Sunday, February 03, 2019

The Feb Four !!

நண்பர்களே,

வணக்கம். The Feb Four - உங்களிடம் The Fab Four என்ற பெயரை ஈட்டிட உள்ளார்களா என்பதே இப்போதைய மேட்டர் எனும் போது - ஞாயிறின் (குட்டியான) பதிவு வேறெங்கும் ஒளிவட்டத்தைப் பாய்ச்சிடப் போவதில்லை !! So இந்த இதழ்களின் தயாரிப்பு ; இத்யாதி பற்றியே எழுதவுள்ளேன் !

போன மாசமும் சரி ; இந்த மாதமும் சரி, இதழ்களின் தயாரிப்பில் நிறையவே பல்டி அடிக்க வேண்டியிருந்தது போலவே தோன்றிடுவதற்கு என்ன காரணமென்று நிதானமாய் யோசிக்க முயற்சித்தேன் ! "வயசாகிட்டே போகுது மாப்பு ; வேறென்ன ?" என்று பதில் பளிச்சென்று கிட்டினாலும் - முதன்மையான காரணமாய்த் தோன்றியது ஜனவரியில் இரு biggies & இம்மாதமும் ஜெரெமியாவின் வடிவில் இன்னொரு biggie இருப்பதே ! பரக்குடா ; தோர்கல் & ஜெரெமியா -தலா 3 அல்பங்களின் தொகுப்புகள் எனும் போது பணியில் பளு கூடித் தெரிவது இயல்பு தானே ! And அவை மூன்றுமே தத்தம் பாணிகளில் complex கதைகளே எனும் போது - அவற்றை உருப்படியாய் உங்களிடம் ஒப்படைப்பதில் நிறையவே தண்ணீர் குடித்தேன் !

Latest in the list - நமது பரட்டை ஜோடி ஜெரெமியாவின் இரண்டாவது தொகுப்பு பற்றிச் சொல்வதானால் - ரொம்பவே வித்தியாச அனுபவம் இம்முறையும் ! Truth to tell - இந்த apocalypse உலகின்  (அதாவது நிகழுலகம் அழிவு கண்ட பின்னே எஞ்சியிருக்கும் ஒரு இருண்ட உலகின்) கதைகளில் எனக்கு அத்தனை பரிச்சயம் நஹி ! So அந்த ஜானரிலுள்ள காமிக்ஸ் தொடர்களை அவ்வளவாய் படித்திரா நிலையில் ஹெர்மனின் இந்த எதிர்காலக் களத்தொடரைப் பற்றி பளிசென்றோரு கணிப்பை செய்து வைக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ! "இங்கே இதைத் தான் எதிர்பார்த்திடலாம் ; எதிர்பார்த்திடணும் !" என்று சொல்லத் தெரியா நிலமையெனும் போது, ஒவ்வொரு ஆல்பத்தையும் ஒரு மோனா லிசா ஓவியம் போல பாவிக்க வேண்டும் போலும் என்பதே எனக்குள் பிறந்த ஞானம் ! இப்டிக்கா ஒரு கோணத்தில் பார்த்தால் (படித்தால்) கதை ஒரு பாணியிலும், அப்டிக்கா இன்னொரு டிஸைனாகவும் புரிபடும் என்பதை இந்த ஆல்பங்களுள் பணியாற்றும் போது புரிந்து கொண்டேன் ! நமது தொகுப்பானது ஆங்கிலத்தில் வெளியான JEREMIAH INTEGRAL-ன் ஈயடிச்சான் காப்பி என்பதால், இடையிடையே, ஒவ்வொரு கதைக்கும் மத்தியினில் கதாசிரியர் ஹெர்மன் அந்தந்தப் படைப்புகள் பற்றிச் சுருக்கமாய் சொல்லியுள்ள வரிகளுமே நமக்கு கிட்டின ! And அட்சர சுத்தமாய் அவற்றையும் நமது தமிழ் முயற்சியினில் இடம்பிடிக்கச் செய்துள்ளேன் - அவையும் உதவிடும் என்ற எண்ணத்தில் ! அந்த 3 பக்கங்களுக்குமே நாம் நிரம்பக் கடமைப்பட்டிருப்போம் என்பதை நீங்கள் புரிந்திடுவீர்கள் - இந்த ஆல்பத்தைப் படித்து முடிக்கும் போது !! 2 INTEGRALS ; 6 ஒற்றை ஆல்பங்கள் என்று ஜெரெமியாவில் ஒரு decent தூரத்தைக் கடக்க நமக்கு இப்போது சாத்தியமாகியுள்ளது !! இப்போது உங்களின் பளிச் தீர்ப்புகளே நம்மை அடுத்து வழிநடத்திடக்கூடும் - இந்தத் தொடரினைத் தொடர்வது குறித்து ! So நிதானமாய் இந்த ஆல்பத்தை படிக்க நேரமெடுத்துக் கொண்ட பிற்பாடு - YESSS !! NOOOO !! என்று ஏதேனும் ஒரு பதிலை மட்டும் தந்திட்டால் ரெம்போ மகிழ்வேன் ! இம்முறை மட்டும் NOTA-க்கு NO ப்ளீஸ் !! And இதழைப்  படிக்காமலே போடும் டப்ஸா வோட்டுக்களும் ஆட்டத்துக்குச் சேர்த்தியாகாது ! So புக்கை எடுக்கறோம் ; படிக்கறோம் ; வோட்டைக் குத்தறோம் !! 

ஜானியாரின் இந்தப் புது template சார்ந்த இதழிலுமே உங்களுக்கு அதே பொறுப்புள்ளது - இம்முறை அத்தனை சீரியஸான பொறுப்புக்கள் அல்லாது ! புதுப் பாணியோ ; பழைய "புன்னகை  மன்னன்" பாணியோ - ஜானி நம் அணிவகுப்பில் தொடரவிருப்பதில் ஐயங்கள் லேது ! So தற்போதைய வாக்கெடுப்பே - இந்த ஜானி புது அவதாரைத் தொடர்வதா - பழசுக்கே ரிவர்ஸ் கியரை  போடுவதா  ? என்பதே !  இந்தக் கதையில் பணியாற்றும் போது ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் கவனிக்க முடிந்தது !! கமிஷனர் போரடனுக்கு    இங்கே நல்கப்பட்டிருக்கும் காமெடி பொறுப்புகளைப் பார்த்து முகம் மலர்ந்திடாது இருக்க இயலவில்லை !! பிரின்ஸ் கதைகளுக்கு ஒரு குடிகார  பார்னே மெருகூட்டுவது போல ; கார்சனின் நக்கல்கள் டெக்ஸ் சாகசங்களை ஜாலியாக்குவது போல ; இனி கமிஷனர் போர்டனை கொண்டு ஜானியின் புது பாணி கதைகளை refresh செய்திட படைப்பாளிகள் எண்ணியுள்ளனர் போலும் ! எப்படியிருந்த மனுஷன்....இப்படியாகிப் போனாரே ?!! தவிர, இந்த ஆல்பத்தை முழுசாய்ப் படித்த பிற்பாடு எனது கேள்விக்கு பதில் தர முற்படுவீர்களா guys ? ஜானியின் இந்த சாகசம் நடைபெறுவதாய் சித்தரிக்கப்பட்டிருப்பது 1968-ல் ! உங்களுள் முக்காலே மூன்று வீசத்தினர் அன்றைக்கெல்லாம் பிறந்திருக்கவே மாட்டீர்கள் ! My question is - கதை நெடுக கவனமாய்க் கவனித்தால் எல்லாமே அந்த 1960's காலகட்டத்தோடு பொருந்திடும் விதத்தில் கதாசிரியர் அமைத்துள்ளாரா ? என்பதே !! 'மண்டையை மறைத்தாச்சு ; ஆனால் கொண்டையை அல்ல' - என்பது போல் எங்கேனும் கதாசிரியர் லைட்டாய் கோட்டை விட்டுள்ளாரா ? கதையினை ஒரு தபா அங்குலம் அங்குலமாய் அலசிச் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? 

டெக்சின் "வைக்கிங் தீவு மர்மம்" பற்றி புதுசாய் என்ன சொல்லவிருக்கிறேன் - என்னளவிற்கு அந்த பாக்கெட் சைஸ் தான் இதைவிடவும் அழகாய்த் தெரிந்தது என்பதைத் தவிர்த்து ? Maybe இன்றைக்கு எல்லா இதழ்களையும் ஒரே standard சைசில் பார்த்துப் பழகிப் போய் விட்டதாலோ - என்னவோ , அந்நாட்களது அந்த கோக்கு மாக்கு சைஸ் லைட்டாய் சபலப்படுத்துகிறது ! கதையைப் பொறுத்தவரைக்கும் எனக்குச் சுத்தமாய் எதுவும் ஞாபகம் இருந்திருக்கவில்லை - எடிட்டிங்கிற்கு அமர்ந்த போது ! And உப்புத்தாளைக் கொண்டு லேசாய் லேசாய் தொடையில் உரசுவது போல் அந்நாட்களது மொழிபெயர்ப்பு வழிநெடுக படுத்தி எடுத்ததால் அதனைச் செப்பனிடும் அயர்வில் கதையை இம்முறையும் அவ்வளவாய் உள்வாங்க முடியவில்லை ! Maybe மார்ச்சில் வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமாய் முடிக்க முடிந்திட்டால் புக்கை fresh ஆக வாசிக்க வேண்டும் போலும் !! And இங்கேயே இன்னொரு முக்கிய கேள்வியும் எழுகிறது - what next இரவுக்கழுகாரின் மறுபதிப்பினில் என்று ! ஆண்டுதோறும் இது ஈரோட்டில் தீர்மானிக்கப்படும் சமாச்சாரம் என்றாலும் - உங்களின் அடுத்த "TEX 3" பட்டியலை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து வைத்துக் கொள்கிறேனே ?! எனது personal choice : குத்தும் ஒரு சாகசம் !! 

Last in the list ; but first in my list - "மேக் & ஜாக்" ஜோடியின் அந்த "நடனமாடும் கொரில்லாக்கள்" ! எப்போதோ ஒரு யுகத்தில் பாரிசில் வாங்கியிருந்ததொரு SAMMY Integral ஆபீசில் துயில் பயின்று வந்தது ! பெரிய சைசில் - 4 கதைகள் அடங்கிய அந்த ஹார்டகவர்  இதழை போன வருஷம் உருட்டிக் கொண்டிருந்த போது கண்ணில்பட்டுத் தேர்வானது தான் இந்த கார்ட்டூன் கூத்து !  அப்போதே இதனை டிக் செய்து விட்டிருந்தேன் 2019-ன் கோட்டாவில் கட்டாயம் இடம்பிடித்திட வேண்டுமென்று ! 
And தற்செயலாய் ஆண்டின் முதல் மாதம் கார்டூனிலா வறண்ட பொழுதாய்க் காட்சி தர - பிப்ரவரியில் இந்தக் குட்டை-நெட்டை ஜோடிக்குக்  கிட்டியுள்ளது லட்டு போலவொரு வாய்ப்பு என்பது புரிந்தது !! Early days yet ; ஆனால் இதுவரைக்கும் செம positive reviews எனும் போது வருஷத்தில் முதல் கார்ட்டூன் இதழ் சோடை போகாதென்றே தோன்றுகிறது !! இங்கேயும் நீங்கள் கதையை முழுமையாய்ப் படித்து விட்டீர்களா ? என்பதை ஊர்ஜிதப்படுத்திட ஒரு சின்ன வேலை !! அவசரகதியில் அட்டவணை தயாராகும் சமயம் வைத்த பெயர் தான் "நடனமாடும் கொரில்லாக்கள்" ! நிதானமாய் யோசிக்கும் போது இதற்கு இன்னும் வேறு பெயர்கள் தலைக்குள் உதிக்கின்ற எனக்கு ! இது உங்களின் turn - இந்தக் கதைக்கு ஏற்ற விதமாய் மாற்றுப் பெயர்களை இங்கே புட்டு வைக்க !! Give it a try guys !
ஞாயிறை ஜேம்ஸ் பாண்டோடு தொடர்ந்திட நான் புறப்படுகிறேன் !! நீங்கள் The Feb Four பற்றி அலசல்களை நடத்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?

And இன்னமும் சந்தாவில் இணைந்து கொள்ளாதிருக்கும் ஒரு 40+ நண்பர்கள் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் நம்மோடு பயணத்தில் கைகோர்த்துக் கொண்டால் அட்டகாசமாயிருக்கும் !! Please folks - maybe this Sunday is a good time for it ? 

மீண்டும் சந்திப்போம் all !! அட்டகாசமானதொரு வாரயிறுதியாய் இது அமையட்டும் நமக்கெல்லாம் ! Bye for now !

305 comments:

  1. ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. Enjoying sunday. Got the books yesterday ( saturday)

    ReplyDelete
  3. // பரக்குடா ; தோர்கல் & ஜெரெமியா -தலா 3 அல்பங்களின் தொகுப்புகள்//

    எனக்கு பிடிச்ச மூனு கதைத்தொடரையும் அல்பங்கள்னு ஆசிரியர் சொல்வதை வன்மையா கண்டிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையிலும் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுகிட்டூ படிப்பீர்களோ?

      Delete
    2. நமக்குத் தானே அதிகாலை ; அக்கட குளிரான மாலை தானே ? அதான் !!

      Delete
    3. நான் வழிமொழிகிறேன்.

      Delete
    4. //அதிகாலையிலும் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுகிட்டூ படிப்பீர்களோ?//

      பதிவு வந்தவுடனே ஒன்றுக்கு இரண்டு முறை படித்து விடுவேன். வார நாட்களில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மறு முறை.

      சும்மா லுலாயிக்கு ஆசிரியரை கையைப் பிடித்து இழுக்கத்தான் அந்தப் பின்னூட்டம்.

      Delete
    5. இழுக்குறதுதான் இழுக்குறீங்க
      அப்டியே டான்ஸும் ஆடிட்டா ....

      Delete
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....


    இனி பதிவை படித்த பிறகு...:-)

    ReplyDelete
  5. இதழைப் படிக்காமலே போடும் டப்ஸா வோட்டுக்களும் ஆட்டத்துக்குச் சேர்த்தியாகாது ! So புக்கை எடுக்கறோம் ; படிக்கறோம் ; வோட்டைக் குத்தறோம்


    #######

    ஓகே சார்...டன் சார்...கலக்குறோம் சார்...பட்டையை கிளப்புறோம் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. அருமை. படிக்காமல் ஜஸ்ட் பிரசன்ட் சார் போடுவதில் அத்தனை கிக் இருப்பதில்லை.

      Delete
  6. டெக்ஸின் அடுத்த மறுப்பதிப்புகான எனது தேர்வுகள்..


    கழுகு வேட்டை..


    கழுகு வேட்டை ...    கழுகு வேட்டை...

    ReplyDelete
  7. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ஜம்போ வில் இது வரை நாங்கள் படிக்காத காமிக்ஸ் வரும் என்ற எண்ணத்தில் தான் சந்தா கட்டி உள்ளோம்! ஆனால் நீங்கள் ஏற்கனவே பிடிஎப் ஆக வந்த கதையைப் போடுவதாக இந்த மாத நமது காமிக்ஸ் ஸில் ஜம்போ விளம்பரம் பார்த்தேன். ஒன்று பிடிஎப் பாக வந்த கதையை நீங்கள் போடாதீர்கள் அல்லது நீங்கள் போடும் கதைகள் பிடிஎப் பாக வராமல் பார்த்துக் கொள்ளவும். உங்களை நம்பி நான் கட்டும் சந்தா தொகையை என்னுடைய கண்ணோட்டத்தில் வீணடிக்க வேண்டாம். என்னுடைய சந்தா பெயர் R. P. ALAGI SENEGA -SALEM. என்று கட்டி உள்ளேன். இது ஒரு வாசகன் என்ற முறையில் எனது வேண்டுகோள் மட்டுமே. மார்ஷல் சைக்கஷ் இது போன மாதமே பிடிஎப் ஆக வந்து விட்டது. ஒரு வேளை நீங்கள் விளம்பரம் செய்த கதையும் பிடிஎப் கதையும் வேறுவேறாக இருந்தால் நீங்கள் இந்த பதிவை பொறுட்படுத்த வேண்டாம். நன்றி வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை சீரியசானதா அல்லது லுலாயிக்காகவா என்று தெரியாது நண்பரே ; ஆனால் சீரியஸ் தானெனில் உங்கள் சந்தா தொகையினை திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமையை தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம் ! 

      ஆறு மாதங்களுக்கு முன்னே கதையை வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் கோமாளியான எனக்க்கு இவர்கள் அந்த கதையை வடை சுடுவார்களென்று எவ்விதம் தெரிந்திருக்குமென்று எதிர்பார்க்கிறீர்களோ நானறியேன் ! 

      இவையெல்லாம் காலத்தின் கட்டாயங்களென்று எண்ணிடக்கூடிய உங்களைப் போன்ற நண்பர்களுக்கு நமது சிரமங்களை விளக்கும் நேரத்தினில், உங்களை நஷ்டத்துக்கு உள்ளாக்கிடாது இருப்பதாவது முறையான காரியமாக இருந்திடக்கூடும் ! 

      Please e-mail the office sir & your payment will find its way back to you !

      Delete
    2. நல்ல முடிவு, எடிட்டர் சார்!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. திருடன் தைரியமாக எனக்கு சலுகை கொடு கேட்பதை பார்க்கும் போது, ஒருவேளை நிஜமாகவே இந்தியா வல்லரசு ஆகிடுச்சோன்னு தோன்றுகிறது.

      Delete
    5. சபாஷ் எடிட்டரே .
      நெத்தியடி!!👍

      Delete
    6. சரியாக சொன்னீர்கள் சார்...

      மேலும் இரண்டில் ஒன்று தான் வேண்டும் என்றால் பிடிஎப்பை விலக்கி விட்டு புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் நண்பரே...அதுதான் சிறப்பு...

      Delete
    7. +1 மில்லியன். பிரபு சார்... எங்கே போனாலும் குழப்பம் செய்வது என்கிற போக்கினை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நண்பர்கள் மகிழ்வோம்.. சைக்கஸ் அட்டகாசமான வரவேற்பை அடைவது உறுதி. பேனல்கள் ஒவ்வொன்றும் மிரட்டும்..கதை சொல்லும்..நம்மோடு ஏதாவதொரு விதத்தில் புதுமையைப் புகுத்தும்...
      பியரி துபாய்ஸின் கதைக் களமும், திமிட்ரி ஆல்மாண்டின் ஓவிய சாகஸமும் கைகோர்க்கும்போது விளையும் மாஜிக்கை நீங்கள் பதிப்பில் வாசிக்கும்போதுதான் முழுமையான அனுபவத்துக்குள்ளாவீர். இது அனைவருக்கும் எனது வேண்டுகோள் புத்தகங்களை நேசிப்போருக்கே என் நட்பு வட்டத்திலும் நெருக்கமான இடம். எத்தனைதான் பிடிஎப்களாக ஆங்கிலத்திலும் இன்னபிற மொழிகளிலும் வாசிக்க முடிந்தாலும் அழகுத் தமிழில் அர்த்தமிகு உருவாக்கத்தில் சிறப்புற பதிப்பிக்கப்பட்டு வீடு தேடி வரும் பொக்கிஷத்தை இழக்க எண்ணும் உங்களது சிந்தனையை மடை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்குமே.. நன்றியும் அன்பும் தோழமை உள்ளங்களே..

      Delete
    8. சன்டன்ஸ் சைக்கஸைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வாசியுங்கள்..http://www.europecomics.com/album/sykes/

      Delete
  8. டெக்ஸ் 3 யில் எனது சாய்ஸ்!
    1.கழுகு வேட்டை
    2.பழிக்குப் பழி
    3.பழிவாங்கும் பாவை

    ReplyDelete
  9. /// உங்களின் அடுத்த "TEX 3" பட்டியலை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து வைத்துக் கொள்கிறேனே ?! எனது personal choice : குத்தும் ஒரு சாகசம் !! ///

    உங்களுடைய சாய்ஸானா மரணமுள்ளே என்னுடைய முதல் சாய்ஸும் சார்..!

    1. மரண முள்
    2. கழுகு வேட்டை
    3. பழிவாங்கும் பாவை

    ReplyDelete
  10. மேக் அண்ட் ஜாக் செம ரவுசா இருந்திச்சி
    சார் .. உங்கள் மொழிபெயர்ப்பு தான் sir highlight இதில் ..

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன்களுக்குப் பேனா பிடிப்பதே சுகமான அனுபவம் ஸார் ; அதிலும் இது போன்ற செம ரவுசுக் கதைகளென்றால் வரிகள் அமைந்துவிடும் தாமாய் !

      Delete
  11. அடுத்த டெக்ஸ் பழிக்குப் பழி என் வோட்டு.

    ReplyDelete
  12. இந்த முறை ஜானி 2.0! சும்மா சொல்லி அடிக்கிறார்.
    கொஞ்சம் கவிதைகள்.
    நிறைய கம்யூனிஸம்,
    பிரென்ச் வாழ்க்கை முறை,
    அரசியல் சதிகள்.
    முத்தம் தந்து கொலைகள் செய்யும் அந்த பெண்யை பற்றி ஜானி துப்பறிவது எல்லாம் செமையான காம்போ வில் கதை சொல்லப்படுகிறது.

    பழைய ஜானி கதைகளில் பெரிய பிரச்சினை மொக்கையான முடிவுகள் அது இதில் இல்லை.

    "சுவாசக் காற்றில் கூட காதலின் வாசம் வீசும் பாரிசின் இரவுகள்" என்ற கவிதை வரிகளுடன் கதை ஆரம்பித்து, பிரெஞ்சு போன்ற முதலாளித்துவ நாடுகள் அல்ஜீரியா போன்ற நாடுகளில் செய்த கொடுமைகளை பற்றி எல்லாம் ஒரு காமிக்ஸ் பேசுகிறது என்பது உண்மையில் சுவாரசியமான விஷயம்.

    கொலையாளியான அந்த பெண் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் காட்சியில் "ஜானி சென்று வா காம்ரேட்" என்று சொல்வது நெகிழவைக்கிறது...!

    கிட்டத்தட்ட ஒரு அரசியல் துப்பறியும் கதை படித்த உணர்வு வருகிறது...!❤️❤️

    #my_comics_reading

    ReplyDelete
    Replies
    1. ///சுவாசக் காற்றில் கூட காதலின் வாசம் வீசும் பாரிசின் இரவுகள்" என்ற கவிதை வரிகளுடன் கதை ஆரம்பித்து, பிரெஞ்சு போன்ற முதலாளித்துவ நாடுகள் அல்ஜீரியா போன்ற நாடுகளில் செய்த கொடுமைகளை பற்றி எல்லாம் ஒரு காமிக்ஸ் பேசுகிறது என்பது உண்மையில் சுவாரசியமான விஷயம்.///

      சூப்பர்!

      Delete
    2. @ vigneswaran k

      சூப்பா் சூப்பா்!! 👏👏👏

      Delete
    3. ////பழைய ஜானி கதைகளில் பெரிய பிரச்சினை மொக்கையான முடிவுகள் அது இதில் இல்லை.///

      +111

      Delete
    4. ஆஹா..
      2.0 ஜானி ..சூப்பரான ரிவீயு..
      வாசிப்பிற்கு வெய்ட்டிங்..!

      Delete
    5. //பழைய ஜானி கதைகளில் பெரிய பிரச்சினை மொக்கையான முடிவுகள் அது இதில் இல்லை.//


      அந்தக் கடேசி 3 பக்க முடிச்சுகளை அவிழ்க்க பழைய பாணி ஜானி திணறுவாரோ - இல்லையோ ; நான் லிட்டர் லிட்டராய்த் தண்ணீர் குடிப்பது வழக்கம் ! தப்பித்தேன் அந்த விதத்தில் !

      Delete
    6. 🙂 சார் உங்கள் உழைப்பு எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. வாசிப்பில் அதை நேரிடையாக உணர்கிறோம்.இந்த கதையில் நீங்கள் சொன்ன அந்த புதிரை தேடிக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் புரியவில்லை அடுத்த பதிவில் நீங்களே எழுதினால் மகிழ்ச்சி!

      Delete
  13. 1. மரண முள்
    2. கழுகு வேட்டை
    3. பழிவாங்கும் பாவை/பழிக்குப் பழி

    ReplyDelete
  14. எடிட்டருக்கும்,அன்பு தோழமை உள்ளங்களுக்கும் வணக்கங்கள். புத்தாண்டின் முதல் மாதம் பட்டாசாய் வெடித்தது என்பதே உண்மை. பராகுடா வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்திருக்கிறது.அடுத்தடுத்த பாகங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன.
    தோர்கல்..சொல்லவே வேண்டாம்.
    அதிலும் இதழின் கடைசி பாகம் அதகளம்!!
    இரவுக் கழுகார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்..
    பக்கங்கள் பரபரவென பறக்கின்றன..!
    மொத்தத்தில் ஜனவரியில் ஒரு மகோன்னதமான மகோத்சவம் அரங்கேற்றம் கண்டிருக்கிறது..!!
    2019-ன் முதல் பந்திலேயே சிங்கக் குட்டி சிக்சர் விளாசியிருக்கிறார்!
    👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. //ஜனவரியில் ஒரு மகோன்னதமான மகோத்சவம் அரங்கேற்றம் கண்டிருக்கிறது..!!//

      அட்றா சக்கை !

      Delete
  15. டெக்சின் பழிவாங்கும் பாவைக்கு அடுத்த வாய்ப்பு தரலாம்:
    👍👍

    ReplyDelete
  16. டெக்ஸ் 3 யில் எனது சாய்ஸ்!
    1.கழுகு வேட்டை
    2.பழிக்குப் பழி
    3.பழிவாங்கும் பாவை

    ReplyDelete
  17. எதிர்பார்ப்பில் பிப்ரவரியின் காமெடி மேளா!

    ReplyDelete
  18. டெக்ஸ் அடுத்த தேர்வுகள்
    1) பலி கேட்ட புலிகள்
    2) கழுகு வேட்டை
    3) பழிக்குப்பழி

    ReplyDelete
  19. நடனமாடும் கொரில்லாக்கள்....

    ( சுருக்கமாக )


    நீண்ட நாட்கள் கழித்து
    பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த இதழ்...சிறைச்சாலையில் இருந்து ஒருவன் தப்பி செல்ல அவனை கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் ஆடும் நடனமே்...சாரி ஆட்டமே இந்த நடமாடும் கொரில்லாகள்..இப்பொழுது எல்லாம் லக்கி ,சிக்பில் தவிர மற்ற கார்ட்டூன் கதைகளில் அவ்வளவுவாக ஈடுபாடு வருவதில்லை ..( பென்னி ,ப்ளுகோட் போன்றோர் தோடா ..தோடா விதிவிலக்கு தான் என்றாலுமே கூட..)

    காரணம் வளர்ந்து வரும் வயதின் முதிர்ச்சியா அல்லது அந்த முதிர்ச்சியின் காரணமாய் நம்மை சுற்றி சுழலும் பணி சுமைகளும்,கடமைகளுமா....தெரியவில்லை தான்.

    ஒரு ஆக்சன் ஹீரோவும் ,துப்பறியும் நாயகரும் பால்ய வயதிற்கு எளிதாக நம்மை கொண்டு செல்ல முடிய இப்பொழுதெல்லாம் கார்ட்டூன் நாயகர்களால் அந்த பால்ய உலகிற்கிற்குள் கொண்டு செல்ல மிகுந்த சிரம படுகிறார்கள் என்பது உண்மை.அந்த காலகட்டத்திற்குள் நம்மை கொண்டு செல்கிறார்களோ இல்லையோ ஒரு சில இடங்களில் ஆவது வாய்விட்டு சிரிக்க வைப்பதும் கடினமாகி விட்டது.

    இந்த முறை மேக் அன்ட் ஜாக் அதை நிவர்த்தி செய்து விட்டார்கள் .....எளிய கதைகருவில் ,பலத்த நகைச்சுவையை தூவி அட்டகாச படுத்தி விட்டார்கள்...முடிவு ஒரு துப்பறியும் நாயகராக அல்லாது நகைச்சுவை நாயகராய் காணப்படும் பொழுது இந்த முடிவும் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றே...

    மனதை லேசாக்கிய ஓர் அழகான புன்னகை பூத்த இதழ்


    நட (ன)மாடும் கொரில்லாக்கள்...


    இந்த இதழுக்கான மதிப்பெண் ஒரு குத்தாட்டம் தான்..

    ( ஆனா ஜோடி வேணாப்பா சாமீ ஈஈஈ...:-)


    ***************
    வைக்கிங் தீவு மர்மம்...

    அட்டகாசமான ,அழகான அட்டைப்படம் மட்டுமல்ல...கதையுமே...முதலில் இந்த கதை மறுபதிப்பிற்கு தேர்வான பொழுது இது ஒன்றும் ஓர் மாபெரும் வெற்றி பெற்ற இதழ் போல தெரியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.. மேலும் இது ஓர் சிறிய சாகஸ கதை என்ற நினைப்பும் மனதில் மேலோங்கி இருந்தது. இதழின் அளவையும் ,பக்க அளவுகளையும் கண்டவுடன் தான் ஓர் முழு திருப்தி கிடைத்தது எனில் கதையை படித்து முடித்ததும் இந்த திருப்தி மனதில் பன்மடங்கு ஏற்படுத்தியது.ஒரு கெளபாய் சாகஸத்தில் ,அதுவும் டெக்ஸ் வில்லர் சாகஸத்தில் எதிரிகள் துப்பாக்கிகளை பற்றி கூட அறியாதவர்களாக இருந்தும் கதை "குதிரை " வேகத்தில் பறப்பது உண்மை.கதையின் ஆரம்ப பக்கங்களை தொடங்கும் பொழுது மட்டுமே இது ஒரு மறுபதிப்பு கதை ,ஏற்கனவே படித்த கதை என்ற நினைவு ...ஆனால் சில நிமிடங்களில் ஒரு புது சாகஸ கதையில் புதிதாக படிப்பது போன்றே படித்து முடித்தவுடன் தான் இதழை கீழே வைக்க சொல்லியது.பல இடங்களில் டெக்ஸ்,கார்சன் உரையாடல்கள் மிக மிக ரசிக்க வைத்தன.புரபஸர் மகள் எதிரியின் முக ஜாடையை விமர்சனம் செய்யும் பொழுது டெக்ஸின் நக்கல்..,கார்ஸன் உணவுக்கு அல்லோல படும் பொழுது டெக்ஸின் கிண்டல் ,தனது போராட்டத்தால் கிடைத்த வெற்றிகரமான தோல்வி ,இறுதியாக இந்த சம்பவங்களை மறக்க கார்ஸன் க்ளைமேக்ஸில் எடுக்கும் "பீர் " முடிவு என பல இடங்களில் இந்த தீவு முகத்தில் புன்சிரிப்பை தவழ விட்டன.

    ஏற்கனவே படித்த நண்பர்களுக்கே இந்த "வைகிங் தீவு மர்மம் " இதழ் அதிரடியாய் இருக்க போகிறது எனில் புதிதாய் படிப்பவர்களுக்கு அட்டகாச அதிரடியாய் இன்னும் பட்டைய கிளப்பும்.எந்த நண்பர்கள் இந்த இதழுக்காக மறுபதிப்பை வேண்டினார்களோ ..அவர்களுக்கு ஒரு அழகான மலர் கொத்து எனது பரிசாக....போன முறை சில நண்பர்களுக்கு டெக்ஸ் கொஞ்சம் முழு அளவில் திருப்தியை கொடுக்கவில்லை போலும் ...இந்த முறை அதற்கும் சேர்த்து ஈடு செய்து விட்டார்..


    ஓர் அழகான பயணம் வைகிங் தீவு மர்மத்தில்...

    ReplyDelete
    Replies
    1. //இந்த இதழுக்கான மதிப்பெண் ஒரு குத்தாட்டம் தான்..

      ( ஆனா ஜோடி வேணாப்பா சாமீ ஈஈஈ...:-)//

      போச்சு...! செயலாளரோ சல்சா..ச்சா ..ச்ச்சா ...என்று எதெதிலோ பயிற்சி எடுத்து வருகிறாராம் !! அவரது ஆசைக்கு சங்கு தானா ?

      Delete
    2. செயலாளருக்கு ஆட்டத்தை விட பாட்லதான் தான் ஜோடி சேர ஆசை சார்..:-))

      Delete
    3. செயலாளரும் கண்ணனும்

      ஹ்ஹஹ்ஹஹ்ஹா ஹாஹா

      Delete

  20. இப்பத்தான் நள்ளிரவு வேட்டை நீண்ட நாட்களுக்கு பிறகு படிச்சுட்டு இருக்கேன். செமத்தியா இருக்கு. இதுக்கு முன்னே ரத்த ஒப்பந்தம் 3 பாகம் படித்து முடித்தேன். மறுபதிப்புகள்னு கேட்டா பெரிய லிஸ்ட்டே போடலாம். எனக்கு வேண்டிய கதைகள்..
    1. அதிரடிக் கணவாய்
    2. பழிக்குப் பழி
    3. மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்)
    4. எமனோடு ஒரு யுத்தம்.
    இவை எல்லாம் சேத்து ஒரு ஆகஸ்ட் ஸ்பெசலா போட்டாக் கூட மிக்க சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்தக் கதைகளெல்லாமே அட்டைப்படங்களாக மட்டுமே ஞாபகம் உள்ளன சார் !

      Delete
  21. நட(ன)மாடும் கொரில்லாக்கள் :

    ஜெயிலில் இருந்து தப்பியோடிப்போன கைதியை பிடித்து பாதுகாக்க ஒரு கும்பலும், அதே கைதியை கண்டுபிடித்து போட்டுத்தள்ள ஒரு கும்பலும் ஒன்றாய் களமிறங்குகின்றன.
    அந்தக் கைதியைப் பற்றி தெரிந்த ஒரே விசயம் அவன் தினமும் ஒரு குறிப்பிட்ட பாருக்கு குடிக்க வருவான் என்பது மட்டுமே.!
    இதுவரை சாதாரணமாக போகும் கதை, லவ் பார் எனப்படும் அந்த பாரில் நுழைந்த சற்றைக்கெல்லாம் ஜெட் வேக காமெடி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.!

    13ஆம் பக்கத்தின் கடைசி கடைசிப் பானலில் பார்மேன் பேசும் வசனத்தில் தொடங்கிய சிரிப்பை சத்தியமாய் இறுதிவரை நிறுத்தவே முடியவில்லை.!

    Cross dressersகளை (எதிர் பாலினம் போல் ஆடையணிவோர்) மையமாக வைத்து செம்ம காமெடித் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.!
    வசனங்கள் கூடுதல் சிறப்பு.!

    பெண் வேசம் கட்டுவதற்காக நடைபயிற்சி எடுத்துக்கொள்ளும் ஜாக்., அதே ஞாபகத்தில் சாலையிலும் பின்புறத்தை ஆட்டியபடி நடந்துசெல்ல .. பாஸ் ..சாலையில் இருக்கோங்கிறதை மறந்துட்டீங்க ...டிக்கி ..டிக்கி ன்னு ஜாக் சொல்லும்போது சத்தமாவே சிரிச்சிட்டேன்.!
    ஏய்...நீ..நீங்க அந்த ஜெயில் வார்டன்தானே ன்னு ஜாக் கேட்கும் இடம், உங்க கண்கள் ரொம்ப அழகுன்னு பெண் வேசத்தில் இருக்கும் மாபியா லீடர் அல் கபோனிடம் எலியாஸ் நெட் வழியும் இடம், அல் கபோனிடம் பெண் வேசத்தில் மாட்டிக்கொண்டு ஜாக் நடனமாடுவதை நினைத்து ரெஸ்ட் ரூமில் புகுந்துகொண்டு மேக் சிரிக்கும் இடம்.. அய்யோ .. இன்னும் நிறைய இருக்கு சிரிக்க.!

    போலிஸ், டிடெக்டிவ், வில்லன்னு அத்தனை பேரும் மொத்தமாக பெண் வேசத்தில் இருக்க... கைதியைக் கண்டுபிடிக்க நடக்கும் கூத்து சிரிச்சி மாளாது.!

    யாரோடு குத்தாட்டம் போட்டோம்கிற உண்மையை ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டவுடன் கொடுக்கும் ரியாக்ஷன் செம்ம.!
    எங்கே அந்த மூதேவி...ச்சே ..மூதேவன்...ஹாஹாஹா...!
    சிரிப்பு சமாச்சாரம் ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல ... படிச்சி சிரிச்சுக்கோங்க.!

    இந்த வருடத்தின் முதல் கார்ட்டூனே சூப்பர்டூப்பர்..!

    நட(ன)மாடும் கொரில்லாக்கள் - விலா நோகுதுபா

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. //சாலையிலும் பின்புறத்தை ஆட்டியபடி நடந்துசெல்ல .. பாஸ் ..சாலையில் இருக்கோங்கிறதை மறந்துட்டீங்க ...டிக்கி ..டிக்கி ன்னு ஜாக் சொல்லும்போது//

      அந்த frame -ல் சின்னச் சின்ன கோடுகளையும், நெளிவுகளையும் மாத்திரமே வரைந்து ஓவியர் செய்திருக்கும் ரகளையை பார்த்தீர்களா சார் ?

      Delete
    2. //இந்த வருடத்தின் முதல் கார்ட்டூனே சூப்பர்டூப்பர்//

      நான் ஆசைப்பட்டதும் இதற்கே !

      Delete
    3. ///அந்த frame -ல் சின்னச் சின்ன கோடுகளையும், நெளிவுகளையும் மாத்திரமே வரைந்து ஓவியர் செய்திருக்கும் ரகளையை பார்த்தீர்களா சார் ?///

      ஹாஹாஹா...!

      சின்ன சின்ன கோடுகளை வைத்தே டிக்கியை தூக்கியபடி ஆடிஅசைந்து நடப்பதை அழகாக காட்டியிருப்பார்கள்.!

      அதுமட்டுமா சார்.! அல் கபோனை அடையாளம் தெரிஞ்சிக்கிட்ட ஜாக்கோட முகபாவமும், இவன்தான் நம்மோட ச்சா ச்சா ச்சா டான்ஸ் ஆடினவனா இருப்பானோன்னு அல் கபோன் ஜாக்கைப் பார்க்கிற பார்வையும், அல் கபோனும், எலியாஸும் ஆடும் நடன அசைவுகளை வரைந்திருக்கும் விதமும் ...

      அடடா அடடா ..!
      நான் போய் இன்னொருக்கா சிரிக்கிறேன் (படிக்கிறேன்) .!

      Delete
    4. இங்குள்ள (சொற்ப) மகளிரணி நம்மை மன்னிப்பார்களாக !!

      Delete
  22. I read all stories. My rating for this month as follows :-

    1. Jeramiah. This time more pictures than dialogues which tells the story. So dont read dialogues only. Take more time to go through each and every frame please.

    2. Nadanamadum Korillagal. You can't stop laughing from the page no 30 onwards.

    3. TeX willer.

    4. Johnny 2.0 as usual. A suspense thriller.

    ReplyDelete
    Replies
    1. //Take more time to go through each and every frame please. //

      Super !!

      Delete
  23. சுவாசக் காற்றில் கூட காதலின் வாசம் வீசும் பாரிசின் இரவுகள்" \\\

    எனக்கும் அட!!! என்று தோன்றியது.

    2.0 வில் ஜானி கெத்தாக(கொத்தாக) மாறி இருக்கிறார்.

    அதுவும் குற்றம் செய்த பெண்ணிற்கு கால் செய்து

    "உண்மையைச் சொல்வதானால் அடையாள அணிவகுப்பில் நீ தந்த முத்தத்தை விட, பசுமைக்கூடத்தில் நீ தந்த முத்தத்திலிருந்த கிக் குறைவு"

    என்று கூறும் இடத்தில் கிளப்ஸ் வாங்குகிறார்.

    நானறிந்த வரை பெரும்பாலன காமிக்ஸ் கள் கம்யூனிச எதிர்ப்பு நிலை கொண்டு ளவையே.

    நேரடியாக கம்யூனிச ஆதரவு தருகின்றன மாதிரி இந்த காமிக்ஸ் வந்து இருப்பது ஆச்சரியம். இது தொடருமா என்பதும் கேள்வி குறி????.

    "ஆண்டவா.... ஒரே ஒரு ரிப்போர்டர் ஜானியைப் படைத்தாய்-சரி! ஆனால், அவனை என்னிடம் ஊழியனா சேர்த்து விட்டது ஏனோ? ஊர் உலகத்தில் வேறு எடிட்டர்களே சிக்கவில்லையா?...."

    என்று எடிட்டர் சமூகம் புலம்புவது எதார்த்த காமெடி.

    சித்திரங்கள் அருமை. ஆனால் லாங் ஷட்டில் உதடுகளை சரியாக வரையபடவில்லை.

    மொத்தத்தில் 2.0 வில் ஜனி அருமையாக ரிலோட் செய்யபட்டுள்ளார்

    ReplyDelete
    Replies
    1. ///நேரடியாக கம்யூனிச ஆதரவு தருகின்றன மாதிரி இந்த காமிக்ஸ் வந்து இருப்பது ஆச்சரியம். இது தொடருமா என்பதும் கேள்வி குறி????.///

      +111

      Delete
    2. ///சித்திரங்கள் அருமை. ஆனால் லாங் ஷட்டில் உதடுகளை சரியாக வரையபடவில்லை.///

      Ganesh kumar ..

      இதெல்லாம்....:))))))

      Delete
    3. Cold War நிலவி வந்த காலகட்டத்தில் கதை நிகழ்வதாய் அமைத்திருக்கும் கதாசிரியர் மாமூலான கம்யூனிச bashing -ல் ஈடுபட்டிருக்கலாம் தான் ! ஆனால் அவ்விதம் செய்திட பிரியம் காட்டாது போனதில் பாராட்டுக்களை ஈர்க்கிறார் !

      Delete
  24. ///இது உங்களின் turn - இந்தக் கதைக்கு ஏற்ற விதமாய் மாற்றுப் பெயர்களை இங்கே புட்டு வைக்க !! Give it a try guys !///

    1. அவனா நீயி
    2. ஆணென்ன பெண்ணென்ன
    3. நான் அவள் இல்லை

    அப்பாலிக்கா ஒஸ்தானு (இது தலைப்பில்லை) :-)

    ReplyDelete
    Replies
    1. ஊஹும் ....கதையின் plot-ஐக் காட்டிக் கொடுக்கும் விதத்திலான தலைப்புக்கள் செல்லாது.. செல்லாது !!

      Delete
    2. ///கதையின் plot-ஐக் காட்டிக் கொடுக்கும் விதத்திலான தலைப்புக்கள் செல்லாது.. செல்லாது !!///

      அடடே...!

      அப்படீன்னா "அப்பாலிக்கா ஒஸ்தானு" ன்னே வச்சிக்கலாம் சார்.!
      யாராலையுமே கண்டுபுடிக்க முடியாதுல்ல ..எப்பூடி ..ஹிஹி.! :-)

      Delete
    3. மின்னுவதெல்லாம் பெண்ணல்ல..!

      Delete
    4. துள்ளுவதோ இளமை..!

      Delete
    5. //மின்னுவதெல்லாம் பெண்ணல்ல..!//

      அட...!

      Delete
    6. உன்னை கண் தேடுதே...


      ஆஜானுபாவ அழகி...


      அழகனை தேடி....

      Delete
    7. ///மின்னுவதெல்லாம் பெண்ணல்ல..///

      Super .. GP.!

      Delete
    8. ///மின்னுவதெல்லாம் பெண்ணல்ல..!///

      சூப்பர் தலைப்பு GP! உங்களுக்கான பன் பரிசு ஈரோடு விழாவில் உண்டு!

      Delete
    9. கூழ் ஒன்றரை கன்டைனர் லோடு பாக்கி ; இதில் பன் கணக்கு மீட்டர் வேறு எகிறுகிறது !!

      Delete
    10. புரூச்( தமிழ்வாணன் ஞாபகம்)
      முத்தக் கால்
      வாடி என் முத்தக் கிழங்கே.

      Delete
    11. பெண்ணல்ல.. பெண்ணல்ல.. ஊதாப்பூ

      Delete
  25. Tex reprints
    1.பலி கேட்ட புலிகள்
    2.பழிக்கு பழி
    3.அதிரடி கணவாய்

    ReplyDelete
  26. ஜானி 2.0 பாதிதான் படிச்சிருக்கேன். So far so good.!
    மருத்துவ முத்தம் மாதிரி மூச்சை நிறுத்தற முத்தமா இருக்கே.!

    ReplyDelete
    Replies
    1. பார்க் பக்கம் கொஞ்சம் சாக்ரதையா ; சூதானமா போயிட்டு வாங்கோ !!

      Delete
    2. க்கும்.... நீங்க வேற சார்.!
      எங்க ஊரு பார்க்குல அஞ்சாறு பாட்டிகதான் கொட்டலான்ல பாக்கை இடிச்சிக்கிட்டு காலை நீட்டி உக்காந்து ஊர்நாயம் பேசிக்கிட்டு இருப்பாங்க.!
      அங்கே போனா ...
      அடே பேரான்டி இது ரெண்டுருவா காசா ஒருருவா காசான்னு பாத்து சொல்லுடான்னு கேப்பாங்க..!:-)

      Delete
    3. உண்மையாகவே அந்த பாட்டிகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை போலும், இருந்திருந்தால் அடே தம்பி இது ரெண்டுருவா காசா ஒருருவா காசான்னு பாத்து சொல்லுடான்னு அப்படின்னு கேட்டு இருப்பாங்க....

      Delete
    4. என்னோட அழகையும் இளமையையும் பார்த்து உங்களுக்கு பொறாமை ப்ளூ.!:-)

      Delete
    5. இப்பல்லாம் நெறய கிடைக்குதாக்கும்
      பாட்டி முத்தம்

      Delete
    6. கிட் ஆ க
      இல்லாமைய இளமைங்கிறீக....

      Delete
    7. அப்போ அழகை ஒத்துக்கிறீங்களா J ஜீ ..! ;-)

      Delete
    8. கிழவிங்கள பத்தி யாரு பேசுவாங்களாம்...

      Delete
    9. கிழவிங்கனு ஏன் சொல்லணும்? ஒருவேளை பக்கத்துல இருக்கிற இணை பிரபஞ்சத்துல பேரழகிகளாக இருந்துட்டு ரகசியமாக நம்ம தளத்தை நோட்டம் விட்டுட்டு இருக்கலாம்.
      அல்லது ,
      கிழவி வேஷத்துல இருப்பது உண்மையாகவே குமரியாக இருக்கலாம்.

      Delete
    10. இணை பிரபஞ்ச பேரழகியோ

      கிழவி வேடத்தில் குமரியோ

      அட ! நெஜமாலுமே கிழவியோ

      லவ் பார் மெம்பரா இல்லாதவரை சரி!!!

      Delete
  27. //இரவுக்கழுகாரின் மறுபதிப்பினில் என்று ! ஆண்டுதோறும் இது ஈரோட்டில் தீர்மானிக்கப்படும் சமாச்சாரம் என்றாலும் - உங்களின் அடுத்த "TEX 3" பட்டியலை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து வைத்துக் கொள்கிறேனே ?! //

    1) கழுகு வேட்டை
    2) கழுகு வேட்டை
    3) கழுகு வேட்டை

    ReplyDelete
  28. டெக்ஸ் எனது சாய்ஸ்
    1.மரண முள்
    2.அதிரடி கணவாய்
    3.எல்லையில் ஓர் யுத்தம்

    ReplyDelete
    Replies
    1. அட...எனது தேர்வும் முள் கதை தான் சத்யா !

      Delete
    2. முள்ளு கத சுகிக்காது
      ஊத்திகிட போகுது...‌

      Delete
    3. மரண முள் நிச்சயம் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

      Delete
    4. அய்யோ..முள்ளா? நோ...........!!!

      Delete
    5. எனக்கும் முள்ளு மேல கிக் இல்ல..!

      Delete
  29. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிரித்தேன் காமெடி இதழில்.
    வைகிங் தீவு மர்மம் இதுதான் முதல் தடவை tex ரசிகன் என்று சொல்வதை விட வெறியனாக உணர்கிறேன்.
    ஜானி பழையது விட ஒரு வித்தியாசமான அனுபவம் தொடரவும்.

    Tex மறுபதிப்பு என் விருப்பம்
    1.கழுகு வேட்டை
    2.அதிரடி கணவாய்
    3.பழி வாங்கும் புலிகள்

    ReplyDelete
    Replies
    1. //வைகிங் தீவு மர்மம் இதுதான் முதல் தடவை tex ரசிகன் என்று சொல்வதை விட வெறியனாக உணர்கிறேன். //

      Wow !!

      Delete
  30. டெக்ஸ் அடுத்த தேர்வுகள்
    1) பலி கேட்ட புலிகள்
    2) கழுகு வேட்டை
    3) அதிரடி கணவாய்

    ReplyDelete
  31. அட! நடனமாடும் கொரில்லாக்கள் - க்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்தால்

    ஈரோடு விஜயாள்

    கிட் ஆர்டின் கண்ணாத்தாள்

    கோவிந்தம்மாள் பெருமாள்

    கணேச குமாரி

    மிதுனா சக்ரவர்த்தினி

    தாரை பரணீதரனி

    அப்டிங்கற பேர்களில்தான் அடுத்த வாரம் கமெண்ட்கள் வரும் போலிருக்கே .:-)

    ReplyDelete
    Replies
    1. ஹேய்.. you naughty! அஹ்..அஹ்.. ஹாங்!

      Delete
    2. ஆஆ..ஆ..அ..அஹ்ஹ்ஹா..
      (கமல் ஸ்டைலில் அழவும்)

      Delete
    3. பொழுதோட கோழி கூவுற வேளை..
      ராசாதி ராசன் வாரான்டி புள்ள..

      Delete
    4. பொருளாளரே....:-)))))

      Delete
    5. செல்வி அபிராமிக்கு நடனமாடும் கொரில்லா பிடிக்கலையோ????

      Delete
    6. அபிராமி அபிராமி ...அபிராமி

      Delete
    7. அபிராமி செல்லத்த கட்டி பிடிச்சு நான் டான்ஸ் ஆட்றேன் ஆன்லைன் ல

      Delete
    8. //செல்வி அபிராமிக்கு நடனமாடும் கொரில்லா பிடிக்கலையோ???//

      ரொம்ப புடிச்சிருக்கு கணேஷ் குமார் சார்!

      எல்லாரும் செமயா எழுதி தள்ளிட்டதால புதுசா எழுத ஒண்ணுமில்லே...

      Enjoyed it!!!

      Delete
    9. நானும் நடனமாடும் கொரில்லா வை ரொம்ப ரசிச்சேன்.

      பெரும்பாலும் parcel வந்த உடன் office ல் தான் cartoon காமிக்ஸ் படிப்பேன். இந்த முறை நடமாடும் கொரில்லாவை படிக்கும் போது, சத்தமாக சிரித்து விட்டேன்.

      (வேலை நேரத்தில் ஆபிஸில் காமிக்ஸ் படிபக்க வேண்டாம் என்று மறைமுகமாக tecnicle supervisor சொல்லி பார்த்தார். மனைவி சொல்லியே கேட்காத நாம, supervisor சொல்லியா கேட்க போகிறோம்.)

      Delete
    10. ////பெரும்பாலும் parcel வந்த உடன் office ல் தான் cartoon காமிக்ஸ் படிப்பேன். இந்த முறை நடமாடும் கொரில்லாவை படிக்கும் போது, சத்தமாக சிரித்து விட்டேன்.////

      உங்களுக்குச் சிரிக்கவும் தெரியும்ற விசயத்தை அறிந்து ஆபீஸில் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருப்பாங்களே? (ஹிஹி! ச்சும்மா ஒரு கலாய்ப்புக்காண்டி!)

      Delete
  32. இந்த மாதம் வந்த கதைகளில் அட்டைப்பட தரவரிசை:
    1) வைக்கிங் தீவு மர்மம்
    2) பயணங்கள் முடிவதில்லை
    3) ஜானி 2.0 (இது போன்று முத்தக் காட்சிகளுடன் வரும் அட்டைப் படங்களை முடிந்தால் தவிர்க்கும்; புத்தகத் திருவிழாவில் வரும் புதிய வாசகர்கள் புத்தகங்களை தேர்வு செய்வதில் அட்டைப் படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்)
    4) நடனமாடும் கொரிலாக்கள் (இந்த பதிவில் நீங்கள் கண்ணில் காட்டிய ஒரிஜினல் அட்டடை சூப்பர், அதனையே உபயோகித்து இருக்கலாம்)

    ReplyDelete
    Replies
    1. சார் ...காமிக்ஸ்கள் குழந்தைகள் சமாச்சாரம் (மட்டுமே) இல்லை என்பதை நிலைநாட்டத் தான் கிடைக்கும் ஒவ்வொரு கூரையிலும் ஏறி நின்று கூவ முற்பட்டு வருகிறேன் ?! இதில் ஒரிஜினல் ராப்பரை பயன்படுத்தவும் தயங்கிக் கொண்டிருந்தால் இரண்டடி முன்னே ; மூன்றடி பின்னே என்ற கதையாகத் தானிருக்கும் !

      தவிர, அட்டையில் ஒரு சாதுவான படத்தைப் போட்ட பிற்பாடு கதையினில் வரும் இச் சீன்களை எவ்விதம் நியாயபடுத்துவோமோ புது வாசகர்களிடம் ? What you see is what you get என்றமட்டிற்காவது எடுத்துக் கொள்ளலாமே ?

      Delete
    2. இன்னுமா நம்மள நம்புறாங்கே.(வடிவேலு)

      Delete
    3. விஜயன் சார், லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகளில் கூட நாம் இது போன்ற அட்டைப் படங்களை
      நாம் உபயோகப் படுத்தியதாக ஞாபகம் இல்லை.

      Delete
    4. ஒரிஜினலில் அட்டைப்படத்தினில் லார்கோ இச்சென்றால் தானே சார் தமிழில் நாம் அதை உபயோகிப்பதோ - யோசிப்பதோ நிகழ்ந்திட ?

      Delete
    5. பரணி சும்மா இருமைய்யா
      நம்மாளு இப்பத்தான் எதார்த்தத்துக்கு வந்திருக்காரு.

      ஆமா செல்போன்ல நம்ம புள்ளைங்க பாக்காத முத்தமா.. கேட்காத சத்தமா..

      Delete
    6. நடுராத்திரியில பேசி முடிக்கிறப்ப முத்தச்சத்தம் தான் கேக்குறது.

      Delete
    7. Editor Sir .. You can start Santhaa K for these comics :) :) :)

      Delete
    8. சந்தா.மு ன்னு தமிழில் பெயர் வைத்தாலும் எங்களுக்கு ஒ.கே தான்.

      Delete
    9. அறிவிக்கும் முதற்தினத்துக்கே சந்தா டார்கெட்டை போட்டுத் தாக்கிடுமோ ரெஸ்பான்ஸ் ?

      Delete
    10. எந்தவொரு சந்தா என்றாலும் நான் வாங்குவேன். ஆனால் நண்பர்கள் புரிந்து கொள்ளாமல் விட்ட விஷயம் எந்த சந்தா போட்டாலும் அதனை புத்தகத் திருவிழாவில் கண்ணில் காட்ட வேண்டுமே🤔

      Delete
    11. உலகம் மாறி கொண்டுள்ளது பரணி. இதை மறைந்து வைக்க வேண்டிய அவசியம் இனி வரும் சந்ததிகளுக்கு தேவையில்லை. என்னை பொருத்தவரை இந்த இதழை புத்தக திருவிழாவில் முதலாவது வைக்க வேண்டும்.
      குழந்தைகள் படிப்பது மற்றும் வயது வந்தோர் படிப்பது என்று தனி தனி ரேக் வைக்கலாம்.

      Delete
    12. // குழந்தைகள் படிப்பது மற்றும் வயது வந்தோர் படிப்பது என்று தனி தனி ரேக் வைக்கலாம் //

      +1 இது தான் நான் விரும்புவது.

      Delete
    13. அதனால் தான் புத்தகத்ையே இதழ்கள் என்று சொல்கிறோமோ என்னவோ? (SUPERAPPU...)

      Delete
    14. முத்தங்கள் குழந்தைகளுக்கு ஆபாசமாக தெரிவதல்லை... உலகத்திலியே எனக்கு ரொம்ப புடிச்ச இடம் என் மகளின் கன்னம் தான்..

      Delete
  33. நடனமாடும் கொரில்லாக்கள் படித்து முடித்து விட்டேன்.

    வைகிங் தீவு மர்மம் முதல் முறையாக படிக்க போகிறேன்.

    ReplyDelete
  34. டெக்ஸ் பதிப்பு எனது சாய்ஸ்
    1அதிரடிக்கணவாய்
    2.பழிக்குப்பழி
    3.பழி வாங்கும் பாவை

    ReplyDelete
  35. சார்....

    படித்த இரு இதழ்களும் ( டெக்ஸ்...மேக் அன்ட் ஜாக்) செம ...செம...முழு மதிப்பெண்களையும் முழுதாக பெறுகிறது.

    இன்று மதியம் தான் பேட்ட சாரீ...2.0...இனி படித்து விட்டு...:+)


    ReplyDelete
  36. எனது விருப்பமும் கழுகு வேட்டைதான். அட்டைப்படத்தில் இருக்கும் செவ்விந்தியனின் முகம் ரௌத்திரமாக இருக்கும்

    ReplyDelete
  37. Tex3
    1. Palivaangum paavai
    2. Palliku palli
    3. Kalugu vettai

    ReplyDelete
  38. I read all stories. My rating for this month as follows :-

    1. Jeramiah. This time more pictures than dialogues which tells the story. So dont read dialogues only. Take more time to go through each and every frame please.

    2. Nadanamadum Korillagal. You can't stop laughing from the page no 30 onwards.

    3. TeX willer.

    4. Johnny 2.0 as usual. A suspense thriller.

    ReplyDelete
  39. Hi edit
    I finished johnny 2.o
    Old flavour is missing.
    As standalone new detective ok.
    If u have to choose between 1.0 vs 2.0 then my vote z 1.0.
    Note- never felt like 1968.artwork so modern and out of place.Story doesnt have simple thrills of johnny oldies
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. ஒரு புராதன காலகட்டத்தை உணர்த்தும் சித்திர பாணியில் நவீனம் இருப்பதில் தவறில்லை சார் ; அந்த சித்திர சப்ஜெக்ட்களில் நவீனம் தலைகாட்டினால் தானே தவறு ?

      Delete
  40. Plenty of new comics are ahead. Why should we go for reprints? I suggest separate track for reprints. We may go for reprints in print run like Ratha Padalam colour & En Peyar Tiger (Black and white).

    So say NO to reprints.
    So say YES to new comics.

    ReplyDelete
  41. டெக்ஸ் மறுபதிப்பு எனது விருப்பம்
    பழிக்குப்பழி
    அதிரடி கணவாய்
    பழி வாங்கும் பாவை/ மரண முள்

    ReplyDelete
  42. ஜானி 2.0....    வாவ்....நினைத்தே பார்க்க வில்லை..ஜானி முன்னரை விட இப்பொழுது 2.0 வாக பிறப்பெடுத்து மிக உயரத்தில் வெற்றி கொடியை நாட்டுவார் என்று.எனக்கு முதல் சந்தோசம் ஜானியின் அதே கதாபாத்திரங்கள் ,அதே பணியில் ,ஏன் அதே பாணியில் ஆனால் சிக்கலான க்ளைமேக்ஸ் என்றுமட்டுமல்லாமல் ஒரு நேர்க்கோட்டு பாணியில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக பரபரப்புடன் மட்டுமல்ல மேக்அன்ட் ஜாக் போல் பல இடங்களில் தங்களின் வசனங்கள் சிரிக்கவும் வைத்தன என்பது உண்மை.மேலும் ஜானியின் " கெத்தை " பிற நபர்களின் மூலம் அள்ளி தெளிக்கும் பொழுது நமது மனதிற்குள் "எங்க ஜானிடா " என்று ஒரு கூதுகலம்.

    உண்மையில் இந்த ஜானி 2.0 வில் தான் முழுமையான ,உண்மையான ,அட்டகாசமான "ரிப்போர்ட்டர் ஜானி " யை காண முடிகிறது.இறுதியில் ஜானி க்கு முத்தம் கொடுக்கும் அந்த நேரத்தில் ஜானிக்கு எதுவும் நேராது என்ற எதிர்பார்ப்பு மனதிற்குள் உறுதியாக புகுந்து விட்டாலும் அடுத்த சில நொடிகளில் மனதை கனக்க வைக்கும் நிகழ்வு நிகழபோகிறது என்பதும் உறுதியானது.அது போலவே நடந்த்தில் மனதில் பாரம் ஏற்பட்டாலும் அதற்கடுத்தான ஜானியின் குறுகிய நகர்வுகள் ஓர் அழகான ..ஹீரோவை காட்டுகிறது.

    அதே சமயம் இறுதியாக கடைசி பேனலில் கடைசி பக்க வசனங்கள் மனதில் ஏற்பட்ட சிறிய பாரத்தை கொஞ்சம் மறக்க செய்து முகத்தில் புன்னைகையை பூக்க வைத்தது.


    இந்த ஜானி 2.0 வை யார் மொழி பெயர்த்தது என உறுதியாக தெரியாது சார் ...ஆனால் யாராக இருந்தாலும் 2.0 போன்று இல்லாமல் அவரின் கரங்களுக்கு எனது மானசீக முத்தங்கள்....    இப்ப ரொம்ப சத்தமாகவே சொல்கிறேன் ...முன்வந்த ஜானியை விட இந்த "ரிப்போர்ட்டர் ஜானி 2.0 " தான் வேண்டும்...வேண்டும்...வேண்டும்...


    இனி ஜானி 2.0 வை தலைவரின் அறிமுக காட்சியில் கைசிலிர்க்க கைதட்டி வரவேற்பது போல பலத்த கைதட்டலுடன் வரவேற்கிறேன்....
    அடுத்த 2.0 எப்போ சார் ப்ளீஸ்....?!

    ReplyDelete
    Replies
    1. தலீவரே ... உங்கள் முத்தங்கள் மானசீகமானவையோ ; மருத்துவ குணம் வாய்ந்தவையோ - அவற்றிற்குப் பதிலாய் கடலை மிட்டாய் ; ரவுண்டு பன போல் எதையாச்சும் வாங்கிக் கொள்ளலாமா ? பிப்ரவரி ஒன்று முதலாய் ஆண்களிடமிருந்து ஒரு ஆரோக்யமான இடைவெளியை maintain செய்தால் தேவலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது !! தவிர முத்தம் என்றாலே தூக்கிப் போடுது சாமி !!

      Delete
    2. சார்.. எங்க தலீவர் ஒரு தபா முடிவு பண்ட்டார்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாருன்னு உங்களுக்குத் தெரியாதா?!

      உம்மா தான்!!

      Delete
    3. அதுவும் தலைவரோட தலீவர் படம்முத்து பாணில இறுக்கி அணைச்சு தான் குடுப்பாரு.

      Delete
    4. எச்சூஸ் மீ ...வாட் இஸ் தி ப்ரொசீஜர் for கால பயணம் ? யார்கிட்டேயாச்சும் ஒரோபோரோவோ / ஓணாண்பூரானோ கீதா ? சித்தே பின்நோக்கிப் போயி ஒரு ஸ்கிரிப்ட்டை மாத்த வேண்டியிருக்கே !

      Delete
    5. ///அதுவும் தலைவரோட தலீவர் படம்முத்து பாணில இறுக்கி அணைச்சு தான் குடுப்பாரு.///

      அருமையான தகவல் MP அவர்களே!
      இந்த வருட ஈரோட்டு விழாவுல இதையும் ஒரு முக்கிய நிகழ்வா வச்சுக்கிடலாம்!
      ரோபோ ஆர்ச்சி மாதிரியான கவச உடை கெட்அப்பில் ஒரு உருவம் வந்து மேடையில் உட்கார்ந்திருந்தா அது யாரா இருக்கும்னு கண்டுபிடிக்கறது அப்படியொன்னும் கஷ்டமில்லைதானே?!

      Delete
  43. இம்மாதம் படித்த மூன்று இதழ்களுமே முக்கனியாய் சுவைத்து விட்டன...அனைத்து கதைகளுமே படித்து முடித்தவுடன் அதற்அதற்கான ஜானர்களில் மனதை முழுமையாக ஆக்ரமித்து கொண்டது என்பது மறுக்க முடியா உண்மை....


    இனி இருப்பது ஜெராமியா மட்டுமே....

    ஜெராமியா ராவ் வய்யா...:-)

    ReplyDelete
  44. From Steel claw Coimbatore:
    பலிக்குப் பலி....பலி வாங்கும் பாவை....கழுகு வேட்டை/அதிரடிக் கணவாய்

    ReplyDelete
  45. **** நடனமாடும் கொரில்லாக்கள் *****

    திரும்பத் திரும்பப் படிக்க, உருண்டு புரண்டு சிரிக்க - ஒரு ரகளையான காமெடி இதழ் ஆண்டின் துவக்கத்திலேயே கிடைச்சாச்சு!!
    செம ரவுசான கதைக் களம்!! வயிறைப் பதம் பார்க்கும் வசனங்கள்!! பல முறை வாய்விட்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தது!!

    'மேக் & ஜாக்' - நம்மிடம் நிரந்தர இடத்தைத் தக்க வைப்பார்கள் போல தெரிகிறது!

    என்னுடைய ரேட்டிங்: 9/9 (ஃபுல் மார்க் தான்.. ஹிஹி! கதைக்குத் தகுந்தமாதிரி நம்பரைத் தேர்வு செய்தேன்!)

    ReplyDelete
    Replies
    1. //மேக் & ஜாக்' - நம்மிடம் நிரந்தர இடத்தைத் தக்க வைப்பார்கள் போல தெரிகிறது!//

      கதைத் தேர்வினில் எங்களுக்கு நிரம்பவே பொறுப்பு கூடிடுவது இது போன்ற தருணங்களில் தெளிவாகவே புரிகின்றது !

      Delete
  46. ஜெராமியா:

    ஜெராமியாவின் சித்திரங்கள் அருமை. உலகம் அழிந்த பிறது, எஞ்சிய உலகம் எப்படி இருக்கும் என்பதை அழகாக வரைந்து இருக்கிறார்.

    கதை:
    முதல் பாகம் கொஞ்சம் இல்லை ரொம்பவே சுமார். முந்தைய ஜெராமியா நிறைய முறை மீள்வாசிப்பு செய்ததற்கு காரணம், அதில் இருந்த எதார்த்தம்.

    ஆனால் இம்முறை மந்திரவாதியை கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் கதை ஏனோதானோ என்று செல்கிறது.

    இரண்டாவது கதை அருமை. கதை நேர்கோட்டில் செல்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் அந்த பெண்ணிற்கு ஏற்படும் நிலைமை பரிதாபமாக உள்ளது.

    மூன்றாவது பாகத்தில் 100 பக்கம் மேல் எழுத நினைத்த தாகவும். ஆனால் பதிப்பகம் ஒத்துகொள்ளவில்லை என்பதை ஹெர்மன் துவக்க பக்கத்தில் கூறும் போது வியப்பாக இருந்தது.

    கதையின் பக்கத்தை ஹெர்மன் தான் முடிவு செய்து இருக்க வேண்டும்.

    அதன் விளைவு கதை எங்கே ஆராம்பித்து எங்கே முடிகிறது என்றே தெரியவில்லை.சாமியாரை எதிராக கருத்து சொல்பவர்களை எப்படி இறக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர்.

    மூன்று பாகங்களிலும் கிளைமாக்ஸ் வலுவாக இல்லை. சட்டென முடிந்து விடுகிறது. திறமையான வில்லன்களும் எதார்த்த வாழ்க்கையில் இருக்க தானே செய்கின்றனர்.

    இன்னும் ஒருமுறை படித்து விட்டு என்னுடைய முடிவை சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கு நன்றிகள் சார் !

      Delete
  47. மேக் அண்ட் ஜாக் Made me laugh😄😄

    ReplyDelete
  48. ஜானி 2.0

    வரவேற்கத்தக்க மாற்றம். கதையின் துவக்கம் ஜேம்ஸ்பாண்ட் படத்துவகத்தை ஒத்திருந்தது. 'நிக்டலோப்' ஒரு தொடரும் கதைப்பாத்திரமாய் தோன்றுகிறது.
    Larger than life எனும் படியான பிம்பம் சிலருக்கு உண்டு.எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், போன்ற நிஜங்களும்; ஜேம்ஸ்பாண்ட், டெக்ஸ் போன்ற நிழல்களும் சில உதாரணங்கள். ரிப்போர்ட்டர் ஜானியின் இந்த புதிய அவதாரம் அவரையுமே அந்த கட்டத்திற்கு நகர்த்த துவங்கியிருப்பதாய் புலனாகிறது.

    இந்த கதையில் ஜானி ஃப்ரான்ஸ் அரசையே அசைத்துப் பார்க்க அஞ்சாத ஒரு உறுதியான ரிப்போர்ட்டர், அதே சமயம் நியாயமான காரணங்கள் முன்னிட்டு கொலைகள் புரிந்த பெண்ணை 'காம்ரேட்' என்று வழியனுப்பி வைக்கும் ஒரு உணர்வாளன்.

    ஜானி - நாடின் இடையேயான ஈர்ப்பு மிகவும் அழகாக காட்டப்பட்டு இருக்கிறது. அவர்கள் அன்யோன்யம் பேனல்களை அட்டகாசப்படுத்துகிறது. உ.ம்., பக்கம் 24...
    இந்த புதிய ஜானி நம்மிடையே பலகாலம் பவனி வருவது உறுதி.

    ReplyDelete
  49. பக்கம் 51 ஒரு ஸ்பெஷல் பேனல், எடிட்டர் கலா ரசிகர்....

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யயோ...எனக்கு கலா என்ற யாரையுமே தெரியாதே ?!

      Delete
    2. அந்த சிலையோட பேரு கலாவா இருக்குமோ ..!? :-)

      Delete
  50. இதுவரை படித்ததில் :

    மேக் அண்ட் ஜாக் : ஐந்து சீரியஸ் கதைகளைப் படித்துவிட்டு - Sammy was a welcome and refreshing change. விலா நோகும் ரகம் இல்லை என்றாலும் நன்றாகவே சிரிக்க வைத்தது. They are worth another couple of slots in the upcoming seasons. இந்த ஆல்பம் நமக்குச் செய்தது என்னவெனில் மாதந்தோறும் கார்ட்டூன்கள் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. Both for the Editor and fans. ஆறு கார்ட்டூன்கள் மற்றும் ஒரு மறுபதிப்பு என்று ஏற்கனவே அணி வகுத்திருக்க, இன்னுமொரு ஐந்து கார்ட்டூன் புத்தகங்களுக்கு வழி செய்து விட முடியும் என்றே தோன்றுகிறது. May be as limited editions? எடிட்டர் சார் ?!

    --x--x--

    ஜெரேமியா பொறுத்தவரை:

    கணேஷ் குமார் கூறியது போல இரண்டாம் கதை சற்றே பரவாயில்லை. முதல் மற்றும் மூன்றாம் கதைகளில் அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்கள் (ஜாலக்காரன், மதகுரு) - never did full justice to their introductions. ஒரு apocalyptic அமெரிக்காவை எண்பதுகளின் சற்றே சக்தி வாய்ந்த ஐரோப்பிய பிராந்தியங்களின் ஒரு கதைசொல்லியின் வாயிலாக ரசிப்பதற்கு சிரமமாக உள்ளது. சித்திரங்களில் உள்ள மனித முகங்கள் ஒரே போன்றுள்ளது வேறு சலிக்கச் செய்கிறது. Better slotted as an optional edition அல்லது விலையில்லா அன்பளிப்பு இதழாய் இருந்தால் OK :-) :-) :-)

    விந்தை என்னவெனில் தற்போது அமெரிக்கா இன்னமும் வலுவாய் இருக்க ஐரோப்பா "தாம் .. தறிகிட" போட்டுக்கொண்டுள்ளது. ஓவர் டு Dr செல்வம் அபிராமி ... !!

    Now reading Johnny 2.0 !

    ReplyDelete
  51. நடனமாடும் கொரில்லாக்கள்-ஐந்தே பெயரே கரெக்டாக உள்ளது. என் கற்பனை
    1. நான் அவன்(ள்) இல்லை
    2. நளினமான மாஃபியா
    3. இவன் வேற மாதிரி
    4. உள்ளே ரவுடி, வெளியே லேடி
    5. குத்தாட்ட கும்பல்
    6. புலனாய்வு குத்தாட்டம்
    7. சல்சா பயங்கரம்
    8. துப்பறிய பெண்ணாகு
    9. அழகிய துப்பறியும் கதை
    10. கவர்ச்சிக்கு குறைவில்லை

    சும்மா வந்ததை எழுதினேன். உட்கார்ந்தால் நிறைய வரும்

    ReplyDelete
  52. ஜானி 2.0 :

    முதல் பத்து பக்கங்களை தாண்டும் வரை இதுதான் ரிப்போர்ட்டர் ஜானின்னே மனசு ஒத்துக்கவேயில்லை. அப்புறம் அதுவே பழகிப் போய் இவர்தான் ரிப்போர்ட்டர் ஜானின்னு மனசுல பதிஞ்சிடுச்சி.!

    கதையைப் பொறுத்தவரை ..வழக்கமான ஜானியின் இடியாப்பச் சிக்கலோ, எல்லோரையும் குற்றவாளியாக சந்தேகிக்கும்படியான கதைக்கருவோ 2.0வில் இல்லை.!
    ஆனாலும் கதையில் விறுவிறுப்புக்கோ சஸ்பென்ஸ்க்கோ பஞ்சமேயில்லை.!

    கமிஷ்னர் போர்ட்டன் மட்டுமே பழைய மாதிரி அப்படியே தெரிகிறார். அலுப்போடு அவர் பேசும் வசனங்கள் யாவும் சிரிக்கவைத்தன.!

    முத்தக் குற்றவாளியை கண்டறிய ஜானி மேற்கொள்ளும் வழிமுறை (எலே ஜானி ..வயிறு எரியுதுலே) அடடா..அடடா....!

    கொலைக்கான மோட்டிவ் நியாயமாக இருப்பதாக ஜானி நினைத்து அந்தப் பெண்ணை விசாரனையில் காட்டிக்கொடுக்காமல் பெண்போலிசை மாட்டிவிடுவது (அந்தம்மாவுக்கும் முத்தம் கொடுத்துதான்) நன்றாக இருந்தது.!
    காமெடியாகவே பேசி வந்தாலும் கமிஷ்னர் போர்ட்டன் க்ளைமாக்ஸில் தான் ஒரு சிறந்த போலிஸ் அதிகாரி என்பதை நிரூபிக்கிறார். ஜானிக்கே தெரியாமல் கொலைகாரியை வளைப்பது அருமை.!
    இடதுசாரி, வலதுசாரின்னு பெரிய விசயங்கள் பேசும் கதைதான் என்றாலும் எதையும் போட்டுக் குழப்பாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் ..சபாஷ்.!

    என்னைக் கேட்டால் ..(என்னுடைய கருத்தைக் கேட்டால் மட்டுமே) பழைய ஜானியைவிட புதிய ஜானி ஒருபடி மேலே இல்லை என்றே சொல்வேன்.!
    ஜானியின் ரெண்டு பாணிகளுமே வரும் என்றால் சந்தோசமே ..! ஏதாவது ஒன்றுதான் என்றால் என்னுடைய ஓட்டு பழைய பாணிக்கே.! ( புதியபாணியை குறைத்து சொல்லவில்லை..எனக்கு ஜானியின் பழையபாணி அவ்வளவு பிடித்திருக்கிறது என்ற அர்த்தம்)

    ஜானி 2.0 - மரண முத்தம்

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
  53. கீழ்காணும் என்னுடைய டவுட் ஜானி 2.0 வை படித்தவர்களுக்கானது... படிக்காதவர்கள் தொடரவேண்டாம்.!

    ஏறக்குறைய 300 மில்லிஆம்பியர் மின்சாரம் பாய்வதால் மரணம் ஏற்படுகிறது .. சரி.! அந்த மின்சாரம் ஷெரில் கைப்பையில் இருக்கும் டைனமோ மூலம் உருவாகி அவள் அணிந்திருக்கும் புரூச் வழியாக டார்கெட் உடலில் பாய்ச்சப்படுகிறது ...சரி..!
    மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் டார்க்கெட்டின் உதடுகளோடு உதடாக முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஷெரில் உடலில் மின்சாரம் பாயாதா? ஏன் கேட்கிறேன் என்றால் ஷெரிலின் தற்கொலையைப் பார்க்கும்போது டைனமோவை ஆன் செய்துவிட்டு தண்ணீரில் விழுவதன் மூலம் மின்சாரம் பாய்ந்தே ஷெரில் இறந்துபோகிறாள். .என்பதால் அவள் உடலும் மின்சாரத்தால் பாதிக்கப்படும் என்றே ஆகிறதல்லவா? அப்படியிருக்கையில் லிப்லாக்கில் இருக்கும் ஒருவர் உடலில் பாயும் மின்சாரம் மற்றவரையும் தாக்கத்தானே செய்யும்.. !? அப்படி பாயாமல் இருக்க தடுப்பு சாதனமோ வழிமுறையோ பயண்படுத்தப்பட்டு இருப்பதாக கதையில் காட்டப்பட்டதாகவும் தெரியவில்லையே ..!?
    அப்படி ஒரு சாதனம் சாத்தியமா?
    தெரிந்தவர்கள் விளக்கினால் சந்தோசமடைவேன். .!

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பார்க்கில் ஒன்லி பாட்டிமாஸ் ; பாரிஸின் பார்க்கில் பியூட்டிமாஸ் என்ற கடுப்பில் எழுப்பப்பட்ட கேள்வியாய்த் தெரிகிறதே ?!

      Delete
    2. சூட்சமத்தை கண்டூட்டிங்களே சார்..:)))

      Delete
  54. அவள் தடுப்பு சாதனம் அமைத்து கொண்டு தான் மற்றவர்களை கொல்கிறாள் ...


    என்பதை நாமாக புரிந்து கொள்ள வேண்டும்...( ஹீஹீ ...கிராபிக் நாவலுக்கு இப்படிதானே எனக்கு விளக்கம் சொன்னீங்க..)


    அவள் இறக்கும் பொழுது தனது முடிவை அவள் ஏற்கனவே தீர்மானித்து விட்டபடியால் தடுப்பு சாதனத்தை அணிந்திருக்க வில்லை...( போலீசாருக்கு தகவல் கொடுத்தது தான்தான் என்பதை ஜானியிடம் சொல்ஙதின் மூலம் அதனை அறியலாம்..நீரில் விழுந்த பிறகே அவள் மின்சாரத்தை பாய்ந்து கொள்கிறாள்...!


    ( வாவ்..செமட பரணீ ..நீயும் இன்னொரு பொருளாளருடா.....:-)

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி ஆர்ட்டின் சார்..:-)

      Delete
    2. இந்த டைனமோ கான்செப்ட் கொலைகள் எல்லாமே இயற்பியல் - மின்னியல் விதிகளுக்குட்பட்டு வருவது போல் தோன்றவில்லை கண்ணன்..

      ஒரு உண்மை சம்பவத்தினை ( அல்ஜீரிய பாலைவன அணுகுண்டு வெடிப்பு சோதனை) சுவாரஸ்யமாக கதாசிரியர் சொல்லமுயன்று இருப்பதால்
      பௌதீக விதிகளை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என அனுமானிக்கலாம்..

      ஷெரில் தோற்றத்தை பார்த்தால் எனக்கென்னவோ ஷெரிலின் வெறும் முத்தத்துக்கு எல்லாரும் மண்டையை போட்டுவிட்டார்கள் என கதாசிரியர் கதையை நகர்த்தியிருந்தாலே நம்பியிருப்பேன் ...:)

      திமிங்கலத்தை கொல்லும் கைப்பை டைனமோ..அதுவும் 1968-ல்...அதை தூக்கி கொண்டு பார்க் முழுதும் ஓடும் ஷெரில் ..நடக்கற விஷயமா என்ன?

      ஒரே பார்க்கில் அத்தனை கொலைகளும்..???

      ஒரு செனட்டர் பப்ளிக் பார்க்கில் உள்நோக்கத்தோடு ஒரு இளம்பெண்ணை சந்திப்பது சாத்தியமா என்ன?


      Delete
    3. ///ஷெரில் தோற்றத்தை பார்த்தால் எனக்கென்னவோ ஷெரிலின் வெறும் முத்தத்துக்கு எல்லாரும் மண்டையை போட்டுவிட்டார்கள் என கதாசிரியர் கதையை நகர்த்தியிருந்தாலே நம்பியிருப்பேன் ...:)///

      செனா அனா ...)))))

      ///ஒரே பார்க்கில் அத்தனை கொலைகளும்..???

      ஒரு செனட்டர் பப்ளிக் பார்க்கில் உள்நோக்கத்தோடு ஒரு இளம்பெண்ணை சந்திப்பது சாத்தியமா என்ன?///

      எனக்கும் அது தோன்றியது செனா.!
      நம்ம ஊரா இருந்திருந்தா பொது இடத்தில் சந்திக்க வாய்ப்பே இல்லை. ப்ரான்ஸ்தானே .. என சமாதானப்படுத்திக் கொண்டேன்.!

      Delete
  55. 300 மில்லி ஆம்பியர் அளவிற்கு மின்சாரம், சுமார் 3 நொடிகளில் மரணத்தை தந்து விடும்.
    ஷெரில் முத்தமிடும் போது மின்சாரத்தை பாய்ச்சி இருந்தால்,மரணம் அவளையும் தழுவியே இருக்கும்.
    அவளின் அந்த முத்தம்,அவள் 'புருச்' அவர்களை தொடும் அளவிற்கு நெருக்கத்தை உண்டு செய்யவே.
    என் அனுமானம், அவள் இதழ்களை விடுவித்த பிறகுதான் மின்சாரத்தை பாய்ச்சி அவர்களை கொல்கிறாள்.
    அது கடும் குளிர் காலம் என்பதால், தோலினாலான கையுறை அவளை மின் அதிர்விலிருந்து காத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஷெரிலின் modus operandi வசீகரமானது என்ற அளவில் ஒத்து கொள்ளலாம் ..

      ஆனால் இம்ப்ராக்டிக்கல் என்றே தோன்றுகிறது..

      ட்ரூ லெதர் ஒரு இன்சுலேட்டர்தான்..

      கதையில் ஷெரில் கையுறை அணிந்து வந்திருப்பதாக எந்த ஒரு கொலை சம்பவத்தின் போதும் காட்டப்படவில்லை..

      தவிர கொலை செய்யப்படும் நபர்களின் உடலோடு இவ்வளவு ஒட்டி மின்சாரத்தை பாய்ச்சினால் உடல் முழுக்க இன்சுலேசன் டேப் ஏதேனும் ஒட்டி வந்திருந்தால் அது பற்றி யோசிக்கலாம்..எகெய்ன் இம்ப்ராக்டிக்கல்..

      குளிர் காலத்தில் தோலுறை கூட dampen ஆகி இருப்பின் அதுவும் மின்கடத்தியாக மாறும்..poor conductor maybe but enough to knock out..

      Delete
    2. நீங்கள் முன்பே கூறியது போல, தொடர்ந்து ஒரே இடத்தில்,ஒரே முறையில், பெருந்தலைகளை கொல்லுவது, அதுவும் ஒரே மாதிரியான உடையில் என்பதே ஒப்புக் கொள்வது கடினம்.
      பல 'ஒருவேளை' களும்,சில யூகங்களும் கொண்டே, கதையை நம்மளவிற்கு பகுத்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது...

      Delete
    3. ///அவளின் அந்த முத்தம்,அவள் 'புருச்' அவர்களை தொடும் அளவிற்கு நெருக்கத்தை உண்டு செய்யவே.
      என் அனுமானம், அவள் இதழ்களை விடுவித்த பிறகுதான் மின்சாரத்தை பாய்ச்சி அவர்களை கொல்கிறாள்.
      அது கடும் குளிர் காலம் என்பதால், தோலினாலான கையுறை அவளை மின் அதிர்விலிருந்து காத்திருக்கும்.///

      Navaneetha krishnan @

      நல்ல பாய்ண்ட் சார்.!

      ஆனால் ..
      முதலிரண்டு முத்தங்களின் போது ஷெரில் தன் லிப்ஸை விலக்கிய பிறகே மின்னதிர்ச்சி ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.! ஆனால் கடைசி கிஸ்ஸில் அந்த ராணுவ கர்னலுடன் ஷெரில் லிப்லாக்கில் இருக்கும்போதே மின் அதிர்ச்சி ஏற்படுவது போல காட்டப்பட்டுள்ளது.! எனவே அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.!

      மேலும் ஷெரில் கையுறை ஏதும் அணிந்திருப்பதாகவும் தெரியவில்லை சார்.!

      Delete
  56. இறுதியில் ஷெரில் நீரில் விழுவதால், அவள் தோலாடை நீரில் அமிழ, நீர் மின் கடத்தியாக செயல் புரிந்து மரணம் அடைந்தாள்.

    ReplyDelete
  57. ஜெரெமயா- கதை-1,
    மிகவும் பிடித்திருந்தது... ஒரு மினி sci-fi thriller.
    Post apocalyptic world - ஒரு பெரும் அளவிற்கு பிறகான காலகட்டம்,
    அணு ஆயுத பிரயோகத்தின் பின்னேயான கதை.
    இன்டியானா- அணுக்கதிர் பாதிப்புக்குள்ளாகி மரபணு மாற்றத்தால், அதிக உடல் வலுவும், வேகமாக ஓடும் ஆற்றலும், கண்களிலிருந்து அகச்சிவப்பு கதிர் வீசிடும் ஆற்றலும் கொண்ட ஒரு பரிதாப ஜீவன்.
    சாதாரண வெளிச்சம் தாங்கிடவும் முடியாத உயிர்.
    X- men mutant போல.
    அந்த உலகில் விசித்திரங்களுக்கு ஆயுள் மிகக் குறைவு, ஆகவே தன் பாதுகாப்பிற்காக ஹோப் உ(டன்)பட்டு அவனுக்காய் ஊழியம் புரிந்து, மரணமடைகிறன்(ள்).

    ஜானி கதைகளையும், மார்ட்டின் கதைகளையும் பலமுறை படிக்க வேண்டும், இந்த கதையையும்.
    Read again thinking it as a sci-fi thriller, you guys will love it

    ReplyDelete
  58. Jeremiah முதல் கதை படித்துவிட்டேன் . அருமை. Post acopalyptic america வில் நடக்கும் கதை. இந்த genre வும் ரசிக்க வைக்கும் என்பதை Jeremiah நிரூபிக்கிறது.
    Jeremiah கதைகள் தொடர வேண்டும்.
    இந்த கதைகளை படிக்கும் போது " கதை"
    என்று படிக்காமல் frame by frame ஆக சித்திர அவதானிப்பு அவசியம். மேலும் இதனால் கதையை படிக்கிறோம் என்பதைவிட போரினால் அழிந்த நாட்டில் எஞ்சியுள்ள மனிதர்கள் , அவர்களில் ஒருவனான Jeremiah வும் அவனுடைய தோழனான கர்டியும் எதிர்கொள்ளும் இன்னல்.களே இத்தொடருக்கு அடிப்படை.என்பது என் கருத்து

    ReplyDelete
  59. ஜெரெமயா-கதை-2
    There is nothing called free lunch.
    வயோதிகத்தை விரட்டும் மருந்தை விரட்டும் வசதி வாய்ந்தவர்கள்.
    அழித்து எழுதப்படும் புது உலகில், ஆதரவு அதிகமற்ற யுவன,யுவதிகளிடமிருந்து இளமையை திருடும் திறமையான மருத்துவ குழு.
    அவர்களின் தேவைக்கு இளவல்களை கொணர்ந்து தரும் வியாபாரிகள்.
    நட்புக்காக நம் ஜெர் & கார்...
    இத்தனையும் ஒன்றுமில்லாமல் செய்யும் பெருந்திணை காதல் ஒன்று.
    வாவ்...

    ReplyDelete
  60. Dr. Hariharan சார் மட்டும் தான் டைட்டில் சொல்லுவாரா ? , நாங்களும் சொல்லுவம்ல என்று வீம்புக்கு ஏடாகூடமாக உட்கார்ந்து யோசித்ததில் ......

    1 . MR மிஸ் சிக்காகோ

    2 . அவ்வை GUNமுகி

    3 . மேடையில் ஒரு womenமதன்

    4 . கேடீ'ஸ் க்ளப்

    5 . விக்'கி பீதியா

    6 . GAYயுமானவன்

    7 . பாவி'யர் சங்கம்

    8 . ஆணழகி

    9 . ஒன்பதில் ஒரு ஏழரை

    10 . பத்தினி ஆண்டீர்

    படித்து விட்டு அடியேனை உதைக்க ஆசைப்படும் அன்பர்கள் ஆகஸ்ட் வரை பொருத்தருளவும் ;)))

    ReplyDelete
    Replies
    1. அதுவரைக்கும் பொறுக்கமுடியாது சாரே....ந்தா கெளம்பிட்டேன்..!

      Delete
  61. இன்றைய பயணம் டெக்ஸ் மற்றும் கார்சனோடு இணைந்து வைகிங் தீவிற்கு..!

    சார் ..டெக்ஸ் சார்..! கலர்ல சார்..!

    ReplyDelete