Powered By Blogger

Saturday, August 02, 2025

ஆ. அ. ஆ...!

நண்பர்களே, 

வணக்கம்! முன்னெல்லாம் சென்னை கிண்டியில் நெதமும் குதிரை ரேஸ் நடப்பது வாடிக்கை! மதியம் மூன்று அடித்துவிட்டாலே சென்னையின் ஆபீஸ்களில் பற்பல சேர்கள் சொல்லி ­வைத்தாற் போல கா­லியாகி விடுமாம்! "சாயா அடிச்சிட்டுத் திரும்பிடறேன் சேட்டா.. மூச்சா பெய்ஞ்சிட்டு வந்திடறேன் பாசு..'' என்று காணாது போகும் ஊழியர்கள் - அங்கே ரேஸ் மைதானத்தில் ஏதாச்சுமொரு குருத மேலே பணத்தைக் கட்டிட்டுப்புட்டு - "கமான்.. கமான்''என்று கூக்குரலி­ட்டுக் கொண்டிருப்பார்களாம்! So அப்போல்லாம் "மூணு மணி நமைச்சல்'' என்றால் ரொம்பப் பிரசித்தம்!

நமக்கோ கொஞ்சம் வித்தியாசமானதொரு அரிப்புண்டு - and அது ஆகஸ்டின் முதல் வாரயிறுதியோடு தொடர்பு கொண்டது!! அதற்கு "ஆ. அ. ஆ'' என்று பெயர்.. அதாவது ஆகஸ்டின் அளப்பரிய ஆனந்தம்! Oh yes- பதினோரு ஆண்டுகளாய் ஒவ்வொரு ஆகஸ்டின் முதல் வாரத்து இறுதியினை ஈரோட்டில் எல்லைகளில்லா அன்புகளின் மத்தியில் களித்திருந்து கழித்து வந்திருக்கிறோம்! கொரானா அசுரன் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளை விழுங்கியிருக்க, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் 2023 & 2024 செம அதகளப் பொழுதுகளாக்கிக் கொண்டதெல்லாம் நமது பயணத்தின் மைல்கல் தருணங்கள்!

2014-ல் துவங்கிய இந்தக் காதல் கதைக்குத் தான் எத்தனை - எத்தனை அத்தியாயங்கள்?!

*LMS ரிலீஸ்

*தல - தளபதி திருவிழா

*மின்னும் மரணம் அறிவிப்பு

*எழுத்தாளர் சொக்கன் அவர்களின் வருகை

*முதலும், கடைசியுமாய் அம்மா கலந்து கொண்ட ஈரோட்டு விழா!

*இரத்தப் படலம் கலர்த் தொகுப்பின் ரிலீஸ் அதகளங்கள்..!

*முத்து ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள்! 

*லயன் @ 40 லூட்டிகள்..!

என்று அடுக்கிக் கொண்டே போகலாம் - ஈரோட்டின் மண்ணில் நாம் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அற்புத நினைவுகளை! அதிலும் அந்த VOC பார்க் திட­லில் புத்தகவிழா நடந்து வந்த நாட்களில், Le Jardin ஹோட்ட­லிலும் சரி, மரத்தடிகளில் மாலைப் பொழுதுகளிலும் சரி, நாம் அடித்த கூத்துக்கள் ஒரு ஆயுட்கால நினைவுகள் என்பேன்! சகலத்தையும் மூட்டை கட்டிவிட்டு, வீட்டாண்ட ஒரு ஓரமாய் குந்திக் கிடக்க வேண்டியதொரு எதிர்காலத்து நாளில்- மஞ்சள் மாநகருடன் நமக்குள்ள இந்தப் பந்தம் பற்றியும், இங்கே நாம் உணர்ந்த மட்டற்ற அன்புகள் பற்றியும் அசை போடும் போது தான், இங்கே நாம் ஏற்றிக் கொண்ட மின்சாரங்களின் வீரியத்தின் முழுப் பரிமாணம் என்னவென்பது புரியும் என்பேன்!

