Powered By Blogger

Sunday, March 19, 2023

பன்னிரெண்டுக்கும், பதினான்குக்கும் மத்தியிலே..!

 நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலும் நெருங்கியிருக்க, நண்பர் பழனிவேலின் நினைவலைகள் மனதில் நிழலாடுகின்றன ! அவரது ஆதர்ஷ XIII-ன் பிதாமகர் வில்லியம் வான்ஸ் போன இடத்துக்கே பழனியும் புறப்பட்டுப் போய் ஓராண்டாகிறது ! அதன் பின்பான 365 நாட்கள் ஏதேதோ மும்முரங்களில், நகர்ந்து விட்டுள்ளன தான் ! இங்கே சின்னதாயொரு முரண் உணர்வு எனக்கு ! ஓராண்டுக்கு முன்பாய் வைத்தியம் பார்க்கும் பொருட்டு சென்னைக்கு வந்து இறங்கிய கையோடு, மனுஷன் போன் அடித்து எனக்கு தைரியம் சொன்னதெல்லாம்( !!!)  ஏதோவொரு யுகத்து நிகழ்வாய்த்  தோன்றுகிறது ! ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னே, ஒரு பத்து மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஈரோடு வரைக்கும் பைக்கிலேயே பயணம் செய்து, முகம் நிறைந்த புன்னகையோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த நாளோ, நேற்றைக்குப் போல் படுகிறது ! Wonder why ??? 

அதன் பின்பாய் சந்தித்த போதெல்லாம் ; கடுதாசி போடும் போதெல்லாம் ; இங்கே பின்னூட்டமிடும் போதெல்லாம் - பன்னிரெண்டுக்கும், பதினான்குக்கும் நடுப்பட்ட அந்த நம்பரையே ஜெபம் போல மனுஷன் உச்சரித்துக் கொண்டே இருந்ததை நாமறிவோம் ! And நிறைய தருணங்களில், காதில் தக்காளிச் சட்னி கசியும் அளவுக்கு அவரது XIII காதல் ரீங்காரம் தொடர்ந்ததில் எனக்கு நிறையவே அயர்வு ஏற்பட்டிருந்ததை மறுக்க மாட்டேன்  ! "XIII-ஐ தாண்டியுமொரு லோகம் உள்ளது பழனி...ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க !" என்றும் அவருக்கு கடுதாசி எழுதியதும் உண்டு தான் ! ஆனால் போன மே மாதத்தில் டாக்டர் ராஜா சாருடன், கரூருக்கு அருகிலுள்ள அவர்தம்  வீட்டுக்குப் போய்ப் பார்த்த போது தான், XIII என்பது ஒரு கதை ; காமிக்ஸ் ; புனைவு என்ற நிலையெல்லாம் தாண்டி, பழனிக்கொரு உணர்வாகவே மாறியிருப்பதைப் புரிந்திட முடிந்தது ! அவர் வீட்டில், திரும்பிய பக்கமெல்லாம் XIII - ஏதோவொரு ரூபத்தில் ! கண்மூடித்தனமான அந்த நேசத்தினை பார்த்த போது - அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரிந்திருக்கவில்லை எனக்கு - simply becos புரியாத ஐரோப்பிய மொழியில் வெளியாகியிருந்த XIII ஆல்பங்களைக் கூட தனது சேகரிப்பில் அடுக்கி வைத்திருந்தார் ! அவற்றின் பின்னே தென்பட்ட பழனியின் காமிக்ஸ் காதலும் புரிந்தது ; அதனுள் முடங்கி கிடந்த பணத்துக்கு நிச்சயம் வேறு நல்ல உபயோகங்கள் இருந்திருக்க முடியும் என்பதுமே புரிந்தது தான் ! Anyways, அவர் உசிரோடு இருந்த வேளையில் நமது ரேடாரில் இருந்திருக்கா அந்த XIII Spin-off கதைகள், அவரது பெயரைச் சொல்லும் விதமாய் ஒவ்வொரு எப்ரலிலும் வெளிவர உள்ளது தான் விதியின் விளையாட்டு போலும் ! ஏக நேரத்தில் சந்தோஷமும், சங்கடமும் சூழ்கிறது பழனி - இந்த இதழின் திட்டமிடலில் !! 

இதோ - "எந்தையின் கதை" preview படலம்  ! XIII தொடரின் மாந்தர்களை எனக்கு ஞாபகம் இருப்பதைக் காட்டிலும் உங்கள் ஒவ்வொருவருக்குமே சிறப்பாய் நினைவிருக்குமென்பது உறுதி ! So "ஜானதன் ப்ளை இன்னார்...இன்னார்...அவர் குலமிது, கோத்திரமிது' என்ற அறிமுகங்களெல்லாம் அனாவசியம் தானே ?! 

XIII தொடரின் வெவ்வேறு 13 கதை மாந்தர்களைத் தேர்வு செய்து, வெவ்வேறு படைப்பாளிகளிடம் அவர்களை ஒப்படைத்து, ஆளுக்கொரு பின்னணிக் கதையை உருவாக்கச் செய்திருந்தனர் - இந்த spin-off வரிசைக்கு ! பிதாமகர் வான் ஹாம்மின் மேற்பார்வையில் இம்முயற்சி நடந்திருப்பினுமே, ஒவ்வொரு கதாசிரியருக்குமான தனிப்பட்ட பார்வைகள் நாம் பழகியிருந்த XIII template-க்கு சற்றே அந்நியப்பட்டு நிற்கப் பார்த்திருக்கிறோம் ! And இந்த spin-off வரிசையானது மெயின் தொடருக்கு இணையாய்ப் பேசப்படாது போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது ! ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட இந்த "XIII மர்மம்" தொடரினில், சிலவற்றுக்குக் கிட்டியிருக்கும் treatment - ஒரு சபாஷ் போட வைக்காதும் இல்லை தான் ! காத்திருக்கும் "எந்தையின் கதை" அந்தச் சிறுபான்மையில் ஒன்று ! ஒரு நெடும் தொடருக்குள் பின்னிக் கிடக்கும் ஒரு complex கதாப்பாத்திரத்துக்கு நெருடல்களில்லா ட்ரீட்மெண்ட் தருவது சுலபக் காரியமே அல்ல தான் - moreso ஒரிஜினலுக்குக் கதை எழுதியது ஒரு ஜாம்பவான் எனும் போது ! ஆனால் இம்முறை புதுக்கதாசிரியர் லுக் ப்ரன்ஷ்விக் நிச்சயம் சோடை போயிருக்கவில்லை ! ரொம்பவே இயல்பானதொரு கதை....நம்ப சிரமங்கள் தந்திடா ஒரு மர்ம முடிச்சு ; ஜானதன் ப்ளைக்கு அழகானதொரு பின்னணி என்று தந்து, மெயின் கதையுடனான இணைப்பினை லாவகமாய் கையாண்டுள்ளார் ! So பழனியின் பெயரைச் சொல்லி ஒரு அழகான வாசிப்பு அனுபவம் நமக்கு வெயிட்டிங் ! இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :




துவக்க நாட்களது XIII மொழிபெயர்ப்புகளின் போது நேர்ந்த பிழைகள் சமீப பொழுதுகளில் தொடர்ந்திடலாகாதென்பதில் ரொம்பவே கவனமாய் இருந்து வருகிறேன் ! So "எந்தையின் கதை" இயன்றமட்டுக்கு ஒரிஜினலை ஒட்டிப் பயணித்திடும் வரிகளுடன் இருக்கவுள்ளது ! அட்டைப்படமோ - ஒரிஜினல் சித்திரத்துடன் ; வண்ணப் பின்னணியில் மாத்திரமே மாற்றங்களுடன் ! 

இது XIII மர்மம் தொடரினில் நாம் வெளியிடும் ஆறாவது ஆல்பம் ! இன்னமும் 7 எஞ்சியுள்ளன - up and down அனுபவங்களைத் தரும் ஆற்றலோடு ! ப்ளஸ் தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான ஜோன்ஸுக்கென ஒரு 3 பாக spin-off வேறு புதிதாகத் தயாராகி வருகிறது ! And மெயின் தொடரினில் ஏற்கனவே 1 புது ஆல்பம் காத்துள்ளது + அடுத்தாண்டு வரவுள்ள இன்னொரு ஆல்பத்தோடு இரண்டாம் சுற்றை நிறைவு செய்திட உள்ளார்களாம் ! So அடுத்த ஒரு டஜன் ஆண்டுகளுக்காவது பழனிக்கான tributes தொடர்ந்திட வழிவகையுள்ளது ! மெயின் தொடரும் அதற்கு மத்தியில் "மூன்றாம் cycle" என புறப்படும் பட்சத்தில், of course there will be more !  

Moving on, "உயிரைத் தேடி" பணிகளின் இறுதி stretch ஓடி வருகின்றன ! நாளை மறுநாள் black & white பதிப்பானது அச்சுக்குச் செல்கிறது ! And அடுத்த வாரயிறுதியனில் வண்ணப் பதிப்பும் பிரிண்ட் நோக்கிப் பயணிக்கத் தயாராகிட வேண்டும் - fingers crossed ! நமது ஆன்லைன் புத்தக விழாவின் மெயின் பார்ட்டிக்களே இவர்கள் தான் எனும் போது - இவர்களை உருப்படியாய் தயார் செய்து விட்டாலே ஒரு பெரும் சுமை தோள்களிலிருந்து இறங்கியிருக்கும் ! அதன் பின்பாய் பாக்கி இதழ்களை போட்டுத் தாக்க வேண்டியது தான் ! And இங்கே சின்னதாயொரு தகவலுமே : 

புத்தக விழா கேரவனானது மறுபடியும் புறப்பட தயாராகியுள்ளது - இம்முறை விழுப்புரம் & திருவண்ணாமலை நகர்களை நோக்கி !!

**மார்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை விழுப்புரத்திலும்

**மார்ச் 27 to ஏப்ரல் 6 வரை திருவண்ணாமலையிலும்

விழாக்கள் துவங்கிடவுள்ளன ! So நம்மாட்கள் இங்கும், அங்கும் பிசியாக இருப்பர் எனும் போது ஆன்லைன் புத்தக விழா ஏப்ரல் 1 & 2 தேதிகளுக்கு சாத்தியமாகிடாது ! Will have to be ஏப்ரல் 15 & 16 ! மறுக்கா fingers crossed !!

இரு இலக்குகளுமே (நமக்கு) புத்தக விழா firsts என்பதால், என்ன மாதிரியான வரவேற்பு கிட்டுமென்று கணிக்க தெரியவில்லை ! In fact விழுப்புரத்துக்கே இது முதல் புத்தக விழாவாம் ! எப்படியாயினும் மக்களின் பார்வைகளில் பட்டிடக் கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகளை, வரவு-செலவுகளுக்கு அப்பாற்பட்ட அழகான விஷயமாகவே நாம் பார்த்திடுகிறோம் ! வெறுமனே மகசூல்களை மட்டுமே கவனிக்கும்  பட்சத்தில், சிறு நகரங்களின் ஒரு சில விழாக்கள் வறண்டு தென்படலாம் தான் ; ஆனால் ஒரு நெடும் பயணத்திற்கு சகல திக்குகளிலிருந்து கிட்டும் சகாயங்களும் அவசியம் என்பதால் இந்த அனுபவங்களையும் உற்சாகமாய் அரவணைத்து வருகிறோம் ! 

And தொடர் சங்கிலியாய் புத்தக விழாக்கள் அரங்கேறி வரும் சூழலில், கொஞ்சமாய் கைவசமுள்ள இதழ்களின் பலத்தினை அதிகம் பண்ண வேண்டியுள்ளது ! Of course சொற்ப விலைகளிலான மினி காமிக்ஸ் அதற்கு உதவிடும் தான் ; ஆனால் லக்கி லூக் ; மாயாவி & 'தல' டெக்ஸ் தான் சகல விழாக்களின் பிரதம showpieces எனும் போது, அவர்களின் கையிருப்புகளில் இன்னும் கொஞ்சம் எண்ணிக்கைகளைக் கூட்டிட வேண்டியுள்ளது ! புது லக்கி லூக் & புது டெக்ஸ் ஆல்பங்கள் ஒருபக்கம் வெளிவந்து கொண்டுள்ளன என்றாலும், கையிருப்பின் எண்ணிக்கையினை 'டக்'கென்று உசத்த மறுபதிப்புகளே அருமருந்து ! So மேற்படி 3 தொடர்களிலும் சரி, இன்னும் ஓரிரு prime நாயகர்களின் தொடர்களிலும் சரி, நீங்கள் பார்த்திட விரும்பும் மறுபதிப்புகள் பற்றிய பரிந்துரைஸ் ப்ளீஸ் ? அதற்காக "ஜான் மாஸ்டர்..இரட்டை வேட்டையர்.....என்ற ரேஞ்சுக்குப் போக வேணாமே ப்ளீஸ் ? கோப்புகளை படைப்பாளிகள் ரெடி செய்திடும் வரையிலும் அவற்றிற்குள் தலைநுழைக்க சாத்தியங்கள் கிடையாது ! நான் கோரிடுவது, இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ் ?! இவை சகலமும் டிஜிட்டல் கோப்புகளாய் இருப்பதால், மறுபதிப்புச் செய்வது சுலபம் ! So suggestions please ?

Bye all...V காமிக்சின் TEX vs ZAGOR இதழினை பராக்குப் பார்க்கப் புறப்படுகிறேன் ! இள ரத்தங்களுடன், டீம் V அழகாய் துளிர் விட்டு வருவது ரொம்பவே மனநிறைவைத் தருகிறது ! மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருமே under 35 !! அவர்களின் லேட்டஸ்ட் பணியை பார்க்கவும், அவசியப்பட்டால் ரோசனைகள் நல்கவும் நடையை கட்டுகிறேன் ! V காமிக்ஸ் அடுத்த 3 மாதங்களின் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இன்றைக்கே அனுப்பிடலாமே - ப்ளீஸ் ? 

Rs .300 for Lion & Muthu subscribers !

Rs .400 for newcomers !

See you around ! Enjoy the Sunday !

379 comments:

  1. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. 10க்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு....

    ReplyDelete
    Replies
    1. 8வது பாஸ்... வணக்கம் ப்ரெண்ட்ஸ்....

      Delete
  5. ரொம்ப நாள் கழித்து ஞாயிறு பதிவு,..... திவ்யமாக உள்ளது....

    ReplyDelete
  6. மறுபதிப்பு request : கார்சனின் கடந்த காலம் சார் :)

    ReplyDelete
  7. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  8. So மேற்படி 3 தொடர்களிலும் சரி, இன்னும் ஓரிரு prime நாயகர்களின் தொடர்களிலும் சரி, நீங்கள் பார்த்திட விரும்பும் மறுபதிப்புகள் பற்றிய பரிந்துரைஸ் ப்ளீஸ் ? //

    தங்க கல்லறை மற்றும் கார்சனின் கடந்த காலம்.

    ReplyDelete
    Replies
    1. அடடே 100/100. This is what I want

      Delete
    2. தங்க கல்லறை மற்றும் கார்சனின் கடந்த காலம்.

      பழைய வசனங்களுடன் & ஹார்ட் பவுண்ட் அட்டையில் 😇😇

      Delete
  9. For reprints ..
    Lucky - boom boom padalam , Jane iruka bayamen ..
    Tex - karsanin kadantha kaalam , nalliravu vettai ..
    Tiger - Thanga kallarai .. Hardbound .. With Original dialogues ..
    வன ரேஞ்சர் ஜோ .. மூன்று கதைகளும் கலரில் ..

    ReplyDelete
    Replies
    1. // வன ரேஞ்சர் ஜோ .. மூன்று கதைகளும் கலரில் .. // பிளீஸ் சார்

      Delete
    2. வன ரேஞ்சர் ஜோ... யானை கல்லறை சிறுத்தை வேட்டை உட்பட மூன்று புத்தகங்களை கலரில் கொண்டுவருவதை அனைவரும் ஆதரிக்கிறோம்... இன்றய இளம் வாசிப்பாளர்களுக்கும் இது உத்வேகம் தரக்கூடும்

      Delete
  10. Me வந்துட்டேன்..😃😍😘😀

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி. அனைவரையும் திருவண்ணாமலை புத்தக விழாவுக்கு வருக வருக என வரவேற்கிறேன். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைக்கு மலையை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளதால் குடும்பத்தோடு வந்து அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள் பெற்று செல்லவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏதும் உதவிகள் எனில் தயங்காமல் அழைக்கவும் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் 9498127882

    ReplyDelete
    Replies
    1. அருமை காவலரே

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி போலீஸ்கார் சார்.

      Delete
  13. எல்லையில் ஒரு யுத்தம் & இரத்த நகரம்..

    ReplyDelete
  14. மறு பதிப்பு செய்வதாக இருந்தால் டெக்ஸ் டிராகன் நகரம் , பவள சிலை மர்மம் , வைகிங் தீவு மர்மம்.
    Prince in காணாமல் போன கழுகு சைத்தான் ஜெனரல்

    Chickbill அதிரடி மன்னன், இரும்பு cowboy


    ReplyDelete
    Replies
    1. நண்பரே...போன வருஷம் வரைக்கும் ஸ்டாக் இருந்த புக் "வைகிங் தீவு மர்மம்" !

      Delete
  15. ஏதாவது ஒரு சூப்பர் ஹிட் classic Roger கதையை முயற்சி செய்யவும்

    ReplyDelete
  16. மறுபதிப்பு

    சிக்பில் வண்ணத்தில் வராத கதைகள் போடலாங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. ஓடுற குருத அவசியம் சார் ; சிக் பில்லில் நமது கையிருப்பை ஒருக்கா பாருங்களேன் ?

      Delete
  17. //அவர் வீட்டில், திரும்பிய பக்கமெல்லாம் XIII - ஏதோவொரு ரூபத்தில் ! கண்மூடித்தனமான அந்த நேசத்தினை பார்த்த போது - அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரிந்திருக்கவில்லை எனக்கு - simply becos புரியாத ஐரோப்பிய மொழியில் வெளியாகியிருந்த XIII ஆல்பங்களைக் கூட தனது சேகரிப்பில் அடுக்கி வைத்திருந்தார் ! அவற்றின் பின்னே தென்பட்ட பழனியின் காமிக்ஸ் காதலும் புரிந்தது ; //

    XIIIயை படித்திடும் போது பழனிவேல் சகோவின் ஞாபங்கள் வராமல் இருந்தது இல்லை. காமிக்ஸ் நேசங்களை உறவால் கவர்ந்திழுத்தவர் அன்பு சகோ

    என் மகளின் அத்தையே என்றுதான் அழைப்பார்

    ReplyDelete
    Replies
    1. // XIIIயை படித்திடும் போது பழனிவேல் சகோவின் ஞாபங்கள் வராமல் இருந்தது இல்லை. காமிக்ஸ் நேசங்களை உறவால் கவர்ந்திழுத்தவர் அன்பு சகோ // நூற்றுக்கு நூறு உண்மை. இப்படி ஒரு அன்பான மனிதரை பார்க்கவே முடியாது.

      Delete
    2. என்னைப் போன்ற நண்பர்களை தலைவரே என்று தான் அழைப்பார்.

      Delete
  18. டெக்ஸ் வில்லரின் சைத்தான் சாம்ராஜ்யம்

    ReplyDelete
  19. தோர்கல் மீதமுள்ள கதைகளை ஒரே குண்டு புக்காக போடலாமே சார் முன்பதிவுக்காக என்றாலும் பரவாயில்லை

    ReplyDelete
    Replies
    1. +10000

      வரவேற்கிறோம்

      Delete
    2. +1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

      Delete
    3. தோர்கல், வெளியிடப் படாதது நிறைய உள்ளது. ஒரு செல்ப் கொள்ளும் அளவுக்கு. வேண்டுமானால் 5 கதைகள் கொண்ட ஒரு தண்டி புத்தகமாக Limited edition -ல வரலாம்.

      Delete
    4. தண்டி தண்டி புத்தகமாக தொடர்ந்து வெளியிடலாம்.

      Delete
  20. சார்
    இரத்தபடலம்" எந்தையின் கதை" ஒரு அழகான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். (காரணம்-ஏதும் ஆக்ஷனுக்கு வழியிருக்காது அல்லவா..)
    அப்றம், இந்த பதிவில் மறுபதிப்பு ஆலோசனை கேட்டால்.....
    .இரத்தப்படலம்- இரத்தப்படலம்-இரண்டாம் சுற்றின் முதல் தொகுப்பு (20& 21) புத்தக விழாவில் இல்லையே - (திருநெல்வேலியில்)
    நான், ஒரு பழைய வாசகர் - புதிதாக நம் இதழ்களை ஆச்சரியமாய் பார்த்து - X | | |-ன் புதிய சுற்றைப் பார்த்து - கேள்வி மேல் கேள்வியாய் கேட்டவரிடம் (எங்கே நம்ம x 111-கலெக்ஷனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி)...
    லார்கோ விஞ்ச் - சை ரெக்கமண்ட் செய்துவிட்டேன்..
    (அவரும் அனைத்து பாகங்களையும் எடுத்துக்கொண்டார்..சந்தோசமாக இருந்தது..நானும் லார்கோவின் முதல்பாகம் மட்டும் மீண்டும் வாங்கினேன்.. மற்றவர்களுக்கு படிக்க கொடுக்க வேண்டும்..)

    ReplyDelete
    Replies
    1. இளங்கோ அண்ணா ரத்த படலம்
      புத்தகம் வாங்குவதற்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க
      .
      // இது XIII மர்மம் தொடரினில் நாம் வெளியிடும் ஆறாவது ஆல்பம் ! இன்னமும் 7 எஞ்சியுள்ளன - up and down அனுபவங்களைத் தரும் ஆற்றலோடு //
      இவ்வாறு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் ஆனால் வெப்சைட்டில் எட்டு புத்தகங்கள் இருக்கிறது இதில் எதை எல்லாம் செலக்ட் செய்ய வேண்டும்

      Delete
    2. X 111-என்ற அடையாளம் உள்ள எல்லா புத்தகங்களையும் - வாங்கிவிடவும்..
      அது ஒரு சுவராஸ்யமான கதைக்களம்..
      .படிக்கப் படிக்க நம்முடைய கற்பனைத் தளம் விரிவடைந்து கொண்டே செல்லும்.
      என்ன ஒரு பிரச்சனைன்னா..
      அதன்பின் நமது ரசனை அளவுகோல் நம்பர் X 111-அளவுக்கு கதைகளின் தரத்தை பரிசீலிக்கும்..

      Delete
    3. சரி அண்ணா அப்படின்னா லாஸ்ட் ரத்த படலம் வாங்குகிறேன் ஃபர்ஸ்ட் எதை நான் படிக்க வேற எந்த புக்..?

      Delete
    4. கார்டூனில் - லக்கிலூக்-சிக் பில்-மதியில்லா மந்திரி..
      ரிப்போர்டர் ஜானி - CID ராபின் - கேப்டன் பிரின்ஸ் --
      லேடி S
      கேப்டன் டைகரின் - "இரத்தக் கோட்டை".
      டியூராங்கோ-ஆல்பம். அப்றம் - அப்றம்...அது ஒரு கடலுங்க- மூழ்கிட் டோம்னா..எல்லாமே ஒருவகை. ரசனை ரகளையானதுதான்..
      என் சாய்...

      Delete
    5. ////ரிப்போர்டர் ஜானி - CID ராபின் - கேப்டன் பிரின்ஸ் -/////
      + 55555-

      Delete
  21. கார்சனின் கடந்த காலம் வெளியிடுவதற்கு சாத்தியம் உள்ளதா எடிட்டர் ஐயா🤔🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  22. டெக்ஸ் வில்லர்:
    பவளச்சிலை மர்மம்.
    சைத்தான் சாம்ராஜ்யம்.
    டிராகன் நகரம் .
    கார்சனின் கடந்த காலம்.
    கனவாய் யுத்தம்


    ReplyDelete
  23. கார்சனின் கடந்தகாலம் டைகரின்தங்கக்கல்லறை.ராபினின் கொலைப் பொக்கிசம்.

    ReplyDelete
  24. கேப்டன் பிரின்சின் பனி மண்டலக் கோட்டை.லக்கி லூக்கின் அதிரடி ஜேன் part2 பேய் நகரம்

    ReplyDelete
  25. டெக்ஸ் - சிகப்பாய் ஒரு சொப்பனம், கார்சனின் கடந்த காலம்
    லக்கி லுக் - எதிர் வீட்டில் எதிரிகள்
    லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் இதில் எந்த இதழாக இருந்தாலும் ஓகே.

    ReplyDelete
  26. XIII ஸ்பின் ஆஃப் கதைகள் என்னைப் பொருத்தவரையில் நன்றாகவே இருந்தது.

    அதுவும் கர்னல் ஆமோஸ் தாய் நாட்டுக்காக செய்யும் தியாகம் & மங்கூஸ் கொலைகாரனாக உருவாக காரணம் எல்லாம் அப்படியே ஒரு மெல்லிய சோகம் இழையோடி மனதை வருடியது.

    அடுத்தடுத்து ஸ்பின் ஆஃப் கதைகள் வருவது மகிழ்ச்சி.

    ReplyDelete
  27. டியர் எடி,

    பழனி ஞாபகமாக XIII ஸ்பெஷல் இதழ்கள் இன்னும் பத்தாண்டுக்காவது தேறும் என்பதை கேட்பதே மகிழ்ச்சி. மேலுலகில் எங்கிருந்தாலும்... இதை தொடர்வார் என்பதில் ஐயமில்லை...

    கடந்த 11 வருட இதழ்கள் அத்தனையும் கைபிருப்பில், இருப்பதால். எது மறுபதிப்புக்கு உகந்தது என்று சொல்ல தெரியவில்லை. ஒரு இரு வருடங்கள் ஸ்டாக்கிலிருந்து காலி ஆன இதழ்களை தவிர்த்து, வெளிவந்த போதே பரபரப்பாக விற்று தீர்ந்த, நாயகன் பாகுபாடில்லாத, இதழ்கள் கண்டிப்பாக உங்கள் ரேடாரில் இருக்கும் என்பதால் அதையே களமிறக்குவீர்கள் என்று தோன்றுகிறது. அப்படியே நடக்கட்டும்.

    உயிரைத் தேடி ஒரு வழியாக அச்சுக்கு செய்கிறது என்ற கூடுதல் தகவல், icing on the cake. பல வருடங்கள் காத்திருப்பு....We are Waiting 🥰

    ReplyDelete
  28. Kaliman manithargal (mayavi)
    Yanaikkallarai (colour)

    ReplyDelete
  29. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  30. கொடூர வனத்தில் டெக்ஸ்

    ReplyDelete
  31. // கையிருப்பின் எண்ணிக்கையினை 'டக்'கென்று உசத்த மறுபதிப்புகளே அருமருந்து ! //
    நிறைய புத்தக விழாக்கள் நடப்பது எப்படி எல்லாம் செளகர்யமா இருக்கு பாருங்க,அருமை,மறுபதிப்புகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...

    ReplyDelete
  32. Te xடிரகான்நகரம்

    ReplyDelete
  33. விஜயன் சார், நண்பர் பழனிவேல் குடும்பத்திற்கு தொடர்ந்து ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து அதனை மறவாமல் வருடம் தோறும் தொடர்வது நல்ல செயல். இந்த முயற்சியில் எப்போதும் போல் உங்களுடன் இணைந்து இருந்து எங்களால் முடிந்த உதவியை செய்வோம். பழனி எங்கே இருக்கீங்க ☹️ we are missing you.

    ReplyDelete
  34. விஜயன் சார், அடுத்து அடுத்து புத்தகத் திருவிழாக்கள் நமது கேரவன் ஒவ்வொரு ஊராகச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. விற்பனை சிறக்கட்டும்.

    புதிய வாசகர்கள் கிடைக்கட்டும். நமது காமிக்ஸ் தொடர்பு விட்டுச்சென்ற பழைய வாசகர்கள் இதன் மூலம் மீண்டும் நமது காமிக்ஸ் பயணத்தில் இணைய இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் அமையட்டும்.

    இந்த இரண்டு ஊர்களில் நடக்கும் புத்தகத் திருவிழாவை குறிப்பிட்டு e-poster ஏதாவது தயார் செய்து கொடுங்கள் சார். அதனை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனுப்பி பலருக்கு நமது ஸ்டால்கள் இந்த புத்தகத் திருவிழாவில் உள்ளன எனத் தெரிவிக்கலாம் சார்.

    ReplyDelete
  35. விஜயன் சார், புத்தகத் திருவிழாவில் மறுபதிப்பு பற்றிய என தாழ்மையான கோரிக்கை - இதுவரை மறுபதிப்பு செய்யாத இதழ்களை மறுபதிப்பு செய்ய முன்னுரிமை கொடுங்கள் சார்.

    நமது மறு வருகைக்கு பிறகு இணைந்த காமிக்ஸ் நண்பர்கள் சமீபத்தில் படிக்காத கதையாக இருந்தால் அவர்களும் வாங்கி படிக்க வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.

    ReplyDelete
  36. யுத்த பூமியில் டெக்ஸ்
    ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
    விரட்டும் விதி
    சர்வமும் நானே

    ReplyDelete
  37. Waiting for our Wagon to reach Tiruvannamalai..

    ReplyDelete
  38. விஜயன் சார், எந்தையின் கதை முன் அட்டைப்படத்தை விட பின் அட்டைப்படம் வந்து ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு.

    ReplyDelete
  39. விஜயன் சார், புரவிகளின் பூமி குழந்தைகளின் பூமி இது. குழந்தைகள் படித்து மகிழ மிகச் சிறந்த புத்தகம்.

    ReplyDelete
  40. My Suggestion:

    1. தங்கத்தின் பாதையில் (டெக்ஸ் சிறுகதை)
    2. இருளோடு யுத்தம் (டெக்ஸ் சிறுகதை)
    3. கைதியாய் கார்சன் (டெக்ஸ் சிறுகதை)
    4.ஆறாது சினம் (டெக்ஸ் சிறுகதை)
    இந்த 4 புத்தகங்கள் சேர்த்து ஒரேயொரு புத்தகமாக வெளியிட்டால் SUPER!!!

    5 .இரத்த முத்திரை - டெக்ஸ்வில்லர்
    6. எமனோடு ஒரு யுத்தம் - டெக்ஸ்வில்லர்
    7. மரண தூதர்கள் - டெக்ஸ்வில்லர்
    8. மந்திர மண்டலம்
    9.மரண தூதர்கள்
    10. அதிரடிக் கணவாய்

    If all or any of the above Reprints in Color....Semmaya Irukkum...!!!

    ReplyDelete
  41. விழுப்புரத்தில்...புத்தக விழாவும்..நமது ஸ்டாலும் வருவது மிக்க மகிழ்ச்சி சார். இங்கேதான் எனது காமிக்ஸ் பயணம் , முத்து காமிக்ஸ் வாரமலருடன்..துவங்கியது. விழுப்புரம்.. மற்றும் சுற்று வட்டார சிறு நகரங்கள்...மாணவர்கள் நிறைந்த நகரம்...but...தேர்வுகள்...மும்முரமாக நடக்கும் சமயத்தில்..மாணவர்கள் வருகை சற்று சந்தேகமே... கோடை விடுமுறையில் (மே) மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஹய்யா. நா சனி, ஞாயிறு விழுப்பரத்துல இருப்பேன். நம்ம புக் ஸ்டால் செல்ல முயற்சி பண்றேன்.26,27 மீட்டிங் விழுப்பரத்துல.

      Delete
  42. நான் கோரிடுவது, இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ்

    " இந்த புத்தகங்கள் (சிறப்பு இதழ்கள் நீங்கலாக)..பரவலாக எல்லா புத்தக குழுக்களிலும்..கிடைக்கின்றன சார்...எனது choice..1-100 Muthu & -50 லயன்..which are not easily available...

    ReplyDelete
  43. சமீபத்தில் வந்து உடனே விற்றுத்தீர்ந்த சுஸ்கி விஸ்கி Reprint போடலாமே Sir

    ReplyDelete
    Replies
    1. ஹார்ட் கவர் இல்லாமல் சுஸ்கி விஸ்கி.

      Delete
    2. நளபாக விருந்தே ஆனாலும், அடிக்கடி சுவைக்கத் தந்தால் திகட்டிப் போகும் ! அப்புறம் ராயர் மெஸ் மீள்சுக்கு இணையாகி விடும் நண்பரே ! ஆறே மாதங்களுக்கு முன்பான ஒரு இதழை மறுக்கா வெளியிடவேணுமெனில் , இன்னும் மிகப் பெரிய வாசக வட்டம் அவசியம் !

      Delete
  44. மரண தூதர்கள்
    மந்திர மண்டலம்

    எஞ்சியிருக்கும் ஸ்பைடரின் கதைகள்..
    சட்டித் தலையனின் கதைகள்..
    புரட்சித் தலைவன் ஆர்ச்சி
    தங்க வேட்டை
    ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி
    நதி அரக்கன்
    ext..

    ReplyDelete
    Replies
    1. சர்ப்பங்களின் சாபம் தீரும் நாளெதுவென்று தேடி வருகின்றோம் சார் !

      Delete
  45. மாயாவி ,லூக், டெக்ஸ் எந்த கதையாயினும் மறுபதிப்பை இயலுமாயின் வண்ணத்தில் வெளியிடுங்கள் சார்.

    ஒரேயொரு மாயாவி கதையாவது வண்ணத்தில் ஹார்டு பவுண்ட் -ல்

    ReplyDelete
  46. ஆமோதிக்கின்றேன் சார். வரவேற்கின்றேன் சார்.

    ReplyDelete
  47. டெக்ஸ் - டிராகன் நகரம் & சர்வமும் நானே.

    ReplyDelete
  48. சூப்பர் சார்...அட்டைப்படம் அருமை....எந்தையின் கதைக்காக ஆவலுடன்..‌‌நமக்கு இரண்டாம் சுற்று அடுத்த வருடமேவா..அதற்கடுத்த வருடமா....பழனியின் காதல் படிக்க படிக்க அசத்துது....இதையும் வழக்கம் போல படித்து புன்முறுவல் பூப்பார் என்ற நம்பிக்கையில் கடப்போம்....அப்ப சித்திரை விருந்து அல்லது தமிழ் புத்தாண்டு மலரும் டசனுக்குள் உண்டல்லவா

    ReplyDelete
  49. விஜயன் சார், கடந்த சில மாதங்களாக நமது புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் அதிகமாக தென்படுகிறது. இது வாசிப்பின்/கதையின் வேகத்தை சில நேரங்களில் குறைப்பது போல் தெரிகிறது.

    வருங்காலங்களில் இதில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து இதனை சரி செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ப்ரூப் ரீடிங் பார்க்க நான் ரெடி எடிட்டர் சார்.

      Delete
    2. 45 ஆண்டு அனுபவம் கொண்ட தமிழாசிரியர் : M A தமிழ் மாணவியர் இருவர் ; வாசக நண்பர்களுள் பலர் ; 2 freelance proofreaders, இவர்களோடு ஞானும் !

      இந்த பிழைத்திருத்தப் படலத்தில் மண்ணைக் கவ்விய / கவ்வி வரும் பட்டியல் இது ! இது பற்றி ஒரு தனிப் பதிவே போடும் அளவுக்கு பின்னணி உள்ளது ! ஒரு சாவகாச நாளில் எழுதுகின்றேன் !

      Delete
    3. நம் நண்பர்களுள் முனைப்புக் காட்டிய முயற்சியாளர்கள் எண்ணிக்கை 7 so far ! நம்பர் எட்டாக இடம்பிடிக்க எண்ணினால் welcome புன்னகை ஒளிர் சார் !

      Delete
    4. ஆகஸ்ட் முதல் நான் ரொம்பவே free ஆக இருப்பேன். மே 31 அன்று பணி ஓய்வு. So நான் ரெடி. சார் ப்ரூப் ரீடிட.

      Delete
    5. நான் செயல்முறை படுத்தி பார்க்கிறேன் எடிட்டர் சார்.

      Delete
    6. அடடே பத்து சார், புன்னகை ஒளிர் சார் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

      Delete
    7. குறைந்தது மாசம் 2 செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் சரியாய் இரண்டு நாட்கள். Or 1.

      Delete
    8. @ Parani from Bangalore
      நாமெல்லாம் பத்து வயசுல இந்த பொம்ம பொஸ்தகம் படிச்ச போது நம்ம கண்ணுக்கு ஒரு எழுத்து பிழை கூட தெரிஞ்சது கிடையாது. இப்போ மறுபடி ஒரு பத்து வயசு பையனா உங்கள நினைச்சுக்கிட்டு இந்த பொம்ம பொஸ்தகம் படிச்சுப்பாருங்க. ஒரு எழுத்து பிழை கூட தெரியாது. "பொம்ம புஸ்தகம்ன்னா அனுபவிக்கணும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது"

      Delete
  50. பழனிவேல் அன்போடு ஆசிரியர் தான் விடும் கதையிலே
    பதிமூன்றே உன் நினைவில் வருவதால் நாம் இங்கு படிக்கிறோம்
    உன்னை எண்ணிப் பார்க்கையில் கண்கள் சொட்டுது
    அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது



    உண்டான பதிமூனு எங்கும் தன்னாலே வந்து போகும்
    மாயம் என்ன நண்பனே நண்பனே
    என்ன புக்கு வந்த போதும் என் மனது வாங்கி கொள்ளும்
    உந்தன் மனது தேடாது தோழனே
    எந்தன் தேடல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
    உந்தன் தேடல் என்னைத் தாங்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதத்தேடலல்ல
    அதையும் தாண்டி உனதானது

    பதிமூனயே தாலாட்டும் சாமியே நாம்தானே தெரியுமா
    பழனிசாமியே பதிமூனில் நீயும் சேர்த்தியே அதுவும் உனக்கு புரியுமா
    சுப லாலி லாலி லாலி லாலி
    பழனிசாமி லாலி லாலி லாலி

    ReplyDelete
    Replies
    1. இந்த காபி-பேஸ்ட் கவிஞரை கொஞ்சம் மூடாக்கு போட்டு மூடி உடுங்களே மக்களே ?

      Delete
    2. சார் வாய்ப்பே இல்லை அதற்கு. காட்டு ஆறு

      Delete
  51. ////இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ் ?/////

    ------இந்த வினாவுக்கு இங்கே நண்பர்கள் தத்தம் கலக்சன்ல இல்லாதவற்றை சொல்லி வருவதை பார்க்கும் போது எனக்கும் சில ஆசைகள்.....ஆசைகள் மட்டுமே. ஒரு டைம் ட்ராவலர் கருவி கிடைச்சா 1980கள்ல கால பயணம் சென்று கைப்பற்றி வந்திடுவேன்...

    1.மினிலயன் சம்மர் ஸ்பெசல்
    2.மினலயன் விண்டர் ஸ்பெசல்
    3.மினிலயன் ஹாலிடே ஸ்பெசல்

    4.லயன்-கொலைப்படை, இரும்பு மனிதன், சதிவலை, மீண்டும் ஸ்பைடர், திக்கு தெரியாத தீவு, அப்பல்லோ படலம்





    5.முத்து காமிக்ஸ்- சம்மர் ஸ்பெசல், முத்து ஸ்பெசல், ஆழ்கடல் அதிரடி, சைத்தான் சிறுவர்கள்

    6.ஜூனியர் லயன் காமிக்ஸ்-சூப்பர் சர்க்கஸ், புதிர் குகை, உலகம் சுற்றும் அலிபாபா

    7.பயங்கர பூனைகள், பிசாசுகுரங்கு, சிரித்துக்கொள்ள வேண்டும், பெளர்ணமி வேட்டை, பேட்மேன் கிறுக்கனா?,

    ReplyDelete
    Replies
    1. வாடகை சைக்கிளை எடுத்துக்கிட்டு சவாரி கிளம்பச் சொன்னா, நீங்க டைம் மிஷினிலே தொத்திக்கிட்டீங்களே சார் ?

      Delete
  52. Replies
    1. இந்த லெஹெங்கா.. சுடிதார் .. நைட்டிலாம் ஆருக்கும் வாணாமோ ஸ்டீல் ? அத்தினி பேருக்குமே மேக்சிய போட்டு விட்ரலாமா ?

      Delete
    2. இல்லன்னா அதுல வைக்குற பாக்கட் சைஸ் சார் ....லிஃப்கோ டிக்ஸ்னரி கணக்கா

      Delete
  53. வித்தியாசமான ஆசையாய் உள்ளதே சார் !

    ReplyDelete
  54. Tex மறுப்பதாக வண்ணத்தில் விரும்புவது, மெக்சிகோ படலம், மரண தூதர்கள், ரத்த முத்திரை ,ரத்த நகரம்,

    சந்தா வாசகர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட 35 பக்கம் டெக்ஸ் கதைகளை, அதே 35 பக்கங்களுடன் தனித்தனியாக வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன திருத்தம் சார். அது 16 பக்க டெக்ஸ்.

      Delete
  55. //லக்கி, டெக்ஸ்& மாயாவி---இந்தக் கடைசிப் 11 ஆண்டுகளில் வெளிவந்து, தீர்ந்து போன இதழ்களுக்குள்ளிருந்தான தேர்வுகளை மட்டுமே ப்ளீஸ் ?!..//

    இரும்புக்கை மாயாவி கேள்விகளுக்கு அம்பாற்பட்டவர் சார்....
    2015முதல் மறுபதிப்பானவற்றில் தற்போதைக்கு கையிருப்பில் உள்ளவற்றை தவிர மீதி அனைத்தும் தட்டி தள்ளலாம்....ஒரு தொகுப்பாக டெக்ஸ் ரேக் போல இரும்புக் கையாருக்கு தனி ரேக் ஒதுக்கிடலாம் சார்... ஒன் லாஸ்ட் டைம் ஃபுல் ஸ்விங்கில அவரை ட்ரை பண்ணிடலாம்... இந்த ஆண்டு முழுமைக்கும் சிறு நகரங்களில் தான் புத்தக விழா எனும் போது அங்கே நவயுக கதைகள் எடுபடாது என்பதே நிலவரம்...

    கூடவே சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசலில் வந்த இரும்புக் கையாரின் "எட்டுக்கர எத்தன்"--- முழு நீள சாகஸத்தையும் களம் இறக்கலாம் சார்....
    2012ல சட்டுனு ஸ்டாக் தீர்ந்து போயிட்டதாலும் இரும்புக் கையாரின் ரசிகர்களுக்கு இது முழுமையாக கிட்டாததாலும் இது செம ஹிட் ஆகும் சார்

    ReplyDelete
  56. லக்கி லூக்.......

    1.லயன் கம்பேக் ஸ்பெசல்ல வந்த, "ஒற்றர்கள் ஓராயிரம்" தனியாக..

    2.லயன் நியூ லுக் ஸ்பெசலில் வந்த," பனியில் ஒரு கண்ணாமூச்சி"--- தனியாக...

    3.பூம் பூம் படலம்- வித்தியாசமான அட்டையுடன்...எத்தனை முறை வாசிச்சாலும் மறுபடி வாசிக்க தூண்டும் லக்கி.. இதெல்லாம் ஸ்டாக் அவுட் ஆகாமல் புதிய ரசிகர்களுக்கு கிடைக்கும் படி எப்போதும் பார்த்துக்கொள்ளலாம் சார்.. லயனோட அடையாளங்களில் இந்த கதையும் உண்டு...

    4.ஒரு பட்டா போட்டி

    5.திருடனும் திருந்துவான்

    6.தரைக்கடியில் தங்கம்

    7.ஒற்றைக்கை பகாசூரன்

    8.தனிதனியாக லக்கி க்ளாசிக்குகளில் வந்த இரு பொடியர்களையும் இணைத்து, "பொடியர்கள் ஸ்பெசல்"--ஆக "அதிரடி பொடியன்& பயங்கர பொடியன்"- இணைந்த "பொடியன் ஸ்பெசல்".---இதுவும் ஆல்பம் லக்கி டாப்களில் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. தனிதனியாக லக்கி க்ளாசிக்குகளில் வந்த இரு பொடியர்களையும் இணைத்து, "பொடியர்கள் ஸ்பெசல்"--ஆக "அதிரடி பொடியன்& பயங்கர பொடியன்"- இணைந்த "பொடியன் ஸ்பெசல்".---இதுவும் ஆல்பம் லக்கி டாப்களில் உண்டு!/ சூப்பர்+

      Delete
  57. டெக்ஸ் - சர்வமும் நானே, டிராகன் நகரம்
    லக்கி லூக் - பூம் பூம் படலம்

    ReplyDelete
  58. சார், 94இல் முத்துவில் வந்து அனைவரையும் கவர்ந்த மறக்க முடியாத ஹிட்களான
    ஜான் ஸ்டீலின் "மாண்டு போன நகரம்", ஜெனரல் கஸ்டரின் "ஒரு வீரனின் கதை"
    இரண்டையும் வண்ண மறுபதிப்பாக பார்த்திட ஆசை. இத்தனை வருடங்கள் கடந்தும் என் டாப் 15 கதைகளுக்குள் இவற்றுக்கும் இடம் உண்டு.

    ReplyDelete
  59. டெக்ஸ் வில்லர்ல என்ன தேவை.......????

    *வாமன டெக்ஸ்கள்.....* (பெயர் உபயம்: மரியாதைக்குரிய அன்பின் செனா அனா)

    ரொம்ப நாட்களாக சந்தாவில் உள்ள வாசகர்களுக்கு ஏதாவது இலவசமாக செய்யனும் என்ற எடிட்டர் சாரின் எண்ணத்தில் விளைந்தவை இவைகள்....

    இத்தாலியில் அறிமுக கதாசிரியர் & ஓவியர்கள்-சில சமயம் எஸ்டாபிளிஸ்ட் படைப்பாளிகளும் 32பக்கத்தில் சின்ன கதைகளை சொல்ல பழகினர்... 32x5=160பக்கங்களில் கலரில் இவைகள் அங்கே செம ரகளை செய்தன....

    இலவசமாக தர இவற்றை எடிட்டர் கையில் எடுத்தார்... இலகுவாக பிரிக்க அமைந்திருந்ததும் ஒரு காரணம்...

    2017ன் இறுதியில் அறிவிக்கப்பட்ட சந்தா2018 அறிவிப்பு சமயத்தில் இவைகள் நிறைய விவாதங்களை கிளப்பின...

    ஆனால் அவைகள் 2018ல ரீலீஸ் ஆனபோது சக்கை போடு போட்டன.....😍😍😍😍

    2018ல 6கதைகள் இப்படி ஆல்டர்நேட் மாதங்களில் சந்தாதாரர்களுக்கு தரப்பட்டன....

    கடைகளில் & முகவர்களிடம் வாங்கும் ரசிகர்களுக்கு இந்த டெக்ஸ் இல்லையா என்ற யதார்த்தமான கேள்வி எழ, 3 கதைகள் வந்தபின் ஒரு தொகுப்பாக வெளிவரும் ரூ90விலையில் என அறிவித்தார் எடிட்டர்....

    அதன்படி முதலில் வந்த இந்த

    *விரட்டும் விதி*
    *கடைசிப்பலி*
    *இரவுக்கழுகின் நிழலில்*

    ---3ம்இணைந்த தொகுப்பு ஆகஸ்ட் 2018ல வெளியானது, ஈரோடு விழாவில்... சரியான சேல்ஸ்... இதுவும்...😍😍😍

    2வது தொகுப்பும் இதே பாணியில் அதிரடி காட்டியது...

    ReplyDelete
    Replies
    1. 2018ன் தடாலடி வரவேற்பை தொடர்ந்து 2019லும் இந்த வாமன டெக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக தர ப்ளானிங் பண்ணப்பட்டது....

      இம்முறை 3மாதங்களுக்கு 1மினி என 4 புத்தகங்கள் அறிவிக்கப்பட்டது...

      பின்னர் ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்ற எண்ணம் போல...

      1.வெளிச்சத்துக்கு வந்த நிழல்

      2.நட்புக்கு நாட்களேது

      3.தகிக்கிம் நியூ மெக்சிகோ

      4.ரெளத்திரம் மற

      இம்முறையும் 2வது முறையாக இவைகள் பட்டையைக்கிளப்பின...😍😍😍

      ஒரே தொகுப்பாக ஜனவரி2020ல இது வெளியானுது... வழக்கம்போல சில நாட்களிலேயே ஸ்டாக்கும் அவுட்😉😉😉

      இரு ஆண்டுகளின் அதிரடியான சக்சஸ் 3வது ஆண்டாக தொடர்ந்து 2020லயும் மினி TeX கள் ப்ளானிங் பண்ணப்பட்டன....

      ஆனா மொத கதையாக தேர்வான *இருளோடு யுத்தம்* அமானுஷ்ய பின்னணி கொண்டு மார்ச்2020ல வெளியானது.... கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டது.
      தொடர்ந்தது பேரிடர் நாட்களின் முதல் அத்தியாயம்.... லாக்டவுன்1....

      இந்த இடைவெளியை அடுத்து ரெகுலர் இதழ்களே வெளியாக தடுமாறின... இலவச டெக்ஸ்கள் எங்கே வெளிவர???

      Delete
    2. *The pinnacle of mini TeX*

      லாக்டவுன்1க்குப் பிறகு 2020ன் மீதி சந்தா இதழ்களையே ,2021மார்ச் வரை எடிட்டர் நீட்டித்தார்...

      2015முதல் சந்தாதாரர்களுக்கு ஏதாவது கிஃப்ட் தரணும்னு சொல்லி கொண்டே இருப்பார்.... 2017ல் அதை செயல்படுத்தியும் காட்டினார்... காலண்டர், மேக்னட் ஸ்டிக்கர், டைம்டேபிள், லேபிள்ஸ், குழந்தைகள் கலரிங் புக்.....என மாதம் ஒரு கிஃப்ட் கிடைத்தது...

      அடுத்த ஸ்டேஜ் இந்த மினி டெக்ஸ்கள்....

      இந்த மினி டெக்ஸின் உச்சம், பெரிய சைசில் 2020தீபாவளி மலருடன் இலவசமாக அளிக்கப்பட்ட *விண்டர் ஸ்பெசல்* என்ற 32 பக்க ஆயில் பெயிண்டிங் சித்திரக்கதையே....

      இத்தாலியில் *Prisoner of Apache* என வந்தகதையே இது... கடந்த மினி டெக்ஸில் விழுந்த அடியை இது ஈடுகட்டியதோடல்லாமல் சும்மா டாப்புக்கு போனது....

      பெரும்பாலான நண்பர்கள் பார்வையில் மெயின் புத்தகத்தை விட இதுவே டாப்...😍😍😍😍

      Delete
    3. *Merging of mini TeX*

      துவக்கத்தில் இலவச இணைப்பாக தனித்தனியாக வெளியிடப்பட்டன மினி TeX கள்...சந்தா வாசகர்கள் மட்டுமே படிக்க இயன்றது...

      பின்னர் விற்பனைக்கு அந்த இலவச புத்தகங்கள் ஒரே தொகுப்பாகவும் வெளியாகி, அனைத்து வாசகர்களையும் அடைந்தது.

      லாக்டவுன் காரணமாக ஒரு மினியோடு நிறுத்தப்பட்டு இருந்தது...

      அறிவிக்கப்பட்ட பாக்கி இரு மினிகளையும் ஒரு தொகுப்பாக்கி நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்தார்.
      ... சந்தா வாசகர்களுக்கும் அதே புக், விலையின்றி வழங்கப்பட்டது...

      " *தங்கத்தின் பாதையில்* &
      *மின்னும் சொர்க்கம்** "- இரு மினி கதைகள் இடம் பெற்றிருந்தன....!!!

      2ம் நல்ல வரவேற்பைப் பெற்றன....
      தொடர்ந்து லயன்400, தீபாவளிமலர்களுடன் இவைகள் தொடர்கின்றன.

      இலகுரக ரீடிங், அனைவருக்கும் பிடிக்கும் கியூட் சைஸ், எல்லோரையும் ரீச் ஆகும் விலை.. என பல ப்ளஸ் பாயிண்ட்களை தன்னகத்தே கொண்டுள்ள வாமன டெக்ஸ் தொகுப்புகள் புத்தக விழாக்களில் சக்கை போடு போடும்சார்....

      தொடர்ச்சியாக விழாக்களில் இவற்றை ரீலீஸ் செய்வதோடு, ஸ்டாக் அவுட் ஆகாம பார்த்து கொண்டால் இந்த மினி ராக்கெட்கள், குண்டு டெக்ஸ்களுக்கே போட்டியை தரவல்லவை...

      உடனடியாக களமிறக்குமாறு அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் சார்.....

      Delete
    4. ஆமாம். டெக்ஸ் மினி கதை தனி தனி புக்காக வெளியிடலாம் தொடர்ச்சியான புத்தக கண்காட்சிசக்காக. கவர்ச்சியான விலையில்,

      Delete
    5. அருமையான கட்டுரை டெக்ஸ். வாமன டெக்ஸுக்கு ஜேஜே. இதை வெளியிடுங்கள் சார்.

      Delete
    6. தேங்யூ KS.... இந்த வாமன டெக்ஸ்களின் தொகுப்புகளை மிஸ் செய்கிறோம்....தோராயமாக ரூ 40க்கு தனி மினி, ரூ100விலையில் 3மினி, ரூ150க்கு 5னு மாறுபட்ட காம்பினேசன்களில் களம் இறக்கினா தூள் கிளம்பும்....
      நீண்ட கால விற்பனைக்கு உத்தரவாதம் இந்த மினிகள்....

      Delete
  60. லக்கி, டெக்ஸ்& இரும்புக்கையார் மட்டுமே தாங்கள் கேட்டுள்ளீர்கள்...

    புத்தக விழாக்களில் அதிரடி காட்டக்கூடிய மற்றொருவர் கேப்டன் டைகர்...

    இவரது கதைகள்ல குறிப்பிடத்தக்க ஸ்டாக் ஏதும் இல்லை போலங் சார்....

    1.தங்க கல்லறை

    2.தோட்டா தலைநகரம்

    3.இரத்தக்கோட்டை

    4.மின்னும் மரணம்(6+5என இரு தொகுப்புகளில்)

    5.என் பெயர் டைகர்

    கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரலாம்சார்... முதல் கட்டமாக தங்க கல்லறை, நார்மலாகவே புத்தகவிழாக்களுக்கு மட்டுமே; கலக்டர் எடிசன் ஆக பிற்பாடு பார்த்து கொள்ளலாம்...

    புக் ஃபேர்ல தர எதுவும் இல்லை என்பதை கவனிக்க வேண்டுகிறோம் சார்..

    அப்படியே அந்த இளமையில் கொல்2&3---வண்ண மறுபதிப்பு நீஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலமாக பாக்கியுள்ளதுங் சார்...

    ReplyDelete
    Replies
    1. """"அப்படியே அந்த இளமையில் கொல்2&3---வண்ண மறுபதிப்பு நீஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலமாக பாக்கியுள்ளதுங் சார்...""""
      ஆமாம் எடிட்டர் சார்.

      Delete
  61. @இரும்புகை மாயாவி..😍😘
    முத்து வாரமலர் Reprint.👍.
    அதேமாதிரி ..பேப்பரில்..
    அதே சைசில்..
    அதே contentகளுடன்...😃
    😍

    வந்தா எப்படி இருக்கும்..😃😀😍😘💪👌👍

    ReplyDelete
  62. டெக்ஸ் கிளாசிக் சாகசத்தில் ஏதாவது ஒரு மறுபதிப்பு

    அல்லது

    2012க்கு பிறகு வந்ததில் இருந்து எனில் sold out ஆன கறுப்பு வெள்ளை சாகசம் ஏதாவது ஒன்று வண்ண மறுபதிப்பாக.

    ReplyDelete
    Replies
    1. இருளோடு யுத்தம் கலர் டெக்ஸ் சந்தாவில் இல்லாதோருக்கு கிடைக்கவில்லை ‌‌ அதை மறுபதிப்பு செய்யலாம் .

      Delete
  63. 2012 இல் இருந்து 2017 வரை வெளியான லக்கிலுக் இதழ்களை மறு பதிப்பு செய்யவும்.
    ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு ஈரோடு புத்தக விழாவுக்கு பின்னே தான் நம் காமிக்ஸ் வருவதே தெரிந்திருக்கிறது அதனால் தான்

    ReplyDelete
  64. நான் பிறந்து வளர்ந்த விழுப்புரத்தில் நீங்கள் மறுபடி கால் பதிப்பது குறித்து மகிழ்ச்சி. கத்தி முனையில் மாடஸ்டி (லயன் முதல் இதழ்) & சூப்பர் சர்க்கஸ் (ஜூனியர் லயன் முதல் இதழ்) & துப்பாக்கி முனையில் (மினி லயன் முதல் இதழ்) மூன்றும் பின் பிரிக்காமல் வாங்கியது பசுமையான நினைவு. அதற்குப் பிறகு நமது இதழ்களை வாங்க பாண்டிச்சேரி, விருத்தாசலம், திருவெண்ணெய்நல்லூர் என்று சுற்றியலைந்ததும் நீங்காத நினைவுகள்.

    என்னையும் நண்பன் சரவணனையும் போல வேறு காமிக்ஸ் வாசகர்கள் இருந்தார்களா என்று இதுவரை தெரியவில்லை.

    இப்புத்தக விழா பழைய புதிய வாசகர்களை (வாங்குபவர்களை) உங்களுக்கு பெற்றுத்தர நல்வாழ்த்துகள்.

    டைகர் கதைகள் மேக்ஸி அளவில் வண்ண மறுபதிப்புகள் வந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  65. பழைய கதைகள் எதுவாகினும் ரீ பிரிண்ட்ல போடுங்க சார்..

    ReplyDelete
  66. தங்க கல்லறை, பறக்கும்பலூனில் டெக்ஸ்

    ReplyDelete
  67. சார் ஷெல்டனின் முதல் கதை. நம்ம NBS ல வந்த கதை அதை வெளியிடுங்கள் சார்.

    நிலவொளியில் நரபலி, தங்கக் கல்லறை, இளமையில் கொல் பாகம் 2,3

    வன ரேஞ்சர் ஜோ யானைக் கல்லறை, புதையல் பாதை, சிறுத்தைகள் சாம்ராஜ்யம்.

    லக்கியின் சூப்பர் சர்க்கஸ், பயங்கரப் பொடியன், அதிரடிப் பொடியன், பூம் பூம் படலம், புரட்சித் தீ

    இப்போதைக்கு தோன்றியது இது தான் சார். மீண்டும் நினைவுக்கு ஏதாவது வந்தால் வருகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு இருப்பது சாவதற்கு நேரமில்லை சார். பிளீஸ்

      Delete
    2. // சாவதற்கு நேரமில்லை சார் //

      Aalai vidunga Sami:-)

      Delete
    3. பரணி திகிலில் வந்த அந்த கதையை படித்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நான் சிறுவனாக இருந்தபோது அந்த கதையை குறைந்து 100 முறை படித்து இருப்பேன். இப்போது படித்தாலும் கொஞ்சமும் சலிக்காத கதை இது.

      Delete
    4. //சார் ஷெல்டனின் முதல் கதை. நம்ம NBS ல வந்த கதை அதை வெளியிடுங்கள் சார்.//

      +9

      Delete
    5. //லக்கியின் சூப்பர் சர்க்கஸ், பயங்கரப் பொடியன், அதிரடிப் பொடியன், பூம் பூம் படலம், புரட்சித் தீ//

      +9

      Delete
    6. ?????இளமையில் கொல் பாகம் 2,3/////
      + 55555

      Delete
    7. ////பயங்கரப் பொடியன், அதிரடிப் பொடியன்/////
      + 55555

      Delete
    8. Kumar @ I read the story again 2years back, not impressed. No story keep running. I am sorry to say this

      Delete
  68. 1. குறுகிய காலத்தில் sold out ஆன "கழுகு மலை கோட்டை" வண்ண புத்தகம்
    2. மீண்டும் "மின்னும் மரணம்"

    ReplyDelete
  69. So மேற்படி 3 தொடர்களிலும் சரி, இன்னும் ஓரிரு prime நாயகர்களின் தொடர்களிலும் சரி, நீங்கள் பார்த்திட விரும்பும் மறுபதிப்புகள் பற்றிய பரிந்துரைஸ் ப்ளீஸ் ? ///


    சிறுத்தைகள் சாம்ராஜ்யம்..
    புதையல் பாதை + யானைக் கல்லறை
    மூன்றுமே வனரேஞ்சர் ஜோ வின் கதைகள்..! மூன்றையும் வண்ணத்தில் ஒரே இதழாக பரிந்துரைக்கிறேன்..!

    வாய்ப்பில்லை என்றால் கார்சனின் கடந்த காலம் (லினாவின் "தப்பியோடி காணத்துடிக்கிறேன்.. அந்தச் சின்னப்பெண்ணை.. நான் பிரிந்துவந்த காதல் தேவதையை" பாட்டுடன்)

    ReplyDelete
    Replies
    1. பிளஸ்சோ பிளஸ்

      Delete
    2. கா.க.கா.....க்கு ஆயிரம் ப்ளஸ்கள்.....

      Delete
    3. கண்ணனாரின் கோரிக்கைகளை வரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன் சார்.

      Delete
    4. // சிறுத்தைகள் சாம்ராஜ்யம்..
      புதையல் பாதை + யானைக் கல்லறை
      மூன்றுமே வனரேஞ்சர் ஜோ வின் கதைகள்..! மூன்றையும் வண்ணத்தில் ஒரே இதழாக பரிந்துரைக்கிறேன்..! //

      Out of syllabus கண்ணா :-)
      But I like this choice!

      Delete
    5. // சிறுத்தைகள் சாம்ராஜ்யம்..
      புதையல் பாதை + யானைக் கல்லறை
      மூன்றுமே வனரேஞ்சர் ஜோ வின் கதைகள்..! மூன்றையும் வண்ணத்தில் ஒரே இதழாக பரிந்துரைக்கிறேன்..! //
      +55555

      Delete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. எமனின் திசை மேற்கு

    ஷெல்டனின் முதல் கதை

    NBS இதழ்ளில் வந்த கதைகள்

    ReplyDelete
    Replies
    1. ///எமனின் திசை மேற்கு////
      இது கிராபிக் நாவல் என நினைக்கிறேன்.

      Delete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. கதலும் கடந்து போகும்.

    அராஜகம் அன்லிமிடெட்.

    சிங்கத்தின் சிறு வயதில்.


    பாலைவனத்தில் ஓரு கப்பல்.

    கார்டனின் கடந்த காலம்.

    ரௌத்திரன் மற.

    காற்றுக்கு ஏது வேலி.

    சிகப்பாய் ஒரு சொப்பனம்.

    தங்க கல்லறை.

    ReplyDelete
    Replies
    1. அராஜகம் அன்லிமிடெட்

      பாலைவனத்தில் ஓரு கப்பல்.


      ரௌத்திரம் மற.

      காற்றுக்கு ஏது வேலி.

      சிகப்பாய் ஒரு சொப்பனம்.

      Delete
  74. ஷெல்டனின் புத்தகங்கள் அனைத்தும் கோடோனை காலி செய்து போய் விட்டார்கள் என்றால் இவரின் மறுபதிப்பு செய்யலாம் இல்லை என்றால் "பிக் நோ".

    ReplyDelete
  75. விஜயன் சார்,
    உங்களுக்கு தெரியும் எங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன உங்களுக்கு நன்றாக தெரியும். அதே நேரம்
    குடோனில் மறுபதிப்பு செய்து காலியான புத்தகம் எது அல்லது எந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்தால் விற்பனையில் தூள் கிளப்பும் என நினைக்கிறீர்களோ அந்த கதையை தயார் செய்து விடுங்கள் சார்! நாங்கள் படிக்க ரெடி!

    ReplyDelete
  76. @Edi Sir..

    இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் 2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு முழுவதும் *புத்தக கண்காட்சிகள் நடத்த ரூ.10.00 கோடி ஒதுக்கீடு* செய்யப்பட்டுள்ளது...😍💐🌷

    💪👌👍மகிழ்ச்சியான அறிவிப்பு..😍😘😃😀

    Edi Sir..
    வரும் ஆண்டிலும் நம் கேரவன்கள் தமிழ்நாடு எங்கும் அணிவகுக்க தயாராக வைத்திடுங்கள்..🙏❤🚚🚚🚚

    ReplyDelete
    Replies
    1. இந்தாண்டின் துவக்கத்திலேயே இது அனைத்துப் பதிப்பகங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட விஷயம் சார் ! ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாய் 4 விழாக்கள் அரங்கேறுகின்றன - இதோ இப்போது கூட

      *திருவாரூர்
      *திருவண்ணாமலை
      *விழுப்புரம்
      *நாகர்கோயில்
      *ஆவடி

      என்ற பட்டியல் உள்ளது நம் முன்னே ! நாம் தான் நமது ஆட்பலத்துக்கு ஏற்ப மட்டும் பங்கேற்கிறோம் !

      Delete
  77. பள்ளி சிறுவர்களை கவர்ந்திட ஜூனியர் லயனில் வந்த அது சைசில்
    உலகம் சுற்றும் அலிபாபா, சொர்க்கத்தின் சாவி,
    சாகச வீரன் சிந்துபாத் ,
    மாயத்தீவில் அலிபாபா

    போன்ற கதைகளை வண்ணத்தில் முயற்சி செய்யலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. நிறையவாட்டி பதில் சொன்ன கோரிக்கைகளுள் இதுவும் ஒன்று நண்பரே ! அந்த அலி பாபா கதைகளுக்கு படைப்பாளிகளிடமே டிஜிட்டல் கோப்புகள் கிடையாது !

      Delete
    2. தவிர, கையில் 20 ரூபாயை வைத்துக் கொண்டு ஏதாச்சுமொரு புக்கைத் தேர்வு செய்ய அலை பாயும் மாணவர்களுக்கு அந்த பட்ஜெட்டுக்கு அனுசரிதன்றோ நாம் திட்டமிட வேண்டியிருக்கும் ? வண்ணத்தில் அச்சிட்டு, ஒரு டிஷ்யூ பேப்பரைக் கூட சொற்ப விலைகளுக்கு இன்றைக்கு வழங்க இயலாது சார் !

      Delete
    3. But மறுபடியும் கோப்புகளை கோரி கேட்டுப் பார்ப்போம் ; maybe இப்போது படைப்பாளிகள் அவற்றை மீட்டிருந்தனர் எனில், கார்ட்டூன் வரிசையில் இறக்கி விடலாம் தான் ! இதோ - ஸ்பைடர் தொடரில் & மாயாவி தொடரில் ஒரு வண்டி முந்தைய கதைகளை டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றியுள்ள தகவல் நேற்றிரவு கிட்டியது ! அது போல் இதனிலும் ஏதேனும் வாய்ப்புண்டா என்று பார்க்கலாம் சார் !

      Delete
  78. டெக்ஸ் .கார்சனின் கடந்தகாலம் கலர் மினி டெக்ஸ் அனைத்தும். கேப்டன் டைகர்.தங்கக்கல்லறை.தோட்டா தலைநகரம். லக்கி லூக்பயங்கரப்பொடியன், அதிரடிப்பொடியன், சூப்பர் சர்க்கஸ்

    ReplyDelete
  79. வன ரேஞ்சர் ஜோ... யானை கல்லறை சிறுத்தை வேட்டை உட்பட மூன்று புத்தகங்களை கலரில் கொண்டுவருவதை அனைவரும் ஆதரிக்கிறோம்... இன்றய இளம் வாசிப்பாளர்களுக்கும் இது உத்வேகம் தரக்கூடும்

    ReplyDelete
    Replies
    1. நிறைய நண்பர்கள் எனது வினாவை முழுசாய் உள்வாங்கியதாய் தெரியக் காணோம் நண்பரே & அந்தப் பட்டியலில் நீங்களுமே சேர்த்தி !

      2012 க்குப் பின்பாய் வெளியிட்ட இதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் கோப்புகள் ! அவற்றை மறுக்கா அச்சிடுவதென்பது மேகி பாக்கெட்டை உடைத்து நூடுல்ஸ் போடுவது போல் சுலபமானது !

      2012 க்கு முன்பான இதழ்கள் சகலமும் புராதன நெகட்டிவ் டெக்நாலஜி கொண்டவை & அவை எதுவும் இன்றைய அச்சு முறைகளுக்கு ஒத்துழைக்காதவை ! So அந்த நாட்களது இதழ்களை மறுபதிப்பு செய்வதாக இருப்பின், படைப்பாளிகளிடம் நவீன யுக டிஜிட்டல் கோப்புகளைக் கோரிப் பெற்று பிள்ளையார் சுழியிலிருந்து முழுசுமாய் பணிகளைத் துவக்கிட வேண்டும் ! And கணிசமான பழைய கதைகளுக்கு அவர்களிடமே டிஜிட்டல் files கிடையாது !

      So நான் 11 ஆண்டுகளுக்குள்ளான பட்டியலிலிருந்து உங்கள் மறுபதிப்புத் தேர்வுகளைக் கோரியதே இந்தப் பின்னணியில் தான் !

      Delete
  80. விழுப்புரம் புத்தக திருவிழாவில் ஏதேனும் புதிய புத்தகம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ஏடிஜி

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே ; 4 நாட்களுக்கு முன்பாய் தான் விழுப்புரம் & திருவண்ணாமலை விழாக்களில் இணைந்து கொள்ளும் திட்டம் இறுதி செய்யப்பட்டது ! Moreover ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சமாய் 20+ புத்தக விழாக்கள் வரும் ஆண்டினில் இருக்கும் போல் தெரிகிறது ! ஒவ்வொன்றுக்கும் ஒரு ரிலீஸ் திட்டமிடுவது next to impossible !

      Delete
  81. கார்சனின் கடந்தகாலம். *பழைய மொழிபெயர்ப்பில் .

    ReplyDelete
  82. மாஸ்கோவில். மாஸ்டர். தாங்களே. பல. வருடங்களாக. சொல்லி. கொண்டிருப்பதுDekshnamurthy

    ReplyDelete
  83. மாடஸ்டி: கழுகு மலைக்கோட்டை
    டைகர்: தங்கக் கல்லறை maxi
    டெக்ஸ்: காற்றுக்கென்ன வேலி
    அண்டர் டெக்கர்: பிணத்தோடு ஒரு பயணம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் // காற்றுக்கென்ன வேலி // double yes

      Delete
    2. //காற்றுக்கென்ன வேலி// Yes +10

      Delete
    3. If they are out of stock then editor sir can do the reprint

      Delete
  84. விஜயன் சார், நமது மறு வருகைக்கு பிறகு வந்த இதழ்களில் விற்பனையில் சாதித்து குடோனை காலி செய்து விட்ட இதழ்கள் எவை என நீங்கள் இங்கே பட்டியலிட்டால் அவற்றில் இருந்து நண்பர்கள் சிலவற்றை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். இந்த இதழ்களை தேர்வு செய்ய மேற்குறிப்பிட்ட விபரங்கள் தேவை அதனை உங்களால் மட்டுமே தரமுடியும். இல்லை என்றால் நீங்களே சிறந்ததை தேர்வு செய்து மறுபதிப்பு செய்யுங்கள்.

    தங்கக் கல்லறை மற்றும் கார்சனின் கடந்த காலம் போன்ற புத்தகங்கள் குடோனை காலி செய்து இருப்பார்கள் என நம்புகிறேன் எனவே மறுபதிப்புக்கு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் சார்.

    ReplyDelete
  85. பழைய கார்ட்டூன் கதைகள் கறுப்பு வெள்ளை என்றாலும் பரவாயில்லைங்கசார் புது மாணவவாசகர்கள் வாங்கும் வகையில் குறைந்த விலையில் மறுபதிப்பு கள் நிறைய வெளியிடுங்கள்சார்

    ReplyDelete
  86. But மறுபடியும் கோப்புகளை கோரி கேட்டுப் பார்ப்போம் ; maybe இப்போது படைப்பாளிகள் அவற்றை மீட்டிருந்தனர் எனில், கார்ட்டூன் வரிசையில் இறக்கி விடலாம் தான் ! இதோ - ஸ்பைடர் தொடரில் & மாயாவி தொடரில் ஒரு வண்டி முந்தைய கதைகளை டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றியுள்ள தகவல் நேற்றிரவு கிட்டியது ! அது போல் இதனிலும் ஏதேனும் வாய்ப்புண்டா என்று பார்க்கலாம் சார் !

    இதன் கதை விபரங்களை சொல்லுங்கள் சார்

    ReplyDelete
  87. ////ஸ்பைடர் தொடரில் & மாயாவி தொடரில் ஒரு வண்டி முந்தைய கதைகளை டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றியுள்ள தகவல் நேற்றிரவு கிட்டியது ! ///

    ----ஆஹா... அருமை சார்.

    என் மனங்கவர்ந்த "கடத்தல் குமிழிகள்"---ஐ இப்போதைய S70 சைஸில், டிஜிட்டல் பிரிண்டில காண ஆசையோ ஆசை....கொள்ளை ஆசைங் சார்....

    அந்த சிங்கம், புலி, கார், பஸ், நகைகளை குமிழிகள் கொண்டு போறதுலாம் அருமையா இருக்கும்....!!!

    க்ளைமாக்ஸ்ஸில அந்த கோப்ராவை ஆர்டினியும் பெல்ஹாமும் தரையடி ரயில் நிலையத்தில் போட்டு தள்ளுவது செம ட்விஸ்ட்.....

    &

    பாட்டில் பூதம் அடுத்த பேவரைட்...பூதத்தின் சவாங்கள் செமயா இருக்கும்....

    இன்னும் சில ஸ்பைடர் கதைகளை ரசிகர்கள் வாக்கெடுப்பு வாயிலாக முடிவு செய்து ஒரு ஸ்பைடர் ஸ்பெசல் ஆக போட வேண்டுகிறேன் சார்...

    டிஜிட்டல் ஸ்பைடர் கதைகளின் லிஸ்ட் வெளியிட்டால் அகமகிழ்வோம் சார்...

    அப்படியே அந்த இரும்பார் கதைகளின் லிஸ்ட்டும் நம்ம பத்து சார் செட்டுலாம் ஹேப்பியாக இருக்கட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சி சாரோட டிஜிட்டல் கிடைச்சா அந்த "உலகப்போரில் ஆர்ச்சி"-யையும் இணைத்து......

      அந்த போக்கர் விமானங்களின் அழகோ அழகு.....

      Delete
    2. ஆங்... டிஜிட்டல் கிடைக்குதோ இல்லையோ இப்போதைய S60 மாதிரி உலக போர் ஸ்பெசல் போட்டி என்றால் சார்... அள்ளிடுமே...

      1.உலகப் போரில் ஆர்ச்சி
      2.இரும்புக் கை நார்மன்- உலகபோர் பொங்கல் மலர்ல வந்தது
      3.ஏஜெண்ட் தாமஸ்ஸின் எமனுக்கு எமன்
      4.சாகஸ தலைவியின் உலக போர் கதைகள்-அது உலகபோரானு தெரியல
      5.பெருச்சாளி பட்டாலத்தின் உலகபோர் கதைகள்

      (வெயில்லாம் அதிகமாவுல, ஒரு ஆர்வந்தான்.....ஹி...ஹி...ஹி...)

      Delete