நண்பர்களே,
வணக்கம். வாரயிறுதியை விட்டால் உங்களுக்கு அவகாசம் கிடைப்பது குதிரைக் கொம்பென்பதை சமீப மாதங்களில் புரிந்து கொள்ள முடிந்ததன் பலன் : இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்கள் இன்றே கூரியரில் கிளம்பிவிட்டன - சனி காலையில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்ட வேண்டுமென்ற அவாவோடு !! கைக்கு கிடைத்தவுடன் அவற்றை வேக வேகமாய்ப் படிக்கப் போவது சிலரே !! மீதப் பேரோ - அட்டைப்படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்து ; தடவிக் கொடுத்து, மசியின் வாசனையை 'ம்ம்ம்ம்ம்ம்' என்று நுகர்ந்து ரசித்து ; பக்கங்களைப் புரட்டி ; விளம்பரங்களைப் பராக்குப் பார்த்த கையோடு ; சித்திரங்களை "ப்ப்பாஆ' என்று சிலாகித்தபடியே - தலைமாட்டில் புக்குகளை வைத்துவிட்டு "இன்னிக்கு நைட் வேற வேலையே நஹி ; ஏக் தம்மிலே படிக்கிறோம் !" என்ற சபதமிட்ட பிற்பாடு ஒன்பதரைக்கு பிக் பாசில் லோசியாவைப் பார்த்த கணத்தில் - அவருக்கு வோட்டு போடும் ஜனநாயகக் கடமைக்குள் புதைந்து போகவுள்ளனர் என்பது தெரிந்திருந்தாலும், வாரயிறுதிகளில் உங்களிடம் புக்குகளை ஒப்படைக்கும் ஜாலியே எங்களுக்கு தனி தான் !! So good luck with the courier tomorrow !
இம்முறை சிக்கனமாய் இரண்டே ரெகுலர் இதழ்கள் + ஒரு குட்டி color TEX இணைப்பு என்பதால் கூரியர் டப்பிகள் - தலீவரின் தேகத்தைப் போலவே ஒடிசலாய் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! இதனை ஈடு செய்யும் விதமாய் ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்கள் அடுத்த வாரயிறுதியினில் உங்களைத் தேடிக் கிளம்பும் சமயம் - செயலாளரின் புஷ்டியோடு இருந்திடுமென்பது உறுதி !! So ஒரு வாரத்தை மட்டும் வெட்டியானோடும், நம் இடியாப்பப் பார்ட்டியோடும் செலவிட்டு விட்டால் - ஆகஸ்டின் மிச்சப் பொழுதை செமத்தியாய் நகற்ற - நிறையவே சரக்கிருக்கும் ! Happy Reading folks !! (டப்பிக்குள் காத்திருப்பது அண்டர்டேக்கர் எனும் போது - இந்த வாழ்த்து கொஞ்சம் குடாக்குத்தனமாய்த் தோன்றக் கூடுமோ ?! )
கோவையில் நடந்து வரும் புத்தக விழாவினில், நமது ஸ்டாலில் புது இதழ்கள் இரண்டும் நாளை கிடைக்கும் என்பது கொசுறுச் சேதி ! அப்புறம் சனி & ஞாயிறோடு - புத்தக விழாவும் நிறைவுறுகிறது என்பதால் - இது வரையிலும் அந்தப் பக்கம் சென்றிரா கோவை மாவட்டத்து நண்பர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே ப்ளீஸ் ?
Online listing நாளை காலையில் செய்யப்படும் ! Bye for now folks !!
Bonjour !
ReplyDeleteI first
Delete2
ReplyDelete2
ReplyDelete4th
ReplyDelete😀😀😀😀😀😀😀
ReplyDeleteஇவ்வளவு விரைவில் ஆகஸ்ட் இதழ்களா?!
ReplyDeleteஅருமை,அருமை.🙏🙏🙏
அடடே நாளை கோபுதி2019 சென்றிருக்கலாமோ ஜஸ்ட் மிஸ்
ReplyDeleteஅடடே! அண்டர்டேக்கர்!! :)
ReplyDeleteசெயலாளரே
Deleteநேத்து நாஞ்சொன்ன புஷ்டி மேட்டரு blog வரைக்கும் வந்திடுச்சே...
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஅடடே...! அண்டர்டேக்கர் & டெக்ஸ்ஸின் மினி சாகசம்... 😚😚😚😚
ReplyDeleteஅடடே ஆச்சர்யப்பதிவு
ReplyDeleteஅடடா அண்டர்டேக்கர்
அட்ராசக்கை ஜூலையில் ஆகஸ்ட்டா 😊
ஹையயா... ரிப்போர்ட்டர் ஜானி..!! :))
ReplyDeleteஇம்மாத இதழ்கள் வாசிப்பின் இறுதியான பாரிஸில் பயணித்து கொண்டு இருக்கையிலேயே அடுத்த மாத இதழ்கள் வருகை ..ஆஹா! இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் கவிழ்த்த அயர்லாந்தை போல் உற்சாகம்..
ReplyDelete///இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் கவிழ்த்த அயர்லாந்தை போல் உற்சாகம்..///
Deleteஒரு வேர்ல்ட் சாம்பியன்கிற மரியாதைகூட இல்லாம 85 ரன்னுக்கே சுருட்டிட்டாங்க.!
ஆனா இங்கிலாந்து ரெண்டாவது இன்னிங்ஸ்ல அயர்லாந்தை 38 க்கே சுருட்டி 143 ரன்ஸ் வித்தியாசத்துல ஜெயிச்சிட்டாங்க..!
இதன்மூலம் நான் என்ன சொல்ல வர்ரேன்னா..
மாசாமாசம் கார்ட்டூன் வந்தாதான் உலகம் செழிப்பா மகிழ்ச்சியா கிரிக்கெட் விளையாடிக்கிட்டு, கபடி ஆடிக்கிட்டு அப்புறம் லோஸ்லியாவை பாத்துக்கிட்டு..பரவசமா.. அதாவது.. அப்புறம்.. வந்து.. இப்போ...
கார்ட்டூன் வேணும்.. அவ்ளோதான்..!!
ஹா..ஹா..ஹா..கார்ட்டூனுக்கும் லோஸ்லியாதான் ப்ராண்ட் அம்பாஸடரா?
Deleteலோல்ஸியாவா யாரந்த பரமார்த்த குரு சிஷ்யை....
Deleteவந்துட்டேங்க
ReplyDeleteபோய்ட்டு தபால் போடுங்க....
Deleteநன்றி.
ReplyDeleteHi..
ReplyDeleteமுன்னாடியே்தெரிஞ்சிருந்தா ஆத்தா கூட டீல் போட்டிருக்கலாம். குரியர் ஆபிஸ் எங்கிருக்குன்னு கூடத் தெரியாதே. இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள வரலைன்னா கொடிசியாக்கு வண்டி கட்டிட வேண்டியதுதான். ஏலே சம்முவம்...என்னாது... நான் தான் சம்முவமா...நான் தான வண்டி கட்டிக்கனுமா? அது சரி.
ReplyDeleteநம்ப ஸ்டீல் வீட்டுக்கிட்டத்தான் கொரியர் ஆபீஸ். அவரு கிட்ட கேளுங்கள்.
Deleteசம்முவமாவது முருகனாவது
Deleteஇங்க நாமத டிரைவர் வேல பாக்கணும்
சகதர்மிணிகள் மகாராணியாட்டம் வருவாங்க...(மேக்கப்போடு)
பர்ஸ் காலி பண்ற உத்தேசமும் அம்மிணிகளுக்கு நம்பர்1 அஜெண்டாவா ஆப்பரேஷன் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கா சீக்ரேட்டா இருக்கும்.
நம்மளோட அப்புராணி ரெண்டு காமிக்ஸ் புக்குக்கு ஈடா அம்பாயிரம் செலவு.கடோசியா நாமதா பேயரஞ்ச மாதிரி வீட்டுக்கு திரும்பி சோகத்தோடு வண்டியோட்டீட்டு வரணும்.அப்பக்கூட நம்மள விடாம கேப்பாங்க பாருங்க ஒரு கேள்வி ,"ஏங்க சாப்டுட்டு போயிருவமா "
சகதர்மிணிகள்???
Deleteஅதானே! நோட் தட் பாயிண்ட் யுவர் ஆனர்.
Deleteஅதானே! நோட் தட் பாயிண்ட் யுவர் ஆனர்.
DeleteJ ji@ பேருக்கு ஏற்ற மாதிரியே 2தர்மிணிகளா? நடக்கட்டும்!
Deleteஉங்க மூஞ்சி 2பக்கமும் வீங்கியிருக்கும் போதே லைட்டா ஒரு டவுட்டு! ஹி...ஹி...!
Deleteஏன்னா கடம உணச்சி. நா அடி வாங்குறது அவ்வளவு சந்தோசமாக்கும்...
Deleteஒருத்திட்ட வாங்கி கட்டிக்கிறதே ஏழு ஜென்மம் தாங்கும்.இதுல ரெண்டாவதா ஒண்ணா....
ஒரு வேளை அவங்கவங்க சொந்த அனுபவத்தை இங்க கொட்றாங்கேளோ.... குற்றமுள்ள நெஞ்சூஸ் குறுகுறுக்குது போலருக்கு....
எம்ஜியார் கமெண்ட் எல்லாமே ரெண்ரெண்டா வருதே. அதுவே கன்பர்ம்டு....
Deleteநம்ப டெக்ஸ் விஜயராகவன் ரெண்டு கடை வச்சிருக்காப்டில்ல...
Deleteநம்ப ஜெகன்ஜீ எப்பயும் ரெண்டு செட் புக் வாங்குவார்ல.
DeleteHa! Ha!
DeleteHa! Ha!
DeleteHa! Ha!
Delete'தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.
Deleteஅந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை
வேண்டுமே.'
வாலி அவர்களின் வரிகள்.
'தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.
Deleteஅந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை
வேண்டுமே.'
வாலி அவர்களின் வரிகள்.
சகதர்மிணிகள் என்பது பன்மையில் உள்ளதை குறிப்பிட்டேன். இரண்டுதான் என கூறவில்லை............😁
Deleteஇரண்டு என்பது எங்க பக்கம்லாம் பன்மை....
Deleteஜெகன் ஜி
சூப்பர் சார். ஜூலையிலேயே ஆகஸ்ட் இதழ்கள். அசுர வேகம்.
ReplyDeleteஹை அய் ஹை....
ReplyDeleteஎன்னா வேகம் இன்னா வேகம். ஆகஸ்ட் இதழ்களை படிக்க அடுத்த வாரம் வரை காத்திருக்க வைக்காமல் 5 நாட்கள் முன்னதாகவே! அதேபோல் இரண்டு கொரியர் 10 நாட்களுக்குள் (நண்பர்கள் சிலரின் கனவு மெய்ப்படுகிறது) நமது காமிக்ஸ் இதழ்களுக்காக. அருமையான திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்திய நமது காமிக்ஸ் அலுவலக நண்பர்களுக்கு நன்றி.
ReplyDeleteஆமாம் ஆமாம் என் கனவு மெய்ப் பட்டு விட்டது.
Deleteமதிப்புமிக்க ஆசிரியருக்கு வணக்கம் 🙏. அப்பப்பா என்ன வேகம் மின்னல் உங்களிடம் தோற்றது போங்கள்.என்ன ஒரு கடமை உணர்வு.கோடானு கோடி நன்றிகள்.புத்தக விழாவுக்கு முன்னாடி லைட் ரீடிங்.புத்தக விழாவிற்கு பிறகு ஹேவி ரீடிங் என்கிற உங்களது பணி மிகமிகச் சிறப்பு.நன்றி ஐயா.
ReplyDeleteஅற்புதம். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. இன்று மட்டும் புத்தகங்கள் கையில் கிடைத்து விட்டால்? என் சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இவ்வளவு சீக்கிரம் இது வரை புத்தகங்கள் வந்தது இல்லை. திருவிழா ஆரம்பம். எதிர்பாரா பதிவு
ReplyDelete// ஒரு குட்டி color TEX இணைப்பு என்பதால் //
ReplyDeleteஅய்யகோ,குட்டி டெக்ஸ் டிரெய்லர் இல்லையா....
இந்த குட்டி டெக்ஸ் டிரெயிலர் for அடுத்த வார மெயின் டெக்ஸ் பிச்சருக்கு :-)
Deleteதல வந்தாலே நமக்கு தீபாவளிதான்
ReplyDeleteயெஸ்ஸூ!
Deleteஅண்டர்டேக்கர் ஐயாவ அண்டர்வரோட ஓடவிட நம்ம மினி டெக்ஸ் போதும்னுதானே. உங்கள் சேஃபான ஐடியா புரிந்துவிட்டது. 😋😀😀😀 எப்படியோ அண்டர்வராவது தப்பிக்கட்டும். 😂😂😂
ReplyDeleteகத வரட்டும் . பாப்போம்.ஆனா அண்டர்டேக்கர் இதுக்கெல்லாம் அசர்ற ஆள் இல்லங்குறது மொத புக்லயே தெர்ஞ்சதுதான....
Deleteஒரே ஒரு தலீவரிடமிருந்து...
ReplyDeleteவழக்கமாக மாத இதழ்கள் வரும்போது, இரண்டு நாட்கள் கழித்தே அழைத்க்கும் ST Courier ல் இருந்து ஒரு வாரம் முன்னதாகவே அழைப்பு வந்தபோது வியப்படைந்தேன்.
ஆகஸ்டு இதழ்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டுள்ளன என்ற செய்தி கேட்டு பெருமகிழ்ச்சியடைந்தேன்.
எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.!
இன்னும் பத்து நாட்களுக்கு இணைய இணைப்பு கிடைக்காது என்பதால் கதைகளுக்கான விமர்சனங்களையும் இதேபோல் நண்பர்கள் மூலமாக எழுதிவருவேன்..!
இப்படிக்கு..
பதுங்குக் குழியை ஆழப்படுத்திக்கொண்டிருக்கும்..
உங்கள்..
ஒரேயொரு
நிஜாரில்லா தலீவர்..!
அதனால என்னங்க. அதான் அண்டர்வேர் கூரியரில் வருதே. போட்டுக்குகுங்க. சாரி டைப் ஸ்லிப்பாயிட்டு. அது அண்டர் டேக்கர் இல்லே.
Deleteஅதனால என்னங்க. அதான் அண்டர்வேர் கூரியரில் வருதே. போட்டுக்குகுங்க. சாரி டைப் ஸ்லிப்பாயிட்டு. அது அண்டர் டேக்கர் இல்லே.
Deleteஅனேகமாக டெக்ஸ் சஸ்பென்ஸ் இதழ் மெபிஸ்டோ கதைக்களமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteகார்டூன் சஸ்பென்ஸ் ஸ்மர்ப் + சுட்டி பயல் பென்னியாக இருக்கலாம்.
வை ராஜா வை ஒன்று வைத்தால் ஒன்று... அதாங்க ரவுண்டு பண்ணு:-)
இல்லையே. மினிமம் பட்ஜெட் என்று சொன்னாரே. அநேகமாக போன அட்டவணையில் விட்டுப் போன பழிவாங்கும் புயல் ஆக இருக்கலாம்.
ReplyDeleteஇல்லையே. மினிமம் பட்ஜெட் என்று சொன்னாரே. அநேகமாக போன அட்டவணையில் விட்டுப் போன பழிவாங்கும் புயல் ஆக இருக்கலாம்.
ReplyDeleteஅடுத்த வாரம் இந்த நேரம் ஈரோடு நினைத்தாலே இனிக்கும்
ReplyDeleteபாகுபலி.....
Deleteவாவ்... ஜூலையில் ஆகஸ்ட் புத்தக பார்சல் வழக்கம்போல் ஆபிஸ்க்கே-வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டது. பார்சலில் மூன்று புத்தகங்கள். தி அண்டர்டேக்கர் & தலைமுறை எதிரி அட்டைப் படங்கள் செமையா இருக்கு. தகிக்கும் நியூ மெக்ஸிகோ மினி டெக்ஸ் இந்த முறை ரொம்பவே மினி கதை போல. செப்டம்பர் மாதமும் பெரிய கொண்டாட்டங்கள் காத்திருக்கிறது என்பதை அடுத்த மாத வெளியீடுகள் விளம்பரங்கள் ஆவலை தூண்டுகின்றன.
ReplyDeleteஇந்த மாதம் மொத்தம் ஏழு புத்தகங்கள் படிக்க வேண்டுமே நேரம் கிடைக்குமா என்றிருந்தேன் ஜூலையில் ஆகஸ்ட் மிகப் பெரிய மகிழ்ச்சி சார்..
ReplyDeleteபுக் பார்சலும் வந்து சேர்ந்தாச்சு..
ஆமால்ல...
Deleteஏழு புக்க படிக்கெணுமே....நெம்ப கஷ்டமாச்சே....
Undertaker புத்தகத்தில் ஒரு சிறிய தவறு நிகழ்ந்துள்ளது சார்...
ReplyDeleteஅடுத்தமாதம் வரவுள்ள ப்ளுகோட் கதையின் விலை 48 பக்கங்கள் 280 ரூபாய் என்றுள்ளது.
முன்பக்கத்தில் சாலையெல்லாம் ஜ்வாலைகளே 48 பக்கம் -80 ₹ என்பதால்
Deleteஇதுவும் 80₹ -ஆகத்தான் இருக்கும்..
அந்த விளம்பரத்தில் அந்த நேரத்தில் கம்போஸிட்டர் அம்பயர் குமார தர்மசேனா ரசிகராக மாறிவிட்டார் போலும்!!!
மினி டெக்ஸ்::
ReplyDeleteமிகமிக சுலபமான பழிவாங்கும் நேர்கோட்டு கதை
சித்திரங்கள் மட்டும் அருமையாக உள்ளது
ஜ...
அடுத்த இலவச கலர் டெக்ஸ் 48 பக்கத்தில் வரபோவுதா ??
சூப்பர் சார். 💗💗💗
பொட்டி வந்துடுச்சு.
ReplyDeleteதகிக்கும் நியூ மெக்சிகோ –வின் கதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது
ReplyDeleteஅவ்ளோதான் !!!! :-)
மினி டெக்ஸ்-ன் அவ்வளவாக சோபிக்காத கதைகளில் இதுவும் ஒன்று !!
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
எர்னெஸ்ட் ஹெம்மிங்வே எழுதியதாக சொல்லப்படும் கதை இது
FOR SALES ,BABY SHOES ,NEVER WORN…
கவ்டிமாலா கதாசிரியர் அகஸ்டோ மன்ட்டரோஸ்ஸ எழுதிய சிறுகதை
WHEN I WOKE UP , THE DINOUSAR WAS STILL THERE.
இவ்விரு சிறுகதைகளும் ஏற்படுத்தும் தாக்கத்தை போலவே மினி டெக்ஸ் கதைகளும் வெகுவாக தாக்கம் ஏற்படுத்த கூடியவைதான் ..சிலசமயம் மெலிதான ஏமாற்றம் அளிக்கின்றன ...ஏற்கனவே வெளியான கதைகள் அதிகப்படியான பெஞ்ச் மார்க்கை உருவாக்கிவிட்டபடியால் இருக்கலாம்
DINOUSAR>>>>>DINOSAUR..
Deleteஉட்ருக்குற கேப் ....சரியா படலியே....
Deleteவோட்காவோ இல்லாக் காட்டி என்னமோ சோடா சொன்னீங்களே..
அதப் போட்டுட்டு தான் படிக்கெணுமோ...
பொட்டி கிடைத்து விட்டது. நன்றி.
ReplyDeleteமினி டெக்ஸ் படித்து விட்டேன். ரொம்பவே மினி... சாரி குட்டி மினி. மிகக்குறைந்த வசனம் மற்றும் சித்திரத்தை வைத்து கதை சொன்ன முதல் டெக்ஸ் கதை இதுவாகத்தான் இருக்கும். அதில் டெக்ஸ் பேசும் வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ReplyDeleteசாரி டெக்ஸ். மினி டெக்ஸ் இந்த முறையும் ஏமாற்றம்.
தகிக்கும் நியூ மெக்சிகோ - என்ன சார் இது.???
ReplyDeleteஏதாவது ஒரு டெக்ஸ் கதையின் உட்பக்க டீஸரா?
:-)
DeleteSurprise, Surprise. Aug issues received today. Thanks EDI.
ReplyDeleteProbably, this is the earliest we have released a months book in advance, almost by a week.
தகிக்கும் டெக்ஸ் ரசிகர்கள் மனது....
ReplyDeleteஅடுத்த மாசத்துக்கு இது முன்னோடியாக்கும்...
Deleteஅட போங்கப்பா.....
படிச்சிட்டு குப்பறதான் படுத்துக்கணும்...
This comment has been removed by the author.
Deleteஇன்னைனைக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல.
Deleteஇன்னைனைக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க போல.
Deleteவியப்பிலும் வியப்பாக இன்றே இதழ்களை கைப்பற்றியாகி விட்டது,S.T Courier க்கு என்னாச்சோ?!😯
ReplyDeleteஇன்று தலைமுறை எதிரியுடன்...
.
நன்றிப் பாடல்:
ReplyDeleteஆயி மகமாயி மணி மந்திர சேகரியே..
எங்கள் ஆயி உமையானவளே..
ஆத்தா என் மாரிமுத்தே..
வின் போய்ட்டா...
ReplyDeleteரோஸும் போயிட்டா....
வெட்டியா போயிட்டான்..வெட்டியான்.
ஆனா க்விண்ட் இருக்கான்..
ஜெரோனிமஸ் க்விண்ட்.....
மினி டெக்ஸ்.
ReplyDeleteலைட் ரீடிங் நல்லதுதான்.ஆனா இவ்வளவு லைட்டா நான் பார்க்கவில்லை.
தகிக்கும் நியூ மெக்ஸிகோ - ஹலோ ஃபிரண்ட்ஸ் இது ஒன்னும் டெக்ஸ் மினி சாகசம் இல்லை. மினி டீஸர். டீஸரே இப்படி பட்டைய கிளப்பினால் மெயின் சாகசம் எப்படி இருக்கும் யோசிங்க.
ReplyDeleteஸ்ஸ்ப்பா... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. :))
மாய எதிரியே பரவாயில்லையா???
DeleteBooks recvd ... Thanks...
ReplyDelete70th
ReplyDeleteபுத்தகங்கள் இன்றே கிடைத்தன. இரண்டு புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். மினி டெக்ஸ் மற்றும் அண்டர்டேக்கர். இரண்டுமே ஏமாற்றமே.
ReplyDeleteUndertaker முதல் பாகத்தில் கொடுத்த எதிர்பார்ப்பு இந்த முறை பூர்த்தி ஆக வில்லை. ஆனால் அந்த வில்லன் மிகச் சிறந்த வில்லன்.
Deleteகண்ணு படப் போகுதய்யா சின்ன(விஜய்) கவுண்டரே ii
ReplyDeleteஉமக்கு சுத்திப் போட வேண்டுமய்யா சின்ன கவுண்டரேii
(நீங்கள் சொல்லும் எல்லா கட்டளைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் உங்கள் அலுவலக நண்பர்ககளுக்கு கண்டிப்பாக சுத்திப் போடுங்கள் ii)
+1
Deleteதகிக்கும் நியூ மெக்ஸிகோ,
ReplyDeleteசின்ன கதைதான்,அதுக்காக இம்புட்டு சின்னக் கதையா,ஹி..ஹி...
படித்தவுடன் கிழித்து விடவும்னு காமெடியா சொல்ற மாதிரி,படித்தவுடன் முடித்து விடவும்னு சொல்றதுக்கு பொருத்தமான கதை.
ஏதோ ஒரு கதையின் டீஸரை கொஞ்சம் பெரிசா போனெல்லியில் தெரியாமல் விட்டுட்டாங்களோ?!
இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது....
இதை மினி டெக்ஸ்னு சொன்னா லயன் கூட நம்பாது...
வழக்கமா கதையில் கெஸ்ட் ரோல் இருக்கும்,இங்கே கதையே கெஸ்ட் ரோலா இருக்கு.....
இருக்கு ஆனா இல்லை,இல்லை ஆனா இருக்கு.....
UNDERTAKER is amazing sir ! It nullified the dissapointment created by Neerillai ..Nilamillai .. and that other Graphic Novel !! IRULIN RAAJIYATHTHIL is an awesome graphic novel having the right mix of everything a story would contain. More details after your next blog.
ReplyDeleteதலைமுறை எதிரி.... செம. Good one from ஜானி நீண்ட இடைவெளிக்கு பிறகு. சூப்பர்
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! - WELCOME All !!
ReplyDelete100th
ReplyDelete101
ReplyDeleteஈரோடு சலோ..மெம்பர்கள் அனைவருக்கும் என் மகிழ்ச்சி மிக்ஸ் செய்த வாழ்த்துக்கள்.. அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.. பேசிப் பழகிப் பாருங்கள்..ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதத்தில் ஸ்பெஷல்... என்சாய் நட்பூக்களே.
ReplyDeleteகண்ணு படப் போகுதய்யா சின்ன(விஜய்) கவுண்டரே ii
ReplyDeleteஉமக்கு சுத்திப் போட வேண்டுமய்யா சின்ன கவுண்டரேii
(நீங்கள் சொல்லும் எல்லா கட்டளைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் உங்கள் அலுவலக நண்பர்ககளுக்கு கண்டிப்பாக சுத்திப் போடுங்கள் ii)
For comics magazine and novel like rani comics lion ambulimama balmitra or other any you want contact me whatsapp 7870475981
ReplyDelete