But இந்த மகிழ்வுகளில் பங்கேற்று வந்த சீனியர் எடிட்டர் இன்று நம்மோடு இல்லை எனும் போது, நடப்பாண்டில் ஈரோட்டிற்கென பெருசாய் எதுவும் திட்டமிடலை! அடுத்த வாரயிறுதியில் (ஞாயிறு - ஆகஸ்ட்-10) ஒரு நாளுக்கு மட்டும் "பிரபல வைத்தியர் ஈரோடு வருகை'' என்ற பாணியில் ஒரு flying visit  திட்டமிட்டுள்ளேன்! ஏதேனுமொரு தோதான இடத்தில் சந்திப்பு நடத்திட நமது ஈரோட்டு சர்வாதிகாரியும், நண்பர்களும் தேடி வருகின்றனர்! அடுத்த ஓரிரு நாட்களில் தகவல்கள் தருகிறேன் folks - ஈரோட்டுப் பக்கமாய் அன்றைக்கு எட்டிப் பார்க்க உங்களுக்கு இயலுமெனில் wud love to see you!

சந்திப்புகளுக்குப் பெரிதாய் இம்முறை மெனக்கெடவில்லை என்றாலும் ஆகஸ்டை அதகளமாக்கிட நாம் தவறவில்லை! போன பதிவில் சொன்னது போலவே 4 x T's...!

Tintin

Tiger

Tex

The Classic Kings

என எக்கச்சக்க அதிரடி நாயகர்ஸ் இந்த மாதம் உங்களை சந்தித்து வருகின்றனர்! And எனது ஆரம்ப அனுமானமோ - முதலிடத்துக்கான போட்டி இம்முறை டின்டினுக்கும், டைகரின் தங்கக் கல்லறைக்கும் மத்தியிலி­ருக்கும் என்றேயிருந்தது! ஆனால், "இன்டிகேட்டரை இப்டிக்கா - அப்டிக்கா போட்டுப்புட்டு நேரா போற வித்தையிலே நாங்களுமே ஜித்துக்கள்டா தம்பு!'' என்று சொல்லாமல் சொல்­லிவிட்டீர்கள் guys! And இதுவரையிலான முதற்பார்வையின் தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆறு நாயகர்கள் கலந்து கலக்கிடும் The King's ஸ்பெஷல்-1 தான் இம்மாதத்து show stealer....!!

வேதாளர்; ரிப் கிர்பி; சார்­; காரிகன்; மாண்ட்ரேக் & விங் கமாண்டர் ஜார்ஜ் என அமெரிக்க அந்நாள் ஜாம்பவான்ஸ் ஒற்றை இதழில் இணைந்து களமிறங்குவது அஜால் குஜால் ரகளையாகவே இருக்குமென்று எனது திட்டமிடலில் சொல்லியிருந்தது! ஆனால், நடுவாக்கே ஏதோவொரு கலந்துரையாடலி­ன் போது- "ஐயே... எனக்கு அவரைப் புடிக்காதே...! இவர்னா ஆகாதே!'' என்ற ரீதியில் கொஞ்சக் குரல்கள் ஒலி­த்த வேளையில் லைட்டாக வயிற்றில் புளியைக் கரைத்தது! ஆனால், ultimately எனது துவக்கத்து gut feel பொய்க்கவில்லை என்பதைக் கடந்த மூன்று தினங்களின் feedfack நிரூபித்து வருகின்றன!" ஒரே நாயகரை விடாப்பிடியாய் படிப்பதைக் காட்டிலும், இந்த variety பிரமாதம்!'' என்ற எண்ணங்கள் பரவலாக உலவிடுவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே ஹேப்பி! 

