Powered By Blogger

Friday, April 14, 2017

ஹலோ ஹேவிளம்பி !!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றை நாள் - மூன்று பெயர்களில் மூன்று புதுத் துவக்கங்கள் !! 

புலர்ந்திருக்கும் ஹேவிளம்பிப் புத்தாண்டு நமக்கு அட்டகாசமான ஆரோக்கியத்தை ; ஆனந்தங்களை  ; மன நிறைவை நல்கிட அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தப்போமே  ! படைத்தவர் நிச்சயமாய் காமிக்ஸ் காதலர் # 1 என்பதால் - நயமான பல காமிக்ஸ் சுவைகளும் இந்தாண்டின் விருந்தில் ஒரு அங்கமாகிடக் கோரியும் ஒரு வேண்டுகோளை போட்டு வைப்போமே guys ?

"ஜெரெமியா" ஏற்படுத்தியுள்ள விவாத மேடையானது கதையை விடவும் சுவாரஸ்யமானதாய்த் தோன்றுவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பது உறுதி !! என்னென்னவோ சிற்சிறுக் குறிப்புகள் ; குறியீடுகள் என நண்பர்கள் ரவுண்ட் கட்டி அடித்திருப்பதை ஹெர்மன் படித்தாலே அசந்து போயிருப்பார் என்பது உறுதி !! அதே சமயம் - நண்பர்களின் ஒருசாராரின் திரிசங்கு நிலைமையும் புரியாதில்லை எனக்கு ! இத்தனை complications இல்லாது ; 'சுலபமாய் வாசித்தோம்-ரசித்தோம்' என்ற பாணியிலான கதைகளே போதும் சேட்டா !! என்ற அந்த மௌனக் கோரிக்கைகளும் ரீங்காரமிடுவது போலொரு பிரமை எனக்கு ! ஜெரெமியாவைப் பொறுத்தவரையிலும் அடுத்த 3 கதைகள் இணைந்த ஆல்பத்தை வெளியிடுவோம்....அப்புறமாய் ஒரு இறுதித் தீர்மானத்துக்கு வருவோம் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்குமென்பதில் பெரிதாய் மாற்றுக கருத்துக்கள் இல்லையென்பதால் அவ்விதமே தொடர்ந்திடுவோம் ! 

கொஞ்சம் விழுங்கச் சிரமமான சப்பாத்தியை வழங்கியாச்சு ; so what next ? தொண்டையில் நழுவிச் செல்லக் கூடிய சுலபமான ஐஸ்க்ரீம் ? ஆகஸ்டுக்கு ? அந்த ஐஸ்க்ரீம் என்னவாக இருக்கலாமென்று யூகம் பண்ணிப் பார்ப்போமா ?

ஞாயிறுக்கு சந்திக்கிறேன் all !! அதுவரையிலும் வாரயிறுதியை அமர்க்களப்படுத்துங்கள் !!  Bye for now !


P.S : இது எந்த நாயகரின் கதையாக இருக்குமென்று any guesses ?

97 comments:

  1. ஹஹஹா! பூனை முந்திக்கொண்டது..!படித்துவிட்டு வருகிறேன்.!!!

    ReplyDelete
  2. Tamil puthandu vazhthukal lion comics

    ReplyDelete
  3. ஆகஸ்ட்டு ஐஸ்கீரீம் எங்கள் இளவரசியாகத்தான் இருக்கும்.!!!

    ReplyDelete
  4. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ///அந்த ஐஸ்க்ரீம் என்னவாக இருக்கலாமென்று யூகம் பண்ணிப் பார்ப்போமா ?///

    இன்னும் ஏதாவது க்ளூ கொடுக்கலாமே எடிட்டர் சார்? போனவாரம் நம்ம செனா அனா ஒரு கிசுகிசுல " பூ'னு ஆரம்பிச்சு 'னை'னு முடியற ஒருத்தர்"னு எழுதினதையே 'யாரா இருக்கும்?'னு அரைமணி நேரம் யோசிச்ச ஆளுக நாங்க. எங்ககிட்டப்போய் வெறும் 'ஐஸ்கிரீம்'னு சொல்லி கண்டுபிடிக்கச் சொன்னா எப்படியாம்?!

