நண்பர்களே,
வணக்கம். The day after .....! எப்போதுமே பண்டிகைகளுக்கு மறுநாள் ; பரீட்சைகளின் ரிஸல்ட்கள் வந்த மறுநாள் ; எதிர்பார்த்துக் காத்திருந்த நெடும் விடுமுறைகள் நிறைவுற்ற மறுநாள் - ஒருவித இனம்புரியா மௌனம் குடிகொள்வது வாடிக்கை ! இனி இந்த எதிர்பார்ப்புப் படலம் ஒரு வருஷம் கழிந்த பின்னேயே என்ற புரிதல் ; சில நேரங்களில் தேட்டையை விடவும் தேடலே ரொம்ப சுவாரஸ்யமானது என்ற உணர்தல், இந்த மோன நிலைக்குக் காரணமாகிடலாம் ! 'பண்டிகையும் வந்தாச்சு ; புதுத்துணியையும் போட்டாச்சு ; பலகாரத்தையும் ருசிச்சாச்சு ; பட்டாசையும் வெடிச்சாச்சு' எனும் போது மறுதினம் அவரவர் மாமூலான வாழ்க்கைகளுக்குத் திரும்பிடத் தானே வேணும் ? ஒவ்வொரு ஆண்டின் அட்டவணை ரிலீசுக்குப் பின்பாய் எனக்கு இவ்விதம் தோன்றுவது மாமூல் ! அட்டவணையில் விட்டிருக்கும் உதார்களை இனி நிஜமாக்கிக் காட்டும் பொறுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் உறைக்கத் துவங்கிடும் ; "ஆஹா...இங்கே கொஞ்சம் ஓவராய் ஆவேசப்பட்டுப்புட்டோமோ ? இதைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ ?" என்றெல்லாம் தோன்றத் துவங்கும் !
ஆனால் for a change - இம்முறை the day after syndrome என்னுள் இல்லை ; அச்சோ...ரொம்ப ஓவராய் இழுத்துப் போட்டுக்கிட்டோமோ ? என்ற டர்ருமே இல்லை ! "இதுக்குப் பதிலா - அதை பண்ணியிருக்கலாமோ ? அதுக்குப் பதிலா இதை நுழைச்சிருக்கலாமோ ? என்ற குழப்பங்கள் பெரிதாய் இல்லை ! So கொஞ்சம் தொலைவில் நின்றபடிக்கே எனது தேர்வுகளை நானே விமர்சிக்க முயன்றால் ; எனது அட்டவணையினை நானே decode செய்திட முனைந்தால் பலன் இவ்விதமிருக்கும் :
சந்தா A -
கிட்டத்தட்ட மாற்றங்களுக்குத் துளியும் முகாந்திரங்களில்லா affair என்பேன் ! ஒன்பது புக்ஸ் கொண்ட சந்தாவினில் கிட்டத்தட்ட ஆறேழு நாயகர்களுமே தம்மைத் தாமே தேர்வு செய்துகொள்கிறார்கள் ! Maybe எடிட்டர்கள் & டாக்டர்கள் & தொழிலதிபர்களின் ஆதர்ஷ அம்மணிக்கு 007 உடனொரு இருக்கையைப் போட்டு வைத்ததை நீங்கள் யூகித்திருக்க மாட்டீர்கள் ! இதற்கொரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு !
சொல்லப்போனால் இது முட்டை ரெடியானதால் கோழியும் ரெடியாகிய மாதிரியொரு சமாச்சாரம் ! நமது அமெரிக்க ஓவியை ஒவ்வொரு பணியையும் ஒரு வாரத்திலோ, மிஞ்சிப் போனால் பத்து நாட்களிலோ முடித்துத் தூக்கிப் போடுவது வழக்கம். "அடுத்து வேலை இருக்கா ?" என்ற கேள்வியும் இணைந்தே வரும். So இத்தனை சுறுசுறுப்பாய்ப் பணியாற்றுபவரின் வேகத்துக்கு நாமும் ஈடுதந்திட வேண்டுமே என முன்கூட்டியே அடுத்தடுத்த அட்டைப்படச் சித்திரங்களுக்கு references சேகரித்துத் தயாராக வைத்திருப்பேன் ! சில தருணங்களிலோ - "எப்போனாச்சும் பயன்படுமே !' என்ற ரீதியில் டெக்ஸ் கவர்களையோ ; ஜேம்ஸ் பாண்ட் கவர்களையோ தயார் செய்திடத் தீர்மானிப்பேன் ! அந்த ரீதியில் ஒருவாட்டி இளவரசியின் செம cool படம் கண்ணில் தட்டுப்பட்டது ! 'அட..இந்த அட்டைக்காககவாச்சும் அம்மணியை இட்டாந்தா தேவலையோ ? என்று நினைப்போடு அதை வரைந்தும் வாங்கினேன். அட்டவணையை இறுதி செய்யும் வேலை / வேளை புலர்ந்த போதோ கடுமையான இடநெருக்கடி & ஸ்லாட்டுக்குப் போட்டி நிலவுவதைக் கவனித்த போது - 'ரைட்டு...நமது முதல் ஈரோயினிக்கு மன்ஸ்லே தான் இடம் போலுமென்று பட்டது ! ஆனாலும் அந்த டிசைனை ஆறப்போட மனசு கேட்டில்லா ! அப்போது பிறந்த மகா சிந்தனை தான் - ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டையும் ; அந்நாட்களில் நம்மால் "லேடி ஜேம்ஸ் பாண்ட்" என்று பில்டப்பிக்கப்பட்ட இளவரசியையும் ஒரே இதழுக்குள் அடைத்தால் அம்மணிக்கான ஸ்லாட் பிரச்னையும் தீர்ந்திடும் ; அட்டைப்படத்தையும் கண்ணில் காட்டியது போலாகிடுமே என்பது ! ஏப்ரலின் லாக்டௌன் வேளையில் சிக்கிய சிக்கிய சகலத்தையும் வாசிக்க முடிந்த போது மாடஸ்டியின் ஒரு செம crisp சாகசம் கண்ணில்பட்டது ! சித்திரங்களும் ஷார்ப்பாக இருந்திட, பணத்துக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த மே மாதமே எப்படியோ கதையையும் வாங்கிவிட்டோம் ! So அந்த B & B ஸ்பெஷல் உருவான பின்னணி இதுவே ! And
And அந்தப் புது வரவு மேகி உங்கள் ரேடார்களில் இருந்திருக்க வாய்ப்பிராது ! 2017 முதலே இந்த புஷ்டியான புலியை நான் வெயிட்லிஸ்டிலேயே வைத்து வந்ததால், நடப்பாண்டின் அறிமுக இருக்கையை இவருக்குப் போட்டுத் தரத் தீர்மானித்தேன் ! நெட்டில் பார்த்த மட்டிற்கு reviews எல்லாமே பாசிட்டிவாக இருந்தது மட்டுமல்லாது - நமது பெல்ஜிய ஆலோசகரும் thumbs up தந்திட, சீட் உறுதியானது ! இக்கட LADY S-க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கும் சபலமும் இருந்ததை நான் சொல்லிட வேண்டும் ! ஒரு வான் ஹாம் தொடரை இப்படி அம்போவென abandon செய்துள்ளோம் என்பதை இன்னமுமே என்னால் நம்ப முடியவில்லை தான் ! என்னமோ போம்மா ஷானியா !
