Powered By Blogger

Sunday, July 07, 2019

லண்டன் டயரி -2

நண்பர்களே,

வணக்கம். நல்ல நாளைக்கு நான் தூங்கினாலே ஒன்றரைக்கண் மட்டுமே மூடியிருக்க, கிட்டே இருப்போர்க்கு நான் முழித்திருக்கிறேனா ? தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறேனா ? என்ற சந்தேகம் எழுவது சகஜம் ! In fact நண்பர்களாய் எங்கேனும் ஊர்களுக்குப் போகும் போது நான் முழித்துக் கிடக்கிறேன் என்ற நினைப்பில் என்னுடன் பேசுவதாக நினைத்தபடிக்கே யாராவது எதையாவது பேசிக் கொண்டிருப்பதும், ரொம்ப நேரமாய் 'ஊம்' கொட்டக் காணோமே என்ற சந்தேகத்தில் கிட்டக்க வந்து பார்த்து நான் தூங்கி மாமாங்கம் ஆனதை உணர்ந்து கடுப்பான அனுபவங்கள் எக்கச்சக்கம் ! இந்த அழகில் பின்னிரவு மூன்று மணிக்கு பிசாசாட்டம் எழுந்து உட்கார்ந்தபடிக்கே இந்தப் பதிவை டைப்பும் போது - கால்வாசிக் கண்ணே திறந்து கிடப்பதால் - இம்மாத லக்கி லூக் சாகசத்தில் தலைகாட்டிடும் 'கிறுக்கு ஓநாய் - முறுக்கு ஓநாய்' பாணியில்  சில பல எழுத்துப் பிழைகள் தலைக்காட்டிடக்கூடும் ; மன்னிச்சூ ப்ளீஸ் !!

இந்தியா ஸ்ரீ லங்காவைத் துவைத்துத் தொங்கப் போடுவதைப் பார்த்த கையோடு மருவாதையாய் 11 மணிக்கே படுக்கைக்குப் போயெல்லாம் விட்டாச்சு ! ஆனால் நள்ளிரவைத் தாண்டிய வேளையில் - 'அட..தென் ஆப்ரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆடும் இன்னொரு மேட்ச் என்னாச்சோ ?' என்ற curiosity-ல் போனை லேசாய் நோண்டத் துவங்கினால், அங்கே ரவுசு கிளப்பும் ஆட்டம் தீயாய் ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது ! அப்புறமென்ன - அந்த மேட்சின் தலைவிதியோடு, நம்மவர்களின் தலைவிதியும் பின்னிக் கிடப்பதால், கோட்டான் போல இரண்டரை வரைக்கும் தூக்கத்துக்கு டாட்டா காட்டியது தான் பலனாகியது ! 'அட்ரா சக்கை..அட்றா சக்கை...அரையிறுதியில் நியூஸிலாந்தோடு மல்லுக்கட்டினால் போதும் !!" என்பது  புலனாகிய போது, அகலத் திறந்த ஆந்தை விழிகளுக்கு தூக்கம் திரும்பக் காணோம்  என்பதால் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு ஐக்கியமாகி விட்டேன் !!

இந்த ஒன்றரை மாதங்களாய் நம்மவர்களின் "இங்கிலாந்துக் காதல்" தொடர்ந்திடும் சூப்பர் சந்தோஷத்தை உணர்ந்த கையோடு   - அரையிறுதியில் சற்றே இலகுவான நியூசி எதிராளிகளைச் சாய்த்து விட்டால் 'சலோ லண்டன்...அப்பாலிக்கா ஒரே வெற்றியே கோப்பைக்கும் நமக்குமிடையே !!" என்ற புரிதலும் கைகோர்க்க - அந்தக் காலத்து சினிமா flashback பாணியில் எனது நினைப்புகள் சகலமும் இங்கிலாந்து மண்ணை நோக்கிப் புறப்பட்டன !! So ஒரு அர்த்தஜாமத்து லண்டன் டயரி 2 இந்த ஞாயிறும் உங்களைப் பதம் பார்க்கக் காத்துள்ளது ! உஷார் people !!

1985 -ல் நமது வண்டி முழுக்க முழுக்க Fleetway குழுமத்தின் அந்த அசாத்தியப் படைப்புகளோடு ஓடிக்கொண்டிருக்க - மாயாவிகளும், லாரன்ஸ்-டேவிட்களும் ; ஸ்பைடர்களும் ; ஆர்ச்சிகளும் நம்மை உந்தி இழுத்துச் சென்று கொண்டிருந்தனர் ! அப்போதெல்லாம் இன்னொரு காமிக்ஸ் பிறப்பிடம் பற்றிய நினைப்பே பெருசாய் எழுந்ததில்லை ! அந்நாட்களில் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்ததெல்லாமே - Fleetway எனும் கரைகளிலா சமுத்திரத்தில் இயன்ற முத்துக்களை ஒன்று பாக்கியின்றிச் சேகரித்து விட வேண்டுமென்ற அவா தான் ! அதிலும் அந்நாட்களில் ராணி காமிக்ஸ் செம வேகமாய்க் களத்தில் நின்று கொண்டிருந்தனர் & அவர்களும் நாம் வாங்கிடும் அதே டில்லி ஏஜெண்டிடமே கதைகளைக் கொள்முதல் செய்து வந்தனர் என்பதால் - தப்பித் தவறி கூட நல்ல  தொடர் அவர்கள் பக்கமாய்ப் போய் விடக்கூடாதே என்ற ஆதங்கம் தலைமுழுக்க !! ஏற்கனவே James Bond தொடரை நமக்கு முன்பாக அமுக்கி விட்டார்களே என்ற கடுப்ஸ் விடிய விடிய படுத்தி எடுக்கும் நிலையில் Fleetway ன் ஸ்டார் நாயகர்களை கோட்டை விட்டுடக்கூடாது என்ற தீவிரமே என்னை 1985 ன் பெரும் பகுதிக்கு ஆட்டிப் படைத்து வந்தது !! எனக்கிருந்த ஒரே ராட்சச plus point - Fleetway நிறுவனத்தின் படைப்புகளை ஒரு கேட்டலாக்கில் அடைந்திட எண்ணினால் 1000 பக்கங்கள் கூடப் போறாது என்பதே ! So இதர பதிப்பகங்களைப் போல அவர்கள் ஒருநாளும் பெரிதாய் தமது படைப்புகளை விளம்பரப்படுத்தி கேட்டலாக் ஒன்றை உருவாக்கியதில்லை ! ராணி காமிக்சிலோ Fleetway இதழ்களின் அம்பாரக் குவியல் பற்றிய ஞானம் கொண்டோர் யாரும் லேது என்பதால் - டில்லி ஏஜெண்ட் கைவசம் வைத்திருக்கும் சரக்குகளைத் தாண்டி வேறெதுவினுள்ளும் புகுந்திட அவர்கட்கு சாத்தியப்பட்டதில்லை ! நானோ வீட்டில் இறைந்து கிடந்த British காமிக்ஸ் வாரயிதழ்களுள் புகுந்து வாரா வாரம் எதையாவது தோண்டுவதையே பிழைப்பாகக் கொண்டிருந்தவன் ! "1963-லே Valiant வாரஇதழிலே ஏப்ரல் 12 -ம் தேதி ஆரம்பிக்கிற இஸ்பய்டர் தொடருக்கு ஆர்டர் போடுங்கோ ; 1967-லே டைகர் வாரயிதழிலே வெளியான "குண்டன் பில்லி" க்கு ஆர்டர் போடுங்கோ !" என்று டில்லிக்கு மாசத்துக்கு நான்குவாட்டியாவது ஓலை அனுப்புவது எனது வாடிக்கை ! அவர்களும் எனது ஆர்டரை அப்படியே அட்சரசுத்தமாய் லண்டனுக்கு அனுப்புவார்கள் ; அங்கிருக்கும் அவர்களது records library-ல் மேற்படித் தேடலைச் செய்து, வரிசையாய்க் கதைப் பக்கங்களை தோண்டியெடுத்து - உயர்தர கனத்த ஆர்ட்பேப்பரில் பிரிண்ட் போட்டு டில்லிக்கு அனுப்பிடுவார்கள் ! அங்கிருந்து நம்மை வந்து சேரும் ! So 1984 முதலே இந்தக் குரங்கு வேலையைத் துவக்கியிருந்ததால் - Fleetway-ல் உள்ளோர்க்கு நம்மிடம் நேரடிப் பரிச்சயமில்லாவிடினும் "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்ற நிறுவனம் குடல் உருவும் குத்தகையை ரெகுலராய் எடுத்து வருவோர் என்ற மட்டுக்கு நன்றாகவே பரிச்சயம் ! சீனியர் எடிட்டர் காலத்திலிருந்தே டில்லியிலிருந்த ஏஜெண்ட்களும் நமக்கு நல்ல பழக்கம் என்பதால் நான் அடிக்கச் செய்யும் அத்தனை லூட்டிகளுக்கும் மறுப்புச் சொல்லாது உடன்படுவர் ! இது தான் நிலவரம் என்றிருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் தலை முழுக்க புசு புசுவென கேசம் கொண்டிருந்த ஒரு மீசைக்கார இளம் தொழிலதிபர் பிராங்கபர்ட் புத்தக விழாவுக்குப் பயணமாகிடத் தீர்மானம் ஆன பொழுது - பட்டியலின் உச்சத்திலிருந்து Fleetway நிறுவனத்தினரோடு புத்தக விழாவிலேயே சந்திப்பு நடத்துவது & தொடரும் நாட்களில் லண்டனுக்கே நேரில் போய் இத்தனை காலமாய்த் தொலைவிலிருந்து உருவி வந்த குடல்களின் பரிமாணங்களை நேரடியாய் ஆராய்வது தான் !!

Frankfurt-ம் வந்தது ; அழகானதொரு டபுள் ஸ்டாலில் Fleetway-ன் பிரதிநிதிகளை வெட வெடப்போடு சந்திக்கவும் செயதேன் ! தயங்கித் தயங்கி நமது விசிட்டிங் கார்டை நீட்டியவனை நிமிர்ந்து பார்த்த மனுஷனின் முகத்தில் மறு கணமே ஒரு விசாலமான புன்னகை விரிந்தது !! "ஆஹ்ஹா.....எங்களது காமிக்ஸ்களை பற்றி, எங்களை விடவும் ஜாஸ்தி ஆராய்ச்சி செய்து வரும் நிறுவனத்திலிருந்து வருகிறீர்களாக்கும் ?" என்றபடிக்கே கையை இறுகப் பற்றிக் குலுக்கியவர் தான் Fleetway-ன் காமிக்ஸ் உரிமைகள் விற்பனைப் பிரிவின் பிரதிநிதி Mr.Bas Sprately என்பதை தொடர்ந்த நிமிடங்களில் தெரிந்து கொண்டேன் ! அவருக்கு கிட்டத்தட்ட 45 வயதிருக்கும்  என்ற யூகம் எனக்கு ; கனத்த பிரிட்டிஷ் உச்சரிப்பில் மட மடவென்று பேசிக்கொண்டே போக - எனக்கோ அதுவரையிலும் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு நூறு வினவல்கள் போனயிடம் தெரியலை ! 'பேபே பேபேபே' என்று எதையோ பேசி வைத்துக் கொண்டிருந்தேன் ! "புத்தகவிழா முடிந்த பிற்பாடு எப்படியும் லண்டன் வருவதாக உள்ளாய் தானே?  - அங்கே விரிவாய்ப் பேசிக் கொள்ளலாம் !" என்று அவர் நாசூக்காய்ச் சொன்னபோது நானும் தலையாட்டி விட்டு, விடை பெற்றேன் ! தொடர்ந்த புத்தக விழா நாட்களின் போது அவர்களது ஸ்டாலைத் தாண்டி போகும் தருணங்களில் எல்லாம் ஒரு ஸ்நேஹப் புன்னகையை வீசிடுவார் என்பக்கமாய் ! ஒரு மாதிரியாய் புத்தக விழாவும் நிறைவு காண - லண்டனில் அவர்களை சந்திக்கும் தேதியையும், நேரத்தையும் மட்டும் கேட்டு வாங்கி கொண்டு நானும் மூட்டையைக் கட்டினேன் ! ஆறு நாட்கள் இடைவெளிக்குப் பின்பாய் இலண்டனில் அவர்களை சந்திப்பது திட்டம் !

இடைப்பட்ட அந்த நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள், அப்புறமாய் பெல்ஜியத்தில் பதிப்பகங்களோடு சந்திப்பு ;அதைத் தொடர்ந்து லண்டனுக்குள் புகும் முயற்சியில் சிக்கி சில்லுமூக்கு சிதறியதெல்லாம் அரங்கேறியது ! ஒரு மாதிரியாய் முதல் பொழுதை இங்கிலாந்தின் மண்ணில் முழுசாய் ஒப்பேற்றி முடித்த போதே எனக்குள் ஓடிக்கொண்டிருந்த பிரதான சிந்தனை - சல்லிசாய்த் தங்கக்கூடிய இடமொன்றைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமென்பதே !! இப்போது யோசித்தாலும் மிரட்சியாகத் தானுள்ளது - ஆனால் இங்கிலாந்தில் மட்டும் 11 நாட்கள் தங்குவதென சீனியர் எடிட்டர் எனக்குப் பயணத்திட்டத்தைப் போட்டிருந்தார் ! கோட்டும், சூடும் போட்ட ஆடு போல புறப்பட்ட எனக்கும் - "அத்தினி நாட்கள் அங்கே என்ன செய்றதோ ?" என்று கேட்கவும் தோன்றவில்லை ! நான் பாட்டுக்கு ஏதேனும் ஹோட்டலில் அத்தனை நாட்களைக் குப்பை கொட்டத் தீர்மானித்தால் கைவசமிருந்த டப்பு நிச்சயம் பணாலாகிப் போகுமென்பது புரிந்தது ! அந்நேரம் பயணம் புறப்படுவதற்கு முந்தைய தினம் டில்லியில் என்னை சீனியர் எடிட்டர் இட்டுச் சென்றிருந்த சர்வதேச Youth Hostel பற்றிய ஞாபகம் வந்தது ! பெயரளவிற்கே Youth ஹாஸ்டல் ; ஆனால் யூத்தைத் தொலைத்து யுகங்களான பெருசுகளுமே அங்கே சர்வ சாதாரணமாய் தங்கிக் கொள்கின்றனர் என்பதை பின்னாட்களில் தான் புரிந்து கொண்டேன் ! எது எப்படியோ - ஏதோவொரு சிறு கட்டணம் கட்டி என்னை அதனில் ஒரு உறுப்பினராக்கியிருந்தார் சீ.எ. அந்த ஹாஸ்டலின் கிளைகள்  ஐரோப்பாவில் எங்கெல்லாம் உள்ளன  என்ற விபரங்கள் அடங்கிய சின்ன டைரெக்டரியும் பெற்றுத் தந்திருந்தார் ! அதை நான் கையோடு கொண்டு வந்திருக்க - அதனைப் புரட்டிய போது லண்டனில் மட்டுமே 5 வெவ்வேறு இடங்களில் அவர்களுக்கு கிளைகள் இருப்பது தெரிய வந்தது ! இலக்கொன்றில், 5 தினங்கள் மட்டுமே தங்கிடலாம் என்றும் போட்டிருந்தது ! (அநேகமாய் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்த ஒரே பேமானி அடியேனாகத் தானிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ; ஆனால் அந்நாட்களில் ரூல்ஸ் ராமானுஜம் ஆச்சே !!) மறு நாள் காலையில் அந்த 5 இடங்களுள் ஊருக்குள் மையமாய் இருக்கக் கூடிய ஹாஸ்டல் எதுவென்று விசாரித்துக் கொண்டேன் !! இன்டர்நெட்டோ ; பையில் செல்(ல)போனோ இலா நாட்களில் புதுசாயோரு ஊரில் குப்பை கொட்டிட முயற்சிப்பது எத்தனை கஷ்டம் என்பது இந்த smart phone தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் நஹி ! Trust me guys - நாக்குத் தொங்கிப் போகும் வழி கேட்டு விசாரித்தே !!! அதிலும் எவனாச்சும் ஆத்துக்காரியிடம் துடைப்ப மசாஜ் வாங்கி வந்து கடையில் பிரெஷாக அமர்ந்திருக்கும் நேரமாய்ப் பார்த்து "அண்ணாச்சி...இந்த டோர் நம்பரும், தெருவும் காங்கலியே ?...சித்தே பார்த்துச் சொல்றியளா ? " என்று கேட்டு நாம் போய் நின்றோமென்றால் காதெல்லாம் தக்காளிக் சட்னி கரை புரண்டு ஓடிடுவதுண்டு !! ஒரு மாதிரியாய் விசாரித்துப் போய் Earl 's Court என்ற சதுக்கத்திலிருந்த ஹாஸ்டலில் 5 நாட்களுக்கு கட்டையைக் கிடத்த ஒரு இடத்தை வாங்கி விட்டேன் ! தனி அறையெலாம் நஹி ; எட்டோ - பத்தோ பேர் ஒரே அறையில் இரட்டை அடுக்குப் படுக்கையில் தங்கிக்  கொள்ளும் டார்மிட்டரி தான் ! சின்னதாயொரு லாக்கர் மட்டும் தருவார்கள் முக்கிய பொருட்களைப் பத்திரப்படுத்திக் கொள்ள ! மற்றபடிக்கு காலைக்கடன்களை ; குளியல்களை பொதுவான பாத்ரூமில் வைத்துக் கொள்ள வேண்டியது ! முதல் நாள் நாய்க்கடி வாங்காத குறையாய் லண்டனுக்குள் புகுந்தவனுக்கு அந்த ஹாஸ்டலின் கல கல atmosphere ரொம்பவே இதமாய்த் தோன்றியது ! அதுவரையிலும் எங்கேயுமே இது போல் தங்கிய அனுபவம் கிடையாதென்றாலும், வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்திருந்த இளைஞர்களோடு ஒரே கூரையின் கீழே தங்கிடும் அந்த வாய்ப்பு ரசிக்கவே செய்தது ! முக்கியமாய் நாளொன்றுக்கு ஏழோ-எட்டோ பவுண்டுகள் தான் கட்டணம் என்பது தேனாய்க் காதில் பாய்ந்திருந்தது ! அங்கு வந்து தங்கியிருந்த அத்தனை படங்களுமே tourists என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! ஒரு ஆசாமி சைக்கிளேலேயே கிரீஸ் நாட்டிலிருந்து வந்திருக்க - தலைமாட்டோடு சைக்கிளைக் கட்டி வைத்திருந்தான் ! நான் ஒற்றை ஆள் தான் அங்கே "தொழிலதிபர்" !!! அவனவன் அரை நிஜாரும், கிழிஞ்ச பனியனுமாய்ச் சுற்றி வரும் அங்கே - லார்ட் லங்கோட்டுதாஸ் போல கோட்டையும், சூட்டையும் மாட்டிக் கொள்ள எனக்கு செம கூச்சமாயிருந்தது ! So ஒரு கவருக்குள் டையையும், கோட்டையும் திணித்து வைத்துக் கொண்டு, வெளியே சாலைக்கு வந்த பிற்பாடு, ஏதேனுமொரு சந்தைத் தேடிப்பிடித்து அங்கு நின்று கோட்டை மாட்டிக் கொள்வேன் தினமும் ! அதே போல மாலை ஹாஸ்டலுக்குத் திரும்பும் தருணத்திலும், அதே சந்து ; அதே கவர் ; அதே கோட் திணிப்பு !

ஒரு மாதிரியாய் Fleetway நிறுவனத்தை சந்திக்க வேண்டிய காலையும் புலர்ந்திட - வேக வேகமாய் மெட்ரோ ரயிலைப் பிடித்து ஓட்டமெடுத்தேன் ! இரண்டே தினங்களுக்குள் லண்டன் ஒருமாதிரிப் பழகிப் போயிருக்க - இந்த ஊரே என்னைப் பார்த்து முறைப்பது போலான எனது பிரமை விலகத் துவங்கியிருந்தது ! எல்லாமே தெரிந்த பாஷையில் இருந்ததால் - ஜெர்மனியில் ; பெல்ஜியத்தில் போல் சைகை பாஷையில் பேசும் அவசியங்கள் எழுந்திடாதது ரொம்பவே உதவியது ! Tube Train எனப்படும் அவர்களது தரைக்கடி ரயில்களிலும், பஸ்களிலும் ஒரு வாரத்துக்கான பாஸ் ஒன்றை வாங்கியிருந்தேன் சல்லிசாய் ! So புசுக் புசுக்கென்று ஏதாவது ஒன்றில் தொற்றிக் கொண்டு ஊரின் எந்தப் பகுதியையும் எட்டிப் பிடிக்கச் சிரமமுமில்லை ; செலவுமில்லை ! லண்டனின் கிழக்குப் பிராந்தியமே அதன் வியாபார மையம் & Fleetway நிறுவன அலுவலகமும் அங்கு தானிருந்தது ! அலுவலகம் என்று நான் குறிப்பிடுவது அவர்களது பதிப்பக அலுவலகம் நஹி ; உரிமைகளை சந்தைப்படுத்தும் பிரிவின் அலுவலகமே ! Syndication International என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தின் ஆபீசை ஒரு மாதிரித் தேடிப்பிடித்து உள்ளே புகுந்த போது ஜிலீரென்று இருந்தது !! கனவில் அப்போதெல்லாம் வந்த சொப்பன சுந்தரிகளை விடவும் - ஜிங்கு ஜிங்கென்று தாண்டவமாடிய சட்டித் தலையன்களும், வலைமன்னன்களுமே  ஜாஸ்தி எனும் போது - அவர்களின் வசிப்பிடத்தில் கால்பதிப்பது ஏதோ ஒருவித உற்சாகத்தைக் கரைபுரளச் செய்தது !! ரொம்பப் பெரிய ஆபீஸெல்லாம் கிடையாது ; அதே போல பழமையான கட்டிடமே ! ஆனால் அதன் ஏதோ ஒரு பகுதியில் நமது ஆதர்ஷ காமிக்ஸ் புதையல் கரைபுரண்டோடுவதை நினைக்கும் போது வேறெதுவும் முக்கியமாய்த் தென்படவில்லை ! நான் போன போதே பகல் 11 -30 இருக்கும் ! நெடுநாள் பரிச்சயத்தை வரவேற்பது போல் என்னை வரவேற்றவர்கள் - எனது பயணம் பற்றி ; தங்கள் தேசம்  பற்றிய எனது அபிப்பிராயத்தையெல்லாம்  விசாரித்தார்கள் !  24 மணி நேரங்களுக்கு மும்பாய் இதே கேள்வியை என்னிடம் யாரேனும் கேட்டிருந்தால் கலாமிட்டி ஜேனுக்குப் போட்டியாய் நானும் பேசியிருப்பேன் தான் ! ஆனால் ஒற்றை தினத்தில் சாந்தம் கண்டிருந்த மனசு நிதான பதிலையே முன்வைக்கச் செய்தது ! "சரி,இப்போதே நண்பகல் ஆகப் போகுது....லஞ்ச் சாப்பிட்டு விட்டு வந்து records room -ல் புகுந்து வேலையைப் பார்த்துக் கொள்ளலாமே ?" என்று மிஸ்டர்.ஸ்ப்ராடெலி கேட்ட போது நானும் சரியென தலையாட்டினேன் ! அவரும், அவரது உதவியாளரான Mr மார்ட்டின் மார்கனும் இணைந்து கொள்ள - மூவருமாக அருகாமையிலிருந்த Pub ஒன்றிற்குப் போனோம் ! பொதுவாய் இங்கிலாந்தில் புட்பால் அல்லது கிரிக்கெட் மேட்ச்களை பார்த்துக் கொண்டு  கிளாஸ் கிளாஸாய் பீரை உள்ளே இறக்கிக் கொண்டே, இறுதியாய் வயிற்றுக்கும் ஏதாச்சும் போட்டுக் கொண்ட பிற்பாடு வீடு திரும்புவது வாடிக்கை ! So அங்குள்ள Pub களில் சாப்பட்டுச் சமாச்சாரங்களும் இருப்பதுண்டு ! மதியப்பொழுது ; காற்று வாங்கிக்கொண்டிருந்த pub க்குள் புகுந்து ஒரு மூலையில் இடம்பிடித்தபடிக்கு மெனுவை என்னிடம் நீட்டினார்கள் - ஆர்டர் செய்திடும் பொருட்டு ! பிரிட்டிஷ் உணவுமுறைகளுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த முதல் தருணமிது என்பதால் - சிக்கன் என்று தென்பட்ட ஏதோவொரு சமாச்சாரத்தை ஆர்டர் பண்ணி வைத்தேன் ! சாப்பாட்டுக்காகக் காத்திருந்த வேளையில், நமது மார்க்கெட் பற்றி ; நமது சர்குலேஷன் பற்றியெல்லாம் அக்கறையாய் விசாரித்தார்கள் ! அவையெல்லாம் நாம் 20000 பிரதிகள் விற்று வந்த நாட்களெனும் போது பந்தாவாய் "டொன்டி தவுசண்ட்" என்று சொன்னேன் ! "ஓஹோ.." என்றவர்களிடம் - "நீங்கல்லாம் எவ்ளோ விற்பீங்க சார் ?" என்று கேட்டேன் ! ஆறிலக்கங்களில் ஒரு முரட்டு நம்பரை அவர் சொன்ன போது "ஹி..ஹி.." என்றபடிக்கே சகல துவாரங்களையும் மூடிக் கொண்டேன் !!  அதற்குள் சப்லையர் ஒரு முரட்டு கும்பா நிறைய ஏதோ பசை மாதிரியான திரவத்தைக் கொணர்ந்திருக்க - எனக்கு பார்க்கும் போதே கிறுகிறுத்தது !! முட்கரண்டியையும், கத்தியையும் கையில் தந்து விட்டு அவர் அகல - "இதில் சிக்கனைத் தேடித் பிடிக்க ஒரு மீன்பிடி வலையிலே பொருத்தமாயிருக்கும் ?" என்ற நினைப்பு தான் மண்டைக்குள் ஓடியது ! கிளம்பும் முன்பே முட்கரண்டியால் சாப்பிடும் வித்தைகளை  புளியோதரையிலும், சாம்பார் சோற்றிலும் முயற்சித்திருந்தேன் தான் - வீட்டில் ! ஆனால் கொழ கொழ வென்றிருக்கும் அந்தப் பசையை மடக் மடக்கென்று குடித்து விட்டால் தேவலாமோ என்றே தோன்றியது ! வாயில் வைத்தால் - உப்புமில்லை ; காரமுமில்லை ; சுத்தமான வெண்களிமண்ணைச் சுவைத்தது போலவே இருந்தது ! அவர்களோடு ஒரு பக்கம் பேசிக் கொண்டேயிருந்தாலும், மண்டை முழுக்க - இந்தக் கொப்பரை நிறைய மிதக்கும் கன்றாவியை விழுங்கிவிட்டு வாந்தியெடுக்காது வண்டியோட்ட வேண்டுமே - தெய்வமே !! என்ற பயம் தான் நீந்தியது ! அடுத்த 15 நிமிடங்களுக்கு எனது நாக்கை நான் படுத்திய பாடை இன்றைக்கு நினைவு கூர்ந்தாலும் அழுகாச்சி தான் மிஞ்சும் !! பரோட்டாவும், குஸ்காவும், வக்கணையாய்த் தின்று பழகியது - அன்றைக்குப் பட்ட அவஸ்தை ரணமே !! ஒரு மாதிரியாய் சாப்பாட்டுக் கூத்து நிறைவுற - அடுத்து dessert ? என்று எதையெதையோ பட்டியலிட்டிருந்ததொரு மெனுவை நீட்டினார்கள் ! எனக்கோ - 'மொட்டையும் போட்டாச்சு..காதும் குத்தியாச்சு...ஆனைகிட்டே ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ! இனியாச்சும் கிடா வெட்டிடலாமே ?" என்ற கவுண்டரின் பதைபதைப்புத் தான் !! "காமிக்ஸ் குவிந்து கிடக்கும் records room-க்குப் போவோமே - வயிற்றுக்குப் போட்ட பெட்ரோல் அடுத்த புத்தகவிழா வரைக்கும் தாங்குமே சார் !!" என்ற ரீதியில் எனது முட்டைக்கண்கள் சேதி சொன்னனவோ - என்னவோ, அவர்களே புறப்படலாம் என்று எழுந்தார்கள் !

