நண்பர்களே,
வணக்கம். நாயர் கடையிலே புச்சா ஒரு மாஸ்டர் டீ போட வந்தா - அடடே, கூட்டம் அள்ளுதே !! முன்னமே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் போண்டாவும், வடையும் சேர்த்தே போட்டிருக்கலாமோ ? Anyways காத்திருக்கும் பொழுதுகளுக்கென கணிசமான ஐட்டங்கள் ரெடியாகி வருகின்றன எனும் போது சீக்கிரமே ஜமாய்ச்சுடலாம் !
ஆன்லைன் புத்தக விழாவுக்கென பணிகள் ஒரு பக்கம் ஓடி வருகின்றன என்றால் - SUPREME '60s தடத்தின் இதழ் # 2 இன்னொரு பக்கம் தடதடத்து வருகின்றது ! And இம்முறை தலைகாட்டவுள்ளது நமது பப்லிமாஸ் கன்ன புகழ் சார்லி தான் ! 1970-களின் ஏதோவொரு பொழுதில், முதன் முதலாய் இந்த கொழு கொழு நாயகர் நமது முத்துவில் அறிமுகமான நாட்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்குமோ - ஞானறியேன் ; ஆனால் எனக்கு பளிச்சென்று நினைவில் உள்ளது ! "கடத்தல் ரகசியம்" என்றதொரு பாக்கெட் சைஸ் ஆல்பத்தில் இந்த டிடெக்டிவ் சார் entry ஆகியிருந்தார் ! வள வள ஆர்ட்பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு கதைகளின் ஒரிஜினல்கள் அந்நாட்களில் நமக்கு வந்து சேர்ந்திடும் and more often than not - அந்தப் பார்சல்களை நான் ஸ்கூலிலிருந்து திரும்பும் வரைக்கும் உடைக்காமலே முத்து காமிக்சின் ஆபீசில் வைத்திருப்பார்கள் ! நல்ல பெரியதொரு டார்க் மஞ்சள் நிற கவர் மேஜையில் காத்திருக்கும் - உள்ளாற வேதாளரையோ ; மாண்ட்ரேக்கையோ ; ரிப் கிர்பியையோ தாங்கி ! இம்முறை Buz Sawyer என்றொரு புதியவரின் கதையொன்றும் உள்ளுக்குள் இருக்க, எனக்கு முதற்பார்வையிலேயே காதல் - இந்த மனுஷன் மீது ! ஏனோ தெரியலை, ஆனால் அந்த கள்ளம் கபடமில்லாத புன்சிரிப்பும், கொஞ்சம் cartoony பாணியிலான சித்திரங்களும் பச்சக்கென மனதில் ஒட்டிக்கொண்டன ! கதையை வீட்டுக்குக் கொண்டு போய்ப் படிக்கும் பொறுமையெல்லாம் இல்லை ; அங்கேயே அமர்ந்து படித்த அந்தக் கதை தான் அடுத்த சில மாதங்களில் "கடத்தல் ரகசியம்" என்று ஒரு மஞ்சள் நிற அட்டைப்படத்துடன் வெளியானது ! So கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, the very same "கடத்தல் ரகசியம்" கதையினையும் உள்ளடக்கியதொரு "சார்லி ஸ்பெஷல்" இதழினை ரெடி செய்திடும் வேளையில், நிரம்ப மலரும் நினைவுகள் !
நீங்கள் 1.9K அல்லது 2K கிட்ஸாக இருந்து ; க்ளாஸிக் நாயகர்களோடு இப்போது தான் அன்னம், தண்ணீர் புழங்கிடுவதாக இருந்தால் - மீசையில்லாத ஜெமினி கணேசன் போலான இந்த டிடெக்டிவை உங்களுக்குப் பரிச்சயமிருக்கும் வாய்ப்புகள் குறைச்சல் ! Buz Sawyer என்ற நம்ம சார்லி - நாம் மாமூலாய்ப் பார்த்திடும் "கையிலே கன்" ரகத்து ஆக்ஷன் நாயகரெல்லாம் கிடையாது தான் ! "கால்நடைகளைக் காணோம்" என்ற புகார் வந்தாலும் களமிறங்குவார் ; கோடி ரூபாயைக் காணோமென்றாலும் துப்பறியத் துவங்கிடுவார் ! யதார்த்தமான பல மனிதர்கள் ; மித ரக வில்லன்கள் ; தெளிந்த நீரோடையாய் ஓடும் கதைக்களங்கள், என இவரோடு பயணம் பண்ணுவது - ஒரு விக்கிரமன் படம் பார்த்த feel good உணர்வினைத் தரத் தவறுவதில்லை ! Of course - நிச்சயமாய் இதற்கு மாற்று அபிப்பிராயங்கள் இல்லாது போகாது - but நீங்களாகவே சார்லியோடு ஒருவாட்டி டிராவல் செய்துவிட்டு அப்புறமொரு தீர்மானத்துக்கு வருவது நலமென்பேன் !
மொத்தம் 11 கதைகள் & அவற்றுள் ஒன்றே ஒன்று மட்டும் மறுபதிப்பு ! And சைசும் வழக்கமான MAXI அல்லாது, அதனில் பாதி சைசில், 392 பக்கங்கள் கொண்டிருக்கும் ஹார்ட் கவர் இதழிது ! So இந்த பழைய நாயகர் + புது format கூட்டணி பற்றிய உங்களின் எண்ணங்களை அறிந்திட எப்போதும் போல் ஆர்வத்துடன் காத்திருப்போம் ! அப்புறம் சின்னதாய் இக்கட ஒரு குறிப்பு : "புராதன நெடி நாசியை துளைக்கீ" என்ற ரீதியிலான stating the obvious சமாச்சாரங்கள் வேணாமே ப்ளீஸ் ! இது க்ளாஸிக் சரக்கிற்கான பிரேத்தியேகத் தனித்தடம் & காலத்தில் பின்னோக்கிப் போயே கதைத்தேர்வினைச் செய்தும் உள்ளோம் என்பதை நெற்றியிலே ஒட்டித் திரிகிறோம் எனும் போது - சமகாலத்து அளவுகோல்களை இங்கு நடைமுறைப்படுத்திப் பார்த்தலில் ஆதாயங்கள் இருந்திடப் போவதில்லை ! பீம்சிங் காலத்து black & white படங்களைப் பார்த்திடத் தான் டிக்கெட் வாங்கிடுகிறோம் என்பதை நினைவினில் இருத்திக் கொண்டால் திரையில் Schindler's List-ஐ மிஸ் செய்திட மாட்டோமல்லவா ?
ஒற்றை மறுபதிப்பு நீங்கலாய் பாக்கிக் கதைகள் சகலத்துக்கும் மொழிபெயர்ப்பு கருணையானந்தம் அங்கிள் தான் ! இப்போதெல்லாம் நேர்கோட்டுக் கதைகளில் பணியாற்றுவது எனக்கு 'டர்' அனுபவமாகவும், மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைகளில் பணியாற்றுவது அங்கிளுக்கு அயர்வு தரும் அனுபவமாகவும் அமைவதால் - எங்களுக்கு மத்தியிலான கோட்டை தெள்ள தெளிவாய்ப் போட்டுக் கொள்ள முடிகிறது ! So கோட்டுக்கு அப்டிக்கா நான் போறதே இல்லை and in fact இந்த ஆல்பத்தினை பெரிதாய் எடிட் செய்திட மெனெக்கெடவெல்லாம் இல்லாது பிழை திருத்தங்கள் மட்டும் செய்த கையோடு அச்சுக்கு அனுப்பிடவே சபலம் தட்டியது ! And வாகாய் நமது நண்பர் ஒருவரும் பிழை திருத்தம் பார்த்துத் தர முன்வர, மொத்தப் பக்கங்களையும் அவரிடம் தூக்கி அனுப்பி விட்டு இதர பணிகளுக்குள் மண்டையை நுழைத்து விட்டிருந்தேன் ! நண்பரும் ஒரே வாரத்துக்குள் மொத்தத்தையும் proof reading செய்து அனுப்பியிருக்க, 'ரைட்டு - பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாம் மைதீன் !' என்று சொல்லியிருந்தேன் ! இக்கட ஒரு குட்டி கொசுறு தகவல் ! 2012-க்குப் பின்பான நமது இரண்டாம் இன்னிங்சில் கிட்டத்தட்ட 475+ இதழ்களை வெளியிட்டிருப்போமென்று தோராயமாய் சொல்ல தோன்றுகிறது ! (Maybe a bit more ; or a bit less) இந்த 475+-ல் பிள்ளையார் சுழி முதல் சுப மங்களம் வரைக்கும் நான் பணியாற்றிடாத இதழே கிடையாது - ஒன்றே ஒன்று நீங்கலாய் !! The Mystery ஸ்பெஷல் என்றதொரு மர்ம மனிதன் மார்ட்டின் புக்கினை மட்டும் அம்மாதத்து பணிநெருக்கடி காரணமாய் தொடக்கூட எனக்கு முடிந்திருக்கவில்லை ; இம்மியும் எடிட் செய்திடாது வெளியிட்டிருந்தோம் ! அநேகமாக அதற்குப் பின்பாக இந்த "சார்லி ஸ்பெஷல்" தான் நான் மண்டையை நுழைக்கவே செய்திருக்கா இதழ் # 2 ஆக இருந்திடுமென்று தோன்றியது ! But நம்ம பப்லிமாஸ் சார்லியை வாசிக்காது கழற்றிவிட உள்ளுக்குள் கொஞ்சமாய் நெருட - சரி...மேலோட்டமாய், வேக வேகமாய் வாசிப்போமே என்று ஆரம்பித்தேன் ! போகப்போக எழுத்துப் பிழைகளும் நிறையவே கண்ணில் பட ஆரம்பித்தன & கதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் என்னை வசீகரிக்கவும் துவங்கின ! அப்புறமென்ன - கண்ணில்பட்ட பிழைகளைத் திருத்தியபடியே 11 கதைகளையும் 'ஏக் தம்மில்' ஒன்னரை நாட்களில் (சு)வாசித்தேன் ! உள்ளதைச் சொல்வதாயின் இந்த SMASHING '70s தடத்திலும் சரி, SUPREME '60s தடத்திலும் சரி, இத்தனை சுளுவாய் வாசிக்க எனக்கு சாத்தியப்பட்டோர் இருவர் தான் ! And they are : ரிப் கிர்பி & சார்லி ! வேதாளரில் கூட இந்த ஜாலியான யதார்த்தம் ஒரு மிடறு குறைவாக இருந்தது போல்பட்டது எனக்கு ! 11 கதைகளும் ஒவ்வொரு விதத்தினில் அமைந்துள்ளன & ஒவ்வொன்றையும் நீங்கள் நேரம் கிட்டும் போதெல்லாம் வாசிக்கலாம் ! So நான் நிரம்ப ரசித்த சார்லியை நீங்களும் ரசித்திடுவீர்களா ? என்பதை அறிய ஏப்ரலுக்கோ வெயிட்டிங் ! இதோ - சென்னை ஓவியர் + நமது டிசைனர் கோகிலாவின் கூட்டணியிலான அட்டைப்பட முதற்பார்வை & உட்பக்க டிரெய்லர் :
Moving on, V காமிக்ஸின் அடுத்த க்வாட்டருக்கான வரவேற்பு தெறி ரகம் என்பதைச் சொல்லியாக வேண்டும் ! காத்திருக்கும் ஏப்ரல் இதழில் ஜம்பிங் ஸ்டாரும், 'தல' டெக்ஸும் பட்டையைக் கிளப்பவிருப்பது ஒரு கூடுதல் காரணம் என்று புரிகிறது ; but still, V பெற்று வரும் இந்த கவனம் ரொம்பவே ஸ்பெஷல் ! And இந்த சுலப வாசிப்பு template சிறுகச்சிறுக வேரூன்றி விடும் என்ற நம்பிக்கையினை உங்கள் உற்சாகங்கள் தருகின்றன ! Fingers crossed !
