நண்பர்களே,
வணக்கம். கடையில் கூட்டம் குறைச்சலாக இருப்பதன் காரணமாய், ஆத்தும் டீயை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் எழுவதன் பலனாக ஞாயிறு காணாமல் போவது நிகழ்கிறது தான், மறுக்க மாட்டேன். ஆனால், வெகு சொற்ப தருணங்களில் காது வழியாக தக்காளி சட்னி வழிவதாக எனக்கே ஒரு பிரமை ஏற்படும் போதும், பதிவுக்கு விடுமுறை விட்டிருக்கிறேன். And இந்த ஞாயிறும் கூட அந்த ரகத்தில் சேர்த்து தான். ஒய் தி டொமேட்டோ சட்னி என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை guys..... ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டு, ஒரு மாதத்தில் மாமூலைக் காட்டிலும் ரொம்பவே கூடுதலாய் பேனா பிடிக்க அவசியப்பட்டு விடுவதுண்டு. விடிய விடிய எனது எழுத்தை நானே வாசிக்க நேரிடும் போது ஒரு வித அயர்ச்சி தலைதூக்கும். 'தெய்வமே, அவசியத்துக்கு எழுதியாச்சு....இனி பதிவு எனும் ஆடம்பரத்துக்கும் மறுக்கா மொக்கை போட்டே தீரணுமா ?' என்ற கேள்வியோடு பேனாவை உள்ளே போட்டு பூட்டி விடுவதுண்டு. And காத்திருக்கும் ஜூன் மாதத்திற்கென அதுவே தான் அரங்கேறியுள்ளது.
புது அறிமுகம் ‘ரெட் கன்’ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கதை அரங்கேறுவது நமக்குப் பிடித்தமான கவ்பாய் உலகில் என்றாலும், இது மாமூலான bang bang ரகக் கதையே அல்ல. ஒரு சீரியல் கில்லர் கைவரிசையினைக் காட்டி வர, அவன் யார்? அவனது பின்னணி என்ன? என்ற தேடலில் இறங்கிடும் ‘ரெட் கன்’ கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் இவரது கதையை டிக் அடித்த போதே பேனா பிடிக்கும் வேலையை நாமே வைத்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்திருந்தேன். So, அங்கே ஆரம்பித்தது முதல் புள்ளி.
தொடர்ந்ததோ, நமது ராபின் 2.0-வின் கிளைமாக்ஸ் அதிரடி. நிறையவே இது பற்றி நடுநடுவே பில்டப் கொடுத்திருக்கிறேன் தான். So, காத்திருப்பது என்னவென்று நமக்கெல்லாம் ஸ்பஷ்டமாகவே தெரியும் தான். एक வண்டி ஹைடெக் சமாச்சாரங்களோடு, ஒரு தெறிக்கும் வேகத்திலான க்ரைம்த்ரில்லர் அரங்கேறிடும் சமயம் அதனை நம் டீமில் உள்ள யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, அப்புறமாய் எடிட்டிங்கிற்குள் குஸ்தி போடுவதைக் காட்டிலும், ஆரம்பம் முதலே பேனா பிடித்துவிட்டால் பஞ்சாயத்து கொஞ்சம் குறைச்சலாக இருக்குமே என்ற எண்ணம் நடப்பாண்டின் திட்டமிடலின் போதே தலைதூக்கி இருந்தது. In fact, மார்ச் மாதமே வந்திருக்க வேண்டிய இந்த ஆல்பம் ஜூன் வரை தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இதனுள் புகுந்திட இருந்த 'டர்' தான் காரணம். But, இதற்குமேலும் தள்ளிப்போட இயலாது என்ற ஒரு சூழல் புலர்ந்த போது எங்கிருந்தோ பிறந்த வைராக்கியத்துடன் 'தம்' கட்டியபடியே 192 பக்க பணிக்குள் 'ஆடறா ராமா தாண்டறா ராமா' என்று பயணித்திருந்தேன். And, ரொம்பவே intense ஆன ஒரு சாகசம் என்பதால் வசனங்களில் இம்மிகூட அனலுக்கு பஞ்சமே கிடையாது - ஒரிஜினலில். So, முதல் பாகம் ஈட்டித் தந்த நற்பெயரை இந்தக் கிளைமாக்ஸ் பாகம் தக்க வைத்திட வேண்டுமெனில், எழுத்திலும் சோம்பலின்றிப் பரபரப்பு இருந்திட வேண்டும் என்பது புரிந்தது. So, ராபின் 2.0 புண்ணியத்தில் குறுக்கெலும்பு 2.0 தேடி அலைந்த கதையாகிப் போய்விட்டது.
ரைட்டு, இம்மாதத்தின் மூன்றாவது கதையான தல சாகசம் சிங்கிள் ஆல்பம் தான். அதை நடுநடுவே நமக்கென பேனா பிடித்திடும் சகோதரி சமீரா எழுதட்டும் என ஒப்படைத்திருந்தேன். எழுதியிருந்தார் தான், ஸ்கிரிப்ட்டும் வந்திருந்தது தான். ஆனால் வழக்கம் போல ‘I want more emotions’ என்ற பாரதிராஜா குரல் தான் தலைக்குள் ஒலித்தது. 'உஸ்ஸ்' என்று பெருமூச்சு விட்டபடியே திருத்தங்கள் செய்திட அமர்ந்த போது, இன்னொருவரின் ஸ்கிரிப்ட்டுக்குள் தலைநுழைப்பதைக் காட்டிலும், மொத்தமாகவே மாற்றி எழுதிவிட்டால் வேலை கொஞ்சம் சுலபம் என்பது போல் 108-வது தடவையாக உணர்ந்தேன். வேறு வழியே இல்லை என்ற சூழலில், தம் கட்டி முற்றிலுமாய் புதிதாய் ஸ்கிரிப்ட் அமைக்க நேரிட்டது. முக்கால் பாகம் நாக்கு ஏற்கனவே தெருவை கூட்டிக் கொண்டிருந்த நிலையில்,GEN Z தடத்துக்கென நமது குட்டி டிடெக்டிவ்ஸின், குட்டி சாகசம் காத்திருந்தது. அதைப் பார்த்த மறுநொடி உற்சாகம் தொற்றிக்கொள்ள, செம ஜாலியாய், ரொம்பச் சீக்கிரமே பணியினை முடித்துவிட்டு, சித்த நேரம் தரையில் படுத்து விட்டத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்.
'ஆஹா, பணி இன்னும் பூரணமாய் முடிந்தபாடில்லைடா தம்பி, லண்டனில் மேகி பாப்பா வெயிட்டிங் !' என்று காதுக்குள் ஒரு குரல் கேட்டது. நமது கிராஃபிக் நாவல் Twins முன்பதிவுத் தடத்தில் போன மாதமே வந்திருக்க வேண்டிய மேகி கேரிசன் இந்த ஜுனில் எப்படியும் வெளிவந்தே தீரவேண்டும் என்பதால், அந்தப் பணியினையும் ஜுனுக்கென slot in செய்து வைத்திருந்தேன். ஆரம்பத்து இரு அத்தியாயங்களுக்கும் நானே பேனா பிடித்திருக்க, இந்த மூன்றாவது பாகத்தை இன்னொருத்தரிடம் செய்யக் கொடுக்கவும் சாத்தியமாகாது என்பது புரிந்தது. Again இந்த நொடியில் நண்பர் பல்லடம் சரவணகுமாரை நினைவுகூர்ந்திடாமல் இருக்க இயலவில்லை. 2024 சென்னை காமிக் கானில் சந்தித்தபோது கூட, ஏதேதோ பேச்சின் மத்தியில் மேகி கேரிசன் translation பற்றி ஒரு ஐந்து நிமிடங்களாவது பேசியிருந்திருப்பார். So, இரண்டு கிணறுகளைத் தாண்டிய பிற்பாடு, கடைசிக் கிணற்றைத் தாண்ட ஆள் தேடுவது சுகப்படாது என்றபடிக்கே, மேகியோடு அன்னம் தண்ணி புழங்க அமர்ந்தேன். ஆரம்பத்து இரு அத்தியாயங்களும் தத்தம் விதங்களில் செம ஃப்ரீக்கியான கதைக்களங்கள் என்பதில் ஐயமே கிடையாது. In fact இதுதான் இந்த கதையின் திசை, இதுதான் இந்த கதையின் இலக்கு என்றே அல்லாது, கால் போன போக்கில் லண்டனின் வீதிகளில் மேகி அடிக்கும் ஷன்டிங்கை போலவே, கதையினூடே கிளைக்கதைகள், குட்டிக்கதைகள் என்று ஏகப்பட்ட கொப்புகளும், கிளைகளும் இருப்பதை பார்த்திருந்தோம். And இந்த கிளைமாக்ஸ் அத்தியாயத்திலுமே அதுவேதான் டெம்ப்ளேட்.
லண்டனின் தட்பவெப்ப நிலை போலவே, துளியும் கணிக்க முடியாத விதத்தில் இங்கிட்டும் அங்கிட்டுமாய் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தது கதைக்களம்! காதலனுடன் live-in ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் மேகி, வழக்கம் போல் வேலை தேடி அலையும் படலங்கள் ஒருபுறமெனில், அவளது டிடெக்டிவ் நிறுவனத்தின் முதலாளி தரும் விசித்திரமான கேஸ்கள் இன்னொரு ரகம். மேகிக்குமே அந்த நக்கலும், நையாண்டிக்கும் பின்னே ஒரு காதல் நெஞ்சம் உண்டு என்பதை கதாசிரியர் இம்முறை அழகாகக் காட்டியுள்ளார். தனது பார்ட்னர் செம மாத்து வாங்கும்போது, குறுக்கே விழுந்து அவன் மேல் அடிவிழாமல் தடுக்கும் சமயம், நமது கோலிவுட் படங்களின் சென்டிமென்ட் சீன்கள்தான் நினைவுக்கு வந்தன! எங்கோ ஆரம்பித்து, ஏதேதோ ரூட்களில் பயணித்து, மொத்தமாய் புதுசாய் ஒரு திக்கில், கிளைமாக்ஸில் நிறைவு காணும் இந்தப் பணி, மெய்யாலுமே என்னை நாக்குத் தொங்கப் பண்ணிவிட்டது! Not because of the language or the writing style... மாறாக, கதாசிரியர் எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறார் ? எந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போடுகிறார் ? எந்தப் பக்கம் வண்டியை விடுகிறார் ? என்று இந்த வித்தைகளில் கில்லாடியான எனக்கே செமையாகத் தண்ணீர் காட்டியுள்ளார்! So, பேனா பிடிக்கும்போது எங்கு அழுத்தம் கூடுதலாகத் தேவை ? எங்கு மேலோட்டமாய் கடந்து செல்லலாம் ? என்று இனம் காணவே, நான் மூன்று வாட்டி முடித்த ஸ்கிரிப்டை மீண்டும் சரி செய்ய வேண்டிப்போனது. ஆக, பக்கங்கள் 46 ஆக இருந்தபோதிலும், அதனூடே மூன்று தடவை செய்த பயணத்தால், கிட்டத்தட்ட 135 பக்கங்களில் பணி செய்தது போன்றதொரு பளு!இத்தனை கூத்துகளுக்கும் அப்புறமாய், ஒட்டுமொத்தமாய் எடிட்டிங் என நான் எழுதியதையே ஒட்டுக்கா மேஜையில் குவித்துப்போட்டு, அப்புறமும் அவற்றினூடே திருத்தங்கள், மாற்றி எழுதுதல் என்ற ரகளைகளைச் செய்து முடித்த சமயம்... என் காதில் ஒரு வண்டி தக்காளிச் சட்னி கசிந்து கொண்டிருந்தது! 'தப்பேயில்லை' என்று உங்களுக்கும் புரியும் என நம்புகிறேன்!
So இத்தனைக்கும் பிறகு இன்னொரு முறை பதிவுக்கென பேனா பிடிக்க தம்மே இருக்கவில்லை தான். ஆனாலும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி உங்களிடம் வினவ வேண்டியிருந்ததால், "சரி ரைட்டு ஆனது ஆச்சு....மேற்கொண்டு சில பக்கங்கள் !" என்றபடியே இந்த பதிவுக்குள் புகுந்துவிட்டேன். மறுக்கா பெருசா பில்டப் தரவெல்லாம் தம் இல்லை என்பதால், நேரடியாகவே மேட்டருக்குள் புகுந்துவிடுகிறேன். வேறொன்றுமில்லை guys. நமது TERRIFIC TEX கிளாசிக் மறுபதிப்புத் தடத்தினுள் ஆறு முந்தைய black & white பதிப்புகளை அழகாய் கலரில் வெளியிட திட்டமிட்டிருந்தோம்தானே? கதைகளுக்கும், மொத்தமாய் ஆர்டர் செய்திருந்தோம் and கதைகளும் போன வாரம் வந்துவிட்டன. ஆனால் டெக்ஸ் தொடரின் நெடும் கதைகள் எந்த புக்கில் துவங்குகிறது ? எதில் பயணிக்கிறது ? எங்கு முடிவுறுகிறது ? என்று தேடிப் பிடிப்பது செம tough காரியம் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதுவும் தொடரின் 200 வரைக்குமான நம்பருக்கு முன்பான காலகட்டத்தில், ஒரு ஆல்பத்தில் 20 பக்கங்கள், அடுத்ததில் 100, அதற்கடுத்ததில் ஒரு 30 - என்றெல்லாம் கதைகள் travel செய்வதுண்டு. So நமக்கான மறுபதிப்புக் கதைகளை தேடிப் பிடித்து ஆர்டர் செய்ததில் ஒன்று இரண்டு நம்பர்கள் தப்பாகிவிட்டதால், ஓரிரு மறுபதிப்புக்கான கதைகளுக்குப் பதிலாய் - முற்றிலும் புதிதான கதைகள் வந்து சேர்ந்துள்ளன. சகலமும் கலரில் எனும்போது இந்தப் புதுக்கதைகளை 'ஆ'வென பராக்குப் பார்க்கத்தான் முடிந்தது.
நமது திட்டமிடலின்படி அச்சு அசலாய் நாம் விளம்பரப்படுத்திய அதே மறுபதிப்புகள் தான் வேண்டுமெனில் விடுபட்டுப் போயிருக்கும் ஓரிரு கதைகளுக்கு மறுக்கா ஆர்டர் கொடுத்து வரவழைத்திட வேண்டியிருக்கும். அதற்கான அவகாசமெல்லாம் உண்டு தான் ! அதே சமயம் 'ஒன்றோ இரண்டோ புத்தம் புதுக்கதைகளை உள்ளே புகுத்தினால் தப்பே இல்லை' எனும் பட்சத்தில் கைவசம் இருக்கும் இந்தப் புதுக்கதைகளை TERRIFIC TEX தடத்துக்குள்ளேயே புகுத்தி விடலாம் தான். இது பற்றி நிச்சயமாய் ஆளுக்கு ஒரு கருத்து இருக்கும் என்பதில் எனக்கு இம்மி கூட சந்தேகமே இல்லை ! So காலையே எழுந்து, மூத்திர சந்தைத் திறந்து, பிளீச்சிங் பவுடர் எல்லாம் போட்டு, வெயிலுக்கு ஒரு பந்தலையும் அமைத்துவிட்டு, தயாராகக் காத்திருக்கிறேன்.
'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்' எனும் பட்சத்தில் no worries, இந்தப் புதுக்கதைகளை 2027-ன் அட்டவணைக்கென மாற்றித் திட்டமிட்டுக் கொள்வேன். "இல்லைங்கண்ணா பெட்ரோமாக்ஸ் லைட் இல்லாங்காட்டி லாந்தர் விளக்கோ, LED பல்போ, தீப்பந்தமோ இருந்தா கூட நேக்கு ஓ.கே தான் !" எனும் பட்சத்தில் இந்தப் புதுக்கதைகளை TERRIFIC TEX-க்குள் புகுத்திடலாம். இது குறித்து யார்-யார் எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் ? என்பதை யூகிப்பதில் எனக்கு சிரமமே இருக்கவில்லை. எங்கிருந்தெல்லாம் தொடப்பக்கட்டைகள் பறந்து வரும் ? பூரிக்கட்டைகள் வரும் ? என்பதை ஏற்கனவே லிஸ்ட் போட்டு வைத்தாகி விட்டது ! எங்கிருந்தெல்லாம் இதற்கு இசைவு கிட்டிடும் ? என்பதுமே என் ஞானக்கண்ணில் தெரிகின்றது. ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தில், கொஞ்சமே கொஞ்சமாய் முழியாங்கண்ணனை நாலு மாத்து மாத்தினால், தளமும் சுறுசுறுப்பாக இருந்தது போல் இருக்கும் ; என் கேள்விக்கு விடை கிடைத்தது போலவும் இருக்கும் அல்லவா? So ஒரு ரோஸ் கோட் போட்டுக்கினு, வாண்டனாக வண்டியில் ஏறி தயாராகக் காத்திருக்கிறேன் மக்களே.
உங்களுக்கான வினா வெரி சிம்பிள். "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்" எனும் பட்சத்தில் no problems - விடுபட்டுள்ள மீதக் கதைகளுக்கு ஏற்பாடு செய்து விடலாம் ! So பின்னுட்டத்தில் "பெட்ரோமாக்ஸ்" என்று பதிவிட்டால் போதும். என்ன - மறுக்கா அவற்றிற்கென ஒரு தொகையினைத் தேற்ற வேண்டும் என்பது தான் நோவு !
அதேநேரம் - "ஒன்றிரண்டு மறுபதிப்புகள் இன்னைக்கு இல்லாங்காட்டி நாளைக்கோ, நாளான்னைக்கோ வந்துவிட்டால் தெய்வ குற்றமெல்லாம் கிடையாது. புதுசை பேஷா உட்புகுத்தலாம் !" என்று நீங்கள் எண்ணிடும் பட்சத்தில் "LED பல்ப்" என்றோ "தீப்பந்தம்" என்றோ "லாந்தர் விளக்கு" என்றோ பதிவிட்டால் போதும். .
"அக்காங் - பழசோடு புதுசை சேர்த்து போணி பண்ண பாக்குற. இது ஈ.பி.கோ. செக்ஷன் 676-படி மெக்ஸிகோவுக்கு பக்கத்து கொங்கணாபாளையத்தில் தூக்குதண்டனை தரவேண்டிய ரேஞ்சுக்கான குற்றமாகும். இதை நான் வன்மையாய், கொடூரமாய், தீவிரமாய், ஆவேசமாய், ஆக்ரோஷமாய் ஆரவாரமாய் , ஆர்ப்பாட்டமாய் , அதகளமாய் எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன்" என்று குரல் கொடுக்க மெனக்கெட வேண்டாமே ப்ளீஸ். நிலவரத்தை உள்ளதை உள்ளபடிக்கே சொல்லியுள்ளேன். இதை சரிசெய்வதும் இதையே நமக்கேற்றார்போல் தகவமைத்துக் கொள்வதும் நம் விருப்பமே. Simple as that ! So 1984 வரை போய் 'உன் புத்திய பத்தித் தெரியாதா ? உன் டகால்டி பத்தித் தெரியாதா ?' என்ற ரேஞ்சுக்கு போட்டுச் சாத்த முகாந்திரங்கள் தேட வேண்டாமே ப்ளீஸ் ! இன்னொரு முறை பணம் தேற்ற வேணும் தானா ? என்ற தயக்கம் மட்டுமே இந்தக் கேள்வியினை உங்களிடம் முன்வைக்கச் செய்துள்ளது !
And end of the day - இந்த மறுபதிப்புத் தனித்தடத்தினில் கிட்டத்தட்ட அனைத்து ரெகுலர் சந்தா நண்பர்களும் இணைந்திருப்பர் என்றே தோன்றுகிறது ! அவ்விதம் இணையாதோர் கூட, இந்தப் புதுக்கதைகளை மட்டும் ஆன்லைனிலோ, புத்தக விழாக்களிலோ வாங்கியும் கொள்ளலாமே ? என்று என் மண்டைக்குள் சிந்தனை ஓடியதை மறைக்க மாட்டேன் ! ஆனா 'வார்டன்னாலே குட்டுவோம் / குத்துவோம்' என்ற தெய்வீக அவா உள்ளோரும் நம் மத்தியில் உள்ளதால் - அவர்களின் சிந்தைகள் வேறாக இருக்கக்கூடுமென்றும் பட்டது ! Hence this ரோஸ் கோட் !!
Moving on, ஜூன் புக்ஸ் எல்லாமே பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களில் பைண்டிங் முடித்து வந்தவுடன் டெஸ்பாட்ச் ஆகிடும் folks. And, ஜூலை மாதத்து தக்காளி சட்னி தவணைக்கென இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறேன் Becos அங்கேயும் அநேகமாய் மாதத்தின் முழுமைக்கும் பேனா பிடிக்கும் பாக்கியம் நமக்கே அமையும் போல் தெரிகிறது.
லக்கி லூக் ஆண்டுமலர்
தாத்தாக்கள்
GEN Z தடம்
FAB 5
என்ற ரேஞ்சில் பொறுப்பை கைமாற்றி விட இயலா விதத்திலான இதழ்களே வெயிட்டிங். So லக்கியோடு பயணிக்கப் புறப்படுகிறேன். Bye all..see you around ! Have a fun evening !

.jpg)
Me
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சி முதலிடம்
ReplyDeleteசாரி, இரண்டாவது இடம்
Delete😄😄😄👍😘
DeleteHaiyo...first time, lucky to be first...
ReplyDeleteவாழ்த்துக்கள்! 😁💐💐💐
Deleteவாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கள் சார்
DeleteHi
ReplyDeleteMe in 4th 😳
ReplyDelete😘😘😘💐😄Me in Sir💐😘
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteபெட்ரோமாக்ஸோ, led யோ.. நமக்கு வெளிச்சம் வந்தா சரி.. அதாவது டெக்ஸ் வந்தா மட்டும் போதும்....
ReplyDeleteI too.
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete13th
ReplyDeleteபுத்தக திருவிழா (அ) ஆன்லைன்
ReplyDeleteLED பல்ப்
ReplyDeleteபுதிய கதைகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteவிடுபட்ட பழைய கதைகள் என்னென்ன, அவை வண்ணத்தில் எப்போது வரும் என்று சொன்னால் நண்பர்கள் பதிலளிக்க வசதியாக இருக்கும் சார்.
தீப்பந்தம்
ReplyDelete///'தெய்வமே, அவசியத்துக்கு எழுதியாச்சு....இனி பதிவு எனும் ஆடம்பரத்துக்கும் மறுக்கா மொக்கை போட்டே தீரணுமா ?' ///
ReplyDeleteஉங்களுக்கு வேணா அது ஆடம்பரமா இருக்கலாம் சார்... எங்களுக்கு அது அத்தியாவசியம்! பதிவு இல்லேன்னா எதையோ இழந்தது போல ஒரு மார்க்கமாவே அன்னிக்கு பூரா சுத்திக்கிட்டிருப்போம்!
இனிமே இப்டி பண்ணனுமோ - பதிவ படிக்க பைசா... 💪
Deleteபொஸ்தவங்க பிரீ 👍
நீங்க சந்தா தொகை மட்டும் எவ்ளோன்னு சொல்லுங்க சார்... முதல் ஆளா சந்தா கட்டறேன்!!😁😁
Deleteஅந்த சந்தாக்கு பேர் கூட ரெடி - "சந்துக்குள் சல்சா ".... இல்லே.. இல்லே... "The சந்துக்குள் சல்சா 💪சந்தா"!
Deleteஅல்லாங்காட்டி - "The குஜ்லிமஸ்து சந்தா "
Deleteசார்... 🤣🤣🤣🤣🤣😝😝
DeleteLED பல்ப்😍
ReplyDeleteLED பல்ப்😍😍
LED பல்ப்😍😍😍
LED பல்ப்😍😍😍😍
LED பல்ப்😍😍😍😍😍
TERRIFIC டெக்ஸ் ல் விடுபட்டு போன அந்தக் கதை எதுங்க சார்? (நோ.. நோ! உங்களை மூ. ச க்கு இழுப்பதற்காகக் கேட்கலைங்க சார் 😁)
ReplyDeleteஅஸ்கு புஸ்கு...
Deleteஆஜர்
ReplyDelete
ReplyDeleteதுள்ளிக் குதிக்குது மனசு 🤗🤗🤗
1.LED BULBS
இரண்டு கதைகள் புதிய கதைகள் என்றால் லெட்பல்ப் என்று சொல்வேன் 🤗
2.OLED (ORGANIC LIGHT EMITTING DIODE )
மூன்று கதைகள் புதியதாக வருமாயின் OLED என்று சொல்வேன்
🤗🤗🤗
3.MICROLED BULBS
நான்கு கதைகள் புதிதாக வருமாயின் மைக்ரோ லெட் என்று சொல்வேன்
🤗🤗🤗🤗🤗
4.QUANTUM DOTT/PEROVSKITE EMITTER
BULBS
ஐந்து கதைகள் புதிதாக வருமாயின் மேலே உள்ள கசாமுசா என்று வரும் பல்புகளை சொல்வேன்.🤗🤗🤗🤗🤗🤗
4.MIT’s Nanophotonic Incandescent Bulbs:
ஆறு கதைகளும் புதிதாக வருமாய் மேலே உள்ளதைத்தான் சொல்வேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கடைசியில் உள்ள மூன்றுமே லெட் பல்புகளை விட அதிக தொழில்நுட்பம் சார்ந்தவை.
எல்லா புத்தகங்களுமே தவறுதலாக புதிதாக வந்திருக்கக் கூடாதா? இத்தாலி யில தப்பு பண்ணுனு தான் பண்ணாங்க அது முழுசா பெரிய தப்பா பண்ணி இருக்க கூடாதா
புதுசுகளை சீக்கிரமாக அடிச்சு விடுங்க சார் 👍
///ஐந்து கதைகள் புதிதாக வருமாயின் மேலே உள்ள கசாமுசா என்று வரும் பல்புகளை சொல்வேன்.///
Delete🤣🤣🤣🤣🤣🤣
தப்பு - இக்கட நான் நம்பர்கள தேடுனதிலே சார் 🥹🥹!
Deleteஇதற்கென ஒரு இத்தாலிய ஆர்வலரின் site உண்டு - அங்கு தகவல்கள் துல்லியமாய் இருக்கும்! துரதிரஷ்டவசமாய் அந்த site மூணு மாதங்களாய் down 🤕 So நானாய் பாக்கித் தளங்களில் சேகரித்ததில் கொஞ்சம் சொதப்பல்ஸ்!
லத்தின் மொழியில் ஒரு சொற்றொடர் உண்டு சார்.
DeleteFELIX CULPA
A HAPPY FAULT அல்லது BLESSED FALL
ஒரு apparent error ஆனால் Positive outcome.
😊 என்னைப் பொருத்த மட்டிலும் ஆவது.
ஒன் ZEN கதை நினைவுக்கு கமிங்.... இதோ அதன் copy-paste :
Deleteநெடுங்காலத்திற்கு முன்பு, சீனாவின் வட எல்லைப் பகுதியில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தாராம். அவரிடம் ஒரு அற்புதமான வெள்ளைக் குதிரை இருந்ததாம். அதன் அழகையும் கம்பீரத்தையும் ரசிப்பதற்காகவே சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் அவரைத் தேடி வருவார்களாம்.
ஒரு நாள் காலை, அந்தக் குதிரை வேலியை உடைத்துக் கொண்டு பக்கத்து நாட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பித்துவிட்டதாம்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் முதியவரைத் தேடி வந்து, "ஐயோ, என்ன ஒரு துரதிர்ஷ்டம்! இவ்வளவு அருமையான குதிரையை இழப்பது எவ்வளவு பெரிய சோகம்!" என்று தலையசைத்து வருந்தினார்களாம்.
ஆனால், வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து பக்குவப்பட்ட அந்த முதியவர், புன்னகையுடன் அவர்களிடம் சொன்னாராம்: "துரதிர்ஷ்டமா? அதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? விதி என்பது ஒரு பெரிய வலைப்பின்னல்; அதில் நமக்குத் தெரிவது ஒரே ஒரு நூலிழை மட்டும்தான். பொறுத்திருந்து பார்ப்போம்."
ஒரு வாரம் கழிந்ததாம். யாரும் எதிர்பாராத விதமாக அந்த வெள்ளைக் குதிரை திடீரென்று வீட்டிற்குத் திரும்பியதாம். அது தனியாக வரவில்லை; காடுகளில் இருந்து இன்னும் ஒரு டஜன் கம்பீரமான காட்டுக்குதிரைகளையும் தன்னுடனேயே கூட்டிக்கொண்டு வந்திருந்ததாம்.
அக்கம் பக்கத்தினருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டதாம்! அவர்கள் முதியவரின் வீட்டிற்கு ஓடி வந்து, "நீங்கள் சொன்னது எவ்வளவு நிஜம்! இது துரதிர்ஷ்டமே இல்லை, ஒரு பெரிய வரம்! இப்போது நீங்கள் பெரும் பணக்காரர் ஆகிவிட்டீர்கள். என்ன ஒரு அலாதியான அதிர்ஷ்டம்!" என்று கொண்டாடினார்களாம்.
முதியவர் அந்தப் புதிய குதிரைகளை அமைதியாகப் பார்த்துவிட்டு, மெல்ல தோள்களை உயர்த்திச் சொன்னாராம்: "அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? எதையும் இவ்வளவு சீக்கிரம் முடிவு செய்யாதீர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்."
சில நாட்களுக்குப் பிறகு, முதியவரின் ஒரே மகன் அந்தக் காட்டுக்குதிரைகளைப் பழக்கப்படுத்தத் தொடங்கினானாம். அப்படி ஒரு துடிப்பான குதிரையின் மீது அவன் ஏறிச் சவாரி செய்ய முயன்றபோது, அந்தக் குதிரை மிரண்டு அவனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். அவன் உயிர் தப்பினானாம், ஆனால் அவனது கால் பலமாக உடைந்து, ஊனமுற்றவனாகிப் போனானாம்.
வழக்கம்போல அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சோக முகத்துடன், "என்ன கொடுமை இது! உங்கள் வயோதிக காலத்தில் உங்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரே மகனின் கால் இப்படி ஊனமாகிவிட்டதே. என்ன ஒரு மோசமான விதியோ!" என்று புலம்பினார்களாம்.
அதற்கும் அந்த முதியவர் சற்றும் பதற்றமின்றி, "துரதிர்ஷ்டமா? அதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களைக் கொண்டது. ஒரு பக்கத்தை மட்டும் படித்துவிட்டு முழுக் கதையையும் உங்களால் மதிப்பிட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றாராம்.
அடுத்த ஆண்டே, பேரரசருக்கும் அண்டை நாட்டுப் படைத்தளபதிக்கும் இடையே ஒரு கடுமையான போர் வெடித்ததாம். ராணுவ அதிகாரிகள் கிராமம் கிராமமாகச் சென்று, போரிடத் தகுதியுள்ள அனைத்து இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தார்களாம். அந்தப் போர் ஒரு ரத்தக் களரியாக மாறியதாம்; போர்க்களத்திற்குச் சென்ற பத்து இளைஞர்களில் ஒன்பது பேர் மாண்டார்களாம்.
ஆனால், முதியவரின் மகனோ கால் ஊனமாக இருந்ததால் ராணுவத்தினரால் நிராகரிக்கப்பட்டானாம். அவன் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கி, தன் தந்தைக்கு உதவியாக நிலத்தைக் கவனித்துக் கொண்டானாம்.
போரில் தங்கள் பிள்ளைகளை இழந்த அக்கம் பக்கத்தினர் கதறி அழுதுகொண்டே முதியவரிடம் வந்து, "உங்கள் மகன் உயிர் பிழைத்துவிட்டான். நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!" என்றார்களாம்.
அதற்கு அந்த முதியவர் தன் வயல்வெளியை அமைதியாகப் பார்த்தபடி மெல்ல முணுமுணுத்தாராம்: "அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்?..."
Zen தரும் பாடம்:
விதி என்பது தனித்தனியான பரிசுகளோ அல்லது தண்டனைகளோ அல்ல; அது ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சி. விதியின் பலமே அதன் ரகசியத்தில்தான் இருக்கிறது.
So மூ. ச. வுக்கும் - சொகுசு ச. வுக்கும் கூட ஒரு இணைக்கும் சந்து உண்டு போலும் 🥹
Deleteவாவ்!! வாழ்க்கையின் எதார்த்ததை விளக்கிடும் அட்டகாசமான கதை சார்!! இதுபோன்ற Zen கதைகளை அடிக்கடி பதிவிட்டு எங்களைப்போன்ற Gen-Z kids ஐ உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!😍😍😍😍
Deleteநல்ல கதை சார்... இப்போதைக்கு எனக்கு தேவையான கதையும் கூட ....பத்திரபடுத்தி கொள்கிறேன்...:-)
Deleteஎதுவாக இருந்தாலும் ஓகே சார்.
ReplyDeleteடெக்ஸ் கதைகள் வந்தா போதும்.
தீப்பந்தம்.
தீப்பந்தம்
ReplyDeleteநள்ளிரவு வேட்டை இருக்கு தான சார்...
ReplyDeleteதீப்பந்தம்
ReplyDeleteமகிழ்ச்சியில் கூத்தாடுது மனசு
விடுபட்ட கதையை சாவகாசமாக டெக்ஸ் கிளாசிக் ல போட்டுக்கலாம்.😄🤸🤸🤸🤸🤸🕺🕺🕺🕺
ReplyDeleteLED பல்ப்
ReplyDeleteநமக்கு டெக்ஸ் வந்தாலே போதும்.... அதுதான் எனக்கு தீபாவளி பொங்கல் ரம்ஜான் பக்ரீத் கிறிஸ்மஸ் 🌹🙏🌹🌹🌹🌹
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteஜீலை டெக்ஸ் இல்லையா அய்யா😭😭😭😭😭😭😭
ReplyDeleteபுதிய கதைகளை வரவேற்கிறேன் சார்....
ReplyDeleteபழசோ புதுசோ டெக்ஸ் வந்தா போதும்.கொண்டாட நாங்க ரெடி
ReplyDeleteநள்ளிரவு வேட்டை இருக்கு தான சார்...
ReplyDeleteபெட்ரோமாக்ஸ்
ReplyDeleteLED பல்ப்
ReplyDeleteLED
ReplyDelete52th
ReplyDelete"கதை மாறுவது"....
ReplyDeleteமறுபதிப்பு கதைகளுக்கான எதிர்பார்ப்புடன் சந்தா கட்டிய + பல மாதங்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து - இப்போது வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிக கண்மணிகளுக்கு ஒரு ஏமாற்றம் தான்.
இவர்களை தவிர்த்து "சோ வாட்" என போகும் மற்ற வாசக நண்பர்களுக்கு "ஓகே கூல்" தான்.
கதை புதுசோ,பழசோ- "தவிர்க்க முடியாத காரணங்களால்" எனும்போது அதை ஏற்றுக் கொள்வதே சரி எனப் படுகிறது.
அதிலிலும் டெக்ஸ் எனும்போது "டபுள் ரைட்"
விடுபட்ட கதைகளை அடுத்த பு வி யில் ஸ்பெஷலாக போட்டால் போயிற்று.
ஏற்கனவே FEB FIVE க்கு கருத்து கணிப்பு கேட்டபோது (February 22 post) ஒரு அட்டகாசமான டெக்ஸ் கதை ரெடியாக இருப்பதாக சொன்னீர்கள்.
ஆனால் பெரும்பாலான வாசகர்கள் தேர்வில் அந்த டெக்ஸ் மிஸ்ஸானது.
ஒரு வேளை அந்த டெக்ஸ் கதை போட முடிந்தால் சந்தோஷமே.
மற்றபடி,"விடுபட்ட கதைகள் எதெது"என குறிப்பிட்டு ஒரு போஸ்ட் போட்டால் இனிமேல் சந்தா கட்டும் வாசகர்களுக்கும்,
ஏற்கனவே கட்டிய வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்.
இந்த மாற்றத்தால் சந்தா வரவு சுணங்காமல் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் டெக்ஸுக்கே tough தருவது தினப்படி அரங்கேறி வரும் அரசியல் ஆக்ஷன் தான் சார் ! டெக்சாசிலும், அரிஸோனாவிலும் பறக்கும் பொறிகளைக் காட்டிலும் தாராபுரத்தில், ஆண்டிப்பட்டியிலும் அன்றாடம் அரங்கேறும் ரகளைகளே கவனங்களை ஈர்த்து வருகின்றன !
Deleteமற்றபடிக்கு தல பழசா ? புதுசா ? என்பதால் சந்தாக்களில் சுணக்கம் நேராது என்பதே எனது நம்பிக்கை !
Hi Editor sir,
ReplyDeletePlease try to Write in blog every week .
I feel missed something if I didn’t see a post.
This is my personal request sir.
On Tex books, I am okay for anything as long as Tex is coming sir
My option is LED bulb
LED bulb my choice
ReplyDelete// மாறாக, கதாசிரியர் எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறார் ? எந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போடுகிறார் ? எந்தப் பக்கம் வண்டியை விடுகிறார் ? என்று இந்த வித்தைகளில் கில்லாடியான எனக்கே செமையாகத் தண்ணீர் காட்டியுள்ளார்! //
ReplyDeleteஅப்படி போடு. உங்களுக்கே தண்ணி காட்டி விட்டார்களா. அப்ப கதை செம கிட் அடிக்க சார்.
LED பல்ப் ஒகே தான். ஆனால் அந்த விடுபட்டுப் போன கிளாசிக் கதைகளை down the line எப்போதேனும் வெளியிட்டால் நன்று.
ReplyDeleteLED bulb😘😘😘👍💐
ReplyDeleteஇது சந்தோசமான விசயம் ஆயிற்றே....எனவே எல்ஈடி பல்பு...தீப்பந்தம்..லாந்தர் எல்லாத்திலியும் ஒரு டஜன் போட்டுக்குங்க சார்....:-)
ReplyDeleteLED Bulb
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteLED, மெழுகுவர்த்தி, பெட்ரோமேக்ஸ், சிம்னி விளக்குன்னு எதா இருந்தாலும் ஓகே. வெளிச்சம் (டெக்ஸ்) வந்தாப் போதும்.
ReplyDeleteLED bulb
ReplyDeleteநள்ளிரவு வேட்டை விடுபட வேண்டாம் Sir. A top class Tex willer story. I am still having it, but in bad condition n B&W. Eagerly waiting for its color version. Thank You.
ReplyDeleteஇரண்டுமே வேண்டும் சும்மா தக தக என்று எரியட்டும்
ReplyDeleteLED
ReplyDeleteதீப்பந்தம் எடுப்போம் புதுத்தடமைப்போம்
ReplyDeleteMy vote is for "All LED bulbs". No பெட்ரோமேக்ஸ்
ReplyDeleteவெள்ளி நிலாவே விளக்காய் எரிந்தால் கூட போதும்..
ReplyDeleteLED, OLED, Tube light, Gundu bulb, Focus light. Add any other missing lights too sir 😜😃😜
ReplyDeleteLED bulb sir.
ReplyDeleteLED பல்ப் அல்லது தீப்பந்தம் அல்லது லாந்தர் விளக்கு என்றாலும் எனக்கு ஓகே சார் !
ReplyDelete