வாழ்க்கையில் முதல்முறையாக நான் கொடுத்த inputs சகிதம் ஒரு டிசைன் என்னளவுக்கு ஓகேவாகி இருந்தது ! பாருங்களேன் இந்த நவீன பிக்காஸோ ஓவியத்தை !! 
கதையைப் பொறுத்த வரை - ஒரேயொரு வேண்டுகோள் guys !! கூரியர் கிடைத்த பிற்பாடு, பிப்ரவரி இதழ்களுள் - இந்த கார்ட்டூன் ஆல்பத்தை உங்களின் முதல் வாசிப்பாக்கிட நேரமெடுத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? சமீப நாட்களில் நான் இத்தனை ரகளையாய் ரசித்துப் பணியாற்றிய கதை இதுவாகத் தானிருக்கும் என்பேன் !! So எனது ரசனையும், உங்களது ரசனையும் எந்தமட்டிற்கு ஒத்துப் போகின்றதென்பதை அவதானிக்கவும், ஆண்டின் முதல் கார்ட்டூன் இதழுக்கான உங்களின் ஆதரவை கணிக்கவுமே இந்தக் கோரிக்கை !! 

And இந்த மாதம் ரிப்போர்ட்டர் ஜானியின் புது template கதையும் உங்கள் கவனங்களை & அபிப்பிராயங்களைக் கோரிடக் காத்துள்ளதென்பதை மறவாதீர்கள் ப்ளீஸ் !! இந்தப் புதிய பாணி சுகமா ? அல்லது முந்தைய இடியாப்பமே தேவலாமா ? என்ற தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்புண்டு கனம் ஜூரிக்களே !! 

And ஜெரெமியா 2 இம்மாத ஜம்போ ரிலீஸ் எனும் போது அந்தத் தொகுப்பின் மீதும், இந்தத் தொடரின் எதிர்காலம் மீதும் தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்பையும் நான் நினைவூட்ட வேண்டுமா - என்ன ? So  இது பிஸியான மாதம் folks - ஜூரிக்களான  உங்களுக்கு ! மீண்டும் சந்திப்போம் !! Bye for now !!

பி.கு. திருப்பூரில் துவங்கியுள்ள புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் 39 ! Please do drop in folks !! 

Saturday, January 26, 2019

தேவை ஒரு பாலைவனச் சோலை !

நண்பர்களே,

வணக்கம். அந்தக்காலத்து கரி எஞ்சின்கள் ஒவ்வொரு ஸ்டேஷனை எட்டியதும் ஒரு வண்டிப் புகையோடு பெருமூச்சைப் போலொரு 'உஷ்ஹ்ஹ்ஹ' சத்தத்தை வெளிப்படுத்திடுவதுண்டு !! கிட்டத்தட்ட அதே நிலவரம் தான் பிப்ரவரியின் பணிகளை முடித்த தருணத்தில் இங்கு எனக்கு !! ஜெரெமியா & ஜானி 2.0 பணிகள் ஒரு மாதிரியாய்ப் போன வாரமே பூர்த்தி கண்டிருக்க, அவற்றின் அச்சுப் பணிகளுமே அழகாய் நிறைவுற்றன ! So எஞ்சியிருப்பது ஒரு வண்ண TEX சாகசமே - அதுவும் மறுபதிப்பே + ஒரு கார்ட்டூன் ஆல்பம் மட்டுமே எனும் போது துக்கனூண்டு சிரமம் கூட இருந்திருக்கக் கூடாது ! ஆனால் நிலவரமோ நேர் தலைகீழ் !! And அதன் உபயமே நமது இரவுக்கழுகார் & டீம் தான் !!

ஒவ்வொரு ஆண்டும் டெக்சின் மறுபதிப்புத் தேர்வுகளை நீங்கள் ஈரோட்டில் செய்திட, அவற்றை நடைமுறைப்படுத்துவது மட்டுமே எனது பொறுப்பாக இருந்து வந்துள்ளது ! அதன்படி, உங்களின் லேட்டஸ்ட் தேர்வான "வைக்கிங் தீவு மர்மம்" தான் 2019-ன் Tex (வண்ண) மறுபதிப்பின் கோட்டா ! பாக்கெட் சைசில் 1990+ தருணங்களில் வெளியாகி, அந்நேரம் செமையான வரவேற்பினைப் பெற்ற இதழிது என்பது மட்டுமே எனக்கு ஞாபகம் இருந்தது ! கதை பற்றியோ - மொழியாக்கம் பற்றியோ துளிகூட நினைவில்லை !! So எப்போதும் போலே நம்மிடமுள்ள முந்தைய பிரதியினை எடுத்து வைத்துக் கொண்டு, சட சடவென டைப்செட்டிங் செய்து மேஜையில் அடுக்கி விட்டார்கள் ! 

பொதுவாய் மறுபதிப்புகளில் ஒற்றை வாசிப்பைப் போட்டுவிட்டு, சிறுசிறு திருத்தங்களை மட்டுமே செய்த கையோடு அவற்றை அச்சுக்கு கொண்டு செல்லப் பணித்து விடுவது வழக்கம் ! அதே நினைப்பில் அந்த 156 பக்கக் கத்தையைக் கையிலெடுத்துக் குந்தினால் சரமாரியான பக்கங்களில் இத்தாலிய வசனங்களே பலூன்களுக்குள் இடம்பிடித்துக் கிடந்தன ! 'இது என்னடா புதுக் கூத்து ?' என்று விசாரித்தால், நமது அந்நாளைய பாக்கெட் சைஸ் பதிப்பினில் நிறையவே frame-களை நாம் வேண்டாமென எடிட் செய்துள்ள விஷயம் புரிந்தது ! So அவற்றிற்கெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பில்லை கைவசம் ! டெக்ஸும், கார்சனும் சும்மாக்காச்சும் பேசிக்கொள்ளும் இடங்கள் ; அந்த வழக்கமான "வறுத்த கரி-பீர்" புலம்பல்களெல்லாம் கதையோட்டத்துக்குத் தேவையில்லை என்ற நினைப்பா ? அல்லது பக்க நீளங்களின் கட்டுப்பாடா ? - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு ஆங்காங்கே சிலபல படங்களை ; கட்டங்களைக் கட்டம் கட்டியிருந்திருக்கிறோம் ! அவை சகலத்தையும் google translator-ல் அடித்து "தீனி வர்றோம் போட குதிரைக்கு !" என்ற ரீதியில் இல்லாத - ஒழுங்கான மொழியாக்கத்தைப் பெற்றிட வேண்டுமாயின் நமது இத்தாலிய எழுத்தாளரையே நாடிட வேண்டியது அவசியமென்று புரிந்தது ! So அவற்றை ஒட்டு மொத்தமாய் ஜூனியர் எடிட்டரிடம் ஒப்படைத்து ; இத்தாலிக்கு அனுப்பி, அவை முறைப்படி மொழிபெயர்க்கப்பட்டு திரும்பக்கிட்டியான பின்னே மறுக்கா DTP செய்து இணைத்து, இன்னொரு குதுப் மினார் கோபுரத்தை என்னிடம் தந்தார்கள் நம்மாட்கள் ! 

சரி, என அதனுள் புகுந்து பக்கங்களைப் புரட்டத் துவங்கினால், ஒரு மின்வெட்டு நாளில் - பிரிட்ஜில் வைத்திருந்த  நேற்றைய சட்னியை  எடுத்துச் சாப்பிடுவது போலவே தோன்றத் தொடங்கியது !!  இது நான் எழுதியதுமல்ல ; கருணையானந்தம் அவர்களின் பணியுமல்ல என்பது துளிச் சந்தேகமுமின்றிப் புலனானது ! அந்நாட்களில் முத்து காமிக்சில் பணியாற்றிய மேனேஜரின் எழுத்துப் பாணியிது என்பதும் புரிந்தது ! அங்கிருந்து வெளியேறியவர் தனியாகத் தொழில் செய்து வந்தார் ; எப்போதாவது இதுபோல் பணிகளை வாங்கிச் செய்ததுண்டு என்பதும் நினைவுக்கு வந்தது ! So அன்றைய காலகட்டத்துக்குச் சுகப்பட்ட வரிகள் இன்றைக்கோ லேசாய்க் கரடு-முரடாய்த் தென்பட - எனக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளத் தான் தோன்றியது ! முழுசாய் மாற்றி நானோ ; கருணையானந்தம் அவர்களோ எழுத அவகாசமில்லை எனும் போது - இருப்பதைச் செப்பனிடலைத் தாண்டி வேறு மார்க்கம் தெரிந்திடவில்லை !! தொடர்ந்த 5 நாட்கள் - பாயைப் பிறாண்டும் சுகத்துக்குத் துளியும் குறையா "இன்பத்தை" திகட்டத் திகட்ட வழங்கியது !! ஏற்கனவே உள்ள வரிகளோடு sync ஆகும்விதமாய் மாற்றங்களையும் செய்து ; பிழைத்திருத்தங்களையும் அதே மூச்சில் பார்க்க முனைவது truly a nightmare !! அதுவும் 156 பக்கங்களுக்கு நீண்டு கொண்டே செல்லும் சாகசமிது எனும் போது - மூச்சு முட்டிப் போய் விட்டது - "முற்றும்" என்று போட்டிருக்கும் பக்கத்தைத் தொட்டுப் பிடிப்பதற்குள் !! ஒரு வழியாய் இயன்ற ரிப்பேர்களைச் செய்து,சகலத்தையும் மைதீனிடம் ஒப்படைத்தது குடியரசு தினப் பகலில் தான் !! அங்கிருந்து நேராய் பதிவினை டைப்படிக்கும் இந்தப் படலத்துக்குள் மூழ்கிடும் வேளையில் எனக்குள் நிறையவே கேள்விகள் !! அந்நாட்களில்  நமது தரங்களில் இத்தனை ஓட்டைகள் இருந்துள்ளனவா ? ; இத்தனை மிதங்களையுமே நாமன்று சந்தோஷமாய்  ரசித்துள்ளது எவ்விதம் ? என்ற சிந்தனைகள் உள்ளுக்குள் ! Of course இன்னொரு 15 ஆண்டுகளுக்குப் பிற்பாடு இன்றைய இதழ்களைப் பரிசீலித்தால் இவற்றிலும் முன்னேற்றங்களுக்கு நிறைய வாய்ப்புகள் தென்படாது போகாது தான் ; ஆனால் at least இத்தகைய wholesale திருத்தங்களுக்கு அவசியப்படாது என்றாவது நம்பிக்கை கொள்ளலாம் என்பேன் ! மெய்யாகவே நீங்கள் ரொம்பவே தாராளமான ஜூரிக்களாய் இருந்துள்ளீர்கள் guys - அன்றும், இன்றும் !! 

இதோ பிப்ரவரியின் ஒரு toughie இதழின் அட்டைப்பட முதல்பார்வையும், உட்பக்கப் preview-ம் :

ஒரிஜினல் அட்டைப்படமே இது - லேசாய் வர்ணங்களை அதிகமாக்கியுள்ளது மாத்திரமே நமது கைவரிசை ! ஒரிஜினலாக இந்த புக்கை பாக்கெட் சைசில் நம் வெளியிட்ட தருணத்தில் 'ஜிகு ஜிகுவென' மிட்டாய் ரோஸ் கலரிலும், பளீர் ஆரஞ் ? பச்சை ? நிறத்திலும், அட்டைப்படத்தில் ஏதோ ஜிகினா வேலை செய்தது நினைவுள்ளது ! சர்க்கஸ் விளம்பரச் சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தும் ஒருவித மினுமினுக்கும் மசி நிறையவே வாங்கியது கையில் கிடந்து வந்தது ! அவற்றைக் காலி செய்யும் பொருட்டே வம்புக்கு அந்த ராப்பரை டிசைன் செய்தொமென்பது இப்பொது ஞாபகத்துக்கு வருகிறது !! 

டெக்ஸோடு மல்யுத்தமெனில் கார்ட்டூனில் இம்மி கூட சிரமம் நஹி - all the way through !! ஆண்டின் முதல் சிரிப்பு மேளாவான "நடனமாடும் கொரில்லாக்கள்" எங்கேயுமே இடர்களின்றி ஒன்றரை நாட்களில் மொத்த மொழிபெயர்ப்பையும் செய்து முடித்து - அதே வேகத்தில் டைப்செட்டிங்கும் நடந்தேறி அச்சுக்குப் போக சூப்பராய் ஒத்தாசை செய்துள்ளது !! மாதாமாதம் இந்த கார்ட்டூன் கோட்டாக்கள் என்னளவுக்குமே பணிகளில் ஒரு மகா stress buster ஆகச் செயல்பட்டிடுவதை இம்முறை நன்றாகவே உணர முடிந்தது !! ஆண்டவர்களே : உங்களுக்கு ரசிக்காத SMURFS & லியனார்டோ தாத்தாவுக்கு கல்தா தந்தாச்சு ; எஞ்சியிருக்கும் சிரிப்புப் பார்டிகளுக்கேனும் ஒரு சிறப்பான வரவேற்பளித்தால் அடுத்தாண்டிலாவது அவர்களுக்கு ஒரு larger share of the pie தந்திட எனக்கு ஏதுவாக இருக்கும் ! தொடர்ச்சியாய் "சிகரங்களின் சாம்ராட்" ; "பரக்குடா" ; "ஜெரெம்யா" போன்ற heavyweights மோதலாய் அமைந்தால் - எனது நாக்கார் ஸ்வச் பாரத் திட்டச் செயல்பாட்டுக்கே உதவிடுவார் !! So பாலைவனத்தின் மத்தியில் ஒரு சோலையாய்க் காட்சி தரும் கார்ட்டூன்களுக்கே உங்களின் பொன்னான வாக்குகளை வாரி வழங்கி, அடுத்தாண்டாவது அவை ஆட்சியமைக்க உதவிடுங்களேன் folks ? ரவுண்ட் பன் ஒரு லோடு இறக்கிடலாம் - வீடுதோறும் விநியோகிக்க !! 

சென்னைப் புத்தக விழா முடிந்திருக்க, அவற்றின் விற்பனைகளை ; விற்றுள்ள இதழ்களின் விபரங்களை அலசிட முனைந்து வருகிறேன் ! Of course ஒரு காஷுவல் வாசகரின் தேர்வு அந்த நொடியினில் அவர் கவனத்தை ஈர்க்குமொரு அட்டைப்படத்தையோ ; தலைப்பையோ சார்ந்த தேர்வாகவே இருந்திடலாமெனும் போது - reading between the lines சிரமமே ! இருப்பினும், இந்த விற்பனை பாணியில் ஏதேனுமொரு ஒற்றுமை தென்படுகிறதாவென்று ஆராய ஆசை ! சீக்கிரமே அது பற்றி எழுதுவேன் !! And புத்தக விழா கேரவன் அடுத்து திருப்பூரை நோக்கிப் பயணிக்கிறது - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை அங்கு நடைபெறவுள்ள விழாவின் பொருட்டு !! 

ஜாலியாய் வாரயிறுதியை தூக்கம் ; டி-வி ; புதுப் படமென்று கொண்டாடி வரும் உங்களுக்கு இதோ நம்மளவுக்கொரு சிறு அறிவிப்பு !! ஜம்போ சீசன் 2 தனில் இன்னமும் 2 ஸ்லாட்கள் காலியிருக்க, ஈரோடு ஸ்பெஷல் சார்பாயும் இரண்டல்லது மூன்று ஸ்லாட்கள் காலியிருக்க, ஏதேனுமொரு இலக்கில் இடம்பிடிக்கவல்ல ஒரு அதிரடி நாயகர் பற்றிய அறிவிப்பிது !!

"தனியொருவன்" என்ற தலைப்போடு முழுவண்ணத்தில், ஒரு அழகான புது சைசில் தெறிக்கச் செய்ய வருகிறார் இன்னமுமொரு புது கவ்பாய் நாயகர் !! ஒரு முகமூடி ; ஒரு வெண்புரவி ; வெள்ளித் தோட்டாக்கள் ; ஒரு செவ்விந்திய சகா !! இவையே இந்த நாயகரின் அடையாளங்கள் ! இது போதாதா - காத்திருப்பது THE LONE RANGER தானென்று யூகம் செய்திட ? Oh yes - அமெரிக்காவில் புத்தம் புதிய creative அணியினைக் கொண்டு இவரது சாகசங்களை மெர்சலூட்டும் தரத்தில் வெளியிட்டு வருகிறது டைனமைட் நிறுவனம் ! அந்தக் கதைவரிசையினை நடப்பாண்டினில் தமிழில் நாம் ரசித்திடவுள்ளோம் - முழுநீளத் தொகுப்பாய் ! எப்போதென்பதை மார்ச்சில் பார்த்துக் கொள்வோமே ! 

பிப்ரவரி இதழ்களைப் பூர்த்தி செய்த கையோடு - ஜேம்ஸ் பாண்ட் 007-ன் இரண்டாவது ஆல்பத்துக்குள் இன்று புகுந்துள்ளேன் - அதனை மார்ச்சில் உங்கள் கைகளில் தந்த தருணத்தில் ஜம்போவின் சீசன் 1 நிறைவுறுமென்ற புரிதலோடு !! Action special ஜெர்க் அடித்திருந்தாலும் ; 'ஜெரெமியா' எவ்விதம் ஸ்கோர் செய்திடவுள்ளதென்பது தெரிந்திருக்காவிட்டாலும் - ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது - 007 இம்முறையும் பின்னிப் பெடலெடுக்கப் போகிறாரென்று !! புரட்டியெடுக்கும் ஆக்ஷன் ; செம strong plot என்று ராக்கெட் வேகம் தான் !! 

Adios for now all !! See you around !! 

Saturday, January 19, 2019

ஒரு தட தட வாரம்...!

நண்பர்களே,

வணக்கம். திகட்டத் திகட்ட விடுமுறைகள் ....இன்னமுமே காத்திருக்கும் இன்னொரு நெடும் வாரயிறுதி என்று ஆண்டின் முதல் மாதமே ஒரு festive மூடில் தடதடத்து வருவதில் எனக்கும் குஷியே ! ஆனால் இந்த லீவுகளின் பொருட்டு உதை வாங்கிடும் பணிகளைப் பார்க்கும் போதுதான் உள்ளுக்குள் ஜெர்க் அடிக்கிறது !! மாதத்தின் பாதியைத் தாண்டிய பிற்பாடே தினமும் காலையில் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதெல்லாம் மண்டைக்குள் சைரன் ஒலிக்கத் துவங்கிடும் -  "ஆஹா...இந்நேரத்துக்கெல்லாம் பிரின்டிங் துவங்கியிருக்க வேண்டுமே...." என்று ! இம்முறையோ காத்திருக்கும் அடுத்த மாதத்து அட்டவணையில் சகலமும் முழுவண்ண இதழ்களே எனும்போது அனுதினமும் காலையில் இஞ்சி தின்ன ; பீதி பீடித்த குரங்காகித் தான் ஆபீஸ் போகிட முடிகிறது !!

தோர்கலின் புண்ணியத்திலும், பராகுடாவின் பெயரைச் சொல்லியும், ஒரு ஜாலியான ஜனவரி இந்தப் புத்தாண்டினை அதகளமாய் ஆரம்பித்துத் தந்திருக்க - அந்த tempo-வைத் தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு மிகுந்திடுவது புரிகிறது ! So பிப்ரவரியின் பட்டியலைக் கையிலெடுத்துப் பார்க்கும் போது தான் சில பல சுவாரஸ்யங்கள் காத்திருப்பது தெளிவாகியது !! அதே சமயம் - சென்னைப் புத்தக விழாவின் ஜோரிலும், ராஜஸ்தானுக்குப் பயணமெனும் ஜாலியிலும், பொங்கல் விடுமுறைகளின் ஓய்விலும், சிகரங்களின் சாம்ராட்டின் அலசல்களிலும் எத்தனை பணிநாட்கள் சாத்து வாங்கியுள்ளன என்பதும் ; காத்துக் கிடக்கும் பணிகளின் பரிமாணமும் திகிலூட்டத் துவங்கி விட்டன ! பொதுவாய் black & white இதழ்களென்றால் முந்தைய ராவில் எடிட்டிங் முடித்த கையோடு மறு நாளே அச்சுக்குக் கொண்டு சென்று, சூட்டோடு சூடாய் பைண்டிற்கும் தூக்கிச் செல்ல சாத்தியப்படும் ! ஆனால் வண்ண இதழ்களெனும் போது பிராஸஸிங்கில் அவகாசம் ; அச்சில் அவகாசம்  ; அப்புறம் அந்த மசிகளெல்லாம் காய்ந்திடலுக்கு அவகாசமென்று நிறையவே நேரத்தை விழுங்கிடும் ! And இம்மாதம் தற்செயலாய் சகல இதழ்களும் கலராய் அமைந்திருக்க, காத்திருக்கும் அடுத்த 10 நாட்களுமே எங்களுக்கு சிவராத்திரிகளே for sure !!

For the right reasons ; or for the wrong ones - நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இதழ்களுள்  ஜெரேமியா-2-க்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதை நன்கறிவேன் ! இந்தத் தொடரின் ஆல்பங்கள் 4 & 5 & 6 இணைந்ததொரு முப்பாகத் தொகுப்பாய் "பயணங்கள் முடிவதில்லை" பிப்ரவரியில் ஜம்போ காமிக்ஸ் (சீசன் 1) வரிசையின் ஐந்தாவது இதழாய் வெளிவரக் காத்துள்ளது ! வழக்கம் போலவே கதை ; வசனம் ; சித்திரங்கள் ; லெட்டரிங் ; கலரிங் என ஆல் இன் ஆல் ஹெர்மன் அவர்களே !! 1980-களின் துவக்கத்தில் வெளியான இந்த ஆல்பங்களை, இன்றைக்குமே ஐரோப்பாவில் வெவ்வேறு மொழிகளில் மறுபதிப்பிட்டுக் கொண்டே செல்கின்றனர் !! So அவர்கள் ரசித்த சமாச்சாரங்களை நாமும் ரசிக்கத் தான் முயற்சிப்போமே என்ற எண்ணத்தினில் இந்த இரண்டாம் தொகுப்பிற்குள் புகுந்துள்ளோம் ! And இதோ அதன் அட்டைப்பட முதல்பார்வை !  

ஒரிஜினல் ஹெர்மன் சித்திரமே ; பின்னணி வர்ணத்தை மட்டுமே, சற்றே பளிச்சென்று மாற்றிடும் நமது மெனெக்கெடலோடு ! So அந்த டிரேட்மார்க் பரட்டைத் தலையோடும், கவிழ்த்துப் போட்ட கும்பாச் சட்டி ஹெல்மெட்டோடும் நாயகர்கள் இருவருமே அட்டைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள் !! As usual அந்த வெறிச்சோடிக் கிடக்கும் அமெரிக்காவினில் அரங்கேறும் பயணம் எனும் போது - மனம் போன போக்கினில் சின்னச் சின்னக் கருக்களைக் கையில் எடுத்துக் கொண்டு அவற்றைச் சுற்றி ஒவ்வொரு ஆல்பத்தையும் அமைத்துள்ளார் ஹெர்மன் ! And ஒவ்வொரு ஆல்பத்தின் பின்னணி பற்றியும் இரத்தினச் சுருக்கமாய் மனுஷன் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள், அந்தந்த ஆல்பத்தின் புதிர்களுக்கு ஏதொவொருவிதத்தில் உதவிடக்கூடிய knots ! So மறவாது அவற்றையும் இணைத்துள்ளோம் !!

சித்திரங்களைப் பொறுத்தவரை ஹெர்மனின் அந்த unique பாணி பற்றி இத்தனை காலத்துக்குப் பின்பாய் சிலாகித்திடப் புதிதாய் என்னதானிருக்க முடியும் ?  கேப்டன் பிரின்ஸ் ; கமான்சே ; இப்போது ஜெரெமியா என ஒவ்வொரு தொடரிலும் நாம் பார்த்துப் பரிச்சயம் வளர்த்துக் கொண்டுள்ள அதே freehand பாணி இங்கேயும் ! கலரிங்குமே கதையின் மூடுக்கேற்ப மெலிதான வர்ணங்களிலும், மிரட்டலான அடர் வர்ணங்களிலும் ரவுண்டு கட்டி அடிக்கின்றன  ! பாருங்களேன் ஒரு சில மாதிரிகளை : 

2 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கதை என்பதால் இடைப்பட்ட நாட்களில் மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட்டிங்கும் செய்யப்பட்டு காத்துக் கிடந்தது !! "சிகரங்களின் சாம்ராட்" அனுபவத்துக்குப் பின்பாய் மூத்திரச் சந்து வடிவேல் போல எனக்குள் ஒருவிதத் தெனாவட்டு துளிர்விட்டிருந்தது எனக்கே புரிந்தது !! இடியாப்பத்தையும் ; நூடுல்ஸையும் ; பெவிகாலையும் ஒன்றாய்ச் சேர்த்து வான் ஹாம் உருவாக்கிய அந்த ஆல்பத்தையே எடிட் செய்தான  பின்னே, வேறு எதையும் பந்தாடிடலாமென்ற மாதிரியாயொரு   பீலிங் உள்ளுக்குள் சுற்றி வர, சாவகாசமாய் ஜெரெமியாவினுள் புகுந்தேன் !  வழக்கம் போலவே, அழுத்தம் அவசியமாகிடும் சில பகுதிகளில் ; கர்டியின் நக்கல் தெறிக்க வேண்டிய பக்கங்களில் மெருகூட்டும் விதமாய்க் கைவைத்தால் போதுமென்ற நம்பிக்கையோடே புகுந்தால் - ஒன்றைத் தொட, அடுத்தது தொடர - வேலை இழுத்துக் கொண்டே போனது !! இது பிரெஞ்சு கலாச்சார மையத்தின் மானியத்தில் உருவாகும் இதழ் என்பதால்  - அவர்களும் நமது மொழிபெயர்ப்பை தமிழ் தெரிந்ததொரு  ஆராய்ச்சி மாணவியின் சகாயத்தோடு சரி பார்த்திடுவார்கள் என்பதால் - துளி கூட நெருடல் இருந்திடலாகாது என்ற பயம் ஆட்டிப் படைக்க - திருத்தங்கள் கூடிக் கொண்டே சென்றன ; நாட்களும் ஜவ்வாய் இழுத்துக் கொண்டே ஓடின !! புதிதாய் எழுதுவதை விடவும் சிரமமென்பது - ஏற்கனவே உள்ளதொரு ஸ்கிரிப்ட்டை நோகாது நோண்டிட முயல்வதே !! So பாவப்பட்ட நமது DTP பெண்களிடம் இரத்தக்களரியாய்க் காட்சி தந்த  பக்கங்களை ஒப்படைக்கவே தேதி 17 ஆகிப் போய் விட்டது !! ஒரு மாதிரியாய் அவர்கள் திருத்தங்களை போட்டுத் தந்த பக்கங்களை மறுக்கா சரி பார்த்தது friday !! So திங்கட்கிழமை அச்சுக்குச் செல்லுமென்ற நம்பிக்கையோடு சுற்றி வருகிறேன் ! ஏற்கனவே அறிவித்தது போல இந்த இதழ் ஹார்ட் கவரோடு டாலடிக்கவுள்ளது என்பது கொசுறுச் சேதி !! So மீண்டுமொருமுறை ஜெரெமியா எனும் புதிரை முடிச்சவிழ்க்கத் தயாராகிக் கொள்ளுங்கள் folks !! நம்மிடையே இந்தத் தொடருக்கு make or break சூழலிது என்பதால் கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள் guys !! So பிப்ரவரியின் முதல் வாரம் ஒரு சுவாரஸ்ய வாரமாய் அமையும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் !  

பெருமூச்சோடு அடுத்த பணியினைக் கையிலெடுத்தால் "பச்சக்" என்ற முத்தக் காட்சியோடு ஒரு ராப்பர் சகிதம் ஜானி 2 .0 காத்திருப்பது புரிந்தது ! (அது சரி, இதற்கு முன்பாய் நமது அட்டைப்படங்களில்  கிஸ்ஸிங்-கிஸ்ஸிங் ஏதேனும் இருந்ததுண்டா ? Maybe வேதாளரின் பூவிலங்கு ??) "ஹய்யா...ஜானியின் மாமூலான கதைகள் தலையைப் பிய்க்கச் செய்யும் ; நாமோ அதன் புது version -ஐக் கையில் எடுத்துள்ளோம் ; so நிச்சயமாய் அதனில் இருந்த நோவுகள் இந்தப் புது வார்ப்பினில் இராதென்று மனதுக்குள் ஒரு ஜாலியான குரல் கேட்டது ! சித்திரங்களும் சற்றே மாறுபட்ட பாணியில் இருக்க, ஆர்வமாய் உட்புகுந்தேன் !! பரபரப்பாய் ஓடும் கதைக் களம் ; ஏதேனும் பிரெஞ்சு குக்கிராமமாய் அல்லாது - பாரிஸின் நட்ட நடு வீதிகளில் அரங்கேறும் மர்மங்கள் ; மரணங்கள் என வேகத்துக்குப் பஞ்சமே இல்லை தான் ! So நியாயப்படிப் பார்த்தால் நானிருந்த பரபரப்பிற்கு ஓரிரண்டு நாட்களில் எடிட்டிங்கை முடித்து மைதீனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் !ஆனால், புதியதொரு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் 2018 -ன் பிற்பகுதியிலேயே தயாரான இந்த ஆல்பத்தினில் ஏகமாய்ப் பிழைகளும், நெருடல்களும் எனக்கு ! வசனங்களில் நிறைய improvisations செய்ய அவர் முனைந்திருப்பதை ரசிக்க முடிந்த போதிலும்,அவை கதையின் ஸ்கிரிப்ட்டோடு துளியும் ஒன்றிடாது, அப்பட்ட நெருடல்களாய் தனித்து நிற்பது தென்பட்டது ! நிறைய இடங்களில் எதிர்மறையான பொருள்படும் விதமாகவும் வரிகள் அமைந்து போயிருக்க, கையைப் பிசையத் தான் முடிந்தது எனக்கு !! பற்றாக்குறைக்கு இது நார்மல் ஜானி கதையினை விடவும் 10 பக்கங்கள் ஜாஸ்தி நீளம் கொண்டது !! திருத்தங்களை போடப் போட - நேரம் தான் ஓடியதே தவிர்த்து - காத்துக்கிடந்த பக்கங்களின் எண்ணிக்கை குறைந்த பாடையே காணோம் ! வேறு வழியே இல்லை ; வெகு சொற்பப் பக்கங்களில் மட்டும் ஒரிஜினல் வரிகளைத் தக்க வைத்துக் கொண்டு, பாக்கி சகலத்திலும் திருத்தம் போடும் நேரத்துக்கு, புதுசாகவே எழுதிடலாமே என்று இறங்கிடத் தான் வேண்டிப் போனது ! இந்தப் பதிவுக்கென சித்தே ஓரம்கட்டும் வரையிலும், 32 பக்கங்களே பூர்த்தி கண்டுள்ளன & இன்னமும் 22 காத்துள்ளன - வண்டி வண்டி வசனங்களோடு !! So பதிவை upload செய்த கையோடு சனியிரவும், ஞாயிறும் தம் பிடித்தால் தான் பிப்ரவரி இதழ்களை காலத்துக்கு உங்கள் கைகளில் ஒப்படைக்க முடியும் ! ஜானி 2.0 பணிகளிலும் 2.0 !!! இதோ அதன் ஈயடிச்சான்   அட்டைப்பட முதல்பார்வை - 

எஞ்சி நிற்கும் அடுத்த 2 இதழ்களிலும் பணிகள் தொக்கி நிற்கன்றன ; அவற்றையெல்லாம் பூர்த்தி செய்த கையோடு அடுத்த ஞாயிறில் அந்த பிட்டை எடுத்து விடுகிறேன் !  

So பதிவினை நீட்டிக் கொண்டே செல்லாது, நான் விடைபெறும் முன்பாய் இதோ ஜம்போவின் சீசன் 2-ல் வரக்காத்திருக்கும் ஜேம்ஸ் பாண்டின் preview !! நேற்றைக்குத் தான் கதை files வந்து சேர்ந்திருக்க, செம மிரட்டலான ஆல்பமாய்த் தென்படுகிறது !! இம்மாதத்து இதழ்களை பூர்த்தி செய்த பிற்பாடு இதனைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்  !! ஆக ஜம்போ சீசன் 2 -ன் 4 இதழ்களை  இறுதி செய்துவிட்டிருக்கிறோம் ! தொடரும் வாரங்களில் பாக்கி 2 பற்றியும் சொல்கிறேன் !! So இதுவரையிலும் நமது ரெகுலர் சந்தா எக்ஸ்பிரஸில் ஏறாது இருக்கும் 15 % நண்பர்களும் ; ஜம்போ எக்சிபிரசுக்கு டிக்கெட் எடுத்திருக்கா அணியினரும் - தாமதிக்காது செயலில் இறங்கிடலாமே - ப்ளீஸ் ? எப்போதும் போலவே உங்களை நமது சந்தா குடும்பத்தின் ஒரு அங்கமாய்ப் பார்த்திடவே விரும்புகிறது மனசு !! Bye  folks ; see you around !! Have a warm weekend !!