Of course புராதனத்தின் பிள்ளைகளே இந்த நாயகப் பெருமக்கள்! ஆனால், யாருக்கும் சிக்கல் தராது, தனித்தடத்தில், தெளிவான அடையாளத்தோடு, இவர்கள் பவனி வரும் போது- "பிடித்தால் மட்டும் வாங்கிக்கலாம்! no தலைகளில் திணிப்பு! என்ற சாத்தியம் கை கொடுக்கிறது ! நம் மத்தியில் இந்த க்ளாஸிக் ஹீரோக்களை ஆராதிக்கும் அணியினர் கணிசமாய் இருப்பதால் அவர்களை உதாசீனம் செய்வது முறையாகாதே?! Truth to tell -  வேதாளரும், ரிப் கிர்பியும், சார்­லியும் மட்டுமே எனது current ரசிப்பு ­லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்! பாக்கி மூவரை முன்பு போல ஆராதிக்கத் தடுமாறுகிறது! ஆனால், இன்று நண்பர்களின் முகங்களில் தாண்டவமாடும் புன்னகைகளை உணர்ந்திடும் போது, எனது தடுமாற்றத்தை ஒரு பொருட்டாக்காமல் விட்டது உத்தமம் என்பது புரிகிறது! So இதே பாணியில் The King's ஸ்பெஷல்-2 ஜரூராய் தயாராகி வருகிறது! And அதனிலுமே ஏதேனும் ஒரு க்ளாஸிக் சூப்பர்ஹிட் மறுபதிப்பு இடம்பிடித்திடும்! Hail the Kings!!

டின்டின்! ரொம்பச் சிலருக்கே கேல்குலஸ் படலத்தை வாசித்திட அவகாசம் கிட்டியிருக்கும்! Yet இதுவொரு மெகா ஹிட்டாகிடும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை! அதுவும் ஆன்லைனில் அனல் பறக்க டின்டின் காணும் விற்பனைகள் மிரட்டல்!! ஒரு அசாத்திய ஜாம்பவான் - என்றைக்குமே, எங்குமே ஜாம்பவான் தானென்பதை இம்மியும் ஐயமின்றி புரியச் செய்கின்றன! இதோ- இப்போதே அடுத்த டின்டினின் பணிகளை ஆரம்பிச்சாச்சு! The Crab with the Golden Claws!!

TEX!! Again - பொம்ம பார்ப்பதைத் தாண்டி இந்த நெடும் சாகசத்தினை ரசித்திட யாருக்கும் பெருசாய் அவகாசம் கிட்டி இராதென்று நினைக்கிறேன்! Whenever that happens - தல ஒரு சூறாவளியைக் கிளப்பாது போக மாட்டார் என்பேன்! Simply becos - ஒற்றை நாயகராய், துணைக்கு கார்சன் கூட இல்லாது, கிட்டத்தட்ட 300 பக்கங்களை நகர்த்திடுவதற்கெல்லாம் ஒரு அசாத்திய ஆளுமை அவசியம்! அதிலும் தமிழ் சினிமாவின் சாயல்கள் மிகுந்திருக்கும் இந்தக் களத்தில் நாம் ரசிக்க கணிசமான சமாச்சாரங்கள் உண்டு! எனது ஒரே ஆதங்கம் : இதில் மட்டும் கார்சனும் இருந்திருந்தால் கதை இன்னும் ஒரு notch மேலே சென்றிருக்கும் என்பதே!! 

ரைட்டு... கை நிறைந்திருக்கும் இதழ்களின் அலசல்களில் இந்தப் பகுதியினை இனி சற்றே கலகலப்பக்கினால் சிறப்பு என்பேன்! உங்களின் உற்சாக அலசல்களே, மதில் மீதான மியாவ்களை சட்டென்று ஆர்டர் செய்திடத் தூண்டிடும் க்ரியாஊக்கிகள்! So முன்பு போலவே இதழ்கள் சார்ந்த அலசல்களை இங்கே கொஞ்சம் அழுத்தமாக்கிடலாமா folks?

Before I sign out - 4 கேள்விகள் :

1.அட்டவணையில் ஒரு லாரி லோடு டெக்ஸ் ; இரண்டோ - மூன்றோ டின்டின் என்றான பின்னே மிஞ்சிடும் slots மிகக் குறைவே! லக்கி, சிக் பில், ரூபின் etc etc என இன்றியமையா நாயக / நாயகியர் உட்புகுந்த பிற்பாடு எஞ்சிடுவதோ கொஞ்சத்திலும் கொஞ்சமே! So 2026 அட்டவணையில் - "புது வரவுகள்" எனும் பெட்ரோமாக்ஸ் லைட் அவசியமே அவசியம் தானா?

2.நடப்பாண்டின் ஹீரோ / ஹீரோயின் யாருக்கேனும் ஒரு சின்ன பிரேக் தர அவசியம் இருக்கிறதா?

3.காதில் தக்காளி சட்னி கேள்வி : ஆண்டுக்கு எத்தினி TEX மதி சாரே?

4.And உங்களது favorite ஈரோடு நினைவுகள் எவையோ? 

Bye all... See you around! Have a great weekend!


80 comments:

  1. If you ask me the real hit is Horror Special. All the stories were unique and Twists. Completed Thanga Kallarai too (I don't know how many times I read it). Currently reading Tex (half way through :-)

    ReplyDelete
  2. படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. Vijayan sir, please give an image in this post. Without image, post looks like without sugar in the tea. 🙂

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்க வேற சார்! Blogger என்ன செய்துள்ளார்களோ தெரியலை - இன்னிக்கி இமேஜஸ் ஏற்ற முடியலை 🤕

      Delete
    2. அப்போப்ப கமெண்ட் போடுறதே இரண்டு மூணு தடவை முயற்சி பண்ண வேண்டியதாக உள்ளதுங்க

      Delete
  4. To be frank, if there is no Tex for a month I hesitate to start reading. I don't know why :-)

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. Vijayan sir, please try to publish 'piralayam' aka pandemonium with sensor in 2026.

    ReplyDelete
  7. சார் ஆண்டுக்கு 24 டெக்ஸ் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆத்தி.. முன்பே இந்த message பார்த்திருந்தா நானும் இதையே கேட்டிருப்பேனே..

      Delete
  8. 1.புது வரவுகள் கண்டிப்பாக அவசியம்...
    2.வந்தவரை எல்லோரும் நலம் என்றுதான் நம்புகிறேன்...
    3.ஆண்டுக்கு 15 ஆசை,12 வது வந்தால் மதி என்பேன்...
    4.All is Well...

    ReplyDelete
  9. The Crab With The Golden Claws

    தல ஹேட்டாக் & டின்டின் இருவருக்கும் ஏற்படும் முதல் சந்திப்பே இதில்தான்...

    அதனால்தான் இந்த இதழ் one of my favourite டின்டின் சாசகசம்

    கொஞ்சம் சட்டுபுட்டுன்னு போட்டுத் தாக்குங்க சார்... இன்னும் நாலஞ்சு மாசமாக்கிடாதீங்க தெய்வமே...

    🙏🏼🥺

    ReplyDelete
    Replies
    1. 😘🥰👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

      Delete
  10. 1. புது வரவுகள் அவசியம் தான் சாரே .. எனினும் அதிகம் இடம் பெறாமல் இருப்பதே மதி ( இல்லையேல் உங்களை மூ.ச.மிதி ..😉😉 Just Fun )

    குழந்தைகளை கவருகிறது போல் சிறுவர் மலரில் வெளி வந்த எக்ஸ்ரே கண் + பல முக மன்னன் ஜோ + பேய்ப்பள்ளி + ஒரு குண்டு பையன் சாப்டிட்டே இருப்பானே பெயர் மறந்து விட்டது இவர்களின் கதைகளையும் புக்ஃபேரில் விச்சு கிச்சு போல் வெளியிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் சார்

    2. தாத்தாஸ் க்கு கொஞ்ம் கேப் விடலாம் சார் .. + ஸ்டெர்ன் + ஸ்பூன் & வொய்ட்

    3. 09 சரியானது .. அப்பும்தான் ஸ்பெஷல் ல் போட்டு தாக்குறீங்களே .. 😍😍 ( முக்கியமா குட்டி இலவச இதழ்கள் .. விலைக்கென்றாலும் சரி மறுபடியும் கொண்டு வாருங்கள் சார் )

    4. 2016 ஆண்டு லீதார்ஜன் ல் அரங்கு நிறைந்த அந்த தருணம் நேரிலே பார்க்காத அத்துணை நண்பர்களையும் நேரில் பார்த்து அளவாவியது .. மூத்த ஆசிரியர் + அம்மா + சொக்கன் சார் என அனைவரையும் நேரில் சந்தித்து அளவாவியது ..

    +
    2024 ஆம் வருடம் முத்து 50'S

    ReplyDelete
  11. 1. பெட்ரோமாக்ஸேதான் வேணும்

    2.

    3. 12 புத்தகங்களாவது Tex வேண்டும்

    4. என் இரட்டை பசங்களை கை குழந்தைகளாக உங்களிடம் அறிமுகம் செய்தது...

    ReplyDelete
  12. 1. டியூராங்கோ, அண்டர்டேக்கர் மாதிரியான கமர்சியல் நாயகர்களாக இருந்தால் புது நாயகர்கள் வரட்டும்.
    2. தோர்கல் அல்லது ஜானி
    3. 24
    4. 2016 ஆகஸ்ட் புத்தக விழா. முதல் தடவை உங்களை, சீனியர்/ஜூனியர் எடிட்டர்களை, நண்பர்களை என சந்தித்த தருணம். ஒரு Jerry Maguire moment ன் போது என்னை ரீ சார்ஜ் செய்தது 2016 ஈபுவி தான்.

    ReplyDelete
  13. 1.புது வரவுகள் அல்லது புது வரவு அவசியம் சார்

    2.முடிந்தால் மேகி கேரிசன் மற்றும் Durango சீக்கிரம் போட்டு முடிச்சு விடுங்க சார்

    3.ஆண்டுக்கு TeX 10 இளம் டெக்ஸ் 10
    (கொஞ்சம் ஓவரா போறோமோ... போவோம்)

    4.கா.க.காவில் இரு ஜாம்பவான் நண்பர்களிடம் autograph வாங்கிய சமயம்

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸ் , நன்றிகள் சகோ

      Delete
  14. //புது வரவுகள்" எனும் பெட்ரோமாக்ஸ் லைட் அவசியமே அவசியம் தானா?//

    ஒன்றாவது தாருங்களேன், சார்

    ReplyDelete
  15. The கிங்ஸ் ஸ்பெசல் - 1.
    முதல் கதை. புது புது அர்த்தங்கள்.
    'வேதாளருக்கு திருமணம்' ஏற்கனவே வந்து விட்டது‌. இது அதற்கு முந்தைய கதை.

    டயானாவை திருமணம் செய்ய நகரத்தில் சம்பாதித்து இயல்பு வாழ்க்கை வாழ முடியுமா? என்ற பெருங்குழப்பத்தில் வேதாளர்.
    கானகத்தைச் சுற்றி round அடித்து, நமக்கும் சுற்றிக் காட்டி விட்டு, பிரியா விடை பெற்று, நகர வாழ்க்கையில் நுழைகிறார். நேர்மையாய் கூலி வேலை செய்து சம்பாதிக்க பாடுபடுகிறார். கூடவே டெவில்.
    'ஊருக்குள்ள ஓநாய் புகுந்த மாதிரி' என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஊருக்குள் வேதாளரோடு நிஜ ஓநாய் டெவில்!
    நம்ம வேதாளரோ 'பாட்சா' மாணிக்கம் கணக்காய், தன்னை ஏமாற்றுபவனை கூட ஒன்றும் செய்யாமல் அமைதியாய் வாழப்பார்க்கிறார். நேர்மையாய் நகரத்தில் வாழ்வது எவ்வளவு சிரமம் நமக்குத் தெரியாததா?
    ஒரு கட்டத்தில், மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் நாலு முரடர்களை கும்மாங்குத்து விட, 'வேதாளர் முத்திரை' மூலம் 'மாணிக் பாட்சா' வந்திருப்பது ஊருக்குள் தெரிந்து போகிறது. அமைதியாய் பதுங்குகிறார்கள் ஊர்த் திருடர்கள்.

    அதிலும், ஒரு ஹைலைட் என்னவென்றால் இரவில் தனியே நடக்கும் வேதாளரிடம் 'ஊருக்குள் வேதாளர் வந்திருக்கிறார். எந்தப் பிரச்சனையும் செய்து விடாதே!' என்று எச்சரித்து விட்டுப் போகிறான் ஒரு திருடன். ஹா..ஹா..ஹா....
    'திருநெல்வேலிக்கே அல்வாவா'!
    நல்ல சுவாரசியம்தான்!

    அப்புறம் என்ன முடிவெடுத்தார் வேதாளர்?
    வேறு வழியில்லை.
    ஈடன் கார்டனுக்கு போவதைத் தவிர!
    அப்பாடா! நமக்கும் இனி கதைகள் கிடைக்கும்!
    நல்ல வித்தியாசமான வேதாளர் கிளைக்கதை.
    Good for Kings special.

    ReplyDelete
  16. ///காதில் தக்காளி சட்னி கேள்வி : ஆண்டுக்கு எத்தினி TEX மதி சாரே?///

    12 என்பது இந்தாண்டு 9-ஆக உள்ளதுங்க, சார்

    இந்த 9-பதை குறைக்காமல் இருந்தால் ஜெயம், சார்

    ReplyDelete
  17. //And உங்களது favorite ஈரோடு நினைவுகள் எவையோ? //


    2016 முதன் முதலில் வந்த ஈரோடு மீட்😊😊😊😊😊😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலில் காமிக்ஸ் அன்பர்களை சந்தித்த அனுபவம். அனைவரின் காமிக்ஸ் குதுகலத்தை நேரில் காண கிடைத்த முதல் சந்தோசம்.
      சகோதரர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது.

      ஹாட்லைன், ப்ளாக், புகைப்படம் இவற்றில் மட்டும் அறிமுகம் இருந்த தங்களை நேரில் பார்த்து உரையாடிய தருணம்


      தங்கள் பெற்றோரை ஒரு சேர சந்தித்தது. தங்கள் தாயார் அருகில் உட்கார்ந்து பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
      தங்கள் சிறுவயது காமிக்ஸ் காதலை பகிர்ந்து கொண்டார்.

      மரத்தடி மீட்டில் சிறிது நேரம் உரையாடவும் முடிந்தது. காமிக்ஸ் நேசங்களை விடைபிரிய மனமில்லாமல் விடை பெற்ற தருணம்.

      Delete
  18. நீண்ட நாட்களாச்சோ.... பதிவு வந்து.

    ReplyDelete
  19. //நடப்பாண்டின் ஹீரோ / ஹீரோயின் யாருக்கேனும் ஒரு சின்ன பிரேக் தர அவசியம் இருக்கிறதா?//


    என் பார்வையில் யாரும் இல்லைங்க, சார்

    ReplyDelete
  20. சூப்பர் சார்...உங்க உற்ச்சாகம் என்னையும் தொத்திகிச்சு....

    1. டெக்ஸ் போடுவீங்களோ மாட்டீங்களோ...ஆனா புது நாயகர்கள் நிச்சயம் வேணும்....புதுசுன்னாலே தேடலுமாவலும் சகஜம் தானே
    2.இல்லை...இல்லாமலில்லை
    3.முதல் கேள்விக்கு எனது பதிலிடித்தாலும்...டெக்ஸ் மாதாமாதம்....
    4.முதன்முறை பரணி ஈவி சிபி புனிதர் ஸ்டாலின் தங்களை சந்தித்த என்பிஎஸ் ஆண்டுக்கு முந்தயாண்டே...எல்லாமே கவிதை...அதகளங்கள்

    ReplyDelete
  21. Tex12 with your choices sir any other barracuda also

    ReplyDelete
  22. உண்மைதான் சார்..
    சீனியர் இல்லாத விழாவை நினைத்து பார்க்க முடியவில்லை. ஈரோடு விழாவை தள்ளி தவிர்த்தது நல்ல விசியம் தான்.

    சிரிக்க சிரிக்க டின்டின் முடித்ததும்
    டெக்ஸ் எடுத்தாச்சுங்க சார்.
    கதை வழக்கமான டெக்ஸ் பாணியில் இல்லாமல் வேறு விதமான பாணியில் வேறு ஏதோ ஹீரோ கதை படிப்பது போல் வித்தியாசமான ரீடிங்ல் சுவாரஸ்யமாக உள்ளது.

    1) புது வரவுகள் அவசியம் சார்.
    ரெகுலர் ஹீரோக்கள் பாணி நமக்கு தெரிந்ததுதான், புதிய வரவுகளின் பாணிகள்,கதைகளங்கள் நாம் அறியாதது.
    ஆகவே புதிய நாயகர்கள் வருகை அவசியம் சார்.
    இந்தாண்டு வந்த ஸகுவோரா அருமையான ஹீரோ.

    2) ஜானிக்கு கொஞ்சம் ரெஸ்ட் தரலாம்.

    3) இந்த வருடம் போல கதைத்தேர்வுகள் நச்சுனு இருப்பின் மாதமாதம் டெக்ஸ் தெறிக்க விடுவார்.
    ஆனால் மற்றவர்களுக்கும் வழி விடும் நோக்கில் ஒரு மாதம் விட்டு 1 மாதம் என 6 டெக்ஸ் அதில் தீபாவளி ஸ்பெஷலாக ஒரு 700 பக்க குண்டு புக் + ஏதாவது மறுபதிப்பு.

    4)2022.
    40 வருட கற்பனை கனவுலக ஜாம்பவான்களை நேரில் பார்த்து திகைத்தது.
    உண்மையில் நாம் பார்ப்பது ஆஸ்தான ஆசிரியர் விஜயன் சார் தானா? என மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்த வருடம்.
    தொடர்ந்த 2 வருடத்தில் சீனியர் ஐயா, கருணையானந்தம் சார் என ஜாம்பவான்களை கண்குளிர பார்த்து ரசித்தது.

    நன்றி.

    ReplyDelete
  23. *Kings ஸ்பெஷல்* 😘🥰👍🙏

    செம்ம சார் 😘🥰👍🙏

    இதே ஸ்டைல் தொடருங்கள் sir😘🥰

    ReplyDelete
  24. வரும் நடப்பாண்டில்
    இளம் டெக்ஸ்,
    விஷம்,
    டெக்ஸ் 75 வது சிறப்பிதழ் களுக்கு வாய்ப்பு உண்டாங்க சார்?.
    ஆவலுடன் waiting 🔥🔥.

    ReplyDelete
  25. இளம் டெக்ஸ் தனித்தொடராக வேண்டுங்க, சார்

    ReplyDelete
  26. சார் ஏற்கனவே எத்தனைனு நீங்க கேட்டப்ப ஆண்டுக்கு 12என்றே பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.(அதிலும் "குண்டு"புக்கு12)வேணுமுனு நீங்க கேட்காமலேபெரும்பான்மையோர் தெரிவித்திருந்தோம்.

    ReplyDelete
  27. இப்பவும் அதே . 2026ல் டெக்ஸ் குண்டு புக் 12 குடுங்க சார்

    ReplyDelete
  28. மாண்ட்ரேக் . இம்முறையும் ஸயன்ஸ் ஃபிக்ஷன்.சார்60 களில்இதுபோல் கதைகள் எழுதப்பட்ட போது வித்யாசமான புதுமையான கதைக் களமாகக் கொண்டாடப்பட்டன.அதற்குபிறகு மர்ம மனிதர் மார்ட்டின்,நேற்று போய் நாளை வா போன்ற பல வித்யாசமான கதைகளை நாமே கொண்டாடி விட்டோம் எனும் போது கிளாசிக் கதைகளில்ஸயன்ஸ் ஃபிக்ஷன் கதைகள் வெகுவாக கவரவில்லை ங்க சார் (குறிப்பாக மாண்ட்ரேக் கதைகளில் )கிளாசிக்கில்முடிந்தவரை ஸயன்ஸ் ஃபிக்ஷன் வேண்டாம் சார்.

    ReplyDelete
  29. வணக்கம் நண்பர்களே 💐🙏💐

    ReplyDelete
  30. இளம் டெக்ஸ் 2 குண்டு 5+5 =10
    டெக்ஸ் 10 double, single, triple and குண்டு

    ReplyDelete
  31. 3. கேள்விக்கு பதில்.

    ஆண்டுக்கு 24 டெக்ஸ் புத்தகங்கள் (தீபாவளி ஸ்பெஷல் சேர்க்காம) மட்டும் போதும். 👍

    ReplyDelete
  32. c.s.khannan sir உங்கள் விமர்சனத்தில் மாணிக் பாட்சா ஒப்பீடு செம .ரசித்து மீண்டும் மீண்டும் சுவாரஸ்யமாகபடித்துக் கொண்டுள்ளேன்

    ReplyDelete
  33. ஈரோடு புத்தக திருவிழா அனுபவங்கள் எல்லாம் மறக்க முடியாத இனிமையான நினைவுகள்.

    ReplyDelete
  34. Tex குறைந்தது 24 புக் ..(யங் டெக்ஸ் சேர்த்து).. டெக்ஸ் 110 ல் சுவாரஸ்யம் எப்போதுமே குறைவுதான் சார், எனவே குண்டு குண்டாக...

    நாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் பட்ஜெட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.. Inflation கூ டிக்கொண்டே போவதால் வருடத்திற்கு 10% ஆவது ஆண்டு சந்தா பட்ஜெட்டை ஏற்ற முயற்சி செய்யலாமே. அதிக புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்பு இருக்குமே.
    இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு புத்தகங்களே வருவதால் மிகவும் வறட்சியாக இருக்கிறது சார்..

    ReplyDelete
  35. ஜானி, தாத்தா, ஸ்பூன் , இவர்களை ஒதுக்கி, வேதாளரை ஸ்பெஷல் இதழ்களுக்கு மாற்றி பட்ஜெட்டில் புதிய வரவுகளை புகுத்தலாம் சார்.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை யுவர் ஆனர்!!

    ReplyDelete
  36. Dear sir, Consider publishing Balance 7 episodes of Thorgal as 2 shots in 2026.
    Also look into the possibility of publishing Eagle's Doomlord (B&W) which once came in Rathinabala as Vithiyannal( if my memory is right)

    ReplyDelete
  37. 1. ஒவ்வொரு ஆண்டும் புது ஹீரோக்களை கொண்டு வாருங்கள்.... பிடித்திருந்தால் கூட வைத்திருப்போம் இல்லையேல் மூட்டை கட்டுவோம். டெக்ஸ் டைகர் எல்லாம் புதிதாக வந்தவர்கள் தானே அப்போது .... வரவேற்போம் அனைவரையும் 🌹🌹🌹. 2. இந்த ஆண்டு வந்த ஹீரோக்கள் நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிற மாதிரி.தெரிகிறது..
    3. ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் உடன் சேர்ந்து காடு மேடு சுற்றுவதை தவிர்க்க முடியவில்லை.... முடிந்தால் இரண்டாக கொடுத்தால் கூட சந்தோஷமே ❤️❤️❤️❤️.
    4. நாலாவது கேள்விக்கு நான் அம்பேல்.ஏனென்றால் இதுபோன்ற சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத துரதிஷ்டசாலி.. வீட்டில் நடக்கும் நல்லதுக்கே கலந்து கொள்ள முடியாத வாழ்க்கை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரே சந்தோசம் நமது காமிக்ஸ் படிக்கும் போது மட்டுமே. ❤️❤️❤️❤️

    ReplyDelete
  38. Hi editor sir ,
    1. Yes .
    3.For Tex, 10 books for an year sir

    Kamache series , really enjoyed this cowboy stories sir. Is there any chance of his stories coming in future sir ?

    ReplyDelete
  39. புதுசு வேணும் சார்...

    அது தான் நமக்கு பொக்கிஷங்களை வெளியே திறந்து காட்டும் சாவி

    ReplyDelete