Powered By Blogger

Sunday, February 02, 2025

பிப்ரவரியில் பிப்ரவரி !

 நண்பர்களே,

ஞாயிறு வணக்கங்கள் ! இப்போதெல்லாம் சனிக்கிழமை தான் ஊரிலிருக்கும் அத்தனை வேலைகளும் ஒருசேரக் குவிந்திடுகின்றன & பதிவுக்கு அமர்வதற்குள் கொட்டாவி கிழிய ஆரம்பித்து விடுகிறது !! And இந்தப் புத்தாண்டின் தீர்மானங்களுள் ஒன்று - "ராக்கோழிக் கூத்துக்கள் வேண்டாம்" என்பதாக இருப்பதால், தூக்கத்தோடு மல்லுக்கட்டாது சமாதானக் கொடியினைப் பறக்க விட வேண்டிப் போகிறது ! Maybe வரும் வாரம் முதலாய் வெள்ளிக்கிழமையே பதிவினை எழுதித் தந்து விடணும் போலும் - ஆற அமர டைப் ஆகி வந்தாலுமே சனியிரவுக்கு சுலபமாகிட !

நேற்றைக்கே பிப்ரவரி புக்ஸ் கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் புறப்பட்டு விட்டன folks ! கொஞ்சமே கொஞ்சமாய் நான் தப்புக்கணக்குப் போட்டிருக்காவிடின் ஜனவரியிலேயே பிப்ரவரி சாத்தியமாகி இருக்கும் தான் ! But ஸ்பூன் & ஒயிட் மொழிபெயர்ப்பு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாய் நேரத்தை விழுங்கி விட்டிருந்தது ! கார்ட்டூன் தானே ? என்று லைட்டாக மெத்தனமாய் இருந்து வைத்தது தான் தப்பாகிப் போச்சு - ஒவ்வொரு பக்கத்திலும் சராசரியாக 12 படங்களாச்சும் இருக்க,ஒரு பிரேமுக்கு 2 வசனங்கள் என்று வைத்துப் பார்த்தாலே ஸ்கிரிப்ட் எகிறி விடுகிறது ! And இந்தத் தொடரே கொஞ்சம் offbeat ரகம் என்பதால், கதாசிரியர் என்ன சொல்ல முனைகிறார் ? எதை சித்திரங்களின் மொழிக்கு விட்டிருக்கிறார் ? என்பதை கிரகிக்கவுமே நேரம் எடுத்து விட்டது ! So இந்தப் பஞ்சாயத்துக்களில் ஒன்றரை நாட்கள் கூடுதலாய் செலவாகியிருக்க, பிப்ரவரிக்கே பிப்ரவரி என்றாகிப் போனது ! ஆனால் - நாளை காலை உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டவுள்ள பார்சல்களை பிரித்து, புக்ஸ் மூன்றையும் கையில் ஏந்தும் சமயத்தில் ஒரு விசாலமான புன்னகை உங்கள் வதனங்களை அலங்கரிக்காது போனால் வியப்படைவேன் - all 3 books have come out brilliantly !! அதிலும், 'தல' டெக்ஸ் ஆல்பத்தினை நீங்கள் கையில் ஏந்தும் நொடியின் முதல் ரியாக்ஷனை பார்க்க மட்டும் வழி இருந்தால் செமையாக இருக்கும் ; கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பிக்கு செம fight தரவல்ல ஆல்பமாய் அமைந்துள்ளது !! And நண்பர் ஜகத்தின் எழுத்துரு அந்த புக்குக்கு தந்திடும் கெத்து என்ன ? என்பதை நாளை பார்க்கும் போது சர்வ நிச்சயமாய் ஒரு மானசீக 'ஓ' போடாது இருக்க முடியாது !! அப்புறம் நாளை முதல் 'தல' vs 'கோடாரி மாயாத்மா' யுத்தமும் ஆரம்பித்தால் I won't be surprised at all !! இரு இதழ்களுமே வாசிப்பில் தெறி ஸ்பீடு ; நம்ம ஜம்பிங் பேரவை மட்டும் சித்தே செண்டை மேளங்களுக்கு ஏற்பாடு செய்து விட்டால், போட்டி அட்டகாசமாய் இருக்கக்கூடும் ! 

ஆன்லைன் லிஸ்டிங் கூட போட்டாச்சு : https://lion-muthucomics.com/latest-releases/1301--2025-february-pack.html 

Happy Shopping & Reading all !!

