நண்பர்களே,
வணக்கம். தீபாவளியின் ஒளி வெள்ளம் இல்லங்களிலெங்கும் பரவட்டும் ; நலமும், வளமும், மகிழ்வும் இனித் தொடரும் நாட்களில் நமதாகிட வேண்டிக் கொள்வோமே folks !!
இம்மாதத்துப் புஷ்டியான கூரியர் டப்பிகள் ஒரு மாதிரியாய் அனைவருக்கும் கிடைத்து விட்டது போலத் தெரிவதால், இந்தப் பண்டிகை தினத்துக்கு நமது உழைப்பின் பலன்கள் உங்கள் இல்லங்களை அலங்கரிக்க வேண்டுமென்ற எங்கள் அவா பூர்த்தி கண்டுள்ளதென்பேன் ! மாதத்தின் முதல் நாளே புக்ஸை அனுப்பியிருப்பின், பண்டிகை நேரத்துக்கு அது ஆறிப் போன ராயர் கடை தோசை போலாகியிருக்கும் ! இப்போதோ அந்தச் சிக்கலில்லை ; L&T சிமெண்டுக்குப் போட்டி தரவல்ல உறுதியான சீடைகளையும், முறுக்குகளையும் தட்டில் போட்டுத்தரும் இல்லத்தரசிகளிடம் "ஏ..ஜுப்பரு !!" என்று வழிவதை - இப்டிக்கா அமாயாவோடோ ; யுலாவோடோ தொடரவும் செய்யலாம் ! 'மொடேர் ..மொடேர்...' என பக்கத்துப் புதுவீட்டுக்காரன் வெடிக்கும் வெடிகளின் முன்னே நம்ம போடும் வெங்காய வெடிகள் 'புஸ்க்..புஸ்க்.." என பூனைக்குட்டியாட்டம் முனகுவதை மறக்க நினைத்தால் Tex & டீமோடு களமிறங்கினால் போதும் - ஒரு தோட்டாக் கச்சேரியே அரங்கேறிடும் மனசுக்குள் ! பண்டிகை நாளுக்கு டி-வியில் போடும் படம் மொக்கை போட்டால் - no worries ; பருந்து சர்ப்பத்தில் ஏறி ஜிலோன்னு ஆஜராகும் நம்ம ஸ்நேகிபாபு கூட பொழுதைக் கழிக்கலாம் ! So இந்த மாதத்துக் கூட்டணி உங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகிடுவதில் நாங்க ஹேப்பி !!
பால்ய நினைவுகளைக் கிளறும் ஒரு சூப்பர் ஹீரோ ; ஒரு sci-fi ரக ஒன் ஷாட் ; ஒரு புயட்சிக்கார அம்மிணி + ஒரு towering சூப்பர் ஸ்டார் என்பதே இம்மாதத்து இதழ்களின் தொகுப்பு எனும் போது - இங்கே ஒளிவட்டம் முதலாமவர் + இறுதியானவர் மீதே பாயும் என்பதில் ஐயங்களில்லை ! நம் பால்யங்களது சூப்பர் ஸ்டாரும், இன்றைய சூப்பர் ஸ்டாரும் இதற்கு முன்பாய் ஒரே மாதத்தில் இதுபோல் கரம் கோர்த்து வந்துள்ளனரா ? என்று யோசிக்க முயற்சிக்கிறேன்.....NO என்றே எனக்குத் தோன்றுகிறது ! So முதன்முறையாக இரு மாஸ் நாயகர்கள் ஒருசேர கெத்து காட்டும் மாதமிது என்பதும் ஒரு சன்னமான highlight தானே ?
எது எப்படியோ - இந்த வாரத்தின் இதுவரையிலுமான 5 நாட்களுமே நம் அலுவலகத்தினில் தீபாவளி தான் !! இந்த கொரோனா தாண்டவங்களும் ; லாக்டௌன் கூத்துக்களும் துவங்கிய காலம் முதலாகவே நான் ஆபீசுக்குச் செல்வது என்பது - கார்சன் புலம்பாமல் இருப்பதற்குச் சமமான அரிய நிகழ்வாகி விட்டுள்ளது ! அதற்கு மீறிப் போனாலுமே மதியமாய்ப் போய் விட்டு, மாலைக்குள் திரும்பி, வீட்டுக்குள் அடைந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த டெஸ்பாட்ச் தினத் திங்களன்று காலையே ஆபீசுக்கு வந்து விட்டிருந்தேன் - சிலபல ஸ்பாஞ்கேக் டப்பிகளைப் பார்வையிடவும், உங்களின் பார்சல்கள் ஏக் தம்மில் புறப்படத் தயாராகிடும் மும்முரத்தை ரசித்திடவும் ! பேக்கிங் நடந்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்த செல்போன் ரணகளங்களை நானே நேரில் பார்த்திராவிடின் நம்பியிருக்க மாட்டேன் !! இரண்டு செல் போன் நம்பர்கள் + 1 லேண்ட்லைன் நம்பர் - என மூன்றுமே ஏக காலத்தில் போட்ட கூப்பாடுகளை நம்மாட்கள் ஆளுக்கொன்றாய் காதுகளுக்குள் செருகியபடி கவனித்துக் கொண்டே - மறுபக்கம் டப்பாக்களை பிரிக்கவும், ஒட்டவுமாய் இருந்தனர் ! நான் ரூமுக்குள்ளாற குந்திக் கிடக்க முயற்சித்தாலும் முன்னே கேட்டு வந்த களேபரங்களை ஒட்டுக்கேட்கும் ஆர்வத்தை அடக்கில்லா !! கிட்டத்தட்ட அத்தனை அழைப்புகளுமே - "இப்போவே பணம் போட்டு விட்டுடுறேன் ; இன்னிக்கே தீபாவளி மலர் புக்கை அனுப்பிடலாமா ?" என்றோ ; "சந்தாவிலே ஏற்கனவே இருக்கேன் ; 90 ரூபாய் இப்போ போட்டு விடறேன், ஸ்பைடர் புக்கையும் சேர்த்துப்புடலாமா ? " என்ற ரீதியினில் தான் !! And நம்மவர்களையும் சும்மா சொல்லக்கூடாது சாமியோவ் ; பிரவாகமெடுத்து ஓடும் தக்காளிச்சட்னிக்களை துடைத்துக் கொண்டே முகத்தில் புன்சிரிப்புகள் மாறாது பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர் ! போனை வைத்த கணத்தில் நோட்டில் அந்த விபரத்தைக் குறித்துக் கொண்டே, மறுக்கா பேக்கிங்கில் மும்முரமாகிட முனைவதற்குள் "அலோ...பிரபா ஒயின்சா ?" என்று அடுத்த அழைப்பு துவங்கியிருக்கும் !
இதனிடையே நமது ஏஜெண்ட்களோ - "தீவாளி மலராச்சும் இன்னிக்கே பண்டல் போட்டிருவியளா அண்ணாச்சி ?" என்று பிரித்து மேய்வதும் அரங்கேறியது ! இந்த லாக்டௌன் இடர்கள் துவங்கிய பிற்பாடு நமது விற்பனைகளில் சுணக்கம் ; வசூல்களில் தேக்கம் ; ஆன்லைன் விற்பனையினில் மந்தம் என்று ஏகப்பட்ட "ம்ம்ம்ம்ம்"கள் ஆக்கிரமித்திருந்தது பற்றிப் புலம்பியிருக்கிறேன் தான் ! அக்டோபர் துவக்கத்தினில் நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது முதல் முறையாய் ஒரு வெளிச்சக் கீற்று லேசாய் கண்ணில்பட்டது ! And இதோ - இந்த நவம்பரின் ஒரு திங்கட்கிழமையன்று பிடரியில் சாத்தி ஊர்ஜிதம் செய்துள்ளீர்கள் நம் காமிக்ஸ் நேசத்தினில் all is well என்று ! நிறையவே தொழில்கள் நசிந்து நிற்கின்றன தான் ; நிறையவே பணிகள் காற்றோடு கரைந்துள்ள தான் ; நிறையவே பதில்களை விடவும், நிறையவே கேள்விகளே நம் முன்னே நிற்கும் தருணமிது தான் ; ஆனால் இந்த இடர்களுக்கு மத்தியிலும் உங்களின் பொம்மை புக் காதல்களோ ; நம் மீதான அக்கறைகளோ - கிஞ்சித்தும் சேதம் கொண்டிருக்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து விட்டுள்ளீர்கள் folks - நானூற்றி நாற்பத்தி ஏழாம் தபாவாக !
And சகலத்துக்கும் க்ரியாஊக்கியாய் நின்று, எவ்விதச் சூழலிலும் நம்முள்ளே உற்சாகத்தைக் கொப்பளிக்கச் செய்து வரும் ஒற்றை உருவம் - TEX என்ற பெயருக்குப் பதில் சொல்லும் ஜாம்பவான் என்று சொன்னால் அது சத்தியமாய் hype கிடையாது ! கடைசியாய் ஆபீசில் இது மாதிரியான பரபரப்பை நான் பார்த்தது "டைனமைட் ஸ்பெஷல்" வெளியான தருணத்தினில் தானென்பேன் ! இதில் மெகா கூத்து என்ன தெரியுமோ ? வளர்ந்த பெரும் புள்ளிகளான நாமெல்லாமே திடு திடுப்பென பாலக அவதார்களெடுப்பதன் காரணங்கள் நம் அலுவலகத்தினில் உள்ள எவருக்குமே புரிந்திடாது என்பதே !! Simply becos இக்கட யாருமே அடைமழைக்கு கூட காமிக்ஸ் எனும் குடையின் கீழே ஒதுங்கிடும் பழக்கம் கொண்டோரில்லை ! "நானும் இது வரைக்கும் ஏதாச்சும் ஒரு புக்கையாவது படிக்கணும்னு பாக்குறேன் சார் ; ஆனா 4 பக்கத்தைத் தாண்டுறதுக்குள்ளாற தூக்கம், தூக்கமா வருது !" என்பதே அவர்களின் ஏகோபித்த பதில்கள் ! So "நாலே பக்கங்களில் சயனத்தை சாமரம் வீசி வரவேற்கும் சமாச்சாரங்களுக்கோசரம் அமெரிக்காலேர்ந்து கூப்பிடுறாங்க ; ஆஸ்திரேலியாவிலிருந்து கூப்பிடுறாங்க ; லட்ச ரூபாயைத் தூக்கி அனுப்புறாங்க ; விடிய விடிய பின்னிப் பெடல் எடுக்கிறாங்களே ..?!! என்று பெண்பிள்ளைகளின் மைண்ட்வாய்ஸ்கள் ஓடாது இருந்தால் தான் வியப்பே ! திங்கள் மாலையில் நம்மாட்கள் வீடு திரும்பிய போது அத்தினி பேருமே 'மிருதன்' படத்தில் வந்த zombies போலவே இருந்தனர் என்பதனில் வியப்பே இருக்கவில்லை எனக்கு !
செவ்வாயும் வந்தது - இன்னமுமே வீரியமாய் அலறும் தொலைபேசிகளோடு !! "எனக்கு கூரியர் இன்னும் வரலே !! டிராக்கிங் நம்பர் இருக்கா ? அங்கேயே டப்பா கிடக்கான்னு பாருங்களேன் !! " என்ற பெரும்குரல்கள் நாள் முழுக்கவே தொடர்ந்தன ! இன்னொரு பக்கமோ "கேட்லாக் தனியா விலைக்குத் தருவீங்களா ? வின்டர் ஸ்பெஷல் இன்னொரு புக் தருவீங்களா ?" என்ற ரீதியில் புதிரான கேள்விகளும் !! குடு குடுவென ஆள்மாற்றி ஆள் என் அறைக்கு ஓடி வருவர் - ஒவ்வொன்றுக்கும் என்ன பதில் சொல்வதென்ற வினவல்களோடு ! And செவ்வாயன்று இன்னொரு சந்தோஷ அத்தியாயத்தையும் பார்க்க முடிந்தது !! இந்த இன்னல்மிகு நாட்களில் கரைந்து போயிருந்த முகவர்கள் பலரும் - ஒருவர் பின் ஒருவராய் போனில் அழைத்து - "ஏதோ தீவாளி மலர் பொஸ்தவம் வந்திருக்கலாம்லே மக்கா ? யே...அது என்ன வெல ? பழைய பாக்கிலே பாதியே இன்னிக்கு போட்டுவிடுறேன் ...அந்த புது பொஸ்தவத்தைப் போட்டு விட முடியுமா ?" என்ற கோரிக்கைகள் ! சத்தியமாய் டெக்ஸ் என்ற அந்த அசாத்தியனைத் தாண்டி வேறு யாருக்கும் இத்தகைய ஜாலங்களைச் செய்திடும் ஆற்றல்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை ! Oh yes - துக்கனூண்டு சட்டிக்குள் தம்மாத்துண்டு குதிரையையே ஒட்டுகிறோம் நாம் ; so ஏழரைக்கோடி ஜனத்தின் சார்பில் ஏதோ நிஜமான 'தல'க்குரிய பில்டப்களை தருவது போல் நான் எழுதுவது போங்காகத் தென்படலாம் தான் ; காமிக்ஸ் வாசனையறியா வட்டத்தினிடம் "டக்ஸ் வில்லரோ...டெக்ஸ் வல்லரோ' வீசம்படிப் பரிச்சயம் கூட இல்லாப் பெயராகவே தொடர்ந்திடும் தான் ; ஆனால் இந்தக் குட்டி வட்டத்தைப் பொறுத்தவரையிலும் யார் சாம்ராட் ? என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகங்கள் இருந்திருப்பின், இத்தீபாவளி வேளையானது அதனைப் பூரணமாய் நிவிர்த்தித்து விட்டது !
புதனன்றோ ஆன்லைன் ஆர்டர்கள் ஒரு சமீப உச்சத்தைத் தொட்ட நாள் ! Of course - கோவிடுக்கு முந்தைய நாட்களின் விற்பனைகளை இன்னமும் பெருமூச்சுகளோடே தான் பார்த்து வருகிறோம் ; ஆனால் புதன்கிழமையின் அதகளம் பழைய நாட்களுக்கு ரொம்பத் தொலைவினில் இருந்திடவில்லை ! கை கடுக்க செய்த பேக்கிங் முடிந்து மாலை கூரியருக்குச் சென்ற டப்பிக்கள் ஒரு குட்டியான LIC உசரம் இருந்தன ! And அவற்றுள் முக்கால்வாசி டப்பிக்கள் 'தல' + தானைத் தலீவர் கூட்டணிகளே !!
வியாழனுமே பழைய நினைவுகளை ; ரொம்பவே பழைய நினைவுகளைக் கிளறிய நாளாக அமைந்தது - முகவர்களின் புண்ணியத்தில் ! நமது ஆரம்ப நாட்களில் ஸ்பைடர் புக்ஸ் கடைக்குப் போன இரண்டாம் நாளே - அரக்கப் பரக்க போன் வந்திடும் - "யே..இன்னொரு அம்பது புக்கை போட்டு விடு...நூறு புக்கை அனுப்பு !" என்ற ரீதிகளில் ! மறந்தே போயிருந்த அந்த நடைமுறையை வியாழனன்று பார்க்க முடிந்தது - 'தல' தீபாவளி மலருக்கு கிட்டிய அதிரடி repeat ஆர்டர்கள் மார்க்கமாய் ! "தெய்வமே...லாரி ஷெட் எல்லாமே பூட்டியாச்சு ; இனிமே திங்கள்வரைக்கும் பண்டல் வாங்க மாட்டாங்க !!" என்று அண்ணாச்சி விளக்க முற்பட்டாலும் - "எப்பிடியாச்சும் அனுப்புங்க ப்ளீஸ் !!" என்ற ஆதங்கக் கோரிக்கைகள் ! முடிந்த கரணங்களை அடித்துக் கொண்டிருக்கும் அந்த மாலையே ஓசையின்றியொரு கனக்குப் பார்க்கச் செய்தேன் - "தீபாவளி with டெக்ஸ்" இதழின் விற்பனை & கையிருப்பு குறித்து !! இந்த மே முதலாகவே கழுதையின் அளவிலான நமது பிரிண்ட்ரன்னை கட்டெறும்பாக்கியுள்ளோம் தான் ; இந்த ஒற்றை ஆண்டினில் பெருசாய் costing ; கத்திரிக்காயெல்லாம் பார்த்திட வேண்டாம் ; குடவுனை நிரப்பாது இருந்தாலே உத்தமம் ! என்று தீர்மானித்திருந்தேன் தான் ! அந்த பாலிசிபடியே இம்மாத புக்ஸ் நான்குமே குறைந்த பிரிண்ட்ரன்னேகொண்டிருந்தன தான் ; ஆனால் surprise ..surprise ...."தீபாவளி மலர்" நடப்பாண்டின் இறுதியைத் தாண்டியும் கையிருப்பில் இருப்பின், நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் !! ரொம்ப ரொம்ப நாளாகிவிட்டது இதுபோலொரு நிகழ்வைப் பார்த்து - எனும் போது வியாழன் மாலை மழையில் நனைந்தபடிக்கே வீடு திரும்பும் போது - இளையராஜாவின் மெட்டுக்கள் பேக்கிரவுண்டில் ஒலிப்பது போலிருந்தது !
வெள்ளிக்கிழமை புலர்ந்ததோ நம்மாட்களுக்கு தீபாவளி போனஸ் என்ற சந்தோஷங்களோடு ! சமீப மாதங்களில் இரண்டாம் முறையிது - நண்டு பிடிக்க அவசியங்களின்றி, சம்பளங்களை ; இன்ன பிற பட்டுவாடாக்களை செய்திட சாத்தியப்பட்டது ! And நண்பர் PFB அனுப்பியிருந்த தொகையினையும் ஆளுக்கொரு பங்காய்ப் பிரித்துத் தந்த போது ஒவ்வொருத்தரின் முகங்களிலும் வெகுகாலத்துக்குப் பின்பாய் சன்னமான வெளிச்சங்கள் ! அக்டோபர் முதல் தேதியிலிருந்தே நம்மவர்களை தினமும் பணிக்கு வரச் செய்யும் நடைமுறை சாத்தியமாகியிருந்தது - ஆன்லைன் புத்தக விழாவின் எதிர்பாரா வெற்றியின் உபயத்தில் & முறையாய் போனஸ் போடவும் இப்போது சாத்தியப்பட்டிருக்க - 'தல' வசிக்கும் இத்தாலியை நோக்கியொரு வணக்கம் போட்டால் தப்பே இல்லையென்று பட்டது ! 'ரைட்டு..மதியம் 2 மணிக்கு எல்லாரும் கிளம்புங்க ; கூட்டத்துக்குள்ளே கடைவீதிகளில் திரியாதீங்க ; மாஸ்க் போடுங்க !" என்றபடிக்கே ரூமைப் பூட்டிவிட்டு நான் கிளம்ப எத்தனித்த கணத்தில் ஒரு முரட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தான் AMAZON கூரியர் பையன் ! "இது என்னாது ???" என்றபடிக்கே பார்சலை உடைத்தால் - phewwwwwwww !!! 15 காட்பரி சாக்லெட் gift boxes !!! சென்னை சூளைமேட்டிலிருந்து நண்பர் சத்ய சாய்நாத்தின் அன்புடன் !! (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸ்சும் புடிக்கும்). மிரண்டே போய் விட்டோம் இந்த அன்பின் பிரவாகத்தினில் !!
ஆளுக்கொரு டப்பாவை ஒப்படைத்த போது உள்ளுக்குள் இனம்புரியா உணர்வுகள் - இத்தனை அன்புக்கும், நேசத்துக்கும் நாம் அருகதையானவர்கள் தானா ? என்று ! வீட்டுக்குப் புறப்பட்ட நம்மவர்களின் கைகளில் பளபளக்கும் சாக்லெட் டப்பாக்கள் இடம்பிடிப்பதை இமைதட்டாது பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு வீடு திரும்ப நேரமாகியது !! "Thanks a ton " என்று மட்டும் சொல்லி இந்தாண்டினில் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதேதோ ரூபங்களில் நம்மை நனைத்துவரும் அன்பிற்கு நியாயம் செய்திடவே இயலாது என்பது சர்வ நிச்சயம் ! பணமோ ; பொருளோ ; ஆதரவான வார்த்தைகளோ ; நம் நிலைகளின் புரிதல்களோ ; இதழ்கள் சார்ந்த சிலாகிப்புகளோ ; சந்தக்களோ ; முன்பதிவுகளோ - ஒரு பேரிடரின் மத்தியில் இவை சகலமுமே தங்கத்துக்கு நிகரானவை !! And இந்த அன்பின் பரிமாற்றங்களுக்கு பட்டிருக்கும் கடன்களை வெறும் வாய் வார்த்தைகளின் ஜாலங்களை தாண்டி எவ்விதம் சமன் செய்யப்போகிறேனோ - புனித மனிடோவுக்கே வெளிச்சம் !!
'அட..போங்கப்பா,,,,இந்தக் கூட்டத்துக்குள்ளாற போயி எந்தப் புதுத் துணிய வாங்க ? இந்த வருஷம் புதுசில்லாமலே பண்டிகையைக் கடப்பதில் தப்பில்லை !" என்று இருந்தவனுக்கு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியே தமன்னாவோடு ஒரு செம டான்சைப் போட்டபடிக்கு வீட்டு வாசலுக்கே கடையைக் கொணர்ந்துவிட்டது போலொரு சந்தோஷம் இந்த நொடியினில் அலையடிக்கிறது ! ஒரு கோடி ரூபாய் ஈடாகாது guys உங்கள் அன்பு கொணரும் இந்த மன நிறைவுக்கு ! நம் சார்பிலும், நம்மவர்கள் சார்பிலும் , 'தல' சார்பிலும் ; தானைத் தலீவர் சார்பிலும் - சந்தோஷ தீபாவளி நல்வாழ்த்துக்கள் folks !! ஆண்டவன் அருளட்டும் இந்த நேசம் நாளும் தொடர்ந்திட !! Have a Safe & Fun filled Diwali all !! See you around ! Bye for now !!
1
ReplyDeleteஎப்பூடி...ஆசிரியர் மிந்திட்டமுள்ளா
Deleteபொன்ராஜ் மற்றும் கந்தவேலன் அவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteநன்றிகள் நண்பரே...தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்க்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
Deleteதீபாவளி வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் சக்தி.
Deleteசார் டிராகன் நகரத்துல சின்ன கதைல ரெண்டு வேரும் வருவாப்ல...வீனஸ் கல் மர்மம்னு நினைக்கிறேன்
ReplyDeleteDear Editor
ReplyDeleteHappy Diwali to you and your family!
Spider book was as good as olden times.
Nostalgic trip.
Vandhuttarnu sollu,Epdi ponaro apdiye
vandhuttar nu sollu dialogue running
in mind.
Thanks
Arvind,
DeleteHappy Diwali sir.
Thanks
Deletewish u the same
Arvind
Happy Diwali too all our team members
ReplyDeleteComicsselva,
DeleteHappy Diwali.
Comicssekva,
DeleteHappy Diwali.
Happy Diwali💐
ReplyDeleteJegan sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
👍
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 🎉🎊🎉🎊
ReplyDeletePuthagapriyan,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அமாயா. ஒரு குறுகிய கதைக்களம். அதிலும் விறுவிறுப்பு காட்டியுள்ளனர் படைப்பாளிகள். ஏதோ ஒரு படக்கதை, அதிலும அழகான கதாநாயகியின் கவர்ச்சியான சித்திரங்கள் என்னும்ராணி காமிக்ஸின் பார்முலாவில் ஹிட்டித்த புரட்சிப் பெண் நாம் தற்போது எட்டியஉயரங்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ஒரு கதை என்ற அளவில் மட்டும் சோபிக்கிறார். எனினும் கதை ஒரு நான் ஸ்டாப்ஆக்ஷன் கதையே. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநன்றி. நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteParani sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteArivarasu,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே,தங்களுக்கும் தீப ஒளித் திருநாளின் வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
Deleteவிஜயன் சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐
ReplyDeleteTex sampath sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Tex sampath sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஆசிரியர்,அவர்தம் குடும்பத்தினர் & பணியாளர்கள் மற்றும் குழு நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteParthiban sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸ்சும் புடிக்கும் @ தரமான செயல் சத்யா. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமை...நீயுந்தால
Deleteவாழ்த்துக்கள் சத்யா. மிக்க மகிழ்ச்சி.
DeleteKumar sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
🙏🙏
ReplyDeleteBlizybabu sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteVenkateshc,
DeleteHappy Diwali sir.
// - 'தல' தீபாவளி மலருக்கு கிட்டிய அதிரடி repeat ஆர்டர்கள் மார்க்கமாய் ! "தெய்வமே...லாரி ஷெட் எல்லாமே பூட்டியாச்சு ; இனிமே திங்கள்வரைக்கும் பண்டல் வாங்க மாட்டாங்க !!" என்று அண்ணாச்சி விளக்க முற்பட்டாலும் - "எப்பிடியாச்சும் அனுப்புங்க ப்ளீஸ் !!" என்ற ஆதங்கக் கோரிக்கைகள் ! //
ReplyDelete//
surprise ..surprise ...."தீபாவளி மலர்" நடப்பாண்டின் இறுதியைத் தாண்டியும் கையிருப்பில் இருப்பின், நான் ரொம்பவே ஆச்சர்யம் //
மகிழ்வாக உள்ளது. நன்றி
பட்டாசு
Deleteக்ளோன்டைக். ஜாலிஜம்பர் ஜாலியாக சிரிப்புக்கூட்டிய அதே கதைக்களம். இம்முறைடெக்ஸேபனிச்சரிவில் பதையுண்டு போகும் அளவிற்க்குதிகைக்க வைக்கிறது. டெக்ஸ் சிரஞ்சீவி இல்லை என்பதுநமக்கும் மண்டையில் அடித்தாற்போல்உறைக்கிறது. இது வரைடெக்ஸ் எத்தனையோஆபத்தில் சிக்கியிருக்கிறார் தான். இம்முறைபனியில் புதையுண்டபோதுஅதிர்ச்சியில்உறைந்துபோனது நிஜம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅருமை அருமை சார்...
ReplyDeleteபதிவை படிக்க படிக்க அவ்வளவு ஆனந்தம் சார்...உண்மையை சொன்னால் லேசாக கண்களில் நீர்...ஆனந்த நீர்...
விரைவில் 86 ல் நமது காமிக்ஸ் பயணம் போல் மீண்டும் நமது பயணம் ஆரம்பமாகட்டும் .
நண்பர்கள் பெ.பரணி ,சத்யா அவர்களுக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..வாழ்த்துக்கள் நண்பர்களே..
அதே போல் லட்சத்தில் ஒருவர் ,செனாஅனாஜீ அவர்களுக்கும் இந்த சமயத்தில் மீண்டும் பாராட்டுதல்களையும்,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்..
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
அப்படியே ஆல்ப்ளஸ் தலீவரே
DeleteParanirharan.k sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார்...
Deleteதங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
நல்லதொரு நாளில்
ReplyDeleteநல்லதொரு துவக்கமாய்
மன நிறைவு தந்த பதிவு!
தலயும், தானைத் தலைவரையும் பார்க்க எத்தனை பேருக்கு கொண்டாட்டம் என்பதை அவர்களிடம் பேசும் போதுதான் தெரிகிறது! டெக்ஸ் வசூல் சக்கரவர்த்தி மட்டுமில்லாமல் இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கும் உகந்தவரே! அனைத்து நண்பர்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்! டெக்ஸ் பேரக் கேட்டாலே ஆயிரம் வாலா வெடித்த சந்தோஷம் பீறிற்றிக் கிளம்பும் அதான் டெக்ஸ் ஜாலம்!
ReplyDeleteKaleel sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
எடிட்டர் மற்றும் காமிக்ஸ் உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் அருமை...இந்தத் தீபாவளி ஒளிக்கீற்றை நமது நிறுவனத்தின் மேல் பாய்ச்சியது அருமை...தொடரட்டும் இது மேன்மேலும் பெருகட்டுமினி...இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் அவரில்லத்தோர் மற்றும் பணியாளர் தோழர்கள் மற்றும் காமிக்ஸூடன்பிறப்புகளும் கும்...கிடைக்கும் நேரங்களுக்கும் சந்து ஓரங்களுக்குள்ளும் ஸ்பைடர
Deleteபுரட்டுத் துவங்கி விட்டேன்...ஸ்நேக் மினி ஸ்பைடர் போல் போல சரியான எதிரி...மினி ஸ்பைடர்ல மரமூட்டுக்குள் ஒளிந்தவாறே ஜெட்ட தருவானே அதப்போல காட்சி ஸ்நேக்கும் ஒளிந்திருந்தது நினைவூட்டுது...தீபாவளி மலர்ல ட்ராகன் நகர்ல அட்டைல இளித்தஸ்பைடர் தலயும் துப்பாக்கியோட தல டெக்சும் இருப்பார்
ஆஹா கண் அசந்த நேரத்தில் 23 பதிவுகளா
ReplyDeleteHi..
ReplyDeleteRummi XIII sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பரணி...சத்யசாய்நாத்...கலக்குறிய நண்பர்களே...இந்த அற்புத உணர்வ சந்தோசத்த பார்க்கிறேன்...எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteSaravana kumar.R sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete// நம்மவர்களையும் சும்மா சொல்லக்கூடாது சாமியோவ் ; பிரவாகமெடுத்து ஓடும் தக்காளிச்சட்னிக்களை துடைத்துக் கொண்டே முகத்தில் புன்சிரிப்புகள் மாறாது பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர் //
ReplyDeleteஉண்மை சார். பாராட்டுக்கள்.
// நான் ஆபீசுக்குச் செல்வது என்பது - கார்சன் புலம்பாமல் இருப்பதற்குச் சமமான அரிய நிகழ்வாகி விட்டுள்ளது ! //
ReplyDeleteசார் :-) அனைத்தும் விரைவில் சரியாகும். எங்கும் புன்னகை ஒளி வீசும் விரைவில்.
அன்பு நண்பர்களுக்கும், அருமை ஆசிரியர் சமூகத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteஎடிட்டரின் பதிவைப் படிக்கும்போது பூரிப்பாக இருக்கிறது. மனசுக்குள் உற்சாக அலையடிக்கிறது. காரணங்கள் இரண்டு:
1. தீபாவளி இதழ்களின் ஆர்டர்கள் குவிவதும், ரிப்பீட் ஆர்டர்களும்.
2. நண்பர்கள் PfB & சத்யாவுக்கு கா.பி.கா.பி லயன் அலுவலக நண்பர்களுக்காக செய்திருக்கும் ஜாலங்கள்!! அசத்தல் நண்பர்களே!! எத்தனை பாராட்டினாலும் தகும் உங்களை!!
கூடவே, அனைத்து லட்ச ரூவாய், நாற்பதாயிரம் ரூவாய், பத்தாயிரம் ரூபாய், சந்தா அன்பளிப்பு பார்ட்டிகளையும் இந்த நேரத்தில் அன்புடனும், பெருமையுடனும், பூரிப்புடனும், நன்றியுடனும் நினைத்துக் கொள்கிறேன்!!
சத்தியமாய் இதுபோன்றதொரு நேசமிகு பொம்மைப்பட உலகில் நானும் ஒருவனாய் பங்குகொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!
அனைவருக்கும் உற்சாகமான தீபாவளி வாழ்த்துகள்!!
Erode Vijay sir,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி புன்னகை ஒளிர் சார்! தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!
DeleteThank u sir.
Deleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.🙏
Deleteபுன்னகை ஒளிர் அவர்களுக்கும், அணைத்து நண்பர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 💐💐💐
Deleteநமது அலுவலத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹலோ, மைக் டெஸ்டிங்
ReplyDeleteஆங்! சொல்ல மறந்துட்டேன்.. காமிக்ஸ் சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Deleteஉப்புமா அதிரசம் உப்புமா பாயாசம் அப்புறம் உப்புமா லட்டு எல்லாம் சுட்டாச்சா அனு. :-)
Deleteஅப்புறம் இன்றைக்கு டிபன் என்ன ஸ்பெஷல் உப்புமாவா?
Anu sister,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteசெந்தில் சத்யா அவர்களுக்கு,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தீபாவளி சொல்லியிருக்கிங்க நண்பரே சூப்பர் இந்த தீபாவளி எங்களுக்கும் உங்களுக்கும் ஆசிரியருக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கிட ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
Deleteஎடிட்டர், லயன் டீம், நண்பர்கள் மற்றும் அனைவர் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteமகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோசமாகயிருக்கிறது சார். மாதந்தோரும் இதேப் பேnன்ற விற்பனையின் உச்சத்தினை எட்ட இறைவன் அருளட்டும்.
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!
MH Mohideen sir,
Deleteநண்பர்களின் தீபாவளி பண்டிகையில் பங்கு கொண்ட தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Kumaran anbu sir,
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
எடிட்டர், சீனியர் எடிட்டர், லயன் டீம், நண்பர்கள் மற்றும் அனைவர் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteதிருப்பூர் நாகராஜன் அவர்களுக்கு,
Deleteதீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் வலைப்பக்கம் வராமல் Busyயாய் இருக்கும் சேலம் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவருக்கு எப்பயுமே தலதீபாவளிதான்
Deleteயாழ் ( பெயர் சரியா ) ,
ReplyDeleteசகோதரிக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
Deleteஅவர் கடல் யாழ் என்ற புனை பெயர் கொண்ட ரம்யா.
Deleteமடிப்பாக்கம் வெங்கட் சார்,
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இது போன்ற நேசமிகு பொம்மைப் புத்தக உலகின் பயணத்தில் நானும் இணைந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் நட்பூக்களே....
ReplyDeleteபிதீபாவளிப்காக உழைத்த நமது டீமை கொண்டாடும்விதத்தில் தீபாவளிப்புத்தகங்களின் விற்பனைஅமைந்திருப்பது சந்தோசம் கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteஆசிரியர் மற்றும் அவர்தம் அலுவலகப் பணியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
ReplyDeleteHappy Diwali
ReplyDeleteசார், நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் முகவர் இந்த மாதம் நான்கு புத்தகங்கள் மட்டுமே (ஸ்பைடர் + டெக்ஸ் + காலவேட்டையர் +Axa) மட்டுமே என்கிறார். winter Special+அட்டவணை கிடையாது என்றார். ஆகவே, இன்னும் புத்தகம் வாங்கவில்லை. முகவருக்கு தெளிவுபடுத்தி புத்தகங்கள் கிடைக்க ஆவன செய்யுங்கள் சார்! நன்றி!
ReplyDeleteஎந்த நகரில் சார் ?
Deleteதிருநெல்வேலி என நினைக்கிறேன்.
Deleteதிருநெல்வேலி சார்!
Deleteமுகமறியா காமிக்ஸ் அன்பு உள்ளங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபுன்னகை ஒளி (யாழ்)அவர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான நாளில் அருமையான நம்பிக்கை ததும்பும் பதிவு சார். தீபாவளி இதழ்கள் அனைவரிடமும் அமோக வரவேற்பு பெற்று இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரவேற்பு விற்பனையாகி இருப்பது அதைவிட மகிழ்ச்சி. முகவர்களும் நண்பர்களும் புத்தகங்களுக்கு ஆர்டர் மேல் ஆர்டர் தருவது மிக்க மகிழ்ச்சி. வெகு நாட்களுக்கு பிறகு நமது விற்பனை பட்டையை கிளப்புவது இனிய செய்தி. ரொம்பவே பாஸிட்டிவ் ஆன பதிவு சார். நண்பர்களின் பரிசுகள் இந்த சந்தோசத்தை இன்னும் பன்மடங்கு பெருக்கி விட்டது.
ReplyDeleteஅன்பு காமிக்ஸ் எடிட்டர்கள்,
ReplyDeleteஅன்பு காமிக்ஸ் அலுவலக நண்பர்கள்,
அன்பு காமிக்ஸே.. உயிரான நண்பர்கள்
அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.. - iii
Ñane enrum Raja
ReplyDelete- My name is Willet Tex Willer.
Adutha varudamum ipadiyana Deepavali with Tex Vendum sir.
யெஸ்ஸூ....!!!
Deleteடெக்ஸ் குண்டு புக் தனியாவாச்சும் போட்டே ஆகணும்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
ReplyDeleteஆசரியர் அவர்களுக்கும்..,
ReplyDeleteஅவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்....
அவர்தம் பணியாளர்கள் அனைவருக்கும்...
இங்கு கூடும் அனைத்து காமிக்ஸ் நல் உள்ளங்களுக்கும்...
அவர்தம் குடும்பித்தினர் அனைவருக்கும்....
*இனிய தீவாவளி திருநாள் வாழ்த்துக்கள்*
ReplyDeleteஆசிரியர்,அவர்தம் குடும்பத்தினர் & பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்
💥⚡️💫🙏🏼🙏🏼🙏🏼
.
கால வேட்டையர்!!!
ReplyDeleteரொம்ப நாளா வரவேண்டியிருந்த கதை அபடின்னு கேள்விப்பட்டப்போ பயந்து போயிருந்தேன்...
ஆனா..
என்னவொரு இன்ப அதிர்ச்சி...!!!!
புது கதைங்கறது மட்டுமில்லே!!!
கதையோட முடிச்சே புதுசுதான்..
புதுசா இருந்தா மட்டும் போதுமா?
விறுவிறுப்பு வேணும்ல?
கவலையேபடாதீங்க !! விறுவிறுப்பு ஏகத்துக்கு கொட்டி கிடக்கு!!!
கொஞ்சூண்டு படிச்சுட்டு அப்புறம் மீதிய படிப்போம்னு எடுத்த கதை ..
ஆனா அப்படி செய்ய முடியல!!!
நேரம் திருடப்படுவது எப்படின்னு பக்கங்கள் 66,67 லே படிச்சப்ப முதல்ல சிரிப்பு வந்துச்சு..
ஆனா அந்த சிரிப்பு நீடிக்கல....
கேலி செய்யப்பட்டு சிரிக்கப்பட்ட விஷயங்கள் பல பின்னாட்களில் நிஜமாக உருவெடுத்து எல்லாரையும் வாயடைக்க செய்திருக்கிறது என்பது நினைவிலாடியது...
In Time னு 2011ல்ல வந்த படம்...
ஆண்ட்ரூ நிக்கோல் எழுதி தயாரிச்சு,இயக்கி அமெண்டா செய்போர்ட்,ஜஸ்டின் டிம்பர்லேக் நடிச்சு வெளிவந்த படம்...
இதில் நேரம்தான் சம்பளம்,லோன்,கடன் எல்லாமே...நேரத்தை இதுலேயும் திருடுவாங்க..நியூரான்- டி போன்ற சிக்கல் இல்லாம...
எதிர்பாரப்பு உச்சத்தை பலமடங்கு மீறி இதயம் கவர்ந்த கதை!!!
9/10
கன்டென்ட் ஸ்பாய்லர் சற்று இருப்பினும் கதை ஸ்பாய்லர் தவிர்க்கப் பட்டு இருக்கிறது!!
Delete///எதிர்பாரப்பு உச்சத்தை பலமடங்கு மீறி இதயம் கவர்ந்த கதை!!!///
Deleteசூப்பர்! நான் இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பப் பக்கங்களே பீச்சாங்கரையில் - கண்ணுக்குக் குளிர்ச்சியாய்!! சித்திரங்கள் - அசத்தல் ரகம்!
The surprising cameo of the month Doc ! A real racy story with awesome sketches. தலையும் சக்கரவர்த்தியும் அதகளம் செய்வார்கள் என்று நினைத்தால் சில குள்ள வாத்துக்கள் வந்து சிக்ஸர் அடித்துச் சென்றுவிட்டன !
Deleteஆசிரியர் மற்றும் பணியாளர்கள்,
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
ReplyDelete105th
ReplyDelete107th
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பு எடிட்டர் ,நண்பர்கள், அலுவலக தோழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete// "தீபாவளி மலர்" நடப்பாண்டின் இறுதியைத் தாண்டியும் கையிருப்பில் இருப்பின், நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் !! //
ReplyDeleteஇதுதான் தல தாண்டவம்,டெக்ஸ் 70 ஓராண்டில் விற்றுத் தீர்ந்த சாதனையை தற்போதைய தீபாவளி வித் டெக்ஸ் முறியடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...
இதுவரையிலான பதிவில் புரிந்து கொண்ட தகவல் யாதெனில்,தீபாவளி மற்றும் முக்கிய கொண்டாட்டத் தருணங்களில் தல சாகஸத்தை மெகா குண்டு புக்காய் ஹார்ட் பைண்டிங்கில் வெளியிடுவது 100 % வெற்றிக்கும்,அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் நிகழ்வாகும்...
தற்போதைய பேரிடர் காலங்களில் கூட விற்பனையில் சுணக்கம் காட்டாமல் “பணம்” “வெற்றி” போன்றவற்றை உவப்பாய் அளிக்கும் தலையை அனைவரும் கொண்டாவதில் வியப்புதான் ஏது...
நம்மை,விற்பனையாளர்களை,ஆசிரியரை மகிழ்ச்சிபடுத்தும் வரலாற்று நாயகரை பாரபட்சம் பார்க்காமல் கொண்டாடி மகிழ்வோம்...
அருமையாக சொன்னீர்கள் ரவி!!!
Deleteவரிக்கு வரி வழி மொழிகிறேன்.
பிரிக்க முடியாதது: பண்டிகையும் டெக்ஸ் குண்டு புக்கும்!
டெக்ஸை காப்பாற்றியது ப்ளூ தான் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன் 😉😉😉 🕺🏼🕺🏼🕺🏼
Delete// டெக்ஸை காப்பாற்றியது ப்ளூ தான் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன் 😉😉😉 🕺🏼🕺🏼🕺🏼 //
Deleteஹா ஹா :-)
மிக,மிக மகிழ்ச்சியான பதிவு சார்,படிக்கும்போது மனதில் உற்சாகம் பொங்கி மகிழ்ந்தது....
ReplyDeleteஇந்தாண்டின் எதிர்மறை நிகழ்வை முறியடித்த ஒரு நேர்மறை நிகழ்வு...
தற்போதைய சூழலுக்கு பொருத்தமான வாசகம் - “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”...!!!
எடிட்டர் ஒரு முடிவோடுதான் இம்மாத இதழ்களை வெளியிட்டிருக்கிறா ரோ என எண்ணத் தோன்றுகிறது !!!!
ReplyDeleteபெண்ணீயம் பேசும் கதைகள் ..நமது லயன் முத்துவில்
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது ??
கால வேட்டையரில்
சுயமாக முடிவெடுத்து ஆர்ப்பரிக்கும் அதிரடி பெண்ணாக யுலா
யுலாவால் தூண்டப்பட்டு இருப்பினும் அதற்கு தோதாக மனதை வைத்திருக்கும் ஆபத்து என தெரிந்தும் தலை நுழைக்கும் லௌரி
வானம் வசப்படும்-ல்
வாழ்வியல் சௌகரியங்களை புறக்கணித்து சுதந்திரம் நாடி தன்னையே தேடும் பெண்ணாக அமாயா
விகாரிகள் மேல் பரிதாபப்பட்டு அவர்களுடன் இருக்க விழையும் மார்ஜ்
பெண்களுக்கொரு சுயம் உண்டு ..தீர்மானங்களை அவர்கள் தலையில் திணிப்பானேன் என மார்ஜ் –க்கு ஆதரவாய் தெறிக்கும் அமாயாவின் வார்த்தைகள் ...
விண்டர் ஸ்பெஷலில் ....
ஆகச்சிறந்த மினி டெக்ஸ் கதை என்பேன் ..
பெண்களின் உணர்வுகள் மிக நுட்பமானவை ...
பாட்ரிசியா கதாபாத்திரம் சித்தரிப்பு – இவ்வளவு குறுகிய பக்கங்களுக்குள் – மேதாவிகளால் மட்டுமே சாத்தியம் ...
கதாசிரியரை –அவரது எண்ணவோட்டங்களை –எண்ணி வியக்கிறேன்
டெக்ஸ் கதையொன்றில் பெண் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கதாசிரியரின் தைரியத்தை என்ன வார்த்தைகள் கொண்டு பாராட்டுவது ???
டெக்ஸ் விட்ட குத்துகளிலேயே மிக சிறந்த குத்தாக கருதுவது கர்னலுக்கு விட்ட குத்துதான் ..
மங்கை ஒருத்தியின் மெல்லிய உணர்வுகளை புரிந்து முடிவெடுக்கும் உரிமையையும் அவளுக்கு அளிக்கும் டெக்ஸின் இன்னொரு பக்கம் குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை ..
பாரங்களின்றி இனி அவள் பயணிப்பாள் என டெக்ஸ் சொல்லும்போது
அடிப்பாவி பெண்ணே லிலித் !!! இவரோடு இன்னும் பல்லாண்டு வாழாது போனாயே என நெஞ்சம் விம்முகிறது ..
தனது நிலைக்கும் மேம்பட்ட பெண்களின் மேல் கொண்ட காதலால் இரு ஆண்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பதும் இரு கதைகளில் நடக்கிறது
பேட்ரிசியா மேல் ஆக்டேவியா
அமாயா மேல் பர்ட்
நமக்கு மிகவும் அறிமுகமான ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்
வானம் வசப்படும் மற்றும் விண்டர் ஸ்பெசலில் நடக்கிறது
கடத்தியவர்கள் மீது கடத்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனரீதியாலான பிணைப்பு
அமாயாக்கு பர்ட் மேல்
பேட்ரிசியாவுக்கு ஆக்டேவியா மேல்
விண்டர் ஸ்பெஷல் 9.9 /1௦
வானம் வசப்படும் 9.5 / 1௦
Super sir.
DeleteNiraivaana vimarsanam.
Winter Special really rocked !
Deleteமினிமம் 10000க்கு வித்துருவானுவ :-D
தீபாவளி இதழ்கள் தாமதமாக வியாழன்று கிடைத்தாலும்,நீண்ட இடைவெளிக்கு பிறகான கனமான இதழ்களும்,தல இதழின் தயாரிப்புத் தரமும் வருத்தத்தைப் போக்கியது சார்...
ReplyDeleteடெக்ஸ் தீபாவளி மலரை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டிற்கு திடீர் வருகை புரிந்த அக்கா மகன் தீபாவளி மலரை கையில் பார்த்து வியந்துதான் போனான்,ஏற்கனவே மின்னும் மரணம் இதழைப் பார்த்து சிலாகித்தவன் அவன்,அப்போது கேட்ட கேள்வியையே தற்போதும் கேட்டான்.
இந்த கதையைப் படிக்கும்போது நீங்க எப்படி பீல் பண்ணுவிங்க ?!
அந்த கதைக்குள்ளேயே போயிடுவிங்களா ?!
அந்த கேரக்டர்களுடன் கூடவே பயணம் செய்விங்களா ?!
இல்லை அந்த கேரக்டராவே மாறிடுவிங்களா ?!
படிக்கும்போது எந்தெந்த மாதிரியான உணர்வுகள் வரும் ?!
எப்படி இதுக்குள்ள் சட்டுன்னு உங்களால போக முடியுது ?!
இப்படி கேள்விக் கணைகளால் துளைத்தான்...
அக்கேள்விகளுக்கான எனது பதிலையும் கேட்டு நிறைவடைந்தவன்,எங்களுக்கு எல்லாம் வெப் சீரிஸ் போல உங்களுக்கு இதுவா...என்ஜாய் பண்ணுங்க என்று கூறினான்....
🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇
ReplyDeleteஅன்பு நண்பர்கள்,
சகோதரர்கள்,
சகோதரிகள்,
மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் சார்,
ஜூனியர் எடிட்டர்,
லயன் அலுவலக பணியாளர்கள்,
உலகெங்கும் உள்ள காமிக்ஸ் ரசிகர்கள்,
&
அன்பின் ஆசிரியர் சார்
---அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!💐💐💐💐💐
Tex....
ReplyDeleteTex....
Tex....
Tex....is comics!
Comics is Tex!
Same to you ji.
Deleteஅதே.... அதே.... சார்
Deleteபரணி பெங்களூரு & கால்வின் சத்யா@
ReplyDeleteவாழ்த்துகள் ஃப்ரெண்ட்ஸ்!🌹🌹🌹🌹
/////சகலத்துக்கும் க்ரியாஊக்கியாய் நின்று, எவ்விதச் சூழலிலும் நம்முள்ளே உற்சாகத்தைக் கொப்பளிக்கச் செய்து வரும் ஒற்றை உருவம் - TEX என்ற பெயருக்குப் பதில் சொல்லும் ஜாம்பவான் என்று சொன்னால் அது சத்தியமாய் hype கிடையாது////
ReplyDelete---மனசு நெறைஞ்சு போய் கிடக்குது எடிட்டர் சார்.
ஒரு டெக்ஸ் ரசிகனாக ரொம்பவும் ஹூப்பீஈஈஈஈ....!!!😍😍😍😍😍😍😍
நானும்....
Deleteஅன்பானஆசிரியருக்கும், இளைய ஆசிரியருக்கும்,குடும்பத்தாருக்கும்,
ReplyDeleteஅலுவலக நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும்,
தளம் நிறைத்த நண்பர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும்
என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவரும் நலமும், வளமும் நிறைந்தோங்கி மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
ReplyDelete
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
லயன் செஞ்சுரி ஸ்பெஷலில் டெக்ஸும் ஸ்பைடரும் வந்துள்ளனர்
அனைத்து நண்பர்களுக்கும் இனிமையான தீபாவளி வாழ்த்துக்கள்..
ReplyDeleteதானைத் தலைவனின் முதல் பக்கத்தில் என் தமையனுக்கான அன்புச் சொறிவுகளுக்கு நன்றி எடி.சார்
ReplyDeleteஆசிரியருக்கும்,காமிக்ஸ் சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDelete///நம் பால்யங்களது சூப்பர் ஸ்டாரும், இன்றைய சூப்பர் ஸ்டாரும் இதற்கு முன்பாய் ஒரே மாதத்தில் இதுபோல் கரம் கோர்த்து வந்துள்ளனரா ? என்று யோசிக்க முயற்சிக்கிறேன்.....NO என்றே எனக்குத் தோன்றுகிறது ///
ReplyDeleteடெக்ஸ் and ஸ்பைடர்--- நான்லாம் சின்னப்பிள்ளையா இருந்தபோதே ஒரே இதழ்ல கோர்த்து விட்டுள்ளீர்கள் சார்...!!!
1987 கோடைமலரில்..!!
1987-ஏப்ரலில் ரூபாய் 5க்கு பாக்கெட் டைனமைட்டாக 306பக்கங்களில் 6சித்திர கதைகள் கொண்ட அட்டகாசமான பேக்கேஜ்ல கோடைமலர் வெளியிட்டு இருந்தீர்கள். ஆளுயர ஸ்பைடர் இடது கையை உயர்த்தி உயரே பறக்கும் ஹெலிகாரை தொட முயற்சிப்பது போன்ற அட்டையை பார்த்தவுடன் நம்ம சீனியர்ஸ் அள்ளிட்டு போயிருப்பாங்க!
இதில் என்னா ஆச்சர்யம்னு கேளுங்க, டெக்ஸின் படம் அட்டைல போடப்படவேயில்லை; அப்டீனா தானைத்தலைவர் ஸ்பைடரின் புகழ் எந்தளவு உச்சத்தில் இருந்து இருக்கும் இருந்து இருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.
டெக்ஸ் & ஸ்பைடர் என்ற இரு பிரமாண்டங்கள் போதாதா அதகளத்திற்கு???
ஸ்பைடரின் "சிவப்புத் தளபதி" vs
டெக்ஸ் வில்லரின் "பழிக்குப் பழி"
---நேரடியாக மோதிக்கொண்டன!
அப்போதைய ஸபைடர்மேனியா பற்றி சீனியர் நண்பர்கள் யாரும் நேரம் ஒதிக்கி பகிர்ந்து கொண்டா நல்லா இருக்கும்!
டெக்ஸ் vs ஸபைடர் 2ம் முறையாக 1988ன் லயன் கோடைமலரும், லயன் காமிக்ஸின் 50வது இதழுமான "ட்ராகன் நகரம்"---ல இடம்பெற்றது!
ReplyDeleteடெக்ஸின் நீண்ட கதை vs ஸ்பைடரின் மினி சாகசம் " வீனஸ் கல் மர்மம் " என இருந்தாலும் அந்த இதழில் டெக்ஸே ஹைலைட்!
நன்றி சார். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteடெக்ஸ் vs ஸ்பைடர் 3வது முறையாக 1994ன் கோடைமலர்+ லயனின் 100வது இதழில்...
ReplyDeleteடெக்ஸ்---"இரும்புக் குதிரையின் பாதையில்..." & ஸபைடர் சாகசம்-"ஸ்பைடர் vs பனிப்பிரபு"--இடம் பெற்றன...!!!!
4வது முறையாவும் டெக்ஸ்ம் ஸ்பைடரும் ஒரே இதழில் இடம்பெற்றது 1995ன் கோடைமலரான லயன் டாப்10 ஸ்பெசல்ல...
ReplyDeleteடெக்ஸின் "பழிகேட்ட புலிகள்" என பெயரிடப்பட்டு "பாலைவனப் பரலோகம்"-மும்,
" எதிரிக்கு...எதிரி...=எதிரி"--என்ற ஸ்பைடரின் 14பக்க மினி சாகசமும் வெளியான இதழ் அது.
ஸபைடர் கதையின் ஸ்பெசாலிட்டி என்னான்னா வாசகர் படைப்பு இது. நம்புங்க ஃப்ரெண்ட்ஸ்; பெருங்குளத்தூர் நண்பர் ரமேஷகுமாரின் தரமான படைப்பு!
தீபாவளிமலர் 2020 vs சர்பத்தின் சவால்--5வது முறையாக ஒரே சமயத்தில் டெக்ஸ்ம் ஸ்பைடரும் நம்மை வசீகரிக்க வந்துள்ளனர்.
ReplyDeleteSuperb saare
Deleteஉங்களை மிஞ்சவே முடியாது சேலம் Tex .. :-)
Deleteஎப்படி விஜயராகவன் பக்கத்தில் எல்லா புத்தகங்களையும் வைத்து கொண்டு இருப்பீர்களா? செம நடமாடும் காமிக்ஸ் களஞ்சியம்.
Deleteஅடுத்த முறை ஈரோட்டில் சந்திக்கும் போது இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
எனக்கும் அதுதான் ஆச்சர்யம்.
Deleteஉதய்,
Deleteராக் ஜி,
பரணி,
பத்து சார்@
&மனிதில் பாராட்டிய நண்பர்கள்,
அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் ஃப்ரெண்ட்ஸ்!
உங்கள் அனைவரின் உற்சாகம் நிறைந்த பாராட்டுகள் தான் இதுபோன்ற தகவல்களை தேடிஎடுத்து போட உத்வேகம் அளிக்கும் டானிக்!
மஹி, KOK, ரவி , பேபி, உள்ளிட்ட நண்பர்கள் நிறைய உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
1989ல என்னுடைய 14வது வயதில் தாமதமாகவே காமிக்ஸ் படிக்க வந்தேன். பால்யத்தில் விட்டுப்போனதை ஈடு செய்ய 1990களில் வெறித்தனமாக காமிக்ஸ் படிப்பது, சேகரிப்பது என இறங்கி , அதுவரை வந்திருந்த காமிக்களை படித்து முடித்தேன்.
இளம் எடிட்டர் சார் அந்நாட்களில் பட்டையை கிளப்பிய மலர்களை நிறைய தடவை ஆச்சர்யத்துடன் வாசித்து மகிழ்ந்து உள்ளேன்.
ஒவ்வொரு ஸ்பெசல் வெளியாகும் போதும் எனக்குள் உரக்க கேட்கும் வினா, குண்டுபுக் ஹார்டு பவுண்ட் இதழ்களில் ஒவ்வொரு முறையும் நம்மை அசத்த ஓயாது சிந்தித்து செயலாற்றும் எடிட்டர் சாரின் உத்வேகம் & காமிக்ஸ் காதல்...!!!!
சூப்பர்.... "காமிக்ஸ்களஞ்சியம்" டெக்ஸ்விஜயராகவன் என இன்றுமுதல் அழைக்கப்படப் போகிறீர்கள். (நன்றி PFB)
Deleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுன்னகை ஒளிர்சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் இல்லங்கள் தோறும் நலத்தோடு, வளத்தோடு இருள் அகன்று ஒளி இன்றும் என்றென்றும் பரவட்டும். 💐🙏🏻
ReplyDeleteஊருக்கு பயணமானதால் டெக்ஸை ( மினி மற்றும் தீபாவளி மலர் ) மட்டும் இன்னும் படிக்க இயலவில்லை...
ReplyDeleteஆனால் அது மாஸ் ஹிட் என்பது அறிந்த உண்மை தான்..மற்ற இதழ்களை பொறுத்தவரை அதுவும் அட்டகாசமாக அமைந்து விட்டதால் இந்த மாதம் செம அட்டகாஷ் என்பது நிரூபணமாகி விட்டது..
Reading now.
ReplyDeleteTime hunters.
Editor sir, Winter Special Dialogues very impressive sir.super sir.
ReplyDeleteAll rounder Tex Willer.
///பழைய பாக்கிலே பாதியே இன்னிக்கு போட்டுவிடுறேன் ...அந்த புது பொஸ்தவத்தைப் போட்டு விட முடியுமா ?" என்ற கோரிக்கைகள் ! சத்தியமாய் டெக்ஸ் என்ற அந்த அசாத்தியனைத் தாண்டி வேறு யாருக்கும் இத்தகைய ஜாலங்களைச் செய்திடும் ஆற்றல்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை///
ReplyDelete--- இன்றைய தினத்தின் மிகச்சிறந்த செய்தி இதுவே!
பழைய பாக்கிகள் வசூலாவது என்பது எத்தனை மகத்துவமானது என்பது வியாபாரத்தில் இருப்போருக்கு தெரியும்.
டெக்ஸ் இதற்கு காரணம் என்பதை அறியும் போது பெருமிதம் கொள்கிறது மனம்!
/* பணமோ ; பொருளோ ; ஆதரவான வார்த்தைகளோ ; நம் நிலைகளின் புரிதல்களோ ; இதழ்கள் சார்ந்த சிலாகிப்புகளோ ; சந்தக்களோ */
ReplyDeleteஇன்னும் யாரும் சாத்தலியா சார் - நவம்பர் பாதி ஆயிடிச்சி ? :-) :-D
Hope all LION FAMILY members had an unforgettable Deepavali given the times !
அட...இங்கே தானே இருக்கேன் - எப்போனாலும் கூப்ட்டுவிட்டு மொத்திக்கலாமில்லியா சார் ?
Deleteபண்டிகைலாம் முடிஞ்ச பிற்பாடு சாவகாசமாய் 'அலோ.. இந்த முட்டுச் சந்து புதுசா இருக்கு ?!"ன்னு ஒரு குரல் குடுத்தா போதாதா ? டாண்ணு ஆஜராகிட்டுப் போறேன் !!
ஸ்பைடர் ராக்ஸ்...
ReplyDeleteஸ்பைடர் 1980களின் பிற்பகுதி மாஜிக்கை மீண்டும் ஒருதடவை நிகழ்த்திட்டார்...!!! யெஸ் "மீண்டும் ஸ்பைடர் ராக்ஸ்"!
Deleteஸ்பைடர் ராக்ஸ்???
Deleteபக்கம் 12-ல் ஸ்நேக்கின் வசியப் பார்வையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு இளகிய மனம் படைத்த
ஸ்பைடர் ராக்ஸ்....
பக்கம் 19-ல்
ஸ்நேக்கின் நாகங்களிடமிருந்து தலைதெறிக்க ஓடி தப்புவதன் மூலம் பின்வாங்குவது ராஜதந்திர உபாயம் என உணர்த்தும் செயல்வாயிலாக
ஸ்பைடர் ராக்ஸ்..
பக்கம் 24 -ல் ராட்லே மூலம் தண்ணீரில் மூழ்கவிருந்த ஸ்பைடரை ஸ்நேக் காப்பாற்ற பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற வரிகளுக்கு ஸ்நேக்கை தகுதியானவனாக்கியவகையில்
ஸ்பைடர் ராக்ஸ்..
மறுபடியும் ராட்லே பக்கம் 30-ல் ( இப்ப ஆரம்பிக்குதுங்க
எத்தனை தடவை ஸ்நேக்கால் ஸ்பைடர் காப்பாற்றப்படும் எண்ணிக்கை பற்றிய குழப்பம்) ஆட்களிடமிருந்து ஸ்நேக் வந்து தீப்பிழம்புகளிடமிருந்து ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்
பக்கம் 37 -ல் ஸ்நேக் வந்து மிஸ்டிரியோஸாவிடமிருந்து ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ் ...
பக்கம் 41 -ல் புரபஸர் ஸின்னிடமிருந்து ஸ்நேக் ( அன்னைக்கு காலையிலே எட்டு மணியிருக்கும் ..என் பொண்டாட்டி குளிச்சி முடிச்சி - ன்னு ஆரம்பிருக்குற ரோபோ சங்கர் ஞாபகம் வருதா..?)
ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்...
பக்கம் 53-ல் ஸ்நேக்கால் முட்டாள் பட்டம் கட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்..
இறுதியில் கிளிக்கூண்டுக்குள் அடைபட்டு தன் படைப்புகளாலேயே ஸ்நேக் அழிவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதன் மூலம்' ரத்தக் கறை' ஏதும் இல்லாத கரங்களை கொண்டு இருக்கும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ் ....
கூர்மண்டையர் கதைக்கு மைசூர்பாகு அறிவிக்கலை தான் சார் ; ஆனால் இந்த அலசலுக்கு ஒரு பாக்கெட் கமர்கட்டாச்சும் அனுப்பத் தகும் !!
Deleteநம்மாள் ஸ்பீட் ஜாஸ்தி இந்த சாகசத்தில் !!
Deleteசெனா அனா.. :)))))
Deleteஎன்னியவே ஸ்பைடர் கதைய படிக்க வச்சுடுவீங்க போலிருக்கே?!!
ஸ்பைடர் ராக்ஸ்???
Deleteபக்கம் 12-ல் ஸ்நேக்கின் வசியப் பார்வையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு இளகிய மனம் படைத்த
ஸ்பைடர் ராக்ஸ்....
பக்கம் 19-ல்
ஸ்நேக்கின் நாகங்களிடமிருந்து தலைதெறிக்க ஓடி தப்புவதன் மூலம் பின்வாங்குவது ராஜதந்திர உபாயம் என உணர்த்தும் செயல்வாயிலாக
ஸ்பைடர் ராக்ஸ்..
பக்கம் 24 -ல் ராட்லே மூலம் தண்ணீரில் மூழ்கவிருந்த ஸ்பைடரை ஸ்நேக் காப்பாற்ற பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற வரிகளுக்கு ஸ்நேக்கை தகுதியானவனாக்கியவகையில்
ஸ்பைடர் ராக்ஸ்..
மறுபடியும் ராட்லே பக்கம் 30-ல் ( இப்ப ஆரம்பிக்குதுங்க
எத்தனை தடவை ஸ்நேக்கால் ஸ்பைடர் காப்பாற்றப்படும் எண்ணிக்கை பற்றிய குழப்பம்) ஆட்களிடமிருந்து ஸ்நேக் வந்து தீப்பிழம்புகளிடமிருந்து ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்
பக்கம் 37 -ல் ஸ்நேக் வந்து மிஸ்டிரியோஸாவிடமிருந்து ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ் ...
பக்கம் 41 -ல் புரபஸர் ஸின்னிடமிருந்து ஸ்நேக் ( அன்னைக்கு காலையிலே எட்டு மணியிருக்கும் ..என் பொண்டாட்டி குளிச்சி முடிச்சி - ன்னு ஆரம்பிருக்குற ரோபோ சங்கர் ஞாபகம் வருதா..?)
ஸ்பைடரை காப்பாற்றும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்...
பக்கம் 53-ல் ஸ்நேக்கால் முட்டாள் பட்டம் கட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ்..
இறுதியில் கிளிக்கூண்டுக்குள் அடைபட்டு தன் படைப்புகளாலேயே ஸ்நேக் அழிவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதன் மூலம்' ரத்தக் கறை' ஏதும் இல்லாத கரங்களை கொண்டு இருக்கும் வகையில்
ஸ்பைடர் ராக்ஸ் ....///////////Super comment sir. But even a worse story of The Spider cannot stop us from loving him. I suggest revising 'Kal Nenjan' What an artwork & storyline!
Time Hunter sci- fi Thriller.
ReplyDeleteVery complecated with good entertainment story.
True...
DeleteNext
ReplyDeleteDeepavali with TEX.
165வது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதி வின்டர் ஸ்பெஷல்
ReplyDeleteவழக்கமாக டெக்ஸ் மற்றும் கார்சன் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார்கள்; ஒரு பெரிய கூட்டத்தை எதிர்க்கின்றனர், ஒற்றைக்கு ஒற்றையில் டெக்ஸ் ஜெயிக்கிறார். காப்பாற்றிய பெண்ணை அவரின் கணவரான அதிகாரியிடம் ஓப்படைக்கிறார்கள். இதில் என்னப்பா வித்தியாசம் வழக்கமான டெக்ஸ் கதைதானே என நினைக்கும் இடத்தில் :-) இதற்கு அடுத்து சில பக்கங்களில் நடப்பதுதான் மெயின் பிக்சர்.
அந்த காப்பாற்ற பெண் செவ்விந்தியனை மீண்டும் பார்க்க செல்லும் போது ஆகா செல்வராகவன் கதை போல் நினைக்கும் இடத்தில் அந்த பெண் எடுக்கும் முடிவு அட என போட்டு பாராட்டவைக்கிறது.செம ட்விஸ்ட். அருமையான முடிவு.
ஓவியம் வித்தியாசமாக இருந்தது. இந்த ஸ்டைல் தலைவன் ஒரு சகாப்தத்தில பார்த்தாக ஞாபகம். எனக்கு இந்த ஸ்டைல் ஓவியம் அந்த அளவுக்கு கவரவில்லை.
ஒரு இடத்தில் கோபம் என்ற எழுத்து பிழையை தவிர மற்றவை எல்லாம் மிகவும் நிறைவு.
வின்டர் ஸ்பெஷல் உண்மையில் ஸ்பெஷல்.
அனுராதா ரமணின் பரிசு பெற்ற குறுநாவலும் பின்னர் திரைப்படமாக்கப்பட்டமாதுமான " சிறை "
Deleteநினைவில் வருகிறதில்லையா?
நெஞ்சு நெகிழவைக்கும் லட்சுமியின் கதாபாத்திரம் ஞாபகப் பேழையை திறந்து வெளிவரப் பார்க்கிறதில்லையா?
ஆனால் இது அதிரடி நாயகன் டெக்ஸ் கதையின் ஜீவனாக வைக்க நெஞ்சுரம் வேண்டும்..
வெளியிட பதிப்பகத்தார் கொண்டிருந்த முனைப்பு இன்னமும் வியப்பிலாழ்த்தும் ஒன்று...
ஆமாம். அதேநேரம் ஒரு இடத்தில் நமது இதிகாசம் ஞாபகம் வந்தது, அந்த அதிகாரி தனது மனைவியை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் ஊருக்கு அனுப்பும் போது.
Delete//பதிப்பகத்தார் கொண்டிருந்த முனைப்பு இன்னமும் வியப்பிலாழ்த்தும் ஒன்று...//
Deleteஆண்டுக்கு குறைந்தபட்சமாய் சுமார் 4000 பக்கங்களை - டெக்ஸ் சார்ந்த வெவ்வேறு தட இதழ்களுக்கென போனெல்லியில் உருவாக்கி வருகிறார்கள் சார் ! So சதா நேரமும் புதுப் படைப்பாளிகள் ; புதுச் சிந்தனைகள் சார்ந்த தேடலில் அவர்கள் முனைப்புக் காட்டுவது நடைமுறை !
And புதியவர்களுக்கு ஒரு பரீட்சார்த்தக் களமாகவோ ; அல்லது, புதிய கதை பாணிகளுக்கொரு trial grounds ஆகவோ இந்த 32 பக்க மினி டெக்ஸ் வரிசையினை பயன்படுத்தி வருகிறார்கள் !
இந்த ஆல்பம் (வின்டர் ஸ்பெஷல்) அவர்களது ரெகுலர் எழுத்தாளர் Pasquale Ruju & முதிர்ந்த ஓவியரான செர்ஜியோ டிசெல்லியின் கைவண்ணமே ! போனெல்லி வழங்கிய அந்தச் சுதந்திரமே இது மாதிரியான முயற்சிக்கு முதுகெலும்பு !
ஒரு கொசுறுச் சேதி - போனெல்லியின் தடத்தில் ஓவியர் டிசெல்லி பணியாற்றிய முதலும், கடைசிப் பணியும் இந்த 32 பக்கக் குறும் சாகசமே ! துரதிர்ஷ்டவசமாக இந்த ஏப்ரலில் தனது 63 வது வயதில் காலமாகி விட்டார் ! கொரோனாவின் தாண்டவமா என்பது தெரியவில்லை ; ஆனால் ஒரு ஆற்றலாளர் ரொம்பச் சீக்கிரமே விடை பெற்றுவிட்டார் !
//ஆமாம். அதேநேரம் ஒரு இடத்தில் நமது இதிகாசம் ஞாபகம் வந்தது, அந்த அதிகாரி தனது மனைவியை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் ஊருக்கு அனுப்பும் போது.//
Deleteஆமால்ல!!!
மனமறிய தவறு செய்யாத முனிவர் மனைவியை கல் வடிவத்தில் இருந்து விடுவித்தவனே மனதை கல்லாக்கி தன் மனைவியை கிட்டத்தட்ட அதே காரணத்துக்காக வனவாசம் அனுப்புகிறான்..
மானுட அவதாரம் என்பதால் டெக்ஸ் குத்துக்கு இலக்காகிட வேண்டியிருக்கும்தான்..!!!
//போனெல்லியின் தடத்தில் ஓவியர் டிசெல்லி பணியாற்றிய முதலும், கடைசிப் பணியும் இந்த 32 பக்கக் குறும் சாகசமே ! துரதிர்ஷ்டவசமாக இந்த ஏப்ரலில் தனது 63 வது வயதில் காலமாகி விட்டார் ! கொரோனாவின் தாண்டவமா என்பது தெரியவில்லை ; ஆனால் ஒரு ஆற்றலாளர் ரொம்பச் சீக்கிரமே விடை பெற்றுவிட்டார் !//
Deleteஅடடா!!! வருத்தமளிக்கும் செய்தி..
வித்தியாசமான ஓவியங்கள் அல்லவா அவை..
:(
///அதேநேரம் ஒரு இடத்தில் நமது இதிகாசம் ஞாபகம் வந்தது, அந்த அதிகாரி தனது மனைவியை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் ஊருக்கு அனுப்பும் போது.///
Deleteஅடடே!! எனக்கு இது தோனாமப் போச்சே!! சூப்பர் PfB!!
/// துரதிர்ஷ்டவசமாக இந்த ஏப்ரலில் தனது 63 வது வயதில் காலமாகி விட்டார் !///
வருத்தமான செய்தி! :(
// துரதிர்ஷ்டவசமாக இந்த ஏப்ரலில் தனது 63 வது வயதில் காலமாகி விட்டார் ! //
Deleteவருத்தமான செய்தி சார்.
அப்புறம் கடைசி நான்கு பக்கங்களை படித்து முடித்த பிறகு இந்த கதையை இந்திய கதாசிரியர் இன்னும் சரியாக சொல்லப்போனால் தமிழ் பட கதாசிரியர் எழுதியது போல் தோன்றியது :-)
Deleteஅனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளியை சாப்பிட்டும் தூங்கியும் மூக்குத்தி அம்மனிலும் கழிச்சாச்சு... இன்னமும் ஒரு புக் கூட படிக்கலை.
ReplyDeleteHappy'deepavali folks!
ReplyDeleteTwo Tribute issues:
ReplyDeleteSpider- JSK
Winter Special - Tisseli.
Deepavali Double Damacka...both the Tex stories ultimate. Felt like watching 2 super hit movies back to back. The only worry is I don’t have another Gundu book
ReplyDeleteயுத்த பூமியில் டெக்ஸ்!!!
ReplyDelete9/10
அமெரிக்க உள்நாட்டு யுத்தம் பற்றிய எளிய நடையில் முழு சம்பவங்களின் தொகுப்பை யாரேனும் பகுதி பகுதியாகவேனும் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது...
STV ??
முதல் சில பக்கங்களில் "லாடம்" பற்றி வருவதால் அது பற்றி படிக்க விழைந்ததில் அமெரிக்க சிவில் யுத்தத்தில் லாடங்களை மாஸ் புரடக்ஷன் செய்யும் இயந்திரங்களை வடக்கு படையினர் வைத்திருந்ததால் அதுவும் வெற்றிக்கு ஒரு காரணம் எனப் கொண்டிருக்கிறார்கள்... தேவுடா!!!
Deleteஅடடே இப்படியும் ஒரு விஷயம் இருக்கா :-)
Deleteபொருளர் ஜி@ ஆம் ஜி!
Deleteஅமெரிக்க உள்நாட்டு யுத்தம்-கேப்டன் டைகர், டெக்ஸ், ப்ளூகோட்ஸ் & சிங்கிள் ஷாட்ஸ் என சகல ஹீரோக்கள் சாகசங்களிலும் தவிர்க்கவே இயலாத பகுதியாக ஆக ஆகிட்டது. அதைப்பற்றி யாரேனும் எழுதத் தான் வேணும். டிசம்பர் பிற்பாதியில் இருந்து பொங்கல் முடியும் வரை எனக்கு நிறைய நேரம் ஃப்ரீ இருக்கும். (மார்கழி விரதம் காரணமாக ஆஃப் சீசன்)
அந்த சமயத்தில் எழுத முயற்சி செய்கிறேன்.
@STV யெஸ்!! கண்டிப்பாக எழுதுங்கள் டெக்ஸ்...பின்னணி தெளிவாக உணர்ந்தால் கதைகளோடு எளிதில் இன்னும் மிக நன்றாக ஒன்ற இயலும்..
Deleteநிஜத்தைச் சொல்வதானால் - அந்த யுத்தத்தின் மெய்யான பின்னணியே நமது இரத்தப் படலத்தின் ஒன் லைனர் கரு ! இன்னும் முன்னெடுத்துச் செல்வதாயின் இன்றைக்கு அமெரிக்க அரசியலில் அரங்கேறி வரும் காமெடிகளுக்கும் அதுவே துவக்கப் புள்ளி !
Deleteயுத்தம் முடிந்து நூற்றுச் சொச்சம் ஆண்டுகளாகி விட்டதாய் சரித்திரப் புத்தகங்கள் சொல்லலாம் ; ஆனால் இன்னமும் பல மனங்களில் அது அன்றாடம் நிகழ்ந்தே வருகிறது !
ஓகோ இப்படி வேற ஒரு கதை இருக்கா? அப்ப ரத்த படலத்தை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் போல.
Delete/////யுத்தம் முடிந்து நூற்றுச் சொச்சம் ஆண்டுகளாகி விட்டதாய் சரித்திரப் புத்தகங்கள் சொல்லலாம் ; ஆனால் இன்னமும் பல மனங்களில் அது அன்றாடம் நிகழ்ந்தே வருகிறது !////
Deleteபயங்கரமா இருக்கும் போலிருக்குங்களே சார்?!!!
தீபாவளி இதழ்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். I'm very much satisfied with this month's books. Loved it Sir.
ReplyDeleteOverall ratings 8.5/10
இன்னும் கொஞ்சம் விரிவான விமர்சனம் எழுதுங்களேன் KS?
DeleteYutha boomiyil Tex another smash hit.
ReplyDeleteVery impressive story dialogues.
Dik another Karson.
பனிவனப் படலம் - 50 பக்கம் படிச்சாச்சு
ReplyDeleteயுத்த பூமியில் மொட்டை பசங்ககூட சுற்றி திரிந்த டெக்ஸ், பனிமலையிலும் கிழவன்களோடு சுற்றிவருவாரோ என பயம் வந்துடுச்சூ... ஆனால் ஒரு அருமையான கேரக்டர் என்ட்ரி. கதையும் மிக சுவாரஸ்யமாக செல்கிறது. ஓவியம் செம்ம சூப்பர்ர்ர்.
மிச்சத்தையும் படுச்சுட்டு வாரேன்.
பனிவனப்படலம்!!!
ReplyDelete9.5/ 10