Powered By Blogger

Monday, December 16, 2019

அண்ணனுக்கொரு சீட் !!

நண்பர்களே,


வணக்கம். A for Archie என்று போடச் சொன்னால் - A for அதகளம் என்றும் பிரித்து மேய்ந்துள்ளீர்கள் ! என்ன தான் கி.நா. ; கோ.நா. என்று நாம் முயற்சித்தாலும், back to the evergreen memories என்ற நொடியிலேயே  நெடும் மௌனத்திலிருக்கும் நண்பர்கள் கூடத் துள்ளி எழுவதைப் பார்க்கும் போது பிரமிக்காது இருக்க இயலவில்லை ! காதிலே புய்ப்பமோ - இல்லியோ ; பால்யம் சார்ந்த சமாச்சாரங்களெனும் போது எங்கிருந்தோ பிரவாகமெடுக்கும் அந்த உற்சாக ஊற்றின் நதிமூலத்தைக் கண்டறிய இயன்றால் தான் எத்தனை அட்டகாசமாய் இருக்கும் !! 

அதே சமயம் - பால்யங்களைத் தாண்டியது, தாண்டியது தான் ; மறுக்கா அரை நிஜார்களுக்குள் புகுந்திட முனைந்து நம்மை நாமே நோகடித்துக் கொள்வானேன்? என்ற யதார்த்தவாதிகளின் அணி சிறுபான்மையில் இருந்தாலும் அவர்களது குரல்களையும் உதாசீனம் செய்வது முறையாகாது ! So அவர்களை ஓவராய் சோதிக்கவும் கூடாது ; அதே சமயம் ஆர்ப்பரிக்கும்  இந்த சட்டித் தலையன் காதலுக்கும் முதல் மரியாதை செய்தாக வேண்டும் என்பதே நிலவரம் ! ஆகையால் ஒரேயொரு சாகசத்தோடு அண்ணாத்தே ஆர்ச்சியை தற்போதைக்கு சந்தா D-ல் ரசித்துக் கொள்வோமே ?! And அதையுமே ரொம்பத் தள்ளிப் போடாது பிப்ரவரியிலேயே என்று வைத்துக் கொள்ளலாம் ! கைவசமுள்ள  பாக்கிக் கதைகளை நெருடாத விதத்தில் நடுநடுவே போட்டுத் தாக்கிக் கொள்ளலாம் ! So சிகப்பு மண்டையனின் பக்தாள்ஸ் : பொறுமையோடு பயணிப்போமே ப்ளீஸ் ? 

எது எப்படியோ - ஒரு விதத்தில் எனக்கு குஷி !! அது எப்படி என்கிறீர்களா ? ஆர்ச்சி பற்றிய சேதிக்கு உங்களில் யார் யார் - எவ்விதம் ரியாக்ட் செய்வீர்களென்பதை ஒரு யூகமாய் உருவகப்படுத்தியிருந்தேன் ! And அட்சர சுத்தமாய் அந்த யூகத்துக்கு வெற்றி ! ஆர்ப்பரிக்கப் போவோர் யார் ? மிரண்டு ஓடப் போவோர் யாரென்று நான் எதிர்பார்த்தேனோ - அதனில் 90 % சரியாகவே இருந்தது ! 

அப்புறம்  ஆர்ச்சியை ஒற்றை ஸ்லாட்டுக்குள் புகுத்திய பிற்பாடு, எஞ்சியிருக்கக்கூடிய 3 காலி ஸ்லாட்களுக்குள் யார் யாரைப் போடலாமென்று ஏகமாய்ப் பரிந்துரைகளையும் கவனித்தேன் தான் ! ஆனால் ஆர்வ மிகுதியினில் நம்மிடம் இந்த இதழ்களுக்கென  கைவசம் இருப்பது (தலா) ரூ.40 பட்ஜெட் மட்டுமே என்பதையும் , சின்ன சைஸிலெனில் 64 பக்கங்களும் ; பெருசிலெனில் 32 பக்கங்களும் மாத்திரமே என்பதை நிறைய பேர் கருத்தில் கொள்ளத் தவறி விட்டிருந்தார்கள் ! அதே போல அந்நாட்களிலேயே பெருசாய் உயரங்களைத் தொடாத விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகியோரை nostalgia காரணமாய் இன்று பரிந்துரைப்பதையுமே கவனித்தேன் ! Sorry guys - வேண்டாமே அந்த ரூட்டிலான பயணம் ! இளம் டெக்ஸ் விட்டுள்ள வெற்றிடத்தை பொருத்தமான கதைகளால் ரொப்பிட எனக்குத் தேவை கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் மாத்திரமே ! Stay assured please !! 

அப்பாலிக்கா கடந்த பதிவின் வாலில் நண்பர் கிரி நாராயணன் பதிவிட்டிருந்ததைப் பார்த்த போது ஆர்ச்சிக்கு thumbsdown தந்த நண்பர்களுக்கெல்லாம் ஜெர்க்கோ ஜெர்க் அடித்திருக்குமென்பது நிச்சயம் !! For those who missed it :


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விக்டர்: தாம்சன்! அழைப்பு வரும் போல் தெரிகிறது, ஆர்ச்சியை தயார் செய்.


தாம்சன்: நான் எப்பவோ தயார் செய்து விட்டேன். அது ஏனோ தயங்குகிறது.

விக்டர்: ஏன்?

தாம்சன்: அது மேல பாசம் காட்டின சின்ன பசங்க எல்லாம் இப்ப பெரியாளா ஆகியிருப்பாங்க. பழைய பாசம் காட்டுவாங்களா என்று யோசிக்கிறது.

விக்டர்: முடிந்த வரை முயற்சிப்போம் என்று சொல். அதற்கு மேல் விதி விட்ட வழி.

ஆர்ச்சி: நண்பர்களே! எனது சக போட்டியாளன் ஸ்பைடரும் வந்தால் கொஞ்சம் தெம்பாக உணர்வேன்.

தாம்சன் & விக்டர்: ஸ்பைடருக்கும் அழைப்பு வரும்.முதலில் நீ களத்தில் இறங்கு.

ஆர்ச்சி ரசிகர்கள் : ஆர்ச்சி இங்கே வா! வா! ஆசை முத்தம் தா! தா !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு தெறிக்கும் கற்பனையாய் ஸ்பைடரையும், ஆர்ச்சியோடு  களமிறக்கினால்  எவ்விதமிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் !! இந்தக் குளிரிலும் வியர்த்துப் போய் விட்டது !! 

Bye guys..."மேக் & ஜாக்" இறுதிக்கட்டப் பணிகள் காத்திருப்பதால் நடையைக் கட்டுகிறேன் ! See you around ! 

147 comments:

  1. ஆர்ச்சி வரட்டும் கூடவே நார்மன்
    இரும்பு கை வில்சன் வந்தால் நன்று

    ReplyDelete
    Replies
    1. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வர நண்பரே ? அவர்கள் உருவாக்கியதே இரண்டே கதைகளெனும் போது யார் என்ன செய்திட முடியும் ?

      Delete
    2. @விஜயன் சார்..
      அப்ப அந்த ரெண்டு கதையையும் ரீபிரிண்ட் போட்டுடுங்களேன் ப்ளீஸ்.

      Delete
  2. ஆர்ச்சிக்கு ஜே.. பாபு,சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து..

    ReplyDelete
  3. ஒற்றை இதழ் மட்டும் என்பது சிறிது ஏமாற்றம்..

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் இல்லாததற்கு ஒன்று தேவலாம் தானே !

      Delete
  4. லாரன்ஸ் டேவிட்
    பிட் போட்டு வைப்போம்

    ReplyDelete
  5. ஒற்றை இதழ் ஏமாற்றமே என்ன பிப்ரவரியில் வருவதால் சற்று ஆறுதல்

    ReplyDelete
  6. தலீவருக்கு சலாமுங்கோ.

    ReplyDelete
  7. டில்லனுக்கு பதில் வேறு கவ்பாய்

    ReplyDelete
  8. Replies
    1. ரோடு கிடையாது ; தெரு விளக்கும் கிடையாது ; அட...பயண முடிவில் ஊரே கிடையாது !! ஆனால் 'ரைட்..ரைட்'என்று பஸ்ஸை அந்தப் பக்கமாய் விரட்டுவோமென்று சொல்கிறீர்கள் சத்யா !

      Delete
  9. இதுவரை மறுபதிப்பாகாத ஸ்பைடர் & மும்மூர்த்திகள் கதைகளை முயற்ச்சிக்கலாம்

    ReplyDelete
  10. /// And அட்சர சுத்தமாய் அந்த யூகத்துக்கு வெற்றி ! ஆர்ப்பரிக்கப் போவோர் யார் ? மிரண்டு ஓடப் போவோர் யாரென்று நான் எதிர்பார்த்தேனோ - அதனில் 90 % சரியாகவே இருந்தது ! ///
    இதில் நான் எந்த ரகமென்று சொல்லுங்க சார்..

    ReplyDelete
  11. Any coeboy instead of Dillon. Please sir. மாற்றம் ஒன்றே மாறாதது

    ReplyDelete
  12. நான் ஆர்ப்பரிக்க போவோர் ரகமென்று சரியாக கனித்தீர்களா ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அது இந்த உலகத்துக்கே தெரியுமே. பழைய கதைகளை பற்றி பேசினாலே நீங்கள் என்ன சொல்வீர் என்று தளத்தில் உள்ள நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும்.

      Delete
  13. அண்ணன் ஆர்ச்சிக்கு ஜே ஜே

    ReplyDelete
    Replies
    1. அப்படியே 2 ஸ்லாட்டுக்கும் ஒரு ஜேஜே போடுங்க!!

      Delete
  14. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  15. Sir, டெக்ஸ்க்கு பதில் டெக்ஸே வருவதே சரியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. பக்க எண்ணிக்கையில் match ஆகும் மத்த டெக்ஸ் கதைகளை இளம் டெக்ஸுக்கு பதில் வெளியிடு வாய்ப்பு இருக்கிறதா என முயற்சி செய்யவும். ஆர்ச்சிக்கு வேறு வழியில் வாய்ப்பை குடுக்கலாம். நன்றி!.

    ReplyDelete
    Replies
    1. அவ்விதம் கதைகள் இருந்திருப்பின் அவற்றை சத்தமின்றிக் கொணர்ந்திருக்க எனக்குத் தோன்றியிராதா சார் ?

      Delete
  16. //இளம் டெக்ஸ் விட்டுள்ள வெற்றிடத்தை பொருத்தமான கதைகளால் ரொப்பிட எனக்குத் தேவை கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் மாத்திரமே ! Stay assured please !! // நிறைய நேரம் எடுத்து கொண்டு நல்ல முடிவாக சொல்லுங்கள் சார்.

    ReplyDelete
  17. // ஒரு தெறிக்கும் கற்பனையாய் ஸ்பைடரையும், ஆர்ச்சியோடு களமிறக்கினால் எவ்விதமிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் //
    கண்டிப்பாக நல்லா இருக்கும் சார்.....
    தெறி கூட்டணி.....

    ReplyDelete
    Replies
    1. 1. விண்வெளி பிசாசு
      2. பாட்டில் பூதம்
      3. நீதிகாவலன் ஸ்பைடர்

      Delete
    2. no 1 கு ஜெ
      MAXI ல தா வரணும்

      Delete
    3. மர்மத் தீவில் ஆர்ச்சி
      கொலைப்படை
      ஐந்து விலையில் வந்த இருவண்ண கோடை மலர் மெகா சைசில் அப்படியே வந்தா தெறிக்குமே...ரெண்டு ஸ்லாட் ஓவர்...
      ஸ்டீல்

      Delete
  18. ஒரு ஆர்ச்சி கதையை உறுதி செய்ததற்கு நன்றி. அதுவும் பிப்ரவரி மாதத்திலேயே கண்ணில் காட்டப்போவதற்தகு கோடி நன்றிகள்.

    மீதமுள்ள 3 ஸ்லாட்டுக்கு புதிய கதைகளை கொடுங்கள் சந்தா Dயை மேலும் சுவாரசியமாக்க.

    3 ல் 1க்கு ஏதாவது பேய் கதையை (டிராகுலா/இரத்த காட்டேரி) முயற்சிக்கலாமே?

    ஜில் ஜோர்டன் அல்லது டிடெக்டிவ் ஜெரோம் கதைகளையும் முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. பக்க எண்ணிக்கை சார்ந்து எழுதியுள்ளதை மறுக்கா படியுங்களேன் சார் ?

      ரூ.80 விலையின் வரிசையில் வாசக அபிமானமின்மை காரணமாய் வெளியிட இயலாது போன கதைகளையெல்லாம் ரூ.40 விலைக்குள் அடக்கும் மந்திரம் நடைமுறையில் இல்லையே ?

      Delete
    2. விஜயன் சார், பக்க எண்ணிக்கை மற்றும் 40 விலைக்குள் முடிந்தால் மட்டுமே என்பது எனது கருத்து.

      Delete
    3. அப்ப மர்ம பங்களா தொடராய்...

      Delete
  19. ஆர்ச்சிக்கு ஒரு ஸ்லாட் என்பது நல்ல முடிவு! வரவேற்பைப் பொருத்து அடுத்த வருடங்களில் ஸ்லாட்டுகளை கூட்டுவது பற்றி யோசிக்கலாம் தான்!
    விங் காமாண்டர் ஜார்ஸ், சார்லி போன்ற சோபிக்காத நாயகர்களுக்கு நோ சொல்லியிருப்பதும் நல்ல முடிவே!

    'ஆர்ச்சி சூடு' அடங்குவதற்குள் பிப்ரவரியிலேயே சட்டித்தலையனை களமிறக்கிட உத்தேசித்திருப்பதும் நல்ல முடிவே!

    ReplyDelete
  20. ஆர்ச்சி போக மீதமிருக்கும் 3 ஸ்லாட்டுகளில் ஒன்றிற்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்டையே கூட களமிறக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. அட... இது நல்லா இருக்கே...

      Delete
    2. லேடி ஜேம்ஸ் பாண்ட் ?

      Delete
    3. லேடி ஜேம்ஸ் பாண்ட் (மாடஸ்டி) & ஜேம்ஸ் பாண்ட் இருப்பதே போதுமானது.

      2020 இவர்களுக்கு உள்ள வரவேற்பை பொறுத்து 2021 இவர்களுக்கான இடங்களை அதிகப் படுத்தலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

      Delete
    4. அப்ப அந்த அழகியைத் தேடி

      Delete
    5. லேடி ஜேம்ஸ்பாண்ட்(இளவரசி) டபுள் ஓகே👍

      Delete
  21. சந்தா D நமக்கு light ரீடிங் ஆக மட்டுமின்றி விற்பனையை விஸ்தீரணமாக்கவும் உருவாக்கப் பட்டத்தல்லவா? புதிய வாசகர்களை கவரும் வண்ணமாகவும் கதைத் தேர்வு இருக்க வேண்டுமல்லவா சார்?

    எனவே இளம் tex க்கு சரியான மாற்று அவசியம் சார்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதைத் தானே சொல்லியிருக்கிறேன் நண்பரே ? மாற்று அவசியமே & அந்த மாற்றை இறுதி செய்ய எனக்கு அவகாசம் அவசியமே !

      Delete
    2. நிச்சயமாக சார்... காத்திருக்கிறோம்!

      Delete
  22. சார், 4-ல் 1 சிறுகதை தொகுப்பு போல் அல்லாமல் முன்பு நமது இதழில் வெளிவந்த திகில், த்ரில், ஹாரர் ஸ்பெஷல் போன்ற கதைகளை முயற்சிக்கலாமே?

    ReplyDelete
  23. என்னதான் காலங்கள் நவீன யுகமாக மாறினாலும்,பீட்சா, பர்கர், சாண்விட்ச் என்று வந்தாலும், இட்லி சாம்பார் வடைக்கு இருக்கிற மவுஸ் என்றுமே குறையாது! அதுபோலத்தான் என்னதான் புதுப்புது நாயகர்கள் வந்தாலும், சிறுவயதில் வாசித்த நாயகர்களை பார்க்கிற சந்தோஷத்தை (அது மொக்கையோ, சூப்பரோ அது விஷயமே அல்ல) இப்போ வருகிற எந்த நாயகரும் தந்திட முடியாது சார், A for archi னு நீங்க அறிவித்ததும் எத்தனை மனங்கள் துள்ளிக் குதித்ததை கவனித்தீருப்பீர்கள்! ஆர்ச்சிக்கே இப்படியென்றால் S for spider க்கு கேட்டுப் பாருங்கள் இன்னும் அதகளப்படுத்தி விடுவார்கள்! இந்த மாதிரியான நாயகர்களை அடிக்கடி போடா விட்டாலும், வருடத்திற்கு ஒரு நாயகருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பாருங்களேன் யாருடைய முடிவையும் கேட்டிராமல் நீங்களே முடிவெடுத்து போட்டுதான் பாருங்களேன்! ஒரு கதையின் வெற்றியை தோல்வியை பொருத்து அடுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கலாமா வேண்டாமா என்பதையும் நீங்களே முடிவெடுத்து விடலாமே சார்! புதுமையோடு பழமையும் அவ்வப்போது கைகோர்த்தால் தான் விற்பனை என்கிற வண்டி சேதாரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து! இதற்கு மேல் முடிவு உங்கள் கைகளில்! நீங்கள் எதைப் போட்டாலும் நாங்கள் வாங்கத்தான் போகிறோம் அதில் மாற்றுக் கருத்தேயில்லை

    ReplyDelete
    Replies
    1. Trichy vijay
      நன்றி நண்பரே

      Delete
    2. பழைய mass ஹீரோக்களுக்கு மட்டும் இம்முயற்சியை ஆண்டுக்கு ஒன்று என்று தொடரலாம். உதாரணம்: மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி, நார்மன், இரட்டை வேட்டையர். அன்றே சற்று சோபிக்காத நாயகர்கள் அப்படியே இருத்தல் நலம்.

      Delete
    3. இந்த மாதிரியான நாயகர்களை அடிக்கடி போடா விட்டாலும், வருடத்திற்கு ஒரு நாயகருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பாருங்களேன் யாருடைய முடிவையும் கேட்டிராமல் நீங்களே முடிவெடுத்து போட்டுதான் பாருங்களேன். Super sir.

      Delete
    4. Spider please
      விண்வெளி பிசாசு

      Delete
  24. Sir, Thank you very much sir. I am very happy and feel I am in heaven.

    ReplyDelete
    Replies
    1. அங்கே எங்க தாத்தாவைப் பார்த்தால் நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க கிரி! அசப்புல நம்ம கிளிப்டனின் சாயலில் இருப்பார் - எப்பவும் பாட்டீம்மாக்கள் பின்னாடியே சுத்திக்கிட்டிருப்பார்.. சுளுவா அடையாளம் கண்டுபிடிச்சுடலாம்! ;)

      Delete
  25. நல்ல பதிவு ..

    நல்ல செய்தி...:-)

    ReplyDelete
  26. வணக்கம் ஆசிரியரே. ஆர்ச்சி கட்டாயம் வேண்டும்.இந்த ஆண்டின் மிக அருமையான கதைப் பிரிவு D ஆகும். ஏனெனில் குறைவான பக்கங்கள் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் வெளியீடு எங்களது மனங்கவர்ந்த நாயகர்களின் கதைகள் என கூறிக் கொண்டே செல்லலாம்.இளம் டெக்ஸ்,ரிப் கெர்பி,பாண்ட்,காரிகன்அவர்களோடு ஆர்ச்சியும் அதகளம் செய்யட்டும்.பழைய நாயகர்களோடு பயணிப்பது என்பது எங்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்லப் போகிறீர்கள் ஐயா.அதற்காக உங்களுக்கு அனைவர் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.பிற நாயகர்களின் கதைகளையும் வெளியிடுங்கள் ஐயா.ராணி காமிக்ஸ் புத்தகங்களை லயன் முத்துவில் படிக்க ஆவலாய் உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  27. காரிகன் வேண்டும்

    ReplyDelete
  28. ######ஒரு தெறிக்கும் கற்பனையாய் ஸ்பைடரையும், ஆர்ச்சியோடு களமிறக்கினால் எவ்விதமிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் !!########

    அப்படி இருவரும் இணைந்து கதை வந்திருக்கிறது சார்..
    அதையவே முயற்சி பண்ணிடலாமே.

    ReplyDelete
  29. சார், டிடெக்டிவ் டிரேக் என்று ஒருவரை ஒரே ஒரு கதையில் மட்டும் முத்து காமிக்ஸில் தலைகாட்டச் செய்திருந்தீர்கள். அவருடைய கதைகள் இருந்தால் முயற்சிக்கலாமே...

    டேஞ்சர் டயபாலிக்கிற்கு இன்னுமொரு ஸ்லாட் தருவதையும் யோசிக்கலாமே

    காதில் புய்ப்பம் வைத்தாலும், மாயாஜால மன்னருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்...

    இன்னமும் ஜான் சில்வர், ஜெஸ்லாங்கின் வெளிவராத கதைகளையும்ம்ம்ம்ம்...

    ஐய்யய்யோ, நம்ம குரங்கு மூஞ்சி இஸ்பைடரையும், சட்டித் தலையன் ஆர்ச்சியையும் பேக் to பேக் அடுத்தடுத்த மாதங்களில் படிக்கனும் என எனக்கு மட்டும் தான் தோணுதா... பாத்து ஏதாவது செய்யுங்க ஐயா..

    ReplyDelete
  30. ///ஒரு தெறிக்கும் கற்பனையாய் ஸ்பைடரையும், ஆர்ச்சியோடு களமிறக்கினால் எவ்விதமிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் //


    சந்தையில் ......................
    வியாபாரி : என்ன சார் ? அஞ்சு கிலோ வெங்காயம் கேக்குறீங்க ?? உங்க வழக்கமான பட்ஜெட்டுக்கு அது ஒத்து வராதே ?

    காமிக்ஸ் ரசிகர் : சந்தா D காமிக்ஸ் பத்தி நினைச்சுகிட்டே வந்ததில அந்த காலத்துக்கே போயிட்டேன்

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    சொர்க்கத்தில்

    தியாகராஜ பாகவதர் , சின்னப்ப பாகவதர் ,கிட்டப்பா மூவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள் ...அதில்
    கிட்டப்பா : { பெருமூச்செறிந்தவாறு ] தமிழ் லயன்முத்து காமிக்ஸ் ரசிகர்கள் பத்தியா ? கிட்டத்தட்ட நம்ம காலத்துல வந்த புத்தகங்களை எல்லாம் விரும்பி திரும்பி கேக்குறாங்க ..நம்ம ரசிகர்கள் யாராவது நம்ம படங்களை தியேட்டர்ல போட சொல்லி கேக்குறாங்களா பாரு ??

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    பிரம்மலோகத்தில்

    சரஸ்வதி : சுவாமி ! திரேதாயுகத்தில் காந்தர்வ ரூபன் என்ற யவனனை படைத்தீர்களே... இந்த கலியுகத்தில் மறுபடியும் அவனை படைக்க இயலுமா ?
    பிரம்மா : என்ன தேவி இது ? அவ்வளவு புராதனமான ஒன்றை மறுபடி படைக்க சிவகாசி எடிட்டர் சார் திரு விஜயன் அவர்களால் கூட முடியாதே ?
    ( எடிட்டர் சார் ! மன்னிச்சூ !! ஆர்ச்சி கூட ஸ்பைடர் பெயரும் அடிபடவும் பீதியில் எழுதப்பட்ட ஹாரர் ஜோக் )

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி சார் சரியான டைமிங். விழுந்து விழுந்து சிரிக்கும் படங்கள் 100

      Delete
    2. பிண்ணிடீங்க அபிராமி..

      Delete
  31. Sir, சில வருடங்களுக்கு முன்பு the Institute of Chartered Accountants of India, Coimbatore branchற்கு கவிஞர் நா. முத்து குமார் வருகை புரிந்து உரை நிகழ்த்தினார் .சிறு வயதிலிருந்தே தன் தந்தையோடு நூலகம் சென்றதும் , நூல் பல கற்றதும் தான் தனது வெற்றிக்கு காரணம் என்றும் சொன்னார். அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிய வேண்டும் என்று கூறிய அவர் சிறுவயதிலிருந்து லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் படிப்பதாக சொல்லி அங்கே வீற்றிருந்தோரையும் படிக்கச் சொல்லி ஆர்வம் ஊட்டினார்.

    இந்த நிகழ்ச்சியை முன்னரே யாரேனும் பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் நானும் ஒருமுறை பதிவு செய்துவிடுகிறேன் சார்.

    ReplyDelete
  32. Thanks to Barani, Vijay.அன்பு நண்பர்களே உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை. கொஞ்சம் Work Tension. very sorry.

    ReplyDelete
    Replies
    1. பர்ர்ர்ரால்ல விடுங்க கிரி.. நான் கூட heaven-னா ரொம்ப ஃப்ரீயா, ஜாலியா இருக்கும்னு நினைச்சேன்!
      எங்க தாத்தாவை அங்கே தேடிக்கிட்டிருக்க வேண்டாம் விட்ருங்க! இவ்வளவு பிஸியானதொரு இடத்தில் அவர் இருக்க வாய்ப்பில்லை! ;)

      Delete
  33. kumar sir, மன்னித்து விடுங்கள். உங்களை மறந்து விட்டேன். Thank you very much .

    ReplyDelete
    Replies
    1. கிரி சார் பெரிய வார்த்தைகள் எல்லாம் தேவை இல்லை. You are welcome sir.

      Delete
  34. ஆர்ச்சி ஸ்பெஷல், ஸ்பைடர் ஸ்பெஷல், ஜேம்ஸ்பாண்ட் ஸ்பெஷல் என போட்டு தாக்குங்க எடிட்டர் சார்.

    ReplyDelete
  35. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விஜயன் சார் அவர்களுக்கு!
    எனது மொபைலில் இருந்து கமெண்ட் செய்ய இயலாததால் அடிக்கடி எனது கோரிக்கையினை தெரிவிக்க இயலவில்லை.மவுன பார்வையாளனாகவே கடந்து விட நேருகிறது.
    தற்போது என்னிடம் உள்ள காமிக்ஸ் சேகரிப்புகளை பார்வையிட்ட போது அதில் பொருந்தாமல் காணப்பட்டவை…
    1.தலையில்லா போராளி (டெக்ஸ்)
    2.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் (டெக்ஸ்)
    3.பழிவாங்கும் பாவை (டெக்ஸ்)
    4.மனதில் உறுதி வேண்டும் (லக்கி)
    5.விசித்திர சவால் (ஸ்பைடர்)
    6.கழுகு மலைக்கோட்டை (மாடஸ்டி)
    இதில் கழுகு மலைக்கோட்டையினை மட்டும் விதிவிலக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவை காட்சிப்பொருளாக பார்க்க மட்டுமே ஏற்றதாக உள்ளது. வாசிப்பிற்கோ, சேகரிப்பிற்கோ உகந்ததாக இல்லை.
    உதாரணத்திற்கு லக்கியின் கதைகளை மட்டும் பைண்டிங் பண்ணி பாதுகாக்க எண்ணினால், இது போன்ற சைஸ் மாறாட்டங்களினால் இயலாமல் போகிறது. 1 முதல் 4 வரையுள்ள கதைகள் நார்மல் சைஸில் வந்திருந்தால் இதழுக்கு ரூ.50/- குறைவான விலையில் வாசகர்களுக்கு கிடைத்திருக்கும். மேலும், நல்ல காமிக்ஸ்களை பொருத்தவரையில் விலை ஒரு பிரச்சனையே இல்லை சார்! கடந்த ஆண்டு ரூ.2350/-க்கு தாங்கள் வழங்கிய ரத்தப்படலம் தொகுப்பு தற்போது காமிக்ஸ் மார்க்கெட்டில் ரூ.6500/- வரை விலை போயுள்ளது. எனவே, ஒரு ஹீரோ சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் அவை சைஸில் மாற்றம் இல்லாமல் ஒரே சைஸில் வெளி வருவதே சேகரிப்பிற்கு நன்று!
    கமான்சேவிற்கு வருடம் ஒரு இடமாவது ஒதுக்கி எஞ்சிய கதைகளை தமிழில் படிக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.
    மறுபதிப்பு கோரிக்கைகள்:-
    1.ஜான் மாஸ்டரின் சதிவலை, மாஸ்கோவில் மாஸ்டர் இரண்டினையும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    2.இரும்புக்கை நார்மனின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    3.இரட்டை வேட்டையரின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    4.அதிரடிப்படையின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    5.அதிரடி வீரர் ஹெர்குலஸின் சாகஸம் வண்ணத்தில் வர வேண்டும்.(தமிழில் வராத 10 பக்க சாகஸமும் சேர்த்து)
    6.கேப்டன் டைகரின் இளமையில் கொல்லின் அடுத்த இரண்டு பாகங்கள் அதே சைசில் தனித்தனியாக வரவேண்டும்.
    7.ரிப்போர்ட்டர் ஜானியின் இரத்தக்காட்டேரி மர்மம் வண்ணத்தில் வரவேண்டும்.
    8.கேப்டன் பிரின்ஸின் எஞ்சிய கதைகள் வண்ணத்தில் வரவேண்டும்.
    9.கமாஞ்சேவின் ஓநாய் கணவாய் வண்ணத்தில் வரவேண்டும்.
    எனது கோரிக்கைகளில் எத்தனை சதம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரியாவிட்டாலும், எனது கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தவே இப்பதிவு! நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. வெளிப்படையான கருத்துகள் மற்றும் கோரிக்கைகள்! பாராட்டுகள் பூபதி சார்!

      Delete
    2. //ஒரு ஹீரோ சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் அவை சைஸில் மாற்றம் இல்லாமல் ஒரே சைஸில் வெளி வருவதே சேகரிப்பிற்கு நன்று!//

      +1

      Delete
    3. படிக்க படிக்க இனிமை.

      Delete
    4. துள்ளாதோ இளமை

      Delete
  36. சார்! வில்லியம் வான்ஸின் சித்திர ஜாலத்திற்காகவே ரிங்கோவின் எஞ்சிய கதைகளை வெளியிடலாம்!

    ReplyDelete
  37. மறுபதிப்பு கோரிக்கைகள்:-
    1.ஜான் மாஸ்டரின் சதிவலை, மாஸ்கோவில் மாஸ்டர் இரண்டினையும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    2.இரும்புக்கை நார்மனின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    3.இரட்டை வேட்டையரின் கதைகளை மட்டும் ஒரே இதழாக ஆக்ஷன் ஸ்பெசல் சைசில் வெளியிட வேண்டும்.
    4. அதிரடி வீரர் ஹெர்குலஸின் சாகஸம் வண்ணத்தில் வர வேண்டும்.(தமிழில் வராத 10 பக்க சாகஸமும் சேர்த்து)

    + 1

    ReplyDelete
  38. Na atha ama therapy mathunga....naalu
    steel

    ReplyDelete
  39. Naattaama theerppa mathunga... Naalu
    steel

    ReplyDelete
  40. Saar attagasam... Na bar giri vaakkum palikkattum steel

    ReplyDelete
    Replies
    1. Thank you Steel. அனைத்து ஆர்ச்சி ஸ்பைடர் ரசிகர்களின் ஆதரவு தான் என் வாக்கு பலிக்க பக்கபலமாக இருக்கும்

      Delete
  41. Saar attagasam... Na bar giri vaakkum palikkattum steel

    ReplyDelete
  42. Naattaama theerppa mathunga... Naalu
    steel

    ReplyDelete
  43. சிறு வயதில் ஒரு புத்தகத்தை குறைந்தது 50 முறைகளாவது படித்து விடுவது வழக்கம். ஆனால் இப்போது நான் படிக்காமல் இருக்கும் புத்தகங்கள் 10 - 15 வது இருக்கும். காரணம் வேலைப்பளு மற்றும் நேரமின்மை தான் . ஒரே ஆறுதல் வேலைக்கு காலையும் மாலையும் ட்ரெயினில் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் துணைக்கு வருவது பெரும்பாலும் டெக்ஸ் வில்லர். அந்த வகையில் இன்று வல்லவர்கள் வீழ்வதில்லை 4 வது முறையாக படித்தேன்.
    இந்த கதை முதல் முறை படிக்கும் போது பெரிதாக ஒரு தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் இன்று இந்த கதையை படித்து முடித்ததும் மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகம் மற்றும் வருத்தம். இந்த புத்தகம் மட்டும் வண்ணத்தில் மேக்ஸி சைஸில் வந்தால் எப்படி இருக்கும். நிஜமாகவே டெக்ஸ் வில்லர் கதைகளில் கார்சனின் கடந்த காலம் போல இந்த கதைக்கும் தனி இடம் உண்டு. இந்த புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிக்காதவர்கள் இருந்தால் இந்த சண்டே ஒரு முறை படியுங்கள். ஒரு வேளை எனக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று கட்டாயமில்லை. ஆனால் மறு வாசிப்புக்கு தகுதியான கதை என்பது என்னுடைய கருத்து .

    ReplyDelete
  44. தங்கதடம்:வெல்ஸ்பார்கோஎனும்பெயரைகேட்டமாத்திரத்தில்நினைவுக்குவந்துவிடும் வெஸ்ஸ்லேடு, சிஸ்கோ கிட் ஆகியோரை மறக்கச்செய்யும் வகையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பான சம்பவங்களோடு கதை அமைந்திருந்தால்ரிங்கோவும்ஜொலித்திருப்பார்.மனிதர் ரொம்பவும் நல்லவராகதான் தெரிகிறார் சார்.

    சூதுகொல்லும்: கபாலமுத்திரை Part II, packed with etc humor. ஷெரிப்பிடம் வில்லன் கும்பலை ஒப்படைத்துவிட்டு Tex கிளம்பும்போது , படாவில்லனை ஷெரிப் சமாளிப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது. அது மட்டும் தான் கதைக்கு மைனஸ்பாயிண்ட்போல தெரிகிறது.

    கதை சொல்லும் கானகம்: "திகில் லைப்ரரி" என்னும் Brand Name இந்த வகை கதைகளுக்கு மிக்க பொருத்தமாக இருக்கும். Freightning and Interesting Thriller. கதை முடிந்ததும் வேறு ஒரு தோட்டம் நினைவுக்கு வந்தது. ( Evil Dead படத்தில் வருவதை சொன்னேனுங்.)

    சுறாவேட்டை: Terror வேட்டை. வேட்டைக்காரன்தான் செமTerror. The World is not enough படத்தின் knot ஐதொட்டு சென்றாலும் இதுவரைவந்த James Bond கதை, திரைப்படம் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி மெய்மறக்கச்செய்கிறது.
    எவ்வளவோ விதமான ஜேம்ஸ்பாண்ட்களை ரசித்திருந்தாலும் இந்த ஜேம்ஸ்பாண்ட் மீது திகில் கலந்த மரியாதை ஏற்படுகிறது.
    அற்புதமானவிஷயம்என்னவெனில்இந்தகாமிக்ஸ்வெள்ளித்திரையில்படம்பார்ப்பதுபோன்றஉணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பும்போது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தினை கைகளால் அளைவது போன்ற உணர்வை அடைகிறோம். A Great Experience. Thank you sir.

    ReplyDelete
    Replies
    1. நைஸ் விமர்சனம்ஸ்!

      Delete
    2. அட்டகாசமான விமர்சனங்கள். கிரி சார் சும்மா பட்டையை kilapiteenga. நான் மிக ரசித்தது சுறா வேட்டை விமர்சனம். அடி ஒவ்வொன்றும் சும்மா நெத்தி அடி தான். அப்படியே படம் பார்ப்பது போல தான் இருக்கிறது.

      Delete
    3. சூப்பர் விமர்சனங்கள்...

      Delete
    4. பாண்ட் வேற வேற லெவல் இல்லடா கிரி

      Delete
  45. மர்மத் தீவில் ஆர்ச்சி
    கொலைப்படை
    ஐந்து விலையில் வந்த இருவண்ண கோடை மலர் மெகா சைசில் அப்படியே வந்தா தெறிக்குமே...ரெண்டு ஸ்லாட் ஓவர்...
    ஸ்டீல்

    ReplyDelete
    Replies
    1. Ama nenechen pongal spasalnu ...typaila maranthu...naalu roovathane ....adada...attagasamana ithal nanbare...Pacha calaru...aranju calaru...apdiye vantha pinni pedaledukkum...aasriyar appadiye thara thayaar...nanbargal kural tharalaye

      Delete
  46. A ஆர்ச்சியின் ஆர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு பதிவு. பொதுவாக கமெண்ட்ஸ்களை பார்த்து நல்ல விமர்ச்சனங்களை கொண்ட காமிக்ஸ்களை வாங்கி படிப்பது என் வழக்கம்.
    போடுங்க சார்..... ஆர்ச்சி, லாரன்ஸ் & டேவிட்டின் காணாமல்போன கடல் , இரும்புக்கை நார்மனின் மனித எரிமலை இதெல்லாம் கூட consider பன்னினால் நல்லா இருக்கும்..

    ReplyDelete
  47. இரும்புக்கை நார்மன் ???
    இரட்டை வேட்டையர் ???
    அதிரடி வீரர் ஹெர்குலிஸ் ????
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    பி ஏ ஆங்கிலம் இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் : அம்மா ! நான் சாயந்தரம் காலேஜ் முடிச்சிட்டு வந்தவுடனே லாக்டோஜன் 2 இருநூறு மில்லி தண்ணியில கலக்கி வை ..குடிக்கிறேன் .
    அம்மா : என்னடா இது ?
    மாணவன் : அதை நான் என்னோட ரெண்டு வயசுல நல்லா குடிச்சேன் .சத்துள்ளதுன்னு நீதான்னே சொன்னே ? இப்பவும் அந்த பவுடர் வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும்

    அந்த அம்மா தன பையன் கேட்டதை செய்வார்களா ???
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    லயோலா கல்லூரி கணித துறை தலைமை பேராசிரியர் : என்னப்பா சொல்றே ?

    முதுகலை கணிதம் இறுதியாண்டு மாணவன் : மூணாம் வாய்ப்பாடு இப்பவும் நமக்கு தேவையாத்தானே இருக்கு ..அதை இறுதியாண்டு சிலபஸில் வைத்தால் என்ன தப்பு ?
    பேராசிரியர் மாணவனின் வேண்டுகோளை ஏற்பாரா ?
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    இரு நண்பர்கள் பேசி கொள்கிறார்கள்

    நபர் 1 : அவெஞ்சர்ல இப்ப வந்த அயர்ன் மேனே போதும்னு கொன்னுபுட்டாங்க ..எப்பவோ வந்த அயர்ன்மேனை இன்னமும் ...
    நபர் 2 : ம் ..ம்.. சொல்லிமுடி
    நபர் 1 : டிசம்பர் மாச புக்குகளை இன்னமும் படிக்க முடியல ..நான் படிக்க போறேன் ...
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. சரி சரி, புக்கு படிக்கும்போது விரல் சூப்பும் பழக்கத்தை நீங்க எப்பத்தான் விடப்போறீங்களோ?!! ;)

      Delete
    2. Steel : Anju vayasula ammanu koopten...ippavum ammanu ...
      Ungalukku theriyatha Satyam neethi illai se na ...yetho pathu pannunga
      Annaikku thinna Poppins Jem's innaikkum pidikkuthe...
      S.a :aiyaiyo steel mupathu varusam munnadi naan birthday gifta thantha Horlicks biscutta enakke thanthu thinga vechiruvaro ....,zaar irumbu Manithan rendu kilo parcel...

      Delete
    3. Se na sonna neethi ...ellame Marum...sila mara virumbuvathilai...

      Delete
    4. @ஸ்டீல்: நன்னா செப்பிருக்கீங்க இனிமேல் தமிழில் செப்பினால் நன்னாயிருக்கும் கும் ம் ம் ப்

      Delete
    5. ஆனாலும் பெரியவனானதுக்கப்புறமும் இரண்டு ஸ்பூன் எடுத்து வாயில் போடுவதில்லையா?

      சம்பளத்தில் மூன்று சதவீதம் தான் அப்ரைசல் என்று மூன்றாம் வாய்பாடு யூஸ் பன்னி கணக்கு பார்த்து புலம்புவதில்லையா...

      Delete
  48. அந்த 3 க்கு டெக்ஸ். எரிந்த கடிதம் மறுபதிப்பு. ஒரு ரிப் கிர்பி.மாண்ட்ரேக்
    .மாண்ட்ரேக் நடுநிசி நாடகம் மறுபதிப்பு கரூர்ராஜ சேகரன் .

    ReplyDelete
  49. Saar archiyin intha attai padam summa thool kilapputhu

    ReplyDelete
  50. Dear Edi,

    Warm greetings to see Archie back in our comics lineup, even if it's slotted as one issue per year.

    For the rest two titles, I suggest to have a Western styled replica series of golden oldies special issues, from our past. It could be Archie or any other British spy series, from our previous editions.

    Going by the welcome you received from our readers for Archie, I am sure this will be celebrated too.

    And also long on demand, please publish same format, same cover, same adverts as it is, titled Golden Replica Reprints. This will kill black market and also make our special issues from past, more reachable for our longtime readers.

    ReplyDelete
  51. ஆர்ச்சி பாக்கட் சைஸில் வந்தால் இன்னும் சூப்பராக இருக்கும் விஜயன் சார் .. (மாடஸ்தியின் கழுகு மலைக்கோட்டை போலே)

    ReplyDelete
  52. புதிய பதிவில் 3 ஸ்லாட் யாருக்கு என்பதை ஆசிரியர் அறிவிப்பாரோ

    ReplyDelete
  53. இன்னும் பதிவை காணவில்லையே. இதற்கு மேல் முடியாது சார் good night

    ReplyDelete