நண்பர்களே,
வணக்கம். பொங்கலோ பொங்கல்…! இல்லம்தோறும் ; உள்ளம்தோறும் – நலமும், வளமும், மகிழ்வும் பொங்கலாய்ப் பொங்கட்டும் ! வரிசைகட்டி அமைந்திருக்கும் விடுமுறைகளைக் குடும்பத்தோடு ஆங்காங்கே கொண்டாடிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்குக் கூடுதலாய் ஒரு “ஓ” போட்டுக் கொண்ட கையோடு பதிவுக்குள் பாய்கிறேன் !
“ஷப்பாாா” என்ற பெருமூச்சு என்னுள்ளே ஓங்கி ஒலித்து வருகிறது ஞாயிறு முதலாய் ! ‘சிகரங்களின் சாம்ராட்‘ என்ற நூடுலாப்பத்தை மெல்லவும் வழி தெரியாது ; விழுங்கவும் தம்மில்லாது சுற்றித் திரிந்தவனுக்கு 13-ம் தேதீய பதிவைப் போட்ட பிற்பாடு ஒரு பெரும் பாரம் குறைந்தது மாதிரியான உணர்வு ! முடிச்சுகளை அவிழ்த்து விட்ட திருப்தியோ ; சகலத்தையும் புரிந்து கொண்டு, உங்களுக்கும் விளக்கி விட்டேனென்ற திருப்தியோ அந்தப் பெருமூச்சுக்குக் காரணமல்ல ! மாறாக - கிட்டத்தட்ட 2½ வாரங்களை விழுங்கிக்கொண்டதொரு கதையிலிருந்து ஒரு மாதிரியாய் வெளியேறி அடுத்த பணிக்குள் புகுந்திட சாத்தியப்பட்டுள்ளதே என்ற நிம்மதி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! இதன் மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் தீவிரமாய் மூழ்கிக் கிடந்த நாட்களில் கதையின் புதிர்களுக்கு ஓரளவுக்கு விடை கண்டிருந்தது போல் தோன்றியது ; but ஆளாளுக்கொரு தியரியோடு வலம் வரத்துவங்கிய பிற்பாடு - சங்கிலி முருகன் பஞ்சாயத்துப் பண்ணின கதை தான் எனக்கு !! "நான் சரியாத் தானே பேசிட்டிருக்கேன் ? சரியாத் தானே பேசிட்டிருக்கேன் ?" என்று சுற்றி நிற்பவர்களிடம் கேட்காத குறை தான் ! எது எப்படியோ - இதற்கும் மேலே சாம்ராட்டோடு நான் WWF நடத்தி நின்றால் - பிப்ரவரி இதழ்கள் 'கொக்கரொக்கோ' ஆகிப் போயிடும் என்பதால் நகன்றிட அவசியமாகிறது ! For sure – ‘காலப் பயணம்‘ என்பதெல்லாமே ஒரு முரட்டு concept & அதனைப் புரிந்து கொள்வதென்பது அசாத்திய பொறுமையினையும், கவனத்தையும், நேரத்தையும் அவசியப்படுத்தும் சமாச்சாரம் என்பதை நாம் கடந்த ஒரு வாரமாகவே பார்த்தும் வாசித்தும் வருகிறோம் ! நாம் தான் என்றில்லை – பிரெஞ்சில் கூட இந்த கதைக்கோசரம் வாசகர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டு திரிவதை ஜாலியாய்ப் பார்த்திட முடிந்தது – சில forum-களில் ! இதோவுள்ள லிங்க்கில் சென்று google translate-ன் சகாயத்தோடு அங்கே அரங்கேறியுள்ள அலசல்களைப் புரிந்திடத் தான் பாருங்களேன் : ஏர்வாடியைத் தேடித் திரிபவர்கள் நாம் மாத்திரமல்ல என்பது ‘பளிச்‘சென்று புரியும் ! இதில் விசேஷம் என்னவெனில் – தொடரின் ஆல்பம் # 21-ல் இந்த “காலப்பயணம்” concept மறுக்கா தலைகாட்டுகிறது – இதனிலோ குட்டி ஜோலனின் எதிர்கால மல்லுக்கட்டோடு ! தற்சமயம் நாம் குந்திக் கிடப்பது ஆல்பம் # 15-ல்! So எப்படியாச்சும் அடுத்த 5 ஆல்பங்களை ஓராண்டுக்குள் தடதடக்க வைத்த கையோடு – yet another வான் ஹாம் ஸ்பெஷலோடு உங்களைச் சந்திக்கும் ஆவல் இப்போதே அலையடிக்கிறது !
