நண்பர்களே,
வணக்கம். இந்த வாரத்தின் ஆரம்பப் பொழுது அது. செப்டம்பர் புக்ஸ் நான்கும் despatch ஆகி உங்கள் கைகளில் மிளிர்ந்து கொண்டிருந்த நேரத்தில் விமர்சனங்களும், அலசல்களும் சன்னம் சன்னமாய் வரத் துவங்கியிருந்த சமயம் அது. பின்னிரவுப் பொழுதில் எனது வாட்சப் தனிச்செய்திக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. இதோ, அதனை இங்கு பகிர்ந்திடுகிறேன் :
=========================================
=========================================
இந்தக் குறுந்தகவலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன.
முதலாவது, Spoon & White கதையில் அந்த மானாவரியான தற்கொலைத் தாண்டவம் பற்றிய எனது தனிப்பட்ட அதிருப்தியை நண்பருமே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இரண்டாவது, ஒரு நெகட்டிவ் விமர்சனத்தை நாசூக்காய், தனித்தகவலில் பகிர்ந்த அந்தப் பண்பு !!
புத்தகம் வெளியான ஒற்றை நாளில் அதைப் படித்து, அலசி ஒரு நெகட்டிவ் review-வை பொதுவெளியில் போட்டுத் தாக்குவது ரொம்பவே fashionable தான். And விமர்சன ஜோதிகளில் ஐக்கியமாகிடும் இன்றைய உத்வேகங்களினை குறை கண்டிடவே இயலாதும் தான். ஆனால், வெறும் 120 ரூபாய் சமாச்சாரமாய் மாத்திரமே தன் கையிலிருக்கும் புக்கைப் பார்த்திடாமல், அதன் பின்னே குவிந்து கிடக்கும் உழைப்பையும், லட்சங்களிலான முதலீட்டையும், ஒரு புதுத் தொடரின் தலைவிதி தொங்கலில் இருக்கும் யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, நண்பர் பொதுவெளியில் இதைப் பகிர விரும்பாத அந்தப் பாங்கு மெய்யாலுமே மகிழ்வூட்டியது. Of course காசு கொடுத்து வாங்கும் கஸ்டமர் எப்போதுமே King தான். அவர் விரும்பும் பாணியில், விரும்பும் விதத்தில், விரும்பும் இடத்தில், விமர்சனங்களைப் போட்டுத் தாக்கும் சுதந்திரம் பூரணமாக உண்டுதான். Yet சொல்ல வரும் கருத்தை நயத்துடனும், பாதிப்பு ஏற்படா வண்ணம் வெளிப்படுத்துவதும் கூட, தேவையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்ற அந்தப் புரிதலுக்கு hats-off ! "கொத்துக்கறி போட்டு விட்டீர்கள்", "கோழி குருமா பண்ணி விட்டீர்கள்",என்று நவீன நக்கீரர் அவதார் எடுக்கும் நண்பர்கள் உலாவரும் வேளையில், இந்த practical approach ரசிக்கச் செய்தது.
அந்தக் குறுந்தகவலுக்கு நான் அனுப்பிய பதில் இதோ!
=========================================
உங்களின் கருத்துக்கு முழுமையாய் உடன்படுகிறேன் xxxxx. இரத்தக் களரியை ஒரு தற்கொலைக் கூட்டம் வாயிலாக முன்நிறுத்தியதில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால், இது கற்பனையல்ல என்பது தான் ஆச்சரியமூட்டும் விஷயமே! 1990'களில் “The Order of The Solar Temple” என்றதொரு குடாக்குக் கூட்டம் அமெரிக்காவிலேயே வேரூன்றி, எண்ணற்ற நபர்களின் தற்கொலைக்குத் தூண்டுகோலாக இருந்தது தான் நிஜமே. இதோ, இந்த விக்கிபீடியா link-ஐப் பார்த்தீர்களென்றால் புரியும் : https://en.wikipedia.org/wiki/Order_of_the_Solar_Temple
So, ‘சிறையில் ஒரு அழகி‘ கதையானது இந்தத் தற்கொலை அமைப்பிற்கு எதிரானதொரு பகடியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
=========================================
நான் செய்தியை அனுப்பிய சற்றைக்கெல்லாம் நண்பரிடமிருந்து reply வந்தது.
அடடே! இது எனக்குச் சுத்தமாகத் தெரியாதே சார்! இதைக் கதையோடு சேர்த்து சிறு குறிப்பாக நீங்கள் கொடுத்திருந்தீர்களென்றால் வாசிக்கும் பொழுது கொஞ்சம் வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ?! Anyways, திரும்பவும் நான் வாசிக்கப் பார்க்கிறேன் !
என்று தகவல் சொல்லியிருந்தார்.
இந்தக் குறிப்பு, original–ஆக கதையிலும் கதாசிரியர்கள் கொடுத்திருக்கவில்லை தான். ஆனால், இதற்கு பேனா பிடிக்கும் சமயத்தில் எனக்கு மேலோட்டமாக ஒரு சந்தேகம் எழுந்தது - இப்படிப்பட்டதொரு கதைக்கருவினை ஏதேனும் நிஜப் பின்னணியில்லாமல் தைரியமாகக் கையாண்டிருக்க மாட்டார்களே என்ற ரீதியில். So, அந்த 5 கிரகங்கள் நேர்க்கோட்டில் நிற்கும் நிலை ; இத்யாதி... இத்யாதி என்று அந்தத் தற்கொலை மொட்டைச் சாமியார் அள்ளிவிடும் பக்கங்களின் போது நானாக Google-ல் தேடலை நடத்தினேன். அப்போது, கண்ணில் பட்டது தான் இந்த “Solar Temple” தற்கொலைக் குழு பற்றிய தகவல்.
இந்த Spoon & White தொடர் பற்றி பேசும் முன்பாக, இது தேர்வான பின்னணியைப் பற்றி பார்த்திடலாமே?! சமீப ஆண்டுகளாய் கார்ட்டூன் தொடர்களை தேடிப் பிடித்து கொண்டு வருவதும், அதே வேகத்தில், ரைஸ்மில்லுக்கு ஆளெடுக்கும் கவுண்டர் பாணியில் "நீ reject", "you are unselected" என்று தொடர்களை பரணுக்கு அனுப்பும் வேலைகளையும் நாம் குஜாலாய் செய்து வந்ததில் ரகசியங்கள் ஏது? கார்ட்டூனில் மண்ணைக் கவ்வியவர் பட்டியல் - லியனார்டோ தாத்தாவில் தொடங்கி, நீலப் பொடியர்கள், சுட்டிப்பயல் பென்னி, கேரட் மீசை க்ளிப்டன், சிகாகோ போலீஸ்காரர் மேக் & ஜாக், ரின்டின் கேன் என்று நீண்டு கொண்டு போகும். எனக்கே ஒரு கட்டத்தில் இது ஏன் மல்லுக்கட்டுவானேன் ? பேசாமல், வருஷத்துக்கு லக்கி லூக்கிற்கான slot-களை மட்டும் கூட்டி விட்டால் கார்ட்டூன் கோட்டா தானாகக் கூடியது போலாகிடுமே ? புத்தகவிழா விற்பனையிலும் அது உதவிடுமே ? என்று தோண ஆரம்பித்திருந்தது ! ஆனாலும் variety இல்லாத விருந்து சுவைக்காது என்ற குறளி தலைக்குள் குந்தியிருக்க, தேடல் பயணத்தைத் தொடர்ந்தேன்.
அந்த சமயத்தில் கண்ணில்பட்ட பல க்ளாஸிக் தொடர்களின் மத்தியில் இந்த Spoon & White கொஞ்சம் மாறுபட்டுத் தெரிந்தனர். மேக் & ஜாக்கில் வருவது போலவே ஒரு குட்டை போலீஸ்கார், ஒரு நெட்டை போலீஸ்கார் என்ற காம்பினேஷன் தான் என்றாலும், அந்தப் புராதனம் இங்கில்லை. தவிர, மேலோட்டமான இதன் விமர்சனங்கள் ; தொடரிலுள்ள 7 ஆல்பங்களின் அலசல்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்த போது, இது லைட்டாக தெலுங்கு பட பாலய்யா பாணியில் இருக்கக் கூடும் என்று மனதிற்குபட்டது. So 'எவனா இருந்தா எனக்கென்ன ?' என்று நெற்றிப்பொட்டில் ரத்தத் திலகம் வைக்க யோசிக்காத அந்தக் குள்ள Spoon ஒருவாட்டி நம் மத்தியில் பயணித்துப் பார்ப்பதில் தப்பில்லை என்று பட்டது. Of course சித்திரங்கள் ஒரு தினுசாக இருந்ததைக் கவனித்தேன் தான். ஆனால், அதையும் மீறி, அந்தத் தொடரில் இழையோடிய ஒருவித கோக்குமாக்குத்தனம் எனக்கு ஒரு வித்தியாசமான சமாச்சாரமாக தென்பட்டது. சரி, முயற்சிக்காமலே இதை மூட்டை கட்டுவதைக் காட்டிலும், ஒற்றை ஆல்பத்தைக் களம் இறக்கிவிட்டு, அப்புறமாய் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தேன். And here we are!
ஒத்துக் கொள்கிறேன். இங்கே மட்டு மரியாதையில்லாமல் பொட்டு பொட்டென்று போட்டுத் தள்ள நாயகர்கள் தயங்குவதே இல்லை தான். இப்படி logic இன்றி இந்த ஜோடி அடிக்கும் லூட்டி, பொம்ம புக் வாசிப்பிலும் ஒரு ஒழுங்குமுறையைத் தேடிடும் வாசகர்களை எரிச்சலூட்டக்கூடும் என்பதும் புரிகிறது தான். ஆனால், அத்தனை கார்ட்டூன் நாயகர்களையுமே லக்கிலூக்கோடு அளவீடு செய்து, அவர்களுக்கு சரசரவென VRS தந்து வரும் அதே ஸ்டைலில் இந்த Spoon & White ஜோடியை எடைபோட சாத்தியமாகாது என்பதே முக்கிய மேட்டர் என்று தோன்றியது ! இது எதுபோலும் இல்லாததொரு unique தொடர் என்பதால் உங்களுக்குப் பிடித்தால் பிடித்தபடி, பிடிக்காவிட்டால் பரணுக்குக் கடாச வேண்டியது தான். Simple as that !!
So, தொடரும் வாரம் வரைக்கும் இந்த ஆல்பத்தை படித்து முடிக்க நேரம் எடுத்துக் கொண்டு, இதோ இங்குள்ள ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு, இந்த கோக்குமாக்கு நாயகர்கள் அடுத்த ஆண்டிலும் தொடரலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து உங்களின் பதில்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன் : https://strawpoll.com/NMnQNN6WGg6
என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரானது ரொம்பவே casual-ஆக, ரசிக்கும் விதமாய் இருப்பதாகவேபடுகிறது. And my vote will be for them to continue in 2025 !
செப்டம்பரின் இன்னொரு சற்றே off-beat ஆல்பம். நமது கேரட் கேச டிடெக்டிவ் ரூபினின் ‘மங்களமாய் மரணம்‘. இதற்கு முன்பாக வெளியாகி இருந்த 2 ரூபினின் சாகஸங்களுமே, மற்ற நாயகர்களுடன் கூட்டணி இதழ்களில் தான் இடம் பிடித்திருந்தன. So, இந்த முறை solo-வாக தனி ஆல்பத்தில் தலைகாட்டுவதென்பது ஒருவிதத்தில் promotion போலத்தான். C.I.A Agent Alpha, சிஸ்கோ, Soda போன்றோரே வாய்ப்பின்றி வாசலில் காத்திருக்கும் வேளையில் இந்த சிகாகோ டிடெக்டிவிற்கு கிட்டியுள்ள வாய்ப்பு in many ways a surprise தான்.
ஆனால், கிடைத்த வாய்ப்பை அம்மணி கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் - இதுவரைக்குமான உங்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போதாவது ! ரொம்பவே முன்நாட்களில் நடந்த கதைகளாக அல்லாது, தற்போதைய காலகட்டத்தில் சுற்றி வரும் கதைக்களங்களைத் தேர்வு செய்வதே கடந்த சில ஆண்டுகளாய் ஒரு எழுதப்படாத விதியாக பின்பற்றி வருகின்றோம். In fact, b/w-ல் வந்த James Bond கதைகளில் நாசியைத் தாக்கிய புராதனம் "போதுமடா சாமி. It’s time to move on" என்று புரியச் செய்தது.
ரூபின் ரொம்பவே ஒரு current நாயகியே and ஒரு police பணியைப் பெண் பிள்ளையாய் கையாள்வதென்பது எத்தகைய சவால் என்பதை சற்று சுவாரஸ்யமான கோணத்தில் கதாசிரியர் சொல்ல முனைவது இந்தத் தொடரின் ஒரு பலமாக நான் பார்க்கிறேன். I agree, இங்கே வசனங்கள் கொஞ்சம் ஜாஸ்திதான். எழுதும் போது, நமக்கே - "பேச்சைக் குறைங்கடா" என்று சொல்லத் தோன்றும். ஆனால், இந்தக் கதைகளில் கதாசிரியர் Mythic உட்புகுத்தியிருக்கும் நுணுக்கங்களை எதையாச்சும் கத்திரி போட்டுத் தொலைத்து விட்டால், கதையின் ஓட்டத்திற்கும், புரிதலுக்கும் ஆப்படித்தது போலாகி விடுமே என்ற பயத்தில் இம்மியும் குறைக்க முயற்சிப்பதே கிடையாது. இம்மாதத்து ஆல்பமும், அதே template-ல் பயணிப்பதால் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையோடு வாசித்த கையோடு, ரூபினுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் ஒற்றை slot-ஐ உறுதி செய்யலாமா அல்லது வாணாமா ? என்ற கேள்விக்கு பதில் பதிவிடக் கோருகிறேன்.
https://strawpoll.com/xVg7113XRyr
இம்மாதத்தின் Surprise Packet என்னைப் பொறுத்தவரையிலும் ஸாகோர் தான். இதுவரையிலும் b/w-ல் மினி சாகஸங்ளில் சுமாராய் சாகசம் செய்ததை தாண்டி கோடாரி மாயாத்மா பெரிதாய் எதையும் சாதித்திருக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கலரில் வந்த ஆல்பங்கள் முற்றிலும் வேறொரு லெவலில் இருந்தன என்றாலும், தினப்படி பிழைப்பான B/w சாகஸங்களில் ஒரு நாயகர் வெற்றி கண்டாலொழிய, அவரது தொடரை காலத்துக்கும் கலரை நம்பியே கொண்டு செல்ல முடியாது. அந்த வகையில் இது ஸாகோருக்கு ஒரு மைல்கல் தருணம் என்பேன். கறுப்பு வெள்ளையில் நமக்கு ரசிக்கத்தக்க கதைகள் இந்தத் தொடரில் உள்ளன என்பதை அழுத்தமாய் ஊர்ஜிதம் செய்கிறது ‘வஞ்சத்திற்கொரு வரலாறு‘. In fact, 2025-ல் காத்துள்ள இன்னொரு b/w சாகஸமான ‘சிரிக்கும் விசித்திரம்‘ இதை விடவும் தெறி வேகத்தில் தடதடக்கும் ஒரு த்ரில்லர். So, ரொம்பச் சீக்கிரமே சின்னத் தளபதி ஸாகோர் பேரவை முழுவீச்சில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். (கட்சி கொடி ரெடியா தல ? மாநாட்டுக்கு இடம் பாத்ரலாமா ?)
Last but not the least Tex-ன் ‘சினம் கொண்ட சின்னக் கழுகு‘ சற்றே வித்தியாசமான சித்திர பாணி இந்த இதழைப் புரட்டிய மறுகணமே நம்மைக் கவனிக்கச் செய்யும் என்பதை மறுக்க மாட்டேன். இதன் ஓவியர் C.I.D ராபின் தொடருக்கு, சில மார்டின் கதைகளுக்கு சித்திரம் போட்டிருக்கிறார் தான். ஆனால், Tex-ன் ஒரு முழுநீள சாகஸத்திற்கு அவர் தூரிகை தந்திருப்பது இதுவே முதல்முறை. கதாசிரியரோ நமது ஆதர்ஷ மௌரோ போசெலி அவர்கள். "இன்னிக்கு குழாயில் தண்ணி வரும்", "இன்னிக்கு தண்ணி வராது" என்பது போல் - அத்தனை சுலபமாய் அழுத்தமான கதைகளையும், கமர்ஷியல் கதைகளையும் ஒரே நேரத்தில் பிரவாகம் எடுக்கச் செய்யும் அசாத்திய ஆற்றலாளர் இவர். இதோ, இந்தவாட்டி அழுத்தமான கதையை இறக்கினால் போச்சு என்று அவர் தீர்மானித்த தினத்தில் ‘தி ரேஞ்சர்ஸ் of பின்னிகென்‘ என்ற பெயரில் மேக்ஸி டெக்ஸ் தொடரில் இந்த ஆல்பமானது வெளியானது. சற்றே இறுக்கமான ஒரு mood கதை முழுவதிலும் வியாபித்திருப்பதை மறுக்க மாட்டேன். இந்தக் கதைக்களத்திலும் ஏற்கனவே ஆங்காங்கே பார்த்த சாயல்கள் தெரிவதையும் மறுப்பதற்கில்லை தான். இருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு Cocktail-ஆக கௌபாய் உலகின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கிணைத்து சிக்ஸர் அடிப்பதென்பது போசெலிக்கு அன்றாட வாழ்க்கை என்றாகி விட்டது. நிதானமாய், வாசிக்கவும், சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீள்வாசிப்பிற்கும் உட்படுத்த நிச்சயமாய் ‘சினம் கொண்ட சின்னக் கழுகு‘ பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
ரைட்டு, கிளம்பும் முன்பாய், மதுரை புத்தக விழா நியூஸ் ! நமது ஸ்டால் # 188 and வழக்கம் போல ஒரு வண்டி புக்ஸ் சகிதம் காத்திருக்கிறோம் !! முதல் இரு தினங்களும் டீசென்ட்டான விற்பனை கண்டிருக்க, காத்திருக்கும் நாட்களிலும் அதே உத்வேகம் தொடருமென்ற நம்பிக்கையில் உள்ளோம் !
மதுரை முடிஞ்ச கையோடு திருச்சி & எங்க வூட்டாண்டை உள்ள விருதுநகரில் புத்தக விழாக்கள் ஒரே தேதிகளில் துவங்கிடவுள்ளன ! And இரு இலக்குகளிலுமே நமது ஸ்டால்கள் இருந்திடும் ! So முகமதைத் தேடிய சோம்பேறி மலையின் பயணங்கள் முழுவீச்சில் துவங்கியாச்சு !! Wish us good luck folks !!
Bye all....have a beautiful Sunday ! See you around !
வந்துட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே
Deleteநன்றி சகோ❤️
Deleteவரலாறு படச்சுட்டேன்
ReplyDeleteவரலாறு படைத்த சகோவுக்கு வாழ்த்துகள்
Deleteநன்றி சகோ! ☺️
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeletePresent sir
ReplyDeleteபதிவின் தலைப்பு அப்படியே அள்ளுதுங்க எடிட்டர் sir😁😁
ReplyDeleteMagic Number 7
ReplyDeleteஆஜர்
ReplyDeleteபிரபஞ்சப் பந்தயம் - மாண்ட்ரேக்கின் சயின்ஸ் பிக்ஷன் சாகசம்!
ReplyDeleteஆகஸ்ட் 2024-ல் வெளிவந்த மாண்ட்ரேக் ஸ்பெஷலின் 4வது கதை இதுவே!
ஒரு வடிவேலு காமெடியில, இந்த விஷயத்துக்கு அவன் சரிப்பட்டு வருவானா? மாட்டானா? என டிஸ்கஷன் நடக்கும். கடைசியில அதை வடிவேலுகிட்டயே போய் கேப்பாங்க. அவருக்கோ நான்அல்லது எந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வருவேன்னு
வரமாட்டேன்னு கேக்குறாங்கன்னு சந்தேகமா வந்துட்டு இருக்கும். ஆனாலும், அவர் அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு படம் முழுசும் அவர வெச்சு செய்வாங்க!
ஹலோ, ஹலோ, மாண்ட்ரேக் கதையோட விமர்சனத்த தான் மேற்படி வடிவேலு காமெடி வழியா சொல்ல வந்தேன்! ஏன்னா, இந்த விஷயத்துக்கு நீங்கள்ளெல்லாம் சரிப்பட்டு வருவீங்கன்னு நான் நம்புறேன்!
சரி கதைக்கு வருவோம்! கதையோட தொடக்கத்தில் நீச்சல் குளத்துக்கு அருகில் ஹாயாக தூங்கிக் கொண்டிருக்கிறார் நம்ம மாண்டி! அவருக்கு கனவுல ஒரு தாடி வெச்சவனும், இன்னொரு தாடி வெக்காதவனும் வர்றாங்க! அவங்க ரெண்டு பேரும் வேற பிரபஞ்சத்த சேர்ந்தவங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி. நான் ஒரு அணுகுண்டு / ஹைட்ரஜன் குண்டு மாதிரி ஒரு குண்ட பூமியில வெக்கப் போறேன். அத மாண்ட்ரேக் கண்டுபிடிச்சிடுவார் அப்படின்றான் ஒருத்தன். இல்ல மாண்ட்ரேக் கண்டுபிடிக்க மாட்டர்னு சொல்றான் இன்னொருத்தன்!
இதுவரைக்கும் இது கனவுன்னு நினைச்சுட்டு இருந்த நாமளும், மாண்ட்ரேக்கும் அவருக்கு முன்னால, முப்பரிமாண உருவமாக நின்று பேசிட்டிருக்கிற இந்த இரட்டையர்களைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறோம். நீங்க சொல்றதெல்லாம் நெசந்தானா? என மாண்ட்ரேக் வினவ, அதே நேரத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கனும் என லொதாரும், நார்தாவும் அங்க வர்றாங்க. மாண்ட்ரேக்கின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் அந்த இரட்டையர்களிடம் அவர் நடத்திக் கொண்டிருக்கும் சம்பாஷணைகளை கண்டு மனுசனுக்கு முத்தி போய்டுச்சோன்னு ஒண்ணும் புரியாமல் நார்தாவும், லொதாரும் குழம்புகிறாங்க. சரி கேள்விக்கு வருவோம்!
ஆமாய்யா! நாங்க ரெண்டு பேருஞ்சொன்னது நெசந்தேன்! முடிஞ்சா போய் பூமிய காப்பாத்து. முடியலன்னா நாங்க வெச்ச குண்டுல பூமி ரெண்டா பிளந்துடும்னு சொல்லி ஒரு குண்ட (சிவப்பு கோளத்த) தூக்கி போடுறாங்க. அதைப் போட்டுட்டு, இந்த லைட்டர வெச்சு மட்டும் தான் இந்த கோளத்த திறக்க முடியும்னு சொல்லி ஒரு லைட்டரையும் தர்றாங்க. இதே மாதிரி மொத்தம் 7 கோளங்களை பூமியில ஒளிச்சு வெச்சிருக்கோம். அந்த ஒவ்வொரு கோளத்தையும், அதற்குள் இருக்கும் குறிப்புகளைக் கொண்டு, வரிசையா கண்டுபிடிச்சா பூமிய காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். உனக்கு மொத்தம் 100 நாள் டைம்னு சொல்றாங்க!
அப்போ தான் மாண்ட்ரேக் கேப்பார் : இந்த விஷயத்தை ஏண்டா எங்கிட்ட சொல்றீங்கன்னு.
இந்த விஷயத்துக்கு நீ மட்டும் தான் சரிப்பட்டு வருவேன்னு எங்களுக்குத் தெரியும். அதனால தான் உங்கிட்ட சொன்னோம். போ! போய்! பூமிய காப்பாத்து! வர்ட்டா! அப்டின்னுட்டு போய்டுறாங்க விண்வெளிக்கு!
முதல் கோளத்தை திறந்து பார்த்து, அதிலிருந்து புதிருக்கு விடை கண்டுபிடிச்சு, வடதுருவத்திற்கு போய், 2வது கோளத்தை கண்டுபிடிச்சு, பனிக்கரடிகிட்ட சண்டை போட்டு, எரிமலை வாயிலிருந்து 3வது கோளத்தை எடுத்து உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் மாண்ட்ரேக்-லொதார்-நார்தா குழு பயணிக்கிறது. இப்படி 6 கோளங்களை கண்டுபிடிச்சு, 7வது கோளத்தை தேடும் போது திணருது மாண்டி குழு. கடேசில அதுக்கு விடை, மாண்ட்ரேக் நீச்சல் குளத்துக்கு அருகே படுத்திருந்த கட்டிலுக்கு கீழே என்பது! அடப்பாவிகளா, கட்டிலுக்கு கீழே இருக்குற 7வது கோளத்த நேரடியா கண்டுபிடிச்சிருந்தா, ஊரு உலகத்தை ஏண்டா நான் சுத்தப்போறேன்னு டென்ஷனாகிறது மாண்டி குழு! சந்தோஷத்தில் துள்ளிக குதிக்குது இரட்டையர் குழு!
குண்டு வெச்சவனோ, கோளங்களை கண்டுபிடிச்சாலும் கூட, இன்னமும் குண்டு வெடிக்க வாய்ப்பிருக்கு. பூமி பணால்! நீ திவால்னு! இன்னொருத்தன் கிட்ட சொல்ல. எப்படியாவது அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயற்சிககிறார் மாண்ட்ரேக்!! இந்த கதையில அவர் பூமிய எப்டி காப்பாத்துறார்னு இதுக்கு அப்புறம் படிச்ச தெரிஞ்சுக்கங்க நண்பர்களே!
அப்புறம் இந்த கதையில, மாண்ட்ரேக்கின் வழக்கமான மேஜிக், மந்திர-தந்திரமெல்லாம் எதிர்பார்க்காமல், ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் பார்க்கும் மனநிலையில் படியுங்கள் சூப்பரா இருக்கும்!
இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது, இப்படியெல்லாம் கூட கற்பனை செய்ய முடியுமா என்ற எண்ணவோட்டம் தான்! இதே விளைவை தான் மாண்ட்ரேக்கின் மற்ற சயின்ஸ் பிக்ஷன் ஜேனர் கதைகளும் (காற்றில் கரைந்த பாலர்கள், கொலையுதிர் காலம், etc) கொடுக்கும். இந்த மாதிரியான கதைகளை படிப்பதன் மூலமாக கற்பனைக் குதிரையை தறிகெட்டு பறக்க விட முடியும். மிக்க நன்றி!
இந்த கதைக்கு மார்க்கு போடற விஷயத்துக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே முடிவு பண்ணிட்டு கிளம்புறேன்! ரைட்டு!
What an amazing review. Will order book today
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஓட்டு போட்டாச்சு. தலைவிக்கு ஒரு ஸ்லாட் கண்டிப்பாக வேணும்
ReplyDeleteவிண்ணிலிருந்து வந்த விசித்திரன்...!!
ReplyDeleteஆகஸ்ட் மாதம் வந்த மாண்ட்ரேக் ஸ்பெசலின் கடைசி கதை இதுவே! அருமையான கதையை கொடுத்து பஞ்ச் வைத்து முடித்துள்ள ஆசிரியருக்கு நன்றிகள்!
மாண்ட்ரேக், நார்தா, லொதார் மற்றும் கார்மா 4 பேரும் இந்த விசித்திரனுடன் விசித்திர பயணம் செய்கிறார்கள்!!!
இந்த 4 பேரும் ஆழ்கடலில் உலவிக் கொண்டே (ஸ்னோர்க்லிங்), வானவியலில் சோலார் விண்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாது, விரைவில் சோலார் வின்ட் மூலம் பயணம் செய்யப் போகிறார்கள் என்று!
பிரபஞ்சங்களின் பேரரசர் மாக்னான் அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த தூதர்களில் ஒருவருடைய விண்கலம் சேதமடைந்து, பூமி இருக்கும் திசையில் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களுடைய விண்கலம் சரியாகும் வரையில் அவர்களை முறையாக உபசரிக்க வேண்டும் என்று, அந்தப் பேரரசர் மான்ட்ரேக் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.
பேரரசரின் வேண்டுகோளை ஏற்ற மாண்ட்ரேக் வரக்கூடிய தூதர் எப்படி இருப்பார் என்று கேட்க பேரரசருக்கோ தூதர் யார்? எப்படி இருப்பார்? என்றோ எந்த விபரமும் தெரியவில்லை.
வரக்கூடிய விருந்தினர், அதுவும் விண்ணில் இருந்து வரக்கூடிய அந்த விசித்திர விருந்தினர் யார் என்று தெரியாமலேயே மான்ட்ரேக் குழுவினர் விருந்தாளியை எதிர்பார்த்து காத்திருக்கையில் அந்த விண்கலமும் அவர்களுடைய கண்களுக்கு நேராக வந்து களமிறங்குகிறது.
அந்த விண்கலத்திலிருந்து முதலில் மாண்ட்ரேக்கும் அடுத்தது நார்தாவும் வெளி வருகிறார்கள்! வேறு வழியில்லை உண்மை அதுதான்! கலத்திலிருந்து வெளியே வந்த விருந்தினர்கள் தங்களுடைய உருவத்தையே பெற்றிருப்பதைக் கண்டு மாண்ட்ரேக் மற்றும் குழுவினர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் இருக்க, உள்ளிருந்து மற்றொரு குரல் வருகிறது!
உண்மையில் விண்ணிலிருந்து வந்த அந்த விசித்திரன், உள்ளிருந்து குரல் கொடுப்பவர் தான்! மெதுவாக கையை ஆட்டிக் கொண்டு ஒரு ரோபோ மனிதன் வெளியேறி வர, அதைப் பார்த்து மாண்ட்ரேக் குழுவினர் ரோபோ என்று சொல்ல, ரோபோவோ நான் தான் மனிதன் அந்த மனிதர்கள் தான் ரோபோ என்று ஜெராக்ஸ் பிரதியாக வந்த இன்னொரு மாண்ட்ரேக் மற்றும் நார்தாவை பார்த்து சொல்கிறார்!
அவருடைய விண்கலத்தில் ஏற்பட்டுள்ள காயம்!!! சரியாகும் வரை இங்கே இருப்பதாகவும் பிறகு கிளம்பி சென்று விடுவதாகவும் சொல்கிறார் அந்த விருந்தினர். அவருடைய விண்கலமும் கூட உணர்ச்சியுள்ள ஜந்து என்கிறார் அவர்!
அப்புறமென்ன, ஆயில், தார், நிலக்கரி எல்லாம் சேர்த்த கூட்டாஞ்சோறு பரிமாறப்பட விசித்திரனுக்கு அருமையான விருந்து கிடைக்கிறது. இந்த விருந்தில் அக மகிழ்ந்த விசித்திரனோ, மாண்ட்ரேக் குழுவினரை சோலார்வின்ட் பயணமாக செவ்வாய் கிரகம் வரை அழைத்து செல்கிறார்!
இறுதியாக விண்கலம் சரியாகி விட, சொந்த ஊர் கிளம்புகிறார் விசித்திரன்.
விசித்திரனின் கிரகத்தில் இருந்த மனித இனம் எப்படி அழிந்தது என்று விசித்திரன் சொல்லும் விஷயம், உண்மையிலேயே நாம் வாழும் இந்த காலத்திற்கும் பொருந்தும்.
மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்ட சயின்ஸ். ஃபிக்ஷன்!
அட்டகாசமான விமர்ச்சனம் நண்பரே! உங்கள் விமர்ச்சனம் கதையைப் படிக்கத் தூண்டுகிறது!👌👌💐💐
Delete13th
ReplyDeleteபதிவில் வழக்கமாக இழைந்தோடும் சந்தோஷமான நகைச்சுவை..??!!
ReplyDeleteமென் சோகம்
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteகுளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறும் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு இன்று மாலை சென்று, ஜோதி மேடம் அவர்களைச் சந்தித்தேன். டின்டின்னின் புதிய கதைகளைத் தானும் படித்து விட்டதாகவும், திபெத்தில் டின்டின் பல மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் மகிழ்வுடன் கூறினார்.
வேர்த்து ஊற்றும் ஈரோட்டு புத்தக விழா மைதானத்தை விட, மதுரை புத்தக விழா நடைபெறும் மாநாட்டு மையம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றேன். அவரோ, "காலையில் இருந்து A/C ஹாலில் அமர்ந்து குளிரத் துவங்கி விடுகிறது, வெயில் மற்றும் வெளிக்காற்று படாமல் ஒரு மாதிரியாக இருக்கிறது..." என்றார்! புத்தக விழா வாடிக்கையாளர்களுக்கு இனிமையாகத் தோன்றும் ஒரு விடயம், ஸ்டாலில் அமர்த்திருப்பவர்களுக்கு வேதனையாகத் தோன்றக் கூடும் என்று அப்போது தான் உறைத்தது!
அது போகட்டும்...
எங்கள் ஊர் புத்தக விழாவிற்கு எல்லாம் வர மாட்டீர்களாமே?! என்று உங்களைக் கேட்க எண்ணி, அதற்கு நீங்கள் "உங்கள் ஊர் ஆட்கள் எல்லாம் ஈரோடு, சென்னை அளவிற்கு புத்தகங்கள் வாங்க மாட்டீர்களாமே?!" என்று திருப்பிக் கேட்டால் என்ன செய்வது என்பதால், கேட்காமலேயே போகிறேன்! :-D
உங்க ஊர்னு இல்லே சாமி, பர்மா, மலேஷியா, கம்போடியா - என எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் போக நாங்க ரெடி! உங்க ஊரு பக்கம் நம்மளையெல்லாம் சேத்துக்க ரெடியா இருந்தா தானே!
Deleteமதுரை பன் பரோட்டா பண்பாட்டு மையத்தில் உறுப்பினராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்கிறோம் சார்! :-) :-) :-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😃
One slot to Rubin please.
ReplyDeleteVoting please
Deleteஎடிட்டர் சார்.. இதை சொல்லியே ஆகணும்! ரொம்ப வருஷங்களா நான் படிக்கணும்னு நினைச்சுட்டிருந்த திகில் லைப்ரரிய இப்போ என் மனைவி & மூத்த மகள் - இரண்டு பேருமே கடந்த வாரங்கள்ல படிச்சு முடிச்சுட்டாங்க. படிச்சாங்கன்னு சொல்றதை விட - படிச்சு மிரண்டுட்டாங்கன்னு தான் சொல்லணும்! ( ஏனோ லேடிஸ்களுக்கு பேய் கதைன்னா அப்படி பிடிக்குது!! என்ன சொந்தமோ பந்தமோ தெரியலை போங்க!!) ஆனா நான் இன்னும் படிக்கலை! படிப்பதற்கான நேரம் மற்றும் சூழ்நிலை இன்னும் அமையலை! சீக்கிரமே படிப்பேன்!