    இன்ஃபேக்ட், நீங்க எந்தத் தொடர்னு பளிச்னு போட்டு உடைச்சாலுமே கூட பத்து நிமிஷத்துக்கு 'பே'னு முழிச்சிட்டு அப்புறம்தான் எங்க ரியாக்ஷனைக் காட்டுவோம்னு உங்களுக்குத் தெரியாதா? ;)

    ReplyDelete
    Replies
    1. குருநாயரே!!!

      ஆரம்பிச்சாச்சா..! :):):):):):)

      Delete
    2. அப்படின்னா அந்த ஜேம்ஸ்பாண்ட் படம்
      பார்த்தாச்சா? ??

      Delete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. 'யமா'வின் அடையாளம்! - டெக்ஸ் வில்லரது கதைதான்!

    ReplyDelete
  10. ஆகஸ்டில் கேப்டன் டைகர் வரும்போது அவருக்கு ஜோடியாக lady S வந்தாதான் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  11. ஓவியர் சிவிடெல்லியின் நேர்த்தி தெரிகிறது.அப்படின்னா கண்டிப்பாக டெக்ஸ் சாகஸம்தான்.

    ReplyDelete
  12. Replies
    1. அதுதான் முதல்லியே குருநாயருக்கு
      வணக்கம் வெச்சாச்சில்லே.

      Delete
  13. ஆசிரியர் குழுமத்தினர்..,குடும்பத்தினர்...இங்கு வருகை புரியும் அனைத்து இனிய காமிக்ஸ் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  14. ஜெரோமியா சப்பாத்தியவே முழுங்கியாச்சு ....இனிமேல் நீங்க என்ன கொடுத்தாலும் அதை ஐஸ்கிரீம் போல "வழுக்" ன்னு முழுங்கிறுவோம் ன்னு ஒரு பலமான நம்பிக்கை சார் இப்பொழுது எல்லாம்...:-))

    ReplyDelete
    Replies
    1. சப்பாத்தியா
      சப்பாத்திகள்ளியா???

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. ///இது எந்த நாயகரின் கதையாக இருக்குமென்று any guesses ?///

    டெக்ஸ் வில்லர்

    ம.ம. மார்டின்

    டைலன் டாக்

    மேஜிக் விண்ட்

    இவ்வளவுதான் கெஸ் பண்ண முடிஞ்சுது சார். .!!

    ReplyDelete
    Replies
    1. // மேஜிக் விண்ட் //

      ஆனாலும் உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்...

      Delete
    2. ///ஆனாலும் உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்...///

      இதுக்கே இப்படின்னா..,

      இன்னும் டயபாலிக், ஸ்பைடர் எல்லாம் யோசிச்சு வெச்சிருந்தேனே. .! :-)

      (சும்மா சொல்லிவைப்போமே)

      Delete
  16. 💥 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்💐

    பிரம்மிக்க வைக்கும் சித்திரங்கள்!!!!

    டெக்ஸ் என்றுதான் தோன்றுகிறது...:-)

    ReplyDelete
  17. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஆகஸ்ட் ஜஸ்க்ரீமை புத்தாண்டை முன்னிட்டு இன்னிக்கே உருகவிடலாமே எடிட்டர் சார்!!!
    முன்பு ஒருமுறை அறிமுகப்படுத்திய அன்டர்டேக்கராக இருக்குமோ?? இல்லையெனில் அவர் எப்போது அறிமுகப்படுத்தப்படுவார் சார்?

    ReplyDelete
  18. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ம.ம. மார்ட்டின்??

    ReplyDelete
  21. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும்...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  22. Wish you a happy Tamil new year.
    That story page may be tex viller or new hero ZAGOR .

    ReplyDelete
  23. காமிக்ஸ் அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  24. ஆகஸ்ட் ஐஸ் கீரீம்.........



    கலரில்...................



    ஹார்டு கவர் பைண்டிங்............


    மாடஸ்டி இளமைகால வரலாறு + பழி வாங்கும் புயர் + மரணப்பிடி என காம்போ ஸ்பெஷல் ............


    ReplyDelete
    Replies
    1. தற்போது லயனில் ஜஸ்கிரீம் போல் குளுகுளுன்னு இனிமையாக இருக்கும் ஒரே ஹீரோயினி எங்கள் இளவரசி மட்டுமே.!.......



      தற்போதும் ஏப்ரல் வெயில் கொடுமையில் சிக்கி தவிக்கும் எங்களுக்கு இப்போதே மாடஸ்டி கதையொன்றை கொடுத்தால் ஜில்லுன்னு ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாதிரிதான் இருக்கும்.!!!

      Delete
    2. சூப்பரப்பு

      Delete
  25. மாயாஜால கதையா.???


    நாக்கு ஒத்து..........

    நான் சபையை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.!!!!

    புத்தாண்டு ஸ்பெஷல் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு மாலை வருகிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. மேலே பொடியன் சொல்லியிருக்கிறார் மவெ சார்.

      டெக்ஸ் கதைதான்.

      யமனின் அடையாளம்.

      மெபிஸ்டோவின் மகன் எல்லாம் வருவதால் கொஞ்சம் மாயாஜாலம் இருக்க வாய்ப்புண்டு.

      இந்திய பெண்மணி சக்தி என்றெல்லாம் வருவது போல் காண்கிறது.

      டெக்ஸின் மிக சமீபத்திய கதை( அக்டோபர்2016) என்பது போல் தெரிவதால்

      அட்றாசக்கைதான்!!!

      Delete
    2. ///டெக்ஸின் மிக சமீபத்திய கதை( அக்டோபர்2016) என்பது போல் தெரிவதால்.///

      வர்ரே வாஹ்..!!

      Delete
    3. Tex - The sign of Yama
      Release 02/22/2017
      Type: Hardcover
      Format: 19 x 26 cm, b / w Pages: 352

      அட்டகாசம்!!!

      Delete
    4. மெளரோ போசெல்லி கதையமைக்க, சிவிடெல்லி சி்த்திரங்கள் அமைக்க - ஒரு மெகா சாகஸம்!!

      'தலையில்லா போராளி' சைஸுல வர வாய்ப்பிருந்தா... அட்ராசக்கை அட்ராசக்கை தான்!

      Delete
    5. தகவலுக்கு நன்றி பொடியன் மற்றும் செனாஅனா அவர்களே!

      Delete
    6. தேங்காய்சட்னியா??
      தக்காளி சட்னியா??

      Delete
  26. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இங்கே மாயாவி மாண்டிரெக் இரட்டை வேட்டையர் ஆர்ச்சி ரசிகர்கள் யாரும் இல்லையா? ஒரே கொலை பட்டாளமா இரு க்கே!!??

    ReplyDelete
    Replies
    1. இது ரத்த பூமி! பல உயிர்களை உருத்தெரியாம செதைச்சுட்டு வந்தவங்கதான் இங்ஙனக்குள்ள சுத்திக்கிட்டிருக்காக.
      அதாவது... இங்கே டாக்டர்கள் நிறையப்பேர் இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்! ;)

      Delete
    2. வேதாளர். மாண்ட்ரேக். ரிப் கெர்பி .ஆர்ச்சி
      ரசிகரும் இருக்கோம்

      Delete
    3. கைப்புள்ள எப்ப MBBS படிச்சாரு???

      Delete
    4. இரட்டை வேட்டையர்கள் .ஆர்ச்சி.ஜான் மாஸ்டர்.ரசிகர்கள் இங்கு நிறைய பேர் இருக்கோம் பாஸ்

      Delete
  28. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

    ஜெரோமியா
    =============
    ஜெரோமியா படித்தேன் சற்று ஏமாற்றமாக இருந்தது. ஸ்பீட் ரேஸில் பங்கு கொண்டவர்களை ஸ்லொ சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள செய்தது போல் இருந்தது.

    டெக்ஸ், டைகர், டுராங்கோ போன்ற ஜாம்பவான்களை படித்து விட்டு சின்னப்பையனை கதாநாயகனாக வைத்து ஒரு கதையை படிக்கும்போது சின்னப்புள்ள சமாச்சாரமா தெரியுது. விறுவிறுப்பு குறைவு நெருடலாக இருக்கிறது. ஹெர்மனும் என்ன செய்ய முடியும் பதின் வயது பையன்களை வைத்துக் கொண்டு.ஒளிப்பதிவு நன்றாக இருந்து என்ன பயன், கதை விறுப்பாக இல்லாமல்.

    ஒரு வெறியனின் தடத்தில்
    ===========================
    டெக்ஸ் கதைகள் பற்றி டைகர் ரசிகர்கள் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு ஒரே மாதிரி டெம்ப்லேட்டாக இருக்கிறது. அதை முறியடிக்கும்படி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறீர்கள். அதன் படி "ஒரு வெறியனின் தடத்தில்" ரொம்பவே என்னை கவர்ந்தது. டெக்ஸ் கதைகளில் டெக்ஸை விட கார்சனுக்கு கூட முக்கியத்துவம் குடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த கதையில் அந்த கிழவர் சீக் தான் ஹீரோ. அவருடைய வாழ்க்கைமுறையை பற்றி விவரித்த விதம் அருமை. ஒரு நாடோடிக்கு, சுற்றி பார்க்க இவ்வளவு இடம் இருக்கும்போது ஒரே இடத்தில வாழும் இவர்கள் பைத்தியக்காரர்கள் என்ற மனநிலை தான் இருக்கும். அந்த மனநிலையில் இருக்கும் அந்த கிழவரை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பக்கத்துக்கு பக்கம் தோட்டா பறக்காமல் இந்த மாதிரி கதைகளையும் வெளியிடுவதற்கு நன்றி. இது உங்கள் நல்ல தேர்வை காட்டுகிறது.

    MS அட்டகாசம்
    ===============

    சில கதைகள் குழந்தைகளுக்காக உருவாக்கப் படுகிறது ஆனால் என்னை மாதிரி நாலு கழுதை வயதானவர்களுக்கும் பிடித்து விடுக்கிறது. பென்னி முதல் கதையிலே என்னைக் கவர்ந்து விட்டான். இப்போதும் ஏமாற்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Raj Muthu Kumar S : //பக்கத்துக்கு பக்கம் தோட்டா பறக்காமல் இந்த மாதிரி கதைகளையும் வெளியிடுவதற்கு நன்றி. இது உங்கள் நல்ல தேர்வை காட்டுகிறது//

      நிஜத்தைச் சொல்வதாயின் - diehard டெக்ஸ் ரசிகர்களுக்கு இந்த "வித்தியாச பாணிகளை" விடவும் அனல்பறக்கும் அந்த மாமூல் ஸ்டைலில் தான் நாட்டம் அதிகமுள்ளது என்றொரு எண்ணம் எனக்கு ! மாறுபட்ட களங்களில் ரொம்பவே விஷப்பரீட்சை செய்ய வேண்டாமோ ? என்று கூட அவ்வப்போது தோன்றும் !! எது எப்படியோ - டெக்சின் 70 வது ஆண்டில் ஒன்லி dynamite !! அத்தனை கதைகளிலும் !!

      //MS அட்டகாசம்
      ===============

      சில கதைகள் குழந்தைகளுக்காக உருவாக்கப் படுகிறது ஆனால் என்னை மாதிரி நாலு கழுதை வயதானவர்களுக்கும் பிடித்து விடுக்கிறது.//

      நானும் அந்த 4 + கழுத்தை லிஸ்டில் ; பென்னி ரசிகன் லிஸ்டிலும் !!

      Delete
  29. போனெல்லியின் தளத்தை அப்படியே எட்டிப்பார்த்ததுல...

    டெக்ஸ் - 70வது வருடத்தைக் கொண்டாடும் வகையில் அங்கே இத்தாலியில 'TEX DYNAMITE'ன்ற பேர்ல டெக்ஸின் 4 க்ளாசிக் புக்ஸ் + காமிக் ஸ்ட்ரிப் ஃபார்மேட்டில் இரண்டு புக்ஸ் + ஒரு பெரிய சைஸ் போஸ்டர் + இத்துடன் ஒரு சர்ப்ரைஸ் - இதை எல்லாத்தையும் ஒரு டைனமைட் பெட்டியில வச்சு ( ஆமா டைனமைட் பெட்டி மாதிரியே இருக்குமாம்) அடுத்த மார்ச்-3ம் தேதி ரிலீஸ் பண்ணப்போறாங்களாம்! (எவ்வளவு கெஞ்சினாலும் ஒருத்தர்க்கு 3 பொட்டிக்கு மேல கிடைக்காதுன்னு வார்னிங் வேற!)

    ஹோ ஹோ ஹோ! நாம இப்ப மாதாமாதம் வாங்கிக்கிட்டிருக்கும் புத்தகப் பார்சலே டைனமைட் பெட்டி சைஸுலதானே இருக்கு!

    ( எடிட்டர் சார், நாம ஏன் அதே மார்ச்-3ம் தேதி 'TEX-RDX'னு ஒன்னை ரெடி பண்ணக்கூடாது? நல்லா ட்ரங்க் பொட்டி சைஸுல பெரிஸ்சா!)

    ReplyDelete
    Replies
    1. ///
      ( எடிட்டர் சார், நாம ஏன் அதே மார்ச்-3ம் தேதி 'TEX-RDX'னு ஒன்னை ரெடி பண்ணக்கூடாது? நல்லா ட்ரங்க் பொட்டி சைஸுல பெரிஸ்சா!)///

      அவ்வண்ணமே கோரும்

      அடியேன் KOK.

      Delete
    2. அட! நல்ல யோசனைதான்!!!!

      எடிட்டரோட 50-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக ப்ளஸ் டெக்ஸ் கொண்டாட்டமாக கலக்கலாக கொண்டாடலாம்.

      TEX-RDX அப்படின்னு போட்டு பார்சல் வந்தா NSG வந்து அள்ளிட்டு போயிடும்னு பயந்து வருது..

      TEX 7050 அப்படி மாதிரி வந்தா டபுள் ட்ரிப்யூட்.

      பேர் எப்படியோ ஸ்பெஷல் வந்தா

      சூப்பரா இருக்கும்.

      Delete
    3. ///TEX-RDX அப்படின்னு போட்டு பார்சல் வந்தா NSG வந்து அள்ளிட்டு போயிடும்னு பயந்து வருது..///

      :D

      Delete
  30. ஜஸ் கிரிம் கண்டிப்பாக இளவரசி ஜாம்போ ஸ்பெஷல் தான்....
    இளவரசி கதை கண்டிப்பாக வேண்டும்....

    ReplyDelete
  31. There are lot of discussions about Jeremiah , initially I don't like to criticize because I know , it should be read slowly , so we can go deeply into the authors world , I enjoyed this story inch by inch , my opinion , we really lucky to get this book in Tamil ,I hope, he will soon fill the place of captain prince, quality wist , it reached level next.

    ReplyDelete
    Replies
    1. +1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

      Delete
  32. ஆசிரியரே புதிய தமிழ்
    புத்தாண்டு அறிவிப்பாக ஏதாவது புதிய
    சந்தா???

    ReplyDelete
  33. சில தினங்களுக்கு முன் தமிழ் நாளிதழில்
    வந்த செய்தி காகித விலை ஏற்றம்.
    நம்ஆசிரியர் 5 ரூபாய் இதழுக்கு அதிகப்
    படடுத்தினால் வரிந்து கட்டும் வாசகர்கள்
    பலர் இருக்கிறார்கள். அதே சமயம்
    நம் மக்கள் அரசு விற்பனை செய்யும்
    பொருளுக்கு 10 முதல் 20 வரை
    அதிகம் கொடுத்து வாங்கும்போது விலை
    கண்ணுக்கு தெரிவதில்லை??
    என்ன உலகமடா சாமி??????

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் படிக்கற எல்லோரும்
      அரசு விற்பனை செய்யும்
      பொருளுக்கு 10 முதல் 20 வரை
      உள்ள பொருள வாங்கறது இல்லை சார்

      Delete
    2. ganesh k v +1

      அரசு விற்பனை செய்யும் அந்தப் பொருள் - குடிமக்களின் தாகம் தணிக்கும் 'அது' தானே சார்?

      Delete
  34. இரவு வணக்கங்கள் நண்பர்களே..!

