Powered By Blogger

Sunday, December 23, 2018

ஆவ்...நெருப்புடோய் !!

நண்பர்களே,

வணக்கம். தமிழ் சினிமா பார்த்திடும் யாருமே நமது தானைத்தலைவர் கவுண்டரின் ரவுசுகளுக்கோ ; லவ்ஸ்களுக்கோ   அடிமையாகிடாது இருக்க வாய்ப்பேயில்லை என்பது இந்த சிஷ்யப்புள்ளையின் கருத்து ! And கடந்த ஒரு வாரமுமே எனக்கு நிகழ்ந்தவை தலைவரின் ‘I am very happy!’ சமாச்சாரங்களே ! என்னவென்று கேட்கிறீர்களா ? எல்லாமே ஒரு கதையின் கதை தான் !!  சகலமும் ஆரம்பித்தது “அலைகடலில் அசுரர்கள்” எனும் தொடக்கப் புள்ளியிலிருந்து ! நேர்கோட்டுக் கதைக்களமாகயிருக்கும் ; பெரிதாய்ப் பணிகள் பெண்டு கழற்றாது என்ற நம்பிக்கையோடு அதற்குள் புகுந்தால் – நிலவரம் நேர்மாறாயிருந்தது ! கதையும் சரி, வசனங்களின் ஆழமும் சரி, பராகுடா பயணிக்கும் சமுத்திரத்தின் ஆழத்திற்குச் சிறிதும் சளைக்காதிருக்க, அந்த 168 பக்கங்களைக் கரை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்தே போனது ! 

And இவை எல்லாமே போன வாரத்து நிகழ்வுகள் ! “ரைட்டு… ஒரு மாதிரியா கஷ்டமான பணிக்கு சுபம் போட்டாச்சு ; இனி இந்த மாசம் காத்திருப்பது தோர்கலும் ; ‘தல‘ டெக்ஸ் வில்லரும் தான்…! ரெண்டுமே intense ஆன களங்களே - ஆனால் சமாளிச்சுக்கலாம் !” என்றபடிக்கு ஜாலியாகி விட்டேன் ! பொதுவாய் கிருஸ்துமஸ் & ஆண்டின் இறுதி வேளைகளில் நமது மிஷினரி இறக்குமதி சார்ந்த பணிகளில் பெரியதொரு தொய்வு ஏற்பட்டு விடுவது வாடிக்கை ! மேலை நாடுகள் சகலமும் சகட்டுமேனிக்கு விடுமுறையில் சென்றிருக்க – நாம் செய்வதற்கு ஏதுமிராது ! இந்தாண்டும் அதே நிலை தொடர – பராகுடாவைத் தேற்றி முடித்த கையோடு நான் ஒரு வித விடுமுறை மூடுக்குப் போயிருந்தேன் ! 

நாட்கள் ஓட்டமெடுக்க, மற்ற இதழ்களை அச்சிட வேண்டிய நேரமும் நெருங்கிய போது  – “குஞ்சாய்ன்… பூ மிதிக்க சித்தே வரணுமே !” என்று மைதீன் தலைகாட்டினான் ! நானோ – ”ஹஹஹஹ…. எட்டாம் தேதி சேலத்திலே மாநாடு…. பத்தாம் தேதி டில்லியிலே இருக்கேன்… ஆங்… ஒன்பதாம் தேதி வந்திடறேன்” என்ற ரேஞ்சில் ஹாயாகத் தேதி கொடுத்து விட்டு, அன்றிரவு ஹாயாக தோர்கலின் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! இம்முறையோ 3 one-shot ஆல்பங்களின் தொகுப்பாகவே இந்த இதழ் களம் காண்கிறது ; So எந்தக் கதைக்கும் – அதன் தொடரும் பாகத்தோடு தொடர்பே கிடையாது ! “அட… வேலை இன்னும் லேசுடோய்!” என்றபடிக்கு கூடுதலாய் குதூகலமானேன் ! கதை # 1 – ஆரிசியாவின் இளவயது சாகஸங்களைச் சார்ந்ததென்பதால் பெரிதாய் எந்த மொக்கையும் போட அவசியப்படவில்லை ! “காந்தக் கண்ணழகி… ஆ ரைட்லே பூசு…ஆ....பேக்ல பூசு…!” என்று சந்தோஷமாய் சந்தனப் பூச்சை ரசித்துக் கொண்டே, பக்கங்களைத் தள்ளிக் கொண்டே போனேன் ! Of course – வான் ஹாமின் ஜாலங்கள் எப்போதுமே சராசரிகளுக்கு ஒரு லெவல் மேலிருப்பது இயல்பே என்பதால் இந்தச் சுலபக் கதையிலுமே ஆங்காங்கே twist-கள் இருக்கத் தான் செய்தன! ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து விட்டு, "I am very happy!" என்றபடிக்கே கதை # 2 ஆன “சிகரங்களின் சாம்ராட்டை" எட்டிப் பிடித்தேன் ! சிறுகச் சிறுக அதனோடு ஐக்கியமாகத் துவங்கும் போது தான் ”ஆ… நெருப்புடோய் !!” என்றபடிக்கே நமது தலைவர் துள்ளிக் குதித்து ஓட முயற்சிக்கும் காட்சி என் மனத்திரையில் விரிந்தது! "பூ மிதிக்க" வந்தவனுக்கு ஒரு அக்னிக்குண்டமே காத்துள்ளதே என்றபடிக்கு மலங்க மலங்க முழிக்க ஆரம்பித்தேன் !

To cut a long story short – தோர்கல் தொடரின் கதை # 14 ஆன – “சிகரங்களின் சாம்ராட்” நாமெல்லாம் இதுவரைக்கும் பார்த்தேயிரா ஒரு புது உச்சத்தைத் தொட்டு நிற்கும் படைப்பு ! “காலப் பயணம்” என்பதே இந்தக் கதையின் கரு! ஆனால் வான் ஹாம் எனும் ஒரு அசுரரின் கையில் இந்தக் கரு சிக்கிடும் போது என்ன மாதிரியான அதகளங்கள் விளைவாகிடும் என்பதை இதன் 46 பக்கங்கள் – எனக்கு உணர்த்தியுள்ளன ! ”ஆங்… சைதாப்பேட்டை போலாம்பா” என்பது போல இறந்த காலத்திற்குள்ளும் ; “கூடுவாஞ்சேரிக்கு 2” என்பது போல எதிர்காலத்திற்குள்ளும் கதை நெடுக டவுண்பஸ் ஷண்டிங் அடிக்கிறார் தோர்கல் ! இந்த ஆல்பங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எட்டுப்-பத்து மாதங்களுக்கு முன்பாகவே ஓர் ஓய்வான சமயத்தில் நமது கருணையானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை ! அவரது classical நடைக்கு இந்தப் புராதன காலகட்டத்துக்கதைகள் நெருடலின்றி ஒத்துப் போகுமென்ற நம்பிக்கையில் மூன்று பாகங்களையுமே அவரிடம் ஒப்படைத்திருந்தேன் ! அவருமே அழகாய் எழுதியனுப்பியிருக்க – சமீபமாய் DTP பணிகள் முடிந்த பின்பே அவை என்வசம் வந்து சேர்ந்தன ! 

துவக்க சாகஸமான “ஒரு தேவதையின் கதை”க்கு வழக்கம் போல திருத்தங்கள் ; சிற்சில மாற்றங்கள்; நகாசு வேலைகள் என்று செய்து பணி முடித்து விட்டிருந்தேன் ! ஆனால் “சிகரங்களின் சாம்ராட்” கதையோ மிரளச் செய்யும் ஒரு புதிரான கதைக்களம் என்பதைப் “பூ மிதிக்க” வேண்டிய தருணத்தில் தான் உணர்ந்தேன் ! நிச்சயமாய் இந்த ஆல்பத்தினில் தென்பட்ட மொழியாக்க நெருடல்களின் பொருட்டு, நமது கருணையானந்தம் அவர்களைக் குறைசொல்வது நியாயமல்ல என்பதையுமே அப்போது உணர்ந்தேன் ! சொல்லி மாளா complex முடிச்சுகள் ; பேஸ்தடிக்கச் செய்யும் சம்பவக் கோர்வைகள் ; சராசரிக் கற்பனைகளுக்கெல்லாம் எட்டவே சாத்தியமாகா ஒரு க்ளைமேக்ஸ் – என்று வான் ஹாம் இங்கே தீட்டி வைத்திருப்பது ஒரு மோனலிசா சித்திரத்தை ! இப்டிக்கா நின்று பார்த்தாக்கா ஒரு அர்த்தமும் – அப்டிக்கா குந்திக்கிட்டுப் பார்த்தாக்கா வேறொரு அர்த்தமும் தொனிக்கும் பாணி - கதை நெடுகே ! ஒற்றை வார்த்தையை இடம் மாற்றிப் போட்டால் கூட கதையின் போக்கே அந்தர்பல்டி அடித்து விடக்கூடுமென்பதை உணர்ந்த போதே எனக்கு வயிற்றைப் பிசையத் துவங்கி விட்டது! தேதியோ 16ஐத் தொட்டிருக்க – அவகாசமும் அதிகமில்லை ; ஆனால் இந்தக் கதையில் காத்திருக்கும் பணியோ இமாலய அளவிலானது எனும் போது பேய் முழி முழிக்கத் துவங்கினேன் !

வான் ஹாம்மே…! நாமெல்லாம் இட்லி சாப்பிடுகிறோம்… வடக்கே சப்பாத்தி… மேலை தேசங்களில் ரொட்டி… கீழை தேசங்களில் நூடுல்ஸ்…! ஆனால் இந்த மனுஷன் மாத்திரம் 3 வேளைக்குமே ஏதோ தேவர்களுக்கான மெனுவையே லவட்டி விடுகிறார் என்று சந்தேகம் எழுகிறது எனக்கு ! சராசரி மனிதர்களை விடவும் – படைப்பாளிகள் பன்மடங்கு கற்பனைத் திறனிலும் – ஆற்றலிலும் உச்சமானவர்களே என்பது தெரியும் ! ஆனால் இவரோ head & shoulders above every one of them ! அசாத்தியத் திறனும், நிகரில்லா தன்னம்பிக்கையும், இலக்கு மீதான கவனத்தை எந்தவொரு சூழலிலும் விட்டுத் தரா உறுதியும், அவரது சிறகடிக்கும் கற்பனைகளுக்கு மெருகூட்டும் அம்சங்கள் என்பதை இந்த ஒற்றை வாரத்தில் அழுத்தம் திருத்தமாய்ப் புரிந்துள்ளேன் !  

நாளொன்றுக்கு 3 மணி நேரங்களை ஒவ்வொரு இரவும் செலவிட்டால் 10 பக்கங்களைப் பணி முடிக்கவே நாக்குத் தொங்கிப் போனது ! அதிலும் இந்தக் கதையின் முன்னணி – பின்னணி என சகலத்தையே தலைக்குள் ஒவ்வொரு தபாவும் reload செய்து கொண்டு அமர்ந்தால் தான் அன்றைய வேலை ஓடும் ! இல்லாது போனால் சொதப்பிடுவோமோ ? என்ற பயம் ! ‘ஒட்டுமொத்தமாய் 6 நாட்களை விழுங்கிய பிற்பாடு கதையினை மாற்றியெழுதி ; திருத்தங்களைச் செய்துவிட்டதான லேசான நம்பிக்கையோடு, இரத்தக்களரியான சிகப்பு மசிப்பக்கங்களை நமது  DTP பெண்களிடம் ஒப்படைத்தேன் ! அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது ; யுத்த களம் போல் காட்சி தந்த திருத்தங்கள் நிறைந்த பக்கங்களைப் பொறுமையாய்க் கையாண்டு, பிரிண்டவுட் எடுத்துத் தந்த வண்ணமே இருந்தனர் ! ஆனால் எனக்கு தலைக்குள்ளோ குடைச்சல் தொடர்ந்து கொண்டேயிருந்தது ! So வெள்ளியிரவு மறுக்கா மொத்தப் பக்கங்களையும் ; CINEBOOK-ன் ஆங்கிலப் பிரதியையும் ; ஒரு கத்தை வெள்ளைத்தாள்களையும் எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தேன்! ஆங்கிலத்தைப் படித்தபடிக்கே நமது தமிழாக்கத்தைக் கவனித்தால், பொடிப் பொடியான சில தகவல்கள் மிஸ் ஆவது புரிந்தது ! ‘நாசமாய்ப் போச்சு!‘ என்றபடிக்கே அவற்றை இணைத்து விட்டு – மேற்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன் ! வெள்ளைத்தாளிலோ – “ஆங்… தோர்கல் தோசை சாப்பிடறது சமகாலத்திலே ; பூரி சாப்பிடப் போறது எதிர்காலத்திலே ; இட்லி சாப்பிட்டது 37 ஆண்டுகளுக்கு முன்பாக !” என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் குறித்து வைக்கத் தொடங்கினேன் ! இந்த நிகழ்விற்கும் – அந்த நிகழ்விற்குமான கால வித்தியசம் இத்தினி வருஷம் என்று algebra பார்முலா போலவும் எழுதிடத் தொடங்கினேன். அப்புறமாய் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோடும் சிற்சில சந்தேகங்கள் குறித்துப் பேசினேன். சில இடங்களது வரிகளுக்கு இரு மாதிரியான அர்த்தங்கள் சாத்தியம் என்பதை அவர் சொல்ல – அதையுமே குறிப்பெடுத்துக் கொண்டேன் ! இவை சகலத்தோடும் மறுக்கா கதையின் முழுமையையும் புரட்டத் துவங்க – நான்காவது தடவையாய்த் திருத்தங்கள் செய்யத் தேவைப்பட்டது புரிந்தது ! So சனி பகலில் இயன்றதைச் செய்துவிட்டு – “இதுக்கு மேலே தம் லேது சாமி !” என்ற கதையாக “சிகரங்களின் சாம்ராட்டை” அச்சுக்குத் தந்த கையோடு – பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறேன் – இன்னமுமே என்னால் 100% திருப்தியான விடைகளை வழங்கிட இயலா சில கேள்விகளை எண்ணி ! 

ஒன்று மட்டும் நிச்சயம் guys – இதழ் வெளியான பிற்பாடு; இந்தக் கதையினை நீங்கள் (சு)வாசித்த பிற்பாடு – எக்கச்சக்கமான ரவுசுகள் இங்கே அரங்கேறவிருப்பது சர்வ நிச்சயம் ! Keep your best thinking caps fresh folks – அவற்றிற்கு ஜரூராய் வேலை காத்துள்ளது ! ‘யாம் பிறாண்டிய பாயைப் பிறாண்டட்டும் சகலரும் !‘ என்ற நல்லெண்ணம் மேலோங்கவே செய்தது தான் ; ஆனால் தலீவர் போன்ற சில சாத்வீக ஜீவன்களின் நலன் கருதி நான் எழுதிப் பார்த்த அந்தக் காலகட்ட அட்டவணைகளையும் இதழில் புகுத்தியுள்ளேன் – கதையின் இறுதிப் பக்கத்தில் ! ஏனோ – தெரியலை - சந்தனம் பூச வரும் காந்தக்கண்ணழிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பின்வாசலை உடைத்துக் கொண்டாவது ஓடிப் போய்விடத் தோன்றுகிறது இப்போது ! கவுண்டரே – நீர் தேவுடு !

கதை # 3 – புண்பட்ட கபாலத்தை மயிலிறகால் வருடித் தந்ததென்று சொன்னால் மிகையாகாது! தெள்ளத் தெளிவாய் ஓட்டமெடுக்கும் கதை; அழகான சில குடும்பத் தருணங்கள்; சற்றே சினிமா ஜாடையிலான க்ளைமேக்ஸ் என்று “ஓநாய்க் குட்டி” ஜெட் வேகத்தில் ஓட்டமெடுத்தது! இந்தக் கதையுமே "சி.சா." ஜாடையில் இருந்திருப்பின் – இந்நேரம் நான் கும்பமேளாவில் கலந்து கெள்ளும் பொருட்டு உத்தர் பிரதேசத்தை நோக்கிய ரயிலைப் பிடித்திருப்பேன் என்பது உறுதி ! Anyways – all’s well that ends well என்ற கதையாக இதழின் முழுமையும் நாளை அச்சுக்குச் செல்லத் தயாராகி விட்டுள்ளது ... provided - இந்த ஞாயிறு இரவில் எனக்குப் புதிதாய் ஏதேனும் சந்தேகமோ; விளக்கமோ தோன்றிடாத பட்சத்தில் ! இதுவரையிலும் வேறு எந்த ஆல்பத்திற்கும் செய்திடாத அதிசயமாய் – இந்த 46 பக்கங்களை மொத்தம் 5 முறை பிரிண்ட் அவுட் எடுத்துள்ளோம் ! And 5 தடவைகளுமே ஏதேதோ திருத்தங்கள் அவசியமாகியுள்ளன ! In spite of all that – தொக்கி நிற்கும் சில கேள்விகள் என்னைச் சுற்றி இன்னமுமே ஜிங்கு-ஜிங்கென்று நர்த்தனம் ஆடித் திரிகின்றன ! சில குழப்பமான களங்கள் கடுப்பைக் கிளப்புவது வாடிக்கை... “போங்கையா... நீங்களும் உங்க இடியாப்பமும்” என்று நடையைக் கட்டத் தான் அவ்விதக் களங்களில் தோன்றும் ! ஆனால் இங்கேயோ மறுக்கா-மறுக்கா அதே பக்கங்களைப் புரட்டோ-புரட்டென்று புரட்டி, புரிய மறுக்கும் சமாச்சாரங்களுக்கு விடை கண்டிட மனசு அல்லாடுகிறது! இதோ – இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட மண்டை அந்தப் பனிச்சிகரங்களிலேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது! ஆஹா... வாராதோ ஜனவரி? என்ற அவா இப்போதே அலையடிக்கிறது - உங்களிடமிருந்தாவது எனது கேள்விகளுக்கான விடைகள் கிட்டுமா ? என்றறிய !

உப்ப்ப்ப் ! ஒற்றைக் கதைக்கோசரம் இதுவரையிலும் இத்தனை ப்ளேடு போட்டதாய் சமீபத்தில் நினைவில்லை ! So ஓவர் புலம்பலாகவோ - அலம்பலாகவோ தென்படின் – my apologies!! கதையைப் படிக்கும் வரையும் எனது பெனாத்தல்களுக்கு முழுமையான பொருள் புரிவது சிரமமே !

And இதோ இந்த இதழின் அட்டைப்பட முதல்பார்வை + உட்பக்க previews - முறையே கதை # 1 ; 2 & 3 -லிருந்து !! அட்டைப்படம் கொஞ்சம் முன்பாகவே அச்சிட்டதென்பதால் - "முத்து காமிக்ஸ் 47 -வது ஆண்டுமலர்" என்று குறிப்பிட விடுபட்டுப் போய் விட்டது ! நிச்சயமாய் இதுவொரு முட்டாள்தனமே !! பிழையைச் சரி செய்ய அழகாயொரு ஸ்டிக்கர் தயாராகி வருகிறது !!  முன் அட்டை + பின்னட்டை  - என இரண்டுமே ஒரிஜினல் சித்திரங்களே ! And கதையின் பெயர் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !! 





இனி காத்திருப்பது நம்மவரின் “சாத்தானின் சீடர்கள்” b&w இதழ் மாத்திரமே ! இதோ – இன்றைய பொழுதே அதன் மீதான எடிட்டிங்கை நெருக்கி முடித்து விடலாமென்ற நம்பிக்கையுள்ளது ! நேர்கோட்டுக் கதைகள் வாழ்க !! டெக்ஸ் வில்லர் வாழ்க !! அவரது குழப்பமிலாக் கதைகளை உருவாக்கும் போனெல்லி வாழ்க ; அவற்றை ரசித்து என் பணியைச் சுலபமாக்கிடும் நீங்கள் வாழ்க !! கார்சன் வாழ்க !!

அப்புறம் பராகுடாவின் அச்சுப் பணிகள் சகலமும் முடிந்து பைண்டிங்கில் உள்ளது! ஒட்டுமொத்தமாய் அச்சாகிக் கிடக்கும் அந்தக் கலர்ப் பக்கங்களைப் பார்த்தால் எனது ஆந்தை விழிகள் இன்னும் அகலமாவதைத் தவிர்க்க முடியவில்லை! இதுவரையிலும் நிறைய அட்டகாசமான கலர் இதழ்களைப் பார்த்துள்ளோம் தான் ; ஆனால் இந்த இதழின் கலரிங் பாணி அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிட்டுவிடுமென்று படுகிறது ! ஓ.... யெஸ்....! இது கணினிகளின் காலம் தான்; ஏதேதோ பணிகளை இயந்திரங்கள் அற்புதமாய்ச் செய்து தருகின்றன தான் ! ஆனால் அதன் சகலத்தின் பின்னேயும் உள்ள மனிதரின் ஆற்றலைப் பார்க்கும் போது வாய் அலிபாபா குகையாகப் பிளக்கிறது! Out of the world!!! பாருங்களேன் சில பக்கங்களின் சிதறல்களை!

Before I sign off – இதோ இன்னொரு கார்பீல்ட் கார்ட்டூன்! And சிரித்தபடிக்கே நீங்களிருக்கும் வேளையில் சந்தாப் புதுப்பித்தல்களைப் பற்றிய நினைவூட்டலையும் முன்வைத்து விடுகிறேனே folks ? இன்னும் பத்தே நாட்களில் நடப்பாண்டு நிறைவுறவிருக்கும் நிலையில் – உங்களது 2018-ன் சந்தாக்கள் ஏற்கனவே நிறைவுற்றிருக்கும் ! So இது வரையிலும் 2019-ன் சந்தா எக்ஸ்பிரஸில் இடம்பிடித்திருக்கா நண்பர்கள் இன்றைக்கே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திடலாமே – ப்ளீஸ் ? சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமுமே கணிசமான தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதால் இதனையே ஒரு மெலிதான நினைவூட்டலாய் எடுத்துக் கொள்ளலாமே folks !

மீண்டும் சந்திப்போம்! Have an awesome Sunday! Bye for now!

260 comments:

  1. சரி சரி தூங்குங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. எதுனாலும் காலைல பேசிக்கலாம்

      Delete
  2. வணக்கம்,
    அடியேன் ஊர் ஊராக சுற்றும் வேலையில் இருப்பதால் நமக்கு சந்தா .. ஒத்து வருவதில்லை.. எனவே நான் பயணிக்கும் இடங்களில் நமது லயனை வாங்கி கொள்வேன், இந்த வருடம் நான் லயனை வாங்கிய ஊர்கள் : ஈரோடு, தேனி, திண்டுக்கல், பெருந்துறை, சேலம், பொள்ளாச்சி மற்றும் கோவை... வரும் 2019லும் இது தொடரும்... புது படைப்புகளை எதிர்... நோக்கி... கார்பீல்ட் போல்...

    ReplyDelete
  3. // “குஞ்சாய்ன்… பூ மிதிக்க சித்தே வரணுமே !” என்று மைதீன் தலைகாட்டினான் ! நானோ – ”ஹஹஹஹ…. எட்டாம் தேதி சேலத்திலே மாநாடு…. பத்தாம் தேதி டில்லியிலே இருக்கேன்… ஆங்… ஒன்பதாம் தேதி வந்திடறேன்” என்ற ரேஞ்சில் ஹாயாகத் தேதி கொடுத்து விட்டு, அன்றிரவு ஹாயாக தோர்கலின் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன்//


    ஹே...ஹே... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா .... :)

    ReplyDelete
  4. //ஆனால் தலீவர் போன்ற சில சாத்வீக ஜீவன்களின் நலன் கருதி நான் எழுதிப் பார்த்த அந்தக் காலகட்ட அட்டவணைகளையும் இதழில் புகுத்தியுள்ளேன் – கதையின் இறுதிப் பக்கத்தில//

    சார்.. தலீவர் இப்பெல்லாம் கி.நாவலுக்கே விளக்கவுரை எழுதற ரேஞ்சில இருக்கார்....

    ReplyDelete
  5. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.....!!!

    ReplyDelete
  6. அந்த காலப் பயணத்தை பற்றிய கதையைப் பற்றிய ஒரு சின்ன பின்னூட்டத்தை இரண்டு பிளஸ் வருடங்களுக்கு முன்னே போட்ட நினைவிருக்குறது. நீண்ட நாட்களுக்கு முன் படித்தது. ஒரு தூண் அதில் வரையப்படும் குறிப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கதையை புரிந்து கொண்டேன். செம கதை. கொஞ்சம் கவனமாப் படிக்கனும்.

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் பதிவுகளில் டமாசு தூக்கலா இருப்பது நல்லாத்தான் கீது.

    ReplyDelete
    Replies
    1. டமாசான பிழைப்பு எனும் போது - இங்கேயும் அது தலைகாட்டட்டுமே !!

      Delete
  8. சந்தாவில் இணைய முயற்சி செய்து வருகிறேன்.
    நிச்சயம் இணைந்து கொள்வேன்.

    ReplyDelete
  9. Replies
    1. இந்தத் தளமே 20வது நபராக இங்கே வருகை புரிவது ஆச்சரியம்தான்! :)

      Delete
    2. தளம் சந்தா கட்டீருச்சாம்ல

      Delete
  10. When can we expect the books. Can we read on new year day. Lot of expectations

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி முதல் தேதிக்கு கூரியர் பட்டுவாடாக்கள் இராதென்பதால் JAN 2 !

      Delete
  11. Oh God my favorite hero thorgal odinson .You have just hyped the story to the other level Sir. I'm just too excited for the book. Which one to read first Barracuda or Thorgal? As u say sir Barracuda's coloring is just another level. Why don't this week comes to an end at this instant and the new year dawns upon us bringing the comics bundle of joy. That too time travel is a concept that intrigues me so so much.

    ReplyDelete
    Replies
    1. தோர்கல் ஏஜிர்சன் சார் !

      Thorgal Aegirsson...

      Delete
    2. Oh Yup sorry sir. I confused this with marvel's Thor.

      Delete
  12. அப்பாடி. ஒரு வழியாய் பதிவிட முடிகிறது. இதுவாவது நிலைக்க கூகுளாண்டவரின் கருணை தேவை.

    ReplyDelete
    Replies
    1. மீண்டு (ம்) வருக நண்பரே..:-)

      Delete
  13. இந்த பதிவை படித்த பிறகு சொல்ல தோன்றுவது காமிக்ஸ் மொழிபெயர்ப்பில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா! Jokes apart பாரகுடா மற்றும் தோர்கல் வருகை ஜனவரியை மேலும் ஆவலை மற்றும் மெருகை கூட்டுகிறது

    ReplyDelete
  14. தோர்கல்லை காண மனம் துடிக்கிறது. ஜல்தியாய் சென்னை புக் ஃபேரில் காணலாம்...

    ReplyDelete
  15. அதிகாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  16. 30 வது.. காலை வண்க்கோம் நண்பர்ஸ்..

    ReplyDelete
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  18. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நலம் விசாரிப்புகளும்,வணக்கங்களும்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் அவ்வாறே...:-)

      Delete
  19. இங்குள்ள நண்பர்களின் சகாயத்தால் பராகுடாவை ஆறு மாதங்கள் முன்பே பிடிஎப் வடிவில் தமிழில் படித்து விட்டேன் இருந்தாலும் புத்தக வடிவில் அதனை கையில் ஏந்தி படிக்க ஆவலோடு உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. திரி கொளுத்தியாச்சு போல..

      Delete
    2. தயை கூர்ந்து இந்தத் தலைப்பு சார்ந்த எண்ணங்களை / கருத்துக்களை / சேதிகளை இனி இங்கே பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் ! எதுவாயினும் நேரடி மின்னஞ்சலாய் மாத்திரமே அனுப்பிடுங்களேன் !

      Delete
  20. எடிட்டர் சார்...

    2019ன் முதல் மாதமே ஒரு 'பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம் நிறைந்த மாதமாக' எங்களுக்கு அமையவிருப்பதை பராகுடா குறித்தும், தோர்கல் குறித்துமான உங்கள் விவரிப்புகளே உள்ளங்கை நெல்லிக்கணியாய் உணர்த்துகின்றன! இவ்விரு கதாசிரியர்களின் சிந்தனா சக்தியையும், அவர்களின் கற்பனைக்கு தூரிகைகளால் உயிரூட்டியிருக்கும் ஓவியர்களின் ஆற்றலையும் எண்ணி எண்ணி வியக்கப்போகும் ஒரு மாதமாக இது அமைந்திடப் போவது உறுதி!

    2019ஐ வரவேற்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?!

    ///"I am very happy!" ///

    ReplyDelete
  21. ஒரு கிராபிக் நாவலை ஆவலாக எதிர் பாா்ப்பெதன்பது இதுவே முதல்முறை
    Waiting for barracuda.. .!

    ReplyDelete
  22. சார் சென்னை புக் ஃபேர் என்ன ஆச்சு

    ReplyDelete
  23. நம் சேந்தம்பட்டி குழுவில் இணைந்திட கார்பீல்டுக்கு எல்லாத் தகுதியும் இருப்பதாகத் தோன்றுகிறது.. ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...

      முதலில் எனக்கு புரியவில்லை...பின் மீண்டும் உற்று கவனித்தவுடன் படாரென சிரித்து விட்டேன்..:-))

      Delete
    2. அதே அகல வாயா சிரிச்சீங்களா

      Delete
  24. எடிட்டர் சார்...

    2019ன் முதல் மாதமே ஒரு 'பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம் நிறைந்த மாதமாக' எங்களுக்கு அமையவிருப்பதை பராகுடா குறித்தும், தோர்கல் குறித்துமான உங்கள் விவரிப்புகளே உள்ளங்கை நெல்லிக்கணியாய் உணர்த்துகின்றன! இவ்விரு கதாசிரியர்களின் சிந்தனா சக்தியையும், அவர்களின் கற்பனைக்கு தூரிகைகளால் உயிரூட்டியிருக்கும் ஓவியர்களின் ஆற்றலையும் எண்ணி எண்ணி வியக்கப்போகும் ஒரு மாதமாக இது அமைந்திடப் போவது உறுதி!

    2019ஐ வரவேற்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?!

    ///"I am also very happy!" ///

    ReplyDelete
    Replies
    1. @ KOK

      புரியுது! நீங்க ரொம்ப பிஸி - அதானே?

      Delete
    2. ஆனா போன் ஒயர் தான் பிஞ்சு ஆறுமாசமாச்சு...:-)

      Delete
    3. ஆனாலும் "தா.த.க.ம." மட்டும் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சிலபல டயலாக்குகள் உருவாகிடாதே போயிருக்கும் !! பிழைச்சோம் !!

      Delete
  25. ஆஹா ஆஹா ....முந்தைய பதிவும் ,இன்றைய பதிவும் புத்தாண்டு இதழ்களை விரைவில் காண மனம் துடிக்க வைக்கிறதே...

    தோர்கலா ,பரகுடாவா ,தலயா...

    பந்தயத்தில் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது ..ஆனால் எவர் முதலிடத்தை பெற போகிறார் என்பதை அறிய மேலும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..


    அதை விட ஆவலாக சந்தா புள்ளிகளின் பரிசாக "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு இதழும் இனைந்து வருமா என்ற சஸ்பென்சும் மனதை துடிக்க வைக்கிறது..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....points சார்ந்த பணிகளெல்லாம் இந்தாண்டின் சந்தாச் சேகரிப்புகள் நிறைவுற்ற பிற்பாடே !! So முதல் மாதமே டப்பிக்குள் துழாவி ஏமாற்றம் கொள்ள வேண்டாமே !

      Delete
    2. ஓ....முன்கூட்டியே தகவலுக்கு நன்றி சார்..!

      Delete
  26. டிஎன்ஏ - வின் இரு ஹெலிக்ஸ் போல சேதிகளும் ஹாஸ்ய உணர்வும் பின்னி பிணைந்து பிரமிக்க வைக்கும் பதிவு!!

    செம!!!!

    ReplyDelete
    Replies
    1. 'பின்னிப் பிணைந்து' என்பதற்கு என்னைப் போன்ற சாதாரண வாசகர்களும் புரிந்துகொள்ளும்படியாக ஏதாவது கிளுகிளுப்பான உதாரணம் கொடுத்திருக்கலாம் நீங்க! ;)

      Delete
    2. சங்கமும், ரவுண்ட் பன்னும் போல .....கோவையும் கவிஞரும் போல ..பொருளாளரும், பொழிப்புரையும் போல ....தலீவரும், தபாலும் போல !!

      இப்போ புரிஞ்சல்லோ ?

      Delete
    3. ///சங்கமும், ரவுண்ட் பன்னும் போல .....கோவையும் கவிஞரும் போல ..பொருளாளரும், பொழிப்புரையும் போல ....தலீவரும், தபாலும் போல !!

      இப்போ புரிஞ்சல்லோ ?///

      ஹா ஹா! செம சார்!
      ஆனாலும் அந்த 'கிளுகிளுப்பு' மிஸ்ஸிங்!;)

      Delete
    4. உங்க எதிர்பார்ப்பே வேற லெவல் .

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. தங்கத் தாலியும் முன்னழகுகளும் போல

      கருநாகப் பின்னல்களும் பின்னழகுகளும் போல


      ......ஈ விளையாட்டு போதுமா....



      Reloaded j

      Delete
  27. அட..அடடா..ஆஹா...

    தோர்கல் பத்தின செய்தியை படிக்கும்போதே உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்குது.

    ReplyDelete
  28. வரவிருக்கும் மாஸ்டர் ஆப் மௌண்டன்ஸ் என்ற தோர்கல் கதை ஒரு காலப்பயணம். அதனில் தோர்கல் சந்திக்கவிருக்கும் நபர்கள்தான் கதையின் knot. இதற்கு மேல் வாசகர்களே புரிந்து கொள்வார்கள்.

    மற்றபடிக்கு 2019 இதழ்களுக்கு (காமிக்ஸ் இதழ்கள் தான் சார் ! ) waiting.

    Either 27ம் தேதி அனுப்பவும் or 2ம் தேதி அனுப்பவும் (ஒரு முறை பரவாயில்லை). 28,29 அனுப்பினால் போன மாசம் மாதிரி தாமதம் ஏற்பட்டால் விடுமுறை தினங்கள் கடுப்படித்து விடக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. 27 சாத்தியமாகாது சார் ; ஜனவரி 1 க்கு பட்டுவாடா செய்ய மாட்டார்களோ ??

      அப்படியானால் முதல் தேதிக்கு இங்கே புக் பண்ணி, மறு தினம் டெலிவரி ஆகும் விதமாய் ஏற்பாடு செய்ய வேண்டியது தான் ! விடுமுறைகளுக்கு எங்கேனும் சென்றிருப்போர் கூட ஊர் திரும்பியிருப்பார்கள் தான் அந்நேரத்துக்கு !

      Delete
    2. First jan is mostly a holiday for new year. You may even be unable to book it.

      Delete
  29. எடிட்டர் சார்...

    2019ன் முதல் மாதமே ஒரு 'பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம் நிறைந்த மாதமாக' எங்களுக்கு அமையவிருப்பதை பராகுடா குறித்தும், தோர்கல் குறித்துமான உங்கள் விவரிப்புகளே உள்ளங்கை நெல்லிக்கணியாய் உணர்த்துகின்றன! இவ்விரு கதாசிரியர்களின் சிந்தனா சக்தியையும், அவர்களின் கற்பனைக்கு தூரிகைகளால் உயிரூட்டியிருக்கும் ஓவியர்களின் ஆற்றலையும் எண்ணி எண்ணி வியக்கப்போகும் ஒரு மாதமாக இது அமைந்திடப் போவது உறுதி!

    2019ஐ வரவேற்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?!

    ///"I am very happy!" ///

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ரெம்ப பிஷியாக்கும்?!!

      Delete
  30. Adata புது varutathuku cartoon இல்லயே. Baraguda Baraguda.மனசு thutikuthu கருர் ராஜா sekaran

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன் இல்லை என்பதொரு குறை தான் சார் !! நெருடத் தான் செய்கிறது !

      Delete
  31. என் ஆர்வம் முழுவதும் பராகுட மீது மட்டுமே ஏனெனில் புதிய வரவு இவர்தான். இவற்றில் மொத்தம் எத்தனை தொடர்கதைகள் உள்ளது ஆசிரியர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாகங்கள் 6 கொண்ட ஒற்றைத் தொடர் சார் ! முதல் மூன்று ஜனவரியில் ; தொடர்ச்சியின் 3 அநேகமாய் ஏப்ரலில் !

      Delete
    2. //பாகங்கள் 6 கொண்ட ஒற்றைத் தொடர் சார் ! முதல் மூன்று ஜனவரியில் ; தொடர்ச்சியின் 3 அநேகமாய் ஏப்ரலில் !//

      ஏப்ரலில் மீதி உள்ள பாகங்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி சார்...

      Delete
    3. //பாகங்கள் 6 கொண்ட ஒற்றைத் தொடர் சார் ! முதல் மூன்று ஜனவரியில் ; தொடர்ச்சியின் 3 அநேகமாய் ஏப்ரலில் !//

      ஜம்போ 2 விலா?

      Delete
  32. அனைவருக்கும் வணக்கம் . பாராகுடாவும் தோர்கலும் ஆர்வத்தை தூண்டுகின்றனர்

    ReplyDelete
  33. ஆசிரியர் & நண்பர்களுக்கு வணக்கம்
    எனது நிலைமையை ஆசிரியர் தளத்தில் தெரிவித்தவுடன் நண்பர் பெங்களுர் பரணி களத்தில் இறங்கினர் அவர் மட்டுமல்லாது நம் நண்பர்கள் காமிக்ஸ் மார்க்கெட் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் புத்தகங்கள் ஏலம் மூலமாக அவர்களும் களம் இறங்கினார்கள் முகமறியா நண்பர்கள் பலரும் எனக்கு போட்டி போட்டுக்கொண்டு உதவினார்கள் பெங்களுர் பரணியின் காமிக்ஸ் அல்லாத நண்பர்களும் உதவினார்கள் காமிக்ஸ் மார்க்கெட் வாட்ஸ் ஆப் குரூப்பில் எனக்காக புத்தகங்கள் ஏலம் விடுவதும் ஏலம் எடுப்பதன் மூலமாக அவர்களும் உதவ எனக்கு வந்த உதவித்தொகை 67.250 குவிந்தது அதன் மூலம் கடந்த வெள்ளியன்று இரவு 7.30 மணிக்கு எனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன் இது நம் நண்பர்கள் இல்லையென்றால் சாத்தியமாகியிருக்காது நண்பர் பெங்களுர் பரணி நான் என் மனைவியை வீட்டுக்கு அழைத்து வரும் கடைசி நிமிடம் வரை என்னுடன் தோள் கொடுத்து நின்றார் இந்த காமிக்ஸ் உலகம் இதுவரை விஜயன் எனும் மூத்த சகோதரரை தந்தது இப்போது பரணி இளைய சகோதரரையும் மற்றும் பல உயிர் நண்பர்களையும் தந்திருக்கிறது இதற்க்கெல்லாம் என்ன கை மாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை தவம் செய்திருக்கிறேன் இப்பேர்ப்பட்ட மனிதர்களை பெற நன்றி ஆண்டாவா
    ஆசிரியர் & நண்பர்களுக்கு
    எனது வாழ்நாள் நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி செந்தில் சத்யா!

      முனைப்புடன் செயல்பட்டு கணிசமான நிதியுதவி கிடைத்திட பெரும்பங்காற்றிய PfBக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்!!

      Delete
    2. உங்களை போன்ற நண்பர்களின் ஆறுதல்கள் எனக்கு ரொம்பவும் தெம்பை தந்தது செயலாளரே
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    3. மகிழ்ச்சி செந்தில் சத்யா!

      PfBக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்!!

      Delete
    4. ஈரோட்டில் சந்தித்த மற்றும் இந்த தளத்தில் உரையாடியதன் மூலம் கிடைத்த நண்பர்கள் அனைவரையும் whatsup மூலம் தகவல் சொன்ன உடன் எந்த கேள்வியும் கேட்காமல் அடுத்த வினாடி பண உதவி செய்த நண்பர்கள்; அதே போல் நான் தொடர்பு கொண்ட சில நண்பர்களை இதுவரை நேரில் கூட பார்த்து இல்லை ஆனால் இது போன்ற ஒரு சூழல் என்ற உடன் தங்களால் முடிந்த உதவியை செய்தது எல்லாம் காமிக்ஸ் என்ற ஒத்த வார்த்தையால் மனதளவில் நாம் இணைந்ததை தவிர வேறு எதுவும் இல்லை. இதில் எனது பங்களிப்பு என்பதை விட நமது நண்பர்களின் பங்குதான் முதன்மையானது. நன்றி நண்பர்களே.🙏🙏🙏🙏

      Delete
    5. நண்பர் செத்தில் சத்யா மிக மிக மகிழ்ச்சி...உதவிய நண்பர்களுக்கும் ,முன்னெடுத்த நண்பர் பெங்களூர் பரணி அவர்களுக்கும் மனமீர்ந்த வாழ்த்துகள்...

      Delete
    6. நல்லது நடக்கும்...நல்லதே நடக்கும்.

      (நன்றி. கரூர் குணா).

      Delete
    7. மகிழ்ச்சி செந்தில் சத்யா!

      முனைப்புடன் செயல்பட்டு கணிசமான நிதியுதவி கிடைத்திட பெரும்பங்காற்றிய PfBக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்!!

      Delete
    8. வாசிப்புகளையும் தாண்டி நிலைக்கப் போவது இவ்வித நேசிப்புகளே என்பது இன்னொருமுறை நிரூபணமாகியுள்ளது !! சூப்பர் !!

      Delete
    9. உயிருள்ளவரை இந்த உறவுகள் நிலைத்திருக்க வேண்டும் ஆண்டவனே

      Delete
  34. spGK

    ஆன்லைன்ல மற்ற எல்லா புக்கையும் தனியாக வாங்குவது உங்களுக்கு டெக்ஸ் சந்தாவை சேத்துகட்டுவதை விட அதிகம் வருட செலவு ஆகும். பேசாம சந்தாவை கட்டிட்டு புக்கை வாங்கிக்குங்க. வருடக் கடைசில எல்லா டெக்ஸ் புக்கையும் (மினி கலர் டெக்ஸ் உள்பட) உங்களிடமிருந்து ்நான் விலைக்கு வாங்கிக்கறேன். நீங்களும் மாதம் ஒரு தடவை படிச்சுட்டு டெக்ஸை கழுவி ஊத்தலாம். நம்ம எல்லாருக்குமே செம வின் வின் ஆப்சன் இது. டீலுக்கு நீங்க ஓகேயா?////

    டீலை ஏற்று கொண்டு போன வாரம் சந்தா கட்டி விட்டேன்.

    டெக்ஸின் "சாத்தானின் சீடர்கள்" எவ்வளவு சாத்து வாங்குதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு அந்த சீடர்கள் தான் சாத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் !!

      Delete
  35. எடிட்டர் சார்...

    2019ன் முதல் மாதமே ஒரு 'பிரம்மிப்பான வாசிப்பு அனுபவம் நிறைந்த மாதமாக' எங்களுக்கு அமையவிருப்பதை பராகுடா குறித்தும், தோர்கல் குறித்துமான உங்கள் விவரிப்புகளே உள்ளங்கை நெல்லிக்கணியாய் உணர்த்துகின்றன! இவ்விரு கதாசிரியர்களின் சிந்தனா சக்தியையும், அவர்களின் கற்பனைக்கு தூரிகைகளால் உயிரூட்டியிருக்கும் ஓவியர்களின் ஆற்றலையும் எண்ணி எண்ணி வியக்கப்போகும் ஒரு மாதமாக இது அமைந்திடப் போவது உறுதி!

    2019ஐ வரவேற்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?!

    "I am very happy!"

    ReplyDelete
    Replies
    1. அக்கட ஹேப்பி என்றால் இக்கடேயும் ஹேப்பி சார் !

      Delete
  36. தோர்கல் கதையை விட, அதன் பிறகு விமர்சனம் செய்யவும். பிறகு விமர்சனங்களின் விவாதங்கள் செய்யவும் ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கவலையே வேண்டாம் சார் ; உங்கள் ஆர்வம் நிஜமாகிடப் போகும் வேளை அதிக தொலைவில் இல்லை !

      Delete
  37. தோர்கல் எங்கள் குடும்பத்தில் ஒருவர். இவரை ஆரவாரமுடன் எட்டு கரங்களை தட்டி சந்தோஷமாக வரவேற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ///தோர்கல் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ///

      ரேஷன் கார்டில் பெயரை இணைத்துவிட்டீர்களா? :D

      Delete
    2. பிரபஞ்சத்தின் புதல்வரை ரெசன் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேண்டாம் என்று அவர் பெயரை ரெசன் கார்டில் சேர்க்க வில்லை:-)

      Delete
    3. ///பிரபஞ்சத்தின் புதல்வரை ரெசன் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேண்டாம் என்று அவர் பெயரை ரெசன் கார்டில் சேர்க்க வில்லை:-)///

      அடடா...அடடா...!

      சோறாவது போடுவீங்களா ..இல்லை பிரபஞ்சத்தின் புதல்வருக்கு பசிக்காதுன்னு நினைச்சி விட்ருவீங்களா.!? :-)

      Delete
    4. // சோறாவது போடுவீங்களா ..இல்லை பிரபஞ்சத்தின் புதல்வருக்கு பசிக்காதுன்னு நினைச்சி விட்ருவீங்களா.!? :-) //

      பிரபஞ்சத்தின் புதல்வன்தான் நமக்கு எல்லாம் சோறு போடுபவர். அவருக்கு சோறு இல்லாமலா:-)

      Delete
    5. பெருசாகிப் கொண்டே போகும் குடும்பம் சார் - தோர்கலது !! உங்கள் வீட்டில் இடம் ஒதுக்குவதாயின் கணிசமான இடம் தேவைப்படும் !!

      Delete
    6. ////பெருசாகிப் கொண்டே போகும் குடும்பம் சார் - தோர்கலது !! உங்கள் வீட்டில் இடம் ஒதுக்குவதாயின் கணிசமான இடம் தேவைப்படும் !!////

      @PfB

      இப்படி குடும்பத்தை பெருசாக்கிட்டேஏஏ போனீங்கன்னா.. இன்னும் ரெண்டு மூனுவருசத்துக்கப்புறம் EBF வாசகர் சந்திப்புக்கு நீங்க குடும்பத்தோட (லாரிகள்ல) வந்து இறங்கும்போது, உங்கள் குடும்ப உறுப்பினர்க்காகவே ஒரு கல்யாண மண்டபத்தை புக் பண்ண வேண்டியிருக்கும் போலிருக்கே?!! ;)

      Delete
    7. யாரு கண்டா?!.. இன்னும் கொஞ்சநாள்ல இவர் தன் ப்ரொஃபைல் ஐடியை 'Parani from பிரபஞ்சம்'னு மாத்திவச்சுக்கிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே!

      Delete
    8. அட அதைவிடுங்க...
      ரவுண்டு பன்னு எத்தனை லோடு கொண்டு வர்ரது ..எடிட்டர் பாவமில்லையா ..!?

      அப்புறம் அவங்களுக்கே சில பிரச்சினைகளும் இருக்கே ..
      ஒரு நல்லநாள் பண்டிகைன்னா கறியெடுக்கனும் துணியெடுக்கணும் குளிக்கணும் (இதை வேண்ணா சாய்ஸ்ல விட்டுடடலாம்).!

      ஒவ்வொரு ஞாயிறும் ஒரு பட்டி ஆடு தேவைப்படுமே ...
      பரணியின் நிலையை நினைச்சா......:-)

      Delete
    9. @ KOK

      ஹா ஹா ஹா!! :)))

      ///பரணியின் நிலையை நினைச்சா......///

      அப்புறமென்ன.. ப்ரொஃபைல் ஐடியை 'Parani to காசி, ராமேஸ்வரம்'னு மாத்திக்கிட வேண்டியதுதான்! :)

      Delete
    10. இரண்டு புதிய profile பெயர்களும் நன்றாக உள்ளது. ஏற்கனவே காசி, ராமேஸ்வரம் சென்று வந்ததால் இரண்டாவது profile பெயர் தேவைப்படாது.

      Version 2.0க்கு Parani from பிரபஞ்சம் பயன்படுத்தி கொள்கிறேன்.

      அப்புறம் இந்த பன்னு கறி எல்லாம் பற்றி கவலை பட வேண்டாம். நம்ப பிரபஞ்சத்தின் புதல்வன் அமிர்த கலசம் வைத்துள்ளார்; so don't worry.

      அப்பறம் பிரபஞ்சமே தனது இல்லமாக கொண்ட தோர்கல் குடும்பத்திற்கு குடிசை தேவையில்லை :-)

      Delete
    11. ///பிரபஞ்சத்தின் புதல்வன் அமிர்த கலசம் வைத்துள்ளார்; ///

      பிரபஞ்சத்தின் புதல்வனை ஏன் குடும்ப உறுப்பினராக சேர்த்திக்கிட்டீங்கன்னு இப்பத்தானே புரியுது! :D

      Delete
    12. அடடே ...இது தெரிஞ்சிருந்தா நானும் தோர்கலுக்கு ஆதார் கார்டு ரேசன் கார்டு விசிட்டிங் கார்டு ப்ளேயிங் கார்டுன்னு எல்லா கார்டையும் வாங்கி என் குடும்பத்துல சேர்த்தியிருப்பேனே.....வடை போச்சே ..!:-)

      Delete
    13. // ...வடை போச்சே ..!:-) // very late:-)

      Delete
  38. “குஞ்சாய்ன்… பூ மிதிக்க சித்தே வரணுமே !” என்று மைதீன் தலைகாட்டினான் !

    ஹா..ஹா...! சத்தியமாய் வாய் விட்டு சிரித்து விட்டேன் எடிட்ரே..!

    ReplyDelete
    Replies
    1. கரூரிலும் ஒரு பூ மிதி ஏற்பாடாகாமலா போய் விடும் ? குஞ்சாய்ன் !!

      Delete
  39. காலப்பயணம் ..மனிதனின் கற்பனைகளிலேயே தலை சிறந்த கற்பனை இந்த காலப்பயணம்தான் என்பேன் .முடியுமா..காலத்தின் ஊடே மனிதன் பயணம் செய்தல் சாத்தியம்தானா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.என்றாலும் இந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வைத்துக்கொண்டு எத்தனை கதைகள் சினிமாக்கள் ..இறந்த காலமோ எதிர்காலமோ எதனுள்ளும் நம்மால் போகவே முடியாதுதான்.ஆனால் படைப்பாளிகள் காலம் கடந்தவர்கள் .நிஜம்போலவே நம்பவைத்து கதைகள் பண்ணுவதில் சாமர்த்தியசாலிகள்.
    வான்ஹம் போன்ற மேதைகள் கையில் தோர்கல் காலப்பயணியாக மாறுகிறார் என்றால் அதகளம் தான் .ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே "காலப் பயணம்" என்பதோடு இன்னொரு பிரமிப்பூட்டும் விஷயமுமே கையாளப்பட்டுள்ளது சார் ! In fact - அது தான் கதையின் ஜீவ நாடி கூட !!

      Delete
  40. 2017-க்கு ஐந்து புள்ளிகள் ஆனால் 2018-க்கு நான்கு மட்டுமா? ஏன் அப்படி?

    2019-ம் ஆண்டு அனைத்திற்கும் சந்தா செலுத்தியாகவிட்டது. எத்தனை புள்ளிகள்.

    ReplyDelete
    Replies
    1. புள்ளி ராஜாவைத் தான் கேக்கணும் சாரே

      Delete
  41. அப்போ பாகம் ஒன்னு லயனிலும் பாகம் இரண்டு புதிய ஜம்போவிலும் வருதா ? :-) ஒரே வருடத்தில் வெளியிடுவது சிறப்பு சார். ஆறும் தனிக்கதைகளா அல்லது முழுத்தொடரா ?

    ReplyDelete
  42. விஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழாவில் நமது பற்கேற்பு பற்றி சொல்ல முடியுமா?

    ReplyDelete
  43. // தலீவர் போன்ற சில சாத்வீக ஜீவன்களின் நலன் கருதி நான் எழுதிப் பார்த்த அந்தக் காலகட்ட அட்டவணைகளையும் இதழில் புகுத்தியுள்ளேன் – கதையின் இறுதிப் பக்கத்தில //

    சொக்கா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ///சொக்கா இருக்கும்.///

      அந்த பேன்ட்டுக்கு மேலே போடுவோமே அதுவா. .!!? :-)

      Delete
    2. // அந்த பேன்ட்டுக்கு மேலே போடுவோமே அதுவா. .!!? :-) //

      சோக்கா இருக்கீதே :-)

      Delete
    3. எந்த பேண்ட்டுக்கு மேலே....... (ஜட்டி போட்ற சூப்பர்மேன்களா)

      Delete

  44. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

    அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
    🎂🎂🎂🎂🎂
    💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

      அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
      🎂🎂🎂🎂🎂
      💐💐💐💐💐

      Delete
    2. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

      அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
      🎂🎂🎂🎂🎂
      💐💐💐💐💐

      Delete
    3. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

      அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
      🎂🎂🎂🎂🎂
      💐💐💐💐💐

      Delete
    4. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

      அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
      🎂🎂🎂🎂🎂
      💐💐💐💐💐

      Delete
    5. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

      அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
      🎂🎂🎂🎂🎂
      💐💐💐💐💐

      Delete
    6. ஆனாலும் இந்த copy - paste மட்டும் இல்லாங்காட்டி - ரெம்போ கஷ்டமாகிப் போயிடும் போலிருக்கே !!

      Delete
    7. ஆனாலும் இந்த copy - paste மட்டும் இல்லாங்காட்டி - ரெம்போ கஷ்டமாகிப் போயிடும் போலிருக்கே

      ₹₹####


      ஹாஹாஹா...:-)))

      Delete
    8. பேஸ்ட்டுக்கு அப்புறம், .காபி தானே கரெக்ட்

      Delete
    9. ஹிஹி.... நம்ம ஆட்களோட வந்து ஓரிரு நாள் தங்கிப்பாருங்க சார் ..புரியும் ...

      காப்பி, டிபன் லஞ்சுச்கு அப்புறம் டின்னர்தான் ..பேஸ்ட்டே கிடையாது..! :-)

      Delete
    10. ஈரோட்டை பார்த்தப் பார்த்து ஒருத்தருக்கு பேஸ்ட்டை சாப்டுட்டு இருந்தாரே...

      Delete
  45. ஐயா திரு சௌந்திர பாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
    🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  46. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் பிதாமகர் சௌந்திரபாண்டியன் ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்..
    🎂🎂🎂🎂🎂
    💐💐💐💐💐

    ReplyDelete
  47. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீனியர் எடிட்டர் சார்..

    ReplyDelete
  48. Wish u many more happy returns of the day சௌந்திரபாண்டியன் sir!!!

    ReplyDelete
  49. இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களை வணங்கி விட்டு வாழ்த்துகிறேன்.(எத்தனை நாளைக்குதான் வாழ்த்த வயதில்லை'னு சொல்லுவோம்.நமக்கும் வயசாசகுதில்ல)

    ReplyDelete
  50. சில நாட்களுக்கு முன்பு செனாஅனா இங்கே 007ன் கதையில் வந்த சம்பவங்களைக் கொண்டு கலாய்த்து ஜோக்ஸ் எழுதியிருந்தார்! அதை நான் ரொம்பவே ரசித்தேன்! காமிக்ஸ் படித்து அதில் வரும் சம்பவங்களைக் கலாய்த்து கூட ஜாலியாய் எழுதி சிரிக்கவைக்க முடியும் என்று நான் கற்றுக்கொண்ட நாள் அது! நன்றிகள் செனா அனா!

    செனாஅனா கற்றுத்தந்த வழியில், கீழே:

    *** ச்சும்மா ஜாலிக்காண்டி ***

    இயந்திரன் : எதிரியின் கார் 120 கி.மீ வேகத்துல போகுது.. என் உடலின் இயங்குதிறனை இன்னும் 30% கூட்டினால் மட்டுமே அந்தக் காரை நான் ஓடிச்சென்று எட்டிப்பிடிக்க இயலும்னு என் தலையில் பதிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் சிப் சொல்லுது! ஆங்.. இதோ அதிகப்படுத்திக்கிட்டேன்.. இதோ கிளம்பிட்டேன்.. விர்ர்ர்ர்ர்... ஹா ஹா.. பிடிச்சுட்டேன்..

    சாதா மனிதன் : என் வூட்டுக்காரம்மாவின் கையிலிருந்து கிளம்பிய அந்தப் பூரிக்கட்டை என் மண்டையை நோக்கி மணிக்கு 140 கி.மீ வேகத்துல வந்துக்கிட்டிருக்கு! உடனே நான் 150 கி.மீ வேகத்துல என் மண்டையைத் தாழ்த்திக்கிடலேன்னா 473வது தடவையா இன்னிக்கும் என் கபாலத்துல விரிசல் விழ வாய்ப்பிருக்குன்னு என் சிறுமூளை சிணுங்குது! என் வூட்டுக்காரம்மா வைத்த குறி இதுவரை தப்பியதே இல்லைன்றதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகணும்! ஆனா இன்னிக்கு அந்த வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இருக்கிறேன்... இதோ நான் மண்டையை இப்படி சட்டென்று குனிந்.. தடால்... ம்ப்ப்ப்... யெஸ்..473! எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வருது.. விழித்தெழுந்ததும் பிறகு பேசுகிறேனே? பை!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...

      கற்பனை கதாபாத்திரங்களுடன் நமது அனுபவ கதைகளும் ஒரு சேரும் பொழுது அதன் சுவையே தனிதான்..:-)

      Delete
    2. நாற்பது வருச குடும்ப வரலாற்றுல வெறும் 473 தடவைகள் தானா...!?

      குடுத்து வெச்சவர் குருநாயரே நீங்க..!!

      Delete
    3. ///நாற்பது வருச குடும்ப வரலாற்றுல///

      பிறந்தவுடனே எனக்கு கண்ணாலங்கட்டி வச்சுட்டாங்கன்னு நினைக்கறீங்களா?!!
      ஹூம்... அப்படியெதுவும் நடக்கலை!

      //வெறும் 473 தடவைகள் தானா...!?///

      என்னோட கீபேடில் ஏதோ பிரச்சினை போலிருக்குங்க kok.. குறிப்பிட்ட சில எண்கள் எவ்வளவு அழுத்தினாலும் விழமாட்டேன்றது!

      ///குடுத்து வெச்சவர் குருநாயரே நீங்க..!!///

      ஹிஹி! உங்க நம்பர் பெருசு போலிருக்கே!! அடுத்த மாசம் வரப்போற '3 மில்லியன் ஹிட்' ஸ்பெஷலுக்கும் உங்களுக்கும் எதுனாச்சும் தொடர்பிருக்குங்களா? ;)

      Delete
    4. /// அடுத்த மாசம் வரப்போற '3 மில்லியன் ஹிட்' ஸ்பெஷலுக்கும் உங்களுக்கும் எதுனாச்சும் தொடர்பிருக்குங்களா? ;)///

      எதுனாச்சும் தொடர்பா ...வாய்ல அடிங்க வாய்ல அடிங்க ...3 மில்லியன் ஹிட்ஸே எனக்கு நடந்ததுதான்...!

      ஆனா ஒரு விதத்துல பரவாயில்லை குருநாயரே ...எல்லாம் உள்காயம்ன்றதாலே வெளியே தெரியாம நான் தப்பிச்சிக்கிறேன்.!

      Delete
    5. இது தைரியமா வெளியே சொன்ன காரணத்திற்காக மூணுமில்லியனோ ஒண்ணு வாங்கி புறமுதுகிட்டு ஓடி வந்து ( ஓட்டப்பந்தயத்தில் நம்பள ஜெயிக்க முடியுமா ) ‌‌‌‌‌‌‌‌‌........

      Delete
  51. அரும்பாக யாமிருந்த காலத்தில்
    இரும்புக்கை மாயாவி எமக்கீந்தாய்
    பெருமகனே ..அறிமுகம் அத்தோடா ?
    இருபெரும் தீரர் லாரன்ஸ் டேவிட்
    ஜானி நீரோ ஸ்டெல்லா வேதாள மாயாத்மா
    தமிழ் கூறும் நல்லுலகம் அதுவரையும் அறியாத பேரை
    தமிழ் பேச வைத்திட்டாய்
    முத்தான செந்தமிழில் காமிக்சை உருவாக்கி
    முத்தென்றே பேரிட்டாய் முழுமூச்சாய் உழைத்திட்டாய்
    முதல்வனே மூத்தவனே -இன்று
    முன்னணியில் லயன் இருக்க பின்னணியில் நீ இருக்க
    சாதனைகள் சரித்திரங்களாக உன்னை அடைய
    என்ன தவம் செய்தோமோ நாங்கள் உன்னை அடைய
    சவுந்திர பாண்டியனார் பிறப்பெடுத்தார்
    தமிழ் காமிக்ஸ் மகிழ்ந்தது வாழிய பெருமானே நீடூ ழி !
    வார்த்தைகள் போதாது உன்னை வாழ்த்த ..வாழிய நீடு !

    ReplyDelete
    Replies
    1. அருமையான, அழகான, இனிமையான, பொருத்தமான வாழ்த்து மடல்!

      Delete
    2. அழகு தமிழ் படிக்கவே இனிமையாக இருக்கிறது..!

      வாழ்த்துகள் கவிஞரே ..!

      Delete
    3. அருமை...!
      அற்புதம்..!
      அட்டகாசம்...!
      அமர்க்களம்..!

      Delete
    4. ஐக்தாவது வரியில் மூன்றாவது வார்த்தை...கவித.. கவித.. (கர்சீப் ப்ளீஸ்) ..ஹி..ஹி. அந்த ஒரு வார்த்தையால முழு கவிதையுமே ரம்யமாகத் தெரிவது எனக்கு மட்டும்தானா?

      Delete
    5. @Padmanaban Ramadurai

      ஹா ஹா! செம & உண்ம!! :))))))))

      Delete
    6. ஸ்வப்ன சுந்தரி ஸ்டெல்லா ரசிகர் மன்றம் சார்பாக (ஸ்க்கு... ஸ். சரியா வரும்)க விஞர்க்கு கவி நிலவு (திங்கள் அன்று கவி பாடியதால்) என்று பட்டம் வழங்குகிறோம்.

      Delete
  52. புத்தகம் அடங்கிய பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த போது, டெக்ஸின் ஆவியின் ஆடுகளம் மீண்டும் ஒருமுறை வாசிக்க முடிந்தது.. நிறைவான கதை..

    ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை..

    டெக்ஸ்க்கு முன்பே, கார்சன் புகழ் பெற்ற ஒரு ரேஞ்சர்.. சின்ன சின்ன விசயங்கள் கூட அவரது கவனத்துக்கு வராதது போல கதையமைப்பில் உள்ளதும், நிறைய இடங்களில் டெக்ஸ், கார்சனுக்கு விளக்கம் கொடுப்பது போலவும் இருக்கின்றன.

    இது கிட்டத்தட்ட அனைத்து கதைகளிலும் வருகின்றன..

    மெய்ன் கேரக்டர் டெக்ஸ்ஸுக்காக கார்சனின் கேரக்டரை கொஞ்சம் நகைச்சுவைக்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதா?? அல்லது வயதானதால் அவரது செயல்பாடுகள் குறைந்து விட்டது போல் காட்டப்படுகிறதா..??

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு சரவணரே ..!

      Delete
    2. யோசிக்க வேண்டிய கருத்தே..:-)

      Delete
    3. டைகரின் இளமைக் கால கதையான 'காதலும் கடந்து போகும்'ல கூட டைகரை கம்முனு உட்கார வச்சுட்டு டெக்ஸுதான் முழுக்கதையையும் சொன்னாப்ல. நடுநடுவே டைகரிடம் 'இதுக்குமேல சொல்றதுக்கு உனுக்கு எதுனாச்சும் அப்ஜெக்சன் உண்டா டைகரு?'னு ஒரு ஃபார்மாலிட்டிக்கு கேட்டுக்கிட்டதோட சரி!

      யாரு நல்லா கதைவுடுவாங்களோ அவங்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுதுன்னு தோனுது!

      Delete
    4. ஆனாலும் கார்சன் பிரமாதமான பாத்திரம் படைப்பே....


      பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் போல.....
      (ஆழ்வார்க்கடியான் இல்ல)...

      Delete
    5. டெக்ஸ் ரேஞ்சராய் தொடர்வதும் ; கார்சன் பணியில் இல்லாத போதிலும், சில ஸ்பெஷல் கேஸ்களுக்கோசரம் அழைக்கப்படுவதும் - "சாத்தானின் சீடர்கள்" கதையில் சொல்லப்பட்டிருக்கும் சார் !

      Delete
  53. சார்...புத்தாண்டு இதழ்களை இரண்டாம் தேதி வாக்கில் அனுப்புவதாக சொல்லி உள்ளீர்கள் .அதனை முன்கூட்டியே அனுப்பி இம்மாதம் 30 ,31 அன்று கிடைக்குமாறு அனுப்பினால் அந்த இருநாட்கள் இதழ்களை ரசிக்கவும் ,புத்தாண்டு அன்றே இதழ்களுக்குள் நுழைந்து தரிசனம் செய்யவும் முடியுமே ..

    கொஞ்சம் முடியுமானால் முயற்சி செய்யுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. நானுமே ஜனவரி புத்தகங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுடன் கடந்த நான்கு மாத புத்தகங்களையும் சேந்தம்பட்டி நண்பர் அனுப்பி வைக்கப் போகிறார். டைனமைட்டையும்,தீபாவளி டெக்ஸையும் தரிசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்

      இவற்றில் கண்ணர் மொழி பெயர்த்த கதைகளும் இருப்பதால் இன்னும் ஆவல் அதிகமாக உள்ளது.

      Delete
    2. தலீவரே... சனவரி மாசம்றது 'பழைய சந்தா கழிதலும் - புதிய சந்தா புகுதலும்' நேரம்றதால புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கும் பணிப்பெண்களை வச்சு குழப்பம் நேராம சந்தா சமாச்சாரங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர சற்றே அதிக கால அவகாசம் தேவைப்படும்! அடிச்சுப் பிடிச்சு கடைசி நேரத்துல சந்தா புதிப்பிக்கற நண்பர்களும் கணிசமா இருப்பாங்க! அவங்களையும் மிஸ் பண்ணிடக்கூடாது! இன்னொரு பக்கம் CBFக்கான ஏற்பாடுகளையும் கவனிக்கணும்!

      நடைமுறை சிக்கல்கள் நிறைய எழும் மாதமிது என்பதால் நாம் சற்று பொறுமை காக்கவேண்டியதிருக்கலாம்!

      Delete
    3. இதுவும் நியாயந்தான் ..!!

      இதுக்கும் ஒரு

      +1

      Delete
    4. ஒ...செயலரே..

      புரிகிறது...

      முடிந்தால் ..

      மட்டுமே...


      நோ..கவலை...


      பின்குறிப்பு : ( இது கவிதை அல்ல )

      Delete
    5. தலீவருக்கு ரெட்ட ரவுண்டு பன்னோய்ய்ய்....

      Delete
  54. வங்கிய சேகர பாண்டியன் மதுரையை ஆண்ட காலம் ...
    படைப்பு கடவுள் ப்ரம்மா தனது மனைவிகள் சாவித்திரி ,காயத்ரி, சரஸ்வதி ஆற்றங்கரை நோக்கி செல்ல சரஸ்வதி இழைக்கும் ஒரு சிறு பிழையால் சரஸ்வதிக்கு ப்ரம்மா ஒரு சாபம் இடுகிறார் ..
    48 புலவர்களாக –சாபப்படி – சரஸ்வதி மண்ணில் அவதரிக்கிறார் ..
    ( கோவை ,ஈரோடு பகுதியை ஏனோ தவிர்த்த ) சரஸ்வதி மதுரை மண்ணில் 48 புலவர்களாக தோன்றுகிறார்
    பின்னாளில் மதுரை சுந்தரேஸ்வரர் (ஈசன் ) அவர்களுக்கு ஒரு சங்க பலகை அளிக்கிறார் .
    ஒருவர் மட்டுமே அமரக்கூடிய அப்பலகை தகுதி வாய்ந்தவர் ஏறினால் அவர்களுக்கு நீண்டு இடமளிக்கும் ...
    48 புலவர்களுக்கும் நீண்டு இடமளித்த அப்பலகை பின் மற்ற தகுதி வாய்ந்தோருக்கும் இடமளித்தது..
    முதன்முதலில் அப்பலகையில் ஏறியோர் நக்கீரர் மற்றும் பரணர் என சொல்வர் ...
    ஒருவேளை
    கலியுகத்தில் தமிழ் காமிக்ஸ் –க்கு கடவுள் ஒரு சங்க பலகை அளித்திருக்க கூடுமாயின் அதே மதுரை மண்டலத்தில் பிறந்த திரு சௌந்திர பாண்டியனார் அதில் முதல் ஆளாக உட்கார்ந்தவர் என்ற பெயரை பெற்று இருப்பார் ..
    பின்னாளில் பல தகுதி வாய்ந்தோரும் அப்பலகையில் அமர தற்போது நமது எடிட்டர் வரை பலகை நீண்டு இருக்கிறது ...
    எனினும் முதலில் அமர பூரண தகுதி பெற்றவர் திரு சௌந்திர பாண்டியனார் பெருந்தகைக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் மரியாதைகளும் .

    ReplyDelete
    Replies
    1. ஆங்! செம ஐடியா!! அடுத்த EBF ஃபங்சன்ல மேடையிலேயே ஒரு நீளமான பலகையைப் போட்டு, மொத்த எடிட்டர் சமூகத்தையும் அதிலே உட்கார வச்சுப் பார்த்துப்புடணும்!

      Delete
    2. எப்டி...இந்த சீ-சா பலகை மாதிரியா ?

      Delete
  55. செ. அனா ஜி.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  56. Dear Edi,

    Man of Mountains is indeed a twist to the time machine fantasy... Good to see it finally making it's appearance in Lion/Muthu. Remember reading it on Cinebook edition back in 2010, and the memories are still afresh.

    Credits should go to your patience and determination of wading through bad reviews for first Thorgal albums among Tamil readers, and in one point of time, I was afraid we would discontinue this golden series without Tamil readers ever knowing about the gems in the series, which was to follow. Good to see a different sci-fi+Viking+mythology+supernatural all-in-one comics series, finally embraced by our fraternity.

    ReplyDelete
    Replies
    1. தோர்கலிடம் அதீத பொறுமை காட்டத் தோன்றியது அந்த fantasy ஜானரின் பொருட்டே சார் ! கார்ட்டூன்களில் ஒன்று சுமாராய்ப் பட்டாலும், வேறொன்று அதனிடத்தை இட்டு நிரப்ப உண்டு ! கௌபாய் கதைகளிலும் இதே நிலை ! But நம்மிடம் fantasy தொடர்கள் மருந்துக்கும் வேறெதுவும் இல்லையெனும் போது அதனை கொஞ்சம் பொறுமையாய்க் கையாள்வோமே என்று பட்டது ! And ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கு 'ஜே'!!

      Delete
  57. மாடஸ்டியின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  58. அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

    ReplyDelete
  59. Replies
    1. அனைவருக்கும் நமது XMAS வாழ்த்துக்களும் உரித்தாகுக !!

      Delete
  60. I read the first 8-10 Cinebook Thorgal albums in one binge sitting (8-10 days). When it came to Master of Mountains I was totally shocked !

    Yep - in fact, even now, after the series becoming a hit with our readers, I am nervy about how Master of Mountains would pan out with our fans. We will know soon but the twist - the knot - is just too wonderful this time :)

    ReplyDelete
    Replies
    1. Waiting... I will be back to Bangalore on 31. If we get the book atleast on 31st I am happy

      Delete
    2. // I am nervy about how Master of Mountains would pan out with our fans.//

      !!!!

      Delete
  61. Belated birthday wishes to Sri.Sowndarrajan senior editor

    And happy Christmas wishes to beloved Mr.Karunaiyanandham

    God bless you sirs

    ReplyDelete
    Replies
    1. திருத்தங்கள் 2 சார் !

      சௌந்திரபாண்டியன்...not சௌந்தரராஜன்..!

      And கருணையானந்தம் அவர்களும் தீபாவளியினைக் கொண்டாடுபவரே ! But கிருஸ்துமஸ் உலகுக்கே ஆன பண்டிகை எனும் போது வாழ்த்துக்கள் ஓ.கே. !!

      Delete
    2. பாண்டியனும் ராஜன் தான் சார்.

      ( அப்பாடா சமாளிச்சாச்சு )

      ஆனா கருணையானந்தம் மொழி பெயர்ப்புல அடிக்கடி ஜீசஸ் தென்படுவாரே....

      Delete