ReplyDeleteகதையை படிச்சு முடிச்சபின் என் வீட்டம்மா என்னிடம் "ஏங்க.. செம திகிலா இருந்துச்சுங்க. குறிப்பா இரண்டாவது கதை மிரள வச்சுருச்சு. இதே மாதிரியே கதைகள் வேற ஏதாவது கிடைக்குமா?"னு கேட்டாங்க. 'காலனின் கால் தடத்தில்' கி.நா'வை எடுத்து கொடுத்திருக்கிறேன்.
7 வயதான என் இளைய மகளும் இப்போது தமிழ் மற்றும் ஆங்கில கார்ட்டூன் கதைகளை எழுத்துக்கூட்டி ஆர்வமாக படிக்க ஆரம்பித்திருக்கிறாள்!! ஆக, மொத்த குடும்பமும் இப்போது காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து இருக்கிறோம்!
மனசுக்குள் எதையோ சாதித்து விட்ட ஒரு மெல்லிய உணர்வோடு, கூடவே கொஞ்சம் சந்தோஷம், பெருமிதம் எல்லாம் கலந்து கட்டி அடிக்கிறது சார்!😇😇🥰🥰🫠
@EV ji..😍
Deleteஆஹா...ஆஹா..😃😍👍✊👌செம்மையான நியூஸ்..
குடும்பமா படிக்க ரெடியாயிட்டீங்க..
Wow..😍😘
இனிமேல்
"குடும்பங்கள் விரும்பும் காமிக்ஸ்"❤ னு
விளம்பரத்தை போட்டு தாக்கிடுவோம்..😃😍
ஹாஹா!! நன்றிகள் ஜம்பிங் ஜி!🙏😁😁
Deleteஆகமொத்த சாகசம் விஜய்... பாராட்டுகள் பல.
Deleteநானும் என் பிள்ளைகளிடம் காமிக்ஸ் படிப்பை, ஆத்மார்த்தமாக கொண்டு வர பல முயற்சிகள் எடுத்து வருகிறேன்.
அடுத்த வருடத்திற்குள் தமிழ் காமிக்ஸ் தனியாக படிக்கும் ஆர்வம் அவர்களுக்கும் வரும் என்று நம்பி காத்திருக்கிறேன்.
Excited to See the Future in the Right hands.
நன்றிகள் ரஃபிக்! உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும்! 👍
Deleteஜனவரி முதலாய் நம் வீட்டு குட்டீஸ் படிக்க புதுசாய் நிறைய வரவிருக்கின்றன சார்!
Deleteஅப்படியே அந்த 'திகில் காமிக்ஸ்'ஐ திரும்பக் கொண்டுவருவது பற்றியும் கொஞ்சம் யோசிசீங்கன்னா..
DeleteIthu entha thigil library..erode kku varathavangalukku varatha thigil library book aaa
Deleteஅனைவருக்கும் வணக்கம்....
ReplyDelete@EV ji..😃😍
ReplyDeleteநம்ப குண்டு குழந்தைக்கு😃😃
இரு குழந்தைகளா..
அதுவும் 10+ & 7+ ன்னு
ரெண்டு ச்சுட்டீஸ் களான்னு..❤💛
அப்படியே "ஷாக்"
ஆகிட்டேன்..😍😍😃😄😄
ரொம்பச் சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வட்டாங்க ஜி.. அதான்! 😁😁
Deleteஆனாலும் dark காமெடிலே ரண்டு பேரும் பின்றீங்கோ சாமி!
DeleteHaha
Deleteவந்துட்டேன்
ReplyDeleteஉள்ளேன் ஐயா....
ReplyDeleteஓட்டு போட்டாச்சு சார்.
ReplyDeleteஇம்முறை தல ஆர்ட் ஒரு வித திகிலை ஏற்படுத்தும் விதத்தில் இரவு நேர காட்சிகள் இருந்தது நன்றாக இருந்தது சார்.
என்ன தான் ஒரே கதை வேறு அட்டை என கிண்டல் செய்தாலும் இது போன்றவிஷங்கள் தான் அதை புதுமை படுத்துகிறது.
சின்ன தளபதி கமெர்சியல் பாதையில் வருகிறார் தொடரட்டும் நற்பணி.
ரூபின் முதல் கதையில் அம்மாவை தேடுவதில் இருந்தே அவருக்கு என்று ஒரு தனி வழி உருவாக்கிக்கொண்டுள்ளார் அதுவும் இம்முறை சீரியல் கில்லர் கதை நன்றாக இருந்தது
ஸ்பூன் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்கலாம்
சின்ன தளபதி 🔥🔥🔥🔥
DeleteNote this point தல 💪💪
இன்று இரவு 10 மணியளவிலேதான் வீடு திரும்ப முடிந்தது..
ReplyDeleteவந்தவுடன் முதல் வேலை அனைத்தையும் புரட்டிவிட்டு சாப்பிடும்போதே ஆரம்பித்திடுவோம் என எண்ணி முதலில் எடுத்தது தலயைதான்..😃😃😍
But வலது கையால் சாப்பிட்டு கொண்டே தலையை இடது கையால் புரட்ட ஆரம்பித்து 3 பக்கம் தாண்டிய நிலையில் புத்தக கனம் தாங்காமல் புரட்ட முடியாமல் ஸாகோரிடம் சரணடைந்தேன்..😍😘👍✊👌
என்ன சாப்பிட்டேன் என்ற நினைவே இல்லாமல் ஸாகோரையும் வின்ட்டர் ஸ்னேக்கையும் துரத்தி கொண்டே சென்று விட்டேன்... 😍
விறுவிறுப்பான செம்ம ஆக்க்ஷன் திரில்லர் ..😍😃😘
ஸாகோருக்கு ஜே..
😍😘😃👍✊👌
சிறையில் ஓரழகி....
ReplyDeleteதாத்தாக்கள்...படிக்கும் வெட்டியானுக்கப்புறமா ஓர் அற்புத ஆசிரியரின் தேடலுக்கு கிடைத்த அதிரடி வரவக் கதை...துவக்கம் கொஞ்சம் படபடக்க வைக்க....கதை கடைசி வரை வேகம் வேகம்....ஸ்பூன் சுட்டுத் தள்ளுவதில் கில்லாடின்னா....
அந்த மொட்டை குருஜி வில்லத்தனத்தால் கதைய விரைவு படுத்த...தள்ளி விடாமலே பாய்ந்து போலீசாரை பதைபதைக்க வைத்த சீடர்கள்...சொதப்பிய போலீஸ்...எஃப்பிஐன்னு கதைல சும்மா ரவுண்டு கட்டி அடிக்க...உண்மை வேறுன்னு அட்ரா சிட்டி பன்னும் நம்ம டிவி சேனல்கள் நம்மள தெளிவா குழப்புவத....கடைசில ஏன்டா சினிமா கூடாதுன்னு தன்னை வைத்து உலகை காக்க வந்த உத்தமனாய் வில்லன்...
ஓர் அபத்தமான அற்புதமான வாசிப்பனுபவத்தை தமிழுக்கு தந்ததற்காக ஆசிரியருக்கு ஜே...வழக்கம் போல ஆசிரியரின் பேனா விளையாடுது ...காட்சிகளுமே...ஆமா நியூயார்க் ஆபத்தான நகரம் பாஸ்...
அந்த ஸ்பூன் கண்ணாடிய உடைக்க முடியாம திணற அவன சுடும் எஃப்பிஐ அசால்டா குறி மாறி அவனுக்குதவ... ஸ்பூனும் லிஃப்ட்ல போலீச கொல்ல...தவறான புரிதல்கள் சரியா கதைய நகர்த்த இப்படி கூட கதை சொல்ல முடியுமான்னு நாயகர்களாய் தவறான புரிதல்கள்...வண்ணங்கள் போட்டி போட அபார வேக கதை...அடுத்த கதய டக்னு தாங்க ஆசிரியரே..அந்த கோள்களை வைத்து நகர்த்தியது போல அடுத்த கதைய எப்படி நகர்த்திருப்பாங்கன்னு அறிய ஆவல்...
வித்தியாச விரும்பிகளுக்கு சுவையான அல்வா...வித்தியாசம் விரும்பாதோரும் ருசிய உணரலாம்
சார் இப்பதான் பதிவ படிச்சேன்...அந்த நரம்போடோ சதையோட கண்கள் பாக்கைல ஒரு மாதிதானிருந்தது...ஆனா இப்படி தவிர்த்தா...சில கட்டங்களால் பரகுடா...லார்கோ கிடைக்காம போயிருக்கலாம்....நண்பர் கூற்றில் ஆக்சன் கதைகள்ல அது சாதாரணமாய் படுவது...கார்ட்டூனிலும் வந்தாலும் பழகுவோமே...
ReplyDeleteநிச்சயம் இக்கதை தொடரும்..
வன்முறை எனும் மூட்டை பூச்சிக்கு பயந்து அற்புதமான கற்பனை வீட்டை கொளுத்தனுமா என்ன
ஸ்பூன் அண்ட் ஒயிட்
ReplyDeleteசிறையில் ஒரு அழகி
பொறுப்புத் துறப்பு : ஒரு எளிய சக வாசகனாய் இந்த பதிவு இடப்படுகிறது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தின் மேன்மையை வெளிப்படுத்த மட்டுமே இடப்படுகிறது.
எடிட்டர் சாருக்கு தன்னுடைய மனதில் தோன்றுவதை ஒரு சகவாசகர் தனி செய்தியில் தெரிவித்தால் அந்த செய்தியின் சாராம்சம் மற்ற வாசகர்களுக்கு எப்படி போய் சேரும்?
தனி செய்தி அனுப்பிய வாசகர்
கார்ட்டூன் என்றால் அதற்கான ஒரு பிம்பத்தை தனது மனதில் வடிவமைத்துக் கொண்டு அந்த எல்லையை தாண்டுவதை விரும்பவில்லை. on the positive side boundaries are meant to be broken.
பிரெஞ்சு கதாசிரியர்களையும் ஓவியங்களையும் ஓவியர்களையும் குறைத்து மதிப்பிட இயலாது.
சினம் கொண்ட சின்னக் கழுகின் ஹாட் லைனில் "இதன் பிரெஞ்சு பதிப்பில் ஹாலிவுட் படங்களையும் நாயகர்களையும் பகடி செய்ததோடு சினிமா பாட்டுகளையும் ஆங்காங்கே கோர்த்து விட்டிருப்பார்கள் " என எடிட்டர் சார் எழுதி இருக்கிறார்.
ஹாலிவுட் படங்களை மட்டுமல்ல, அமெரிக்க வாழ்வு முறை, அதிகப்படியான உணவு உண்ணுதல், பன்னாட்டு கலாச்சாரம், மீடியாக்களின் விளம்பர வெறி(கோர்ட்னி நடந்து கொள்வதை பார்த்தாலே தெரியும் ,) பிற காமிக்குகள் என சகலத்தையும் பகடி செய்து இருக்கிறார்கள்.
கதை டைஹார்ட் படத்தின் நேரடியான பகடி என ஏற்கனவே எழுதியிருந்தேன்.
Overeating
ஸ்பூன் மற்றும் ஒய்ட்டின் பாஸ் உருவத்தைப் பாருங்களேன். அவர் மேஜையை குத்தும் போது சாஸ் தெறிக்கிறது.( பக்கம் 9.) பக்கம் பத்தில் ஸ்பூன் ஹிப்போகாம் என சொல்வதாக வருகிறது. பிரெஞ்சு ஒரிஜினல் மூலத்தில் "ce gros lard adipeux "என வருகிறது. அர்த்தம்"
Big fat bacon". எடிட்டர் சார் நாகரிகம் கருதி ஹிப்போகாம் என எழுதி இருக்கிறார். அமெரிக்கர்களின் உணவு முறை ஓவர் ஈட்டிங் உடல் பருமன் இதனை கதாசிரியர் கிண்டல் செய்கிறார்.
ஓவர் ஈட்டிங், உடல் பருமன் இவற்றை கதாசிரியர் கிண்டல் செய்வதை பக்கம் 29லும் காணலாம். முதல் பேனல். நம் விருப்பத்துக்குரிய டின் டின் -ன் அமெரிக்க வர்ஷனாக போட்டோகிராபர் வடிவத்தில் காட்டி இருப்பதை பாருங்கள். டின் டின் அடிப்படையில் ஒரு ரிப்போர்ட்டர் என்பதால் இதில் போட்டோகிராபராக காண்பித்து இருக்கிறார்கள். ஹம்பர்களாக தின்று தீர்த்தால் அமெரிக்க டின்டின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என பகடி செய்கிறார்கள்.
Beauty is only skin deep என சொல்வார்கள். ஆனால் இந்த புத்தகத்தின் அழகு ஆன்மா வரை செல்லக்கூடியது. Beauty of this book is not only up to the thickness of the page but it goes to the soul.
Deleteஉதாரணம் பக்கம் 10.
ஒயிட் வராண்டாவில் பாட்டு பாடிக்கொண்டே வருவதை காணலாம். தமிழில் என்ன விலை அழகே, சொன்ன விலைக்கு வாங்க வருவேன். மூலத்தில் 🎶🎶 Mayflower🎶🎶, Mayflower🎶🎶, I am born in Mayflower🎶🎶🎶🎶. முதல் பேனலில் சுவரில் மாட்டி உள்ள படத்தை என் மொபைல் போனின் கேமராவினால் 7.1x என உருப்பெருக்கம் செய்தேன். AMISTAD என காட்டியது.AMISTAD கறுப்பினத்தவர்கள் மத்தியில் என்றும் நினைவு கூறக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு. 1839-ல் மேற்காப்பிரிக்க கருப்பினத்தவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டு கியூபாவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சட்டத்துக்கு விரோதமாக ( அட்லாண்டிக் வணிக ஒப்பந்தம்) ஸ்பெயினுக்கு கொண்டு செல்வதற்காக amistad என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டபோது புரட்சி வெடித்து
கப்பல் கேப்டனையும் சமையலாளி யையும் அடிமைகளாக விற்கப்பட்ட கருப்பு இனத்தவர்கள் கொன்றுவிட்டு கப்பல் சிப்பந்திகளால் மறுபடியும் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்று விடுவதாக வாக்களிக்கப்பட்டு ஆப்பிரிக்கா கொண்டு செல்வதற்கு பதிலாக
அமெரிக்காவில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டார்கள்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு கருப்பு இனத்தவர்களுக்கு சாதகமாகவே முடிந்தது.
மே ஃபிளவரில் சென்ற குடும்பத்தில் பிறந்தேன் என மார்தட்டிக் கொள்ளும் ஒயிட்டுக்கு பதில் சொல்வது போலவே இந்த படமும் பெயரும்.
Amistad சம்பவம் பல கலை வடிவங்களில் வெளிவந்திருக்கிறது. 1997-ல் இதே பெயரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படமும் எடுத்திருக்கிறார்.
ஸ்பூன் அண்ட் ஒயிட் போன்ற பகடிக்கதைகளில் மூலச் சம்பவங்களைப் பற்றி தெரிந்திருப்பது அவசியமாகிறது.
Deleteதமிழ் படம் ஒன்று மற்றும் இரண்டு போன்ற தமிழ் பகடி படங்களில் நகைச்சுவையை ரசிக்க தொடர்புடைய பல தமிழ் படங்களையும் தியானம் செய்வது போல் அமர்ந்திருப்பது போன்ற விஷயங்களில் சென்ற காலத்திய தமிழ் அரசியல் நிகழ்வுகளையும் தெரிந்திருப்பது அவசியம் என்பது போலவே.
தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு மாய வலை.
பக்கம் 38
கோர்ட்னி: அடடே. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலே பங்கேற்ற ஒரு ஆசாமியோட குடும்பப் பெயர் கூட ஒயிட் தான்.
ஒயிட்: நான் தான் சொன்னேன்ல.
கோர்ட்னி: ஆனா கப்பல் கரை சேருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னமே அந்த ஆள் மண்டைய போட்டுட்டான்
ஜேசன் மக்லேன் மூலம் நமக்கு அறிமுகமான மே ஃப்ளவரின் வரலாறு இப்படி சொல்லவில்லை.
வில்லியம் ஒயிட்டுக்கும் சூசனாவுக்கும் 1620 நவம்பரில் பிறந்த குழந்தை peregrine white.
Cap cod-ல் மேப்ளவர் கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது பிறந்த குழந்தை. ப்ளைமவுத் காலனியில்
முதல் தேங்க்ஸ் கிவிங் பார்ட்டியில் பங்கெடுத்த நான்கு பெண்களில் ஒருவர் சூசன்னா. ஒரு வருடம் கழித்து நவம்பர் 1621-ல் வில்லியம்
ஒயிட் மறைந்தார். Peregrine white நெடுநாள் வாழ்ந்து 84 ஆம் வயதில் காலமானார். மசாசூசெட்ஸ் -ல் அவரது கல்லறை உள்ளது.
பின் ஏன் மொழிபெயர்ப்பில் இப்படி இருக்கிறது ?
மூலத்தில் ஆன பிரென்ச் வசனங்கள்
கோர்ட்னி: je connais les patronymes descent deux personnes qui etaient aboard... il y avait effectivement un denomme white... (முடிக்கவில்லை)
ஒயிட்: ah! Vous voyez!
கோர்ட்னி:le mousse!il a ete mange une semaine avant le fameux debarquement a cap cod.
தோராயமாக கோர்ட்னியின் வசனங்கள் தமிழில்
இந்த குடும்பப் பெயருடன் இரு நபர்கள் அந்த கப்பலில் இருந்தது எனக்கு தெரியும். அதில் ஒன்று white le mousse. Cap cod -ஐ மேப்ளவர் சென்றடைய ஒரு வாரம் இருக்கும் முன்னரே அதை எல்லோரும் சாப்பிட்டு விட்டதால் தீர்ந்து போய்விட்டது.
(White le mousse என்பது புட்டிங் மாதிரியான பிரெஞ்சு உணவு பொருள்.)
( கோர்ட்னி ஒயிட் சொல்வதை நம்ப மறுத்து கிண்டல் செய்கிறாள்)
வரலாறு வேடிக்கைக்காக கூட மாற்றி எழுதப்படக்கூடாது என்பதற்காக மட்டுமே இது இங்கு சொல்லப்பட்டது.
சினம் கொண்ட சின்னக் கழுகு படித்துக் கொண்டிருந்ததை நிறுத்தி இந்த பதிவு எழுத வேண்டியதுதாகி விட்டது.
நாளை நேரம் ஒதுக்க வேண்டும்.
If Your Time Flies, make sure you are it's pilot என்பதை பின்பற்றி தானே ஆக வேண்டும். ( இதுக்கும் பைலட் லைசென்ஸ் வாங்கணுமோ? 😂)
சூப்பர் செனா
Deleteஅந்த காக்கா துவக்கத்ல பறந்து வருவது ....அந்த புகைப்பட கடைக்காரர் ஃபோட்டால பாத்து இயற்கை அழகு சூப்பர்னு சொல்வதற்கு மட்டும்தானா செனா
Deleteசார், வழக்கம் போலான நெடும் ஆய்வுப் பதிவு!
Deleteஇதை வாசிக்க ஆரம்பிக்கும் நொடியே இன்று கமெண்டரி பாக்சில் இருந்து வர்ணித்து வரும் சஞ்சய் மாஞ்ரெக்கர் தான் மறுக்கா நினைவுக்கு வருகிறார். இந்தியாவின் டாப் தலைகளை பாகிஸ்தானில் போட்டு துவம்சம் செய்து கொண்டிருந்தனர் - இம்ரான் கானும், அப்துல் காதீரும்! அதன் மத்தியில் பின்னிப் பெடல் எடுத்து வந்தார் ஒற்றை இளைஞர் மட்டும். அடுத்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் எதிராய்! அங்கேயும் புள்ளையாண்டன் பிரமாதப்படுத்தினான். அவனது டெக்னிகல் நேர்த்தியை நாடே கொண்டாடியது. ஆனால் அந்த நேர்த்தியே சஞ்சய்க்கு ஒரு ஆளை விழுங்கும் obsession ஆக மாறிப் போக, விடிய விடிய தனது பேட்டிங் ஸ்டான்ஸ் ; back lift என்று தொடர் ஆய்வுகளுக்குள் ஐக்கியமானான்.
விளைவு? தனது off stump என்ன - தெருவில் நட்டப்பட்டிருக்கும் கொடிக்காம்பம் கூட எங்குள்ளது? என்பதில் சந்தேகமாகிப் போச்சு மனுஷனுக்கு! 1987-ல் அற்புதமாய் துவங்கிய கேரியரானது 1996-ல் ஊற்றி மூட வேண்டிப் போனது!
சில தருணங்களில் ஓவர் அலசல்கள் can be counter-productive என்பது எனது அபிப்பிராயம் சார்! Moreso ஒரு புது கார்ட்டூன் தொடரினில், நண்பர்கள் ஜாலியான வாசிப்பினை நாடி வரும் தருணத்தில் - இம்புட்டு ஆய்வுகளை செய்து மொழிபெயர்ப்பினை அதன் பலனாக்கிடும் பட்சத்தில் இதே free flow சாத்தியப்பட்டிருக்குமா - தெரியாது! நீங்கள் விவரிக்கும் Bruce Willis திரைப்படத்தினை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? என்று யூகிப்பது கூடச் சிரமம் எனும் போது, எனது முதல் priority - கதை இலகுவாய், ஜாலியாய் ஒட்டமெடுத்திட வேணும் என்பதாகவே இருக்க வேணும் சார்! (அந்தப் படத்தை நானே பார்த்தில்லா 🤕..)
நானோ, அல்லது நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோ இத்தனை அடி ஆழம் வரை துளை போட்டுப் போய் தகவல்களை அள்ளி இறைத்திருக்கும் பட்சத்தில், சமீபத்தைய இந்தியன் 2 படம் பற்றிய கோபி *சுதாகர் spoof போலாகி இருக்கும் சார்!! வர்மம் போடாமலே அதைப் பற்றிய விளக்கங்களிலேயே எதிராளி மண்டையை போட்டிருப்பான்!
End of the day - நீங்கள் அறியாததா சார்? ஆபரேஷனும் சக்ஸசாக இருந்திட வேணும் ; பேஷண்டும் நலமாக இருந்திட வேணும்! உள்ளே தியேட்டரில் நீங்கள் ரோபோட்டிக் சர்ஜரி செய்தீர்களா? அல்லது AI நுண்ணறிவின் உதவியினை நாடினீர்களா? 3D பிரின்டிங் உதவியதா? என்பது வெளியில் காத்திருக்கும் உறவினருக்கு பெரிதாய் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை - as long as the பேஷண்ட் is alive & healthy & smiling!
இந்த மரத்தடி கம்பவுண்டராய் நான் செய்ய எத்தனித்திருப்பது அதனையே சார்!
I agree வரலாறு முக்கியமே ; but அதனை sidestep செய்ததில் நாம் எதையும் இழந்துள்ளதாய் நான் நினைக்கலை சார்!
I agree sir, on the factual count - துல்லியத்தை நாம் தவற விட்டிருக்கலாம்! ஆனால் என்டர்டைன்மெண்ட் தான் பிரதான factor என்ற கோணத்தில் பார்க்கும் போது இது தாண்டிச் செல்ல ஓ.கே என்பேன்
Deleteவரலாறு இருந்தா கொண்டாட வேண்டியதுதான்....அது தவறா இருந்தா கதைன்னு கொண்டாட வேண்டியதுதான் கதை பாய்ச்சல் நல்லாருந்தா
Delete
Delete//சில நேரங்களில் ஓவர் அலசல்கள் can be counter productive என்பது எனது அபிப்பிராயம் //
இதற்கு இதழை விரித்து புன்னகைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை சார்.
கரும்பு இனிமையானது தான். இயந்திரத்தில் கொடுத்து பிழிந்தால் கிடைக்கும் கரும்புச்சாறு வேறு வகை இனிமை உடையது. சாறை காய்ச்சினால் கிடைக்கும் வெல்லமும் இனிமையானது தான். வேறு வகையான இனிமை. சாறு பிழியவோ அதை காய்ச்சவோ ஏன் மெனக்கெட வேண்டும் என கேட்கிறீர்கள். எனது முந்தைய பதிவு சகவாசகர் எழுதிய தனி செய்தியை படித்த பின் எழுதியது.
கதாசிரியர் அந்த கதையை எந்த context -ல் எழுதினார் , கதையின் சப்ஸ்டன்ஸ் என்ன என புரியாமலே அந்த சகவாசகர் எழுதியிருக்கிறார்.
அவர் நெகட்டிவ் ரிவ்யூ என நினைத்துக் கொண்டு எழுதியதே அடிப்படை இல்லாதது என்பதே எனது நிலைப்பாடு. அதை நீங்கள் ஆமோதித்ததும் எனக்கு பெரும் வியப்பு எழுந்தது . பலாச்சுளை தின்று பழக்கப்பட்ட ஒருவர் ஒரு முழு பலாப்பழத்தை அவருக்கு கொடுத்தவுடன் நான் அறிந்த வரை பலாச்சுளை மஞ்சளாக இருக்கும். சுவைத்து பார்த்தால் இனிமையாக இருக்கும். இதுவோ பச்சையாக முட்களுடன் இருக்கிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்? அது பரவாயில்லை. பலாப்பழம் விற்பவரே அதை சரி என்று சொன்னால்? தவறாக எண்ணி நெகட்டிவ் ரிவ்யூ கொடுப்பவரை அது சரியல்ல என்று சொல்லி புத்தகத்தின் உண்மையான தாத்பரியத்தை சொல்ல முயல்வது எப்படி கவுண்டர் ப்ரொடக்ட்டிவாக மாறும் என்பது எனக்கு புரியவில்லை.
கதையின் துவக்கத்தில் அவனுக்கு வேண்டிய பெண்ணைநிர்வாண போட்டோ எடுத்ததற்காக ஸ்பூன் துப்பாக்கியை சகட்டுமேனிக்கு முழக்கிக் கொண்டு துரத்துகிறான்.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் போட்டோகிராபரை துப்பாக்கியால் சுட அவன் உயரத்தில் இருந்து விழுந்து மரணிக்கிறான். போட்டோகிராபர் விழும் இடமோ குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பகுதி. சில குழந்தைகளின் மேல் ரத்தம் கூட தெறிக்கிறது. குழந்தைகள் முன்னிலையில் வன்முறை நிகழ்வுகள் நடப்பதே தவறு என்ற போது அவர்கள் கண் முன்னே ஒரு மரணம் நிகழ்வதும் அவர்கள் மேல் ரத்தம் தெறிப்பதும் கதை எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தவில்லையா? போட்டோகிராபரை கொன்ற ஸ்பூன் மற்றும் அவனது பார்ட்னருக்கு தண்டனை முன்கூட்டியே வெக்கேஷன் என்பது கேலிக்கூத்து இல்லையா?
கதாசிரியர் அதைத்தான் விரும்புகிறார். அழகிய பொய்களை விட அசிங்கமான உண்மைகளே இங்கு வெளிப்படுகின்றன. இங்கு எல்லாமே பகடி தான்.
13 இரண்டாம் சுற்றில் மே பிளவர்
கப்பலில் சென்ற மூதாதையர் வழித் தோன்றலாக ஜேசன் மக்லேன் சித்தரிக்கப்படுவதை கிண்டல் செய்வது தான் ஒயிட் கதாபாத்திரத்தின் வழியாக வெளிப்படுகிறது என்ற சந்தேகமும் உண்டு.
தங்கச் சிலை வரும் ஒரு அண்டர்டேக்கர் கதை, தோர்கலின் சிகரங்களின் சாம்ராட், தாத்தாக்களின் முதல் கதை, இப்போது ஸ்பூன் அண்ட் ஒயிட் மட்டுமே நான் தீவிரமாக அலசிய கதை. இதில் முதல் இரண்டிலும் பல பேர் கலந்து கொண்டார்கள். கடைசி இரண்டிலும் நான் எனது பார்வையை மட்டுமே முன் வைக்கிறேன். இதில் ஓவர் அலசல் என்பது எங்கிருந்து வந்தது என புரியவில்லை. பிரஞ்சு புத்தகங்கள் சில அலசல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையே. They are intended to be.
overt ஆக சில விஷயங்களை சொன்ன கதாசிரியர் subtle சில விஷயங்களை சொல்லும்போது அதை உணர்கையில் கிடைக்கும் எக்சைட்மென்ட் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
பின்னிரவு சுமார் மூன்று மணிக்கு
Amistad என கேமராஉருப் பெருக்கி மூலம் பார்த்தபோது உற்சாகமாகவே இருந்தது. அதைப் பற்றி படிக்க அரை மணி நேரத்திற்கு மேலானது. ஆயினும் களைப்போ சோர்வோ ஏற்படவில்லை. அது புத்தகம் செய்த மாயம்.
மறுபடியும் வேறு விதமாக
ஸ்பூன் அண்ட் ஒயிட் பால் போன்றது. அப்படியே பருகினாலும் நன்றாகத் தான் இருக்கும்.
கொஞ்சம் மெனக்கெட்டு புரை போட்டால் தயிர் மோர் கிடைக்கும்.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும். மூன்றும் வெவ்வேறு விதமான சுவை. எனக்கு பால் தயிர் மோர் வெண்ணெய் எல்லாமே பிடிக்கிறது. கடைவதை கவுண்டர் ப்ரொடக்டிவ் என எடிட்டர் சார் சொன்னாலும் சரி.😌
அய்யய்யோ... புத்தகத்தை படிப்பதற்குள், இந்த ஸ்பாய்லர் பதிவை படித்து விட்டேனே....
ReplyDeleteஇனி எப்படி ஃப்ரெஸ் லுக்காக படிப்பது.... 😁
Sorry rafiq. Spoiler எச்சரிக்கை செய்யவில்லை. I apologise.
Deleteஅந்த எமோஜி...??? ஓ!!!யூ ஆர் ஜோக்கிங்... 😅😅
Deleteஅவர் டப்பியை பிரிக்கவே வருடக் கணக்காக ஆகும் என்பது நம் காமிக்ஸ் உலக வரலாறு சார்
Deleteவெல்கம் பேக் டாக்டர்..
Deleteகாலை வணக்கம்
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே
ReplyDeleteரூபினுக்கு ஓட்டு போட்டாச்சு,
ReplyDeleteSpoon and White பத்து பக்கம் படித்துள்ளேன், அதற்குள்ளே இவங்க பண்ற அட்ராசிட்டீஸ் 😧😧😧😧
😵💫😵💫
DeleteMandrake science fiction கதைகள் இருக்கலாம் இன்னும்... மாய மந்திர வித்தைகளை அளவாக பயன்படுத்தியும் , மேஜிக் use பண்ணாமலும் வந்த கதைகலளில் பல வருடங்களுக்கு முன்னால் இந்திரஜால் comics இல் வந்த mandrake கதை. அவர் வீட்டு நீச்சல் குளம் அருகே நின்று கொண்டு telescope வழியாக பார்த்து கொண்டு இருக்கும் நேரத்தில் கண்ணில் தூசி விழுந்து விடும். அது உருத்த துவங்க மேஜிக் காரருக்கு ரொம்ப துவதை கொடுக்கிறது. அதே சமயம் பூமிக்கு ஒரு விண்வெளி கப்பலில் இருந்து Aliens களால் ஒரு மிரட்டல் விடுக்கப்படும்... Matter என்ன வென்றால் பூமி வாசிகளே நாங்கள் உங்கள் கிராகத்தை சுற்றி பார்த்து விட்டு போகவே வந்தோம் ஆனால் நீங்கள் எங்களை சிறை படுத்தி விட்டிர்கள்... விரைந்து எங்களை விடுவிக்க வில்லை என்றால் நாங்கள் பூமியை அழித்து விடுவோம் என்று மிரட்டுவார்கள். இது சமயம் mandrake கண் டாக்டர் இடம் சென்று கண்ணை பரிசோதிக்க அந்த கண்ணை உறுத்தி கொண்டு இருந்த தூசியை பார்த்து டாக்டர் உம் நம்ம silk தொப்பிகாரரும் அதிர்ச்சி அடைகிறார்கள். என் என்றால் அந்த கண்ணை உறுத் தி கொண்டு இருந்த தூசி தான் அந்த அயல் கிராகவாசிகளின் விண்வெளி கப்பல். கண்ணில் இருந்து ரிலீஸ் பண்ணதும் aliens ship பறந்து ஓடி மறைகிற மாதிரி கதை அமைத்து இருப்பார்கள். வித்யாசமான கதை களம் mandrake கு. நமக்கும்தான். 😍🥰
ReplyDeleteஅநேகமாய் மாண்ட்ரேக் இப்படியொரு தொகுப்பில் ஆஜராவது இதுவே இறுதி தபா எனலாம் சார் ; so let's savour him!
Deleteநன்றி Edi sir உள்ள நிலவரத்தை தெளிவு படுத்தியதற்கு. 😍🥰🙏
DeleteSuresh @ இப்படி ஒரு கதையா. தகவலுக்கு நன்றி.
Deleteநண்பர்களை காண இதோ மதுரை புத்தகத் திருவிழாவிற்கு கிளம்பி விட்டேன்.
ReplyDeleteஎன்ஜாய் 😊
DeleteHi..
ReplyDelete*சிறையில் ஒரு அழகி*
ReplyDeleteநானும் டெக்ஸ் அன்ட் கார்ஸன்..,ஜார்ஜ் & டிரேக்..,மாடஸ்தி கார்வின் என ஜோடியாய் கலக்கும் ...ஒருவருக்கு ஒருவர் உயிரையே கொடுக்கும் நாயக,நாயகி தோழர் கதைகளை வாசித்து தான் இருக்கிறேன்...ஆனால் இப்படி ஒருவருக்கொருவர் உயிரையே எடுக்கும் தோழமையான கதையை இப்பொழுது தான் வாசிக்கிறேன்...அப்படி உயிரையே எடுக்க முனைந்தாலும் நமக்கு அது காமெடியாய் அமைந்து போவது தான் கதையின்..கதை ஆசிரியரின் திறமை எனக்கூட சொல்லலாம்..பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்த அனுபவம் இந்த சிரிப்பு போலீஸ்களால் ஏற்பட்டது என்பதையும் மறவாமல் சொல்லி கொள்கிறேன்...அதே போல் ஆசிரியர் குறிப்பிட்ட படி சினிமா வசனங களும் ,சினிமா பாடல்களும் இதில் கதையின் போக்கில் உறுத்தவோ ..குறுக்கிடவோ இல்லை என்பதையும் சொல்லி கொள்ளலாம்...உண்மையை சொல்ல போனால் சரியான தேர்ந்தெடுத்த தமிழ் சினிமா வசனங்களும்..தமிழ் பாடல்களும் இடத்திற்கேற்றவாறு சரியாக பொறுந்தி இன்னும் புன்னைகையை அதிகமாக்கியது ..சினிமா வசனங்களையும் பாடல்களையும் சரியாக தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை கூட தெரிவிக்கலாம்..இக்கதையில் ஒரே உறுத்தல் என்னவெனில் ( எனக்கல்ல ..)போர் சூழல்களில் ஏற்படும் மரணங்களை வைத்தே ப்ளூகோட்டை தள்ளி வைக்கும் சில நண்பர்கள் அப்படிப்பட்ட சூழல் இல்லா நிலையிலும் இக்கதையில் வரும் மரணங்கள் நகைச்சுவையாக அமைந்து போனதை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ...?!
ஆனால் என்னை பொறுத்தவரை ராணுவ தோழர்கள் ப்ளூகோட் போலவே இந்த காவல் தோழர்கள்( ?) ஸ்பூன் அன்ட் ஒயிட்டும் வெகுவாக மனம் கவர்ந்து விட்டார்கள்...
எனவே ப்ளூகோட்டை போலவே இவர்களுக்கும் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்க நான் என்றுமே தயார்...
( இந்த விமர்சனம் புது பதிவு வாசிப்பதற்கு முன்னரே எழுதியது..நான் யோசித்தபடியே கார்ட்டூனில் ரத்தம் ,மரணம் பற்றிய சந்தேகமே பதிவாக அமைந்து போனதில் சர்ப்ரைஸ்..)
நீங்க தான் ஒரு பதுங்கு குழி nostradamus ஆச்சே தலீவரே!
Delete:-))
Deleteசூப்பர் தலீவரே....நண்பர்களுக்குள் பொறாமை அடைவது யாரென...காதல் தேசம் போல....பாடல்கள்...கலக்கல்
Deleteசூப்பர் தல
Delete*மங்களமாய் மரணம்*
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை இதற்கு முன் வந்த டிடெக்டிவ் ரூபின் கதைகள் மிகவும ரசித்தேன் என்றெல்லாம் சொல்ல போவதில்லை....ஓகே பரவாயில்லை ரகம் தான் ..ஆனால் இந்த முறை மரணத்தை மங்களமாய் ரசிக்க வைத்து விட்டாள் இந்த ரூபின்...சம்பவங்கள் ஒரு பக்கம் நடக்க ..ரூபினி ஒரு பக்க இருக்க சில இறுதி பக்கங்கள் முன் த்ரில்லர் படங்கள் போல் ஒன்று சேர மிக மிக விறுவிறுப்பாகவே கதை நகர்ந்து சென்றது... எனில் மீண்டும் இதற்கு முன் வந்த ரூபின் சாகஸங்களை வாசித்து பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை இந்த சாகஸம் ஏற்படுத்தி உள்ளது.. இது போன்ற நாயக ,நாயகி கதையில் கார்ட்டூன் பாணி அல்லாத சித்திரங்கள் அமையாது இள ரசியின் தெளிவான ஓவியங்கள் போல் ஓவிய ஆசிரியர் படைத்து இருப்பின் இன்னமும் ஓர் விறுவிறுப்பான கதையாக இன்னமும் மனதளவில் உள்நுழைந்து இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்..ஆனாலும் மொத்தத்தில் இந்த நாயகியும் இப்பொழுது மனதை கவர்ந்து விட்டார்...வெல்கம் ரூபின்...
தலீவரே : ஒரு ஈரோ / ஈரோயினின்னா அழகா இருக்கோணும் ; செவப்பா இருக்கணும் ; ஏழை எளியோர்க்கு நண்பரா இருக்கணும் என்பதும் நம்ம ஊர் சினிமாக்கள் நமக்குள் விதைத்துப் போன templates. நிஜம் எல்லா தருணங்களிலும் அவ்விதம் இருப்பதில்லை.
Deleteஆஹா... சார் தாங்களும் கீழே எனது கருத்தை வாசிக்கும் முன்னரே அதற்கான பதிலை சொல்லி அசத்தி விட்டீர்கள்....:-))
Deleteஅது :-) நல்ல விமர்சனம்.
Deleteமுக்கிய எண்ணக்குறிப்பு :
ReplyDeleteசீரியஸான துப்பறியும் கதைகள்...த்ரில்லர் கதைகள்....ஆக்ஷன் கதைகள் போன்றவை தெளிவான ( டெக்ஸ்..ராபின் ..இளவரசி..ஓவியங்கள்..)போல் அமைந்து உள்ள கதைகளும்..கார்ட்டூனில் லக்கி ,சிக்பில்..சுஸ்கி விஸ்கி ,டின்டின் போன்ற தெளிவான கார்ட்டூன் பாணி ஓவியங்களும் கதைகளில் நம்மை இன்னமும் மனதளவில் ஒன்ற செய்கிறது..அதே சமயம் கதை பாணிக்கும்...சித்திரங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவாறு வரும் புது ரெட்டையர்..ரூபின் போன்றவர்களின் கீச்சு பாணி சித்தரங்கள் கதை நன்றாகவே அமைந்தாலுமே மனதளவில் கொஞ்சம் தள்ளியே வைக்கிறது என்பதையும் இச்சமயத்தில. தெரிவித்து கொள்கிறேன் சார்..
மேலே....*...:-)
Delete*வஞ்சகத்தொரு வரலாறு*
ReplyDeleteஆரம்பம் முதலே எனக்கு ஸாகோரை பிடித்து விட்ட காரணியால் இம்முறையும் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையும் நூறு சதவீதம்...அதே போல் இந்த முறை ஸாகோர் முழுநீள சாகஸம் ..கொஞ்சம் டெக்ஸ் சாகஸ இதழ் போல சிறிது பருமன்...மற்றும் டெக்ஸ் சாகஸம் போலவே ஒரு சாகஸம் எனும் பொழுது இம்முறை சொல்லவா வேண்டும்...வழக்கம் போல் இல்லை இல்லை வழக்கத்தை விட பட்டையை கிளப்பி விட்டார் மிஸ்டர் ஸாகோர்...இரண்டு கார்ட்டூன் பாணி கதைகளை வாசித்து விட்டு இந்த அக்மார்க் நிஜ பாணி சித்திரக்கதையை வாசிக்கும் பொழுது இன்னமும் ஆர்வமாய் எடுத்தால் முடிக்க வேண்டும் என்பது பரபர..விறுவிறுவென வாசிக்க வைத்து விட்டது இதழ்...வி காமிக்ஸின் மறுக்க முடியா நாயகர் ஸாகோர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் ஸாகோருக்கு பலத்த கைத்தட்டல்கள்...
சமீபமாய் ஒரு நண்பர் வி காமிக்ஸ் இதழ்களின் கதை முன்பு போல் இல்லை சுமாராக அமைந்து வருகிறது ..சித்திரங்களும் அவ்வாறே என சொல்லி இருந்தார்...என்னை பொறுத்த வரை வேதாளர் கதைகளை வேண்டுமானால் ( அதுவும் குறிப்பாக பூவிலங்கு ..(வேதாளருக்கு திருமணம்) என்ற இதழ் )மட்டுமே விறுவிறுப்பிற்கு குறைச்சலாய் பட்டது...மற்றபடி பிற நாயகர்கள் நறுக் ,சுறுக் என விறுவிறுப்பாகவே வாசிக்கும் படி அமைந்து உள்ளது..அதே போல் இளம் டெக்ஸ் சாகஸங்களும் தொடர் சாகஸங்களால் அமையாது ஒரு தொகுப்பாய் அமைந்து போனால் அதுவுமே சிறப்பு...
மற்றபடி வி காமிக்ஸ்...வின்னரே....
நன்று .
Delete*சினம் கொண்ட சின்ன கழுகு*
ReplyDeleteஇந்த நாயகரை பற்றி ..கதைகளை பற்றி நன்றாகவே அனைவரும் அறிவார்கள்...
பிறகு எதுக்கு சாமீ இவரையும் உடனே படித்து விட்டு பிறகு வாசிக்க வேறு இதழ் இல்லாமல் போக.....
ம்ஹூம்...
வேண்டாமே எனவே எனதுயிர் டெக்ஸ் இன்றோ...நாளையோ வாசித்து விட்டு இதழின் விமர்சனத்தை தெரிவித்து விட்டு பதுங்கு குழியில் பத்திரமாய் இருக்கலாம் என்பதால் .....
சினம் கொண்ட சின்ன கழுகை சினம் இல்லாமல் பொறுமையாக வாசத்து விட்டு வருகிறேன் சார்...மன்னிக்க..:-)
சரியான முடிவு சார். வழக்கமான டெக்ஸ் கதை இது அல்ல
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//இதில் பியூட்டி தங்கள் வேலை இதுதான் என்பது தெரியாமலேயே கதைக்குள் புகுந்து அவர்கள் அடிக்கும் லூட்டி செம;//
Deleteசூப்பர்ல தம்பி
Spoon and White - இரண்டு காமெடி போலீஸ்காரர்கள் பயணகைதிகளாக உள்ளவர்களை எப்படி விடுவிக்கிறார்கள என்பதை சிரிப்பு கலந்து கொடுத்து இருக்கிறார்கள். இதில் பியூட்டி தங்கள் வேலை இதுதான் என்பது தெரியாமலேயே கதைக்குள் புகுந்து அவர்கள் அடிக்கும் லூட்டி செம; டார்க் காமெடி பல இடங்களில் வாய்விட்டு கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கும்; படங்களை கொஞ்சம் கவனித்து படித்தால் இன்னும் பக்க பெரியதாக சிரிக்க வைப்பார்கள். சில இடங்களில் மேலோட்டமாக பார்த்தால் வரலாறு பேசுவதாக தெரியும் அங்கே கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அட இப்படியும் காமெடி செய்யலாமா எனத் தோன்றுகிறது. கதாநாயகர்கள் இருவரும் மிகப்பெரிய கொக்கு மாக்கு பார்ட்டிகள் என்பது அவர்களின் ஆரம்ப அசைனமட (assignment) புரியவைத்து விடுகிறது.
Deleteஇதில் வில்லன் மற்றும் நடுவில் வரும் குரு எல்லாம் செம காமெடி பீஸ்சஸ். அதுவும் மெயின் வில்லனை கைது செய்த பிறகு அவர் மனைவியின் ரியாக்ஷன் எதிர்பாராத சிரிப்பு.
மொத்தத்தில் எங்கெங்கும் புன்னகை 😊
*சினம் கொண்ட சின்னக் கழுகு*
ReplyDeleteஉண்மைக்கு நெருக்கமாக கதையை எழுது, வாசகனுக்கு அந்த கதை மிகவும் பிடித்துப் போகும் என்று என் நண்பன் கூறுவான். எத்தனை உண்மை சம்பவங்களை நேர்த்தியாக கோர்த்து ஒரு அற்புதமான உணர்ச்சிப் பிரவாகமாக கதையை கொடுத்து இருக்கிறார் போசேல்லி.
உயிர் நடுங்கும் இருளை ஒரு ஓவியத்தில் கொண்டு வர முடியுமா? முடியும் என்று சாதித்திருக்கிறார் ஓவியர். அந்த கோமான்சே மக்களின் படுகொலை மிரட்டல் ரகம். கருப்பு காகிதத்தில் சில பல வெள்ளை கோடுகளை இழுத்து விட்டது போல் இருள் அப்பிக் கொண்டு திகைக்க வைக்கிறது..
வழக்கம் போல டெக்ஸ் குற்றவாளியை ஊகித்து விட்டிருந்தாலும் ஆதாரம் தேடி அலைவதாக கதையை அமைத்தது அருமையான திட்டம். அதிலும் சின்னக் கழுகை எதிரிகளின் கூட்டத்தில் அண்டர்கவர் ஏஜெண்டாக அனுப்புவது எல்லாம் வேற லெவல் திங்கிங்
ஒவ்வொரு கதை மாந்தர்களும் கதைக்கு இடைச்சொருகலாகவே இருக்கவில்லை.. டைகர் ஜாக்கின் அதிரடி, கார்சனின் பாசம், டெக்சின் தயாள குணம், சின்னக்கழுகின் சீற்றம். மில்டனின் தைரியம். பீகோசின் மதியூகம். ரோப்லீடோவின் கர்வம், பின்னிக்கென்னின் கோழைத்தனம்.
முக்கியமாக இங்கு பின்னிக்கேன் போன்ற நரிகளின் தோலை உரித்து தொங்க விட்டுள்ளார் ஆசிரியர் பொசெல்லி, என்னதான் வீரனாக தகவமைத்துக் கொண்டாலும், ஊடக வெளிச்சத்தில் ஹீரோவாக வலம் வந்தாலும் இவர்களை போன்றவர்கள் சமயத்தில் காலை வாரி விட்டு ஓடி விடுவார்கள் என்பதை மணிக்கொரு முறை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இவனைப் போன்றவர்களை இனம் காண்பது மிகவும் கடினம். அதனால் தான் மக்கள் இவனைப் போன்றவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். GUT FEELINGS என்ற ஒன்றை மக்கள் வளர்த்துக் கொள்ளவேண்டியதின் அவசியத்தை சின்ன கழுகின் அறியாமையை வைத்து நமக்கு பாடம் புகட்டுகிறார் ஆசிரியர். வில்லன் நரியாக இருந்தாலும், கதை வலுவாக இருப்பதால் என் கவனம் முழுவதும் கதையின் இழையை பிடித்துக் கொண்டு நடப்பதாகவே உணர்ந்தேன். அந்த இழையை எங்கேயோ ஒரு இடத்தில் தவற விட்டிருந்தாலும் இந்த அற்புத படைப்பை உள்வாங்காமல் கடந்து சென்றிருக்கும் அபாயம் இருந்தது.
உணர்ச்சிகளின் குவியலுக்கு நடுவில் அமர்ந்துக் கொண்டு அடுத்த பக்கத்தை நகர்த்துவது மட்டுமே வாசகனாகிய என் வேலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பக்கங்கள் புரட்டப்படுவதைக் கூட நான் கவனிக்கவில்லை. ஒவ்வொரு பக்கமாய் கதை ஓட்டம் எடுக்க முடிவில் கனத்த இதயத்துடன் புத்தகத்தை மூடி வைத்தேன். புத்தகத்தை மூடி வைத்தபின் ரேஞ்சர்களின் கொடூரங்கள் என்று பக்கம் பக்கமாய் வரலாற்றின் இருந்த பக்கங்கள் என்னை உள் இழுத்துக் கொண்டது. PORVENIR MASSACRE, அநேகமாக அலமிட்டோ பண்ணையில் ரெமிரேஜ் மக்களை காலி செய்த சம்பவம் இதை ஒட்டி எழுதப்பட்டதாக நான் கருதிக் கொண்டேன். 1840 ல் நடந்த RED FORK MASSACRE அநேகமாக இதில் நடக்கும் எதோ ஒரு கோமஞ்சே இன ஒழிப்பின் பாதிப்பே.
வரலாற்றின் இருண்ட பக்கங்களை படித்து விட்டு வேறு எதுவும் படிக்கத் தோணாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்து படுத்து விட்டேன். மனிதன் மிகச் சிறந்த சல்லிப்பயல் என்று எழுதிய ஜி.நாகராஜன் வார்த்தைகள் மீண்டும் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அந்த முதல் பேனலில் தனியாக குதிரை மீது அமர்ந்திருக்கும் செவ்விந்திய சகோதரனைப் போலவே நான் இந்த பரந்த உலகத்தில் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் வழக்கமாக புத்தகங்களை சேகரிக்கும் பழக்கம் இல்லாதவன். ஆனால் ஒரு சில புத்தகங்கள் விதிவிலக்காக எனக்கு நெருக்கமாகி விடும். அப்படியே என்னை ஆட்கொண்ட புத்தகங்களின் வரிசையில் இந்த புத்தகமும் உண்டு. நன்றிகள் பல எடிட்டர் சார்.
கதை :10/10
ஓவியம் 11/10
மேக்கிங் 9/10
அருமை சார். விமர்சனம், சிறந்த விமர்சனம்..என்பதை தாண்டி எப்போதாவது உணர்ச்சி பிரவாகமாக வெளிவரும் வார்த்தைகளுக்கு ஈடு இணை இல்லை. நல்ல பதிவு..
Deleteஆத்மார்த்தமான எழுத்துக்கள் @SURYAJEEVA. ரொம்பவே ரசிக்க வைக்கிறது!!💐👏👏
Deleteஅருமையான விமர்சனம்.
Deletethank you friends
Delete// மனிதன் மிகச் சிறந்த சல்லிப்பயல் என்று எழுதிய ஜி.நாகராஜன் வார்த்தைகள் மீண்டும் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அந்த முதல் பேனலில் தனியாக குதிரை மீது அமர்ந்திருக்கும் செவ்விந்திய சகோதரனைப் போலவே நான் இந்த பரந்த உலகத்தில் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன். //
Deleteஉங்கள் மனதில் உள்ளதை வார்த்தையாக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
நன்றி சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//. என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரானது ரொம்பவே casual-ஆக, ரசிக்கும் விதமாய் இருப்பதாகவேபடுகிறது. //
ReplyDeleteஎனக்கும். அதே எண்ணம் தான் சார்.
வஞ்சத்திற்கொரு வரலாறு - சென்டரை கொலை செய்ய முயற்சிக்கும் ஒரு செவ்விந்திய இனத்தின் தலைவர் தோல்வி அடைய எதற்கு ஏன் அடுத்து என்ன என்று கதை நகர்கிறது. இதில் ஸ்கோர் பங்கு என்ன முடிவு என்ன என விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். நிறைய இடங்களில் படங்கள் கதை சொல்கிறது வசனங்கள் குறைவு, எடுத்தோமா படித்தோமா என்ற எளிய வாசிப்புக்கு உகந்த கதை. கதை அரைத்த பழைய மாவுதான் என்பது குறையாக தெரிகிறது; ஸ்கோர் கதாபாத்திரத்திம பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ReplyDeleteகடந்த வருடம் வந்த ஸ்கோர் கதைகளுக்கு இந்த கதை ஓகே.
மொழிபெயர்ப்பு நீங்கள் செய்தது போல இருந்தது, ஆசிரியர் எதிர்பார்த்ததை தனது மொழிபெயர்ப்பில் அழகாக கொடுத்த கண்ணா வாழ்த்துக்கள்.
சினம் கொண்ட சின்னக் கழுகு... ஓவியர் அவருடைய மாமா, சித்தப்பா,மருமகன் ஆகியோரின் முகங்களை வரைந்து,பெயரை மட்டும் டெக்ஸ்ட் அண்ட் டீம் என்று எழுதிவிட்டார் போல...
ReplyDeleteவஞ்சத்துக்கொரு வரலாறு.
ReplyDeleteகுற்றவாளிகள் எப்பொழுதாவது ஒரு நாள் நீதிக்கு முன் மண்டியிட்டே ஆக வேண்டும் என்பதான feel good கதை. முடிவில் நண்பர்கள் சகோதரர்களாக வலம் வரப் போகிறார்கள் என்று முடித்து சுபம் போட்டிருக்கிறார்கள்.
இந்த ஆல்பத்தில் எனக்கு இடறிய விஷயம் அந்த முழு நிலவு. வின்டர் ஸ்நேக் செனட்டரை கொலை செய்ய வரும் நாளிலும் முழு நிலவு. சில நாட்கள் கழித்து தப்பித்த வின்டர் ஸ்நேக் கொலம்பஸை அடைந்து செனட்டரை கொலை செய்த பொழுதும் முழு நிலவு. கதை ஒரு மாதமாக நடப்பதாக எடுத்துக் கொள்வதா என்பது தான் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
கதை 9/10
ஓவியம் 8/10
மேக்கிங் 10/10
முழு நிலவில் ஆரம்பித்து முழு நிலவில் கதை முடிவதாக எடுத்து கொள்ளலாம்.
Deleteஓகே சார்
Deletemilton oru hollywood actor inspiration. forgot the name
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசிறையில் ஒரு அழகி :-
ReplyDeleteஒரு காமிக்ஸ் கதை படிக்கும்போது திடீர்னு என்னையறிமால் வாய்விட்டு சிரிச்சி சில வருசங்களாவது ஆயிருக்கும்..!
இப்போ ஸ்பூன் & வொயிட் படிக்கிறப்போதான் அது திரும்ப நடந்துச்சி.!
முதலில் கதை பற்றி.. Spoof சினிமாக்கள் பல ரகங்களில் பார்த்து ரசித்திருப்போம்.. ஆனால் அவற்றை ஏன் காமிக்ஸ்களில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்னு எனக்கு ரொம்ப நாட்களாவே ஒரு ஆதங்கம்..! அதைப் போக்க *ஏஜென்ட் 327* னு ஒரு ஜேம்ஸ்பாண்ட் Spoof கேரக்டர் வந்துச்சி.. தூங்கிப்போன டைம்பாம்னு கதை பேரு.. எனக்கு ரொம்பவே புடிச்சிருந்தது.. (அஃப்கோர்ஸ்.. எனக்கு மட்டுமே புடிச்சிருந்தது போல). நிறைய வெட்டுகளுடன் வந்திருந்தாலும் கதையை நன்றாகவே ரசிக்க முடிஞ்சுது..! ஆனா அந்த ஒரே கதையோட அந்த ஜானர் ஊத்தி மூடப்பட்டது..!
அதற்குப் பிறகு இப்போதுதான் அப்படி ஒரு கதையை படிக்கிறேன்.. மகிழ்ச்சி.!
ஸ்பூன் மற்றும் ஒயிட்னு ரெண்டு போலிஸ்காரங்க.. ரெண்டுபேருமே ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சும் முரட்டு முட்டாப்பீசுகள்..! அவங்களோட ஆப்பரேசன் மிஸ்ஃபயர் ஆகி ஒரு பத்திரிக்கைகாரர் இறந்துவிட கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார்கள்..! மிஸ் கோர்ட்னி பால்கனின்னு அழகான ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி.. ஸ்பூன் & ஒயிட் ரெண்டுபேருக்கு அவமேல ஆளுக்கொரு கண்ணு.! ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் மிஸ் பால்கனியை ஃபாலோ பண்ணிப்போக.. தொடர்ந்து நடக்கும் கூத்துகள் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிரிப்புதான்..!
கொஞ்சமல்ல நிறையவே ரத்தம் தெறிக்கிறதுதான்.. ஆனால் கதை எது நிஜமெதுவென்ற வேறுபாட்டை உணர்ந்துகொண்டால் போதும்.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.!
முதல் பத்து பக்கங்களுக்கு அந்த ஓவியங்களுடன் ஒன்ற சிரமமாக இருந்தது உண்மைதான்.! ஆனால் ஸ்பூனின் பிங்க் கலர் கெடிலாக் கார் கோல்டன் கூஸில் நுழைந்த அந்தநொடியில் இருந்து கதையும் காமெடியும் ராக்கெட் பற்றிக்கொண்டதைப்போல பறக்க ஆரம்பித்துவிடுகின்றன..!
கதைமுழுக்க நேரடி நகைச்சுவைகளை விட மறைமுக நகைச்சுவைகளே அதிகம்.. எதுவுமே திணிக்கப்பட்ட காமெடிகள் அல்ல.. கதையே காமெடிதான்..!
தற்கொலை செய்துகொள்ள ஒன்றுகூடியிருக்கும் ஒரு குழுவை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தால் என்னவாகும்.. அவர்களை சாகவிடாமல் பாதுகாக்க போலிஸ் மட்டுமல்ல.. பிடித்துவைத்த தீவிரவாதிகளே திண்டாடுகிறார்கள்.!
பணயக்கைதிகள் எல்லோரும் செத்துவிட்ட சூழலில் போலீசை ஏமாத்த தீவிரவாதிகள் இருவருக்கு மொட்டை போட்டு பணயக் கைதிகளா நடிக்க வைப்பாங்க.. மாடியில ஓரமா நின்னு போலீசை மிரட்டிக்கிட்டு இருக்கும்போது.. அந்த குரு வந்து.. "அஸூம் சகோதரத்துவத்தின் வாழ்த்துக்கள் ஜென்டில்மேன் னு தள்ளிவிட்ருவாப்ல... சத்தமாவே சிரிச்சிட்டேன்..!
ஜட்டி மட்டுமே மிஞ்சியிருந்த நிலையில் அதிலேயே துப்பாக்கியை சொருகிக்கொண்டு ஒவ்வொரு ஃப்ளோராக சுட்டுக்கொண்டே என்ட்ரி கொடுக்கும் ஸ்பூன்.. தீவிரவாதிகள் இருக்கும் ஃப்ளோருக்கு வரும்போது கரெக்டாக தோட்டா தீர்ந்துபோக திருதிருவென விழிக்குமிடம்...
தீவிரவாதிகளை மடக்க வரும் போலிஸ் குரூப்புகள் அடையாளம் தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி போட்டுத்தள்ளிக்கிறது..
கடைசியில போலிஸ் அதிகாரி ஒயிட்டையே தீவிரவாதின்னு FBI அரெஸ்ட் பண்றது.. FBI கிட்டே இருந்து தப்பிக்க ஸ்பூன்.. அஸூம் குரூப் ஆளா நடிக்கிறது.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..!
ஸ்பூன் & ஒயிட் அட்டகாசமான அறிமுகம்.. கட்டாயம் தொடர்ந்து வாய்ப்பளிக்கணும்.!
ப்ளூகோட்ஸின் ஆகாயத்தில் அட்டகாசத்தைப் போலவே ஸ்பூன் & ஒயிட்டிற்கும் முதல் கதை மிக அமர்க்களமாக அமைந்துள்ளது..!
எடிட்டர் சார்...
இந்த நேரத்தில் அந்த ஏஜென்ட் 327 ஐயும் ஏதாவது ஒருவழியில் திரும்ப வரவழைக்க முயற்சி செய்யுங்க சார்..? இதேமாதேரி கலரில் வந்தால் அவரையும் ஜனங்க ரசிக்க வாய்ப்பிருக்கு..! அப்போதைய சூழலைவிட இப்போ கொஞ்சம் பரவாயில்லைதானே.. பாத்து பண்ணுங்க சார்..!
ரெண்டு தடவை படிச்சிட்டேன்...!
DeleteExcellent review 😊👏🏻👏🏻👏🏻👏🏻
Delete// ஜட்டி மட்டுமே மிஞ்சியிருந்த நிலையில் அதிலேயே துப்பாக்கியை சொருகிக்கொண்டு ஒவ்வொரு ஃப்ளோராக சுட்டுக்கொண்டே என்ட்ரி கொடுக்கும் ஸ்பூன்.. தீவிரவாதிகள் இருக்கும் ஃப்ளோருக்கு வரும்போது கரெக்டாக தோட்டா தீர்ந்துபோக திருதிருவென விழிக்குமிடம். //
Deleteநான் மிகவும் ரசித்த இடம் இது.
White துணி இல்லாமல் ஜன்னல் பக்கத்தில் பின்புறத்தை காட்டி கொண்டு இருக்கும் காட்சி 😆😊🤣😀
Delete😂😂😂
Delete// எதுவுமே திணிக்கப்பட்ட காமெடிகள் அல்ல.. கதையே காமெடிதான்..! //
Delete+1 ஆசிரியர் கிடைத்த வாய்ப்பை நன்றாக செய்து உள்ளார்.
விடுபட்ட ஒரு விசயம்..
Deleteதமிழ் சினிமா பாட்டுகள்.. ஏதோ புரியாத தெரியாத பாட்டுகளை விட நமக்கு தெரிஞ்ச பொருத்தமா ன சினிமா பாட்டுகள் இடம்பெற்றிருப்பது கதையை நெருக்கமாக உணர்ந்துகொள்ள உதவுகிறது.!
அந்த அழகி கையில் விழுங்கை மாட்டி white பேசும் டயலாக் 😁
Deleteசமையல் கட்டில் உள்ள விஷ மீன் மற்றும் அதற்கு குரு சொல்லும் காரணம் 😂
Deleteமொத்தத்தில் ரசிக்க சிரிக்க நிறைய உள்ளன இந்த கதையில். That’s all your honour 😊
Deleteகண்ணா நான் எழுத நினைத்ததை அட்டகாசமாக எழுதி அசத்தி விட்டீர்கள். ☺️
Delete@PFB. 😍
Deleteசூப்பர் கண்ணரே...அருமையான டாப் விமர்சனம்
Deleteரசிச்சு படிச்சு. ரசிக்க ரசிக்க எழுதியிருக்கீங்க kok!!👌💐
Delete*சிறையில் ஒரு அழகி*
Deleteகதையை நான் படித்து புரிந்து கொண்டு, ரசிக்க இயலாமல் கடந்து போய்விட்டேன்..
உண்மையில் உங்கள் விமர்சனம் அந்த கதையை ரசிக்கும் படி இருந்தது. உங்கள் விமர்சனத்தில், நான் தவறவிட்ட கோணங்களை, மற்றொரு கருத்தின் வாயிலாக ரசிக்க முடிந்தது. அந்தக் கதையில் சொல்வதற்கு உள்ள சமாச்சாரங்கள் இவ்வளவு உள்ளது என்பதை தங்கள் விமர்சனம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
உங்களில் கண்ணோட்டத்தில், நான் கவனிக்காமல் விட்ட சமாச்சாரங்களை மீண்டும் கதையை படித்துப் பார்க்கிறேன்.
*நம்மை அறியாமலும், சரியான ஒரு நபரை தவறான கண்ணோட்டத்தால் தவிர்க்கக்கூடாது பாருங்கள்... அதான்..*
மீள் வாசிப்பில் என்னை ஈர்த்தால் சந்தோசம்..
உங்கள் விமர்சனம் நன்றாகவே இருந்தது சார்..🔥🔥🔥
நன்றி ரகு சார்..!
Deleteகுருநாயர் & ஸ்டீல் க்ளா.. 😍
ரத்தம் தெறிக்கிறது..
ReplyDeleteஸ்பூன் & ஒயிட் வேண்டாம்னு சொல்ல காரணம்...
கொத்து கொத்தா சாகுறாங்க..
ப்ளூகோட்ஸ் எதிர்ப்புக்கு காரணம்...
ஒரு பெரிய ஹீரோ ஒருத்தரோட பட. ஒண்ணு சமீபத்துல பார்த்தேன்.!
கத்தியை போலிஸ் கழுத்துலயே சொருகி சாகடிப்பதை நேரடியா காட்றாங்க...
ஒரு அழகான இளம்பெண்ணை கழுத்தை அறுத்தே கொல்றதையும் காட்றாங்க..
ரயிலுக்கு குண்டு வெச்சி சின்னப்பசங்க உட்பட குடும்பத்தையே எரிச்சிக் கொல்றதை காட்றாங்க..
பெத்த அப்பாவை.. கூடப்பிறந்த தங்கையை கொல்லல்துடிக்கும் இளைஞனை காட்றாங்க..
தானியிங்கி துப்பாக்கிகளை வெச்சிக்கிட்டு டபடபடபன்னு சுட்டுக் கொன்னுக்கிட்டே போறதைக் காட்றாங்க...
இதையெல்லாம் செய்யுறது வில்லன் கூட இல்லை... குழந்தைகள் இளைஞர்கள் கொண்டாடும் ஒரு பெரிய ஹீரோ..!
இந்தப் படத்தை குடும்பத்தோடு குழந்தைகுட்டியோடு போய்தான் பாக்குறாங்க..!
அதிலெல்லாம் இல்லாத ரத்தமா.. வன்முறையா இந்தக் காமிக்ஸ் கதைகளில் இருந்துடுது..!
யதார்த்தம் எது கதை எதுன்னு தெரியாத குழந்தைகளா காமிக்ஸ் உலகில் இருக்கிறோம்.!
யாரையும் குறைசொல்ல எழுதவில்லை நண்பர்களே.. பொருத்தமில்லாத காரணத்துக்காக இதுபோன்ற கதைகளை தவிர்க்க வேண்டாமே என்றே எழுதியிருக்கிறேன்.!
This comment has been removed by the author.
ReplyDeleteவாப்பா டைகரு...💐💐
Delete🤣🤣🤣நன்றி நன்றி ஐயா
Deleteசிறையில் ஒரு அழகி கதை ஓகே ரகம் தான். ஆனால் அதை விட சித்ரங்களை நன்றாக பார்த்து படிக்க ஏதுவாக பலூன்கள் இருந்தது நன்றாக இருந்தது. செம்ம மேக்கிங் இந்த ஒயிட் அண்ட் ஸ்பூன். இன்னும் நிறைய கதைகள் இதன் வரிசையில் வந்தால் நன்றாக இருக்கும் எடி ஐயா
ReplyDeleteWelcome to Spoon & White club 😊
Deleteநன்றி அண்ணா
Deleteமங்களமாய் மரணம். கார்ட்டூன் கதையாக இருந்தாலும் நல்ல த்ரில் ஆக இருந்தது.
ReplyDeleteஇந்த வருடம் வந்த புத்தகங்களில் பெஸ்ட் மன்த் என்றால் அது செப்டம்பர் தான்.
2024 இன் லைஃப் டைம் செட்டில்மென்ட் செப்டம்பர்.
வஞ்சத்திற்கொரு வரலாறு :-
ReplyDeleteதலைப்பே கதையைச் சொல்லிவிடும்..! வழக்கமான பழிவாங்கும் கதைதான்.. ஆனால் சொல்லியிருக்கும் விதத்தில்தான் மார்க்குககளை அள்ளுகிறது.!
கோட்டையில் தங்கியிருக்கும் செனட்டர் ஒருவரை கொல்ல முயற்சித்து தோல்வியுறுகிறார் செவ்விந்திய தலைவர் ஒருவர்.. சிறைபிடிக்கப்பட்ட அந்த செவ்விந்திய தலைவர் வின்ட்டர் ஸ்னேக்.. ஸாகோரின் நண்பர் என்பதால் அவரைப் பார்த்து விசாரிக்க வருகிறார் ஸாகோர்.. ஆனால் அதைப் பயண்படுத்தி தப்பிச் செல்கிறார் வின்ட்டர் ஸ்னேக்.!
செனட்டரை கொல்ல பின்தொடர்கிறார் வின்ட்டர் ஸ்னேக்.. ஆனால் வின்ட்டர் ஸ்னேக்கை ஜெயிலில் இருந்து தப்புவித்து தன் கையாலேயே கொல்ல நினைக்கிறார் செனட்டர்..! இதற்கிடையே தன்னை ஏமாற்றி தப்பிச் சென்ற நண்பனையும் பிடிக்க வேண்டும்.. செனட்டரின் தவறை கண்டுபிடித்து அவரை சட்டத்தின் பிடியில் நிறுத்த வேண்டும் என்ற நோக்கங்களோடு பயணிக்கிறார் ஸாகோர்.!
வின்ட்டர் ஸ்னேக்கிற்கும் செனட்டருக்கும் இருக்கும் முன்பகை என்ன.? மூவரில் யாருடைய நோக்கம் நிறைவேறியது.? என்பதை செம்ம விறுவிறுப்பாக தொய்வே இல்லாத பக்கா ஆக்சனுடன் சொல்லியிருக்கிறார்கள்..!
வின்ட்டர் ஸ்னேக் மற்றும் செனட்டர் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத்துடிப்பதற்கான காரணம் விசித்திரமானது... இருவருக்கும் ஒரே காரணம்தான்.. அது என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.!
வின்ட்டர் ஸ்னேக்கும் ஸாகோரும் கைவிடப்பட்ட நகரத்தில் மோதிக்கொள்ளும் காட்சிகள்.. அதைத்தொடர்ந்து அங்கே வரும் செனட்டரின் ஆட்களுடன் ஸாகோர் மோதும் காட்சிகள்... க்ளைமாக்ஸில் எத்தனுக்கு எத்தனாக ஸாகோர்.. செனட்டர்.. வின்ட்டர் ஸ்னேக் மோதிக்கொள்ளும் கட்டம் என ஆக்சன் விருந்து இந்த வஞ்சத்திற்கொரு வரலாறு.!
முன்பகையை சில ஃப்ரேம்கள் நடுநடுவே காட்டி.. சஸ்பென்ஸை அப்படியே கொண்டுபோய் இறுதியில் வெளிப்படுத்தியிருப்பது அட்டகாசம்..! இந்தக் கதையில் வின்ட்டர் ஸ்னேக்தான் ஹீரோ... ஸாகோரும் ஹீரோதான்.. சீகோ அவ்வபோது கார்சனையும் சில இடங்களில் ஜிம்மியையும் ஞாபகப்படுத்துகிறார்.!
இதுமாதிரி வருடம் ஓரிரு கதைகள் வந்தால் போதும்.. டெக்ஸ் வில்லரின் இடத்தில் ஒரு கால்வாசியையாவது ஸாகோர் பிடித்துவிட வாய்ப்பிருக்கிறது.!
தல வில்லரின் பாணியில் ஜம்பிங் தல ஸாகோரின் சிறப்பான சாகசம் இந்த வஞ்சத்திற்கொரு வரலாறு.!
@KoK ji..😍😘
ReplyDeleteSemma mass விமர்சனம்..🙏👍✊👌👌💐💐
#ஸாகோருக்கு ஜே#
😍😘
*** மங்களமாய் மரணம் ***
ReplyDeleteபிடித்திருக்கிறது.. ரொம்பப் பிடித்திருக்கிறது!
கதை பிடித்திருக்கிறது..
அட்டைப்படம் பிடித்திருக்கிறது..
சித்திரங்கள் பிடித்திருக்கிறது..
வண்ணங்கள் பிடித்திருக்கிறது..
வசனங்கள் பிடித்திருக்கிறது..
வசனங்களில் இழையோடும் துள்ளல் பிடித்திருக்கிறது( குறிப்பாக ரூபினின் வசனங்களில்) ..
ரூபினின் பெற்றோர் நடத்தும் கல்யாண நாடகம் பிடித்திருக்கிறது..
அதில் இயல்பாக நடித்திருந்த ரூபினையும் பிடித்திருக்கிறது..
ரூபினின் கதைகள் மீண்டும் வேண்டும்!
10/10
பாட்டாவே பாடிட்டீங க்ளா
DeleteThis comment has been removed by the author.
Deleteசுருக்கமான நச விமர்சனம்
Deleteபிடித்தமான கவிதை
Deleteவசந்த கால நள்ளிரவு(தமிழமுது) ....இந்த வசீகர வரிகளே மனதை அள்ளிக்கொண்டு.... தொடரும் கட்டங்கள் பௌர்ணமி ஒளியில் இரவின் போர்வையில் தயாராகிறார் ஓர் போராளி....
ReplyDeleteசெனட்டரை கொல்லப்பாய்ந்து பிடிபட....ஸாகோர் வந்து துருவ ...அந்த கோட்டை பொறுப்பதிகாரிக்கும்...ஸாகோருக்கும் நடக்கும் பொறுப்பான வாதங்கள் 47 ம் பக்கம் மனதோடு நெருக்கமாக....
ஆசிரியர் சொன்னது சரிதான் மஞ்ச சட்டையை மாத்திட்டு வந்துட்டார் டெக்ஸ்....
அந்த படகில் செல்லும் செனட்டர் தனது காவலரிடம் சொல்லும் வசனங்கள் நல்லதொரு அதிகாரியாக காட்ட...அடடான்னு நெருட ...வின்டர் ஸ்னேக்க தொடரும் கொடூர முகம் பின்னர் வெளிச்சம் காட்ட அந்த பௌர்ணமி ஒளி உதவ...
முடிவு வெற்றியடைந்தாலும்...அரசியல் தகிடுதத்தங்கள் தொடரும் ப்ளாக்மெயிலாக என முடிவுரை வல்லான் வகுத்ததே வாய்க்கால் என இறுமாப்பை தெளித்தாலும் ....ஸாகோர் கடவுளாய் தென்படுகிறார் செவ்விந்தியர்களுக்கு போல கோடாரி மாயாத்மாவாக நமக்கும்...
கதை எந்த இடத்திலும் உறுத்தாமல் தெளிவாக செல்ல...முதல் ஸாகோர் போல நீண்ட அற்புதக் கதை பொசுக்கென முடியாமல்
அட நல்லா விமர்சனம் எழுதி இருக்கல மக்கா 😀
Deleteகாம்ப்ளான் குடிச்சியோல
Deleteஸ்டீல்.. 😮 இவ்வளவு தெளிவா ஒரு விமர்சனம்!! தண்ணி கிண்ணி?!!🤔
Deleteவிஜய் @ யாரோ எழுதிய விமர்சனத்தை தன்னோடது என போட்ட மாதிரி தெரிகிறது :-)
Delete@Parani சகோ
Deleteஏவ்வளவு அருமையா எழுதி இருக்காரு, கிணடல் பண்றீயாங்க லே
இம்மாத ரேட்டிங் 1.ஸ்பூன்&ஒயிட்.
ReplyDelete2 .ரூபின். 3.டெக்ஸ்.
ஸ்பூன்&ஒயிட் .இது ஒரு கிராபிக் "கார்ட்டூன்" நாவல். கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டாவது மூன்றாவது வாசிப்பில் ....ஒவ்வொரு முறையும் ஒரு புது வகையில் உசரே உசரே பறக்குது . கார்ட்டூனுக்கு இது புது உற்சாகம் .ராஜசேகரன் . கரூர்
ReplyDeleteSuper
Deleteமாண்ட்ரேக் அநேகமாய் இதுபோன்ற தொகுப்பில் வெளியாவது இதுவே கடைசிதபாவாக இருக்கும் . ஆசிரியர் சார் விளக்கம் ப்ளீஸ்
ReplyDelete💕💞💕💞💕💞💞💕💞💕💞💕
ReplyDeleteதமிழ் காமிக்ஸின் G.O.A.T. ஐ சந்திக்க சென்ற போது.....இதே நாள் 12ஆண்டுகளுக்கு முன்பு இனிய நாளாக அமைந்தது....
*2012 கம்பேக்கிற்கு பிறகு நேரில் காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பது தொடக்கம் பெறாத காலம் அது. லயன் வலைத்தளத்தில் உலாவந்த சிலரை எல்லோருக்கும் போல வெறும் பெயர்களாக மட்டுமே எனக்கும் தெரியும்.
*கம்பேக் ஸ்பெசல், சர்ப்ரைஸ் ஸ்பெசல், டபுள் த்ரில் ஸ்பெசல்... என ரெகுலர் புத்தகங்களே சிறப்பு மலர்களாக வெளியாகி சக்கபோடு போட்டு வந்தன. ஒரு மாசத்துக்கே ஒரு புத்தகம் தான் எனும் போது விமர்சனங்கள் வரிசை கட்டின. மாசம் பூரா நிறை,குறை என வெச்சி செஞ்சு வந்தாங்க.
*அப்பத்தான் 2012 சம்மர் இறுதியில் ஒரு நாள்.....
*"பெங்களூரு காமிக்கான் செப்டம்பர் 8-9, 2012--அனைவரும் வாரீர்; ஆதரவு தாரீர். உங்களை வரவேற்பது:உங்கள் எடிட்டர் விஜயன்"* ---- என்ற அறிவிப்பை போட்டு இருந்தார்...🤩
*டெக்ஸ் கதைக்கு அடுத்து ஹாட்லைன் தான் ரொம்ப பிடிச்ச பகுதி. "எடிட்டர் S.விஜயன்" என ரொம்ப நாளாகவே பார்த்து பார்த்து பரிச்சயம் ஆன பெயர்; இவரது வசனங்கள் வாயிலாக ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருந்தார். தொலைவு காரணமாக சிவகாசி போய் நேரில் சந்திக்க எண்ணியது கிடையாது என்றுமே. "அட பெங்களூரு பக்கம் தானே போய் பார்ப்போம்" என்ற எண்ணத்தை ஸ்பார்க் பண்ணிச்சு ஆசிரியரின் இந்த அறிவிப்பு!
*பெங்களூரா நாங்களும் வருவோம்னு வீட்டில் தொற்றி கொண்டார்கள். "விஜயன் சாரை பார்க்க போறம்மா, காமிக்ஸ் விழா"- என சொல்லி கழட்டி விடபார்த்தும் பாச்சா பலிக்கல. ரொம்ப நாள் எங்கும் வெளில போகல நாங்களும் வந்தே தீருவோம்னு வீட்டில் அடம் பிடிச்சாங்க..
*காமிக்ஸ் வாங்கப் போறம்னு தெரிஞ்சதும் என் தங்கை பையன் அவுங்க தெரு நண்பனோட அப்பாவுக்கு சில காமிக்ஸ் வாங்க வேணும் என இணைந்து கொண்டான். (பிறகு அவரோட அறிமுகம் கிடைத்து, பழைய ரசிகர் என தெரிந்து கொண்டேன். 2013 முதல் இன்றளவும் லயன்-முத்து சந்தாவில் லஷ்மன பெருமாள் எனும் அவர் தொடர்கிறார். என்றாவது ஈரோடு விழாவிற்கு அழைத்து வர்றேன்)
*பெங்களூரு போக ட்ரெயின் தேர்ந்தெடுத்தேன். எங்கயோ ஹீலாலிகேவுல இறங்கி, சேர் ஆட்டோ பிடித்து மெயின் ரோடுவந்து, டவுன்பஸ்ஏறி பெங்களூரு ஊருக்குள் வந்து, செயின் ஜான்ஸ்ல இறங்கி, மறுபடியும் ஆட்டோ பிடிச்சா விழா நடக்கும் ஸ்டேடியம் போய் விடலாம்னு தகவல்களை திரட்டியாச்சுது.
*சேலம் டூ பெங்களூரு ட்ரெயின் அதிகாலை 5மணிக்கு போல. போய் சேர 10மணி ஆகிடும். பிறகு அந்த லோக்கல் ட்ராவலிங் இன்னும் நேரம் எடுக்கும், பொடியனை வெச்சிகிட்டு டிபனுக்கு எங்கே தேடுவதுனு ரோசனை. நானுமே பசி தாங்க மாட்டேன்... ஹி.. ஹி...!! பைனலி ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்வது தான், கட்டுச்சோறு!
*சோறெல்லாம் எம்பையன் காலைல சாப்பிட மாட்டான்னு தங்கை சொல்ல, ஒரு வழியாக பூரி+ உருளைகிழங்கு குருமானு முடிவாச்! சரி, மொத மொத எடிட்டர் சாரை பார்க்க போறோம்; வெறுங்கையாகவா போறதுனு என் சிற்றறிவுக்கு ஏற்ப ஒரு சின்ன கிஃப்ட் வாங்கினேன். என்ன அதுவென பின்னர் சொல்றேன்!
*2012,செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 3மணிக்கு எழுந்து டிபன் கட்டிகிட்டு போய் சேலம் ஜங்சன்ல யஷ்வந்த்பூர் ட்ரெயின் ஏறி ஆச்சி. ட்ரெயின் விசிலை விட சத்தமாக என் மனசுக்குள் விசில் அடித்தது. டெக்ஸை நமக்கு தந்தவரை பார்க்க போறோம்னா சும்மாவா!!!
*ஓசூரில் அரை மணி நேரம் கட்டய
போட்டு விட்டது ட்ரெயின்! எத்தனை ஆரவாரம் அங்கே! கூடை வியாபாரிகளிடம் இட்லி வாங்கி சாப்பிடும் மக்கள் ஒரு பக்கம், வேகவைத்த குச்சி கிழங்கோடு ஒரு கூட்டம், அவித்த கடலை விற்கும் பாட்டிம்மாவிடம் வாங்கும் ஒரு 10பேர்...என கலவையான காலை! நாங்களும் பூரியை சாப்பிட்டுவிட்டு, சில ஸ்நாக்ஸ் வாங்கிட்டோம்.
*மேலே சொன்னவாறு எல்லா வகை பிரயாணத்தையும் முடித்து அந்த ஸ்டேடியம் சென்று சேர்ந்தோம். இங்கே அதுமாதிரி எந்த விழாவும் நடக்கலயே என குண்டை தூக்கிப் போட்டான் செக்யூரிடி! திகைத்து போய் பேஸ்து அடிச்சிடுச்சி எனக்கு...!!!
*செக்யூரிட்டியின் பதில் தூக்கிவாரிப்போட்டதை அடுத்த ஓரிரு நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு, ஸ்டேடியம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்ல விசாரித்தேன். விசயம் விளங்கிட்டது. பெங்களூருல கோரமங்களா என்ற பெயரில் 2 ஸ்டேடியங்கள் இருக்கும் போல. ஒன்று பெரியது அவுட்டோர்; மற்றது சிறிதான இன்டோர். காமிக்கான் நடப்பது இன்டோர்ல; நாம இருப்பது அவுட்டோர்ல என ஒருவழியாகப் புரிய போன உசுரு திரும்பிச்சு!
Delete*மொத ஆட்டோ ட்ரைவர் எங்கே காமிக்கான் நடக்குதுனு தெரியாமல் எங்களை பெரிய ஸ்டேடியம் அழைத்து சென்று விட்டார். மறுபடியும் வேறொரு ஆட்டோ. இம்முறை சரியான இடம். தூரத்திலயே "வெல்கம் டூ காமிக்கான்2012" போர்டுகள் வரவேற்றது. மீண்டும் என் மனசில ஒலித்த விசில் ஓசூர் வரை கேட்டு இருக்கும்.
*டிக்கெட் வாங்கிட்டு லைன்ல நிக்கவும், கையில் டேக் அடித்து விட்ட மினி கோட் யுவதியை பார்த்ததும் இது வேற லெவல் விழா என புரிந்து போனது. 11மணிக்கு தான் உள்ளே அனுமதி தந்தாங்க! 20நிமிட காத்திருப்பு 20நொடியில் பறந்தது.
*பேட்மிட்டன் உள்ளறங்கில் தடுப்பை வைத்து விழா ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.
*எடிட்டர் சாரை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டே ஒவ்வொரு ஸ்டால் ஆக போனோம். முத்து காமிக்ஸ் என இருந்த நமது ஸ்டால் கண்ணில் பட்டது. பில்லிங் டேபிளில் இருந்த பெரியவரிடம் (அவர் தான் திரு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என பின்னர் தெரிந்து கொண்டேன்) எடிட்டர் சார் எங்கே என கேட்டேன். பக்கத்தில் இருந்த குழுவை கை காட்டினார்.
*வாங்க சார், வாங்க என எடிட்டர் சார் முன்னே வந்து கையை நீட்டினார். 22வருடங்களாக அவரது எழுத்துக்கள் வாயிலாக உள்வாங்கி இருந்த பிம்பத்தை நிஜமாக பார்த்தபோது நா உலற , உள்ளம் பதற சற்றே தடுமாறிப்போனேன். உள்ளத்தின் உதறலை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு கை கூப்பினேன். சட்டுனு கைகளை பிடித்து குழுக்கினார். அவரை பார்க்க என்றே வந்துள்ளதாக சொன்னபோது லேசாக ஆச்சர்யம் காட்டிதாக பட்டது. சேலம் டூ பெங்களூரு பக்கம்தான், வருவது எளிது என அவரே விளக்கி சொன்னார், அருகே இருந்த நம்மவர்களிடம்....
*"டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன் சார் நான்"---- என தட்டு தடுமாறி சொல்லியே விட்டேன்.
"கம்பேக் ஆகி இன்னும் டெக்ஸ் வர்ல; இப்ப வருவது சந்தோசம் சார்"-- என அம்மாத இதழ் வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல இருந்த டெக்ஸ் வருகிறது விளம்பரம் பற்றி சொன்னேன்.
Delete"நிறைய டெக்ஸ் இனிமே வருது சார் "--என பதில் தெரிவித்தார்.
*அருகில் சில ரசிகர்கள் இருந்திருப்பார்கள் போல. சாரோடு போட்டோ எடுத்துக்கொண்டேன். என் பையன் பொடியனை, எடிட்டர் சார் அவரோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போஸ் தந்தது பெரு மகிழ்ச்சியை தந்தது.
*எடிட்டர் சாருக்கு என வாங்கி இருந்த கிஃப்ட்டை என் மனைவி ஞாபகப்படுத்தினாள். சில மாதங்களில் வர இருக்கும் முத்து நெவர் ஸ்பெசல் வெற்றிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள் தெரிவித்தேன்.
####என்னுடைய வருகை& சிறு சந்திப்பை பற்றி தளத்தில் எடிட்டர் சாரின் விவரிப்பு...., ..
*.////மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?////.....*
*நான் அதிகம் முறை படிச்சது மேற்கண்ட வரிகளை தான். பின்னர் வந்த *சூ.ஹீ.சூ.ஸ்பெசல்ல பிரிண்டிங்ல அந்த பதிவுல இருந்த இந்த வரிகள்& போட்டோக்களை அடுத்த ஓரிரு மாதங்கள் எங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்...🤩🤩🤩🤩!*
*சொற்ப நேரமே என்றாலும் நிறைவான சந்திப்பு. வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல சாரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு புறப்பட்டேன். மற்ற ஸ்டால்களை லேசாக நோட்டம் விட்டோம். ஒவ்வொரு ஹீரோவை போல வேடமணிந்த இளம் யுவதிகள் பட்டாம் பூச்சிகளை போல சுற்றித் திரிந்தனர். டோரோ, இன்னொரு பொம்மை உடன் என் மகன் போட்டோ எடுத்து கொண்டான். ஆனா....சரி வேணாம், சொல்லி என்ன ஆகப்போவுது.
*மீண்டும் டவுன் பஸ் ஏறி கெம்பேகெளடா பஸ்நிலையம் வந்ததோ, அங்கிருந்த எண்ணிலடங்கா பேருந்துகளோ, நகரின் பிரமாண்டங்களோ, வெளியே இருந்த ஓரு ஓட்டலுல்ல சாப்பிட்ட பிரியாணியோ, யஷ்வந்த்பூரின் விஸ்தாரங்களோ எதுவும் மனிதில் நிற்கல. *எடிட்டர் சாருடனான சொற்ப நேர சந்திப்பை மட்டுமே மனம் அசை போட்டது மறுபடி மறுபடி......!*
*சுவீட் பாக்ஸில் இருந்த இனிப்பை அங்கே குழுமி இருந்த நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தந்து மகிழ்ந்தார் எடிட்டர் சார். சாரின் எளிமையாக பழகும் விதம் கண்டு எல்லா நண்பர்களும் மலைத்து போனோம்.*
*அதற்கு பிறகு ஆசிரியர் உடன் நிறைய முறை சந்தித்தும் அவரோடு அருகருகே உட்கார்ந்து உணவு உண்டும் உள்ளேன்.... எத்தனை நினைவுகள் இருந்தாலும் இந்த முதல் சந்திப்பு என்றென்றும் இனிமையானது🤩🤩🤩🤩🤩
-----STV.
அருமையான மலரும் நினைவுகள்! வருடங்கள் வேகமாக ஓடுகிறது!
Deleteஆம் நண்பரே பரணி,....கடகடனு 12ஆண்டுகள் ஒடிச்போச்சு....
Deleteஅன்றைய தின புகைப்படங்கள் காண இந்த லிங் ப்ரெண்ட்ஸ்...
https://www.facebook.com/share/p/Qk8xj47Rs5tKPjCJ/?mibextid=oFDknk
குறிப்பு:- அப்போதுலாம் துணி எடுத்து டைலர்கிட்ட தைக்கும் பாணி....லூஸாக தாத்தா போல சட்டை போடுவது உண்டு.. பின்னாளில் அறிமுகம் ஆன நம்ம அன்பு தம்பி யுவாவின் கடையில் ஃபிட்டாக ட்ரெஸ் தந்து நம்மையும் யூத்தாக காட்டுறாருங்கோ....!!!
*சினம் கொண்ட சின்ன கழுகு*
ReplyDeleteஅடேங்கப்பா.... இந்த இதழை விட அதிதிதிக பக்கங்கள் கொண்ட இதழ்களில் கூட இத்தனை கதாபாத்திரங்கள் வந்ததாக எனக்கு நினைவில்லை...இத்தனை மாந்தர்கள் கதையில் இருந்தாலும் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல் வழக்கம் போல் விறுவிறுப்புடன் வாசிக்க வைப்பது டெக்ஸ் இதழாக தான் இருக்கும்...இரண்டு மணி நேரம் .....முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை வாசித்து கீழே வைக்கும் வரை கண்கள் அங்கும் இங்கும் எங்கும் இதழை தவிர வேறு இடங்களுக்கு நகரவில்லை...பாவப்பட்ட செவ்விந்தய சிறு குழு தங்களை தாக்கியவர்கள் ரேஞ்சர்கள் தாம் என சந்தேகப்படுவதாக சொன்னவுடனே கதை பட்டாஸாய் பரபரக்க வைக்க போகிறது என நினைத்தேன் ...கொஞ்சம் கூட ஏமாற்ற வில்லை...அட்டைப்படம் வேறு கதைகள் ஒன்றே என கதை சொல்லும் நண்பர்களும் இந்த கதையை வாசித்தால் தனது நிலையை மாற்றிக் கொள்ளலாம்...
இரண்டு மணி நேரம் என்னை அந்த வன்மேற்கு உலகில் உலவ வைத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்...
இம்முறை ரூபின் அம்மணி கதை மிகச் சிறப்பு.
ReplyDeleteமுதல் மதிப்பெண் (10/10).
தலை (9.5/10) எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம்.
ஸ்பூன் அன்ட் வொயிட் (8/10) .
ஸாகோர் (9.5/10) சிறப்பு.
காமிக்ஸ் வாசகரும் எனது தாய் மாமா பையனும் ஆகிய கிரிதர சுதர்சன் சென்னை இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteR.I.P 😢
Deleteஆழந்த இரங்கல்கள் நண்பரே...!
Deleteதுயரத்தில் ஆழ்த்தும் செய்தி. Condolences to the family.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.
Deleteவருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே😞
Deleteஆழ்ந்த இரங்கல்கள்
Deleteஆழ்ந்த இரங்கல். கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.
Delete@Trichy Vijay ji..
Deleteஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..🙏😭😥😥
ஆழ்ந்த இரங்கல்கள் சார்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் .திருச்சி விஜய் சார்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDelete**** சிறையில் ஒரு அழகி *****
ReplyDeleteஸ்பூன் யாரோ.. வொய்ட் யாரோ..
வந்தது எதற்காண்டி?
சுடுகின்றார்.. கொல்லுகின்றார்.. அந்த
நிருபர் லேடிக்காண்டி!
என்னாச்சு எனக்கே புரியவில்லை
என் சிரிப்பும் அதிர்ச்சியும் குறையவில்லை
அட என்ன இது.. என்ன இது
இப்படிக் குழம்பிநின்றேன்..
இது பிடிச்சிருக்கா பிடிக்கலையா
யாரிடம் கேட்டுச்சொல்வேன்
😂😂😂😂😂
DeleteBack to your original id @Selvam Abirami sir, welcome back again.
Deleteதேங்க்ஸ் பரணி🙏
Delete//வெல்கம் பேக்// @ ரம்மி xiii
ReplyDeleteரம்மி! நலமா?
வெல்கம் பேக் செனா அனா எ பொருளர் ஜி💐💐💐💐💐
ReplyDeleteதேங்க்ஸ் STV.🙏 நலம் தானே?
Deleteஅனைவரும் நல்ல நலம் ஜி. தாங்கள் லயன் கம்யூனிட்டிக்கு வருகை புரிந்ததை அடுத்து இங்கும் பழைய பன்னீர் செல்வமாக திரும்பியது ரொம்ப மகிழ்ச்சி...!!
Deleteநலமே டாக்டர். .
Deleteஒரிஜினல் ஐ.டி.யில் வருகை தந்திருக்கும் மதிப்பிற்குரிய செனா. அனா.ஜியை இருகரம் குவித்து வரவேற்கிறோம் .
ReplyDeleteநன்றிகள் சார்🙏
DeleteCKCK
ReplyDeleteஅமீபாவின் சூடோ போடியாக்கள் மாதிரி டெக்ஸ், டைகர் ஜாக் குழு ஒருபுறம், பின்னிகனின் இரட்டைக் குழுக்கள் ஒருபுறம், கார்சன், கென் குழுவினர் ஒருபுறம், யாக்கீஸ் ஒருபுறம், ரோப்லீடோவின் குழுவினர் ஒருபுறம் என பலபுறமும் நகர்ந்து கதை படு சுவாரசியமாக செல்கிறது.
9.5/10
நச்! 👌
Deleteஇளவரசே. //பாட்டாவே பாடிட்டீங்களா// இந்த பதிவிலயேஇது ரெண்டாவதுதபா .ரூபினுக்காக முததபா சூர்யஜீவா
ReplyDeleteபட்டும்-படாமலும் பாட்டாவே பாடிடறது உடம்புக்கு நல்லதுங்க ராஜசேகர் ஜி..!
Deleteநிறைய எழுதினா counterproductive ஆகிடுமோன்னு பயமா
இருக்கு!😝😝😝😝
ReplyDeleteமங்கள(ல)மாய் மரணம்...
மனித உடல் உறுப்பு திருட்டுகளை நாம நிறைய திரைப்படங்களில் பார்த்து உள்ளோம்.... இருதயத்தை கழட்டி சுவற்றில் மாட்டி வைத்து விட்டு கேட்பார் யாரும் இல்லாதவர்களாகப் பார்த்து வன்கொலை செய்து உடல் பாகங்களை திருடி விற்பதை பார்த்து அடிவயிறு கலங்கியுள்ளோம்...
மங்கலமாய் மரணம் கதையிலும் அதே உடல் உறுப்பு திருட்டை வித்தியாசமான கோணத்தில் சொல்லி உள்ளார்கள்....
கடைசிவரை இதான் நோக்கம் என துளியும் கணிக்க இயலாமல் கதையை நகர்த்தியவிதம் ஆச்சர்யபடவைக்கிறது...
ராஜேஷ்குமார் சாரின் க்ரைம் நாவல்களில் இரு ட்ராக்குகள் ஓடும்.... இரண்டும் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவாறு நகரும்... சட்டுனு க்ளைமாக்ஸில் இரு ட்ராக்குகளும் இணைய கதையின் போக்கு வாவ் சொல்ல வைக்கும்...முத்து காமிக்ஸில் வெளியாகியுள்ள மங்கலமாய் மரணம்- ரூபின் சாகஸமும் அதே பாணியில் வாவ் சொல்ல வைக்கிறது...
அமெரிக்காவில் வாழும் கனவோடு ஏறத்தாழ கேட்பாறற்று உள்ள யுவதிகளை அவர்களின் சிறப்பியல்பான நீச்சலை அவர்களுக்கு எதிராகவே திருப்பி கொல்லும் கொடூர கொலைகார கூட்டம் ஒரு பக்கம்....
இன்னதுதான் நோக்கம் என அறியாமலேயே தேடும் அழகி ரூபின் இவர்கள் வழியில் குறிக்கிட திசைமாறுகிறது ஆட்டம்...
அற்புதமான க்ளைமாக்ஸ்...
துடிப்பான வசனங்கள் ரூபினின் இளமையோடு போட்டி போடுகிறது...
வசனங்களை அமைத்த ஆசிரியர் விஜயன் சாரும் கதாசிருக்கு இணையாக ஸ்கோர் பண்ணும் இடம் இது....
தற்கொலை எண்ணத்தில் உள்ள ஒருவனை உசுரை காப்பாத்திக்க ஓட விடுவதும், வழிப்பறி ஆசாமிகளை துப்பாக்கி முனையில் தெறிக்க வைப்பதும் ரகளையான இடங்கள்..இறுதியாக தென்னக மாப்பிள்ளையை தெற்குக்கே ஓடவிடுவதும் என கதை முழுதும் ருபீன் தனியாளாக வெளுத்து கட்டுகிறார்.
கதையின் ஊடாக நையாண்டியாக சொல்லப்படும் தெற்கின் பெண்ணடிமைத்தனம், வில்லியத்தை ருபினுக்கு மணமுடிக்க அவளது பெற்றோர் செய்யும் கோக்குமாக்கு தனங்கள் என கதையோடு ரசிக்க நிறைய அம்சங்கள் உள்ளன.
கதை 9/10
ஓவியங்கள் 9/10
வசனங்கள் 10/10
முந்தைய இரு பாகங்களை விட தெளிவான கதையம்சத்தோடு வெளியாகயுள்ள இது ருபினுக்கு சந்தாவில் ஒரு நிரந்தர இடத்தை உறுதியாக்குகிறது...
மாடஸ்தி இடத்தை எடுத்துக்
கொள்ள ஜூலியா, லேடி S, அமாயா என நிறைய பேர் முயன்றதில் வெகுவாக முன்னேறி உள்ளார் ரூபின்....மாடஸ்தி மன்றங்களை கலைச்சிட்டு ரூபின் பாசறைகளாக புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது..
ரூபினின் முந்தைய இரு சாகஸங்களை காண முத்து கோடைமலர் 2022யும், முத்து சம்மர் ஸ்பெசல் 2023யும் தேடி எடுத்து 3யும் ஒரே சமயத்தில் வாசிக்கும்போது வெகுவாக கவர்கிறாள் ரூபின்...
மாடஸ்தி ப்ளைசிக்கு இணையாக நீண்டகாலம் தொடரும் இந்த சிகாகோ கேரட் கேச அழகியின் சாகஸம் முத்துவில் என்பது தெளிவு.....!!!
கதை விமர்சனம் எல்லாம் சூப்பரா தான் எழுதியிருக்க மாமு ஆனா கதையின் ட்விஸ்ட் எல்லாம் ஆனந்த விகடன் சினிமா விமர்சனம் மாதிரி எல்லாத்தையும் சொல்லிட்டியே !
Deleteசூப்பர். Welcome back விஜயராகவன் ☺️
Deleteசிறப்பான விமர்சனம் STV. வாழ்த்துக்கள்.
Deleteமுதல் உடல் உறுப்பு திருட்டை செய்தது யாருன்னு கேட்டா சிவபெருமான் தான்னுதான் சொல்லணும். பிள்ளையாருக்கு யானைத் தலை வைத்தது அவர்தானே. முதல் இல்லீகல் ட்ரான்ஸ்பிளான்ட் சர்ஜன். 😄யானைத்தலை என்பதால் ப்ளூ கிராஸ், பீட்டா(peta ) எல்லாமே உள்ளே வரும். 😂😂
தேங்யூ செனா அனா, மாப்பு ரட்ஜா, பரணி...
Deleteமாப்பு@ கதை சுருக்கத்தை தொடவேயில்லை நானு... புக் வந்த அடுத்த நாளே கதை சுருக்கத்தை அல்ர்ட் இல்லாமலே பலரும் தாக்கிடுதாங்க....🤣
பாவம் ஆணாதிக்க வில்லியம்..ஏமாந்து போனது ரொம்ப நல்லா இருக்க அதை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்..மற்ற இடங்கள் ஓவியங்கள் ஆக பார்க்கும் போதே லயிக்க இயலும்...
செனா அனா@ செம..செம...இது பல புராணங்களில் வாசித்து இருந்தாலும் எனக்கு தோணல...
ரூபின் பாசறை o.k.நம்ம மகளிர் அணி தலைவி கடல் தலைமையில் ஆரம்பிச்சிடலாம் .ஆனாக்கா மாடஸ்டி பேரவையை ஏன் கலைக்கனும் .வருசத்துக்கு ஒரு ஸ்லாட்டுதானே .நம்ப முதல் நாயகி சாரே . கொஞ்சம் பார்த்து மனசு வையுங்க. ராஜ சேகரன் கரூர்.
ReplyDeleteஅட ஜி அது ருபீனின் டாமினேசனை குறிப்பிட சொல்லி உள்ளேன்...
Deleteமற்றபடி மாடஸ்தி மன்றம் இயங்கட்டும்...60s kidகளுக்காக..
நாங்கள் லேட்டஸ்ட் பிட் ரூபின் பாசறையில ஐக்கியமாகிடுதோம்
ரூபினை டின்னருக்கு அனுப்ப ரூபினின் அம்மா வின் முயற்சி ரசிக்க வைக்கிறது .ரூபினின் அம்மா அப்பாவின் அன்னியோன்யம் ஒரு குடும்ப திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது .
ReplyDeleteSuper. நீங்கள் ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகர் சார். எல்லா கதைகளையும் ரசித்து படிக்கிறீர்கள். ☺️
Deleteஅவிங்கவுங்க இணைவி, துணைவியை நினைவூட்டும் இடம்...பாவம் அந்த ஷெரீப்பு..அவருக்கே இந்த நிலை எனும்போது நாமெல்லாம் எவ்வளவோ பரால்ல..
DeleteThanks parani ji
ReplyDeleteஇப்போதான் அம்பேரிக்காவுல விடிஞ்சிருக்கும்....
ReplyDeleteஹேப்பீ பர்த்டே மச்சான்..💐💐💐
&
ஹேப்பீ பர்த்டே ரம்மி..💐💐💐
ஹாப்பி பர்த்டே ஷெரிஃப் ❤️
Delete&
ஹாப்பி பர்த்டே ரம்மி ❤️
ஹேப்பீ பர்த்டே டே டே டே மாப்பு..💐💐💐
Delete&
ஹேப்பீ பர்த்டே பாயாசம்..💐💐💐
நன்னிங்கோ
DeleteHappy birthday officer
ReplyDelete60sஇல்லீங்கோ.stvrசார் நாமெல்லாம் 80s. ரூபின் குழந்தைங்க நம்பள்க்கு . லேடிsக்கு பாசறை அமைப்போம்
ReplyDelete