அப்புறம் ஆன்லைன் புத்தக விழா சார்ந்த பணிகள் எதிர்பார்த்தது போலவே அத்தினி பேரது குறுக்குகளையும் இங்கே கழற்ற துவங்கி விட்டது ! "லட்சியம் ; நிச்சயம்னு பன்ச் டயலாக் பேசிப்புட்டு, லூசு கோர்த்து விட்ருச்சி ; இங்கே ஆளாளுக்கு நாக்கு தொங்குதுடோய் !" என்ற நம்மாட்களின் மைண்ட்வாய்ஸ் அனுதினமும் கேட்டு வருகிறது தான் - but நம் வண்டியை ஓட்டமெடுக்கச் செய்யும் பெட்ரோலே இது போலான சவால்கள் தான் எனும் போது, அதன் லேட்டஸ்ட் அத்தியாயத்தை எதிர்கொள்ள அந்தர்பல்டிக்களை சரளமாய் அடிக்க ஆரம்பிச்சாச்சு ! ஏப்ரலின் ரெகுலர் இதழ்களை அடுத்த சில நாட்களில் பூர்த்தி செய்து விட்டால் அப்புறம் full steam ahead தான் - ஆன்லைன் விழா சார்ந்த ஸ்பெஷல்களின் திக்கில் ! And ஆன்லைன் விழா நடந்திடும் வாரயிறுதி எதுவாக இருப்பினும், ஏற்கனவே சொன்னது போல - ஒரு சூப்பர் அறிவிப்பினை நடுவாக்கில் நுழைத்திடவும் all is ready !!
ஏப்ரல் இதழ்கள் எனும் போது - காத்திருக்கும் XIII Spin-off (எந்தையின் கதை) பற்றிச் சொல்லாது இருக்க இயலாதென்பேன் ! XIII தொடரின் ஒருசில மறக்கவியலா images உண்டெனில் - குட்டிப்பையன் ஜேசன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையிலொரு கரடி பொம்மையைப் பற்றியிருக்கும் சித்திரத்தை சொல்லிடலாம் ! அந்த டாடி ஜானதன் பற்றிய கதை தான் இந்த spin off எனும் போது, இ.ப.ரசிகர்களுக்கு இது நிரம்பவே முக்கியத்துவம் பெற்றிடும் என்பதில் ஐயங்களில்லை எனக்கு ! And இந்தக் கதைக்கென பேனா பிடித்த அனுபவம் நடப்பாண்டின் highlight-களுள் நிச்சயம் இடம்பிடித்திடும் எனக்கு ! பிரெஞ்சில் இந்த ஆல்பத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய மனுஷன், சும்மா பின்னிப் பெடல் எடுத்துள்ளார் & அவற்றை பிசகின்றி தமிழுக்கு கொணரும் முயற்சியானது எனது இவ்வாரத்து இரண்டரை நாட்களை தொடர் குட்டிக்கரணப் பொழுதுகளாக்கின என்று தாராளமாய்ச் சொல்லலாம் ! அதுவும் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் இடம்பிடிக்கும் தருணங்களெல்லாம் மாடு கழனித்தண்ணி குடிக்காத குறை தான் எனக்கு ! இந்த ஆல்பம் வெளியாகிடும் பொழுது நிரம்ப சுவாரஸ்யம் இல்லாது போயின் நிச்சயம் வியப்படைவேன் ! பழனி....this one's for you !! வாக்குத் தந்திருந்தது போலவே இந்த இதழிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையானது நண்பரின் குடும்பத்துக்குச் சென்றிடவுள்ளது ; so இயலும் பட்சத்தில் maybe ஒரு பிரதி கூடுதலாய் இந்த ஆல்பத்தினில் மட்டும் வாங்கிட முயற்சிக்கலாமே guys ? And தொடரவுள்ள ஒவ்வொரு ஏப்ரலிலும், "XIII அல்லது XIII Spin-off" என்ற இந்த நடைமுறை தொடர்ந்திடும் !
Bye all...மார்ச்சின் அலசல்களோடு தொடருவோமே ? See you around...have a fun Sunday !
First
ReplyDeleteபரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் புள்ளீங்களுக்கு வாழ்த்துக்கள் ! ஜெய் தோர்கல் !!
ReplyDeleteதோர்கல் வாழ்க
Deleteதேங்யூ சார்.
Delete😍😍😍😍
DeleteJust now finished answering all the questions
DeletePhew.
நன்றி ஆசிரியரே
Deleteநன்றி சார்
DeleteYae me 3
ReplyDeleteவந்துட்டேன் நான் வந்துட்டேன்
ReplyDelete10க்குள்ள
ReplyDeleteஏழு ஒரு மேஜிக்கல் நம்பர் என்பது நம்மிள் கித்னா பேத்துக்கு மாலும்்ஹை
ReplyDeleteDear editor sir
ReplyDeleteஇந்தப் பரிந்துரையை சொல்லலாமா என்று எனக்கு தெரியவில்லை புத்தகத்தின் அட்டைப்படம் வெளியிடும் பொழுது mockup பயன்படுத்துங்க அது புத்தகத்தை இன்னும் அழகாக காட்டும் எடுத்துக்காட்டாக https://www.freepik.com/free-psd/book-mockups-psd-editable-color-changeable-design_18995720.htm#query=book%20mockup&position=24&from_view=keyword&track=ais
மற்றும்
https://www.freepik.com/free-psd/hard-cover-book-mockup-with-plants_2827815.htm#query=book%20mockup&position=20&from_view=keyword&track=ais
இது புதிதாக புத்தகம் வாங்குபவர்களை இழுக்கும்
அருமையான ஐடியா @inigo. கூகுளில் சில mockup மாதிரிகளைப் பார்த்தபோது ஆச்சரியப்படவைத்தது!
Deleteபத்துக்குள்ள....
ReplyDeleteசெம்ம ஃபீல் good பதிவு சார். சார்லி பற்றி பேசியதால் பதிவும் ரொம்பவே ஃபீல் good ஆக உள்ளது.
ReplyDeleteV காமிக்ஸ் பெற்று வரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
நண்பர் பழனிக்காக இன்னும் ஒரு copy எக்ஸ்ட்ரவாக ஆர்டர் செய்து விடலாம் சார். உங்கள் மொழிபெயர்ப்பில் எந்தையின் கதையை படிக்க ஆவலுடன் நான்.
சீக்கிரமே ஏப்ரல் மாத வேலையை முடித்து விட்டு ஆன்லைன் புத்தக விழா பணியை தொடங்குங்கள் சார்.
பலப்பல லட்டுகளுக்கு வெயிட்டிங்.
// ஆன்லைன் விழா சார்ந்த ஸ்பெஷல்களின் திக்கில் ! And ஆன்லைன் விழா நடந்திடும் வாரயிறுதி எதுவாக இருப்பினும், ஏற்கனவே சொன்னது போல - ஒரு சூப்பர் அறிவிப்பினை நடுவாக்கில் நுழைத்திடவும் all is ready !! // ஆகா கேட்கவே ரொம்ப குஷியாக இருக்குதே. அறிவிப்பு வந்த உடன் cloud 9 தான் confirm
Deleteஇந்த ஆன்லைன் புத்தக திருவிழாவில் ரத்த படலம் எப்படி இருக்கும் என டேஸ்ட் பார்க்கலாம் என இருக்கிறேன்+ 10 comics ♥ 🎶 ❤
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஜெய் சார்லி..💪💪💪
ReplyDeleteவணக்கமுங்க.
ReplyDeleteஜெய் தோர்கல் १२५७७२८७९३
சார்லி ஸ்பெஷல்
ReplyDeleteகதையில்
வார்த்தைகள் அருமை.
படிப்பதற்கு
எளிமையாக
உள்ளது. படித்த
இரு பக்கங்களும்
ஆர்வத்தை
தூண்டும் வகையில்
உள்ளது
விஜயன் Sir க்கு
நன்றிகள்
// "லட்சியம் ; நிச்சயம்னு பன்ச் டயலாக் பேசிப்புட்டு, லூசு கோர்த்து விட்ருச்சி ; இங்கே ஆளாளுக்கு நாக்கு தொங்குதுடோய் !" /:
ReplyDeleteROFL 🤣
+1😃😀😀
Deleteஆஜர்
ReplyDeleteV காமிக்ஸ் பெற்று வரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
ReplyDeleteநண்பர் பழனிக்காக இன்னும் ஒரு copy எக்ஸ்ட்ரவாக ஆர்டர் செய்து விடலாம் சார். உங்கள் மொழிபெயர்ப்பில் எந்தையின் கதையை படிக்க ஆவலுடன் நான்.
சீக்கிரமே ஏப்ரல் மாத வேலையை முடித்து விட்டு ஆன்லைன் புத்தக விழா பணியை தொடங்குங்கள் சார்.
பலப்பல லட்டுகளுக்கு வெயிட்டிங்.
நன்றி : ஜம்ப்பிங் செயலர்
Me வந்துட்டன்...
ReplyDelete@சார்லி.. 😃மை டார்லி (ங்)😘😍..Welcome💐💐
ReplyDeleteI am waiting..for மம்மா's fight..😍😘😄😀
26th
ReplyDeleteஆன்லைன் புத்தக விழாவுக்காக ஆவலுடன் வெயட்டிங். ஆன்லைனில் கலந்துக்க முடியுதோ இல்லியோ அனைத்து புத்தகங்களையும் வாங்கிடப் போறேன்.
ReplyDeleteநானும் அண்ணா
Deleteநானும் தாத்தா
Deleteவாங்குவது என்று முடிவாகி விட்டது இதில் ஆன்லைன் என்ன ஆஃப்லைன் என்ன?
Delete///நானும் தாத்தா///
Deleteநீங்களும் தாத்தா ன்றது பார்த்தாலே தெரியுதே குருநாயரே.. அதை தனியா வேற சொல்லணுமா.?
கிட் ஈவி கண்ணு தெரியாம' நீங்கன்னு நெனச்சு அவர கூப்டுட்டாப்ல....
Delete@Edi Sir..😍😘
ReplyDelete#NBF 2023#😘
நிறைய பள்ளி குழந்தைகள் நம் தமிழ் காமிக்ஸ்களைபார்த்துவிட்டு ஆங்கிலத்தில் காமிக்ஸ் ஏதேனும் உள்ளதா என்று கேட்கிறார்கள்..😃
வாய்ப்பிருப்பின் நம்மிடம் உள்ள cinibooks களையும் களமிறக்கலாமே..😶😘
வணக்கம் நண்பர்களே!
ReplyDelete//475+-ல் பிள்ளையார் சுழி முதல் சுப மங்களம் வரைக்கும் நான் பணியாற்றிடாத இதழே கிடையாது - ஒன்றே ஒன்று நீங்கலாய் !! //
ReplyDeleteHats off Sir. அன்றிருந்த வீரியம் இன்று வரை குறையாமல் எழுதி சிங்க ராஜாவை கம்பீரமாக நடமாட செய்வது இமாலய சாதனை!! அதற்கு சூப்பர் ஸ்பெஷல் சல்யூட்!!
++++++++....+++
Deleteஆஹா....சார்லி . மிக்க மகிழ்ச்சி சார்.
ReplyDeleteநள்ளிரவு வணக்கம் நண்பர்களே.
ReplyDelete34வது
ReplyDeletesupreme 60 half maxi சைசில் தொடர்வது நலம்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு....
ReplyDeleteசார்லியை காண மற்ற இதழ்களை விட ஆவலாக காத்திருக்கிறேன் சார்..தாங்கள் சொன்னபடி இந்த க்ளாசிக் இதழ்களில் நான் ஒரே மூச்சில் படிக்க வைத்தது எனக்கும் ரிப்கெர்பி தான் ..எனவே கண்டிப்பாக சார்லியும் இதே போல் கலக்குவார் என்பது உண்மை...off maxi அளவில் எனும். பொழுது இன்னும் ஆவலை கூட்டுகிறது..
ReplyDeleteHI all, Good morning
ReplyDeleteகாலை வணக்கம் காமிக்ஸ் சகோஸ்
ReplyDeleteசார்லி கதைகள் படித்தது இல்லை
ReplyDeleteசகோதரரிகளின் ஆர்வத்தை பார்த்து சார்லி தேர்வு செய்து உள்ளேன் முதல் தடவை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
நமது டிடெக்டிவ் சார்லி இதழுக்காக ஒரு mockup செய்துள்ளேன். அதன் லிங்க்
ReplyDelete🥰👇👇👇
https://photos.app.goo.gl/VVhfp1n2KcGz3WhZ7 😊
👌
Deleteஅருமை!! ஆனால் இதைவிடவும் கிளுகிளுப்பான mockup ஏதாவது...
Deleteகண்டிப்பாக Data balance கம்மியாக உள்ள காரணத்தினால் இன்று மாலை அனுப்பி விடுகிறேன் .😁
Delete👌
Delete.எதுமாதிரியும் இல்லாமல் ஒரு புதுமாதிரி யான வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது சார்லிபுதிதாகப்படிப்பவர்களுக்கு.
ReplyDeleteDear Editor,
ReplyDeleteEagerly waiting for Charlie and the smaller bulkier book.I remember your question regarding panel sizes and the reconsideration of book size from maxi to this.Why no sirai meetiya sithirakathai and Napoleon pokkisham? Anyways eager to read Charlie.Teasers look awesome.Also wait to know about Book fair specials.I have subscribed for V comics 2nd quarter.V comics format is nice.Breezy reads.
Regards
Arvind
"நெப்போலியன் பொக்கிஷம்" சார்லியின் சாகசம் அல்ல ; விங்-கமாண்டர் ஜார்ஜினுடையது நண்பரே !
DeleteSorry
DeleteI didn't know much of both heroes stories.But heard about them in this blog.I have read few of Wing commander George but none of Charlies.
Regards
Arvind
சார் ஜார்ஜ் வரயில் முடிஞ்சா அத நிச்சயமா போடுங்க...நண்பர்கள் எதிர்பார்ப்பு அதிகம்...ரெண்டு பாகம் வருதுன்னு சொன்னது நினைவில்
Deleteசார்லிக்கு வெல்கம்..
ReplyDeleteஎனக்கு .சார்லியின் மகன் - போதைப் பொருள் வில்லங்கத்தில்-மாட்டிக்கொள்ளும் (தலைப்பு மாப்பிள்ளை என்று முடியும்). மிகவும் பிடித்த கதை..
சார்லி ஸ்பெசல் தயாரிப்பு பணிகள் முடிஞ்சி அட்டைகளை பார்க்கும்போது பரவசம் ஆகிறது....
ReplyDeleteவாழ்த்துகள் சார்லி ரசிகர்களுக்கு💐💐💐💐💐💐
ஒரு குண்டு புக் காதலனாக இதை நிச்சயமாக வாங்குவேன்..
ஆன்லைன் விழா சார்ந்த ஸ்பெஷல்களின் திக்கில் ! And ஆன்லைன் விழா நடந்திடும் வாரயிறுதி எதுவாக இருப்பினும், ஏற்கனவே சொன்னது போல - ஒரு சூப்பர் அறிவிப்பினை நடுவாக்கில் நுழைத்திடவும் all is ready !! //----
ReplyDeleteஆஹா...ஆஹா...
ஆன்லைன் விழாவுக்காக இப்போதே மனம் ஏங்குதுங் சார்....!!
அடடா பட்டய கிளப்பும் போல
Deleteஸாரி..i விக்ரம் Edi..
ReplyDeleteஎனக்கு புத்தகத் திருவிழாவிலும்-புக்ஸ்டா லிலும் வாங்க சிறந்த சாய் ஸ் சாக விளங்குவது நம்ம V_காமிக்ஸ்தான்.
மூன்று புத்தகங்களும் வாங்கி படித்து முடித்துவிட்டேன்..
//// இயலும் பட்சத்தில் maybe ஒரு பிரதி கூடுதலாய் இந்த ஆல்பத்தினில் மட்டும் வாங்கிட முயற்சிக்கலாமே guys ///
ReplyDelete--- உறுதியாக சார்....சந்தாவில் இருந்தாலும் கடையில் இன்னொரு பிரிதி வாங்கி அதில் தான் வாசிக்க போறேன்...அனில் போல...!!
ரெண்டு புக் வாங்குவதால் அணிலுக்கு ரெண்டு சுழி போடலாமே
Deleteபுக் ஸ்டாலில்-நம்ம காமிக்ஸ்களை பார்ப்பது-அதில் எதெல்லாம் விற்பனை ஆகிவிட்டன மீதி உள்ளவைகளை பார்வையிடுவது (Feel -. பண்ணுவது) ஒரு அனுபவம்..
ReplyDeleteநேற்று நாகர் கோவிலில்- பாரதிபுக்ஸ்டா லில்-மாடஸ்டியின் டபுள் ஆல்பம் ( மூன்று ) - மீண்டும் ஆர்டர் செய்து வாங்கியது என்று நினைக்கிறேன். பார்த்ததில் மகிழ்ச்சி..
Kanyakumari la comic book வாங்க கிடைக்கிறதா புக் ஸ்டால் name சொல்ல முடியுமா
Deleteசூப்பர் சார்....சார்லி பெரிதாய் கவர்ந்ததில்லை அன்றய வயதில்....இப்ப நீங்க விவரிப்பதும்அந்த பரிசு பொருள் தர ஒரு நாய் புரஃபசர்னு தேடிப் போன அட்டகாச உணர்வுக் கதை நினைவில்.....நீங்க சொல்வது போல் உணர்வுக் குவியலுக்காக ஏக்கத்துடன்...அட்டை நல்லாருக்கு....
ReplyDeleteஎந்தையின் கதை அடேயப்பா....பதிமூனை விட இவர் பிண்ணணிக்கு வான்ஹாம்மே குடுத்த பில்டப் அதிகமல்லவா...இவர் கம்யூனிஸ்ட் தீவிர சிந்தனையாளர்....அந்த அணு ரகசியத் தகவல்களால் கொல்லப் பட்ட நபர்கள் ரோஸ்மண்ட் சகோதரர்கள்...எங்கயோ போவார்....வாழ்நாள் குறைவென எழுதித் தள்ளினார்னு இவர் கதய தேடுனது அதிகம்....ஜேசன் ஃப்ளைக்கு இணையாக கவர்ந்தவர்... விரிவாக எனும் போது ஆஹா அட்டகாச அனுபவத்தை உங்க வரிகளும் உறுதி செய்யுது...தணியாத தாகத்துடன் காத்திருக்கிறேன் லார்கோ ஷெல்டன் பதிமூன்று கதைகள் போலவே......
சீக்கிரமா பதினஞ்சாம் தேதி தர முடியுமா...மார்த்தா...ஆலன் ஸ்மித் கதைகள் காட்னா முக்கிய நாயகர்கள் தரிசித்த ஏக்கம் தீரும்....முடிஞ்சா மிச்சக் கதைகள ஒரே தொகுப்பாக போடலாமே....காலம் ....உயிர்க்கொல்லி நோய்கள்னு யாரிருப்பார் என அச்சத்தோட ஓடுது...அடுத்த வருடம் ஸ்டீல் நினைவான்னு போட்டுக் கூடாதல்லவா....அதனால் உடனை போட்டுத் தாக்குங்க....நண்பர் பழனி நீங்க திருத்தும் போதே படிச்சிருப்பார்எனும் நம்பிக்கையில்..எக்ஸ்ட்ரா ஓர் எந்தை புக்குக்கு தபால் கட்டணம் அனுப்பனுமா சார்..பார்சல் இம்முறை பெருசாச்சே..
அப்புறம் முதன் முறையாக ஓர் பழம் கதை 60 ல நுழைந்தது சூப்பர் சார்
Deleteஜோன்ஸ் கதையை விட்டுடீங்க?
Deleteகுமார் ஜோன்ஸ் மேல் பெரிய எதிர்பார்ப்பதில்லை....ஆனாலும் மொத்தக் கதைகளும் வந்தா செமயாருக்குமே..
Deleteஇனிகோ சார்-நாகர் கோவில் டவர் ஜங்சன் (கலைவாணர் சிலை அருகில்)-ல்தான் பாரதிபுக்ஸ்டால் உள்ளது- இரண்டு மூன்று மாத லயன் -முத்து வெளியீடுகள் உள்ளன..
ReplyDelete(கன்னியாகுமாரி-எனக்கு தெரியாது-ஸாரி..)
ரொம்ப ரொம்ப நன்றி இளங்கோ அண்ணா நான் கேட்டது வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்க இருந்தாலும் ஓகே தான். சார் எல்லாம் கிடையாது வயது23 தான் ஆகுது ஹா ஹா😁😆🤣
Deleteசார் அப்படியே அசயாம உத்து பாருங்க...இந்த கொசுவத்திய சுத்திக் காட்டுறேன்...
ReplyDelete//and his original character name is Nick Raider.
Vijayan29 January 2012 at 12:38:00 GMT+5:30
அசடு வழிவது தான் நமக்கு கை வந்த கலையாச்சே...! வழக்கம் போல் ஒரு 'ஹி ஹி ஹி' போட்டு விட்டு கொஞ்சமாய் யோசித்துப் பார்த்தேன் .... இதோ சில பதில்கள் :
1.நிக் தண்டர் & கிரைம் லாயர் கென்னெடி : இவர்கள் ஒரு சிறிய பதிப்பகத்தின் அறிமுகம்! '94 -ல் ஐரோப்பாவில் இவர்களது பிரதிநிதியை சந்திப்புப் பேசி இருந்தேன்.. ஆனால் இந்தக் கதைத் தொடர்கள் அங்கேயே அவ்வளவாய் சோபிக்கவில்லை என்பதால் எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தவிர இந்த நிறுவனம் அது வரைக்கும் வேற்று மொழி உரிமைகளை யாருக்கும் கொடுத்துப் பழகி இருக்கவில்லை என்பதால் அவர்களோடு சேர்ந்து வேலை செய்திடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது !
2 பூத வேட்டை & மரண தூதன் : டெக்ஸ் வரிசையில் எக்கச்சக்கமாய் கதைகள் உள்ளதால் சில நேரம் இது போல் விளம்பரப் படுத்தப் பட்ட கதைகள் தூங்கிப் போவதும் உண்டு. தூசி தட்டி சீக்கிரமாய் எடுக்கப் பார்க்கிறேன்.
3 காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் முயற்சிக்குக் கிடைத்தது போல ஒரு கும்மாங்குத்து எனக்கு நினைவு தெரிந்து வேற எந்த முயற்சிக்கும் கிடைத்தது கிடையாது. So அந்த டெக்ஸ் கதை கூட அப்படியே அம்போ-வாகி விட்டது ! மூத்திர சந்தில் வடிவேல் திணற திணற எப்படி அடி வாங்கி இருப்பார் என்பது எனக்கு visualise செய்திட முடிகிறது!! யப்பா.. என்னா ஒரு 'டின்' காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்-க்கு!
4 மதியில்லா மந்திரி (Iznogoud ) கதைகள் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் வண்ணத்தில் அட்டகாசமாய் நமது லயனில் வரவிருக்கிறது . ஆகையால் அந்த "காரட்" கதை மட்டுமன்றி இன்னும் நிறையவே சாகசங்களை சந்திக்கப் போகிறோம்.
5 Code Name மின்னல் என்ற பெயரைக் கேட்டாலே மண்டையெல்லாம் குடையும் எனக்கு ! இந்தத் தொடர் பிரெஞ்சு மொழியில் துவக்கப் பட்டபோது நான் பிரான்சில் தான் இருந்தேன்.புதியதொரு லேடி jamesbond / மாடஸ்டி ப்ளைசி பாணியிலான action தொடராக இருக்குமென பதிப்பகத்தினர் சொன்னதை நம்பி அவசரம் அவசரமாய் முதல் 2 பாகங்களுக்கும் பணம் அனுப்பினேன். கதைகளும் வந்தன..பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க அனுப்பி விட்டு அவசரம் அவசரமாய் அட்டைப் படங்களையும் அச்சிட்டோம்..
"Code Name மின்னல்" ; "கானகத்தில் கறுப்புத் தங்கம்" என்று பந்தாவாய் டைட்டில் வேறு ! ஆங்கில மொழிமாற்றத்தோடு கதை வந்த பின்னே படித்துப் பார்த்தால் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது. தக்கி முக்கி முதல் 10 பக்கங்களைக் கூட தாண்டிட முடியலை..! குழப்பம் என்றால் இமாலயக் குழப்பம். ரஷ்யப் பேரரசு உள்நாட்டுக் கலவரங்களால் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்ததனைப் பின்னணியாகக் கொண்ட தொடர் என்பதாலும் நமக்கு கதைக் களத்தில் ஒன்றிட முடியவே இல்லை...! சத்தியமாய் இது தேறாதுடா சாமி-ன்னு மூட்டை கட்டிப் பரணில் போட்டாச்சு..! ராயல்டி கட்டணங்கள் ; மொழிபெயர்ப்புச் செலவுகள்..அட்டைப்படத் தயாரிப்பு என்று எக்கச்சக்கமாய் வேட்டு வைத்த அம்மணி நம் Code Name மின்னல்!
6 .Chinaman தொடர் நல்லதொரு கதைக் களமே....இவரை நம் இதழ்களுக்குக் கொண்டு வரலாம் தான்...திரும்பவும் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்...! நினைவுபடுத்தியதுக்கு நன்றிகள் அருண் பிரசாத்.
7 .முத்து காமிக்ஸ் : "ரத்தமும் யுத்தமும்" :
தமிழில் கொண்டு வர நான் பெரிதும் முயற்சித்த கதை இது. ஆனால் பதிப்பகத்தினர் ஏனோ அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அசாத்தியமான இந்தப் படைப்பையும் இந்த ஆண்டு தட்டி எழுப்ப முடியுமாவென்று பார்க்கிறேன்.
ஒன்று மட்டும் நிச்சயம் !! நினைவாற்றலில் நம் வாசகர்களை மிஞ்ச இனி யாராச்சும் பிறந்து வந்தால் தான் உண்டு !!//
கோட் நேம் மின்னலுக்கு இப்ப வாய்ப்பிருக்கா ....ரஷ்யான்னாலே ஒரு சந்தோசம்..
Deleteசைனா மேன்
ரத்தமும் யுத்தமும்
//Anyways காத்திருக்கும் பொழுதுகளுக்கென கணிசமான ஐட்டங்கள் ரெடியாகி வருகின்றன எனும் போது சீக்கிரமே ஜமாய்ச்சுடலாம் ! //
ReplyDeleteகுண்டு புத்தகங்களும் உண்டா ..கோடை மலர் தொகுப்பாய் ஏழெட்டு கதைகளாய்
🙏🙏
ReplyDeleteவாங்க...மாமாங்கமாச்சே பாத்து
ReplyDelete///V காமிக்ஸின் அடுத்த க்வாட்டருக்கான வரவேற்பு தெறி ரகம் என்பதைச் சொல்லியாக வேண்டும் !///
ReplyDelete---அட்டகாச படுத்திவரும் விக்ரம்@எடிட்டர்900 க்கு வாழ்த்துகள்💐
////ஆன்லைன் புத்தக விழா சார்ந்த பணிகள் எதிர்பார்த்தது போலவே அத்தினி பேரது குறுக்குகளையும் இங்கே கழற்ற துவங்கி விட்டது ! "லட்சியம் ; நிச்சயம்னு பன்ச் டயலாக் பேசிப்புட்டு, லூசு கோர்த்து விட்ருச்சி ; இங்கே ஆளாளுக்கு நாக்கு தொங்குதுடோய் !" என்ற நம்மாட்களின் மைண்ட்வாய்ஸ் அனுதினமும் கேட்டு வருகிறது/////
ReplyDeleteஹா...ஹா....
/////நம் வண்டியை ஓட்டமெடுக்கச் செய்யும் பெட்ரோலே இது போலான சவால்கள் தான் எனும் போது, அதன் லேட்டஸ்ட் அத்தியாயத்தை எதிர்கொள்ள அந்தர்பல்டிக்களை சரளமாய் அடிக்க ஆரம்பிச்சாச்சு ! ////
ReplyDelete----தாங்கள் அடிக்கும் பல்டிகளை ஒருமுறை நேரில் காண வேண்டும் ஆசிரியர் சார்!
எங்கள் பங்குங்கு கூடுதலாக ஒரு பல்டி அடிக்க வைக்கப்போகும் கோரிக்கையை வைக்கிறோம் சார். அது மிகவும் சந்தோசமான கோரிக்கையே....
விபரம் என் அடுத்த கமெண்டில்.......
"""""கம்பேக் 500 ஸ்பெசல்"""""
ReplyDeleteடிசம்பர்2022முடிய,
லயன் வெளியீடு எண் 425 ம்
முத்து வெளியீடு எண் 471ம் வெளியாகியுள்ளது....
கம்பேக் ஆனதில் இருந்து லயன், முத்து, கி.நா., சன்ஷைன், மேக்ஸி, ஜம்போ, லயன் லைப்ரரி...
என இதழ்கள் வெளியாகி வருகிறது.
ஜனவரி2012 கம்பேக்கில் இருந்து,
2022 டிசம்பர் மாத இதழ்களோடு 476 ல் வந்து நிற்கிறோம்...
டிசம்பர் 2022முடிய வெளியாகியுள்ள இதழ்களின் பிரேக்அப்...,
முத்து----159
லயன்----216
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்---2
சன்சைன் லைப்ர்ரி- 26
சன்ஷைன் கி.நா.--- 5
லயன் கி.நா.---21
ஜம்போ--- 24
மேக்ஸி--- 8
முத்துமினி- 6
தி லயன் லைப்ரரி-9
மொத்தம்--476
2022முடியும் போது மொத்தம்: 476.
""""""2023ல வெளிவரும் 24வது இதழ் கம்பேக்கிற்கு பிறகான 500வது இதழ்....."""""
பதினோரு ஆண்டுகளில் 500இதழ்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வட்டத்திற்கு இது இமாலய சாதனை.... வாழ்த்துகள் சார்💐💐💐💐💐💐
ப்ரைன் லாராவுக்குப் பிறகு ஐச்சதம் (501*) அடிக்கப்போவது சிவகாசி "லாரா" தான்....!!!
இரட்டை சதம், முச்சதம்,...வரிசையில் ஐச்சதம் சரிதானுங்களா Lusettesofia???
(வெளியீடு எண் இல்லாத டெக்ஸ்ஃப்ரீ, எலியப்பா கைப்புள்ளை ஜாக்ஸ் & இலவச இதழ்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படல....!!!!)
(தங்களது துவக்க கால 2012ஜனவரி பதிவுகளை ஆராய்ந்து முத்து 313ல் இருந்தும், லயன் 210ல இருந்தும் கணக்கிட்டு உள்ளோம்...
2012 கம்பேக்கின் ஆரம்ப இதழ்கள்...
#காமிக்ஸ் க்ளாசிக் 26- கொலைகார கலைஞன்-பார்க்க ஜன12, 2012தேதி பதிவு
#முத்து காமிக்ஸ் 313- விண்ணில் ஒரு குள்ளநரி-பார்க்க ஜன21,2012 தேதி பதிவு
#லயன் கம்பேக் ஸ்பெசல்(210) -முதல் இதழாக மலர்ந்தது நாம் அனைவரும் அறிந்தது.
சன்ஷைன் கி.நா. 5ம் 2014ல வெளியாகிவை. இப்போது லயன் கி.நா.தொடர்ந்து வருகிறது.)
*இதுவரை இந்த 2023ன் முதல் 3மாதங்களில் வெளியாகியுள்ள இதழ்கள்:14*
Delete*476+14=490*
ஏப்ரல்ல வர்ற 10வது இதழ் தான் அந்த "கம்பேக் 500 ஸ்பெசல் "
இப்போது ஏப்ரலில் ஏற்கனவே அறிவுக்கப்பட்டுள்ள 3புக்ஸ் உடன் 493 ஆகிடும் சார்....
அந்த ஆன்லைன் விழாவில் தாங்கள் வெளியிடும் இதழ்கள் உடன்(மினிமம் 9னா கூட) 500 தாண்டுவிடும்...💃💃💃💃💃💃
ஒட்டுமொத்தமாக ஒரு டஜன் இதழ்கள் வெளிவருவதால் 500வது இதழ் எது என்பதை தங்களால் மட்டுமே முடிவு செய்ய இயலும்.
இந்த சிறப்பான தருணத்தைக் கொண்டாட ஒரு ஸ்பெசல் இதழில் "கம்பேக் 500ஸ்பெசல்" என தங்களது அதிரடி நகாசு வேலைகளுடன் வெளியிட்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்....
----STV, KOK, மஹி, பேபி வித் கனவுலகம் ப்ரெண்ட்ஸ்!!!
@STV ji..😍😘😃😀
Deleteஆஹா.ஆஹா..
"காமிக்ஸ் என்சைக்ளோபீடியா" ன்னா.. ச்சும்மாவா.. புள்ளிவிபரத்தை கொடுத்து அசத்துறீங்க..😍😘😘😘❤💛💙💚💜💐🌷🌹🌺🌸👍✊👌💪💪
நல்ல குண்டுபுக்காக போட்டுத்தாக்குமாறு கேட்பதை விட வேறு என்ன கேக்கப்போறோம். அதுவும் இது ஒரு முக்கிய மைல்ஸ்டோன்
Deleteசூப்பர் நண்பரே....500 வந்துஆ இதழா அந்த ஆயிரம் பக்க கௌபாய் வந்தா நல்லாருக்குமோ
Deleteகம் பேக் ஸ்பெஷல் 500 வது இதழுக்கு ஜேஜேஜே. இது மிகப் பெரிய land mark நமக்கு.
Delete+1000
Deleteவார்ரே வாவ்...!
Deleteஅட்டகாசம் @STVR
அருமையான பணி செஞ்சிருக்கீங்க...
நீங்க பு.வி.பு என்பதை திரும்ப திரும்ப நிரூபிச்சிட்டே இருக்கீங்க...
சரியான நேரத்தில் சரியான கோரிக்கை.
+100
ஆமா ஒரு மிகப் பெரிய மைல் கல் சார் இது. கண்டிப்பாக பெரிய அளவில் ஏதாவது செய்யலாம் சார்.
DeleteComeback 500
Delete500 பக்க டெக்ஸோடு கொண்டாடினா நல்லாதான் இருக்கும்....
அம்மன்கோவில்பட்டி ஒடின்.... மாரியம்மன் கோவில் தெரு மனிடோ மனசு வைக்கணுமே...!!
படிக்கிறது க்கே தலய சுத்துதே.இதைத் தொகுக்க எவ்வளவு உழைப்பு ஆர்வம் இருந்திருக்க வேண்டும்."காமிக்ஸ் என்சைக்ளோபீடியா"ஒரு ராயல் சல்யூட்சார்ஸ்
ReplyDeleteராஜசேகரன் ஜி@ ஆசிரியர் சார் வெளியிட்டதை கணக்கு பண்ணி போட்டதே பெரும் பணினா..., அந்த 500புக்ஸ்ம் வெளியிட்டவர் நம்ம அன்பின் ஆசிரியர் சார். எத்தனை சவால்கள், எவ்வளவு உழைப்பு, எவ்வளவு எழுத்து, எத்தனை நேரம் ஒதுக்கி இதை வெளியிட...
Deleteஆசிரியர் சார்& டீம் லயனுக்கு வாழ்த்து சொல்வோம் ஜி...
தளத்தின் ரமணா STV : நன்றிகள் ஒரு லோடு !!
Deleteபுள்ளிவிபரங்கள் என்றைக்குமே ஒரு சுவாரஸ்யத் துறை என்பதால் - இதோ என் பங்குக்கு கொஞ்சம் + கொஞ்சம் வினாக்களுமே !!
**135 மாதங்கள் ! இந்த இரண்டாம் இன்னிங்சின் இதுவரையிலான அகவை இது !
**ஒரு சராசரி இந்திய ஆணின் ஆயுட்காலம் 70.2 ஆண்டுகளாம் - அதாவது 842 மாதங்கள் !
**So அந்த ஆயுட்காலத்தின் 16 சதவிகிதத்தினை நாம் ஒவ்வொருவரும் இந்த காமிக்ஸ் இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு இதுவரையிலும் தந்துள்ளோம் !
**ஏற்கனவே செலவிட்டிருக்கக்கூடிய பல மாதங்களை / வருடங்களை மேற்படிக் கணக்கோடு சேர்த்தோமெனில் நம் ஒவ்வொருவரின் ஆயுள்களோடும் இந்த 'பொம்ம புக்' எத்தனை பின்னிப் பிணைந்துள்ளதென்பது புரிந்திடும் !
**COMEBACK ஸ்பெஷலுக்குப் பின்பாய் கிட்டத்தட்ட 500 இதழ்களை போட்டுத் தாக்கியுள்ளோம் என்றால் மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட மூன்றே முக்கால் இதழ்கள் (!!) என்றாகிறது !
**இந்த பொழுதுகளில் வெயிலும் சேரும், மழையும் சாரும் ; (சென்னை) வெள்ளமும் சேரும்...(வரதா) புயலும் சாரும்...உலகமே முடங்கிய கொரோனாவும் சேரும் ; தேசமே பூட்டிக் கிடந்த லாக்டவுனும் சேரும் !
**So அத்தனையையும் மீறி, consistent ஆக இந்தப் பதினொன்றே கால் ஆண்டுகளில் நம் பயணம் தொடர்ந்துள்ளது என்றாகிறது !
Take a bow my team !!
And take a HUGE BOW - லயன் & முத்து காமிக்ஸ் வாசக வட்டத்தினரே !!
இத்தனை நெடும் காலத்துக்கு ஒரு ஆர்வத்தினை, பெரும் தவமாய் தொடர்வதென்பது அசாத்தியமானதொரு சாதனை !! மொக்கையோ, magnificient படைப்போ ; அசத்தலோ, அறுவையோ - சகலத்தையும் ஆரவாரமாய் வரவேற்று வாசிக்க நீங்கள் மட்டும் இல்லையெனில், இந்தப் புள்ளிவிபரமும் சாத்தியப்பட்டிராது ; இந்தப் பயணமும் தொடர்ந்திராது !
And SPECIAL MENTION to the நண்பர்கள் who have been keeping this blog going over these 135 months !! இக்கட ரமணா படத்திலிருந்தே யூகி சேது பேசும் ஒரு வரியை இரவல் வாங்க நினைக்கிறேன் : "இங்கே தட்டுனா, அங்கே வலிக்கும் !!" அதனை சற்றே மாற்றி : "இங்கே சிரிச்சா, அங்கே சிறக்கும் ! இங்கே சிலாகித்தால் அங்கே சரவெடி வெடிக்கும் !" என்று சொல்வேன் !
இங்கு நீங்கள் எழுதிடும் தீர்ப்புகளே நமது இதழ்களின் விதிகளை எங்கெங்கோ நிர்ணயித்து வருகின்றன ! So சந்தோஷங்களையும், சங்கடங்களையும் ஒரே சீராய் கருதி நமக்குத் தோள் தந்தபடியே ட்ராவல் செய்திடும் அத்தனை bloggies நட்பூசுக்கும் நமது கரம் குவித்த ஓராயிரம் நன்றிகள் - இந்தத் தருணத்தினில் !
வெறும் பத்திருபது நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த "500" after the comeback எனும் மைல்கல்லை கொண்டாட புச்சாய் ஒரு 'மெகா புக்' ரெடி பண்ண அவகாசம் லேது ! So ஒரு சிறப்பான stat-க்கு புலவர் முத்துவிசயனாரின் கவி சமர்ப்பணத்தைக் கொண்டு இப்போதைக்கு அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கள் folks :
Deleteஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது...!
மானிடர் ஆயினும் தமிழில் 'பொம்ம புக்' நேசனாய் பிறப்பது அரிது...!
அந்த பொம்ம புக் நேசத்தில் தலயும் இருந்து, தளபதியும் இருந்தால் அரிதிலும் அரிது...!
அந்தப் பட்டியலில் கார்டூனும் இருந்து, கி.நா,வும் இருத்தல் அரிதோ அரிது....!
OTT காலத்திலும் காமிக்ஸ் வாசிப்பது அரிது...!
ஓர் யுகத்துக்கு முன்பான க்ளாஸிக் நாயகர்களை ரசிப்பது அரிதிலும் அரிது !
'இன்னுமா பொம்ம புக் ??' என்ற பகடிகளுக்கு மீறியும் வாசித்தல் அரிது...!
பறக்கும் பூரிக்கட்டைகளைப் பொருட்படுத்தாமல் ஜம்ப்பியபடியே படித்தலும் அரிது...!
சாயம் பல தலைக்குப் பூசும் வயதிலும், சாகாவரம் பெற்ற சாகசங்களை சுவைப்பது அரிது...!
தொப்பைகள் வளரும் வேகத்துக்கு காமிக்ஸ் சேகரிப்புகளையும் வளர்த்தல் அரிதிலும் அரிது..!
'நேரமில்லை' என்ற நெடும்கானம் நிஜவாழ்வின் அங்கமாகிய பின்னேயும் காமிக்ஸ் படித்தல் அரிது...!
படித்ததைப் பகிர்ந்து மகிழ்வதோ அரிதிலும் அரிது...!
இயந்திர வாழ்வினில் ஒரு புன்னகையை கொண்டு வர பல்டிக்கள் அடித்தலும் அரிது..!
இன்னல்கள் பல தந்தாலும் இந்த வலைப்பூவை உயிர்ப்போடு தொடரச் செய்யும் பண்போ அரிதிலும் அரிது...!
ஒரு முழியாங்கண்ணனின் மொக்கைகளை மாதங்களாய் சகிப்பதும் அரிது..!
இடர் பல இடைப்பட்டாலும் இன்முகத்தோடு தோள் தரும் அன்பு அரிதோ அரிது..!
So அரியவர்களின் இச்சங்கமத்துக்கு அடியேனின் ஆத்மார்த்த நன்றிகள் உரித்தாகுக !!
கோவையின் இரும்புப் பார்ட்டி - எச்சூஸ் மீ ! இந்த ஒருதபா உங்க அருவியை கொட்ட வாணாமே ?! இதுக்கே ஆளாளுக்கு ஊரை காலி பண்ணுற நிலைமையில் இருப்பாங்க ; நீங்களும் சேர்த்துப்புட்டா கிழிஞ்சிடும் !
DeleteAnd வினாக்கள் :
Delete**இந்த உத்தேச 500 க்குள் கலர் எத்தனை ? Black & வைட் எத்தனை ?
**பக்க எண்ணிக்கை எத்தனை ?
**Maximum இடம் பிடித்திருக்கும் ஒற்றை நாயகர் 'தல' தானா ?
**Yes எனில் - பிடித்திருக்கும் ஸ்லாட் எண்ணிக்கை ?
**All 500 வாங்கியோர் எத்தனை ?
**All 500 வாசித்தோர் எத்தனை ?
:-) :-)
Delete//OTT காலத்திலும் காமிக்ஸ் வாசிப்பது அரிது//
😌😁
நாங்கள் அல்லவோ தங்களுக்கும் தங்களின் சின்ன டீமுக்கும் நன்றிகள் சொல்லணும் சார்....
Deleteஇந்த 11ஆண்டுகளில் NBS,LMS, மின்னும் மரணம், இ.ப. தொகுப்பு, வாசகர் சந்திப்பு என்ற சாதனைகளையும்,
புயல், மழை, கொரோனா அரக்கன், விலைவாசி அரக்கன் என்ற கடுமையானசோதனையும் தாண்டி பயணத்தை இடையூறு இன்றி நகர்த்தி வருகிறீர்கள் சார்....!!! வெல்டன் டீம் லயன்💐💐💐💐💐
கம்பேக் 1000ஸ்பெசல்,
கம்பேக் 2000ஸ்பெசல்..னு சாதனை புரிய வாழ்த்துகள் சார்.
@ Dear Edi Sir...
DeleteOne small request...if no time to make 500th issue as special...simple you can give 500 no to Our All time Favourite book " and Most wanted Book .."Uyiraithedi" .
We would be grateful to you for making and achieving this Mile stone.
Thanks.
செம சார்...போட்டிக்கு நா வரல
Deleteசார் 500 வது இதழ் அறிவிப்புக்கு 499 க்கு அப்புற இதழுக்கு 501 ஐ தந்துட்டு ... சாவகாசமாக இதழ் 500 விடலாமே அடுத்த மாதமே 1000 பக்க கௌபாய
Deleteசார் நாங்கள் தான் உங்களுக்கும் உங்கள் சிறிய டீமுக்கும் நன்றி சொல்லவேண்டும். என்ன உழைப்பு எவ்வளவு தடங்கல்கள் அத்தனையும் தாண்டி மாதம் முதல் தேதி காமிக்ஸ் எங்கள் கைகளில். மிக்க மிக்க நன்றிகள் சார்.
Deleteகவித சும்மா அள்ளுது 😇😍
Delete500 ஐயும் வாங்கியாச்சு பிடித்த எல்லாக்கதைகளும் வாசித்தாச்சு. தோர்கல், ர ப , டெக்ஸ், அண்டர்டேக்கர், ட்யூராங்கோ, டெக்ஸ் போன்றவற்றை மறுவாசிப்பும் பண்ணியாச்சு.
Deleteவாசிக்க ட்ரை பண்ணி முடியாமல் கிராபிக் நாவல்களும், S70, ஸ்பேடர் போன்றவற்றை அழகாக பேக்பண்ணியாச்சு.
அடடா... வடை ஏற்கனவே போயாச்சா..!?
Deleteஇது தெரியாம மேல டெக்ஸ் குண்டு கேட்டுக்கிட்டு இருக்கேனே..!?
அயாம் போல ஒரு அப்பாவி ஈ லோகத்தில் உண்டோ..!!
"எந்தையின் கதை "அற்புதமான தலைப்புங்க சார்.
ReplyDeleteகதையுமே வித்தியாசமாய் உள்ளது சார் !
Delete"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
Deleteஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?"
என இரண்டாயிரம் வருடங்கள் முன்பு செம்புலப் பெயல் நீரார் புலவர் பாடினார்.( குறுந்தொகையில் 40-வது பாடலாக குறிஞ்சித் திணையில் வரும் கவிதை)
பின்பு
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -அதன்"
என ' கூடல் " பாட்டு பாடினார் மகாகவி பாரதி.
ஜேஸனின் தந்தை பற்றி வரும் கதைக்கு என்னவொரு கவித்துவம் மிக்க தலைப்பு!
ஜேஸனின் தாய் பற்றி ஸ்பின் ஆஃப் வருமாயின் "யாயின் கதை " என வருமோ? :-)
வாங்க செனா…இந்தத் தமிழை காணோம்னு தொலாவிட்டிருந்தோம். சுருக்கமா எழுதற எடிட்டர் பதிவுல விமர்சனம் சுருக்கமா போட்டிருந்தீங்க. இங்கே விளக்கமா்போடுங்க. நேரம் கிடைக்கும் போது.
Deleteசார் இத்தலைப்பு க்கு எக்கவிதையும் ஈடாகாதே...டாப் தலைப்பு இதுன்னு சொல்ல ஆசைப்பட்டாலும்....கொலைப் படை....யாரந்த மினி ஸ்பைடர்...சதி வலைன்னு தலைப்புகள் நான் நான்னு போட்டி போடுவது காது கொடுக்காம இருக்க முடியல ...எவ்ளோ அழகிய ஈர்ப்பான தலைப்புகள்
Deleteசார்லி கதைகள் மிகவும் யதார்த்தம் சார்.. மற்ற கதைகள்...."இப்படியெல்லாம்
ReplyDeleteநடக்குமா" என்ற ஒரு உணர்வை கொண்டுவரும் போது... இது கடை அல்ல.. நிஜம் .. என்ற உணர்வை ஏற்படுத்தி விடும் ஆற்றல் சார்லி கதைகளுக்கு உண்டு.. எனக்கு மிகவும் பிடிக்கும்... ஒரு கதை... அப்பாவி கணக்காளரை
ஒரு முதலாளி ஏமாற்றி சிறைக்கு அனுப்ப... தண்டனை முடிந்து வரும் அவன் தன் மனைவி, மகனை மறைந்திருந்து பார்ப்பான்.. டிவோர்ஸ் ஆகி, மனைவி இன்னொருவனுடன்...அங்கே அப்படிதானே...வீடற்ற அப்பாவி... புறாக்களுக்கு தீனி போட்டு
கொண்டிருப்பான்... பாவமாய் இருக்கும்... சார்லி அவன் உயிரை காப்பாற்றி... "என்னால் நீ இழந்த வாழ்க்கையை மீட்டு தர முடியலையே "என்று வருத்துவார்... எல்லா கதைகளும் மனதை தொடும்... ❤️
100% true
Deleteசார்லி சீக்கிரமே வருவது மகிழ்ச்சி.
ReplyDeleteஇவரது கதைகளில் சிறை மீட்டிய சித்திரக்கதை & பேய்த்தீவு ரகசியம் கதைகள் மட்டுமே இதுவரை மறுபதிப்பாக வந்துள்ளது.
கடத்தல் ரகசியம் மீண்டும் வருவது அருமை.
முத்துவில் சார்லி கதைகள்
கடத்தல் ரகசியம்
குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்
சிறை மீட்டிய சித்திரக்கதை
தீவை மீட்டிய தீரன்
பேய்த்தீவு ரகசியம்
திக்குத் தெரியாத தீவில்
ஒரு நாள் மாப்பிள்ளை
யார் அந்த அதிர்ஷ்டசாலி
சார்லிக்கொரு சவால்
சிறை மீட்டிய சித்திரக்கதை மறுபதிப்பு
இரத்த வாரிசு
பேய்த்தீவு ரகசியம் மறுபதிப்பு
ஒரு கைதியின் கதை
மினி லயன்
ஒரு கள்ளப்பருந்தின் கதை
ஒரு காவலனின் கதை
பத்து புதிய கதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். அட்டைப்படம் நன்றாக உள்ளது.
///**இந்த உத்தேச 500 க்குள் கலர் எத்தனை ? Black & வைட் எத்தனை ?
ReplyDelete**பக்க எண்ணிக்கை எத்தனை ?//
---500புத்தகங்களையும் புரட்டினால் தான் விடை காண இயலும் சார்
///**Maximum இடம் பிடித்திருக்கும் ஒற்றை நாயகர் 'தல' தானா ?
**Yes எனில் - பிடித்திருக்கும் ஸ்லாட் எண்ணிக்கை ?//
----சந்தேகம் இன்றி தல தான் சார். 100யும் தாண்டி.. சென்று கொண்டுள்ளார்.
///**All 500 வாங்கியோர் எத்தனை ?//
---ஓரிரண்டு தவிர அனைத்தும்
////**All 500 வாசித்தோர் எத்தனை ?//
---அலோ.அலோ...லைன் சரியாக இல்லையே... என்ன சொல்றீங்கனு கேட்கலயே!
Dear Editor,
ReplyDeleteI have bought all and read all except last 2 books of this month.One great ongoing ride I would say
Regards
Arvind
Almost all books !! Phenomenal sir !!
Delete😊🙏
Delete@ Dear Edi Sir...
ReplyDeleteOne small request...if no time to make 500th issue as New Special Book...simple you can give 500 no to Our All time Favourite book and Everyone's Most wanted Book .."Uyiraithedi" .
We would be grateful to you for making and achieving this Mile stone.
Thanks.
I second this. 500th book as உயிரை தேடி கலர்
Deleteசின்னதாய் இங்கொரு குறிப்பு guys :
Deleteலயன் காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
V காமிக்ஸ்
லயன் லைப்ரரி
மினி காமிக்ஸ்
என்ற தனித்தனித் தடங்களில் ஏப்ரலில் வரவிருக்கும் இதழ்களையெல்லாம் கூட்டினால் "500 After the Comeback" என்ற எண்ணம் ரெடியாகிறது ! So தனிப்பட்ட எந்தவொரு இதழிலும் 500 என்ற நம்பர் இப்போது இருக்கப் போவதில்லை எனும் போது, காத்திருக்கும் கத்தைக்குள் நாமாய் ஏதேனும் ஒரு புக்கிற்கு அந்த அந்தஸ்த்தைத் தந்தாலே போதும் !
And "உயிரைத் தேடி" ராப்பரெல்லாம் அச்சாகி ஒரு யுகமாச்சு !
அதனால் என்ன சார்? 500வது இதழ்ன்னு ஒரு சின்ன ஸ்டிக்கர் ஓட்டி உள்ளே ஒரு bookmark வச்சிடுங்க. சோலி முடிஞ்சிடும்.
Delete@Padhu ji..😍😃
Deleteஇது பாயிண்ட்..👍
சார் இதழ் 500 க்கு நம்ம டாக்டர் மொழி பெயர்ப்பான சினிஸ்டர் செவன
ReplyDeleteஅடடே
Deleteஆனாலும் என்னையா காண்டு உமக்கு - டாக்டர் சார் மீது ?
Deleteபரவால்ல சார்....500 ன்னு ஏதாவது ஓர் சிறப்பிதழ் விலை குறைவானாலும் அட்டைபடத்த கலர் ஃபுல்லா அலங்கரிச்சு சர்ப்ரைஸ் இதழா விட வாய்ப்புண்டா....விச்சு கிச்சு ...பலே பாலு...அதி மேதை அப்புன்னாலும் சந்தோசமே
Deleteஎடி சார் மினி காமிக்சில் வரவிருக்கும் கதைகள் மற்றும் விலை விவரம் பற்றி கூறுங்கள்.🤔🤔🤔🤔
ReplyDeleteஆன்லைன் விழாவில் சொல்லிப்புட்டா போச்சு நண்பரே !
Deleteநம்ம ஆன்லைன் திருவிழா ஏப்ரல் 1 & 2 தானே தலைவரே .?
Deleteமாற்றம் இல்லையே
@inigo ji..😃😍
Deleteஏப்ரல் 15& 16 ஆக மாற வாய்ப்புகள் உண்டுங்க ji..😃
உயிரைக் தேடி ராப்பரெல்லாம் ரெடியாகி ஒருமாசமாச்சு.ஓகேங்க சார் என்னளவில் உயிரைக் தேடி 500என்று பேனாவில் எழுதி வச்சுக்கிறேன்.எப்படியோ அதுவும் சிறப்பிதழ்தானே.
ReplyDeleteCome back 500 special னு ஒரு ஸ்டிக்கர் கொடுத்திடுங்க சார்... அவங்கவங்களுக்கு எந்த புக் ஸ்பெஷலோ அதில ஒட்டிக்கிறோம்...
ReplyDeleteசரவணகுமார் சார் .தோர்கல் வரலங்கசார் அந்தமாசம்.ஒருக்கா வருதோ.?மொழிபெயர்ப்பு வேலை நடக்குதோ?இருக்கலாம் ஒரு டஜன் புது புத்தகங்கள் வருதில்ல
ReplyDeleteதலைவன் தோர்கல் வாழ்க
Delete// ஒரு சூப்பர் அறிவிப்பினை நடுவாக்கில் நுழைத்திடவும் all is ready !! //
ReplyDeleteஒருவேளை இது முத்து 500வது இதழ் பற்றிய அறிவிப்பாக இருக்குமோ ?
நானும் நெனச்சன்ல
Deleteஉன் வாழைக்காய் பஜ்ஜி சொன்னது என சொல்லுல :-)
Deleteமாரியாத்தா காளியாத்தா வாய் குடுத்து மாட்டிக்கக் கூடாதாத்தா
DeleteInigo. நம்ம தளத்தின் ரொம்ப ரொம்ப ரொம்ப குட்டிவாசகர்
ReplyDeleteகாமிக்ஸ் வாசிப்புக்கு எப்படி வந்திங்கfressஆன உங்கள் வரவினை பதிவிடுங்கள்
சரியா ஞாபகம் இல்ல முதன் முதலா ஒரு youtube சேனல்ல தான்," தமிழ்ல காமிக் புக் இருக்கா?" அப்படின்னு ஒரு வீடியோ பார்த்தேன் ( இவ்வளவு நாளும் தமிழ்ல தனியா comic book வருவது தெரியாது ) சின்ன வயசுல சுட்டி விகடன் ஒரு புக்கு கடைசியா 12 ரூபா இருக்கும் போது வாங்கினேண்ணு நினைக்கிறேன்( வீட்ல அடி பிடிச்சு வாங்குனது 😄 அதுல சின்னதா ரெண்டு அல்லது மூன்று page காமிக்கு இருக்கும் nu நினைக்கிறேன் அதுக்கு அப்புறம் போன வருடம் தான் தெரிஞ்சது லயன் முத்து காமிக்ஸ் முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகம் வெளியிட ப்படுகிறது என்று). ஃபர்ஸ்ட் நான் வாங்குன புக் தி 50 அண்ட் பார் அவர் ஸ்பெஷல் அப்புறம் ஒரு நான்கு, ஐந்து புத்தகம் வாங்கினேன்.
Deleteநில் கவனி வேட்டையாடு
லக்கி லுக்கை சுட்டது யார்
சுறா வேட்டை
மனதில் மிருகம் வேண்டும்
கென்யா மர்மதேசம்
இந்த புத்தகங்களில்" நில் கவனி வேட்டையாடு" எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அப்புறம் கென்யா மர்ம தேசம் அந்தப் புத்தகமும் ஓரளவிற்கு பிடித்திருந்தது
ஆனால் கடைசியாக வேறு ஏதாவது புத்தகம் ட்ரை செய்து பார்ப்போம் என்று தோர்கல் சிகரங்களின் சாம்ராட் ஆர்டர் செய்திருந்தேன் ஆனால் வந்ததோ சிகாகோவின் சாம்ராட்
பிறகு இந்த
தோர்கல் புத்தகத்தை அனுப்பி விட்டிருந்தார்கள்
ஏனோ தெரியவில்லை தோர்கல் புத்தகத்தை படித்தவுடன் மிகவும் மிகவும் மிகவும் பிடித்திருந்தது தோர்கலில் உள்ள அனைத்து புத்தகத்தையும் வரிசையாக வாங்க தொடங்கினேன்
பொதுவாக எனக்கு சயின்ஸ் பிக்சன் இந்த பேண்டஸி கதைகள் ரொம்ப பிடிக்கும் அதனால் தான் தோர்கல் மிகவும் பிடித்தது என நினைக்கிறேன்
அடுத்த தோர்கல் குண்டு இதழுக்காக காத்திருக்கிறேன் .
அப்புறம் வருகிற ஆன்லைன் புத்தக திருவிழாவில் ரத்த படலம் லார்கோ விட்ஸ் ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் ஒரு சில புத்தகங்களை வாங்கலாம் என நினைத்திருக்கிறேன்☺☺
Nice to know
Deleteவெல்கம் டூ தோர்கல் கிளப் நண்பரே!
DeleteThorgal nice
Deleteஇனி ஊருக்கு நான்கு inigoக்கள் தோன்றவேண்டும்.. தமிழ் காமிக்ஸ் புத்துயிர் பெறவேண்டும்!
Deleteஇந்த online புத்தக திருவிழாவிற்கு நானும் தோர்கல் வாங்க போகிறேன்
Deleteமகிழ்ச்சி
சார்லி ஸ்பெஷல் - இவரின் ஒரு சில கதைகளை நமது காமிக்ஸில் படித்து இருக்கிறேன் சிறுவயதில்; என்ன கதை என்பது எல்லாம் கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை! எனவே இவரை மீண்டும் படிக்க ஆர்வமுடன் உள்ளேன், அதுவும் புதிய அளவில் குண்டு புத்தகமாக என்பதும் சேர்ந்து படிக்கும் ஆவலை பண்மடங்காக ஆக்கி விட்டது! சார்லி ஸ்பெஷல் அட்டைப்படம் நன்றாக உள்ள்து அதுவும் எல்லா கலரும் அட்டையில் வரும்படி செய்தது சிறப்பு.
ReplyDeleteமுத்து 500வது இதழ் பற்றிய அறிவிப்பை கண்டிப்பாக விரைவில் அறிவிப்பீர்கள் என்ற ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறேன். முத்து 500வது இதழ் கொண்டாட வேண்டிய தருணம்! எதாவது காரணம் சொல்லி எங்களிடம் இருந்து நழுவ வேண்டாம் சார்! முத்து 500வது இதழ் என்பது நமக்கு பெருமை!
// V காமிக்ஸின் அடுத்த க்வாட்டருக்கான வரவேற்பு தெறி ரகம் என்பதைச் சொல்லியாக வேண்டும் ! //
மகிழ்ச்சியை தரும் விஷயம்! இந்தஎளிதான வாசிப்பு கதைகள் மூலம் காமிக்ஸ்க்கு புதிய வாசகர்கள் கிடைத்து இந்த காமிக்ஸ் வட்டம் பெரியதாக மாறினால் சந்தோஷம் இரட்டிப்பாகும்!
// அடுத்த க்வாட்டருக்கான வரவேற்பு தெறி ரகம் //
ReplyDeleteரம்மி @ ஆசிரியர் இப்போது எல்லா பதிவிலும் குவாட்டர் பற்றி சொல்லிக்கிட்டு இருக்கிறார்! என்ன என கொஞ்சம் விசாரிங்க! :-)
@STV & SV sir,
ReplyDeleteதலையைச் சுற்றவைக்கும் புள்ளி விவரங்கள்...! கொசுறாக ஒன்று:
914+ பதிவுகளின் வாயிலாக இங்கே எழுதப்பட்ட மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 2,25,915, இதையும் சேர்த்து. ஐயமிருந்தால், எண்ணி சரிபார்த்துக் கொள்ளவும், நன்றி! :)
Same way robot Archie special and spider special in hard bound like sawer typer hardbound
ReplyDeleteசூப்பர்+1
DeleteInigo.நீங்கள் காமிக்ஸ் வாசிப்புக்கு வந்ததை சுவையாக சொல்லியுள்ளிர்கள்.வெல் come lion comics world.அடிக்கடி விமர்சனங்கள் பதியுங்கள்.
ReplyDeleteநிச்சயமாக 😊
Deleteநமது டிடெக்டிவ் சார்லி இதழுக்காக new mockup செய்துள்ளேன். அதன் லிங்க்
ReplyDeletehttps://photos.app.goo.gl/E6HTEFTcSJXAgHzE6
Very very nice
Deleteமிகவும் நன்றாக உள்ளது
Delete@inigo..😍😘
Deleteசார்லி mockup மிகவும் நன்றாக உள்ளது..
வாவ்!! அட்டகாசம் inigo சகோ!!
Deleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகறை படிந்த கரண்சி:-
ReplyDeleteவெளியே கறையும் உள்ளே கரையும் படிந்த கரண்சியின் மிகப்பெரிய பலமே கலரிங்தான்..! அடர் வண்ணங்கள்.. எனினும் கொஞ்சமும் உறுத்தாத சேர்க்கை..!
லார்கோவின் முதல் வெளியிட்டை படிச்சப்போ ஏற்பட்ட பிரமிப்பு IRSலும் ஏற்பட்டுச்சின்னு பொய்யெல்லாம் சொல்லமாட்டேன்..!
ஆனாலும் சில வியப்புகள் ஏற்பட்டதென்னவோ உண்மைதான்..! இரண்டாம் உலகப்போர், நாஜிக்கள்.. யூதர்கள்.. ஆவ்ஷ்விட்ஸ் வதை முகாம் இவற்றையெல்லாம் பின்னனியாகக் கொண்டு எத்தனையோ கதைகளை வாசித்திருப்போம்தான்...! ஆனால் இது முற்றிலும் வேறுமாதிரியானது...!
இஸ்ரேலிய யூதர்கள் உலகப்போர் சமயத்தில் சுவிஸ் வங்கிகளில் போட்டுவைத்திருந்த பணத்தை அவர்களின் வாரிசுளுக்கு சேர்க்காமல்... ஜெர்மானியர்களுக்கு சுவிஸ் வங்கிகள் தாரை வார்த்ததாக நேரடியாகவே இந்தக் கதையில் குற்றம் சாட்டப்படுகிறது..! ஐரோப்பாவில் வெளியாகும் ஒரு காமிக்ஸ் கதையில் இப்படி பகிரங்கமாக எழுதியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்குகிறது..!
சுவிட்சர்லாந்து மேல் இப்படி ஒரு குற்றத்தை சுமத்தும் கதையை சுவிஸ் நாட்டவர்கள் எப்படி அணுகியிருப்பார்கள்..!?
நம்மூர்ல கவுன்சிலர் வீட்டு சமையல்காரம்மாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சியோட மருமகளுக்கு பேனு பாக்குற பாட்டியை பத்தி கூட பேசிட முடியாது..! ஆனா அங்கேயோ.. எத்தனை சுதந்திரமா எழுதுறாங்க...!!
முதல் பாகம்.. கொஞ்சம் தலையை முட்டிக்காலுக்கு வலப்பக்கமா சுத்திவந்து மூக்குக்கு இடப்பக்கமா தொடுற மாதிரி போனாலும்.. இரண்டாம் பாகம் நல்ல விறுவிறுப்பு...!
வதைமுகாமில் கெல்டாப்பையும் ஜெர்மானிய சிப்பாயையும் காட்டும்போதே *அந்த விசயத்தை* (No Spoiler 😇) யூகிக்க முடிகிறது...!
கார் சேசிங்... கன் ஃபைட் எல்லாம் அட்டகாசம்..! இன்கம்... டேக்ஸ்.. பேங்க்.. பேலன்ஸ்.. கிஸ்தி.. திரை.. வரி... வட்டின்னு ஒரேடியா போரடிச்சிடக் கூடாதுன்னு நடுநடுவே மிஸ் க்ளோரியா.. மிஸ் டெபோரா கெய்ன்ஸ் னு கொஞ்சம் குளிர்ச்சியூட்டவும் முயற்சி பண்ணியிருக்காங்க..!
ஆனாப் பாருங்க.. மிஸ் குளோரியாவை கதை முழுக்கத் தெளிவா காட்டுறதேயில்லை... மிஸ் கெய்ன்ஸை முழுக் கதையிலும் காட்ட விடாமே பாதியிலேயே போட்டுத் தள்ளிடுறாங்க... கதாசிரியருக்கு நம்ம மேல என்ன கோவமோ..!?
க்ளைமாக்ஸில் இஸ்ரேலியர்களுக்கு அல்வா கொடுத்த கெல்டாப்பை.. மொஸாட்டை வைத்தே போடுவது நல்லா இருந்துச்சி..!
லேரி B.மேக்ஸ் நிச்சயம் மோசமில்லை..!
கறை படிந்த கரண்சி - காசு பணம் துட்டு
சூப்பர் விமர்சனம் கண்ணா. இந்த முறை வெகு சீக்கிரம் படித்து விட்டீர்களே. Keep it up.
Deleteகுமார்...😆😆
Deleteஇஸ்ரேலிய யூதர்கள் உலகப்போர் சமயத்தில் சுவிஸ் வங்கிகளில் போட்டுவைத்திருந்த பணத்தை அவர்களின் வாரிசுளுக்கு சேர்க்காமல்... ஜெர்மானியர்களுக்கு சுவிஸ் வங்கிகள் தாரை வார்த்ததாக நேரடியாகவே இந்தக் கதையில் குற்றம் சாட்டப்படுகிறது..! ஐரோப்பாவில் வெளியாகும் ஒரு காமிக்ஸ் கதையில் இப்படி பகிரங்கமாக எழுதியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்குகிறது..!//
Delete1996-ல் international Jews congress institute ஸ்விஸ் வங்கிகளின் மேல் யூதர்களின் சொத்து இரண்டாம் உலகப்போரின் முடிவு காலத்தில் சுரண்டப் பட்டது பற்றி தொடுத்த லாசூட் ( lawsuit) பற்றி இணையத்தில் விவரமாக அறியலாம் . Front line ஆன்லைன் பத்திரிக்கையில் SINISTER FACE OF NEUTRALITY என்ற தலைப்பில் இவ்விஷயத்தில் ஸ்விஸ் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய ஆதாரப் பூர்வ உண்மைகள் அடங்கிய கட்டுரை உள்ளது.
இன்னும் பல்வேறு விஷயங்கள் உள்ளது. கதையை விட அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் உள்ளன.
நமக்குத்தான் இது ஆச்சர்யம்.
ஐரோப்பியர்களுக்கில்லை.
சுவிட்சர்லாந்து மேல் இப்படி ஒரு குற்றத்தை சுமத்தும் கதையை சுவிஸ் நாட்டவர்கள் எப்படி அணுகியிருப்பார்கள்..!?//
Deleteமேச்சேரியில் மணி மளிகை கடையில் முந்திரி பருப்பு ஒரு கிலோவுக்கு பணம் வாங்கிக் கொண்டு துவரம் பருப்பு ஒரு கிலோ கொடுத்து விட்டதாக வெளியூர்காரர் ஒருவர் குற்றம் சாட்டினால் மேச்சேரி மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ அப்படித்தான்.
குற்றச்சாட்டு ஸ்விஸ் வங்கிகளின் மேல்தானே தவிர நாட்டின் மீதல்லவே.ஸ்விஸ் வங்கிகள் அதிகம் சுதந்திரம் உள்ளவை.
இது பற்றி நெடிய விமர்சனக் கட்டுரை எழுத கைகள் பரபரக்கின்றன. ஆனால் சலூனில் நுழைந்த டெக்ஸைப் போல் சுழற்றி சுழற்றி அடிக்கும் வைரஸ் காய்ச்சலினால் ஏற்பட்டிருக்கும் பணிச்சுமை தடுக்கிறது.
Deleteஹேஹேஹேஹே. சிங்கம் களத்துல குதிக்கப் போது.
Deleteநான் இன்னும் இந்த கதை படித்த மயக்கத்திலேயே இருக்கிறேன். ஏனெனில் Bible-லில் யூதர்களை பற்றிய முழு வரலாறு காணலாம். கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட இனம். ஆபிரகாமின் பின் வந்த தலைமுறைக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தை கொடுப்பார். அதிலிருந்து அவர்கள், அவர்களின் தேசத்திலிருந்து விரட்டப்படுவர் அகதிகளாய். அப்படிப்பட்ட பின்புலத்தைக் கொண்ட அசுர கதையை படித்து விட்டு பிரமையில் இருக்கிறேன். அதன் பின் சோடாவும் குடித்துப் பார்த்தாயிற்று. மீண்டும் இன்னொரு முறை படித்து விட்டு வருகிறேன்.
Delete////கதாசிரியருக்கு நம்ம மேல என்ன கோவமோ..!?/!!
Delete--- அந்த மிஸ் கெல்டாஃப், ஐஸ் ஹாக்கி விளையாடற புள்ளையை பத்தி நீ ஏதும் சொல்லாதது என் நெஞ்சை தாக்கிட்டு மாமா....
A thorn in the heart....
கொஞ்சமே வந்தாலும் என்னை கவர்ந்தது அவளோட தில்....
வாடா லேரி, என்னயவா ஏமாத்தின, உன்னைய போட்டு தள்ளினா தான் ஆத்திரம் அடங்கும்னு கிளம்புதே... செம கிக்...
இன்னும் சோடா மாத்திரம்தான் பாக்கி.. நாளைக்கு மிக்ஸ் பண்ணிற வேண்டியதுதான்.!
ReplyDeleteபாஸ். விடிஞ்சுருச்சு. சீக்கிரம் எழுந்திருங்க. வாங்க சோடா குடிக்கலாம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடேங்கப்பா புன்னகை ஒளிர் நண்பரே இது வேற லெவல் விமர்சனம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
Deleteதப்பிச் சென்ற தேவதை ..!
Deleteஎம்பயர் ஹாஸ்பிடலில் பணிபுரியும் நர்ஸ் லார்சி, அங்கு உள்ள மருந்துக்கடையில் உயர் ரக மருந்துகளை திருடியதாக குற்றம் சாற்றப்பட்டு ஜெயிலில் இருக்கிறார்.
நமது நியூயார்க் போலீஸ் ரெவரண்ட் பாஸ்டர் சோடா லார்சியை விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் பாதையில், இயற்கை அழைப்புக்கு செல்ல, லார்சி நமது போலீஸ் காரை லவட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார்.
இதனால் சோடா போலீஸ் வேலையை ராஜினாமா செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார், அதற்கு முன்பாக எஸ்கேப் ஆன லார்சியை பிடித்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற வார்னிங்குடன்.
நம்ம சோடா லார்சியை திரும்பவும் பிடித்தாரா.
அவரது வேலை அதோ கதி தானா...
சோடாவின் முதல் சாகசம் இது. அது இக்கதையில் தெரிகிறது.
சோடா தெணாவட்டாக செய்யும் காரியங்கள் மரண அடி.
தேவதை காரை லவட்டிப் போவதை கண்டதும், அடுத்து நிகழும் அந்த சேசிங்....
அந்த தொழில்முறைக் கொலையாளியுடன் நடக்கும் அறிமுக படலமாகட்டும்... அவனை விரட்டிப்போய் நடக்கும் சண்டை ஆகட்டும் ...
லார்சி "என்ன திடீரென்று சத்தமே கேட்க காணோம்" என்றதும், சோடா கண்கள் தெறிக்க சுவரில் இருக்கும் துளையில் புகையும் டைணமன்ட்-ஐ கண்டதும் ஆக்சனில் குதிக்க...என்று சோடாவின் அட்டகாசங்கள் செம.
கதையின் துவக்கத்தில் வசனமில்லாமல் வரும் பேனல்கள், நிகழ்வை வேகமாக நகர்த்துகின்றன.
போலீஸ் வாகனத்தை, பிணத்தை ஏற்றிச் செல்லும் கார் துரத்தி போகும் துவக்க காட்சியே அமர்க்களம்.
சோடாவின் 10 நிமிட சேசிங்கால் போலீஸ் உயர் அதிகாரி எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு, [ ""இரண்டு போலீஸ் ஆபீஸர்கள் ஆஸ்பத்திரில். ஒரு கார் பேரிச்சப்பழத்துக்கு போட்டாச்சு. ஒரு முதலைக்கு மாரடைப்பு. பென்சன் வாங்கிற பெரிசு-அ மிரளவுட்டது. செல்ல நாய்குட்டிய எட்டி உதைச்சது. ஒரு ஒட்டகத்தை திகிலடைய செய்தது. பொணம் எற இருந்த காரை கடத்தி, பொணத்தை நடை ஊர்வலமாக்குனது"" ] , சோடா நெத்தியடியாய் பதில் சொல்வது. பார்க்க : பக்கம்.13,பேனல் எண் 5.
மற்றும் ரசித்துப் படிக்க..
நாத்தம் பிடிச்ச ஜாக்கெட்
பக்கம்.13,பேனல் எண் 8 இதன் நீட்சியாக பக்கம்.14,பேனல் எண் 1to 4 லிப்ட் உள்ள பெருசுகள் மூக்கை பொத்தி மிரள்வது.
பக்கம்.16,பேனல் எண் 1-3
சோடாவின் அம்மா, " இன்னும் பாஸ்வேடை-அ சொல்லலையே, அதன் தொடர்ச்சியாக மிளகாய் ஸ்பிரே என செம கலாட்டா.
பக்கம்.22,பேனல் எண் 7 துப்பாக்கிய காட்டும் பாவிக்கு நம்ம ஆளு கொடுக்கும் ட்ரீட்டு.
பக்கம்.26,பேனல் எண் 2,3.
சோடா கிராசாக அடிக்கும் டைவ், நம்மை உறைய செய்பவை.
பக்கம்.32,பேனல் அனைத்தும். சோடாவின் கனவில் தேவதை.
பக்கம்.38,பேனல் எண் 8, ஆண்டனுக்கே பிரட்சனை..?
பக்கம்.39,பேனல் எண் 1
முடியவே முடியாது என்ற அலறல்.....!! .
பக்கம்.40,பேனல் எண் 5.
சோடா ஆட்டத்தின் கருப்பு ஆடு யார் என கண்டு பிடிப்பது.
பக்கம் 41 பேனல் 3-7,
டெலிபோன் பூத்தில் காசு போடுவதற்கு பதில் போலீஸ் பதக்கத்தை திணித்து போன் பேசுவது. பேசியதும் ரிசிவர் வைக்கும் வேகத்தில், உள்ளே உள்ள நாணயங்கள் தெறித்து வெளி வருவது.
கடைசியாக நடக்கும் அந்த கிளைமாக்ஸ் சண்டை. பக்கம் 46 பேனல் 5-லிருந்து.
மற்றும் பேனல் 11 தொழில்முறைக் கொலையாளின் கண்ணாடியை துளைத்து புல்லட் தெறிப்பது.
நடக்கும் இந்த கன் பைட்டால் லின்கன் இதய பலகீனத்தால் உயிர் துறப்பது.
இறந்து போன தேவதையை தாங்கி சோடா அழுவது.
And final -ஆ இவன் பிணம் தூக்குற வண்டிய ஆட்டய போட்டவன் என்று ஒரு பார்ட்டி மிரள்வது.
இந்த 45 பக்க கதையில், ஒவ்வொரு பேனலிலும் ஓர் விசயம் இருக்கிறது. நீங்களும் அனுபவித்து படித்தால், என்னைப் போல நீங்களும் பல காட்சிகளை ரசித்து எழுதலாம்.
மதிப்பெண் : 9•5 / 10
Good review
Deleteஅப்ப ரவுண்டு பன் உண்டுன்னு சொல்லுங்க.
Delete@புன்னகை...😍😘😃
ReplyDeleteசெம்மையான விமர்சனங்கோ..👍💪
படிக்காதவங்களை உடனே படிக்கவும்,
படிச்சு முடிச்சவங்களை மறுபடியும் படிக்கவும் தூண்டுதுங்க உங்க விமர்சனம்...💐🌷🌹
10/10.. உங்க விமர்சனத்திற்கு😍😘😘
IRS - கறை படிந்த கரன்ஸிஅமெரிக்க வருமான வரித்துறை (IRS) கண்காணிப்பில் இருக்கும் ஒரு நபர் கொல்லப்பட, அவன் கொல்லப்பட்டதற்கான காரணத்தை கதாநாயகன் மேக்ஸ் துப்பறியத் தொடங்கும்போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத்துவங்குகிறது. புலிவாலைத் தொடர்ந்த கதையாக அதன் பின்புலம் இரண்டாம் உலக யுத்தம், யூதர்கள், நாஜிக்கள் - வதைமுகாம்கள் என நீண்டுசென்று, ஸ்விஸ் வங்கிகளையும் சம்பந்தப்படுத்துகிறது. ஒரு பரபர அக்மார்க் த்ரில்லர்.
ReplyDeleteIRS தமிழுக்கு சற்றே தாமதமான அறிமுகம்.
சில இடங்களில் கறை என்பது 'கரை'யாக இடம் பெற்றுள்ளது. அது அட்டைப்படத்தில் பைண்டிங் சைடிலும், ஹாட்லைனிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கப்படவில்லையா? ஒருசில இடங்களில் எழுத்துப்பிழைகளும் உள்ளது. (சமீபத்திய பல இதழ்களிலும் உள்ளது.) கதையின் ஓட்டத்தில் இதெல்லாம் தெரியவில்லை என்றாலும் இனிவரும் இதழ்களில் சரிசெய்யப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!
+1
Deleteஎல்லாருக்கும் ஸ்பெஷல் போட்டாச்சு... அடுத்து இரட்டை வேட்டையருக்கும் ஒரு ஸ்பெஷல் இதழ் போடுங்க # இல்லனா வெடிகுண்டு வீசப்படும் 💣💣💣💣💣💣
ReplyDelete+123
Delete+456
Deleteசெனா .அனா.ஜி வழக்கம்போல இது உங்கள் ஏரியா.எதிர்பார்த்தது போலவே புள்ளிவிவரங்களுடன் வழக்கம் போல பதிவு.அருமை.ஆனாk.o.k.எதிர்பார்க்கவே இல்லை.நல்லகதைகளுக்கெல்லாம்பாரபட்சம் பார்க்காம இதேபோல் விமர்சனம் எழுதுங்க.தேங்க்ஸ்
ReplyDeleteபுன்னகை ஒளிர். .சோடா எப்படி படிக்கவேண்டும் என்றுஒரு பாடமே அருமையாக எடுத்துள்ளிர்கள் தேங்க்ஸ் . சூப்பர். வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeleteதிருநெல்வேலி மற்றும் நாமக்கல் புத்தகத்திருவிழா விற்பனை எப்படி இருந்தது! நேரம் கிடைக்கும் போது இந்த புத்தகத் திருவிழாக்கள் பற்றி கொஞ்சம் எழுதுங்கள் சார்.
நேரம் இல்லையாம். ஆன்லைன் புத்தக விழா வேளையில் busy ஆக இருக்கிறார் ஆசிரியர்.
Delete@Kumar ji...
Deleteஅப்ப இந்தவாரம் பதிவு வராதா....😶😶😶😶
// அப்ப இந்தவாரம் பதிவு வராதா....😶😶😶😶 // sema sema 😎
Deleteஹிஹிஹி அது வேற department
Deleteஅப்ப நம்ப விக்ரம் சார்-அ பேச சொல்லுங்க.
Delete+++11111😍😘🙏
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteஎல்லாருக்கும் ஸ்பெஷல் போட்டீர்களே , எங்கள் இளவரசிக்கு ஒரு ஸ்பெஷல் போட வேண்டும் என்ற எண்ணம் எழவில்லையே , இது என்ன நியாயம்?
ReplyDeleteஆமா. விடாதீர்கள் பாஸ்.
Deleteபாக்கெட் சைஸ் 6 மினி காமிக்ஸ் வரும்
ReplyDeleteஅட்டவணையில் இல்லாத 6 புக் அதிரடி ரிலீஸ்
உயிரைத் தேடி B & W மற்றும் Color = 2
Total 16 books வருமோ...?
கைவசமுள்ள ஸ்டாக்- அதிரடி டிஸ்கவுண்ட் விலைகளில்...
Deleteகார்ட்டூன் புக் ஒன் செட்
Deleteபட்ஜெட் என்ன.
புதிதாய் வர இருக்கும் இதழ்கள் என்னவென்று தெரிந்தால் ...ஆன்லைன் புக் மேளாவை நல்முறையில் தயார் ஆகலாம்.
எடிட்டர் சார்,
கொஞ்ச கொஞ்சமா வர இருக்கும் காமிக்ஸ் பத்தி தகவல் கொடுங்க Plssssss......
ஸாகோருக்கு,
ReplyDeleteஉங்களை பற்றி
Exclusive FACEBOOK & INSTA பக்கம் உருவாக்குகிறேன்னு சொன்னீங்க.
தொடங்கியாச்சா.
Link-அ வெளியிடுங்க.
உங்கள பத்தி Full details கொடுங்க.
+11111111111111111111...
Deleteஆமாமாம்..😍
உடனே ஸாகோர் FB / Instagram /Telegram விபரம் வெளியிடவேண்டுகிறோம்....😍💪👍
ஜெய்ஸாகோர்...😘😘😘😘😍
கொஞ்சம் கொஞ்சமா வரவிருக்கும் காமிக்ஸ் பத்தி தகவல் கொடுங்க pls+111111
ReplyDelete