நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் இங்கே வாரயிறுதியில் பதிவிட்ட கையோடு, வார நாட்களில் நமது வாட்சப் கம்யூனிட்டியில் போஸ்ட் போடுவது; polling போடுவது என ஏதாவது கும்மியடித்து வருவதால், ஒரு தினுசாய் வாரம் முழுக்க ‘டச்‘சில் இருப்பது போலவே ஒரு பீலிங்! பெருசாய் பூமியைப் புரட்டிப் போடும் அறிவிப்புகளை அங்கே போடுவதில்லை தான் - yet அங்கே கடந்த வாரத்தில் செய்துள்ள அறிவிப்புஸ் பற்றி இங்கொரு தபா! Just in case அங்கே உள்ள நெருக்கடிகள் உங்களுக்கு ரசிப்பதில்லை எனும் பட்சத்தில்!!
And அங்கே மேலோட்டமாய் மட்டுமே என்னாலும் பதிவிட முடிவதால் - அவற்றை சற்றே elaborate செய்கிறேனே இங்கே:
Topic # 1:
”யார் அந்த மினி-ஸ்பைடர்?” உட்டாலக்கடி சமாச்சாரம்!
காவேரியில் நீர் வற்றிப் போகலாம்; வைகை வறண்டு கிடக்கலாம் - ஆனால் சிலபல ஆர்வங்ஸ்கோ பார்ட்டிகளின் “காமிக்ஸ் சேவை தாகம்” என்றென்றும் வற்றுவதில்லை! And சேலத்திலிருந்து இந்தச் சேவையை கர்ம சிரத்தையாய் செய்து - அதனை முழுக்கவே நண்பர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதாய் அள்ளி விட்டு வரும் ஆர்வலர், லேட்டஸ்டாக ரூ.900 விலையில் ”யார் அந்த மினி-ஸ்பைடர்?” ஆல்பத்தினை விளம்பரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2021 லாக்டௌன் சமயத்தில் இதே வேலையை மனுஷன் செய்திட, அப்போதே போனில் பேசவும் செய்திருந்தேன் தான்! ஆனால் அந்தக் "கலைச்சேவை நமைச்சல்" விட்டபாடில்லை எனும் போது - இது தொடர்பான தகவல்களை அவர் நடத்தும் க்ரூப் நண்பர்களே நமக்கு அனுப்பி வர, அவற்றை சம்பந்தபட்டோருக்கு forward செய்துள்ளோம். அதில் மேற்கொண்டு எது செய்வதாக இருந்தாலும் அவர்களது பாடு!
நம்மைப் பொறுத்தவரையோ அதே ”யார் அந்த மினி-ஸ்பைடர்?” இதழை ரூ.200 விலையில், அட்டகாசமான art paper-ல் சீக்கிரமே வெளியிடவுள்ளோம்.
அது மட்டுமன்றி - தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தாலுமே, ஒரு கணிசமான அணியினருக்கு, இந்தப் பழசு மீதான மோகங்களிலிருந்து வெளிப்படும் சாத்தியங்கள் கிடையாது என்பது புரிகிறது! And அவர்களே இந்த கலை சேவகர்களின் prime targets! எத்தனை பிரயத்தனம் செய்து புதுசாய் கதைகளைத் / தொடர்களை அறிமுகம் செய்ய குட்டிக்கரணங்கள் போட்டாலுமே - “பறக்கும் பிசாசு” போடலாம்லே? “பறக்காத பூதம்” போடலாமில்லே?” என்ற ரீதியிலான கேள்விகள் பிரதானப்பட்டு வருவது தொடரவே செய்கிறது ! “அதே புளிய மரத்தை, அதே போல மறுக்கா மறுக்கா சுற்றி வருவதில் நாம் சாதிக்கப் போவது தான் என்ன?” என ஒரு நூறு தபா நான் குரல் கொடுத்தாலும் - எதுவும் மாறிய பாட்டைக் காணோம் தான்! So if you can't beat them, join them என்று தீர்மானித்துள்ளோம்! So-
- டெக்ஸின் ”நடுநிசி வேட்டை” தான் வேணுமா? ரைட்டு - அதையே அன்னிக்குப் போலவே போட்டுப்புடுவோம்!
- “கத்தி முனையில் மாடஸ்டி” அதே சைஸில், அதே அட்டையோடு அச்சுக்கா - அசலுக்கா அப்டியே வேணுமுங்களா - பேஷாய் போட்டுத் தாக்கிப்புடலாம்!
- மாயாவி மாமாவின் “ப்ளாக்மெயில்” அதே டபுள் கலரில், அதே அட்டைப்படத்தோடு பார்த்தா தான் மனசு குளிருமா? ஒண்ணும் பிரச்சனையே இல்லீங்கோ - ஒரு whirlpool ப்ரிட்ஜையே மனசுக்குள்ளாற இறக்கிப்புடலாம்!
And rest assured - இவை சகலமுமே கலைச் சேவைகளின் ரூ.900/- விலை ரேஞ்சுகளில் இருக்கவே இருக்காது. And இவற்றிற்கென சந்தா, சாந்தா, சாதனா - என எவ்வித தனித்தடங்களோ, முன்பதிவுகளோ இராது! வாகான சந்தர்ப்பத்தில், ஏதேனுமொரு சிறுநகரப் புத்தக விழாவின் தருணத்தில் இந்த புக்ஸ் வெளிவரும் - நமது ப்ளாக்கிலும், FB-யிலும், வாட்சப்பிலும் ஒரு அறிவிப்போடு! So அவற்றை உங்கள் தலைகளில் வலுக்கட்டாயமாய் திணிக்கும் அவசியங்களெல்லாம் இருக்கவே இராது!
தவிர, இந்த segment-க்கென நான் பெருசாய் மெனக்கெடுவதாகவும் இல்லை! சகலமும் மறுபதிப்பு மேளாக்களே எனும் போது, அந்தக் காலத்து ‘
Topic # 2:
”முத்தக் கதைகள்” (ரொமான்ஸ்) போட்டுப் பார்க்கலாமா - அட்டகாசமான சித்திரங்களுடன்? அல்லாங்காட்டி ”யுத்தக் கதைகள்”?
- முதல் ரகத்துக்கு (ரொமான்ஸ்) ”வாணவே வாணாம்டா சாமி!” என்ற பதில்!
- யுத்தக் கதைகள் ஆப்ஷனுக்கு - “பார்ப்போம்டா தம்பி” என்ற ரீதியிலான மித response!
இங்கே எனக்குள் கலவையாய் ஓட்டமெடுக்கும் சிந்தனைகளை உரக்க ஒலிக்கச் செய்வதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது! Of course வாண்டனாக மூத்திரச் சந்துக்கான கேட்டைத் திறந்து கொண்டு, நானாகவே உள்ளாற போய் நிற்கவும் மெனக்கெடுகிறேன் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது தான்! ஆனால் மனதில் இழையோடும் விஷயங்களைப் பொதுவில் பகிர்வதொன்றும் நமக்குப் புதுசில்லியே?! So எனது சிந்தனைகளை உங்களுக்குக் கடத்தும் விதமாய் இதோ - சில வினாக்கள் folks:
1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
"புது புக்னா அதைப் படிக்க வேணும்; இதுவோ அந்தக் காலத்திலேயே படிச்சு முடிச்ச உப்மா தானே? ஜாலியாய் படம் பார்த்துப்புட்டு நிம்மதியாய் உள்ளாற வச்சுப் பூட்டிப்புடலாங்கிற ஒரு அவாவின் நாசூக்கான வெளிப்பாடா - கூடிப் போயுள்ள நோஸ்டால்ஜியா கோரிக்கைகள் ?
எனக்கு நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் ரொம்ப, ரொம்ப காலத்துக்குப் பின்பாய், துரிதமாய் நம் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இரு புது ஆல்பங்கள் / தொடர்கள்:
1. ரூபின்
2. ஸ்பூன் & ஒயிட்
மட்டுமே!
- கணிசமான depth இருந்தும் C.I.A. ஏஜெண்ட் ஆல்பா கதைகளில் "வஜனங்கள் சாஸ்தி" என்று ஓரம் கட்டி விட்டோம்!
- “உள்ளதுக்கே நேரமில்லே - இதிலே இவன் யாரு புதுசா?” என்றபடிக்கே IR$-ஐ மூட்டைகட்டி விட்டோம்!
- ஒரு cult classic ஆகியிருக்க வேண்டிய “ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாக்கள்” இதழினை அதன் நீளத்தைக் கண்டு பம்மி ஓரமாய் சாத்திவிட்டோம்.
- அட அவ்வளவு ஏனுங்கோ - நம்மளையெல்லாம் ஆர்வத்தில் அநாட்களில் சட்டையைக் கிழிக்கச் செய்த XIII தொடரின் லேட்டஸ்ட் அத்தியாயங்களையே இன்னமும் புரட்ட முனையாதோர் ஒரு வண்டி!!
வார்னிஷ் இல்லா நிஜத்தை செப்புவதாயின் இன்றைக்கு ; இன்றைய நமது mindset-க்கு “இரத்தப் படலம்” கதை இப்போது அறிமுகமாகியிருக்கும் பட்சத்தில் எவ்விதமாய் ரியாக்ட் செய்திருப்போமோ? “இவன் யார்டா திருட்டு முழி முழிச்சிக்கினு வண்டி வண்டியான வசனங்களுக்கு மத்தியிலே மொக்கை போட்டுக்கிட்டு? ஞாபகமறதின்னா வல்லாரைக் கீரையைத் தின்ன வேண்டியது தானே?” என்று மண்டையில் XIII-ஐ தட்டியிருப்போமோஎன்ற சந்தேகம் எனக்கு !?
In a nutshell - கூடி வரும் பொறுப்புகளும், மாறி வரும் பொழுதுபோக்கு அம்சங்களும், post covid lockdowns - நமது வாசிப்புகளுக்கு சங்கிலிகளைப் போட்டு விட்டுள்ளன என்பதே யதார்த்தம்! இன்றைக்கு நமது பொழுதுகளை எதைக் கொண்டு நகர்த்துவது? என்பதையே நாம் தீர்மானிப்பதில்லை என்பது எனக்குள் உள்ளதொரு குட்டியான சந்தேகம்! நுண்ணறிவும், அதன் algorithm -களுமே அடுத்தடுத்து FB-யில் நமக்கு எதைக் காட்ட வேண்டும்? Youtube-ல் எந்த shorts-ஐ காட்சிப்படுத்த வேண்டும்? இன்ஸ்டாவில் எந்த ரீல்ஸை முன்னிலைப்படுத்த வேண்டுமென தீர்மானிக்கின்றன அல்லவா ?! And நாமோ, குஷியாய் அவற்றின் விரல் பிடித்தபடிக்கே ஜாலியாய் பயணித்து வருகிறோம் - அல்லவா ?! ஆனால் இங்கேயோ - “நீர்மோர் சாப்பிடுங்கண்ணா.. தினை லட்டு சாப்பிடுங்கண்ணா... மில்லெட்ஸ் உப்மா நல்லதுங்கண்ணா” என்ற ரீதியில் நாம் பரிமாறுவது சற்றே அயர்ச்சியூட்டுகின்றனவோ - என்னவோ?
ஆனால் சமீப நிகழ்வுகளில் நான் கவனித்த / கிரகித்த ஒரு விஷயம் மனசை குஷியாக்கத் தவறவில்லை! And அது இம்மாதத்து 2 இதழ்கள் சார்ந்ததே!
- Maybe ரூபின் கதை on its own உங்களை பாராட்டச் செய்யவும் பண்ணியிருக்கலாம் தான்! ஆனால் ரூபின் நம்மோடு 3-வது ஆண்டாய் அன்னம், தண்ணீர் புழங்கி வருகிறார் தான்! And இதற்கு முன்பான 2 சாகஸங்களுமே செம விறுவிறுப்பானவைகளே! ஆனால் அந்த இரண்டையும் இந்த மாதத்துக்கு முன்பாக வாசித்திருப்போரை count பண்ணுவதாக இருந்தால் ஒரு மினி பஸ்ஸின் புட்போர்டில் மட்டுமே நிரப்பி விடலாம் என்பது எனது யூகம்! So how come ரூபின் scored just this month?
- Spoon & White கூட அண்ட சராசரங்களை சிரிப்பலைகளால் அதிரச் செய்யும் ஆற்றல் கொண்ட அசகாயர்கள் அல்ல தான்! Yet அவர்களை இம்மாதம் நாம் சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடிந்தது எவ்விதமோ?
இரண்டு கேள்விகளுக்குமே என்னைப் பொறுத்த வரை ஒரே பதிலே:
நமது வாட்சப் கம்யூனிட்டியில் இவற்றைப் பற்றி தொண தொணவென உங்கள் முகங்களுக்கு முன்னே கொசுவாட்டம் பாட்டுப் படித்தபடியே நின்று வந்தேன்! And இந்த கம்யூனிட்டி தரும் ஒருவித அண்மையும், அந்நியோன்யமும் - “சரி, நம்ம கோமுட்டித் தலையன் வுடாம கேட்கிறானில்லே - படிச்சுத் தான் போடுவோமே” என்று ரொம்ப காலம் கழித்து உங்களை எண்ணச் செய்திருக்கலாம்! படிச்சதைப் பகிர்ந்துக்கவும் கம்யூனிட்டி விரல்நுனியில் காத்திருக்க, அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள - இம்மாத வாசிப்பு வேகமெடுக்க; வாசிப்பின் கலப்படமில்லாத மகிழ்வுகளும் நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன! And அகஸ்மாத்தாய் அட்டைப்படங்கள் கலரிங்; அச்சு - என எல்லாமே அழகாய் மிளிர - "அட...இது நல்லா தான் இருக்கேப்பா !!" என்ற பீலிங்கு மேலோங்கியிருக்கலாம் ! So இம்மாதத்து இருவர் மாமூலான விமர்சக கண்ணி வெடிகளில் கால் பதிக்காது தப்பி விட்டனர் என்பதே எனது யூகம்!
Of course - இது முழுக்க எனது மன விஸ்கி; பிரமை; கற்பனையாகவோ இருக்கலாம் தான்! ஆனால் நிதானமாய் நீங்களே யோசித்துத் தான் பாருங்களேன் folks! ஜாலியாய், ஒரே அணியாய், பழைய பன்னீர்செல்வங்களாய் நாமெல்லாம் வாசிப்புக்கு நேரம் தர மட்டும் மெனெக்கெட்டால் - ஜான்ராக்கள் பேதங்களின்றி ; குழப்பங்களுமின்றி வாசிப்பின் sheer joy-தனை ரசித்திட சாத்தியப்படுகிறது !
And if that can happen on a consistent basis -
- இதிலே முடிவு சுபமா கீதுமா? சோகமா கீதுமா?
- பொண்ணுங்களை இங்கே போற்றுவாங்களா? போஸ்டாபீஸ்லே இறக்கி விட்டுடுவாங்களா?
- இது “பெருச்சாளிப் பாஷாணம்” ரேஞ்சுக்கு இருக்குமோ?
- ரோமான்ஸா? ரோட்டோர பானி பூரியே இப்போதான் ரசிக்க ஆரம்பிச்சிருக்கு... போவியா?
போன்ற ரியாக்ஷன்கள் புது வரவுகளை நோக்கி எழுவது மட்டுப்படக் கூடும்! "அட ருசித்துத்தான் பார்ப்போமே - புடிச்சா தொடரலாம்!" என்ற பழைய நம்பிக்கைகள் மறுக்கா துளிர் விடலாம் ! I agree habits ஆயுட்காலப் பரிச்சயங்களே! அவற்றை மீறுவது சுலபமே அல்ல தான்!
-Yet கடுதாசி போட்டுக் கொண்டிருந்த நாமெல்லாம் இன்று voice notes பரிமாறிக் கொள்வதில்லையா? இல்லே, நான் அன்னிக்கி மெரியே போஸ்ட்கார்டு தான் போடுவேன் - என அடம் பிடிப்பதில்லை தானே ?
- இட்லியும், ரவா தோசையும் சாப்பிட்டு வந்தோர், இன்னிக்கி பிரெட்; கார்ன் ப்ளேக்ஸ் என்ற மாற்றத்துக்கு தடா போடுவதில்லை தானே?
