நண்பர்களே,
ஞாயிறு வணக்கங்கள் ! இப்போதெல்லாம் சனிக்கிழமை தான் ஊரிலிருக்கும் அத்தனை வேலைகளும் ஒருசேரக் குவிந்திடுகின்றன & பதிவுக்கு அமர்வதற்குள் கொட்டாவி கிழிய ஆரம்பித்து விடுகிறது !! And இந்தப் புத்தாண்டின் தீர்மானங்களுள் ஒன்று - "ராக்கோழிக் கூத்துக்கள் வேண்டாம்" என்பதாக இருப்பதால், தூக்கத்தோடு மல்லுக்கட்டாது சமாதானக் கொடியினைப் பறக்க விட வேண்டிப் போகிறது ! Maybe வரும் வாரம் முதலாய் வெள்ளிக்கிழமையே பதிவினை எழுதித் தந்து விடணும் போலும் - ஆற அமர டைப் ஆகி வந்தாலுமே சனியிரவுக்கு சுலபமாகிட !
நேற்றைக்கே பிப்ரவரி புக்ஸ் கூரியர்களிலும், பதிவுத் தபால்களிலும் புறப்பட்டு விட்டன folks ! கொஞ்சமே கொஞ்சமாய் நான் தப்புக்கணக்குப் போட்டிருக்காவிடின் ஜனவரியிலேயே பிப்ரவரி சாத்தியமாகி இருக்கும் தான் ! But ஸ்பூன் & ஒயிட் மொழிபெயர்ப்பு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாய் நேரத்தை விழுங்கி விட்டிருந்தது ! கார்ட்டூன் தானே ? என்று லைட்டாக மெத்தனமாய் இருந்து வைத்தது தான் தப்பாகிப் போச்சு - ஒவ்வொரு பக்கத்திலும் சராசரியாக 12 படங்களாச்சும் இருக்க,ஒரு பிரேமுக்கு 2 வசனங்கள் என்று வைத்துப் பார்த்தாலே ஸ்கிரிப்ட் எகிறி விடுகிறது ! And இந்தத் தொடரே கொஞ்சம் offbeat ரகம் என்பதால், கதாசிரியர் என்ன சொல்ல முனைகிறார் ? எதை சித்திரங்களின் மொழிக்கு விட்டிருக்கிறார் ? என்பதை கிரகிக்கவுமே நேரம் எடுத்து விட்டது ! So இந்தப் பஞ்சாயத்துக்களில் ஒன்றரை நாட்கள் கூடுதலாய் செலவாகியிருக்க, பிப்ரவரிக்கே பிப்ரவரி என்றாகிப் போனது ! ஆனால் - நாளை காலை உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டவுள்ள பார்சல்களை பிரித்து, புக்ஸ் மூன்றையும் கையில் ஏந்தும் சமயத்தில் ஒரு விசாலமான புன்னகை உங்கள் வதனங்களை அலங்கரிக்காது போனால் வியப்படைவேன் - all 3 books have come out brilliantly !! அதிலும், 'தல' டெக்ஸ் ஆல்பத்தினை நீங்கள் கையில் ஏந்தும் நொடியின் முதல் ரியாக்ஷனை பார்க்க மட்டும் வழி இருந்தால் செமையாக இருக்கும் ; கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பிக்கு செம fight தரவல்ல ஆல்பமாய் அமைந்துள்ளது !! And நண்பர் ஜகத்தின் எழுத்துரு அந்த புக்குக்கு தந்திடும் கெத்து என்ன ? என்பதை நாளை பார்க்கும் போது சர்வ நிச்சயமாய் ஒரு மானசீக 'ஓ' போடாது இருக்க முடியாது !! அப்புறம் நாளை முதல் 'தல' vs 'கோடாரி மாயாத்மா' யுத்தமும் ஆரம்பித்தால் I won't be surprised at all !! இரு இதழ்களுமே வாசிப்பில் தெறி ஸ்பீடு ; நம்ம ஜம்பிங் பேரவை மட்டும் சித்தே செண்டை மேளங்களுக்கு ஏற்பாடு செய்து விட்டால், போட்டி அட்டகாசமாய் இருக்கக்கூடும் !
ஆன்லைன் லிஸ்டிங் கூட போட்டாச்சு : https://lion-muthucomics.com/latest-releases/1301--2025-february-pack.html
Happy Shopping & Reading all !!
Moving on - ELECTRIC '80s தனித்தடத்தின் அடுத்த இதழாக நமது சட்டி மண்டையன் ஆர்ச்சி ரெடியாகி வருகிறான் ! 38 வருஷங்களுக்கு முன்னே - இதே பிப்ரவரியில் 31,000 பிரதிகள் விற்றுத்தள்ளிய "புரட்சித்தலைவன் ஆர்ச்சி " தான் இந்த "அதிரடி ஆர்ச்சி ஸ்பெஷல்"ஆல்பத்தின் highlight ! And இதனூடே பணி செய்யும் போது எக்கச்சக்க flashbacks !!! அந்நாட்களில் சந்தாக்கள் என்பதெல்லாம் கிட்டத்தட்ட பூஜ்யமே ; சகலமும் முகவர்கள் மூலமாய் விற்பனை கண்டிடும் ! கிட்டத்தட்ட 250 பேர் வாங்கிடுவர் ; அவர்களுள் 225 பேராச்சும் ரெகுலர்ஸ் ! இருபதோ - முப்பதோ பிரதிகள் வாங்குவோருக்கு தபால் பார்சல்களில் செல்லும் and அவர்களின் எண்ணிக்கை உத்தேசமாய் 40 இருக்கும் ! So மீத 185 பேருக்கும் ஒவ்வொரு மாதமும் பண்டல்களில் தான் புக்ஸ் பயணமாகும் ! அந்த நாட்களிலெல்லாம் பேக்கிங் செய்ய நம்மிடம் நிரந்தரப் பணியாளர் கிடையாது ; பண்டலுக்கு ரூ.2 என்பது கூலி ; contract அடிப்படையில் நம்மிடம் ஓவியராய் பணியாற்றிய காளிராஜனின் சித்தப்பா தான் வந்து பண்டல்கள் போடுவார் ! இந்த "புரட்சித் தலைவன் ஆர்ச்சி" இதழுக்கு just about every agent - மாமூலைக்காட்டிலும் கூடுதலாய் ஆர்டர் செய்திருக்க, பேக்கிங் பணியே ஒரு திருவிழா போலானது !! பணி முடித்த போது இரவு மணி மூணு !! நான் செய்திட அங்கு வேலை என்று பெருசாய் இல்லாத போதிலும், இந்த சந்தோஷ மேளாவை பராக்குப் பார்க்கவே வீட்டுக்குப் போகாமல் நானும் ஆபீஸிலேயே குந்தியிருந்தேன் ! மறுநாள் காலை பண்டல்களை ரயிலுக்கு எவை ? லாரிகளுக்கு எவை ? என்று பிரிப்பதற்குள் பாதிப் பிராணன் போய்விட்டது ! கம்பியூட்டர்கள் நஹி அந்நாட்களில் ; so 225 பில்களும் நம்ம கைப்படவே போட்டாகணும் & ஒவ்வொரு பார்சலோடும் அதற்கான கச்சாத்துக்களை எழுதி ரெடி பண்ணிட வேண்டும் ! பெண்டை கழற்றும் அந்தப் பணிகளை மொத்தமாய் முடித்த பிற்பாடு, கிட்டங்கியில் வெறும் ஆயிரமோ, என்னவோ புக்ஸ் மிஞ்சியிருப்பதை பார்த்த நேரம் அப்டியே நம்ம ஸ்பைடர் சாரின் ஹெலிகாரில் பறப்பது போலொரு பீலிங்கு மேலோங்கியது இன்றைக்கும் நினைவுள்ளது !! இதில் பெரும் கூத்து என்னவெனில் - அந்த நாட்களில் லயன் ; திகில் ; மினி-லயன் & ஜூனியர் லயன் - என மொத்தம் 4 புக்ஸ் போட்டுத் தாளித்துக் கொண்டிருந்தோம் !! So பயணம் செய்தது ஆர்ச்சி மாத்திரமல்ல - 3 more books too !! வாழ்க்கையில் மறக்க இயலா அத்தருணங்களை ஏதாச்சும் ஒரு AI பூதத்தைக் கொண்டு மறுக்கா clone பண்ண மட்டும் முடிந்தால் - பேசாமல் அந்த 1980'ஸ் மத்தியில் செட்டில் ஆகிப்புடுவேன் !!
