நண்பர்களே,
வணக்கம்! கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்களில் நாக்குத் தொங்க பௌலிங் போட்டு, எதிரணியின் top order ஆட்டக்காரர்களையெல்லாம் அவுட்டாக்கிய பின்னே, பொதுவாய் பவுலர்களுக்கு கொஞ்சமாய் ரிலாக்ஸ் பண்ணத் தோணுவது இயல்பு ! "உப்ப்ப்... கஷ்டமான வேலைல்லாம் முடிஞ்சது.. இனி கீழே வரப் போறது தடவல்ஸ்கி பேட்ஸ்மேன் மட்டுமே ! ஊதித் தள்ளிடலாம்!'' என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அன்னிக்கென்று பாருங்க - அடுத்து வரும் lower order பேட்ஸ்மேன் செமத்தியாய் கட்டை போடும் மூடில் வந்து சேர்ந்திடுவார்கள். சுலபமாய் சாய்த்து விடலாமென்று யாரையெல்லாம் எண்ணியிருந்தார்களோ.. அவர்களெல்லாம் பவுலிங் டீமை நாயாய், பேயாய் அலைக்கழிப்பர்!
மிகச் சரியாக இம்மாதம் நேக்கு நிகழ்ந்ததுமே அது தான். மூணே மூணு இதழ்கள்! "வதம் செய்வோம் வேங்கைகளே'' ஒரே மூச்சில் "ஜிலோ'வென்று முடிச்சாச்சு! அடுத்து "தீவிரவாதி சிக்பில்''! செம சுளுவாய் வாய்ஸ் ரெக்கார்டரில் போட்டே இதற்கான மொழிபெயர்ப்பையும் முடித்து விட்டாச்சு! So செப்டம்பரின் இறுதி இதழான "எட்டும் தூரத்தில் யுத்தம்'' (ஸாகோர் + இளம் டெக்ஸ்) மட்டுமே காத்திருந்தது ! ஆகஸ்டில் வேலைப்பளு ஜாஸ்தி; அக்டோபரிலும் தீபாவளி மலர்(ஸ்) பணிகள் நெட்டி வாங்கும் - so இடைப்பட்ட செப்டம்பரை மட்டும் இயன்றளவுக்கு இலகுவாக்கிக் கொண்டால் தேவலாம் என்ற மகாசிந்தனையில் "எட்டும் தூரத்தில் யுத்தம்'' ஆல்பத்தின் மொழிபெயர்ப்பை கருணையானந்தம் அங்கிளிடம் ஒப்படைத்திருந்தேன்! சில காலமாகவே டெக்ஸ் கதைகளுக்கு base version எழுதி வரும் சகோதரி, சமீபத்தில் கணவரோடு Gulf புறப்பட்டு விட்டதால் இதனை அங்கிளிடமே தந்து விட்டிருந்தேன்! And எழுதியும் வந்து, DTP-ம் முடிந்து ரெடியாக இருந்தது.
இது 128 பக்க சிங்கிள் ஆல்ப சாகஸம் தான் எனும் போது, டைப்செட்டிங்கின் எழுத்துப் பிழைகள்; ஒற்றுப் பிழைகளை மட்டும் நீங்களாகவே ஒப்பேற்றிவிட்டு, பிரிண்டிங்குக்கு எடுத்துப் போய்விடுங்கள் என்று சொல்லலாமா? என்ற சபலம் கூட சோம்பேறி ஸ்ரீகாந்த் அவதாருக்குத் தோன்றியது! சரி.. ரைட்டு, ஒரு பத்தோ- பதினைந்தோ பக்கங்களைப் பார்த்துப்புட்டு நம்மாட்களிடமே proof reading-க்கு ஒப்படைத்துவிடலாமென்று கதையை கையில் எடுத்தது மட்டுமே தான் ஒரு வாரத்துக்கு முன்பான எனது தெளிவான ஞாபகம்!
அதைத் தொடர்ந்த ஆறு நாட்களும், சும்மா கும்மு கும்முவென்று சில்லுமூக்கிலேயே "தல'' பாணியிலான குத்துகள் வாங்கின பீலிங் தான்! சிக்கல் என்னவெனில் "எட்டும் தூரத்தில் யுத்தம்'' அழுத்தமானதொரு கதைக்களம்! And "கலவரபூமியில் கனவைத் தேடி'' சாகஸத்தின் அடுத்த அத்தியாயமும் கூட! கருணையானந்தம் அங்கிளோ கடந்த 10+ ஆண்டுகளில் டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடித்ததில்லை! And இந்த பத்தாண்டுகளில் "தல'' கதைகளுக்கென அழுத்தம்; நக்கல்; பன்ச் என்று நிரம்பவே மாற்றங்களை நாம் செய்திருக்கிறோம்! So இத்தனை நெடிய பிரேக்குக்குப் பிற்பாடு அந்த க்ளாஸிக் நடையில் டெக்ஸும், கார்ஸனும், ஸாகோரும், சீகோவும் கதைப்பதைப் பார்த்த போது, எனக்குக் கிறுகிறுக்காத குறை தான்! சாதாரண கிராமத்து கௌபாய்களும், குடியானவர்களும் கோனார் நோட்ஸ் தமிழில் பின்னியெடுப்பதைப் பக்கத்துக்குப் பக்கம் படிக்கப் படிக்க, எனது "டர்ர்ர்ர்'' அளவுகள் தெறிக்கத் துவங்கிவிட்டன! இந்த சாகசத்திலோ கணிசமான உரையாடல்களும் உண்டு! 'அடிடா.. குத்துடா... சுடுடா.. போடுடா'.. என்று ஆக்ஷன் மிகுந்திருந்தாலாவது அந்த sequence-களில் பக்கங்கள் கொத்துக் கொத்தாய் கடந்துவிடும்! ஆனால், இந்தக் கதையில் மாந்தர்கள் எக்கச்சக்கம் என்பதால் அவர்களுக்கென வழங்க அவசியமாகிடும் space-ம் மிக அதிகம்! So ஆளாளுக்கு மைக் மோகனாட்டம் உரையாட, "செத்தான்டா சேகரு'' என்று உள்ளுக்குள் ஒரு குரல் மட்டுமே ஒலித்தது!
To Cut a long story short - 128 பக்கங்களையுமே கிட்டத்தட்ட 75% மாற்றி எழுத வேண்டிப் போனது! அதிலும் இந்த மாசத்தில் கஷ்டமான வேலைகளே லேது என்ற ஒரு மிதப்பில் சுற்றித் திரிந்து கொண்டிருந்துவிட்டு, கடைசி வாரத்தில் ஒரு நூறு தண்டால்களைப் போடத் தேவைப்படுமென்பது திடுதிடுப்பெனப் புரிந்த போது, மண்டை சுத்தமான சண்டித்தனத்தில் இறங்கிவிட்டது! And ஏற்கனவே சொன்ன விஷயம் தான் - புதுசாய் மொழிபெயர்ப்பது கூட சுலபமே; ஆனால், ஏற்கனவே உள்ள வரிகளை ரிப்பேர் செய்து, உள்ளே புகுவதென்பது ரண வேலை! So போட்டேன் பாருங்க மொக்கையை அடுத்த ஐந்து நாட்களுக்கு!! பலன்? "ஆகஸ்டில் செப்டம்பர்'' என்ற கனவு பணால் ! வியாழன் இரவு தான் எனது பணிகள் முடிந்திட, கிட்டத்தட்ட முழுசாய் ஒரு புதுப் பணியில் ஈடுபடுவதைப் போல DTP-ல் நம்மாட்களும் செயல்பட, இதோ சனியான இன்று கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் ப்ரிண்டிங்கே சாத்தியப்பட்டுள்ளது!
எல்லாவற்றையும் முடித்த பிற்பாடு கொஞ்ச நேரம் மோட்டு வளையையே முறைத்துக் கொண்டிருக்கத் தோன்றியது! "இதெல்லாம் தேவை தானாடா முக்கா மண்டையா? துவக்க நாட்கள்லே இந்த க்ளாஸிக் பாணியிலே தானே டெக்ஸ் & டீம், மாட்லாடி வந்தாங்க? So ஒற்றை இதழை அந்தப் பழைய பாணியிலே விட்டா எந்தக் குடி முழுகிப் போயிடுமாம்?'' என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிப் பிடித்து விளையாடியது! "நீதிடா.. நேர்மைடா.. நாயம்டா..'' என்று பொங்கும் நாட்டாமை விஜயகுமாரைப் போல, நமக்கும் உள்ளுக்குள் லைட்டாய் ஏதாச்சும் ஒரு வேதாளம் குடியேறியிருக்குமோ? என்ற ரீதியில் கூட மண்டை காய்ந்தது! "இயன்றவரைக்கும் மொழியாக்கத்தில் ஒரு சரளம் இழையோடிட வேணும்; எந்த பல்டியடிச்சாவது அதை தக்க வைக்க வேணும்!'' என்ற நமைச்சல் இப்போதெல்லாம் எனக்குள் ஒரு mania-வாகி விட்டதோ- என்னவோ?
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதித் தந்துள்ள 452 பக்க "சாம்பலின் சங்கீதம்'' ஸ்க்ரிப்டில் கூட திருத்தங்கள் சொல்லி- "கொஞ்சம் மாற்றங்கள் ப்ளீஸ்'' என்ற கோரிக்கையை முன்வைக்கவும், அவர் திரும்பவும் பணியாற்றுவதுமே இந்த mania வின் புண்ணியம் தானோ ? மெய்யாலுமே இந்த நொடியில் பதில் தெரியலை எனக்கு! And end of the day- ஒரு தீரா வேட்கையாகவே உருமாறியுள்ள இந்த அழுத்தம் - ஒவ்வொரு இதழையும் காவியமாய் படைக்கின்றதா? என்றால், அதற்கான பதிலும் சொல்லத் தெரியலை எனக்கு! போன மாசம் வந்த புக்கை எடுத்து இந்த மாசம் புரட்டினால்- ''இது நொள்ளை; இது சூத்தை'' என்று என் எழுத்திலேயே பிழைகள் தான் தென்படுகின்றன ! என்னமோ போடா மாதவா- ஏர்வாடிக்கு பஸ் ஏறாமல் இருந்தா தேவலாம் போலும்னு தோணுது!
இங்கே தான் பஞ்சாயத்து, மற்ற புக்ஸ் இம்மாதம் smooth sailing என்ற நினைப்பில் இருந்தால், அதிலும் ஒரு லோடு Msand மண்ணை கொட்டியது போலோர் சிக்கல்! சிக் பில் எனது பணி தான் என்பதால், வசந்த் & கோ. வில் வாங்கிடும் A.C. க்கான தவணைப் பணத்தைப் போல, பிய்த்துப், பிய்த்துத் தான் முடித்துத் தந்திருந்தேன். So அப்போது கொஞ்சம், இப்போது கொஞ்சம் என Dtp பணியும் ஓடியிருந்தது! எடிட்டிங்கும் முடிந்து, வியாழன் மாலை அச்சுக்குச் சென்றது. வெள்ளி காலையில் அச்சான பக்கங்களை சாவகாசமாய் புரட்டிப் பார்த்த நொடியில் தூக்கி வாரிப் போட்டது! கதையின் முதல் 12 பக்கங்களில் வண்டி வண்டியாய் பிழைகளோடே அச்சாகி இருந்தன 🤕🤕... ஒவ்வொன்றையும் நான் திருத்திய நினைவு தெளிவாக இருக்க, ஆபீசையே உலுக்கி எடுத்தேன் - எவ்விதம் சொதப்பல் நிகழ்ந்ததென்று கண்டுபுடிக்க! பார்த்தால் முதல் 12 பக்கங்களில் மட்டும் செய்த திருத்தங்களை சரியாக save பண்ணாது கோட்டை விட்டிருப்பது தெரிய வந்தது. So அச்சுக்கு சென்ற கோப்புகளில் முதல் 12 pages திருத்தங்கள் save ஆகிடாதவை!! மண்டையெல்லாம் உஷ்ணம் ஆகிப் போச்சு - சரளமாய் கண்ணடித்த பிழைகளைக் கண்டு! வேற வழியே லேது, அந்தப் பக்கங்கள் வரும் form-களை மொத்தமாய் குப்பையில் கடாசி விட்டு, புதுசாய் தாள் வாங்கி, இன்னொருவாட்டி பிரிண்ட் பண்ணுவதே தீர்வு என்று புரிந்தது! So அதையும் நேற்றிரவு தான் செய்து முடிக்க முடிந்தது ! Phewwww!
ரைட்டு, மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த அம்புட்டையும் இறக்கி வைத்தாயிற்று என்பதால் கொஞ்சம் இலகுவாய் உணர முடிகிறது! செம ஜாலியாய் 2026-ன் அட்டவணையின் இறுதி stretch பணிகளுக்குள் பிஸியாகி வருகிறேன்!
இங்கே இம்முறை உதைப்பது நம்ம பட்ஜெட் மட்டுமே!
பேக்கிங் டப்பிகள்; கூரியர் கட்டணங்கள் சுத்தமாய் ஒரு ஆண்டுச் சந்தாவினில் ரூ.725/-ஐ ஆக்கிரமித்துக் கொள்கின்றன இப்போதெல்லாம்! So மீதமிருப்பது தோராயமாய் ரூ.5200/- தான் - அதாவது ஆண்டுச் சந்தாக்கள் ரூ.6000/- எனும் நம்பரை தொட அனுமதிக்கலாகாது; அதற்குக் கீழாகவே இருந்திட வேணுமென்ற அரூபக் கட்டாயத்தால்!
இந்தப் பணத்துக்குள் "தல'' கிட்டத்தட்ட ஆண்டின் 90% சதவிகித மாதங்களில் நம்மை மகிழ்விப்பதெற்கென ரூ.2200/- (just a rough number) அவசியம். அது சமரசம் செய்ய இயலா சங்கதி!
ஆக, மீதமிருக்கும் ரூ,3000/-ல் தான் ஐயர்; சமையல்; நாதஸ்வரம்; பந்தல்; போட்டோகிராபர்; ஜானவாசம்; மேடை டெக்கரேஷன்; பெண் அலங்காரம்- என சகலத்தையும் செய்து முடிக்க வேண்டியுள்ளது!
நாயகப் பெருமக்களின் எண்ணிக்கைகள் கூடியிருப்பதற்கு ஏற்ப சந்தாவின் மொத்தத் தொகையையும் சற்றே உசத்தினால் கூட - "லயனுக்கு சந்தா கட்ட பேங்க்கிலே லோன் போடணும், லாட்டரி டிக்கெட் வாங்கணும்!'' என்ற ரேஞ்சில் பொங்கலோ, பொங்கலுக்கு சில பல வித்துவான்கள் தயாராகயிருப்பார்கள்!
மறுபக்கமோ அவர்களே ஒரு மரு ஒட்டிய முகத்தோடு ''ரெம்ப சீப்ங்கணா... "ஆனை கல்லறை" ரண்டே ஆயிரம் தான்ங்ணா..! "பூனை பள்ளத்தாக்கு" மூணே ஆயிரம் தான்'' என்று நமது முந்தைய வெளியீடுகளை பிரிண்ட் போட்டு கனஜோராய் போணி பண்ணிக் கொண்டிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!
So "பையிலிருக்கும் பணத்துக்குள் ஒரு முழுமையான விருந்தை சுவைப்பது எப்படி?'' என்று Rapidex கைடுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் இந்த நொடியில் !
உங்களுக்கான questions for the week :
1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா?
2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?
3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்?
ரைட்டு,சந்தா பல்ட்டிகளை முடித்து விட்டு தீபாவளி மலர்ஸ் பணிகளுக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் folks! Bye all.. see you around... Have a lovely Sunday!
And டெஸ்பாட்ச் செவ்வாய் காலை தான்! சாரி guys!
ஹாய்
ReplyDeleteவாழ்த்துகள்
Deleteடாங்ஸ்பா...
Deleteவிமர்சனங்கள் போட்டு கொண்டே அப்படியே பர்ஸ்ட் வந்தாச்சு ஃஎ, சகோ
Deleteவாழ்த்துகள் சகோ 💐💐💐
நன்றி சகோ...
Deletehi sir
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDelete@Edi Sir😘🥰👍
ReplyDeleteMe in😘🥰🙏
7th
ReplyDelete💛💙💚💜
ReplyDelete10 க்கு உள்ளே
ReplyDeleteவாழ்த்துகள் சகோ 😊
DeleteHi.. Vanakkam
ReplyDeleteவணக்கம் கார்த்திக்
Deleteபரணி சகோ கரெக்ட்டா சொல்லிடாப்பல
ReplyDeleteநன்றி கே
Delete// And டெஸ்பாட்ச் செவ்வாய் காலை தான்! சாரி guys! //
ReplyDeleteஅடடே...
வணக்கம்
ReplyDeleteஇந்த தடவை சந்தா 6500/- கொண்டு போகலாம் - மூன்று தவணைகள் தரலாம் 👍
ReplyDeleteசெப்டம்பர், டிசம்பர் & பிப்ரவரி 👍
இல்ல தல.... ரெண்டாவது தவணைக்கு நினைவூட்டும் போதே நிறைய பேர் நம்மாட்களை கடித்துக் குதறுகிறார்கள்! இதில் மூணு தவணை என்றால் சுத்தம் 🤕
DeleteOmg 🫣
DeleteOnly 2.
Deleteகலவர பூமியில் கனவை தேடி எங்கே இருக்கு என்று தேடணுமே...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete1. சந்தா - 5900 இதே இருக்கட்டும் சார். குறைக்க வேண்டாம்.
ReplyDelete2. 3 மாதங்களுக்கு ஒரு ஸ்பெஷல் புக் அல்லது லயன் & முத்து காலெண்டர் அல்லது மாதம் 2 சந்தாதாரார்களுக்கு குழுக்கல் முறையில் பரிசு( ஸ்பெஷல் டூர்ஸ்
Deleteமாசம் 2 பேருக்கு டூரா? வருஷத்துக்கு 24 டூர்ஸ்!! ஐ.. ஜாலி!
Deleteபட்ஜெட் எவ்ளோ போடலாம்னும் கையோட சொல்லிடுங்களேன் சார் 🤔
சார் அல்லது வருடம் 2 டூர், அதாவது ஆறு மாதம்களுக்கு இருவர். ஆகஸ்ட் மாதம் என்றால் குற்றாலம் டூர், ஏப்ரல் மே என்றால் ஊட்டி / கொடைக்கானல் / ஏற்காடு; தமிழ்நாட்டுக்குள் டூர் சார், பக்கத்துக்கு மாநிலம் என்றால் செலவு அதிகம் ஆகும்!
Delete// பட்ஜெட் எவ்ளோ போடலாம்னும் கையோட சொல்லிடுங்களேன் சார் //
Deleteநான் சொல்ல வந்தது, தமிழ்நாட்டுக்குள்; இது ஐடியாதான் சார், கம்பனிக்கு எது கட்டுப்படி ஆகுமோ அது படி நீங்கள் செய்யங்கள் சார்!
// மாதங்களுக்கு ஒரு ஸ்பெஷல் புக் //
Deleteடெக்ஸ் மினி அல்லது டயலன் டாக் மினி வண்ண கதைகளை சொன்னேன் சார்.
// லயன் & முத்து காலெண்டர் //
Deleteசந்தாதார்களுக்கு மட்டும்! ஆரம்ப காலத்தில் கொடுத்த காமிக்ஸ் காலெண்டர் போல அல்லது உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி & காமிக்ஸ் publisher விதி முறைகளுக்கு தகுந்தவாறு ஒரு காமிக்ஸ் காலெண்டர் சார்
சிக் பில் 🥺🥺🥺
ReplyDeleteஅந்த சேவ் பட்டன் சரியாக வேலை செய்யலைனா என்ன கஷ்டங்கள் என்று அலுவலகத்தில் அனுபவித்துள்ளேன்
It happens, Sir...We are ready to wait Sir..
கவனித்து சரி செய்ய முடிந்ததற்கு நன்று, சார்
// 1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா? //
ReplyDeleteஓகேதான் சார்...
// 2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்? //
சந்தா 3 தவணை எனும் திட்டம் பயன் அளிக்குமா சார் ?!
// 3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்? //
வாசித்தவரை எல்லாம் நலமே,அடுத்தாண்டு கூடவே சேர்த்து இன்னும் சில புதுமுகங்களையும் இறக்குங்க சார்...
சந்தா - 5900....ஓகே சார்
ReplyDeleteஒரே தவணையில் சந்தா 6500 கட்டுவோருக்கு free books ஏதேனும் தரலாம்.
ReplyDeleteசந்தாவில் சேரும் அனைவருக்கும்
ஏதேனும் gift அல்லது free கூரியர்
தரலாம்.
Free கூரியர் தரலாம் தான் தல...! ஆனா நானே ஐஸ் வண்டி தள்ளிட்டே பட்டுவாடா பண்ணுனா தான் கட்டுப்படியாகும்!
Deleteஒரு வருஷத்துக்கு ஆகும் கூரியர் கட்டணம் - ஐந்து லட்சம் சாரே!
சந்தாவில் இருப்பவங்களுக்கு இப்பவும் ப்ரீ கூரியர் தாங்க, ஜம்பிங் பாஸ்
Deleteஒரே தவணையிலா, நிறையா பேரால் சாத்தியமாகாத காரியம், தல
1. சந்தா தொகை அதிகமாகத்தான் படுகிறது எடி
ReplyDelete5000 - 5500 க்குள்ளென்றாலும் மேனேஜ் பண்ணலாம்தான்
2. 2025 ஆம் வருடம் போலவே இரு வகையான சந்தாக்களை களமிறக்குங்கள் .. ++
மேலும் டெக்ஸ் இலவச இணைப்புகள் மறுபடியும் கொண்டு வாருங்கள் அ குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் இப்படி ஏதாவது குட்டி புக்காக போடுங்கள் .. பலவருடங்களுக்கு முன்பு சொன்னதுபோல் பாயிண்ட்ஸ் ஆப்சனைக் கொண்டு வாருங்கள் ..
போனெல்லி பொம்மைகளை இறக்குமதி செய்து இங்கு விற்க ஆவன செய்யுங்கள்
போனெலி தளத்துக்குப் போய் பொம்மைகள் பத்தி என்ன போட்ருக்குன்னு ஒரு தபா பாருங்களேன் சம்பத்?
Delete//சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்? //
ReplyDeleteநண்பர்களுக்கு நாங்கள் இதனை பலனை சொல்லி சந்தாவில் இணைய சொல்வதுண்டு
மினி கலர் டெக்ஸ் போன்று எதேனும் சந்தா இணைப்புகள்
டெக்ஸ் தான் வேண்டிம் என்றில்லை
அல்லது எதேனும் இலவசமாக தங்கள் பட்ஜெட்டுடன் இடிக்காமல்
சந்தாதாரர்க்கு மட்டும் கலர் டெக்ஸ் விலைக்கு தரலாம் ஒரு சந்தாதாரர் இரண்டு புத்தகங்கள் வேண்டுமென்றாலும் விருப்பத்திற்கேற்ப்ப பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDelete38th
ReplyDeleteமினி கலர் டெக்ஸ்*. இது சந்தா அட்டவணையில் இல்லாமல் தனித் தடம் .சந்தாதாரர் உம் விருப்பம் பட்டால் மட்டும் இதற்க்கு மட்டும் மாதம் ஒரு முறை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் இல்லா விட்டால் skip பண்ணிக்கலாம்.இரண்டு வேண்டுமானாலும்வாங்கிக்கலாம்
ReplyDelete//பேக்கிங் டப்பிகள்; கூரியர் கட்டணங்கள் சுத்தமாய் ஒரு ஆண்டுச் சந்தாவினில் ரூ.725/-ஐ ஆக்கிரமித்துக் கொள்கின்றன இப்போதெல்லாம்! So மீதமிருப்பது தோராயமாய் ரூ.5200/- தான்//
ReplyDeleteசார். சந்தா கட்டுவோர்க்கு கூரியர் கட்டணம் இலவசம் தானே. இது தானே நாம் ஆண்டு தோறும் கடைபிடிப்பது.
கூரியர் கட்டணம் வசூலித்தால் சந்தாதாரர்களுக்கு என்ன பயன். புத்தக கடையில் வாங்குவோருக்கு லாபம், புத்தக விழாக்களில் வாங்குவோருக்கு கூடுதல் லாபம். ஆகவே இதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
20 ரூபாய் இருந்த கூரியர் இன்று 42 ரூபாய் + GST
Delete3.50 இருந்த டப்பி இப்போது 9 ரூபாய் + 18% GST...
பேக்கிங் material மும்மடங்கு விலையேற்றம்!
இவற்றை சோலோவாய் சமாளிக்க சூப்பர்மேன் வந்தாலும் குதிங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவார் நண்பரே!
இதையெல்லாம் விட பெசல் ஐட்டம் Postal rates!! பதிவுத் தபால்களின் கட்டணங்கள் தாறுமாறு தக்காளி சோறு ரேஞ் இப்போது! And செப்டம்பர் முதல் ஒன்லி ஸ்பீட்போஸ்ட்!
Deleteதாங்கள் இந்த வருட போல், கதைகள் தேர்வு பொறுத்தும் சந்தாவில் இணைகிறார்கள், சில சகோதரர்கள் சொல்ல கேட்டது, க்ளாசிக் ழசிகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அருந்தால் கட்டுகிறார்கள், புதியதை அதிகமாக விரும்புவோர் அவர்கள்கென உள்ள புத்தகங்களை, ஓகே தான் என கட்டுகின்றனர்
ReplyDeleteசில புதிய வாசகர்கள் புத்தக விழாவில் அறிமுகமாகி, சந்தாவில் இணைய செய்வது, what are the benefits or perks available for me என்ற கேள்வியே
கதை தேர்வு, வீடு தேடி வரும் புத்தகங்கள் என்ற வார்த்தைகள், எதேனும் அலஙச இணைபுகள்
1. 5900 ஓகே சார்.
ReplyDelete2. வருடம் முழுவதும் புதிய சிறு சிறு சந்தாக்களை குறைத்திடுங்கள்.
"வருஷம் முழுக்க புதுசு புதுசா புக்கு வருது... எப்படியும் பிரிச்சு பிரிச்சு காசு கட்டப் போறேன்... அப்புறம் எதுக்கு மொதல்ல சந்தா கட்டணும்...!?" இந்த முறை ஈரோட்டில் சில நண்பர்கள் என்னிடம் கூறியது...
பழையபடி கேலண்டர், சிறு டைரிகள் only சந்தாவிற்கு மட்டும்.
அப்படியானால் ஆன்லைன் விழாவினை இனி விழுங்கிட வேண்டியது தான் சார்! ஒரு வருஷத்துக்கு only ரெகுலர் சந்தாஸ் என்று வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான்!
Deleteவாசிப்பிலும் ரொம்ப backlog விழாது நிறைய பேருக்கு!
Deleteசென்னை & ஈரோடு புத்தக விழாக்களுக்கு மட்டும் ஏதேனும் பண்ணிக்கொண்டு, மற்ற தருணங்களில் எதையும் திட்டமிடக் கூடாது!
Delete
Deleteஉங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதனை தயங்காமல் செய்யுங்கள்! எங்களை பற்றி கவலை வேண்டாம்! நமது காமிக்ஸ் தொடர்ந்து மாதம் 3-4 புத்தகங்கள் வந்தால் போதும்!
DTP யில் நடந்த குளறுபடிகள் வருத்தம் அளிக்கின்றன சார்! ஆனால் ஏற்பட்ட குளறுபடியை செலவு செய்து, மெனக்கெட்டு செய்து முடித்த உங்களுக்கு காமிக்ஸ் வாசகர்கள் சார்பாக மானசீகப் பூங்கொத்துக்கள்!!💐💐💐💐💐
ReplyDelete👍🥰💐💐Me too🙏
Delete// இனி கீழே வரப் போறது "தடவல்ஸ்கி" பேட்ஸ்மேன் //
ReplyDeleteROFL
🙏🙏🙏
ReplyDelete5900 ok sir
ReplyDeleteஇரண்டு தவணைச் சந்தா தொடரட்டும்..
ReplyDelete🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽
Deleteசந்தா தொகை 5900 என்பது ஓகே தான் சார்! தூற்றுவோர் தூற்றட்டும்.. நீங்கள் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்! விலைகளை நிர்ணயிப்பதில் எப்போதும் உங்களிடம் நியாயமான அணுகுமுறையே இருக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம்!👍💐💐
ReplyDelete+9
Delete// விலைகளை நிர்ணயிப்பதில் எப்போதும் உங்களிடம் நியாயமான அணுகுமுறையே இருக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம்! //
Delete+1
/ விலைகளை நிர்ணயிப்பதில் எப்போதும் உங்களிடம் நியாயமான அணுகுமுறையே இருக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம்! //
Deleteஅதே,அதே...
//போன மாசம் வந்த புக்கை எடுத்து இந்த மாசம் புரட்டினால்- ''இது நொள்ளை; இது சூத்தை'' என்று என் எழுத்திலேயே பிழைகள் தான் தென்படுகின்றன !//
ReplyDeleteசார் இது பற்றி கவலை பட வேணாம், பிடிக்கலைன்னா நாங்களே அதெல்லாம் சொல்லிடுவோம்😁😅😋
// சோம்பேறி ஸ்ரீகாந்த் //
ReplyDeleteஸ்ரீகாத் விளையாடும் போது எனக்கு அடிக்கடி தோன்றும்; சில குறிப்பாக ரன் அவுட் ஆகும் போது. இதை ஞாபகமாக வைத்து எழுதி உள்ளீர்கள் சார்.
சார்... நான் சொன்ன ஸ்ரீகாந்த் வேற ஆளு 🤕🤕
Deleteசாரி சார்!
Deleteஅப்ப அந்த சோம்பேறி ஸ்ரீகாந்த் நீங்கதானா சார் ?
🫣🫣🫣கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க ஜி 😄😄👍
Delete// நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதித் தந்துள்ள 452 பக்க "சாம்பலின் சங்கீதம்'' ஸ்க்ரிப்டில் //
ReplyDeleteSuper!! So we are on the planned date to release!!!
அட நீங்க வேற ஏன் சார் பீதிய கிளப்புறீங்க....
Deleteடெக்ஸ் கலர் : 336
ராபின் தீபாவளி மலர் : 282
சாம்பலின் சங்கீதம் : 452
காத்துள்ள லிஸ்ட் இது தான் 🥹🥹
டோட்டல் போட்டு பாருங்களேன் - ஆயிரத்தை தாண்டும் 🥹
Deleteஎன்ன சார், எந்த பக்கம் போனாலும் கேட் போடுறீங்க
Delete// டோட்டல் போட்டு பாருங்களேன் - ஆயிரத்தை தாண்டும் 🥹 //
Deleteஆயிரம் பக்கங்கள் வெளியிட்ட அபூர்வ விஜயர்...
சூப்பர் சார்...ஏக எதிர்பார்ப்புடன்
ReplyDelete1.அதிகபடுத்தலாம்
2.....
3. எல்லாரும் வேணும்...புதுசாவும் சேத்துங்க
//And டெஸ்பாட்ச் செவ்வாய் காலை தான்! சாரி guys!//
ReplyDeleteஇட்ஸ் ஓகே சார்
இதில் ஏற்பட்ட சிக்கலும் வேலை பளுவும் புரிகிறதுங்க
தங்களை போன்று
ராப்பர்களை பார்த்தவுடன், ரெடியாகி விட்டது என்றே இருந்தோம்
அதனால் தான் சிக்கல்களை பற்றி அறியாது வழக்கம் போல் கேட்டு வைத்தோம்
// 1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா? //
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் கூட்டினாலும் தப்பில்லை சார். இங்கே குறைந்தாலும் லிமிடெட் பிரிண்ட் என்று எப்படியும் இதற்கு ஈடான தொகையை special புத்தகங்களுக்கு செலுத்த தான் போகிறோம். சந்தாவின் இருந்தால் விலையாவது குறையும்
// 2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்? //
புத்தக பிரியர்களுக்கு புத்தகமே சிறந்த பரிசு. ஆகையால் மினி கதைகள் அல்லாது ஏதாவது ஒரு முழு நீளக் கதையை பரிசாக கொடுத்தால் ஈர்க்கும்
// 3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்? //
None. Spoon & white வேண்டும்
// அந்தப் பக்கங்கள் வரும் form-களை மொத்தமாய் குப்பையில் கடாசி விட்டு, புதுசாய் தாள் வாங்கி, இன்னொருவாட்டி பிரிண்ட் பண்ணுவதே தீர்வு என்று புரிந்தது! So அதையும் நேற்றிரவு தான் செய்து முடிக்க முடிந்தது ! Phewwww! //
ReplyDelete:-( வருத்தமாக உள்ளது சார்.
// இந்தப் பணத்துக்குள் "தல'' கிட்டத்தட்ட ஆண்டின் 90% சதவிகித மாதங்களில் நம்மை மகிழ்விப்பதெற்கென ரூ.2200/- (just a rough number) அவசியம். அது சமரசம் செய்ய இயலா சங்கதி! //
ReplyDeleteநன்று!
// "லயனுக்கு சந்தா கட்ட பேங்க்கிலே லோன் போடணும், லாட்டரி டிக்கெட் வாங்கணும்!'' என்ற ரேஞ்சில் பொங்கலோ, பொங்கலுக்கு சில பல வித்துவான்கள் தயாராகயிருப்பார்கள்! //
சார் இவர்களை பற்றி நீங்கள் நினைக்க தேவையில்லை! ஒவ்வொரு ஆண்டும் இதனை ஏதாவது ஒருவகையில் இவர்களை நீங்கள் ஞாபகபடுத்தி விடுறீங்க! இவர்களுக்காக நீங்கள் கவலைபட தேவையில்லை! என்ன செய்தாலும் இவர்கள் மாறப்போவதில்லை, நம்மை தூற்றி கொண்டுதான் இருப்பார்கள்! பட்ஜெட் இதே விலையில் வந்ததால் அவர்கள் சந்தாவில் இணைந்தார்களா இல்லை நிறைய நண்பர்களை சந்தாவில் சேர்க்க உதவினர்களா? அட போங்க சார்! தேவையில்லாத கவலை சார்!
இவர்களை கண்டு கொள்ளாமல் பட்ஜெட் அதிகபடுத்தினால் நல்லது என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் செய்யுங்கள்! நாங்கள் எப்போதும் போல் உடன் இருப்போம்.
சூப்பரா சொன்னீங்க PfB!!👍💐💐💐
Delete1. சந்தா தொகை குறைக்க வேண்டாம்
ReplyDelete2. சந்தாவினருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் ஏதேனும் சிறப்பு பரிசு.
3. தோர்கல், ஜானி மாதிரி யாராவது ஒருத்தர்.
///சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?///
ReplyDelete* ஒரே தவணையிலோ அல்லது இரண்டு தவணைகளிலோ ஒட்டுமொத்த சந்தாவையும் செலுத்தி விடுபவர்களுக்கு 'ரூ. 200 மதிப்பிலான அனல் பறக்கும் ஆக்சன் கொண்ட புத்தம் புதிய கதையோடு டெக்ஸ் புத்தகம் ஒன்று free free free!!! - ஆண்டின் இறுதியில்' என்று அறிவிப்பு கொடுக்கலாம் சார்!!
சந்தா செலுத்தாத மற்றவர்கள் அந்த புத்தகத்தை ஆன்லைனிலோ, புத்தகத் திருவிழாக்களிலோ, முகவர்களிடமோ - காசு கொடுத்து பெற்றுக் கொள்ளும்படி இருக்கட்டும்!
* ஒரே தவணையில் 2026க்கான சந்தாவை செலுத்துவோர்களில் மூன்று பேர் மட்டும் 2026 EBF வாசகர் சந்திப்பின்போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு - அவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக அடுத்த வருட (2027) சந்தாவையே இலவசமாகக் கொடுக்கலாம்! ( அல்லது வெற்றி பெற்றவர் - தான் விரும்பும் யாருக்கும் அதைப் பரிசாக அளிக்கலாம்!)
சந்தாதார்களுக்கு நம்ம கம்பெனி லோகோ போட்ட t-ஷர்ட ஏதாவது கொடுக்கலாம்.
Deleteஅல்லது வாய்ப்பிருந்தால் நம்ப காமிக்ஸ் கதாபாத்திரங்கள் படம் போட்ட காஃபி கப் கொடுக்கலாம் சார்.
// அவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக அடுத்த வருட (2027) சந்தாவையே இலவசமாகக் கொடுக்கலாம்! ( அல்லது வெற்றி பெற்றவர் - தான் விரும்பும் யாருக்கும் அதைப் பரிசாக அளிக்கலாம்!) /:
Deleteநல்ல யோசனை.
3 நண்பர்களுக்கு
ஒருவருக்கு - ஆண்டு சந்தா ரெண்டாம் பரிசு ஆன்லைன் புத்தக விழா புத்தகங்கள் மூன்றாம் பரிசு - ஈரோடு புத்தக திருவிழா புத்தகங்கள்
இவை போக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் - ஒரு சந்தாதாரற்கு மாலையப்பன் அவர்கள் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் ஒன்று பரிசாகக் கொடுக்கலாம்!
Deleteஅதிக பரிசுகள் அதிக நண்பர்களைச் சந்தாதார்களாக மாற்ற ஊக்குவிக்கும் என்பது உறுதி!
///காமிக்ஸ் கதாபாத்திரங்கள் படம் போட்ட காஃபி கப் கொடுக்கலாம் சார்///
Deleteக்யூட் ஐடியா PfB! EBF வாசகர் சந்திப்பின்போது குலுக்கல் முறையில் ஐந்து பேருக்கு இந்த மாதிரியான காபி கப் பரிசாகக் கொடுக்கலாம்!!😍😍😍
அந்த காஃபி கப் ஐடியா நல்லா இருக்கே
Deleteகலர் டெக்ஸ் மினி டெக்ஸ் என்று எந்த புத்தகத்தை இலவசமாக கொடுத்தாலும் மீண்டும் அதை நீங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மற்ற அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பதிப்பிடத்தான் போகிறீர்கள் எனும்போது அந்த இலவச இணைப்புகளுக்கு நிறைய பேர் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை.
ReplyDeleteஇந்த வழிமுறை சாத்தியப்படுமா என்று தெரியவில்லை, இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.
இந்த வருட தீபாவளிக்கு முன்பாக அட்டவணையும் சந்தா தொகையும் முடிவு செய்து அறிவித்து விட்டால் தீபாவளிக்கு முன்பாக முழு சந்தா வையும் செலுத்துபவர்களுக்கு பட்டாசு பார்சல் கிஃப்டாக கொடுக்கலாம். ஆனால் இதில் உள்ள சிரமங்கள் எதுவும் எனக்குத் தெரியாது என்ற போதிலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியாத போதிலும் இதை இங்கு நான் குறிப்பிட்டது தவறு என்று நினைத்தால் மன்னிக்கவும்.
கொரியர் அல்லது அஞ்சலகம் மூலம் பட்டாசு பார்சல் அனுப்ப வாய்ப்புகள் மிக மிக குறைவு.
Deleteயானை கல்லறை கொண்டு கல்லா கட்டும் அந்த அல்ஷேஸன் யாருங்க...
ReplyDelete1. சந்தாவை தயவு செய்து குறைக்க வேண்டாம்.. முடிந்தால் அதிகப்படுத்தி இன்னும் புத்தகங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ReplyDelete2. இதில் சிலருக்கு மாறுபட்ட முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் என் மனதில் உள்ளதை சொல்லி விடுகிறேன். சந்தா தாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் சில புத்தகங்களை இலவசமாக வெளியிடவும். உதாரணமாக கலர் மினி டெக்ஸ். முன்பும் கொடுத்தீர்கள் ஆனால் அதை மீண்டும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கொடுத்ததினால்... நானே அடுத்த வருடம் சந்தா கட்டாமல் புத்தகங்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் எல்லா புக்கையும் வாங்கி விடுவேன் அது வேறு விஷயம். அதனால் சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் சில புத்தகங்களை வெளியிடுங்கள். நமது ஹீரோக்களின் காலண்டர் போஸ்டர் இப்படி ஏதாவது கொடுத்தீர்கள் என்றால் சந்தாவில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும்..
3. ஜானிக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு அந்த இடத்தில் தோர்களை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். டெக்ஸ் டைகர் இவர்களுக்கு அடுத்து என் மனம் கவர்ந்த ஹீரோ தோர்கல் மட்டுமே.
முன்பெல்லாம் 5000 கட்டினால் 50 புக்,
ReplyDeleteபிறகு 5000 கட்டினால் 48 புக்
அப்புறம் 40 புக்
இதற்கெல்லாம் காரணம் எல்லா வகையிலும் உயர்ந்து கொண்டே செல்லும் மூலப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை ஏற்றம் தானே அன்றி உங்களுடைய லாபம் பார்க்கும் நோக்கம் அல்ல என்பது கண்கூடு.
என்ன ஆனாலும் சரி பெஸ்ட் ஆக கொடுப்பேன் என்று நீங்களும், பெஸ்ட் தான் கிடைக்கும் என்று நாங்களும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 1அதனால் உங்களுடைய பட்ஜெட்டுக்கு என்ன செட் ஆகுமோ அந்த விலையை தேர்ந்தெடுங்கள் ஐயா.
கொரியர் மற்றும் போஸ்ட் ஆபீஸ் கட்டண உயர்வுகள் பலரையும் இன்று விழி பிதுங்கச் செய்து வருவது உண்மை. எனவே, அந்த கட்டணத்தை இலவசமாக கொடுக்காமல், சந்தா+கொரியர் வாங்கலாம்.
மூச்சு விடவாவது நேரம் கிடைக்கும்!
கிளாசிக்ஸ் தனி சந்தா போல நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு டெக்ஸ் சந்தா . இரண்டிலும் இணைபவருக்கே இந்த டெக்ஸ் offer.இந்த புத்தகங்கள் குறைந்தது ஒரு வருடத்துக்கு விற்பனைக்கு வராது.
ReplyDelete
ReplyDelete1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா?
அந்த 5900/- ஓகே தான் சார் புத்தகங்களுக்கு. கூரியர் அதன் பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?
மினி Tex போல 3 மாதம் ஒரு முறை, வருடத்தில் 4 புத்தகங்கள் சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு கொடுக்கலாம்.
3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்?
வேற யாரும் இல்லை சார்.
//.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?//
ReplyDeleteஇலவச இணைப்புகள் எதுவிமே ஈர்க்காது போது, நல்ல வாசிப்புக்கான கதை தேர்வுகளே ஈர்த்திடும். அப்கோர்ஸ் ரசனைகள் பலவிதம்.
தங்களுக்கு தெரியும் வாசகர்களின், ஸ்பூன் & வொயிட் பற்றி தெரிந்தது கொண்டது போல் தெரிந்து விடும்.
வீடு தேடி வரும் புத்தகங்கள் தாங்கள் கட்டும் சந்தாவிற்கு சரியான தேர்வுகளே என்ற பீல் இருந்தால் கண்டிப்பாக சந்தாவை விரும்பவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிடலாம். வலைக்கு அப்பால் இள்ள ரசிகர்களையும் ஷார்ட் & கிரிஸ்ப் விமர்சனைங்கள் எழுத தூண்டி, அதையும் புத்தகங்களில் போடலாம், சமீப காலங்களில் வாசக விமர்சனங்கள் பக்கம் வருவதில்லை. இங்கு உடனே யாரும் எழுதுவதில்லை என்ற கம்ப்ளேன் தாங்கள் முன் வைக்கலாம், ஆனால் தொடர்ந்து இந்த பகுதியினை கொஞ்சமாய் உயிர்ப்புடன் வைத்தால் நன்றாக இருக்குங்க, சார்
Well said Sister. தளத்தினை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்தால் நன்றாக இருக்கும்.
DeleteSpoon&white வேண்டும்.யாருக்காவது டாட்டா _னா ரிப்போர்ட்டர் ஜானி . ஆனா அவருக்குனு தனிரசிகர்கள் உள்ளனரே.
ReplyDeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரை அனைத்து வகையான விலைவாசிகளும் (சம்பளங்களும் தான்) உயர்ந்துள்ளது.
நீங்கள் மற்றும் நண்பர்கள் இன்னும் பழைய படியே மணந்தால் மகாதேவி மன நிலையிலிருந்து வெளிவர வேண்டும்.
சராசரியாக ஒரு டீ க்கு ஒரு நாளுக்கு சுமார் 50/100 ரூபாய் செலவிடும் போது பட்ஜெட் இடிக்காது.
பிடித்த நடிகரின் படத்தை பார்க்க 1000/2000 டிக்கெட் வாங்கும் போது பட்ஜெட் இடிக்காது.
நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் போது பட்ஜெட் இடிக்காது.
ஆனால் எப்போதும் கையில் இருக்கும் மனத்திற்கு பிடித்த புத்தகம் வாங்கும்போது மட்டுமே பட்ஜெட் இடிக்கும்.
தேவைப்படும் நம் வாசகர்கள் கண்டிப்பாக மணி மேனேஜ் செய்து வாங்குவர்.
பள்ளி காலத்தில் கிடைக்கும் பாக்கெட் மணியை சேமித்து (சில பல தின்பண்டங்களை /ஐஸ்கிரீம் தியாகம் செய்து) காமிக்ஸ் வாங்கியவர்கள் நாம்.
எனவே 6900 என்ற மைண்ட் செட்டிலிருந்து வெளியே வாருங்கள். சந்தா தொகை வருடத்திற்கு ரூபாய்
365x25=9125 Or 10000 வரை ஃபிக்ஸ் செய்யலாம். அப்பொழுது தான் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பல கதைகளை எடிட்டர் பப்ளிஷ் செய்ய முடியும்.
அனைவரும் யோசியுங்கள் மக்களே!
ஒரே தவணையில் சந்தா கட்டினால்
டெய்லி /மந்த்லி காலண்டர் அல்லது டி-ஷர்ட் மற்றும் ரீ பிரிண்ட் இதழ்களை புத்தக விழாவில் பரிசாக தரலாம்.
நன்றி.
நண்பர்கள் மன்னிக்கவும்
ReplyDeleteஇந்த காபி கப், டி சர்ட், குலுக்கல் பரிசு, இவையெல்லாம் பழைய காலத்து டெக்னிக்குகள். இதற்காக எல்லாம் சந்தா எண்ணிக்கை கூடுமா என்றால் அது மிக கடினமே
அதிக புத்தகம் வாங்குவோர்க்கு மொத்த தொகையில் சலுகை அல்லது கூடுதல் சலுகை என அறிவித்தால் தான் எடுபடும்.
எங்கும் இதுதானே நடைமுறை. குறைந்த எண்ணிக்கையில் வாங்குவோர்க்கு விலை அதிகமாகவும், அதிகம் வாங்குவோருக்கு குறைவாகவும் கொடுத்தால் தான் சந்தா எண்ணிக்கை கூடும்.
சந்தா, ஸ்பெஷல் வெளியீடுகள் என்று அனைத்தையும் அட்டவணை வெளியிடும் போது அறிவித்து விடுங்கள். ஸ்பெஷல் வெளியீடுகளை அட்டவணை வெளியிடும் சமயம் தீர்மானிக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஒரு outline கொடுத்து தொகையை முடிவு செய்து விடுங்கள்
புதிய கதைகள் மட்டுமே இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் (கிளாசிக்கையும் சேர்த்து தான்). மறுபதிப்புகளை சென்னை மற்றும் ஈரோடு புத்தக விழாக்களுக்கு என்று ஒதுக்கி இவை மட்டுமே Special வெளியீடுகளாக இருக்கட்டும். மற்றவை அனைத்தும் சந்தாவில் இருக்குமாறு திட்டமிடுங்கள்
பின்பு இந்த தொகையை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் கட்டுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை discount ஆக கொடுத்து விடுங்கள்.
சந்தாவில் இல்லாதவர்களுக்கு அல்லது முழு சந்தா கட்டாதவர்க்கு இவை பொருந்தாது, அவர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
இங்கே முன்கூட்டியே பணம் செலுத்தி சந்தாவில் இருந்து கொண்டு மேலும் ஆண்டு முழுதும் வரும் அனைத்து புத்தகங்களையும் வாங்குவோருக்கும் அதே விலை,
தேவையான புத்தகங்களை மட்டும் செலக்ட் பண்ணி ஆன்லைன், கடைகள், புத்தக விழாக்களில் வாங்குவோர்க்கும் அதே விலை என்றால் எதற்காக சந்தாவில் இணைய வேண்டும்.
இதில் புத்தக விழாக்களில் வாங்குவோர்க்கு பத்து சதவீதம் டிஸ்கவுண்ட் கூடுதல் சலுகை.
இந்த நடை முறையை மாற்றுங்கள் அல்லது இதை இப்படியும் நடைமுறை படுத்தலாம்.
வழக்கம் போல் ஒரு சந்தா மேலும் நான் பரிந்துரை செய்த மொத்த ஆண்டு சந்தா (கிளாசிக், ஸ்பெஷல் வெளியீடுகள் சேர்த்து with some attractive discount)
அவரவர் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். இது குறித்து நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்
//. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்?//
ReplyDeleteஇந்த வருடம் வந்ததில் யாரும் வேண்டாம் என்று தோன்றவில்லை
சிலர் இல்லையே என்ற குறையை தாண்டி, சந்தாவில் இருக்கும் கதாநாயகர்கள் நீக்கும்போது, அதுவும் ஒரு புத்தகத்தில் மட்டும் வருகின்றவர்களை, சந்தாவில் இருப்போரின் கருத்துகளுக்கு 50%
முக்கியத்துவம் குடுத்திடலாம், இல்லை கருத்து சொல்பவர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் வரும்போது சந்தாவில் இணைய வாய்ப்பு என்றால் ஓகே
லார்கோ, வேய்ன் போன்றவர்கள் கதை இல்லாததால் வரப்போவதில்லை, தோர்கல் நிலவரம் தாங்கள் அட்டவணை அறிவிக்கும்போது தெரிந்திடும்
அடுத்த வருடத்தில்
சோடா, ஸ்பூன் & வொயிட், தாத்தாஸ், மேகி மற்றும் இவர்கள் போன்று புதியவர்கள் கதையினை எதேனும் ஸ்பெஷல் நேரங்களில் வெளியிடுங்கள் ப்ளீஸ், சார்
மிஸ்ஸிங் தாத்தாஸ் so much
1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா?
ReplyDeleteஅந்த 5900/- ஓகே தான் சார் புத்தகங்களுக்கு. கூரியர் அதன் பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?
மினி Tex போல 3 மாதம் ஒரு முறை, வருடத்தில் 4 புத்தகங்கள் சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு கொடுக்கலாம்.. ONLY EXCUSIVE FOR SUBSCRIPTION SIR ..
3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்?
EXCEPT Spoon & White வேற யாரும் இல்லை சார் ..
சார் குரியர் கட்டணம் குறைக்க முயற்சிக்கலாம். வருடம் சுமார் 5 லட்சம் வியாபாரம் அதாவது மாதம் 40000 வியாபாரம் தரும் வாடிக்கையாளர் நாம் எனும் போது குரியரின் மேல் மட்டத்தில் பேசிப் பார்க்கலாம் சார். அல்லது தடுமாறிக் கொண்டிருக்கும் தரமான வேறு சிறிய குரியரை முயற்சித்துப் பார்க்கலாம் சார்
ReplyDeleteசந்தாவில் வாங்குவதை விட புத்தக விழாக்களில் 3 மாதத்திற்கு ஒரு முறை வாங்கினால 10% டிஸ்கௌண்ட். இப்படி இருக்கும் போது சந்தால வாங்கறதா அல்லது புத்தக விழால வாங்கறதான்னு கேள்வி வரும் போது நிறைய பேர் புத்தக விழாவை டிக் பண்றது சகஜம். அந்த 10% டிஸ்கௌண்ட் பத்தி எனக்கு கவலையில்லை. சந்தா என்பது காமிக்ஸிற்கு ஆக்சிஜன். காமிக்ஸ் வரத்தை வலுப்படுத்த எந்த கதை வந்தாலும் பரவாலை என்று சந்தாவில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் என ஏதாவது ஒரு சிறப்பு பரிசு இருக்க வேண்டும். அது எப்படி அல்லது என்ன என்பதை ஜிந்திக்கனும்.
ReplyDelete//இந்தப் பணத்துக்குள் "தல'' கிட்டத்தட்ட ஆண்டின் 90% சதவிகித மாதங்களில் நம்மை மகிழ்விப்பதெற்கென ரூ.2200/- (just a rough number) அவசியம். அது சமரசம் செய்ய இயலா சங்கதி!//
ReplyDeleteபுத்தக விழாவில் நான சந்தித்த ஒரு சிலர் டெக்ஸ் ஓவர்டோஸ், அதனால் சந்தாவில் இணையவில்லை என்றனர்,
வேறு சிலர் டெக்ஸ் மட்டுமே வாங்குகிறோம், தங்களுடையான பிஸியான நேரத்தில் டெக்ஸ்க்கு மட்டுமே தன்னால் நேரம் ஒதுக்கி படிக்க ஆர்வம் உள்ளது என்றனர்
எனக்கு தெரிந்து அனைத்து ஜானரையும் படிப்பவர்கள் (விரும்புகிறார்கள் என்று சொல்லிட இயலாது தான்), சந்தாவில் இணைந்திடுவர்
இன்னும் சிலர் அனைத்தும் வாங்குபவர்களாக உள்ளனர், ஆனால் ஆறுமாதத்திற்கு ஒரு முறை புத்தக விழாக்களில் தங்களுக்கு நேரம் கிட்டிடும்போது வாங்கிடுகின்றனர்
சந்தாவில் இருப்போரை மகிழ்விக்க, நேரம் கிட்டிம் போது அனைத்தையும் வாங்குபவர்களை சநுதாவில் இணைத்திட, எதேனும் ஐடியாவை தாங்கள் கொண்டு வரலாஙுக, சார்
Deleteவணக்கம் சார்,
ReplyDeleteதங்களின் சிரமங்கள் புரிகிறதுங்க சார்,
முன் மாதம் வரவேண்டிய அடுத்த மாத இதழ்கள் அந்த மாதத்திலேயே வருகிறது இதில் வருத்தப்பட ஏதுமில்லைங்க சார், பணிகள் முடிந்து மெதுவாக வரட்டும்.
பிறகு இந்த சந்தா பட்ஜெட் பிரச்சினை....
ஒரு புத்தகத்துக்கு மொழி உரிமை வாங்கி,
அதை தமிழாக்கம் செய்ய கூலி கொடுத்து,
பேப்பர் செலவுகள்,
பிரிண்டிங் செலவுகள்,
கரன்ட் சார்ஜ்,
பணியாளர்கள் கூலி,
கார்ட்டன் அட்டை (கொரியர்பாக்ஸ்)கூலி,
பாலிபேக்,
கம் டேப் purchase,
கொரியர் சார்ஜ்....
என இத்தனையும் கடந்துதான் ஒரு புத்தகம் நம்ம கைக்கு கிடைக்கும்.
இதில் எந்த செலவை குறைக்க முடியும்?,
எதை தவிர்க்க முடியும்?.
இது இந்த தொழிலில் மட்டும் அல்ல எல்லா தொழில்களிலும் விலை உயர்வு உண்டு.
இன்றைக்கு உள்ள அன்றாட விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினசரி செலவினங்களை சாமாளிக்க தெரிந்த நம்ம காமிக்ஸ் வாசகர்கள் பலருக்கு, நமக்கு பிடித்தமான காமிக்ஸ் புத்தகத்தில் மட்டும் விலை உயர்வை குறை சொல்வது மகா முட்டாள்தனம்.
சரி, அது பத்தி நாம பேசக்கூடாது என்றாலும், மீண்டும் மீண்டும் காமிக்ஸ் விலை உயர்வை காரணமாக காட்டி "பேங்கில் லோன் போட்டு காமிக்ஸ் படிக்கனும்" என பேசும் அர மென்டல்களுக்கு - மத்தியில் தான்
பிடித்தமான காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி படித்து மகிழும் வாசகர்களும் ஏராளமாக உள்ளனர்.
ஒரு நாளைக்கு 10₹ முதல் 15₹ வரை மொபைல் டேட்டாவுக்கு செலவு செய்து என்பது இன்றைய கட்டாயம் ஆகிறது,
அப்ப மாதம் மொபைலுக்கு மட்டும் 300₹ முதல் 450₹ வரை நிரந்தர செலவுதான்,
அரிசி ஒரு சிப்பத்துக்கு வருசம் 300₹ விலை ஏறுது,
ஃபேமிலியோட சினிமா போனாலே குறைந்தது 1000₹ வேணும்,
இப்டி சொல்லிட்டே போலாம்.
இதெல்லாம் அவசியமான செலவுகள்தான்,
இதையெல்லாம் ஏத்துக்கறவங்க-இதையும் தாண்டி "மனதை ரிலாக்ஸ் செய்யும் காமிக்ஸ் பெரிய செலவு கிடையாது"ங்கறத மட்டும் ஏத்துக்க மறுப்பது வெட்டி பேச்சு.
ஆக,
"காமிக்ஸ் தவிர மற்ற செலவினங்கள் எல்லாமே குறைவு " என எப்படி பூசி மொழுகி உருட்டினாலும் எல்லா விலைவாசி உயர்வையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
குறை சொல்றவர்களை மனசுல வெச்சுட்டு இங்க பட்ஜெட்டை போட்டால் தலைல பெரிய துண்டா போட்டு போக வேண்டியதுதான் சார்.
பட்ஜெட்டை குறைக்க குறைக்க புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்து, கடைசியாக வருடம் 12 புக் மட்டும் வரும் நிலை வரும், இதைத்தான் குறை சொல்பவர்கள் எதிர்பார்ப்பது, அவங்களுக்கு மொத்தமாவே காமிக்ஸ் வராமல் நின்று போனாலும் கவலை இல்ல.
ஒரு உதாரணமாக....
சந்தாவில் மட்டும் மாசம் 12 டெக்ஸ் கேட்டுட்டே இருக்காங்க நம்ம வாசகர்கள், ஆனா இந்த பட்ஜெட் விலை குறைப்பால் வருச வருசம் டெக்ஸ் புத்தகங்கள் குறைந்துட்டே போகுது.
2023 & 2024 & 2025 இதில் மட்டும் ஸ்பெஷல் தவிர சந்தாவில் வந்த டெக்ஸ் புத்தகங்கள் எத்தனை என கணக்கிட்டால் இதை தெரிந்து கொள்ளலாம்.
கண்டிப்பாக 2026 ம் இது தொடரலாம்.
ஆக, "படிப்படியாக புத்தகங்களை குறைப்பது,
விலைய கட்டுக்குள் கொண்டு வர பக்கங்களை குறைப்பது,
என்பது காமிக்ஸ் தீவிரமாக படிக்கும் வாசகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.
1.50₹ க்கு காமிக்ஸ் விற்ற காலத்தில் 2.50₹ காமிக்ஸ் வாங்கி படித்தவர்கள் இன்றும் அதை படிக்கிறார்கள் என்றால் இங்கு விலை பிரதானமல்ல "காமிக்ஸ் மீதுள்ள காதலே பிரதானம்."
ஆக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நீங்கள் பட்ஜெட் போடுவதே இப்போதைய நிலவரத்துக்கு ஏற்றது.
அப்படியே இல்லைனாலும் வருசம் 500₹ ஏற்றலாம் இது பெரிய அளவில் ஏற்றமில்ல.
சந்தா தவிர, க்ளாசிக் தடங்கள் என்பது அவரவர் விருப்பம் என்பதால் அதை பட்ஜெட் கணக்கில் எடுத்துக்க வேண்டியதில்லை.
"புத்தக விழாக்கள் ஸ்பெஷல்" என்பது அந்தந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பிப்பது, ஆகவே அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் கொண்டு வருவது இனிவரும் காலங்களில் அவசியமாகிறது.
இங்கு, "ஏற்கனவே விலை ஓவர், இதுல இது வேறயா?" எனும் வயிற்றெரிச்சலை விட", "இந்த முறை என்ன ஸ்பெஷல்?" என ஆர்வமாக கேக்கும் இதமான குரல்களே மெஜாரிட்டியாதலால்....bee happy sir ❤️.
கொரியர் பாக்ஸ் செலவை குறைக்க....
100,50 பக்கங்கள் கொண்ட புக்ஸ் என்றால் சாதாரண கொரியர் கவர்களிலேயே உள்ளூர்களுக்கு அனுப்பலாம் சார். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
200 பக்கம் +150 பக்கங்கள் என்றால் பாக்ஸ் தரலாம்.
2) சந்தாதாரர்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் சலுகை தரலாம் சார். புத்தகங்களோ அல்லது வேறு ஏதாவதோ (உங்கள் பட்ஜெட்க்கு தகுந்தவாறு).
இலவச புத்தகங்கள் தந்தால் அது சந்தாதாரர்களுக்கு மட்டுமானதாகவே இருந்தால் நல்லது, பொது விற்பனைக்கு வராமல் இருப்பது நல்லது.
3) நடப்பு சந்தாவில் என்றால் ரிப்போர்ட்டர் ஜானியை கொஞ்ச காலம் நிறுத்தலாம்,
பதிலாக புதிய கதைகள் போடலாம் அல்லது கார்ட்டூன் கதை போடலாம்.
நன்றி..🌹🌹🌹.
For point no 3
ReplyDeleteRemove cartoon comics or make it as seperate subscription with yearly 6 books. Except Lucky Luke nothing others impressed.
Now. Make our regular subscription as 7000 and add monthly one new comers or 6 new comers with yearly 2 books.
Based on user rating we change to regular channel from next year. Every year one exit and one new commers in regular slot compulsory or atleast 2 years once.
Comicselva