-- டூரிங் டாக்கீஸ்களில் “மெக்கனால் கோல்ட்” படம் பார்த்து வளர்ந்த நாம் இன்றைக்கு ரயிலின் மேல் பெர்த்தில் படுத்தபடியே OTT-ல் படம் பார்ப்பதை “காலத்தின் கட்டாயம்/முன்னேற்றம் ” என்று மட்டும் தானே பார்க்கிறோம்?
Yet காமிக்ஸ் வாசிப்புக்கு மட்டும் ஏன் இத்தனை கம்பிகள்? இத்தனை தழைகள்? இத்தனை கட்டுப்பட்டிக் கட்டுப்பாடுகள்? "இது தான் என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் ; இப்டி தான் நான் வளர்ந்துப்புட்டேன் - மாத்த நினைக்கிறது தெய்வ குத்தம் !"என்ற பிடிவாத பிரசன்னாக்களாய் நாமெல்லாம் of late உலவ முனைவது ஏனோ ? படிப்பதெல்லாம் பிடிச்சுப் போவதில்லை தான்; yet பிடிச்சதை மட்டும் தான் படிப்போமென்றால், நம்ம புள்ளைங்களது ப்ராக்ரஸ் கார்டைக் கூடப் படிக்கத் தோன்றாதே?!
சமீபத்தில் FB-ல் ஒரு எழுத்தாளர் பதிவிட்டிருந்ததை வாசித்தது நினைவுக்கு வருகிறது!
- தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸாகும் முதல் நாளில் விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 1000
- தமிழகத்தில் ஒரு இலக்கியப் படைப்போ; இன்ன பிறவோ ரிலீஸாகும் முதல் நாளில் விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 0
- தமிழகத்தில் ஒரு இலக்கியப் படைப்போ, இன்னபிறவோ ரிலீஸாகிய ஒரு வருஷத்திற்குள் அதற்கு விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 0
இதில் நாமெல்லாம் ரொம்பவே தேவலாம் ரகம் தான்; இன்னமுமே இந்தச் சிறிய வட்டம் இயன்றமட்டுக்கு காமிக்ஸ் உலகினைத் தாங்கிப் பிடித்து, உயிர்ப்போடு உலவி வருகிறது தான்! ஆனால் நம்மை அறியாமலே, நமக்கு நாமே சமீப காலங்களில் போட்டு வரும் சங்கிலிகளை உடைக்க இந்த நொடியைப் பயன்படுத்தினால் நாம் ஆராதிக்கும் இந்த காமிக்ஸ், நம் பிள்ளைகள் காலத்துக்கும் தழைத்திடும்! இல்லையேல் பாலையாக்களாய் நாம் வாழ்ந்து முடித்த கையோடு, பசங்களுக்கு விட்டுச் செல்லும் சேகரிப்புகளை, முதல் சந்தர்ப்பத்தில் அவர்கள் பேரீச்சம்பழத்துக்குப் போட்டு விடுவார்கள்! ”அட... அவனுக என்ன போடறது? நானே போட்டுட்டுத் தான் போவேன்?!” என்கிறீர்களா - அப்டின்னா பேரீச்சம்பழத்தையாச்சும் பங்கு போட்டுக்கலாம் சார்ஸ்! Iron சத்து நிரம்ப உண்டாமே?!
”நீ இப்போ என்ன தான்டாப்பா சொல்ல வர்றே? ஒரு மைய்யமா, “அவரு” பேசறா மேரியே இருக்குதே?!” என்று கலாய்க்க ஆங்காங்கே சகோக்கள் தம் கட்டுவர் என்பதும் புரிகிறது! Simple-ஆகச் சொல்வதானால் :
நம்மையும் அறியாது, நாமே சமீபமாய் சாத்திக் கொண்டிருக்கும் காமிக்ஸ் ஜன்னல்களைத் திறப்போம் folks ? வெளிச்சமும், காற்றும் உட்புகட்டுமே ?வாசிப்புகளுக்கு முன்பு போல் சிறகு கொடுங்கள் please ! மாசம் நாலை வாசிக்கத் துடித்த அந்த நாட்கள் திரும்பப்போவதில்லை தான் - at least ஒன்றையோ, இரண்டையோ உற்சாகமாய், மனநிறைவாய் வாசிக்கவும், ரசிக்கவும் தீர்மானிப்போமே ? பழைய பன்னீர்செல்வங்களாய் வராங்காட்டியும், இராமநாதபுரத்து பன்னீர்செல்வம் சாராக அல்லாதிருக்க முயற்சிப்போமே?!
ரைட்டு! மனதில் ஓடியதைப் பகிர்ந்தாச்சு! இனி வைபவங்கள் ஆரம்பிக்கலாமுங்க! மூ.சந்தில் பெட்ரமேக்ஸ் லைட்லாம் போட்டு ரெடியா கீது! "முத்தம்ஸ்" வாணாம்னு ஆகிப் போன பிற்பாடு, ஜாலியாய் மொத்தல்ஸையாச்சும் ஆரம்பிக்கலாம் இல்லியா ? Before I sign out - ஒரேயொரு வேண்டுகோள் மட்டும் :
1.இதை A14 சைசில், font 33-ல் போட்டாலன்றி உருப்படாது !!
2.இதைச் சிதைச்சு, அதை நாசம் பண்ணி, அங்குட்டு சேதாரம் பண்ணிப்புட்டு எது என்னிக்கி உருப்பட ?
3.மாங்கா சீசன் முடிஞ்சிருச்சினாலும் மங்கா சீசன் முடியவே முடியாது ; அதை முயற்சிக்காத வரைக்கும் அன்னபூர்ணா கிரீம் பன் கூட இனிக்காது !
போன்ற அட்வைஸ்களை மட்டும் வேறொரு தருணத்துக்கு வைத்துக் கொள்வோமே ? அதுக்குப் பதிலா மூத்திர சந்தில் நாலு சாத்து கூட வாங்கிக்க நான் ரெடி !
(காமிக்ஸ்) வாசிப்பினை குறுக்கிக் கொண்டே செல்கிறோமோ ? என்ற ஒற்றை agenda மாத்திரமே இந்த நொடியின் அலசல்களுக்கு உட்பட வேண்டியது !! So என் மீதான கடுப்புகளை, விசனங்களை எப்போன்னாலும் சாவகாசமாய் இறக்கிக்கலாமுங்கோ ; இங்கே, கூப்பிடு தொலைவிலே தானே இருக்கப் போறேன் ?
Bye all... See you around! Have a fun Sunday !!
And yes - கபிஷ் தொகுப்பு பற்றி :
சேலம் புத்தக விழாவினில் முழுநீள கலர் ஆல்பமாய், ரூ.100 விலையில் இதழ் # 1 வெளிவரவுள்ளது ! ஒரிஜினல் ஓவியரே அட்டைப்படங்கள் போட்டுத் தந்துள்ளார் !
இரண்டாம் தொகுப்பு - ஜனவரியில், சென்னைக்கு ரெடியாகிடும் !
திரும்ப வந்துட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரூஸ்
DeleteBack to back!! Two weeks in a row🔥🔥🔥
Delete👌👌👌👏👏👏😊
Deleteஅஹா.. இந்த வாரமுமா ?வாழ்த்துக்கள் ப்ரூஸ்..
Deleteஇரவில் உங்களுக்கு ஜோக்கரை பிடிக்கிற வேலை ஏதும் இப்ப இல்லையா..
வாழ்த்திய நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி.. அது தான் எனக்கும் தெரியலை ரகுராம் சகோ. அதிர்ஷ்ட தேவதை நம்ம போனை குத்தகைக்கு எடுத்து இருக்கிறாங்க என்று நினைக்கிறேன் 😅
Deleteசெம 🥳🥳🥳
Deleteவந்துட்டேன்
ReplyDeleteவாங்க சகோ
Delete10க்குள்ள வந்தாச்சு..!
ReplyDeleteவந்தாச்சு
ReplyDeleteஆஹா
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஆஜர்
ReplyDeleteHi nanbas❤️
ReplyDeleteவணக்கம் நட்பூஸ்
ReplyDeleteஅடேங்கப்பா யாருமே உறங்க மாட்டார்கள் போல.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.....
அனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteநானும் .
ReplyDeleteசயின்ஸ் பிக்சன் கதைகள் ஏதாவது போடக்கூடாதா?
ReplyDeleteமாங்காய் என்றாலே டெத் நோட்டு தான்
ReplyDelete💪🏾💪🏾💪🏾🤝🏽🤝🏽
Deleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteAll is well
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteசேலத்தில் புத்தக விழாவில் இரட்டை வேட்டையர்கள் வருவார்களென நீங்கள் சொன்னதாக ஞாபகம்
ReplyDeleteஆமா ஜான் மாஸ்டர், இரட்டை வேட்டையர் ஸ்பெஷல்.
Delete😮
Delete1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
ReplyDeleteலார்கோ என நினைக்கிறேன்
கபிஷ் அட்டைப் படம் அழகு👌👌👌
ReplyDelete3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
ReplyDeleteமுதலில் இரத்தப் படலம் கடைசியாக டைனமைட் ஸ்பெஷல்
கபீஸ் சபாஸ்
ReplyDelete4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
ReplyDeleteபடிக்கும் நேரத்தில் ஹாப்பியாக படித்திருக்கிறேன் விமர்சனம் & குறை சொல்லும் நோக்கம் இவை இரண்டும் எப்போதுமே என்னுள் இருந்ததில்லை
31st
ReplyDeleteயார் அந்த மினி-ஸ்பைடர்?” இதழை ரூ.200 விலையில், அட்டகாசமான art paper-ல் சீக்கிரமே வெளியிடவுள்ளோம்.
ReplyDeleteமுன்பு கத்தரிக்கப் பட்ட பக்கங்களையும் இனைத்து போட்டால் சந்தோஷம்
🙏🙏
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteஇதற்கு முந்தைய ரூபின் கதைகள் சில பேரிடம் இல்லை; சில பேர் வாங்கி வைத்ததோடு சரி; சில பேர்களுக்கு இதற்கு முன்பு இரண்டு ரூபின் கதைகள் வந்ததே தெரியவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பு வந்த கதைகளை பற்றி படித்த சில நண்பர்களை தவிர்த்து பெரும்பாலான நண்பர்கள் பேச கூட இல்லை. அப்படி இருக்க இந்த தீடீர் பேன்ஸ் எப்படி வந்தார்கள். முதல் முறையாக அறிமுகம் ஆன ஸ்பூன் அண்ட் ஒயிட் க்கு நிறைய பேர் படித்து விட்டு விமர்சனங்கள் பகிர்ந்து ஓட்டு கூட போட்டு இருக்காங்க.
இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். வாட்சாப் கம்யூனிட்டி!!
இங்கு இவ்வளவு நாள் sign in செய்ய முடியாமல் கருத்துக்கள் பகிர முடியாமல் (என்னையும் சேர்த்து தான்) தவித்து கொண்டு இருந்த நண்பர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. Sleeper cells மாதிரி பதிவுகளை மட்டும் படித்து விட்டு கடந்து செல்வோரையும் இந்த வாட்சாப் கம்யூனிட்டி பேச வைத்து உள்ளது.
இது ஒரு பக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று சகலத்தையும் நண்பர்கள் ஆளுக்கு ஒரு திசையை பார்த்து கேட்டு கொண்டு வருவதும் ஒவ்வொரு கம்யூனிட்டி போஸ்டிலும் காண முடிந்தது.. முடிந்த வரை புது கதைகள் வரட்டும். நல்லா இருக்கா இல்லையா என்று வந்து படித்து பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.. வருவதற்கு முன்பே முட்டுக்கட்டை போட்டு வரும் செயல் பண்பான அனுகுமுறை அல்ல.
பி. கு. திடீர் ரூபின் ரசிகர்களுக்கு, அப்படியே இதற்கு முன்பு வந்த ரூபினை வாங்கி படியுங்கள். அவைகளும் "தொட்டால் தெறிக்கும்" கதைகளே.
நன்றி. வாழ்க வளமுடன்.
This comment has been removed by the author.
Delete//ரூபின் ரசிகர்களுக்கு, அப்படியே இதற்கு முன்பு வந்த ரூபினை வாங்கி படியுங்கள். அவைகளும் "தொட்டால் தெறிக்கும்" கதைகளே.//
DeleteIn fact, "96 மணி நேரங்கள்" கதை இதை விடவும் தெறி ரகம்!
இப்ப இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தால் இந்த கேரட்டு கேச பீட்ரூட் கொண்டை அம்மணியும், மாடஸ்டி மாதிரி ஒரு ரவுண்டு வருவாங்க போல தெரிகிறது.
DeleteIn fact இதுக்கு முன்னாடி வந்த ரூபின் இரண்டு கதைகளும் இதை விட நன்றாக இருக்கும்.
Deleteநெசம் தான். டியர் எடி & குமார் சகோ.
Deleteரூபின் முத கதை வந்ததிலிருந்து நா ரசிகனுங்க நானு.
Deleteஇப்படி ஒரு தவறான தகவல் தரலாமா நண்பரே...
@Edi Sir..😍😘
ReplyDelete#அன்னபூர்ணா கிரீம் பன்#..😃😀😀
ரொம்ப லேட்டஸ்ட் சார் நீங்க..😃😀😃😀😘
நாமள்லாம் யூத்து ; updated ஆக இருந்தாகணுமே தல 😃
Delete' மைய்யம் , ராமநாதபுரம் பன்னீர்செல்வம்' பன்ச் எல்லாமே தெறி ரகம். நாசூக்கான நையாண்டியில் பின்றீங்க சாரே..
Deleteகண்டிப்பா அப்டேட்டட் யூத்து தான் நீங்க.
// சேலத்திலிருந்து இந்தச் சேவையை கர்ம சிரத்தையாய் செய்து - அதனை முழுக்கவே நண்பர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதாய் அள்ளி விட்டு வரும் ஆர்வலர், லேட்டஸ்டாக ரூ.900 விலையில் ”யார் அந்த மினி-ஸ்பைடர்?” ஆல்பத்தினை விளம்பரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2021 லாக்டௌன் சமயத்தில் இதே வேலையை மனுஷன் செய்திட, அப்போதே போனில் பேசவும் செய்திருந்தேன் தான்! ஆனால் அந்தக் "கலைச்சேவை நமைச்சல்" விட்டபாடில்லை எனும் போது - இது தொடர்பான தகவல்களை அவர் நடத்தும் க்ரூப் நண்பர்களே நமக்கு அனுப்பி வர, அவற்றை சம்பந்தபட்டோருக்கு forward செய்துள்ளோம். அதில் மேற்கொண்டு எது செய்வதாக இருந்தாலும் அவர்களது பாடு //
ReplyDeleteபோன வருடம் ஈரோட்டில் & சேலத்தில் கிரிக்கெட் போட்டி நடந்த சமயம் அன்னார் கொண்டு வந்திருந்த செல்ப் பிரிண்ட்டேடு புத்தகங்கள் அ(எ)த்தனை அ(எ)த்தனை .. சேலத்தில் என்னிடம் டெக்ஸ் வில்லர் புத்தகங்களின் அட்டை கள் கொண்ட தொகுப்பு புத்தகத்தை பரிசாக கொடுத்து ( நானே முகநூலில் எந்த டெக்ஸ் கதைகள் எத்தனை எந்த வருடம் எது வந்தது என்று சேலம் டெக்ஸ் உதவியோடு பதிவிட்டு இருந்தேன் ) பின்னர் கொலைப்படையின் ஒரிஜினல் புத்தகத்தை ஸ்கேன் செய்ய கொடுத்தே ஆகவேண்டுமென்று தெரிவிக்க அதை நான் ஆட்சேபிக்க சண்டை ஆனது .. நீங்கள் செய்யும் செல்ப் பிரிண்ட்களுக்கு என்னால் எந்த வித உதவியும் செய்ய முடியாது என கூறிய பின்பு என்னை வறுத்தெடுத்தார் .. நான் அவர் செய்யும ஃபேன் மேட் களை பற்றி சொல்லிய போது அவர் அதை பற்றி எடிட்டரிடம் பேசி விட்டதாகவும் இதை வைத்து உங்களால் ஏதும் செய்ய முடியாதெனவும் வாதிட்டார் அன்றோடு அவர் எனக்கு கொடுத்த டெக்ஸ் ன் அட்டை பட கலக்சனை அவர் கூறிய முகவரிக்கு அனுப்பிய பின்பு அவருடனான நட்பை தலை முழுகினேன் .. அவர் அனுப்பிய வாட்ஸப் கமண்ட்களை எனது நண்பர்க்கு அனுப்பி இவர் செய்வது சரியா என கேட்டு அத்தோடு முடிவுக்கு வந்தேன் ..
இனி இம்மாதிரி நபர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்கிற முடிவுடன் ...
இதை வைத்து அவர் என்னுடன் தனிப்பட்ட முறையில் இனி வாக்குவாதம் செய்யலாம் அல்லது அவர் நண்பர்கள் மூலம் என்னை கார்னர் செய்யவும் நினைக்கலாம் .. எப்படியானாலும் நடக்கலாம்
டியர் எடி பார்வைக்கு ...
//அவர் அதை பற்றி எடிட்டரிடம் பேசி விட்டதாகவும்//
Deleteபுடலங்காய்!
யார் அந்த கறுப்பு ஆடு என்று சொல்லுங்கள் ப்ரோ.
Deleteபிரபல எழுத்தாளரின் பெயரைக் கொண்ட அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் முகவர்களின் உதவியும் இருப்பதாகக் கேள்வி.
Deleteஆஹா.. சம்பத் இப்படியெல்லாம் நடக்கிறதா...கள்ள நோட்டு
Deleteஅச்சிடற மாதிரின்னா இருக்கு...எனக்கு இப்போதாம்பா தெரியுது..
ரொம்ப பெருமையா இருக்கு..😄... வருத்தமாவும் இருக்கு.. 😔... அமெரிக்கா
ல இருக்கிற மகி ஆள் யார்னு சொல்றாரு...
பக்கத்தில இருக்கற
எனக்கு ஒரு மண்ணும் தெரில.... 😄
பொதுவாக புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அதுவும் காமிக்ஸ் படிப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. புதிய காமிக்ஸ் வாசகர்கள் உருவாகி வருகின்றார்களா என்பதும் சந்தேகமே. இருக்கின்ற காமிக்ஸ் வாசகர்களை தக்க வைக்க அவர்கள் விரும்பும் சில பழங் காமிக்ஸ்களை வெளியிடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து. புதுசு கொஞ்சம். பழசு கொஞ்சம் வெளியிடுவதில் தவறு இல்லை . இருக்கின்ற சிறு வாசகர் வட்டத்தை தக்க வைக்க செய்வதில் தவறு ஏதுமில்லை.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDeleteநான் எந்த ஒரு கதையை படிக்கும் போதும் ஒரு வாசகனாக தான் படிக்கிறேன் ரசிக்கிறேன்.
ReplyDeleteFan made fake களை 900 ரூபாய் குடுத்து வாங்கும் சக்தி உள்ள ஆர்வலர்கள் லயனில் வரும் கதைகளை ஒன்றுக்கு நான்காக வாங்கி ஆதரித்தால் கூட வேண்டிய மறுபதிப்புகளையும் புது ஜானர்களை எடிட்டர் கொண்டு வர அவருடைய கரத்தை வலைப்படுத்தியதாக இருக்கும் என்று தெரிவித்துக் கொண்டு…
ReplyDeleteஆமா நீங்க சொன்ன மாதிரி 6 டெக்ஸ் புக் வாங்கலாம்
Delete+1
Deleteஇந்த விமர்சகர் குல்லா எப்போதும் போடுவதில்லை.
ReplyDeleteநேரு?
Delete50 ####
ReplyDeleteஅடுத்த இரண்டு வருடங்கள் பல வித காரணங்களால் பொழுது போக்க நேரமிருக்கப் போவதில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் படித்து கொண்டு தானிருக்கிறேன். ஒன்னரை வருட பழய புத்தகங்களுக்கு புதிதாக விமர்சனம் எழுதி என்னவாகப் போகிறது என்ற அலுப்பினால் விமர்சனம் எழுதுவதில்லை.
ReplyDeleteஎதைப் படிச்சாலும் டைம் பாஸுக்கு என்ற முடிவோடு இருப்பதால் எதையும் விமர்சனப் பார்வையோடு அணுகுவதில்லை. I just focus on entertaining myself than finding fault.
தேங்கும் புத்தகங்கள் எனக்கு குற்றவுணர்சசியை தருவதில்லை. I know I dont have time now but I will definitely read them.
Nostalgia மோகம் எதுமில்லை. 2012க்கு பிறகு மறுபதிப்பில் வராத கதைகள் வந்தால் சந்தோசமே. வரலைன்னாலும் சந்தோசம்.
// Nostalgia மோகம் எதுமில்லை. 2012க்கு பிறகு மறுபதிப்பில் வராத கதைகள் வந்தால் சந்தோசமே. வரலைன்னாலும் சந்தோசம்.// வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்
Delete1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
ReplyDeleteஇப்போது நம்ம டேங்கோ, நம்ம வெட்டியான் ஸ்ட்ர்ன், ரூபின் எனக்கு டெட் வுட் டிக் ரொம்பவும் பிடித்து இருக்கு.
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
பாரகுடா
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, கென்யா
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
எப்பொழுதும் வாசகனாக தான் வாசிக்கிறேன்.
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா? இல்லீங்க சார். நான் தான் எல்லா புத்தகங்களையும் படித்து விடுகிறேன்.
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
எனக்கு அப்படி இல்லை சார்.
"புது புக்னா அதைப் படிக்க வேணும்; இதுவோ அந்தக் காலத்திலேயே படிச்சு முடிச்ச உப்மா தானே? ஜாலியாய் படம் பார்த்துப்புட்டு நிம்மதியாய் உள்ளாற வச்சுப் பூட்டிப்புடலாங்கிற ஒரு அவாவின் நாசூக்கான வெளிப்பாடா - கூடிப் போயுள்ள நோஸ்டால்ஜியா கோரிக்கைகள் ?
இப்படி கூட யோசிக்கலாமோ சார்?
இந்த பழைய புக் கேட்கும் வாசகர்களிடம் நான் கவனித்தது என்ன என்றால் இப்போது அந்த புத்தகம் வந்தாலும் நல்ல பேப்பர், அட்டகாசமான அட்டை என்று இருந்தாலும். இது அந்த பழைய புத்தகம் போல இல்லை, பாக்கெட் சைஸ் இல்லை, அந்த பிரிண்டிங் போல இல்லை என்று குறை கூறுவது. அப்பறம் எதுக்கு பழைய புக் reprint?
ReplyDelete@Kumar..😂😂😂
Deleteஎனக்கும் அதே டவுட்டுதான் குமார்..!
அப்போதைய புத்தகங்கள் எங்கிட்டேயும்தான் இருந்துச்சி..! அட்டை .. உள்தாள் எல்லாம் ஒரேமாதிரி இருக்கும்..! ப்ரின்ட்டிங் ரொம்பவே சுமாராதான் இருக்கும்.. உத்து உத்து பார்க்கவேண்டி இருக்கும்..! அதிலும் கலர்னா சொல்லவே வேணாம்.. லக்கிலூக்கோட சட்டை ஒருபக்கம் இருக்கும்.. அந்த மஞ்சள்கலர் சட்டைக்கு வெளியே இருக்கும்..! அதுல கொண்டாடா என்ன இருக்கு.? அப்போதைய தரம் இல்லேன்னா.. அதேமாதிரி இப்போவும் ப்ரின்ட் பண்ண சொல்லலமா..? 😂😂😂
நிகழ்காலத்தை யாருமே பொற்காலம்னு சொல்றதில்லை.. அதுதான் ஹ்யூமன் சைக்காலஜி..!
நிஜம் என்னன்னா.... இந்த பத்துவருடங்கள்தான் தமிழ் காமிக்ஸின் பொற்காலமே.. இனியும் அது தொடரும்.!
// நிஜம் என்னன்னா.... இந்த பத்துவருடங்கள்தான் தமிழ் காமிக்ஸின் பொற்காலமே.. இனியும் அது தொடரும்.!// இது தான் Fact 100/100
Deleteஅதுல பாருங்க 35ம் பக்கத்தில அந்த ஸ்பெசல்லிங் மிஸ்டேக்கை எப்படி திருத்தலாம். அதனால் எங்க பால்வாடிக்குள்ள போக முடியாம போச்... மறுக்கா அதே மிஸ்டேக்கோட போட்டாதான் டவுசரு போட்ட காலத்துக்கே போக முடியும்....🤣😉
Deleteஇவ்ளோதான் மறுபதிப்புகளோட நிலமை... எனக்கு தெரிஞ்சி ஒரு 3பேரு வாசிக்கிறாங்க...
பிரபு கோவை, ஆரஞ்சிபூரு, இன்னும் ஒருவர்...
மீதிபேருலாம் பொறுப்பா பீரோவுல வெச்சிட்டுதான் மறுவேலை..
//கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?//
ReplyDeleteஇப்போதும் எப்போதும் ட்யுராங்கோ.
இதன் கமர்சியல் அப்பீல் மிகவும் அதிகமாக இருக்கும். ஸ்டெர்ன் மிகவும் ரசித்த, ரசிக்கும் கதை மற்றும் தொடர். சமீபத்தில் தாத்தாக்கள்.
./// ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?//
லார்கோவின் போது தான். கார்ப்பரேட் கிரைம் என்பதும் லார்கோவின் பிளேபாய்தனமும், கதையின் நவீனத்துவமும், அடுத்த கதை எப்போது வரும் என எதிர்பார்க்க வைத்தது.
//ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?//
பதில் கொஞ்சம் வெட்கம் தரக்கூடியது தான். ரத்த படலம் கருப்பு வெள்ளை வெளியான போது தான் சூட்டோடு சூடாக நேரம் ஒதுக்கி உடனே படித்து முடித்தது.
//படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?//
விமர்சனம் எழுத யார் கதையை படிப்பார்கள்? சந்தோஷமாக இருக்க மட்டுமே.. சமீபத்தில் மிகவும் ஜாலியாக உணர்ந்து படித்த தருணம் சமீபத்திய லக்கி லூக்கின் டபுள் ஆல்பம்..
//மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?//
வேதாளர் ஆல்பம், காரிகன் ஆல்பம், மாண்ட்ரேக் ஆல்பம், ரிப் கிர்பி ஆல்பம் போன்றவற்றில் ஓரிரு கதைகள் படித்ததோடு நிற்கிறது. இது பற்றி ஒரு மெலிதான குற்ற உணர்ச்சி மனதில் வியாபித்து இருப்பது என்னவோ உண்மைதான்.
//நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?//
வித்தியாசமான கேள்வி. ஆனால் எனக்கும் இந்த கேள்விக்கும் சம்பந்தம் இல்லை. பழசு எதையும் நான் காதலிப்பதில்லை.
ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாக்கள்.
ReplyDeleteஇப்போதும் அது ஒரு cult கிளாசிக்கே!!
கமான்சே போல என்றாவது ஒரு நாள் இப்போது ஒதுக்கி வைத்தவர்கள் அதனை தலை மேல் வைத்து கொண்டாடலாம். ஏன் ரீபிரிண்ட் கூட கேட்கலாம்
படிச்சா கேப்பாங்க சார். ஆனா பல பேர் வாங்கியதோடு சரி.
Deleteஎன்னுடைய நாள் குறைந்தது பத்து பக்கங்களாவது படிக்காமல் நிறைவடையாது. அந்தந்த மாதம் வரும் புத்தகங்களை அடுத்த மாத புத்தகங்கள் வருவதற்குள் படித்து விடுவேன். முதலில் படிப்பது ஹாட்லைன்/காமிக்ஸ் டைம்... அடுத்து தொடர்வது கார்ட்டூன் கதைகளே.
ReplyDeleteநிறைய கார்ட்டூன் கதைகள் வர/படிக்க ஆசை.. மாறி வரும் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் கொஞ்ச நேரம் கவலைகள் மறந்து இருக்க கார்ட்டூன் கதைகளே. ஆனால் விற்பனையில் சொதப்பி கதைகளின் எண்ணிக்கை குறைந்தது வருத்தமே...
முயன்று, ரசித்து படித்து பாருங்கள் நண்பர்களே...
1. டேங்கோ, டெட் வுட் டிக் இருவரும் சமீபத்தில் நான் ரசித்த புதியவர்கள்.
ReplyDelete2. ஒற்றை நொடி, ஒன்பது தோட்டா, அர்ஸ் மேக்னா, கென்யா, நான் மிகவும் ரசித்தது.
3. ஒ. நொ. ஒ. தோ. , இரத்தப்படலம் கலர் எடிஷன். இரண்டும். பொதுவாகவே எல்லா குண்டு புத்தகங்களும் எனக்கு விருப்பமானவையே.
சமீபத்திய வரவுகளான மாண்ட்ரேக், காரிகன், சார்லி, ரிப்கெர்பி போன்றவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
4. எல்லா பத்தகங்களுக்கும் நான் முதலில் வாசகன் மட்டுமே. அதன் பின்பு விமர்சிப்பது, முடிந்த பொழுதில் மட்டும்.
5. No Sir. அனைத்தும் அந்த வாரத்திற்குள் முடிந்துவிடும். அமெரிக்கா வந்திருப்பதால் இந்த மூன்று மாத கால புத்தகங்கள் மட்டுமே வாசிக்க காத்திருக்கின்றன.
6. No sir. பழைய புத்தகங்கள் மீண்டும் வந்தால் ரசித்து வாங்கி படிப்பேன். இல்லையெனில் No problem.
அதிகாலை வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே.. 🙏🏻🙏🏻
ReplyDeleteஅந்த மாசத்து புத்தகங்கள அப்பவே படிக்கறதுதான் எப்பவுமே நம்ம பழக்கம்.. அது மறு பதிப்போ, முதல் பதிப்போ..
ReplyDeleteமறு பதிப்புக்கு முன்னுரிமை..
நண்பர்கள் மறு பதிப்பில் அதிகமாகக் கேட்பது,
ReplyDeleteஸ்பைடர் {நிலுவையில் உள்ள கதைகள் மட்டும்..}
இரும்பு மனிதன் ஆர்ச்சி
இளவரசி
ஜான் மாஸ்டர்
அதிரடிப் படை
மின்னல் படை
இரட்டை வேட்டையர்
கேப்டன் பிரின்ஸ்
ரிப்போர்ட்டர் ஜானி
மினி-ஜூனியர் லயன் கதைகள்
கறுப்பு கிழவி திகில் கதைகள்
முத்து காமிக்ஸ் க்ளாசிக் கதைகள் தனித் தடத்தில் வந்து கொண்டிருக்கின்றன..
மேலே குறிப்பிட்ட கதைகள் மறு பதிப்பு கண்டு விட்டாலே போதும்.. அதன் பிறகு மறு பதிப்பு க்ளாசிக் கதைகள் வேண்டுமென்ற குரல்கள் கணிசமாகக் குறைந்து போகும் என்பது என் எண்ணம்!
அதே போல டெக்ஸின் க்ளாசிக் கதைகளும் வண்ண மறு பதிப்புகளாக களம் கண்டு கொண்டிருக்கின்றன..
அதே நேரம் புதிய நாயகர்களின் கதைகளையும் ஆராதிக்கத் தவறுவதேயில்லை..
பௌன்சர்
அண்டர்டேக்கர்
ட்யுராங்கோ
டேங்கோ
ரூபின்
ஸ்பூன்&ஒயிட்
ப்ளூ கோட்
மேக்&ஜாக்
(எக்ஸட்ரா..)
ஆனாலும் சிஸ்கோ, ஆல்பா இவர்கள் என்னையும் கவரவில்லை என்பதே உண்மை.. 🙏🏻🙏🏻
க்ளாசிக் கதைகளிள் பட்டியலில் ஜெஸ்லாங்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. 🙏🏻
ReplyDeleteபுதிய நாயக வரவுகளில் டின் டின்னுக்கே முதலிடம்.. 🔥🔥❤️
ReplyDeleteHi..
ReplyDeleteஅறிமுகத்திற்கு முன்பே வாக்கெடுப்பை நிறுத்திவிட்டு விற்பனையைப் பொறுத்து கதையைத் தொடர்வதைத் தீர்மானம் செய்வது சரியாக இருக்குமோ? தனித்தடத்திலேயே வந்தாலும் பழசு புதுசு(அறிமுகம்) இரண்டில் எது வந்தாலும் சலிப்பாக விமர்சிக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை .
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசமீபத்தில் என்னை கவர்ந்த அறிமுக நாயகர்கள் / நாயகிகள் - சோடா, டேங்கோ, சிஸ்கோ, ரூபின், டின் டின், நவீன வெட்டியான், தாத்தாக்கள், இளம் டெக்ஸ் - ஸ்கோர் ஓகே but not great.
ReplyDeleteலார்கோ, டியூராங்கோ,, டெட் வுட் டிக் ☺️😊
Deleteமாங்கா சீசன் முடிஞ்சிருச்சினாலும் மங்கா சீசன் முடியவே முடியாது ; அதை முயற்சிக்காத வரைக்கும் அன்னபூர்ணா கிரீம் பன் கூட இனிக்காது !
ReplyDeleteபோன்ற அட்வைஸ்களை மட்டும் வேறொரு தருணத்துக்கு வைத்துக் கொள்வோமே ? அதுக்குப் பதிலா மூத்திர சந்தில் நாலு சாத்து கூட வாங்கிக்க நான் ரெடி ! // மங்காவை வரும்போது வரட்டும் சார்..... கபீஸ் 100 விலையில் வர இருப்பதால் நிறைய பேருக்கு இன்னும் போய் சேரும்... ஜெரெமியா அடுத்த ஆல்பம் எப்போது எதிர்பார்க்கலாம் சார்?
//ஜெரெமியா அடுத்த ஆல்பம் எப்போது எதிர்பார்க்கலாம் சார்?//
Delete+1
ஜெரேமியா+1
Deleteஜெரெமியா +1
Deleteஜெரெமியா +1
Delete+∞ :)
DeleteThis comment has been removed by the author.
Delete+1
Deleteஜெரெமையா அவ்ளோ நல்லா இருக்குணும் சொல்ல முடியாது; அவ்ளோ நல்லா இல்லைணும் சொல்ல முடியாது..... போதுமான ரிக்வெஸ்ட் வரும்போது தாங்களே செய்வீர்கள்னு அறிவோம் சார்...
Delete+1
Deleteஉள்ளேன் சார்...:-)
ReplyDeleteஇ.கை.மாயாவியின் வண்ண புத்தகங்கள் தரும் மன நிறைவும்
ReplyDeleteசந்தோஷமும் இளம் வயதிலேயே
பசுமையாக பதிந்தவை.அது மாற்ற இயலாது.எனவே அவ்வப்போது இக்கதைகள் மறுபதிப்பு வருவதை வரவேற்கிறேன்
// தொடர்களை அறிமுகம் செய்ய குட்டிக்கரணங்கள் போட்டாலுமே - “பறக்கும் பிசாசு” போடலாம்லே? “பறக்காத பூதம்” போடலாமில்லே?” என்ற ரீதியிலான கேள்விகள் பிரதானப்பட்டு வருவது தொடரவே செய்கிறது ! “ //
ReplyDeleteஇதை நீங்கள் தவிர்த்திருக்கலாம் சார்...
இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் அன்பர்களே
ReplyDelete//டெக்ஸின் ”நடுநிசி வேட்டை” தான் வேணுமா? //
ReplyDeleteசார் .. அது நள்ளிரவு வேட்டை ..
1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
இப்போது நம்ம டேங்கோ, நம்ம வெட்டியான் ஸ்ட்ர்ன், ரூபின் எனக்கு டெட் வுட் டிக் , CISCO பிடித்து இருக்கு .. EVEN I LIKED JEREMIAH ..
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
பாரகுடா , ARS MAGNA , UNDERTAKER
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, கென்யா, ARS MAGNA
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
எப்பொழுதும் வாசகனாக தான் வாசிக்கிறேன்..
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?
இல்லீங்க சார்.. எல்லா புத்தகங்களையும் படித்து விடுகிறேன்.
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
எனக்கு அப்படி இல்லை சார்.. NOT A BIG FAN OF CLASSIC OR NOSTALGIA ..
கமான்சே போலவே ஜெரெமயாவுக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும் சார்...
ReplyDeleteஒரு வாய்ப்பு லாம் போதாது சகோ....24 மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறப்பு சாதாரண கதைக்கு கிடைக்காது....நிச்சயம் இந்த முறை ஜெரெமியா சோடை போகாது
Deleteதினமும் காமிக்ஸ்கள் படிக்கின்றேன்... தினமும் வேறு வேறு பாணி கதைகள் படிப்பதையே விரும்புகின்றேன்...
ReplyDeleteநமது தமிழில் கிளாஸிக் கதைகள் 90% படிக்க முடிவதில்லை... இரும்புக்கை, செக்ரட்டேரி, லாரண்ஸ் டேவிட் எல்லாம் பரிசு கொடுத்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடிவதில்லை... அதனால் அவற்றை படிக்க முயற்சி செய்வதுமில்லை... விரைவில் கிளாசிக் கதைகளுக்கு என்னளவில் end card போட்டு விடுவேன்...
பல்வேறு genreகள் தமிழில் வரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை... Tintin, Are Magna போன்ற கதைகள் தமிழில் வராதா என ஏங்கிய காலங்கள் உண்டு... அவையும் வந்து தமிழில் சக்கைபோடு போடும் என கனவிலும் நினைத்ததில்லை... Valerian எப்படியாவது தமிழ் பேசிடாதா என்ற ஆசை இல்லாமலில்லை... ஆனால் சூழல் இப்பொழுது ஏற்பாக இருப்பதாக தோன்றவில்லை... எண்ணாத பல விஷயங்கள் leftல் இன்டிகேட்டர் போட்டு rightல் வருவது போல், என்றேனும் நடந்திட வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்...
புத்தகங்கள் படிக்காமல் தேங்குவது பற்றி கவலைப்பட்ட தில்லை இனியும் கவலைப் வரப்போவதில்லை... நமது லயன் முத்து காமிக்ஸ் என் வாழ்வின் ஒரு அங்கம்... அதன் வளர்ச்சிக்கு என்னாலான அணில் பங்கை செய்திட தவறமாட்டேன்...
சார், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என் முழு ஆதரவு உண்டு...
என்னை பொருத்தவரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த புத்தகம், genre, character, seriesக்கும் என் முழு ஆதரவு உண்டு...
எனக்கு உங்கள் மேல் இருக்கும் ஒரே வருத்தம்... நீங்களே முடிவெடுக்காமல் எங்களிடம் opinion கேட்பதே... நீங்கள் பழைய பன்னீர்ஸெல்வமாக உங்கள் மனதை மட்டுமே நம்பி புத்தகங்கள் வெளியிடும் நாளை எண்ணி கனாக்களுடன் இருக்கின்றேன்...
டாக்டர்@ +100000
Delete////நீங்கள் பழைய பன்னீர்ஸெல்வமாக உங்கள் மனதை மட்டுமே நம்பி புத்தகங்கள் வெளியிடும் நாளை எண்ணி கனாக்களுடன் இருக்கின்றேன்...///இதன் சரியாக வரும்..
முட்டையை கேட்டுகிடடு இருந்தா ஆம்லெட் எப்படி சாப்பிட இயலும்னேன்...
கம்யூனிடியில அட்டைபடங்கள், இது நல்லாயிருக்கா போன்ற சாதாரண கேள்விகளை வைத்துக் கண்ட.. இதுபோடலாமா? அது போடலாமா? லாம் தவிர்த்து விடலாம் சார்...
கம்யூனிட்டியில இப்படியே கேட்டுட்டே இருந்தா கடைசியில A4 sheetஐ தான் எல்லோருக்கும் அனுப்பணும்..
கம்யூனிட்டி நல்ல விசயம்..ஆனா அதை decision making க்கு உபயோக படுத்தினா சரிவராது..
கடையில செலக்ட்டிவாக வாங்குபவர்கள், புத்தக விழாக்களில் காத்திருந்து குறிப்பிட்டதை மட்டுமே வாங்குபவர்கள லாம் சந்தாவில் இது வேணாம் அது வேணாம்னு சொல்றதை பார்த்தா......
......இந்த கம்யூனிட்டி 1984ல இருந்திருந்து , "இந்த மாதிரி லயன் காமிக்ஸ், திகில், மினிலயன்னு ஆரம்பிக்கிறேன்...ஸ்பைடரு, டெக்ஸ் வில்லர், ஆர்ச்சி, லக்கி லூக், பிரின்ஸ், ரிப்போர்ட்டர் ஜானி, சிக்கல், ஆயா, போர் கதைகள், இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர், & பல்வேறு சிங்கிள ஜாட்லாம் போடலாம் னு உள்ளேன்""" -- னு தாங்கள் கேட்டிருந்தா... அதெல்லாம் வேணாம் எங்களுக்கு இப்ப வர்றதே போதும். இதையே இப்படிக்கா ஒண்ணு அப்படிக்கா ஒண்ணு
Deleteஎப்படிக்கா ஓண்ணுனு கொடுத்துட்டே இருந்தா போதும்.. நீங்கள் MA, PhDனு பண்ணி நல்ல ஒரு Professorஆக வாங்கனு அனுப்பி வைச்சிருப்பாங்க...🤣🤣🤣🤣🤣
தனி தடத்தை ஆரம்பிக்கிறீங்க..க்ளாசிக்கா போட்டு தாக்குறீங்க..
புதிய ஜானர்களை பற்றியதாக மட்டுமே வாக்கெடுப்பு, பதிவுகளை கொண்டு பங்கு சார்... அட்லீஸ்ட் பதிவுகள்லயாச்சும் புதுசா பார்க்கிறோம்..
// நீங்கள் பழைய பன்னீர்ஸெல்வமாக உங்கள் மனதை மட்டுமே நம்பி புத்தகங்கள் வெளியிடும் நாளை எண்ணி கனாக்களுடன் இருக்கின்றேன்...//
Delete+1 எனது விருப்பமும் இதுவே சார்.
1. லார்கோ, டியூராங்கோ, அண்டர்டேக்கர், சமீபத்தில் டேங்கோ, ரூபின்... லிஸ்ட் பெரிதாக உள்ளதே சார்.
ReplyDelete2. ஜெரெமயா - வெளிவந்தபோது இல்லாவிட்டாலும் அதை படித்தபோது மனம் குதூகலித்ததே சார்!
3. சூட்டோடு சூடாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் ஆறிய பின்னர் ஒரு கட்டி விடுவதுதான் வாடிக்கை. இந்த கிளாசிக் வரிசை மட்டும் விதிவிலக்காகி போனது.
4. எல்லா கதைகளையும் ரசிக்கத்தானே வாசிக்க ஆரம்பிக்கிறோம். டேங்கோ போல ஆழ்மனதை வசீகரித்தாலோ இல்லை டியூக் போல காலை கடித்து வைத்தாலோதான் விமர்சனமே.
5. அந்த கொடுமைதான் நடந்து வருகிறது.
6. கிளாசிக்சை ஆதரவளிப்பது அதை விரும்பும் நண்பர்களின் பொருட்டே சார். வாசிப்பு இரண்டாம் பட்சம்தான்.
கடைசியாக ஆரவாரமாக வரவேற்ற ஹீரோ,தொடர் ட்யூராங்கோ. மற்றும் ஜேசன் பிரைஸ் ,டெமக்லீஸ்ஏஜன்சீஸ் எமிலி .
ReplyDeleteஉள்ளேன் ஐயா....
ReplyDeleteபுரட்டாசிக்கு முந்தைய கடைசிஞாயிறு கறிகடைலாம் கன ஜோராக உள்ளது.. கறிகடையில இருந்துட்டே பதிவை படிக்கும் சுகமே தனிதான்..
1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
ReplyDeleteலார்கோவுக்கு கிடைச்சதுதான் உச்ச வரவேற்பு....
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks
ReplyDeleteஸ்டெர்ன்
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
ReplyDeleteலயன் டைனமைட் ஸ்பெசல்
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
ReplyDeleteதலீவர், நந்தி இவர்களது விமர்சன கடிதங்களை அந்த இதழ்கள் வெளியாகி மாமாங்கம் ஆகி பழைய புத்தக கடைகளில் காணும் முன்பு வரை....
:-))
Deleteஅன்புள்ள எடிட்டருக்கு ஒரு மனம் திறந்த மடல்
ReplyDelete" அதே புளிய மரத்தை, அதே போல மறுக்கா மறுக்கா சுற்றி வருவதில் நாம் சாதிக்கப் போவது தான் என்ன?” என ஒரு நூறு தபா நான் குரல் கொடுத்தாலும் - எதுவும் மாறிய பாட்டைக் காணோம் தான்! "
தங்களுடைய பதிவில் உள்ள சலிப்பை, ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது,
யார் அந்த மினி ஸ்பைடர் விவகாரத்தில் தங்களுடைய உழைப்பை யாரோ பயன்படுத்துகிறார்ளே என்ற வருத்தம் மற்றும் இது போன்ற ரீபிரிண்ட் ஆகாத கதைகளை பிரீமியம் விலை கொடுத்து பல வாசகர்கள் வாங்குவது சிரமம், மேலும் இவை நல்ல விற்பனை காணும் என்ற நம்பிக்கையிலேயே நான் மற்றும் என்னைப் போன்ற சிலர் ரீபிரிண்ட் கோரிக்கைகளை தொடர்ந்து தெரிவித்தோம்,
ரீபிரிண்ட் குறித்த தங்களுக்கு பெரிய ஆர்வமில்லை என்பதை பலமுறை தெரிவித்துள்ளீர்கள்தான்,
ஆனால் தங்களுக்கு இவ்வளவு சலிப்பூட்டும் பணி என்பது எங்களுக்கு தெரியாது, அதே சமயம் பூந்தளிர் அட்டைப்படம் குறித்து கூட தாங்கள் கருத்து கேட்பது எங்களை குழப்புகிறது. அது ரீபிரிண்ட் வகையறாவில் வராதா, தாங்கள் பணியாற்றாத கதை என்பதால் சலிப்பு ஏற்படவில்லையா, லயன் குழுமத்தில் வந்து தாங்கள் பணியாற்றிய அதே புத்தகங்களை ரீபிரிண்ட் கேட்பதுதான் தங்களை அயர்ச்சியடைய வைக்கிறது என்பது எனது புரிதல்,
எது எப்படியோ, ஆசிரியருக்குபிடிக்காத ரீபிரிண்ட் கோரிக்கைக்களை இனி நாங்கள் மன்னிக்கவும் நான் எழுப்ப மாட்டேன், வேண்டா வெறுப்புடன் அறுசுவை விருந்து பரிமாறினாலும் ருசிக்காது,
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போன்ற Classic களை மீண்டும் வாசித்து அதன் பெருமைகளை உணர்ந்து உயருகிறோம்,
எனவே மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகிறேன், ரீபிரிண்ட் கோரிக்கைகள் குறைந்தபட்சம் இனி என்னிடமிருந்து வரவே வராது,
வரக்கூடிய காமிக்ஸ்களில் பிடித்தவற்றை மட்டும் வாங்கி படித்து ரசிப்பதே சிறந்தது என்பது புரிகிறது,
எங்கள் பால்யத்தை ரம்மியமாக்கிய ஆசிரியருக்கு நன்றிகள் பல 💐💐💐
This comment has been removed by the author.
Delete5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?
ReplyDelete2015ல கருப்பு வெள்ளையில் மறுபதிப்பு சீரியஸ்கள் சந்தாவில் இடம்பெற ஆரம்பித்தபின்பு.... அப்போது இருந்து சந்தாவில் வெளியாகும் இவைகளை வாசிக்காம அடுக்கிதான் வர்றேன்.. மாறாக வண்ணத்தில் மறுபதிப்பாகும் லக்கி, பிரின்ஸ், ஜானி, டெக்ஸ் அனைத்தும் வாசித்திடுறேன். அதும் உச்சமாக S70 சந்தா 2000ரூவா படு வேஸ்ட்டாக....(அதை தவிர்த்து இருக்கலாம், ஆனா தங்களின் முயற்சிக்கு ஆதரவு தரணும்னு வாங்கியது...)
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
ReplyDeleteஇதற்கு பதில் சொல்லும் அனுபவம் இக்கட நஹி... 14வயசுல வாசிக்க வந்ததால் நோஸ்டால்ஜியா னா கிலோ என்ன விலைனு கேட்கும் வெகு சிலரில் நானும் ஒருவனாக...
////எனக்கு நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் ரொம்ப, ரொம்ப காலத்துக்குப் பின்பாய், துரிதமாய் நம் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இரு புது ஆல்பங்கள் / தொடர்கள்:
ReplyDelete1. ரூபின்
2. ஸ்பூன் & ஒயிட்///
எக்ஸாக்ட்லிங் சார்.. இந்த மாத இதழ்கள் வந்து ஒருசில நாட்கள் ரொம்ப ஜாலியாக போனது..
தொய்வாகவே இருந்த நம்ம வாசிப்புலகில் ஒரு மினி புரட்சியையே இந்த இரண்டும் பண்ணிட்டன...
ஏனைய தொடர்கள் பலதும் பாக்கியவான்கள் அல்ல....
////கம்யூனிட்டி தரும் ஒருவித அண்மையும், அந்நியோன்யமும் - “சரி, நம்ம கோமுட்டித் தலையன் வுடாம கேட்கிறானில்லே - படிச்சுத் தான் போடுவோமே” என்று ரொம்ப காலம் கழித்து உங்களை எண்ணச் செய்திருக்கலாம்! படிச்சதைப் பகிர்ந்துக்கவும் கம்யூனிட்டி விரல்நுனியில் காத்திருக்க, அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள - இம்மாத வாசிப்பு வேகமெடுக்க; வாசிப்பின் கலப்படமில்லாத மகிழ்வுகளும் நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன///
ReplyDeleteமிகமிகசரிங் சார்..
.கம்யூனிட்டியின் நோக்கம் ஒருவழியாக புலப்பட்டுவிட்டது மகிழ்ச்சி...
இனி இந்த திக்கிலே கம்யூனிட்டி பயணித்தால்ரொம்ப நல்லா இருக்கும் சார்.. புதிய புத்தகங்களுக்கு ஒரு வழியை திறந்த்தாக இருக்கும்..
நாஸ்டால்ஜியா, க்ளாசிக், பழசு போன்ற வார்த்தைகள அங்கே தவிர்க்க இயன்றால் இன்னும் சிறப்பு
///சேலம் புத்தக விழாவினில் முழுநீள கலர் ஆல்பமாய், ரூ.100 விலையில் இதழ் # 1 வெளிவரவுள்ளது ! ஒரிஜினல் ஓவியரே அட்டைப்படங்கள் போட்டுத் தந்துள்ளார் ! ///
ReplyDeleteகபீஷை ஓசியில் வாசித்து மகிழ்ந்த அப்போதெல்லாம் வண்ணத்தில் வாசிச்சா எப்படி இருக்கும்னு கனவு வரும்... அது நனவாக போவது ரொம்பவும் சந்தோசம் சார்..
+1000000😍😘
Deleteசூப்பர் 😃
Delete
ReplyDelete1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
கம்பளத்த மடக்குனதே இல்லை!!
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
எப்ப எல்லாம் நீங்க அறிமுகப்படுத்துகிறீர்களோ அப்ப எல்லாம்!!
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
கையேந்தி காத்துக் கொண்டும் கையிலேந்தி படித்துக் கொண்டும் தான் இருக்கிறோம் சார்!!
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
எப்பொழுதும் வாசகனாகத்தான் வாசிக்கிறேன்..
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?
அடுத்த புத்தகம் எப்ப வரும் எப்ப வரும்னு சொல்லி ஏங்கிக்கிட்டு இருக்கிற எங்கள பார்த்து, உங்களுக்குத்தான் குற்ற உணர்ச்சி வரணும் சார்!!
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
நான் சரோஜாதேவி ,சாவித்திரி, ராஜ சுலோசனா ரசிகன் அல்ல சாரே!! மாளவிகா மோகன்,சமந்தா ரசிகனாக்கும்!
:-)))
Delete@Nagaraj Sethupathi ji..😍
ReplyDeleteI agree with your comments..😘
(except 5th one)
I like பழ்சு & புத்சு both..
ராஜ சுலோசனாவும் பிடிக்கும்😍.. ராஷ்மிகா மந்தனாவும்😘 பிடிக்கும்😃😍😍👍
1. Durango, Undertaker, Largo
ReplyDelete2. ஒற்றை நொடி ஒன்பது தோட்ட, கென்யா, பராகுடா
3. எல்லா புத்தகமும் ஒன்றுதான் sir. அதோட content தான் முக்கியம்
4. No விமர்சனம் sir
5. Till date எல்லா புத்தகமும் படிசச்சு
6. Re release வாங்குறதே illa sir
வஞ்சத்திற்கு ஒரு வரலாறு
ReplyDeleteமிகவும் பழைய கதை. ஆனால் தெளிவான சித்திரங்களுடன் கதை சொல்லும் யுக்தி புதுமையானது.
கடைசி பக்கம் சுவாரசியத்தை அதிகமாக்கியது..
9/10
சேலம் புத்தக விழாவுக்கு ஆர்வத்துடன் வெய்ட்டிங் . //கபீசின் வருகை க்காக//சார் .செந்தில் சத்யா ஞாபகப் படுத்திய ,இரட்டை வேட்டையர் ஆப்பிரிக்க சதி& மாஸ்கோவில் மாஸ்ட்டர்சேலத்தில் வர வாய்ப்புண்டுங்களாங்க சார்.ஜஸ்ட் ஞாபகப் படுத்தறோம் அவ்வளவே.
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் ரசிகர்களை பலவகை படுத்தலாம்.
ReplyDeleteவிளக்குக.
💐💐தமிழ்காமிக்ஸ் ரசிகர்கள் பலவகையினை சார்ந்தவர்கள்.
அவர்களில் கீழ்கண்டவர்கள் முக்கிய வகையினர்.
1)உரியவர்களிடம் அனுமதி பெற்று தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும்/வெளியிடப்பட்ட கதைகளை உழைப்பை திருடி copyright பற்றி கவலையே படாமல் அப்படியே ரீபிரிண்ட் செய்து கொள்ளை லாபம் பார்ப்போர் ஒரு ரகம்.
(ஏமாளி காமிக்ஸ் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து கொள்ளை லாபம் பார்ப்பது மட்டுமே இவர்களது குறி)
2)பிற மொழிகளில் வந்த கதைகளை உரிய அனுமதி இன்றி தமிழில் மொழி பெயர்த்து
ரசிகர்களின் விருப்பத்திற்காக வெளியிடுவோர் ஒரு ரகம்.. (காப்பிரைட் பிரச்னையில் மாட்டி கொள்ள வாய்ப்பிருந்தும் ரிஸ்க் எடுத்து ரசிகர்களை திருப்தி படுத்துவது மட்டுமே இவர்களது குறி)
3) உரிமம் பெற்று தமிழில் வெளியிடப்பட்டு தற்போதும் ரசிகர்களின் மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் உள்ள காமிக்ஸ்களை பட்டி டிங்கரிங் பார்த்தோ பார்க்காமலோ சிண்டிகேட் அமைத்து கொள்ளை விலைக்கு விற்று,
ஏமாந்த ரசிக கண்மணிகளின் பர்ஸை காலி பண்ணி தங்களது அசையும் அசையா சொத்துகளை அதிகரித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட பிஸினஸ் மேக்னட் கள் தனி ரகம்.. (இவர்களுக்கு want போடும் ரசிகாஸ்கள்தான் குறி)
4)தேவையோ தேவையில்லையோ வெளியிடப்படும் காமிக்ஸ்களை வாங்கி படிப்பது/ பீரோவில் அடுக்கி வைத்து ரசிப்பது ஸ்பெஷல் ரகம் (இவர்களுக்கு காமிக்ஸ் உலகை வாழ வைப்பது மட்டுமே குறி)
5)காமிக்ஸ் கதைகளை தேர்ந்தெடுத்து வாங்குவது/படிப்பது ஒரு ரகம்.. (இவர்களுக்கு மன திருப்தி மட்டுமே குறி)
6)கடைசி ரகம்..
புத்தகத்தை நன்கு படித்து அலசி ஆராய்ந்து புள்ளி விபரங்களுடன் விமர்சனங்களை தந்து ஆர்வத்தை தூண்டும் அடடே! ரகம் (டீப் அனலைஸேஸன் மட்டும் இவர்களது குறி)...
அந்த மாத காமிக்ஸ் இதழ்களை அந்த மாதமே படித்து முடித்துவிட்டு அடுத்த மாத காமிக்ஸ்களுக்காக காத்திருக்கும் போது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் எத்தனை ரகம் என ஆராய்வது, அவர்களை வகைப்படுத்துவது கடைசிக்கு பிந்திய ரகம்.( காமிக்ஸ் படித்து கடமையை முடித்த பின் சுற்றுச்சூழலை ஆராய்ச்சி கண்ணோடு நோக்குவது இவர்கள் குறி 😂😂😂😂😂😂)
Delete:-))))
Deleteசெல்வம் அபிராமி சார் @ 😀😀😂😂😂
Delete@Selvam ஜி...😃😃
ReplyDeleteRofl..😃😃😃
இதுவரை மீண்டும் வராத ஆரம்ப கால லயன்/ முத்து போன்ற கதைகளை புதிய வாசகர்கள் படிக்காதவர்கள் வாசிக்க ரீபிரிண்ட் தான் ஒரே வழி.
ReplyDeleteஅதே சமயம் புதிய வரவுகளுக்கும் பழைய ரீபிரிண்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவு தந்தால் எடிட்டர் மகிழ்வார்.
எடிட்டரோட வருத்தமே புதிய ஹீரோக்களை அறிமுகப் படுத்திய கொஞ்ச காலகட்டத்திலேயே ஆதரவு ரொம்ப குறைவாக இருப்பது தான்.
ரீபிரிண்ட் & புதிய கதைகள் இரண்டையும் ரயில்வே ட்ராக் போல ஈக்வலா இருந்தால் அவருக்கும் மகிழ்ச்சி நமக்கும் நாம் கேட்பது கிடைக்கும்.
என்பது எனது கருத்து
சார் நண்பர்கள் எழுதியது படித்த பின்....
ReplyDeleteஒன் ஷாட் கதைகள் கென்யா...பரகுடா...அந்த துப்பாக்கி லைசென்ஸ் லேடி கதை...ஒரு சிறுவனை கொன்னதுக்கு பழி வாங்கும் கதை...ட்யூக்...
அந்த சித்திரமும் கொலைப் பழக்கம் இல்லாத மகளுக்காக இருந்ததாம் கற்பனை செய்து பிற குழந்தைகளுக்காய் பழிவாங்கும் உளவியல் உளமகிழ் கதை(நீங்க விட்டதிலே பல்வகைமை யோசித்து லயிக்க வைத்த படைப்பு)...எப்படி மறந்தேன் ரே தெரியல தோர்களை...காலனின் கதை இரண்டாம் பாகத்துக்காய் காத்திருக்கேன் ஆகவே அனைத்து கதைகளுமே அருமை...விண்வெளி கதை கரடி பல் ...ஜேசன் ப்ரைஸ்...பென்சில் அழகி முதல் கதை படித்து வியந்து இரண்டோ மூனோ படிக்கலன்னாலும் காத்திருக்கு படிக்காம புத்தகத்தோடு..கமான்சே..பரவால்ல ரக ஜெராமையா...உங்கள் வெளியீடுகள் அனைத்துமே சூப்பரே முதலிதழோடு நின்ற கதைகள் ரெண்டு மூனோடு நிக்க ....சூப்பராருந்தும் அதிர்ச்சியளித்தது முதல் கதையோட நின்ற ஐஆர்எஸ்...
மியாம்ஸ்ல தொடர இயலாம தடுமாறும் சிஸ்கோ...
நம்ம கதைகள் கிடைக்காத போது பாருங்க அடுத்த தலைமுறைக்கு காமிக்ஸ் கடத்த கிட்டங்கிகளில் காத்துக் கிடக்கும் இக்கதைகள வெளியிட இவர்கள் வாரிசுகள் கலைத்தாகத்தோட வருவது நிச்சயம்
...தயங்காம லிமிட்டெட்ல சிறந்த கதைகள் கொண்டு வாங்க...படிக்க வாய்க்கும் போது வியக்கப்படும்...விமர்சிக்க இயலாம ஒன்றி படித்த டின்டின்ன யாரும் குறிப்பிடாத தும் ஆச்சரியமே
காதலனின் கால் தடத்தில் இரண்டாம் பாகத்த யாரிந்த மினி ஸ்பைடரோட கலந்து கட்டி விடுங்க..அந்த தப்பிய நாயகியும்...மனநலம் குன்றிய சிறுவனும் பீச்ல என்ன பன்னுறாங்கன்னு அறிய ஆவல்...இக்கதைகளுக்காக காத்திருக்கும் சுனாமி போல வந்து தாக்கும் புத்தகங்களால் இதன மறந்து விடுகிறோம்...ஆனா படிக்காம சேமிக்கும் இவையனைத்தும் நிச்சயமா எனது ஓய்வு கால ஓய்வூதிய பொக்கிசங்களே...பழய நினைப்பு டா பேராண்டி என ரசிக்க காத்திருக்கு எதிர்காலம்
Deleteவிண்வெளி கதை...வானத்தின் வீதியில்
Deleteகேன்சர் குழந்தை கதை
Deleteசாகோரின் முதல் குண்டு புக்...சாகோர்..மிஸ்டர் நோ...
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்களுக்கு ஒரு விரிவான விமர்சனம் பேஸ்புக்கில் எழுதினேன்.அது நிச்சயமாய். ஒரு கல்ட் கிளாசிக்.அது ஹிட்டாகவில்லை என்பது துயரம்
ReplyDeleteSpoon and white not good sir, can't travel with the story or enjoy it
ReplyDeleteஅன்பிற்கினிய எடிட்டர் சார் வணக்கம்..,
ReplyDeleteவாருங்கள் சார், நாயர் கடையில் அமர்ந்து கட்டஞ்சாயா அருந்திக்கொண்டு. ஓஓ ..அதுவும் பழைய கிளாசிக் வாசனை உள்ள கடை, அதனால் Brown Bench tea shop இல் அமர்ந்து கிரீன் டீ அருந்திக்கொண்டு பேசலாம்.
முதலில்,நீங்கள் தங்களது வெளியீடுகள் மூலம் எந்த புத்தகத்தை வெளியிட்டாலும்.. அது கிளாசிக் மறுபதிப்பாக, புதிய ஜானர் புதிய கதையாக இருந்தாலும் வாசிக்கும் வாசகர்கள் ஒருவன் நான்.
பால்ய காலம் தொட்டு தங்களின் காமிக்ஸ் நிழலில் வளர்ந்தவன் நான்.
இதன் மூலம் நான் அடைந்த வாழ்வியல் சூத்திரங்கள் அதிகம். நன்றி..!!!
மறுபதிப்பு கிளாசிக் கதைகளை பற்றி தங்களின் இந்த பதிவும், சில பதிவுகள் மூலம் தங்களின் எண்ண ஓட்டத்தை ஓரளவு அறிய முடிகிறது. கதைகளையும் வாசிக்கும் ரசனையும் அடுத்த கட்ட முயற்சிக்கு நகர்த்தும் தீவிர கருத்திற்கும் வாழ்த்துக்கள்.
மறுபதிப்பு கதைகள் பற்றிய ஆப்ஷன்களையும் ஓட்டெடுப்பில் வைப்பதற்கு தயவு கூர்ந்து மறு பரிசீலனை செய்யவும். கேட்பதால் வாய்ப்புள்ள இடத்திலும் இம்மாதிரி கோரிக்கைகள் எழுவதை தவிர்க்க இயலாது தங்களால்.
மறுபதிப்பில், தங்களுக்கு விருப்பமான கதையை, தங்களது சொந்த விருப்பப்படி,விருப்பம் இருந்தால், முழு மனதோடு விருப்பம் இருந்தால்.. வெளியிடுங்கள் சார்.வெளி வந்தால் நான் வாங்கிக் கொள்கிறேன். படிக்கிறேன். வெளியிட விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை சம்மதமே..கேலி, கிண்டல்களுடன் பறக்கும் பிசாசு ,பறக்காத பூதம், ஆறு அஞ்சறைப்பெட்டி என்ற எங்களுக்கான தக்காளி சட்னி வார்த்தை நல்ல நகைச்சுவை போங்கள். இந்த அரிய நகைச்சுவையை புரிந்து கொள்ளாத கவச உடை மனிதர்களாக இருந்து விடுகிறோம். பலரது மறுபதிப்பு கோரிக்கை.. உங்களுக்கு ரத்தம், தங்களின் சலிப்புணர்வு, வேண்டா வெறுப்பான மனதும், கிண்டலும் கவச உடுப்பு அணிந்த என்னால் தமாசாக நினைக்க இயலவில்லை. உறுதியாக அவ்வாறு நினைக்க இயலவில்லை.
கிளாசிக் மோகம் உள்ள வாசகர்கள், மறு பதிப்புகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் பிடிவாத கோரிக்கையால் தான் புதிய கதைகளும் புதிய ஜானர்களும் அதிகம் ஆராதிக்கப்படுவதில்லை என்ற கருத்து ஆக்கபூர்வமான கருத்து அல்ல.
கிளாசிக் கதை மோகம், மறுபதிப்பு கோரிக்கையால் தான் புதிய கதை, புதிய ஜானர்கள் வெளிவருவது தடைபெறுவது, முட்டுக்கட்டை கொடுப்பது போல ஒரு பிம்பம், சாயல் உருவாக்கப்படுவதை பார்க்க முடிகிறது.
மறு பதிப்பு பற்றிய கோரிக்கையை தாங்கள் 100% நிராகரித்து விடுங்கள் தாங்கள் விருப்பப்பட்ட கதையை விருப்பப்பட்ட சமயங்களில் வெளியிட்டுக் கொள்ளுங்கள். ஆர்வமுள்ளவர்கள் வாங்குவார்கள் வாங்குவேன். தயவு செய்து இனி வரும் காலங்களில் கருத்து கேட்டு, நாங்கள் அதற்கு குதூகலமாக சம்மதம் தெரிவித்து.. அதனால் புதிய ஜானர்களுக்கு முட்டுக்கட்டை என்ற சூழ்நிலை கிளாசிக் கதைகளுக்கு உருவாக்க வேண்டாம்.
ReplyDeleteரிப்போட்டர் ஜானி, ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளுக்கு மறுபதிப்பு கோரிக்கை நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது பரவலாக எழுவது, தங்களது கவனத்தை ஈர்க்கவே அன்றி வேற எதுவும் இல்லை.
ஆனா தற்பொழுது யார் அந்த மினி ஸ்பைடர் fanmade இதழ் உருவாகி வருவதால், அதை முன் உதாரணமாக கொண்டு அவசர அவசரமாக ரூ.200 விலையில் கிளாசிக் நண்பர்களுக்காக இந்த கதையை தாங்கள் வெளியிட அறிவிப்பு தந்தது கிளாசிக் மோகம் மேல் எழுந்த வெறுப்புணர்வு என்பதை தங்களின் இந்த வார இந்தப் பதிவின் மூலம் வெளிப்படையாக அறிய முடிகிறது. இம்மாதிரியான கசப்பான சூழ்நிலையில் யார் இந்த ம மினி ஸ்பைடர் வெளிவருவதை மறு பரிசீலனை செய்யுங்கள் சார்.வாய்ப்பு இருந்தால் வேறு ஒரு இணக்கமான சூழ்நிலையில் பார்த்துக் கொள்ளலாம்.
Fan made இதழை உருவாக்கும் நண்பரிடம் தாங்கள் நிர்வாக ரீதியில் பேசிக் கொள்ளுங்கள்.
// அது மட்டுமன்றி - தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தாலுமே, ஒரு கணிசமான அணியினருக்கு, இந்தப் பழசு மீதான மோகங்களிலிருந்து வெளிப்படும் சாத்தியங்கள் கிடையாது என்பது புரிகிறது //
தங்களின் இந்த வார்த்தைகளுடன், கருத்துக்களுடன்
யார் இந்த மினி ஸ்பைடர் மறுபதிப்பு வெளியீடு வந்தால், கிளாசிக் ரசிகர்கள் அல்லாத பிற வாசக நண்பர்களால் அனார்த்தமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்.
நான் காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்த காலம் முதல் 2012 முன்பு வரை தாங்கள் வெளியிட்ட கதைகளில், ஒற்றை இலக்க எண்ணிக்கை தவிர மற்ற கதைகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும். தயவு செய்து கிளாசிக் கதையோ, புதிய கதைகளோ ,புதிய ஜானர்களோ.. தங்கள் விரும்பும் படி தங்களின் சுயமான விருப்பத்துடன் வழக்கம்போல் வெளி கொணர யோசித்துப் பாருங்கள் சார்.
கிளாசிக் வாசகர்களின் சத்தம் இன்னும் வெகுவாக இந்த சூழ்நிலைக்கு பிறகு மௌனமாகி விடும் என ஓரளவு அறிய முடிகிறது.
மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி அலங்கார வார்த்தைகளின்றி பதிவு செய்துள்ளேன்.
ReplyDelete1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
டேங்கோ
டிடெக்டிவ் ஜூலியா
மேக் ஜாக் ஜோடி
வெட்டியான் ஸ்ட்ர்ன்
ரூபின்
டெட் வுட் டிக்
ஐஆர் எஸ்
ஆல்ஃபா
எனக்கு பிடித்தவர்கள்
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
எப்போதுமே.
மறுபதிப்பை விட புதியவர்களே எனது தேர்வு.
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
வந்த உடன் படித்து விட்டு தான் அடுத்த வேலை.
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
எப்பொழுதும் வாசகனாக தான் வாசிக்கிறேன்.
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா? இல்லீங்க அய்யா . நான் எல்லா உடனே புத்தகங்களையும் படித்து விடுகிறேன்.
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
இல்லை.
Sir. Naan Ella bukkum vaanguren. Immediate a padikkiren. I am newbies fan. Puthusa podungo
ReplyDelete6.
ReplyDelete// Nostalgia மோகம் எதுமில்லை. 2012க்கு பிறகு மறுபதிப்பில் வராத கதைகள் வந்தால் சந்தோசமே. வரலைன்னாலும் சந்தோசம்.//
மும்மூர்த்திகள் மீண்டும் வருகின்றது என்ற போது மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அது ரெகுலராக வர ஆரம்பித்த பிறகு பழைய ஆர்வம் இன்று வரை இல்லை. எந்த கதை வந்தாலும் படித்து விடுவேன்; ஜடா முடி ஜனாதன் கதையையே நான் படித்து விட்டேன் சார் 😊 விமர்சனம் எழுத வேண்டும் என படித்தது இல்லை. புதிய கதைகளுக்கு நேரம் கிடைக்கும் போது அதில் உள்ள நல்ல விஷயங்களை இங்கு பகிர்வேன். எனக்கு காமிக்ஸ் தொடர்ந்து வர வேண்டும்.
தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்து வெளியிடப்படும் அறிமுக புது ஹீரோக்களுக்கு ஆதரவு குறைவாக உள்ளது என்று கருத்தும் உள்ள நிலையில்..
ReplyDeleteஅறிமுக கதையில் எந்த ஒரு ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டார் அடைவதில்லை. (கேப்டன் டைகர் விதிவிலக்கு). ஒரே வருடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் தொடர்ச்சியாக வந்தால் வாசகர்களுக்கும் அந்த ஹீரோ ஹீரோயின் கதையின் மேல் ஆர்வம் ஏற்பட்டு மதிப்பு ஏற்பட்டு தொடர்ச்சியாக அந்த ஹீரோவை ஆதரிக்க தொடங்குவார்கள்.
கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி ,பிளைசி, ஸ்பைடர், ஆர்ச்சி, இரட்டை வேட்டையர்கள் என அக்காலகட்ட உதாரணம் அடிக்கடி இவர்களின் கதை தனியாகவோ மற்ற கதைகளில் கூட இணைந்தும் வந்துவிடும். வருடத்திற்கு மூன்று நான்கு கதைகள் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தன.
2012 பிறகு தொடர்ச்சியாக புதிய ஹீரோக்கள் நிறைய அறிமுகம் ஒருவரின் கதையை ஒரே ஆண்டில் மூன்று அல்லது நான்கு தடவை கதையாக வெளியிட முடியாத நிலவரம். எவரைக் கொண்டு வரலாம், எவரை தவிர்க்கலாம் இவருக்கு பின்னர் வாய்ப்பு வழங்கலாம் என்ற நிலைமையில் ஒரே கதை யின் மூலம் ஒரு கதை பிரபலமடைந்தாலும் அடுத்த கதைக்கு காத்திருக்க வேண்டிய நிலைமை..
உதாரணம்.. நில் கவனி வேட்டையாடு
நல்ல கதை அம்சம் கொண்ட ஹீரோவா இருந்தாலும் சில கதைகளுக்கு பின்பு அவருக்கான வெற்றி இலக்கை அடைய முடிகிறது.
உதாரணம்.. டிடெக்டிவ் ரூபின்
டிடெக்டிவ் ரூபின் 2022 சம்மர் ஸ்பெஷல் அறிமுகம், அடுத்த கதை 2023 சம்மர் ஸ்பெஷல், அடுத்த இதழ் இந்த வருடம் நடப்பு மாதத்தில் அவருக்கான வெற்றி இலக்கை அடைந்துள்ளார் இனி இவருக்கான கதையை வாசகர்கள் ஒருவனாக நானும் கொண்டாடுவேன்.
பெரும்பான்மை யானவர்களால் கொண்டாட கூடிய கதைக்களத்தை ஏற்று கொள்வதற்கு சில குறுகிய காலத்தில் வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரே கதையில் எதிர்பார்க்கும் வெற்றியினை அடைவதற்கு கேப்டன் டைகர் போன்றவர்கள் மட்டுமே சாத்தியம்
1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?
ReplyDeleteடேங்கோ,
வெட்டியான் ஸ்டெர்ன்,
டெட் வுட் டிக்...இவர்கள் பிடித்த பட்டியலில் உள்ளனர்...
2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?
பெரும்பாலான புதிய வரவுகளை ஆர்வமுடனே படித்ததுண்டு,ஈர்ப்புடைய கதைகளாயின் வரவேற்பதிலும் ஆர்வமாய் இருந்ததுண்டு...
3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?
கடைசியா நீங்க எப்போ குண்டு புக் போட்டீர்களோ அப்போதான்...ஹி,ஹி...
4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?
இந்த கோணத்தில் தனித்தனியாக பிரித்து யோசித்து படித்ததாய் நினைவில்லை...
முதலில் ஒரு கதையை படிக்க வேண்டும் என்ற ஆவலே தோன்றும்,பின் வாசித்து முடித்ததும் அதைப் பற்றி மனதில் ஓடும் நிறை,குறைகளை நம் பார்வையில் அலசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்...
சில நேரங்களில் இந்த காட்சி அமைப்பு,கதையோட்டம் இப்படி அமைந்திருந்தால் சிறப்பாய் அமைந்திருக்குமோ என்று ஒரு கதாசிரியரின் பார்வையிலும் யோசித்ததுண்டு,பெரும்பாலும் மிகவும் ஈர்ப்பாய் உள்ளே இழுக்கும் கதைக் களங்களில் அவ்வாறு தோன்றியதுண்டு...
5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?
ஜுன் மாதம் வரையிலான இதழ்களை படித்து முடித்தாயிற்று,ஜூலை இதழ்கள் நிலுவை,ஆகஸ்ட் இதழ்களை முடித்தாயிற்று,ஆனால் விமர்சனம் போட நேரமில்லை...
செப்டம்பர் இதழ்கள் வாசிப்பில் உள்ளது,இந்த ஆண்டு முழுவதும் இந்த நிலையே தொடரும்,பெரியதொரு பணியை முடிக்க வேண்டி இருப்பதால் அடுத்துவரும் 6 மாதங்களும் கிட்டத்தட்ட வாசிப்பு வண்டி மெதுவாகவே நகரும்...
பின்தொடரும் காரணங்கள் பொதுவாய் எல்லோருக்குமே ஏதாவது ஒரு தருணத்தில் வாய்த்திருக்கும் என்பதால்,2025 இல் பின்பாதியில் வாசிப்பின் வேகம் சீராகும் என்று நம்புகிறேன்...
6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?
”நோஸ்டால்ஜியா மோகம்” -இது ஒரு ஆர்வம்தானே தவிர,வெறி எல்லாம் கிடையாது சார்...
“பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” -இதில் ஒன்றும் தவறு இருப்பதாய் ஒன்றும் எனக்கு தோன்றவில்லை,எனினும் மற்றவர்களை போல பழசு அப்படியே அதே எழுத்துருவில்,அதே சைஸில்,அதே விலையில் வேணும்கிற அபத்த சிந்தனை எல்லாம் எனக்கு இல்லை,பழசு கிடைத்தால் தவற விட்டதை மீண்டும் பிடித்து விட்டோம்,வாசித்து விட்டோம் என்ற ஒரு மகிழ்ச்சி,மன நிறைவு அவ்வளவே...
பழசு கிடைத்தால் மகிழ்ச்சி,கிடைக்கா விட்டால் பெரிதாய் வருத்தப்பட ஒன்றுமில்லை என்பதே தற்போதைய மனநிலை...
எனினும் புதிய இதழ்களை,புதிய ஜானர்களை வரவேற்பதிலும் எனது ஆர்வம் தொடரும்...
// மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா? இல்லீங்க அய்யா . நான் எல்லா உடனே புத்தகங்களையும் படித்து விடுகிறேன். //
ReplyDeleteநமது காமிக்ஸ் புத்தகங்கள் வந்த உடன் வீட்டில் எனது மேசை மீது எடுத்து வைத்து விடுவேன்; அவைகளை படித்து முடித்த பின்னர் உள்ளே எடுத்து வைப்பேன். இப்படி செய்வதால் வீட்டில் அனைவரும் படிக்கிறார்களஓ இல்லையோ அவைகளை அனைவரும் படம் பார்த்து சென்று விடுவார்கள்; பரீட்சை நேரத்தில் கண்டிப்பாக மொபைல் கிடையாது என்பதால் குழந்தைகள் தமிழ் தெரியாவிட்டாலும் இவற்றில் படங்களை ரசிப்பார்கள், சில நேரங்களில் அதில் ஏதாவது பிடித்து இருந்தால் படம் வரைய ஆரம்பித்து விடுவார்கள்.
மேசையில் படிக்காத புத்தகங்கள் இருந்தால் அதற்கு எப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்று அவைகளை படித்து விடுவேன்.
கபீஷ என் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். பூந்தளிர்ல் படித்த கதைகளை ஞாபகம் வைத்து அவ்வப்போது குழந்தைகளுக்கு சொல்லுவேன். கபீஷ சேலம் புத்தகத் திருவிழாவில் வரும் என்றால் சேலம்கு புத்தகத்டு திருவிழாவிற்கு குடும்பத்துடன் ஒரு விசிட் அடிக்க வாய்ப்புகள் அதிகம் 😀
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteகபீஸை கலரில் பார்க்க ஆசை..😍
Waiting for #Salem Bookfair# 👍💐
// வரணும்...பன்னீர்செல்வமாயிட்டு வரணும் //
ReplyDeleteவருவாங்க சீக்கிரம் எல்லோரும் பழைய பன்னீர் செல்வமா வருவாங்க 😊
+ 1
Deleteநா ஆல்ரெடி பன்னீர் செல்வம் தாங்க..
Deleteஒரு வார whatsapp கம்யூனிட்டி கும்மி ஆடலுக்கு பின் இந்த பதிவை எழுத வேண்டியதாகி விட்டது.
ReplyDeleteஇங்கே காமிக்ஸ் படிக்கும் சிறு வட்டத்தில் பெரும் பகுதியினர் குறிப்பிட்ட சில ஜனங்களை தாண்டி வெளியே வருவதில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது கதை வந்தாலும் அவர்கள் ஸ்கிப் செய்து விடுகிறார்கள். கார்ட்டூனா வேண்டாம். டிராபிக் நாளா வேண்டவே வேண்டாம். வேறு மாற்றுக்கல கதையா படித்துக் கூட பார்ப்பதில்லை வேண்டவே வேண்டாம் என்கின்ற மனநிலையில் உள்ளனர். 45+ புத்தகங்கள் வாங்கும் போது என் போல மாற்றுக்கள சிறு அணியினருக்காகவாவது வருடத்திற்கு ஒரு புத்தகம் வாங்கலாமே. ஆனால் அவர்களோ தங்கள் ஜான்ரத் தாண்டி வேறு கதைகளை ஸ்கிப் செய்து விடுகிறதால் அந்தக் குறிப்பிட்ட கதைகள் விற்பனையில் தோற்று விடுகின்றன. அதனால் அந்த கதைகளை என் போன்ற சிறுகடையினர் இழந்து வருகிறோம். ஆசிரியரும் வேறு வழியின்றி ஓடும் குதிரையில் பணம் கட்ட வேண்டியதாகிவிடுகிறது. இதே நிலை நீடித்தால் குறிப்பிட்ட சில ஜனங்களைத் தவிர எந்த கதையும் இல்லாமல் போய்விடும். என் போன்ற வாசகர்களும் வெறுத்துப் போய் மனதை கல்லாக்கி கொண்டு காமிக்ஸ் சீன் படிப்பதை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 2025 க்கு சந்தா கட்டுவதா வேண்டாமா என்கின்ற கடுமையான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். என் சந்தாவை கட்டிவிட்டு நமக்கு பிடிக்காத கதைகளை வாங்க வேண்டும். நாமும் மற்றவர்கள் போல எந்த கதை பிடிக்கிறதோ அந்த கதையை அவ்வப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாமே என்கின்ற எண்ணமே மேலோங்குகிறது. கிராபிக் நாவல் சந்தா. வி காமிக்ஸ் சந்தா மட்டும் கட்டிவிட்டு பொதுச் சந்தாவில் இருந்து விலகிவிடலாமா என்கின்ற எண்ணம் தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. புத்தகங்கள் வெளிவந்த பின் பிடித்த புத்தகத்தை மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாமா என்கின்ற ஆலோசனையும் தோன்றுகிறது. நான் எடுத்த இதே முடிவை சில மௌனமாசர்களும் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு முடிவு ஏற்பட்டும் ஆயின் சந்தா எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட வாய்ப்புள்ளது. இந்த முடிவை மனதை கல்லாக்கி கொண்டு தான் நான் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். இதனால் வரை பிடிக்கிறதோ பிடிக்கலையோ அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் வாங்கியதற்கு காரணம் தொடர்ந்து காமிக்ஸ் வரவேண்டும் என்கின்ற ஆசைதான். ஆனால் அதனிலும் மண் விழும்போது கடுமையான உதவிகளை எடுக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது. இதில் யாரையும் குற்றம் குற்றம் சொல்ல விரும்புவதில்லை. காமிக்ஸ் வாங்குவது அவரவர் விருப்பம். அதுபோல் நானும் என் விருப்பத்திற்கு மாறிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று இதே நிலை நீடிக்குமாயின் கடைசியில் ஒரே ஜானர் மட்டுமே மிஞ்சும். அப்பொழுது காமிக்ஸ் என்பது ஆளில்லா தீர்வு போல் அரவமற்ற காடு போல் மாறிவிட வாய்ப்புள்ளது. அதை தடுப்பதற்காகவாவது பெரும்பான்மை அணியினர் கொஞ்சம் மனது வைக்க வேண்டும். காமிக்ஸ் வாழ்வதும் வீழ்வதும் இனிய அந்தப் பெரும்பான்மை அணையின் கையிலே உள்ளது.
கபீஷ் கலரில்... வாவ்.... I am waiting. 😍🥰💐
ReplyDeleteநான் தற்போது கூறிய கருத்து பலருக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் என் கருத்தை இங்கே பதிந்தால் தானே மற்றவர்களுக்கு என் எண்ணம் தெரியும். எத்தனை நாளும் இதனை மௌனமாக பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இப்பொழுது சொல்லத் தோன்றியது அதனால் சொல்லுகிறேன். இந்தக் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். காமிக்ஸ் என்னும் கனவு களையக் கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் இந்த பதிவை செய்துள்ளேன். இது சம்பந்தமாக யார் எப்படி ஆதரவாகவோ எதிர்பாவோ பதிவிட்டாலும் அது காமிக்ஸ் உதவும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteநண்பரே யாரோ எதுவோ செய்து விட்டு போகட்டும் லயன் is king y மூச்சா சந்து smile
ReplyDeleteதாத்தாக்கள் கதை கூட வெளிவந்து விமர்சனங்களை சந்தித்த பின் தான் தற்பொழுது வெற்றி நடை போடுகிறது. அட்டவணை பதிவுக்கு காத்திருக்கிறேன். அதன் பின் ஒரு நல்ல முடிவை இந்த முறை எடுக்கிறேன். சந்தா கட்டுவதா அல்லது அவ்வப்போது ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாமா என்கின்ற முடிவை இப்போதுள்ள வெறுப்பு அதிகமாய் உள்ள சூழலில் எடுத்தால் தவறாக போய்விடும் என்பதற்காக அட்டவணை வரை காத்திருக்கிறேன்
ReplyDelete///சேலம் புத்தக விழாவினில் முழுநீள கலர் ஆல்பமாய், ரூ.100 விலையில் இதழ் # 1 வெளிவரவுள்ளது !///
ReplyDeleteசார்.. ஐ யாம் ஆவலாய் வெயிட்டிங்! என் குழந்தைகளுக்கு கபீஷ் கதைகள் ரொம்பப் பிடிக்கும்! அவர்களை புத்தக திருவிழாவுக்கு அழைத்துவந்து புத்தகங்களை வாங்கிச்செல்ல ஆவலாய் இருக்கிறேன்.
Super!
Delete///4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியான வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?///
ReplyDeleteஎன்னை சற்றே யோசிக்க வைத்த கேள்வி இது சார்.. சமீபத்தில் நான் எப்படிப் படிக்கிறேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இன்னும் ஒரு தெளிவான பதில் கிடைத்தபாடில்லை.👀
சிந்தனையின் முடிவில் ஒருவேளை நான் விமர்சக பார்வையில்தான் கதைகளைப்படித்து வருகிறேன் என்பது உறுதியானால்.. இனி வரும் கதைகளை ஒரு ஜாலியான வாசகனாய் படித்திட - அதே பழைய பன்னீர்செல்வமாய் மாறிட - என்னாலான முயற்சிகளைச் செய்திடுவேன்...😌
அப்படியே உங்கள் சரீரத்தை குறைக்க ஏதாவது முயற்சி செய்யுங்கள் ஈரோடு (கி) இளவரசே :-)
DeletePfB.. குண்டாகி தொப்பை வளர்த்தால் SPB மாதிரி கணீர்னு பாடலாம்னு நினைச்சேன்.. அதான்!!😌😤
Deleteநீங்க சும்மா பாடுங்க அதுவே SPB மாதிரிதான் இருக்கிறது! :-)
Deleteஎனக்கு பாட தெரியாதே...
Deleteஆசிரியர் எந்த முடிவு எடுத்தாலும் எப்போதும் போல் உடன் இருப்பேன்; அவருக்கு நமது ரசனை நன்றாக தெரியும், எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று நன்றாக தெரியும்; கடந்த 40 வருடங்களாக நமது கைகளில் புதிய புதிய காமிக்ஸ் கதைகளை கொடுத்து ஒவ்வொரு வருடமும் நமது காமிக்ஸ் ரசனையை வேறு லெவெலுக்கு உயர்த்தி சென்று கொண்டு இருக்கிறார்! வழக்கம் போல சந்தா கட்டுவேன், இன்று போல் என்றும் சந்தாவில் தொடர்ந்து இருப்பேன்! எனக்கு காமிக்ஸ் தொடர்ந்து வரவேண்டும் அவ்வளவுதான் :-) !
ReplyDeleteசில பல காரணம்களால் கிளாசிக் கதைகளை ஆசிரியர் வெளியிடுகிறார் என்றால், அதற்கு ஆதரவு தருவேன்(வோம்)! ஆசிரியர் கண்டிப்பாக காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை பல நண்பர்களுக்கு உண்டு!! எனவே தொடர்ந்து அதனையும் வாங்குவேன்(வோம்).
PfB.. வரிக்கு வரி லைக்ஸ். என்னுடைய நிலைப்பாடும் இதுவே!👌👌👌👍💐
Delete@PFB..😍😘
DeleteMe too..👍✊👌👌
I agree with the views of Pfb..✊
இந்த வார கோட்டாவான செப்டம்பரின் 2வது புக்- ஸோகோரின் "வஞ்சத்துக்கொரு வரலாறு"- வாசிக்க எடுத்தேன்...
ReplyDeleteமொத பேனலே அசரடித்திட்டது....யப்பா..
செமயான ஓவியம்...நள்ளிரவில முழு நிலவின் கிரணங்களில் ஒளிரும் டார்க்வுட் கானகம்....
கெளபாய் கதைகளின் துவக்கம் எப்போதும் சிலிர்க்க வைக்கும்... அதில் முத்தாய்ப்பாக லயன் காமிக்ஸ் ஆசிரியர் Vijayan S விஜயன் சாரின் டயலாக் அப்படியே அந்த சூழலுக்கு நம்மை இட்டு செல்லும்....
இம்முறையும் செமயான டயலாக்....
"ஒரு வசந்தகால நள்ளிரவு..." னு தொடங்கும் கதை -- டார்க்வுட் கானகத்தின் காரிருளினுள் நம்மையும் மூழ்கடிச்சிட்டது.....செவ்விந்திய கானகப்பகுதி, மலைத்தொடரின் குளிர் காற்று, கிரணங்களில் நனையும் ஊசி மரங்கள், மெல்லிய பனிப்புகை.....சான்ஸே இல்லை!!!
அந்த பேனல்ல இருந்து ரொம்ப நேரம் ஆச்சு மீள்வதற்கு..மீள்சிக்குப்பின் பழம் நினைவுகளில் மனசு சுழன்றது...இதுபோன்ற டெக்ஸ்& டைகர் கதைகளில் எத்தனை முறை ஸ்தம்பித்து நின்றுள்ளோம்னு மனசு அசைபோட....
#பவளசிலை மர்மத்தின்...
"எலும்புக்கூடு பள்ளத்தாக்கின் வடபகுதியிலுருந்த மேட்டுப் பிரதேசத்தில், கோடை இறுதியில் ஒரு மாலைப் பொழுது......."
----அப்படியே அந்த எழுத்துகள் வழியே அங்க எலும்புக்கூடு பள்ளதாக்குக்கு பயணித்தோம்...பவளசிலையோடு பறக்கும் ஹூவால்பைகளின் முதுகில் தொற்றிக் கொண்டு சவாரி போக...
#பழிவாங்கும் புயலின்....
"ஏப்ரலில் ஓர் இனிய காலைப் பொழுது- வடக்கு பிராந்தியத்தை நியூ மெக்ஸிகோவுடனும், அரிசோனாவுடனும் இணைக்கும் புதிய ரயில்பாதையில் ....."
----அந்த ஓவியம், விஜயன் சாரின் இந்த வார்தைகளோடு இணைந்து அரிசோனாவுக்கு அழைத்து போயிடுது..இரயிலின் மேற்கூரையில் தொற்றிக் கொண்டு நாமும் அந்த பாலையில் ஓரு பயணம் மேற்கொள்கிறோம்.
#லயன் சென்சுரி ஸ்பெசல் முதல் கதை...
"நியூமெக்சிகோ மாநிலத்தின் போர்ட் சம்மரில் மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்த ஒருநாள் நண்பகலில்...
-----அப்படியே அந்த போர்ட் சம்மர் வெயில் நம்ம உச்சியில் சுடும்..
#தி பெஸ்ட் ஆஃப் டெக்ஸ் கார்சனின் கடந்த காலம் துவக்க பேனலில்...
"மாண்டனாவில் ஒரு இதமான மதிய வேளை...காட்டுப் பகுதியில் காற்று கடுமையாக வீசிக் கொண்டிருந்தது.. "
---மாண்டனாவின் குளிர் சூழல் நம்மையும் ஆக்ரமிக்கும்....கதையில் என்ன சூழல் வரப்போகிறது என்பதற்கு இந்த ஆரம்ப வசனங்கள் ஒரு ஆருடம் சொல்லி செல்பவை....!!!
இன்னும் பலப்பல உதாரணங்கள் சொல்லி கொண்டே செல்லலாம்... அந்த கதையை ஏனோ வாசித்தோம்னு இல்லாத , அந்த சூழலுக்குள் நம்மை கொண்டு போய் உணர வைப்பதில் ஓவியத்துக்கு இணையானது ஆசிரியர் சாரின் துவக்க வரிகள்...
எத்தனை யுகங்கள் ஆனாலும் அடுத்த கெளபாய் கதையில் இந்த துவக்கத்தை பார்த்து சிலிர்க்கும் உணர்வுக்கு மனம் ஆவலுடனே காத்திருக்கும்....😍😍😍😍😍
https://www.facebook.com/share/p/z2HvVmvkGGAYEjWd/?mibextid=oFDknk
Deleteபழைய புத்தகங்களை எடுத்து பார்க்க நேரம் இல்லாத நண்பர்கள் இந்த லிங்கில அந்த துவக்க பக்கங்களை காணலாம்.
"அது ஒரு பக்கம் இருக்கட்டும் " -
ReplyDeleteவஞ்சத்திற்கு ஒரு வரலாறு - படிச்சீங்களா..? ii இல்லையா? ii.
ஆங் இளங்கோ சார்... அதும் செமயாக ஓடுது.... அற்புதமான கதை அமைப்பு.... நேர்த்தியான ஓவியங்கள்.... புயலான டயலாக்ஸ்....
Deleteஐ லைக் ஸோகோர்.... இப்படி சில கதைகள் வந்தா டைகரின் ஸ்தானம் காலின்னேன்.முழு விமர்சனம் நாளை போடுறேன் சார்.
@Edi Sir..😍😘
Deleteஇன்றைய மீள்வாசிப்பு😃
முத்து பொன்விழா இதழான "ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்"👍
ஆரம்பம் முதல் கடைசிவரை கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பான கதைகளம்..👌
இன்னும் என்னை சுற்றி தோட்டாக்கள் பறப்பது போலவே உணர்கிறேன்..😘
முதல் தடவை படித்ததைவிட தற்போது நிறுத்தி நிதானமாக ஓவியங்கள், கதை களம், காலம் ஆகியவற்றை உள்வாங்கி படிக்கும்போது ஹாலிவுட் க்ரைம் திரில்லர் படம் பார்த்தது போல ஒரு Good feeling..😍😘✊
#What a fantastic story#
#சில கதைகளை படிக்க படிக்கதான் பிடிக்கும் moment❤💛#
🔥🔥🔥ஸாகோர்🔥🔥🔥
ReplyDeleteஇந்த உலகத்தை காப்பாத்த சிவப்பு நிற ஆடை அணிந்த ஒருவன் வருவான்..👍
அவன் வானத்துல பறப்பான்..✊
ஜாலங்கள் புரிவான்..✌
அவனது ஆயுதம் இயற்கை தந்ததாகவே இருக்கும்..👍
அவன் முன்னே
மாயாஜாலங்கள் கை கட்டி சேவகம் செய்யும்..✊
அத்தனை நிறங்களுமே அடி பணிந்து நிற்கும்..✊✊
இது இந்த பிரபஞ்சத்தின் வாக்கு..🙏🙏
🔥🔥⚡⚡ஸாகோர் ⚡⚡🔥🔥
ரூபின்
ReplyDelete2. ஸ்பூன் & ஒயிட்
, ரூபின் மற்றும் சோடா காவாலி...
ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்"👍
ReplyDeleteஇப்படி ஒரு புக் வந்துச்சா என்ன..
ஒரு வேளை பரண்ல கிடக்கும் போல...
புன்னகை ஒளிர் ஜி..
Deleteஏன் ஜி..?!! என்ன ஆச்சு உங்களுக்கு?!!🤔
அதெல்லா படிச்சாச்சு. இதை காட்டிலும் சிறந்த புக் கென்யா.
Delete🔥🔥🔥ஸாகோர்🔥🔥🔥
ReplyDeleteஇவரு டம்மி பீசு..
உடனே பொங்கி எழாதீங்க.
இவரு ஒன்னு அப்படி ஒன்னும் அப்பா டக்கர் கிடையாது..
ஸாகோர் - டெக்ஸ், டைகருக்கு அடுத்தபடியாக தமிழ் காமிக்ஸில் வெற்றி நாயகனாக வலம் வருவார்..
Deleteஆத்தாடி,
Deleteதெய்வமே நீங்களா.,
நீங்கள் செய்யும் தவறை நான் செய்ய மாட்டேன். ஏனெனில்,
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இல்லாத
ஓர் மாயையை நான் உருவாக்க விரும்ப வில்லை.
இதை விட சிறந்த கதா பாத்திரங்கள் இருக்கிறார்கள்.
( ex)
Mr நோ...
🔥🔥🔥ஸாகோர்🔥🔥🔥
ReplyDeleteஇதை விட சிறந்த படைப்புக்களை நாம் கொண்டாட மறுக்கிறோம்.
கலர் ஆல்பமாய், ரூ.100 விலையில் இதழ் # 1 வெளிவரவுள்ளது !/
ReplyDelete10 ரூபாய் விலையாக வந்த போது, ஆத்தாடி இம்புட்டு காசா என்று யோசித்தேன் அன்று. ஆனால் இன்று 100 ரூபாய் விலை பரவாயில்லை என்று தோன்றுகிறது...
இதன் விடை தான் என்னவோ..
*** சினம் கொண்ட சின்னக் கழுகு ***
ReplyDeleteவெகு நாட்களுக்குப் பின் ஒரு ஆழமான டெக்ஸ் கதை! கதாசிரியர் போசெல்லின் கதை சொல்லும் திறன் வியக்க வைக்கிறது!! ரேஞ்சர்களே அவர்களுக்குள் அடித்துக் கொண்டு சாவதெல்லாம் மிரள வைக்கிறது!
மிக மிக அபாரமான, நேர்த்தியான சித்திரங்கள்! ஓவியர் Majoவுக்கு விருது கொடுத்து கௌரவிக்கலாம்! மொழிபெயர்ப்பே லயன் முத்துவின் தனித்துவம் என்பது ஆயிரத்து சொச்சமாவது தடவை உணர வைக்கும் கதை!
ஒரு நட்சத்திர யுத்தம்!
சினம் கொண்ட சின்னக் கழுகு,
ReplyDeleteஏகப்பட்ட கதாபாத்திரங்கள்,கதை நகர்வு பல்வேறு முனைகளில் இருந்து நகர்ந்தாலும் மையப்புள்ளியை அழகாய் கோர்த்தெடுத்து கதையை நகர்த்தி உள்ளனர்,என்ன கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவு வைத்துக் கொள்வதுதான் கொஞ்சம் கடினமாய் இருந்தது,பெயர் உச்சரிப்புகள் கூட காரணமாய் இருக்கலாம்...
ஃபின்னிகென்,ரோப்லீடோ போன்ற பாத்திரங்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் சுவராஸ்யமாய் இருந்தது...
கொஞ்சமும் போரடிக்காமல் போனது சினம் கொண்ட சின்னக் கழுகு...
வஞ்சத்துக்கொரு வரலாறு,
அட்டைப் படமும் சரி,கதை நகர்வும் சரி,”நச்”...
வழமையான பழிவாங்கும் படலம் என்றாலும் கதையோட்டம் காட்டாறு போல போனது...
வணிகக் கூறுகள் கதையின் மைய ஓட்டத்தில் அழகாய் இயைந்து அமைந்திருந்தது...
கிட்டத்தட்ட டெக்ஸிற்கான கதையில் ஸாகோர் இருப்பதாய் தோன்றினாலும்,இரு இடங்களில் ஸாகோர் கொஞ்சமே “மொக்கை” வாங்குகிறார்,இதுவே டெக்ஸ் கேரக்டர் இந்த கதையில் இருந்திருந்தால் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என்று தோன்றியது...
வஞ்சத்திற்கொரு வரலாறு ஸாகோரின் இருப்பைத் தக்க வைக்க உதவும் என்பதில் ஐயமில்லை...
மங்களமாய் மரணம்,
ரூபினின் ஜில்,ஜில் சாகஸம்,போரடிக்காத கதை நகர்வு,திருப்தியான வாசிப்பு...
ஒரு இடத்தில் ரூபின் தன் தாயாரிடம் பேசும் வசனம் மட்டும் சற்றே உறுத்தலாய் தோன்றியது...
“அங்கே அவனோடு சேர்ந்து நான் பெற்றுப் போடப் போகும் பன்றிக் குட்டிகளை மேய்ப்பதுதான் என் வேலையாக இருக்குமாம்”
-இந்த வசனத்தை இன்னுமே கொஞ்சம் பிசிறடிக்காமல் செய்திருக்கலாமோ என்று தோன்றியது...
ஒருவேளை ஒரிஜினலில் இதைவிட ராவாய் வசனம் இருந்திருக்குமோ ???!!!
சிறையில் ஒரு அழகி,
ஸ்பூன் & ஒயிட்...
சீரியஸான கதையை காமெடியா நகர்த்திட்டு போவது கம்பி மேல நடப்பது போல சிக்கலான விஷயம்தான்,கொஞ்சம் சொதப்பினாலும் குறிப்பிட்ட நகர்வை சீரியஸா எடுத்துக்கறதா,இல்ல காமெடியா எடுத்துக்கறதான்னு தோணும்...
ரொம்ப யோசிக்கத் தேவை இல்லைன்னா,அதைக் காமெடியா எடுத்துக் கொண்டு நகர்வதில் எந்த பிரச்சனையும் இல்லதான்...
செலெனா கிறுக்குக் கும்பலின் அஸும் மொட்டைத் தலை மாதிரி கேரக்டர்கள் நிறைய இடங்களில் உள்ளன...
கூட இருக்கறவங்களை கோர்த்து விட்டுட்டு,வாயில் வடை சுடும் கேரக்டர்கள்...
எப்பவுமே பாதிப்பு சுற்றி இருக்கும் தொண்டர் படைகளுக்குத் தான் “தலைமை” என்றும் பத்திரமாகவே இருக்கும்...
செலெனா கும்பலின் கிறுக்குத்தனங்களைப் பார்க்கும் போது சமீபத்தில் படித்தது நினைவில் வந்து போனது,”ஒரு பறவை பறவையாகவே இருக்கிறது,ஒரு பசு பசுவாகவே இருக்கிறது,ஆனால் மனிதன் மட்டும் அதிகாரியாக,தொழிலாளியாக,பணக்காரனாக,பிச்சைக்காரனாக,ஏதாவது ஒன்றாக ஆகிகொண்டிருக்கின்றான்,மனிதனாகவே இருக்கும் மனிதனை காண நான் ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்”
இந்த மனுசங்களுக்குத்தான் எத்தனைவிதமான கிறுக்கு சிந்தனைகள்...
Super. Short and goo review
Deleteஇன்றைய மீள் வாசிப்பு..😃👍
ReplyDeleteமுத்து பொன்விழா
மூன்று கதாநாயகர்கள்.❤💛💙.
அதிரடி ஆல்பா, சிதறடிக்கும் சிஸ்கோ & டமால் டுமீல் டாங்கோ..😍😘
பொறுமையான மீள்வாசிப்பில்தான் ஓவியங்களை ரசிக்க முடிகிறது😘..
கதை களத்தை உள்வாங்க முடிகிறது😍..
#I Love மீள்வாசிப்பு# ❤
அஸ்ஸியா டென்கோவாவை கேட்டதாக சொல்லவும் கோடாலியாரே.....💕💕💕💕💕💕💕💕💕💕💕
Deletedefinitely ji..😍😍😍
Delete@STV ji..😍
Delete😘😘😘கேட்டேன்.. முடியாதுன்னு சொல்லிடுச்சு ஜி...
😘😘😘😘
ReplyDelete"""வஞ்சத்துக்கொரு வரலாறு """
செவ்விந்தியர் நிலங்களை அமெரிக்கர்கள் எப்படி ஆக்ரமித்தனர் என்பதை கல்லூரி பாடநூல்களில் தொடங்கி பல்வேறு வரலாற்று செய்திகளில் அறிந்துள்ளோம்...
நம்ம லயன் காமிக்ஸ்ஸில் சிலபல கதைகளில் இதை இரத்தம் தெறிக்கும் ஓவியங்களில் பார்த்துள்ளோம். "பிஸ்டலுக்குப் பிரியா விடை"- யில் நவஹோ & பிற செவ்விந்திய நிலங்களை எப்படியெல்லாம் ஆக்ரமித்தனர் என்பதை பூர்வகுடி மக்களின் பார்வையில் பார்த்தோம்...
"காற்றில் கரைந்த கூட்டம் "- தளபதி கதையில் அபாச்சேக்கள் தம் நிலங்களை இழந்து எப்படி அல்லல் பட்டனர் என்பதை இரத்தமும் சதையும் தெறிக்கும் படி அழுத்தமாக பதிவு செய்திருந்தார்கள் பிதாமகர் சார்லியர்& ஜிரோவ்.
நவஹோ பிரதேசத்தில் ஒளிந்துள்ள தங்கத்தை அடைய நவஹோ பிராந்தியத்தையே சுருட்ட, வாசிங்டனில் செல்வாக்கு உள்ள நபர் முயன்றதையும், தொடர்ச்சியாக டெக்ஸ் சிறைபட்டதையும்; கார்சனின் சாதுர்ய சமயோசித நடவடிக்கைகளால் அந்த முயற்சி எப்படி முறியடிக்கப்பட்டது என்பதை லயன் காமிக்ஸ் டைனமைட் ஸ்பெசல்--- "புயலுக்கொரு பிரளயம்"- கதையில் விரிவாக கண்டு துணுக்குற்றோம்.
காமெடி கிங் லக்கி லூக்கின் நையாண்டி ஸ்டைலிலும் இதே கதையமைப்பை பார்த்து உள்ளோம். சமீபத்திய லயன் லக்கி 40வது ஆண்டு மலரின் இரண்டாவது கதை "களமெங்கும் கிழம்" காமெடி ரகளையின் கதையும் இதே செவ்விந்திய நில அபகரிப்பு முயற்சியே!
லயனின் 5வது பெரிய நாயகராகும் முயற்சியில் உள்ள ஸோகோரின் இம்மாத சாகஸத்தின் கதைக்கருவும் இந்த நில ஆக்ரமிப்பே..கதை சொல்லப்பட்ட விதம் அற்புதமான படைப்பாக மிளிரச்செய்கின்றது...!!!
செனட்டர் ப்ளேக் & அவரது பார்ட்னர்கள் சாதுர்யமாக காய் நகர்த்தி செவ்விந்திய விவகாரத்துறையின் ஒப்பந்தம் என்ற போர்வையில் செவ்விந்திய நிலங்களை கைப்பற்ற முயல்கின்றனர். ப்ளேக்கின் முந்தைய அடாவடி செயல் க்யோவா இன தலைவன் வின்டர் ஸ்நேக்கின் தீராப்பகையை எவ்வாறு பெற்று தருகிறது என்பதை பின்னணியில் சொல்லியுள்ளார் கதாசிரியர். கதையின் மையத்தை விளக்கும் இந்த முன்கதை மதிப்பெண்களை சேதாரம் இல்லாமல் பெற்று தருகிறது.
ப்ளேக் vs ஸ்நேக் என்பதான பழிவாங்கலில் ஸோகோர் தலைநுழைக்க ஆட்டம் சுடுபிடிக்கிறது. ப்ளேக்கை ஸ்நேக் பழி தீர்த்தானா? அல்லது ப்ளேக், இம்முறையாவது ஸ்நேக்கை கதை முடித்தாரா என்பது பரபரப்பான க்ளைமாக்ஸில்.......!
கதையின் பிரதான பலமே ஓவியங்கள் தான்....துவக்க பேனலை பற்றி தனிபதிவாகவே பதிவு செய்துள்ளேன். கதை நெடுகிலும் அசத்தலான ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.. கதையின் வேகத்தில் தவற விடும் சில காட்சிகளை நிதானமாக கவனிக்கும் போது உணரலாம்.
பக்கம்5 கடைசி பேனலில் சட சடனு சிறகை அடிக்கும் ஆந்தை..அதன் பார்வையின் ஊடுருவல்.. அனைத்திற்கும் மெளன சாட்சியாக... மெக்கன்னாஸ் கோல்டு டர்க்கி கழுகின் கண்களுக்குப் பிறகு ஆழமான பார்வையில் மிரட்டுகிறது.....!!!
இதை போன்ற அழுத்தமான கதைகள் ஸகோரை மறுக்க இயலாத நாயகராக மற்றும்!!!
ஸாகோர்..The rocking star..😍👍✊👌👌
Deleteஅங்கே அவனோடு சேர்ந்து நான் பெற்றுப் போடப் போகும் பன்றிக் குட்டிகளை மேய்ப்பதுதான் என் வேலையாக இருக்குமாம்”
ReplyDelete-இந்த வசனத்தை இன்னுமே கொஞ்சம் பிசிறடிக்காமல் செய்திருக்கலாமோ என்று தோன்றியது...
ஒருவேளை ஒரிஜினலில் இதைவிட ராவாய் வசனம் இருந்திருக்குமோ ???!!!
இப்படி நீங்களும் நானும், யோசிக்க காரணம் ரூபின் ஆல்ரெடி ரீச் ஆகி விட்டது.
// இப்படி நீங்களும் நானும், யோசிக்க காரணம் ரூபின் ஆல்ரெடி ரீச் ஆகி விட்டது. //
Delete😊 உண்மை
விற்கும் பூவிற்கு விளம்பரம் எதற்கு என்று இந்த மாதம் டெக்சை கண்டு கொள்ளாமல் விட்ட விட்டார் கள் சேலம் சார் கொண்டாடப்பட வேண்டிய இதழ் இது
ReplyDeleteMahendran@ அப்படியொரு எண்ணமே துளி்கூட கிடையாது நம்மவர்களுக்கு... தல எப்போதுமே சிறப்பாக இருப்பது வழக்கந்தானே..
Deleteநம் ஆசிரியர் சார் குறிப்பாக Spoon&white மற்றும் ரூபின் குறித்து முடிவெடுக்க வேண்டி உடனடியாக அவ்விரண்டின் ரிசல்ட் தெரிந்தால் 2025ன் சந்தாவில் இவர்களுக்கு இடம் தருவதை பற்றி முடிவு பண்ணிட தோதாக இருக்கும் என கேட்டதால் அனைவரும் அவற்றை முதலில் எடுத்தனர்.
என்னை பொறுத்து சுவையான பதார்த்தங்களை கடைசியாக உண்ணுவது வழக்கம்.சோ டெக்ஸ் எப்போதும் 4வதாகதான் வாசிப்பது..
ஆனா கடைசியாக வாசித்தாலும் முதல்ல வாசித்தாலும் கொண்டாடப்பட வேண்டியவை டெக்ஸ் கதைகள்...😍😍😍😍
அடுத்த மாதம் உங்க விருப்ப படி டெக்ஸ்க்கே முதல் உரிமை.. முதற் விமர்சனம் கூட....
@STV ji..😍😘
DeleteMe too..😃வாசிச்சிங் டெக்ஸ் @lost தான்..👍
புல் NV meals ல ..
கடைசி வாய் சாப்பிட
அப்படியே தயிர் சோறை கை நிறைய எடுத்து லைட்டா குழி பறிச்சு அதுல கருவாட்டு குழம்பை ஊத்தி வாயை 'ஆ' ன்னு திறந்து உள்ளாற போட்டா எப்படி
இருக்கும்..😋😛😜😝
அப்படி இருக்கும் டெக்ஸை கடைசியா படிக்கிறது..😃👍✊✊👌
சூரியனை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியதில்லையே மகிசார். அது போல் தான் டெக்ஸும். புது வரவுகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தால் தானே அவர்களும் ரெகுலர் தடத்தில் உரிய இடத்தை பிடிக்க முடியும்.
ReplyDeleteஅதே அதே பத்து சார்...
Delete@STV ji..😍😃
ReplyDeleteஇந்த மாத "வஞ்சத்துக்கொரு வரலாறு" கதையில் ஸாகோர் அனைவரையும் கவர்ந்துவிட்டார்..
😍😘👍✊👌
Spoon & White:
ReplyDeleteநல்ல காமெடி. அந்த தற்கொலை பண்ணிக்கற மொட்டை கும்பலைத்தான் சகிச்சுக்க முடியலை. பணையக்கைதிங்க இன்னும் இருக்காங்கன்னு காட்ட கடத்துனவங்களே மொட்டை அடிச்சுக்கறதும் அவங்களையே அந்த மொடடைக்குரு தள்ளிவிடறதும் சிரிச்சு மாளலை. ஆனா அவங்க தப்பிக்க அதே மாதிரி மொட்டை போட்டுக்கிற கிளைமாக்ஸ் ROFL.
இது தொடரா? இல்லைத் தனித்தனி கதைகளா சார்? பால்கனிக்கு இவங்களைத் தெரியாததால இதுதான் முதல்கதைன்னு நினைக்கிறேன். சரியாங்க சார்...?