Speaking of Classics - இன்றைய யதார்த்தத்தின் ஒரு முகம் பற்றியும் பேசாது இருக்க இயலவில்லை folks !! புத்தக விழாக்களில் மாயாவிக்களும், லாரன்ஸ்-டேவிட்களும், ஜானி நீரோக்களும், வேதாளர்களும், மாண்ட்ரேக்களும் சிறப்பாக போணியாகி விடுகிறார்கள் தான் ! ஆனால் Classics தனித்தட சந்தாக்களில் துவக்க நாட்களின் துள்ளல் மிஸ்ஸிங் !! Smashing 70s ஆல்பங்கள் பார்த்த சந்தா ரகளைகள் ஒரு வரலாற்று உச்சம் ! Supreme '60s கூட செமத்தியான ஓட்டமே ! ஆனால் ELECTRIC '80s - சமோசாவை அரைத்த படிக்கே 'வாக்கிங்' என்ற பெயரில் சாணி மிதிப்போரின் நடையினை ஒத்த வேகத்தில் தான் நகன்று வருகிறது ! இத்தனைக்கும் இந்த வரிசையில் ஸ்பைடர் & ஆர்ச்சி தவிர்த்த மீத ஆல்பங்கள் எல்லாமே கிளாசிக் நாயக / நாயகியரின் புதுக் கதைகள் தான் ! Yet - அந்த ஆர்வம்ஸ்கி - ரொம்பவே மிஸ்ஸிங்ஜி !
இங்கு ஒரு வேடிக்கையான தகவலுமே :
இங்கிலாந்தில் இந்த கிளாசிக் பார்ட்டீஸ் வலம் வந்து சக்கை போடு போட்டதெல்லாமே 1960-களில் ; 1970-களில் & 1980-ன் நடுப்பகுதி வரையிலும் ! So எப்படிப் பார்த்தாலும் அன்றைக்கு இவற்றை ரசித்த வாசக வட்டத்தின் பெரும்பான்மை, இன்றைக்கு டொக்கு விழுந்த கன்னங்களோடு, யானைகளையே உற்று உற்று பார்க்கும் பார்வைத்திறனோடு தான் சுற்றி வந்து கொண்டிருக்க வேணும் ! Yet - இப்போது இங்கிலாந்தில் க்ளாஸிக் நாயகர்களை ரவுண்டு கட்டி தூசி தட்டித் துயில் எழுப்பி, தொகுப்புகளாய் போட்டுத் தாக்கி வருகின்றனர் ! மாயாவி நிறைய வந்து விட்டது ; ஸ்பைடர் கணிசமாய் ; இப்போது ஆர்ச்சி வந்துள்ளது ; இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ! எனக்கென்ன வியப்பெனில் - இவை விற்பனையில் இன்றும் சக்கை போடு போடுவது எந்த வயதிலான வாசகர்களின் சகாயத்தில் ? என்பதே !! அங்கும் நோஸ்டால்ஜியா போட்டுத் தாக்கிடுகிறதா ? அல்லது இன்றைய எறும்பு மேன் ; கரும்பு மேன் - என்ற சூப்பர் ஹீரோ கலாச்சாரங்களுக்கு அந்நாட்களின் க்ளாஸிக் நாயகர்ஸ் கூட தேவலாம் ! என்று இன்றைய இளம்வட்டம் கருதுகிறதா ? பிரில்லே !!
எது எப்படியோ - இங்கு பழையவர்களுக்கு ஒரு பிரேக் தரும் காலகட்டம் புலர்ந்துள்ளதா ? என்பதே இந்த நொடியின் கேள்வி எனக்கு ! (ஆமா...ஆமா..பிரேக் விட்டுப்புட்டா நான் வெறும் 900 ரூவாயிலே சேவை ஆத்துவேன்ல்ல....!! என்றொரு குரல் கேட்கிறது தான் !) And if at all மறுபதிப்புகளாய் இன்னமும் சில இதழ்கள் self எடுக்குமெனில் அவற்றினை பட்டியலிட இயலுமா guys ? Oh yes - லிஸ்ட்டில் முதல் பெயராய் "தங்கக் கல்லறை" இருக்கும் என்பது தெரியும் ; but அது நீங்கலாய் இன்னமும் உங்கள் ஆர்வ மீட்டர்களை உசுப்பி விடக்கூடிய மறுபதிப்புகளாய் எவற்றைச் சொல்வீர்களோ ? Your wishlists ப்ளீஸ் ?
அதற்காக உங்களின் பட்டியல்கள் வந்த மறுநாளே மறுபதிப்பெனும் சமுத்திரத்துக்குள் தொபுக்கடீர் என்று நான் குதித்து விடவெல்லாம் போவதில்லை தான் ; நீச்சல் தெரியாத கோமுட்டியே என்பதையெல்லாம் மறந்து விடமாட்டேன் ! But கிட்டங்கியில் உறங்கும் தேர்வுகளாய் அல்லாத மறுபதிப்ஸ் எவையென்று தெரிந்து கொண்டால், முன்செல்லும் நாட்களில் அவற்றினை சென்னைப் புத்தக விழாக்களில் ; கோவையில், சேலத்தில், ஈரோட்டில் - என்று திட்டமிட உதவிடும் ! So your thoughts ப்ளீஸ் ?
Before I wind up - புத்தக விழா news ! திருப்பூரில் இன்று நிறைவு காண்கிறது புத்தக விழா !! And இறுதி தினமான இன்றைக்கும் விற்பனை சூடு பிடித்திடும் பட்சத்தில் போன வருஷத்து ரெக்கார்டை தொட்டு விடுவோம் ! எப்படியேனும் ஆங்காங்கே நம்ம B டீமாக செயல்பட்டு, நமது புக்ஸையே பிரதானமாய் விற்று வருவோரின் சேல்ஸ் நம்பரையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால், "லயன்-முத்து" குழும புக்ஸ்களின் விற்பனை already திருப்பூரில் ஒரு புது உச்சத்தை தொட்டாச்சு !! விற்பனை கேந்திரம் எதுவாக இருப்பினும், அத்தனை காமிக்ஸ் வாசகர்களின் கரங்களிலும் நமது புக்ஸ் தென்படுவதில் ஹேப்பி அண்ணாச்சி ! அதிலும் குறிப்பாக போன மே மாதம் FREE COMICS DAY என்று அறிவித்து, விலையின்றி நாம் தந்த இதழ்கள் கூட இத்தனை தூரம் பயணித்து, அவையும் இன்று போணியாவதை பார்க்கும் போது நமது இதழ்களின் கெத்து ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது !! "விலையில்லாதவை" என நாமே நிர்ணயித்தாலும் - 'ஊஹூம்....இல்லீங்கோ !! இவற்றிற்கு என்றைக்குமே மதிப்புண்டு" என்பது கண்முன்னே நிரூபணமாகி வருகிறது !! Awesome !!
And நெல்லையில் நடந்து வரும் புத்தக விழாவினில் இன்று DAY 3 ! அந்தப் பகுதி வாசகர்கள் - ஒரு விசிட் ப்ளீஸ் ?
Bye all...have a cool Sunday ; see you around !! ஆர்ச்சி பயலோடு எடிட்டிங்குக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் நான் !