அதிலும் எனக்கொரு கூடுதல் ஆசையுமே ! ஆங்கிலக் கவிதைகள் ; இலக்கியத் தொகுப்புகள் வெளியாகும் போது – எங்கேனும் ஒரு புக் ஷாப்பில் ‘Book Reading with the Author’ என்ற நிகழ்வுகளை நடத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ! கதாசிரியர் புக்கை வாசித்துக் கொண்டே போக, வாசகர்கள் ஆளுக்கொரு புக்கோடு அமர்ந்திருந்து வாசிப்பைப் பின்தொடர்வர் ! நடுநடுவே அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் பற்றிய அலசல்கள் live ஆக அரங்கேறிடும் ! எப்போவாச்சும் ஒரு தபா அது போலலொரு நிகழ்வை நாமும் ஏற்பாடு செய்து, ஒரே ரூமுக்குள் அமர்ந்து, அடுத்த தோர்கல் time travel ஆல்பத்தை வாசித்து, விவாதித்துப் பார்க்க வேண்டுமென்பதே அந்தக் கூடுதல் ஆசை ! தலீவர் வாசிக்க – செயலர் சுவாசிக்க – பொருளாளர் சிலாகிக்க - மெய்மறந்து விட்டத்தைப் பார்த்திருக்க – அடடா…. நினைக்கும் போதே புல்… செடி… கொடி… எல்லாமே அரிக்கிறது ! Of course – அந்த அறையின் கதவிற்கொரு முரட்டுப் பூட்டும் போட்டிருக்கும் !
சரி, Enough of தோர்கல் for awhile ! ஜனவரியின் இன்னொரு 3 பாக ஆல்பம் பக்கமாயும் ஒளிவட்டத்தைச் சித்தே திருப்புவோமே ப்ளீஸ் ?! நிஜத்தைச் சொல்வதானால் பராகுடா தான் ஜனவரியின் ஒட்டுமொத்த கவனக் கடத்தல்காரனாய் அமைந்திடுவானென்று நான் கணக்குப் போட்டு வைத்திருந்தேன் ! ஆனால் ‘சிகரங்களின் சாம்ராட்‘ எனும் சாலைத்தடை ஒரு பகுதியாகவும் ; பராகுடாவின் மீத 3 ஆல்பங்களும் வெளியான பிற்பாடு ஒட்டுமொத்தமாய்ப் படித்துக் கொள்ளலாமே என்ற பரவலான அபிப்பிராயம், மீதப் பகுதியாகவும் அமைந்து போக, எனது யூகம் சொதப்பி விட்டது ! Maybe இந்த மாதத்தில் தோர்கல் தலைகாட்டியிராது ஒரு மாற்றுக் குறைச்சலான ஆல்பம் ஏதேனும் வந்திடும்படியாக நான் திட்டமிட்டிருக்க வேண்டுமோ, என்னவோ – தெரியலை ! Anyways – மாதத்தின் பாதி இன்னமுமே காத்துள்ளது எனும் போது ‘அலைகடலின் அசுரர்கள்‘ மீதும் கவனத்தைக் காட்டிட நிறையவே நேரம் உள்ளது தானே ? Why not give it a try guys ?
“பராகுடா” ஆல்பங்களின் உரிமைகளை நாம் வாங்கிடும் முயற்சி துளிர்விட்டது 2½ ஆண்டுகளுக்கு முன்னே ! 2016-ன் நடுவினில் பாரிஸில் படைப்பாளிகளைச் சந்திக்க நான் சென்றிருந்த சமயம் – இந்தத் தொடரின் ஓவியர் ஜெரெமியும் அங்கே வந்திருந்திருக்கிறார் போலும் ! அப்போது எனக்கு இந்தத் தொடர் பற்றி லேசாய்த் தெரியும் தான் என்றாலும் – ‘இதையெல்லாம் நாம என்னிக்குப் போடப் போறோம் ?‘ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது! So நான் பாட்டுக்குப் போன வேலையைப் பார்த்தபடிக்கே திரும்பி விட்டேன் ! ஆனால் ஓவியரின் வருகையை ஒட்டி பராகுடாவின் ஒற்றை black & white பக்கத்தை மெகா சைஸில் ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் போட்டு ஒட்டி வைத்திருந்தார்கள் ! அது என்னவோ தெரியலை – black & white-ல் ஒரு காமிக்ஸ் artwork பக்கத்தைப் பார்க்கும் போது எழும் தாக்கம் – வண்ணப் பக்கங்களில் (எனக்கு) எழுவதில்லை ! So அதைப் பராக்குப் பார்த்தது மட்டும் நினைவில் நின்றது – ஊருக்குத் திரும்பிய பிற்பாடும் ! But கடல்கொள்ளையர் கதைகளென்ற பக்கமாய் என்றைக்கேனும் நாம் சலாம் போடுவதாயிருந்தால் – அது ஓவியர் வில்லியம் வான்சின் “ப்ரூஸ் ஹாக்கர்” தொடரின் பக்கமாகத் தான் இருந்திட வேண்டுமென்று ரொம்பவே தீர்க்கமான தீர்மானம் எனக்குள் நிலவி வந்தது ! ஏதேதோ வேலைகளில் அப்புறமாய் மூழ்கிட ‘பராகுடா‘ சுத்தமாய் நினைவை விட்டு அகன்றிருந்தது ! 2017-ன் திட்டமிடல்கள் துவங்கியிருக்க – முதன் முறையாக கிராபிக் நாவல்களுக்கான தனித்தடம் அமைத்திடும் தீர்மானமும் அமலாகியிருந்தது என்னுள் ! So 2017-ல் சந்தா E அறிமுகமாகி, சிறுகச் சிறுக உங்கள் அபிமானங்களை அதிரடியாய் ஈட்டத் துவங்கிய போதே, என்னுள்ளிருந்த மந்தி ‘ஜிங்கு-ஜிங்கென்று‘ குதிக்கத் துவங்கி விட்டது ! தொடரவுள்ள 2018-க்கு கிராபிக் நாவல்கள் என எதைத் தேர்வு செய்யலாமென்ற பட்டியல் போட்ட சமயம் தான் ‘ப்ரூஸ் ஹாக்கர்’ & ‘பராகுடா‘ பற்றிய ஞாபகம் எழுந்தது ! If I remember right – இது பற்றிக் கூட இங்கே நமது பதிவினில் ஏதோ எழுதியிருந்தேன் ! இறுதியில் எனக்கு ஆபத்பாந்தவனாய் அமைந்து போனது CINEBOOK-ன் ஆங்கில பராகுடா பதிப்பே ! அதனை வரவழைத்து pdf-ல் வாசித்த போதே மிரளச் செய்தன சித்திரங்களும், கலரிங்கும், கதையின் தெறிக்கும் போக்கும் ! ஆக அடுத்த கிராபிக் நாவல் சுற்றில் இதனை வெளியிட்டே தீர வேண்டுமென ஞானம் பிறந்த போதே கதைகளையும் வாங்கி விட்டோம் ! And here we are – ஓராண்டுக்குப் பின்னேயாவது அதனைத் தமிழில் கரைஒதுங்கச் செய்த குஷியோடு ! ஒரே வருத்தம் என்னவென்றால் - அன்றைக்கே எனக்கிந்தத் தொடர் பற்றித் தெளிவாய்த் தெரிந்திருந்தால் – எருமை போல ரிசப்ஷனில் காத்துக் கிடந்த நேரத்துக்கு, ஓவியர் ஜெரெமியைச் சந்தித்து ஒரு ஃபோட்டோவாவது எடுத்திருப்பேன் ! வட போச்சே !!
SMURF படைப்பாளிகளின் அலுவலகத்துக்குப் போயிருந்த போதுமே இதே போலத் தான் கோட்டை விட்டிருந்தேன் ! அவர்களது ஆபீஸின் ரம்யத்தை விவரிக்க வார்த்தைகள் பற்றாது ! மெய்யாகவே ஒரு கனவுலக ஸ்மர்ஃப்வில்லா அது ! அங்கேயே பேஸ்மெண்டிலிருந்த அவர்களது ஓவியர்களின் பணியறைக்கு என்னை இட்டுச் சென்ற போது – திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றிப் பார்க்கும் வெள்ளைக்காரர்களைப் போல blank ஆக சகலத்தையும் பராக்கு மட்டும் பார்த்து வந்தேன் ! அங்கே live ஆக ஸ்மர்ஃப் புது ஆல்பத்திற்கான பணிகள் ஓடிக் கொண்டிருந்த போதிலும் – என்னோடு சிரித்துப் பேசியவர் தான் தலைமை ஓவியர் ஜெரோயென் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை ! அப்புறமாய் ரூமுக்குத் திரும்பிய பிற்பாடு நெட்டை உருட்டிய சமயம், மனுஷனின் போட்டோ கண்ணில்பட்ட போதுதான் விஷயமே புரிந்தது ! “அட கோமாளிப் பயலே….அத்தனை நட்பாய்ப் பேசிய மனுஷனோடு ஒரு போட்டோ தட்டியிருக்கலாமே !! போச்சே வாய்ப்பு !!” என்று நொந்து கொண்டது தான் மிச்சம்!
‘Just miss” அனுபவங்களின் உச்சமோ – போனெல்லி அலுவலகத்தில் TEX-ன் சூப்பர் ஸ்டார் எடிட்டர் மௌரோ போசெல்லியுடன் கைகுலுக்கி விட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளாது சொதப்பியதே ! பொதுவாய் போனெல்லி அலுவலகத்தினில் அசலூர் பதிப்பாளர்கள் யாரும் தலைகாட்டுவதில்லை – simply becos அவர்களது கதைகளுக்கான உரிமைகளைச் சந்தைப்படுத்த மோடெனா என்ற நகரில் பனினி எனும் நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளனர் ! உலகெங்கும் நடைபெறும் பிரதான புத்தக விழாக்களுக்குக் கூட போனெல்லி வருகை புரிவதில்லை ! “எதுவானாலும் ஏஜெண்ட்களிடம் பேசிக்கோங்கப்பா” என்று அவர்கள் ஒதுங்கிடுவது துவக்கம் முதலான பாலிஸி ! So எனது பலகாலக் கனவு நிறைவேறுமா ? என்பதிலேயே எனக்கு நிறையவே சந்தேகமிருந்தது ! “இத்தாலியில் வேலை உள்ளது… போனெல்லி பக்கமாய் அரை மணி நேரம் மட்டும் தலைகாட்ட ஆசை… அனுமதிப்பார்களா?” என்று பனினி நிறுவனத்தில் கேட்ட போது – “அவசியம் போகணுமா? அவர்கள் எப்போதுமே படு பரபரப்பாய் இயங்கிடுபவர்களாச்சே?” என்று பதில் போட்டார்கள் ! “நிச்சயமாய் உபத்திரவம் செய்திட மாட்டேன் ; சும்மா ஒரு ஆர்வக் கோளாறு மாத்திரமே ; 15 நிமிடங்கள் கூடப் போதும் !” என்று மறுக்கா மெயில் அனுப்பினேன் ! “சரி… கேட்டுச் சொல்கிறேன்” என்றவர் – அன்று மாலையே “ஓ.கே…. காலையில் 11.30-க்கு அங்கே ஆஜாகிடவும் ; brief meeting மட்டுமே !” என்று பதில் அனுப்பியிருந்தார் ! So அவர்களது இசைவு கிட்டியதே பெரும்பாடு ; இதில் வழக்கமான நம் பிளேடைப் போட்டு, அவர்களது வேலைக்கு இடைஞ்சலாகிடப்படாது !” என்ற ஒருவிதப் பரபரப்பு எனக்குள்ளே மின்சாரமாய் ஓடிக் கொண்டேயிருந்தது ! அவர்கள் ரொம்பவே அன்பாய், ஜாலியாய் எனக்கு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டி ரிலாக்ஸ்டாகப் பேசிக் கொண்டிருந்த போதிலும், எனக்குள்ளே – “"அஞ்சரைக்குள்ளே வண்டி ...கிளம்பிடு..அஞ்சரைக்குள்ளே வண்டி..கிளம்பிடு.."” என்ற அலார மணி தான் ஒலித்துக் கொண்டேயிருந்தது ! முதல் மாடியில் சுற்றிக் காட்டியவர்கள், தரைத் தளத்தையும் காட்டிட அழைத்துப் போய் – "இது தான் ‘TEX டிபார்ட்மெண்ட்‘!" என்ற போது, எனக்குள்ளேயோ – “சரி… நாசூக்காய் கீழே கூட்டிட்டு வந்திருக்கிறது வழியனுப்பத் தான்!” என்பது போலொரு குரளிச் சத்தம்! So – “இவர் தான் எங்க எடிட்டர் மௌரோ போசெல்லி” என்று அவரை அறிமுகப்படுத்திய போது கூட, பேமானி போலொரு சம்பிரதாய இளிப்போடு கையை மாத்திரம் நீட்டினேன். அவர் கூட அந்நேரம் வெளியே கிளம்பிடத் தயாராகிக் கொண்டிருக்க – நானும், "சரி சார்… சரி சார்… கிளம்புங்கள்!” என்று டாட்டா காட்டி வைத்தேன் !
ஒரு வழியாய் நானுமே விடைபெற்று அவர்களது அலுவலகத்தினருகே உள்ள மெட்ரோ ஸ்டேஷனுக்குள் புகுந்த போது தான் உரைத்தது – நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னே சந்தித்தது "THE MAN HIMSELF" என்று !! “அடங்கொன்னியா… ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்காமப் போனியே!” என்று என்னை நானே மூக்கில் குத்திக் கொள்ளாத குறை தான்! அலுவலகத்தில் போனெல்லியின் இளவலைச் சந்தித்து சாவகாசமாய்ப் பேச முடிந்திருந்தாலும் - ஒரு டாப் படைப்பாளியோடு கொஞ்சமாவது பேசிப் பழகிட வாய்ப்புக் கிட்டியும், கிட்டாது போனதே செம disappointment ! “நாமெல்லாம் கண்டு மிரளும் பல classic டெக்ஸ் கதைகளை உருவாக்கும் பிதாமகர், பாசாங்குகள் ஏதுமிலா சாந்தமான இந்த மனுஷர் தானா?” என்ற கேள்வி அன்று முழுவதுமே என்னை உலுக்கியது! “இத்தனை பெரிய படைப்பாளியே அமைதியாய் உலவும் போது – யாரோ சுடும் தோசைகளுக்கு சட்னிகளும், தொக்குகளும் மாத்திரமே தயார் பண்ணும் நாமெல்லாம் காலமெல்லாம் வாயில் ப்ளாஸ்திரியை மட்டுமே ஒட்டியே திரிய வேணும் போலிருக்குடா சாமி!” என்று அன்றைக்குத் தீர்மானித்தேன் ! அதே போல மர்ம மனிதன் மார்ட்டினின் கதாசிரியரான ஆல்ப்ரெடோ காஸ்டெலினியும் காட்டிய அன்பும், சகஜத்தனமும் நிஜமாய் வாய்பிளக்கச் செய்த ரகம் ! அந்தத் தொடருக்கென அவர் செய்திடும் வாசிப்புகளை நாமெல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்ந்தால் கூட நமது ஆயுட்காலங்களில் பூர்த்தி செய்திட முடியாது ! அவரது லைப்ரரியும் சரி, நோட்ஸ்களும் சரி – ஒரு பல்கலைக்கழகத்தின் நிகர் ! ஆனால் அவருமே யதார்த்தமாய்ப் பேசியதைப் பார்த்த போது தான் புரிந்தது – அந்தத் தலைகள் ஏற்கனவே சரக்கால் கனமாயிருப்பதால், ‘ஈகோ‘ எனும் கனத்தைத் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை என்று ! Simply magnificient people!
And I met more lovely people on the 5th' Jan – சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலுக்கு சித்த நேரம் விசிட் அடித்த போது ! ராஜஸ்தான் பயணம் 3 நாட்களை எடுத்துக் கொள்ள, என்னால் ஸ்டாலில் சொற்ப நேரமே இருக்க முடிந்தது ! And நண்பர்களில் சிலரை மட்டும் சந்திக்க முடிந்தது என்றாலும் அந்த 2 மணி நேரங்களுமே உற்சாகமாய்க் கரைந்தன !
இந்தாண்டு இதுவரையிலான விற்பனைகள் decent ரகம் என்றாலும், தினமுமே ஒருவித pattern-ஐ பார்த்திட முடிகிறது ! வாரயிறுதிகளில் & விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே புத்தக விழா துவங்கிடுவதால், பகல்களில் விற்பனை பரபரப்பாகவே உள்ளது. அப்புறம் சாப்பாட்டு வேளையில் லேசாய் டல்லடிக்க, மறுபடியும் 4 மணி முதலாய் வேகமெடுக்கிறது ! ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாய் இரவு 7½ மணிக்கு மேலே அந்த வேகம் மட்டுப்பட்டு விடுகிறது ! பொதுவாய் அந்நேரம் தான் விற்பனை களைகட்டும் ! என் ஃபோனில் உள்ள Point of Sale செயலியில் ஒவ்வொரு க்ரெடிட் கார்ட் விற்பனை விபரமும், மறுகணமே பிரதிபலித்து விடும் என்பதால் நேரவரிசைப்படியே விற்பனை pattern-ஐக் கண்காணிக்க சாத்தியமாகிறது ! மாலைகளில் குளிர் சற்றே தூக்கலாய் இருப்பது காரணமா – என்னவென்று தெரியலை ; ஆனால் இப்போது வரையிலுமாவது வாடிக்கையாளர்கள் பகற்கழுகுகளாகவே இருந்து வருகின்றனர் ! Anyways, பகல் கழுகுகளோ ; மதியானக் கழுகுகளோ ; சாயந்திரக் கழுகுகளோ - ஏதேனுமொரு அவதாரில் வாசகர்கள் நம்மை விசிட் செய்தாலே சந்தோஷமே !!
ராஜஸ்தானிலிருந்து திரும்பிய பிற்பாடு அலுவலகத்தில் இதரப் பணிகள் ; அப்புறம் 13-ம் தேதியின் முரட்டுப் பதிவு என்பனவற்றை மங்களம் பாடிய கையோடு பிப்ரவரி இதழ்களுக்குள் புகுந்திருக்கிறேன் ! மலை போல 3 பாக ஜெரெமயா ; 1 ஜானி 2.0 ஆல்பம் ; 1 (கார்ட்டூன்) மேக் & ஜாக் + 1 டெக்ஸ் மறுபதிப்பு என்று குவிந்து கிடக்க, இணைப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது லேசான பணிகள் காலியாக உள்ளனவா ? என்று பார்க்கத் தான் தோன்றுகிறது! Truth to tell – 12 & 13 தேதிகளில் புத்தக விழாவுக்குச் சென்றிட டிக்கெட் போட்டிருந்தேன் தான் ! ஆனால் இங்கே குவிந்து கிடக்கும் பணிகளின் பருமனைப் பார்த்த போது வியர்க்கத் துவங்கி விட்டது ! So டிக்கெட்டைக் கேன்சல் செய்த கையோடு பணிகளுக்குள் குதித்து விட்டேன் ! பிப்ரவரியின் முதற் பயணமே “பயணங்கள் முடிவதில்லை” என்று சொல்கிறது ! அட ஆமாங்கோ – ஜெரெமயா Integral # 2-ல் தான் தற்போது எனது பொழுதுகள் கரைந்து வருகின்றன ! பாதித் தூரத்தைக் கடந்தாச்சு – but அதற்குள்ளாகவே ஒரு கிலோ வெயிட் குறைந்து விட்டது போலொரு பீலிங்கு ! அநேகமாய் 19 & 20 தேதிகளில் பணிகளின் சகலத்தையும் நிறைவு செய்த கையோடு சென்னை செல்லும் எனது திட்டத்திற்கு ஜெயம் கிட்டிடும் பட்சத்தில், லக்கி லூக்குக்குப் போட்டியாய் இருப்பேனென்று தோன்றுகிறது ! பார்ககலாமே !!
2019-ன் சந்தா நிலவரம் பற்றிய update செய்வதாயின் – ஓடும் வண்டியில் பரபரப்பாய் இணைந்து கொள்ளும் நண்பர்களின் பட்டியல் நீண்டு வருகிறது எனலாம் ! இன்னமும் 20% நண்பர்கள் புதுப்பித்தல்களைச் செய்திடுவதாய் promise செய்திருக்க – அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆர்வமாயுள்ளோம் ! ஜனவரி 31-க்குள் 2018-ன் சந்தா எண்ணிக்கையைத் தொட்டுவிட சாத்தியமாகின் தலை தப்பித்து விடும் ! So இன்னமுமே சந்தா எக்ஸ்பிரஸில் தாவியிரா நண்பர்கள் 2 தவணைகளின் சலுகையினைப் பயன்படுத்திடவும் செய்யலாம்! Please do hop in folks – we would love to have you back for 2019 too!
Looking ahead – 2019-ன் முழு அட்டவணையும் உங்கள் கைகளில் இருக்க, அறிவிப்புக்குக் காத்திருக்கும் களங்கள் இரண்டு மாத்திரமே ! அவை :
- ஜம்போ காமிக்ஸ் – சீஸன் 2 - (6 இதழ்கள்)
- ஈரோடு 2019 ஸ்பெஷல் ! (2 / 3 இதழ்கள் ?)
Of course ஜம்போ சீஸன் 2-ன் ஆரம்பம் இளம் TEX-ன் “சிங்கத்தின் சிறு வயதில்” என்பது அறிவிக்கப்பட்டுள்ள சமாச்சாரமே ! அதே போல – இன்னொரு slot ஜேம்ஸ் பாண்ட் 007-ன் அடுத்த சாகஸத்துக்கென ரிசர்வ் செய்து வைத்துள்ளேன் ! ஆக எஞ்சியிருக்கும் 4 ஜம்போ இதழ்களில் இடம்பிடிக்கவிருப்போர் யார் ? அல்லது எந்தக் கதைகள் ? என்பதே தற்போதைக்கு under wraps ! சில பல புதுத் தொடர்களுக்கும்; one-shot-களுக்கும் உரிமைகளை அவ்வப்போது வாங்கி வைத்துள்ளோம் என்ற போதிலும், மார்ச் வரையிலும், எதை, எங்கே நுழைப்பது ? என்ற எனது option-களைத் திறந்தே வைத்திருத்தல் நலமென்று நினைத்தேன் ! ஜம்போவில் ACTION SPECIAL லேசாய்ச் சறுக்கியது போல் தொடரும் ஆண்டினில் ஏதும் நிகழ்ந்திடப்படாதே என்பதே எனது தலையாய சிந்தனை ! கதைகளின் அறிவிப்பினைச் செய்திராத போதிலும் - நமது சந்தாதாரர்களில் பெரும்பான்மையினர் - ஜம்போ சீசன் 2-க்கும் சேர்த்தே பணம்கட்டியுள்ளதை நான் உங்களது நம்பிக்கைகளின் அடையாளமாய்ப் பார்த்திடுகிறேன் ! அந்த நம்பிக்கை வீண்போயிடக் கூடாதே என்ற ஆதங்கமும் ஆட்டிப் படைப்பதால் - ஜம்போ சார்ந்த எனது திட்டமிடல்களை இந்தப் பொங்கல் நன்னாளில் பகிர்ந்திட்டால் தேவலாம் என்று நினைத்தேன் !
Action Special நமது நினைவுகளில் பசுமையாய் நிற்கும் இந்த வேளையில், அது சார்ந்ததொரு கேள்வி என்னிடமுள்ளது guys !! அந்த “பதிமூன்றாவது தளம்” கதைத் தொகுப்புகள் மட்டுமே கொண்டதொரு பிரத்யேக ஆல்பத்தை இங்கிலாந்தில் Rebellion வெளியிட்டுள்ளனர் ! அந்தக் கதைகளை மட்டுமே ஜம்போ காமிக்ஸ் சீஸன் 2-வில் ஒரு பிரத்யேக இதழினில் கொணரலாமா ? ஒற்றைக்கண் ஜாக் & இயந்திரன் சற்றே அஜீரணத்தை ஏற்படுத்தியிருந்தாலும் - இந்தப் பதிமூன்றாம் மாடியார் ஒரு சுவாரஸ்ய வாசிப்புக்கு வாய்ப்புத் தந்தது போலவே எனக்குப் பட்டது ! தவிர, 13 என்ற நம்பர் நமக்கு ரொம்பப் பிடித்தமானது தானே ? Thoughts on that please? “The Mystic Special” என்ற பெயரில் maybe இதன் முழுநீளத் தொகுப்பு சுகப்படுமா ?! In black & white of course !
அதே போல இன்னொரு கேள்வியுமே உங்களுக்கு ! How much is too much when it comes to a genre? விளக்குகிறேனே: கௌபாய் கதைகளில் தற்சமயம் நம் பக்கமிருப்பன:
- டெக்ஸ் வில்லர்
- ட்ரெண்ட் (not really a cowboy in the true sense)
- ஜானதன் கார்ட்லேண்ட்
- ட்யுராங்கோ
- Bouncer
இந்த நிலையில் மேற்கொண்டும் சிலபல westerns-களுக்கான உரிமைகளை வாங்கி வைத்துள்ளோம் ; வாகான சந்தர்ப்பத்தில் புகுத்திக் கொண்டு விடலாமென்று ! அந்த ரகத்தில் அதிரடியானதொரு நாயகரின் தொடரொன்று காத்துள்ளது – ஜம்போ சீஸன் 2 (or) ஈரோடு ஸ்பெஷல் (களில்) தலைகாட்டிடும் பொருட்டு ! அவரது வருகையினில் நிச்சயமாய் யாருக்குமே திகட்டலிராது என்ற நம்பிக்கை எனக்குள்ளது – simply becos அவர் Wild West-ஐத் தெறிக்கச் செய்து வருவது செம மிரட்டலான பாணியில் ! So he's gonna be an automatic entry !! அவர் யாரென்று கேட்கிறீர்களா? நேரம் வரும்போது சொல்கிறேனே ?!
கதைகள் மிகுதியாயுள்ள இது போன்ற தொடர்கள் ஒருபக்கமெனில், one-shot கௌபாய்க் கதைகளிலும் சில பல நம் பீரோவில் தேவுடு காத்து வருகின்றன - ஒரு நுழைவுக்களத்தினை எதிர்பார்த்து ! டிடெக்டிவ் கதைகள் உருப்படியாய் அமையவில்லை ; கார்ட்டூன்களில் பல நமக்கு ஒத்துக்க கொள்ள மறுக்கின்றன ; லார்கோ / கேப்டன் பிரின்ஸ் / XIII போன்ற adventure சாகசங்களும் அவ்வளவாய்க் கண்ணில் படமாட்டேன்கின்றன ; sci-fi-க்கு நாமின்னும் ரெடியில்லை எனும் போது - கௌபாய் ஜானரின் வண்டி இன்னும் சில பல ஆண்டுகளுக்காவது திடமாய் ஓடுமென்ற நம்பிக்கை உள்ளது ! So கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை எங்கேனும் நுழைத்துக் கொள்ளலாமென்ற நம்பிக்கையில், "cowboy கதை ஷாப்பிங்" செய்வதை சத்தமின்றிச் செய்து வருவது வாடிக்கை ! அந்த சேகரிப்பினில் ஒரு 'பளிச்' ஆல்பம் ஜம்போவின் ஒரு ஸ்லாட்டுக்கு என்று திட்டமிட்டுள்ளேன் ! தமிழ் பேசவிருக்கும் இந்தப் புதுவரவின் பெயர் மார்ஷல் சைக்ஸ் !
செம யதார்த்த வன்மேற்கினைக் கண்முன்னே கொணர்ந்து காட்டும் பாங்கு ; ஒரு நரம்பும், சதையுமான, சராசரி மனித இயலாமைகளுக்கு ஆளாகிடக்கூடிய மார்ஷல் ; ரொம்பவே மாறுபட்ட சித்திர பாணி ; பர பரவென 75 பக்கங்களில் நிறைவுறும் ஆக்ஷன் மேளா என இந்த ஆல்பத்தினை வர்ணிக்கலாம் ! One-shot என்பதைவிடவும் two-shot என்று சொல்வது பொருத்தமென்பேன் - சிக்கனமாய்ப் பேசிடும் இந்தப் புது இறக்குமதியைப் பொறுத்தமட்டில் ! தனித்தனியாய்ப் படிக்கக்கூடிய 2 கதைகளே இங்கு ; ஆனால் முதலாவதில் தலைகாட்டும் மாந்தர்களின் சிலர், தொடரும் இரண்டாம் ஆல்பத்திலும் இடம்பிடிப்பதால் - லேசாயொரு link உள்ளது இரண்டுக்குமிடையே ! ப்ரெஞ்சில் 2017-ல் SYKES & 2018-ல் TEXAS JACK என்றே தனித்தனியாய் வெளியிட்டுள்ளனர் ! So முதல் ஆல்பத்துக்கு சென்றாண்டின் நடுவாக்கிலேயே உரிமைகளை வாங்கிவிட்டிருக்க, 2019-ன் ரெகுலர் சந்தாவிலேயே இதனை வெளியிட எனக்கு ஆசை தான் ! In fact - “நீரில்லை… நிலமில்லை” one-shot ஆல்பத்த்தின் இடத்தினில் நான் திட்டமிட்டிருந்தது மார்ஷல் சைக்ஸைத் தான் ! ஆனால் “ஓவராய் கௌ-பாய் நெடி சந்தா முழுக்க வீசுதே !” என்ற புகார் எழக்கூடுமென்பதால் மனதை மாற்றிக் கொண்டேன் ! சரி, இருக்கவே இருக்குது ஜம்போ சீஸன் 2 ; இந்தப் புது நாயகர் அங்கே பொருந்திடுவாரென்று பட்டதால் அப்போதைக்கு அடுத்த வேலைக்குள் புகுந்து விட்டேன் ! இப்போது ஒரு மாதிரியாய் 2019-ன் பயணம் துவங்கி விட்டிருக்கும் நிலையில், ஜம்போ # 2-ன் திட்டமிடல்களை இறுதிப்படுத்துவதே எனது அடுத்த பணியாக நிற்கிறது ! And கதைகளின் அறிவிப்பே இல்லாமலே கூட ஏகப்பட்ட நண்பர்கள் ஜம்போவின் இரண்டாவது சீஸனுக்கும் சந்தா செலுத்தியிருப்பதால், கதைத் தேர்வுகளில் முன்னெப்போதையும் விடக் கூடுதல் கவனம் தேவையென்று புரிகிறது ! அதனால் தான் இந்தக் கேள்வி : How much is too much – when it comes to the Wild West ?
இன்னமுமே ஒரு கௌபாய் நாயகரின் ஒரு வித one-shot ஜம்போவின் சீஸன் #2-ல் இடம்பிடித்திட உள்ளது! ஆனால் இம்முறை யாரும் அவருக்குத் தடா போட முனைந்திட மாட்டார்களென்றே நினைக்கிறேன்! அவர் வேறு யாருமல்ல – நமது ஆதர்ஷ ஒல்லிப் பிச்சான் லக்கி லூக் தான்! ஆனால் இம்முறையோ அவரது மாமூலானதொரு கார்ட்டூன் ஆல்பத்தோடு உங்கள் கதவுகளைத் தட்டுவதாகயில்லை ! மாறாக லக்கி லூக்கின் 70-வது பிறந்த நாள் ஆண்டான 2017-ல் உருவானதொரு மாறுபட்ட லக்கி சாகஸம் தான் ஜம்போவில் ! “Who killed Lucky Luke?” என்ற பெயரில் வெளியாகி – முதல் 15 நாட்களுக்குள்ளாகவே ப்ரெஞ்சில் ஆறு இலக்கங்களின் விற்பனை கண்டுள்ள ஆல்பம் இது ! லக்கி லூக் ஒரு நிஜ மனுஷனாய் இருந்திருப்பின், அவரது நாட்கள் எவ்விதமிருந்திருக்கும் ? என்பதை ஒரு சீரியஸான பார்வை - இலகுவான சித்திரங்களோடு பார்த்திட முனைந்துள்ளார் கதாசிரியர் ! இந்த சூப்பர்ஹிட் ஆல்பமும் எனது 2019 ரெகுலர் சந்தாவினில் இடம் பிடிப்பதாகவே இருந்தது ! But கார்ட்டூன் சந்தாவில் ஏற்கனவே 3 LL கதைகள் இருப்பதால் - ஜம்போவுக்கென வண்டியைத் திரும்பிவிட்டேன் ! இதுவுமே நம்மிடம் 2017-ன் இறுதி முதலாய் துயின்று வரும் கான்டிராக்ட் ; so “ஜம்போவே தஞ்சம்” என்றாகிவிட்டது சில பல வித்தியாசமான ; அதே சமயம் ஜனரஞ்சகமான சாகஸங்களுக்கு !
So தற்போதைய உத்தேச ஜம்போ - சீஸன் 2-ன் பட்டியல் பின்வருமாறு!
1. Young TEX – சிங்கத்தின் சிறுவயதில்
2. ஜேம்ஸ் பாண்ட் 007 – கதை # 3
3. லக்கி லூக்கை போட்டுத் தள்ளியது யார்?
4. மார்ஷல் சைக்ஸ்
5. ....? (Maybe பராகுடா க்ளைமேக்ஸ் பாகம்?)
6. ....? (Maybe 13-வது தளம் Integral - The Mystic Special ?)
கோடிட்ட கடைசி 2 இடங்களை நிரப்ப உங்கள் ஒத்தாசை தேவை folks - simply becos நம்மிடம் இன்னமுமே 3 one-shot கௌபாய்க் கதைகள் RAC-ல் காத்துள்ளன ! How much is too much for Westerns ? என்ற கேள்விக்கு - "வானமே எல்லை" என்று நீங்கள் குரல் கொடுப்பின், slots 5 & 6-ன் ஏதோவொன்றிலாவது இன்னொரு கௌபாயும் பிரசன்னமாகிடுவார் ! உங்கள் குரல் கேட்டால் - திரையினை விலக்கி அவரையும் உங்கள் முன்னே களமிறக்கிடலாம் !! அல்லது - இப்போதைக்கு குதிரைப்பையன்கள் போதுமென்றீர்களெனில் - நேராய் 2020-க்கு அவர்களைக் கடத்திடலாம் ! What say all ?
சரி, இனியும் பிளேடு போட்டுக் கொண்டிருந்தால் அதிகாலையில் சுடச் சுடத் தயாராகும் பொங்கலை கார்பீல்டுக்குத் தான் போட வேண்டி வரும் என்பதால் புறப்படுகிறேன் ! பொங்கலை புக்ஸோடு கொண்டாடிட எண்ணினால், சென்னைப் புத்தக விழாவுக்கு விசிட் அடியுங்களேன் folks ! ஸ்டால் # 153-ல் ஆவலாய் நம்மவர்கள் காத்திருப்பார்கள்! Bye all… See you around ! Have an awesome time !!
இது நமது அபிமான சென்னை வாசகக் குடும்பத்து இளவரசி வெள்ளைத் துணியில் செய்துள்ள ஜாலம் ! கலக்குங்கள் ரூபா கண்ணன் !!























