Sunday, September 08, 2019

ஒரு கோ.மா.கனவு !

நண்பர்களே,

வணக்கம். செம்டம்பர் இதழ்கள் : டிக் அடிச்சாச்சு! நீங்களுமே சூட்டோடு சூடாய்ப் படித்தாச்சு ! ஆனால் நாட்காட்டியைப் பார்த்தால் இன்னுமும் இரட்டை இலக்கத் தேதியைத் தொடவே அவகாசம் உள்ளது என்று சொல்கிறது! But அக்டோபரின் இதழ்கள் பற்றிய preview-க்களுக்கு இது ரெம்பவே early ! வழக்கமாய் எழுத சமாச்சாரம் சிக்காங்காட்டி நேராக ரிவர்ஸ் கியர் போட்டு ஒரு வாடகைச் சைக்கிளை எடுத்தபடிக்கு "நான் ப்ராங்க்பர்ட் போனேனா...தன்னானே...." என்று ஆரம்பித்து விடுவது தான் வாடிக்கை ! ஆனாக்கா "பிராங்பர்ட்" என்ற வார்த்தையை உச்சரித்தால் என் காதிலேயே தக்காளிச் சட்னி கசிவதால், அந்தத் திக்கில் வண்டியை விடவும் இஷ்டமில்லை ! So thinking...!

செப்டம்பரின் success story என்று பார்த்தால் ஒரு எதிர்பாரா ஆசாமி கைதூக்கி நிற்பதைக்  கடந்த 10 நாட்களாய் பார்த்து வருவதால் அவரது பின்னணியினை inspiration ஆக எடுத்துக் கொண்டே இந்த வாரத்துப் பதிவு வண்டியை துவக்க  நினைக்கிறேன்!

ட்ரெண்ட் !! 'தல' டெக்ஸையும் ; 'ஒல்லித்  தல' லுக்கியையும் கார்ட்டூன் இரட்டையர் ஸ்கூபி & ரூபியையும் பச்சைக் குதிரை தாண்டி எதிர்பாரா முதல் ஆசாமியாய் எகிறி நிற்கும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரை கொஞ்சம் வாஞ்சையோடும், கொஞ்சம் புதிரோடும்  பார்த்திடுகிறேன்! பொதுவாகவே கௌபாய்கள் எல்லாருமே முரட்டு அதிரடிக்காரர்கள் என்பது template ! தோட்டாக்கள் பறப்பதும் ; முஷ்டிகள் சீறுவதும்,  டெக்ஸ் / டைகர் / ட்யுராங்கோ என அத்தனை வெற்றி கண்ட வன்மேற்கர்களின் அடையாளங்களுமே ! ஆனால் அதிலிருந்து விலகி நிற்கும் இந்த கனடாவின் காவல் வீரர் - பெரிய அடிதடிகளுக்கோ; ஆக்ஷன் sequence-களுக்கோ அவசியமே நஹி ; தெளிவான கதையும், அழகான சித்திரங்களும் இருந்தாலே போதுமென்பதை நிலைநாட்டியிருக்கிறார்! அதன் மூலமாய் தொடரும் அட்டவணைகளில் தனக்கான slot பற்றிய சந்தேகங்களை அறவே நீக்கி விட்டுமுள்ளார் ! So "சாலையெல்லாம் ஜுவாலைகளே" - இந்தத் தொடருக்கான சாலைகளை நம்மளவிற்காவது smoothen பணியுள்ளது! (என்ன ஒரே வருத்தம் - மொத்தமே  8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரில் ! இன்னமும் நாம் போட்டிரா கதைகள் நான்கே இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கும் எனும் போது, மிஞ்சிப் போனால் இரண்டோ / மூன்றோ ஆண்டுகளே இவரது பரிச்சயம் இருந்திட முடியும் !!)

இந்தத் தருணத்தில்  இன்னொரு சற்றே சாத்வீகமான கௌபாய்த் தொடரான கமான்சேவை எண்ணிடாமலும் இருக்க இயலவில்லை ! அங்குமே பெரும் ஆக்ஷனுக்கோ ; மாமூலான கௌபாய் சாகச template களுக்கோ முக்கியத்துவம் தந்திட கதாசிரியர் முனைந்திடுவதில்லை ! யதார்த்தமாய் ; மிகைகளின்றி சீராய் ஓடிடும் கதைகளை அங்கு பார்த்துள்ளோம் ! And அங்குமே சித்திரங்கள்  ஜாம்பவான் ஓவியரான ஹெர்மனின் கைவண்ணம் !! ஆனால் - டிரெண்ட் நம்மை கவர்ந்துள்ளதில் பாதி கூட கமான்சே கவர்ந்திடவில்லையே எனும் போது மோவாயில் கைவைத்து யோசிக்கவே தோன்றுகிறது !! இரு தொடர்களுக்கும் மத்தியினில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் எதை பார்த்திடுகிறீர்கள் ? என்று அறிந்திட ஆவல் folks !! ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே ப்ளீஸ் ?  

Anyways ட்ரெண்ட் புராணமல்ல இந்தப் பதிவின் நோக்கம் ; மாறாக ஆண்டின் மூன்றாவது quarter ஒரு surprise வெற்றியாளரோடு மெருகு கண்டு நிற்கும் வேளைதனில் - அவரை சிலாகித்து முடித்த கையோடு - இத்தகைய star power இலா நாயகர்களின் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யும் ஒரு freewheeling சிந்தனைக்கே இந்த ஞாயிறு !! இன்னும் சொல்லப் போனால் - நானே ஆசைப்பட்டாலும் நிறைவேற்றிட இயலாக் கனவாய் என்னுள் நின்றிடும் ஒரு project சார்ந்த உரத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ? 

ரொம்ப வருடங்களாகவே எனக்கொரு கோக்கு-மாக்கான ஆசையுண்டு ! அதாவது ஏதேதோ காரணங்களின் பொருட்டு நாம்  waiting list -க்கு அனுப்பிவைத்திருக்கும் நிறைய நாயக / நாயகியரை தூசி தட்டி, மெருகூட்டி அவர்களைக் கொண்டொரு பிரத்யேக ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிட வேண்டும் என்பதே அந்த கோ.மா. ஆசை !! உதாரணத்துக்கு ஜாகஜ வீரர் ரோஸர் ; டிடெக்டிவ் ஜெரோம் ; Lady S போன்றோரை எடுத்துக் கொள்வோமே ?! நமது தர எதிர்பார்ப்புகளும், அளவீடுகளும் இத்தனை strict சுடலைமுத்துக்களாய் இல்லாதிருப்பின், இவர்களெல்லாம் நிச்சயமாய் இன்னமும் நம் மத்தியில் உலவி வருவார்கள் தானே ?! Granted - ரோஜர் தொடரில் உப்மாக்கள் நிறையவே கிடக்கின்றன தான் ; அதே சமயம் "மர்மக் கத்தி " ; "தவளை மனிதனின் முத்திரை" ; "கறுப்புக் கதிரவன்" போன்ற செம offbeat சாகசங்களும் இருந்துள்ளன தானே ? So அத்தகைய சுவாரஸ்யக் கதையினைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தால் சுகப்படாது போகுமா - என்ன ?

எனது "கோ.மா.கனவு" இதழுக்கொரு பெயரும் உண்டு என்னிடம் ! "The BBB ஸ்பெஷல் !!" என்பதே அது !!! அதாவது வகுப்பின் முன்பெஞ்சில் எப்போதுமே 'படிப்ஸ்' பார்ட்டிகள் இடம் பிடிப்பது சகஜம் தானே ? So  லார்கோ ; தோர்கல் ; டெக்ஸ் ; லக்கி போன்ற 'பளிச்' மாணாக்கர்கள் அந்த முன்வரிசைகளை ஆக்ரமித்துக் குந்தியிருப்பது  நடைமுறை என்றால் - ஓரம்கட்டப்பட்டிருக்கும் 'not so பளிச்' மாணவர்களின் ஜாகையாக அந்தப் பின்பென்ச்கள் தானே இருந்திட முடியும் ? ஆக - BBB Special = Back Bench Boys  ஸ்பெஷல் !! அதாவது - 'ஓரம்கட்டப்பட்ட நாயகர்களின் ஸ்பெஷல்' என்று சொல்லலாம் !!

நிஜமாகிட வாய்ப்பில்லா இந்த ஸ்பெஷலினை நான் துவக்கிடத்  திட்டமிட்டிருப்பது - ஒரு வில்லிய வான்ஸ் சித்திரங்களுடனான சா.வீ.ரோஜரின் கதையிலிருந்து தான் !! டிடெக்டிவ் பாணிக் கதைகள் ; நார்மலான ஆக்ஷன் கதைகளெனத் தேர்வு செய்தால் அங்கே புராதனத்தின் சுவடுகளை மறைக்க இயலாது போகும் என்பதால் - offbeat கதைகளாய் ; ஒருவித திகில் ஜாடைகளோடு பயணிக்கும் த்ரில்லராய்த் தேடிட வேண்டும் என்பது இலட்சியம் !! இதன் பொருட்டு, நிறையவே கதைத் தேடல் ; உருட்டல் என்று மெனெக்கெட வேண்டியிருக்கலாம் ; but கடல்படுகையில் புதையல் தேட நினைத்தால் அதற்கென முதுகை வளைத்தே தீர வேண்டும் தானே ?

So ஜாகஜ வீரர் முதல் பந்தைச் சந்திக்கிறாரெனில், மறுமுனையில் அவரது பார்ட்னராக நான் களமிறக்க எண்ணியிருப்பது  எஞ்சியிருக்கும் ஒற்றை புது சாகசத்தினுடனான முதலைப்படையினரை !! ப்ருனோ பிரேசில் ! 'திகில்' comics வெற்றியோடு மிளிர்ந்த நாட்களில் இவரும் அதற்குப் பெருமளவில் உதவி செய்திட்ட நாயகரே !! இன்றைக்கு இத்தனை காலம் கடந்த பிற்பாடு, இவரது கதைகளை மறுக்கா வாசிக்க முனையும் போது - நிறையவே ஜெர்க் அடிக்கத் தான் செய்கிறதென்றாலும் - சர்வதேச அரங்கில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் கொடிகட்டிப் பறந்து வந்த '70-களில் உருவாக்கப்பட்ட இந்த "ஜேம்ஸ் பாண்ட் ஜெராக்ஸ்" - wouldn't do too badly for an one-shot என்றே சொல்வேன் !! Moreover - இங்கேயும் திரு வான்சின் கைவண்ணம் உண்டெனும் போது - இரு சமகால பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பங்கள், ஒரே ஜாம்பவானின் தூரிகையினில் என்ற திருப்தி கிட்டிடாதோ ? 

கதை # 3 என நான் தேர்வு செய்வதுமே ஒரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாகவே இருந்திடும் - இம்முறை டிடெக்டிவ் ஜெரோம் ரூபத்தில் ! 'ஒரே ஆல்பம் தான் வாய்ப்பு ; அதுவே அவரது தலைவிதியை நம் மத்தியில் நிர்ணயிக்கும் தீர்ப்பு' என்ற அந்த not so fair உபசரிப்பே இந்தக் கோழிமுட்டைக் கண் நாயகருக்கு நாம் வழங்கியுள்ளோம் ! 'தற்செயலாய் ஒரு தற்கொலை' டாம்-டூம் ஆக்ஷன் இல்லாததொரு டிடெக்டிவ் சாகசம் தான் ; but தேசத்தில் எல்லாத் துப்பறிவாளர்களும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு, 'உய்..உய்' எனக் கூச்சலிடும் சைரன் கார்களில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணிப்பதில்லையே - நிஜத்தினில் ? So 'தேமே' என சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பாரிஸை வலம் வந்தபடிக்கே மர்மங்களை முடிச்சவிழ்க்க முனையும் இந்த சிம்பிள் டிடெக்டிவினை இன்னொருவாட்டி பரிசீலிக்க விழையும் எனது BBB ஸ்பெஷல் ! அதுவும் இதுவொரு 26 ஆல்பம் கொண்ட not so ancient தொடர் எனும் போது, நவீன பாணியில் கலரிங்கும் இருந்திடும் ! So கண்களைக் கூசச் செய்யும் பஞ்சு மிட்டாய் வர்ணங்களை அள்ளித் தெளித்த effect இங்கே இராது ! ஆக ஆக்ஷன் ஜானருக்கு ரோஜர் ; சர்வதேச spy த்ரில்லர் பாணிக்கு ப்ருனோ பிரேசில் ; டிடெக்டிவ் பாணிக்கென ஜெரோம் என்றிருக்கும் !

எனது தேர்வு # 4 - கார்ட்டூன் கரைகளில் பக்கமாய் இருந்திடும் ! இங்கே நாம் ஓரம்கட்டியுள்ள நாயகர்கள் / தொடர்கள் ஏராளமுண்டு ! Smurfs ; பென்னி ; லியனார்டோ ; மந்திரியார் ; ரின்டின் கேன் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் அவர்களையெல்லாம் மறுக்கா தூசி தட்டுவதற்குப் பதிலாய் நான் நாட நினைப்பது திருவாளர் "ஸ்தீல்பாடி ஷெர்லாக்" அவர்களையே ! இதுவரைக்கும் குட்டிக் குட்டி சாகசங்களில் (!!) மனுஷனின் கூத்துக்களைப் பார்த்துள்ளோம் ! But இவரது தொடரில் இன்னமும் சில முழுநீள ஆல்பங்கள் காத்துள்ளன ! So ஒரு 46 பக்க நீள ஆல்பத்தில் இந்த குடாக்கு ஷெர்லாக் & டுபுக்கு வாட்சன் ஜோடியை ரசிக்க எண்ணிடும் எனது ஸ்பெஷலானது ! கார்ட்டூன் பாணியையும் டிக் அடித்தது போலாச்சு ; ஒரு offbeat நாயகரை உட்புகுத்திய திருப்தியும் கிட்டியாச்சு என்பேன் !

My கதை # 5 would be : LADY S ! 'பின்பென்ச் பசங்க' என்ற அடையாளத்தோடு வந்திடும் ஒரு இதழில் பொம்மனாட்டிக்கு என்ன ஜோலியோ ? என்ற லாஜிக் கேள்விகளை நீங்களும் சரி, நானும் சரி, அம்மணியின் விஷயத்தில் மட்டும் வசதியாய் ஓரம்கட்டிடுகிறோமாம் !! So அந்தச் சலுகையைக் கையில் எடுத்துக் கொண்ட கையோடு கதாசிரியர் வான் ஹாமின் இந்தப் படைப்பின் நடுவாக்கைத் தொட்டிடும் ஒரு ஆக்ஷன் ஆல்பத்தோடு களமிறங்கத் தயாராவேன் ! இங்கே தொடரின் ஒரிஜினல் கதைவரிசைக்கெல்லாம் பெருசாய் முக்கியத்துவம் தந்திடாது - CINEBOOK -ல் அத்தனை லேடி S ஆல்பங்களையும் வாங்கி, பர பரவெனப் படித்துவிட்டு அவற்றுள் best எதுவோ, அதையே தேர்வு செய்திட முனைந்திடுவேன் ! எப்படியும் - எந்த ஆல்பத்தைத் தேர்வு செய்தாலும் நிக்கரோடு கூரைகளில் பாப்பா நடுராத்திரியில் பயணிப்பது நிச்சயம் எனும் போது நம்மிலுள்ள 'கலாரசிகர்களுக்கும்' ஏமாற்றங்களிராது !! வான் ஹாமின் இதர அமர படைப்புகளை (XIII ; தோர்கல் ; எமனின் திசை மேற்கு etc ) மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டே லேடி S தொடரினையும் அவற்றோடு ஒப்பிடாது - கதையைக் கதைக்காக மட்டுமே ரசிக்க முனையும் இந்த ஸ்பெஷல் இதழினில் !

அரை டஜனாவது கதையோடு இந்த ஸ்பெஷலை நிறைவு செய்திட நான் தேர்வு செய்வது கமான்சே கதையினையே !! 'கௌபாய் சுவையின்றி ஒரு ஸ்பெஷல்' என்பது இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கவே இயலா சமாச்சாரம் எனும் போது - நம்மிடையே the neglected cowboy series என எஞ்சி நிற்கும் இந்த கேரட் மண்டைக் கௌபாயை களமிறக்கிடுவதில் தயக்கமே இராது என்னுள் ! Again - கதைத் தொடரின் வரிசைக்கு நோ முக்கியத்துவம் ; எஞ்சியுள்ளவற்றுள் எது பெஸ்டோ அதை பச்சக் என தூக்கியாந்திட வேண்டியது தான் ! And maybe..just maybe இந்த ஒற்றை சாகசத்தை மட்டும் கலரில் அல்லாது - black & white-ல் முயற்சித்திடுவேன்- கண்களைக் கூசச் செய்யும் அந்த வர்ணக்கலவையினைத் தவிர்த்திடும் பொருட்டு !!

ஆக அரை டஜன் கதைகளோடு அம்சமாய் அமைந்திடும் இந்த இதழினில் வில்லியம் வான்ஸ் ; கிரெக் ; வான் ஹாம் ; ஹெர்மன் போன்ற பிரான்க்கோ-பெல்ஜிய அசுரர்களின் கைவண்ணங்கள்  நெடுக விரவிக் கிடக்கும் ! And இவர்களையெல்லாம் ஒரே இதழில் ஒட்டுமொத்தமாய் சாம்பாராக்கிட படைப்பாளிகள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் - அதற்குமொரு உபாயம் இருக்கும் என்னிடம் ! ஆறு இதழ்களையும் , ஆறு individual இதழ்களாய் ; தனித்தனி அட்டைப்படங்களோடே வெளியிட்டு விட்டு, மொத்தமாய் அவற்றை உட்புகுத்திட ஒரு அழகான slipcase ரெடி செய்து தந்திடுவேன் ! So 6 கதைகளையும் அந்த box set-ல் போட்டு அசத்திட திட்டங்கள் ரெடி !! Phew !!! கனவுகளுக்கும் எத்தனை நுணுக்கம் அவசியமாகிறது இன்றைக்கெல்லாம் ?

Back to reality - வெளியிட ரிஸ்க் இலா கதைகள் ஒரு வண்டி காத்துள்ள போது, இந்தப் பின்பென்ச் காதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை மண்டை சுட்டிக்காட்டுவதால் எனது இந்தக் கோக்கு மாக்குக் கனவானது கனவாக மாத்திரமே தொடர்கிறது என்னுள் ! And அவ்விதமே தொடரவும் செய்திடும் ! என்றேனும் ஒரு பொழுது போகா நாளில் இதனை உங்களோடு பகிர்ந்திட நினைத்திருந்தேன் ; and அந்த நாள் இன்றாகிப் போனது என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

Before I sign off - இதோ காத்திருக்கும் அடுத்த மாதத்தின் மறுபதிப்பின் அட்டைப்பட முதல்பார்வை :
இப்போதெல்லாம் ஒரிஜினல் அட்டைப்படங்களையே உபயோகிக்கும் பாங்கு கிட்டத்தட்ட 95% நடைமுறையிலிருப்பதைக் கவனித்திருப்பீர்களென்று நினைக்கிறேன் ! இந்தாண்டின் இதுவ்ரைக்கிலும் " சாத்தானின் சீடர்கள்" & "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆகிய 2 ஆல்பங்களுக்கு மாத்திரமே நமது ஓவியர் மாலையப்பனின் பெயிண்டிங்கை பயன்படுத்தியுள்ளோம் ! அவருக்கும் வயதின் தாக்கம் அதிகமிருப்பதால் முன்போல் சிரத்தை தந்திட இயன்றிடுவதில்லை ! So நல்ல நாளைக்கே மாடஸ்டிக்கு டிசைன் போடுவதினில் சிரமம் காண்பதுண்டு என்ற நிலையில் - இந்த வேளையில் மேற்கொண்டும் விஷப்பரீட்சை செய்திட தோன்றவில்லை ! அதனால் இந்த மறுபதிப்பு சாகசத்துக்கு ஒரு ஒரிஜினல் டிராயிங்கையே அட்டையாக்கிட முனைந்துள்ளோம் ! அச்சிலும் ரொம்பவே decent ஆக வந்துள்ளதாக எனக்குத் தோன்றியது ! Your thoughts folks ? நமது முதல் நாயகியின் இந்த classic மறுப்பதிப்பை உங்களில் எத்தனை பேர் படித்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் ஒரு அட்டகாச ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது என்பதை மட்டும் முதல்வாட்டி படிக்கவுள்ள நண்பர்களுக்குச் சொல்லிடுவேன் ! One of the best tales from the series guys !!

நாளை நிறைவுறும் மதுரைப் புத்தக விழாவோடு இந்த சீசன் புத்தக விழா caravan வீடு திரும்புகிறது ! இந்த சீசனது ஆச்சர்ய சந்தோஷமெனில் அவை கோவை & மதுரை புத்தக விழாக்கள் என்பேன் !! இரண்டிலுமே அசகாய விற்பனை நம்பரெல்லாம் நஹி என்றாலும் - நாம் மாமூலாய்ச் சந்தித்து வந்துள்ள இலக்கங்களை இந்த 2 நகரங்களில் மட்டுமே தாண்டிட இயன்றுள்ளது ! இன்றும், நாளையும் மதுரையில் அதே trend தொடர்ந்திட்டால் சூப்பர் !! Fingers crossed !!

Bye folks...have a wonderful sunday ! See you around !!

311 comments:

 1. ஆகா கனவு மெய்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் நண்பரே

   Delete
 2. ஆகா கனவு மெய்படுகிறது

  ReplyDelete
 3. Replies
  1. ஷெரீஃப் நீங்கள் தூங்கவே மாட்டீங்களா

   Delete
  2. இப்ப தான் பத்தே கால். மகளிர் மட்டும்ல மூக்கனோட ரகளைகளை பாத்து சிரிச்சிட்டிருக்கேன். சனி இரவு லேட்டாத்தான் படுப்போம்.

   Delete
 4. கிட்டு மாமா படிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. காலையிலே பல்பு கொடுத்திட்டிங்களே மாமா இது ஞாயமா...???

   Delete
  2. விடுங்க விடுங்க.!
   பல்புன்னு இருந்தா கொடுக்குறதும் வாங்குறதும் ஜகஜம்தானே..!:-)

   Delete
 5. Replies
  1. ஐஞ்சுக்கு வச்ச அலாரத்தை கூடையைப் போட்டு மூடிவிட்டு, ஆறு மணிக்கே எழ முடிஞ்சது சார் ! அதான் லேட் !!

   Delete
  2. ///ஐஞ்சுக்கு வச்ச அலாரத்தை கூடையைப் போட்டு மூடிவிட்டு, ஆறு மணிக்கே எழ முடிஞ்சது சார் ! அதான் லேட் !!///

   ஹாஹாஹா.. இதைப்படிக்கும்போது இருவர் ஞாபகத்துக்கு வருகின்றனர்..!

   முதலாமவர் அலாரம் அடித்ததும் டைம்பீஸை தண்ணீர் பாத்திரத்துக்குள் போட்டு மூழ்கடித்த Mr.Bean.!
   இரண்டாமவர் தினமும் காலையில் அலாரம் டைம்பீஸை ஜன்னல் வழியே வெளியே தூக்கியெறிந்துவிட்டு ரிப்பேர் செய்ய ஆல்இன்ஆல் ஸ்மர்ஃப்பிடம் தினமும் ஒப்படைக்கும் சோம்பேறி ஸ்மர்ஃப்.! :-)

   Delete
 6. பழிவாங்கும் புயல் - அட்டைப்படம் சிம்பிள் அன்ட் அட்ராக்ட்டிவ் சார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆமாம். நான் சொல்ல நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்

   Delete
  2. பொதுவாய் எனக்கும், டிசைனிங் மேற்பார்வைக்கும் ஒரு ராசியுண்டு சார் ! அவர்கள் பணி செய்யும் போது நான் உடனிருந்தால், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கெல்லாம் வராது - godzilla ரேஞ்சுக்கு டைனோஸாரே ஆஜராவது தான் வழக்கம் ! 'சிகப்ப கூட்டு ; பச்சைய கம்மி பண்ணு ; இதைப் பெருசாக்கு ; அதை பொடுசாக்கு !' என்று நான் செய்யும் அழிச்சாட்டியங்களின் இறுதியில் மாடஸ்டி- மனோரமா ஆச்சியைப் போல ; டெக்ஸ் வில்லர் டணால் தங்கவேலுவைப் போல வருவதே வாடிக்கை !! ஆனால் வாழ்க்கையில் முதல்முறையாக - முழுக்கவே அடியேனின் அகுடியாவில் ; அடியேனின் மேற்பார்வையில் ஒரு ராப்பர் ஓ.கே.ரகத்தில் தேறியுள்ளது !!

   Delete
 7. கோக்கு மாக்கில் காரிகன் ரிப் இவர்களை கொண்டுவரலாமா? யோசியுங்கள். Please

  ReplyDelete
  Replies
  1. அட..கனவு தானே சார் - டின்டினையும், ஆஸ்டெரிக்ஸையும் கூடக் கொணரலாமே ?!

   Delete
  2. ஆஸ்டெரிக் வரலாம்

   Delete
  3. காரிகன் and rip girbi kku +1

   Delete
  4. கூடவே நம்ம ஜெஸ்லாங்கையும் சேத்துக்கங்க சார்....

   Delete
  5. அப்படியே என் favorite detective Charli

   Delete
  6. அட..கனவுப் பட்டியலிலே சேர்த்துக்கிறதுன்னு ஆச்சுன்னா - வேதாளரையும் ?

   Delete
 8. மாடஸ்டியின் கதை இதனுடன் வருமா சார்?

  ReplyDelete
  Replies
  1. வராத பட்சத்தில் டிஜிட்டலில் ரெடியாக இருப்பதும் தெரிகிறதே சார் ?

   Delete
  2. இது போன்ற முயற்சிகளை தொடர்வதில் என்ன பொருள் உள்ளதோ - புரியலை !! முன்மாதிரியாய் இருக்க வேண்டியவர் அல்லவா நீங்கள் !

   Delete
 9. Hai friends 👦👦👦👦👦🏃🏃🏃🏃🏃🏃🏃

  ReplyDelete
 10. ரோஜர் / ப்ரூனோ பிரேசில் டபுள் ஓகே. லேடி எஸ் / கமான்சே ஹூகும். மற்றவை பரவாயில்லை. இது எனது வாசிப்பின்படி.

  ReplyDelete
 11. அப்படியே அந்த BBB special அடுத்த வருடம் வெளியிட்டு விட்டால் பிளீஸ். Surprise ஆக ஈரோட்டில்

  ReplyDelete
  Replies
  1. 6 புத்தகங்கள் ஒன்று 80 ரூபாய் எனில் மொத்தம் 480 ரூபாய். கூரியர் கட்டணம் சேர்த்து 500 ரூபாய்க்கு முன்பதிவு தொடங்குவோம் சார். பிளீஸ்

   Delete
  2. இப்பவே வயித்த கலக்குதே உங்க வேகம்...

   Delete
  3. பழனி சார். கல்லை விட்டு எறிவோம் வந்தால் மாங்காய் போனால் கல்.

   Delete
  4. கல் யார் மண்டையையாவது பெயர்க்கப் போகிறது சார் !

   Delete
  5. எங்களுக்கு உங்களவிட்டா யார தெரியும் நாங்க எங்க போவோம்....சார்...

   Delete
  6. ஆமா சார். உங்களை விட்டால் யார் இருக்கா

   Delete
 12. ///ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே ///

  இரண்டுமே பிடித்தமானவை எனினும் என்னைப்பொறுத்தவரை வேறுபடுத்திடும் விசயம் ஒற்றை வரியல்ல, ஒற்றை வார்த்தை.. "சித்திரங்கள்".

  ReplyDelete
  Replies
  1. சிகப்புச் சட்டைக்காரர் கம்பீர அழகு ! கேரட் மண்டைக்காரர் கிறுக்கலில் அழகு !

   Delete
 13. பி.பி.பி ஸ்பெஷல்க்கு எவ்ளோ பணம் கட்ட வேண்டும் என்று அப்படியே சொல்லிட்டீங்கன்னா டிரான்ஸ்பர் பண்ணிடலாம். (கனவு மெய்ப்பட வேண்டும் ) .நான் சொல்லல.தோர்கல் |சொல்றாருங்கோ.

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா இன்றே அனுப்பி விடுகிறேன்

   Delete
  2. Bank of ஒரோபோரா ; வல்ஹல்லா கிளை ; வைகிங் தேசம் !!

   இங்கே NEFT அனுப்பிடுங்கோ சார் !!

   Delete
 14. பழி வாங்கும் புயலுக்கு காத்து இருக்கிறேன். சிறு வயதில் படித்தது. சுத்தமாக நினைவு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் இன்னும் படிக்கவே இல்லை.அதனால கொலைஆர்வத்தோட வெயிட் பண்றேன்.

   Delete
 15. September இதழ்களின் ratings
  1. Lucky - 10/10
  2. Blue coats-10/10
  3. Trent - 10/10
  4. Tex - 7/10
  ஆக மொத்தம் எல்லாமே ஹிட்ஸ் தான்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வருடம் இது வரை 9 மாதங்கள் கடந்து வந்து இருக்கிறோம். என்னை பொறுத்த வரை இது மிகவும் நிறைவான வருடம். மிகச்சில கதைகளே சுமார். மற்ற எல்லா கதையும் சிறப்பு. Best year after our come back. அதுவும் ரெகுலர் சந்தா உடன் ஜம்போ வும் இணைய போதாதற்கு ஈரோடு surprise இதழ்கள் 4 ஹாப்பa அட்டகாசமான வருடம். அசத்தி விட்டீர்கள் ஆசிரியரே. Two thumbs up for your efforts.

   Delete
  2. இன்னாது. எங்க தலக்கு வெறும் 7 மார்க்கா. ஏலே சம்முவம் ரத்தினபுரிக்கு கட்றா வண்டியை.

   Delete
  3. போதும் போதும் 7 மார்க்கே ரொம்ப அதிகம்.

   Delete
  4. டெக்ஸ் கதை வித்தியாசமா வேணும் வேணும்னு டைகர் ரசிகர்கள் கொடி பிடிக்கிறீங்க.
   வித்தியாசமான கதை கொடுத்தா 7மார்க் போடுறீங்க!

   மார்க் கம்மியா போட்டு கடைசி இடம் தந்து சந்தோச பட்டுக்க இது ஒரு டெக்னிக்கா??? நடக்கட்டும்!

   ரைட்டுநாமளும் டைகர் கதைக்கு விமர்சனம் எழுதிட வேண்டியது தான்!

   Delete
  5. டெக்ஸ் விஜயராகவன் ஹிஹிஹி

   Delete
  6. // 4. Tex - 7/10 //
   என்ன கொடுமை சார் இது???

   // 1. Lucky - 10/10 //
   என்ன கொடுமை சார் இது???

   Delete
  7. //இன்னாது. எங்க தலக்கு வெறும் 7 மார்க்கா ?//

   அதானே ?

   Delete
  8. குமார் @ அகில உலக டெக்ஸ் ரசிகர் மன்ற தலைவர் வருகிறார் பராக் பராக் பராக். :-)

   Delete
  9. யோவ் ரம்மி! வாய்யா சீக்கிரம்!பெங்களூர்கார்ர் உமக்கு கட்டியம்லாம் சொல்லி வரவேற்கிறார்...!!! எவ்ளோ நேரம் காத்திருப்பது😉😉😉😉

   Delete
  10. குமார் @ அப்படி டெக்ஸ் மன்ற ரசிகர்கள் வந்தார்கள் என்றால்,சாரி 10/7 என்று டைப் செய்வதற்கு பதில் 7/10 என தவறி எழுதி விட்டேன் என சொல்லி விடுங்கள்:-)

   Delete
  11. அவ்வளவு தான். சரியாக சொன்னீர்கள். டைபிங் error. Manichooo

   Delete
  12. ///4. Tex - 7/10 //
   என்ன கொடுமை சார் இது???///

   ஆமாம் என்ன கொடுமையிது. 0000.07 மார்க்கே அதிகம். எதுக்கு 7 மார்க் போட்டிங்க.

   Delete
 16. BBP????🤥 தினகரன் நத்தம்

  ReplyDelete
 17. அடுத்த மாதம் நான் மிகவும் எதிர் பார்க்கும் புத்தகம் "வஞ்சம் மறப்பதில்லை" கிராஃபிக் நாவல்கள் வரும் மாதங்கள் எப்போதுமே அந்த எதிர்பார்ப்பு எகிறி நிற்கும். இந்த கிராஃபிக் நாவலோ ஒரு ஆக்சன் தெறிக்கும் நாவல் மிக ஆர்வமாக இருக்கிறேன். I'm waiting

  ReplyDelete
  Replies
  1. இது வேற லெவல் ஆக்ஷன் சார் ; தற்சமயம் அதனுள் தான் மொழிபெயர்ப்புப் பயணம் ஓடிங்ஸ் !

   Delete
  2. ஆஹா ஆஹா மாத இறுதியை எதிர் நோக்கி

   Delete
  3. அடுத்த வாரம் ஒரு முன்னோட்டம் கொடுங்கள் சார்.

   Delete
 18. கடைசில கனவுனு சொல்லிட்டிங்களே சார்...? ஆனாலும் ஒரு வாய்ப்பிருக்கு வான்ஸை பெருமைப்படுத்தும் விதமா அவரது நினைவா அவரது ஆக்கங்களில் இருந்து சிறந்த கதைகள் 4-5 சேர்த்து ஒரு வான்ஸ்ஸ்பெசல் போடலாம் சார்....

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா. வான்ஸ் tribute நமது வாசகர்களுக்காக

   Delete
  2. மாடஸ்டிக்கு நல்வரவு..ii
   டியர் சார், எனக்கும் ஒரு கனவு உண்டு.
   CID ராபின், ஜுலியா, மாடஸ்டி, டயபாலிக் கதைகளை ரூ 10க்கு வெளியிட்ட சைஸிலாவது (நியூஸ் பிரிண்ட் பேப்பர் தரத்திலாவது) வருடம் இரண்டு இதழ்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று.
   ப்ளீஸ் சார்,
   என்ன தான் ட்ரண்ட்-டை ஓவியத்திற்காக புகழ்ந்தாலும், (ரொம்ப கொழந்த புள்ள கதை சார். i?) ஒரு குற்றம் அது தொடர்பான கதை ஓட்டம் என்பதற்கு இவர்களுக்கு இணையாக வேறு யாருமே இல்லையே சார். டைலன் டாக் கூட எடுபடவில்லையே.
   எனவே., எனது கனவு மெய்ப்பட வேண்டும்.சார் ..ii ??

   Delete
  3. சந்திராயன் கனவே கானல் நீரெனும் போது நீங்களும் நானும் காணும் கனவெல்லாம் ஒரு மேட்டராகுமா சார் ?

   Delete
 19. ரிங்கோ.ப்ரூஸ்ஹாக்கர்.ரோஜர்.ப்ரூனோ.ரொமாரியோ.என நிறைய வான்ஸ்ஸின் கைவண்ணத்தில் உள்ளது மனமிருந்தால் மார்க்கபந்து.....😊

  ReplyDelete
  Replies
  1. சித்திரங்கள் மட்டுமே ஒரு தேர்வின் மூலதனமாகிடாதெனும் போது மார்க்கமிருந்தாலும் மனமிராது !

   Delete
  2. மறுக்கமுடியாத உண்மைதான் சார்..!

   Delete
 20. அந்த யங் டவுசர் கலெக்சனுக்கு பேரு இப்பவே கிடைச்சிடுச்சி. BBB ஸ்பெசலு. ஹி..ஹி...இதை பத்தி தகவல் ஒன்னும் காணோங்களே எடிட்டர் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஊஹூம்..! அது அவுட்ஸ்டேன்டிங் (வகுப்புக்கு வெளியவே நின்னுக்கிட்டு இருக்குற) ஷ்பெசலு..!

   Delete
  2. உங்க ரெண்டு பேருக்கும் பொறாமை. எங்க தளபதியை கண்டு

   Delete
  3. //இதை பத்தி தகவல் ஒன்னும் காணோங்களே//

   அதுக்கு இன்னும் 11 மாச அவகாசம் இருக்கே சார் ?

   Delete
 21. ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼

  மற்றும் நண்பர்களே 🙏🏼
  .

  ReplyDelete
 22. BBB SPECIAL வரவேற்க்கிறேன் .. நல்ல செலக்சன்

  ReplyDelete
  Replies
  1. ரசனையான கனவு என்று வைத்துக் கொள்ளுங்கள் சார் !

   Delete
 23. பழிவாங்கும் புயல் அட்டைப்படம் அட்டகாசமாக உள்ளது. இந்த கதையை சிறுவயதில் படித்து இருக்கிறேன் என நினைக்கிறேன்; மீண்டும் படிக்க ஆர்வமாக உள்ளேன். வாழ்க என்து ஞாபகமறதி.

  ReplyDelete
 24. BBB lady-s வண்டியை எடுத்து கொண்டு ஊர்பக்கம் போயிடுரேன் :-) கனவுல கூட நிம்மதியாக இருக்க விட மாட்டீங்க போல :-)

  ReplyDelete
  Replies
  1. Same feeling except lady S I'm ok with all the other stories and selections.

   Delete
  2. அவுங்க வண்டிய நீங்க எடுத்திட்டு போயிட்டா அ வுங்க என்ன பண்ணுவாங்க... ஓஹோ.. அவுங்கள கூட்டிக்கிட்டா... சரீரீ ... வீட்ல சொல்லிட்டீங்களா?

   Delete
  3. இது திருச்செந்தூர் பதிவாய் இருக்கும் பட்சத்தில், அக்கட வீட்டிலே one துடைப்பம் ரெடியா இருக்கும் என்று மட்டும் யூகிக்க முடிகிறது !

   Delete
  4. அட கொடுமையே ! இப்படி கூட அர்த்தம் எடுத்துகிடலாமா! :-) கனவு இதழில் கூட படிக்க விரும்பாத கதை lady-s என்ற அர்த்தத்தில் சொன்னேன். நான் கரெக்ட்டா சொல்லிட்டேன் என நினைக்கிறேன்

   Delete
  5. சரியாக தான் பேசுகிறீர்கள்

   Delete
  6. // இது திருச்செந்தூர் பதிவாய் இருக்கும் பட்சத்தில், அக்கட வீட்டிலே one துடைப்பம் ரெடியா இருக்கும் //

   விஜயன் சார், அப்ப பெங்களூர் பதிவு என்றால்? கொஞ்சம் சொல்லிட்டு போங்க; தயாராகிக் கொள்கிறேன:-)

   Delete
  7. லேடி s.....நோஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

   Delete
 25. வான் ஹாம் என்றவகையில்ப்ரூனோவுக்கு முதல் கைதூக்கிலேடிஎஸ் மற்றும் மாடஸ்டி, கமான்சே, மேஜிக் விண்ட், லியனார்டோஆகியோரையும் வரவேற்கிறேன். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 26. Trent மிக நன்றாக உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமாக. அது ஏன் என்று சொல்ல தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கதையோடு கலந்து வரும் கனவாய்ப்போன மெல்லிய காதல்!
   அடுத்த மாசம் ட்ரெண்ட் இன்னும் நெருக்கமாவார்....!!!

   Delete
 27. மாடஸ்டி அட்டைப்படம் அருமை சார்!! இத்தனை வயதாகியும் இப்படி ஒய்யாரமாக நின்றுகொண்டு காந்தப் பார்வையால் கதிரியக்கம் நடத்துவதெல்லாம் இளவரசிக்கே சாத்தியம்!!
  பின்புலத்தில், வில்லனின் இரு கண்களுக்கு நடுவே இளவரசியை நிறுத்தி வைத்து, அந்தக் கண்கள் இளவரசியை பரிதாபமாக ஏறிடுவது போல அமைத்திருப்பது அட்டகாசம்!!! கார்வின் - வழக்கம்போல பவ்யமாக; தரையோடு தரையாக!!

  இந்தக் கதையிலாவது இளவரசிக்கு ஏழெட்டு பாய்பிரண்டுகள் இல்லாமலிருந்தால் நிஜமான ஜாகஜமாய் இருந்திடும்!

  ReplyDelete
  Replies
  1. கவலைப்படேல்...இக்கட only action !!

   Delete
  2. "எ"ந்த மாதிரி ஆக்சன் எடிட்டர் சார்???

   Delete
  3. விஜய் @ மாடஸ்டியின் பாய் பிரண்ட் லிஸ்டில் நீங்கள் இல்லை என்ற உங்களின் வருத்தம் புரிகிறது :-)

   Delete
  4. ///மாடஸ்டியின் பாய் பிரண்ட் லிஸ்டில் நீங்கள் இல்லை என்ற உங்களின் வருத்தம் புரிகிறது////

   ஆமாங்க PfB.. எனக்கு அந்த அளவு வயதாகவில்லை!!

   Delete
  5. பரணி சூப்பர் யா. இன்று அசத்துரீிங்களே

   Delete
  6. பாய் ப்ரெண்ட் வைக்கிறது ஒரு தப்பா என்ன?

   Delete
  7. மாடஸ்தியோட பாஸ் பிரெண்டா ஆகும் அளவு வயசானவரை எனக்கு தெரியும். காலைல தான் தெரிஞ்சது. சொல்லாட்டி தலை வெடிச்சே போகுமே! என்ன பண்ணுவேன் இப்போ...!!!!!

   Delete
  8. அப்ப நீங்க லாலிபாப் பேபியா .. ஓரமாக போய் உட்கார்ந்து கார்ட்டூன் பாருங்க

   Delete
 28. சார் நான் ஏற்கனவே உங்களிடம் கேட்டது தான். டின்டின் தமிழில் வெளியாக ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? அப்படி ஆனால் நம்முடைய இளைய தலைமுறையிடம் காமிக்ஸ் ஐ கொண்டு சேர்ப்பது எளிது. பிளீஸ்

  ReplyDelete
  Replies
  1. சார்..ஏற்கனவே நானிங்கு சொன்னது தான் ; இன்னும் டின் டின்னாய் காம்பிளான் குடிச்சா தான் நாம 'அந்த' டின்டின்னை எட்டிட இயலும் !

   Delete
 29. //ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே //

  கமான்சே முதல் இரண்டு பக்கங்களில் மெதுவாக செல்லும் ஆனால் அதற்கு பிறகு ஜெட் வேகம் தான்; இயல்பான மனிதர்கள் அட்டகாசமான திரைக்கதை.

  டிரெண்ட் இயல்பான மனிதர்கள் நேர்கோட்டில் பயணிக்கும் கதை மற்றும் சென்டிமென்ட், ஆங்காங்கே தென்படும் சஸ்பென்ஸ்.

  ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் டிரெண்டை விட கமான்சே எனக்கு மிகவும் பிடிக்கும் :-)(எஸ்கேப்)

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் டிரெண்டை விட கமான்சே தான் பிடிக்கும்.

   Delete
  2. அக்காங்.....வருஷமா கடை விரிச்சுக் குந்திக் கிடக்கிறச்சே சொல்லாதீங்க பழனி ; இப்போ சொல்லுங்க !!

   Delete
  3. விஜயன் சார், பலமுறை இங்கு எனக்கு பிடித்த தொடர் கமான்சே என்று உரக்க சொல்லி இருக்கேன் சார்.

   Delete
  4. // பழனி; இப்போ சொல்லுங்க // இது ஆசிரியரின் பின்னூட்டம் தானா?🤔

   Delete
  5. ஆங் profile click பண்ணி check செய்து விட்டேன். ஆசிரியர் பின்னூட்டம் தான்.

   Delete
  6. அச்சச்சோ....பரணியை...பழனி என்று வாசித்து விட்டேன் !!

   Delete
  7. எனக்கும் டிரெண்டை விட கமான்சே பிடிக்கும்.கமான்சேவை விட டிரெண்ட் பிடிக்கும். (ஏம்ப்பா.. நான் கரெக்டாத்தானே சொல்லுேதேன்.)

   Delete
  8. பத்மநாபன் @ கரெக்ட்டா தப்பா சொல்லுறீங்க:-) இப்படி எழுதினால் ஏதாவது ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள் :-)

   Delete
  9. பழனிக்கும் கமான்சே பிடிக்கும் சார் முடிந்தால் அடுத்த மறுபதிப்பு லிஸ்ட்டில் அந்த ஓநாய் கணவாய் ....

   Delete
 30. // Back to reality - வெளியிட ரிஸ்க் இலா கதைகள் ஒரு வண்டி காத்துள்ள போது, இந்தப் பின்பென்ச் காதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை மண்டை சுட்டிக்காட்டுவதால் //
  பின்னாடி பெஞ்சுக்கு வேற ஆட்களை கொண்டு வந்து உட்கார வைக்கும் யோசனை இருந்தால் அடுத்த கட்ட நகர்வை யோசிக்கலாம் சார்,இல்லையெனில் BBB ஸ்பெஷல் PP வர வைக்கும் ஸ்பெஷலாக ஆகிவிடும் அபாயம் உண்டு...

  ReplyDelete
 31. // ஒரு அட்டகாச ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது என்பதை மட்டும் முதல்வாட்டி படிக்கவுள்ள நண்பர்களுக்குச் சொல்லிடுவேன் ! //
  படித்ததா என்னன்னு நினைவில் இல்லை,கையில் கிடைத்தால் தான் தெரியும்.....

  ReplyDelete
  Replies
  1. அதுவும் மாடஸ்தி கதையும் இணைந்து வரும் பொழுது இந்த தடவையும் மாடஸ்தி கதை பிடிக்கவில்லை எனில்..   அவர்கள் டெக்ஸ் கதையை விழுந்து விழுந்து படிக்கும் ரம்மியை போன்றவர்கள்..:-)

   Delete
 32. BBB - சார்! தூங்கிப் போன டைம் நாம் சார். கருப்பு வெள்ளையில் இன்னும் 20 பக்கங்கள் கூட நான் படித்து முடிக்க முடியவில்லை சார். வண்ணத்தில் போடுங்க சார் படிக்க முடியுதான்னு பார்கலாம் சார் :-)

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஜீ...கலர்ல எழுத்து இருந்தா தான் ஸ்பெல்லிங் தெரியுதா..:-)

   Delete
  2. கலர்ல வரும் போது சித்திரங்களை மட்டுமாவது ரசிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான்.

   சார் தூங்கிப் போன டைம் பாம் சார்..... :-)

   Delete
 33. // எனது "கோ.மா.கனவு" இதழுக்கொரு பெயரும் உண்டு என்னிடம் //
  ஓடாத குதிரைக்கு ஏன் சார் வண்டியை கட்டனும்.....

  ReplyDelete
 34. // மறுமுனையில் அவரது பார்ட்னராக நான் களமிறக்க எண்ணியிருப்பது எஞ்சியிருக்கும் ஒற்றை புது சாகசத்தினுடனான முதலைப்படையினரை !! ப்ருனோ பிரேசில் ! //
  இது கொஞ்சம் சுவராஸ்யமா இருந்ததா நினைவில் இருக்கு....

  ReplyDelete
 35. // ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே ப்ளீஸ் ? //
  முதலாவது வித்தியாசம் - சித்திரங்கள், இரண்டாவது வித்தியாசம் - கதைக் களம், மூன்றாவது வித்தியாசம் - ஈர்ப்பு.
  எனினும் ஆரம்பகட்டங்களில் எனக்கும் கமான்சே பிடித்தே இருந்தது....

  ReplyDelete
  Replies
  1. கமான்சே பிடித்தே இருந்தது..

   எனக்கும்...

   Delete
 36. ஆசிரியர் சமூகத்துக்கு சில கோரிக்கைகள் :
  1. அடுத்த ஆண்டு (2020)0 அட்டவணை விரைவில் தயராகும் சூழல் உள்ள நிலையில்,முக்கிய இதழ்களுக்கு குறிப்பாக தோர்கல் ஸ்பெஷல்,கோடை மலர் ஸ்பெஷல் மற்றும் பராகுடா போன்ற பாணியில் வரும் ஸ்பெஷல் இதழ்கள் போன்றவைகளுக்கு கெட்டி அட்டை போட்டுத் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது...
  2. சந்தா அளவு (பட்ஜெட்) பிரச்சனை எனில் ஒன்றிரண்டு இதழ்களை (மறுபதிப்புகள்) குறைத்துக் கொண்டாவது ஸ்பெஷல் இதழ்களை கூடுதல் போஷாக்குடன் வெளியிடவும்....
  கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன்.....

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா இதை அப்படியே ஆமோதிக்கிறேன்

   Delete
  2. அட்டையின் பருமன் பாதிப்பது பட்ஜெட்டை மாத்திரமல்ல சார் - கூரியர் கட்டணங்களையும் தான் ! 1 கிலோவுக்கு கீழிருக்கும் பார்சல்களுக்கும், ஒரு கிலோவைத் தாண்டிடும் பார்சல்களுக்குமான கட்டணங்கள் எகிறி விடுகின்றன !

   ஏர்மெயிலில் அயல்நாடுகளுக்கு அனுப்பிடும் போது இந்தக் கொடுமை இன்னமும் ஜாஸ்தியாகிப் போகிறது !! கண்ணுக்குத் தெரிவது production costs ; தெரியாது பாதிப்பை ஏற்படுத்துவது logistics costs !

   Delete
  3. காலாண்டுக்கு ஒரு ஹார்டு கவர் இதழ் அவசியம் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் சார்.

   கனமான ஹார்டு பவுண்ட் இதழ் கையில் எடுக்கும் போதே ஜிவ்வுனு இருக்கு!

   பி.பி.வி. மாதிரியான அதிரடி இதழ் அவசியம் சேர்த்துடுங்க சார்.

   டியூராங்கோ(கோடை மலர்), 1அதிரடி, 1தீபாவளிமலர், 1தோர்கல் அல்லது பொருத்தமான இதழ், ஈரோடு ஸ்பெசல் இத்தோடு சேரும் போது கூடுதல் ரகளையாக இருக்கும்!

   குறிப்பு:- ஒரு டெக்ஸ் குண்டு கூட போடலாம்...
   சர்வமும் நானே!...போட்டு ரொம்ப நாள் ஆச்சுதுங் சார்...ஹி...ஹி...!

   Delete
  4. சரிங்க சார்...நீங்க அட்டையை எப்படி வேணாலும் போடுங்க...ஆனா இதழை குண்டாக போடுங்க...:-)

   Delete
  5. Correct தலைவரே. எங்களுக்கு புக் குண்டா இருக்கணும் அவ்வளவு தான்

   Delete
  6. முதன்முதலாய் அந்த மேக்னம் குண்டுஸ்பெசல கைல வாங்கும் போது இருந்த சுகம் இருக்கே....ஆஹா...எது எப்படியோ குண்டா சைஸா போடுங்க....

   Delete
  7. லாஜிஸ்டிக்ஸ்லயும் ஒரு லாஜிக் இருக்கும் போல.

   Delete
  8. // ஏர்மெயிலில் அயல்நாடுகளுக்கு அனுப்பிடும் போது இந்தக் கொடுமை இன்னமும் ஜாஸ்தியாகிப் போகிறது. //
   உங்கள் கஷ்டம் புரிகிறது சார்,இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைத்தால் நலம்.....

   Delete
 37. கனவாக இருந்தாலும் முதலைப்பட்டாளத்தை காண ஆசை

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டார் சத்யா வாருங்கள்

   Delete
  2. வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் குமார்

   Delete
  3. தீயா வேல செய்யணும் குமாரு.

   Delete
 38. கமான்சே தேடி பார்த்தால் அழகு..

  ட்ரெண்ட் பார்த்தாலே அழகு..

  ReplyDelete
  Replies
  1. அட. கவிதை. பின்னுரிங்க தாரை பரணி.

   Delete
  2. ஓ...இதான் கவிதையா..இதை கா.பா .சார் பாக்காம இருக்கனும்..:-)

   Delete
  3. தலைவரே செம்ம டைமிங். 😂🤣

   Delete
  4. கா.பா இந்த மாதிரி கவிதைகளை ரொம்பவே ரசிப்பாராம் :-)

   தாரை பரணி உங்கள் கடுதாசியை விட உங்கள் கவிதையைதான் ஆசிரியர் ரொம்ப ரசிக்கிறாராம் :-)

   Delete
 39. வேதாளக் கதைகள் இனி எப்பொழுதும் நமது லயன் முத்து காமிக்ஸில் வர வாய்ப்பே இல்லையா எடிட்டர் சார் ப்ளீஸ் பதில்

  ReplyDelete
 40. கமான்சே படித்தாலே அழகு!

  ட்ரெண்ட் பார்த்தாலே அழகு!!

  ReplyDelete
 41. ட்ரெண்ட் கதை ஏற்கனவே வந்த கதைகள் இன்னும் வாங்கவில்லை. ஆனால் இந்த மாதம் வந்த கதை நன்றாக இருக்கிறது.

  அப்புறம் உங்க கனவு பேக் பெஞ்ச் நாயகர்களில் இருந்து ஜெரோம் மற்றும் ஸ்டீல்பாடி ஷெர்லாக் மட்டும் எடுத்து ஒரு சான்ஸ் கொடுக்கலாம். சமீபத்தில் ஆங்கிலத்தில் சில ஜெரோம் கதைகள் படித்தேன். ஆக்ஷன் அவ்வளவு இல்லையென்றாலும் கதையின் வேகம் நமக்கு அந்த குறையை தெரிய விடுவதில்லை. டயபாலீக், மார்டினுக்கு ஒரு நாள் வந்தது போல் ஜெரோமுக்கு வராமலா போயிடும்.

  அடுத்து ஸ்டீல்பாடி ஷெர்லாக் .. ஃபில்லர் ஆக வந்தபோது நல்ல காமெடியாக இருந்தது. முழுநீள கதையாக காமெடி வசனங்களை தொய்வில்லாமல் கொண்டு போக முடியுமென்றால் அதை கொண்டு வருவது குறித்து நீங்களே முடிவு செய்யலாம். இதுபோல எதிர்காலத்தில் ஏதாவது கதையை உள்ளே கொண்டு வர நினைத்தால் அதற்கு ஏதாவது ஃபில்லர் கதைகள் இருந்தால் இப்போது வரும் கதைகளில் பின்னால் வெளியிட்டு இப்போதே நம்மாட்களுக்கு பழக்க படுத்தி விடுங்களேன்.

  அப்புறம் இந்த தீபாவளி மலர் குறித்து ஒரு சின்ன வேண்டுகோள். மற்ற இதழ்கள் போல வெளியான பிறகு ஆன்லைன் லிஸ்டிங் கொடுக்காமல், கொஞ்சம் முன்னவே கொடுத்திர்கள் என்றால் சந்தாதாரர்கள் தவிர மற்ரவர்களும் கொஞ்சம் குஜாலாக தீபாவளியை கொண்டாடி கொள்வோம்.. நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. // ஜெரோம் மற்றும் ஸ்டீல்பாடி ஷெர்லாக் மட்டும் எடுத்து ஒரு சான்ஸ் கொடுக்கலாம் // கண்டிப்பாக முயற்சிக்கலாம் சார். ஜெரோம் மிக slow என்றால் ஸ்டீல் பாடி ஷெர்லாக் முயற்சிக்கலாமே. எனக்கு மிக பிடித்தது.

   Delete
 42. ஆமா சார் தீபாவளி மலர் சிறப்பாக வேண்டும்....நன்றி...

  ReplyDelete
 43. கமான்சே -அழகிய வேகன்கள் இணைக்கப்பட்ட சரக்கு ரயில்

  ட்ரெண்ட் - அழகிய பெட்டிகள் இணைக்கப்பட்ட சாதா பாசஞ்சர் ரயில்..


  இரண்டிலும் வேகத்தை எதிர்பார்க்க முடியாதுதான் ...

  ReplyDelete
 44. ஒரு கோ .மா கனவு ..(கோக்கு மாக்கு )


  வாசிப்பவர்களில் பெரும்பாலானவரை கோமாவில் ஆழ்த்திவிட வாய்ப்புள்ள கனவு அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது ..

  எல்லா கனவுகளும் மெய்ப்படவேண்டிய அவசியமில்லைதான் ..:-)

  ReplyDelete
  Replies
  1. இதே கோ.மா.கனவானது - "கோ.மா.கோ." கனவாக இருந்தாலாவது மக்களில் சிலர் குதூகலப்பட்டிருக்கக்கூடும் !!

   Delete
  2. "கோ.மா.கோ." - கோக்கு மாக்கு கோவிந்தா? 🤔

   Delete
  3. கோல மாவு கோகிலா..நயன் ;-)

   Delete
 45. இளவரசியின் அட்டைப்படம் 'அட்ரா சக்கை' வகை..

  ReplyDelete
 46. Despite in pocket-size, pazhivangum puyal first print was excellently clearly printed(newsprint but not dim ).But our black and white reprints ....Better paper yet somewhat lacking sharpness.Hope this reprint will be good. I m going to compare with the original( Vera vela)

  ReplyDelete
 47. சார் பிஸ்டலுக்கு பிரியாவிடை மாதிரி ஒன்ஷாட் கவ்பாய் கதைகளை வெளியிடுங்கள் டேக்ஸ் கதைகள் ஒரே மாதிரி தான் இருக்கு சார்

  ReplyDelete
 48. பழி வாங்கும் புயல் பற்றி தெரியாதவர்களுக்காக இது மாடஸ்டியின் சிங்கத்தின் சிறுவயதில் இளவரசி எங்கிருந்து வந்தாள் எப்படி தற்காப்பு கலைகள் பயின்றாள் சட்டவிரோதமான காரியங்களில் எப்படி பங்கேற்றாள் எப்படி நியாத்தின் பக்கமாக வந்தாள் கார்வின் அறிமுகம் எப்படி இதுபோல பல எப்படிகளுக்கு விடைகளாக வருகிறது நண்பர்களே தவறவிட வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. நல்ல முன்னோட்டம்

   Delete
  2. இந்த கதை படித்து இருக்கிறேன். ஆனால் புத்தகம் என்னிடம் இல்லை. சூப்பர். எனக்கு மிகவும் பிடித்த கதையை மீண்டும் படிக்க போகிறேன்.

   Delete
  3. இந்த கதை இரட்டை வேட்டையர்களின் சாகசமான மர்ம எதிரியில் இரண்டாவதாக இடம் பெற்ற கதை பரணி ஜி

   Delete
 49. பழி வாங்கும் புயல் கழுகு மலைக்கோட்டை போல கலரில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. பூவோ. புய்ப்பமோ .எல்லாமே ஒன்று தானே சத்யா ?

   Delete
 50. டிரென்ட் ககதை அழகிய Canadian wilderness ல் நடைபெறுகிறது.
  Comanche கதை வறண்ட அமெரிக்க பாலைவனம், அல்லது கிராமத்தில் அல்லது கணவாயில் நடைபெறுகிறது.
  ட்ரெண்ட் கதை நேர்கோட்டில் நகர்கிறது.
  Comanche கதையும் அப்படித்தான்...ஆனால் hero Red தூசிக்கு முன்கதை உள்ளது என நம்புகிறேன்.
  Trent ற்குaction limited ஆக உள்ளது.
  Comanche unlimited சிலசமயங்களில் எல்லா wild west நாயகர்கள் போல action ல் இறங்குகிறார்.
  இந்த அம்சம் Trent ஐ red dust இடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
  ஆனாலும் Comanche series அந்தரத்தில் தொங்குவது நெருடலாக உள்ளது.
  என்னைப்பொருத்தவரை Comanche தொடரலாம்.....
  அதேநேரத்தில் Trent ம் தொடரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. //டிரென்ட் ககதை அழகிய Canadian wilderness ல் நடைபெறுகிறது.
   Comanche கதை வறண்ட அமெரிக்க பாலைவனம், அல்லது கிராமத்தில் அல்லது கணவாயில் நடைபெறுகிறது//

   True....சித்திரங்களில் பெரியதொரு மாற்றத்தை இது கொணர்கிறது !

   Delete
 51. சார் பிட்டர் பாலன்டையனின் யானை கல்லறை இரத்த பூமி மறுபதிப்பு எப்போது வண்ணத்தில் பார்க ஆசை சார்

  ReplyDelete
 52. சார் 2020 கேட் லாக் எப்போது

  ReplyDelete
 53. சார் 1450 பக்க கவ்பாய் கதை இருக்கு இன்னிங்க அது எப்போது

  ReplyDelete
  Replies
  1. கைவசம் நி றை ய ய ய ய நேரமிருக்கும் போது யோசிக்கலாம் சார் !

   Delete
 54. கனவு கனவாகவே இருந்திடட்டும் சார்.

  ReplyDelete
  Replies
  1. யெஸ்.....சில கனவுகள் கனவுகளாய்த் தொடர்வதே ரம்யம் சார் !

   Delete
 55. /// CINEBOOK -ல் அத்தனை லேடி S ஆல்பங்களையும் வாங்கி, பர பரவெனப் படித்துவிட்டு அவற்றுள் best எதுவோ, அதையே தேர்வு செய்திட முனைந்திடுவேன் ! ///

  சார்! எப்படியோ, ஓரங்கட்டப்பட்ட நாயகர் என்ற அடைமொழியோடாவது Lady S'ன் கதை வெளிவருகிறதே என்று எனக்கு சந்தோஷம்தான். மேலும், லேடியின் அனைத்து சினிபுக் வெளியீடுகளையும் நீங்கள் வாங்கி படிக்க முடிவெடுத்திருப்பது இன்னும் சந்தோஷம்தான். லேடியின் அனைத்து கதைகளையும் படித்ததும், அதை எப்படியாவது வெளியிட முயற்சி செய்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், best எதுவோ, அதையே தேர்வு செய்திடுவேன் என நீங்கள் முடிவு செய்துள்ளது தான் சிக்கலாக தெரிகிறது. நீங்கள் வெளியிட்டதை அடுத்து லேடி S'ன் தொடரில் மூன்று கதைகளை Play books'சில் படித்தேன். லேடியின் கதைகளில் 4 -5 என தொடர்ச்சியாக வெடியிடுவதே நன்றாக இருக்கும். அப்படி இல்லாமல், நடுவில் ஏதாவது ஒரு கதையை வெளியிட்டால், படிப்பவர்களுக்கு ஒன்றுமே புரியாது.

  ReplyDelete
  Replies
  1. கனவில் புக் வாங்கி, கனவிலேயே படித்துப் பரிசீலனையும் செய்யும் போது, புரிதலில் சிக்கல்கள் எழாது தானே ஜெகத் ?

   Delete
 56. ரெட்டஸ்ட் கதையைஒருஹீரோயிசத்தை எதிர்பார்த்தே அனுகுகிறோம். ஆனால் ட்ரெண்ட் இன்னும் ஒருக்ராபிக் நாவல் லெவலிலேயே உள்ளார். எனவேஆக்ஷன்இல்லாமல் கதை சென்றாலும் ஓக்கே ஆகிவிட்டது. இதே கேரக்டரில் டெக்ஸ் அல்லதுடைகர் இருந்தால் என்ன மாதிரியான எதிர்வினை தளத்தில் உருவாகியிருந்திருக்கும். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. //இதே கேரக்டரில் டெக்ஸ் அல்லதுடைகர் இருந்தால் என்ன மாதிரியான எதிர்வினை தளத்தில் உருவாகியிருந்திருக்கும் ?//

   செம ஜாலியாய் பொழுது போயிருக்கும் சார் !

   Delete
 57. இளவரசியின் கதையை எங்கோஒ ரு முறை நண்பர்! J. S. K.! முழுமையாக எழுதியிருந்தார். பழிவாங்கும் புயல். மறுபதிப்பிற்க்கு மிகச்சிறந்ததேர்வு. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete