நண்பர்களே,
வணக்கம்.வேறு இடமே கிடைக்கவில்லை என்று தேள் எதற்காக தென்னை மரத்தில் போய் போட வேண்டும் என்பதும் தெரியாது ; அந்த நெறியானது பனைமரத்துக்கு எவ்விதம் டிரான்ஸ்பர் ஆகிவிடும் என்பதுமே புரியாத புதிர்தான். ஆனால் பழமொழியாச்சே, அனுபவித்துத் தான் தீரணும் போலும்...!தொலைதூர டாலர் தேசம் மத்திய கிழக்கில் நடத்தும் யுத்தத்தின் தாக்கம் இதுவரையிலும் டிவி செய்திகளாகவும், ட்விட்டர் பதிவுகளாகவும் இருந்து வந்ததெல்லாம் சில நாட்களுக்கு முன் வரையில்தான்.
இதோ ரவுண்டு கட்டி அத்தனை விலைகளும் தெறிக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்கக் கொடுக்கு பாய்ச்சி வரும் விஷத்தின் வேகம், பூமி எங்கும் எதிரொலிப்பது தவிர்க்க முடியா நிகழ்வு போலும்......!! பேப்பரில் துவங்கி, அச்சுப்பொருட்கள், இங்க் ; அட்டை ; பற்றாக்குறைக்கு பாலித்தீன் கவர் வரை அத்தனையும் மானாவாரியாய் விலைகளில் எகிறத் தொடங்கிவிட்டன. இன்றைக்கோ DTDC மற்றும் ST கொரியர்களும் தாக்கீது அனுப்பிவிட்டனர் - ஏப்ரல் முதலாய் கட்டணங்களில் 25 சதவீத உயர்வு என்று. இதென்ன பிரமாதம் - நம்மகிட்டே இன்னொரு பேசல் ஐட்டம் கீதே ..? முப்பதே நாட்களில் அமெரிக்க டாலரின் அன்னியச் செலாவணி மதிப்பு சுத்தமாய் ரூ.10 கூடி விட்டது !! போன மாதம் இதே நேரத்துக்கு ரூ. 83 விலையிருந்த டாலர் இப்போது ரூ .94 கிட்டே குலாவியபடி நின்றுகொண்டிருக்கிறது !! ராயல்டி கட்டணங்களில் மூக்காந்தண்டை தாறுமாறாய் சாத்து வாங்கப் போவது சர்வ நிச்சயம் !! ஆண்டின் மீத 8 மாதங்களை பற்களுக்கு சேதாரம் இன்றி முழுசாய் நகற்ற முடிந்தால் அது பகவான் புண்ணியமாகத் தான் இருக்க வேண்டும்."போச்சுடா முழியாங்கண்ணன் ட்ரம்ப்பின் யுத்தத்தை காரணம் காட்டி விலையை ஏத்தப்போறானா?" என்ற பயம் இந்த நொடியிலாவது அனாவசியம். Becos சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு எவ்வித விலை உயர்வுகளையும் pass on செய்திடும் உத்தேசம் நகி. என்ன - கூரியர் கட்டண உயர்வு தான் தினப்படி துடைப்பத்தால் சாத்தப் போகிறது !!
இதோ இன்றைக்கு ஏப்ரலின் அதிரடி கூட்டணி கொரியர்களில் கிளம்பியாச்சு. ஒவ்வொரு மாதமும் அகஸ்மாத்தாய் அமைந்து போகும் இந்த இதழ்களின் காம்போவே என்னை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்தும் விஷயம். 'ஒரு டெக்ஸ் ஆல்பம் மாதம்தோறும் வேண்டும்' என்ற நிரந்தரப் புள்ளியினைத் தவிர்த்து, பாக்கிப் புள்ளிகள் சகலமுமே வசதிக்கேற்ப, பணி செய்யும் தோதிற்கு ஏற்ப, கதைகளின் கோப்புகள் கிடைப்பதற்கு ஏற்ப, ஆங்காங்கே தாமாய் ஸ்லாட் இன் ஆகிக்கொள்வதுண்டு. And, இந்த ஏப்ரலில் உங்களை சந்திக்க காத்திருப்பதோ ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்பது நாயகப் பெருமக்கள். So, நவநாயகர்களின் கதையே இந்த ஏப்ரல்.
ஏற்கனவே ஹாட்லைனில் இதையே எழுதியது நினைவிருக்கிறது. இந்த மாதத்து வாசிப்பினை யார் எவ்விதம் அணுகிடுவார்களோ என்ற கேள்விக்கு பதில் தரும் பொறுப்பை நானே கையில் எடுக்கும் பட்சத்தில் - எனது முதல் சாய்ஸ் ஐயமின்றி டின்டினாகத்தான் இருக்கும்.96 வருட ஜாம்பவான் என்பது ஒருபுறம் இருக்க, பால்யத்தின் தீரா craze என்ற அடையாளமும் டின்டினோடு கைகோர்த்திடும் போது நம்மையும் அறியாமல் அந்தப் பக்கமாய் ஒரு மையல் எழுவதை தவிர்க்க முடியவில்லை. டின்டின் வரிசையில் இரண்டாவது ஆல்பமாக விளம்பரப்படுத்தப்படும் ‘The Crab with the Golden Claws' ஆல்பமே இம்மாதம் ‘பாலைவனத்தில் ஒரு பொன் நண்டு’ என்று தமிழில் அவதார் எடுத்துள்ளது. இங்கே, இந்த நொடியில் நேக்கொரு திடீர் டவுட் : பொன்+ நண்டு = "பொன்னண்டு" என்று வருமோ ?? ஆத்தாடி ....சீவக சிந்தாமணியிலிருந்து யாப்பிலக்கணம் வரைக்கும் கிளாஸ் நடக்குமோ ? 😕
புக்கைப் பொறுத்தவரையில் வழக்கம் போலவே கெட்டியான காகிதம், அதே பெரிய சைஸ், தெறிக்கவிடும் அதே தரம் and வழக்கம் போலவே செம ஜாலியான + பரபரப்பான வாசிப்பு அனுபவம் இங்கு வெயிட்டிங்.நமது லபோதீபோ கேப்டன் ஹேடாக் - டின்டினையும், ஸ்னோயியையும் முதன்முறையாக சந்திப்பது இந்த சாகசத்தின் வாயிலாகவே. சரக்கைப் போட்டுவிட்டு கப்பலுக்குள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் கேப்டனை காப்பாற்றி சஹாரா பாலைவனம் முழுக்க இழுத்துச் செல்கிறார் டின்டின்.இதற்கு முந்தைய ஒன் ஷாட் ஆல்பங்களான கால்குலஸ் படலத்திலோ, விண்கல் வேட்டையிலோ இருந்த depth இந்த சாகசத்தில் ஒரு மிடறு குறைவுதான். ஆனாலும் காலத்தை வென்றதொரு அசாத்தியப் படைப்பு இது என்பதில் உலகெங்கும் காமிக்ஸ் படிக்கும் சகல வயதினருக்கும் சந்தேகமே இருக்க இயலாது.டின்டின் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது சன்னமானதொரு சந்தோஷ செய்தியுமே. கொஞ்ச காலமாகவே தலைநகரில் - அதாவது தேசத்தின் தலைநகரில் - நமது இதழ்களை வாங்கி ரசித்திட ஒரு சின்னஞ்சிறு வட்டம் உருவாகியிருப்பது புரிகிறது. டின்டினின் ஒவ்வொரு ஆல்பத்திலும் தவறாமல் 20 பிரதிகள் வரை தருவித்து அங்கு விற்பனை செய்வது கடந்த சில மாதங்களாக நடந்தேறி வருகிறது.விளம்பரப்படுத்தும் அவசியம் இம்மியும் இல்லாது ஜெகஜோதியாய் ஜொலிக்கும் ஒரு global சூப்பர் ஸ்டாரை கையில் எடுக்கும்போது இதுபோலான சகாயங்கள் சாத்தியமாகிடும் போலும். தவிர வழக்கம் போலவே ஐரோப்பிய சேகரிப்பாளர்களும் செம ஆர்வம் காட்டி வருகின்றனர். எது எப்படியோ - "ஜப்பானில் கூப்பிட்டாகோ, சைனாவில் ‘கூப்பிட்டாகோ, ஜாக்கிசான் கூப்பிட்டாகோ" என்று நான் கூவப் போவதில்லை. உள்ளூரில் நம் வட்டத்தில் டின்டின் பெற்றிடக் கூடிய பாராட்டுகளே மெய்யான மகிழ்வைத் தந்திடும். So, நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அமையும் பட்சத்தில் - ஏப்ரலின் காம்போவில் டின்டினுக்கு முதலிடம் கொடுக்கப் பாருங்களேன் மக்களே!
Next in line என்று நான் சொல்லக்கூடியது இன்னொரு செம breezy read இம்முறை GEN Z சந்தாவின் "ஜாக்கி போட்ட ஓநாய்" ரூபத்தில்.இந்தத் தொடர் உருவானதே செம வித்தியாசமான ரூட்டில். நம்ம தாத்தாக்கள் கதை உருவாக்கிய கதாசிரியர் வில்ஃபிரிட் லுபானோ , பொம்மலாட்டம் நடத்தும் பேத்தி சோபியின் ஷோக்களில் ஒரு ஓநாயைக் காட்சிப்படுத்தியிருப்பார். ஒரு பட்டாப்பட்டி டிராயரை மட்டும் போட்டுக்கொண்டு வரும் அந்த ஓநாய் காட்டு விலங்குகளுக்கு மத்தியில் செய்யும் லூட்டிகளை பொம்மலாட்டத்தில் காட்ட பசங்க விழுந்து சிரித்து ரசிப்பது போன்ற sequences தாத்தாக்கள் கதைகளில் உண்டு.அட அந்த ஓநாயை மெய்யாலுமே ஒரு காமிக்ஸ் பாத்திரமாக்கினால் என்னவென்று ஒற்றை நாளில் யாருக்குத் தோன்றியதோ தெரியவில்லை, ஆனால் The Wolf in Underpants என்ற பெயரில் இந்தத் தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர்.இது ரெகுலரான , மாமூலான காமிக்ஸ் பாணியிலிருந்து சற்றே விலகி நிற்கும் என்பது முதல் தகவல். சித்திர பாணிகளும் கலரிங்கும் இங்கே செம லேட்டஸ்ட் பாணி. And இது முழுக்கவே நம்ம இல்லத்துக் குட்டீஸ்களுக்கு என்று சொன்னால் தப்பில்லை என்பேன்.ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு சன்னமான மெசேஜ் & அதைப் பரபரப்பான கதைக் களம் மூலம் பசங்களுக்கு லுபானோ சொல்ல முனைகிறார். So வீட்டில் பசங்க இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தவறாமல் படிக்கக் கொடுங்கள் மக்களே - அல்லது உறவினர் / நண்பர்களின் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்புவதாக இருப்பின் இவற்றைத் தேர்வு செய்தால் பசங்களும் சரி, நீங்களும் சரி நிச்சயம் மகிழ்வீர்கள். So எனது லிஸ்ட்டில் "ஜாக்கி போட்ட ஓநாய்" இரண்டாவது வாசிப்பு இடத்தை ஆக்கிரமித்திடும்.
அதற்கடுத்து சந்தேகமே இன்றி நம்ம இரவு கழுகாரையும், வெள்ளி முடியாரையும் ஒரு சேர மாந்திரீகர் மோரிஸ்கோவுடன் நாம் ரசித்திட உள்ள **'மரணம் மறந்த மம்மி'**யைத் தான் சுட்டிக்காட்டுவேன்.இங்கே சின்னதாய் ஒரு பிளாஷ்பேக்...! 2026-ன் அட்டவணை தேர்வில் ஒரிஜினலாய் இந்த ஆல்பத்திற்கு இடம் இருந்திருக்கவில்லை தான். ஒரு வெகு சமீப 220 பக்க டெக்ஸ் கதையினையே தேர்வு செய்து அதை வரவழைக்கவும் செய்தாயிற்று.ஆனால், போன வருடத்தின் நடுப்பகுதியின் ஏதோ ஒரு தருணத்தில், நண்பர் பல்லடம் சரவணக்குமார் எனக்கு ஓரிரு இத்தாலிய டெக்ஸ் அட்டைப்படங்களை அனுப்பிய கையோடு, "சார், மோரிஸ்கோ கதைகள் எதையாச்சும் அவ்வப்போது கண்ணில் காட்டுங்களேன்" என்று ஒரு கோரிக்கையை எழுப்பியிருந்தார்.எனக்குமே இந்த எகிப்திய வைத்தியர் + மாந்திரீகரை பிடிக்கும் என்பதால், "ஓ! அதற்கென்ன சார்? 2026-ல் பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி வைத்திருந்தேன்.அட்டவணையை இறுதி செய்யும் கடைசி கட்டத்தின் போதுதான் நான் தந்திருந்த வாக்கு நினைவுக்கு வந்தது. "ஆஹா! மோரிஸ்கோவை மறந்து தொலைத்துவிட்டோமே !" என்றபடியே அவசர அவசரமாய் போனெல்லியின் மோரிஸ்கோ சாகசங்களை உருட்ட ஆரம்பித்தேன். அப்போது சிக்கிய ஆல்பம் தான் இந்த 'மரணம் மறந்த மம்மி'. And yes, மெபிஸ்டோவின் 2026 தீபாவளி சாகசமுமே இதேபோல் ஈரோட்டில் தந்த பிராமிஸை மறந்துவிட்டு, அப்புறமாய் கடைசி நொடியில் அடித்துப் பிடித்து உள்ளே நுழைத்த சங்கதி தான். வெண்டைக்காய் கொத்சு அடிக்கொரு தபா அவசியம் போலும் ....! என்ன... நண்பர் கோரிய மோரிஸ்கோ இதோ வந்துவிட்டார்....... ஆனால் அவருக்குக் கொடி பிடித்த நண்பர் SK இன்று வெகு தொலைவிற்குப் போய்விட்டார்.எங்கிருந்தாலும் நண்பர் இதை ரசிக்கத் தவறமாட்டார் என்பது மட்டும் உறுதி.
இந்த சாகசத்தைப் பொறுத்தவரையில் பேனா பிடிக்கும்போது கொஞ்சம் இப்படியும் அப்படியுமாய் நெளியச் செய்தேன் என்பதை நான் மறுக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் விறைப்பான ஒரு ரேஞ்சர், விட்டலாச்சாரியா லோகத்தினுள் புகுந்திடும்போது நிறையவே நெருடுகிறது.அதனால்தான் ஒவ்வொரு மெபிஸ்டோ கதையினையும், ஒவ்வொரு மாந்திரீகம் சார்ந்த கதையினையும் களமிறக்கும் முன்பாக ஓட்டை ரெக்கார்டாட்டம் உங்களிடம் அபிப்ராயம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.இந்த முறையோ எகிப்திய புராணங்கள் சகலமுமே இந்தக் கதையின் பின்னணி. வரிசை கட்டி ஒவ்வொன்றாய் உயிர்கண்டு எழுவதுதான் இம்முறை நம்ம தலை சந்திக்கவிருக்கும் சவால்கள்.So ஒரு முக்கால் மணி நேரத்திற்கோ, ஒரு மணி நேரத்திற்கோ "லாஜிக்" எனும் சமாச்சாரத்தை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு பிலாரேஸ்க்குள் புகுந்தீர்களெனில் ஒரு அதகள ஆக்ஷன் மேளா வெயிட்டிங். ஷாப்திக்கள் , சைனோசெபாலிக்கள் , தோத் , ஜானி, டிக்வாலி... இவையெல்லாம் என்னவென்று இந்த நொடியில் புருவம் உயர்த்தக்கூடிய நீங்கள், அந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்பாய் கரைகண்டிருப்பீர்கள்.So, ஒரு வித்தியாசமான உலகம் காத்துள்ளது folks. Get ready, Get going......!!
இம்மாத்து இறுதி இதழ் இம்மாத்தின் ஆகப் பெரிய இதழும் கூட. பத்து கதைகள், ஆறு ஜாம்பவான் நாயகர்கள், அட்டையில் நடமாடும் மாயாத்மா... செம வித்தியாசமான காம்போ (Combo) தான், மறுப்பதற்கில்லை. And, 1950-களில் துவங்கி, 90-கள் வரையிலான வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகள் இவை. சார்லியின் சாகசங்கள் ஏற்கனவே முத்து காமிக்ஸில் வந்த கிளாசிக்ஸ். அவை தவிர்த்த பாக்கி எல்லாமே தமிழுக்குப் புதிதோ இல்லையோ, நமக்குப் புதியவைகளே .சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒற்றை கதையை ; இரண்டு கதைகளை ; வாசிக்க நினைக்கும் பட்சத்தில், அடுத்த 10-15 நாட்களுக்கு இந்த கிங் ஸ்பெஷல் அட்டகாசமான துணையாக இருக்குமென்பதில் ஐயமே இல்லை.
அப்புறம் இந்த இதழோடு Electric 80's தனித்தடம் நிறைவடைகிறது.இதே ரீதியில், இதே போல கிளாசிக் நாயகர்களைக் கலந்து கட்டி, இந்த கிங்ஸ் அணிவகுப்பு மேற்கொண்டும் ஒரு சீசனுக்குத் தொடரலாமா ? அல்லது போதுமா ? என்பதே இந்தப் பொழுதில் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்.இதேபோல இன்னும் ஒரு மூன்று இதழ்களை ஓர் ஆண்டின் அவகாசத்திற்குள் நடுநடுவே நுழைத்தால் ஓ.கே.தானா? And மறுபடியுமே முதல் சீசனின் மேக்ஸி சைஸுக்கே போய்விட்டால் என்ன guys? அளவு மாற்றம் செய்திடும் போது பணிகள் ஏகமாய் பெண்டைக் கழற்றுகின்றன. ஒரிஜினல் சித்திர அமைப்பிற்கு ஏற்ப மெகா சைஸில் போடுவதாயின் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். What say all?
ரைட் , இந்த வார இறுதியினை கூரியர் நண்பர்கள் சிறப்பித்துத் தரும் பட்சத்தில், தேர்தல் ரவுசுகளுக்கு இணையாக நம்ம அதகளமும் உங்கள் கைவசம் இருக்கும். So Happy reading !
இங்கே ஏப்ரலின் முதல் வாரத்தில் எப்போதும் போலவே அம்மன் கோவில் திருவிழா என்பதால், காத்திருக்கும் திங்கள் நமது அலுவலகத்திற்கு விடுமுறை. அந்த ஒற்றை நாள் மட்டுமே உங்களது அழைப்புகளுக்குப் பதில் சொல்ல ஆள் இருக்காது....Please do note.!
Bye all.....see you around...! ரிப்போர்ட்டர் ஜானியோடு ஒரு மர்மத்தை முடிச்சவிழ்க்கப் புறப்படுகிறேன் ! Have a wonderful week ahead.....Bye for now !!
ONLINE LISTINGS ARE READY & WAITING.....!
https://lion-muthucomics.com/latest-releases/1457-2026-april-pack.html


Hi
ReplyDeleteFirst 😄😍
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா...
Delete😭😭
Deleteவாழ்த்துகள் தம்பி 💐
Deleteஅட டே...)
ReplyDelete5th
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteஅட... வெள்ளியன்றே பதிவு..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
க்ளாசிக் நாயகர்கள் தொடரலாம் சார்...
ReplyDeleteஆனால் எனக்கு என்னவோ மெகா சைஸை விட இப்போதைய டெக்ஸ் பாணி அளவு தான் அதனுடன் பயணிக்க ,வாசிக்க ஏதுவாக உள்ளது...மற்றபடி உங்கள் வசதிக்கேற்ப...
என் கருத்தும் இதுவே...
Deleteவந்தாச்சு இப்பவும் பத்துக்குள்ள..!
ReplyDeleteகிளாசிக் ஹீரோஸ் தொடரலாம். மாக்ஸி சைஸ் ok..!
DeleteKings தொடரலாம்
ReplyDeleteThis size s best for classics sir .. maxi a big no
ReplyDeleteகிளாசிக் நாயகர்கள் தொடர்ந்து வரட்டும் சார்.
ReplyDeleteஎந்த சைசில் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் படங்களை ரசிக்கும் வகையில் பெரிய அளவில் இருந்தால் சுகம்.
தற்போது வேதாளர் மட்டுமே வண்ணத்தில் வருகிறார். மற்றவர்களையும் வண்ணத்தில் முயற்சி செய்யலாம்.
காரிகன், சார்லி தவிர ரிப் கெர்பி, ஜார்ஜ், மாண்ட்ரெக் கதைகள் வண்ணத்தில் நன்றாக இருக்கும்.. அவை கலக்டர்ஸ் ஸ்பெஷலாய் கொண்டாடப்படும்.
காரிகனும் , ஜார்ஜும் கருப்பு-வெள்ளையில் வருவதே தம்புரான் புண்ணியம் சார் ; இவர்களுக்கும் கலர் என்றால் ட்ரம்ப் இன்னொருக்க குண்டு மழை பொழியச் சொல்லிப்புடுவார் !!
Delete🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteகிளாசிக் நாயகர்கள் தொடரட்டும்
ReplyDeleteசைஸ் ஒரிஜினலில் உள்ளது உள்ளபடி
வருஷம் 6 புத்தகங்கள் வேண்டும்
😘😘💐Me in😘🥰💐
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஎனக்கும் மோரிஸ்கோ பார்த்ததும் சரவணகுமார் சகோ ஞாபகம் வந்ததுங்க சார்
ReplyDeleteகனவுலக சகோதரர்கள் சிலருக்கும் அவரது ஞாபகம் வந்திருக்க வாய்ப்புண்டுங்க
உங்களிடம் கோரிக்கை வைத்த அதே தருணங்களில் கனவுலக க்ருப்பில் மோரிஸ்கோ தலை காட்டிடும் கதைகளை பற்றி பெரிய பத்தி எழுதினார்
ஆமா சகோ
Deleteவந்துட்டேன்
ReplyDeleteகிளாசிக் 😘கிங்ஸ் ஸ்பெஷல் தொடர வேண்டும் 😘💐சார் 🙏
ReplyDeleteசைஸ் doesn't matter Sir😘
Your choice 👍💐
கிளாசிக் 😘கிங்ஸ் ஸ்பெஷல் தொடர வேண்டும் 😘💐சார் 🙏
Deleteசைஸ் doesn't matter Sir😘
Your choice 👍💐
Size matter for me. No maxi size please.
Deleteதி கிங் ஸ்பெஷல் தொடரட்டும், maxi சைஸ் முயற்சி செய்து பார்க்கலாம், மூன்று புத்தகத்தையும் நான்கு புத்தகம் மாற்றலாம், 3x4
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteKings special, please continue
ReplyDeleteவிலையேற்றங்கள் நம்மை கலங்கடிப்பது உண்மையே. ஆனால் எல்லா யுத்தங்களும் ஓய வேண்டும். உலக அமைதி திரும்பி சமாதானம் ஓங்க வேண்டும் என்பதனை நம் வேண்டுதல்களில் வைப்போம். நம்பிக்கை கொள்வோம். சீக்கிரமே இதுவும் கடந்து போகும்.. ஏப்ரல் இதழ்கள் ஆவலைத் தூண்டுகின்றன..
ReplyDeleteKings Special please continue sir. Same size makes it handy. Maxi is difficult to hold. 4 books a year is fine.
ReplyDeleteMaxi size ok if the panels can be broadened sir - otherwise it does not make readability any better.
ReplyDeleteகிளாசிக் தொடரலாம் சார் ஆனால் இப்போதைய சைஸே தேவலாம் சார்
ReplyDeleteசூப்பர் சார்...முதல் கதை டின்டின்லதான்...மேக்சி சைஸ்ல முத்து நாயகர்கள் தொடரலாம்
ReplyDelete❤️👍🙏🙏...
ReplyDeleteHi..
ReplyDeleteHi Editor sir ,
ReplyDeleteClassic hero’s , please continue to publish sir . Maxi should also be okay sir .
கிளாசிக் மேக்சி சைஸில் வருவதே சிறப்பு சார். அதிஅற்புதமான காரிகன் கதைகளின் சித்திரங்களை minimize செய்யப்பட்டபின் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteMAXI என்றாலே கேட்டை போட்டுப்புடுறாங்களே நம்ம மக்கள் !!
Deleteகிங்ஸ் special கண்டிப்பாக தொடர வேண்டும். வருடத்திற்கு 3 என்பதை 4 ஆக Consider செய்யுங்களேன் சார்.size உங்களுக்கு எது வசதியோ அது ஓகே எங்களுக்கும்.
ReplyDeleteசார் ஏப்ரல் மாதம் ஒரு announcement இருக்கு என்று சொல்லி இருந்தீங்க? Can you share that Sir?
ReplyDeleteஅப்படி கேளுங்க குமார். அந்த மே மாத ஆன்லைன் புத்தக திருவிழா எல்லாம் தேதி மற்றும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும் சார்.
Deleteஅட, நீங்க வேற ஏன் சார் - காமெடி பண்ணிட்டு ? FAB FIVE என்ற முன்பதிவை அறிவித்து விட்டு ஆளில்லாம டீ ஆத்திக்கிட்டு இருக்கோம் !!
Deleteப்ரைம் நாயகர்களைத் தாண்டி இரண்டாம்நிலைக் கதைகளுக்கு இப்போதெல்லாம் பெருசாய் எதிர்பார்ப்புகள் நஹி போலும் !
" மறுபதிப்பு போடுறதாலே தான் புச்சு புச்சா போடக்கூடிய கதைகளுக்கு தடை நேர்கிறது"ன்னு அவ்வப்போது ஒரு மூ. ச. பஞ்சாயத்து வேற இதிலே !!
Delete😒😒😒😒😒🥲🥲
Deleteகிங்ஸ் ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும் சார். படிப்பதற்கு வசதியான இந்த சைஸ் சிறப்பாக உள்ளது. மேக்ஸி சைஸ் வேண்டாம். நன்றி.
ReplyDeleteஎன்னது மேக்ஸி சைஸ், வேண்டாம் சார். இதே அளவில் தொடருங்கள் சார்.
Deleteவணக்கம் சார்
ReplyDeleteநமது மறுவருகைக்கு பிறகு அந்த மாத இதழ்களில் முன்னோட்டம் இல்லாமல் கடந்த மாதம் மார்ச் 2026 தான் சார்.
ReplyDeleteஇந்த பதிவிலும் இந்த மாத இதழ்களின் உட்பக்க பக்ககள் பார்வைக்கு இல்லையா சார்?
ReplyDeleteசார், கிங்ஸ் ஸ்பெஷல் மீண்டும் மேக்ஸி சைஸ் ஆ ஆ. என் சார் மாறி மாறி சைஸ் பற்றிய சிந்தனை? கண்டிப்பாக மேக்ஸி சைஸ் வேண்டாம். இந்த சைஸ் டின் டின் கதைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது.
ReplyDeleteகிங்ஸ் ஸ்பெஷல் தற்போது வரும் அளவு கைக்கு அடக்கமாக எங்கு சென்றாலும் அழகாக பைக்குள் வைத்து படிக்க ரொம்ப வசதியாக உள்ளது சார்.
தயவு செய்து இதே அளவில் கிங்ஸ் ஸ்பெஷல்ஐ தொடருங்கள் சார்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
//தேசத்தின் தலைநகரில் - நமது இதழ்களை வாங்கி ரசித்திட ஒரு சின்னஞ்சிறு வட்டம் உருவாகியிருப்பது புரிகிறது//
ReplyDeleteGlad to know, Sir
Super news 😍
DeleteKing's ஸ்பெஷல்கள் வருடத்திற்கு மூன்று தொடரலாம் சார்.
ReplyDeleteபுத்தக சைஸ் தங்களுக்கு எது உகந்ததோ, அந்த சைஸ் ஓகேங்க
கிங்ஸ் ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும். வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் உத்தமம்.படிப்பதற்கு இந்த சைஸ் வசதியாக உள்ளது. மேக்ஸி சைஸ் வேண்டாம். நன்றி
ReplyDeleteசார் மேக்ஸி சைஸ் வேண்டாம் . மேக்ஸி சைரஸ் படிக்கும் போது புத்தகம் படிக்கின்ற உணர்வே தோன்றுவதில்லை. தற்போதைய சைசிலேயே தொடர முயற்சிக்கலாம் சார்.டின் டின் மட்டுமே மேக்ஸி சைஸ் இதழ்களில் நன்றாக உள்ளது.
ReplyDeleteபல்லடம் சரவண குமார்
தோர்களின் காதலர் டெக்ஸ் ஸுக்கும் பரம விசிறி என்பதுநமக்கெல்லாம் தெரிய வந்த நேரம் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
அற்புதமான நண்பர் சரவண குமார்.
அம்மாவிற்கு தற்போது வரும் King's ஸ்பெஷல் புத்தகங்கள் சைஸ் சரியாக இருக்கிறது என்றார்.
ReplyDeleteகையில் பிடித்து படிக்க, பயணத்தின் போது சுலபமாக ஹேண்ட் பேக்கில் எடுத்து செல்ல என தற்போதைய சைஸ் ஏற்றதாக சொல்லி விட்டார். மேக்ஸி சைஸ் இதற்கெல்லாம் சரிபடாதாம்
அதே அதே
Deleteஇந்த மஞ்சப்பை மிஷின் இல்லியோ அந்தப் பக்கம்லாம்?
Deleteபெரிய ஹேண்ட்பேக் வாங்கி தந்து விடுகிறேன், சார்😊😁
Deleteஎன்ன ஒரு பொண்ணுயா இது 😍
Deleteபரணி சகோ 😊😁
Deleteஅம்மாவின் போஷாக்கு அருமையாக இருக்குமாயின் குழந்தையின் வயிறு நிறையும் என்பது இயல்பான ஒன்று.
ReplyDeleteஎனவே கிங்ஸ் அணிவகுப்பு தொடர வேண்டும்.
மேக்ஸி சைசிலையே தொடரலாம்
// மேக்ஸி சைசிலையே தொடரலாம் //
Deleteஏன் சார் ஏன்… மாடஸ்டி கதைதான் கிங்ஸ் ஸ்பெஸிலில் கிடையாதே எனும் போது ஏன் இந்த மேக்ஸி சைஸ் ஆசை.
அப்புறம் கிங்ஸ் ஸ்பெஷல் தற்போது டெக்ஸ் கதை புத்தக சைசில் வருகிறது என்பது கொசுறு செய்தி.
//
Deleteஏன் இந்த மேக்ஸி சைஸ் ஆசை.?//
1. எடிட்டர் சாருக்கு ஒரிஜினல் மேக்ஸி சைஸில் இருந்து தற்போது உள்ள சைசுக்கு மாற்றுவது கஷ்டமாக இருக்கிறது
2. மேக்சி சைஸில் படிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது
அவ்வளவுதான் பரணி 😊
ஒரிஜினல் பேனல்களை இந்த சின்ன சைசுக்கு மாற்றியமைக்க நிரம்பவே நாக்குத் தள்ளுகிறது - குறிப்பாக வேதாளர் கதைகளில்!!
Deleteபேனல் அளவுகள் ஒரே சீராய் இருப்பதில்லை என்பது தான் கஷ்டமே!
உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது சார். ஆனால் தற்போது வரும் சைஸ் படிக்க, பாதுகாக்க எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல, புத்தக அலமாரியில் அடுக்கி வைக்க ரொம்ப வசதியாக இருக்கிறது சார்.
Deleteக்ளாஸிக் நாயகர்களை
ReplyDeleteஇரண்டு கதைகளை குறைத்துக் கொண்டு (அல்லது நான்கு ஹூரோக்களின் கதை தொகுப்பு )
சாதா அட்டை போதும்
இரு வண்ணத்தில் வெளியிடலாமே சார்..
இதையும் முயற்சித்து முடித்து விட்டால் ...
அப்றம் நானெல்லாம் புதிய கதைகளின் (நாயகர்கள்)பக்கம் போய் விடுவேனாக்கும் ... சார்..
தயாரிப்பின் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு காரணமுண்டு நண்பரே....
Delete//சாதா அட்டை போதும் //
புக் சத்தியமாய் கரை சேராது!
// புக் சத்தியமாய் கரை சேராது! //
Deleteஉண்மை சார்.
இந்த கிளாசிக் கதை தொகுப்பின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் இந்த ஹார்ட் பவுண்ட் அட்டை மற்றும் தயாரிப்பு தரம். அதனால் இந்த இரண்டில் ஒருபோதும் சமரசம் செய்ய தேவையில்லை சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Deleteசார் பொக்கிஷப் பெட்டி கிடைத்து விட்டது. நாளைக்கு விமர்சனத்துடன் வருகிறேன்.
ReplyDeleteமுதலில் டின்டின் தான்
வாங்க குமார் வாங்க விமர்சனத்துடன்
Deleteஜாக்கி போட்ட ஓநாய் - சார் செம சர்ப்ரைஸ் இந்த கதையின் படங்கள், படம்களின் வடிவமைப்பு, இந்த அளவு புத்தகத்தில் முழுப்பக்க படங்கள், வண்ணம் என எல்லாமே அமர்க்களம் சார்.
ReplyDeleteபடித்து முடித்து விட்டேன்; இது போன்ற சித்திரகதை அமைப்பை நான் பள்ளிக்கூடம் செல்லும் போது எனது அக்கா பாலிடெக்னிக் படிக்கும் போது எனக்கு வாங்கி கொடுத்தார்கள்.
இந்த கதை கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும், என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் சார்.
இந்த காமெடி டிரவுசர் பாண்டியின் அடுத்த கதை எப்போது சார்.
வரட்டும் சார் - இன்னும் கொஞ்சம் feedback வரட்டும், அடுத்த ஆல்பத்தை போட்டுத் தாக்கிடலாம் 👍
Delete//இந்த கதை கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும்//
Delete+9
இந்த மாத புத்தகங்கள் கிடைத்து விட்டன சார்.
ReplyDeleteகிங்ஸ் அணிவகுப்பு தொடரலாம் சார்
ReplyDeleteமூன்று இதழ்கள் இந்த வருடம் தாரளமாக களமிறக்குங்கள்
ReplyDeleteபாலை வனத்திலொரு
ReplyDeleteபொன் நண்டு
கேப்டன் ஹேடாக், டின் டின் இணையும் முதல் அட்வெஞ்சர். கேப்டனின் வானொலி உரையாற்றல்
"ஒரு மாலுமியின். மெய்யான எதிரி ஆர்ப்பரிக்கும் ஆழ்கடல் இல்லே. பொங்கியெழும் புயலும் இல்லே.சூறைக்காற்றுடன் நுரை பொங்கும் நீரோடு கப்பலையே பந்தாடும் பேய் மழை இல்லே! மாறாக ஒரு மாலுமியை உருத்தெரியாமல் அழிக்கிற மிக மோசமான எதிரி... குடிப்பழக்கம் ஏ தான்! "
கேப்டனுக்கு என்னாச்சு ஒரு கிளாஸ் பச்சதண்ணிய குடிச்சது அவருக்கு ஒத்துக் கலை அதிர்ச்சியிலே மனுசன் மயங்கி விழுந்துட்டார்
டின் டின் வழக்கம் போல விறுவிறுப்பு அசத்தல்.
முழுசையும் படிச்சாச்சா ராஜசேகரன் சார் 💪💪
Deleteமுதல் கதையிலேயே முழுக்க மொடாக் குடியரசாக வே வலம் வருகிறார் கேப்டன் ஹேடாக்
ReplyDeleteபாலை வனத்தில் தாகத்தில் அரை மயக்கத்தில் இருக்கும் கேப்டன் கண்களுக்கு,டின்டின் நிற்பதுமுரட்டு சாம்பெய்ன் பாட்டில் நிற்பது போல் தென்படுவது சுவாரஸ்யம்.
🤩🤩🤩🤩🤩
Deleteஜீ, நான் ஒரு Rip Kirby ரசிகன் இவரின் அடுத்து வரும் கிங்ஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் இடையே ஒன்று அல்லது இரண்டு மறு பதிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteபுதையல் வேட்டை (முதல் கதை)
ரோஜா மாளிகை ரகசியம்
கொலை வழக்கு மர்மம்
பகல் கொள்ளை
மூன்று தூண் மர்மம்
பட்லர் படுகொலை
கள்ள நோட்டுக் கும்பல்
கடல் ராணி
விசித்திர குரங்கு
பிரமிட் ரகசியம்
பொக்கிஷம் தேடிய பிசாசு
ஆபரேஷன் அலாவுதீன்
மரண மாளிகை
கானகக் கோட்டை
பலி கேட்ட புதையல்
மாயஜால மோசடி
No worries நண்பரே.... ரிப் கிர்பி நம்மிடையே சரளமாய் உலவிடுவார் ; and இந்த க்ளாசிக் ஹிட்ஸ் அவற்றுள் இடம் பெறாது போகாது!
Deleteபாலை வனத்திலொரு பொன் நண்டு!
ReplyDeleteரொம்பவே சின்ன வயதில் இருந்தே டின்டின் கதைகளை கேட்டு படம் பார்த்து வளர்ந்ததால் என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் எப்போதுமே டின்டினுக்கு முதல் இடம் உண்டு.
இந்த கதை ஆரம்பம் முதலே வேகம் வேகம் கடைசி பக்கம் வரைக்கும். ஒரு நண்டு இறைச்சி டின் உடன் தொடங்கும் மர்மம் அது என்ன என்று ஆராய டின்டின் தொடங்க அதனால் வரும் பிரச்சினைகள், கரபுஜான் கப்பல், சஹாரா பாலை வனம் என்று எங்கெங்கோ கொண்டு செல்கிறது. கதை நெடுகவே கேப்டனின் லூட்டிகள் சிரிப்புக்கு உத்திரவாதம். ஒரு திரில்லர் படம் பார்ப்பது போல இருக்கிறது.
அதும் தமிழில் படிக்க ரொம்பவே pleasant ஆக இருக்கிறது அட்டகாசமான மொழிபெயர்ப்பு சார்.
டின்டின் மதிப்பெண்ணுக்கு அப்பாற்பட்ட ஒரு ஹீரோ. Wow
உள்ளதைச் சொல்லணும்னா இது எனக்கொரு கனவுத் தருணம் சார். சிறு வயதில் டின்டின் என் மீது உருவாக்கிய தாக்கம் சொல்லி மாளாத ஒரு high.
Deleteஅன்றைக்கு இதே டின்டினை தமிழில் பார்க்க முடியும் என்று யாராச்சும் சொல்லியிருந்தால் உற்சாகத்தில் புளிய மரத்தில் ஏறியிருப்பேன்.
அதே தமிழ் பதிப்பை நாமே தான் வெளியிடுவோம் என்று சொல்லியிருந்தால் மொட்டை மாடிக்கு ஏறி நின்று திங்கு திங்கு என்று குதித்திருப்பேன்.
நாமே செய்யும் அந்த பதிப்பில் நானே தான் மொழிபெயர்ப்பும் செய்திருப்பேன் என்று சொல்லியிருந்தால் கேட்கவே வேண்டாம்.
So, இது இன்று ஒரு கனவு நனவாகும் படலமே....!
// அன்றைக்கு இதே டின்டினை தமிழில் பார்க்க முடியும் என்று யாராச்சும் சொல்லியிருந்தால் உற்சாகத்தில் புளிய மரத்தில் ஏறியிருப்பேன். //
Deleteசார் இப்ப கூட நீங்க புளியமரம் ஏறலாம் சார் ஏன் பனைமரம் கூட நீங்க ஏறலாம் சார்.
சூப்பர் குமார். மகிழ்ச்சி
Deleteஅருமை குமார் சகோ
Delete//அதும் தமிழில் படிக்க ரொம்பவே pleasant ஆக இருக்கிறது அட்டகாசமான மொழிபெயர்ப்பு சார்.
Deleteடின்டின் மதிப்பெண்ணுக்கு அப்பாற்பட்ட ஒரு ஹீரோ. Wow//
+9
சார் நீங்கள் சொன்னது வரிக்கு வரி உண்மை. நீங்கள் சொன்னது எல்லாமே எனக்கும் பொருந்தும். இதெல்லாம் சிறு வயது கனவு. இப்போது உங்கள் மூலம் நனவாகி விட்டது.
Deleteஅதும் கதையில் வரும் ஒரு பக்க பேனல்கள் எல்லாம் வேற லெவல். இன்னும் கண் முன்னே அப்படியே நிற்கிறது.
Deleteபதநீர் சீசன் சார் - பனைமரம் ஏறுனா வியாபாரம் ஆன மெரியும் இருக்கும் 💪
Deleteஆமாம் சார்! சீசனுக்கு ஏற்ற தொழில்தான் சம்பாதிக்க உதவும் சார்.
Deleteமரணம் மறந்த மம்மி
ReplyDeleteரொம்ப நாள் கழித்து சைத்தான் சாம்ராஜ்யம், இருளின் மைந்தர்கள், மந்திர மண்டலம் மாதிரி ஒரு கதை. அமானுஷ்ய டெக்ஸ் கதைகளில் ஒன்று. பழைய பாணி டெக்ஸ் ஓவியங்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. மோரிஸ்கோ யூசோபியோ ஜோடி. அந்த வில்லன் ராகோஸ் அவனுடைய அடியாட்கள் யாகீ கூட்டம் அந்த விந்தை மிருகங்கள் என ஜாலியாக மாந்திரீக உலகில் ஒரு பயணம். சூப்பர் கதை சார். வருடம் ஒன்று அல்லது இரண்டு இது போல தாராளமாக தொடரலாம் என்பது எனது கருத்து.
எனது மதிப்பெண் 9/10
//வருடம் ஒன்று அல்லது இரண்டு இது போல தாராளமாக தொடரலாம் என்பது எனது கருத்து//
Deleteவரவேற்கிறேன்
டெக்ஸ் கதைகளில் இது போன்று கதைகள் மாமூலான ஆக்ஷன் கதைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும்
// இதேபோல இன்னும் ஒரு மூன்று இதழ்களை ஓர் ஆண்டின் அவகாசத்திற்குள் நடுநடுவே நுழைத்தால் ஓ.கே.தானா? //
ReplyDeleteதொடரலாம் சார்.
// மெகா சைஸில் போடுவதாயின் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். What say all? //
ReplyDeleteBig NO for MAXI
கிங்ஸ் ஸ்பெஷல் அட்டைப்படம் மாஸ். அதுவும் பேக் க்ரௌண்ட் கலர் செலக்ஷன் செம.
ReplyDelete// நவநாயகர்களின் கதையே இந்த ஏப்ரல்.
ReplyDelete//
😍😍😍😍😍
// புக்கைப் பொறுத்தவரையில் வழக்கம் போலவே கெட்டியான காகிதம், அதே பெரிய சைஸ், தெறிக்கவிடும் அதே தரம் //
ReplyDeleteஉண்மையோ உண்மை. அதே போல மிகவும் குறைந்த விலையில், இது எல்லாம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கிடைத்த வரம் சார்.
// நண்பர் கோரிய மோரிஸ்கோ இதோ வந்துவிட்டார்....... ஆனால் அவருக்குக் கொடி பிடித்த நண்பர் SK இன்று வெகு தொலைவிற்குப் போய்விட்டார். //
ReplyDelete😒😒😒😒😒
மரணம் மறந்த மம்மி..
ReplyDeleteஅட்டைப்படத்தில் ஆரம்ப டெக்ஸ் ஓவியபாணி என்றாலும் உள்ளே அந்த பாணி தெரியாமல் டெக்ஸ் மிகவும் அழகாக இருக்கிறார்...போலவே முழு சித்திரங்களும் சிறப்பு..எப்படி வழக்கமான டெக்ஸ் அதிரடி ..ஆக்ஷன் கதைகளை வாசிக்கும் பொழுது ஏற்படும் அதே விறுவிறுப்பும்,பரபரப்புமாகவே சென்றது இந்த மரணம் மறந்த மம்மி..கதையின் ஆரம்பித்திலேயே நம்ப முடியாத விபரீதத்தை மோரிஸ்கோ டெக்ஸ் உடன் பகிரும் பொழுது டெக்ஸ் இதெல்லாம் நம்ப முடியவில்லை என நம்மை போலவே உடனிருக்கு பின் டெக்ஸ் அன்ட் கார்ஸன் அந்த அந்த மாயமந்திர சூழலில் சிறிது சிறிதாக உள்நுழைய நாமும் அதே போல் உள்நுழைய டெக்ஸ் குழுவினருக்கு ஏற்படும் அதே படபடப்பு ,பரபரப்பு எல்லாமே அட்டகாசம்..நம்ப முடியாத காதில் பூச்சுற்றும் கதைதான்..ஆனால் மோரிஸ்கோ கதை களம் என்றாலே இது போல் வித்தியாசமான பாணி கதை தானே..குரங்கும் ,நாயும் உரையாடி கொண்டே செல்வதை எல்லாம் நான் வாசிக்கும் பொழுது ஓர் வித்தியாமான டெக்ஸ் கதை வரிசையை படிக்கும் உணர்வு தான்...எனக்கு எந்த ஏமாற்றமும் அளிக்காமல் வழக்கமான டெக்ஸ் எப்படி நம் மனதை கவர்ந்தோரோ அதே போலவே இந்த மரணம் மறந்த மம்மியும் ..
லாஜீக்கை எல்லாம் தூர எறிந்து விட்டு வாசித்தால் அருமையான அதே விறுவிறுப்பான டெக்ஸ் சாகஸமே
சூப்பர் விமர்சனம் தளீவரே
Deleteஅருமை தலீவரே
Deleteதலைவரே சூப்பர் விமர்சனம்
Delete105th
ReplyDeleteக்ளாசிக் நாயகர்கள் தொடரலாம் சார்...மெகா சைஸை விட இப்போதைய அளவு தான் அதனுடன் பயணிக்க ,வாசிக்க ஏதுவாக உள்ளது
ReplyDelete*****ஜாக்கி போட்ட ஓநாய்*****
ReplyDeleteசிறுவயதில் தீர்ந்து போயிடும் சில்லறை சமையல் சாமான்களை வாங்கிட சட்டென வாங்கி வர நம்மளை தான் அருகில் இருக்கும் பொட்டி கடைக்கு அனுப்புவர், அப்போதெல்லாம் சில தாத்தாக்கள் கடைக்கு பீடி வாங்க வருவர். போட்டு இருக்கிற சட்டையிலும் பாக்கெட் இருக்காது, கட்டி இருக்கிற வேஷ்டியிலும் இருக்காது, பெரிய அண்ட்ராயிரில் தான் பாக்கெட் இருக்கும், ஒரு பீடி கட்டு வாங்கிட்டு, அண்ட்டிராயரில் இருந்து காசு எடுத்து நீட்டுவாங்க. தந்தை வழி தாத்தாவுக்கும் இதே பழக்கம் தான்.
நம்ம ஓநாயார் ஸ்டைலாக காசு போட்டு வைக்க அதன் பட்டாப்பெட்டியில் உள் பாக்கெட் இருக்கிறது என்று சொன்னப்போது இந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது😁😁😂😂😂
ஊருக்குள்ள எல்லாரும் டிரஸ் போட்டு சுத்த எல்லாரையும் பயமுறுத்தாம பயமுறுத்தி வைத்துள்ளார் கோடு போட்ட பட்டாப்பெட்டியில் வலம் வரும் நம்ம க்யூட் ஓநாயார்🥰. அந்த பட்டாப்பெட்டிற்கு ஒரு பின்புல கதையுண்டு😁😁😁
வண்ணங்கள் அட்டகாசம், படைப்பாளிகளுக்கு பாராட்டுகள் பல👏👏👏
வசனங்கள் குட்💐💐
எங்க ஏரியா குட்டி பையனிடம் பரீட்சை முடிந்த பின்புதான் டின்டின் மற்றும் ஓநாயாரை குடுக்கனும்😊
சூப்பர்
Deleteடின் டின் கதையை நான் என்னுடன் அலுவலகத்தில் நண்பனிடம் நேற்று கொடுத்துள்ளேன். படித்து விட்டு அவனின் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.
ReplyDeleteஅவனிடம் இருந்து புத்தகம் திரும்ப வந்த பிறகு தான் டின் டின் நான் படிக்க வேண்டும்.
ஜாக்கி போட்ட ஓநாய்:
ReplyDeletedifferent drawing and coloring .. 8.5 /10 ..
மரணம் மறந்த மம்மி:
எப்போவும் ரேஞ்சர் ஆக பார்த்து ஒரே templateல் படிப்பதற்கு டெக்ஸ் இன் அமானுஷ்ய கதைகள் feels refreshing .. லாஜீக்கை எல்லாம் தூர எறிந்து விட்டு வாசித்தால் அருமையான அதே samayam விறுவிறுப்பான டெக்ஸ் சாகஸமே .. எந்த TEX கதையில் லாஜிக் இருந்தது ..SIR NEED MORE OF MEFISTO AND MORISCO IN TEX .. 9/10 ..
TINTIN :
BEST OF THIS MONTH .. இந்த கதை தான் SPIELBERG இயக்கத்தில் திரைப்படமாக வந்து உள்ளது .. THIS SHOULD VE BEEN FIRST INTRODUCTION TO THE WORLD OF TINTIN FOR US ..
9.5/10 ..
ஆசிரியர் சார்... நான் தற்போது கிங் ஸ்பெசலின் இரண்டாவது கதையில் உள்ளேன்.தற்போது வெளிவரும் எலெக்ட்ரிக் 80 புத்தகமானது கையில் ஏந்தி படிக்க ஏதுவாக இருந்தாலும் படங்கள் அடிவாங்கி ஒவ்வொரு படங்களும் ஸ்டாம்ப் சைசில் உள்ளதால் கண்களை குறுக்கி குறுக்கி பார்த்து கண் வலி வருவதுதான் மிச்சம். அதை நமது லக்கி லுக் அளவிற்கு மாற்றினால் நன்றாயிருக்கும்.நமது புத்தகங்களை படிப்பவர்கள் தொண்ணுறு சதவிகிதம் முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டோர் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் படங்கள் சிறிது பெரிய அளவில் வருவதால் சித்திரங்களை ரசிக்கவும் ஏதுவாயிருக்கும் என்பதால் நீங்கள் பார்த்து செய்யுங்கள் சார்.மேலும் இந்த தடமானது தொடர வேண்டும் என்பது என் ஆசையும் கூட.
ReplyDelete**ரிப்போர்டர் ஜானி – மதிப்பளிக்கப்படாத ஹீரோ 🔥**
ReplyDeleteநேர்மையாக சொல்லணும்னா, Reporter Johnny ரொம்பவே *underrated*. இப்போதான் கொஞ்சம் explore பண்ண ஆரம்பிச்சேன்… ரொம்ப நல்ல stories miss பண்ணிட்டேன் னு feel ஆயிடுச்சு 😮🔥
Recently நான் படிச்சது **Visithira Petti (விசித்திர பெட்டி)** — செம்ம experience!
கதையில முழுக்க twists & turns 😵💫
ஒவ்வொரு page-லும் ஒரு surprise இருக்கு… next என்ன நடக்கும் னு guess பண்ணவே முடியாது.
அந்த “விசித்திர பெட்டி” concept-ஐ ரொம்ப interesting-ஆ handle பண்ணிருக்காங்க.
Climax பற்றி சொல்லணும்னா… 🔥
**Mass staging!** build-up + tension + reveal எல்லாம் சேர்ந்து goosebumps கொடுத்துச்சு 🥶
ஜானி investigation style கூட next level — calm-ஆ இருந்து, last-ல எல்லா clues-யும் connect பண்ணுவாரு 👌
**Overall:**
* Twist lovers-க்கு perfect treat 🎯
* Suspense last page வரை maintain பண்ணிருக்காங்க
* Climax = full satisfaction 💯
**Verdict:** Lion Comics கண்டிப்பா ரிப்போர்டர் ஜானி series-ஐ மீண்டும் கொண்டு வரணும்… இந்த மாதிரி stories இன்னும் நிறைய வரணும் 🔥
"பாலைவனத்திலொரு பொன் நண்டு..."
ReplyDeleteஆரம்பத்தில் அசத்திய டின்டின் போன முறை ஒரு படி மட்டும் கீழிறங்கியது போல் தோன்றினாலும் இந்த முறை அதற்கும் சேர்த்து பல படி தாண்டி ஏறிவிட்டார் என்பது போல டின்டின்னின் இந்த சாகஸம் அட்டகாசப்படுத்திவிட்டது..அட்டகாசமான ,அருமையான தரத்தில் சிறப்பான தெளிவான சித்திரத்தரத்தில் வழக்கம் போல் டின்டின் அசத்த கதையின் தரத்திலும் ,நகைச்சுவை தரத்திலும் இதுவரை வந்த டின்டின் இதழ்களில் எது முதல் வரிசை என என்னை கேட்டால் தயங்காமல் இந்த பாலைவனத்திலொரு பொன் நண்டு இதழை தான் கை காட்டுவேன்..சித்திரத்தை பொறுமையாக ரசித்து பார்த்தால் சித்திரங்களே பல இடங்களில் நம்மை புன்னகைக்க வைக்கிறது..போலி நாணயம் ,கஞ்சா ,கப்பல் ,கடத்தல் என கதை பல முனைகளை கடக்க கொஞ்சம் கூட குழப்பமோ ..சந்தேகமோ இல்லாமல் நகைக்க வைத்து கொண்டே விறுவிறுப்பாக கதையை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கிறது..போன முறை அதிகமாக இடம் பெற்ற கேப்டன் ஹேடாக் ன் திட்டல்கள் ஓவர் டோஸ் போல் அமைந்து இருக்க இந்த முறை தேவையான இடத்தில் மட்டும் அவரின் கோப திட்டல்கள் கதைக்கு சிறப்பு சேர்க்க நம்மை ரசிக்கவும் வைக்கிறது..கதையின் ஓட்டத்தில் நம்மை நகைக்கவும் வைக்கிறது..அருமையான சிறப்பான மொழிபெயர்ப்பு கதைக்கு மெருகூட்டுகிறது...டின்டின்னின் பெஸ்ட் சாகஸம் இந்த பாலைவனத்திலொரு பொன்நண்டு...
அருமை தல
Deleteஇந்த டின்டின் சாகஸம் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி தலீவரே
Deleteஎனக்கு டின்டின் சாகஸம் எப்பொழுதுமே ஓகே தான் சகோ...ஆனால் போன சாகஸம் மற்ற சாகஸங்களை விட சிறிது மாற்று குறைவு அவ்வளவே..:-)
ReplyDelete//ஒரிஜினல் சித்திர அமைப்பிற்கு ஏற்ப மெகா சைஸில் போடுவதாயின் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். What say all?//
ReplyDeleteMaxi சைசில் போடுங்கள் ஐயா. ஆனால், சித்திரங்கள் தெளிவாக இருப்பதை மட்டும் உறுதி செய்யுங்கள்.
நன்றி?
பாலைவனத்தில் பொன் நண்டு.
ReplyDeleteடின் டின் கையில் எடுத்தவுடன் முழுவதும் படித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது. சார்,அடிக்கடி கூறும்breecy r readஎன்பது இதுதான் .கேப்டன் ஹேடாக்கும் டின்டினும் பாலை வனத்தில் தோள்மீது சாய்ந்து கொண்டு நடக்கும் போது நமக்கும் பாலை வனத்தில் மாட்டிக் கொண்ட உணர்வு. தாம்ப்ஸன். &தாம்ஸன்உரையாடல்களில் ஆசிரியர் வழக்கம்போல மொழிபெயர்ப்பில் அசத்தியுள்ளார்.
டின்டின்
Win. Win
Good morning Kumar!
ReplyDeleteGood noon பரணி
Deleteஇன்று பதிவு உண்டா குமார் 😊
ReplyDeleteஉண்டு என்று தான் நினைக்கிறேன் பரணி
Deleteஅச்சச்சோ சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஇதே ரீதியில், இதே போல கிளாசிக் நாயகர்களைக் கலந்து கட்டி, இந்த கிங்ஸ் அணிவகுப்பு மேற்கொண்டும் ஒரு சீசனுக்குத் தொடரலாமா ?
ReplyDeleteகண்டிப்பாகத் தொடரவும்.
இதேபோல இன்னும் ஒரு மூன்று இதழ்களை ஓர் ஆண்டின் அவகாசத்திற்குள் நடுநடுவே நுழைத்தால் ஓ.கே.தானா?
டபுள் ஓகே