Moving on - ELECTRIC '80s தனித்தடத்தின் அடுத்த இதழாக நமது சட்டி மண்டையன் ஆர்ச்சி ரெடியாகி வருகிறான் ! 38 வருஷங்களுக்கு முன்னே - இதே பிப்ரவரியில் 31,000 பிரதிகள் விற்றுத்தள்ளிய "புரட்சித்தலைவன் ஆர்ச்சி " தான் இந்த "அதிரடி ஆர்ச்சி ஸ்பெஷல்"ஆல்பத்தின் highlight ! And இதனூடே பணி செய்யும் போது எக்கச்சக்க flashbacks !!! அந்நாட்களில் சந்தாக்கள் என்பதெல்லாம் கிட்டத்தட்ட பூஜ்யமே ; சகலமும் முகவர்கள் மூலமாய் விற்பனை கண்டிடும் ! கிட்டத்தட்ட 250 பேர் வாங்கிடுவர் ; அவர்களுள் 225 பேராச்சும் ரெகுலர்ஸ் ! இருபதோ - முப்பதோ பிரதிகள் வாங்குவோருக்கு தபால் பார்சல்களில் செல்லும் and அவர்களின் எண்ணிக்கை உத்தேசமாய் 40 இருக்கும் ! So மீத 185 பேருக்கும் ஒவ்வொரு மாதமும் பண்டல்களில் தான் புக்ஸ் பயணமாகும் ! அந்த நாட்களிலெல்லாம் பேக்கிங் செய்ய நம்மிடம் நிரந்தரப் பணியாளர் கிடையாது ; பண்டலுக்கு ரூ.2 என்பது கூலி ; contract அடிப்படையில் நம்மிடம் ஓவியராய் பணியாற்றிய காளிராஜனின் சித்தப்பா தான் வந்து பண்டல்கள் போடுவார் ! இந்த "புரட்சித் தலைவன் ஆர்ச்சி" இதழுக்கு just about every agent - மாமூலைக்காட்டிலும் கூடுதலாய் ஆர்டர் செய்திருக்க, பேக்கிங் பணியே ஒரு திருவிழா போலானது !! பணி முடித்த போது இரவு மணி மூணு !! நான் செய்திட அங்கு வேலை என்று பெருசாய் இல்லாத போதிலும், இந்த சந்தோஷ மேளாவை பராக்குப் பார்க்கவே வீட்டுக்குப் போகாமல் நானும் ஆபீஸிலேயே குந்தியிருந்தேன் ! மறுநாள் காலை பண்டல்களை ரயிலுக்கு எவை ? லாரிகளுக்கு எவை ? என்று பிரிப்பதற்குள் பாதிப் பிராணன் போய்விட்டது ! கம்பியூட்டர்கள் நஹி அந்நாட்களில் ; so 225 பில்களும் நம்ம கைப்படவே போட்டாகணும் & ஒவ்வொரு பார்சலோடும் அதற்கான கச்சாத்துக்களை எழுதி ரெடி பண்ணிட வேண்டும் ! பெண்டை கழற்றும் அந்தப்  பணிகளை மொத்தமாய் முடித்த பிற்பாடு, கிட்டங்கியில் வெறும் ஆயிரமோ, என்னவோ புக்ஸ் மிஞ்சியிருப்பதை பார்த்த நேரம் அப்டியே நம்ம ஸ்பைடர் சாரின் ஹெலிகாரில் பறப்பது போலொரு பீலிங்கு மேலோங்கியது இன்றைக்கும் நினைவுள்ளது !! இதில் பெரும் கூத்து என்னவெனில் - அந்த நாட்களில் லயன் ; திகில் ; மினி-லயன் & ஜூனியர் லயன் - என மொத்தம் 4 புக்ஸ் போட்டுத் தாளித்துக் கொண்டிருந்தோம் !! So பயணம் செய்தது ஆர்ச்சி மாத்திரமல்ல - 3 more books too !! வாழ்க்கையில் மறக்க இயலா அத்தருணங்களை ஏதாச்சும் ஒரு AI பூதத்தைக் கொண்டு மறுக்கா clone பண்ண மட்டும் முடிந்தால் - பேசாமல் அந்த 1980'ஸ் மத்தியில் செட்டில் ஆகிப்புடுவேன் !!   

Speaking of Classics - இன்றைய யதார்த்தத்தின் ஒரு முகம் பற்றியும் பேசாது இருக்க இயலவில்லை folks !! புத்தக விழாக்களில் மாயாவிக்களும், லாரன்ஸ்-டேவிட்களும், ஜானி நீரோக்களும், வேதாளர்களும், மாண்ட்ரேக்களும் சிறப்பாக போணியாகி விடுகிறார்கள் தான் ! ஆனால் Classics தனித்தட சந்தாக்களில் துவக்க நாட்களின் துள்ளல் மிஸ்ஸிங் !! Smashing 70s ஆல்பங்கள் பார்த்த சந்தா ரகளைகள் ஒரு வரலாற்று உச்சம் ! Supreme '60s கூட செமத்தியான ஓட்டமே ! ஆனால் ELECTRIC '80s - சமோசாவை அரைத்த படிக்கே 'வாக்கிங்' என்ற பெயரில் சாணி மிதிப்போரின் நடையினை ஒத்த வேகத்தில் தான் நகன்று வருகிறது ! இத்தனைக்கும் இந்த வரிசையில் ஸ்பைடர் & ஆர்ச்சி தவிர்த்த மீத ஆல்பங்கள் எல்லாமே கிளாசிக் நாயக / நாயகியரின் புதுக் கதைகள் தான் ! Yet - அந்த ஆர்வம்ஸ்கி - ரொம்பவே மிஸ்ஸிங்ஜி ! 



இங்கு ஒரு வேடிக்கையான தகவலுமே : 

இங்கிலாந்தில் இந்த கிளாசிக் பார்ட்டீஸ் வலம் வந்து சக்கை போடு போட்டதெல்லாமே 1960-களில் ; 1970-களில் & 1980-ன் நடுப்பகுதி வரையிலும் ! So எப்படிப் பார்த்தாலும் அன்றைக்கு இவற்றை ரசித்த வாசக வட்டத்தின் பெரும்பான்மை, இன்றைக்கு டொக்கு விழுந்த கன்னங்களோடு, யானைகளையே உற்று உற்று பார்க்கும் பார்வைத்திறனோடு தான் சுற்றி வந்து கொண்டிருக்க வேணும் ! Yet - இப்போது இங்கிலாந்தில் க்ளாஸிக் நாயகர்களை ரவுண்டு கட்டி தூசி தட்டித் துயில் எழுப்பி, தொகுப்புகளாய் போட்டுத் தாக்கி வருகின்றனர் ! மாயாவி நிறைய வந்து விட்டது ; ஸ்பைடர் கணிசமாய் ; இப்போது ஆர்ச்சி வந்துள்ளது ; இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ! எனக்கென்ன வியப்பெனில் - இவை விற்பனையில் இன்றும் சக்கை போடு போடுவது எந்த வயதிலான வாசகர்களின் சகாயத்தில் ? என்பதே !! அங்கும் நோஸ்டால்ஜியா போட்டுத் தாக்கிடுகிறதா ? அல்லது இன்றைய எறும்பு மேன் ; கரும்பு மேன் - என்ற சூப்பர் ஹீரோ கலாச்சாரங்களுக்கு அந்நாட்களின் க்ளாஸிக் நாயகர்ஸ் கூட தேவலாம் ! என்று இன்றைய இளம்வட்டம் கருதுகிறதா ? பிரில்லே !!

எது எப்படியோ - இங்கு பழையவர்களுக்கு ஒரு பிரேக் தரும் காலகட்டம் புலர்ந்துள்ளதா ? என்பதே இந்த நொடியின் கேள்வி எனக்கு ! (ஆமா...ஆமா..பிரேக் விட்டுப்புட்டா நான் வெறும் 900 ரூவாயிலே சேவை ஆத்துவேன்ல்ல....!! என்றொரு குரல் கேட்கிறது தான் !) And if at all மறுபதிப்புகளாய் இன்னமும் சில இதழ்கள் self எடுக்குமெனில் அவற்றினை பட்டியலிட இயலுமா guys ? Oh yes - லிஸ்ட்டில் முதல் பெயராய் "தங்கக் கல்லறை" இருக்கும் என்பது தெரியும் ; but அது நீங்கலாய் இன்னமும் உங்கள் ஆர்வ மீட்டர்களை உசுப்பி விடக்கூடிய மறுபதிப்புகளாய் எவற்றைச் சொல்வீர்களோ ? Your wishlists ப்ளீஸ் ?

அதற்காக உங்களின் பட்டியல்கள் வந்த மறுநாளே மறுபதிப்பெனும் சமுத்திரத்துக்குள் தொபுக்கடீர் என்று நான் குதித்து விடவெல்லாம் போவதில்லை தான் ; நீச்சல் தெரியாத கோமுட்டியே என்பதையெல்லாம் மறந்து விடமாட்டேன் ! But கிட்டங்கியில் உறங்கும் தேர்வுகளாய் அல்லாத மறுபதிப்ஸ் எவையென்று தெரிந்து கொண்டால், முன்செல்லும் நாட்களில் அவற்றினை சென்னைப் புத்தக விழாக்களில் ; கோவையில், சேலத்தில், ஈரோட்டில் - என்று திட்டமிட உதவிடும் ! So your thoughts ப்ளீஸ் ?

Before I wind up - புத்தக விழா news ! திருப்பூரில் இன்று நிறைவு காண்கிறது புத்தக விழா !! And இறுதி தினமான இன்றைக்கும் விற்பனை சூடு பிடித்திடும் பட்சத்தில் போன வருஷத்து ரெக்கார்டை தொட்டு விடுவோம் ! எப்படியேனும் ஆங்காங்கே நம்ம B டீமாக செயல்பட்டு, நமது புக்ஸையே பிரதானமாய் விற்று வருவோரின் சேல்ஸ் நம்பரையும்  கணக்கில் சேர்த்துக் கொண்டால், "லயன்-முத்து" குழும புக்ஸ்களின் விற்பனை already திருப்பூரில் ஒரு புது உச்சத்தை தொட்டாச்சு !! விற்பனை கேந்திரம் எதுவாக இருப்பினும், அத்தனை காமிக்ஸ் வாசகர்களின் கரங்களிலும் நமது புக்ஸ் தென்படுவதில் ஹேப்பி அண்ணாச்சி ! அதிலும் குறிப்பாக போன மே மாதம் FREE COMICS DAY என்று அறிவித்து, விலையின்றி நாம் தந்த இதழ்கள் கூட இத்தனை தூரம் பயணித்து, அவையும் இன்று போணியாவதை பார்க்கும் போது நமது இதழ்களின் கெத்து ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது !! "விலையில்லாதவை" என நாமே நிர்ணயித்தாலும் - 'ஊஹூம்....இல்லீங்கோ !! இவற்றிற்கு என்றைக்குமே மதிப்புண்டு" என்பது கண்முன்னே நிரூபணமாகி வருகிறது !! Awesome !!

And நெல்லையில் நடந்து வரும் புத்தக விழாவினில் இன்று DAY 3 ! அந்தப் பகுதி வாசகர்கள் - ஒரு விசிட் ப்ளீஸ் ?

Bye all...have a cool Sunday ; see you around !! ஆர்ச்சி பயலோடு எடிட்டிங்குக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் நான் ! 

83 comments:

  1. Replies
    1. இவர என்ன பண்ணலாம் சகோ😤😂

      Delete
    2. அவரையெல்லாம ஒன்னும் பண்ண முடியாது.. அவர் ஒரு சாமக்கோழி 😀😀

      Delete
    3. இன்னிக்கி சீக்கிரமே பண்டபாத்திரங்களை கழுவியாச்சாம் !

      Delete
  2. வாழ்த்துக்கள் மஹி சகோ 3 இடமும் பிடித்து விட்டீர் 😂

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. இனிய ஞாயிறு காலை வணக்கம் ஆசிரியர் சார்

    ReplyDelete
  7. அடடே. இந்த முறை ஸாகோர் பட்டயை கிளப்புவார். சும்மா தெறிக்க விடறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஜம்ப்பி..ஜம்ப்பி..டயர்டாகிட்டாரோ நம்ம பேரவைத் தல ?

      Delete
  8. டியர் எடி, பழைய பார்ட்டிகளுக்கு கொஞ்சம் ப்ரேக் கொடுப்பதில் எனக்கும் சம்மதமே...

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் - நண்பர்கள் என்ன கருதிடுகிறார்கள் என்று !

      Delete
    2. Dear Rafiq, Editor,

      I beg to differ.

      பழைய பார்ட்டிகள் இந்த மாதிரியே தனித்தடத்தில் வருவதற்கு எனது ஓட்டு. இவை வேண்டும் என்பவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ள வசதியாக.

      Delete
  9. //மறுபதிப்புகளாய் இன்னமும் சில இதழ்கள் self எடுக்குமெனில் அவற்றினை பட்டியலிட இயலுமா guys ?//

    டெக்ஸ் வில்லரின்
    1. "சாத்தான் வேட்டை"
    2. "மரண தூதர்கள்"

    *மரண தூதர்கள் முழு வண்ணத்தில் அப்போது வந்தது போலவே பாக்கெட் சைஸில் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சைஸ் மாற்றங்களெல்லாம் இன்று சாத்தியமாகிடாது ஜகத் !

      Delete
  10. வணக்கம் நண்பர்களே ..

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. MYOMS நின்று போனது கொஞ்சம் வருத்தமாக இருந்ததுங்க சார்... அதனால் நமக்கு பிடிக்காததை நாமும் தெரிவிக்கனும்னு முடிவெடுத்தேன். எலக்ட்ரிக் 80 சந்தா கட்டலை. ஆனா வேறு வகைகளில் வாங்கிடுவேன்.

      கிளாசிக் விரும்பும் நண்பர்களை மதிக்கிறேன். ஆனாலும் நமக்கு பிடிச்ச ஒன்னு வரலைங்கிறது கஷ்டமாத்தான் இருக்கு...

      Delete
    2. // கிளாசிக் விரும்பும் நண்பர்களை மதிக்கிறேன். ஆனாலும் நமக்கு பிடிச்ச ஒன்னு வரலைங்கிறது கஷ்டமாத்தான் இருக்கு... //

      +1

      Delete
  12. பழைய பார்ட்டிகளுக்கு பிரேக் விட்டால் புதிய பார்ட்டிகள் கூடுதலாக வந்து இறங்கி விடுவார்கள் என்கிற குஷி எனக்கு

    ReplyDelete
  13. பழைய நாயகர்களெல்லாம் ப்ரேக் விடுவது மகிழ்ச்சியே.. இன்னும் எவ்வளவோ புதிய நாயக,நாயகியர் ஒன்ஷாட் ஸ்டோரீஸ் என நிறைய உள்ளன.நம்ம எடிட்டர் சாரை சற்று சுதந்திரமாக விட்டால் அவர் நிறைய கொண்டுவருவார்.என்ன.. ட்யூக்,மைக் ஹேமர் போன்ற மொக்கைகளை கடந்துபோயாக வேண்டும்.ஆனால் லார்கோ,I.R.S போன்ற கதைகள் சற்று ஹிட் ஆனால் சமகால கதைகள் நிறைய வரும்..

    ReplyDelete
  14. கொடூர வனத்தில் டெக்ஸ்

    ReplyDelete
  15. 1.திக்கு தெரியாத தீவில்
    2.சாத்தான் வேட்டை
    3.மரண தூதர்கள்
    4.அதிரடிப் படை
    5.இரத்த ஒப்பந்தம் & தணியாத தணல் & காலன் தீர்த்த கணக்கு
    6.டிராகன் நகரம்
    7.தனியே ஒரு வேங்கை &கொடுரவணத்தில் டெக்ஸ் &துரோகியின் முகம்
    8.கபால முத்திரை & சதுப்பில் ஒரு சதிகார கும்பல்
    9.எமனுடன் ஒரு யுத்தம்
    10.யார் அந்த மினி ஸ்பைடர்

    ReplyDelete
  16. //And if at all மறுபதிப்புகளாய் இன்னமும் சில இதழ்கள் self எடுக்குமெனில் அவற்றினை பட்டியலிட இயலுமா guys ? //

    என் பெயர் லார்கோ & கான்க்ரீட் கானகம் நியூயார்க்
    புதிதாய் இணையும் லார்கோ ரசிகர்களுக்காக, ஆசிரியரே
    இவை இரண்டிலும் வான் ஹாமே மேஜிக் உண்டு

    ReplyDelete
  17. டைகர் கதைகளில் "மின்னும் மரணம்" கூட மறுபதிப்பு கண்டால் நன்றாக இருக்கும். (பழைய புத்தகம் அடிக்கடி எடுத்து படித்ததால் அட்டை எல்லாம் கிழிந்து விட்டது.) அப்படி வந்தால் கடைசி அத்தியாயமான arizona love இல்லாமல் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  18. மறுபதிப்புகளில் மட்டுமின்றி Myoms-ல் வரவேண்டிய கதைகளில் எதோ ஒன்று
    ஆல்பா, சிஸ்கோ, மேகி கேரிஸன் மூன்றாவது பாகம்

    ReplyDelete
    Replies
    1. Yes....👍இந்த மேகி கேரிஸனின் மீத பாகங்களை ஏதாவது புத்தக திருவிழாவில் வெளியிடலாம்.

      Delete
  19. சென்ற மாதம் டெக்ஸ் -டைகர் வித் வேதாளர் மோதல்.
    இந்த முறை டெக்ஸ்- ஸாகோர் வித் ஸ்பூன் வெய்ட் மோதல்.
    அப்ப இந்த மாதமும் டெக்ஸ்க்கு ஸாகோர் டஃப் காட்டுவார் போலவே அட்டைப் படம் டெரராக உள்ளது.
    பார்ப்போம்.

    ReplyDelete
  20. //////எப்படியேனும் ஆங்காங்கே நம்ம B டீமாக செயல்பட்டு, நமது புக்ஸையே பிரதானமாய் விற்று வருவோரின் சேல்ஸ் நம்பரையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால், "லயன்-முத்து" குழும புக்ஸ்களின் விற்பனை already திருப்பூரில் ஒரு புது உச்சத்தை தொட்டாச்சு !! விற்பனை கேந்திரம் எதுவாக இருப்பினும், அத்தனை காமிக்ஸ் வாசகர்களின் கரங்களிலும் நமது புக்ஸ் தென்படுவதில் ஹேப்பி அண்ணாச்சி ! அதிலும் குறிப்பாக போன மே மாதம் FREE COMICS DAY என்று அறிவித்து, விலையின்றி நாம் தந்த இதழ்கள் கூட இத்தனை தூரம் பயணித்து, அவையும் இன்று போணியாவதை பார்க்கும் போது நமது இதழ்களின் கெத்து ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது !! "விலையில்லாதவை" என நாமே நிர்ணயித்தாலும் - 'ஊஹூம்....இல்லீங்கோ !! இவற்றிற்கு என்றைக்குமே மதிப்புண்டு" என்பது கண்முன்னே நிரூபணமாகி வருகிறது !! Awesome !!//////

    அவங்களோட மார்கெட்டிங் அண்ட் பிஸினஸ் ஐடியா பாருங்க...

    எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?!!

    உங்களுக்கு சாமர்த்தியம் போதல ஆசானே..

    நானும் வர்ற பசங்கள எல்லாம் போட்டோ எடுத்துட்டு இருந்தேன்..

    அப்புறம் தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது ஆசானே..

    ReplyDelete
    Replies
    1. போதும் சிவா, இருக்க சாமர்த்தியத்த வச்சு 41 வருஷங்கள் குப்பை கொட்டியாச்சு ; ஆயிரத்து சொச்சம் புக்ஸ் போட்டாச்சு! மிச்ச சொச்ச வருஷங்களையும் இப்படியே நகர்த்திட்டா போச்சு!

      Delete
  21. சரி ஆசைதானே.. சும்மா கேட்டு வைக்கறேங்க சார். மின்னும் மரணம் என்னைக்காவது கா.க.கா மேக்கிங்கில் ஒரிஜினலில் வந்தது போலவே ஐந்து / ஆறு(?) தொகுப்புகளாக :)

    ReplyDelete
  22. In my Opinion book size matters, new content and images/art of spider , others doesn't look good. Tex book size is best

    Also too many old reprints need a break. Some are reprinted again and again.
    If reprint I like
    Chickbill visithara hero,

    ReplyDelete
  23. ப்ரூனோ பிரேசிலின் //குள்ள நரிகளின் இரவு. // கேப்டன் பிரின்சின் //பனி மண்டலக் கோட்டை//

    ReplyDelete
  24. //Oh yes - லிஸ்ட்டில் முதல் பெயராய் "தங்கக் கல்லறை" இருக்கும் என்பது தெரியும் ; but அது நீங்கலாய் இன்னமும் உங்கள் ஆர்வ மீட்டர்களை உசுப்பி விடக்கூடிய மறுபதிப்புகளாய் எவற்றைச் சொல்வீர்களோ ? Your wishlists ப்ளீஸ் ?//

    முடிந்தால் அந்த "Never Before Special" -இல் வந்த கதைகள் ஆசிரியரே
    முக்கியமாக வேய்ன் ஷெல்டனின் கதை

    NBS புத்தகம் இல்லாதவங்க நிறைய பேர் நான் உட்பட
    என்னுடைய முதன்மை விருப்ப பட்டியல் நெடுங்காலமாக

    ReplyDelete
    Replies
    1. ஆமா வெயின் ஷெல்டன் அந்த ஒரு கதை மட்டும் தனி புத்தகமாக.

      Delete
    2. // ஆமா வெயின் ஷெல்டன் அந்த ஒரு கதை மட்டும் தனி புத்தகமாக //

      ராசா..
      +007

      Delete
  25. கராத்தே டாக்டர் , தூங்கிப் போன டைம்பாம். (ஹிஹி) வந்தா நெஜமாலுமே சந்தோசந்தான்

    ReplyDelete
  26. என்னைப் பொருத்தவரை எந்த மறு பதிப்பு புத்தகம் வந்தாலும் வாங்குவேன்.

    மாயாவி கதைகளை பொருத்தவரை யார் அந்த மாயாவி என்ற கதை தான் நான் முதலில் படித்தது. ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தால் மாயாவிக்கு மறையும் தன்மை கிடைக்கிறது.இத்தகவலால் பொறாமை கொண்ட புரபசர் ஒருவர் தானும் அது போல் ஆக வேண்டும் என்று முயற்சித்து அடிக்கும் கொட்டம் தான் அந்த கதை. அதை வெளியிட வேண்டும்.

    இரண்டாவதாக தவளை மனிதர்கள் இதுவும் மாயாவி கதை தான் ஆனால் இது இப்போதைய சுச்சுவேஷனுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்கும்.
    எனக்கு இந்த இரண்டு கதைகள் மறு பதிப்பாக மீண்டும் வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. அது ரெண்டும் தான் ஏற்கனவே வந்து விட்டதே?

      Delete
    2. பல முறை reprint ஆகிவிட்டதே.

      Delete
    3. லயன் நீர்வரகியின் பின் மின்னும் மரணம் வந்த 2019 என்று நினைக்கிறேன் அதிலிருந்து தான் நான் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின் இப்போது வரை தவளை மனிதர்கள் ரீ பிரிண்ட் ஆனதாக எனக்கு ஞாபகம் இல்லை. அதேபோல் கடைசியாக யார் அந்த மாயாவி எப்போது வந்தது என்றும் கூறுங்கள்

      Delete
  27. பழைய நாயகர்களின் அதே கதையை மறுபடி மறுபடி மறுபடி போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை சார். அவர்களின் இதுவரை வெளியிடாத கதையை படிக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.

    ReplyDelete
  28. St கொரியர் ஆபிஸ் மதியம் வரை திறந்திருக்கு போய் வாங்கலாம் என்று பார்த்தால், ஓனர் இருக்கும் ஏரியாவில் கோயில் திருவிழா, கடை இன்று திறக்கமாட்டோம் என்று கூறிவிட்டனர்😊

    ReplyDelete
  29. Reprint
    1. சிறுத்தைகள் சாம்ராஜ்யம்
    2. புதையல் பாதை
    3. யானைக் கல்லறை
    முடிந்தால் கலரில்

    ReplyDelete
  30. வணக்கம் நண்பர்களே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  31. எலெக்ட்ரிக் 80' நானுமே சந்தா கட்டவில்லைதான்.. வாகான தருணங்களில் மட்டும் அவைகள் வெளிவர இருப்பதால் கரூர் முகவரி தருவதா..? அல்லது ஆந்திரா முகவரி தருவதா என்ற குழப்பத்தில்.... மின்சார 80' வெளிவரம் சமயம் நான் இருக்கும் இடத்திலே தருவித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.. ஆனால் க்ளாசிக் மறுபதிப்பு இதழ்கள் மற்றும் புதிய கதைகள் அனைத்தையும் நான் வாங்கி விடுவேன் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது... 💪🏻💪🏻💪🏻

    ReplyDelete
  32. க்ளாசிக் மறு பதிப்புகள் மற்றும் க்ளசிக் புதிய கதைகளுக்கு எப்போதுமே என் ஆதரவு உண்டு.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  33. மரண தூதர்கள், எமனின் எல்லையில்..

    ReplyDelete
  34. நிலவொளியில் ஒரு நரபலி.. இந்தக் கதையை மேக்சி சைசில் பெரிய பெரிய படங்களாக பார்க்க, படிக்க பேராசை சார்.. 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  35. பழைய பார்ட்டிகளுக்கு கொஞ்சம் ப்ரேக் கொடுப்பதில் எனக்கும் சம்மதமே, இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. பழைய பாட்டிகளின் எண்ணிக்கையை சபடி படியாக குறைத்து, அவ்விடத்தில் புதியவர்களை நிரப்லாம்

    ReplyDelete
  36. மேக்சி சைஸ் என்றால், படங்களும் மேக்சியாக... கா. க. கா. போல... 🔥🔥🔥

    ReplyDelete
  37. புத்தக விழா நாயகர்களாக வலம் வருபவர்கள் க்ளாசிக் நாயகர்களே என்பதையும் மறுக்க முடியாதல்லவா திருநாவுக்கரசு நண்பரே..

    ReplyDelete
  38. அன்புள்ள ஆசிரியருக்கு,

    ஒற்றைக்கண் மர்மம் (முழு வண்ணத்தில்),
    யார் அந்த மினி ஸ்பைடர்,

    அப்புறம் அந்த ஸ்பெஷல் மலர்கள் (Purely for the Nostalgia), அதே சைஸ் ல், அதே கதைகளுடன்.

    - அனைத்து தீபாவளி மலர்களும் ( முக்கியமாக, சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் )
    - அனைத்து கோடை மலர்களும்

    முன்கூட்டிய நன்றிகள்


    ReplyDelete
  39. சமீபத்தில் நமது வாட்ஸ் அப் குருப்பில் எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் ஏலம் போன இரும்பு மனிதன் அதே சைஸில் அதே வண்ணத்தில் மறுபதிப்பாக காண ஆசை

    ReplyDelete
  40. சூப்பர் சார் ஆர்ச்சி நினைத்தாலே அந்த கால ஏக்கங்கள் தாலாட்டுது...ஆர்ச்சி விழுந்தால் உலுப்பி எலுப்பும் அந்த ஸ்விட்ச்....கோட்டை எனும் கால எந்திரம்...தாம்சன் விக்டர்...மார்பில் காற்று பீச்சும் கருவி....டெலஸ்கோபிக் கரம்...அந்த தலைக்கணம்...கடைசி தருணத்தில் பதைபதைக்கும் நண்பர்களை காக்கும் இடம்....காலப்பயணங்கள்....தவறுதலாய் நீண்டு விடும் காலப்பயணங்கள்...நான் படித்த முதல் புத்தகம்...கதை ...காமிக்ஸ் பாலே ஆர்ச்சி யின் இரும்பு மனிதன்...அந்த அட்டைப்படம்...ஆர்ச்சிய எப்ப படிச்சாலும் அந்த பால்ய வயது பள்ளி விடுமுறைக்குள் போயிருந்த மனநிலை நுழையும் காலப் பயணம்...



    தொடருங்கள் காத்திருக்கிறோம்...


    இரு வண்ண பறக்கும் பிசாசு
    ப்ளாக் மெயில்

    ReplyDelete
  41. Main சந்தாவில் உள்ளேன்...
    Electric 80s சந்தாவில் சேர வில்லை சார்... But, Books கண்டிப்பாக தனியாக வாங்குகிறேன்👍

    ReplyDelete
  42. யார் அந்த மினி ஸ்பைடர் & ஜூனியர் ஆர்ச்சி - இவை இரண்டும் டெக்ஸ் சைஸில் மட்டும்.

    ReplyDelete
  43. டெக்ஸ் மறுபதிப்பு கதைகள் நிறைய வேண்டும் சார். அதிலும் ஸ்பெஷல் புக்கில் வந்த நிறைய டெக்ஸ் கதைகள் மறுபதிப்பு ஆகாமல் உள்ளது சார்

    ReplyDelete
  44. // எப்படியேனும் ஆங்காங்கே நம்ம B டீமாக செயல்பட்டு, நமது புக்ஸையே பிரதானமாய் விற்று வருவோரின் சேல்ஸ் நம்பரையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால்,//

    🥲🥲🥲🥲🥲

    ReplyDelete