Powered By Blogger

Saturday, August 12, 2023

பெருச்சாளியும், ஒரு புல்லெட்டும் !

 நண்பர்களே,

வணக்கம். வண்டி வண்டியாய் வந்து சேர்ந்திருக்கும் இதழ்களை வாசிக்கவும், அலசவும் இந்தக் குட்டிப்  பதிவினை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், கொஞ்சமாய் மூச்சு விட்டுக்கொண்டு, ரிப் கிர்பி ஸ்பெஷலையும், செப்டெம்பரின் இதழ்களையும் காலத்தோடு ரெடி பண்ணும் வேலையைப் பார்த்திடுவேன் !! So இது உங்களுக்கான வேளையே guys !! பின்னணியினில் ஓசையின்றி 2024-ன் அட்டவணை சார்ந்த பதிவுகள் ஓடி வருவதால், இங்கே நான் சில last minute கேள்விகளை மாத்திரமே முன்வைப்பதாக இருக்கிறேன் !  அதற்கு முன்பாய் ஒரு பொதுவான observation !

"கார்சனின் கடந்த காலம்" பின்னிப் பெடல் எடுத்து வருகிறது ; BIG BOYS  ஸ்பெஷல் மூட்டை மூட்டையாய் விற்பனை கண்டு வருகிறது  ; "பேரிக்காய்ப் போராட்டத்துக்கு" பலத்த மவுசு உள்ளது ; "மந்திர மண்டலம்" நடப்பாண்டின்  blockbuster !! மாயாவி சார் எப்போதும் போல ரகளை செய்து வருகிறார் & லக்கி லூக் கூட மறுபதிப்புத் தடங்களில் சிக்ஸர் அடித்து வருகிறார் ! இன்னொரு பக்கமோ "வேதாளருக்கு ஜே ; ரிப் கிர்பி வாழ்க ; வருங்கால அமெரிக்க ஜனாதிபதி சார்லி !!" என்றெல்லாம் classic குரல்கள் ஒலித்து வருவதையும் கேட்டு வருகிறோம் ! So மேலோட்டமாய்ப் பார்த்தால், சத்தமேயின்றி "பெருசுகள் படையானது" நம் அணிவகுப்பை டெம்போ வைத்துக் கடத்தி விட்டது போலவே தோன்றலாம் ! வழுக்குப்பாறைகளிலிருந்தும், இன்ன பிற கி.நா.காதல் சேத்திரங்களிலிருந்தும் சிவந்த பார்வைகள் நம்மைத் துளைத்தெடுக்க முகாந்திரங்கள் மெய்யாலுமே உண்டு தானோ ? என்றும் படலாம் ! ஆனால், அட்டவணைப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் நொடியில் தான் தெரிகிறது - nothing can be further from the truth என்பது ! எப்படி என்கிறீர்களா ?

நம் மத்தியில் மறுபதிப்புகள் ரவுசு செய்து வரும் இந்த வேளையினில் - ரெகுலர் தடத்தில் புதியவர்களின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முழுமையடைந்திருப்பதை பாருங்களேன் : 

*டேங்கோ புதியவரே !

*ஆல்பாவும் புதியவரே !

*ஏஜென்ட் சிஸ்கோ newcomer தான் !

*ரூபின் புது வரவே !

*தாத்தாஸ் புதியவர்களே !

*IR$ ரெம்போ புதுசு !

*(காத்திருக்கும்) நெவாடா செம புதுசு !

*ஜம்பிங் பேரவை ஸாகோரும் புதியவரே !

*(காத்துள்ள) மிஸ்டர் நோ கூடப் புதியவரே !!

*டெட்வுட் டிக் புச்சு !

*SODA சமீப வரவே !

So மெது மெதுவாய் ஒரு சமகால வாசிப்பின் பக்கமாகவும், நாம் பயணித்து வருகிறோம் - ரெகுலர் தடங்களிலாவது என்பது pretty much obvious ! 

இன்றைக்கு நமது ரெகுலர் தட நாயகர்களில் டெக்ஸ் வில்லர் செம சீனியர் ; ditto with  லக்கி லுக் & சிக் பில் & தட்டை மூக்கார் !! லார்கோ  & தோர்கல் பத்தாண்டுப் பிரமுகர்கள் ; ப்ளூகோட் பட்டாளமும் அவ்விதமே ! And ரெம்போ ...ரெம்போ ரெம்போ மூத்தவர் இளவரசி மாடஸ்டி மட்டுமே ! 

Which means - ரெகுலர் அணிவகுப்பினில் அடுத்த சில ஆண்டுகளுக்காவது இடம் பிடித்திடப் போகும் நாயகர்கள் யாரும் 'திடு திடு'வென்று ஓட்டமாய் ஓடிப் போய் சாலையோரமாய் இருக்கக்கூடிய போன் பூத்தில் காசு போட்டு, காக்கா கலரிலான காலாவதியான இயந்திரத்தை டயல் பண்ணும் கொடுமைகளை இந்த   AI தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க அவசியமிராது ! காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு கிஞ்சித்தும் அசராத ஜாம்பவான்களான  டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும் தவிர்த்த பாக்கிப் பேர் அனைவருமே சுகருக்கு மாத்திரை தேடும் பார்ட்டிகளாகத் தென்படவே காணோம் ! இந்த மாற்றம் கொஞ்சம் சிந்தனைக்குப் பின்பானதும் தான் ; சில தொடர்கள் "மங்களம்" கண்டதன் பலனாய் நம் மீது திணிக்கப்பட்டதுமே தான் ! காரணம் எதுவாயினும் - இன்றைய நமது ரெகுலர் தடப் பயணமானது - "மாடுகள் மீது மோதாத 'வந்தே பாரத்' கோச்களில் ! 

அதே சமயம், ஒரு இணைத்தடத்தில் - க்ளாஸிக் நாயகர்கள் in full bloom too ! 

முத்து காமிக்சில் எனது கணக்குப்படி வெளியான மொத்த வேதாளர்  கதைகளே பதினாங்கோ ; பதினைந்தோ தான் ! ஆனால் 2022-ல் துவங்கிய SMASHING '70s முதலாய் அதற்குள் நாம் பார்த்துள்ள வேதாளர் கதைகள் அதை விடவும் ஜாஸ்தி ! இன்னொரு பக்கமோ 36 ஆண்டுகளுக்குப் பின்பாய் சுஸ்கி * விஸ்கி சக்கை போடு போடுகிறார்கள் ! ஸ்பைடரார் on demand ஆஜராகி வருகிறார் ; இரத்தப் படலம் பற்றிச் சொல்லவே வேண்டாம் - மறுபதிப்புக்கு மறுபதிப்புக்கு மறுபதிப்பு என்று வண்டி ஓடி வருகிறது ! 

So - "இந்த அணி ; அந்த அணி ; பயசு-புச்சு" - என்ற பஞ்சாயத்துக்களுக்கெல்லாம் புகுந்திடாமல் ஒரு கழுகுப் பார்வையில் இந்தக் கள நிலவரத்தை பார்க்கும் போது - இனம்புரியா ஒரு குஷி மேலோங்குகிறது ! இதுவரைக்குமான  இந்த 51 ஆண்டுகளில், இப்படியொரு phase-ன் மத்தியினில் நாம் பயணித்துள்ளோமா ? - தெரியலை ! பழசை நாம் ஆதரிப்பதில் புதுமை ஏதுமில்லை தான் ; ஆனால் புதுசாய் ஒட்டு மொத்தமாய் அரவணைக்கும் இந்த வேளை seems pretty new !! 

இது பற்றிய உங்களின் பார்வைகள் என்னவோ guys ? இது தான் இன்றைய கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !

கேள்வி # 2 : காத்துள்ளது லயனின் நாற்பதாவது ஆண்டெனும் போது 2024-ன் அட்டவணையில் நிறையவே கவனம் தந்திட எண்ணுகிறேன் ! So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All good with the current line-up ?

கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ? 

கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ  ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் ! 

கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது !  2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?

கேள்வி # 6 : லயனின் ஆண்டுமலருக்கென பெரூசா பட்ஜெட் போடலாமா ? என்ற மஹாசிந்தனை ஓடி வரும் ருணத்தில் சற்றே வியப்பூட்டும் தகவல் ஒன்று ! 

'தல' 75 வது ஆண்டிது என்பதை நாமறிவோம் ! இங்கே நாம் அதற்கென 700 பக்கங்களில் ; 4 விதக் கதைகளோடு THE SUPREMO SPECIAL ரெடியாவதும்  தெரிந்ததே !  எனக்கோ, போனெல்லி இதெற்கென என்ன திட்டமிட்டிருப்பரோ ? என்ற குறுகுறுப்பு ! கொஞ்ச மாதங்கள் முன்னமே வினவியிருந்தேன் ; தகவல் கிட்டியிருக்கவில்லை ! சில தினங்களுக்கு முன்னே குட்டியான அறிவிப்பாய் வந்தது - டெக்சின் இதழ் # 755 அக்டொபர் முதல் தேதிக்கு வரவுள்ளது - 132 பக்கங்களில் ஒரு வண்ணத்திலான ஒன்-ஷாட் சாகசமாக என்று ! 'தல' ஆண்டுமலர் # 75 இதழும் இதுவே தான் போலும் ! 

பூசாரியே சைக்கிளில் போகிறச்சே பெருச்சாளி புல்லெட்டில் போகுதோ ? என்ற எண்ணத்தினைத் தவிர்க்க இயலவில்லை ! So ரெம்போ ஊடு கட்டி அடிக்காமல், லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் சொல்லுங்களேன் - பார்க்கலாம் ? 

Bye guys....செப்டெம்பர் இதழ்களினில் பணியினைத் தொடர நடையைக் கட்டுகிறேன் !  Have a fun weekend ; see you around !

மக்களே....இந்த போட்டோவுக்கும், தலைப்புக்கும் சம்பந்தமே கிடையாதுங்கோ ! 

303 comments:

  1. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு செம ஆசிரியரே!!!

      Delete
  2. வணக்கம் நண்பர்களே..& டியர் எடி

    ReplyDelete
  3. Me வந்துட்டேனுங்க..😍😘😃

    ReplyDelete
  4. கேள்வி # 4 - இரட்டை வேட்டையர் ஜார்ஜ் & டிரேக் மறுபதிப்புக்கே வராதவர்கள்.
    அந்த அதிரடி ஹீரோக்களை மீண்டும் தரிசிக்க ஆவல். இரட்டை வேட்டையர்களை ஒரே குண்டு புக்கில் பாக்கெட் சைஸில் ரீபிரிண்டலாம்.எனது நீண்ட நாள் கோரிக்கை இது சார்.

    ReplyDelete
  5. வாசித்தேன். மகிழ்ச்சி.. இன்பங்கள் தொடரட்டும்.. 75 டெக்ஸ் களை கட்டட்டும்..
    1. சிறப்பான சித்திரக்கதை நாட்கள்.. 2. All good with the current line-up-ஆம். 3. தொடரட்டும் கலாட்டாக்கள்.. 4. மிஸ்டர் மர்மம். 5.மூவரும் வேண்டும் என்பேன்.. 6. லயன் ஆண்டு மலர் கொஞ்சம் விரிவான பல கதைகள் இணைந்ததாய் இருந்தால் நன்று.

    ReplyDelete
    Replies
    1. அடடா மிஸ்டர் மர்மத்த எப்படித்தான் மறந்தனோ...
      பொம்மைகளின் பேரரசும் வருவானே...நிச்சயமா வேண்டும்.

      Delete
  6. லயன் 40. ஆயிரம் பக்கங்கள் ஆயிரம் ரூபாய்

    ReplyDelete
  7. உள்ளேன் சார்....
    ஹாய் ப்ரெண்ட்ஸ்...

    ReplyDelete
  8. //கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !//

    சந்தேகத்திற்கு இடமின்றி ...
    இளவரசி டைஜஸ்ட் தான் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்..

    லயன் பிரசவித்த முதல் குழந்தை இவள் என்பதை மறக்கலாகாது..
    எல்லா க்ளாசிக் நாயகர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்..

    நம்ம இளவரசிக்கும் ஒரு டைஜஸ்ட் இதழைக் கொடுத்து 40 ஆண்டு்கால கொண்டாட்டத்தை பூரணமாக்குங்கள்!!

    நண்பர்களே..
    ஆதரவு தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. முழு ஆதரவு
      உண்டு
      இளவரசிக்கு
      உங்கள் சார்பில்
      நானும்...

      Delete
    2. ஆஹா.. என்ன ஒரு அழகான யோசனை.. மாடஸ்ட்டி ன்.. பிரசுரம் ஆகாத ஒரு 10 கதைகள் ஸ்பெஷல் ஆக சூப்பர்.. ❤️🙏👍

      Delete
  9. Comics விருந்து தொடரட்டும் editor sir. 👍

    ReplyDelete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !

    இரட்டை வேட்டையர்களின்
    திக்குத் தெரியாத தீவு

    ReplyDelete
    Replies
    1. திக்குத் தெரியாத தீவில், பெரிய சித்திரங்களுடன் maxi சைசில்

      Delete
  12. @Editor Sir..🙏😘

    கேள்வி 6 க்கான பதில்:

    தல Tex 75 க்கு மரியாதை செய்ய
    132 பக்க பொனெல்லி கலர் + ஏற்கனவே முடிவு செய்த 700 பக்க 6 அத்தியாயங்கள் என ஆக மொத்தம் 832 பக்க மெகா குண்டுபுக் கொடுத்துடுங்க சார்..😍😘😃😀❤💛

    ReplyDelete
  13. கேள்வி # 3 :
    சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?


    வேண்டும்..வேண்டும்.. சுஸ்கி விஸ்கி வேண்டும்..😍😘💐💙💚❤

    ReplyDelete
  14. கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !


    விண்வெளி பிசாசு..😍😘😃💛💙👍👌

    ReplyDelete
    Replies
    1. இதுவும் செம்ம எனது நீண்ட நாள் கோரிக்கை இது.

      Delete
  15. கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !

    >> I like this.

    கேள்வி # 2 : காத்துள்ளது லயனின் நாற்பதாவது ஆண்டெனும் போது 2024-ன் அட்டவணையில் நிறையவே கவனம் தந்திட எண்ணுகிறேன் ! So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All good with the current line-up ?

    >> All good with the current line-up ?

    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?

    Double YES

    கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது ! 2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?

    >> All three needed! If you want to drop someone then my choice is ரிப்போர்ட்டர் ஜானி

    கேள்வி # 6 : லயனின் ஆண்டுமலருக்கென பெரூசா பட்ஜெட் போடலாமா ? என்ற மஹாசிந்தனை ஓடி வரும் ருணத்தில் சற்றே வியப்பூட்டும் தகவல் ஒன்று !

    >> Do as you wish sir.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி 4க்கு பதில் சொல்லாம விட்டுட்டியளே..😍😃

      Delete
    2. கேள்வி 4.
      மக்களின் ஒருமித்த தீர்ப்பே...

      Delete
  16. கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !


    😍😘தற்போதைய நிலைமையே double OK தான் சார்..💛❤💜💚💙

    ReplyDelete
  17. ட்ரெண்ட் பனி வனப் பிரியாவிடை...!

    வெண்பனி சூழ்ந்த கனடாவின் குளிரில், விறைக்க வைக்கும் குளிரில், எந்தவொரு அலட்டலும் இல்லாமல், சலசலக்காமல் ஒடும் நதி போல, இந்த முறையும் தனது இறுதிக் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ட்ரெண்ட்.

    மிஸஸ் டெய்லர், ரோட்னீ, சிறுவன் ஜெரிமி, கனவில் வரும் குட்டி ட்ரெண்ட் என சில பல பாத்திரங்கள் கதையை வலிமையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.

    கதையின் தொடக்கத்தில் ட்ரெண்டை விட்டு விட்டு ஐரோப்பாவிற்கு சென்று விடுகிறார் ஆக்னஸ். தனிமையில் இருக்கும் டிரண்டுக்கு வரும் காவல் பணியே கதை.

    மதுவுக்கு அடிமையான கணவனை விட்டு விலகி இருக்கும் நோக்கில், தந்தையின் ஊர் நோக்கி செல்லும் மிஸஸ் டெய்லருக்கும், அவருடைய புதல்வன் ஜெரிமிக்கும் காவலாக செல்கிறார் ட்ரெண்ட்.

    பாதி தூரம் ரயில் பயணம், மீதி தூரம் கப்பல், இறுதியாக கோச்சு வண்டி என கதை ஒவ்வொரு ஃபிரேமிலும் பயணிக்கிறது.

    ஆங்காங்கே குட்டி ட்ரெண்ட்டும், ரோட்னீயும் வந்து செல்கிறார்கள்.

    ரோட்னீக்கு தனது மனைவியும், பையனும் திரும்ப தேவை. அதற்காக அவன் செய்யும் செயல்கள், அவனைப் பற்றி அம்மா, மகனுக்கு உள்ள எண்ணங்கள் என உணர்வுப்பூர்வமாக ஓட்டமெடுத்து செல்லும் இந்த கதை டுமீல் என்ற துப்பாக்கிச் சத்தத்துடன் கதை முடிகிறது...

    ஆக்னசும் வந்து சேருகிறார்...

    வேகமான கதையல்ல, விசித்திரமான சம்பவங்களும் இல்லை. ஆனால் இந்த கதைத்தொடர் முடிகிறது என்று சொல்லும் போது, ட்ரெண்ட் அந்த மவுனத்தை நமக்கும் டிரான்ஸ்ஃபர் செய்து விடுகிறார். ஏதோ ஒரு நண்பரை பிரிந்தது போல உணர்கிறேன்.

    முடிந்தால் போய் வாருங்கள் ட்ரெண்ட் 🙏🏼🙏🏼🤝🏽

    ReplyDelete
    Replies
    1. சிறுவன் ஜெரிமியுடனான ட்ரெண்ட்-ன் நட்பானது, கடைசியில் முறிந்து போவது வேதனை தர கூடிய ஒன்றே. ..

      Delete
    2. " ட்ரெண்ட் " ன் எட்டு கதைகளையும் ஒரு சேர, ஒரு நீள் வாசிப்புக்கு தகுதி ஆனதே. மீதம் உள்ள அந்த ஏழு கதையுடன் இணைந்து படிக்க வேண்டும். இரு நாள் ஓய்வு கிடைக்கும் போது அது புலரும்.

      Delete
    3. இதைப்போல "காமென்சே "
      முடிவு காண படாமல் அந்தரத்தில் நிற்கிறது. விடுபட்ட கதையும் வந்து விட்டால் சந்தோசமே.
      இதுவும் ஒரே மூச்சில் படிக்க சிறந்த தொகுப்பு தான்.
      நடக்குமா...

      Delete
  18. லயன் 40வது ஆண்டு மலர் ₹1200/- ல நெவர் பிஃபோர் ஸ்பெசல் மாதிரி 10 கதைகளாவது வேணும்.

    ReplyDelete
  19. கேள்விகளுக்கான பதில்கள்....

    1.மாடர்ன் பொற்காலத்திற்கான துவக்கத்தில் இருப்பதாக உணர்கிறேன் சார்...நிறைய இதழ்கள் நாங்க கேட்பது கிடைக்கிறது... கேட்பது கிடைச்சாவே அங்கே கிராஃப் நல்ல நிலையை நோக்கி போகுது னு அர்த்தம்.

    ரூ2 வா புக்கில 43ஆயிரம் பிரதிகளும்,
    இப்போதைய டாப் ஸ்டார்களின் உச்ச விற்பனையும் (மாடர்ன் விலைகளுக்கு ஏற்ப)எங்கே மேட்ச் ஆகுதுனு தங்களுக்கே தெரியும்.. இந்த கிராஃப் உயர்வதாக தெரிந்தால் நிச்சயமாக பொற்காலமே😍

    ReplyDelete
  20. கேள்வி 6:

    லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் சொல்லுங்களேன் - பார்க்கலாம் ?

    Rs.1200-1500 விலையில "தல Tex 75 க்கு மரியாதை செய்ய"
    132 பக்க பொனெல்லி கலர் + ஏற்கனவே முடிவு செய்த 700 பக்க 6 அத்தியாயங்கள் என ஆக மொத்தம் 832 பக்க மெகா குண்டுபுக் கொடுத்துடுங்க சார்..😍😘😃😀❤💛

    ReplyDelete
  21. பதில் 1: நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் ரசனைக்கு ஏற்ற கதைகள் கிடைப்பது சந்தோஷமளிக்கிறது. இரண்டையும் பேலன்ஸ் செய்து கொள்ளும் திறன் நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    பதில் 2: இப்போதைக்கு அட்டவணையில் உள்ள நாயகர்கள் அனைவருமே தங்கள் இடத்திற்கு உரியவர்களே! யாரையும் நீக்க வேண்டியதில்லை.

    ReplyDelete
  22. 2.கரண்ட் பிளேயிங் XI சரியாத்தானே இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆமா. பக்காவா செட் ஆகி விட்டது. No Tampering with the line up please.

      Delete
  23. Editor Sir..😍😃😘😀

    அப்படியே ஸாகோர் முதல் ஆண்டு விழாவிற்கு ஒரு "ஸாகோர் குண்டுபுக்" கொடுக்க மறந்துறாதிங்க..😍😘💐👍✌👌✊

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் தல V comics தீபாவளி மலர் நம்ம ஸாகோர் தான். Don't worry.

      Delete
    2. Super..Super..ji.. 😍😃😘😀அப்போ "ஸாகோர் குண்டு புக்"😍
      "V காமிக்ஸ்" ல உறுதி..👌👌👌💛❤

      Delete
    3. வரும் வருடம் "V" காமிக்ஸ், ஒன்றாம் ஆண்டு நிறைவு மலர் கூட இருக்கிறது...

      Delete
  24. 3.சுஸ்கி விஸ்கி இதேபோல தொடரலாம் சார்.

    4.சத்தியமாக திக்கு தெரியாத தீவு-இரட்டை வேட்டையர்...

    ReplyDelete
  25. 1. நன்றாகவே இருக்கிறது. இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் நிறைய காமிக்சும் கறி சோறுமாக பொழுது கழிஞ்சா நல்லாருக்கும்.
    2. கரன்ட் லைன் அப் நன்றாகவே உள்ளது.
    3. சுஸ்கி விஸகி ஒரிஜினல்படைப்பாளிகளின் ஆரம்ப கால கதைகள்
    4. எல்லையில் ஒரு யுத்தம்
    5. ஜானி
    6. லயன் ஆண்டு மலர் பட்ஜெட் 1200 ரூபாய்.

    ReplyDelete
    Replies
    1. ஜானி உனக்கும் போர் அடிச்சிட்டாரா?😉

      டெக்ஸ் மறுபதிப்பு நிறைய வருவதால் வேறு ஒன்று செலக்ட் பண்ணலாமே மாப்பு...

      Delete
    2. 1. சந்தா எண்ணிக்கையை உறுதிப்படுத்த டெக்ஸ் அவசியம். மத்தவங்க எல்லாம் புத்தக விழா சிறப்பிதழ்களாக வந்து சிறப்பிக்கட்டும்
      2. ஜானி நிறைய படிச்சிட்டோம். அதனால ரூபினும் சோடாவும் வரட்டும். இப்ப கழட்டி விட்டா அவங்க மறுக்கா வருவாங்களான்னு தெர்ல

      Delete
  26. பதில் 3: பெரிசுங்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும்போது தொடரலாங்க சார்...

    பதில் 4: ஏற்கனவே டெக்ஸ் கிளாசிக் தடத்தில் டெக்சின் மறுபதிப்புகள் வந்து கொண்டுள்ளதால் டெக்ஸ் தவிர்த்த ஏதேனும் ஒரு ஹிட்டான கதையை மறுபதிப்பாக (கண்டிப்பாக வண்ணத்தில்) விடலாங்க சார்...

    என்னுடைய சாய்ஸ்: ஜெஸ்லாங் கதைகள்

    ReplyDelete
  27. 5.ரூபின் உறுதியாக வேணும்...

    சோ, ஜானிக்கே ஓராண்டு ரெஸ்ட் தரலாம்னு.......(அய்யா ஜானி பார்டிகள் பேசி தீர்த்துக்கலாம்யா)

    ReplyDelete
  28. லயன்-40 க்கு இரண்டு 330 பக்க கலர் டெக்ஸ் ரூ.800 விலையில் ஹார்டு பெளவுண்டு + 3D ஹாலோஜென் அட்டைப்படத்துடன் வெளிவர ஏற்பாடு செய்யுங்கள் சார் ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. Wow..😍💪👍Semma..semma..😍
      3D அட்டைபடம்..❤💛

      Delete
    2. இது realistic ஆன தேர்வு. இரண்டு ட்ரிபிள் ஆல்பம். நமது லயன் flag ship நாயகருடன். எனக்கு 3D அட்டை எல்லாம் வேண்டாம். ஹார்ட் பவுண்ட் போதும்.

      Delete
    3. 1200 க்கு குறைந்த எந்த ஸ்பெசலையும் ஏத்துக்க முடியாது.

      Delete
  29. கேள்வி # 1 : பழசும்,புதுசுமான கலவையான இந்த கூட்டணி சிறப்பாகவே உள்ளது,இதில் பல சாதகங்கள் எல்லோருக்கும் உள்ளன...
    கேள்வி # 2 : IRS,மைக் ஹேமர் கதைகள் பெரிதாய் ஈர்க்கவில்லை...
    மற்றபடி எல்லாம் ஓகேதான்...
    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : தொடரலாம்...
    கேள்வி # 4 : பாட்டில் பூதம்...
    கேள்வி # 5 : ரூபின்...
    கேள்வி # 6 : 40 ஆண்டுமலர் 1,000/- பட்ஜெட் கூட இல்லைனா எப்படி சார் ?!
    போடுங்க சார் பூசாரி கோவிச்சிக்க மாட்டாரு...

    ReplyDelete
  30. 6.முத்து 50மாதிரி பட்ஜெட்டில் 20%லாம் வேணாம் சார்....சந்தாவுக்கு தோராயமாக 6ஆயிரம் பட்ஜட்னா அதிகபட்சம் 15% தோராயமாக.... 600 முதல் 900போதும்....!!!

    ReplyDelete
  31. பதில் 5: டஃப் கொஸ்டின்!!! வேறு வழியே இலைன்னா மட்டும் ஜானி!

    பதில் 6: லயன் 40- இதையெல்லாம் கொண்டாடமல் வேற எதைங்க சார்... விலை பற்றிய நெருடல் இல்லாமல் நல்ல குண்டு புக்கில் கொண்டாடலாங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சோடாவையும், ரூபினையும் கழட்டிவிடும் எண்ணமே வர்லதானுங்களே SK...!

      Delete
    2. சான்ஸே இல்லீங்க stv.

      Delete
    3. சத்தியமாக வாய்ப்பே இல்லீங்க. அப்படி நடந்தால் எனக்கு இந்த நாட்டை விட்டு போறதை தவிர வேற வழி இல்லீங்க...

      Delete
    4. ஆமாம் குண்டு புக் வேண்டும்

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. 1. I would like one or two extra graphic novels

    2. Current line up is perfect

    3. As you wish sir as long as the story is humorous

    4. Kazhugu malai kottai in colour

    5. Reporter

    6. 1100 inc courier :-)

    ReplyDelete
  34. கேள்வி # 1. 👍
    கேள்வி # 2. 👍
    கேள்வி # 3. Yes
    கேள்வி # 4. விண்வெளி பிசாசு
    கேள்வி # 5. Soda
    கேள்வி # 6. ( இது நியாயமா சார் ) 40வது ஆண்டு மலர் முத்து 50 போல் வந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  35. இரத்த முத்திரை
    விண்வெளி பிசாசு
    தவளை எதிரி
    அதிரடி கணவாய்
    உலகப்போரில் ஆர்ச்சி
    சுவிட்சர்லாந்தில் மாயாவி
    கண்ணீர் தீவில் மாயாவி

    ReplyDelete
    Replies
    1. மீண்டு ( மீண்டும்) வந்த மாயன் படிச்சாச்சா..

      Delete
  36. கேள்வி 1 : தரமான கதைதேர்வு என்பேன். ஒன்றிரண்டு கதைகள் உதை வாங்கினாலும், மற்ற கதைகள் சிறப்பு...

    கேள்வி 2: ரிப்போர்ட்டர் ஜானி இந்த லிஸ்டில் வர்ற அளவுக்கு இல்லை. அவரை ஏன் கைய புடிச்சி இழுக்குறீங்க ஆசானே...?!!!

    ReplyDelete
  37. ஜானி.. ரூபின்.. சோடா..
    மூவரில் தெளிவான சித்திரங்களும் அருமையான கதைகளும் கொண்ட ஒரே தொடர் ரிப்போர்ட்டர் ஜானியுடையதுதான் நண்பர்களே..!

    சோடா.. ரூபின் எல்லாம் கொசகொசன்னு தெளிவற்ற சித்திரங்களுடன்.. ஆழமில்லாத கதைகளங்களும் கொண்டவை...!
    சும்மா யூத்துன்னு காட்டிக்கிறதுக்காக சோடாவுக்கும் ரூபினுக்கும் ஓட்டுப்போட்டு நல்ல தொடரை பரணுக்கு அனுப்பிடாதிங்க தெய்வங்களே..!

    கடைசியில இங்கு நல்ல மின்கள் விற்கப்படும் போர்டு கதையாயிடும்..🙏

    ReplyDelete
    Replies
    1. கம்பேக் தர ஜானிக்கு வாய்ப்பு உள்ளது மாமா..ஆல்ரெடி பார்த்து உள்ளோமே..
      ஆனா மற்ற 2பேரும் ட்ராப் அவுட் ஆனார்கள்னா சோலி ஓவர் ஆகிடும் வாய்ப்பு நிறைய!!

      சச்சினுக்கு ரெஸ்ட் தர மாதிரி....!!!

      Delete
    2. என்னமோ மாம்ஸ்..
      எனக்கும் வயசாயிடுச்சோ..😂

      Delete
    3. //எனக்கும் வயசாயிடுச்சோ//
      எப்பவோ ஆயிடுச்சு

      Delete
    4. இது காலத்தின் கட்டாயமோ. நெருக்கடியோ.

      Delete
    5. ///எனக்கும் வயசாயிடுச்சோ///

      நா கூட அப்பப்ப இப்படி நினைக்கணுமோ...

      Delete
  38. 1. I am excited about all the new stories we are trying. I am at apathy about all the old reprints as long as they don't get out of hand.
    2. Please continue with the current line-up.
    4. சாத்தான் வேட்டை in Ka k ka format
    5. Reporter Johny can be excluded.

    ReplyDelete
  39. சார் இந்த வருடம் டிரெண்ட் முடிந்து விட்டது, Mike Hammer உம் அடுத்த வருடம் கிடையாது தானே. எனவே இரண்டு இடங்கள் காலியாக உள்ளதே. எனவே ஜானி, சோடா, ரூபின் மூவரையும் அடுத்த வருடமும் தொடரலாம் என்பது எனது கருத்து

    ReplyDelete
  40. இரும்புக் குதிரையின் பாதையில்
    எல்லையில் ஒரு முத்தம்
    கறுப்பு கிழவி கதைகள்
    விச்சு கிச்சு தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி கதையா இருக்குமோ..!?

      Delete
    2. "எல்லையில் ஒரு முத்தம்"
      இந்த கதை தா வேண்டும்...

      Delete
    3. எல்லையில்லாத முத்தம் எனும் தலைப்பில் ஏதும் கதை இருந்தா அது எனக்கு வேண்டும்

      Delete
    4. //கறுப்பு கிழவி கதைகள்//

      +9

      Delete
    5. எல்லையில் ஒரு யுத்தம் தானே சார்

      Delete
  41. பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !

    பழசும் புதுசும் கலந்துகட்டி காக்டெய்ல் விருந்து படைத்துக்கொண்டிருக்கும் பொற்காலம் சார் இது..!
    So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All good with the current line-up ?

    Question pass

    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?

    மூணு மூணு கதைகளா போடலாம் சார்.!

    கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !

    சிறுத்தைகள் சாம்ராஜ்யம் (வனரேஞ்சர் ஜோ)

    கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது ! 2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?

    சோடா

    லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் சொல்லுங்களேன் - பார்க்கலாம் ?

    ₹1000








    ReplyDelete
  42. 1. நன்றாகவே இருக்கிறது. இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் நிறைய காமிக்ஸ் வரணும்.
    2. கரன்ட் லைன் அப் நன்றாகவே உள்ளது.
    3. சுஸ்கி விஸகி ஒரிஜினல்படைப்பாளிகளின் ஆரம்ப கால கதைகள்
    4. திக்கு தெரியாத தீவில்/ விண்வெளி பிசாசு/ பாட்டில் பூதம்/ ஆப்பிரிக்க சதி/ யானை கல்லறை, புதையல் பாதை, சிறுத்தைகள் சாம்ராஜ்யம் இணைந்த தொகுப்பு. மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது எல்லாமே.
    5. ஜானி
    6. லயன் ஆண்டு மலர் பட்ஜெட் 800 ரூபாய்.

    ReplyDelete
  43. லயன் ஆண்டு மலர் இரண்டு இதழ்களாக வந்தால் நன்றாக இருக்கும் சார். எப்போதும் போல ஒரு லக்கி லூக் Double ஆல்பம் ஹார்ட் பவுண்ட். ஒரு டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பம் மீண்டு வந்த மாயன் போல இதுவும் ஹார்ட் பவுண்ட், கலர் ஆக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

    லயன் 40 ஆவது ஆண்டு மலர் இரண்டு Flagship ஹீரோக்களுடன். இதற்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  44. கேள்வி 3 : சு.வி தொடரலாம் இதே பாணியில்

    கேள்வி 4: இரும்பு மனிதன் (A 4 சைஸ்)

    கேள்வி 5 : கேள்வி 2ல் பதில்னகொடுது விட்டேன். தூக்கியே ஆக வேண்டும் என்றால் சோடாவை தூக்கலாம்

    கேள்வி 6 : இத்தாலியின் கொண்டாட்டமும், இந்தியாவின் வேறு வேறு பரிணாமங்கள். நம்மூரில் டெக்ஸுக்கு பெரியளவில் ராஜமரியாதை இந்த வருடம்...

    அம்புட்டுதேன்...!

    ReplyDelete
  45. கேள்வி 1.இரண்டு வருடங்களுக்கு முன்னெல்லாம் சார் பழசு அப்படினு யார வது வாய் திறந்தாலே அங்கிட்டு போய் விளையாடும்பாங்க.இப்ப பழசும் ஓரளவு மரியாதையுடன் நடத்தப்படுகிற நிலமை வந்துள்ளது. அதேசமயம் புதிய கதைகளும் பலபல ஜேனர்களில் பட்டைய கிளப்புது. இதுவரை இப்படி பழசும் புதுசும் இணைந்து கொண்டாடப் படவில்லை ஒரு காமிக்ஸ்வாசகனாக இந்த நிகழ்வு சந்தோ .ஷத்தைக் கொடுக்குது . கேள்வி 2. .புதியவர்களில் மைக் ஹமர் மட்டுமே கழட்டி விடலாம் 3.புத்தக விழாக்களில் சுஸ்கி&விஸ்கி நல்லதொரு விசிட்டிங் கார்டாக இருப்பர்.தொடரட்டும்.4.இரட்டை வேட்டையன்.5.ரிப்போர்ட்டர் ஜானி.6.ரூ10ல்வெளிவந்த 4பாக டெக்ஸ் கதைகள் கலரில்ரூ.1000த்துக்குள் . .....கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  46. என் பையன் காமிக்ஸ் படிக்க ஆசைப்பட்டதே ரிப்போர்ட்டர் ஜானியாலதான்..!
    ஓநாய் மனிதன் ஊடு சூனியம் தொகுப்பை நானே ரெண்டு தடவைதான் படிச்சிருக்கேன்.. அவன் மூணு தடவை படிச்சிட்டான்..!
    ரூபின், சோடாவையெல்லாம் காட்டினா.. என்னப்பா ஓவியங்கள் இது கோழி கிளறின குப்பையாட்டம்னு கேக்குறான்..! (சோடா.. ரூபின் ரசிகர்கள் மன்னிக்க..🙏)

    எனக்கேக்கூட காமிக்ஸ் புத்தகம்னு கையில எடுத்தா.. அழகான சித்திரங்களை பாக்குறப்போ மனசுல ஒரு சந்தோசப் பூ மலரும்.. ஏதேனும் கவலையோ பிரச்சினையோ இருந்தாக்கூட பாத்துக்கலாம் போடான்னு அந்த தருணத்துல மனசு சொல்லும்..!
    படக்கதை புத்தகங்களை ரசிப்பது படங்களுக்காகவும்தான்..
    ரிப்போர்ட்டர் ஜானிக்கு கல்தா என்பது என்னைப் பொறுத்தவரை என் ரசனைக்கு இன்னொரு சம்மட்டி அடி.!

    ReplyDelete
  47. கரூர் குணா மாதிரி மாடஸ்டி டைஜஸ்ட் கேட்க ஆசைப்பட்டாலும்,இன்னைக்கி காலைல ஜமினையா சிலம்பம் எடுத்து சுழட்டுனதநெனச்சா பயம்மா இருக்குது . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  48. 1. ரெகுலர் சந்தா (லயன், முத்து, V, & S70 வகையறா
    2. புத்தக விழா ஸ்பெசல் 1 (ஆன்லைன்)
    3. புத்தக விழா ஸ்பெசல் 2 (ஈரோடு)
    4. புத்தக விழா ஸ்பெசல் 3 (சென்னை)

    சந்தாவில் இணைக்க முடியாதவற்றை புத்தக விழா ஸ்லாட்டுக்குன்னு திட்டமிட்டுக்கலாம். ரெகுலர் சந்தாவில் இருந்துகிட்டு புத்தக விழாக்களுக்கு வந்துவிட்டு வெறும் கைய வீசிட்டு போக மிகுந்த சங்கடமா இருக்கு. எனவே புத்தக விழாக்களுக்கென கண்டிப்பாக ஸ்பெசல் இதழ்கள் குறிப்பாக இந்த வருடம் வந்தது போல் பழசு பாதி புதுசு மீதி கலந்த கலவையாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.

    ஸ்பெசல் இதழ்கள் இல்லாத புத்தக விழாக்களை நினைத்துப
    பார்க்கவே கர்ண கொடூரமாக இருக்கிறது. ஜனவரி, மே, ஆகஸ்ட் என தகுந்த இடைவெளியில் அடுத்த ஆண்டும் போட்டுத் தாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. அருமையான யோசனை மகி...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

      Delete
    2. ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள் மாப்பு.....🤩😍💕

      Delete
    3. அப்ப வர்ற சேலம் புக்ஃபேருக்கு இரத்த முத்திரையை வாங்கிபுடலாம்ல....

      Delete
    4. @ஷெரீப் ஜி..😍😃

      சிறப்பு..மிகசிறப்பு..😍👍👌💪💪✊

      Delete
  49. Replies
    1. அப்ப V காமிக்ஸ் நூறடி பாயும்னு சொல்லாம சொல்றீங்க ...😍😘😃

      நன்றி இரும்பு கையாரே..✊

      Delete
  50. சந்தோசமூட்டும் பதிவு சார்....

    1. செம சூப்பர் சார்...80கள் ஓர் பொற்காலம் னா...2010 கள் முதல் பெரும் பொற்காலம்
    2. நல்லாதான போவுது... அவசியம்னா சிஸ்கோ...ஆனா இரண்டாவது கதய படிக்கல... படிச்சிட்டு பகிர்கிறேன் ...சீக்கிரமா
    3.சார் அப்பாவிகள விட அதிக காலமா காத்தெடுத்த புதையல்...பட்டய கிளப்பட்டும் ...முடிஞ்சா மேலுமிரு கதைகள் சேருங்க...
    4.யாரந்த மினி ஸ்பைடர்...நீதிக் காவலன் ஸ்பைடர்...விண்வெளிப் பிசாசு...பாட்டில் பூதம் கார்சன் கடந்த காலம் போல வசீகரமான ஒரே புக்கு நீங்க கேட்ட மாதிரி ஒரு கதை புக்கு போதும்...
    புதுசா சினிஸ்டர் செவன்...இப்பத்தய ஸ்பைடர் கதைகள் என்னாச்சு சார்
    5. யாரயுமில்ல...அவசியம்னா ஜானியோ சோடாவோ
    6. சார் கார்சன் கடந்த கால கார்சன் தலை அட்டை போல லிலித் மின்னுறார்
    ...அவங்க கதையே வேற...மாதம் 10 வெரைட்டில அது இதுன்னு டெக்ஸ் வாரார்...இங்க அப்பிடியா...இந்த கதையையும் முடிஞ்சா வாங்கி அவங்க வெளியிடும் போது அதே நாள்ல முயற்ச்சி பண்ணுங்க...லயன் 40 வேற லெவல்ல முத்துவ விஞ்சும் வண்ணமிருக்கனும் ...முத்து அஞ்சடி பாஞ்சா லயன் பத்தடி பாய வேணாமா

    ReplyDelete
  51. எங்கள் தலைவர் தோர்கல் time travel பண்ணி வந்தாவது சாதிப்பார்

    ReplyDelete
  52. Dear Edi Sir. I booked variant cover For Big Boyz Spl. But recd normal one at EBF. Informed the same to office. They said will chk and revert. But still I am waiting for reply from office. I want variant cover book too. Pls help. Thanks.

    ReplyDelete
  53. 500அல்லது 600 க்குள் மாடஸ்ட்டி க்கு ஒரு ஸ்பெஷல் book சார்.. ❤️
    காரிகன் க்கு கூட ஸ்பெஷல்
    வந்திருச்ச்சு.. லயன் ன் முதல் நாயகி, first edition
    .. யோசிங்க சார்... ❤️👍

    ReplyDelete
  54. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே...!!!

    ReplyDelete
  55. ////பூசாரியே சைக்கிளில் போகிறச்சே பெருச்சாளி புல்லெட்டில் போகுதோ ?///

    காலையில் புல்லட்- லே போயே தீரணும்.
    மாலை மயங்கும் வேளையில் சைக்கிளில் பயணம் செய்யலாம்...
    கூடவே அந்த ஒன்சாட் கலரையும்
    பிரிண்ட் போட்டுருங்க எடிட்டர் சார்...

    ReplyDelete
  56. Replies
    1. "மீண்டு வந்த மாயன்"

      விமர்சனம்

      கதையின் துவக்கத்தில் பறக்கும் நெருப்பு, கதையின் இறுதி வரை பற்றி கொண்டு எரிகிறது.
      வீழ்த்த முடியாத வில்லனாக, டெக்ஸ் குருப்பையே கதி கலங்க செய்கிறார் மெபிஸ்டோ.
      மாயஜால தந்திரங்களில் வித்தகராய் இருக்கிறார்.
      கதை முழுவதும்
      மெபிஸ்டோ one man army யாக செயல்பட்டு , கதையின் நாயகன் அவரே என்று சூளுக்கிறார்.
      கடைசியில் கூலாக தப்பித்து விடுகிறார்.
      கூடிய விரைவில் இந்த கதை நிச்சயமாக மேக்ஸி சைசில் கலரில் வெளி வருவதை எதிர்பார்க்கிறேன்.
      அதற்கான
      அனைத்து தகுதியும் இந்த கதையில் இருக்கிறது.
      கதையின் சுவாரஸ்யங்களை எழுத கைகள் பரபரத்தாலும்,
      என் கைகளை கட்டி போடுவது நலம் என்றே எண்ணுகிறேன்.
      இந்த ஆண்டின் மிக சிறந்த வெளியீடாக இது அமையும்.
      கா.க.கா பிறகு டெக்ஸ் -ன் அடுத்த சிறந்த மைல்கல்.

      ஸ்கோர்: 1000 / 100

      Delete
    2. அடடே அடி தூள் நண்பரே.

      Delete
    3. அருமை ஒளிர் ஐயா... தூள் கிளப்பிட்டீங்க....

      Delete
    4. அருமையான "psychology" திரில்லர் தான் சகோ.. ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் எல்லாம் உண்மையே.. ஆனால்,
      அந்த கற்பனை உலகம் நமக்கு புதிதானது.. பயங்கர கனவில் ஆழ்த்துவதை
      நாம் mantreke கதைகளிள் நிறைய படித்து விட்டதால்.. எனக்கு mantreke வில்லனான உணர்வே எர்ப்பட்டது..
      நல்ல கதைதான்.. ஆனால், reprint
      அவசியமில்லை.
      ஒரு அதீத கற்பனை கதை என்பதாகவே
      எனக்கு பட்டது.. சாத்தான் வேட்டை...
      சொல்கிறீர்களா.. அது மறக்க முடியாத கதை... அதில் ஒரு
      நிஜம்,உணர்வு பூர்வமாக இருக்கும்...❤️

      Delete
    5. மான்ட்ரேக்,
      1985லேயே படிச்சாச்சு .
      இப்ப அது எல்லாம் போயே போச்சு.

      இப்போ ...
      One and only one..

      ர்
      லர்
      ல்லர்
      வில்லர்

      ஸ் வில்லர்
      க்ஸ் வில்லர்
      டெக்ஸ் வில்லர் மட்டுமே...

      Delete
    6. ஊருக்கு வெளியே,
      அந்த ஒத்த மரத்தில பேய் இருக்குது. யாரு அந்த பக்கம் தனியா போகாதீங்கன்னு ஊர்ல சொன்னாங்க.
      எ நண்பன் ஒருவன் ராத்திரி 8 மணிக்கு தனியா
      போனாங்க.
      பேயரைஞ்சவனா ஆனாங்க.
      உண்ணாம உறங்காம பல்லை கடிச்சே செத்துப் போனாங்க.
      இன்னும் காத்து கருப்பு மாயதந்திரம் கெட்ட சிந்தனைகள் எல்லாமே
      ரொம்ப டேஞ்சர் தோழரே...

      Delete
  57. கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !

    புதுவித அனுபவம் இதுவே தொடர விரும்புகிறேன்

    ReplyDelete

  58. கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?

    ஆரவாரமாக தொடரலாம்

    ReplyDelete

  59. கேள்வி # 2 : காத்துள்ளது லயனின் நாற்பதாவது ஆண்டெனும் போது 2024-ன் அட்டவணையில் நிறையவே கவனம் தந்திட எண்ணுகிறேன் ! So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All good with the current line-up ?
    நிதானம் காத்தல் நல்லது ஆசிரியரே

    ReplyDelete
  60. கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது ! 2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?

    மூன்று பேரும் வேண்டும் ஆசிரியரே கட்டாயம் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால் சோடா ரிப்போர்ட்டர் ஜானிக்கு கலந்து வேண்டாம் சார் இவரின் கதை கல்கண்டில் ஒன்று தொடராக வந்தது அதை போடுவதாக நீங்கள் சொல்லியிருந்திங்க இவரின் கிளாசிக் சாகசங்கள்
    மரணப்பட்டியல்
    இரத்த அம்பு
    விண்வெளி படையெடுப்பு
    இரத்தக்காட்டேரி மர்மம் போன்ற கதைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால் அடுத்த வருடம் ஜானி கிளாசிக் தொகுப்பு (4 கதை) ஒரே புக்காக, 10 ரூபாயில் வந்ததை வெளியிட்டு விடுங்கள். லிமிடெட் எடிசனாக..

      Delete
  61. கேள்வி 6.டெக்சுக்கு யார் பன்றாங்களோ இல்லையோ நாம் பெரிசா பன்னலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. கேள்வி அதுக்கல்ல சத்யா...லயன் 40க்கு...உங்க பதிலேதான்....யார் எப்படியோ நம்ம காமிக் சுக்கு இரத்தப்படலத்த விட ஒரு ரூவா அதிக விலைல

      Delete
  62. ( K .o .k ://லேசா தானே சுத்தி காட்டினேன் //)அப்படிங்களா) சில நேரம் ரசிச்சாலும் நேத்துநீங்க இளவரசி பத்தி ஆரம்பிச்ச உடனே ஓடி வந்திட்டேன் . கரூர் ராஜ சேகரன் .

    ReplyDelete
  63. 1. உண்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்த வருடம் சந்தா கட்டாததால் ஒரு புத்தகம் கூட வாங்க முடியவில்லை.. சில புத்தகங்கள் மட்டுமே படிக்க முடிந்தது..

    ஆனால் நண்பர்கள் பலரின் கருத்துகள் "நன்றாகவே இருக்கிறது" என்பதால், இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் தொடரலாம்..

    2. நண்பர்களின் விருப்பமான கரெண்ட் லைன் அப் தொடரலாம்..

    3. நோ கமெண்ட்..

    4. இளவரசி அல்லது இரட்டை வேட்டையர்

    5. ஜானி

    6. லயன் ஆண்டு மலர் பட்ஜெட் 1200 ரூபாய்.

    ReplyDelete
  64. ஜானியின் துப்பறியும் பாணி மிக  பிடித்த ஒன்று
    நினைவுகளை துரத்துவோம் ரொம்ப அருமை

    சோடா, தி நியூயார்க்கின் போலீஸாக வேலை செய்யும் அன்பு மகன் ப்ரீஸ்ட்
    ஸ்டைல் தனி ரகம்

    ரூபின் கதைகள் மிக மிக சூப்பர்
    இப்போதைக்கு இருக்கும் லீடிங் லேடி கதாநாயகி அவர் மட்டுமே

    ரிப்போர்ட்டர் ஜானி நம்முடைய ஆல் டைம் பேவரிட், நிறைய கதைகள் படித்து விட்டோம்


    புதியவர்களுக்கு வாய்ப்பு குடுப்போம்

    ப்ளஸ்

    புதிய ஜெனரெஷனிடம் ஜானியின்  டிக்டெக்டிவ் ஸ்டைல் ரீச் ஆக மாட்டேங்குது 😔😔😔

    ஜானியை ரிமூவ் செய்யலாம் 😥😥😥😥😥

    ReplyDelete
    Replies
    1. // புதிய ஜெனரெஷனிடம் ஜானியின் டிக்டெக்டிவ் ஸ்டைல் ரீச் ஆக மாட்டேங்குது 😔😔😔 // இப்போதெல்லாம் எனக்கே ரீச் ஆகல சிஸ்டர்.

      Delete
    2. அப்படிப்பாத்த இப்ப வந்த மார்டீன் கதை கூட, முன்வந்த பழைய கதையை போல த்ரில் இல்லை. ஆனா அதுக்கு போயி அவர வேணாம்ன்னு சொல்ல முடியுமா...

      Delete
  65. கேள்வி # 1. பழசு புதுசு .. THIS FORMAT OK SIR ..

    கேள்வி # 2 : All good with the current line-up SIR .. IF POSSIBLE ADD BOND 2.0 TO IT ..

    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி .. TAKE DECISION BASED ON SALES SIR

    கேள்வி # 4 வன ரேஞ்சர் ஜோ மூன்று கதைகளும் HARD BOUND , COLOR கா.க .கா FORMATல் OR சாத்தான் வேட்டை + மரண தூதர்கள், கா.க .கா FORMAT COLORல்

    கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA .

    மூணும் வேணும் சார் .. அப்படி ஒன்றை கழட்டி விடுவதாயின் அதை" V காமிக்ஸ்" அல்லது புக் FAIR ஸ்பெஷல்ல சேர்த்து விடுங்கள் சார் ..

    கேள்வி # 6 : லயனின் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் .. MINIMUM RS1000 SIR .. கதம்ப இதழாக வேண்டும் ..

    ReplyDelete
    Replies
    1. அப்படீன்னா ரிப்போர்ட்டர் ஜானி , "வி" காமிக்ஸ்க்கு டிரான்பர் கொடுத்துருங்க.

      Delete
  66. 4. இரும்பு மனிதன் (ஆர்ச்சி A4சைஸ்)

    ReplyDelete
  67. Lion 40 - 1000 INR big bang special !

    ReplyDelete
  68. Question 4: .யாரந்த மினி ஸ்பைடர்...நீதிக் காவலன் ஸ்பைடர்...விண்வெளிப் பிசாசு...பாட்டில் பூதம் - 4 in 1 combo - MAXI !!

    ReplyDelete
  69. பெருமை + சாலி.....புல்+லட்டு....
    நம்ம பெருமையான லயன் விழுங்க இத்தாலி லட்டுகள் ஏராளமுள்ளதால்....இந்த சின்ன வட்ட காரணம் காட்டாம நம்ம பெரிய தட்டுகள் நிற்போம்...இந்த 40 மாண்ட கொண்டாட கோடை மலர் போல...காககா போல.. ஈர்க்கும் கதைகள தேடியும்...இருக்கும் கதைகள் சிறப்பித்துப் தாங்க

    ReplyDelete
    Replies
    1. அவங்ககிட்ட ஃபுல்லா லட்டுகள் இருப்பதால் நாம பூந்தியில்லாம லட்டா திங்குறோம் ...


      மேலும் இந்த வருடம் முழுவதும் அவங்க விட்டது எவ்ளோ நாம் விட்டதெவ்ளோ

      Delete
  70. //கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !//

    இப்ப போயிட்டு இருக்குகிறது ஓகே தான், ஆசிரியரே


    //கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?//

    ப்ளீஸ் தொடருங்கள், ஆசிரியரே

    ReplyDelete
  71. How do you imagine those titles for week's entry sir? பெருச்சாளியும், ஒரு புல்லெட்டும் ! LOL !! :-D

    ReplyDelete
  72. Replies
    1. டெக்ஸ்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் விலை ரொம்ப ஜாஸ்தியாக இருந்தால் அனைவராலும் வாங்குவது சுலபமில்லை
      புதிய தலைமுறையிடம் 50% ஆப் த டைம் டெக்ஸ் ஜெயிக்கிறார்
      அவர்களுக்கு பெற்றோர் தான் வாங்கி தருகின்றனர்
      ஆகையால் அனைவராலும் வாங்க கூடிய விலையில் சைக்கிளில் போலாம் என்பது என் அபிப்பிராயம்

      Delete
    2. ///ஆகையால் அனைவராலும் வாங்க கூடிய விலையில் சைக்கிளில் போலாம் என்பது என் அபிப்பிராயம்///

      +555

      Delete
  73. கேள்வி # 1. Please note : "பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் ! —————————— 2011 க்கு பிறகு குழுவில் இணைந்த எனக்கு எல்லாமெ புதுசு தான் சார். ரெகுலர் தடம், கிளாஸிக் ‘தடி’த்தடம், ‘சிக்’கென ‘வி’ காமிக்ஸ், ஆன்லைன் புத்தகவிழா ஸ்பெஷல், ஈரோடு ஸ்பெஷல் டெக்ஸ் கொண்டாட்டம் அடுத்து விண்டர் ஸ்பெஷல் என truly this is a golder era for me sir. Living the dream. Please continue.


    கேள்வி # 2 : காத்துள்ளது லயனின் நாற்பதாவது ஆண்டெனும் போது 2024-ன் அட்டவணையில் நிறையவே கவனம் தந்திட எண்ணுகிறேன் ! So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All good with the current line-up ? —————————— மைக் சுத்தியலாரைத் தவிர இந்த வருடம் வந்த அத்தனை நாயகர்களுமே பட்டாசு தான். கதைத் தேர்வுகளுமே. நெவாடாவும் சாதிப்பார் என நம்பிக்கை இருக்கிறது. சிஸ்கோ மற்றும் டேங்கோ சொல்லவே வேணாம். டன் கணக்கில் அட்ரீனலின் சப்ளை செய்பவர்கள். IRS அடுத்த கதையுமே இதே போல் இருந்திட்டால் அவருமே சாதிப்பார். இந்த வருட நாயகர்கள் ஒரு பெர்ஃபெக்ட் காம்போ என்னளவில்.


    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ? —————————— பேரிக்காய் போராட்டம் மட்டுமே முன்பே படித்திருந்தது. ராஜா ராணி ஜாக்கி தொகுப்பு மிகவும் பிடித்திருந்தது. ஜூனியர்களுக்கு வைத்துக் கதை சொல்ல மிகவும் ஏற்ற கதைகளாக இருக்கிறது. லக்கி கூட அவ்வப்பொழுது pg-13 சேஷ்டைகள் செய்து விடுகிறார். கண்டிப்பாகத் தொடரட்டும் இந்த பயங்கரப் பொடியர்கள்.


    கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் ! ————— இதற்கு ஒரு selfish ஆன பதில் :-) இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு. இதை டெக்ஸ் மறுபதிப்பில் சேர்த்தாலும் சரி, லயன் கணக்கில் சேர்த்தாலும் சரி. ரெண்டும் வேறா என்ன :-)


    கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது !  2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ? —————— மூன்றுமே அட்டகாசம். இந்த ஜானர் கதைகள் ஏற்கனவே குறைவு. மூன்றையும் சேர்த்து ஒரு wudunit special போட்டீர்கள் என்றால் கோடைக்கு கேசத்தைப் பிய்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் சார் :-) ஒருவரை கழற்றி விட்டே ஆக வேண்டும் என்றால் ஜானி. என்னுடைய ஃபேவரைட் நாயகராக இருந்தாலும்.


    கேள்வி # 6 : லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் சொல்லுங்களேன் ———- Rs. 1000 to 1200.

    Out of the syllubus பதில் : In love with கார்சனின் கடந்த காலம் format and making sir. பெரிய ஸைஸ் படங்களா, கலரா இல்லை அவர்கள் புகைப்படம் முதல் பக்கத்தில் இருந்ததாலா தெரியவில்லை. ஜூனியர்கள் ஆர்வமாக கார்சனைப் புரட்டி அவர்களே ஒரு கதை சொல்வதைப் பார்க்க ஜாலியாக இருக்கிறது (புத்தகத்தை ஹேண்டில் செய்வதைப் பார்த்து மனது பதறினாலும்). இரும்புக்கை மாயாவியும் இரட்டை வண்ண ஸ்படருமே கூட அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனிமேல் புத்தகம் படிக்க வைத்துவிடலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. இந்த பார்மேட்டில் தொடர்ந்து கதைகள் வரவேண்டும் சார். தங்கக் கல்லறைக்கு ஒரு அப்ளிகேஷன் :-)

    ReplyDelete
    Replies
    1. ///மூன்றையும் சேர்த்து ஒரு wudunit special போட்டீர்கள் என்றால் கோடைக்கு கேசத்தைப் பிய்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் சார் :///

      +555

      Delete
  74. சார் லயன் 40 பட்ஜெட் ரூபாய். 900 . கண்டிப்பாக கா. க. கா. மாதிரி ஃபோட்டோ போட்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் காமிக்ஸ் பட்ஜெட் அதிகமானாலும் மனைவியிடம் திட்டு வாங்காமலும் தப்பி விடலாம்.

    ReplyDelete
  75. ஜானி கட்டாயம் வேண்டும்...அதுவும் 2.0 ன்னா டபுள் ஓகே...

    ReplyDelete
  76. கேள்வி 4: 2003ம் வருடம் (என நினைக்கிறேன்) 20 ருபாய் விலையில், குண்டு புக்காக வெளிவந்த TEX-ன் "சாத்தான் வேட்டை"

    ReplyDelete
  77. 1.பழசு தேவலாமா - புதுசு தேவலாமா ?" என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன்.

    Golden oldies களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு தரலாம் Sir, விற்பனையில் சாதிக்காத புதியவர்களை கழட்டி விடலாம்

    2.முதல் கேள்விக்கான பதிலே பொருந்தும்

    கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் - புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே - இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?

    கண்டிப்பாக வேண்டும் Sir, லயனில் வந்த கதைகளின் காலகட்டத்தில் வந்த கதைகளை தேர்ந்தெடுங்கள் Sir

    கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !

    இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில் மற்றும் லயனில் வந்த அனைத்து கதைகளையும் சேர்த்து கார்சனின் கடந்த காலம் போல " இரட்டை வேட்டையரின் மறந்த காலம் " வேண்டும்

    கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி..... ரூபின் .....SODA ....மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது ! 2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் - யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?

    சோடா Or ரூபின் (தயவு செய்து ஜானி மீது கைவைத்து விடிதீர்கள்)

    லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு realistic பட்ஜெட் சொல்லுங்களேன் - பார்க்கலாம் ?

    ₹1000

    ReplyDelete
    Replies

    1. இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில் மற்றும் லயனில் வந்த அனைத்து கதைகளையும் சேர்த்து கார்சனின் கடந்த காலம் போல " இரட்டை வேட்டையரின் மறந்த காலம் " வேண்டும்

      அருமை அபாரம்

      Delete
  78. 1 நான் புதுசின் ரசிகனே என்பதால் இதற்கு என்ன பதில் சொல்ல?

    2 இருப்பவர்களில் சில பேரை கழற்றி விட்டு புதுப் பட்டாசு நாயகர்களை களம் இறக்கி விட்டால் அடுத்தடுத்த ஆண்டுகள் இன்னும் பட்டையை கிளப்பும் அல்லவா!!

    3 வழக்கம் போல சுஸ்கி விஸ்கி முன்பதிவிலேயே வரலாம் சார்!!

    4 மறு(பதி)ப்பு

    5 ஜானி சோடா அவுட், ரூபின் இன்...

    6 1500.. ஒன்லி டெக்ஸ்.. Kkk சைஸில்.. ஏற்கனவே அறிவித்தவற்றை கணக்கில் சேர்க்காமல்...

    ReplyDelete
    Replies

    1. ///3. வழக்கம் போல சுஸ்கி விஸ்கி முன்பதிவிலேயே வரலாம் சார்!! ///
      +555

      Delete
  79. கே 1) எதுனாலுஞ் சரி... பழசுல படிக்காததும் இருக்கும்ல. அதுக்கும் முன்னுரிமை ப்ளீஸ்.

    கே 2) ஆணியோ சுத்தியலோ எங்க மண்ட ரெடி... கழட்டி விட்ற வேலைய்லாம் வேணாஞ்ஜாமீ...

    கே 3) எதாயிருந்தாலும் படிக்க காமிக்ஸ் தந்தா போதும். இருக்கவே இருக்கு முன்பதிவு ஒன்லி தடம்.

    கே 4) எதுக்குங்க எடிட்டர் ஐயா கேள்வி...? ஆனா கண்டிப்பா டெக்ஸூ வேணாங்க

    கே 5) நாங்க பாக்காத காமிக்ஸ்ஸா. பழசோ புதுசோ போட்டுத்தாக்குங்க... இவுக மூணு பேரையும் சேத்து குடுத்திட்டா போச்சி.

    கே 6) என்ன ஒரு 800/ 900 கண்ண பர்ஸ உறுத்தாது. இல்ல பட்ஜெட் பத்துன்னா 450/500 க்குள்ளாற கருப்பு வெள்ள ஆப்சனுக்கு போயிடேங்க குணீடா...

    ReplyDelete
  80. 1. என்னை பொறுத்தவரை சந்தா A, B, C, D, E, ஜம்போ + super six, புத்தக விழா/ஸ்பெசல்
    வெளியீடுகள் என களை கட்டிய அந்த நாட்களே/ஆண்டுகளே நமது காமிக்ஸின் சிறந்த காலகட்டம் ஆகும்.

    சந்தா D யில் கிளாசிக் நாயகர்களும், மறுபதிப்புகளும் அளவோடு இருக்க, நிறைய புது முயற்சிகளும், தேடல்களும் சாத்தியப்பட்டது. அதன் பலனே பவுன்சர், பராகுடா, ஜேம்ஸ்பாண்ட் 2.0, ஜேசன் பிரைஸ், நிஜங்களின் நிசப்தம், விடுதலையே உன் விலை என்ன, ஒரு முடியா இரவு என பல ஆச்சர்யங்களையும் கொடுத்து நமது ரசனையையும் உயர்த்தியது.

    ஆனால் இப்போது மறுபதிப்புகளும், கிளாசிக் நாயகர்களும் சரி சமமாக புதிய கதைகளுக்கு நிகராக வந்து ஒரு வித அயர்ட்சியை உண்டாக்குகிறது.

    மேலும் நமது வரலாறு காணாத அளவிற்கு எழுத்து பிழைகள், அச்சு மற்றும் பைண்டிங் தரங்களில் குறைபாடு, வெளியீடு திட்டமிடல்களில் நெருடல் (கோடை மலர், கோடையை தாண்டி வருவது, ஒரு மாதத்தில் ரெகுலர் சந்தாவில் ஒரு இதழ் கூட இல்லாதது) என ஒரு வித அவசரமே மேலோங்கி நிற்கிறது.

    விற்பனையில் சாதிக்கலாம், ஆனால் quality கொஞ்சம் மட்டு பட்டு கொண்டிருப்பது உண்மை.
    அனைத்தையும் இழுத்து போட்டு மல்லு கட்டுவதை காட்டிலும், கொடுக்கும் இதழ்களில் மேலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

    நேற்று வந்த புதிய தமிழ் காமிக்ஸின் தரம், உதாரணம் ராபின் கதைகள் அங்கும் வந்து கொண்டிருக்கிறது (காகிதம், அச்சு, அட்டை) நன்றாகவே நமது வெளியீடுகளை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
    முதல் பக்கத்தில் ஆரம்பித்த தெளிவான அச்சு புத்தகம் முழுதும் தெறிக்க விடுகிறது. ஆனால் நமது புத்தகங்களில் ஒரு பக்கத்தில் தெளிவாகவும், அடுத்த பக்கத்தில் அடர்த்தியாக அப்பிக்கொண்டும், அதற்கு அடுத்த பக்கத்தில் டல்லாகவும் மாறி மாறி பக்கத்திற்கு பக்கம் வேறு படுகிறது.

    நமது காமிக்ஸின் அடையாளங்களில் முக்கியமானதே தரமும், மொழி பெயர்ப்பும்தான். அதிக புத்தகங்களை வெளியிடுவதை காட்டிலும், வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் நிறைவானதாக இருக்க வேண்டும் என்பதே ஆரோக்கியம்.

    உதாரணத்திற்கு, கார்சனின் கடந்த காலம், லக்கி ஆண்டு மலர் 2023 போன்று அனைத்து புத்தகங்களிலும் இத்தரம் வெளிப்பட வேண்டும் என்பதே அவா. மந்தனான அச்சுக்கு கௌபாய் காதலி, கைதியாய் கார்சன் உதாரணங்கள். மேலும்
    காரிகன் மற்றும் சார்லி ஸ்பெசல் எல்லாம் ரூபாய் 450 கொடுத்து வாங்கி ஏமாற்றம் அடைந்ததே மிச்சம். இரண்டிலுமே சித்திரங்கள் தெளிவாக இல்லை

    நிறை குறைகளை சுட்டி காட்டுவதே உண்மையான காமிக்ஸ் ரசிகனின் கடமையாகும். நீங்கள் கிளாசிக் நாயகர்களையோ, மறுபதிப்புகளையோ, புதிய கதைகளையோ எதை போட்டாலும் சரி, அது முழுமையாக தரமானதாக வேண்டும் என்பதே எனது கோரிக்கை. ஆகையால் கேள்வி ஒன்றுக்கு "இன்னும் நிறைய கவனம் தேவை என்பதே" எனது பதில்

    2. All good with current line up, Add ஜேம்ஸ் பாண்ட் மற்றும் வன்மேற்கின் அத்தியாங்களுக்கு இன்னும் கூடுதல் slots கொடுத்து ஒரே ஹார்ட் பவுண்டில் இருந்தால் சிறப்பாக இருக்கும்

    3. சுஸ்கி விஸ்கி : 50/50 வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. இவர்களை விட மந்திரி, ரின் டின் கேன், ஸ்மர்ப்ஸ், பென்னி, மேக் & ஜேக் better என்பதே எனது கருத்து

    4. ஒரு மறுபதிப்பு - "திக்குத் தெரியாத தீவில்" பெரிய சித்திரங்களில் மேக்ஸ் சைசில்.

    5. ஜானி, ரூபின், சோடா மூவருமே தேவை. கண்டிப்பாக ஒருவருக்கு கல்தா என்றால் "சோடா"

    6. கண்டிப்பாக 1200 to 1500. நாற்பது ஆண்டு கால் ஆண்டு மலருக்கு இத்தகைய சிறப்பு தேவை.
    நன்றி

    ReplyDelete
  81. ///ஓசையின்றி 2024-ன் அட்டவணை சார்ந்த பதிவுகள் ஓடி வருவதால், ///

    ஆகா... அடுத்த குளிர் ஜுரம் அட்டாக்கா...

    ReplyDelete
  82. கேள்வி --1.பழசும் புதுசும் கலந்த கலவை சிறப்பாகவே இருக்கிறது. இப்படியே தொடர வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  83. ///பயசு-புச்சு" - என்ற பஞ்சாயத்துக்களுக்கெல்லாம் புகுந்திடாமல் ஒரு கழுகுப் பார்வையில் இந்தக் கள நிலவரத்தை பார்க்கும் போது - இனம்புரியா ஒரு குஷி மேலோங்குகிறது ! ///

    ///காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு கிஞ்சித்தும் அசராத ஜாம்பவான்களான டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும் தவிர்த்த பாக்கிப் பேர் அனைவருமே சுகருக்கு மாத்திரை தேடும் பார்ட்டிகளாகத் தென்படவே காணோம் ! இந்த மாற்றம் கொஞ்சம் சிந்தனைக்குப் பின்பானதும் தான் ; ///
    1. குஷி அனைவருக்குமே...
    2.மாற்றம் தான் மாற்றமோ..

    ReplyDelete