Saturday, June 22, 2019

இடியாப்பம் 2.0..!

நண்பர்களே,

வணக்கம். அனுபவம் மகத்தான ஆசான் என்பார்கள் !! அனுபவம் கற்பிக்கும் பாடங்கள் ஆயுசுக்கும் நிலைக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் ! ஆனால் அந்த ஆசான் குடியிருக்கும் தெருப் பக்கமோ ;  அவரது பாடங்கள் அரங்கேறும் பள்ளிக்கூடம் பக்கமோ நான் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லை என்பதை அவ்வப்போது எனக்கு நானே ஊர்ஜிதம் செய்து கொள்வதுண்டு ! அதன் லேட்டஸ்ட் episode கடந்த 10 நாட்களின் பெரும்பான்மையை விழுங்கியதே மகா கொடுமை ! அதுவும், ஆகஸ்டில் ஈரோட்டுக்கென ஒரு அம்பாரம் இதழ்களைத் தயார் செய்திட வேண்டிய நெருக்கடிக்கு மத்தியினில் கடந்த 10 நாட்களின் கூத்துக்கள் ஓவரோ ஓவர் என்பேன் !! என்ன விஷயம் என்கிறீர்களா ?

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணைத் தேர்வுப்படலம் நடந்தேறும் சமயம் முந்தைய ஆண்டுகளின் பணி சார்ந்த அனுபவங்களை ஓசையின்றி நடைமுறைக்கு கொணர விழைவதுண்டு ! "எல்லாமே smooth sailing தான் ; சும்மா எல்லாத்தையும் போட்டுத் தாக்கி விட்டேன்" என வெளியே தெனாவெட்டாய் பீலா விட முனைந்தாலும், அந்தந்த ஆண்டுகளின் ஓட்டத்தின் போது, சிலபல அல்பங்களின் பணிகளில் நாக்கைக் கொண்டு தெருவைக் கூட்டிய அனுபவங்களெல்லாம் அடிமனதில் 'பளிச்' என்றே குந்திக் கிடக்கும் ! மர்ம மனிதன் மார்டினின் "கனவின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" ; "வானமே எங்கள் வீதி" ; ஒரு சிப்பாயின் சுவடுகள்" ; அண்டர்டேக்கர் ;  "நிஜங்களின் நிசப்தம்" ; போன்ற கதைகளெல்லாம் குப்புறப் போட்டு ரோடு ரோலரை மேலேற்றிப் பிதுக்கி எடுத்த taskmasters !! So குறிப்பிட்ட நாயகரின் கதைகள் / குறிப்பிட்ட ஜானர்கள் / குறிப்பிட்ட தொடர்கள் - சிரத்துக்கும்,சிரத்தின் மீதுள்ள சொற்பத்துக்கும் செம ஆபத்தானவை என்பதைச் சன்னமாய்த் தலைக்குள் ஒரு நோட் போட்டு வைத்திருப்பேன் ! மறு ஆண்டில் கதைகள் தேர்வு செய்திட முனையும் போது - இயன்றமட்டிலும் கொஞ்சம்  சுலபக்களங்களை நாடிட மனசு பறக்கும் ! அதாவது - முருங்கை மரத்தில் ஏறும் முன்பான மனசு !! 

ஆனால் ஏதேனும் ஒரு புது கேட்லாக்கைப்  பார்த்தாலோ ; புதியதொரு ஆல்பத்தின் டிரெய்லரைப் பார்த்தாலோ ; புதிதாய் நெட்டில் ஏதேனும் அலசல்களை ரசித்தாலோ - "சலோ முருங்கை மரம் !!" தான் ! அதுவரையிலும் பட்ட சூடுகளை மறந்து ; அதுவரைக்கும் எழுத்திலும், எடிட்டிங்கிலும் போட்ட மொக்கைகளை மறந்து விட்டு - "வாடி செல்லக்குட்டி !!" என்று புதுக் கதையை அரவணைத்து விடுவதே வாடிக்கை ! அப்புறமாய் அந்தக் கதையோடு மல்லுக்கட்டும் போது - 'குத்துதே...குடையுதே !!" என்ற நெளிதல் படலமுமே வாடிக்கை !! அதன் latest அனுபவம் - காத்திருக்கும் "நீரில்லை...நிலமில்லை !

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாய் நமது படைப்பாளிகளிடமிருந்து, "சமீபத்து இதழ்களது  ரிலீஸ்கள் சார்ந்த previews" என்று ஒரு வண்டி தொடர்கள் பற்றிய pdf files மின்னஞ்சலில் வந்திருந்தன ! அத்தனையையும் சாவகாசமாய்ப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் என் கவனத்தை ஈர்த்த சிலபல one shots அதனுள் இருந்தன ! அவற்றை ஒரு பட்டியலிட்டுக் கொண்டு, நெட்டில் அலசிய போது - சில 'பவர் ஸ்டார்' கதைகளும் எனது லிஸ்டில் இருப்பது புரிந்தது ! பிரெஞ்சு ரசிகர்களே அவற்றை surf excel போட்டு துவைத்தெடுத்திருந்தனர் ! So பட்டியலிலிருந்து அதையெல்லாம்  அடித்த பிற்பாடு தேறி நின்றவை இரண்டே கதைகளே ! ஒன்று "நீரில்லை..நிலமில்லை" என்ற பெயரில்  ஜூலையில் நாம் சந்திக்கவுள்ள இதழும், SYKES என்ற ஜம்போ சீசன் 2-வின் ஒரு தேர்வுமே !! பின்னது ஒரு கௌபாய்க் களமென்பதால் அது சார்ந்த தீர்மானம் செய்வது பெரியதொரு கம்பு சுத்தும் கஷ்டமாக இருக்கவில்லை ; சீக்கிரமே டிக் அடித்து வைத்தேன் ! ஆனால் "நீரில்லை..நிலமில்லை" கதையோ கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கக் கண்டேன் ! நவீன ரகத்திலான கதை ; கொஞ்சம் கண்ணுக்குக் குளிர்ச்சியான artwork (!) என்று தென்பட, நெட்டில் அது பற்றிய விமர்சனங்கள் அவ்வளவாய்த் தட்டுப்படவில்லை ! So படைப்பாளிகளிடமே வினவி வைத்தேன் - என்ன மாதிரியான கதை ? பிரெஞ்சில் என்ன மாதிரியான வரவேற்புக் கிட்டியது ? என்ற ரீதியில் ! இங்கொரு சிறு இடைச்செருகலுமே :

பொதுவாய் நான் குடலை உருவும் ரேஞ்சுக்கு இதர மொழியினில் கதைகளை வெளியிடும் பெரும் பதிப்பகங்களெல்லாம் கேள்வி கேட்பார்களா ? என்பது எனக்குத் தெரியாது ! ஆனால்  "இந்தியா" எனும் அசாத்திய தேசத்தின் ஒரு துக்கனூண்டுப் பிரதிநிதியாய்  மண்டையைக் காட்டி வரும் எனது 'தொண தொண' கேள்விகளை பொறுமையோடே அணுகுவார்கள் !! நமக்குத் தான் "இந்த வண்டி எவ்ளோ லிட்டர் குடுக்கும் ?" ; "இந்தப் படம் எவ்ளோ வசூல் பண்ணுச்சு ?" ; "அந்த அஜலகுஜாலாம்பாள் நடிகை எவ்ளோ சம்பளம் வாங்குச்சு ? என்ற ரீதியிலான உலகைப் புரட்டிப் போடவல்ல புள்ளிவிபரங்கள் மீது ஓயாத காதலாச்சே ? So படைப்பாளிகளிடம் நான் முன்வைக்கும் பிரதான கேள்வியே - "இது எவ்ளோ ஆல்பம் அச்சிட்டீங்க ? எவ்ளோ விற்பனையாச்சு ?" என்று இருப்பது வாடிக்கை ! நாம் மூக்குப்பொடி மட்டை அளவிலான சர்குலேஷனோடு வண்டியோட்டுவது அவர்கட்கு நன்றாகவே தெரியும் தான் ; 'அட...இந்த இலட்சணத்தில் உன் புழைப்பைப் பாக்குறே வழியை விட்டுப்புட்டு எங்க விற்பனையைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆணி பிடுங்கப் போறே ?" என்று கேட்டார்களெனில் அதனில் பரிபூரண லாஜிக்கும் இருக்கும் தான் ! ஆனால் புன்னகையோடே எனது அறிவுப்பசிக்கு (!!!) தீனி போடுவார்கள் ! "இரத்தப் படலம்" பல லட்சங்களில் ; லக்கி லூக் - again லட்சங்களில் ; லார்கோ : லட்சத்தினில்...என்று சொல்லும் போது  பூசணிக்காயே நுழையும் அளவுக்கு அலிபாபா குகையாய் என் வாய் விரிந்து கிடக்கும் ! "ஆக எல்லாமே லட்சத்தில் போலும் !!" என்று நினைத்துக் கிடந்தவனுக்கு , சற்றே low profile கதை நாயகர்களின் விற்பனை பற்றிய நிலவரம் தெரிந்த போது ரொம்பவே ஷாக் !! நம்மிடையே கொஞ்ச ஆண்டுகள் முன்பாய் செம ஹிட்டடித்ததொரு கலர் கி.நா ஒன்றின் ஒரிஜினல் பிரெஞ்சு சேல்ஸ் - "TEN THOUSAND !!" என்று அவர்கள் சொல்லக்கேட்ட போது காதைக் குத்தி விட்டுக் கொள்ளவே தோன்றியது ! மெய்யாலுமே சின்ன சேல்ஸ் கொண்ட நாமெல்லாம் தனித்து இல்லை போலும்  - என்பது மேலும் புரிய வந்தது - நாம் இதுவரையிலும் வியாபாரம் செய்திரா இன்னொரு பிரெஞ்சுப் பதிப்பகம் தாங்கள் பொதுவாய் அச்சிடுவதே 5000 பிரதிகள் தான் என்பதை Frankfurt-ல் அவர்கள் வாயாலேயே சொல்லக் கேட்ட சமயத்தில் !!

So வழக்கம் போல ஓட்டை ரெகார்டுக் கேள்வியை நான் முன்வைக்க- "Decent சேல்ஸ் ; முதல் பதிப்பு 15,000 பிரதிகள் விற்றுள்ளது ! அப்புறம் இதுவொரு 2 பாக மிஸ்டரி த்ரில்லராக்கும் ; இரண்டாம் பாகம் 2018-ல் வெளியாகும் !" என்று பதில் வந்தது !  'அட...டபுள் ஆல்பம் ; ஒரு மர்ம த்ரில்லர் !" என்றால் நமக்கு ஆர்வத்தைக் கிளப்பிடக் கூடியதே - என்ற ஆர்வத்தில் 2018-ல் இதன் இறுதி பாகத்தை மறவாது வாங்கிய கையோடு - நமது மொழிபெயர்ப்பாளரைப் படித்துப் பார்க்கவும் கோரினேன் ! "Seems ok !" என்று அவரும் சொல்ல - 'விடாதே..பிடி...!" என்று உரிமைகளை வாங்கிய கையோடு அட்டவணைக்குள் ஒரு இடமும் கொடுத்து விட்டேன் ! "புது one shot ; கதை நேர்கோடா ? இடியாப்பமா ? என்றெல்லாம் தெரியாதே ; இதை மெயின் சந்தாவுக்குள் அவசரமாய் நுழைக்கத் தான் வேணுமா ? சிம்பிளான ஏதோவொரு ஆக்ஷன் ஆல்பத்தோடு வண்டியை ரிஸ்கின்றி ஒட்டிடலாமே ?" என்று உள்ளிருந்த முன்ஜாக்கிரதை முன்சாமி குரல் கொடுத்தார் ! ஆனால் கட்டைவிரலை கலைநயத்தோடு சூப்பிடும் கடமை கந்தசாமியோ - "ஆங்..அதெல்லாம் பாத்துக்கலாம் !! ; கதை சும்மா மெர்சலூட்டும் வேகத்தில் ஓடுது !!" என்று அன்றைக்குத் தீர்ப்பளித்து விட்டு பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டார் ! 

நாட்களும் ஓடின ; ஆண்டின் மைய்யமான பகுதியில் இதற்கு slot ஒதுக்கப்பட்டிருக்க - இதர வேலைகளில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது ! So இதை பற்றி மறந்தேயும் போயிருந்தேன் ! ஏப்ரல் / மே மாத ரேஞ்சில் இதற்கான பணியினைக் கையிலெடுக்க வேண்டிய தருணம் நெருங்கிய சமயம் நானோ லோன் ரேஞ்சர் ; பராகுடா ; கிராபிக் நாவல் போன்ற கொஞ்சம் குண்டூ பணிகளுக்கும் புதைந்து கிடந்தது மாத்திரமன்றி, சுகவீனத்தால் ஓய்விலும் இருந்தேன் ! So இதனை மொழிபெயர்க்கும் பணியினை திரு.கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மறுக்கா மறந்தே போயும் விட்டேன் ! அவரும் எழுதி அனுப்பிட, நம்மவர்களும் சூட்டோடு சூடாய் DTP செய்து ஒன்றரை மாதங்கள் முன்பாகவே என்னிடம் ஒப்படைத்திருக்க - வீட்டிலுள்ள எனது மேஜையில் அதுபாட்டுக்கு குறட்டை விட்டுக் கிடந்தது ! 'அட...மர்ம த்ரில்லர் தானே ? நேர்கோட்டுக் கதையாய்த் தானிருக்கும் ; கொஞ்சமாய் மெனெக்கெட்டால் வேலையாகிடும் !!' என்ற தெனாவட்டில் 10 நாட்களுக்கு முன்வரைக்கும் அதைக் கையில் தொடவே இல்லை !! Finally ஒரு சாவகாச சுபயோக சுப தினத்தில், 108 பக்கங்கள் கொண்ட இந்த டபுள் ஆல்பத்தைப் புரட்டத் துவங்கிய போது மெது மெதுவாய் இருக்கையில் நெளிய ஆரம்பித்தவன் - சற்றைக்கெல்லாம் வியர்த்து விறு விறுக்க பேய் முழியோடு காட்சி தர ஆரம்பித்தேன் ! ஒரு ரிப்போர்ட்டர் ஜானி பாணியிலான மர்ம த்ரில்லர் - ஆனால் டபுள் இடியாப்பங்களோடு என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! "தெய்வமே....இந்தாண்டு ஜானி 2.0 என்று ஒரிஜினல் ரிப்போர்ட்டர்  ஜானியைச் சேதமின்றிக் கரையேற்றிய கையோடு - இப்படியொரு புது ஐட்டமா ? " என்று தலையைச் சொறிய ஆரம்பித்தேன் ! 

For starters - நவநாகரீக youth 6 பேர் தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்களெனும் போது அவர்களுக்கான வசனங்களில் பிரயோகத்திலிருந்த கருணையானந்தம் அவர்களின் கிளாசிக் தமிழ் நெருடோ நெருடென்று நெருடியது !! சமகால யூத் - இலக்கியத் தமிழில் பேசினால், கதையின் டெம்போவுக்கு நிச்சயம் உதவிடாது என்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புரிந்திட, எனது பதட்டம் அதிகமானது !  ஆகஸ்ட் சார்ந்த பணிப்பளு மண்டையில் பிரதானமாய் வீற்றிருக்க - மேஜராய் வசனங்களை மாற்றி எழுத அவகாசமில்லையே என்ற பயம் பக்கத்துக்குப் பக்கம் அதிகமாகிக் கொண்டே சென்றது ! பதட்டமும், குழப்பமும் கைகோர்க்கும் போது மண்டை எங்கே வேலை பார்க்கப் போகிறது ? "இன்னிக்கு ரா முழுக்க கண்முழிக்கறோம் ; தம் கட்டி வேலை பாக்கிறோம் ; ரெண்டே நாளிலே முடிக்கிறோம் !!" என்றபடிக்கு பணிக்குள் புகுந்தால் - "அண்ணாத்தே...அந்த வயசெல்லாம் நீங்க தாண்டி ஏக காலமாச்சு !!" என்று உடம்பு சொல்லத் துவங்கியது ! பற்றாக்குறைக்கு நமது இதர தொழில்முயற்சிகளுக்கும் அந்த வாரம் பிசியாகிட - நாளொன்றுக்கு ஏழோ-எட்டோ பக்கங்களுக்கு மேலே முடிக்கச் சாத்தியப்படவேயில்லை !! இயன்ற இடங்களில் வசனங்களைத் தக்க வைத்துக் கொண்டு ; அவசியமெனப்பட்ட இடங்களிலெல்லாம் முழுசாய் மாற்றும் வேலை துவங்கியது ! இதில் கொடுமை என்னவெனில் - பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பிலேயே ஏகமாய் dark areas இருந்தன !! 10 நாட்களாய் அதனோடு மல்லுக்கட்டியும் அதனை நான் முழுமையாய்ப் புரிந்து கொண்டதாய்ச் சொல்ல மாட்டேன் ; so யானையின் வாலா ? தும்பிக்கையா ? என்ற புரிதல் முழுமையாய் இன்றியே கதையினுள் புகுந்து பணியாற்றிய அனுபவம் கடந்த 10 நாட்களில் !!

சனிக்கிழமை காலையில் ஒரு மாதிரியாய் இந்தப் பணிகளுக்கு மங்களம் போட முடிந்த போது நான் விட்ட பெருமூச்சை ஒரு பலூனுக்குள் அடைத்திருப்பின் அது ராட்சச சைசில் இருந்திருக்கும் ! Anyways - ஒரு மறக்க இயலா எடிட்டிங் படலத்தின் இறுதியில் உங்களை சந்திக்கவிருக்கும் "நீரில்லை...நிலமில்லை" இதழினில் ஏகமாய்க் கேள்விகள் தொங்கி நிற்குமென்பதும் ; இந்தக் கதையினை இடியாப்ப ஜானியின் template உடன் ஒப்பிடுவது நிச்சயம் நிகழுமென்பதும் ; நிறைய காதுகளில் நிறைய தக்காளிச் சட்னிப் பிரவாகம் இருக்குமென்பதும் தீர்க்கதரிசி திருநா அவதார் எடுக்காமலே என்னால் ஆரூடமாய்ச் சொல்ல முடிகிறது !! இதோ இந்த இதழின் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க previews !   


முன் & பின் அட்டைகள் ஒரிஜினல்களே ! And உட்பக்க சித்திரங்கள் + கலரிங் செம modern !! திங்களன்று அச்சுக்கு செல்லும் இதுவொரு visual treat ஆக இருக்குமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! அந்த உட்பக்க previews ஒவ்வொன்றிலும் கேமரா கோணங்களைப் பாருங்களேன் !!!!! 

So ஒரு சுவாரஸ்ய ஜூலை காத்துள்ளதென்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடிகிறது எனக்கு ! அது முதுகில் மத்தளம் கொட்டி விறுவிறுப்பை ஏற்றிடுவதில் எழக்கூடிய சுவாரஸ்யமா ? அல்லது வாசிப்பினில் எழுந்திடவுள்ள சுவாரஸ்யமா ? என்பதை அடுத்த 2 வாரங்களில் தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் !!

So இப்போதைக்கு விடைபெறுகிறேன் guys - ஆகஸ்டில் காத்திருக்கும் கத்தையின் சவாலைச் சமாளிக்க வழி தேடிடும் முயற்சியினில் !! Have a blissful weekend !! Bye for now !! 

232 comments:

 1. MGRக்கு அடுத்ததா வந்தேன். அவர்கிட்டத்தான் தோத்தேன்னு பெருமையா சொல்லிக்குவேன்.

  ReplyDelete
  Replies
  1. நானோ - "முதல் பதிவே மக்கள் திலகத்தினது !" என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வேனாக்கும் !!

   Delete
  2. All credits goes to that profile legend and ever green

   Delete
 2. அந்த கலங்கரை விளக்க சித்திரம் சூப்பர்.இதர படங்களும் அருமை.waiting for July.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. முன் பின் அட்டையின் மிரட்டலான சித்திரங்கள் செம்ம் ம.

  ReplyDelete
 5. பஞ்சாயத்து பெருசுகள்ளாம் சட்டுபுட்டுனு வந்தா பரவாயில்ல. Filler pages மாதிரி நானே கமென்ட் போட்டுகிட்டு இருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் பூனை படம்..பாப்பா படம் என்று எதை எதையோ போட்டு மூடி, மறைக்கப் பார்த்தாலும் பொசுக்குனு "பெருசு'ன்னு கண்டுபுடிச்சி கவுத்திப்புடறாங்களே ?

   பயிற்சி பற்றலியோ ?

   Delete
  2. அப்போ நெஜமாவே பெருசுக தானா? பத்த வெச்சுட்டியே பரட்ட..

   Delete
 6. நீரில்லை நிலமில்லை சித்திரங்கள் புதுமையாக மற்றும் கலரிங வித்தியாசமாக உள்ளது. அட்டைப்படம் முற்றிலும் புதிய டிசைனில் உள்ளது. ஆர்வமுடன் படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வசனங்கள் குறைவான கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கதையின் உட்பக்கங்களை பார்தாபார் சித்திரங்கள் கதை சொல்கிறது.

   Delete
  2. ///வசனங்கள் குறைவான கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.///

   டெக்ஸ் கதைகாள்ல வசனங்கள் குறைவுதானே பரணி...

   கும், நங் , சத் ,மடார்.,பளார்.. தடால் கடேசியா டுமீல்..

   அம்புட்டுதானே..!?
   அதை மட்டும் ஏன்.. ம்ம்.. !?

   Delete
 7. விஜயன் சார், கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் நடந்த caption போட்டி முடிவுகளை அறிவிக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. +2

   ஈரோட்டில் ராஜமரியாதையோடு வலம்வரப் போகும் அந்த 'guest of honor' யார்? அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்! (கர்ர்.. புர்ர்..)

   ஜூரிகள் தங்கள் தீர்ப்புகளைச் சொல்லிவிட்டார்களா? அல்லது 'சிரிப்பே வர்லயே..'ன்னு கமுக்கமா இருந்துட்டாங்களா?

   Delete
  2. பேசாம ,தீர்ப்பு சொல்லப் போற ஜுரிகளுக்கு ஏதாச்சும் பரிசுன்னு அறிவிக்கலாம் (உதாரணமா ரவுண்ட் பன் )

   Delete
  3. To : ஜூரிவாள் ரபீக் & காமிக் லவர் ராகவன் :

   தீர்ப்பைச் சொல்லிடலாமே சார்ஸ் ?

   Delete
 8. 'நீரில்லை நிலமில்லை' அட்டைப்படங்களும், உள்பக்க ப்ரிவீயூக்களும் ச்சும்மா மிரட்டல் ரகம்!! சித்திரங்களில் வண்ணச்சேர்க்கை பிரம்மிப்பூட்டுகிறது! கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் அந்த ஒளியைப் பாருங்களேன் - ப்பா!!

  ReplyDelete
  Replies
  1. பக்கங்களைப் புரட்டப் புரட்ட அந்த உப்புக் காற்று கன்னத்தில் வருடும் உணர்வே எழும் பாருங்கள் !!

   Delete
 9. Awesome preview editor Sir. Wow I love idiyappam. I'll come back morning and tell what I felt. Superb pictures and all. Eagerly waiting for July books.

  ReplyDelete
  Replies
  1. I prefer my இடியாப்பம்ஸ் white சார் !

   Delete
 10. நீரில்லை நிலமில்லை வித்தியாசமான சித்திரங்கள். எதிர்பார்ப்பு கூடுகிறது.

  ReplyDelete
 11. ச்சும்மா பயப்படுத்தாதீங்க சார். ஓவியங்கள் கலக்குது. இது நிச்சயமாக கலக்கப்போகிற ஒரு சித்திர விருந்தாக அமையும் என்றே தோன்றுகிறது கர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. நீரில்லை.நிலமில்லை..இனி பயமுமில்லை சார் !!

   Delete
 12. ////இந்தப் பணிகளுக்கு மங்களம் போட முடிந்த போது நான் விட்ட பெருமூச்சை ஒரு பலூனுக்குள் அடைத்திருப்பின் அது ராட்சச சைசில் இருந்திருக்கும் !/////

  நடூ ராத்திரியில இத படிச்சுட்டு கெக்கபிக்கேன்னு சிரிச்சுப்புட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. அதென்ன பழக்கம்.. நடுராத்திரியில சிரிச்சிக்கிட்டு.. எல்லோரும் தூங்கின பிற்பாடு.. அதுவும் கெக்கபிக்கேன்னு..!?

   தைரியம் இருந்தா வீட்டம்மா முழிச்சிக்கிட்டு இருக்கும்போது சிரிக்கணும்.. என்னைய மாதிரி..! (ஊருக்குப் போயிருக்காங்கன்றது வேற விசயம் ) :-)

   Delete
  2. கண்ணா @ எப்படி இப்படி :-)

   Delete
  3. KOk
   சகதர்மிணி அவுட் ஆஃப் ஸ்டேஷன்னா எம்பூட்டு தெகிரியமா எழுதறார் பாருங்கோ..மஹா ஜனங்களே...

   அதும் அவுங்க அவுட் ஆஃப் ஸ்டேஷனுங்கிறத கூட .....

   அய்யா எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் தெகரியம் வருது....

   எங்களுக்கெல்லாம் அவுங்க அவுட் ஆஃப் ஸ்டேஸனக்கூட அவங்க பர்மிஷன் இல்லாம சொல்ல முடியல....


   ஜோக்...

   (வாசலில் அதட்டல் குரல்)

   யாருய்யா அது வீட்ல...

   கணவர்: யாருங்க அது பொம்பள இல்லாத வீட்ல வந்து சத்தமா அதட்றது...கடைக்கி போயிருக்காங்க இப்ப வந்திடுவாங்க

   அதட்டல் குரலுக்குரியவர்: நானும் அப்பறமா வர்றேன் சார் என் வீட்டுக்காரம்மாட்ட கேட்ட பெறகு ....

   Delete
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...


  எதீர்பார்ப்புகளோடு நானும் காத்திருக்கிறேன் சார்..:-)

  ReplyDelete
 14. ஞாயிறு காலை வணக்கம்
  ஆசிரியர் மற்றும் நண்பர்களே 🙏🏼
  .

  ReplyDelete
 15. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
  வேறொன்றறியேன் பராபரமே..!

  உள்ளேன் ஐயா..!

  ReplyDelete
  Replies
  1. என்னாச்சு.. தத்துவமா கக்கறீங்க... சாமியாராகிட்டீங்களா... இல்ல சாமியாராக்கிட்டாங்களா..😂😂😂

   Delete
  2. ஆசிரமம் ஒண்ணு போடலாம்னு ப்ளான் சரவணரே..! :-)

   Delete
  3. ///ஆசிரமம் ஒண்ணு போடலாம்னு ப்ளான் சரவணரே..! :-)///

   கலர்புல்லான திட்டம். ஹி..ஹி..

   Delete
  4. ஹீரோயின் யாருன்னு சொன்னா ஜாய்னிங் அப்பிளிக்கேஷன் போடலாம்

   Delete
  5. நேக்கு ஒரு சீட் புக்கிங் செஞ்சூ !

   Delete
  6. ஈரோடு எக்ஸ்பிரஸ்ஐ விட ஆசிரம membership booking அதிகமாக இருக்கும் போல.எடிட்டர் ஸ்பெஷல் கோட்டாவுல வர்றார் போல.

   Delete
 16. நீரில்லை நிலமில்லை - A Visuval Treat- waiting for July.

  ReplyDelete
 17. நீரில்லை நிலமில்லை

  ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளது.
  அந்த கலங்கரை விளக்கம் வெளிச்சத்தில் ஒளிர்வது நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
  ஜீலை வெளியீடுகளில் முதலிடம் பெறும் இதழாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஜூலை வெளியீடுகள் எல்லாமே ஆவலை தூண்டுகிறது. ஆண்டு மலர் கி.நா மற்றும் நீரில்லை அற்புதம்.

   Delete
  2. இந்த மாதம் வெளியாக நிறையவே தகுதிகள் கொண்ட இதழ் தான்,,,நீ.நி...! ஊருக்குள் தான் எங்கேயும் நீரில்லையே !!

   Delete
 18. Replies
  1. தண்ணீர் பஞ்சம் தலைவிரிச்சி ஆடுற இந்த காலத்திலே எல்லாரும் ஒரே நேரத்தில வந்தாச்சி, வந்தாச்சின்னா என்ன பண்றது?? என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா...

   Delete
  2. வீட்ல நியூஸ்பேப்பர் வாங்குறிங்க இல்ல.. அதை யூஸ் பண்ணி..


   நாட்டு நடப்பைத் தெரிஞ்சிக்கோங்க.!

   Delete
 19. நீரில்லை நிலமில்லை

  பதிவை படிக்க ஆரம்பிக்கும்போது, ஓகே இதுவும் பரனுக்கு அனுப்ப போகிறார் என்று திகிலோட படிச்சா நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கல.

  அட்டை படங்களும், உள் பக்க ப்ரியூக்களும் கதையின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் அதே தான் நினைத்தேன். நல்ல வேளை தப்பித்தது.

   Delete
  2. நானும் கூடத்தான்.

   Delete
  3. நானும் கூடத்தான் !!!

   Delete
  4. பரணென்ன பரணு. அவரோட குடோன்ல இதுமாதிரி எத்தனை கிடைக்குமோ....

   Delete
 20. நீரீல்லை நிலமில்லை..

  😍😍😍😍😍😍😍😍😍😍😍

  ReplyDelete
  Replies
  1. மதியில்லை மந்திரி இல்லை....😢😢😢😢😢😢😢

   Delete
  2. மந்திரி இருக்காரு.... :-)

   Delete
  3. அட போங்கப்பா நம்ம CM EPS ரெண்டு பக்கெட் தண்ணி வாங்கித்தான் குளிக்கிறாரு.நாலு லிட்டர் தான் குடிக்கிறாராம்- தண்ணிய த்தான்...

   Delete
 21. நீங்களும் இப்படி தான் ஒவ்வொரு கதைக்கும் விளம்பரம் செய்கிறீர்கள் அது உண்மையாக மாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வேறெப்படி சார் விளம்பரப்படுத்த இயலும் ?

   Delete
  2. 99 சதவீதம் உண்மையாகவே அமைகிறது.

   Delete
 22. நியுட்டனின் புது உலகம்:

  வித்தியாசமான இந்த காமிக்ஸின் கதையின் தலைப்பை முதலில் பாராட்ட வேண்டும்.
  கதை டாக்குமென்டரி போல ஆரம்பித்தாலும், டிடெக்டிவ் த்தில்ராக முடிந்து இருப்பது ஆச்சரியம்.

  மார்ட்டினுக்கு அடி வாங்குவதை தவிர வேறு எதுவும் பெரிதாக இந்த காமிஸ்ஸில் அவருக்கு வேலை இல்லை.

  காதாசிரியர் பிலிப் ஜேன் பார்மருக்கு ஜே போட வைக்கும் கதை.

  விண்ணில் இருந்து விழுந்த எரிக்கற்களை நேரில் பார்த்த நபர்களுக்கு ஆதித அறிவற்றலும், இளமை மாறத வாழ்க்கையும் கிடைக்கிறது.

  ஏற்கனவே எரிகல்லை பார்த்து பயனடைந்த கார்ல் என்பவன் , வெவ்வேறு இடங்களில் விழுந்த எரிக்கற்களை ஒன்றாக சேர்த்தால் மிகப்பெரிய சக்தி கிடைக்கும் என்று நம்புகிறான்.

  அந்த முயற்சியின் போது கார்லின் காதலி ஹெலன் லிங் கொல்ல படுகிறாள்.
  ஹெலனை கொன்றது யார்?. கார்லின் செயலை தடுக்க ஒரு கும்பல் திவிரமாக முயற்சி செய்கிறது. அது ஏன்?. இரண்டு எரிக்கற்களை சேர்த்தால் என்ன நடக்கும்?.

  போன்ற கேள்விகளுக்கு விடைகளோடு முடிகிறது நியூட்டனின்(புது) உலகம்.

  சித்திரங்கள் அருமை. ஹெலன் லிங் மற்றும் ஹிரோயின்(77 வது பக்கத்தில்), எரிக்கற்களை பார்த்த பெண்(பெயர் குறிப்பிடபடவில்லை). போன்ற பெண்களின் சித்திரங்கள் சுப்பர்.

  ஹெலன் லிங் செத்து போனது தான் வருத்தம். ஹெலன் லிங் பத்திரமாக சொர்க்கத்திற்கு போய் இருப்பாள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ இது தான் கதையா....மீண்டும் படிச்சுட்டு வாரேன்.....

   Delete
  2. நல்ல விமர்சனம் கணேஷ். Plain and simple.

   Delete
  3. ///ஹெலன் லிங் மற்றும் ஹிரோயின்(77 வது பக்கத்தில்), எரிக்கற்களை பார்த்த பெண்(பெயர் குறிப்பிடபடவில்லை). போன்ற பெண்களின் சித்திரங்கள் சுப்பர்.///

   ஓஹோ...

   Delete
  4. //வித்தியாசமான இந்த காமிக்ஸின் கதையின் தலைப்பை முதலில் பாராட்ட வேண்டும்.//

   Original தலைப்பே இதுதான் சார்...!

   Delete
 23. இடியாப்பதை தக்காளி சேவையாய் கொடுத்தால் ஓகே.....

  ReplyDelete
 24. லக்கி ஆண்டு மலர்-

  நித்திரை மறந்த நியூயார்க்-

  நீரில்லை நிலமில்லை-

  3பிரிவீயுக்களும் 3விதம்....!

  3யும் பார்க்கும்போது தலா 33மார்க்!

  3ல் நம்ம டேஸ்ட்டுக்கு உகந்தது நீரில்லை நிலமில்லை தான்!

  எதோ ஒரு பெரிய ஃபேக்டரியில் திரும்பி பார்த்துக் கொண்டே ஓடும் அவளின் உயிர்பயம்!

  "செத்தடி நீ *@%&#%&@*"---கொல்ல துரத்தும் குரூரத்தை கொப்பளிக்கும் அவனது விழிகள்!

  மாட்டிக் கொண்டவுடன் வெளிப்படும் இயலாமை!

  சான்சே இல்லை!! சூப்பர் முன்னோட்டம் எடிட்டர் சார்!

  திஸ் கோயிங் டூ பி த பிளாக்பஸ்டர் ஆஃப் ஜூலை!

  ReplyDelete
  Replies
  1. நம்முடைய உயரங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. No doubt.

   Delete
  2. வீட்டின் நிலைவாசலோ அதே உசரம் தான் சார் ; மண்டை தட்டாது போயின் சூப்பர் !!

   Delete
 25. மே மாதத்திற்கு பிறகு ஜூலையில் தான் அதே போல 3 இதழ்கள் . மூன்றுமே அட்டகாசம். மே வை மிஞ்சுமா ஜூலை fingers crossed.

  ReplyDelete
  Replies
  1. ஜூலையில் ஹெல்மெட் அவசியப்படலாம் சார்ஸ்....உச்ச நீதிமன்றம் உத்தரவோ - இல்லியோ.....அடியேனின் பரிந்துரை !!

   Delete
  2. ஜூலை வரட்டுமே சார்....

   Delete
  3. புதிய முயற்சிகளுக்கு நான் எப்போதும் தயார் ஆசிரியரே. அவை எந்த ஒரு extreme ஆக இருந்தாலும். I'm always game.

   Delete
 26. Sir, this story seems to be part 2 of the thriller graphic novel “Iravey Irulae Kollaaedhe”, and the murders are to be happened at sea instead of forest and town.

  ReplyDelete
  Replies
  1. அது இன்னமும் விசாலமான களம் சார்....!

   Delete
  2. Sir, Coimbatore book festival will be conducted on July 19 to 28.Can I expect " Kaala Vettaiyar?"

   Delete
  3. நல்ல கேள்வி. நானும் அதே கேள்வியை கேட்கிறேன்

   Delete
  4. ஸ்டால் உறுதியாகட்டும் சார் !

   Delete
 27. சார் அட்டைப்படம் இது வர வந்ததிலே பெஸ்ட்னு பட்சி கூவுவதுடன்...இனிமே இத விட பெஸ்ட் வரவே முடியாதுன்னே கரையுது.....அட்டகாசம்....பின்னட்டையும் சந்தோச கிறுகிறுப்பத் தர நீங்க எழுதிய வரிகள்...இதுக்காத்தாண்டா காத்துக்கிடந்த சீக்கிரமா வான்னு கூவும் மனத அடக்க ஏலலயே....சார் கதையென்ன கதை ....கலங்கரை விளக்கம்ங்க எழுத்த பார்த்தே இரசித்து மயங்கிக் கிடந்தவன் நான்....இவ்ளோ அழகா கருநீலப்பச்சை வான் ...அதை எதிரொலிக்கும் கடல் பின்னனியிலும் முன்னனியிலும் மனதைக் கவரும் மழையோடு காணும் கலங்கரை விளக்கத்த பாத்து ரசிக்கவே நேரம் காணாதே...அசத்தல் சார்....நானும் உங்களோடு தீவுக்குள் நுழைய காத்திருப்பேன் கரம் நீட்டி.... பார்க்க பார்க்க ஈர்க்குது வண்ணங்கள்....

  ReplyDelete
  Replies
  1. பரணி செம்மயா எழுதரிங்க. சூப்பர் ஜி சூப்பர் ஜி

   Delete
  2. சூப்பர் ஸ்டீல்..

   Delete
  3. //இது வர வந்ததிலே பெஸ்ட்னு பட்சி கூவுவதுடன்...இனிமே இத விட பெஸ்ட் வரவே முடியாதுன்னே கரையுது....//

   உங்க ஊர் பட்சி மாசத்துக்கு ஒருவாட்டி "பெஸ்ட்" பட்டயத்தை ரவுண்ட் விட்டுப்புட்டே இருக்கே ஜி ? கோவையிலே பட்சிகள் இப்டி தானோ ?
   Anyways - புது மாப்பிள்ளை சார் பதிவுப்பக்கமும் தலைகாட்டி வருவதில் சந்தோஷமே !!

   Delete
  4. Oh அது ஸ்டீல் தான் சூப்பர் ரம்மி.

   Delete
 28. அருமையான கலரிங், மிக அருமையான சித்திரங்கள். Mindhunter என்ற ஹாலிவுட் படத்தை நினைவுட்டுகிறது. FBI trainees ஒரு சின்ன தீவில் trainingபோது ஒவ்வொருவராக தங்கள் பலவீனங்களாளெ கெல்லப்படுவர். 1970ல வந்த "நடு இரவில்" படமும் ஒரு தீவில் நடக்கும் Murder mystery.

  ReplyDelete
  Replies
  1. ஏகப்பட்ட.ஏகப்பட்ட...ஹாலிவுட்..கோலிவுட்..கோலிசோடாவுட் படங்களெல்லாம் சீக்கிரமே நம் அலசல்களில் இடம் பிடிக்கவுள்ளன நண்பரே !

   Delete
 29. @ Rafiq Raja & Comic Lover Raghavan :

  கேப்ஷன் போட்டிக்கான வின்னரை அறிந்துகொள்ள நானும் ஆவலாயுள்ளேன் சார்ஸ் ; anytime you are ready ...!!

  ReplyDelete
  Replies
  1. இன்று இதற்கு நேரம் ஒதுக்கி பதிலளித்து விடுகிறேன் எடி. இரு வாரங்களாக வேலை பளு, பின்னி விட்டது.

   Delete
  2. I am ready sir - give me two minutes to cut and paste .. hope your option is ready - Rafiq and Editor !

   Delete
  3. This entry of Selvam Abirami is my selection as a winner of Caption B. Though he had dubbed it as Lootikaaandi and no Pottkaandi, I loved the timing (trend of the week) and the decency in the comedy !

   ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

   கேப்சன் 2

   பார்மேன் : மிஸ்டர் கார்சன் !! நீங்க கேட்டமாதிரியே சுத்தியல் ஒண்ணு ஆர்டர் குடுத்திட்டேன்
   டெக்ஸ் : ஹலோ ஆட்டுத்தாடி !!!! இனிமே உங்க ஆயுதம் வின்செஸ்டர்,ரிவால்வர் இல்லையா ?

   கார்சன் : சுத்தியல் இருந்தாத்தான் இப்போதைக்கு ட்ரெண்டிங்ல இருக்க முடியும் !!!!
   //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

   Delete
  4. அடியேனின் தேர்வு....!!!

   பொருளாளர்ஜியின் கைவண்ணம் !
   =================================================================================
   கேப்சன் 3

   டெக்ஸ் : அடேய் கிழவா !! நல்ல லெக் பீஸ் இருக்கற இடமா கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டியே ??

   கார்சன் : ஹி..ஹி ..விழிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

   Delete
  5. மதிப்பிற்குரிய ஜட்ஜ் அய்யாக்களுக்கு வணக்கம்!

   நமது அனைவரது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான செனாஅனாவுக்கு எந்த கேப்ஷன் போட்டிகளிலும் பங்கேற்காமலேயே EBF விழாவில் 'guest of honor' அந்தஸ்து பெறுவதற்கு 100% தகுதி இருக்கிறது! ஒருவேளை அவர் கேப்ஷன் போட்டியில் நேரடியாகப் பங்கேற்றிருந்தால், நடுவர்களின் தேர்வும் மிகச் சரியானதே!!

   ஆனால், அவர் எழுதியுள்ள கேப்ஷன்கள் நம்மைச் சிரிக்க வைக்கவும், மற்ற போட்டியாளர்களை உற்சாகப் படுத்தவுமே அன்றி - வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுவதற்கு அல்ல என்பது என் தாழ்மையான கருத்து! உங்களின் இந்தத் தீர்ப்புமே கூட அவருக்கு இக்ளியூண்டு இன்ப அதிர்ச்சியையும், சகட்டுமேனிக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும்!
   கிரிக்கெட்டில் ஆடும்-லெவன் அணியில் இடம்பெறாத, பெவிலியனில் உட்கார்ந்து கைதட்டி உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தவரை இழுத்துவந்து 'மேன் ஆஃப் த மேட்ச்' அவார்டு கொடுத்ததைப் போலிருக்கிறது உங்களது செயல்!!
   இந்த இடத்தில், கஷ்டப்பட்டு விளையாடிய வீரர்களின் மனநிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன் ப்ளீஸ்...?

   ஆகவே நடுவர்களே.. போட்டி எதுவுமின்றி நாம் அனைவரும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கும் அந்த 'guest of honor' நமது செனாஅனாவாகவே இருக்கட்டும்!! ஆனால், நமது சிவகாசி ஜட்ஜ் ஐயா தனது சாசனத்தில் கூறியிருந்தபடி, போட்டியில் பங்கேற்ற - I repeat - போட்டியில் பங்கேற்றவருக்கான 'Guest of honor' இன்னமும் தேர்வு செய்யப்படாமலேயே இருப்பதாக நான் திட்டவட்டமாகக் கருதுகிறேன்!
   இன்னமும் ஒரு ஜட்ஜ் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத நிலையில், சற்றே யோசித்து உங்களது தீர்ப்புகளையும் மறு பரிசீலணைக்கு ஆட்படுத்துமாறு ஜட்ஜ் சமூகத்தை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!

   மற்றவை - ஜட்ஜ் ஐயாக்களின் எண்ணங்களில்!

   Delete
  6. ஆஹா !!! ஈவியை வழிமொழிகிறேன்!!! மிகவும் தர்ம சங்கடத்தில் இருந்தவனை தத்தளிக்கையில் கை தூக்கி விட்ட தயாளனாக ஈவியை பார்க்கிறேன் .
   29-வது ஓவரில் ஷாவையும் ஷாஹிடியையும் மெய்டன் ஓவர் வீசி வீழ்த்திய பும்ராவை கோலி பார்த்தது போல் ஒரு பார்வை ..
   நேற்று கடுமையான இரவு பணியால் ப்ளாக் வர இயலவில்லை நண்பர் ..திருப்பூர் நாகராஜன் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தபோது தர்ம சங்கட உணர்வே மேலோங்கியது ...
   எடிட்டர் சாரும் ,ராகவன்ஜியும் தவறாக எண்ணாமல் வேறு ஒரு தள வாசகரை பரிசுக்கு தேர்ந்தெடுக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ...

   Delete
  7. ஹிஹி.. செனாஅனாவின் மைன்டு வாய்ஸ் : 'அடடா.. இந்தப் பூனைகளையெல்லாம் மொதல்ல விஷ ஊசி போட்டு கொல்லணும்யா'

   Delete
  8. ///29-வது ஓவரில் ஷாவையும் ஷாஹிடியையும் மெய்டன் ஓவர் வீசி வீழ்த்திய பும்ராவை கோலி பார்த்தது போல் ஒரு பார்வை ..///

   ஹா ஹா!! இதே பார்வையை நீங்கள் EBF வரும்போது என்னை நோக்கிப் பார்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ( எச்சரிக்கை! பார்வையில் லைட்டா மாற்றம் ஏற்பட்டால்கூட நம்ம கவுண்டரின் 'ரொமேன்டிக் லுக்'கு போல ஆகிவிட வாய்ப்பிருக்கிறது!)

   Delete
  9. I have proclaimed judgement based on what appealed best to me. The Editor is the right to me. I read every contribution painstakingly before deciding on this.I do not think it is fair on the judge to change because contestants are requesting.

   Therefore I request Editor to take over and decide for Caption B.

   Delete
  10. I don't go with MrRaghavan's confused statement.

   While செ அ had declared his clear intention ,Mr.Raghavan is creating rukus in comics parliament and furthermore he is asking the speaker Vijayan sir to decide.
   Better he can decide ,"the prize goes to Mr.Vijayan sir" as he is eagerly waiting for the results.

   Delete
  11. I stand by my decision. No ruckus. Everyone chooses what they find best considering all options. Mind your words Mr J - No ruckus intent. Since Editor is the owner if he does not like my decision I thought he can choose.

   Delete
  12. சமையல் போட்டி நடைபெறுகிறது....ஆளாளுக்கு அவரவர் கைவண்ணத்தைக் காட்டி சமைத்து அடுக்கி விடுகிறார்கள் !

   அப்பாலிக்கா ....

   நடுவர்கள் ஒவ்வொன்றாய் ருசி பார்த்து தங்கள் தேர்வைச் செய்கிறார்கள் !!

   அப்போ ஒரு குரல் :

   "அச்சச்சோ....அது போட்டிக்கான பலகாரமே நஹி வாத்யாரே ! சும்மாக்காச்சும் - போட்டியாளர்களை உற்சாகப்படுத்த செஞ்சது ! அதைப் போயி ஏனுங்கோ தேர்வு செய்றீங்க ? "

   ஜட்ஜின் எண்ணம் :

   "ஜி ...ருசி பார்த்து தேர்வு பண்றதே நம்மள் கி பொறுப்பு !! வாயிலே அல்லா ஐட்டத்தையும் வய்ச்சு பார்த்தான் ; எது பெஸ்ட்டா தெரிஞ்சதோ - அதைத் தேர்வு செய்தான் ! இதில் நம்மள் தப்பு க்யா ?"

   நியாயம் தானே ?

   பார்வையாளர்கள் கைதட்டுவார்கள் ; பிகில் அடிப்பார்கள் ; கரகோஷம் எழுப்புவார்கள் ! ஆனால் மைதானத்தினில் இறங்கி பவுண்டரி விளாசி விட்டு,"அச்சச்சோ ஞான் டீம்லேயே இல்லீங்கோ ! " என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா ?

   மூன்றாவது ஜட்ஜ் அவரது தீர்ப்பைச் சொல்லட்டும் ; அதுவரையிலும் ஹமாரி judgement stands !

   Delete
  13. "Duckworth and Louis" it seems.

   Delete
  14. இந்த வார பதிவின் தலைப்பு போலவே கேப்சன் ரிசல்ட்டும் இடியாப்ப சிக்கலாய் இழுக்கிறது...

   Delete
  15. ஆஹா !!! ஈவியை வழிமொழிகிறேன்!!! மிகவும் தர்ம சங்கடத்தில் இருந்தவனை தத்தளிக்கையில் கை தூக்கி விட்ட தயாளனாக ஈவியை பார்க்கிறேன் .
   29-வது ஓவரில் ஷாவையும் ஷாஹிடியையும் மெய்டன் ஓவர் வீசி வீழ்த்திய பும்ராவை கோலி பார்த்தது போல் ஒரு பார்வை ..
   நேற்று கடுமையான இரவு பணியால் ப்ளாக் வர இயலவில்லை நண்பர் ..திருப்பூர் நாகராஜன் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தபோது தர்ம சங்கட உணர்வே மேலோங்கியது ...
   எடிட்டர் சாரும் ,ராகவன்ஜியும் தவறாக எண்ணாமல் வேறு ஒரு தள வாசகரை பரிசுக்கு தேர்ந்தெடுக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ...///
   அப்ப இந்த வருசமும் ஈரோட்டுக்கு வர்ற ஐடியா இல்ல.. அதானே?? அதுக்கு எதுக்கு இப்பிடி 'சுத்தி' வளைக்கிறீங்க???

   Delete
  16. ரம்மி ஐயா

   நாங்கள் லாம் ஜோக்குன்னு சொல்லி நாங்களே சிரிச்சிக்கிட்றோம்

   ஆனா உங்க ஒவ்வொரு ஜோக்கும் class apart...

   Delete
  17. டியர் எடி (அப்பாடா, ஒரு வழியாக, அனைத்தையும் கருத்துகளையும் படித்து முடித்து விட்டேன்)

   கேப்ஷன் போட்டி 1க்கான எனது தேர்வு P.Karthikeyan

   4 June 2019 at 14:50:00 GMT+5:30
   Caption 1

   டைனமைட் : ஏன் தல, உங்க செல்வாக்க பயன்படுத்தி எடிட்டரிடம் பேசி ஈரோடு போக ஒரு ஏற்பாடு செய்ய சொல்லுங்களேன். எனக்கும் ரெஸ்ட் கிடைக்குமுள்ள...

   டெக்ஸ் : மெதுவா பேசு டைனமைட். கேப்ஸன் போட்டியில ஜெயிக்கிறவங்களை அப்படியே உங்க குதிரை மேலேயே அழைச்சு வந்துருங்களேன்னு சொல்லிடப்போறார். அப்புரம் உனக்குத்தான் கஷ்டம்..

   Delete
 30. சார் இன்னொரு சந்தோச விசயம்...எனது துணைவியிடம் தப்பியோடிய இளவரசிய கொடுத்து படிக்கச் சொல்ல...படித்து அசந்த அவளை ...அடுத்து அசரச் செய்தது நம்ம தலைவாங்கிக் குரங்குதான்...தற்போதய படிப்பில் ட்ராகன் நகரம்....வாய்ப்பிருந்தா டெக்சின் பெஸ்ட்டான ...மறுபதிப்புல வண்ணத்ல தலை வாங்கி மற்றும் கார்சனின் கடந்த காலத்த மறு மறு வண்ணத்ல பெரிய சைசுல தரிசிக்க ஆசை தங்கள் கேள்வியான டெக்ஸ் மறுபதிப்புக்கு. ....

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் Domestic abuse லே வராதா??

   Delete
  2. சார் ஒரு டவுட்டு. இளவரசி தான் தப்பி ஒடிப்புட்டாங்களே. திரும்ப அவுங்கள எதுக்கு உங்க துணைவி கிட்ட கொடுத்தீங்க.

   Delete
  3. ரம்மி செம்ம யா

   Delete
  4. ரம்மி கலக்குறிங்க...

   Delete
  5. ரம்மி@ சிரிச்சு மாளல..

   பரணிfB@..பரணி ! சும்மா கலாய்ச்சாலும் spouse காமிக்ஸ் படிக்கறதுங்கறது ரொம்ப பெரிய விஷயம்...you are gifted..

   Delete
  6. செல்வம் அபிராமி @ இது கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளாவின் கமெண்ட்.

   Delete
  7. Sorry barani..it ought to have been addressed to STEEL...

   every regular commentator of this blog knows steel's unique slang and writing style..

   And i already knew like everybody else your better half is a comics reader ..and she is a thorgal fan..

   The humour behind rummy's fantastic joke is of course steel has been newly wed...

   Delete
 31. கேப்டன் போராடி முடிவுகள் வர்ற வரை தாக்கலாம்.


  கேப்ஷன்1)

  டைனமைட்: கொள்ளு பை மாட்டி விடுங்க சார்.நான் இதை சாப்டுட்டு இருப்பேன்ல.

  டெக்ஸ்: உனக்கு கொள்ளு வாங்கப் போன கொள்ளுத் தாத்தா கார்சனத் தான் எதிர் பார்த்துக்கிட்டு இருக்கேன்.பார்ல கொள்ளு பேத்தி வயசுல பொண்ணு யாராவது ஊத்தி மூடிருப்பாங்க நம்ம பெருச ...


  கேப்டன் 2) :

  கார்சன்: டெக்ஸ்,கடைசி டேபிள்ல நம்மள பார்த்ததுமே தூங்குற மாதிரி நடிக்கிறான் ஒருத்தன்.என்ன பண்ணலாம்.

  டெக்ஸ்: உன் வாய் சுக்கா ரோஸ்ட் தட்டு தட்டா முழுங்கியிருந்தாலும் கண்ணு கரெக்டா வேலை செய்யுது...அவன நான் பார்த்துக்கிறேன்...நீ வாசலுக்கு எதிராக வின்செஸ்டர் வச்சுகிட்டே தூங்கும் அந்த அறிவாளிய பார்த்துக்க...

  பார்மேன்: இருங்கப்பா..என்னோட பார கடைசியாக ஒரு தடவை பார்த்துக்கிறேன்....

  கேப்ஷன்3)
  டெக்ஸ்: பெருசு நீ என்ன பாட்டு பாடப் போறேன்னு தெரியும்...

  கார்சன்: உங்கூட இருந்தா பாட்டு டான்ஸ் எதுவும் வராது.பரவாயில்ல..பல்லு வெளக்கீட்டு
  வாய் கொப்புளிச்சிட்டு வர்றேன்.குருதைய கொஞ்சம் நிப்பாட்டுப்பா....
  ReplyDelete

 32. லயன் ஆண்டுமலர்கள்

  #"பர்த்டே"---குழந்தைகள்கிட்ட இந்த நாள் கொணரும் உற்சாகமும், கொண்டாட்டங்களும் ஜாலியானவை.

  #வளர்ந்த "குழந்தை"களுக்கு கொண்டாட்டங்கள் வேறுமாதியானவை!ஹி...ஹி...!!!

  #லயன் காமிக்ஸ் ஆண்டுமலர் பற்றிய எடிட்டர் சாரின் முன்னோட்டங்கள், அவரின் சிறுவயது நினைவுகளை ஹாஸ்யத்துடன் வெளிக்கொணர்ந்து இருந்தது.

  #லயன்ல தீபாவளிமலரும், கோடைமலரும் டாப் கவனங்களை எடுத்து கொள்ள, இடையே வெளிவரும் ஆண்டுமலர் உண்டாக்கும் எதிர்பார்ப்பு ஒரு வகையானது!

  #இரு ஞாயிறுகளாக இந்தியா மேட்ச் இருந்ததால் புத்தக பொட்டிய உருட்டமுடியலை! இன்று கொஞ்சம் உருட்டி பழைய லயன் ஆண்டுமலர்கள் பற்றிய விபரங்களை தொகுத்து உள்ளேன்!

  லயன் ஆண்ட மலர் பட்டியல் இதோ....!!!!

  1.சைத்தான் விஞ்ஞானி-1985
  2.பவளச்சிலை மர்மம்-1986
  3.அதிரடிப் படை-1987
  4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
  5.நடுக்கடலில் அடிமைகள்-1989
  6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
  7.மர்ம முகமூடி-1991
  8.மின்னலோடு ஒரு மோதல்-1992
  9.கானகக் கோட்டை-1993
  10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
  11.பூம் பூம் படலம்-1995
  12.இரத்தப் படலம்-VI-1996
  13.பேங்க் கொள்ளை-1997
  14.கானகத்தில் கலவரம்-1998
  15.தலைவாங்கும் தேசம்-1999
  16.இரத்த பூமி-2000
  17.மெக்சிகோ படலம்-2001
  18.பயங்கரப் பயணிகள்-2002
  19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
  20.----------------------------2004
  21.----------------------------2005
  22.சூ மந்திரகாளி-2006
  23.----------------------------2007
  24.----------------------------2008
  25.----------------------------2009
  26.----------------------------2010
  27.----------------------------2011
  28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
  29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
  30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
  31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
  32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
  33.லயன் 300 ஸ்பெசல்-2017
  34.லூட்டி வித் லக்கி-2018
  35.தி லக்கி ஆண்டுமலர்-2019

  #இந்த 35ஆண்டுகளில் எத்தனை விதமான பயணங்கள் என அந்தந்த ஆண்டுமலர்களை பார்க்கும் போதே தெரிகிறது.

  #வாசிப்பு உச்சத்தில் இருந்த 1980கள்& 1990களில் வளர்ந்த நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே!

  #1990களின் ஹாட்லைன்ஸ் பார்க்கும் போதே எடிட்டர் சாரின் உற்சாகம் நம்மையும் தொத்திகிறது.

  #தொடர்ந்து 19ஆண்டுகள் ஆண்டுமலர்கள் வந்ததே பெரிய சாதனைதான்!

  #வாசிப்பிற்கு சோதனை வந்த 2000களில் எடிட்டர் சாரின் ஹாட்லைன் படிக்கும்போதே, அவரின் வேதனை, சூழலின் கடுமை புரிகிறது.

  #வசந்தம் மீண்ட 2012க்கு பிறகு 2ம் பிற்காலத்தில் ஆண்டுமலர்கள் பீடுநடையுடன் கோலோச்சுகின்றன.

  #ரூ3க்கு வெளிவந்த முதல் ஆண்டுமலர் ஆகட்டும், அதிகபட்சமாக ரூ550க்கு வந்த LMSஆகட்டும் கையில் ஏந்தும்போது உண்டாகும் உற்சாகம் ஒன்றே!

  #ஆண்டுமலர்களில் அதிகமான சாகசங்களில் டெக்ஸ் & லக்கி கலக்கியிள்ளனர்.

  #50வது, 100வது , 200வது ஆண்டுகள்......என லயனின் பயணம் சிறக்க வாழ்த்துகள்.

  ********#######******#######

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கொடுக்கும் புள்ளி விபரங்கள் மற்றும் அந்த ஃபிளாஷ் பேக் எல்லாம் அருமை விஜய் அதை எல்லாம் அனுபவித்து வந்த நாம் அதிர்ஷ்ட சாலிகள் தான்.

   Delete
  2. டெ வி ஃபார்ம்க்கு வந்துட்டாரு.

   Delete
  3. இதில் பல மறுபதிப்பில் கலர் காரணத்திற்காக வந்து விட்டன....

   அரைத்தமாவையே அரைப்போம்...

   புதுசெல்லாம் எதற்கு....

   Delete
  4. வளர்ந்த கொயந்தைகளோட வேறே மாதிரியான ஹி ஹி கொண்டாட்டங்கள்
   பள்ளி சாரி புள்ளி விவரங்கள் புளீஸ்.‌..

   Delete
  5. குமார் @ யெஸ்....நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகளே!

   ஸ்பைடர், ஆர்ச்சி, டெக்ஸ், மாடஸ்தி, லக்கியின் ஜெம்ஸ்கள், துப்பறிவாளர்கள் கூட்டம்னு.....பலவித நாயகர்கள்.

   J ji@ தேங்யூ...!!! "அந்த" புள்ளி விபரங்களில் நான் கொஞ்சம் வீக்கு...!!! இங்கே அதில் Ph.D பண்ணியவங்க நீங்கள் அல்லது யாராச்சும் கொடுத்தா நானும் அறிந்து கொள்வேன்...!!!

   Delete
  6. KOK, மியாவ், ஷெரீப்பு இவங்கள விடவா

   Delete
 33. வானமே எங்கள் வீதி
  இதில் கஷ்டப்பட காரணம் புரியல சார்.

  வசனங்கள் சொற்பந்தானே....

  ஒருவேளை ஆள்மாறாட்டம் அதில் நடப்பதால் அந்த ஆங்கிளில் கற்பனை செய்வது கஷ்டமாயிருந்ததோ....

  ReplyDelete
 34. வாயு பகவான் அடிச்சி மண்ணா வாரியிறைக்கிறாரு...


  வருண் பகவான் இன்னமும் கண்ணு தொறக்கல.‌‌

  உங்க ஊர்ல எப்படி நண்பர்களே...

  நீரில்லை குடிநீரில்லை...

  ReplyDelete
  Replies
  1. வெய்யிலில் எல்லாமே வெந்து போனது, ஒற்றை மழை தவிர
   மறுபடி
   மழையில்லை,

   Delete
 35. நம்மள மாதிரி 5000 புக் போட்றவங்கே இருக்காங்கேளா...

  மனசு இப்பதான் நிம்மதியாச்சு....

  ReplyDelete
 36. ///நம்மிடையே கொஞ்ச ஆண்டுகள் முன்பாய் செம ஹிட்டடித்ததொரு கலர் கி.நா ஒன்றின் ஒரிஜினல் பிரெஞ்சு சேல்ஸ் - "TEN THOUSAND !!"///

  அண்டர் டேக்கர்?

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் பாருங்க...!!

   Delete
  2. G P கண்டு பிடிச்சிட்டீரா

   Delete
 37. சார் கல்லூரி தொடங்கிவிட்டது புது நண்பர்கள் அவர்களுக்கு நம் காமிக்ஸ்சை அறிமுகம் படுத்த இந்த இதழ் கண்டிப்பாக உதவும்...சூப்பர் சார்...🤩...
  ஓவியம் #கொல மாசு சாரே...🥳

  ReplyDelete
 38. இன்னமும் ரிசல்ட் வரல....

  கேப்ஷன்1)

  குதிரை: தண்ணி தொட்டியில சாஞ்சுகிட்டு ஸ்டைல் போஸ் கொடுத்தா போதுமா...குடிக்க தண்ணி தாங்க ஜி

  டெக்ஸ்: நீ குடிச்சுட்டு எங்களுக்கு தண்ணி வாங்கிட்டு வான்னு கார்சன்ட்ட சொல்லி அனுப்பிச்சேன்.இன்னமும் பெருசக் காணோமே.

  குதிரை: வெளங்கீரும்.அவுரு எந்த தண்ணியடிச்சிட்டு மட்டையா கெடக்காறோ?.

  கேப்ஷன்2)

  கார்சன்: டெக்ஸ் ஜில்லுனு பீர் ஊத்திட்டு என்ன பண்ணப் போறோம்?

  டெக்ஸ்: உனக்கு பிடிச்ச சுக்கா ரோஸ்ட் உருளைக்கிழங்கு வறுவல், ஆப்பிள் பாயாசம் சாப்ட்றோம் .அப்புறம் நல்லா ரூம் போட்டுத் தூங்குறோம்.

  பார்மேன்: சார்,எல்லாம் சேர்த்து 55 டாலர்கள் பில் வரும் சார்.

  டெக்ஸ்: எங்களை பார்த்தால் பஞ்சப்பராரியாத் தெரியுதா.கார்சன் பில்லக் கட்டுப்பா...

  கார்சன்: ஙே....

  கேப்சன்3)

  கார்சன்: (ஏழாம்கட்டகுரலில்)

  உலகம் பிறந்தது எனக்காக
  ஓடும் நதிகளும் எனக்காக....

  டெக்ஸ்: நல்லா பாரு பெருசு இதுக்கு பேரு கடல்...

  கார்சன்: கொஞ்சம் சந்தோஷமா பாடினா பொறுக்காதே....( மறுபடியும் பாடுகிறார்)
  காதல் மலர் கூட்டம் ஒன்று
  தேடி வந்தது என்னைக் கண்டு
  யாரோ சொன்னார்....

  டெக்ஸ்: ஹாய் லேடீஸ்... அவரு BJPகாரர்.( Big Jollu Party)கண்டுக்காதீங்க.....

  ReplyDelete
 39. கேப்ஷன் 3)

  கார்சன்: டெக்ஸ்...யாரோ வீவீஐபி 2 பாக்கெட்ல குளிச்சு 4 லிட்டர் தண்ணி!!!! மட்டும் நாள் ஒன்றுக்கு குடிக்கிறாராமே....அவருக்கு இந்த குளிர்ச்சியான இடத்த பத்தின தகவல் அனுப்புப்பா...

  டெக்ஸ் : சும்மா இரு கார்சன்... 8 வழி பாதை போட்டு "அப்பா" குடிநீர் கூட்டுதிட்டம் போட்ருவாங்க.அப்புறம் இந்த லேடீஸ் எங்க போய் குளிப்பாங்க....

  இதுவும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் தான்.


  பின்குறிப்பு: போட்டிக்கல்ல...

  ReplyDelete
 40. என்னால மாடிப்படி ஏறீ ஏறி இறங்க முடியாது என்பதால்...கடைசி படிக்கட்டில் தான் என் பதில் வரும் என்ற அறிவிப்போடு


  சமையல் போட்டி நடைபெறுகிறது....ஆளாளுக்கு அவரவர் கைவண்ணத்தைக் காட்டி சமைத்து அடுக்கி விடுகிறார்கள் !

  அப்பாலிக்கா ....

  நடுவர்கள் ஒவ்வொன்றாய் ருசி பார்த்து தங்கள் தேர்வைச் செய்கிறார்கள் !!

  அப்போ ஒரு குரல் :

  "அச்சச்சோ....அது போட்டிக்கான பலகாரமே நஹி வாத்யாரே ! சும்மாக்காச்சும் - போட்டியாளர்களை உற்சாகப்படுத்த செஞ்சது ! அதைப் போயி ஏனுங்கோ தேர்வு செய்றீங்க ? "

  ஜட்ஜின் எண்ணம் :

  "ஜி ...ருசி பார்த்து தேர்வு பண்றதே நம்மள் கி பொறுப்பு !! வாயிலே அல்லா ஐட்டத்தையும் வய்ச்சு பார்த்தான் ; எது பெஸ்ட்டா தெரிஞ்சதோ - அதைத் தேர்வு செய்தான் ! இதில் நம்மள் தப்பு க்யா ?"

  நியாயம் தானே ?

  பார்வையாளர்கள் கைதட்டுவார்கள் ; பிகில் அடிப்பார்கள் ; கரகோஷம் எழுப்புவார்கள் ! ஆனால் மைதானத்தினில் இறங்கி பவுண்டரி விளாசி விட்டு,"அச்சச்சோ ஞான் டீம்லேயே இல்லீங்கோ ! " என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா ?


  ########


  எதீரணி தலைவரின் இந்த கூற்றை வழிமொழிகிறேன் செயலரே...போட்டியில் கலந்து கொண்டாலே அவர் போட்டீயாளர்தான்..போட்டியில் கலந்து கொண்டு நோ...நோ...பரிசு வேண்டாம்..என போட்டியாளரே சொன்னாலும் அது தவறே....பிரபல ஆனந்த விகடன் இதழில் பேரிய்ய்ய சிறுகதை போட்டி ஒன்று நடைபெற்றது..அதில் பிரபல எழுத்தாளர்கள் சுபா அவர்கள் " கோழிக்குஞ்சு * என்ற சிறுகதையை எழுதி பரிசு பெற்றார்கள்..அவர் பிரபல எழுத்தாளர் என்பதற்காக பரிசு கொடுக்கவில்லை...தான் பிரபல எழுத்தாளர்கள் பல நாவல்களை படைத்து பல்லாயிர ரசிகர்களை பெற்றவர்கள் என்பதற்காக பரிசை மறுக்கவும் இல்லை..பரிசு அந்த படைப்புக்காக மடரடுமே...அதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது வாதமும் என்பதால் சேயலர் மற்றும் பொருளாளர் அவர்களே...ஐயம் வெரி சாரி...

  நடுவர் தீர்ப்பே இறுதியானது என்பதே எனது கருத்தும்...

  ReplyDelete
  Replies
  1. இந்த நடுசாமத்துல இங்கே என்ன வேலைன்னு கேக்காதீங்க..மனசு சரியில்ல..தூக்கம் வரல...அப்புறம் வேற எங்கே போறது...தூக்க கலக்கத்துல ஸ்பேல்லிங் மிஸ்டேக் வரலாம்..மன்னிச்சூ...

   Delete
 41. அவர் சொல்றதும் நியாயமாத்தான் தெரியுது..
  இவர் சொல்றதும் நியாயமாத்தான் தெரியுது..


  :-)

  ReplyDelete
  Replies
  1. KOK

   U mean.. அதுவுந்தே.. இதுவுந்தே? :)

   Delete
  2. எக்ஸாட்லீ குருநாயரே.. :-)

   (முதல்ல அப்படித்தான் சொல்ல நினைச்சேன்.. ஹிஹி )

   Delete
  3. கண்ணா and EV 🙃😁😂🤣

   Delete
 42. ஆசிரியர் கேப்ஷன் போட்டியை அறிவித்து அதற்கான பரிசு பற்றி அறிவித்தது முதல் நானும் பல கேப்ஷன்களை எழுதி எழுதி கை வலித்ததுதான் மிச்சம். மறுபடி அதை படிக்கையில் எனக்கே அது அசட்டுத்தனமான கேப்ஷன்களாக காட்சியளிக்க அதனை பதிவிட மனம் வராமல் 'இதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்' என தீர்க்கமாக தெரிந்து கொண்டேன். இங்கு பலரும் கேப்ஷன்களாக அள்ளி இறைக்க அதில் திரு.செனா அனா அவர்களின் கேப்ஷன் படித்ததும் 'பச்சக்' என மனதில் ஒட்டிக் கொண்டது. அப்போதே அவர்தான் வெற்றியாளர் என எனக்கு தோன்றினாலும் தீர்ப்பு கூற ஆசிரியர் பரிந்துரைத்தவர்களின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். அவரின் கேப்ஷன் சிறந்ததாக அறிவிக்கப்பட்டது மிகவும் சரியானது.
  செனா அனா அவர்கள் தளத்தில் வேறொருவருக்கு வழங்க பரிந்துரைப்பது அவரின் பெருந்தன்மையை காட்டினாலும் பரிசினை அவருக்கு வழங்குவதே அந்த பரிசுக்கும் பெருமை சேர்க்கும். நன்றி

  ReplyDelete
  Replies
  1. //இதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்' என தீர்க்கமாக தெரிந்து கொண்டேன்// நானும்

   Delete
 43. வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.
  தோற்றவர்களுக்கு தெம்பு தர ஜாலி கேப்சன்கள்:

  படம் 1:-
  B.முப்பது இரண்டு கேப்சன் எழுதியும் ஜெயிக்க முடியலயே..கெஸ்ட் ஆப் ஹானர் இல்லாட்டியும் கெஸ்ட் ஆப் கார்னராவது கொடுங்கப்பா...வண்டி கிண்டிலாம் வச்சு கடத்திருக்கோம்...
  A.ஜெயிக்காட்டியும் நீதான் எனக்கு பெஸ்ட் ஆப் ஓனர் தல..மேல ஏறு தல மெதுவா நடைய கட்டுவோம்.அப்பதான் ஆகஸ்டுக்குல்ல ஈரோடு போய் சேர முடியும்...

  படம் 2:-
  A.போட்டில ஜெயிக்காட்டி டிரான்ஸ்பர் பண்ணிடுவேனாங்க...ஏதோ தண்ணி இல்லாத காட்டுக்கு தான் போக போறோம்ணு பார்த்தா இப்படி தண்ணியா இருக்க ஊருக்கு மாத்துவாங்கனு எதிர்பார்க்கல..ஐயா ஜாலி...

  B.தண்ணி இல்லாத ஊரு இல்ல..உன்னைலாம் கன்னி இல்லாத ஊருக்கு அனுப்பிருக்கணும்...

  படம் 3:-
  A.யோவ் கார்ஸ்..லவ் பெயிலியருக்கு சரக்கு கேட்டா பரவாயில்ல..கேப்சன்ல தோத்ததுக்குமா ஓசு சரக்கு கேட்ப..

  B.எதுனா என்னப்பா...எப்படியும் ரிசல்ட் போயிடுச்சுல..சரிதானே பார்மேன்

  C.ஆமாமாம்..நான்லாம் யூரின் டெஸ்ட்ல நெகடிவ் வந்ததுக்கே சரக்கு வாங்கி கொடுத்திருக்கேன்ல..

  ReplyDelete
  Replies
  1. பார்த்தீபன் ஹிஹிஹி செம்ம ஜி

   Delete
 44. Yintha judgement sariyillai naan veliyerukiren good bye .

  ReplyDelete
  Replies
  1. வெ வீ ....

   Cool...cool...எல்லாமே ஜாலியா எடுத்துக்கங்க....

   Delete
 45. ஆசிரியர் ஐயா இந்த மாத இதழ்கள் என்று கிடைக்கும்? 29th or 2nd. Please answer I've to plan my leave according to that

  ReplyDelete
  Replies
  1. தீயா வேல பாத்துகிட்டு இருக்காங்க குமாரு....

   எப்டியும் கண்டிப்பா புக் கெடச்சிடும்...

   Delete
  2. J ji@ Ha...Ha..!!!

   35ஆண்டு கம்ப்ளீட் ஆனாத்தானே 35வது ஆண்டுமலர் ரிலீஸ் செய்ய!

   ஜூலையில் வருவது தானே முறை!

   Delete
 46. கேப்சன்களும் நானும்...

  நமது ஆசிரியரின் வாரப் பதிவின் நீண்ட கால மௌன வாசகன் நான்...

  2012 க்கு பிறகுதான் லயன்காமிக்ஸ் அறிமுகம் எனும் போது மிக நீண்ட என்று சொல்வது கட்டாயம் இங்கு பொருத்தமாகாதுதான்...
  நாட்கள் நகர அவ்வப்போது ஒன்று இரண்டு பிண்ணூட்டங்கள் இடுவதோடு சரி..

  ஆனால் கேப்சன் போட்டி நிகழும் சமயங்களில் என்னுள் எங்கிருந்தோ வீறு கொண்டு எழும் சந்திரமுகி அனல் பறக்க வீரம் காண்பித்தது உண்டு.
  ஒவ்வொரு படத்திற்கும் பக்கம் பக்கமாய் குறைந்தது பத்து கேப்சனுக்கும் மேல் எழுதுவேன்.

  கவிதை எழுதும் பழக்கம் கொண்டவன்தான் எனினும் கற்பனை பண்ண கூட நேரமில்லா வாழ்க்கையில் கற்பனை ஊற்று சுரக்க உதவும் கேப்சன் போட்டி எப்போதும் எனக்கு ஸ்பெசல்தான்..

  பரிசு முக்கியமாய் எப்போதும் பார்த்ததில்லை.பங்கெடுத்தலும் பாராட்டுகளும் மற்றுமே பெரிதாய் இருக்கும்.

  முன்பு வித்யா என்ற பெயரில் பங்கேற்று சில முறை வெற்றியும் பெற்று புத்தகம் பரிசாய் பெற்றிருக்கிறேன்.

  இந்த முறையும் மூன்று படத்திற்கு மூன்று பாகமாக நிஜமாகவே முப்பத்து இரண்டு கேப்சன்கள் எழுதி இருக்கிறேன்.(இரண்டு வார முந்தைய பதிவில் பார்க்க..)

  எப்படியாயினும் நம் நண்பர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார் எனும் போது அதை மகிழ்ச்சியாய் ஏற்பது நம் கடமை.நடுவர் தீர்ப்பை ஏற்பதும் நம் கடமை.

  தோற்றாலும் அதற்கும் கேப்சன் போட்டு கடப்பது என் வழக்கம்.
  கஷ்டபட்டு முயற்சி செய்து தோற்ற நண்பர்கள் வருத்தப்படக் கூடாதென்பதற்கே இப்பதிவு...

  மகிழ்ச்சியாய் பங்கேற்பது மட்டுமே போதும்..பரிசெல்லாம் இரண்டாம் பட்சம் தான்..

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. @ Partheeban

   அழகான எண்ணங்கள்! அருமையான எழுத்துக்கள்!!

   Delete
  2. நீங்கள் எழுதிய captions நன்றாகவே இருந்தது பார்த்திபன் தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete
  3. // எப்படியாயினும் நம் நண்பர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார் எனும் போது அதை மகிழ்ச்சியாய் ஏற்பது நம் கடமை.நடுவர் தீர்ப்பை ஏற்பதும் நம் கடமை. //

   // மகிழ்ச்சியாய் பங்கேற்பது மட்டுமே போதும்..பரிசெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. //

   +1 Well said

   Delete
 47. கேப்ஷன்1)
  டைனமைட்:

  போட்டி முடிவு எப்ப வரும் மாஸ்டர்....

  டெக்ஸ்: அட அதுக்கும் போட்டி வச்சிடுவோம்...‌

  கேப்ஷன்2)

  கார்சன்:
  என்னமோ கேப்ஷன் போட்டியாம்ல டெக்ஸ்.... நாம் கலந்துக்க போறோமா...

  டெக்ஸ்: இதுக்கு முன்னாடி வைச்சதுக்கே முடிவுகள் வந்தபாடில்லை....இதையும் ஊத்தி மூடீடுவாங்க...

  பார்மேன்: ஊத்தி கிட்டு தான் இருக்கேன்.இப்ப மூடச் சொல்றீங்களே.....பாட்டில மூடிடவா சார்ஸ்...


  கேப்ஷன் 3)

  கார்சன் :டெக்ஸ் உங்குதிரை மிரளுதே ஏன்?

  டெக்ஸ்: அது சரி பெருசு, உங்குதிரை ஏன் ஸ்லோமோஷன்ல பின்னாலே போவுது....


  ReplyDelete
 48. மூனு ஜட்ஜுல ரெண்டு பேரு சுளுவா தீர்ப்புச் சொல்லிட்டு அக்கடான்னு வேலைகளைக் கவனிக்கப் போய்ட்டாங்க.. மூனாவது ஜட்ஜு - ஆனாலும் ரொம்பத்தான் பிஸியா இருக்காரு! 'ந்தா வர்ரேன்'ட்டு போனவரை மூனு நாளா காணலை!!
  சட்டுபுட்டு இங்கிட்டு எட்டிப்பார்த்து, வெத்திலையக் கொதப்பி அங்கிட்டு துப்பிட்டு, செவப்புத் தெறிக்கத் தெறிக்க அம்சமா ஒரு தீர்ப்பச் சொல்லுங்க ஜட்ஜ் ஐயா!! உங்க தீர்ப்புக்கோசரந்தான் இந்த வூருச் சனமே காத்துக் கெடக்குது!

  ReplyDelete
  Replies
  1. பழைய சினிமா படங்கள்ல கடேசி சீன்ல சொல்ற ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு வசனம் தான் நினைவுக்கு வருது...

   Delete
  2. ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டுனா கூட பரவாயில்லை.. ஜட்ஜே ரிசர்வ்டுனா என்னங்க பண்றது?!! :)

   Delete
  3. சமையல் போட்டி நடந்து ஊர்ந்து தவழ்ந்து நெளிஞ்சி முடிஞ்சி போச்சி.

   ஆளாளுக்கு செஞ்ச பலகாரமெல்லாம் நாறிப்போச்சி.....

   இனிமே ஜட்ஜ் வந்தாலும் ஊசிப்போன பலகாரத்த என்ன ருசி பாத்து எப்பிடி சொல்லப் போறாரோ....

   இனிமேல் என்னத்த....

   எந்திரிங்க ப்பா...
   குண்டிமண்ணை தட்டி விட்டுட்டு வேலைய பாக்க போவோம்...

   பை பை...

   Delete
 49. அருமை அற்புதம் அபாரம். சிங்கத்தின் சிறு வயதில் படித்த பிறகு எனக்கு தோன்றியது. உண்மையிலேயே அருமையான கதை. அதுவும் எடிட்டரின் மொழி பெயர்ப்பு அருமை. ஒரு சில இடங்களில் மிகவும் ரசித்தேன். " நோயை விட சிகிச்சை மோசமானதாக இருந்து விட கூடாதே" மேலும் பல இடங்களில் வசனங்களை மிகவும் ரசித்தேன். நான் படித்த புத்தகங்களில் இது நிச்சயமாக மிகச் சிறந்த புத்தகம். அதுவும் அந்த ஜிம் Bridger character அற்புதம். அந்த அறிமுகம் ஆகட்டும். பிறகு டெக்ஸ் இன் பணத்தை மீட்டு கொடுப்பது ஆகட்டும். இறுதியில் குத்து சண்டை சாம்பியன் ஆன கோல் உடன் மோதி அவனை வீழ்த்துவது ஆகட்டும் அப்பா அபாரம். டெக்ஸ் கிளாசிக் களில் கட்டாயம் இந்த கதைக்கு இடம் உண்டு. டெக்ஸ் விஜயராகவன் வழக்கம் போல build up கொடுக்கிறார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் இல்லை உண்மையாகவே அருமையாக இருந்தது. கணேஷ் இளம் டெக்ஸ் நன்றாக இருந்தது என்று பாராட்டியது சரியே. நானும் அதையே முன் மொழிகிறேன். Awesome awesome.

  ReplyDelete
  Replies
  1. அட டே சூப்பர்!!!!

   எதிரணி முகாம்ல 2விக்கெட் காலி!

   இரண்டு இளம் டெக்ஸ் களும் பட்டையை கிளப்பிட்டனர்.

   ///இல்லை உண்மையாகவே அருமையாக இருந்தது.///--- இளம் டெக்ஸ் ராக்ஸ்!

   நான் எங்கே டெக்ஸ் கதைகளுக்கு பில்டப் கொடுத்தேன்! எப்போதும் உண்மையை தான் சொல்கிறேன். அது சிலசமயங்களில் மட்டுமே எதிரணிக்கு தெரியவருது!

   (டெக்ஸ் போட்டோவையே 3மணி நேரம் பார்ப்போம்! கதைய சும்மாவா விட முடியும்...பில்டெப்புலாம் தானாகவே வரும் தலய பார்த்தாலே...ஹி....ஹி...)

   அடுத்து போக்கிரி டெக்ஸ் வெளியிட்டா நல்லாயிருக்கும்...!!!
   அங்கே கடகடனு அந்த சீரியஸ் பறக்குது!

   Delete
  2. என்ன கொடுமை சார்?

   எல்லோரும் இந்த டெக்ஸ் கதை நல்லாயிருக்குனு சொல்லீரீங்களே!

   அப்போ இனி படிச்சுட வேண்டியது தான்!!

   Delete
  3. இளம் டெக்ஸே போக்கிரி டெக்ஸ் மாதிரியே தெரியுது.

   Delete
  4. இளம் டெக்ஸ் இன்னும் படிக்காமலேயே கெடக்கு.

   Delete
 50. உண்மையாகவே அருமையாக இருந்தது.///--- இளம் டெக்ஸ் ராக்ஸ்!

  ReplyDelete
 51. 200 அடிச்சேன் பாரு 200

  ReplyDelete