Powered By Blogger

Saturday, June 15, 2019

வானவில்லின் இரு முனைகள்....!!

நண்பர்களே,

வணக்கம். வருண பகவான் மனசு வைத்தால் நாளைய பொழுது ஆசியத் துணைக்கண்டத்தின் முக்கால்வாசிக்கொரு (கிரிக்கெட்) திருவிழாவாகிடும் வாய்ப்புகள் எக்கச்சக்கம் என்பதால் நமது கச்சேரியினை இன்றே வைத்துக் கொள்ளல் நலமென்று நினைத்தேன் ! So here I am !! 

மாதத்தின் ஒரு பாதி நகன்றிருக்க, எதிர்நோக்கியுள்ள ஜூலை பக்கமாய் பார்வையினை ஓட விடுவதில் தப்பில்லை என்று பட்டது ! So நமது ஆண்டுமலர் மாதத்தினை வரவேற்கக் காத்துள்ள இதழ்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சலாமா folks ? ஜூலை என்ற உடனேயே பிறந்தநாள் கேக்கின் முன்னே குந்தியிருக்கும் சிங்கமும், அது கொணரும் நினைவுகளுமே மனதில் அலையடிப்பது வாடிக்கை ! முழுசாய் 35 ஆண்டுகளுக்கு முன்பாய்த் துவங்கிய பயணம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாய் 35 மெழுகுவர்த்திகள் செருகக்கூடிய கேக்கெல்லாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்பதால் 35 என்ற நம்பரைப் பெருசாய்ப் போட மட்டுமே முனைந்துள்ளோம் - பொன்னனின் கைவண்ணத்திலான "லக்கி ஆண்டுமலர்" அட்டைப்படத்தினில் !! 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய இதே வேளையில்  - "வருகிறது : லயன் காமிக்ஸ் - "கத்தி முனையில் மாடஸ்டி ! விற்பனையாளர்கள் தேவை !!" என்ற அரைப் பக்க விளம்பரத்தை "கல்கண்டு" வாரயிதழினில் வெளியிடும் பொருட்டு மதுரையில் கடுவன் பூனை போல சுற்றி வந்தது இன்னமும் நினைவிலிருந்து அகலவில்லை ! விளம்பரக் கட்டணமாய் ஒரு ஏஜென்சி ரூ.2000 கேட்க, எனக்கோ 'பக்கோ' என்றிருந்தது !!  நாலு கடை ஏறி இறங்கினாக்கா ஏதாச்சும் சலுகை கிட்டுமோ ? என்ற ஆதங்கம் தலைதூக்கியது !! இறுதியாய் ரூ.1800 -க்கு "சந்திரா பப்லிசிட்டிஸ் " என்ற நிறுவனம் சம்மதிக்க, அவர்களிடம் விளம்பர டிசைனின் நெகட்டிவ்வை ஒப்படைத்து விட்டு ஊர் திரும்பினேன் - பெருசாய் எதையோ சாதித்து விட்ட திருப்தியோடு ! அந்நாட்களில் "கல்கண்டு "சுமார் ஒன்றரை இலட்சம் சர்குலேஷன் கொண்ட இதழ் என்பதால் - கணிசமான enquiries கிட்டுமென்ற நம்பிக்கை எனக்குள் ! அந்நாட்களில் நமக்கென ஒரு புறாக்கூட்டு அலுவலகம் கூடக் கிடையாது ; தந்தையும், அவரது சகோதரர்களும் இயங்கி வந்த ஆபீஸின் ஒரு மூலையில், ஒரேயொரு மேஜை தான் லயன் காமிக்சின் ஆபீஸ் ; பணிக்கூடம் - எல்லாமே ! So விண்ணப்பிக்க விரும்பும் முகவர்களின் தொடர்புக்கெனத் தந்திட்டதும் 04562 - 132 என்ற அந்நாட்களது அவர்களது லேண்ட்லைன் போன் நம்பரையே !! 1984 -ல் அந்தக் கறுப்பு போன் 'ட்ரிங்..ட்ரிங்' என்றாலே ஆபீஸிலிருக்கும்  அத்தனை பேரும் தெறித்து ஓட்டமெடுப்பது வாடிக்கை - simply becos உச்சத்திலிருந்த கடன் தொல்லைகள் காரணமாய், நித்தமும் நயமான அர்ச்சனைகள் செவிகளை சிவப்பாக்கிடுவதுண்டு ! எனக்கோ - 'அடிக்கிற ஒவ்வொரு போனுமே ஏதோவொரு ஊரின் முகவராக இருக்குமோ ?' என்ற பதைபதைப்பு ! So விளம்பரம் வெளியான வெள்ளிக்கிழமையிலிருந்து போனை முதல் ரிங்கிலேயே எடுக்க முனைந்து, காது நிறைய தக்காளிச் சட்னியை வாங்கிக்கட்டிக் கொண்ட படலமே தொடர்ந்தது ! ஹிந்தியிலும், சிங்காரச் சென்னையின் நறுமணம் கமழும் தமிழிலும் அந்த ஒரு வாரத்துக்கு  நான் கேட்டுக் கொண்ட வரிகளைக் கொண்டு ஒரு 'கலாமிட்டி ஜேன்' முழுநீளக் கதைக்கே @#*### **$@*) ஸ்கிரிப்ட் தயார் பண்ணியிருக்கலாம் ! 

ஷப்பா....!!! சனிக்கிழமை வந்த முதல் முகவரின் போன் தான் காதில் கசிந்த குருதிக்கு   மருந்திட்டது ! திண்டுக்கல் நகரைச் சார்ந்த அந்நாட்களது முத்து காமிக்ஸ் முகவர் - தனது துணைவியார் பெயரில் ஏஜென்சி எடுக்க நேரில் வரலாமா ? என்று கேட்க - எனக்கு செம த்ரில் ! அவரை வரச் சொன்னபிற்பாடு தான் உறைத்தது -  கைவசம் ரசீது புக் கூட இல்லையே என்று ! 'விடாதே-பிடி' என்று அவசரம் அவசரமாய் முத்து காமிக்சின் ரசீதையே மாதிரியாய்க் கொண்டு, அங்கேயே இருந்து அச்சுக் கோர்ப்புப் பிரிவினரிடம்  வேலையை ஒப்படைத்து, ஒரே மணி நேரத்தில் ரசீதை அச்சடித்து வாங்கிவிட முடிந்தது ! ஆனால் மேல்தாளையும், அடித்தாளையும் பைண்டிங் செய்து வாங்கிட அவகாசமில்லை ! So நடுங்கும் கையோடு முதல் ரசீதைப் போட்ட போது loose sheets  தான் !! "200 புக்குகள் திண்டுக்கல் நகருக்கு ; பிரதி ஒன்றுக்கு ரூ.3 வீதம் மொத்தம் ரூ.600 டெபாசிட்" என்று சொல்லியவர் சிரித்த முகத்தோடு, என் கையில் 6 நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்த போது உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளின் நர்த்தனத்தை உணர முடிந்தது ! வாழ்க்கையில் முதன்முறையாக நான் கையில் வாங்கிய பணத்தை எந்தப் பெயரில் வரவு செய்வது ? என்று கேட்டேன் ! "சரஸ்வதி" என்ற பெயரில் போடுங்க தம்பி ! என்றார் !! Could just have been a simple coincidence - ஆனால் 35 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் இந்தப் பயணம், நிச்சயமாய்  ஆண்டவனின் ஆசீர்வாதங்களுடனானது என்ற எனது நம்பிக்கையின் துவக்கப் புள்ளி அந்த ரசீதில் உள்ளது ! 

தொடர்ந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாய் தபாலில் ஏஜென்சி கோரிடும் விண்ணப்பங்களும் வரத்துவங்கிட, அந்த நொடியே அவர்கட்கு படிவங்களை அனுப்புவதில் பிசியானேன் ! முதல் மாதம் மாத்திரம் மதுரையின் அந்நாட்களது தினமணி ஏஜென்ட் நமக்கு முகவராய்ச் செயல்பட்டதால் - அவர் மூலமாக தினமணி நாளிதழிலும் விளம்பரம் செய்தோம் ஒரேவாட்டி மட்டும் ! சக்கரம் மெது மெதுவாய்ச் சுழலத் துவங்க -   ஜூலை பிறப்பதற்குள் சுமார் 140 ஏஜெண்ட்கள் தேறியிருந்தனர் மொத்தமாய் ! அதனில் கிட்டத்தட்ட 135 பேர் முன்பணம் + டெபாசிட் செலுத்தியிருக்க - 'லயன் காமிக்சின் ' வங்கிக் கையிருப்பு 5 இலக்கங்களில் கெத்து காட்டியது !! சென்னைக்கு 5000 பிரதிகள் ; மதுரை / கோவை தலா 3000 ; சேலம் / திருச்சி தலா 2000 என்று ஆர்டர் இருந்த அந்த நாட்களை ஒவ்வொரு ஜூனின் இறுதியிலும் நினைத்துப் பார்த்துக் கொண்டு ரயில் எஞ்சின் போல பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! இந்தாண்டும் அதற்கொரு விதிவிலக்காகுமா - என்ன ? 

Back to terra firma - இதோ ஆண்டு # 35-ன் அடையாளமாய் வரவுள்ள டபுள் ஆல்பம் !! முன் & பின் அட்டைகள் இரண்டுமே ஒரிஜினல் டிசைன்களே ;  மெருகூட்டல் மாத்திரமே நம் பங்களிப்பு இங்கே ! 

"பாரிசில் ஒரு கௌபாய்" - லக்கி தொடரின் லேட்டஸ்ட் ஆல்பம் ! 2018 நவம்பரில் ஒரிஜினல் பிரெஞ்சு ஆல்பமானது ரிலீஸ் ஆகியது ! படைப்பாளிகளுக்கு,  தம் ஆதர்ஷ ஒல்லிப்பிச்சானை வன்மேற்கிலிருந்து ஒருவாட்டியாவது சொந்த ஊருக்கு இட்டுப் போக ஆசை போலும் ; பெரும் பிரயாசைப்பட்டு கடல் கடக்கச் செய்துள்ளார்கள் ! ஒரிஜினல் மோரிஸ் தரத்திலான படைப்பல்ல என்ற போதிலும், ஜாலியான read என்பதில் சந்தேகமில்லை ! 
And இதன் கதை # 2 ஒரு க்ளாஸிக் மோரிஸ் ஆக்கம் !! அந்த நாட்களது தரமே ஒரு தனி உச்சம் எனும் போது - 1971-ல் உருவாகிய "உத்தம புத்திரன்" ஆல்பத்தை ரசிப்பது ஒரு அலாதி சுகமே !! So சென்றாண்டைப் போலவே இம்முறையும் ஆண்டுமலரை சிறப்பிக்கப் போவது நமது பிரியமான கார்ட்டூன் நாயகரே !! ஏற்கனவே ஏப்ரலில் ஒரு சிங்கிள் ஆல்பத்தோடு ரகளை செய்திருக்க, இப்போதோ டபுள் ஆல்பம் எனும் போது - L.L காட்டில் அடைமழையே - நம் மத்தியிலாவது !! 

Moving on - இம்மாதத்து இதழ் # 2 செம வெயிட்டான களம் ! "நித்திரை மறந்த நியூயார்க்" black & white-ல் ஒரு visual bonanza என்பேன் ! இந்த கிராபிக் நாவல் தனித்தடம் அறிமுகம் கண்ட நாள் முதலாய் - கறுப்பு, வெள்ளையில் ஆஜராகிடும் dark கதைகளை ரசிப்பது நமக்கு செம சுவாரஸ்யமான பொழுதுபோக்காகியிருப்பது கண்கூடு ! "நிஜங்களின் நிசப்தம்" அதனில் ஒரு செம extreme என்பதை ஏற்றுக்கொண்டு - பாக்கி இதழ்களைப் பார்வையிடும் பட்சத்தில், ஒவ்வொன்றுமே நமக்குத் தந்துள்ள வாசிப்பு அனுபவங்கள் மிரட்டலான ரகங்களே !! ஒரு மனநல விடுதியினுள் சிக்கிடும் திருடர்கள் ; யுத்த காலத்து பெர்லினின் சதிராட்டங்கள் ; வேல்ஸ் மண்ணில் கனவுகளின் வலிமைகள் ; நூற்றாண்டுக்கு முந்தைய பிரான்சின் சிறுகிராமத்தில் வாழ்க்கை - என நாம் பயணித்துள்ள பாதையின் காட்சிப் பொருட்கள் சராசரியான ஆக்ஷன் தொடர்களிலோ ; மாமூலான கவ்பாய் கதைகளிலோ பார்த்திடத் துளியும் வாய்ப்பிலா  சமாச்சாரங்கள் என்பேன் !   நியூயார்க் நகரத்தைப் பின்னணியாய்க் கொண்டு வெளிவந்திடக் காத்துள்ள இந்த ஆல்பம் இதற்கு முந்தைய ஆல்பங்களை போலவே செம unique in its own way !! 

நியூயார்க் நகரினை முதன்முறையாய்ப் பார்த்திடும் எவருமே அதனைக் கண்டு பிரமிக்காது ; மிரளாது ; வாயைப் பிளக்காது இருத்தல் வெகு சிரமம் !! அமெரிக்காவே ஒரு பிரமிப்பூட்டும் தேசம் தான் என்றாலும், NY நகருக்கென ஒரு செம பிரத்யேக feel உண்டு !! அங்கே கால்பதித்தோர் எவரும் அதனை உணராது போயிருக்க இயலாதென்பேன் ! நீங்கள் அங்கு பயணித்திருந்தாலும் சரி, படங்களிலும், கதைகளிலும் மட்டுமே பார்த்திருப்போராய் இருந்தாலும் சரி - இம்மாத கிராபிக் நாவலைப் படித்தான பிற்பாடு Big Apple எனப்படும் அந்த உலகின் தலைநகரில் கொஞ்ச காலத்திற்கு வாழ்ந்தது போலான feeling-ஐத் தவிர்க்கவே முடியாது ! 1930 களின் நியூயார்க் தான் இந்த ஆல்பத்தின் background !! அது சரி, 1930-ல் மையம் கொள்ள என்ன அவசியமோ ? என்று நமக்கிங்கு தோன்றிடலாம் ! ஆனால் 1930-களுக்கும், நியூயார்க் நகருக்கும் ஒரு பெரும் சம்பந்தம் இருப்பதை வரலாறு அறியும் ! இந்த ஆல்பம் வெளியான பிற்பாடு நம்மவர்கள் கூகுளில் இது பற்றி அலசி ஆராய்ந்து பெடலெடுக்கப் போவதையும் இப்போதே என்னால் யூகிக்க முடிகிறது ! So இந்த ஆல்பத்தினை 1930-ல் அமைத்திட வேண்டிய அவசியம் பற்றி மேலோட்டமாய்ச் சொன்ன கையோடு நான் கழன்று கொள்கிறேன் - மீதத்தை ஆராய இப்போதே 'தம்' கட்டிக்கொள்ளுங்கள் புலவர்களே ! என்ற அறிவுறுத்தலோடு !! 

"The Great Depression " - என்ற பெயர் - 1930 களை ஆட்டிப்படைத்த பொருளாதாரப் பீடைகளுக்கு !! 1920 களில் பெரும் செழிப்பில் அமெரிக்காவே திளைத்திருந்தது ! உற்பத்தி சக்கை போடு போடுவது ஒருபக்கமெனில் சினிமா ; வணிகம் ; பங்குச் சந்தை வர்த்தகம் என்று இதர துறைகளுமே கொடிகட்டிப் பறந்தன ! So much so that 1920 களுக்கு The Roaring Twenties என்றே பெயரிட்டனர் ! ஆனால் சோப்பு நுரை குமிழ்  'டுப்'பென்று வெடிப்பது போல 1929 -ன் செப்டெம்பரிலும், அக்டோபரிலும் Wall street எனப்படும் அமெரிக்கப் பங்குச் சந்தை பூதாகாரமாய்ச் சரிந்தது ! முறையற்ற பங்குப் பரிவர்த்தனைகள் ; ஆதாய நோக்கில் வாங்கவும் - விற்கவும் முதலீட்டாளர்கள் காட்டிய பேராசை ; கொப்பளிக்கும் செல்வதை முறைப்படுத்த சரியான கட்டுப்பாடுகள் இல்லா நிலைமை - என பல காரணங்கள் ஒன்று சேர்ந்த போது, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு விழுந்த சம்மட்டி அடி அசாத்தியமானது ! And அதன் முக்காலே மூன்று வீசத்து ரணத்தை வாங்கி கொண்டது நியூயார்க் நகரே !! 1900 முதல் 1930 வரைக்குள்ளான முப்பதே ஆண்டுகளில் NY -ன் ஜனத்தொகை இரட்டிப்பாகியது ! பிழைப்புத் தேடி இங்கே குவிந்தோருக்கு நிறங்களிலோ ; மதங்களிலோ ; திறன்களிலோ எவ்வித ஒற்றுமையும் இருக்கவில்லை ! "ஏதாச்சும் செஞ்சு புழைச்சுக்கலாம் !" என்று திமு திமுவென குவிந்த ஜனம் அது ! பங்குச் சந்தை ராட்சஸச் சரிவைக் கண்ட பிற்பாடு நியூயார்க் ஸ்தம்பித்துப் போனது ! 1932 வாக்கில், நியூயார்க்கின் உற்பத்தி ஆலைகளில் பாதி மூடிக்கிடந்தன! மூன்றில் ஒரு நியூயார்க்கருக்கு வேலையில்லை  ;  கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் அரசின் நிவாரணங்கள் பெயரைச் சொல்லியே வயிற்றைக் கழுவி வந்தனர் ! இத்தகையதொரு  நெருக்கடியை சமாளிக்க துளியும் ஆயுத்தமிலா நிலையில் தத்தளித்த NY நகரின் இருண்ட நாட்களே நமது இம்மாதத்து கி.நா.க்கு பின்புலம் !! (ஷப்பா...இந்த மொக்கையைப் படிக்கிறே நேரத்துக்கு நான் நிஜங்களின் நிசப்தத்தே இன்னொருவாட்டி படிச்சிட்டுப் போயிடுவேனே !!" என்று புலம்பும் சத்தம் கேட்குதோ ? Sorry guys - இந்த ஆல்பத்தின் பின்னணியினைக்   கொஞ்சமாய் உள்வாங்கிக்கொண்டால் கதையினை ரசிக்க இலகுவாய் இருக்குமே என்ற  ஒரு ஆர்வக்கோளாறில் தான் எக்கச்சக்க எக்ஸ்டரா நம்பர்களை போட்டுப்புட்டேன் !!)
இதோ ஆல்பத்தின் அட்டைப்படம் - ஒரிஜினலில் இருந்து சன்னமாய்  மாற்றத்துடன் !! ஜன்னலுக்கு வெளியே விரியும் காட்சியானது மினுமினுக்கும் நியூயார்க் இரவினைப் பிரதிபலிக்க - அறையினுள்ளோ அந்நாட்களது black & white போட்டோ பாணியில் சகலமும் இருப்பதைக் காண்கிறீர்கள் ! ஒருவிதத்தில் கதையின் பாணிக்குமே இதுவொரு subtle indicator !! And தொடரும் preview பக்கங்களில் உட்பக்க சித்திர ஜாலங்களை பாருங்களேன் !!  



Black & white-ல் கதையின் மூடுக்கேற்ப ஓவியர் இங்கு உருவாக்கியுள்ள சித்திரங்கள் முற்றிலுமாய் வேறொரு லெவலில் உள்ளன ! இந்த ஆல்பத்தில் பணியாற்றிய ஒவ்வொரு இரவும் எனக்கு அந்நாட்களது  NY சோகத்தை உணர முடிந்ததென்பது ஓவியரின் பணிநேர்த்தியின் பிரதிபலிப்பு என்பேன் !! இந்தக் கதைக்கென ஓவியர் எத்தனை research செய்திருப்பார் என்பதை ஒரு யூகமாய் சிந்தித்துப் பார்க்கவே மிரட்சியாக உள்ளது !!  And கதையைப் பொறுத்தவரை ............... ??!!! Phew .........ஜாக்கிரதை folks !! கி.நாவுக்கே ஒரு கி.நா அனுபவமிங்கே waiting !! கொத்து கொத்தாய் பிய்த்தெடுத்த கேசக்கற்றைகள் இன்னமும் கையிலிருக்க  சீக்கிரமே துணைக்கு நிறையப்பேர் கிட்டப் போகிறீர்கள் என்ற குஷியில் I am also waiting !! 

நடையைக் கட்டும் முன்பாய் - இதோ நமது ஈரோட்டு எக்ஸ்பிரஸுக்கான இதுவரையிலான முன்பதிவுப் பட்டியல் ! விடுதல்கள் இருப்பின் (and there would be for sure ...) தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ! இங்கே பின்னூட்டங்களில் அதனைக் குறிப்பிடுவது உதவிடாது - ப்ளீஸ் !! 
And இன்னமும் வண்டியில் எக்கச்சக்க சீட்கள் காலியிருப்பதால் - அவற்றை நிரப்பிட உங்களை எதிர்நோக்கிக் காத்துள்ளோம் guys !! Before I sign off - here you go !!
 Have a sparkling weekend all !! See you around !!

P.S : 1930 களின்  நியூயார்க் !!! சில போட்டோக்கள் !!
Central Park - அன்றைக்கு !! 

இலவச உணவுக்கு நெடும் கூட்டம் !! 

ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கட்டி முடிக்கப்பட்ட Empire State Building !! 
சத்தியமா இதுவும் நியூயார்க் தானுங்கோ !! Brooklyn !! 



அடாது மழை பெய்தாலும், விடாது பணியாற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் !! Rockfeller Center கட்டுமானத்தில் !! 
Phew !!! இது Manhattan !! அன்றைக்கு !! 

200 comments:

  1. Replies
    1. நான் எப்போதோ ready sir. குறைந்தது 4 புத்தகங்கள். அப்படி என்றால் ஆகஸ்ட் மாதம் மற்ற புத்தகங்கள் ?

      Delete
  2. ரொம்ப நாளாய் கேட்க நினைத்தது. 2015 ல் வருவதாக அறிவித்த ஒற்றைநொடி ஒன்பது தோட்டா 3 பாக தொடர் என்ன ஆச்சு சார்?

    ReplyDelete
    Replies
    1. Sir நீங்க நிறைய நல்ல நல்ல கேள்வியா கேட்கரிங்க

      Delete
    2. லார்கோவின் நிழல் நிஜமாகிறது ரீ ரீடிங் இன்று. அதில் அந்த அறிவிப்பு இருந்தது. அடடே.. மறந்தே போயிட்டு.அப்பிடின்னு உடனே ஒரு கேள்விய போட்டு வச்சேன்.கல்லை விட்டு பாப்போம்.வந்தால் okay.

      Delete
    3. மூன்று பாகங்களாய் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட தொடரானது பின்னாட்களில் 5 பாகங்களாய் நீண்டு விட்டது சார் ! So வாகான வாய்ப்புக்கு வெயிட்டிங் !

      Delete
    4. அட நீங்க வேற

      நம்ப எடிட்டர்காரு 1/9 நொடிக்குள்ளாற புத்தகங்களை மாத்துறதுல நல்லவரு ( காரணம்னா- காமிக்ஸ் வெகுஜன ரசனைம் பாரு)

      அதாச்சும் பருவாயில்ல.

      அதை 1/90000000 நொடிக்குள்ளாற சாமார்த்தியமா மறக்குறதுல வல்லவரு....

      Delete
    5. அதனாலதான் அவரு எடிட்டர்.நாமல்லாம் ரீடர்ஸ்.

      Delete
  3. ஜூலை மாத இதழ்கள் எதிர்பார்ப்பை எகிற செய்கிறது . அதும் கிராஃபிக் நாவல் படங்கள் அற்புதம். என்ன ஒரு ஓவியம்.

    ReplyDelete
  4. லயன் 35-வது ஆண்டு மலர் - அப்போ ஆண்டு மலர் புக்கோட ஒரு கிலோ டயரிமில்க் சாக்லேட் கன்ஃபார்ம்....

    :))))

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...ஒரு கிலோ பஞ்சு மிட்டாய்க்கே லாட்டரி அடிக்கும் வீரர்களாக்கும் நாம் !!

      Delete
    2. ஒரு க்க்க்கிலோ பஞ்சு மிட்டாயா....

      எடிட்டரே ஹே

      டயரிமில்க் cheap ஹே

      வேணுமின்னா தெருவில பஞ்சு மிட்டாய் வியாபாரிட்ட வெசாரிங்களேன்...

      Delete
  5. நீங்கள் பின்னோக்கி செல்லும் பொழுது உண்மையிலேயே அட்டகாசம் எடிட்டர் ஐயா. 2000 3000 5000 மறுபடியும் அந்த காலம் வராது.

    ReplyDelete
  6. @vijayan sir
    NY இப்படியொரு வரலாறு இருப்பது இதுவரையில் நான் கேள்வி பட்டது கூட இல்லை..
    உங்களின் முண்ணோட்டத்தை ஞாபகம் வைத்து படிக்க வேண்டும்..
    ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்
    "நித்திரை மறந்த நியூயார்க்"

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம். கிராஃபிக் நாவல் என்றாலே மனது கள் குடித்த குரங்காக மாறி விடுகிறது

      Delete
    2. நிறைய புது உலகங்கள் பக்கமாய் நம் ஜன்னல்களை கிராபிக் நாவல்கள் திறந்து விடுவதில் மகிழ்ச்சி நண்பரே !

      Delete
    3. உண்மை தான் ஆசிரியரே. நாம் நிறைய கௌபாய் கதைகள் தான் படித்து கொண்டு இருக்கிறோம். என்னை பொறுத்த வரை அவை minimum guarante தருகின்றன. அந்த stero டைப் ஐ உடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது

      Delete
  7. கண்ணா..
    ஈரோட்டில
    நாலு லட்டு தின்ன ஆசையா
    🥰🥰🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
    Replies
    1. சிவா அப்போ ஆகஸ்ட் மாதத்தில் ரெகுலர் சந்தா செலுத்துபவர்களுக்கும் புத்தகங்கள் வேண்டும் இல்லையா? நான் குறைந்தது 6 புத்தகங்களை எதிர் பார்க்கிறேன்

      Delete
    2. @ Kumar salem
      அப்படின்னா ஆகஸ்ட் ல மொத்தம் எத்தனை புத்தகங்கள் வருகிறது அண்ணா ??

      Delete
  8. நித்திரை மறந்த நியூயார்க்...😍

    ReplyDelete
  9. அதுவும் July மாதம் நீரில்லை நிலமில்லை நான் மிகவும் எதிர் பார்க்கும் இதழ். எந்த புத்தகத்தை முதலில் படிப்பது. அடுத்த வாரத்தில் நீரில்லை preview எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்றைய எனது பொழுது நீரிலும்...நிலத்திலும் தான் சார் !

      Delete
    2. இந்த புத்தகத்தினை ஒரு ஒன் ஷாட் நீங்கள் சந்தா A வில் இணைத்ததற்கு என்ன காரணம் என்று படித்து தான் தெரிந்தது கொள்ள வேண்டும் எனவே மிக ஆவலாக இருக்கிறேன்.

      Delete
  10. முன்பதிவு பட்டியலில் எனது பெயர் 4வது என்ன ஒரு சாதனை

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் நண்பரே...:-)

      Delete
  11. முன்பதிவு பட்டியலில் நான் முதல்வன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் sir. நானும் கவனித்தேன்

      Delete
  12. டியர் எடிட்டர்

    நமது காமெடி மன்னர் அமரர் கிரேசி மோகனுக்கு இந்த ஆண்டு மலரை நினைவுச் சிறப்பிதழாய் அலங்கரித்தால் என்ன ? Actually வெகுநாள் கழித்து வுட்சிட்டி கோமாளி கூட்டம் அசத்தி விட்டது - சென்ற இதழ் சேந்தேகமில்லாமல் ஒரு சிரிப்புச் சிறப்பிதழே. ஒரு சில இடங்களில் வசனங்களைப் படித்து சிரித்த போது நினைவு முழுவதும் கிரேசி மோகன் !

    ReplyDelete
    Replies
    1. இந்த இதழின் தயாரிப்பு ஒரு வாரம் முன்பே ஓவர் சார் !! ராப்பரெல்லாம் போன மாசமே முடிந்ததொன்று ! So அமரர் கிரேசி மோகன் அவர்களை இங்கே நினைவு கூர்ந்து கொள்ள மட்டுமே நமக்கு சாத்தியமாகும் !

      தமிழில் எந்தவொரு ரூபத்திலுமான நகைச்சுவையிலும் கிரேசி சாரின் flavor இல்லாது போதல் அசாத்தியமே !! 1980 களில் எங்கள் ஊருக்கு டிராமா போடும் பொருட்டு அடிக்கடி வந்திருக்கிறார் .....அன்றைக்குப் பார்த்தது போலவே இறுதி வரையிலும் இருப்பதை எண்ணி நிறைய முறைகள் வியந்துள்ளேன் ! இனி அவர் நம் இதயங்களில் மட்டுமே !! காமெடியின் அசுரருக்கு அழிவே கிடையாது !

      Delete
    2. True sir .. may be we can do that for the Erode Cartoon Special sir - in memory of him !

      Delete
  13. 1930 களில் அமெரிக்காவில் தலைவிரித்தாடிய வேலையில்லாத் திண்டாட்டம்.. போட்டி.. பொறாமை.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தவித்தது என அத்தனை விசயங்களையும் ஹாஸ்யத்தோடும் (சற்று கண்ணீருடனும்) அழகாய் காட்டியிருப்பார்...

    சர் சார்லஸ் ஷ்பென்சர் சாப்ளின்..

    படம் ..


    மாடர்ன் டைம்ஸ்..!


    அந்த காலகட்டத்தில் நடைபெறும் கதையான நி.ம.நியூயார்க்கை காண பொறுமையின்றி காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
  14. நியூயார்க்.. தானை தலைவன் ஸ்பைடரின் பாசறை.. எம்பயர் ஸ்டேட் பில்டிங் தலைவனின் கோட்டை..

    ReplyDelete
  15. லயனின் ஆண்டுமலர் சமீப காலமாக ஒல்லிபிச்சான் குத்திகைக்கு எடுத்தது போல் போட்டு தாக்குகிறார்....வருக..வருக...
    நி.ம.நியுயார்க். ....படித்து விட்டு எத்தனை பேர் நித்திரையை மறக்கப் போகிறார்களோ..!!!!!

    ReplyDelete
  16. ஆண்டு மலர் அட்டை மிக பிரமாதமாக வந்துள்ளது.வாழ்த்துகள்..
    ஆகஸ்டில் தலையும்,கார்ட்டுனும் உண்டு என்பதே காதில் தேன் வந்து பாய்கிறது..(தலையின் கதை அட்டவணை யில் இல்லாத கதையாக இருத்தல் நலம்)...

    ReplyDelete
  17. // கிட்டத்தட்ட 135 பேர் முன்பணம் + டெபாசிட் செலுத்தியிருக்க - 'லயன் காமிக்சின் ' வங்கிக் கையிருப்பு 5 இலக்கங்களில் கெத்து காட்டியது !! சென்னைக்கு 5000 பிரதிகள் ; மதுரை / கோவை தலா 3000 ; சேலம் / திருச்சி தலா 2000 என்று ஆர்டர் இருந்த அந்த நாட்களை ஒவ்வொரு ஜூனின் இறுதியிலும் நினைத்துப் பார்த்துக் கொண்டு ரயில் எஞ்சின் போல பெருமூச்சு விட்டுக் கொள்வேன் //

    இந்த காலம் விரைவில் திரும்பும்; 2020 நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் நீண்ட பெருமூச்சு விட தயாராகிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதிலிருந்தே தம் கட்டி பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு சார் !!

      உப்..உப்...உப்...உப்..!!

      Delete
  18. எடிட்டர் சார்..

    அழகானதொரு ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்து, அடுத்து வரயிருக்கும் கி.நா'க்காக அந்நாளைய நியூயார்க் பற்றிய (ஆவலை எகிறச் செய்யும்) முன்னோட்டத்துடன் பதிவை அமர்க்களப்படுத்தியிருக்கிறீர்கள்!! வரயிருக்கும் ஆண்டுமலரும் சரி.. அந்தக் கி.நாவும் சரி.. என்னளவில் ஒரே அளவிலான (ஏக) எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளன!

    கூடுதல் வேலைப்பளு காரணமாக இம்மாத இதழ்களைப் படிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது!! எனினும் கிடைத்த கேப்புகளில் 'ஒரு ஷெரிப்பின் சாசனம்' கதையை ரசித்துச் சிரித்துப் படித்துவிட்டு, இப்போது 'இளம் தல'யின் 'சி.சி.வ'வை பிரம்மிப்போடு படித்து வருகிறேன்! பாதிதான் படித்திருக்கிறேன் என்றாலும், நமது வெளியீடுகளில் இதுவொரு மைல்கல் இதழாக இருந்திடும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லிட முடியும்! கதையை நகர்த்தும் பாணியிலாகட்டும், ஓவியங்களிலாகட்டும், வசனங்களிலாகட்டும் - அப்படியொரு நேர்த்தி!!! அபாரமான வாசிப்பு அனுபவம்!!

    'ஈரோட்டுக்குப் போகலாமாங்கோ?' ஒருபக்க உட்டாலக்கடி கதை - கெக்கபிக்கே ரகம்!! பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து, அதற்கேற்ற வசனங்களையும் அமைத்து ரணகளம் செய்திருக்கிறீர்கள்! அபாரம்!! (எப்படித்தான் இப்படியெல்லாம் தோனுதோ உங்களுக்கு!!)

    ReplyDelete
    Replies

    1. செயலரே...சிங்கத்தின் சிறுவயதில் இன்னுமா முடிக்கலை...பாதிக்கு மேலே தான் பயங்கரமா சூடு பறக்குது...சீக்கிரமா படிங்க..

      Delete
    2. ///.பாதிக்கு மேலே தான் பயங்கரமா சூடு பறக்குது...சீக்கிரமா படிங்க..///

      பாதித்கு மேல அடுப்பாங்கரையில சமைக்கிறச்சே படிச்சீங்களா தலீவரே..!

      Delete
    3. ஆனாலும் தலீவருக்கு பிஞ்சு மனசு...அப்போப்போ தொபுக்கடீர்னு நிஜத்தைப் போட்டு உடைச்சிப்புடுறார் !

      Delete
    4. //நமது வெளியீடுகளில் இதுவொரு மைல்கல் இதழாக இருந்திடும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லிட முடியும்! கதையை நகர்த்தும் பாணியிலாகட்டும், ஓவியங்களிலாகட்டும், வசனங்களிலாகட்டும் - அப்படியொரு நேர்த்தி!!! அபாரமான வாசிப்பு அனுபவம்!!//

      இளம் 'தல' இதுவரையிலும் கில்லியே !!

      Delete
    5. //'ஈரோட்டுக்குப் போகலாமாங்கோ?' ஒருபக்க உட்டாலக்கடி கதை - கெக்கபிக்கே ரகம்!! பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து, அதற்கேற்ற வசனங்களையும் அமைத்து ரணகளம் செய்திருக்கிறீர்கள்! அபாரம்!!//

      நம்மள் கி ரோசனை தான் என்ற போதிலும் செட் பண்ணிக் கொடுத்த DTP கோகிலாவுக்கும் இதனில் credit சாரும் !!

      Delete
    6. ...அப்போப்போ தொபுக்கடீர்னு நிஜத்தைப் போட்டு உடைச்சிப்புடுறார்

      ####

      :-))))))

      Delete
    7. ஆனாலும் தலவரு குக்கர் புடிக்கிற அழகே அழகு...

      Delete
    8. அதிலும் கெளரவமான அழுத்தக்கார குக்கர். அதாங்க.. பிரஸ்டிஜ் பிரஷர் குக்கர்.

      Delete
  19. டியர் எடி,

    ஜூலை மாத இதழ்களில் ஜாலி பாணிக்கு, லக்கி. அழுத்த கதைகளத்திற்கு 30களின் நியூயார்க் என்று ஒரு வர்ணமாலை காத்திருக்கிறது போலும். முதல் வாசிப்பை கிராபிக் நாவலுக்கு ஒதுக்கி வைத்து காத்திருப்பேன்.

    35 வது வருட நிறைவுக்கு உங்களுக்கும், இதை சாதிக்க உழைத்த உங்கள் குழுவிற்கும, கூடவே பயணித்த நமது வாசகர்கள் அனைவருக்கும் உண்டான வாழ்த்தாக பதிவு செய்து கொள்கிறேன். தடதடக்கட்டும் நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்.

    ReplyDelete
    Replies
    1. //முதல் வாசிப்பை கிராபிக் நாவலுக்கு ஒதுக்கி வைத்து காத்திருப்பேன்.//

      Changing times !!!!

      :-)))))

      Delete
  20. லக்கிலூக்கின் இரண்டு அட்டைகளுமே பிரமாதம்

    ReplyDelete
  21. கருர் ராஜ சேகரன். கடன் வாங்கி வாங்கிய கத்தி முனையில் மாடஸ்டி ஞாபகம் வருது . ஈரோடு எக்ஸ் பிரேஸில் ஷீட் பிடிச்சாச்சு அப்பாடா . சாதனை. என்னைப் பொருத்தவரை kat

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொள்ள முடிகிறது ராஜசேகர்.

      Delete
  22. Code name மின்னல் வந்த தா ஞாபகம் உள்ளவர்கள் கூறுங்கள் ப்ளீஸ் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies

    1. அது வெளிவர வில்லை நண்பரே...கதை சிறப்பாக இல்லை என்பதால் அதை பரணில் பத்திரபடுத்தி உள்ளதாக ஆசிரியர் தெரிவித்து இருந்தார்..

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. நான் ரெடி ஆசான்......
    கி.நா வுக்கு👍👍👍

    ReplyDelete
  25. Wow. Please continue " sunbathing siruvayadhil" like this in every post sir. I am very happy that I still have 'kathi munayil madesty' . Modesty stories are always wonderful.

    ReplyDelete
  26. Replies
    1. நாங்கூட சிந்துபாத்தின் சிறுவயதில்னு எழுத்துக்கூட்டி படிச்சி பாத்தேன்...

      சரியா புரியல...
      (ஏன்னா லைலா இன்னமும் குட்டையாத்தான இருக்கா...)

      நாம் வளந்துட்டோம்ல.
      அப்டீன்னாக்க இப்டி...
      டௌசர் வயசுல அருப்புக்கோட்டை செந்தூராங்கடையில தேவுடு காத்து மாயாவியோட கலர் இதழ் (கொரில்லா சாம்ராஜ்ஜியம் னு நெனைக்கிறேன் )வாங்க முடியாம தவிச்சது கியாபகம் வருது....
      J யின் சிறு வயதில்...

      Delete
  27. லக்கியின் இந்த மாறுதலான அட்டைப்படமும்...கிராபிக் நாவலின் வித்தியாசமான அட்டைப்படமும் கலக்கலாக அமைந்து உள்ளது சார்.ஆவலுடன் காத்திருக்கிறேன்...இன்னும் பதினைந்தே நாட்கள் ..

    காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. "லக்கி ஆண்டு மலர்" ??? ii
      - விளக்கம் ப்ளீஸ்..i
      ". லயன் - 35 வது ஆண்டு மலர் " _
      "The லக்கி ஸ்பெஷல்" _ என்பதே சரியானது.
      Theலக்கி ஆண்டு மலர் - -
      சந்தாதாரர்கள் அனைவரின் பெய்ரையும் எழுதி குலுக்கலில் ஒரு " பத்து பேரைத் "தேர்ந்தெடுத்து -
      இரண்டு ஆண்டு மலரை அனுப்பி வைப்பதே ._ The லக் கி ஆண்டு மலருக்கு சரியான விளக்கம்..' ?iii

      Delete
    2. செம ஜடியா இளங்கோ.

      Delete
    3. கி.நா.கண்டு அஞ்சாத ஒரே ஒரு ஒரிஜினல் தலீவர் வரார்....வழி விடுங்கோ...!!

      Delete
  28. வணக்கம்.
    கடந்த ஒரு மாதமாக சொந்த வேலை காரணமாக தளத்திற்கு சரியாக வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

    அடுத்த வாரம் முதல் ரெகுரலாக வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே திரும்பி வாருங்கள்.

      Delete
    2. ///கடந்த ஒரு மாதமாக சொந்த வேலை காரணமாக தளத்திற்கு சரியாக வரமுடியவில்லை. மன்னிக்கவும்.///

      அதெல்லாம் முடியாது.. சங்கத்துல அபராதத்தை கட்டிடுங்க..!

      Delete
  29. அந்த பழைய நாட்கள் மீண்டு (ம்) வந்தால் அடடா...

    காமிக்ஸ் உலகிற்கே மறுமலர்ச்சி ..

    அந்த காலங்களில் கோவையில் காமிக்ஸ் கிடைக்கும் புத்தக கடைகளில் நமது காமிக்ஸ் இதழ்களை மொத்தம் மொத்தமாக அடுக்கி வைத்திருப்பார்கள்.பள்ளிக்கு செல்லும் பொழுதும்,வரும் பொழுதும் அதனை கண்டு ரசிக்கவே கடைக்கு செல்வதும் ,விலையை விசாரிப்பதும் ..

    ஹீம் ...அது ஒரு கனாக் காலம்...

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரில் 90களில் ஒரேஒரு கடையில்தான் கிடைக்கும். !
      நானும் நண்பன் ஜேகேவும் பார்ட்னரஷிப் போட்டு வாங்குவோம். !
      கார்ட்டூன் ,டெக்ஸ்களை மட்டும் நான் வைத்துக்கொள்வேன்.. மற்றவை அவனு(ரு)க்கு.. !

      Delete
    2. ஒரு flow லே வாசித்தால் - "கார்ட்டூன் டெக்ஸை மட்டும் நான் வைத்துக் கொள்வேன்" என்று வருகிறது சார் ; அட...நண்பர் கணேஷ்குமாரின் பதிவோன்னு நிமிர்ந்து பார்த்தால்......

      Delete
    3. அட வேற யாரா இருக்கப் போகுது சாரே.நம்ம பதுங்கு குழி மாவீரன் தான்....

      Delete
  30. கடைசி கார்ட்டூன் பதிவு செம விளம்பரம்...இறுதியில் " கெக்கே பிக்கே " என வாய்விட்டு சிரிக்க வைத்தது...:-)

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. லக்கியை விட நித்திரை மறந்த நியூயார்க்கு செம waiting...🥳🥳🥳...இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படம் இதுவே...💝...
    "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்"உள்பக்ககள் அட்டகாசம்...😎...#Try to subscribe sir...

    ReplyDelete
    Replies
    1. அகில் வளர்ந்தாச்சு !!

      Delete
    2. காம்ப்ளானும் ஹார்லிக்ஸூம் சேத்தடிச்சிருப்பாரோ....

      Delete
  33. லயன் ஆண்டு மலர் அட்டைப்படம் அருமை. அதுவும் சுதந்திர தேவி சிலையின் மேல் லக்கி சூப்பர்; ஆனால் நம்ப ஜாலியை அட்டையில் மிஸ் செய்ததை வண்மையாக கண்டிக்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. ஜாலி சார்பாய்த் தான் ஒரு பூனை குந்தியிருக்குது சார் !

      Delete
    2. ரெண்டு 🐈-கள் சாரே.

      இதுல எது ஜம்பர் ஜாலியோட பினாமி....

      Delete
  34. The great depression ஐ மையப்படுத்தி The Road to Perdition ப்போல ஒரு கதையை வெளியிட Editor திட்டமிட்டு இருந்ததாக ஞாபகம்....

    ReplyDelete
    Replies
    1. That was more of a road movie sir ...இது வேறு மாதிரியான களம் !!

      Delete
  35. பாரிஸ்லயா சுதந்திரதேவி சிலை இருக்கு?

    L.L க்க அதுல ஒய்யாரமாக குத்த வைச்சிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் எத்தினி நாள் தான் வன்மேற்கின் கட்டாந்தரையில் கட்டையைக் கிடத்துவார் ? அதான் உசரத்துக்கு ஏத்திப்புட்டாங்க !!

      Delete
  36. நி.ம.நி - இதுவும் ஷெர்ஜியோ போனெல்லி எடிட்டோரா....எத்தனை புத்தகங்கள் தான் போடுறாங்களோ?

    எடிட்டருக்கே வெளிச்சம்....

    ReplyDelete
    Replies
    1. அதுவொரு பெருங்கடல் சார்....எல்லைகள் லேது அவர்கட்கு !!

      Delete
    2. சாரே
      பெருங்கடல் சரி,....

      எங்கள் பெருங்குடல் கலங்குகிறது.
      இதெல்லாம் எப்ப படிச்சு முடிக்கப் போறோம்.

      Delete
    3. மார்க்கண்டேய வரம் பிக் பஜாரில் கிடைத்தால் மட்டுமே சாத்தியம் சார் !

      Delete
  37. அதில்லங்க. மனுஷன ஈபில் டவர்லல ஒக்கார வைச்சிருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. ஜாலி ஜம்பர் ஒய்யாரமாக உட்கார்ந்து ரெஸ்ட்ல கப்பல் பயணத்த அனுபவிக்கிற அழகே அழகு

      Delete
  38. World's top investigator ஆன sherlock Holmes, unsolved murder case ஆன ,jack the ripper serial killer ஐ துப்பறிவதான கதை ஏதேனும் உள்ளதா சார்...

    ReplyDelete
  39. விளக்கம் ப்ளீஸ் ஆசிரியரே..தங்களின் ப்ளாஷ்பேக்கில் 200 புக் பிரதி ரூபாய் 3 வீதம் ரூபாய் 600 என்று வருகிறதே...க.மு மாடஸ்டி 2 ரூபாய் தானே....எங்கோ கணக்கு இடிக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. வியாபாரிகளுக்கான கமிஷன் 25 % நீக்கினால் 200 புக்குகளுக்கு ரூ.300 ஆகிறதா ? சரியாக இந்தத் தொகையை மட்டும் செலுத்தி பிரதிகளை வாங்கிடுவதற்கு advance payment என்று பெயர் சார் ! அதே நேரம் ஒரு பில் நிற்கவே அடுத்த பில்லுக்கான தொகையையும் முன்பணமாய்க் கட்டுவதற்கு deposit என்று பெயர். இப்போது பாருங்கள் - கணக்கு உதைக்காது !

      Delete
    2. இப்போ உதைக்கவில்லை...வில்லை....நன்றி ஆசிரியரே🙏🙏🙏

      Delete
    3. சார் வேண்டாமே..நான் உங்களை விட இளையவனே....

      Delete
  40. Jack the ripper போன்ற serial killer கதை ஏதாவதொன்றை Halloween special ஆக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கைவசமுள்ள free slots சொற்பமே சார் ! அவற்றுள் வியாபார அவசியங்கள் ; வாசக எதிர்பார்ப்புகள் என்ற இரு விஷயங்களையும் balance செய்திடுவது தான் சிக்கலே ! சந்தர்ப்பம் அமையட்டும் - ஜமாய்த்திடுவோம் !

      Delete
  41. கி நா வுக்கே கிநாவா....

    நாங்கள் லாம் ஷி நா பாவுக்கே தந்திரம் சொல்லிக்குடுத்தவங்கே...

    அது யாரு...
    நம்ப தோர்கல் கூடவே டைம் டிராவல் பண்ணி கலக்குனவங்களாக்கும்..


    நம்ம வட்டம் சிறுசு
    அலசி காயப் போட்டா பெரிசு...

    ReplyDelete
    Replies
    1. //கி நா வுக்கே கிநாவா....

      நாங்கள் லாம் ஷி நா பாவுக்கே தந்திரம் சொல்லிக்குடுத்தவங்கே...//
      J சூப்பர் நண்பரே வெடி சிரிப்பு

      Delete
  42. ஈரோட்ல 4 பெசலு சரி...

    வழக்கமானதுகள் எவை எவை சாரே?

    ஞான் அறிஞ்ஞில்லா! பரையு என்ட பொன்னு எடிட்டர் சாரே...

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே கேள்வி தான் கேட்டேன். சொல்லுங்க சார் சொல்லுங்க

      Delete
    2. ஜூலை புக்குகளைப் புரட்டிடும் போது அந்த ஒரு விஷயமாவது புதிதாய் இருந்துவிட்டுப் போகட்டுமே நண்பர்களே ?

      Delete
  43. சுதந்திர தேவி சிலை இருப்பது நியூயார்க். எப்படி பாரிஸில்?!

    ReplyDelete
    Replies
    1. அட்வான்ஸ் pinchக்கே இன்னமும் பதில் வந்த பாடில்ல...மேல போயி பாருங்க....

      Delete
    2. ஸ்ரீதர்!! சுதந்திர தேவி சிலை அமெரிக்காவுக்கு ப்ரான்ஸின் அன்பளிப்பு!!

      அமெரிக்காவுக்கு அதன் பகுதிகள் பிரிக்கப்பட்டு கொண்டுவருமுன் ப்ரான்ஸின் பல பகுதிகளில் காட்சி பொருளாக வைக்கப்பட்டு சிலைக்கான நிதி திரட்ட

      பயன்படுத்தபட்டது...

      தலையை மட்டும் வைத்து பொருட்காட்சியில் லாட்டரி எல்லாம் நடத்தி சுமார் 25000 ப்ராங்குகள் திரட்டி இருக்கிறார்கள்..

      எனவே பாரிஸில் லிபர்ட்டி சிலையை காண்பது ஆச்சர்யமல்ல...

      Delete
    3. இந்தக் கதையின் knot நண்பர் செனா-அனா வின் வரிகளே நண்பர்களே !!

      Delete
    4. ஹை... அப்படீன்னா ப்ரான்சிலிருந்து அமேரிக்காவுக்கு சுதந்திரதேவி சிலையை கொண்டு போனது நம்ம லக்கிலூக்தானா..!?

      ஒத்துக்கொள்ளாத கடற்பயணத்தில், தடைகளை (இருந்தால்தானே சுவாரஸ்யம்) உடைத்தெறீந்து லக்கியும் ஜாலியும் எப்படி சிலையை கரைசேர்த்தார்கள் என்று காண ஆவல் அதிகமாகிறது..!

      ஏம்மா ஜூலை... சீக்கிரம் வாம்மா..!

      Delete
    5. விளக்கம் விளக்கிய விதம் மிக அற்புதம்.மிக்க நன்றி செனா அனா ஜி.

      Delete
    6. ஆமாம் ஆமாம் எப்பயோ படிச்சது ஞாபகம் வந்திடுத்து...

      டாக்டர்
      வல்லாரை நெறைய சாப்ட்றாரோ..

      Delete
  44. 1930
    பங்கு சந்தை
    Great depression
    நியுயார்க் சிட்டி

    வாவ்! முதல்முறையாக லக்கி வரும் மாதத்தில் லக்கியைவிட எதிர்பார்ப்பை தூண்டிய இதழ்!!

    1929ல் இன்று பங்குச்சந்தை பணக்கடவுளாய் கருதப்படும் வாரன் பபெட் பிறந்த வருடம்!!

    The great depressionல் கடும் பாதிப்படைந்த ஒரு பங்கு தரகரின் மகன் தான் வாரன் பபெட்!!

    Great depression கொடுமைகள் தான் வாரன் பபெட் உலக கோடீஸ்வரர் ஆக முக்கிய காரணம்! கடும் வறுமை காலத்தில் பிறந்த வாரன் சிறுவயதில் "நான் ஒருநாள் மிகப்பெரிய பணக்காரன் ஆவேன்" என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம்!!

    அமெரிக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வு தான் Great depression!!

    பங்கு சந்தை பித்தலாட்டங்கள், முதலாளித்துவம், போன்றவற்றால் அதள பாதாளத்தில் விழுந்த பங்குச்சந்தை காரணமாக, இன்று வரை பங்கு முதலீட்டுக்கான ஆகச் சிறந்த புத்தகமாக கருதப்படும் "The Intelligent Investor" - Benjamin Graham வெளிவர காரணமாக இருந்ததும் இந்த Great depression தான்!!

    Great depressionன் பாதிப்புகளை பற்றி பல கூட்டங்களில் பேசும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற வகையில் இந்த இதழை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. வர வர நம்முடைய காமிக்ஸ் படிப்பதற்கு நிறைய பின்புல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி உள்ளதே. நாம் நிறைய வளர்ந்து விட்டோம் . Our expectations has grown and I really like this.

      Delete
    2. //வர வர நம்முடைய காமிக்ஸ் படிப்பதற்கு நிறைய பின்புல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி உள்ளதே. நாம் நிறைய வளர்ந்து விட்டோம்//

      "பொம்மை புக் !!" என்றபடிக்கே நம் ஸ்டாலைத் தாண்டிச் செல்லும் பெற்றோர்களிடம் சொல்லிப் பாருங்களேன் சார் இதை !!!

      :-))))

      Delete
  45. ///"The Great Depression " - என்ற பெயர் - 1930 களை ஆட்டிப்படைத்த பொருளாதாரப் பீடைகளுக்கு !! 1920 களில் பெரும் செழிப்பில் அமெரிக்காவே திளைத்திருந்தது ! உற்பத்தி சக்கை போடு போடுவது ஒருபக்கமெனில் சினிமா ; வணிகம் ; பங்குச் சந்தை வர்த்தகம் என்று இதர துறைகளுமே கொடிகட்டிப் பறந்தன ! So much so that 1920 களுக்கு The Roaring Twenties என்றே பெயரிட்டனர் ! ஆனால் சோப்பு நுரை குமிழ் 'டுப்'பென்று வெடிப்பது போல 1929 -ன் செப்டெம்பரிலும், அக்டோபரிலும் Wall street எனப்படும் அமெரிக்கப் பங்குச் சந்தை பூதாகாரமாய்ச் சரிந்தது ! முறையற்ற பங்குப் பரிவர்த்தனைகள் ; ஆதாய நோக்கில் வாங்கவும் - விற்கவும் முதலீட்டாளர்கள் காட்டிய பேராசை ; கொப்பளிக்கும் செல்வதை முறைப்படுத்த சரியான கட்டுப்பாடுகள் இல்லா நிலைமை - என பல காரணங்கள் ஒன்று சேர்ந்த போது, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு விழுந்த சம்மட்டி அடி அசாத்தியமானது ! And அதன் முக்காலே மூன்று வீசத்து ரணத்தை வாங்கி கொண்டது நியூயார்க் நகரே !! 1900 முதல் 1930 வரைக்குள்ளான முப்பதே ஆண்டுகளில் NY -ன் ஜனத்தொகை இரட்டிப்பாகியது ! பிழைப்புத் தேடி இங்கே குவிந்தோருக்கு நிறங்களிலோ ; மதங்களிலோ ; திறன்களிலோ எவ்வித ஒற்றுமையும் இருக்கவில்லை ! "ஏதாச்சும் செஞ்சு புழைச்சுக்கலாம் !" என்று திமு திமுவென குவிந்த ஜனம் அது ! பங்குச் சந்தை ராட்சஸச் சரிவைக் கண்ட பிற்பாடு நியூயார்க் ஸ்தம்பித்துப் போனது ! 1932 வாக்கில், நியூயார்க்கின் உற்பத்தி ஆலைகளில் பாதி மூடிக்கிடந்தன! மூன்றில் ஒரு நியூயார்க்கருக்கு வேலையில்லை ; கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் அரசின் நிவாரணங்கள் பெயரைச் சொல்லியே வயிற்றைக் கழுவி வந்தனர் ! இத்தகையதொரு நெருக்கடியை சமாளிக்க துளியும் ஆயுத்தமிலா நிலையில் தத்தளித்த NY நகரின் இருண்ட நாட்களே நமது இம்மாதத்து கி.நா.க்கு பின்புலம் !! ///

    அபார எழுத்து!! அருமை! அருமைங்க சார்! தங்களது எழுத்துக்களில் The Great depression ன் பாதிப்புகளை காண ஆவலோடு இருக்கிறேன்!!

    👏👏👏

    ReplyDelete
    Replies
    1. நானும் மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

      Delete
    2. இது முற்றிலும் வேறு....வேறு மாதிரியான கதை சார் !!

      Delete
  46. கருர் ராja sekar an ஈரோடு திருவிழாவுக்கு இன்னும் சுமார் 55 நாட்களே உள்ளன ரெடியா நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. ஸ்டால் ரெடியாக வேண்டியதல்லவோ பிரதானம் நண்பர்களே ? :-))

      Delete
  47. PDF -எனது நிறுவன கதைகளை வெளியிட்டால் சட்ட பிரச்சினை எதிர் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள்...ரொம்ப ரொம்ப  சந்தோஷம் ..ஆனால் உங்களின் பழைய அரிய படிக்காத கதைகளை என் போன்ற வாசகர்கள் வாசிக்கஎன்ன தீர்வு கண்டு உள்ளீர்கள்?(இப்போது வருபவை 90´s....நான் கேட்பதோ 70´s)...PDF பயம் தேவையில்லாத ஒன்று என்று  நினைக்கிறேன். சின்ன உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன். .பவள சிலை மர்மம் PDF எனக்கு கிடைத்த போது அதை ஆர்வத்துடன் படித்து..பிறகு A4சைஸ் பிரிண்ட் (இந்திய மதிப்பில் 1000 ரூபாய்) போட்டு படித்தும் அதே புக் ரீபிரிண்ட்யாக வந்த போது 1க்கு 3 புக் வாங்கி 2புக் இந்தியாவில் என் பொக்கிஷத்தில் சேர்த்து ஒன்றை இங்கு வரவழைத்து படித்து இன்புற்றேன்(B&Wயாகவே வந்தாலும் இதை செய்து இருப்பேன்)..பின் குறிப்பு: இதன் ஒரிஜினல் முதல் காப்பி எவ்வித சேதாரமும் இன்றி என்னிடம் உண்டு).
    மற்றது பரகுடா இதுவும் PDF கிடைத்த போது படித்தேன்.அவ்வளவு தான்பிரிண்ட்  எல்லாம் போடவில்லை. காரணம் உங்களின் மொழி பெயர்ப்பு திறன் அங்கு இல்லை. .மறுபதிப்பு  கதைகளை படிக்க என்ன செய்யலாம். .யோசித்த போது எனக்கு தோன்றியவை(நன்றாக இருந்தால் ஆலோசனை செய்யலாமே) .இந்த அயல்நாட்டு பேப்பர்,பெரிய சைஸ்,கலர்எல்லாவற்றையும் கொஞ்சம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு.....A.இது வரை வராத 4 கதைகளின் தொகுப்பு.எ.கா.1.கொலைகார குள்ள நரி(முத்து)
    2.நீதிக் காவலன் ஸ்பைடர்(லயன்)
    3.கடற்கோட்டை மர்மம்(திகில்)
    4.உலகம் சுற்றும் அலிபாபா கலரில்(மினிலயன்).
    B.இது போன்று 3 தொகுப்பு வருடத்திற்கு. ..ஜனவரி (சென்னை புத்தக விழா)...ஏபரல் 15(கோடை விழா)..ஆகஸ்ட் (ஈரோடு புத்தக விழா)..
    C.நிலவொளியில் நரபலி சைஸ்...
    D.விலை ..நீங்கள் மட்டுமே அறிவது..தயக்கமாக இருந்தால் முன் பதிவிற்கு மட்டும்.
    அது மட்டுமல்ல டெக்ஸின் வண்ணப் பதிப்பு வருடத்திற்கு 2 புக்.கண்டிப்பாக ...அவ்வளவு தான்.முக்கியமாக உங்களிடம் கேட்க நினைத்த கேள்வி. .டெக்ஸின் மாயாஜால கதைகளை எடுக்க தயங்கும் நீங்கள் கூறும் பதில்கள் எல்லாம் ok ரகம் தான் .என்றாலும் திருப்தி அளிப்பதாக அமையவில்லை என்பதே நிதர்சனம்.சில்லு மூக்கை பதம் பார்க்கும் கதைகளை ரசித்தாலும் மாயாஜால எதிரிகளை டெக்ஸ் எதிர் கொள்ளும் போது ஒரு திரில் வந்து ஒட்டி கொள்கிறது(காஞ்சனா படம் போல்)..அதிலும் மந்திர மண்டலம்,இருளின் மைந்தர்கள் my all time favorite. ...நீங்கள் வெளியிட தயங்குவதால.....வேற வழி தெரியாமல் பல நல்ல கதைகளை தேடி பிடித்து pdfல் விருந்து அளித்து கொண்டு இருக்கும் நண்பர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்...நமது ஆசிரியர் வெளியிட தயங்கும் டெக்ஸின் மாயஜால கதைகளை மொழி பெயர்த்து தர முடியுமா என்றேன்..உடனே சில நண்பர்கள் கோப கனலும்,சிரிப்பு அலைகளையும்,தோள் தாங்கிய நண்பர்களை காண முடிந்தது...உங்களின் படைப்பை தோல்வி அடைய யார் முயற்சி செய்தாலும் அவர்களை எதிர்க்கும் முதல் ஆளாக நான் தான் வருவேன்...ஏனெனில் உங்களது படைப்பின் தீவிர முதல் வாசகன் நானாக தான் இருப்பேன்...பல நண்பர்கள் ஆச்சரிய படக்கூடும்..ஏன் அப்படி சொல்கிறேன் என்று .30 வருடமாக காமிக்ஸ படிக்கும் நான்..எனது சேமிப்பில் தங்களின் படைப்பை தவிர மருந்திருக்கு கூட வேற காமிக்ஸை சேர்த்தது கிடையாது. (ஸ்டார் காமிக்ஸில் வந்த பனி மண்டலக் கோட்டைமட்டும் உண்டு அதுவும் உங்கள் படைப்பு என்பதால்)...இப்போது சொல்லுங்கள் உங்களின் அழிவை விரும்புவேனே!!!!!!!
    உங்களுக்கு பாதகம் இல்லாமல் நமது டெக்ஸின் கதைகளை படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆதங்கம்....
    நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது இது தான் டெக்ஸின் அனைத்து கதைகளையும் உரிமம் வாங்கி விட்டீர்களா....நாங்கள் யாராவது ஒருவர் ஒரு  கதையை எடுத்து எங்களுக்கு தெரிந்த மொழிபெயர்ப்பில் இலவசமாக வழங்கினால் அதனால் உங்களுக்கோ எங்களுக்கோ ஏதேனும் பாதகம் ஏற்படுமா..இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?ப்ளீஸ்.
    நம் எல்லோரின் வாழ்வும் மிஞ்சி போனால் மீதி 25 வருடம்(Die hard fans அனைவரும் 40+வயதுக்கு மேல் தான் 80%)அதற்குள் நல்ல புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று ஆசை...என் கண்ணோட்டத்தில் நல்ல காமிக்ஸ் என்றாலே அது டெக்ஸ் தான்.....

    ReplyDelete
    Replies
    1. 2 வாரங்களுக்கு முன்பே உங்களின் இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தேன் நண்பரே ! சில சந்தர்ப்பங்களில் கொஞ்சமாய் அவகாசம் எடுத்துக் கொண்டால், நமக்கே சில விஷயங்கள் தெளிவான வெளிச்சத்தில் தென்படத் துவங்கிடும் ! So உங்களுக்கும் இந்த அவகாசத்தைத் தந்திட்டால், நான் இதற்குப் பதில் சொல்லும் அவசியமே இல்லாது போகுமென்று எதிர்பார்த்தேன் ! ஆனால் நீங்கள் அதே பின்னூட்டத்தை மறுக்கா அட்சர சுத்தமாய் cut & paste செய்திருப்பதைப் பார்க்கும் போது, அந்தக் கேள்வி உங்களுக்குள் இன்னமுமே சாரம் உள்ளதொரு பிம்பமாய்த் தொடர்ந்திடுவது புரிகிறது !

      உங்களுக்கும், எனக்கும், ஊருக்கும், உலகுக்குமே தெரிந்ததொரு பதிலை நானிங்கு சொல்லப் போய் அதனையே விவாதப் பொருளாக்கி அடுத்த ஒரு வாரத்தை எனக்குப் பூரண கும்ப மரியாதை செய்வதில் செலவிட சில பல நண்பர்களுக்கு வழி வகுப்பானேன் சார் ? So டெக்சின் ஒரிஜினல் முதலாளிகளான படைப்பாளிகளே உங்கள் சந்தேகங்களை நிவர்த்திக்க பொருத்தமான ஆட்கள் - என்றபடிக்கு மீத மேட்ச் பார்க்க நடையைக் கட்டுகிறேன் !

      Delete
    2. நல்ல பதில் சார் தான்....இது இதை தான் எதிர் பார்த்தேன்...இதே கேள்வியை நண்பர்களிடம் கேட்ட போது கேலிக்கு உள்ளானேன்...இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறது. .நன்றி ஆசிரியரே💐💐🙏🙏🙏🙏

      Delete
  48. ..
    2.முன்பதிவு:முன்பதிவுக்கு என்று புத்தகத்தின் விலையை ஏற்றி...பிறகு அந்த  புக்கை கழுதை பொதி சுமப்பது போல் சுமக்கிறோம் என்கிறீர்கள்...முன்பதிவுக்கு மட்டுமே வெளியீடும் புக்காக இருப்பின் அதை சுமக்க வேண்டியது இல்லையே...உங்கள் பக்கம் சில பல நியாயங்கள் இருந்தாலும் எனக்கு இதன் மூலம் தெரிவது என்னவென்றால் அதிகமான பிரிண்ட் அடிக்காமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் நமது டார்கெட் 500 எஎன்பதைஇலக்க்க கொண்டு மேற்கொண்டு 150..ஆக 650 புத்தகம் அடித்தீர்கள் என்றால் பொதி சுமக்க வேண்டிய அவசியமும் இல்லை..பரணில் காசு கொடுத்து வாங்கிய கதைகளும் வெளிச்சத்தை பார்க்க வைக்க முடியுமே.
    இரத்தப் படல வண்ணத் தொகுப்பு போல் வருடத்திற்கு ஒரு முறை ஆவது பழைய ஹீரோக்களின் கதைகளின் தொகுப்பாக குண்டு புக் கொண்டு வர வேண்டும். ..
    ஆணவம் செய்வீர்களா...ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....மாதந்தோறும் உங்களை வந்து சேரும் கதைகளில் ; அவற்றின் தரங்களில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் சுட்டிக் காட்டுங்களேன் - அவற்றை நிவர்த்திக்க நிச்சயம் விழைவேன் ! மற்றபடிக்கு எதை - என்ன விலையில் - எப்போது - எவ்விதம் வெளியிடுவதென்ற தீர்மானங்களை எங்களிடம் விட்டு விடுங்களேன் - ப்ளீஸ் ?

      ஆண்டின் 365 நாட்களும் இந்தத் துறையோடு குடும்பம் நடத்துவோர் என்ற விதத்தில், நடைமுறை கண்டிடும் ஒவ்வொரு தீர்மானத்தின் பின்னணியிலும் ஒரு உருப்படியான காரணம் இருக்குமென்று மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள் !

      Delete
    2. உங்கள் மேல் நாங்கள் வைக்காத நம்பிக்கையா...காமிக்ஸில் நம்பிக்கை என்றால் அது விஜயன் சார்..
      தங்களின் காமிக்ஸ் பங்களிப்பில் எந்தவொரு நஷ்டமும் வந்து விடக் கூடாதே என்பதே எனது அவா..

      Delete
  49. உலகக்கோப்பையில் இந்தியா பகிஸ்தானை கிட்டத்தட்ட பொட்டலம் கட்டிட்டாங்க.. நூறு ரன் வித்தியாசத்துக்கு மேல் ஜெயிக்கப் போவது உறுதி..!

    இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாம் ஏன் ஒரு ஷ்பெசல் கேக்குறது நியாயந்தானே மக்களே..!

    எடிட்டர் சார்...

    ஒரு சிக்பில் ஷ்பெசல் போடுங்க சார் ப்ளீஸ்.. கனப்பொருத்தமா இருக்கும்..! ( என்ன லாஜிக்குன்னுல்லாம் கேக்கப்படாது.. ஹிஹி..!-))

    ReplyDelete
    Replies
    1. பாகிஸ்தான் பொட்டலம் ஸ்பெஷல் !!

      பெயர் கூட ரெடி !!!

      Delete
    2. அப்படியே அந்த ரிலீஸ் தேதியையும்.. :-)

      Delete
  50. நியூட்டனின் புது உலகம் இப்போது தான் படித்து முடித்தேன். வழக்கம் போல மார்ட்டின் செம. மற்ற கதைகள் இனிமேல்தான் படிக்க வேண்டும். இந்த மாத இதழ்களை ஆன்லைனில் தான் வாங்கினேன். ஆர்டர் செய்த 2வது நாளே புத்தகங்கள் கிடைத்து விட்டால். அதிவேக சேவை. மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. //அதிவேக சேவை.//

      அட !!!

      Delete
  51. லக்கி லூக்கிற்காக we r eagerly waiting

    ReplyDelete
  52. மேன்மை மிகு ஆசிரியருக்கு வணக்கம் 🙏. உங்களுடைய ஆரம்பகால வரலாற்றை வாசித்த போது மெய்யாலுமே கண் கலங்கி விட்டது.அலுவலகம் இன்றி,ஏஜென்சி இன்றி, விளம்பர கட்டண தொகைக்காக அலைந்த நிகழ்வு,பில் புக் இல்லாத நிலை என நீங்கள் பட்ட துயரங்களை அடுக்கி கொண்டே போகலாம்.இத்தனை துயரங்களையும் அனுபவித்து இன்று வரை நிலைத்து எங்களுக்கு காமிக்ஸ் வழங்கி வரும் பணி மெய்யாலுமே ஒரு சாதனை என்றே நினைக்கிறேன்.எண்ணற்ற எண்ண ஓட்டங்களை உடைய காமிக்ஸ் வாசிப்பாளர்களின் கோபம்,விமர்சனம், துன்பங்களுக்கு ஆட்பட்டு காமிக்ஸ் வெளியிட்டு வருவது அரியப் பணி.நீங்கள் மெய்யாலுமே ஒரு முத்து சார்.கானகத்துக்கே இராசாதான் ஐநா...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.....தண்ணீருக்குள் கடாசப்படும் போது அடிக்க அவசியமாகிடும் கடப்பாரை நீச்சல்கள் ஒரு போதும் கஷ்டமாய்த் தெரிவதில்லை ! மூழ்காது தப்பிய நிம்மதியும், கரையைத் தோட்ட சந்தோஷமும் அந்த தத்தக்கா-புத்தக்கா நீச்சல்களின் சிரமங்களை வென்றிடும் !!

      Delete
  53. Replies
    1. நம்ம குமார் சாருக்கு ஒரு ரவுண்ட் பன் கன்பார்முடு..!:-)

      Delete
  54. Sir, the first half an hour of the Super Movie “King Kong” released in 2005, is based on the Great Depression scenario. After that the movie turned into a fantasy one.

    I think the way of this story is evolved into horror or dark one, and I am waiting for July.

    ReplyDelete

  55. \\\\\............சிங்கத்தின் சிறுவயதில்...........////

    இது ஒரு சகாப்தத்தின் கதை....!!!

    *ஜம்போ காமிக்ஸ் சீசன்1 ஐத் தெறிக்கவிட்ட இளம் டெக்ஸின் காற்றுக்கு ஏது வேலியைத் தொடர்ந்து ஜம்போ சீசன் 2ல் 2வது சாகசமாக இளம் தலயின் பின்னணயை தேடி தேடி பயணப்படுகிறது அணல் பறக்கும் டெக்ஸாஸ் மண்ணில்...........,,,,,

    *சிங்கத்தின் சிறுவயதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இத்தாலி முதல் இந்தியா வரையும் பின்லாந்து முதல் பிரேசிலின் மூலை முடுக்குகள் வரையும், சம அளவில் விரவிக் கிடக்கிறது.

    *டெக்ஸின் இளம் பருவத்தில் நடக்கும் நிகழ்வுகள் வருகிறது என்றவுடன் ஆர்வம் பன்மடங்கு எகிறுவது இயல்பு தானே!

    *கார்சனின் கடந்த காலம்-கார்சன், இரத்த ஒப்பந்தம்-டெக்ஸ், காதலும் கடந்து போகும்-டைகர் ஜாக்....., ஆகிய கதைகளைப் போன்றே ப்ளாஷ்பேக்கில் கதைசொல்லப்படுகிறது. மற்ற 3கதைகளை விட இதில் அந்த பாணி இன்னும் மெருகூட்டப்பட்டுள்ளது.

    *அரிசோனா & நியூமெக்சிகோவில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் மிளெசரி மாகாணத்தின் வெஸ்ட்போர்ட் பகுதியில் சலூன் வைத்து இருக்கும் முதியவர் ஜிம் பிரிட்ஜர்க்கு உதவிட செல்கின்றனர் டெக்ஸ், கார்சன், கிட்& டைகர் ஜாக்.

    *ஜிம் பிரிட்ஜர் யார்? அவருக்கும் டெக்ஸூக்கும் என்ன சம்மந்தம் என வெஸ்ட்போர்ட் செல்லும் வழியில் ஓர் இரவில் டெக்ஸ், பழங்கதையை விவரிப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

    #1838ன் டெக்ஸாஸ் குடியரசின் நியூசெஸ் பள்ளத்தாக்கு பகுதியின் கடும் சவாலான வாழ்வியல் சூழல்.

    #நியூசெஸ் பகுதியில் குடியிருப்பை நிறுவ வரும் குழுவினர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள்; சவால்கள்; சர்வைவல் போராட்டங்கள்.

    #முன்னோடி குழுவின் ஒரு குடும்பமாக வரும் கென் வில்லர்& மே வில்லர் தான் நாம் மிகவும் ரசித்து வரும் தல டெக்ஸின் பெற்றோர் என அறியச் செய்யும் சாகசம் இது. டெக்ஸ் & அவரது இளம் சகோதரன் சாம் இருவரது இளம்பருவம் தத்ரூபமான காட்சிகள் வாயிலாக விரிவாக சொல்லப்படுகிறது.

    #டெக்ஸின் பிறப்பு, அவரது தாய் மே வில்லரின் இறப்பு, கென் வில்லரின் வாழ்க்கை என சென்டிமெண்ட் ஆக கதை நகர்கிறது.

    #மலைகளை ஆராயும் ஜிம் பிரிட்ஜர் என்ற வெகுமதி வேட்டையர் டெக்ஸின் இளம் பருவத்தில் பெரும் பங்கு வகிக்கிறார். டெக்ஸ் சிக்கலில் மாட்டித் தவிக்கும் ஒவ்வொரு முறையும் பிரிட்ஜர்தான் ஆபத்பாந்தவன்.

    #டீன் ஏஜ் டெக்ஸ், நியூசெஸ் டூ கலிபோர்னியாவுக்கு 2000மைல்கள் கால்நடை மந்தையோடு பயணிக்கும் கடும் சவாலான தொடர் பிரயாணம்- டெக்ஸை ஒரு திறமையான, தைரிமான, ஒழுக்கமான, நேர்மையான, முழு மனிதனாக, தலைமை பண்பாளணாக பரிணமிக்கச் செய்கிறது.

    #டெக்ஸ் எனும் சகாப்தத்தின் ஆதிஅந்தந்தை அறிய வைத்த இதழ்; டீட்டெயிலான கதைக்களம், நுணுக்கமான ஓவியங்கள், சிறந்த காட்சியமைப்பு என எல்லாம் சேர்ந்த டோட்டல் பேக்கேஜ் ஆக இது டெக்ஸின் ஆல் டைம் பெஸ்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.

    *இன்றளவும் கறுப்பினரை சக மனிதராக மதித்து டெக்ஸ் நடத்துவது அவரது தந்தை இளமகயில் டெக்ஸூக்கு கற்பித்தமையே!

    *பைனலி டெக்ஸ் பிறந்தவருடம் 1838என அறிகிறோம்.

    ###*****#####****####

    (முந்தைய ரிவியூ கதை படிக்க படிக்க அந்த எமோஷனலோடு எழுதியது; இது கதையை படித்து முழுசுமாக உள்வாங்கிய பின் கதையின் தாக்கத்தை கொண்டு எழுதியது)

    ReplyDelete
    Replies
    1. கணேஷ் 🤔புரியலையே

      Delete
    2. கணேஷ்@ என்ன இது கோட் வேர்டு???

      குமார் சேலம் @ உங்க மெயில் இன்பாக்ஸ்ல செக் பண்ணிட்டு ஒரு பதில் போடுங்க சார்!

      Delete
    3. டெக்ஸ் விஜய் ஜி
      கால் விரல்களின் இடையே தீக்குச்சி வைத்து உண்மையை சொல்ல வைக்கும் கலையை டெக்ஸ் கற்றுக் கொள்வதும் இந்த கதையில் தான்.

      Delete
    4. ஸ்ரீ ஜி@ ஆம்....!! இன்னும் நிறைய அனுபவ பாடங்களை கற்கிறார்.

      வன்மேற்கின் வாழ்க்கை முறை நேரடியாக படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இந்த கதையை படிக்கும் போது இரத்த பூமி கதையின் ஞாபகம் வந்து போனது.

      வன்மேற்கின் வாழ்க்கையியலை எந்தவொரு காம்ப்ரமைஸ்ம் இல்லாமல் சொல்வது இதன் மற்றொரு முக்கிய அம்சம்.

      கதைதான் நாயகன்.
      டெக்ஸ் என்பதற்காக அவரை ஆராதிக்கவில்லை.

      இந்த கதையின் தாக்கம் வெகுநாள் நீடிக்கும்!

      Delete
    5. "இரத்தபூமி"- இதுகதையல்ல-ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு முந்தைய கெளபாய் உலகின் documentary என்று சொல்லலாம்"

      -----இது இரத்த பூமி இதழில் ஹாட்லைனில் எடிட்டர் சார் எழுதியது.

      அவரின் வரிகள் "சிங்கத்தின் சிறுவயதில்" கதைக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

      இந்த கதை நியூசெஸ் வாழ் மக்களின் டாக்குமென்டரி.

      டெக்ஸ் எனும் ஹீரோயிசம் இங்கே இல்லை.

      முன்னோடிகள்,
      கென்வில்லர்,
      யதார்த்தமான கேரக்டர்கள் க்ளார்க்,கோனிபில்,ஜிம்ஜோடி, டக்சன் ஷெரிப்,
      பிமாச் செவ்விந்தியர்கள்,
      அபாச்சேக்கள்,
      ஃப்ரிஸ்கோ பிராடுகள்,
      வெஸ்ட்போர்ட் சுயநலமிகள்---என கதை நெடுகிலும் கலவையான மனிதர்கள்.
      இந்த மனிதர்களுடன் வளரும் டெக்ஸ் என்ற சாதாரண கெளபாய் இளைஞன்.

      வன்மேற்கின் நிதர்ஷனமான சூழலில் வாழும் யதார்த்தமான வாழ்க்கை முறையே என்னைப் பொறுத்து டைட்டிலில் சொல்லப்பட்டுள்ள "சகாப்தம்".

      Delete
  56. இ.டெ.ந.இ.து. இளவயது டெக்ஸ் நன்றாக இருந்தது. சரிதானுங்களா?

    ReplyDelete
    Replies
    1. ///ம.வ.போ.... ///

      மழை வரப் போகுது!!

      Delete
    2. ///ம.வ.போ....///

      மட்டன் வறுவல் போட்டேயாகணும்..!!

      Delete
    3. @கணேஸ்
      ஒ. நி. த. சு.

      Delete
    4. ///ஒ. நி. த. சு.///

      ஒருஅண்டா நிறைய தந்தூரி சுக்கா..!!

      Delete
    5. ///ம.வ.போ///
      மண்ணாங்கட்டி.வன்மேற்கு.போதுமா(ன்னு சொல்லுங்கப்பா)

      Delete
    6. ஷெரீஃப் ஒரு நிமிடம் தலை சுத்திடுசு

      Delete
    7. இது நம்ம கணேஷ் தானா? 🙃🤔

      Delete
    8. கலக்கீட்டிங்க குமார். நம்ம kOk பாருங்க சாப்பாட்டு குண்டா இல்லை அண்டாலேயே இருக்கிறார்.

      Delete
    9. சோ க இ சொ
      னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருப்பாங்க..!

      Delete
    10. சோறு கண்ட இடம் சொர்க்கம்!

      நாங்களும் சோத்துக் கட்சிதான்!

      Delete
  57. நான் இன்னும் டெக்ஸ் மட்டும் படிக்கவில்லை மற்ற மூன்று காமிக்ஸ் அட்டகாசம். Martin Tiger and sigbill முழு மதிப்பெண்கள். சனி கிழமை அன்று டெக்ஸ் படித்து விட்டு பதிவிடுகிறேன். நன்றி

    ReplyDelete
  58. பராகுடா..

    இப்போதுதான் படித்து முடித்தேன்..! ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில்..!

    இதுபோன்றதொரு உணர்வுமாறாட்டங்களை இதற்குமுன் நமது காமிக்ஸ் கதைகளில் நான் அனுபவித்ததே இல்லை.!
    அடிமைச் சந்தையில் விற்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும்போது அய்யோ பாவம் என்று பரிதாபப்பட வைத்த மரியா.. அடுத்தடுத்து ஆடும் ஆங்கார ஆட்டங்களின் போது அடி பாதகத்தி என்று அங்கலாய்க்க வைக்கிறாள்.! அதே மரியாவின் காதல் (முறை தவறியதெனினும் ) கைகூடிட வேண்டுமே என்று மீண்டும் இறுதிக்கட்டத்தில் பரிதாபப்பட வைக்கிறாள்.!

    ராபி.. பராகுடாவின் கேப்டன் ப்ளாக் டாக்கின் மகனான இவனை முதலில் பார்க்கும்போது வெறுப்பு தோன்றினாலும் போகப்போக ஒரு ஹீரோவாய் அவதானித்து விடுகிறான்.!

    எமிலியோ அல்லது எமிலியா மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டக்காரன் அல்லது அதிர்ஷ்டக்காரி..! ஆரம்பம் முதல் இறுதிவரை பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படுத்தாத கேரக்டர்..!

    இவர்கள் மூவரும்தான் கதைத்தொடரின் முக்கியஸ்தர்கள்..!

    ReplyDelete
    Replies
    1. அடுத்து அந்தக் கொடூரமான அடிமைத் தரகன் பெர்ராங்கோ..!
      ஆரம்பத்தில் ஆசாமி ரொம்பவே டெர்ரர் பீஸாக காட்சியளிக்கிறான். இடையில் மரியாவின் அழகுக்கு அடிமையானதும் அசல் காமெடி பீஸாகிவிடுகிறான்.. இறுதியில் ஸ்பெயின் படையெடுப்பின் போதும் அந்த பொக்கிசத்தைக் கைப்பற்றி வியாபார சக்ரவர்த்தி அந்தஸ்துக்கு உயரும்போது அடேயப்பா சரியான தில்லாலங்கடிதான்யா நீ என சொல்ல வைக்கிறான்.!

      பராகுடா கேப்டன் ப்ளாக் டாக் .. பயமுறுத்தும் ஒற்றைக்கண் தோற்றமும் ஈவிரக்கமில்லா குணமும் கொண்ட பயங்கரமான வில்லனாக அறிமுகமாகி.. கஷார் வைரத்தை கைப்பற்றி அரைபைத்தியமாகி.. மீண்டும் தெளிவுபெற்று பராகுடாவுக்கு புத்துயிர் கொடுத்து கஷார் வைரத்தாலேயே உயிர்விடும் பரிதாபத்திற்குரிய வில்லன்.!

      கவர்னர் ஷானின் ஆசைநாயகன் மற்றும் கரீபியன் கடற்பகுதியே நடுங்கும் சூரன் என்ற பில்டப்புகளோடு அறிகமாகும் ரெட் ஹாக்.. நிற்பது ,பார்ப்பது. ,சண்டையிடுவது பேசும் தோரனை என ஸ்டைலானதொரு ஆசாமி.!

      Delete
    2. கீன் -ப்ளேம் ..
      ஒரு மறக்கமுடியாத கேரக்டர்.! ப்யூர்டோ ப்ளாங்கோ தீவின் எண்ணற்ற தாசிகளில் ஒருத்தியாகத்தான் அறிமுகமாகிறாள்.!ராபியின் மீது கொண்ட ஒருதலைக் காதலின் பொருட்டு அவள் செய்யும் மாய்மாலங்கள்... அடேயப்பா..! கவர்னர் ஷான் தீவு வாசிகளின் பரமவைரியான ரெட் ஹாக்கின் ஆசைநாயகி என்ற ரகசியத்தை சரியாக பயண்படுத்தி தான் கேடுகெட்ட தாசியாகக் கிடந்த அதே தீவுக்கு கவர்னர் ஆகிறாள்.!
      ராபியை அடைய ஏங்கி ஏங்கி .. இறுதியில் வெற்றியும் பெற்று அவன் கையாலேயே சாகும்போது இவளுக்கு இது தேவைதான் என்று பாதி மனதும் அச்சோ பாவம்பா என்று மீதி மனதும் ஒருங்கே சொல்கின்றது.!

      கேப்டன் ப்ளீன்.., கவர்னர் ஷானின் மெய்காப்பாளன்., அந்த சூனியக்கார மருத்துவச்சி கிழவி., கஷார் வைரத்தை கையாள்வதற்கென்றே நேர்ந்துவிட்டதுபோல் திரியும் அந்த கண்ணில்லாத ஸ்பெயின் பாதிரியார்.., நீளநீளமான பெயர்களை கொண்ட ஸ்பெயின் தேசத்து தளபதிகள்., தொழுநோயாளிகளின் தீவு ,நரமாமிசம் உண்ணும் கொடூரர்களின் தீவு இப்படி மனதில் பதிந்துவிட்ட மறக்கமுடியாத சங்கதிகள் பல..!

      எல்லாவற்றிற்கும் மேலாக அசரடிக்கும் சித்திரங்களும்.., அவற்றை அமைத்திருக்கும் கோணங்களும்.. வண்ணச் சேர்க்கையும்..

      சிறப்புகளை சொல்லி மாளாது.!

      கதையின் மாந்தர்களை தொடக்கம் முதல் இறுதிவரை இவன் நல்லவன் இவன் கெட்டவன் என்ற வரையறைக்குள் கொண்டுவரவே முடியவில்லை.! கதையின் போக்கில் அவர்களைப் பற்றிய நம் எண்ணங்கள் மாறிக்கொண்டே போகின்றன.! இதைத்தான் உணர்வுமாறாட்டாம் என்று குறிப்பிட்டேன்.!

      வாசித்ததும் எனக்கு ஏறப்பட்ட உணர்ச்சிகளில் ஒரு பத்து சதவீதம்தான் சொல்லியிருப்பேன்..!

      இறுதியாக..

      எடிட்டர் சார்..

      இதுபோன்ற எத்தனையோ பொக்கிஷங்கள் அந்த ஐரொப்பியக் காமிக்ஸ் கடலில் மூழ்கிகிடக்கக்கூடும்..!
      அவற்றை கண்டறிந்து.. நம் தமிழ் தேசத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி வாருங்கள்.!

      பராகுடா - அடா அடா

      Delete
    3. அருமையான விமர்சனம் கண்ணா . அற்புதம் . எல்லா பாய்ண்ட் சொல்லி விட்டீர்

      Delete
    4. செம கண்ணரே. நச்சுன்னு இருக்கு விமர்சனம்.

      Delete
    5. கண்ணரே சிறப்பான விமர்சனம் என்று மட்டும் தெரிகிறது,
      நான் நாளைக்குத்தான் படிக்கனும்,படிச்சிட்டு பேசுவோம்.😍
      துவைச்சி தொங்கப் போடுவோம்.

      Delete
  59. Tex விஜயராகவன் ஜி tex illaya😃

    ReplyDelete
  60. குமார். சேலம் சார் முதல்ல டெக்ஸ் படிங்க. சும்மா பட்டையைக் கிளப்பறாருங்க சார் நம்ம இளம் டெக்ஸ் கருர் ராஜ சேகரன்

    ReplyDelete
  61. தலைவரே.. எதிர்கட்சி தலைவருக்கு ஒரு விசயத்தை ஒரு விசயத்தை மட்டும் தெளிவா சொல்லிருங்க.. 'சிங்கத்தின் சிறு வயதில்' ன்னு பேரு வெச்சா மட்டும் போதாது .. ஒரிஜனல் சிங்கத்தோட சிறு வயசு அனுபவங்கள்ன்னு சோறும் வெக்கனும்முன்னு..

    ReplyDelete

  62. "த லெஜண்ட் ஜிம் பிரிட்ஜர் "

    *"சிங்கத்தின் சிறுவயதில் "-சமீபத்தில் வந்த கதைகளில் ஒன் ஆஃப் த பெஸ்ட்.

    *2012க்கு முன்னாடி வந்த கதைகள்ல பார்த்தோம்னா பெரும்பாலான கதைகளில் டெக்ஸ் தான் எல்லாமே! அவர்தான் டாமினண்ட். அப்போதைய நம்ம ரசனைக்கு ஏற்றவாறு டெக்ஸின் கதைகள் செலக்ட் ஆகின.

    *2012க்கு பின்னாடி நம்ம ரசணைகளின் மாற்றத்தை பார்த்துட்டு அதற்கு தகுந்தவாறு கதைகள் தேர்வும் மாறுது. டெக்ஸின் எல்லா வித கதைகளையும் ஏற்றுக் கொள்ள பழகிட்டோம்.

    *வல்லவர்கள் வீழ்வதில்லை"-ஐரிஷ் ஷானோடு வரலாற்றில் ஒரு வலம் வந்து இருக்க முடியமா 1980களில்???

    *டைனமைட் ஸ்பெசல்ல வந்த "புயலுக்கொரு பிரளயம் "-கதை 1990கள்ல வந்திருந்தால் வரவேற்பு எப்படி இருந்திருக்குமோ??? வர்றவன் போறவன்லாம் டெக்ஸின் சில்லை பெயர்ப்பதை அப்போது நம்மால் ஜீரணிக்கவே முடிந்திருக்காது. இப்போது அதெல்லாம் ஒரு வகையான கதைபாணி என புரிந்து கொண்ட பின் ஜஸ்ட் லைக் தட் எடுத்து கொள்கிறோம்.

    *டெக்ஸ் கதையில் அப்படி ஒரு வெரைட்டியான இந்த "சிங்கத்தின் சிறுவயதில்"-லிலும் டாமினண்ட் கேரக்டர் இந்த பிரிட்ஜர்.

    *கார்சனின் கடந்த காலத்திற்கு பிறகு வேற ஒரு கேரக்டர் டெக்ஸ் கதையை இந்தளவு ஆக்ரமித்திருப்பது இதுவே!

    #முன்னோடிகள் குழுவை பற்றி தெரியும் முன்னரே அவுங்களுக்கு உதவுவது.

    #டெக்ஸ் பிறக்கும் முன்னாடியே டெக்ஸ் உசுரை காப்பாற்றுவது!

    #கென்வில்லர் & மற்ற நியூசெஸ் வாழ் மக்களின் உழைப்பான கால்நடைகளை விற்க வழிகாட்டுவது.

    #டெஸ்பரடோக்களிடம் இருந்து டெக்ஸ் & சாம் இருவரையும் சரியான நேரத்தில் காப்பது.

    #கார்ப்பஸ் கிறிஸ்டி பிரஜைகளுடன் கென் வில்லரோடு "பழகுவது"

    #ஃப்ரிஸ்கோவில் மீன்களுக்கு இறையாகவிருக்கும் டெக்ஸை மீட்பது.

    #இளம் டெக்ஸின் வளர்ச்சியில் ஒரு கார்டியன் போலவே செயல்படுகிறார்.

    #கோல் ப்ராம்டனை வீழ்த்தி லெஜண்டாக மிளிர்கிறார்.

    *வரலாற்றில் இத்தகைய லெஜண்டுகளால் பயிற்றுவிக்கப்பட்ட சரித்திரம் போற்றும் சாதனையாளர்கள் பலரையும் படித்துள்ளோம் நாம்.

    *நமக்கும் ஒரு 17வயது பாலகன்(ர்) க்கு 40ஆண்டுகளாக துணையாக இருந்து வரும் ஒருவரைத் தெரியும்.





    ReplyDelete
  63. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!

    ReplyDelete