நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் ஞாயிறு to ஞாயிறு ஒற்றை வாரமானது ஓட்டமெடுப்பது டெக்ஸின் டைனமைட்டை விட வேகமாய் இருப்பதாக எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா - தெரியவில்லை..... ! இதோ - கண்மூடி கண் திறப்பதற்குள் ஆண்டின் சரி பாதியை கடந்திருக்கிறோம் நமது அட்டவணையில். And எப்போது போலவே இரண்டாவது பாதியில் பெண்டைக் கழற்றவல்ல பணிகள் சகலமும் குவிந்திருப்பது கண்கூடாய்த் தெரிகிறது. But இந்த நொடியில் ஒளிவட்டம் ஜூன் மாதத்து இதழ்களின் மீதே என்பதால் அவற்றைப்பற்றிப் பேசுவதே முறையாக இருக்கும்.
எனக்குள் அரித்துக் கொண்டிருந்த சின்னதொரு கேள்விக்கு ஓரளவிற்கேனும் இந்த ஜூனில் விடை கிட்டிவிட்டது என்றுதான் சொல்லலாம். அது வேறொன்றுமில்லை folks ! புதுக்கதைகள், நாயகர்கள் தொடர்பான தேடல்களை இன்னமும் தொடரத்தான் வேணுமா? உள்ளதைப் படிக்கவே அவரவருக்கு நேரமோ, பொறுமையோ இல்லை எனும்போது 'அமெரிக்கால கூப்பிட்டாஹோ.... ஜப்பான்ல கூப்பிட்டாஹோ...' என்று புதுசாய் பீப்பீ ஊதும் பார்ட்டிகளை இங்குமங்கும் அலைந்து சேகரித்து தமிழ் பேசச் செய்வதெல்லாம் போதுமோ ? என்ற எண்ணம் தலைதூக்கியிருந்ததுதான். So, ரெட் கன் வாயிலாக ஜூனில் ஒரு புது நாயகர் அறிமுகம் காணும்போது உங்களது வரவேற்பினை எனது வினாவுக்கான விடையாக எடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன். And very early days yet, ஆனாலும் இதுவரையிலான அலசல்கள் 99 சதவீதம் பாசிடிவ்வாக அமைந்திருப்பது எனக்குள் கொஞ்சமாய் ஒரு தெளிவைத் தந்துள்ளது. Of course, நமக்கு நிரம்பவே பிடித்த cowboy கதைக்களம் எனும் போது ரெட் கன்னுக்கு ஆரம்பிக்கும்போதே சின்னதொரு பூஸ்ட் கிட்டிவிடுகிறதுதான். ஆனாலும் அதற்குப் பின்பாய் வெற்றி எல்லைக்கோடு வரை இட்டுச் செல்வதற்கு அந்த ஒற்றைப் பாசிடிவ் மட்டுமே போதாதுதானே ?! சரக்கும் முறுக்காக இருக்கணும், செட்டியாரும் முறுக்காக இருக்கணும் என்பதாக நாயகரும் சரி, அவர் களமாடும் கதைப் பின்புலமும் சரி ஸ்டிராங்காக இருந்தாலொழிய இன்றைய ப்ளூ சொக்காய் அலசல்களில் கரை சேருவது கஷ்டமாச்சே! அந்த வகையில் போன வருஷம் இவரது சாகசத்தை முதன்முறையாகக் கண்ணில் பார்த்தபோது, எனக்குப் பளிச்சென்று பட்டது இரண்டு விஷயங்கள்.
முதலாவது: ரொம்பவே இறுக்கமான, தனக்குள்ளேயே வசிக்கும் அந்தக் கதாபாத்திரம். அழகழகாய் பட்டாம்பூச்சிகள் சுற்றிலும் பறந்து வந்தாலும், அவற்றை ஒரு தூரத்திலேயே நிறுத்தி வைத்துக்கொள்ள முனைந்திடும் மனுஷனின் உள்ளுக்குள் இருக்கும் யுத்தம் சார்ந்த காயங்களை, maybe, கதாசிரியர் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம் தான். ஆனாலுமே, from what little we have seen ரெட் கன்னின் சித்ரவதை செய்யும் நினைவுகள், அந்த பாத்திரத்தின் மீது நமக்கொரு பிடிமானம் சட்டென்று கிடைத்திட உதவுவதாகவே நான் நினைத்தேன்.
இரண்டாவது விஷயமானது: மாமூலான வெஸ்டர்ன் நாயகர்களைப் போல் டமால், டுமீல் என்ற அதிரடிகள் இல்லாது, ஒரு எதார்த்தமான புலனாய்வு அதிகாரியாய் மனுஷன் செயல்படுவது கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது. "நாயகரின் பெர்பார்மன்ஸ் கம்மிதான் !' என்று நண்பர்கள் குறிப்பிட்டிருந்தது கூட நினைவுக்கு வருகிறது. அது மெய்யே, simply becos எந்தவொரு நிஜப் புலனாய்விலும் ஜேம்ஸ்பாண்ட் பாணிகளில் அதிரடிகள் சதா நேரமும் அரங்கேறுவதில்லை. இதோ இம்மாதத்து ராபின் கூட அதற்கு ஒரு prime உதாரணம். சம்பவங்களை கூர்ந்து நோக்குவது, பின்னணியில் புள்ளிகளை இணைத்து அதற்கொரு 'லாஜிக்' கற்பிக்க முனைவது, குற்றவாளி ஏதேனும் தப்பிழைத்துப் பிடிபடுவது என்பதெல்லாமே எதார்த்தங்கள். And கதாசிரியர் மிகைகளின்றி அதைச் செய்திருந்தது, இந்தக் கதையைப் போன வருஷம் பரிசீலித்த சமயத்தில் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது. பிளஸ் ஒருவித டார்க் களமானது, கதையோடு பயணிக்கும்போது நம்மை இறுக்கமாகவே பற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை எழுந்தது; அதன் பலனே குருதியின் கூலி. இந்தத் தொடரில் மொத்தமே இதுவரை இரண்டு கதைகளே உள்ளன என்பதால், இரண்டையுமே வாங்கிவிட்டோம். Of course, நடப்பாண்டிலோ அடுத்த வருஷத்திலோ அடுத்த ஆல்பம் வரக்கூடும் தான். So, நம் மத்தியில் தரமான புதியவர்களுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்திருக்கும் டெரன்ஸ் நிக்கோலஸை நம் அணிவகுப்புக்குள் நிரந்தரனாக்குவதில் அண்ணாச்சி ஹாப்பி !
இம்மாதத்து ராபின் 2.0 இன்னமும் நிறைய பேரது வாசிப்புகளில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது obvious. ஒரு பக்காவான, தெறி மாசான கதைக்கருவோடு, அட்டகாசமான நெடும் திட்டமிடலோடு இந்த ராபின் 2.0 தொடரினை படைப்பாளிகள் துவங்கியிருப்பது அழகாய் ஒரு கிளைமாக்ஸில் முற்றுப் பெறுகிறது. மொத்தம் 10 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை சாவகாசமாய், என்றேனும் அவகாசம் கிடைக்கும்போது, வரிசையாய் படித்துத்தான் பாருங்களேன் - ராபினின் பரிணாம வளர்ச்சி மாத்திரமன்றி, அவரது டீமின் உறுப்பினர்களும் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் செம நேச்சுரலாக சித்தரிக்கப்பட்டிருப்பது புரியும். துடுக்குத்தனமாய் திரிந்த மார்வின்), இன்று தலை நரைத்த அனுபவசாலியாக, தனது முன்னாள் பார்ட்னருக்கு கைகொடுக்க மறுவருகை செய்கிறார். நியூயார்க்கை இம்மி விடாது அலசிடும், உயரம் குறைந்த ஆல்பி, அனுபவ முதிர்ச்சியோடு ராபினுக்கு ஒத்துழைக்கிறார். கேப்டன் வான்சோ "என்னமோ செஞ்சுக்கோங்க, எனக்கு எதுவும் புரியலை" என்று எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பூமராக அவதார் எடுத்துள்ளார். இவர்கள் சகலருக்கும் மத்தியில், ராபின் 2.0 கண்ணியமாய், கம்பீரமாய், கெத்தாய் தலைமைப் பொறுப்பை ஏற்று நிற்கின்றார்.
And oh yes, கதாசிரியர் காலத்துக்கேற்ப செய்திருக்கும் மாற்றங்களைச் சின்னதொரு ஜெர்க்கோடு பார்க்காமலும் இருக்க முடியவில்லை. இதுபற்றி நாம் பெரிதாகப் பேசியிருக்கவில்லைதான். ஆனால், பொதுவாகவே போனலி தொடர்களில் கதைமாந்தர்களைச் சுத்தபத்தமான பாத்திரங்களாகவே நகற்றியிருப்பார்கள். Of course டெட்வுட் டிக் போல, ஆரம்ப முதலே "நான் ஒரு கெட்ட பையன்" என்று முத்திரையை சுமந்து திரியும் நாயகர்களை இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது தான். அவர் நீங்கலாக , ஒரு மர்ம மனிதன் மார்ட்டினோ, ஒரு ஜூலியாவோ, ஒரு 'தல' டெக்ஸோ, எப்போதுமே ஒழுக்க சீலர்களே. ஆனால் புதுயுகப் பாணியில் அந்தச் சப்பையான பாணிகளுக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் விடுமுறை தந்துள்ளது புரிகிறது !
டைலன் டாகை இப்போதெல்லாம் பாருங்களேன், மனுஷன் தனது இரண்டாவது அவதாரில் என்னமாய் லூட்டி அடித்து வருகிறார் என்று. அதே போலவே ராபின் 2.0 தொடரில், அவரது டீம் உறுப்பினனான லெஸ், நேசிப்பது எதிர்பாலினத்து...கவர்ச்சியை அல்ல.....! இதற்கு முன்பான ராபின் triple ஆல்பத்தில் அதை கவனித்திருக்கலாம். அதேபோலவே டீமில் உள்ள பாலும் அந்தக் கண்ணாடிப் பெண்மணியும் ஜலபுல ஜங்க்ஸ் பயிற்சி எடுப்பதையுமே கதையினூடே இயல்பாக புகுத்தி இருக்கிறார்கள். எங்குமே விரசம், தலைதூக்கும் பேச்சுக்கே இடமில்லை. இயல்பான சராசரியான மக்களின் ஆசாபாசங்களின் வெளிப்பாடுகளாகவே அவை சித்தரிக்கப்பட்டுள்ளன. And இந்த டீமில் இருப்போர் யாரும் சூப்பர்மென் அல்ல....சராசரி மனிதர்களே என்பதை நிறுவும் பொருட்டே அந்தச் சிறு சிறு எபிஸோட்ஸ் என்பதாகவே நான் பார்த்தேன்.
எல்லோருக்கும் உச்சமாய் அந்த மனிஷா டெர்சன் கேரக்டர் அட்டகாசம். GEN Z-யா ? GEN ஆல்ஃபாவா ? என்று சொல்லத் தெரியாத ஒரு செம யூத் கேரக்டர். கையில், கழுத்தில் டாட்டூக்கள்.... மண்டையில் காரக்குழம்பை ஊற்றி வைத்த கோலம். ஆனால் அவள் இன்றி இந்தத் தொடர் முற்றிலுமாய் டேக் ஆஃப் ஆகி இருக்காது என்பது அப்பட்டம். இன்னும் சொல்லப்போனால், இந்த கிளைமாக்ஸ் அத்தியாயங்களில் ராபினின் வலது கரமே மனிஷாதானே ?! அந்தப் பாத்திரத்தை ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணாக படைத்ததுமே படைப்பாளிகளின் இன்றைய சமூகத்தின் பல்ஸ் என்னவென்பதை உணர்ந்து வைத்திருக்கும் லாவகத்தைக் காட்டுவதாகவே நினைத்தேன். இந்தியர்களின்றி கம்ப்யூட்டர்களில் ஆணியே பிடுங்க முடியாது என்பதை உலகமே அறிந்துள்ளதுதானோ? எது எப்படியோ, அந்த இரு காலிச் சவப் பெட்டிகளின் பின்னணியை உரக்கச் சொல்லும் இந்த டபுள் ஆல்பம் has to be one for the ages ! அதனை ரசித்தீட உங்களுக்கு சீக்கிரமே நேரம் கிடைக்க வேண்டுமென புனித மணிட்டோவை வேண்டிக்கொள்கிறேன். அந்த வேண்டுதலின் பின்புலத்தில் கொஞ்சம் சுயநலமும் உண்டு. உசுரைக் கொடுத்து பேனா பிடித்திருப்பது கதையின் புரிதலுக்கு உதவியுள்ளதா ? என்பதை உங்கள் வாயால் கேட்டறியும் ஆர்வமே அந்த சுயநலம்.
இம்மாத டெக்ஸ் பற்றி புதுசாய் சொல்ல கிஞ்சித்தும் கிடையாது தானே ? தல என்றைக்குமே தொடும் பந்துகளெல்லாம் சிக்ஸர்களுக்குப் பறப்பது வியப்பே அல்ல தான். And, இந்த சாகசத்தில், நம்ம 'சின்னத் தல' குட்டியூண்டு பையனாக, டைகரின் பாதுகாப்பில் நடமாடுவது செம க்யூட்டாக இருந்ததாக எனக்குப் பட்டது. பின் நாட்களில் சின்னக் கழுகாராய் உருவெடுக்கும் கிட், டைகரும் தூக்கி வளர்த்த பிள்ளை தான் போலும். 80 ஆண்டுகள் legacy கொண்டதொரு நெடும் தொடர் நாயகனின் வரலாற்றுக்குள் துளியும் இடராமல் புகுந்து, தனது சின்னச்சின்ன முத்திரைகளை அழகாய் பதிப்பது போனிலிக்கும், போஸலிக்கும் அல்வா சாப்பிடுவது போல் செம சுலபமான வேலைகள் போலும். கொஞ்சம்கூட பிசறின்றி, மூத்தவர் ஜியான்லூயிகி போனலி உருவாக்கிய டெக்ஸின் வரலாறை இன்று பதிவு செய்து கொண்டு செல்கிறார்கள். இரத்தம் ஓர் நிறமே, அந்த வகையில் ஒரு முக்கிய மைல்கல் இதழே. நிச்சயம் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அப்புறம், இந்த மாதம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக, மொத்தமே 325 பிரதிகளுக்கான ஒரு பிரிண்ட் ரன்னோடு, வெளிவந்திருக்கும் நமது பப்ளிக்குட்டி மேகி என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெர்சனல் ஹைலைட் தான். 100 கௌபாய் இதழ்களுக்குப் பேனா பிடித்துவிடலாம், ஒன்றுக்கொன்று ஸ்டைலில் பெரிதாய் வேற்றுமை இருந்திருக்காது. 100 ஆக்ஷன் த்ரில்லர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்திடலாம் தான். களங்களில் மாற்றம் இருந்திருக்குமே தாண்டி, எழுதும் சவால்களில் பெருசாய் வித்தியாசங்கள் எழுந்திருக்காது. ஆனால், கார்ட்டூன்களிலும் சரி, இதுபோலான offbeat கிராபிக் நாவல்களிலும் சரி, பேனா பிடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் குட்டி குட்டியாய் ஏதேனும் ஆச்சரியங்களும், சவால்களும் காத்திருக்கும் என்பதுதான் அழகே. ஒரு ஜாலி ஜம்பரின் முகபாவத்தை மட்டும் பார்த்துக்கொண்டு, அதற்கேற்ப ஏதாச்சும் ஒரு எக்ஸ்ட்ரா நம்பரைப்போடுவது உருவகை கிக்கென்றால், மேகி காரிஸன் போன்ற அண்டை வூட்டுப் பெண்மணிக்கு, அந்தப் பெண்ணின் பார்வையில் இருந்தபடியே, அந்த வயதுக்கும், அந்த வாழ்க்கை நிலைக்கும், அந்த லண்டனின் பின்புலத்துக்கும் ஒத்துப்போகும் விதமாய் எதையாச்சும் எழுத முனைவது இன்னொரு அழகான சவாலே. Of course, இதற்கு முந்தைய இரு பாகங்களில், மொழிபெயர்ப்பாளராக லூட்டி அடிக்க வாய்ப்புகள் சற்றே கூடுதல். ஆனால் இந்த கிளைமாக்ஸ் பாகத்தில் கதை நகர்ந்திடும் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டிய முனைப்பில், ரொம்பவெல்லாம் சந்தில் புகுந்து சிக்ஸர் அடிக்க வாய்ப்பில்லைதான். But yet, மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடிக்கொண்டே திரிவதைக் காட்டிலும், எப்போதாவது இதுபோலான வாய்ப்புகள் கிட்டுவது truly special என்பேன். ஏனோ தெரியவில்லை, இந்த அழகான தொடர், பொதுவான பார்வையில் ஒரு புறஅழகில் குறைச்சலான பெண்ணின் காரணமாய் நம் மத்தியில் take-off ஆகவில்லையா ? என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பதிவு செய்துள்ள 250 நண்பர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். அவர்களும் இல்லையெனில் கோவிந்தா..கோவிந்தா தான் !
இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெற்றுள்ளது, அந்தமட்டிற்கு நிம்மதியைத் தருகிறது. Becos, இந்த 300 பிரதி பிரிண்ட் ரன்னில் தொடர்ந்து குப்பையைக் கொட்டுவதைக் காட்டிலும், நானே இந்த குட்டி வட்டத்திற்கு ஒரு ZOOM மீட்டிங் போட்டு கதையைச் சொல்லி முடித்துவிடலாம். மேகியின் பார்ட்னரான தாத்தாக்கள் பாடுதான் கொஞ்சம் கவலைக்கிடம். ஏனெனில் அவர்களது தொடர் still going very strong in french. நாம் பாதியில் அம்போவெனக் கழற்றிவிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அங்கே வெற்றிநடை போட்டு வரும் அந்தத் தொடரைப் பெருமூச்சோடு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் போலும். மேகி காரிஸன் + தாத்தாக்கள் என்ற அந்தக் கூட்டணிக்கான இதழ்கள் கொஞ்சமாய் நம்மிடம் இன்னமும் ஸ்டாக்கில் இருக்கத்தான் செய்திடும். So, லைட்டாக மனம்மாறி இவுகளையும் ஆதரிப்போம் என்ற எண்ணம் தோன்றிடும் பட்சத்தில், கிராபிக் நாவல் ட்வின்ஸ் பேக்கிற்குப் பணம் போட்டுவிடலாமே.
And இம்மாதத்து குட்டி புக் பற்றி புதுசாய் சொல்வதற்கு ஏதுமில்லைதான். இந்த ஜூனியர் டிடெக்டிவ்ஸ் டீம் செம நச்சென்று குட்டிக்குட்டி கதைகளில், குட்டிக்குட்டி மர்மங்களை முடிச்சவிழ்ப்பது செம க்யூட் என்றே நினைத்தேன். But வெவ்வேற காரணங்களுக்காக நம் வட்டத்தில் இவற்றிற்கு பெரிதாய் ஒரு வரவேற்பு லேது என்பதே எதார்த்தம். ஆன்லைனில் ஆர்டர் செய்திடும் நண்பர்களில் பெரும்பான்மை இந்த Gen-Z தடத்துக்குத் தடா போட்டுவிட்டு, பாக்கி இதழ்களுக்கே ஆர்டர் செய்கின்றனர்.
இதோ ஜூன் 19 முதல் நெய்வேலியில் துவங்கிடும் புத்தக விழா சர்க்யூட்டில் இந்த இதழ்கள் எவ்விதம் மாணாக்கரிடம் வெற்றி பெறுகின்றன என்பதைப் பார்த்தாக வேண்டும். நிச்சயம் அந்த சைஸும், அந்த கதைக்களமும், அந்த கலரும் பிள்ளைகளுக்கு ரசிக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தொடரைத் தொடரச் செய்கிறது. But நிஜத்தைச் சொல்வதானால், "கார்ட்டூன் ஸ்டைல் எந்த விலையிலும் எந்த டெம்ப்ளேட்டிலும் எங்களுக்கு ஏற்புடையதே அல்ல" என்ற நம் வட்டத்தின் அந்த கருத்தானது நிஜமாகவே செம disappointing. நான் VRS வாங்கி வீட்டில் குந்தும் நாள் வரை, இது குறித்த வருத்தம் சத்தியமாய் என்னோடு தொடரும் தான்.
ரைட்டு, இன்னும் இரண்டே வாரங்களில் நெய்வேலியில் புத்தக விழா. அதைத் தொடர்ந்து கோவை, அப்புறமாய் ஈரோடு என்று கேரவன் புறப்படத் தயாராகி வருகிறது. And, நெய்வேலியிலிருந்து சில பல சர்ப்ரைஸஸ் நமது ஜூனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் 'சிக்'கென்று ஆஜராக உள்ளன. அவை எதுவுமே உங்களுக்குப் பரிச்சயமானவையாகவோ, நமது பழைய கதைகளாகவோ இருக்கப்போவதில்லை. உங்களைப் போலவே அவற்றை முழுமையாய்ப் பார்த்திட நானும் வெயிட்டிங். இப்போதைக்கு இது போதும் என்றபடிக்கு லக்கி லூக்கோடு ஆண்டுமலரில் பயணம் செய்யப் புறப்படுகிறேன்.
Bye all...see you around ! Have a great Sunday !
P.S : இதோ ஆன்லைன் லிஸ்டிங்ஸ் guys : https://lion-muthucomics.com/latest-releases/1471-2026-june-pack.html
And சந்தோஷச் சேதி : TERRIFIC TEX தனித்தடச் சந்தாக்கள் செம வேகமெடுத்து வருகின்றன !! Let's rock !!!


Bathri
ReplyDeleteசூப்பர் சகோ, வாழ்த்துகள் 💐💐💐
DeleteSuper!
DeleteHi sir
ReplyDeleteவணக்கம்சார்
ReplyDelete10க்குள்ள
ReplyDelete//இந்த சாகசத்தில், நம்ம 'சின்னத் தல' குட்டியூண்டு பையனாக, டைகரின் பாதுகாப்பில் நடமாடுவது//
Deleteஇதைப் படித்ததும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..! ஆமாங்க சின்னத்தல, தளபதி பாதுகாப்புலயா..?
ஆனா அழகான கற்பனை..!
ஆத்தீ.... இது வேற ரூட்டிலே போகுதே ?!
Delete😂😂😂😂😂😂
DeleteMe also
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் 🙏
ReplyDeleteGood morning to all
ReplyDeleteஎடிட்டர் சார், இந்த மாத கொரியர் பெட்டியில், எனக்கு மேகி கேரிஸன் புக் மிஸ்ஸிங். நான் ஏற்கெனவே அதற்கு பணம் கட்டியிருந்தேன்.
ReplyDeleteஆபீசுக்கு ஒரு வாட்சப் மட்டும் போட்டு விடுங்க சார் !
DeleteOk sir
Deleteஅனைவருக்கும் வணக்கம்..
ReplyDelete🙏
ReplyDeleteஅடடே வந்துட்டேன்...
ReplyDeleteகாலை வணக்கம் சார்
ReplyDeleteமதிய வணக்கம் கார்திக் !
Deleteஇந்த மாதஹிட் ரெட்கன்.ராபின் ஒரு அசத்தலான டிடேக்டிவ் திரில்லர்,டெக்ஸூம் கிளாசிக் ரகம்.Genz கதையும் நன்று.மேகி மட்டும் பாக்கி.இந்த மாதம்10/10 .சூப்பர் ஹிட் மாதம்.
ReplyDelete// இந்த மாதம்10/10 //
DeleteWow! super sir!!
மேகியையும் படிச்சிட்டு சொல்லுங்க சார் !
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇரத்தம் ஓர் நிறமே
ReplyDeleteதவறு செய்யும் அதிகாரி. தட்டிக் கேட்கும் டெக்ஸ். வழக்கமான இந்த சின்ன ஒன் லைனை கையில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.தமிழ் காமிக்ஸின் தலைமகன் டெக்ஸ் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.முதல் பக்கத்திலிருந்து முடிவு வரை பரபரப்பு விறுவிறுப்பு.
சூப்பர் 💐💐💐
DeleteGen z பூம் பூம் தாத்தா இரண்டு நாட்கள் முன்னர் தான் அம்மா படித்தார்
ReplyDeleteஎன்ன சொல்லுவாங்க என ஆவல் எனக்கு, சில நேரங்களில் புதியதை குடுக்கும்போது நெகடிவ் விமர்சனங்களே வரும். அதனால் கொஞ்சமாய் சந்தேகம் இருந்தது.
டீம் ஜூடித் இதுவரை அம்மாவிடம் குடுக்கவில்லை, ஜட்டி போட்ட ஓநாய் படித்த பின்பு நல்லாருந்தது, மூன்று பன்றிகளை யாராக இருக்கும்ஙென வினவல் மட்டுமே வந்தது
நித்திரையறியா நித்திரன் படித்து முடித்ததும் வேறு என்ன என குட்டி புத்தகம் இருக்கு என சொல்ல, சரி தா என வாங்கி கொண்டார்
வாங்கி இரண்டு நாட்கள் கழித்தே படித்தார், இரண்டு நாட்களும் படிக்கலையா, படிக்கலையா என கேட்டு கொண்டே இருந்தேன்
அவர் படிக்க ஆரம்பித்ததும் அவங்க முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன், என்னை போன்றில்லாமல் முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் காமிக்கவில்லை, விலையோ, சைஸ் பற்றி குறை சொல்லிடுவாரோ என்ற எண்ணத்தினால் ஜூடித் குடுக்கவில்லே
குட்டி தாத்தா புத்தகத்தை என்னிடம் திரும்ப குடுத்தவுடன் கேட்டேன்
முகத்தில் புன்னகை ததும்ப நல்லாருந்துச்சுல என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது😁😁😁😊😊😊😊
தாத்தா & பேத்தியின் குறும்புகளை அவரும் மிக ரசித்து படித்துள்ளார் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
அடுத்தது டிம் ஜூடித் குடுக்க வேண்டும்
// முகத்தில் புன்னகை ததும்ப நல்லாருந்துச்சுல என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாகி விட்டது😁😁😁😊😊😊😊 //
DeleteSuper! Super!!!
நித்திரையறியா நித்திரன் அம்மாவுக்கு பிடித்திருந்தது.
Deleteஅந்த இளைஞனுக்குக்காக வருத்தப்பட்டார்
GEN B-க்குப் புடிச்சிருந்த GEN Z !!
Deleteசூப்பர் சகோ!!😍😍💐💐💐
Delete😊😊😊
Delete// நெய்வேலியிலிருந்து சில பல சர்ப்ரைஸஸ் நமது ஜூனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் 'சிக்'கென்று ஆஜராக உள்ளன. //
ReplyDeleteSuper! I am waiting.
நானுமே...
Delete24th
ReplyDelete// இந்த ராபின் 2.0 தொடரினை படைப்பாளிகள் துவங்கியிருப்பது அழகாய் ஒரு கிளைமாக்ஸில் முற்றுப் பெறுகிறது //
ReplyDeleteஎன் கண்ணோட்டத்தில் இன்னும் ஒரு கிளைமேக்ஸ் பாக்கியுள்ளது சார். ஒருவேளை எதிர்காலத்தில் படைப்பாளிகள் உருவாக்கலாம்
மர்ம எதிரியின் அசாத்திய அறிவும், எதிர்கால நிகழ்வுக்கான கணிப்பிற்கு ஏற்ற செயல் திட்டமும் உள்ள எதிரி செயல்படாமல் இருக்க முடியாது.
போலீஸ் கஸ்டடியில் இருந்து கொண்டே ராபினை ஓட விடுவதும், இன்னும் நான்கு தலைகள் மிச்சம் உள்ளதும், கணக்கு தீர்க்க வேண்டிய ஹிட் லிஸ்டில் போலீஸ் அணியும் எதிரியின் எதிர்கால இலக்கு. தற்பொழுது மர்ம எதிரி யார் ?என்று தான் தெரிய வந்துள்ளது. மர்ம எதிரியும் ஆட்டம் முடிந்து விட்டது என தோல்வியை ஒத்துக் கொள்ளும் வரை முடிவுக்கு வராது.
ஆனாலும் அந்த மர்ம எதிரி யார் என தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட கொதிப்பு இருக்கிறதே.. என்ன சொல்வது..
//என் கண்ணோட்டத்தில் இன்னும் ஒரு கிளைமேக்ஸ் பாக்கியுள்ளது//
DeleteNopes... இந்தத் தொடர் முடிஞ்சு 4 வருஷங்கள் ஆச்சு சார்!
பதிவிற்கு நன்றி சார்....:-)
ReplyDelete*இரத்தம் ஓர் நிறமே...*
ReplyDeleteமீண்டும் ஓர் வெற்றி நடை பயணத்தில் நமது டெக்ஸ்....வழக்கமான சாரி வழக்கத்தை விட இந்த முறை டெக்ஸ்ன் சாகஸம் ஓர் பழைய அதிரடி டெக்ஸ் சாகஸத்தை வாசிப்பது போல மிக சிறப்பு எனில் கதையின் ஓவிய தரம் இன்னும் இன்னும் அழகு ...டெக்ஸ்..டைகர் மட்டுல்ல சிறுவனாக இருக்கும் கிட்டும் மிக அழகாக சித்திர தரத்தில் படைத்ததுடன் அவர்களுக்கான காட்சிகளும் சிறப்பு...அழகான அட்டைப்படம்...விறுவிறுப்பான டெக்ஸ் சாகஸம்...மிக சிறப்பான ஓவிய தரம்...என அனைத்திலும் டெக்ஸ்ன் மீண்டும் ஓர் வெற்றி படைப்பு *இரத்தம் ஓர் நிறமே..*
ஒரே குறை எனில் இது நீண்ட சாகஸமாக இல்லாமல் சிறிது நேரத்தில் வாசித்து முடித்து விட்டோமே என்பது மட்டும்தான்... :-)
*குருதியின் கூலி...*
ReplyDelete( வாசிக்காதவர்களும் வாசிக்கலாம்...)
நீண்ட மாதங்களுக்கு பிறகு ஓர் புது நாயகர் தனது முதல் சாகஸத்திலியே மனதை மிகவும் கவர்ந்து விட்டார் என உறுதிபட சொல்வேன்....ஓர் வன்மேற்கு உலகின் பிண்ணனியில் ஓர் துப்பறியும் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் பாணியை நான் முதன் முறையாக வாசிக்கிறேன்...கதையை வாசிக்க வாசிக்க பல துப்பறியும் நாவல்களை படித்த தாக்கத்தில் இறுதியில் கொலையாளி இவனாகத்தான் இருக்கும்...இல்லை இவனாகதான் இருக்கும் என நினைத்து கொண்டே வாசிக்க இறுதியில் எதையும் எதிர்பாரா க்ளைமேக்ஸ்...குருதியின் கூலி என்ற இந்த காமிக்ஸ் படைப்பு ஓர் அட்டகாசமான காமிக்ஸ் சாகஸத்தை படித்த திருப்தியையும் கொடுத்து ஓர் அட்டகாசமான த்ரில்லர் நாவலை படித்த திருப்தியையும் கொடுத்து உள்ளது...சித்திரங்களும் அட்டைப்படமும் மொழி ஆக்கமும் வெகு சிறப்பு ...கதை முழுவதும் சித்திரங்கள் ஓர் இருண்ட பிண்ணனி கொண்டது போல் இல்லாமல் பகல் நேரத்தில் பளீச் வண்ணத்தை ஓவியர் படைத்து இருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் வாசிக்கும் பொழுது தோன்றினாலும் இந்த கதை களனுக்கு இது தான் சரி என்றே சிறிது இருண்ட பாணி வண்ணத்தை கடை பிடித்து இருப்பார் என நினைக்கிறேன்... மொத்தத்தில் ரெட் கன்னிற்கு சிவப்பு கம்பளம் விரித்து அவரின் அடுத்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ஓர் அறிமுக நாயகர் தனது முதல் சாகஸத்திலியே மனதை கவர்ந்து அவரின் அடுத்த சாகஸம் எப்பொழுது என ஏங்க வைக்கும் நிலையை நீண்ட மாதங்களுக்கு பிறகு மிஸ்டர் ரெட்கன் ஏற்படுத்தி விட்டார்...
வெல்கம் டெரன்ஸ் நிகோல் எனும் மிஸ்டர் ரெட் கன்....
உங்களுக்கு பிடிச்சிருந்தா அது சூப்பர் ஹிட் தான் தலீவரே!!💐💐🍫🍫🍫😍😍
Deleteவணக்கம் அனைவருக்கும்...
ReplyDeleteஎந்த இறுதி கதை வந்தாலும் அதன் முன் தொடர்ச்சியை வாசித்துவிட்டே இறுதி இதழை வாசித்து வருவதால் இந்த முறை ராபின் அதே போல் வாசிக்க கொலைநோக்கு பார்வையில் இருந்தே எடுத்து வைத்து விட்டேன்...இன்று அலுவலகம் அரை நாள் மட்டுமே என்பதால் மதியம் பிறகு இல்லம் சென்றவுடன் ஒட்டுமொத்த ராபின் பாகத்தையும் வாசிப்பது தான் இன்றைய மகிழ்வான பணி...
ReplyDeleteதலீவர் vs செயலாளர் : இந்த விஷயத்திலே தல - தல தான்!
Deleteஅவருக்கென்னங்க சார்.. ஆபீஸ் - வீடு மாதிரிதான்! வீடும் ஆபீஸ் மாதிரிதான்!😤
Delete*எங்கேயோ கேட்ட குரல்!*
ReplyDelete☠️நோ ஸ்பாய்லர்☠️
*ஏஜென்ட் ராபின் 2.0*
2025 தீபாவளி மலரிலும், அதற்கு முன்பு வந்த பாகத்திலும் காட்டாறாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறு சருகை போல என்னை புரட்டி போட்டு அடித்து சென்ற பரபரப்பான கதை..
இம்முறையோ *எங்கேயோ கேட்ட குரல்!* மூலம் உயரமான அருவியிலிருந்து இந்த சிறு சருகை தூக்கி வீசுகிறது கதையின் போக்கு.
ஒரு திசையில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மர்ம டிஜிட்டல் எதிரி ஆடும் சதுரங்க ஆட்டத்தில் ராபின் மற்றும் அவரது அணியிலுள்ள ஒவ்வொருவரும் மற்றொரு திசையில் ஒவ்வொரு இடமாக ஓடி ஓடி, மர்ம எதிரியின் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் கட்டுக்குள் கொண்டுவர தவிக்கிறார்கள்.
மூன்றாவது திசையிலோ அதிகார வர்க்கத்தில் உள்ள ஊழல் ஜாம்பவான்கள் சங்கிலி கூட்டணி ஒவ்வொருவராக காலியாகி கொண்டிருக்கிறார்கள். மும்முனை டிஜிட்டல் சதுரங்கம் ஆட்டம்.
மர்ம டிஜிட்டல் எதிரி யார் என தெரிய வரும்போது கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு கப் சூடான இஞ்சி டீயை மடக்கென குடித்தது போல் உள்ளுக்குள் திகுதிகுவென எரிவது ஏஜென்ட் ராபினுக்கு மட்டுமில்ல படித்துக் கொண்டிருந்த எனக்கும்தான்.
நிஜ உலகிலும், இந்த உலகம் இன்னும் எவ்வளவு கொடூர ரகசியங்களை தன்னுள் வைத்துக் கொண்டுள்ளதோ..
இரண்டு பாக இறுதி கிளைமாக்ஸ் ஆன இந்த கதையை படித்துவிட்டு, ஒன்றை மட்டும் உறுதியாக எண்ணுகிறேன். ஒரிஜினல் கதாசிரியரே நினைத்தாலும் இந்த கதைக்கு இத்துடன் *முற்றும்* போட இயலாது.
எல்லாம் முடிந்து விட்டது என்றெண்ணிய காட்டாற்றில் சிக்கிய அந்த சிறு சருகு.. சலனமான ஆற்றில் கரை ஒதுங்கும் என நினைத்த சமயத்தில், மர்ம டிஜிட்டல் எதிரியின் அந்த கிளைமேக்ஸ் கொலை முயற்சி, திசை மாறிய கொடூர திட்டம். நிச்சயம் மர்ம டிஜிட்டல் எதிரியின் அடுத்த காய் நகர்த்தலுக்காக மிக மிக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளேன்..
காட்டாற்று வெள்ளம் இன்னும் சீற்றம் அடங்காமல் பாய்ந்து கொண்டுள்ளது. தற்போது அதன் பயணம் இருண்ட குகையுனுள் நுழைந்து உள்ளது. காட்டாறு மீண்டும் எந்த திசையில் எந்த இடத்தில் வெளியேறுமோ... வெறியேறும் போது இன்னும் என்ன நடக்க உள்ளதோ.. 🔥🔥🔥
காத்திருப்பேன் ஆவலுடன். ❤️❤️❤️
சூப்பரா எழுதறீங்க ரகுராமன் ஜி! ஒவ்வொரு வரியிலும் அனல் தெரிக்குது!!!😍😍😍💐💐💐
Deleteஎன்றும் உங்கள் வழியில் ஈ வி சார்..
Delete*ரெட் கன்*
ReplyDelete*குருதியின் கூலி..!*
☠️நோ ஸ்பாய்லர்☠️
கௌபாய் உலகில் நடக்கும் மர்ம தொடர் கொலைகள் கதையை படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. கதைத் தேர்வு நிச்சயம் வெரி குட் ரகம்.
முரட்டு குணாதிசயங்கள் உள்ள கௌபாய் உலகில், மர்ம தொடர் கொலைகள் ரீதியான கதை தடம் மாறிட வாய்ப்பு நிறைய இருந்தாலும்.. இரண்டிலும் சுணக்கம் இல்லாமல் சமமான தண்டவாளம் பயணம். நிச்சயம் பாராட்ட வேண்டியது தான்.
ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பாதையில் அன்றாடம் புதிய புதிய மனிதர்கள் வரவு உள்ள இடத்தில் நடக்கும் தொடர் கொலைகளுக்கான காரணத்தை நோக்கி நல்ல கிரைம் சஸ்பென்ஸ் கதை.
*ரெட் கன்* என்பது காரண காரியம் ஏதும் இல்லாமல் இடுகுறிபெயராக இருக்குமோ ஒரு கட்டத்தில் எண்ணிருந்தேன். கதையின் போக்கில் *ரெட் கன்* என்பதற்கான காரணப்பெயர் ஏன் வந்தது என்பதற்கான அந்த காட்சி எதிர்பார்க்கவில்லை.
மிஸ்.அட்கின்ஸ் என்ற பாத்திரம் மற்றும் நாயகன் ரெட் கன் இவர்களுக்கிடையான உரையாடல் நடக்கும் இடங்கள் எல்லாம் நாயகனின் சுபாவத்தை ஓரளவு நெருங்க முடிகிறது என்னால் முழுமையாக உணர முடியவில்லை. மனிதர் மனதில் நிறைய அழுத்தங்களை சுமந்து கொண்டு வாழ்கிறார் போல் உள்ளது.
இவர்கள் இருவருக்கும் கதை போக்கில் நடக்கும் உரையாடல்கள் அழுத்தம் நிறைந்தவை. இருவரும் வேறு வேறான பாதையில் வேதனையை, பிரச்சனைகளை சுமந்து வாழ்பவர்கள். செம ஜோடி..
உரையாடலின் உதாரணமாக..
*மிஸ் அட்கின்ஸ்* : போரில்உங்களுடைய வீரத்திற்காக பல பதக்கங்களை பெற்றதாக சொல்கிறார்கள்!
*ரெட் கன்* : ஆமாம், "வீரம்" என்று சொல்வதை விட நான் அந்தப் போரில் "உயிர் பிழைத்தேன்" என்று தான் சொல்ல வேண்டும்.
கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் வரை சஸ்பென்ஸ் நீடிப்பதால் மேற்கொண்டு விவரங்களை சொன்னால் சுவாரசியம் போய்விடும் நிறுத்திக் கொள்கிறேன்.
கதை நெடுகிலும் என்ன ஒரு அட்டகாசமான மொழிபெயர்ப்புகள் பாராட்டுக்கள் எடிட்டர் சார்.
*குருதியின் கூலி* கதை நிச்சயம் புதிய வாசக நண்பர்களையும் கவர்ந்திழுக்கக்கூடிய தரமான கதை.
முக்கியமாக, அடுத்து இந்த நாயகனின் கதை எப்பொழுது வரும் என எதிர்பார்ப்பை எனக்குத் தூண்டி உள்ளது.
இம்மாதத்தின் மற்ற வெளியீடுகளையும் படித்துவிட்டு, உடனே இந்த கதையை மறு வாசிப்பு படித்தே ஆக வேண்டும் எனக்கு. படித்தால் தான் கவனிக்காத விட்ட விஷயங்களை இன்னும் கவனிக்க வேண்டும். இரண்டாவது வாசிப்பில் புரிந்து கொள்ள வேண்டிய சரக்கு கதையில் உள்ளதாக மனது கூறிகிறது.
தரமான தேர்வுக்கு வாழ்த்துக்கள் எடிட்டர் சார் மொழிபெயர்ப்பு தூள்..
ஆம்..!! அந்த ஆரம்ப அறிமுக வசனம்..
*நிசப்தம் போர்த்தியிருந்த அந்த இருண்ட பூமியில், காதலியின் கிசுகிசுப்பைப் போல் நீர்த்திவலைகள் வானத்திலிருந்து விழத் துவங்கியிருந்தன.*
சமீபமாக இந்த அமர்க்களமான அறிமுகம் வசனங்கள் தனி எதிர்பார்ப்பை தருகிறது சார்.
❤️❤️❤️
கம்யூனிட்டியில் பதிவிட்ட அலசல்களை இங்கேயும் போடுவது சிறப்பு சார் 👍
Deleteதெறி மாஸ் விமர்சனம்!!😍😍💐💐💐💐
Deleteநன்றி சார், நன்றி ஈ வி சார்..
Deleteஎங்கேயோ கேட்ட குரல்
ReplyDeleteமனிஷா டெர்சனுக்கு பாடி க்ரீம் மூலம் விசயம் செலுத்தபப்பட்டு உடல் செயலிழந்து வருகிறது!மூச்சுத் திணறல்.....இதயத்துடிப்பு பலவீனமாகிக்கொண்டே போகிறது கண்கள் விரிந்து விட்டன....ஆம்புலன்ஸ் வர 15நிமிடங்கள் ஆகும். அது வரை மனிஷா தாக்குபிடிக்க மாட்டார்.செய்வதறியாது ஸ்தம்பிக்கிறார் ராபின்.பரபரப்பான நிமிடங்கள்.எழுந்து நின்றுவிட்டேன்.
எப்போ உட்கார்ந்தீங்க சார் அப்புறம்?
Deleteசார் 🤣🤣🤣🤣🤣🤣🤣
DeleteRED GUN Goosebumps SCENE
ReplyDeleteRed Gun இந்த புத்தகத்தில் ஆக்சன் குறைவு என்றாலும்
ஒரு Scene என்னை மிகவும் கவர்ந்தது அல்லது மறக்க முடியாத நினைவு நின்றது அல்லது Pure Goosebumps scene என்று சொல்லலாம்.
இறந்து போன அல்லது கொல்லப்பட்ட குதிரையின் வயிற்றுப் பகுதி மிகக் கொடூரமான காயங்களுடன், சிதைந்த நிலையில் உள்ளது. இந்தக் கொடூரமான காட்சியின் உள்ளே இருந்து, ஹீரோவின் கைகள், ரத்தக் கறைகளுடன், வெளியே வருகின்றன.
அவர் அந்த குதிரையின் உடலையே ஒரு தற்காப்புக் கவசமாகப் பயன்படுத்தி, அதற்குள் மறைந்திருந்து வெளியே வருகிறார்.
அசாத்தியமான தற்காப்பு – ஒரு அனல் பறக்கும் காட்சி
மிரட்டலான கற்பனை,எதிரிகளிடமிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாத சூழலில், இறந்து கிடக்கும் குதிரையின் வயிற்றுப் பகுதியைக் கிழித்து அதற்குள் ஒளிந்து கொள்வது என்பது சாதாரண ஒரு சிந்தனை அல்ல. இது அந்த ஹீரோவின் அசாத்தியமான உயிர்வாழும் உள்ளுணர்வையும் (Survival Instinct), "எப்படியாவது வெல்ல வேண்டும்" என்ற வெறியையும் காட்டுகிறது.
திகிலூட்டும் ஆக்ஷன்.
எதிரிகள் 'அவன் எங்கே?' என்று தேடி வரும்போது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த சிதைந்த குதிரையின் உடலுக்குள்ளிருந்து ரத்தக் கறைகளுடன் ஹீரோ திடீரென வெளியே பாய்ந்து வந்து சுடத் தொடங்கும் இடம் — Pure Goosebumps!
நிதானமாய் படித்தாலன்றி, இவற்றைக் கவனிக்க இயலாது ! இனி வாசிக்கும் நண்பர்கள் - இந்த சீனுக்கென நிதானிப்பார்கள் என்பது உறுதி ! Thanks sir
Deleteகூர்ந்து படித்து - அனுபவிச்சு எழுதியிருக்கீங்க சிக்-பில் ஜி!!😍😍💐💐💐
Deleteஇம்மாத ரேட்டிங்
ReplyDelete1.எங்கேயோ கேட்ட குரல்( ராபின்)
2.இரத்தம் ஓர் நிறமே(டெக்ஸ்)
3.குருதியின் கூலி(ரெட் கன்)
4.சாம்பல் நிற வானம்.(மேகி கேரிஸன்)
5.நள்ளிரவில் மர்ம ஓசை.( டீம் ஜூ.டி)
அடடே.... ! அல்லாம் ஓவரா சார் ?
Deleteசெம வேகம் சார் நீங்க இந்த முறை 😍
Deleteசெம ராஜசேகர் சகோ
Deleteசார் உண்மையாகவே பரபரப்பில் எழுந்து விட்டேன்.மனிஷா எழுந்தவுடன் நான் உட்கார்ந்து விட்டேன் சார்.,இந்த பரபரப்பான காட்சியை திரைப்படம் போலஎழுத்தில் கொண்டு வந்த மொழி பெயர்ப்புக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட் சார்
ReplyDelete///மனிஷா எழுந்தவுடன் நான் உட்கார்ந்து விட்டேன்///
Deleteஅச்சச்சோ!! என்னாச்சுங்க ராஜசேகர் ஜி?!! 🤔🤔🤔
// அச்சச்சோ!! என்னாச்சுங்க //
Deleteமனிஷா பாப்பா அந்த சீன்ல குளித்து முடித்துவிட்டு துண்டை மட்டும் கட்டிக் கொண்டிருப்பார் என்ற விவரம் உங்களுக்கு தெரியாது என்பதும், அதை நான் உட்பட எல்லோரும் உங்களிடம் மறைத்து விட்டோம் என்பதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஈ வி சார்.
உங்க பிஞ்சு மனசு தாங்காது என்பதால்..
///நெய்வேலியிலிருந்து சில பல சர்ப்ரைஸஸ் நமது ஜூனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் 'சிக்'கென்று ஆஜராக உள்ளன. அவை எதுவுமே உங்களுக்குப் பரிச்சயமானவையாகவோ, நமது பழைய கதைகளாகவோ இருக்கப்போவதில்லை///
ReplyDeleteஅடடே!! We r வெயிட்டிங்கு சார்... 😍😍😍😍😍
சமோசாவும் கையுமாவா ?
Deleteஆமாங்க சார் 😁 சம்சா இல்லாம கொண்டாட்டம் இல்லீங்களே!😋💦
Deleteஈரோட்டில் சம்சா மேளா !!
Deleteஐ!!!😍😍😍😍😍😋😋💦💦💦💦
Deleteசூப்பர் சார் 😍😍😍
Deleteசங்க பொருளாளர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் அதுக்கென!
Deleteபாத்தீங்களா!! பொருளாளர் ரொம்ப நல்லவர்னு நான் சொன்னப்ப நீங்க நம்பலை!! 😇😇😇
Deleteபொருளாளருக்கு மனசுக்குள் ஒரு சிலை வச்சாச்சுங்க
Delete///ஒரு மர்ம மனிதன் மார்ட்டினோ, ஒரு ஜூலியாவோ, ஒரு 'தல' டெக்ஸோ, எப்போதுமே ஒழுக்க சீலர்களே. ஆனால் புதுயுகப் பாணியில் அந்தச் சப்பையான பாணிகளுக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் விடுமுறை தந்துள்ளது புரிகிறது !///
ReplyDeleteஆமாங்க சார். இப்போல்லாம் யதார்த்ததுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால்தான் எப்பவும் உள்ளங்கையை மட்டுமே குறிவச்சு சுடும் 'ஒழுக்க சீலர்' lone ranger போன்றவர்கள் நம்மிடமும் எடுபடவில்லை!
///ரொம்பவே இறுக்கமான, தனக்குள்ளேயே வசிக்கும் அந்தக் கதாபாத்திரம். அழகழகாய் பட்டாம்பூச்சிகள் சுற்றிலும் பறந்து வந்தாலும், அவற்றை ஒரு தூரத்திலேயே நிறுத்தி வைத்துக்கொள்ள முனைந்திடும் மனுஷனின் உள்ளுக்குள் இருக்கும் யுத்தம் சார்ந்த காயங்களை, maybe, கதாசிரியர் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம் தான்.///
ReplyDeleteஎங்கயாவது படாத இடத்துல பட்டுடுச்சோ என்னமோங்க சார்? 🤔😲
இன்னும் எந்தப் பொஸ்தவத்திலேயும் படம் கூட பாக்காம அள்ளி விடுறது சங்கத்துக்கும் , சங்கத்தலீவருக்கும் இழுக்கு !!
Deleteஅதே அதே சார் 😄
Deleteரெட் கன்- முதல் 10 பக்கங்கள் படித்து விட்டேன், முதல் பக்கம் முதல் பேனல் வசனம் செம, எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க; “காதலியின் கிசுகிசுப்பை போல”, அமர்க்களம்.
ReplyDeleteமுதல் 10 பக்கம் செம வித்தியாச வாசிப்பு அனுபவம்.
நள்ளிரவில் மர்ம ஓசை - குறைவான வசனம்கள், ரொம்ப எளிதான கதை கரு, சிறப்பான வண்ண படம்கள், வாசிப்பவர்களை அவர்களின் குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும் காட்சிகள். வேறென்ன வேண்டும். ஓ ஹாப்பி 😍😍😍😍
ReplyDelete//குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும் காட்சிகள். வேறென்ன வேண்டும்//
Delete😍😍😍
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம் உதவி வேண்டும் ராபின் 2.0 கதை ஒன்று முதல் பத்து வரை உள்ள கதை தலைப்பை தர முடியுமா?
ReplyDeleteநன்றி.
1) ப்ளாக்மெயில் பண்ண விரும்பு
Delete2) தப்புத் தப்பாய் ஒரு தப்பு
3) கொலை நோக்குப் பார்வை
4) தலைவனுக்கொரு தாலாட்டு
5) ஆருடத்தின் நிழலில்
6) எழுந்து வந்த எதிரி(V காமிக்ஸ் தீபாவளி மலர் 2025)
7) இரத்தமின்றி யுத்தம் + 8) வஞ்சம் (இரு பாகங்கள்)
(V காமிக்ஸ் தீபாவளி மலர் 2025)
9) எங்கயோ கேட்ட குரல்(இரு பாகங்கள்)
நண்பர்கள் யாருக்கும் வரிசை கிரமமாக தெரிந்தால் நமது தளத்தில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteHi..
ReplyDeleteMy rating 1 Robin 2 Red gun 3 Magie 4 Tex. Little one haven't read.
ReplyDeleteரெட் கன் கதையில் முக்கிய காட்சிகளில் ஒன்றான, இறந்து போன குதிரையின் வயிற்றுக்குள் ஒளிந்திருந்து வெளிவந்து சுடும் காட்சி, முன்னரே டியூராங்கோ கதையில் பார்த்துள்ளேன். இந்த விவரம் சரிதானா ? நண்பர்களே..
ReplyDelete