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிலவறையிலிருந்ததொரு நீளமான ஹாலுக்கு என்ன இட்டுச் சென்ற போது எனக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது Big Ben கடிகார மணிச்சத்தத்தை விடவும் ஜாஸ்தியாக இருந்தது !! Uffffff !!  அங்கே குவிந்து கிடந்த காமிக்ஸ் இதழ்களின் அசத்தியத்தை கண்களால் அளவிட்ட அந்த முதல் நொடியினை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் புல்..செடி..கொடி..மரம்..மட்டை..என சகலமும் அரிக்கும் !! வார்த்தைகள் போறாது - அங்கே வரிசை வரிசையாய்....ரேக் ரேக்காய்....அட்டியல் அட்டியலாய்....அம்பாரம் அம்பாரமாய்க் குவிந்து கிடந்த காமிக்ஸ் வாரயிதழ்கள் ; Annuals ; இத்யாதிகளின் கம்பீரத்தை வர்ணிக்க !! அங்கிருந்ததொரு மூத்த பணியாளர் என் கையில் ஒரு கத்தைக் காகிதங்களைத் தந்து விட்டு - "ஏதேனும் தேவையென்றால் கூப்பிடு !" என்றபடிக்கே கிளம்பிவிட்டார் ! அந்த ஒட்டு மொத்த சேகரிப்பிற்கும் ஏக பொறுப்பாளர் அந்த ஒற்றை மனுஷனே என்பதை உணர்ந்த போது பிரமிப்பாய் இருந்தது ! நான்பாட்டுக்கு ஊரிலிருந்தபடிக்கு அனுப்பும் குடாக்கு ஆர்டர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைச் சேகரிக்க அந்த ராட்சஸக் குவியலினுள் அவர் என்னமாய்த் தத்தளித்திருப்பாரோ ? என்று நினைக்கும் போதே பாவமாயிருந்தது !! ஒரு பக்கம்  முழுக்க பெண்பிள்ளைகள் காமிக்ஸ்  ; இன்னொரு பக்கம் முழுக்க Football சார்ந்த காமிக்ஸ் (அந்நாட்களில் அவை இங்கிலாந்தில் செம பிரபலம் !!) ; இன்னொரு பக்கம் Boys காமிக்ஸ் என்று பிரித்திருந்தனர் ! நேராக Boys காமிக்ஸ் பகுதியினுள் புகுந்தவன் - வாயை அகலத் திறந்தது மாத்திரமே நியாபகமுள்ளது ! தொடர்ந்த மணி நேரங்கள் ; தினங்கள் எல்லாமே - விரல்கள் நோகும் வரை, கைகள் கடுக்கும் வரை ; கண்கள் சொக்கும் வரை அவர்களது எல்லையற்ற தொகுப்புகளை புரட்டோ புரட்டென்று புரட்டுவதிலேயே செலவானது ! 1985-ன் இறுதி முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாம் வெளியிட்ட Fleetway கதைகள் / குட்டிக் கதைகள் / தொடர்கள் / oneshots என சகலமும் அப்போதைய தேடல்களில் உருப்பெற்றவை என்று சொன்னால் மிகையில்லை ! நமக்கு ஆகக்கூடிய கதைகள் ; தொடர்கள் எனில், பர பரவென அவை எந்த வருடத்தில் ; எந்த இதழில் துவக்கம் கண்டது - எப்போது முடிவுற்றது ? என்று மட்டும் குறித்துக் கொள்வேன் ! அன்றைய மாலை மொத்த லிஸ்டையும் அந்த records பராமரிப்பாளரிடம் தந்தால் அவர் அதைத் தனது ஆர்டர் லிஸ்டில் சேர்த்துக் கொள்வார் ! நேரம் கிடைக்கும் பொழுது அவற்றை நகலெடுத்து இந்தியாவுக்கு அனுப்பிடுவார் ! தொடர்ந்த 3 நாட்களுக்கு இதே வேலை ஓடிட - எனக்கோ மண்டை முழுக்க கலர் கலரான முன்னோட்டங்கள் ஓடிக் கொண்டேயிருந்தன ! இத்தனை தொடர்களையும் கொணர்ந்து உங்கள் முன்னே கடைவிரிக்கும் நாள் பற்றிய கனவுகளில் ஒரே மிதப்பு தான் !! 1985 டிசம்பரில் வெளியான "ஆப்பிரிக்க சதி" இதழில் "வருகிறது" விளம்பரங்கள் ஒரு வண்டி களமிறங்கியது நினைவுள்ளதா folks ? எல்லாமே அந்த நிலவறை உருட்டிய மூன்று நாட்களின் பலனே !

விட்டால் அங்கேயே குடியிருந்து விடுவேன் என்ற பயத்தில் மூன்றாவது நாள் கைகுலுக்கி என்னை வழியனுப்பி வைத்தனர் !! அதன் முன்பாய் அவர்களது MD என்னைச் சந்திக்க விரும்புவதாய்ச் சொல்ல - அவர் முன்னேயும் ஆஜரானேன் ! அவருக்கோ சத்தியமாய் நம்ப முடியவில்லை - ஒரு சுள்ளான் பயல் தங்களது காமிக்ஸ் சேகரிப்பினுள் புகுந்து முத்துக் குளிக்கவே இத்தனை தொலைவு பயணமாகியிருக்கான் !! என்பதை !! அவர்களுக்கு நம் மண்ணில் இரும்புக்கை மாயாவிக்கு உள்ள வரவேற்பு பற்றி நன்கு தெரியும் என்பதால் அது பற்றியும் விசாரித்தார் ! நானோ தற்போதைய டாப் நாயகர் "ஸ்பைடர்" தான் என்று சொல்ல - "மெய்யாலுமா ?" என்று இடிச்சிரிப்போடு கேட்டுக் கொண்டார் ! "அட...என்னோட லிஸ்டைப் பாருங்களேன் !"  என்று அவர் முன்னே records அறையிலிருந்து நான் தோண்டியெடுத்திருந்த ஸ்பைடர் கதைகளின் பட்டியலைக் காட்டிட ஏக குஷி அவருக்கு ! அடுத்த முப்பதாவது நாளுக்குள் இந்தப் பட்டியலின் ஒட்டுமொத்த பக்கங்களும் டில்லிக்குச் சென்றிருக்கும் ! சந்தோஷமாய்ப் போய் வா !!" என்று விடைகொடுத்தார் !! எனக்கோ உலகமே வசந்தம் வீசும் பூமியாய்க் காட்சி தந்தது !! ஆனால் 30 நாட்களுக்குள் மொத்தக் கதைகளும் டில்லி வந்துவிடுமென்று கேட்ட போது வயிற்றில் புளியைக் கரைத்து - "தெய்வமே...அத்தனைக்கும் ஒட்டு மொத்தமாய்ப் பணம் புரட்டணுமே !! இல்லாங்காட்டி டில்லி ஏஜெண்ட் ராணி காமிக்ஸுக்கு எதையாச்சும் தள்ளி விட்டிடக் கூடுமே !!" என்று ! ஏதேதோ கூத்தடித்து பின்னாட்களில் அவற்றை வாங்கினோம் என்பது மட்டும் நினைவுள்ளது !! 1985 -ல் செய்த அதே பாணியில் மறு வருடமும் ஜெர்மனியில் புத்தக விழா ; லண்டனில் காமிக்ஸ் நிலவறைப் படையெடுப்பு என்று தொடர்ந்திட - நமது காமிக்ஸ் கையிருப்போ அசாத்திய கனம் கொள்ளத் துவங்கியது ! தட்டுத் தடுமாறியவன் அவற்றை களமிறக்க மாமூலான லயன் காமிக்ஸ் மாத்திரமே ஒருபோதும் பற்றாதென்ற புரிதலில் "திகில்" ; அப்புறம் "மினி-லயன்" ; "ஜூனியர் லயன்" என்றெல்லாம் அடித்த ரவுசுகள் நாமறிவோம் ! 1988 -ன் வாக்கில் மறுபடியும் ஊர்சூற்றும் ஆசை தலைதூக்கிய போது - "Fleetway-க்கு மறுக்கா போலாமா ?" என்று அனுமதி கோரி டில்லி ஏஜெண்டுக்கு கேட்டு வைத்தேன் ! மறுநாள் அவரிடமிருந்து கிட்டிய பதில் என் ஈரக்குலையைப் பதறச் செய்தது இன்றும் நினைவுள்ளது ! "ஒரு வாரயிறுதியின் போது கட்டிடத்திலிருந்த தண்ணீர் பைப்கள் வெடித்து வைக்க, நிலவறை முழுசும் தண்ணீர் கட்டி விட்டதால் - அங்கிருந்த records கிட்டத்தட்ட முக்கால் பங்குக்கு மேல் நீரில் மிதந்து போச்சாம் !!" என்று பதில் வந்தது !! அதனுள் இன்னமும் நாம் ரசித்திரா முத்துக்கள் எத்தனை புதைந்து கிடந்தனவோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !! ஒரு மாதம் வரைக்கும் மனசே ஆறவில்லை அந்தத் தகவல் தெரிந்தது முதலாய் !! All good things must come to an end I guess !!

இன்றைக்கு - எக்கச்சக்க ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் Fleetway நிறுவனமும் மூன்று முறை கைமாறிய பிற்பாடு - புதிதாய் வாங்கியிருக்கும் நிறுவனமானது அரும்பாடுபட்டு பழைய கதைகளை சேகரித்து, அவற்றையெல்லாம் மேம்படுத்தி, டிஜிட்டல் கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியை முனைப்போடு செய்து வருகிறார்கள் ! சமீபத்தில் நாம் வெளியிட்ட ACTION SPECIAL அதன் பலனே !! ஒரு சகாப்தம் அந்தக் கால கட்டத்தோடு நின்று போயிடாது, நிரந்தரமாய்த் தொடர்ந்திட அவர்கள் செய்து வரும் முயற்சிகள் ரொம்பவே நிறைவைத் தருகிறது ! மெது மெதுவாயே இந்த முயற்சிகள் வெற்றி கண்டிட முடியும் !! அவற்றின் மீது நமக்கு இன்னமும் மையல் உள்ளதோ, இல்லையோ - நம்மையெல்லாம் கற்பனையெனும் சோலைக்குள் இட்டுச் சென்ற அந்த அசாத்திய ஆக்கங்களை மீட்டிடும் முயற்சி வெற்றி காண வாழ்த்துவோமே !! Back to the present folks.......

எப்போதுமே நமக்கொரு சுவாரஸ்ய மாதமாய் அமைந்து வந்துள்ள ஜூலை - 35 ஆண்டுகளாகியும் அந்தப் பழக்கத்தினை விட்டுத் தந்திருக்கவில்லை !! இதோ - சிறுகச் சிறுகப் பதிவாகி வரும்  உங்களின் இம்மாத அலசல்களின் துவக்கம் all is well with this July too என்பதைச் சுட்டிக்காட்டி வருகிறது ! உங்களில் நிறையப் பேர் டப்பியை உடைத்து புக்குகளின் அட்டைப்படங்களை ரசிக்கும் கட்டத்தைத் தாண்டியிருக்க மாட்டீர்கள் என்பதில் ரகசியங்களில்லை தான் ! But still இது வரைக்கும் உட்புகுந்து இதழ்களை வாசிக்க நேரம் ஒதுக்கியுள்ள  நண்பர்களின் அபிப்பிராயங்கள் நிறையவே பாசிட்டிவ் ரகம் என்பதை ஒரு உற்சாகமூட்டும் குறியீடாய்ப் பார்த்திடுகிறேன் !! லக்கி லூக் ஆல்பங்கள் எப்போதுமே ஜாலியான K.S .ரவிக்குமார் ; சுந்தர் C படங்களை போல பொழுதுபோக்குக்கு உத்திரவாதமானவை என்பதால் லயனின் 35-வது ஆண்டுமலரைப் பற்றி ரொம்பவெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ளவில்லை !  ஹார்ட்கவர் பைண்டிங் ; அட்டைப்படங்களில் நகாசு வேலைகள் ; ஒன்றுக்கு, இரண்டாய்க் கதைகள் என்றெல்லாம்  கூடுதலாய் ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்திட, இந்த இதழை எப்படியும் கரை சேர்த்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது ! எனது சுவாரஸ்யமே - இதர 2 இதழ்கள் சார்ந்தது !!

*நீரில்லை..நிலமில்லை..!
*நித்திரை மறந்த நியூயார்க் 

இந்த 2 ஆல்பங்களை வாசிக்கவும் நேரமெடுத்துக் கொண்டு கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களின் அபிப்பிராயங்களை !!

அப்புறம் முக்கிய விஷயத்தை மறந்து விடக்கூடாதல்லவா ? Caption போட்டியில் வெற்றி கண்டுள்ள 2 நண்பர்களும் ஈரோட்டில் நமது Guests ஆக இருந்திடுவர் !! அவர்களை ஈரோட்டுக்கு அழைத்து வருவது முதல், தங்கிட, திரும்பிச் சென்றிட என all ஏற்பாடுகள் கம்பெனியின் பொறுப்பே ! பொருளாளர்ஜியைக் கடத்தி வரும் ஏற்பாட்டை யாரேனும் ஏற்றுக் கொண்டால் - செலவினங்களை நாம் ஈடு செய்திடலாம் ! நண்பர் கார்த்திகேயன் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் - உங்கள் வயது + முகவரியோடு !! டிக்கெட்கள் உங்களைத் தேடி வந்திடும் வெகு விரைவிலேயே !!

And மேற்படி நண்பர்கள் தவிர்த்த இதர நண்பர்களும் ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டாச்சா ? என்று தெரிந்து கொள்ள ஆவல் ! சென்றமுறை போலவே மதிய உணவும் அரங்கிலேயே என்பதால் அன்றைய தினக் கிடாவிருந்து முன்னேற்பாடுகளை ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டுக் கொள்ளக் கோருகிறேன் !! Please folks - visit with family if possible !!

Bye guys for now !! Have a cool Sunday ! See you around !!
நித்தமொரு யுத்தம்  preview !!

265 comments:

  1. Replies
    1. அங்கன எத்தனை மணியாம்

      Delete
  2. இந்த வருட நெய்வேலி புத்தக கண்காட்சியில் ஸ்டால் எதுவும் இல்லையா சார்?

    ReplyDelete
  3. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே.. ஈரோட்டு திருவிழாவுக்கு இன்னும் ஒரு மாதாத்திற்கு குறைவான நாட்களே இருக்கின்றன.. வண்டி கட்டறவிங்க எல்லாம் ரெடியாகிக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. வர வாரம் முழுக்க அது தான் வேலை.

      Delete
    2. உங்களை இங்கே சந்திக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்

      Delete
    3. நானும் குமார். 🙏👍🏻

      Delete
    4. வண்டி தயாரானவுடன் சொல்லுங்க சரோ வந்து ஏறிக் கொள்கிறோம்...

      Delete
    5. வண்டி, வெள்ளிகிழமை காலை கிளம்பி கரூர்,வேலாயுதம்பாளையம், நாமக்கல் வழியாக ஈரோட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

      7 July 2019 at 10:47:00 GMT+5:30

      Delete
    6. பொள்ளாளாச்சிலேந்து புளியம்பட்டி .

      Delete
    7. M P பால் கோவா....?????காலங்காத்தால சாப்ட்ரூவோம்...

      Delete
  4. ///ஒரு கவருக்குள் டையையும், கோட்டையும் திணித்து வைத்துக் கொண்டு, வெளியே சாலைக்கு வந்த பிற்பாடு, ஏதேனுமொரு சந்தைத் தேடிப்பிடித்து அங்கு நின்று கோட்டை மாட்டிக் கொள்வேன் தினமும் ///

    ச்சே.. ஏனோ இன்றைய ஸ்பைடர் மேன் படக்காட்சி ஞாபகம் வந்து தொலைக்குது...

    ReplyDelete
    Replies
    1. ஆனாப் பாருங்க எனக்கு சூப்பர் மேன் ஞாபகம் வந்தது :-)

      Delete
  5. அருமையான பதிவு ஆசிரியரே. நீங்கள் அந்த fleetway கிடங்கு பற்றி விவரிக்கும் போது உங்களோடு சேர்ந்து நானும் அங்கே காமிக்ஸ் புதையலில் தேடியது போல ஒரு ஃபீலிங். இந்த ஃபிளாஷ் பேக் எப்போதுமே மிகவும் ரசிக்கும் படி இருக்கிறது. அந்த நித்தமும் யுத்தம் preview அட்டகாசம். நான் கண்டிப்பாக இந்த முறை ஈரோடு வருகிறேன்.

    ReplyDelete
  6. லக்கி யின் பாரிசில் ஒரு கௌ பாய் அருமை. இந்த முறை இரண்டு கதைகளுமே மனதை கொள்ளை கொண்டன. 200/10. மற்ற இரண்டு கதைகளை படித்து விடு இன்று அல்லது நாளை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  7. கோவையில் கால வேட்டையர் உண்டா ஆசிரியரே?

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்....

      Delete
    2. அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்வ்

      Delete
  8. ஆத்தி

    எம்மாம் பெரிய மாத்திரை

    படிக்கவே இப்படின்னா எழுதிய உங்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼

    படிச்சிட்டு அப்புறமா வர்றேன் சார்

    ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  9. நீரில்லை நில மில்லை நமதுகாமக்ஸ் ரசனையை பல படிகள் முன் எடுத்துச்செல்லும் ஒரு காமிஸ் காவியம்.டெக்ஸ்வழக்கம் போல சிறப்பு. லல்கியின் உத்தம புத்திரன் சூப்பர். பாரிஸில் ஒரு கௌபாய் சிரிப்பை வரவைக்கவல்லை. ஓல்டு இஸ் கோல்டு என்பது போல எனக்கு லல்கியின் பழைய க்ளாஸிக் நடை தான் பிடித்துள்ளது. நி.ம.நி.நண்பர்களின் பின்னூட்டத்திற்கு பின்பு. கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  10. இந்த வாரம் இனிய வாரம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவே இந்த வாரம் இனிய வாரமே எனக்கு.

      Delete
    2. குமாரு

      மேல படிச்சீகளா சிரிச்சி முடியல வயிறு
      குலுங்கீருச்சு...

      நம்மாளு மாதிரி எழுத இன்னொருத்தனால முடியாது...

      Delete
    3. ஆமா j கண்டிப்பா நம்ம ஆசிரியர் மாதிரி யாராலும் எழுத முடியாது.

      Delete
  11. Replies
    1. சார்க்கு ஞாயித்து கெழமைல மட்டும் தான் வரும் போல.

      Delete
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  14. Fleetway publication stories don't seem to come to our comics....so atleast may London diary continue to console us. When Action Special was published,I thought such collection would continue .
    .....phew! I yearn for fleetway stories. I also remember comparing ' Africa Sathi ' with some Rip Kirby story published in 1991 thinking how nice Lion'comics was in mid 80s .Espcially 'coming soon advertisement' which 1991 books lacked. OK. That old black and white adventures (How fortunate I m to keep them safe!) still make me look down these new world standard full coloured hi tech stories printed on imported paper. Pls understand sir, I am just telling that those oldies are relatively more important to me. Not that I hate new ones.

    ReplyDelete
  15. நீரில்லை,நிலமில்லை:
    தேவைக்கு மேல் பொருள் சேர்ந்து விட்டால் கண்ணில் படுவது எல்லாமே சாதாரணமாக தோன்றும்,எதனுடைய மதிப்பும் தெரியாது என்று கண்ணதாசனின் சிந்தனையில் உதிர்த்த வார்த்தைகளை படித்த நினைவுண்டு,
    அந்த அடிப்படையில் செல்வச் செழிப்பில் ஊறிப்போய் அடுத்து என்ன செய்வது என்ற பிறழ்சிந்தனைக் குழப்பத்தில்,பதின்ம வயதில் இருந்து பருவ வயதை எட்டும் தருணத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற சிந்தனைகளும் கொண்ட அறுவர் அணியினர் அடிக்கும் கூத்துகளே கதையாக நமக்கு விரிகிறது.
    அணியில் காணாமல் போன ஜான் எனும் நபரைத் தேடி அலெக்ஸ் என்பவன் தலைமையில் குழு பயணிக்கிறது,இடையில் ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகளால் ஒரு கலங்கரை விளக்கத்தில் ஒதுங்க நேரிடுகிறது,
    அந்நிகழ்வு தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?
    கலங்கரை விளக்கத்தில் பணிபுரியும் நபர்கள் இவர்களின் வரவை இரசித்தார்களா?
    அங்கே நிலவும் மர்மங்களுக்கு விடை என்ன?
    தேடிப்போன ஜான் என்னவானான்?
    குழுவினர் அடுத்தடுத்து கொலையாகும் காரணங்களுக்கான விடை என்ன?
    இறுதியில் மிஞ்சியவர்கள் தப்பித்தார்களா?
    என்பதை பரபரப்பான கதைக்களம் நமக்கு விவரிக்கிறது.

    முதல் பாகத்தில் பெரும்பாலான பகுதி உரையாடல்களில் சென்றாலும் இரண்டாம் பாகத்தில் சூடுபிடிக்கிறது,
    ஓவிய பாணிகள் அசத்தலாக உள்ளது,
    கதை இறுதியில் சொல்லப்படும் வார்த்தைகள் அர்த்தப்பூர்வமானவை:
    "வாழ்க்கயை நேசித்திருந்தால்,வாழ்க்கை உங்களை நேசித்திருக்கும்".
    காட்சிகளின் பிரதிபலிப்பை மனதில் கொண்டு 18+வயதினருக்கானது முத்திரை கொடுத்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  16. நட்புக்கு நாட்களேது:
    ரியோ கிராண்டே ஆற்றின் கரையில் ஷெரீப் குழு டெக்ஸை துரத்தும் படலத்தோடு கதை தொடங்குகிறது,சற்றே நெருக்கடியான சூழலில் வெகுமதி வேட்டையர் வின்சென்ட் ஜான்சனின் உதவியோடு தப்பிக்கிறார் டெக்ஸ்,
    தொடரும் உரையாடலில் வின்சென்டின் சகோதரர் வால்டர் மர்மமான முறையில் கொலையுண்டதாக அறிந்து கொண்டு விடைபெறுகிறார்,
    நீண்ட வருடங்களுக்குப் பின்னர் அரிசோனா ஷெரீப்பை சந்திக்கும்போது ஜான்சன் சூதாட்ட விடுதி உரிமையாளர் ஜார்மனுடன் ஏற்பட்ட மோதலில் தலைமறைவானதாக தெரிந்து கொள்ளும் டெக்ஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையில் அவருக்கு உதவ முடிவு செய்கிறார்.
    இடையே தப்பித்துச் சென்ற ஜான்சனை வேட்டையாட ஜார்மன் தலைமையில் சாண்டனா எனும் போக்கிரியுடன் ஒரு குழு செல்ல,சில்வர் ராக் சுரங்கத்தினருகே ஜான்சனை கண்டுபிடிக்க களம் சூடுபிடிக்குறது.
    ஜான்சனை ஜார்மன் குழு வேட்டையாடியதா? டெக்ஸ் காப்பாற்றினாரா?
    கதையின் இறுதியில் சுவாரஸ்யமான மோதலில் காணலாம்.
    டெக்ஸ் கதைக்கே உண்டான விறுவிறுப்பு ஓவியங்களில் காணப்படும் குறைகளை மறக்கச் செய்கிறது.
    வழக்கம்போல் சொல்வதுதான் 32 பக்கத்தில் நிறைய சம்பவங்களை தொகுத்து குழப்பமில்லாமல் கதையை நகர்த்தி உள்ளனர்.
    நிறைவான வாசிப்புக்கு உத்திரவாதம்.
    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
    Replies
    1. // ரியோ கிராண்டே ஆற்றின் கரையில் ஷெரீப் குழு டெக்ஸை துரத்தும் படலத்தோடு //

      டெக்ஸ் செய்த தவறு என்ன?

      Delete
    2. இப்ப எல்லாம் தவறு செஞ்சவங்களை கூட துரத்துவதில்லையாம்,தவறு செய்யாதவங்களைதான் துரத்தறாங்களாம்.....

      Delete
    3. அது டெக்ஸின் சிறுவயதில்..
      டெக்ஸ் தேடப்படும் குற்றவாளி. அவர் தலைக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டிருப்பதால், சட்டத்தின் காவலர்கள் துரத்தி பிடிக்க முயல்கின்றனர்..

      Delete
    4. அது சிறுவயதெல்லாம் இல்லை ஹசன்,பெருவயதுதான், காரணம் தான் வேறு....

      Delete
  17. உத்தமபுத்திரன்:
    செய்யன்னீ பிராந்தியத்தில் மஞ்சள் (யெல்லோ)டாக்,பெரிய(பிக்)ஜீரோ இருவருக்கும் இடையேயான "வோ" "உவ்வே" சமாதானக் குழாய் ஒப்பந்தப்படி நிலவும் அமைதியை குலைக்க ஃப்ளாய்ட் எனும் கறுப்பு ஆடு முயல மேலிடத்தில் அனுப்பப்படும் நம் நகைச்சுவை நாயகர் உள்ளே புகுந்து தனது பாணியில் அமைதியை நிலைநாட்டுவதே உத்தம புத்திரன் எனும் காமெடி மேளா.
    தொடக்கத்தில் சாதாரண தோரணையுடன் ஆரம்பிக்கும் களம் தொப்பி வியாபாரி தனது ஓட்டைத் தொப்பிகளுடன் கோட்டைக்குள் வரும்போதே நமது வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்து இறுதியில் "வரலாற்று சிறப்பு மிக்க அதிர்ஷ்டத் தொப்பிகள் பெரிய விலைக்குப் போகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
    "சார்ஜெண்ட் ! ஒரு லோடு உருளைக்கிழங்கையும் ரெடி பண்ணு" என்பதுடன் முடிகிறது.
    "குதிரை சாக்ஸ்"
    "எங்கப்பன் குதிருக்குள் இல்லை,
    அவ்வளவு சின்ன அப்பாவா அவரு?
    இல்லாட்டி அவ்ளோ பெரிய குதிரா".
    " சாரிப்பா இன்விடேஷன் அடிக்க இப்போ நேரமில்லை, அதான் உன்னை அடிச்சிட்டேன்".
    "என் காலில் ஷூவையே காணோம் பாஸ்"-ஜாலி ஜம்பர்.
    " இதையெல்லாம் விட பெரிய சித்ரவதை யெல்லோ டாக்கோட சமாதானக் குழாயில் புகைக்கச் சொல்றதுதான் ! ஹா..ஹா..ஹா...ஹா!"
    கதை நெடுக வரும் அந்த "இரட்டை இறகு நரி"," தொப்பி வியாபாரி" வாய்ப்பே இல்லை ஒரு முழு நீள காமெடி மேளாதான்.
    முழுமையான, நிறைவான,மகிழ்ச்சியான கதை.
    அருமை,அருமை....
    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. //முழுமையான, நிறைவான,மகிழ்ச்சியான கதை.
      அருமை,அருமை....// ஆமாம் ஆமாம் வெகு நாட்களுக்கு பிறகு

      Delete
  18. ஆகஸ்ட் 3ம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் மற்றும் நண்பர்களை சந்திக்க பெங்களூர் நண்பர்கள் தயாராகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களை சந்திக்க தயாராகி விட்டேன்

      Delete
    2. நன்றி. ஆவலுடன் நானும்.

      Delete
    3. பரணி அந்த பேடா......

      Delete
  19. மினி டெக்ஸ்: மிகவும் சாதாரணமான கதை. இதற்கு முன் வந்த மினி டெக்ஸ் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அசத்தியது. இந்த கதையில் அது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒத்து கொள்கிறேன். இந்த கதையில் அந்த x ஃபேக்டர் இல்லை.

      Delete
  20. நித்திரை மறந்த நியூயார்க்:
    இரண்டு நண்பர்கள் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள், கதாநாயகன் தனது பழங்காலத்தை மறந்தவன் எனத் தொடங்குகிறது. ஆனால் போகப்போக தான் தெரிகிறது உண்மை அது இல்லை என்று.


    அதிக
    கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒரு சிறிய அழகான முடிச்சை வைத்து கதையை சுவாரசியமாக கொடுத்த கதாசிரியர் பாராட்டுக்குரியவர். இதற்கு பக்கபலமாக ஓவியங்கள், கருப்பு வெள்ளையில் நியூயார்க் அழகாக தெரிந்தது. ஆனால் அந்த வைரங்கள் சஸ்பென்ஸ் என்னை படுத்தி எடுத்து விட்டது, அது எங்கே மறைத்து வைக்கபட்டிருந்தது என சொல்லி இருக்கலாம். :-)

    நித்திரை மறந்த நியூயார்க் தனிமையின் வெளிப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. அப்பிடி வைரமே கெடயாது ங்குறது தான் implied

      Delete
  21. வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே

    ReplyDelete
  22. மேன்மை மிகு ஆசிரியருக்கு வணக்கம் 🙏. உங்களது வரலாற்று அனுபவப் பதிவு உங்களது காமிக்ஸ் நேசத்தையும்,நமது காமிக்ஸ் நிலைகொள்ள கண்ட துன்பங்களையும்,துயரங்களையும் காட்டுகிறது. குறைசொல்வது எளிது அந்த வேலையை நாங்கள் சிறப்பாக செய்கிறோம்.ஆனால் அதன் பின்னால் இவ்வளவு வரலாறு உள்ளது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.புத்தக திருவிழாவிற்கு நானும் வருகிறேன் முதன் முறையாக உங்களை சந்திக்கப் போகும் நாளை மிக மிக ஆவலோடு எதிர்பாக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள் நானும் உங்களை முதல் முறை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். எடிட்டர் ஐ ஏற்கனவே ஒரு முறை ஈரோட்டில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அது சிறிது நேரமே. EV மற்றும் ரம்மி யை யும் சந்தித்து இருக்கிறேன். இந்த முறை அனைத்து நண்பர்களையும் சந்தித்து காமிக்ஸ் பற்றி பேச வேண்டும்.

      Delete
    2. துன்பம் ; துயரம் என்பனவெல்லாம் பெரிய வார்த்தைகள் நண்பரே ! ஒரு ஜாலியான பயணத்தின் pit stops மாத்திரமே இவையெல்லாமே !

      Delete
    3. குமாரு....

      தீயா சந்திப்போம் குமாரு....

      Delete
    4. சந்திப்போம் நண்பரே. என்னுடைய comments மதிச்சு comments idugira ore ஜீவன் உங்களை சந்திக்காமல் இருப்பேனா

      Delete
    5. Kumar salem@.. Please don't think like that...i believe everyone respect everyothers' comments..the reasons for to reply or not to reply are multifactorial...

      Delete
    6. I accept what you said Sir. I'll keep this in mind.

      Delete
  23. சூப்பர் பதிவு...... ஸ்பைடரின் போடாத கதை ஏதாவது........பிலீஸ்

    ReplyDelete
    Replies
    1. Hello ...hello bad signal...oh next year?....Ok. thank u very much sir!

      Delete
    2. இன்னாது.... ஸ்பைடரா....

      நீங்களா தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் செல்போனையே தொலைத்து விட்டார்.....

      Delete
  24. மாதத்திற்கு மூன்று பதிவு தாங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, ஒருநாள் மட்டும் அந்தந்த மாத காமிக்ஸ் பற்றி பிரிவீயு போடலாம். நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எழுத உருப்படியாய் எதுவும் சிக்காது போகும் நாட்களில் இந்தப் பின்னோக்கிய பயணம் போவதை வழக்கமாக்கியுள்ளேன் சார் ; மாதா மாதமென்றால் கதை கந்தலாகிப் போய் விடும் !

      Delete
  25. சார் அப்படியே அந்த சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு எப்போதுன்னு - atleast ஒரு Surprise வெளீயீடாகவாவது.

    ReplyDelete
    Replies
    1. அது தான் சிக்கும் ஒவ்வொரு சைக்கிள் கேப்பிலுமே வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு back in time சவாரி கிளம்பி விடுகிறேனே சார் ; இதை தொகுப்பானேன் ?

      Delete
    2. முதல் முறையாக தங்களை நேரில் சந்திக்க ஆவல் கொண்டுள்ளேன் சார் ஈரோட்டில். ஆகஸ்ட் மாத காமிக்ஸ் ஒரு புல் செட் பார்சல் சார்.ஈரோடு Express விரைவில் முன்பதிவு செய்து விட்டு மொத்தமாக நேரில் பெற்றுக்கொள்கிறேன் சார்.

      Delete
    3. குறைந்தது நமது வெப்சைட்டிலாவது இதுவரை blog-ல் வந்த அனைத்து தொகுப்புகளையும் எடிட் செய்து ஒரு தனி tab ல் போடுங்க சார். விருப்பப் படுபவர்கள் அங்கே தொடர்கதை போல படித்து கொள்கிறோம். புதிதாக வரும் வாசகர்கள் பின்னாளில் படிக்க வசதியாக இருக்கும். அனைத்து blog பதிவு படிக்கும் அவசியம் குறையும்.

      என்ன தான் நீங்க காரணம் சொன்னாலும், இது முத்து காமிக்ஸ் வரலாறு இல்லையா?

      வரலாறு முக்கியம் இல்லையா?

      தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

      - சங்கர்

      Delete
  26. அடுத்த வாரம் கோவை விஜயம் உண்டுதானுகளே அய்யா!!!

    ReplyDelete
    Replies
    1. கோவையில் புத்தக விழா துவங்குவதே 19 தேதிக்குப் பின் தானே நண்பரே ?

      Delete
  27. தங்களுடன் லண்டன் பயணித்தது போன்ற உணர்வு,அவற்றில் கிடைக்காத பொக்கிஷங்களை மீண்டும் கொண்டு வர முயற்சியுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. அவற்றை ரசிக்கும் அந்த பால்யத்தை மீட்டிட ஓர் வழி இருப்பின் பேஷாய் செய்திடலாம் சார் !

      Delete
  28. மினி டெக்ஸ்

    தேடப்படும் குற்றவாளி டெக்ஸ் ஷெரீப் எஸ்னரிடமிருந்து தப்பிட 🏇 யில் பறக்கிறார்.

    முடியாத போதே பதுங்குகிறார்.

    தொலைநோக்கி பொருத்திய ரைபிள் அவரை காக்கிறது.

    வெகுமதி வேட்டையன் என்ற போதிலும்
    ஜான்சனின் நேர்மையை ரசிக்கும் டெக்ஸ் , தான் பட்ட நன்றிக்கடனை பல வருடங்களான பின்பும் மறக்காமல் மரணத்தின் விளிம்பிலிருந்து அவரைக் காக்கிறார்.

    மினி டெக்ஸ் கடலை மிட்டாய் மாதிரி அப்பப்ப எடுத்து ரசிக்கலாம்.
    ருசி கேரண்டீட்.



    ReplyDelete
  29. காமிக்ஸ் களஞ்சியத்தில் முதன்முதலில் நீங்கள் இருந்த தருணத்தை என்னால் உணர முடிகிறது ஆசிரியரே...நான் முதலில் காரைக்கால் ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர் முன்னே நின்ற அந்த தருணம்....காமிக்ஸை நேசிப்பவர்கள் மட்டுமே உணரக் கூடிய சொர்க்கம்..வாவ்...

    ReplyDelete
  30. உங்கள் லண்டன் அனுபவம் - சிரிச்சு அதுவுமா காலங்காத்தால...
    சகதர்மிணி செல்போன பிடுங்கி எறிஞ்சிட்டாங்க...நல்ல வேளை மெத்தையில் விழுந்திச்சி....

    ReplyDelete
  31. ஈரோடு ஸ்பெஷல் 600 ரூபாய் அனுப்பி இருக்கிறேன் சார் இப்பொழுது மேலும் 2 புத்தகங்கள் சேர்ந்துள்ளது அதற்கு எவ்வளவு அனுப்பவேண்டும் என கூறுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. August 3 சொல்கிறேன் சார் !

      Delete
    2. Free ஆக இருக்கும் போலிருக்கிறது. Editor-க்கு மிக்க நன்றி 👍😍🤓

      Delete
  32. கிருதா கணேஷ்

    உடனே வரவும்...

    ReplyDelete
  33. இந்த வருஷம் என்ன கலர் யூனிபார்ம்...
    ஹிஹ்ஹிஹ்ஹி

    ReplyDelete
    Replies
    1. K V கணேஷ்
      ஹலோ. மைக் டெஸ்ட்டிங்....

      Delete
    2. குச்சிமிட்டாய், குருவிரொட்டி includes.

      Delete
    3. குச்சிமிட்டாய், குருவிரொட்டி includes.

      Delete
    4. MGR ராமன் தேடிய சீதைல போட்டுட்டு வருவாரே அந்த புளூ கலரோ....

      Delete
    5. உள்ளேன் ஐயா

      Delete
  34. // நண்பர் கார்த்திகேயன் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் - உங்கள் வயது + முகவரியோடு //

    என்னாது... வயது சொல்லனுமா.. இப்படி எல்லாம் கேட்பிங்கனு தெரிந்திருந்தால் கேப்ஷன் போட்டி ஏரியா பக்கமே தல வச்சு படுத்திருக்க மாட்டேனே... ☹️😋😀😀😀

    ReplyDelete
    Replies
    1. அநியாயத்துக்கு இப்போல்லாம் ரயில்லே டிக்கெட் போடறச்சே வயசைக் கேட்டு மானத்தையெல்லாம் வாங்கிடறாங்களே சார் ; ஞான் என்ன செய்யும் ?

      Delete
    2. வரும் மின்னஞ்சலை தளத்திலும் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    3. @கிருஷ்ணா

      என்னா வில்லத்தனம். :)))

      Delete
    4. புகை சமிக்ஞை அனுப்பிடுங்க கார்த்தி சார்...

      Delete
    5. ///வரும் மின்னஞ்சலை தளத்திலும் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்///

      ஹா ஹா ஹா! செம!!

      Delete
    6. கார்த்திகேயன் வயசை தெரிந்து என்ன செய்ய போறீங்கப்பா? 🤔🤔🤔🤔

      Delete
  35. நலம் நலமறிய அவா..!!

    (எக்கா மகளே இந்தூ...)

    ReplyDelete
    Replies
    1. நங்கே ஒந்துனு பேட்

      நீவூ சிவகாசி பத்தேரா....

      Delete
    2. மேட்டுக்குடி எபெக்டா கண்ணரே...😍

      Delete
    3. ஏன்யா பேமிலியோட வாங்கன்னு தான் எடிட்டர் பறைஞ்சு...

      நீங்க அக்கா மகளை கூட்டிட்டு வர்றேங்கிறீங்க...

      எல்லா வயசுக்கோளாறு...
      கோளறு பதிகம் பாடுற வயசுய்யா உமக்கு....

      Delete
  36. // அதனுள் இன்னமும் நாம் ரசித்திரா முத்துக்கள் எத்தனை புதைந்து கிடந்தனவோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் //
    உங்கள் அனுபவங்கள் விலை மதிப்பில்லாதது சார்,கண்முன்னே சம்பவங்கள் வந்து போகின்றன....

    ReplyDelete
  37. இந்த மாதம் வந்த நான்கு புத்தகங்களின் கதைகளும் நன்றாக உள்ளது. எப்படி என விளக்கி பதிவு போட தெரியாது. படித்தவுடன் எனது மனதில் தோன்றிய உணர்வை பதிவாக போடுகிறேன். இதே போல அனைத்து மாதங்களிலும் தொடருமாறு அண்புடன் கேட்கிறேன்

    ReplyDelete
  38. பலப்பல ஆண்டுகளுகளுக்கு முன்பு ஒரு காலத்தில் வெளியாகி, அனைவரது ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற 'சிங்கத்தின் சிறுவயதில்' என்ற தொடரைப் படித்ததைப் போன்றதொரு நிறைவும், மகிழ்வும் - இப்பதிவைப் படிக்கும்போதும்!! அர்த்தசாமத்திலும் கண்விழித்து எழுதி வழங்கிய உங்கள் அன்புக்கு நன்றி எடிட்டர் சார்!

    பதிவின் ஆரம்பமே கெக்கபிக்கே ரகமென்றால், இறுதியில் அந்த நிலவறையிலிருந்து புத்தகங்கள் எல்லாம் நீரில் மூழ்கியதைப் படித்தபோது நெஞ்சு கனத்துப் போனது!

    'கெஸ்ட் ஆஃப் ஹானர்' நண்பர்கள் செனாஅனா & கார்த்திகேயன் இருவரும் மீண்டும் எனது வாழ்த்துகள்! ( ட்ரீட்டு க்ரீட்டு இல்லீங்களா பிரண்ட்ஸ்?.. ஹிஹி!)

    ReplyDelete
  39. //சிக்கன் என்று தென்பட்ட ஏதோவொரு சமாச்சாரத்தை ஆர்டர் பண்ணி வைத்தேன் ! சாப்பாட்டுக்காகக் காத்திருந்த வேளையில், நமது மார்க்கெட் பற்றி ; நமது சர்குலேஷன் பற்றியெல்லாம் அக்கறையாய் விசாரித்தார்கள் ! அவையெல்லாம் நாம் 20000 பிரதிகள் விற்று வந்த நாட்களெனும் போது பந்தாவாய் "டொன்டி தவுசண்ட்" என்று சொன்னேன் ! "ஓஹோ.." என்றவர்களிடம் - "நீங்கல்லாம் எவ்ளோ விற்பீங்க சார் ?" என்று கேட்டேன் ! ஆறிலக்கங்களில் ஒரு முரட்டு நம்பரை அவர் சொன்ன போது "ஹி..ஹி.." என்றபடிக்கே சகல துவாரங்களையும் மூடிக் கொண்டேன் !!  அதற்குள் சப்லையர் ஒரு முரட்டு கும்பா நிறைய ஏதோ பசை மாதிரியான திரவத்தைக் கொணர்ந்திருக்க - எனக்கு பார்க்கும் போதே கிறுகிறுத்தது !! முட்கரண்டியையும், கத்தியையும் கையில் தந்து விட்டு அவர் அகல - "இதில் சிக்கனைத் தேடித் பிடிக்க ஒரு மீன்பிடி வலையிலே பொருத்தமாயிருக்கும் ?" என்ற நினைப்பு தான் மண்டைக்குள் ஓடியது ! கிளம்பும் முன்பே முட்கரண்டியால் சாப்பிடும் வித்தைகளை  புளியோதரையிலும், சாம்பார் சோற்றிலும் முயற்சித்திருந்தேன் தான் - வீட்டில் ! ஆனால் கொழ கொழ வென்றிருக்கும் அந்தப் பசையை மடக் மடக்கென்று குடித்து விட்டால் தேவலாமோ என்றே தோன்றியது ! வாயில் வைத்தால் - உப்புமில்லை ; காரமுமில்லை ; சுத்தமான வெண்களிமண்ணைச் சுவைத்தது போலவே இருந்தது ! அவர்களோடு ஒரு பக்கம் பேசிக் கொண்டேயிருந்தாலும், மண்டை முழுக்க - இந்தக் கொப்பரை நிறைய மிதக்கும் கன்றாவியை விழுங்கிவிட்டு வாந்தியெடுக்காது வண்டியோட்ட வேண்டுமே - தெய்வமே !!//ஹஹஹா....சிரிச்சு மாளல தெய்வமே....சார் ஸ்பைடரோட அந்த ௐரே இதழ 35 வது ஆண்டுவிழா சிறப்பு மலரா வெளியிடலாமே...ராணி காமிக்ச பிடிக்காததுக்கு காரணமே ஜேம்ஸ்பாண்ட்தான அன்றய வயதில்...ராணில ஜேம்சுக்கு அடுத்த கதய மட்டும் வாங்குவேன் ...ஜேம்ஸ் வந்தா பின்னாடி அட்டயயோ...பின் அட்டயின் உள் பக்கத்தயோ பார்த்து சந்தோசபடுவேன்...நம்ம தானைத்தலைவனயோ... ஆர்ச்சியயோ...மாயாவியயோ...லாடேவிட்டயோ மிஞ்ச கதைகள்தான் ஏது அன்றய பொற்கால காமிக் உலகில்.....தண்ணில அவிய ஊராம போயிருந்தா நம்ம காமிக்சுக்கு இடை காலங்களில் தொய்வு ஏற்படாம போயிருக்குமோ எனும் எண்ணம் மேலோங்குது....சார். ஸ்பைடர் இல்லாம நாம இல்ல...அதால...அதால...அதனால சிறப்பிங்க இந்த 35வது ஆண்டு ஈரோட்டு கொண்டாட்டத்ல அதிரடி சிறப்பா நாம ஏன் அந்த குண்டு ஸ்பைடர பாட்டு உற்சாகத்த கூட்டக்கூடாது...ஆப்பிரிக்க சதி விளம்பரங்கள கண்லயாவது காட்டலாமே சார்....நித்தமொரு யுத்தம் வண்ணத்ல மிளிர்வத பாத்தா லார்கோவ மிஞ்சும் போலவே....ஆக்சன் ஸ்பெசல் போல வே ற முளுநீளக்கதய அங்க தூச தட்னா நாமும் ஆச்சம்மா என சந்தோச உதறல் உறும ஆவன செய்வீர்களா...

    ReplyDelete
  40. இந்த பதிவு படிக்க படிக்க மிக சுவையாக இருந்தது, சார்!

    ReplyDelete
  41. இந்த முறையும் மதியம் கறிச்சாப்பாடு சாப்பிட முடியாது போல். ஹீம். மக்களே சனி இரவு ஏதாவது நல்ல ஒரு ஹோட்டலில் (ஜூனியர் குப்பன்னா தவிர) நான்-வெஜ் சாப்பிடலாமா? அதாவது இரவு மரத்தடி மீட்டிங்க்கு பிறகு.?

    ReplyDelete
    Replies
    1. நீங்க வெஜ் சாப்பிடலாமே!

      Delete
    2. பரணி. என்னிக்கு வந்துட்டு எப்ப கிளம்பறீங்க?

      Delete
    3. Friday night we will reach there and Saturday night 11.40 returning: one day visit

      Delete
    4. பத்மநாபன் @ மதியம் ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் வெஜ் தான் :-)

      Delete
    5. சனிக்கிழமை அன்று இரவு அனைத்து நண்பர்களுடன் இணைந்து மீண்டும் வெஜ் என்றாலும் ஓகே தான்.

      Delete
    6. நம்ப ஸ்டாலின் சாருக்கு தெரியாத புரோட்டா கடையா....
      பரணி சாப்ட்ருவோம்...

      ஆனா பாருங்க. நம்ப பர்மாகடை டேஸ்ட் லாம் வராதுப்பா....

      அதுசரி தனியா வர்றதுன்னு முடிவாக்கும்.....

      Delete
    7. கொங்கு பரோட்டா ஸ்டால் என்று கேட்டுப் பாருங்கள் சார் ; அலை மோதுகிறது கூட்டம் ! என் தங்கை பையன் கூட்டிப் போனான் ஒருவாட்டி ! அசைவப் பிரியர்களுக்கு செம !

      Delete
    8. அப்ப கொங்கு பரோட்டா கடைதான் சனிக்கிழமை இரவு.

      Delete
    9. லாப்பா, கொத்து புரோட்டா .....

      Delete
    10. ///கொங்கு பரோட்டா ஸ்டால் என்று கேட்டுப் பாருங்கள்///

      கொங்கு புரோட்டா புகழ் சிவகாசி வரையிலும் பரவிருச்சா!!

      Delete
  42. https://www.thenewsminute.com/article/1972-tn-publisher-has-been-printing-comics-tintin-and-asterix-tamil-104990

    Today's article in bangalore based new site.

    ReplyDelete
    Replies
    1. Yes sir...was done sometime back...!

      Delete
    2. Still feel our catalogue is not being exposed to full in any article as they take quite a time on steel law.

      Delete
    3. இந்த article வரப்போகுதுன்னு சொல்லவே இல்லை.
      தெளிவான, நல்ல ஆங்கில கட்டுரை.

      Delete
    4. This was a far better attempt than most ; for a newcomer the fascination towards The Steel Claw is quite understandable I guess !

      Delete
    5. பேட்டி எடுக்கப்பட்டது பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்பாய் சார் & பொதுவாய் என்னமாதிரியான என்னமாதிரியான முக்கியத்துவம் தந்து பிரசுரிப்பார்களோ என்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை ! நிறைய கேள்விகளாய்க் கேட்டு விட்டு இறுதியில் மாயாவி பற்றி மட்டும் எழுதிட முனைந்துள்ளோரும் உண்டு ! So என்ன மாதிரியான கட்டுரையாக இது வெளிவரும் என்று தெரியாத நிலையில் வாயைத் திறக்க தோன்றவில்லை இங்கே !

      நம் வாசகர்களைப் பற்றி பேசிட எல்லா பேட்டிகளிலும் முயற்சித்துள்ள போதிலும் அதனையும் நுழைக்க நேரம் எடுத்துக் கொண்டது தான் icing on this cake !!

      Delete
  43. உத்தம புத்திரன் :

    யெல்லோ டாக்கின் சமாதானக் குழாயின் உவ்வே ஒப்பந்தங்களின் கலகலப்புகளோடு தொடங்கி,
    ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான குதிரைப்படையின் கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளின் சிரிப்புகளோடு பயணித்து.,
    கிறுக்கு ஓநாய், சீக்காளி கழுகு, சினைப் பன்றி போன்ற செவ்விந்திய தலைகளுடைய சம்பிரதாயங்களின் ஹிஹிஹிக்களோடு தோள் நின்று,
    டெர்ரிக் ப்ளாயிடின் துரோகத்தோடு பின்னி.,
    இரட்டை இறகில் ஆரம்பித்து.. ஒற்றை இறகு , இறகில்லா , ஒற்றைப்புடைப்பு , வீங்கின கருங்கண் இப்படி பல அவதாரமெடுத்து இறுதியில் வாந்தி எடுத்த நரியாக மாறும் அந்த செயன்னீப் போராளியின் லாவகங்களில் கிச்சுகிச்சு ஏற்படுத்தி..,
    மொத்தத்தில் அட்டகாசமான நகைச்சுவை விருந்து இந்த உத்தமபுத்திரன்.!

    இருக்கோ இல்லையோ தண்டனைப்படி உரித்தே ஆகணும்னு உருளைக் கிழங்கு தோலை பாவ்லாவாக உரிப்பது, (அதிலும் மெல்லிசாய் உரிப்பதாய் பாவ்லா பண்ணணுமாம்), யெல்லோ டாக்கின் சமாதானக் குழாயைப் பார்த்து அனைவரும் தெறித்து ஓடுவது..., கர்னல் தன் மகனிடம் கறாராய் இருப்பது போலவே தலைமையக ஜெனரலும் இருப்பது..,
    கருமமே கண்ணாய் இருக்கும் தொப்பி வியாபாரியும் சைனா லான்ட்ரீ மேனும் ... ஹைய்யோ ஹைய்யோ ..சிரிக்க நிறைய இருக்கு பாஸ்..!
    மிதீயை வெள்ளித்தாளில் காண்க..!

    உத்தமபுத்திரன் - புத்தி சிகாமணி

    பாரிசில் ஒரு கௌபாய் :

    மேற்கத்திய கதாசிரியர்களுக்கு எழுத்துச் சுதந்திரம் நிறையவே உண்டு போல.!
    ப்ரான்ஸில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட லிபர்ட்டி சிலையை மையமாக வைத்து காமெடி செய்திருக்கிறார்கள்..!
    நன்கொடை வசூலுக்காக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட லிபர்ட்டியின் கை பாகத்தை ஐஸ்க்ரிம் விளம்பரம் என்று நினைத்து அமெரிக்கர்கள் அடிக்கும் லூட்டி சூப்பர்.!
    அப்புறம் வழக்கம்போல சிலையை நிறுவ விடாமல் தடுக்கும் கும்பலின் முயற்சிகளை முறியடித்து ப்ரான்ஸிலிருந்து சிலையை அமெரிக்கா கொண்டுவர உதவுகிறார் லக்கி லூக்..!
    வன்மேற்கை தாண்டியிராத நம்ம லக்கியை கப்பலில் தூக்கிப்போட்டு சித்ரவதை செய்து ப்ரான்ஸ்க்கு கூட்டிப் போய் வந்திருக்கிறார்கள்..!

    லக்கி லூக்கின் மிக லேட்டஸ்டான ஆல்பம் இது. .. நல்ல ஜாலியான கதை.!

    பாரிஸில் ஒரு கௌபாய் - ஜாலி ட்ரிப் வித் ஜாலி

    ReplyDelete
    Replies
    1. பாரிசில் ஒரு கௌபாய் கதையின் உருவாக்கத்தில் ஒரு சின்ன நோஸ்டால்ஜியா ஆசை இருந்திருக்கும் போலும் படைப்பாளிகளுக்கு ! தங்களின் ஆதர்ஷ நாயகனை பாரிஸின் வீதிகளில் உலவச் செய்து அதை நிறைவேற்றியிருக்கிறார்கள் !

      Delete
  44. லண்டன் அனுபவம் அருமை விஜயன் சார்.

    ReplyDelete
  45. விஜயன் சார், ஓவ்வொரு ஆண்டு லயன் ஆண்டு மலருக்கு லக்கி லூக் கதையை மட்டும் வெளியீடுகள். ஆண்டு மலர் என்றால் சிரித்து சந்தோஷமாக கொண்டாட வேண்டும் அதற்கு லக்கி லூக் கதைகள் மிகச்சரியான தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாசகர்களுக்கு சலிப்புத் தட்டாத வரைக்கும் எனக்கு டபுள் ஓ.கே சார் !

      Delete
    2. லக்கி லூக்கிற்கான ஸ்லாட்டை அதிகரிக்கலாம் சார்.

      Delete
    3. இந்தாண்டில் மூன்று சார் ! டெக்ஸ் வில்லருக்கு அடுத்தபடியாக ஜாஸ்தி ஸ்லாட்ஸ் பெற்றுள்ளவர் ல. லூ தானே ?

      Delete
    4. லனா லூனா நல்லா விக்கிற பார்ட்டியும் கூட....

      Delete
  46. விஜயன் சார், ஆண்டு மலர் அட்டைப்படத்தில் பாரிஸில் ஒரு கௌபாய் என முன் அட்டையிலும் உத்தம புத்திரன் கதை பின் அட்டையிலும் உள்ளது. ஆனால் முன்பக்கத்தை திறந்தால் உத்தம புத்திரன் கதை வருகிறது. உங்களின் அறிவியல் பூர்வமான விளக்கத்தை கேட்டு சிரிக்க ஆர்வமாய் உள்ளேன். :-)

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே சிம்பிள் சார் ; அட்டைப்படங்களுள் எது பெஸ்டோ அது முன்னட்டைக்குத் தேர்வானது ; கதைகளுள் எது பெஸ்டோ அது முதற் வாசிப்புக்கெனத் தேர்வானது !

      Delete
    2. லக்கி அட்டை டெக்ஸ்க்குக்குடெக்ஸ்., அட்டை லக்கிக்கும் மாறாம இருந்தா சரி.

      Delete
  47. உத்தம புத்திரன் அட்டகாசம்.. என்னுடைய ரேட்டிங் 12/10.
    பாரீசில் ஒரு கௌபாய் 9/10
    நீரில்லை நிலமில்லை.. அட்டகாசமான சஸ்பென்ஸ் திரில்லர்.. அட்டகாசமான கதைக்களம் .. பரபர சம்பவங்கள்.. சூப்பர்.. 9.3/10
    நித்திரை மறந்த நியூயார்க்.. இந்த மாதிரியும் ஒரு கதை எழுத முடியுமா என திகைக்க வைத்த கதை.. பாராட்ட வார்த்தைகள் இல்லை. Fight club ஹாலி வுட் படத்தின் கதையை நினைவு படுத்துகிறது. இருந்தாலும் Fight club ன் முதல் ruleஐ பன்பற்றியே ஆக வேண்டும் என்பதால் என்னுடைய ரேட்டிங் 9.75/10

    ReplyDelete
    Replies
    1. நம் வாசிப்புக் களங்கள் ரொம்பவே விசாலமாகி வருவது புரிகிறது ! மகிழ்ச்சி !!!

      Delete
  48. லக்கி லூக் நல்லா இருந்தாலும் குழந்தைகள் படிக்க கொடுக்க முடியாதபடிக்கு வார்த்தைகள் உள்ளதாக நான் நினைக்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. சிரமமா ? விரசமா ? எவ்வித சிக்கல் என்று சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வோம் சார் !

      Delete
    2. சிரமமே என்ற தலைப்பில் பேசுகிறார்..

      Delete
  49. நித்திரை மறந்த நியூயார்க் :

    ஏகப்பட்ட எதிர்ப்பார்போடு வெளியான கதை.! அதே அளவு விளம்பரமும் ஆவலைத் தூண்டியிருந்தது.!

    1930 களின் நியூயார்க் நகரத்தில் ஒரு பாடாவதி லாட்ஜில் கதை தொடங்குகிறது.!
    ஜேகே ரஸ்ஸல் என்னும் தன் பெயரைத் தவிர கடந்தகாலம் எதுவும் நினைவிலில்லாத ஒரு நபர்தான் ஹீரோ(இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்).! கால் ஊனமுற்ற ஒரு முதியவருடன் தங்கியிருக்கிறான்.! The Loser என்ற நாவல் ஒன்றையும் எழுதிவருகிறான்.!

    இந்நிலையில் சரக்கு எங்கே எனக்கேட்டு இருவர் ரஸ்ஸலை அவ்வபோது அடி பின்னியெடுக்கிறார்கள்.!
    ஏதோ ரவுடிப் பயல்கள் என்று நினைத்தால் அவர்கள் போலிஸ் ஆபீசர்களாம்..!

    ரஸ்ஸலுக்கு குழப்பத்திற்கு மேல் குழப்பம். அவனுடைய நினைவில் இருப்பதெல்லாம் தன்னுடைய பெயரும் ஒரு அழகான இளம்பெண்ணின் (கொஞ்சம் முதிர்கன்னிதான்) முகமும்தான்..!
    எதேச்சையாக அந்தப் பெண்ணை சந்தித்து பின் தொடர்கிறான்.! அவள் தன்னுடைய காதலி எனத் தெரிந்துகொண்டு காதல் வசனங்களைப் பேச எத்தனிக்கும்போது, அவனுக்கு சிகிச்சையளித்து வந்த மனோதத்துவ டாக்டர் வந்து உன்னை தலையில் சுட்டு இந்த கதிக்கு ஆளாக்கியதே அவள்தானடா முட்டாப்பயலே என்கிறார்.!
    போதாக்குறைக்கு அந்த டாக்டரும் சரக்கை அதாவது வைரத்தை என்னிடம் ஒப்படைத்துவிடு இல்லையேல் இருவரையும் சுட்டுவிடுவேன் என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு விரட்டுகிறார்.!
    இப்போது ரஸ்ஸலுக்கு தலை சுற்றுகிறது.!
    குதிரை ரேஸ் மைதானத்தில் பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது.. ரஸ்ஸல், லானா ஜோடியை டாக்டர் கொல்ல விரட்டுகிறார்.. ஓடிக் கொண்டிருந்த குதிரைகள் ரேஸ் பைக்குகளாக மாறுகின்றன.. தொடர்ந்து விபத்தொன்று நடக்கிறது.. இப்போது நமக்கு தலை சுற்றுகிறது.!

    இதுவரை படித்ததை வைத்து கதையின் முடிவை பலவாறு யூகித்து வைத்திருந்தேன்..!

    ஆனால் அந்தக் கடைசி பக்கங்களில் எந்த பரபரப்பும் இல்லாமல் குழப்பம் முடிச்சவிழ்க்கப்படும்போது.... அடேங்கப்பா இப்படியெல்லாம்கூட சிந்திப்பார்களா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.!
    முதல்முறை படிக்கும் யாராவது இந்தக் கதையின் முடிவை முன்கூட்டியே யூகித்துவிட்டேன் என்று சொன்னால் அது நூறுசதம் பொய்யாகத்தான் இருக்கும்.! நூற்றி ஐந்து பக்கங்ளுக்கு அந்தக் கோணத்தில் நம்மை சிந்திக்கவே விடாமல் கடைசி ஐந்து பக்கங்களில் அந்த முடிவுக்கான வியாக்யானங்கள் ஆங்காங்கே இருப்பதை சுட்டிக்காட்டி அழகாக முடித்திருக்கிறார்கள்.!

    சித்திரங்கள் அடடே ரகம்.! சாப்ளின், ஹெரால்டு லாய்டு, கீட்டன் படங்களில் பார்த்திருந்த அந்நாளைய நியூயார்க்கை கண்முன்னே கொண்டுவந்திருக்கும் ஓவியருக்கும்., பழசை மறந்துவிடும் பழைய கருவை எடுத்துக்கொண்டு முற்றிலும் புதியபாணியில் கதையைச் சொல்லியிருக்கும் கதாசிரியருக்கும் பலத்த கரகோசங்கள்.!

    நித்திரை மறந்த நியூயார்க் - சபாஷ்.

    ReplyDelete
    Replies
    1. // சாப்ளின், ஹெரால்டு லாய்டு, கீட்டன் படங்களில் பார்த்திருந்த //

      அடேங்கப்பா.

      Delete
    2. //முதல்முறை படிக்கும் யாராவது இந்தக் கதையின் முடிவை முன்கூட்டியே யூகித்துவிட்டேன் என்று சொன்னால் அது நூறுசதம் பொய்யாகத்தான் இருக்கும்.! //

      +1

      முதல் 80 பக்கங்களை இரண்டு நாட்களில் கடந்தவனுக்கு தொடர்ந்த 30 பக்கங்களை எழுத நிறையவே நேரம் தேவைப்பட்டது சார் ! அந்த க்ளைமாக்சின் வீரியம் அப்படி !

      எது எப்படியோ - இத்தகைய முயற்சிகளில் மண்டையை நுழைக்கும் தகிரியம் நமக்கு சாத்தியப்பட்டிருப்பது செம அல்லவா ?!

      Delete
    3. // முதல்முறை படிக்கும் யாராவது இந்தக் கதையின் முடிவை முன்கூட்டியே யூகித்துவிட்டேன் என்று சொன்னால் அது நூறுசதம் பொய்யாகத்தான் இருக்கும்.! //
      உண்மைதான் முடிவு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்து விட்டது.
      நம் கணிப்புகளை பொய்யாக்கி முடிவில் புதுமை படைப்பதுதான் படைப்பாளிகளின் உண்மையான சவால்.

      Delete
    4. நல்ல விமர்சனம் கண்ணா

      Delete
  50. Spiderman :far from home வெளிவந்த நேரமும் தங்களின் லண்டன் அனுபவ பதில் வந்த நேரமும் ஏக பொருத்தம்

    ReplyDelete
    Replies
    1. குருவி ... பனம்பழம் சார் !

      Delete
  51. நித்திரை மறந்த நியூயார்க்:
    என்ன மாதிரி விமர்சனம் இடுவது,ஆனால் வாசித்து முடித்ததும் பல்வேறு உணர்வுகளையும்,சிந்தனைகளையும் ல் எழுப்புகிறது,
    முடிவு இப்படியும் யோசிக்க முடியுமா,இதற்கெல்லாம் வாய்ப்புண்டா,இதற்கு இப்படி ஒரு கோணம் உள்ளதா? எனப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
    மையப் பாத்திரத்தின் முடிச்சு அவிழும்போது நமக்கு அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் எழுகிறது.
    வாழ்வின் சில நேரங்களில் எல்லாமே கற்பனையோ என்ற சிந்தனை சில நேரங்களில் எழுவதுண்டு,அதையே ஒரு களமாக தேர்ந்தெடுத்தது முற்றிலும் புதுமை.
    31 ம் பக்கத்தில் முதல் பேனலில் வரும் காட்சி படைப்பாளி & ஓவியரின் வித்தியாசமான இரசனையை காட்டுகிறது.
    வசனங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளாக ஜொலிக்கின்றன.
    "தெய்வமே ஒரு கண்றாவியான சினிமா போல என் வாழ்க்கையும் இப்படி முடிஞ்சிடக் கூடாதே !"
    "நானே ஒரு ஆவிதானோ என்று நினைக்கத் தோன்றும்".
    " சீட்டைக் கலைத்துப் பிரித்து போடுவது விதிதான் என்றாலும் ஆடும் பொறுப்பு மனுஷனின் கையில்தானே உள்ளது?"
    "திரியில்லாத மெழுகுவர்த்தி போல.. ப்யூஸ் போன பல்பை சுமந்து நிற்கும் விளக்கைப் போல நம் ஜீவனங்களுக்குப் பெருசாய் அர்த்தமே கிடையாதுதான் !"
    "சில ராத்திரிகளில் கடந்த காலம் நம் கதவைத் தட்டினால் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் தான் !"
    "இந்த புத்தகம் தன்னைத்தானே எழுதிக் கொண்டு போகிறது."
    "தலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு பழைய பாடலைப் போல."

    நித்திரை மறந்த நியூயார்க் ஒரு இருள் உலகில் பயணித்த உணர்வை அளித்தது.

    யார் கண்டது ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு கோணங்கள் தோன்றலாமே.

    தற்போது தலைக்குள் தோன்றுவது இதுதான் மீண்டும் இந்த உலகத்தில் ஒரு பயணம் சென்று வா என்பதே.

    எமது மதிப்பெண்கள்-10/10

    ReplyDelete
    Replies
    1. அட மறந்துட்டேனே,சித்திர பாணிகள் கண்ணாடியின் பிரதிபலிப்பு போல் அப்படி ஒரு தரம்...

      Delete

    2. இது போன்ற கதைகளில் பணியாற்றும் போது ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டுக்கு இயன்றமட்டிலும் தலைவணங்குவதே உத்தமம் என்று உணர்ந்துள்ளேன் சார் ! So வரிகள் தமிழில் இருப்பினும் கதாசிரியருக்கே அவற்றின் வீரியத்தின் கிரெடிட் சார்ந்திடும் ! நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள எல்லா வரிகளும் நானும் ரசித்தவை சார் !

      And more than anything else - உலகே பொறாமைப்படும் மினுமினுக்கும் நியூயார்க் நகருக்கும் ஓர் இருண்ட பக்கமுண்டு என்று சித்தரித்திருக்கும் பாணியையும் ரசித்தேன் !

      Delete
    3. ரவி sir அருமையான விமர்சனம். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
    4. ///சீட்டைக் கலைத்துப் பிரித்து போடுவது விதிதான் என்றாலும் ஆடும் பொறுப்பு மனுஷனின் கையில்தானே உள்ளது?"///

      அருமையான வரிகள்!!

      Delete
    5. ///நித்திரை மறந்த நியூயார்க் ஒரு இருள் உலகில் பயணித்த உணர்வை அளித்தது.

      யார் கண்டது ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு கோணங்கள் தோன்றலாமே.///

      உண்மை ரவி..!

      Delete
    6. கண்ணரே அந்த 31 ம் பக்க முதல் பேனல் காட்சியைப் பாருங்க,ஓவியரின் திறன் பளிச்சிடும்,முற்றிலும் மாறுப்பட்ட சிந்தனை,வெகுவாக கவர்ந்தது.

      Delete
    7. ///கண்ணரே அந்த 31 ம் பக்க முதல் பேனல் காட்சியைப் பாருங்க,ஓவியரின் திறன் பளிச்சிடும்,முற்றிலும் மாறுப்பட்ட சிந்தனை,வெகுவாக கவர்ந்தது.///

      உண்மைதான்! மழைநீரில் தெரியும் அந்தத் தலைகீழ் பிம்பங்கள் வித்தியாசமான சிந்தனையின் பிரதிபலிப்பே! ஆனால் ஓவியர் அதை வரைந்த விதத்தில் ஒரு பிழை செய்திருக்கிறார்! அது என்னவென்று யாராவது சொல்லுங்களேன் பார்ப்போம்?

      சரியான பதில் சொல்லுபவர்களுக்கு EBFல் ஒரு பரிசு உண்டு!

      Delete
    8. //சரியான பதில் சொல்லுபவர்களுக்கு EBFல் ஒரு பரிசு உண்டு!//

      ஆயிரம் "பன்" னாச்சே ,ஆயிரம் "பன்"னாச்சே..! சொக்கா! எனக்கில்லை..எனக்கில்லை..இன்னும் புக்கை படிக்கலையே!!!!

      Delete
    9. ரஸ்ஸல் அந்த மழையில் சிகரெட் பற்ற வைக்க முயல்கிறாரே அதுவா?!

      Delete
    10. // இன்னும் புக்கை படிக்கலையே //
      நல்லவேளை நீங்க இன்னும் படிக்கலை அய்யா...

      Delete

    11. @EV சார்.
      ஜேக்கின் பிம்பம் மழைநீரில் தலைகீழாக விழுகிறது.அப்படியானால் பார்வைக் கோணம் தேங்கிய மழைநீரை நோக்கியுள்ளது.
      இப்போது ஜாக்கை பார்த்தபடி வரும் இருவரின் பிம்பமும் முதுகைக்காட்டியபடி இருக்காது.அவர்களின் பிம்பம் முகம் தெரியும்படி, ஜேக்கின் தலைகீழ் பிம்பத்திற்கு அருகில் நேராக தெரியவேண்டும்.

      Delete
    12. @ Arivarasu @ Ravi

      //ரஸ்ஸல் அந்த மழையில் சிகரெட் பற்ற வைக்க முயல்கிறாரே அதுவா?!//

      இல்லீங்க! சிகரெட்டோ, லைட்டரோ அணைந்துவிடாதபடிக்கு தொப்பி பாதுகாப்புக் கொடுக்கும்!

      @Govindaraj perumal

      இல்லீங்க! முதுகுதான் தெரியும்! ஓவியர் அதை வரைந்திருப்பது சரியே! ஆனாலும் உங்கள் முயற்சியைப் பாராட்டி ஆறுதல் பரிசு (அன்பே வா படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய அதே மைசூர் சாண்டல் சோப்பு) வழங்கப்படும்! ம்ம்ம்ஹா...!

      Delete
    13. மழைத்துளிகள் விழுவதால் நீரில் தெரியும் அந்த பிம்பங்கள் சற்றே கலங்கியது போன்று இருக்க வேண்டும்,ஆனால் தெளிவாக உள்ளது சரியா ஈ.வி.

      Delete
    14. @ Arivarasu @ Ravi

      வாவ்!! மிகச் சரியான பதில்!! வாழ்த்துகள் ரவி அவர்களே!!!

      உங்களுக்கான பரிசை ஆகஸ்டு 3 அன்று ஈரோட்டு விழாவில் தகுந்த அடையாளச் சான்றுகளைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம்! :)

      Delete
    15. வாழ்த்துகள் ரவி..!!

      குருநாயரே..
      நான் இந்த பதிலை ஏற்கனவே கண்டுபுடிச்சிட்டேன். ! எழுதுவதற்கு நேரம் கூடிவரவில்லை.. நானும் அடையாளச் சான்றுகளை கொண்டுவரலாமா..!?:-)

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
  52. https://www-thenewsminute-com.cdn.ampproject.org/v/s/www.thenewsminute.com/article/tn-publisher-has-been-bringing-international-comics-tamil-nearly-50-years-104990?

    ReplyDelete
  53. சார்! ஈரோடு எக்ஸ்பிரஸ் முன்பதிவிற்கு கடைசி நாள் எப்போது சார்?

    ReplyDelete
  54. நித்திரை மறந்த நியூயார்க் அட்டகாசம். 9/10 எனக்கு தான் முடிவை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. நீங்கள் சொன்னது போல கடைசி டுவிஸ்ட் கணிக்க முடியவில்லை . கிராஃபிக் நாவலில் இன்னும் ஒரு ரத்தினம். எது கதை எது நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. ///எது கதை எது நிஜம்.///

      KUmar Salem...

      அந்த கதை முழுக்க நிஜம்தான்..
      அதேபோல
      அந்த நிஜம் முழுக்க கதைதான்..!


      (இதுக்கு அந்த கி நா வே பரவாயில்லைன்னு சொல்றிங்கதானே குமார்..):-)

      Delete
    2. கண்ணா @ இதுக்கு நம்ப ஆசிரியர் எவ்வளவோ மேல் :-)

      Delete
    3. இல்லை கண்ணா நீங்கள் சொல்வது தான் கதையின் கான்செப்ட். அருமை

      Delete
  55. நீரில்லை நிலமில்லை ஒரு த்ரில்லர் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. மெதுவாக நகரும் கதை பாதிக்கு மேல் வேகம் எடுத்து நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது. அருமை என்னை கேட்டால் இது சந்தா A வில் வரவேண்டிய கதை அல்ல இது இடம் பிடித்திருக்க வேண்டியது கிராஃபிக் நாவலில். எனது மதிப்பெண் 9.5/10. ஆக மொத்தம் ஜூலை நிறைவான மாதம். இரண்டு புத்தகங்களு மே மனதை கனக்க வைத்தன. இரு புத்தகங்களின் சித்திரங்கள் அற்புதம்.நல்ல வேளை lucky இருந்ததால் தப்பித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நண்பர்கள் சிலர் சொன்னது போல ரசனையில் முதிர்ந்த வர்களுக்கு என்று print செய்து இருக்க வேண்டும்.

      Delete
  56. இதோ வழக்கம்போல் படித்து முடித்ததும் தாமதமான எனது ஏப்ரல் மாத விமர்சனம்,

    1. பரலோகத்திற்கொரு படகு - 9/10

    மற்றுமொரு சிம்பிலான ஆனால் ஜாலியான கதைக்களத்தில் லக்கிலூக். வசன நடை காலத்திற்கேற்ப trendy ஆக இருப்பது பலம். கப்பல் கேப்டனின் காபி sequence, தூக்கத்தில் போர்டர்கள் பார்சல்களை நதியில் கொட்டுவது என பல சிறு சிறு நகைச்சுவை ஜாலங்கள் லக்கி லூக் கதைகளில் மட்டுமே சாத்தியம். இம்முறையும் ஜெயமே.

    2. புனித பள்ளத்தாக்கு - 8.30/10

    முதல் மற்றும் மூன்றாவது கதைகள் அதிகம் score செய்கிறது. மீண்டும் ஒரு பாக்கெட் dynamo. மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே தொகுப்பாக bindingல் படிப்பது சுகம்.

    3. பச்சோந்தி பகைவன் - 8.30/10

    வில்லன் உறுமாறி ஏமாற்றுவது o.k. ஆனால் நினைத்தவுடன் உயரமாகவும், குள்ளமாகவும், பருமனாகவும் மாற்றம் காண முடிவது எவ்வாறு சாத்தியம். இப்படி கதையில் பல இடங்களில் பூச்சுற்றல் ஏராளம். இருந்தாலும் தங்கு தடையின்றி வேகமாக நகரும் பக்கங்கள் கதையை கரைசேர்த்து விடுகிறது.

    4. மரண வைரங்கள் - 8.25/10

    இதுவரை படிக்காத கதை. மற்றவர்களுக்கு உதவும் பிரின்ஸின் மனிதாபிமானம் இக்கதையிலும் பிரதிபலிக்கிறது. இயல்பாக தொடங்கிய கதை பின்பு வேகமெடுத்து, இறுதியில் சப்பென்று முடிந்து விட்டது. பிரின்ஸ்க்கும், பார்னேவுக்கும் பெரிதாக வேலை இல்லை. இம்முறை பிரின்ஸ் சற்று ஏமாற்றமே.

    5. குளிர்கால குற்றங்கள் - 8/10

    கதை சிறு சிறு சம்பவங்களாக நின்று நின்று நகர்கிறதே தவிர ஒரு கோர்வை இல்லை. கார்ட்லேண்டின் யதார்த்த வாழ்க்கையை கமர்சியல் இன்றி கொடுக்க முயற்சித்து தோற்றிருக்கிறார் படைப்பாளி.
    அடுத்த வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தெரிந்து விடும் உண்மை நிலை. இம்முறை தடுமாற்றமே.

    ReplyDelete
  57. நி. ம. நி. சொல்லப்படுகிறது போனா முடிவு மட்டுமல்ல. முழுக் கதையுமே நான்யூகித்த மாதிரி இல்லை என்பது தான் நிஜம். நன்றி. கிட் ஆர்டடின்கண்ணன் சார் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. கரூர் ராஜசேகரன்..

      அருமை.. நன்றி சார்.!

      Delete
  58. ****** தலீவர் பரணிதரனிடமிருந்து ******

    நட்புக்கு நாட்களேது...

    சிறுகதையோ..குறுங்கதையோ..நெடுங்கதையோ..டெக்ஸ் வந்தால் போதும்...அது ஹிட் என்பதை மீண்டும் நிரூபித்த சாகஸம்...இந்த குறுகிய பக்க கதையில் கூட ரேஞ்சர் ஆகும் முன் ...ரேஞ்சர் ஆகிய பின் என கலந்து கட்டி சுவையான படைப்பை படைக்க முடியும் என்பதை மீண்டும் நீரூபித்து விட்டார்கள் படைப்பாளிகள்..

    நட்புக்கு நாட்கள் ஏது...? டெக்ஸ்ற்கு
    தோல்வி ஏது..?

    ReplyDelete
  59. ****** தலீவர் பரணிதரனிடமிருந்து ******


    *நித்திரை மறந்த நியூயார்க்*


    முதல் பக்கத்திலியே சித்திரங்களை பற்றி (யும் ) ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை பற்றி படித்து விட்டு பக்கத்தை திருப்பினால் அடுத்த பக்கமே நியூயார்க் கண்முன் நிற்கிறது.அட்டகாசமான சித்திரங்கள் கதையை மேன்மேலும் ஒன்றிட துனைபுரிய வேகவேகமாக பக்கங்கள் நகர்ந்தன.கொஞ்சம் கமர்சியல் கலந்த மசாலா ..கொஞ்சம் க்ரைம்..கொஞ்சம் திடுக்..கொஞ்சம் சஸ்பென்ஸ் என கலந்து கட்டி கதை பறக்க இறுதியில் நினைத்தே பார்க்க முடியாத ,யோசிக்க முடியா வித்தியாசமான க்ளை மேக்ஸ் என முடிவு நம்புவதற்கு கொஞ்சம் கடினப்பட்டாலும் உண்மையிலேயே அசர வைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.கதையின் கடைசி பக்கமும் ,அடுத்து கதையின் கதையிது பக்கத்தையும் படித்து முடித்தவுடன் அந்த வித்தியாச முடிவும் நிஐம் தானோ என எண்ண வைத்தது மட்டுமில்லாமல் மனதில் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்பதும் நிஜமே. கதையை பற்றி சொல்ல ஆரம்பித்தால் அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்து விடுவோமா என்ற அச்சம் ஏற்படுவதால் பெவிகால் பெரியசாமி சாருக்கு சிஷ்யனாகி விடுகிறேன்.
    அதே சமயம் ,


    " இங்கே வரும் போது எல்லோருமாய் பரிசுத்தமாய் இருக்கிறோம் .ஆனால் விடைபெறும் போது அசுத்தமாகி கேவலப்பட்டு போகிறோம் "

    போன்ற வசனங்கள் படிக்கும் பொழுது யோசிக்கவும் வைக்கின்றன.மொத்தத்தில் நித்திரை மறந்த நியூயார்க் லயன் கிராபிக் நாவலில் மீண்டும் ஒரு முத்திரை பதித்த நாவல் என்பது மறுக்க முடியா உண்மை

    ReplyDelete
    Replies
    1. // " இங்கே வரும் போது எல்லோருமாய் பரிசுத்தமாய் இருக்கிறோம் .ஆனால் விடைபெறும் போது அசுத்தமாகி கேவலப்பட்டு போகிறோம் " //

      I enjoyed this line! good one!!

      Delete
    2. *****செயலாளர் மூலமாக தலீவருக்கு*****

      தலீவரே.!
      இப்போல்லாம் கி நா வுக்கு நெருங்கிய நண்பராயிட்டிங்க போல.. மகிழ்ச்சி.. பாராட்டுகள்..!!

      Delete
    3. ஏதேது,தலைவர் அடுத்து புகை சமிஞ்சை எல்லாம் விடுவார் போல.....

      Delete
  60. ****** தலீவர் பரணிதரனிடமிருந்து ******

    தி லக்கி ஸ்பெஷல்....


    உத்தம புத்திரன் என்ன சொல்றது...படிக்க ,படிக்க எத்தனை முறை வாய்விட்டு சிரித்தேன் என இந்த முறை கணக்கே இல்லை..கதையும் சரி,சித்திரங்களும் சரி ,அச்சு தரங்களும் சரி ,மொழிபெயர்ப்பும் சரி செமயோ செம என கலக்கி எடுத்து விட்டார் லக்கி...நீண்ட நாள்களுக்கு பிறகு மிக மிக மகிழ மகிழ படித்த இதழ் இந்த உத்தம புத்திரன் ..


    இனி தான் பாரீஸ் போக வேண்டும்...

    ReplyDelete
  61. ****** தலீவர் பரணிதரனிடமிருந்து எதிரணி தலீவருக்கு ******

    ஆசிரியர் அவர்களுக்கு...

    எனது பலநாள் எண்ணம் இந்த முறை ஈரோடு புத்தக காட்சி சமயம் ஈடேறிவதில் மிக்க மிக்க மகிழ்ச்சி.. என்னவென்று வினவுகிறீர்களா...அதுதான் சஸ்பென்ஸ் டெக்ஸ் இதழும்..சஸ்பென்ஸ்
    கார்ட்டூன் இத
    ழும் ...நண்பர்கள் அனைவரும் (
    90
    %) சந்தா தார நண்பர்கள் எனும் பொழுது அனைத்து இதழ்களும் சந்தாவில் கிடைத்து விட...ஈரோடு வெளியீட்டு இதழ்களும் முன்பதிவாக அரங்கத்திலியே பெற்று விட ..

    நமது ஸ்டாலில் சென்று நாம் ஏதும் புத்தகம் வாங்க முடிவதில்லையே...அனைத்து இதழ்களும் வாங்கிய இதழ்கள் ,படித்த இதழ்கள் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது... இந்த முறை அதனை தாங்கள் நிவர்த்தி செய்தமைக்கு மிக்க மிக்க நன்றி சார்...புது இதழ்களை தரிசிக்கவும் ,வாங்கவும் இந்த முறை இன்னும் ஆவலுடன் ஈரோட்டிற்கு படை எடுப்போம்...இனி ஒவ்வொரு முறையும் இதை மறவாமல் தொடருங்கள் சார்...

    ReplyDelete
  62. Salem Book Fair..........May be again in the future.

    ReplyDelete
  63. Hello friends..

    நாற்பதின் பின்பகுதியில் உள்ளதால் கண்கள் மெதுவாக பியூஸ் போகத் தொடங்கியுள்ளது. போன ஆசிரியரின் சனியிரவின் சிந்தனைகள் தலைப்பையே அவசரத்தில் சனியம்புடிச்ச சிந்தனைகள்னு படிச்சேன்.
    இங்கு பொட்டி வந்துடிச்சி. படிக்க சற்று லேட்டா ஆகிற மாதிரி இருந்ததால் புத்தகங்களை ஆபீசுக்கு எடுத்து போயி படிச்சிட்டேன். அரசு அலுவலர்கள் னாலே தியாகிகள் தானே. சென்னைல அடிச்ச வெயிலுல 5 star chocolate உருகி, வெளியே வந்து பரவி விட்டது. எகானாமிக்கலா அனுப்புரேனுட்டு ஆசிரியர் 5 star அப்பளம் அனுப்பிட்டாரோன்னு தவறா நெனச்சிட்டேன்.

    வழக்கம்போல் டெக்ஸ் டெக்ஸ் தான்... வெடிப்பதில் குட்டி டைனமைட் எல்லாம் தாண்டி இது குட்டி சாம்சங் போன்..

    நானெல்லாம் கார்ட்டூன் கதையை படிக்கும்போது கூட உர்ர்ருனு முகத்த வச்சிக்கிட்டு படிக்கிறவன். வாசகர்கள் கெக்க பிக்கனு சிரிச்சா கூட நானெல்லாம் சிடுமூஞ்சி சின்னச்சாமியா சிரிக்காம படிப்பேன். ஆனால் என்னையே சில இடங்களில் லுக் சிரிக்க வைத்தார். எனில் இந்த கதை அட்டகாசமாக வரவேற்பு பெறும்.
    நீரில்லை, நிலமில்லை சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.Excellent thriller. சற்று Hollywood movies போல அனைவரையும் சந்தேக பட வைத்தது.
    New york - new style. சற்று குழப்பமா கொண்டு போயிட்டு அவ்வளவுதான் பா. போயீ புள்ள குட்டிங்களா படிக்க வைய்யுங்கன்னு சொல்ட்டாங்க. வசனங்கள் இதற்கு யானை பலம்.

    ஆர்வமா அந்த 32 ம் பக்கத்தை தேடி ஏமாந்து போய்ட்டேன். இப்புடி சப்புன்னு போனதுக்கு யாரை திட்றதுன்னு தெரியல.
    மொத்தத்தில் ஒரு நல்ல மாதம்.

    ReplyDelete
    Replies
    1. // போன ஆசிரியரின் சனியிரவின் சிந்தனைகள் தலைப்பையே அவசரத்தில் சனியம்புடிச்ச சிந்தனைகள்னு படிச்சேன். // அசோக் ஜி செம்ம காமெடி யா எழுதறிங்க. படிச்சுட்டு வாய் விட்டு சிரித்து விட்டேன். 5 ஸ்டார் அப்பளமும் சூப்பர்.

      Delete
    2. ஹா.ஹா.ஹா..ஹாஸ்யமாக எழுதவரப் பெறுவது ஒரு வரம்...செம..""ஒரு குட்டி சாம்சங் போன்"" செம...:-)

      Delete
    3. அசோக் சார்...:-)))

      Delete
    4. ஹா.ஹா.ஹா..ஹாஸ்யமாக எழுதவரப் பெறுவது ஒரு வரம்...செம..""ஒரு குட்டி சாம்சங் போன்"" செம...:-)

      Delete
  64. www.thenewsminute.com/article/tn-publisher-has-been-bringing-international-comics-tamil-nearly-50-years-104990?

    ReplyDelete
  65. பாரீஸில் ஒரு கெளபாய்...உத்தம புத்திரன் அளவிற்கு இல்லை எனினும் ஓகே தான்...ஆசிரியர் சொல்லி வருவது போல பழைய லக்கி பழைய லக்கி தான்..அதுவும் புதிய லக்கி ,பழைய லக் கி இணைந்து வரும் பொழுது பழைய லக்கியின் அருமை நன்கு புரிபடுகிறது..

    எனி வே இந்த மாதம் அனைத்து இதழ்களும் சிறப்பே...

    நன்றி சார்..

    ReplyDelete
  66. ****** நித்திரை மறந்த நியூயார்க் *****

    யய்யா கதாசிரியரே.. எப்படிய்யா இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க?!! எங்க ஊர்ல 'இருக்கு.. ஆனா இல்லே'ன்ற கான்செப்டுல 'அ..ஆ'னு ஒரு படம் எடுத்தாங்க.. நீங்க அதையும் மிஞ்சி 'இல்லே.. ஆனா இல்லே'னு கதை சொல்லி எங்களையெல்லாம் ஒரு வழி பண்ணிப்புட்டீங்க போங்க!! பிரம்மாதம்!!

    ஒவியரய்யாவும் பின்னிப் பெடல்!! இருள்போர்வை போர்த்திய நியூயார்க்கின் பிரம்மாண்டங்களையெல்லாம் கருப்பு வெள்ளையிலேயே காட்சிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறாரு! முதல் சீன்லேர்ந்து கடேசி சீன் வரைக்கும் இருட்டு இருட்டு இருட்டுதான்! 'ஏன் இருட்டு'ன்ற காரணம் கடைசியா சொல்லப்படும்போது 'பார்ர்ரா.. இந்தப் படைப்பாளிகள?'ன்று ஆச்சரியப்பட வைக்கறாங்க!

    இறுதிப் பக்கத்தில் எடிட்டர் கொடுத்திருக்கும் அந்த 'ஒரு கதையின் கதை' விளக்கம் - அதற்கு முந்தைய 113 பக்கங்களையும் 100% அழகா நியாயப்படுத்துது!

    எல்லோருக்கும் இந்தக் கதை பிடிக்குமான்னு தெரியலை.. ஆனா பிடிச்சதுன்னா 'சபாஷ்! நீங்க வாசிப்பு அனுபவத்தின் அடுத்த லெவல்க்கு ரெடியாகிட்டீங்க'ன்னு அர்த்தம்!

    ப்பா!!!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete