Thursday, February 28, 2019

சுடச் சுட ஒரு மார்ச் !!

நண்பர்களே,

வணக்கம்."சுடச் சுட"....."சூட்டோடு சூடாக.." என்றெல்லாம் பேசுவது ; எழுதுவது ஜகஜம் ! ஆனால் அதை நடைமுறையில் ; மெய்யாலுமே பார்க்க உங்களுக்கோர் வாய்ப்பு !! நேற்றைக்கு அச்சாகிய டெக்ஸ் வில்லரும், கிராபிக் நாவலும் - நாளை இதர புக்குகளோடு உங்களை எட்டிப்பிடிக்கும் வேளையினில் அவற்றை சற்றே ஜாக்கிரதையாய்த் திறந்து நுகர்ந்தீர்களெனில் ஆப்செட் மசியின் வெப்பமும், பெட்ரோல் நெடியும் ஜிவ்வென்று தூக்கியடிக்கத் தவறாது ! என்ன செய்தோம் - எப்படிச் செய்தோமென்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் 4 புக்குகளோடு உங்களது கொரியர்கள் சகலமும் இன்றைக்குக் கிளம்பிவிட்டன இங்கிருந்து !! 
http://www.lion-muthucomics.com/home/383-march-pack-2019.html
ஞாயிறு துவங்கிய எடிட்டிங் கூத்துக்கள் - திங்களும், செவ்வாயும் சர்க்கஸ் கூடாரமாய் மாற்றிவிட்டது நமது DTP அறையை !! டெக்ஸ் வில்லரை அரக்கப் பரக்க முடித்த போதே ஞாயிறு மாலையாகிப் போயிருந்தது !! அப்புறமாய் "முடிவிலா மூடுபனி" கிராபிக் நாவலைக் கையிலெடுத்தால் - 'கெக்கெபிக்கே' என்று சிரிக்கத் தான் தோன்றியது - சிலபல காரணங்களின் பொருட்டு !! இது 2 மாதங்களுக்கு முன்பாய் கருணையானந்தம் அவர்கள் எழுதிய கதை என்பதால் - இந்த ஞாயிறு மாலை வரையிலும் அதனுள் நான் நுழைந்திருக்கவேயில்லை !! பக்கங்களை புரட்டப் புரட்ட - அந்த black & white கி.நா.பாணி செமையாய் வசீகரிக்கச் செய்தது ! ஆனால் வரிகளில் இன்னும் வீரியம் கூடுதலாயிருந்தால் கதையின் அந்த melancholy மூடுக்கு பிரமாதமாய் ஒத்துப் போகுமே என்று தோன்றியது !! So ஸ்கிரிப்டில் ஏகமாய்  கைவைக்க வேண்டிவருமென்பது பிப்ரவரி 24-ன் ஞானோதயமாய் துளிர்க்கும் வரையிலும், ஏதேதோ காரணங்களின் பொருட்டு மாடு மேய்த்துத் திரிந்த எனது  மடமையை எண்ணிச் சிரிக்கத் தோன்றியது ! சிரிப்பின் காரணம் # 2 - "இந்தக் கதையின் பொருட்டும் இங்கொரு அலசல் காத்துள்ளது டோய்ய் !!" என்ற புரிதலின் பலன் !! "தோர்கலின்-சிகரங்களின் சாம்ராட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும், வெகு சுலபமாய்த் தெரியும் அதே நொடியில் - செம complex ஆகக் கதாசிரியர் எதைச் சொல்ல வருகிறாரோ ? என்று நாம் நிச்சயமாய் அபிப்பிராயங்களை இந்தக்கதையின் பொருட்டு பரிமாறிக் கொள்ளப்போவது உறுதி !! சிரிப்பின் காரணம் # 3 - பெரும்புலவரின் குறள்வரிகள் !! காத்திருந்த 25 & 26 தேதிகளில் நமது இதர தொழில்களின் பொருட்டு வேறு பணிகளுமே சற்றே மிரட்டலாய்க் காத்திருக்க - இங்கேயோ ஒரு முழுநீள கிராபிக் நாவலை ஏகமாய் மாற்றியெழுதி ; அதனை மறுக்கா எடிட் செய்யும் பொறுப்பு தாட்டியமாய் நின்று கொண்டிருந்தது !! வேறென்ன செய்வது - இடுக்கண் வரும் சமயம் சிரிப்பதைத் தாண்டி ??! ஞாயிறு & திங்கள் சாமக்கூத்துக்களை வழக்கத்துக்கும் ஜாஸ்தியாக்கிய கையோடு - நமது DTP அணியின் பெண்களையும் ஆபீசில் லேட்டாய் அமரச் செய்து அடித்துப் பிடித்து புதனன்று அச்சிட்டோம் !! And வியாழன் காலையில் despatch !! 

As always - நமது டீம் 'வேலையென்று வந்துவிட்டால் விஸ்வரூபம்" எடுப்பதை இம்முறையும் பார்க்க முடிந்தாலும், இங்கே நிறைய credit இந்தக் கதைக்கே சாரும் என்பேன் !! டெக்ஸ் வில்லரின் எடிட்டிங் பொதுவாய் பெரிய குழப்படிகளில்லா பணியே ; ஆனால் அங்கேயே ஒருநேரத்துக்கு 20 பக்கங்களைத் தாண்டுவதற்குள் பிட்டம் பிதுங்கிப் போய்விடுவதுண்டு !! 260 பக்கங்களை சுமார் 10 நாட்களாய் நீட்டித்து வந்தேன் ! ஆனால் இங்கேயோ விரவிக்கிடக்கும் ஒருவித சோகமான வசீகரம் - அலுப்புத்தட்டாது பணியாற்ற அனுமதித்தது !! ஞாயிறு சாமத்தில் 50 பக்கங்களையும், திங்களின் இரவினில் பாக்கி 60 பக்கங்களையும் மாற்றியெழுதி முடிக்க முடிந்தது - என்னைப் பொறுத்தவரையிலும் nothing short of a medical miracle தான் - because எடிட்டிங் வேலைகள் என்று வரும் போது நானொரு மேல்வளையா கோவேறு கழுதையாகிடுவது வாடிக்கை ! அப்படியொரு மெதுவண்டியான எனக்கே இந்த வேகம் என்றால் - எல்லாப் புகழும் அந்தக் கதாசிரியருக்கே !! கதையின் தரம் பற்றிய அறைகூவலாகவோ  - அதற்கான பில்டப்பாகவோ இதனை நான் சொல்லவில்லை ; ஆனால் ஏதோவொரு காந்தமுள்ளதாய் எனக்குத் தோன்றியது "முடிவிலா மூடுபனி " இதழினில் !! And here is the first look of the (original ) cover :


ஒரிஜினல் அட்டைப்படம் - துளிகூட மாற்றங்களின்றி ; and அந்தத் தலைப்பு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !! மாற்றியெழுதிடும் பணி தானென்றாலும், கடைசி நிமிடத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டே செய்ய வேண்டிய வேலையென்றாகிப் போனாலும் - ரொம்பவே ரசித்தேன் இங்கே பேனா பிடித்ததை !! மென்மையாய் ஓடிய கதை ; yet ஏதோவொரு இன்னும்சொல்ல இயலா air of mystery about it !! உங்களுக்கும் அவ்விதமே தோன்றினால் சூப்பர் ; மாறாக - "ச்சை...எனக்கு இந்த கி.நா.வே புடிக்காது !!" என்று முகம் சுளித்தாலும் புரிந்து கொள்வேன் !!

அப்புறம் "தொடர்ச்சியாய் இந்தாண்டின் மூன்று மாதங்களுமே கடைசி நிமிடம் வரை இழுத்துக்கோ-பறிச்சுக்கோ என்று கூத்தடித்து வருகிறோமே -  நம்மள்க்கு லைட்டா வயசாகிட்டு வருதோ ? ; அப்டிக்கா -இப்டிக்கா தெரியுறதுலாம் பித்த நரையில்லையோ ?  " என்ற கேள்வி எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! ஆனால் எது எப்படியோ - நூற்றி எழுபத்தி எட்டாவது தபாவாய் விஸ்வரூபமெடுத்துக் காட்டியிருக்கும் எனது டீமுக்கு ஒரு thumbsup என்றபடிக்குக் கிளம்புகிறேன் - ஏப்ரலின் லக்கி லூக் & ஜாலி ஜம்பர் டீமோடு மிஸிஸிப்பி நதியினில் சவாரி செய்திட !! Bye all ; see you around !!

பி.கு : "Onomatopoeia" பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வோமா guys - தொடரும் நாட்களில் பயன்படக்கூடும் !! 

Online listing available now !!

143 comments:

 1. யப்பா..!

  என்னவொரு டிசைனிங்..!என்னவொரு கலரிங்..!என்னவொரு குவாலிடிங்..!

  வைத்த கண்ணை மாற்றுவது எளிதாகவே இல்லை..!முன்னட்டை ஒரு கதை சொல்ல ,பின்னட்டையோ வேறுகதை சொல்ல, முதல் பக்க பேனலோ ஆயிரம் கதை சொல்கிறது..!

  கிராபிக் நாவலே நீ வாழ்க..!

  ReplyDelete
 2. ய்ய்ய்ய்ய்யாயாயாயாயாயா

  ReplyDelete
 3. பத்துக்குள்ளே வந்தாச்சி.. தாங்க்யூ வாட்ஸ் அப் மகேந்திரன்...

  ReplyDelete
 4. "முடிவிலா மூடுபனி" அட்டைப்படமே கதை சொல்கிறது. சூப்பர் !

  ReplyDelete
  Replies
  1. உங்க மண்ணில் அரங்கேறும் கதை சார் !

   Delete
 5. இரவு வணக்கம் 🙏

  ReplyDelete
 6. வந்தாச்சி.🙏🙏🙏
  .

  ReplyDelete
 7. // நேற்றைக்கு அச்சாகிய டெக்ஸ் வில்லரும், கிராபிக் நாவலும் - நாளை இதர புக்குகளோடு உங்களை எட்டிப்பிடிக்கும் வேளையினில் அவற்றை சற்றே ஜாக்கிரதையாய்த் திறந்து நுகர்ந்தீர்களெனில் ஆப்செட் மசியின் வெப்பமும், பெட்ரோல் நெடியும் ஜிவ்வென்று தூக்கியடிக்கத் தவறாது ! //

  எதிர்பார்க்கலை இல்ல,இப்படி சுடச்சுட மசியோட கமகமன்னு புத்தக வாசத்தோட வருவேன்னு எதிர்பார்க்கலை இல்ல,மோந்து பாத்தா ஒன்றை டன் வாசம்டா.........

  ReplyDelete
 8. மீண்டும் பத்துக்குள்ளே வந்தாச்சி.

  ReplyDelete
 9. ஜம்போ 2nd சீசன் எப்போ ஆரம்பம்

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ சீசன் 1 நிறைவுற வேண்டுமல்லவா அதற்கு ?

   Delete
 10. // நமது டீம் 'வேலையென்று வந்துவிட்டால் விஸ்வரூபம்" எடுப்பதை இம்முறையும் பார்க்க முடிந்தாலும்,//
  நமது அலுவலகப் பணியாளர்களின் உழைப்புக்கு மீண்டும்,மீண்டும் வாழ்த்துகள் சார்..

  ReplyDelete
 11. மிக மிக மிக மகிழ்ச்சி சார்...

  தங்கள் அலுவலகத்தினர் அனைவருக்கும் பலத்த பாரட்டுகள் சார்...


  இமைகள் மிகவும் களைப்படைந்து போவது போல் காணப்படுவதால் நாளை இதழ்களை ரசித்து பிறகு கம்மிங் சார்..:-)

  ReplyDelete
  Replies
  1. இமைக்கா நொடிகள் இப்போதிருந்தே ஆரம்பம்..!

   Delete
 12. ஆன மாவாட்டப் போவியா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ....ஓ நோ மாட்ட போய்யா...

   Delete
  2. ஓணான் முட்டை பொய்யா..

   Delete
  3. "எடிட்டர் எடிட்டிங் "செஞ்சதால மார்ச் புக் கிடைச்சது.
   டெக்ஸ் வில்லர் " கும் " கும்" என்று குத்தினார்.
   கார்சன் "டுமீல் "டுமீல்" என்று சுட்டுத் தள்ளினார்.
   ஈ வி "மியாவ் " மியாவ்" என்று கத்தினார்.

   லாரன்ஸ் டேவிட் இருவரும் அவனை " "பளார் "பொளேர்" என்று அறைந்தனர்.

   கேப்டன் டைகரின் டைனமைட் பாம்"பூம்" பூம்"- என்று பயங்கர சத்தத்துடன் காதை பிளந்தது.

   Delete
  4. KOK ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹா என்று சிரித்தார்.

   Delete
  5. தலீவர் "ப்பாஆஆஆவ்வ்வ்" என்று பதுங்கு குழிக்குள் ஏப்பம் விட்டாரு.

   Delete
  6. சிவகாசி டீமுக்கு " பட் பட்" என்று கைகளை தட்டி வாழ்த்து தெரிவிக்கிறோம்.

   Delete
  7. எல்லாரும் "பர பர" வென்று கைகளை தேச்சுக்கங்கப்பா...

   Delete
  8. மிச்ச மாவையெல்லாம் KOK மாங்கு மாங்கு ன்னு ஆட்டுவாரு.

   Delete
  9. அதாகப்பட்டது - சொல் செயல் ஓசை ஒரே மாதிரி ஒரு மாதிரி அர்த்தம் தரணுமாக்கும்.
   அதைத்தான் ஆன மாவாட்டப் போவியா ன்னு நம்ப எடிட்டரு சொன்னாரு.

   Delete
  10. ஙே....ன்னு முழிக்க வைக்கும் ஜே...:-)

   Delete
 13. அட்டைப் படத்தில் ஒரு சுவாரசியம் கவனித்தீர்களா சார் ? ரேஞ்சரும், டிடெக்டிவும் அங்கிட்டு இங்கிட்டு பாக்கறாங்க. தானாக்காரரும் , ஒற்றரும் நம்மள பாக்கறாங்க ; )

  ReplyDelete
  Replies
  1. இது வேறயா ?!! பாருடா !!

   Delete
 14. பச்சக்கலரு ஜட்டியோட படுத்திட்டிருக்கிற பாப்பாவோட பின்பக்கத்த நம்ம பாண்ட் சுட்டுப்புட்டாரோ...

  துப்பாக்கியிலருந்து புகை சமிக்ஞையா கசியுதே...

  ReplyDelete
 15. 'முடிவிலா மூடுபனி' அட்டைப்படம் ஒரு டிபிகல் கி.நா'வுக்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு, கதையைப் படிக்கும் ஆர்வத்தை ஏகத்துக்கும் ஏற்றிவிடுகிறது!

  என்னதான் நேர்கோட்டுக் கதைகள் நூற்றுக்கணக்கில் படித்தாலும், இதைப் போன்ற சைடுகோட்டு கி.நா'க்கள் மனதுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சுகமே தனீ தான்!

  வாழ்க கி.நா! வளர்க தானா!
  இனி கி.நா இல்லாமப் போனா
  மனம் உடைஞ்சிடும் வீணா!
  இப்படிக்கி - ஈனாவினா

  ReplyDelete
  Replies
  1. கி.நா...கி.நா..என்றபடிக்கே பதுங்கு குழிக்குள்ளாற போனா..

   துண்டை காணோம்..துணிய காணோம்னு ஒடுதொரு உருவம் புள்ளி மானா..!!

   "ஓட்டமெடுக்கிற அந்த ஜிம் பாடி - உசைன் போல்ட்டுக்குப் பேரனா ?"

   அட..இல்லீங்கோ ; இது தோர்கலையே ஒத்தைக் கையாலே நிறுத்தின நம்ம சங்கத்து சிங்கம் தானா (ம்) !!

   Delete
  2. :-))))


   கவித நல்லாருக்கு சார்...அட்டை படமும்...உட்பக்க சித்திரங்களும் அசல் கிராபிக் நாவல் இது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது..உங்கள் கவிதை பொய்யாகுமா...மெய்யாகுமா என இந்த முறை நானே வெயிட்டிங்..இதழ் கைக்கு வந்தவுடன் இந்த முறை முதல் இதழாக படிப்பது " முடிவில்லா மூடுபனியே ".

   Delete
  3. 20 லாயல்ட்டி பாயிண்ட்டுக்கு எடிட்டரின் கவிதைத் தொகுப்பு அடஙகிய புத்தகமொன்னு கிடைச்சா செமயா இருக்கும்னு ஆச வருது! சந்தாவுல இல்லாதவங்களும் காசு கொடுத்து வாங்கிக்கிடற மாதிரி ஏற்பாடு பண்ணணும்!

   ஈரோடு விழாவுல எடிட்டர் அந்தக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் படிக்க, பக்கத்து ஹாலிலேயே நம் செனாஅனாவின் தலைமையிலான ஒரு சிறப்பு மருத்துவர் குழு தயாராயிருக்க - விழா முடிஞ்சதுமே 'தலைசுற்றல் வாந்திக்கான சிறப்பு மருத்துவ முகாம்' - அழகழகான நர்சுகள் சகிதம்!!

   ப்பா!! எனக்கு இப்பவே கிறுகிறுன்றது!

   Delete
  4. /// பக்கத்து ஹாலிலேயே நம் செனாஅனாவின் தலைமையிலான ஒரு சிறப்பு மருத்துவர் குழு தயாராயிருக்க - விழா முடிஞ்சதுமே 'தலைசுற்றல் வாந்திக்கான சிறப்பு மருத்துவ முகாம்' - அழகழகான நர்சுகள் சகிதம்!!///

   நான் முன்னாடி நாளே போய் அந்த 'பக்கத்து ஹாலிலேயே' தங்கிக்கிறேனே..!?

   செனா அனாவுக்கு உதவி எதுவும் தேவைப்படாதுன்னு தெரியும். ! ஆனா ..ஆனா ...அந்த நர்ஸுங்க பாவம் இல்லையா ..அதனால கூடமாட ஒத்தாசை பண்ணலாமேன்னுதான் ...!:-)

   Delete
  5. ஆண்டவா...நான் எந்த ரூமுக்கு போறதுன்னு தெரிலியே..

   :-(

   Delete
  6. ஈரோடு பரணி : வழக்கம்போல நாம ரெண்டு பெரும் ஒரே முறை படிக்கிறோம் .. புரிஞ்சுகிறோம் .. நமக்கு புரிவது தான் கதை .. ஓகே-வா ?! அப்புறம் Tex ஒரு 2-3 தபா படிச்சுக்கலாம் :-)

   Delete
  7. எடிட்டர் இங்கே பிரயோகப்படுத்திய சில சொற்றொடர்களைக் தொகுத்தால் we have a super hit, ஈரோடு விஜய் :-) உதாரணம் : "புளிய மரத்தடியில் வடை சுட்டு விற்பேன் தவிர (நமது கலாச்சாரத்துக்கு பொருத்தமில்லா கதைகளை போட்டு) வியாபாரம் செய்ய மாட்டேன்" ;-) ஹி ஹி !!

   Delete
  8. ஹிஹி! தலைப்புக்கூட 'என் புளியமரத்தில் கல்லெறிந்தவர்கள்' அப்படீன்னே வச்சுடலாம்! :)

   Delete
  9. ஈரோடு பரணி :

   #####

   ராகவன் சார்...செயலரும் நானும் ஒண்ணுமண்ணு தான்...அதுக்காக அவரு ஊரை எனக்கு " தாரை " வாக்குறது நல்லதா படல..அப்புறம் சங்கத்துல சலசலப்பு வந்துரும்..:-)

   ******

   ரெண்டு பெரும் ஒரே முறை படிக்கிறோம் .. புரிஞ்சுகிறோம் .. நமக்கு புரிவது தான் கதை .. ஓகே-வா ?! அப்புறம் Tex ஒரு 2-3 தபா படிச்சுக்கலாம் :-)

   #####₹


   இது டீல் சார்....நம்ம லெவலுக்கு சிகரம் எல்லாம் கடுகு மாதிரி...பனி என்ன பனி...:-)

   Delete
 16. இரவுக் கழுகுகளுக்கு இரவு வணக்கங்கள்!

  ReplyDelete
 17. Dear Edi, looking forward for the sweet. Kudos to to your team to get the work done in 28 days.

  Graphic Novel would be a sure hit going by the previous titles from Italian genre, which fared well with our readers. Hope to get then before Saturday, to chance a complete read.

  ReplyDelete
 18. புத்தகங்கள் கிளம்பி விட்டன என்ற தகவல் மட்டும் இல்லாமல் க்ராபிக்ஸ் நாவல் பற்றிய டீசர் என ஒரு அடடா பதிவு. சூப்பர்.

  ReplyDelete
 19. இன்று "பகல் விடுமுறை " என்பதால் கொரியர் ஆபிசர் மறக்காமல் அழைத்தால் இந்த நாள் இனிய நாளாக மாறிவிடும்...

  ReplyDelete
  Replies
  1. பகல் விடுமுறை -> இன்றைக்கு night shift ஆ?

   Delete
  2. மாசத்துல ஏதாவது ஒரு்நாளோ இரண்டு நாளோ இரவு அலுவலகத்திலியே தங்கும் சூழல் ஏற்படும் பரணி சார்..நேற்று இரவு அலுவலகத்தில் தங்கி விட்டு இப்பொழுது இல்லம் நோக்கி பயணம்...:-)

   Delete
 20. Editor ஐயா இந்த பதிவுக்காக தான் காத்து இருந்தேன். புத்தகங்கள் வர போகிறதே இன்னும் கிராஃபிக் நாவல் பற்றி நீங்கள் build up கொடுக்கவில்லயே என்று நினைத்தேன். சரியாக பதில் கொடுத்து இருக்கும் தங்களுக்கு நன்றி. மார்ச் will better both Feb and Jan ?

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. புத்தகங்கள் கிடைத்த நண்பர்கள் அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்கள் எவையென சொல்ல முடியுமா ? எனது அனுமானம்

  1. கோடை மலர் (ட்யுராங்கோ)
  2. மினி டெக்ஸ் (சந்தாதாரர்களுக்கு) மூன்று மாதங்களுக்கு ஒன்று என ஆசிரியர் அறிவித்தது)
  3. பாரிஸில் ஒரு கௌபாய் - (லக்கி லூக்)
  4. ஒரு தங்க தடம் (ரிங்கோ )

  ReplyDelete
  Replies
  1. பரணி சார்...அடுத்த மாத இதழ்கள்..

   குளிர்கால குற்றங்கள் ..அறிமுகம் ஜானதன் கார்ட்லேண்ட்..

   பரலோகத்திற்கொரு படகு...லக்கி லூக்..

   மரண வைரங்கள் ...கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்பு..

   ஜம்போ காமிக்ஸ்..காலவேட்டையர்..

   Delete
  2. நன்றி தாரை பரணி

   Delete
  3. மினி கலர் டெக்ஸ்?

   Delete
  4. நோ....அறிவிப்பு...:-)

   Delete
 23. அனைத்து புத்தக கடைகளிலும் இதே வேகத்தில் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் Sir,

  ReplyDelete
 24. விஜயன் சார், கென்யா இதழ் ஜம்போ சீசன் - 2விலும் இடம் பெறவில்லை. ரெகுலர் சந்தாவான A+B+C+D+E விலும் இடம் பெறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு கென்யா பற்றி நடந்த தேர்தல் முடிவில் இந்த ஆண்டு நாங்கள் அவற்றை தரிசிக்க ஆவண செய்வதாக சொன்னதாக ஞாபகம்!

  கென்யா இந்த ஆண்டு வர உள்ள ஒரே வழி ஈரோடு புத்தக திருவிழாவின் BOOK FAIR SPECIAL. கென்யாவை ஈரோடு புத்தக திருவிழாவின் போது கண்டிப்பாக வெளி இட வேண்டும்!
  ஈரோடு புத்தக திருவிழாவின் BOOK FAIR SPECIAL எனது எதிர்பார்ப்பு
  1. கென்யா
  2. கார்ட்டூன் ஸ்பெசல்
  3. டெக்ஸ் 700 இதழுக்கு மௌரோ போசெல்லியின் கதைக்கு ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்டிய "பாண்நீ புதையல்"

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் 700க்கு எனது ஆதரவு.

   Delete
  2. அப்போ வாக்கெடுப்பில் முதல் இடம் பிடித்த American psycho thrillarku வாய்ப்பு இல்லையா?

   Delete
 25. மகிழ்ச்சி சார்... காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 26. பார்சல் வந்துருச்சுங்கோஓஓஓஓஓ.....!!!

  ReplyDelete
 27. கொரியர் ஆபீஸுக்கு நேரில் போய் கேட்டுட்டேன் - புத்தகங்கள் வரலையாம்!

  *** தன் தீவிர பக்தர்களை ஏமாற்றிய ஆத்தா! சேலத்தில் பக்தர்கள் அதிர்ச்சி!! ***

  ReplyDelete
  Replies
  1. குழ் ஊத்துவேன் என்று சொல்லி ஆத்தாவை தீவிரமாக ஏமாற்றியவர்களை ஏமாற்றிய ஆத்தா என்பது சரியாக இருக்கும் 😁

   Delete
  2. ஆத்தா நான் பாஸாயிட்டேன்...:-)

   Delete
 28. இம்மாத இதழ்களை ரசித்து கொண்டு இருக்கிறேன் பார்வையிலேயே...


  நிழலும் நிஜமும் ...தளத்தில் பார்த்ததை விட புத்தகத்தை நேரில் பார்க்கும் பொழுது தான் அதன் ஸ்டைலிஷ் புரிபடுகிறது ...செமயா இருக்கு ...பின் அட்டைப்படமோ இன்னும் செம மாஸாக மின்னுகிறது.பக்கங்களை புரட்டி பார்க்கும் பொழுதே புரிந்து விடுகிறது இது ஒரு ஹை டெக் சாகஸமே...இன்னும் ஒரு செமயான குஷி...இந்த முறை அமைதியான ஆக்‌ஷன் அல்ல...5.1 அதிரடி ஆக்‌ஷன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி .இம்முறை படிக்கும் பொழுது ஆக்‌ஷனில் உண்மையாக ஒன்றி போகலாம்...வெரி ஹேப்பி சார்...

  விற்பனைக்கு ஒரு பேய்..அட்டைபடத்திற்கும் தெளிவான படங்களுக்கும்..அதே பாராட்டுகள்...ஏற்கனவே பல காலங்களுக்கு முன் படித்த கதை தான் .ஆனால் புத்தகத்தை பார்த்த பின்னர் சமீபத்தில் படித்து இருந்தாலும் இப்பொழுது படிக்காமல் இருக்க முடியாது.அழகு.

  பாலைவனத்தில் ஒரு கப்பல்...
  சமீபத்தில் பார்த்த அட்டைப்படம் போலவே இருந்தாலும் இந்த பிண்ணனிகள்..,மற்றும் டெக்ஸ்ன் ஒரிஜினலான கம்பீர தோற்றம் அசத்தலாக உள்ளது..பின் அட்டை வித்தியாசமான பாணியில் இன்னும் அழகு.இதழை புரட்டி பார்க்கும் பொழுதே பழைய டெக்ஸ ,கார்ஸன் தோற்றமும்...முழுநீள பக்கங்களும் ஒரு அட்டகாசமான கெளபாய் பயணத்திற்கு அழைத்து செல்ல காத்திருப்பதை அறிய முடிகிறது...டெக்ஸ் இதழை பொறுத்தவரை இது போல் கொஞ்சம் பருமனாக இதழ் இருந்தாலே அதிலியே ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது.இம்முறையும் அதே..

  முடிவிலா மூடுபனி லயன் கிராபிக் நாவல் என்ற இதழுக்கு ஏற்ப அட்டைப்படம்,உட்பக்க சித்திரங்கள்..கைக்கு அடக்கமான அளவு போல்...பக்கங்களும் ...ஆனால் கதை கனமாக இருக்கும் என தோன்றுகிறது ...இது உண்மையா என அறிய இம்முறை ஆரம்ப வாசிப்பே இதுதான்....

  இனி ....படித்து விட்டு...

  ReplyDelete
  Replies
  1. உங்ககிட்டேர்ந்து 'முடிவிலா மூடுபனி' விமர்சனத்தை எதிர்பார்த்துக் கிடப்போம் தலீவரே! சீக்கிரம் ஆவட்டும்!

   Delete
 29. Got the James Bond. Yet to read the book, but the first thing that I noted. Dumeel, Boom, sath, crack and all the sounds are back again.

  This was a very different feature in the earlier book and it made look at the pictures, instead of rushing through the book. Somehow, these words takes away the effect of the artwork.

  Any reason for bringing this back.

  ReplyDelete
  Replies
  1. ///Any reason for bringing this back.///

   Mute modeல ஆக்சன் காட்சிகள்னா ஏதோ குறையுறாப்லயே இருக்குன்னு நம்ம நண்பர்களில் சிலர் ஃபீல் பண்ணியிருந்தாங்க. அதான் காரணம்!

   Delete
  2. ஆனா இந்த கும் சத் எனக்கு பிடிக்கல .. சத்தத்தை நாமே கற்பனை செய்து கொள்வது நன்றாக இருந்தது .. This looks artificial because the original does not have it :-( :-( :-( If the next one has plans to contain the sounds please do not send me - I will read the English original !

   Delete
 30. புத்தகம் வந்து விட்டது..
  மிங்கி பிங்கி பாங்கி ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான்...

  ReplyDelete
 31. முடிவிலா மூடுபனி : ( படிக்காதவர்களும் வாசிக்கலாம் என்றாலும் இம்முறை தாண்டி செல்வது உகந்தது என்பதால் அதுவே சிறப்பாகவும் இருக்கலாம்.படித்த முடித்த கணத்தில் நேரமும் இருப்பின் உடனடியாக மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டால் அடுத்த இதழுக்குள் சுலபமாக நடை போலாமே என்ற எண்ணத்திலியே உடனடி விமர்சனம்..)

  ஆசிரியர் முன்னோட்டத்தில் குறிப்பிட்ட அமைதியான ,தனிமை சூழலிலே ஆனால் மதிய நேரத்தில் முடிவிலா மூடுபனியை வாசிக்க ...மன்னிக்க நேசிக்க நேர்ந்தது... ஒரு காவல் அதிகாரியின் முன் நினைவுகளே இந்த கதையோட்டம் என்றாலும் கொஞ்சமும் சோர்வடையாமல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போலவே கதையோட்டம் செல்கிறது.ஒரு பெண்ணின் கொலைக்கு காரணமானவனை தண்டிக்க வேண்டும் ..நிரபராதி தண்டிக்க பட கூடாது ( தண்டிருக்கபட்டிருக்கலாகாது ) என்ற எண்ணவோட்டத்தில் காவலர் வேலையும் பறிபோக .. பல வருடங்கள் கழித்து அதற்கான தடயங்களை தேடும் ஒரு தனிப்பட்ட மனிதனின் தேடல்களே இந்த முடிவிலா மூடுபனி ..இதற்கிடையில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்கள் ,அதற்கு காரணமான குற்றவாளியை தண்டிக்க தான் அளித்த வழிமுறை என அவனின் வாழ்வின் சம்பவங்களும் கலந்தோட ஒரு அமைதியான துப்பறியும் கதையை படித்த திருப்தி...தான் நடந்தது போல நினைத்தது நிகழ்வு அல்ல என்று அவர் அதிரும் சமயம் அதிர்ந்து போவது நாமும் தான் ..முடிவுரை முன்னோட்டத்தில் ஆசிரியர் சொன்னபடி பரபரப்பாகவோ..அல்லது திடீர் திருப்பமாகவோ இல்லாது போவது ஒரு சிறு குறையாக தோன்றினாலும் இது ஒரு நிஜ நிகழ்வாக இருப்பின் இப்படி தானே நிகழ்ந்து இருக்க முடியும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஒரு கற்பனை படைப்பை கூட வாசிப்பவருக்கு இது ஓர் நிஜ படைப்பு என ஒன்றி போக செய்வதில் இப்படி பட்ட முடிவுகளும் அவசியம் தானோ..?இதில் ஒருவரின் வாழ்க்கை ஓட்டத்தை மட்டும் அல்ல..பணிபெண்...பழையை பொருட்களை வாங்கி விற்கும் நண்பர் ,பூக்கடை ஓனர் என வரும் சில நிமிட மாந்தர்களின் வாழ்வியலை பற்றி கூட கதை ஆசிரியர் நம் மனதில் பதிந்து விட வைப்பது அவரின் படைப்பின் திறமையை பறை சாற்றுகிறது...


  ஆர்ப்பாட்டம் ...ஆராவாரம் இல்லாமல் அமைதியாக

  மனதில் பதிந்த பனி...!

  ReplyDelete
  Replies
  1. கி.நா'ன்னு சொன்னாலே காணாப்போன நம்ம தலீவரே இன்னிக்கு மொதோ ஆளா படிச்சு முடிச்சுட்டு, சிலாகிச்சு அறிக்கை விடறார்னா...

   நெஜமாவே அது கி.நா'தானான்னு ஒரு டவுட்டு வர்தூ! :D

   Delete
  2. // எண்ணத்திலியே உடனடி விமர்சனம் //

   உங்கள் விமர்சனங்களை எழுதி மொபைலில் சேமித்து வைத்து வேண்டும் போது எடுத்தது இங்கு பின்னூட்டம் இடலாமே?

   Delete
  3. நெஜமாவே அது கி.நா'தானான்னு ஒரு டவுட்டு வர்தூ! :D

   #######

   எனக்கும் அந்த டவுட் இருக்கு செயலரே...ஏன்னா கதை நல்லாருக்கு....


   ( எனக்கு ) கதை நல்லாலை ன்னு சொன்னா தான் கிராபிக் நாவல்..இல்லைன்னா எல்லாமே அசத்தல் நாவல் தான்..:-)

   Delete
  4. உங்கள் விமர்சனங்களை எழுதி மொபைலில் சேமித்து வைத்து வேண்டும் போது எடுத்தது இங்கு பின்னூட்டம் இடலாமே?

   #######

   பல சமயங்களில் அப்படி தான் நிறைவேற்றுகிறேன் பரணிசார்..ஆனால் சில கதைகளை படித்தவுடன் பொதுவில் விமர்சனம் வைக்க உடனடி ஆவல் ஏற்படும்...காரணம் கதையின் தாக்கம்...முடிவிலா மூடுபனியும் அவ்வாறே...

   Delete
  5. நெஜமாவே அது கி.நா'தானான்னு ஒரு டவுட்டு வர்தூ! :D

   #######

   எனக்கும் அந்த டவுட் இருக்கு செயலரே...ஏன்னா கதை நல்லாருக்கு....


   ( எனக்கு ) கதை நல்லாலை ன்னு சொன்னா தான் கிராபிக் நாவல்..இல்லைன்னா எல்லாமே அசத்தல் நாவல் தான்..:-)

   Delete
 32. சார்! 3 மணிக்கு உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் கூரியர் நம்பரை வாங்கி இங்கே உள்ள DTDC தலைமை அலுவலகத்தில் விசாரித்தது பார்த்தேன். நேற்று நீங்கள் அனுப்பிய புத்தக பார்சல் சிவகாசி DTDC அலுவலகத்தில் இன்று மாலை 4:50-க்கு தான் புக்கிங் ஆகியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் கூழ் பெண்டிங் பார்ட்டியா? :D

   Delete
 33. புது்புத்தக விமர்சனங்களின் பொருட்டு நான் படிச்ச சோமசுந்தரத்தின் சீடர்கள், லக்கி கிளாசிக் 2 வை சில பதிவுகளுக்கு தள்ளி வைக்கிறேன். டைனமைட் ஸ்பெசல் புயலுக்கொரு பிரளயம் போய்க்கினு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ///சோமசுந்தரத்தின் சீடர்கள் ///

   ஹா ஹா ஹா! :))))))

   Delete
  2. ஹைய்யா ...எனக்கு கூட சீடர்களா ? ? ? எங்க தட்சணை எங்க தட்சணை ? , தட்சணையை மொதல்ல கொடுங்கப்பா. ஓம் ஜெயந்தி !!!

   Delete
 34. அதெப்படி சாமி subscription no 1001க்கு புக் அனுப்ப மறப்பாங்க ? போன வருஷ ஜம்போ மட்டும் வந்திருக்கு :-(
  அப்போ சந்தா எண் வரிசை படி pack பண்றதில்லையா? அது சும்மா லுல்லுலாய்க்காகவா ? :-)

  ReplyDelete
  Replies
  1. கல்யாணத்துல மொய் வைக்கிறமாதிரி ஒரு சந்தா நம்பரை வச்சுக்கிட்டிருந்தா இப்படித்தான் ஆகும்! :D

   Delete
  2. Not so sir...ஜம்போ ஒரு தனி கூரியராகவும், அதே தினத்தில் ரெகுலர் சந்தா இன்னொரு கூரியராகவும் அனுப்பியுள்ளனர் ! இரண்டு டிராக்கிங் நம்பர்களுமே 28 -ம் தேதி generate ஆனவைகளே ! ஆனால் இங்கிருந்து கிளம்பிய லோடில் இடம் லேது என்ற பிரச்னையா ? அல்லது அங்கே பட்டுவாடா செய்ய சோம்பலா ? தெரியலை - மறுநாள் உங்களது ஜம்போ கூரியரை மட்டுமே எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ! DTDC இதுவரையிலும் இது போல் சிக்கலேதும் உருவாக்கியதில்லை....surprising !!

   Delete
 35. கடந்த இரண்டு மாதங்களாக புத்தகங்கள் ஆசிரியர் அனுப்பிய மறுநாள் கிடைத்தது. இந்த முறை இல்லை. :-(

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தான் எனக்கு ஆத்தா மேல இருந்த கோபம் கொஞ்சம்போல குறையறாப்ல இருக்கு!

   Delete
 36. ஆன்லைன் விற்பனையில் இந்தமாத வெளியீடுகள் - இதுவரையிலான விற்பனைகளின்படி:

  முதலிடம் : டெக்ஸ்
  இரண்டாமிடம் : 007
  மூன்றாமிடம் : ஹெர்லக்
  நான்காமிடம் : கி.நா

  இம்மாதக் கி.நா நண்பர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி - பேசப்படும் பொருளாகும் போது - விற்பனையில் ஹெர்லக்கை முந்திச் செல்லக்கூடும்!

  ReplyDelete
 37. 88வது. ஆவலுடன் இதழ்களுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 38. சுடச்சுட சுட்டது. (லைட்டா)

  காமிக்ஸ் படித்துப் பார்..!

  உன்னைச் சுற்றி உலகம் சுற்றும்.
  உன்னையே உனக்கு அடயாளம் காட்டும்.

  சனியிரவுகள் சிவராத்திரி ஆகும்.
  சண்டே பொழுதுகள் சண்டையின்றிப் போகும்

  காமிக்ஸ் படித்துப் பார்..!

  உந்தன் கமெண்டெழுத்து அழகாகும்.
  உந்தன் கண்ணியம் மேலும் கூடும்.

  மாதக் கடைசிகளுக்கு மனசு ஏங்கும்.
  மாதம் முழுதும் தளத்தை நோண்டும்.

  காமிக்ஸ் படித்துப் பார்..!

  புத்தகப் பார்சல்கள் பிரசாதமாகும்.
  கொரியர் பையன் கடவுள் ஆவான்.

  புத்தக விழாக்கள் சுற்றுலாத் தலமாகும்.
  ஆகஸ்ட் வர வர யானை பலமாகும்.

  காமிக்ஸ் படித்துப் பார்.!!

  சந்தா (சாந்தா இல்லீங்கோ) பிடித்த வார்த்தையாக உருமாறும்
  வந்தவரெல்லாம் வேந்தரே என்ற எண்ணத்தை உருவாக்கும்.

  மஞ்சள் சட்டை பிடித்த ஆடையாகும்.
  உடைந்த மூக்கும், பரட்டைத் தலையும் பேஷனாகும்.

  கி.நா, கார்டூன்கள் பேசுபொருளாகும்.
  குண்டும், ஒல்லியுமே இஷ்டப் பொருளாகும்.

  காமிக்ஸ் படித்துப் பார்..!

  அரிஸோனாவும், மெக்ஸிகோவும் அண்டை ஊர்களாகும்.
  ப்ரான்சம், இத்தாலியும் பக்கத்து வீதிகளாகும்.

  காமிக்ஸ் படித்துப் பார்..!
  காமிக்ஸ் படித்துப் பார்..!
  காமிக்ஸ் படித்துப் பார்..!

  ReplyDelete
  Replies
  1. வாவ்! வாவ்! வாவ்!!!

   அட்டகாசம் GP!!!

   ரொம்ப ரொம்ப ரசித்தேன்! செம்ம்ம!!

   Delete
  2. சூப்பர் கோவிந்தராஜ்.

   Delete
  3. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

   Delete
  4. //மஞ்சள் சட்டை பிடித்த ஆடையாகும்.
   உடைந்த மூக்கும், பரட்டைத் தலையும் பேஷனாகும்.
   அரிஸோனாவும், மெக்ஸிகோவும் அண்டை ஊர்களாகும்.
   ப்ரான்சம், இத்தாலியும் பக்கத்து வீதிகளாகும்.//

   :-) :-)

   Delete
  5. அருமை நண்பரே்..

   இன்னொரு கவிஞரும் ரெடி...:-)

   Delete
  6. செம்ம செம்ம gpஜி

   Delete
  7. 🙏🙏🙏🙏🙏

   மொதல்ல ,ஜாலியா ரெண்டு வரி மட்டும் எழுதலாம்னு நெனைச்சேன்.ஆரம்பிச்சதும் மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகள் வர ,அதுவே ரெண்டு பக்கத்துக்கு நீண்டது. அதை அப்டியே பப்ளிஷ் பண்ணா, அதைப் படிக்கிறவங்களை நினைச்சு பரிதாபம் ஏற்பட்டது.அதனால நானே அதை எடிட் பண்ணி சுருக்கிவிட்டேன்.

   Delete
 39. செம கோவிந்துராஜ்.

  ReplyDelete
 40. - பேச்சு வார்த்தையில் உடன்பாடு -
  - இன்று புத்தகங்கள் கிடைக்கச் செய்வதாக ஆத்தா உறுதி -
  - உற்சாகத்தில் சேலம் பக்தர்கள் -

  ReplyDelete
 41. Again 007 rocks...complete thriller like movie ...depth story line this time...thanks you sir ....please add other new series 007 one by one ...I need all new stories...

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ சீசன் -2-ல் ஜேம்ஸ் பாண்ட் # 3 உண்டு நண்பரே !

   Delete
 42. ஆன்லைன் விற்பனையில் ஹெர்லக்கை முந்தியது 'முடிவிலா மூடுபனி'!!!

  ReplyDelete
  Replies
  1. 'தல' தான் முன்னணியில்..!

   Delete
  2. Erode Vijay, How do you calculate which book sold how many copies?

   Delete
  3. @ Ragh ji

   நமது ஆன்லைன் ஸ்டோரில் இந்த மாதத்துத் தலைப்பைக் கிளிக் பண்ணீங்கன்னா அடுத்துவரும் பேஜில் '488 items'ன்ற மாதிரி ஏதாவதொரு நம்பரைக் காட்டும்! லிஸ்ட்டிங் போடும்போது 500. இப்போ ஸ்டாக்கில் 488. அப்படீன்னா விற்பனையானது மொத்தம் 12.

   ஒவ்வொரு தலைப்புக்கும் இதே மாரிதி க்ளிக் பண்ணிப் பார்க்க, யார் பெஸ்ட் ஸெல்லர்னு தெரிஞ்சுடும்!

   Delete
 43. முடிவிலா மூடுபனி !!! நோ ஸ்பாயிலர்ஸ்!!!
  சோகரசம் ததும்பினாலும் முடிவு திகைக்க வைக்கும் !!!
  ஆண்டி –க்ளைமாக்ஸ்-ம் உண்டு ..அதுவும் வியக்க வைக்கும் !!
  FLAWS ARE THERE !!! STILL THE BOOK SHALL NOT FAIL TO GET YOU FASCINATED !!!
  கிராபிக் நாவல் என்றால் இரண்டடி பின்னால் போவோர்கள் கூட தயங்காமல் வாங்கி படிக்கலாம்
  Whodunit வகை கதைதான் !!!

  8.5 /10 …..

  ReplyDelete
  Replies

  1. ////கிராபிக் நாவல் என்றால் இரண்டடி பின்னால் போவோர்கள் கூட தயங்காமல் வாங்கி படிக்கலாம் ///

   ஹிஹி! நம்ம தலீவர் இந்தக் கதையைப் படிச்சுட்டு 'மனதில் பதிந்த பனியம்மா.. மார்கழிப் பனியம்மா'னு கமெண்ட் போட்டப்பவே இது 'வெகுஜன கி.நா' வகையறான்னு புரிஞ்சிடுச்சு!

   Delete
  2. இந்த Le Storie கதைவரிசையின் ஒவ்வொரு இதழுமே ஏதோவொரு வகையில் நம்மை ஈர்த்திடும் ஆற்றல் பெற்றுள்ளன !! இங்கே மூடு பனியாய் கதை நெடுகப் போர்த்துக் கிடக்கும் சோகமுமே ஆளை அமுக்காது - இதுவொரு யதார்த்த வாசிப்பாய்த் தோன்றிட உதவுகிறது என்பேன் !

   "நித்திரை மறந்த நியூயார்க்" - என்னை ரொம்பவே எதிர்பார்க்கச் செய்திருக்கும் இன்னொரு ஆல்பம் இந்த வரிசையில்...!

   Delete
  3. Yep - கண்டிப்பாக fascinating - அதுவும் அந்த anti-climax மற்றும் second climax !

   எனினும் கதை சற்றே இழுவை - 50 பக்கங்களில் முடிந்திருக்க வேண்டிய கதை.

   Delete
 44. வூட்லேர்ந்து ஃபோன் - புக்கு வந்திடுச்சாம்!! ஹைய்யா!!!

  ஆத்தா... உன் கருணைக்கு அளவில்லையே, உன்
  கருணைக்கு எழுகடலும் இணையில்லையே..

  ReplyDelete
  Replies
  1. ஆனா கூலுக்கு கோப்பை இல்லையே ஆத்தா...:-(

   Delete
 45. From Steel claw:
  சார் இன்றுதான் கிடைத்தது....பாண்டின் அட்டைதான் இதுவரை வந்ததிலே பெஸ்ட்.....ஏன் இனி வரப் போவதிலும் இதனை மிஞ்ச முடியாது.. பின்னட்டயும் பின்னுது....பிற அட்டைகளும் அம்சம் ௐன்றையொன்று விஞ்சுது

  ReplyDelete
  Replies
  1. To : Steel claw : புகை சிக்னல் மார்க்கமாய் "நன்றி " என்று சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் !!

   Delete
  2. About steel claw: என்னாச்சு - PFB போன்ல கான்ஃபெரன்ஸ் கமெண்ட் மாதிரி தெரியுதே (கடந்த சிலபல காலமா).

   Delete
 46. Dear Vijayan sir/ or friends! Any one can tell me how much pages in the (jumbo book )James bond book? I have received with 130 pages only?! It didn't have the word END IN IT? WHY?

  ReplyDelete
  Replies
  1. @ SS

   136ம் பக்கத்தில் 'முற்றும்' உள்ளது! எனவே, உங்களுடைய புத்தகத்தில் குறை இருப்பதுபோல தெரிகிறது! நமது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டீர்களானால் மாற்றுப் பிரதி அனுப்பி வைப்பார்கள்!

   Delete
  2. உங்கள் சந்தா நம்பரைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் சார் !

   Delete
  3. Thank you sir, Vijay an sir. Thank you erode Vijay sir. I will send the mail right away!

   Delete
 47. Editor ஐயா ஈரோடு புக் Fair ku என்ன plan என்று எப்போது அறிவிப்பு ? இந்த மாத இதழ்களை சனிகிழமை தான் சுவைக்க முடியும். விற்பனைக்கு ஒரு பேய் எப்படி உள்ளது herlock jumboவில் வசீகரித்தார் . ஜேம்ஸ் பாண்ட் கிராஃபிக் நாவல் அடாடா

  ReplyDelete
 48. @ ALL : ஞாயிறு தூக்கத்தை ஒருநாள் அனுபவித்த ஜாலியோடு காலையில் ஒன்பதுக்கு இங்கே எட்டிப் பார்த்திடுங்களேன் guys ? புதுப் பதிவோடு காத்திருப்பேன் !!

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்குத்தான் சுடச்சுட நாலு புத்தகங்கங்கள் கிடைச்சுருக்கு - அத வச்சு இன்னிக்கு நைட்டை ஓட்டிக்கிடலாம்றதால போனாபோவுதுன்னு உங்க கோரிக்கையை ஏத்துக்கிடறோம்!

   ஆனாலும் இந்தப் போக்கு பிடிக்கலே!

   முதலிரவை முதல்பகலாக மாத்தறதுன்றது எந்தஅளவுக்கு நம்மவூர் கலாச்சாரத்துக்கு ஒத்துவராதோ.. அதே அளவுக்கு 'சனி சாயங்காலப் பதிவை' 'ஞாயிறு நண்பகல் பதிவாக' மாத்துறதையும் காமிக்ஸ் கலாச்சாரத்தால ஏத்துக்கிடமுடியாது!


   Delete
  2. சாம்சங் கோடாங்கி இப்பதான் திருந்தியிருக்காரு கெடுத்திடாதீங்கப்பா‌...

   Delete
  3. முதல்பகல் மாறி பல மாமாங்கம் ஆயிடுச்சு ஈவி...

   பழைய நெனப்புடா பேராண்டிங்கிற மாதிரில இருக்கு...

   இப்பல்லாம் கல்யாண மண்டபங்கள்ல தாலி கட்டி முடிச்சு விருந்து முடிஞ்ச கையோட மாப்ள ரூமுக்குள்ள பொண்ணையும் போட்டு அடைச்சிட்றாங்கே - வூட்டுக்கு கெளம்புற வரைக்கும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கணுமாம் ( மவனே ஜாலியா சிரிச்சுக்கிட்டாdaa இருக்க - இப்பவே ஒனக்கு சங்குதாண்டி)

   Delete
 49. இன்று பதிவு உண்டா நண்பர்களே?!!

  ReplyDelete
  Replies
  1. இன்று பதிவு உண்டா ஆசிரியர் சார்..?! :-)

   Delete
 50. சிவகாசி கடிகாரத்திலே இன்னும் மணி ஒன்பது ஆகலியான்னு தலிவர் கேட்கச் சொன்னாரு..

  ReplyDelete
  Replies
  1. தாரையில் மணி சரியாக 9;18 என்பதையும் தெரிவித்து விடுங்கள் ரம்மி...:-)

   Delete
 51. நானும் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன்

  ReplyDelete
 52. எடிட்டரின் புதிய மதியப் பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete