Powered By Blogger

Saturday, November 15, 2025

மஞ்சள் is MISSING..!

நண்பர்களே,

வணக்கம்! இப்போதெல்லாம் தாட்டியமான இதழ்கள் இல்லாத மாதங்களில் நாட்கள் றெக்கை கட்டிக் கொண்டு பறப்பது போலுள்ளது - simply becos சின்னச் சின்ன சிங்கிள் ஆல்பங்களை ஒட்டுக்கா படித்து முடித்த கையோடு "ஜிலோ'வென நீங்கள் free யாக இருக்கிறீர்கள்! இதோ- நவம்பரின் மூன்று breezy இதழ்களையும் ஒற்றை வாரத்துக்குள் நிறையப் பேர் போட்டுத் தாக்கி முடித்து, அலசிடவும் செய்துவிட்டீர்கள்! அடுத்த செட் இதழ்களுக்கு இன்னமும் மூன்று வாரங்கள் இருக்க - பொழுதுகளைத் தடிப் போட்டுத் தான் தள்ள வேண்டி வரும் போலும்!

நவம்பரின் முக்கூட்டணியில் யாருமே clear first என்று வகைப்படுத்த இயலா பரவலான வெற்றி ஈட்டியுள்ளது ஒரு சந்தோஷச் சமாச்சாரம்! ஆனால்.. ஆனால்.. 

  • அறிமுக வைல்ட் கேட்டில் ஏகமாய் சிகப்பு இருக்க.. 
  • ப்ளூகோட்டார்களிடம் கணிசமாய் ப்ளூவும் இருக்க, 
  • கானகவீரர் மிஸ்டர்.நோவிடம் பச்சையும் இருக்க- 

"மஞ்சள் is MISSING''என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் தூரங்களைக் கடந்து எங்களின் செவிகளில் டணாரென்று ஒலி­க்கிறது! நமது ஆதர்ஷ டெக்ஸ் & டீம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிய 2016 முதலாகவே இந்த topic பற்றி பல முறைகள் காதில் நெத்தம் கசியுமளவிற்குப் பேசியும், அலசியும் விட்டோம் தான்! Yet அதே சமாச்சாரத்தை மறுக்கா தூசு தட்டி, புதிதானதொரு பார்வைக் கோணத்தில் அணுகுவது தவிர்க்க இயலா அவசியமாகி நிற்கின்றது இந்த நொடியில்!

Oh yes- புது வரவான "வைல்ட் கேட்'' சாகஸத்தில் சில லாஜிக் துவாரங்கள் இருந்தாலுமே, அந்த நேர்கோட்டுக் கதைக்களம், புதுவித சித்திரபாணி & மிரட்டும் கலரிங் இந்த வாசிப்பினை செமத்தியாக ஸ்கோர் செய்ய அனுமதித்துள்ளது தான்! And இத்தொடரில் இன்னமும் ஒரு டபுள் ஆல்பம் + ஒற்றை சிங்கிள் ஆல்பம் மாத்திரமே  வெயிட்டிங் என்பதால் ட்ரெண்ட் தொடருக்குப் பிற்பாடாக முழுமை காணப் போகும் series ஆக, Catamount அமைந்திடும் என்பதில் ஐயமில்லை! அதே போல "சிரிப்புப் பார்ட்டிகள்'' என்ற அடையாளம் - பல நேரங்களில் பல கார்ட்டூன் நாயகர்களுக்கு சுமக்க வேண்டியதொரு சிலுவையாகவே அமைந்து போவது துரதிர்ஷ்ட யதார்த்தம்! இம்முறையோ ஸ்கூபி & ரூபி ஜோடி மெய்யாலுமே சிலுவை சுமக்கும் விதமாய் கதை அமைத்திருப்பது ஒரு கவித்துவ முரண் என்பேன்! And truth to tell இங்கே பக்கத்துக்குப் பக்கம் சிரிப்புத் தோரணங்கள் லேது தான்! கதை சொல்லல் இயல்பாய், நயமாய் கையாளப்பட்டிருக்க, கிட்டிடும் சிற்சிறு வாய்ப்புகளில் வம்படியாய் திணிக்காத நகைச்சுவையுடன் "ஊழியம் செய்ய விரும்பு'' பயணிக்கின்றது!

And மிஸ்டர்.நோவின் "சதுப்பில் ஒரு சடுகுடு'' எல்லா பெட்டிகளிலும் டிக் அடித்து, ஒரு சுவாரஸ்யமான, ஹிட் சாகஸ நாயகரென்ற அந்தஸ்தினை இந்தப் பரட்டை மண்டை விமானிக்கு நல்கியுள்ளது! காத்திருக்கும் காலங்களில் இந்த மனுஷனுக்கு கூடுதல் முக்கியத்துவம்   & கூடுதல் ஸ்லாட்களும் செம அத்தியாவசியம் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது! And அதனை அறிவிக்க இந்த நொடியையே எடுத்தும் கொள்கிறேனே..?! 2026-ன் அட்டவணையில் மிஸ்டர்.நோவுக்கென ஒற்றை ஸ்லாட் மட்டுமே ரெகுலர் தடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது! And அதன்படி மட்டுமே செயல்படுவதாகயிருப்பின்- 5 விக்கெட்களை வீழ்த்தின மறு டெஸ்ட் மேச்சிலேயே ப்ளேயர்களுக்கு முகம் துடைக்கும் துண்டுகளையும், தொண்டை நனைக்க பானங்களையும் மட்டுமே எடுத்துப் போகும் ஒப்புக்குச் சப்பாணி 12th man பொறுப்பு தரப்படும் நம்ம குஸ்தீப் யாதவ் போல மிஸ்டர்.நோவும் துருப்பிடித்துப் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்! அந்தத் தப்பை செய்யலாகாது என்பதால் இதோ ஒரு அறிவிப்பு:

"மிஸ்டர்.நோவின் புது சாகஸங்கள்'' என்ற தனித்தடத்தினில் - அட்டகாசமான ஆர்ட் ஒர்க்+ 14 புத்தம் புது ஆல்பங்கள் என்ற ரீதியில் 2019 to 2020 காலகட்டத்தில் போனெலி குழுமம் இந்த சாகஸவீரருக்கு ஒரு புனர்ஜென்மம் தந்திருந்தது! ரெகுலர் தொடரானது 379 இதழ்களோடு 2006-ல் நிறைவுற்றிருந்தது! கொரோனா கோரங்களும், லாக்டௌன் பஞ்சாயத்துக்களும் குறுக்கிட்டிராவிடின் maybe இந்த மிஸ்டர்.நோ மறுவருகையானது மேற்கொண்டும் கிளை விட்டிருக்கலாம்! ஆனால், பிப்ரவரி 2020-ல் இத்தா­லியே கொரோனாவின் மரண தாண்டவத்தில் சீரழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தத் தனித்தடம் drop செய்யப்பட்டிருந்தது! நம்ம V காமிக்ஸில் மிஸ்டர்.நோவை அறிமுகம் செய்திட ஜுனியர் எடிட்டர் விக்ரம் தீர்மானித்த சமயம், "போடறது போடறோம்- இந்த லேட்டஸ்ட் தடத்துக் கதைகளைத் தேர்வு பண்ணினால் அதனில் ஆர்ட்ஒர்க், கதை சொல்லல் என எல்லாமே லேட்டஸ்டாக இருக்கக் கூடுமே?!'' என்று பிட்டைப் போட்டிருந்தேன்! So அதன் துவக்க நான்கு ஆல்பங்களையும், தொடரின் பிற்பகுதியில் சுவாரஸ்யமாய் தென்பட்ட சில கதைகளையும் வாங்கி விட்டிருந்தோம்! காது வரை நீளும் நம்ம திருவாயை சித்தே மூடியபடி இருந்திருந்தால் - க்ளாஸிக் தொடரி­லிருந்தே விக்ரம் ஆர்டர் செய்திருக்கக் கூடும்! & ஒரு மண்டை நோவி­ருந்து 2023-ல் தப்பித்திருப்போம்! Becos ஒரு சுபயோக சுபதினத்தில் மிஸ்டர்.நோ லேட்டஸ்ட் தொடரின் முதல் ஆல்பத்தை எடுத்து எழுத ஆரம்பித்தால், சுவற்றில் அடித்த பந்து போல துவக்கப்புள்ளிக்கே திரும்பி வந்து நின்றேன்! முதல் ஆல்பம் செம ஆக்ஷனோடு தடதடத்தாலும் - அதன் 94வது பக்கத்தில் "தொடரும்'' என்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது!'' "ஆகா... முதல் சாகஸமே டபுள் ஆல்பம் போல, பின்னிப்புடலாம்'' என்றபடிக்கே அடுத்த ஆல்பத்தை எடுத்து வேகவேகமாய் 94-ம் பக்கத்துக்குப் போனால், எவனோ கபாலத்தில் போட்ட போட்டில் சுருண்டு அமேசான் கானகத்தின் மத்தியில் கிடக்கிறார் நம்மாள்! "ஆங்.. ஒருவேளை "கபாலம் பிளக்கும் முன்'' ஒரு ஆல்பம்- "கபாலம் பிளக்கும் பின்'' அடுத்த கதைச்சுற்று என்று அமைத்திருப்பார்களோ? அப்டின்னா சமாளிச்சுடலாம் தான்'' என்றபடிக்கே ஆல்பம் # 3-ஐ எடுத்துப் புரட்டினால், விட்ட இடத்தி­லிருந்து மிஸ்டர்.நோ எழுந்து அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கிறார்! நான் எதிர்பார்த்தது போல புதுசாய் ஏதாச்சுமொரு புள்ளியிலி­ருந்தெல்லாம் ஆல்பம் # 3 துவங்கக் காணோம்! மிஸ்டர்.நோ வாங்கிய அதே சாத்தை நானும் வாங்கியது போலானதொரு உணர்வு லைட்டாய் பீதியை எழுப்ப- அதன் இறுதிப் பக்கத்துக்குப் போனால், அங்கேயுமே "தொடரும்'' என்ற பிம்பி­லிக்கா பிலாக்கி தான் வெயிட்டிங்! "என் குத்தமா? ஒன் குத்தமா...? யாரை நான் குத்தம் சொல்ல..?'' என்ற பாட்டு மனசுக்குள் ஓட - நான்காவது ஆல்பத்தின் 94-ம் பக்கத்துக்குப் போனால்- by now பரிச்சயமாகிப் போயிருந்த அதே "தொடரும்'' கானம் தான் பாடிக் கொண்டிருந்தது- சத்தமின்றி அந்த நான்கு ஆல்பங்களையும் உள்ளாற வைத்துவிட்டு, போனெலி­யில் அப்புறமாய் மொள்ளமாய் விசாரித்தேன்! 

*இது மொத்தம் எத்தனை பாகங்கள் கொண்ட சாகஸம்? 

*இதனை நடுவாக்கில் எங்கேயாச்சும் பிரிச்சுப் போடும் சாத்தியங்கள் உண்டோ? என்ற ரீதியில் விசாரித்தேன்! 

அப்போது தெரிய வந்தவை தான் கீழுள்ள தகவல்கள்!

* 9 அத்தியாயங்கள் கொண்ட அசாத்திய நீள சாகஸம் இது!

* 94 பக்கங்கள் x 9 = 846 பக்கங்களுக்குத் தடதடக்கும் கதைச்சுற்று இது!

* போனெலி­யின் flagship நாயகர்களான டெக்ஸ் வில்லருக்கோ, ஸாகோருக்கோ கூட இம்மாம் நீள ஒற்றை சாகஸம் இதுவரையிலும் லேது!

*And பழனிக்கே காவடி எடுத்தாலும், இந்த சாகஸத்தை ரெண்டோ, மூணோ ஆல்பங்களாய் பிரித்துப் போட்டு, ஒவ்வொன்றுமே ஒருவித முழுமை தர வாய்ப்பு கிஞ்சித்தும் லேது!

So 2023 முதலாய் நம்மிடையே உலவி வரும் மிஸ்டர்.நோவிற்கு ஒரு solid நாயகரென்ற கீர்த்தி கிட்டியுள்ள இத்தருணத்தில் அவருக்கென பெரும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்! 2026-ன் backend-ல் ஏதேனுதொரு வாகான தருணத்தை ரெடி பண்ணிக் கொண்டால் இந்த 9 ஆல்ப அதிரடியினை "ஏக் தம்மில்' ' போட்டுத் தெறிக்க விடலாம்! இது குறித்து நம் முன்னேயுள்ள Options:

A. ஒன்பது தனித்தனி இதழ்கள் in a ஸ்­லிப்கேஸ்!

B. 3+3+3 என மூன்று இதழ்கள் plus a slipcase.

C. ஒரே முரட்டு ஆல்பம் - 9 அத்தியாயங்களும் ஒன்றிணைந்து!

Given a choice -- ஒன்பது அட்டகாசமான தனித்தனி அட்டைப்படங்கள் கிட்டும் & தோதுப்படும் சமயங்களில் ஒவ்வொன்றாய் ரசித்திடலாம் என்ற ரீதியில் - Option A தான் எனது தேர்வாகயிருக்கும்! தொடரின் 9 அட்டைப்பட்ஙகளும் செம மெர்சல் என்பது என் தரப்புக்கு வலு சேர்த்திடும் சமாச்சாரமுமே!

ஒற்றை 848 பக்க குண்டு புக் என்ற concept நன்றாக இருக்கும் தான் - ஆனால், black & white-ல் அம்மாம் தண்டியிலான சாகஸத்தைப் புரட்டிப் பார்த்தே பலருக்கும் களைத்துப் போய்விடும்; "ஆங்.. நாளைக்கு அஷ்டமி ; நாளான்னிக்கு நவமி.. அது முடிஞ்ச பிற்பாடு படிக்க ஆரம்பிக்கலாம்'' என்ற ரீதியிலேயே பீரோவில் அடுக்கி வைத்துவிடும் ஆபத்துண்டு என்றும் பட்சி சொல்கிறது! தவிர, அத்தனை பருமனைத் தூக்கிச் சுமந்து படிப்பதும் சுலபமேயாகாது; and பைண்டிங்கிலும் தீரா நோவுகளுக்குப் பஞ்சமிராது! 

So உங்களது பொன்னான வாக்குகளை Option A-க்குப் போட்டுத் தாக்கினால், மீதத் திட்டமிடல்களைப் பார்த்துக் கொள்வோம் folks! ஒரு மைல்கல் நாயகனாய் மிஸ்டர்.நோ விஸ்வரூபம் எடுக்கப் போகும் 2026-ன் தருணத்தினை இப்போதே visulize செய்ய ஆரம்பிச்சுட்டேன் - கலர் கலரான 9 ராப்பர்களோடு! பார்த்துப் பண்ணுங்க மக்களே?!



Back to the topic of "மஞ்சள் is missing'' - இனி வரும் ஆண்டுகளில் மாதமொரு டெக்ஸ் இல்லாது போயின் வண்டி ரொம்பவே தடுமாறி விடும் என்பது ஐயமறத் தெரிகிறது! அதுவும் போன மாதம் டெக்ஸின் தீபாவளி மலர் விற்பனையில் கிளப்பிய அனலைப் பார்த்த கையோடு, நவம்பரின் மியா- மியா சேல்ஸைப் பார்க்கும் போது, கைகளைப் பிசையத் தான் தோன்றுகிறது! எத்தனை டீசண்டான படைப்புகளாய் இருந்தாலும், டெக்ஸ் எனும் காந்த சக்தியின்றி அவை திருவிழாவில் காணாமல் போன புள்ளீங்களாய் விழிப்பதே கதியாகும் என்பதால்- maybe for the years to come, கீழ்க்கண்ட ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றையோ, இரண்டையோ தவிர்க்கப்படாத நிஜமாக்கிட வேணும் போலும்!

*அட்டவணையிலேயே 12 டெக்ஸ் சர்வ நிச்சயமாய்! Simple solution...!

*இயன்றால் இளம் டெக்ஸின் சிங்கிள் 64 பக்க ஆல்பங்களை இத்தாலியில் போலவே மாதமொரு முறை - தொடர்ந்து செல்லும் கதைகளாய்..!

*ஆன்லைன் விழாக்களில்; புத்தக விழா ஸ்பெஷல்களில் - யாரைத் திட்டமிட்டாலும் சரி, யாரைக் கிடப்பில் போட்டாலும் சரி, அங்கெல்லாம் நமது மஞ்சள் மாவீரரையும் முதல் ஆளாய் களமிறக்கிட வேணும்!

சொல்லுங்களேன் folks இவற்றுள் எது சுலபமென்று? 

அப்புறம் -

"ஓவராய் டெக்ஸுக்கு முக்கியத்துவம்..!'

"இவரால் மற்ற நாயகர்களுக்கான ஸ்லாட்ஸ் மர் கயா ஆகிப் போகுது..!''

ஒரே template-ல் உள்ள கதைகள்.... இன்னும் படிக்காம வச்சிருக்கேன்!'' 

என்ற ரீதியிலான சம்பிரதாய விமர்சனங்களை நீங்களும் தவிர்த்தால் என் பாடு சற்றே இலகுவாகிடும். It's come to a point where இஞ்சின் இல்லாத ரயிலும், டெக்ஸ் இல்லாத மாசமும் பிளாட்பாரத்தை விட்டு அகலாது - bottomline ! 

ரைட்டு.. "சாம்பலி­ன் சங்கீதம்'' இறுதிக்கட்டத் தயாரிப்புகளுக்கு முன்பாக சில அத்தியாவசியச் சரி பார்த்தல்ஸ் ஓடி வருகின்றன! சிக்கியுள்ள இரண்டு நாள் கூடுதல் அவகாசத்தில் மறுக்கா நானுமே கதைக்குள் புகுந்து, நகாசுகள் தேவைப்படுகின்றனவா? என சரி பார்த்து வருகிறேன்! அதைத் தொடர்ந்து பிரின்டிங் தான்!

அதன் பின்பாய் லார்கோ காத்திருக்கிறார்! நண்பர் அனுப்பியுள்ள ஸ்க்ரிப்டில் அந்தப் பங்குச் சந்தை வணிகம் சார்ந்த பகுதிகள் நீங்கலாக பாக்கி முழுசுமே மாற்றி எழுதத் தேவைப்படும் என்பது இந்த நொடியில் பெரும் பூச்சாண்டியாய் தலைவிரித்து நிற்கிறது! 2 அத்தியாய நெடும் சாகசமாச்சே 🥹🥹! And அதைத் தொடர்ந்து 5 பாக இளம் டெக்ஸ் 🥹🥹!

Just maybe- மல்லாக்கப் படுத்து விட்டத்தை ஆராமாய் பார்த்திடும் வாய்ப்பு கிட்டக்கூடிய ரிட்டயர்மெண்டுக்குப் பின்பான ஒரு ஓய்வான பொழுதினில், இந்த 2025 தான் எனது பணிக்காலத்தின் இமயமலையாய் தென்படுமோ- என்னவோ; தெரியலை! எண்ட குருவாயூரப்பா! 

கிளம்பும் முன்பாய் சந்தா நினைவூட்டலுமே guys!  இது வரையில் மூன்றில் ஒரு பங்குத் தொலைவைக் கடந்து விட்டோம்! மற்ற நண்பர்களும் தொடரவுள்ள நாட்களில் வேகம் எடுப்பர் & ஜனவரியில் அடுத்த பயணம் துவங்கிடும் நொடியில் வண்டி முழுசும் புக் ஆகி இருக்கும் என நம்பிடுவோம்! Fingers crossed & God be with us!

Bye all... Have a fun Sunday! See you around!

58 comments:

  1. அஞ்சுக்குள்ள ஒண்ணு

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. ஆப்ஷன் A தான் சார், நிச்சயம் இத்தாலி போல இளம் டெக்ஸ் மாதம் ஒருமுறை விடலாம்

    ReplyDelete
  4. உங்களுக்கும் வேணாம்.. எங்களுக்கும் வேணாம். Option B :)

    ReplyDelete
  5. 1 மிஸ்டர் நோ. ஆப்சன் 1. ஸ்லிப் கேஸ் கெட்டி அட்டையில் தரவும்.
    2 மாதமொருமுறை மஞ்ச சட்டை மாக்கான் மறுபதிப்பிலோ சந்தாவிலோ வந்தே தீர வேண்டும். ஓடற குதிரையை கட்டிப் போடுவது சரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. //மிஸ்டர் நோ. ஆப்சன் 1. ஸ்லிப் கேஸ் கெட்டி அட்டையில் தரவும்.//

      +9

      Delete
  6. //அட்டவணையிலேயே 12டெக்ஸ் சர்வநிச்சயமாய் இது o.k.ங்க சார் ஆன்லைன் விழாக்களில் புத்தக விழா ஸ்பெசல் களில் யாரைத் திட்டமிட்டாலும் யாரைகிடப்பில் போட்டாலும் நமது மஞ்சள் மாவீரரை முதல் ஆளாய் களமிறக்கணும் //இத கேட்கவும் வேண்டுமாங்க சார்.ஆரவாரமா மஞ்ச கொடிய பிடிச்சுகிட்டு வர நாங்க ரெடி.

    ReplyDelete
  7. 1) சிறுத்தை படத்துல கார்த்திக் சொல்வது ஆப்ஷன் A
    2) மாதம் ஒரு டெக்ஸ் - தி பெஸ்ட் தீர்வு

    எங்க அம்மா இந்த மாதத்தில் டெக்ஸ் ஏன் வரவில்லை என வினவினார்

    ReplyDelete
  8. சாம்பலின் சங்கீதம் அட்டைப்படம் காண ஆவலுடன் வெயிடிங், சார்

    ReplyDelete
  9. மஞ்சள் is MISSING''என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் தூரங்களைக் கடந்து எங்களின் செவிகளில் டணாரென்று ஒலி­க்கிறது!

    மனப்பிராந்தி சார்...அப்பிடியெல்லாம் லேது..

    ReplyDelete
    Replies
    1. மனப்பிராந்தியோ ; மேக்டோவெல் பிராந்தியோ - மாசம் ஒருக்கா மஞ்சளார் வராட்டி டண்டணக்கா தான் !

      Delete
    2. 😄😄😄Why don't we try Tiger🫣🫣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
      (Rummy கேக்க சொன்னாரு சார் 😄😄)

      Delete
  10. இரவுக் கழுகுகளுக்கு இனிய இரவு வணக்கங்கள்.

    ReplyDelete
  11. 1. Mr no option B .. 3+3+3 ..
    2. Tex .. monthly tex sir in direct santha itself .. plus in reprints too .. need of the hour ..

    ReplyDelete
  12. மிஸ்டர் நோ ஆப்ஷன் a

    மாதம் ஒரு டெக்ஸ் ok அதனால் sales மட்டுப்படுகிறது என்ற போது. சரியான தீர்வு இது தான்.

    ReplyDelete
  13. 1) மிஸ்டர் நோ. ஆப்சன் 1. ஸ்லிப் கேஸ் கெட்டி அட்டையில் தரவும்.
    2) மாதமொருமுறை மஞ்ச சட்டை மறுபதிப்பிலோ சந்தாவிலோ வந்தே தீர வேண்டும்.

    ReplyDelete
  14. மிஸ்டர் நோ ஆப்ஷன் 1

    டெக்ஸ் : மாதம் ஒரு முறை ஆண்டு சந்தாவில் 12 இதழ்கள்

    ReplyDelete
  15. // மஞ்சள் is MISSING''என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் தூரங்களைக் கடந்து எங்களின் செவிகளில் டணாரென்று ஒலி­க்கிறது! //

    எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை.
    நவம்பர் மாதம் மிஸ்டர் நோ வின் கானகத்தில் சடுகுடு தரமான ஆக்சன் அதுவே எனக்கு போதுமானது


    ReplyDelete
  16. Mr. நோ - ஆப்சன் - A தான்.

    ReplyDelete
  17. Missing என எண்ணுவது..
    கிங் ஸ்பெஷல் -2 க்காக தான். எப்போது வரும் என்று அறிவிப்பு எதிர்பார்க்கிறேன் சார்

    ReplyDelete
  18. அட்டாஹாச அட்டைப்படங்கள்... Option a தாங்க sir... 😄😄😄😄நவம்பர் மியா, மியா சேல்ஸ்.. மனப்பிராந்தியா.. Makdolad பிராந்தியா.. 😄😄😄😄❤️❤️👍... சிரிப்பு தாங்கலைங்க sir... 😄😄😄❤️

    ReplyDelete


  19. A. ஒன்பது தனித்தனி இதழ்கள் in a ஸ்­லிப்கேஸ்!

    அட்டவணையிலேயே 12 டெக்ஸ் சர்வ நிச்சயமாய்!

    ReplyDelete
  20. V காமிக்ஸ் தனி வருட சந்தா. 12 இதழ்கள்.

    சாகோர்
    மிஸ்டர் நோ
    வேதாளர்
    ஏஜென்ட் ராபின்

    குறைந்தபட்சம் தரமான நான்கு நாயகர்கள் இருக்கும்போது 12 வெளியிட கவனத்தில் கொள்ளலாம். இவர்களுக்கு கூடுதல் ஸ்லாட் என்பது வெற்றி வாய்ப்பினை குறைக்காது. ஆர்வத்தையும் எதிர்பார்பையும் அதிகமாக்கி உள்ளார்கள்.

    ReplyDelete
  21. எப்படி வந்தாலும் சரி 😄😄😘

    எங்களுக்கு Mr. No வந்தே தீரணும் 😄😄

    அப்புறம் இந்த Tex தம்பிய 12+1(குண்டு book) கொண்டு வரலாமே 🤔🤔🤔

    ReplyDelete

  22. சிரிக்க சிரிக்க பேசுற பொண்ணு, அழகான பொண்ணு, சம்பாதிக்கிற பொண்ணு.. ஆனாலும் மூடநம்பிக்கையால் செவ்வாய் தோஷம் ; வேணாம்னு தட்டி கழிக்கிற மாதிரி அழகான விசுவல் ட்ரீட்டாய் வைல்ட் கேட்+ நகைக்க வைக்கும் ஊதா சட்டைக்காரர்கள் + அதிரடியாய் சடுகுடு விளையாடும் மிஸ்டர் நோ என அற்புதமான காம்பினேஷனில் வந்திருக்கும் நவம்பர் மாத இதழ்களை ஆன்லைன் விற்பனையில் குறைய வைத்திருக்கும் அந்த X ஃபேக்டர் டெக்ஸ்தான் என்பதை நம்பவே முடியவில்லை..

    ReplyDelete
  23. A. ஒன்பது தனித்தனி இதழ்கள் in a ஸ்­லிப்கேஸ்!

    ReplyDelete
  24. // ஆன்லைன் விழாக்களில்; புத்தக விழா ஸ்பெஷல்களில் - யாரைத் திட்டமிட்டாலும் சரி, யாரைக் கிடப்பில் போட்டாலும் சரி, அங்கெல்லாம் நமது மஞ்சள் மாவீரரையும் முதல் ஆளாய் களமிறக்கிட வேணும்! //

    I like this idea sir.

    ReplyDelete
  25. நவம்பர் மாத இதழ்கள்

    குறையில்லா கதைகள்.

    "சதுப்பில் ஒரு சடுகுடு" படிக்க ஆரம்பித்தால் கதையை முடிக்காமல் மூடி வைக்க முடியாத ஒரு விறுவிறுப்பான கதை.

    "குருதியில் பூத்த குறிஞ்சி மலர்"
    அருமையானதொரு சித்திர விருந்துள்ள கதை.

    கார்ட்டூன் நாயகர்களுக்கு ஸ்லாட் குறைந்து வரும் நிலையில் ஆதரவளிக்க வேண்டிய நேரத்தில் வந்துள்ள ப்ளூகோட் "ஊழியம் செய்ய விரும்பு" கதை.

    மூன்று கதைகளில், இரண்டாவது வாசிக்கும் நண்பர்களை கவர்ந்து விடும்.

    ReplyDelete
  26. 1.Mr. நோ. ஒரே குண்டு புக். ( ரத்த படலம் கருப்பு வெள்ளை போல் )
    2. டெக்ஸ் மாதம் இரண்டு கொடுத்தாலும் சந்தோஷமே ❤️❤️❤️

    ReplyDelete
  27. என் தரப்பில் இருந்து, உள்ளது உள்ளபடியே சொல்வதாக இருப்பின் இந்த வருடம் அக்டோபர் வரை வந்த டாப் 3 என நான் தேர்ந்தெடுத்தால்.

    1)கிங் ஸ்பெஷல்-1
    2) வதம் செய்வோம் வேங்கைகளே
    3) எழுந்து வந்த எதிரி +ரத்தம் இன்றி யுத்தம் +வஞ்சம்

    ஒரே திக்கை நோக்கி கொண்டு நான் இருந்திருந்தால் இவற்றை கவனிக்காமல் இருந்திருப்பேன்.

    ReplyDelete
  28. Mr. No - option A

    டெக்ஸ் ரெகுலரில் 9 இதழ்கள். பாக்கி 3 இதழ்களை புத்தக விழா & ஆன் லைன் புக் ஃபேரில் போட்டு விடுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த 3 இதழ்கள் மறுபதிப்பாக இருக்கட்டும்.

      Delete
  29. Mr. நோ option A, xiii ற்கு ஒரு குண்டு book 😍🥰

    ReplyDelete
    Replies
    1. Xiii.... புதிய கதைகள் not old one. 😊

      Delete
  30. நாம ஏன் இந்த 3 ஆப்ஷன்களையுமே சேர்ந்து செயல்படுத்தக் கூடாது?

    *அட்டவணையிலேயே 12 டெக்ஸ் சர்வ நிச்சயமாய்! Simple solution...!

    *இயன்றால் இளம் டெக்ஸின் சிங்கிள் 64 பக்க ஆல்பங்களை இத்தாலியில் போலவே மாதமொரு முறை - தொடர்ந்து செல்லும் கதைகளாய்..!

    *ஆன்லைன் விழாக்களில்; புத்தக விழா ஸ்பெஷல்களில் - யாரைத் திட்டமிட்டாலும் சரி, யாரைக் கிடப்பில் போட்டாலும் சரி, அங்கெல்லாம் நமது மஞ்சள் மாவீரரையும் முதல் ஆளாய் களமிறக்கிட வேணும்!

    ReplyDelete
  31. வணக்கம் சார்,
    வைல்ட்கேட் ஒரு சின்ன எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது நிஜம் சார், மீதமுள்ள 3 பாகங்களையும் அடுத்த வருட இறுதிக்குள் வெளியிட்டால் சூடு குறையாமல் படித்து விடுவோம். ஆனால் நாள் பட,"வைல்ட் கேட் யாரு?,எந்த பூனை?" என யோசிக்க நேரிடும்.
    பரிசீலிக்கவும்.

    Wowwwww - "மிஸ்டர் நோ" க்கு இவ்வளவு சுவாரஸ்யமான Flashback ?❤️👏👏👏.
    நீங்க அதை எடுத்திருந்தாலும் வருசத்துக்கு 3 என்ற கணக்கில் இப்ப முடிவை நெருங்கிருக்கும், ஆனா
    சிங்கிள் ஷாட் ஆல்பங்களில் ஒவ்வொரு இதழிலும் சிக்ஸர் அடித்து வரும் இவருக்கு
    அறிமுகமே தொடர் என்கிறப்ப இத்தனை வரவேற்பு பெற்றிருப்பது சாத்தியமா என்பது டவுட்தான்.
    இந்த தொடரை ஒட்டு மொத்தமாக வெளியிடுவது அளவில்லா மகிழ்ச்சி ❤️🎇❤️

    ஆப்ஷன் A&B இரண்டில் எது போட்டாலும் ஓகேதான்.
    அதிரடி அதகளத்துக்கு ஆவலுடன் waiting 🥰.

    "மாதம் ஒரு டெக்ஸ்" என்பது விருப்பம்னா அதையே தரலாம் சார்.
    இங்கு விருப்பங்களை விட விற்பனை முக்கியம் என்பதால் இதுக்கு தடை போடாமல், மாதம் ஒரு டெக்ஸ் தாராளமாக வரலாமே.
    இதை "ஒரு மாதம் ரெகுலர் டெக்ஸ், ஒரு மாதம் யங் டெக்ஸ்" இந்த ரீதியில் கூட தரலாம்.

    ReplyDelete