    தீய சக்திகளுடன் போராடும், நேர்மையான மந்திரவாதியான மோரிஸ்கோவுடன் சேர்ந்து டெக்ஸ் வில்லர் செய்யும் மூன்று பாக தொடர் ஒன்று நவம்பர்-2016 அன்று துவங்கிப்பட்டது.

    அதன் சித்திரம்& கதாசிரியர் நம்மையெல்லாம் மெகா சைஸில் அசத்திய தலையில்லா போராளி யை உருவாக்கியவர்களே தான்.!

    அந்த மெகா படைப்பை வாசகர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடுசெய்து வெளியிட்டது போனொல்லி...அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு...இங்கே'கிளிக்'

    டெக்ஸ் வில்லரின் வெளியிடான..

    நவம்பர்-2016 / வரிசை எண்-673

    டிசம்பர்-2016 / வரிசை எண்-674

    ஜனவரி-2017 / வரிசை எண்-675


    மந்திரவாதி மொபிச்டோவோட மகன் 'யமா'வுடன் மோதும் இந்த மெகா ஸாகசம் ஜனவரியில் முடிந்த கையோடு, பிப்ரவரி மாதத்திலேயே மூன்று பாகத்தையும் ஒன்னு சேர்த்து குண்டுபுக்காவும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது பொனோல்லி. அந்த குண்டு புக் பார்க்க...இங்கே'கிளிக்'

    இதேமாதிரி ஒரு குண்டுபுக் தமிழில்....மெகா இத்தாலி ஐஸ்கிரீமாக வரும் ஆகஸ்டில் வந்தே ஆகணும்ன்னு போராட்டத்தை ஆரம்பிக்கலாமன்னு டெக்ஸ்வில்லர் ரசிகர்கள் யாராச்சும் இராமையா கூட பேசினது போக மிச்சம் இருந்தா...நைட் யோசிச்சி நல்லதா ஒரு முடிவுக்கு வாங்கோ..தொம்..!

    மன்கி பாத் : ஏய்ய்ய்ய்ய்ய்..நீ இன்னும் கிளம்பலை, நேத்துதானே லீவ் லெட்டர் கொடுத்த...அதுக்குள் என்ன முந்திரிகொட்டையாட்டம்....லெட்டர் கொடுத்தா அதுக்கு ஒரு மரியாதை வேணாம்...

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!

      Delete
    2. ஆசிரியர் ஒரேயொரு ப்ரேம்தான் காட்டினார்.
      மாயாவி சார் அதோட வரலாறையே சொல்றாரே!!!
      மாயாவி சார் உங்களுக்கு வெளியே தெரியாத இன்னொரு பேர் எதாவது இருக்குதோ?

      Delete
    3. சார் இந்த அதகளம் எப்பவோ...பத்து டெக்ஸ்தானே இந்த வருட பயணத்ல... இதயும் இணைச்சி கணக்க நேர் செய்ய ..அதகள...அட்டகாச வாய்ப்பு....அள்ளுதே மாயாவியாரே

      Delete
  35. அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. உலகெலாம் நல்வன பெருகி;நலமே விளைய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மௌரோபோசெலி"சிவிடெல்லியின் ஆக்கத்தில் உருவான 640 பக்க சாகசம்.அமெரிக்காவை வடக்கு தெற்காக கடல் மார்க்கமாக கடக்கும் டெக்ஸ் குழுவினர் செல்லும் கப்பல் புயலில்சிதைகிறது.டெக்ஸ் வில்லர்'கார்சன்'சில பயணிகளும் போராடி ஒரு தீவின் ஓர்கரையில் ஒதுங்குவர்.கிட்"டைகர் சிலமாலுமிகள் மற்றொரு குழுவாக அதே தீவின் நேர் எதிர் முனையில் ஒதுங்குவர்.எஞ்சிய இரு குழுவும் தாங்கள் மட்டுமே உயிர் பிழைத்ததாக கருதுவர்.நர மாமிசம் உண்ணும் ஆதி வாசிகளை உள்ளடக்கிய அத்தீவு மாய சக்திகளுடைய இளம் பெண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கும்.அத் தீவில் அக்குழுக்கள் சந்திக்கும் மிகப்பெரும் போராட்டம் சிலிர்க்க வைக்கும்.இரு குழுவும் இணைந்தனரா?தீவில் இருக்கும் மாய மோகினி யார்?கடற்கொள்ளையரை வீழ்த்த கடல்கண்ணிகள் உதவியதா?எண்ணற்ற சங்கதிகளோடு பரபரவென கட்டவிழும் கதைப்பயணம்; நட்பு'சோகம்'வீரம்'திகில்'மர்மம் என்று எண்ணற்ற உணர்வுகளாள் வரையப்பட்ட காவியம். சில சமயம் டைட்டானிக்கையும்"பைரேட்ஸ் ஆப் த கரிபின்"னையும்;காமிக்ஸ் கதைகளில்"வன ரேஞ்சர் "ஜோ"சாகசத்தையும் நினைவூட்டவல்லது.ஆனாலும் இது எது மாதிரியும் இல்லா புது மாதிரி.இந்த பக்கத்து சித்திரம் அந்த டெக்ஸ் காவித்து ஓவியம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. .! ஆஹா..! ஆஹஹ்ஹஹ்ஹா..!!

      Delete
    2. பேஷ் ரொம்ப நல்லா இருக்கும் போல. ....

      Delete
    3. ///ஆஹா. .! ஆஹா..! ஆஹஹ்ஹஹ்ஹா..!!///
      ///பேஷ் ரொம்ப நல்லா இருக்கும் போல. ///

      +11111

      Delete
  37. நான் தங்களுடைய திருப்பூர் ஏஜென்டாக விரும்புகிறேன்.அதற்காக உங்களது அலுவலகத்தைத் தொடர்புகொண்டேன்.ஆவன செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. @ PRAKASAM KATHIRESAN

      உங்களால் திருப்பூரில் நம் விற்பனை மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே!

      Delete
    2. PRAKASAM KATHIRESAN : உங்கள் தொலைபேசி எண் + முகவரியோடு ஒரு மின்னஞ்சல் அல்லது 98423 19755 என்ற நம்பருக்கொரு சம்ஸ் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ?

      Delete
  38. இப்படி எல்லாம் கதைகள் உள் ளதா ? ஆசிரியரின் கடை கண் அதிகம் தேவை இப்போது அதுவும் ஆகஸ்ட்- கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ///ஆசிரியரின் கடை கண் அதிகம் தேவை ///

      கொஞ்சம் பெரிஸ்ஸ்சா, பயமுறுத்தறமாதிரி இருக்கும். பர்ராலியா? ;)

      Delete
  39. அந்த மாய பெண் Bollywood பிபாஷா போன்று உள்ளதே.ஓவியர் Bollywood படம் பார்க்கும் பழக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  40. நண்பர்கள் அனைவருக்கும் தாமதமான இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் .டெக்ஸ் கதைதானே சார்...

    ReplyDelete
  41. அந்த படம் உள்ள கதை கன்பார்மா டெக்ஸ் வில்லர் தான் சார்
    நான் பார்த்திருக்கேன்

    ReplyDelete
  42. சாட்சாத் டெக்ஸ் .

    ReplyDelete
  43. கஷ்டப்பட்டு புதுப் பதிவை கம்ப்போஸ் பண்ணிய எடிட்டர், பப்ளிஷ் பட்டனை அழுத்தறக்கு முன்னாடியே தூங்கிப்போயிருந்தார்னா... அச்சச்சோ!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா, அந்த கூர்க்கா பயபுள்ள இன்னிக்கு 10 மணிக்கே விசில் ஊதிடுச்சோ என்னமோ?!!

      Delete
    2. இனிமே தூக்கத்தில கையோ, காலோ பட்டு பப்ளிஷ் ஆனாத்தான் உண்டு!

      Delete
  44. ஏ யப்பா யாரவது எழுப்புங்கையா உங்களுக்கு புண்ணியமா போவட்டும்.

    ReplyDelete
  45. ஏ யப்பா யாரவது எழுப்புங்கையா உங்களுக்கு புண்ணியமா போவட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அவசியமில்லை! இன்னும் சித்தே நேரத்தில் வெயில் வந்துடும். அவராகவே எந்திரிச்சுக்குவார்.

      Delete
  46. naan irukken boss.......For irattai vettaiyar fan

    ReplyDelete
  47. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே"

    ReplyDelete