அது தவிர அங்கிருந்த ஒரே சர்ப்பரைஸ் - நமது தளபதி தீபாவளி மலர் ! அது முழுக்க முழுக்கவே ஒரே routine-ல் தங்கிடுவது எனக்கு ரொம்பச் சீக்கிரமே போர் அடித்துப் போய் போவதன் பலனே ! வருஷமாய் தீபாவளிகளை ஒரே தடத்தில் கொண்டாடிப் பழகியான பின்னே ஏதாச்சும் மாற்றிப் பார்ப்போமே ? என்ற குடைச்சல் தலைக்குள் எழுந்ததன் பலனே அந்தத் தேர்வு ! And 2014 ஈரோடு ஸ்பெஷலாய் LMS வெளியான நாட்களுக்குப் பின்பாய், இந்த 'தல vs தளபதி ' ஜாலி மோதலுக்கு வாய்ப்பே அமைந்திருக்கவில்லை என்பதால் - 2021 -ல் அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் ஆசையின் பலனே அந்த surprise தீபாவளி மலர் !
சந்தா B -ல் 'தல' தான் பிரதானமாய் இடம்பிடித்திடுவார் என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம் எனும் போது - அவருக்கு எத்தினி ஸ்லாட் என்பது மட்டுமே கேள்வியாக இருந்திருக்க முடியும் ! "இளம் டெக்ஸ்" ஒரு இன்றியமையா அங்கமாகிப் போயிருக்க "திக்கெட்டும் பகைவர்கள்" முதல் தேர்வாகியது ! அப்புறம் தொடர்ந்த இதர டபுள் ஆல்பங்கள் மூன்றுமே, அதனதன் மட்டில் ரவுசு கிளப்பும் கதைகள் என்பதால் no surprises again ! "கண்ணே..கொலைமானே" & Tex & Tesha ஸ்பெஷல் ஆகிய 2 கதைகளுமே நடப்பாண்டிலேயே ரெகுலர் தடத்திலும், ஈரோடு சர்ப்ரைசாகவும் வெளிவந்திருக்க வேண்டியவைகள் என்பதால் கைவசம் கோப்புகள் ரெடியாகவே இருந்தன ! அவற்றை வாகாய் நுழைக்க வேண்டியது அடுத்த ஆட்டோமேட்டிக் பொறுப்பானது ! முன்போல ராயல்டி செலுத்தித் துயில் பயிலும் பாணிகளை இந்த இடர்நாட்களிலும் தொடர்வது இயலாக்காரியமாச்சே ! So ஏதேதோ காரணங்களின் பொருட்டு "அப்பாலிக்கா பாத்துப்போம்" என்று ஆறாமாய் விட்டு வைத்திருந்த படைப்புகள் இனி அவ்வப்போது களம்காண்பது தவிர்க்க இயலா நிகழ்வாகிடும் !
சந்தா B -ன் முதல் சர்ப்ரைஸ் நம்ம டைலன் + மார்ட்டின் கரம்கோர்க்கும் ஆல்பம் எனலாம் ! இங்கே குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை தான் ; because நான் ஒரிஜினலாக டைலனின் சாகசம் ஒன்றையும் ; மார்டினின் சாகசம் ஒன்றையும் தேர்வு செய்தெல்லாம் முடித்திருந்தேன் - 2 தனித்தனி புக்குகளாய் வெளியிடும் எண்ணத்தில் ! CID ராபினுக்கு இம்முறை ஏதாச்சும் குருவி ரொட்டி தந்து கொள்ளலாம் - டைலனையும், மார்ட்டினையும் நுழைப்பதால் என்பதே planning ! ஆனால் படைப்பாளிகளின் இந்தப் புத்தம்புது கூட்டணி ஆல்பம் 2020 செப்டெம்பரில் வெளியானது என் முட்டைக்கண்களில் அகஸ்மாத்தாய் விழுந்து வைக்க - ராபினும் உண்டு ; மார்டினும் உண்டு ; டைலனும் உண்டு என்ற சமரசம் சாத்தியமானது ! என்னைப் பொறுத்தவரையிலும் சந்தா B -ன் highlight புதுவரவான "டபுள் D " தான் (Deadwood டிக்) ! போனெல்லியின் 'அடுத்த லெவல் படைப்புகள்' என்ற அடையாளத்தோடு 2018 -ல் மார்க்கெட்டுக்கு வந்த சில பல புதுப் படைப்புகளுள் இந்தக் கறுப்பினச் சிப்பாயும் ஒருவர் ! 20198-ல் சூட்டோடு சூடாய் இவரை தமிழ் பேச வைக்க விழைந்தேன் ; ஆனால் 'தல' Dynamite Special குறுக்கால பெரும் பட்ஜெட்டில் அன்று நின்றதால் - தள்ளிப்போனது DD திட்டமிடல் ! இந்தாண்டு குறும் அட்டவணையெனினும், சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்கலாகாது என்ற குடைச்சல் மண்டைக்குள் குடியிருந்தால் புதியவரை கையைப் பிடித்து இழுத்து வராத குறையே ! இங்கும் 'இளம் டெக்ஸ்' பாணியிலானதொரு சிறு குழப்பம் இருந்தது - becos 4 சிங்கிள் ஆல்பங்கள் சேர்ந்தே ஒற்றை முழு சாகஸமாகிடுகிறது ! இத்தாலியிலோ அவர்கள் மாதமொன்று என்று சிங்கிளாகவே வெளியிட்டிருந்தனர் - தனித்தனி அட்டைப்படங்களோடு ! இந்தவாட்டியும் "இளம் டெக்ஸ்" விஷயத்தினில் நிகழ்ந்த குளறுபடியினை நாம் அனுமதிக்கப்படாதென்பதால் மருவாதையாய் ஒரே இதழாய் அறிவித்துள்ளேன் ! ஆனால் இந்த டீலிங்கில் 3 அட்டைப்படங்கள் மிஸ் ஆவது தான் நெருடலே !
கடைசிக்கு நான் விட்டு வைத்திருந்தது லயன் 400 -க்கான தேர்வினை ! ஒவ்வொரு ஆண்டிலும் கலர் டெக்ஸ் + ஹார்ட் கவர் என்ற கூட்டணி யாருக்கு ரசிக்கிறதோ இல்லையோ - நம் முகவர்களில் நிறையப்பேருக்கு இவை பஞ்சாமிர்தங்களாய்த் தித்திக்கின்றன ! அவரவர் கடைகளில் வைத்தே பத்தோ - இருபதோ புக்ஸ் விற்க முடியும் போது - அதனில் கிட்டும் கமிஷன்கள், நமது இதர பரீட்சார்த்த லொடுக்கு பாண்டி இதழ்களின் சுணக்கங்களை ஈடுசெய்வதாய் அவர்கள் உணர்கிறார்கள் ! ஆனால் பட்ஜெட் கருதி நாம் TEX Color biggies களை ஊறுகாய்களாகவே பயன்படுத்திடுகிறோம் - unless there is a true occasion like this !! துவக்கத்தில் "திக்கெட்டும் பகைவர்கள்" இத்தலையே இன்னொரு டெக்ஸ் சாகசத்தோடு combine செய்து லயன் 400 என ரூ.250 விலையில் வெளியிட உத்தேசித்திருந்தேன் ! ஆனால் மூத்த பிள்ளைக்கு பளபளக்கும் கலரில் Allen Solly சட்டையை பிறந்தநாளுக்குப் போட்டு விட்டு, இளசுக்கோ - உள்ளூர் குருசாமி டெய்லரிடம் துணியெடுத்துக் கொடுத்து தைத்து வாங்கித் தர மனசு கேட்கவில்லை ! ஆனால் பட்ஜெட் 4000 என்ற நம்பரைத் தாண்டுவது தவிர்க்க இயலாமலே இருந்து வந்தது ! ரைட்டு - 'கி.நா.' வூட்டிலே கொஞ்சம் பியூஸ் பிடுங்கினாக்கா - 'தல' வூட்டிலே சீரியல் செட் மாட்டிப்புடலாம் !' என்ற நினைப்பு மெது மதுவாய்க் குடிகொண்டது ! And அதுவே - கி.நா.வினில் 3 black & வைட் ஆல்பங்கள் காணாது போனதன் பின்னணி ! அவை மூன்றுமே சற்றே இறுக்கமான ; இருண்ட களங்கள் என்பதுமே எனக்குள் லேசான உறுத்தலாய் நின்றதால் - நிறைய யோசனைக்குப் பின்பாய் சந்தா E அரை டஜன் இதழ்களென்பது - கால் டஜனானது !
பாதையினில் இருந்த ஆக்கிரமிப்புகள் காலியான பின்னே 'தல' தாண்டவத்திற்கு ரூட் க்ளியர் என்றான பின்னே - சில காலமாகவே நான் துண்டை விரித்து வைத்திருந்த "புத்தம் புது பூமி வேண்டும்" மெகா சாகசத்தை அங்கே நிலைகொள்ளச் செய்து விட்டேன் ! 'ஓக்லஹோமா' ; 'பந்தம் தேடிய பயணம்' பாணிகளில் இதுவுமே ஒரு புது வாழ்க்கையைத் தேடி ; புது பூமிகளைத் தேடி கேரவன்களில் புறப்படும் குடும்பங்களின் கதை என்பதால் ஆக்ஷன் + செண்டிமெண்ட் + varied கதைப்பின்புலங்கள் இங்கு சாத்தியமாகிடும் என்பது புரிந்தது ! டக்கென்று டிக் அடித்தேன் ! And by the way - இந்த இதழின் விலைக்கு, புஷ்டி காணாது என்ற நண்பர்களின் சிறு நெருடல்களைக் கவனித்தேன் ! Rest assured guys - இதழுக்கு Complan ஊட்டிப்புடலாம், இன்னமும் ஆரோக்கியமாக்கிட !
கார்ட்டூன் சந்தாவினில், கதைகளின் தேர்வுகளைத் தாண்டி, நாயகத் தேர்வுகளில் எனக்குத் துளி கூட ஜோலிகள் இருக்கவில்லை ! இருக்கும் ஆறு பேருக்கு ஆளுக்கொரு ஸ்லாட் ; லக்கிக்கு அதனில் prime slot என்பதோடு கடையைச் சாத்தி விட்டேன் வெகு சுலபமாய் ! பணியாற்றும் வேளைகளில் மட்டுமன்றி, தேர்வுகளிலுமே நோவு தரா டார்லிங்ஸ் !! 2022-ல் தான் இருக்குது வேடிக்கையே - ஹெர்லாக் ஷோம்ஸ் காலி & clifton out of the selection race எனும் போது !!
சந்தா E தேர்வுகள் தான் தினத்துக்கு ஒரு கிளையாய் பயணித்த எனது சிந்தனைகளால் ஏகப்பட்ட அடித்தம் & திருத்தம் கண்டது ! One shot கிராபிக் நாவல்களுக்கு வானமே எல்லை எனும் போது இங்கே அலிபாபா குகைக்குள் புகுந்த புலவன் தருமியைப் போல - 'ஐயோ...இது ஜொலிக்குதே ; ஆத்தி...அது மினுமினுக்குதே ; அச்சச்சோ...அது கண்ணைக் கட்டுதே !!' என்று உருண்டு புரளாத குறை தான் ! இவற்றிற்கென நான் shortlist செய்த கதைகளைக் கொண்டே 2 ரெகுலர் ஆண்டுகளுக்கு முழுவீச்சிலான சந்தாக்களைத் தேற்றிட முடியும் தான் ! இறுதியில் மூணே slots தான்டா மாப்பு...என்றான பின்னே கலரில் இருந்த மூவரை மட்டும் டிக் அடித்தேன் ! அந்த "தாத்தாக்கள் பட்டாளம்" கதையானது at any cost உள்ளுக்குள் நுழைத்திருப்பேன் - becos அந்தக் களத்தில் பணி செய்யவும், அதனை உங்களுக்கு அறிமுகம் செய்யவும் உள்ளுக்குள் ஓராண்டாய் ஆசை ! அதே போல அந்த இன்னொரு வெட்டியானுமே ! இப்போதெல்லாம் சித்திர பாணி breezy ஆக இருக்கும் கதைகளைப் பார்த்தாலே ஒரு வாஞ்சை பிறந்து விடுகிறது ! இங்கு artwork-ம் அழகு ; வர்ணங்களும் அழகு ; நமக்குத் பிடித்த வன்மேற்கே பின்புலம் என்ற போது, சில காலமாகவே ஜம்போவுக்கென நான் அடையாளமிட்டு வைத்திருந்த இந்த ஆல்பம் இம்முறை உள்ளாற புகுந்தது ! And அந்த மூன்றாம் கலர் ஆல்பம் - ஒரு நிஜமான கி.நா. என்பேன் ! புக் வரட்டுமே - மேற்கொண்டு பில்டப்களின்றி !
So எனது அட்டவணையின் பின்னுள்ள ; சைடிலுள்ள ; உசக்கேயுள்ள மஹாசிந்தனைகள் இவையே ! பட்டியலை விளம்பரங்களாக்கி, கண்ணில் காட்டி முடிக்கும் போது - 'அடங்கொன்னியா ..இதுக்குப் போயி இந்த முக்கு முக்குனியாக்கும் ?" என்று எப்போதும் போலவே இம்முறையும் தோன்றுகிறது ! ஆனால் தேர்வு செய்திடும் போது தலைக்குள் வந்து செல்லும் ஓராயிரம் எண்ணங்கள் ; நிறைகள்-குறைகள் ; குழப்பங்கள்-தெளிவுகள் எல்லாமே என்ன மாதிரியான சித்து விளையாட்டுக்களை ஆடும் என்பது தனிக்கதை !
இயன்ற வரையறைகளுக்குள், வாசக அபிலாஷைகள் ; விற்பனைக்கட்டாயங்கள் ; கதைக்கொள்முதலின் சாத்திய - அசாத்தியங்கள் ; பணியாற்றக்கூடிய ஆக்கங்கள் ; பளுநிறைந்த ஆக்கங்கள் - என நிறைய சங்கதிகளுக்கு weightage தந்திடும் போது ஒரு குறுகிய கால அட்டவணை என்ற விதத்தில் இது ஓ.கே. என்று எனக்குப்பட்டது ! ஆனால் உள்ளுக்குள் குடியிருந்தபடிக்கே என்றைக்குமே நமக்கான உசரங்களை 'இன்னும் கொஞ்சம் மேலே..இன்னும் கொஞ்சம் மேலே..' என்று நகர்த்திட விழையும் ambitious ஆராவுமுதன் - "இன்னும் பெட்டராப் பண்ணியிருக்கலாமோடா அம்பி ?' என்ற கேள்வியினைக் கேட்கத் தவறுவதேயில்லை ! ஆண்டுதோறும் ; மாதம்தோறும் ; வாரம்தோறும் ; தினந்தோறும் இந்தக் கேள்வியினை repeat செய்திட இவர் மட்டும் இல்லையெனில், 'பெருசாய் கிழிச்சாச்சு !" என்ற லயிப்பில் நான் கொஞ்சம் லாத்தலாகிடக்கூடும் என்பதால் - ambitious அம்பி எப்போதுமே எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் !! "இருக்கவே இருக்கு 2022 அண்ணாச்சி ; இன்னும் பேஷாப் பண்ணிப்புடலாம் !' என்றபடிக்கு இப்போவே புதியதொரு நோட்டை வாங்க ஆள் அனுப்பிவிட்டேன் - மஹாசிந்தனைகளின் அத்தியாயம் நானூற்றி எழுபத்திஎட்டுக்கோசரம் !
Bye folks !! See you around !! A nd here's the online listing :
https://lioncomics.in/product/jumbo-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu-copy/
அட!
ReplyDeleteIthuvaa mini pathivu Dr? :-)
Delete@ Doctor and @ Editor,
DeleteDeadwood Dick - செஞ்சமரக் குத்துன்னு அப்டியே direcடா எழுத்திடவேண்டியதுதான் - கொஞ்சம் dyslexic-ஆ படிச்சிகிட்டா போச்சு - விரசமாவே இருக்காது :-D
//Ithuvaa mini pathivu//
Deleteஅர்னால்ட் பக்கத்துல ஓமக்குச்சி நரசிம்மன்
பாத்தப்ல அட்டவணை பதிவுக்கப்பறம் இதப் பாத்தா அப்டி தெரிஞ்சது:)
வாழ்த்துகள் 💐💐💐💐💐
Deleteநம்மள்லாம் பரீட்சை ஹாலை எக்ஸ்டரா ஷீட் வாங்கியே தெறிக்க விட்ற ஆளாக்கும் ; அவ்ளோ லேசா மினி பதிவோடு வுட்டுப்புடுவோமா ?
Deleteமார்க் எம்புட்டு வாங்கினீக..
Deleteகடமையைச் செஞ்சுப்புடணும் சார் ; பலன்கள் நம்ம கைலேயா கீது ?
DeletePadhu Sir - அவர் எப்படிப்பட்ட மாணவர்னு சில மாதங்கள் முன்னாடி ஒரு பதிவுல சொல்லிருந்தாரு - தேடிப் படிங்க ! இங்க அடக்கி வாசிக்கிறார் என்பதால் யாருக்கும் சளைத்தவரல்ல - அவர் காலங்களில் எவரையும் மிஞ்சக்கூடிய மாணவராய் இருந்தவர்.
Deleteநம்ம நல்ல நேரம் - இப்போ 1000 பேருக்கு காமிக்ஸ் போட்டுக்கிட்டிருக்கார் ! இல்லேன்னா நம்மெல்லாம் வேற பிளாக்ல கட்சி சண்டை போட்டிக்கிட்டுருப்போம் :-)
2
ReplyDeleteகாலத்தின் கட்டாயம் என்றாலும் 2021 அட்டவணை எந்தவித சமாதானங்களும் தேவைப்படாத மிகமிக நிறைவானதொரு அட்டவணை சார்.. (என் வரையில்).!
ReplyDeleteSometimes challenging circumstances bring out the best within us - this time it applies to Editor as well ..
Deleteஅனைத்து selectionsஉம் நன்றாக உள்ளன.... இளவரசியின் இதழுக்கு ஆவலுடன் waiting....
ReplyDeleteபுத்தகத்தைதானே சொல்றீங்க சார்? he he !
Delete//புத்தகத்தைதானே சொல்றீங்க சார்? he he !//
Deleteஹா..ஹா..ஹா..
////புத்தகத்தைதானே சொல்றீங்க சார்? he he !//
Deleteகுறும்பு! :)))))
பை த வே, நண்பர் AKK ஒரு 'டாக்டர்' என்பதால் 'புத்தகத்துக்காக' மட்டும்தான் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! :P
உங்களுக்கு மீன் பிடிக்கத் தெரியுமா டாக்டர்?!!
எடிட்டர்களுமே செமையா மீன் பிடிப்பாங்கன்னு ஆருக்காச்சும் தோணுச்சா ?
Deleteபுத்தம் புதிய புத்தகமே..
Deleteஉன்னை புரட்டிப்பார்க்கும் புலவன் நான்..
சூப்பர் சீனியர்ஸ்லாம் ஏதோ சீரியஸா பேசிக்கிறாங்க!!!!
Deleteநாம அப்டிக்கா போவோம்!😉😉😉
6th
ReplyDelete9th
ReplyDeleteடாப் டென்
ReplyDeleteஅடடே...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஅவையோருக்கு வணக்கம்
ReplyDeleteவந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteHi..
ReplyDeleteHiii
ReplyDelete21
ReplyDelete// ஒருவாட்டி இளவரசியின் செம cool படம் கண்ணில் தட்டுப்பட்டது ! 'அட..இந்த அட்டைக்காககவாச்சும் அம்மணியை இட்டாந்தா தேவலையோ ? என்று நினைப்போடு அதை வரைந்தும் வாங்கினேன். //
ReplyDeleteIf possible can you please share the picture sir?
இதோ - பார்த்திருக்க மாதங்கள் ஓடி விடும் சார் ! புக்கிலேயே பார்த்திடலாமில்லியா ?
Deleteரொம்ப ஆசைப்படறராரு காட்டி புடுங்க சார்...
Delete(நிசமா பக்கத்து இலைக்கி பாயாசமே தான்....)
🙏
ReplyDeleteஇளவரசியா கொக்கா...:-)
ReplyDeleteஒருவேளை வாத்தோ?!🤔
Deleteஹிஹி! இருக்கலாம் இருக்கலாம்!!
Deleteமகேந்திரன் பரமசிவம் - உங்க கூட மீன் பிடிக்க வராமல் டாக்டர் கூட மீன் பிடிக்க செல்வதால் தானே இப்படி சொல்லுறீங்க :-)
Deleteஇஸ்தான்புல் பறவையா?
Deleteஇளவரசி என்பவர் கொக்கு மட்டுமல்லவே...?.!..
Deleteஇந்த மாத புத்தைங்கள் விரைவிலியே கிளம்ப வையுங்கள் சார்...!
ReplyDeleteபுது பதிவுக்கு நன்றி சார்.
ReplyDeleteபோன பதிவில் உள்ளே நுழையவே முடியவில்லை.. (சில விசயங்களை அனுபவிக்கனும்.. ஆராயல்லாம் கூடாது... என்பது போல்.. ஆகா..' ஆகா... நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டதே என்ற சிலாகிப்பிலேயே ... நேரம் கடந்து விட்டது.)
எப்படியும் 27- இதழ்கள் ( மாதம் மூன்று) இருக்கும் என்று யூகத்தில் தவறி றுக்க வாய்ப்பில்லை. என்று நினைத்தேன்.
ஆனால் இதழ்களின் எடை ?i தான் சந்தேகமாக இருந்தது.
ஒரு பாண்டியராஜன் படத்தில் 2000 ம் - 3000-ம் 4000 -ம் என்று ஏலம் கூடுதலாக விடுவது - மாறி நீங்கள் 4000-ம் , 3000 -ம், 2000 -ம் என்று பின்னோக்கி சென்று விடுவீர்களோ என்று தோன்றியது.
உண்மையில் இரண்டு மைல்கல் , இதழையும் ,கழித்துப் பார்த்தால் - ரூ 3000 தில் தான் நிற்கிறது. நன்றி சார்.. இப்போதைக்கு இந்த வெயிட் - டே - யாரையும் பாதிக்காத அளவுக்கு இருக்கிறது.
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான்.
பாண்ட் & ப்ளைஸி இதழை பெரிய சைஸில் அல்லாமல் (பக்கத்துக்கு 12 படங்கள்)
Tex இதழ் சைஸிற்க்கு - (பக்கத்துக்கு 6 படங்கள்)மாற்றி அமைத்தால் நிச்சயம் ரசிக்கக் கூடிய இதழாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் இதழாகவும் அமையும். (ப்ளிஸ் சார் அந்த சைஸில் B & Wஇதழ் சோபிக்க வே இல்லை.. இது மனம் சார்ந்த விசயம்தான் ஒத்துக் கொள்கிறேன் - முயற்சி செய்யுங்கள் சார்..)
அட்டைப்படங்களில் இருக்கும் கிக் சின்ன சைசில் இருக்காதே ஜி!
Deleteஅத்தோடு இளவரிசியின் செமயான ஓவியமாமே! அதை பெரிய சைஸ் அட்டைல பார்த்து புடலாமே, இந்த ஒரு தபா! 😍😍😍😍
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான்.
Deleteபாண்ட் & ப்ளைஸி இதழை பெரிய சைஸில் அல்லாமல் (பக்கத்துக்கு 12 படங்கள்)
Tex இதழ் சைஸிற்க்கு - (பக்கத்துக்கு 6 படங்கள்)மாற்றி அமைத்தால் நிச்சயம் ரசிக்கக் கூடிய இதழாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் இதழாகவும் அமையும். (ப்ளிஸ் சார் அந்த சைஸில் B & Wஇதழ் சோபிக்க வே இல்லை.. இது மனம் சார்ந்த விசயம்தான் ஒத்துக் கொள்கிறேன் - முயற்சி செய்யுங்கள் சார்..)
####
எனக்கும் இந்த எண்ணம் தோன்றியது நண்பரே..ஆசிரியர் முடிந்தால் (மட்டும் ) முயற்சி செய்து பாருங்கள் சார்..
( என்ன ..ஒரு இன்னொரு குண்டு புக் வரும் பீலிங் வரும் சார்..அதுக்கும் தான்..)
// என்ன ..ஒரு இன்னொரு குண்டு புக் வரும் பீலிங் வரும் சார்..அதுக்கும் தான்.. //
Delete:-)
ஆஜர்
ReplyDelete// துவக்கத்தில் "திக்கெட்டும் பகைவர்கள்" இத்தலையே இன்னொரு டெக்ஸ் சாகசத்தோடு combine செய்து லயன் 400 என ரூ.250 விலையில் வெளியிட உத்தேசித்திருந்தேன் ! //
ReplyDeleteஎனது யூகமும் அவ்வாறே இருந்தது சார்......
// ஓக்லஹோமா' ; 'பந்தம் தேடிய பயணம்' பாணிகளில் இதுவுமே ஒரு புது வாழ்க்கையைத் தேடி ; புது பூமிகளைத் தேடி கேரவன்களில் புறப்படும் குடும்பங்களின் கதை என்பதால் ஆக்ஷன் + செண்டிமெண்ட் + varied கதைப்பின்புலங்கள் இங்கு சாத்தியமாகிடும் என்பது புரிந்தது ! //
ReplyDeleteஅப்ப டெக்ஸின் முக்கியமான இதழ்களில் இதுவும் இடம்பிடிக்கும்னு சொல்லுங்க...
டெபனட்லி டெபனட்லி ரவி!
Delete// சந்தா B -ன் முதல் சர்ப்ரைஸ் நம்ம டைலன் + மார்ட்டின் கரம்கோர்க்கும் ஆல்பம் எனலாம் //
ReplyDeleteஉண்மையில் இது வித்தியாசமான முயற்சிதான் சார்,திரை நாயகர்கள் கூட்டணி சேர்ந்து தரும் படைப்புகள் பொதுவாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்,இனிவரும் காலங்களில் இதே உத்தியை காமிக்ஸிலும் கடைபிடித்தால் நல்லதொரு வரவேற்பு கிட்டும் என்று தோன்றுகிறது....
காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமான சிந்தனைகளை களமிறக்குவதும்,வரவேற்பதும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்......
உண்ம!
Deleteஇணைந்த கைகள் எப்பவும் சாதிக்கும்!
Deleteவழிமொழிகிறேன்..
Deleteகதைத் தேர்வுகளின் பின்னணி கூட படு சுவாரஸ்யமாகவே இருக்கிறது!
ReplyDeleteவாழ்க ambitious ஆராவுமுதன்!
///கதைத் தேர்வுகளின் பின்னணி கூட படு சுவாரஸ்யமாகவே இருக்கிறது!///---யெஸ்ஸூ டபுளாக!
Deleteமீஈஈஈண்டும் மிகப்பெரிய பதிவு பார்த்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteஇந்த இதழின் விலைக்கு, புஷ்டி காணாது என்ற நண்பர்களின் சிறு நெருடல்களைக் கவனித்தேன் ! Rest assured guys - இதழுக்கு Complan ஊட்டிப்புடலாம், இன்னமும் ஆரோக்கியமாக்கிட !
ReplyDelete:) :)
**** சத்தமின்றி ஒரு அன்புச் சந்தா *****
ReplyDeleteநண்பர் ஜெகத்குமாருக்கு (சேலம்) ஒரு நல்லுள்ளம் படைத்த நண்பரால் சந்தா ஃபலூடா + ஜம்போ சந்தாக்கள் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது!
இதன் பின்புலத்தில் மாடஸ்டியைக் காணத் துடிக்கும் பெங்களூரு நண்பர் ஒருவரும், சேலத்தின் இரும்பு மனிதர் ஒருவரும் உண்டு!
பரிசளித்த நல்லுள்ளத்திற்கும், பக்கபலமாய் இருந்த நண்பர்களுக்கும் 🙏🙏💐💐
ஜெகத்குமாருக்கு வாழ்த்துக்கள்!
Deleteஅழகான நிகழ்வு மகிழ்ச்சி
Deleteஅற்புதமான நிகழ்வு!
Deleteவாழ்த்துகள் ஜெகத்💐💐💐💐
அள்ளி வழங்கும் அன்புள்ள நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்🙏🙏🙏🙏
அருமையான செய்தி ...வாழ்த்துக்கள் நண்பரே...
Deleteஎப்பவும் தீபாவளின்னா பட்டாசுதான் சார். அதாவது தல. இம்முறை ஒரு சேஞ்சுக்கு பொங்கலும். இதாவது டைகர். அசத்துனா இதே வண்டியை அடுத்தவருசமும் சந்தோசமா ஓட்டுவோம் கரூர் ராஜ சேகரன் .
ReplyDeleteஆசிரியர் சார். இளவரசிக்குஆதரவு கூடிக் கொண்டே இருப்பதை குறிச்சுக்குங்க. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதலைநகரில் செட்டிலாகியிருக்கும் அன்புள்ளம் கொண்ட ஒரு நண்பரிடமிருந்து நேற்று ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது! அதாவது, எனக்கான சந்தாக்கள் அவரால் பரிசாக அளிக்கப்பட்டுவிட்டதாம்.. இதில் இ.ப முன்பதிவும் சேர்த்தியாம்!
ReplyDeleteமூச்சடைப்பது போல உணர்ந்தாலும் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆனால் ஏன்? எனக்கு அவசியமில்லையே?!! எனக்கான சந்தாவை நானே செலுத்திக் கொள்ள முடியுமே?! வேறு இடம் பாருங்கள்' என்றேன் - சற்றே கண்டிப்போடு! அதற்கு அந்த மர்ம நபர் அளித்த பதில் கண்களில் நீர் துளிர்க்கச் செய்வதாய் இருந்தது!!
அதாவது சந்தா செலுத்தாமல் எனக்கு மிச்சமாகும் பணத்தைக் கொண்டு என் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் முதலீடு செய்ய வேண்டுமாம்! அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.. அந்த அன்பு நண்பர்!
வீட்டம்மாவிடம் இது குறித்துப் பெருமையாகச் சொன்னபோது "இந்தக் காலத்துல இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்காங்களா?!. ஆச்சரியமா இருக்குங்க! உங்களுக்குத்தான் எத்தனை நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க!!" என்றார்!
"ஃப்ரெண்ட்ஸாவது நல்லவங்களா கிடைச்சிருக்காங்களே!!" என்று சொல்லிவிட்டு கணநேரத்தில் கட்டிலுக்கடியில் புகுந்து தப்பினேன் நான்!
Super! Wow!!
Deleteஅருமையான செய்தி EV
Deleteஅட டே!!! சூப்பர் வாழ்த்துகள் செயலரே!🌹🌹🌹🌹🌹
Deleteஅன்புள்ள நண்பரை யூகிக்க முடிகிறது. அருமையான முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள்,👌👌👌👌👌
வாவ்...அருமை செயலரே... அந்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Deleteஇந்த காமிக்ஸ் கூட்ட நண்பர்களிடம் மட்டும் ஏதோ உள்ளது அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும்..காமிக்ஸ் தோழமைகளால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் ,பயன்களையும் அலுவலக நண்பர்களிடம் ,தோழர்களிடமும் ( மட்டும் ) பகிர்வேன்...உண்மையிலேயே ஆச்சர்யமாகிவிடுகிறார்கள் இப்படியும் உனக்கு நண்பர்கள் உள்ளார்களா என்று ..
அது போலத்தான் இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் ஆச்சர்யபடுத்துகிறார்கள்.சந்தோசபடுத்துகிறார்கள்..
அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த பாராட்டுகள்..
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
DeleteGood night friends
ReplyDeleteஅவங்க நல்ல மூடுல இருந்ததால் தப்பினீங்க. பிரமோஸ் ஏவுகணையை விட பூரிக்கட்டை குறி தவறாமல் இலக்கை தாக்கி வீழ்த்தக்கூடியது. Be careful ஈ.வி.
ReplyDeleteஅனுபவம் (தோ/பா/கா)ய்ந்த எழுத்துக்கள், பத்து சார்! :)
Deleteவீட்டிலும் ஓரிரு நாளுக்கு ஹெல்மட் போட்டுக்குங்க ஈவி!😆😆😆😆
Delete1991ல் என் திருமணம். 30 வருட அனுபவமாக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஈ.வி. உண்மையிலேயே மிகச்சிறந்த நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கின்றார்கள். அந்த நல்ல உள்ளங்களை உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇத்தகைய நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்தது இந்தக் காமிக்ஸே எனும்போது இதன்மீதான ஈடுபாடும் கூடிக்கொண்டே போவதில் வியப்பில்லைதானே பத்து சார்?
Deleteஇரவு வணக்கம்
ReplyDeleteஎடிட்டர் சொன்ன மாதிரி, பல நாயகர்களின் கதைகள் ஒன்றாக இனணந்து நாம் கதம்ப இதழ்களாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் முதல் முறையாக ரசிக்கயிருக்கும் ஒரே இதழில் மார்ட்டின் + டைலன் கூட்டணி கதையைப் பற்றி சில விஷயங்கள்:
ReplyDeleteThe Investigator of the Nightmare (டைலன்) and the Detective of the Impossible (மார்ட்டின்) இந்த இருவரும் ஒரே கதையில இணைந்தது இப்போதல்ல, சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே! அதாவது, 1990-ல் இவர்களின் இணைந்த முதல் கதை Last Stop: The Nightmare!
அடுத்து 2 ஆண்டுகள் கழித்து 1992-ல் இரண்டாவது கதை La fine del Mondo (The End of the World) அதாவது, 'உலகத்தின் கடைசி நாள்'. இதுதான் நாம் அடுத்தாண்டு ரசிக்கவிருக்கும் கதை. (இது இந்தாண்டு செப்டெம்பரில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாக வந்துள்ளது என்பது கொசுறுத் தகவல்).
கடைசி மற்றும் இறுதியாக 26 ஆண்டுகள் கழித்து, 2018-ல் மூன்றாவது கதை 'The Abyss of Evil' வெளிவந்துள்ளது. So, இதுவரையில் இவர்களின் கூட்டணியில் மொத்தமே 3 கதைகள் மட்டுமே! டைலன் & மார்ட்டின் கதைகள் தனி தனியாக வரும் போதே எதிர்ப் பார்ப்புகள் அதிகமிருக்கும். இப்போது இவர்கள் இணைந்து ஒரே கதையில் எனும் போது நிச்சயம் மண்டை குடைச்சலுக்குப் பஞ்சமிராது...!?
சூப்பர் தகவல்களை அள்ளித்தர்றீங்க, உங்களது தேடலுக்கு நன்றிகள் நண்பரே!
Deleteகூட்டணி பற்றிய தகவல்கள் அருமை, மொய்தீன் ஜி!
Deleteகூட்டணிக்கான ஏற்பாடுகள் வேகமெடுக்கும் இந்த நேரத்தில், கூட்டணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அருமை சார்.
Deleteசுவையான தகவல்கள்...
Deleteடைலன், மார்ட்டின் இணைந்து ஒரே இதழில் எனும் போதே ஒரு வித எதிர்பார்ப்பு..! So, இவர்கள் ஒரே கதையில் இணைந்தது எப்படி / எப்போது என்ற தேடலின் பின்னணியே இந்த விவரங்கள்; நாம் இவர்கள் இணைந்த இந்த கூட்டணிக் கதைகளைப் படிக்கும் போது இந்த விஷயங்கள் துளியும் உதவாதுதான். ஆனால், சில விஷயங்ககளை இது மாதிரி தெரிந்து கொண்டு படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.
DeleteDylon dog batman இணைந்து சாகசம் செய்த கதை நெட்டில் பார்த்ததாக ஞாபகம்
Deleteவாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
ReplyDeleteஈ வி &அன்புள்ளம் கொண்ட நண்பர்க்கு.
சம்மரி ஆஃப் 2021.....
ReplyDeleteசந்தா A for ஆக்சன் அதிரடி:-
#9இதழ்கள்!
#டாப் பிக்:இரத்தப்படலம் க்ளைமாக்ஸ் பாகம்!
#பிரியா விடை:டியூராங்கோ!
#டூ ஆர் டை:கேப்டன் டைகர்!
#ரூக்கி:மேகி!
#டார்க் ஹார்ஸ்: The B&B special!
சந்தா B for போனெல்லி பார்டர்:-
9இதழ்கள் மீண்டும்...
#ஹைலைட் ஆஃப் த இயர்: லயன் 400!
#செல்லப்பிள்ளை:திக்கெட்டும் பகைவர்கள்-யங் டெக்ஸ்!
#ரவுண்ட் பன்: T&T special!
#டார்க் ஹார்ஸ்: உலகத்தின் கடைசி நாள்-டைலன்&மார்டின்!
#அரிசோனா ஆம்புஸ்-டெட்வுட்!
சந்தா C for சிரிப்பு.....
#என்றும் 16 லக்கி ஆண்டு மலர்!
#காமெடி தோரணங்கள்:வுட்சிடி பாய்ஸ்& மேக்அப் தாத்தா!
#பெர்ஃபார்ம் pair:ப்ளூகோட்ஸ்!
சந்தா E for எக்ஸைடிங் ஒன் ஷாட்ஸ்...
3இதழ்கள்....
#மினி மீல்ஸ்கள்-3
#XII the man:-லயன் மேக்ஸி!
கிராக்கர் ஆஃப் த சீசன் வெயிட்டிங்!
(ஒன்றும் இல்லை மறுக்கா ஒரு தபா அட்டவணை பதிவு படிச்சனா அதான், ஹி..ஹி..)
இதான் அதிக தடவை படிச்ச அட்டவணை பதிவாக்கும்!
:-)
Delete77வது
ReplyDeleteஇதான் அதிக தடவை படிச்சஅட்டவணை பதிவாக்கும். நாமலும் ஏதாச்சும் பதியலாம்னாகாலை எட்டுமணிக்கே load moreன்னு அசத்திட்டாங்க. கரூர் ராஜ சேகரன்
ReplyDelete79
ReplyDeleteMaxi size பலருக்கு பிடிக்கவில்லை (அடுக்கி வைப்பதற்கும், புக் மடங்கி வளைந்து போவதாக பலர் குறை கூறியுள்ளனர்) அதனால அடுத்த வருடம் Maxi size வராது இந்த வருடத்தோடு அதற்கு சுபம் போடுவதாக சொல்லியிருந்தீர்கள்! ஆனால், அடுத்த வருட சந்தாவில் Maxi size m வரும்னு சொல்லியிருக்கிங்களே சார்? 😳
ReplyDeleteகலீல், மாக்ஸி சைஸ்-க்கு சுபம் என்று எடிட்டர் சொன்னதாக எனக்கு நினைவில்லை. மாக்ஸி சைஸ் தொடரவே செய்யும். டெக்ஸ் மட்டுமே மாக்ஸி சைசுக்கு முழுக்கு. ஒரு online புத்தக விழாவோ அல்லது வேறு ஏதேனும் நேரடி புத்தக விழாவிலேயோ மாக்ஸி சைஸில் லக்கி லூக், வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் தலை காட்டிடும்.
Delete👍👍
Delete93rd
ReplyDelete2021 கதை தேர்வுகளுக்கு பின்னால் உள்ள கதை நன்றாக உள்ளது.
ReplyDeleteநாம் வருடத்தில் பாதிநாளு உலவும், நம்ம டெக்ஸ் & கோ, பெரும்பாலான குதிரை சவாரியாளர்கள் வாழிடமான அரிசோனா மிக முக்கிய பங்கு ஆற்றி இருக்கும் போல....
ReplyDelete72 ஆண்டுகளில் மாற்றத்திற்கு மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.
Jumbo 4 இதழ்கள் ஏப்ரல் 2020-- டிசம்பர் 2020 வரையிலுமா அல்லது ஏப்ரல் 2020 --
ReplyDeleteமார்ச் 2021 வரையிலுமா என்று clarify செய்யுங்கள்.
My dear KS asks this in last post, and editor sirs answer...
Delete///Kumar Salem1 November 2020 at 21:09:00 GMT+5:30
சார் எனக்கு ஒரு சந்தேகம் ஜம்போ சீசன் 4 ஏப்ரல் 2021 இல் இருந்து எப்போது வரை??
a) டிசம்பர் 2021
b) March 2022
Reply
Replies
Reply
Lion Comics1 November 2020 at 22:54:00 GMT+5:30
சந்தர்ப்ப சூழல்களை பொறுத்தே சார் !
///---
I think if all goes well then JUMBO season IV will end in next year.
We can expect a solid santha and JUMBO-V and glittering Graphic novel santha for 2022!
Also 2022 is Muthu comics's 50th year. So we can celebrate whole year with comics garland!!!
---STV.
99
ReplyDeleteNow 100 ....
ReplyDeleteகழுகு வேட்டை 2021 ஏப்ரலில் வருவதாக ஆசிரியர் கூறியுள்ளார்,இந்த வருடச் சந்தா
ReplyDeleteமார்ச்சில் முடிகிறது...
அப்படியெனில் கழுகு வேட்டை இதழ் எந்த வருட வெளியீட்டில் இடம்பெறும்....
அதேபோல் ஜனவரி ஆன்லைன் திருவிழாவிற்கு இடம் பிடிக்கும் ஸ்பெஷல் இதழ்கள் என்னவாக இருக்கும் ???!!!
1st ones ans in your question, 2020 will ended in march2021. So it's beginning of 2021s...!!!
DeleteJanuary online specials:-
One colour reprint of Tex and one heroes new story who missed out in 2021plan.
For reprint, My wish is Tigers "Illamyil kol"- part2&3!.
-STV.
// One colour reprint of Tex //
Deleteஅந்த மரண முள் கூட வெயிட்டிங்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க...
"பழிக்குப் பழி"--- ம் பட்டையை கிளப்பும்...!!! தீபாவளிமலர் 1987ல் வந்த கதை என்பதால் நிறைய பேரிடம் இல்லை... நல்ல வரவேற்பைப் பெறும்...!!!
Deleteமரணமுள்ளும் அதிரடியான ஒன்றே!
மில்லெனியம் ஸ்பெசல் ல வந்த " எல்லையில் ஒரு யுத்தம்" -கூட நிறைய பேரிடம் இல்லாத கதைதான்(ஸ்பெசல் இதழில் இடம்பெற்ற காரணமாக)
----இந்த 3ல் எதுனாலும் அட்டகாஷ் தான்!
சரி,சரி வருஷத்துக்கு ரெண்டா போடுங்க,நாங்க கோவிச்சிக்க மாட்டோம்......ஹி,ஹி......
Deleteமா..துஜே ...சலாம்.!
ReplyDeleteமுதலில்..
ஆசிரியருக்கு ஒரு மிகப் பெரிய சலாம்.
இது போன்ற கதைகளே நம் சிந்தனையை செம்மைப்படுத்துகின்றன.மனிதத்தின் மேலான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.வாழ்வின் மீதான பிடிப்பை அதிகப்படுத்துகின்றன.
வரலாற்றைப் புரிந்து கொள்வோம்.
செமி கார்டூன் பாணியிலான சித்திரங்கள், கதையை உள்வாங்குவதற்கும், ஒரு இலகுத் தன்மையை உருவாக்கவும் செமையாக உதவி புரிகின்றன.
Deleteஒரு நார்மலான ஓவிய பாணி, இதே வகையான உணர்வுகளை நமக்குள் கடத்துமா என சொல்லத் தெரியவில்லை.
ஓவியங்கள் அற்புதம் நிகழ்த்துகின்றன.
அருமை GP same feeling.
Deleteதலைவருக்கே டெஸ்டா.?
ReplyDeleteசென்ற பதிவின் லோடுமோர் குவியலில் பொதிந்து இருக்கும் கமெண்ட்,
ReplyDelete///
Selvam abirami2 November 2020 at 11:45:00 GMT+5:30
வழக்கமான அட்டவணை ஏதோ ஒரு தரப்பின் அதிருப்தியை சம்பாதிக்கத்தான் செய்யும்.
இந்த அட்டவணை ஒரு ப்ளஸெண்ட் ஷாக்னுதான் சொல்லணும்..
போன வருட அட்டவணையின் ஒருபகுதியை புதுவருட குவார்ட்டருக்கு ஸ்டெரெட்ச் செய்ய வேண்டிய நெருக்கடி .
9 மாதத்துக்கான அட்டவணை முதல் குவார்ட்டர் இதழ்களுடன் கிளாஷ் செய்யக்கூடாது
இதழ்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்துவது
கையிருப்பு ஜோனர் இதழ்களை பாலனஸ் செய்வது..
ராயல்டி செலுத்தப்பட்ட இதழ்களை வெளியிட முடியாதபடி பட்ஜெட் நெருக்கடி
ஓவராலா பாத்தா எடிட்டர் சாரின் இந்த அட்டவணை அமேஸிங்னுதான் சொல்லணும்!!////
----மரியாதைக்குரிய அன்பு பொருளர் ஜி குறிப்பிட்டு உள்ளவாறு இது "அமேஸிங்"கான அட்டவணை!
ஓன்ஸ்மோர் வெல்டன் எடிட்டர் சார்.
சேலத்தில் உள்ள மூத்த காமிக்ஸ் ரசிகரும் நேற்று நேரில் சந்தித்து எடிட்டர் சாரின் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் சந்தாவில் இணைவதாக சொல்லி இருக்கார்.
சகலரிடமும் எடிட்டர் சாரின் இந்த அட்டவணை ஸ்கோர் செய்திருப்பதை காணும்போது நிறைவாக இருக்கிறது.
சோதனையான காலகட்டத்தில் பாலைவனச்சோலையாக இளைப்பாற உதவுகிறது!
// சேலத்தில் உள்ள மூத்த காமிக்ஸ் ரசிகரும் நேற்று நேரில் சந்தித்து எடிட்டர் சாரின் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் சந்தாவில் இணைவதாக சொல்லி இருக்கார். //
Deleteசூப்பர். மகிழ்ச்சி.
Jameshbond 2.0 missing sir
ReplyDeleteMI 6 எங்கேனும் அனுப்பியிருப்பார்களோ ? 🤔
DeleteDiwlai booke eppp sir varum
ReplyDeleteதீபாவளிக்கு முன்னேவே நண்பரே !
Deleteஇந்த பதிலுக்கு 2 மார்க் தான் கொடுக்க முடியும் சார்!
Delete'இன்னும் இரண்டு நாளில்'னு சொன்னீங்கன்னா ஃபுல் மார்க்!
பன் எண்ணிக்கை குறைஞ்சிடுமே. ..பரால்லியா ?
Deleteஅது வந்துங் சார்... (slurp) இருதலைக் கொள்ளியாய் என் நிலைமை!!
Deleteசெவ்வாய்க்கிழமை புக் கிடைக்கற மாதிரி கனவெல்லாம் வந்தது சார்,அது கெலிக்கனும்......
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசதியின் மதி...
ReplyDeleteஇந்த மாதம் வந்த கதைகளில், முதலாவதாக படித்த கதை... ஒரு ஆட்டக்களத்தில் நம்பர் 1 முக்கியமா, நம்பர் 2 முக்கியமா என்று கேட்டால், இனிமேல் 2 என்று தான் பதில் சொல்லுவேன். அந்த அளவிற்கு கால்விக் வாக்ஸ் முத்திரை பதித்திருக்கிறார். யார் தலைவனாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் இப்படிப்பட்ட நிழல் மனிதர்களிடம் தான் இருக்கும் என்பதை, அமெரிக்க அரசியல் வரலாற்றுடன் சேர்த்து பக்குவமாக கொடுத்திருக்கிறார்கள் படைப்பாளர்கள். இரத்தப்படலம் தொடரில் சிறிய வேடம் / பங்கு மட்டுமே கொண்டிருந்த ஒரு மனிதனுக்குப் பின்னால், எத்தனை எத்தனை அழுத்தமான கதைகள், கொடூரங்கள், கற்பனைகள்... அப்பப்பா!
ஆசிரியருக்கு: எஞ்சியுள்ள ஸ்பின்-ஆப் கதைகளை வரும் நாட்களில் ஒன்றிரண்டாகவோ, டைஜஸ்டாகவோ வெளியிட்டால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறது கால்வின் வாக்ஸ் கதைக்களம்...
நேற்றைய நகரம்!
சரக்கு நிறைய இருக்கும் கதை... நடக்கும் சிலை மர்மத்தில் பார்த்த ரோஜருக்கும், இதற்கும் போட்டி வைத்தால், இந்த ரோஜர் சற்றே ரியாலிட்டி உலகில் சாகஸம் செய்கிறார். மாயன் நாகரீகத்தின் நகரத்தை கண்டுபிடிக்கச் செல்லும் ரோஜர், அங்கே தொலைந்து விட... அவரைத் தேடி சகா பில்லும், சோஃபியும் செல்கிறார்கள். ஆக்ஷன் கலந்த கதை... இண்டியானா ஜோன்ஸ் போன்ற கதைகளை விரும்புபவர்களுக்கு இதுவொரு ட்ரீட்...
வணண்ணத்தில் வந்திருந்தால் இன்னமும் அமர்க்களமாக இருந்திருக்கும்.
மா...து...ஜே...சலாம்!
பனியில் ஒரு பாசப்போரட்டம் என்ற வரைக்கும் படித்திருக்கிறேன். முழுமையாக படிக்க இன்னும் நேரமாகும்...
நன்றிகள் பல
Good one!
Deleteஸ்பின் ஆப் தொடரின் 13 கதைகளும் வெவ்வேறு படைப்பாளிகளின் கைவண்ணம் நண்பரே ! ஒரேயொரு ஆல்பம் மாத்திரமே ஒரிஜினல் கதாசிரியர் வான் ஹாமின் படைப்பு !
Deleteஇங்கே கால்வின் வாக்ஸ் போன்ற பலாக்களும் உண்டு ; பெட்டி பார்னோவ்ஸ்கி போன்ற பிம்பிலிக்கா பிலாக்கிக்களும் உண்டு ! So ஒரே பாயாய்ப் பாய்ந்தால் கபால சேதங்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம் !
Delete@ discoverboo
அருமையான விமர்சனம்!! சரியான வார்த்தைகளைக் கொண்டு நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!
அருமை சார்
ReplyDeleteநவம்பர் இதழ்களின் முன்னோட்டம். சார் ப்ளீஸ். இம்மாத புத்தகங்கள் பற்றிஇன்னுமே தெளிவு இல்லை என்மட்டிலும் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான்.
Deleteதெளிவா டப்பியை ஓடைக்கிறச்சே தெரிஞ்சிடும் சார் !
Deleteஅது என்ன தெளிவு என கொஞ்சம் சொல்லுங்க அண்ணாச்சி :-) அத தெளிவா சொன்னா, தெளிவாக நாங்களும் டப்பியை ஓடைக்காம திறந்து தெளிவாக பார்ப்போம்ல அண்ணாச்சி :-)
Deleteபுரட்டாசி முடிந்து ஐப்பசி வந்து விட்டது. ஆமாம் தீபாவளி மாதம்... அப்புறம் இந்த பதிவு கிழமையில் தீபாவளிக்கு வர உள்ள மற்ற புத்தகங்களின் அட்டைப்படம் மற்றும் உட்பக்கங்களை கண்களில் காண்பித்தால் சிறப்பாக இருக்கும் :-)
ReplyDeleteஆமாம் ஆமாம் .
Deleteஏனுங்கண்ணா ...நம்ம ஊரிலெல்லாம் கார்த்தியை பொறக்கவே இன்னும் எட்டே நாள் தான் பாக்கியிருக்குது ; பக்கத்து இஸ்டேட்டிலே இப்போ தான் ஐப்பசியே பொறக்குதுங்களா ? ரெம்போ ஷ்லோவா இருக்குதுங்களே !
Deleteஎடியூரப்பாஜி கிட்டே சொல்லிப்போடணும் போல !
ஹிஹிஹி எடிட்டர் சார் ஃபுல் ஃபார்ம் ல இருக்கார் போல.
Deleteஎன்ன அண்ணாச்சி ரொம்ப பிரியா இருக்கீங்க போல தெரியுது. புத்தகங்கள் எல்லாம் அச்சுக்கு அனுப்பி விட்டு செவ்வாய் அல்லது புதன்கிழமை புத்தகங்களை அனுப்பி வைக்க நீங்க தயார் என்று ஊருக்குள் பேசிக்கிட்டாங்க அண்ணாச்சி. எனுங்க அண்ணாச்சி நான் சொல்லுறது சரிதானுங்களா அண்ணாச்சி :-)
Deleteஎடியூரப்பாஜி இரண்டு மாசம் முன்னாடி தான் தூங்கி எழுந்து கொரோனாவை இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபடுத்த ஆரம்பித்து இருக்காங்க. போங்க அண்ணாச்சி அவருகிட்ட போய் சொல்லப் போறீங்கன்னு சொல்லுறீங்க ;-)
Delete////2020-ன் நவம்பரில் இரத்தப் படலத்தின் 27-ம் பாகம் பிரெஞ்சில் ரிலீஸாவதால் – சூட்டோடு சூடாய் 2021-ல் அதனை வெளியிடவுள்ளோம் – “நினைவோ ஒரு பறவை” வாயிலாக ! And தகவல் ரைட்டா – தப்பா ? என்று தெரியலை ; ஆனால் இரண்டாம் சுற்று இந்தப் புது ஆல்பத்தோடு நிறைவுறுவதாய்க் கேள்வி ! நிஜம் தானா என்றறியக் கேட்டுள்ளேன் - அடுத்த வாரத்தில் files வரும் போது விடையும் வந்திருக்கும் !////
ReplyDeleteவிடை வந்துருச்சாங் சார்?!!
கொரோனா இரண்டாம் அலையில் பிரான்ஸ் கண்முழி பிதுங்கிக் கிடக்கும் தகவலுக்கு மத்தியில் நான் போட்டு அவர்கள் குடலை உருவவில்லை சார் ! எல்லோருமே இப்போது வீட்டிலிருந்து தான் பணியாற்றி வருகிறார்கள் - நமது படைப்பாளிகளின் ஏஜென்சியினில் !
Deleteஇன்று சனிக்கிழமை.
ReplyDeleteபதிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்
ஐயா பதிவு?????
DeleteSir new post please.
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete